• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   5

  • Content Count

   85,545


 2. nunavilan

  nunavilan

  கருத்துக்கள நிர்வாகம்


  • Points

   5

  • Content Count

   41,353


 3. valavan

  valavan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   567


 4. கிருபன்

  கிருபன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   19,144Popular Content

Showing content with the highest reputation on 05/20/2018 in Posts

 1. 2 points
  ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்...... 1. பகலவன் 37 2. ஈழப்பிரியன் 32 3. vasanth1 31 4. Ahasthiyan 31 5. nunavilan 31 6. suvy 30 7. nesen 30 8. கறுப்பி 25 56 ம் கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பபட்டுள்ளது.
 2. 2 points
  மொத்தத்தில் தன்னால் முடிந்த இதய பூர்வமான பங்களிப்பை தாயக போராட்டத்துக்காக அந்தகாலத்தில் இருந்தே... சத்தமில்லாமல் வழங்கிய பஷீர் காக்கா அண்ணர் ...பற்றி... எதுவுமே பண்ணியிருக்காத இந்த இணைய தளங்கள் சத்தமாக அவர்பற்றி பேசி விளம்பரம் தேடுது என்று சொல்லுங்கள்... சாமானிய எந்த மனிதனுக்கும் எம் நாகரிகத்தை எண்ணி எம்மீதே காறி துப்ப தோன்றும்...!
 3. 2 points
 4. 2 points
  புலிகளின் கொடிகளை எரித்த சிங்களவர்கள் எத்தனை பேர்? இதே சிங்களவர்களில் போர்குற்ற ஆவணங்கள் வெளிவர உதவி செய்த சிங்களவர்கள் பலர் என்பதையும் மறக்கலாகது. இதேவேளை புலிகளின் சொத்துக்களை பினாமி பெயரில் பராமரித்தவர்கள் (தமிழர்கள், தாங்களை புலிகளின் பிரதிநிதிகள் என அழைத்துக்கொண்டவர்கள்) யுத்தமுடிவிக்கு பின் எத்தனை பேர் ஞாயமாக நடந்து கொண்டார்கள்? ஆட்டையை போட்டவர்கள் எத்தனை பேர்? யுத்த முடிவின் பின் அதிக லாபம் அடந்தவர்கள் இத்தகையா வியாபரிகளே. கயவர்கள் எல்லா இனத்திலும் உண்டு. கரிகாலன் அவர்களின் குடும்பம் கூட மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் ஆனலும் ஒருவரும் உதவி செய்யமாட்டர்கள்.
 5. 1 point
  ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் 1. மீண்டும் சிவகாமியின் சபதம் கே.என்.சிவராமன் இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்படியும் புலவர் தண்டி கட்டளையிட்டிருந்தார். அதை ஏற்றே மல்லை கடற்கரைக்கு கரிகாலனும் நடந்து வந்திருந்தான். ஆனால், எப்போதும் மனதை ஆற்றுப்படுத்தும் அந்த இடம் அன்று ஏனோ அலைக்கழித்தது. நிச்சயம் சந்திக்கப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியின் அழுத்தத்தால் இந்த உணர்வு விளையவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கையே அது. என்னவாக இருக்கும்? மேடான பகுதியில் அழுத்தமாகக் கால்களை ஊன்றியபடி புருவங்கள் முடிச்சிட சுற்றும்முற்றும் அலசத் தொடங்கினான். வைகாசி மாத சுக்கில பட்ச சதுர்த்தி என்பதால் பகலின் வெப்பம் தணிந்து இரவின் மூன்றாம் நாழிகையில் இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. விரிந்திருந்த கடலில் அலைகளால் உந்தப்பட்ட நாவாய்கள் முன்னும் பின்னும் ஆடியதன் விளைவாக நங்கூரம் பாய்ச்சி நின்ற பல நாட்டுக் கப்பல்களின் கொடிகள் அசைந்தவண்ணம் இருந்தன. அந்த நாவாய்களில் இருந்து கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வணிகப் படகுகளின் துடுப்புகள் சரேல் சரேலென்று துழாவப்பட்டதாலும், கரையோரம் வந்து இழுக்கப்பட்ட படகுகளாலும், படகில் இருந்து குதித்த வணிகர்களாலும், கரையோரத்திலும் சற்றுத் தள்ளியும் இருந்த கட்டுமரங்களில் மீன் பிடிக்க மீனவர் வீசிய வலைகள் பலமாகப் பல இடங்களில் இழுக்கப்பட்டதாலும் அலைகள் குழம்பியும் கலங்கியும் தெளிவதுமாக இருந்தன. அக்கம்பக்கத்து உப்பளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை உப்பை உள்நாட்டுக்கு எடுத்துச் சென்று அதற்குப் பதிலாக நெல்லை ஏற்றி வந்துகொண்டிருந்த படகுகளை உப்பங்கழிகளின் தளைகளில் ஆங்காங்கு பிடித்துப் பிணைத்துக் கொண்டிருந்த பரதவரின் அதட்டலான குரல்களும், ஓடிய படகுகளின் துடுப்புகள் கழிகளின் நீரில் பாய்ந்து எழுப்பிய சரேல் சரேல் என்ற சத்தங்களும், ஆங்காங்கு அலுவல் புரிந்து கொண்டிருந்த சுங்கக் காவலரின் கட்டளைக் கூச்சல்களும் வெகுதூரம் வரை கேட்டுக் கொண்டிருந்தன. மேல் நாட்டவரும் கீழ்நாட்டவரும் தூரக் கீழ்த் திசை நாடுகளுக்குச் செல்வதற்கு ஒன்றுகூடும் துறைமுகமாக மல்லைப் பெருந்துறை இருந்ததால் சீனரும், அராபியர்களும், தமிழரும், ஆந்திரரும், வட நாட்டாரும் கலந்து காணப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தட்டை முகமும் மஞ்சள் நிறமும் உள்ள குள்ளச் சீனரும்; மொட்டையடித்துத் தலைக்கு துணி கட்டி தொள தொளத்த உடைகளுடன் நடந்த சிவந்த மேனியும் திடகாத்திர தேகமும் உள்ள அராபியரும்; அதிக உயரமோ அதிக குள்ளமோ இல்லாத தமிழரும் கலந்து நின்ற காட்சி மல்லை கடற்கரையை நவரத்தினங்கள் போல் மாற்றியமைத்திருந்தன. இந்த ஒளிக்கு ஒலி சேர்ப்பதுபோல் சுங்கக் காவல் வீரர்கள் ‘ம்… இப்படி…’, ‘அந்தப் பக்கம் அல்ல…’ என பொதி சுமக்கும் ஊழியர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவை எல்லாம் இம்மி பிசகாமல் எப்போதும் போல் அன்றும் நிகழ்ந்தன. மல்லை கடைவீதியிலும் மாற்றங்கள் ஏதும் தென்படவில்லை. எப்போதும் போல் நெரிசலுடனேயே காணப்பட்டது. இறக்குமதியான பொருட்களுக்கு சுங்க வரி கட்டப்பட்டதும் அவற்றுக்கு உரிய வணிகர்கள் தங்கள் இடங்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று உள்நாட்டு விற்பனைக்கு தனியாகவும், கடையில் விற்பதற்கு தனியாகவும் பொருட்களைப் பிரித்து அடுக்கியவண்ணம் இருந்தனர். எந்தெந்த பொருட்கள் எந்தெந்த கடைகளில் விற்பனையாகின்றன என்பதை அறிவுறுத்தும் விதமாக ஒவ்வொரு கடையின் மேலும் கொடிகள் பறந்துகொண்டிருந்ததால் பல நாட்டு வணிகர்களும், வீரர்களும், வனிதையர் கூட்டமும் தங்களுக்குத் தேவையான கடைகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். கடை வீதியின் ஓரத்திலிருந்த புஷ்ப மரங்கள் உதிர்த்த நானாவித மலர்களின் சுகந்தம் அப்பகுதியை அரவணைத்து ரம்மியமாக்கி இருந்தது. வேல்களை ஏந்தியபடி நடமாடிய பல்லவ வீரர்கள் நெருக்கத்திலும் ஒரு சீர்மையையும் நேர்மையையும் சிருஷ்டித்துக் கொண்டிருந்தனர். சில கடைகளில் அதிகமாகக் கூடி வழியை மறித்த மக்கள் வீரர்களால் கண்ணியமாக எச்சரிக்கப்பட்டும், அது இயலாவிடில் மெதுவாகத் தள்ளப்பட்டும் ஒழுங்குக்குக் கொண்டு வரப்பட்டனர். சில முரடர்கள் பெண்கள் கூடிய இடங்களில் அத்துமீறி நுழைய முற்பட்டபோது பல்லவ வீரர்களின் ஈட்டிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தின. இதனால் வியாபாரம் தடையின்றி நடைபெற்றது. போலவே வெளிநாட்டு மரக்கலங்களுக்கு வழிகாட்டுவதற்காக மல்லை நகரின் கலங்கரை விளக்கத்தில் சுடர் விட்டுப் பிரகாசித்த பெரும் தீ்ப்பந்தங்களுக்கு அவ்வப்போது எண்ணெய் விட்டுக் கொண்டிருந்த காவலாளிகள் மேலிருந்து எண்ணெய் கேட்டுப் போட்ட கூச்சல்களும், அதற்கு தரை மட்டத்திலிருந்து கிடைத்த பதில்களும் சேர்ந்து அமைதியைக் கிழிப்பதற்கு உயரம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தன. எந்த மாற்றமும் எந்த இடத்திலும் தென்படவில்லை. பல்லவ நாட்டின் வருவாய்க்கான கேந்திரமாக மல்லை இயங்கிக் கொண்டே இருந்தது. ஆம். வருவாய்க்கான கேந்திரம்தான். தன்னையும் அறியாமல் கரிகாலனின் நாசியிலிருந்து பெருமூச்சு ஒன்று வெளியேறியது. அரிசி உற்பத்தி சோழர்களுக்கும், யானைகளின் பெருக்கம் சேரர்களுக்கும், முத்துக்களின் ஆதிக்கம் பாண்டியர்களுக்கும் கை கொடுப்பதுபோல் பல்லவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்தப் பொருளின் தனித்த உற்பத்தியும் இல்லை. அதனாலேயே வரி விதித்து வருவாயை அதிகரிக்க கவனம் செலுத்தினார்கள். செங்கொடி என்னும் சித்ரமூலம் என்ற மூலிகைக் கொடிக்கு செங்கொடிக்காணம்; நீலோற்பலம் எனப்படும் குவளைச் செடிகள் நடகுவளைக்காணம்; சீன நாட்டிலிருந்து பெறப்பட்ட மருக்கொழுந்து செடிகள் பயிரிட வரி; பயிர்த்தொழிலுக்கு நீர் பெற நேர்வயம்; கிணறு தோண்ட உல்லியக்கூலி; உள்நாட்டில் விற்கும் தானியங்களுக்கு வரி; சில இடங்களைக் கடந்து செல்ல ஊடுபோக்கு வரி; மீன் பிடிக்க பட்டினச்சேரி; கள் இறக்க ஈழப்பூட்சி; கால்நடை வளர்க்க இடைப்பூட்சி; பால் மற்றும் பால்பொருட்களின் உற்பத்திக்கு இடைப்பூட்சிதண்டல்; குயவர்களிடம் இருந்து குசக்காணம்; தட்டாரிடமிருந்து தட்டுக்காயம்; உடைகளை வெளுப்போர் பயன்படுத்திய பாறைக்கு பாறைக்காணம்; ஓடக்காரர்களிடமிருந்து பட்டிகைக் காணம்; நெசவாளர்களிடமிருந்து தறிக்கூறை; எண்ணெய் எடுப்போரிடமிருந்து செக்கு; பொருட்களை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையில் இருக்கும் தரகர்களுக்கான தரகு வரி; ஆடை நெய்ய நூல் நூற்போரிடமிருந்து பாடாம் கழி; கொல்லர்களிடம் கத்திக் காணம்; பறையடிப்போரிடமிருந்து நெடும்பறை; நெய் விற்போர் அரசுக்குச் செலுத்திய நெய்விலை; நீர் இறைக்கப் பயன்படும் ஏற்றத்துக்கு ஏற்றக்காணம்; திருமண நிகழ்ச்சிகளுக்கு கலியாணக்காணம்; ஒவ்வொரு கிணறு தோண்டவும் வரி... இதுதவிர வீரத்துக்காணம், ஆத்துக்காணம், ஊராட்சி சாதிப் பொன், பரிக்காணம், உறிக்காணம், அரிகொழி, புதக்குதிகை, குற்றதுவை... நீளும் வரிகளின் பட்டியல்தான் பல்லவ நாட்டை வாழவே வைக்கின்றன. அதனாலேயே சுங்கத் துறை ஒருவகையில் இந்நாட்டின் முதுகெலும்பாகவே திகழ்கிறது. பெருமூச்சுடன், தன்னைச் சந்திக்கப் போகும் நபர் யாராக இருக்கும் என யோசித்தபடி மேட்டிலிருந்து இறங்கி கடற்கரையில் கரிகாலன் நடக்க