• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. கரும்பு

  கரும்பு

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   14

  • Content Count

   5,077


 2. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   9

  • Content Count

   85,545


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   28,303


 4. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   17,004Popular Content

Showing content with the highest reputation on 01/19/2016 in all areas

 1. 9 points
  அன்புகலந்த வணக்கம், யாழ் இணையத்துடன் தொடர்ந்து இணைந்து அவ்வப்போது எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்வேன். நன்றி!
 2. 2 points
  பிரித்தானியாவிற்கு ஓர் திடீர் பயணம் வந்தேன். கடந்த சில நாட்களாக கருத்தியல் வேறுபாடுகளிற்கு அப்பாற்பட்டு இடைஇடையேயாவது எனது தடங்களையும் யாழில் பதிக்கவேண்டும் என்று ஓர் ஆர்வம். மோகனின் புண்ணியத்தில் கைவிடப்பட்ட படகில் யாழ் எனும் கடலில் மீண்டும் சவாரி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒன்றும் வெட்டிப்புடுங்கவில்லை. பிரச்சனைகளின் ரூபங்கள் மாறியுள்ளன. எனக்குள்ளும் மாற்றங்கள். புதிய அனுபவங்களுடன் பயணங்கள் தொடர்கின்றன. கைத்தொலைபேசியில் தட்டித்தடவி இப்போது எழுதுகின்றேன். சமயம் வாய்க்கும்போது சற்று விரிவாக கருத்துக்களை பதிகின்றேன். நான் இங்கு எழுதாவிட்டாலும் கிழமையில் இரண்டு மூன்று தடவையாவது மேலோட்டமாக பார்வையிடுவது வழமை. உங்களைப்போலவே நானும் அலைகளின் ஓசை, அமைதி, ஆர்ப்பரிப்பு, சுனாமியின் தாக்கங்கள் என யாழில் நடைபெறும் பல விடயங்களையும் உணர்ந்து வந்துள்ளேன். நன்றி!
 3. 2 points
 4. 1 point
  இந்த திரியில் சமையல் தொடர்பான சந்தேகங்கள் தீர்வுகள் பற்றிய தகவல்களை இணைக்க உள்ளேன். மேலதிக சந்தேகங்கள் இருந்தால் சுவி அண்ணா.. (சமையல் கலை விற்பன்னர்) இடம் கேளுங்கோ அவர் விளக்கம் தருவார் என நம்புகிறேன். இப்ப கடியன் இல்லை என்ற துணிவில் ரென்சன் ஆகிற கேள்விகள் கேட்க கூடாது. இனியெல்லாம் ருசியே! - 1 புத்தம் புதிதாக சமையலில் இறங்குபவர்கள் மட்டுமல்ல... கரை கண்டவர்களும்கூட, 'சமையல், நன்றாக வர வேண்டுமே... சாப்பிடுபவர்கள் திருப்தியடைந்து, பாராட்ட வேண்டுமே...’ என்கிற அக்கறையுடன்தான் ஒவ்வொரு தடவையும் பார்த்துப் பார்த்து சமைப்போம். ஆனால், சில சமயங்களில் இது காலை வாரிவிடுவது உண்டு. 'அடடா... காரம் தூக்கலா இருக்கே?' என்பது போன்ற சங்கடங்களும்... 'ஹோட்டல்ல மட்டும் எப்படி முறுகலா, அழகா தோசை வார்த்தெடுக்கறாங்க?' என்பது போன்ற சந்தேகங்களும் அடிக்கடி எட்டிப் பார்க்கும். இதோ... உங்கள் சமையல் அற்புதமாக அமைவதற்கு உதவும் வகையில், உங்களின் சங்கடங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு விடை கொடுத்து விரட்டியடிக்கத் தயாராகிறார்கள்... நமக்கு மிகவும் பரிச்சயமான சமையல் கலை நிபுணர்கள்! ஓட்டலில் சுடுவதுபோல் கல்தோசை சுடுவது எப்படி? பச்சரிசியையும், உளுந்தையும் மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் போட்டு ஒன்றாகவே 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றிய பிறகு எண்ணெயை விட்டு தோசையைத் திருப்பிப் போட்டதும் லேசாக தோசையின் மீது தண்ணீர் தெளித்து, உடனே மறுபடியும் திருப்பிப் போட்டு கல்லிலிருந்து எடுத்துவிடவும். இட்லி 'புஸ்புஸ்’ என்று, அதேசமயம் சாஃப்ட்டாக வர என்ன செய்ய வேண்டும்? உளுந்து அரைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்ச மாக நீர் ஊற்றி பொங்க பொங்க அரைக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம், 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த£ல்... இட்லி சூப்பராக வரும். ஆப்பம் மிருதுவாக வர, என்ன வழி? புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி தலா ஒரு ஆழாக்கு, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து... அரைக்கும்போது தேங்காய் துருவல் ஒரு கப், வெந்த சாதம் ஒரு கரண்டி சேர்த்து அரைத்து சுட்டால்... ஆப்பம் சூப்பரப்பு! சப்பாத்தி சுடுவதற்கும், தோசை சுடுவதற்கும் தனித்தனி தோசைக்கல்லை பயன்படுத்த வேண்டுமா? ஆம்... அவ்வாறு செய்வது நல்லது. அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.. பூரி உப்பி வர... யோசனை கூறுங்களேன்... மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவை பூரியாக செய்தால்... உப்பலான பூரி சமர்த்தாக உங்கள் தட்டில் 'ஹாய்’ சொல்லும். பிள்ளைகளை பசலைக் கீரை சாப்பிட வைப்பது எப்படி? வதக்கிய பசலைக் கீரையுடன் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவோடு சேர்த்துப் பிசைந்து சப்பாத்தியாக சுட்டு, சாஸ் உடன் பரிமாறினால்.. தட்டு 'சட்’டென்று காலியாகிவிடும். வடை மாவு சரியான பதத்தில் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? அரைத்த மாவை கொஞ்சம் கிள்ளி, ஒரு கிண்ணத்திலுள்ள தண்ணீரில் போடவும். மாவு தண்ணீரில் மிதந்தால்... சரியான பதம். மிகவும் தண்ணீராக அரைத் திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும். கெட்டியாக அரைத் திருந்தால்... தண்ணீரில் மூழ்கி விடும்! தயிர் கெட்டியாக கிடைக்க, வழி என்ன? பாலை சுண்டக் காய்ச்சுங்கள். ஆறவிடும்போது... வெதுவெதுப்பான சூட்டுக்கு வந்ததும், ஒரு துளி மோர்விட்டு, 4, 5 முறை நன்கு ஆற்றி (காபிக்கு ஆற்றுவதுபோல) மண்சட்டியில் தோய்க்க... நல்ல கெட்டித் தயிர் கிடைக்கும். கூட்டு நல்ல சுவையில் இருக்க என்ன செய்ய வேண்டும்? எந்த வகை கூட்டு செய்தாலும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 2 பச்சை மிளகாய், கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்துக் கலக்கினால், கூட்டு... செம டேஸ்ட்டு! மோர்க்குழம்பு திக்காக வர, உபாயம் சொல்லுங்கள்... மோர்க்குழம்புக்கு அரைக்கும் பொருட்களோடு பச்சைக் கடுகு ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டித் தயிரில் போட்டு, சின்ன வெங்காயம் 4, பூண்டு 2 பல் இரண்டையும் சற்று கரகரப்பாக அரைத்துச் சேர்க்கவும். இதனுடன் கடுகு, மிளகு, கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து, 2 முறை நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி 2, 3 முறை ஆற்றவும் (காபிக்கு ஆற்றுவது போல). இப்படிச் செய்தால், மோர்க்குழம்பு திக்காக இருக்கும். அதிக நேரம் அடுப்பில் வைத்தால் நீர்த்துப் போய்விடும். http://www.vikatan.com
 5. 1 point
  ஆஸ்திரேலிய ஒபன்: வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி வீனஸ் வில்லியம்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ். முதன் முதலாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வதான அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸின் கனவை பிரிட்டன் வீராங்கனை ஜொஹானா கொன்ட்டா முறியடித்தார். முதல் சுற்றிலேயே ஒற்றையர் ஆட்டத்தில் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ், இவருக்கு வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது. 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ், 2015-ல் 3 டபிள்யூ.டி.ஏ ஒற்றையர் பட்டங்களை வென்றதன் மூலம் மீண்டும் டாப்-10-ற்குள் வந்ததோடு, 2015-ன் சிறந்த மீண்டெழுந்த வீராங்கனை என்ற புகழையும் பெற்றார். இவர் வெல்லாத பட்டம் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டமாகும். இந்நிலையில் ராட் லேவர் அரங்கில் நடைபெற்ற இந்த முதல் சுற்றுப் போட்டியில் 79 நிமிடங்களில் தோற்று வெளியேறினார் வீனஸ். 2-வது செட்டில் ஒரு கணத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் வீனஸ். அதாவது 5-0 என்பதிலிருந்து 5-2 என்பது வரை வந்தார். ஆனால் இது தோல்வியை தாமதப்படுத்தியதே தவிர தவிக்க முடியவில்லை. ஒரு ஷாட்டை வலையில் வீனஸ் அடிக்க, ஜொஹன்னா வெற்றி பெற்றார். http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article8123462.ece
 6. 1 point
  இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இலங்கை வல்வெட்டித்தறையை சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மாநிலங்கள் அளவில் சென்னை வேளாச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்றபோட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் 9 வயதுக்குற்பட்ட 50M Buterfly நீச்சலினை 39 வினாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார். அத்தோடு இதற்கு முன்னரும் பல முறை நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி மூலம் :- http://www.vvtuk.com/archives/148700
 7. 1 point
  யாயினியின் 73 ஆவது பக்கம் உங்களை அன்போடு வர வேற்கின்றது!!! yayini's 73
 8. 1 point
  நன்றி நெடுக்காலபோவான். நன்றி வாத்தியார். நன்றி வாலி. நன்றி பகலவன். நன்றி சகாறா அக்கா. நன்றி குருஜி. நன்றி குமாரசாமி அண்ணா. நன்றி புங்கையூரன். நன்றி ஈழப்பிரியன் அண்ணா. எனது சுகங்கள் ஓரளவு பரவாயில்லை. எதிர்காலத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் எனும் எதிர்பார்ப்புடன் வாழ்க்கை ஓடுகின்றது. நன்றி கறுப்பி. நன்றி சுவைப்பிரியன். தொலைந்த‌ படகை மீட்டுத்தந்த மோகனுக்கும் மிக்க நன்றி.
