Leaderboard

 1. வாத்தியார்

  வாத்தியார்

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   4

  • Content Count

   10,839


 2. sOliyAn

  sOliyAn

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   2

  • Content Count

   2,687


 3. MEERA

  MEERA

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   3,840


 4. putthan

  putthan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   11,878Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 05 ஏப்ரல் 2015 in all areas

 1. 3 points
 2. 2 points
  புத்தக வெளியீடு என்ற விளம்பரத்தை இணையத்தில பார்த்தவுடன் அதில் கலந்துகொள்வது எனமுடிவெடுத்தேன். மெல்பேர்னிலிருந்து எழுத்தாளர்கள் வேறு பங்குபற்றுகிறார்கள் என எழுதியிருந்தார்கள் எனவே நிச்சயம் போகவேணும் என தீர்மானித்தேன். அந்த நாளும் வந்தது. கதிரவன் இளைபாறும் நேரம். மனிதர்களுக்கு அடுத்த நாள் ஒய்வு. வாயில் சுவிங்கத்தை போட்டு மென்றுகொண்டு பின்வரிசையில் போய் உட்கார்ந்தேன். முற்போக்கு பிற்போக்கு, நடுபோக்கு எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் இருந்தார்கள். புத்தக வெளியீட்டு வைபவம் தொடங்கியது. வரவேற்புரை, மெளனஞ்சலி என சம்பிராதய சடங்குகள் முடிவடைந்த பின்பு, இப்பொழுது மெல்பேர்னிலிருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் ,கவிஞர், நாடக நடிகர் ,பேச்சாளர் .சு.கா.....பேசுவார் என் அறிவிப்பாளர் அறிவித்தார். கையை கட்டிகொண்டிருந்தோர் எல்லோரும் கைக்கு சிறிய வேலைகொடுத்தனர். மண்டபம் ஒலி அலைகளை ரசித்தது. நித்திரை தூங்கியோர் திடுகிட்டு எழுந்தனர். குறுந்தாடி வைத்த, நனஷனல், பான்ட் அணிந்த 55க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதுடைய சு.கா புத்தகத்தை பற்றிய விமர்சனத்தை வைத்தார். பதின்ம வயதில் புத்தகங்கள் வாசிப்பு, மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடித்தல் போன்ற செயல்களால் சுரேஸின் சிந்தனையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முக்கியமாக அவனது இனம் வேற்று இனத்தவர்களால் ஒடுக்கப்படுவதை உணர்ந்த அவனது நண்பர்கள் போரட புறப்பட்டனர். ஒவ்வொருத்தரும் தனிநாடு வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெவ்வேறு பாதைகளில் சென்றனர். குகன் சுரேசின் தெருவில் வசிப்பவன். இருவரும் ஒரே வகுப்பில்தான் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். இருவரும் சுரேஸின் சைக்கிளில்தான் பாடசாலை சென்றுவருவார்கள். அன்று பாடசாலையிலிருந்து திரும்பி வரும்பொழுது "மச்சான் இன்றைக்கு பின்னேரம் உன்ட சைக்கிளை ஒருக்கா தாடா, டவுனுக்கு போகவேணும் " "பின்னேரம் வா தாரன்" மூன்று தரம் கேற் கொழுக்கி தட்டும் சத்தம் கேட்டால் அது குகன் தான் என வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். அம்மா அந்த சத்தத்தை கேட்டவுடன் கேற்றடியை பார்க்காமலயே தம்பி குகன் வந்திருக்கிறான் என குரல் கொடுத்தார். அடிவளவுக்குள் ஆட்டுக்கு குழை ஒடித்து கொண்டிருந்த நான் கொக்கத்தடியை அப்படியே மரத்தில் கொழுவி விட்டு , முற்றத்தில் நின்ற சைக்கிளை வந்து எடுக்கும் படி அழைத்தேன்.. நானும் அவனுடன் வருவதாக சொல்ல தான் திரும்பி வருவதற்கு நேரம் செல்லும் என்று சொல்லி என்னை அழைத்து செல்லவில்லை. கிழமையில் ஒரு நாள் எனது சைக்கிளை எடுத்து செல்வான். ஆறு மாதங்களின் பின்பு என்னை அவனுடன் அழைத்து சென்றான். என்னை ஒரு கடையில் நிற்கும் படி கூறிவிட்டு அவன் சென்று சிறிது நேரம் கழித்து ஒரு தாடி வைத்த அண்ணருடன் வந்தான். இவர் சுதா அண்ணே என எனக்கு அறிமுகம் செய்து வைத்தான் .நானும் கலோ அண்ணே என்றேன் ,அவரும் பதிலுக்கு கலோ என்றார் .தேனீர் அருந்த வருமாறு பக்கத்திலிருந்த தேனீர்கடைக்கு அழைத்து சென்றார். தேனீர் குடித்தபடியே "தம்பி மட்டர்ன் ரோல் சாப்பிடுவீரோ" என்றார். "சாப்பிடுவேன் ஆனால் இன்றைக்கு வெள்ளிக்கிழமை சாப்பிட மாட்டேன்". "தம்பி நல்ல பக்திமான் போலகிடக்கு" சிரிச்சு சமாளித்தேன். நேற்று இரண்டு தமிழ்சனத்தை பொலிஸ் சுட்டவன். அப்ப உம்மட கடவுள் என்ன கண்ணை மூடிக்கொண்டே இருந்தவர்? என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கும் சிரித்து மழுப்பினேன். அவர் கேட்ட கேள்விகளில் நியாயம் இருந்தாலும் கடவுளை எதிர்த்து கருத்து சொல்லவில்லை. எந்த துறையில் படிக்கபோறீர் டாக்டராகவோ இஞ்ஜினியராகவோ வரப்போறீர் என்று அடுத்த கேள்வியை கேட்டார். இல்லையண்ணே, எங்களுக்கும் அதற்கும் வெகுதூரம் கொழும்பில போய் ஐ.சி.எம்.எ செய்யலாம் என்று இருக்கிறேன் என சொன்னேன். கொழும்பிலும் தமிழன் இனிவரும் காலங்களில் வாழமுடியுமோ தெரியாது. 1977 இல் நடந்த இனக்கலவரம் பற்றி அறிந்திருப்பீர். ஒசியில லங்காராணியில் யாழ்ப்பாணத்திற்கு வரவேணும் என்றால் கொழும்பில போய் படியும் என்று நக்கலடித்தார். அவரிடமிருந்து இருவரும் விடைபெறும் பொழுது தாடிக்கார அண்ணே குகனிடன் சொன்னார் அடுத்த வகுப்புக்கு தோழரையும் அழைத்து கொண்டு வருமாறு. "அடே குகன் என்ன வகுப்படா தாடிக்காரன் எடுக்கப்போறான்" "அரசியல் வகுப்படா காய் பேய்காய் ,லெபனான் ரிட்டன்., ஆயுதங்கள் எல்லாம் அந்த மாதிரி கழற்றி பூட்டும்" "ஆயுதங்களடா , ஆளைவிடடா நான் வகுப்புக்கு வரவில்லை" "நீ பயப்பிடாத,ஆயுதம் ஒன்றும் நீ தூக்க தேவையில்லை. முதலில் போராளிகள் அரசியல் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு அந்த அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பின்பு மக்கள் போராட்டம் வெடிக்கும். அது ஒரு புரட்சிக வெகுஜன போராட்டமாக இருக்கும்" எனக்கு