• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. முள்ளியவளை சுதர்சன்

  முள்ளியவளை சுதர்சன்

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   4

  • Content Count

   122


 2. ஆரதி

  ஆரதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   3,406


 3. நிழலி

  நிழலி

  கருத்துக்கள பொறுப்பாளர்கள்


  • Points

   3

  • Content Count

   12,695


 4. sOliyAn

  sOliyAn

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   2,687Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 13 ஏப்ரல் 2014 in all areas

 1. 2 points
 2. 1 point
 3. 1 point
  பகுதி 21 காலம் காலமாக உலகையே சுற்றிவரும் நிலாவின் பெயரைக்கொண்ட அவளுக்கு இலங்கையிலிருந்து லண்டன் வரும் விமானப்பயணம் அதிசயமாக இருந்தது. பயமும், படபடப்பும், அவதியும், ஆச்சரியமும், வியப்பும், வினோதமும். அதுவும் தன்னந்தனியாகப் புறப்பட்ட துணிவு...! இருக்கை, யன்னலோரமாகத்தான் கிடைத்திருந்தது. அவள் இருக்கையோடு இடப்பக்கம் இன்னொன்றாக இரு இருக்கைப் பகுதி. விமானக் கதவு சாத்தும் நேரம் ஒரு நடுத்தரவயது வாலிபனை அழைத்துவந்த விமானப் பணிப் பெண்மணி, அவள் இடப்பக்க இருக்கையைக் காட்டிவிட்டு அவன் கைப்பைகளை மேலே வைப்பதற்கு உதவியும் புரிந்துவிட்டுச் சென்றாள். அவன் அடிக்கடி பயணம் செய்பவனைப்போல் அலட்சியமாக வந்தவன், தனது இருக்கை அருகே நிலாப்போன்ற மங்கை ஒருத்தியைக் கண்டவுடன், ஒரு கணம் உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்த பந்தாட்ட வீரனைப்போல் ஆனந்தம் கொண்டு தடுமாறினான், சட்டென்று நிதானித்துக் "கலோ" என்றான். இவை எதையும் கவனிக்காது, வெளியே காட்சிகளைப் பார்க்கும் கவனத்தில் இருந்த நிலா, பக்கத்தில் அமர்ந்தவனின் கலோவிற்கு நாகரீகமாகத் தானும் "கலோ" சொல்லிவைத்தாள். முதலில் தயங்கி நெளிந்த நிலா, விமானப்பயனத்தின் நாகரீகம் தெரியாத பட்டிக்காடு என்று தன்னை நினைத்து விடுவார்களோ! என்ற பயத்தில் புன்முறுவல்காட்டவும், நிலவொளியில் மூழ்கிய அவன் தன் அதிட்டத்தை எண்ணி வியந்தான். அந்தப் புன்முறுவல் ஒன்றைவைத்தே நிலாவின் நிலை அனைத்தையும் அறிந்துகொண்டான். அவள் புதிது, பயணம் புதிது, போகும் இடம் புதிது. தேன்குடித்த நரிபோலானான். தலைமை விமானியும், பணிப்பெண்களும் அறிவிக்கப்போகும், தெரிவிக்கப்போகும் அனைத்தையும், அவன் அவளுக்கு அறிவித்தான். அறிவிக்கும்போது அவன் கைகள் அவள் அங்கங்களில் படுவதை அவள் இயல்பாகவே எடுத்துக்கொண்டாள். விமானம் நடுவானில் செல்லும்போது அது இயல்பல்ல என்று தோன்றியது. அவன் கைபட்ட இடங்களில் இப்போ கம்பளிப்பூச்சி ஊர்ந்தது. அச்சம் மடம் நாணமெல்லாம் வீட்டில் அடுப்படிக்குள் இருக்கும்வரையில்தான். அவள் தற்பொழுது விமானத்தில் பறக்கும் நாகரீக மங்கை. எப்படி அந்தத் துணிவு வந்தது அவளுக்கே விளங்கவில்லை. துணிவோடுதான் கூறினாள். "எனக்கு இதெல்லாம் பிடிக்காது!" "மன்னித்துக் கொள்ளுங்கள்." அவன் ஒரு சொல்லில் மன்னிப்புக் கோரினான். எப்படி இத்தனை அமைதியானான்!!. