• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. வந்தியத்தேவன்

  வந்தியத்தேவன்

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   8

  • Content Count

   2,400


 2. தமிழரசு

  தமிழரசு

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   32,841


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   50,956


 4. shanthy

  shanthy

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   3

  • Content Count

   4,255Popular Content

Showing content with the highest reputation on 06/13/2013 in all areas

 1. 5 points
  'பாராட்டுதல்' - என்பது மனித குணங்களில் உன்னதமானது! பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது! பாராட்டுரையைத் தலைசிறந்த 'கிரியா ஊக்கி' - என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர். பாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது - மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே!! படிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும். ¬ வெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக முன்சென்று மனமுவந்து தாராளமாகப் பாராட்டுவார்கள்! இந்தப் பாராட்டு மொழி என்பது, பல விந்தைகளைச் செய்து நம்மை வியக்க வைக்கிறது. ஆம்! சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு? அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது! தன்னம்பிக்கை தானே தழைக்கிறது!! பாராட்டப்படாதவரின் அறிவும், ஆற்றலும் சுருங்கிப் போகிறது. மனச்சோர்வும் உண்டாகிவிடுகிறது. பாராட்டுகளால் நட்பும், உறவும் பலப்படுகிறது. அன்பு வெளிப்படுகிறது. நல்வாய்ப்பு அதிகரிக்கிறது. பிறர் பாராட்டில் மனம் மகிழாத மனிதர் எவருமில்லை என அடித்துச் சொல்லலாம்! சின்னச் சின்ன செயல்கள் செய்தாலும் பாராட்டுவது அவசியம். அதன்மூலம் பெரிய செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்திட முடியும். பாராட்டுவதைத் தள்ளிப் போடவோ, காலம் கடத்தவோ கூடாது. பாராட்டுவதை உடனே செய்ய வேண்டும். பாராட்டுவதில் தயக்கம் காட்டக்கூடாது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும், தேர்தலில் வெற்றி அடைந்தாலும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும், இசை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம் என நுண்கலைகளில் சாதித்தாலும், நாம் மனமுவந்து அவர்களைப் பாராட்டி விட வேண்டும். அப்படிப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை குற்ற மனப்பான்மையுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் வளர்கிறது. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை புத்திசாலியாகவும், தன்னம்பிக்கைப் பண்பில் சிறந்தாகவும் வளர்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஓயாமல் திட்டிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருந்தால், அந்தப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மழுங்கிப் போய்விடும். சில நேரங்களில் அவர்களை விரக்தி மனம் கொண்டவர்களாக மாற்றிவிடும். மாறாகப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் தட்டிக் கொடுத்து, அவர்கள் திறமையைப் பாராட்டிட வேண்டும். இடை இடையே அன்பு மொழிகளால் கண்டித்து வளர்த்தால், பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கை தானே துளிர்விடும்! சாதனைகள் செய்திடத் தூண்டுகோலாய் அப்பாராட்டு அமையும். என குழந்தை மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், பாராட்டுரைகள், நம்பிக்கையை வளர்க்கும்; பாதுகாப்பு உணர்வைப் பெருக்கும்;; கற்பதைத் தூண்டும்; நல்லெண்ணத்தை மனதில் பதியமிடும்; பிறருக்கு உதவும் மனப்பாங்கை ஏற்படுத்தும்; மனித நேயத்தை ஊட்டும்; மானிட உறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்! பிறருடைய நிறைகளைப் பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். குறைகளையோ, தனிமையில் நாசுக்காகச் சுட்டிக்காட்ட வேண்டும். சமுதாயத்தில் பாராட்ட வேண்டியவர்களை, நாம் பாராட்டத் தவறினால், நல்லது செய்வதற்கான மனம் படைத்தவர்கள் சற்று ஒதுங்கி விடும் சூழல் ஏற்படும். எனவே, நல்ல செயல் புரிபவர்களை உடனடியாகப் பாராட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும். 'பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்' - என்பது புதுமொழி. பாராட்டுகளைப் பெற்றவர்கள் மீண்டும், மீண்டும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதலால் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக செய்வார்கள்! இது, நிர்வாக மேலாண்மைத் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அப்பட்டமான உண்மை! நமது குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் என அனைத்து நிலையில் உள்ளவர்களையும் நாம் பாராட்டிப் பழகுவோம். மனித உறவுகளை மாண்புற வளரும்படி செய்வோம்! http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23867:2013-05-10-06-51-14&catid=44:general&Itemid=123
 2. 3 points
