Leaderboard

 1. Athavan CH

  Athavan CH

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   11,326


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   47,586


 3. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   6

  • Content Count

   85,545


 4. தமிழரசு

  தமிழரசு

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   6

  • Content Count

   32,814Popular Content

Showing content with the highest reputation on 09/25/2017 in all areas

 1. 8 points
  இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் . இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம் எமது வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். சிறுவர்களுடன் பயணம், கடைசி மகளுக்கு 1 வயது, எப்படியும் பால் குடுக்க , பம்பர்ஸ் (நப்பி) மாற்ற என இரண்டு மூன்று தரிப்புகள் எடுக்க வேண்டி வரும், போக்குவரத்து நெரிசலும் ஒரு பெரிய பிரச்சனையாக வாய்ப்பு உள்ளது. எனவே பயண நேரம் 9 மணி நேரமாக இருக்கும் எனத் திட்டமிட்டு காலை 4 மணிக்கு புறப்படுவதாகத் திட்டமிட்டோம், பயணத்திற்கு முதல் நாள் காருக்கு ஓயில், தண்ணீர், ரயரின் காற்றழுத்தம் எல்லாம் சரி பார்த்துக்கொண்டேன் . இத்தாலி யில் பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் பணமாகச் செலுத்தலாம், ஆனால் விடுமுறை காலங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி வரும் என எனது வேலைத்தள இத்தாலி நண்பன் எச்சரிக்க ,கார்ட்டில் செலுத்த முடிவெடுத்தேன், எல்லா இடங்களிலும் கடனட்டை பாவிக்க விருப்ப மில்லாததால் . இங்கே TCS இல் இத்தாலி பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வியாகாட்(VIA CARD) என ஒன்று விற்பதாக அறிந்து 50 யூரோவிற்கு ஒரு வியாகாட் வாங்கிக் கொண்டேன். திட்ட மிட்ட படியே காலை 4 மனிக்கு புறப்படக்கூடியதாக இருந்தது மனைவி தான் பாவம் அதிக வேலைச் சுமை நான் 11.00 மணிக்குப் படுக்கச் செல்ல , அவர் தான் கடைசி நேர ஒழுங்குகளை யெல்லாம் பூர்த்தி செய்து 12.00மணிக்குப் படுத்து 2.30 மணிக்கு எழும்பி பிரசாக பானெல்லம் அவனில் போட்டு தேனீர் போட்டு என்னை 3.15 க்கு எழுப்ப நான் குளித்து தேனீர் குடித்து பான் எல்லாம் ஒரு கட்டு கட்டி மனைவியுடன் சேர்த்து பிள்ளைகளிருவரையும் தயார் படுத்தி காரில் ஏற 4.15 ஆகியது கார் புறப்பட இரண்டு திட்டங்கள் மனதில் ஓடியது சுவிசின் டொச் மொழி மாநிலங்களையும் சுவிசின் இத்தாலி மொழி மாநிலமான டிச்சினோ (Ticino ) வையும் பிரிக்கும் அல்ப்ஸ் மலைகுகையான 17 Km நீளமான "கொட்டார்ட்" குகையையும் , சுவிஸ் - இத்தாலி போடரினையும் எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் கடப்பது , என்பதே அது மனைவியும் இரு பிள்ளைகளும் காரில் பின்னாலேயே இருக்க நான் தனியே முன்னே . மனைவியும் , கடைசி மகளும் கார் புறப்பட்டு 10 நிமிடத்திலேயே நித்திரைக்குச் செல்ல மூத்த மகள் என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தா. அவருடன் கதைத்துக்கொண்டே காரும் சுவிஸ் கிராமங்களை மெல்லிருட்டில் கடந்து கொண்டிருந்தது..., நேரமும் 5.00 மனியை நெருங்க சூரிய கதிர்களும் வெளியே கசியத்தொடங்கின சற்றே காரின் வேகத்தைக் கூட்டி ஹைவேயைத் தொட்டு "கொட்டார்ட்" குகையை நெருங்க டிரபிக்கும் கூடியிருந்தது . கொட்டார்ட் குகை 17 km நீளமானது தரையிலுள்ள வாகனப்போக்குவரத்திற்கான குகைகளில் உலகிலேயே நான்காவது நீளமானது (முதலாவது நீளமான குகை(24.5 km) நோர்வேயிலுள்ளது) கொட்டார்ட் குகை யினுள் இரு வழிப் பாதை மாத்திரமே உள்ளது போக ஒன்று வர ஒன்று , ஹைவே யில் இரண்டு ட்ரெக்கில் வரும் வாகனங்கள் குகைக்கு வெளியே நிறுத்தப்பட்டு ஒரு ட்ரெக்கினூடகவே உள்ளே அனுமதிக்கப்படும் இதனால் குகைக்கு வெளியே ட்ரபிக் அதிகமாகும் விடுமுறை கால மென்றால் சொல்லத் தேவையில்லை கொட்டார்ட் குகை எவ்வளவு முயற்சி செய்தும் ட்ரபிக்கில் மாட்ட வேண்டி வந்து விட்டது . மெதுவாக உருண்டு கொண்டிருந்த கார் இப்போது நிற்க வேண்டி வந்து விட்டது. வீட்டிலிருந்து புறப்பட்டதுக்கு 2 மணித்தியாலம் கழித்து முதன் முதலில் கார் நிற்கிறது. மெதுவாக காரின் முன் பக்க ஜன்னல்கள் இரண்டையும் திறக்கின்றேன் அல்ப்ஸ் மலைகளினூடே தவழ்ந்து வந்த மெல்லிளங் குளிர் காற்றலைகள் என் முகத்தில் அறைந்து களைப்பை அள்ளிச் செல்கின்றன...., அதிக நேரம் எடுக்கவில்லை ஒரு அரை மணித்தியாலமே டிரபிக்கில் நிற்க வேண்டி வந்தது. ... இப்போது மெதுவாக ஊரத் தொடங்கிய கார் வேகம் பிடித்து 80 km/h இல் "கொட்டார்ட்" குகையினுள் நுழைகிறது இனி 17 km தூரத்திற்கு குகை தான்.... குகையின் அரைவாசித் தூரம் கடந்ததும் சுவிஸ் சின் டொச் மொழி மாநில எல்லை முடிந்து சுவிஸ் இத்தாலி மொழி மாநில எல்லை வரவேற்கிறது.... குகை முடிந்து சிறிதுதூரம் செல்ல 80 km/h வேக எல்லை முடிய , காரும் சுவிஸ் ஹைவேயின் அதி கூடிய வேக மான 120 km/h இனைத்தொடுகிறது.. இடையில் ஒர் ஹைவே எரிபொருள் நிலையம் தென்பட ஒரு எஸ்பிரசோ குடித்தால் நல்லா இருக்குமென மனம் நினைக்க ...., சுவிஸ் எல்லையை விரைவில் கடக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்த 100 km இனையும் நிற்காமல் ஓடுவதென முடிவெடுத்து நான் வேகம் பிடிக்க மற்றய பெரும்பாலான கார்கள் வேகம் குறைத்து ட்ரக் மாற்றி ரெஸ்டுரன்டை நோக்கி நகர்ந்தன.... ,அவை பெரும் பாலும் ஜேர்மனி,நெதர்லாந்து, பெல்ஜியம் கார்களாகவே காணப்பட்டன....., அவர்கள் சில வேளை அதிகாலை ஒருமணி, இரன்டு மணிக்கு வெளிக்கிட்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு பிரேக் தேவைப் பட்டிருக்கும், இப்போது காலை சூரிய வெளிச்சம் நன்கு பரவியிருக்க சுவிஸ் நாட்டின் ஒரெயொரு இத்தாலி மொழி பேசும் மாநிலமான டிச்சினோ இதமாக சூரியக்குளியல் செய்து கொண்டிருந்தது ஹைவேயில் அதிகளவில் வாகனங்கள் காணப்பட்டாலும் எல்லா வாகனங்களும் 120 km/h இலேயே போய்கொண்டிருந்தன இது மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. சுவிசிலுள்ள ஹைவே களில் டிச்சினோவிலுள்ள இந்த A2 ஹைவேயும் நல்ல அழகானது இரண்டு பக்கமும் கம்பீரமாய் நிற்கும் அல்ப்ஸ் மலைகளினூடு பயணிப்பது ஒரு இனிமையான அனுபவம் மகளுக்கும் நான் இடையிடேயே டிச்சினோ மாநிலத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே வந்தேன். இடையிடயே விழித்த மனைவி இப்போது நன்கு விழித்தெழுந்து தனது கால்களை hand break க்கு மேலால் முன்னால் நீட்டி லாவகமாக இருந்து கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே சிறிது சிறிதாக செய்து கொண்டு வந்த சான்ட் விச்சுகளை பரிமாறினா எனக்கும் பசி யெடுக்க ஒவ்வொரு வாய்க்கும் ஒவ்வொரு சான்ட் விச்சுகளை அனுப்பி கொண்டிருந்தேன் , டிச்சினோ மாநில தலை நகரான பெலின்சோனா வினை கார் கடந்து சென்று கொண்டிருந்தது காலைக் கதிரவனின் கதகதப்பில் பெலின்சோனா பள்ளத்தாக்கு பளபளத்துக் கொண்டிருந்தது. அதனழகு என்னை வசியம் செய்து இடம் கிடைத்தால் காரை ஒரம் கட்டி சில நிமிடம் நின்று ரசிக்கச் சொன்னது ஆனால் ஹைவேயில் அதற்கான இடமும் இல்லை , எனக்கு நேரமும் இல்லை மனம் ரசனையில் இருக்க காரின் வேகமும் இயல்பாகக் குறைய வீதியும் சற்று ஏற்றமாக ஏறிக்கொண்டே போக PS குறைந்த எனது கார் சற்று சிரமப்பட கியரை 4க்கு மாற்றி முடியாமல் போக 3 க்கு மாற்றி வேகம் எடுத்து டிச்சினோ மாநிலத்தின் பெரிய நகரான அழகிய லுகானோவைக் கடந்து கொண்டிருந்தது சுவிசில் எனக்குப் பிடித்த நகரம் எது எனக் கேட்டால் லுகானோ எனத்தான் சொல்வேன் அவ்வளவு ரம்மியமானது அது . பெலின்சோனா (Bellinzona) லுகானோ(Lugano) இப்போது கார் சுவிசின் எல்லைப்பபுர நகரான கியாசசோவினை அடைந்திருந்தது.