Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 19 பிப்ரவரி 2017 in all areas

 1. 4 points
  இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது ---------------------------------------------- வியப்பாக இருக்கிறதா....? அதிர்ச்சியாக இருக்கிறதா.....? இதுதான் உண்மை.................... இனி ஒரு மெரினா புரட்சி....... தோன்றவே தோன்றாது..............!!! மெரினா போராட்டம் ஒரு....... இயற்கை இயக்கத்தால்...... தோன்றியது........................... தலைவன் இல்லை....... தோற்றியவனும் இல்லை..... முடித்து வைத்தவனும் இல்லை....... அது இயற்கை இயக்கத்தால்..... தோன்றிய அற்புத போராட்டம்....!!! எப்படி இணந்தார்கள்.....? யார் இணைத்தார்கள்....... எப்படி இப்படி ஒரு மாபெரும்..... சக்தி திரண்டது..........? எல்லமே ஒரு விசித்திர நிகழ்வு....... எத்தனை சமூக ஊடகம்..... பங்களிப்பு செய்தாலும் ...... அதற்கும் மேலாக ஒரு சக்தி..... இயக்கியது என்றால் அதுமிகையல்ல.....!!! இன்று அதே ஊடகங்கள் இருகின்றன..... நாளையும் இருக்கத்தான் போகிறது....... எந்த காலத்திலும் மெரினாபோல்......... ஒரு போராட்டம் இனி எப்போதும்.... தோன்ற போவதுமில்லை....... தோற்றிவிகக்வும் முடியாது...... மெரினா போராட்டம் ஒரு...... இயற்கை இயக்கத்தால் தோன்றியது.......!!! & கவிப்புயல் இனியவன்
 2. 2 points
  வணக்கம் வாத்தியார்....! மயிலைப் பார்த்து கரடி என்பார் மானைப் பார்த்து வேங்கை என்பார் குயிலைப் பார்த்து ஆந்தை என்பார் அதையும் சிலபேர் உண்மை என்பார் யானையைப் பார்த்த குருடனைப் போல் என்னைப் பார்த்தால் என்ன சொல்வேன் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி....! --- மனச்சாட்சி---
 3. 1 point
 4. 1 point
 5. 1 point
 6. 1 point
  எட்டுக்காலும்.... நிலத்தில், முட்டவே இல்லை...... மான் குட்டியே... தாேற்று பாேகும்.
 7. 1 point
 8. 1 point
  கண் இமைக்காமல்... பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
 9. 1 point
  உலக மசாலா: நகரும் வீடு! பிரையன் சலிவனும் ஸ்டார்லாவும் 3 குழந்தைகளுடன் வாஷிங்டனில் வசித்து வருகின்றனர். மாதம் ஒரு லட்சம் ரூபாய் வீட்டு வாடகைக் கொடுத்துக் கொண் டிருந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் பணம் விரயமாகிறது என்ற எண்ணம் வந்து விட்டது. சொந்தமாக வீடு வாங்கும் நிலையில் இல்லாததால், குறைந்த செலவில் ஒரு வீட்டை உருவாக்குவது எப்படி என்று யூடியூப் வீடியோக்களைப் பார்த்தனர். இறுதியில் ஒரு பழைய பேருந்தை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்கள். 