• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. இசைக்கலைஞன்

  இசைக்கலைஞன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   21,944


 2. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   5

  • Content Count

   85,545


 3. manthahini

  manthahini

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   4

  • Content Count

   60


 4. Nathamuni

  Nathamuni

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   4

  • Content Count

   7,278Popular Content

Showing content with the highest reputation on 03/12/2017 in all areas

 1. 4 points
  1 அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? அனைத்துலகப்பெண்கள்நாள் ஆண்டுதோறும் சிறப்பாக, உலகெங்கும் கொண்டாடப்பட, அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உறவுகள் தொலைத்தவர் துயரை எத்தனைபேரால் புரிந்திட முடியும்? இழப்புக்கள் தரும் வலிகளோடு அனுதினமும் போராடி போராடி, அழுவதைத்தவிர வழியே இல்லாமல் அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும் எங்கள் தாயகப்பெண்கள் நிலை எத்தனை பேருக்கு தெரியும்? வாழ இடமின்றி தத்தளித்து தவித்து உயிரே போனாலும் சரி எம் நிலம் மீட்க எமக்காக நாமே போராடுவோம் என தனித்து நின்று போராடும் எங்கள் மண்ணின் பெண்கள் அன்றாடம் படும் அவலங்கள் எத்தனை பேரால் உணரப்படும். உயிர்ப்பயம் இருந்த போர்க்காலங்களில் உரிமையுள்ளவர்களாக தலைநிமிர்ந்து துணிவுடன் செயற்பட்ட எம் பெண்கள் கூனிக்குறுகி வாழும் கொடுமைக்குள் சிக்குண்டு தவிக்கும் அவலநிலை இன்று. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அனுதினமும் கண்ணீருடன் போராடும் எம் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் நீளும் பயணங்கள் தொடர்கின்றன சொந்த நிலத்தில் வாழ முடியாமல் தங்கள் நிலத்துக்காக தாமே போராடும் முடிவுடன் அறப்போராட்டங்கள் தொடர்கின்றன நாளும் நாளும் போராடும் நிலையில் அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை ஆனாலும் அயராது போராடும் அவலநிலை யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்? இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும் அச்சமே வாழ்வாக ஆதரவில்லா சூழலில் நித்தம் நடுநடுங்கி வாழும் அவலம் எம்மண்ணில். எத்திக்கிலிருந்து எவன் வந்து தங்கள் அன்பு பிள்ளைகளை பிடித்து செல்வானோ என தத்தளிக்கும் சோகம் நாளும் தொடரும் கொடுமை. பள்ளிக்கு சென்று பாடம் படிக்க விரும்பும் தங்கள் பிள்ளைகளின் எண்ணம் ஈடேற வழியே இல்லையா என அன்னையர்கள் ஏங்கி தவிக்கும் அவலம். உறவுகளை பறிகொடுத்துவிட்டு உள்ளம் உடைந்து உருக்குலைந்து நடைப்பிணமாக வாழும் கொடுமை. இதுதான் எம் மண்ணில் இன்றைய மக்களின் அவல வாழ்நிலை. புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும் வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு அடுத்த பக்கத்துக்கு நகரும் அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? உலகே உனக்கு கண்ணில்லையா என கேள்விகள் கேட்க எமக்கு தெரிகின்றது. உணரவேண்டியவர்கள்,புரியவேண்டியவர்கள் எமக்குள் எண்ணில்லாதோர் என்பதை எண்ணிட ஏன் மறந்தோம் நாம்? பட்டால்தான் வலிகள் புரியும் என்பது மானிடநேயம் புரியாதவர் சொல்லும் வார்த்தை. சின்னத்திரைகளிலும்,வெள்ளித்திரைகளிலும் அழுது வடிக்கும் நடிகர்களை பார்த்து கண்ணீர் சொரிய முடிகின்ற எம்மவர்கள் பலருக்கு உண்மை மனிதர்களின் துயரம் எப்படி புரியாமல் போனது? உறவுகளின் இழப்பின் வலிகளை உணர முயல்வோம். தவித்து துடிக்கும் அவர்களுக்கு தோள்கொடுத்து துணைநின்று வலிமை அளிக்க நாம் உள்ளோம் என வாக்கு கொடுப்போம். அவர்கள் வாழ்வின் விடிவுக்காக உறுதியுடன் உழைப்போம் என உரத்து சொல்வோம்,செயற்படுவோம் மந்தாகினி
 2. 3 points
  சபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன்! ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன்! சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன்! சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன்! நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன்! கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய்! வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ நின்றாய்! சாதியென்றும் மதமென்றும் தற்பெருமைகள் பேசி உனக்கு நீயே மகுடங்கள் சூடிக்கொண்டாய்! தலையனை சுகமே பெரிதென நீ கிடந்தாய். கடவாய் வழிய படுத்திருத்தல் சொர்க்கமென நீ கிடந்தாய், அர்சுனர்களின் ஆட்டம் உனக்கு சினத்தை தந்தது! அர்ச்சுனன் வீரம் கண்டு உலமே வியந்து நின்றது. உனக்கு மட்டும் முற்றத்து மல்லிக்கையின் மகத்துவங்கள் புரியவேயில்லை! வாழ்வியலின் அர்த்தம் புரியட்டும் என்று கல்விதாயை வரமாய் கொடுத்தேன். நீ போதை தலைக்கேறி மதம் கொண்டு திரிந்தாய்! பிரிவுகள் பல சொன்னாய் அடிமையாய் கிடப்பதே சுகமென கிடந்தாய்! மெத்தப்படித்த செருக்கு உனக்கு! கடவுளே வந்தாலும் திருத்தமுடியாதென யாரோ சொன்னது. நந்திக்கடல் அலையின் ஓசையிலும் எனக்கு நன்றாய் கேட்டது. உன்னைக் காப்பாற்ற முடியா விரக்தியில் நானும் அர்ச்சுனர்களும் நந்திக் கடலில் இறங்கி, தூர நடந்தோம்... பெரிய அலையொன்று எங்களை விழுங்கியது. அர்ச்சுனர் கூட்டம் அமிழும் நிலையிலும் தாகத்திற்க்கு தமிழீழம் கேட்டது! கொடுத்துவிடலாம் என ஒரு கணம் நினைத்தேன்! திரும்பிப் பார்த்தேன்.. நந்திக்கடலின் ஆர்பரிப்பில், தப்பிய தறுதலையொன்று தலையாட்டியாய் மாறி நின்றது! இன்னொன்று செத்த பிணங்களை புணர்ந்து கொண்டது! இன்னொன்று வெள்ளைவேட்டிக் கனவில் நாயாய் நக்கிநின்றது! நாசமாய் போகெட்டும் இந்தக் குடியென மனமார திட்டிவிட்டு நந்திக்கடலில் நானும் இறந்தே போனேன்!
 3. 3 points
  சரி.... நீங்கள் 80 வயது குழந்தையாகும் போது, தூக்கிப் பறிப்பா உந்தக் கிழவி எண்டு எதிர்பார்க்கக் கூடாது கண்டியளோ குழந்தைகள் இறைவன் தரும் ஒரு வரம்.
 4. 2 points
  இது ஒரு பொன் மாலைப்பொழுது….. என் முன் ஆளுயர நிலைக்கண்ணாடி உற்றுப் பாா்க்கிறேன் இது நானா? இதில் தொியும் விம்பம் என்னதா? அடடா, காலம் என்னையும் எனது இளமையையும் எத்திப் பறித்து விட்டதா? தினமும் பாா்க்கும் கண்ணாடிதான் ஆனாலும் இன்றுபோல் பாா்க்கத் தவறி விட்டேனா? மீண்டும் கண்களை இடுக்கி நிதானமாக உற்றுப் பாா்க்கிறேன் சந்தேகமில்லை இது என் உருவம் தான் முகத்தில் சுருக்கம் முடி அடியில் வெண்மையின் நெருக்கம் துடிப்பும் துள்ளலும் ஆடங்கிய கை கால்களில் சிறிது நடுக்கம் அத்தனை விடயங்களையும் அட்டவணைப்படுத்தும் என் ஞாபகச் சிறகுகளில் சற்று தடுமாற்றம் அடித்துப் பேசி அனைவரையும் அடக்கும் திடமான சொற்களில் கொஞ்சம் தயக்கம் சிந்தையில் வந்து வந்து சிதறிடும் நினைவுகளில் மாறாட்டம் அரண்மனையில் சிம்மாசனம் இழந்த என் சிங்காசனம் மட்டும் இன்னும் இருப்பதாய் உள்ளுக்குள் ஊஞ்சலாடும் மனவோட்டம் இத்தனை விரைவில் கழியும் இந்த வாழ்க்கைக்கா இத்தனை ஆா்ப்பாட்டம் போட்டி, பொறாமை, எாிச்சல், கோவம், எத்தனை பேரைக் காயப்படுத்தும் கயமை என் வீட்டு நிலைக்கண்ணாடி எனக்கு வாழ்வைப் போதிக்கும் போதிமரம் இப்போதெல்லாம் அடிக்கடி கண்ணாடியைப் பாா்த்து என்னை ஆசுவாசப் படுத்துவது வழக்கம் ஒரு காலத்தில் இந்த நிலைக்கண்ணாடி முன் என் விம்பம் எத்தனை அழகாய் எனக்கே பிரமிப்பு ஊட்டுவதாய் மனதில் கா்வம் ஏற்படுத்துவதாய் அழகை மிகைப் படுத்துவதாய்……. இன்று அதே கண்ணாடிதான் காலத்தின் கோலத்தை அழித்து அழித்து வரையும் ஓவியனாய் மாறி………… வாழ்க்கை மேடையில் எத்தனை கதாபாத்திரம் எம் ஒவ்வொருவருக்கும் அத்தனையும் கடந்து வந்த அனுபவத்தின் முத்திரைதான் முதுமை அது கூட அழகுதான். இளமை அழகு ரசிக்கத் தகுந்தது முதுமை அழகு ஆராதிக்கத் தகுந்தது எனவே எமக்கென்ன குறைச்சல் வந்தால் வரட்டும் முதுமை.
 5. 2 points
 6. 1 point
  கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண்டே போவார்கள். எமது ஒழுங்கைக்குள் ஒலி பெருக்கியில் பாட்டு கேட்டால் ஒன்றில் ஐஸ்பழ வானாக இருக்கும் அல்லது இப்படி ஏதாவது திருவிழா போன்ற கொண்டாட்டம் ஏதாவதாக இருக்கும்.ஆனால் என்ன சத்தம் கேட்டாலும் ஒழங்கையில் உள்ள பெடி பெட்டைகள் எல்லாம் பறந்து வந்து வாசலில் நிற்பார்கள்.பாட்டு சத்தம் எங்கோ கேட்டிருக்கும் ஆனாலும் வாகனம் வந்து சேர இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.சிலவேளை காவல் நின்றால் ஐஸ்பழ வான் தான் வரும்.அவனும் ஓரிரு நிமிடம் நிற்பாட்டி எட்டி பார்த்து கொண்டு நின்றுவிட்டு போவான்.நாங்களும் ஆளை ஆள் பாரத்து கொண்டு நின்றுவிட்டு போவோம்.யாராவது ஐஸ்பழ வான் வந்திருக்கு காசு தாங்கோ என்று கேட்டால் அடியில் அழுகைச் சத்தம் தான் கேட்கும்.பின்னர் சந்திக்கும் போது எப்படி ஐஸ்பழம் என்று கிண்டல் பண்ணுவார்கள். இதுவே காரில் ஒலிபெருக்கியுடன் வந்தால் நிச்சயம் ஏதோ ஒரு கூத்தைப் பற்றியதாக தான் இருக்கும்.இப்போ எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.கார் கிட்ட வந்ததும் காருக்கு பின்னால் அண்ணே நோட்டீஸ் அண்ணே என்று கத்திக் கொண்டு எறத்தள ஒரு மைலுக்கு காருக்கு பின்னால் எல்லோரும் ஓட்டம் தான்.அதில் ஒரு ஆள் நின்றால் மற்றவர்களும் படிப்படியாக நின்றுவிடுவார்கள்.கடைசியில் யார் யார் எத்தனை எத்தனை நோட்டீஸ் என்று எண்ணிப் பார்த்து கூடுதல் நோட்டீஸ் எடுத்தவர் மிகவும் சந்தோசமாக ஆகூ என்று கத்திக் குளறுவார். இதுவே கொஞ்சம் வளர்ந்த பின் எமுது ஊர் திருவிழா என்றால் திருவிழா செய்கிறவர்கள் ஊர்க்காரராக இருக்கும்.ஒரு மாதம் முதலிருந்தே அண்ணை நோட்டீஸ்போட நானும் வாறம் விட்டுட்டுப் போடாதைங்கோ என்று ஒரு மாதிரி காரில் ஏறி நசி பட்டுக் கொண்டிருக்கிறது.இப்போ நம்மைப் போல ஓடி வாறவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் போது சந்தோசம் என்றால் எழுத்தில் வடிக்க முடியாது.அன்று அறிவிப்பு முடிந்து வீடு போகும் போது தான் ஏனடா இந்தக் காரில் ஏறிப் போனேன் என்று பதுங்கி பதுங்கி போவேன்.நினைத்த மாதிரி எனக்காக ஒரு தடி காத்திருக்கும். இருந்தாலும் அந்தக் காரில் இருந்த போது அடைந்த சந்தோசத்துடன் பார்க்கும் போது இன்னும் எத்தனை தடவை வேணுமென்றாலும் அடிங்கப்பா என்று சொல்லத் தோன்றும்
 7. 1 point
  யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 10 வது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Delhi Daredevils (DD) Kolkata Knight Riders (KKR) Kings XI Punjab (KXIP) Mumbai Indians (MI) Royal Challengers Bangalore (RCB) Sunrisers Hyderabad (SRH) Gujrat Lions (GL) Rising Pune Superiants (RPS) பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (1 - 56 வரையிலான கேள்விகள்) ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 56 புள்ளிகள் 1 1) Sunrisers Hyderabad v Royal Challengers Bangalore 2) 2) Rising Pune Supergiants v Mumbai Indians 3) Gujarat Lions v Kolkata Knight Riders 4) Kings XI Punjab v Rising Pune Supergiants 5) Royal Challengers Bangalore v Delhi Daredavils 6) Sunrisers Hyderabad vs Gujrat Lions 7) Mumbai Indians vs Kolkata Knight Riders 8) Kings XI Punjab vs Royal Challengers Bangalore 9) Rising Pune Supergiants vs Delhi daredavils 10) Mumbai Indian vs Sunrisers Hyderabad 11) Kolkata Knight Riders vs Kings XI Punjab 12) Royal Challengers Bangalore vs Mumbai Indians 13) Gujrat Lions vs Rising Pune Supergiants 14) Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad 15) Delhi Daredevils vs Kings XI Punjab 16) Mumbai Indians vs Gujarat Lions 17) Royal Challengers Bangalore Vs Rising Pune Supergiants 18) Delhi Daredavils Vs Kolkata Knight Riders 19) Sunrisers Hyderabad vs Kings XI Punjab 20) Gujrat Lions vs Royal Challengers Bangalore 21) Sunrisers Hyderabad vs Delhi Daredavils 22) Kings XI Punjab vs Mumbai Indians 23) Kolkata Knight Riders vs Gujarat Lions 24) Delhi Daredevils vs Mumbai Indians 25) Rising Pune Vs Sunrisers Hyderabad 26) Gujrat Lions vs Kings XI Punjab 27) Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore 28) Mumbai Indians vs Rising Pune Supergiants 29) Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad 30) Rising Pune Supergiants vs Kolkata Knight Riders 31) Royal Challengers Bangalore vs Gujrat Lions 32) Kolkata Knight Riders vs Delhi Daredavils 33) Kings XI Punjab vs Sunrisers Hyderabad 34) Rising Pune Supergiants vs Royal Challengers Bangalore 35) Gujarat Lions vs Mumbai Indians 36) Kings XI Punjab vs Delhi Daredavils 37) Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders 38) Mumbai Indians Vs Royal Challengers Bangalore 39) Rising Pune Supergiants vs Gujrat Lions 40) Delhi Daredevils vs Sunrisers Hyderabad 41) Kolkata Knight Riders Vs Rising Pune Supergiants 42) Delhi Daredavils vs Gujrat Lions 43) Royal Challengers Bangalore vs Kings XI Punjab 44) Sunrisers Hyderabad vs Rising Pune Supergiants 45) Mumbai Indians Vs Delhi Daredavils 46) Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders 47) Kings XI Punjab Vs Gujrat Lions 48) Sunrisers Hyderabad Vs Mumbai Indians 49) Kings XI Punjab vs Kolkata Knight riders 50) Gujrat Lions vs Delhi Daredavils 51) Mumbai Indians vs Kings XI Punjab 52) Delhi Daredavils vs Rising Pune Supergiants 53) Gujarat Lions vs Sunrisers Hyderabad 54) Kolkata Knight Riders vs Mumbai Indians 55) Rising Pune Supergiants vs Kings XI Punjab 56) Delhi Daredavils vs Royal Challengers Bangalore ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு போகும். 