Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7,044

  • Content Count

   47,622


 2. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   5,210

  • Content Count

   85,545


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3,740

  • Content Count

   16,490


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3,017

  • Content Count

   27,599Popular Content

Showing content with the highest reputation since 01/16/2017 in all areas

 1. 27 points
  ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீனாவின் இன்னொரு முகம் அவளின் எண்ணங்களில் ஓங்கி அறைந்து அறைந்து அவளை இயல்பாக்கத் துடித்தது. எப்படி ஆயிற்று? சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தக்கணம்….. எதிர்வு கூறும் கற்பனைகளை நொருக்கிவிட்டு, நிகழ்காலமாக வியாபித்து அவளைத்தூக்கி தட்டாமாலை சுற்றியது. வீடு தேடி வந்தவனை……… வாய் திறந்து வரவேற்க மாட்டாளா............, என்ற தவிப்பில் அந்த முதுமையைத் தொடத் தொடங்கியவனின் எதிர்பார்ப்பு விழிகளுக்குள்ளால் எட்டிப்பார்த்தது. வினாடிகள் கழிவது வருடங்கள் கழிவதான காலவிரயம்போல் தோன்ற….., சிவா…. அவளின் பெயரைச்; சொல்லி அழைத்தான். எங்கோ ஆழக்கிணற்றுக்குள் இருந்து அவலஒலி எழுப்புவதுபோல் குரல் ஈனசுரத்தில் சிக்குண்டு சேதத்தை வெளிப்படுத்தியது. அந்தக்குரலின் ஒலித்தளம்பல் அவளுக்கு தன்நிலை உணர்த்தியதுபோல் சட்டென்று மீனா மீண்டு கொண்டாள். அவனின் நரைத்த மீசைக்குக் கீழான உதடுகளுக்குள் விரித்த கலவரத்துடனான புன்னகை அவளைத் தாக்கியது. அவளின் பார்வையை எதிர்கொள்ளும் திராணியற்றதாக சிவாவின் பார்வை மெல்ல தாழ்ந்து வாசற்கதவினைப் பற்றியிருந்த மீனாவின் கரங்களில் படிந்தது. அந்தக் கைகளின் உலர்வையும்; சுருக்கங்களையும் நோக்கும் அக்கணம் அவனுக்குள் மெலிதாக வலித்தது. “வாங்க வாங்க உள்ளே வாங்க” என்ற அவளின் குரலில் வெளிப்பட்ட கரகரப்பும் அவளை அவனுக்கு காட்டிக் கொடுத்தது. எத்தனை ஆண்டுகள்…… கண்வழி ஆரம்பித்து, கனவுகளில் வாழ்ந்து, குதூகலிக்கும் பொழுதிற்குள்ளாகவே பாதைகள் பிரிபட்டு, பயணங்கள் மாறுபட்டு, கண்டங்கள் விலகி எல்லாம் முடிந்து தசாப்தங்களும் கடந்து நேற்றைய கனவாக வாழ்வு நெடுந்தூரம் கடந்து போய்விட்டது. “என்ன வீட்டுக்குள் வந்துவிட்டு உட்கார மாட்டீர்களோ?” என்ற அவளின் விருந்தோம்பல் அவனுக்கு ஆணையாக மாற, அந்த வரவேற்பறையில் கிடந்த சோபாவில் மெல்ல அமர்ந்தான். அவனின் சிறு அசைவையும் தவறாமல் உன்னிப்பாக கவனித்தபடியே எதிர் இருக்கையில் அமர்ந்த அவளாலும் அதற்குமேல் பேச இயலவில்லை. கசியும் விழிகளையும், நடுங்கும் உதடுகளையும் கட்டுப்படுத்துவதற்காக அவள் தனக்குள் போராடுவதை சிவாவால் உணர முடிந்தது. தான் சற்றுத் திடமானவன் என்று நினைத்தபடி அருகில் சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனின் காத்திரத்தை உடைத்துப் போட்டன கலங்கிச் சிவப்பேறிய அவன் விழிகள். இதுதான் காதலா? வாழ்க்கையின் முக்கால் கிணறு தாண்டும்வரை இருந்த உறுதி, இன்னும் தாண்ட இருக்கும் எதிர்காலத்தின் மீதான உறுதி… இன்னும் அசைக்கமுடியாததாகத்தான் இருக்கிறது…. எப்படி இந்தக்கணம் மட்டும் இப்படி?....... அவன், அவள், திடகாத்திரம் எதுவுமே இல்லாத ஆத்மவெளியில் உருவங்களைத் தொலைத்த இரண்டு ஆன்மாக்கள் மனித உடல்களின் ஐம்புலன்களையும் வைத்து பேசத் தொடங்கியதுபோல் இருந்தது அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் புலப்படவில்லை நேசிப்பு ஒன்றுதான் சிம்மாசனமிட்டு ஆட்சி செய்தது. இருப்பினும் நேற்றைய காதல்...... உணர்வுகளில் குவிய எண்ணங்கள் அந்நியப்பட்டு விலகிக் கொண்டன. “உனக்கு நான் எனக்கு நீ ” என்று என்றோ பேசிய வார்த்தைகள்...., காலவெளியில் அள்ளுண்டு காணாமல்போய் இருவரும் வேறு வேறு துணைகளுடன் எல்லாம் பகிர்ந்து, விதி போட்ட முடிச்சுக்குள் வாழ்ந்த பின்னால்..................................., எதிர்பாராத இந்தச் சந்திப்பு. விருந்தினனாக வந்தவனுக்கு தேநீர் தயாரிக்கும் சாக்கில் தளர்ந்த தன்னுணர்வுகளை இறுக்கிக் கொண்டாள் மீனா. தன் கணவன் , பிள்ளைகள் பற்றிப்பேசி, அவன் மனைவி பிள்ளைகள் பற்றி பேசி அவன் நிலையையும் தேற்றினாள். மன அதிர்வுகளை மறைத்தபடி அவனுக்கான திடத்தையும், வழிகாட்டலையும் நோகாமல், அவனைச் சிதைக்காமலும் மேற்கொண்டு நல்ல நட்புடன் அனுப்பிவிட்டு, கதவைத் தாழிட்டவள் ஓடிவந்து அவன் இருந்த சோபாவை வருடிக் குப்புற விழுந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள். பிரிக்கப்பட்ட காதல், திணிக்கப்பட்ட வாழ்வு பெண் என்னும் பிம்பத்தால் பிய்த்தெறிய முடியாத உறவுச் சங்கிலிகள், வரங்களாகச் சொல்லப்பட்டு மற்றவர்களால் திணிக்கப்பட்ட சாபங்கள், விடுபடமுடியாத மனச்சுமைகள்…… சிறகுகளும் வானும் இருந்தும் பறக்கமுடியாது… எத்தனை ஆண்டுகாளாய் அடக்கி வைத்த அழுகை. அவளைக் கொஞ்சம் அழவிடுங்கள் ஆறாய் பெருகும் கண்ணீரில் முற்றுப்பெறாத அவளின் நேசிப்பு நிறையட்டும்.
 2. 23 points
  இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் . இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம் எமது வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். சிறுவர்களுடன் பயணம், கடைசி மகளுக்கு 1 வயது, எப்படியும் பால் குடுக்க , பம்பர்ஸ் (நப்பி) மாற்ற என இரண்டு மூன்று தரிப்புகள் எடுக்க வேண்டி வரும், போக்குவரத்து நெரிசலும் ஒரு பெரிய பிரச்சனையாக வாய்ப்பு உள்ளது. எனவே பயண நேரம் 9 மணி நேரமாக இருக்கும் எனத் திட்டமிட்டு காலை 4 மணிக்கு புறப்படுவதாகத் திட்டமிட்டோம், பயணத்திற்கு முதல் நாள் காருக்கு ஓயில், தண்ணீர், ரயரின் காற்றழுத்தம் எல்லாம் சரி பார்த்துக்கொண்டேன் . இத்தாலி யில் பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் பணமாகச் செலுத்தலாம், ஆனால் விடுமுறை காலங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி வரும் என எனது வேலைத்தள இத்தாலி நண்பன் எச்சரிக்க ,கார்ட்டில் செலுத்த முடிவெடுத்தேன், எல்லா இடங்களிலும் கடனட்டை பாவிக்க விருப்ப மில்லாததால் . இங்கே TCS இல் இத்தாலி பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வியாகாட்(VIA CARD) என ஒன்று விற்பதாக அறிந்து 50 யூரோவிற்கு ஒரு வியாகாட் வாங்கிக் கொண்டேன். திட்ட மிட்ட படியே காலை 4 மனிக்கு புறப்படக்கூடியதாக இருந்தது மனைவி தான் பாவம் அதிக வேலைச் சுமை நான் 11.00 மணிக்குப் படுக்கச் செல்ல , அவர் தான் கடைசி நேர ஒழுங்குகளை யெல்லாம் பூர்த்தி செய்து 12.00மணிக்குப் படுத்து 2.30 மணிக்கு எழும்பி பிரசாக பானெல்லம் அவனில் போட்டு தேனீர் போட்டு என்னை 3.15 க்கு எழுப்ப நான் குளித்து தேனீர் குடித்து பான் எல்லாம் ஒரு கட்டு கட்டி மனைவியுடன் சேர்த்து பிள்ளைகளிருவரையும் தயார் படுத்தி காரில் ஏற 4.15 ஆகியது கார் புறப்பட இரண்டு திட்டங்கள் மனதில் ஓடியது சுவிசின் டொச் மொழி மாநிலங்களையும் சுவிசின் இத்தாலி மொழி மாநிலமான டிச்சினோ (Ticino ) வையும் பிரிக்கும் அல்ப்ஸ் மலைகுகையான 17 Km நீளமான "கொட்டார்ட்" குகையையும் , சுவிஸ் - இத்தாலி போடரினையும் எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் கடப்பது , என்பதே அது மனைவியும் இரு பிள்ளைகளும் காரில் பின்னாலேயே இருக்க நான் தனியே முன்னே . மனைவியும் , கடைசி மகளும் கார் புறப்பட்டு 10 நிமிடத்திலேயே நித்திரைக்குச் செல்ல மூத்த மகள் என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தா. அவருடன் கதைத்துக்கொண்டே காரும் சுவிஸ் கிராமங்களை மெல்லிருட்டில் கடந்து கொண்டிருந்தது..., நேரமும் 5.00 மனியை நெருங்க சூரிய கதிர்களும் வெளியே கசியத்தொடங்கின சற்றே காரின் வேகத்தைக் கூட்டி ஹைவேயைத் தொட்டு "கொட்டார்ட்" குகையை நெருங்க டிரபிக்கும் கூடியிருந்தது . கொட்டார்ட் குகை 17 km நீளமானது தரையிலுள்ள வாகனப்போக்குவரத்திற்கான குகைகளில் உலகிலேயே நான்காவது நீளமானது (முதலாவது நீளமான குகை(24.5 km) நோர்வேயிலுள்ளது) கொட்டார்ட் குகை யினுள் இரு வழிப் பாதை மாத்திரமே உள்ளது போக ஒன்று வர ஒன்று , ஹைவே யில் இரண்டு ட்ரெக்கில் வரும் வாகனங்கள் குகைக்கு வெளியே நிறுத்தப்பட்டு ஒரு ட்ரெக்கினூடகவே உள்ளே அனுமதிக்கப்படும் இதனால் குகைக்கு வெளியே ட்ரபிக் அதிகமாகும் விடுமுறை கால மென்றால் சொல்லத் தேவையில்லை கொட்டார்ட் குகை எவ்வளவு முயற்சி செய்தும் ட்ரபிக்கில் மாட்ட வேண்டி வந்து விட்டது . மெதுவாக உருண்டு கொண்டிருந்த கார் இப்போது நிற்க வேண்டி வந்து விட்டது. வீட்டிலிருந்து புறப்பட்டதுக்கு 2 மணித்தியாலம் கழித்து முதன் முதலில் கார் நிற்கிறது. மெதுவாக காரின் முன் பக்க ஜன்னல்கள் இரண்டையும் திறக்கின்றேன் அல்ப்ஸ் மலைகளினூடே தவழ்ந்து வந்த மெல்லிளங் குளிர் காற்றலைகள் என் முகத்தில் அறைந்து களைப்பை அள்ளிச் செல்கின்றன...., அதிக நேரம் எடுக்கவில்லை ஒரு அரை மணித்தியாலமே டிரபிக்கில் நிற்க வேண்டி வந்தது. ... இப்போது மெதுவாக ஊரத் தொடங்கிய கார் வேகம் பிடித்து 80 km/h இல் "கொட்டார்ட்" குகையினுள் நுழைகிறது இனி 17 km தூரத்திற்கு குகை தான்.... குகையின் அரைவாசித் தூரம் கடந்ததும் சுவிஸ் சின் டொச் மொழி மாநில எல்லை முடிந்து சுவிஸ் இத்தாலி மொழி மாநில எல்லை வரவேற்கிறது.... குகை முடிந்து சிறிதுதூரம் செல்ல 80 km/h வேக எல்லை முடிய , காரும் சுவிஸ் ஹைவேயின் அதி கூடிய வேக மான 120 km/h இனைத்தொடுகிறது.. இடையில் ஒர் ஹைவே எரிபொருள் நிலையம் தென்பட ஒரு எஸ்பிரசோ குடித்தால் நல்லா இருக்குமென மனம் நினைக்க ...., சுவிஸ் எல்லையை விரைவில் கடக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்த 100 km இனையும் நிற்காமல் ஓடுவதென முடிவெடுத்து நான் வேகம் பிடிக்க மற்றய பெரும்பாலான கார்கள் வேகம் குறைத்து ட்ரக் மாற்றி ரெஸ்டுரன்டை நோக்கி நகர்ந்தன.... ,அவை பெரும் பாலும் ஜேர்மனி,நெதர்லாந்து, பெல்ஜியம் கார்களாகவே காணப்பட்டன....., அவர்கள் சில வேளை அதிகாலை ஒருமணி, இரன்டு மணிக்கு வெளிக்கிட்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு பிரேக் தேவைப் பட்டிருக்கும், இப்போது காலை சூரிய வெளிச்சம் நன்கு பரவியிருக்க சுவிஸ் நாட்டின் ஒரெயொரு இத்தாலி மொழி பேசும் மாநிலமான டிச்சினோ இதமாக சூரியக்குளியல் செய்து கொண்டிருந்தது ஹைவேயில் அதிகளவில் வாகனங்கள் காணப்பட்டாலும் எல்லா வாகனங்களும் 120 km/h இலேயே போய்கொண்டிருந்தன இது மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. சுவிசிலுள்ள ஹைவே களில் டிச்சினோவிலுள்ள இந்த A2 ஹைவேயும் நல்ல அழகானது இரண்டு பக்கமும் கம்பீரமாய் நிற்கும் அல்ப்ஸ் மலைகளினூடு பயணிப்பது ஒரு இனிமையான அனுபவம் மகளுக்கும் நான் இடையிடேயே டிச்சினோ மாநிலத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே வந்தேன். இடையிடயே விழித்த மனைவி இப்போது நன்கு விழித்தெழுந்து தனது கால்களை hand break க்கு மேலால் முன்னால் நீட்டி லாவகமாக இருந்து கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே சிறிது சிறிதாக செய்து கொண்டு வந்த சான்ட் விச்சுகளை பரிமாறினா எனக்கும் பசி யெடுக்க ஒவ்வொரு வாய்க்கும் ஒவ்வொரு சான்ட் விச்சுகளை அனுப்பி கொண்டிருந்தேன் , டிச்சினோ மாநில தலை நகரான பெலின்சோனா வினை கார் கடந்து சென்று கொண்டிருந்தது காலைக் கதிரவனின் கதகதப்பில் பெலின்சோனா பள்ளத்தாக்கு பளபளத்துக் கொண்டிருந்தது. அதனழகு என்னை வசியம் செய்து இடம் கிடைத்தால் காரை ஒரம் கட்டி சில நிமிடம் நின்று ரசிக்கச் சொன்னது ஆனால் ஹைவேயில் அதற்கான இடமும் இல்லை , எனக்கு நேரமும் இல்லை மனம் ரசனையில் இருக்க காரின் வேகமும் இயல்பாகக் குறைய வீதியும் சற்று ஏற்றமாக ஏறிக்கொண்டே போக PS குறைந்த எனது கார் சற்று சிரமப்பட கியரை 4க்கு மாற்றி முடியாமல் போக 3 க்கு மாற்றி வேகம் எடுத்து டிச்சினோ மாநிலத்தின் பெரிய நகரான அழகிய லுகானோவைக் கடந்து கொண்டிருந்தது சுவிசில் எனக்குப் பிடித்த நகரம் எது எனக் கேட்டால் லுகானோ எனத்தான் சொல்வேன் அவ்வளவு ரம்மியமானது அது . பெலின்சோனா (Bellinzona) லுகானோ(Lugano) இப்போது கார் சுவிசின் எல்லைப்பபுர நகரான கியாசசோவினை அடைந்திருந்தது.பெரிதாக வாகன நெரிசல் இருக்கவில்லை கஸ்டம்சினூடாக 20 km/h கார் ஊர்ந்து கொண்டிருந்தது , கியாசோ கஸ்டம் அதிகாரிகளும் பொலிசும் கொஞ்சம் கடுமையானவர்கள் மோசமான இத்தாலி மாபியாக்களை கையாள்பவர்கள், மற்றும் எல்லை கடக்கும் சட்டவிரோத குடியேறிகளையும் சமாளிப்பவர்கள்...., ஆனால் என்னை போகச் சொல்லி கையசைத்தார்கள் கூடவே மகளுக்கும் கையசைத்து bye சொன்னார்கள் , மிகவும் மகிழ்ச்சியாகவே சுவிசுக்கு ஒரு bye சொல்லி இத்தாலிக்குள் நுழைந்தோம் ....., பெரிதாக வாகன நெரிசலுக்குள் சிக்காமல் வந்தது மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது 5 நிமிட ஓட்டத்தில் இத்தாலியின் கோமோ பிரதேசத்தில் முதலாவது எரிபொருள் நிலையம் மற்றும் ரெஸ்டுரன்ட் வர எனது காரும் அதனை நோக்கி சென்றது.... உள்ளே போனால் கார் விட இடமில்லை எல்லாம் நிறைந்து வழிந்தது பல கார்கள் தரிப்பிடம் தேடி அலைந்து கொண்டிருக்க ஒரு ஜேர்மன் இலக்கமுடைய BMW இன் பின்னே வெள்ளை லைட் தெரிய என் முகத்திலும் லைட் எரிய இப்போது எனது கார் அந்த இடத்தில், காரை அணைத்து, hand break ஐ இழுத்து , நான் கீழிறங்க எனது குட்டி மகளும் கண் விழிக்க எல்லாம் நலமே ....., கடைசி மகளையும் Bagஐயும்நான் தூக்க மனைவி பெரிய மகளை அணைத்த படி ரெஸ்டுரன்டினுள் நுழைய உள்ளே ஒரே சனக்கூட்டமும், கபே கப்புகளின் சத்தமும் பணியாளர்களின் இத்தாலி மொழி உரையாடலும் மனதுக்கு ஒரு வித கிளர்ச்சியைக் கொடுத்தது.... பாத்ரூம் சென்று முகத்தில் குளிர் தண்ணீரை அடித்து தலைக்கும் கொஞ்சம் தேய்த்து வெளியே வந்து சில வினாடி காத்திருக்க மனைவியும் பிள்ளைகளை கூட்டிச் சென்று பம்பர்ஸ் எல்லாம் மாற்றி வந்தார். காரினுள் சாப்பிட்டதால் பெரிதாக பசி இல்லை ஏதாவது குடிப்போம் என முடிவெடுக்க , இல்லை பிள்ளைக்கு முதலில் பால் குடுக்க வேண்டும் என மனைவி சொன்னா(அது தான் தாயுள்ளம் ) நீங்களும் பெரிய மகளும் ஏதாவது குடியுங்கோ நான் பால் குடுத்திட்டு வாறன் என அவா சொல்ல பால் போத்தலினுள் பால் கரைத்தால் ,பால் சூடு ஆற கொஞ்சம் நேரம் எடுக்கும் போல இருக்கவே நான் நேரம் போகிறது என மனைவியை அவசரப்படுத்த நாம் எல்லாரும் கோபி குடிக்க முடிவெடுத்து ஒரு லத்தே மக்கியாத்தோவும் (எனக்கு), இரண்டு ஓவல் மாட்டினும் வாங்கி குடித்து முடிக்கவும் .சிறிய மகளின் போச்சி பால் ஆறவும் சரியாக இருந்தது. நான் காரில் போய் மகளுக்கு பால் குடுக்கிறேன் நீங்கள் இருவரும் ஒரு 10நிமிடம் கழித்து வாங்கோ எனக்கூறி விட்டு மனைவி சிறிய மகளுடன் சென்று விட்டா, நான் மீண்டும் ஒரு எஸ்பிரசோ வினை வாங்கிக் குடித்து விட்டு செல்ல , மகளும் பால்குடித்து ரெடியாக இருந்தா அவாவைத்தூக்கி முதுகில் மேல்நோக்கி சில தடவைகள் தடவி ஏவறை (birth) எடுக்கச் செய்து maxi cosi இனுள் இருத்தி பெல்ட் போட்டு விட்டு , பின்னால் சென்று காரைத்திறந்து எனது bag இனுள் ரீசேட் ஒன்றை எடுத்து மாற்றிக் கொண்டேன், இப்போது புத்துணர்வு இன்னம் கொஞ்சம் கூடியிருந்தது . நான் காரை ஸ்டார்ட் செய்து பின்னோக்கி நகர்த்தி திருப்பவம் இன்னுமொருவர் முகமெல்லாம் பல்லாகா எனது இடத்தில் கொண்டு வந்து தனது காரை விட்டு எனக்கு நன்றி சொன்னார் ( பாவம் அதிக நேரம் இடம் தேடி அலைந்திருப்பார் போலும்) ரெஸ்டுரன்டின் அருகிலேயே இருந்த எரிபொருள் நிலையத்தினுள் ஒரு புல் டாங் பெற்றோல் அடித்து விட்டு , காரை இத்தாலி ஹைவேயில் ஏற்றுகின்றேன் , மனதிற்குள் பயணத்திட்டம் ஓடுகிறது இனி மிலானோ( Milan ) நோக்கிச் சென்று அங்கிருந்து வெனிஸ் (Venice) நகரை நோக்கிச் செல்லும் ஹைவே யினுள் ஏறி ஜேசலோ exit எடுக்க வேண்டும் மிலானோ ஒரு 50km , அங்கால ஒரு 300 km ஒடினால் போதும்... கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்.....
 3. 22 points
  ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை) ஒரு நாள் மனைவியுடன் புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன் கைத்தொலைபேசியில் முகநூலில் ஒன்றிப்போயிருந்த என்னை ஒரு தரிப்பிடத்தில் ஏறி பிச்சை கேட்கத்தொடங்கிய ஒருவரின் குரல் இடை மறித்தது அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால் வாகனத்தில் என்றால் ஐன்னல்களை மூடிவிடுவேன் புகையிரதத்தில் என்றால் தோழிலிருக்கும் துண்டால் மூக்கை மூடிக்கொள்வது தான் எனது வழமை புகையிரதத்தில் ஏறி பிச்சை கேட்பவர்கள் ஏதாவது ஒரு கதை சொல்வார்கள் இது வழமையானது தான் ஆனால் இவர் தனது வாழ்வு பற்றி சொல்லத்தொடங்கியது வித்தியாசமாக இருந்தது அவர் ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லும்போதும் அதன் வலியை உணர்ந்தது அதை சொல்ல மிகவும் சிரமப்பட்டது ஒவ்வொரு வார்த்தைக்கும் கண் கலங்கி வெட்கப்பட்டது அவர் இதை விரும்பவில்லை ஆனால் வேறு வழி இன்று தெரியவில்லை என்ற போது உடல் முழுவதும் கூசியது அந்த வலியை நானும் உணர்ந்தேன் இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது என்பதை வாழ்வில் முதன்முதலாக உணர்ந்தேன் பொக்கற்றுக்குள் கை வைத்த என்னை மனைவி கேட்டார் திடகாத்திரமான எவருக்கும் பிச்சை போடமாட்டீர்களே இன்று என்னாச்சு என்று? அவன் ரொம்ப வெட்கப்பட்டு பிச்சை கேட்கின்றான் எவருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று காசு போடும் போது தான் பார்த்தேன் நான் மட்டுமல்ல பலரும் கண்களில் ஒருவித கனிவுடன் பணம் போட்டபடி இருந்தனர். (இந்தக்கதையை எழுதத்தூண்டிய தம்பி நிழலிக்கு நன்றிகள்)
 4. 19 points
  முன்னொரு காலத்தில் யாழ் அதிகம் இளையோரைக் கொண்டிருந்தது. தற்போது, நான் பார்த்தவரைக்கும் இது மாறியுள்ளது. அந்தவகையில் வாழ்வு சார்ந்து யாழ் கள உறவுகளின் அனுபவங்களைப் பெறுவதற்காக இந்தப் பதிவு. போராட்டம் நடந்தவரை, ஈழத் தமிழர்களிற்கு வாழ்விற்கு அர்த்தம் தேடும் தேவை இருக்கவில்லை. ஒரு சாரார் போராட்டத்தோடு ஒன்றியிருந்து அதன் அர்த்தம் நமது அர்த்தம் என வாழ்நதார்கள், பிறிதொரு சாரார் எதிரிகளாக போராட்டத்தின் பிறழ்வுகளைக் கோடிட்டுக்காட்டுவது வாழ்வின் அர்த்தம் என்று வாழ்தார்கள். மிகுதிப் பேர் தமக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் நடக்கின்ற போராட்டத்தின் வீச்சு தம்மையும் தொட்டுவிடக்கூடாது என்ற கவனமே குறியாக, தாம் அது அல்ல (தாம் அதற்கு மேலானவர்கள்: ஆன்மீகம், நண்பர்கள், வர்க்கம் இப்படி இன்னபிற காரணிகளின் துணைகொண்டு) என்று நிரூபிப்பதை வாழ்வின் அர்தமாகக் கொண்டிருந்தார்கள். ஆக, ஏதோ ஒரு வகையில் போராட்டம் அர்தங்களின் விளைநிலமாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் ஒரு வெற்றிடம் சூழ்கிறது. போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் வளர்ந்தவர்களாக வாழ்ந்தவர்கள் யாரேனும் யாழில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் அந்தக் காலம் தொன்றுதொட்ட பாரம்பரியம் சார்ந்ததாக, பாரம்பரியத்தில் இந்தப் பிரச்சினை கையாளப்படுவதற்காக இருந்த கூறுகளின் பிடியில் இப்படி ஒரு பிரச்சினை இருந்ததே தெரியாது நகர்ந்திருக்கலாம்? தற்போது அர்த்தம் தேடுதல் மேட்டுக்குடிப் பிரச்சினை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பின்நவீனத்துவம் புரட்ச்சிகளைக் காலாவதியாக்கிவிட்டது. தொழில் நுட்பம் எல்லைகளைக் கரைத்து விட்டது. சந்தை பெறுமதிகளைப் புதைத்துவிட்டது. செல்வம் அனைவரிடம் நிறைந்து கிடக்கிறது. கல்வி என்ற பெயரில் கட்டழைகளால் மூளை நிறைகின்ற போதும் கல்வி தொலைந்து விட்டது, வீரம் அநாகரிகம் என்றாகிவிட்டது. மொத்தத்தில் கதாநாயகர்கள் கதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மேற்படி நிலை உணரப்பட்டதும் பிள்ளைகளில் மனதைக் குவியப்படுத்தித் தியாகிகள் ஆகிவிடப் பலர் முனைகிறார்கள். தமது வெற்றிடங்களைத் தமது பிள்ளைகளின் வெற்றிகொண்டு நிறைக்கத் தலைப்படுகின்றனர். ஆனால், இம்முயற்சி முயல்கொம்பு. இவர்களின் வெற்றிடம் பலமடங்கு பெரிதாகப் பிள்ளைகளிற்குள்ளும் வளர்கிறது. இப்போது கனடாவில் மிகப்பொதுவாக, பிள்ளைகளின் பல்கலைக்களக செலவு மட்டுமன்றி ஆடம்பர திருமணங்கள் ஊடாக வீடுகளைக் கூடப் பெற்றோர் பிள்ளைகளிற்கு வாங்கிக் கொடுப்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது, இதனால், நாற்பது வயதடைந்தபோது முன்னைய சந்ததி பெற்றுக் கொண்ட செல்வத்தின் சுதந்திரம் தற்போது இருபதுகளிற்கு வரப்பார்கக்pறது. ஒருவகையில் இது முன்னேற்றம் என்று பார்க்கினும், முன்னைய சந்ததி நாற்பது வயதில் சந்தித்த அர்த்தம் தேடல் தற்போது இருபதுகளில் ஆரம்பிக்கிறது. பேரன் பேத்தியில் மீண்டும் கதை ஆரம்பிக்கிறது. உத்தியோக உயர்வு, உயர்பதவிகளில் உட்காரல், அதிகாரம் போன்றன எல்லாம் இன்றைக்குத் தேடல்கள் அல்ல என்றாகிவிட்டது. ஏனெனில் இவை தாராளமாகக் கிடைக்கின்றன. அதிவேக கார்கள் முதலான இதர பல அதிர்வுகள் அதில் நாட்டமுள்ள அனைவரிற்கும் கிடைக்கின்றன. நாம் வைத்திருக்கும் வாகனங்களின் உச்சப் பயன்பாட்டை அனுபவிக் அவற்றை றேஸ் திடலிற்கு எடுத்துச் சென்றே அனுபவிக்க முடியும் என்றளவிற்கு நாளாந்த தெருவிற்குச் சம்பந்தமற்ற வாசகனங்களைச் சர்வசாதாரணமாக ஓட்டிக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருக்கிறோம். ஐந்தாயிரம் வரை கொடுத்து சிறந்த நாய்க்குட்டிகளை ஆராய்ச்சி செய்து பெற்றுக்கொள்கிறோம். ஆடம்பரச் சுற்றுலாக்கள் சர்வசாதாரணம். காதலும் காமமும் தாராளம், ஆனால் வெற்றிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு முனையில் ஆன்மிக வியாபாரம் முதலியன மேற்படி வெற்றிடம் சார்ந்து எழுகின்றன. என்ன தான் எழுந்தாலும் அர்த்தம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. போதைகள் பலவிதம் ஆனால் அனைத்தும் தற்காலிகம். புத்தகங்கள் ஏற்படுத்திய ஈர்ப்பு சில ஆயிரம் புத்தகங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும் தொலைந்து போய்விடுகிறது. இசை, திரைப்படம், ஓவியம், சமையல் என்று எண்ணற்ற முனைகளில் ரசனையும் creativityயும் ஓடிக்கொண்டு நிறங்கள் தெரிந்து கொண்டும் இருப்பினும், ஒரு எல்லையினை வாழ்வு தாண்டியதும் வெற்றிடம் அறியப்பட்டுவிடுகிறது. அதன் பின்னால் கடிவாளங்கள் பலமிழந்து போகின்றன. இந்தவகையில், யாழ்கள உறவுகளின் அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தப்பதிவு…
 5. 19 points
  அம்மாச்சி மகள் (குறுங்கதை) ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒற்றைப்பார்வையால் என்னை அடக்கிக் கொண்டிருந்தாள் என் அம்மாச்சி மகள். சில தினங்களுக்குள் சடுதியாக எடுக்கப்பட்ட முடிவை ஏற்கும் திராணியற்ற நிலையில் நான். அம்மாச்சி மகளின் மீதான் நம்பிக்கை சரிந்த கடைசி நிலையில் பொருமும் நெஞ்சும், முடக்கிய அழுகையும் , உறவுகள் முன்பு கலங்காத வீராப்புமாக பெரு நடிப்பில்…. நேரமும் துரிதமாக நகர்ந்தது. பார்த்த எவருடனும் பேசப்பிடிக்கவில்லை. செயற்கை சிந்திய முறுவல், சூழலின் கலகலப்பில் மறைக்கப்பட்ட யதார்த்தமாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன.. இன்னும் சில மணித்துளிகளில் இந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். புதிய பக்கம் எப்படி ஆரம்பிக்கும் என்ற எண்ணமே ஏற்பட மறுத்தது. அம்மா, அப்பாவின் காதல் திருமணம் எவ்வளவு பெரிய பிரளயத்தை உருவாக்கி களையப்படாத சோகமாக இன்றளவும்…..பாவம் அம்மா காதலை மறுத்த பெற்றோரை விட்டு அப்பாவை நம்பி வீட்டை விட்டு வெளியேறியபோது கனவில் கூட தனக்கு இப்படிப்பட்ட சாபம் வந்து சேரும் என்று நினைத்திருக்க மாட்டாள். அம்மா காதலுக்காக கதவைத் தாண்டியபோது. பாடையை விரித்துப் போட்டது பெற்ற வயிறு. ஒரு புறம் அழுகை ஒப்பாரி, மறுபுறம்திருமண நாதஸ்வரம் காதலுக்குக் கிடைத்த பரிசு ஏற்கமுடியாத பெற்றவள் பிணமானாள். முதல் அடி எடுத்து வைத்த திருமண வாழ்வு அன்னையின் பெருஞ்சாபம் சூழ… அடுத்தடுத்து , பெற்றவளின் கடைசிப்பயணத்தில் கூட ஒற்றைப்பிள்ளைக்கு முகங்காட்ட மறுத்து துரத்திய உறவுகளுக்கு முன்னால்…… இன்று பெருமிதத்தோடு அவள் தலை நிமிர்வாக நடந்தாள். அம்மா அப்பாவின் காதல் வாழ்வின் சாட்சியும் பொக்கிசமும் நான் மட்டுமே. உறவுகள் தள்ளி வைத்ததால் ஏற்பட்ட தனிமை, ஆதரவற்ற போராட்ட வாழ்வு இப்படியான வாழ்வில் இன்று வரைக்கும் மற்றவர்களிடம் கையேந்தாத வைராக்கியத்தோடு பெற்றவள் சாபம் முறியடித்து வெற்றிக் கனி பறிக்கும் சமயத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியில் அவள்…… என் மனதில் பறந்த பட்டாம்பூச்சி திருமணமேடையில் ஓதும் மந்திரத்துடன் அக்கினிக்குள் சங்கமித்துக் கொண்டிருந்தது. அம்மா அப்பாவின் காதல் மணம் என்னையும் ஆதரிக்கும் என்ற பெருநம்பிக்கை வெற்றிடமாகியது. அம்மாச்சி மகளை அதிகம் நேசித்துவிட்டேன். அக்கினி சாட்சியாக என் கழுத்தில் மாலை விழுந்தது. கலங்கிய விழிகளுடன் அம்மாவைப்பார்த்தேன். அம்மாச்சி மகள் பெற்றவள் சாபம் வென்ற பூரிப்பில் என் தலையில் அட்சதை தூவினாள்
 6. 18 points
