Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 10 மார்ச் 2014 in all areas

 1. 7 points
  யாழில் ஒரு காதல் 8 அங்கா பாருங்கோ…! முள்ளுக்கிளுவைக் கதியால்கள் நெருக்கினாற்போல் அடைத்திருந்த வேலியோடு ஒட்டியிருந்த பச்சைத் தகரப் படலையடியில் குந்தியிருக்கிறாரே… அவர்தான்.. அவரேதான்.. ஆத்தைப்பிள்ளை ஆச்சி. ‚உந்தக் கிழவிக்கு வேறை வேலை இல்லாட்டி வீட்டுக்கை போய் படுத்திருக்க வேண்டியதுதானே.. இண்டைக்கோ நாளைக்கோ எண்டு மண்டையைப்போடுற வயசில றோட்டாலை ஆர் போகினம், வருகினம் எண்டு விடுப்புப் பாத்துக் கொண்டு..‘ அந்த வீதியிலுள்ள சனம் முணுமுணுத்தாலும், நேரே ஆத்தைப்பிள்ளை ஆச்சியிடம் கூறத் துணிவில்லை. சொன்னால் அவ்வளவுதான்… ஆச்சியின் வாயில் இருந்து உதிரும் சொற்களில் இருந்து இலகுவில் தப்ப முடியாது என்பது எல்லோரும் அறிந்த விடயம். ‚உந்தக் கிழவியோடை அண்டக்கட்ட முடியாமைத்தான் அந்தாள் யாக்குறுக் கிழவன் நேரத்தோடை மண்டையைப் போட்டூட்டுது..‘ ஆத்தைப்பிள்ளை ஆச்சியின் கணவர்தான் யாக்குறு. இருவரின் மண வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு மகள் அம்பிகா.. அவளுக்கு ஒரு மகன் நாகேந்திரன். கட்டிளம் காளை. படிப்பு ஏறாததால், சொந்தமாக உள்ள காணிகளில் வெங்காயம் மிளகாய் என்று தோட்டம் செய்து கொண்டிருந்தான். "பிள்ளை… அங்கை பார்.. அந்தக் கோழியைக் கலை பிள்ளை.. காலங்கார்த்தால விறாந்தைல பீச்சப் போகுது" என்று கத்தினாள் தாய் பொன்னம்மா "சும்மா இரணை.. நா பள்ளிக்கூடத்துக்கு நேரஞ்செண்டு போச்செண்டு அவதிப்படுறன்.. நீங்கள் அதுக்கை வேறை" என்று எரிச்சலுடன் கூறினாள் நிலா. "ஓமோம்.. ஒண்டையும் ஒழுங்காய் வைக்கிறேல்லை.. அததை அங்கங்கை போடுறது.. பேந்து சுடூது மடியைப் பிடியெண்டு அந்தந்த நேரத்தில தேடினால் நேரம் போகும்தானே.. நான் என்ன சொன்னாலும் உனக்கு புறக்குடத்திலை ஊத்தின நீர்போலை.. சரி சரி.. கெதியா வெளிக்கிடு பிள்ளை.." அவசர அவசரமாக தோள்வழி தவழ்ந்து புரண்டு நெளிந்த அந்த இரட்டைப் பின்னல்களை முன்னால் இழுத்து யன்னலில் இருந்த சின்ன கண்ணாடியில் அழகு பார்த்தவள் எதையோ நினைத்தவளாகக் குபுக்கென்று சிரித்துக் கொண்டாள். 'ஏ.. இரட்டைப் பின்னலே.. பெயர் தெரியாத மதுரனுக்கு என் அடையாளப்படுத்தியது நீதானே?!’ பின்னல்களைப் பின்னால்விட்டு, நெற்றியில் சிறு கோடாக விபூதியை ஒரு விரலால் பூசியவாறு, "அம்மா.. போவிட்டு வாறன்.." என்று திண்ணையால் முற்றத்திற்கு இறங்கிணாள் நிலா. "பொறு பிள்ளை.. இந்தா தேத்தண்ணிய ஒரு வாய் குடி.. நான் றோட்டிலை போய் ஆர் வரீனம் எண்டு பாக்கிறன்.. எதுக்காலை தப்பினாலும் எங்கடை சனத்தின்ரை முழுவியளத்துக்காலை தப்பேலாது.." "உங்களூக்கு வேறை வேலை இல்லை… முழுவியளம் அது இதெண்டு கொண்டு.. திருந்தமாட்டியள்.." தாயிடம் இருந்து மூக்குப்பேணியை வாங்கி அண்ணாந்து வாய்க்குள் விட, விறுவிறென்று முகதலைப்பை இடுப்பில் செருகிக்கொண்டு வீதிக்கு விரைந்தாள் பொன்னம்மா. சற்று தூரத்தில் ஆத்தப்பிள்ளை ஆச்சி தனது வீட்டு படலைக்கு முன்பாகக் குந்திக்கொண்டிருந்தார். "உந்தக் கிழவி வீட்டிலை அடங்கிக் கிடக்காது.. றோட்டாளாஇ போற வாறதுகளை ஆந்தைக் கண்ணாலை சுட்டுப் போடும்.." நிலா றோட்டடிக்கு வர, "அங்கால திரும்பிப் பார்க்காதை பிள்ளை.. ஆத்தைப்பிள்ளை குந்திக் கொண்டிருக்குது.. அதீன்ரை முகத்திலை முழிச்சால் ஒண்டும் விடியாது.. இப்பிடியே நேர பாத்துக் கொண்டு போ…" நிலாவுக்கு தாயின் அறியாமையை எண்ணிச் சிரிப்பு வந்தாலும்.. வழமைபோலவே தாயின் மனதைப் புண்ணாக்க விரும்பாமல் ஆத்தைப்பிள்ளை ஆச்சி இருந்த திசையை பார்ப்பதைத் தவிர்த்தவளாகச் செல்ல ஆரம்பிக்கும்போது ஆத்தைப்பிள்ளை பொன்னம்மாவைக் கூப்பிட்டார். "வேலியள் எல்லாம் கறையான் அரிச்சு உக்கிப் போட்டுது.. அதுதான் பாத்துக்கொண்டு நிக்குறன்..“ "ம்.. இதுக்கொண்டும் குறைச்சலில்லை.. விடுப்புப் பாக்கிறதுக்கெண்டு ஒரு வியாக்கியானம்.." அப்போது… அந்த வழியால் சுரேஷும் மதுரனும் கண்ணனும் சைக்கிளில் வருவதைக் கண்டு, எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் முகம் சிவக்க நடை தளரத் தடுமாறினாள் நிலா. "அட.. உந்தா.. அதிஷ்டசாலிதான்.. ரட்டைப்பின்னலே முன்னலை வரூது.. இதுதான்போலை வீடு..“ என்று கிசுகிசுத்தான் கண்ணன். "ம்…“ - சுரேஷ். "டேய் மதுரா.. வீட்டை வடியாய் பார் மச்சான்.. இதுதான் சீதன வீடு.." என்று பெருங்குரலில் சிரித்தான். "ஆர் தம்பியவை நீங்கள்.. எங்கை போறியள்..“ ஆத்தப்பிள்ளை வார்த்தைகளால் கொழுவி இழுத்தார். "நாங்கள் சுரேஷிட்டை வந்தனாங்கள்.. இதாலை போறம்..“ "இப்ப காலம் கலியுகம்.. ஆரார் எங்கை போய் வரீனம் எண்டு ஆருக்கு தெரியும்… உந்த குமரியளும் வீடு வாசலள்ளை அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறேல்லை.. பொடியளும் றோட்டுவழிய படங்காட்டிக் கொண்டு திரியுதுகள்…“ 'சுரீர்‘ என்று தாக்கியது பொன்னம்மாவுக்கு. விறுவிறென்று நடக்கலானாள் நிலா. "கிழவி.. ஆரைச் சொல்லுறாய் எண்டு விளங்குது… மரியாதைக்கு பேசாமை இருந்தா வர வர மேலை மேலை போய்க்கொண்டிருக்கிறாய்… உன்னாலை றோட்டால பெட்டை பொடியள் போக வழியில்லை…“ பொன்னம்மா பொரிந்து கொட்டினாள். "ஓமடி ஓம்.. உண்மையைச் சொன்னால் பொத்துக் கொண்டு வரூதாக்கும்… இண்டைக்கு மூண்டு பேர் போறாங்கள்.. போகப் போக எத்தினை பேர் போறாங்கள் எண்டு பாக்கத்தானே போறன்..“ ஆத்தப்பிள்ளை ஆச்சியின் சத்தத்தில் வேலி ஓலைக்குள் இருந்து கரகரத்த கறையான்கூட அமைதி காத்தது. (தொடரும்…)
 2. 6 points
  ஊருக்கு நான் போகவேணும் ஊருக்கு நான் போகவேணும் என்ர கடலில காலை நனைக்கவேணும் வெள்ளை மணலில படுத்து கிடக்கவேணும் அம்மான்ர மடியில நித்திரை கொள்ளவேணும் தம்பியை தோளில தூக்கவேணும் தங்கச்சியை கைபிடிச்சு நடக்கவேணும் மாமியின்ர வீட்டையும் போகவேணும் என்ர மச்சாளையும் ஒருக்கா பாக்கவேணும் முருகன் கோயிலுக்கு திருவிழா செய்யவேணும் கடலைக்கொட்டை சோளம் வாங்கி தின்னவேணும் சைக்கிள்ள சுத்தி திரியவேணும் ஊரில கனபேரை சந்திக்கோணும் எங்கட பொடியளோட கும்மாளம் அடிக்கவேணும் எங்கினையும் அவங்களை கூட்டிக்கொண்டும் போகவேணும் பள்ளிக்கூடத்துக்கும் ஒருக்கா போகவேணும் எனக்கு படிப்பிச்ச ரீச்சரையும் சந்திக்கோணும் கொக்குப்பட்டம் கட்டி ஏத்தவேணும் நார் கூவ இராக்கொடி விடவேணும் உறைப்பா காரல் சொதி ஒண்டு வைக்கவேணும் கூப்பன் மா புட்டோட குழைச்சு தின்னவேணும் தட்டிவானில ஒருக்கா ஏறவேணும் கொடிகாம சந்தைக்கும் ஒருக்கா போகவேணும் கூழன் பிலாப்பழம் வாங்கிவரவேணும் கறுத்த கொழும்பான் சீவி தின்னவேணும். பூவரசம் இலையில "பீப்பீ" செய்து ஊதவேணும் அம்மம்மா "பீப்பீ" குழல் திருவிழாவில வாங்கவேணும் நிலவு வெளிச்சத்தில முற்றத்தில இருக்கவேணும் ஊர்ப்புதினங்கள் கனக்க கதைக்கவேணும் அக்கான்ர கல்லறைக்கு போகவேணும் அவளை விதைச்ச இடத்தில் நிண்டு அழவேணும் அம்மாவாணை என்ர ஊருக்கு ஒருக்கா போகவேணும் எங்கட கடலில ஒருக்கா குளிக்கவேணும் இதெல்லாம் நடக்க எனக்கு விசா கிடைக்கவேணும் விசா கிடைச்சாலும் போக கையில காசு வேணும் FACTORY இல பட்டையடி அடிக்கவேணும் நித்திரை கொள்ளாமல் இரவுபகல் ஓடி ஓடி உழைக்கவேணும். அம்மாவாணை என்ர ஊருக்கு ஒருக்கா போகவேணும் எங்கட கடலில ஒருக்கா குளிக்கவேணும். தமிழ்ப்பொடியன் 09/03/2014
 3. 4 points
