• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. துளசி

  துளசி

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   4

  • Content Count

   8,892


 2. யாயினி

  யாயினி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   7,434


 3. நெற்கொழு தாசன்

  நெற்கொழு தாசன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   487


 4. தமிழரசு

  தமிழரசு

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   3

  • Content Count

   32,841Popular Content

Showing content with the highest reputation on 11/21/2014 in all areas

 1. 3 points
  திருமாவளவன். ஈழத்தின் வளம்பொருந்திய வருத்தலைவிளான் (வலிவடக்கு தெல்லிப்பளை) கிராமத்தின் மண்வாசனையோடுயுத்தம் கனடாவுக்கு தூக்கியெறிந்த ஒரு ஆளுமை. இடதுசாரித்துவ பின்னணியுடன் ஒரு நாடகக் கலைஞனாக கிராமத்தோடு இயைந்திருந்த அவரை கவிஞனாக்கியது புலப்பெயர்வு வாழ்க்கை. பனிவயல் உழவு, இருள்யாழி, அஃதே இரவு அஃதே பகல், முதுவேனில் பதிகம் என்ற நான்கு கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், பத்தி எழுத்துகள், அரங்குசார் நிகழ்வுகள் எனத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். இவரின் இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ் அருணோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் பழையமாணவர். புலம்பெயர் வாழ்வின் துயரப்பொழிவினை ஊடுகடத்தும் கவிதைகள் அதிகம் இருந்தாலும் அவை மெல்லிய பனிப் பொழிவு போன்ற ஒரு அழகியலையும் கொண்டிருக்கின்றன எனலாம். திணைமாறிய, இயந்திர வாழ்வியல் அனுபவங்களைப் படைப்பாக்கி அவற்றினூடாக புலம்பெயர் சமூகத்தின் வலிகளை, இயங்குதலை எந்தவித சமரசமும் இன்றி எடுத்து உணரவைக்கும் கவிஞர், இன்றைய கவிஞர்களில் வேறுபட்டு இயற்கையில் இருந்து தன்னை ஆற்றுப்படும் வித்தையைக் கொண்டிருக்கிறார். ஈழக் கவிஞர் கருணாகரன், கவிஞர் திருமாவளன் குறித்து இப்படிப் பதிவு செய்கிறார். 'இலங்கையின் கொந்தளிப்பான காலட்டத்தில் இளமைப்பருவத்தைக் கொண்டிருந்தவர் திருமாவளவன். இன ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் இனப்போராக மாறிய சூழலில் வாழவேண்டிய, எழுதவேண்டிய நிலையைக் கொண்டவர் என்பதால் இந்தக் கொந்தளிப்பு அவரின் கவிதைகளிலும் உண்டு. ஆனால் சமநிலை குழம்பாதவர் எந்தப்பக்கமும் இழுபடாதவர் சாயாதவர் என்பதனால் திருமாவளவனின் கவிதைகள் கால நீட்சியைக் கொண்டிருக்கும் தன்மையை அதிகம் கொண்டிருக்கின்றன.எனினும் அதை மீறி சமகால ஈழப்பரப்பிற்குள் மட்டும் அடங்கி உறைந்துவிடும் கவிதைகளும் உண்டு. இதைத்தவிர்த்தால் திருமாவளவன் ஈழக் கவிஞர்களிலும் ஈழக்கவிதைகளிலும் முக்கியமான ஒரு அடையாளமாகவே உள்ளார்'. உச்சி வெளிக்க உதட்டுக்கு கீழே சிறிதாய் குட்டித்தாடி விட்டேன் சேரன் என்ற நினைப்போ என்றானொருவன். சரிதான் போடா என்றபடி தாடையிலே படரவிட்டேன் அச்சொட்டாய் ஜெயபாலன் போலவே இருக்கிறாய் என்றான் இன்னொருவன். அழல் ஏற காட்டுப்புதர்போல அதன்பாட்டில் வளரவிட்டேன் திடீரென ஒருவன் தேவதேவன் சாயல் தெரிகிறதென்றான். என்று அடையாளங்களோடு தொலைந்து போகாத ஒரு படைப்பாளியின் அடையாளமாக இந்த உரையாடல் வெளிவந்திருக்கிறது. --நெற்கொழு தாசன் ■ கவிதையை திருமாவளவன் தேர்ந்து எடுத்த காரணம் என்ன? தொண்ணூறுகளுக்கு பிற்பாடு இனியும் நாட்டில் இருந்தால் உயிர் என் உடலில் தங்காது என்றுணர்ந்த போது போரை மறுத்தோடி ஊர் விட்டு வந்தவன் நான். புதிய புலம் எனக்கு இன்னொரு போர்க்களமாக இருந்தது, வாழ்வின் துயர், உறைபனியின் கொடுங்குளிர். பணியின் சுமை. இவை எல்லாவற்றையும் விட என்னைப்போல ஓடிவந்த சகமனிதர்களின் போக்கு எல்லாம் சேர்ந்தபோது நான் தனித்து விடப்பட்டிருந்ததாக உணர்ந்தேன் இரவு வேலை, பகலில் தூக்கம். கிடைக்கும் நேரத்தில் மனம் போனபடி அலைவதென என் வாழ்வு இலக்கற்றிருந்தது. அப்போதுதான் நான் எழுத்தை என்தெரிவாகக் கொண்டேன். இள வயதில் வாசிப்பதற்கு நல்ல வாய்ப்பிருந்தது. நல்லதெரிவின் பக்கம் திருப்பிவிட யாரும் வாய்க்கவில்லை. வாசித்தவை எல்லாம் பொழுதுபோக்கு இலக்கியங்கள். எழுதியது மிகக் குறைவு. அவை ஊர் மற்றும் கையெழுத்துப் பத்திரிக்கை மட்டத்தில் தொலைந்து போய்விட்டன. அக்காலத்தில் கவிதை தொடர்பாக நான் கொண்டிருந்த எண்ணமும் வேறானது. அத்தோடு ஓசைநயத்திற்கேற்ப மேடையிலே கவிதையை ஒப்புவிக்கும் பயிற்சியும் இருந்தது இத்தகைய சூழலில், கனடா வந்த பிற்பாடு தற்செயலாக வ.ஐ.ச. ஜெயபாலனின் 'நமக்கென்றோர் புல்வெளி' மற்றும் 'சூரியனோடு பேசுதல்' ஆகிய இரு தொகுப்புகளும் கிடைத்தன. இந்த வாசிப்பினால் ஏற்பட்ட தரிசனமே மீண்டும் கவிதையின் பக்கம் திரும்பவைத்தது. அதற்குப்பின் பல ஈழத்துக்கவிஞர்கள் மற்றும் பசுவையா, மனுஷ்யபுத்திரன் போன்ற தமிழகக்கவிஞர்களின் கவிதைகளைப் படித்தேன். அக்காலத்தில் தொரன்ரோவில் 'சூரியன்' என்றொரு தமிழ் வாராந்த பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் தொடர்ந்து எழுதி வந்தேன். ஓரளவு உள்ளூரில் அவதானிப்பு கிடைத்தது. தொண்ணூற்றைந்தில் கவிஞர் சேரனின் நட்பு கிடைத்தது. அவர் தந்த ஊக்கமும் ஒத்துழைப்பும் கவிதை தொடர்பான நுணுக்கங்களை மேலும் அறியும் வாய்ப்பைத் தந்தது. சிற்றிதழ்களுக்கு எழுதத் தொடங்கினேன். சக்கரவர்த்தி, பிரதீபா தில்லைநாதன் இருவருடனும் இணைந்து 1999 இல் 'யுத்தத்தை தின்போம்' என்ற தலைப்பில் சிறு கவிதைத் திரட்டு வெளிவந்தது. தொடர்ந்து 'பனிவயல் உழவு' தொகுப்பை வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது, இருந்தும் அது வெளிவந்த பின்னால் அதன் மீது எனக்கிருந்த திருப்பி இன்மை அல்லது போதாமை மேலும் கவிதை மீதான தேடலை உருவாக்கியது. இத்தொடர்ச்சியானது கவிதையையே என் முதற்தெரிவாகக் கொள்ளக்காரணமாக அமைந்தது. நான் கவிதா மனோபாவத்தோடு வாழத்தலைப்பட்டேன். இருந்தும் 'பனிவயல் உழவு' என் தொகுப்புகளில் சிறந்தது என்று சொல்லுபவர் இன்றும் உளர். ■ நான்கு கவிதைத் தொகுதிகள். புலம்பெயர் வாழ்வின் சுமைகளுக்குள் இவற்றைச் சாதித்திருக்கிறீர்கள். முதற் தொகுதி பனிவயல் உழவுக்கும் நான்காவது தொகுதி முதுவேனில் பதிகத்துக்கும் இடையிலான கவிதைப் பயணம் குறித்து? முதற்தொகுப்பான 'பனிவயல் உழவு' வைக் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. இரண்டு வருடங்கள் தாமதமானது, முடிவில் அது 'எக்ஸில்' வெளியீடாக வந்திருந்தாலும் கூட நானே அதன் வெளியீட்டாளனாகவும் இருந்தேன். தாமதமான இரண்டு வருடகால இடைவெளியில் கவிதை தொடர்பான என் எண்ணப்பாடு வேறாயிருந்தது. அக்காலத்தில் நிறையப் படிக்கவும் கவிதை தொடர்பாக பேசவும் நல்ல சூழலும் நிறைய நண்பர்களும் நல்வாய்ப்புகளும் அமைந்தது. ஈழத்துக் கவிதைகளை விடவும் தமிழகக் கவிதைகளை நிறையப் படித்தேன். அதனால் பரீட்சார்த்தமாக எழுதிப்பார்க்க முடிந்தது எனது விருப்பத்திற்கு இசைந்தபடி இரண்டாவது தொகுப்பு 'அஃதே இரவு அஃதே பகல்' வெளிவந்தது றஷ்மியும் பௌசரும் அதற்கு உறுதுணையாக இருந்தனர். அதன் பின்பு கலைச்செல்வனின் மரணம் உட்பட இரண்டு கடும் துயர்தரு சம்பவங்கள் குடும்பத்தினுள் நிகழ்ந்தன. மிகவும் மனஉளைச்சலுக்கு ஆட்பட்டேன். பலகாலம் எழுதுவதே இல்லை. இனி எழுத்து வசப்படாமல் போய்விடும் என்ற அச்சமிருந்தது. இடையிடையே நண்பர்கள், சிற்றிதழ்கள் சில கோரிக்கைகளைத் தவிர்க்க முடியாதபோது முயற்சிப்பேன். இப்படி ஆறேழு வருடங்கள் சிறுகச்சிறுக சேர்த்தவையே 'இருள்யாழி'யாகத் திரண்டது, அத்திரட்டிலுள்ள கவிதைகளைப் படித்தாலே தெரியும். அவை ஒரே பாய்ச்சலில் இருக்காது. பல பரீட்சார்த்த வடிவங்களைக் கொண்டதாக இருக்கும். காலச்சுவடு வெளியீடாக வந்தது. என் கவிதைகள் மீது வெங்கட்சாமிநாதன் பெருவிருப்புக் கொண்டிருந்தார். அவர் ஊடாக ராஜமார்த்தாண்டன் என்னை அறிந்து கொண்டார். அவரே இத்திரட்டைத் தொகுத்தவர். அவருக்கு அத்திரட்டு ஏனையவற்றிலிருந்து வேறுபட்டிருப்பதாகவும் திருப்தி தந்ததாகவும் சொன்னார். வேறு விமர்சகர் சிலர் நான் தேங்கி விட்டதாகக் குறிப்பிட்டனர் இது எனக்குச் சவாலாக இருந்தது. இந்த இடையில்தான் இறுதிப்போரும் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்தது. அதற்குபின் வாழ்வு தொடர்பான வெறுமை நிலை ஏற்பட்டது. துயரத்தில் மனம் உறைந்து பேசுவதற்கு வார்த்தைகள் அற்றிருந்தோம் பின் புதிய துளிராக இரண்டு பேரக்குழந்தைகள். அவர்களினூடாக எழுகின்ற புது நம்பிக்கைத் துளியில் சில கவிதைகள் அமைந்தன. அஃதே 'முதுவேனில் பதிகம்' திரட்டு. இத்தொகுப்பில் பல கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன. நெருக்கடியான சூழலிலும், எனக்கு மிகப் பிடித்தவகையில் கவிஞர் கருணாகரன் இத்தொகுப்பைத் திரட்டி வடிவமைத்து வெளியிட்டார். தொரன்ரோவில் நடந்த வெளியீடு கூட எனக்கு மகிழ்வைத் தரும்வகையில் அமைந்தது, வாழ்வின் துயரே என் கவிதைகளில் தூக்கலாக இருக்கிறதென்றார்கள். இனியாவது சற்று மகிழ்வான கவிதைகள் அமையவேண்டும் என மனசார விரும்பினேன். ஆனால் காலம் எனக்கு அப்படி அமையவில்லை. ■ வாசகனாக உங்கள் கவிதைகளை எப்படி உணர்கிறீர்கள் திருமாவளவன் தனக்கான கவிதையைக் கண்டடைந்து விட்டாரா? இந்தக் கேள்வி மிகச் சிக்கலானது. என் முதலாவது தொகுப்பில் இழந்த சோகம், போர் மீதான வெறுப்பு, புகலிடச் சீரழிவுகள் என்ற வகையில் கவிதைகள் அமைந்தது, இதற்குப் பின்னான கவிதைகளில் அதிகம் என் வாழ்வே கவிதையானது, ஒப்பிட்டுப் பார்த்தால் தன்னிலை சார்ந்த கவிதைகளே தூக்கலாகத் தெரியும். இறுதித் தொகுப்பில் இதை அதிகம் அவதானிக்கலாம். ஒரு வாசகனாக என் கவிதையைப் பார்ப்பதென்பது என்வாழ்வை வெளியில் நின்று நானே என்னைத் திரும்பிப் பார்ப்பதற்கு ஒப்பானது. உங்கள் வாழ்க்கை குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்பது போல் இருக்கிறது, என் வாழ்வின் திருப்தி இன்மைகளே அதிகம் என் கவிதைகளில் வெளிப்பட்டிருக்கிறது, எனக்குச் சிறு வயதிலிருந்தே திருவாசகம் பிடிக்கும். மணிவாசகரைப் பிடிக்கும். அவர் தன்வாழ்வைக் கவிதைகளூடாகக் கடந்தவர், எனக்கும் கவிதையென்பது வாழ்வைக் கடக்கும் துடுப்புத்தான். நானும் என் வாழ்வின் துயரைக் கவிதையிலே இறக்கிவைத்து விட்டு அடுத்த கருமத்தில் இறங்குகிறேன். என்வாழ்வில் உச்சத்தை அல்ல அதன் அடிவாலைக்கூட கண்டடைந்ததாக இல்லை. கவிதையும் அப்படித்தான். கண்டடைய முடியும் என்றும் நம்பவில்லை. கவிதையின் இயல்பும் அஃதே. வடிவத்தைப் பார்க்கும் போது கூட எனக்கான கவிவடிவம் இதுதான் என்று சொல்லமுடியவில்லை. இப்போதும் புதியபுதிய பரிசோதனை முயற்சிகளில் காலங்கழிகிறது. ■ உங்கள் கவிதைகளில் அதிகமான குறியீடுகள், படிமங்கள் வாழும் சூழல் சார்ந்தே அமைகிறது. அத்தோடு இயற்கையோடு வாழ்வை இணைத்து ஆற்றுப்படுத்தும் ஒரு ஆற்றுகை நிகழ்கிறது. இந்த அமைவின் மூலம் என்ன ? நான் கவிதை புனைபவன் அல்ல. கவிதை புனைபவன் கவிஞன் அல்ல. புலவன். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்று நம்புகிறவன் நான். நான் எந்த இசங்களுக்கும் கட்டுப்பட்டவனல்ல. படிமங்களைத் தேடி அலைவதுமில்லை சிறுவயதிலிருந்தே இயற்கைமீது ஈடுபாடு உண்டு பாடசாலைக்கு ‘கட்’ அடித்துவிட்டு சினிமா பார்க்கப் போனதை விட காடுகரம்பை என அலைந்ததே அதிகம். வறுமை அதற்கு வாய்ப்பாக அமைந்தது பற்றையிலே அன்று எவை கிடைக்கிறதோ அதுவே அன்றைய உணவாகும்.