  அம்மா….இண்டைக்கு வசதிக்கட்டணம் கட்டட்டாம் ! மூன்று வருஷமாய்ப் பணம் கட்டப்படவில்லையாம் !இல்லாவிட்டால், வாற கிழமை சோதினை எழுத விட மாட்டினமாம்! பரீட்சையுடன் சம்பந்தப்பட்டிருத படியால்...அடுத்த சம்பளம் வரட்டும் என்ற வழமையான பதிலை...அம்மாவால் சொல்ல முடியவில்லை! சரியப்பு...அப்பாவிட்டைச் சொல்லுறன்! ஏன் தான் வசதிக்கட்டனம் எண்டு பேர் வைச்சிருக்கினமோ தெரியாது! வச்தியில்லாததுகளிட்டையும் பலவந்தமாய்ப் பறிக்கினம்...என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அம்மா! அன்று காலை அப்பா கொஞ்சம் வழமைக்கு மாறாகக் கடு கடுப்பாகவே இருந்தார்! அவர் ஒரு ஆசிரியர்! அம்மாவும் ஒரு ஆசிரியை! அவர்களது சம்பளத்தில் தான் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் நடத்தப்பட வேண்டும்! தனது விரலுக்கு மேலால கொஞ்சம் வீங்கித் தான் தனது இரண்டு பையன்களையும், தனது ஒரே மகளையும்..யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில்,,,விடுதிகளின் வைத்துப் படிப்பித்து வருகிறார்! காலையில் பள்ளிக்கூடம் போபவர்...மாலையில் நாலு மணிக்குச் சைக்கிளில் ஏறித் தனது மிளகாய்த் தோட்டத்துக்குப் போய் விடுவார்! பிறகு வீட்டுக்கு வர...பின்னேரம் ஏழு மணியாகும்! இரண்டு பிள்ளைகள் ஒரே இடத்தில் படிப்பதால்….எவருடைய வசதிக் கட்டணத்தை எப்போது கட்டியது என்பது அவருக்கு நினைவில் இல்லை! இருந்தாலும் அதே கல்லூரியில் படிப்பிக்கும்...தன்னுடன் ஆசிரிய கலாசாலையில் ஒன்றாகப் படித்த பொன்னம்பலம் மாஸ்ரரிடம் பணத்தைக் கொடுத்ததாக அவருக்கு நினைவுண்டு! அதனால் தான் அவருக்கு அந்த எரிச்சல் வந்திருக்க வேண்டும்! அப்பா..அம்மாவுடன்...அளவளாவுவது...அவனுக்குக் கேட்டது! பின்னர் அம்மா...அப்பாவுக்குத் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்த தனது சேமிப்பிலிருந்து ….நூறு ரூபாவை எடுத்து என்னிடம் தந்து...தம்பி..ஒருத்தரிட்டையும் குடுக்காமல்...நீயே நேர போய்க் கவுண்டரில கட்டிப்போட்டு, றிசீட்டை வாங்க்கி கொண்டு வரவேணும் எண்டு கடுமையான கட்டளையும் போட்டு விட்டுச் சென்று விட்டார்! கொடுத்த காசைப் பொன்னம்பலம் கட்டாமல் விட்டது ..அப்பாவுக்குப் பெரிய கவலையாகப் போய் விட்டது! வாத்திச் சீவியம் என்றால் இப்படித் தானே! அவனுக்கும் என்ன பிரச்சனையோ என்று நினைத்தவாறே….தம்பி 'துலாவைக் கொஞ்சம் எட்டி மிதி அப்பு 'என்று துலா மிதிக்கும் மூத்த மகனுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்! அம்மாவும் அப்பாவைப் போலத் தான்! வளவுக்குள் இருபது தென்னை மரங்களும், சில பனை மரங்களும் உண்டு! பள்ளிக்கூடத்தால் வந்த பிறகு...அம்மா...என்றுமே பகல் நித்திரை கொண்டதை ...அவன் கண்டதில்லை! அப்பா முதல் நாள்...நனைத்துப் பிழந்து போட்ட தென்னோலைகளைப் பின்னுவதும், பனையோலைகளின் நாரிலிருந்து வெங்காயக் கூடை, மற்றும் பனையோலையில் இருந்து பாய் போன்றவை பின்னுவதும் அம்மாவின் பின்னேர வேலைகளாக இருந்தது! சனி ஞாயிறுகளில் பிள்ளைகளும் இந்த வேலைகளைப் பகிர்ந்து கொள்வதுமுண்டு! இப்படியான வேலைகளிலிருந்து அம்மாவுக்கு வரும் பணத்தை ...அப்பா கண்டு கொள்வதில்லை! அதற்காக அம்மாவும் தேவையில்லாமல் செலவழிப்பதுமில்லை! இந்தப் பணத்தை வைத்து...அம்மா பல வேளைகளில்...எங்கள் எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறாள்! எங்களிடம் ஒரு பழைய ரேடியோ ஒன்று இருந்தது! அதன் பின் பக்கத்தில் பெரிய..பெரிய பல்புகள் மாதிரி வால்வுகள் இருக்கும்! ஒரு இரவில்..அந்த றேடியோவின் பின பக்கத்தைத் திறந்து விட்டால்...அந்த வால்வுகளின் வெளிச்சத்தில்..ஒரு புத்தகம் கூட வாசிக்கலாம்! இவை அதிகம்...பற்றரிகளை உபயோகிப்பதால் நீண்ட நேரம் வானொலி கேட்க முடியாது! காலைச் செய்திகளும்..மாலைச் செய்திகளும் தான் கேட்பதுண்டு! ஐக்கிய தேசியக் கட்சி...அல்லது சுதந்திரக் கட்சி என்று எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ அதற்கேற்ப யானை வரும் போது ஒலிக்கும் மணிச்சத்தமோ அல்லது..யானை கலைக்கும் போது பறை தட்டும் சத்தமோ மாறி ...மாறி வரும்! ஒரு நாள்.. எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது...அடுத்த அறையிலிருந்து சல்லல்லாஹு சலையும் அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து கொண்டிருந்த போது ...வீதியில் ஒரு கல் கிடந்தது! அவர் அதனை ஒரு பக்கம் தூக்கிப் போட்டு விட்டுத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் என்று நபிகளின் போதனை போய்க் கொண்டிருந்தது! ஆனால் எமது ஆஸ்தான ரேடியோ ..தன்ர பாட்டில் 'சிவனே' என்று பேசாமல் குந்திக்கொண்டிருந்தது! அது கடைசியாக வாய் திறந்து கதைத்து.. ஆறுமாதங்கள் முடிந்திருந்தது! அப் போது தான் எல்லோருக்கும் தெரிந்தது...அம்மா..எங்களுக்குத் தெரியாமல் ஒரு ற்றானசிஸ்ரர் ரேடியோ வாங்கியிருக்கிறாள் எண்டு! அதன் பெயர் 'எலையிற்' என்று இப்போதும் நினைவில் உள்ளது! சரி...கதையை விட்டுக் கன தூரம் போய் விட்டோம் போல உள்ளது! மூத்தவனும், அக்காவும் ஒரு மாதிரி அரசாங்க வேலையில் சேர்ந்து..அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கை கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்! ஆனால் அப்பாவும்..இதுவரை தோட்டம் செய்வதை விடவுமில்லை…! அம்மாவும் கிடுகு பின்னுவதை நிறுத்தவுமில்லை! அவை இரண்டும் ..அவர்கள் பணத் தேவைக்காகவன்றி..ஒரு ஆத்ம திருப்திக்காகச் செய்வது போலத் தோன்றியது! கடைசி மகனால் தான் ....அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கொஞ்சம் பிரச்சனை தோன்றியது! அவனுக்கும் படித்து வேலை செய்யும் நாட்டம் இருக்கவில்லை! அவனது நண்பர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து பணம் அனுப்பத் துவங்கியிருந்தனர்! அவனுக்கும் அந்த ஆசை பிடித்து விட்டது! அப்பாவும் ...தனது மிளகாய்த் தோட்டத்தைக்..குத்தைகைக்கு விட்டு..அந்த பணத்தை வைத்து அவனை ஒரு ஏஜன்சி மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்! தம்பி...எனக்குக் கலியாண வயசில ஒரு பொம்பிளைப் பிள்ளையிருந்தும்...நான் உன்னைச் செலவழிச்சு அனுப்பிறன்! போற இடத்தில ..ஏதாவது செய்து வாழ்க்கையில முன்னேறப் பார் அப்பு! வேற எதுவும் எங்களுக்கு நீ செய்யவேண்டாம்! அவனுக்கும்...வெளி நாடு போன பின்னர் தான்..அந்த வாழ்வின் உண்மையான உருவம் தெரிந்தது! தனது நண்பர்கள் அனுப்பிய படங்களையும், அவர்கள் அனுப்பிய ‘பிறை' நையிலோன் சேட்டுக்களையும், வைத்து அவன் எடுத்த முடிவு எவ்வளவு தவறானது என்றும் அவனுக்குப் புரிந்தது! மூன்றே வருடங்களில் அவன் திருப்பி அனுப்பப் பட்டிருந்தான்! அவன் திரும்பி வந்து...இரண்டு மாதங்க கழித்து..! "அம்மா...கொழும்பில ஒரு கொம்பியுட்டர் கோர்ஸ் ஒண்டு செய்தால்...நான் இதுவரை படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலை எடுக்கலாமாம்! ஆனால் கொஞ்சம் ...காசு தேவைப்படும்!" அம்மாவிடம் இருந்து அமைதியாகப் பதில் வந்தது! அடுத்த பென்ஷன் வரட்டும்! ( யாவும் கற்பனை)
 7. 18 points
  “அத்தான் எழும்புங்கோ“ காலை நித்திராதேவியின் அணைப்பின் சுகம் கலைந்த கடுப்பையும் மீறி அழைத்த குரல் காதில் தேனாக நுளைந்தது. அழைத்தபடி அருகே வந்து தட்டி எழுப்பிய கையை பட்டென்று பற்றி அணைத்தான். “விடுங்கோ“ அவள் சிணுங்கிச் சிவந்தாள். சிவந்த கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டியவன் அவள் அழகை ரசிக்கத் தொடங்கினான். சிவந்த கன்னம் அவன் கைபட்டதால் மேலும் சிவந்து நெற்றியை அலங்கரித்த குங்கும நிறத்தோடு கலந்தது. சாமியைக் கும்பிட்ட அடையாளம் அவள் நெற்றியில் மெல்லிய வெண்ணிறக் கோடாக மிளிர்ந்தது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலரின் மணம் அவன் நாசியில் ஏறி நித்திரைச் சோம்பல் எல்லாம் விரட்டி அடித்தது. ஆறரை மணிக்கு எழுந்து காலைக் கடன்கள் எல்லாம் முடித்து வேலைக்குப் புறப்பட அவனுக்கு நேரம் போதுமானது. அலாரம் 'டிங்' 'டிங்' 'டிங்' என்று இனிமையாகத்தான் ஒலிக்கும். ஆனாலும் அவன் அன்பு மனைவியின் இனிய "அத்தான்" என்ற குரல் ஒலி கேட்காது எழுந்ததே இல்லை. பல் துலக்குவதிலிருந்து பாதணி போடும்வரை அவனுக்கு தேவையான அனைத்தையும் நேர்த்தியாக வழங்கிக் காலை உணவையும் அருந்த வைத்து, ஏழரை மணிக்கு அவனை வேலைக்குப் புறப்படத் தயாராக்கி விடுவாள். அதுமட்டுமின்றிப் பாடசாலைக்குப் போகும் மூத்தவனையும் பளிச்சென்ற உடைகளுடன் அப்பாவுக்கு முத்தம் கொடுப்பித்து அவனுடன் மகிழுந்தில் ஏற்றிவிடும்போது டாண் என்று அருகேயுள்ள கோவில் மணி ஒலிக்கும். பாலர்வகுப்புக்குச் செல்லும் இளையவனை அவளே கூட்டிச் செல்வாள். அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து தன் பிஞ்சுக் கைகள் இரண்டையும் ஆட்டும் கடைக்குட்டியை அவன் அணைத்துக் கொஞ்சும்போது அம்மாவுக்கும் ஒன்று அழுந்தக் கிடைக்கும். மனைவியை எந்த இடத்திலும் வைத்து அணைத்துக் கொஞ்சக்கூடிய கலாச்சாரம் உள்ள யேர்மனியில், அவனது கொஞ்சல் அவளுக்குக் கூச்சம் தருவதில்லை. ஆனால் சொந்த நாட்டவர் எவருடைய தலை தெரிந்தாலும்...! அவளுக்கு கொஞ்சலைக் கொடுக்கவோ எடுக்கவோ கெஞ்சினாலும் அவனால் முடியாது.!! பணி தொடரும்.
 8. 17 points
  மனிதர் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது. சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார். இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும்.
 9. 17 points
  என் முதலாவது காதலியே...! உன்னை நெஞ்சோடு…, இறுக்கமாக அணைத்த நாள், இன்னும் நினைவிருக்கின்றது! நீ…,! எனக்கு மட்டுமே என்று.., பிரத்தியேகமாக... படைக்கப் பட்டவள்! உனது அறிமுகப் பக்கத்தில், எனது விம்பத்தையே தாங்குகிறாயே! இதை விடவும்…,, எனக்கென்ன வேண்டும்? உனது நிறம் கறுப்புத் தான்! அதுக்காக…., அந்தக் கோபாலனே கறுப்புத் தானே! அதுவே உனது தனித்துவமல்லவா? உன்னைப் பற்றி…, எனக்கு எப்பவுமே பெருமை தான்! ஏன் தெரியுமா? ஜனநாயகமும்...சோசலிசமும், உடன் பிறந்த குழந்தைள் போல.. உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!, உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது? என்னவளே...! தோற்றத்தில்…, நீ கொஞ்சம் பெரிசு தான்! அதுவும் நல்லது தானே! அதிலும்,,, ஒரு வசதி தெரியுமா? எந்த தேசத்தின் பணமானாலும், உனது ஆடைகளுக்குள் இரகசியமாக, மறைத்து விடலாமே! உன்னை அடைவதற்கு.., நான் பட்ட பாடு…, உன்னைத் தொடுவதற்கு, நான் கடந்த தடைகள், அப்பப்பா..! இப்போது நினைத்தாலும், இதயத்தில் இலேசாக வலிக்கிறதே! விதானையிடம் கூட…, கையெழுத்துக்கு அலைந்தேன்! விதானையின் விடுப்புக்களுக்கு…, விடை சொல்லிக் களைத்தேன்! பாம்புகள் போல நீண்ட வரிசைகளில், பல பகல் பொழுதுகள்..,, பைத்தியக் காரனாய்க்காத்திருந்தேன்! நாளைக்கு வந்திருவாள் என்றார்கள், நாலு நாட்கள் எடுத்தது! சில வேளைகளில்.., உனது அழகிய மேனியில்.. அன்னியர்கள் சிலர், ஓங்கிக் குத்துவார்கள்! அந்த வேளைகளில்.., உன்னை விடவும், எனக்குத் தான் வலிக்கும்! ஒரு நாள்…, உன்னை அந்நியர்களின் வீட்டில், அனாதரவாய்க் கை விட்டேன்! எனக்கு மட்டும்,விருப்பமென்று நினைத்தாயா? உன்னை விட்டுத் தான் ஆக வேண்டும்! எனக்கோ, இரவு முழுவதும் தூக்கமேயில்லை! எப்போது விடியும் என்ற ஏக்கத்தில்.., இமைகளை மூட முடியவில்லை! விடிந்ததும்.., ஓடோடி வந்தேன் உன்னிடம்! உன்னைக் காணவில்லை என்றார்கள்! இதயத்தின் துடிப்பே,,,. அடங்கிப் போன உணர்வு! இரண்டு நாட்களின் பின்னர்.., அந்த உத்தியோகத்தரின், 'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,, உனது சக தோழிகளுடன்.., நாலாவது காலாகி..... நீ மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்! அப்போதும் கூடப் பார்..! உனது கறுப்பு நிறம் தான்…, உன்னை மீட்டுத் தந்தது! பத்து வருடங்களின் பின்னர்…, இன்னொரு காதலி வந்தாள்! நீ எனது முதல் காதலியல்லவா? உன்னையும் வைத்துக் கொள்ளத் தான் ஆசை! கெஞ்சிக் கேட்டும் பார்த்தேன்! வஞ்சகர்கள் அவர்கள்! இரண்டு லட்சம் கேட்டார்கள்! இரண்டு லட்சத்தை.., எங்கே தேடுவேன்! அந்த இரண்டு லட்சம் உனக்கல்லவாம்! என் சொந்தங்கள் மீது,,,, எரி குண்டுகள் போடவாம்! ஒரு நிமிடம் தான் சிந்தித்தேன்! உனது முகம் வாடியது தெரிந்தது! இறுக்கமாய் மனதை வரித்து, உன்னிடம் சொன்னேன்…! சரி தான் …. போடி! (உருவகக் கவிதை)
 10. 16 points
  உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம். எச்சரிக்கை இம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். குறிப்பு சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை. உடலுக்கான சக்தியின் தேவை பிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. 1. முதலாவது காபோஹைதரேட் இதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு. சுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும். அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும். ஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது. 2. இரண்டாவது கொழுப்பு. முளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும். ஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும். வரலாற்றுக் குறிப்பு ரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர். 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார். குளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது. இன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. ஒப்பந்தம் கொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா ? இதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை. என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம். சமன்பாடு கொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம். ஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி 150 கிராம் கோழி = 350 கி.கலோரி ஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி ஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது. இதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம் . அனுகூலங்கள் கொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன. நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம் கலோரிக் கட்டுப்பாடு தேவையில்லை இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும் (triglycerides) இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது மேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம். சில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது சில வகையான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும் ஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும். இன்னும் பல… தீமைகள் உடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் நார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் கொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும். படிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும். இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன். தயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள். தொடரும்.
 11. 16 points
  துருச்சாமி... தொடர்கிறது ! 3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். காலை 09 : 00 மணி. அந்த வீட்டின் முன்னாலுள்ள வீதியில் சற்றுத் தள்ளி இருந்த பூவரசமர நிழலில் சிலர் கூடி நிக்கிறார்கள். சூசை சயிக்கிளில் மீன் கொண்டுவாற நேரம்.அங்கு நின்ற காமாட்சி மற்றவர்களைப் பார்த்து பர்வதம் வீட்டில் ஒரு சாமி வந்திருப்பதைத் தான் பார்த்ததாக மெதுவாய் சொல்கிறாள்.அது சிறிது நேரத்தில் அந்தக் கிராமம் முழுக்க காதோடு காதாகப் பரவுகின்றது. அதேநேரம் சூசையும் அந்த பல்பு போல இருக்கும் ஹாரனை பீப்...பீப் என கையால் அமுக்கி அமுக்கிக் கொண்டு அங்குவந்து இறங்குகின்றான். எல்லோரும் மீன் பெட்டிக்குள்ளிருந்து தங்களுக்கு இசைவான மீன்கள் , றால்கள், நண்டு கணவாய், சுறா என்று பொறுக்கி எடுக்கினம். செண்பகமும் மோகனாவும் கதைத்துக் கொண்டே வந்து சேருகினம். காமாட்சி : சூசை நீ ஊரெல்லாம் நல்ல மீன்களை வித்துப் போட்டு உள்ள நாறல் மீனெல்லாத்தையும் கடைசில கட்டியடிக்க இங்கு கொண்டு வாராய். சூசை: இல்லையக்கா உங்களுக்கு நான் அப்படி செய்வேனா. இப்பதான் கடற்கரையிலே ஏலம் எடுத்துக் கொண்டு இங்கால வாறன். அவரவர் முன்பே பத்தியம் அதுக்கு இதுக்கு என்று சொல்லி வைத்த மீன்களைத் தனியாக எடுத்து அவரவர்களிடம் கொடுத்து சிலருக்கு கொப்பியில் கணக்கும் எழுதிக் கொள்கிறான். காசு கொடுத்தவர்களுக்கு மிச்சத்தை தனது சாரத்தின் சண்டிக்கட்டை தூக்கி உள்ளிருந்த காற்சட்டைப் பையில் இருந்து காசை எண்ணிக் கொடுக்கிறான். எல்லோரும் கலைந்து போனபின் செண்பகமும் அவனுடன் உரசினாப் போல் நின்றுகொண்டு மீன்கள் எடுக்க சூசையும் தனியாக வைத்திருந்த நல்ல மீன்களைப் பெட்டியில் போடுகின்றான். அவளும் எடுத்துக் கொண்டு கிளம்ப அவனும் "செம்பு" இன்னும் இரண்டு தெருவுக்குப் போட்டு வீட்டுக்கு வாறன் என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே அந்த பல்பு ஹாரனை அமுக்கிக் கொண்டே சயிக்கிளில் ஏறிப் போகிறான். (கிராமத்தைக் கொஞ்சம் பார்ப்போம். அது ஒரு மிகச் சிறிய கிராமம்.சுமார் ஐம்பது வீடுகள் வரை இருக்கும். ஒரு சில வீடுகளே ஓடு போட்டதும் பெரிய வீடுகளுமாய் இருக்கின்றன.கிராம எல்லையில் ஓரிரு கோயில் குளங்கள் இருக்கின்றன. ஆனால் நல்ல செழிப்பான கிராமம். இயற்கை வளத்தை அள்ளிக் கொடுத்திருக்கு. அது அங்குள்ள ஆண்களிடம் வலிமையாகவும் பெண்களிடம் வனப்பாகவும் வாளிப்பாகவும் குவிந்து கிடக்கு. ஆங்காங்கு ஊருக்குள் நடக்கும் கொண்டாட்டங்கள் திருவிழாக்களுடன் சேர்ந்து கிசுகிசுக்களும், கசமுசாக்களும் தாராளமாக நடக்கும். எல்லாம் ஓரிரு வாரந்தான். பின்பு பழையபடி வேறொரு கிசுகிசு கசமுசா. ஒரு வெள்ளந்தியான கிராமம்.) சாமி திண்ணையில் தியானத்தில் இருக்குது. அந்த வீட்டுக்காரர் கதிரவேலு படலையை சயிக்கிளை விட்டு இறங்கி ஸ்ராண்ட் போட்டு விட்டு உள்ளே வாரார்.வாசலில் கிளுவமர நிழலில் திருகணியில் இருந்த மண்பானையில் இருந்து கிண்ணத்தில் நீர் மொண்டு அண்ணாந்து குடித்து விட்டு உள்ளேபோய் சற்று நேரத்தில் வெளியே வந்து எதிர் திண்ணையில் அமர்கிறார். சாமியும் அரவம் கேட்டு கண்திறந்து பார்க்குது. கதிவேழு குசலம் விசாரிக்கிறார். கதிரவேலு: கும்புடுறேன் சாமி. சாமியை எப்படிக் கூப்பிடுறது. சாமி: ஒரு தெய்வீகப் புண்ணகை சிந்தி சொல்லுது. என்நாமம் "துருச்சாமி" . ( சாமியின் பூர்விகப் பெயர் துரைச்சாமி. அவரது பால்ய காலத்தில் அவருடன் இருந்த கஞ்சாச்சாமி, அபின்சாமி,கள்ளுச்சாமி எல்லாம் அவரை துருச்சாமி ...துருச்சாமி என்று அழைத்து இப்ப சாமியே தன்நாமம் கெட்டு, தானே மறந்து துருச்சாமியாய் கிராம வலம் வருகுது). கதிரவேலு: சாமியின் பூர்வீகம் அறியலாமோ. சாமி: மூச்சை நன்றாக இழுத்து வீட்டுக் கொண்டு ம்.... அது ஒரு ஆடி அமாவாசை. அறியாப் பருவத்தில் கீரிமலையில் நீராடப் போய் அங்கு கூட்டத்தில் ஐயா அம்மாவைத் தவறவிட்டு அங்கிருந்த சாமிமார்களுடன் அலைந்து,திரிந்து கால்நடையாய் கதிரமலை சென்று மாணிக்க கங்கையில் மூழ்கி மாங்குளத்தில் எழுந்து பின் இப்படியே கிராமம் கிராமமாய் அலைந்து ம் ....! சாமி மோனத் தவத்தில் மூழ்குது. "கூடுமறை யட்சரக் கோணமெல்லாம் காவல் கொண்டண்டம் பூத்த தேவே" அது ஒரு நாற்சார் வீடு. உள்ளே அடுக்களையில் பெண்டுகள் சிலர் சேர்ந்து சமையல் செய்ய தொடங்கிட்டினம். சிலர் நெல்லு எடுத்து வந்து மரஉரலில் போட்டு உலக்கையால் கைமாற்றி குத்தினம். ஒருவர் இருவராய் பலர் வாசலாலும் பின் வளவாலும் வந்து சேருகினம். சாமியும் திண்ணை விட்டு வெளியே வந்து முற்றத்து மாவின்கீழ் நிக்க பர்வதத்தின் பேரன் கண்ணன் ஒரு வாங்கை எடுத்து வந்து அங்கு வைக்கிறான்.சாமியும் அதில் மான்தோல் போட்டு அமருகின்றது. மறக்காமல் தூளிப் பையையும் கையேடு எடுத்து வந்து பக்கத்தில் வைத்திருக்கு. கதிரவேலுவும் மீண்டும் சயிக்கிளில் வெளியே போகிறார். செண்பகம் மீனோடு வந்து படலையைத் திறக்க சயிக்கிளில் வந்த கதிரவேலுவும் உள்ளே சயிக்கிளை நிப்பாட்டிப் போட்டு செண்பகத்திடம் எனக்கு கொஞ்சம் வாழை இலை வேணும் செம்பு என்கிறான். செண்பகம்: என்ன கதிரு உனக்கில்லாததா! தேவையானதை நீயே எடுத்துக்கொள். குருத்திலை எல்லாம் விரிஞ்சு கிடக்கு காத்தில என்கிறாள். கதிரும் கத்தியுடன் வளவுக்குள் சென்று நல்ல இலைகளாய்ப் பார்த்து பார்த்து வெட்டுகிறான். மீனை சட்டிக்குள் வைத்து மூடிவிட்டு வந்த செண்பகம் என்ன கதிர் உன் வீட்டுக்கு யாரோ சாமி வந்திருக்காமே ! கதிரவேலு: ஓம் செம்பு. அதுதான் கானபேர் வருகினம், மத்தியானம் சோறு ஆக்கிப் போடுறம் நீயும் வா என்ன. செண்பகம்: சும்மா போ கதிரு, உன் பொஞ்சாதி பொன்மணி பார்க்கிற பார்வையே சரியில்லை. ( பழனி வேற்ரூருக்கு வேலைக்கு போன இடத்தில் அவனுடன் பழக்கமாகி செண்பகம் அவனது ஆசைநாயகியாய் இங்கு வந்துவிட்டாள். ஊருக்குள் கிசுகிசு இல்லாத நேரங்களில் செண்பகம்தான் அவள்). என்று சொல்லிக் கொண்டே அதோ அந்த மொந்தன் குலையை வெட்டி ரெண்டு காயை எனக்குத் தந்திட்டு மிச்ச இலையையும் கொலையையும் நீ எடுத்துக் கொண்டுபோ என்கிறாள். இந்நேரம் வாசலில் வந்த சூசை வேலியால் எட்டிப் பார்த்துவிட்டு யாரோ நிக்கினம் போல என்று அப்பால் போகின்றான். கதிரும் அதை வெட்டி அவளுக்கும் குடுத்து விட்டு வாழை நாரால் எல்லாத்தையும் சயிக்கிளில் கட்டி விட்டுத் திரும்ப நில்லு கதிரு இந்தா இந்த ரெண்டு பொத்தியும் உனக்குத்தான் என்று வாளைப் பொத்தி இரண்டைக் கொடுக்கிறாள்.கதிரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு போகிறான். சாமி வாங்கில் இருந்து அங்கிருந்த பிள்ளைகள் பெரியவர்களுக்கு சில பல சிரிப்புக்கு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு ஒரு பெண்மணி ஒரு பையனைக் கூட்டி வந்து சாமி இவனுக்கு மாலையில் இரவில் காச்சலாய்க் கிடக்கு. உன் கையாள கொஞ்சம் துண்ணுறு பூசிவிடு. சாமியும் விபூதிப் பொட்டலத்தை எடுத்து சிறிது விபூதியை அள்ளி இடது உள்ளங் கையில் பரப்பி ஒரு குச்சியால் ஏதோ யந்திரம் கீறி மந்திரிச்சு அந்தப் பையனது உச்சியிலும் நெத்தியிலும் பூசி சொடக்குப் போட்டு அனுப்பி வைக்குது. மற்றவர்களுக்கும் திருநீறு தந்து குழந்தைகளுக்கு தன்கையாலே பூசி விடுகுது. அந்தத் திருநீறும் ஒரு தனித்துவமான வாசனை வீசுது. வேறொரு பெண் கையில் ஒருமாதக் குழந்தையுடன் தனது மாமியாரோடு வந்திருக்கு. அவள் சாமியிடம் சாமி நீங்கள்தான் என்பிள்ளைக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி சாமியின் காலடியில் குழந்தைய கிடத்துகிறாள். சாமியும் பிள்ளையை அல்லி எடுக்க அது சாமியின் மார்பில் "உச்சா" போகின்றது. அப்பெண்ணும் அவசரமாய் தன் முந்தானையை எடுத்து சாமியின் மார்பைத் துடைக்கப் போக சாமி அதை கையால் தடுத்து தனது சால்வையால் துடைத்துவிட்டு விபூதி எடுத்து மாமிக்கும் தாய்க்கும் பிள்ளைக்கும் பூசிவிட அங்கிருந்த பர்வதாக கிழவியும் சின்னப் பிள்ளை யாரிடம் உச்சா போகுதோ அவர்களிடம் உறவு அதிகம் என்று சொல்லுறாள். சாமியும் அந்தக் குழந்தையின் குஞ்சை பாசத்துடன் தடவிக் கொண்டே அதன் காதில் மெல்ல குஞ்சிதபாதம்... குஞ்சிதபாதம்...குஞ்சிதபாதம் என்று மூன்று முறை சொல்லிவிட்டு கையை ஆகாயத்தில் ஆட்டி ஒரு சங்கிலி எடுத்து அதன் கழுத்தில் போட எல்லோரும் வியக்கின்றார்கள். பின் துருச்சாமிக்கு அரோகரா என்றும், குஞ்சிதபாதம் வாழ்க என்றும் கோரஸ்சாய் கோஷம் போடுகின்றார்கள். சாமியும் பிள்ளையைத் தாயிடம் குடுத்து குளிக்கும்போது மறக்காமல் சங்கிலியைக் கழட்டிவிடு , தண்ணி பட்டால் சாயம் போய்விடும் என்று சொல்லுது. எல்லோரும் போடும் சத்தத்தில் அது சக்தி போய்விடும் என்று அவளுக்கு விளங்குது. அப்படியே செய்கிறேன் சாமி என்று சொல்கிறாள். அவர்களுக்கு தண்டம் தூக்கி ஆசிவழங்கி அனுப்புது. அந்தப் பெண்ணும் திரும்பத் திரும்ப சாமியைப் பார்த்துக் கொண்டே செல்லும்போது மங்கலாய் பழைய நினைவொன்று பொறி தட்டுது. போனவருடமளவில் தனது மாமியார் தன்னிடம் கலியாணம் கட்டி நாலு வருடமாகுது இன்னும் ஒரு புள்ளை பெறக் காணேல்ல என்று திட்டிப் பேசி மகனிடம் சொல்லி அவளை அயல் கிராமத்திலிருக்கும் அம்மா வீட்டுக்கு அனுப்பியதும், அடுத்தடுத்த நாள் இரவு தான் தோட்டத்துக்குள் இருந்து வரப்பில வரும்போது யாரோ தன்னை இழுத்து விழுத்தியதும் அவனிடம் இருந்த தண்டத்துக்கு பயந்து தான் பேசாமல் இருக்க அப்போதும் இதே மாதிரி வாசனைத் திருநீறு தன்னை மூடியதும், அதையும் வீட்டில சொல்லப் பயந்து பேசாமல் இருக்க அடுத்தடுத்து வந்த இரண்டு மாதத்தில் தான் சத்தி எடுக்க இது மசக்கை என்டு கண்டு புருஷன் வீட்டுக்கு தகவல் அனுப்ப அவர்கள் வாடகைக்கு சிவதாற்ற காரோடு வந்து தன்னைத் தாங்காத குறையாய் இங்கு அழைத்து வந்ததும்,பின் சீராட்டிப் பாராட்டி இந்தக் குஞ்சிதபாதம் பிறந்ததும் நினைவில் வர "இவர் அவனாய் இருக்குமோ என ஐயப்பட்டு அவர் கையில் தண்டத்தையும் கண்டு அவன்தான் இவர்" என்று தெளிந்து மாமியிடம் குழந்தையைக் குடுத்துவிட்டு சற்று நில்லுங்கோ மாமி வாறன் என்று திரும்பிப் போய் சில ரூபாய் தாள்களும் கையில் கிடந்த காப்பையும் கழட்டி சாமியின் மடியில் போட்டு வாஞ்சையுடன் அவர் பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு போகிறாள். அற்புதங்கள் தொடரும்....!
