Leaderboard

  1. துளசி

    துளசி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Content Count

      8,892


  2. தமிழரசு

    தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      32,814


  3. இணையவன்

    இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      5

    • Content Count

      5,767


  4. மாறன்

    மாறன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Content Count

      63



Popular Content

Showing content with the highest reputation on 08/22/2014 in all areas

  1. 4 points
    பேசவேண்டும் யார் இருக்கிறீர்கள் வெறுமையாகிப்போன தேநீர்க் கோப்பையில் நிறைகிறது என் குரல். நீங்கள் எனக்காவும் பேசுவதாக இருந்தால் தேநீர்க் கோப்பையை கவிழ்த்துவிடலாம் என் வெற்றிடங்கள் நிறைந்து கொள்ளும். எதைப்பற்றி பேசுவீர்கள்.. வழிக்காத என் தாடியைப் பற்றி கசங்கிப்போன என் ஆடையைப் பற்றி கிழிந்துபோன காலனி பற்றி அருகில் இருப்பவரைப் பற்றி.. ஓ, நீங்கள் என்னைப்பற்றி பேசவே மாட்டீர்களா? ஓசைகளை கழற்றி எறிந்துவிட்டு சொற்களை கொட்டுவீர்கள் பின் எப்போது சிதை ஏற்றுவீர்கள் நான் செத்தபின்பா அப்போதாவது என்னைப் பற்றி பேசுவீர்களா என்ன. எப்போதுதான் பேசுவீர்கள் என்னைப்பற்றி? எனக்குத் தெரியும் உங்களால் பேசவே முடியாது. ஏனென்றால், நீங்கள் உங்களிடம் சரணடைந்திருக்கிறீர்கள் நான் உங்களிடம் சுகந்திரமாக இருக்கிறேன். என்னால் பேச முடியும் ஒவ்வொருவரிடமும் சுகந்திரமாக இருப்பதால், ஒவ்வொருவரும் ஒருவராகவே இருப்பதால், இருந்தும் நான் பேசப்போவதுமில்லை, எனக்குத் தேவை இப்போது ஒருகோப்பை தேநீர் மட்டுமே.
  2. 3 points
  3. 3 points
    தேவையானப் பொருட்கள் : பிரட்: 1 பாக்கெட் பெரிய வெங்காயம்: பொடியாக நறுக்கியது சிறதளவு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு உப்பு: தேவையான அளவு எ‌ண்ணெ‌‌ய்: 1/4 லிட்டர் செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு உளுந்தம் பருப்பு தாளிதம் செய்து, அத்துடன் இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். பின் உதிர்த்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி ஆறவிடவும். சூடு ஆறியதும் எலுமிச்சை அளவு உருட்டிக் கொள்ளவும். பிரட் துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்து உடனே பிழிந்துவிட்டு அதில் மசால் உருண்டையை வைத்து உருட்டி கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை நான்கைந்தாக போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறசுவையாக இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-tamil/bread-bonda-114082100026_1.html
  4. 2 points
  5. 2 points
    அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் செரிமானம் செய்யச் (digest) செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு. தவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமாக உடலுக்கு சேர்கிறது. இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. முன்பு மாதிரி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது. இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பளபளப்பாக்குதல் (Polishing) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும் வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர். சம்பா எனப்படும் அந்த அரிசி கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பை பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு. உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி, உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல் மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி. கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள். எளிதில் சீரணமடையும் மலச்சிக்கலைப் போக்கும் சிறுநீரை நன்கு பிரிக்கும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும் பித்த அதிகரிப்பை குறைக்கும் நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும் சருமத்தைப் பாதுகாக்கும் வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும் கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பளபளப்பாக்குதல் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டை வரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பளபளப்பாக்குதல் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=115367&category=CommonNews&language=tamil
  6. 1 point
    1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான். 2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை. 3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது. 4. விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான். நன்றி: வினவு - http://malarum.com/article/tam/2014/08/13/4477/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-.html#sthash.4l6X9cXa.dpuf
  7. 1 point
    வீதியில் வரையப்பட்ட, கண்ணைக் கவரும்.... 3D படங்கள். நீங்களும் பார்த்து ரசியுங்கள். 3D என்று சுருக்கமாக அழைக்கப்படும் முப்பரிமான நுட்பத்தில் வரையப்படும் ஓவியங்கள் உருவங்களை நேரில் காண்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்த வல்லவை. ஓவிய கலைஞர்கள் சிலர் சாலைகளில் வரையும் 3டி நுட்பத்திலான ஓவியங்கள் அசத்துவதாக இருக்கும். பல நேரங்களில் புதிதாக பார்ப்பவர்களை பெரும் குழப்பதையும் ஏற்படுத்தும். சாலைகளில் வரையப்பட்ட அசத்தலான 3டி ஓவியங்களின் தொகுப்பை இங்கு பார்த்து ரசியுங்கள். நன்றி தற்ஸ்தமிழ்.
  8. 1 point
    தொலையும் நின்மதியே நிரந்தரமாகி நிற்கதியாக்கி விடுகின்றது உரிமையற்ற நிலைகளின் ஈடாட்டம் கண்டு ஏதுமற்றதாக ஆசை கொள்கிறது மனது மனதில் கூடுகட்டும் குப்பைகளும் ஆற்றாமைகளில் அழுந்தும் எண்ணங்களுமாய் எல்லாவற்றையும் எதிரியாய் நோக்க எந்நேரமும் எதுவுமாகிவிடாதிருக்க எனக்கே நான் எதிரியாகிறேன் செய்கைகளும் செயற்கையாய்க் கோர்க்கப்படும் வார்த்தைகளும் எந்நேரமும் செயல்களின் பிரதிபலிப்பை எதிர்மறை எண்ணங்களின் பிரதிநிதியாக்க பகுக்கப்படும் சிந்தனையின் செயல்களில் பக்கவிளைவாகின்றன வார்த்தைகள் உண்மையற்ற புரிதலற்ற அன்பும் காரணங்களுக்கானதான செயலும் எங்கோ ஓரிடத்தில் ஏதுமற்றதாகிவிடுகிறது உண்மை அன்பு எந்தவித எதிர்பார்த்தலுமின்றி என்றும் வற்றாத நதியாய் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது எனக்கானதாக எதுவும் இல்லாததில் எனக்கானதாய் எண்ணிய பொய்மையில் உணர்வுகளின் கருக்கூட்டலில் எதுவுமே புரிந்துகொள்ளப்படாது அன்னியமாக்கப்படுகின்றது அதன் வலியை எதிர் கொள்ள முடியாது எதிர்கொண்டபடியே எப்போதுமானதான ஏமாற்றத்துடன் எதிர்வினை புரிந்தபடி நான்
  9. 1 point