  அன்பான உறவுகளே சில இசைக்கோர்வைகளை பரீட்சித்து பார்த்தேன் ............அவற்றையும் உங்களுடன் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் . உண்மையில் இந்த புதிய மென்பொருளில் தேடுவதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது ..............எதிர்காலத்தில் அவற்றை எல்லாம் தேடிகண்டுபிடித்து மேலும் பல பாடல்களை சிறப்பாக இசையமைப்பேன் என்று கூறிக்கொண்டு .....பணிவுடன் இந்த காட்சியை இணைக்கிறேன் .நன்றி.
 3. 2 points
  காதலுக்கு கொடி பிடிக்கும் விஷயத்தில் இந்திய சினிமாவை வெல்ல வேறு எதுவுமே கிடையாது. ஏன், காதல் இல்லாத இந்திய சினிமாவே இல்லை என்று கூறும் அளவிற்கு காதலுக்கு அப்படியொரு முக்கியமான இடம். இதன் விளைவாக, கண்ட உடன் காதல், காணாமலே காதல், தொலைப்பேசியில் காதல், இன்டர்நெட்டில் காதல், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என எங்கு பார்த்தாலும் காதல் மயம். இப்போது தான் பிடித்த ஒருவரை பார்த்திருக்கிறேன்!!. இது காதலா என்பது தெரியவில்லை. காதலிக்கலாமா, வேண்டாமா ? என்ன செய்வது ? என்று குழம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. கொஞ்சம் பொறுமையாக, திறந்த மனதோடு வாசித்துப் பார்த்து பிறகு முடிவெடுங்கள். காதல் ஒரு உன்னதமான உணர்வு. காதலுக்கு விளக்கம் கூற முடியாது, அதை உணர்வுப் பூர்வமாக தான் அறிய முடியும். மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பது காதல். இது போல காதலை தலையில் தூக்கி கொண்டாடுபவர்கள் பலர். ஆனால், எங்களைப் பொறுத்த வரை காதல் ஒரு வலி. சந்தோஷமாக, உல்லாசமாக வாழ்க்கையை அனுபவிக்கும் மனிதனுக்கு வரக்கூடாத ஒரு உணர்வு, காதல். சரி, அப்படி என்ன காதல் மேல் இவ்வளவு கோபம் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் இருங்கள். காதலே வேண்டாம் பாஸ்... இதை விட நல்ல விஷயங்கள் உலகில் எவ்வளவோ இருக்கிறது என்ற தரப்பு நியாயத்தை வலுப்படுத்த, இதோ உங்களுக்காக 10 காரணங்கள். காதல் ஒரு வலி தலை வலி, கால் வலி, முதுகு வலி போன்ற வலிகள் எல்லாம் மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். ஆனால் இந்தக் காதல் இருக்கே, மனதை வருடி, ஏமாற்றி, பிறகு உடைத்தே விடும். இந்த வலிக்கு மருந்தே கிடையாது. இப்படி உடைந்து போன பழைய காதலை மறப்பதற்கு, நாம் படும் அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏன் இப்படி காதலில் விழுகிறோம் என்று பார்த்தால், அதற்கு முக்கிய காரணம் நம் பலவீனம் தான். காதல் செய்ய முடிவெடுத்துவிட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதற்கு பதிலாக காதலில் விழுந்தேன் என்று தான் சொல்வார்கள். விழுவது என்பது சுயநினைவோடு செய்யும் செயல் அல்ல, அது ஒரு விபத்து. காதலும் அப்படி தான். இந்த விபத்தில் அகப்படாமல் இருப்பதே, வாழ்கையை வலியில்லாமல் வாழ சிறந்த வழியாகும். ரகசியம் காதலில் இரு மனங்கள் ஒன்றாக கலந்து, இரு உடல் ஓர் உயிராக மாறிவிடுகின்றனர். அப்படியிருக்கும் போது, எந்த ஒரு ரகசியத்தையும் மனதுக்குள் வைத்திருக்க முடியாது. நம்மைப் பற்றி எல்லாவற்றையும் காதலரிடம் சொல்ல வேண்டும் என்பது கட்டாயம். என்ன தான் காரணம் சொன்னாலும், காதலன்/காதலி என்பவர் ஒரு வெளி நபர். நம்மைப் பற்றி, நம் குடும்பத்தைப் பற்றி, நம் ரகசியங்களைப் பற்றி, வெளி நபர் ஒருவரிடம் சொல்வது எந்தளவுக்கு நம்பகத் தகுந்ததாக இருக்கும். நம்முடைய ரகசியங்களை வேறொரு நபருக்கு எதற்காக சொல்ல வேண்டும்? நம்முடைய பலவீனங்களை நாமே எதற்கு வெளிகாட்டிக் கொள்ள வேண்டும்? வேணவே வேணாம் பாஸ்... இப்படிப்பட்ட காதலே வேணாம். மைனர் ஜாலி, மணி பர்ஸ் காலி கொஞ்ச நஞ்சம் இருக்கும் காசும், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்தே தீர்ந்து விடும். காதலரின் பிறந்த நாள் தொடங்கி, அவர் வளர்க்கும் நாய்குட்டியின் பிறந்தநாள் வரைக்கும், அனைத்துக்கும் பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் வாங்கிக் கொடுக்கணும். அப்போது தான் அவர்களை சந்தோஷப் படுத்தி பார்க்க முடியும். நாம் இருக்கும் பொருளாதார நிலைமையில் இதெல்லாம் நமக்கு தேவையா பாஸ் ? இப்படி காதலுக்காக தேவையில்லாமல் பணம் செலவழிப்பதை விட, நிம்மதியா 10 ரூபாய் கொடுத்து, ரோட்டு ஓர கடையில் பானி பூரி சாப்பிடுவது எவ்வளவோ மேல். கோவப்படாதீங்க... கொஞ்சம் பொறுமையாக கேளுங்க... காதலில் விழாதீங்க... மூளையை நசுக்கிப் பிழியும் காதலரை எப்படி ஆச்சர்யப்படுத்துவது? எந்த மாதிரி பரிசுப் பொருட்கள் கொடுக்கலாம்? வார இறுதியில் எங்கு அழைத்துச் செல்லலாம்? எந்த மாதிரியெல்லாம் செய்தால் காதலர் நம் அன்பை நினைத்து மகிழ்வார்? இப்படி யோசித்து யோசித்து, நமக்கு இருக்கும் மூளையை கசக்கிப் பிழிய வைக்கும் இந்தக் காதல். காதலுக்காக இவ்வளவு சிரமப்பட்டு சிந்தனை செய்வதற்கு பதிலாக, வேறு ஏதாவது நல்ல விஷயத்துக்கு சிந்தனை செய்தால், வாழ்வில் முன்னேற வழிவகுக்கும். ஆனால், இந்தக் காதல் நம் காலை வாரி விடவே பார்க்கும். இத்தனை நாட்கள் பெற்றோரின் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்திருப்போம். அது நல்லது, நம் வாழ்கையை நல்வழிப்படுத்த உதவும். ஆனால், காதலுக்குப் பிறகு, காதலரின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். இவன் கிட்ட பேசாதே... அவள் கிட்ட பேசாதே... நீ ஏன் அவளுக்கு போன் பண்ணே ? நேற்று ரொம்ப நேரம் போன் பிசியாகவே இருந்ததே... யார் கிட்ட பேசினீங்க? இப்படி எல்லாவற்றிலும், நம் சுதந்திரம் போய்விடும். ஆசைப்பட்டு நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போன்ற