• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. Gari

  Gari

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   1,352


 2. ஜீவா

  ஜீவா

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   5

  • Content Count

   3,551


 3. nunavilan

  nunavilan

  கருத்துக்கள நிர்வாகம்


  • Points

   4

  • Content Count

   41,762


 4. ArumugaNavalar

  ArumugaNavalar

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   4

  • Content Count

   1,373Popular Content

Showing content with the highest reputation on 06/18/2013 in all areas

 1. 5 points
  அமுதா.. எணேய் பிள்ளை எழும்பணை ராசாத்தி பள்ளிக்குடத்துக்குப் போகவேணுமெல்லே இன்னும் என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு, கெதியா எழும்பணை. ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்.. காலங்காத்தாலையே புலம்ப ஆரம்பிச்சிட்டியேம்மா, போங்கோ போய் அப்பாவை வரச் சொல்லுங்கோ எப்ப உங்கண்டை முகத்திலை முழிச்சனான் இண்டைக்கு புதுசா எழும்ப .. அப்பாவை வரச்சொல்லணை. எத்தனை நாளைக்குத்தான் இப்படி அப்பா முகத்திலை முழிக்கப் போறியோ, குமரா விட்டாய் கலியாணம் கட்டி போற இடத்திலை என்ன பாடுபடப்போறியோ... என்னங்க, உங்கண்டை ஆசை மகள் கூப்பிடுறாள் போங்கோ நான் ஏதும் சாப்பாடு தேடவேணும், பாவம் அவள் பசி இருக்க மாட்டாள், அப்படியே உவன் மதனையும் எழுப்பி விடுங்கோ பள்ளிக்குடம் போற பஞ்சியிலை படுத்திருக்கிறான். கணபதிப்பிள்ளை,சரஸ்வதியின் மூத்த மகள் அமுதா,இளையவன் மதன். பத்து பிள்ளை பெத்தாலும் பார்க்க வசதியிருந்தாலும், நாமிருவர் நமக்கிருவர் என்பதற்கிணங்க ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்றென்று பெற்ற பிள்ளைகள். கணபதிப்பிள்ளையர் போஸ்ட்மாஸ்டரா இருந்ததாலையும் கனக்க நிலபுலன்கள் இருந்ததாலையும் தறையளைக் குத்ததைக்கு விட்டும், வளவுக்குள்ளை இருந்த தென்னை,மாமரம்,தேசிக்காய் என்று எல்லாத்தாலையும் வருவாய்க்கு குறைவில்லை, அதே போல ஊருக்கு உதவி செய்வதிலையும் வஞ்சகமில்லாதவர்கள். அமுதா உயர்தரமும், மதன் பத்தாம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தார்கள். அமுதா என்ன ஆச்சணை ஏன் இண்டைக்கு நேரத்துக்கே வந்திட்டாய் பள்ளிக்கூடத்திலை ஏதும் விஷேசமோ? இல்லையணை ஆமிக்காரன் யாழ்ப்பாணத்துக்குள்ளை வந்திட்டானாம், முன்னேறிக்கொண்டிருக்கிறானாம், இயக்கப்பொடியள் அறிவிச்சுக்கொண்டு வாறாங்கள் கெதியா பாதுகாப்பான இடத்தை தேடி ஓடட்டாம், றோட்டெல்லாம் ஒரே வாகனமும், அம்புலன்ஸுமா கூவிக்கொண்டு பறக்குது. அறிவிச்சுக்கொண்டு இஞ்சாலையும் வரப்போறாங்கள் கெதியா எடுக்கிறதை எடுத்து அடுக்கணை எல்லாச்சனமும் போகுது அதுகளோடை நாங்களும் போக.! எங்கையடி போக? எங்களுக்கு ஆர் தெரிஞ்ச சனம் இருக்குது, இரு அப்பாவும் வரட்டும். அது சரி எங்கை மதனைக் காணேல்லை அவன் வருவனம்மா நீங்கள் கெதியா சாமானை அடுக்குங்கோ அப்பா வர முடிவெடுப்பம் ஆனால் அதுக்குள்ளை ரெடியா இருந்தால் நல்லது தானே. "என்ன இஞ்சை சத்தம்? என்ன சரசு உடுப்பெல்லாம் அடுக்கிறாய் எங்கை போறியள்?" அப்பா, ஆமி யாழ்ப்பாணத்துக்கு வந்திட்டானாம் முன்னேறிக்கொண்டிருக்கிறானாம், இடம்பெயரச்சொல்லி இயக்கம் அறிவிச்சுக்கொண்டு இருக்கிறாங்களப்பா. "அதுக்கு எங்கை போகச் சொல்லுறாய்? இவ்வளவத்தையும் விட்டிட்டுப் போகவோ? நான் செத்தாலும் என்ரை கட்டை இங்கை தான் வேகுமே தவிர எங்கையும் போக மாட்டேன். நல்ல கதை கதைக்கிறியள்." இஞ்சை பாருங்கோ நாங்கள் வச்சிருக்கிறதே ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை அதுக்கு ஒண்டு நடந்திட்டால் நாங்கள் உயிர் வாழுறதிலை அர்த்தம் இல்லை உங்களுக்குத் தெரியும் தானே இந்தியன் ஆமியும், சிறீலங்கன் ஆமியும் முந்தி பொடி பெட்டையளை என்ன பாடுபடுத்தினவங்கள் என்டு, தெரிஞ்சுகொண்டும் அதுகளைக் காவுகுடுக்கப் போறிங்களே, உந்தச் சனம் முழுக்கத்தானே போகுது, ஆண்டவன் மேலை பாரத்தைப் போட்டிட்டு வாங்கோ போவம். நடக்கிறது நடக்கட்டும், பிறந்தனாங்கள் எண்டைக்கோ ஒரு நாள் சாகத்தானே போறோம், அதுகள் பிள்ளைகளாவது சந்தோசமா இருக்கட்டும். "சரசு....." வாங்கோ அப்பா, மதனும் வந்திட்டான். நகைகளையும்,முக்கிய ஆவணங்களையும் கையில் சிக்குப்பட்ட உடுப்புக்களையும் எடுத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக நடக்கிறார்கள் விடியலில்லா பொழுதுகளை வரவேற்க. கணபதிப்பிள்ளையற்றை மனமோ அந்த மண்ணிலேயே தொலைந்துவிடுகிறது, ஒரே செல்ல மகளுக்காக ஆசையாகப் பார்த்துப்பார்த்துக் கட்டிய வீடு அது வெறும் கல்லும் மண்ணும்,சீமெந்துமல்ல அவரின் இரத்தமும்,கண்ணீரும்,வியர்வையும் கலந்து கட்டிய வீடு அது ஒவ்வொரு மரஞ்செடியும் கூட பிள்ளையப் போல பாசமாக வளர்க்கப்படவை, உயர்றிணைகளுடன் மட்டுமல்ல அஃறிணைகளுடனும் கூட அவ்வளவு அன்னியோன்யம் அனைத்தையும் துறந்து ......"உயிர் பிரியும் வலியை உணர்ந்த நொடிகள் அவை". கண் முன்னே சாவுகள், விழுப்புண்களை எல்லாம் கடந்து காலம் காலாறிய இடம் முத்தையன் கட்டு. பானைக்குள்ளிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக வந்த இடமோ வாழ்ந்த இடத்திற்கே திரும்பப் போகலாமோ என்ற வலிகள் நிறைந்த பூக்களின் வித்துக்களைத் தான் விதைத்துத் தள்ளின. பிள்ளைகளின் படிப்பும் போச்சு,எந்த வேலையும் இல்லை என்ன செய்வது என்று தெரியாத சூன்ய வெளியில் தினக்கூலிக்குப் போனார் கணபதிப்பிள்ளை. பிள்ளைகளையாவது கரையேற்றி விட்டால் செத்தாலும் பரவாயில்லை இதுகளை வச்சுக்கொண்டு உயிரைப் பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டி இருக்கே கணபதிப்பிள்ளையின் புலம்பலுக்கு ஆறுதல் கூறினாள் சரசு.. "இருக்கிற நகையளை வித்து, கொஞ்சம் கடன் வாங்கியாச்சும் உவன் மதனை லண்டனுக்கு அனுப்பி விடுவம் உங்கண்டை பெறாமகன் பொடியன் ஒருத்தன் அங்கை இருக்கிறான் தானே அவன் பார்ப்பான் தானே"! ம்ம்ம்... இது நல்ல யோசனையாத் தான் இருக்கு சரி அவனை அனுப்பி விடுவம். நாட்களும் ஓடின அமுதாவுக்கு ஒரு சம்மந்தம் வந்திருந்தது , குறிப்புப் பார்த்து பத்துக்கு ஒன்பது பொருத்தமாம் பொடியன் வாத்தியார், வவுனியாவிலை தான் படிப்பிக்கிறான் போட்டோ பார்த்து அமுதாக்கும் பொடியனுக்கும் பிடிச்சுப்போட்டுது, வாங்கோ போய் கொழுக்கட்டை மாத்திப்போட்டு வரும். இது தான் அவர்களின் கடைசி நாள் என்பதை எப்படி அறிவார்கள்? கொழுக்கட்டை மாத்திவிட்டு வவுனியாவில் இருந்து திரும்பும் போது ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் பஸ்ஸில் வந்த அத்தனை பேரும் உடல் சிதறிப்பலி என்ற அடுத்த நாள் தலைப்புச் செய்தி தான் கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதியர்களை அடையாளப் படுத்தியது. தனிமரமாகி விட்டாள் அமுதா, இறுதிக்கிரியை செய்யும் அளவுக்குக் கூட உடல் கிடைக்கவில்லை. அத்தனை பேரின் எலும்புகளும்,சதைகளும் செஞ்சிலுவைச்சங்கத்தின் மேற்பார்வையில் புலிகளால் விதைக்கப்பட்டது என்ற நாழிதழ் படம் மட்டுமே அவளின் கைகளில் வந்து சேருகிறது. சில கணங்களுக்கு முன்னே சீவித்த உயிர்கள் அட்டைப்படமாய் அந்த வீட்டின் சுவர்களில் காலத்தின் கதைகளாய் ஆணி அடிக்கப்பட்டுவிட்டது. செல்லமாகவே வளர்ந்தவள் அமுதா, எவ்வளவு கஸ்டம் வந்த போதும் அவளை எந்தக் கெடுதலும் தீண்டவிடாமல் பார்த்தவர்கள் இன்று யாருமே இல்லாத அநாதை போல் ஆகிவிட்டாள், தூக்கங்களைத் தொலைத்தவள் மௌனங்கள் மட்டுமே பேசும் கானகத்தின் நடுவே