முதலில் பயமாக இருந்தாலும் போய் பார்ப்போம் என்ன நடக்குது என்று தாடிக்கரா அண்ணேயின்ட இருப்பிடத்திற்கு போக முடிவெடுத்தேன். நேரடியாக தாடிக்கார அண்னையின்ட வீட்டை போய் அரசியல் பாடம்படிக்கலாம் என நினைத்தபடி குகனுடன் சென்றேன். என்னை பெருமாள் கோவிலடி சந்தியில நிற்க்கும் படிசொல்லிவிட்டு குகன் சென்றுவிட்டான். அரை மணித்தியாலத்தின் பின்பு தனியாக நான் நிற்க்கும் இடத்திற்கு வந்தான். எங்கயடா அண்ணையை காணவில்லை என்று கேட்க, வருவார் தோழரிட்ட சொல்லிவிட்டனான், அவர் கூட்டிகொண்டு வருவார். ஏன்டா உனக்கு அவரின்ட வீடு தெரியாதோ என நான் கேட்க, அடே அவர் என்னைப்போல உன்னைப்போல சாதாரண ஆளே? லெபனான் ரிட்டேன் காய் . அடேய்! இன்னும் கொஞ்ச நாளில் என்னை சந்திப்பதும் இலகுவாக இருக்காது என நக்கலாகவும் அதே நேரம் நம்பக்கூடிய வகையில் சொன்னான். தனியாக வந்த தோழர், அண்ணே வர நேரமாகுமாம் என்னை வகுப்பு எடுக்க சொன்னவர், வாங்கோ தேர்முட்டி படியடியிலிருந்து கதைக்கலாம் என எங்களை அழைத்து சென்றார். தேர்முட்டியடியில் ஏற்கனவே எனக்கு அறிமுகமில்லாத இருவர் இருந்தனர். ஆனால் குகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் போலதெரிந்தது. அவர்களின் உரையாடல் குகனை கணட அந்த இருவரும், தோழர் பீட்டர் எப்படி இருக்கின்றீர்கள் என சுகம் விசாரித்தனர். நான் குகனை திரும்பி பார்த்தேன். இங்கு எனது பெயர் பீற்றர் மச்சான் என்றான். சரி அண்ணே வரும் வரை நாங்கள் அரசியல் கலந்துரையாடுவோம் என மூத்த தோழர் தொடங்கினார். பேசிகொண்டிருக்கும்பொழுது எப்படி தோழர்களே என கூறிக்கொண்டு அண்ணே எமது அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றினார். "நாம் ஏன்போரட வேண்டும தோழர்களே" என அண்ணர் ஒரு கேள்வியை கேட்டார். ஒவ்வொருத்தரும் ஒரு பதிலை சொல்லிகொண்டிருந்தனர். எனது முறை வந்தவுடன் சொன்னேன் சிங்களவன் அடிக்கிறான் நாங்கள் அவனை திருப்பி அடிக்கவேணும் என்றேன். "சிங்களவன் என்று சொல்லக்கூடாது ,சிங்களவர்களிலும் நல்ல சிங்களவர்கள் பலர் உண்டு ஏன் எங்கன்ட ஆட்களை விட சிங்களவர்கள் நல்லவர்கள்". சிறிது நேரம் மெளனமாக இருந்தது அந்த இடம். அண்ணரே மெளனத்தை கலைத்தார். நாளைக்கு யாரவது வெருளிகள் ஆர்மிக்கு கண்ணிவெடி வைக்குங்கள் அதில ஆர்மியும் சாகும் அதனால் எமது எமக்கு தமிழீழம் கிடைக்காது... மக்கள் போராட்டம் மூலம்தான் ஈழம் கிடைக்கும் " கம்யுனிசம் பற்றி யாருக்கு தெரியுமோ? கம்னிஸ்ட் நாடுகள் எவை? என அடுத்த கேள்வியை அண்ணர் கேட்டார். ஒருத்தரும் பதிலளிக்காதபடியால் எனக்கு தெரிந்த இரண்டு கம்னிஸ்ட் நாடுகளாகிய சீனாவையும் ரசியாவையும் சொல்லி, எனக்கும் அரசியல் தெரியும் என்ற வகையில் அங்கு இருந்தவர்களை பார்த்து ஏளன புன்னகையை உதிர்ந்தேன். "தோழரே உலகத்தில் இன்னும் கம்னிஸ்ட் நாடுகள் என்று ஒன்றில்லை , எப்ப உலகம் பூராவும் சோசலிச சமதர்ம சமுதாயம் உருவாகுதோ அப்ப கம்னிஸ்ட் நாடுகள் சாத்தியம் "என்றார் அண்ணை தோழர். இதென்ன கோதாரியா கிடக்குது என்றுபோட்டு அதன் பின்பு அரசியல் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்துகொண்டேன். முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நவகாலனித்துவம் இப்படி பல எமது பழக்கத்தில் இல்லாத சொற்களையெல்லாம் சொல்லி அரசியல் பாடம் எடுத்தார். இப்படியாக எமது அரசியல் பாடம் தொடர்ந்தது. அடுத்த வகுப்பை வேறு இடத்தில வைப்போம் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்று கூடினால் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என மூத்த தோழர் ஒருவர் கருத்து சொன்னார். அடுத்த வகுப்புக்கு மயிரத்தான் வந்தான் சிங்கன் என்று மனதில் நினைத்து விடைபெற்றேன். இனிமேல் குகன் சைக்கிளுக்கு வந்தால் கொடுங்கோ என்னை கூப்பிடவேண்டாம் என வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு நான் பின் வளவில் ஆடுகளுக்கு குழை ஒடிப்பதற்க்கு சென்று விடுவேன். உயர்தர பரீட்சை எடுத்து பெறுபெறுகளுக்கு காத்திருந்தமையால் பாடசாலைக்கு செல்வதில்லை இதனால் அவனை சந்திக்கும் வாய்ப்பு குறைந்திருந்தது. ஒரு நாள் சைக்கிளை திருப்பி வீட்டை கொண்டு வந்துவிடும் பொழுது சந்திக்கவேண்டியதாகிவிட்டது. மச்சான் என்னடா உன்னை காணக்கிடைக்கிதில்லை. வகுப்புக்கு வாரது என்று சொல்லிப்போட்டு காய்வெட்டிப்போட்டாய், அடுத்த வகுப்பு எங்கன்ட அம்மன் கோயிலில் தான் நடக்குது வாடா. அண்ணரும் உன்னை கேட்டவர் என்று சொல்லியடி சைக்கிளை மாமரத்தடியில் சாய்த்து வைத்தான். பார்ப்போம் நேரம் கிடைச்சா வாறன் என சொல்லி தொடர்ந்து கதையை வளர்க்காமல் அவனை விடை பெறவைத்தேன். அவனுடன் தொடர்ந்து நற்பை வளர்ப்பதா அல்லது துண்டிப்பதா என்ற எண்ணம் மனதில் எழுந்தது. அன்று அம்மன் கோயில் வகுப்புக்கு போவதற்கு முடிவெடுத்தேன். வழமைபோல தோழர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். தாடி அண்ணர் எனது தோளில் கை போட்டபடி என்ன தோழர் உம்மை பிறகு காணகிடைக்கவில்லை, நீங்கள் எல்லாம் பின்நின்றால் எப்படி நாங்கள் மக்கள் புரட்சியை உருவாக்குவது? எல்லாம் வெல்லலாம் அண்ணே வகுப்பை தொடங்குங்கோ என்று கூறியபடி படிக்கட்டில் இருந்தேன். தொடரும் நியானி: சீர் செய்யப்பட்டுள்ளது.
 3. 2 points