    வறட்சி: சில மைல்களில் அபாயம்… ஜெரா படங்கள் | கட்டுரையாளர் அது ஒரு சிறு தனித்தீவு. சுற்றியும் உப்புக்கடல் அந்தத் தீவைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு மூலையில் மக்கள் வாழும் கிராமம் இருக்கின்றது. ஆங்காங்கே வீடுகள். வசதி படைத்த மக்கள் குடியிருப்புகள், சில இடங்களில் நெருக்கமாகவும், இன்னும் சில இடங்களில் ஐதாகவும் இருந்தமைக் கான எச்சங்கள் உண்டு. கடந்த 100 வருடங்களுக்குள் வரும் ஏதாவது ஒரு ஆண்டில் அங்கு மனிதர்கள் வாழ்ந்திருக்கக்கூடும். செல்வச் செழிப்புடனும், சீருடனும்தான் அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு இங்கு சிதைந்து கிடக்கும் வீடுகளும், மாடி மனைகளும் தக்க சாட்சி. தீவுக்குள்ளால் வரும் முட்புதர்களையும், எஞ்சிய மிருகங்கள் நீருக்காகவும், உணவுக்காகவும் அலையும் கால்தடயப் பாதைகளையும், பழைய தார் வீதிகளையும் இணங்கண்டு நடந்து கிராமத்துக்குள் ஏதாவது ஒரு மூலையால் உள்நுழையலாம். பயங்கரமான பாழடைந்த வீடுகளே வரவேற்கின்றன. ஆங்காங்கே வெட்டைகளில் மாடுகள் செத்துக் கிடக்கின்றன. மாட்டுப் பிண நாற்றம் மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது. இன்னும் சில இடங்களில் இறந்த ஆடுகள், மாடுகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டற்கான தடயங்களும் அந்தத் தீவு முழுதும் பார்க்கக்கூடியதாகவுள்ளது. சில இடங்களில் மாடுகள் மரணத்தின் கடைசி வாசலில் நின்று துடித்துக் கொண்டிருக்கின்றன. கிடைக்கின்ற கொட்டன்களால் இரண்டு கொம்புகளுக்கும் நடுவில் ஓங்கி ஒரே அடியாய் அடித்துக் கொன்றுவிட்டு கடந்து போகுமாறு எம்மிடம் கெஞ்சிவதைப் போன்று “ம்மா” என கறகறக் குரலில் ஓலமிடுகின்றன. ஏதோ ஒரு நம்பிக்கையில் காய்ந்து சருகாகி தரையோடு ஒட்டிய புற்களை மண்ணோடு சேர்த்து வறண்டி வறண்டி சாப்பிடுகின்றன மண் தின்னிமாடுகள். இந்த நேரம் அவற்றின் வயிறுகள் வெடித்திருக்கக்கூடும். மண்ணால் நிரம்பிய வயிறுகள் ஒவ்வொரு மாட்டின் வயிற்றின் உள்ளும் பெரும் பூமிப் பந்தை வைத்திருந்தன. கோரமான இந்தக் காட்சிகள் அந்தக் காய்ந்த நிலம் முழுதும் காணக்கிடைப்பதால் மாட்டுப் பிணங்கள் மீதான ஈர்ப்பு வெகு சீக்கிரமே சலிப்புத் தட்டிவிடுகிறது. எங்காவது மனிதத் தடயங்கள் இருக்கவேண்டும். தேடிக்கண்டுபிடி எனக் கால்களுக்குத் தீவிரமாகத் தகவல் அனுப்புகின்றது மூளை. ஆள்நடமாட்டத் தடயமுள்ளத் தெருமுனையில் பல வர்ண கான்கள் (நீர்க் கொள்கலன்கள்) நேர்த்தியாக, நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கின்றன. அதுவொரு நீர்த்தாங்கி. ஆனால், அதற்குள்ளும், அதனை சூழவுள்ள இடங்களிலும் எம் உடலில் பிசுபிசுக்கும் வியர்வையைத் தவிர மருந்துக்குக்கூட நீர் எடுக்க முடியாது. கொதிக்கின்ற வெயிலில் கருகிய சறுகுகள் பற்றியெரியத் தயாராகின்றன. அவ்வளவு வெயில். அந்த இடத்துக்கு அருகில் சென்றால், மனிதப் பேச்சரவங்கள் கேட்கின்றன. சற்றுத் தொலைவில் ஒரு தொகை மனிதர்கள். ஆண்கள், பெண்கள், அதிகளவு சிறார்களுமாக ஒவ்வொருவர் நிழலையும் இறுக்கமாக ஆக்கிரமித்து அமர்ந்திருக்கின்றார்கள். அனைவரிலும் வெயிலின் கருமை தெரிகிறது. கண்களிலும், முகத்திலும் வெயிலேற்றிய வாட்டம் நிரந்தரமாகவே இடம் பிடித்திருக்கிறது. சில குழந்தைகளுக்கு வெயிலிலிருந்து தற்காலிக பாதுகாப்பை அம்மாக்களின் சேலைத்துண்டுகள் தருகின்றன. அந்தத் தீவில் நிழல்தர ஒரு மரம்கூடவா இல்லை என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது போல பனையும், தென்னையும், பயன்தந்து இப்போது பயன்தராத