Leaderboard

 1. valavan

  valavan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   593


 2. nedukkalapoovan

  nedukkalapoovan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   29,985


 3. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   4

  • Content Count

   85,545


 4. மெசொபொத்தேமியா சுமேரியர்

  மெசொபொத்தேமியா சுமேரியர்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   7,573Popular Content

Showing content with the highest reputation on சனி 19 மே 2018 in all areas

 1. 3 points
  தமிழர்களில் உள்ள சில ஈனத்தமிழர்கள்.. புலிக்கொடியை அடிப்பெட்டிக்குள் மடிச்சு வைக்கச் சொன்னார்கள்.. ஆனால்.. சிங்களவன் அதை மறக்காமல்.. தூக்கிப் பிடிக்கிறான்.. கொழுத்திறான். அவனுக்குத் தெரியுது... புலிக்கொடியின் யதார்த்தம்.. வலிமை. ஆனால்.. எம்மில் சிலதுகளுக்கு.. சராணகதின்னா.. கோடி சுகம்.
 2. 3 points
  உண்மையான கருத்து நிலாக்கா! பெண்ணடிமைத்தனம் எம்மிடம் இருந்ததில்லை! பெண்ணை அர்த்த நாரீஸ்வரியாக்கி ...அழகு படுத்தியது....எமது மதம்! ஏன் உங்கள் மதம் கூட அவளை அன்னை வடிவாக்கி ....உயரத்தில் வைத்தது! தனது சமூகத்தின் கண்ணியத்தையே..எமது சமூகம் பெண்ணில் தான் வைத்தது! அதனால் தான்...பெண்ணை...அண்ணனும், தம்பியும், அப்பாவும்...அம்மாவும்...அத்தானும் கூடப் பொத்தி வளர்த்தார்கள்! அந்தப் பொத்தலில்....கொடுமையோ....வன்மமோ இருக்கவில்லை! அன்பும்..அணைப்பும் தான் இருந்தது! எத்தனை...அண்ணாக்கள், அப்பாக்கள், தம்பிகள்,..தங்கள் வாழ்க்கைகளைக் கருக்கியும், சுருக்கியும்,,தங்கள் தன்கைகளுக்காக, மகள்களுக்காக, அக்காக்களுக்காக..உழைத்திருக்கிறார்கள்? தலையில்...மயிர் கொட்டத் தொடங்கிய பிறகு தான்...அண்ணா.... திருமணம் செய்கிறான்! காலம்...காலமாகத் தங்கையைப் பொத்தி வளர்த்தவன்...அதே கவனத்தால் தான்...வந்த துணையையும் பொத்தி வைக்க முனைகிறான்! ஏனெனில்....வெளியுலகம்...அப்படி! ஆனால்...வெளியுலகம் பாதுகாப்பானது என...அவன் கருதுகையில்...தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறான்! அது தான்....இப்போது நடக்கின்றது! ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்! அண்மையில்...நிழலி ஓரிடத்தில் எழுதிய...ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது! அது அன்னையர் தினத்தன்று எழுதியது...! மனைவிகளை...அன்னையராகக்கிய தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்! எனவே....அவன்...அவள்..என்ற வேறு பாடின்றி...நாம்.....நமது குடும்பம்...என்ற மனநிலையில் பயணிப்போமே!
 3. 3 points
  முள்ளிவாய்க்கால் முடிவோடு எல்லோரையும்விட அதிகம் பாதிக்கப்பட்டது அவர்களே, சொந்தமாய் எந்த தொழிலும் தெரியாத அவர்கள், காலம் முழுவதும் புலிகள் இருப்பார்கள், புகை,போதை,பொண்ணு,பொருள் எல்லாம் காலம் முழுவதும் சிங்களவன் கால் கழுவி பெற்றுக்கொண்டு, காலம் முழுவதும் இப்படியே ஓட்டிவிடலாம் என்று எத்தனையோ கனவு கண்டிருப்பார்கள்... உடம்பு நோகாமல் புலியெதிர்ப்பு பிரச்சாரம்,காட்டி கொடுப்பு ,கப்பம் கையில் ஆயுதம்,புதிய வாகனம் என்று சுகபோகியாக வலம் வந்தவர்களிடம், யுத்தம் முடிந்ததும் சில மாதங்களுக்குள்ளேயே அவர்கள் கையில் இருந்த ஆயுதத்தை சிங்களவன் பறித்ததும், அவர்களுக்கான கொடுப்பனவுகள் வசதிகள் அனைத்தையும் நிறுத்தியதும்... அவர்களின் மேலிடத்தில் உள்ள பெரும் தலைகளை தவிர மற்றவர்கள் நிலை எல்லாம் அம்போதான்... நானறிந்து கீழ்மட்டத்திலிருந்து வண்டியோட்டியவர்கள் பலர் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை வைத்து சவுதி,குவைத்,கட்டார் பக்கம் கிளம்பி சென்றுவிட்டார்கள். அங்கே இலங்கையிலிருந்து எட்டப்ப தொழில் செய்து ஒரு மாதம் சம்பாதித்ததை, ஒரு வருஷம் உடம்பு முறிந்து வேலை செய்து உழைக்கணும், இப்போது அவர்கள் இறுதி யுத்தத்தை எண்ணி கண்ணீர் வடிப்பார்கள்...நாங்களும் வடிப்போம்... ஆனால் இரண்டு கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கும்... அவர்கள் தாங்கள் இழந்ததை எண்ணி...நாம் நாங்கள் இழந்ததை எண்ணி!
 4. 2 points
  சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது. குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா. இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். எதுக்கு இந்த வேல ... நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணம் தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள். யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு. தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ... எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்?? எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.
 5. 1 point
  புலிகளின் கொடிகளை எரித்த சிங்களவர்கள் எத்தனை பேர்? இதே சிங்களவர்களில் போர்குற்ற ஆவணங்கள் வெளிவர உதவி செய்த சிங்களவர்கள் பலர் என்பதையும் மறக்கலாகது. இதேவேளை புலிகளின் சொத்துக்களை பினாமி பெயரில் பராமரித்தவர்கள் (தமிழர்கள், தாங்களை புலிகளின் பிரதிநிதிகள் என அழைத்துக்கொண்டவர்கள்) யுத்தமுடிவிக்கு பின் எத்தனை பேர் ஞாயமாக நடந்து கொண்டார்கள்? ஆட்டையை போட்டவர்கள் எத்தனை பேர்? யுத்த முடிவின் பின் அதிக லாபம் அடந்தவர்கள் இத்தகையா வியாபரிகளே. கயவர்கள் எல்லா இனத்திலும் உண்டு. கரிகாலன் அவர்களின் குடும்பம் கூட மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் ஆனலும் ஒருவரும் உதவி செய்யமாட்டர்கள்.
 6. 1 point
  54 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள். 1. பகலவன் 36 2. suvy 30 3. ஈழப்பிரியன் 30 4. nunavilan 30 5. vasanth1 29 6. Ahasthiyan 29 7. nesen 29 8. கறுப்பி 24
 7. 1 point
 8. 1 point
  ஒரு நாட்டின் மீது கோபம் ஏற்படும் அதன் கொடியை எரிப்பதும் கிழிப்பதும் வழமைதானே லண்டனில நம்மவர்கள் சிங்க கொடியை கிழிச்சு தொங்கப்போடலயா
 9. 1 point
  ஈழ போராட்டத்தையும் அதன் கொடியையும் பிரபாகரனையும் இணையத்தளங்களில் சக தமிழர்கள் கேவலப்படுத்தும் அளவிற்கு சிங்கள அரசியல் இனவாதிகள் கேவலப்படுத்தவில்லை என்பதை பலரும் சிந்திக்க வேண்டும்.