  ஆகாயத்தாமரை மீனா சலனங்கள் அற்ற பார்வையுடன் என்னை நோக்கினாள். அவளின் பார்வை எனக்குள் பலத்த அதிர்வை ஏற்படுத்தி என் எண்ணங்களை புரட்டிப்போட்டது. அவளுடைய பார்வையை மீறி பேசும் நிலையை அடைய முடியாத தவிப்பு என்னை ஆக்கிரமித்தது….. ஐரோப்பாவிலிருந்து உறவினர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ள கனடா வந்த எனக்கு மன ஆழத்தில் புதைந்திருந்த ஆவல் தலைதூக்கியதில் வியப்பில்லை பதின்ம வயதில் மறுக்கப்பட்ட காதலின் தாக்கம் ஐம்பதைத் தாண்டியும் மனதில் துயரமாக யாரும் அறியாமல் அழவைத்திருந்தது. நம்பியவளை ஏமாற்றிவிட்டோமோ என்று சிறுகச் சிறுக என்னைச் சாகடித்து எனக்குள் தன்னை மட்டும் உயிர்ப்பாக வைத்திருக்கும் உணர்வு காதலுக்கு மட்டுந்தான் இருக்கமுடியும். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் இன்னும் இருநாட்கள்தான் இங்கு நிற்கமுடியும் எப்படி அவளைப்பார்ப்பது…… கண்ணாடிக்கூண்டுக்குள் பறக்க விட்ட பறவைபோல எண்ணங்கள் எல்லாத்திசைகளிலும் வேகத்துடன் எழுவதும் கண்களுக்குத் தெரியாத தடைகளில் முட்டி சுழன்று விழுவதுமாக அந்த இரவு என்னை வாட்டி எடுத்தது. கனடாவின் உறைந்தபனியில் நாயக்கரா வீழ்ச்சியின் தோற்றத்தை காண்பதற்காக அதன் அழகை இரசிக்கும் கொலிடே இன் ஹோட்டலில் இருந்தபடி ரொரன்ரோவில் வாழும் அவளைச்சந்திக்க மனதில் ஆர்ப்பாட்டம். . மேசையில் கண்ணாடி குவளையில் நிரப்பப்பட்ட பொன்நிற திரவம் தன்னைப்பருக அழைப்பு விடுத்தபடி கிடக்க…அனைத்தையும் விழுங்கியபடி பதின்மவயது மீனா உடலின் இயக்கங்களைச் சிறைப்படுத்திக் கொண்டிருந்தாள். எப்படியாவது… எப்படியாவது அவளைப்பார்த்தே ஆகவேண்டும்….. கைத்தொலைபேசி ஒலித்தது.. கரிணி….. …… என்னுடைய மனைவி அழைத்துக்கொண்டிருந்தாள். தொலைபேசியை எடுக்க மறுத்து மனம் குளறுபடி செய்தது. மீளவும் தொடர்ச்சியாக ஒலித்த தொலைபேசி அழைப்பை மறுக்கமுடியாமல் எடுத்தேன். எதிர்ப்பக்கத்தில் நீண்டநேரம் தொலைபேசியை எடுக்காத கோபத்தில் என்னைப் பேசவிடாமல் கரிணி பொரிந்து தள்ளினாள் மௌனமாக கண்களை இறுக மூடிக்கொண்டேன் மீனா என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். “ வினோத் ஆர் யூ தெயா?” என்று கரிணி கேட்க சட்டென மீனா மறைந்து போனாள் “ஆங் கேட்கிறேன் “ என்னுடைய குரல் உயிர்ப்பிழந்து கரகரத்தது….. “ஆர் யூ ஓகே வினோத்”….. கரிணி குரலில் கலவரம் கலக்க நெருக்கமாகிக் கேட்டாள் “ஐ”ம் ஓக்கேடா” என்னுடைய பதில் அவள் கலவரத்தை குறைத்திருக்கவேண்டும் சற்று சமாதானமாகி என் வரவுக்காக காத்திருப்பதாக காதலோடு சொல்லி போனை வைத்தாள். கரிணி என் மனைவி பெற்றோரால் தெரிவு செய்யப்பட்டு என் மனைவியாக்கப்பட்டவள். என் மனச்சிம்மாசனத்தில் அமர மீனா என்கிற என்னுடைய பதின்மவயது காதலியோடு எனக்குள் சண்டைபோட்டுக் கொண்டிருப்பவள். ஆனால் கரிணிக்கு மீனாவோடு அவள் சண்டைபோடுவது தெரியவே தெரியாது. தெரிவதற்கான வாய்ப்பையும் வழங்காதவனாக இன்றுவரை இரகசியத்திற்குள் என் அக உருவம் ஒளிந்து கொண்டிருக்கிறது. நான் இங்கு வருவதற்கு முன்பே என்னுடன் படித்த நண்பர்கள் பலருக்கு தகவல் கொடுத்திருந்தேன் உறவினரின் திருமணநிகழ்வில் பலர் என்னை சந்தித்து அளவளாவி சென்றனர் நாளை மதி ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறான் போகவேண்டும். விடுபட்ட சில நண்பர்களையும் அழைப்பதாக கூறியிருந்தான் பழைய தோழர்களை சந்திக்கும்போது யாரிடமாவது மீனாவைப்பற்றி கேட்கவேண்டும் என்று சிந்தனை மையமிட்டது… மீனாவும் என்னுடன் படித்தவள்தான் ஆனால் ஆண் நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்ற படியால் மீனாவைப்பற்றிய விடயங்கள் தெரியாது. அவளைப்பற்றி அறிவதற்காக யாரிடமும் தகவல் சேகரித்ததும் இல்லை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் இரகசியமாக மீனாவை பத்திரப்படுத்தியது மனம். கடிதப்பரிமாற்றங்கள், பார்வைமொழிகள் கிடைத்த சில நிமிட தனிமையில் உடல் அதிர பரபரக்க, வியர்த்து விறுவிறுக்க அவளை இழுத்தணைத்து கொடுத்த முத்தம். உதறி திமிறி மானாக அவள் ஓடிய கணம்………. எல்லாம் என்னை விழுங்கியபடி…. இரவென்னும் நரகம் உறைபனியினூடே மந்தமாக நகர்ந்து மறைந்தது. புதிய காலை யன்னல்களுக்கு வெளியே வெண்பனியோடு உறவாட கதிர்கரங்கள் சிரித்தன. நிர்மல வானின் முகில்களில் காற்றின் கைகள் ஓவியங்களை தீட்டுவதும் அழிப்பதுமாக நகர்ந்து கொண்டிருந்தது. இன்று நண்பர்களை சந்திக்க ரொரன்ரோ நகருக்கு செல்வதற்கான டாக்சியை ஒழுங்கு செய்து விட்டு வந்து குளித்து சவரம் செய்து மெல்லிய நீல நிறத்தில் சேர்ட்டை அணிந்தபடி கண்ணாடியில் ஒரு கணம் நிலைத்து என்னை உற்று நோக்கினேன். அரைவாசிக்கு அதிகமாக தலைமுடியும், மீசையும் நரைத்திருந்தன. இளவயதில் இருந்த ஒற்றைநாடி உடல் மறைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதை உடல்வாகு காட்டியது. துருதுருவென்றிருந்த கண்களும் கனத்த இமைகளுக்குள் சோர்வாக ஒளித்திருந்தன. தடித்த தாடைகள் முதுமையின் பயணத்தை ஆரம்பித்துவிட்ட அரும்பலை காட்டத்தயங்கவில்லை. புன்னகையிற்கூட இயற்கை மறைந்து ஒரு இயந்திரத்தனம் தெரிவதாக மனம் சொல்லியது. அன்று என்னைத் தள்ளிவிட்டு மானாக ஓடிய மீனா கண்ணாடிக்கு அப்பால் இருந்து கைகொட்டி ஏளனமாக சிரிப்பதாக தெரிந்தது. உள்ளத்தின் அலைக்கழிவைத்தாங்க முடியாமல் “ ச்சீ வேண்டாம்” என்று உதறினாலும் போக மறுத்தவளாக உறுதியாக நின்றாள். மீனா திருமணம் செய்தாளா என்ற தகவல்கூடத் தெரியாமல்…… கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவளை தேடுகிற விசித்திரம் காதலுக்கு மட்டுந்தான் சாத்தியம். ரொரன்ரோ பயணம்… 2 மணித்தியாலங்களில் மதியை சந்தித்து நேராக ஒரு இத்தாலியன் ‘வுப்பே’க்கு கூட்டிச் சென்றான் அங்கு கரன், உதயா, பரணி அவர்களின் துணைவியர் என்று ஒரு நண்பர்கள் குழாமே இருந்தது. ஒவ்வொருவரும் அறிமுகம் செய்தபின் பள்ளிக்கதைகள் பேசி கலாய்த்து அவ்விடம் களைகட்டியது அப்போது மதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர “வினோத் இன்னும் இரு நண்பர்கள் எங்களோடு இணைகிறார்கள் இரு அழைத்து வருகிறேன்” என்று வெளியே சென்றவன் எங்கள் வயதையொத்த இரு