1) 1ம் 2 ம் இடத்தில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் (கேள்வி 57) விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். 2) 3ம் 4ம் இடத்தில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் (கேள்வி 58) விளையாடும். 3) Qualifier 1 இல் தோல்வி அடைந்த அணி Eliminator போட்டியில் (கேள்வி 59) வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும். 57) IPL 2017 Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்) 58) IPL 2017 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) 59) IPL 2017 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) 60) IPL 2017 Final இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) 61) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) 62) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) 63) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) 64) இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) 67) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) 68) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) போட்டி விதிகள் 1) போட்டி முடிவு திகதி 04.04.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி. 2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். 4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்
 8. 1 point
  பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் அவனிடம் 50 சதம் இல்லாதது அல்ல.மாறாக அவன் அதி பணக்காற வீட்டு பிள்ளையாக இருந்ததே.அவனைக் பாடசாலையிலிருந்த கூட்டிச் செல்வதற்க்கு கார் வரும்.அதால மற்ற பிள்ளைகளுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிக்கும் பாக்கியம் அவனக்கு கிடைப்பதில்லை.ஒரு முறை இவனும் மறடறவர்களுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிப்பதை பார்த்த சாரதி தகப்பனிடம் போட்டுக் கொடுத்ததால் அதுவே முதலும் கடைசி முறையுமாகப் போய் விட்டது.கால ஓட்டத்தில் அவன் தனது தகப்பனின் வியாபரத்தை நிர்வகிக்கும் பொறுப்பையேற்றுக் கொன்டான். இப்போது அவனது பொறுப்பில் பல வேலையாட்க்கள் உதவிக்குப் பலர்.அந்த 50 சத ஐஸ் பழ கனவு மடடும் இன்னும் தீரவில்லை. குற்றம் குறை மன்னித்தருள வேண்டும்
 9. 1 point
  கசக்கி எறியும் நோட்டீஸ் காற்றில் பறக்காது ஆனாலும் கசக்காமல் கத்தையாக எறிந்து காற்றில் பறக்கும் நோட்டிஸ்களைப் பாய்ந்து பாய்ந்து பிடிப்பதில் இருக்கும் சந்தோசம் அந்தமாதிரி இருக்கும் நோட்டீஸ் அந்த மாதிரி ஈழப்பிரியன்
 10. 1 point
 11. 1 point
 12. 1 point
  வணக்கம், இதுவரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. வாந்தி.....! தாயக மண்ணின் கோலங்கள் துருக்கியும்.... நானும். - தமிழ் சிறி. - குச்சி ஐஸ்பழம் அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? கடவுளின் மரண வாக்குமூலம்...... இது ஒரு பொன் மாலைப்பொழுது….. இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். நன்றி.
 13. 1 point
  சீரடி சாய்பாபா, அரவிந்தர் ஆசிரமம்,கர்நாடக ராகவேந்திரா சமாதி, சூரிய கதிர்களில் ஏதோ ஒருவிதமான கதிர்களை உள்வாங்கும் புதுச்சேரி ஆரொவில் தியானமண்டம். அட நம்ம பக்கத்து ஊரு ... திருவண்ணாமலை ரமண மகரிசி ஆசிரமம் எல்லாத்திலையும் உட்கார்ந்து தியானம் பண்ணி போட்டேன் .. ஒரு மண்ணும் பிடிபடல ..! அம்மாவின்ற சமாதியில் ஆளாளுக்கு உட்கார்ந்து தியானம் செய்வதை பார்த்தால் .. அம்மாவின்ற சமாதியில் ஏதோ ஒரு சக்தி இருக்கு போல கிடக்கு ..! அடுத்த முறை சென்னை சென்றால் நிச்சயம் அங்கு அமர்ந்து தியானம் செய்வன்..!! டிஸ்கி : ஒரு வேளை அம்மாவின்ற ஆன்மா என்னை தொடர்பு கொண்டு ..தமிழ்நாடு முதலமைச்சராக வேண்டினால் அம்மாவின்ற ஆன்மா ஆசிர்வாதத்தோடு தேர்தலில் போட்டியிட்டு நான் முதலமைச்சர் ஆவன்.!!! இதை எந்த கொம்பாதி கொம்பனாலும் ஏன் ஆண்டவனாலும் தடுக்க முடியாது சொல்லி போட்டேன் !!
 14. 1 point
 15. 1 point
  “அந்த 10 லைக்ஸ்தான் நேஷனல் ஜியோகிராபி விருது கொடுத்துச்சு!" - ‘கானுயிர்’ வருண் ஆதித்யா #VikatanExclusive வருண் ஆதித்யா... 25 வயதிலேயே 'நேஷனல் ஜியாகிராபி' விருது பெற்ற இளம் புகைப்படக் கலைஞர். கோவையை சேர்ந்தவர். கடந்த ஆண்டு இவர் எடுத்த 'பச்சை பாம்பு' புகைப்படத்திற்கு நேஷனல் ஜியாகிராபியின் சிறந்த கானுயிர் புகைப்படத்திற்கான விருது கிடைத்தது. வருண் ஆதித்யாவிடம் புகைப்பட அனுபங்கள் பற்றி பேசினோம்... தனது அனுபவங்களை உற்சாகமாக நம்மிடையே பகிர்ந்து கொண்டார். ''சின்ன வயசுல இருந்தே இயற்கை மீது காதல். நான் படிச்ச பள்ளியில் படிக்கறதைத் தவிர வேறு எதையும் சொல்லித் தரவில்லை. மாணவர்களிடம் இருந்து மற்ற எந்தத் திறைமையையும் அந்த பள்ளி எதிர்பார்த்ததே இல்லை. எப்போ பாரு படிப்பு படிப்புதான். என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் படிப்புல கெட்டி. எங்க குரூப்லேயே நான்தான் சராசரி. எப்போதும் டீச்சர்ஸ் ஏதாவது குறைச் சொல்லி திட்டிக்கிட்டே இருப்பாங்க. அது எனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிச்சு. படிப்புல நாட்டம் குறைஞ்சு போச்சு. ஆனாலும் எப்படியோ படிச்சு பாஸாகிட்டேன். அப்பா, அம்மாவுக்கு வங்கி ஒன்றில் பணி. அதனால, வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வசதி இருந்தது. சிறு வயது முதலே பெற்றோருடன் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். தேக்கடி போன்ற அழகான இடங்களைப் பார்த்த போது இயற்கையின் வசீகரம் என்னை இழுத்தது. வனங்களை நேசிக்க வைத்தது. கோவையில் டிகிரி முடிச்ச பிறகு, லண்டனில் எம்.பி.ஏ பண்ணினேன். லண்டன் ஒரு அழகான நகரம். எங்கு பார்த்தாலும் பூங்காக்கள் தான். பூங்காக்கள், பறவைகளை சும்மா விளையாட்டுக்கு செல்போனில் 'கிளிக்' செய்ய ஆரம்பித்தேன். அதனை நண்பர்களுடன் ஷேர் செய்து கொண்டிருப்பேன். இப்படித்தான் தொடங்கியது எனது போட்டோகிராபி வாழ்க்கை'' எனக் கூறும், வருணுக்கு ஃபேஸ்புக்தான் க்ரியா ஊக்கி. ஃபேஸ்புக்கில் நாம் போடும் ஸ்டேட்டசுக்கு 'லைக்' வந்தால் மனசு கொஞ்சம் துள்ளும்... அதுமாதிரிதான் வருணும் விளையாட்டுக்காக ஃபேஸ்புக்கில் ஒரு படத்தை ஷேர் செய்துள்ளார்.முதலில் 10 லைக்ஸ் கிடைத்துள்ளது. தினமும் 10 பேராவது, வருண் படத்துக்கு லைக்ஸ் போட்டு, அவர்களை அறியாமலேயே பிற்காலத்தில் விருது பெறும் அளவுக்கு அவரைத் தயார் செய்துள்ளனர். ஃபேஸ்புக் தந்த ஊக்கம் வருண் ஆதித்யாவை லண்டன் முழுக்க சுற்றி சுற்றி கிளிக் செய்ய வைத்துள்ளது. 'உண்மைதான் சார். 'பேஸ்புக்கில் கிடைத்த அந்த 10 லைக்சுக்கு ஆசைப்பட்டுத்தான் போட்டோக்களை எடுத்துத் தள்ளினேன்.டிஎஸ்எல்ஆர் கேமரா ஒன்றும் வாங்கிக் கொண்டேன். லண்டனில் கண்ணில் பட்டதெல்லாம் எனக்கு போட்டோதான். யூடியுப், கூகுளும்தான் எனக்கு புகைப்பட ஆசான்கள். காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை பார்க்கும் பணியில் எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. அப்போதே இனி போட்டோகிராபிதான் வாழ்க்கை என முடிவு செய்திருந்தேன். ஒரு கட்டத்தில் ‘நேஷனல் ஜியாகிராபி' போட்டோகிராபர்களை ஃபேஸ்புக்கில் பின் தொடர ஆரம்பித்தேன். லண்டனில் ஆங்காங்கே 'கேங்ஸ்டர்ஸ்' மோதிக் கொள்வார்கள். என் கண் முன்னே அப்படி ஒரு மோதல் நடந்தது. அதனைப் பார்த்து ஆக்ஷன் படங்கள் எடுக்கும் ஆர்வம் உருவானது. பறக்கும் பறவைகள் புகைப்படங்களை அப்படித்தான் எடுக்க ஆரம்பித்தேன். பறவைகளை புகைப்படம் எடுப்பதில்தான் ஒரு போட்டோகிராபருக்கு சவாலே இருக்கிறது. 2013ம் ஆண்டு மறக்கவே முடியாத அந்த நிகழ்வு நடந்தது. 'நேஷனல் ஜியோகிராபி' இதழ் நடத்திய போட்டி ஒன்றில் முதல் பரிசு கிடைத்தது. அந்த வெற்றி என்னை கோஸ்டாரிகா வரை செல்ல வைத்தது. நேஷனல் ஜியாகிராபியில் புகழ்பெற்ற போட்டோகிராபர் மிக்கேல் மெல்ஃபோர்டுடன் இணைந்து பணி புரியவும் வைத்தது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். போட்டோகிராபி ஒரு விலை உயர்ந்த 'ஹாபி'. எனது பெற்றோர் மிகுந்த ஊக்கமளித்தனர். கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து கேமரா, லென்சுகளை வாங்கித் தந்தனர். 'நேஷனல் ஜியாகிராபி' விருது பெற்றதில் இருந்தே நான் தொடர்ந்து டிராவல் செய்ய ஆரம்பித்து விட்டேன். மாதத்திற்கு இரு முறை என்று பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்வேன். ஒவ்வொரு பயணமுமே சவால்களும் செலவு மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால், நாம் எதிர்பார்ப்பது போல புகைப்படங்கள் அமைந்து விட்டால் நாம் சந்தித்த கஷ்டங்களை எல்லாம் மறந்து விடுவோம்'' என வருண் ஆதித்யா சொல்லும் போதே நாம் மிரண்டு போனோம். மேலும் அவர் ஒரு போட்டோகிராபருக்கான குணாதிசயங்களை பட்டியலிட்ட போது மேலும் மிரண்டோம். ''புகைப்படக் கலைஞன் என்பவன் நல்ல படம் அமையும் வரை திருப்தி அடைந்து விடக் கூடாது. திரும்ப திரும்ப முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு புகைப்படத்திலும் வித்தியாசத்தைக் காட்ட முயற்சி செய்யணும் . வித்தியாசமானக் கோணத்தில் சிந்திக்கணும். திருப்திபா என மனசு சொன்னால்தான் மூட்டையை கட்ட வேண்டும்' 'என்கிறார்.
 16. 1 point
 17. 1 point
 18. 1 point
  அப்ப அஸ்திவாரம் ரொம்பதான் ஸ்ட்ரோங் போல இருக்கு - சரி நேரம் கிடைக்கும்போது நானும் ஒரு மாடியை கட்டுறன்.
 19. 1 point
  எதோ நானும் தலைவனும் இதெல்லாம் தெரிஞ்சு கொண்டா பதிவு போட்டம்
 20. 1 point
  பெல்லியையும் பரதத்தையும் கலந்து ஒரு டான்ஸ் ஐநாவிலை போட்டிருந்தால் இந்தியாவை வாழ்க்கையிலை மறக்கமாட்டாங்கள்.
 21. 1 point
  தகப்பன் ரஜனிக்கு பாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா பஞ்சு அருணாசலம் எஸ்பி முத்துராமன் பாலாஜி போன்றோர் பயிற்சி கொடுத்து பட்டை தீட்டியதால்தான் இன்று சுப்பர் ஸ்டார்..... இல்லையேல் இன்றும் மகளைப்போல் தையக்க தையக்க தான்....
 22. 1 point