ஏனைய மரங்களும் உண்டு. ஆனால், அவை எதிலுமே இலைகள் இல்லை. எல்லாம் கருகி நீண்ட நாட்களாகிவிட்டன. இலைகளற்ற மொட்டை மரங்களும் பறட்டைக்காட்டில் முளைக்கும் முட்செடிகளும், சுடுகாட்டில் செழிக்கும் எருக்கலையும் தாராளமாய் நிற்கின்றன. பனையே கருகத் தொடங்கியிருக்கின்றதெனில் அந்தத் தீவைக் கொழுத்தும் வெயிலுக்கு என்ன பெயர் வைக்கலாம்? அவர்கள் ஆபிரிக்க நாடொன்றில் வாழ்பவர்களைப் போல நீருக்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, அரச நிர்வாகத் தரப்பொன்று நீர் வழங்குமாம். எவ்வளவு நீரெனில் குடும்பமொன்றுக்கு ஒரு தடவையில் 20 லீற்றர்கள். ஆக குடும்பமொன்றில் 10 பேர் இருந்தாலும், 2 பேர் இருந்தாலும், வாரமொன்றுக்கு 40 லீற்றர் நீர் மட்டுமே அவர்களால் செலவிட முடியும். வாரத்துக்கு 40 லீற்றர் நீர். நமக்குப் போதுமா? நம்பமுடிகிறதா இந்த யதார்த்தத்தை? நீர் வழங்குநர்கள் எப்போது வருவார்கள் எப்படி வருவார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. குறித்த இரு தினங்களில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களையும், அவர்கள் நீரள்ளும் கிணற்றின் நீர் கொள்லளவினவைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் மட்டும் வருவதில்லை. வரும்வேளையில் வரிசையில் காத்திருப்பவர்கள் அந்த வாரத்துக்கான பாக்கியசாலிகள். அதையும் கடந்து, அங்கு வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் துணையோடு தீவுக்குள் ஆழ ஊடுறுவலாம். அந்த ஊரைக் கடந்து “கட கட மொட மொட” சத்தத்தோடு அயல் கிராமங்களுக்கு பைப் நீர் செல்கிறது. இடையிலிருக்கும் அவர்களுக்கும் அதிலொரு பகுதி நீரைத் தந்தால் மேலும் சீவிக்க முடியும் என்ற கதையைச் சொல்லியபடி வானைப் பார்க்கிறார் அந்த வழிகாட்டி. அவர் நிற்குமிடம் குடமுண்டகுளம். அந்த ஊருக்கே தொன்மையான குளம் அது. 1972ஆம் ஆண்டுக்குப் பின்னர் வற்றி வெடித்திருக்கிறது அந்தக் குளம். அதனை அண்டிய அனைத்து நிலங்களும் தோட்டங்களால் செழித்தவை என்பதற்கான பயிர்களின் அடிக்கட்டை சான்றுகளைத் தொட்டுக் காட்டுகிறார் அவர். குளத்துக்குள்ளே கிணறுதோண்டியும் நீருக்காகப் போரடியிருக்கின்றனர். அங்கு எந்தக் கிணற்றையும் ஒரு கட்டத்துக்கு மேல் ஆழமாகத் தோண்ட முடியாத அபாயம் நீடிக்கிறது. மேலும் ஆழமாகத் தோண்டினால் அருகிலிருக்கும் கடலின் உப்புத் தண்ணீர், நன்னீரோடு கலந்து ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு எந்தக் காலத்திலும், எந்தப் பெரிய மழையானாலும் நன்னீருக்கு சாத்தியமிருக்காது. அண்மையில் நட்ட பயிர்களை, தோட்டங்களைக் காட்டுகிறார். கருகி நிற்கின்றன அனைத்தும். அங்கு இனி எருக்கமிலையைத் தவிர வேறெதையும் பயிரிட முடியாதளவுக்கு நிலமும் வறண்டுவிட்டது. குளிக்க, காலையில் கழுவ, துணி துவைக்க எதற்கும் நீரில்லை என்கிறார். எல்லா குளங்களும் வானைப் பார்த்துப் பிளந்து கிடக்கின்றன. இதற்கென்ன தீர்வு? இந்தக் கடல் நீரை நன்னீராக்கித்தாருங்கள். இங்கேயே வாழ்கிறோம். அல்லது இந்தப் பாழடைந்த வீடுகள் மட்டுமே இனி இங்கிருக்கும் என்கிறார் கடலைப் பார்த்து. நீரைத் தேடி இடம்பெயரத் தொடங்கிவிட்டோமா என்ற அச்சம் மேலிட “குடிக்க தண்ணி தாங்கோ” என்று கேட்க வாயெடுத்து, குற்ற உணர்வால் மனங்கோனிக் கொள்கிறோம். நானும் ஏதாவதொரு மரத்தை எப்போதாவது கொன்றிருப்பேன்… “…மழை மட்டுமா அழகு? சுடும் வெயில்கூட ஒரு அழகு…” உன்னிகிருஸ்ணனின் மகள் பாடிய இனிய இசை ஹெட்செற் மூலமாக