Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on வெள்ளி 06 நவம்பர் 2015 in all areas

  1. 1 point
    என்றைக்கோ ஆயிரம் பச்சைகள் பெற்றிருக்க வேண்டியவர் நீங்கள்! உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது 'தணிக்கை' செய்யப் படாத ஒரிஜினல் படமொன்றைப் பார்க்கும் உணர்வு வரும்! அத்துடன் வாசிக்க வேண்டும் என்னும் ஆர்வமும், மற்றையவர்கள் படைப்புக்களை ஊக்குவிக்கும் பண்பும்.. உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது! ரதியிடம் பேச்சு வாங்காத ஒரே ஒரு கள உறவு 'ஆறுமுக நாவலர்' என்று முன்பு தமிழ் சிறி எழுதிய நினைவு! இப்போதெல்லாம் ரதி ..என்னை ஒரு முறை திட்ட மாட்டாரா என்னும் ஏங்கும் அளவுக்கு நீங்கள் ஒதுங்கிக் கொண்டது தான் எனது வருத்தம்! வாழ்த்துக்கள் ரதி.. யாழை வளப்படுத்துங்கள்!
  2. 1 point
    உலக மசாலா: அடடா! அற்புதமான அப்பா! ஷாங்காயைச் சேர்ந்தவர் ஸு சுன்ஸியாவோ. தொழில திபர். தன் இரண்டு வயது மகளுக்காக வீட்டையும் சொத்துகளையும் 2 கோடி ரூபாய்க்கு விற்று விட்டார். ‘‘என் மகள் தான் என் உலகம். அவளுக்கு என்னால் முடிந்த அனைத்து விஷ யங்களையும் கொடுத் துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். பள்ளிக் கல்வி மூலம் கிடைக்கும் அறிவுக்கு முன்பாக அவளுக்கு உலக அறிவு கிடைக்க வேண்டும். அதற்காக 5 ஆண்டுகள் என் மகளுடன் உலகம் சுற்றி வரப் போகிறேன். இதில் ஓராண்டு சீனாவைச் சுற்றி வருவோம். மீதி நான்கு ஆண்டுகள் உலகப் பயணம். தொழிலதிபரான நான், தவறான முடிவு எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கு தொழில் தெரியும். எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்து விட முடியும். ஆனால் என் மகளுக்கு இந்த வயதில் கொடுக்க வேண்டிய அறிவையும் அனுபவத்தையும் கொடுக்காமல் விட்டால், இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. 3 மாதங்கள் திட்டமிட்டு, சொத்துகளை விற்று, பயணத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறேன். இதோ நாங்கள் பயணம் கிளம்பி 9 ஆயிரம் மைல்களைக் கடந்துவிட்டோம். இதுவரை ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து, மகிழ்ச்சியாக இருக்கிறோம். குழந்தை பெரியவளாகும்போது இந்தத் தருணங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வாள். என்னை ஒரு சிறந்த அப்பாவாக அவள் நினைத்தால், அதை விட எனக்கு என்ன சந்தோஷம் கிடைத்துவிட முடியும்?’’ என்கிறார் ஸு. அடடா! அற்புதமான அப்பா! அமெரிக்காவின் ப்ரூக்ளினைச் சேர்ந்தவர் நீனா கெனியலி. 