காட்டேரிகளும், கொள்ளிவால்ப் பேய்களும் மட்டுமே குடித்தனம் நடத்துவதாய் கனவினில் கண்டாள். யாரிடம் போக? மதனின் நிலை கூட என்னவென்று தெரியாது, லண்டன் போய்ச் சேர்ந்து விட்டானோ இல்லை எங்கும் இடையில் நிக்குறானோ எந்தத் தொடர்பும் இல்லை, தாய் தந்தையரின் இழப்புச் செய்தி கூட அறிவானோ என்ன ஏது என்றே தெரியாது அவனை அனுப்பவென்று ஊரில் வாங்கிய கடன் வேறை இருக்கு, மூளைப்பரப்பில் அமிலங்களாய் அரித்துக்கொண்டிருந்தது வலிகளின் வடுக்கள். என்ன செய்வதென்றே அறியாதவள் அலரி விதையை அரைத்துத் தின்றுவிட்டாள். அவளது நல்ல காலமோ,கெட்ட காலமோ எதிர்வீட்டு கனகம்மாக்கா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய் காப்பாற்றி விட்டார். "என்னடி லூசுத்தனமாப் பண்ணிப்போட்டாய்? உனக்காக நாங்கள் இருக்கிறம் நீ ஏன் கவலைப்படுறாய், என்னை உன்ரை அம்மாவா நினைச்சுக்கொள். பார் எத்தனை சனம் தாய்,தந்தை இல்லாம பிள்ளையள் இல்லாமல் இருக்குதுகள், அதுகள் எல்லாம் வாழேல்லையா? இப்படி எல்லாரும் நினைச்சால் இஞ்சை ஒருத்தருமே மிஞ்ச ஏலாது, பார் என்ரை அவர் எல்லைப்படைக்குப் போய் ஆமியின்ரை சினைப்பரிலை வீரச்சாவு, நான் என்ன செத்தா போட்டேன்? நானும் போனால் என்ரை இந்த குருமனை யார் பார்க்கிறது சொல்லு? ஒரு நாளும் இப்படி மொக்கு வேலை பார்க்காதை சரியோ, நான் உனக்கு இருக்கிறேன். உனக்குத் தான் கல்யாணம் முற்றாயிட்டுதே ஒரு வருசம் கழியட்டும் போய் அவையோடை கதைச்சு உன்னை ஒப்பேத்தி விடுறன் நீ சந்தோசமா வாழு சரியே"! நாட்களும் வருடங்களாயின.. அட.. அமுதாவே வா பிள்ளை, எப்படி இருக்கிறாய்? குறை நினைக்காதை உன்ரை அம்மா,அப்பான்ரை விசயம் கேள்விப்பட்டனாங்கள் வரமுடியேல்லை உனக்குத் தெரியும் தானே வாறது எவ்வளவு கஸ்டம் என்று ஏதும் ஒன்று நடந்திட்டால் நாங்களும் உன்ரை அம்மா,அப்பா போன இடத்துக்குத்தான் போக வேணும். ஏன் உந்த தேவையில்லாத வேலை என்று தான் வரேல்லை. அது சரி திடீரென்று இந்தப்பக்கம்? அது வந்து அவளோடை அம்மா,அப்பா இருக்கேக்குள்ளை முற்றாக்கின விசயம் அது தான் என்ன மாதிரி என்று பேசிப்போட்டுப் போவம் என்று வந்தனாங்கள் தனிச்சுப்போனாள் அமுதா அவளோடை வாழ்க்கை சந்தோசமா இருக்கட்டும் என்று தான் , வந்த விடையத்தைச் சொல்லி முடித்தாள் கனகம்மா. "என்னது கலியாணமோ? என்ரை பொடியனுக்கு வேறை இடத்திலை பொம்பிளை பார்த்திருக்கிறம், இந்தப்பெட்டை ராசி இல்லாதது அது தான் கொழுக்கட்டை மாத்தின அண்டைக்கே தாய்,தேப்பனை காவு வாங்கிப்போட்டுது. அதை விட பேசின படி நகையும், சீதனமும் தருவிங்களோ? சும்மா கந்தறுந்ததுகளுக்கு எல்லாம் என்ரை பொடியனைக் கட்டிக்குடுக்கலாமே? வந்ததுக்கு ஏதும் குடிச்சிட்டுப் போங்கோ வெளிய போய் சொல்லிடாதையுங்கோ" அவளின்ரை தம்பி தான் லண்டனுக்கு என்று போயிருக்கிறானே. போனதும் நீங்கள் கேட்டதை விட அதிகமாகவே செய்யிறம், அநாதையா நிக்கிற பொண்ணுக்கு வாழ்வு குடுங்கோவன் என்று தன் பங்குக்கு கெஞ்சினாள் கனகம்மாக்கா. "அதுவரைக்கும் என்ரை பொடியன் என்ன நெத்துக்கு விடவே? அது தான் சொல்லிப் போட்டேனெல்லே போங்கோ போய் வேலையைப் பாருங்கோ" மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்த அமுதா "இவனெல்லாம் ஒரு ஆம்பிளை சீ... தூ.. மனசுக்குள் காறித்துப்பிவிட்டு, கல்யாணச் சந்தையில் விலை போகவில்லைய என்ற வேதனையோடு வீடு திரும்பினாள்". பட்ட கால்லையே படும், கெட்ட குடியே கெடும் என்ற வாக்கு மட்டும் ஏனோ அமுதா வாழ்வில் பொய்க்கவில்லை. விழுந்து எழலாம் என்று நினைக்கும் போதெல்ல்லாம் சாணேற முழம் சறுக்கும் கதையாய் மதனும் மலேசியாவில் வைத்து ஏஜென்சியால் ஏமாற்றப்பட்டு திரும்ப ஊருக்கே வந்துவிட்டான் அமுதா வாழ்வில் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோசமும் பறிபோய்விட்டது. அவன் வந்தது தான் தாமதம் கடன் குடுத்தவர்களும் கடன் கேட்டு வாசலுக்கு வந்துவிட்டார்கள், தம்பி அடுத்த மாதம் காசு அனுப்புவான் தாறேன் என்று சொல்லி வந்தவளுக்கு இன்று வார்த்தைகள் கூட வரவில்லை எஞ்சியிருந்த மூக்குத்தியையும் தோட்டையும் கழற்றி அடைவு வைத்து விட்டு வேப்பங்குச்சியைச் சொருகிக்கொண்டாள் காதுகளில். போர் உச்சமடைந்திருந்த நேரம் வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற சூழ்நிலை யாரையும் விட்டுவைக்கவில்லை. அமுதாவிற்கும் மதனுக்கும் நடந்த பாசப் போராட்டத்தில் மதனே ஜெயித்துப் போர்க்களம் போனான். அவன் போய்விட்டான் அமுதாவோ????? பாவம், எத்தனை மன்மதன்களின் காதல்க்கடிதங்களையும், காம அம்புகளையும் கடந்து, வறுமையைக் காட்டி படுக்கைக்கு அழைக்கும் வல்லூறுகளின் வலையிலும் சிக்காது, தான் தையல் செய்தும், சின்னப்பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக்கொடுத்தும் பெரும்பகுதி கடனை அடைத்து விட்டாள். இன்னும் கொஞ்சம் தான் அதுக்காக இரவு பகலாக கால்கள் தையல் இயந்திரத்தின் பெடல்களை மிதித்துக் கொண்டே இருக்கிறது தனக்கான நாள் வரும் என்று. என்ரை ராசாத்தி எப்படி இருந்த நீ? உன்னை இந்தக்கோலத்திலை பார்க்க எனகே இரத்தக்கண்ணீர் வருது..!! உன்னை ஒருத்தனட்டைப் பிடிச்சுக்குடுக்க மாட்டேனா என்ற கவலை தான் என்னை வாட்டுது. "விடுங்கோ கனகம்மாக்கா இன்னும் இழக்க என்னிடம் என்னணை இருக்கு? எல்லாம் பழகிப்போட்டுது வாழ்க்கை என்னைப் புடம் போட்டிட்டுது இப்ப எல்லாம் எதையும் தாங்கும் மனம் வந்திட்டுது தலை தான் போனால் என்ன? இந்தக் கையும் காலும் இருக்கும் வரைக்கும் பார்ப்பம் அங்காலை கடவுள் விட்ட வழி" அப்படி எல்லாம் பேசாதையணை, அவர் கட்டின தாலியும் கொஞ்ச நகையும் இருக்கு எனக்கு என்ன பொம்பிளைப் பிள்ளையே இருக்கு இந்த ஒரு பொடியன் தானே அவன் பிழைச்சிடுவன் நான் என்ரை நகையைத் தாறேன். கண்களில் நீர்வழிய கட்டியணைத்துக் கொண்டாள் கனகம்மாக்காவை. காலம் எவ்வளவு கொடியது .. களமாடப் போன மதனும் வீரச்சாவு என்ற செய்தி புலிகளின் குரல் வானொலியில் காற்றலை வழியே வருகிறது, இருந்த ஒரே நம்பிக்கையும் தவிடு பொடியாக உறவென்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரே சொந்தமும் போய் அநாதை என்ற பட்டம் மட்டும் மேலதிகமாக ஒட்டிக்கொள்கிறது. யாரை நோவாள் அந்த அப்பாவி? கடைசிச் சொட்டுக் கண்ணீர் கூட வற்றிவிட்டது அவள் வாழ்வில். அம்மா.. அம்மா..!! அமுதாம்மா எழும்பணை பள்ளிக்கூடம் போக வேணும் . கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருகும் அமுதாவை எழுப்புகிறான் குட்டி "வசந்தன்"... போரில் தாய், தந்தையை இழந்த அனாதைக் குழந்தை வசந்தனை தத்தெடுத்து வளர்க்கிறாள் அமுதா. அவன் கை பிடித்து நடக்கிறாள் பாடசாலை நோக்கி. முற்றும். ( யாவும் கற்பனையே ) ஜீவா 18.06.2013 12:35
 2. 5 points
  நான் முன்று வருடங்களில் 10 லட்சங்களை முதலிடுவது என்ற திட்டத்தின் அடிப்படையில் சென்றவருடம்( sept 2012) 250000.00 ரூபாக்களைபின்வரும் திட்டங்களில் முதளிட்டுள்ளேன் .இதன்முலம் சில குடும்பங்கள் வருமானம் பெறுவதோடு , என்னுடைய பங்கு வருமானத்தை மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தலாம் . 1.ஆடு வளர்ப்பு ; இதில் முதல் என்னுடையது .உழைப்பு பயன்பெறும் குடும்பத்தினுடையது .வருமானம் 50:50என்ற அடிப்படையில் பங்கிடப்படும் .குறைந்த முதலில் உச்ச பலனைப் பெறமுடியும் .இரண்டு குடும்பங்களுக்கு 75000.00ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்க்கியுளேன் .அதாவது ஒவ்வொரு பட்டியிலும் 6 மறி ஆடுகளும் 1 கிடாய் ஆடும் வழங்கப்பட்டுள்ளது .இந்த வருடமுடிவில் தான் இலாப -நட்ட கணக்கு பார்க்கப்படும் . ஒரு பட்டியில் 30000.00ரூபாய் என்னுடைய பங்காக வரும் என எதிபார்கின்றேன் . 2.வியாபாரம் : ஒருவருக்கு வியாபாரத்திற்கு 100000.00ரூபாய் கொடுத்துள்ளேன் .என்னுடைய நல்ல நோக்கத்தை புரிந்து கொண்ட இவர் மாதம் 5000-10000.00ரூபாய் தருவதாக சொல்லியுள்ளார் .இதுவரை 40000.00ரூபாய் தந்துள்ளார்.இதிலிருந்துதான் நேசக்கரத்தின் திடத்திற்கு 25000.00ரூபாய் தந்தனான் . இதேபோல் நேசகரத்திட்கு முன்றுவருடங்களில் 500000.00ரூபாய்களை என்னால் தரமுடியும் .என்னுடைய செயல்பாட்டையும் உங்கள் முன் வைத்துள்ளேன் .உங்களிடம் திட்டங்கள் இருந்தால் முன்மொழியுங்கள் .நேரடியாக கலந்துரையாடி முடிவெடுக்கலாம் . இதற்கு உடனடியாக 100000.00ரூபாய் தரமுடியும் .