 12. 15 points
  ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். சில மாதங்கள் கழித்து........ ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க.. அது ஒன்னுமில்ல.. எங்க பார்ப்பம்.. அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ.... ஐயையோ.............................................. நானும் யாழும்..... எம்பிட்டுப் போனமே. இருந்தாலும் எழுதிக்கேட்டே தான் இருப்பம். அந்தளவு உறவு நமக்குள்.. தமிழால்.. தமிழுக்காக.. தமிழருக்காக.. தமிழர் உலகிற்காக.. நல்ல சமாளிப்புக்கேசன் என்றாலும்.. யதார்த்தமும் கூட. (இது ஒரு உண்மையின் தரிசனம்)
 13. 15 points
  இந்த உலகம் தொழிநுட்பத்தில் வளர்கிறது நாமும் அதன் போக்கில் காலத்துக்காலம் அதில் புதிய கண்டுபிடிப்புக்களில் ஈர்க்கப்பட்டு அதன் பின்பே சென்று கொண்டிருக்கிறம் என்பத விட ஓடிக்கொண்டிருக்கிறோம். நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சி நம்மை எவ்வாறு அடிமையாக்கிறது நமது வாழ்வை அது எப்படி விளையாடுகிறது என்பதே இந்த கதை. இலங்கை போக்குவரத்துசபை பஸ் மட்டும் கைபோட்டால் நிற்குமா என்ன? நிற்கவில்லை அந்த கொழுத்தும் வெயிலில் மீண்டும் அடுத்த பஸ்ஸ்சுக்காக காத்திருந்தேன் அந்த மொபலை நொண்டிக்கொண்டே இந்த போணும் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் சாமி. என்ற நினப்பில் பஸ் கோர்ண் சத்தம் கேட்டது நிற்பானா ?மாட்டானா? என்று கைய போட்டாலும் அங்கே இறங்கும் பயணிக்காக நிற்பாட்டினான். உடனே ஏறிவிட்டன் பஸ் மெதுவாக நகர தொடங்கியது நான் ஏறியவுடனே என்னவோ நமக்கும் மட்டும் எல்லாம் மெதுவாத்தானே நடக்குது. என்ற நினைப்பு அடிக்கடி வந்து போகும் இருந்தாலும் பஸ்ஸுக்க அடிக்கடி என்னை ஒரு நிலைப்படுத்துவதென்றால் அந்த ஹெட்போணும் பாட்டுத்தான் இல்லையென்றால் ஆயிரம் கதைகளை காதில் வாங்கி போட்டுக்கொள்ள வேண்டி வரும். இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளினால் என்பதற்க்காக அதை ஏறிய உடன் தூக்கி மாட்டிக்கொள்வேன். பக்கத்தில் பெண்கள் இருந்தால் எங்கே கைபட்டாலும் குற்றம் என்று சொல்லும் பெண்கள் எழுந்து சீற் கொடுத்துவிட்டு நின்றாலும் உரஞ்சுகிறான் என்ற குற்றம் வேறு என்ன செய்வது எங்கேயாவது ஒரு மூலையில் சுவரில் ஒட்டிக்கொள்ளும் பல்லி போல உட்கார்ந்து வேலைக்கான பயணத்தை தொடர்வது வழமையாகும். அன்றைய நாளும் பக்கத்திலிருந்தவர் அந்த நேர காற்றின் சுழற்ச்சிக்கு நித்திரை செல்ல அடிக்கடி வந்து முட்டுக்கொடுத்துவிட்டு போனார் தலையால். நமக்கு மட்டும் இரண்டு பக்கமும் அடிதானே என நினைத்து அவரை சாய்த்து விட்டு திரும்பும் போது செல்வியை அந்த வங்கியில் கண்டேன். அது பாதையோரம் என்பதால் அவளை முழுமையாக பார்க்க கிடைத்தது இருந்தாலும் சந்தேகம் இவள் லண்டன் போனவள் மீண்டும் எப்படி வந்தாள்? திரும்பவும் என்ற யோசனை ஓடிகொண்டு போனது மறக்க முடியாமலும் நினைக்காமல் இருக்க முடியாமாலும் என் மனதில் இருக்கும் அவள்முகம். அவளைக்கண்டதும் அவளைப்பற்றி கேட்க ஆசை தோன்றியது. அவளது வங்கியில் வேலை செய்யும் இன்னொரு அக்கா லதா. லதா அக்காவை அழைத்தேன் தொலைபேசியில் வணக்கம் அக்கா வணக்கம் சொல்லுங்க ஜெய் என்றார் அவரும் அக்கா செல்வியை போல ஒருவளை உங்க வங்கியில மற்ற கிளையில பார்த்தான் வந்துவிட்டாளா அவள்? இல்லை வேற யாருமா அக்கா?? அவள் தான் தான் தம்பி வந்துட்டாள் வந்து ரெண்டு மாசத்துக்கு மேலாகுதே உனக்கு தெரியாதா என்ன? இல்லை அக்கா எனக்கு தெரியாது இன்று அவளை போல ஒருத்தியை கண்டேன் சந்தேகம் அதான் உங்களிடம் கேட்டேன் ஓகோ நாளைக்கு நேரம் இருந்தால் வீட்டுக்கு வா முழுவதும் விபரமாக சொல்கிறேன் என்றார் அவரும் ஒரு பெண்ணைப்பற்றி அறிவதென்றால் ஒரு பெண்ணிடம் கேட்டால் தானே முடியும். அவரின் அடுத்தநாள் சந்திப்புக்கு காத்திருந்தாலும் அவளைக் முதன் முதலாக கண்ட நாள் கண்முன் பிரள நினைவு முன்நோக்கி சுழன்றது எனது தொழிலுக்கு வங்கி தேவைப்பட்டது காசுகள் அறவிட்டால் அதனை வைப்பு செய்ய வங்கியை நாடுவது வழமை அன்று சரியான கூட்டம் வேறு. வரிசை வரிசையாக ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் வங்கியில் வரிசையில் நிற்கலாம் தற்போது வங்கியில் அத்தனையும் தேர்வு செய்து எடுத்த அழகிய பெண்கள் அவர்களும் அழகாக குட்டை பாவடை வங்கியின் ரீ சேட் அணிந்து இன்னும் பல வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்துக்கொண்டிருந்தார்கள். நானும் தலையை ஆட்டாத ஆடு போல் வரிசையில் நின்றேன் அன்று தான் பார்த்தேன் அவள் நெஞ்சில் அங்கே அவளது அழகான பெயர் அன்புச்செல்வி என்ற பெயரும் பதவியும் பொறித்த அடையாள அட்டை மாலையாக தொங்க அப்படியே அவள் போண் நம்பரும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை இருந்தாலும் அன்று அவளை பார்த்த பின்பு ஓர் ஆசை. எத்தனை பெண்களைப்பார்த்தாலும் கூட ஒரு சில பெண்களைப் பார்த்தவுடன் இவர் நம்க்கு வாழ்க்கை துணைவியாக இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும். அந்த உணர்வே என்னை தினமும் அந்த வங்கிக்கு அழைத்து சென்றது சில நாட்களில் அவள் இருப்பாள் கவுண்டரில் சில நாட்கள் அவளை வேறு பிரிவில் இருப்பாள் எப்படியாவது அவளிடம் விருப்பம் கேட்க வேணும் என்ற ஆசை இருந்தாலும் ஒரு வங்கியில் வேலை செய்கிற பொண்ணுடன் நான் எப்படி கேட்கிறது என்ற தாழ்வு மனப்பாண்மை என்னிடம் குடிகொண்டே இருந்தது இருந்தாலும் அவளும் ஓர் பெண்தானே கேட்டால் என்ன பிரச்சினை என்றும் தோன்றியது யாரை தூது விட்டு கேட்கலாம் என்று பார்த்தால் எந்த முகமும் தெரிந்த முகமாய் இல்லை. அப்போது லதா அக்கா என்ற ஒருவரைக்கண்டேன் அவர் என்னுடன் வேலைசெய்யும் நண்பனின் அக்கா ஆஹா நல்ல சந்தோஷம் அவர் வேற பிரிவில் அங்கேயே இருந்திருக்கிறார் அவரைக்கண்டதும் அக்கா என்ன இங்க இப்ப பிரான்ச்ஞ் மாற்றிப்போட்டானுகள் தம்பி ஒரு வங்கியில ஒழுங்கா வைக்கமாட்டானுகள் குறிப்பிட்ட காலம் காலம் வேலை செய்த்து மாற வேண்டியதுதான் என்றார் அக்கா ஆர் அந்த பிள்ளை? ஓ அதுவா உனக்கு செட்டாகாது அது லண்டன் போகப்போதாம் என்று சொல்லி திரியுது தம்பி ஓ அப்ப வெளிநாட்டு பார்ஷல் என்று சொல்லுறியள் என்ன?? உங்கபாஷையிலாடா அது? ம்ம்ம்ம் நாங்க இப்ப அப்படித்தான் சொல்லுற வெளிநாட்டுக்கு போற பிள்ளைகளை. பேஷ்புக்கு லவ்வாம்டா ஓ அப்படியா சரி அக்கா நான் வாரன் பிறகு சந்திக்கிறன். என்று எனது தொலை பேசி தொல்லை கொடுக்க நான் அந்த வங்கியை விட்டு நகர்கிறேன். காசுகளை அறவிட இப்படி நாழும் பொழுதும் போனது அவளை மறப்பதா விடுவதா என ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் விருப்பம் இல்லாவளை தொடவே கூடாது அதிலும் அவள் இன்னொருவனை விரும்பும் போது நாம் அவளை நினைக்கவே கூடாது என்று அந்த வங்கி கிளையை அவளுக்காக மறந்தேன் . பல மாதங்கள் கழிந்து விட்டன அவளை மறந்து .அடுத்த நாள் காலை லதா அக்கா வீட்டுக்கு சென்றேன் அக்கா அவள் கதையை முழுமையாக சொன்னார் லதா அக்காவிடம் முழுமையாக சொல்லி இருக்குறாள் அவள். அது அவள் மனச்சுமையை குறைத்து வைத்திருக்கும் போல். முகநூலில் அவன் போடும் படங்களையும் இடங்களையும் பார்த்து ரசித்த அவளுக்கு அங்கு செல்ல ஆசை வந்திருக்கிறது அவன் போடும் படங்களுக்கு இவளும் லைக் , கொமன்ஸ் போட்டு வந்திருக்கிறாள்டா ஒரு நாள் அவன் இவளுக்கு மெசேச் போட்டு இருக்கிறான் ஆனால் இவள் ரீப்பிளே பண்ணல அவனும் நாள்தோறும் மெசேச் போட்டு வந்திருக்கிறான் ஒரு நாள் இவளும் ஏன் எனக்கு மெசேச் பண்ணுறீங்கள் நாம் நண்பர்களாக இருப்போமே முகநூலில் என்று சொல்லி இருக்கிறாள். இவளும் மெசேஞ்சில் ம் நண்பர்களாக இருக்கிறோம் தான் ஆனால் நான் உங்களை நான் படத்தில் பார்த்தேன் மிக அழகாக இருக்குறீர்கள் வங்கியில் வேலைபார்க்கிறீர்கள் ஆனாலும் உங்கள் குரலை கேட்கவில்லையே ஏன் என்னுடன் கதைத்தால் என்ன பிரச்சினை. நான் ஒன்றும் கெட்டவன் இல்லையே என்று சொல்லி இருக்கிறான் பதிலிற்கு உவள் நான் உங்களை கெட்டவன் என்று சொல்லவில்லையே என்று சொல்லி இருக்கிறாள். இவள் அதன் பிறகு தொடர்பு எடுக்கவில்லை. அவனும் பிறகு ஓர் நாளில் அவன் குடும்ப போட்டோவை அனுப்பியிருக்கிறான் இவளுக்கு இது என்னுடைய குடும்பம் எனக்கு பெண் தேடுகிறார்கள் உனக்கு விருப்பம் என்றால் நான் உன்னை கல்யாணம் கட்டலாமா? அதுவும் நம்ம இலங்கை தமிழ் பெண்ணைத்தான் நான் கல்யாணம் கட்ட விரும்புறன் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்றால் கூடியளவு விரைவாக பதிலை சொல்லு என்றும் அனுப்பியிருந்தான் அந்த தகவலை பார்த்த அவளுக்கு நம்ப முடியவில்லை அந்த செய்தியை என்ன செய்வதென்ற யோசனை ஓடியது அவளது அம்மாவிடம் சொல்ல அம்மாவோ ஆள் எப்படி ஒருக்கா காட்டு என்று பார்த்தாள் பார்த்தால் நல்ல பொடியன் மாதிரித்தான் இருக்கிறான் ஆரும் ஆட்களிட்ட விசாரிக்கணுமே விசாரிக்காமல் எப்படி பதில் சொல்ல்வது ஆ.. ஆ கொஞ்சம் பொறு அப்பாவும் வரட்டும் அவரிட்டயும் கேட்பமே ஐயோ எனக்கு பயமா இருக்கிறது சும்மா இரடி பயப்படாத வெளீநாடு என்றால் சும்மாவா அங்க போய் நல்லா இரு இப்ப ஊருக்க வெளிநாட்டில் ஆராவது சொந்தக்காரர்கள் இருந்தால் தான் ஊரில மதிக்கிறாங்கள். மாலை நேரம் அப்பா வருகிறார் இஞ்சாருங்கோ என்ன சொல்லு நம்ம செல்வியை ஒரு பொடியன் போணில பாத்திருக்கான் கல்யாணம் கட்ட கேட்டிருக்கான் என்ன சொல்லுற அதான் இப்ப புதுசா பேச்சு புக்கு என்று இருக்காமே அதுல பழகினவனாம் . உனக்கு லூசா? உன்ற மகளுக்கும் லூசா? ஆள் ஆரெண்டு தெரியாது என்ன சாதியெண்டு தெரியாது ஊர் தெரியாது குலம் என்ன கோத்திரம் என்ன என்று தெரியாது இங்க நல்ல வேலையில் இருக்கும் போது என்னத்துக்கு வெளிநாடு கேட்குதாம். நாளைக்கு எதுவும் நடந்தால் யார் அங்க போய் பார்ப்பது சொல்லு ?? ம்ம் ஆனால் அவளுக்கும் வெளிநாடு என்றால் விருப்பம் தானே ம் அதுக்காக அவங்களை விசாரிக்காமல் எப்படி பிள்ளையை கட்டிக்கொடுப்பது ? விசாரிப்பம் விசாரிச்சு சரி வந்தால் கட்டிகொடுப்பம் எதுக்கும் அவளிடம் ஒருக்கா கேழு நீ சரியா ம் கேட்கிறன் ஏன்டி பிள்ளை உனக்கு சம்மதம் தானே ம் சம்மதம் பிறகென்ன. நம்மட ஆட்களிட்ட அவங்கள் போட்டோவை காட்டி ஆட்கள் எப்ப்டியென்று விசாரியுங்கள் அப்பா போட்டோவ காட்டு அப்படியே என்ற போணுக்கு அத அனுப்பு அவள் அப்பாவோ போட்டோவை எடுத்துக்கொண்டு விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். சகல விசாரிப்பின் பிறகு அவரும் ஓகே சொன்ன பிறகு அவனுக்கு இவள் எனக்கு சம்மதம் என சொல்லி இருக்கிறாள் அதன் பிறகு பேச்சுக்கள் ஆரம்பமாகின புதிதாய் வருகை தந்த வட்ஸப்பும் வைப்பரும் குரல்களை பரிமாறி ஆசைகளை நாடுகடத்தி அழைப்பில் உருகிநின்றார்கள் இருவரும் கல்யாண நாளை எதிர்பார்த்து நாள் நெருங்கியது குடும்ப அங்கத்தவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஊருக்கெல்லாம் சொல்லாமல் இந்தியாவில் கல்யாணம் நடத்தி முடித்து வைத்தார்கள் ஆனால் அங்கு குடியுரிமைக்கான சட்ட அங்கீகாரம் கிடைத்த பின்பே இவளை எடுக்க முடியும் என்று சொல்லி போனவர்கள் ஒரு வருடம்முடிந்த பின்பே அவளை எடுத்தார்கள் அங்கு இவளும் வேலையை தற்காலிகமாக விட்டு விலகுவதாக வங்கிக்கு கடிதம் கொடுத்து விலகிவிட்டு போனவள் தான் பிறகு அங்கு போனவளுக்கு நடந்தது !!!! செல்பி வரும் ........................................
 14. 14 points
  அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை....... எமது ஆன்மீகத்தின் வேர்களைத் தேடி புனித பூமிக்கான திருப்பயணம் -2017 (ஜோர்தான்-- இஸ்ரவேல் -- பலஸ்தீனம்) என் தெய்வம் வாழ்ந்த தெய்வீக பூமி இது. இயற்கை அழகும் செயற்கை நிர்மாணிப்பும் கலந்த அற்புதமான உலகம். மலைப்பாங்கான பிரதேசம். ஜோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வரட்சியில் வாட அதைத்தாண்டி வனாந்தரம் கண்ணுக்கெட்டிய தூரம் புல் பூண்டுகளற்று பசுமைகளற்று பரந்து விரிந்து பாலைவனமாகக் காட்சியளித்தது. என் நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்வு மனதுக்குள் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கார்த்திகை மாதம் 23ம் திகதி. இந்த நாளுக்காய் எத்தனை காலம் ஏங்கித் தவித்திருந்தோம். மாலை 9.40க்கு பியசன் விமானநிலையத்தில் இருந்து எயார்கனடா விமானம் எம்மைச் சுமந்தபடி மேலெழும்பியது. எம் பிரயாணத்தை வழிநடத்தும் பொறுப்பாளர் திரு. அன்ரன் பிலிப் அவர்கள் வழி நடத்துதலுடன் 48 யாத்திரிகர்கள் பயணமானோம். நாம் சென்ற விமானம் பிராங்பேட் விமான நிலையத்தில் 2 மணிநேரம் தரித்து லூத்தான்சா விமானமூலம் மாலை 7 மணியளவில் அம்மான் விமான நிலையத்தை வந்தடைந்தோம். புனித பூமியில் கால் பதிக்கும் பொழுதே எமக்குள் கிளர்ந்த சிலிர்ப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாது. எமக்கென ஆயத்த நிலையிலிருந்த வாகனம் மூலம் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு தயார் நிலையிலிருந்த உணவை உண்டு ஏற்கெனவே எமக்கென பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் இருவர் இருவராக உறங்கி ஓய்வெடுத்தோம். மறுநாள் 25ம் திகதி காலை 5 மணிக்கே தொலைபேசி அலாரம் எம்மை துயிலெழுப்பியது. 6 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு சரியாக 7.30க்கு அனைவரும் வாகனத்துள் இருந்தோம். ஒவ்வொரு முறையும் வாகனத்துள் ஏறும்பொழுதும் இறங்கும் பொழுதும் எமைக் கணக்கெடுத்து எமக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் இருந்து மதிய உணவு, திருப்பலிகள், செபமாலை, மன்றாட்டு என்று அனைத்தையும் தன் 11 வருட அனபவத்தின் மூலம் எவ்வித குறையுமின்றி திரு. அன்ரன் பிலிப் அவர்கள் பார்த்துப் பார்த்து செய்திருந்தார். எம்முடன் பயணித்த ஒவ்வொரு சகோதரர்களும் அன்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொண்டனர். வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்குமிடமெங்கும் மலைக் குன்றுகளும் பள்ளத்தாக்குகளுமாக உயிரினங்களற்ற பாறைத் தொடர்களே காட்சியளித்தன. உலகத்தின் அதிசயங்களுள் ஒன்றான அதிசய நகரம் பெற்றா. இதைச் சிவப்பு நகரம் என்றும் அழைப்பர். பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான இந் நகரம் காலத்துக்குக் காலம் பல அரசுகளால் சுவீகரிக்கப்பட்டு வரலாற்றின் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் அரசுகளின் வீழ்ச்சியினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் கைவிடப்பட்டு இன்று உலகின் அதிசயங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரு புறமும் பிரமாண்டமான பாறைப் பிளவுகளுக்கூடாக ஊடறுத்துச் செல்லும் பாதையில் நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டும். அந்த பாதையின் இருமருங்கும் பல சிற்பங்கள், கல்லறைகள், சிதைந்த மண்டபங்கள் என பல அடையாளச் சின்னங்கள் பற்றியும் புராதன கல்வெட்டுக்கள் பற்றியும் எம்முடன் வந்த ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த வழிகாட்டி விளக்கமாக எமக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து தமிழில் திரு. அன்ரன் பிலிப் அவர்களும் அதற்கான விவிலிய குறிப்புப்களையும் விளக்கங்களையும் கூறியது எமக்கு அவ்வப்போது ஆன்மிகத்தின் பக்கங்களையும் விளங்க வைத்தது. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் பார்க்க வேண்டிய 28 முக்கிய இடங்களில் ஒன்றான இந்த அதிசய நகரை நாம் பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு. அங்கிருந்து யோவான் அருளப்பரின் தலையை ஏரோது மன்னனிடம் நடனமாடி பரிசாகக் கேட்டுப் பெற்ற அந்த புனித இடம். மன்னனின் அரண்மனை தூர்ந்து போனாலும் சிதிலமான மண்குன்றான அந்த புனித இடத்தில் இறைவார்த்தை தியானித்து செபித்தோம். ஜோர்தான் பள்ளத்தாக்கின் அழகை அங்கிருந்து பார்த்து ரசிக்கக்கூடியதாக கண்முன்னே மலைச்சரிவுகள் பரந்து கிடந்தன. மதிய உணவை பயண ஒழுங்கு செய்தவர்களே ஒழுங்கு படுத்தி இருந்ததால் எமது நேரத்தை சரியான முறையில் மேற்கொள்ளவும் திட்டமிட்டபடி இடங்களைச் சென்றடையவும் மிக உதவியாக இருந்தது. இரவு தங்குமிடம் திரும்பியதும் சுவையான போசாக்கான உணவு, வசதியான படுக்கை, உடல் அலுப்புத் தீர குளித்து சுகமான நித்திரை. அதிகாலை தொலைபேசி அழைப்புமணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் பதட்டமின்றி நித்திரை செய்தோம். 26ம் திகதி காலை புறப்பட்டு நெபோ மலை என அழைக்கப்படும் மலைக்குச் சென்றோம். இறைவனால் வாக்களிக்கப்பட்ட கானான்; தேசத்துக்குள் நுழைய முடியாமல் இம் மலையிலுருந்தே மோயீசன் இஸ்ரவேல் நாட்டைப் பார்த்ததாக விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குதான் மோசே அடக்கம் பண்ணப்பட்டதாக நம்பப்படுகிறது. அம் மலையில் வெண்கலப் பாம்பு என அழைக்கப்படும் ஓர் இரும்பினால் ஆன கோலில் பாம்பு சுற்றி இருப்பதுபோல் செய்யப்பட்ட அடையாளச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுத்து செபித்தோம். ஒவ்வொரு இடத்திலும் அந்த இடம் தொடர்பான நற்செய்தி வாசகங்களும் வாசித்து தியானித்தோம். அங்கிருந்து யேறாஸ் நகரம் சென்றோம். கிரேக்க ரோம சாம்ராச்சியங்கள் அங்கு அமைக்கப் பட்டிருந்ததன் அடையாளமாக கிரேக்க ரோம மன்னர்கள் நிர்மாணித்த விசாலமான மண்டபங்கள், மாபெரும் தூண்கள், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்ற அரங்குகள், அங்காடிகள், வீதி வளைவுகள் என்று இன்னும் பல சிதைந்த சீரழிந்த சின்னங்கள் உச்ச நிலையிலிருந்த சாம்ராச்சியங்களின் எச்சங்களாகக் காட்சியளித்தன. அன்றிரவே இஸ்ரவேல் நாட்டுக்குள் ஜோர்தான் எல்லையைக் கடந்து செல்ல வேண்டி இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டு இஸ்ரவேல் எல்லையை அடைந்தோம். அங்கு நாம் எம் பயணப் பொதிகளுடன் நாம் பயணித்து வந்த வாகனத்தையும் சாரதியையும் வழிகாட்டியையும் பிரிந்து எல்லைக் கடவை ஊடாக பலவித பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் சொந்தமான வாகனம், சாரதி, வழிகாட்டியுடன் எமக்கென ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தங்குமிடம் சென்றடைந்தோம். வழியெங்கும் மலைச்சரிவுகளில் தீப்பெட்டிகளை அடுக்கியதுபோல அமைக்கப்பட்ட கட்டிடங்கள் மின்ஒளியில் பளபளத்தன. இஸ்ரவேல் என்னும் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அழகிய நாடு செழிப்புடனும் வளமுடனும் காட்சியளித்தது. எங்கும் வளமையும் செழுமையும் மிக்க ஆற்றுப் பள்ளத் தாக்குகளும் ஒவிவத் தோட்டங்களும் கூடாரங்களில் மூடி அமைக்கப்பட் வாழைத்தோட்டங்களும் தோடை முந்திரி என பலவகை பழத்தோட்டங்களும் வீதியின் இருமருங்கும் அழகூட்டின. உலகின் பல பாகங்களிலுமிருந்தும் அலை அலையாக இன மத மொழி வேறுபாடின்றி இறைமகன் இயேசு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, புதுமைகள் பல புரிந்து, மரித்து, உயிர்த்த அந்த புனித பூமியை தரிசித்து இறை உணர்வில் பெலனடைய வந்துகொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடங்களையும் ஆலயங்களையும் சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்களையும் வீடுகளையும் காணும்போது எம் மண்ணின் ஞாபகம் அடிக்கடி மனதில் நிழலாடியது. இன்னும் சில நூற்றாண்டுகளின் பின் எமது எதிர்காலச் சந்ததியினரும் எமது வாழ்விடங்களையும் இப்படித்தான் வழ்காட்டிகளின் உதவியுடன் வந்து பார்த்து எமது வரலாற்றை அறிந்து கொள்வார்கள் என மனத்திரையில் வந்து போனது. என்றோ ஒருநாள் எம் வேர்களைத் தேடி எம் விதைகள் புறப்படும்போது அவர்களின் தேடல் இன்றைய நிகழ்வுகளாக இருக்கலாம். இன்றைய திருப்பலி ஒப்புக்கொடுத்த குருவானவரின் அருளுரையும் இத் தேடல் பற்றிய சிந்தனையாகவே இருந்தது. நசரேத்தூரில் மரியாளுக்கு மங்களம் சொன்ன இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம், இயேசு மறுரூபமான தபோர் மலை, மரியாளின் கிணறு, இவற்றை தரிசித்து விட்டு கானாவூரில் இறைமகன் இயேசு முதல் புதுமை செய்த இடத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினோம். அங்கு எம்முடன் தம்பதிகளாக வந்தவர்கள்திருமண வாக்குத்தத்தம் புதுப்பித்தார்கள். விவிலியத்தின் முக்கிய இடங்களில் வழிகாட்டி மிகத் தெளிவாக விளக்கங்களை அளித்தார். இறைவழிகாட்டலுடன் எமது பயணத்தைத் தொடர திரு.அன்ரன் பிலிப் அவர்கள் உதவியாக இருந்தார். திருக்குடும்பம் வாழ்ந்த வீடு, செசாரியா பிலிப் எனப்படும் ஜோர்தான் ஆறு ஆரம்பமாகும் இடம்.(இது சிரிய எல்லையில் அமைந்துள்ளது). பல நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றிரவு நாம் தங்கிஇருந்த கொட்டலில் ஒரு ஒன்றுகூடல் வைத்தோம். அந்த ஒன்றுகூடலில் திருப்பலி ஒப்புக்கொடுத்த இரு குருவானவர்களும் பங்குபற்றினர். அன்று எம் மாவீரர் தினமென்பதால் அவர்களுக்கு மௌன அஞ்சலி செய்ய மறக்கவில்லை. அதன்பின் அனைவரும் தத்தமது பயண அனுபவங்களைப் பரிமாறி மகிழ்ந்தனர். திராட்சை ரசமும் பரிமாறப்பட்டது. மறுநாள் இயேசு மலைப்பொழிவு செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். அப்பம் பலுகியஆலயம், கர்ப்பநாகூம் செபக்கூடம், பேதுருவின் வீடு, முதலான புராதன இடங்களைப் பார்த்து செபித்து நற்சிந்தனையுடன் கலிலேயாக் கடலில் படகுப் பிரயாணம் மேற்கொண்டோம். படகுப் பிரயாண ஆரம்பத்தில் படகு ஒட்டுனர்கள் கனடிய கொடி ஏற்ற நாம் அனைவரும் இசையுடன் கனடிய கீதமிசைத்து கை தட்டி எமது மகிழ்வைத் தெரிவித்தோம். தொடர்ந்து இறைமகன் இயேசு பயணம் செய்து புதுமைகள் செய்த அக் கடலில் பயணம் செய்வது மிகவும் ஆசீர்வாதமாக எண்ணி இறைவனைத் துதித்து பாடல்கள் பாடி இறை வார்த்தைகளை வாசித்து இறை உணர்வுடன் பயணம் செய்தோம். படகுப் பிரயாணம் முடிந்ததும் கடலோரமாக உள்ள உணவு விடுதியில் பேதுருவின் மீன் உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் சுவையான அந்த உணவை உண்டு மகிழ்ந்தோம். தொடர்ந்து கலிலேயாக் கடலில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன ஓடம் வைக்கப்பட்டுள்ள காட்சிச் சாலைக்கு சென்று படகைப் பார்வையிட்டோம். அங்கிருந்து இராயப்பர் திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம் சென்றோம். அனைத்து இடங்களையும் கைத்தொலை பேசிகளிலும் ஒளிப்படப் பெட்டிகளிலும் பதிவுசெய்தபடி எம் பயணம் தொடர்ந்தது. 7ம் நாள் எமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதற்காக ஜோர்தான் நதிக்கரைக்கு செல்ல ஆயத்தமாக அனைவரும் வெண்ணிற ஆறை அணிந்து புறப்பட்Nhம். அங்கு பல இன மக்களும் வெண்ணிற ஆடைகளுடன் கூட்டம்கூட்டமாக பரிசுத்த ஆவியின் பாடல்களைப் பாடி துதித்தபடி தம் திருமுழுக்கினைப் புதுப்பித்தபடி இருந்தனர். நாம் அங்கு திருப்பலி நிறைவேற்றி எம் திருமுழுக்கை புதுப்பித்தோம். எமக்கு திருப்பலி நிறைவேற்ற குருக்களை ஆயத்தம் செய்திருந்தார்கள். அதிலும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது மிகவும் சிறப்பான அம்சம். மசாடா மலை. விசாலமான இம் மலையின் மேற்பகுதி தட்டையாகவும் பக்கங்கள் செங்குத்தாகவும் உள்ளன. இம் மலையின் மேல் கோட்டை ஒன்று அமைக்கப்பட்டதற்கான எச்சங்களாக சிதைவடைந்த நிலையில் பல அறைகள், குளியலறைகள், மண்டபங்கள், என பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. இங்கு செல்வதற்கு கம்பி மூலம் கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. எமது வழிகாட்டி அதன் சரித்திரப்பின்னணியை விபரித்தார். எதிரிகள் சுற்றி வளைத்ததால் அவர்களிடம் மண்டியிடுவதைவிட மடிவதே மேல் என்று முடிவெத்த யூத இனத்து விடுதலைக்குழு போராளிகள ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக தம்மையே அழித்துக் கொண்டனர். அம் மாவீரர்களின் கதை கூறியபடி இம் மலை தலை நிமிர்ந்து நிற்கிறது. சாக்கடலில் குளியல். இது ஒரு இனிய அனுபவம். இக்கடலின் அதிக கனவளவு உப்பு கலந்த நீர் இருப்பதால் எந்த உயிரினமும் இதில் உயிர்வாழ முடியாது. இக் கடலில் ஒருவரும் தாள முடியாது. பலர் மிதந்தபடி குளிப்பதைக' காணக்கூடியதாய் இருந்தது. தொடர்ந்து எலிசபேத் அம்மாள் ஆலயம், திருமுழுக்கு யோவான் இல்லம், கிறீஸ்து பிறப்பு ஆலயம் சென்றோம். தினமும் வரிசை வரிசையாக மக்கள் கூட்டம் இப் புனித தலத்தைத் தரிசிக்க காத்திருப்பர். நாம் அங்ு போன நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக உள்ளே நுழைந்து இறைமகன் இயேசு பிறந்த புனிக இடத்தை தரிசிக்கக் கிடைத்தது இறைவனின் அரிய செயலன்றி வேறில்லை. தொடர்ந்து தேவதூதன் இடையர்களுக்கு சேதி சொன்ன மலைக்குகை, மரியாளின் பால் துளியில் பரிசுத்தாகிய வெள்ளை குறோற்றா ஆலயம், ஆகிய புனித தலங்களைத் தரிசித்து அவ்விடத்தில் திருப்பலியும் நிறைவேற்றி இறை உணர்வுடன் எம் இருப்பிடம் திரும்பினோம். தினமும் காரம் மசாலா தவிர்ந்த அனைத்து உணவு வகைகளும் தரமான முறையில் பரிமாறப்பட்டன. சுவையான கலப்படற்ற பேரீச்சம் பழங்கள், திராட்சைரசம் என்பன குறைந்தவிலையில் பெறக்கூடியதாய் இருந்தது. மறுநாள் மார்கழி 1ம் திகதி இயேசு விண்ணம் சென்ற இடம், பரலோக மந்திர ஆலயம், மரியாள் அடக்க ஆலயம், முதலியவற்றுடன் ஒலிவத் தோப்பு என அழைக்கப்படும் ஜெத்சமெனிப் பூங்காவையும் தரிசித்தோம். பழமைவாய்ந்த அந்த ஒலிவ மரங்கள் இன்றும் பரிசுத்தமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இறைமகன் தனது சீடருடன் இரவுணவு உண்ட ஆலயம், தாவீதின் கல்லறை, இராயப்பர் இயேசுவை மறுதலித்த இடம், மரியாள் உறங்கும் ஆலயம் என பல பரிசுத்த இடங்களையும் தரிசித்தோம். ஆங்காங்கு அந்த இடத்தின் சிறப்புக்களை அறிந்து கொண்டதுடன் அந்த இடத்திற்குரிய இறைவார்த்தைகளையும் செபமாலையையும் தியானிக்கத் தவறவில்லை. சில இடங்கள் ஓத்தடைஸ் எனப்படும் யூதஇன மதக்குழுவினராலும் இன்னும் சில கத்தோலிக்க பிரிவினராலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியாய் இருந்தது. யூத மக்களால் புனிதமாக மதிக்கப்படும் புலம்பல் மதில் முன் ஆண்கள் ஒரு பகுதியிலும் பெண்கள் ஒருபகுதியிலுமாக மதிலில் தலையை முட்டி செபித்துக்கொண்டிருந்தனர். மதிலுக்கு அப்பாலுள்ள தம் வணக்கத்தலம் முஸ்லிம் பிரிவினரின் பகுதிக்குள் இருப்பதால் இவர்களால் அங்கு சென்று வணக்கம் செய்ய முடியாது. நாமும் அம் மதிலுக்கு முன் சென்று அதற்கு மரியாதை செலுத்தி வி;ட்டு வந்தோம், அவ் இடத்தை மிகவும் புனிதமாகப் பேணி வருவதால் அங்கு செல்வதற்கு மிகவும் பாதுகாப்பு செய்துள்ளனர். மறுநாள் மரியாள் பிறந்த வீடு, அதைத் தொடர்ந்து பெத்சாயிதாக் குளம் சென்றோம். அக் குளம் நீரின்றி சிதைவடைந்த நிலையில் இருந்தாலும் இறைமகன் புதுமைகள் செய்த புனித நினைவுடன் இறைவார்த்தை வாசித்து செபித்து தியானித்தோம். அதைத் தொடர்ந்து போஞ்சு பிலாத்துவின் அரண்மனை, இயேசுவுக்கு மரணத் தீர்ப்பிட்ட இடம், சித்திரவதைக் கூடம், அங்குதான் அவரது சிலுவைப் பாதை ஆரம்பித்த அந்த துக்க நிகழ்வுகளின் ஆரம்பமாக இருந்தது. சித்திரவதைக் கூடங்கள் நிலக்கீழ் அறைகளாக மிக ஒடுங்கிய வாயில்களுடன் அமைந்திருந்தன. அவற்றைப் பார்த்தபொழுது அனைவரும் துக்கம் தாங்க முடியாமல் விழிகளில் நீர்வழிய விம்மி அழுதோம். எம் கண்முன் இறைகனின் பாடுகளுடன் எம் இன இளைஞர்களின் பாடுகளும் மனக்கண்ணில் நிழலாடி மனப்பாரத்துடன் அவ்விடத்தில் இறைவார்த்தை வாசித்து செபித்து இறைவனை மகிமைப்படுத்தினோம். சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலையிலும் சிறுசிறு ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவ் ஒவ்வொரு நிலையிலும் முழங்கால் படியிட்டு தியானித்து செபித்து பாடல்கள் பாடி ஒருங்கிணைந்து இறை உணர்வுடன் ஒன்றித்தோம். பதினான்கு நிலைகளையும் தாண்டி இயேசுவின் சிலுவை நிறுத்திய இடமான கல்வாரி மலையின் குன்றை அடைந்தோம். அப் பரிசுத்த தலத்தில் உட்புகுவதற்கு மிகுந்த நீளமான வரிசையில் நின்று போகவேண்டி இருந்தது. உலகின் பல நாட்டு மக்களும் குழுக்களாக அங்கு வந்திருப்பதைக் காணக்கூடியதாய் இருந்தது. இயேசுவின் சிலுவை நிறுத்திய அந்த பரிசுத்த இடம் ஒருவர் ஒருவராக வணக்கம் செலுத்தக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இயேசுவின் உடல் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையையும் தரிசித்தோம். எம் பாவம் போக்க மனுவுருவாகி மரணத்தை ஏற்று உயிர்த்த கிறீஸ்துவின் அருள் பெற்றவர்களாய் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். கல்வாரித் திருப்பலிக்கு ஆயத்தமாக முதல்நாள் இரவு குருவானவரை எம் தங்குமிடத்திற்கு அழைத்து நாம் பாவமன்னிப்புப் பெற ஒழுங்கு செய்த எம் ஒழுங்கமைப்பாளர் திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இறுதி நாளான 3ம் திகதி காலை எமது பயணப் பொதிகளுடன் ஆயத்தமாக நின்ற வாகனத்தில் ஏறி எம்மாவுஸ் நகருக்குச் சென்றோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. எம்மாவுசில் உள்ள குருமத்தில் உள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டபின் இயேசு மரணத்தை வென்ற பின் எம்மாவுஸ் சீடருடன் உணவருந்திய அந்த இடத்தை தரிசித்தோம். அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறந்த நேரக் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைப்புடனும் செப உணர்வுடனும் எம்மை வழி நடத்திய திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அவருடன் கூட இருந்து உதவி புரிந்த நெறிப்படுத்திய திருமதி.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அனைவரும் மனம் நிறைந்த நன்றி சொன்னோம். இறைவனால் கூடாதது ஒன்றுமில்லை என்ற கூற்றுக்கிணங்க இவர்களைபப் பயன்படுத்தி எம்மை காத்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றி கூறி இஸ்ரவேலின் தெல்அவி விமான நிலையத்தில் புனித பூமிக்கு விடை கொடுத்து ரொறன்ரோவுக்கு புறப்பட்டோம். எம் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்துவமான இப் புனித பயணத்திற்கு வழிவகுத்த இறைவனுக்கும் எம் பயண ஒழுங்கமைப்பினருக்கம் எம் இதயம் நிறைந்த நன்றிகள். அத்துடன் இத் திரு யாத்திரையில் பங்குபற்றிய அனைவரும் அன்புடனும் நட்புடனும் சகோதரத்துடனும் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொண்டனர். எமது குழுவில் சில வாலிபப் பிள்ளைகளும் கலந்து கொண்டது சிறப்பம்சம். எம்மோடு பயணித்து நட்புடன் பிரிந்து சென்ற அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். இறை வழியில் தொடர்ந்தும் பயணிப்போம். காவலூர் கண்மணி
 15. 14 points
  இத்தாலி ஹைவேகள் 3 ட்ரக்குகளைக் கொண்டது அதி கூடிய வேகம் 130 km/h, சுவிஸ் ஹைவேகளைப் போலவே இங்கும் பல நாட்டுக் கார்களைக் காண்கிறேன் ஜேர்மன், பிரான்ஸ், மெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து .... ஏன் டென்மார்க், நோர்வே கார்களையும் காணக்கூடியதாக உள்ளது, சுவிசை விடக் கொஞ்சம் வித்தியாசமாக அதிகளவில் GB கார்களைக் காண்கிறேன் இத்தாலி ஒரு அழகான நாடு, அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்லும் நாடுகள் வரிசையில் ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்பயினுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் வரும் நாடு. உலகின் முன்னனி உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டது இத்தாலியின் மிலான், ரோம் போன்ற நகரங்கள் உலகின் ஆடை அலங்கார( fashion world) வரைபடத்தில் தவிர்க்க முடியாத நகரங்கள், சிறந்த இயந்திர தொழில் நுட்ப ஆற்றல் கொண்ட நாடு உலகப் புகழ் பெற்ற பராரி(ferrari), லம்போர்கினி (lamborghini) போன்ற கார்களினதும், டுகாட்டி (ducati) ,ஜிலேரா(gilera) போன்ற மோட்டார் சயிக்கிள்களினதும் தாயகம் மற்றும் பல தொழிற்சாலை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நாடு எனினும் ஊழல் ஆட்சிகளாலும், ஒழுங்கற்ற திட்டங்களினாலும் சரிவைச் சந்திக்கும் நாடு இத்தாலி ஹைவே சிறிது தூரம் ஹைவேயில் செல்ல கட்டணம் செலுத்துமிடம் வருகிறது....... எதிர்பார்த்த படியே கூட்டம் கும்மி யடிக்க சிறிது தாமதத்தின் பின்னர் கட்டணம் கட்டி வெளியேறுகிறேன், மிலானோவை அண்மித்ததும் மீண்டும் ஒர்முறை கட்டணம் கட்டுகிறேன். இப்போது மிலானோபிரதேசத்தில் , மிலானோ இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரம் இத்தாலியின் வர்த்தக தலை நகரம். அழகிய மிலான் டொமோ பேராலயம் உள்ளது, சொப்பிங் போகலாம் மற்றபடி பார்க்க பெரிதாக இடங்கள் இல்லை என நினைக்கிறேன். மிலான் டொமோ பேராலயம் (Milan Cathedral , Mailänder Dom ) (படம்:cheapflightslab.com/direct-return-flights-from-new-york-to-milan-italy) இத்தாலியில் கணிசமான இலங்கையர்கள் வசிக்கிறார்கள் பெரும் பாலும் சிங்களவர்கள். மிலானோ , ரோம், ஜெனோவா, நாப்போலி , பலோர்மோ என பரவலாக இலங்கையர் வாழ்கிறார்கள் பெரும் பாலும் சிங்களவர்கள் அதிலும் பலர் நீர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் , இதனால் தான் நீர்கொழும்பை குட்டி இத்தாலி என அழைக்கின்றனர் போலும். இத்தாலியில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் அதிக தூரத்திலுள்ள சிசிலியா தீவினுள் (பலோர்மோ நகரை அண்டி) போய் அடைந்து விட்டார்கள் என்ன காரணம் எனத் தெரியவில்லை. இப்போது ஒரு சில ஹைவே சந்திப்புக்கள் வர எனக்குரிய சரியான வெனேச்சியா நோக்கிய ஹைவே யினை தேர்ந்தெடுக்க சற்று சிரமப்பட்டு , சில வளைவுகளில் கீழே போய் , பின்னர் மேலே வந்து ஒருவாறு மிலானோ ஹைவே நெரிசலில் இருந்து வெளியேறி வெனேச்சியாவுக்குரிய ஹைவேயினுள் வருகிறேன் இப்போது 3வது கட்டணத் தரிப்பிடத்தில் ரிக்கற் எடுக்கிறேன் . இனி ஒரு 250 க்குநொச்டொப் ஓட்டம் தான். ஜேசலோ exit எடுக்கும் போது ரிக்க்கெற்றை போட்டு காசு கட்டினால் போதும். இப்போது சூரியன் மெதுவாக தனது மென்நிலையிலிருந்து வன்நிலைக்கு மாறுகிறார், வெளிச்சம் கூடிக்கொண்டு வர , வெப்பமும் மெதுவாகக் கூடுகிறது. இப்போது காரின் AC யும் வேலைசெய்யத் தொடங்க என் மூக்கின் மேல் குளிர் கண்ணாடியும் அமர்ந்து கொள்கிறது. வீதியில் வாகனங்களும் அதிகரித்து காணப்படுகிறது பெருமளவில் wohnwagen (caravan)களும் காணப்படுகின்றன, இத்தாலி camping க்கும் ஒரு பெயர்போன இடம், ஜேசலோவில் மட்டும் 3000 பேருக்கு camping வசதியுள்ளதாக வாசித்தேன். இப்போது சற்றுத் தாகமெடுக்கவே மனைவியிடம் orange juice கேட் கிறேன், மனைவி cool bag இலிருந்து பெட்டியெடுத்து அதில் ஒரு ஸ்ரோவினை வைத்து தருகிறா அமிர்தமாக இறங்குகிரது...., cool bag இனுள் வேறு என்ன இருக்கிறது என் கிறேன் , அப்பிளும், பியர்சும் வெட்டி box இல் போட்டுள்ளேன் என்றார் அப்பிளைத் தாங்கோ என்றேன், cool bag இப்போது free யாக இருந்த முன் சீட்டிற்கு இடம் மாறுகிறது, இதுக்குள்ள உங்களுக்கு தேவையானதெல்லாம் இருக்கிறது, சும்மா என்னை தொந்தரவு பண்ணாமல் எடுத்துச் சாப்பிடுங்கோ...., ok , good night என்று விட்டு duty க்கு போய் விட்டா , பாவம் அவர் இரவும் நித்திரை இல்லை, நித்திரை கொள்ளட்டும். மூத்த மகளும் நித்திரைக்கு போய்விட்டா அது தான் கொஞ்சம் கவலை , அவா விழித்திருந்தால் அப்பா, அப்பா என கனக்க கேள்விகள் கேட்டுக் கொண்டே வருவா எனக்கும் நேரம் போவது தெரியாது....., பாவம் பிள்ளை தூங்கட்டும் காலையில் வெளிக்கிட்டதிலிருந்து என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தவா......எல்லோரும் உறக்கதிற்கு செல்ல இளையராஜாவை உதவிக்கு அழைக்கிறேன் இளையராஜா hits இசைத்தட்டு உள்ளே போக மீண்டும் உற்சாகம் பிறக்கிறது இத்தாலி ஹைவே யில் உள்ள Autogrill ரெஸ்டுரண்ட் பிரசித்தமானது , நல்ல இத்தாலி சாப்பாடுகளும், கபே களும் மிகவும் நல்லா இருக்கும் என நண்பன் சொல்லியிருந்தார் , எனக்கும் இந்த ஹைவே இல் stop எடுப்பது மிகவும் பிடிக்கும், விடுமுறைக் காலங்களில் உள்ளே போனால் பல்வேறு நாடுகளிலிருந்தும் உல்லாச பயணிகள் வருவார்கள் சுறுசுறுப்பான ,மகிழ்ச்சியான மனிதர்களை காணலாம் அதுவே ஒரு புத்துணர்வைத் தரும் . இப்போது ஒரு பெரிய Autogrill ரெஸ்டுரண்ட் வந்தது உள்ளே போகும் ஐடியா இல்லை பின்னால் எல்லோரும் நித்திரை ,சிறிய மகளின் பால் நேரமும் இது இல்லை, அவா எழும்பி அழும் போது பால் குடுக்க ஒருமுறை நிறுத்தினால் போதும் என மனதில் நினைத்துக் கொண்டே வேகமெடுக்கிறேன் Autogrill ரெஸ்டுரண்டின் வெளிப்புற ,உட்புற தோற்றம் , (படம் : dalluva.com ,bbc.com/autos/story/20131001-road-food-italy) சில ஹைவே சந்திப்புகளை கடந்து செல்கையில் சிறிய மகளின் முனகல் கேட்டு சிறிது நேரத்தில் அழுகையாக அது மாற்றங்காணவும் ஒரு சிறிய ஹைவே ரெஸ்டுரண்ட் ஒன்று வரவும் சரியாக இருந்தது..... ஒரம் கட்டி உள்ளே போனால் கார் விட இடமில்லை ஒரு ஒரமாக காரை நிறுத்தி பாலைகரைத்து மகளுக்கு கொடுத்து விட்டு, மீண்டும் ஜேசலோ நோக்கி வேகமெடுத்தேன் ...... பின்னால் இருந்தவர்கள் மூவரும் மீண்டும் தமது கடமையைத் தொடர்ந்த்தார்கள். ஹைவேயின் இரு பக்கங்களும் பெரும்பாலும் சிறு நகரங்களும், குடியிருப்புக்களுமே காணப்பட்டன, டொஸ்கானா போல் ஒரு அழகிய இடம் வந்தால் எப்படியிருக்குமென மனம் எண்ணியது , டொஸ்கானா புளோரன்ஸை தலைநகராகக் கொண்ட இத்தாலியின் ஒரு பிராந்தியம் (Region) மிகவும் அழகான பிரதேசம் , இந்த பிரதேசத்திற்குள் தான் பிசா/பைசா சாய்ந்த கோபுரம் வருகிறது. உங்களுக்கு இயற்கை காட்சிகளை ரசிப்பதில் விருப்பம் இருந்தால் கூகிளில் Toskana (ஆங்கிலத்தில்Tuscany) எனக் கொடுத்து படங்களைப் பாருங்கள்.சிலிர்த்துப் போவீர்கள்.....! டொஸ்கானாவின் படங்கள் சில miriadna.com/preview/tuscany-landscape குளிர் கண்ணாடியினூடாக இத்தாலியின் பெருந்தெரு கண்முன்னே விரிய .....இளையராஜாவின் இசயில்"தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும்......" பாடல் உயிரை வருட...., cool bag box இலிருந்து அப்பிள் ஒன்றைக் கடிக்கிறேன் gala அப்பிளின் வாசனை நாசித்துவாரங்களை தென்றலாய் வருட , அதன் சுவை அமிர்தமாக உள்ளிறங்க தெய்வீக ராகம் பாடலின் இடையிசை முடிந்து தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு.... என இளசின் இசை செவிப்பறைகளில் அருவியாய் பாய ஆகா அற்புதம் ஆனந்தம், பேரானந்தம் ,பரமானந்தம் , பரம பேரானந்தம் ........... போங்கப்பா வர்ணிக்கத் தெரியவில்லை....., இந்தப்பயணத்தின் போது இளையராஜாவின் பாடல்கள் தன்னை ஒரு படி மேலே என்னுள் நிலை நிறுத்தியது என்றால் மிகையாகாது.... ஆரம்பத்தில் நான் பெரிதாக இளையராஜா பாடல்களைக் கேட்பதில்லை , ஆங்கில pop music , fast music தமிழ் பாடல்கள் தான் எனது தேர்வு...., பிதாமகன் படத்தின் இளங்காற்று வீசுதே பாடல் மூலம் இளையராஜா படிப்படியாக என்னுள் ஊடுருவி முழுமையாகக் கட்டிப் போட்டுவிட்டார் இப்போது அவர் கட்டவிழ்த்து விட்டாலும் எனக்குப் போக விருப்பமில்லை அதனுள் கட்டுண்டு கிடக்கவே மனம் விரும்புகிறது ..... , இப்போதும் pop music பிடிக்கும் ஆனால் இளையராஜாவை ரொம்பப் பிடிக்கும்.... (யோவ் பயணக் கட்டுரையில் இளசு வைப் பற்றி எழுத வைக்காதையுங்கோ..... அதுக்குத்தான் களத்தில் சசிவர்ணம், இசை,ரகுநாதன்..... என பல ஜாம்பவான்கள் இருக்கினம் ) இப்போது ஹைவே சந்தி ஒன்று வர (Padua என நினைக்கிறேன்) , பல வாகனங்கள் பிரிந்து வெளியேற எனது பாதை சற்று வாகனங்கள் குறைந்து வெளிக்கிறது, பாடல்கள் தரும் உற்சாகத்தில் கண் முன்னே சற்று வெறுமையான ஹைவே .... மனமோ ஒடு மச்சி ஒடு......, 130 , 140 ஆகி 145 ஆகி 150 km/h ஆக..... வேண்டாம் கடந்த மாதம் தான் சுவிஸ் பொலிசுக்கு 250 பிராங் அழுதது (அது நான் கட்டிய இரண்டாவது 250 தண்டம்) நினைவுக்கு வரவே காலை மெதுவாக வெளியில் எடுக்கவும் , மனைவி பின்னாலிருந்து ஏனப்பா வீட்டில ஏதும் காசு அடிக்கிற மெசின் வைச்சிருக்கிறீங்களோ என குரலெழுப்பவும் சரியாக இருந்தது.... cool box இலிருந்த பொருட் களும் தீர்ந்து கொண்டு வர GPS (navi) இல் போகவேண்டிய தூரமும் நன்கு குறைந்திருந்தது. ஜேசலோ exit இட் வர பணம் கட்டி ஹைவே யிலிருந்து வெளியேறுகிறேன். இப்போது பின் சீட்டும் கலகல எல்லோரும் விழித்து விடடனர் , இன்னும் ஒரு 25km கள், கிராமங்கள் ஊடாகப் பயணிக்கிறேன் சில பழைய கட்டிடங்களைக் கடந்து செல்கிறேன் இப்போது ஒரு பெரிய camping பிரதேசம் வருகிறது, மிகவும் அழகாக இருக்கிறது , தூரத்தில் இரண்டு கட்டிடங்களின் நடுவே நீல நிறத்தில் கடல் மினுமினுக்க உள்ளூர உற்சாகம் தொற்றிக் கொள்கிறது . சில அழகான கட்டிடங்கள் கடந்து செல்கின்றன அவற்றில் ristorante, pizzeria கள் என போர்டுகள் தெரிகின்றன, மிகவும் புதிய பிரதேசம் ஒன்றில் நன்கு பழகிய ஒருவரைக் காண்பது போல lidl கடையின் விளம்பரம் கண்ணில் படுகிறது (இவர்கள் ஒரு இடத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் போல) வீதியின் இரண்டு பக்கமும் பைன் மரங்கள் வரிசையாக வரவேற்க ஜேசலோவினுள் நுழைகிறோம் அழகிய கடற்கரை நகரம் எமது வருகையைப் பதிவு செய்கிறது படிப் படியாக நெரிசல் கூடிக் கொண்டு போகும் வீதிகளினூடாகப் பயணித்து எமது Hotel இருந்த தெருவை அடைகிறோம். கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்..... கருத்திட்ட கள உறவுகளுக்கும் , பச்சையிட்ட கள உறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி உங்கள் ஊக்கம் தான் இதை எழுதத் தூண்டுகிறது, ஆனால் இப்படி நீளும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை எழுத்தனுபவம் புதிது என்பதால் editing இல் கனக்க பிரச்சனை. (இந்த கட்டுரை அணைத்திலும் வந்த வர இருக்கின்ற படங்கள் அணைத்துமே நானெடுத்தவை அல்ல , எல்லாம் இணையத்தில் பெறப்பட்டவை)
 16. 13 points
  வணக்கம் சுமே அக்கா. போன வருடம் நானும் எனது நண்பிகளும் விடுமுறை போனோம். ஒவ்வொரு வருடமும் நண்பிகள் அவர்கள் கணவர்கள் பிள்ளைகள் என்று ஒன்றாக விடுமுறை போவோம். போன வருடம் ஒரு மாறுதலுக்காக 6 நண்பிகள் தனியாக போனோம். ( சில நண்பிகளுக்கு 4 வயதில் குழந்தை இருந்தது) அனைவரது கணவர்களும் தமது குழந்தைகளை பார்த்துக்கொண்டு மனைவிமாரை அனுப்பிவைத்தார்கள். இரண்டு நாட்கள் தான் நின்றோம் ... நிறைய சிரித்தோம் நிறைய கதைத்தோம் ஆனால் என்ன ஒவ்வொருவரும் தனியாக போய்விட்டோமே தவிர உள்ளுக்குள் பிள்ளைகளை விட்டுவிட்டு போனதை நினைத்து கவலைப்பட்டோம்.........ஒழுங்காக சாப்பிட கூட முடியல. எமக்கு கணவர்கள் சுதந்திரம் தந்தாலும் எம்முள் இருகும் பாசப்பிணைப்பு எம்மை நிம்மதியாக இருக்கவிடல. இது தான் யதார்த்தம். நாம் என்ன தான் வெள்ளைகள் செய்கிறார்கள் என்று முயற்ச்சி செய்தாலும் நாம் நம் கலாச்சாரம் அன்பு பாசம் என்பது எம்மோடு கூடபிறந்தது. எம்மால் அவர்களை போல் குடும்பத்தை விட்டு விட்டு தனியா மகிழ்வாக இருக்க முடியல. இனி போவதென்றால் பிள்ளைகள் 16 தாண்டியபின்பு தான் போவது என்று முடிவெடுத்து திரும்பிவந்தோம் ஆனால் எனக்கு தெரிந்து பல வீடுகளில் பெண்கள் விரும்பினாலும் ஆண்கள் அனுமதிப்பதில்லை என்பது உண்மை. அதற்கு முதல் காரணம் எமது நாட்டு வளர்ப்பு முறை. சிறு வயதில் இருந்தே ஆண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு கொடுத்து வளர்ப்பதில்லை அதைப்பார்த்து வளரும் ஆண்கள் அதையே தமது திருமணத்தின் பின்பும் பின்பற்றுகின்றார்கள். ( நான் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை ).
 17. 13 points
  இங்கு, எத்தனை பிழைகள்... உள்ளது? இணையத் தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்று, பிரபல செய்தி ஊடகங்கள் எழுதும்... தமிழ் எழுத்துக்களை வாசிக்கும் போது, அதில் வரும் தமிழ் எழுத்துப் பிழைகள்.... நாம்... கற்ற, பேசும் தமிழ் மொழியை கூட.... எது சரி, எது பிழை என்று, எமக்கே... சந்தேகம் வரும் போது, பெரும் சங்கடமாக இருக்கும். இங்கு... அந்த ஊடகங்களின் பெயரை குறிப்பிடாமல், அந்தச் செய்தியில் வந்த ஒரு பந்தியை... மட்டும் இணைக்கின்றேன். அதில் எத்தனை... பிழைகள் உள்ளது என்று, ஒரு, தமிழ் ஆசிரியராக..... உங்களை, நினைத்துக் கொண்டு... எத்தனை பிழைகளை.... கண்டு பிடிக்க முடிகின்றது என்பதே.... போட்டி. இதனால்... நாம் விடும் பிழைகளை, உங்கள் மூலம் அறியலாம், தமிழ் ஊடகங்களால், நாம்... திசை திரும்பாமல் இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவும் முடியும் என நம்புகின்றேன். oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo போட்டி ஆரம்பம்.... போட்டி விதிகள்: 18 வயதுக்கு மேற்ப ட் டவர்கள் எல்லோரும், கலந்து கொள்ளலாம். பரிசு: வெல்பவருக்கு, கையில்..... இருப்பதை, தருவேன். பிற் குறிப்பு: மோதிரம், கைக்கடிகாரம் தருவேன் என்று எதிர் பார்க்காதீர்கள். பிறகு என்ன இழவுக்கு.... என்று, நீங்கள் முணுமுணுப்பது கேட்குது... அது ரகசியம். முதலில்.... போட்டியில் கலந்து கொள்ளுங்கப்பு. //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// கீழே உள்ள பந்தியில் எத்தனை பிழைகள் உள்ளது? ##### வடமாநிலங்களில் காவிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தாலும், தென் இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி அதலபாதாளம். இதற்கு சான்றாக அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை சொல்லலாம். பிளவுபட்ட அதிமுக இடையே ஒரு பக்கம் போட்டியென்றால் மற்றொரு பக்கம் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான். தினகரன், அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வந்த பாஜக பிடிக்கும் என்று பார்த்தால் நாம் தமிழர் கட்சி, நோட்டா இரண்டும் பாஜகவை 5வது இடத்திற்கு தள்ளியது. #####
 18. 12 points
  பாசமலர்ச் சோலை கை நிறைய மலர்கள் புன்னகையின் இதழ்கள் கண்களிலோ மொழிகள் கலகலக்கும் ஒலிகள் பாசமலர்ச் சோலை பால் மணக்கும் மழலை நேசமுடன் வருடும் மயிலிறகாய் விரல்கள் சிரிப்பினிலோ உவகை சிணுங்கலிலோ உரிமை மொழிகளில்லா உலகில் மோகனமாய் விழிகள் பஞ்செனவே கால்கள் பழங்களென விழிகள் பிஞ்செனவே விரல்கள் கொஞ்சுகின்ற பார்வை கண்சிமிட்டும் அழகு கை அசைப்பில் அழைப்பு சிந்துகின்ற சிரிப்பு சேய் அவனின் துடிப்பு அபிநயமோ வேதம் அணைப்பினிலோ மோகம் என்னவென்று வியக்கும் எடுத்தணைத்தால் மயக்கம்
 19. 12 points
  அழைப்பு மணி ஒலித்த பத்தாவது நிமிடம் கதவு திறக்கிறது. புலநாய்வில் கைதேர்ந்த சீலனிற்கு ஒரு தடவைக்கு மேல் மணி ஒலி எழுப்பும் அவசியம் இருக்கவில்லை. உள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் மணியினை அமிழ்த்து முன்னரே அவனிற்குத் துல்லியமாய்த் தெரிந்திருந்தது. அதனால் கதவு திறக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான். நிலா கதவினைத் திறந்தாள். பம்பாய் வெங்காயத்தின் மூன்றாவது அடுக்கின் நிறத்தில் அழகிய மென்மையான மேற்சட்டை அணிந்திருந்தாள். வெள்ளி நிறத்தில் பாதணிகள் அணிந்திருந்தாள். அவள் தொப்புளிற்கும் பாதணிகளிற்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த ஆடையும் இருக்கவில்லை. விமான ஓடுதளத்தில் பாதைதெரிவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் போன்று, அவளது பெண் குறிக்கு வழிகாட்டுவது போன்று அவளது பூப்பின் முடி சீராகப் பராமரகிக்கப்பட்டு மற்றைய இடங்களில் முடி அகற்றப் பட்டிருந்து. நிலாவின் முகத்தில் மழையில் நனைந்த நந்தியாவட்டை மலரின் குளிர்ச்சி இருந்தது. ஆனால் மழை ஓய்ந்த பின்னர் சிலிர்க்கும் இலை நீர் போன்று கண்ணீர் முற்றாகக் காயவில்லை. பெற்றோள் தீர்ந்துவிட்டது, பெற்றோள் சாவடி செல்லும் வரைக்கான பெற்றோள் கிடைக்குமா எனக் கேட்பதற்காகத் தான் வந்ததாக, தெருவில் நின்ற தனது காரைக் காட்டி சீலன் கேட்டான். தேனீர் பருகுகிறாயா என நிலா கேட்டாள். முன்னறிமுகம் சற்றுமற்ற நிலா இத்தனை இயல்பாய் உபசரித்தது சீலனின் மூளையில் பதியவில்லை. அவளிற்கு அவனைத் தெரியாதிருக்கலாம் ஆனால் அவன் அவளைக் கடந்த மூன்று மாதங்களாக வேவு பார்க்கிறான். ஆதலால் பரிட்சயமானவளிடம் தேனீர் சம்மதித்தான். மாளிகையின் கூடத்தில் போடப்பட்டிருந்த விலையுயர் கதிரையில் அமர்ந்து சுவரில் இருந்த சித்திரத்தைச் சீலன் பார்த்துக்கொண்டிருந்தான். தேனீருடன் வந்தவள் அவனருகில் அமர்ந்து தேனீர் பரிமாறினாள். ஆடையற்றிருந்த அவளது பாகங்கள் எவர் கவனத்தையும் பெறவில்லை. பென்ச்சமின் கண்ணைக் கசக்கிக் கொண்டு தூக்கம் முறித்தபடி கூடத்திற்கு வந்தான். சீலன் பெற்றோள் கேட்டு வந்திருப்பதாக நிலா சொன்னாள். வீட்டின் பின் பகுதியில் காலடி ஒலி கேட்டது. ஒரு ஆணும் பெண்ணும் கூடத்திற்குள் வந்தார்கள். அவர்கள் போதையில் இருந்தார்கள். நாற்பதுகளில் வயதிருக்கும். பெண் வெள்ளை நிறத்தில் மிருதுவான விலையுயர் ஆடை உடுத்தியிருந்தாள். அவள் ஒரு சீனப் பெண். அவன் குள்ளமாக இருந்தான். வெள்ளை முடி சவரம் செய்யப்படாது அவனது முககத்தில் இரு நாளின் கதைசொல்லிக் குத்தி நின்றது. குட்டை நரைமுடி அவன் மண்டையில். அவனது கண்களில் சோபை இல்லை. தனிமை அவற்றுக்குள் படர்ந்திருந்தது. சீனப் பெண்ணும் வந்தவனும் தம்பதியர் என நம்ப முடியாத தம்பதியராக இருந்தனர். சீலனிற்கு அவர்களைத் தெரியாது. "எங்கிருந்து வருகிறாய்" என பென்ச்சமின் சீலனைக் கேட்டான். தான் ஒரு வியாபாரப் பயணத்தில் பாதை தவறவிட்டதனால் இவ்வழி செல்வதாயும், கன தூரம் பெற்றோல் நிலையமெதுவும் வரிவில்லை எனவும் கூறினான். "நீ கனடாவிற்குப் புதியவனா, ஆங்கிலம் தற்போது தான் கற்கின்றாயா" என்றான் பென்ச்சமின். சீலன் அவனிடம் உங்கள் தொலைபேசியில் ஒரு அழைப்பை மேற்கொள்ளலாமா என்றதும் பென்ச்சமின் சீலனிடம் தன் கைப்பேசியினைக் கொடுக்க, அதை வாங்கிய சீலன் இலக்கங்களை அழுத்துகிறான். பின் தமிழில் உரத்து யாருடனோ பேசத் தொடங்கினான். “ரெண்டுபேரும் நிக்கினம். ஆரோ ஒரு புதுச் சப்பைப் பெட்டையும் என்னண்டு சொல்லமுடியா ஒருத்தனும் எதிர்பாராமல் நிக்கிறாங்கள். போட்டுட்டு வெளிக்கிடவா” என்று கூறி, பதிலைக் கேட்ட பின்னர் தொலைபேசியினை பென்ச்சமினிடம் கொடுக்கிறான். பென்ச்சமினின் முகத்தில் வியர்வை ஊற்றெடுத்தது. அருகில் வந்த மற்றையவன் பென்ச்சமினின் கைப்பேசியினை வாங்கிப் பார்த்துவிட்டு, “இவன் சும்மா இலக்கங்களை அழத்தியிருக்கிறான் ஆனால் கோல் அடிக்கேல்ல. சும்மா நடிச்சிருக்கிறாண்ட்டா” என்கிறான். சீனப் பெண் கதிரையில் அமர்ந்து கொள்ள, பென்ச்சமினும் மற்றையவனும் சரளமாய்த் தமிமிழில் உரையாடுகிறார்கள். பின்: “யார் நீ. உனக்கு என்ன பிரச்சினை. யுhரைப் போடப் போறாய். ஏங்க துவக்கு வச்சிருக்கிறாய்” என்று அடுக்கடுக்காய் பென்ச்சமின் சீலனைப் பார்த்துக் கேட்கிறான். சீலன் மற்றையவனைப் பார்த்து "உனது பெயரென்ன" என்கிறான். யாரும் ஆயுதம் எதனையும் எடுக்காதபோதும், சீலன் துப்பாக்கியினைப் பிடித்திருப்பது போன்ற தோரணையில் சீலனின் கேள்விகளிற்கு மற்றையவன் கண்ணுங்கருத்துமாய் ஒரு கதையினையே பதிலாககச் சொன்னான்: "மட்டக்களப்புச் சொந்த ஊர். கில்பேர்ட் றையன் என்ற்ர பேர். அம்மா தமிழ். அப்பா பேகர். பின்ன நாங்கள் தமிழ் தான் கதைக்கிறது. அங்கையிருந்தால் இயக்கங்களில சேர்தாலும் எண்டிட்டு அனுப்பி விட்டாங்கள். பல நாடு அடிபட்டு பிறகு கனடா வந்தன். இஞ்சதான் இவவைக் கண்டது. இவ இஞ்ச தான் பிறந்த மூண்டாம் தலைமுறை. சைனாப் பாசை தெரியாது. இங்கிலிசில தான் நாங்கள் கதைக்கிறது. நாலு பிள்ளையள். மூத்த மூண்டும் பெட்டையள். கடைசி பெடியன். பெட்டையள் தாயோட தான் நெருக்கம். அவளவை என்னோட கொஞ்சம் தூரமாய்த் தான் இருக்கிறாளுவள். பின்ன கடையிப் பெடியரோட தான் நான் கதைக்கிறது. அவரிற்குக் கொஞ்சம் தமிழ் விழங்குது." சீலனின் இதயத்தில் இரண்டுதலைமுறைத் தனிமை நுழைந்து அழுத்தியது. மட்டக்களப்புத் தமிழிச்சி பேகரைக் கட்டிப் பட்ட தனிமையும், கில்பேட் சீனாக்காறியைக் கட்டிப்பட்ட தனிமையும் சீலனிற்குள் உணரப்பட்டது. நிலா தேனீருடன் உண்பதற்கு கேக் கொண்டு வந்து வைத்தாள். அவள் தொப்புள் முதல் பாதம் வரை ஆடையின்றி இருந்தமை எவரின் கவனத்தையும் பெறவில்லை. “யார் தம்பி நீங்கள். என்ன நோக்கத்தில வந்திருக்கிறியள்” பென்ச்சமின் மீண்டும் கலவரத்துடன் சீலனைக் கேட்டான். சீலன் உறைந்த பார்வையினை பென்ச்சமின் மீது பொருத்தி நிலைகுத்தியிருந்தான். நிலா எழுந்து மீண்டும் சமயலறை நோக்கிச் சென்றாள். அவளது வலது பிட்டத்தில் குதிரை பச்சை குத்தப்பட்டிருந்தது. ஒரு தோட்டா பெனச்சமனின் தலை புகுந்து வெளியேறி கூடத்தின் சுவரில் இருந்த சித்திரத்தின் கண்ணாடியினை நொருக்கியது. நிலா நில்லாது நடந்து கொண்டிருந்தாள். சீலன் கதைவைத் திறந்து வெளியேறினான். கில்பேட் “பின்ன இவன் யார்? ஏன் சுட்டான்” என்று திருப்பத்திருப்ப ஈனக்குரலில் கேட்டபடி கதிரையில் அமர்ந்திருந்தான். சீனப் பெண், அலறியபடி கூடத்தைச் சுற்றிச் சுற்றிச் செக்குமாடு போல் ஓடிக் கொண்டிருந்தாள்.