 9. 1 point
  செல்ஃபி புள்ள சமந்தா
 10. 1 point
 11. 1 point
  நான் அப்போது அகதியாய் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில கொக்குவிலில இருந்தன். அது போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்த காலம். அன்று ஒரு நாள் பிரவுன் வீதியால யாழ்நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில போய்க்கொண்டு இருக்கேக்க எதிராக இன்னுமோர் துவிச்சக்கரவண்டியில சென்ற ஒருத்தன் திடீரெண்டு என்ர பெயரைச் சொல்லி கூப்பிட்டான். நானும் ஆச்சரியப்பட்டு யார் என்று திரும்பிப் பார்த்தன். அது எனது பழைய நண்பன். முந்தி பாடசாலைக்கு நாங்கள் இரண்டுபேரும் ஒன்றாய் போவம். வகுப்பிலையும் பக்கத்தில பக்கத்திலதான் இருக்கிறது. ஆரம்பத்தில அவன் எனக்கு உயிர் நண்பன் மாதிரி. ஆனால்.. நாங்கள் நாலாம் வகுப்பு படிக்கேக்க இரண்டுபேருக்கும் ஒரு சண்டை. அவன் எனக்கு அடிச்சுப்போட்டான். அதுக்கு பிறகு நாங்கள் ஆளோட ஆள் இரண்டு வருசமாய் கதைக்கிறது இல்லை. பிறகு எப்படியோ மீண்டும் நல்ல நண்பர் ஆகினம். திரும்பவும் எட்டாம் வகுப்பில மீண்டும் இரண்டு பேருக்கும் சண்டை. அவனுக்கு மூக்கில அடிச்சால் சரியான கோவம் வரும். ஏதோ பிரச்சனையில எனக்கு அடிச்சான். நானும் திருப்பி அடிச்சன். அப்ப அவனுக்கு நான் மூக்கில குத்திப்போட்டன். அதுக்கு பிறகு பல வருசங்கள் கடந்து, இன்று அவன் என்ரை பெயரை சொல்லிக்கூப்பிடும் வரைக்கும் நாங்கள் இரண்டுபேரும் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கிறது இல்லை. பழைய கோபம், நாங்கள் பெரிய கோவக்காரர் என்று எல்லாம் இல்லை. இருவருமே நாங்கள் செய்த தவறுக்காய் வருந்தினம். மீண்டும் நண்பர்களாய் இருக்க உள்ளார விரும்பினம். ஆனாலும், யார் முதலில கதைச்சு நேசம் போடுறது எண்டு ஒரு பிரச்சனை, வெக்கம் வேற. இதனால நட்பை சின்னனில மீண்டும் புதுப்பிக்க முடிய இல்லை. சரி அப்ப என்ன என்றால்... நான் எட்டாம் வகுப்பு முடிய இஞ்சால யாழ் நகரத்து பள்ளிக்கூடம் ஒன்றுக்கு மாற்றலாகி வந்திட்டன். அவன் படிப்புக்கு கொஞ்சம், கொஞ்சமாய் முழுக்கு போட்டுட்டு கூலி வேலை செய்கிறதில அதிக ஈடுபாடு காட்டத்தொடங்கினான். அவன் படிப்பில நல்ல கெட்டிக்காரன். ஆனால், வீட்டில வறுமை. அவன் சிறுவயதில இருந்தே கூலி வேலைகளுக்கு போறது. இப்படி நிலமை இருக்கேக்க.. கொஞ்சக்காலத்தால இவனும் இயக்கத்துக்கு போயிட்டான் என்று ஊர்ப்பெடியங்கள் எனக்கு சொன்னாங்கள். அங்கை என்ன செய்கிறான் என்று ஒரு தகவலும் தெரியாது. எங்கை இருக்கிறான் என்றும் தெரியாது. அவன் இயக்கத்துக்கு போனபிறகு இண்டைக்குத்தான் திரும்பவும் காணுறன். "டேய், எப்பிடி மச்சான் சுகங்கள்" என்று தான் இப்ப இயக்கத்தில இருக்கிற விசயம் முதற்கொண்டு எல்லாம் சொல்லி, என்னை பற்றி, மற்றைய நண்பர்கள், ஊர் ஆக்கள் எல்லார் பற்றியும் விசாரிச்சு, எனது வீட்டு முகவரியையும் கேட்டு சென்றான். அவன் ஒரு காலில பெரியதொரு காயம். கட்டுப் போடப்பட்டு இருந்திச்சிது. கெந்திக்கெந்தித்தான் நடப்பான். இன்னொரு பெடியன் அவனை துவிச்சக்கரவண்டியில ஏத்திவந்தான். அன்றைக்கு சுமார் கால் மணித்தியாலம் தெருவிலையே ஓரமாய் நின்று கதைச்சுப்போட்டு போயிட்டம். சில கிழமைகளின் பின்னர் அவன் தனியாக என்ர வீட்டுக்கு வந்தான். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சொச்சம் என்னோட பல்வேறு விசயங்கள் பற்றி மனம் திறந்து கதைச்சான். பிறகு மீண்டும் வந்தான். அடிக்கடி வந்தான். மணித்தியாலக்கணக்கில என்னோட கதைச்சு தனது மனச்சுமைகளை இறக்கிக்கொண்டான். தான் கெதியில இயக்கத்தை விடப்போவதாய் சொன்னான். என்னை மாதிரி தானும் படிச்சு நல்லாய் வரவேணும் எண்டு ஆசைப்படுவதாய் சொன்னான். என்னட்ட படிக்கிறதுக்கு உதவிகள் கேட்டான். நான் பல்கலைக்கழகத்துக்கு அருகில இருந்த ஓர் மடத்தில கிழமையில சில நாட்கள் விஞ்ஞானம், கணிதம் பாடங்களை படிப்பிச்சு அவன் ஆசை பூர்த்தி செய்யப்படுகிறதுக்கு என்னால முடியுமான உதவிகளை செய்தன். கடைசியில அவன் இயக்கத்தில இருந்துகொண்டே ஒரு மாதிரி க.பொ.சா சோதனை தேர்ச்சி பெற்றுட்டான். பிறகு க.பொ.உயர்தரம் உயிரியல் படிக்கத் தொடங்கினான். எனது இன்னோர் நண்பனிண்ட அப்பா ஓர் இரசாயனவியல் ஆசிரியர். என்னைப்போலவே எனது மற்றைய நண்பன், அவன் அப்பா, அவன் குடும்பத்தினர் அனைவருமே அவனுக்கு தங்களாலான உதவிகள் செய்வதாய் சொன்னார்கள், செய்தார்கள். இவன் படிக்கிற விசயங்கள், இவன் இயக்கத்தை விடப்போற விசயங்களும் எங்களை தவிர வேற ஒருவருக்கும் தெரியாது. இவன் அப்போது இயக்கத்தில மருத்துவ துறையில முக்கியமான பொறுப்பில இருந்தான். இவனுக்கு இயக்கத்தில இருந்த அதிகாரங்கள் காரணமாய் இரகசியமாக இவனால படிக்ககூடியதாய் இருந்திச்சிது, அத்தோட விருப்பமான நேரங்களில எங்களிட்டை சுதந்திரமாய் வந்துபோகக்கூடியதாயும் இருந்திச்சிது. நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளிக்கிட்ட பிறகு