 3. 3 points
  ஆலாபனையொன்றின் சிதைவுகளிலிருந்து எழுகின்றது சீரான முனகல் ஒலியொன்று இன்றைய பொழுதுகளில், கரிய இருளூடு அந்தரித்தலையும் மெல்லிய வெண்மையொன்றை போல, நீண்ட அமைதிகளை ஊடறுத்து ஒலித்தோயும் தெருநாயொன்றின் ஊளையைப்போல, வைகறையொன்றை நோக்கி தவமிருக்கும் ஒரு பறவையின் பசியைப்போல, நிகழ்த்திப்போகிறது உணர்த்தமுடியாத எதோ ஒன்றை, மதர்த்தெழும் அடுத்தடுத்த பொழுதுகளில் எழும் அச்சங்களை தொலைக்கும் அபயகரமொன்றின் ஓங்கார ஒலியை தடுக்கமுடியாத ஊனங்களை கடக்கும் யாதார்த்த கணங்களில் தேவகணங்களின் ஆதரவுப்பார்வைகளை, எதிர்பார்த்து கிடக்கிறது ஒலி எழுப்பிய அந்த சிதைவுகள். இருந்தபோதும்.................... ஆலாபனைகளூடான நீடிக்கும் அந்த ஒலிமட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது எல்லாவற்றையும் மீறி........
 4. 3 points
  அர்ஜுன் தமிழ் தேசியத்துக்கு எதிராக மக்கள் வேதனைப்படும் அளவுக்கு நக்கல், நளினங்கள் தொடர்வதால் ஒரு எச்சரிக்கை புள்ளியை பெறுகிறார்.
 5. 2 points
  கம்போடியாவில் நாம் குலேன் மலைப் பகுதியில் கள அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் நிபுணர்கள். கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது. இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர். எனினும், அங்குள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட அடர்ந்த காடு, வேகமாகப் பாய்ந்தோடும் காட்டாறு, சதுப்பு நிலம் போன்றவை காரணமாக முழு அளவில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட அவர்களால் இயலவில்லை. இதைத் தொடர்ந்து, அந்த மலைப்பகுதி மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிடார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, தகவல் சேகரிக்கும் நூதன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, நாம் குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான் கி.பி. 802இல் அங்கோர் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது. இப்போது, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து 20 லட்சம் மக்கள் அங்கோர்வாட் கோவிலைப் பார்வையிடுகின்றனர். இந்த நகரம் குறித்த தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர் குழுவின் தலைவர் ஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், ""தொன்மையான நூல்களின்படி புகழ்பெற்ற வீரனும், மன்னனுமான இரண்டாம் ஜெயவர்மனுக்கு மலை மீது அமைந்த தலைநகர் இருந்தது தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதமாகும். இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும், கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்'' என்றார். இந்த நிபுணர் குழுவின் இணைத் தலைவரான சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேமியன் இவான்ஸ் கூறுகையில், ""இந்த நகர் குறித்த தகவல்கள் மூலம் இன்றைய சமூகத்துக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கலாம். மலை மீது அமைந்த நகரில் காடுகள் அழிப்பு மற்றும் நீர் நிர்வாகத்தை அதிகம் சார்ந்திருந்தது போன்றவற்றால் இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம் '' என்றார். இந்த நகரில், இதற்கு முன் அடையாளம் காணப்படாத 30 கோவில்களும் இருந்துள்ளது லேசர் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட உள்ளன. அதன் பின், நாம் குலேன் காடுகளுக்குள் தொல்லியில் நிபுணர்கள் நுழைந்து கள அகழாய்வில் ஈடுபட்டு, மகேந்திர பர்வதம் நகரில் மக்களின் வாழ்க்கை, நாகரிகம் ஆகியவை குறித்து தகவல் சேகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தெற்காசியா மீது சுமார் 600 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திய அங்கோர் பேரரசு உருவான விதம் மற்றும் அது குறித்த மேலும் பல தகவல்களும் இந்த அகழாய்வில் கிடைக்க வாய்ப்புள்ளது. http://dinamani.com/world/2013/06/16/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1200-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/article1636757.ece
 6. 2 points
  வெட்கம் கெட்டுச் சிங்களவன் வெண்டதைப் பற்றிப் பெருமை பேசிறியளோ??
 7. 2 points
  16. அன்பியல் 410. அன்பாவது யாது? ஒருவருக்குத் தம்மொடு தொடர்புடையவராய்த் தமக்கு இனியவராய் உள்ளவரிடத்தே நிகழும் உள்ள நெகிழ்ச்சியாம். 411. உள்ளபடி ஆராயுமிடத்து நம்மோடு தொடர்புடையவராய் நமக்கு இனியவராய் உள்ளவர் யாவர்? அநாதியே மலத்தினாலே மறைக்கப்பட்டுள்ள அறிவுந் தொழிலும் உடையவர்களாய்த் தம்வயத்தரல்லாதவர்களாய் உள்ள பசுக்களாகிய நம்மோடு அநாதியே இரண்டறக் கலந்து நின்று, நமக்கெல்லாம் நித்தியானந்தப் பெருஞ் செல்வத்தைத் தந்தருள விரும்பி, தந்தொழில்களெல்லாந் தம் பயன் சிறிதுங் குறியாது, நம் பயன் குறித்த தொழில்களாகவே கொண்டு, பெத்தநிலையிலே தாம் நம்முள்ளே அடக்கித் தாம் நமக்கு முன்னாகியும், இப்படியே என்றும் உபகரிக்கும் இயல்புடைய பெருங்கருணைக் கடலாகிய பசுபதி, சிவபெருமான் ஒருவரே. ஆதலினால் அவரொருவரே நம்மோடு என்றுந் தொடர்புடையவராய், நமக்கு நம்மினும் இனியவராய் உள்ளவர்; அவருக்கே நாமெல்லாம் உடைமைப் பொருள்; அவருக்கே நாமெல்லாம் மீளா அடிமை. ஆதலினால் அவரிடத்திற்றானே நாமெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்.
 8. 2 points
  மறைந்த தோழர் மணிவண்ணணை 1983 ல் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் மறைந்த தோழர் விடியல் சிவா.மணிவண்ணனை ஒரு இயக்குனராக நடிகராக கதாசிரியராகவே பலரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.ஆரம்பகாலத்தில் அவர் புரட்சிகர பொதுவுடமை இயக்கத்தின் செயற்பாட்டாளராக இருந்தவர் என்பது பலருக்கு தெரியாது. சினிமாவுக்கு சென்று பெயரும் புகழும் பெற்றும் கூட அவர் எழிமையான மனிதராகவே இருந்தார்.ஒரு சமூக செயற்பாட்டாளனுக்கு இருக்கக் கூடிய போர் குணம் என்பது அவரிடம் இருந்தது.1985க்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈழப் போராளிகளுக்கு இயக்க வேறுபாடின்றி விளம்பரமின்றி தன்னாலான உதவிகளை அவர் செய்திருக்கிறார்.அவருடைய உதவி கிடைத்திருக்காவிட்டால் பல்வேறு மாற்று இயக்க தலைமைகளாலும் நடுத் தெருவில் விடப்பட்ட நூற்றுக் கணக்கான போராளிகள் பட்டிணி கிடந்து செத்திருப்பார்கள்.அல்லது தெருவில் பிச்சை எடுத்திப்பார்கள். 2004ம் ஆண்டு அவர் வன்னிக்கு வந்த போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அழைத்துச் சென்று காண்பிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைந்திருந்தார்கள். நாங்கள்அங்கு சென்ற போது அந்த துயிலும் இல்ல வாசலிலேயே செருப்பை கழற்றி வைத்துவிட்டார். நாங்கள் பரவாயில்லை செருப்போடு வாருங்கள் என்று கூறியபோது 'இது வீரத்தின் விளைநிலம்.தியாகத்தால் புனிதப்பட்ட மண்.அதற்கு நான் செலுத்தம் மரியாதை இது' என்று கூறிவிட்டார் 'பயிர் முளைத்த வயலுக்குள் யாராவது செருப்பு போட்டுக்கொண்டு நடப்பார்களா? இது விடுதலைப்பயிர் முளைத்திருக்கும் புனித மண்.அதை செருப்புக் காலால் மிதிக்க கூடாது என்றும் கோவிலுக்குள் போகும் போது ஏன் செருப்பை வாசலில் கழற்றி வைத்து விட்டுச் செல்கிறோமே அது போல் தான் இதுவும்' என்று கூறிவிட்டார். பகட்டும் ஆட்பரமும் சுயவிளம்பரங்களும் நிறைந்த மாய உலகம் என்றும் கனவுத் தொழிற்சாலை என்றும் வர்ணிக்கப்படும் சினிமா துறையில் இனமான உணர்வோடு பயணித்த தோழர் மணிவண்ணனின் இழப்பு உண்மையில் ஈழத்தமிழர்களான எமக்கு பேரிழப்பாகும். தோழர் மணிவண்ணனுக்கு எனது வீர வணக்கங்கள் உரித்தாகட்டும்