பெண்களை அழைத்து வந்தான். கலகலப்பாக வந்த இருவரும் என்னை உற்று பார்த்தபடி நெருங்கி வந்தனர் கைகளை குலுக்கி சிரித்தவளைப்பார்க்க தெரிந்தவளாக இருந்தாள் அடையாளம் பிடிக்க கடினமாக தடுமாற “டேய் வினோத் நான் மனோடா” என்று சிரித்தவளுக்குப் பின்னால் வந்தவளை பார்த்ததும் என் புலன்கள் அனைத்து அதிர்ந்து போயின. தலை லேசாக கிறுகிறுக்க கால்கள் தள்ளாட மூர்ச்சையாகி போவதுபோல ஒரு மாயைக்குள் அமிழ்ந்து தத்தளித்தது இயல்பு. “ஹாய் வினோத்” என்றபடி எனது கைகளை குலுக்கியவள் சிறிய புன்னகையுடன் சுற்றிவரப் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் எனக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள். நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவளைப் நேராக பார்க்கும் துணிவும் அற்றவனாக…… கோழைமையில் தகர்வதை அவள் பார்த்திருப்பாளோ......... என்ற வீம்பு வர மிகுந்த பிரயத்தனப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன் மீனா எந்தவித சலனங்களும் இன்றி மிக நிதானமாக என்னை பார்த்து புன்னகைத்தபடி இருந்தாள். ம்… அவள் திடமாகத்தான் தெரிந்தாள் நான்தான்…. நான்தான் இன்னும் பதின்ம நினைவுகளில் இருந்து விடுபடாமல் உள்ளுக்குள் உருக்குலைந்து கொண்டிருக்கிறேன். இதோ எதிரே அவள்….. அவள் கண்களுக்குள் என் தேடல் விரிந்தது அவளிடம் பார்வை மொழி புலப்படவில்லை….. என்ன ஒரு அழுத்தம் இவளிடம்….. நண்பர்கள் பேச்சுகள் ,கேலிகள், சிரிப்பு வெடிகளாக அன்றைய விருந்து அமர்க்களமாக நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர் முன்பே எனக்காக காத்திருந்த உதயா பரணி, கரன் ஆகியோர் துணைகள் சகிதம் விடை பெற நானும் மதியும் மனோவும் மீனாவும் எஞ்சியிருந்தோம்….. அப்போதுதான் மதியை அவதானித்தேன் அவன் மனோவை உற்று நோக்கியபடியே இருந்தான் மனோவும் அவனை அன்றைய நாட்களில் திட்டுவதுபோல ஆனால் பக்குவமாக முறைப்பது விளங்கியது. ‘ஓ… கதை இதுவா….”………. “ஏன்டா மதி நீ திருந்தவே மாட்டாயா?” மனோ மதியைநோக்கி சொல்லிக் கொண்டிருந்தாள்…… “வினோத்!....... இவன் கதையை கேள் இப்பவும் என்னைக் காதலிக்கிறானாம் இவனை என்ன செய்யலாம் சொல்லு?” என்று என்னை நோக்கி மனோ சொன்னாள். மதியும் கிண்டலாக “ மனோ உன்னை எப்ப என்னால மறக்க முடியும் சொல் என்னுடைய முதல் காதல் நீ என்ன நீ காதலிக்காவிட்டாலும் நான் சாகும்வரைக்கும் காதலிப்பேன்…..” “ டேய் டேய் முட்டாளே இப்படி லாசுத்தனமாக உளறுவதை நிற்பாட்டு அதுக்குத்தான் நான் உங்களை எல்லாம் சந்திக்கிறதை விரும்பிறேல்லை…… இப்படி ஏடாகூடமாக எதையாவது கதைக்கிறதை நீ நிற்பாட்டினால்தான் நான் இனிமேல் இப்படியான நண்பர்கள் சந்திப்புக்கு வருவேன்” என்று மனோ டென்சனாகிக் கொண்டிருந்தாள்…. மீனா அவர்களின் உரையாடலை மெல்லிய புன்னகையுடன் இரசித்தபடி இருந்தாள்……. மீனாவுடன் பேச்சுக் கொடுக்க அவா ஏற்பட்டது ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது. மீனாதான் பேசினாள் நலம் விசாரித்தாள். மனைவியைப்பற்றிக் கேட்டாள். தான் தனது குடும்பம் பிள்ளைகள் பற்றி சொன்னாள். கணவனைப்பற்றி மிகப் பெருமையாக சொன்னாள். எனக்கு சிறிது எரிச்சலாக இருந்தது. என்னுடைய இடத்தில் இன்னொருவன் என்ற குரோதம் எட்டிப்பார்த்தது. சிம்பிளாகப் பேசி நட்புடன் கைகுலுக்கிவிட்டு மனோவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டாள். இப்போதும் என்னுடைய நப்பாசை விடவில்லை அவளுடைய செயலில் முகத்தில் பார்வையில் எங்காவது என்னை உணர்ந்ததற்கான அடையாளம் தெரிகிறதா என்று துருவித் துருவித்தேடினேன் தோல்வி மட்டுமே எனக்கு கிடைத்தது. என்னுடைய எண்ணத்தை உருவத்தை அவளின் அகவெளியிலிருந்து அகற்றி எறிந்துவிட்டாள் என்றே அவளுடைய ஒவ்வொரு செயலும் நிரூபித்தன..... நாளை நானும் மீளவும் ஐரோப்பாவுக்கு பயணமாகவேண்டும். மதியுடன் விடை பெற்றுக் கொண்டு மீளவும் ஒரு டாக்சியில் நாயக்கராவை நோக்கிப் புறப்பட்டேன். மனிதர்களை, நிலத்தை, மரங்களைப் பார்க்க பிடிக்கவில்லை டாக்சியின் இருக்கையைச் சரித்துவிட்டு வான் நோக்கி என் பார்வையை நகர்த்தினேன் இப்போதும் காற்று முகிலில் ஓவியங்களை வரைவதாகவும் களைவதாகவும்...., அதைப்போல மனமும் ஒரு நிலையிழந்து அலைக்கழிந்தது. கண்ணெதிரே முகிலில் போட்ட தாமரையை காற்று கண்களுக்குத் தெரியாத கரங்களால் கலைத்துக் கொண்டிருந்தது.
 4. 1 point
  தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் திருமலையை ஆட்டிப்படைத்த ராணுவ புலனாய்வாளர்களின் பெயரை ஐந்து வயது குழந்தை கூட சொல்லும். அந்த அளவுக்கு பிரபல்யம் வாய்ந்தவர்கள் பெர்னாண்டோ, பைத்துல்லா, ராஜப்த்தீன். அவர்கள் செய்த கொடுமைகள் சொல்ல இந்த கதை போதாது. நிறைய குறுக்கு தெருக்களை கொண்ட திருமலை நகரின் மத்தியை நிறைந்த படையினரை கொண்டு அடைத்து விட்டு, நீல வானை கொண்டுவந்து, திருமலை மாவட்ட அடையாள அட்டை (முதலில் மஞ்சள் பின்னர் வெள்ளை) பரிசோதிக்கும் படையினரை இப்போ நினைத்தால் கூட வடிவேலு பாணியில் பில்டிங்கை ஸ்ட்ரோங் ஆக வைத்து கொண்டு பேஸ்மெண்டை நடுங்கும் பலரை இப்போதும் காணலாம். இவர்களது ஆட்டங்கள் கோலாச்சிய அந்த கால பகுதியில், திருமலை நகரின் மத்தியில் கல்லூரி வீதியையும் மூர் வீதியையும் இணைக்கும் அந்த மூலையில் இருக்கும் கோணேஸ்வரா இந்து கல்லூரியின் ஆரம்ப பாடசாலை வகுப்பறையின் கதிரைகளை இழுத்து போட்டுவிட்டு தூங்கும் சுகமே எங்களுக்கு ஒரு தனி சுகம் தான். நாங்கள் நாலுபேர் மட்டும் தான் திருமலை நகரின் காவல் அணி. மின்மாற்றிகளை தகர்ப்பதோ,நிதி சேகரிப்போ, துரோகிகளை எச்சரிப்பதோ எல்லாம் எங்கள் நாலுபேரின் பணிகளுக்குள் தான் வரும். ஊரேல்லாம் உறங்கும் அதிகாலை மூன்று மணிக்கு