விடலைப்பருவத்தில் எங்கள் ஊரில் நிகழும் திருமண வைபவங்களுக்கு அலங்கார (வரவேற்பு) முகப்பமைப்பேன் அப்போதெல்லாம் சூழலில் எது கையில் கிடைக்குமோ அதுவே அலங்காரப் பொருளாகும் தென்னங்குருத்து. பச்சைஓலை. பழுத்தல். பாக்கு, கமுகம் பாளை, குரோட்டனிலை என எதெது அகப்படுகிறதோ அதுவே மூலம். இப்போது கவிதையிலும் அதுவே நிகழ்கிறது என்று நம்புகிறேன் இங்கு இன்று கூட புதிதாக வந்த ஒரு கார் பற்றிக் கேட்டால் மணித்தியாலக் கணக்கில் பேசுவார்கள். அருகில் நிற்கும் மரம் ஒன்றைச் சுட்டி என்ன மரம் எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது. பொதுவாக இயற்கை பற்றிய நேசிப்பு நம்மவர்களிடம் அந்த அளவில்தான் உள்ளது, இதை எழுதிக்கொண்டிருக்கையில் இந்த இலையுதிர் காலத்திற்குறிய முதல் மழை பெய்கிறது. மைனா போன்ற நிறையக் குருவிகள் வீட்டுமுற்றத்தில் வந்து குந்துகின்றன. ஐந்து நிமிடங்கூட ஆகியிருக்காது. எழுந்து பறந்து அடுத்தவளவு முற்றத்தில் பின் அடுத்தஇடம் அடுத்தஇடம் என மாறிமாறிச் செல்கின்றன. குரலிலும் பார்வையிலும் சோகம் படிந்துகிடக்கிறது. இப்படித்தானே எம் மக்கள் மூட்டைமுடிச்சுகளோடு இடம்மாறி இடம்மாறி அலைந்து கொண்டிருந்தார்கள். இது ஒரு கவிதையில் படிமமாக வருவதில் என்ன அதிசயமிருக்கிறது இன்னொரு தளத்தில் பார்க்கும்போது நாங்கள் முதலில் இயற்கையை வழிபட்டவர்கள். பிள்ளையார் என்பது இயற்கைக்கு கொடுத்த உருவகம். சிறிது மாட்டின் சாணத்தை உருட்டி அதன் மீது அறுகம் புல்லைச் சொருகிவிட்டு பிள்ளையார் என்கிறோம். இது இயற்கையான உருவகம் அல்லவா. இதை முன்வைத்துத்தானே எல்லாக் காரியங்களையும் செய்கிறோம். எங்கே குளத்தோரம் பெரிய மரம் நிற்கிறதோ அங்கே அதன்கீழ் ஒரு கல்லை வைத்துவிட்டு மரத்தை வணங்குகிறோம். உண்மையில் மரத்தைத்தானே வணங்குகிறோம். பிற்காலத்தில் வந்த பார்ப்பனர்கள் பிள்ளையார்தான் கணபதி அல்லது விநாயகன் என்றது வேறுகதை. அது தனிக்கதை. நானும் சிறுவயதிலிருந்தே மரத்தை அதன் சூழலைநேசித்து வணங்கி வளர்ந்தவன். வறுமை வேறு. வெய்யிலோடும் புழுதியோடும் மழையோடும் வெள்ளத்தோடும் பனியோடும் இசைந்தே வாழ்ந்தோம். மாரிகாலம் வந்தால் தவளைச் சத்தமின்றி தூக்கமில்லை. மாசிக் குளிருக்கு அம்மாவின் பழஞ்சேலையை விட்டால் வேறு போர்வை இல்லை. பங்குனி, சித்திரையில் சஞ்சீவிமலைபோல் வெள்ளத்தோடு வந்த எல்லாவகையான புல்பூண்டுகளும் எங்கள் வளவில் முளைக்கும். இதுதான் என் வாழ்வியல். எவ்வளவு வசதிவந்த போதும் இந்த வாழ்வையே மனம் அவாவுகிறது. இனிக்கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் இந்த வாழ்வே எனக்குள் நிறைந்தும் கிடக்கிறது. கவிதையும் அதனூடு இசைந்ததே. ■ அப்படியாயின் புனைவு இலக்கியங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அனுபவங்கள் சார்ந்த படைப்புகள் ஒரு வாசகமனதினை சிறைப்படுத்திவிடும் அபாயம் இருக்கிறதே தவிர அனுபவங்களைப் படைப்பாக்குவதால் தான் ஈழக் கவிதைகள் பெருமளவு தேக்கமடைந்திருப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்களே? எல்லாப் புனைவுகளும் அனுபவங்களின் மறுவுருக்கள்தான். புனைவு என்பதைப் படைப்பாளி தான் காணாத நுகராத கேட்காத அல்லது அனுபவிக்காத ஒன்றிலிருந்து அதிசயமாக இறக்கி வைக்கிறான் என்பதை என்மனம் ஏற்க மறுக்கிறது ஒரு சினிமா நட்சத்திரத்தின் நிஜமுகத்தைப் பார்த்து அயல்வீட்டு ப்பெண் போலிருக்கிறாள் எனக்கருதும் மனம் அவளது ஒப்பனை செய்யப்பட்ட முகத்தைப் பார்த்து பிரமிப்படைகிறது. இதுவேதான் புனைவுக்கும் அனுபவ எழுத்துக்குமான வித்தியாசம் எனக்கருதுகிறேன். ஆனால், ஒரு நல்ல படைப்பாளி தன் அனுபவத்தின் மீது புனைவைக் கட்டி எழுப்புகிறான் அல்லது வளர்த்துச் செல்கிறான். அங்கு வாசகமனம் பிரமிப்படைகிறது. புதிய தரிசனங்களை எட்டுகிறது. இங்ஙனம் பார்த்தால் ஈழத்துப் படைப்பாளிகள் அந்தநிலையைத் தொடவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. அவர்கள் யதார்த்தத்துடன் திருப்தி கொள்கிறார்கள். நான் நினக்கிறேன் எங்களிடம் விமர்சனத்துறை வளரவில்லை. ஒரு படைப்பாளியை நெறிப்படுத்துபவன் விமர்சகன். அவனே படைப்பாளியை வளர்த்துச் செல்கிறான். இதேவேளை ஈழத்துப் படைப்பாளிகளிடம் விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் அருகி வருகிறது. முதுகுசொறிதலில் புளங்காகிதம் அடைகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து விமர்சனங்கள் வந்தால் அதுபற்றி ஆராயாமலே கோபப்படுகிறார்கள். முதலில் இந்நிலை மாறவேண்டும் ■ ஈழத்தமிழ் படைப்பாளிகளும் சரி வாசகர்களும் சரி அதிகம் தமிழ் நாட்டின் ஊடகங்களையும், படைப்பாளிகளையும் கொண்டாடுபவர்களாகவும், தங்கள் படைப்புகள் தமிழக ஊடகங்களில் வெளியாகினால் தமக்கான அங்கீகாரம் கிடைத்தாகக் கருதும் மனோபாவம் உடையவர்களாகவும் இருக்கிறார்களே? இஃதொரு சிக்கலான கேள்வி. நெடுங்காலமாகவே எங்கள் வாசகப்பரப்பு தமிழ்நாட்டையே சார்ந்திருந்தது. தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் கூட தமிழ்நாட்டுப் படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கியங்களாகவும் மீதி ஈழத்து இலக்கியங்கள், மலேசிய இலக்கியங்கள் எனவும் வகுத்து வைத்திருந்தனர். பின்நாளில் தலித்திலக்கியங்கள், பெண்ணிய இலக்கியங்கள், புகலிட இலக்கியங்கள் அவற்றுடன் சேர்ந்துகொண்டன. இந்தச் சவலைப்பிள்ளை மனோபாவம் எனக்கு எரிச்சல் தருகின்ற ஒன்று. இந்த விடயத்தில் போராடியதில் 'உலகத்தமிழ் இலக்கியம்' என்ற பொதுக் குரல் தமிழ்நாட்டிலிருந்து இப்போதுதான் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இஃது ஒருபுறமிருக்க ஈழத்து வாசகர்கள் கூட தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற படைப்புகளுக்குக் கொடுக்கின்ற மதிப்பை ஈழத்து எழுத்தாளர்களுக்கு கொடுப்பதில்லை. எங்களில் பலருக்கு இரண்டு முகங்கள் உண்டு. இந்தக் குற்றச்சாட்டை வைக்கும் ஈழத்துப் படைப்பாளிகள் கூட மனதளவில் இந்திய அங்கீ காரத்தைக் கோருபவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலையில் படைப்பாளி என்னசெய்ய முடியும்? நான் எழுதத்தொடங்கி பல ஆண்டுகளான பின்பும்கூட 'பனிவயல் உழவு' வந்து தமிழ்நாட்டில் பேசப்பட்ட பின்பே ஈழத்தவர்களின் அவதானத்தைப் பெற்றேன். என் நான்கு தொகுப்புகளில் 'இருள்யாழி' மட்டுமே தமிழ்நாட்டில் வெளிவந்தது. அண்மையில் வெளிவந்த 'முதுவேனில் பதிகம்' கூட இலங்கையில்தான் வெளியிட்டேன். ஆனால் இந்தியாவில் அறிமுகம் கிடைத்த பின்பே நம்மவர்களிடம் இருக்கும் சிற்றிதழ்கள் கூட என்னிடம் கவிதை கேட்கத் தொடங்கின. சிற்றிதழ்களே அப்படியாயின் மற்றவர்கள்? கைலாசபதி, சிவத்தம்பி தமிழ்நாட்டில் தம் ஆளுமைகளைச் செலுத்தத் தொடங்கிய பின்பே ஈழத்தில் அவர்கள் பற்றிய பார்வை மிகுந்தது. அவர்களின் செயற்பாடுகள் விசாலித்தன. ஒரு படைப்பாளியின் பார்வை விசாலப்படவேண்டுமாயின் அவனுக்குப் பரந்த வாசகர்தளம் வேண்டும் அத்தகைய வாசகர் தளம் வேண்டுமாயின் அங்கீகாரம் இருக்கவேண்டும்.ஈழத்தமிழருக்கு தங்களோடு இயங்குபவர்களைப் பாராட்டும் பண்பாடு குறைவு. தங்கள் தேவைகருதி முதுகு சொறிவதைத் தவிர. இது என் கருத்து. ஆனால் தமிழ் நாட்டில் அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே சிறந்த படைப்பாளிகள் என்ற எண்ணம் தவறானது. முக்கியமாக அந்தக் கர்வம் படைப்பாளர்களுக்கு வரக்கூடாது. ■ புலம்பெயர் தமிழர்களிடம் தங்கள் குழுமம் சார்ந்த படைப்பாளிகளை கொண்டாடுவதும் ஏனைய தளங்களில் இயங்குபவர்களைப் புறக்கணிப்பதுவுமான ஒரு நிலை காணப்படுகிறதே? இது புலம்பெயர் தமிழரிடம் மட்டும் தான் உள்ள நோய் என நான் கருதவில்லை. இலக்கியம் எப்போதும் குழுநிலை சார்ந்தே இயங்குகிறது. பிற்போக்கு, முற்போக்கு, நற்போக்கு, என, பல போக்குகளுடன் தான் இலக்கியம் இயங்கி வந்திருக்கிறது. அவ்வப் போக்குள்ளவர்கள் தாங்கள் சார்ந்த படைப்பாளிகளையே கொண்டாடினர். முப்பதாண்டுகாலப் போராட்டமானது எங்கள் சமூகத்தில் பெரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. சனநாயகத்தன்மை அற்ற தனிமனித ஆளுமைகள் தான் இயங்குகின்றன. அதுவே இன்று யதார்த்தமாகிவிட்டது. கூட்டுறவு, கூட்டுழைப்பு என்பது வெறும் வார்த்தைகளாயின. தனிநபர் பெயருக்குப் பதிலாக ஒரு அமைப்பின் பெயரை வைத்துக்கொண்டு தனிநபராகவே இயங்குகிறார்கள். ஒரு படைப்பாளி இந்தப் பாராட்டுகளுக்கு அல்லது புறக்கணிப்புகளுக்குச் செவிசாய்க்க வேண்டியதில்லை. நான் நீண்டகாலமாக புறக்கணிப்புக்குள்ளானவன். இந்தப் புறக்கணிப்புத்தான் நான்கு கவிதைத் திரட்டுகளைச் சாத்தியமாக்கியது, ஒரு படைப்பாளி அதிலும் குறிப்பாக கவிஞர் எந்தச் சட்டகத்தினுள்ளும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. நிற்கவும் கூடாது. யாருடைய பாராட்டுதலையும் பெறவேண்டியதில்லை. யாருக்காகவும் அல்லது எதற்காகவும் சமரசம் செய்யவேண்டியதில்லை. கண்டு கொள்வதும் காணாமல் போவதும் நுகர்வோர் மனநிலை சார்ந்தது. அது அவரவர் அரசியல் சார்ந்தது. ஒவ்வொரு பாராட்டுதல் ஒவ்வொரு விருதுகள் அல்லது புறக்கணிப்புகளின் பின்னும் நுண்அரசியல் இருக்கிறது. இன்று உவப்பாயிருப்பது நாளை கசக்கலாம். அல்லது கசப்பது நாளை உவக்கலாம். அதைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை இது என் பட்டறிவு. ■ புலம்பெயர் தேசத்தில், புலத்தில் என இருதளங்களிலும் இன்று அதிக அளவில் படைப்புகள் வெளியாகின்றன. உங்கள் பார்வையில் எந்தத் தளம் திருப்தி தருகிறது? எனக்கு புலம் நிறையவே திருப்தி தருகிறது. புலம்பெயர் தேசத்தில் பல வெளியீடுகள் பணச்சடங்கை நோக்காகக் கொண்டு நிகழ்கின்றன. புலத்தில் அப்படி அல்ல. அது முப்பதாண்டு காலமாகப் போருக்குள் மூடுண்டதேசம். இன்று அங்கு வெளிவரும் படைப்புகளின் தரம் அதிகரித்திருக்கிறது. அதிலும் வடக்கை விட கிழக்கில் அதிகம் வெளிவருவதைக் காணமுடிகிறது. இது என் அவதானம் புலம்பெயர் தேசத்தில் படைப்பாற்றல் அருகியிருக்கிறது. ஆனால் வெளியீடுகள் நிறைய நிகழ்கின்றன. மற்றைய புலப்பெயர் நாடுகளில் வதிபவர்கள் தொரன்றோ வந்து நூல்களை வெளியிடுகின்றனர். இவர்கள் புலத்தில் சென்று வெளியிடுவதில்லை. புதிதாக இப்போது புகலிடத்தில் குவிந்து வரும் மாசுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றவகையில் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். புகலிடத்தில் வாழும் பலபடைப்பாளிகள் தங்களின் ஓரிரு படைப்புகளோடு நின்று போய்விடுகிறார்கள். அவர்களின் வாழ்வுச்சுமை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிப்பதில்லை. எண்பது,தொண்ணூறுகளில் புகலிடத்தில் இருந்த படைப்பாற்றல் இன்றில்லை. முகப்புத்தகம் வேறு படைப்பாற்றலை குறுக்கியிருக்கிறது. . பலர் அதில் எழுதும் குறுந்தகவல், சிறுபதிவுகள் மற்றும் அதற்கு கிடைக்கும் 'லைக்' குகளுடன் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். ■ 'ழ' இதழின் இணையாசிரியாரக இருந்த அனுபவங்களைப் பகிர முடியுமா? எனக்கு அதில் முக்கிய பங்குண்டு, முன்பு சொன்னது போல வணிக இதழ்களிலிருந்து தீவிர எழுத்தின் பக்கம் திசை மாறியபோதில் 'ழ'கரம் இதழ் தொடங்கினோம். அக்காலத்தில் புகலிடச் சூழலில் சிற்றிதழ்கள் அருகியிருந்தன. எஞ்சியிருந்த 'காலம்' போன்ற ஓரிரு சிற்றிதழ்களும் அறியப்பட்ட எழுத்தாளர்களையே கண்டுகொண்டனர் புதியவர் நுழைவதென்பது முயற்கொம்பு. இச்சூழலில் ஒரு சிற்றிதழ் தொடங்கவேண்டிய தேவை எனக்கிருந்தது, அக்காலத்தில் என்னுடன் மிக நட்போடிருந்த அ.கந்தசாமி, பொன்னையா. விவேகானந்தன் இருவரோடிணைந்து 'ழ'கரம் இதழ் தொடங்கினேன் இருமாதம் ஒன்று என்ற வகையில் நான்கு இதழ்கள் வெளிவந்தன. இன்று மிக அறியப்பட்ட சுமதிரூபன், வசந்திராஜா, பிரதீபா தில்லைநாதன், சக்கரவர்த்தி, ரதன் மற்றும் நான் உட்பட பலர் சிற்றிதழில் நுழைந்து பிரபலமாக 'ழ'கரம் பத்திரிகையே வழிசமைத்தது, பத்திரிகை யுத்தமறுப்பையும் மாற்றுக்கருத்தையும் கொண்டிருந்தது. அதேவேளை வெகுசன நீரோட்டத்தில் இயங்கிய பலரைக் காரசாரமாக விமர்சித்தது. இதனால் பலத்த அறிமுகமும், எதிர்ப்பும் கிளம்பிற்று. முதலாவது இதழோடு பொன்.விவேகானந்தன் பின்வாங்கினார். பொருளாதார நிலையில் இறுதிவரை அ.கந்தசாமி அவர்களே பெரிதும் உதவினார், நான் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருந்தேன். எங்களுக்குப் படைப்பில் இருந்த விருப்பும் செயற்பாடும் விநியோகத்தில் இருக்கவில்லை. சிற்றிதழ்களுக்குரிய பிரச்சனையே இதுதான். ஐந்தாவது இதழ் 'லே-அவுட்' முடிந்து அச்சகத்துக்கு போகும் தறுவாயில் அ. கந்தசாமி அவர்கள் இனித் தன்னால் பண உதவி செய்வது சிரமம் என்றார், இவ்வேளையில் 'ழ'கரம் இதழின் வருகையானது கலைச்செல்வனுக்கு தாங்கள் சிற்றிதழ் ஒன்றைத் தொடங்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிற்று என்பது என் நம்பிக்கை. அவர் தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு (எக்ஸில்) சிறுபத்திரிகை தொடங்க இருப்பதாகத் தகவல்கிடைத்தது, ஐந்தாவது 'ழ'கரம் இதழை எப்படிக் கொண்டுவருவது என்பது தொடர்பாக நண்பர்ளுடன் கூடிக் கதைத்தோம். அப்போது சேரன், 'எக்ஸில்' பற்றிய தகவலையும் கூறி அவர்களுடன் இணைந்து இயங்கும்படியும் தொரன்ரோவில் இருந்து படைப்புகளை ஒன்றுதிரட்டி அனுப்பும் படியும் இதனால் சிற்றிதழ் தொடர்பான உங்கள் முயற்சியில் திருப்தி கிடைக்கும் என்று அவர்கள் சார்பில் பரிந்துரைத்தார். ஏற்றுக்கொண்டேன். ழகரத்தை கைவிடவேண்டியதாயிற்று. முடிவு வேறுவிதமாக அமைந்தது. பின்னாளில் “ழ”கரத்தை பிச்சை எடுத்தாவது தொடர்ந்திருக்க வேண்டும் என உணர்ந்தேன். ■ கலைச்செல்வன். புலம்பெயர் இலக்கியத் தளத்தில் ஆழமாகத் தடம் பதித்த ஆளுமை. கலைச்செல்வனின் படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். கலைச்செல்வனின் படைப்புகள் மீது உங்களுக்கு இருக்கும் விமர்சனங்கள் ? கலைச்செல்வனின் படைப்புகளை நான் முழுமையாகப் படிக்கவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய சில கதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். அவர் நல்ல கதை சொல்லி. அவர் திசை திரும்பாது சிறுகதை, நாவல்களில் மட்டும் இயங்கியிருந்தால் ஒரு சிறந்த படைப்பாளியாகப் பார்த்திருக்க முடியும். அவருடைய கட்டுரைகள், பத்திகள் சில, வேவ்வேறு புனைபெயர்களில் எழுதியிருப்பதாக பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இலக்கியச் சந்திப்புகளில் அவர் வாசித்த கட்டுரைகள் முக்கியமானவை எனச் சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் ஒருசேரப் படித்தால்தான் படைப்புகள் மீதான என்கருத்தைச் சொல்ல முடியும். நிற்க, கலைச்செல்வன் புலம்பெயர் இலக்கியத்தடத்தில் இயங்கிய முக்கியமான ஆளுமை என்பதில் ஐயமில்லை. அவரது ஆளுமை படைப்பில் இருந்ததைக் காட்டிலும் செயற்பாடுகளில் அதிகம் இருந்திருக்கிறது. ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு, சிற்றிதழ்கள் (பள்ளம், எக்ஸில், உயிர்நிழல்) மற்றும் புகலிடச்சினிமா என மூன்றிலும் இயங்கியிருக்கிறார். இந்த மூன்றும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவரது மரணத்தின் போது இருந்த உணர்வெழுச்சியைப் பார்த்தபோது அடுத்த ஓரிரு ஆண்டுக்குள் அவரது நண்பர்களால் அவர் படைப்புகள் ஆவணப்படுத்தப் பட்டிருக்கும் என்றே நம்பினேன். ஒரு “டாக்குமென்றி” எடுக்கப்போவதாக கூடச் சொன்னார்கள். அவருடன் வாழ்விலும் இலக்கியத்திலும் இணைந்து செயற்பட்ட லஷ்மியிடமும் ஒரிரு தடவை கேட்டேன். ஐந்தாம் ஆண்டு நினைவாக அவரது படைப்புகளை கொண்டுவர இருப்பதாகச் சொன்னார், அவர் கையில் அனைத்துப் படைப்புகளும் சேகரிப்பில் இருக்கிறதென்பதை அறிவேன். அவர் இன்றுவரை வெளியிடாமல் இருப்பதன் காரணம் புரியவில்லை. கலைச்செல்வனோடு நீண்டகாலம் இலக்கியத்தில் இயங்கிய சுசீந்திரனிடம் கேட்டேன். அவர் அதைப் பெற்றுத் தந்திருந்தால் கூட இதுவரையில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கும் இன்றுவரை நடக்கவில்லை. இப்போ பத்தாவது ஆண்டும் வந்துவிட்டது. கலைச்செல்வனோடு இறுதி நேரத்தில் இணைந்து செயற்பட்டவர்கள் வேறுவேறு திசையில் நிற்கின்றனர். எனக்கு நம்பிக்கை போயிற்று. என் ஆயுள் கேள்விக்குறியானபோது இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. கலைச்செல்வன் என் சகோதரன். அவ் வகையில் அதைசெய்வதற்கான உரித்து எனக்கும் உண்டு. முழுமையாக ஆவணப்படுத்துதல் எனக்குச் சாத்தியமில்லை என்பது தெரிந்தபோதும் கிடைத்ததையாவது ஆவணப்படுத்த வேண்டும் என நினைக்கின்றேன். அவையாவது மிஞ்சட்டும். அதில் தவறில்லை. இந்த இடத்திலும் நான் வேண்டுவதெல்லாம் கலைச்செல்வனின் படைப்புகள், அது தொடர்பான தகவல்கள் அல்லது அதை வைத்திருப்பவர்களிடம் இருந்து பெற்றுத் தந்து உதவுங்கள் என்பதே. அது உங்களோடு வாழ்ந்த நண்பனுக்குச் செய்கின்ற கௌரவமாக இருக்கும். ■ நீங்கள், கலைச்செல்வன் இருவருக்கும் இலக்கியத்தில் தடம் பதிக்க எந்தச் சூழல் காரணமாகியது ? மனந்திறந்து பேசுவதாயின் இதில் சொல்வதற்கு நிறைய விடயங்கள் உண்டு, என் பதினைந்தாவது வயதில் எழுபதாம் ஆண்டுத் தேர்தல் வந்தது அப்போது தந்தை.செல்வா. வீ,பொன்னம்பலம் இருவரும் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டனர். அப்போது தான் அப்பா என்னை முதன்முதலாகத் தேர்தல் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார், அவர் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருந்தார், இதற்குப் பின்தான் அவரைப் பற்றியும் அவர் மலேசிய விடுதலை அமைப்பில் போராளியாக இருந்த இளமைக்காலம் தொடர்பாகவும் அறியமுடிந்தது, அவரது வாழ்வும் கொள்கையும் எனக்குள் ஒருவித எழுச்சியைத் தந்தது, அவர் என்னை 'இதுவே உன்திசை'யென இடதுசாரித்துவ சிந்தனையின் பால் திருப்பிவிட்டதாக உணர்ந்தேன் எழுபதுகளின் ஆரம்பத்தில் அப்பா விசுவமடுவில் இருந்தார். அங்கிருந்த அவர் நண்பர்களில் பலர் கம்யூனிஸ்ட்கட்சியின் சண்முகதாசனின் பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்களின் உரையாடல்களோடு சேர்ந்தே வளர்ந்தேன். அப்பா இறந்ததன் பிற்பாடு அவர்கள் தொடர்பு இல்லாமல் போனது. எழுபதில் நடந்த தேர்தலோடு மூடப்பட்டிருந்த “வருத்தலைவிளான் வாலிபர் சங்கம்” என்ற அமைப்பை என் வயதொத்தவர்களோடு இணைந்து பொறுப்பேற்று இயங்கத் தொடங்கியதிலிருந்து என் பொதுவாழ்வு ஆரம்பமானது, அக்காலத்தில்தான் என் வாசிப்புப் பழக்கமும் தொடங்கியது, எனது சிறியதாயார் வீட்டில் ஒரு தகரப்பெட்டி (றங்குப்பெட்டி) நிறைய புத்தகங்கள் இருந்தன. அத்தனையும் கல்கி, கலைமகள் போன்றவற்றிலிருந்து சேகரித்து “பைன்ட்” செய்யப்பட்ட சரித்திர சமூக நாவல்கள். கல்கி, அகிலன், சாண்டில்யன், லஷ்மி எனத் தொடர்ந்து பின் மு.வரதராசன் அப்பால், காண்டேகர் வரை நீண்டது. கலைச்செல்வன் என்னிலும் ஐந்து வருடங்கள் இளையவன் பின்னாளில் என் தெரிவிலுள்ள புத்தகங்கள் தான் கலைச்செல்வனுக்கும் கிடைத்ததன, இவைதான் இருவரினதும் வாசிப்பாக இருந்தது எங்களுக்குச் சரியான தெரிவைத் தர யாரும் இருக்கவில்லை. நாங்கள் கற்ற யூனியன் கல்லூரியிலும் அஃதே நிலை. எழுபத்திரண்டில் முல்லைமணி எழுதிய 'பண்டாரகவன்னியன்' நாடகத்தை இயக்கி மேடை யேற்றினேன் அதில் நான் பண்டார வன்னியனாகவும் அவன் தம்பி கைலாசவன்னியனாக கலைச்செல்வனும் நடித்திருந்தோம் சங்கத்தின் செயற்பாடுகளுடாக எங்களை நன்கு வளர்த்துக் கொண்டோம். பட்டி மன்றத்தில் நான் ஓருபக்கம் தலைமை வகித்தால் அவர் மறுபக்கத்தின் தலைவனாக இருப்பார், இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். அங்கும் அது போலவே. இருந்தும், உறவுகளில் பாதிப்பிருக்கவில்லை. இருவரும் ஒரு சைக்கிளில் திரிவோம் ஒரு கட்டத்திற்கு பிற்பாடு எங்கள் இருவர்க்கிடையிலும் ஒருவித போட்டி மனோபாவம் துளிர்விடத் தொடங்கியது, “கொம்பு சீவி” விடுவதற்கும் பலர் இருந்தார்கள், அதுதானே இயல்பு. இதனால் சிலசமயங்களில் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கியது. கலைச்செல்வன் 1984ல் பாரீஸ் வந்து சேர்ந்தார். அவரது நண்பர்கள், செயற்பாடுகள், வாசிப்பு, இலக்கிய முயற்சிகள் எல்லாமே அவரைப் புதிய திசைக்கு மாற்றியது, நான் போருக்குள் உழன்று கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் எனக்குப் புலம்பெயரும் எண்ணமிருக்கவில்லை. இந்தியராணுவ வருகைக்கு பின் யுத்தம் முடிவுறும் என நம்பியிருந்தேன். நான் 1992ல் கனடா வந்தேன். இந்தப் பின்புலத்தில்தான் முன்பு கூறியது போல நான் ஜெயபாலனின் கவிதைத்தொகுப்பைப் படித்தேன். எழுதத் தொடங்கினேன். அதற்குப் பின்பும் ஓரிரு ஆண்டுகள் கழிந்த பின்பே தேர்ந்தெடுக்கப்பட்ட திசையில் என் தேடல் தொடங்கியது சிறிது சிறிதாக கவிதைக்குள் ஆட்பட்டேன். நான் 'ழ'கரம் தொடங்கி பிற்பாடு கலைச்செல்வன் தன் நண்பர்களுடன் இணைந்து 'எக்ஸில்' தொடங்கவும் இத்தகைய சூழலே காரணம் என்பது என் மனசறிந்த உண்மை. “எக்ஸில்“பின் 'உயிர்நிழலில்' இரண்டிலும் எனக்கு எந்த உருத்தும் இருக்கவில்லை. முன்பு சேரன் கூறியது போல எந்த மனநிறைவையும் அது தரவில்லை. படிப்படியாக நான் செய்துவந்த பங்களிப்பும் நின்றுபோனது. இரண்டாயிரமாம் ஆண்டு நான் கலைச்செல்வனை நேரில் பார்த்தபோது பிரமித்து நின்றேன். அவனது தோற்றமும் ஆளுமையும் என் அப்பாவை நினைவூட்டியது. மகிழ்ந்தேன். இளமைகாலத்தில் இருக்கும் உறவும் நெருக்கமும் அவரவர்கள் குடும்பங்களானபின் இருப்பதில்லை. நாங்களும் விதிவிலக்கல்ல. திடீரென நிகழ்ந்த அவனது மரணம் என்னைக் கதிகலங்க வைத்தது. இப்போ பத்து வருடங்கள் கழிந்து விட்டன, அவன் இருந்திருந்தால் இருவரும் இன்னமும் வளர்ந்திருப்போம்.இருந்தும் ஏதோவகையில் நாங்கள் ஒருவர்க்கொருவர் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் சமூகத்துக்குப் பணியாற்றியிருக்கிறோம் என்பதே சிறப்பு. ■ உங்களின் தந்தையார் மலேசிய விடுதலை அமைப்பில் செயற்பட்டதாகக் கூறினீர்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா? அவர் தன் தந்தையாருடன் குடும்பமாகச் சிறுவயதில் மலேசியா சென்றிருந்தார். போய், சிலநாட்களிலேயே தாயாரும் தமக்கையும் ஊர் திரும்பி விட்டார்கள். சில ஆண்டுகளில் அண்ணன் ஒரு விபத்திலே இறந்துவிட்டார். இச்சூழலில் வாகன ஓட்டியாக இருந்த இவர் ஜப்பான் ராணுவத்தின் அட்டூழியங்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த அகத்தூண்டலில் மலேசியக் கம்யூனிஸ்கட்சியில் இணைந்தார். இவரைப் பொலீஸ் தேடத் தொடங்குகிறது. நெருக்கடியான ஒருநிலையில் தப்பிக் காட்டுக்குள் நுழைந்து கட்சியின் ஆயுதப் போராளியாகிறார். அங்கு கப்டன் தரத்தில் இயங்கியதாக அறிந்தேன். பின்னாளில் கட்சியில் உள்ள தலைவர்கள் அவரைக் கப்டன் என அழைப்பதைக் கண்டிருக்கிறேன். இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவுக்கு வரும்காலத்தில் கட்சி கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் இராணுவத்திடம் இருந்து தப்பித்து பர்மா ஊடாகத் தரைமார்க்கமாக தமிழ்நாடு வருகிறார். அங்கு கைதுசெய்யப்பட்டுச் சிறைசெல்ல நேர்கிறது. அச்சூழலில் என். எம். பெரேரா, டாக்டர். விக்கிரமசிங்கா ஆகியோருடனான நட்பு ஏற்படுகிறது. விடுதலையாகி இலங்கை வந்தபோது டாக்டர் விக்கிரமசிங்கா அவர்களே இவரை எதிர்கொள்கின்றார். ஊரில் யாருடனும் தொடர்பற்ற நிலையில் கொழும்பில் தங்கிவிட்டார் அப்போது கட்சியின் 'அத்த' என்ற பத்திரிகையில் இரண்டாண்டுகள் கடைநிலை ஊழியனாக வேலை செய்கிறார். இரண்டாண்டுகளின் பின் இளவாலையில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் மைத்துனர் அவரை அடையாளங்கண்டுகொள்கிறார். அவர் தமக்கையார் குடும்பம் வறுமைநிலையில் வாழும் நிலைகண்டு பின் ஊரிலேயே தங்கிக் கட்சி வேலைகளில் ஈடுபடுகிறார். ஐம்பதில் பொன். கந்தையா தேர்தலில் நின்ற போது தினமும் சைக்கிளில் இளவாலையில் இருந்து தேர்தல் பணிக்காக பருத்தித்துறை செல்வார்களாம். போகும்போது அக்காலத்தில் இளைஞனாக கம்யூனிஸ்ட்கட்சியில் செயற்பட்ட பிறைசூடி (றயாகரனின் தந்தை) யையும் அழைத்துச் செல்வாராம். இவர்களுடனான நட்பின் தொடர்ச்சியாக பிறைசூடியின் அக்காவான என் அம்மாவைத் திருமணஞ் செய்தார். எங்கள் ஊர் ஒரு வித்தியாசமான ஊர். யாழ்ப்பாண மனோபாவத்துக்கு எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டுமாயின் எங்கள் ஊரைக் குறிப்பிடலாம். அப்பா பல தொழில்கள் செய்தும் உருப்பட முடியவில்லை. திருமணமாகி ஆறேழு ஆண்டுகள் தான் ஊரில் இருந்திருப்பார். ஒத்துவரவில்லை. 1958க் கலவரத்தைத் தொடர்ந்து 'தருமபுரம்' கிராமம் உருவானது. அப்போ அப்பகுதிக்கான 'டீ.ஆர்.ஓ' வாக முருகேசபிள்ளை இருந்தார். இக் கிராம உருவாக்கத்தில் இணைந்து செயற்பட்டார். எழுபதாம் ஆண்டுவரை அக்கிராமத்திலேயே வாழ்ந்தார். நான் அவரது வாழ்வை நேரடியாகப் பார்த்தவன். மாக்சிஸம், கம்யூனிசத்தைக் கரைத்துக் குடித்த தங்களை கம்யூனிஸ்ட்டுகள் எனச் சொல்லும் பல பண்டிதர்களைப் பார்த்திருக்கிறேன். இரவிரவாக வாதாடுவார்கள். அவர்கள் வாழ்வு அதற்கு நேர் மறையாக இருக்கும். கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தால் மட்டும் போதாது அது செயலிலும் இருக்கவேண்டும். அந்தக்கொள்கைகளில் நம்பிக்கையும் செயலும் இணைய வாழ்ந்தவர் மிகச்சிலரே. இதில் என் தந்தையும் ஒருவர். அவர் பற்றிய நீண்ட பதிவொன்றை விரைவில் எழுதுவேன் ■ உங்களது ஆரம்பமே ஒரு இடதுசாரித்துவம். இதன் பின்னணியில் உங்களின் செயற்பாடுகள் பற்றி? அம்மா ஒரு மூன்று வருடங்கள் வரையிற்தான் தருமபுரத்தில் வாழ்ந்தார். அவருக்கு அப்பாவின் வாழ்வியலும் அச்சூழலும் ஒத்துவரவில்லை. ஊர் திரும்பிவிட்டார். அம்மாவுக்கும் அப்பாவிற்குமான வாழ்வியல் போராட்டமே அப்பா கட்சிப் பணிகளில் இருந்து விடுபடக் காரணமாக அமைந்தது என நம்புகிறேன். நாங்கள் அம்மாவுடன் அவர் ஊரிலேயே வாழ்ந்தோம். 1973ல் அப்பா காலமானதன் பிற்பாடு வறுமை அசுரத்தனமாகத் தாக்கியது. அதனோடு போராடவே எமது காலம் போது மாயிருந்தது. ஊரில் எல்லாவிதத் தாக்குதல்களையும் புறக்கணிப்புகளையும் வடுக்களையும் சுமக்க வேண்டியவர்களாக இருந்தோம். அம்மா ஒரு சண்டைக்கோழியைப் போல எங்களைத் தன் இறகுக்குள் வைத்துப் பராமரித்தார். 1975இல் நடைபெற்ற தேர்தலில் நான் வி.பொன்னம்பலத்தின் வீட்டில் தங்கியிருந்து தேர்தல் பணியாற்றினேன். 