20 லட்சம் ரூபாய் செலவு செய்து, அனைத்து வசதிகளும் கொண்ட நவீன வீடாக மாற்றிவிட்டார்கள். “நாங்கள் முதலில் குடியிருந்த வீட்டுக்கும் பிரையன் அலுவலகத்துக்கும் ஒரு மணி நேரம் பயணம் செய்யணும். வாடகை கொடுப்பதற்காகவே ஓவர் டைம் வேலை செய்வார். சில நேரம் காரிலேயே 3 மணி நேரம் தூங்கிவிட்டு, மீண்டும் வேலையைத் தொடர்வார். அவரைப் பார்ப்பதற்கே நாங்கள் பல நாள் காத்திருக்கணும். இந்த வாழ்க்கையை எப்படியாவது மாற்ற முடிவு செய்தோம். பேருந்து வீட்டுக்கு வந்துவிட்டோம். வீட்டிலிருந்ததைவிட மிகவும் சந்தோஷமாகவும் வசதியாகவும் வாழ்க்கை நடத்துகிறோம். வெளியிலிருந்து பார்த்தால்தான் இது பேருந்து. உள்ளே வந்தால் அழகான வீடு. சமையலறை, படுக்கையறை, வரவேற்பு அறை, குளியலறை அனைத்தும் இருக்கின்றன. இடத்தை வீணாக்காமல் பயன்படுத்தியிருக்கிறோம். பிரையனின் அலுவலகத்துக்கு பக்கத்திலேயே பேருந்தைக் கொண்டுவந்துவிட்டோம். அதனால் எங்களோடு அதிக நேரம் செலவிட முடிகிறது. போகுமிடமெல்லாம் வீட்டையும் நாங்கள் எடுத்துச் செல்லலாம். வாடகை கொடுத்த பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு மிச்சமானதால் கடன்களை அடைத்துவிட்டோம். சூரிய ஒளி மூலம் மின்சாரம் என்பதால், இரவில் மின்சாரம் கிடையாது. அதனால் குளிர்க் காலங்களில் தண்ணீர் உறைந்துவிடும், அறைக்குள் வெப்பமும் கிடைக்காது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. அதற்காக மீண்டும் வீட்டை நோக்கிச் செல்ல மாட்டோம். இதில் மின்வசதியைக் கொண்டு வர முயற்சி செய்வோம்” என்கிறார் ஸ்டார்லா. நகரும் வீடு! ஸ்காட்லாந்தில் வசிக்கும் பால் க்ராஸ்ஸன் மோட்டார் சைக்கிள் பயணி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் கிளம்பிவிடுவார். சாலையில் ஒரு நாயைப் பார்த்தார். உடனே அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, பலரும் நாயை வளர்க்க விருப்பமில்லாமல் தெருவில் விட்டுவிட்ட தகவல் கிடைத்தது. வளர்க்க ஆரம்பித்தார். “மில்லி மிகவும் சமர்த்தானவள். சொல்வதை எளிதில் புரிந்துகொள்வாள். அவளுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய முடிவெடுத்தேன். மில்லிக்குத் தோலாடை, தலைக் கவசம் அணிந்து அழைத்துச் சென்றேன். பயணத்தை அவ்வளவு விரும்பினாள் மில்லி. சாலையில் செல்பவர்கள் அவளிடம் ஹலோ சொல்லும்போது மட்டும் அப்படி, இப்படித் திரும்பிப் பார்ப்பாள். மற்றபடி சாலையை நேராகப் பார்த்துக்கொண்டே வருவாள். வண்டி நிற்கும் இடங்களில் சாப்பிடுவாள். கழிவறைக்குச் செல்வாள். என்னைப் போலவே மில்லிக்கும் பயணம் பிடித்ததிலும் துணையுடன் செல்வதிலும் எனக்கு மகிழ்ச்சி. நான் சும்மா இருந்தாலும்கூட இப்போதெல்லாம் மில்லி விடுவதில்லை, மோட்டார் சைக்கிளைக் காட்டி, பயணம் கிளம்ப வேண்டுமென்கிறாள். நாங்கள் இருவர் மட்டும் அடிக்கடி பயணம் செல்வதில் என் மனைவிக்குதான் பொறாமை” என்கிறார் பால் க்ராஸ்ஸன். வீட்டுக்கு வெளியேதான் உலகம் இருக்கு என்று மில்லிக்கும் தெரிந்திருக்கு! http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நகரும்-வீடு/article9550413.ece?homepage=true&relartwiz=true
 10. 1 point
 11. 1 point
 12. 1 point
 13. 1 point
  மிகச்சரியான போராட்டங்கள் சரியான நேரத்தில் நடந்தேறி உள்ளன. தமிழக இளைஞர்கள் யுவதிகளை இலகுவில் எடை போட முடியாத ஜீனியஸ் என்பது எனது கணிப்பு. முடிந்தால் உலகின் எந்த மூலையில் உள்ள இளைஞர் யுவதிகளுடனும் ஒப்பிடுங்கள் பார்க்கலாம்.