  டேய் கண்ணன். உனக்கு இன்னும் ஒருத்தரிலையும் உண்மையாக் காதல் வரேல்லை. அதுதான் உப்பிடி விசர்க் கதை கதைக்கிறாய். நீ திருந்தவே போறதில்லை. என்னடா இன்னும் நிலாவின்ர வீடு வரேல்லையே என்றான். நீ சயிக்கிள்ள ஏறின உடன வீடு வந்திடுமே. டேய் அவன் என்னடா முன்னால போறான். மச்சான், நாங்கள் எப்பவும் பக்கத்தில பக்கத்தில தானே போறனாங்கள். என்ன உனக்குப் பிரச்சனை. நில்லடா என்று சயிக்கிளை இரண்டு மிதி மிதித்து சுரேசின் சயிக்கிள் கைபிடியைப் பற்றி நிறுத்தினான். எனக்கு ஒண்டும் இல்லையடா சரியான தலையிடி. ஏனெண்டு தெரியேல்ல மச்சான் அதுதான் என்று நிறுத்தியவனை நான் நம்பவில்லை என்பதுபோல் பார்த்தான் கண்ணன். மதுரனுக்கு நிலாவின் வீட்டைப் பார்க்கும் நினைப்பில் இவர்கள் பேசியது காதிலும் விழவில்லை. வந்து கொஞ்ச நாளிலயே அவளை மடக்கீட்டான். ம்.. எண்டாலும் கெட்டிக்காரன் தான் என்று பெருமூச்சும் பெரிதாய் விட்டான். நான் பாத்தாலும் ஒருத்தியும் நிமிந்தும் பாக்கிறாளவை இல்லை. எல்லாத்துக்கும் மச்சம் வேணும் என்றும் முடித்தான். எடேய் புலம்பாதை. உனக்கும் ஒண்டு கட்டாயம் மாட்டும் என்றுவிட்டு மச்சான் சுரேஷ் நீ ஒண்டிலையும் கண் போடேல்லையே என்றுவிட்டு அவனின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் மதுரன். என் ஆசையில மண்ணள்ளிப் போட்டுட்டு என்னையே கேட்கிறியோ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு, நானும் ஒருத்தியை கன நாளா மனதில வச்சு, கட்டினால் இவளைத்தான் கட்டவேணும் எண்டு பகலும் இரவும் அவளையே நினைச்சு வாழ்ந்துகொண்டிருந்தன். எடேய் நீ என்னட்டைக் கூட உத ஒருநாளும் சொல்லேல்லையே என்று ஆதங்கத்துடன் கேட்ட கண்ணனை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு காதலிச்சால் உடனேயே சொல்லிப்போட வேணுமடா. விட்டமோ வேற யாரும் கொண்டு போவிடுவாங்கள். இப்ப பாத்தா இன்னொருத்தன் போட்டிக்கு வந்திட்டான் என்று நிறுத்தினான். மதுரனுக்கு மண்டையில் யாரோ ஓங்கிக் குட்டியது போல் இருக்க ஒரு திடுக்கிடலோடு சுரேசைப் பார்த்தான். என்னையோடா சொல்லுறாய் என்று கேட்டான். ஓம் என்று எங்கே சொல்லிவிடுவானோ என்று நெஞ்சில் திகில் ஒன்று பரவியது. நல்ல வேளை சுரேஷ், இல்லையடா அது கொக்குவில் பெட்டை. இப்ப வேறை ஒருத்தன் அவளிண்ட மனதில் வந்திட்டான். என்ன செய்யிறது. விதி என்று கூறி நிறுத்தினாலும், ஏன் அப்படிச் சொன்னேன். ஓம் என்று மதுரனிடம் கூறியிருக்கலாமோ என்னும் எண்ணமும் தோன்றியது. எது என்னைத் தடுத்தது. நான் அவளில் ஆசை கொண்டிருந்தாலும் அவள் என்னை எப்பவும் ஏறெடுத்தும் பார்க்காததுதான் என் மனதில் ஒரு தாழ்வு மனப்பாங்கைக் கொண்டுவந்திருந்ததா?? அல்லது மதுரனில் ஏற்பட்டுள்ள ஆழமான நட்பா ?? அல்லது என் காதல் கூட ஆழமானது இல்லையா ?? எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டும் அவனுக்கு குழப்பம் தான் மிஞ்சியதே தவிர விடை கிடைக்கவில்லை. எடேய் இந்த ஒழுங்க்கேக்குள்ளை எல்லே அவள் இருக்கிறாள். நீ எங்க நேராப் போகிறாய் என்று சுரேசின் மனத்தை இழுத்து நிறுத்தினான் கண்ணன். ஓமடா நான் எதோ நினைப்பில் நேரா விட்டிட்டன் என்று நிலாவின் வீட்டு ஒழுங்கைக்கு மிதியுந்தைத் திருப்பினான். அவளின் வீடு கடக்கும் போது ஆவலுடன் பார்த்த மதுரனின் கண்கள் ஏமாற்றம் அடைந்தன. என்னடா ஒருத்ரையும் காணேல்ல என்ற மதுரனுக்கு, நீ வருவாய் என்று எல்லாரும் வாசல்ல வந்து காவல் இருக்கினம் என நக்காலாகச் சொன்னான் கண்ணன். வேணுமெண்டால் போய் பெல் அடிச்சுப் பாரன் எல்லாரும் வெளியில வருவினம் என்றுவிட்டுச் சிரித்தான். சுரேசுக்குச் சினம் தான் ஏற்பட்டது. வீடு பாத்தாச்செல்லே இனிப் போவம் என்றான். போரடா வீடுவரையும் வந்திட்டு பாக்காமல் போறதே.??ஒருக்கா சயிக்கிலைத் திருப்புங்கோடா. பெல் அடிச்சுக்கொண்டு போவம் சிலவேளை வெளியில வருவாள் என்றான். அவளிண்ட அம்மம்மாக் கிழவி நெடுக முன்னுக்குத்தான் இருக்கிறது. பிறகு பிரச்சனையாப் போடும் என்று சுரேஷ் எச்சரித்ததைக் காதிலும் வாங்காமல் கண்ணன் சயிக்கிலைத் திருப்ப சுரேசும் திருப்பவேண்டியதாய்ப் போட்டுது. அவளின் வீட்டுக்கு மூன்று வீடுகள் முந்தியே பெல்லை பலமாக அடித்தபடி கண்ணன் சென்றான். மதுரன் எட்டி எட்டி மதிலால் பார்த்ததுதான். யாரையும் வீட்டில் காணவில்லை. சந்திவரை சென்றபின் இன்னும் ஒருதடவை போவம். இல்லாட்டா திரும்புவம் என்ற மதுரனுக்கு ஒன்றும் பதில் சொல்லாமல் மிதியுந்தைத் திருப்பினர். இம்முறை சுரேசும் தன் சயிக்கிள் பெல்லை தொடர்ந்து அடித்தபடி வர இவர்கள் வீட்டைக் கடக்க முதலே மதுரன் மெதுவாப் போங்கோடா என்றான். வீட்டுகுக் கிட்ட வர நிலா வீட்டு கேற் திறக்கும் சத்தம் கேட்டது. மதுரனுக்கோ நிலாதான் என்று அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட முகம் எங்கும் பிரகாசிக்க அழகான சிரிப்புடன் பார்த்தவன் பேயைக் கண்டதுபோல் முகம் மாற சடுதியாக முகத்தைத் திருப்பினான். கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தது நிலாவின் அம்மம்மா. மற்ற இருவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனாலும் கிழவிக்குக் கேட்டாலும் என்று அடக்கிக் கொண்டே வந்தவர்கள் சந்தி திரும்பியதும் மிதியுந்தை நிறுத்திவிட்டு சிரித்து முடித்தார்கள். உந்த வேலைக்கு இனி நான் வரமாட்டன். உனக்கு வீடு காட்டியாச்சு. நீயே வந்து கொள். மாட்டினாலும் அடியையும் வாங்கிக் கொள் என்றான் சுரேஷ். உப்பிடிப் பயந்து சாகிறாய். நீ எல்லாம் எப்பிடித்தான் காதலிக்கப் போறியோ என்று சலப்புடன் சொன்னான் கண்ணன். மீண்டும் அந்த வழியே செல்லாது சுத்திப் போவமடா என்றபடி மிதியுந்தை மித்தித்தபடி நண்பர்கள் வேறு வீதிக்கு மாறினார்கள். மதுரனின் அதிட்டமோ என்னவோ தூரத்தில் நிலா வந்துகொண்டிருப்பது தெரிந்தது. மதுரன் தூரத்திலேயே கண்டுவிட்டான். சுரேசும் கண்டுவிட்டான் தான். சரி நானும் அவளைப் பார்ப்போம். அவள் யாரைப் பாக்கிறாள் என்றுதான் பார்ப்போமே. சிலவேளை மதுரனுக்கு மட்டும்தான் அவளில் விருப்பம் இருந்து அவளுக்கு இல்லாமலும் இருக்கலாம் என்ற ஒரு நப்பாசையும் தோன்றியது. அவளை நெருங்க நெருங்க அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே வந்தான். நிலாவோ தூரத்தில் அவர்களைக் கண்டுவிட்டாள். இவர்கள் தற்செயலாக வருகிறார்களோ அல்லது எதுக்கு என்னும் கேள்வியும் மனத்தைக் குடைய ஆனாலும் மதுரனைக் கண்ட மகிழ்வு மனதில் பரவ, நெஞ்சு தடதடக்கத் துவங்கியது. இன்று இவரை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை என்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டு தலையைக் குனிந்தவள் அவர்கள் அண்மித்ததும் தன்னை அறியாமலேயே தலையை நிமிர்த்தி மதுரனைப் பார்த்துவிட்டு அடுத்த கணம் தலையைக் குனிந்து கொண்டாள்
 4. 3 points
  மதுரனின் நண்பர்கள் . சுரேஸ்,கண்ணன் .கண்ணனுக்கு பேராதெனிய பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் அனுமதி கிடைத்திருந்தது.சுரேஸ் அடுத்து என்ன செய்யலாம் வெளிநாடு போவதா அல்லது ஐ.சி.எம்.ஏ செய்து கொண்டு கொழும்பில் ஒடிட் ரெயினிக் எடுப்பதா என்று மனம் குழம்பி போயிருந்தான்.மதுரனின் பழைய வீட்டின் முன்னும் ஒன்று கூடி கதைப்பது வழக்கம்.சுரேஸ் அதிகமாக அரசியல் கதைப்பான்.மதுரன் படிப்பு சம்பந்தமான விடயங்களை பற்றி கதைப்பான்.கண்ணன் பெண்களைப்பற்றிதான் அதிகம் கதைப்பான்.மதுரன் புது வீடு மாறுவதற்கு பல விதத்தில் சுரேஸும் கண்ணனும் உதவினார்கள். "டெய் டியுசன் முடிஞ்சு சரக்குகள் வார நேரம் வாங்கோடா வெளியால போய் நிற்போம்" என கண்ணன் எல்லொரையும் கூப்பிட்டான்.சுரேசை தவிர மற்ற இருவருக்கும் வாழ்க்கையின் இருப்புக்கான அடுத்த படி தெளிவாக இருந்தது. "அடே உடுப்பு சரியில்லை நான் வரவில்லை" என மதுரன் சொன்னான். " பெரிய கமலகாசன், பெட்டைகள் உன்னை பார்க்க போகுது என்ற எண்ணம்,சும்மா சேட்டை விடாமல் வாடா" என்றான் கண்ணன். "அடே யாரும் பொக்கட்டுக்குள் சீப்பு வைச்சிருக்கிறீங்களா" "இல்லையடா வீட்டு சீப்பையும் எந்த பெட்டிக்குள்ள போட்டனோ தெரியவில்லை" மூவரும் தலைமுடியை கையால் கொதிவிட்டு (சீவி),அணிந்திருந்த உடுப்புக்களை அழகுபண்ணி வெளியே வந்து நின்றார்கள். "டேய் நான் நேற்று ஒரு சுப்பர் காயை கண்டனான் "என்றான் மதுரன். "அடே இவனுக்கும் பெட்டைகளின்ட ஆசை வந்திட்டு" "டேய் எங்களுக்கும் அது...... இருக்குடா" என்றான் மதுரன். டியுசன் முடிந்து பெண்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். "மச்சான் நான் சொன்ன காய் அந்தா போகுது இரட்டை பின்னலுடன்" "இரட்டை பின்னலுடன் இரண்டு பெட்டைகள் போகுதுடா...உயரமானவளோ ?" "ஒமடா அவள் தான்" "மச்சான் உந்த காய் எங்கன்ட ஊர்காய் பெயர் நிலா,"என்று சொன்ன சுரேஸ் எதையோ இழந்தவன் போல திகைத்து நின்றான். "அடேய் உத விட திறம் காய்களை நான் கொழும்பில கண்டனான்"என்றான் கண்ணன். "நான் கண்ட பெட்டைகளுக்குள்ள இவள் எனக்கு அழகாய் தெரிகின்றாள்,அத்துடன் என்னை அறியாமல் ஒருவித உணர்வு உண்டாகின்றது" தட்ஸ் இட்...என்றான் மதுரன். வழமையாக மூவரும் ஒன்றாகதான் பிரிந்து செல்வார்கள். அன்று சுரேஸ் உடனே நண்பர்களிடம் விடை பெற்று சென்று விட்டான். நிலாவை கண்டவுடன் "எதொ ஒர் உணர்வு"என்று மதுரன் சொன்ன வார்த்தை சுரேசை வெகுவாக பாதித்திருந்தது. நிலாவை சிறு வயதுமுதல் கண்டிருக்கிறான் .