முற்பட்டபோது - அந்த விபரீதம் நடந்தது. கிட்டத்தட்ட ஐம்பது அரபுப் புரவிகள் வாயு வேகத்தில் மணலில் ஓட ஆரம்பித்தன. இன்னும் பழக்கப்படுத்தப்படாத குதிரைகள் அவை என்பது பார்த்ததுமே தெரிந்தது. இது விபரீதமல்லவா? குளம்புகளில் மக்கள் சிக்கினால் என்ன ஆகும்? பொதுவாக அரபு நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வரும் குதிரைகளை நள்ளிரவு கடந்தபின் எச்சரிக்கை செய்துவிட்டே கடற்கரை மணலில் ஓடவிட்டு பரிசோதிப்பார்கள். அரசர்களுக்கு, தளபதிகளுக்கு, போர் வீரர்களுக்கு, ரதங்களுக்கு, வணிகர்களுக்கு என தர வாரியாக அவற்றைப் பிரித்து உரியவர்களிடம் சேர்ப்பிப்பார்கள். நகுலசகாதேவரால் இயற்றப்பட்ட அசுவசாஸ்திரம் கற்றவர்கள் மட்டுமே புதிதாக வந்திறங்கும் குதிரைகளின் தன்மையைக் கண்டறிய முடியும். பல்லவ நாட்டில் அசுவசாஸ்திரம் அறிந்தவன் அவன் மட்டும்தான். எனவே, அரபு நாடுகளில் இருந்து புரவிகள் வரும்போதெல்லாம் அவற்றின் தரத்தை சோதிக்கும் பொறுப்பு அவனிடமே ஒப்படைக்கப்படும். இதுதான் இத்தனை நாட்களாக நடந்து வந்த நடைமுறை. இதற்கு மாறாக இன்று தன்னிடம் கூட தகவல் தெரிவிக்காமல், வந்திறங்கிய குதிரைகளை மணலில் ஓடவிட்டிருப்பவர் யார்? விடையை பிறகு அறியலாம். தறிகெட்டு ஓடும் புரவிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் இப்போது முக்கியம். விரைந்த கரிகாலனின் கால்கள் தாமாக நின்றன. ஆச்சர்யம் மெல்ல மெல்ல அவனைச் சூழ ஆரம்பித்தது. ஏனெனில் அவன் அச்சப்பட்டதுபோல் எதுவும் நடக்கவில்லை. கடற்கரையில் குழுமியிருந்த மக்களை எந்தவகையிலும் அவை சிதறடிக்கவில்லை. மாறாக, தறிகெட்டு ஓடியபோதும் ஓர் ஒழுங்கு அதனுள் தென்பட்டது. எனில் புரவிகளின் மொழி அறிந்த யாரோ அவற்றின் செவிகளில் அன்பாகக் கட்டளையிட்டிருக்க வேண்டும். அதன்பிறகே கட்டை அவிழ்த்து அவற்றை கடற்கரை மணலில் ஓடவிட்டிருக்க வேண்டும். நாம் அறியாத அந்த அசுவசாஸ்திரி யார்..? பூத்த கேள்விக்கான பதிலாக ஓர் இளம்பெண் தோன்றினாள். அதிகம் போனால் அவளுக்கு பதினாறு வயதுதான் இருக்கும். புரவிகளுக்கு சமமாக ஓடியபடியே அவற்றின் தரத்தையும் அவள் ஆராய்வதை கரிகாலனால் உணர முடிந்தது. குதிரையின் கழுத்துக்குக் கீழே ஓரங்குல நீளத்தில் இரண்டு அல்லது மூன்று சுழிகள் இருந்தால் அது தெய்வமணி. அரசர் அல்லது அவருக்கு சமமானவர் இப்புரவியைப் பயன்படுத்தலாம். குளம்புக்கு மேல் ஒன்று அல்லது இரண்டங்குல நீளத்துக்கு ரோமங்கள் வளர்ந்திருந்தால் அது சிந்தாமணி. முதுகின் வலப்பக்கம் சுழி இருந்தால் அது மேகலை. தொண்டையின் கீழ் இடபத்தின் கழுத்தைப் போல் மயிர்கள் குறுக்காக வளர்ந்திருந்தால் அது கண்டாபரன். குதிரையின் தலை, நெற்றி, மார்பு, பிடரி, பீசனம் என ஐந்து இடங்களிலும் சுழி இருந்தால் அது ஜெயமங்கலம். தேகம் ஒரு நிறமாக இருந்து, தலை, மார்பு, ஒருகால் பீசம், வால் ஆகிய இடங்கள் வெளுத்திருந்தால் அது சஷ்டமங்கலம். குதிரையின் முதுகில் இரு பக்கங்களிலும் சுழியிருந்து நெற்றியில் தாமரை மொட்டைப் போன்று இன்னொரு சுழி இருந்தால் அது சுமங்கலம். இவை நல்ல சாதிக் குதிரைகளுக்கான அறிகுறிகள். எனில், இங்கு ஓடுபவை அனைத்துமே உயர்ரக புரவிகள். யுத்தத்துக்கு ஏற்றவை. இதைத்தான் கச்சிதமாக அந்தப் பெண் பரிசோதிக்கிறாள். யார் இவள்..? ‘‘உங்களைச் சந்திக்க ஒருவர் வருவார் என புலவர் தண்டி சொன்னாரே... அவர் இவர்தான். தங்களைப் போலவே குதிரைகளின் காதலர்!’’ கரிகாலனின் அருகில் வந்து விடையளித்தான் பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதியான வல்லபன். ‘‘இதற்கு முன் இப்பெண்ணைப் பார்த்ததில்லையே... புலவரின் சிஷ்யையா?’’ ‘‘இல்லை. நம் மன்னர் பரமேஸ்வர வர்மரின் மகளுக்கு சமமானவர்!’’ ‘‘விளக்கமாகச் சொல்!’’ ‘‘மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கினாரே ஆயனச் சிற்பி... அவரது மகள் சிவகாமியின் வளர்ப்புப் பேத்திதான் இவர். இவரது சொற்படி தங்களை நடக்கும்படி புலவர் கேட்டுக் கொண்டார். ஏனெனில் இவரும் ஒரு சபதம் செய்திருக்கிறார். அது உங்கள் வழியாக நிறைவேற வேண்டும் என நம் இளவரசர் ராஜசிம்மர் விரும்புகிறார்...’’ கரிகாலனின் மனக்கண்ணில் வாதாபி பற்றி எரிந்தது. புரவியை அணைத்தபடி ஓடியவளை விட்டு அவன் கண்கள் அகலவில்லை. ‘‘இவள் பெயர்?’’ ‘‘பாட்டியின் பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார். சிவகாமி!’’ (தொடரும்) ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in
 6. 1 point
 7. 1 point
  பெண்களை தனியே வீட்டில் விட்டுவிட்டு வாரக்கணக்காய் வீட்டுக்கு வராம சுற்றி திரியும் பொறுப்பென்றால் என்னவென்று தெரியாத ஆண்களும் உண்டு... ஆண்களையும் பிள்ளைகளையும் தனியே விட்டுபுட்டு சமையல்கூட செய்யாமல் அலங்காரம் பண்ணி வெளியே சுற்றும் பொறுப்பற்ற பெண்களும் உண்டு... இங்கே சுதந்திரம் கெட்டுபோச்சு என்ற ஆப்பு எங்கே ஆரம்பிக்குது என்றால்... கல்யாணமான புதிதில் ஆண்களுக்கு...பெண்களும்...பெண்களுக்கு ஆண்களும்... அளவு கடந்த ரொமான்ஸ் மூடில்...வெட்டி தனமாய் கொடுத்த வாக்குறுதிகளே விடாமல் அவர்களை தொரத்துகின்றன... கடைசிவரை உன்னை கண் கலங்காம பாப்பன்,,, உன்னை கருணாநிதி பொண்டாட்டிபோல ராஜாத்தி மாதிரி வைச்சிருப்பன் என்ற உளறலும்... நீங்கள் என்ன சொன்னாலும் கேப்பன்... நீங்கள் இல்லையெண்டால் உடனயே செத்துபோவன் என்ற பெண்களின் கோமாளிதனமான வார்த்தைகளின்/வாக்குறுதிகளின் ஆரம்பமே..... தப்பு பண்ணிட்டோமா என்பதை தலைமுறை கடந்தபின் மீட்டி பார்க்க தோன்றுகிறது... இது என் சொந்த வாழ்க்கையில் பட்ட அனுபவமில்லை என்று சுமே அக்கா சொன்னாலும்... என் பேர குழந்தைகளைகூட நான் என் பொருளாதாரமீட்டும் வசதிகளை தூக்கி தூர போட்டுவிட்டு நல்லா பார்க்குறேன் என்று காவலூர்.. கண்மணி அக்கா சொன்னாலும்... எமது அனுமதி பெறாமலே எம்மை சுற்றி வளைத்த ஒரு கலாச்சாரத்தின் மின்சார வேலிகளுக்கு இடையில் சிக்குப்பட்டு...ஒரு மன அழுத்ததில் இரு பாலரும் வாழ்கிறோம்... இதில் பெண் என்ற ஒரு பாலினத்தின் சுதந்திரம் பற்றிய ஆய்வு எதுக்கு? எங்கோ ஒரு முனையில் இந்த சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சமுதாய கடப்பாடுகளால் அவதி பட்டிருக்கிறோம்/இனியும் அவதிபடுவோம் என்பதே பொருள். இது மட்டுமே எனக்கு உங்க தலைப்பு பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பது... மற்றும்படி அதிக பிரசங்கிதனம் ஒன்றுமல்ல... விவாதத்துக்குரிய தலைப்புக்கள் ஆரம்பிப்பவர்களால் மட்டுமே ... ஒரு தளம் உயிர்ப்புடன் இருக்கும்... நன்றி இதுபோன்ற தலைப்புக்களை ஆரம்பிப்பவர்களுக்கு...
 8. 1 point
 9. 1 point
  ஒரு நாட்டின் மீது கோபம் ஏற்படும் அதன் கொடியை எரிப்பதும் கிழிப்பதும் வழமைதானே லண்டனில நம்மவர்கள் சிங்க கொடியை கிழிச்சு தொங்கப்போடலயா
 10. 1 point
  தோல்வியின் நெடில் சோதியா காற்றழுது திரிந்த கடற்கரை வெளியின் நிலவுறைந்த பொழுதொன்றில் கைவிடப்பட்டன.... எனது சீருடை சுடுகலன் வீரம் நம்பிக்கை.... வெளிகள் எங்கணும் தோல்வியின் நெடில் வியாபித்திருந்தது. மனிதநேய மீட்பர்களின் இரட்சிப்புக் காலம் திமிரும் வன்மமும் வக்கிரமும் தினவெடுத்த குறிகளாய் சுற்றிவளைக்கப்பட்டது விசாரணைகளின் அங்கமானது பாலியல் வதை; கூட்டு வன்புணர்வு நினைவு தப்பிக்கொண்டிருந்த நிட்டூர நிமிடங்களில் அரையிருள் பரவிய அறையெங்கும் தோல்வியின் நெடில் வியாபித்திருந்தது. காணி உறுதி மீள் வரைவு, கச்சேரி அலுவல்கள், நிவாரண பொருட்களின் சீரான வழங்கல்..... ஆங்காங்கே பக்குவமாய் கோரப்படுகிறது பாலியல் லஞ்சம்! அசிங்கங்கள் விரவிய அலுவலக சுவர்களுக்குள் தோல்வியின் நெடில் வியாபித்திருந்தது. கட்டவுட் கதாநாயகருக்கான பாலாபிசேகம் கேரளக் கஞ்சா கேட்பாரற்ற குறுநில மன்னர்களின் வாள்வீச்சு வீரம் வெற்று பியர் ரின்களோடு வீசப்பட்ட விடுதலை வேட்கை இனவாதம் விழுங்கும் எல்லைக் கிராமங்கள் புதிதாய் முளைக்கும் புத்தர் சிலைகள்..... தேசமெங்கணுமே தோல்வியின் நெடில் வியாபித்திருந்தது. தோழர்களே! உங்களோடிணைந்து உரைத்த உறுதிமொழி காக்க கதியற்றேன் மன்னிப்பீராக! http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=df5de093-95cc-460f-a31e-ab4dfdaed973
 11. 1 point
  அப்பிக்கிடக்கும் அந்தகாரம் துடைத்து கசியும் நிலவொளி துருவேறிய கம்பிகளை கடந்து கரடுமுரடான பழுப்பேறிய சுவர்களில் திட்டுதிட்டாய் விழுகிறது காய்ந்த உதிரச் சிதறல்கள் உயிர்வற்றிய ஓவியங்களாய் பயமுறுத்துகிறது. இரவின் நிசப்தம் உடைகிறது கூட்டத்தைப் பிரிந்து தனியனாகிப்போன குட்டியானையொன்றின் பிளிறலைப்போல் அருகிலோர் அறையில் அலறி அடங்கிப்போகிறது அந்தரித்த ஒரு தமிழ்க்குரல் அடிவயிற்றைப் பிழிகிறது பயம் அடுத்தது நானாகவும் இருக்கலாம் கடந்த விசாரணையின் காயங்களே காயவில்லை உதிரம் கலந்து ஒழுகிறது சலம் பிளாஸ்ரிக்குழாய் செருகப்பட்ட மலவாயிலில் மரணவேதனை நகம் பிடுங்கப்பட்ட விரல்களில் இலையான்கள் இருக்க எத்தனிக்கிறது. இன்னமும் நான் இருக்கின்றேனா? இவை கடந்துவிட்ட காட்சிகளா? உயிர் தரித்திருக்கிறதா அன்றி தவறிப்போனதா மனவெளியில் மங்கலாய் மாலையாய் காட்சிகள் தெளிவில்லை… தெரிவதும் மறைவதுமாய் ஒருகால்…. உணர்வு தப்பியதோ? உளவளம் உடைந்ததோ? ஒன்று மட்டும் உறுதி கனவுத்தேசம் கலைந்துகொண்டிருந்த கடைசிநாட்கள் அவை ஒட்டிய கண்கள் உலர்ந்த உதடுகள் புழுதி அப்பிய தேகம் அம்மா…. ஆம், அம்மாவேதான்…. காயம்பட்டுக் கிடந்த என்னை கவனமாய் ஒப்டைத்தாள் மீளத்தருவார்கள் என்ற மீதமிருந்த நம்பிக்கையோடு என் செய்வாள் இப்போது? கண்ணீர் கோடிழுத்த கன்னங்களோடு காவல் நிலைகளில் காத்துக்கிடப்பாளா? திரும்புவான் மகனென்று தினம் தினம் வழிபார்ப்பாளா? என் படத்தோடும் பதாகையோடும் பாதையோரத்தில் பரிதவிப்பாளா? இல்லை…. காரியங்களாற்றி கடமை செய்து முடித்திருப்பாளா? வலிக்கிறது கால நீளவும் கண்ணின் இமையென காத்துக்கிடந்தவள் கண்மூடும் ஒரு நாளில் தோளேற்றி துயர் வடித்து கொள்ளி எடுத்துப்போட கொடுப்பினை அற்றுப் போனேன்….! 15.05.18 - சோதியா