 14. 1 point
  பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்! புதிய நம்பிக்கைஸ்ரீலோபாமுத்ரா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ளது பிப்லாந்திரி கிராமம். பெண்களைப் போற்றும் முன்மாதிரி கிராமம் என உலகமே வியந்து நோக்கும் வகையில், பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் கம்பீர கிராமம் இது! பத்தாண்டுகளுக்கு முன் வரை, சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கி, இந்தியாவின் மற்றுமொரு கிராமமாகவே இருந்தது பிப்லாந்திரி. 2005-ம் ஆண்டு இதன் பஞ்சாயத்துத் தலைவராக ஷ்யாம் சுந்தர் பொறுப்பேற்ற பின், நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. பள்ளிக் கல்வியைக்கூடத் தாண்டாத ஷ்யாம், தொலைநோக்குப் பார்வையுடன் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு, மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்புடன் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, பத்து ஆண்டுகளுக்குள் பிப்லாந்திரியை முற்றிலும் முன்னேறிய கிராமமாக மாற்றியுள்ளார். ஷ்யாம் சுந்தருக்கு அவள் விகடனின் வாழ்த்துகளைத் தெரிவித்தோம். பணிவு, எளிமை, மக்கள் நலனில் அக்கறை... இம்மூன்றும் அவர் பேச்சில் புலப்பட்டன. அந்த கிராமத்தின் வளர்ச்சிப் பயணத்துக்கான ஆரம்பப் புள்ளியாக, ஷ்யாம் சுந்தர் மகளின் மரணம் இருந்தது நாம் எதிர்பாரா அதிர்ச்சி. ‘`நான் பொறுப்பேற்றவுடன் வீடு வீடாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தேன். குடிநீர்ப் பற்றாக்குறை, கல்லாமை, பெண் சிசுக்கொலை, குற்றங்கள், மார்பிள் (வெள்ளை சலவைக்கல்) குவாரிகளில் இருந்து வெளியேறும் கழிவு எனப் பல சவால்கள் காத்திருந்தன. முதல் கட்டமாக, நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்புப் பணிகளை மேற்கொண் டேன். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர்த் தட்டுப்பாடு தீர்ந்தது. என் மகள் கிரண், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள். அவளின் நினைவாக 111 மரங்களை கிராமம் எங்கும் நட முடிவெடுத்தேன். இதுபற்றி மக்களிடம் பேசினேன். குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்துக்கு இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் நிச்சயம் கைகொடுக்கும் என்பதை விளக்கிச் சொல்லி நம்பிக்கை அளித்தேன். ஆரம்பத்தில் யாரும் ஒத்துழைக்கவில்லை. ஆனால், ஒரு பஞ்சாயத்துத் தலைவராக, அரசின் நலத்திட்டங்களை நான் வெற்றிகரமாகச் செயல்படுத்தி கிராமத்தின் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்த பின், மக்கள் எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்க ஆரம்பித்தனர்’’ என்கிற ஷ்யாம், அந்த முயற்சி கிராமத்திலும், கிராமத்துப் பெண்களிடமும் ஏற்படுத்திய மலர்ச்சியைப் பற்றிக் கூறினார். ‘`கடந்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மரங்களை உருவாக்கியுள்ளோம். மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி, அந்த மரங்களைப் பராமரிக்கிறோம். இப்போது எங்கள் கிராமம் முழுவதும் நல்ல வருமானம் தரக்கூடிய வேம்பு, மா, நெல்லி, ஸ்ரீஷம் (தேக்கு மர வகை) மற்றும் மூலிகை மரங்கள் வளர்ந்து சோலையாகவே காட்சி அளிக்கின்றன. பெண்கள் இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை விற்றுக் கிடைக்கும் தொகையை, பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும், பெண் குழந்தை வளர்ப்புக்கும் பயன்படுத்திக் கொள் கிறார்கள். இதைத் தொடர்ந்து, நகரங்களுக்கு வேலை தேடிச் செல்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இப்படி எங்கள் கிராம மக்கள் பொருளா தாரத் தன்னிறைவைப் பெற்றனர். அடுத்த அவசிய நடவடிக்கையாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த குடும்பத் தலைவிகளின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டத்தைச் செயல்படுத்தினேன்’’ என்கிற ஷ்யாம், பெண் குழந்தை பிறந்தால், அதைத் தங்கள் கிராமம் வரவேற்கும்விதம் பற்றிச் சொன்னபோது, வியந்துபோனோம். ‘`பெண் குழந்தைகளின் மேற்கல்வி மற்றும் திருமணச் செலவுகளைக் கருத்தில் கொண்டோம், குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் தங்களின் பங்களிப்பாக ரூ. 