ஊருக்குள் அவள் ஒரு யாழ் அழகி என்று சொல்லலாம். கலியாணம் கட்டினால் இவளை கட்ட வேணும் இல்லாவிடில் இவளை மாதிரி ஒருத்தியை கட்டவேணும் என்று எண்ணிக்கொண்டான்.அவள் ஒ.எல் முடிக்கட்டும் அதன்பின்பு அவளிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று காத்திருந்தான்.ஆனால் அவளுக்காக அவன் கடிதமும் எழுதவில்லை கவிதையும் எழுதவில்லை.என்றாலும் அவனது மனவுலகில் அவளை பற்றிய பல பேசாப்பொருள் எண்ணங்ளையும் பல பேசுபொருள் எண்ணங்களையும் வளர்த்திருந்தான்.கோவிலில் பாவாடை தாவனியில் அவளை கண்ட பின்பு அவள் மீது அதிகமான காதல் அவனை அறியாமலேயே குடி கொண்டிருந்தது..இரண்டு நாட்களாக நண்பர்களை சந்திக்க அவன் செல்லவில்லை. மதுரனின் படலையடியில் கண்ணன் வந்து சைக்கிள் மணியை அடித்தான் . "வாரன்டா நில்லு"என்றவாறு சேர்ட்டை மாட்டிகொண்டே வெளியெ வந்தான். "எங்கயடா சுரேஸ் இரண்டு,மூன்று நாளா ஆளை காணவில்லை" "ஒமடா வாரீயோ வீட்டை போய் பார்ப்போம்" "கொஞ்சம் இரு இப்ப டியுசன் முடிந்து பெட்டைகள் வருவாளைவையள் பார்த்து போட்டு போவம்" பெட்டைகள் வர பெடியள் தங்கட நாயக விளையாட்டை காட்ட அவையள் நாயகி விளையாட்டை காட்டி விட்டு பஸ் தரிப்பிடத்திற்கு சென்று விட்டார்கள். இருவரும் சுரேஸின் வீட்டை சைக்கிளில் சென்றார்கள். "என்னடா வீட்டுப்பக்கம் காணவில்லை" "இல்லை கொஞ்சம் வேலை கிடந்தது அதுதான்" "டேய் சுரேஸ் இவனை நாங்கள் நல்ல பெடியன், புத்தக பூச்சி என்று நினைத்தோம் ஆனால் காய் சுழியன்டா மடக்கி போட்டான்டா அந்த இரட்டை பின்னல்காரியை இப்பவும் உன்னை பார்க்க வரவில்லை அவளின்ட வீடு தேடி வந்திருக்கிருக்கிறான்."என நக்கலடித்தான். டிங்....டொங்க்....இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்... நேரம் சரியாக 4 மணி----- இப்பொழுது முதல் தொடர்ந்து கேட்க இருப்பது தத்துவ முத்துக்கள் முதலாவது பாடலாக இதோ டி.எம் செளந்தரநாயகம் பாடிய "எங்கிருந்தாலும் வாழ்க"...... என்ற. அறிவிப்பு பி.எச் அப்துல் ஹமீதின் குரலில் ஒலிபரப்பானது..... வாங்கோடா அவளின்ட வீட்டை காட்டுறேன் .....என்று தனது சைக்கிளை எடுத்து கொண்டு முன்னே சென்றான்...... "மச்சான் இவன் அந்த பெட்டையை கண்டவுடன் காதல் கலியாணம் என்று புலம்புகிறான்...எனக்கு உதெல்லாம் சரி வராது பெட்டைகளை பார்த்தமா மடக்கின்மா மாறினமா என்று இருக்க வேணும்....கலியாணம் கட்டும் பொழுது வீட்டுக்காரர் பார்த்து வைச்ச பெண்ணைத்தான் கட்ட வேணும்.லவ் பண்ணப்போறன் என்கின்றாய் கவனம்"என்று கண்ணன் கூறினான் "தொடரட்டோ.....விடட்டோ"
 5. 2 points
  பகுதி - 1 அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்திருந்தன. கண்களைத் திறந்து பார்க்கக் கூட இயலாத அளவுக்கு, அதன் பிரகாசம் இருந்தது. நீண்ட ஒரு கருநிற மலைப்பாம்பொன்றின் வளைவுகளுடன், அந்த நெடுஞ்சாலை நீண்டு கிடந்தது. முதல் நாள் இரவின் ‘கடுங்குளிர்', மெல்லிய நீர்ப்படலமொன்றை, அந்த வீதியின் மீது தடவியிருந்தது. வரப்போகும் ‘வெயிலின்' கடுமையுணர்ந்த கங்காருக்கள், வீதியின் இரு பக்கங்களிலும் பரந்திருந்த, மஞ்சள் நிறமான கோரைப்புற்களின் மறைவுகளிலிருந்து, வீதியில் படிந்திருந்த நீரைத் தங்கள் நாக்குகளினால், மெல்ல மெல்ல நக்கி எடுப்பதற்காக வந்து கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், அன்றைய பொழுது தாகத்துடனேயே கழிந்து விடக்கூடும். முந்திய இரவுகளில், அந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, வாகனங்களினால் கொல்லப்பட்டு வீதியோரங்களில் கிடந்த தங்கள் உறவுகளுக்காக, ஒரு நிமிட அஞ்சலி செலுத்தவும் நேரமில்லாத ‘அவசரம்' அவற்றுக்கு இருந்தது! அந்த இறந்து போன, கங்காருகளின் ‘கருப்பைப் பைகளில்’ சில ‘குட்டிகள்' இன்னும் குற்றுயிருடன் இருக்கவும் கூடும்! அந்தப் பாதையில் தான் ‘மாயா' (Maya) தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தாள். ‘கார்' என்ற வகையினுள் அதனை ‘அடக்கி விட' முடியாது. இப்பகுதியில் 'கார்' என்று அழைக்கப்படுவது நான்கு சில்லுகளும், ஆகக்குறைந்தது இரண்டு கதவுகளையுமாவது கொண்ட, வீதியில் ஓடக்கூடிய ஒரு 'வாகனம்' என்பது தான் அதிகமாகப் பொருந்தும் .பொதுவாக ஒரு தேசத்தின் வீதிக் கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் நடை முறைப்படுத்துபவர்கள் போக விரும்பாத பகுதி அது. வெளியே தெரியும் ஒய்யாரக் கொண்டைகளையும், தாழம்பூ வாசனைகளையும் தாண்டி, உள்ளே இருக்கின்ற ஈர்களையும், பேன்களையும் பற்றி எவரும் கவைலப்படுவதில்லை. அதனை ஆங்கிலத்தில் ‘காம்ப்' என்னும் நவீன வார்த்தைகளுக்குள் அடக்கி விட்டு, வாரா வாரம் அவர்களுக்கான ‘ கொடுப்பனவைக்' கொடுத்துவிடுவதுடன், தனது ‘கடமை' முடிந்து விடுவதாகத் தான் சராசரி, அவுஸ்திரேலியக் குடிமகன் நினைத்துக் கொள்வதுண்டு. தற்செயலாகத் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, அந்தப் பகுதிக்குள் போக நேரிட்டால், கறள் கட்டிய தகரக்கூரைகளும், உடைந்து போன கண்ணாடிகளைக் கொண்ட ‘ஜன்னல்களும்', வீதியெங்கும் சிதறிக்கிடக்கும் உடைந்து போன, பியர்ப் போத்தல்களும், மூக்குச் சிந்திய படியே விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களும், கட்டாக்காலி நாய்களுடன் கட்டிப்பிடித்தபடி படுத்திருக்கும் முதியவர்களும் அவர்களது கண்களையும், மனச்சாட்சியையும் உறுத்துவதுண்டு. எனினும், எப்படி முயன்றாலும் இவர்களை மாற்றமுடியாது என்று தங்கள் மனச்சாட்சிகளை, அவர்களே சாந்தப்படுத்தி விடுவதுண்டு! மாயா தனது காரைப் பிரதான வீதியிலிருந்து, ‘உலுறு' நோக்கிச் செல்லும், சிறு செம்மண் பாதையொன்றில் செலுத்திக்கொண்டிருந்தாள். வெயில் வருவதற்கு முன்பு, அவள் ‘உலுறுவை' அடைந்து விடவேண்டும் என்பது தான் அவளது திட்டமாக இருந்தது. மத்திய வயதில் பயணித்துக் கொண்டிருக்கும் மாயா, இப்போதெல்லாம் ‘உலுறுவுக்கு' அடிக்கடி வர விரும்புகின்றாள். ‘உலுறு' என்பது வேறு ஒன்றுமல்ல. அவுஸ்திரேலியாவின் நடுவே பரந்து கிடக்கும் சிவந்த மண்ணின் பரப்பில், விரிந்து கிடக்கும் ஒரு பாரிய ‘பாறைத்தொடர்' தான். உலகத்திலேயே மிகவும் பெரிய ‘தனிக்கல்' இதுவென்று சொல்லப்படுகின்றது. வெளியே பல தலைகளைக் கொண்ட ‘ஒரு அரக்கன்' படுத்திருப்பது போலத் தோன்றினாலும், நிலத்தின் கீழேயே, இதன் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதி, தனிக்கல்லாகப் புதைந்து போய்க் கிடக்கின்றது என்று கூறுகிறார்கள். இதற்கு ‘வயிற் பெல்லாஸ்' (White Fellows) வைத்த பெயர் ‘ அயர்ஸ் றொக்' (Ayers Rock) எனினும், மாயாவுக்கு அந்தப் பெயரால், அதை அழைக்க ஏனோ விருப்பமில்லை. அவளைப் பொறுத்தவரையில், அந்த ‘கற்குன்றைப்' பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. அவளது மூதாதைகளின் ‘கனவுக் காலங்களில்' (Dream Times), இதைப்பற்றிப் பலவிதமான ‘கர்ண பரம்பரைக் கதைகள்' உள்ளன. அநேகமானவை, மலைப்பாம்புக்கும், நச்சுப்பாம்புக்கும் நடந்த போராட்டத்தை நடுநிலைப் படுத்த, மற்றையவை அரணை, ஓணான், தீக்கோழி, கங்காரு, முதலை போன்றவற்றை முன்னிலைப்படுத்தி நிற்கின்றன. எது எப்படி இருந்தாலும், இந்த கற் குன்றுக்கு' அண்மையில் வரும்போது, தனது மூதாதையரின் ‘ஆவிகள்' வந்து தன்னை, அரவணைப்பதாகவும், ஆறுதல் சொல்வதாகவும் அவள் உணர்கிறாள். அண்மையில் நடந்த ஒரு சம்பவமொன்று, அவளை இந்த இடத்திற்கு, இப்போதெல்லாம் அடிக்கடி அழைத்து வருகின்றது ! அவளது தாயாரான 'பின்டிக்கும்' (Bindi), யாரோ ஒரு ‘வயிற் பெல்லா' வுக்குமிடையில் ஏதோ ஒரு வகையில், ஒரு விதமான ‘தொடர்பு' ஏற்பட்டு விட்டது. அதற்குக் காதல் என்று பெயர் வைத்து அந்தப் புனிதமான வார்த்தையை மாசு படுத்த மாயா விரும்பவில்லை. பின்னர் அந்த ‘வயிற் பெல்லா' தனது பயணத்தைத் தொடர்ந்து சென்று விட, அவர்களின் தொடர்பின் விளைவாக மாயாவின் அம்மா ‘பின்டி' (Bindi) கர்ப்பமானாள். நல்ல வேளையாக, அவளுக்குப் பிறந்த குழந்தை, எந்த விதமான ‘வயிற் பெல்லா' வின் வெளிப்படையாகத் தெரியக்கூடிய எந்த அடையாளங்களும், குணாதிசயங்களும் கொண்டு பிறக்கவில்லை. அதனால் ‘மாயாவை' அவளது ‘இனத்தவர்' ஒதுக்கியோ, விலக்கியோ வைக்கவில்லை. அதனால் அவளும், இன்னுமொரு 'பூர்வீகக் குடி மகளாக' அவளது தாய் வழிப் பாட்டியால், அந்தக் 'காம்புக்குள்ளேயே' வளர்க்க்கப்பட்டாள். ஒருவேளை மாயாவை, அவளது அம்மம்மா ஒருவருக்கும் தெரியாமல் மறைத்தும் வைத்திருந்திருக்கலாம். ஆனால் மாயாவின் அம்மாவை, அவளது இனத்தவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படியான கலப்புத் திருமணங்களில் ஈடுபட்டவர்களை, பூர்வீகக் குடிகள் என்றைக்குமே, தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. ஈவிரக்கம் இல்லாது, பரந்த வெளிகளில் அவர்கள் துரத்திவிடப்படுவார்கள். இல்லாவிட்டால், உறவினர்களால் தயவு தாட்சண்யம் இன்றிக் கொல்லப்படுவார்கள். இப்படியான உறவுகளின் விளைவாகப் பிறக்கும் குழந்தைகள், எப்போதும் அவர்களது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதனால் பின்டி ‘களவெடுக்கப்பட்ட தலைமுறையினரில் ' (Stolen Generation) ஒருவராக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதை விடவும், இவ்வாறு துரத்தப்பட்டவர்கள், மாட்டுமந்தைகளை வளர்க்கும் ' மிகப்பெரிய நிலப்பரப்பிலான மந்தை பராமரிப்பு நிலையங்கள்" (Cattle Stations) போன்றவற்றைச் சுற்றி அலைவது வழக்கமாகும். இத்தகைய நிலையங்கள், பெரும்பாலும் வெள்ளையர்களாலேயே நடத்தப்பட்டதுடன், இவ்வாறு 'சமூகத்தால் விலக்கப்பட்ட பெண்களுக்கு, நல்ல 'வரவேற்பும்' இருந்தது. ஏற்கெனவே மனமுடைந்து போயிருந்த பின்டிக்கு, மரத்தால் விழுந்தவளை மாடு ஏறி மிதிப்பது போன்றதொரு வாழ்வில் வெறுப்பே ஏற்பட்டது. அத்துடன், தனது மகளை' ஒருநாளாவது திரும்பவும் பார்க்கவேண்டும் என்ற ஒரு தாயின் சாதாரண 'எதிர்பார்ப்பும்' அவளுக்குத் தான் உயிரோடு வாழவேண்டும் எனும் உந்துதலை அளித்தது. இதனால் மரணத்தைப் பின் தள்ள விரும்பிய அவள், அங்கிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிறீஸ்தவ ‘திருச்சபைகளால் நடத்தப்படும் சீர்திருத்த விடுதியொன்றுக்குத் தானாகவே போக முன்வந்தாள். இப்படியான விடுதிகளுக்கு, பூர்வீகக் குடிகளிலிருந்து 'இளம் வயதினரும், குழந்தைகளும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பிடித்துச் செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. இப்படியானவர்களையே 'களவெடுக்கப்பட்ட தலைமுறை' (Stolen Generation) ஐச் சேர்ந்தவர்கள் என்று அழைப்பார்கள். அவள் அவ்வாறு கொண்டுபோகப்பட்டது கூட, அவளது பாட்டியார் சொல்லித் தான் மாயாவுக்கே தெரியும். தனது அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற ‘தாபம்' மாயாவின் மனதில் அடிக்கடி தோன்றி மறைந்தாலும், அதனை வெளியே எவரிடமும் சொல்லும் ‘துணிவு' அவளுக்கு ஏற்படவே இல்லை. (வாசகர்கள் விருப்பத்தைப் பொறுத்து, இன்னுமொரு ‘பகுதி ' மட்டும் வரும்..! ) அடுத்த பகுதியைப்பார்க்க, பின்வரும் இணைப்பில் 'கிளிக்கவும்' ! http://www.yarl.com/forum3/index.php?showtopic=137207&hl=
 6. 2 points
  யாழ் புகையிரத நிலையம் வழக்கம் போல இரவு ஏழு மணி மெயில் ரெயினுக்கு பச்சை கொடி காட்டியது. கோர்னர் சீட் கிடைத்த சந்தோஷத்தில் மதுரன் சூட்கேசை இருக்கைக்கு மேலே தள்ளிவிட்டு யன்னலை சற்று காற்றுவர உயர்தியவன் இரயிலின் நகர்வோடு யாழ்ப்பாணம் தன்னை நோக்கி கையை ஆட்டி சற்று கோபத்துடன் விடைபெறுவது போல உணர்ந்தான் . அவன் யாழை விட்டு போகும் போது கோபப்படுவதும் திரும்பி வரும்போது கட்டி அணைப்பதும் யாழ் செம்பாட்டு மண்ணுக்கும் அவனுக்குமான இந்த ஊடல் எவருக்கு புரிய போகின்றது . ஏ எல் பரீட்சை முடிவுகள் மிக சிறப்பாக வந்து பல்கலைகழகத்தில் முதல்வருடம் முடிந்த நிலையில் நாட்டின் அரசியல் நிலை கருதி அவனது பெற்றோர் மதுரனை லண்டன் போக சொல்லி வற்புறுத்திவந்தார்கள் .மிக வசதியான குடும்பம் ,லண்டனில் அண்ணர் டாக்டராக இருக்கின்றார் , நீயும் அங்கு போய் உனது மேற்படிப்பை தொடர் என்று பெற்றோரே முடிவேடுத்துவிட்டார்கள் . பாடசாலை அனுமதி ,லண்டனில் இருப்பிட கடிதம் ,ஸ்பொன்சர் கடிதம் இவையெல்லாம் கொண்டு கொழும்பில் மாமா வீட்டில் தங்கி அவருடன் சென்று இங்கிலாந்து விசா எடுக்க ஏற்பாடு செய்தாயிற்று . “தம்பி என்ன கொழும்பிற்கோ “ என்ற குரல் கேட்டு தன்னிலை வந்தவன் திரும்ப அருகில் ஒரு பெரியவர் ,அவருக்கருகில் ஒரு இளம் பெண் . “ஓம் நீங்களும் கொழும்பிற்கோ “ “தம்பி எனது மகளுக்கு ஒரு கொள்ளுபிட்டியில் இருக்கும் ஒரு வங்கியில் இண்டர்வியுவிற்கு வந்திருக்கு கூட்டிக்கொண்டு போகின்றேன் ,அங்க எனக்கு வடிவாக இடங்களும் தெரியாது சிங்களமும் தெரியாது தம்பியை பார்த்தால் கொழும்பில வேலை செய்பவர் போல கிடக்கு உதவ முடியுமோ “ “நானும் எனது லண்டன் விசா விடயமாகத்தான் கொழும்பு போகின்றேன் பிரச்சனையில்லை உதவிசெய்கின்றேன் வாருங்கள் .” என்றபடி அருகில் இருக்கும் பெண்ணை பார்த்தான் .மிக அழகான ஓரளவு மேலைத்தைய உடையில் அவனை கவனிக்காதவள் போல ஒரு ஆங்கில நாவலை வாசித்துக்கொண்டிருந்தாள் . “காலோ நான் மதுரன் ,எந்த வங்கியில் இன்டர்வியு” “கிரின்லஸ் வங்கி,நான் தனிய வருவம் என்றிருந்தேன் அப்பா தான் இல்லை தானும் வாறன் என்று ஒட்டியபடி வருகின்றார் .நானும் இதுதான் கொழும்பிற்கு முதல் தடவை செல்லுகின்றேன் அதுதான் அப்பா பயப்பிடுகின்றார் “ “பரவாயில்லை ,கிரின்லஸ் வங்கி சட்ட கல்லூரிக்கு முன்னால் தான் இருக்கு ,நான் நண்பர்களை சந்திக்க அடிக்கடி போகும் இடம் .புதன் காலை உங்களை உங்கள் இடத்திற்கு வந்து கூட்டிசெல்கின்றேன் “ “ஓ தாங்க்ஸ் “ என்றபடி திரும்ப புத்தகத்திற்குள் மூழ்கிவிட்டாள். மதுரன் இருக்கையில் சற்று சாய்ந்து கண் மூடியவன், இவளை போல எத்தனை அழகிகளை நேற்று ஒரு ஊர்வசி இன்று ஒரு மேனகை என்று பாடசாலை பல்கலைக்கழகம் டியுசன் என்று கண்டு கதைத்து பழகி நண்பர் என்ற வட்டத்தை மீறி ஏதும் இல்லாமல் இருந்தவன். யாழ் கச்சேரியில் இருந்து மாற்றலாகி உடுவிலுக்கு அப்பா வேலைக்கு வர இணுவிலில் புது வீட்டிற்கு வந்தவனை ஒரு வாரத்தில் கிறங்கடிதுவிட்ட நிலாவை நினைத்து தான் தன்னை இழந்த அந்த கணங்களை கண்ணை மூடி திரும்ப ஓடவிட்டான் . எப்படி இது எனக்குள் நடந்தது எல்லாமே ஒரு கனவு போல இருந்தது .அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ஆனால் ஒரு கல்லில் என் நெற்றிப் பொட்டில் அடித்து விழுத்திவிட்டாள். அது எப்படி சாத்தியமாகியது? நான் சும்மா விட்ட பகிடிக்கு சற்றும் சளைக்காமல் எதிர்ப்பதில் சொன்னதும் அதில் சூடேறிய ஆண் என்ற திமிர் அவளை போடி என்றதற்கு பதிலுக்கு அவள் தன்னை போடா என்றதுதான் அவன் மனதை துளைத்தது .எப்படியும் இவளை பழி வாங்கவேண்டும் என்ற நினைப்பில் அன்று இரவு தூங்கியவனுக்கு காலை எழ அவள் முகமே முதல் நினைவில் வந்தது . தனது வாழ்வு பற்றி மிக தெளிவாக இருப்பவன் மதுரன் .எக்காலமும் வெளிநாடு நாடு போவதில்லை படித்து முடிய மட்டும் காதல் ,தண்ணி சிகெரெட் என்ற சிற்றின்பங்களில் கவனம் சிதறவிடுவதில்லை. நாட்டில் இருந்தே தனது படிப்பை பயன்படுத்தவேண்டும் என்பதே அவன் முடிவு. இப்படி ஒரு தெளிவு அவனுக்குள் இருப்பது அவன் குடும்பத்திற்கே தெரியும் .அதனால் அவர்களுக்கு அவனில் ஒரு தனி மரியாதை வேறு இருந்தது .இவள் நினைப்பு அனைத்தையும் கெடுத்துவிடும் என்று நினைத்தவன் அவள் நினைப்பை மறந்துவிடுவம் என்ற எண்ணத்தில் தாயிடம் இரவு நண்பர்களுடன் தங்கிவிடுவேன் என்று வீட்டு பைக்கை எடுத்து பல்கலைக்கழகம் நோக்கி போய்விட்டான் . இரண்டு நாட்கள் அவள் நினைவை மறந்திருந்தவன் அன்று மாலை வீட்டிலிருந்து லைபிரரிக்கு போக வெளியே வரும் போது அவளை மீண்டும் பார்த்தான் .அவளில் தெரிந்த ஒரு உடல்மொழி தன்னை அவள் தேடியிருக்கின்றாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது .அதே நேரம் தானும் தொலைத்துவிட்ட ஒரு அரும்பொருள் ஒன்று மீண்டும் கிடைக்கும் சந்தோஷ உணர்வொன்று அவனுள் பரவுவதை உணர்ந்தான் .எத்தனை பெண் நண்பிகளிடம் பழகிய எனக்கு இது என்ன புது வித உணர்வு என்று அவனுக்கே வியப்பாக இருந்தது .பைக்கை விரைவாக செலுத்தி வீதி முனையில் திருப்பியவன் சற்று அவளை திரும்பி பார்க்க அவளும் மதுரன் மறையும் தருணத்தை விட கூடாது என்று அவனை திரும்பிப்பார்த்தாள் .இருவர் கண்ணும் கண்ணும் கலந்ததில் அவனுள் ஒரு புது மொழி பிறந்தது அதுதான் அவனை அந்த கடிதத்தை எழுத தூண்டியது. கே கே எஸ் வீதியில் பைக் பறக்கின்றது .