1977 ல் அவர் கரணமடித்தார். பின் போரட்டம் தொடங்கியது. சிலகாலம் ‘டொலர் பாம்’ குடியேற்றத்தில் தொண்டனாயிருந்தேன். அப்போது இயக்கத்தின் பின் பலத்துடன் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் இயங்கியது. அம்மா அறிந்து கொண்டார். என்னைத் திரும்பப் போகவிடவில்லை. நானும் அவர் சொல்லை மீறமுடியாதவனாக இருந்தேன். சிலகாலம் புளொட் அமைப்பில் அரசியல் பணி செய்தேன். நாடகங்கள், கவிதா நிகழ்வென இயங்கினேன். இப்படியே கழிந்ததன்றி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என் மனசாட்சிக்கு விரோதமின்றி அக் கொள்கைகளுடன் வாழ்ந்திருக்கிறேன் என்பதில் திருப்தி. ■ சிறுகதைகள் மற்றும் பத்தி எழுத்துகள் போன்ற இன்னொரு தளத்திலும் இயங்கி வருகிறீர்கள். கவிதை -சிறுகதை -பத்தி எழுத்துகளின் வாசகர் தளங்கள் எப்படி இருக்கின்றன ? கவிதை விடுத்து மற்றைய தளங்களில் இயங்குகிறேன் என ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. இதுவரையில் ஐந்து சிறுகதைகள் (கல்வெட்டு, மனுஷி, போகுமிடமெலாம், ஆண்டபரம்பரைகள், பழி) மட்டுமே எழுதியிருக்கிறேன். பத்து வரையிலான பத்திகள் நினைவு அல்லது அனுபவப் பகிர்வாக எழுதியிருக்கின்றேன் அவை அளவில் சற்றுப் பெரியவை. பத்திகள் என்று குறிப்பிடலாமா என்பதும் தெரியவில்லை. என்னோடு எழுதப் புறப்பட்டவர்கள் பலர் வெள்ளாடுகள் போல கவிதை, கட்டுரை குறும்படம் சினிமா, நாடகம் என அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒவ்வொரு கடி கடித்துவிட்டு எதையும் உருப்படியாகச் செய்யாது விடுவது விசனத்தைத் தந்தது, அதனால் நான் கவிதையோடு நிற்பது என முடிவுசெய்தே இயங்கத் தொடங்கினேன். எனக்கான நேரமும் வாழ்வியல் சூழலும் அதற்கே போதுமானதாக இருந்தது, பின்னாளில் கவிதை என்பது வாழ்வுச் சிக்கலிலிருந்து என்னை மீட்டுக் கொள்வதற்கான கருவியாகவும் பயன்பட்டது. நான் மனச்சிதைவுக்கு உள்ளாகும் போதெல்லாம் என்னை கவிதையில் இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாக தூங்கவோ மறுவேலை பார்க்கவோ உதவிற்று. அண்மைக்காலக் கவிதைகளில் அதை அவதானிக்க முடியும். இப்போது சற்று நேரங்கிடைக்கிறது உடல்நிலை கைகொடுக்குமிடத்து உரைநடை இலக்கியங்களில் கூடுதல் கவனங் கொள்ள எண்ணியிருக்கிறேன். நிற்க, இன்று கவிதைகளைப் பொறுத்த வரையில் அதன் வாசகர் தளம் குறுகி வருவதாக உணர்கிறேன். வருடத்தில் 500 தொகுப்புகளுக்கு மேல் கவிதை என்ற தலைப்பில் வருகின்றன. இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய தொகுப்புகளே தேறும். ஒரு தொகுப்பில் ஐம்பது பிரதிகள் விற்பனையாகுவதே அரிது. கவிதை எழுதுபவர்கள் வாங்கினால் கூட 500 பிரதிகள் விற்பனையாகவேண்டும் அதனால் இன்று வாசகர் கவனம் உரைநடை இலக்கியம் மீதே திரும்பியிருக்கிறது. வெளியீட்டு நிறுவனங்கள் கூட உரைநடை இலக்கியத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அஃது செழுமை பெற்று வருகிறது. தற்போது ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதை மற்றும் பத்தி இலக்கியங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். நாவல் இலக்கியத்தில் நாம் மிகப் பின்தங்கியே நிற்கிறோம். ■ நீங்கள் ஒரு நாடக கலைஞனாகவும் இருந்திருக்கிறீர்கள். நாடகம் மக்களை நேரடியாகச் சந்திக்கும் ஒரு சிறப்பான கலைவடிவம். எப்படி உங்களின் அரங்கு சார் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இன்று நாடகத்துறையில் உங்களின் செயற்பாடுகளைப் பற்றி? சிறுவயதிலிருந்தே நாடகத்தின் மீது பெருவிருப்பிருந்தது. இன்றும் நான் 'நாடகன்' என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். நான் அருணோதயாக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே பாடசாலை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன். 'இரு துருவங்கள்' என்ற நாடகத்திலேயே முதலில் மேடையேறினேன். ஆசிரியர் சிவபாதசுந்தரம் அதைப் பாடசாலைகளுக்கிடையேயான நாடகப் போட்டிக்கு தயாரித்தார். பின் யூனியன் கல்லூரியிலும் ஓரிரு நாடகங்களில் நடித்திருக்கிறேன். நான் முதலில் நெறியாள்கை செய்து நடித்த நாடகம் 'பண்டாரகவன்னியன்' இதன் பிரதி முல்லைமணி அவர்களால் எழுதப்பட்டது. வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. இதில் தொடர்பறாமல் 7 காட்சிகளாகச்சுருக்கி பிரதி தயாரித்தேன். இதுவே நான் சுயமாக முதன்முதலில் இயங்கிய இலக்கிய முயற்சி எனலாம். நெறியாள்கை செய்தபோது நல்ல அனுபவம் கிடைத்தது. இரண்டு, மூன்று இடங்களில் மேடையேற்றினோம். அக்காலத்தில் மாவை மறுமலர்ச்சி கழகம் நாடகப் போட்டிகளில் பங்குபெறும் அமைப்பு. அவர்களின் நாடகங்களில் இடைநிரப்பு பாத்திரமாக பலதடவைகள் நடித்திருக்கிறேன். 1981ல் என நினைவு. யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியின் நாடகங்கள் சில தொடர்ச்சியாக வீரசிங்கமண்டபத்தில் மேடையேறியது. அஃதே நாடகம் மீதான புதிய தரிசனத்தை தந்தது. 1987ல் நாடக அரங்கக் கல்லூரியும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து ஆறுமாத நாடகப் பட்டறையை நடாத்தினர். அதில் பயிற்சி பெற்றேன். அந்த அனுபவத்தோடு புலம் பெயர்ந்த பிற்பாடு 1995 இல் தொரன்றொவில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புக்காக மஹாகவியின் 'புதியதொரு வீடு' நாடகத்தை நெறியாள்கை செய்து மேடையேற்றினேன். அண்மையில் கூட சக்கரவர்த்தி, செழியன் போன்றவர்களின் நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடிகனாக பங்குபற்றி இருக்கிறேன் ■ ஈழத்தமிழினத்துக்கு, ஈழத்துக்கு வெளியில் அரசியல் ரீதியான ஒரு அடையாளம் கிடைத்த தேசம் கனடா. கனடாவில் தமிழ் இலக்கிய அடையாளம் எப்படி இருக்கிறது ? ஈழத்தமிழர்கள் பெருவாரியாக ஒருநாட்டின் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் வாழுகிறார்கள் என்றால் கனடா என்பதில் எந்த ஐயுறவும் இல்லை. முன்பின்னான ஐந்து லட்சம் தமிழ்மக்கள் தொரன்ரோவில் மட்டும் வாழ்வதாக சொல்கிறார்கள். பெருவாரியான மக்கள் கனடாவை நோக்கிப் படையெடுத்ததன் காரணம் இரண்டு. ஒன்று ,குறைந்தது நான்கைந்து வருடங்களில் குடியுரிமை பெற்று குடும்பத்தினரை அழைத்துக்கொள்வது இலகு. இரண்டாவது, ஆங்கிலம் பேசும் நாடு, இதில் முதலாவதின் அதாவது குடியுரிமை பெறுவதன் பொருள் இனி நாங்கள் தாயகம் திரும்பப்போவதில்லை என்பதாகும். இரண்டாவதன் விளைவு ஆங்கிலமே நாம் பேசக் கௌரவமான மொழி. இவற்றை நாங்கள் மறுத்தாலுங்கூட இதுவே எங்கள் ஆழ்மனதில் ஆழப்பதிந்த விடயம். இது என் அவதானம். இன்று கனேடியப் பாராளுமன்றத்தில் ஒரு ஈழத்தமிழ் உறுப்பினர் இருக்கிறார், பலர் அடுத்த தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள். மொழியைத் தவிர மீதி எல்லா விடயங்களிலும் தமிழர்கள் கடும் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதுவரை நாளும் தமிழை முதன்மொழி வடிவில் கற்பிக்க முயற்சி செய்து தோல்வி கண்ட நம் தமிழ் அபிமானிகள் இப்போ இரண்டாவது மொழி வடிவில் தமிழைக் கற்பிக்கும் வழிமுறைகளைத் தேடுகின்றனர். அதிலும் தூய தமிழைக் கற்பிப்பதா அல்லது நடைமுறைத் தமிழை கற்பிப்பதா என்பதில் பெரும்வாதங்களை பத்திரிகைகளில் காண்கிறோம். இவையெல்லாம் அவரவர் சுய பண்டிதத் தனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது,மேற்தட்டு வர்க்கம் ஆங்கிலத்தையே பேசுகிறது. அதேவேளை நம் அரசியல்வாதிகள்போல மேடைகளில் தமிழ், தமிழ் எனக் கொக்கரிக்கின்றனர். சாதாரணமானவர்களின் பிள்ளைகள் வீட்டிலாவது தமிழைப் பேசினால் போதும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கனேடியத் தமிழரிடம் எதிர்காலத்தில் 'தமிழ் இலக்கியம்' பற்றிய கேள்வி என்னளவில் கேள்விக்குறியே. இதுவரை நாளும் இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக அகதி அந்தஸ்துக் கோரி அல்லது குடியுரிமை பெற்று வந்தவண்ணமிருந்தனர். கடந்த ஓரிரு ஆண்டுகளில் அருகிவிட்டது. இல்லை என்று சொல்லலாம். ஒரு உதாரணத்திற்குச் சொல்வதானால் எண்பதுகளில் வந்த காலம் செல்வத்திலிருந்து அண்மைக்காலம் வரை வந்தவர்களிடம் மட்டுமே தமிழ் இலக்கிய அடையாளம் தங்கியிருக்கிறது. இப்போ வாராவாரம் நூல் வெளியீடுகள் இடம் பெறுகின்றன. விருதுகள் இலக்கியப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் தரம், தரமல்ல என்ற வேறுபாட்டுக்கு இடமில்லை. விரலுக்கு ஏற்ற வீக்கம் போல எல்லாத் தரமும் இருக்கிறது. இப்போ அண்மைக் காலங்களில் இந்த இலக்கிய நிகழ்ச்சிகள் ஆங்கில மயப்பட்டு வருவதையும் காணமுடிகிறது. விழாக்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதையும் அங்கு வரும் தமிழர்கள் நடை உடைபாவனைகள் ஆங்கில மயப்படுவதையும் அவதானிக்கிறேன் சுருங்கச் சொல்வதானால் விரும்பியோ விரும்பாமலோ பேரக்குழந்தைகளுக்காக எங்கள் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். ■ கனடாவில் வாழும் ஏனைய சமூககங்களோடு தமிழினம் எவ்வாறானதொரு போக்கினைக் கடைப்பிடிக்கிறது? நான் அண்மையில் பாரீஸ் வந்தபோது லாச்சப்பலில் உள்ள ஒரு தமிழ் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றேன் அங்கு இருந்த வாடிக்கையாளரில் பாதிக்குமேல் வேற்றினத்தினர். தொரன்ரோவில் மூலைக்கு மூலை 'டேக்அவுட்' உண்டு. இருந்து சிற்றுண்டி அல்லது இருந்து உணவு உண்ணும் 'ரெஸ்ரோரன்ட்' அரிது. இருப்பதிலும் அனேகம் இந்தியத் தமிழ் உணவகங்கள். உண்மையில் கனடா ஒருபல்கலாசார நாடாக இருந்தால் இங்குதான் பல்லினப் பரிமாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். அண்மைக்காலங்களில் திருமணம் போன்ற சடங்குகளில் உணவு மற்றும் உடைகளில் இந்திய வடமாநிலக் கலாசாரங்களை பின்பற்றுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது ஆண்கள்( மாப்பிளை) பஞ்சாபியர் போல உடை அணிதல் பெண்கள் 'மெகந்தி' அணிதல் எனப் பல சடங்குகளில் மாற்றம் வருவதைக் காணமுடிகிறது. இவை காலாசாரப் பரிமாற்றமா என்று கேட்டால் இல்லை என்பது என்கருத்து, குறிப்பாக எம்மவர்களுக்கு எங்கள் உணவு, உடை, கலாசாரம் என்பவற்றின் மீது மதிப்பின்மை இருப்பதாக உணர்கிறேன். இரண்டாவது, திருமணம் போன்ற சடங்குகளின் இடைத்தரகர்களாக இருப்பவர்கள் மண்டபம் மற்றும் திருமண நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கிறார்கள் இவர்கள் வியாபாரிகள். இவர்களின் வியாபாரப் போட்டிகாரணமாக இதுபோன்ற விடயங்கள் திணிக்கப்படுகின்றன. வருடத்தில் இரண்டு மூன்று திருமணக் காட்சிச்சாலை நிகழ்வுகள் தமிழர்களால் நிகழ்த்தப்படுகிறது. இங்கு வடஇந்திய உடையலங்கார நிகழ்ச்சிகளே அதிகம். விற்பனைச்சாலைகளும் அத்தகையதே. இவற்றை விட்டால் மற்றைய நிகழ்ச்சிகள் சடங்குகள் இலக்கியம் போன்றவற்றில் வேறு சமூகத்தினர் வந்து கலந்து கொள்வதோ அல்லது அவர்கள் நிகழ்வுகளில் நாங்கள் கலந்து கொள்வதோ அரிது. பல்கலைக்கழக மட்டத்தில் கலாசார பரிவர்த்தனை உள்ள சிலநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ■ ஈழத்தமிழ் இனத்தின் அடையாளம் இன்று என்னவாக இருக்கிறது? தெரியவில்லை. அடையாளம் தேடித் தொடங்கிய போராட்டமானது இத்தகைய கேள்வி எழும்வண்ணம் முடிவடைந்தது எங்கள் துர்ப்பாக்கியமே. புலம்பெயர்ந்த மக்களின் அடையாளமானது ஆற்றில் வீழ்ந்த உப்பு மூடைக்கு நிகரானது. சிலசமயம் பொதிசெய்யப்பட்ட சாக்குமட்டும் மீந்திருக்கலாம். ஈழத்தைப் பொறுத்தவரையில் அது எங்களின் மண்.. சிறு மழை போதும் நாங்கள் துளிர்க்க. இதுவே வரலாறு. இலங்கை வரலாற்றில் பன்நெடுங்காலமாக எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டே வாழ்ந்து வந்திருக்கிறோம். விரைவில் அடையாளம் இழந்து அழிந்துவிடுவோம் என நம்பவில்லை. ■ 'முதுவேனில் பதிகம்' தொகுப்பில் இருக்கும் 'தோற்கடிக்கப்பட்ட நிலம், முள்ளிவாய்க்கால், நெத்தலி ஆறு' போன்ற பல கவிதைகள் ஈழத்தின் வலிகளைப் பேசுகின்றன. ஈழப் போராட்டம் பற்றிய புரிதல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளையவர்களிடம் எப்படி இருக்கிறது ? இதற்கு எவ்வகையில் பதில் சொல்வேன்? குறிப்பாக 1972ம் ஆண்டில் தொடங்கிய தரப்படுத்தலில் இருந்து இன்றுவரை இந்த யுத்தத்தை அவதானித்து வருபவன். நாங்கள் எல்லோருமே ஒருகாலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பங்காளர்களாக இருந்தவர்கள்தான். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஈழவிடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை என்று தோன்றியது அல்லது ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்று கொள்ளலாம். அதற்குபின் நிகழ்ந்தது இரண்டு அதிகாரங்களுக்கிடையேயான போர் என்பது என் கருத்தாயிருந்தது. மக்களை மிரட்டியே யுத்தத்தின்பால் இணைத்துக்கொண்டது. அது பலவிதங்களிலும் மக்களை அடிபணியவைத்தது. மேலும் இந்த யுத்தமானது பெருவாரியான மேல்தட்டு வர்க்கத்தினரின் புலம்பெயரும் அவாவினை அல்லது மேல்நாட்டுக் கனவினைப் பூர்த்திசெய்தது. யாரோ போராட்டத்தைத் தொடங்கினார்கள் வேறு யாரோ யுத்த முடிவில் மாண்டார்கள். எப்படி இந்த யுத்தம் தொடங்கியது என்பதை அவர்கள் அறியார் இது அதிகாரங்களுக்கிடையேயான யுத்தமாக மாறிய காலத்திருந்து இந்த யுத்தத்தை பலமாகக் கண்டித்து வந்திருக்கிறேன். பாரபட்சமில்லாமல் இருபக்க அநீதிகளையும் சுட்டி வந்தேன் என்றோ ஒருநாளில் இந்தமுடிவு தான் எமக்கு கிட்டும் என்பதை என் மனக்குருவி எச்சரித்துக் கொண்டே இருந்தது. என் கவிதைகள் பக்க சார்பின்றி இருந்தும் கூட தமிழினத்தின் துரோகியாகவே சித்தரிக்கப்பட்டேன் குறிப்பாக என் கோபமெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீதே இருந்தது பலர் பிரமுகர்களாகவும் பலர் பணம் பண்ணுபவர்களாகவும் இருந்தனர். அவர்கள் யுத்தத்தின் பெயரால் பலமில்லியன் டாலர்களை மக்களிடமிருந்து கொள்ளையிட்டனர். பல வர்த்தக ஸ்தாபனங்களில் முதலீடு செய்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர் வாழ்கின்றனர். இவர்களுக்கு யுத்தம் தேவையாக இருந்தது. அவர்கள் எண்ணியிருந்தால் யுத்தத்தின் போக்கை மாற்றியிருக்கலாம். இவர்களின் குறி பணத்தின் மீதே இருந்ததால் இளைஞர்களிடத்து ஈழப்போராட்டம் அல்லது ஈழம் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தத் தவறிவிட்டனர். யுத்தத்தின் பின்னான புகலிட நிலையானது மாறியிருக்கிறது. இன்று பல இளந்தலைமுறையினர் இதை அறிவர். மழைவிட்டபின் மரங்களின் கீழ் சொட்டும் நீர்போல பெரியவர் சிலர் ஒட்டியிருந்தாலும் இளந்தலை முறையினர் ஏமாறத் தயார் இல்லை அண்மையில் ஹரி ஆனந்தசங்கரியை பலமாக எதிர்த்த உலகத்தமிழர் அமைப்பால் மக்களை சிறிதும் ஒன்றுதிரட்ட முடியவில்லை. இளைஞர்களின் முழுச் சிந்தனையும் கனேடிய நீரோட்டத்தில் அரசியலின் பால் திரும்பியிருக்கிறது. இவ்வருடம் 25 பேர்வரையில் கனேடிய அரசியல் தேர்தல் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டார்கள். சிலசமயங்களில் வாக்குக்காக ஈழ அனுதாபிகள் போல் நடிக்கிறார்கள். அவ்வளவே. ■ யாழ் தேவி யாழ்ப்பாணம் சென்றுவிட்டது. நீங்கள் “கொட்டைப்பாக்கு குருவி” போன்ற என் கிராமம் இன்னும் முள்வேலிக்குள் தான் இருக்கிறது என எழுதி இருக்கிறீர்கள்?. உண்மையில் என் கிராமம் முள்வேலிக்குள்தான் சிறைப்பட்டுக்கிடக்கிறது. அது பலாலிப் பெருமுகாமின் நச்சுவேர்களுக்குள் சிக்குண்டு கிடக்கிறது. இன்று யாழ்நகரம் சென்ற யாழ்தேவி சில மாதங்களில் காங்கேசன்துறையை சென்றடையலாம் சிலவருடங்களின்பின் பலாலிப் பெருமுகாம் தன் நச்சுவேர்களை தன்னுள் இழுத்து சுருங்கிக்கொள்ளலாம். அதனால் என்கிராமம் மீளப்பொலிவு பெற்றுவிடும் எனக்கருத முடியாது. ஊர் என்பது வெறும் நிலப்பரப்பல்ல. அது அங்கு வாழ்ந்த மக்களையும் சேர்த்தது. என் ஊரின் தொண்ணூறு விழுக்காடு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். மீதிப் பத்து விழுக்காடு மக்களும் வெவ்வேறு ஊர்களில் சொந்த வீடுவாங்கி குடியேறி இப்போ இரண்டு தசாப்தங்களாகிவிட்டன. அவர்கள் கூட இனி ஊர் மீளப்போவதில்லை. என் ஊர் என்பது இனிக் கனவுதான். இதில் என் ஊர் என்பது ஒரு அடையாளம் தான். ■ முள்ளிவாய்க்கால் பேரவலத்தை மறந்துகொண்டிருக்கிறோம். ஈழத்தமிழர்களின் வரலாறு சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லையே? அடுத்த தலைமுறைக்கு எதைக் கையளிக்கப் போகிறோம்? வரலாற்றைச் சரியான வகையில் பதிவுசெய்யும் கடமை புலத்தில் உள்ளவர்களுக்கே உண்டு. ஆனால் அது நிகழும் போலத் தெரியவில்லை. இத்தனை அவலங்களுக்கும் இவ்வளவு துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏன் இவ்வளவு உயிர்களைப் பலிகொடுத்தோம்? ஏன் ஊருலகில் எந்த நாடும் கேட்காதிருந்தார்கள்? நாங்கள் எங்கே தவறுசெய்தோம் என்பதைத் திரும்பிப் பார்ப்பதற்குக்கூட எமக்கு அவகாசம் கொடுக்கவில்லை. ஹிட்லர், சுபாஸ்சந்திரபோஸ் வரிசையில் பிரபாகரனின் மரணத்தையும் கேள்விக் குறியாக்கிவிட்டு மீண்டும் பழி தீர்க்கும் அரசியல். பழையபடி மேடைபோட்டு வீரவசனம் பேசி வாக்குக் கறப்பதிலேயே முனைப்பாயிருக்கிறோம். இதில் யார் பதிவு செய்வது? நன்றி கார்த்திகை -மார்கழி ஆக்காட்டி இதழ்
 2. 2 points
  தாயக விடுதலைக்கான நீண்ட பயணத்தில் தம்மை அற்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் இக் காலத்தில் இலங்கை இந்தியப் படைகளின் அட்டூழியங்களை வெளிப்படுத்தும்.." கண்ணீர் தேசம் " எனும் இக் குறும்படத்தை இணையத்தில் வெளியிடுகிறோம் எம்மக்கள் மீது திணிக்கப்பட்ட இக் கொடுமைகளை இல்லாது செய்யவே அந்தப்படைகளை அழித்து எமது மண்ணை சுதந்திர தமிழீழமாக உருவாக்க மாவீரர்கள் கனவு கண்டார்கள் அவர்கள் கனவு நினைவேற உறுதி பூணுவோமாக... Director Shankar Theva Editing & Production Robert Thiru cinematography Janeshan Viveka Actor Manmathan Baski Manmathan Baski https://m.facebook.com/story.php?story_fbid=1535595110014206&id=100006911940641
 3. 1 point
  எங்கள் கள உறவு விசுகு வின் அண்ணா சற்று முன்னர் காலமானார் என்பதை துயரத்துடன் அறியத் தருகின்றோம். அண்ணனின் பிரிவால் துவண்டு இருக்கும் விசுகுவின் துயரிலும், அவர் குடும்பத்தின் துயரிலும், அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தின் துயரிலும் நாமும் பங்குகொள்கின்றோம். எம் கண்ணீர் அஞ்சலிகள்
 4. 1 point
  Troy நகரைக் கிரேக்கப் படைகள் சூழ்ந்திருக்கின்றன. கொடியின் எதிரே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களம். அன்றைய நாள் மோதல் வித்தியாசமானது, முக்கியமானது. அந்நாட்டின் மிகச்சிறந்த வீரனும் நாட்டின் பிரதான படைத்தளபதியுமான இளவரசன் ஹெக்டர் தன் மனைவியிடமும், குழந்தையிடமும் விடைபெற்றுக் கொள்கிறான். அவன் அக்கலிஸ் உடன் ஒற்றைக்கு ஒற்றையாக மோதப் போகிறான். அக்கலிஸ் வெல்லப்பட முடியாதவன் என எதிரிகளாலும் மதிக்கப்படும் பெரும்வீரன். ஒரு விடிகாலையில் அக்கலிஸ்சின் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு போரிடுகிறான் அனுபவமில்லாத இளவயதினனான அவன் உறவினன். அவனை அக்கலிஸ் எனத் தவறுதலாக நினைத்துக் கொன்றுவிடுகிறான் ஹெக்டர். அதற்குப் பழிவாங்கவே ஹெக்டரை ஒற்றைக்கு ஒற்றை அழைக்கிறான் அக்கலிஸ். யுத்தம் ஆரம்பிக்கிறது. கோட்டையின் மேற்தளத்தில் ஹெக்டரின் மனைவி ஆரம்பத்திலேயே எதையும் பார்க்காமல் திரும்பி மடங்கி உட்கார்ந்து அழுகிறாள். அவளுக்குத் தெரிந்துவிடுகிறது ஹெக்டர் திரும்பப் போவதில்லை என்பது. மன்னருக்கும் தெரிகிறது தன் மூத்தமகன் முடிவு. இந்தப் போருக்கே காரணமான அவன் தம்பி, ஏனைய படைத்தளபதிகள், ஏன் ஹெக்டருக்கே கூட தெரிந்துவிடுகிறது அது தன் இறுதியுத்தம் என்பது. ஏற்கனவே அவன் தன் தம்பியைக் காப்பாற்றுவதற்காக யுத்தவிதிகளை மீறியிருக்கிறான். அவன் தன்னளவில் உறுதியாகப் போரிடுகிறான். உயிர்துறக்கிறான். Troy (2004) படம் பார்க்கும்போது, ஹெக்டரின் கதாபாத்திரம் எனக்குக் கர்ணனையே நினைவூட்டியபடியிருந்தது. தன் முடிவு தெரிந்தும், களம் தனக்குச் சாதகமாயில்லை என்பது தெரிந்தும், தனக்கான இறுதியைத் தான் விரும்பியபடியே எதிர்கொள்ளும் ஒவ்வொருவனும், தன் கொள்கைக்காக, தான்கொண்ட நியாயத்துக்காக, நன்றிக்காக, நம்பிக்கைக்காக தோற்கப்போவது தெரிந்தும் இறுதிவரை மனம்தளராது முழுமனதுடன் போராடி மடியும் யாவரும் கர்ணனையே நினைவூட்டுகிறார்கள். மகாபாரதக் கதையில் கர்ணன் மாதிரி தேவர், முனிவர், அரசர், சாதாரண மனிதர் ஆகிய எல்லாத் தரப்பினராலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட, பலி(ழி) வாங்கப்பட்ட வேறொரு பாத்திரம் இருந்ததாகத் தெரியவில்லை. போர்க்களம் போகுமுன்பாகவே மிகப் பலவீனமாக்கப்பட்ட நிலையில் களம்புகுந்த வீரனாக அவன் மட்டுமே இருந்தானென நினைக்கிறேன். சின்ன வயதில் மகாபாரதக் கதை தெரிந்துகொண்டபோது, ஏனோ கர்ணனை மிகவும் பிடித்திருந்தது. நிச்சயமாக இது பலவீனமானவர்கள் மீது பரிதாபம் கொள்ளும் மனநிலையல்ல. அவனும் பலவீனமானவனல்ல. கர்ணன் தன் வாழ்நாள் முழுவதும் போராளியாகவே வாழ்ந்திருக்கிறான். துரதிருஷ்டத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான முழுமையான போராளியாக! துரதிருஷ்டம் துரத்த, துரோகங்கள் தொடர, நயவஞ்சகர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் தன் முடிவு தெரிந்திருந்தும், இறுதிவரை தன் கொள்கையிலிருந்து மாறாமல், நிலைகுலையாமல் போராடினான். அவனுக்குத் தனது முடிவு தெரிந்தேயிருந்தது. தன் பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் எல்லாச் சாத்தியங்களையும் அவனாகவே மனமுவந்து விட்டுக் கொடுத்து தன்னை அழிப்பதற்கான சாதகமான சூழலை அவனே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். தான் கற்ற வித்தையை மட்டுமே நம்பிக் களமிறங்குகிறான். முடிவு தெரிந்தும் தளர்ந்துவிடாமல் போராடி மடிகிறான். அவன் வாழ்நாள் முழுவதும் போராளியாகவே வாழ்கிறான். வர்க்க வேறுபாடுகளுக்கும், அடையாளச் சிக்கலுக்குமிடையில் வாழ்நாள் முழுவதும் யாருக்கோ தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்த முழுமையான போராளி. மகாபாரதம்! எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய மாபெரும் காப்பியம். மிகச் சுருக்கப்பட்ட வடிவம் எனச் சொல்லப்படுகிற ராஜாஜி எழுதிய 'வியாசர் விருந்து' ஏழாம் வகுப்புப் படிக்கும்போது வாசிக்கக் கிடைத்தது. அதற்குமுன்னர் கண்ணாடித்தாத்தா கதை சொல்லக் கேட்டதும், தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடராகப் பார்த்ததும், 'அமர்சித்திரக்கதா' வில் தனித்தனியாக ஒவ்வொரு பாத்திரங்களின் கதைகளை வாசித்ததும், ஏராளமான கிளைக்கதைகளைப் படித்ததுமாகத் தெரிந்திருந்தது. ஏராளமான கதாபாத்திரங்கள். அவை ஒவ்வொன்றுக்கும் விரிவான தனிக்கதைகள், முன்கதைகள். தியாகம், வீரம், நட்பு, துரோகம், நன்றி, காமம், காதல், அறியாமை, குருவிசுவாசம், அரசதர்மம், போரியல்தர்மம், போரியல் வியூகங்கள், சூழ்ச்சி, வஞ்சகம், அரசியல், அத்துமீறல், வர்க்கபேதம், நம்பிக்கைத்துரோகம், பழிவாங்கல் என இன்னும் ஏராளமாக, விரிவாகச் சொல்லப்படுகிறது. முன்பின் நகரும் திரைக்கதைபோன்ற உத்தி, கிளைக்கதைகள் என ஆச்சரியமளிக்கும் மகாபாரதத்தின் கும்பகோணம் பதிப்பை ஒருமுறை வாசித்துவிட வேண்டும். நான்காம் வகுப்புப் படிக்கும்போது, எங்கள் தமிழாசிரியர் பாடப்புத்தகத்தைத் தவிர, நிறையக் கதைகள் சொல்வார். அருமையாகப் பாடுவார். இராமாயணம், பெரியபுராணம், மகாபாரதம், இவற்றிலிருந்தெல்லாம் நிறையப் பேசுவார். பாடுவார். எங்கள் எல்லோருக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது! மகாபாரதக் கதை சொல்லும்போது ஒரு சிக்கல் வந்தது. ஆசிரியரோடு ஒன்றமுடியவில்லை. ஆசிரியருக்கு பெரும்பாலானோரைப் போலவே அர்ச்சுணனைப் பிடித்திருந்தது. அது இயல்பானதுதான். மகாபாரதத்திலும் அப்படித்தான். அர்ஜூனன் வீரன் என்பதில் ஐயமேதுமில்லை. ஆனால் அவன் மட்டுமே வீரனாக இருக்கவேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட கண்ணன், துரோணர் உள்ளிட்டவர்களால் செய்யப்பட்ட அரசியல்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவே! ஆனால், கதை சொல்பவர் கதையில் தனக்குப் பிடித்த, தான் மிக ரசித்த கதாபாத்திரத்தின் சார்பாகவே கதை கூறிச் செல்வதைப் புதிதாகக் கதை கேட்பவனால் மட்டுமே ரசிக்கமுடியும். பெரும்பாலான கதைகளே யாரோ ஒருவர் சார்பாகவே எழுதப்பட்டிருக்கும். அப்படியிருப்பினும் சொல்லப்பட்ட கதையை அப்படியே சொல்வதே கதைசொல்பவரின் நடுநிலை. ஆனால் அதற்கும் மேலாகத் தான் ரசிக்கும் பாத்திரத்தை உயர்த்தி, சிலாகித்துப் பேசுவதை, முக்கியத்துவம் கொடுத்ததை ரசிக்கமுடியவில்லை. வகுப்பில் ஒரு சிலருக்கு மட்டும் என்னைப்போலவே கர்ணனைப் பிடித்திருந்தது. ஒருவர் தனக்குப் பிடித்த கதாபாத்திரத்தைச் சிலாகித்துப் பேசுவது இயல்பானதுதான் என்கிறபோதிலும், நான்காவது வகுப்பில் படிக்கும் எனக்கு 'இவர் அர்ச்சுணனை மட்டுமே அளவுக்கு மீறி முன்னிலைப் படுத்துகிறார்' எனப் புரியுமளவுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டதை ஏற்க முடியவில்லை. அது, முதன்முறையாக அவர் பற்றிய எங்கள் எண்ணத்தில் மாற்றம் கொண்டுவந்தது. இறுதியில் வெல்பவனே ஹீரோ, தோற்பவன், இறந்து விடுபவன் வில்லனாகவே இருக்கவேண்டும் என்பது போன்ற நம்பிக்கையின் அடிப்படையில் கர்ணனை மோசமானவனாகவே சித்தரித்தார். தமிழ் சினிமாவைப் போலவே பெரும்பான்மையானோர் எதிர்மறையான குணங்கள் கொண்டவர்களை, பலவீனங்கள் கொண்ட மனிதனை ஹீரோவாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும், சொல்லிக் கொடுக்கும் நிலையில் இருப்பவர்கள், மிக முக்கியமாக ஆசிரியர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை மற்றவர்கள்மேல் திணித்துவிடாமல், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பது அவசியம். ஆனால் துரதிருஷ்டவசமாக என்னைப்போலவே பலருக்கும் அப்படி வாய்த்ததில்லை. அதனால் சின்னவயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டோம். எங்கள் சொந்தக் கருத்துக்களை மனதில் புதைத்துக் கொண்டு வெளியில் 'ஆமாமா நீங்கள் சொன்னால் சரிதான்!'