10 ஆயிரம் மற்றும் கிராம மக்கள் தங்களுக்குள் வசூலித்த ரூ.21 ஆயிரம் என, மொத்தம் ரூ. 31 ஆயிரத்தை 20 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக (Fixed deposit) அக்குழந்தையின் பெயரில் வங்கியில் முதலீடு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினேன். அதைப் பெற, பெற்றோர் மூன்று விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவாதம் அளித்து, உறுதிமொழிப் பத்திரத்தை பஞ்சாயத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விதிமுறைகள்... 1. வனத்துறையின் ஒத்துழைப்புடன் நல்ல வருமானம் தரும் 111 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். 2. தங்கள் பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் செய்யக் கூடாது. 3. இருபது ஆண்டுகளுக்குப் பின் பல லட்சங் களாகப் பெருகியிருக்கும் நிரந்தர வைப்பு நிதிப் பணத்தை மகளின் மேற்கல்வி அல்லது திருமணச் செலவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!’’ - இப்படி அசரவைக்கும் ஷ்யாமின் அதிரடி இன்னும் நீள்கிறது. அரசின் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, மின்சாரம், தெருவிளக்குகள் போன்ற பயன்கள் மக்களை அடையச் செய்திருக்கிறார். தங்கள் கிராமத்தில் மதுக்கடைகள் கிடையாது என்று பெருமையுடன் சொல்பவர், இதனால் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து அமைதியும் ஒற்றுமையும் நிலவுவதாகவும் சொல்கிறார். சமூக சேவகர் அன்னா ஹஸாரே இந்த கிராமத்தைப் பார்வையிட்டு, பெண்கள் நலன் மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரத் தன்னிறைவு என மும்முனைப் பயனுடன் பிப்லாந்திரி வளர்ச்சியடைந்ததாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘பிப்லாந்திரி’ என்ற பெயரிலேயே இந்த கிராமத்தின் வெற்றிக் கதை இந்தி மற்றும் மலையாள மொழிகளில் திரைப்படங்களாகவும் தயாராகி வருகிறது. ‘`சிறந்த பஞ்சாயத்துக்கான பல விருதுகளை எங்கள் கிராமத்துக்கு வழங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள், பிப்லாந்திரியை மாதிரி கிராமமாக அங்கீகரித்து, மற்ற கிராமங்களிலும் இந்த நிர்வாக நேர்த்தியைச் செயல்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன. நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். இந்த கிராமத்தின் வெற்றிக்குப் பின்னால், என் மகள் கிரண் இருக்கிறாள்!” அந்த அப்பாவின் நெகிழ்வும் அன்பும் சமூக அக்கறையாக ஆக்கம் பெற்ற கதையைச் சலசலக்கின்றன பிப்லாந்திரி மரங்கள்.
 15. 1 point
  ஆண் பிள்ளைகளுக்கும் அப்பாவுக்கும் ஏன் டிஷ்யூம் டிஷ்யூம் ஆகிறது? #GoodParenting ஆண் பிள்ளைக்கும் அப்பாவுக்குமான இணக்கம் பெரும்பாலும் எதிரும் புதிருமாகவே இருக்கும். தன் வெற்றி, சந்தோஷம், துக்கம், கவலை, காதல் என சகல விஷயங்களையும் தன் அம்மாவிடம் சொல்லும் ஆண் பிள்ளைகள் அப்பாவிடம் முகம் கொடுத்துக் கூட பேசுவது குறைவே. இந்த போக்குக்குக் காரணம் என்ன, இதனால் ஆண் பிள்ளை சந்திக்கும் வேதனைகள் என்ன என்பது பற்றிப் பேசுகிறார் குழந்தைகள் நல ஆலோசகர் பிரீத்தா நிலா . எந்த ஒரு குழந்தையும் தன்னை தொட்டிலில் படுக்க வைத்து