 20. 11 points
  பிடரிப்பகுதியிலே -எனக்குப் பெரியதாய் ஒரு தசைப்பிடிப்பு. ஆட்டிச் சொல்ல முடியுதில்லை- தலையை ஆம் என்றும், இல்லை என்றும். பின்னாலே பார்ப்பதற்கு நான் பிரள வேண்டும் பாதி வட்டம். முயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும் முன்னேற்றம் மட்டும் பூச்சியமே. வாட்டி இழு எருக்கிலையை வலி மறையும் என்றார் பாட்டி. வாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி மயிரெல்லாம் எரிந்து போச்சு. வா வீ கியூ மணம் வருதே நானும் வரட்டா ஒரு பிடிபிடிக்க என மயிரெரியும் வாசனையை என் மச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான். டைகிளோ பீனைல் போடு என ரை கட்டிய நண்பன் சொன்னான். போட்டுத்தான் பார்த்தேன் நானும் ம்கும் போகவில்லை தசைப்பிடிப்பு. பிசியோ தெரபி சிகிச்சை செய்யும் பிரிந்து போன பழைய காதலி சொன்னாள். செய்துதான் பார்த்தேன்- செலவாய்ப் போச்சு பெருமளவு. தலையணையை மாற்றுங்கள் அத்தான் தயவாய் எந்தன் மனைவி சொன்னாள். மாற்றினேன் தலையணையை-அதிசயம், மாயமாச்சு தசைப்பிடிப்பு. கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து காரணம் என்ன என்று கேட்டேன். தலையணைக்கும் மெத்தைக்கும் சரியான பொருத்தமில்லை, மற்றையவர் பொருந்தாட்டியும் நமக்கும் வலிகள் வரும். மனைவி சொன்னாள் இந்த உண்மை. மெத்தையை மாற்றுதற்கு மெத்தச் செலவு , அதனாலேதான்- தலையணையில் கையை வைத்தேன் தயங்காமல் இதையும் சொன்னாள். மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை மனைவி சொல் மருந்துமாகும். ஆதலினால் மனைவி சொல்லைக் கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.
 21. 11 points
  வாழ்வின் அர்த்தம் என்ன என்று வெறுமைக்குள் தேடும்போது ஒருவித பயமுண்டாகின்றது. அதனைத் தவிர்ப்பதற்காக பல்வேறு போதைகளில் மனத்தை திசைதிருப்பி மூளைக்கு ஓய்வைக் கொடுக்காமல் வாழ்வை ஓட்டப் பழகுகின்றோம். ஒருநாள் லீவு கிடைக்காதா என்று ஏங்குவதும், ஒன்றுக்கு இரண்டு நாள் ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருந்தால் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்று அச்சப்படுவதுமான வாழ்க்கை போகின்றது. இன்னும் விரிவாக எழுதலாம்.
 22. 11 points
  2015 இல் அண்ணனின் மகனுக்கு திருமணம் என்று சிட்னி அவுஸ்திரேலியா போயிருந்தேன்.அண்ணியின் குடும்பம் கொஞ்சம் பெரியது.லண்டன் பிரான்ஸ் ஜேர'மனி என்று தூர இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.நான்காம் சடங்கு முடியும் வரை ஒரே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் நண்பர்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர்.நாளாக ஆக வருவோர் போவோரும் குறைந்து விட்டது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.அதற்கிடையில் எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு இடமாக கூட்டிக் கொண்டு போய் காட்டினார்கள். நாளைக்கு எல்லோரும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம்.10 மணிக்கு இங்கிருந்து வெளிக்கிட வேண்டும் எல்லோரும் வேளைக்கு எழும்பி வெளிக்கிடுங்கோ என்று மகன் சொன்னான்.அடுத்த பக்கத்தில் சுட்டு சாப்பிடக் கூடிய இறைச்சி சோளன் பாண் பழங்கள் என்று நிறைய சாமான் பட்டிலிட்டு கொண்டிருந்தார்கள்.என்னடா திறி சிஸ்ரேஸ் என்று இப்ப இதையும் கொண்டு போய் என்ன செய்கிறதென்று கேட்க பரவாயில்லi சித்தப்பா திறி சிஸ்ரேசைப் பார்த்துவிட்டு 2 மைல் ஓடினால் நல்ல பார்க் ஒன்று வரும் அங்கு போய் இதுகளை சுட்டு சாப்பிடுவோம் என்றான். ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி எல்லோரும் வெளிக்கிட்டுக் கொண்டிருந்தனர்.நானும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம் என்று வழமைக்கு மாறாக கொஞ்சம் நல்ல உடுப்பும் போட்டு அட திறி சிஸ்ரேசில ஒரு சிஸ்டர் தன்னும் என்னைப் பாரக்காதா என்று கொஞ்சம் பூசி மொழுகி கறுப்பு கண்ணாடியும் போட்டு கொண்டு வெளிக்கிட்டேன்.அப்பவும் மனைவி என்னப்பா இண்டைக்கு வழமையை விட தூக்கலாக இருக்கு என்றவுடன் திறி சிஸ்ரேசை எல்லோ பார்க்க போகிறோம் என்றவுடன் சரி சரி வாலிபத்தில் ஆடினது இப்ப காலைக்காலை போட்டு அடிக்கிறீங்கள் என்று ஒரு நமட்டு சிரிப்பு வேறை. அன்று எல்லோரும் வேளைக்கே எழும்பி சொன்ன நேரத்தை விட கொஞ்ச நேரம் முன்பாகவே தாயாராக நின்றோம்.எப்படி இருந்தாலும் அதைக் காணவில்லை இதைக் காணவில்லை என்று ஒரு மாதிரி 5 கார்களில் எல்லோரும் புறப்பட்டோம்.இரண்டு மணி நேர ஓட்டம் என்றார்கள்.போகிற வழியில் நினைத்ததைத் தருகிற சிறிய வேதக் கோவில் இருக்கிறது அதையும் போய் கும்பிட்டு எல்லோர் வேண்டுதல்களையும் சொல்லிப் போட்டு வரும் என்றார்கள்.ஓசியில் கேட்பது கிடைக்குமென்றால் யார்தான் விடுவார்கள்.அங்கே போனால்அமைதியான ஒரு இடம் சிறிய கோவில்.யார் யார் என்னென்ன வேண்டினார்களோ தெரியாது.எனக்கு ஒரே திறி சிஸ்ரேசின் ஞாபகம் தான். ஒரு மணி நேர ஓட்டத்தின் பின் இடத்துக்கு வந்துவிட்டோம் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்றார்கள்.கிட்ட போக போக ஒரே மலைப் பிரதேசமாக இருந்தது.இன்னும் கிட்ட போக ஊரிலே மாட்டு இலையான் என்று சொல்வார்களே அந்த இலையான் எல்லோர் முகத்தையும் சுற்றி சுற்றி ஒரு வித இரைச்சலுடன் வந்து கொண்டிருந்தது.நல்ல அழகான இயற்கையாக இருந்தாலும் மாட்டு இலையான் ரொம்ப மோசமாக இருந்தது.வாயைத் திறந்து கதைக்க முடியவில்லை.என்னடா திறி சிஸ்ரேசைப் பாரக்க வந்து கதைக்கவும் ஏலாமல் இருக்கு திறி சிஸ்ரேசை கொண்டு போய் காட்டுங்கோடா என்றால் சித்தப்பா எங்கை தெரியுது பாருங்கோ என்றான்.நானும் சுற்றி சுற்றி பார்க்கிறேன் எங்களோடு வந்திருந்தவர்களும் சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்.பின்பு தான் சொன்னான் மூன்று ஆள் மாதிரி மலை தெரியுது அது தான் திறி சிஸ்ரேஸ்.நான் மாத்திர மல்ல அங்கே புதிதாக வந்த எவருமே இதை எதிர் பார்க்கவில்லை. மலையைப் பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் ஏதேதோ எல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு போய் ஏமாந்துவிட்டது போல ஒரு உள்ளுணர்வு.என்னைப் போலவே பலரும் எண்ணிக் கொண்டு வந்ததை பின்னர் பார்க்கில் போயிருந்து கதைக்கும் போது அட இதாடா திறி சிஸ்ரேஸ் நாங்களும் ஏதோ என்று எண்ணிவிட்டோம் என்னும் போது எனது மனமும் ஆகா நம்மளை மாதிரியே எல்லோரும் எண்ணி வந்ததை நினைக்க கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.நாங்கள் பார்த்து ரசித்த மூன்று சகோதரிகளை நீங்களும் ரசிக்க வேண்டாமோ?
 23. 11 points
  புலிகளையும், அவர்களின் போராட்டத்தையும் ஆதரித்தவர்களை அவர்கள் எந்த பிண்ணனியைக் கொண்டவர்களாக இருந்தாலும் எதிர்ப்பதென்பது தமிழர்களுக்குள் இருக்கும் ஒரு குழுவினரின் யுக்தியாக இரருந்து வருகிறது. இந்தக் குழுவினர் 2009 இற்குமுன்னார் இருந்ததைக் காட்டிலும் இப்போது அதிகரித்தவர்களாக (பின்னாட்களில் இணைந்துகொண்டவர்கள் புலிகளை 2009 வரை ஆதரித்து , தோல்வியின் விரக்தியில் இக்குழுவினருடன் இணைந்தவர்கள்) இருக்கிறார்கள். அந்தவகையில்த்தான் திரு வை. கோபாலசாமி மீதான காழ்ப்புணர்வும் பார்க்கப்படல் வேண்டும். சிங்களவர்கல் எதிர்க்கிறார்கள் என்றால் அதை புரிந்துகொள்ளுதல் கடிணமானது இல்லை. மிகவும் வெளிப்படையானது. தமது அநியாயங்களை உலக அரங்கில் அவர் பேசுகிறார் என்பது நிச்சயம் சிங்களவர்களைக் கோபப்பட வைக்கும். ஆனால், தமிழர்களாக இருக்கும் ஒருவருக்கு இது எந்தவகையில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் என்பது மிகவும் கேள்விக்குறியானது. ஆக, அவர் பேசும் விடயம் பற்றி நோக்கப்படாது, அவரது பின்புலம் பற்றி நோக்கப்பட்டே இந்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அதாவது புலிகளை தொடர்ந்தும் ஆதரிப்பவர் என்கிற பின்புலம். மற்றும்படி அமெரிக்கா வருகிறது, ஆப்பிரிக்கா வருகிறது என்றெல்லாம் இவர் புலிகளை நம்பவைத்து முள்ள்வாய்க்காலுக்குத் தள்ளிச் சென்று பலிகொடுத்தார் என்பதெல்லாம் அவர்மீதான காழ்ப்புணர்விற்கு வலுச்சேர்க்க கட்டப்பட்ட கட்டுக்கதைகள்தான். சிங்களவர்கள் ஆத்திரப்படும் விடயம் ஒன்றை ஒரு தமிழர் செய்கிறார் என்றால், தமிழராக இருக்கும் எல்லோரும் ஆதரிக்கவேண்டும். அதை விட்டு விட்டு அவர் பலிகொடுத்தார், இன்னும் நம்புங்கள், இன்னும் பலிகொடுப்பார் என்பதெல்லாம் காழ்ப்புணர்ச்சியே !!!
 24. 11 points
  துருச்சாமி தொடர்கிறது....! இந்தக் களேபரத்தில் எல்லோரும் இருக்கையில் வீட்டுப் படலையை உதைத்துத் திறந்துகொண்டு பழனி தன் பெஞ்சாதி செண்பகத்தின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு கையில் அவிழும் சாரத்தையும் பற்றிக் கொண்டு உள்ளே வருகிறான். அவன் நல்ல வெறியில் வேறு இருக்கின்றான்.அவனுக்கு செண்பகத்தின் மேல் அவ்வப்போது சந்தேகம் வரும். ஏனெண்டால் அவனே "முதல் ஒருவனின் ரெண்டாம் தாரமாய் இருந்த அவளுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வந்து ப்ரமோஷன் குடுத்து முதலாவது வைப்பாட்டியாய் வீடு வாசலோடு வைத்திருக்கிறான். அவளும் அதுக்குத் தகுதியானவள்தான்.உலக அழகிகளே உச் சுக் கொட்டும் அளவுக்கு ஓங்கு தாங்காய் இருக்கிறாள். எல்லோரும் விலகி நின்று வேடிக்கை பார்க்கினம். சாமியிடம் நேராக வந்து அவளை சாமியின் காலடியில் தள்ளிவிட்டு சாமி" இண்டைக்கு எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்" சாமியும் ஒருமுறை கோவணத்தைத் தொட்டுப் பார்த்து ம்...கட்டியிருக்கிறன் என்று தனக்குள் சொல்லுது. என்ன சொல்லு. சிலநாளாய் எனக்கு இவளின் நடத்தையில் சந்தேகமாக் கிடக்கு. இவள் இல்லை என்று சொல்லுறாள்.நீ ஒருக்கால் இவளிட்ட கேட்டுச் சொல்லு. சாமி முகத்தில் சாந்தம் தவழ அவளைப் பார்க்கிறது. செண்பகமும் வலு கெஞ்சலாய் சாமியைப் பார்க்கிறாள்.அந்தப் பார்வை எப்படியாவது என்னை காப்பாத்து என்கிறது. பழனியும் விடாமல் அடியேய் இப்ப நீ சாமிமேல கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணுடி என்று கத்துகிறான். செண்பகத்துக்கு பெருத்த அவமானமாய் இருக்கு. ஒரு முடிவுக்கு வந்தவளாய் முடியை இழுத்து முடிஞ்சு கொண்டு ஆவேசமாய் எழுந்து நிக்கிறாள். பழனியைப் பார்த்து உனக்குச் சாத்தியம்தானே பண்ணவேண்டும். நாயே என்னை யாரென்று நினைத்தாய், நீ சூடத்தை ஏற்று நான் இப்ப வாறன் என்று பழநியைத் தள்ளிவிட்டு கிணத்தடிக்குப் போகிறாள். நிறைவெறியில் நிண்ட பழனியும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து கீழே இருந்த சனங்களுக்கிடையில் மல்லாந்து விழ குழந்தைகள் சேம்... சேம் என்று காத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.சுற்றி இருந்த பெண்டுகள் எல்லாம் முகத்தைத் திருப்பி கமுக்கமாய் சிரிக்கினம். சாமிக்கு செண்பகம் தன்மேல் சத்தியம் பண்ணுவதில் கொஞ்சமும் விருப்பமில்லை. என்ன செய்யலாம் என்று அது சுற்று முற்றும் பார்க்குது. எட்டத்தில் ஒரு சிறு பிள்ளை ஒரு சின்ன பிள்ளையார் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருக்கு. உடனே சாமி அருகில் இருந்த ஒரு பெடிச்சியைக் கூப்பிட்டு காதில் எதோ சொல்ல, அவளும் ஓடிச்சென்று அந்தப் பிள்ளையிடம் இருந்து பிள்ளையாரைப் பிடுங்கிக் கொண்டு வருகிறாள். உடனே அந்தக் குழந்தையும் " என்ர பிள்ளையாரைத் தாடி பூமணி என்று பின்னால காத்திக் கொண்டு ஓடி வருகுது. பூமணி பொம்மையை சாமியிடம் குடுக்க வந்தப்பிள்ளை சாமியின் தண்டத்தைப் பார்த்து கம்மென்று நிக்குது. சாமி அந்தப் பிள்ளையாரை தன்னருகே வைத்து ஒரு இலையில் சூடத்தை ஏற்றிவிட்டு எழுந்து நிக்குது. நீர் ஒழுக ஈரச்சேலையுடன் அங்கங்கள் எல்லாம் அங்கும் இங்கும் குலுங்க லக லக லக என்று பத்ரகாளிபோல் வந்த செண்பகம் பழனியை முன்னால இழுத்துவிட்டு சொல்கிறாள் " நீதான் என்ர புருஷன். உன்னோடு தவிர வேறு யாரோடும் போகவில்லை" என்று ஆவேசமாய்க் கூறி வலது கையை உயர்த்தி கற்பூரத்தின் மீது ஓங்கியடித்துச் சத்தியம் செய்ய வெலவெலத்துப் போன துருச்சாமியின் கையில் இருந்த தண்டம் எகிரிப் பிள்ளையார் மேல் விழ மண்ணில் இருந்து வந்த பிள்ளையார் நொறுங்கி மண்குவியலாய்க் கிடக்கிறார். எல்லோரும் பிரமித்துப் போய் செண்பகத்தைப் பார்க்கினம். தங்கள் கண்களையே தங்களால் நம்ப முடியாமல் கிடக்கு. அட இந்தப் பத்தினித் தெய்வத்தையா இவ்வளவு நாளும் நாங்கள் வாய்கூசாமல் வம்பு பேசிக்கொண்டு திரிந்தோம், தாயே மகமாயி எங்களை மன்னித்துக் கொள் என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். பழனிக்கு வெறி எல்லாம் முறுஞ்சு போச்சு. கத்துறான் என்னை மன்னிச்சுக் கொள்ளடி செண்பகம், உன்னான இனி யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டன். உன்னைச் சந்தேகப் படமாட்டன் என்று அவள் காலைக் கட்டிப் பிடித்து அரற்றுகிறான்.எல்லோரும் எட்ட தூரமாய் விலகி நிக்கினம். சாமிக்கு கிட்ட வந்த செண்பகம் சாமியைக் கும்பிட சாமி விபூதி எடுத்து அவள் முகத்தில் அடித்து விட்டு வாங்கில் இருக்க, அவள் தனது இடது கையில் இருந்து இரண்டு ஓட்டுச் சில்லுகளை சாமியின் மடியில் விட்டெறிந்துவிட்டு , ஈர ஆடையில் நீரொழுக நெஞ்சம் விம்மித் தனிய பின்னழகுகள் சதுராட ஒய்யாரமாய் நடந்து போறாள். போகும் போது மறக்காமல் கதிரைப் பார்த்து ஒரு காமப் பார்வையும் வீசிவிட்டு போகிறாள். பொன்மணியும் அநியாயமாய் சென்பத்தையும் தன்ர புருஷனையும் சந்தேகப் பட்டுட்டேன் என்று மனதுக்குள் மருகி இன்றிரவு மனுசனுக்கு விசேஷமாய் விருந்து போடணும் என்று நினைக்கிறாள். கதிரும் கூட அசைந்தசைந்து போகும் செம்பூவை வெறித்துப் பார்க்கிறான். அவனது பார்வையும் எல்லோரையும் போல் அவள் முதுகையோ முழங்காலையோ மேயவில்லை. சாமி தன் மடியில் செண்பகம் எறிந்த ரெண்டு ஓட்டுச் சில்லுகளையும் எடுத்துக் பார்க்குது. அதில் ஒன்றில் கதிர் என்றும் மற்றதில் சூசை என்றும் காரியால் எழுதியிருக்கு. அவள் நின்ற இடத்துக்கு சிறிது தூரத்தில் இன்னொரு சில்லு கிடக்குது.சாமி எட்டி அதை எடுத்துப் பார்க்க அதில் பழனி என்று எழுதிக் கிடக்கு. அப்படியென்றால் முதலே மூன்றுபேரின் பெயரையும் மூன்று ஓட்டில் எழுதிவிட்டு வரும்போது பழனி என்று எழுதிய ஓட்டைத் தவறவிட்டு மற்ற இரண்டையும் இடக்கையில் வைத்துக் கொண்டு வலது கையால் அசத்தியம் பண்ணியிருக்கிறாள். " உன் ஓடு தவிர வேறு யார் ஓடும் போகவில்லை" சிறுக்கி மவள். ஆகா எனக்குச் சிஷ்யையாக வரக்கூடிய அத்தனை தகுதியும் உனக்கு இருக்குதடி என் தங்கம். என்று சென்பகத்தைச் சிலாகிக்குது சாமியின் மனசு. இந்த நிகழ்ச்சியை எல்லோரும் உருசையாய் கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது, ஒரு குழந்தை மட்டும் "என்ர பிள்ளையாரை வாங்கித் தாடி பூமணி" என்று அழுது அடம்பிடிக்குது. மண்குவியலாய் கிடக்கும் பொம்மையைப் பார்த்து பூமணி முழுச, சாமி அந்தக் குழந்தையைப் பார்த்து உனக்கு பிள்ளையார் பொம்மைத்தானே வேணும் ,நான் செய்து தாறன் அழக்கூடாது என்று சொல்லி வாங்கில் கிடந்த மண்குவியலோடு கொஞ்சம் குறுனிக் கற்களையும் பொறுக்கிச் சேர்த்து கமண்டலத்தில் இருந்த நீரை அதன் மேல் ஊத்துது. கமண்டலத்தில் காலையில் ஊத்திய கள்ளு புளித்துப் போய்க் கிடக்கு எண்டதை சாமி மறந்துட்டுது.ஊத்தியாச்சு இனி என்ன செய்ய, பேசாமல் அதைக் கையால் குழைத்து பிசைந்து அமுக்கி அமுக்கி பிள்ளையார் செய்யுது. குழந்தையும் அதை பார்த்து ஆர்வத்துடன் ஐ...யா... ஆ.... கள்ளுப்பிள்ளையார் எண்டு கத்துது. பக்கத்தில் இருந்த சுவேதா டீச்சர் பிள்ளையிடம் அப்படிச் சொல்லக் கூடாது. கல்லுப்பிள்ளையார் என்று சொல்ல வேண்டும். எங்க சொல்லு கல்லு ...கல்லு மேலண்ணத்தை நாக்கு தொட்டு வருட வேண்டும். சொல்லிக் கொடுக்கிறாள்.குழந்தையும் விடாமல் "ள " கள்ளுப்பிள்ளையார் என்று பாடுது. சாமியும் சுவேதாவைப் பார்த்து விடுங்கம்மா குழந்தையும் தெய்வமும் ஒன்று எப்போதும் உண்மைதான் பேசும். பெரியவர்கள் நாங்கள்தான் பொய்யும், களவும்,பித்தலாட்டமும் என்று சொல்லி அந்தப் பிள்ளையார் பொம்மையை பிள்ளையிடம் குடுக்குது. குழந்தையும் அதை வடிவாய்ப் பார்த்து, ஹை ...யோ குரங்குச்சாமி , எனக்கு இதுதான் பிடித்திருக்கு என்று குதூகலிக்குது.எல்லோரும் அதை வாங்கிப் பார்த்துவிட்டு அப்படியே அச்சு அசலாய் குரங்கு போலவே இருக்கு வால்தான் இல்லை என்று சொல்லுகினம்.பர்வதக் கிழவியும் குரங்கு எண்டு சொல்லாதையுங்கோ, அனுமார் எண்டு சொல்லுங்கோ என்கிறாள்.சாமியும் மீண்டும் அதை வாங்கி தும்பிக்கையை ஒடித்து பின்னால் ஒட்டிவிட்டு மூக்கைச் சரிபண்ணிக் குடுக்குது. எல்லோரும் சாமியைப் புகழ்ந்து துருச்சாமிக்கு அரோகரா என்று கோஷம் போடுகிறார்கள். நேரம்...05 : 00 மணி. பொன்மணியும் சுவேதாவும் எல்லோருக்கும் சுடச்சுட தேநீரும் கருப்பட்டியும் , அவித்த மரவள்ளிக் கிழங்கும் இடித்த சாம்பலும் , உளுந்து வடையும் பரிமாறுகினம். சாமியும் அவர்களுடன் சேர்ந்து அவற்ரைப் புசித்து விட்டு, தனக்குள் அட சே இன்று முழுதும் ஒரு புகை அடிக்கேல்ல , நாக்கு நாம நாம என்குது .எங்காவது ஒரு நல்ல இடமாய்ப் இருந்து சுருட்டு பத்தவேணும். எண்டு நினைத்து தூளிப்பையையும், தண்டத்தையும், கமண்டலத்தையும் மறக்காமல் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் நமஸ்காரம் சொல்லுது. அப்போது எல்லோருமாய் சேர்ந்து தங்களால் முடிந்தளவு சில்லறையும் தாளுமாய் பணம்சேர்த்து சாமியின் பையில் கொண்டு வந்து போடுகினம்.சின்னஞ்சிறு நகைகள் கூட அதில் இருக்கு கோமளமும் தன்ர மோதிரத்தையும் கழட்டிப் போடுகிறாள். பொன்மணி கொஞ்சம் இறைச்சிக் கறியும் பொரியலும் வடை,கிழங்கு சம்பல் முதலியனவும் வாழை இலையில் கட்டி வந்து சாமியிடம் கொடுக்கிறாள். சுவேதாவும் புருஷன் காசு தன்னிடம் தாறதில்லை என்று சொல்லி பெண்மணியிடம் நூறுரூபாய் கடனாய் வாங்கிக் குடுக்கிறாள். கதிரவேலுவும் சாமி படலையடிக்கு வர அங்கு நின்று கொண்டு சாமியின் பையுக்குள் ஒரு சாராயப் போத்தலும் பணமும் வைத்து விடுகிறார். சாமியும் தனது தண்டத்தைத் தூக்கி எல்லோரையும் ஆசிர்வதித்து விட்டு வீதியால் இறங்கி நடக்குது.....! பாலகர் காண்டம்: பாகம் ஒன்று முற்றும்...!
 25. 10 points
  ஜேர்மன் சனாதிபதி முன்னிலையிலே ஈழத்தமிழரின் பிரச்சனையை எடுத்துரைத்த #மருத்துவர் #தமிழன் திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன் , உயரிகாரிகளையும் கண்கலங்கவைத்தார்! யேர்மனி கம்பர்க் நகரில் பணிபுரியும் இருதய சத்திரசிகிச்சை நிபுணரும் வைத்தியகலாநிதியும், எழுத்தாளருமான திரு உமேஸ் அருணகிரிநாதன். இவர் தனது 12வயதில் இலங்கையைவிட்டு யேர்மனிக்கு வந்துள்ளார்; தமிழர் பிரச்சனை உலகத்தலைவர்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்கு தனது தாயக இடப்பெயர்வும் அதன்வலிகளையும் ஜேர்மானிய அரசுக்கு புத்தக வடிவிலும் , அதை அவர்களையே முன்னிருத்தி எடுத்துச் சொன்ன அந்த அகதியாகி, மருத்துவர் பல ஜெர்மனிய உயரதிகாரிகளையும் கண்கலங்க வைத்தார் , பாஷை விளங்கவில்லை, ஆனால் அவரின் பேச்சை மிகவும் ரசித்தேன். தெளிவான, கூர்மையான பேச்சு. எத்தனை தடவைகள் வேணுமானாலும் கேட்கலாம். 13 நிமிடங்கள் எல்லோரும் அமைதியாக கேக்கிறார்கள் வாழ்த்துக்கள் சகோதரா.