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று திரும்பத் திரும்பக் குடைவார்களே! இவன் எப்படி இப்படி!! அவன் வெளியுலகில் பலகாலம் வாழ்பவன். எங்கள் கலாச்சாரத்துக்கு மாறான பல வெளியே இருந்தாலும் சில நல்லதுகளையும் எங்களவர்கள் பற்றியிருப்பது அவனில் தெரிந்தது. விருப்பம் இல்லை... சொன்னதும் விலகிவிட்டான்!. கடவுச்சீட்டுகளின் வேறுபாடு அதற்கான வரிசைகளை அமைத்திருந்தது. அவன் உதவினான். நிலவரங்களைப் புதிதாக அறிந்துகொள்ளும், சக பிரயாணிக்கு உதவுவதுபோல், மேற்கொண்டு அவள் விமான நிலயத்தில் எதிர்கொள்ள வேண்டி வரப்போவது பற்றியும் சொல்லி, இயல்பாக அவன் உதவினான். நிலாவை அது ஈர்த்தது. பெயரோ முகவரியோ எதுவுமே பரிமாற்றம் அற்ற ஒரு உறவு, அவன்மீது ஒரு மதிப்பை அவளுக்கு ஏற்படுத்தியது. கண்களால் நன்றிசொல்லி வார்த்தையாலும் கூறினாள். அவன் புன்சிரிப்போடு தலையாட்டி விடைபெற்றான். ஒருவாறு விமானத் தளத்திலுள்ள குடிவரவுப் பரிசோதனை நிலையம், கடவுச்சீட்டு, விசாப் பரிசோதனை, என்று தனது பல கேள்விக் கணைகளால் அவளைத் துளைத்துவிட்டு, அங்கு அவள் தனது படிப்பை மேற்கொள்வதற்கான அத்தாட்சிப் பத்திரங்களையும் பார்வையிட்டு நல்வாழ்த்துச் சொல்லி அனுப்பியது. சோதனை நிலையம் விடைதர, நிலா வெளிப் பகுதிக்கு வந்து சேர்ந்தாள். படமொன்றை எடுத்து அதிலுள்ளதுபோல் ஒரு படத்தை அங்கு நிற்பவர்களில் தேடினாள். இணுவிலில் ஆச்சியம்மாவின் சகோதரி மகள் அபியின் படம்தான் அது. நீங்கள்தானே நிலா, இனிய குரலொன்று அருகே கேட்டது. திரும்பியவள் முன் அபி நின்றாள். அவளின் படத்துடன். தனியே வந்த உங்கள் துணிவிற்கு என் வாழ்த்துக்கள் வரவேற்றாள். அவரிடம் மகிழுந்து இல்லை. தொடரூந்திலும் பேரூந்திலுமாக பயனித்து வந்திருந்தார். நிலாவின் பயனப் பொதியும் இரண்டே இரண்டுதான் கனதியும் இல்லை. ஆகவே அபியின் வீட்டிற்கு இருவரும் பயனிப்பது கடினமாக இருக்கவில்லை. ஆச்சியம்மா கூறியதுபோல் குறிப்பறிந்து உதவும் மனப்பாண்மை அபிக்கு இருந்ததால் அவரை நிலாவிற்கு உடனே பிடித்துவிட்டது. பலகாலம் பழகிய நண்பிகளைப்போல் பழகவும் தொடங்கிவிட்டனர். தொடரூந்து நிலையத்தில் அறிவிப்பு ஒன்று கிணற்றில் இருந்து வந்ததுபோல், சடுதியாக வந்துசென்றது. நிலாவுக்கு அது புரியவில்லை. "லண்டன்போகும் தொடரூந்து ஒருநிமிடம் முப்பது வினாடிகள் தாமதமாக வருமாம்." அபி தெரிவித்தாள். "வினாடிகளையும் அறிவிப்பார்களா!" அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். அங்கு நின்றவர்கள் ஆரவாரப்பட்டனர். ஆச்சரியம்தான்! ஆனால் அதைவிடவும் ஆச்சரியம்!!. அங்கு நின்ற நம்முடைய நாட்டு ஆட்கள் போல் தெரிந்த சிலரும் ஆரவாரப்பட்டதுதான். "இதைவிட யேர்மனி திறம்" தமிழும் கேட்டது. நிலாவுக்கு