அவன் நெஞ்சமெல்லாம் அவள் அவனின் அனுமதி இல்லாமலே நிரம்பிவிட்டாள். லைபிரரிக்கு சென்றவன் இனியும் தாங்காது என்று அவளுக்கு ஒரு கடிதம் எழுத தொடங்குகின்றான் . அதற்கான அவளின் பதில் உடன் கிடைத்ததும் அதை தான் ஆயிரம் தடவைகள் வாசிதத்தையும் நினைக்க அவனுக்கே சிரிப்பாகவும் வெட்கமாகவும் இருந்தது . ரேயினில் அவளை நினைத்து மீண்டும் திரும்ப திரும்ப வாசிக்கவேண்டும் என்று கொண்டுவந்த அந்த கடிதத்தை எடுத்தான் .அதனுடன் சேர்ந்து இன்னொரு கடிதமும் வந்தது .அட லண்டன் அண்ணரின் கடிதம் . டியர் மதுரன் ( நண்பன்) அறிவது . உனது கடிதம் கிடைத்தது .நீ பல்கலைக்கழக படிப்பை தொடர போவதுபற்றியும் அதன் பின் நாட்டில் இருந்தே வேலை செய்ய போவது பற்றியும் எழுதியிருந்தாய் . வெளிநாடு என்ற எண்ணமே எள்ளவும் இல்லை என்ற வரி எனக்கு ஒரு சின்ன மறை முக நக்கல் என்பதை நான் அறிவேன் . உனது முடிவு பற்றி மிக மிக சந்தோசம். இப்படி ஒரு தம்பி எனக்கு கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும் பெற்றோரை விசா கிடைக்கவில்லை என்று ஏமாற்றிவிடு , வேறு வழி எனக்கு தெரியவில்லை .நானும் மதுரன் பல்கலை கழக படிப்பு முடிய லண்டன் வரலாம் என கடிதம் போடுகின்றேன் .அத்துடன் நீ கேட்டது மாதிரி மூன்று முடிச்சு படத்தில் கமல் போடுவது மாதிரி குறுக்காக கட்டம் போட்ட இரண்டு செர்ட்டுகளும் பெரிய இரண்டு பெல் போட்டங்களும் வேறு சில உடுப்புகளும் அனைவருக்கும் அனுப்பியிருக்கின்றேன் ,கொழும்பில் நின்று அதையும் கஸ்டம்ஸில் போய் எடுத்துக்கொண்டு ஊருக்கு போகவும் . அடுத்த என்ன கறுத்தகொழும்பான் என்று எதோ எழுதியிருந்தாய் . மாம்பழம் ஒன்று உன்னை மயக்கிவிட்டதா ? சில வருடங்களுக்கு முதல் நீ எழுதிய கடிதம் ஒன்று நினைவிற்கு வருகின்றது .ராணி தியேட்டரில் டே ஒப் தி ஜாக்ககோல் (DAY OF THE JACKAL) படம் பார்த்துவிட்டு கொலை செய்யபோறவனே அதற்கு முதல் ஒழுங்காக தான் செய்யப் போவதை இவ்வளவு திட்டமிடுகின்றான் .அதே போல நானும் எனது வாழ்கையில் ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டே வாழப் போகின்றேன் .படிப்பு வேலை கல்யாணம் எல்லாம் ஒரு ஒழுங்கில் அந்த அந்த வயதில் இருக்கவேண்டும் என்று தத்துவம் கதைத்த நீ இன்று இப்படி எழுதியது சிரிப்பு வந்துவிட்டது , முடிந்தால் எனக்கும் உன்ர கறுத்த கொழும்பானின் படத்தை அனுப்பு .இப்போதைக்கு பெற்றோர் தம்பி தங்கைக்கு ஏதும் தெரியாமல் நடந்துகொள் . அன்பின் அண்ணன் அண்ணன் தன்னில் இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதை நினைக்க மதுரனுக்கு பெருமையாக இருந்தது .அக்கடிதத்துடன் மடித்து வைக்கப்படிருந்த மற்ற கடிதத்தை சற்று படபடக்கும் கையோடு திறக்கின்றான் . ‘உயிராக நினைக்கும் மதுரனுக்கு .... மரத்திலே ஆயிரம் மலர்கள் மலரும் இதயத்தில் ஒரு மலர் தான் மலரும் .. காலமும் விதியும் ஒத்துழைத்தால் நாம் வாழ்விலும் ஒன்றினைவோம். அது வரை எந்த சோதனை வந்தாலும் நான் தடுமாற மாட்டேன் . விரைவில் l ஒ எல் சோதனை வருகிறது . நானும் நிறைய படிக்க வேண்டும் புத்தகத்தி தூக்கினால் உங்கள்முகமே முன் வந்து நிற்கிறது ..எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும். ஒ எல் சோதனை முடியும்வரை என்ன குழப்ப கூடாது. அதி திறமை சித்திகளோடு ளோடு தான் உங்கள் ளுக்குமருமடல் வரைவேன்...அதுவரை உங்கள் நினைவுகளுடன் ..நிலா ....(இது நிலாமதி அக்காவின் வரிகள் ) தனக்குள் சிரித்தபடி கடித்தை மடித்தவன் விசர் பெட்டைக்கு விளங்கவில்லை இனி ஒரு நாளும் உன்னை காணாமல் என்னால் இருக்கமுடியாது என்று , நான் தான் இல்லையென்றாலும் நீ என்னை பார்க்காமல் இருந்துவிடுவாயா ? காதல் என்று வந்து விட்டால் கடக்கமுடியாத ஆற்றையும் கடக்க வைத்து ஏறாமுடியாத மலையும் அது ஏற வைத்துவிடும். இதற்குள் ஓ எல் ஏ எல் பரீட்சை என்றுகொண்டு . நான் வளர்ந்த இடமும் விதமும் உனது கிராமதுத்துடன் ஒப்பிடும் போது வித்தியாசம் தான் அதற்காக உன்னை பார்க்காமல் இருக்க முடியுமா என்ன ? அதற்கும் ஒரு பிளான் போட்டால் போச்சு என்று அவன் நினைக்க , "தம்பி வவுனியா வந்துவிட்டது ,குரங்குகள் ஏறப்போகின்றது மகளுக்கு உந்த கோர்னர் சீட்டை கொடுக்கமுடியுமா" "நிச்சயம் "என்றபடி எழும்பியவனை "இது கூடிப்போச்சு அப்பா ,அவர்தான் கொழுப்பில் இறங்கி உதவி செய்வதாக சொல்லியிருக்கினார் ,பிறகு ஏன் கஷ்டம் கொடுக்கின்றீர்கள் .நீங்கள் சொல்லும் குரங்குடன் இருந்துதான் நான் இனி வேலையும் செய்ய போகின்றேன் ,எனக்கு என்னை சமாளிக்க தெரியும்" என்று முழு ஆங்கிலத்தில் தந்தையை திட்டியவள் மதுரனை நோக்கி "நீங்கள் ஆவலாக சிரித்தபடியே வாசித்துக்கொண்டிருந்த கடிதத்தை தொடருங்கள் "என்றாள். அட இவள் சிட்னி செல்டன் வாசிப்பது மாதிரி என்னை அல்லவோ பார்த்துகொண்டு இருந்திருக்கின்றாள் என்று நினைத்தவன் பரவாயில்லை வாருங்கள் என்றபடி அவளுக்கு கோர்னர் சீட்டை கொடுக்கின்றான் . மதுரனது காதல் எத்தனை தடைகளை தாண்ட வேண்டி வரும் என்பதை அறியாமல் மெயில் ரெயின் வவுனியாவை தாண்டி வேகம் எடுக்கின்றது (தொடரும் ).
 7. 1 point
  இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை, மகிழ்வு, பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன ஓடியாடித் திரிந்து. கிட்டத்தட்டச் சிறை வாழ்க்கை போலத்தான். என்ன விரும்பிய உணவு, கணவனின் ஆதரவான விசாரணை, பெற்றோரின் தொடர் தொலைபேசி விசாரிப்புக்கள் என்று எத்தனை தான் இருந்தாலும் கணவன் அருகே இல்லையே என்னும் குறையும் பெரிதாகத்தான் தெரிந்தது. இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவேன் என்று சுதாகரன் கூறினாலும் அவன் தன்னிடம் வந்து சேரும் வரை சுசீலாவுக்கு நின்மதி இருக்கப் போவதில்லை. யார் என்ன ஆறுதல் கூறினாலும் கணவன் அருகிருப்பதே பெரிய பலம். நோய் வாய்ப்பட்டிருக்கும் தந்தையை விட்டுவிட்டு வரமுடியாததால் தாய் இவளுடன் வந்த நிற்கவில்லை. என்னதான் வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பயம் எந்நேரமும் மனதில் ஓடிக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை சுசீலாவால். ஒரு வருடங்களுக்கு முன்புவரை விரக்தியின் விளிம்பில் நின்று, யாரையும் பார்க்கப் பிடிக்காது, தொலைபேசியில் யார் அழைத்தாலும் பேசப்பிடிக்காது இருந்த எனக்கு இப்ப எல்லோருடனும் பேசவேண்டும் என்னும் ஆசையை நிறைவேற்ற முடியாது என் நிலை தடுக்கிறது. இரண்டு மாதங்களில் எல்லோரையும் வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்து வைத்து என் மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். திருமணமாகி எட்டு வருடங்கள் அவள் பட்ட பாடு சொல்லி முடியாது. காண்பவர் எல்லாம் என்ன விசேடம் ஒன்றும் இல்லையா என்று அறிவற்றுக் கேட்கும் போது திடீரென மனதில் எழும் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்களுக்கு பதில் கூறியதை நினைக்க இப்ப சிரிப்பாக இருந்தது அவளுக்கு. இந்தச் சனங்கள் வாயை வச்சுக்கொண்டு பேசாமல் இருக்காமல் ஏனப்பா எங்கள் குடும்ப விசயங்களில் தலியிடுதுகள் என்று எரிச்சலுடன் இவள் கூறும்போதில், அதுதான் உலகமப்பா அவர்களை மாற்ற முடியாது என்று கணவன் கூறுவான். அதன் பின் அவள் பொது நிகழ்வுகளில், திருமண வீடுகளுக்குக் கூடச் செல்லாது வீட்டுக்குள்ளேயே ஒடுங்கப் பழகிவிட்டாள். ஏன் திருமணத்துக்கு வரவில்லை என்று யாராவது தொலைபேசியில் கேட்டாலும் ஏதாவது சாட்டுகள் கூறித் தப்பிக் கொண்டாள். எத்தனை வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டு, எத்தனை பேரிடம் தலை குனிந்து, எத்தனை தரம் இவளுக்கும் கணவனுக்கும் பரிசோதனை செய்து, எத்தனையோ ஊசிகள் மருந்துகள் ஏற்றி கிட்டத்தட்டச் சித்திரவதைதான். எல்லாவற்றையும் இருவரும் தாங்கினார்கள்தான். ஆனாலும் எந்தப் பயனும் அற்றுப் போய் வாழ்வில் பிடிப்பே அற்று இருவரும் இருந்தபோதுதான் அவள் ஆனந்த விகடனில் வந்திருந்த ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதை கணவனையும் வாசிக்கச் செய்து இருவரும் நீண்டநேரம் அதுபற்றிக் கலந்து கதைத்து ஒரு முடிவுக்கு வந்தனர். அடிமனதில் ஒளிந்துகொண்ட ஆசை மீண்டும் இருவருக்கும் விஸ்வரூபம் எடுக்க ஒருவரை