 26. 10 points
  அப்ப எனக்கு ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதிருக்கும். எனது அன்ரி மன்னாரில் ஒருபாடசாலையில படிப்பிச்சுக்கொண்டு இருந்தா. நான் அதுவரை அங்கு சென்றதில்லை. ஒரு பெரிய பள்ளி விடுமுறைக்கு அன்ரி எங்களை எல்லாம் அங்கு கூட்டிக்கொண்டு போவதாகக் கூறியவுடன் மனதில ஏற்பட்ட சந்தோசத்தைச் சொல்ல முடியாது. அங்க போற நாளை ஒவ்வொருநாளும் எண்ணியபடி காத்திருக்க ஆரம்பிச்சம் நானும் என் தம்பி தங்கைகளும். அப்போதெல்லாம் எந்த விடயத்தையும் மனதில் வைக்க முடியாது அக்கம் பக்கத்தில் உள்ள எம் வயதுக்காரருக்குச் சொல்லிவிடுவோம்தானே. அப்பிடி நாங்கள் மன்னார் போவதும் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு ஆட்களுக்கு எல்லாம் தெரிய, எங்களோட வர அவர்களும் ஆசைப்பட, என்னும் இரண்டு பேரை மட்டும் எம்மோடு கூட்டிக்கொண்டு போக அன்ரியும் சம்மதிக்க, என் தம்பிக்கு மற்றவர்களைக் கூட்டிக்கொண்டு போவது பிடிக்காது அவை எங்களுடன் வரவேண்டாமென்று அன்ரியுடன் சண்டைபோட ஆரம்பித்தான். எங்களோட வர இருந்தது எங்கள் மாமிமார்தான். மாமிமாரென்றால் கிழடு கட்டை எண்டு எண்ண வேண்டாம். அவையில ஒருத்திக்கு எனிலும் ஒருவயதும் மற்றவாவுக்கு மூண்டு வயதும்தான் வித்தியாசம். அதுக்கு முதல் இன்னொண்டும் சொல்லவேணும். என்ர அன்ரி மன்னாரில் ஒரு குடும்பத்தோடதான் இருந்தவ. அவைக்கு நாலு பிள்ளையள். ஒரு பெட்டை மூண்டு பெடியள். மூத்த பெடியனுக்கு ஒரு இருபது வயது இருக்கும். இரண்டாவது பெட்டைக்கு ஒரு பதினெட்டும் மூன்றாவதுக்கும் நாலாவதுக்கும் இரண்டிரண்டு வயதைக் குறைச்சுப் பாருங்கோவன். ஆனால் அப்ப எங்களுக்கு முதல் இரண்டுபேரை மட்டும்தான் தெரியும். ஏனெண்டா அவை இரண்டுபேரும் அன்ரியோடை அல்லது மூத்தவர் தனியா யாழ்ப்பாணத்திலே ஏதும் அலுவலிருந்தா வந்து எங்கட வீட்டிலதான் தங்கிப்போறவை. அவை வந்து நிக்கிற நாட்களிலே வீடே இரண்டுபடுமளவு ஒரே சிரிப்புச் சத்தம் தான் கேட்கும். இரவிரவா நான் என்ர பக்கத்துவீட்டு மாமி, தம்பி, அவர் ... அதுதான் தினேஷ் எல்லாரும் சேர்ந்து தாயம் விளையாடுவம். கரம்போர்ட் விளையாடுவம் அல்லது வீடியோ வாடகைக்கு எடுத்து இரண்டுமூன்று படம் என்று பார்ப்பம். அதனால அவை வந்தால் நேரம் போவது தெரியாது. அவை வந்தால் அம்மாவும் நல்லா அவையை உபசரிப்பா. தினேஷ் தனிய வந்தாலும் சரி.தங்கையோட வந்தாலும் சரி அம்மா என்னிடம் தான் மக்கில் தேநீர் அல்லது கோப்பி போட்டுத் தருவா. தங்கைக்கு சிறிய சோசர் தான் பிடிக்கும் அதனால அவவுக்கு அதில குடுப்பன். ஒருக்கா நாங்கள் எல்லாரும் சேர்ந்து வின்சர் தியேட்டருக்கு படம் பார்க்கப்போனால் அவருக்குப் பக்கத்தில இருக்கிறதுக்கு என்ற மாமிமார் இரண்டுபேரும் நான் நீ எண்டு சண்டை போட நான் எதை பற்றியும் யோசிக்காமல் அவரின் தங்கைக்குப் பக்கத்தில் போய் இருந்திட்டன். எனக்குப் பக்கத்தில தம்பி வந்து இருக்க அவர் இரண்டுமாமிமாருக்கும் நடுவில இருந்து என்ர பக்கமா அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது என்ர கடைக்கண்ணுக்குத் தெரிஞ்சிது. மனதில ஒரு சந்தோசமும் எட்டிப் பார்த்தது. அவரைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லத்தான் வேணும். பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.
 27. 10 points
  இன்று இங்கே சனி காலை நேரம். வழமையாக இரவு படுக்கப் போக எப்படியும் 11, 11.30 ஆகி விடும். புலம் பெயர்ந்தும் மாறாத பழக்கங்களில் இதுவும் ஒன்று. அதிசயமாக நேற்று இரவு 10 மணிக்கே படுக்கைக்கு போயாயிற்று । காலையில் துணைவியார் அதிசயமாக நல்லதொரு "mood " உடன் என்னப்பா இரவெல்லாம் ஒரே கனவு என்று கொண்டு வந்தார்। தேடிக் கதைக்க வரும் அருமையான சந்தர்பங்களை விட மனமில்லாமல் கையில் இருந்த வேலை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னப்பா என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லையப்பா சிங்களவர் , சோனகர் , தமிழர் எல்லோரும் ஒரே சண்டை , நீர்வேலியில் வைத்து நாங்கள் எல்லோ இடையில் மாட்டுப்பட்டுப் போனோம்। ஓடித் தப்பிக்கலாம் எண்டால் கை கால் ஒண்டும் வேலை செய்யுதில்லை அப்பிடியே இறுக்கிப் போச்சுது , சரியாக் களைச்சுப் போனன் அப்பா என்றார் இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் , வீட்டில் சர்வதேச விடயங்களை கையாள்வது நான் மட்டுமே. மன்னார் புதை குழி பற்றி கதை எடுத்தால் கூட “உதெல்லாம் தெரிந்த விடயம் தானேயப்பா , உவங்கள் உதுக்குள்ள என்ன விளையாட்டு காட்டினங்களோ ஆருக்கு தெரியும் " என்பதோடு முடித்து விட்டு " அந்த அந்த பிளம்பரோட கதைச்சநீங்களே , எப்ப வாறானாம்” என உள்நாட்டலுவல்களுக்கு மாறி விடுவார் । அப்பிடிகொத்தவர் இப்ப இலஙகைப் பிரச்சனை பற்றி கனவும் கண்டு அதைப் பற்றி கதைக்கவும் வருகிறார் எண்டால், ஏதோ ஒண்டு சரியில்லை எண்டு மட்டும் விளங்குற மாதிரி ।। துணைவியார் மேலும் தொடர்ந்தார் ।। " அப்பா கனவு அத்தோட முடியேல்லையப்பா " . " என்ன Chapter 2 உம் இருக்கோ " இது நான் । "” ஓம் ஓம் , உங்களுக்கு எவ்வளவு தடிப்பப்பா , நான் சொல்லச் சொல்ல , இவ்வளவு பிரச்சனைக்குள்ளும் நீங்கள் இவள் சுமதியைஎல்லோ காருக்குளேயே ஏத்திக் கொண்டு வாரியள், ஒண்டாத் தப்புவம் எண்டு. நாங்களே தப்ப வழியைக் காணேல்லை , இதுக்குள்ள இது வேற. இவள் சுமதி உங்களோட இளிச்சு இளிச்சு கதைக்கிறது எனக்கு கொஞ்சமும் பிடிப்பில்லை, அவள் ஆக்களைப் பாவிச்சு தன்ர காரியத்தைக் கொண்டு போகிற type “” ( இதுவெல்லாம் கனவிலே நடந்த விடயங்கள் தான் ). இப்ப எனக்கு கொஞ்சம் விளங்குகிற மாதிரி இருந்தது , துணைவியார் தொடர்ந்து கேட்டார் ( இது கனவிலல்ல ) “ எப்பவெண்டாலும் , என்ன காரணத்திற்கெண்டாலும் சுமதியை காரில ஏத்துவீங்களோ எண்டு " இப்ப தான் சனி காலை தொடஙகி இருக்கு. இன்று முழுவதும் போய் , நாளை ஞாயிறும் போய் திங்கள் வேலைக்கு வெளிக்கிட எவ்வளவு காலம் கிடக்கு । அதுக்குள்ளே இன்று சனி இரவு இலங்கையில் இன்னொரு கலவரம் வராதெண்டதுக்கும் ( கனவிலே தான் ) எது வித உத்தரவாதமும் இல்லையென்று நினைக்க அடி வயித்ததில என்னவோ செய்யிது
 28. 10 points
  இயந்திர மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது இன்று தான் வெள்ளிக் கிழமை மாலை, நாளை சனிக்கிழமை வார விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில் சனி ஞாயிறுக் கிழமைகள் எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும் ஓடத்தொடங்க வெள்ளி வந்துவிடும். வா ரங்கள் மாதங்கள் என்றுஆகி வருடங்கள் உருண்டோடி விடுகின்றன. அன்று சனிக்கிழமை விடுமுறை என்று காலையில் ஆறுதலாக பரபரப பில்லாமல் .. எழுந்தாள் மைதிலி ...கணவனுக்கும் காபி கலந்து வெளியே இயற்கையை ரசித்தவாறு பருகிக் கொண்டு இருந்தார்கள். வசந்தத்தின் முடிவும் கோடையின் ஆரம்பமாகவுள்ள உள்ள காலம் . கண்ணாடி ஜன்னலால் பார்க்கும்போது அழகழகாய் றோஜா க்கள் பூத்திருந்தன . கணவன் மாதவன் மாலைநேரங்களில் கவனித்து வளர்த்த பூங்கன்றுகள். வெளிநாடுவந்து இருபத்தைந்துவருடங்கள் ...மேனன் ஐந்து வயதும் மிதுனன் மூன்று வயதுமாக இருந்தார்கள் , புலம் பெயர்ந்து கனடாவுக்கு வந்த போது ... ஆரம்பம் மிகவும் கஷ்டமாக தான் இருந்தது ...சிறுவர் பள்ளி கல்லூரி என்று என்று படிப்பித்து ஆளாக்கி விடடார்கள். தற்போது மூத்தவருக்கு முப்பதுவயது ...நின்று ஒருகேள்விக்கு பதில் பெறமுடியாது . வயது வந்துவிட்ட்து .கலியாணம் பற்றி ..பேச்சு வந்தது . தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார். தாமாக விரும்பி இருந்தால் செய்து வைப்பதற்கும் பெற்றவர் தயார். ஆ னால் அவரோ ஒரு முடிவும் சொல்வதாயில்லை . ஆனால் கணவரோ அவர்கள் வீட்டை விட்டு போக எண்ணம் வரும் போது போகட்டும் நாமாக அனுப்புவதுபோல் ஆகிவிடாதா? ...இல்லை அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பது மனைவியின் வாதம். விடுமுறையில் இருவரும் வாக்குவாதப்படுவதே வேலையாகி விட்ட்து. தற்கால இளையோருடைய மன நிலையை எப்படி புரிந்துகொள்ள லாம் ? சில இளையோர் தாமாகவே துணையை தேடி ... பள்ளிக் கடன் கட்டி ...சேமித்து ஒரு இல்லிடத்தை தேட விழைகின்றனர் ..சிலர் அப்படித் தேடி வாடகைக்கு விட்டு பின் தங்களுக்கு தேவை வரும்போது ..பயன் படுத்துகின்றனர் . சிலர் காதலித்துக் கொண்டே நாட்களைக் கடத்துகின்றனர் . திருமணம் செய்ய காசு சேமிக்கிறார்களாம். சிலர் விரைவில் ஏன் இல்லற பந்தத்தை அவசரப்பட்டுக் தேடிக் கொள்வான் இன்னமும் காலம் இருக்கிறது என வாழ்கிறார்கள். சடங்கு சம்பிரதாயம் என்பன எல்லாம் அர்த்தமற்ற தாகி போய் கொண்டே இருக்கிறது அவர்களுக்கு . திருமணம் ஆகினாலும் குழந்தை தேவை இல்லை என்ற மனப்பாங்கும் இருக்கிறது .. மிகவும் வசதியான வீட்டுப்பெண் மூன்று பெண்களில் மூத்தவர் .. காதலித்தார் ..பையன் இந்து, பெண் கிறிஸ்டியன் சமய துறவியின் முன்னிலையில் நிச்சயாத்தம் நடந்தது . மோதிரம் மாற்றிக் கொண்டார்கள் . அடுத்த வருடம் தாலிகட்டிக் கலியாணம் என்ற நிலையில் ..பெண்ணுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம். சிங்க பூருக்கு வா நகை வாங்க ..என்றார் தந்தை . பையனும் இந்துமதப்படி தாலிகட்டிடலாம் என்கிறார். ஆனால் மணப்பெண்ணோ எனக்கு மினுங்கும் நகை தேவையில்லை .. ( தாலி உட்பட ) தற்போதும் போடுவதில்லை. இனியும் போடப் போவதில்லை. நாங்களும் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறோம் . மண்டபம் எடுத்து ஆடம்பரம் தேவையில்லை. தருவதை தாருங்கள் ஒரு கொண்டோ ( தொடர்மாடிக் கட்டிடம் ) வில் எங்கள் வாழ்வை ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். உற்றார் உறவினர் சூழ மாலையும் கழுத்துமாய் மகிழ்வாய் நடத்தி வைக்க ஆசைப்படும் பெற்றோர் விருப்பம் என்னாவது ? ... எங்கள் இளையோருடைய வாழ்வு எங்கே போகிறது ...? .உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கலாம் ஒரு பெற்றோராக இப்படியான பிரச்சினைகளை எப்ப டிக் கையாளலாம் ? தற்போதுள்ள அசுர வளர்ச்சியில் ...தொலைபேசி முக்கிய இடத்தி வகிக்கிறது ..வளர்ச்சியிலும் முன்னேறி கெட்டு சீரழிவதிலும் முக்கிய இடம் வகிக்கிறது ...பெற்றோர் பிள்ளைகளின் ... உரையாடல் கூட .. mom what is for dinner ...பிட்டும் ..சிக்கன் கறியும் ...வேண்டுமென்றால் மூடடை பொரி த்து தருகிறேன். .. no mom I am not hungry .. Ill eat ..bread and sausage curry .. or Ill go out for dinner... என்று மெசேஜ் சொல்கிறது..... உறவுகள் மேம்பட பேசுங்கள் ..அல்லது ..தொல்லைபேசியை தூர எறி ந்து விடுங்கள்... எட்டு மாதக் குழந்தைக்கு உணவூட்ட் தொலைபேசியில் பாட்டு வே ண்டி இருக்கிறது. குழந்தையை அமைதிப்படுத்த செல்போன் தேவையாய் இருக்கிறது . கால ஓட்ட்த்தில் .இப்படியே இடைவெளிகள் நீண்டு சென்றால் சந்த திகளின் எதிர் காலம் என்னாகும்...
 29. 10 points
  காரும் கதியாலும்...... (2). தங்கராசு சொல்வதுபோல் கேற்றை வடக்கு பக்கம் போட்டால் இன்றுவரை பலன் தந்து கொண்டிருக்கும் ஒரு பிலாமரம், இரண்டு தென்னைகள், கறிவேப்பிலை மரம் எல்லாம் தறிக்க வேண்டி வரும்.அதுகள் பிள்ளைகள் போல தாத்தா வைத்து விட்டு போன மரங்கள். அதனால் அவருக்கு அது சிறிதும் விருப்பமில்லை. தங்கருக்கும் சோமருக்கும்தான் புடுங்குப்பாடே தவிர தனலட்சுமியோ பிள்ளைகளோ வழமைபோல சோமாரின் வீட்டுக்கு வந்துதான் குளித்து முழுகி தண்ணீரும் எடுத்துக் கொண்டு போறவை.தண்ணீரும் நல்ல உருசியான தண்ணீர். அவர்களின் விட்டு கிணறு பின் வளவிற்குள் தூரத்தில இருக்கு. அது துலாக்கிணறு.பாதுகாப்பு கருதி பிள்ளைகளை அந்தப் பக்கம் விடுகிறதில்லை. சோமற்ரை கிணறு கப்பி போட்டிருக்கு. முன்னுக்கும் ஒரு முழம் உசத்திக் கட்டியிருக்கு.இனி எந்நேரமும் அவர் வளவிற்குள் அங்கும் இங்கும் ஊசாடித் திரிவதால் பிள்ளைகளையும் கண்காணித்துக் கொள்வார். இப்போது ஆடும் குட்டியும் வந்ததில் இருந்து பிள்ளைகள் எந்நேரமும் அதுகளுடன் விளையாட்டுத்தான். சோமரும் தனது c 90 யில் சந்தை, கடை என்றுபோய் சாமான்கள் வாங்கிவந்து தனி சமையல்தான். இப்படியே இரு வருடங்கள் ஓடிட்டுது.அதன்பின் ஆடும் இரண்டுதரம் குட்டி போட்டுட்டுது. ஒருநாள் பின்னேரம் தனலட்சுமி வந்து சோமண்ணை எப்பன் ஆட்டுப்பால் தாறியே. உவன் பெரியதம்பிக்கு வாயெல்லாம் அவிஞ்சு போய்க் கிடக்கு. பிள்ளையால சாப்பிட ஏலாமல் கிடக்கெணை. சோமரும் அதுக்கென்ன பிள்ளை போய் கறந்து கொண்டு போணை என்று சொன்னவர் கொஞ்சம் இரு பிள்ளை அது முரட்டு ஆடாய் கிடக்கு நான் வந்து கறந்து தாறன் என்று சொல்லி, அரை சட்டி பால் கறந்து இந்தா தனம் பிள்ளைகளுக்கும் காச்சிக் குடு என்று குடுத்து விடுகிறார். தனமும் வாங்கிக் கொண்டு போகிறாள். விலகாது கதியால்.....!
 30. 9 points
  ஏராளன், ஈழப்பிரியன் அண்ணை, நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை! கடைசி முயற்சியாக இந்த விடயத்தில் மட்டும் என் பங்களிப்பு. இதன் பின் எதுவும் எழுத இல்லை: 1. மின்காந்த கதிர்வீச்சினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டு. அது ஏற்கனவே நவீன வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பாதிப்பை விட அதிகமா என்றால் இல்லை என்பது தான் பல முறையான வழியில் செய்யப் பட்ட ஆய்வுகள் சொல்லியிருக்கும் பதில். உதாரணமாக டீசல் புகை ஒரு நிரூபிக்கப் பட்ட புற்று நோய்க்காரணி. அந்த டீசல் புகையை ஏற்கனவே சுவாசித்துக் கொண்டு, 5ஜியும் 4 ஜியும் புற்று நோயை இனித் தான் கூட்டப் போகிறது என்று கதை பரப்புவது பயமுறுத்தும் செயல். மேலும் 5ஜியும் 4ஜியும் ஏனைய ரேடியோ அலைகளும் மனிதனின் தோலைத் தாண்டி உள்ளே சென்று டின்.ஏயைத் தாக்கும் சக்தியற்றவை. அதனால் தான் மூளைப் புற்று நோய்க்கும் செல்லிடப் பாவனைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று காட்டியிருக்கிறார்கள். வெறும் செல்களில் பரிசோதனை செய்து விட்டு தரமற்ற சஞ்சிகைகளில் அதை பிரசுரித்து விட்டு ரேடியோ அலைகள் புற்று நோயை உருவாக்கும் என்று கதை பரப்பும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும், நான் அறியேன். 2. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பது தான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் செய்ய வேண்டியது. அறிவியல் தகவல்களை உரிய ஒப்பீடுகளோடு மக்களிடம் சொல்லாமல் fear mongering செய்தால் என்ன நிகழும் என்பதை அழகாக ஒரு 2016 ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் 15000 நபர்களை தேர்வு செய்து அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சைப் பெறுகிறார்கள் என்று துல்லியமாக அளவிட்டார்கள் (modeled exposure) . பின்னர் அந்த நபர்களைப் பேட்டி கண்டு "எவ்வளவு செல் போன் கதிர் வீச்சுக்கு அவர்கள் ஆளாவதாக நினைக்கிறார்கள்" என்று கணக்கிட்டார்கள் (perceived exposure).பின்னர், இதே நபர்களின் சில ஆரோக்கிய அளவீடுகளை (health outcomes) மேற்கொண்டார்கள். ஆய்வு முடிவில், தாம் அதிகமாக செல் போன் கோபுரக் கதிர்வீச்சைப் பெறுவதாக நம்பும் நபர்களிடையே அதிகமாக ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதையும் துல்லியமாக அளவிடப் பட்ட கதிர்வீச்சிற்கும் ஆரோக்கியக் குறைபாட்டிற்கும் தொடர்பில்லாதிருப்பதையும் கண்டறிந்தார்கள். இந்த மனப் பிராந்தியை சரியான ஆய்வு முடிவுகளை மக்களுக்குச் சொல்லாமல் வெறும் பயப் பிராந்தியை மட்டுமே உருவாக்கும் போலி அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இணைப்பு இதோ: https://academic.oup.com/aje/article/186/2/210/3111638 3. 5ஜி யினால் யாழ் நகரம் smart city ஆக நவீன மயப்படுமென நான் நம்பவில்லை. ஆனால், 5ஜியினால் எவ்வளவோ நன்மைகள் கல்வித் துறைக்கும் மருத்துவ சேவைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு. யாழ் பல்கலை உலக மட்டத்தில் தங்கள் வலைபின்னலை அதிகரிக்க இந்த தொழில் நுட்பம் உதவும். எங்கள் மருத்துவர்கள் யாழில் இருந்தே மேற்கு நாடொன்றில் நடக்கும் நவீன மருத்துவ ஆய்வு முயற்சிகளை, கூட்டங்களை ஏன் சத்திர சிகிச்சைகளைக் கூட பார்த்து நவீன திசை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஒரு ஆதாரமில்லாத பயமூட்டும் தகவல்களால் கிடைக்காமல் போகும் என்பது துரதிர்ஷ்டம்! நன்றி.
 31. 9 points
  அன்புள்ள என்ரை செல்லம் அறிவது! நான் நல்ல சுகம். உங்கடை சுகத்துக்கும் கடவுள் அருள் புரிவாராக. நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டனான்.கிடைச்சிருக்குமெண்டு நம்புறன். இப்ப நான் பேர்லினை விட்டு மேற்கு ஜேர்மனியிலை நிக்கிறன். சுவீஸ் இல்லாட்டி கொலண்டுக்கு போனால் நல்லது எண்டு இஞ்சை எங்கடை ஆக்கள் கனபேர் கதைக்கினம்.எனக்கும் என்ன முடிவெடுக்கிறதெண்டு தெரியேல்லை. பாப்பம். உங்கை வீட்டிலை எல்லாரும் சுகமாய் இருக்கினமோ? எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ? பக்கத்து தோட்டக்காரன் சந்திரனோடை கவனம். அவன் என்ன கேட்டாலும் ஒரு பதிலும் சொல்லக்கூடாது. அவன் ஒரு மாதிரியானவன் தெரியும் தானே.கொய்யா கொம்மாவை சுகம் கேட்டதாய் சொல்லவும். தங்கச்சி அதுதான் உங்கடை அன்புத்தங்கச்சியையும் நான் விசாரிச்சதாய் சொல்லவும். வேறை என்னதை எழுத....பிறகு விரிவாய் எழுதுறன். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை அனுப்புறன். இப்படிக்கு அத்தான்
 32. 9 points
  ஆயுதப்போராட்ட காலத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஒரு குறுகிய வட்டத்துள் என்னும் நிற்கின்றது அவற்றைக் கடந்து எம்மால் இன்னும் சிந்திக்க முடியவில்லை. ஒரு விதத்தில் சிந்திக்கவும் முடியாத பலவீனமான இனக் குழுமம்தான் நாம். ஆயுதப்போராட்டத்திற்கு முற்பட்ட எமது சமூகம் ஆரோக்கியமான ஒற்றுமையான சமூகமாக இருந்ததிற்கான எந்த ஒரு வரலாறும் இல்லை. இனம் தேசீயம் என்ற பொது உணர்வற்ற சமூகமாக இருந்தது. கீழ்சாதிப் பிணங்கள் மேல்சாதித் தெருக்களில் எடுத்துப்போவதற்கு எதிராக வன்முறையில் இறங்கிய சமூகம். இதற்காக தனது புத்திஜீவிதத்தை கோட்டிலும் வழக்கிலும் பயன்படுத்திய சமூகம். சாதி மதம் பிரதேசவாதம் புரையோடிப்போன சமூகம். இவற்றைக் கடந்து சிங்கள பேரினவாதம் எம்மை இனமாக பெயரிட்டு அடித்தபோதே அதற்கு எதிர்வினையாற்ற சில இளைஞர்கள் முயன்றார்கள். அந்த இளைஞர்களை இனம்கண்டு பல்வேறு பிரிவுகளாக ஆயுதப்பயிற்சியளித்து வளர்த்து விட்டது இந்திய மத்திய அரசு. ஆயுதப்போராட்டம் தொடர்ந்தது பின்னர் முடிந்தது. அதன் பிறகு ஒரு தசப்பதம் முடிந்த இன்றை நிலையில் மனனாரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதல், யாழில் ஆயுதங்களுக்குப் பதிலாக வாள்கள், கசிப்புக்கு பதிலாக கஞ்சா கிழக்கில் இஸ்லாமியர் இந்துக்கள் முறுகல். சாதி மத பிரதேசவாத பிரச்சனை ஆயுதப்போராட்ட காலத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே என்னும் இருக்கின்றது. இனி ஒரு போதும் சிங்களவர்கள் எம்மை இனமாக அணுகிய தவறை செய்ய மாட்டார்கள். மதமாக பிரதேமாக தேவைப்பட்டால் சாதிவாரியாக அணுகுவார்கள். இன அடிப்படையில் நாம் ஒன்றுபட்டு தேசிய எழுச்சிபெற்று இனவிடுதலைக்கான அரசியல் ஆயுதப்போராட்டத்திற்கான எந்த அவசியமும் இனி ஏற்பட வாய்ப்பில்லை. புலியும் ஏனைய இயங்கங்களும் எமது வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எமது சமூகத்தில் தோன்றி மறைந்தவர்கள் தவிர வேறு சமூகத்தை சேர்ந்த அந்நியர்கள் இல்லை. நேற்றும் இன்றும் நாளையும் பானையில் உள்ளதே அகப்பையில் வரும்.
 33. 9 points
  யாத்திரை :(4). நன்றாக விடிந்து விட்டது. கிளிநொச்சி நகரம் மிகவும் பரபரப்பாக அன்றைய நாளைத் தொடங்கி விட்டது. எல்லோரும் அரக்க பரக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.எங்கள் வண்டியும் "அம்மாச்சி" உணவகத்தின் முன்பாக வந்து நின்றது. அங்கும் ஒரே சனக் கூட்டம். அனைத்து விதமான காலை உணவுகளும் அங்கு கிடைக்கின்றன. அத்தனையும் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கின்றது. நாங்களும் எமக்குத் தேவையானவற்றை வாங்கி சாப்பிட்டோம். எனது பார்வையில் நகரம் முழுவதும் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.வீதிகள் அகலமாக இருக்கின்றன. நிறையக் கடைகள். மாடிகளுடன் கூடிய பெரிய பெரிய கடைகள். சாரதியும் எமது வண்டியை எடுத்து கொண்டு ஓடி பரந்தன், ஆனையிறவு வீதியை பிடிக்காமல் பூநகரி பக்கமாய் செலுத்திக் கொண்டு போகிறார்.நானும் என்ன தம்பி இந்த வீதியால் போகிறீங்கள். ஆனையிறவு பாதையால் போறதில்லையோ என கேட்க, அவரும் இப்ப நாங்கள் இந்த கிளாலி பாதையைத்தான் பாவிப்பது.சுற்று இல்லாமல் விரைவாக சென்று விடலாம் என்று சொன்னார். அந்த வீதியும் நன்றாக இருந்தது. என்ன நிறைய டிப்பர் வாகனங்கள் நிறைய போய் வருகின்றன மிகவும் வேகமாக. நான் முன்பு வரும்போது பார்த்த கிளாலி கடல் வேறு.இப்போது அங்கு பெரிய பாலம்போட்டுபயன்படுத்துகிறார்கள். எனது மனைவியின் கண்கள் கலங்க விம்மல் வெடிக்கிறது. மருமகள் கேட்கிறாள் ஏன் அன்ரி அழுகிறீங்கள் என்று. அவர் அந்த சம்பவத்தை சொல்லிக்கொண்டு வருகிறார். தொடர்ந்து வரும்போது நாவற்குழியடியில் புதிதாய் ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன். யாத்திரை தொடரும்........! சம்பவம்: எனது மனைவியும் இரு பிள்ளைகளும் பிரான்ஸ் வருவதற்காக கொழும்பு வரவேண்டும். அப்போது ஆனையிறவு பாதை அடைப்பு. கிளாலியில் வந்து வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்போது பாலம் இல்லை.சிறிய படகில்தான் பயணம்.தனியாக சிறுவர்களான இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும். சரியான குளிர்.கை கால் எல்லாம் விறைக்குது. நன்றாக இருட்டி விட்டது.ஒரு மாதிரி படகில் ஏறியாகி விட்டது. படகுக்கு உள்ளும் தண்ணீர் வருகுது. நெருக்கமான சனம்.வெளிச்சமும் இல்லை. இருந்தால் செல் வந்து விழும்.பிள்ளைகளை காலடியில் இருத்தி இறுக்கிப் பிடித்து கொண்டாள். பெட்டிகள் எல்லாம் ஈரமாகி விட்டது. நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........!