காதுக்குள் இனிக்க, கருகும் தீவுகளை இணைக்க, சீனாக்காரன் வேகமாக அமைக்கும் வீதியைக் கடந்து அந்தப் பயணம் யாழ். நகரின் எல்லை முடியுமிடத்தில் முடிகிறது. குளிரூட்டியில் வைக்கப்பட்ட கூலான ஒன்றரை லீற்றர் தண்ணீர் போத்தலை அறுபது ரூபாய்கள் கொடுத்து வாங்கி, அப்படியே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்து, முகத்தில் ஊற்றி, அந்தத் தீவில் பட்ட வெயில் தீயை அணைத்துக் கொள்கிறேன். வெயில் குரூரமானது. அனல் கொதிக்கும் அந்தத் தனித்தீவுக்குப் பெயர் சரவணை. யாழ்ப்பாணத்திலிருந்து 10 கிலோமீற்றர்களில்தான் அந்த அபாயம் இருக்கிறது. நன்றி: உதயசூரியன் http://maatram.org/?p=1805
  10. 1 point
    இந்த ஆக்கத்தில் கூறப்பட்டுள்ள அங்கலாய்ப்பு ஞாயமானதே. தமிழ் நாட்டில் அல்ல முழு இந்தியாவிலும் கூட (ஏன் இலங்கையில் கூட) தாங்களாக சுயமாக இவ்வாறான நிகழ்வுகளை தயாரிப்பதில்லை.பெரும்பாலும் இவை எல்லாம் மேற்கத்தைய நாடுகளில் நடாத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்சிகளின் பிரதி விம்பங்களே. அர்ஜுன் கூறியது போல் வணிக மயமாக்கப்பட்ட உலகில் இவைகள் எல்லாம் சாதாரணம் தான். கூடிய விரைவில் இவை எல்லாம் எங்கள் ஊரிலும் (தாயகத்திலும்) அரங்கேறும். எங்கள் பிள்ளைகள் பார்க்கும், கேட்கும் ஜஸ்டின் பீபர், சலீனா கோமாஸ், கோடி சிம்சன், விலோ ஸ்மித் (11 வயது), மைலி சைரஸ் ... இன்றைய புகழ் நட்சத்திரங்கள் இப்படி தான் வந்தவர்கள். எமக்கு விருப்பமோ, விருப்பம் இல்லையோ, பார்த்தால் என்ன தவிர்த்தால் என்ன ... இதுவும் கடந்து போகும். ஊரில அவனவன் கைத்தொலைபேசியில் பப்ளிக்கில் (p)பொனோக்ரப்ஹி காமலீலைகள் பார்த்துக்கொண்டு திரியிறான் ... அதுக்கு தான் என்ன தான் செய்யலாம். - குப்பையிலும் குண்டுமணி...சேற்றிலும் செந்தாமரை... இப்படி இந்த பிள்ளைகளில் இருந்து நாளைய நட்சத்திரம் உருவாகத்தான் செய்கிறார்கள். (பாடகர்... கார்த்திக்) - நானும் முன்னரை போல பெரிதாக இந்த நிகழ்வுகளை பார்ப்பதில்லை (எல்லோரும் கூறிய அதே காரணங்கள் தான்) - நமக்கு எப்படி இவை இப்போது திகட்டி பார்க்காமல் விடுகிறோமோ அதே போல் அங்கும் நடக்கும்) பின்குறிப்பு: சரி இவை தான் எமக்கு பிடிக்க வில்லை ...உள்ளூர் கலைஞர்கள் தயாரித்து வழங்கும் "வணிக மயம் ஆக்கப்படாத" நிகழ்சிகளும் பிடிக்குது இல்லையே.
  11. 1 point
    கல்லிலே கலைவண்ணம் கண்ட ஊர் - மாமல்லபுரம்.
  12. 1 point
    இத்த பாருப்பா.. இன்னா இடம் தெர்தா..? நம்ம கபாலி இல்ல.. கபாலி..! அவுரு வூடுபா.. ஷோக்கா கீதா?
  13. 1 point
    இன்று 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது ‘சென்னை’... ஹேப்பி பர்த்டே டூ யூ! வந்தாரை வாழ வைக்கும் நகரம் எனப் புகழப்படும் சென்னை இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையுடன் இன்று உலா வரும் நமது சென்னை ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது என்று கூறினால் உங்களால் நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை. பல்வேறு நிலைகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, பல ஊர்களுக்கு சிம்மச் சொப்பனாக விளங்கும் சென்னைக்கு இன்று 375வது பிறந்தநாள். சென்னைப்பட்டணம்... கிராமமாக இருந்த சென்னைப் பட்டிணம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னால் மதராசப்பட்டிணம் ஆனது. காற்று வாங்கிய சாலைகள்... வண்டி ஹார்ன் ஓசைகளுக்கிடையே நடப்பதற்குக் கூட இடமில்லாமல் வாகன நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ள இன்றைய சாலையில் அன்று மாட்டு வண்டிகள் தான் சென்றுள்ளன. சென்னையின் பிறந்தநாள்... 