 10. 1 point
  வெற்றிக் கொண்டாட்டம் என்றால், வெற்றியைத் தேடித் தந்தவர்களையும், அந்த வெற்றிக்கு உதவியவர்களையும் போற்றிச் சிறப்பித்துக் கொண்டாடுவது உலக வழமை. இங்கு தங்கள் எதிரியான புலிகளின் கொடியை எரித்துக் கொண்டாடுவதானது புலிகள்மேல் இன்னமும் உள்ள பயத்தையே காட்டுகிறது.
 11. 1 point
  தோல்வியின் நெடில் சோதியா காற்றழுது திரிந்த கடற்கரை வெளியின் நிலவுறைந்த பொழுதொன்றில் கைவிடப்பட்டன.... எனது சீருடை சுடுகலன் வீரம் நம்பிக்கை.... வெளிகள் எங்கணும் தோல்வியின் நெடில் வியாபித்திருந்தது. மனிதநேய மீட்பர்களின் இரட்சிப்புக் காலம் திமிரும் வன்மமும் வக்கிரமும் தினவெடுத்த குறிகளாய் சுற்றிவளைக்கப்பட்டது விசாரணைகளின் அங்கமானது பாலியல் வதை; கூட்டு வன்புணர்வு நினைவு தப்பிக்கொண்டிருந்த நிட்டூர நிமிடங்களில் அரையிருள் பரவிய அறையெங்கும் தோல்வியின் நெடில் வியாபித்திருந்தது. காணி உறுதி மீள் வரைவு, கச்சேரி அலுவல்கள், நிவாரண பொருட்களின் சீரான வழங்கல்..... ஆங்காங்கே பக்குவமாய் கோரப்படுகிறது பாலியல் லஞ்சம்! அசிங்கங்கள் விரவிய அலுவலக சுவர்களுக்குள் தோல்வியின் நெடில் வியாபித்திருந்தது. கட்டவுட் கதாநாயகருக்கான பாலாபிசேகம் கேரளக் கஞ்சா கேட்பாரற்ற குறுநில மன்னர்களின் வாள்வீச்சு வீரம் வெற்று பியர் ரின்களோடு வீசப்பட்ட விடுதலை வேட்கை இனவாதம் விழுங்கும் எல்லைக் கிராமங்கள் புதிதாய் முளைக்கும் புத்தர் சிலைகள்..... தேசமெங்கணுமே தோல்வியின் நெடில் வியாபித்திருந்தது. தோழர்களே! உங்களோடிணைந்து உரைத்த உறுதிமொழி காக்க கதியற்றேன் மன்னிப்பீராக! http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=df5de093-95cc-460f-a31e-ab4dfdaed973
 12. 1 point
  எல்லா இடங்களிலும் அண்ணாக்கள்;தம்பிகள் மற்றும் பெரியவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது...எல்லாவற்றையும் விபரிக்கவும் இயலாது..
 13. 1 point
  என் வாசிப்பு ரசனையை மெருகூட்டி, புதிய பரிணாமத்துக்கு கைபிடித்து அழைத்துவந்த என் மானசீக குருவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.. உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக. ??? நிழலி, கிருபன் மற்றும் பலரை போலவே வேதாளம், இரும்புக்கை மாயாவி, துப்பறியும் சாம்பு, பாலமித்திரா , ரத்தினபாலா வாசிப்பில் இருந்து திளைத்த காலம்.. அன்பு நண்பன், புத்தகப் பித்தன் பிரபா எனக்கு "இரும்புக்குதிரைகளை" அடையாளம் காட்டினான்.. புத்தகத்தின் பெயரின் கம்பீரத்திலேயே சுண்டி இழுக்கப்பட்ட நான் விஸ்வநாதன், ராவுத்தர், தாமீரா, இவர்களோடு நாட்கணக்கில் சஞ்சாரிக்கத்தொடங்கினேன்... "குதிரைகள் பசுக்களை போல வாய்விட்டு கதறுவதில்லை வழியில்லை என்பதல்ல ..வலிமையே குதிரை ரூபம் தொட்டதும் சிலிர்க்கும் குதிரை சவுக்குகாக பணிந்து போகும் புணர்ந்த பின் குதிரைகள் ஒரு நாளும் தூங்கியதில்லை இது - குதிரைகள் சொன்ன வேதத்தின் முதலாம் பாடம்... இப்படி புரிந்தும் புரியாத வரிகளை நண்பனிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு பாலகுமாரன் அய்யாவின் புத்தகங்களை தேடி தேடி வாசித்த காலங்கள்.. மெர்குரிப்பூக்கள், என்றேன்றும் அன்புடன், கைவீசம்மா கைவீசு, கரையோர முதலைகள் இப்படி மனதில் ஆழமாக படிந்த பல புத்தகங்கள்... இவர் புத்தகங்களை வாங்கி அழகாக அடுக்கி அழகு பார்க்க வீட்டிலேயே ஒரு சிறிய வாசிகசாலை அமைப்பது; என் அன்றைய நாள் கனவு... கனடாவில் அது சாத்தியமானது. இன்று பாலகுமார் அய்யாவின் சுமார் 35க்கு மேற்பட்ட புத்தகங்கள் என் வாசிப்பு அறையை கௌரவப் படுத்துகின்றன. பாரதியார் முதல் கொண்டு பாலகுமாரன், சுஜாதா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், காசியானந்தன், புதுவை ரத்தினதுரை இவர்களை புத்தக வடிவில் நண்பர்களாக, ஆசிரியர்களாக சேர்த்து வைத்திருப்பதில் கொஞ்சம் கர்வமும் சேர்ந்தே இருக்கிறது... பின்னணி, முன்னணி, சின்னத் திரை, பெரியத் திரை நட்சத்திரங்களை கொண்டு வந்து அழகு பார்க்கும் இந்த கனேடிய சமூகத்துக்கு நல்ல தமிழ் எழுத்தாளர்களை கொண்டு வந்து கௌரவப்படுத்த முடிவதில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு. இது குறித்து பலருடன் பேசியாயிற்று என்ன பயன்... 5, 6 மாதங்களுக்கு முன்னர் கூட முருகன் புத்தக சாலை உரிமையாளருடன் இது குறித்து கதைத்தேன்.. அவரும் பாலகுமாரன் ஐயாவை இங்கு அழைத்து வருவது பற்றி மேலோட்டமாக கதைத்தார். கொடுத்து வைக்க வில்லை.... நவீனன் நீங்கள் இணைத்திருக்கும் பாலகுமாரன் குறித்த இனிய பதிவுகளுக்கு மனம் உவந்த நன்றிகள்.
 14. 1 point
  இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் யுத்தவெற்றியை கொண்டாடுகிறார்கள் என்றால், அவ்வளவு தூரம் நினைவில் வைத்திருப்பதற்கு அவர்களுக்கு நாம் தோல்வியை ஒரு காலம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.. இதில் கவலைப்பட ஒன்றுமில்லை, பெருமை வேண்டுமென்றால் பட்டுக்கொள்ளலாம்.