 34. 9 points
  உள்ள போனவ நிறைய இனிப்புக்களையும் டொபியையும் இன்னும் சில பிஸ்கட்களையும் தந்தார் இனி அந்த மணியை ஆட்டக்கூடாது சரியா. ம்ம் உனக்கு சொக்கா வேணுமென்றால் இங்க வா அப்பச்சியும் நானும் தான் இருக்கிறம். இங்க எங்கட பிள்ளை ஒன்றை தேடி வந்திருக்கிறம் இங்க சரியா ம்ம் வாங்கின அத்தனை இனிப்பு பொருட்களையும் சந்தோஷத்தில வீட்டுக்கு எடுத்து வந்தால். அம்மாவோ உனக்கு ஏது இவ்வளவு பொருட்கள் என கேட்டு காதை திருக அந்த எதிர்வீட்டு ஆச்சியோ ஓடி வந்து நடந்ததை சொல்ல மீண்டும் அம்மா காதை திருகினா. அந்த இனிப்பை வாங்கியற்கு அல்ல அந்த மணியை இனி தட்டுவையா என்று கேட்டு இல்ல இல்ல என்று நானும் கத்த. விடுங்க பிள்ள சின்ன பொடியந்தானே என்ன தெரிய போகிறது என்று அந்த ஆச்சி சொல்ல அம்மா காதிலிருந்து கையை எடுத்தா அன்று ஆரம்பமாகிறாது அம்மாக்களின் நட்பு. நானும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன் அந்த நேரம் எல்லாம் அந்த வீட்டுக்கார ஆச்சியின் கணவரோ இருக்கமாட்டார். இந்த ஆச்சியோ யாரையோ நினைத்து அழுதுகொண்டிருக்கும் நான் வீட்டுக்குள் போகும் போது சேலையால் கண்களை துடைத்து விட்டு ஓடி வா ராசா என்ன சாப்பிட்டயா நானும் சாப்பிட்டாலும் இல்லையென்பேன் ஏதாவது கள்ள தீன் கிடைக்குமே என்ற எண்ணத்தில் உடனே கொதிக்க கொதிக்க பிளேன் டீயும் கடிக்க எதாவது தந்துவிட்டு என்னை தடவிகொண்டிருக்கும் அந்த கைகள் . ஏன் டா நாங்க செத்தா கொள்ளி போடுவையா ? ஓ அடுப்பிலதானே ஓம் போடுவன் சிரித்த கிளவி அடுப்புக்கு இல்லையடா எனக்கும் அவருக்கும். ஏன்ஆச்சி உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? கண்களில் நீர் கரை தேடி ஓடுவதை போல நிலத்தில் விழ ஆரம்பக்கிறது அழாதீங்க அழாதீங்க என்றேன் நான். அவவோ என்ற பிள்ளையை பிடிச்சிட்டு போயிட்டாங்கடா பொலிஸ்காரங்க அவனைத் தேடித்தான் இந்த ஊருக்கு வந்தன் ரெண்டு பெண் வேற நாட்டுக்கு போயிட்டாங்க எந்த நாட்டில் இருக்கிறாங்கள் எங்கு இருக்கிறாங்கள் என்று தெரியல. நானும் என்ற கடைசி மகனை தேடி தேடி ஊர் ஊராக திரியுறோம் இன்னும் அவன் கிடைக்கல என்று அழுது முடித்தார் . அந்த படலை மணி அவனுக்குத்தான் கட்டியது வெளியே போகும் அப்பச்சி அவனை கூட்டிக்கொண்டு வரமாட்டாரா? என்ற ஏக்கத்தில் அந்த மணியோசை காதில் கேட்க காத்திருப்பேன் என்றார் அன்றிலிருந்து அந்த மணியை நான் தட்டுவதும் கிடையாது யாரையும் தட்ட விட்டதும் கிடையாது . கவலைப்படாதீங்க ஆச்சி நான் இருக்கன், எங்க அம்மா இருக்காவு, அப்பா இருக்கிறார், என்ற அக்கா இருக்காவு இனி நீங்கள் எங்கவும் போக வேண்டாம் இந்த இந்த ஊரில் இருங்க எங்களோட இருங்கள் நான் இருக்கிறன் சரியா அவர் கண்ணை துடைத்த என் கைகளை கொஞ்சி விடுகிறார் அப்பச்சியும் வருகிறார். என்ன அப்பச்சி அண்ணனை தேடுன நீங்களோ? ஓமடா உன்னைப்பத்தித்தான் மனிசி சொல்லிச்சி இண்டைக்குத்தான் பார்க்க முடிஞ்சிது. என்ற அவர் சொக்கை திருகிவிட்டு உள்ளே சென்றார் உள்ளே சென்ற அவர் மனிசியிடம் காதில் புறு புறுப்பது எனக்கும் கேட்க மனிசியோ தேம்பி தேம்பி அழுவது எனக்கு சஞ்சலத்தை உண்டாக்க நாளை வருகிறேன் என நான் படலைக்கு கீழாக புகுந்து வெளியே வந்து விட்டேன் . இப்படி நாள் தோறும் இருவரும் அடிக்கடி வீட்டை பூட்டிக்கொண்டுமனுக்கள் கொடுப்பது போட்டோவை காண்பித்தும் கேட்பதும் அவர்கள் நாளாந்த நடவடிக்கை ஆகிவிட்டது காலம் பதில் சொல்ல மறுத்தது !!!! இப்படி நாட்களும் வருடங்களும் கிழித்த கலண்டர்களும் வருடங்களை கணக்கிட்டது. இப்போ 2018 எனக்கு வயது 18 இருவரும் உள்ளே தினம் தினம் செத்து இருக்கிறார்கள் அவனை தேடி. கொடுக்காத கடிதங்கள் அல்ல பார்க்காத இடங்கள் இல்லை ஆனால் கொண்டு போனவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று. மனிசியும் என்னை அடிக்கடி கூப்பிட்டு என்னை மறந்திராதடா இல்லை ஆச்சி நான் மறக்க மாட்டன் என சொன்ன எனக்கு அடுத்த நாள் ஆச்சி படுக்கையிலே இறந்து போன செய்தி கேட்டு யாருக்குமே இந்த நிலை வரக்கூடாது இறைவா என இல்லாத கடவுளை வேண்டியவன் போல அந்த ஆச்சி சொன்னது போலவே அவருக்கு கொள்ளி வைக்க என்னைத்தான் கூப்பிட்டார்கள். அந்த அப்பச்சிக்கும் எங்கள்குடும்பத்துக்கும் இந்த செய்தியை தாங்க சக்தியில்லாமல் அங்கே கிடந்தோம் அழுதழுது. ஒருவரை கொன்று விட்டால் நிம்மதியாக வாழ்ந்திடலாம் நினைப்போடு ஆனால் ஒருவரை கைதாக்கி கொண்டு போனவருக்கு என்ன நடந்திருக்கும்! ஏது நடந்திருக்கும் ! என்று வாழ்வது யாருக்கும் வரக்கூடாது என்ற நினைவுகள் அந்த சிமிழி விளக்கின் ஒளியில் அணைந்த நினைவுகள் அவை. நாட்கள் கழிந்தன அப்பச்சியின் பெண் பிள்ளைகள் மட்டும் கன இடங்கள் தேடி கண்டு பிடித்து பேர பிள்ளைகளுடன் வரவே அப்பச்சியும் அளவிலா சந்தோஷத்தில் மகிழ்கிறார். ஒரு துன்பம் ஒரு இன்பம் இது வாழ்வியலின் பக்கம். அப்பச்சியும் தேடி கொடுத்த அனைவரிடமும் அந்த வீட்டு முகவரியை மட்டும் என்னிடம் தந்து விட்டும் கடிதங்களோ யாரும் தேடிக்கீடி வந்தாலோ என்னை தொடர்பு கொள்ளு மகன். என்று சொல்லி கொள்ளி வைத்த கதையை மகள்களிடன் சொல்லி விட்டு அந்த நினைவுகளிலிருந்து நாடு விட்டு கடந்து சென்றுவிட்டார். நானோ அந்த படலை மணி சத்தம் கேட்காதோ ஆச்சியின் ஆத்தாமாவும் சாந்தி பெறாத என்ற நினைப்பில் தினம் தினம் படலையை நோக்கியவாறு பயணிக்கிறேன் . யாவும் கற்பனை என்று சொல்ல முடியல படங்கள் இணையத்தில் எடுத்தவை
 35. 9 points
  1990ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப்போட்டியிலும் ஆர்ஜென்ரினா தான் விளையாடிய குழுவில் நடந்த முதலாவது போட்டியில் ஆபிரிக்கநாடான கமரூனுடன் தோற்று பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது . அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலர் ஆர்ஜென்ரினாவுக்குதான் ஆதரவு. 1986ல் மேற்கு ஜேர்மனியை வென்று உலககிண்ணத்தினை வென்றது ஆர்ஜென்ரினா. ஜே.ஆர் அரசுக்கு இராணுவ தளபாடங்களை அக்காலத்தில் மேற்கு ஜேர்மனி வழங்கிவந்ததினால் 1986ல் இருந்து பலர் ஜேர்மனியை வெற்ற ஆர்ஜென்ரினாவுக்கு ஆதரவு. மரடோனா பலரது விருப்பமான விளையாட்டுவீரர். தற்போதைய உலகக்கிண்ணத்தில் 8 குழுவாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றில் 4 அணியாக மொத்தம் 32 அணிகள். ஒவ்வொரு குழுக்களில் இருந்து முதல் இரண்டு அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும். அதாவது 8*2 =16 அணிகள் தெரிவாகும். 1990ம் ஆண்டில் 6 குழுக்கள். ஒவ்வொன்றிலும் 4 அணிகள். மொத்தம் 24 அணிகள் . குழுக்களில் இருந்து முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும் (மொத்தம் 6*2 =12), 3ம் இடத்தினைப் பெறும் (புள்ளிகள் ,கோல்கள் அடிப்படையில்) சிறந்த 4 அணிகளும் மொத்தமாக 16 அணிகள் 2ம் சுற்றுக்கு செல்லும். 1990 ஆண்டில் ஆர்ஜென்ரினா, பிறேசில், இத்தாலி, மேற்கு ஜேர்மனி ஆகியவற்றுள் ஒன்றே கிண்ணத்தினைப் பெறும் எனப்பலர் எதிர்ப்பார்த்தார்கள். இதன்படி போட்டிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டன. அதாவது இவ்வணிகள் தங்கள் பங்கேற்கும் குழுவில் முதல் இடம்பெற்று, தொடர்ந்து வெற்றி பெற்றால் , அரை இறுதியில் மேற்கு ஜேர்மனியும், ஆர்ஜென்ரினாவும், மற்றைய அரை இறுதியில் பிரேசிலும் இத்தாலியும் விளையாடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இரண்டு மூன்று தினங்கள் ரசிகர்கள் தொலைக்காட்சியில் உலகக்கிண்ணத்தினைப் பார்த்தார்கள். பிறகு 2ம் ஈழப்போர் ஆரம்பிக்க, சுன்னாகம் மின்சாரநிலையத்திற்கு வானில் இருந்து குண்டு போட்டு யாழ்ப்பாணத்து மின்சாரத்தினை தடைசெய்தது பிரேமதாசா அரசு. மக்கள் வானொலிச் செய்திகளில் மட்டும் போட்டி முடிவுகளை அறிந்து கொண்டார்கள். (அக்காலத்தில் மயிலிட்டி போன்ற பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் காணிகள் சில இப்பொழுதுதான் விடுவிக்கப்பட்டிருக்கிறது). கமரூனுடன் தோற்ற ஆர்ஜென்ரினா, உருமேனியாவுடன் நடந்த போட்டி வெற்றி தோல்வியுடன் முடிய, இரஸ்சியாவினை வென்று மூன்றாம் இடத்தினை ப் பெற்றது. இதனால் 2ம் சுற்றில் பலம் வாய்ந்த பிரேசிலுடன் மோதும் வாய்ப்பினைப் பெற்றது. அப்போட்டியில் ஆர்ஜென்ரினா வெற்றி பெற்றது. யூகோசிலாவாக்கியாவை காலிறுதியில் வென்று, அரையிறுதியில் இத்தாலியையும் வெற்று, இறுதிப்போட்டியில் மேற்கு ஜேர்மனியுடன் மோதியது. கமரூனுடன் நடந்தபோட்டியில் தோற்றதினால் முதல் சுற்றிலே தோற்கடிக்கப்படும் என்று எதிர்ப்பார்த்த ஆர்ஜென்றினா இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் மேற்கு ஜேர்மனி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. நடுவரின் தவறான தீர்ப்பினால் கிடைத்த பனால்டியினால்தான் மேற்கு ஜேர்மனி வெற்றதாக அப்போதைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இம்முறையும் அடுத்த போட்டியில் நையிரியாவை வென்றால், சிலவேளை ஆர்ஜென்ரினா 2ம் இடத்தினைப் பிடிக்கலாம். குழு Cயில் பிரான்ஸ் பெரும்பாலும் முதலாம் இடத்தினைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறது. 2ம்சுற்றில் பிரான்சும், ஆர்ஜென்ரினாவும் மோதும் சந்தர்ப்பம் உருவாகலாம். 1990ம் ஆண்டில் நடந்தது போல நடக்கலாம்.
 36. 9 points
  பிரிவுகள் தரும் சுமை. 01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது. வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது. படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன். இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்லை. பிள்ளைகளின் நினைவுகளிலேயே அறுபடும் உறக்கத்தை மீட்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் உதவுவதில்லை. காரணம் சொல்லத் தெரியாது கணங்கள் ஒவ்வொன்றையும் கண்ணீரால் கடக்கிறேன். சந்திக்கும் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தைரியம் இல்லாமல் கண்ணீராலேயே அவர்கள் முன்னும் தொலைகிறேன். எங்களுக்கு நாடுமில்லை வீடுமில்லை...பலதடவைகள் சொல்லிவிட்டாள். சொந்தநாடில்லாத துயரத்தை அவள் இப்போது அதிகம் உணர்கிறாள் என்பதை அவள் சொல்லும் கதைகளில் இருந்து புரிகிறேன். சொந்த நிலமில்லாதவர்களின் பிள்ளைகள் என்றோ ஒருநாள் தன் வேர்களைத் தேடும் என்பதை என் குழந்தையின் ஏக்கங்களிலிருந்து கற்றுக் கொள்கிறேன். 19வருடம் அவள் அருகாமை இல்லாத நாட்கள் மிகவும் அரிதானவை. 2 அல்லது 3நாட்கள் சென்று வரும் பாடசாலை பயணங்கள தவிர அவள் என்னைப்பிரிந்து தூரம் போனதில்லை. அவர்கள் வரும் நாள்வரையும் அவர்களது படுக்கையில் உறங்கி அவர்கள் அறையில் என்னைத் தொலைப்பேன். 02.10.2017 அவளும் நானும் அவளது தோழிகள் இருவரும் அவளது பல்கலைக்கழக தங்குவிடுதிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். எண்ணங்கள் எங்கே போகிறது என்பது தெரியாமல் ஏதேதோ நினைவுகள். எனது காரும் 61ம் இலக்க நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறேன். அவள் அடுத்துவரும் தனிமையை புதிய இடம் புதிய மனிதர்கள் எல்லோரையும் சமாளித்து தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ளப் போகிறாள் என்பதே என் அந்தரமாக இருந்தது. என் குழந்தை என் முன்னால் பெரிய மனிசியாக தனது அலுவல்களை ஓடியோடிச் செய்து கொண்டிருந்தாள். அவள் போல நூற்றுக்கணக்கான மாணவமாணவியர் அந்தப் பகுதியெங்கும் தங்கள் பொருட்களோடும் உறவினர்களோடும் திரிந்தார்கள். அம்மா,அப்பா,சகோதரர்கள்,பேரன்,பேர்த்தி என ஆளாளுக்கு அவர்களது பொருட்களைக் காவிவந்து கொண்டிருந்தார்கள். என் குழந்தைக்கு அனைத்து உறவாயும் நானொருத்தி மட்டுமே. அவள் தனக்குள் அழுதிருப்பாள். உறவுகளே இல்லாது நாங்கள் தனித்திருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பாள். 02.10.2017 தொடக்கம் 04.10.2017 வரையும் அவளது பல்கலைக்கழக தங்குமிட விடுதிக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். பொருட்கள் கொள்வனவு செய்தல் , பதிவுகள் என ஓடியது. 05.10.2017 காலை எட்டு மணிக்கு அவளது மீதிப் பொருட்களையும் காரில் ஏற்றினோம். இனிமேல் இந்த வீட்டுக்கு வரமாட்டேன்.... தான்உலவிய ஒவ்வொரு இடமாய் நின்று நின்று பயணம் சொன்னாள். அவளுக்கு 6வயதில் இந்த வீட்டுக்கு குடிவந்தோம். துயரங்களைத்தான் அதிகம் சுமந்த வீடு. 2012இல் இந்த வீட்டை விட்டு எங்காவது போவோம் எனக் கேட்ட போது ஓமென்றாள். வீட்டைவிட்டு வெளியேற இருந்த தடைகளை பிள்ளைகள் இருவரையும் வைத்துக் கொண்டு அலைய துணிவும் இருக்கவில்லை. அதற்கான வழிகளும் கடினமாக இருந்தது. அவளும்பல்கலைக்கழகம் போகும் வரை சூனியம் சூழ்ந்த இந்த வீட்டிலே இருப்போமென என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். உளவள ஆலோசகர்களும் மருத்துவர்களும் இந்த வீட்டைவிட்டு வெளியே போ தூரம் போ... புதிய இடம் புதிய வாழ்வு உன்னையும் பிள்ளைகளையும் மீட்கும் என சொன்னவர்களின் வார்த்தைகளை செயற்படுத்தக் கூடிய வலு என்னிடம் இல்லாதிருந்தது. அவளும் ஒரு கட்டத்தில் இந்த வீட்டில இருக்கேலாது வெளியேறுவம் என அழுத காலமும் ஒன்று வந்தது. அது அவளுக்கான பள்ளிப்படிப்பு இறுதிக்கால இரண்டு வருடங்களாக இருந்தது. பிள்ளையின்ரை படிப்பு முடிஞ்சு நீங்க யூனி போக ஒரேயடியா மாறுவம். அதுவரை பொறம்மா...அவளைச் சமாதானம் செய்தாலும் அவள் இந்த வீட்டில் அமைதியாக இருந்தது அரிது. 000 000 000 காரில் ஏறியவள் தனது பொருட்களை மீண்டும் சரிபார்த்தாள். இன்னும் சில மணித்தியாலங்களில் அவளைத் தனியே விட்டுவிட்டு நான் தனியே திரும்பி வர வேண்டும். குண்டம்மா கவனமா இருங்கோ , வடிவாச் சாப்பிடுங்கோ , நித்திரை கொள்ளுங்கோ, மருந்தை ஒழுங்கா போடுங்கோ,எப்ப கதைக்க வேணுமெண்டாலும் எந்த நேரமெண்டாலும் என்னோடை கதையுங்கோ...., அவள் பெரிய பட்டியலொன்றை சொல்லிக் கொண்டிருந்தாள். பிள்ளைகளே என் இதுவரைகால உலகம். அவர்களும் ஒருநாள் தங்கள் பாதைகள் நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை மறந்த அம்மா நான். கொண்டு வந்த பொருட்களை அவளும் நானும் அவளது அறைக்குக் கொண்டு சென்றோம். இனி சமையல்,படிப்பு,படுக்கை, இருப்பு எல்லாமே அந்த ஒற்றை அறையில் தான். காலம் இப்படியும் ஒரு நாளை என் குழந்தைக்குக் கொடுக்குமென்று நினைத்திருக்காத எனக்கு அது பெரும் ஏமாற்றமே. இன்றிலிருந்து அவள் தனியே இருக்கப் போகிறாள். தனிமையை உணராத மன அமைதியையும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அவளுக்கு காலம் கொடுக்க வேண்டும். எனது பிரார்த்தனைகள் அவளைக் காக்குமென்று நம்புகிறேன். சரி செல்லம் அம்மா வெளிக்கிடப்போறன்...கவனம்...அவள்கட்டிப்பிடித்து காதுக்குள் சொன்னாள். குண்டம்மா சந்தோசமா இருந்தா நான் சந்தோசமா இருப்பேன். அம்மாச் செல்லம் கவனம். என் குழந்தையின் அணைப்பிலிருந்து விடுபட்டு நடக்கிறேன். உடல் நடுங்குகிறது.நெஞ்சுக்குள் ஏதோ வலி. உயிரைப்பிடுங்கிக் கொள்கிறது துயர். வாகனத்தரிப்பிடம் வரையும் வந்தாள். வழியனுப்பிவிட்டு திரும்பி நடக்கிறாள். வாகனம் 61நெடுஞ்சாலைக்கு ஏறுகிறது. கண்ணீர் வழிகிறது. கத்தியழுகிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான் எனது பயணங்கள் அமைகிறது. காரில் ஒலிக்கும் பாடலும் இலத்திரனியல் வழிகாட்டியின் குரலும் தான் என்னோடு கூட வருகிறது. ஒலிக்கும் பாடலைச் சேர்ந்து பாடுவதும் , சில பாடல்களில் கரைந்து அழுவதுமாக அலைகிறேன். கார் போன போக்கில் என் பயணங்கள் தொடர்கிறது. கார் ஓடுகிறது வீதிவழியே. பிள்ளைகளின் நினைவுகளோடு ஓடுகிறது எண்ணம். பிள்ளையை திரும்ப கூட்டிவா என்கிறது உள் மனசு. வந்த தரிப்பிடமொன்றில் காரை நிறுத்துகிறேன். அதிகம் ஆட்களில்லாத அந்தத் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி அருகிருந்த காட்டுவழி கொஞ்சத்தூரம் நடக்கிறேன். பிள்ளைகளே கடைசிவரையென இதுவரை ஓடிய என் கால்களை இந்த நாட்கள் இழுத்துக் கட்டி வைத்துள்ளது. காலம் மாறும் நீயும் மாறவேண்டுமென்கிறார்கள் நண்பர்கள். என்னால் முடியவில்லை. இதுவும்கடந்து போகுமென்று ஆறுதலடையவும் முடியவில்லை. இதுவும் கடந்து போக வேண்டும்.
 37. 9 points
  அங்கு போனவளுக்கு நடந்தது !!!! எல்லாம் தலைகீழாக. இரு ஜெய் டீ போட்டுக்கொண்டு வாரன் என்று சொல்லி அக்கா குசினிக்க டீ போட போன . இந்தா டீ குடி சூடா இருக்கு எனக்கும் அவள் கதையை கேட்க சூடாத்தான் இருக்கு ஏன் அக்கா இவளோ நல்ல ஓர் வேலையில் இருந்தவள் இங்க பார்த்து எவனையாவது கல்யாணம் கட்டி சந்தோஷமாக வாழ்வதை விட்டுட்டு இப்ப பாருங்க வாழ்கையை தொலைத்துவிட்டு வந்து நிற்கிறத்தை ம் என்ன செய்வது ஜெய் சிலநேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் நல்லது போன்றே இருக்கும் ஆனால் அது நடந்து முடிந்த பிறகே கொஞ்சம் யோசித்து இருக்ககூடாதா என்று நினைப்பம் ம்ம் உன்மைதான் அக்கா. அவளின்ற அம்மாவுக்கு வெளுக்கணும் அவங்கப்பா நல்ல வெழுத்திருக்கிறார் ஓ அப்ப நல்ல பூஜை போல அவள் அம்மாவுக்கும் ம்ம் அதுவும் சொன்னாள் தன்னால தன்ற அம்மாவும் அப்பாகிட்ட அடி வேண்டினதா.. லண்டன் போனவள் அவங்கட வீட்டில் தான் எல்லோரும் இருந்திருக்கிறார்கள் பெரும் வரவேற்பெல்லாம் இல்லையாம் ஒரு சொந்தக்காரர் வந்தது போன்ற மரியாதை மட்டும் தானாம் மருகள் என்ற பெயர் கூட இல்லாமல். இவளுக்கு போன புதிதில் லண்டனை மிகப்பெரும் கற்பனை பண்ணிய அவளுக்கு அங்கே கட்டிடங்களும் காலநிலையும் காசின் பெறுமதியும் கலரான வெள்ளைக்காரர்களும் கலராகத நம்ம ஆட்களும் மிகப்பிரமிப்பாக இருந்திருக்கிறார்கள் லண்டனும் ஓர் நாடுதான் கடிகார நேரம் தான் வித்தியாசம். மற்ற மடி ஒன்றும் இல்லையென நாட்கள் செல்ல செல்ல புரிந்து கொண்டாள் அவள். (பண்ணிய கற்பனையில் பாரிய சரிவு அவளுக்கு ) அவர்கள் இவளை மாத்திரம் வீட்டில் விட்டு வேலைக்கு போவார்களாம் இவளும் வீட்டில் சமையல் வேலைகள் எல்லாம் செய்து விட்டு வீட்டில் தனியே இருப்பாளாம் வீட்டு வேலைக்காரி போன்று அந்தநேர துணை அந்த யன்னல் காட்சியும் காற்றும் மட்டுமே அவள் துணையாக இருந்த்து . அவள் கணவன்கூட சில வேளைகளில் நள்ளிரவில் கூட தான் வீட்டுக்கு வருவானாம் கேட்டால் வேலையென்பானாம் வெளியில் கூட போவதில்லையாம் கிழமையில் ஒரு நாள் கூட போவதில்லையாம் மாதத்தில் சிலவேளைகளில் எங்கேயாவது போவது அதுவும் சந்தோஷம் இல்லாமலே யாராவது வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வது எப்போதாவது இப்படி மாதங்கள் கழிந்து விட்டது . அவனிடம் ஓர் கேள்வி கேட்டிருக்கிறாள் தீபன் என்ற தகமைக்கும் ஓர் வேலையை எடுத்தால் நாம் சேர்ந்து உழைத்தால் தனியா ஓர் வீடு வாங்கி செட்டிலாகலாம் தானே அதுக்கு தீபனோ ஒன்றும் தேவையில்லை. நீ வீட்டில் இரு நான் உழைக்கிறேன் தானே என்று சொல்லி இருக்கிறான் அவன் அன்றிலிருந்து இவனுக்கும் அவளுக்கும் விரிசல் ஆரம்பமாகியது . அது நாழுக்கு பெரிதாகி ஓர் இடைவெளியை கருத்து முரண்பாடுகளுடன் கழிந்தது . ஓர் நாள் இவளுக்கு அங்குள்ள காலநிலை மாற லேசான காய்ச்சல் அடிக்க அன்றைய நாள் இவள் சமைக்கவில்லை படுத்த படுக்கையாகவே இருக்க வீட்டிற்கு வந்த அவன் அக்காவோ என்ன வீடு இப்படி அழுக்காக கிடக்கு வீடு எப்படி இருக்க வேண்டும் தெரியாதவளையெல்லாம் வெளிநாட்டுக்கு கூட்டி கொண்டு வந்தால் இப்படித்தான். எல்லாம் இருக்கும் என்று சொன்னது இவள் காதுக்கு வீழ்ந்தது இவளும் நான் மட்டும் தானா இந்த வீட்டில் பெண் இருக்கிறன் நீங்களும் இங்க தானே இருக்கிறியள் நீங்கள் செய்தால் என்ன குறைஞ்சா போய்விடுவியள் என்று இருந்த காய்ச்சல் வலி வேதனையில் சொல்ல அவன் அக்காவோ தீபனிடம் போணை போட்டு இல்லாதது பொல்லாததுகளை சொல்ல வீட்டுக்கு வந்த அவன் இதோ பாரு செல்வி நானும் கொஞ்சநாளா பார்த்துக்கொண்டுதான் வாரன் உன்ற நடவடிக்கை சரியில்லை உனக்கு என்ன பிரச்சினை?? எனக்கு எல்லாம் என்ற சொந்தங்கள்தான் உனக்கு விருப்பம் என்றால் அவங்கள் சொல்லுறத கேட்டு வாழு இல்லையென்றால் நீ போகலாம் என்று மிக சாதரணமாக சொல்லி இருக்கிறான் . அவளோ அவர்கள் உன் சொந்தம் என்றால் நான் யார் தீபன் தாலி கட்டின பெண்டாட்டி ம் உன்மைதான் அதுக்காக என் சொந்தங்களையெல்லாம் விட்டு கொடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறான் அவன் . அவளோ நீங்கள் எல்லாம் இங்கே மெசினாக வாழ்ந்து கொண்டிருக்கிறயள் என்று சொல்வதை விட நடித்துக்கொண்டிருக்கிறியள் வெளிநாடு என்ற திரையில் இருக்கும் விம்பங்கள் நீங்கள் இங்கு கட்டிடங்களும் காட்சிகளும் மட்டுமே அழகாய் இருக்கிறது மனிதர்கள் அல்ல எனக்கு நல்ல வேலை எடுத்து இங்கு வாழ முடியும் என் தகமைகளுக்கு . நான் இங்கு இருக்க விரும்பல அப்படி இருந்தால் போட்டோவுக்கும் வாழ்க்கைக்கும் நடிக்க வேண்டியதாக இருக்கும் தீபன் என்னை நீங்கள் நாட்டுக்கு அனுப்புங்கள் அங்கு எனக்கு தொழில் இருக்கிறது நான் நல்லபடியாக வாழ்வேன் என்று சொல்லி விட்டு பெட்டி படுக்கையோடு வந்துவிட்டாள் செல்வி என்று சொல்லி முடித்த லதா அக்கா. என்ன மாதிரி ஜெய் நீ அவளை லவ் பண்ணுன நீ தானே அவளை கல்யாணம் கட்டுற ஐடியா இருந்தால் சொல்லன் ஆனால் நீ விரும்புனதும் அவளுக்கு தெரியும் ஓ அப்படியா தெரிந்து என்ன செய்யுறது. எனக்கு புறப்போஸ் பண்ணிருக்கு என்று பொய் சொல்லிவிட்டு அவர் வீட்டை விட்டு செல்கிறேன் ஏதோ ஒன்று மனதை குடைகிறது அவள் திருமணமானவள் என்றும் இரண்டாம் தாரம் என்றும் நாளைக்கு ஊர் சொல்லும் அவச்சொல்லும் குத்தும் குடையும் அவளையும் என்னையும் என்ற காரணத்தால். இருந்தாலும் அடுத்தநாள் அவளைக்காணாத ஆள் போல் அந்த வங்கிக்கு போகிறேன் என்னைக்கண்டதும் கவுண்டர் குளோஸ் என்ற அட்டையை தொங்க விட்டு விட்டு செல்கிறாள் என்னைக்கண்டு……………………………………………… யாவும் கற்பனையில்
 38. 9 points
  பொறுங்கோ ...பொறுங்கோ அண்ணை மார்களே நாங்களும் வருகிறோம் ..... தலைவர் சம்ம்பந்து 2016 இல் வெடித்தீர்வு என்று உதார்விட்ட போதே ,தன்னால் தனது கூட்டுப்படையுடன் வெட்டிக்கிழிக்க முடியுமென்று புறப்பட்டவர் . 2016 முழுக்க முக்கி ஒரு ஆணியும் புடுங்கமுடியாது என்று தெரிந்தபின் ,சொந்தக்கருத்து பக்கத்து வீட்டானின் கருத்து என்று பல்ட்டியடித்தவர் அப்படியான கருத்தை ஒரு கட்சியின் தலைவர் சம்பந்து விட்டபோதே அதற்க்கான தார்மீக பொறுப்பை ஏற்று மக்களை பிழையாக வழிநடத்தியமையை ஏற்று எதிர்க்கட்சி தலீவர் பதவியை துறந்து கட்சியை விட்டு தனது அரசியல் வாரிசுடன் எஸ்கேப் ஆகியிருக்கவேண்டும் . எப்போது தீர்வு வருது ...தேர்வு வருது என்று மக்களிடம் வாக்கு கொள்ளையடித்த கூத்தமைப்பு எவரது தலையீடும் இன்றி மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்ட எம்ப்டன்ஸ் தலைவர் அது வேற வாய் இது நாற வாய் ஸ்டைலில் கருத்து விட்டாரோ அப்போதே அவரதும் அவர் சார்ந்த கோணல் மாணல்களினதும் அரசியல் பொய்த்து விட்டது என்பதை ஏற்றுகொண்டிருக்கிறார்.அவ்வாறெனின் அவரும் பதவிவிலகியிருக்க வேண்டும் இன்னும் ஒருபடி மேலே போய் கட்சியையே கலைத்துவிடிருக்க வேண்டும். ஆனால் இதுவொரு துரதிர்ஷ்டவசமான விடயம் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன. நாடாளுமன்ற தேர்தலில் கூத்தமைப்பு போட்டியிட்டதே, ஆரம்பத்திலிருந்தே ஒன்றுக்கும் உதவாத கட்சியாக இருந்தாலும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் எங்கள் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய சேவைகள் நிறையவே இருந்தன, அவற்றை ஓரளவுக்கேனும் அரசியல் தீர்வு மூலம் நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்பே. ஆனால் கூத்தமைப்பு அதில் கிஞ்சித்தேனும் அக்கறை கொள்ளாமல், ரணிலுக்கும் மைத்திரிக்கும் ஜிங் ஜக் போடுவதிலும் எதிர்க்கட்சி தலிவர் என்னும் ஒத்த பைசா பெறுமதியற்ற வெற்று விராப்பையும் ,உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தையும் தீர்வையற்ற வாகன இறக்குமதியையும் நிறைவேற்றுவதிலேயே கவனத்தினைச் செலுத்தியிருக்கின்றது. அதுவொரு பாரிய தவறு. இப்போது இங்கே வந்து வாதிடும் வைரவரும் இதனை உரக்க சொல்லியிருக்கவேண்டும் அதனை ஜீவன் அண்ணையும் வழி மொழிந்திருக்கவேண்டும்
 39. 9 points
  வலிகளை சுமந்து வாழ்கிறேன் வாழ்கையில் ஒர் அர்த்ததை தேட தேடிய இடங்கள் எல்லாம் ......... மீண்டும் தேடல் தொடர்கிறது வாழ்க்கை என்ற போ..ராட்டினத்தில் வலம் மட்டும் வருகிறேன் வாசல் இல்லாமல். வருத்தங்கள் சூழ்ந்து வா வா என்கிறது போவதா ? வேண்டாமா? என்று புலம்ப தொடங்கிறது புலன் ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் மனது மட்டும் போகாதே என்கிறது அங்கே ....அது சுட்டு விடும் காடு சுடு காடு
 40. 8 points
  ரதி, தயவுசெய்து நான் “நரம்பில்லாத நாக்கு” என்று எழுத முன்னர் இந்த திரியில் வைத்தியர் மூர்தி பற்றி என்ன எழுதபட்டது என்பதை மீளவும் வாசியுங்கள். நான் உண்மையிலே வக்கீலா அல்லது டுபாகூரா என்பதல்ல முக்கியம். என் மனதுக்கு அநியாயம் என்று பட்டதை சுட்டிக் காட்டினேன். அதைவிட ஒரு அப்பழுக்கற்ற மனிதர், நான் அவதானித்து உண்மையிலேயே சேவை மனப்பாங்குடைய, இனப்பற்றாளர் என நான் நினைக்கும் ஒருவரை பற்றி, தன்னை அவர் தற்காத்து பேச முடியாத நிலையில், எழுந்தமானமாக, எல்லாரும் இப்படித்தான், சுனாமி நேரம் நடந்தது தெரியாதோ, என்று பூடகமாக விடுப்பு கதைப்பதை மட்டுமே நான் தட்டிக் கேட்டேன். நான் இந்த திரியில் 2 தடவைதான் எழுதியுள்ளேன். இரெண்டு தடவையும் வைத்தியர் மூர்த்தி மீதான சேறடிப்பை கேள்வி கேட்டது மட்டுமே நான் செய்தது. சுமோ நான் எழுதியதால்தான் எழுதாமல் விட்டா என அவவே சொல்லவில்லை. இதே திரியில் நான் எழுதியதற்கு பதிலும் எழுதி அதன் பின்னரும் பலநாட்கள் அவ எழுதியிருக்கிறா. இடையில நீங்கள் குறுக்க விழுந்து ஏன் ஒப்பாரி வைக்கிறியள் எண்டதுதான் எனக்கு விளங்கேல்ல. கோசானிடம் இதை நீங்கள் எதிர்பார்க்காமல் இருக்கலாம், ஆனால் அது கோசான் இப்படி பட்டவர் அல்லது இன்ன குறூப் ஆள் என்று என்னை பற்றி தாமாகவவே கற்பனை செய்து கொண்டவர்களின் பார்வைக் கோளாறு. புலிகளின் தலைமையை (மட்டுமே) நான் விமர்சித்துள்ளேன். மற்றயது போருக்கு பின் வெளிநாட்டில் புலிவேசம் கட்டுவோரையும் விமர்சிப்பேன். அதில் மாற்றமில்லை. ஆனால் அடுத்த நிலைத் தலைவர்கள், போரளிகளையோ அல்லது பாலாசிங்கம் மூர்தி போன்றோரையோ நான் விமர்சிப்பதில்லை. கூடவே ஒரு ஆளை எனக்குப் பிடிக்கும் என்பதற்க்காக பச்சை இனத் துரோகம் செய்தவர்களின் நிலைப்பாட்டை சமயோசிதம் என்றோ, அல்லது பிரதேசவாதத்தின் எதிர்வினை என்றோ சப்பைக் கட்டும் ஆளும் இல்லை நான்.