 12. 1 point
  ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-2 ‘‘சிவகாமி...’’ மனதுக்குள் உச்சரித்த கரிகாலனின் மனதில் பல்வேறு உருவங்கள் அலைக்கழித்தன. இமைகளை மூடி சில கணங்கள் நின்றவன் சட்டென்று வல்லபனை ஏறிட்டான். ‘‘தன் பாட்டியைப் போலவே இவளும் ஏதோ சபதம் செய்திருப்பதாகச் சொன்னாயே..?’’ ‘‘அப்படித்தான் பல்லவ இளவல் என்னிடம் குறிப்பிட்டார்...’’ ‘‘என்ன சபதம்?’’ ‘‘தெரியாது. அதுகுறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை நீங்களே அறிந்துகொள்ள வேண்டுமென அவர் நினைத்திருக்கலாம். ஆனால், ஒன்று...’’ ‘‘என்ன?’’ ‘‘உங்கள் வழியாக இந்த சிவகாமியின் சபதம் நிறைவேற வேண்டும் என்றே, தான் விரும்புவதாகத் தெரிவித்தார்...’’‘‘எப்போது?’’ ‘‘ஆறு திங்களுக்கு முன் அவரைக் கடைசியாகச் சந்தித்தபோது...’’கரிகாலன் யோசனையில் ஆழ்ந்தான். ‘‘சபதத்தை நினைத்தால் மனம் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறது...’’ மெல்ல வல்லபன் முணுமுணுத்தான். ‘‘ஏன்?’’ ‘‘திரவுபதியின் சபதம் கெளரவர்களை அழித்தது. கண்ணகியின் கோபம் மதுரையை சாம்பலாக்கியது. நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் சிவகாமி அம்மையாரின் சபதம் சாளுக்கிய தேசத்தையே அழித்தது. அந்தப் போரில் நாம் வெற்றி பெற்றோம். அதேசமயம் சாளுக்கியர்களுக்கு சமமாக யுத்தத்தால் நாமும் அதிகம் இழந்தோம். பயிர்கள் நாசமாகின. கடைநிலை கைவினைக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். கால்நடைகளை, மேய்ச்சல் நிலங்களைப் பறிகொடுத்த பூர்வகுடிகள் இன்னமும் அவற்றைத் திரும்பப் பெறவில்லை. இப்போது இந்த சிவகாமி தன் பங்குக்கு ஏதோ சபதம் செய்திருக்கிறார். இதனால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறதோ..?’’ ‘‘அச்சப்படுகிறாயா வல்லபா..?’’ ‘‘இல்லை. இப்போதிருக்கும் நிலையை எண்ணினேன்...’’ ‘‘அதற்கென்ன..?’’ ‘‘கரிகாலரே... அமைச்சர் பிரதானிகள் நம் மன்னரிடம் உரையாடும்போது நானும் அங்கிருந்தேன்...’’ ‘‘ம்...’’ ‘‘பல்லவ நாடு மழையை நம்பி இருக்கும் பூமி என்பது தங்களுக்கே தெரியும். சில ஆண்டுகளாக மழை பொய்த்து வருகிறது. வசூலிக்கும் வரிகளில் ஒரு பகுதியை பஞ்ச நிவாரணத்துக்கு ஒதுக்குவதால் அதை அவ்வப்போது மக்களுக்கு பகிர்ந்தளித்து ஓரளவு சமாளிக்கிறோம். வரும் ஐப்பசி, கார்த்திகையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். அது மட்டும் நடக்கவில்லையென்றால் வரும் ஆண்டை எதிர்கொள்வது இயலாத காரியம் என்கிறார்கள் அமைச்சர் பிரதானிகள்...’’ சொன்ன வல்லபன் அருகில் வந்து கரிகாலனின் கைகளைப் பிடித்தான். ‘‘என்ன வல்லபா..?’’ ‘‘ஒரு வேண்டுகோள். பல்லவ நாடு இப்போதிருக்கும் நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இரண்டாம் புலிகேசி யின் மகனும் சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தர் திட்டமிட்டிருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. பெரும் படையைத் திரட்டி வருகிறாராம். எப்போது வேண்டுமானாலும் போர் முரசு கொட்டப்படலாம். எனவே, இந்த சிவகாமியின் சபதம் என்னவென்று அறிந்து, முடிந்தவரை அதை நிறைவேற்றுவதைத் தள்ளிப் போடுங்கள்...’’ சொல்லிவிட்டு விறுவிறுவென்று சிவகாமியை நோக்கி வல்லபன் சென்றான். இதற்குள், நாட்கணக்கில் மரக்கலங்களில் பயணித்த மயக்கம் நீங்க புரவிகளும் கடற்கரை மணலில் ஓடிப் புரண்டு இயல்புக்குத் திரும்பியிருந்தன. ‘‘அனைத்துமே நல்ல சாதிக் குதிரைகள்தான். யார் யாருக்கு எதை எதை அளிக்கலாம் என்பதை வீரர்களிடம் தெரிவித்திருக்கிறேன்...’’ என்ற சிவகாமி, தள்ளி நின்ற கரிகாலனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தாள்.‘‘உங்களுக்காகக் காத்திருப்பவர் அவர்தான். பெயர் கரிகாலர்...’’ தலையசைத்துவிட்டு, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனை நோக்கி மணலில் கால்கள் புதைய சிவகாமி நடந்தாள். முதல் பார்வையிலேயே கரிகாலன் மீது அவளுக்கு மரியாதை வந்தது. காரணம், அவன் கண்கள். அவளது பார்வையை மட்டும்தான் அது எதிர்கொண்டிருந்தது. மற்றபடி உடலின் வேறு அங்கங்களை அது ஆராயவில்லை. இத்தனைக்கும் புரவிகளுக்கு சமமாக அவள் ஓடி முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறாள். எனவே அப்போதும் பெருமூச்சுகள் வெளியேறிக் கொண்டிருந்தன. அதற்கு அறிகுறியாக அவளது ஸ்தனங்களும் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தன. அணிந்திருந்தது மார் கச்சைதான். ஆனால், அது நீராட்டத்தின்போது அணிபவை. புரவிகளுடன் கடற்கரையில் ஓடவேண்டும் என்பதாலும், சமயத்தில் கடலிலும் மூழ்கி எழவேண்டியிருக்கும் என்பதாலும், வழக்கமாக வெளியே செல்லும்போது உடுத்தும் கச்சையைத் தவிர்த்திருந்தாள். எனவே, மறைய வேண்டிய இடங்கள் மறைந்தும் மறையாமல் ஸ்தனங்களின் அளவைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. இடுப்பில் உடுத்தியிருந்ததும் மெல்லிய ஆடைதான். ஆனால், வெண்மைக்கு பதில் சற்றே சிவப்பு சாயம் ஏறியவை. இப்படி வேண்டும் என நெசவாளர்களிடம் நெய்யச் சொல்லியிருந்தாள். இந்த மெல்லிய உடையும் காலம்காலமாக மல்லை வாழ் பெண்கள் கடலாடும்போது அணிபவைதான். அதனால்தானே தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தனது பெரும்பாணாற்றுப் படையில், மல்லை மாதரசிகளின் ஆடைகளைக் கொன்றையின் மெல்லிய கொம்புகளிலே தவழும் பனித்திரைக்கு ஒப்பிட்டிருந்தார்! அப்படிப்பட்ட மெல்லிய ஆடையையே அன்று சிவகாமி அணிந்திருந்தாள். அப்படியிருந்தும் கரிகாலனின் கண்கள் அவளை மொய்க்கவில்லை. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவனைத்தான் புலவர் தண்டி அனுப்பியிருக்கிறார். நிம்மதியுடன் அவனை நெருங்கியவள், ‘‘செ-லி நா- லோ-செங்-கியா பா-தோ-பா-மோ” என தனித்தனிச் சொற்களாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி அழுத்திச் சொன்னாள்! கரிகாலனின் கண்கள் விரிந்தன. செ-லி என்றால் . நா-லோ-செங்-கியா என்றால் நரசிம்ம. பா-தோ-பா-மோ என்றால் போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் நரசிம்ம போத்தவர்மன். இரண்டாம் நரசிம்மவர்மரான ராஜசிம்மனை சீனர்கள் இப்படித்தான் அழைத்தார்கள்*. இதையேதான் சங்கேதச் சொல்லாக ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளவும், பரஸ்பர நம்பிக்கையுடன் பணியாற்றவும் பல்லவ நலம் விரும்பிகள் தங்களுக்குள் உபயோகித்தார்கள். அப்படிப்பட்ட சொல்லை இந்த சிவகாமி உச்சரிக்கிறாள் என்றால்... இவள் நம்பிக்கைக்கு உரியவள்தான். ‘‘சொல்லுங்கள்...’’ சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கரிகாலன் விஷயத்துக்கு வந்தான். ‘‘இளவரசரைச் சந்திக்க வேண்டும்..!’’ ‘‘என்ன விஷயமாக?’’ ‘‘அதை அவரிடம்தான் சொல்ல முடியும். இளவரசர் இருக்கும் இடம் உங்களுக்கு மட்டுமே தெரியும். அங்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். இது புலவர் தண்டியின் உத்தரவு!’’ சிவகாமி இப்படிச் சொல்லி முடித்ததும், தனக்கு நேராக நின்று கொண்டிருந்த அவளது தோளைப் பிடித்து கரிகாலன் விலக்கினான். ‘என்ன...’ என்று கேட்க முற்பட்டவளின் வாயைப் பொத்தி கண்களால் ஓரிடத்தைக் காண்பித்தான். கடற்கரையை ஒட்டியிருந்த தோப்பிலிருந்து மூவர் யாருக்கும் சந்தேகம் வராதபடி கடலில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். வைகாசி மாத சுக்கில பட்ச சதுர்த்தி என்பதால் இரவின் ஐந்தாம் நாழிகையிலும் பிறை நிலவு வெள்ளிப் பாளங்களாகக் கடலில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மூவருமே தங்கள் முகத்தை வஸ்திரங்களால் மூடியிருந்தார்கள். எனினும் அவர்கள் இடுப்பிலிருந்த வாளின் நுனி, கிடைத்த ஒளியிலும் ஒளிர்ந்தது. ‘‘இவ்வளவு விரைவில் இதை எதிர்பார்க்கவில்லை...’’ முணுமுணுத்த கரிகாலன் தன் வலக்கரத்தை சிவகாமியின் இடுப்பில் சுற்றினான். ‘‘கடலாடும் காதை என மற்றவர்கள் நினைக்கட்டும்...’’ என அவள் செவியில் முணுமுணுத்துவிட்டு, கடலை நோக்கி அவளை இழுத்தபடி நடந்தான். இடுப்பில் தவழ்ந்த விரல்கள் அத்துமீறாததாலும், கண்முன்னே தெரிந்த காட்சி ஆபத்துக்கு அறிகுறியாக இருந்ததாலும் தன் பங்குக்கு சிவகாமியும் ஒத்துழைத்தாள். அரைவட்டமாக அர்த்த சந்திர வடிவத்திலிருந்த நீராடு கட்டத்தின் கரையோரத்தை நெருங்கிய கரிகாலன், இடைவெளி விட்டு நின்றிருந்த பெரும் தூண்களில் ஒன்றை தனது இடது கையால் அணைத்தான். பொந்து ஒன்றுக்குள் சென்ற அவனது கரம் எதையோ தேடித் துழாவியது. நினைத்தது கிடைத்ததும் கையை வெளியே எடுத்தான். இரு வாள்கள்! ஒன்றை சிவகாமியிடம் கொடுத்துவிட்டு கடலில் இறங்கினான். முடிந்தளவு இருவரும் வாளை மறைத்துக் கொண்டார்கள். கரையில் இருந்தவர்களுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை. காதலர்கள் என நினைத்து தங்கள் பார்வையைத் திருப்பிக் கொண்டார்கள். அர்த்தசேது என்று கொண்டாடப்பட்ட மல்லைக் கடல், சேதுவைப் போலவே நீண்ட தூரம் ஆழமில்லாதது. கடலோர நீர்ப்பகுதியும் குளம் போல் சிற்றலைகளை எழுப்பக் கூடியது. இடுப்பளவு நீரில் நடந்தார்கள். இருவரின் பார்வை மட்டும் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த அந்த மூவரையும் பின்தொடர்ந்தபடியே இருந்தது. ‘‘நம்மைப் போலவே அவர்களும் கழுத்தளவு நீருக்கு வந்துவிட்டார்கள்!’’ சிவகாமி எச்சரித்தாள். ‘‘ஆம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் நீந்தத் தொடங்கலாம். இலக்கை அவர்கள் அடைவதற்குள் நாம் தடுத்தாக வேண்டும்...’’ சொன்ன கரிகாலன் அடுத்த கணம் அவளை அணைப்பதுபோல் அணைத்து விழுவது போல் கடலில் விழுந்தான். அதன் பிறகு இருவரின் தலையும் கடலுக்கு வெளியே தெரியவேயில்லை. அந்த மூவரும் இருந்த திக்கை நோக்கி நீருக்குள்ளேயே நீந்தினார்கள். ஒரேயொருமுறை மட்டும் தன்னுடன் நீந்தும் சிவகாமியைப் பார்த்தான். ஒரு கரத்தில் வாளை ஏந்தியபடி மறுகரத்தால் நீந்திக் கொண்டிருந்தாள். தன்னைப் போலவே அவளும் அசுவசாஸ்திரி மட்டுமல்ல... மச்ச சாஸ்திரியும் கூட என்பது புரிந்தது. நீரின் அடி ஆழ இருட்டு மெல்ல மெல்லப் பழகியது. இருளும் ஒளிதான். சந்தேகமேயில்லை. வரைகோடு போல் மூன்று உருவங்கள் சில கணங்களுக்குப் பின் தட்டுப்பட்டன. முழங்கையால் சிவகாமியை இடித்து செய்கை செய்துவிட்டு கரிகாலன் வாளைச் சுழற்ற ஆரம்பித்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த மூவரும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பிறகு சுதாரித்து இடுப்பிலிருந்த தங்கள் வாட்களை உருவினார்கள். நிலத்தில் நடப்பது போலவே கடலுக்குள்ளும் வாள் சண்டை உக்கிரமாக நடந்தது. கரிகாலனும் சிவகாமியும் கைகோர்த்திருந்த மூவரையும் பிரித்தார்கள். நீரின் கனத்தை வாள் வீச்சுகள் கிழித்தன. இருவர் காயம்பட்டு தங்கள் வாட்களை நழுவவிட்டார்கள். எஞ்சியவனின் கழுத்தை பின்னால் இருந்து கரிகாலன் நெருக்கினான். மூச்சுத் திணறல் ஏற்படவே அனைவரும் கடலுக்கு வெளியே தலையை நீட்டினார்கள். நிலவொளியில், தான் பிடித்திருந்தவனின் முகத்தைப் பார்த்ததும் கரிகாலன் அதிர்ந்தான்! (தொடரும்) ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in
 13. 1 point
  என் வாசிப்பு ரசனையை மெருகூட்டி, புதிய பரிணாமத்துக்கு கைபிடித்து அழைத்துவந்த என் மானசீக குருவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.. உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக. ??? நிழலி, கிருபன் மற்றும் பலரை போலவே வேதாளம், இரும்புக்கை மாயாவி, துப்பறியும் சாம்பு, பாலமித்திரா , ரத்தினபாலா வாசிப்பில் இருந்து திளைத்த காலம்.. அன்பு நண்பன், புத்தகப் பித்தன் பிரபா எனக்கு "இரும்புக்குதிரைகளை" அடையாளம் காட்டினான்.. புத்தகத்தின் பெயரின் கம்பீரத்திலேயே சுண்டி இழுக்கப்பட்ட நான் விஸ்வநாதன், ராவுத்தர், தாமீரா, இவர்களோடு நாட்கணக்கில் சஞ்சாரிக்கத்தொடங்கினேன்... "குதிரைகள் பசுக்களை போல வாய்விட்டு கதறுவதில்லை வழியில்லை என்பதல்ல ..வலிமையே குதிரை ரூபம் தொட்டதும் சிலிர்க்கும் குதிரை சவுக்குகாக பணிந்து போகும் புணர்ந்த பின் குதிரைகள் ஒரு நாளும் தூங்கியதில்லை இது - குதிரைகள் சொன்ன வேதத்தின் முதலாம் பாடம்... இப்படி புரிந்தும் புரியாத வரிகளை நண்பனிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு பாலகுமாரன் அய்யாவின் புத்தகங்களை தேடி தேடி வாசித்த காலங்கள்.. மெர்குரிப்பூக்கள், என்றேன்றும் அன்புடன், கைவீசம்மா கைவீசு, கரையோர முதலைகள் இப்படி மனதில் ஆழமாக படிந்த பல புத்தகங்கள்... இவர் புத்தகங்களை வாங்கி அழகாக அடுக்கி அழகு பார்க்க வீட்டிலேயே ஒரு சிறிய வாசிகசாலை அமைப்பது; என் அன்றைய நாள் கனவு... கனடாவில் அது சாத்தியமானது. இன்று பாலகுமார் அய்யாவின் சுமார் 35க்கு மேற்பட்ட புத்தகங்கள் என் வாசிப்பு அறையை கௌரவப் படுத்துகின்றன. பாரதியார் முதல் கொண்டு பாலகுமாரன், சுஜாதா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், காசியானந்தன், புதுவை ரத்தினதுரை இவர்களை புத்தக வடிவில் நண்பர்களாக, ஆசிரியர்களாக சேர்த்து வைத்திருப்பதில் கொஞ்சம் கர்வமும் சேர்ந்தே இருக்கிறது... பின்னணி, முன்னணி, சின்னத் திரை, பெரியத் திரை நட்சத்திரங்களை கொண்டு வந்து அழகு பார்க்கும் இந்த கனேடிய சமூகத்துக்கு நல்ல தமிழ் எழுத்தாளர்களை கொண்டு வந்து கௌரவப்படுத்த முடிவதில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு. இது குறித்து பலருடன் பேசியாயிற்று என்ன பயன்... 5, 6 மாதங்களுக்கு முன்னர் கூட முருகன் புத்தக சாலை உரிமையாளருடன் இது குறித்து கதைத்தேன்.. அவரும் பாலகுமாரன் ஐயாவை இங்கு அழைத்து வருவது பற்றி மேலோட்டமாக கதைத்தார். கொடுத்து வைக்க வில்லை.... நவீனன் நீங்கள் இணைத்திருக்கும் பாலகுமாரன் குறித்த இனிய பதிவுகளுக்கு மனம் உவந்த நன்றிகள்.
 14. 1 point
  வாசிதது முடிக்க நெஞ்சு பாரமாகிப்போகின்றது...தேற்றவும் முடியாது ஆற்றவும் முடியாது..காலப் பெருவலியை கடக்கவும் முடியாது.. வலியோடுதான் வாழ்வென்றாகிவிட்டது.
 15. 1 point
  மரணித்தும்...மௌனித்தும் போன.., எங்கள் சொந்தங்களே...! சென்று வாருங்கள் என்று,,,, இன்னும் கூட..., எம்மால் விடை தர முடியவில்லை! ஏனெனில்..., மீண்டும் வரும்போது.., நீங்கள் விட்டுச் சென்ற் ..., சாம்ராச்சியத்தின் ... சிதிலங்கள் கூட இருக்காது! அத்தனையையும்...., உங்கள் பெயர் சொல்லியே... அவர்கள் தின்றும் , மென்றும், விற்றும் விட்டார்கள்! காலம் கனிகையில்..., நாங்களே அழைக்கிறோம்! அதுவரை...., உன்னத ஆத்மாக்கள்..., உறங்கியே இருக்கட்டும்! வீர வணக்கமும்........ஆத்மார்த்த அஞ்சலிகளும்!
 16. 1 point
  முள்ளிவாய்க்கால் முடிவோடு எல்லோரையும்விட அதிகம் பாதிக்கப்பட்டது அவர்களே, சொந்தமாய் எந்த தொழிலும் தெரியாத அவர்கள், காலம் முழுவதும் புலிகள் இருப்பார்கள், புகை,போதை,பொண்ணு,பொருள் எல்லாம் காலம் முழுவதும் சிங்களவன் கால் கழுவி பெற்றுக்கொண்டு, காலம் முழுவதும் இப்படியே ஓட்டிவிடலாம் என்று எத்தனையோ கனவு கண்டிருப்பார்கள்... உடம்பு நோகாமல் புலியெதிர்ப்பு பிரச்சாரம்,காட்டி கொடுப்பு ,கப்பம் கையில் ஆயுதம்,புதிய வாகனம் என்று சுகபோகியாக வலம் வந்தவர்களிடம், யுத்தம் முடிந்ததும் சில மாதங்களுக்குள்ளேயே அவர்கள் கையில் இருந்த ஆயுதத்தை சிங்களவன் பறித்ததும், அவர்களுக்கான கொடுப்பனவுகள் வசதிகள் அனைத்தையும் நிறுத்தியதும்... அவர்களின் மேலிடத்தில் உள்ள பெரும் தலைகளை தவிர மற்றவர்கள் நிலை எல்லாம் அம்போதான்... நானறிந்து கீழ்மட்டத்திலிருந்து வண்டியோட்டியவர்கள் பலர் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை வைத்து சவுதி,குவைத்,கட்டார் பக்கம் கிளம்பி சென்றுவிட்டார்கள். அங்கே இலங்கையிலிருந்து எட்டப்ப தொழில் செய்து ஒரு மாதம் சம்பாதித்ததை, ஒரு வருஷம் உடம்பு முறிந்து வேலை செய்து உழைக்கணும், இப்போது அவர்கள் இறுதி யுத்தத்தை எண்ணி கண்ணீர் வடிப்பார்கள்...நாங்களும் வடிப்போம்... ஆனால் இரண்டு கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கும்... அவர்கள் தாங்கள் இழந்ததை எண்ணி...நாம் நாங்கள் இழந்ததை எண்ணி!
 17. 1 point
  இதுக்குப் பேர் தான்.....கொழுப்பு எண்டு சொல்லிறது! வேணுமெண்டால் தடிப்பு எண்டும் சொல்லலாம்! அந்த மகள் தான் பாவம்...! இவ எல்லாத்திலையும் 'குற்றம்' கண்டு கொண்டிருக்க....அங்காலை....குமர் முத்திக் குரங்காகப் போகுது!
 18. 1 point
  ஹவாய் தீவிலுள்ள கிளாவே எரிமலை தொடர்ந்து சீறி வரும் நிலையில் அதன் வாய்ப்பகுதியில் கொந்தளித்த லாவா குழம்பின் வெளிச்சத்தில் புகை மண்டலம் ஜொலித்த காட்சி. இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையான காஸாவில், சூரியன் அஸ்தமனமாகும் அழகிய காட்சி. டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள நீர்நிலையில் பூத்திருக்கும் தாமரை பாத்திரத்தில் இருக்கும் நீரை குடித்து தாகம் தீர்க்கும் மைனா இடம்: புதுடில்லி ஹவாய் தீவின் பாகோ பகுதியில் ஏற்பட்ட எரிமலைக்குழம்பு சாலைநோக்கி வந்த காட்சி. 'ம்... ஹூம்...! ஒண்ணும் ஆகலே...': 'நானும் பல மாசமாக படியேறு மனு கொடுத்து சலிச்சு போச்சு. காரியம் மட்டும் கைகூடலை. உனக்கு? " எனக்கும் அதே கதிதான்,' இப்படித்தான் இவை பேசியிருக்கக்கூடும். 'நமக்கு ஒரு நாள் விடியும்' என்று மக்களும், சளைக்காமல் கலெக்டர் அலுவலக கதவுகளை கைவலிக்க தட்டிக்கொண்டே உள்ளனர். ஆனால், அதிகாரிகளுக்குத்தான் கேட்பதே இல்லை. இடம்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒரு வித்தியாசமான 'கிளிக்'.
 19. 1 point
 20. 1 point
 21. 1 point