1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை நகரை கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்பவர் விலைக்கு வாங்கிப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் முதல் முறையாக சென்னை என்ற பெயர் அந்தப் பத்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தினத்தையே மக்கள் சென்னையின் பிறந்த தினமாக கொண்டாடி வருகிறார்கள். புனித ஜார்ஜ் கோட்டை... 1640ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டைக் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை முக்கிய வணிக மற்றும் கலாச்சார நகரமாக உருமாறத் தொடங்கியது. ஓல்ட் இஸ் கோல்ட்.... நாகரீகமான நகரமாக உருமாறியதில் இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தாவை விட 50 ஆண்டுகளும், மும்பையை விட 35 ஆண்டுகளும் பழமையானது சென்னை. சென்னை... சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழகத்தின் தலைநகரானது மதராஸ். பின்னர், மதராஸ் கடந்த 1996ம் ஆண்டு முதல் சென்னை என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வருகிறது. 375வது பிறந்தநாள்... இந்நிலையில் இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது சென்னை. வேலை, கல்வி என பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளோருக்கு அடைக்கலம் தந்து வாழ்வாதாரமாக விளங்குகிறது சென்னை. கொண்டாட்டங்கள்... சென்னையின் 375வது பிறந்தநாளை சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் நம்ம மக்கள். சென்னை தொடர்பாக ஆல்பம்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சென்னையில் அழகு வித்தியாசமான கோணங்களில் படமாக்கப் பட்டுள்ளது. நன்றி தற்ஸ்தமிழ்.
  14. 1 point
  15. 1 point
    எல்லாம் நல்லூர் முருகனோட அதிசியம் யாழ்ப்பாணத்தில நல்ல மழை பெய்யுதாம் பல மாதங்களுக்கு பிறகு அரோகரா....
  16. 1 point
    இப்படிச் சொல்லிக் கொண்டு படம் காட்டுவதே பலரின் வேலையாகிப் போய்விட்டது என்ன? 6 வயதுக்குப் பின்னர் தந்தையோடு இருக்கவில்லை என்பதையாவது தெரியுமா?
  17. 1 point
    ஒருசிலர்தான்.. ஆனால் அந்த ஒருசிலரே போதும்..
  18. 1 point
  19. 1 point
    தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-tamil/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-114041300022_1.html
  20. 1 point
    இப்போ நடக்கும் இந்த கூத்து முழு வக்கிரமானது....அந்த நாட்டுக்கும் பொருந்தாத உடுப்புகளை அந்த பிள்ளைகளுக்கு போட்டு..ஒரு கோமாளித்தனமான...பார்ப்பவர்களை உணர்ச்சியூட்டி கோமாளியாக்குகிரார்கள்...கொஞ்சகாலம் ஒரு வலது குறைந்த பிள்ளையை வைத்து வேடிக்கை காட்டினார்கள்...... எல்லாம் Rupert Murdoch இன் விளையாட்டு...... எப்படி 1கக் தங்கம் இவர்களால் கொடுக்க முடியும்? எவ்வளவு மக்களின் தலைகளில் மிளகாய் அரைகிறார்கள்.... பாடுவது முழுக்க தரம்குறைந்த சினிமா பாட்டுகள்.....கேவலமான நிகழ்ச்சி இது..... ஏன்தான் மற்ற சிறிய தமிழ் தொலைக்காட்சியூடகங்கள் சுத்தமான தமிழ் பாட்டுகளை சிறுவர்களை பாட சொல்லி குறைந்த பரிசில் களை வழங்கி தங்களது பார்வையாளர் வட்டத்தை உயர்த்த முயலவில்லை....இதை பார்க்கவும் ஊக்கப்படுத்தவும் ஒரு சிறு கூட்டம் இருக்கும்...சிறியளவில் ஆரம்பித்து பின் வளர்க்கலாம்...
  21. 1 point