 9. 1 point
  தாங்கவியலா வெறுமைகளில் அமிழ்ந்து விழிகளில் நீர்வர நினைவுகள் கரைந்தழிகிறது... எழுதுகோலும் வெற்றுத்தாளுமாய் என் எதிரிலே... எதை எழுதுவது...? முகவரி இழந்து முகமிழந்து முற்றத்து நிழல் இழந்து ஊர் சுமந்த கனவிழந்து உள்ளே வலி சுமந்து அகதியாய் உருக்குலைந்து கிடக்கும் கதை எழுதவா..? ஒளித்து ஒளித்து - தன் இணையுடன் விளையாடும் ஒற்றைப்பனை அணிலுக்கும் விரத விருந்துண்டு களைத்து முற்றத்தில் துருத்திக்கொண்டு நிற்கும் வேம்பில் கரகரத்த குரலில் கரையும் காக்கைக்கும் கிடைத்த சுதந்திரம் என் மண்ணில் என் முற்றத்தில் எனக்கு மறுக்கப்பட்டதை எழுதவா..? என் பாடு பொருளாய் பலகாலம் இருந்த கொலுசொன்றின் ஒலிக்காக மனசெல்லாம் காத்திருந்து காலங்கள் உருக்குலைந்து உள்ளே துருப்பிடித்து மனச்சுவர்களில் உக்கி உதிர்ந்து போனதை எழுதவா..? என் தேசத்தின் தெருக்களில் நிற்கும் எருக்கலைக்கும் நாயுருவிக்கும் கூட எல்லாமாய் எதுவுமாய் வெளித்தெரியாமல் உள்ளே ஒட்டி இருப்பவை வேர்கள்... ஊட்டி வளர்த்து - என் உள்ளிருக்கும் ஆன்மாவை உருவாக்கிய பாட்டியை எங்கள் வீட்டின் வெளித்தெரியா வேரை விட்டுப்போகும்படி பிடுங்கி எறிந்த போரை நீழ்கின்ற இரவினிலே நினைவுகளினூடே கொப்பளிக்கும் அது தந்த வலிகளை எழுதவா..? உறவுகள் அறுபட அகதியாய் ஊர் விட்டு வந்து பனி உதிர்ந்த வீதிகளில் பாதை தெரியாமல் கனவுகளை பரணில் காயப்போட்டுவிட்டு வயிற்றுக்கும் வாழ்க்கைக்குமாய் போராடும்போது செருக்குடன் கடந்துபோகும் செல்வந்த மனிதர்களின் இரக்கமற்ற வார்த்தைகளை புழுவைப்போல் எமைப்பார்க்கும் எள்ளல்களை எழுதவா..? சுமை அமத்தும் அகதி வாழ்க்கையில் ஊற்றெடுக்கும் விழி நீரை துடைக்க ஒரு உறவும் இன்றி உருக்குலைந்து நிற்கதியாய் நின்றிருக்கும் பொழுதுகளில் எல்லாம் நாமிருக்கிறோம் என்று தானாடாவிட்டாலும் தமிழனென்ற தசையாடிய ஓடி வந்து தூக்கிவிடும் ஊரில் பார்த்தறியா உடன்பிறவா இரத்தங்களை நினைக்கும்பொழுதெல்லாம் பனி இரவிலும் கண்கள் பனிக்க உள்ளம் விம்மி அழும் கதை எழுதவா..? நெஞ்சுள் இருக்கும் கறுத்த பக்கம்கள் தெரியாமல் உரித்துள்ள ரத்தங்கள் என்று உரிமையுடன் எதிர்பார்த்த உறவுகள் கழுத்தறுத்த கதை எழுதவா..? இவை எல்லாம் பார்த்த கொதிப்பில் தொல்லைகளை துடைத்தழித்து எல்லைகள் வரையப்பட்ட என் சுதந்திர மண்ணில் ஒரு நாள் இறப்பேன் என்று நெஞ்சுக்குள் நெருப்பாய் வளர்த்த கனவை கடைசியாக தின்று முடித்த முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த காலமும் கண்ணீரும் எம் வலிகளைப்போக்காத கதை எழுதவா..? வானம் பார்த்து வரும் கண்ணீரில் வடுக்களைத் தடவிக்கொள்கிறேன்.. ஓ கடவுளே.. எதை எழுதுவேன் நான்..? எல்லாக் கண்ணீரும் என் வேலிகளை அரிக்கையில்...
 10. 1 point
  தயிர் சாதம் என்ன வேணும்??? அரிசி (பஸ்மதி அரிசி ) 2கப் 3 பேருக்கு . மோர்மிளகாய் 4 . சின்னவெங்காயம் 6 . கடுகு தாளிக்க . இஞ்சி 1 துண்டு . கஜூ 10 . உப்பு தேவையான அளவு . நல்லெண்ணை தேவையான அளவு . கொத்தமல்லி இலை தேவையான அளவு . தயிர் ( யோக்கூர்ட் ) 125 கிறாம் , 4 பெட்டி . கூட்டல் : ஒரு பானையிலை தண்ணியும் உப்பும் போட்டு தண்ணியை கொதிக்க விடுங்கோ . தண்ணி கொதிச்ச உடனை பஸ்மதி அரிசியை கழுவி போடுங்கோ . சோறு அரை பதத்திலை வெந்த உடனை வடிச்சு இறக்கி அதை ஆற விடுங்கோ . சின்ன வெங்காயம் , இஞ்சியை குறுணியாய் வெட்டுங்கோ . ஒரு தாச்சியை எடுத்து அதிலை கொஞ்சம் நல்லெண்ணை விட்டு , மோர்மிளகாய் ***, கஜூ எல்லாத்தையும் பிறிம்பாய் பொரிச்சு எடுங்கோ . மிஞ்சின எண்ணையிலை கடுகை வெடிக்க விட்டு , ஆறின சோறையும் , பொரிச்ச மோர் மிளகாய் , கஜூவையும் , சின்ன வெங்காயம் , இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு அகப்பையாலை கிண்டுங்கோ . இப்ப நீங்கள் எரியிற நெருப்பை நிப்பாட்டுங்கோ . தயிரையும் ( யோர்கூர்ட் ) போட்டு நல்லாய் கிளறுங்கோ . அடுப்பாலை இறக்கின உடனை கொத்தமல்லி இலையை நுள்ளி தயிர்சாதத்துக்கு மேலை போடுங்கோ . இவ்வளவு தான் . பி கு : இது வேலைக்கு போட்டுவாற பொம்பிளையளுக்கு ஒரு குறைஞ்சநேரத்திலை செய்யிற சமயல் முறை . இப்ப வெய்யில் தொடங்கினதாலை , உடம்புக்கு சூட்டை குறைக்கிற சாப்பாடு . இதோடை கொஞ்சம் ஊறுகாய் ஏதாவது ஒரு சிப்ஸ் சேத்து சாப்பிடுங்கோ . *** மோர்மிளகாயை பொரிச்சு சின்னத் துண்டாய் நுள்ளி போட்டு கலவுங்கோ . மைத்திரேயி 16/06/2013
 11. 1 point
  சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌லை எதிர்த்து நிற்கும் ஒரேயொரு த‌மிழ்க்கிராம‌ம்! இல‌ங்கைக்கு வ‌ட‌க்கு கிழ‌க்குக்கு வெளியே வாழ்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் குறிப்பாக‌ புத்த‌ள‌ம்தொட‌க்க‌ம் மாத்த‌றை வ‌ரையிலான‌ க‌ரையோர‌ப்ப‌குதிக‌ளில் வாழ்ந்த‌த‌மிழ்ப்ப‌ர‌த‌வ‌ர்க‌ளும், க‌ரையார்க‌ளும், முக்குவ‌ர்க‌ளும் எவ்வாறு இல‌ங்கை அர‌சின்திட்ட‌மிட்ட‌ செய‌ல்க‌ளாலும், இய‌ற்கையாக‌வும் த‌ம‌து த‌மிழ் அடையாள‌த்தை இழ‌ந்துசிங்க‌ள‌வ‌ர்க‌ளான‌தையும், அந்த‌ இனமாற்ற‌த்துக்கு க‌த்தோலிக்க ம‌த‌மும் ஒருகார‌ணியாக‌ இருந்த‌தையும் முன்னைய‌ ப‌திவில் பார்த்தோம். அத‌ன் தொட‌ர்ச்சியாக‌, எவ்வாறு த‌மிழ் மீன‌வ‌ர் குடிக‌ளை, அவ‌ர்க‌ள் சிங்க‌ளவர்க‌ளாலும்,சிங்க‌ள‌வ‌ர்க‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ க‌த்தோலிக்க‌ர்க‌ளாலும் க‌ட‌ல் போல் சூழப்பட்டிருந்தும் த‌ம‌துத‌மிழடையாள‌த்தையும், த‌மிழ் மொழியையும் 350 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ இழ‌க்காம‌ல்பாதுகாத்த‌ன‌ர், அத‌ற்கு எவ்வாறு அவ‌ர்க‌ளின் முன்னோர்க‌ளின், தமிழ்ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌ம‌காபார‌த‌த்தை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌ பார‌ம்ப‌ரிய‌ த‌மிழ்நாட்டுக் கிராமிய‌ வ‌ழிபாடுஉத‌விய‌து என்ப‌த‌ற்கு உட‌ப்பு கிராம‌த்தில் இன்றும் த‌மிழ‌ர்க‌ளாக‌, தம‌து முன்னோர்க‌ளின் ம‌த‌ம், க‌லை, க‌லாச்சார‌ங்க‌ளை இன்றும் பேணிக்காத்து,சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌லுக்கு த‌ப்பி வாழும் த‌மிழ‌ர்க‌ள் ந‌ல்ல‌ உதார‌ண‌மாகும். . ம‌ன்னாரிலிருந்து மாத்த‌றை வ‌ரை வாழ்ந்துஅந்த‌ நில‌ப்ப‌குதியை த‌ம‌து க‌ட்டுப்பாட்டுக்குள்வைத்திருந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் அடையாள‌மாக‌இன்றும் ஒரேயொரு த‌மிழ்க்கிராம‌ம், இன‌, ம‌த‌மாற்ற‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டு சிங்க‌ள‌வ‌ராக‌ம‌றுத்து, இன்றும் பெருமையுட‌ன் த‌ம‌துமொழியையும், த‌ம‌து முன்னோர்க‌ளின்ம‌த‌த்தையும், அவ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌த்தையும்பாதுகாத்துக்கொண்டு த‌லைந்மிர்ந்து நிற்கும்கிராமம் உட‌ப்பூர் அல்ல‌து உட‌ப்பு ஆகும். சிங்க‌ள‌ ஊர்க‌ளால் சூழ‌ப்ப‌ட்ட‌ த‌மிழ்க்கிராம‌ம். ம‌ன்னாரிலிருந்து மாத்த‌றை வ‌ரை வாழ்ந்து த‌ம‌து க‌ட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த‌த‌மிழ‌ர்க‌ளின் அடையாள‌மாக‌ இன்றும் ஒரேயொரு த‌மிழ்க்கிராம‌ம், இன‌, ம‌த‌மாற்ற‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டு சிங்க‌ள‌வ‌ராக‌ ம‌றுத்து, இன்றும் பெருமையுட‌ன் த‌ம‌துமொழியையும், த‌ம‌து முன்னோர்க‌ளின் ம‌த‌த்தையும், அவ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌த்தையும்பாதுகாத்துக்கொண்டு த‌லைந்மிர்ந்து நிற்கும் கிராமம் உட‌ப்பூர் அல்ல‌து உட‌ப்பு ஆகும்.