 15. 1 point
  மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல - தொல்காப்பியன் சில காலங்களுக்கு முன் ஊடகவியல் துறை (Department of communication) நண்பர் ஒருவர், " மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் தானே ! அதை ஏன் அரசியல்வாதிகள் வழிபாட்டுக்குரியதாக புனிதப்படுத்த வேண்டும்?" எனக் கொந்தளித்தார். தற்கால அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் அவருக்கு நியாமான கோபம் இருக்கலாம். ஆனால் மொழியை அவர்களுக்குரிய விடயமாக விட்டு விடுவது எவ்வகையில் சரி ? மேலும் அது வெறும் தகவல் ஊடகம் என்பது கார்ல் மார்க்ஸ், அண்ணா போன்றோரை வழிபடும்(!!) என் போன்றோர்க்கே வறட்டுத்தனமாகத் தோன்றுகிறதே! ஒருவனுக்கு அவன் தாய்-தந்தை போல, அவன் வேர்விட்ட மண் போல, நம்புகிறவனுக்கு அவன் 'சாமி' போல மொழியும் ஒரு உணர்வாயிற்றே! ஒருவன் சாமியை நிராகரித்து நாத்திகனாய் வாழ்ந்துவிடலாம். மொழி நாத்திகனாய் (இச்சொல்லாடலுக்கான காப்புரிமை தயவு கூர்ந்து அடியேனுக்கே உரித்தாகுக!) எவ்வாறு வாழ முடியும் ? உணர்வுடன் பேசித்தானே ஆக வேண்டும் ? அதிலும் குறிப்பாக " என் பிள்ளை தமிழ் படிக்கவில்லை " ," எனக்கு தமிழ் அவ்வளவாகப் பேச வராது " எனப் பெருமையாகச் சொல்லும் மானங்கெட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறி வரும் நிலையில் தமிழின் தொன்மையும் மேன்மையும் பேசப்படத்தான் வேண்டும். தமிழுக்குத் துளியும் தகுதியில்லாத தமிழனிடம் அம்மொழி மாட்டிக்கொண்டது என்பதை எடுத்துச்சொல்லத்தான் வேண்டும் . தமிழைத் தமிழனிடமிருந்து காப்பாற்றவாவது தொல்காப்பியனை அழைக்கத்தான் வேண்டும். உலகின் எந்த மொழியிலக்கணமும் எழுத்து பற்றிப் பேசும்; சொற்களின் அமைப்பு பற்றிப் பேசும். தொல்காப்பியம் பொருளையும் பேசியது. தமிழ் பேசிய நிலத்தின் பாகுபாட்டை எடுத்தியம்பியது, அந்நிலத்தின் பூவினம், புள்ளினம் (flora and fauna), பொழுது, வெளி (time and space), தொழில் சார்ந்த சமூகப் பாகுபாடு அனைத்தும் சொன்னது. இவை போதாதா மொழி வெறும் ஊடகமல்ல என்று உலகோர்க்குச் சொல்ல? எல்லாவற்றிற்கும் மேலாக தமிழனின் சமூகவியலும் பேசியது தொல்காப்பியம். கற்பு, களவு, திணை வகைகள் இவையனைத்தும் சமூகவியல் அன்றி வேறென்ன? தொல்காப்பியச் சமகாலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் அது குறிக்கத் தவறவில்லை என்பது மொழியிலக்கணம் கற்க முனைந்த எவரையும் வியப்பில் ஆழ்த்தும் விடயம். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம்" என்பது தொல்காப்பியம் சுட்டும் சமூக (அவல) மாற்றங்களில் ஒன்று. களவியலில் மடலேறுதல், உடன்போக்கு போன்ற துறை சார்ந்து ஒழுகிய தமிழ்ச் சமூகத்தில் பொய்களும் குற்றங்களும் தோன்றியமையால் பெற்றோர், உற்றோர் போன்ற மூத்தோர் (அய்யர் என்பதன் பொருள் ஈண்டு மூத்தோரே) மணமுறைகளை (கரணம்) இயற்ற ஆரம்பித்தனர் எனக் குறிக்கிறது தொல்காப்பியம். உன்னதமான காதல் வாழ்விலிருந்து வழுவி, வரையறுக்கப்பட்ட மணமுறைக்குள் சென்றது சங்க காலத் தமிழ்ச் சமூகம் என்பதற்குச் சான்று தொல்காப்பியம். ஒரு மொழியிலக்கணம் எவ்வாறு அமைதல் வேண்டும் என உலக மொழிகளுக்கே இலக்கணம் வகுத்தது தொல்காப்பியம். உலக அறநூல்களுக்குத் தலையாயதாய் திருக்குறளை நிறுத்தியதை போல, உலக இலக்கணங்களுக்குத் தலையாயதாய் தொல்காப்பியத்தைக் கொண்டு நிறுத்துவது தமிழுணர்வு இன்னும் எஞ்சியிருப்போரின் கடமை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இறுதியாக தொல்காப்பியம் மொழிந்தவாறு பொய்யும் வழுவும் தமிழ்ச்சமூகத்தில் தோன்றியமைக்குச் சான்றாக குறுந்தொகைக் காட்சியொன்று (பாடல் 25) : யாருமில்லை தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத் தாளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. அஃதாவது தலைவி தோழிக்குச் சொல்கிறாள், "அவ்விடத்தில் யாருமில்லை; தானே (தலைவனே) கள்வன். அவனே (இல்லையென) பொய்த்தால் நான் என்ன செய்ய முடியும்? தினையின் அடிப்பாகம் போல சிறிய இளங்கால்களையுடையதும் ஆற்றுநீரில் (ஒழுகு நீரில்) சிறிய மீனுக்காக (ஆரல்) காத்திருப்பதுமான குருகு (மட்டுமே) உண்டு அவன் என்னை மணந்த (அடைந்த என்பதன் இடக்கரடக்கல்) பொழுது". இவ்வாறு ஒரு வலுவற்ற சாட்சியையே முன்வைக்கிறாள் தலைவி. தொல்காப்பியத் திறம் பேச முயலும் போது குறுந்தொகை இலக்கியத் திறமும் கண்முன் வருமாயின், சொல்லாமல் எங்ஙனம் மறைப்பது? எல்லாம் தமிழின் திறம்தானே ! - சுப. சோமசுந்தரம்
 16. 1 point
  ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.! விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.! இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன். நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே மடிந்த உன்னத வீர்கள். மடி சுரந்த பால்போல, மனம் தூய்மை யானவர்கலென்பதைக் கூறுவதற்கே. சமீபகாலமாக இணையத்தில் எம் வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகள் திட்டமிட்டு விதைக்கப்படுகின்றது. புதிய தலைமுறையிடம் பிழையான வரலாறு போய்ச் சேரக்கூடாதென்பது மட்டுமே எனது நோக்கம். இந்த சம்பவம் புத்தளத்தை அண்டி, எதிரி பிரதேசத்தில் நடந்த சம்பவம். சில காரணங்களுக்காக சம்பவம் நடந்த இடத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன். ஒரு நடவடிக்கை நிமித்தம், ஒரு அணியொன்று 1997களின் நடுப்பகுதியில் கொழும்புக்கு நகர்த்தப்பட்டிருந்தது. அந்த இலக்கை அழிப்பதற்கான நாள் நெருங்கி வரும் நேரம், எமது ஆதரவாளர் ஒருவரின் கைதின் மூலம் இந்த நடவடிக்கையாளர்கள் சிங்கள உளவுத்துறையால் இனம் காணப் பட்டனர். இதனால் இவர்களின் உயிர் ஆபத்தை கருத்தில் கொண்டும், வேறு சில காரணங்களுக்காகவும் இவர்களை தளம் திரும்பும்படி கட்டளையிப்பட்டிருந்தது. அன்றைய நேரத்தில் பல நாட்கள் நடந்தே, எமது அணி கொழும்புக்கு பயணபட்டுக்கொண்டிருந்தது. இதற்காக பல பாதைகள் பயன்பாட்டில் இருந்தது. அது போல நகர்வுக்கு, வேறு பல முறைகளும் இருந்து பாவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது வில்பத்து காட்டின் ஊடான பயணதின் போது. அதன்படி