இந்த காதல் நமக்கு தேவையா? சந்தர்ப்பங்கள் கதவு தட்டினாலும், திறக்க முடியாது ஒரு சமயத்தில் ஒருவரைத் தானே காதலிக்க முடியும். சில சமயங்களில், நமக்கு ஏற்ற துணை கொஞ்சம் கால தாமதமாக வரலாம். ஆனால், அதற்குள் அவசரப்பட்டு காதலில் விழுந்துவிடுகிறோம். அவ்வாறு, காதலரை விட சிறப்பான, அன்பான வேறு ஒருவர் நம் வாழ்வில் வர முயன்றாலும், அவருக்கு நோ சொல்லி அனுப்பி விட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவரைக் காதலிப்பதால், இப்படிப்பட்ட நல்ல சந்தர்ப்பங்களை இழக்க வேண்டி வரும். காசு மற்றும் நேரச் செலவும் அதிகம் நம்முடைய பொன்னான நேரத்தை காதல் வீணடிக்கும். நாம் ஒருவரை காதலிக்கும் போது, அவருக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும், பேச வேண்டும், வெளியே செல்ல வேண்டும். இதுமட்டுமல்லாமல், ஓயாமல் இரவும், பகலும் காரணமே இல்லாமல் போனில் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இது போன்ற நிர்பந்தங்களால் நம்முடைய நேரம் பெரும்பாலும் காதலருக்காகவே செலவு செய்கிறோம். இதெல்லாம் நமக்கு தேவையா? இப்படி நேரத்தை வீணடிப்பதற்கு, டிவி சீரியல் பார்ப்பது எவ்வளவோ மேல். சண்டை, சச்சரவு இல்லாமல் பொழுது போகும். அழகு காதலில் விழுந்தவுடன், அனைவரும் காதலரின் கண்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என்று நினைப்போம். இந்த கலர் சுடிதார் போடுவதா, என்ன பொட்டு வைப்பது, கம்மல் நல்லா இருக்குமா, பூ வெச்சுக்கலாமா வேணாமா, லிப்ஸ்டிக் போட்டா அவருக்குப் பிடிக்குமா பிடிக்காதா என தன்னை தன் காதலர் விரும்ப என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய முயற்சிப்போம். ஒரு காலத்தில், தன் வெளித்தோற்றத்தைப் பற்றியெல்லாம் அதிகமாக கவலைப்படாமல் இருந்திருப்போம். ஆனால், இப்போது கதை அப்படியே தலை கீழாக மாறிவிட்டது பாருங்கள். கண்ணாடி முன்னாடி ஒரு மணி நேரம் நிற்க வைக்கும் இந்த காதல் தேவையா மேடம்...கொஞ்சம் யோசிச்சு பாருங்க! கனவையும் லட்சியத்தையும் நாசமாக்கும் காதல் வந்தவுடன் காதலே கதி என்று சுற்றி உள்ள அனைத்தையும் புறக்கணிப்பார்கள். கேட்டால் அது ஒரு உணர்வு, அது வந்தால் அப்படித் தான் இருக்கும். சரி, அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும். ஆனால், இந்தக் காதலினால், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, வேலை போன்ற விஷயங்களில் நாட்டம் இல்லாமல் இருப்பது என வாழ்க்கையின் கனவையும், லட்சியத்தையும் காதலுக்கு அடகு வைக்கும் நிலைமை ஏற்படுகிறது. காதலுக்கு முன்னுரிமை கொடுப்பதால், வாழ்க்கையின் லட்சியங்களை அடையவிடாமல் தடுக்கிறது. இப்படி நம் வாழ்கையையே சீரழிக்கும் காதல் நமக்கு தேவைதானா? முட்டாளாக்கும் 10 நிமிடம் காதலரை சந்திப்பது தொடர்பாக, 4 மணி நேரம் அதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். சிறிது சிறிதாக சேமித்த பணம் அனைத்தையும் காதலருக்கு பரிசுப் பொருட்கள் வாங்க செலவு செய்வார்கள். காதல் நம்மை எப்படி முட்டாளாக்குகிறது என்று பாருங்கள். ஆனால், காதலில் இருக்கும் போது இதெல்லாம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அதை ஒப்புக் கொள்ளும் நிலையில் மனம் இருக்காது. எதைச் செய்வது முட்டாள்தனம் என்று நினைத்திருப்போமே, காதல் வந்த பின் நம்மை அறியாமலேயே அதே முட்டாளதனத்தைச் செய்வோம். என்னமோ போங்க, இவ்வளவு அவஸ்தைப்பட்டு காதல் செய்யணுமா? இவை அனைத்தையும் விட, காதல் வந்ததும் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வேறு எதுவுமே செய்ய முடியவில்லை என்று சிலர் சொல்வதைத் தான் சுத்தமாக ஜீரணிக்கவே முடியவில்லை. என்னமோங்க... நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம்... இனிமேல் நீங்கள் தான் உங்கள் கருத்துக்களைச் சொல்லணும்! Thatstamil
 4. 2 points
  மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில் முயற்சியின் முதலாவது முதலீட்டாளராக நேசக்கரம் அமைப்பின் நீண்ட கால ஆதரவாளரான யேர்மனியில் வசித்து வரும் திரு.சபேசன் அவர்கள் இணைந்துள்ளார். ஏற்கனவே போரில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சபேசன் மாதாந்தம் உதவிக் கொண்டிருப்பதோடு அவசர உதவிகள் தொழில் முயற்சிகளுக்கும் உதவியுள்ளார். அத்தோடு தனது உறவினர்கள் நண்பர்களையும் நேசக்கரத்துடன் இணைத்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக தையல் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட உதவியையும் வழங்கியதோடு தையல் நிறுவனத்தை தொடர்ந்த வளர்ச்சியில் கொண்டு சென்று போரால் பாதிப்புற்றவர்களுக்கான ஆதரவை வழங்கும் நோக்கில் எம்முடன் இணைந்துள்ளார். சபேசனின் நிதியுதவியில் மட்டக்களப்பில் தையல் நிறுவனமொன்றினை கடந்தமாதம் ஆரம்பித்துள்ளோம். HAND MADE CREATORS (PVT) Ltd தையல் நிறுவனத்தில் 10பேர் தையல் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பயிற்சியினைப் பெறுவோர் தொடர்ந்து வேலை செய்ய முடியும். அவர்கள் விரும்பாத பட்சத்தில் அல்லது தனியே தையல் தொழிலை மேற்கொள்ள விரும்பின் அதற்கான ஆதரவினையும் வழங்கி அவர்கள் அத்தொழிலைச் செய்வதற்கான ஆலோசனைகள் , இதர ஒழுங்குகளையும் செய்து கொடுப்போம். 2வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எம்முடன் இணைந்துள்ள சபேசன் தையல் நிறுவனத்தில் கிடைக்கும் வருமானத்திலிருந்து வேலை செய்வோருக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும 20சதவிகிதம் நேசக்கரம் சமூக சேவைகளுக்கும் தருவதற்கு முன்வந்து தனது முதலீட்டை வழங்கியுள்ளார். தனது முதலீட்டினை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வுக்கு வழங்கும் நோக்கில் தனது ஆதரவை வழங்கிய சபேசனுக்கு எமது நிறுவனத்தின் சார்பான நன்றிகள். இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh www.nesakkaram.org Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany முக்கிய குறிப்பு :- முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கான கணக்கறிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில் பொதுவெளியில் பகிரப்படும். முதலீடுகளில் தொடர்பற்ற 3ம் நபர்களுக்கு கணக்கறிக்கை விபரங்கள் பரிமாறப்படமாட்டாது. யாரும் தமக்கான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள விரும்பினால் முதலீட்டாளர்களுடன் நேரடியான தொடர்பினை ஏற்படுத்தி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். http://nesakkaram.org/ta/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/
 5. 2 points
  தமிழ் நாட்டின் மூன்று முதல்வர்களின் கதையை அப்படியே இருவர் என்ற படமாக எடுத்திருந்தார் மணிரத்தினம் .அது தமிழ் நாட்டில் எதுவித பிரச்சனையுமில்லாமல் ஓடியது .கடைசி PRIMARY COLORS என்ற ஆங்கில படத்தையாவது பாருங்கோ .ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் படுக்கை மட்டும் போகின்றார்கள் . கதை என்ற தலையங்கத்தில் ஒன்றை எழுதியதற்கு ஏன் பலர் குத்தி முறிகின்றார்கள் என்று விளங்கவில்லை .எல்லாம் அரசியல் செய்யும் வேலை . கட்டபொம்மன்,சங்கிலியன் வந்தியதேவன் என்று பெயரை வைத்து அதே காலத்தில் தான் இன்னும் பலர் இங்கு கிடந்தது வேகுகின்றார்கள்.உலகம் எங்கோ போய்விட்டது . அதைவிட சிலர் புலம் பெயர்ந்தும் வடலிக்க தான் போக நிற்கின்றார்கள் .அவர்கள் திருந்த இடமே இல்லை .
 6. 2 points
  இன்றுதான் வாசித்தேன்.... கதை முடிஞ்சுது போலைகிடக்கு....நீங்கள் தொடருங்கோ எண்டுறியள்???? ஓமோம் அண்ணையிட்டை உப்புடியான ஊர் உளவாரக்கதையள் எக்கச்சக்கமாய் இருக்கும்.
 7. 2 points
  ஒரு குடும்பத்தை பற்றி கதையெழுத உங்களுக்கு என்ன உரிமையிருக்கு. அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை. அதை இங்கு கொண்டு வந்து பகிர்ந்து அதற்கு பலர் விருப்பு வாக்கு வேறு. இந்த கதையும் மற்றவனின் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதற்கு சமன். உங்கள் வீட்டுக்கதையை மற்றவன் எழுதினால் உங்களுக்கு எப்படியிருக்குமென முதலில் யோசியுங்கள். முதுகில் உள்ள ஊத்தை கடிக்கும்போதுதான் தெரியும் எவ்வளவு ஊத்தையென்று. இவர்களைப்பற்றி தெரிந்த பலர் யாழ் வாசகர்களாக இருக்கும்.
 8. 2 points
  காதலிக்காத போது.. "போன்" உங்களுக்கு கட்டுப்படும். காதலிக்கும் போது "போன்" உங்களைக் கட்டுப்படுத்தும். இதில் இருந்து தெரிஞ்சு கொள்ளுங்க.. காதலிப்பது.. எவ்வளவு பெரிய கொடுமைன்னு..! அதாவது ஒரு அஃறிணைக்கே உங்களைக் கட்டுப்படச் செய்யும் கேவலம்.. காதலித்தால் வரும்..!
 9. 1 point
  மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் ௮௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.) மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர். மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது. ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது. மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன. பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம். ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட வேண்டும் என்பதை மதுரையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கர்ம வீரர் காமராஜர் கூறி உள்ளார். அது மீனாட்சி அம்மன் கோவிலையும் அதைச்சுற்றி உள்ள வீதிகளையும் கருத்தில் கொண்டே. http://mathuraikkaaran.blogspot.ca/2010/05/blog-post_28.html கோவிலைச் சுற்றி பார்க்க : http://view360.in/virtualtour/madurai/
 10. 1 point
  ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம். ஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது. அத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். போராட்டத்திற்காக உயிர்கள் முதல் உடமைகள் வரை இழந்த காயங்களையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருக்கும் குசேலன்மலையில் வாழும் குழந்தைகளின் கல்வி நிலமை மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி குழந்தைகள் போசாக்கின்மையால் உடல்உள வளர்ச்சியிலும் போதிய முன்னேற்றமின்றியே காணப்படுகின்றனர். இந்தக் கிராமத்தை உலகின் கண்களுக்கு அறிய வைத்து இந்த மக்களினதும் குழந்தைகளினதும் வாழ்வில் மாற்றமொன்றை உருவாக்கும் நோக்கில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் கல்விக்குழுவின் இளைஞர்கள் முயற்சியை மேற்கொண்டனர். குசேலன்மலையின் ஏழ்மையையும் அந்தக் கிராமத்தின் கல்வியையும் மேம்படுத்தும் முகமாக ஆதரவென்று கேட்டதும் இல்லையென்று சொல்லாமல் எப்போதும் தனது நேசக்கரத்தை நீட்டும் அமெரிக்காவில் வாழும் தவேந்திரராசா ஐயா அவர்கள் இக்கிராமத்தின் கல்வி வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாதாந்த உதவியை வழங்க முன்வந்து முதல் கட்டம் ஆனி மாதத்துக்கான பண உதவியையும் தந்துதவியுள்ளார். 