பெரிதாக வாகன நெரிசல் இருக்கவில்லை கஸ்டம்சினூடாக 20 km/h கார் ஊர்ந்து கொண்டிருந்தது , கியாசோ கஸ்டம் அதிகாரிகளும் பொலிசும் கொஞ்சம் கடுமையானவர்கள் மோசமான இத்தாலி மாபியாக்களை கையாள்பவர்கள், மற்றும் எல்லை கடக்கும் சட்டவிரோத குடியேறிகளையும் சமாளிப்பவர்கள்...., ஆனால் என்னை போகச் சொல்லி கையசைத்தார்கள் கூடவே மகளுக்கும் கையசைத்து bye சொன்னார்கள் , மிகவும் மகிழ்ச்சியாகவே சுவிசுக்கு ஒரு bye சொல்லி இத்தாலிக்குள் நுழைந்தோம் ....., பெரிதாக வாகன நெரிசலுக்குள் சிக்காமல் வந்தது மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது 5 நிமிட ஓட்டத்தில் இத்தாலியின் கோமோ பிரதேசத்தில் முதலாவது எரிபொருள் நிலையம் மற்றும் ரெஸ்டுரன்ட் வர எனது காரும் அதனை நோக்கி சென்றது.... உள்ளே போனால் கார் விட இடமில்லை எல்லாம் நிறைந்து வழிந்தது பல கார்கள் தரிப்பிடம் தேடி அலைந்து கொண்டிருக்க ஒரு ஜேர்மன் இலக்கமுடைய BMW இன் பின்னே வெள்ளை லைட் தெரிய என் முகத்திலும் லைட் எரிய இப்போது எனது கார் அந்த இடத்தில், காரை அணைத்து, hand break ஐ இழுத்து , நான் கீழிறங்க எனது குட்டி மகளும் கண் விழிக்க எல்லாம் நலமே ....., கடைசி மகளையும் Bagஐயும்நான் தூக்க மனைவி பெரிய மகளை அணைத்த படி ரெஸ்டுரன்டினுள் நுழைய உள்ளே ஒரே சனக்கூட்டமும், கபே கப்புகளின் சத்தமும் பணியாளர்களின் இத்தாலி மொழி உரையாடலும் மனதுக்கு ஒரு வித கிளர்ச்சியைக் கொடுத்தது.... பாத்ரூம் சென்று முகத்தில் குளிர் தண்ணீரை அடித்து தலைக்கும் கொஞ்சம் தேய்த்து வெளியே வந்து சில வினாடி காத்திருக்க மனைவியும் பிள்ளைகளை கூட்டிச் சென்று பம்பர்ஸ் எல்லாம் மாற்றி வந்தார். காரினுள் சாப்பிட்டதால் பெரிதாக பசி இல்லை ஏதாவது குடிப்போம் என முடிவெடுக்க , இல்லை பிள்ளைக்கு முதலில் பால் குடுக்க வேண்டும் என மனைவி சொன்னா(அது தான் தாயுள்ளம் ) நீங்களும் பெரிய மகளும் ஏதாவது குடியுங்கோ நான் பால் குடுத்திட்டு வாறன் என அவா சொல்ல பால் போத்தலினுள் பால் கரைத்தால் ,பால் சூடு ஆற கொஞ்சம் நேரம் எடுக்கும் போல இருக்கவே நான் நேரம் போகிறது என மனைவியை அவசரப்படுத்த நாம் எல்லாரும் கோபி குடிக்க முடிவெடுத்து ஒரு லத்தே மக்கியாத்தோவும் (எனக்கு), இரண்டு ஓவல் மாட்டினும் வாங்கி குடித்து முடிக்கவும் .சிறிய மகளின் போச்சி பால் ஆறவும் சரியாக இருந்தது. நான் காரில் போய் மகளுக்கு பால் குடுக்கிறேன் நீங்கள் இருவரும் ஒரு 10நிமிடம் கழித்து வாங்கோ எனக்கூறி விட்டு மனைவி சிறிய மகளுடன் சென்று விட்டா, நான் மீண்டும் ஒரு எஸ்பிரசோ வினை வாங்கிக் குடித்து விட்டு செல்ல , மகளும் பால்குடித்து ரெடியாக இருந்தா அவாவைத்தூக்கி முதுகில் மேல்நோக்கி சில தடவைகள் தடவி ஏவறை (birth) எடுக்கச் செய்து maxi cosi இனுள் இருத்தி பெல்ட் போட்டு விட்டு , பின்னால் சென்று காரைத்திறந்து எனது bag இனுள் ரீசேட் ஒன்றை எடுத்து மாற்றிக் கொண்டேன், இப்போது புத்துணர்வு இன்னம் கொஞ்சம் கூடியிருந்தது . நான் காரை ஸ்டார்ட் செய்து பின்னோக்கி நகர்த்தி திருப்பவம் இன்னுமொருவர் முகமெல்லாம் பல்லாகா எனது இடத்தில் கொண்டு வந்து தனது காரை விட்டு எனக்கு நன்றி சொன்னார் ( பாவம் அதிக நேரம் இடம் தேடி அலைந்திருப்பார் போலும்) ரெஸ்டுரன்டின் அருகிலேயே இருந்த எரிபொருள் நிலையத்தினுள் ஒரு புல் டாங் பெற்றோல் அடித்து விட்டு , காரை இத்தாலி ஹைவேயில் ஏற்றுகின்றேன் , மனதிற்குள் பயணத்திட்டம் ஓடுகிறது இனி மிலானோ( Milan ) நோக்கிச் சென்று அங்கிருந்து வெனிஸ் (Venice) நகரை நோக்கிச் செல்லும் ஹைவே யினுள் ஏறி ஜேசலோ exit எடுக்க வேண்டும் மிலானோ ஒரு 50km , அங்கால ஒரு 300 km ஒடினால் போதும்... கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்.....
 2. 2 points
  இது ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. ஆனால் களத்தின் தன்மைதான் ஒரு தனி நபரினது அல்லது குழுவினது நடவடிக்கைகளை இங்கு தீர்மானிக்கின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் என்பது 18 மைல் தொலைவில் வாழ்ந்த சக தமிழரைக்கூட காப்பதில் தவறி விட்டது என்பதே உண்மை. காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் விளைவு ஒன்றுதான். இதற்கு உள்ளிருந்து ஒரு சுய பரிசோதனையில் இறங்குவது அவசியமாகிறது. இந்தியாவின் வருவாயில் இரண்டாவது அல்லது மூன்றாவது நிலையில் (அதாவது இந்தியாவை ஓரளவுக்கு தாங்கிப் பிடிக்கின்ற) ஒரு மாநிலத்து மக்களால் தம் சக இனத்தவரை ஏன் காக்க முடியாமல் போனது? காரணம் எதுவாயினும், கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் வேலைக்கு ஆகவில்லை என்பது உண்மையானது. ஆனால் அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறுவார்கள். நாம் தமிழர் கட்சியின் கூற்று என்பது இத்தனை காலமும் தமிழர் அறம் சார்ந்த ஆட்சி நடக்கவில்லை என்பது. தமிழகத்தின் முதன்மைக் கட்சிகளில் தமிழர் தலைமை இல்லை என்பது கண்கூடு. ஆனால் இதுவேதான் காரணமா என்பது விவாதிக்கப்பட வேண்டியதுதான். ட்ரம்ப் உதாரணம் இதற்கு சரியானது என்பதாக நான் நினைக்கவில்லை. அமெரிக்காவில் வெள்ளையர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெள்ளையர்கள் லட்சக்கணக்கில் ஸ்பானியர்களாலும், ஆபிரிக்க கறுப்பர்களாலும் கொன்று குவிக்கப்பட்டிருந்தால் ட்ரம்ப் உதாரணம் சரியாக இருந்திருக்கும். ஆட்சித் தலைமை கறுப்பரிடம் போனாலும், அதிகாரம் என்பது அமெரிக்காவில் வெள்ளையர் வசமே இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் யார் ஆண்டாலும், அதிகாரம் என்பது இதுவரையிலும் தமிழர் வசம் இருந்ததில்லை (காமராஜர் உட்பட). காமராஜர் உறுதியான தலைவராக இருந்தாலும் தேசியப் பார்வையையே கொண்டிருந்தார். இதனால் மாநிலப் பிரிவினையில் தமிழர் பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்ல காரணமாக இருந்தார். இந்தக் கருத்தியலுக்கு (தமிழரை தமிழரே ஆள வேண்டும்) என்பதற்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது. காலப்போக்கில் எப்படி மாறுபட்டு வருகிறது என்பதை கவனியுங்கள். தமிழரை தமிழரே ஆளவேண்டும்.. (இது இனவெறி) தமிழரை தமிழரே ஆள வேண்டும் (சரி.. யாரெல்லாம் தமிழர்) தமிழரை தமிழரே ஆளவேண்டும் (ஓபிஎஸ், ஈபிஎஸ் எல்லாம் தமிழர்தானே) தமிழரை தமிழரே ஆள வேண்டும் (நானும் பச்சை தமிலன் - ரஜினி ) தமிழரை தமிழரே ஆளவேண்டும் (தமிழ்தேசியம் என்பது திராவிடத்தின் தோள்களில் நின்றுதான் பயணிக்க முடியும் - திருமுருகன் காந்தி) கவனித்துப் பார்த்தீர்களானால் தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பதை இப்போது யாரும் பெரிதாக எதிர்ப்பதில்லை. அது ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. நாங்களும் தமிழர்கள்தான் என பலர் வருகிறார்கள். அதில் கரிகரசிங் ராஜாவும் (எச். ராஜா) அடக்கம்.