தான் எங்களுக்கு சாப்பாடு. தவணை முறையில் ஆட்கள் மாறி மாறி காவல் நிற்போம். காவல் நிற்பவர்களை தவிர்த்து ஏனையவர்கள் அருகில் இருக்கும் முஸ்லிம் பேக்கரியில் போய் பாண் அல்லது கறி பணிஸ் வாங்கி வரவேண்டும். அந்த அதிகாலை நேரத்தில் சுட சுட வரும் ரோஸ் பாண், கறி பணிசின் சுவையே தனி சுவை. சுவைத்து பார்த்தவர்களுக்கு நான் எழுத்தில் அந்த அனுபவத்தை சொல்ல வேண்டியதில்லை. அன்றும் அப்படி தான். நானும் கார்த்தீபனும் காவல் நிற்க கோகுல்ராஜ்ஜும் நியாஸும் பாண் வேண்டும் முறை. ஐம்பது ரூபாய் தாளுடன் ஆரம்ப பாடசாலை மதில் ஏறி அந்தோனியார் வீதி தாண்டினால் மூன்று நிமிட நடை தான் அந்த பேக்கரிக்கு. மதில் பாயும்போது சத்தம் கேட்காமல் இருக்க வெறும்காலுடன் வெளியே இருக்கும் மெட்ரோ (ஒறேஞ்) பேபோன் காட் போடும் தொலைபேசி கூண்டில் கால்வைத்து அருகில் ஓடும் கால்வாயின் ஓரத்தில் இருக்கும் அழுக்கு புற்களில் கால் பதிக்கலாம். அன்றும் கோகுல்ராஜ் மதில் மீது ஏறி தொலைபேசி கூண்டில் கால்பதிச்சு புல்லுக்கு மேலே வைக்கும் போது யாருடையதோ முதுகில் வைப்பது போன்ற உணர்வு. ச்சீ அப்படி இருக்காது என்று கொஞ்சம் ஊண்டியே காலைப்தித்து நிமிர்ந்தால் இராணுவம். மதில் நீட்டுக்கு படுத்திருந்தாங்கள். நியாஸை எச்சரிக்கை செய்யகூட அவகாசம் இல்லாமல் அவனும் சொப்பின் பையுடன் குதித்து விட்டான். உருளைக்கிழங்குவிற்கு யட்டி போட்டமாதிரி தான் கோகுல்ராஜ். அவன் துப்பாக்கி முனையில் யட்டியுடன் இருப்பதை பார்க்க நியாஸு க்கே சிரிப்பை அடக்க முடியவில்லை. இராணுவத்துடன் வந்திருந்த ஈபிஆர்எல் எப் தோழர்களும் சிரித்தபடிதான் அவனிடம் கேட்டார்கள். இந்த நேரம் சொப்பின் பாக்கோட எங்கடா போறீங்கள். கெற்றபோல் தடிக்கு துணி சுத்தினமாதிரி யட்டியுடன் இருந்த நியாஸ், மாலை கட்ட பூ புடுங்க வந்தனாங்கள் என்று சொல்ல வாயெடுக்கவில்லை. கோகுல்ராஜ் சொல்லிபோட்டான். நாங்கள் பாண் வேண்ட போறோம் அண்ணே. யாருக்குடா புலிக்கு தானே அவனின் குரலில் மாற்றம் தெரிந்தது. இல்லை அண்ணே எங்கள் இரண்டு பேருக்கும் தான். இன்னும் ஒரு வாரத்திலே பரீட்சை படிச்சு கொண்டு இருந்தனாங்கள் பசிச்சுது பாண் வேண்டுவம் என்று வந்தம். சரி ஒருத்தன் இரு. ஒருத்தன் போய் வாங்கி கொண்டு வா. என்று சொல்லி முடிக்கவில்லை நியாஸ் எழும்பிவிட்டான் பையுடன். ஒரு இராணுவ வீரனின் காவலில் நியாஸ் பேக்கரிக்குள் புகும்போது வழமையான சலசலப்பு பேக்கரியினுள் இல்லை. மனசை ஏதோ வருடினாலும் அங்கே இருந்த முனீர் நானாவிடம் அண்ணே பாண் இருந்தால் தாங்கோ என்று ஐம்பது ரூபாயை நீட்டினான் நியாஸ். தம்பி உனக்கு விஷயம் தெரியாதா நாளைக்கு ரமலான் பண்டிகை நாங்கள் பாண் போடலை தம்பி. எண்ட அல்லாவே... அண்ணே ..இப்போ பாண் இல்லாமல் போனால் துவக்காலே அடிப்பான் என்ன இருந்தாலும் தாங்கோ அண்ணே. தம்பி இண்டைக்கு பாண் போடவே இல்லை நேற்றையான் ரோஸ் பாண் இருக்கு என்று பழைய ரோஸ் பாணை சோப்பின் பாக் நிறைய தந்து அனுப்பினார் முனீர் நானா. அன்றைக்கு அவர் தான் அல்லாவாக தெரிந்தார் நியாஸுக்கு. பாண் கிடைத்த சந்தோசம் ஒரு தைரியத்தை கொடுத்தது நியாஸுக்கு, அண்ணை இப்போ ஆவது நம்புறீங்க தானே நாங்க சத்தியமா பாண் வாங்க தான் போனாங்கள் என்று தோழரிடம் தைரியமாக சொல்லும்போதே தெரியவில்லை ஓணானை தேடி பிடிச்சு வேட்டிக்குள்ளே விடுறம் என்று. இவ்வளவு பாணையும் நீங்க இரண்டு பேரும் தானா சாப்பிட போறீங்கள். பொய் சொல்லாதே புலிக்கு தானே சாப்பாடு. இல்லை சத்தியமா நாங்கள் இரண்டு பேரும் தான் சாப்பிட போறோம். சரி அப்போ இங்கயே இப்பவே சாப்பிடு. கோகுல்ராஜ்ஜும் நியாஸும் எங்களிடம் வரும்போது விடிகாலை நாலு முப்பது, கண்கள் எல்லாம் சிவந்து அழுதது அப்படியே தெரிந்தது. ஒரு துண்டு கூட விடாமல் ஆறு றாத்தல் பழைய ரோஸ் பாணை துப்பாக்கி முனையில் யட்டியுடன் குந்தி இருந்து திண்டால் யாருக்கு தான் அழுகை வராது. (யாவும் கற்பனை)
 5. 1 point
  களத்திலிருந்து கொழும்பு மிரருக்காக ஜெரா நிலத்துக்கான போராட்டம் தொடங்கிய இடங்கள் இப்போது எப்படியிருக்கின்றன? யாராவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? கற்பனையே செய்யவேண்டாம், நேரில் வந்து பார்த்துச் செல்லுங்கள் எனக் கொக்கிளாய் வழியான திருகோணமலை தரைவழிப் பாதையையும், நெடுங்கேணி, பெரியகுளம் ஊடான பதவியா பாதையையும் திறந்துவிட்டிருக்கின்றனர். முன்பெல்லாம் மணலாற்றுக் காடுகள் குறித்து பல்வேறு கிளைக்கதைகளை பரப்பிவிட்டிருந்தார்கள். சூரியன் உதிப்பதும், அஸ்தமிப்பதும் தெரியாத காடெனவும், அதற்குள் யாரும் தொலைந்தால் தொலைந்தவரை மீட்க மயில்குஞ்சன் தான் வரவேண்டும் எனவும், பகலில் கூட பேய்கள் மனிதர்களுடனேயே நடமாடி சகல வேலைகளையும் செய்யும் எனவும் கதைகள் சொல்வார்கள். ஆனால் இப்போது மணலாற்றுக் காட்டைப் பார்த்தால், சூது கவ்வும் திரைப்படத்தில் தோன்றும் வில்லன் போல காட்சியளிக்கிறது. அந்தக் காட்டின் அடர்த்தியும், தடிப்பும் மெலிந்துவிட்டன. பெறுமதியும் அற்றுவிட்டது. காட்டைக் கடந்து வெலிஓயா கட்டில் ஏறி நின்று பார்த்தால் தொடர்ச்சியான சிங்கள கிராமங்களைப் பார்க்கலாம். அங்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. வன்னிப் பெருநிலம் 2002 ஆம் ஆண்டுகளோடு தொலைத்துவிட்ட செழுமையை அப்படியே வைத்திருக்கின்றன அந்தக் கிராமங்கள். எங்கு பார்த்தாலும் வயல்கள் விளைந்து கிடக்கின்றன. வீட்டுக் கூரைகளில் கூட வன விலங்குள், பறவைகள் தங்கி வாழ்கின்றன. வன்னியின் வற்றாத குளங்களுக்குச் சாட்சியாக அடுக்கடுக்காகக் காணப்படும் குளங்களும், அருவிகளும் இருக்கின்றன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் சில தசப்தங்களுக்கு முன்புவரை தமிழர்களுடையதாய் இருந்தவைதான். இப்போது வெலிஓயா என்கிற தேர்தல் வலயமாகி, சிங்கபுர, பதவியா, ஜனகபுர என சிங்கள பெயர் மாற்றம் பெற்றுவிட்டன. அதற்குள் பல கிளை கிராமங்களும், பாதைகளும், பௌத்த மத பீடங்களும், உருவாகிவிட்டன. எனவே அவை இப்போது சுத்தமான சிங்களக் கிராமங்கள். வயதான மாடுகளில் காணப்படும் தமிழ் எழுத்துக் குறிகளைத் தவிர, தமிழர் வாழ்ந்தற்கான எந்தச் சான்றுகளும் அங்கில்லை. இலங்கையில் பணியாற்றிய பாக்கர் என்கிற பிரித்தானிய தொல்பொருளியலாளர், இங்கு குறிப்பிடப்படும் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலையில் ஆதிகால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களுடன் கூடிய குகையும், கட்டடட எச்சங்களும், கி.