அவன் என்ன ஆனான் என்று தெரியாது, அவன் தொடர்பும் ஒன்றும் இல்லை. அவன் இப்ப எங்க இருக்கிறான், உயிரோட இருக்கிறானோ என்றும் தெரியாது. தான் இயக்கத்தைவிட்டு விலகியபின் தொடர்ந்து படிச்சு ஓர் மருத்துவராக வரவேணும் என்று அவன் ஆசைப்பட்டுக்கொண்டு இருந்தான். தான் ஏற்கனவே ஐந்து வருசங்களுக்கு மேல இயக்கத்தில பணியாற்றி இருக்கிறதால இயக்கத்தை விட்டு விலகுறது கடினமாக இருக்காது என்று எனக்கு சொன்னான். ஆனாலும், இயக்கத்தை விட்டு விலகப்போவதாய் கடிதம் கொடுக்கேக்க அப்போது அவ்வாறான போராளிகளுக்கு வழமையாக கொடுக்கப்படுகிற தண்டனையான (punishment) ஆறுமாதம் கோட்டையில சுவர் இடிக்கிற வேலையை தான் செய்ய ஆயத்தமாய் இருக்கிறதாய் அவன் சொன்னான். சரி இவன் இயக்கத்தில என்ன என்ன வேலை செய்துகொண்டு இருந்தான்? அவன் எனக்கு சொன்ன விசயங்கள் எவை? இவனது உள்ளுணர்வுகள் எவை? இவன் இயக்கத்துக்கு போனதுக்கு பின்னால வறுமை ஓர் மிக முக்கிய காரணம். இவன் படிப்பில நல்ல கெட்டிக்காரன். ஆனால் வறுமை காரணமாய் கல்வியை தொடர முடிய இல்லை. ஆனால் இயக்கமோ அங்கு சேர்ந்தபிறகு இவனது திறமைகளை, கல்வியில இவனுக்கு இருக்கிற ஆர்வத்தை கண்டு கொண்டிச்சிது. இவன் இப்போது இயக்கத்தில மருத்துவராக இருந்தான். யாழ்ப்பாணம் தொடக்கம் மன்னார் வரை நடைபெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களின்போது இவன் மருத்துவராக பணியாற்றிக்கொண்டு இருந்தான். அவன் உண்மையில மருத்துவன். ஆனாலும் அவனுக்கு பல்கலைக்கழகம் போய் மருத்துவனாக வரவேணும் என்று ஆசைப்பட்டான். தாக்குதல்கள் நடைபெறும்போது எப்படி போராளிகள் காயப்பட்டு வருவார்கள், எப்படி அவர்களுக்கு சிகிச்சை கொடுக்கப்படும் என்பவை பற்றி சொன்னான். ஒரு முறை மன்னாரில ஒரு தாக்குதல் நடைபெற்றிச்சிதாம். நல்லாய் மழை பெய்துகொண்டு இருக்கேக்க வெள்ளம் அடிக்க... அந்த வெள்ளத்தில பதினைந்து, இருபது காயப்பட்ட போராளிகளை தான் தனிய நின்று காப்பாற்றவேண்டி இருந்திச்சிது என்று சொன்னான். அவையிண்ட காயங்களில இருந்து வாற இரத்தம் வெள்ளத்தில கலந்து அந்த இடமே இரத்தமாய், இரத்த வெள்ளமாய் இருந்ததாய் சொன்னான். "அண்ணை என்னைப்பாருங்கோ அண்னை என்னைப்பாருங்கோ" என்று காயப்பட்டவர்கள் வேதனையில கெஞ்சிக்கெஞ்சி முணகல் செய்வதுகொண்டு, ஆக்களிண்ட உடல் உறுப்புக்களை நூலினால வெட்டி அகற்றுவது, அட இவனா அட இவனா என்று இறந்த போராளியின் உடலை முதலாவதாய் பார்த்து அதிர்ச்சி அடைகிற மரணங்கள் வரை சகல சம்பவங்களையும் பற்றி விபரிச்சான். நான் கேட்டன் காலை கையை எப்படி நீக்குவீங்கள், அவையுக்கு நோகாதோ என்று.. அவன் சொன்னான்... "எங்களுக்கு ஊசியால சும்மா குத்தினாவே எப்பிடி கத்துவம்..! உயிரோட இருக்கிற ஒருத்தனிண்ட கையை காலை அவன் பார்த்துக்கொண்டு இருக்கேக்கையே நாங்கள் வெட்டி அகற்றினால் எப்பிடி அவனுக்கு இருக்கும்?" எனது நண்பன் ஒருத்தன் உயிர்நீத்த தாக்குதலிலையும் இவன்தான் மருத்துவராக பணியாற்றி இருந்ததாய் சொன்னான். அந்த நண்பன் இடுப்பு அடியில ஷெல் பட்டு இரத்தப்போக்கு காரணமாய் மரணித்து இருந்தான். அந்த நண்பன் இவனோட நல்லாய் பழகி இவனுக்கும் ஏற்கனவே நல்ல நண்பனாய் இருந்ததாய் சொன்னான். இயக்கத்தில இருக்கிற சகலருமே தன்னோட பரிவுடன் இருந்ததாய் சொன்னான். ஏன் என்றால், அவர்கள் எல்லாருக்கும் தெரியும் இவனே அவர்கள் காயப்படும் நேரங்களில அவர்களை காப்பாற்ற வேணுமாம் என்று. எனது அந்த நண்பன் கண்ணை மூடிக்கொண்டு சப்பாணி கட்டிக்கொண்டு இருந்ததாயும், தான் அவன் காயப்பட்டதை பார்த்து உடனடியாய் அவனை வாகனத்தில ஏற்றி அனுப்பி வைத்ததாயும் ஆனால் அவன் இரத்தப்போக்கு காரணமாய் வைத்தியசாலையில உயிர்நீத்ததாயும் சொன்னான். வேறு என்ன சொன்னான்? தாங்கள் அழைக்கப்பட்டு தலைவர் தங்களுடன் உரையாடுவதாய் சொன்னான். தாங்கள் சுற்றிவர இருக்க.. தலைவர் பல்வேறு விசயங்கள் பற்றி பேசுவார் என்று கூறினான். ஏதாவது தாக்குதல் சம்பவத்துக்கு மருத்துவ பணியாற்ற அவனை கூட்டிக்கொண்டு போகும்போது அவனை "உடன இப்ப வா" என்று சொல்லி கூட்டிக்கொண்டு போவீனம். வேறு எதுவித தகவலும் கூறப்படுவது இல்லை. அங்கை போனபிறகுதான் எந்த இடத்தில நிக்கிறன் என்று தெரியும் என்று சொன்னான். தாக்குதல்கள் முடிந்ததும் தாங்கள் காயப்பட்ட, இறந்த போராளிகள், ஆயுதங்களை தூக்கிக்கொண்டு நடக்கவேணும் என்று சொன்னான். அப்போது விரைவாக நடக்காத ஆக்களுக்கு பெரிய பொல்லினால மாடுகளுக்கு அடிக்கிறது போல அடி விழும் என்று சொன்னான். நான் கேட்டன் களைப்பு நடக்க கடினம் என்றால் என்ன செய்வாய் என்று.. அவன் சொன்னான்.. "மாடு வண்டில் இழுக்கேக்க.. அது களைச்சுப்போய் ஏலாமல் இருந்தாலும் மாட்டிண்ட முதுகில பிரம்பால அடி விழேக்க மாடு என்ன செய்யும்?" சரி, தமிழீழம்.. அடிபட்டு தமிழீழம் அமைக்க முடியுமா என்று கேட்டன். என்னை வடிவாய் முறைச்சுப்பார்த்தான், கொஞ்ச நேரம் யோசிச்சான். "இல்லை" என்று சொன்னான். அரசியல் தீர்வு