 3. 2 points
  சீமானும் அனுபவம் கொண்டவராக பழைய தவறுகளை விடுவதில்லை. தெலுங்கர், கன்னடர் என திட்டுவதில்லை. என்ன நோக்கத்துக்காக சீமானை எதிர்த்து வெளியேறினார்களோ அந்த காரணம் இப்போ இல்லை. அரசியல் என்பது தனிமனித கவர்ச்சி (பில் கிளின்ரன், ரொனி பிளையர், ஜஸ்டின் ரூடியூ, எம்ஜீஆர்) அல்லது தனிமனித பேச்சுவன்மை (கிற்லர், ஓபாமா, கருணாநிதி, அண்ணாதுரை). பேச்சுவன்மை இருந்தாலும், பேச்சில் 'அறிவார்ந்த விபரம்' இருக்க வேண்டும். இதில் இரண்டிலுமே சிறப்பனவர்கள்: பில் கிளின்ரன், ரொனி பிளையர். கறுப்பராயினும் அறிவார்ந்த பேச்சுவன்மையால் சிகரம் தொட்டவர் ஒபாமா. தமிழகத்தில் இன்றைய திகதிக்கு அறிவார்ந்த பேச்சுவன்மைக்கு சீமான் தான். வைக்கோ, ஆளுமை தவறுகளால், வழி தடுமாறிவிட்டார். சீமான் தரமான ஆலோசனைகள் பெற்று, தன்னை சிறப்பாக முன்றேற்றுகிறார் என தெரிகிறது. மேலாக கடின உழைப்பும் சேர்கிறது. திருமுருகன், சிறையிலடைக்கப்பட்ட கோபத்தில் இருக்கிறார் என புரிகிறது. பார்ப்போம்.
 4. 2 points
  அய்யனே! வீடியோவை இணைத்தவர் ஆரம்பத்திலிருந்து தொடங்கும் வீடியோவை இணைக்கவில்லை என்பதை கவனித்தீர்களா? அரைகுறையில் இருந்து தொடங்கும் வீடியோவை மட்டுமே இணைத்துள்ளார். எனவே முழுமையான காணொளியையும் இணைக்குமாறு சம்பந்தப்பட்ட தம்பியிடம் வேண்டுவதோடு எமது விசனத்தையும் தெரிவிக்கின்றோம்...
 5. 2 points
 6. 1 point
  அசைவப் பிரியர்களுக்கு.. என்னதான் வீட்டில் அற்புதமாக அசைவம் சமைத்தாலும் ஓட்டல்களில் கிடைக்கும் வித்தியாசமான சுவைக்காக உயர்தரமான அசைவ ஓட்டல்களை நாடிச் சென்று சாப்பிடும் ஆட்கள்தான் நம்மிடையே அதிகம். அங்கு கிடைக்கும் வெரைட்டியான சுவை மட்டுமல்லாமல் அங்கு கிடைக்கும் வெரைட்டியான வகைகளும்தான் அதற்கு ஒரு காரணம். அப்படி என்னதான் இருக்கு ஸ்டார் ஓட்டல் அசைவ உணவில்? அதை எப்படி வீட்டில் எளிமையாக செய்து சாப்பிடலாம் என அசைவப் பிரியர்களுக்காக இந்தியாவின் பல மாநிலங்களின் ஸ்பெஷலான அசைவ உணவுகளை சமைத்துக் காட்டி இருக்கிறார்கள் ஸ்டார் ஓட்டல்களின் செஃப்களான சஞ்சீவ் ரஞ்சன் (Courtyard by Marriott Chennai), சீதாராம்பிரசாத் (Grand chennai by grt hotels), ரவி சக்சேனா (Dabha by Claridges). கொண்டாட்டம் தான் இனி. என்ஜாய் பண்ணுங்க மக்களே… மட்டன் ரோகன் கோஷ் என்னென்ன தேவை? தயிர் - 20 கிராம், வெங்காயம் - 50 கிராம், மட்டன் - 200 கிராம், சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, இஞ்சி பவுடர் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், பிரிஞ்சி இலைகள் - 1, கருப்பு ஏலக்காய் - 2, ஏலக்காய் - 5, மட்டன் வேகவைத்த தண்ணீர் - 100 மி.லி., நெய் - 20 மி.லி. எப்படிச் செய்வது? மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலைகள் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதில் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு சோம்புத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி குங்குமப்பூ தூவி பரிமாறவும். http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2171&id1=0&issue=20170916
 7. 1 point
  அவர்கள் விடுதலைப்புலிகளின் மீதுள்ள கோபத்தில் மட்டும் எதும் உளறியிருப்பார்கள். மற்றும்படி நாட்டுப்பற்றுடன் எழுதியிருப்பார்கள் என்று நினைத்தால் அது உங்கள் தவறு....
 8. 1 point
  நான் நேர்மாறு மனிசி பக்கத்தில இருக்கோணும்., நித்திரைச்சாமிக்கு வேறு தெரிவில்லை
 9. 1 point
  முதலாவது காட்டன் (cotton) கயிறு விட்டமின் சி இனை உறிஞ்சும் வல்லமை கொண்டது அல்ல இரண்டாவது ஒரு எலுமிச்சையில் ஒரு நாளுக்கு தேவையான விற்றமின் சி யில் 38 வீதமும் மிளகாயில் 25 வீதமும் தான் உள்ளது. வீட்டை காக்கும் அளவுக்கு அதில் இல்லை மூன்றாவது விற்றமின் சி ஆனது சூடு பட்டால் (அதாவது வெப்பத்தில்) செயல் இழந்து விடும். அது ஆவியாகி பயன் தரும் என்பது எல்லாம் இல்லை. இதனால் தான் விற்றமின் சி இருக்கும் மரக்கறிகளை அவிக்காமல் சுடு நீரில் சில நிமிடங்கள் வைத்து விட்டு உண்ண வேண்டும் நன்றி
 10. 1 point
  இசை, இது பற்றி உங்களுடன் உரையாடுவது ஆரோக்கியமாக இருக்கின்றது. இந்த திரியில் இதை மேலும் தொடர்வது சரியில்லை என நினைக்கின்றேன். நாம் தமிழர் திரியை எட்டிப் பார்க்க தொடங்குகின்றேன்.
 11. 1 point
  அவர்களது முதன்மையான கொள்கை தமிழர்களை உலக அளவில் ஒன்றிணைப்பது. அது எமது போராட்டம் நடந்த காலத்திலேயே கொள்கை ரீதியில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் மிகப்பெரிய சனத்திரள் கொண்ட தமிழகம் அதிலிருந்து விடுபட்டுவிட்டது. அதற்கு பல்வேறு காரணிகள். இப்போது தமிழகம் இணைந்த ஒருமுகப்பட்ட ஒரு சக்தியை உருவகப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அதில் பல சிக்கல்கள் உண்டு. ஒருவரை அரவணைத்தால் இன்னொரு தரப்புக்கு அதிருப்தி இருக்கும். மேலும், பல உள்குத்துகளை அறியாதவர்கள் அவர்கள். அதனால் கொள்கை ரீதியில் ஒரு முடிவை எடுத்து வைத்துள்ளார்கள். அதாவது தமிழர் குழுமங்கள் உள்ளாக இருக்கும் தகராறுகளை யாரும் தீர்க்கப் போவதில்லை. அதனால் அதில் நேரத்தை செலவிடுவது விரயம். அதை எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இணைந்து செல்பவர்களுடன் இணைந்து பயணிப்பதுதான் கால ஓட்டத்திற்கு ஏற்றது. இதன் காரணமாகவே, லைக்கா சுபாஸ்கரனை எதிர்க்க அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் உண்டியல் பணம் சேர்ப்பது எங்கும் நடப்பதுதான். ஆனால் இங்கிருந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்பது எனக்கு தெரியாது. நான் எதிலும் இணைந்து பயணிக்கவில்லை. ஆக மொத்தத்தில், தமிழகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஆட்சி அதிகாரம், அதன் மூலம் இந்தியத்திடம் காட்டக்கூடிய வலிமை இதை நோக்கியே பயணப்படுகிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலில் தமிழகத்தில் அதிகாரத்தை மீண்டும் சரியான தமிழ் தலைமை வசம் கொண்டு வர வேண்டும் என்பதை நோக்கி பயணிக்கிறார்கள். மேலும், கிடைக்கும் நன்கொடைகளை ஒவ்வொரு மாதமும் இளையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். http://www.naamtamilar.org/downloads/Naam-Tamilar-Katchi-Development-Fund-income-expenditure-report-Augest-2017.pdf
 12. 1 point
  என்னுடன் வேலைசெய்யும் பெண் இருவாரம் அங்கு வந்து இன்று திரும்பினார். அனுராதபுரம் வரை சென்றாராம். வடக்கே போகுமாறு நான் சொல்லியிருந்தேன். அங்கே எதுவுமே இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. மாகாணசபை தமக்குள் அடிபடாமல் உல்லாசப்பயணத் துறையில் தகுதி வாய்ந்த ஒருவரை, சிங்களவராயினும், பதவியில் அமர்த்த வேண்டும். முனிவர், வருமானம் பெற ஒரு ஆலோசனை... வேண்டுமாயின் தனிமடலில் பார்க்கவும்.
 13. 1 point
 14. 1 point
  இதுவரை எத்தனையோ பருப்புக்களை கொண்டு வடை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குழம்பு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் வெள்ளைக் காராமணியைக் கொண்டு வடை செய்து சாப்பிட்டிக்கிறீர்களா? இந்த வடை மற்ற வடைகளை விட மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் மாலையில் டீ/காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த வெள்ளைக் காராமணி வடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளைக் காராமணி - 1 கப் வரமிளகாய் - 2 சோம்பு - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முதலில் காராமணியை நீரில் 4-5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன், வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், காராமணி வடை ரெடி!!! FB
 15. 1 point
  ஒரு சந்தேகம் மை லார்ட் .... சாதத்தில் வெள்ளை சிகப்பு பிரவுன் எல்லாம் உண்டு....! பால் எப்போதும் வெள்ளை , பொரைபோட்டால் மோர், திரிந்தால் தயிர் எல்லாமே வெள்ளை வெள்ளையோ வெள்ளை .....!