தாலட்டுப் பாடி, தொட்டிலில் இருந்து எழுப்பி, பால் கொடுத்து, சாப்பாடு ஊட்டி, குளிப்பாட்டி, உடன் விளையாடுவதுன்னு தன்னுடன் பெரும்பாலான நேரங்களை செலவிடும் அம்மாவுடன்தான் அதிக இணக்கமாக இருக்கும். மேலும், நமக்கு எல்லாமே அம்மாதான் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் ஆழமாக உருவாகும். அத்தோடு தன்னைப் பத்தி, தன்னோட செயல்பாடுகள், வேலை, உடல்நலம்னு எல்லா விஷயத்தையும் குழந்தைகிட்ட அம்மாக்கள் ஷேர் பண்ணிக்குவாங்க. குழந்தையை குளிக்க வெச்சு, டிரெஸ் மாட்டிவிட்டு, சாப்பாட்டு ஊட்டுற சமயத்துலக்கூட, ஏன்டா என்னப் படுத்துற, அம்மாவுக்கு வீட்டு வேலை, துணி துவைக்குற வேலை, கடைக்குப் போறதுன்னு நிறைய வேலை இருக்கு. நீ சமத்தா அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுப்பான்னு கொஞ்சலுடன் சொல்லுவாங்க. அதேமாதிரி அம்மாவுக்கு உடம்பு சரியில்லப்பா. அதனால அம்மாவை சத்தம்போட வெக்காதன்னு தன் கஷ்ட நஷ்டங்களையும் பரிவாகச் சொல்லுவாங்க. இதைத் தாண்டி, உனக்கு ஒரு குட்டிப்பாப்பா பிறக்கப் போகுது. உன்கூட விளையாட புதுசா ஒரு ஆள் வரப்போறாங்க. இப்படியெல்லாம் தன்னப்பத்தின எல்லா விஷயங்களையும் குழந்தைக்குப் புரியும்படி சொல்லிப் பழகுவது அம்மா மட்டுமே. மேலும், அம்மாக்களும் தன்னோட பெரிய பலமாகவும் ஆண் குழந்தையைப் பார்ப்பாங்க. இதனாலேயே ஒரு குழந்தை, 'அம்மா எனக்கு சுச்சா வருது. பசிக்குது. என் டீச்சர் என்னை பாராட்டினாங்க... இப்படி தன்னோட எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவில்லாம பேசுவாங்க. அம்மாவின் இந்த பரிவும், பரிசுத்த அன்புமே ஆண் பிள்ளை வளர்ந்து பெரியவனாக ஆகும்வரை அம்மாமீது பாசத்தை அதிகமாக வெச்சிருப்பாங்க. அதனால்தான் தான் கல்லூரி, வேலைக்குச் சென்ற பிறகும் தன்னோட எல்லா விஷயங்களையும், தான் ஒரு பெண்ணை காதலிச்சாலும் அதை முதலில் அம்மாவிடம் சொல்லித்தான் அனுமதி பெறுவான். மேற்சொன்ன அம்மாக்களின் செயல்பாடுகளை எல்லாம் அப்பாக்கள் பெரும்பாலும் செய்வதேயில்லை. தனக்கு ஓய்வு கிடைக்கும்போது, தோன்றினால் மட்டுமே குழந்தையை தூக்கி கொஞ்சுவார்கள். குழந்தை அழும்போது அம்மாவிடமே குழந்தையைக் கொடுப்பது. தான் கோபமாக இருக்கும்போது அக்கோபத்தை குழந்தை மேல் காட்டுவது. குழந்தை யூரின், டாய்லெட் போனால் சுத்தம் செய்ய கூச்சப்படுவது. சின்ன விஷயத்துக்குகூட திட்டுவது, அடிப்பது. இதெல்லாம் அப்பாவின் மீது குழந்தைக்கு பயத்தையும், வெறுப்பையும் உண்டாக்கி விடுகிறது. ரொம்பவே பழக்கம் இல்லாத, ஓரளவுக்கு மட்டுமே பழக்கம் இருக்குற யார்கிட்டயும் நாம மனம் விட்டுப் பேசமாட்டோம். அதுதான் குழந்தைப்பருவத்துல இருந்தே தொடரும். இந்த பழக்கம்தான் அப்பா-மகன் உறவிலும் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே தொடர்கிறது. பெண் குழந்தைங்களை அப்பா அடிச்சாலும், திட்டினாலும் அக்குழந்தை அதே இடத்துல இருக்கும். கோபத்தை மறந்து கொஞ்ச நேரத்துல அப்பாக்கூட பெண் பிள்ளைங்க சகஜமா பேசுவாங்க. ஆனா ஆண் பிள்ளை உடனே அந்த இடத்தை விட்டுப் போவதோடு, ரொம்ப காலம் அப்பாகிட்ட பேசாம கோபமா இருப்பாங்க. அப்பாவின் முகம் பார்த்தே பேச மாட்டாங்க. இந்நிலை ஆண் பிள்ளை வளர்ந்து பெரியவனாக ஆனப்பிறகும்கூட தொடரும். பொதுவா ஒரு குழந்தை தன் அம்மாவிடம் அன்பும், அப்பாவிடம் அறிவும் பெற வேண்டும் எனச் சொல்வார்கள். அம்மாவிடம் அன்பு கிடைத்தாலும், அப்பாவுடனான இணக்கம் இல்லாததால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அப்பாவிடம் இருந்து அறிவு கிடைப்பதில்லை. தனக்கு தெரிஞ்ச வெளியுலக அனுபவங்கள், வாழ்க்கை முறைகளை குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது அப்பாவின் கடமை. அக்கடமையை பெரும்பாலான