08.06.2013 அன்று எமது உப அமைப்பான அரவணைப்பு அமைப்பின் அமைப்பின் தலைவர் ஜோ.ரோசந்த் பொருளாளர் பு.தனுசன் உப செயலாளர் ச.ரத்திக்கா நேசக்கரம் அமைப்பின் உபசெயலாளர் சே.ஜோன்சன் பிராந்திய கல்வி இணைப்பாளர் மற்றும் அரவணைப்பு அமைப்பின் உபதலைவர் தா. அருணா கரடியன்குளம் ப்புக்க அபிவிருத்தி சங்க தலைவர் விக்கி ஆகியோரும் 48 சிறார்களும் கலந்து கொண்டனர். வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை மாலை எமது அமைப்பின் பணியாளர்கள் குசேலன் மலைக்குச் சென்று பிள்ளைகளுடன் ஞாயிறு மாலைவரை தங்கியிருந்து உளவள மனவள ஆரோக்கியத்தை முன்னேற்றலும் எழுத்தறிவையும் சிறந்த கல்வியையும் வழங்கும் முயற்சியையும் ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து கற்கைநெறியில் ஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கிலும் பிள்ளைகளின் வரவை அதிகரிக்கவும் முதற்கட்டம் பிள்ளைகளுக்கு சித்திரம் கீறல் விளையாட்டு ஆகியவற்றையே அறிமுகப்படுத்தியுள்ளோம். முதல் 3மாதங்களுக்கும் சித்திரம் வரைதல் விளையாட்டிலேயே பிள்ளைகளின் சிந்தனை ஒருங்கிணைக்கப்பட்டு படிப்படியாக கல்வியூட்டல் ஆரம்பிக்கப்படும். கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கான சிற்றூண்டி உணவு வகைகளும் வழங்கி குசேலன்மலையின் குழந்தைகளை சிறந்த கல்விமான்களாக உருவாக்கும் கனவோடு இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். பிள்ளைகள் நிலத்தில் மர நிழலில் இருந்தே எமது கற்பித்தலில் பங்கேற்றுள்ளார்கள். கதிரை மேசைகளோ அல்லது கட்டிட வசதியோ எதுவுமில்லாத நிலமையில் உள்ள கிராமத்தின் இதர மாற்றங்களுக்கான ஆதரவினை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் உரிமையுடன் வெண்டி நிற்கிறோம். தற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறிய அளவிலான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆயினும் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கக்கூடிய கட்டிட வசதிகளோ அல்லது மின்சார வசதிகளோ இதுவரை இக்கிராமத்தில் இல்லை. கல்வி இல்லையேல் எங்களுக்கு வாழ்வில்லை. என்ற உண்மையைப் புரிந்து ஒவ்வொரு தமிழரும் இத்தகைய கிராமங்களின் கல்வி ,வாழ்வாதார , சுகாதார மேம்பாட்டில் தங்கள் நேசக்கரத்தை நீட்டுமாறு வேண்டுகிறோம். எமது முதல் கட்ட வேண்டுதலுக்கு தனது ஆதரவைத் தந்து அடுத்தடுத்த முன்னேற்றங்களிலும் தனது உதவியை வழங்க முன்வந்த தவேந்திரராசா ஐயாவிற்கு குசேலன்மலை குழந்தைகள், பெற்றோர்கள் , நேசக்கரம் பிறைட் பியூச்சர் பணியாளர்கள் , அரவணைப்புக் குழுவினர் அனைவரும் நன்றியுடனிருப்போம். கடவுள் உங்கள் போன்ற கருணையாளர்களின் வடிவிலேயே மனிதர்களிடம் வருகிறார்கள் என்பதற்கு மதிப்பிற்கினிய திரு.தவேந்திரராசா ஐயா உங்கள் போன்றவர்களே நல்லுதாரணம்.என்றும் நன்றிகள். குழந்தைகளின் சித்திரம் வரைதல் ஒளிப்பதிவு :- http://youtu.be/4nZHWIASOnY மேலதிக படங்கள் எமது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. NESAKKARAM E.V A/C 0404446706 Bank code – 60010070 IBAN DE31 6001 0070 0404 4467 06 Swift code – PBNKDEFF Postbank Stuttgart Germany Paypal Account – nesakkaram@gmail.com Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh www.nesakkaram.org http://nesakkaram.org/ta/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/
 11. 1 point
  அண்மையில் தமிழ்சூரியன் அண்ணா வாங்கிய புதிய சவுண்ட் சொப்ற்வெயார் மூலம் இனிவரும் காலங்களில் தரமான பாடல்களை வழங்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.. அதற்கு முன்னோடியாக புதிய மென்பொருளில் தானே பாடி பார்த்ததை பக்கத்தில் நின்ற என்னைமாதிரி ஒரு மொள்லைமாரி அவருக்கே தெரியாமல் எடுத்து யூ ரியூப்பில் போட்ட்டுவிட்டு எனக்கு அந்த இணைப்பை அனுப்பி இருந்தார்..அதை யாழிலும் பகிருவோம் என்று இங்கு பகிர்ந்திருக்கிறேன்.. அந்த மென்பொருளின் மூலம் மிகவும் தெளிவான தரமான ஒலிப்பதிவை இனிவரும் காலங்களில் செய்யலாம் என்பதை நீங்கள் இந்தப்பாடலை கேட்டால் உணரலாம்.. தமிழ்சூரியன் அண்ணாவுடன் இணைந்து இனிவரும் காலங்களில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை பதிந்து அதனூடாக பல தரமான படைப்புகளை வெளியிட உத்தேசித்துள்ளோமென்பது இன்னொரு உதிரித்தகவல் இந்த இடத்தில்.. ஆர்வமுள்ள திறமை உள்ள உறவுகளை இந்த நிறுவனத்தின் படைப்புகளினூடாக வெளிக்காட்டுவோம்.. http://youtu.be/n23FoC6Mg30
 12. 1 point