  Mumbai Indians IPL 2017 Team Squad (Auction Results) Owner Indiawin Sports Pvt. Ltd Coach Mahela Jayawardene Captain Rohit Sharma Venue Wankhede Stadium Mumbai Indians has spent wisely in the Auction 2017 bringing in some quality players. They brought in Mitchel Johnson for ₹2 crore ($248,000) followed by two quality indian players in K Gawtham (₹3.2 crore) and Karn Sharma (₹3.2 crore). Below is the entire squad with Auction buys. Auction Results: Mumbai Indians brought in 5 players in IPL auction 2017 with their first choice players tipping the balance of the squad to a good level. Australian pacer, Mitchel Johnson and Indian duo Karm Sharma and K Gawtham will improve their playing XI. While Nicholas Pooran and Saurab Tiwary are good squad players. Mumbai Indians IPL 2017 Team Squad – (Auction Results) NO# RETAINED AUCTION BUYS 1 Rohit Sharma (Captain) Mitchell Johnson (₹ 2 crore) 2 Harbhajan Singh Karn Sharma (₹ 3.2 crore) 3 Ambati Rayudu K Gawtham (₹3.2 crore) 4 Tim Southe Nicholas Pooran (₹30 lakh) 5 Mitchell McClenaghan Saurab Tiwary (₹30 lakh) 6 Kieron Pollard Asela Gunaratne (₹30 lakh) 7 Lendl Simmons Kulwant Khejroliya (₹10 lakh) 8 Lasith Malinga 9 Jose Buttler 10 Shreyas Gopal 11 Hardik Pandya 12 Jitesh Sharma 13 Siddhesh Lad 14 R Vinay Kumar 15 Parthiv Patel 16 Nitish Rana 17 Jasprit Bumrah 18 J Suchith 19 Deepak Punia 20 Delhi Daredevils IPL 2017 Team Squad (Auction Results) Owner GMR Sports Pvt Ltd Coach Paddy Upton Captain Zaheer Khan Venue Feroz Shah Kotla Ground Widely known as “DD”, Delhi has retained 18 players from 2016 squad including 13 local indian players and 5 foreign players. They have retained the services of Quinton de Kock and KP Duminy while Zaheer Khan will continue to lead the team for 2017 season. Delhi Daredevils 2017 Auction Results: With ₹21.50 crores available for 2017 Auction Delhi were the most active team in Auction bringing in several quality players. They spent big on two foreign bowlers Kagiso Rabada was bought for ₹5 crore followed by Pat Cummins (₹4.5 crore). Corey Anderson (₹1 crore) and Angelo Mathews (₹2 crore) combine several local indian players. Below is the entire Delhi Daredevils squad for 2017 season. Delhi Daredevils 2017 Squad (Auction Results) NO# PLAYERS RETAINED AUCTION BUYS 1 Zaheer Khan (Captain) Kagiso Rabada (₹5 crore) 2 Jean-Paul Duminy Pat Cummins (₹4.5 crore) 3 Chris Moris Angelo Mathews (₹2 crore) 4 Quinton de Kock Core Anderson (₹1 crore) 5 Carlos Brathwait M Ashwin (₹1 crore) 6 Sam Billings Aditya Tare (₹25 Lakh) 7 Amit Mishra Shashank Singh (₹10 Lakh) 8 Jayant Yadav Ankit Bawne (₹10 Lakh) 9 Mayank Agarwal 10 Mohammad Shami 11 Saurabh Tiwary 12 Shahbaz Nadeem 13 Shreyas Iyer 14 Karun Nair 15 Sanju Samson 15 Rishabh Pant 17 CV Milind 18 Syed Ahmed Gujarat Lions (Rajkot) IPL 2017 Team Squad (Auction Results) Owner Intex Technologies Coach Brad Hodge Captain Suresh Raina Venue Saurashtra Cricket Association Stadium Gujarat Lions had a superb first season in IPL as they finished top of the group stages. Going into the 2017 season they have released 8 players mostly local indian players while they retain majority of their oversees players and some big indian names. Rajkot Budget for IPL 2017 Auction Results: Rajkot has already spent Rs 51.65 crores in retaining 16 of their players from last year’s squad which leaves them with only Rs. 14.35 crores going into the important 4 February 2017 auction weekend. Below is the list of their entire squad before the auction and the players they retained and let go. Gujarat Lions (Rajokot) – IPL 2017 Team Squad (Auction Results) NO# PLAYERS RETAINED AUCTION BUYS 1 Suresh Raina (Captain) Jason Roy (₹1 crore) 2 Ravindra Jadeja Manpreet Gony (₹60 lakh) 3 Brendon McCullum Munaf Patel (₹30 lakh) 4 James Faulkner Akshdeep Nath (₹10 lakh) 5 Dwayne Bravo Pratham Singh (₹10 lakh) 6 Dwayne Smith Tejas Baroka (₹10 lakh) 7 Dhawal Kulkarni Shubham Agarwal (₹10 lakh) 8 Aaron Finch Chirag Suri (₹10 lakh) 9 Praveen Kumar Shelley Shaurya (₹10 lakh) 10 Andre Tye Basil Thampi (₹85 lakh) 11 Karun Nair Nathu Singh (₹50 lakh) 12 Pradeep Sangwan 13 Shivil Kaushik 14 Umang Sharma 15 Shabad Jakati 16 Jaydev Shah Kings XI Punjab 2017 IPL Team Squad (Auction Results) Owner KPH Dream Cricket Private Limited Coach Sanjay Bangar Captain Murali Vijay Venue IS Bindra Stadium Kings XI Punjab had only released four players ahead of the 2017 season and retained pretty much the entire squad from abysmal 2016 season. They spent wisely in Auction 2017 and brought in some quality players at decent prices. We take a look at their squad after the 2017 Auction. Kings XI Punjab IPL Auction Results: Kings XI Punjab had Rs ₹23 crore going into the Auction and unlike the other teams they spent the money wisely. They spent mostly on talented indian youngsters like Varun Aaron (₹2.8 crore), T Natarajan (₹3 crore) and some cheap foreign buys like Eoin Morgan (₹2 crore) and Martin Guptill (₹50 lakh). Here is how their squad looks after IPL Auction 2017. Kings XI Punjab – IPL 2017 Team Squad (Auction Results) NO# RETAINED AUCTION BUYS 1 Murali Vijay Varun Aaron (₹2.8 crore) 2 Shaun Marsh T Natarajan (₹3 crore) 3 Glenn Maxwell Eoin Morgan (₹2 crore) 4 David Miller Martin Guptill (₹50 lakh) 5 Marcus Stoinis Matt Henry (₹50 lakh) 6 Wriddhiman Saha Darren Sammy (₹30 lakh) 7 Axer Patel Rahul Tewatia (₹25 lakh) 8 Shardul Shakur Rinku Singh (₹30 lakh) 9 Anureet Singh 10 Gurkeerat Singh 11 Manan Vohra 12 Nikhil Naik 13 Rishi Dhawan 14 Mohit Sharma 15 Sandeep Sharma 16 Swapnil Singh 17 Pardeep Sahu 18 KC Cariappa 19 Armaan Jafeer Kolkata Knight Riders IPL 2017 Team Squad (Auction Results) Owner Knight Riders Sports Private Ltd Coach Simon Katich Captain Gautam Gambhir Venue Eden Gardens Kolkata Knight Riders had already retained 14 players from last year’s squad and they went big in the IPL auction 2017 spending big on Trent Boult (₹5 crore), Chris Woakes (₹4.2 crore) and Nathan Coulter-Nile (₹3.5 crore) to balance out their squad. Kolkata’s IPL Auction Results: having retained 14 players Kolkata had Rs ₹19.75 crore to spend during 2017 IPL auction. They needed couple of quality all rounders and they went in and bought some good players. Below is the entire squad of Kolkata Knight Riders of 2017 season. Kolkata Knight Riders Team Squad 2017 (Auction Results) NO# RETAINED PLAYERS AUCTION BUYS 1 Gautam Gambhir (Captain) Chris Woakes (₹4.2 crore) 2 Robin Uthappa Trent Boult (₹5 crore) 3 Piyush Chawla Nathan Coulter-Nile (₹3.5 crore) 4 Umesh Yadav Rishi Dhawan (₹55 lakh) 5 Manish Pandey Darren Bravo (₹50 lakh) 6 Yusuf Pathan Ishank Jaggi (₹10 lakh) 7 Sunil Narine (West Indies) Rovman Powell (₹30 lakh) 8 Chris Lynn (Australia) Sayan Ghosh (₹10 lakh) 9 Shakib Al Hasan (Bangladesh) Sanjay Yadav (₹10 lakh) 10 Andre Russell (West Indies) 11 Sheldon Jackson 12 Suryakumar Yadav 13 Kuldeep Yadav Rising Pune Supergiants IPL 2017 Team Squad (Auction Results) Owner RPSG Group Coach Stephen Fleming Captain Steve Smith Venue Maharashtra Cricket Association's International Stadium Pune Supergiants has released the most number of players (12) ahead of 2017 auction. Having finished second from bottom it was not a surprise they wanted to overhaul the squad. However most of the big name players are retained and they have already spent around Rs. 46.90 Crores leaving them with Rs. 19.10 crores for Auction 2017. Rising Pune Supergiants IPL Auction Results: Pune Supergiants made the headlines at the start of Auction 2017 buying much coveted Ben Stokes for ₹14.5 crore ($2.1 million) which left them short on available balance but they still managed to grab several low key yet quality players like Dan Christian (₹1 crore) and several local indian talent. Rising Pune Supergiants – IPL 2017 Team Squad (Auction Results) NO# PLAYERS RETAINED AUCTION BUYS 1 MS Dhoni Ben Stokes (₹14.5 crore) 2 Ajinkya Rahane Dan Christian (₹1 crore) 3 Ravichandran Ashwin Jaydav Unadkat (₹30 lakh) 4 Steven Smith (Captain) Rahul Chahar (₹10 lakh) 5 Faf du Plessis Saurabh Kumar (₹10 lakh) 6 Usman Khawaja Milind Tandon (₹10 lakh) 6 Mitchell Marsh Saurabh Kumar (₹10 lakh) 7 Ishan Kishan Lockie Ferguson (₹50 lakh) 8 Ankit Sharma Rahul Tripathi (₹10 lakh) 9 Ishwar Pandey 10 Baba Aparajith 11 Ashok Dinda 12 Jaskaran Singh 13 Adam Zampa 14 Ankit Sharma 15 Deepak Chahar 16 Ankush Bains Royal Challengers Bangalore (RCB) IPL 2017 Squad (Auction Results) Owner Royal Challengers Sports Private Ltd Coach Daniel Vettori Captain Virat Kohli Venue M. Chinnaswamy Stadium Like all the other IPL teams RCB retained all their main players from last year’s squad. 12 indian and 8 foreign players has been retained keeping the team balance and chemistry. Virat Kohli remains the highest paid IPL player after he was retained by Roayal Challengers Bangalore. Kohli is not the only top Indian player retained, RCB has kept the likes of Mandeep Singh, Kedar Jadev, Stuart Binny, Sachin Baby and KL Rahul. While oversees players like Chris Gayle, Ab De Villiers, Australia bowler Mitchell Starc and Adam Milne also retain their positions in the 2017 squad. Royal Challengers Bangalore IPL Auction Results: RCB had to overhaul their auction strategy after Mitchell Starc withdrew at the last moment. However they went in and bought highly rated bowler Tymal Mills for (₹12 crore) followed by two decent domestic players in Aniket Choudhary (₹2 crore) and Pawan Nagi (₹1 crore). Below is the entire squad of RCB for 2017 season. Royal Challengers Bangalore 2017 Team Squad (Auction Results) NO# RETAINED AUCTION BUYS 1 Virat Kohli (Captain) Tymal Mills (₹12 crore) 2 AB deVillers Aniket Choudhary (₹2 crore) 3 Chris Gayle Pawan Nagi (₹1 crore) 4 Mitchell Starc Billy Stanlake (₹30 lakh) 5 Stuart Binny Perveen Dubay (₹10 lakh) 6 Adam Milne 7 Travis Head 8 Shane Watson 9 Harshal Patel 10 Kedar Jadhav 11 Sarfaraz Ahmed 12 Sreenath Aravind 13 Yuzvendra Chahal. 14 Sachin Baby 15 Samuel Badree 16 Iqbal Abdulla 17 Tabraiz Shamsi 18 Avesh Khan 19 Mandeep Singh Sunrisers Hyderabad 2017 IPL Team Squad (Auction Results) Owner SUN TV Network Coach Tom Moody Captain David Warner Venue Rajiv Gandhi Intl. Cricket Stadium Hyderabad has retained as many as 17 players from the 2016 winning squad including 12 indians and 5 foreign players. Sunrisers let go the likes of Eoin Morgan, Trent Boult and Karn Sharma in just 6 players released from the squad. While most of the big guns has been retained plus some quality youngsters. Sunrisers Hydrabad IPL Auction Results– Having retained 17 players they have already spent Rs 45.10 crores which leaves their remaining purse to around 20.90 crores. They let go Eion Morgan and Trent Bolt from their squad while retained the likes of David Warner and Kane Williamson. Sunrisers Hyderabad – IPL 2017 Team Squad (Auction Results) NO# PLAYERS RETAINED AUCTION BUYS 1 David Warner (Captain) Rashid Khan (₹4 crore) 2 Shikhar Dhawan Mohammed Siraj (₹2.6 crore) 3 Yuvraj Singh Eklavya Dwivedi (₹75 lakh) 4 Bhuvneshwar Kumar Chris Jordan (₹50 lakh) 5 Moises Henriques Mohammad Nabi (₹30 lakh) 6 Deepak Hooda Ben Laughlin (₹30 lakh) 7 Kane Williamson Tanmay Agarwa (₹10 lakh) 8 Ben Cutting Pravin Tambe (₹10 lakh) 9 Vijay Shankar 10 Bipul Sharma 11 Mustafizur Rehman 12 Naman Ojha 13 Ashish Nehra 14 Ricky Bhui 15 Abhimanyu Mithun 16 Siddharth Kaul 17 Brindar Sran