ஊர்ஞாபகம் வந்தது. அங்கு உந்துகள் ஒன்று இரண்டு மணித்தியாலங்கள் அல்லது அன்று முழுவதுமே வரவே வராது. ஆனாலும் பயனிகள் அடுத்த நாள்வரை தாமதித்தும் பயணம் செய்வார்கள். இங்கு ஒரு வினாடி தாமதத்தை அவர்களால் தாங்கமுடியவில்லை...! மேற்குலக வாழ்வின் நல்லது கெட்டதுகள் நம்மவர்களை எப்படி மாற்றியமைத்துள்ளது!!. விமானப் பயனியையும் இவர்களையும் நினைத்துப் பார்த்தாள். தொடரூந்துப் பயணம் முடிந்து பேரூந்தில் பயனித்தபோது லண்டன் மாநகரின் அழகைக்காணும் வாய்ப்புக் கிடைத்தது. நீண்டு அகண்ட நெடும் சாலைகளும், அவற்றோடு ஒட்டி ஓடிய நதியும் பலதரப்பட்ட நவநாகரீக உடையணிந்த மக்களும், அதோ சில பெண்கள் சேலையுடன் ஆனால் ஆச்சரியம் அவர்கள் கால்களில் பாட்டா செருப்பு.... அதிசயித்தவள்! மேலும் யாரையோ கண்டு இடத்தையும் மறந்து "வண்டியை நிறுத்துங்கள்!" என்று கத்தினாள்!!. நல்லகாலம், அவள் தமிழிலே கத்தியதால் அதிசயமாகப் பார்த்த வெள்ளைகளுக்கு அவள் கத்தியது எதுவும் புரியவில்லை. அபி அவள் கையைப்பிடித்து இழுத்து இருத்தி "என்ன நிலா இது....!" என்றாள். அதற்கிடையில் தன்னையும் சுற்றம் சூழலையும் உணர்ந்தவள், திகைத்த கண்களுடன்! அதிர்ச்சியோடு! இடிவிழுந்ததுபோல் அதிர்ந்து இருக்கையில் விழுந்தாள்!!. அது மதுரன்தானோ..? யாரோ ஒரு மங்கை அவனைக் கட்டிப்பிடித்து! அவன் உதட்டை உறுஞ்சுகிறாளே.!! மறுபடியும் திரும்பிப் பார்பதற்கிடையில் பேரூந்து வெகுதூரம் வந்துவிட்டது. வெட்ட வெளியில் அத்தனைபேர் முன்பாக.... அவன் மதுரனாகவே அவளுக்குத் தெரிந்தான். பயணக்களைப்பால் அவள் கண்கள் மூடியதா. ஏமாற்றம் இதயத்தைத் தாக்கியதால் அறிவிழந்து மயங்கி மூடியதா.....
 4. 1 point
  பகுதி 20 கொஞ்ச நாட்களாக நிலாவின் மன நிலை மீண்டும் அமைதியடையத் தொடங்கிவிட்டது. எதுவுமே சொல்லாமல் மதுரன் லண்டன் சென்றுவிட்டான் என அறிந்து அவள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கடிதம் தன்னும் போடாது சென்றுவிட்டானே என்ற வருத்தம் இருந்தாலும், சரி அங்கு சென்ற பின் போடுவார் தானே என மனதைத் தேற்றிக் கொண்டவள், அவன் சென்று மூன்று மாதங்களாகியும் எதுவும் தெரியாமல், அவன் நண்பர்களிடமும் கேட்க முடியாதவாறு அவர்களும் ஊர் பக்கம் வராது விட்டவுடன், தாரணிக்குச் சொல்லிச் சொல்லி அழுவதைத் தவிர வேறு எதுவுமே செய்ய முடியவில்லை. தன் வாழ்வு இவனோடுதான் என்ற எண்ணத்தை, இறுதிவரை மதுரன் தன்னோடு வருவான் என்ற நம்பிக்கையை எத்தனை இலகுவாக அவன் உடைத்துவிட்டான். எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று நேரே கூறியிருந்தாலாவது மனம் சிறிது ஆறுதலடைந்திருக்கும். இவன் எதுவுமே கூறாது கோளை போல ஒழித்து ஓடிவிட்டானே என்று மதுரன் மேல் அளவுகடந்த கோபம் ஏற்பட்டது. நேரே அவன் முன் சென்று நீ எல்லாம் எதற்கடா பெண்களிடம் காதல் என்று சொல்கிறாய் என்று கூறி அவன் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்துவிட்டு