  காசி பற்றி திரு. ஜக்கி வாசுதேவ் காசி என்பது ஒரு ஊரல்ல. அது ஒரு வாய்ப்பு. முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்த ஊர் இது. 33 கோடி பேர்னு ஏன் சொன்னாங்கன்னா ஜனத்தொகை 33 கோடி இருக்கும் போது ஒவ்வொருத்தருக்கும் தனியொஒரு தேவதை வழிபாட்டுக்காக அப்படிச் சொன்னான். அது ஒரு தொழில்நுட்பம். அது மொத மொதல்ல ஆரம்பிச்சது இங்கே தான். அதுனால எல்லா கடவுளும் இங்கேர்ந்து வந்தாங்க அப்படின்னு ஒரு இது இருக்கு. ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒரு பயிற்சி இருக்கு. ஆனா அது நாளாக நாளாக மூட நம்பிக்கையா ஆயிருச்சி. ஒவ்வொரு தலைமுறையிலையும் தெரிஞ்சவங்க, ஞானியா இருக்குறவங்க வளர்ந்திருந்தா இந்த மாதிரி ஆகியிருக்காது. ஆனா அப்படி ஞானியா யார் யாரெல்லாம் இருந்தாங்களோ அவங்களே வெளியிலேர்ந்து படையெடுத்து வந்தவங்க, ஆக்கிரமிப்பு செய்ய வந்தவங்க வெட்டிப் போட்டாங்க. நாலந்தாவுல புக் எல்லாம் எரிச்சிப் போட்டாங்க. 2000 பேருக்கு மேல ஆச்சார்யரை எல்லாம் வெட்டிப் போட்டாங்க. அதான் ஞானம் வளராம வெறும் நம்பிக்கையா மட்டும் போயிருச்சி. சிவனை ஆதியோகின்னு யோக கலாசாரத்துல சொல்வாங்க. அந்த சிவன் மலை மேல தவம் செஞ்சிக்கிட்டிருந்தான். அவன் அப்போ துறவி. அதுனால ஒண்ணும் பிரச்சனை வரலை. ஆனா அப்புறம் அந்த இளவரசி பார்வதி தேவியை கல்யாணம் கட்டிக்கிட்டான். அதுனால அதுக்கப்புறம் அவனால அங்க இருக்க முடியலை. குளிர்காலத்துல காசிக்கு வர்றது, வெயில் காலத்துல இமயமலைக்குப் போறதுன்னு ஒரு அரேஞ்மெண்ட் பண்ணினாங்க. காசி யந்த்ரத்துக்கு யந்திரம். சூப்பர் பவர். இது ஆதியோகி சிவனே உருவாக்கிய நகரம். ஆனா படையெடுத்து வந்தவங்க இந்த புனிதமானதை எல்லாம் உடைச்சு நாசப்படுத்திட்டாங்க. அதுனால கொஞ்சம் வீக் ஆக இருக்குது. ஆனா நாம அதை மீட்டெடுக்கலாம். முக்திக்கான ஒரு எந்திரம் இங்கே இருக்குது. இங்கே சக்திக்காக 54 கோவில் சிவனுக்காக 54 கோவில் இருக்குது. மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதைப் போல காசியிலும் அப்போ 72,000 கோயில்கள் இருந்தன. மொத்தமாக முன்பு 26000 கோயில் இருந்தது. படையெடுத்து வந்தவர்கள் அதைத்தான் முதலில் உடைத்துப் போட்டார்கள், நகை, பணம் எடுப்பதற்காக. தற்போது 3000 கோயில்கள் தான் இருக்குது. இந்த நகரம் வெறுமனே வாழும் இடமாக இல்லாமல், ஒருவர் தன் எல்லைகளைக் கடந்து செல்ல வகுக்கப்பட்ட தொழில்நுட்பமாக அமைந்துள்ளது. மிகச் சிறிய இந்த பிண்டம், பரந்த அந்த அண்டத்துடன் தொடர்பில் இருக்க வகுக்கப்பட்ட தொழில்நுட்பமாக உள்ளது. இந்த முழு செயல்முறையுமே அகண்ட அண்டத்தின் உடலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரம்மாண்டமான மனித உடல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. இதனால் தான், “நீங்கள் காசிக்கு போனால் போதும், எல்லாம் முடிந்துவிட்டது,” என்னும் நம்பிக்கை உருவானது. நீங்கள் காசியை விட்டு வெளியே வரவே விருப்பப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அண்டத்தின் உயிராற்றலுடன் தொடர்பில் இருக்கும்போது, வேறெங்கு செல்ல விருப்பப்படுவீர்கள்? **** மேலும் காசி பற்றி… http://ramanans.wordpress.com/2012/01/30/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/ http://ramanans.wordpress.com/2012/01/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ http://ramanans.wordpress.com/2011/11/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/
 13. 1 point
  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி . தில்லுமுல்லுகள் செய்பவர்கள் அதைப்பற்றி சொல்வது காலத்தின் கோலம் . கோமகன் எந்த தளத்திலும் எந்த ஊடகத்திலும் கோமகனாகவே இருக்கின்றார் . அவருக்கு வேறு முகமூடிகளோ அல்லது கூட்டணிகளோ தேவையில்லை . ஏனெனில் அவரது எழுத்திலும் கருத்துக்களிலும் அவருக்கு நிறையவே நம்பிக்கை இருக்கின்றது . அது இல்லதவர்கள்தான் புலம்புவார்கள் . மேலும் யாழ் கள உறவுகள் வேறு இடங்களில் எழுதக்கூடாது என்பது நிர்வாக விதிமுறையாக இருந்தால் அறியத்தாருங்கள் .
 14. 1 point
  உங்கள் சேவைகள் பாராட்டுக்குரியவை விலை மதிக்கமுடியாதவை கடவுள் உங்களுடன் இருப்பார்
 15. 1 point
  அளவோடு எடுத்து சுபியை ரசிக்கிறதிலேயே குறியா இருந்த மாதிரி எனக்கு விளங்குது .....எல்லா ஆம்பிளைகளும் அப்படித்தான்.....
 16. 1 point
 17. 1 point
  சுண்டல் தேனி, பூ என்று நினைத்து வேப்ப மர பிசினில் உக்காந்துட்டுதாம். அன்டைக்கு பிடிச்ச கடுப்பு..
 18. 1 point
  சில நேரம் பிள்ளைகளுடன் இருந்து, சில நிகழ்ச்சிகள் பார்க்கும் போது.... எக்கச்சக்கமாக... மாட்டுப் பட வேண்டி வரும்.
 19. 1 point
  தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான். அசத்தல் கருத்து: நெடுக்காலபோவான். பதிவு இலக்கம் - 10 http://www.yarl.com/forum3/index.php?showtopic=124093&hl= தலைப்பை இணைத்தவர்: பிழ‌ம்பு. அசத்தல் கருத்து: சயானி. பதிவு இலக்கம் - 5 http://www.yarl.com/forum3/index.php?showtopic=124115&hl=
 20. 1 point
  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், நிகழ்ச்சி நிரலை... ஏன் ஆங்கிலத்திலை அடிச்சிருக்கு.
 21. 1 point
  தோற்றது நான் - நல்ல தலைப்பு ஆனா கவிதைக்கு ஒரு துளியும் சம்பந்தமில்லாதது. தோற்றுவிட்டு, தில்லுமுள்ளு செய்துவிட்டு பல தளங்களுக்குள் ஓடி மறைவது போல் தான், தோற்றும் விட்டோமென சிங்கள *********** பின் பம்முகின்றார்கள்.
 22. 1 point
  நல்லாத்தான் ஆராய்ந்து எழுதியிருக்கு. எதுக்கும் நீங்களும் ஒருக்காக் காதலித்துப் பார்த்துவிட்டு அனுபவத்தை எழுதினால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் சுண்டல்.
 23. 1 point