 23. 1 point
  குமர்ப்பிள்ளை - சிறுகதை அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி கீழ்க்காணும் சம்பவத்தைப் படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை; நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து, நான் நிறைய சம்பாதித்தேன். மனைவி போன பிறகு நான்கு பிள்ளைகளும் நான்கு நாடுகளில் தங்கிவிட்டார்கள். குளிர் கூடக்கூட பகல் குறையும் நாடு அது. என் பிறந்த ஊரில் மீதி வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு. போர் முடிந்ததும் யாழ்ப்பாணத்துக்குப் போய், நான் பிறந்து வளர்ந்த வீட்டைத் திருத்தி எடுத்துத் தங்கினேன். இருபது வருடங்களுக்குப் பிறகு என் சொந்த ஊரைப் பார்க்கிறேன். உடையாத ஒரு வீட்டைக்கூடக் காண முடியவில்லை. கோயில்களின் நிலைதான் மோசம். பார்த்துப் பார்த்து, தேர்வுசெய்து குண்டு போட்டது போலிருந்தது. எல்லாமே தரைமட்டமாகிவிட்டன. என் அப்பா விட்டுப்போன சில காணிகளும் வீடுகளும் இருந்தன. ஒரு காணியை விற்று, அந்தக் காசில் எங்கள் ஊர் கோயிலைத் திருத்தி கும்பாபிஷேகம் செய்வித்தேன். ஊர் சனங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது. அடுத்த ஊரில் இருந்தும் ஆட்கள் வந்து என்னைப் பார்த்தார்கள். அவர்களுடைய கோயிலும் இடிந்துவிட்டது. ஒரு வீட்டை விற்று அந்தக் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்வித்தேன். இப்படித் தொடர்ந்து என் காணிகளையும் வீடுகளையும் விற்று, நான்கு கும்பாபிஷேகங்கள் நடத்தினேன். எனக்கு ஓர் உதவியாளர் இருந்தார். நாள் முழுக்க ஒரே வேலையை அலுப்பில்லாமல் செய்யக்கூடியவர். சண்முகம் என்று பெயர். அவர்தான் காரியதரிசி; அவர்தான் டிரைவர். ஒரு மனுஷி, தினமும் வந்து சமைத்துவிட்டுப் போவார். என் வாழ்வில் முன் ஒருபோதும் அனுபவித்திராத ஒருவித அமைதி நிலவியது. அப்படி நினைத்தேன். அடுத்த நாளே எல்லாம் மாறின. வாசல் கேட்டில் ஒருவர் வந்து நின்று, ``ஐயா...’’ என்று அழைத்தார். சண்முகம் போய் ஏதோ பேசி, அவரை அனுப்பிவிட்டு வந்தார். அடுத்த நாளும் அதே நேரம் வந்தார். சண்முகம் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. மூன்றாவது நாள் கேட்டிலே நின்று, `‘ஐயா... என்னிடம் ஒரு குமர் இருக்கிறது’’ என்று கத்தினார். நான் கையைக் காட்ட சண்முகம் அவரை உள்ளே அழைத்து வந்தார். அவரின் மகளுடைய கல்யாணத்துக்குப் பண உதவி கேட்டு வந்திருக்கிறார் என நினைத்தேன். அவருக்கு வயது அறுபது இருக்கும். வேட்டி உடுத்தி மேல் சட்டை அணியாமல், துவைத்துத் துவைத்துப் பழுப்பேறிய ஒரு சால்வையை காந்திபோல போத்தியிருந்தார். அவர் கழுத்திலே பதக்கம்போல ஒரு திறப்பு தொங்கியது. நெற்றி நிறைய விபூதி. இன்றைக்கோ, நாளைக்கோ, முந்தாநாளோ செத்துப்போகத் திட்டமிட்டதுபோல எலும்பு தள்ளி மெலிந்துபோயிருந்தார். ஆனால், அவர் முகத்தில் ஜொலித்த சாந்தமும் அமைதியும் புன்னகையும் அபூர்வமாக இருந்தன. கைகூப்பி, ``நமசிவாயம்’’ என்றார். நானும் சொன்னேன். ``அமருங்கள்.’’ நெஞ்சை வலது கையால் தொட்டு, ‘`நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’’ என்று சொல்லியவாறு உட்கார்ந்தார். மறுபடியும், ‘`என்னிடம் ஒரு குமர் இருக்கிறது’’ என்றார். ‘`மகளுக்கு மணம் பேசுகிறீர்களா?’’ என்றேன். `‘ஓ... அப்படி ஒன்றுமில்லை. கும்பாபிஷேகம் செய்வதற்குப் பழைய கோயில் ஒன்று உண்டு. மிகவும் விசேடமானது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சண்பகப்பெருமாள் என்கிற மன்னன் கட்டியது. போர்த்துக்கேயர் படையெடுப்பில் கோயிலை மறைத்து மூடிவிட்டார்கள். இந்தச் சரித்திரம், சிங்கள ராணுவம் உள்பட ஒருவருக்கும் தெரியாது. அதனால்தான் அவர்கள் குண்டுபோட்டு அழிக்கவில்லை. தானாகவே சிதிலமடைந்துகிடக்கிறது. நீங்கள் மனம்வைத்தால் கோயிலைப் புனருத்தாரணம் செய்யலாம். உங்களை நம்பி வந்திருக்கிறேன்’’ என்றார். `‘இதோ பாருங்கள்... சொத்து எல்லாவற்றையும் விற்று, நான்கு கும்பாபிஷேகங்கள் செய்து முடித்துவிட்டேன். இனிமேல் விற்பதற்கு ஒன்றுமே இல்லை. மன்னித்துவிடுங்கள்’’ என்றேன். ``மன்னிப்பா... நீங்கள் எனக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்’’ என்றார். பின்னர் சட்டென எழுந்து போய்விட்டார். அவருடன் என் நிம்மதியும் போனது. அன்று இரவு எனக்குத் தூக்கம் இல்லை. எப்படியும் அவருடைய கோரிக்கையை நிறைவேற்றிவிட வேண்டும் எனத் தோன்றியது. ஒரு குமரைக் கரைசேர்க்கப் பாடுபடுவதுபோல, இவர் இதே சிந்தனையாக அலைந்தார் என்பது தெரிந்தது. நான் மறுப்பு தெரிவித்தபோதும் அவர் புன்னகை மாறவில்லை. `நீங்கள் எனக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்’ என்றார். அவரை மறுபடியும் தொடர்புகொள்ள வேண்டும் என நினைத்தபடியே அன்றைய இரவைக் கழித்தேன். அடுத்த நாள் காலை சண்முகம் ஓடிவந்து, கதவுக் குமிழைப் பிடித்துக்கொண்டு மூச்சுவாங்க நின்றார். ``என்ன?’’ `‘நேற்று வந்தவர் மறுபடியும் வந்திருக்கிறார்.’’ எனக்கு மகிழ்ச்சி. நான் அவரைத் தேடிப் போகத் தேவையில்லை. ``ஐயா... ஒரு வேண்டுகோள். நீங்கள் ஒருமுறை வந்து கோயிலைப் பாருங்கள். அதற்குப் பிறகு நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சரி’’ என்றார். நான் உடனே புறப்பட்டேன். சண்முகம் காரை வெளியே எடுத்தபோது, ‘`மன்னிக்க வேண்டும் ஐயா. நான் காரிலே பயணிப்ப தில்லை. நடந்து வருகிறேன். நீங்கள் கோயிலுக்குப் போங்கள்’’ என்றார். நான் முதலில் அங்கே போய் என்ன செய்வது? நானும் அவருடன் நடப்பது என முடிவுசெய்தேன். போகும்போது உரையாடி அவருடைய சரித்திரத்தையாவது தெரிந்துகொள்ளலாம். நடக்கத் தொடங்கிய பிறகுதான் தெரிந்தது, கோயிலின் தூரம் ஆறு மைல் என்று. `நாவுக்கரசன்’ என்பது அவராகவே வைத்துக்கொண்ட பெயர். அவருடைய இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. திருநாவுக்கரசர் மேல் அவருக்கிருந்த பக்தியால் அப்படிப் பெயர் சூட்டிக்கொண்டாராம். நாவுக்கரசர் என்றால் அவர் ஒருவர்தான். அதனால், தன் பெயரை `நாவுக்கரசன்' எனச் சற்று மாற்றிவைத்தார். அப்பருடைய தேவாரங்கள் 3,000 அவருக்குப் பாடம். பதிகங்களைத் தினமும் தான் பாடுவதாகச் சொல்லி, `சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்’ என்ற தேவாரத்தை, நடந்துகொண்டே இனிய குரலில் பாடினார். ஒரு மைல் தூரம் நடந்திருப்போம். எனக்கு இளைத்தது. ``கழுத்திலே என்ன திறப்பு?’’ என்று கேட்டேன். ``அதுவா... மடத்தின் திறப்பு’’ என்றார். ``மடத்திலே நிறைய பொருள்கள் இருக்குமா?’’ ``வேறொன்றுமில்லை. மாடுகள் உள்ளே புகுந்து படுத்துவிடும்’’ என்றார். மிகப்பெரிய வாழைத்தோட்டத்துக்கு ஒருகாலத்தில் சொந்தக்காரராக இருந்தார். மனைவியும் வசதியான இடத்திலிருந்து அவருக்கு வாய்த்திருந்தார். வாழைத்தோட்ட லாபத்தில் இரண்டு லாரிகள் வாங்கினார். அவையும் லாபம் கொடுக்க, மேலும் மேலும் வாங்கி செல்வத்தைப் பெருக்கினார். ஒரு மகனும் பிறந்தான். பணம் சேரச் சேர மனைவி பித்துப்பிடித்தவள்போல ஆனாள். பணவெறியில் ஆடினாள். மகனும் வளர்ந்து அவனையும் பேராசை உலுக்கியது. அவர் வாழ்க்கையில் பெரும் விரிசல் விழ ஆரம்பித்தது. எத்தனை செல்வம் இருந்தால் என்ன, நிம்மதி இல்லாவிட்டால் வாழ்க்கை ஏது? அவர்களுடைய பிரிவுக்கான முதல் காரணம் அவர் மனைவியின் முகத்தில் வாய் இருந்ததுதான்; இரண்டாவது காரணம், இந்தக் கோயில். இது பரம்பரையாக மனைவியின் குடும்பத்துக்குச் சொந்தமானது. கோயிலை நிர்மாணிக்க அவர் முடிவெடுத்தபோது, அவள் மறுத்து பத்ரகாளியாக மாறினாள். அவருடைய சொத்துகள் முழுவதையும் அவளுக்கும் மகனுக்கும் கொடுத்தார். கோயிலை தன் பெயருக்கு ஒரு கடுதாசியில் எழுதி வாங்கிக்கொண்டார். இப்போது கோயில் இருக்கிறது. அதைப் புனரமைக்கப் பொருள் இல்லை. அன்றிலிருந்து அவர் சபதம் எடுத்தார். காசை, கையால் தொடுவதில்லை. காரில் பயணம் செய்வதில்லை. கோயில் மடத்திலே தங்கியிருக்கிறார். காலையில் ஒரு தேநீர், இரவு கோயில் பிரசாதம் என்று கடவுள் தொண்டில் கழிக்கிறார். ``ஐயா... கோயில் கும்பாபிஷேகத்தை மட்டும் நடத்திவிட்டால், நான் பிறந்ததற்கான பயன் கிட்டியதாக நினைப்பேன்’’ என்றார். மிகப் பழைமையான கோயில்தான். நாவுக்கரசன் சொன்ன சரித்திரத்தை நான் எங்கேயும் படித்ததில்லை. ஆனால், வில்லும் அம்பும் ஆயுதங்களாக வைத்திருந்த யாரோ ஓர் அரசன் ஒருகாலத்தில் தன் பெயர் நிலைத்துநிற்க வேண்டும் எனக் கோயிலைக் கட்டி எழுப்பியிருக்கிறான். வயதான பெரிய மாமரம் ஒன்று வாசலிலே பிஞ்சுகளுடன் நின்றது. தலவிருட்சமாக இருக்கலாம். நூறு, இருநூறு, ஐந்நூறு வருடங்களுக்கு முன் எப்படிக் காய்த்ததோ, அப்படியே இன்றும் காய்த்தது. கோயில் தனக்கு மேலே தானே விழுந்து இடிந்துகொண்டிருந்தது. என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நாவுக்கரசன் அவசரமாக உள்ளே நுழைந்தார். கருவூலத்தைப் பார்வையிட்ட நான் திடுக்கிட்டுத் துள்ளி ஓர் அடி பின்நகர்ந்தேன். மீண்டும் கூர்ந்து பார்த்தேன். படங்களாகப் பார்த்திருக்கிறேன். முதன்முதல் நேரில் பார்க்கிறேன். ஸ்ரீசக்கரம்.அதுவும் மூன்று பரிணாமங்களில். எனக்குத் தெரிந்து ஸ்ரீசக்கரம் அமைந்த கோயில் நூறு மைல் சுற்றுவட்டாரத்தில் எங்கும் கிடையாது. மிகவும் சக்தி வாய்ந்தது எனச் சொல்வார்கள். யந்திரங்களின் ராஜா என்றும் கேள்விப்பட்டிருந்தேன். யந்திரத்தின் ஒவ்வொரு கோணத்திலும் தேவதைகள் வீற்றிருக்க, நடுவில் அம்பிகை எழுந்தருளியிருப்பதுதான் ஸ்ரீசக்கரத்தின் சிறப்பு என்பது நான் கேள்விப்பட்டது. தொண்ணூறுகளில் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் பதின்மூன்று மைல் நீளம், பதின்மூன்று மைல் அகலமான ஸ்ரீசக்கரத்தை வற்றிப்போன குளத்தின் கெட்டியான நிலத்தில் கண்டுபிடித்ததாக, செய்தித்தாள்களில் படித்தது நினைவுக்கு வந்தது. 9,000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, விமானி ஒருவர் தற்செயலாகக் கண்டாராம். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. உடல் நடுக்கம் குறையும் வரைக்கும் கொஞ்சம் அமைதியாகக் காத்திருந்தேன். திரும்பி நாவுக்கரசனைப் பார்த்தேன். அவருக்கு யந்திரம் பற்றிய முழுப் பெருமையும் தெரியாது. என் மனதில் அந்தக் கணம் தீர்மானித்துவிட்டேன். எப்படியும் கோயில் கட்டுமானப் பணியைத் தொடங்கிவிடுவது என்று. அந்த நாளும் கணமும் இன்றும் மனதில் நிற்கின்றன. சித்திரை மாதம், சுவாதி நட்சத்திரம். அற்புதங்கள் நடக்கத் தொடங்கிய தருணம். வீட்டுக்கு வந்தேன். என் மனம் அலைபோல எழுந்து எழுந்து விழுந்தது. உடம்பில் இரண்டு மடங்கு பலம் கூடியது. மனம் பளிங்குபோல துலக்கமாயிருந்தது. ஒரு பெரிய ஓட்டப்பந்தயத்தில் பங்குபெறத் தயாராவதுபோல உடல் முறுக்கேறிப் பரபரத்தது. ஒரு மின்னஞ்சல் வந்து அங்கே எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அதை வாசித்தபோது மின்னலடித்ததுபோல ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. முன்னர், கோயில் கும்பாபிஷேகம் செய்தபோது ஒரு நண்பருக்கு உதவி கேட்டு எழுதியிருந்தேன். அவர் பதில் எழுதவே இல்லை. இப்போது பத்து லட்சம் ரூபாய் அனுப்பியிருந்தார், பயன்படுத்தச் சொல்லி. அது ஆரம்பம்தான். அடுத்த நாள் காலை ஒருவரை சண்முகம் அழைத்துவந்திருந்தார். கும்பாபிஷேகம் செய்தி ஏற்கெனவே பரவிவிட்டது. நான்காவது கோயில் திருப்பணியைச் செய்த இன்ஜினீயர். கடுமையான நோயினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் நீண்டநாள் இருந்து பிழைத்தவர். ``நான் கோயில் நிர்மாணத்தை இலவசமாக முடித்துத் தருவேன்’’ என்றார். எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் உதவிகள் கிடைத்தன. என்னுடன் படித்த கட்டடக் கலைஞர் இலவசமாகத் திட்டம் வகுத்துத் தந்ததுடன் மேற்பார்வைசெய்யவும் சம்மதித்தார். ஒவ்வொரு நாளும் காலையில் ஆறு மைல் தூரம் நடந்து, நாவுக்கரசன் என் வீட்டுக்கு வந்துவிடுவார். தினம் அவரைப் பற்றிய ஒரு புது விஷயம் தெரியவந்து என்னை ஆச்சர்யப்படுத்தும். `சமையல்காரர்' எனச் சொல்ல மாட்டார்... `அடிசில்காரர்’ என்பார். `ஈசானிய மூலை, கன்னி மூலை' என்பார். எனக்கு ஒன்றுமே புரியாது. மக்கள் அவரிடம் நிறைய மரியாதை வைத்திருந்தனர். அவர் தேவாரம் இசைப்பதைக் கேட்க, ஒரு கும்பல் தினமும் வந்தது. `தலையே நீ வணங்காய்...’ எனத் தொடங்கும் பதிகத்தை மூச்சுவிடாமல் பாடுவார். ``ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’’ என்று கேட்டபோது, ``அதுவும் ஒரு மூச்சுப்பயிற்சிதான். ஆண்டவன் தந்த மூச்சை அவனுக்கே அர்ப்பணிக்கிறேன்’’ என்றார். `நெஞ்சம் உனக்கே இடமாக வைத்தேன்’ என்று நெஞ்சைத் தொட்டுக்கொண்டு அமர்வார். அவர் கண்களைப் பார்ப்பேன். உள்ளுக்கு ஏதோ எரிவதுபோல அவை சுடர்விடும். அன்றைய திட்டங்களைச் சொல்வார். கணக்குவழக்குகளைப் பார்ப்போம். தொற்றுவியாதிக் காரனைத் தொட்டாலும் தொடுவார்; காசைத் தொட மாட்டார். காரிலும் போக மாட்டார். நடந்தே செல்வார். சண்முகம், காரில் பணத்தைக் கொண்டுபோய் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் திரும்புவார். நீண்ட மூங்கில் கம்புகளில் சாரம் கட்டி, ஆட்கள் பரபரவென வேலை செய்தனர். கோயில் திருப்பணியில் முழுக் கிராமமும் ஈடுபட்டு, ஒரு திருவிழாபோலவே எல்லாம் நடந்தன. தொண்டர்கள் திரண்டு வந்தனர். பக்கத்து ஊர்களில் செய்தி பரவி, கேட்கும் முன்னரே உதவிகள் கிடைத்தன. இரண்டு ஸ்தபதிகள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். ஒரு செல்வந்தர், அவர்களின் முழுச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். ஒருநாள் செய்தி வந்தது... `நாவுக்கரசன் உடல் நலமில்லாமல் மடத்தில் படுத்துக்கிடக்கிறார்’ என்று. உடனே மடத்துக்குச் சென்று பார்த்தேன். சுருண்டுபோய்க்கிடந்தார். கழுத்தில் திறப்பு தொங்கியது. எலும்பும் தோலும் போர்வையில் சுற்றிக் காணப்பட்டது. அதே ஒருநேரச் சாப்பாடுதான். ``இது என்ன பிடிவாதம்; அம்பாளுக்காக உழைக்கிறீர். உண்பதனால் என்ன அபசாரம்?’’ என்றேன். வயிற்றைப் பிடித்துக்கொண்டு ‘ஆற்றேன், அடியேன்’ என உருண்டார். மருந்து எடுக்க மறுத்துவிட்டார். ``24 மணி நேரத்தில் இப்படி வயதாகிவிட்டீரே?’’ ‘`என் வாழ்நாளில் நான் இளமையாக இருக்கும் கணம் இதுதான். நாளை எனக்கு வயது ஒருநாள் மூப்பாகிவிடும்.’’ தன் இளமையை நிரூபிப்பதுபோல படுக்கையில் கிடந்தவர், சட்டென எழுந்து உட்கார்ந்து கணீரெனக் குரல் எடுத்துப் பாடினார். `நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே.’ இரண்டு நாள்கள் கழித்து நாவுக்கரசன் மறுபடியும் பணிசெய்ய வந்துவிட்டார். கும்பாபிஷேகம் தேதி குறிக்கப்பட்டுவிட்டது. சுபவேளை காலை 6:50 – 7:25 எனப் பத்திரிகைகள் எழுதின. ரேடியோக்கள் தொண்டர்களைப் பேட்டி கண்டு ஒலிபரப்பியது. முப்பதாயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அத்தனை பேருக்கும் அன்னதானம் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்து, அதற்கான ஏற்பாடுகளை நாவுக்கரசன் பார்த்தார். ஒருநாள் அவசரமாக ஓடிவந்தார். ``ஐயா... கணக்கீடுகள் பிழைத்துவிட்டன. நாற்பதாயிரம் அடியார்கள் வரக்கூடும். இருப்பில் இருக்கும் அரிசி போதாது’’ என்றார். கடைசி நேரம் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப்போய், ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றோம். அப்போது இன்னோர் அதிசயம் நிகழ்ந்தது. இப்போது நினைத்தாலும் எனக்கு மயிர்கூச்செறிகிறது. ஒரு லாரி நிறைய அரிசி மூட்டைகள் வந்து இறங்கின. பேப்பரில் செய்தியைப் பார்த்துவிட்டு யாரோ அன்பர் கொழும்பிலிருந்து அனுப்பியிருந்தார். அவர் யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. இவை எல்லாம் எப்படி நடந்தன என்று, இப்போது நினைக்கும்போது என்னாலேயே நம்ப முடியாமல் இருக்கிறது. கும்பாபிஷேகத்தை ஆகமவிதிகளின் பிரகாரம் நடத்த சாஸ்திர விற்பன்னர்களை அழைத்திருந்தோம். மேற்குப் பார்த்து அமைத்த யாகசாலைகளில் பூஜைகள் நடைபெற்றன. புனர்நிர்மாணம் தொடங்கும் முன்னரே மூலவிக்கிரகத்தில் உள்ள சக்தியைக் கும்பத்துக்கு மாற்றும் பூஜை நடைபெற்றிருந்தது. ``திருப்பணி முடிந்த பிறகு சக்தி மூலவிக்கிரகத்துக்குச் சென்றுவிடும். அதற்கான பூஜைகள் விரைவில் ஆரம்பமாகிவிடும்'' என்றார்கள். முழுக் கிராமமும் ஒளி விளக்கில் ஜொலித்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் திருவிழாக் கோலம். அன்று நடுச்சாமம் வாசல் கேட்டில் நின்று யாரோ அலறும் சத்தம் கேட்டது. விளக்கைப் போட்டு நாவுக்கரசனை உள்ளே அழைத்து வந்தார் சண்முகம். அவர் முகம் இருண்டுபோய்க்கிடந்தது. ஏதோ பேசினார். ஆனால், அவர் எண்ணுவது வார்த்தைகளாக மாறவில்லை. வழக்கத்தில், ``ஐயா... ஐயா...’' என்று என்னை மரியாதையாக அழைப்பார். அன்று ஏதோ அந்நிய ஆளைப் பார்ப்பதுபோல கண்களை உருட்டி விழித்தார். சண்முகம் மூலையில் நடுங்கிக்கொண்டு நின்றார். ‘`கும்பாபிஷேகத்தை நிறுத்து.’’ இத்தனை நாளும் நான் பார்த்துப் பழகிய நாவுக்கரசன் அல்ல; இது வேறு ஆள். ஆறு வயதுச் சிறுமியிடம் சொல்வதுபோல குரலை மாற்றி, `‘அமருங்கள்... பேசலாம்’’ என்றேன். `‘நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்...’’ என்று இறுமாப்புடன் கூறியவாறே அமர்ந்தார். கையிலே வைத்திருந்த ஒரு மஞ்சள் நோட்டீஸை நீட்டினார். மங்கலான எழுத்துகள். எக்ஸ்ரேயைப் பார்ப்பதுபோல மேலே பிடித்து விளக்கு வெளிச்சத்தில் படித்தேன். தலைப்பு: `கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்’ என இருந்தது. எந்தத் தேதி, எங்கே, என்ன நடக்கும் என்ற விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்ட கோயிலின் படம் மேலே அச்சடிக்கப்பட்டிருந்தது. கீழே இப்படி ஒரு வரி காணப்பட்டது. `பக்தர்கள் அனைவரும் திரண்டு வந்து அம்பாளின் அனுக்கிரகம் பெற்று ஏகுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். இங்ஙனம் பார்வதியம்மாள் திருநீலகண்டன்.' ``யார் பார்வதியம்மாள்?’’ என்று மெதுவாகக் கேட்டேன். ``பார்வதியம்மாள் இல்லை. பாதகத்தியம்மாள். என் மனைவி. அது என் மகன்.’’ நான் திகைத்துப்போய் ஒரு நிமிடம் பேச முடியாமல் நின்றேன். ``அவளுக்கும் என் மகனுக்கும் இதில் சம்பந்தமே கிடையாது. அவள் எனக்கு எழுதித் தந்த கோயில் இது. அவர்கள் வரக் கூடாது. உடனே கும்பாபிஷேகத்தை நிறுத்து’’ என்றார். `‘கோயில் கும்பாபிஷேகம் ஊருக்குப் பொதுவானது. யாரும் வரலாம்; போகலாம். இது கடவுளின் இடம். அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை.’’ `‘உரிமையில்லையா? அவள் எனக்கு எழுதித் தந்த கோயில். நான் எத்தனை பாடுபட்டேன். புகழ் எல்லாம் அவளுக்கா?’’ ‘`புகழ் ஆருக்குப் போனால் என்ன... பலன் உங்களுக்குதானே?’’ அமர்ந்திருந்தவர் பட்டென எழுந்தார். தூணைப் பிளந்து நரசிம்ம அவதாரம் புறப்பட்டதுபோல இருந்தது. ``இத்தனை நாள்கள் கழித்தும் அவள் வன்மம் தீரவில்லை. என் நிம்மதியைக் கெடுக்க வந்துவிட்டாள். செட்டை முளைத்த புழு மறுபடியும் ஊராது.’’ ``நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே அப்பர் தேவாரம், ‘நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’. அதன் அடுத்த அடியை நினையுங்கள். `வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்.’ ஆண்டவன் சந்நிதியில் வஞ்சம் வேண்டாம். இத்தனை பாடுபட்டு இறுதிநிலைக்கு வந்துவிட்ட கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம்’’ என்றேன். வெளியே வரத் துடிக்கும் இதயத்தை அதட்டுவதுபோல தன் நெஞ்சிலே கையினால் ஓங்கிக் குத்தினார். ‘`உடனே நிறுத்துவேன். நான் கோர்ட்டுக்குப் போவேன்.’’ இப்படிச் சொல்லியபடி அவசரமாக எழுந்து கேட்டை நோக்கி ஓடினார். சண்முகம் அவர் பின்னாலே ஓடி, கேட்டை மூடிவிட்டு வந்தார். அடுத்த நாள் அதிகாலை சண்முகம் செய்தியுடன் வந்தார். நாவுக்கரசன் கோர்ட்டுக்குப் போய் விட்டார். ``எப்படிப் போனார்?’’ என்று கேட்டேன். ``நடந்துதான்.’’ கும்பாபிஷேகம் கிரியைகள் தொடங்குவதற்கு ஒரு நாள்தான் இருந்தது. கோயில் அவர் பெயரில் இருந்தபடியால் `தடை உத்தரவு பெறுவதில் ஒன்றும் சிரமம் இருக்காது' என்றே தோன்றியது. விழாவுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அடியார்கள், பக்தர்கள், நன்கொடையாளர்கள் எனக் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. நீதியரசர் வருவதான செய்தி, கடைசி நேரத்தில் வந்தது. அவர் என்னுடைய தனிப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு வருகிறார். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இரவு பகலாக உழைத்தனர். ஒலிபெருக்கிகள், பக்திப் பாடல்களை முழங்கின. பல ஊர்களில் இருந்து சனங்கள் வண்டி பிடித்து வந்து குழுமியிருந்தனர். விடிந்தால் கும்பாபிஷேகம். கடைசி நேரத்தில் தடை உத்தரவு வந்தால், அதை எப்படி எதிர்கொள்வது? ஒன்றுமே புரியாமல் நான் திணறினேன். அன்று இரவு நான் கோயிலுக்குள் புகுந்தேன். இரவு போனது இதுதான் முதல் தடவை. எனக்குப் பிரார்த்தனை எப்படிச் செய்வது எனத் தெரியாது. நாவுக்கரசன்போல தேவாரப் பாடல்கள் மூவாயிரத்தையும் மனனம் செய்ததில்லை. உள்பிராகாரத்தில் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். ``அன்னையே... நான் இங்கு வந்த முதல் நாள் நீ செய்த அற்புதத்தினால் ஈர்க்கப்பட்டேன். தொடர்ந்து பல அற்புதங்கள் நிகழ்த்தினாய். இவை எல்லாம் செய்தது கோயிலை மறுபடியும் இழுத்து மூடவா? `பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்’ என சாஸ்திரம் சொல்கிறது. நீ ஐந்நூறு வருட காலம் இருட்டிலே கிடந்தாய். மீண்டும் இருட்டில் மூழ்குவதுதான் உன் நோக்கமா? பணத்தைத் தொடுவதில்லை. காரில் பயணம் செய்வதில்லை. நாள் முழுக்க விரதம். மூச்சுவிடாமல் தேவாரம் பாடுவது. இதுதான் பக்தியா? ஆணவத்தை அடக்க முடியவில்லையே. சிறியன சிந்தியாதான் என்று அல்லவா அவரை நினைத்திருந்தேன். இத்தனை அற்புதங்கள் நிகழ்த்தினாய். இன்னும் ஒன்று செய். இந்தக் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும்.’’ அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. காலையில் என்ன செய்தி வரும்? இடைக்காலத் தடை உத்தரவு கிடைத்தால் எப்படி எதிர்கொள்வது? ஒவ்வொரு நிமிடமும் நரகமாக இருந்ததால், எல்லா நேரமும் ஒன்றுபோலவேபட்டது. பொழுது விடிந்ததும் சண்முகம் ஓடிவந்தார். பாதி தூரம் வந்ததும் நின்றார். மீதியைக் கடக்க என் உத்தரவு தேவைப்பட்டதுபோல என் முகத்தைப் பார்த்தார். ``என்ன?’' என்றேன். உற்று நோக்கியபோது, அவர் முகத்தில் காணப்பட்ட உணர்ச்சி சோகமா மகிழ்ச்சியா என்பது தெரியவில்லை. மேலும் ஓர் அடி முன்னே வைத்தார். ``கோர்ட்டுக்குப் போகும் வழியில் நாவுக்கரசன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்றார். அப்படியே பின்பக்கமாக விழுந்தார். உடனேயே உயிர் பிரிந்துவிட்டது.’’ இதுவா அற்புதம், இதையா நான் யாசித்தேன்? `எனக்கு ஒரு குமர் இருக்கிறது’ என்று தினமும் அலைந்த உன் பக்தனைக் கொன்றுவிட்டாயே! ``ஐயோ... நான் கொலைகாரன்’’ என்று சொல்லித் தலையில் அடித்துக்கொண்டேன். சண்முகம், ``ஆகும் நாளின்றி எதுவும் ஆகாது. காலம் வந்தது. அவர் போய்விட்டார். அவர் சாவுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே கிடையாது’’ என்றார். நாவுக்கரசன் இறந்தது சண்முகத்துக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். பார்வதியம்மாள் பத்து அங்குலம் சரிகை வைத்த மாதுளம்பழ கலர் பட்டுப்புடவை அணிந்திருந்தார். நான்கு வடம் சங்கிலி, வைர அட்டிகை, காசுமாலை, தங்க வளையல், முத்தாலான தோடு எனச் சகல அலங்காரங்களுக்கும் குறைவில்லை. பக்கத்திலே உட்கார்ந்திருந்த அவர் மகன் தர்ப்பை அணிந்து, தலைப்பாகை தரித்து, கையிலே கும்பத்தைப் பெற்றுக்கொண்டான். நானும் சண்முகமும் தூரத்தில் நின்று பார்த்தோம். கும்பாபிஷேகம் ஆரம்பித்துவிட்டது! http://www.vikatan.com/anandavikatan
 24. 1 point
  ஐ.நா.வில் மேடையேற்றுமுன் விஜய் டீ . வி மேடையில் ஒருமுறை ஏற்றி இறக்கி இருந்தால் தேறியிருப்பார்....!
 25. 1 point