மு 3 ஆம் அல்லது கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் பிராமி கல்வெட்டுக்களும் காணப்படுவதாக 1889 ஆம் ஆண்டில் அவர் எழுதிய நூலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவர் குறிப்பிடும் நூற்றாண்டுகளைத் தொடர்ந்து அங்கு தொடர்ச்சியான மனித நிலவுகை இருந்தமைக்கு சான்றுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. பெருங்காடுகளும், மலைகளும், ஆதி தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களையும் இந்த எல்லைக் கிராமங்களில் இப்போதும் காணலாம். பின்னர் இடையிலிருந்து அதாவது சோழர்காலத் தமிழர் பண்பாட்டுத் தொடர்ச்சியின் பல்வேறு எச்சங்களைப் பார்க்க முடியும். வன்னி முழுவதும் ஆங்காங்கே வாழ்ந்த தமிழர்கள் உள்ளூரளவில் நிலச் சுவாந்தவர்களாகவும், கிராமங்களையும், குளங்களையும் உரிமையாகக் கொண்டவர்களாகவும் சுயாதிபத்தியத்துடன் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு கிராமத்தாரும் தன் சுற்றத்து “நடைமுறைகளை“ மிக இறுக்கமாக கடைபிடித்தமையால், யாராலும் அதற்குள் ஊடுருவ முடியவில்லை. ஆனால் அனைவரும் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான் கூடினார்கள். வற்றாப்பளை கண்ணகி அம்மன் பங்குனி திருவிழாவில்தான் வன்னி மக்களின் மொத்த சந்திப்பும் நடந்தது. இப்படியேதான், 1970 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழர்கள்தான் வாழ்ந்தார்கள். அனுராதபுரம், பொலநறுவைக்கு அப்பாலான தென்னிலங்கையின் சிங்கள தேசத்தையும், ஐம்புகோளப்பட்டிணத்தில் இருந்து தெற்காக நீண்ட தமிழர்களின் தேசத்தையும் பிரித்துநின்றவையே இத்தகைய கிராமங்கள். தணிக்கல், டொலர்பாம், ஹென்பாம், (பிற்கால காரணப்பெயர்கள்) என்பவற்றை அதற்கு உதாரமாணக் குறிப்பிடலாம். இவை குறுநில அமைப்பு முறையில் தனி நபர்களால் உரித்துடையனவாக இருந்தன. அந்தக் காலத்து ஊர் உரிமையாளர்ளை, அங்கு வாழ்ந்த மூத்த குடி ஒருவர் இப்படித்தான் நினைவுகூர்கின்றார், “கொழும்புத் தமிழ் முதலாளியின் 500 ஏக்கர் ஹென் பாம், மாவிட்டபுரம் தமிழ் முதலாளியின் 500 ஏக்கர் டொலர் பாம், தம்பு றொபினுடைய 1000 ஏக்கர் சிலோன் தியேட்டர், அல்வாய் தமிழ் முதலாளியின் 1000 ஏக்கர் சர்ஸ்வதி பாம், நீதிராஜாவின் யானை பீடி கொம்பனி பாம், தனிய ஒருத்தருக்கு சொந்தமான தனிக்கல்லு”, “இதுக்கு இஞ்சால ஒதியமலை, பட்டிக்குடியிருப்பில் நெருக்கமாகச் சனம் இருந்தது. இந்தப் பக்கமிருந்து சனம் அங்கால வயல் விதைக்கவும், வேலை செய்யவும், வேட்டைக்கும், மாடுசாய்க்கவும் போய் தங்கி நிண்டுவருவினம். அங்கயும் வீடுகள் இருந்தது”. ஆனால் அங்க இருந்த தமிழ் முதலாளிமார் சிலபேர் மோசமானவங்களா இருந்தாங்கள். கூலிக்கு ஆக்கள பிடிச்சி வேலை செய்விப்பாங்கள். நல்லநாள், பெருநாளில், கூலியாக்கள் தங்கட குடும்பங்களப் பாக்க ஊருக்குப் போகவேணும் சம்பளம் கேட்டால், இரவில மண்வெட்டியால வெட்டி வயலுக்குள்ளயே புதைச்சிடுவாங்கள். வீட்டுக்குப் போறனி, விளாம்பழம் புடுங்கிக்கொண்டுபோய் பிள்ளைகளுக்கு குடு எண்டு சொல்லி காட்டுக்கு கூட்டிக்கொண்டுபோய், கூலியாக்கள விளாமரத்தில ஏத்தி கீழ நிண்டு இடியனால் சுட்டுக் கொன்று போடுவாங்கள்” – ஏரம்பு (76) ஏரம்பு ஐயா குறிப்பிடுவதுபோல இங்கு இருந்த ஒவ்வொரு கிராமமும் 1000 ஏக்கர்களுக்கு அப்பாலும் பரப்பைக் கொண்டு நீண்டது. வயல்களும், தோட்டக் காணிகளும், பட்டிபட்டியான மாடுகளும் அனைத்துக் கிராமங்களிலும் இருந்தன. வள மிகுயினால் செழிப்புக்கு பஞ்சமிருக்கவில்லை. மறுபுற எல்லையில் வாழ்ந்த சிங்களவர்களுக்கோ பொருளாதார ரீதியில் பெரும் பிரச்சினை இருந்தது. நூற்றாண்டுகாலமாக இராசதானிகளாக இருந்த மையங்கள் வளமின்றி வறண்டு போய்க்கிடந்தன. எனவே தமிழ்க் கிராமங்களுக்குள் ஊடுருவி இரவோடு இரவாக மாடுகளை சாய்த்துப் போவதும், விளைந்த பயிர்களை கொள்ளையடித்துப் போவதும் நடந்தது. திருடிச் சென்ற மாடுகளை மறுநாள் தமிழர்கள் சென்று மீட்டு வருவதும், அதற்காக அடிதடியில் இறங்குவதுமான சம்பவங்கள் தொடர்கதையாக இருந்தன. இந்த சந்தர்ப்பத்தில்தான் (1980) இலங்கை அரசியலில் கூர்மையான இனவாதமும், தமிழர் நிலங்களை அபகரித்துக்கொள்ளும் சதித் திட்டங்களும் அரங்கேறின. இவ்வாறு தமிழரின் பூர்வீக நிலங்களில் திட்டமிட்ட வகையில் சிங்களவர்களை குடியேற்றம் செய்யும் முறையை டீ.எஸ். சேனநாயக்கா, ஜே.ஆர்.ஜெயவர்தனா, சிறீல் மத்தியூஸ், காமினி திசநாயக்க, என்.ஜீ.