இவர்களுக்கான வழி காட்டிகள் துணையுடன், குறிப்பிட்ட இடமொன்றிலிருந்து வழிகாட்டி, மற்றும் ஒரு கரும்புலி வீரனுடன் சேர்த்து ஐந்து போராளிகள் நகர ஆரம்பித்தனர். அதன்படி ஆரம்ப இடத்திலிருந்து நடந்தும், வாகனத்திலுமாக புத்தளம் தாண்டி "தபோவ" என்ற இடத்தை சென்றடைந்தனர். அங்கிருந்து இந்த அணியை பெரும் காடு உள்வாங்கியது. அது வரை பயணத்தின் போது மிக எச்சரிக்கையாகவே பயணப்பட்டனர். இராணுவ காவலரண்கள், மினிமுகாம்கள், காவல் நிலையங்கள், ரோந்து அணிகள், அத்தோடு தமிழரை விரோதியாக பார்க்கும் சிங்கள குடிமக்கள் என, அனைத்து கண்ணிலும் மண்ணை தூவி, ஓரளவு பாதுகாப்பான இடம் ஒன்றை வந்து சேர்ந்திருந்தது அந்த அணி. அந்த இடத்தின் பாதுகாப்பான இடமொன்றில், கொண்டு வந்த உலர் உணவை பங்கிட்டு உண்டபின், சிறிய ஓய்வின் பின் தமது பயணத்தை ஆரம்பித்தனர். மூன்றுநாட்கள் பயணத்தின் பின் "பலகொள்ளகம" (balagollagama) என்ற இடத்தை அண்டி இந்த அணி நகர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு மலை நேரம். காடுகளின் ஊடக அணி நகர்ந்து கொண்டிருந்த போது, யாரோ உரையாடும் சத்தம் கேட்டது. உடனே போராளிகள் பாதுகாப்பான இடம் தேடிப்பதுங்கினர். இப்படி காடுகளின் ஊடான பயணத் தின் போது போராளிகள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை, ஒன்று, சிங்கள வேடைக்காரர்களால் கட்டி வைக்கப்படும் வேட்டை துவக்கு. இரண்டாவது, "சிங்கள அரசின் நடமாடும் சிறப்பு படையணியான SF" என்று சுருக்கமாக அழைக்கப்படும் உந்துருளிப்படையணியாகும். ஏனெனில், இந்த அணிகள்(போராளிகளுக்கு) நகரும் போது இவர்களது கையில் உள்ள வரைபடத்தில் எல்லா விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்றால் போலவே இவர்கள் பயன்படுவார்கள். ஆனால், இந்த "நடமாடும் SF" எங்கு, எப்போது வருவார்கள் என்று தெரியாது. எங்காவது ஒரு இடத்தில் போராளிகளுடன் முட்டுப்படும் போதே அது தெரியும். இப்படியான ஒரு அவதானத்துடன் செல்லும் போது தான் அந்த சத்தம் கேட்டது. இப்போது அந்த சத்தம் இவர்களை நெருங்கி வந்தது. போராளிகளின் இதயத்துடிப்பும் வேகம் பெற்றது. இப்போது அந்த குரல்கள் தெளிவாக கேட்டது. அது மூன்று பெண்களின் உரையாடல் சத்தம்.! அந்த மூன்று இளம் பெண்களும் 22வயதிற்கு குறைவான இளம் வயதினர். தமது வீட்டு தேவைக்கான விறகு வெட்டிச் செலவதற்காக வந்திருந்தனர். அவர்கள் காய்ந்த விறகை தேடி நகர்ந்தபடி, போராளிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கினர். அப்போது போராளிகள் பயந்தது போலவே இவர்களைக் கண்டு விட்டனர் அந்த சிங்களப் பெண்கள்.! ஒரு நாட்டின் சிறப்பு படையணி வீரர்கள், எதிரி பிரதேசத்தினுள், நடவடிக்கை நிமித்தம் நகரும் போது, எப்படி எல்லா காலநிலைக்கும் தாக்குப்பிடித்து, கிடைப்பதை உண்டு உயிர்வாழ கற்றுக்கொடுக்கப்படுகின்றதோ, அது போலவே மிக முக்கியமானது இப்படியான நேரத்தில் யாராவது இவர்களது நடமாட்டத்தை கண்டால், அவரை கொன்று, அந்த உடலை மறைத்து பின் நகரவேண்டும். அது பொதுமக்களுக்கும் பொருந்தும்.! இந்த முறையையே பொதுவாக எல்லா நாட்டு சிறப்பு இராணுவப் படையணியினரும் கையால்கின்றனர்.! புலிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இது மரபுவழி இராணுவமாக இருந்த புலிகளின் சிறப்பு அணிகளுக்கும் பொருந்தும்.! யுத்தத்தில் இது தவிர்க்க முடியாதது.! அப்படி ஒரு சந்தர்ப்பம் தான், புலிகளின் சிறப்பு அணியினருக்கும் அன்று ஏற்பட்டிருந்தது.! அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்தினரின் சீருடையில் இருந்த புலிகள், உடனே பற்றையினுள் இருந்து வெளிவந்து, ஆயுத முனையில் அந்த பெண்களை தமது கடுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். குடிமனைகளில் இருந்து தொலைவில் இருந்தமையால் அது இலகுவாக்கி விட்டிருந்தது. அப்போது அந்த அணியின்பொறுப்பாக வந்த போராளி சரளமாக சிங்கள பேசக்கூடியவர். அவர்களுடன் உரையாடி அவர்கள் வந்த நோக்கத்தையும் அவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர். உரையாடலின் போதே அந்த பெண்களுக்கு இவர்கள் யாரென்று தெரிந்து விட்டது. மூவரும் அழ ஆரம்பித்தனர். அப்போது இவர்களைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் இவர்களை உயிரோடு விட்டால், அடுத்த சில மணி நேரத்தில் சிங்கள உந்துருளிப்படையணியால் சுற்றி வளைக்கப் பட்டு, கொல்லப்படுவார்கள் என்பது புலிகள் ஐந்து பேருக்கும் தெரியும். ஆகவே, கொல்வதற்கு ஆயத்தப்படுத்தும் போது, தங்களுக்கு நிகழப்போவதை உணர்ந்த, அந்த சிங்களப்பெண்கள் விழுந்து, தொழுதபடி கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது அழுதபடியே தங்களை "எது வேண்டுமானாலும் செய்யும் படி கூறி" தங்களை உயிரோடு மட்டும் விட்டு, விடும் படி மண்ராடினர்.! பல வருடங்கள் சிங்கள நாகரீகத்தை கரைத்து குடித்த அந்த அணித் தலைவனுக்கு, அவர்களின் வேண்டு கோளின் அர்த்தம் புரியாமல் இல்லை. சிறு புன்னைகையின் ஊடே அவர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தபின், அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமான போது, அந்த அணியிலேயே வயது குறைந்த, ஒரு இளைய போராளி, அண்ணை கொஞ்சம் பொறுங்கோ... எனக்கு இவையளை பார்க்க பாவமா இருக்கு. இவர்களை இங்கேயே கட்டி போட்டு விட்டு போவம் என்றான். அதற்கு அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அந்த அணியில் இருந்த இனொரு போராளியும் அந்த இளைய போராளிக்கு உதவிக்கு வந்தான். தொடந்து அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அதுவரை அமைதியாக இருந்த, இவர்களுடன் பயணப்பட்ட கரும்புலிவீரனும் அவர்களுக்கு உதவிக்கு வந்தான். அப்போது அந்த மூன்று போராளிகளின் வற்புறுத்தல், அந்த அணித் தலைவனின் மனதை கரைத்து. வேறு வழி இல்லாது, அரைமனதுடன் அவர்களை உயிரோடு விட சம்மதித்தான்.! இராணுவ விதிமுறையை மீறினால், அதன் பின் விளைவு என்ன என்பது அந்த அணியினருக்கு நன்கு தெரிந்திருந்தது. எந்த நிமிடமும் இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். பெரும்பாலும் எல்லோரும் மரணிக்கலாம்.! அவர்கள் அதற்கு