63 வயதாகும் நீனா ஒரு தாய்க்கு உரிய அத்தனை விஷயங்களையும் திறம்படச் செய்து வருகிறார். அம்மாவின் அன்புக்காக ஏங்குபவர்களுக்கு, ஓர் அம்மாவாக இருந்து அரவணைக்கிறார், அன்பு காட்டுகிறார், ஆறுதல் அளிக்கிறார். ‘நீட் எ மாம்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஒரு மணி நேரத்துக்கு 2,400 ரூபாய் கட்டணம் செலுத்தினால், அம்மாவின் பூரண அன்பைப் பெற முடியும். இந்த ஒரு மணி நேரத்தில் உங்கள் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்பார், ஆலோசனைகள் வழங்குவார், பொருட்கள் வாங்குவதற்கும், பார்ட்டிக்கும் கூட உதவி செய்வார். உங்களுக்கு விருப்பமான ஒரு பொருளை அன்போடு பரிசளிக்கவும் செய்வார். ‘‘இரண்டு மகன்களுக்குத் தாய் நான். அருகில் இருந்த யோகா மையத்திலும் காபி ஷாப்களிலும் நிறைய இளைஞர்கள் கவலையோடு இருப்பதைப் பார்த்தேன். எனக்கும் குழந்தைகள் அன்பு வேண்டும். அவர்களுக்கும் சாய்ந்துகொள்ள ஒரு தோள் வேண்டும். உடனே ‘நீட் எ மாம்’ நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஒரு கப் காபியிலேயே உங்கள் கவலைகளை மறக்கச் செய்யக் கூடிய ஆற்றல் என்னிடம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 6 பேர்களுக்கு அம்மாவாக இருந்து ஆதரவு அளிக்கிறேன். நான் இங்கே வருபவர்களின் வாழ்க்கை முறைகளை விமர்சிக்க மாட்டேன். அவர்களின் சகோதர, சகோதரிகளை ஒப்பிட மாட்டேன். மிக மோசமான பாதிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல மருத்துவரைப் பரிந்துரை செய்துவிடுவேன். மிக முக்கியமாக அவர்கள் விருப்பப்படி இருப்பதற்கு அனுமதிப்பேன். படம் பார்க்கும்போது சூப் கேட்டால் செய்து கொடுப்பேன். ஆனால் அவர்கள் துணிகளைத் துவைத்து தருவதோ, வேறு எந்த வேலையோ செய்ய மாட்டேன். ஏனென்றால் நான் அவர்களின் வேலைக்காரி அல்ல, அம்மா’’ என்கிறார் நீனா. காசிருந்தால் அம்மாவையும் வாங்க முடியும் இங்கே… http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அடடா-அற்புதமான-அப்பா/article7845148.ece
  3. 1 point
  4. 1 point
    சுரைக்காய் பணம், கிளிஞ்சல் காசு! அம்மா கடைக்குப் போய் ஏதாவது வாங்கச் சொன்னாலோ, பேருந்து, ரயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது டிக்கெட் வாங்கவோ, நொறுக்குத்தீனி வாங்கவோ வேண்டுமென்றால் என்ன வேண்டும்? காசு அல்லது பணம் வேண்டும் இல்லையா? பணம் என்றாலே அது காகித நோட்டாகவோ அல்லது சலசலக்கும் நாணயங்களாகவோ இருக்கும் என்றே நாம் நினைக்கிறோம். இன்றைக்குத்தான் பணம் அப்படி இருக்கிறது. ஆனால், காலங்காலமாகப் பணம் மாறி வந்த வடிவங்களைப் பற்றித் தேடினால், மிக ஆச்சரியமாக இருக்கிறது: l ஒரு காலத்தில் வட அமெரிக்காவில் உள்ள ஹைதி தீவில் காய்கறிகூட பணமாகக் கருதப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஹைதியில் இன்றைக்கும் 'கௌர்டு' என்றே பணம் அழைக்கப்படுகிறது. கௌர்டு என்றால் சுரைக்காய் என்று அர்த்தம். 1807-ம் ஆண்டில் ஹைதியின் ஆளுநராக ஹென்றி கிறிஸ்டோபே இருந்தார். அப்போது, அந்தத் தீவின் கடன் அடைக்க முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது. ஆனால், நாட்டில் சுரைக்காய் மட்டும் ஏகபோகமாக விளைந்தது. பார்த்தார் ஹென்றி, தீவில் விளைந்த ஒவ்வொரு சுரைக்காயும் அரசுக்குச் சொந்தம் என்று அறிவித்தார். அரசின் பணியாளர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று எல்லா சுரைக்காய்களையும் கொண்டுவந்தார்கள். 