  Loganathan Kanapathipillai மார்ச் 11, 2017> பென்சிலின் மருந்தை கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் அவர்களின் 62 ஆவதுநினைவு தினம். முன்னொரு காலத்தில் ஸ்கொட்லாந்தில் பிளெமிங் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்துவந்தார். ஒரு முறை வயலுக்கு சென்று திரும்பும் அவர் ஒரு அலறல் சத்தத்தை கேட்டார். விரைந்து சென்ற பார்த்த போது, அங்கே ஒரு சிறுவன் புதைகுழியில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கவனித்தார். நிதானமான, ஆனால் நிச்சயமான அந்த மரண பயங்கரத்தில் இருந்து அந்த சிறுவனை அவர் மீட்டெடுத்தார். அடுத்த நாள் அந்த விவசாயி வீட்டின் முன்னே ஒரு அலங்கார வண்டி வந்து நின்றது. அதில் இருந்து ஒரு கனவான் இறங்கி வந்து, தன்னை அந்த சிறுவனின் தந்தை என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். தான் நம் விவசாயிக்கு மிகுந்த கடன் பட்டிருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்புவதாகவும் கூறினார். அவருக்கு பிளெமிங் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார். "நன்றி ஐயா! நீங்கள் எனக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்பினால், என் மகனை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். அவனை படிக்க வையுங்கள். ஒருவேளை அவன் என்னைப் போலவே இருந்தால், ஒருநாள் நிச்சயமாக உங்களை பெருமை அடைய செய்வான்" அந்த சிறுவனை அழைத்துச் சென்ற கனவான், தான் வாக்களித்தது போலவே நன்கு படிக்கவைத்தார். அந்த சிறுவனும் தனது தந்தையின் வாக்கை காப்பாற்றினான். சொல்லப் போனால், அந்தகனவானின் மகனின் உயிரை இரண்டாவது முறையாக காப்பாற்றினான். அந்த சிறுவன்தான், மனித குலத்தின் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பான பென்சிலின் மருந்தை கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங். நியுமோனியா வியாதியில் இருந்து அவர் காப்பாற்றிய அந்த கனவானின் மகனும் சாதாரண ஆள் இல்லை. பிரிட்டனில் பெரும் சமூக தொண்டாற்றிய ருடாடோல்ப் சேர்ச்சில். அவருடைய மகன்தான், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற பிரதமர்களில் ஒருவரான வின்ஸ்டன் சேர்ச்சில். இப்படி விவசாயி மற்றும் அந்த கனவான் செய்த இரண்டு நல்ல காரியங்கள் இந்த உலகிற்கே பெரிய பலன்களை தந்திருக்கின்றன.
 26. 1 point
 27. 1 point
 28. 1 point
  சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' சினிமா படங்களினூடாகவும் தமிழக எழுத்தாளர்களின் எழுத்துகளினூடாகவும் மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருந்த சென்னை நகரில் என் முதல் நாள் விடிந்தது. தண்ணீர் தாங்கி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் முதல் அரை நாள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டிற்கு இரு முனை தண்ணீர் சப்ளை என்பதால் ஒரே ஒரு குழாயில் தண்ணீர் வர, அதை வாளிக்குள் சேகரித்து மிச்ச வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால் plumping வேலைக்கு உடனே ஆளைப் பிடிப்பது கஷடம் என அப்பார்மென்ட் ஆள் சொன்னாலும் மதியத்துக்குள் ஒருவரை பிடித்து திருத்தி விட்டார்கள். காலை 10:30 அளவில் நரேஸ் அண்ணாவுடன் (அக்காவின் கணவரை நரேஸ் அண்ணா எனத்தான் அழைப்பது) நானும் மகனும் அக்காவின் மகனும் மத்தியானச் சாப்பாட்டுக்கு கறி வாங்க வெளிக்கிட்டோம். சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' தொடங்கியது. சென்னை வாகன நெரிசலும், மக்களின் அவசரமும் பார்க்க நம்பமுடியாதளவுக்கு இருக்கின்றது. எந்தவிதமான வீதி ஒழுங்குகளும் எவரும் கடைப்பிடிப்பதாக இல்லை. ஒரு சில Scooter கள் (ஸ்கூட்டிகள்) பாதசாரிகளுக்கான நடைபாதையில் (Side walk) செலுத்திக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் லொறிகள் எக்கச்சக்கம். Horn அடிக்காத வாகனங்கள் இல்லை. கொழும்பில் Pettah வில் மிகவும் குறுகலான முதலாம் / மூன்றாம் குறுக்குத் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசல்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சென்னை நகர வீதிகளின் வாகன நெரிசல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் ஒய்யாரமாக நடந்து செல்லும் பெரிய பெரிய மாடுகள், வீதியின் ஓரத்தில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நாய்கள், அதை விலத்தி சாதுரியமாக ஓடும் வாகன சாரதிகள், இரைச்சல் மிக்க தெருக்கள்... ஆனாலும் இவ்வளவு வாகன நெரிசல்களிலும், விதி மீறல்களிலும் நான் அங்கு இருக்கும் வரைக்கும் ஒரு விபத்தினையும் காணவில்லை. வாகனங்களின் வேகம் மிகவும் குறைவு என்பதால் சின்ன சின்ன உரசல்கள் தவிர வேறு பெரிய விபத்துகள் இல்லை. நரேஸ் அணாவின் காரிலும் சில உரசல்கள் தந்த வடுக்களை மட்டும்தான் காணக் கூடியதாக இருந்தது. மக்கள் ஒழுங்கு மீறல்களினூடாக ஒரு ஒழுங்கை கடைப்பிடித்துக் கொண்டு வாகனங்களை செலுத்தி வருகின்றனர்.. என் மகனுக்கு வீதியின் நடுவில் ஒய்யாரமாக மெதுவாக நடந்து செல்லும் மாடுகளை கண்டது பெரிய சந்தோசம். ஆள் பொதுவாக மிருகங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சிகள் என்பனவற்றில் ஆர்வமுள்ளவர் என்பதால் மாடுகளையும் வீதி ஓரத்தில் நாய்களையும் கண்டது பெரிய சந்தோசமாக போய்விட்டது. இது ஒன்றே போதும் அவனுக்கு சென்னையை பிடித்துப் போக. சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு. எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார். அடேயப்பா....நல்ல கொழுத்த கால்களை கொண்ட நண்டுகள். எனக்கு அப்பவே வாயூறத் தொடங்கியது இந்த நண்டு விற்கும் பெண்மணி மிகவும் அன்பானவராக இருக்கின்றார். நான் பார்த்த அனைத்து சென்னைவாசிகளும் மிகவும் அன்பானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒருமையில் கதைப்பினும் அந்த ஒருமையினூடாக அன்பும் ஒரு ஒட்டுணர்வும் தெரிகின்றது.. நண்டை உடைத்து தானே சுத்தப்படுத்தி தந்தார். மூவாயிரம் இந்திய ரூபாய்கள் வந்தது என நினைக்கின்றேன். சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது? அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம். இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம். வீடு வந்து சேர 12 மணியாகிவிட்டது. ஒன்ரை மணியளவில், அடுப்பில் இருந்த நண்டுக் கறியின் வாசனை மூக்கைத் துளைக்க, மாட்டு இறைச்சி டெவிலும், கோழிக் கால் பொரியலும், Sausages அக்கா சமைச்சுத் தர எங்கள் முதல் பார்ட்டி கோலாகலமாக ஆரம்பமானது. (மிச்சம் பிறகு)
 29. 1 point
 30. 1 point
  எட்டு வருடங்களாக வெறும் சேதிகளாகப் படித்து அப்பால் நகர்ந்துகொண்டுதான் பலர் வாழ்கின்றார்கள். தற்போது தமிழ்நாட்டு அரசியலும், சினிமாக்காரர்களின் ருவிற்றர் திருகுதாளங்களும் சாதாரணர்களான எங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது. அத்தோடு தமிழ் அரசியல் தலைமைகளும் சுயநலத்துடனே செயற்படுகின்றார்கள் என்பதை கேப்பாபுலவு காணி விடுவிப்பில் நடந்துகொண்ட முறை காட்டுகின்றது. விரைவில் கால் மனிதர்களாகிப் பின்னர் மனிதமற்ற இயந்திரங்களாக மாறவும் கூடும்.
 31. 1 point
  சகோதரி....! உங்கள் வீட்டுக் கண்ணாடியும் கூடவா பொய் சொல்கின்றது....!
 32. 1 point
 33. 1 point
  எனக்குத் தெரிந்த வரையில்..இல்லை! வேதங்களில் ' உருத்திரன்' என்று ஒரு காவாலிப் பாத்திரம் வருகின்றது! சுடலைகளில் நடமாடுவதும்....இறந்த உடல்களை உண்பதும்...அழுக்கான உடலுமாக உள்ளவர் தான் உருத்திரன்! எமதென்று நாம் கருதும் 'சிவன்' .இயற்கையையும்...மிருகங்களையும், பறவைகளையும் வணங்கும் சிந்து வெளி நாகரிக காலத்துடன் தொடர்பு பட்டது! ஒருவாறு.... உருத்திரனைச் சிவனுடன் தொடர்பு படுத்தி விட்டது வட இந்திய பார்ப்பனியம்! இதே போல....ஸ்கந்தா என்றும் ஒரு பாத்திரம் வேதங்களில் வருகின்றது! இவரும் ..சூரியனின் வெப்பம் தாங்கவியலாது ஓடிப்போன 'சாயா' .ஆறு விதமான விந்துகளைச் சேர்த்து...அதனில் இருந்து உருவாக்கியவரே இந்த ஸ்கந்தா! ஒருவாறு...அவரையும் ..எமது முருகனுடன் கொழுவி....அவரையும் இந்திரனின் மருமகனாக்கிக் கொண்டு விட்டது ஆரியம்! உண்மையில் சிவன் சுடலையில் ஆடுவதில்லை! சிவ தாண்டவம் என்பது 'பிரபஞ்ச' இயக்கம்! இயற்கையை வசப்பட்டுத்தும் கலை...அவர்களுக்குக் கை வந்திருந்தது! திருக்குறளில்....இறை என்ற பதம் உபயோகிக்கப் படுகின்றதேயன்றி....சிவன் என்ற வார்த்தை எங்கும் வரவில்லை! சித்தர்கள் பெரும்பாலும்...இந்த வழியைத் தான் பின்பற்றினார்கள்! மனித வாழ்வை 'மேம்படுத்துவதற்காக' எல்லா விதமான வழி முறைகளையும் கண்டறிந்தார்கள்! மருத்துவமும், உணவும்..இவர்களின் ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்திருக்க வேண்டும்! 'மழித்தலும்...நீட்டலும்...வேண்டா, உலகம், பழித்தது ஒழித்து விடின்!
 34. 1 point
  பால்ய நினைவுகள்..! இப்படித்தான் இருந்தது எங்கள் கிராமத்தில் 'டூரிங் டாக்கீஸ்'..! ஆற்று மணல் குவியலே எங்கள் இருக்கை.! பண்டிகை நாட்களில் இருபுறமும் தடிப்பான துணிகளால் மூடிவிட்டு பகல் காட்சியும் நடைபெறும்!! சினிமா பற்றிய அறிவிக்கும் மாட்டு வண்டி..! சிவாஜி, எம்ஜியார் படங்களென்றால் இந்த மாட்டுவண்டி, வண்ண வண்ண பேப்பர், ஜரிகை அலங்காரத்தால் கவர்ந்திழுக்கும்!! அன்று திரையிடும் சினிமா பற்றிய அறிவிக்கும் மாட்டு வண்டியின் பின்னால் இப்படித்தான் நாங்களும் பால்ய வயதில் மகிழ்ச்சியுடன் ஓடினோம்..! (சகோதரி நிலாமதி சொன்னபடியே பெண்குட்டிகள் பின்னாடி ஓடி வருவதை, இங்கேயும் காணலாம் ) .
 35. 1 point
  முதல் மனைவி - சுஜாதா சுஜாதா கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது. ராஜலட்சுமி, கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் பிளட் பிரஷர் விலகும். பால் வராவிட்டால் என்ன? மேனகா கொஞ்சம் லேட் பண்ணால் என்ன? டெலிபோன் ஒலித்தால் என்ன? மேனகா சற்றே பயத்துடன் சைக்கிளில் இருந்து இறங்கினாள். அவள் பேன்ட்டும் பட்டனில் அலட்சியமாக இருந்த சட்டையும் ராஜலட்சுமியின் கோபத்தை இன்னும் அதிகரித்தன. ''எப்பம்மா வந்தே?'' ''போன் அடிக்கிறது... கதவைத் திற'' என அதட்டினாள். மேனகா, ''ஈஸி மம்மி!'' ''சரி போடீ... கதவைத் திற முதல்ல... அப்புறம் பெரியவாளுக்கு உபதேசம் பண்ணு.'' ''லுக் அட் திஸ்! நான் என்ன உபதேசம் பண்ணேன்?'' கதவைத் திறந்து, போனை நோக்கி ஓடி அதை எடுப்பதற்கு முன் போன் அடிப்பது நின்றுபோனது. ''சே...'' என்று சோபாவில் விழுந்தாள். ''ரிலாக்ஸ் மம்மி! முதல்ல ஈரப் புடைவையை மாத்தலாமா?'' என்றாள். அத்தனை கோபத் திலும் மேனுவின் அழகான சடையின் கருநாகம் போன்ற வளர்த்தி பயமுறுத்தியது. கல்யாணம் பண்ண வேண்டும். நல்ல கணவனாகப் பார்த்து... என் கணவனைப் போல் இல்லாமல். போன் மறுபடி ஒலிக்க, மேனு எடுத்தாள். ''..............?'' ''ராங் நம்பர்'' என்றாள். எதிர் போன் மறுபடி ஏதோ கேட்க, மேனகா ''ஆமாம்... நம்பர் கரெக்ட்தான். உங்களுக்கு யார் வேணும்?'' ''.............'' ''மிஸஸ் ராமச்சந்திரன்னு யாரும் இல்லை இங்கே.'' ''இரு'' என்று அவளிடம் இருந்து ராஜ லட்சுமி போனைப் பிடுங்கிக்கொள்ள... ''யாரும்மா மிஸஸ் ராமச்சந்திரன்?'' ராஜலட்சுமி போனை எடுக்கும்போது அவள் கரம் நடுங்கியது. ''ராமச்சந்திரன்கறது உங்கப்பா பேரு. ஹலோ... யாரு?'' ''மிஸஸ் ஏ.வி.ராமச்சந்திரன் வீடுங்களா அது? நம்பர் கொடுத்தாங்க'' என்று கேட்டது. நடுத்தர வயதுப் பெண் குரல். ''ஆமாம், நீங்க யாரு..?'' ''நான் எம்.ஆர். ஆஸ்பிட்டல்லேருந்து மேட்ரன் பேசறேன்.''’ ''என்ன விஷயம்?'' ''உங்க ஹஸ்பண்ட் இங்கே அட்மிட் ஆகி, போன ஒரு வாரமா நினைவு இல்லாமப் படுத்திருக்காரு. அட்மிஷன் ரிஜிஸ்தர்ல அட்ரஸும் போன் நம்பரும் இருக்குது. சார்ஜஸ் யாரும் ஏதும் கட்டலே... அதுக்குத்தான்...'' ''அவருக்கு என்ன?'' ''த்ராம்பாஸிஸ். நினைவு இல்லாமக் கிடக்கிறார். கேட் ஸ்கேன் எடுக்கறதுக்கு எழுதியிருக்காரு டாக்டர். ஆனா, யாரும் பணம் கொடுக்காததனால...'' ராஜலட்சுமியையே மேனகா உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்க... ''அட்ரஸ் சொல்லுங்க.'' ''எம்.