தயாராகவே இருந்தனர்.! அதன் பின் அந்த மூன்று பெண் களையும் இவர்களுடனேயே இன்னும் சில km தூரம் கூட்டி சென்றனர். பின் அவர்கள் மூவரையும் கை,கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அந்த பெண்கள் கூறிய நன்றியை காதில் வாங்கியபடி புலிகள் நகர ஆரம்பித்தனர். அந்த பெண்களுக்கும், அவர்களின் உறவினருக்கும் மட்டுமே, அன்று ஒரு உண்மை புரிந்திருக்கும்! புலிகளை எந்தளவு தூரம் "ஒழுக்கமாணவர்களாக" தலைவன் வளர்த்திருந்தாரென்று.! இந்த சம்பவத்தின் பின் அந்த அணியினருக்கு, தமது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் இந்த பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு போய்ச் சேராது போனால், இவர்களை தேடி, இவர்களது உறவினர்கள் வருவார்கள். எப்படியோ சில மணி நேரங்களில், எல்லோருக்கும் தகவல் கிட்டும். ஏதோ ஒரு இடத்தில் இவர்கள், சிங்கள SF படையணியுடன் முட்டுப்படுவார்கள். அதை உணர்ந்து ஒட்டமும் நடையுமாக தங்கள் பயணப்பதையை மாற்றிச் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பயந்தது போலவே, அடுத்த நாள் இவர்களை இனம் கண்ட எதிரி தாக்குதலை தொடுத்தான். இதில் அந்த இளைய போராளி கால் துடையில் காயமடைந்தான். அந்த போராளியையும் தூக்கிக் கொண்டு பெரும் காட்டை நோக்கி நகர்ந்தனர். உடனே எதிரி இவர்கள் முன்னோக்கி ஓடுவார்கள் என்றே கணிப்பார்கள் என்பதை உணர்ந்த அணித்தலைவர், காயமடைந்த அந்த இளைய போராளியுடன் பின்னோக்கி நகர்ந்தனர். ஒரு பாதுகாப்பான இடம் ஒன்றை அடைந்து அங்கு தங்க முடிவெடுத்தனர். அப்போது இவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடும் இருந்தது. அதோடு இன்னும் கடக்கவேண்டிய தூரமோ மிக அதிகம். அதனால் காயமடைந்த போராளியை தூக்கி சுமப்பதும் சிரமம். அப்படி தூக்கி சென்றாலும் வேகமாக நகர முடியாது.! அதனால், மீண்டும் எங்காவது முட்டுப்பட வேண்டி வரலாம்? அப்படி தூக்கி சுமந்தாலும் இரத்த போக்கு காரணமாக அந்த போராளி எம்மை விட்டு போவது தவிர்க்க முடியாது. அதனால் என்ன செய்வதென்று எல்லோருக்கும் குழப்பம். அப்போது அந்த போராளியை சுமந்து செல்வதற்கு முடிவெடுத்து, படுக்கை ஒன்றை தயார் செய்ய ஆரம்பித்த போது அந்த இளைய போராளி அதை தடுத்தான். அப்போது அவன் "அண்ணை நான் கன நேரம் உயிரோடு இருக்க மாட்டன்" என்னை காவி நீங்களும் அடி வேண்ட வேண்டி வரும், அந்த கரும்புலி வீரனை காட்டி "அவரது உயிர் முக்கியம்" நீங்கள் "தப்பி போங்கோ" என்றான் தீர்க்கமாக. அவனது வார்த்தையில் இருந்த உண்மை, அவனது கோரிக்கைக்கு எல்லோரையும் செவிசாய்க்க வைத்தது. அப்போது அந்த இளைய போராளி தன்னை கிடங்கு கிண்டி தாட்டு விட்டு செல்லும் படி கோரிக்கை வைத்தான். ஆகவே அதற்கான கிடங்கை கிண்டும் படி கூறினான். அதன்படியே ஏனைய போராளிகள், பெரும் மனச்சுமையுடன் தடியின் உதவியுடன் கையால் கிடங்கொன்றை கிண்ட ஆரம்பித்தனர். அது ஒரு மணல் பிரதேசம் என்பதால் அந்த வேலை இலகுவாக முடிந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த போராளி தனக்கு தாகமா இருக்கென்று கேட்டு, ஒரு குளிர்பான கானை உடைத்து சிறிது குடித்தான். சிறிது குடித்ததும் "அண்ணை எனக்கு போதும் இதை நீங்கள் பங்கிட்டு குடியுங்கோ, சாகப்போற எனக்கு எதுக்கு" என்றான்.! எல்லோரும் கண்ணீருடன் அவனை பார்த்த போது, தனது வலியை மறந்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயட்சி செய்து தோற்றுப்போனான்.! சிறிது நேரத்தின் பின் தன்னை அந்த கிடங்கில் தூக்கி வளர்த்தும் படி கூறினான்.! அதை யாரும் செய்ய முன்வரவில்லை.! சிறிது நேரத்தின் பின் தூரத்தில் எதிரியின் உந்துருளியின் சத்தம் கேட்டு எல்லோரிடமும் பதட்டம் தொற்றியது. அப்போது அந்த போராளி அங்கிருந்த படியே குப்பியை(சயனைட்) கடிக்க ஆயத்தமான போது, அதை தங்களால் பார்க்க முடியாதென்ற போராளிகள், அவனை தூக்கி அந்த கிடங்கில் வளர்த்தினர்.! எல்லோரும் கண்ணீருடன் அவனிடம் விடை பெற்ற போது, அவன் புன்னகையுடன் அதை ஏற்றான்.! தொடர்ந்து, இவர்களைப் பதுகாப்பாக சென்றுவிடும்படி கேட்டபின், அந்த அணித்தலைவனிடம், தனது மரண செய்தியை இவனே தனது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தான். அத்தோடு என்ன காரணத்துக்காக தான் மரணமடைந்ததையும், தன் தாயிடம் கூறும்படி கூறினான்.! ஏனெனில், அந்த இளைய போராளிக்கு இரண்டு பெண் சகோதரிகள் இருந்தார்கள்.! ஆகவே, தனது உணர்வை அவனது தாயால் உணரமுடியுமென்றும், அவரது மனம் அதனால் சாந்தியடையுமென்றும் வேண்டினான். அப்போது அந்த அணித்தலைவன், அவனிடம் கூறினான், நான் எடுத்த ஒரு தவறான முடிவால் உன்னை இழந்துவிட்டேன் என்றபோது, இல்லை அண்ணை நீங்கள் எடுத்தது தான் சரியான முடிவு. அவர்கள் என் சகோதரிகள் போல இருந்தார்கள் என்றான்.! அது போலவே ஏனைய போராளிகளுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்களை காப்பாற்றியதற்கு. ஆனால், எல்லோருக்கும் பொதுவான ஒரு காரணம் இருந்தது.! எவ்வளவு தூரம் எமது மக்களை இந்த போராளிகள் நேசித்தர்களோ, அந்தளவு தூரம் எதிரியின் மக்களையும் நேசித்தார்கள்.! இவர்கள் தான் எங்கள் போராளிகள்.! சில நிமிடங்களின் பின்,மரணித்த அந்த வீரனுக்கு, உளமார தங்கள் வீரவணக்கத்தை செலுத்திய பின், தமது இருப்பிடம் நோக்கி நகர ஆரம்பித்தனர். அதன் பின் பல ஆபத்துகளைக் கடந்து எதிரியின் தாக்குதல்களையும் முறியடித்து, பல நாட்கள் தாமதமாக உணவில்லாது, கிடைத்தவற்றை உண்டு, தமது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர்.! ஒரு வாரத்தின் பின் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்த அவனது வீட்டுக்கு சென்ற அந்த அணித் தலைவனால், சில நிபந்தனைகளுடன் அவனது பெற்றோருக்கு வீரச்சாவுச் செய்தி அறிவிக்கப்பட்டது. அந்த போராளிக்கு ஒரு நடுகல் கூட இல்லாது, ஊரறியாது, தங்கள் சோகங்களை மறைத்து வாழ்ந்தது அந்த குடும்பம். பின்னைய நாளின் அந்த அணித் தலைவனின் குடும்பமானது அந்த குடும்பம், அவனை மகனாகவும், சகோதரனாகவும் ஏற்றது அந்த குடும்பம்.! ஒரு வெளித்தெரியாத வீரனின் வரலாற்றை, பெருமை, பெயர்,புகழ், கல்லறை, மாவீரர் குடும்பம் என்ற கௌரவம், என எல்லாவற்றையும் துறந்து, தங்களை, தங்கள் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பங்களில் அந்த இளைய போராளியின் குடும்பமும் ஒன்று.! இது தான் எங்கள் மக்கள்.! இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.!! From Facebook