  பிரகாசின் புதிய வீடு எனது வீட்டில் இருந்து ஒன்றும் பெரிய தூரத்தில் இல்லை .டொராண்டோவின் கிழக்கு எல்லையில் காடுகளாக காட்சியளிக்கும் அந்த மிக பழைமை வாய்ந்த அந்த குடியிருப்புகளில் ஒரு பழைய வீட்டை வாங்கி அதை உடைத்து புது வீடு கட்டியிருந்தார்கள் .நாங்கள் அங்கு செல்லும் போது ஏற்கனவே சில நண்பர்கள் வந்துவிட்டிருந்தார்கள். டிரைவ் வேயில் காரை நான் பார்க் பண்ணும் போதே “வாங்கோ வாங்கோ,அப்பா ------- வந்திருக்கின்றார்“ என்றபடி சுபிதான் கதவை திறந்தவர் எனது மனைவியையும் பெயர் சொல்லி “எங்கேயைப்பா நீர் இப்படியெல்லாம் உடுப்பு தேடிப்பிடித்து வாங்குகின்றநீர். நல்லா இருக்கப்பா “ என்று எடுத்த எடுப்பிலேயே சிக்ஸ் அடித்தார். “வீட்டிற்குள் போயிருந்து கதைக்க தொடங்கினால் பிறகு மறந்து போவோம். கையோட வீட்டை ஒருக்கா பார்ப்பமோ “என்று சுபியிடம் கேட்டேன். முரளி அண்ணாவுடன் போய் கதைத்துகொண்டு இருங்கோ ஒரு நிமிசத்தில வாறன் என்று சுபி மேல்மாடிக்கு சென்றுவிட்டார். .முரளி ,நேசன் இன்னும் வேறு சில நண்பர்கள், மனைவிகள் சகிதம் உள்ளே இருந்தார்கள் .பரஸ்பரம் கை கொடுக்கல்களும் கட்டி பிடிப்புகளுக்கும் பின்பு “பிரகாஸ் எங்கே” என்று நான் கேட்கவும் “மச்சான் நீ வாறாய் என்று தான் இந்த பிராண்ட் வாங்கினான்” என்று கிலைன்லவற்றை காட்டிக்கொண்டு பிரகாஸ் வருகின்றான். “நீங்கள் உதிலை இருந்தால் அசைய மாட்டீர்கள் வாங்கோ வீட்டையும் ஒருக்கா பார்ப்பம் “என்ற படி சுபி வருகின்றார் .முதல் போட்டிருந்த அந்த உடுப்பை மாற்றி புது கருப்பு நிற சுடிதார் போட்டிருந்தார்.அதுவும் கீழே ஐயர்மார் கட்டும் பஞ்சகட்சரம் போல புதுவிதமாகதான் இருந்தது. “புது வீடு வாங்குகின்ற ஐடியா தான் முதலில் எங்களுக்கு இருந்தது ,பிறகு சிலர் வீடு கட்டுவதற்கும் மோட்கேஜ் எடுக்க வரும் போதுதான் நாமும் ஒரு வீட்டை கட்டினால் என்ன என்று நினைத்தோம்” என்று சுபி தொடங்க “என்னத்தையாவது நீயே செய்யென்று சொல்லிவிட்டேன் ,ஆள் நல்லாத்தான் கஷ்டப்பட்டது. இப்ப எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல திருப்தி .நினைத்ததை விட மிக வடிவாகத்தான் வந்திருக்கு” இது பிரகாஸ் . “வீடு நாங்கள் கட்டவில்லை எல்லாம் கூகுள் தான் உபயம் .முதலில ஒரு தமிழ் ஆளைத்தான் பிடித்தோம் ,அதுதான் உங்கட இந்து கல்லூரி நண்பர் ,அவர் காசும் கனக்க கேட்டார் அதைவிட பெரிய கொண்டிசன்கள் எல்லாம் போட்டார் .மெல்லமாக காய் வெட்டிவிட்டு பின்னர் ஒரு இத்தாலியன் பில்டரை பிடித்து கட்டினோம் .ஆளும் நல்ல FLEXIBLE காசும் ஒரு லட்சதிற்கு கிட்ட குறையத்தான் முடிந்தது . ஒவ்வொரு அங்குலமும் எங்கட சொல்லு கேட்டுத்தான் கட்டினானார்கள். சும்மா சொல்ல கூடாது கல்லிலே கலை வண்ணம் கண்டிருந்தான் இத்தாலியன் . அந்த மரங்கள் சூழ்ந்த பெரும் காணியில் இரட்டை முன் கதவுடன் திறந்த உள்ளமைப்பான வீடு .(OPEN CONCEPT) ஐந்து படுக்கை அறைகளும் குளியலறையுடன். (ENSUITE) மாபிளில் போட்ட கவுண்டர் டோப்புடன் இருந்தது .குசினி கவுண்டர் டாப், கீழ்பரப்பு நிலம் எல்லாம் கருப்பு கிரனைட். குசினியில் இருந்துஅடுத்த குடும்ப இருப்பிடம் விலை கூடிய கண்ணாடியால்(BEVELED GLASS). மறைக்க பட்டிருந்தது வீட்டின் பின் பக்கமும் இரு கதவுகளால் ஒரு பெரிய டேக் இற்கு செல்கின்றது .ஒவ்வொரு ரூமும் வெவ்வேறு ஸ்டைலில் அலங்கரிக்கபட்டிருந்தன .ஜன்னல் திரை சேலைகளும், சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களும், சிற்பங்களும், பெரிய பெரிய மினுங்கும் பூச்சாடிகளும் நடுவீட்டில் இருந்த மர ஊஞ்சலும் வீட்டிற்கு ஒரு இந்திய தன்மையை கொடுத்திருந்தது. “வீடு அழகு அதன் அலங்காரம் அழகு அதைவிட அதை அலங்கரித்தவர் தான் இன்னும் அழகு” என்று நேசன் பகிடி விட “அவாவும் அப்படித்தான் நினக்கின்றா ” என்று பிரகாஸ் சொல்ல எல்லோரும் சிரிக்க “இந்த வீட்டை கட்டி முடிக்க நான்பட்ட பாடு எனக்குதான் தெரியும். கிட்டத்தட்ட இப்படி ஒரு வீடு இங்கு ஒரு மில்லியனுக்கு மேல் போகுது எங்களுக்கு இது எண்ணூறுக்கு குறையத்தான் முடிந்தது. நான் கஷ்டப்பட்டதால தான் இவ்வளவு மிச்சமும் என்று அவருக்கு விளங்குதில்லை. வாங்கோ பேஸ்மன்ட்டிற்கு போவோம்”என்றபடி சுபி கீழே போகின்றார் . கட்டி முடிக்கப்படாத பேஸ்மன்ட்டில் ஒரு மினி பாரே இருக்கு. திறந்த அந்த நிலகீழ்அறையில் கதிரைகள் போட்டு ஒரு பெரிய டி.வி யும் வீடியோ விளையாட்டுகளும் இருந்தது ஆண் ,பெண் என்ற பாகுபாடில்லாமல் விஸ்கி வோட்கா,வைன் என்று அவரவர் விருப்பத்திற்கு எடுத்துக்கொள்ள பாட்டி களை கட்டுகின்றது. பலவிதமான சோட்ஈட்ஸ்களும் சலாட், குயுகம்பர் ,செலரி என்று தொட்டுதின்ன DIPPING SAUCE உம் அடுக்கபட்டிருக்கு. தண்ணி உள்ளே போக இன்னனதுதான் என்றில்லாமல் பிள்ளைகள்,அவர்கள் படிப்பு, வேலைஇட பிரச்சனைகள், வீட்டு விலை ,சினிமா, அரசியல் என்று அவனவன் தனக்கு தெரிந்ததை அவிழ்துவிடுகின்றான். “ மன்னிக்க வேண்டும் சமைக்க இன்று நேரம் கிடைக்காததால் ராஜாராம் சாப்பாடுதான். பரவாயில்லைதானே. கொஞ்சம் ஒயிலி ஆனால் டேஸ்டாக இருக்கும்.அவசரமில்லை ஆறுதலாக இருந்து சாப்பிட்டுவிட்டு போங்கோ. .விரும்பியவர்கள் படுத்துவிட்டு நாளைக்கும் போகலாம்” என்கின்றான் பிரகாஸ். தண்ணி ஆறாக ஓடுது .முரளி “நிலா அது வானத்து மேலே “என்று இளையராஜாவை இழுக்க தொடங்க மற்றவர்களும் கை தட்ட பாட்டு உச்சத்தை தொடுகின்றது .முரளிக்கு பாட்டி என்றால் பாட்டு பாடியே ஆகவேண்டும்.