 16. 1 point
  கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட...’ - கடை திறப்பு விழாவில் நடனமாடிய ஓவியா..! -
 17. 1 point
  ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு... அண்டார்டிகாவில் ஒரு நாள் எப்படி இருக்கும்? பூமிப் பந்தின் தென் துருவத்தில் ஒரு காலிஃபிளவர் வடிவத்தில் இருக்கிறது அண்டார்டிகா. உலகின் ஐந்தாவது பெரிய கண்டமான அது, உலகிலேயே குளிரான இடமும் கூட. முழுக்க முழுக்க பனி ஆக்கிரமித்த பகுதியான அது, சூழலியல் ஆராய்ச்சியாளர்க கனவுத் தாயகம். நாசாவின் பல்வேறு விஞ்ஞானிகள் இங்கேயே தங்கள் வீடுகள் இருப்பது போல் பாவித்து வருடத்தில் பாதி நாட்களைக் கழிக்கிறார்கள். Photo Courtesy: Gaelen Marsden செவ்வாய் கிரகத்தை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் அண்டார்டிகாவை தான் படிக்க வேண்டும் என்று பல நாசா விஞ்ஞானிகள் வற்புறுத்துகிறார்கள். இதற்குக் காரணம், உயிர்காற்றான ஆக்சிஜன் தவிர்த்து செவ்வாயின் சூழலும், அண்டார்டிகாவின் சூழலும் ஒன்றுதான். இப்படி பூமியின் மற்ற இடங்களோடு ஒத்துப்போகாமல் இருக்கும் அண்டார்டிகாவில் ஒரு நாள் என்பது எப்படி இருக்கிறது? ஆறு மாதம் வெளிச்சம், ஆறு மாதம் இருள் பூமியின் மற்ற பகுதிகளில் ஒரு நாள் என்பது இரவு, பகல் சேர்ந்ததுதான். ஆனால், அண்டார்டிகாவில் இரவு பகல் மாறுவதே சுமார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான். வெயில் காலம், குளிர் காலம் என அங்கே இரண்டே இரண்டு பருவ நிலைகள்தான். இதற்குக் காரணம், பூமி தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதாகும். இதனால் அண்டார்டிகாவின் பெரும் பகுதி வருடத்தில் பாதி நாட்கள் சூரிய வெளிச்சத்தைப் பெற்று விடும். வெயில் காலங்களில், நடு இரவில் கூட சூரியன் அசராது தன் கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும். ஆனால், குளிர்காலத்தில் சூரியனை நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை பார்க்கவே முடியாது. அப்போது அண்டார்டிகாவின் வெப்ப நிலை அகலப் பாதாளத்திற்கு சென்று விடும். சராசரியாக மைனஸ் 34.4 டிகிரி செல்சியஸ் இருக்கும் அது, குறைந்தபட்சமாக ஒரு முறை மைனஸ் 89.4 டிகிரி செல்சியஸ் வரை சென்றிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை வெறும் 15 டிகிரி செல்சியஸ் மட்டுமே. அண்டார்டிகா ஒரு பாலைவனம் ஆச்சர்யமாக இருந்தாலும், இதுதான் உண்மை. அண்டார்டிகா ஒரு பாலைவனம் போலத்தான். பனியால் மூடப்பட்டிருந்தாலும் அங்கே மழைப்பொழிவு என்பதே அரிதான ஒன்று. பனிப்பொழிவு கூட எப்போதாவதுதான். நிலப்பரப்பு பனிப்பாறைகள், பனித் தாழிகள் ஆகியவற்றால் ஆனது. எவ்வித மரங்களோ, செடிகளோ கிடையாது. கடுமையான குளிரைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய தாவரங்களான மரப்பாசிகள் மற்றும் பாசிகள் மட்டுமே வாழ்கின்றன. அங்குப் பெரிய அளவில் நடக்கக்கூடிய ஆராய்ச்சிகளில் ஒன்று எரிகற்கள் குறித்த ஆராய்ச்சி. பூமியின் மற்ற பகுதிகளில் விழும் எரிநட்சத்திரங்களைவிட இங்கு நிறைய அளவில் அவை காணப்படும். இதற்குக் காரணம், மக்கள் நடமாட்டம் குறைவு, மற்றும் பனி நிலம், அந்தக் கற்களை அழியாமல் பார்த்துக் கொள்கிறது. அண்டார்டிகாவில் ஒரு நாள் அண்டார்டிகாவில் நியூசிலாந்து நாட்டிற்குச் சொந்தமான இடத்தில் இருக்கிறது புகழ்பெற்ற அமெரிக்காவின் மெக்முர்டோ நிலையம் (McMurdo Station). அங்கு இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களிலே இதுதான் பெரியது. தற்போது அங்கே 1258 பேர் வசிக்கிறார்கள். எந்தப் பொருட்கள், மனிதர்கள் அண்டார்டிகா வந்தாலும், அந்த நிலையத்தைக் கடக்காமல் செல்ல முடியாது. அங்கு ஒரு நாள் எப்படி இருக்கும் என விளக்குகிறார் அங்குப் பாதுகாப்பு பொறியாளராக இருக்கும் டேவிட் நோல்ட். Photo Courtesy: Liam Quinn from Canada “அண்டார்டிகா நிச்சயம் ஆபத்தான இடம்தான். பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நிதிப் பற்றாக்குறையால் தங்கள் ஆராய்ச்சிகளை போதிய பாதுகாப்பில்லாமல் செய்ய துணிவார்கள். அது விபத்தை ஏற்படுத்தும். அனுபவமில்லாத பலர் இங்கே தவறு செய்து பேராபத்தில் மாட்டி இருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இரண்டு ஆராய்ச்சியாளர்கள், கூடத்தை விட்டு வெளியே சென்றிருந்தனர். புயல் எச்சரிக்கை வரவே, சீக்கிரம் கூடத்திற்கு திரும்ப வேண்டுமெனப் பாதுகாப்பான வழியை விடுத்துக் குறுக்கு பாதையில் நடந்தனர். பிளவுபட்ட பனித்தகடுகளில் காலை வைத்து மாட்டிக் கொண்டனர். நீங்கள் தண்ணீரில் இறங்க வேண்டும் என்றில்லை, பனித்தகடுகளின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாலே போதும் ஓர்கா இன திமிங்கலங்கள் உங்களைக் கொண்டு சென்று விடும். ஒரு சீசனிற்கு சராசரியாக நூறு விபத்துகள் வரை ஏற்படும். பத்து வருடங்களுக்கு முன்னால் இறப்பு கூட நிகழ்ந்துள்ளது. அண்டார்டிகாவின் குளிர்காலம், அதாவது பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை முழுவதும் இருட்டு என்பதால் விமான போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்படும். நீங்கள் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இங்கே வந்தால், குறைந்தது ஆறு மாதங்கள் இங்கேயே தங்கி விட வேண்டிய நிலை ஏற்படும். வெளியுலகத்தில் இருந்து எந்த உதவியும் வராது. ஆனால், தினமும் இன்டர்நெட் சேவை இருக்கும், செய்திகளை அறிந்து கொள்ளலாம். சராசரியாக இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் பத்து மணி நேரங்கள் வேலை செய்வார்கள். அதன் பின்னர் கொண்டாட்டம்தான். பார் வசதி உள்ளது, பௌலிங் ஆடுவார்கள். கொஞ்சம் பழைய இடம்தான் என்றாலும், உற்சாகத்திற்கு குறைவியிருக்காது. வாக்கிங், ட்ரெக்கிங் செல்ல வரையறுக்கப்பட்ட எல்லைகள் இருக்கும். எப்போது சென்றாலும், ஒரு துணையில்லாமல் செல்லக் கூடாது. கையில் ரேடியோ இல்லாமல் செல்ல கூடாது. முறையாக அனுமதி பெறாமல் செல்லக் கூடாது எனப் பல விதிமுறைகள் உண்டு. அனைத்தையும் பின்பற்றினால், எந்த பிரச்னையும் இல்லை. சுத்தமான காற்று, மாசில்லா பூமி, இதை விடச் சொர்க்கம் எங்கு இருக்க முடியும்?” யோசிக்க வைப்பதாகத்தான் இருந்தது டேவிட் அவர்களின் பேச்சு. மிகுந்த சிரமத்திற்கு இடையில் இங்கே ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்வது நம் பூமிக்காகவும், அதில் நம் வாழ்க்கைக்காகவும் என்பதை மறுக்க முடியாது. அது சரி, நீங்கள் அண்டார்டிகா போக வேண்டுமென்றால் என்னவெல்லாம் நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிய வேண்டுமா? Photo Courtesy: anta0187 அத்தியாவசிய பொருட்கள் 21 முறை அண்டார்டிகா சென்று வந்த ராஸ் விர்ஜினியா என்ற சூழலியாளரின் அறிவுரைப்படி, சுற்றுலாப் பயணிகள் அண்டார்டிகாவிற்கு வெப்ப காலத்தில் மட்டுமே செல்ல வேண்டும். அவர் போகும் போது நிச்சயம் எடுத்துச் செல்லும் பொருட்கள் குறித்து விளக்குகிறார். “கூலிங் கிளாஸ் மிகவும் அவசியம். நடு இரவில் கூட சூரியன் இருப்பதால், அதை நேரடியாகப் பார்க்கும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க UVயில் இருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் எடுத்துச் செல்வேன். இசை எனக்கு ஒரு உற்றத்துணையாக இருக்கும். பிடித்த பாடல்களை iPod அல்லது MP3 பிளேயர்களில் சேமித்துக் கொண்டு எடுத்துச் செல்வேன். சில ஆபத்தான நேரங்களில் வெளியே வரக்கூடாது என்று கூறிவிடுவார்கள். சில சமயம், அந்த உத்தரவு இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை கூட நீடிக்கும். அப்போது என் இசை நிச்சயம் கை கொடுக்கும். உறங்கும் போது பயன்படுத்த “eye mask” வேண்டும். சூரிய வெளிச்சம் என்னைத் தூங்க விடாமல் செய்யலாம். அதற்காக இது. குளிரைச் சமாளிக்க “Single Malt Scotch” பாட்டில் எடுத்துக் கொள்வேன். இதெல்லாம் இல்லாமல், ஒரு நாள் கூட என்னால் அங்குத் தாக்கு பிடிக்க முடியாது.” வாய்ப்பு கிடைத்தால், அண்டார்டிகாவை ஒரு ரவுண்டு போய் பார்த்து விடலாமா? http://www.vikatan.com
 18. 1 point
 19. 1 point
 20. 1 point
 21. 1 point
  கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடை குறைய கொடம்புளி.
 22. 1 point
 23. 1 point
  ராஜீவ் காந்தி, பண்ருட்டி ராமச்சந்திரன், அன்ரன் பாலசிங்கம், தேசியத் தலைவர் பிரபாகரன்.