ஒருவர் நீண்டநாளின் பின் நம்பிக்கையோடும் ஆசையோடும் பார்த்து மகிழ்ந்தனர். ******************************************************************************************************************** கணவனுடன் இந்தியா வந்து அந்தப் பெரிய மருத்துவமனையில் எல்லா டெஸ்ட் உம் செய்து தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி, எல்லாம் சரியாக இருக்கிறது. அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம் என்றதும் இருவர் மனதிலும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமற் போனது. சுதாகரன் இன்னும் மூன்று வாரங்கள்தான் அவளுடன் நிற்கலாம். அதன் பின் அவன் வேலைக்குத் திரும்பவேண்டும். அந்த மருத்துவரிடமே ஆலோசனை கேட்டனர். எல்லாமாக எனக்கு நீங்கள் மருத்துவச் செலவுக்கு மூன்று இலட்சம் தந்துவிட வேண்டும் . நீங்கள் இங்கே பக்கத்தில் தங்குவதற்கு நான் ஒழுங்கு செய்கிறேன். அது உங்கள் செலவு. ஒரு பெண்ணை வேண்டுமென்றால் சமைக்கவும் துணைக்கும் ஒழுங்கு செய்கிறேன் என்றுவிட்டார். பணம் என்ன பெரிதா?? பிள்ளை வரம் வேண்டி நொந்து நூலாகிப்போன எங்களுக்கு கடவுள் இப்பதான் ஒரு வழியைக் காட்டியிருக்கிறார். அதை எள்ளளவேனும் பிசக விடாது காப்பது எமது கடமை என்று இருவருமே எண்ணி அவர் கூறிய படியே செய்ய ஆயத்தமாயினர். அடுத்த வாரம் இருவருக்கும் மீண்டும் விந்து, முட்டை ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக மருந்துகள் ஏற்றப்பட்டுத் தயாராக்கி மூன்றாவது வாரம் இருவரிடமும் இருந்து விந்தும் முட்டையும் பெறப்பட்டு சோதனைக் குளாயில் செலுத்துவதாகக் கூறினார்கள். இவர்கள் இருவரும் வேண்டாத தெய்வம் இல்லை. முன்பு சுவிசிலும் இதுபோல் இரு தடவைகள் செய்ததுதான். ஆனாலும் சரிவரத்தான் இல்லை. இம்முறை சுசீலாவுக்கு ஏனோ அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மனம் முழுவதும் ஏற்படும் ஒரு எல்லையில்லா உணர்வை அடக்கு என மனதுக்குக் கட்டளையிட்டுவிட்டுக் காத்திருந்தாள். பதினைந்து நாட்களின் பின்னர் சரிவரும் போல இருக்கு. இன்னும் பதினைந்து நாட்கள் பார்க்கவேண்டும் என்று வைத்தியர் கூறியதும் இன்னும் பதினைந்து நாட்களா என்று இருவருக்கும் ஒரு சலிப்பும் ஏற்பட்டது. இன்னும் இரண்டு வாரங்கள் மெடிக்கல் லீவு கொடுத்துவிட்டு சுதாகரன் மனைவியுடனேயே நின்றான். இரண்டு வாரங்களின் பின்னர் உருவான கரு சுசீலாவுக்குச் செலுத்தப்பட்டது. வலிகளும் வேதனைகளும் கூட அவளது எதிர்பார்ப்புகளின் முன்னால் ஒன்றுமில்லாது போயின. சுதாகரனுக்கும் இம்முறை எல்லாம் நன்றாக நடப்பதாக மனம் சொல்லியதில் நின்மதியாக மனைவியை விட்டுவிட்டு சுவிஸ் வந்துவிட்டான். முன்பே பலருடன் தொடர்புகள் விட்டுப் போனதில் மற்றவர்களின் கேள்விகள் கூட இன்றி நின்மதியானான் அவன். தன் நெருங்கிய நண்பர்களுக்குக் கூட அவனோ சுசீலாவோ இதுபற்றிக் கூறவே இல்லை. நீங்கள் இரண்டு மாதங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான். இவள் தேவை இல்லாமல் வெளியே கூடச் செல்வதில்லை. இவள் தங்கியிருந்த விடுதி போன்ற ஒரு இடத்தில் இவளைப் போன்றே வெளிநாடுகளில் எல்லாம் இருந்து பல பெண்கள் குழந்தைக்காக வந்து காத்திருந்தனர். சிலருக்கு எத்தனை தடவைகள் முயன்றும் முடியாமல் திரும்பி ஏமாற்றம் சுமந்து அழுகையுடன் சென்றிருக்கின்றனர். அவர்கள் அழும்போது இவளுக்குக் கழிவிரக்கம் தோன்றும். தன்னால் முடிந்த ஆறுதலைக் கூறுவாள். இவளுடன் அந்த விடுதியில் இருந்த மற்றைய பெண்கள் நடக்காதே குனியாதே அது செய்யாதே என்று கூறுவதைக் கேட்க இவளுக்குப் பயமாகவும் இருக்கும். மாலையில் கணவன் கதைக்கும் போது தன் கணவனிடம் இவைகளைக் கூற அவனோ சனம் எல்லாம் சொல்லும். நீர் கவனமா இரும். என்ன எண்டாலும் வைத்தியரிடம் கேட்டு அவர் சொல்கிற படி நடவும் என்பான். இருந்தாலும் குழந்தை வளர வளர அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெற்றெடுக்க வேண்டுமே என்ற அவாவிலும் பயத்திலும் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டும் நடக்கவாரம்பித்தாள். அதனால் நடைப் பயிற்சி இல்லாது உடல் ஊதியது. மூன்றாம் மாதம் இவளைப் பரீட்சித்துவிட்டு இரட்டைப் பிள்ளைகள் உனக்கு என்றார். இவளுக்குச் சந்தோசத்தில் நெஞ்சை அடைத்து. சுதாகரனின் களிப்பைச் சொல்லி மாளாது. கடவுள் கருணை காட்டிவிட்டார். ஒன்றுமே இல்லாமல் இருந்த எமக்கு இரண்டா என கடவுளுக்குப் பலதடவைகள் நன்றி கூறிக் கொண்டான் அவன் . ******************************************************************************************************************** இன்னும் இரண்டு வாரங்கள்தான். சுதாகரனும் சுவிசிலிருந்து வந்துவிட்டான். சாதாரண பிரசவமாக இருக்காது என்று வைத்தியர் கூறிவிட்டார். சாதாரணமாகப் பிறக்கும் என்றாலும் கூடப் பணத்துக்காக வைத்தியர்கள் சத்திரசிகிச்சை செய்வது பற்றியும் கதை ஓடித்திரிந்ததுதான். ஆனாலும் அவர்களுக்கு இருந்த பயத்தில் குழந்தைகள் இரண்டும் சுகமாக வெளியே வந்தார் சரி என்ற நிலையில் மருத்துவர் கூறியதை எதிர்த்து ஒரு வார்த்தை கேட்கவே இல்லை. அன்று அவளைப் பிரசவ அறையுள் அழைத்துக்கொண்டு சென்றபோது சுதாகரனும் தானும் வருகிறேன் என்று கூறினான். மருத்துவர் மறுத்துவிட்டார். இவனால் எதிர்த்தும் கதைக்க முடியவில்லை. உள்ள கடவுள்களை வேண்டியபடியே வெளியே காவல் இருந்தான். ஒரு மணி நேரத்தில் சத்திரசிகிச்சை முடிந்ததாகக் கூறி அவனை உள்ளே அழைக்க மனம் முட்டிய மகிழ்வில் உள்ளே சென்றவன் தாய்க்குப் பக்கத்தில் பிள்ளைகளைக் காணாது மனதில் ஒரு திடுக்கிடலோடு தாதியைப் பார்த்து எங்கே பிள்ளைகள் என்றான்??? கால் கைகளில் நடுக்கம் பரவத் தொடங்கியது. மனைவி இன்னும் மயக்கத்தில் இருந்தாள். பிள்ளைகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கொண்டு வருவார்கள் என்று அவள் கூறியதும் மனது ஒருநிலைப்பட்டது. நெஞ்சுக்கூடு மீண்டும் தன் இடத்தில் அமர்ந்தது போன்ற நினைப்பு வர நின்மதிப் பெருமூச்சொன்று வெளிவந்தது. சுசீலாவுக்கும் ஒருவாறு நினைவு திரும்ப பக்கத்தில் பார்த்துவிட்டு அவள் கண்களும் வேதனையை மீறி எங்கே குழந்தைகள் என்று கேட்டன. இவன் கண்கள் கூறிய சமாதானத்துடன் மட்டும் நின்றுவிடாது, இப்ப கொண்டு வருவினம் என்று அவளுக்குச் சொல்லிவிட்டு வெளியே சென்று தாதியிடம் மனைவி கண் விழித்துவிட்டார். பிள்ளைகளைத் தேடுகிறார். எப்ப கொண்டுவருகிறீர்கள் என்றான். நீங்கள் அறைக்குப் போங்கள் இப்ப கொண்டுவருவார்கள் என்றதும் இவன் சுசீலாவுக்கு அருகில் சென்று கொண்டு வருகிறார்கள் என்று கூறிவிட்டு அவளின் தலையைத் தடவி நெற்றியில் முத்தமிட்டு கை ஒன்றை எடுத்து ஆதரவாகத் தடவிக் கொடுத்தான். கதவு திறக்கப்பட, இரண்டு தாதிகள் தொட்டில்களைத் தள்ளிவர, மனம் முழுவதும் மகிழ்வு பொங்க உடனே எழுந்த சுதாகரன் பக்கத்தில் சென்று பார்த்ததும் அதிர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்த்த சுசீலாவின் மனம் திடுக்கிட்டாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தாதியர் வெளியே சென்றதும் இருவரும் கேள்விக் குறியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிள்ளைகள் இரண்டும் பச்சைக் கண்களுடன் வெள்ளைக்காரக் குழந்தைகள் போல் இருந்தன. மாறி வேற ஆட்களின் பிள்ளைகளைக் கொண்டுவந்துவிட்டனரோ என்ற பதைப்பில் வைத்தியரின் அறையைத் தேடி ஓடினான் சுதாகரன். இவன் கூறியவற்றைக் கேட்டபின் முகத்தில் எந்தவிதப் பதட்டமும் இல்லாமல், இப்பிடியான விசயங்களில ஒண்டு இரண்டு மாறி நடக்கிறதுதான். சொறி. பரிசோதனைக் குளாயுள் செலுத்தும்போது ஏதோ தவறு நேர்ந்துவிட்டது. உங்களுக்கு பிள்ளைகளை வைத்திருக்க விருப்பம் இல்லை என்றால் கூறுங்கள். பிள்ளைக்காக எத்தனையோபேர் காத்திருக்கிறார்கள். நீங்கள் சம்மதித்தால் அவர்களுக்குக் கொடுப்போம் என்று கூறிவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருந்தாள் வைத்தியர். உடலும் மனமும் சோர்ந்துபோக வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு எழுந்து நடந்தவன் அறையுள் சென்றதும், மனைவி இரண்டு குழந்தைகளையும் இரு கைகளாலும் அணைத்தபடி முகமெங்கும் பூரிப்புடன் இருப்பதைக் கண்டு தானும் அவளருகில் சென்று பெண் குழந்தையைத் தன் கைகளில் வாரி எடுத்துக் கொண்டான்.