ஏதாச்சும் வந்தால் ஒழிய அடிபாடு மூலம் ஒரு தீர்வு வரப்போவது இல்லை என்று அவன் தெளிவாய் சொன்னான். தாங்கள் மாதக்கணக்கில காப்பரண்களில படுத்து எழும்புவதாயும், பல்லு மினுக்கவே, முகம் கழுவவே, உடுப்பு மாத்தவே சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது இல்லை என்றும் ஆனால்.. ஒன்று இரண்டு நாள் விடுமுறை கிடைக்கேக்க.. நல்லூர் கோயில் பக்கம் போனால் தனக்கு சரியான ஆத்திரமாய் இருக்கும் என்றும் சொன்னான். நாங்கள் முழுவிசரன்கள் மாதிரி வாழுற அதேசமயம்.. இஞ்ச ஆக்கள் நல்லாய் உடுத்து, முசுப்பாத்திகள் செய்து, கலகலப்பாய் இருக்கிறதை பார்க்க தங்களுக்கு பத்திக்கொண்டு வரும் என்று சொன்னான். "நாங்கள் போராடி மாயுறம், நீங்கள் சந்தோசமாய் இருங்கோ." சண்டை நடைபெறேக்க... யார் என்ன ஆயுதம் பாவிக்கிறீனமோ அந்த ஆயுதத்தாலதான் அவையள் சாவீனம் என்று சொன்னான். "ஏகே47 பாவிக்கிற போராளிக்கு ஏகே47 சன்னம் துளைக்கும்." தான் ஒரு தடவை மாவட்ட பொறுப்பாளர் ஒருவருடன் நடந்து சென்றபோது ஓர் ஷெல் வந்து வீழ்ந்ததாயும், அதில தன்னோட வந்த மாவட்ட பொறுப்பாளர் உட்பட அனைவரும் இறந்ததாகவும் தான் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியதாயும் கூறினான். "கடவுள் நான் வாழவேணும் என்று என்னை விட்டு வச்சு இருக்கிறார் போல!" அவன் மிக நன்றாக யோகாசனம் செய்வான். யாழ்ப்பாணத்தில யோகாசன வகுப்புக்களுக்கு சென்று வந்தான். ஒவ்வொரு நாளும் காலை நான்கு அரைக்கு நித்திரையால எழும்பி சுமார் ஒரு மணித்தியாலம் யோகாசனம், தியானம் செய்வதாய் சொன்னான். தவிர, வயலினும் கற்று வந்தான். போராளிகளுக்கு மாதா மாதம் சிறு தொகை வைப்பில இடப்படும் என்றும், காசு சேர்ந்ததும் விருப்பமான பொருளை கேட்கும்போது இயக்கம் வாங்கிக்கொடுக்கும் என்றும் சொன்னான். இந்த வகையில தான் வயலின் வாங்கினதாய் சொன்னான். ஒரு தடவை இவனோட சண்டை செய்த ஓர் சக போராளி மரணம் அடைஞ்சுவிட்டதாயும், உடலை தாங்கள் எடுக்க முடிய இல்லை என்றும் தாக்குதல், நிலமை மிகவும் அகோரமாய் இருந்ததாயும் ஆனால்.. போராளியின் உடல் மீட்கப்படாதது கண்டு பொறுப்பாளர் சீற்றம் அடைஞ்சதாகவும், பின்னர் இதர போராளிகள் வந்து இப்படி சொல்ல "மச்சான் நீ இண்டைக்கு துளைஞ்சாய், நீதான் உடம்பை எடுக்கவேணுமாம், பொறுப்பாளர் உன்னை வரட்டாம்".. பின்னர் சுமார் இருபது அடி தூரத்தில இராணுவம் நிற்க மண்ணோடு மண்ணாக புதரோடு புதராக உருண்டு சென்று அந்த போராளியிண்ட உடலுக்கு கிட்டவாக சென்றதாகவும்.. குடல் முழுவதும் பிய்ந்து கொத்தாய் வெளிய இருந்ததாகவும் அதை தூக்கி திரும்பவும் உள்ளுக்கை போட்டபின்னர், உடலத்தின் தலைமயிரை பிடித்து மெல்ல மெல்ல இழுத்து தமது பகுதிக்கு கொண்டு வந்ததாகவும் கூறினான். தான் அப்போது எப்படி உயிர் தப்பினன் என்று தனக்கு தெரியாது ஆச்சரியமாய் இருக்கிது என்றான். மற்றைய போராளிகள் இவன் தற்போது பொறுப்பாளராக இருந்தும் எதுவித மாற்றமும் காட்டாது சாதாரண உடைகளை அணிந்துகொண்டு துவிச்சக்கரவண்டியில போய்வருவது கண்டு ஆச்சரியப்படுவதாகவும், தன்னிடம் ஏன் இப்படி விசறன் மாதிரி இருக்கிறாய் என்று கேட்பதாகவும் சொன்னான். தனது நிலைக்கு தான் நல்லதொரு வாகனத்தை தனது தேவைக்கு இயக்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும், நன்றாக உடையணிந்து அதிகாரத்துடன் போய்வர முடியும், காதலிக்க முடியும், திருமணம் செய்ய முடியும் என்றும்.. அத்தோட ஓர் பெண் போராளி தன்னை முன்னும் பின்னும் துரத்தி காதல் செய்வதாகவும்.. ஆனால் தான் அப்படி செய்வது இல்லை என்றும்.. தனக்கு அப்பிடி செய்வதில விருப்பம் இல்லை என்றும் சொன்னான். ஏன் என்றால்.. இப்படி கூறினான்; "என்ரை இலக்கு அது இல்லைத்தானே. நான் நினைச்சால் இயக்கத்தில இன்னமும் பெரிய ஆளாய் வரலாம். அடுத்த *** பொறுப்பாளர் நான் என்று எனக்கு பயிற்சி நடக்கிது. இப்ப இருக்கிறவர் சொல்லிப்போட்டார் நான் செத்த பிறகு இனி நீதான் பொறுப்பாளர், உனக்கு எல்லாம் இப்பவே பழக்கவேணும் எண்டு. ஆனால்.. நான் அவருக்கு ஒத்துழைக்கிறது இல்லை. எனக்கு விருப்பம் இல்லை எண்டு சொல்லிப்போட்டன். நான் அப்பிடி வரப்போறதும் இல்லை. நான் உங்களை மாதிரி படிக்கவேணும். ஒரு டொக்டராய் வரவேணும்..."
 12. 1 point
  தக்காளி சட்னி தேவையானவை: தக்காளி - 5 சின்ன வெங்காயம் - 10 காய்ந்த மிளகாய் - 8 உப்பு - தே.அளவு கடுகு - அரை டீஸ்பூன் உளுந்து - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் - 1 சிட்டிகை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தக்காளியுடன் மிளகாயை அரைத்தால் திப்பி திப்பியாக வரும். இத்துடன் தக்காளியை சேர்த்து அரைத்து பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்திருக்கும் தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாசனை போக லேசாக வதக்கவும். கொதி வந்தது, பெருங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கி பரிமாறவும்.