அப்பாக்கள் செய்வதில்லை. அதுமாதிரியே முன்பெல்லாம் அப்பாக்கள்தான் குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கொடுப்பாங்க. இப்போ சைக்கிள் விழாம இருக்க அதன் பின்னாடி ரெண்டு சின்ன வீல் இருக்கும்படியான சைக்கிளை வாங்கிக் கொடுத்து, குழந்தைகளையே ஓட்டி பழகிக்கச் சொல்லுறாங்க. இதெல்லாம் பார்க்கவே கஷ்டமா இருக்கு. இது வெறும் ஒரு சைக்கிள் ஓட்டும் பழக்கமா பார்க்காம, தன் பையனோட வாழ்க்கையில ஒரு அத்யாயமா பார்த்தால்தான் அதோட வலியும், உணர்வும் புரியும். இப்படி அப்பாகிட்ட இருந்து கிடைக்க வேண்டிய அறிவு கிடைக்காத ஆண் பிள்ளைங்க, அப்பாமேல வெறுப்பைக் காட்டுவாங்க. அதோட தனக்காக அடையாளத்தை, வெற்றியைப் பெற அதிக முயற்சிகளையும் எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். அத்தோடு அப்பாவால் மட்டுமே சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பிரச்னையைக்கூட, அப்பாக்கூட இணக்கம் இல்லாததால, தானே சரிசெய்ய முயன்று கூடுதல் சிக்கல்களையும் ஆண் பிள்ளைகள் ஏற்படுத்திக்கொள்வாங்க. பல அப்பாக்கள் குழந்தையை தன் தோல், மார்பு மேல் வைத்து வளர்ப்பதையும், அத்தகைய அப்பாக்களின் மீது ஆண் பிள்ளைகள் பாசத்துடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது. அப்போ குழந்தை பிறந்தது முதல் அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்துலயும் அம்மா, அப்பா ரெண்டு பேருமே போதிய அக்கறையும், பாசமும் கொடுத்து வளர்க்கறப்போ நிச்சயம் பெற்றோர் இருவர் மீதும் குழந்தைங்க பாசமா இருப்பாங்க. இதுமாதிரி இருக்குற தன் ஃப்ரெண்டைப் பார்க்கறப்போ, தன் அப்பாகிட்ட பாசம் கிடைக்காத குழந்தைங்க ஏங்கிப்போறதோடு, தனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்குவாங்க. குறிப்பா எல்லா அப்பாக்களுமே தன் பிள்ளை நல்லா இருக்கணும்னுதான் மனசுல நெனசுட்டு இருப்பாங்க. ஆனா தங்கிட்ட இருக்குற பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாம இருப்பாங்க. அதுவே ஆண் பிள்ளைக்கும் அப்பாவுக்கும் பெரிய இடைவெளியை உண்டாக்குது. அப்போ சின்ன வயசுல இருந்து ஆண் பெண் பாகுபாடு இல்லாம, எல்லா வேலையையும் செய்யக் கத்துக்கொடுத்து ஆண் குழந்தையை வளர்க்கணும். அப்போதான் தான் தகப்பன் ஆனாலும், தன் குழந்தைக்கான எல்லா தேவைகளையும் கூச்சப்படாம செய்துவிட்டு, குழந்தையின் அன்பையும் அப்பாக்கள் பெற முடியும். http://www.vikatan.com
 16. 1 point
  நான்கு மாதங்களுக்கு முன்பே ஒரு வெளி நாட்டுக்காரர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவேண்டும் என்று Appointment கேட்டிருந்தார், அவருடைய Appointment தேதி இன்று என்பதால் காலை தலைமை செயலகத்துக்கு வந்திருந்தார்! CM ஜெயலலிதாவை பார்க்கவேண்டும் என்று கேட்க, Officer: Sry Sir, ஜெயலலிதா இறந்துட்டாங்க! Foreigner : Oh Sry, அப்போ தலைமை செயலாளரை பார்க்க முடியுமா? Officer : Sry Sir, அவரை black money matter ல arrest பண்ணிட்டாங்க! Foreigner : oh !? அதுக்கப்புறம் வேற CM வரலையா?! Officer : வந்தாங்க சார், ஆனா அவரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க! Foreigner : Why? Officer : அவர் சட்டசபையில சிரிச்சிருக்காரு அதான்! Foreigner : ??! வேற தலைமை செயலாளர் வரலீங்களா?! Officer : வந்தாங்க சார், ஆனால் OPS ஐ வேலையை விட்டு தூக்குனதும் அவங்களும் கோச்சிகிட்டு போயிட்டாங்க! Foreigner : oh ! அதுக்கப்புறம் யாருமே CM ஆ வரலையா? Officer : சசிகலா ன்னு ஒருத்தர் வர்ற மாதிரி இருந்தது...! Foreigner : Good, அப்போ நான் அவங்களையே meet பண்றேன்! Officer : Sry சார், அவங்களை meet பண்ண முடியாது, ஜெயிலுக்கு போயிட்டாங்க! Foreigner : Why?? Officicer : First CM