Jump to content

Leaderboard

 1. Ahasthiyan

  Ahasthiyan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Posts

   2046


 2. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Posts

   24414


 3. யாயினி

  யாயினி

  கருத்துக்கள பார்வையாளர்கள்


  • Points

   4

  • Posts

   8829


 4. nedukkalapoovan

  nedukkalapoovan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Posts

   31839


Popular Content

Showing content with the highest reputation on 01/27/17 in Posts

 1. நிலாமதி - 10 மீரா, நவீனன் - 6 வாத்தியார் - 5 வாசி - 4 ஜீவன் சிவா - 3 சுவி,தமிழ் சிறி, குமாரசாமி, கறுப்பி, நுணாவிலான் - 1
  6 points
 2. இன்றுடன் இந்த திரி தொடக்கி ஒரு மாதம் முடிவடைந்தது. பல யாழ் கள உறவுகள் கலந்து கொண்டது இந்த திரிக்கு பெருமை சேர்க்கிறது. என்னையும் தினமும் யாழுக்கு வரத் தூண்டியது உங்கள் ஆர்வமும் திரியின் இடுகைகளும் தான். குறிப்பாக படங்கள் இணைத்து பதில் சொன்னது நான் எதிர் பாராத ஒன்று. சிலர் தனி மடலில் ஊக்கமும் தந்தார்கள். சிலர் பச்சை குத்தி ஊக்குவித்தார்கள். மொத்தமாக 41 விடுகதைகள் போடப் பட்டன, 2 இக்கு மட்டும்தான் ஒரு தரும் விடை தரவில்லை, மிகுதி 39 (95%) இக்கு விடைகள் அளிக்கப் பட்டன. இது போட்டி அரங்கம் அல்ல. இருந்தும் இதுவரை வந்த விடுகதைகளும் பதில்களும், முதல் பதில் அளித்தவர்களும் என்னிடம் Excel கோப்பில் பதிவில் உள்ளது . அதை எப்படி இணைப்பது என்று தெரியாது. எனவே போட்டோ வடிவில் கீழே இணைக்கிறேன்.
  4 points
 3. அபிராமிப் பட்டர் விழா 27.01.2017 அபிராமியின் அருள்பெற்ற அபிராமி பட்டர் கதை பொன்னிநதி என்னும் காவிரி வளம் சேர்க்கும் தஞ்சைத் தரணியில் 300 (பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) ஆண்டுகளுக்கு முன் பிறந்த அருளாளர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்). காலனைச் சம்ஹாரம் செய்த சிவபெருமான் அருள்புரியும் திருக்கடையூர் என்னும் திருத்தலத்தில் இவர் அவதரித்தார். இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். இறையுணர்வு, மத உணர்வில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஒரு தை அமாவாசை நாளில் சரபோஜி மன்னர் திருக்கடையூர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்தார். கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன்னர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் ஆழ்ந்தார். ஆனால், சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம், மன்னா! தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று பட்டரைப் பற்றி புகார் கூறினார் ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. இருந்தாலும், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அப்போது கண் திறந்த பட்டர், அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் பிரகாசித்தது. அந்த அருள் முகத்தில் லயித்தவராக, இன்று பவுர்ணமி என்றார். பின்னர், சுதாரித்து பார்த்த போது மன்னர் கேள்வி கேட்டதும், அதற்கு சரியான பதில் சொல்லாததும் தெரியவந்தது. தன் வாக்கு பொய்த்துவிட்டதே என்று கதறி அழுதார். அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று அரிகண்டம் பாடினார். அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதில் ஏறி அமர்ந்து கொண்டார். உதிக்கின்ற செங்கதிர் என்று பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை. அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும் மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில், 79-வது பாடலாகிய விழிக்கேயருளுண்டு அபிராம வல்லிக்கு என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்தது. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார். அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் அகமகிழ்ந்தார். மன்னரிடம் பட்டரைப் பற்றி பித்தன் என்றும் பேயன் என்றும் கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு கேட்டனர். மன்னரும் மனம் மகிழ்ந்து பட்டருக்கு ஏராளமானமானியம் அளித்தார். அபிராமி அந்தாதி ஒரு அற்புதமான தெய்வீக துதிநூலாக திகழ்கிறது. இந்நூலில் யாவரும் வணங்கும் தெய்வமே! என்னைப் பெற்ற தாயே! வேதமாகவும், உபநிடதங்களாகவும் திகழ்பவளே! அருட்செல்வத்தை அள்ளித்தருபவளே! தீவினையாகிய நரகத்தில்விழாதபடி அடியவர்களைக் காப்பவளே! அருள்நிறைந்த திருவடிகளால் அடைக்கலம் தருபவளே! மனிதர்கள்,தேவர்கள், முனிவர்கள் வணங்கும் பெருமை பெற்றவளே! உயிர்களின் ஆதாரமே!வஞ்சிக்கொடி போன்றவளே! மனோன்மணித்தாயே! என்று பல விதமாகப் போற்றியுள்ளார்.
  3 points
 4. வணக்கம் வாத்தியார்....! பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் -- அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம் இரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம் அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்....! --- தாயன்பு ---
  2 points
 5. நிலாமதி, உங்கள் ஆர்வத்திக்கும் ஊக்கத்திக்கும் நன்றிகள். ஒரு சிறு அறிவுரை: ஒருக்கால் பதில் எழுதினால் பின்பு திருத்தாதீர்கள் (don't edit). தொடர்ந்து இணைந்திருங்கள் இணைந்திருப்பதற்கு நன்றிகள் நவீனன்
  1 point
 6. உங்கள் தரவுக்கு நன்றி . . எனக்கு மிகவும் ஆச்சரியமாய் உள்ளது .. பொழுதுபோக்காக தான் .வருவேன் . நேரம் தவறாது தினமும் பதிக்கும் உங்களுக்கும் என்பராட்டுக்கள் மேலும் தொடரவேண்டும்
  1 point
 7. அகஸ்தியன்... நாங்கள்... நித்திரை கொள்ளுற நேரம், நீங்கள்... விடுகதை கேள்வியை கேட்டால், அந்த நேரம், முழிப்பாக இருக்கிற நிலாமதி அக்கா, மீரா, வாத்தியார், வாசி, ஜீவன் சிவா போன்றவர்கள்.... டக்கென்று, பதில் சொல்லுவார்கள் தானே. (சும்மா... பகிடிக்கு) இதையெல்லாம்.... Excel கோப்பில், பக்காவாக பதிந்து வைத்திருந்த, உங்களின் ஆர்வத்தை மெச்சுகின்றேன்.
  1 point
 8. கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையுங் குன்றாத இ*ளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே! அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
  1 point
 9. வணக்கம் வாத்தியார்....! ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா ஈரேழு மொழிகளிலே எந்த மொழி பிள்ளை மொழி கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வமொழி.....! --- தவழும் தங்கரதம் ---
  1 point
 10. தேனிக்களும்..... எத்தனை நாளைக்கென்று கூட்டில் வாழ்வது... புங்கை. அதான்... நல்ல, "ரூம்" போட்டு கொடுத்திருக்கு.
  1 point
 11. தமிழ் சிறி...நீங்கள் போட்டிருக்கிற படம் தேன் கூடு இல்லை..! அது தேன் வீடு! இது தான் தேன் கூடு..!
  1 point
 12. ஒரு ஏழையின் கால் மிதி பட்ட அரிசியைத்தான் கழுவி உண்கிறாய் என்பதை நினைவில்கொள்.....
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.