ஒருகால‌த்தில் தொட‌ர்ச்சியாக‌ ச‌ங்கிலி போல் த‌மிழ்க்கிராமங்க‌ள் ம‌ன்னாரிலிருந்துமாத்தறை வ‌ரை இருந்த‌ன‌, அவ‌ற்றில் ப‌ல‌ த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ கிராம‌ங்க‌ளாக‌ மாறிஇன்று சிங்க‌ளக் கிராம‌ங்க‌ளாக‌ மாறிவிட்ட‌ன‌. ஆனால் உட‌ப்பு ம‌ட்டும் இன்றும்ஒரேயொரு இந்து த‌மிழ்க்கிராம‌மாக‌க் காட்சிய‌ளிக்கிற‌து. இந்த‌க‌ரையோர‌க்கிராம‌ங்க‌ளில் க‌ரையார் (சிங்க‌ளத்தில் க‌ர‌வா), முக்குவ‌ர், ப‌ர‌த‌வ‌ர், ப‌ர‌வ‌ர்அல்ல‌து க‌டையார் போன்ற‌ சாதிக்குழுவின‌ர் வாழ்ந்து வ‌ந்த‌ன‌ர். உட‌ப்பு திரெளப‌தி அம்ம‌னும் ம‌டுமாதாவும் தாய்க்க‌ட‌வுளை வ‌ண‌ங்கும் த‌மிழ‌ர்க‌ளின்ப‌ண்பாடு த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ளுக்கும், த‌மிழ்இந்துக்க‌ளுக்குமிடையே ஒருவித‌ ஒற்றுமையைஅதாவ‌து மதங்க‌ளுக்க‌ப்பாற்ப‌ட்ட‌ந‌ல்லிண‌க்க‌த்தை ஏற்ப‌டுத்தியிருப்ப‌தை நாம்இல‌ங்கையில் காண‌லாம். உட‌ப்பு திரெப‌தி அம்ம‌னும், மடுமாதாவும் த‌மிழ்க் க‌ரையார்,ப‌ர‌த‌வ‌, முக்குவ‌ர் ச‌மூக‌ங்க‌ளின் முக்கிய‌ தெய்வ‌ங்க‌ளாக‌ விள‌ங்குகின்ற‌ன‌. இன்று சிங்க‌ள‌வ‌ர்க‌ளாக‌ மாறி த‌ம‌துமொழியையும் க‌லாச்சார‌த்தையும் இழ‌ந்த‌த‌மிழ்க்க‌த்தோலிக்க‌ர்க‌ள், இன்றும் த‌ம‌துமுன்னோர்க‌ளைப் போலவே வ‌ட‌க்கிலிருக்கும்வ‌ன்னியிலுள்ள‌ ம‌டுமாதாவை வ‌ருடாந்த‌ம்சென்று த‌வ‌றாம‌ல் த‌ரிசிக்கும் வ‌ழ‌க்க‌த்தை ம‌ட்டும் கைவிட‌வில்லை. உட‌ப்பு ம‌க்க‌ளின் க‌தை - ம‌ற‌வ‌ர்குல‌மாப்பிள்ளை உட‌ப்பில் வாழும் த‌மிழ்க் க‌ரையார், முக்குவ‌, ப‌ர‌த‌வ‌ ச‌மூக‌த்தின‌ர் 17 ம் நூற்றாண்டிலேஇராமேஸ்வ‌ர‌ம், இராம‌நாத‌புர‌ம் போன்ற‌ ப‌குதிக‌ளிலிருந்து இல‌ங்கைக்குகுடிபெய‌ர்ந்ந்த‌தாக‌ அவ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய ப‌ர‌ம்ப‌ரைக் க‌தைக‌ள் கூறுகின்ற‌ன‌. அந்த‌க்க‌தையின் ப‌டி, இராமேஸ்வ‌ர‌ம் மீன‌வ‌ர் குல‌த் த‌லைவ‌னுக்கு ஒரு அழ‌கான‌ ம‌க‌ள்இருந்தாள் அவ‌ளது பெயர் க‌ம‌ல‌க்க‌ண்ணி. அவ‌ளின் அழ‌கைக் கேள்வியுற்ற‌ ம‌ற‌வ‌ர்குல‌த்த‌ர‌ச‌ன் அவ‌ளை ம‌ண‌க்க‌ விரும்பினான். ஆனால் ம‌ற‌வ‌ர்மாப்பிள்ளையின் 'மைன‌ர்' விளையாட்டுக‌ளைக் கேள்விப்ப‌ட்ட‌ க‌ம‌ல‌க்க‌ண்ணியின்த‌ந்தைக்கு அவ‌ளை அவ‌னுக்கு ம‌ண‌ம்முடித்துக் கொடுக்க‌ விரும்ப‌வில்லை. இந்த‌க்க‌தையின் அடிப்ப‌டையில் சிங்க‌ளத்தில் 'ம‌ற‌வ‌ராயா' என்ற சொல் ஒருத‌லைக்காத‌ல்அல்ல‌து 'a desperado' என்ப‌தைக் குறிக்கிற‌து. இல‌ங்கைக்கு வ‌ருகை Temple Mural ம‌ற‌வ‌ர் மாப்பிள்ளை எப்ப‌டியாவ‌து த‌ன்ம‌க‌ளைத்திரும‌ண‌ம் செய்து விடுவான் அவ‌னுக்குஅதிகார‌மும், ப‌லமும் உள்ள‌து என்ப‌தைஉண‌ர்ந்த‌ க‌ம‌ல‌க்க‌ண்ணியின் த‌ந்தைதிரும‌ண‌த்துக்கு ச‌ம்ம‌த‌ம் தெரிவித்தார்.திரும‌ண‌ப்ப‌ந்த‌ல் கூட‌ அமைக்க‌ப்ப‌ட்டுதிரும‌ண‌த்துக்கு ஆய‌த்த‌ங்க‌ள் எல்லாம் முடிந்துவிட்ட‌ன‌. ஆனால் அன்றிர‌வே த‌னது ம‌க‌ளையும்,குடும்ப‌த்தையும், உற‌வின‌ர்க‌ளையும்அழைத்துக்கொண்டு த‌ம‌து உடைமைக‌ளுட‌ன்இல‌ங்கைக்குப் ப‌ட‌கில் ஏறிவிட்டார் அந்த‌மீன‌வ‌ர் த‌லைவ‌ன். அடுத்த‌ நாள் திரும‌ண‌ப்ப‌ந்த‌லுக்கு வ‌ந்த‌ ம‌ற‌வ‌ர்மாப்பிள்ளையை அர‌சாணிக்காலில்க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌ ஒரு நாய் எதிர்பார்த்துக்காத்திருந்த‌து. அந்த‌ அவ‌மான‌த்தாலும்,ஏமாற்ற‌த்தாலும் ஆத்திர‌முற்ற அந்த‌ மற‌வ‌ர்மாப்பிள்ளை எப்ப‌டியாவ‌து அவ‌ர்க‌ளைப்ப‌ழிவாங்கி, க‌ம‌ல‌க்க‌ண்ணியை அடைவ‌தாக‌ ச‌ப‌த‌ம் எடுத்துக் கொண்டான். இராமேஸ்வ‌ரத்திலிருந்து புற‌ப்ப‌ட்ட‌ மீன‌வ‌ர் குடிக‌ள் முத‌லில் ம‌ன்னார்த் துறையைவ‌ந்த‌டைந்து அங்கிருந்து தெற்குநோக்கி க‌ல்பிட்டிக்குப் போய், பின்ன‌ர் புத்த‌ள‌ம்வ‌ழியாக‌ முந்த‌ல் என்ற‌ த‌மிழ்க்கிராம‌த்தை அடைந்த‌ன‌ர். அங்கிருந்துக‌ட‌ற்க‌ரையோரமாக‌ இருந்தாலும், ஒரு சில அடிக‌ள் தோண்டிய‌துமே ந‌ல்ல‌ தண்ணீர்கிடைக்கும் வ‌ள‌மான‌ இட‌மாகிய‌ உட‌ப்பை அடைந்து அங்கே குடியேறின‌ர். க‌ம‌ல‌க்க‌ண்ணி குல‌தேவ‌தையானாள் ஏமாற்ற‌ம‌டைந்த‌ மற‌வ‌ர் மாப்பிள்ளையின்ச‌ப‌த‌த்தைக் கேள்வியுற்ற‌ க‌ம‌ல‌க்க‌ண்ணியின்உற‌வின‌ர்க‌ள் அவ‌ளின் ச‌ம்ம‌தத்துட‌ன்அவ‌ளை நீரில் அமிழ்த்தின‌ர். அந்த‌ அப்பாவிப்பெண்ணைத் த‌ம‌து குல‌தெய்வ‌மாக‌வ‌ழிப‌டுகின்ற‌ன‌ர். அவ‌ள் உட‌ப்பு ம‌க்களைபாதுகாப்ப‌தாக‌ ந‌ம்புகின்ற‌ன‌ர் அத்துட‌ன்ஒவ்வொரு வ‌ருட‌மும் அவ‌ளை, நீர் நிறைந்த‌குட‌மாக‌ உருவ‌கித்து நினைவு கூர்ந்துவ‌ண‌ங்குகின்ற‌ன‌ர். சித்திரை முக்கொட்டுக்கும்மி இல‌ங்கையில் ப‌ல‌ கோயில்க‌ளில் தீமிதிப்புநிக‌ழ்ச்சிக‌ள் திருவிழாக்க‌ளின் ஒருஅங்க‌மாக‌ இருந்தாலும் உட‌ப்புதிரெள‌ப‌திய‌ம்ம‌ன் கோயில் தீமிதிப்புபிர‌பல‌மான‌து. "நீண்டகால வரலாறும் தனித்துவமான கலை கலாசார நற் பழக்கவழக்கங்களுடன் பாரம்பரிய உணவு உடை உறைவிடங்களிடையே இந்தியாவின் தமிழகத்தின் இராமேஸ்வரத்துக்கான மண்வாசனையை காணக்கூடியதாக இருக்கின்றது . மேலும் தமிழகத்திலிருந்து வருவோர் தாம் இராமேஸ்வரம் நிற்பதாகவே கருதுவார்கள் . இங்கே வாழும் மக்கள் மான உணர்ச்சியும் இந்து மதத்தின் மீதான இனியில்லாத பற்றுறுதியும் கொண்டவர்கள்.வரலாற்றுரீதியான ஆய்வுக் குறிப்புக்களும் கர்ணபரம்பரையான கதைகளும் வாய்வழி செய்திகளும் இங்கு வாழும் மக்கள் கி.பி 1300-1400 ஆண்டுகளில் வீரசேகரப்பாண்டியன் மன்னனால் மன்னார் கற்பிட்டி உடப்பு போன்ற பிரதேசங்களில் தமிழகத்து மக்களை குடியேற்றியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் பகருகின்றன. அத்துடன் மாரியம்மன் கோயில் மணியில் கி.பி. 1750 ஆண்டு ஆண்டிமுனை உடப்பங் கரையூரவர் கோயிலுக்கு உபயம் என பொறிக்கப்பட்டுமுள்ளது. மேலும் 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1634 ம் ஆண்டுகளில் இராமேஸ்வரத்தின் அக்காள் மடம் தங்கச்சி மடம் போன்ற கிராமங்களிலிருந்து 18 குடும்பங்கள் கடல் வழியாக மன்னார் கற்பிட்டி ஊடாக ஏழு தோணிகளில் உடப்பில் குடியேறியதாக கர்ணபரம்பரையான கதைகளும் வாய் மொழிச் செய்திகளும் விடை கூறுகின்றன.