பி. பண்டிதரத்ன போன்றோர் தொடக்கி முன்னெடுத்தவர்களாவார். இந்தக் குடியேற்றங்கள் தமிழர்களின் எல்லையோரக் கிராமங்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கின. பட்டிக்குடியிருப்பு, ஒதியமலை கிராமங்களுக்குள் இரவு நேரத்தில் திடீரென ஊடுருவும் சிங்களவர்கள், கொள்ளையடித்தும், வீடுகளை தீக்கிரையாக்கியும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்குப் பயந்து இரவு வேளைகளில் மக்கள் தம் ஊர்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுவதும், காடுகளுக்குள் சென்று மறைந்து வாழ்வதும், ஆண்கள் வயல்காவல், வேட்டை முதலான தொழில்களை தவிர்த்து வந்ததும், இதனால் மிகத் தொலைவாக, சிங்கள எல்லைகளுக்கு அருகில் இருந்த வயல்காணிகள் காடாகியமையும் நடந்தது. ஆனாலும் தமிழர்கள் அந்த நிலத்தைவிட்டு வெளியேறவில்லை. திருப்பிப் போராடியும், பின்வாங்கி மீளச் சென்றும் அங்கேயே வாழ்ந்தார்கள். அப்போதுதான் வெலி ஓயா குடியேற்றத்திட்டம், மகாவலி அபிவிருத்தி குடியேற்றத்திட்டம் நடந்தது. அங்கு குடியேற்றப்பட்டவர்கள், இலங்கை சிறைகளில் மோசமான குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகளாக இருந்தனர். பதவியாவை அண்டிய இந்தக் குடியேற்றத்தில் திறந்தவெளிச் சிறைச்சாலை போல குடியேறிகள் குடியேற்றப்பட்டார்கள். அவர்கள் கொள்ளையடிப்புக்காகவும், தமிழர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்காவும், மிக மோசமான வன்முறைகளிலும் ஈடுபட்டார்கள். வீட்டோடு எரியூட்டினார்கள். ஆண்களைப் பிடித்துச் சென்று குளக்கரைகளில் வெட்டிப் போட்டார்கள். வேட்டைக்கு சென்ற ஆண்கள் தலையற்ற முண்டங்களாக காடுமுழுவதும் கிடந்தார்கள். இரவிரவாகக் காடுகளுக்குள் நுழைந்து, மரங்களிலும், புதர்களிலும் மறைந்திருக்கும் சிறைகைதிக் குடியேறிகள், வேட்டைக்கு செல்லும் தமிழ் ஆண்களையும், மாடு சாய்க்கச் செல்பவர்களையும் கழுத்தறுத்து கொன்று விடுவர். கொன்றுவிட்டு, முண்டமாகக் கிடப்பவரின் ஆடையை அணிந்துகொண்டு, தாம் அணிந்திருக்கும் சிறை ஆடையை முண்டத்துக்கு அணிவித்துவிட்டு தப்பித்துச் சென்றுவிடுவர். இந்தக் குரூரமான கொலைகள் தமிழ் மக்களை அல்லோல கல்லோலப் படுத்தியது. அதற்கான பதில் வன்முறைகள் தடியடி, வாள்களில் தொடங்கி, மிருகங்களுக்கு வைக்கும் பொறிகளைக் கடந்து, கட்டுத்துவக்கு, இடியன், சொட்கன் துப்பாக்கிகள் வரையில் வளர்ந்தது. பொறுமையுடைந்த தமிழர்கள் ஒருநாள் இரவு சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து பழியெடுத்துவிட்டுத் திரும்பினர். அதற்குப் பழிவாங்க சிங்களவர்களும் தயாரானார்கள். இவ்வாறானதொரு பழிவாங்கல் காலைதான், 1982.12.02 அன்றும் விடிந்தது. அது ஒதியமலைக் கிராமம். இரண்டு நாட்களுக்கு முன் அந்தக் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றின் வாசனை அந்தக் காலையிலும் வீசிக்கொண்டிருந்தது. அவ்வேளையில் கிராமத்துக் காடுகளுக்குள் இருந்து இயக்கப் பெடியன்களின் சாயலில் வெளிப்பட்ட மனிதர்கள் “பெடியன்களைப்” போலவே ஆண்கள் அனைவரையும் பொதுறோக்கு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். புதுமாப்பிள்ளையும் போனான். மண்டபத்துக்குள் நுழைந்ததும், அவர்களின் கைகளும், கண்களும் கட்டப்பட்டன. 28 பேரை அவ்விடத்திலேயே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். மிகுதி நான்கு பேரை ட்ராக்டர்களில் ஏற்றி காட்டுக்குள் கொண்டு சென்று கொன்றனர். இங்கு இதுவரை இடம்பெற்ற எல்லாப் படுகொலைகளுக்கும் சாட்சியங்கள் இருப்பதைப் போல இந்த முதல் படுகொலைக்கும் சாட்சியமுண்டு. “அண்டைக்கு காலம 6.30 மணியிருக்கும் எங்கட ஊருக்குள்ள நாலு பக்கமும் ஆமிக்காரர் சுத்திவளைச்சாங்கள். எங்கட ஊரில கண்ணில பட்ட ஆம்பிள ஆக்கள் எல்லாரை பிடிச்சி ஒரு இடத்துக்கு கொண்டு வந்தாங்கள். அவையள் போட்டிருந்த சேட்டைக் கழற்றி கைகள பின்பக்கமா கட்டினவங்கள். அவளபேரையும் சாய்ச்சிக் கொண்டு, ஒதியமலைக் குளக்கட்டுக்கு கிட்ட வந்தாங்கள். அப்ப றோட்டால போன செல்வராசான்ர ட்ராக்டர மறிச்சி அதில போன ஆக்களையும் பிடிச்சி, கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்துக்குள்ள கொண்டுபோனாங்கள். கொஞ்ச நேரத்தில ஒரே அலறல் சத்ததும், துப்பாக்கி வெடிச்சத்தமும் கேட்டது. சுடுறதுக்காகப் பிடிச்ச ஆக்களில வயசானவங்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சின்னையா, கனகையா, ஆக்கள தங்கட பாதுகாப்புக்காக ட்ராக்டர்ல ஏத்திக்கொண்டு போயிட்டாங்கள். இதெல்லாத்தையும் ஒழிச்சி நிண்டு பாத்துக்கொண்டிருந்த நான், ஓடிப்போய் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்த பார்த்தன். மூன்று, நான்கு பேராக நிப்பாட்டி வச்சி, சுட்டும், வெட்டியும் 27 பேரையும் கொன்றுட்டாங்கள். சிலர் தண்ணி கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்தாங்கள். பிறகு அங்க கால் வேறு, கை வேறு, தலைவேறயாக கிடந்தவங்கள எல்லாம் தூக்கி ஒரே இடமா அடுக்கிட்டு, எல்லாரும் முல்லைத்தீவுக்கு கால்நடையா ஓடினம். அங்கயிருந்து திரும்பி வந்து, எல்லா கிராமத்து ஆக்களும், கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு முன்னால இருந்த மரங்கள எல்லாம் தறிச்சி அடுக்கி, அதில செத்தாக்கள போட்டு கொழுத்தினம். அதுக்குப் பிறகு அங்கயிருக்கேல்ல” கந்தசாமி – ஒதியமலை இந்தப் படுகொலையின் பின்னர் தமிழர்கள் எல்லைக்கிராமங்களை விட்டு வெளியேறினார்கள். சில காலம் போர் சூனிய வலையமாக இருந்த கிராமங்கள், மெல்லமெல்லமா சிங்களக் குடியேறிகள் வசமாகியது. சிங்கபுர எனவும், ஜனகபுர எனவும், கிரி இப்பன் வெவ இடதுகர, கிரி இப்பன் வெவ வலதுகர, அகற்றுகஸ் வெவ எனவும் பெயர் மாறின. விகாரைகள் முளைத்தன. 2009க்குப் பின்னர் இவ்வாறு அபகரிக்கப்பட்ட கிராமங்கள் அனைத்தும் வெலி ஓயா என்னும் தேர்தல் தொகுதியாகியது. தமிழர்களின் பூர்வீக நிலமாகிய வன்னிக்குள் முளைத்த இந்தப் புதிய தேர்தல் வலயம் சிங்கள வாக்காளர்களுக்கானதாக இருந்தது. அந்தத் தேர்தல் வலயத்துள் வாக்களிக்கத் தகுதிபெற்ற சிங்கள வாக்காளர்களாக 1726 பேர் (2011,ஓகஸ்ட்) இருந்தனர். இவ்வாறானதொரு திட்டமிட்ட குடியேற்றத்துக்கும், அதில் நிரந்தரமா இடம்பிடித்துக்கொள்வதற்கும் சிங்களவர்களுக்கு எடுத்துக்கொண்ட காலம் வெறும் 20 வருடங்கள் மாத்திரமே. ஆனாலும் தமிழர்கள் அந்த நிலங்களுக்காக சட்ட ரீதியிலாவது போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் போர் இன்னும் ஓயாமல் இருக்கின்றது. அடுத்தடுத்துவரும் மாற்றங்களும், நல்லிணக்கங்களும் இவற்றையும் கண்டுகொள்ளுமா? http://www.colombomirror.com/tamil/?p=3771