திரும்பிப் பாராது வந்துவிட வேண்டும் என்னும் ஆசை நிராசை தான் என்று தெரிந்தபின் மனம் இயலாமையில் அழுதது. நிலா பரீட்சையில் கூட நல்ல புள்ளிகள் எடுக்கவில்லை. தாரணி அவளைத் தேற்றப் பெரும் பாடு படவேண்டி இருந்தது. உன்ர திறமைக்கு முன்னால அவனெல்லாம் தூசெடி. அவனை மறந்துவிட்டு படிக்கிறதில கவனத்தை வை. இந்தமுறை வடிவா படிச்சு நல்ல புள்ளிகளை எடு. கையோட லண்டன் எக்ஸாம் எடுத்து செடிபிக்கட் வாங்கு. student விசாவில அங்க போய் இறங்கி அவனுக்கு முன்னால வாழ்ந்து காட்டடி. அதைவிட்டுப்போட்டு அழுதுகொண்டு இருந்து பிரயோசனம் இல்லை என்று சொல்லும் தாரணியை கண்கள் மின்னப் பார்த்தாள் நிலா. மதுரனைப் பழிவாங்க என் மனம் இடம் தராது. அவன் என்னை உண்மையாக நேசிக்கவில்லை ஆயினும் நான் அவனை மனதார என் உயிரினும் மேலாகவே நேசித்தேன். அவனை நேரில் மீண்டும் பார்க்கவாவது லண்டன் போகத்தான் வேணும் என்று எண்ணியவள், அது அத்தனை இலகுவில் சாத்தியமா என்றும் எண்ணிக் குழம்பியபடி தாரணிக்கும் வாய்விட்டுச் சொன்னாள். ஏன் எல்லாத்தையும் எதிர்மறையாகவே பார்க்கிறாய். ஒன்றை அடைவது எளிதல்ல. அதற்கு நாம் கடினமாக உழைக்கவேண்டும் என்று எங்கயோ வாசிச்சனான் நிலா. முயற்சி செய்து பாக்கிறதில என்ன தப்பு இருக்குச் சொல்லு என்றுவிட்டு நிலாவைப் பார்த்தாள். நான் என் பக்கத்தால முயற்சி செய்யலாம். லண்டன் போறதுக்கு பணவசதிக்கு எங்க போறது. யார் தரப்போயினம்?? அப்பிடித் தந்து நான் போனாலும் திரும்ப மதுரன் என்னிடம் திரும்ப வருவாரா ??? என்றெல்லாம் தாரணியிடம் கேட்டாள் நிலா. நீ உப்பிடி எல்லாம் மண்டையைப் போட்டு உடைக்காமல் இப்ப நடக்க வேண்டியதை மட்டும் பார். மற்றதுகளுக்கு வழி தானாக் கிடைக்குமடி என்று தோழியைச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் தாரணி. """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" நிலாவுக்கு இன்னும் நம்பமுடியாமல்த்தான் இருக்கிறது. ஆனாலும் அவள் நம்பும் படியாக லண்டனுக்கு எல்லோ வந்துவிட்டாள். நேற்று வரையும் நடந்தவை எல்லாம் கனவுதானோ என எண்ணும்படியாக இருக்கின்றன. அவள் பரீட்சைகளில் நன்றாகத் தேறியதும் தான் லண்டன் போய் படிக்கும் எண்ணத்தைத் தாய்க்கு வெளியிட்டாள். தாய் கலங்கிப் போனாலும் நிலாவின் உள்ளத்தை அவர் நன்றாக உணர்ந்ததால் மதுரனை இன்னும் அவளால் மறக்க முடியவில்லை என்பதையும் கண்டுகொண்டார். தன்னைப் போல தானே தன் மகளும் பிடிவாதக்காரி. கடைசிவரை காதலித்தவனை நினைத்துக்கொண்டு நான் இருப்பேனே ஒழிய வேறு ஒருவரையும் மனத்தால் கூட நினைக்க முடியவில்லை என்று கடந்த வருடம் கண்ணீரோடு நிலா கூறியது மறக்குமா அந்தத் தாய்க்க்கு?? பல ஆண்கள் இப்பிடித்தான் நிலா. சேறு கண்ட இடத்தில் உழக்கி தண்ணி கண்ட இடத்தில் கழுவிவிட்டுப் போய்விடுவார்கள். பாதிக்கப்படுவது நாம் தானம்மா. இது ஒன்றும் புதிதில்லை என்று கூட