 13. 1 point
  ஆஸி.ஓபன்: வெர்டாஸ்கோவின் அபார ஆட்டத்தில் நடால் தோல்வியடைந்து வெளியேற்றம் 5 செட்கள் போராடி தோல்வி தழுவிய நடால் சக ஸ்பெயின் வீரர் வெர்டாஸ்கோவுக்கு கை கொடுக்கிறார். | படம்: ராய்ட்டர்ஸ். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலேயே ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். ஸ்பெயினைச் சேர்ந்த மற்றொரு இடது கை வீரர் ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோ, நடாலை 7-6, 4-6, 3-6, 7-6, 6-2 என்ற செட்களில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு அடியெடுத்து வைத்தார். ராட் லேவர் அரங்கில் இத்தகைய பவர் டென்னிஸை கண்டதில்லை என்றே டென்னிஸ் நிபுணர்கள் இந்தப் போட்டியைப் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றில் நடால் வெளியேறுவது இதுவே முதல் முறை. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் இது நடாலுக்கு 2-ம் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 4 மணி 41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் வெர்டாஸ்கோ 90 வின்னர்களை அடித்தார். கடைசி 6 கேம்களை வென்று நடாலை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார். வெர்டாஸ்கோவுக்கு எதிராக நடால் 14-2 என்ற வெற்றி விகிதத்தை வைத்துள்ளார். ஆனால் இன்று குறிப்பாக 5-வது செட்டில் வெர்டாஸ்கோவுக்கு தொட்டதெல்லம் துலங்கியது என்றே கூற வேண்டும், ஏனெனில் 5-வது செட்டில் நடால் 2-0 என்று முன்னிலை வகித்தார், ஆனால் அதன் பிறகு வெர்டாஸ்கோவின் தொடர் வின்னர்களுக்கு முன்னால் நடால் ஒன்றும் செய்ய முடியாமல் திணறினார். மேலும் வெர்டாஸ்கோ 20 ஏஸ் சர்வ்களை அடித்தார். சர்வ்களை திருப்பி அடிப்பதில் 10 வின்னர்களையும், இருவரும் மாறி மாறி அடிக்கும் ரேலியில் 57 வின்னர்களையும் வெர்டாஸ்கோ பெற்றார். நடாலை 54 முறை தவறிழைக்கச் செய்தார் வெர்டாஸ்கோ. குறிப்பாக நடாலின் ஃபோர்ஹேண்டை குறிவைத்து சக்தி வாய்ந்த ஷாட்களை ஆடினார் வெர்டாஸ்கோ. இதில் ஃபோர்ஹேண்ட் ஷாட்களில் மட்டும் 37 தவறுகளை நடால் செய்ததாக ஆட்ட விவரம் கூறுகிறது. முதல் செட்டில் 6-6 என்று சமநிலை வகித்த போது நடால் தன் சர்வில் இரட்டைத் தவறுகளைச் செய்தார் இதனால் முதல்செட்டை டை பிரேக்கரில் கைப்பற்றினார் வெர்டாஸ்கோ. அடுத்த 2 செட்களில் நடால் எழுச்சியுற்றார். இதில் பல சுவாரசியமான ராலியில் நடால் அபாரமாக ஆடி எழுச்சியுற்றார். இதனால் நடால் தோற்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. ஆனால் 4-வது செட் மீண்டும் டைபிரேக்கருக்குச் சென்ற போது தனது சக்தி வாய்ந்த ஃபோர்ஹேண்ட் ஷாட்களினால் நடாலை நிலைகுலையச் செய்து 7-4 என்ற சர்வ் கணக்கில் 4-வது செட்டை 7-6 என்று கைப்பற்றினார் வெர்டாஸ்கோ. 5-வது செட்டில் வெர்டாஸ்கோவின் சர்வை முறியடித்து 2-0 என்று முன்னிலை வகித்தார் நடால். ஆனால் அதன் பிறகு நடாலின் 2 சர்வ்களை பிரேக் செய்த வெர்டாஸ்கோ தன் சர்வை விட்டுக் கொடுக்காமல் நடாலை திணறச் செய்து அபார வெற்றி பெற்றார். 5-வது செட்டில் வெர்டாஸ்கோவின் ஆட்டம் வேறு ஒரு நிலைக்கு உயர்ந்தது. இந்த வெற்றி மூலம் 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார் வெர்டாஸ்கோ. http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article8123822.ece?homepage=true
 14. 1 point
  தோனி நிச்சயம் வெற்றிப்பாதைக்கு திரும்புவார்: மைக் ஹஸ்ஸி ஆதரவுக்கரம் தோனி தன்னால் முடியவில்லை என்ற மனநிலைக்கு வந்தால் நிச்சயம் ஆட்டத்தை கைவிடுவார் ஆனால் அவரால் இன்னமும் பங்களிப்பு செய்ய முடியும்-ஹஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். 'வீரர்களின் அழுத்தத்தைக் குறைத்து அவர்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும் ஆச்சரியமிக்க திறன் கொண்டவர் தோனி' என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் சென்னை அணியில் தோனியின் கீழ் ஆடியவருமான மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்ற மைக் ஹஸ்ஸி, மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படுவதற்கேற்ப தனது 40 வயதிலும் பிக்பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணியை வழி நடத்திச் சென்று அரையிறுதிக்குள் நுழையச் செய்துள்ளார். மெல்போர்னில் இந்தியா தொடரை இழந்த அன்று தனது பயிற்சியாளர் அனுபவம், தோனியின் திறன் என்று பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டியிலிருந்து ஒருசில துளிகள்: தென் ஆப்பிரிக்க அனுபவம் குறித்து... பல்வேறு பண்பாடுகள் தங்கள் கிரிக்கெட் ஆட்டம் குறித்து வைத்துள்ள கருத்துகள், பார்வைகள் எனக்கு புது அனுபவமாக இருந்தன. அவர்கள் ஓய்வறையைப் பார்க்க வேண்டும், பல்வேறு மதத்தினர், நிறங்கள், மொழிகள் உடையவர்கள். முஸ்லிம்கள், கிறித்துவர்கள், வெள்ளையின வீரர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இருந்தாலும் அனைவருக்கிடையேயும் பரஸ்பர மரியாதை உள்ளது. ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் கொஞ்சம் இப்போது இத்தகைய நிலை உள்ளது, உஸ்மான் கவாஜா ஒரு பாகிஸ்தானியர், சில இந்திய வம்சாவளியினரையும் காண்கிறோம். ஆனால் இந்தவிதத்தில் தென் ஆப்பிரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக நான் பல்வேறு பண்பாடுகளின் சங்கமத்தை இப்போதுதான் ஒரே ஓய்வறையில் காண்கிறேன், இது எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. ஐபிஎல்... இந்த நிலையில் ஏலத்தில் உள்ளேன், நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நினைக்கிறேன், இல்லையெனில் வீட்டில் இருப்பேன், எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் எனக்கு நிறைய நண்பர்கள் உருவானார்கள், ரசிகர்களிடமும் நெருக்கமானேன். சென்னையில் நிறைய நேரம் செலவிட்டுள்ளேன். குடும்பத்தில் ஒருவராகவே நான் கருதப்பட்டேன். 2 ஆண்டுகளுக்கு சென்னை அணி இல்லையென்பது வெட்கக் கேடானது. ஆனால் அது அப்படித்தான்... தோனி பற்றி... அவர் ஏன் சிறந்த கேப்டன் என்பது இதனால்தான்... இந்தியா ஒரு கிரிக்கெட் பைத்திய நாடு. வீரர்கள் கடுமையாக விளையாடுகின்றனர், எப்போதும் நன்றாக ஆட முயற்சி செய்கின்றனர், சில வேளைகளில் கடுமையாக முயற்சி செய்வதே பின்னடைவையும், மோசமான தன்மையையும் ஏற்படுத்திவிடும். இதனால் கேப்டன் தன் மீது அதிக அழுத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ரசிகர்களும் ஊடகங்களும் வீரர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கிறது. தோனியின் மிகப்பெரிய திறமை என்னவெனில் வீரர்களை அவர் ரிலாக்சாக வைத்துள்ளார், அழுத்தத்தை அவர்களிடமிருந்து நீக்க முயற்சி செய்கிறார். வீரர்கள் களத்தில் மகிழ்ச்சியுடன் ஆடுவதை அவர் உறுதி செய்கிறார். இதனால்தான் அனைத்து வீரர்களையும் அனைத்து காலங்களிலும் அவர் கவர்ந்திழுக்கிறார். இது அவருடைய மிகப்பெரிய பலமாகும். அதுவும் குறிப்பாக இந்தியாவில், ஏனெனில் இங்கு டென்ஷன், மன அழுத்தம் அதிகம் எப்போதும் வீரர்கள் மீதான கவனம் அதிகமுள்ள இடம். அணியில் தோனியின் இடம்பற்றிய கேள்வி... தோனி ஒரு நேர்மையான வீரர். அதாவது தனது பணிக்கு தான் இனி சரிப்பட்டு வர மாட்டோம் என்று தெரிந்தால், அவரால் பங்களிப்பு செய்ய முடியவில்லை என்று அவர் நினைத்தால் நான் உறுதியாகக் கூறுகிறேன், தோனி ஆட்டத்தை விட்டுச் சென்று விடுவார். ஆனால் அவரால் இன்னமும் பங்களிப்பு செய்ய முடியும் என்று கருதும் போது நான் அவருக்கு 100% ஆதரவளிப்பேன். ஏனெனில் அவரிடம் அனுபவம் உள்ளது. திறமை உள்ளது, கிரிக்கெட் மூளை உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி தான் தேவையில்லை என்று நினைத்த தருணத்தில் அவர் வெளியேறியதை வைத்தே அவரது நேர்மை பற்றி நாம் அறுதியிடலாம். அவர் மீது எனக்கு நிரம்ப மரியாதை உள்ளது. எந்த ஒரு சர்வதேச வீரருக்கும் அனைத்தும் எளிதாக அமைந்து விடமுடியாது. ஆனால் நீங்கள் எதை அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. நான் அணியில் என்னுடைய இடத்தை உத்திரவாதமாக எடுத்துக் கொண்டதில்லை. அதே போல் தடுமாறும் வீரர்களிடம் எனக்கு தனிப்பட்ட கருணை உண்டு. ஏனெனில் நானும் தடுமாறியவனே. ஒரு பயிற்சியாளராக வீரர்கள் தடுமாறும் போது அவர்கள் மீது கருணை காட்டுவது ஒரு முக்கியமான குணாம்சம் என்றே கருதுகிறேன். இவ்வாறு கூறினார் மைக் ஹஸ்ஸி. http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8123548.ece
 15. 1 point
  கடவுளின் கிருபையில் குறிப்பிட்ட நண்பன் திருமணம் செய்து, மனைவி, குழந்தைகளுடன் நலமேயுள்ளான். அவனுடன் தொலைபேசியில் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவனுக்கு அவன் பற்றிய கதையை இணையத்தில் பகிர்ந்தமையை கூறினேன். 2004ம் ஆண்டளவில் தான் பொதுவாழ்வில் இணைந்துவிட்டதாய் கூறினான். அவனது விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, கட்டுக்கோப்பான வாழ்வு அமைதியாக‌ தொடர்கின்றது.