 17. 1 point
  முடிவுறாத் துயரத்தின் சாட்சியாய் முடிவேயற்ற புதைகுழிக்குள் மரணங்கள் மலிந்து மண்ணில் உதிரங்கள் இறைத்த நன்னாள் ஓலங்கள் ஒருங்கே கேட்டும் உதவிட யாரும் எண்ணா ஈனர்களாக்கி நாங்கள் ஒடுக்கி அடக்கி மண்ணில் உயிருடன் புதைத்த நன்னாள் உன்மத்தம் கொண்ட மூடர் ஊளைகளோடு ஊனை உறிஞ்சியே உதிர்த்தன அன்று எரிந்தன எங்கள் ஊர்கள் சரிந்தன சடலங்கள் அங்கே ஆணின் பெண்ணின் ஆடை அவிழ்த்து அம்மணமாக்கியே அரக்கர் சிரிக்க கூனிக் குறுகி நாம் மண்ணில் கரைய கொடுமைகள் அங்கே குவியலாயின கேடுகெட்டு நாம் பார்த்திருந்தோம் கைகள் அறுந்தன அன்றே எமது நெஞ்சு கிழித்து இதயம் தோண்டி மங்கையர் மார்பறுத்து மரணம் காட்டி சிரசறுத்துக் சிசுவறுத்து எம் பெண் சினையறுத்து செங்குருதியோட சிங்கங்கள் அன்று சிறுத்துப்போயின ஆண்டுகள் ஒன்பது ஆனது ஆயினும் மீள முடியா வினைகளின் சுவடுகள் வீழ்ந்த எம்மவர் வீடுகள் தோறும் மேன்மைகொள்ளும் வழிகள் இன்றி கூன் விழுந்த குருடராய் எம்மவர் கூனிக் குறுகி நிற்கிறார் இன்றும் மூன்று நேர உணவு உண்கிறோம் முடிந்தவரை விடுமுறை செய்கிறோம் மனம் களிக்க மணவறை வைக்கிறோம் மேதினி எங்கும் மிதப்பாய் திரிந்து மானத் தமிழர் நாம் எனச் சொல்கிறோம் கூடிய இனம் குமுறலோடிருக்க குலவையிட்டுக் கும்மாளமிடுகிறோம் கோடி கோடியாய்க் காசும் சேர்த்துக் குடும்பமாய் சேர்ந்து கூடிக்களிக்கிறோம் குருட்டுத் தமிழா நீ கூன் நிமிர்ந்து கம்பீரமாய் நடப்பதெப்படி???? வானுயர மனம் தெளிந்து மானுடராய்த் தளைப்பதெப்படி ???? நாதியற்று நாமலையும் நாட்களை நிரந்தரமாய் நிறுத்துவதெப்படி ????? சுற்றமும் சூழலும் எமதாக்கி சுதந்திரமாய்ச் சுவாசிப்பதெப்படி????? மயக்கம் தெளிந்து நுணுக்கம்உணர்ந்து மண்ணை நாம் மீட்பதெப்படி????? உணர்வில் உறுதிகொண்டு ஒன்றாய் நாம் சேர்வதெப்படி ????? எமக்கான ஒரு நாட்டில் எண்ணங்களை ஏகாந்தமாய்ச் சுமப்பதெப்படி ????? ஏழைத் தமிழா நீ எண்ணங்களைச் சுமப்பதெப்படி????
 18. 1 point
  கோட்டலுக்கு உள்ளேயே போய் டக்சி நின்றுது. நேரம் மதியம் இரண்டரை மணி. முன்புறம் ஒருமாதிரி இருந்தாலும் உள்ளே மிக ஆடபரமான இருக்கைகளும் மின்விளக்குகளும் அட நல்ல ஹோட்டல் தான் புக் செய்திருக்கிறம் என்ற நின்மதி வந்தது. எங்கள் இரண்டு பெரிய சூட்கேஸ்களை அங்கு வேலை செய்யும் ஒருவர் இழுத்துக்கொண்டு வர நாமும் ஒவ்வொன்றை இழுத்தபடி லிப்டில் நான்காம் மாடிக்குச் சென்றால் அழகிய பெரிய அறையில் ஒரு சிறிய கட்டிலும் ஒரு இரட்டைக் கட்டிலும். யன்னலைத் திறந்தால் எதிரிலும் கட்டடங்கள் தானேயன்றி வேறு காட்சிகள் தெரியவில்லை. மகள் வந்த உடனேயே குளித்துவிட்டுப் படுத்துவிட்டாள். நாமும் குளித்து உடை மாற்றி ஒரு மனித்தியாலத்தில் எழும்பிச் சாப்பிடப் போவோம். எலாம் வை என்று கணவர் கூற எலாம் வைத்து வேலைக்கோ போகப்போரியள். இங்காவது நின்மதியாப் படுக்க விடுங்கோ என்றுவிட்டுப் படுத்ததுதான். எழும்பிப் பார்த்தால் மாலை ஆறு ஆகிவிட்டிருந்தது. மீண்டும் முகம் கழுவி வெளிக்கிட்டு கீழே போய் பக்கத்தில் எங்காவது நல்ல உணவகம் இருக்கிறதா என்று கேட்டால், இரண்டு நிமிடம் நடந்தால் ஒரு தமிழ் உணவகம் இருப்பதாகக் கூற அங்கு சென்றால் எங்கும் தமிழ் முகங்களும் எம் உணவின் வாசனையும். லண்டனில் எந்த உணவகம் என்றாலும் சுத்தமாகவே இருக்கும். அனால் கொஞ்சம் பார்க்க அப்பிடி இப்படி இருந்தது. வேறு எங்காவது போவோமா என்று நான் கேட்க, இந்த இரவில எங்க தேடுறது. நாளைக்கு நல்லதாப் பார்த்துப் போவம் என்று மனிசன் கூற மகளும் தலையாட்ட வேறு வழியின்றி ஒரு மேசையில் போய் இருந்தம். மேசை நன்றாகத் துடைக்கப்பாடாமல் இருக்க நானும் பாக்கிறன் வேலையாட்கள் அதாலையும் இதாலையும் போயினமே தவிர எங்களைக் கண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அத்தனை சனம் அங்கு. எனக்கோ பொறுமை தேயத் தொடங்கியது. ஒருக்கா அவனைக் கூப்பிட்டுத் துடைக்கச் சொல்லுங்கோ அப்பா என்றால் அவசரப்படாதை வருவாங்கள் தானே என்றுவிட்டு மனிசன் வாற போறவையை பிராக்குப்பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஒரு பத்து நிமிடம் ஆகியிருக்கும் யாரும் எட்டிப் பார்க்கவே இல்லை. எனக்கு ஏற்கனவே மூக்கு சிறிய மனத்தையே பெரிதாக இழுத்து வைக்கும். விதவிதமான உணவுகளின் மணம் என்றால் கேட்கவே வேணும் .பசிக்கவும் ஆரம்பிச்சிட்டுது. வேற வழியில்லாமல் பார்த்துக்கொண்டு இருக்க இன்னும் ஒரு ஆணும் பெண்ணும் எமக்கு அடுத்த மேசையில் வந்து இருக்க எதோ அவைக்காகவே வந்தவர் போல ஒருவர் வந்து என சாப்பிடுறீங்க என்று மெனு காட்டிக் குடுக்க என் பொறுமை பறந்து போக, எஸ்கியூஸ்மி நாங்கள் வந்து இருபது நிமிடம் ஆச்சு. யாருமே எமது மேசைக்கு வரவில்லை என்று பக்கத்து மேசைக்கு வந்தவரைப் பார்த்துக் கூறுகிறேன். சொறி மேடம் என்றுவிட்டு எமக்கும் மெனு காட்டைக் கொண்டுவந்து தர, தயவு செய்து மேசையில் இருக்கும் நீரைத் துடைத்து விட முடியுமா என்கிறேன் நான். அதன் பின் ஓடர் செய்து மகள் பூரி மனிசன் மசாலத் தோசை நான் நெய் முறுகலும் வடையும் உண்டுவிட்டு பால்த் தேநீருக்கு ஓடர் செய்தோம். தேநீரை குடித்தபின் அந்தக் கடைக்காரரில் இருந்த கோபம் எல்லாம் போய்விட்டது. அத்தனை உருசி. பணம் செலுத்தப் போய் நின்றால் நீங்கள் சிலோனில் இருந்து வர்றீங்களா என்கிறார் கல்லாவில் இருக்கும் இந்தியர். ஓம் என்று கூறிவிட்டு நேரத்தைப் பார்த்தால் எட்டு மணி. தெரியாத இடத்தில் இரவில் திரிவது பாதுகாப்பு இல்லை என்று கருதியதால் மீண்டும் கோட்டலுக்கே வந்து அடுத்த நாள் எங்கு போவது என்று திட்டமிட ஆரம்பித்தோம். இங்கிருந்து கிளம்பும்போதே எல்லாம் திட்டமிட்டதுதான். ஆனாலும் மீண்டும் செய்வதுதானே பாதுகாப்பு. சரி ஒருநாள் முழுதும் முகநூலுக்குப் போகவில்லை. இப்ப போவம் என்று எண்ணிக்கொண்டு முகநூலைத் திறந்தால் தோழி நீங்கள் மலேசியாவுக்கு வந்துவிட்டீர்களா