ஆர். ஆஸ்பத்திரி தெரியாதா... பூந்தமல்லி ஹைரோடுல ஈகா தியேட்டர் தாண்டினவுடனே திரும்பினீங்கன்னா...'' ''ரூம் நம்பர் சொல்லுங்க.'' ''பதினாலுல படுத்திருக்கார். வரீங்களா? கேஷா கொண்டுவந்தா நல்லது.'' ''எத்தனை கொடுக்க வேண்டி இருக்கும்?'' ''ஆயிரத்து எழுநூத்துச் சொச்சம் பாக்கி.'' ''சரி... வரேன்'' என்றாள் ராஜலட்சுமி. ''யாரும்மா?'' ''உங்கப்பாடீ.'' ''என்னவாம்?'' ''ஆஸ்பத்திரியில பேச்சு மூச்சில்லாமப் படுத்திருக்காராம்.'' ''அதனால?'' ''பணம் பாக்கியிருக்காம்... டிஸ்சார்ஜ் வாங்கிட்டு...'' ''என்னம்மா பேத்தறே? அவன் யாரு... அவனைப் போய் நீ என்ன பார்க்கறது?'' ''அவன்லாம் பேசாதேம்மா... என்ன இருந் தாலும் உன் அப்பா அவர்.'' ''நோ மம்மி, நோ... அந்தாளு உன்னைவிட்டு எத்தனை வருஷம் ஆச்சு?'' அப்போது மேனு மூன்று வயதுக் குழந்தை. ''அவன் மூஞ்சிகூடத் தெரியாதும்மா. உன்னைத் தனியா விட்டுட்டு... யாரவ... அவ பேர் என்னவோ சொன்னியே... யாரு அவ?'' ''புனிதவல்லி.'' ராஜலட்சுமி ஈரப் புடைவையை மாற்றிக் கொண்டு, தலையை அவசரமாக வாரிக் கொண்டு, பர்ஸில் இருக்கும் பணத்தை எண்ணி செக் புத்தகத்தை எடுத்துக்கொண்டாள். ''என்னம்மா, நான் சொல்லச் சொல்ல காது கேக்கலையா?'' ''என்ன?'' ''அங்கே போகப்போறியா?'' ''ஆமாம். நீயும் வரே!'' ''நோ வே! இந்த ஜென்மத்தில் நடக்காது.'' ''மேனு, அப்புறம் விதண்டாவாதம் பண்ண லாம். இப்போ என்கூட வந்தே ஆகணும். நீ வேணும்னா பாக்க வர வேண்டாம்.'' ''மம்மி, உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?'' பவுடர் போட்டுக்கொண்டு நெற்றிப் பொட்டை விஸ்தாரம் பண்ணிக்கொண்டு, ''பாரு, உன் அப்பா இல்லை, என் கணவன் இல்லேன்னாலும் ஒரு ஸ்ட்ரேஞ்சர்னு வெச்சுக்கலாமே...'' ''மம்மி, யூ ஆர் அன்பிலீவபிள்! பாரத நாரி! என்ன, இப்படி ஒரு மதர் இண்டியா வேஷம் - பதினஞ்சு வருஷமா எட்டிப் பார்க்காத பன்னாடைக்கு.'' ''அதுக்கு முன்னாடி பதினஞ்சு வருஷம் பழகியிருக்கேனே!'' ''இது பைத்தியக்காரத்தனம். நான் பரத்துக்கு போன் பண்ணிச் சொல்லப் போறேன்.'' ''எல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம். வரப் போறியா, நான் தனியா போகணுமா?'' ஆட்டோவில் போகும்போது மழை விடாமல் அவள் கால் ஓரத்துப் புடைவையை நனைத்தது. சின்ன பள்ளங்களில் எல்லாம் துள்ளித் துள்ளி அந்த ஆட்டோ செல்ல, மழை இரைச்சலின் இடையே மேனு புலம்பிக்கொண்டே வந்தாள். ''இந்த மாதிரியும் ஒரு ஆள்... இந்த மாதிரியும் ஒரு மனைவி.'' ''பேசாம வா முதல்ல. அவரைப் போய்ப் பார்க்கலாம் என்ன ஸ்திதின்னு.'' ''அந்தாளு போயாச்சு. காலி கிளாஸ்.'' எதற்காக அவரைப் பார்க்கப்போகிறேன். என்னைப் பாடுபடுத்தியதற்குப் பகவான் கொடுத்த தண்டனையைக் கண்கூடாக - ஊர்ஜிதமாகப் பார்ப்பதற்கா... இல்லை, இன்னா செய்தாரை நாணவைப்பதற்கா... ஏன்தான் இப்படிப் படபடப்பாகப் பதினைந்து வருஷம் காணாத கணவனை நோக்கிச் செல்கிறேன்? 'இந்த லெட்டர் யாரு எழுதியிருக்கா..?’ 'படிச்சுப் பாத்தியே... கடைசியில என்ன எழுதியிருக்கு - புனிதவல்லின்னுதானே?’ 'யாரு இந்தப் புனிதவல்லி?’ 'யாராயிருந்தா உனக்கென்ன..?’ 'ஃப்ரெண்டா?’ 'இப்போதைக்கு அப்படித்தான்.’ 'அப்புறம்?’ 'கல்யாணம் பண்ணிக்க சான்ஸ் இருக்கு.’ 'இப்படிக் கூசாம நேரா ஆணி அடிச்சாப்ல தாலி கட்டின பொண்டாட்டிகிட்ட சொல்றியே பிராமணா... இது நியாயமா? நான் என்ன குறைவெச்சேன் உங்களுக்கு?’ 'ஒரு குறையும் இல்லை ராஜி.’ 'பின்னே எதுக்கு இவ?’ 'அதுவந்து ஒருவிதமான தேவை ஆயிடுத்து ராஜி. உனக்குச் சொன்னா புரியாது. உனக்கு எந்தவிதமான குறையும் இல்லாம...’ 'உங்கப்பாவுக்குத் தந்தி கொடுத்து வரவழையுங்கோ.’ 'வரவழைச்சா போச்சு. எனக்குப் பயமில்லை.’ 'எனக்குப் புகலிடம் இல்லை... தைரியம் இல்லை... படிப்பு இல்லை... சாமர்த்தியம் இல்லை... ஒரு வேலை பாக்கத் தெம்பு இல்லேங்கறதாலதானே இப்படி அழிச்சாட்டியமா...’ 'பீ ரீசனபிள். இதனால எந்தவிதத்துல நீ பாதிக்கப்படறே? உன்னண்ட குறை இருக்கணும்னு கட்டாயம் இல்லை. பல பேர் ரெண்டு பொண்டாட்டி கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கா, தெரியுமோல்லியோ? பெருமாளே... சீதேவி பூதேவினு...’ 'எனக்குச் சந்தோஷம் கிடையாது இதுல.’ 'இப்போ யாரு கல்யாணம் பண்ணப் போறதா சொன்னா? ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன். அசடு... போ, மூஞ்சி அலம்பிண்டு பிள்ளையார் கோயிலுக்குப் போயிட்டு வா...’ 'தயவுபண்ணி எனக்குத் துரோகம் பண்ணிடாதீங்கோ. எனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை. அண்ணா வீட்டுல எனக்கு வாழ்வு இல்லை. ஒண்டியா என்னால எதும் யாரையும் எதிர்க்க முடியாது. ப்ளீஸ்! என்னைக் கைவிட்டுடாதீங்கோ.’ 'சே, அப்படி நடக்காது. எழுந்திரு. காலை விடு முதல்ல!’ மேனகா ரிசப்ஷனில் இருப்பதாகச் சொன்னாள். ''எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம். சரியா அரை மணிதான் காத்திருப்பேன்'' என்றாள். ''எங்கேயும் போயிடாதே செல்லம். ப்ளீஸ், இன்னிக்கு மட்டும் அம்மாவுக்கு ஒத்தாசையா இரும்மா.'' ''அழாத போ.'' 14-ம் எண் அறையை மெள்ள அடைந்தாள் ராஜலட்சுமி. வெண்மை சக்கரத் திரை லேசாக ஃபேன் காற்றில் அசைந்துகொண்டு இருக்க, ட்ரிப் கொடுத்து மார்பு வரை போர்த்தி அந்த ஆசாமி படுத்திருந்தான். வாயில் குழாய் செருகியிருந்தது. அறையில் வேறு யாரும் இல்லை. ராஜலட்சுமி படுக்கையின் கால்மாட்டை அணுகினாள். கண்ணீர் இயல்பாக வடிந்தது. ராமச்சந்திரனின் முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான தாடி இருந்தது. ஊசிக்காகப் பொத்தல் பண்ண பல இடங்களில் கரு ரத்தமாக இருந்தது. வாய் திறந்திருந்தது. மூச்சு மட்டும் கேட்டுக்கொண்டு இருக்க, கண்கள் மூடி இருந்தன. 'இந்த முகமா... இந்த முகமா... இதுவா நான் பிரிந்த கணவன்?’ 'நீ சிவப்பா... நான் சிவப்பா... சொல்லு?’ 'நீங்கதான். இதிலென்ன சந்தேகம்.’ 'சின்ன வயசில் கடுக்கன் போட்டுண்டு காது தொள்ளைக் காதா போயிருக்கும் வைர கனம் தாங்காம. எங்கப்பா பாபநாசம் மைனர் பேரு ஆயிரம் வேலி நிலம் ஒழிச்சே கட்டினார்.’ ''வந்துட்டீங்களா?'' என்று குரல் கேட்கத் திரும்பினாள். ஒரு நர்ஸ் விரைவாக உள்ளே வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள். ''இவர்தான்... இவர்தான்...'' ''அவங்க சம்சாரமா நீங்க?'' ''ஆமாம்மா...'' ''ராஜலட்சுமி உங்க பேரு.'' நர்ஸ் சார்ட்டை எடுத்துக் கையை எடுத்து நாடி பிடித்து கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். ''இப்போ இவருக்கு எப்படி இருக்கு?'' ''டாக்டர் சொல்வாரு. ஆமா, ஒரு வாரமா இந்த மாதிரி போட்டுட்டுப் போயிட்டீங்கன்னா எப்படிங்க யாருன்னு தெரியும்? கேட் ஸ்கேன் எடுக்கணும்னு நியூரோ என்.எஸ். அனத்தறாரு.'' ''இவருக்கு எப்படி இருக்கு?'' ''அதான் பாக்கறீங்களே. பெட்சோர் வராமப் பாத்துக்கிட்டு இருக்கோம். அவ்ளோதான்.'' ''பேசறாரா?'' ''மாரைச் சொறிஞ்சா எப்பவாவது முழிச்சுப் பாரு. அந்தம்மா யாரு... முதல்ல வந்தாங்களே?'' பதில் சொல்லவில்லை. ''பேசாம டிஸ்சார்ஜ் வாங்கிட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருங்க. இங்கே ஒரு நாளைக்கு இருநூத்தம்பது ஆகுதில்லே!'' ''ராமு சார்'' என்று வலுக்கட்டாயமாக ராமச்சந்திரனை ஆட்டினாள் நர்ஸ்... திடுக்கிட்டு விழித்துக்கொண்டு பார்த்தான். ''நான் வந்திருக்கேன்'' என்றாள். ''தலையணை மாத்திரலாமா?'' கண்கள் கலங்கியிருந்தன. எலும்பாக இருந்த கையைப் பிடித்தாள். ''ராஜி வந்திருக்கேன்'' என்றாள். கண்கள் அவளை அடையாளம் தேடினவா, கண்டுகொண்டனவா, கண்டுகொண்ட பின் துக்கப்பட்டனவா... ஏதும் தெரியாமல் மறுபடி கண் மூடிக்கொண்டான். ''பேசுவாரா?'' ''இல்லீங்க. பேச்சு, மூமென்ட் ஏதும் இல்லை. லம்பார் பங்க்சர் எடுத்தப்ப கட்டி கட்டியா ரத்தம்.'' ''ஆகாரம்..?'' ''எல்லாம் டியூப் வழியாதான். என்.எஸ். வந்தா கேட்டுருங்க. டிஸ்சார்ஜ் பண்ணிட்டு, வீட்டுக்கு எடுத்துட்டு ஒரு நைட் நர்ஸைப் போட்டு வெச்சுக்கறதுதான் நல்லது.'' ''அவங்க யாரும் வரலையா..?'' ''யாரு? வந்து அட்மிட் பண்ணதோட சரி. ஒரு சிவத்த ஆளு அந்தம்மாகூட வந்திருந்தாரு. என்னவோ அவங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டாங்க. 'அவளை வரச் சொல்லி ஒப்படைச்சுரு’னு திருப்பித் திருப்பி வாதாடிக்கிட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட கொஞ்சம் கடுமையாகூட இருக்க வேண்டியிருந்தது... பேரு என்னவோ சொன்னாங்களே? ராமு ராமுன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க.'' ''புனிதவல்லி.'' ''ரெண்டு சம்சாரமா? ராமு சார்... பெரிய ஆளு நீங்க'' என்று ராமச்சந்திரனின் கன்னத்தை லேசாக நர்ஸ் தட்ட... அதற்கேற்ப தலை ஆடியது. ''நீங்க மூத்தவங்களா?'' ''ஆமாம்.'' ''எத்தனை நாளா இப்படி?'' ராஜலட்சுமி சட்டென்று முகத்தை மூடி விசும்பி விசும்பி அழுதாள். ''என்.எஸ். வர்ற நேரம். அழுவாதீங்க. கோவிப்பாரு.'' கண்களைத் துடைத்துக்கொண்டு ''கீழே என் பெண் மேனகானு பேரு... வரச் சொல்றீங்களா?'' ''வார்டு பாய்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறேன். டிஸ்சார்ஜ் வாங்கிட்டுப் போயிருங்க... செலவு குறையும். எனக்கு என்னவோ அதிக நம்பிக்கையா தெரியலீங்க. நெறைய ரெஸ்ட் எடுத்தா செலப்ப சரியாகும். பிரெட் எதாவது வேணுமா, சொல்லுங்க.'' ''இதுதானா எங்கப்பா?'' திடுக்கிட்டுத் திரும்ப, மேனகா நின்று கொண்டு இருந்தாள். ''இதானா அந்தாளு?'' ''சத்தம் போடாதீங்கம்மா... மற்ற ரூம்கள்ல பேஷண்டுங்க இருக்காங்க இல்லை? பாப்பா, நீ இவரு மகளா?'' ''அப்டின்னு சொல்லித்தான் தெரியும். மம்மி, பாத்தாச்சில்ல. போக வேண்டியதுதானே? அப்புறம் ஆட்டோ, பஸ் எதும் கெடைக்காது.'' ''இரு மேனு. டாக்டர் வரப்போறாராம். அவரைப் பாத்து...'' ''அவரைப் பாத்து..?'' ''என்ன விஷயம்னு கேக்கணும். யாராவது பொறுப்பேத்துக்கணும்ல?'' ''மம்மி, இதில் நாம தலையைக் கொடுக்கறது நல்லதில்லை. நான் கீழே ஆபீஸ்ல விசாரிச்சேன். முதல் மூணு நாளைக்கு பேமென்ட் பண்ணி இருக்கா. அதுக்கப்புறம் யாரும் வரலை. பாக்கி மட்டும் ஆயிரத்தெழுநூறு ரூபா இருக்கு. அதைக் கொடுத்தாத்தான் டிஸ்சார்ஜ் பண்ணுவா.'' ''பணம் பெரிசில்லை மேனு...'' ''அந்தப் பொம்பளை வந்திருந்தாங்களா அம்மா?'' ''சொன்னேனே... முத நாள் மட்டும் வந்து ரெண்டு பேத்துக்குள்ள ஏதோ வாக்குவாதம் பண்ணிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் யாரும் வரலை.'' ''அவங்க அட்ரஸ் இருக்குமா?'' என்று மேனகா கேட்டாள். ''ரிஜிஸ்தர்ல இல்லை.'' ''ரிஜிஸ்தர்ல நம்ம அட்ரஸ், போன் நம்பர்லாம் கரெக்டா அவா யாரோ கொடுத்திருக்காம்மா.. ரொம்ப க்ளவரா பண்ணியிருக்கா. எனக்கு அந்தப் புனிதவல்லி எங்கே தங்கறானு தெரிஞ்சாகணும்.'' ''மயிலாப்பூர்ல எங்கயோ... அதுக்கென்ன இப்போ?'' ''அதுக்கென்னன்னா? இந்தாளை டிஸ்சார்ஜ் பண்ணிக் குண்டுக்கட்டா அவ வீட்டு வாசல்ல கொண்டுவெச்சுட்டு வர வேண்டாமாம்மா.'' ''என்ன மேனு?'' ''ஆமாம்மா. சரியா கேட்டுக்கோ. இவனை வீட்டுக்குகீட்டுக்கு அழைச்சுண்டு வர்றதா ஏதாவது யோசனை இருந்தா கைவிட்டுரு முதல்ல. இப்படித் திருட்டுத்தனமா நம்ம விலாசத்தைக் கொடுத்துட்டு அவா பொறுப்புல இருந்து கழட்டிக்க முடியாது. திஸ் இஸ் ஜஸ்ட் நாட் ஆன்.'' ''மேனு, இந்தச் சமயத்துல இதெல்லாம் பத்தி ஆர்க்யூ பண்ண வேண்டாம்னு தோண்றது.'' ''பேச்சே கிடையாது சிஸ்டர்... இந்தாளு எங்கம்மாவை எப்படி ட்ரீட் பண்ணியிருக்கார் தெரியுமா... என் அண்ணா பரத் சொல்லி இருக்கான். அப்போ நான் கைக் குழந்தை. மழையில நிஜமாவே தமிழ் சினிமாவுல வர்ற மாதிரி வாசல்ல தள்ளிக் கதவைச் சாத்தி இருக்காரு. ஒரு மெடிக்கல் ஷாப்புல ராத்திரி மழை நிக்கற வரைக்கும் காத்திருந்தோம். ராத்திரி சாப்பாடே இல்லை. இவங்க அண்ணா வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டியிருக்காங்க. அவங்க சம்சாரம் பால்கனியில இருந்தே திருப்பி அனுப்பியிருக்காங்க. இதெல்லாம் இமாஜின் பண்ணிப் பார்க்க முடியாது உங்களால. வாங்க மம்மி, போகலாம்.'' ''அப்படியா... ராமு சார், அப்பேர்ப்பட்ட ஆளா நீ?'' என்று படுத்திருந்தவன் கன்னத்தை நர்ஸ் தட்டுவதற்கேற்ப, தலை மறுபடி ஆடியது. ''எந்த நியாயத்தின் பேர்ல இவரை நாங்க உள்ளே சேர்த்துக்க முடியும். சொல்லுங்க.'' ''நர்ஸ், இப்போ இந்தாளு இதுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய நிலையில் இலை. ஒரு மூட்டை மாதிரிதான் ஃப்ளாட்ஃபாரத்தில் விட்டாலும் படுத்திருப்பார். அப்படியே இருப்பார்.'' ''காது கேக்குமா?'' - மேனகா சார்ட்டைப் பார்த்தாள். கத்தையாகக் காகிதங்களில் பத்து நாள் சரித்திரம் எழுதியிருந்தது. ஸெரிப்ரல் த்ராம்பாஸிஸ்... எம்பாலிஸம் என்றெல்லாம் எழுதியிருந்தது. ''இல்லை கேக்காது!'' - நர்ஸ் திடீரென்று மௌனமாகி சைகை மூலம் பெரிய டாக்டர் வருவதைக் காட்டினாள். பெரிய டாக்டருக்கு அதிகம் வயசாகவில்லை. முப்பத்தைந்து இருக்கலாம்போல. வெள்ளை கோட்டின் பையருகே 'ஜி.ஆர்.கோபிநாத்’ என்று எழுதியிருந்தது. ''ஹலோ! அட்லாஸ்ட் ஸம் ஒன்... என்னம்மா... எல்லாரும் இந்தாளை த்ராட்ல வுட்டுட்டுப் போயிட்டீங்க?'' ''இவங்க முதல் சம்சாரம் டாக்டர்.'' ''யாராயிருந்தாலும் தினப்படி யாராவது பொறுப்பேத்துக்கணும். அண்டர்ஸ்டாண்ட்? நீங்க டாட்டரா?'' மேனகா தலையசைத்தாள். ''லுக் யங் லேடி. யுர் ஃபாதர் இஸ் ரியலி ஸிக். கன்ட்ரோல் பண்ணாத டயாப்படீஸ். ஹைப்பர் டென்ஷன், ஆர்ட்டிரியல் திக்கனிங் த்ராம்பாஸிஸ் ஆகி பிளட் க்ளாட் ஆகியிருக்கு. அஃபேஸியா இருக்கு. எல்லாம் சேர்ந்து ஒரு பக்கமே பாரலைஸ் ஆகியிருக்கு. நிறைய க்ளாட்ஸ் இருக்கும்போல. அதைக் கரைக்கத்தான் தொடர்ந்து மருந்து கொடுத்துக்கிட்டு இருக்கமே... ஒரு ஸி.