 16. 1 point
  தமிழ்த்தேசியவாதி களவாகப் பால்குடிக்கக் கூடாது என்று விதியா உள்ளது? துரோகத்தை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை, மிச்சம் எல்லாம் பிரச்சினையில்லை
 17. 1 point
  உலக மசாலா: தேனீக்கள் வரைந்த ஓவியங்கள்! சீனாவில் வசிக்கிறார் ரென் ரி. இவர் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். தேன் அடைகளிலிருந்து உலக வரைபடங்களை உருவாக்கியிருக்கிறார். 2007ம் ஆண்டு தேனீ வளர்க்க ஆரம்பித்தவர், விரைவிலேயே அதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டார். தேனீக்களின் ஒவ்வோர் அசைவையும் அவற்றுக்கான காரணங்களையும் அறிந்து வைத்திருக்கிறார். ராணித் தேனீயின் கட்டுப்பாட்டில்தான் மற்ற தேனீக்கள் இயங்குகின்றன. தேன் கூட்டைத் தனக்குத் தேவையான அளவுக்கு மாற்றி வைத்துவிடுவார். ராணித் தேனீ அந்தக் கோணத்தில் வேலை செய்துகொண்டிருக்கும். போதிய அளவு கூட்டில் மெழுகு நிரப்பப்பட்ட உடன் வேறொரு கோணத்தில் கூட்டை மாற்றி வைத்து விடுவார். மறுநாள் அந்தக் கோணத்தில் ராணித் தேனீ நகரும். இப்படி உலக வரைபடத்தைத் தேன் கூட்டில் உருவாக்கிவிடுகிறார் ரென். மனிதனுக்கும் தேனீக்களுக்கும், மனிதனுக்கும் இயற்கைக்கும் அருமையான உறவு பாலத்தை அமைத்திருக்கிறார் என்று ரென்னைப் பாராட்டுகிறார்கள். உலகிலேயே தேன் கூட்டில் உலக வரைபடங்களை வரையும் கலைஞர் ரென் மட்டுமே! மனிதர்கள் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து, மேல் நோக்கி கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். ஆனால் தேனீக்கள், புவி ஈர்ப்பு விசையுடன் போட்டி போடாமல் கீழ்நோக்கி கூட்டை உருவாக்குகின்றன என்கிறார் ரென். ஷாங்காய், மிலன், பெய்ஜிங், வெனிஸ் போன்ற நகரங்களில் ரென்னின் உலக வரைபடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ரென்னின் வழிகாட்டலில் தேனீக்கள் வரைந்த ஓவியங்கள்! இங்கிலாந்தில் வசிக்கும் விவசாயி டேவிட் சிம்மோன்ஸ், காலிஃப்ளவர்கள் பாடுவதாகச் சொல்கிறார். மலைப்பாங்கான குளுமையான இடங்களில் காலிஃப்ளவர்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 3 செ.மீ. அளவுக்கு வளர்கின்றன. அப்படி வளரும்போது தினமும் மெல்லிய ஒலியை எழுப்புகின்றன. இப்படிச் சத்தம் வந்தால் காலிஃப்ளவர் வேகமாக வளர்கிறது என்று அர்த்தம் என்கிறார் டேவிட். முட்டைக்கோசு போன்ற தாவரங்கள் ஆபத்தைச் சந்திக்கும்போது ஒருவித வாயுவை வெளியேற்றுகின்றன. பூச்சிகள் அமரும்போது மெல்லிய ஒலியை எழுப்புகின்றன என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பான் தெரிவித்திருக்கிறார். அந்த விஷயத்தை டேவிட் உறுதி செய்திருக்கிறார். ஆஹா! மனிதனுக்குத் தெரியாத இன்னும் எவ்வளவு அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றனவோ http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7360831.ece?ref=relatedNews
 18. 1 point
  சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா தேவையான பொருட்கள் : எலுமில்லாத கோழி கறி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று சாம்பார் தூள் (அ) மிளகாய் தூள் + தனியா தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - கால் தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கு கோதுமை மாவு - முக்கால் பாகம் மைதா மாவு - கால் பாகம் இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை மஞ்சள் தூள் உப்பு செய்முறை : மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும். இதில் தூள் வகைகளைச் சேர்த்து 3 மேசைக்கரண்டி அளவு நீர் விட்டு தூள் வாசம் போக வதக்கவும். தூள் வாசம் போனதும் பொடியாக உதிர்த்த சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து வதக்கி இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவில் சப்பாத்தி தேய்த்து அதன் நடுவே இந்த கலவையை வைக்கவும். அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி ஓரங்களை ஒட்டி விட்டு தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும். சுவையான சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா தயார். virakesari.lk
 19. 1 point
  அருமையான பாடல். சுவியர்! இணைப்பிற்கு நன்றி.
 20. 1 point
  தேவையான பொருட்கள் சிக்கன் – 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1ஃ2 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு தேங்காய் துருவல் – 6 மேசை கரண்டி பச்சை மிளகாய் – 2 புதினா – 1 கப் கொத்தமல்லி – 2 கப் சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 2 சீனி – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 ஏலக்காய் – 5 வரமிளகாய் – 2 தண்ணீர் – 2 கப் செய்முறை முதலில் மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி, புதினா, உப்பு, சீனி, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், பாதி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, ஏலக்காய், பட்டை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் சிக்கனை போட்டு மசாலா நன்கு சேரும் வரை பிரட்டி, அதில் கறிவேப்பிலை மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு, அடுப்பை குறைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். 10 நிமிடங்களின் பின்பு குக்கரை இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் க்ரீன் சிக்கன் குழம்பு தயார்! http://tech.lankasri.com/page.php?greenchickencurry
 21. 1 point
 22. 1 point