நிலாவுக்குப் புத்தி சொல்லிப் பார்த்தார். நிலா தன் நிலையிலிருந்து எள்ளளவும் மாறவே இல்லை. சரி கெட்டிக்காரப் பிள்ளை. இப்ப ஆமிக்கும் பயம் தான். இயக்கத்துக்குப் போனாலும் எனக்குத்தான் நட்டம். எதோ அங்க போய் பிள்ளை பத்திரமா இருக்கும் தானே என்ற ஆசை வெல்ல, தாயும் நிலா லண்டன் செல்லச் சம்மதித்தார். வீட்டை சங்கக்கடை நடேசரிடம் ஈடுவைத்து ஒருவாறு பணம் புரட்டினாலும், நிலா தனிய லண்டன் பொய் எங்கே தங்குவாள் யார் உதவுவார்கள் என்றெல்லாம் எண்ணியதில் கவலை பிடித்துக்கொண்டது தாய்க்கு. அவர்களின் நல்ல காலம் மேற்கு இணுவிலில் இருக்கும் ஆச்சியம்மாவின் சகோதரி மகள் குடும்பம் அங்கு இருப்பதாகவும், அவர்கள் உதவி செய்வார்கள் என்றும் ஆச்சியம்மா கூறி தொலை பேசியிலும் நிலாவைப் பற்றிக் கூறிய பிறகே தாய்க்கு நின்மதி ஏற்பட்டது. தாயும் தாரணியும் கூட நிலாவை அனுப்ப கொழும்பு வந்தபோது பக்கத்து வீட்டுப் பிரசாந்தன் தான் அவர்களுக்குத் துணையாக வந்தான். பிரசாந்தனிடம் இருந்த தொடர்புகளை வைத்து சுரேசை ஒருவாறு தேடிப்பிடித்து அவனும் இவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்திருந்தான். நிலாவுக்கு அவனைப் பார்த்ததும் அழுகை முட்டியது. பழைய நினைவுகள் எல்லாம் கோர்வையாக வந்து போயின. நிலா அழாதேங்கோ. அதுதான் லண்டன் போகப் போகிறீர்களே. இப்ப போய் ஏன் அழுகிறீர்கள் என்று ஆறுதல் வார்த்தை கூறினான். அவள் அழுவதை அவனால் தாங்க முடியவில்லை. இவளைப் போய் கைவிட மதுரனால் எப்பிடி முடிந்தது என்று அவனுள் கேள்வி எழுந்தது. இப்ப கூட தனக்கு அவள் மேல் உள்ள காதல் மாறவே இல்லை. அவளின் மனம் தன்பால் எப்போதுமே வராது என்பதும் அவனுக்குத் தெரிந்ததால் நீண்ட ஒரு பெருமூச்சையும் விட்டான். நிலா இந்தாங்கோ மதுரனின் போன் நம்பர். அவன் ஒருத்தருக்கும் குடுக்க வேண்டாம் என்று கண்டிப்பாச் சொன்னதால நான் உங்களுக்குத் தரேல்ல. இப்ப தான் நீங்கள் போகப் போறியளே. நான் தந்தது எண்டு சொல்லாமல் வச்சிருங்கோ. உடன அவனுக்கு அடிக்காமல் கொஞ்ச நாள் கழிய நீங்கள் எல்லாம் செட்டில் பண்ணின பிறகு அடிச்சுப் பாருங்கோ என்று உண்மையான அக்கறையோடு கூறும் சுரேசை நன்றியுடன் பார்த்தாள் நிலா. சுரேஷ் தனக்குத் தெரிந்த வேறு குடும்பம் ஒன்றின் முகவரியுடன் தன்னோடு படிக்கும் ஒருவனின் அக்காவின் முகவரியும் தொலைபேசியும் கூட நிலாவுக்காக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது நிலாவுக்கு பெரிய ஒரு நின்மதியைக் கொடுத்தது. இப்ப நினைத்தாலும் தாயும் தாரணியும் அழுததும் தானும் அவர்களோடு சேர்ந்து அழுததும் கண் முன்னே வந்தன. சுரேசின் கண்கள் கூடக் கலங்கி விட்டது. இந்தாங்கோ நிலா என்ர நம்பர் என்று ஒரு துண்டில் எழுதிய படி அவன் நீட்டியதை வாங்கி கைப்பையுள் பத்திரப்படுத்தியபடி எல்லோரிடமும் விடைபெற்றது இப்பபோல் இருந்தாலும் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.