டி. ஸ்கேன் எடுக்கணும். எந்த அளவுக்கு டேமேஜ்னு தெரியணும்... யாரு பொறுப்புனு பார்த்தா, அட்மிட் பண்ணவங்க ஆளையே காணுங்கறாங்க... ரொம்ப விநோதம்!'' ''நான் சொல்றேன் டாக்டர்.'' ''மேனு சும்மாரு, டாக்டர்! இவர் உயிருக்கு ஆபத்தா?'' ''அப்படி இல்லை. பெட் சோர் இல்லாமப் பாத்துக்கிட்டு வேளா வேளைக்கு ஃபீட் பண்ணா, பத்து நாளில் சில ஃபேகல்ட்டிஸ் எல்லாம் திரும்பப் பெற சான்ஸ் இருக்கு. எழுந்து நடக்க முடியாட்டாலும் ரைட்ஹாண்ட் கன்ட்ரோல் வரும்னு நம்பிக்கை இருக்கு.'' ''டாக்டர், திஸ் பாஸ்டர்ட் ட்ரீட்டெட் மை மதர் லைக் ஷிட்'' என்று ஆரம்பித்த மேனகாவைத் திரும்பி நிதானமாகப் பார்த்து, ''லுக் இந்தாளு என்னைப் பொறுத்தவரையில் ஒரு பேஷன்ட். இவர் பர்சனல் லைஃப்ல எப்படி இருந்தார்னு எனக்கு அக்கறை இல்லை. கொலைகாரனா இருந்து பெயில்ல வந்திருந்தாலும் இதே ட்ரீட்மென்ட்தான் கொடுப்பேன். எனக்கு இவர் ஒரு பல்ஸ், ஒரு மூச்சு, ஒரு எக்ஸ்ரே, ஒரு ஸ்கேன் இமேஜ், ஒரு சின்ட்ரோம்... அவ்வளவுதான்.'' ''அந்த ஸ்கேன் என்னவோ சொன்னீங்களே... அது எடுக்க எத்தனை பணமாகும்?'' ''ஆபீஸ்ல கேளுங்கோ, சொல்லுவா. நாளைக்கு எடுத்துரலாம். இவரை இன்னும் பத்து நாளாவது வெச்சுக்கிட்டா நினைவு வர சான்ஸ் இருக்கு. இப்பவே நிறைய இம்ப்ரூவ்மென்ட், மாரைப் பிறாண்டினா முழிச்சுப்பாரு. பாருங்க!'' டாக்டர், ''ராமசந்திரன் வேக்-அப் ராமச்சந்திரன். வேக்-அப்... யாரு வந்திருக்கா பாருங்க, வேக்-அப்'' என மூர்க்கத்தனமாக அசைத்தார். ''பத்து நாள் கழிச்சு அவரால பேச முடியுமா?'' என்றாள் மேனகா. ''பேச்சு வர்றதுக்குக் கொஞ்ச நாள் ஆகலாம்.'' ''சொல்றதைப் புரிஞ்சுப்பாரா?'' ராமச்சந்திரன் கண் விழித்து விழிகள் உருண்டன. ''இப்பவே அரசல்புரசலா புரியும். என்ன ராமச்சந்திரன், இது யாரு, சொல்லுங்கோ... உங்க டாட்டர்.'' ''அவர் பதினஞ்சு வருஷமா பாத்ததில்லை டாக்டர்.'' ''அப்படியா... எங்கேயாவது அமெரிக்காவுல இருந்தாளா?'' ''இல்லை. அசோக் நகர்ல'' என்றாள் மேனகா. இப்போது மேனகாவை உற்றுப் பார்த்த டாக்டர், ''ஸாரி, பர்சனல் ட்ராஜடிபோல இருக்கு. சரியானப்புறம் இந்தாளை உலுக்கிரலாம். கவலைப்படாதீங்க'' என்றார். நர்ஸ் அவர் போனதும், ''இண்டியாலயே இவர்தாங்க பெரிய நியூரோ சர்ஜன். என்ன யங்கா இருக்கா பாருங்க.'' மேனகா அதைக் கவனிக்காமல் ''மம்மி, போலாமா?'' ''இல்லை... ராத்திரி நான் இங்கேயே இருக்கேன். நீ போய் எனக்கு மாற்றுப் புடைவையும் டாய்லெட் செட்டும் கொண்டுவந்துரு. கார்த்தால காலேஜுக்கு போன் பண்ணிச் சொல்லிடு. நாலு நாளைக்கு வர மாட்டானு.'' அவள் சொல்வதில் கவனம் இல்லாமல் மேனகா தன் தாயையே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்து ''திஸ் லேடி இஸ் அன்பிலீவபிள்'' என்றாள். ''சிஸ்டர், இந்தாள் சூட்டுத்தழும்பு இருக்குது எங்கம்மா புஜத்துல.'' ''மேனு, ஜாஸ்தி பேசாம போறியா இப்போ?'' மேனகா, படுத்திருந்த ராமச்சந்திரனைப் பார்த்து ''பாருய்யா பாரதப் பண்பாடு... சட் யுர் ஆக் டிஸ்கஸ்டிங்!'' விருட்டென்று புறப்பட்டுச் சென்றாள். போனதும் நர்ஸ் ''இந்த வயசுல புரியாதுங்க'' என்று தன் வயிற்றைத் தடவிக்கொண்டாள். தினம் காலை மேனகா ஆட்டோவில் அவிஷ்கார் ரெஸ்டாரென்ட்டில் இருந்து அம்மாவுக்குச் சாப்பாடும் மாற்று உடையும் கொண்டு கொடுத்துவிட்டுத்தான் காலேஜ் போவாள். மாலை திரும்ப வந்ததும் காபி, டிபன் வாங்கிக் கொடுப்பாள். தாய்க்கும் மகளுக்கும் அதிகம் பேச்சே இல்லை. ராஜலட்சுமிதான் ''இன்னிக்கு முழிச்சு முழுசா என்னைப் பார்த்தார்'' என்பாள். ''அடையாளம் தெரிஞ்சாப்ல இருந்தது. கண்ணுல தண்ணி வந்தது!'' ''மருந்தோட ரியாக்ஷனா இருக்கும் மம்மி, உன்னை ஒண்ணு கேக்கணும்.'' ''என்ன?'' ''இவர் நிஜமா பிழைச்சு எழுந்து நட மாடறார்னு வெச்சுக்கோ... என்ன செய்யறதா உத்தேசம்?'' ''என்ன செய்யறதுன்னா?'' ''எங்கே தங்கப்போறார் எங்க அன்பான அப்பா? பரத்துக்கு எழுதினேன். அவனும் நம்பவே இல்லை''. ''நம்மகூடத்தான்.'' ''நோ வே! நான் ஹாஸ்டல் போயிருவேன். ஐ ஜஸ்ட் கான்ட் ஸ்டாண்ட் திஸ் ரோக்.'' ''அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல பிழைச்சு எழுந்திருக்கட்டும்.'' ''அந்தப் புனிதவல்லிகிட்டே இருந்து தகவல் உண்டா?'' ''இல்லை. அவா கைகழுவிட்டானு தோண்றது.'' ''சக்கையா உறிஞ்சுட்டு, இந்தாளை கொட்டை துப்பறாப்ல துப்பிட்டா. அதைப் பொறுக்கி வெச்சுண்டு இருக்கே மம்மி. நீ என்ன நிரூபிக்க விரும்பறே?'' ''ஒண்ணும் இல்லை. மேனு, ஒண்ணுமே நிரூபிக்க நான் விரும்பலை.'' ''இவர் உன்னைப் படுத்தினது எல்லாம் மறந்துபோச்சா?'' ''இல்லை.'' ''பின்னே எதுக்காக?'' ''எதோ ஒரு அநாதைக்குச் செய்யறதா. ஒரு மனிதாபிமானமா வெச்சுக்கலாமே. அதோட பழைய பந்தம்னு ஒண்ணு. அது என்னவோ எங்க தலைமுறைல அழியாத பந்தம்னு தோன்றது.'' ''இன்க்ரெடிபிள் லேடி'' என்று அவள் அருகில் வந்து கன்னத்தோடு ஒட்டித் தேய்த்து விட்டுச் சென்றாள் மேனகா. டாக்டர் கோபிநாத் எதிர்பார்த்தபடி எட்டாம் நாள் ராமச்சந்திரனுக்கு முழு நினைவு வந்து வலது கையை அசைக்க முடிந்தது. கண்களில் அடையாளம் தெரிந்தது. ''என்னைத் தெரியறதா?'' என்றாள் ராஜலட்சுமி. கண்களில் நீர் வடியத் தலையை ஆட்டினான். ''பேச மாட்டாரோ?'' ''பேச்சு வர்றதுக்கு இன்னும் மூணு, நாலு நாள் ஆகும்.'' அப்போதுதான் உள்ளே வந்த மேனகாவைப் பார்த்து டாக்டர் புன்னகைத்து, ''மேனகா, நான் சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன். உங்க அப்பாவுக்கு முழு நினைவு வந்துடுத்து. என்ன என்னவோ கேக்கணும்னியே. என்ன வேண்ணா கேட்டுக்க. தி மான் இஸ் ல்யுஸிட் நௌ.'' ''சிஸ்டர் இன்னிக்கு வார்டு பாயை ஷேவ் பண்ணிவிடச் சொல்லுங்க.'' மேனகா தன் தகப்பனைக் கண்கொட்டாமல் பார்த்தாள். ''பேசறாரா?'' ''இல்லை, புரிஞ்சுக்கறார். இவ யாரு தெரியறதா?'' கலங்கிய கண்கள் அவளை ஏறிட்டுப் பார்த்து அடையாளம் தேடின. ''இவ மேனகா! அப்போ மூணு வயசு. உங்க பொண்ணு மேனகா... மேனகா.'' ராமச்சந்திரனின் கண்கள் தன் மகளை மெதுவாக மெதுவாக நிரடின. மேனகா படுக்கை அருகே வந்து மிக அருகில் நின்றாள். ''சொன்னியாம்மா? எட்டு நாளா நீ இவருக்கு மூத்திரம், பீ வாரினதையெல்லாம் சொன்னியாம்மா? உன்னை நடுத் தெருவில் துரத்திவிட்டதுக்கு எப்படி எங்களை எல்லாம் வளர்த்தே? சொன்னியாம்மா, எப்படி ஆளாக்கினே, எப்படி நீ வேலைக்குப் போய்ச் சேர்ந்து, எங்களைப் படிக்கவெச்சே... சொல்லும்மா! உறைக்கட்டும் சொல்லு.'' ''மேனு, அதெல்லாம் வேண்டாம்.'' ராமச்சந்திரனின் கை மெதுவாக அசைந்து உயர்ந்து, மேனகாவின் கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தைக் காட்டியது. ''என்ன சொல்றார்?'' ''நோட்டு வேணுங்கறார்.'' ''பேப்பர் வேணுங்கறார்போல இருக்கு.'' ''ஏதாவது எழுதணுமா?'' ராமச்சந்திரன் தலையை அசைக்க, மேனகாவிடம் இருந்து பேனாவையும் காகிதத்தையும் வாங்கி அவன் மடியில் ராஜலட்சுமி வைத்தாள். ராமச்சந்திரனின் விரல் இடுக்கில் பேனா வைக்க, அவன் மெள்ள எழுதினான்... 'புனிதவல்லி எங்கே?’ http://www.vikatan.com/anandavikatan
 36. 1 point
  இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Delhi Daredevils (DD) Kolkata Knight Riders (KKR) Kings XI Punjab (KXIP) Mumbai Indians (MI) Royal Challengers Bangalore (RCB) Sunrisers Hyderabad (SRH) Gujrat Lions (GL) Rising Pune Superiants (RPS) பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (1 - 56 வரையிலான கேள்விகள்) ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 56 புள்ளிகள் 1 1) Sunrisers Hyderabad v Royal Challengers Bangalore 2) 2) Rising Pune Supergiants v Mumbai Indians 3) Gujarat Lions v Kolkata Knight Riders 4) Kings XI Punjab v Rising Pune Supergiants 5) Royal Challengers Bangalore v Delhi Daredavils 6) Sunrisers Hyderabad vs Gujrat Lions 7) Mumbai Indians vs Kolkata Knight Riders 8) Kings XI Punjab vs Royal Challengers Bangalore 9) Rising Pune Supergiants vs Delhi daredavils 10) Mumbai Indian vs Sunrisers Hyderabad 11) Kolkata Knight Riders vs Kings XI Punjab 12) Royal Challengers Bangalore vs Mumbai Indians 13) Gujrat Lions vs Rising Pune Supergiants 14) Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad 15) Delhi Daredevils vs Kings XI Punjab 16) Mumbai Indians vs Gujarat Lions 17) Royal Challengers Bangalore Vs Rising Pune Supergiants 18) Delhi Daredavils Vs Kolkata Knight Riders 19) Sunrisers Hyderabad vs Kings XI Punjab 20) Gujrat Lions vs Royal Challengers Bangalore 21) Sunrisers Hyderabad vs Delhi Daredavils 22) Kings XI Punjab vs Mumbai Indians 23) Kolkata Knight Riders vs Gujarat Lions 24) Delhi Daredevils vs Mumbai Indians 25) Rising Pune Vs Sunrisers Hyderabad 26) Gujrat Lions vs Kings XI Punjab 27) Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore 28) Mumbai Indians vs Rising Pune Supergiants 29) Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad 30) Rising Pune Supergiants vs Kolkata Knight Riders 31) Royal Challengers Bangalore vs Gujrat Lions 32) Kolkata Knight Riders vs Delhi Daredavils 33) Kings XI Punjab vs Sunrisers Hyderabad 34) Rising Pune Supergiants vs Royal Challengers Bangalore 35) Gujarat Lions vs Mumbai Indians 36) Kings XI Punjab vs Delhi Daredavils 37) Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders 38) Mumbai Indians Vs Royal Challengers Bangalore 39) Rising Pune Supergiants vs Gujrat Lions 40) Delhi Daredevils vs Sunrisers Hyderabad 41) Kolkata Knight Riders Vs Rising Pune Supergiants 42) Delhi Daredavils vs Gujrat Lions 43) Royal Challengers Bangalore vs Kings XI Punjab 44) Sunrisers Hyderabad vs Rising Pune Supergiants 45) Mumbai Indians Vs Delhi Daredavils 46) Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders 47) Kings XI Punjab Vs Gujrat Lions 48) Sunrisers Hyderabad Vs Mumbai Indians 49) Kings XI Punjab vs Kolkata Knight riders 50) Gujrat Lions vs Delhi Daredavils 51) Mumbai Indians vs Kings XI Punjab 52) Delhi Daredavils vs Rising Pune Supergiants 53) Gujarat Lions vs Sunrisers Hyderabad 54) Kolkata Knight Riders vs Mumbai Indians 55) Rising Pune Supergiants vs Kings XI Punjab 56) Delhi Daredavils vs Royal Challengers Bangalore ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு போகும். 1) 1ம் 2 ம் இடத்தில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் (கேள்வி 57) விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். 2) 3ம் 4ம் இடத்தில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் (கேள்வி 58) விளையாடும். 3) Qualifier 1 இல் தோல்வி அடைந்த அணி Eliminator போட்டியில் (கேள்வி 59) வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும். 57) IPL 2015 Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்) M Ï 58) IPL 2015 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) D D 59) IPL 2015 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) R Ç B 60) IPL 2017 Final இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) M Ï 61) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) S R H 62) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) R P š 63) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) D D 64) இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) R C B 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) M I 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) K XI P 67) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்) M I 68) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (4 புள்ளிகள்) R C B போட்டி விதிகள் 1) போட்டி முடிவு திகதி 04.04.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி. 2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். 4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.
 37. 1 point
  கண் இமைக்காமல்... பார்த்துக் கொண்டே இருக்கலாம்.