  மரணதேவன் பூட்டிய கடைக்கதவை திரும்ப இழுத்துப்பார்த்து விட்டு தெருவில் இறங்க வழக்கக்தை விட இன்று பிந்திவிட்டது என்பதை உணர்ந்தான் மதி .கடை பூட்டும் நேரம் வந்து வரிசையில் நின்ற அந்த நாலு கஸ்டமர்களையும் மனதில் திட்டிக்கொண்டு இரவு பத்து நாற்பது மணி பஸ்சும் போயிருக்கும் . இனி எப்படியும் அடுத்த பஸ் வர பதினோன்றாகும் சப்பேயிற்கு பத்து நிமிட நடைதான் ஆனால் இந்த நேரம் இருட்டில் நடப்பதை விட பஸ்சிற்கு காத்திருப்பது பாதுகாப்பனது என்று எவருமற்ற அந்த பஸ் நிலையத்தில் ஒதுங்குகின்றான் . தினமும் பகலில் எந்தவொரு பய உணர்வும் இல்லாமல் உலா வரும் இந்த இடம் இரவானதும் வேறு ஒரு கோலம் பூண்டுவிடுகின்றது. இன்று பகல் கூட மதிய சாப்பாடு வாங்க கடையை பூட்டிவிட்டு சன நெருசல் நெருங்கிய இந்த வீதியால் தான் Kentucky வாங்க போனான். இப்போ அனைத்து கடைகளும் பூட்டி தெருவில் மக்கள் ஆரவாரம் அற்று வெறுமையாகி, தனிமை மதிக்கு மனதில் ஒரு வித பயத்தை கொண்டு வந்துவிட்டிருந்தது . ஆங்காங்கே நடந்தது தன்னை கடந்து திரிபவர்கள் எவரும் பகலில் ஒருபோதும் தென்படாதர்களாக ஒரு வித போதை மயக்கத்தில் அவனிடம் சில்லறைகாசு அல்லது சிகரெட் கேட்பவர்களாக இருந்தார்கள் .இல்லை என்று சொல்லும் போது தூசணத்தால் திட்டுபவர்களும் காறி துப்பிக்கொண்டே செல்பவர்க்ளை பார்க்க இரவு மனிதர்களே இப்படிதானோ என்று எண்ணிக்கொண்டான். இவர்கள் யாராலும் தனக்கு ஏதும் வில்லங்கம் வரமுதல் பஸ் வரவேண்டும் என வேண்டவும் திடீரென்று வானம் வெளிக்க இடி மின்னலுடன் மழை தூறத்தொடங்குகின்றது. காற்று வேறு சற்று பலமாக வீசி மதியின் உடைகள் நனைய மதிக்கு உடலில் குளிர் படர ஆரம்பிக்கின்றது . திடிரென உருவாகும் இயற்கையின் மாற்றம் கூட மனிதருக்கு மனதில் பயத்தை உருவாக்குகின்றதுஎன மதி மனதில் நினைத்துக்கொண்டான் மழைக்கிடையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களில் இருந்து முகத்தில் அடிக்கும் வெளிச்சமும் அவை எழுப்பும் ஒலியும் ஆங்கில மாபியா படங்களில் வருவது போல தன்னை யாரோ கடத்த போகின்றார்களோ என்பதாகவும் ஒரு பிரமை வந்து போனது . வீதியில் இருக்கும் தண்ணீரை விசிறியடித்தபடி பஸ் வந்து காலடியில் நின்றது .பஸ்ஸிற்குள் நாலு பேர்கள் தான் இருந்தார்கள் .இரண்டு நிமிடத்தில் Bloor ஸ்டேசனில் பஸ் வந்துசேர்ந்து விட்டது .உடனே ரெயினை பிடித்துவிடவேண்டும் என்று மதி ஓடிச்சென்று படியிறங்கி வர நேரம் பதினொன்று ஐந்து, ரெயின் வர நாலு நிமிடங்கள் இருக்கு என்று பிளாட்பாரத்தில் உள்ள மணிக்கூட்டில் எழுத்துக்கள் ஓடிக்கொண்டு இருக்கு . Kennedy Station போகும் பிளாட்பாரத்தில் எவருமில்லை .மறு புறத்தில் சிலர் இருப்பது தெரிகின்றது . யாரோ படியிறங்கி வரும் சத்தம் கேட்கின்றது . மழை காரணமாக நடந்து வருபவர் ஆளையே மூடி ஆடை அணிந்திருப்பதால் முகத்தை பார்க்கமுடியவில்லை ஆனால் ஆண் என்று தெரிகின்றது . தனிமைக்கு ஒரு துணை கிடைத்தது போலிருந்தாலும் சிலவேளை தன்னை பிடித்து ரெயினில் தள்ளியும் விடுவானோ என்ற ஒரு நினைப்பும் மதிக்கு வந்துபோனது .எதற்கும் பாதுகாப்பாக சற்று தள்ளியே நிற்போம் என்று பிளாட்பாரத்தின் கடைசிக்கு செல்கின்றான் . ரெயின் வருவதற்கான சத்தம் சிறிதாக கேட்கத்தொடங்குகின்றது அத்தோடு உர்ர்ர்ர் என்று நிலக்கீழ் பாதைக்குள் அடைபட்ட காற்றை கிழிக்கும் ஓசையும் அந்த காற்று ஸ்டேசன் கதவுகளையும் அடித்து திறந்து மூடும் சத்தமும் மதிக்கு ஒரு வித எரிச்சலை உருவாக்குது . ரெயின் பிளாட்பாரத்தில் நிற்க சற்று தள்ளி நின்ற பயணி அடுத்த Compartment ஏறுவது தெரிகின்றது . அப்பாடி அவன் தன்னை தள்ள வரவில்லை என்றபடியே தானும் உள்ளே ஏறுகின்றான் . பின்னிரவு ரெயின் பயணம் மதிக்கு ஒன்றும் புதிதில்லை .வேலை செய்த களையில் தூங்கி வழியும் முகங்கள் தான் சிலர் ஆங்காங்கே இருந்தார்கள் . முன் சீட்டிற்கு மேலே காலை தூக்கி போட்டுக்கொண்டு இரண்டு இளைஞர்கள் அவர்கள் தங்கள்பாடு . ரெயினில் ஏறினால் யார் முகத்தையும் பார்க்காமல் மூலை இருக்கையாக அமர்ந்து புத்தகம் படிப்பதுதான் மதியின் வழக்கம் . அன்றும் கடைசியாக வந்த ஆனந்தவிகடனை புரட்ட ஆரம்பிக்கின்றான் . Kennedy Subway ,பிறகு YRT to Mccowan,அடுத்து பஸ் எப்படியும் வீடு போய் சேர இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும் என்று நினைக்க மதிக்கு விசராக இருந்தது . Castle Frank ஸ்டேசனை தாண்டி ரெயின் பாலத்தில் பயணிக்கும் போது களனி ஆற்றை தாண்டும் யாழ் தேவியின் நினைவும் சிறு வயதில் களனி ஆற்றில் எழுந்து பாயும் புழுதி நிறதண்ணீரை பார்த்து பயந்ததும் உண்டு . அசோகமித்திரனின் சிறுகதை ஒன்று வந்திருக்கு அதை வாசிப்பம் என்று கதையில் மூள்கிவிட்டான் மதி .ரெயின் ஒவ்வொரு ஸ்டேசனாக நிற்பதும் பின் வேகமெடுத்து ஓடுவதாகவும் இருந்தது . கிரீச் என்று பெரிய சத்தத்துடன் ரெயின் பிரேக் அடித்தது .சில பயணிகள் சீட்டில் இருந்து விழுந்தும் விட்டார்கள் .மதி புத்தகத்தை மூடியபடியே எந்த ஸ்டேசன் என்று யன்னலை பார்க்க மடார் மடார் என்று ரெயினிற்குள் இருக்கும் கதவுகளை திறந்தபடி ரெயின் ஓட்டுனர் பயணிகள் எல்லோரையும் முன்பக்கம் போய் வெளியேற சொல்லுகின்றார்.ரெயினின் கதவுகள் எதுவும் திறக்கவில்லை .ரெயின் ஸ்டேசனை அண்மித்தவுடன் நின்றுவிட்டது . ரெயினில் வந்த மொத்த பயணிகளும் ஒரு கதவால் நெருக்குபட்ட படியே திட்டியபடி வெளியேறுகின்றார்கள். Pape ஸ்டேசன் , மதிக்கு எதோ நடக்க கூடாதது நடந்துவிட்டதாக உள்மனது சொல்லுகின்றது. கதவால் வெளியேறும்போது தண்டவாளத்தை எட்டிபார்க்கவேண்டும் என்று மனம் அடிக்குது தற்செயலாக பார்க்க முடியாத கோர காட்சியாக இருந்தால் பல நாட்களுக்கு தூக்கம் வராது என்று நடந்தவன் கடைசி படியேறும் போது ஆவல் மீதியால் தலையை திருப்புகின்றான் . அட பார்க்காமலே இருந்திருக்கலாம் .ஸ்டேசனுக்கு வெளியில் வருகின்றான் . மழை இன்னமும் கொட்டிக்கொண்டிருக்கு .எங்கும் ஆம்புலன்ஸ் ஒலி . Stretcher உடன் முதலுதவியாளர்கள் ஸ்டேசனிற்குள் இறங்கி ஓடுகின்றார்கள். ரெயினால் இறங்கிய பயணிகளால் நிறைந்து Pape ஸ்டேசன் அல்லோலகல்லோடப்படுகின்றது .ரெயின் இனி ஓடாது . எல்லோரும் இனி Shuttle பஸ்ஸில் தான் பயணிக்கவேண்டும் என்று அறிவிக்கின்றார்கள் . எல்லோருக்கும் வீடு போக வேண்டிய அவசரம் . அவரவருக்கு அவரவர் பிரச்சனை . நாலாவதாக வந்த Shuttle Bus இல் ஏறி அரை குறையில் விட்ட அசோகமித்திரனின் சிறுகதையை வாசிக்க ஆனந்தவிகடனை புரட்டுகின்றான் மதி . Pape ஸ்டேசனில் தண்டவாளங்களுகிடையில் மரணதேவன் கையில் உயிருடன் செல்லும் காட்சி மட்டுமே கண்ணிற்கு தெரியுது .