. இதுபற்றியெல்லாம் ஆசிரியரிடம் பேச முடியாது. பின்னர் ஆசிரியர் இதே கர்ணனைக் காரணமாக வைத்து இன்னோர் சந்தர்ப்பத்தில் 'கர்ண கொடூரமாக' நடந்துகொள்ளும் அபாயமிருந்தது! ஒருமுறை தொலைக்காட்சியில் 'கர்ணன்' படம் ஒளிபரப்பானபோது உடனேயே அணைத்துச் சென்றுவிட்டேன். சிவாஜியூடாக கர்ணனைக் காண விரும்பாததே காரணம். மற்றபடி சிவாஜி கர்ணனாக நடித்ததுக்கும் கர்ண கொடூரத்துக்கும் எந்த சம்பந்தமிருப்பதாக நான் கூறவில்லை. நாம் ரசித்த எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதனைத் திரையில் எதிர்கொள்வதில்தான் பிரச்சினையே! நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும், அல்லது நாம் முதன்முதலில் ஓவியமாகவோ, திரையிலோ ரசித்த விம்பத்தை பாத்திரமேற்று நடிக்கும் நடிகர் ஈடு செய்ய வேண்டுமே என்ற கவலைதான். மேலும் முதல் மரியாதை, தேவர்மகன் போன்ற ஒரு சில படங்கள் தவிர்த்து, சிவாஜி தனது எல்லாப்படங்களிலும் நடிகர் சிவாஜி கணேசனாகவே எனக்குத் தெரிகிறார். வாழ்வில் வெற்றி பெற்றவர்களையே நாம் விரும்புகிறோம், ஆதர்ஷமாகக் கொள்கிறோம். அந்த அடிப்படையில் கர்ணனைப் பலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். ஒரு மாவீரனின் முடிவு, ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி என்பது சடுதியில் நிகழும் ஒன்றா? என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ஒருவன் வீரியத்தொடு வளர்ந்து வரும் அதே வேகத்திலேயே படிப்படியாக சிறு சிறு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிகழ்வுகளாக அவனது வீழ்ச்சிக்கான காரணிகளும் எந்தக் கவனத்தையும் பெறாமல் வளர்ந்து வருகிறது. ஏதோ ஒரு முக்கியமான தருணத்தில், அல்லது எதிர்ப்பாராத வேளையில் சிறு சறுக்கலில் எல்லாமே ஒரே இடத்தில் குவிந்து விடுகின்றன. அல்லது சறுக்கல் நிகழ்வதாலேயே அது முக்கியமானதாகிவிடுகிறது. கர்ணனுக்கு எதிர்பார்க்கப்பட்ட, வாழ்வின் மிக முக்கியமான போரில் அது நிகழ்ந்துவிடுகிறது. கர்ணனின் முதல் சறுக்கல் எதுவாக இருக்கும்? பரசுராமரிடம் போய் சொல்லி வித்தை கற்றதாக இருக்கக்கூடும். 'நியாயமே வெல்லும்' என்று போதிக்கப்பட்டிருப்பதால், நம்பப்படுவதால், வெல்பவர்கள் நியாயவாதிகளாகவும், தோற்றவர்கள் அநியாயம் செய்தவர்களாகவும் நிலைநிறுத்தப் படுகிறார்கள். அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்களின் வரலாறுகள் மட்டுமே இங்கே தேடப்படுகின்றன. விரும்பப்படுகின்றன. அவற்றைப் படித்து மகிழ்ந்து, நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோமே தவிர, தோல்வி கொடுக்கும் பாடங்களை கற்றுக் கொள்ளவோ, காரணங்களைத் தெரிந்துகொள்ளவோ விரும்புவதில்லை. காலங்கடந்து விழித்துக் கொள்ளும்போது அதற்கான அவசியமும், அவகாசமும் இல்லாமலே போய்விடுகிறது! ஒரு போராளியின் கண்களை எதிர்கொள்வது எப்போதும் கடினமானதாகவே இருந்திருக்கிறது. அவை ஒரு பெருங்கனவை எப்போதும் தேக்கி வைத்துக் கொண்டிருக்கலாம். உள்ளே கொண்டிருக்கும் எரியும் இலட்சியத் தீயின் ஏற்படுத்திய வெம்மையைக் கனன்று கொண்டிருக்கலாம். அந்தக் கண்களில் எங்களுக்கான கேள்வி ஏதேனும் அடங்கியிருக்கலாம். அதன் கூர்மையை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிர்த்துக் கொள்வதற்கான நம் முயற்சியா அது? சமயங்களில் அவர்களும் நம் பார்வையைத் தழைத்துக் கொள்வதையோ இலக்கின்றி தொலைதூரத்தில் எதையோ தேடுவதைப் போலவோ ஒரு பார்வையை நீங்களும் சந்தித்திருக்கலாம். நம் கண்களில் தெரியும் கேள்விகளை இருவருமே தவிர்க்க நினைக்கிறோமா? தோற்றுப் போன ஒரு போராளியின் கண்களைச் சந்திக்க நாம் நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுவதற்கு என்ன காரணமிருந்துவிடப் போகிறது? கலைந்துபோன கனவுகளின் எச்சங்கள் தெரிந்துவிடக் கூடுமென்றா? தீர்க்க முடியாத நிரந்தர சோகம் நிறைந்திருப்பதை, நிராகரிக்கப்பட்டவர்களின் வலியை, அது எங்கள் மனச்சாட்சியை எந்தக் கேள்வியும் கேட்டுவிடக் கூடாதென்பதில் காட்டும் கவனமா? குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் மனோபாவமாகவும் இருக்கலாம். ஒருவித அக்கறையாகவுமிருக்கலாம். போராளிகளை முன்னாள் போராளிகள், இந்நாள் போராளிகள் என அழைப்பதுதான் எவ்வளவு அபத்தமானது! அதற்கான அவசியத்தை நம் சமூகம் எப்போதும் வழங்குவதாக இல்லை. போராளிகள் என்றும் போராளிகளே! வாழ்நாள் முழுவதும் போராடுவதற்காக விதிக்கப்பட்ட வர்களாகவே வைத்திருக்கிறது. அதுவும் தோற்றுப்போன, தோற்கடிக்கப்பட்டதாக நம்பப்படும் போராளிகளின் நிலை மிக மோசமானது. தோற்கடிக்கப்பட்ட இனத்தின் போராளியான ஒருவனின் போருக்குப் பின்னரான மனநிலை என்னமாதிரியானது? தான் நேசித்த, தன் சொந்தமண்ணில் வாழ நேரிடுவது மிகவும் கொடுமையானது. யாருக்காகப் போராடினானோ அவர்களாலேயே கண்டுகொள்ளப்படாமல், எச்சரிக்கையுடன் கவனமாகத் தவிர்க்கப்பட்டு, செயற்கையான புன்னகைய்டன் கடந்து செல்பவர்களை எதிர்கொண்டு வாழ்வதென்பதுதான் பெரும் போராட்டம். உண்மையில் அவர்களின் போராட்டம் போருக்குப் பின்னர்தான் ஆரம்பமாகிறதோ? யாரென்றே தெரியாத எங்கிருந்து என்றே புரியாத பல நூறு கண்கள் சதா காலமும் உற்று நோக்கிக் கொண்டிருப்பது போன்ற பிரமையை உணரக்கூடும். எப்போதும் சந்தேகத்துடன் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும். முகறியாத, எதுபற்றியும் தெரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ள விரும்பாத யாரோ ஒருவர் முகத்துக்கு நேரே கைநீட்டி குற்றம் சுமத்திவிடலாம். தோற்றுப்போன ஒரு போராளி மீது யார் வேண்டுமானாலும் கல்லெறியலாம் என்கிற ஜனநாயகச் சூழல் மிகக் கொடுமையானது. அதுவும் யாருக்காக போராடினானோ அதே தன் சார்ந்த சமூகத்தின் அவதூறு அவன் வாழ்ந்த அல்லது இழந்துவிட்ட வாழ்க்கையை முழுவதுமாக அர்த்தமற்றதாக்கி விடுகின்றன. ஒரு தோற்றுப்போன போராளி எண்ண பேச வேண்டும் என்பதையும் நாங்களே தீர்மானிக்க விரும்புகிறோம். எவற்றைப் பேசக் கூடாது என்பதை எதிர்த்தரப்பு கவனமாயிருக்கிறது என்பது இயல்பானதுதான் அல்லது ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். உண்மை பேசுவது சமயத்தில் யாருக்குமே உவப்பானதாக இருப்பதில்லை. உண்மை சமயத்தில் மிகுந்த பதற்றம் கொள்ள வைக்கிறது. ஏனெனில், உண்மை யார் சார்ந்தும் இருப்பதில்லை. உண்மை எப்போதும் உண்மையாக மட்டுமே இருக்கிறது. உண்மையை நீ ஏன் சொல்கிறாய்? எதற்கு உண்மையைப் பேச வேண்டும்? இப்பொழுது ஏன் உண்மை பேச வேண்டும்? எப்போதுமே உண்மையைப் பேசக் கூடாது என நாம் உண்மையை எதிர்கொள்ளும் முறையே அலாதியானது. வேடிக்கையானது! எமது விருப்பங்களையே, நம்பிக்கைகளையே அவர்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நம் கற்பிதங்களை அவர்கள் சிதைத்துவிடக் கூடாது உண்மை நாம் எதிர்பார்த்ததற்கு சற்று மாறுபாடானதாக இருந்தாலும் அவர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீச தயாராகிவிடுகிறோம். உடனடியாகத் துரோகி என்று முத்திரை குத்திவிடுகிறோம். அவன் யார்? அவன் இழந்தவை எல்லாம் என்னென்ன? யாருக்காக இழந்தான்? அவனது தற்போதைய நிலை என்ன? அவனின் எதிர்காலம்? அவனுக்காக நாம் என்ன செய்யலாம்? எந்த வகையில் உதவ முடியும்? இதுபற்றி எல்லாம் நமக்குக் கவலை இல்லை. அவன் ஏதாவது பேசுகிறானா? அதில் எமக்கு ஒவ்வாத விடயங்கள் இருக்கின்றனவா என்பது மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். நான் யார் எனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பது பற்றியெல்லாம் வசதியாக மறந்துவிட்டு இருப்பதிலேயே மிக உயர்வான போராட்ட முறையான துரோகிப் பட்டம் வழங்கிக் கொள்வோம். ஒரு கணணியும் இணைய இணைப்பும் மட்டுமே போதும் யாரை வேண்டுமானாலும் துரோகியாக்கிவிட முடியும் என்கிற ஜனநாயகம்தான் எவ்வளவு விநோதமானது? வாழ்நாள் முழுவதும் தம்மை யாருக்கோ நிரூபித்துக் கொண்டிருப்பது கர்ணனுக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல. தோற்றுப்போன வாழ்நாள் போராளிகளுக்கும் கூடத்தான். வாழ்நாள் போராளிகள் ஒவ்வொருவரும் ஒருவகையில் கர்ணன்கள்தான். கர்ணன்கள் பாவம்! http://4tamilmedia.com/social-media/google-plus/27334-2014-11-20-09-21-35
 5. 1 point
  எங்களுக்காகத் தங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து தம் உணர்வுகள் துறந்து நின்றார் தாய் மண்ணின் தடையகற்ற மன ஓசை அடக்கி மகிழ்வாய் ஆசைகள் தாண்டி வந்தார் பருவ வயதில் பாசம் அடக்கி பசியடக்கிப் பலதும் அடக்கி எதிரி அடக்கும் ஆசை கொண்டார் எங்கள் நிலம் எமதேயாக தங்கள் நிலம் தான் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தார் எத்தனை உயிர்கள் எம்மினமானதில் அத்தனை பெரும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாயினர் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம் தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம் மண்ணை இழந்து மறுகினோமாயினும் உதிரமிழந்து ஊனமாகி உருக்குலைந்து மானம் காக்க மடிந்ததவர் மறந்திடோம் வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன் வேங்கையானவர் வீரம் மறந்திடோம் கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய கோட்டையின் வீரம் மறந்திடோம் தோல்வி கண்டும் துவள்தல் இன்றி துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம் மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே
 6. 1 point
  http://youtu.be/erwTSFyMgg8 மலையாளப் பாடகி ரேஷ்மி சதீஷ் அக்டோபர் 18, 2014 அன்று கொச்சி 'நில்பு சமரத்தில்' பாடிய அற்புதமானப் பாடல் இது. அருகே நின்று நேரில் கேட்டு புளகாங்கிதமடையும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று. அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் எனது நூல் வெளியீட்டு விழாவில் ரேஷ்மியை பாடுவதற்கு அழைக்கலாம் என்று நேற்று நண்பர் காலச்சுவடு கண்ணன் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகேயுள்ள பாறசாலை எனுமிடத்தைச் சார்ந்த ரேஷ்மியை இன்று அழைத்துப் பேசினேன். ஒரு படபிடிப்பில் மும்முரமாக இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு வர உறுதியாக முயல்வதாகவும் சொன்னார். இஞ்சக்காடு பாலச்சந்திரனின் ஆழமானக் கவிதையும், ரேஷ்மியின் அற்புதமானக் குரலும்...ஓர் அழகான இனிய அனுபவம். அவசியம் கேளுங்கள். விகசனம், அது நன்ம பூக்கும் லோக சிருஷ்டிக்கு ஆயிடாம்... (வளர்ச்சி என்பது நன்மை தரும் உலகம் படைப்பதற்காகலாம்). S.p. Udayakumar
 7. 1 point
  குழந்தைகளுக்கு எந்த வயதில் செஸ் கற்றுக்கொடுப்பது? - செஸ் ‘ராணி’ சூசன் போல்கர் பதில் ஒன்றல்ல, இரண்டல்ல.. நான்கு முறை மகளிர் உலக செஸ்ஸில் சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் ஹங்கேரியைச் சேர்ந்த சூசன் போல்கர். செஸ் நிபுணர், வர்ணனையாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட போல்கர், திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார். 11 வயதுக்குட்பட்டோருக்கான புதாபெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தனது 4-வது வயதில் வென்றவர். அதிலிருந்தே அவருடைய புத்திகூர்மையையும், திறமையையும் நாம் அறிந்துகொள்ளலாம். பிரபல செஸ் வீராங்கனை ஜுடித் போல்கரின் சகோதரி. ஆடவர் கோலோச்சிக்கொண்டிருந்த செஸ் விளையாட்டில் ஆளுமை செலுத்திய முதல் பெண் சூசன். 1990-களில் விஸ்வநாதன் ஆனந்துடன் பல போட்டிகளில் ஆடியிருக்கிறார். உலகில் எங்கு செஸ் போட்டிகள் நடந்தாலும் அதைப் பற்றிய விவரங்களை தன் இணையதளமான http://susanpolgar.blogspot.inல் வெளியிடுகிறார். அதில், பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அதன் தொகுப்பு. என் மகன் செஸ் விளையாட்டை 6 மாதங்களுக்கு முன்புதான் கற்றுக்கொண்டான். அவனுடைய திறமையை வளர்க்க உங்களின் ஆலோசனை? நல்ல கேள்வி. மிடில்கேம் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அடிப்படையான எண்ட்கேமையும் கற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் செஸ்ஸின் அடிப்படை. உங்கள் மகன் செஸ் புதிர்களை எவ்வளவு விரைவாகக் கற்றுக்கொள்கிறார் என்பதைக் கவனியுங்கள். 2-3 மாதங்கள் கழித்து முன்பை விட இன்னும் வேகமாக புதிர்களுக்குத் தீர்வு சொல்கிறாரா என்று கவனிக்கவும். ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். நன்றாக ஆடும்போது பரிசு அளியுங்கள். தவறுகள் செய்யும்போது உற்சாகம் கொடுங்கள். குழந்தைகளுக்கு எந்த வயதில் செஸ் கற்றுக்கொடுக்கலாம்? இது பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி. 2,3 வயதில் செஸ் காய்களின் பெயர்களை விளையாட்டுத் தனமாகச் சொல்லிக்கொடுக்கலாம். 