 24. 1 point
  இப்படிப்பட்ட அனுபவம் யாருக்கு எல்லாம் இருக்கு.
 25. 1 point
 26. 1 point
  இனி எப்படி முட்டினாலும் இந்த இத்தாலி வாரிசு இந்தியாவின் பிரதமர் ஆக முடியாது .
 27. 1 point
 28. 1 point
  நான் அந்தளவு பழைய ஆள் இல்லை த.சி. எங்கள் காலத்தில் , குஷ்பு / அமலா / கெளதமி / நதியா /சுகன்யா போன்றோரே இருந்தார்கள்.
 29. 1 point
  தாலியக்கட்டு காலங்கார்த்தால நாற்பது தடவை பார்த்தாச்சு இன்னும் சேலை எடுத்தது கண்டவர் உடுத்தது கண்டிலர் ......!
 30. 1 point
  தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?! சச்சின் என்றால் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ராகுல் டிராவிட் என்றால் லேட் கட், விராட் கோலி என்றால் கவர் ட்ரைவ், ரோஹித், ரிக்கி பாண்டிங் என்றால் புல் ஷாட்... இந்த வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு... ஹெலிகாப்டர் ஷாட். நவீன கிரிக்கெட் உலகில் எல்லோரும் எல்லா ஷாட்களும் ஆடுகின்றனர் எனிலும், குறிப்பிட்ட சில ஷாட்களை அவர்கள் அடித்தால்தான் அழகு. சந்தோஷம். பிரமிப்பு. நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் சச்சின் ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்தி இருக்கலாம், ஆனால் அதைப் பிரபலப்படுத்தியது தோனிதான். இன்றும் தோனி களத்தில் இருக்கும்போது கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரேயொரு ஹெலிகாப்டர் ஷாட் அடித்துவிட மாட்டாரா என Msdians ஏங்குகிறார்கள். அதற்காகவே மைதானத்துக்கு படையெடுக்கிறார்கள். அடித்துவிட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்ததுபோல ஆர்ப்பரிக்கிறார்கள். வேகப்பந்தோ, ஸ்பின்னோ... மலிங்காவோ, ஃபாக்னரோ... இலங்கையோ, மும்பை இந்தியன்ஸோ... சேப்பாக்கமோ, வான்கடேவோ... இருந்த இடத்தில் இருந்தே ராக்கெட் பறக்கவிட தோனியால் மட்டுமே முடியும். அன்பிலீவபிள், அமேசிங், வாட்டே ஷாட், லுக் அட் திஸ்... என வர்ணனையாளர்கள் ஒவ்வொருமுறையும் அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை சிலாகிக்கின்றனர். எப்படி இவரால் கால்களை நகர்த்தாமல் இருந்த இடத்தில் இருந்தே மணிக்கட்டை மட்டுமே சுழற்றி, 140 கி.மீ வேகத்தில் வரும் பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்ப முடிகிறது. அதுதான் தோனி, அதுதான் ஹெலிகாப்டர் ஷாட். இதோ அந்த ஷாட் பற்றிய டைம்லைன்! பெயர் வந்தது எப்படி? பேட்டானது காற்றில் குறைந்த பட்சம் 180 டிகிரி சுழன்று , பந்தை அடித்தால் அதற்குப் பெயர்தான் !‛தி ஹெலிகாப்டர் ஷாட்!’ (ஹெலிகாப்டரின் இறக்கையைபோல் ஒரு சுற்று சுற்றும்). ஆரம்பம்: சச்சின் , இங்கிலாந்துக்கு எதிராக 2002-ல் துர்காமில் டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடித்து ஆரம்பித்து வைத்தார். இதுவே ஹெலிகாப்டர் ஷாட்டின் ஆரம்பம். இதை மேலும் மெருகேற்றினார் தோனி. 2006-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டர்சன் பந்தில் இந்த ஷாட்டை அடித்து ரசிகர்களின் கைகளுக்கு அந்த பந்தையே பரிசளித்தார். ஹெலி காப்டர்ஷாட் அடித்தவர்கள்: பென் கட்டிங் , முகமது ஷேசாத், சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி, தோனி.. தோனியின் தனித்துவம்: பந்து பிட்ச்சாகி முழுவதும் மேலே எழுவதற்குள், கை மணிக்கட்டில் முழு வேகத்தையும் செலுத்தி, பந்து பேட்டின் அடிப்பாகத்தில் படுமாறு பளிச்சென ஓங்கி ஒரு அறை. கால்களை நகர்த்தாமலேயே இருந்த இடத்தில் இருந்தபடியே அசுர வேகத்தில் அடிப்பார். விர்ர்ர்ர்ரென பறக்கும் அந்தப் பந்து டீப் மிட் விக்கெட் அல்லது லாங் ஆஃன் திசையில் இருக்கும் ஃபீல்டர்களைத் தாண்டி விழும். சில நேரங்களில் ரசிகர்களின் கைகளில், சில நேரங்களில் ஸ்டேடியத்துக்கு வெளியே... விளம்பரம் : ஹெலிகாப்டர் ஷாட்டை பிரபலப்படுத்துவதற்காக பெப்ஸி நிறுவனம் "சேஞ் தி கேம் " என்ற அடிப்படையில் விளம்பரங்களை வெளியிட்டது. இதில் தோனியின் "இறுக்கி பிடி முறுக்கி சுத்தி அடி "என்று பாடியது வைரல். மறக்க முடியாதவை & மிகவும் வைரல் ஆன ஷாட்கள் : ஐபிஎல் போட்டியின் போது லசித் மலிங்காவின் யார்க்கரில் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்த ஷாட், ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டியில் ஜேம்ஸ் பாக்னர் ஓவரில் அடித்த பந்து மைதானத்தையும் தாண்டிச்சென்றது, காரணம் அது ஹெலிகாப்டர் ஷாட். அடித்தவர் தோனி! http://www.vikatan.com/news/sports/103101-dhonis-helicopter-shot-special-story.html
 31. 1 point
  தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வர நிறைவில் தாம் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. அதேவேளை லா லிகா சுற்றுப் போட்டியின் நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி நடைபெற்று முடிந்த ஜந்தாவது வாரப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியுற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மலாகா மற்றும் வெலன்ஸியா கழகங்களுக்கிடையிலான போட்டியுடன் லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வாரப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போட்டியில், ஸய்மோனீ ஸாஸா (Simonie Zaza) மூலம் போட்டியின் இரண்டாம் பாதியில் பத்து நிமிடங்களிற்குள் பெறப்பட்ட ஹட்ரிக் கோலின் மூலம் 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் வெலன்ஸியா அணி வெற்றி பெற்றது. அவ்வணிக்காக ஸன்டா மினா (Santa mina) 17 ஆம் நிமிடத்திலும், ஸய்மோனி ஸாஸா 55, 60 மற்றும் 63 ஆம் நிமிடங்களிலும் ரொட்ரீகோ (Rodrigo) 86 ஆம் நிமிடத்திலும் கோல்களை பெற்றுக் கொடுத்தனர். 20ஆம் திகதி பார்சிலோனா மற்றும் ஏய்பர் அணிகள் பார்சிலோனா அரங்கில் பலப்பரீட்சை நடாத்தின. இப்போட்டியில் லியொனெல் மெஸ்ஸியினால் பெறப்பட்ட ஹட்ரிக் கோலின்மூலம் பார்சிலோனா அணி 6-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது. மெஸ்ஸி இப்போட்டியில் 20 ஆம் நிமிடத்தில் பெறப்பட்ட பெனால்டி வாய்ப்பின்போதும் அதனைத் தொடர்ந்து 59, 62 மற்றும் 87 ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்று இப்போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற வழிவகுத்தார். மேலும் போலீனோ (Paulinho) 38 ஆம் நிமிடத்திலும் டெனிஸ் சுவாரேஸ் (Denis Suarez) 53ஆம் நிமிடத்திலும் ஏய்பர் அணிக்கு எதிராக கோல்களைப் பெற்றனர். அத்துடன் ஏய்பர் அணி சார்பாக போட்டியின் 57ஆம் நிமிடத்தில் ஸர்ஜீ என்ரீச் (Sergi Enrich) ஓரு கோலைப் பெற்றார். இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் மெஸ்ஸியினால் மொத்தமாக 9 கோல்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பின்னர், 21 ஆம் திகதி நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான போட்டியாக ரியல் மெட்ரிட் மற்றும் ரியல் பெடிஸ் அணிகள் மோதின. கடந்த பருவகால லா லிகா சம்பியனான ரியல் மெட்ரிட் அணி றியல்பெடிஸ் அணியிடம் போட்டியின் இறுதித் தருவாயில் பெறப்பட்ட கோலினால் அதிர்ச்சித் தோல்வியுற்றது. இந்த வெற்றியின்மூலம் ரியல் மெட்ரிட் அணியின் மைதானத்தில் மோதிய தொடரான 75 போட்டிகளின் பின்னரான, தனது முதல் வெற்றியை றியல் பெடிஸ் அணி பதிவு செய்துள்ளது. போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை கூடுதலான நேரம் ரியல் மெட்ரிட் அணியே போட்டியை ஆக்கிரமித்தது. அவ்வணிக்கு கிடைத்த பல வாய்ப்புக்கள் றியல் பெடிஸ் அணியின் கோல் காப்பாளர் அன்டோனியோ அடன் (Antonio Adan) மூலம் சிறந்த முறையில் தடுக்கப்பட்டது. ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் கோல் காப்பாளரான அன்டோனியோ அடன் மூலம் அன்றைய போட்டியில் மாத்திரம் கோலை நோக்கி எடுக்கப்பட்ட 7 முயற்சிகள் தடுக்கப்பட்டன. அத்துடன் பல வாய்ப்பபுக்களை தவறவிட்ட வண்ணம் இருந்த ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராக றியல் பெடிஸ் அணியின் வீரர்கள் அனைவரும் பந்தை தடுத்தாடும் முறையிலேயே விளையாடினர். எனினும் போட்டியின் 92ஆம் நிமிடத்தில் அன்டோனியோ பரகன் (Antonio Baragan) மூலம் மத்தியகளத்திலிருந்து ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை அன்டோனியோ ஸனப்ரியா (Antonia Sanabria) தனது தலையால் முட்டி கோலாக்கினார். இது றியல் பெடிஸ் அணி ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராகப் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக பதிவாகியுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட 5 போட்டித்தடை நிறைவுற்றதன் பின்னர் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ இப்போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது. மேலும் சில போட்டிகளின் முடிவுகள் லெகனஸ் 0 – 0 ஜீரோனா டிபோர்டிவோ 1 – 0 அலவஸ் அட்லடிகோ மெட்ரிட் 2-1 அத்லடிக் பில்பாகு செவில்லா 1- 0 லஸ்பல்மஸ் ஈஸ்பான்யல் 0 – 0 விலரல் றியல் சொசிடட் 0 – 3 லெவன்டே ஸெல்டாவிகோ 1 – 1 கெடாவேய் http://www.thepapare.com
 32. 1 point
 33. 1 point
  இந்த மனிசன் மடிப்பிலேயே கண்ணா இருக்கிறார்.