இதனை Patrons Devotees Goddesses – Masakazu Tanaka என்பவரின் நூலும் வரையறை செய்கின்றது. இவர்கள் பின்வரும் ஏழு தோணிகளில் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதாவது கமலந்தோணி கப்பனார் தோணி கலப்போத் தோணி போத்தி தோணி சின்னத் தோணி பாபா தோணி மாந்திரியன் தோணி என்பனவாகும். இத்தோணிகளின் உரிமையாளர்களை சம்மாட்டியார் என்றும் தொழில் நடத்துனரை மண்டாடியார் என்றும் அழைப்பர். இப்பெயர்கள் இன்றும் உடப்பு நகரில் கடற்றொழிலாளரிடையே நிலவி வருகின்றன. இது போல முனியன் கறுப்பன் வைரையா வீரபத்திரன் காளி காளியப்பன் கமலமுத்து மாரிமுத்து போன்ற ஆண்களின் பெயர்களும் மாரியாய் முனியம்மா காளியம்மா வைரம்மா வடுவாச்சி வடிவு போன்ற பெண்களின் பெயர்களும் உடை அணிகளும் இங்குள்ள மக்களை இராமேஸ்வரத்துடன் தொடர்பு படுத்துகின்றன. கூட்டத்தோடு வந்தவர்கள் சந்தனக் கட்டையினால் வடிவமைக்கப்பட்ட திரௌபதையம்மன் சிலையொன்றினையும் கொண்டு வந்தனர். இவர்கள் குடியிருந்த இடங்களில் எல்லாம் திரௌபதையம்மன் ஆலயம் அமைத்து வழிபட்டதாக வாய்மொழிக் கதைகள் பருகின்றன. இதுபோல் இன்று திரௌபதையம்மன் ஆலயமிருக்கும் பிரதேசம் அன்று ஒரு மேட்டு நிலமாகவே இருந்துள்ளது. இவ்விடங்களில் தில்லை மரங்களும் நொச்சி பிஞ்சால் செடிகளும் அடர்ந்து வளர்ந்த பூமியாக காணப்பட்டது. இவ்வாறான ஒதுக்குப் பிரதேசத்தை உடப்பூர் மக்கள் திருக் கோயிலுக்குரிய புனித பூமியாக மாற்றியமைத்தனர் . இன்று இப்பூமி பெருமைக்குரிய ஸ்ரீ பார்த்தசாரதி ருக்மணி சத்தியபாமா சமேதர் ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் திருக்கோயிலாக நவதள 108 அடிகள் இராஜ கோபுரத்துடன் கண்கவர் கவின்கலையாக காட்சி கொடுக்கின்றது. கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - என்பது தமிழர் வாக்கு. உடப்பு வாழ் மக்கள் தாங்கள் குருகுலத்தவர் என்றும் வேதவியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்த மகான் என்றும் குருகுலத்து வேதவியாசரால் அருளப்பட்ட மகா பாரதம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்றும் கூறுவர் . தாய் வழிபாட்டில் நம்பிககை கொண்ட இம்மக்கள் ஸ்ரீ திரௌபதா தேவியம்மன் ஆலயத்தை முதன்முதலில் மரங்கள் தடிகள் கிடுகுகள் கொண்டு கட்டி முடித்து சந்தனக் கட்டையினாலான ஸ்ரீ திரௌபதையம்மன் சிலையை மூல மூர்த்தியாக பிரதிஷ்ட செய்து வழிபட்டு வந்துள்ளனர்." Source: http://www.eegarai.net/t49838-topic http://viyaasan.blogspot.ch/2013/04/blog-post_8191.html
 12. 1 point
  எங்கட ஊருக்கும் மின்சாரம்...!!!! எங்கட ஊருக்கும் மின்சாரம் - இனி அவுணில சுடலாம் பணியாரம் சும்மா குடுக்கிறாங்களாம் எல்.சி.டி இனி எல்லா வீட்டிலயும் சண் டி.வி படிப்பு தான்ரா எங்கட சொத்து வச்சான்ரா ஆமிக்காரன் அதுக்கு ஆப்பு ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்..!!! தூந்து போன துயிலும் இல்லங்கள் மறந்து போனாலும் மனச்சாட்சி கொல்லும் லாம்பு விளக்கில் மங்கிய இரவுகள் இனி ரியூப்பு பல்ப்பில் பளபளக்கும் கனவுகள்..! அன்றைய இரவில் நிலவும் நச்சத்திரங்களும் கூட இருந்தன மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய் நடந்தோம் இரவுகளின் நீளங்கள் தெரியாமல் வாழ்ந்தோம். இனி ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்...!!! எங்கட ஊருக்கும் மின்சாரம்-இனி அவுணில சுடலாம் பணியாரம் இனி வீட்டுக்கு வீடு இன்ரனெற்று கெதியில வரும் ஊரில குத்துவெட்டு சிலது சொன்னால் புரியாது பட்டாலும் தெளியாது..!!! வேப்ப மர நிழலின் அருமை கடற்கரைக்காற்றின் இதமான குழுமை மண்சட்டியில் சமைத்த சூடை கொட்டுக்கிணற்றில் குடிக்கும் தண்ணீர் சந்தோசம் என்பது இருக்கும் போது தெரியாது அதை ஆரும் சொன்னாலும் அனுபவிக்காமல் புரியாது எங்கட ஊருக்கும் மின்சாரம் எங்களுக்கும் கேக்க சந்தோசம்தான் எங்கட ஊருக்கு மின்சாரம் - இனி அவுணில சுடலாம் பணியாரம்...!!! தமிழ்ப்பொடியன் 18/06/2013 குறிப்பு: 21ம் நூற்றாண்டிலாவது எங்கட ஊருக்கு முதல் முதலா கறண்டு வாறது சந்தோசம்தான். 1990 களில் இருந்த மாதிரியே எங்கட ஊர் இருக்கோணும் எண்டு அவுஸ்திரேலியாவில இருந்து கொண்டு ஆசைப்படுவது அபத்தமானதுதான்.இருந்தாலும் சிலதுகளை ஏற்க மனசு மறுக்குது.இன்ரனெற்று,ஈமெயில் எண்டு உலகம் எங்கயோ நிக்கும் போது மாற்றங்களை ஏற்க மறுப்பது மடமைதான்.இருந்தாலும் சில ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மொழிபெயர்க்கும் போது சில உண்மைகள் சுடுகிறது. நாங்கள் மட்டும் ”எல்லாத்தையும்” அனுபவிச்சு கொண்டு விசைப்பலகைகளில் விண்ணாணம் பேசுவது கேவலம் தான்.இருந்தாலும் சில நேரம் கைகள் அரிக்குது.எழுத வைக்குது.
 13. 1 point
  ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை உறிஞ்சி வெளியேற்றுகிறது. மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது. ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது. மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது. தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும், உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும் http://www.sinthikkavum.net/2013/02/blog-post_5291.html
 14. 1 point
  நேற்று ஓசுரில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த த.வ.ஆ.ந'வின் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். கூட்டத்தின் ஒரு பகுதியாக ஒரிசா பாலு ஐயாவின் ஆய்வுகளின் சுருக்கம் ஒரிசா பாலு ஐயா அவர்களால் பகிரப்பட்டது. அவரின் உரைகளை காணொளியில் காண்பதற்கும் நேரில் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவரிடம் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் ஏராளம். கூட்டத்தில் சொல்ல முடிந்தவை சொற்பமே. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் நாகரிகம் விளங்கியது எவ்வாறு என்றும், ஆமைகளிள் கடல் நீரோட்டத்தினை பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றி வருவதையும், அதனை ஆமைகளிடத்திலிருந்து தமிழர் கற்றுகொண்டு உலகம் முழுவதும் பயனம் செய்த விதத்தினையும் தக்க சான்றுகளோடு விளக்கினார். இன்றைக்கு மற்ற மொழிகளிலும் ஊர் பெயர்களிலும் பரந்துபட்டுக்கிடக்கும் தமிழ் சொற்களின் காரணம் வணிகம் சார்ந்து தமிழர் மேற்கொண்ட பயனங்களின் வாயிலாக என்று அவர் நிறுவியது அருமை. இயற்கையை நன்கு அறிந்திருந்த தமிழர்கள், நெய்தல் நிலத்தில் ஆமையையும், குறிஞ்சி நிலத்தில் யானைகளையும், மருத நிலத்தில் எருதுகளின் துணைகொண்டும் எவ்வாறு இயற்கையை தங்கள் நண்பனாக்கி கொண்டனர் என்று விளக்கியதும் அற்புதம். அவரின் ஆய்வுகளை நோக்கும்போது உலகுக்கெலாம் உழவு கற்றுக்கொடுத்த இனம் தமிழினம் என்பதும் நன்கு விளங்கும். இரும்பு நாகரீகம் தமிழகத்தில் தோன்றியதற்கான சான்றுகளையும், எவ்வாறு தமிழகம் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் வணிக தளமாக செயல்பட்டது என்பதையும், கடல் பரப்பில் மூழ்கி கிடக்கும் தமிழர் நாகரீக அடயாளங்களையும், மண்ணுக்குள்ளும், நம் கண்முன்னேயே இறைந்து கிடக்கும் பல வரலாற்று சான்றுகள் சரியான முறையில் ஆவணபடுத்தப்படாமல் வீணாகிவருவதையும், சான்றுகளோடு விளக்குகிறார். அவர் காட்டிய ஆதாரங்களில் என்னை பெரிதும் கவர்ந்தது வடுகர்களால் தமிழர் அடிமைபடுத்தப்பட்டமையை குறிக்கும் பொருட்டு வடிக்கப்பட்ட ஒருகையில் ஆமையும், மறு கையில் களிறுமாக உள்ள ஒரு கோவில் சிற்பம். அவரிடம் பேசும்போது நமக்கான வரலாறுகள் நம்மை சுற்றி கொட்டிக்கிடந்தபோதும், அவற்றை எடுத்து ஆய்வதற்கான நேரமும், ஆள்பலமும் போதமையால் ஏற்படும் அவரின் ஆதங்கமும் இளையதலைமுறையினரிடம் அவருக்கு உள்ள எதிர்பார்பும் விளங்குகிறது. இவரின் ஆய்வுகள் வெரும் பழம்பெருமைகளாக மட்டுமே இல்லாமலும், வெறும் வரலாற்று ஆய்வு முடிவுகளாக மட்டுமே இல்லாமலும், தக்க சான்றுகளோடும் இன்றைய தலைமுறையினரின் பயனம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்ற சிந்தனை தூண்டுதல்களை தன்னுள்ளே உள்ளடக்கியதாகவும் மிக ஆக்கபூர்வமாக இருக்கிறது. இது ஒரிசா பாலு ஐயா அவர்களின் தனிச்சிறப்பு. எந்த முன் அனுபவமும் இல்லாத எனக்கு வெறும் இருபது நிமிடங்களில் இவ்வளவு ஆக்கபூர்வமான உந்து சக்தியை ஐயா அவர்களின் ஆய்வுச்சுருக்கம் மட்டுமே விதைக்க முடியுமானால், தக்கமுறையில் தமிழகம் முழுவதும் இந்த உண்மைகளை எடுத்துச் சென்றால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் விடியலாகக் கூட இவை இருக்கலாம். முகநூலில் அவரின் பணிகளை கவனிக்க http://www.facebook.com/orissa.balu