4 - 6 வயதுகள், செஸ் கற்றுக்கொள்ள சரியான வயது. இது ஒவ்வொரு குழந்தையைப் பொறுத்தது. சில குழந்தைகள் 4 வயதிலேயே விளையாடும் அளவுக்கு பக்குவமாக இருக்கும். ஆரம்ப நிலைக்குப் பிறகு காம்பினேஷன், செக்மேட், அடிப்படை எண்ட்கேம் புதிர்களைக் கற்றுக்கொள்ளலாம். என் மகன் டாமி, நான்கு, ஐந்து வயதில் தினமும் 50-75 செஸ் புதிர்களின் விடைகளைக் கண்டுபிடிப்பான். எந்த வயதாக இருந்தாலும், செஸ் விளையாடுவது என்பது சந்தோஷம் மற்றும் ஊக்கம் அளிப்பதாக இருக்கவேண்டும். அதுதான் முக்கியம். என்னுடைய மகனுக்கு 7 வயது. அவனுடைய ரேட்டிங் சுமாராக 1000. அவன் கற்றுக்கொள்ள எது நல்ல ஓபனிங்ஸ்? ஆரம்பநிலை மாணவர்களுக்கு ஓபனிங்ஸ் கற்றுக்கொடுக்க நான் விரும்பமாட்டேன். ரேட்டிங் 1,800 வரும்வரை ஒருவர் ஓபனிங்ஸூக்காக கூடுதல் நேரம் ஒதுக்கக்கூடாது. மிடில் கேம்ஸ் மற்றும் எண்ட்கேம்ஸில்தான் அதிக கவனம் செலுத்தவேண்டும். குழந்தைகளுக்கு செஸ் ரேட்டிங் எந்தளவுக்கு முக்கியம்? ஆரம்ப வயதில் செஸ் ரேட்டிங் என்பது அவ்வளவு அவசியமில்லாதது. பெற்றோர் ரேட்டிங் பற்றி மிகவும் அக்கறைப்படுவதால் பிள்ளைகள் ஒழுங்கான செஸ் கற்றுக்கொள்ள அஞ்சுகிறார்கள். தோற்பதற்குப் பயப்படுவதால் அவர்கள் தோற்காமல் இருப்பதற்காக ஆடுகிறார்கள். வெற்றிக்காக ஆடுவதில்லை. இது அவர்களுடைய செஸ் வளர்ச்சியைப் பாதிக்கும். குறுகியகால ரேட்டிங் பலனை விடவும் நீண்ட காலத் திட்டமே உதவும். இண்டர்நெட்டில் செஸ் விளையாடுவதை ஊக்குவிப்பீர்களா? எது நல்ல செஸ் இணையதளம்? ஆமாம். இணையம் மிகவும் உதவக்கூடியது. ஒவ்வொரு இணையதளமும் ப்ளஸ், மைனஸ் கொண்டவை. அனைவரும் அறிந்த இணையத்தளங்கள். SimpleChess (www.SimpleChess.com), ICC (www.ChessClub.com), Play Chess (www.PlayChess.com), Chess (www.Chess.com) செஸ் சாஃப்ட்வேர்கள் என் பிள்ளைகளுக்கு உதவுமா? கண்டிப்பாக. செஸ் விளையாட்டில், 21-ம் நூற்றாண்டின் சிறப்பே இதுதான். பல செஸ் சாஃப்ட்வேர்கள் 2600-3100 ரேட்டிங்கில் ஆடக்கூடியவை. வீட்டில் 24x7 செஸ் கிராண்ட் மாஸ்டருடன் விளை யாடுவது போன்ற அனுபவத்தைத் தரக்கூடி யவை. ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் அறியவேண்டும். உத்திகளில் சிறப்பாக இருந்தாலும். செஸ் புரோகிராம்களால் சில செஸ் பொஸிஷன்களைப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் ஒரு அளவுக்கு மேல் செஸ்ஸைக் கற்றுக்கொண்ட பிறகு உங்கள் பிள்ளையை அருகில் உள்ள தகுதியுள்ள பயிற்சியாளரிடம் சேர்க்க வேண்டும். செஸ் உத்திகள் தொடர்பாக நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யுங்கள். ஆரம்பநிலை மாணவர்களுக்கு World Champion's Guide to Chess எனும் புத்தகத்தைப் பரிந்துரை செய்வேன். அடுத்தது Chess Tactics for Champions. இந்த இரு நூல்களையும் நான் எழுதியிருக்கிறேன். என் 30 வருட சொந்த மற்றும் கற்றுக்கொடுத்த அனுபவங்களைக் கொண்டு இந்த நூல்களை எழுதியிருக்கிறேன். என் பகுதியில் பள்ளி சார்ந்த செஸ் கிளப்புகளை எப்படி ஆரம்பிப்பது? சம்பந்தப்பட்ட பள்ளியை அணுகி, பள்ளி நேரம் முடிந்தபிறகு பள்ளி சார்ந்த செஸ் கிளப் ஆரம்பிக்க முடியுமா என கேட்டுப் பாருங்கள். பல பெற்றோர்கள் இப்படித்தான் செய்துள்ளார்கள். பள்ளி நேரம் முடிந்தபிறகு நூலகம் அல்லது உணவகத்தில் கூட வைத்துக் கொள்ளலாம். பல பெற்றோர்கள் இதுபோன்ற ஒரு செஸ் கிளப்பை உணவகம், புத்தகக் கடை போன்றவற்றில் ஆரம்பித்துள்ளார்கள். என் 6 வயது மகளை, மகளிர் செஸ் போட்டிக்கு அனுப்பலாமா? செஸ்ஸில், ஆடவர்-மகளிர் விகிதம் மிகக்குறைவாக உள்ளதே? விகிதம் குறைவாக இருப்பதை எந்த மந்திரக்கோல் வைத்தும் மாற்றமுடியாது. உங்கள் மகள், அவரது வயதுடைய பையன்கள் மற்றும் அதிக வயதுடையவர்களுடன் ஆடுவதற்கு மிரளாமல் இருந்தால் அவரை எந்தப் போட்டிக்கும் அனுப்பலாம். ஆனால் தன்னம்பிக்கை குறைவாக இருந்தால், அவருக்கு சூழல் உகந்ததாக உள்ள மகளிர் போட்டிக்கு மட்டும் அனுப்பலாம். ஆடவர்கள், செஸ்ஸை போட்டியாகப் பார்ப்பார்கள். ஜெயிக்க நினைப்பார்கள். பெண்களுக்கு அது ஒரு கலை. வெற்றி/தோல்வி பிறகுதான். புதிய நண்பர்களை உருவாக்கவும் சந்திக்கவும் பெண்கள் பல போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவார்கள். சூசனின் செஸ் கொள்கைகள் # e4, d4, e5 மற்றும் d5 போன்ற சதுரங்கள் உள்ளிட்ட செஸ் போர்டின் நடுப்பகுதியை உங்கள் கட்டுக்குள் வைக்கவும். ஆட்டம் ஆரம்பித்தவுடன் சிப்பாய்களால் நடுப்பகுதியை நிரப்பி, முடிந்தவரை எவ்வளவு சதுரங்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியுமோ அதைச் செய்யுங்கள். # குதிரை மற்றும் பிஷப்பை வெளியே கொண்டுவாருங்கள். உங்கள் எதிராளியை செக்மேட் செய்யும்முன்பு, முடிந்தால் 6 அல்லது 7 நகர்த்தலுக்குள். # உங்கள் ராஜாவின் பாதுகாப்புக்காக எவ்வளவு சீக்கிரம் காஸ்டல் (Castle) பண்ணமுடியுமோ அதை உடனே செய்துவிடுங்கள். மறக்காதீர்கள். உங்கள் ராஜா பாதுகாப்பாக இருந்தால்தான் நீங்கள் ஜெயிக்கமுடியும். இல்லாவிட்டால் நீங்கள்தான் முதலில் செக்மேட் ஆக்கப்படுவீர்கள். # எந்த ஒரு காயையும் தனியே நிற்கவிடாமல் பாதுகாக்கவும். ஒவ்வொரு காயும் மிகவும் மதிப்புமிக்கது. பாதுகாப்பது என்றால் எதிராளி உங்கள் காயை வெட்டினால் அடுத்த நகர்த்தலிலேயே அவர் காயை நீங்கள் வெட்டவேண்டும். # செஸ்ஸின் குறிக்கோள் இதுதான். செஸ் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கவேண்டும். சில நேரங்களில் நீங்கள் ஜெயிப்பீர்கள் அல்லது தோற்றுப் போவீர்கள். எல்லாம் விளையாட்டின் ஓர் அங்கம். நீங்கள் ஜெயிக்கும்போது நல்ல விளையாட்டு வீரராக இருங்கள். உங்கள் எதிராளியைக் கேலி செய்யவேண்டாம். மோசமாகப் பேசவேண்டாம். தோற்றுப்போனால் இன்னும் நல்ல விளையாட்டு வீரராக இருங்கள். எதிராளிக்கு வாழ்த்து சொல்லி, கை குலுக்கவும். http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article6621492.ece
 8. 1 point
 9. 1 point
  தனிப்பட்ட ஊகங்களின் அடிப்படையில் திறக்கப்பட்டு அவ்வாறே தொடரப்பட்ட 'தமிழ் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக்க(?) மகிந்த ஆர்வம்' எனும் திரி தற்போதைக்கு பூட்டப்படுகின்றது. பல்வேறுபட்ட அரசியல் தெரிவுகளை, நிகழக் கூடியன என்று எதிர்பார்க்கின்ற விடயங்களை ஒட்டி விவாதிப்பது எதிர்கால சவால்களை தெரிந்து கொள்ள உதவுமெனிலும் அதனை செய்தியின் வடிவில் ஒட்டுவதை தவிர்த்து அரசியல் அலசல் பகுதியில் விவாத வடிவில் ஆரம்பிப்பது ஆரோக்கியமாக இருக்கும் என நம்புகின்றோம்.
 10. 1 point
  மாவீரர் வாரத்தின் முதல் நாள் ......
 11. 1 point
 12. 1 point
  “திராட்சைக் கொடியில் பூ பிடிக்கும்போது விலை உயர்ந்த ஒரு பூச்சிக் கொல்லி மருந்தினைத் தெளிப்போம். அம்மருந்தில் ஒரு துளி கொடியின் ஓரிடத்தில் பட்டால் போதும், அம்மருந்தின் வீரியம் அக்கொடி முழுக்கப் பரவி விடும். அதன் பின்னர் பிஞ்சு பிடித்ததும், திராட்சைக் குலைகளை ஒருவகை பூச்சிக்கொல்லி மருந்தில் முக்கி நனைத்து விடுவோம். இப்படி வாரத்திற்கு ஒருமுறை என 14 வாரங்கள் செய்வதுண்டு. அப்போதுதான் எவ்விதப் பூச்சிகளும் தாக்காமல் நமக்கு அதிக விளைச்சல் கிடைக்கும். ஆனால் அதிகமாகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் திராட்சைப் பழங்களில் இல்லாமலா போகும்? நிச்சயம் இருக்கும். கொஞ்சம் யோசித்தேன்.. இப்படி மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் விதத்தில் ஒரு விவசாயம் செய்து நாம் சம்பாதிக்க வேண்டுமா? என் மனசாட்சி உறுத்தியது, திராட்சைப் பயிரிடுவதையே நிறுத்தி விட்டேன்” என்றார். சமையலறையில் விஷம் திராட்சை மட்டுமல்ல நாம் உண்ணும் காய்கறிகள், பழவகைகள், உணவு தானியங்கள் அனைத்தும் ரசாயன உரங்களிலும், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதுகாப்பிலும் தானே விளைகின்றன. உண்ணும் நமக்கு நிச்சயம் பாதிப்புண்டு. ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தொடர்ந்து பயன்படுத்தியதால் விளைநிலங்களே இன்று விஷத்தன்மை பெற்றுவிட்டன. நான் எனது நண்பர் கட்டியுள்ள புதுவீட்டிற்கு செல்கிறேன். வீட்டை அவர் எனக்கு சுற்றிக் காட்டுகிறார். நவீனமாக அமைக்கப்பட்டுள்ள சமையல் அறையையும் காட்டுகிறார். சமையல் அறையைப் பார்வையிட்ட எனக்கு ஒரு பேரதிர்ச்சி! சமையல் அறையில் 'POISON' என்று எழுதப்பட்டு ஒரு பெரிய பாட்டில் நிறைய விஷம் இருக்கிறது. அப்போது என் நண்பர், “கண்டிப்பாக எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும்” என்று வற்புறுத்தினால், நான் சாப்பிடுவேனா? சமையல் அறையில் விஷம் இருந்தால் எப்படி அந்த வீட்டில் நம்பி சாப்பிட முடியாதோ, அது போலத்தான் விளைநிலம் என்பது நம் தேசத்தின் சமையல் கட்டு, அந்த விளைநிலங்களே விஷமானால், ஆரோக்கியமான வாழ்வை நாம் எப்படி பெறுவது?பளபள காய் கனிகள் வாடிய காய்கனிகளையும், சொத்தைக் காய்கனிகளையும் விற்பதே பாவம் என்றும், அவற்றை வாங்குவது முட்டாள் தனம் என்றும், ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால் இன்றோ, பளபளப்பான காய்கனிகளை வாங்குவதுதான் முட்டாள்தனம் என்கின்றனர் உடல்நல ஆலோசகர்கள். காய் கனிகள் பளபளப்பாக இருக்கிறது என்றால், அதில் ரசாயன மருந்து இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில் வாடிய சொத்கைக் காய்கறிகளிலும், கீரைகளிலும் பூச்சிக் கொல்லிகளின் எச்சம் இருக்காது. அவற்றை வாங்கி, சொத்தைப் பகுதியை நீக்கிவிட்டு மீதியைப்பயன்படுத்தினால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்கின்றனர். 'சொத்தையே சுகம்' என்பதே இன்றைய வேளாண்மை நமக்குத் தரும் உறுதி. புத்தர் தனது சீடர் ஒருவரது குடிலுக்குச் சென்றார். சீடரின் போர்வையில் கிழிசல் தென்பட்டது. நல்ல போர்வை ஒன்றைத் தருவதாகச் சொன்ன புத்தர், ஒரு போர்வையைக் கொடுத்தனுப்பினார். சில நாட்களுக்குப்பின்னர் புத்தர் மீண்டும் சீடரின் குடிலுக்குச் சென்றார். “போர்வை பயனுள்ளதாக இருக்கிறதா?” என்று கேட்டார். “ஆமாம் குருவே!” “பழைய போர்வையை என்ன செய்தாய்?” “கிழிசலை வெட்டித் தைத்து படுக்கை விரிப்பாக்கிக் கொண்டேன் குருவே!” “முன்பு படுக்கை விரிப்பாக இருந்தது?” “இப்போது தலையணை உறையாக உள்ளது குருவே!” “முன்பு தலையணை உறையாக இருந்தது?” “வாயில்படி அருகில் கால்மிதியாக உள்ளது குருவே!” “முன்பு கால்மிதியாக இருந்தது?” “விளக்குத் திரியாக நம்முன் உள்ள தீபத்தில் எரிந்து கொண்டிருக்கிறது குருவே!” இப்படி வீண் என்று எதையும் பார்க்காத பயன்பாடுதான் நமது வேளாண்மைக் கலாசாரமாக இருந்தது. பயன்பாட்டு சுழற்சி ஏரில் பூட்டிய மாடுகளோடு மனிதனும் சேற்றில் நடந்தான். மாட்டுச் சாணமும் இலைதழைகளும் வயல்வெளிகளில் அடிஉரமாகின. விதைப்பு நாற்றாகி, பயிராகி அறுவடை முடிந்தது. நெல்லை மனிதன் எடுத்துக் கொண்டான், வைக்கோலை மாட்டுக்கு வழங்கினான். நெல்லை ஆலையில் தீட்டி அரிசியை எடுத்துக் கொண்டான். உமியையும் தவிட்டையும் மாட்டுக்குக் கொடுத்தான். அரிசி உலையில் பொங்கியபோது, சோற்றை அவன் உண்டான். கஞ்சி தண்ணியை மாடுகள் குடித்தன. மீண்டும் மாடுகள் சாணத்தை அவன் வயலுக்கு உரமாக்கின. ஏரில் பூட்டிய மாடுகளோடு மனிதனும் நடந்தான். விவசாயம் தொடர்ந்தது. விவசாயிகள் வாழ்வில் விளக்கு எரிந்தது. இயற்கையில் கழிவு என்பதில்லை, சுழற்சி முறையில் எல்லாமே பயன்பாட்டுக்கு உரியவைதான். இந்தப் பயன்பாட்டுச் சுழற்சி நவீன ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் (மருந்து என்று சொல்லலாமா?) மாறிப் போயின. ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் விற்பனை செய்வதற்காக அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் பன்னாட்டுக் கம்பெனிகள் போட்ட ஆசைத் துாண்டில்தான் 'குறைந்த காலப் பயிர்'. சம்பா பயிரைவிட குறைந்த காலத்தில் புதிய ' ஐ ஆர் 8' போன்ற பயிர்கள் விளைய இயற்கை உரம் உதவாமல் போயிற்று. ரசாயன உரத்தையும், நவீன பூச்சிக் கொல்லி மருந்தையும் பயன்படுத்தினால்தான், அவற்றின் அதீதத் துாண்டலில் அப்பயிர்கள் குறைந்த கால அளவில் விளையும். ஏமாந்த விவசாயிகள் குறைந்த காலத்தில் அறுவடை என்பதில் அன்று நம் விவசாயிகள் ஏமாந்து போனதின் விளைவு, இன்று விளைநிலங்களும், விளைபொருட்களெல்லாம் விஷமாகிப் போயின! காய்கறிகளும், பழவகைகளும் உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் உடல்நலன் சிறக்கும் என்று அடிக்கடி நிறைய ஆலோசனைகளைக் கேட்கிறோம். ஆனால் நுாற்று ஐம்பது நாட்களில் விளையும் கேரட் கிழங்குக்கு, ஐம்பத்து ஐந்து முறை நஞ்சு தெளிக்கிறார்களே! பத்து மாதத்தில் பலன்தரும் வாழை மரத்துக்கு, நான்கு முறை ஊசி மூலம் நஞ்சை ஏற்றுகிறார்களே! 100 நாட்களில் பலன் தரும் திராட்சைக்கு, பதினேழு முறை நஞ்சு தெளிக்கிறார்களே! விளைச்சல், மகசூல், சம்பாத்தியம் என்ற பெயரில் விஷத்தைப் பரிமாறுகிறார்களே என்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கவலை, அவரது மறைவுக்குப் பின்னரும் அப்படியே உள்ளதே? நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையில் தனது ஞானத் தந்தை என்று குறிப்பிட்ட ஜப்பானை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானவு புகோகா, “இயற்கை விவசாயம் என்பது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிரை விளைவிப்பது அல்ல, இயற்கையைக் காயப்படுத்தாமல், ஏன் மண்ணைக் கூட உழாமல் நிகழ்த்துவது,” என்கிறார். 'இயற்கை வேளாண்மை' என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும், நாம் சற்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தால் போதும் என்று பொருள் தருகிறார் புகோகா. இனி உண்பதற்காக நம் வாய் அருகில் வரும் ஒவ்வொன்றும் நம் உடல் நலத்திற்கு உத்திரவாதம் தருவதாய் அமைய வேண்டும். இது குறித்த அறிவும் விழிப்புணர்வும் இன்றைய முதன்மைத் தேவை என்பதை உணர்வோம்! -முனைவர்.மு.அப்துல் சமதுதமிழ் பேராசிரியர்.ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம். 93642 66001 http://www.dinamalar.com/news_detail.asp?id=1119775