 34. 1 point
 35. 1 point
 36. 1 point
 37. 1 point
  “சுதந்திரம் என்றுமே அதிகார வர்க்கத்தினரால் தானாக வழங்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகள் ஒலிக்கப்படும்போது மட்டுமே பெறப்படுகிறது” —மார்டின் லூதர்கிங் பிறப்பை அறுதியிட்டு நிர்ணயிக்க இயலாத உயிரினங்கள் அனைத்தும் உணவு, நீர், வாழிடங்கள் போன்ற தன் தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றவாறு தனக்கான புகலிடத்தை நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது. அதனால்தான் ஆயிரக்கணக்கான மைல்கள் வலசைபோகும் தேசாந்திரித் தட்டான்கள் முதல் பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இன்று விரிந்து பரவி வாழ்கிறது. இவ்வாறு புலம்பெயர்தலில் உள்ள தேடல் மனநிறைவையும், புதிய வாழ்வையும் தரும். ஆனால் “திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே” என்பதுபோல ஆளும் அதிகார வர்க்கத்தின் பேராசைக்கும், பெருநிறுவன முதலாளிகளின் பெரும்பசிக்கும் இரையாகித் தன் சொந்த நிலத்தில் வாழ வழியற்றுக் காப்பாற்றவும் நாதியற்றுச் சொந்த, பந்தங்களை இழந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திக்கற்று, திசை புரியாது, ஆதரவில்லாது அலையும் அகதிகளாகவும், பதியெழா நினைவுகளோடு புலம்பெயர்ந்து செல்லும்போது உடல் பக்குவப்படுதலில் அடையும் துன்பங்களைக் காட்டிலும் உள்ளம் பக்குவப்படுதல் அடையும் துன்பம் கொடியது. இருட்டினுள் உணராப் பொருள்போல அதை என்றுமே பிறரால் உணர முடியாது. பதியெழா நினைவுகளோடு புலம்பெயர்ந்து செல்லும்போது உடல் பக்குவப்படுதலில் அடையும் துன்பங்களைக் காட்டிலும் உள்ளம் பக்குவப்படுதல் அடையும் துன்பம் கொடியது. படம்: fineartamerica அந்த வகையிலே டொமினிக்கக் குடியரசும், சர்வாதிகாரி ரஃபேல் த்ருஜில்லோவும் , தி பட்டர்ஃபிளைஸ் (The Butterflies) அமைப்பின் நிறுவனர்களான மிராபல் சகோதரிகளும் வராலாற்றின் அழியாச் சுவடுகள். டொமினிக்கன் குடியரசு’ என்பது பெரிய ஆன்டிலஸ் தீவுகளில் உள்ள இரண்டாவது பெரியதும், பியூர்டோரிக்காவிற்குக மேற்கேயும், கியூபா மற்றும் ஜமாய்க்காவிற்குக் கிழக்கேயும் அமைந்துள்ள கரிபியன் தீவான கிஸ்பானியோலாவில் (Hispaniola) அமைந்துள்ள ஒரு இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது கைத்தி (HAITI) உடன் அந்தத் தீவில் மூன்றில் இரண்டு பகுதி பரப்பளவு நிலத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ‘தாய்னோ’(TAINO) இனப் பழங்குடியினர்தான் இத்தீவின் பூர்விக குடிமக்கள். டிசம்பர் 5, 1492 கொலம்பஸ் வருகைக்குப் பிறகு இந்நாடு ‘லா எஸ்பனோலா’ என்று பெயரிடப்பட்டதோடு கொலம்பஸின் மகனாகியா ‘டியாகோ’ முதலாவது ராஜ பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுக் காலனி ஆதிகத்தின் கீழ் வந்தது. படம்: gilderlehrman டிசம்பர் 5, 1492 கொலம்பஸ் வருகைக்குப் பிறகு இந்நாடு ‘லா எஸ்பனோலா’ என்று பெயரிடப்பட்டதோடு கொலம்பஸின் மகனாகியா ‘டியாகோ’ முதலாவது ராஜ பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுக் காலனி ஆதிகத்தின் கீழ் வந்தது. 1496 ஆம் ஆண்டு இதன் தலைநகரம் ‘சான்டோ டொமிங்கோ’ என்று பெயரிடப்பட்டு ஐரோப்பியர்களின் நிரந்தரக் குடியேற்றமாகிப் போனது. இதுவே மேற்குலகில் ஐரோப்பியர்கள் குடியேறிய மிகப் பழமையான நகரம். இதுவே மேற்குலகில் ஐரோப்பியர்கள் குடியேறிய மிகப் பழமையான நகரம். படம் :punta-cana தொடர் குடியேற்றங்களின் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் கலாச்சாரம் நசுக்கப்பட்டு, ஐரோப்பியக் கலாச்சாரம் பரப்பட்டது. உரோமன் கத்தோலிக்கம் அறிவிக்கப்படாத அரசு சமயமானது. கத்தோலிக்க சபைகள் ஆட்சி அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவானதாக இருந்தன. இதன் மூலம் அமெரிக்கப் பழங்குடிகளின் சமய உரிமை மறுக்கப்பட்டு, கிறித்துவத்துக்கு மதம் மாற நிர்பந்திக்கப்பட்டனர். மேலும் ஐரோப்பியர்களின் மூலம் பரவிய பெரியம்மை மற்றும் தட்டம்மை போன்ற கொள்ளை நோய்களின் மூலம் மிகப்பெரும் அளவிலான பழங்குடிகள் மாண்டனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கைப் பற்றிய விபரங்கள் பற்றி சரியான தகவல்கள் பற்றி இன்றுவரை கிடைக்கவில்லை. மொத்த பழங்குடிகளின் மக்கள் தொகையில் 25% முதல் 85% வரை இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. மீதம் இருந்த பழங்குடிகளும் காலனியவாதிகளின் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட இனக்கலப்பின் மூலம் மெசுடொசோ எனப்பட்ட புதிய ஐரோப்பிய-அமெரிக்கக் கலப்பு இனம் தோன்றத் தொடங்கியது. காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பான்மையினராக மெசுடொசோக்களே இருந்தனர். படம் : historyfiles தொடர்ந்து இஸ்பானியரின் குடியேற்ற நாடாகிய டொமினிக்கக் குடியரசு, 1795 இல் ஃபிரான்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1808 இல் தலைநகரான ‘சான்டோ டொமிங்கோ’ பொது மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குடியரசுக்கான முதலடி எடுத்து வைக்கப்பட்டது. ஆனால், இடையில் 1814 முதல் 1821 வரை இஸ்பானியர்கள் மீண்டும் தமது காலனித்துவத்தை இங்கு நிலைநாட்டினர். 1822 முதல் 1844 வரை கைத்தியின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு, 1844 ஆம் ஆண்டு ‘பீட்ரோ சந்தானா’ தலைமையில் டொமினிக்கன் குடியரசு உதயமானது. எனினும் கடுமையான உள்நாட்டுப் போர் நிகழ்ந்ததன் விளைவாக 1861 முதல் 1865 வரை மீண்டும் இஸ்பானியரின் காலனி ஆட்சிக்குள் சென்றது. உலகிலேயே காலனி ஆட்சியிலிருந்து வெளியேறி பின் மீண்டும் அதற்குள் சென்ற ஒரே நாடு இதுதான். 1865 ஆம் ஆண்டு இஸ்பெய்னிடமிருந்து முற்றாக விடுதலை பெற்ற ‘டொமினிக்கன் குடியரசு’ சுதந்திர அரசாகத் திகழ்ந்தது. எனினும் ஐக்கிய அமெரிக்காவின் தலையீடு அதிகமாகவே காணப்பட்டது. 1930 இல் இராணுவம் மேற்கொண்ட புரட்சியின் பலனாக இராணுவ ஆட்சி நிறுவப்பட்டு, பின்னர் தேர்தல் நடந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. முப்பது ஆண்டு காலம் ‘ரஃபேல் த்ருஜில்லோ’ என்ற சர்வாதிகாரியின் கீழ் ஆட்சி நடந்ததுபடம்: mtholyoke அதிலிருந்து முப்பது ஆண்டு காலம் ‘ரஃபேல் த்ருஜில்லோ’ என்ற சர்வாதிகாரியின் கீழ் ஆட்சி நடந்தது. அக்டோபர் 24, 1891 ஆம் ஆண்டு ‘சான் கிறிஸ்டோபல்’ நகரில் பிறந்த ‘ரஃபேல் த்ருஜில்லோ’ இளம் வயதில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு அதற்காகச் சிறை தண்டனை அனுபவித்து விட்டுப் பின்பு ‘42’ என்ற கொடூர குணம் படைத்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக உருவெடுத்தார். இடையில் எட்டாண்டுகாலம் (1916-1924) அமெரிக்காவின் கீழ் ஆட்சி இருந்தபோது 1918 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கித் தனது ஆளுமைத் திறன் மூலம் ஒன்பதே ஆண்டுகளில் இராணுவத்தின் தலைமைத் தளபதி பொறுப்பினை எட்டினார். இவரது முப்பது ஆண்டு கால ஆட்சியில் நாடு பொருளாதார வளர்ச்சியில் சீரான நிலைத் தன்மையை அடைந்தபோதும் தனிமனித சுதந்திரங்கள் பறிக்கப்பட்டுப் பெரியளவில் மனித உரிமை மீறல்கள் நடந்தேறின. மாற்றுக் கருத்தை முன்வைக்கும் எதிர்கட்சிகளே இல்லை என்பதற்காகத் தொடர்ந்து பல படுகொலைகளை அரங்கேற்றினார். அதில் குறிப்பிடத்தக்கது 1937,அக்டோபர் 2 முதல் 8 வரை ‘பார்சிலே படுகொலை (parseley massacre) என்றழைக்கப்படும் கைத்தியினருக்கு எதிராக டோமினிக்க இராணவத்தை வைத்து