 15. 1 point
  விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையில் தரையிறங்கிய மஹிந்த எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தனிமனித தாக்குதல்கள் களவிதிகளுக்கு முரணானது. ஏனையவர்களை மதித்து கருத்து எழுதும் படி தாழ்மையாக வேண்டப்படுகிறீர்கள்.
 16. 1 point
  'பாராட்டுதல்' - என்பது மனித குணங்களில் உன்னதமானது! பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது! பாராட்டுரையைத் தலைசிறந்த 'கிரியா ஊக்கி' - என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர். பாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது - மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே!! படிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும். ¬ வெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக முன்சென்று மனமுவந்து தாராளமாகப் பாராட்டுவார்கள்! இந்தப் பாராட்டு மொழி என்பது, பல விந்தைகளைச் செய்து நம்மை வியக்க வைக்கிறது. ஆம்! சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு? அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது! தன்னம்பிக்கை தானே தழைக்கிறது!! பாராட்டப்படாதவரின் அறிவும், ஆற்றலும் சுருங்கிப் போகிறது. மனச்சோர்வும் உண்டாகிவிடுகிறது. பாராட்டுகளால் நட்பும், உறவும் பலப்படுகிறது. அன்பு வெளிப்படுகிறது. நல்வாய்ப்பு அதிகரிக்கிறது. பிறர் பாராட்டில் மனம் மகிழாத மனிதர் எவருமில்லை என அடித்துச் சொல்லலாம்! சின்னச் சின்ன செயல்கள் செய்தாலும் பாராட்டுவது அவசியம். அதன்மூலம் பெரிய செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்திட முடியும். பாராட்டுவதைத் தள்ளிப் போடவோ, காலம் கடத்தவோ கூடாது. பாராட்டுவதை உடனே செய்ய வேண்டும். பாராட்டுவதில் தயக்கம் காட்டக்கூடாது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும், தேர்தலில் வெற்றி அடைந்தாலும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும், இசை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம் என நுண்கலைகளில் சாதித்தாலும், நாம் மனமுவந்து அவர்களைப் பாராட்டி விட வேண்டும். அப்படிப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை குற்ற மனப்பான்மையுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் வளர்கிறது. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை புத்திசாலியாகவும், தன்னம்பிக்கைப் பண்பில் சிறந்தாகவும் வளர்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஓயாமல் திட்டிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருந்தால், அந்தப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மழுங்கிப் போய்விடும். சில நேரங்களில் அவர்களை விரக்தி மனம் கொண்டவர்களாக மாற்றிவிடும். மாறாகப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் தட்டிக் கொடுத்து, அவர்கள் திறமையைப் பாராட்டிட வேண்டும். இடை இடையே அன்பு மொழிகளால் கண்டித்து வளர்த்தால், பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கை தானே துளிர்விடும்! சாதனைகள் செய்திடத் தூண்டுகோலாய் அப்பாராட்டு அமையும். என குழந்தை மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், பாராட்டுரைகள், நம்பிக்கையை வளர்க்கும்; பாதுகாப்பு உணர்வைப் பெருக்கும்;; கற்பதைத் தூண்டும்; நல்லெண்ணத்தை மனதில் பதியமிடும்; பிறருக்கு உதவும் மனப்பாங்கை ஏற்படுத்தும்; மனித நேயத்தை ஊட்டும்; மானிட உறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்! பிறருடைய நிறைகளைப் பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். குறைகளையோ, தனிமையில் நாசுக்காகச் சுட்டிக்காட்ட வேண்டும். சமுதாயத்தில் பாராட்ட வேண்டியவர்களை, நாம் பாராட்டத் தவறினால், நல்லது செய்வதற்கான மனம் படைத்தவர்கள் சற்று ஒதுங்கி விடும் சூழல் ஏற்படும். எனவே, நல்ல செயல் புரிபவர்களை உடனடியாகப் பாராட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும். 'பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்' - என்பது புதுமொழி. பாராட்டுகளைப் பெற்றவர்கள் மீண்டும், மீண்டும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதலால் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக செய்வார்கள்! இது, நிர்வாக மேலாண்மைத் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அப்பட்டமான உண்மை! நமது குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் என அனைத்து நிலையில் உள்ளவர்களையும் நாம் பாராட்டிப் பழகுவோம். மனித உறவுகளை மாண்புற வளரும்படி செய்வோம்! http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23867:2013-05-10-06-51-14&catid=44:general&Itemid=123
 17. 1 point
  பகுதி 20 திரும்பிப் பார்த்த வசந்திக்கு விழிகள் ஆச்சரியத்தோடு விரிய கோபம் எட்டிப் பார்த்தது. வசந்தி தன் தங்கையுடன் நின்றிருந்தார். அவர்கள் இவர்களைக் காணவில்லை. என்னப்பா வசந்தியக்கா எப்ப இங்க வந்தவ. எனக்குச் சொல்லவில்லையே என்று கணவரைப் பார்த்துக் கேட்க, கணவர் உனக்கே தெரியாத விஷயம் எப்பிடி எனக்குத் தெரியும் என்றார். அவ தங்கையுடன் கதைக்காமல் எல்லோ இருந்தவ. லீவுக்கு வந்திருக்கிறா போல என ஆதங்கத்துடன் கணவனுக்குக் கூற கணவன் தொலை ஆட்டி தெரியாது என்றுவிட்டு நின்றுவிட்டார். இப்ப நித்தியாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொருட்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து காரில் ஏறிய பின்னும் படபடப்பு அடங்கவில்லை. இருந்தாலும் வசந்தியுடன் கதைக்காமல் செல்லவும் மனம் இடங்கொடுக்கவில்லை. என்னப்பா செய்வது என்று கணவனைக் கேட்டாள். நீயே முடிவெடுத்துக் கொள். பிறகு நீதான் சொன்னது எண்டு பழியை என்னில போடுவாய் என்றுவிட்டு ஒதுங்க, காணாமல் விடுவது வேறு. கண்டுவிட்டு கதைக்காது சென்றால் என் மனச்சாட்சியே என்னை விடாது என எண்ணியவளாக நித்தியா இறங்கி வசந்தியிடம் சென்றாள். நித்தியாவை அங்கு எதிர்பார்க்காததால் வசந்திக்கு சிறு அதிர்ச்சி முகத்தில் தெரிந்ததுதான்.