 8. 1 point
  பதின்மங்களின் படிமக்கனவுகள்; புதினங்களாய் பேசிக்கொள்ளும் இரகசிய வார்த்தைகள்; இளசுகளின் சுத்தல்களில் பெருசுகளுக்குப் புரியாத தலைமுறை வளர்ச்சியின் வழக்கமான அதே காதல்! எப்போதும் புத்தம் புதிதாய் மின்னும் எண்ணங்களுடன் தோன்றும் மின்னல்கள்! மின்சாரம் இல்லாத ஊரில் மனசுக்குள் விளக்கெரியும்! இரு ஜோடி இதழின் அழுத்தத்தில் பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்! முதல் முத்தம் எப்பொழுதும் தலைக்கேற்றும் பித்தம்! முதன்முதற் காதல்.... காலத்தால் அழியாத இதயத்தின் மோதல்! சூரிய உதயங்கள் வரை வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த வாலிப பருவத்தின் வலிந்த போர்க்காலங்கள் ! கருவேப்பிலை மரத்தைக்கூட பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து பார்வையாலே பேசிக்கொண்டு மனப் போர்வைக்குள்ளே ஒளித்தபடி ஊரறியாமல் உலகறியாமல் உற்றவர் யாருமறியாமல்... சந்திக்கும் அரிதான பொழுதொன்றில், பத்து விரல் பற்றுகையில்... பக்கென்று பற்றிக்கொள்ளும் பதினாறு வயசல்லவா அது! எண்ணிரெண்டு வயதில்... கண்ணிரெண்டில் கலக்கம்! கன்னியவள் மனதில்... துளிர்க்குது மயக்கம்! காதலின் கிறக்கம்... இன்னுமேன் தயக்கம்! முதல் காதல்; முதல் முத்தம்; இன்னும் பல...!!! பெரும்பாலும் , அந்த வயது அனுபவங்கள் அனைவருக்கும் பொதுவானவை! மீண்டும், மீட்டிப்பார்க்கும் நினைவுகள் எப்பொழுதும் இனிதானவை! :wub: :wub: :wub: :wub:
 9. 1 point
  நாம் அனைவரும் தினந்தோறும் ஏராளமான செயல்களைச் செய்கிறோம். இவ்வாறு தினமும் செய்யும் செயல்களில், சில செயல்களை மட்டும் நாம் மிகவும் விரும்பிச் செய்வோம். சிலவற்றை செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்வோம். இவ்வாறு செய்யும் செயல்களை நமது விருப்பத்தேர்வின் அடிப்படையில் மூன்று வகைகளில் அடக்கலாம். * கடமைக்காகச் செய்பவை: பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்துக்காக இதனைச் செய்வோம். * நமக்காகச் செய்பவை: நமக்குத் தேவையான பிடித்தமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து நேர்த்தியாகச் செய்வோம். * நம்மையறியாமல் செய்பவை: தேவையிருந்தாலும், தேவையில்லாவிட்டாலும், இவ்விஷயத்தை நாம் நம்மையறியாமல் செய்திருப்போம் அல்லது செய்து கொண்டிருப்போம். அதுவும் எப்போது தொடங்கினோம் என்று நமக்கே தெரியாது. அப்படியாயின், இச்செயல்களுக்கு நாம் அடிமையாக இருக்கிறோம் என்று பொருள். இப்படி பலர் தெரியாமல், சில விஷயங்களுக்கு அடிமையாவிடுகின்றனர். இப்போது இங்கு உலகமெங்கும் மேற்கொண்ட கணக்கெடுப்புகளின் வாயிலாக, அனைவரையும் அடிமைப்படுத்தும் சில ஆச்சரியமான செயல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளம் பொழுதைக் கழிப்பதற்கு இனிமையான வழிகளில் ஒன்று தான் இணையதளத்தில் உலாவுதல் என்று தான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, மதுவும், போதைப்பொருட்களும் மனதை எப்படி அடிமைப்படுத்துகின்றனவோ, அதே போல் இணையதளத்தில் உலாவுதலும் மனதை அடிமைப்படுத்துகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் உலாவுதலுக்கு அடிமையானவர்கள் (Internet addiction disorder (IAD)), இதர வகை அடிமைத்தனங்களுக்கு ஆட்பட்டவர்களைப் போலவே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காதல் வயப்படுதல் உறவு விட்டு உறவு தேடுபவர்கள் ஒரு ஐந்து நிமிடம் கூட தனித்திருப்பதை கண்டிருக்கமாட்டோம். அத்தகையவர்களை காதல் வயப்படுவதற்கு அடிமையானவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதயம் படபடக்க, உணர்வுகள் ஊற்றெடுக்க, காதலில் விழுதல் என்பதும் ஒரு போதை தான். அதற்கு அடிமையாவது என்பது எளிது. மேலும் காதலுக்கு அடிமையாவதைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட ஆர்தர் ஆரோன் எனப்படும் உளவியலாளரது கூற்றுப் படி, காதலில் விழுவதும் கூட இதர வகை போதை மருந்துகளுக்கு அடிமையாவதைப் போலவே மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு காதலுக்கு அடிமையானவர்கள், ஒரு காதல் மறையத் தொடங்கும் போது, மற்றொரு உறவைத் தேடி ஏங்கத் தொடங்குவார்கள் என்று சர்க்கரை இனிப்பை விரும்பாதவர்கள் எவருமே இருக்க முடியாது. நினைவு தெரிந்த நாள் முதல், அனைவரும் சர்க்கரை சேர்த்த இனிப்பான பொருட்களை ஆர்வத்தோடு சாப்பிட்டு வந்திருக்கிறோம். ஆனால் அவற்றில் குறிப்பிட்ட சில வகையான சாக்லெட் அல்லது பிஸ்கெட் போன்றவற்றிற்கு அடிமையாகியிருப்போம் என்று நினைத்திருப்போமா? சர்க்கரை சேர்த்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பொழுது, ஓபியாட் எனப்படும் வேதிப்பொருள் மூளையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த வேதிப்பொருள் மட்டற்ற இன்பமான உணர்வை உண்டாக்கும். ஆகவே தான் இனிப்புகள் இல்லாத பொழுது, இந்த இன்பமான உணர்வுக்கு ஏங்குகிறோம் என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. அதிலும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஒரு குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் படி, சர்க்கரையானது, ஆல்கஹால் மற்றும் சிகரெட் ஆகியவற்றைப் போல, தீமையை உண்டாக்கும் மற்றும் அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது ஆகும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பச்சை குத்திக் கொள்ளுதல் பச்சை குத்திக் கொள்ளுதலும் ஒருவிதமான அடிமைப்படுத்தும் செயல்களுள் ஒன்றாகும். ஏனெனில் பச்சை குத்திக் கொள்ளும் போதோ அல்லது வேறு இடங்களில் ஊசியால் குத்திக் கொள்ளும் போதோ வெளியிடப்படும், என்டார்ஃபின்கள் வலியை மறக்க உதவுவதோடு, மனதில் அதற்கு அடிமையாகும் எண்ணங்களையும் ஊன்றிவிடுகிறது. இது ஒரு உண்மையான அடிமைப்படுதலா என்பதில் விவாதங்கள் இருந்தாலும், உலகெங்கும் இலட்சக்கணக்கானவர்கள் உடலெங்கும் தோடுகளைக் குத்திக் கொண்டும், பச்சை குத்திக் கொண்டும் திரிகிறார்கள் என்பது உண்மை தானே? வேலை பெரும்பாலானோர் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் போது, வேலை வேலை என்று வேலைக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியில் இருந்தால் மிகவும் ஏங்கிப் போவார்கள். இம்மாதிரி வேலையே கதியென்று வேலைக்கு அடிமையாகியவர்களுக்கு, ஒர்க்கஹாலிக் (workaholic) என்று ஜாலியாகப் பெயரிட்டு அழைக்கிறோம். இது கடின உழைப்பு மட்டுமல்ல. உடல் ஆரோக்கியம் மற்றும் உறவு ஆகியவற்றைப் பாதிக்கும் ஒருவித மனநிலையுமாகும். மேலும் ஸ்பெயினில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, ஸ்பெயினில் உள்ள 12% பேர் வேலையே கதி என்று இருக்கிறார்கள் என்றும், ஜப்பானில் ஆண்டுக்கு 1000 பேர் அதிகமான வேலையால் மரணமடைகிறார்கள் என்றும் சொல்கிறது. டேன்னிங் (Tanning) டேன்னிங் எனப்படுவது சருமத்தின் நிறத்தை பொலிவுபடுத்த செய்யப்படும் ஒரு அழகு சிகிச்சையாகும். இதற்கென சூரியப்படுக்கை (sun beds), டேன்னிங் படுக்கை (tanning beds) ஆகியவைகள் உள்ளன. சூரிய ஒளி அல்லது டேன்னிங் படுக்கை மூலம், புற ஊதாக் கதிர்களை சருமத்தின் மேல் பாய்ச்சுவதால், போதை மருந்துக்கு அடிமையாவது போன்ற மாற்றத்தினை, அவை மூளையில் ஏற்படுத்துகிறது என்று அடிக்சன் பயாலஜி எனப்படும் மாத இதழில் வெளியான கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் தொடர்ந்து இந்த சிகிச்சை முறையை செய்து வந்தால், அது டேன்னிங்கிற்கு அடிமைப்படச் செய்துவிடும். அதிலும் டாக்டர். பிரையன் அடினாஃப் என்னும் டேன்னிங் ஆராய்ச்சியாளர், மூளையின் பகுதிகளில் புற ஊதாக் கதிர்கள் படுவதால், டேனொரெக்ஸியா (Tanorexia) எனப்படும் டேன்னிங் போதைக்கு நம்மை அடிமைப்படச் செய்து விடுகிறது என்று சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், டேன்னிங் செய்து கொள்வது உடலுக்கு மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்பது மற்றொரு ஆபத்து ஆகும். வீடியோ விளையாட்டுக்கள் உலகமெங்கும் உள்ள இளைஞர்களும், சிறார்களும், வீட்டிலோ வெளியிலோ கணிப்பொறி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டு, வீடியோ விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு சாதாரணமானதாக இருந்தாலும், அவை மிகவும் தீவிரமான தீமையை உண்டாக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 2006 ஆம் ஆண்டு பிபிசி-யால் ஒளிபரப்பப்பட்ட ஒரு சொற்பொழிவின் படி, ஆன்லைனில் வீடியோ விளையாட்டு விளையாடும் 12% பேர் அதற்கு அடிமையாகியிருப்பதோடு, இவ்வாறு வளர்ந்து வரும் அடிமைத்தனத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக, பல நாடுகள், சிகிச்சை மையங்களை அமைத்துள்ளன. மேலும் மற்ற போதைகளைப் போலவே, இந்த மாதிரியான விளையாட்டுக்களை விளையாடுவது, உறவுகளையும், வேலையையும் கெடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. குறிப்பாக இந்த செயலால் உயிரை விட்டவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாப்பிங் செய்வது நம்மில் பெரும்பாலானோர் புதிய பொருட்களை வாங்குவதற்கு விரும்புவோம். அதிலும் அன்பிற்குரியவர்களுக்குப் பரிசுகள் வாங்குவதையும், புதிய மின்னணுப் பொருட்களையும் வாங்க பெரிதும் ஆசைப்படுவோம். ஆனால் சிலருக்கு புதிய பொருட்களை ஷாப்பிங் செய்வது மிகப்பெரிய போதையாக மாறிவிடுகிறது. உடலில் என்டோர்பின்கள் மற்றும் டோபமைன்கள் அதிகமாகச் சுரப்பதால், இவ்வாறு ஷாப்பிங் செய்யும் போதை ஏற்படுகிறதாம். மேலும் வாழ்வில் எதிர்மறை எண்ணங்களை மறக்கவும், எதிர்மறை சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்கவும், ஷாப்பிங்கை ஒரு காரணியாக அடிமைப்பட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் இப்போதையானது நிதி ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். லிப் பாம் ஆல்கஹால் அல்லது சிகரெட் போன்ற வேதிப்பொருட்களால் ஆனது இல்லை என்றாலும், லிப் பாம்( Lip balm) எனப்படும் உதட்டுச் சாயம் அடிமைப்படுத்தும் ஒரு விஷயமாகும். லிப் பாமை உதட்டில் தடவும் போது, தற்காலிகமாக ஒரு ஈரத்தன்மையை உண்டாகுகிறது. வறண்டு போன உதடுகளுக்கு, இது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், லிப் பாம் தடவுவதால், இயற்கையான ஈரத்தன்மை உருவாவது பாதிக்கப்பட்டு, ஈரத்தன்மையைப் பேணுவதற்கு மேலும் மேலும் லிப் பாம் தடவும் எண்ணத்தை உண்டாக்குகிறது. இது உயிருக்கு ஆபத்தைத் தரும் போதை அல்ல என்றாலும், செலவு அதிகம் பிடிக்கும் இந்த போதையைத் தடுப்பதற்கென நிறைய ஃபேஸ்புக் குழுக்கள் உருவாகியுள்ளன. இசை அனைவருமே இசையை ரசிப்போம். ஒவ்வொருவருக்கும் பிடித்தமான சில பாடல்கள் இருக்கும். அவற்றைத் திரும்பத்திரும்ப கேட்டு ரசிப்போமல்லவா? ஆனால் அவ்வாறு பிடித்த அப்பாடல்களுக்கு அடிமையாகிவிட்டோம் என்று என்றாவது நினைத்தது உண்டா? மெக்கில் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, இசைக்கு அடிமையாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளனவாம். இந்த ஆய்வின்படி, பிடித்தமான பாடல்களைக் கேட்கும் போது, உடலுக்குள் ஒரு போதை உண்டாகி, உடலில் உள்ள டோபமைன்களானது அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. டோபமைன் என்பது மனிதர்கள் போதைப் பொருளட்களை உட்கொள்ளும் போது, உடலில் அதிகமாகச் சுரக்கும் ஒரு வேதிப்பொருள். மனம் உணரும் போதைக்கு இதுதான் காரணம். ஆராய்ச்சியாளர்களின் கருத்துப் படி, ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய விரும்புவதற்கு டோபமைன் தான் காரணமாம். http://orangeeedaysnews.blogspot.de.s45.en.wbprx.com/2014/02/blog-post_596.html
 10. 1 point
  நான் மேலே எழுதி சில மணி நேரங்களில் வந்திக்கும் செய்தி இந்த கீழ் கண்ட செய்தி..... சுண்டல் ஒரு அரசியல் ஆய்வாளன் ஆகிட வேண்டியது தான் தஞ்சாவூரில் டி.ஆர். பாலு உருவபொம்மை எரிப்பு- பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!!