ம் இவங்களும் சேர்ந்து கொள்ளையடிச்சாங்க, அதுனால ரெண்டு பேரும் உள்ள போயிட்டாங்க! foreigner : oh shit! இப்போ யாராவது CM ஆ இருக்காங்களா?? Officer : பழனிச்சாமின்னு ஒருத்தர் இருக்காரு, நாளைக்கு வரைக்கும் கண்டிப்பா இருப்பாரு அதுக்கப்புறம் இருப்பாரு தெரியல, Foreigner : ok fine! நான் wait பண்ணி பாத்துட்டு போறேன்! Officer : No No, அவர் இங்க வரமாட்டாரு கூவத்தூர் போய் தான் பாக்கனும்! Foreigner : Why Man why, சரி தமிழ்நாட்டு ஜனங்க எல்லாம் உயிரோட இருக்காங்களா!? Officer : ஆங், உயிரோட இருக்காங்க, Foreigner : எதுக்கு உயிரோட இருக்கீங்க, ஸெத்துடுங்க! Officer : whatt??? Foreigner : ஸெத்துடுங்க Man ஸெத்துடுங்க!! Can't understand my words?!?!? Smchuf.... beep..... Wdbdfyeh..... Beep..... bdgcyeuwhd....... beep...... dbhctdue ......beep முகநூலில் சுட்டது
 17. 1 point
  உண்மைதான்... மாசி மாதத்தில் மட்டும்தான் அசைவு உள்ளது. மற்ற மாதங்களில் அனைத்தும் பிடித்துவைத்த கல்லுப் பிள்ளையார் மாதிரி அப்படியே இருக்கும்.
 18. 1 point
 19. 1 point
  சிரித்தது நீ ... துன்பப்படுவது நான் ...!!! @ கவிதை ஓடத்துக்கு .... நீ தான் துடுப்பு...........!!! @ பல‌முகம் இருந்தென்ன‌,,? தெரிந்த‌ முகம் நீ தான் ...!!! @ பார்த்தாலே ஆயிரம் கவிதை.... சம்மதம் சொல் அகராதி எழுதுவேன்....!!! @ நடை பழக்கினாள் தாய் ...... உடை பழக்கினாய் ....நீ....!!! @ என் மனதின் உன் பாசம் .. என் மரணம் வரை பேசும்.....!!! @ கனவிலே எல்லா ...... காதலியும் உலக அழகி........!!! @ பார்ப்பவர் கண்ணுக்கு நீ ...... தேவாங்கு எனக்கு நீ தேவதை.....!!! @ இதயத்தில் இருப்பவளே ....... துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!! @ கல்லில் பாசியாக இருக்கிறேன்நீ மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!! @ எஸ் ம் எஸ் கவிதைகள் இருவரி திருவரி கவிதை & கவிப்புயல் இனியவன்
 20. 1 point
  யூடியூப் பகிர்வு: சதையை மீறி வலியைப் பேசும் பாடல் வீடியோ எங்கும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும், மூன்றாம் பாலினத்தவரின் நிலை மட்டும் மாறாமலேயே இருக்கிறது. திருநங்கைகள் குறித்த மற்றுமொரு விழிப்புணர்வுப் படமா என்று பார்த்தால், ''நியாயக் கூண்டிலே நம்மைக் காலம் தள்ளும் விதிப்படி இவர்கள் கைகள் தட்டினால் அதுவே அதுவே சவுக்கடி'' என்ற வரிகள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. திருநங்கைகளின் வலியும், தனிமையும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லோரின் எதிர்பார்ப்பான திருமண வாழ்வின் மீதான அவர்களின் ஏக்கத்தையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர். வழியில்லாமல், விருப்பமே இல்லாமல் அவர்களின் மீதான தொழிலாகத் திணிக்கப்பட்ட இரவு நேரக் காட்சிகள் நம்மைப் பதற வைக்கின்றன. திருநங்கைகளோடு, ஆணாய் மாறும் திருநம்பிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமும் அழகாய்ப் படைக்கப்பட்டிருக்கிறது. தன் இயல்புப்படி வாழ நினைக்கும் திருநங்கையர்களின் நிலை என்னவானது என்பதை வலி தந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. சந்தோஷ் நாராயணனின் இசை, குறும்படத்தின் உண்மைத்தன்மையை கூட்டுகிறது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் இதயம் சுடுகின்றன. ''அவர்கள் பாலை அவர்கள் சொல்ல சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் மனிதரே!'' உண்மைதானே? காணொலியைக் காணுங்கள், கொஞ்சம் மனம் திறங்கள்: http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சதையை-மீறி-வலியைப்-பேசும்-பாடல்-வீடியோ/article9544784.ece?homepage=true
 21. 1 point