  கடவுளைத் தேடி…. ஷவரில் தலை அலசி குளித்த உடம்பு, கங்கையில் இறங்கி கும்மாளம் போட்டது. பத்து பாக்கெட்டுகள் பிஸ்கெட் வாங்கி அதை சாதுக்களுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு போனேன். சாதுக்கள் யாரும் பிஸ்கெட்டை லட்சியம் செய்யவில்லை. சிறுவர்கள்தான் வாங்கிக்கொண்டு போனார்கள். அதில் ஒரு சிறுவன் பிஸ்கெட்டுகளைப் பிரித்து நாய்களுக்கு வினியோகித்தான். தானம் யாருக்கு செய்தால் என்ன. எல்லாமும் சாதுக்களே என்பதுபோல உணர்வு வந்தது. கங்கைக் கரையிலேயே வாழ்ந்து, அங்கேயே இறந்துபோக ஆசைப்பட்டு, அவ்விதம் இறந்தவர்களை தகனம் செய்யும் இடம் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அங்கு போகும் ஆசை வந்தது..... கருப்பு வெள்ளைப் புகை. பிண நாற்றம். பல்வேறு சிதைகள். அங்கு இரண்டு தகதகத்துக் கொண்டிருந்தன. ஒன்று கனன்றுகொண்டிருந்தது. மற்ற மூன்றும் அமைதியாகி அடங்கிக் கிடந்தது. அதிலிருந்து அதிகம் புகை வந்தது. தெருவின் விளிம்பிலிருந்து பிணங்கள் எரிவதைப் பார்க்கமுடிந்தது. விறகுக் கட்டைகள் மாட்டு வண்டியில் வந்து இறங்கின. கைமாற்றிக் கொண்டுபோய் அடுக்கி வைத்தார்கள். ஏதோ ஒரு புதிய பிணம் வர, இறக்கச் சொல்லி தூக்கி வந்தவரிடம் காசு வாங்கினார்கள். பிறகு சிதை தயாரித்தார்கள். வயதான ஆணின் பிணம் சிதைமீது வைக்கப்பட்டது. அதன்மீதும் விறகுகள் வைக்கப்பட்டது. “ராம் நாம் சத்யஹ‘ என்பது இடையறாத வாக்கியமாக இருந்தது. எது விசாரிக்கப்பட முடியாத ஒரு விஷயமோ, எது விளங்காத ஒரு விஷயமோ, எது நம்மை ஆளுமை செய்கிறதோ, எந்த சக்தி நம்மீது படர்ந்து நம்மை இயங்க வைக்கிறதோ அதுவே சத்தியம். நானும் இறங்கி அந்த அடுக்கிய சிதைமீது வைத்திருந்த பிணத்தை உற்றுப் பார்த்து, அதன் காலைத் தடவி தலையில் வைத்துக் கொண்டு “போய் வாரும்’ என்று சொல்லி, “ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘ என்று அரற்றினேன். காலெல்லாம் சுடுகாட்டுப் புழுதி. எங்கோ உட்கார வேட்டியிலும் கருப்பு. பிணவாடை பழகிவிட்டது. முகத்திலும் புகை படிந்திருக்க வேண்டும். கங்கையில் குளித்த தலைமுடி சடையாகத்தான் இருந்தது. பரட்டையாகத்தான் கிடந்தது. ஆண் நண்பரின் சிதைக்கு தீ வைக்கப்பட்டது. நான் கைகூப்பி வணங்கினேன். கண்கள் கலங்கின. எனக்கென்னவோ யாருக்காவது சமஸ்காரம் செய்யவேண் டும் என்ற எண்ணம் இருந்தது. அரைமணியில் இன்னொரு சடலம் வந்தது. அது பெண். எண்பது வயதிற்குமேல் இருக்கும். மழித்த தலை. பொக்கை வாய். சுருங்கி கோணலான கால்கள். சுருக்கமான தோல் உடம்பு. வற்றிய முலை. மார்பெலும்பு. நெற்றியில் சந்தனக் கீற்று. வட இந்திய விதவையாக இருக்கக்கூடும். அந்த சிதை உரிமையாளருக்கு கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தது. “சமஸ்காரம் நான் செய்கிறேன்’ என்று கேட்டதற்கு அவன் நான்கு விரல்களை நீட்டினான். எனக்குப் புரியவில்லை. விரலை சுண்டிக் காட்டினான். அந்த சமஸ்காரம் செய்வதற்கு நான் காசு கொடுக்கவேண்டும் என்று சொல்ல, இடுப்பு பெல்ட்டிலிருந்து நாநூறு ரூபாய் காசு எடுத்து அவனுக்குக் கொடுத்தேன். பையை ஓரம் வைத்தேன். ஒரு அந்தணர் வந்தார். அவருக்கு அவன் இருநூறு ரூபாய் கொடுத்தான். அவர் என் கையில் கண்டங்கத்திரி நூலைக் கட்டினார். பிரேதத்தின் நோய் என்னைத் தாக்காமல் இருப்பதற்காக அப்படி செய்வது வழக்கம் என்பது எனக்குத் தெரியும். நான் தர்ப்பை வளையத்தை கையில் தரித்துக்கொண்டேன். தர்ப்பைப் புல்லை இடுக்கிக்கொண்டேன். உட்கார்ந்து காலின்கீழ் தர்ப்பையை போட்டுக்கொண்டேன். அவர் சொன்ன மந்திரங்கள் எனக்குப் புரிந்தன. அந்த மந்திரங்கள் ஒரு நாவலுக்காக நான் திரும்பத் திரும்ப படித்து மனதில் ஏற்றிக்கொண்டவை. ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன அர்த்தம் என்று தெளிவாகத் தெரியும். இதுபற்றி பேசியும் நான் அறிந்திருக்கிறேன். என் தந்தை இறந்தபோது இந்த மந்திரங்களைச் சொல்லி, அர்த்தம் கேட்டு மனதில் பதியவைத்தேன். இதுபற்றி எழுதியும் இருக்கிறேன். எனவே இது அர்த்தமற்ற ஒரு விஷயமாக எனக்கில்லை. “ஏஷான்ன மாதா ந பிதா ந பந்துகு ந அன்னிய கோத்ரக'' என்ற மந்திரத்தின் அர்த்தம் எனக்குத் தெரியும்..... “இந்த பிரேதமானது எனக்கு தாயாக, தந்தையாக, உறவினராக, என் வர்க்கத்தினராக இல்லாதுபோனாலும், இதன் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு திருப்தியத திருப்தியத திருப்தியத’' என்று கட்டை விரல் வழியே மறித்து நீர் வார்த்தேன். நான் சொல்வதைக் கேட்டு அந்த அந்தணர் 'அட!' என்று வியந்தார். தமிழர்கள் கெட்டிக்காரர்கள் என்று தன் நெற்றியை சுட்டிக்காட்டினார். நான் நீர்க்குடத்தோடு அந்த அம்மையாரை வலம் வந்தேன். பானையை உடைத்து தரையில் வீசினேன். வாயில் அரிசி போட்டேன். முன் நெற்றியை அவர் பாதத்தில் வைத்துக்கொண்டேன். “அம்மா, நீ எந்த ஜென்மத்தில் என் தாயோ, எந்த ஜென்மத்தில் என் சகோதரியோ எனக்குத் தெரியவில்லை. என் தாயே, உன் உள்ளம் குளிர மந்திர ஜெபம் சொல்லி, சிவ நாமம் சொல்லி, விஷ்ணு நாமம் சொல்லி உன்னை கரையேற்றுகின்றேன்’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன். அந்த பிணம் வைக்கின்ற ஆள், “இறந்தவர்கள் இங்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்’ என்று சொன்னான். எல்லாரும் என் முகத்தையே பார்த்தார்கள். “இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன் கழல் தொழுதெழுவேன் கடலினில் அமுதொடு கலந்த நஞ்சை மிடரினுள் அடக்கிய வேதியனே’' என்று பாட, என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது. “தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்களென்றும் நோயே பட்டொழிந்தேன் உன்னை காண்பதோர் ஆசையினால் வேயே பூம்பொழில் சூழ் கனமாமலை வேங்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆளென்னை கொண்டருளே’' என்று அந்த அம்மையாரின் சார்பாக நான் பாட, அங்குள்ளவர்கள் தலையை அசைத்து ரசித்தார்கள். அவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால் பாட்டின் இனிமை புரிந்தது. நெய்யில் தோய்த்து பற்றி எரியும் கொள்ளிக்கட்டையை அந்த சிதைக்கு அடியில் சொருகினேன். சுற்றிலும் நெய் வார்த்தேன். “பற்றே ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன் மற்றே ஒன்றறியேன் எங்கள் மாயனே மாதவனே’' என்று மனசு அலற பாடினேன். “ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘'. சிதை பற்றிக்கொண்டது. பச்சென்று மேலே எழுந்தது. உலர்ந்த கட்டைகள், நிறைய நெய், கோடை காற்று. சிதை திகுதிகுத்து எழுந்தது. ''போ. போ போ.'' விரட்டினார்கள். நான் மேலேறி, வேறு பக்கம் படியிறங்கி முங்கி முங்கி கங்கை நீரில் குளித்தேன். இரண்டு கைகளிலும் நீர் எடுத்து அந்த அம்மாவின் வாயில் ஊற்றுவதுபோல நீர் வார்த்தேன். “சந்தோஷமா?" என்று மனதிற்குள் வினவினேன். “நிம்மதியாகப் போய் வா!" என்று கைகூப்பினேன். ஒரு பித்து நிலையில் கொஞ்சம் பேசினேன். “நான் இறக்கும்போது நீ வா. அடுத்த ஜென்மத்தில் ஒரே இடத்தில் பிறப்போம். ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டவராய், அறிந்து கொண்டவராய், ஏதோ ஒரு உறவாய் வாழ்வோம். பேசுவோம். சிரிப்போம். இந்த தகனத்தோடு உன் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. என் இறப்போடு என் வாழ்க்கை முடிந்துவிடாது. இது தொடர்கதை. முன்னம் வினைப்பயன். மாறிமாறி வந்துகொண்டிருக்கும்........ உன் தகனத்தினால் என் வினையின் ஒரு பகுதி அறுந்தது. நான் உன்னை தகனம் செய்ததால் உன் வினையின் ஒரு பகுதி அறுந்தது. எனவே இப்படி வினைகளை அறுத்து அறுத்து எறிந்து, எந்த எதிர்பார்ப்புமின்றி வாழ்ந்து நாம் உன்னதமான இடத்திற்குப் போகலாம்.’' மனம் செயல்களை செய்யக்கூடாது. மனம் சாட்சியாக இருக்கவேண்டும். எந்த யோசனையும், எந்த திட்டமிடலும், எந்த உந்துதலும் இருக்கக்கூடாது. உணவு கிடைத்ததா சாப்பிடு. மழை பெய்ததா குளி. செத்தாரைப்போல திரி என்று ஏதேனும் ஒரு ஜென்மத்தில் வாழ்க்கை நடக்கவேண்டும். உந்துதல் அற அற இப்படிப்பட்ட ஒரு ஜென்மம் கிடைக்கும். “அய்யா, உமக்கு என்ன பெயர்?.’' “எனக்கா, என்ன பெயர் தெரியவில்லையே....'’ என்று விழிக்கவேண்டும். இந்த நிலை ஒரு கனவா, என் கற்பனையா, ஒரு வெற்று ஆசையா. இப்படி வாழமுடியுமா?. பெயர் அறுத்துப் போகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கங்கைக்கரை சாதுக்களெல்லாம் பெயர் அறுத்தவர்கள் அல்ல. இது ஒரு ஸ்திதி. இதிலிருந்து இரண்டு மூன்று ஜென்மங்களுக்குப் பிறகு அவர்கள் பெயர் அறுத்த மனிதர்களாக வாழ்வார்கள். எவரும் இல்லாது கங்கைக் கரையில் கிடைத்ததை உண்டு வாழ்வதும் ஒரு அழகான இடம்தான். எங்கோ மயிலாப்பூரில் இரண்டு மனைவியரோடு வாழ்ந்து, இங்கே எவருக்கோ தகனம் செய்து கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டிருப்பதும் ஒரு அழகான இடம்தான். இது ஒரு ஜென்மம். இம்மாதிரி பல ஜென்மங்கள் தாண்டித்தான் நான் உன்னத நிலைக்குப் போக முடியும். அந்த தகனத்திற்குப் பிறகு நான் பல மணிநேரம் கங்கைக்கரை படியில் உட்கார்ந்திருந்தேன். வேறுவிதமாக நடிக்கிறேனோ என்ற எண்ணத்தை சோதித்துக் கொண்டேன். இல்லை என்று புரிந்துகொண்டேன். எங்கோ இருக்கின்ற வீட்டின்மீது பற்றும், இப்பொழுது இந்த இடத்தில் அமர்ந்திருக்கின்ற தனிமையும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றே. இது ஒரு வேலை. இது ஒரு பயிற்சி. இது ஒரு ஒர்க் ஷாப். இது ஒரு பள்ளிக்கூடம்! எழுத்தாளர் திரு பாலகுமாரன்.
 22. 1 point