 41. 8 points
  மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ் பொலன்னறுவைக்கும், மட்டக்கிளப்புக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது புனாணை கிராமம். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பகுதியில் இரண்டு தளங்களுடன் அமைந்து வருகிறது ஷரியா பல்கலைக்கழகம். இது கிழக்கு, சர்சைக்குரிய அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் கனவு முயற்சி. உயர்கல்வி அமைச்சு அனுமதி இன்றி நாம் எவ்வாறு ஷரியா சட்டம் கற்க்கை நெறிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியும் என்கிறார் ஹிஸ்புல்லா. ஆனாலும், அவ்வாறான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறது உயர்கல்வி அமைச்சு. ஆயினும் அந்த அமைச்சுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்ப படிவத்தில் ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் உள்ளடக்கிய 5 வகை கற்க்கை நெறிகளை கொண்டுள்ளதாக தெரிகிறது. சவுதி அரேபியாவில் இருந்து வந்த பெரும் நிதியுடன், அரசு சார்பில்லாத தனியார் நிறுவனம் ஒன்று ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது குறித்த கரிசனைகள் கல்வியாளர்கள் மத்தியில் உண்டாகி உள்ளது. இத்தகைய தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பேராசிரியர் சாண ஜெயசுமண, சட்ட பீடத்தின் கீழ் சட்டம் படிப்பதாக அனுமதியை வாங்கி, அதன் கீழ், ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது தான் திட்டம் என்கிறார். இது குறித்து முழு விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்கிறார். Batticaloa Campus (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஹிஸ்புல்லா. அவர் கிழக்கு கவர்னர் ஆனதும், தனது மகனை தலைவர் ஆக்கி உள்ளார். ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் படிப்பிக்கப் படும் என்பது பச்சை பொய் என மறுக்கிறார் ஹிஸ்புல்லா. உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இன்றி எவ்வாறு அதை செய்ய முடியும் என்கிறார் அவர். உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இந்த தனியார் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கின்றது. முன்னாள் உயர் கலவி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, தனது காலத்தில் அவ்வாறான அனுமதி இன்னும் வழங்கப் படவில்லை என்கிறார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் மாயாதுன்னா, IT சிஸ்டம் குறித்த மதிப்பீடுகளுக்கே விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார். ஆயினும், குறித்த பல்கலைக்கழகம் ஏப்ரல் 30ம் திகதி, Information Technology, Management, Agriculture and Education ஆகிய துறைகளில் கற்க்கை நெறிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் முகாமையாளர் முகம்மது தாஹிர், இன்னும் ஒருவருட காலத்தில் சகல கட்டுமான வேலைகளையும் முடிந்து விடும் என்கிறார். தாஹிர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல்கலைக்கழகத்துக்கு வந்து பரிசீலனை செய்து சென்றதாக சொல்கிறார். ஆயினும் இதனை மறுக்கிறார் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி செயலாளர் விஜேசிங்க. நாம் நாட்டின் அரச பல்கலைக்கழகங்களையே ஒழுங்கு படுத்துகிறோம். இது தனியார் நிறுவனம். ஆகவே இது உயர்கல்வி அமைச்சின் கீழே வரும் என்கிறார் அவர். நிறுவனத்தின் முன்பகுதி, மொகலாய, மேற்கு ஆசிய (சவூதி) கட்டிட கலைகளை பிரதிபலிப்பதாக பிரமாண்டமாக உள்ளது. வகுப்பறைகள் மிக நவீன வசதிகள் கொண்டதாக உள்ளன. இந்த காணி உள்ள நிலம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. இங்கே நீச்சல் தடாகமும், கால்பந்து மைதானமும், பல நவீன விளையாட்டு வசதிகளும் கொண்டதாக இருக்கும் என நிறுவனத்தின் youtube பதிவு சொல்கிறது. இதற்க்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி ஹிஸ்புல்லாவிடம் முன்வைக்கப் பட்டது. சவீதியில் உள்ள ‘Ali Al-Juffali Trust’ இடம் இருந்து 24 மில்லியன் டாலர் கடன் பெறப்பட்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கின் ஊடாக வந்தது என்கிறார் அவர். மலேசியாவில் உள்ள Universiti Teknologi Petronas (UTP) என்கிற தனியார் பல்கலைக்கழகத்தின் மாதிரியை கொண்டே இந்த பல்கலைக்கழகத்தினை அமைகின்றார் அவர். இதற்காக 2016 -17 காலப்பகுதியில் அங்கே சென்று இருக்கிறார் ஹிஸ்புல்லா. சோலார் ஓடுகளுடன் கூடிய கூரைகளுடன் கட்ட பட்டுக்கொண்டிருந்த இந்த பல்கலைக்கழகத்தின் லைப்ரரி வேலைகள், கடந்த வார குண்டு வெடிப்புகளுக்கு பின் நிறுத்தப் பட்டுள்ளன. யாழுக்காக எனது மொழிபெயர்ப்பு. sundaytimes.lk
 42. 8 points
  “வந்துட்டான்யா வந்துட்டான் எழுதியே கொல்லப் போறான் “ என்ற மைன்ட் வொய்ஸ் நல்லாவே கேட்குது. சீ சீ அப்படி செய்வேனா என்ன? இது ஒரு உண்மைக்கதை.சின்னக்கதை. ஆனாலும் பிரபல்யமான கதை. இது சுவியின் ஊரவர் என்றபடியால் அவரும் தெரிந்ததை விபரமாக எழுதலாம். இதை அறவே மறந்தே போனேன்.இருந்தாலும் சைக்கிள்கடை என்று சிறி கேள்வி எழுப்பத் தான் ஞாபகத்துக்கு வந்தது. யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது. ஒரு தடவை புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே சைக்கிள் முன்வளையம் வழைந்துவிட்டது.பாடசாலை முடிவதற்கிடையில் திருத்தி கொடுக்க வேண்டும்.யாரிடமும் திருத்த பணம் இல்லை.மதியநேரம் யாரிமாவது கடன் வாங்கலாம் என பொறுத்திருந்தோம்.சைக்கிளை தூக்கிவந்து மைதான வைரவகோவிலுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு இடைவேளை விட்டதும் ஆளாளுக்கு அலைந்து திரிந்தோம்.ஐஸ்பழத்துக்கும் கடலைக்கும் காசு சேர்ந்ததே தவிர போதுமான காசு சேரவில்லை. நீராவியடி கோவிலுக்கு பக்கத்திலுள்ளவர் எனது வகுப்பு.அவர் மதியம் வீடு போய் சாப்பிட்டு வர அவரிடம் யாரிடமாவது சொல்லி இந்த சைக்கிளைத் திருத்தி தா நாளை காசு தருகிறோம் என்று அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டோம். சரி இந்து மகளீர் சந்தியில் எனது அண்ணன் சைக்கிள்கடை வைத்திருக்கிறார் பெயர் அப்பு நான் சொன்னதாக சொல்லுங்கோ என்றார்.அந்த நேரம் இந்த ராங்ஸ் நன்றி யார் தான் சொல்லுவது.தூக்கிக் கொண்டு அங்கே போய இஞ்சை அப்பு அண்ணை என்றதும் அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில வருவார் என்று நின்றவர் சொன்னார். கொஞ்சநேரத்தில் அவரும் வந்து இறங்கினார்.உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கினம் என்று நின்றவர் சொன்னார்.அப்பு அண்ணையும் வளைந்த ரிம்மையும் எங்களையும் பார்த்திட்டு 2-3 ரூபா வரப் போகுது என்ற சந்தோசத்தில உள்ளுக்கு கொண்டு வாங்கோ என்றார்.இப்போ ஆளையாள் பார்த்து முழுசாட்டம்.காசு இப்ப இல்லை என்று சொல்லித் தொலைக்க வேண்டுமே. அப்புஅண்ணை எங்களை விட 6-7 வயது மூத்தவராக இருப்பார்.நான் தான் மெல்ல மெல்ல மசிந்து மசிந்து அண்ணை இப்ப காசில்லை உங்கடை தம்பி முத்துகுமாரு தான் இஞ்சை அனுப்பினவர்.கோபப்படப் போகிறார் என்று எதிர்பார்த்தா பெலத்து சிரித்துக் கொண்டு அதுதானே அங்கையிருக்கிற கடையெல்லாம் விட்டுட்டு இஞ்சை கொண்டாந்திருக்கிறாங்களே என்று பார்த்தேன். சரி சரி கொண்டு வாங்கோ என்று திருத்தித் தந்தார்.(கூலி சரியாக நினைவில்லை ஓரிரு ரூபா தான்) அடுத்த நாளே அவருக்கு காசைக் கொடுத்துவிட்டோம்.அங்கேயே சைக்கிள் வாடகைக்கு விடுவதாக சொன்னார்.பிற்பாடு தேவையான நேரங்களில் அவரிடமே வாடகைக்கு சைக்கிள் எடுப்போம்.இதுவே நாளடைவில் அங்கேயே ஒரு எக்கவுணட்டும் திறந்தாச்சு. நாள் போகப் போக அண்ணையாக இருந்த அப்பு ஒருமையில் கதைக்கப் பழகிக் கொண்டேன்.எனது 90 வீதம் நண்பர்கள் என்னைவிட 2 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர்.எத்தனை வயது கூடு என்றாலும் எல்லோருடனும் ஒருமையிலேயே கதைக்கப் பழகிக் கொண்டேன்.இதை எனது தகப்பனார் பல முறை எச்சரித்திருந்தார். ஒருநாள் பாடசாலை போன போது சிஐடி வந்து நாலு பேரை பிடித்துக் கொண்டு போட்டாங்கள்.அதில ஒராள் லேடிஸ் கொலிச் சந்தியில் சைக்கிள்கடை வைத்திருக்கிறார்.சைக்கிள்கடைக்குள் கைக்குண்டுகள் இருந்தாம் என்று சொன்னார்கள்.பின்னர் தான் தெரிந்தது யாழ்ப்பாணமே இந்த கைதால் அதிர்ந்து போனது. மெதுவாக முத்துக்குமாரிடம் அப்புவாடா என்று கேட்க கண் கலங்கிவிட்டார்.அண்ணை அண்ணை என்று அழைத்த அப்பு அண்ணை இப்போ வெறும் அப்பு என்றே அழைப்பேன்.இப்போது தான் அவரது முழுப்பெயர் அமரசிங்கம் என்று தெரியவந்தது. இவர் வேறு யாருமல்ல மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை இவர்களுடன் பிடிபட்ட அமரசிங்கம் என்ற அப்பு தான். இந்த நால்வரும் 6-7 வருடம் சிறையிருந்தார்கள்.பின்பு எப்படி விடுதலையானார்கள் என்று தெரியவில்லை.70 களின் பின்பகுதியில் கூட்டணி மேடைகளில் பார்த்தா வெள்ளை வேட்டி வெள்ளைச் சேட்டுடன் இவர்களை இருத்தி வைத்திருப்பார்கள்.இவருக்கு மேடைப் பேச்சு அறவே வராது.வண்ணை ஆனந்தன் தான் இலுப்பைப்பழம் பழுத்துவிட்டது.முன் வரிசையில் இருப்பவர்களிடம் இலுப்பைப்பழம் பழுத்தால் என்ன வரும் வெவ்வால் வரும்.வெவ்வால் வரும் போது சும்மா வராது காலில் துவக்கு கொண்டு தான் வரும் என்றால் விசிலடிச் சத்தம் நிற்கவே ஓரிரு நிமிடமாகும். மேடையில் இருக்கிற அமரசிங்கம் என்ற அப்பு என்னோடு வாடா போடா என்று நெருங்கி பழக என்னோடு சேர்ந்தவர் சேராதவர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.அடுத்தடுத்த கூட்டம் எங்கே என்று கேட்டு என்னைக் கூட்டிக் கொண்டு போவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நால்வரும் மேடைக்கு வந்ததும் இரண்டு மூன்று பேர் ஊசியுடன் நிற்பார்கள்.பின்னால் இரத்ததிலகம் இடுவதற்கு வரிசையில் நிற்பார்கள்.எனக்கு ஒரே சிரிப்பு.என்ன மாதிரி இருந்த அப்பு இப்ப பாரடா.அட சிறை சென்றவனுக்குத் தான் அந்த மரியாதை என்றால் அவருடன் நெருங்கி பழகியதால் எனக்கு வேறை.கூட்டம் என்றால் என்னைக் கூட்டிக் கொண்டு போகவென்றே அலைவார்கள். அந்த நால்வரில் நல்ல புத்திசாலித்தனமாக நடந்து மாவை சேனாதிராஜா நல்ல இடத்துக்கு வந்திட்டார்.மற்றவர் என்னவானார்களோ தெரியாது. முற்றும். ஈழப்பிரியன்.
 43. 8 points
  ஆண் பெண்ணை தினமும் தூசணங்களால் அர்ச்சிப்பதும், அடி உதை கொடுத்து துன்புறுத்துவதும், பயமுறுத்துவதும்.. பெண் ஆணை தினமும் தூசணங்களால் வசைபாடுவதும், பயமுறுத்துவதும், மன உளைச்சலை கொடுப்பதும்.. ஒருவருடன் இன்னொருவர் ஒரே வீட்டுக்குள் போட்டி போட்டு ஒருவரில் இன்னொருவர் குற்றம் காண்பதும்.. சமூகத்திற்கு ஒரு போலி வேடத்தை காட்டுவதற்காக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து பாசாங்கு செய்வதும்.. இன்னொருவரை மனதில் நினைத்துக்கொண்டு வேறொருவருடன் வாழ்வதும்.. ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் படுத்து எழும்புவதும்.. காவல்துறை வீட்டுக்குள் வருவதும்.. திருமணம் ஒருவரை இன்னொருவர் உத்தியோகபூர்வமாக துன்புறுத்துவதற்கும், தமது கீழ்த்தனங்களை காட்டுவதற்கும் அரசாங்கத்திடம் இருந்து கொடுக்கப்படும் லைசன்ஸ் இல்லை. திருமணம் முடித்தபின் ஒன்றாக வாழ்வது பிடிக்காவிட்டால் கேவலப்பட்டுக்கொண்டும், கஸ்டப்பட்டுக்கொண்டும் இராமல் கழற்றிவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம்/உடன்படிக்கை. இது நிரந்தரமாக முடிந்த முடிபு விதி இல்லை. வாழ்க்கை ஒன்றே ஒன்று. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு திருமண ஒப்பந்தம் தடையாக இருக்குமானால் விவாகரத்து ஓர் சிறப்பான முடிவு.
 44. 8 points
  இருள் கலந்த சாலையில் ஒரு சிறு வளைவில் எனக்கான மரணம் இன்று காத்திருந்தது ஒரு கணப் பொழுதில் தீர்மானம் மாற்றி இன்னொரு நாளை குறித்து விட்டு திரும்பிச் சென்றது பனியில் பெய்த மழையில் வீதியின் ஓரத்தில் மரணம் காத்திருந்ததையும் என்னை பார்த்து புன்னகைத்ததையும் பின் மனம் மாறி திரும்பிச் சென்றதையும் நானும் பார்த்திருந்தேன் தூரத்தில் ஒலி எழுப்பும் வாகனம் ஒன்றில் அது ஏறி சென்றதையும் ஏறிச் செல்ல முன் தலை திருப்பி மீண்டும் என்னை பார்த்ததையும் நான் கண்டிருந்தேன் எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒரு புள்ளியில் நானும் அதுவும் அடிக்கடி சந்திக்க முயல்வதும் பின் சந்திக்காது பிரிவதும் அதன் பின் இன்னொரு சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக வாழ்வு நீள்கின்றது ----------- இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.
 45. 8 points
  சகோதர படுகொலைகள் பற்றி பேசுவதை விட அதன் பின்னணிகளை புரிந்துகொள்வதே ஏதாவது பிரயோசனத்தை கொண்டுவரும். சகோதரப் படுகொலைகளுக்கான அடிப்படை என்பது இவ்வளவு அழிவுக்குப் பின்னரும் மாறவில்லை. மேலே மேற்கோள் காட்டப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரம் என்பது ஆயுதப்போராட்டத்துக்கு முந்திய வடிவம. பின்னர் வாள் ஆயுதமாக மாறியது. இப்போது ஆயுதம் வாளாக மாறியுள்ளது. அவ்வளவுதான். மேலும் பிரித்தாளும் தந்திரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்திய தேசத்தின் சதிகளும் எமக்குள் இருந்த சமூக பிரிவினைகளும் அதனூடாக கட்டியமைக்கப்பட்ட தனிமனித ஆழுமைகளும் என சகோதரப் படுகொலைகளுக்கான பின்னணிகள் பலகோணங்களில் சிந்திக்கவேண்டிய விசயம். தமிழீழம் என்ற இலக்குநோக்கிய போராட்டப் பயணம் பல பத்து இயக்கங்களாக பிரிந்து சிதைந்து பின்னர் புலிகளில் இஸ்லாமியர் பிரிவினை மாத்தையா போன்ற வழமையான இந்தியச் சதிப் பின்னணிகள் மேலும் பிரதேசவாரியான கருணா என்ற பிரிவினையாகி போராட்டத்தின் இறுதிவரை பிரிவினையும் உள்ளகச் சிதைவும் தொடர்கதை. ஆனால் தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய பயணம் புலிகளால் நிறுத்தப்படவில்லை. சகோதர படுகொலைகளுக்கான அடிப்படை இச் சமூகத்தில் தாராளமாக உள்ளது. ஏனெனில் நாம் சகோதரத்துவத்துவ உணர்வுள்ள சமூகம் கிடையாது. சாதீய சமூகத்தில் சகோதரத்துவம் என்ற கதைக்கே இடமில்லை. சும்மா சகோதரத்துவம் என்று கதைக்கலாம் அவ்வளவுதான். இவைகுறித்து ஏராளமாக இக் களத்தில் கருத்தாடியாகிவிட்டது. மீளவும் குறிப்பிடுவது ஒன்றுதான் சகோதரப்படுகொலைகள் என்பதன் பின்னணிகள் குறித்து சிந்திப்பது ஆராய்வது ஒன்றே பலனுள்ளது.
 46. 8 points
  அண்ண ...அங்கேயிருந்து கதைக்காமல் இங்கே வந்து முதல் ஆளாக நீங்களே பிரபாகரன் படத்தை பயன்படுத்தி முன்மாதிரிகை காட்டுகிறீர்களா.....? நாங்களும் பயன்படுத்துகிறோம் .
 47. 8 points
  உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப் படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்! அழகுக்காக..., எமக்குள் நிகழ்ந்த மரணங்களும், ஏராளம்! எந்தத் திமிரும் இன்றி.., எளிமையாக நிற்கிறாயே! ஏன்..? உன்னிடம்,,, முகம் பார்க்கும்,, கண்ணாடி இல்லை என்பதாலா? உன் காலடியில், தவழ்கின்ற நீரே..., கண்ணாடி தானே!, புரிந்து கொள்கிறேன்! நீ பறவையினம்! நான்....,, மனிதகுலம்!
 48. 7 points
  கண்ணாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் எதேச்சையாய்க் கண்ணாடி வழி வெளியே பார்க்கிறேன். காக்கி நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலங்கி. கரிய கேசம் சிற்றருவியாய் வழிய, லூயி விற்ரான் பை கையில் தொங்க அந்தத் தமிழ் அழகி வெளியே நடந்துகொண்டிருக்கிறாள். நான் தற்போது காதலில் கட்டுண்டு கிடக்கவில்லையேல் அவசியம் வெளியே சென்று அவளுடன் பேசி இருப்பேன். தவிர்க்க முடியாத அழகி. முறுவலோடு என் நடை கண்ணாடிக் கட்டிடத்திற்குள் தொடர்கிறது. நகரத்தின் கட்டிடங்களைத் தொடுக்கும் நடைபாதையாதலால் என்னை ஒத்தவர்கள் அதிகம்பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அனைவரது கைகளிலும் அலுவலக அலைபேசி. மின்காந்த அலைகள் எங்கும் நிறைந்திருந்தும் கண்ணில் படவில்லை. மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக்கப்பட்டிருப்பதாய் நினைத்துக்கொள்கிறார்களோ என்று நினைக்கத்தோன்றியது காட்சி. அன்றைய நாள்முழவதும் அழகியல் நிறைந்து கிடந்தது. பொதுவாக நாள் எவ்வாறு ஆரம்பிக்கிறதோ அவ்வாறே நகர்கிறது. மாலை திட்டமேதுமில்லாததால் யூரியூபை நோண்டிக்கொண்டிருந்தேன். ஒரு வித்தியாசமான காணொளி கண்ணில் படப் பார்கத் துவங்கினேன். 84 வயதில் மரணித்த ஒரு பெண்ணின் உடல் அம்மணமாக மேசையில் கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிவர பார்வையாளர்களும் ஒளிப்பதிவுக் கருவிகளும் இருந்தன. இரண்டு மருத்துவர்களும் ஒரு சில மாணவர்களும் இருந்தார்கள். நிகழ்வு ஜேர்மனியில் பதிவாகியிருந்தது. மனித உடலமைப்பு, குறிப்பாக குருதியோட்டத் தொகுதியில் நிகழக்கூடிய பிறழ்வுகள் பற்றியது நிகழ்ச்சி. அதற்காக அந்தப் பெண்ணின் உடல் வெட்டித் திறக்கப்பட இருந்தது. சில முகவுரைகளைத் தொடர்ந்து, ஜேர்மனிய மருத்துவர் உடலத்தை அறுக்கத் தொடங்கினார். கழுத்திற்குக் கீழே நெஞ்சுப் பகுதியில் ஆரப்பித்து இடது மார்பகத்தைக் கடந்து சென்று அடிவயிற்றைக் குறுக்கறுத்தது வெட்டுப் பாதை. ஒரு பயணப் பொதியின் சிப்பைத் திறந்து பையைத் திறப்பது போல் கத்தி அந்த உடலத்தின் சிப்பைத் திறந்து கொண்டிருந்தது. மஞ்சள் நிற கொழுப்பு வெளியே தெரிந்தது. இறந்த உடலமாதலால் குருதிப்பெருக்கில்லை. மூன்று நான்கு தடவை கத்தி தடத்தில் பயணித்தபின்னர் பயணப்பொதி திறப்பது போல் மருத்துவர் அந்த உடலத்தில் உடம்பின் மூடியினை அவளது இடது மார்பகத்தோடு சேர்த்துத் தூக்கித் திறந்து போட்டார். உள்ளுர நுரையீரல் தொட்டுப் பெருங்குடல் முடிவுவரை அவள் உள்ளுறுப்புக்கள் கிடந்தன. அன்றைய நாள் முளுவதும் நிறைந்து கிடந்த அழகியலை மறுபடி நினைத்துப் பார்த்தேன். காலையில், காக்கி நிறப் பாவாடை, நீல நிறச் சட்டை, சிற்றருவியெனக் கருங்கேசம், லூயி விற்ரான் பை, தாளத்திற்குத் தப்பாதை நடை, அவளுடன் பேசிவிடத் தோன்றிய எனது உந்துதல். மாலையில், இடது மார்பகம் உள்ளடங்கலாகப் பயணப் பை திறப்பது போல் திறந்து போடப்பட்ட உடலம். இப்போதும் முறுவல். நாளைய காட்சிகளிற்காய்ப் பின் தூக்கம்.
 49. 7 points
  துருச்சாமி தொடர்கிறது....! 4) நினைவேந்தல் படலம்.....! (இந்தப் படலமானது இன்று காலையில் இருந்து சாமியின் பாதயாத்திரையில் நடந்த, நடந்தபின் விளைவுகளைக் கூறுவது). --- கோவில் குளத்தில் முழுகி எழுந்த சாமி படிக்கட்டில் கோவணத்தை வைத்துவிட்டு மறந்து விட்டது. அன்று காலை அங்கு வந்த குருக்கள் குளத்துக்குள் இறங்கி முங்கி குளிக்கின்றார். அப்போது அவர் கையில் தற்செயலாய் மாட்டிய மீனை தூக்கி எறிய அது அந்த கோவணத்தில் விழுந்து துடிக்க மரத்தில் இருந்து அதை பார்த்த காகம் சடாரென்று கீழிறங்கி அப்படியே தூக்கிக் கொண்டு பறக்கின்றது.அப்போது இந்தக் கோவணமும் அதன் கால்களில் சிக்குப்பட்டு பறக்கின்றது. அந்தக் காகம் நேராக வந்து மங்களம் வீட்டு மாமரத்தில் இருந்து மீனைச் சாப்பிடும்போதுதான் சாமியின் காலடியில் இருந்த பெண் அலற காகம் எழுந்து பறக்கின்றது, துண்டு கீழே விழுகின்றது.....! --- அங்கு மூன்று தேங்காய் உரித்தெடுத்து ஒன்றைக் கோயிலில் அடித்து விட்டு இரண்டைக் கொண்டு வந்திட்டுது.....! --- மடப்பள்ளியைத் திறந்து அரிசியை எடுத்துக் கொண்டு போனபின், குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு வந்த குருக்கள் தரையில் அரிசி எல்லாம் சிந்திக் கிடக்கக் கண்டு மற்ற ஐயரைத் திட்டிக் கொண்டு சுத்தப் படுத்துகின்றார்....! --- முதலாவது பனங்கூடலுக்குள் வந்ததும் அங்கு இருந்த கள்ளு முட்டியைக் கண்டு அதை கமண்டலத்தில் ஊற்றிக் கொண்டு தண்ணியை முட்டியில் மாற்றிவிட்டு வருகுது.....! --- வாழைத்தோப்பில் வரும்போது காய்களையும் பொத்திகளையும் முறித்துக் கொண்டு வருகுது. தண்ணி இறைப்பைக்கு வந்த செல்லையா வாழைக்காய்களும் பொத்திகளையும் காணாது பெண்டிலைத் திட்டுகின்றார். இவள் மடைச்சி இன்னும் ரெண்டு சீப்பு வரமுதல் பூவை உடைச்சுக் கொண்டு போட்டாள்....! --- பின்பு காய்கறித் தோட்டத்தில் எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சம் பறித்துக் கொண்டு வருகுது. காலையில் அங்கு வந்து பொன்னம்மா கீழே கிடந்த காய்களையும் பிஞ்ச்சுகளையும் பார்த்து விட்டு புருசனைக் கூப்பிடுகிறாள், எனை இஞ்ச வந்து பாரணை தோட்டத்துக்குள்ள மாடு கீடு வந்திட்டுது போல....! --- சாமி பிறகு கண்ணாத்தாள் வளவால வரேக்க கரப்புக்குள் குஞ்சுகளுடன் இருந்த கோழியைப் பிடித்து அது சத்தம்போடாமல் மயங்கும்வரை அமுக்கிவிட்டு பையில் போட்டுக் கொண்டு, அங்கால கிடந்த முருங்கையிலும் நாலு காய் பறித்துக் கொண்டு வருகுது. விடிந்ததும் கோழியைத் திறந்துவிட பேரனுடன் வந்த கண்ணாத்தாள் கரப்புக்கு வெளில சில குஞ்சுகள் நிக்கிறதைப் பார்த்து கரப்பைத் திறந்தால் கோழியைக் காணேல்ல. மரநாய் ஏதாவது பிடிசிச்சுக் கொண்டு போட்டுதோ என்று ஒப்பாரி வைக்கிறாள். "பத்துப் பாலனையியும் பரிதவிக்க விட்டு எந்த எமன் உன்னை எருமையில கொண்டு போனானோ ங் ...ங்கா ...ஆ .கொண்டைச் சேவலுடன் குலாவிக் கொண்டு என்னை விட்டு நீ எடுபட்டுப் போனியோ ங்.... ங்கா....ஆ...மூக்கை சிந்தி முந்தானையால துடைக்கிறாள்..!!"பின்பு வரட்டும் கழுதை முறிச்சு சட்டிக்க வைக்கிறானோ இல்லையோ பார். உடனே பேரன் பாட்டி அது கழுதையில்லை கோழி என்று எடுத்துக் குடுக்குது. ஓம் இவர் வந்திட்டார் எனக்கு பாடம் சொல்ல. என்று செல்லமாய் திட்டிக் கொண்டு போறாள். பாவம் அது அவளின் கையாலேயே சட்டிக்குள்ளேதான் பிறகு வேகுது. அங்கால கடவையில் முருங்கைக் காய்களும் பூவும் பிஞ்சுமாய் கொட்டுண்டு கிடக்கு. --- சாமி அடுத்து பனங்காட்டுக்குள்ளால் வருகுது. அன்னமுன்னாவில தொங்கிய மஞ்சள் பையை பார்க்குது. பக்கத்தில் யாரும் இல்லை. உள்ளே ஒரு போத்தல் கசிப்பு இருக்கு, அதையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டு வருகுது. அதன் பிறகு பற்றைக்குள் வெளிக்குப் போட்டுவந்த சின்னப்பு அன்னமுன்னாவில் கொழுவி பையையும் போத்தலையும் காணாது அங்கும் இங்கும் ஓடி போதையில் தள்ளாடித் தள்ளாடித் தேடுது. "உவன் சின்ராசிட்ட ஒண்டரைப் போத்தல் கசிப்பு வாங்கி அரைப் போத்தல் அங்கை குடிச்சிட்டன். பிறகு ஒரு போத்தலை பைக்குள்ளை வைத்துக் கொண்டு மேற்குப் பக்கத்தால இஞ்ச வந்தன். வயித்தைக் கலக்கிச்சுது. அன்னமுன்னாவில பையைக் கொழுவிவிட்டு பத்தைக்குள்ள வெளிக்குப் போய் அப்படியே துரவில அடிக்கழுவிட்டு வந்து பார்த்தால் கசிப்போடு பையைக் காணேல்ல." போதையில் இருந்த சின்னப்பு இதையே சொல்லி சொல்லி மேற்கால இருந்து நடந்து வாறது அன்னமுன்னாவில வெறுங்கையை கொலுவிறது, பத்தைக்குள்ள ஓடுறது பின் வாறது ,மீண்டும் முதலில் இருந்து இப்படியே ஆடிக் கொண்டு நிக்குது. (இப்போது உங்களுக்கு பல குழப்பங்கள் தீர்ந்திருக்கும் இல்லையா. ஆங்காங்கே முன்ன பின்ன இருந்தாலும் லாஜிக் பார்க்காமல் சாமியுடன் பயணிக்கவும்). பயணம் தொடரும்.....!
 50. 7 points
  சென்னை உங்களை மிக அன்புடன் வரவேற்கின்றது ரொரன்டோவில் இருந்து Frankfurt பின் அங்கு இருந்து சென்னை செல்லும் விதமாக பயண ஏற்பாடுகள். ரொரன்டோவின் விமானத்தில் ஏறியாச்சு. மகன் மித்தா (மிதுனன்) இரண்டு வயதில் தான் இறுதியாக விமானத்தில் பயணம் செய்து இருந்தமையால் கடும் குஷியில் இருந்தான். மூவர் இருக்கும் வரிசையில் நான் நடுவில், மகன் யன்னலோரம், எனக்கருகில் ஒரு சேர்பிய (Serbian) பெண்மணி. அவ் சேர்பிய பெண்ணுக்கு ஒரு 65 வயது இருக்கும். அவருக்கு அருகில் இருக்க வேண்டி வந்ததையிட்டு மனசில் 'பக்கத்து சீட்டில பாட்டி உக்காந்தா ...டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது. பொதுவாக விமானத்தில் ஏறினால் சாப்பாடு வரும் போதே வைன் அல்லது விஸ்கி கேட்டு அடித்து விட்டு 3 மணி நேரமாவது தூங்கி எழுந்து பின் சினிமா படம் பார்க்கும் பழக்கம் எனக்கு. ஆனால் மகனுடன் போவதால் ஒன்றும் குடிக்க விரும்பவில்லை. பக்கத்தில் இருக்கும் பெண்மணி இரண்டு தரம் ரெட் வைன் அடிக்கும் போது என் வயிற்றில் புகை எழுந்ததை மகன் காணவில்லை. சரி நித்திரை வரவில்லை என்று ஒரு ஆங்கிலப் படத்தை போட்டால் 20 நிமிடங்களில் அதில் வந்த பெண்மணி ஆடை களைய தொடங்க, இதை எப்படி மகனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பார்ப்பது என்று channel மாற்றி laugh for gags பார்த்தேன். போனது Air Canada.. ஓரளவுக்கு வசதி எனிலும் கிட்டத்தட்ட பென்சன் வயது உள்ள பணியாளர்களும் அவர்களின் சலிப்பான சேவையும் பழைய விமானமும் என்று சலிப்பை கொடுத்தன Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை. அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார் மூன்றாம் மாடிக்கு அலைந்து திரிந்து போய் தண்ணீர் வாங்கி கொடுத்து விட்டு கொஞ்சம் காத்திருந்து அடுத்த விமானம் பிடிக்க சென்றால், அவ் விமான நிலைய ஜேர்மன் அதிகாரிகளின் திமிரான நடவடிக்கை வெறுப்பை கொடுத்தது. Frankfurt விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தின் முக்கிய நிலையம் என்பதால் போட்டி போட வேண்டி இல்லை, நாம் வெறுத்தாலும் விரும்பினாலும் தவிர்க்க முடியாத ஒரு விமான நிலையம். இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் அலட்சிய மனப்பான்மை என்னை கடுமையாக வெறுப்பேத்தியது. ஒரு வழியாக எல்லாம் முடிந்து விமானம் ஏறி, சென்னை விமான நிலையத்தினை வந்தடைகின்றோம். சென்னை விமான நிலையம், அதன் கூரை விழும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியம் என பல நூறு செய்திகளை அடிக்கடி கேட்டு இருப்பதால் மிக மோசமான ஒரு அனுபவத்தினை எதிர்பார்த்து விமானத்தில் இருந்து இறங்குகின்றேன். மகனுக்கும் இது பற்றி சொல்லி அவனை தயார் படுத்தி இருந்தேன் ஆனால் என் அவ்வளவு எதிர்மறையான எதிர்பார்ப்பும் பொய்த்து போகும் வண்ணம் சென்னை விமான நிலையமும் அதன் அதிகாரிகளும் இருந்தனர் சென்னை எம்மை அன்புடன் வரவேற்கின்றது