2.27 லட்சம் சுரைக்காய்களை அரசின் கஜானாவில் சேர்த்தார்கள். அதற்குப் பதிலாக விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ பணத்துக்கு ‘கௌர்டு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. l அமெரிக்காவின் சில பகுதிகளில் புகையிலையும், மான் தோலும் பணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மான் தோலுக்கு ஆங்கிலத்தில் ‘Buckskin' என்று பெயர். இன்றைக்கும் ஆங்கிலத்தில் பணம் ‘Bucks' என்று அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம். l மேற்கு பசிஃபிக் பெருங்கடலில் இருக்கும் மைக்ரோனேசிய தீவில் மிகப் பெரிய சுண்ணாம்புப் பாறைகள் உள்ளன. அவை வெட்டியெடுக்கப்பட்டு நாணயமாகச் செதுக்கப்பட்டு பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கின்றனவோ, அதற்கேற்ப மதிப்பு கூடும். 12 அடி சுற்றளவு கொண்ட நாணயங்கள்கூட இருந்திருக்கின்றன. தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்த வீட்டுக்கு வெளியிலேயே இந்தப் பிரம்மாண்டமான நாணயங்களைக் காட்சிக்கு வைத்திருப்பார்களாம். l பண்டைய காலத்தில் ஆழமற்ற பசிஃபிக், இந்தியக் கடற்கரைகளில் சின்னச் சின்ன சோழிகள் (கிளிஞ்சல்) கிடைத்துக்கொண்டிருந்தன. இந்த சோழிகளே மிகப் பரவலாகவும் மிக நீண்ட காலத்துக்கும் பணமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன. சீனாவில்தான் இந்தச் சோழிகள் முதலில் பணமாகப் பயன்படுத்தப்பட்டன. சீனாவின் சித்திர எழுத்தில் பணம் என்ற வார்த்தைக்கு சோழியே வரையப்படுகிறது. சீனா மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் 18-ம் நூற்றாண்டு வரை சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. l ஆஸ்திரேலியா பக்கத்தில் உள்ள ஃபிஜித் தீவில் திமிங்கிலத்தின் பல் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வெள்ளைப் பல்லைவிடச் சிவப்புப் பல்லுக்கு மதிப்பு ரொம்ப அதிகம். திமிங்கிலத்தின் பல் வரிசை ரம்பத்தைப் போலிருக்கும். அதிலிருந்து பற்கள் தனியாக உடைத்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. l ‘ஆப்லாங்’ எனப்படும் ஒட்டியிருக்கும் இரட்டைக் கிளி்ஞ்சல்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வெட்டி பட்டை தீட்டப்பட்டு, சிறுசிறு பாசிமணிகளாக மாற்றப்பட்டன. இப்படி உருமாறிய பிறகு, அதற்குப் பெயர் வாம்பம். அதற்கு வெள்ளை என்று அர்த்தம். வட அமெரிக்காவில் இருந்த செவ்விந்தியப் பழங்குடிகள் வாம்பம்மைப் பணமாகப் பயன்படுத்தியுள்ளனர். அது மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டதற்கு முக்கிய காரணம், அந்த வகை கிளிஞ்சல்கள் எளிதாகக் கிடைக்கவில்லை. அத்துடன் அவற்றைப் பாசிமணியாக மாற்றுவதும் கஷ்டமாக இருந்தது. பொதுவாக வெள்ளைநிறப் பாசிமணிகள் பயன்படுத்தப்பட்டாலும், அதைவிடவும் அரிதாக இருந்த கறுப்புக் கிளிஞ்சல் பாசிமணி இரட்டை மதிப்புடையதாகக் கருதப்பட்டது. ஒரு காலத்தில் வங்கியில் கடனை அடைக்கக்கூட இந்த கிளிஞ்சல் பாசிமணிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.