அவர் நிகழ்த்திய மாபெரும் இனப்படுகொலை. கொடுங்கோல் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலகட்டங்களில் அத்தகைய கொடிய வலியோடு அழிக்க முடியாத நினைவுகளையும், தன் தாய்நாட்டின் விடுதலைக் கனவையும் சுமந்துகொண்டு அமெரிக்காவிற்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். படம்: alchetron விளைவு அரசுக்கெதிரான இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ‘தி பட்டர்ஃபிளைஸ்’ (வண்ணத்துப் பூச்சிகள்) என்ற இயக்கத்தைத் தொடங்கி ‘மிராபல் சகோதரிகள்’ என்றழைக்கப்படும் நான்கு டொமினிக்க சகோதரிகள் அந்த இயக்கத்தைச் சிறப்பாகத் தலைமையேற்று நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் அந்த இயக்கத்தில் இணைந்தனர். ஜனநாயகத்தின் முழு விடுதலையையும் மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே அவர்களது ஒரே இலக்காக இருந்தது. படம் :tumblr மிராபல் சகோதரிகள் டொமினிக்கக் குடியரசின் ‘சிபாவோ’ பகுதியின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள். த்ருஜில்லோ பெரும்பாலும் தன் உடற்பசிக்குப் பருவப் பெண்களை அடைய நினைக்கும் தவறான பழக்கம் உடையவர். இதில் மூன்றாவது பெண்ணான ‘மினர்வா’ ஒருமுறை த்ருஜில்லோவின் விருப்பத்தை மறுத்துவிட்டதால் பின்னாளில் அவர் சட்டம் படித்தும் அங்கு பயிற்சி பெற அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகுதான் மக்களின் அடிப்படை உரிமைகளையும், விடுதலை உணர்வையும் மீட்டெடுக்க வேண்டி இப்படியொரு இயக்கத்தை அவர் ஏற்படுத்தினார். முதலில் நான்காவது சகோதரியான ‘மரியா தெரெசா’ அவரோடு இணைந்தார். தொடர்ந்து மூத்தவரான ‘பாத்ரியாவும்’, இரண்டாவது பெண்ணான ‘தீதியும்’ இந்த இயக்கத்தில் இணைந்தனர். முதலில் அவர்களுக்குள்ளாகவே “தி பட்டர்ஃப்ளைஸ்” என்று அழைக்கத் தொடங்கிப் பின்னாளில் அதுவே அவர்களது இயக்கத்தின் புனைப் பெயரானது. நவம்பர் 25, 1960 அன்று ‘பாத்ரியா’, ‘மினர்வா’, ‘மரியா தெரெசா’ மூவரும் அவர்களது ஓட்டுனரோடு மகிழுந்தில் சென்றுகொண்டிருந்தபோது த்ருஜில்லோவின் ஆட்களால் கொலை செய்யப்பட்டுப் பிறகு விபத்து ஏற்பட்டதுபோல் காட்டிக்கொள்ள அவர்களது வண்டி மலையிலிருந்து உருட்டி விடப்பட்டது. இவர்களது மரணத்திற்குப் பிறகு ‘தி பட்டர்ஃப்ளைஸ்’ இயக்கத்தில் இணைந்திருந்த மற்ற புரட்சியாளர்களால் போராட்டம் வலுத்தது. அதன் விளைவாக 1961 ஆம் வருடம் மே 30ஆம் தேதி ரஃபேல் த்ருஜில்லோ புரட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். மிராபல் சகோதரிகளைக் கௌரவிக்கும் வகையில் 1999 வருடம் கூடிய ஐ.நா பொதுக்குழு நவம்பர் 25 ஆம் தேதியை ‘அனைத்துலக மகளிருக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமாக’ அறிவித்தது. அதன் பிறகு 1978 முதல் இன்றுவரை டொமினிக்கக் குடியரசு முழுமையான விடுதலை பெற்ற ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. ஆனாலும் ஆட்சியும், அரசியலமைப்பும், ஆட்சியாளர்களும் மட்டுமே மாறியிருக்கிறார்கள், கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலும், மனித உரிமை மீறல்களும் டொமினிக்கக் குடியரசு நாட்டில் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலும், மனித உரிமை மீறல்களும் டொமினிக்கக் குடியரசு நாட்டில் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. படம்: forharriet காலங்கள் மாறலாம், சர்வதேசச் சட்டங்களும் மாறலாம், ஆனாலும் உலக அமைதிக்கான முயற்சியை முன்னெடுப்பதுபோல் நடித்துக் கொண்டிருக்கும் நாடுகளும், அதன் தலைவர்களுமே கூடப் பல இனப் பேரழிவிற்குத் துணை போவதையும், தனது இனத்தின் அடையாளச் சுவட்டினைத் தொலைத்துவிட்டு அலைகின்ற அகதிகளின் புலம் பெயர்தலையும் இன்றுவரை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம், இருப்போம்!. இனப் படுகொலையும், மனித உரிமை மீறல்களும், அகதிகள் கடுந்துயரும் தொடர் நிகழ்வே விடுதலைப் போராளிகளின் போராட்டமும், இறப்பும் சராசரி நிகழ்வாகக் கருதப்படும்வரை!, இனம் கடந்து, மொழி கடந்து, மதம் கடந்து, நிறம் கடந்து சக மனிதனை நேசிக்கத் தெரியாதவரை………….. உசாத்துணைகள்: pulitzercentre Before we were free- Julia Alvarez In the Time of the Butterflies -Julia Alvarez The feast of the Goat- Mario vargas llosa https://roar.media/tamil/history/the-butterflies/
 38. 1 point
  கேரளா மீன் குழம்பு என்னென்ன தேவை? மீன் - 1/2 கிலோ எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 2 மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு புளி கரைசல் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு உலர்ந்த கசூரி மேத்தி இலை - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மீன் எடுத்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம், இஞ்சி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தக்காளி, மிளகாய்த்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்த்து கலந்து, புளி கரைசலை ஊற்றவும். ஒரு மூடி கொண்டு மூடி சிறிது நேரம் வேக விடவும். பின் கசூரி மேத்தி இலை தூவி சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான கேரளா மீன் குழம்பு தயார்.
 39. 1 point
  கேசினி விண்கலம். - படம். | நாஸா / ராய்ட்டர்ஸ். 1997-ம் ஆண்டு சனிக்கிரகத்தை நோக்கி பயணித்து 2004-ம் ஆண்டு முதல் சனிக்கிரகத்தைச் சுற்றி வந்து விந்தையான தகவல்களை பூமிக்கு அனுப்பிய கேசினி விண்கலம் நமக்கு அனுப்பிய தகவல்களில் 20 முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கதாகும். சூரியக் குடும்பத்தின் 2வது பெரிய கிரகமான சனியிலிருந்து தகவல்களை அனுப்பி தன் பணியை நேற்று முடித்துக் கொண்ட கேசினி விண்கலம் நேற்று (செப்.15) விண்வெளியில் தீப்பந்தாகி விஞ்ஞானிகளுக்கு பிரியாவிடை அளித்தது. கேசினியால் கிடைத்த 20 அறிவியல் முத்துக்கள்: 1. நீர், பனிப்புகைத்திரைகள், என்சிலேடஸ் கேசினி விண்கலம்தான் என்சிலேடஸ் என்ற சனிக்கிரகத்தின் 6-வது பெரிய நிலவைக் கண்டுபிடித்துக் கொடுத்தது. இதன் பனி மேற்பரப்புக்கு அடியில் நீர் இருப்பதும் தெரியவந்தது. நாஸாவைப் பொறுத்தவரையில் இந்த சனிக்கிரக சமுத்திரம் சூரியக் குடும்பத்தின் அறிவியல் ரீதியாக சுவாரசமூட்டக்கூடிய ஒரு மிகப்பெரிய தகவலாகும். கூடுதலாக என்சிலேடஸ் கெய்சர் போன்ற ஜெட்கள் அமைப்பின் மூலம் நீராவியையும் பனித்துகள்களையும் தெளிக்கிறது என்பதையும் கேசினி மூலமே கண்டு கொண்டோம். அதாவது அடியில் நீர் அனல் வெளியேற்றிகள் இருப்பதை இது அறிவுறுத்தியது. மேலும் இந்த நீரில் நிறைய உப்பு, அமோனியா, இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர், இதன் மூலம் உயிர்கள் அங்கு சாத்தியமாகக் கூடிய சூழல் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. 2. டைட்டனின் மேற்புறம் தோற்றம் எப்படி? சனிக்கிரகத்தின் உலக வரைபடத்தை அணு அணுவாகப் பிடிக்கச் சென்ற கேசினி விண்கலத்துக்கு உதவியாக ஹுய்ஜென்ஸ் என்ற ரோபோ விண்கலம் 2005-ல் சனிக்கிரகத்துக்குள் நுழைந்தது (2005). இது சனிக்கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் தரையிறங்கியது. இதற்கு முன்பாக டைட்டன் என்பது புதன் கிரகத்தை விட பெரியது அடர்த்தியான வளிமண்டலம் கொண்டது என்று நாம் அறிந்திருந்தோம். ஆனால் கேசினி-ஹியுஜென்ஸ் மிஷன் நமக்குக் காட்டியதெல்லாம் டைட்டன் அவை எல்லாவற்றையும் விடக் குறைவானது என்பதே. 