  பாலகுமாரன் எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகைநூல் ஒன்றுக்கு நான் முன்னுரைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். நான் சிறுவன், எளியவன். அவர் எழுதிய புத்தகங்களின் எடைகூட இருக்கமாட்டேன். ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய், பாலகுமாரா…!’ என்று சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆம், அவரேதான் ஆசைப்பட்டார். முகநூலில் என் எழுத்துகளின் அறிமுகம்பெற்று தாமாக முன்வந்து என்னை உளப்பூர்வமாக வாழ்த்தினார். கவிஞரே’ என்று வாயார அழைத்தார். என் கவிதைகளில் ‘தமிழ் புதிது’ என்று பின்னூட்டமிட்டார். அவர் பின்னூட்டமிட்ட அடுத்த கணங்களில் என் முகநூல் உள்பெட்டியில் வாழ்த்துகள் குவிந்தன. ‘பாலகுமாரனே பாராட்டிவிட்டார் போங்கள்…’ என்ற வியப்புகள் பெருகின. அவர் தமக்கெட்டும் எழுத்துகளைக் கவனமாய் வாசித்து வந்தார் என்றே கருதுகிறேன். அவரால் எழுத்துகளின் நிறம் மணம் திடம் உணர்ந்து கூற முடியும். முன்னைப் பழைமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாகச் செயலாற்றிய மூத்தவர் அவரே. எழுபதுகளின் மையத்தில் நான் பிறந்தேன். அன்று நான் சிசுவாய்ச் சுருண்டிருந்தபோது பாலகுமாரன் தமிழ்க் கதையுலகில் புயலாய்ச் சுழன்றடித்துக்கொண்டிருந்தார். எண்பதுகளின் மையத்திலிருந்து நான் கதைகள் வாசிக்கத் தொடங்கினேன். அநேகமாக என் பதின்மத்தின் அகவைகளில் சிறுகதைகளை வாசித்துப் பழகிக்கொண்டிருந்தபோது பாலகுமாரன் முழுமையான ஆகிருதியாய்த் தமிழ்ச் சமூகத்தின்முன் பேருருப் பெற்றுவிட்டார். நாயகன் திரைப்படத்திற்கு எழுதிவிட்டார். ஆனந்தவிகடன் ‘பச்சை வயல் மனதினைத்’ தனி இணைப்பிதழாக வெளியிட்டுத் தன் வாசகப் பரப்பைப் பெருக்கிக்கொண்டது. வார இதழ்களிலெல்லாம் பாலகுமாரனின் தொடர்கதைகள். அவர் எழுதும் எழுத்தைப் படித்துத் தமிழ்நாட்டு இளையோர் பட்டாளம் உன்மத்தமடைந்து உள்ளம் நெகிழ்ந்து கிடந்தது. முக்கியமான காலகட்டமொன்றின் சமூக மாந்தருக்குக் காதல், இல்லறம், வாழ்க்கை, மனச்செயற் களங்கள், மனிதக் கீழ்மைகள் மேன்மைகள் என மாய்ந்து மாய்ந்து கற்பித்தார். பாலகுமாரன் எழுத்துகளின் சுவையுணர்ந்து கற்றவர்கள் அவரை மானசீகமாகக் கைதொழுதனர். ‘நான் வாழ்க்கையில் எதையுமே சாதிக்கலங்க… படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போனேன், நல்லபடியாக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், பிள்ளைகளைப் பெரிய படிப்பு படிக்க வெச்சு வேலை வாங்கிக்கொடுத்து கல்யாணம் செஞ்சுவெச்சேன். வேற எதையுமே நான் உருப்படியாச் செய்யலயே…’ என்று தவித்து நின்ற இல்லறத்தாரிடம் ‘நீரே சாதனையாளர். நீர் செய்தவை என்ன, எளிய செயல்கள் என்றா நினைத்தீர்…. அல்ல, அவை மகத்தான செயல்கள். அரும்பெருங் காரியங்கள். இந்தக் கடமையாற்றலே பெருந்தவம்’ என்று தம் எழுத்துகளின் வழியாகப் புரியவைத்தார். நான் கணையாழி என்ற இலக்கியப் பத்திரிகை மூலம் நவீன கவிதையுலகில் அறிமுகமானேன். அதற்கும் முன்னே வார இதழ்களில் நான் எழுத விரும்பிய கவிதைகளுக்கு அந்நியமாய்ப் போராடிக்கொண்டிருந்தேன். எனக்குக் ‘கணையாழி’ என்ற பத்திரிகை இருப்பதைத் தெரிவித்தது பாலகுமாரனின் தன்னனுபவக் கட்டுரைகள்தாம். அவர் சுப்ரமணியராஜு என்பவரோடு கணையாழி கவிதைக் கூட்டங்களில் புடுபுடு என்று ஈருருளியில் ஒலியெழுப்பியபடி தெனாவட்டாக வந்து பங்கெடுத்ததையும் விவாதங்களில் அனல் தெறிக்கப் பேசியதையும் எழுதியிருந்தார். விவாதம் முடிந்து வெளியே புகைக்குழல் கருக கருக பேசித் தெளிந்தவற்றைக் கூறியிருக்கிறார். அங்கே அறிமுகமான ஞானக்கூத்தன் அவர் தோளில் கைபோட்டபடி சொல்லிக்கொடுத்தவை எண்ணற்றவையாம். எங்கே கணையாழி என்று தேடத்தொடங்கினேன். அப்பொழுதுதான் கணையாழியின் விநியோக உரிமை கல்கி குழுமத்திற்குக் கிடைத்து, அதன்மூலம் நான் வசித்த கடைமடை ஊரின் புத்தகக் கடைகளுக்குச் சில பிரதிகள் வந்து சேர்ந்திருந்தன. கண்பட்டவுடனே கணையாழியைக் கைப்பற்றினேன். என் இலக்கிய உலகத்திற்குக் கதவுகள் திறந்துகொண்டன. கணையாழிக்குக் கவிதைகள் அனுப்பினேன். அடுத்த இதழில் பிரசுரமாயிற்று. கணையாழி கவிதைகளால் அதே ஞானக்கூத்தனின் அன்பைப் பெற்றேன். ஒருமுறை ஞானக்கூத்தனுக்கு என் புதிய வீட்டில் விருந்தளித்தபோது, ஏனோ நான் பாலகுமாரனை நினைத்துக்கொண்டேன். பாலகுமாரனின் இளமையில் பெரிய நட்சத்திர எழுத்தாளராக சுஜாதா புகழ்பெற்றிருந்தார். பத்திரிகை நிறுவனமொன்று அளித்த மதுவிருந்தொன்றில் சுஜாதாவுடனான உரையாடல் ரசாபாசமாகி அவரிடமே ‘நீ என்ன பெரிய எழுத்தாளனா… உன்னையே முந்திக் காட்டறேன் பார்’ என்று சவால் விட்டதாக பாலகுமாரனே எழுதியிருக்கிறார். சுஜாதா இதையெல்லாம் பார்க்காதவரா… ‘விட்ருங்க… பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று கூறியதையும் பாலகுமாரன் நன்றியுடன் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்தச் சூளுரைக்கும் பாலகுமாரனுக்கும்தானே மல்யுத்தம். சபதத்தை நிறைவேற்றியும் காட்டினார். அது ஒரு காலம், கனாக் காலம் ! கமல்ஹாசனைக் கவிஞர் புவியரசுடன் நான் சந்திக்கும் வாய்ப்பமைந்தபோது எழுத்துலக நட்சத்திரங்கள் பற்றியும் பேச்சு வந்தது. கமல்ஹாசன் ‘பாலகுமாரன் எழுத்துலக சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னது நினைவிருக்கிறது. நான் இவற்றையெல்லாம் நினைவில் தொகுத்துச் சொல்கின்றேனே அன்றி, இவர்கள் எல்லாருமே ஒரு மரத்துப் பறவைகள்தாம். பிற்பாடு என் கவிதைகளால் சுஜாதாவின் அன்பைப் பெற்றேன். பிற்பாடு பாலகுமாரனின் மனத்துக்கும் அணுக்கமானவனானேன். இவ்விருவரின் அன்பையும் ஒருசேரப் பெற்றுவிட்டேன் என்பதில் எனக்குப் பேருவகைதான். அய்யனிடமிருந்து எனக்கு அவருடைய கதைத் தொகுதிகள் வந்தன. அவற்றில் அவருடைய கையெழுத்தைக் கண்ட என் மனைவின் தாயார், என் அத்தையார் கண்களில் நீர்தளும்ப நின்றார். அவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. தம் வாழ்க்கைத் துயர்களுக்கு மருந்தாக பாலகுமாரனின் கதைகளில் மூழ்கியவர். அவற்றிலிருந்து போராடும் உரம் பெற்றவர். அந்தக் கண்ணீரின் அடர்த்தி எனக்குத் தெரியும். இலக்கியத்தில் மேலும் மேற்செல்லலாமா என்ற குழப்பம் என்னைத் தீண்டியபோது பாலகுமாரன் தெளிவுபடுத்தியிருக்கிறார். எழுத்து என்பது வரம், அதை நலங்கெடப் புழுதியில் எறியத் தகாது என்று அவரைப் பார்த்துக் கற்றேன். சென்னையின் தெருக்களில் கால்கடுக்க நடந்து திரிந்துவிட்டு இருப்பூர்தியில் ஊர் திரும்பியபோது ‘இரவல் கவிதை’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்தக் கதையிலும் என்போல் பரிதவிக்கும் இளைஞன் வருவான். அவனுக்கும் காதல் வரும். அவற்றோடு அவன் படாதபாடுறுவான். அதே புத்தகத்தில் ‘ஒருநாள் போதுமா ?’ என்றொரு குறும்புதினமும் இருந்தது. மனைவியோடு அவனுக்கு நேரும் ஊடல்பாடல்களும் காதலும் கண்ணீரும் வாழ்க்கைப் பூசல்களுமே களம். எதிர்காலம் குறித்த நல்ல கனவை அந்தக் கதை எனக்குள் விதைத்தது என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். என் நகரை ஐந்தாம் மாடியிலிருந்து இரவில் காணும்போதெல்லாம் மெர்க்குரிப் பூக்கள் என்ற சொற்றொடர் தோன்றாமல் போகாது. மெர்க்குரிப் பூக்களும் இரும்புக் குதிரைகளும் கரையோர முதலைகளும் தொடர்கதைகளுக்கென்று மேன்மையான இலக்கியத் தகுதிகளை நிறுவியவை. திருவல்லிக்கேணியின் ஆடை ஏற்றுமதி நிறுவனமொன்றில் ‘கோட்டா சான்றிதழ்களை’ வாங்குவதற்காக நாள்கணக்கில் வாரக்கணக்கில் காத்தமர்ந்திருக்கிறேன். என் எதிரில் முறையே இருபது, முப்பது, நாற்பது வயதுகளுடைய தட்டச்சு மகளிர் தலைநிமிராமல் பணியாற்றிக்கொண்டிருப்பர். அவர்கள் ஒவ்வொருவரும் அன்னாரின் பாத்திரங்களாகவே எனக்கு அடையாளப்பட்டனர். அந்த அலுவலகச் சூழலை அவர் கதைகளில் பலமுறை படித்துணர்ந்திருக்கிறேன். இந்தச் சரிபார்ப்பில் ஈடுபட்டதால் எனக்கு நாள்கணக்கில் நேரம் போனதே தெரியவில்லை. என் காத்திருப்பால் வியந்த அந்நிறுவன முதலாளி தம் ஏற்றுமதியைத் தள்ளிவைத்துவிட்டுத் தமக்குரிய அமெரிக்க ஏற்றுமதிக்கான ‘கோட்டா சான்றிதழை’ நான் பிரதிநிதியாய்ச் சென்ற திருப்பூர் நிறுவனமொன்றுக்கு விற்க முன்வந்தார். அந்த நல்வெற்றியில் அவருக்கும் நூதனப் பங்குண்டு. பாலகுமாரனின் சிறுகதைகள் என்பவை தனித்த உலகம். பாலகுமாரன் ஏன் புதினங்களுக்குள் நுழைந்தார் என்பதற்கான விடை அவற்றுள் உள்ளது. ஒவ்வொரு கதையும் உணர்ச்சிகளின் அடர்த்தியான பொதிகள். இருந்திருந்தாற்போல் சந்நதம் பொங்கிவர சாமியாடுவார்களே, அப்படிப்பட்ட விவரிப்பும் முடிப்பும். அவற்றில் துலங்குவது எழுபது எண்பதுகளின் தூய்மையான உலகம். நாம் அனைவருமே எண்பதுகளின் காதலர்கள். அதுதான் நம் சமூகத்தில் பெண்கள் தலையெடுக்கத் தொடங்கிய பிள்ளைப் பருவம். அன்றைய மெட்ராஸ், மாநகரத்தின் உயர்குணங்களைத் தண்மையோடு வெளிப்படுத்திய நிதானமான ஊர். அங்குலவிய மனிதர்கள் மாற்றுக் குறையாத மனித மாண்புகளின் பிரதிநிதிகளாக நடமாடியவர்கள். அவர்களே பாலகுமாரனின் கதை மாந்தர்கள். நம் விருப்பத்திற்குரியவர்கள். எப்படிப்பார்த்தாலும் அவர்கள் நமக்கும் தாய் தந்தைகள். வெட்கத்தாலும் தனக்குள் அடங்கும் தன்மையாலும் சாதியிறுக்கக் கட்டுமானங்களாலும் காதல் என்பது சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்வரையில், இந்தச் சமூகத்தில் அடக்கி ஒடுக்கியே வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாவம் என்று நம்ப வைக்கப்பட்டிருந்தது. இலக்கியங்களும் கலைகளும் அதற்கு ஆதரவாக எத்தனையோ எடுத்தியம்பியிருப்பினும் காதலுக்கு எதிரான சமூக நடத்தை கடும் அடக்குமுறையைத்தான் கட்டவிழ்த்துவிட்டது. அன்றைய புதிய தலைமுறை அதற்கெதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போராடிக்கொண்டிருந்தது. திரைப்படங்களில் காதலுக்கு ஆதரவாகப் போதிக்கப்பட்டவை யதார்த்தத்தோடு பொருந்தியிருக்கவில்லை. முரண்கள் முற்றி முடிவொன்றுக்கு வரவேண்டிய முகூர்த்தம் நெருங்கியிருந்தது. கட்டுகளை விடுவிக்க ஏதோ ஒரு திசையிலிருந்து பலமான சொடுக்கி (Trigger) ஒன்று தோன்றாதா என்னும் நிலை. பாலகுமாரனின் கதைகள் அந்தச் சொடுக்கியாக, சாட்டையாகச் செயல்பட்டன என்பதே அவற்றின் வரலாற்றுப் பங்களிப்பு. ‘ஓ. நீ பாலகுமாரனெல்லாம் படிக்கிறாயா…?’ என்பது மூத்த தலைமுறையிடமிருந்து எழுந்த பயமான கேள்வி. இனி சொல்லுக்கு அடங்கமாட்டார்கள். தம் விதியைத் தாமே எழுதிக்கொள்ளும் வழியில் பயணப்பட்டுவிட்டார்கள். பாலகுமாரனைப் படித்த இளைய தமிழகம் தத்தம் மனங்கள் சொன்ன வழியில் நேர்கொண்டு நிமிர்ந்து நடந்தது. இந்த மாற்றத்தைக் காலம் ஏற்றுக்கொண்டுவிட்டது. இன்று காதல் திருமணங்கள் பெற்றோர் வாழ்த்துகளோடு சரிவிகிதத்தில் நிகழ்கின்றன. ஏற்பாட்டுத் திருமணங்கள் சாதி வேலி தாண்டியும் நடத்தப்படுகின்றன. பழைய கட்டுமானங்கள் முற்றாகத் தகர்ந்துவிட்டன என்று சொல்ல முடியாதுதான், என்றாலும் தொடரும் வழக்கங்கள் பொருந்தாப் போக்குகளை ஒழியச் செய்துவிடும் என்றே நம்புகிறேன். இந்த இடத்திற்கு நாம் வந்து சேர ஓர் எழுத்தாளர் தம் எழுத்துகளின் வழியாகக் கனவு கண்டார், தொடர்ந்து விமர்சனங்களுக்கு அஞ்சாமல் எழுதினார், தாம் கூறவந்ததை உலகேற்கச் செய்தார், அவற்றை இன்று நடைமுறையாகக் காண்கிறார். இந்தப் பார்வையில் நாம் பாலகுமாரனைப் பார்க்கவேண்டும் என்று சொல்வேன். ஓர் எழுத்தாளரால் விளைய வேண்டிய உச்சபட்ச நல்விளைவு, சமூக மாற்றம் இதுதான். ஆண்கள் உணரும்படி பெண்மன ஆழத்தை பாலகுமாரன் அளவுக்கு விவரித்தவர்கள் மிகக் குறைவே. ‘நெட்டி பொம்மைகள்’ நீலாவையும் ‘யாதுமாகி நின்றாய் காளீ’ சவீதாவையும் படித்த ஆண் தனக்குள் மனங்குமையாது அமைந்துவிட முடியுமா ? இப்பேருலகின் மனித ராசியின் மாபெரும் மற்றொரு பாதி அல்லவா அவர்கள். ஈன்று புறந்தந்து அமுதூட்டும் அமிர்தவர்ஷினிகள். அவர்கள் நிரந்தமாகத் தாய்மையின் கருணையோடு நோக்குகிறார்கள். தாயுள்ளத்தோடுதான் உயிர்களை நேசிக்கிறார்கள். எல்லா ஆண்மைய நிமித்தங்களையும் எதிர்கொள்கிறார்கள். அந்தப் பெருமையைப் புரிந்துகொள்ளும் ஆண், பெண்களை மதிப்பான். நிபந்தனையின்றி நேசிப்பான். காப்பான். ஆண்களை அந்தப் புள்ளிக்குத் தம் கதைகளால் நெம்பித் தள்ளியவர் பாலகுமாரன். தனக்குள் மார்பு பெருகிச் சுரந்து தாயாகினால் மட்டுமே அப்படி எழுத முடியும். சொற்களின் சொற்றொடர்களின் நுண்ணிய பொருள்களை உணர்வதில் எனக்குத் தீராத விருப்பமுண்டு. மொழித்தொடர்களில் நாம் அறிந்தேயிராத வேறு புதையல்கள் அப்படித்தான் புதைந்துள்ளன. அவற்றை உணர உணர மொழியும் மொழியால் கட்டப்பட்டுள்ள நம் சிந்தனைத் திறமும் ஒருபடி உயர்கிறது என்பது என் நம்பிக்கை. ஸ்திரீலோலன்’ என்னும் கதையை, கதைத் தலைப்பைப் பார்த்துப் புன்முறுவலோடு படிக்கத் தொடங்குகிறோம். பெண்களுக்காக அலைபவன் என்பதைத் தலைப்பின் பொருளாகப் புரிந்துகொள்கிறோம். கதைப்படி அந்நாயகன் பெண்களால் தர்க்கத்திற்குப் பொருந்தாத சூழ்நிலைகளால் அவதியுறுவதைக் காண்கிறோம். ஸ்திரீகளால் அவன் தகைமைகெட அல்லல்படுகிறான். ஸ்திரீ லோலன் என்பவன் பெண்களால் அவதியுறுகின்றவன். அந்த ஏளனத் தொடருக்குள் பொதிந்திருப்பது அழுத்தமான துக்கத்தின் பொருள். சொற்றொடரை நீட்டுவதில் பொருளின் மற்றொரு நிழல்பக்கம் நமக்குப் புலப்படுகிறது. கருவைக் கலைப்பதற்காகத் தன் அண்ணன் வீட்டுக்கு வந்து குமைந்து நிற்கும் ராஜியைச் சுடுசொற்கள் பொசுக்குகின்றன. கலைத்துவிட்டு வா என்றனுப்பும் அவள் மாமியாரும் கணவனும் இரக்கமற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். ஏச்சும் பேச்சுமான மனத்தோடு கலைப்புக்கூடங்களுக்கு வேண்டா வெறுப்பாக அழைத்துச் செல்கிறான் தமையன். அங்குள்ள குடும்ப மருத்துவர் மறுத்து, அதற்கென்று உள்ள மனைக்கு அனுப்புகிறார். அங்கு பெண்மைக்கு எதிரான முள்கேள்விகளை அடுக்குகிறாள் மருத்துவச்சி. எதுவும் ஒவ்வாமல் கலைக்காமல் உள்ளம் வெதும்பிப் புகுந்தகம் திரும்பும் ராஜியிடமிருந்து எந்தச் செய்தியுமில்லை. அங்கே சென்று பார்த்தால் அந்த அலைக்கழிப்பில் கரு தானாகக் கலைந்துவிட்டிருக்கிறது. ஏவிய மாமியார் தன் கொடுமை பொறுக்காமல் அழுகின்றாள். ஆயிரம் பரிகள் பூட்டிய தேரொன்றில் பவனி வரும் சூரியனின் ஒளிரும் கதிர்களைக் காண்பதற்காகக் கருவான அந்தப் புத்துயிர் தன் வருகை பொறாத இவ்வுலகை எண்ணித் தானாகத் தன்னை அழித்துக்கொள்கிறது…! இந்தக் கதையைப் படித்த பிறகு என்னால் தாளமுடியவில்லை. மௌனமான கதாபாத்திரம் ஒன்றைச் சுற்றி கண் நிரம்பும் உணர்வெழுச்சிகளை உருவாக்க முடியும் என்பதற்குச் இந்தக் கதை – செங்கல் - சான்று. பாலகுமாரனின் ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்றே பரபரக்கிறேன். எல்லாக் கதைகளும் எதிர்பாராத திசையிலிருந்து ஒரு திறப்பை ஏற்படுத்த வல்லவை. புதிதான களத்திலிருந்து பொதுவான மனமொழியின் வழியாக அரிதான தளத்திற்குள் நுழைந்துவிடுபவை. அதுவே வாசிப்பின் இன்பமும் பயனும். சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அவருடைய பல கதைகள் இன்றும் அவற்றுக்கே உரிய புதுமை மங்காமல் மின்னுகின்றன. இன்றும் இவற்றோடு உறவுகொள்ள வாசகர்களுக்கு அதேயளவு தேவையிருக்கிறது. பாலகுமாரன் என்னும் பெருங்கதைகளின் ஆசிரியர், பெருமக்கள் திரளால் ஆசானாக ஏற்கப்பட்டவர் – மீது இலக்கியப் புலத்தில் முன்னும் பின்னுமான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குப் புகழ்க்காய்ச்சலே முதன்மைக் காரணமாக இருக்கவேண்டும். எழுத்துலகில் அன்னார் பெற்ற புகழை இனியொருவர் பெறுதல் குதிரைக்கொம்புதான். மக்களால் ஏற்றுக் கொண்டாப்பட்டதைத்தான் புகழ் என்கிறேன். வேண்டுமானால் அங்கங்கே குழுக்குழுவாகச் சிற்றரசுகளை உருவாக்கிக்கொள்ளலாம். எழுத்துக்குத் தரம்பிரிப்பவர்கள் எழுத்தாளர்களின் எழுத்தாளர்களோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். வாசக மனத்தில் தோற்றுவிக்கப்படும் விளைவுகளை அவர்கள் எப்போதும் கருத்தில் கொண்டதேயில்லை. அதனால்தான் இலக்கிய மதிப்பீடுகள் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குப் பிறகும் தகர்கின்றன. ஒரேயொரு எழுத்தாளர் முப்பது நாற்பதாண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கிறார். பாலகுமாரன் தம் எழுத்துகளின் வழியாக மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள் என்றே மழையாய்ப் பொழிந்தார். மழை பொழிந்ததுபோல் வெள்ளமாக எழுதும் எழுத்தாளர்கள் அடிக்கடி தோன்றமாட்டார்கள். அவர்கள் ஒரு சமூகத்திற்குக் கிடைத்த அபூர்வப் பரிசுகள். சுபமங்களாவுக்கு அளித்த பேட்டியொன்றில் பாலகுமாரன் ‘தாம் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வாசிக்கப்படுவேன்’ என்று கூறியதாக ஞாபகம். அவர் கூற்று உண்மையாவதற்கான எல்லாத் தடயங்களையும் பார்க்க முடிகிறது. இன்று தமிழ் எழுத்துகள் அசுர வேகத்தில் எழுதப்படுகின்றன், அதைவிடவும் மின்னல் வேகத்தில் வாசிக்கப்படுகின்றன. உடனடியாக இணையத்தில் ஏற்றுவதால் உலகத் தமிழர்கள் அனைவரையும் அது நொடிப்பொழுதில் சென்று சேர்கிறது. அச்சு ஊடகக் காலத்தில் செங்கோல் தாங்கியவர்கள் தம் எழுத்துகளில் காட்டிய நிதானமும் பொறுப்பும் மேதைமையும் இன்று அருகிப் போய்விட்டன. பொரி கடலையைப் போன்ற உடனடி எழுத்துகள் பெருகிவிட்டன. இந்தப் போக்கு அப்படியே தொடரும் அல்லது இன்றைவிடவும் கீழிறங்கும் என்றே தெரிகிறது. ஏனென்றால் அது எப்போதும் அப்படித்தான் ஆகியிருக்கிறது. அவ்வாறான ஒரு நிலைமையில்தான் நம் முன்னோர்களின் எழுத்துகளுக்கு மற்றொரு மதிப்பான கவனிப்பு கிடைக்கவிருக்கிறது. எழுத்தை, அது எழுதப்பட்ட காலத்தில் வாசித்துப் பயன்பெற்றதைக் காட்டிலும், பிற்காலச் சுற்றில்தான் அதன் முழுமை உணரப்பட்டது என்பதை வரலாறு காட்டுகிறது. ஐயனே... நீங்கள் இயற்கை எய்திவிட்டீர்கள் என்பதை ஏற்க முடியவில்லை. தமிழ்கூறு நல்லுலகின் நினைவுள்ளவரை எங்கள் நெஞ்சத்தில் என்றென்றும் வாழ்வீர்கள் ! மகுடேஸ்வரன் கவிஞர் முகநூல் வழி ***********†*******#### எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்ததாக கேள்விப்படுகிறேன். அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஆனால் வருத்தம். தன் உடல் உபாதைகளைப் பற்றியும் அதிலிருந்து மீண்ட அனுபவங்களைப் பற்றியும் பல முறை அவர் எழுதியிருப்பதால் அதிர்ச்சியாக இல்லை. இளமைப் பருவத்தில் அவருடைய எழுத்தை விழுந்து விழுந்து வாசித்திருக்கிறேன். அவருடைய புகைப்படம் அட்டையில் இருந்தாலே அதை வாங்கி விடும்படியான நம்பிக்கையை தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்தி வைத்திருந்தார். இளமையில் என்னை தீவிரமாக பாதித்த எழுத்தாளர் பாலகுமாரன். மிக குறிப்பாக, தன்னிச்சையான ஆண்மையச் சிந்தனையோடு இருந்த விடலையான என்னை பெண்ணின் உடலைத் தாண்டி அந்த இனத்தின் அகம் சார்ந்த பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உணர வைத்தார். இந்த நோக்கில் சில பல புரிதல்களையும் முதிர்ச்சியையும் அடைந்தது அவருடைய எழுத்தின் மூலம்தான். பள்ளிக்கூடங்களைத் தாண்டி வெளியுலகில் நான் நூலக உறுப்பினராக முதன் முதலில் சேர்ந்தது ‘மறைமலையடிகள் நூலகம்’. (இது பிற்பாடு கன்னிமராவோடு இணைக்கப்பட்டது). அங்கு முதன் முதலில் வாசிக்க எடுத்து வந்த நூல் பாலகுமாரனின் ‘பச்சை வயல் மனது”. காலையில் வாங்கின நூலை மதியத்திற்குள் வாசித்து முடித்து விட்டு திருப்பியளித்து வேறொன்றை வாங்கச் சென்றேன். ‘ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்தான், போ’ என்று திருப்பியனுப்பி விட்டார் நூலகர். ‘காதல் என்பது காதலுக்காக காதலையே விட்டுக்கொடுத்தல்’ என்று பல முறை அவர் நினைவூட்டிய உபதேசம், காதலிக்காத பெண்ணின் மீது வன்மத்துடன் ஆசிட் வீசும் ஆண்மகன்கள் இருக்கும் இன்றைய நிலையிலும் கூட செல்லுபடியாகக்கூடியது. ஒரு காலக்கட்டத்திற்குப் பின்னர் ஆன்மீகம் என்கிற தளத்தின் மீது அவரின் சாய்வு அதிகம் ஏற்பட, பரஸ்பரம் இருவரும் பிரிந்து சென்றோம். ஏறத்தாழ இரண்டு வருடங்கள் முன்னால் ஒரு தீவிரமான மனச்சிக்கலில் விழுந்து அது சார்ந்த கோபத்தில் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்டேன். சற்றே சமநிலைக்கு வந்தபிறகுதான் நான் செய்ததின் மூடத்தனத்தின் குரூரம் எனக்கே புலப்பட்டது. நாயினும் கீழாக என்னை உணர்ந்தேன். தற்செயலாக பாலகுமாரனின் முகநூல் பதிவொன்று கண்ணில் பட்டது. அவருடைய நூல்களின் வழியாக அதுவரை கற்றதை, கோபத்தில் மீறிச் சென்ற முட்டாளதனத்தைப் பற்றி அவருக்கே ஒரு கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்டேன். இவ்வாறாக எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதுவது என் இயல்புக்கு முற்றிலும் முரணானது. அவர் அதைப் பார்த்தாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அப்படிச் செய்தது அந்த தீவிரமான மனநிலையில் எனக்கு சற்று ஆசுவாசத்தையளித்தது. தன்னுடைய இதுவரையான எழுத்தின் மூலம் அவர் பலருக்கு ஆசுவாசமாகவும் உபாத்தியாயனாகவும் இருந்ததை அறிவேன். ஓர் எல்லைக்குப் பிறகு அவர் நீர்த்துப் போனதை அவரே உணர்ந்தாரா என தெரியவில்லை. சிட்னி ஷெல்டன் போன்ற நூலாசிரியர்களின் வார்ப்பை தமிழில் வெற்றிகரமாக முயன்றவர்களில் பாலகுமாரன் முக்கியமானவர். கற்றுக் கொடுத்தவர் அத்தனை பேரும் ஆசான்கள் எனில் என்னளவில் பாலகுமாரன் முக்கியமானவர். ஆரம்பப் பள்ளியின் ஆசான் போல. அவருக்கு என் அஞ்சலி. சுரேஸ்கண்ணன் விமர்சகர் ***†******* எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தது எனக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவி காலந்தொட்டு நண்பர். அவரை சஃபாரி சூட்டில் இளைஞனாகப் பார்த்துப் பேசியது, பழகியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் ஆனந்த விகடனில் பழைய தமிழ் எழுத்தாளர்களை ஒன்று சேர்த்து ஒரு கலந்துரையாடல் செய்யத் திட்டமிட்டார்கள். 