  காதல் இருக்கும் ............ வரைதான் வாழ்க்கை .... இருக்கும் ...........!!! துடிக்காத இதயமும் ..... காதல் இல்லாத இதயமும்.... ஒன்றுதான்........!!! காதல் ..... அடிப்படை உணர்வு .... தயங்காமல் காதல் செய் ......!!! காதல் .... ஒரு சொல் அல்ல .... உலகின் அனைத்து ..... மொழியின் அகராதி.......!!! காதல் செய் .... உள்ளம் மாசு படாது .... ஒளி வீசும்..........................!!! தனக்கான ........... காதலை தெரிவு செய்பவன் ... அதிஸ்ரசாலி .................!!! இறைவனின்........... பெரிய கொடை காதல் .... பெரிய கொலையும் காதல் ..........!!! மன்னித்துவிடு இதயத்தை திருடியத்தற்கு ...!!! திருடிய பின்னும் ..... சந்தோசமாக இருப்பவர்கள்.... காதலர்............!!! காதலை தவிர ............ கவிதை தெரியாதா ..? என்று கேட்கும்.......... உள்ளம் காதலால் ............ பாதிக்கப்பட்டுள்ளது...!!! & உங்கள் காதல் கவிஞர் கவிப்புயல் இனியவன்
 22. 1 point
  யூடியூப் பகிர்வு: கச்சா எண்ணெய் கழிவல்ல, பேராபத்து: மீனவரின் குமுறல் ஊரூர் குப்ப செயலாளர் சரவணன். எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதியதில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது அனைவருக்குமே தெரியும். இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்து படலமாகப் பரவியது. இதனால் ஏராளமான மீன்கள், ஆமைகள், கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் மரணித்தன. அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டது கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமா? இல்லை. பிளாஸ்டிக், புகை, குப்பை என இயற்கையைத் துன்புறுத்துபவர்கள் நாமாக இருக்க, கடல் அன்னையின் புதல்வர்களே எப்போதும் பாதிக்கப்படுகின்றனர். மீனவர்கள் கைது, வார்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டம் என மீனவர்கள் அடி வாங்கிக்கொண்டே இருக்கின்றனர். இயற்கை சீற்றங்கள் தவிர்த்து, செயற்கையாகவும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் அகற்றுதலில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மீனவ மக்களின் தொழில் முடங்கிக்கிடக்கிறது. இதுகுறித்த தன் கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறார் ஊரூர் குப்ப செயலாளர் சரவணன். 'நடுக்கடலில் பிடிக்கப்படும் வஞ்சிரம் வகைகளை வறுத்து உண்டு காண்பிக்கும் மீன்வளத்துறை அமைச்சர், கடலோரத்தில் செத்து ஒதுங்கும் மீன்களுக்கு என்ன பதில் சொல்வார்?' என்று கேட்கிறார் சரவணன். அரசு கச்சா எண்ணெயை பக்கெட்டுகளில் அள்ளி அகற்றும் முறையை விடுத்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறும் அவர், அணுக்கழிவுகளை அரசு என்ன செய்யும் என்றும் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். சூழலியல் மற்றும் அமைதிக்கான புகைப்படக்காரர்கள் குழு இதனை ஆவணப்படுத்தியுள்ளது. அவரின் விரிவான பேச்சு அடங்கிய காணொலி இணைப்பு http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கச்சா-எண்ணெய்-கழிவல்ல-பேராபத்து-மீனவரின்-குமுறல்/article9526424.ece?homepage=true
 23. 1 point
  பண்டைய தமிழர்களின் திறமையை அழகாக அமைதியாக சொல்கிறார். தவறவிடாமல் பாருங்கள்.
 24. 1 point
  சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த தமிழ் சிறுவன்.அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்திய போதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்று கொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.அம் மாணவன் கூறியது ”நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்”
 25. 1 point
 26. 1 point
 27. 1 point