3. டைட்டனின் பூமி போன்ற உலகம்: டைட்டனைப் பற்றி நாஸா விஞ்ஞானிகள் கூறுவதென்னவெனில் இது ஆழ் உறைபனியிலிருந்த ஆரம்பகட்ட பூமி போன்றது என்பதே. இந்த டைட்டன் நிலவு உள்ளார்ந்த சமுத்திரத்தைக் கொண்டது என்பதைக் காட்டிய கேசினி, நைட்ரஜன் அதிகமிருக்கும் வளிமண்டலம் என்பதையும் காட்டியது. ஏனெனில் சனியே ஒரு மிகப்பெரிய வாயுக்கிரகமே. பூமிக்குப் பிறகு அடர்த்தியான நைட்ரஜன் வளிமண்டலம் கொண்டது டைட்டன். 4. டைட்டன் கடல்களில் மீத்தேன் ஹூய்ஜென்ஸ் டைட்டனில் தரையிறங்கிய பிறகு டைட்டன் என்பது உயிர்வாழ்க்கூடிய எதிர்கால ஆற்றல்களைக் கொண்டது என்பது மட்டுமல்லாமல் அதன் கடல்கள் மொத்தமும் மீத்தேன் நிரம்பியிருந்ததையும் நமக்கு கேசினி காட்டியது, எப்படி இத்தனை மீத்தேன் வந்து சேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் இன்னமும் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். ஆனால் டைட்டன் கடல்களில் உயிரிகளைப் பராமரிக்கக் கூடிய தன்மை இருப்பதை விஞ்ஞானிகள் ஓரளவுக்குக் கணித்தனர். 5. சனிக்கிரகத்தின் நிலவுகள் கேசினி 3 புதிய சனிக்கிரக நிலவுகளைக் கண்டுபிடித்தது. மெதோன், பல்லேனி, ஏஜியான் ஆகியவையே இந்த நிலவுகள். இதன் மூலம் சனிக்கிரகத்தின் நிலவுகள் எண்ணிக்கை 62 ஆனது. ஏஜியான் என்பது சனியின் மிகச்சிறிய நிலவாகும். இது 1.5 கிமீ தான் இருக்கும். 6. ஹைபீரியனில் ஹைட்ரோ கார்பன்கள்: சனிக்கிரகத்தின் ‘மிக விநோதமான நிலவு’ ஹைபீரியன் ஆகும். அதன் நீண்ட வடிவமும், ஸ்பாஞ்ச் போன்ற மேற்பரப்பும் அதன் விநோதத்துக்குக் காரணம். இதன் மேற்பரப்பில் பல்வேறு சேர்க்கைகளில் ஹைட்ரோகார்பன்கள் இருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இது மேலும் உயிரிகள் வாழ்வதற்கான அடிப்படை ரசாயனம் ஆகும். இங்கு எதிர்கால உயிர்வாழ்க்கை சாத்தியம் என்பதை மீண்டும் அறிவுறுத்திய ஒரு நிகழ்வு கேசினி மூலம் சாத்தியமானது. 7. இயாபிடஸ் என்ற நிலவின் 300 ஆண்டுகால புதிர்: சனிக்கிரகத்தின் முக்கியமான நிலவுகளில் ஒன்று இயாபிடஸ். இதன் சிறப்பு என்னவெனில் இதன் ஒரு பகுதி சூரியனை நோக்கியும் இன்னொரு பகுதி மற்றொரு புறம் நோக்கியும் இருக்கும், சூரியனை நோக்கி இருக்கும் பகுதி ஒளியினால் மூடப்பட்டிருக்கும், மற்றொரு பகுதி இருண்ட ஒரு பொருளினால் மூடப்பட்டிருக்கும். கேசினி இந்த புதிரை விடுவித்தது. இதன் இருண்ட பகுதிக்கு இன்னொரு சனிக்கிரக நிலவான ஃபீப் காரணமாகும். இந்த ஃபீபிலிருந்து வரும் சிகப்பு நிற தூசி இயாபிடஸ் பாதையில் நுழைந்துள்ளது. இதனால் இருண்ட அதன் மேற்பரப்பு. 8. டயோனில் பிராணவாயு மூலக்கூறுகள்: பிராணவாயு என்பது பூமியில் மட்டும் காணப்படும் ஒன்றல்ல என்பதை கேசினி நிரூபித்தது. டயோனில் ஆக்சிஜன் மூலக்கூறுகள் இருப்பதை கேசினி விஞ்ஞானிகளுக்குக் காட்டியது. 9. சனிக்கிரக வளையங்கள்: சனிக்கிரக வளையங்கள் என்பது நீர், பனித் துகள்கள் அன்றி வேறல்ல. மேலும் இதில் சிறு இயற்கை கோள்களையும் கொண்டது. இதை 2006-ல் கண்டுபிடித்தது கேசினி. 10. சனிக்கிரகத்தைச் சுற்றி புதிய வளையத்தைக் கண்டுபிடித்த கேசினி சனிக்கிரகத்தைச் சுற்றி புதிய வளையம் ஒன்றையும் கேசினி கண்டுபிடித்தது, புதிய அறிவியல் கொடையாகவே பார்க்கப்படுகிறது. இது மங்கலானது, சூரியன் கோளுக்கு பின்னால் இருக்கும் போது சில கோணங்களிலிருந்து மட்டுமே தெரியக்கூடியது. 11.சனிக்கிரகத்தின் புதிர் ஜி-வளையத்தின் சாத்திய ஆதாரம்: சனிக்கிரகத்தின் புதிரான ஜி-வளையம் 1979-ல் கண்டுபிடிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் இதன் காரணத்தை அறிய படாதபாடு பட்டு தோல்வியடைந்தனர். இதற்கு கேசினி விடையளித்தது. நீண்ட காலம் முன்பு உடைந்த நிலவொன்றின் எச்ச சொச்சங்களே ஜி-வளையம் என்பதை அறிவுறுத்தியது கேசினி. 12.சனிக்கிரக வளையங்களுக்கும் கிரகங்கள் உருவாவதற்குமான தொடர்பு: சனிக்கிரக வளையங்களின் செயல்களை ஆய்வு செய்வதன் மூலம் கிரகங்கள் எப்படி உருவாகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடிந்தது. வளையங்களுக்கிடையே சிறு நிலவு உருவாக்கத்தை கேசினி காட்டிக் கொடுத்தது. வளையம் எந்த மூலக்கூறுகளால் ஆனதோ அதே கூறுகளால் இந்த சிறு நிலவுகளும் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டது. 13. சனிக்கிரக வளையங்கள் குலுங்குதல் சனிக்கிரக வளையங்கள் பள்ளத்தன்மை கொண்டது சீரானது அல்ல. கிரகத்தின் புவியீர்ப்பு இடையீடுகளினால் வளையங்களில் அலைகள் உள்ளன. இந்த அலைகளை நிலநடுக்க வரைபடத்துடன் விஞ்ஞானிகள் ஒப்பிடுகின்றனர். இதன் மூலம் வாயுகிரகங்களான சனி, ஜுபிடர் எப்படி நடந்து கொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய உதவி கிடைத்தது. 14. சனிக்கிரக ஒளி அமைப்புகள் பற்றி புதிய பார்வைகள் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஒளியைப் போல் கேசியினால் சிலபல கோணங்களில் சனிக்கிரகத்திலும் ஒளி அமைப்பை கண்டுபிடிக்க முடிந்தது. சூரிய வெடிப்பு பற்றிய கோட்பாட்டுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியது. சனியின் வடதுருவ சுழலும் ராட்சதச் சூறாவளி; கேசினி அனுப்பிய இமேஜ். - படம். | நாஸா. 15. சனிக்கிரகத்தின் ராட்சத சூறாவளிகள்: ஹார்வி, இர்மா போன்ற சூப்பர் சூறாவளிகளை நாம் மறந்து விடுவோம். சனிக்கிரகத்தில் இது மிகமிக மோசமானது, கேசினி மிக அருகில் சென்று சனியின் வட மற்றும் தென் துருவங்களில் இத்தகைய ராட்சத சூறாவளிகளைப் படம் பிடித்தது. இதில் வடதுருவத்தில் கண்ட சூறாவளி 2000கிமீ அகலமும், சாதாரணமாக பூமியில் தோன்றும் சூறாவளியின் கண்பகுதியை விட 20 மடங்கு பெரிதுமாகும். தென் துருவத்தில் சுழன்ற சூறாவளியின் கண் இன்னும் பெரிதாகும். அதாவது 8,000 கிமீ அகலமானதாகும். 16. அறுகோண அமைப்பு மிகப்பெரிய அறுகோண அமைப்பு விஞ்ஞானிகளிடையே புதிராக இருந்து வந்தது. கேசினி இது என்னவென்பதை படம் பிடித்துக் காட்டியது. 17. சனியின் பருவநிலை வகைகள் சனிக்கிரகத்தின் துருவங்களில் எழும் பருவநிலைகள் பற்றி கேசினி தகவல்களை அளித்தது. வடதுருவத்தில் வசந்தகாலத்தில் 36 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை ஏற்படுகிறது. தென் துருவத்தில் இலையுதிர் காலத்தில் 63 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் ஏற்படுகிறது. 18. சனிக்கிரகம் சுற்றுவது எப்படி? சனிக்கிரகம் ஒரு முறை சுற்ற 29.5 ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் இதில் பகல் இரவைக் கணிப்பது விஞ்ஞானிகளின் அறிவுக்கப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. காரணம் சனியின் வளிமண்டலத்தில் இருக்கும் அடர்தியான வாயுவே. கேசினி கிரகத்தின் ஒலி அலைகளை அனுப்பி சனிக்கிரகம் சுற்றுவது பற்றிய தகவலை அறிய உதவியது. 19. சனியிலிருந்து பூமி எப்படி தெரிகிறது? வாயேஜர் மிஷன் பூமியை வெளிர் நீல புள்ளியாகக் காண்பித்தது. கேசினியும் பூமியிலிருந்து 1.5 பில்லியன் கிமீ தூரத்தில் இருந்த போது அங்கிருந்து பூமி எப்படி இருக்கிறது என்ற படத்தை அனுப்பியது. இதுவும் ஒரு புள்ளி போன்று தெரிந்தது. 20. வியாழன் அதன் உண்மையான நிறத்தில் எப்படி தெரிந்தது? கேசினி சனியைச் சுற்றி வரும் அதே வேளையில் வளிமண்டலத்தின் பிற ராட்சத வாயுக்கிரகம் பற்றிய தகவல்களையும் சேகரித்தது. அப்படித்தான் வியாழன் கிரகத்தின் மிகப்பெரிய சிகப்புப் புள்ளியைப் படம் பிடித்தது கேசினி. தமிழில்: முத்துக்குமார் http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19698874.ece?homepage=true