'அவசியம் பாலகுமாரனையும் கூப்பிடுங்கள்; அவர் முக்கியம்' என்று அறிவுறுத்தினேன். கூடவே, 'அவ்ர் உடல்நிலை ஒத்துழைக்காதெனில் அவரை சிரமப்படுத்த வேண்டாம்' என்றும் சொன்னேன். அவரைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னபோது, பெருமகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார். மற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தைப் பத்திரிகையில் பார்த்துப் படித்து முதலில் கூப்பிட்டுப் பாராட்டியவர் திரு.பாலகுமாரன்தான் என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. சக எழுத்தாளரைப் பாராட்டும் பெரிய மனம் பாலகுமாரனிடம் இருந்ததை நான் சாவி நாள்களிலேயே அறிவேன். எனவே, என் சிறுகதைத் தொகுதிக்காக அவரிடம் என் சிறுகதை ஒன்றைக் கொடுத்து, அதற்கு அவரின் விமர்சனத்தை கேட்டுப் பெறும் ஆவலில், என் சிறுகதையை அவரின் இமெயில் முகவரிக்கு அனுப்பியிருந்தேன். விரைவில் மதிப்புரை தருவதாகச் சொல்லியிருந்தார். நேற்றைய ஞாயிறன்று காலை அவர் இல்லத்துக்குச் சென்றேன், அவரைப் பார்த்துப் பேச. அன்றைக்கு விகடன் கலந்துரையாடலின்போது வேறு பணிகள் காரணமாக நான் வெளியூர் சென்றுவிட, அன்றைக்கு அவரைச் சந்திக்கவில்லையே என்கிற மனக்குறை எனக்கு இருந்தது. அதற்காகவே அவர் வீட்டுக்குச் சென்றேன். மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாக அவரின் துணைவியார் சொன்னார். அவர் பலமுறை இப்படிச் சென்று, ஓரிரு நாள் இருந்து, மீண்டும் புதுமனிதனாகத் திரும்பியிருக்கிறார். எமன் அவரை அவ்வளவு சீக்கிரம் நெருங்கமாட்டான், பயப்படுவான் என எண்ணியிருந்தேன். எனவே, நாளை அல்லது மறுநாள் போன் செய்துவிட்டு வருகிறேனம்மா என்று அவரின் துணைவியாரிடம் சொல்லிவிட்டு, வாங்கிக்கொண்டு போயிருந்த இனிப்பையும் ஹார்லிக்ஸ் பாட்டிலையும் அன்னாரிடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். இன்று அவர் மறைந்துவிட்டார் என்று அதிர்ச்சித் தகவல். என்னால் தாள முடியவில்லை. ரவிப்பிரகாஷ் பத்திரிகையாளர்
 23. 1 point
 24. 1 point
 25. 1 point
  தமிழ் மக்கள் மூச்சு விட எந்த இடைவெளியும் ஏற்படவில்லை. முதலில அமைதிச் சூழல் என்பதே ஒரு மாயை. ஒடுக்கப்படும் சிங்கள மக்களுடன் சேரவும் முடியாது அவ்வாறு சேர்ந்து பேரினவாதிகளை பலவீனப்படுத்தவும் முடியாது ஏனெனில் பேரினவாதத்தின் இயக்க சக்தி என்பது சிங்கள உழைக்கும் மக்களிடமும் இருப்பதுதான். எவ்வாறு சாதீயம் மதம் போன்றன சிங்கள ஒடுக்குமுறைக்குள்ளாகி பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிடம் தேசீயவாதத்தை மேவி உயிர்ப்புடன் உள்ளதோ அவ்வாறே சிங்களப்பேரினவாதமும் அவர்களிடம் உள்ளது. இடதுசாரிச் சிந்தனை மற்றும் அது சார்ந்த அணுகுமுறை என்பது எப்போதும் எமது சமூகத்தில் மாற்றுசக்கதியாக உருவாகமுடியாது. எமக்குள் இருக்கும் சாதி மத பிரதேசவாத சமூக முரண்பாடுகள் அதற்கு இடமளிக்காது என்பது இதுவரைகால வரலாற்று அனுபவமாக இருந்தாலும் இடதுசாரி சிந்தனையில் ஊறிப்போனவர்களுக்கு அது புரியப்பேவதில்லை. ஏதோ சீமான் திருமுருகன் காந்தி போன்ற சிலரால் தான் தமிழ்த்தேசீயவாதம் ஞாபகப்படுத்தப்படுகின்றது. அவர்களும் அமைதியானால் தேசீயவாதத்தை பெயரளவில் வைத்திருக்கக் கூட இங்கேயாரும் இல்லை. தேசீயவாதத்தை கதைத்தால் பேரினவாதம் பலப்படும் என்று பயந்து அதை நிறுத்திக்கொண்டால் பேரினவாதம் பலப்பபடவேண்டிய தேவையே இல்லாமல் அது அதன் இலக்கை அடைந்துவிடும். பேரினவாதம் செய்யவேண்டிய வேலையை இடதுசாரிகள் செய்ய முற்படுகின்றார்கள்.
 26. 1 point
  தற்போது படித்த கட்டுரை ஒன்றில் சொல்லப்பட்டதானது: “இராசபக்ஷே போட்டுத் தந்த பாதையில் நடக்கும் சிறிசேன அரசாங்கம், தேர்ந்த இராஜதந்திர நுட்பத்துடன் சீனாவை அணைத்து – ஒரு நாள் இந்தியாவை ஓரங்கட்டுவதில் முற்றிலும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இதன் வினைகளைப் பட்டு அனுபவிக்கப் போகிற நாட்களில் - இந்தியப் பாதுகாப்பு ஈழப்பிரதேசத்திலும், ஈழத் தமிழர்களிடமும் தங்கியுள்ளது என்பதை உணருகிற நாளில் - இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் தேசிய இன விடுதலைக்கு கை கொடுப்பது தவிர்க்க முடியாமல் ஆகிவிடும்” “இலங்கைத்தீவு இரண்டாக உடைவதுதான் இந்தியாவினதும், மேற்குலகினதும் நலனுக்கான ஒரேயொரு தவிர்க்க முடியாத மாற்று வழியென உணரப்படும் காலம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஆண்டுகளில் உருவாகும்” “முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை மட்டுமன்றி அதற்கு பின்பு இன்று வரையுங்கூட தமிழீழப் போராட்டத்திற்கான இராஜந்திர அணியோ, அதற்கான இராஜதந்திர அமைப்புக்களோ அல்லது அதற்கான அறிஞர்குழாம், அறிஞர்படை சார்ந்த ஏற்பாடுகளோ அமைப்பு ரீதியாக எதுவும் இதுவரை (2018) இல்லை என்பது மட்டுமே தமிழ் அரசியலின் கேடுகாலத்தை உணர்த்தப் போதுமானதாகும்.” “அதற்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்வதன் மூலம் தமிழர்கள் – தமிழ்ப்பிரதேசம் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் சிங்களவரின் அடுத்த ராசதந்திர நகர்வு இலங்கையில் தமிழினம் இடமற்று, பொருளற்று, வாழ்வற்று, நசிவுற்று, மக்கள் தொகையே இல்லாமல் செய்து விடுவதன்மூலம், இந்தியாவின் தலையீட்டை முற்றிலும் நீக்கி விடவும், மொத்த இலங்கைத் தீவையே சிங்கள இனத்தின் தீவாக மாற்றிவிடவும் உறுதி பூண்டிருக்கிறது. ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இது நடக்க சில பத்தாண்டுகள் ஆகலாம்” ஆக இன்னும் பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியம் என்று கோஷம் போடத் தேவையிருக்காது.
 27. 1 point
  தமிழ்தேசியம் என்று கோசம் போட, முன்னெடுக்கச் சொல்லவில்லை. 'இனியாவது ஒருமித்துச் செல்லுங்கள்' என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். 'எத்திசையில் செல்வது' என்பது ஈழத்தமிழர்களின் உரிமை. சமீபத்திய தமிழீழ மாநாட்டில் கவிஞர்.காசி ஆனந்தன் உரையை கேட்டுப்பாருங்கள், நம்ப முடியாமல் இருக்கும். சுதந்திரம் கிட்டிய நாளிலிருந்து ஈழத்தமிழர்களிடையே ஒருமித்த அரசியல் தொலை நோக்கு சரியாக அமையவில்லை. மேலே கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு 'தேசிய இனங்களை/அவர்களின் விருப்பங்களை' அக்கால தமிழ்த் தலைமைகள் கருத்தில் கொள்ளாமலா அரசியல் செய்திருப்பார்கள்..? சில முயற்சிகளை செய்து பார்த்தார்கள், வாய்ப்பும் வந்தது, துரதிஷ்டவசமாக தவறிவிட்டது. நிலைமை கைமீறி, எல்லால் முடிந்தபின், இப்போது ஞானம் வந்து, ஏற்கனவே விட்ட பிழைகளை(???) ஆற்றாமையால் மற்றவர் மீது ஏற்றி, 'எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் கம்முன்னு கிடவுங்கள்' என இப்போது சொல்வது சரியன்று..!
 28. 1 point
  இந்த ஞானம் 50 வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தால் நல்லது. குறைந்த பட்சம் ஆயுதப் போராட்டத்தை கையிலெடுக்கும்போதாவது வந்திருக்கலாம்.. லட்சக்கணக்கான மக்கள் அநியாயமாக நீங்கள் உணர்ந்திருக்கும் பேரினவாதத்திற்கு பலியாகமல் இருந்திருப்பார்கள். இருக்கும் ஓரளவு உயிர்ப்பையும் குழிதோண்டி புதைக்கும் கட்டுரை. இம்மாதிரி நாலு பேர், சே..சே.. இவர் மாதிரி ஒருத்தர் போதும், ஒரு பயல் உங்கள் பக்கமே எட்டிப்பார்க்க மாட்டார்கள். சந்தேகக்கோடு அது சந்தோசக்கேடு..! இது சிங்களவருக்கும், தமிழருக்கும் பொருந்தும். முயற்சியுங்கள், சிங்கள பேரினவாதத்தை இணக்கமாக அனுபவிக்க வாழ்த்துக்கள்..! .
 29. 1 point
  கிருபன், வைகோ, சீமான்,திருமுருகன் போன்றோர் தமிழ் தேசியத்தைப் பற்றி பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். பல்லாயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்களின் தியாகங்கள்,முப்பது வருட ஆயுதப் போராட்டம் என்று ஏகப்பட்ட அனுபவங்களை கொண்ட ஈழத் தமிழர் சிலருக்கு, மேலே குறிப்பிட்டவர்கள் சொன்னால்தான் ஈழஅரசியல் புரிகிறது. அவர்கள் வந்து சுடரேற்றினால்தான் மாவீரர் சுடர் ஒளிர்கிறது.
 30. 1 point
  நான் சுமேயின் இடத்தில் இருந்திருந்தாலும் ஒரு சிறு புன்னகையையோ அல்லது ஒரு நன்றியுணர்வுடன் கூடிய ஒரு பார்வையையோ எதிர்பார்த்து இருப்பேன். நன்றியை எதிர்பார்க்காமல் இருப்பது மகான்களின் உணர்வாக இருக்கலாம், ஆனால் நன்றியை எதிர்பார்ப்பது சாதாரண மனிதர்களுக்குண்டான இயல்பு. இந்த உலகில் எத்தனையோ நல்ல விடயங்கள் இப்படியான சாதாரண மனிதர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.