 6. 1 point
  பெண்களின் காதலின் முறிவானது கிணற்றில் போட்ட கல் போன்று சலனமற்று இருக்கும் உயிர்ப்புடன்....! ஆண்களின் காதல் முறிவானது அதே கிணற்றில் வாழும் தவளை போல , எப்பவும் சலனத்துடனும் அப்பப்ப நீருக்கு மேல் வந்து இரை மீட்டுச் செல்லும்...! முதல் காதலையும் முதல் முத்தத்தையும் முற்றும் துறந்த முனிவனும் /முனிவியும் கூட மறக்க மாட்டினம்...! கதை கலக்கல் சகோதரி...!!
 7. 1 point
 8. 1 point
  இலங்கை -ஸ்கொலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் பெற்ற புள்ளிகள் கிழவி 246 மணிவாசகன் 255 அகஸ்தியன் 466 வாத்தியார் 71 M குமார் 328 ஒவியன் 326 நுணாவிலான் 15 அர்ஜீன் 537 ஈழப்பிரியன் 73 ரதி 723 செந்தமிழாளன் 0 நேசன் 213 கல்யாணி 255 வசந்த்1 2 வாதவூரான் 723 சிவகுமாரன் 211 குன்சி 71 நவீனன் 255 ராகா 141 தமிழ்சிறி 71 கறுப்பி 71
 9. 1 point
 10. 1 point
  தாயகத்தில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. அதேசமயம் வெளிநாட்டில் வாழும் உறவினர்களின் பணத்தில் சோம்பேறிகளாக வாழும் ஒரு பகுதியினர் உள்ளார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இப்படியான பொருளாதாரம் ஒருகட்டத்தில் களவுக்கு ஏவும் என்பதை கடந்து போன பல சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய களவுகளை கண்டும் அதைக் காணாதுவிடுவதோ அல்லது அதற்கு நியாயம் கற்பிப்பதோ எதிர்காலத்தில் இதன் வளர்ச்சிக்கு உதவுவது போன்றது. இவற்றின் பரிணாமம் கொலையளவுக்குக் கூட வளர்ச்சியடையலாம். அதனால் மக்கள் காவற்துறையை சார்ந்து வாழ்வது தவிர்க்க முடியாதது என்றொரு நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இங்கே அவர் ஏற்கெனவே சில சங்கிலிகளை அந்த இடத்தில் திருடி இருக்கிறார்.. வேறு 2 பெண்களுடன் தூர இடத்தில் இருந்து திருடுவதற்காக வந்திருக்கிறார்.. ஆகவே இது அவரது முதல் திருட்டு முயற்சி என்றும் கூற முடியாது. இவரை அடையாளப்படுத்தாதுவிட்டால் இவர் இதே திருட்டை இன்னோர் இடத்தில் தொடரமாட்டார் என என்ன நிச்சயம்?!! இப் பெண்ணுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்... சட்டதரணி மூலம் இவரை வெளியில் எடுத்து, இனிமேல் திருடாமல் இருக்கும்விதத்தில் ஒரு நிரந்தர வருமானத்திற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொடுக்கலாம்... இவருக்காக செய்வீர்கள் என நினைக்கிறேன்.. செய்தால் அறியத் தாருங்கள்.. ஒரு நன்றியாவது சொல்ல ஆசைப்படுகிறேன்!!
 11. 1 point
  அது எனது கருத்தல்ல . முகநூலில் காணப்பட்ட ஒரு பதிவையே இங்கு பதிவிட்டேன் . அனால் என்னை பொருத்தவரை குறித்த பெண்ணின் படத்தினை இணைத்திருக்க வேண்டியதில்லை. தேச விடுதலைக்காக சேர்த்த பணத்தினை கொள்ளையடித்தவர்கள் கடனட்டை மோசடி செய்பவர்கள் போன்ற கொள்ளையர்கள் எல்லாம் கம்பீரமாக எந்தவித குற்ற உணர்ச்சியற்று வாழும்போது ஒரு பெண்ணின் பின்புலம் அறியாது அவளின் படத்தினை இணைத்து துகிலுரிவதுதான் தர்மமா ? என்னை பொருத்தவரை அந்த பெண் தண்டனைக்குரியவர், முகநூல் பதிவுகளின் மூலம் அவர் குழந்தைகளின் சங்கிலிகளையும் அருத்திருக்கின்ரார். குழந்தையின் கழுத்து வெட்டுப்பட்டிருந்தால் கதி என்ன ?
 12. 1 point
  அந்த பெண்ணே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.. மேலும் 4 சங்கிலிகள் கைப்பற்றுள்ளன. ஆகவே.. குற்றவாளிகள் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படுதலில் எவ்வித தவறுமே இல்லை!!
 13. 1 point
  நாங்கள் வளர்ச்சியடைந்த ஜனநாயக விழுமியங்களுக்கும் மனிதநேயத்துக்கும் ஒரளவிலேனும் மதிப்பளிக்கும் நாடுகளில் வாழ்ந்தாலும் இன்னமும் சின்னப்புத்தி மாறவில்லை. காவல்துறையால் கைதுசெய்யப்பட்டவர் தற்போதைய நிலையில் குற்றம்சாட்டப்பட்டவரே தவிர குற்றவாளியென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவரல்ல. இப்படியிருக்கையில் ஒரு செய்தியை அடிப்படையாகவைத்து படங்களை வெளியிடுவது எந்தவிதத்திலும் பத்திரிகைத் தர்மமில்லை. இது வக்கிரங்கள் நிறைந்த இணையவுலகின் இன்னுமொரு அசிங்கமான முகத்தை லங்கசிறி இணையத்தளம் காட்டியிருக்கு. படம் வெளியிட்டது, முற்றிலும் வன்மையாகக் கண்டிக்கக்கூடிய விடையம்.
 14. 1 point
  இதற்கு.... மூல காரணம், தமிழக திராவிட அரசியல் கட்சிகள் மட்டுமே... "டாஸ் மாக்" என்று.... மது விற்பனை நிலையங்களை, கண்ட இடமெல்லாம் திறந்து, தமிழக அரசுக்கு.... வருவாய் வருகின்றது என்று, சந்தோசப் பட்ட அரசு..... இன்று.. அதனை குடித்த, தகப்பன், செத்துவிட்டான் என்றால்..... அவனின் பிள்ளைகள்,என்ன செய்யும்? இப்படியான.... இடங்களில், வாழ்க்கையை... சீரழிக்க வேண்டி உள்ளது. அதற்கு... இடையில், தமிழகத்தில் நல்ல வேலை வாய்ப்பு உண்டு... தாராள மது விற்பனையால், அதனை குடித்த தமிழன் செத்தால், அந்த இடத்தை நிரப்ப.... அந்நிய மாநிலத்தவன் வருவான். அவன்... பிள்ளை, தமிழ் பேசாது. இது.... ஒரு, நீண்ட கால... தமிழ் ஒழிப்பு திட்டம். இதற்கு.... கருணாநிதியும், ஜெயலலிதாவும்.... செத்தாலும், தீர்வு கிடைக்காது. ஏனென்றால்.... தமிழகம், திராவிடர் நாடு. கேரளாவில்.... மது விலக்கு, 6 மாதத்தில் கொண்டு வரப் பட்டது. தமிழகம், குடி காரர்களின் நாடு.