 11. 1 point
 12. 1 point
  இந்த கேவலம் கெட்ட வாழ்கையை விட நஞ்சு குடித்து சாகலாம்.
 13. 1 point
  அடி பலமோ? இதுக்கை வந்து என்ன குரங்குச்சேட்டையே விடுறாய்..... அப்பிடி என்ன அவசரமோ? கண்ணையே நம்பேலாமல் கிடக்கு....
 14. 1 point
 15. 1 point
  நீங்களே உங்களுடைய அயோக்கியத்தனத்தை தெரிவிப்பதால் நீங்கள் நல்லவனாக முடியுமா? சோபாசக்தி என்பவர் முகநூலில் கூறியவாறு நீங்கள் அடியாள் மட்டுமல்ல... கொலைகளூக்கும் அதன் திசைதிருப்பல்களூக்கும் உடந்தையாகிய தமிழ் சமூக விரோதியும்கூட!! பொது விசயங்களில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்.
 16. 1 point
  யாழில் ஒரு காதல் (4) கடிதப் பரிமாற்றங்கள் நடந்தபோது காணாத கண்களுக்கு! அவை பறந்தபோது காண்பதற்குத் தடைகள் ஏற்படவில்லை!!. நிலா மதுரன் காதல் வளர்பிறையாக வளரத்தொடங்கியதும், அதன் ஒளி, ஊரிலுள்ள இளவட்டகளுக்கு முதலில் தெரிய ஆரம்பித்தது. நிலாக் காதல் குளிர்விப்பதற்குப் பதிலாக அவர்களை எரிக்க ஆரம்பித்தது. 'ஊருவிட்டு ஊருவந்து காதல் கீதல் பண்ணாதீங்க' பாட்டு அந்த வட்டங்களை உசுப்பேத்தியது. தங்களைக் காயாத நிலா ஊரானைக் காய்வதா? அது என்ன நியாயம்?. தவறணையில் சாராயம் அதற்கு மேலும் தூபம்போட்டது. ஓசிக்குடி நண்பர்களுக்கு பணம் தரும் தலைவன் பரஞ்சோதியின் மனம் பற்றி எரிவதற்கு வெண்சுருட்டையும் அவன் வாயில்வைத்துப் பற்றவைத்தார்கள். புகை மூட்டமும் பகையை வளர்த்தது. பல்கலைக் கழகத்திற்கு படிக்கவந்தானா? பாலியல் கலைகள் ஊட்டிப் பெண்களைக் கெடுக்க வந்தானா? தட்டிக்கேட்காது விட்டால் ஊர்மானம் என்னாவது?. தவறணை பலரும் வந்துபோகும் இடமாகும். பெரும் செல்வந்தக் குடும்பமான மதுரன் குடும்பத்திடம், வட்டியின்றிப் பண உதவிபெற்ற சுப்பண்ணையின் கண்களும் காதும் கூர்மையடைந்தன. மதுரன் தம்பியை எச்சரிக்கை செய்வதற்கு மீதமிருந்த சாராயத்தை ஒரே உறுஞ்சில் உறுஞ்சிவிட்டுப் பறந்தார். இயக்கத்தில் இரகசியமாகப் பயிற்சி பெற்றிருந் மதுரனுக்கு அது தூசுபோல் தெரிந்தாலும், 'வீரம் விலைபோகாது விவேகம் தலைக்குவராவிட்டால்' என்ற சோக்கிட்டீசின் தத்துவத்தையும் மறக்கவில்லை. சுப்பண்ணையிடம் இருந்து அறிந்து கொண்ட ஒரு சம்பவத்தையே துருப்புச் சீட்டாகப் பாவிக்க விளைந்தான். தனது தந்தையின் செல்வாக்கின் மூலம் பரஞ்சோதியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவே! ஒரு வாரத்துக்குள் பரஞ்சோதி லண்டன் போய்ச் சேர்ந்தான். பரஞ்சோதியின் சிபாரிசின் பேரில் அவனது நண்பர்கள் தற்போது மதுரன் நிலா காதலுக்கு பாதுகாப்புப் படைவீரர்களாகப் பண்புரிய முன்வந்ததால், மதுரன் நிலா காதல் வளர்வதற்கு கோவில் குளம் என்று மறைவிடம் தேடாது, நிலாவீட்டு முற்றமே அகலத்திறந்து வரவேற்றது. நிலாவை, 'ஓ லெவல்' வரைக்கும் படிக்க வைக்கவே அவள் தாயார் ஓடி ஓடி வியர்த்து நின்றாள். ஆறுமாதங்களுக்கு முன்பாக அவர்கள் குடும்ப மானத்தைக் காப்பற்றத் தேவைப்பட்ட இரண்டாயிரம் ரூபா பணத்துக்குக் மாதாமாதம் கட்டவேண்டிய வட்டியும் வாட்டி எடுத்தது. இந்நிலையில் குறைந்த செலவில் ரியூசன் எடுக்க மதுரனை நிலா அறிமுகம் செய்தபோது தாயாரினால் அதனை மறுக்கமுடியவில்லை. இலவசம் என்றால் ஐயமும், மறுப்பும் வந்துவிடலாம் என்ற மதுரனின் ஆலோசனையே நிலாவை குறைந்த செலவு என சொல்லவைத்தது. ரியூசன் வகுப்பில் தாரணியும் சேர்ந்திருந்ததால் சந்தேகத்திற்கு இடமே எழவில்லை. காதல் பூத்து மலர்ந்து மணம்வீசக் காலத்தை நோக்கியிருந்தது. மதுரனின் தூய நடத்தையினால் கவரப்பட்டு அவன்மேல் ஒரு பாசமும் ஏற்படவே!, நிலாவைப் பெற்ற தாயின், அந்தத் தாயுள்ளத்தில், நிலாவையும் மதுரனையும் இணைத்துப்பார்க்கும் ஓர் எண்ணம் முளைவிடத் தொடங்கியது. அந்த நிலையைத் தாரணியின் மூக்கு வியர்த்து அவளுக்குக் காட்டியது. அவள் அதனை நிலாவுக்குத் தெரிவிக்கவே நிலா ஆனந்தக்கடலில் மூழ்கித் திண்டாடினாள். அந்த இன்ப மகிழ்ச்சியைத் தெரிவிக்க மதுரன் கொழும்பிவிருந்து வரும் நாள் எப்போ என்று எதிரிபார்த்துக் காத்திருந்தாள். ஆனால் நிலாவின் தாயோ! கவலையில் மூழ்கினாள்!!. செல்வந்தரான மதுரனின் குடும்பம், ஏழைகளான தங்களை ஏற்பார்களா? என்ன என்ற எண்ணம் அந்தத் தாயுள்ளத்தை வாட்டத்தொடங்கியது!.
 17. 1 point
  யாழில் ஒரு காதல் (3) மதுரனின் மடலை வாசித்தவளுக்கு இனம்புரியாத இன்பத்தில் பறப்பது போன்று போன்று இருந்தாலும்... ஒ எல் சோதனை அண்மிக்கிறதே என ..பயம் மெல்ல எழத்தொடங்கியது இரவு வீட்டுப் பாடங்கள் அனைத்தையும் முடித்தவள் ..அழகான மெல்லிய நீல வண்ணத் தாளிலேழுத தொடங்கினாள்... உயிராக நினைக்கும் மதுரனுக்கு .... மரத்திலே ஆயிரம் மலர்கள் மலரும் இதயத்தில் ஒரு மலர் தான் மலரும் .. காலமும் விதியும் ஒத்துழைத்தால் நாம் வாழ்விலும் ஒன்றினைவோம். அது வரை எந்த சோதனை வந்தாலும் நான் தடுமாற மாட்டேன் . விரைவில் l ஒ எல் சோதனை வருகிறது . நானும் நிறைய படிக்க வேண்டும் புத்தகத்தி தூக்கினால் உங்கள்முகமே முன் வந்து நிற்கிறது ..எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும். ஒ எல் சோதனை முடியும்வரை என்ன குழப்ப கூடாது. அதி திறமை சித்திகளோடு ளோடு தான் உங்கள் ளுக்குமருமடல் வரைவேன்...அதுவரை உங்கள் நினைவுகளுடன் ..நிலா .... கடிதத்தை எழுதி முடித்தவள் ..கவனமாக் டியூசன் கொப்பி யின் கவரினுள் ஒழித்து வைத்தாள். ,,மாலையானதும் ..இவளது பாதையில் ..அவன் வழி மேல் விழி வைத்து ஆவலோடு காத்திருந் தான் ...சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மெல்ல..அவனை வரும்படி ஜாடை காட்ட் அவனும் சைக்கிளை மெதுவா க்கி ... வந்து கடிதத்தை ...பெற்றுக்கொண்டான் . சிறிது நேரத்தில் தாரிணி வீடு வரவே ..அவளையும் வகுப்பு க்கு செல்ல அழைத்தால். என்ன நிலா இன்று நேர்துடனே வந்து விட்டீர் . யாரையும் சந்திக்க் தான் இந்த ஐடியாவோ... சும் மா போடி ..எனக்குபயமாய் இருக்கு...சொல்லிபோட்டன் ஒ எல் சோதனையில் கோட்டை விட்டியோ... பிறகு தெரியும். .அப்பரின் முகத்தில் முழிக்க ஏலாது ... பிறகு நீ என்னை முந்திவிடாய் என்று ...கோவிக்கக் கூடாது ...போடி ..நான் எப்படியும் அதி திறமை சித்தி எடுத்துக் காட்டுவேன் என்று சவால் விட்டாள். சில நாட்களாக அவளைப்பின் தொடர்வது குறைந்தது. எங்காவது கண்டால் சிரித்து விட்டு சென்று விடுவான். ஒரு நாள் ...இவள் வீட்டுமுற்றம்கூட்டிக் கொண்டு நிற்கையில்.. ஒரு பெல் சத்தம் கேட்டது ...யாராக் இருக்கும் என்று ம் நிமிர்ந்தவள் ஆச்சரியத்தோடு பார்த்தல். மதுரன் நின்று இருந்தான். அவசரமாக் ஒரு காகிதத்தை அவள் முன் போட்டு விட்டு சென்று விட்டான். அதை எடுத்து சென்று .. குப்பைகளை கொட்டுவது போல .. பின் வளவுக்கு சென்று வாசித்தாள். ............. என் இனிய நிலாவே ... உன் சத்தியத்தை மீறக் கூடாது என்றுதான் இதுவரை எழுதவில்லை. நான் அவசரமாக் கொழும்புக்கு செல்கிறன் இன்று இரவு...சென்று வந்ததும் உன்னை தொடர்பு கொள்வேன். அதுவரை .. என்னை கானவில் லை என்று உன் கண்கள் என்னை தேடும். கலங்காதே நல்ல சேதியுடன் வருவேன் ...என்றும் உன் இனிய மதுரன்... சற்றுக் கவலையாக இருந்தாலும்.. செய்தி சொன்னானே என்பது ...அமைதியாக ... இருந்தது .... எதோ என்னால் முடிந்தது...