பழையது புதியது பைலா என பாட்டுகள் தொடர ஒரு சிலர் ஆடவும் தொடங்குகின்றார்கள். சுபி வழக்கம் போல் தனக்கு பிடித்தமான “வை ராசா வை உன் வலது காலை வை” என்ற பஞ்சதந்திரம் பாட்டை போட்டு துப்பட்டாவை சுழட்டி சுழட்டி அந்த மாதிரி ஆடுகின்றார். எல்லோருமே ஆடினாலும் சுபியின் ஆட்டம் ஸ்டேப் எல்லாம் வைத்து தனித்தன்மையாகவே எப்போதும் இருக்கும். வேறு சிலர் ஆங்கிலபாட்டுக்களை போட்டு ஆடினாலும் சுபிக்கு தமிழ் பாட்டு போட்டு தமிழ் நடிககைகள் மாதிரி ஆடத்தான் விருப்பம் . வழக்கம் போல் நான் பாட்டிற்கும் ஆட்டத்திற்கும் உற்சாகம் கொடுத்துக் கொண்டு எனது கிளாசை திரும்ப திரும்ப நிரப்பவதிலேயே குறியாக சோபாவின் ஒரு மூலையில் மித மிஞ்சிய மயக்கத்தில் இருக்கின்றேன் . சிலர் சாப்பிட மேலே செல்கின்றார்கள். யாரோ எனது முழங்காலுடன் தலை வைப்பதை உணர்ந்து குனிந்தால் தரையில் இருந்து எனது காலுடன் ஒட்டியபடி பிரகாஸ் . “என்ன மச்சான் சந்தோசம் கூடிட்டிது போல” என்றபடி நான் அவனது தலையை தடவ அவனது உடம்பு சிறிது குலுங்க விசும்புகின்றான் . “YOU GUYS ARE SO LUCKY. எனக்குத்தான் இப்படி அமைந்திட்டிது. நான் என்ன பாவம் செய்தேன் ” என்றவனின் முகத்தை நான் நிமிர்த்த “ஒன்றுமில்லை” என்றபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழும்பி வாஸ் ரூமை நோக்கி போய்விட்டான். சுபி “உப்பு கருவாட்டிற்கு” மனிஷா கொய்ராலாவின் ஸ்டெப் வைத்து ஆடிக்கொண்டு இருக்கின்றார். பிரகாஸ் திரும்பி ஏதும் நடவாதவன் போல் வந்து எங்களுடன் இருந்துவிட்டு எல்லோருக்கும் சாப்பாடும் தந்து விடையனுப்பிவிட்டான் . எனக்கு எல்லாமே ஒரு கனவு மாதிரி இருந்தது .இவனுக்கு திடீரென்று அப்படி என்ன நடந்தது. கார் ஓடிக்கொண்டிருக்கும் மனைவியிடம் பிரகாஸ் நடந்துகொண்ட விதம் பற்றி சொன்னேன். அப்பா இது என்ன புதுக்கதையே, கலியாணம் கட்டிய நாளில் இருந்து உந்த பிரச்சனை இருந்துகொண்டுதானே இருக்கு .சுபியின் ஸ்டைலும் போடும் உடுப்புகளும் பிரகாசுக்கு பிடிப்பதில்லை. இரண்டு மூன்று தரம் பிரகாஸ் கை வைத்ததும் உங்களுக்கு தெரியும் தானே .சுபி ஒரேயடியாக பிரகாசுக்கு சொல்லிவிட்டாள் “இனி கை வைக்கின்ற வேலையெல்லாம் சரிவராது அது டிவேர்சில் தான் போய்முடியும்” என்று .பிரகாஸ் “உந்த வேலையால் தான் நீ இப்படி திரிகின்றாய், உந்த வேலையை விடு” என்று வேறு கத்தினவராம். சுபி யாழ்பாணம் கொன்வென்ட்டில் படித்தவள் அங்கு நெட்போல் டீமில காற்சட்டை போட்டு விளையாடினவள். அவளது தாயே அவளுக்கு அந்த மாதிரி உடுப்புகள் எல்லாம் தைத்துகொடுத்திருக்கின்றார். அது அவளுக்கு பழக்கமான ஒன்றாக போய்விட்டது. சுபியின் அண்ணன் முரளியும் இண்டைக்கு பாட்டிக்கு வந்தவர்தானே? அவர் பாடேக்க தானே சுபி எழும்பி ஆடத்தொடங்கியவர். உதெல்லாம் ஒரு பெரிய விடயமே .பிரகாஸ் செய்கின்ற இரண்டு வேலைகளின் சம்பளத்தை கூட்டினாலும் சுபியின் சம்பளம் வராது. வங்கியில் வேலை,மோட்கேஜ் சம்பந்தமாக அடிக்கடி கூட்டங்கள்,சந்திப்புகள்,பாட்டிகள் என்று போறவள். ஏற்கனவே சுபிக்கு ஸ்டைலாக வெளிக்கிட நல்ல விருப்பம். சுபி அந்த மாதிரி உடுப்புகள் போட்டுக்கொண்டு BMW இல் வந்து இறங்கும் போது எனக்கே பெருமையாக இருக்கின்றது இதில அவருக்கு என்ன குறைந்து விட்டதாம். தனது சுதந்திரத்தில் நீங்கள் தலையிட கூடாது என்று அடித்து சொல்லிவிட்டாளம். அதன் பின் ஆள் இப்ப மூச்சு காட்டுகின்றதில்லையாம். மனதில அடக்கி வைத்திருப்பது இன்று தண்ணியில் கொஞ்சம் வெளியில வந்திட்டுது போல . இந்த ஆம்பிளைகள் எல்லோருமே உந்த விசயத்தில் உதவாத கேசுகள்தான் ஆரும் பொம்பிளைகள் கொஞ்சம் வடிவா ஸ்டைலா இருந்தா போய் பல்லை காட்டுவினம். படிச்சு நல்லவேலைக்கு போனால் புழுகி தள்ளுவினம் ஆனால் தங்கட மனுசிமார் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி அடக்கமாக இருக்கவேண்டும். நீங்கள் மட்டும் என்னவோ திறமோ? சும்மா முற்போக்கு என்று விடுகை வேறு விடுவீர்கள் ஆனால் உங்களுக்கும் நான் செய்யும் பலவிடயங்கள் பிடிக்காது என்று எனக்கு தெரியும் ஆனால் நல்ல பிள்ளைக்கு நடிக்க காட்டிக்கொள்ள மாட்டீர்கள். நானும் சுபி மாதிரி இருந்திருந்தால் உங்களுக்கு பிடித்திருக்காது. உங்களுக்காக நான் இப்படி இருக்கவில்லை இப்படி இருக்கத்தான் எனக்கு இருக்க விருப்பம் அதை விளங்கிகொள்ளுங்கோ. பிரகாஸ் கூட வேறு ஒருவர் மனைவி அப்படி இருந்தால் பெருமைதான் பட்டிருப்பார் ஆனால் தனது மனைவி அப்படி இருப்பது அவனுக்கு பொறுக்குதில்லை .உந்த ஆம்பிளைகளே உப்படித்தான். எனக்கு ஏன் தேவையிலாமல் வாயை கொடுத்து “இப்ப இது தேவையா “ என்பது போலிருந்தது .காரை பார்த்து ஓட்டும் என்றேன். உதுதான் ஆம்பிளை புத்தி. எவ்வளவு வருடங்கள் நான் கார் ஓடுகின்றன். எப்ப பக்கத்தில் இருந்தாலும் ஏதாவது பிழை பிடித்துக்கொண்டு ........ ஐயோ என்னை விட்டால் காணும் சாமி.
 24. 1 point
  வருகை தந்த சுமே, உடையார், இசை, யாயினி, நுணா ஆகியோருக்கு நன்றிகள். இன்றைய பாடலாக, தாழம்பூ திரைப்படத்திலிருந்து, கே.ஆர். விஜயாவின் நடிப்பில். பி. சுசீலாவின் குரலில், பங்குனி மாதத்தில் ஓர் இரவு...... http://youtu.be/f4uzLthDFxA
 25. 1 point
  தமிழினம் கரவுவஞ்சகம் இல்லாத இனம். ஐயோ என்றவருக்கு ஆதரவுதரும் இனம்..உதவிமனப்பான்மை நிறைந்த இனம்...மற்றவருக்கு கெடுதல் வருவதை விரும்பாத இனம்.எதிரிகளும் நல்லவனாக நடித்து ஏமாற்றக்கூடிய இனம்.எதிரிக்கும் மூன்றுவேளை உணவு கொடுத்து பராமரிக்கும் இனம். இப்படி எத்தனையோ.........நம்பி ஏமாறும் இனம் தமிழினம். இதனால்த்தான் எமது வரலாறுகளும் நாடுகளும் அழிந்துகொண்டிருக்கின்றன.
 26. 1 point
  தொடர்ந்து நல்ல கதைகளை யாழில் படைக்க... புத்தனுக்கு வாழ்த்துக்கள்.
 27. 1 point
 28. 1 point
 29. 1 point
 30. 1 point