என்று மலேசியாவிலிருக்கும் ஒரு பெண்தோழியின் செய்தி காவலிருக்க, ஆம் வந்துவிட்டோம். கோலாலம்பூரில் இந்தக் கொட்டலில் தான் தங்கியுள்ளோம். நீங்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள்? உங்களுக்கு நேரம் இருந்தால் நாம் சந்திக்கலாம் என்று பதில் போட நான் இருப்பது கொஞ்சம் தூரம் தோழி என்று பதில் போட்ட பின் அந்தப் பெண்ணிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அட இவருக்கு என்னைச் சந்திப்பதில் ஏதும் இடர்பாடாக்கும் என எண்ணியபடி இருக்க கீழே றிசெப்சனில் இருந்து எமக்கு போன். உங்களைக் காண இருவர் வந்து காத்திருக்கின்றனர். இப்ப சந்திக்க முடியுமா என்கின்றனர். நாம் இங்கு வந்து இறங்கியது யாருக்கும் தெரியாதே?? எம்மைச் சந்திக்க யார் என்று யோசனை ஓட நானும் மனுசனும் ஒருவிதப் பதட்டத்துடன் கீழே போனால் என் முகநூல் தோழியும் தங்கையும் அங்கே. எனக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. தான் ஒரு அலுவலாக பக்கத்தில் வந்ததாகவும் நான் கொட்டலின் பெயரைக் கூறியதும் எனக்கு ஆச்சரியத்தைத் தருவதற்காக உடனே வந்ததாகவும் கூறி ஒரு மணி நேரம் எம்முடன் இருந்து கதைத்துவிட்டு நாளை மறுநாள் தான் எம்முடன் வருவதாகக் கூறிச் செல்ல மனதில் ஒரு நின்மதி பிறந்தது உண்மை. வரும்
 19. 1 point
  அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள். கடைசியில கதிர்காமத்துக்குப் போய் இரவு தங்கிவிட்டு காலை வெளிக்கிட வான் கிளம்பவில்லை. நானும் மனிசனும் சேர்ந்துதான் தள்ளி ஸ்டார்ட் ஆனது தம்பி
 20. 1 point
  `பழமையான மொழி... வரலாற்று தொடர்ச்சி ` - திராவிட மொழிகளின் தொன்மையை விளக்கும் ஆய்வு! தெற்கு ஆசியாவில் ஏறத்தாழ 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழிகள், இந்திய பழங்கால வரலாற்றை புரிந்துக் கொள்ள மட்டும் உதவவில்லை, மொத்த யுரேசியாவின் வரலாற்றையும் புரிந்துக் கொள்ள உதவுகிறது. திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த 80 மொழிகளை, தெற்கு மற்றும் மத்திய இந்தியா மற்றும், இந்தியாவின் அருகே உள்ள நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 22 கோடி பேர் பேசுகிறார்கள். இந்த திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது எனலாம் என்கிறது சர்வதேச குழு ஒன்று மேற்கொண்ட ஓர் ஆய்வு. ராயல் சொசைட்டி ஓபன் சைன்ஸில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வானது, திராவிட மொழிகள் மற்றும் அதனை பேசுவோரின் தொல் வரலாற்றை புரிந்து கொள்ள உதவி புரிகிறது. சமஸ்கிருதத்துக்கு இல்லை மேற்கில் ஆஃப்கானிஸ்தான் முதல் கிழக்கு வங்கதேசம் வரை பரந்து விரிந்திருக்கும் தெற்கு ஆசியா, ஆறு மொழி குடும்பத்தைச் சேர்ந்த அறுநூறு மொழிகளுக்கு தாயகமாக இருக்கிறது. இவற்றில் திராவிட மொழி குடும்பமும் ஒன்று. திராவிட மொழி குடும்பத்தில், 80 மொழி வகைகள் உள்ளன (மொழி மற்றும் உள்ளூர் பேச்சு வழக்குகள்). இவை ஏறத்தாழ 22 கோடி மக்களால் பேசப்படுகின்றன. திராவிட மொழி குடும்பத்தில் பழமையான மற்றும் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னடம். படத்தின் காப்புரிமைHTTP://WWW.SHH.MPG.DE இந்த நான்கில் மிகவும் பழமையானது தமிழ் மொழி. உலகில் உள்ள செம்மொழிகளில் சமஸ்கிருதத்தைப் போல தமிழும் ஒன்றாகும். ஆனால், அதே நேரம் சம்ஸ்கிருதம் போல அல்லாமல், தமிழின் மொழிக் கட்டமைப்பில் ஒரு தொடர்ச்சி இருந்துகொண்டிருக்கிறது. இது, தமிழின் கவிதைகள், செய்யுள்கள், கல்வெட்டுகள் எனப் பல வகைகளில் தொடர்கிறது. இத்தொடர்ச்சி சமஸ்கிருதத்துக்கு இல்லை. மேக்ஸ் பிளான்க் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆனிமேரி, "திராவிட மொழிகள் பிற மொழிகளில் குறிப்பிடத்தக்க அளவு ஆதிக்கம் செலுத்தி உள்ளதால், திராவிட மொழிகளை ஆய்வு செய்வது யூரேசியாவின் தொல்வரலாற்றை புரிந்துக் கொள்ளவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்கிறார். `திராவிடர்கள் பூர்வகுடிகள்` திராவிட மொழிக் குடும்பம் புவியியல் தோற்றம் எங்கு என்று தெரியவில்லை. அதுபோல, எப்படி அது காலப்போக்கில் பரவியது என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், 3,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இத்திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் தென்னிந்தியாவில் வசித்தனர் என்பது இந்த ஆய்வை மேற்கொண்டவர்களின் ஒருமித்த கருத்து. அதாவது இந்திய துணைகண்டத்தின் பூர்வகுடிகள் திராவிடர்கள், இந்தோ- ஆரியர்களுக்கு முன்பாகவே அவர்கள் அங்கு வசித்தனர் என்பதும் உறுதி என்பது இந்த ஆய்வை மேற்கொண்டவர்களின் கருத்து. எங்கு, எப்போது திராவிட மொழிகள் வளர்ச்சிப்பெற்றன என்ற கேள்விகான விடையை கண்டறிய, 20 திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள வரலாற்று உறவை இந்த ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆய்வாளர்கள் பயன்படுத்திய புள்ளியியல் தொழில்நுட்பம் மிகவும் நவீனமானதும் முன்னேறியதுமானதாகும். பல வழிகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டபோதும் ஒவ்வொரு முறையும் ஒரே முடிவே கிடைத்துள்ளது. ஆகவே தான் அவர்கள் திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழைமையானது என உறுதியாக கூறுகிறார்கள். அதேநேரம், இம்முடிவுகள் அகழ்வாராய்ச்சியின் முடிவுகளோடும் ஒத்துப்போகின்றன. (Source: http://www.shh.mpg.de/870797/dravidian-languages) http://www.bbc.com/tamil/india-43501454
 21. 1 point
  திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது, தமிழ்மொழி மிகத் தொன்மையானது - ஆய்வில் தகவல் YouTube மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் - படம்: ட்விட்டர் திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை 4,500 ஆண்டுகள் பழமையானது. அதிலும் தமிழ் மிகத் தொன்மையானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனத்தின் மானுடவியல் வரலாற்றுத்துறையும், டேராடூனில் உள்ள இந்தியன் வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் அமைப்பும் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கை ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: திராவிட மொழிக்குடும்பங்கள் என்பது 80 வகையான மொழிகளைக் கொண்டது. ஏறக்குறைய தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதியில் 22 கோடி மக்களால் பேசப்பட்டு வந்திருக்கிறது. இந்த மொழிகளின் ஏறக்குறைய 4,500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம். திராவிட மொழிக்குடும்பத்தில் மிகப்பெரிய மொழிகளாகத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் கருதப்படுகின்றன. அதிலும் தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழியாகக் கருதப்படுகிறது. உலகளவில் சமஸ்கிருதமும், தமிழ்மொழியும் மிகவும் பழமையான மொழியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சமஸ்கிருத மொழியைப் போல் அல்லாமல், தமிழ்மொழி தன்னுடைய பழமைக்கும், இப்போதுள்ள நவீனத்துவத்துக்கும் இடையே தன்னை தொடர்புப் படுத்திக்கொண்டுள்ளது. இது குறித்து மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் மானுடவியல் வரலாற்றுத்துறையின் ஆய்வாளர் அன்னேமரே வெரீக் கூறுகையில், ‘‘ஐரோப்பியவும், ஆசியா பகுதிகளும் இணைந்திருந்த ஈரோசியா வரலாறு குறித்து புரிந்து கொள்ள திராவிட மொழிக் குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும். மற்ற மொழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதிலும் திராவிட மொழிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. திராவிட மொழிகள் பூகோளரீதியா பரவிய காலம், அதன் உண்மையான பூர்வீகம் குறித்துத் தெளிவான காலம் இல்லை. ஆனால், திராவிட மொழிக் குடும்பங்களுக்கு இந்திய துணைக் கண்டம் என்பது பூர்வீகம் என்ற கருத்தொற்றுமை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது. ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன் இந்திய-ஆரியர்கள் வருகைக்கு முந்தைய மொழியாக இருக்கலாம். இப்போதுள்ள நிலையைக் காட்டிலும், திராவிட மொழிகள் அந்த காலத்தில், மேற்கு திசையில் பரவலாகப் பரவி இருக்கலாம். திராவிடமொழிகள் எப்போது உருவாகின, எங்கே தோன்றின என்பது குறித்த கேள்விகளுக்கு விடை தேடும் போது, 20 திராவிட மொழிகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் தெரியவந்தது எனத் தெரிவித்தார். இது குறித்து வைல்ட் லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் பேராசிரியர் விஷ்ணுபிரியா கொலிப்பாக்கம் கூறுகையில் ‘ ‘‘திராவிட மொழிபேசும் மக்களிடம் இருந்து முதல்கட்ட தகவல்களை சேகரிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் திராவிட மொழிகளின் வரலாற்றுக் காலம் என்பது 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம்’’ எனத் தெரிவித்தார். http://tamil.thehindu.com/world/article23319420.ece
 22. 1 point
  4,500 ஆண்டுகள் பழைமையானது தமிழ் மொழி! - ஆய்வில் தகவல் இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் திராவிட மொழிகள் இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படுகிறது இதை தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் உள்ள மக்களே அதிகம்பயன்படுத்துகின்றனர். திராவிட மொழி குடும்பத்தில் மிகப்பெரிய மொழிகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியமொழிகள் உள்ளன. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் மிகவும் தொன்மைவாய்ந்தது. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை தற்போது விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. ஆனால், தமிழ் தன்னுடைய பழைமையை இப்போதும் தக்கவைத்துக்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். தற்போதை விட முன்னாள் இருந்த காலகட்டங்களில் திராவிட மொழி மேற்கத்திய நாட்டில் உள்ள பலரால் பேசப்பட்டுள்ளது என்றும் திராட மொழிகள் 4500 ஆண்டுகள் பழைமையானது என்பதற்கான தொல்லியல் ஆதாரங்கள் தற்போதும் உள்ளன என்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். https://www.vikatan.com/news/world/119902-tamil-and-dravidian-languages-originated-4500-years-ago.html
 23. 1 point
  இன்று பலரையும் தாக்கும் பொது நோயாக சர்க்கரை நோய் உருவேடுத்துக் கொண்டுள்ளது.
 24. 0 points
  அப்பிக்கிடக்கும் அந்தகாரம் துடைத்து கசியும் நிலவொளி துருவேறிய கம்பிகளை கடந்து கரடுமுரடான பழுப்பேறிய சுவர்களில் திட்டுதிட்டாய் விழுகிறது காய்ந்த உதிரச் சிதறல்கள் உயிர்வற்றிய ஓவியங்களாய் பயமுறுத்துகிறது. இரவின் நிசப்தம் உடைகிறது கூட்டத்தைப் பிரிந்து தனியனாகிப்போன குட்டியானையொன்றின் பிளிறலைப்போல் அருகிலோர் அறையில் அலறி அடங்கிப்போகிறது அந்தரித்த ஒரு தமிழ்க்குரல் அடிவயிற்றைப் பிழிகிறது பயம் அடுத்தது நானாகவும் இருக்கலாம் கடந்த விசாரணையின் காயங்களே காயவில்லை உதிரம் கலந்து ஒழுகிறது சலம் பிளாஸ்ரிக்குழாய் செருகப்பட்ட மலவாயிலில் மரணவேதனை நகம் பிடுங்கப்பட்ட விரல்களில் இலையான்கள் இருக்க எத்தனிக்கிறது. இன்னமும் நான் இருக்கின்றேனா? இவை கடந்துவிட்ட காட்சிகளா? உயிர் தரித்திருக்கிறதா அன்றி தவறிப்போனதா மனவெளியில் மங்கலாய் மாலையாய் காட்சிகள் தெளிவில்லை… தெரிவதும் மறைவதுமாய் ஒருகால்…. உணர்வு தப்பியதோ? உளவளம் உடைந்ததோ? ஒன்று மட்டும் உறுதி கனவுத்தேசம் கலைந்துகொண்டிருந்த கடைசிநாட்கள் அவை ஒட்டிய கண்கள் உலர்ந்த உதடுகள் புழுதி அப்பிய தேகம் அம்மா…. ஆம், அம்மாவேதான்…. காயம்பட்டுக் கிடந்த என்னை கவனமாய் ஒப்டைத்தாள் மீளத்தருவார்கள் என்ற மீதமிருந்த நம்பிக்கையோடு என் செய்வாள் இப்போது? கண்ணீர் கோடிழுத்த கன்னங்களோடு காவல் நிலைகளில் காத்துக்கிடப்பாளா? திரும்புவான் மகனென்று தினம் தினம் வழிபார்ப்பாளா? என் படத்தோடும் பதாகையோடும் பாதையோரத்தில் பரிதவிப்பாளா? இல்லை…. காரியங்களாற்றி கடமை செய்து முடித்திருப்பாளா? வலிக்கிறது கால நீளவும் கண்ணின் இமையென காத்துக்கிடந்தவள் கண்மூடும் ஒரு நாளில் தோளேற்றி துயர் வடித்து கொள்ளி எடுத்துப்போட கொடுப்பினை அற்றுப் போனேன்….! 15.05.18 - சோதியா