 13. 1 point
 14. 1 point
  இரண்டு ஆழுமைகள் சந்திக்கிறபோது தான் ஓர் நேர்காணல் வெற்றிபெறுகிறது. நெற்கொழுதாசனின் காலத்தின் கேள்விகள் திருமாவளவனின் எதற்கும் சாயாத சத்திய மான வார்த்தைகள். பல இடங்களில் மனதோடு நெருங்கிய உரையாடல்.----இலக்கிய குவியத்திற்காக வேலணையூர்தாஸ் .
 15. 1 point
 16. 1 point
  தமிழீழப் பாடகர் மேஜர் சிட்டு ஜூலை 31, 2014 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். போராளி பாடகர் (கலைஞன்) மேஜர் சிட்டு ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை. 00:0000:00 போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார். விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’. இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது. ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல். “சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்” சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும். கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர். ‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’ என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள். [ அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல ‘தெருக்கூத்து’ எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது. ] சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள். 01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார். “சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார். இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் “உயிர்ப்பூ” படத்தில் இவர் பாடிய ” சின்னச் சின்னக் கண்ணில் ” என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும். அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது. சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான். …. இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான். போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை. அதேபோல் குட்டிக்கண்ணனும் வீரத்தின் சுவடாகி தமிழினத்தின் காவலராகி ஒளிரவிட்டு வீசுகின்றனர். நீ மறைந்து போனாலும் உன் நினைவுகளை மறக்காமல் நாங்கள்… - சிட்டு இணையத்திலிருந்து…. தமிழீழப் பாடகர் மேஜர் சிட்டுவின் நீளும் நினைவுகள்…….. மேஜர் சிட்டு பாடிய பாடல்த் தொகுப்பு….. வீரனே…. நீயின்றி இசைக்கு ஒரு ஐீவனில்லை… மாவீரன் மேஜர் சிட்டு….. தாயக விடுதலைக் கனவோடு…….. சிட்டண்ணாவின் நினைவே நினைவாகி….
 17. 1 point
  கடற்கரும்புலி - லெப் கேணல் - அமுதசுரபி இயற் பெயர் - சின்னப்பு நந்தினி இயக்கப் பெயர் - அமுதசுரபி தாய் மடியில் - 23.07.1972 தாயக மடியில் - 26.10.2001 தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள், எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று. "இந்த வாறன். இந்தா வாறன்" உயர் அலை வரிசைத் தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, "விடாமல் அடியுங்கோ" என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப் பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான். தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் "பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது" எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை. சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமை மிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், "அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்" என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள். "அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்." கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது. இந்தக் காலம் எமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம். முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன. முறியடிப்புத் தாக்குதலை நடாத்தத் தொடங்கினோம். முறையான போடுää ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு. இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில் காட்டியவாறு: "அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்." அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது. முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டுää பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூடää போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள். அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடா நாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர 'பிறைற் ஓவ் சவுத்' என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும்ää சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டாளர்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள். அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள். நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து 'பிறைற் ஒவ் சவுத்' என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்ணிமை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள். சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள். 'பிறைற் ஒவ் சவுத்' மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுத்த சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார் படுத்தி விடும் சண்டைக் காரி அவள். கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், "அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால்ää அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப் பெடுத்து திறமையாகச் செய்வார்." எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது. வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை... கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு விழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணித்தவாறு. களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்... பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்டு அசைய மறுக்க, படகைக் கைவிட வேண்டிய நிலை. எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப் பேச்சின்றி எம்மை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களது படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது. மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர எதிரிப் படகு, வந்து எமது படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை. ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்து வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது. அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ...? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ...?" இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது. மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம். அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப் படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது. அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய்,ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்...
 18. 1 point
  தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும் ,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் நிலை பெறுகின்றது ஓர் நினைவுத் தூபி. தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும். எதிர்வரும் 29.11.2014 (சனிக்கிழமை ) நண்பகல் 12.00 மணிக்கு திரைநீக்கம் செய்யப்படவுள்ள நிகழ்வில் தாயக உறவுகள் அனைவரையும் உணர்வு பூர்வமாக கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம். (Facebook)
 19. 1 point
  இரண்டரை ஆண்டுகள் இழுபறிப்பபட்டு..மூன்று தடவைகள் திருத்தம் செய்யப்பட்டு.391 பக்கங்களோடு திலீபன் பதிப்பகத்தால் வெளிவந்து விட்டது எனது நாவல் ...ஆயுத எழுத்து.... J’aimeJ’aime · · Partager
 20. 1 point
 21. 1 point
  ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை காலத்தின் கோலம்........" "என்னுடைய திறமைகளா?..........." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......." "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......" "மன்னிக்கவும்........... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........." "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?" "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............" "என் உடல்?..........." "அதுவும் உன்னுடையது கிடையாது.......... உடலும் குப்பையும் ஒன்று........." "என் ஆன்மா?" "இல்லை........அது என்னுடையது.........." மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு.......... கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க, கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன், நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........" * ஒவ்வொரு நொடியும் வாழ் * உன்னுடைய வாழ்க்கையை வாழ் மகிழ்ச்சியாக வாழ மறக்காதே....... * அது மட்டுமே நிரந்தரம்....... * உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...... நன்றி: கதம்பம்
 22. 1 point
 23. 1 point
  சம்பந்தப்பட்டவர் மரண துக்கத்தில் இருக்கும்போது...... அவரின் பெயரை வைத்து விமர்சனங்கள் எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இங்குதான் பலரது மனிதாபிமான பழக்க வழக்கங்கள் தெரிகின்றது.
 24. 1 point
  படித்ததில் பிடித்தது # மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?" தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?" மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?" தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?'' மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா ." தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ..." மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?" தந்தைக்கு கோபம் வந்தது ... தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..." அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் .. அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று .. ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் .. தந்தை : "தூங்கிட்டியாடா ?" மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..." தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .." அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் .. மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... " அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .. அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன் தந்தையை பார்த்தான் ... தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் .... அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..." மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல ... இப்போ இருக்கு .... கேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு .... இதை நீங்களே வச்சிக்கோங்க ... இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ... நா உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ... " அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ... சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ... தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்....
 25. 1 point
  பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். 6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும். 7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும். 8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும். 9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். 10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்
 26. 1 point
  மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான் பாட்டாலே உமை தொழுகின்றோம்