ஆனால் உடனே சமாளித்துக்கொண்டு எப்பிடி இருக்கிறியள் என்று கேட்டாள். எப்ப வந்தனீங்கள். தங்கையுடன் இப்ப கதைக்கிறநீங்களா? ஏன் எனக்கு போனே பண்ணவில்லை என்று கேள்விகளைத் தொடுத்தாள். உங்களுக்கு எந்த மூஞ்சியை வச்சுக்கொண்டு போன் செய்யிறது எண்டுதான் எடுக்கேல்லை. என்னத்தைச் சொல்லுறது நித்தியா நான் இந்தியாவில இருந்து பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இங்கேயே வந்திட்டன். இங்க எல்லாம் தலைகீழாப் போச்சு. கடையும் இப்ப இல்லை. நீங்கள் சொன்னீங்களே நித்தியா ராஜன் நல்லவன் இல்லை எண்டு. நான் நம்பவே இல்லை. அவன் இவருக்குக் குடிக்கக் கொடுத்து கடையிலயும் காசைச் சுருட்டி வீட்டுக் காசும் கட்டாமல் வீடும் இப்ப எங்களிட்டை இல்லை. வசந்தன் குடிச்சிட்டு எங்களுக்கும் போன் செய்யாமல் இருக்க நான்தான் தங்கச்சியை போய் பாக்கச் சொன்னனான். அவள் சொல்லித்தான் நாங்கள் உடன இங்க வந்தது. கொஞ்சம் எண்டால் இவர் குடிச்சே செத்திருப்பார். இப்ப தங்கச்சி வீட்டிலதான் இருக்கிறம் அதுதான் உங்களுக்கு அடிக்கவில்லை என்று முடித்தாள். நித்தியாவுக்கு வசந்தியின் நிலையைக் கேட்டதும் பரிதாபமாகி கோபம்கூட அடங்கிவிட்டது. மீண்டும் வசந்தி முதலிலிருந்து எல்லாம் தொடங்கவேண்டியதாகிவிட்டது. வசந்தன் இன்னும் மீளவில்லை ஆதலால் வசந்தி உடனடியாக ஒரு வேலை தேடிகொண்டாள். வசந்தனை வெறுத்து ஒரேயடியாக ஒதுக்கவும் முடியவில்லை. உதவிப்பணத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. பதியாமல் வேலை செய்தபடியால் கொஞ்சம் கடனுகளை அடைக்கக் கூடியதாக இருந்தது. வசந்தன் குடிப்பதும் சிகரெட்டுக்களை ஊதித் தள்ளுவதுமாக நாட்களைக் கழித்தான். அவனை அப்படி ஆக்கியதில் மூத்த தமக்கையின் பங்கும் இருந்ததை வசந்தன் ஒருநாள் குடித்துவிட்டு உளறும்போது வசந்தியால் அறிய முடிந்தது. தமக்கையின் எண்ணம் வசந்தியைப் பழிவாங்கிவிட்டதாக. வசந்தனிடம் காசும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு தன் கணவனைக் கொண்டே குடிப்பதற்கும் வாங்கிக் கொடுத்து ... என்ன மனிதர்கள் இவர்கள் என வசந்தியின் மனதில் வெறுப்புடன் வைராக்கியமும் எழுந்தது. ஒருவாறு எட்டு மாதங்களில் வசந்தன் வேலை செய்ய ஆயத்தமானான். திரும்பவும் ஹோட்டல் ஒன்றில் வேலை கிடைத்தது. வசந்தி மீண்டும் நிமிர்ந்துவிட்டாள். ஆனால் வசந்தன் மீண்டும் வசந்தியை வேலையை விட்டுவிடும்படி கூறியதை வசந்தி தன்னில் இரக்கத்தில் கூறுகிறான் என்றுதான் எண்ணினாள். அனால் அவனோ எப்பொழுதும் வசந்தி தனக்குக் கீழேயே இருக்கவேண்டும் என எண்ணியதும், மீண்டும் சகோதரர்களுடன் கதைப்பதும் பிடிக்காது, நான் எல்லோரையும் விட்டிவிட்டுத்தானே இருக்கிறன். எங்களுக்கு ஒருத்தரும் வேண்டாம். நீரும் விட்டுவிட்டு இரும் என கேட்டுக்கொன்டதன் பின் வசந்தி திரும்ப ஒன்றுமில்லாமல் வந்தபோது தங்கையின் வீட்டில் தங்கியதையும் மறந்து இனி ஒருத்தரும் என்னோட கதைக்காதேங்கோ. மனிசன் ஒருதரோடும் கதைப்பதில்லை. அதனால் நானும் உங்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இருக்கப் போகிறேன் என்று கூறியபோது வசந்தி பகிடியாகத்தான் சொல்கிறாள் என சரி இரன் என விட்டுவிட்டனர். நாட்கள் செல்லச் செல்ல வசந்தி அவர்களுடன் உண்மையிலேயே கதைக்காது விட்டவுடன் வசந்திக்குத் திமிர் என எண்ணி அவர்களும் தம்பாட்டில் இருந்து விட்டனர். ஒரு ஆறு மாதங்கள் சென்றிருக்கும். மற்றவர்களுடன் கதைக்காது விட்டதனால் மற்றவர்களும் இவர்களை கண்டு கொள்லாமல் வீதியில் கண்டால்கூட முகத்தை திருப்பிக் கொண்டு போக வசந்திக்கு அது பெரிய அவமானமாக இருந்தது. இதற்குள் வசந்தன் இரவு வேலையில் எதோ செய்ததில் வேலையும் போய்விட மற்றவர்கள் தம்மைப் பார்த்துச் சிரிப்பதாய் எண்ணியதில் வசந்தி மனநிலை பாதிக்கப்பட்டு சிறிதுகாலம் வைத்திய சாலையில் இருந்தாள். வசந்தன் மீண்டும் குடியும் புகையும் வீடு சூழ பிள்ளைகள் பற்றிக்கூட்ட எண்ணாமல் காலம் கழித்தான். நித்தியாவுக்கு பிள்ளைகளைப் பார்க்கத்தான் பாவமாக இருந்தது. வைத்திய சாலையில் வசந்தியைப் பார்க்கச் சென்றபோது நீங்கள் இந்த இடத்தை வி ட்டு வேறு எங்காவது மாறிப் போய் இருங்கோ. சில நேரம் அது உங்களுக்கு நல்லதாக இருக்கும் என என்றதை உடனே பிடித்துக்கொண்டு லண்டனுக்குப் போக வெளிக்கிட்டனர் இருவரும். நித்தியாவுக்கு அதைக் கூறியதும் அங்குள்ள நிலவரங்களை தனக்குத் தெரிந்தவர் மூலம் அறிந்து, நீங்கள் அங்கு செல்வதாயின் கடைசி மூன்று மாதங்களுக்கு வீட்டுவாடகை உணவு மற்றும் இதர செலவுகளுக்கு கையில் கொஞ்சம் பணம் கொண்டு போக வேண்டும் என்றாள். அவர்களிடம் ஒரு வாரத்துக்குத் தேவையான பணம் கூட கையில் இல்லை. நித்தியாவிடம் கேட்டபோது நித்தியா இம்முறை மறுத்துவிட்டாள். வசந்திக்கு நித்தியாவில் மனஸ்தாபம் தான். ஆனாலும் வெளியே காட்ட முடியவில்லை. எப்பிடியாவது மறவர்கள் முன் நன்றாக வாழ்ந்து காட்டவேண்டும் என்னும் ஆசை மட்டுமே கண்முன் விரிந்தது. ஆசை மட்டும் இருந்தால் போதாது. விடாமுயற்சியும் சரியான திட்டமிடலும் வேண்டும் என்பது வசந்திக்கு மறந்து போனது. தொடரும்..........
 18. 1 point
  உவமானங்களும், உவமேயங்களும் உங்கள் கவிதைகளில், அழகாக விளையாடுகின்றன! நேரம் கிடைக்கும் போதெல்லாம், கவியுங்கள்!
 19. 1 point
  நான் நினைத்தேன் மும்மொழி என்றால் தமிழ் ஆங்கிலம் சிங்களம் என்று, பொடியள் அதில் பிரஞ்சை போட்டு கலக்கி விட்டார்கள். வாழ்த்துக்கள் .
 20. 1 point
 21. 1 point
  இன்றைய பாடலாகக் ;கற்பகம்' படத்திலிருந்து எம். எஸ், விஸ்வநாதன்/ டி. கே. ராமமூர்த்தியின் இசையில், பி. சுசீலாவின் குரலில், சாவித்திரி/ கே. ஆர். விஜயா ஆகியோரின் நடிப்பில்..... ஆயிரம் இரவுகள் வருவதுண்டு... http://youtu.be/qirRGxNkzX4
 22. 1 point
  வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் ...............இன்றைய நாளில் பிறந்த நாள் என்று சொல்வதையும் விட மனதில் ஒரு சோகமே ஓடிக்கொண்டிருந்தது ...........எமக்கெல்லாம் பேரிழப்பாக அமைந்துவிட்ட இயக்குனர் மாண்பு மிகு மணிவண்ணன் அவர்கள் மறைவால் இன்று எனது அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டேன் .கேக் கூட வெட்டவில்லை .............பல நண்பர்கள் வீட்டிற்கு வருவதற்காக தொடர்பு கொண்டார்கள் .இன்னொரு நாள் அனைவரையும் வரசொல்லிவிட்டேன் ....................வாழ்த்தியதற்கு மீண்டும் நன்றிகள் . எம் சகோதரி சாந்தி அக்காவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 23. 1 point
  சுப்பிரமணிய விரதம் 398. சுப்பிரமணிய விரதம் எத்தனை? சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம். 399. சுக்கிரவார விரதமாவது யாது? ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர். அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர். இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 400. கார்த்திகை விரதமாவது யாது? கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக் கடவர். இவ்விரதம் பன்னிரண்டு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 401. கந்த சட்டி விரதமாவது யாது? ஐப்பசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதற் சட்டியீறாகிய ஆறு நாளுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஆறு நாளும் உபவாசஞ் செய்வது உத்தமம். அது கூடாதவர் முதலைந்து நாளும் ஒவ்வொரு பொழுது உண்டு, சட்டியில் உபவாசஞ் செய்யக் கடவர். இவ்விரதம் ஆறு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். மாசந்தோறுஞ் சுக்கிலபக்ஷ சட்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.
 24. 1 point
  389. பிரதோஷ விரதமாவது யாது? சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே, சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, அநுட்டித்தல் வேண்டும். பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம். (அவமிருந்து = அகாலமரணம்)
 25. 1 point
  என் மனதில் மனிதாபிமானம் கொப்பளித்து ஓடுவதால், முதலில் நான் காரை விட்டு இறங்கி, காலில் அடிபட்ட வயதான நபரை முதலில் காரில் ஏற்றிவிட்டு, அங்கேயே காத்திருக்கும் உயிர் நண்பனிடம் காரின் சாவியைக் கொடுத்து காரை எடுக்கச் சொல்லி இருவரையும் அனுப்பிட்டு,நான் ஹன்ஸிகாவை என் தோளில் சாய்த்துகொள்வேன்! பின்னர், "மண்ணை நம்பி மரமிருக்கு, கண்ணே ஹன்ஸிகா...! உன்னை நம்பி நானிருக்கேன், ஷோக்கா கொஞ்சலாம்..." என்றபடி மழையில் டூயட் தான்! 'தமிழ்சிறி' நேற்று சொல்லியபடி, வயசுப்போன மச்சாள் நமீதவை விட, இந்த ஹன்ஸிகா பரவாயில்லைதானே? எப்படி என் ஐடியா?