 23. 1 point
 24. 1 point
 25. 1 point
 26. 1 point
 27. 1 point
  பக்கத்து வீட்டு அழகிய அரக்கி. புதிதாக குடிவந்த எனக்கு பக்கத்து வீட்டுக்காரர்களின் அறிமுகம் இல்லாத காலமது. பக்கத்து வீட்டை ஒரு காரில் சிலர் வந்திறங்கியது எனது கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் சில நிமிடங்களில் பக்கத்து வீட்டில் இருந்து வந்த "மியாவ்" என்னை நிலை குலைத்தது. அந்தக்குரல் அவ்வளவு இனிமை. அது பூனையில்லை, பூனையைக் கூப்பிடும் ஒரு பெண்ணின் குரல். குரலே இப்படியென்றால் அவள் எப்படி இருப்பாள்? மனமும் அலையத் தொடங்கியது. அவள் வீட்டில் இருக்கும் போது எப்போதும் கதைத்துக் கொண்டிருப்பாள். குரல் என்னைக் கொல்லும். எனக்கோ எப்படியாவது அவளைப் பார்த்து விட ஆசை. நடுவே மதில் எட்டிப் பார்த்தால் ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்ற பயம். அப்படியும் வீட்டுக்குள்ளிருந்து யன்னலில் ஏறி நின்று பார்த்தேன். குரல் கேட்டது, அவளைப் பார்க்க முடியவில்லை. தினமும் இது ஒரு சித்திரவதை எனக்கு. கடவுள் நம்பிக்கையற்ற நானே கடவுளே ஒரு தடவை அவளைக் காட்டு என்று வேண்டிக்கொண்டேன். கடவுளும் என்னைக் கும்பிடாதவனை மதிப்பதில்லை என்றான். சரி அந்தாளை நானே மதிப்பதில்லை, அந்தாள் ஏன் என்னை மதிக்கப் போகுது என்றுவிட்டு வேதாளத்தை மரத்தில ஏறவிட்ட விக்கிரமாதித்தன் போல எனது முயற்சி தொடர்ந்தது. ம்கும் பார்க்க முடியவில்லை. போர்ட்டிக்கோவில் குந்தியிருந்து எதையாவது வாசித்தாலும் அந்தக் குரல் வாசித்தது மூளைக்கு போகாமல் தடுத்தது. மறுபடியும் காதலில் வீழ்ந்தது போலிருந்தது. இப்படியே சில நாட்கள் கடந்தது. ஒருநாள் சமையல் பஞ்சியில் கடையில் சாப்பாடு வாங்கி வந்துகொண்டிருந்தேன். பக்கத்து வீட்டு வாசலில் அன்ரியுடன் எனது பைங்கிளி. அவள் குரலை விட அவள் அழகோ அழகு. என் இதயமும் அதிகமாக துடித்தது. கதைப்பமா என்றால் அவளை முதல் முறை கண்டதால் கஸ்டமாயிருந்தது, ஒரு புன்னகையுடன் தாண்டலாமென்ற முடிவுடன் நான். ஆனால் அதிசயமாக அவள் ஒரு சிரிப்புடன் என்னை மேற்கொண்டு செல்லாமல் தடுத்தாள். நீங்கதானே பக்கத்து வீட்டு போர்ட்டிக்கோவில இருந்து சிகரட் குடிக்கிறது என்றாள். என்னடா இது ஆரம்பமே ரோதனையாக் கிடக்குது என்று யோசித்தபடி "எப்படித் தெரியும்" என்றேன். நான்தான் கொய்யாமரத்தில ஏறி உங்களப் பார்த்திருக்கேனே என்றாள். அடி கள்ளி. அன்றிலிருந்து காலையில் கொய்யாமரம் குட்மோர்ணிங் சொல்லும், அர்த்தமில்லாத கதைகள் பேசி சந்தோசம் தரும். ஏன் குட்நைட்கூட சொல்லும். மனம் இலகுவாயிருக்கும் அவளுடன் கதைக்கும்போது. வீட்டிற்குள் வந்து தானாக ப்ரிஜ்ஜை திறந்து சொக்லேட் எடுக்குமளவு அதிகாரம் அவளுக்கு. சந்தோசமாக சில வாரங்கள் போனது. ஆனாலும் ஒரு நாள் வந்து அங்கிள் நாங்கள் நாளைக்கு ...... நாட்டிற்கு போகிறோம் அடுத்த முறை வரும்போது மீற் பண்ணுவமென்றாள். நான் இங்கு இருக்க மாட்டேன் என்று இந்த 4 வயது கிழவிட்ட சொல்ல நானும் விரும்பவில்லை - மறுபடியும் சந்திப்போம் என்றேன். மதிலுக்கு மேல கொய்யா மரத்தில இருந்து அழகிய அரக்கி இப்பவும் குட்மோர்ணிங் சொல்வது போலுள்ளது. தனது பேரப்பிள்ளைகளை எப்பவாவது சில வருடத்திற்கு ஒரு முறை சில கிழமைகள் சந்திக்கும் பக்கத்து வீட்டு அன்ரிக்கும், பேரப்பிள்ளைகளை காணத் துடிப்பவர்களிற்கும் இது சமர்ப்பணம். சில கிழமைகள் பழகிய எனக்கே எதையோ இழந்தது போலிருந்தது அரக்கியின் பிரிவு. அவர்களிற்கு எப்படியோ.
 28. 1 point
  குமாரசாமி அண்ணை தனக்கு புடிச்ச பாட்டு போடுவார். குஞ்சுகுருமன் எல்லாம் வேலியோடை நிண்டு பாட்டை கேக்கோணும்...ரசிக்கோணும். ஆராவது பாட்டு பொட்டியிலை கை வைச்சியள்???? கொலை விழும் சொல்லிப்போட்டன். இதைப் பார்த்து சிரி சிரியென்று சிரித்துவிட்டேன். குமாரசாமி அண்ணையின் எழுத்தை ரசிப்பவன் நான். நவீனன் சுட்டிக் காட்டிய பின்தான் குமாரசாமி அண்ணையின் முதல் பதிவு ஞாபகம் வந்தது. இருவருக்கும் பச்சை போட ஆசைதான். அப்புறம் அடிபட நான் தயாரில்லை. கு சா இது குஞ்சுகுருமனுக்கு மட்டும்தான். பாலகனுக்கு இல்லை... நான் பாலகன். கு. சா அவர்கள் ரெம்ப ரெம்ப நல்லவர். மப்பிலை ஆடுவாரே தவிர..... சாமியாடமாட்டார்.
 29. 1 point
  வணக்கம் கிருத்திகன்7. மனதைக் குடையும் சில விசயங்கள்.... யுத்த காலப்பகுதியில் யாழிலிருந்து படைப்புகள் வெளிவருவதற்கு ஏதும் தடை இருந்ததா? 2009 முன் துளிர்விட யாழில் என்ன பிரச்சனை? இது (http://tamilnation.co/media/tamil/aaniver.htm) எந்த கால பகுதியில் வந்திருக்கும்? இந்த மாதிரியா? தரமான படைப்புக்கள் வரும்போது நிச்சயமாக மக்கள் ஆதரவு கிடைக்கும். ஆதரவு தந்தாத்தான் தரமான படைப்பு கிடைக்கும் எண்டா கொஞ்சம் கஸ்டம்தான். நன்றி.
 30. 1 point
  நல்லதொரு கருத்தாடற்குரிய விடயம்... கிருத்திகன்...! தோராயமாக 75 / 80 களில் ஈழத்தில் திருகோணமலையிலோ அன்றி வேறிடத்திலோ ஒரு தரமான ஸ்ரூடியொ உருவாகியிருக்க வேண்டிய காலகட்டம். அப்பொழுதுதான் ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்தன. சில படங்கள் நல்ல திரைக் கதை இருந்தும் தொழில்நுட்ப விடயங்களில் சிங்கள , இந்தியப் படங்களில் இருந்தும் பின்தங்கியிருந்ததால் ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டுத் தூக்கியதும் வேதனையான சம்பவங்கள். அந் நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் மலையாள ஹிந்திப் படங்கள் கூட ஐம்பது நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது கவணிக்கப் பட வேண்டிய விடயம். அதையெல்லாம் தாண்டி ஈழத்துப் படங்கள் நல்ல நிலைமைக்கு விருட்சமாக வளர்ந்திருக்கும்..., அதற்குள் 83லிருந்து இன்றுவரை நாட்டில் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டிருந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் சிறந்த குறும்படங்களும், ஈழத்துக் கலைஞர்களை உள்வாங்கிய இந்தியப் படங்களும் வருகின்றது கொஞ்சம் ஆறுதலான விடயங்கள். யதார்த்தத்தில் தற்பொழுது எம் தமிழினம் ஒரு " போன்சாய் " மரமாக திட்டமிட்டு குறுக்கப் பட்டிருக்கின்றது. அவர்கள் விரும்புகின்ற அளவுக்கு மட்டுமே நாம் வளர முடியும். தாழியும் தகர்ந்து கிளைகளும் விரிவது எக்காலமோ ....!