Leaderboard

 1. வாத்தியார்

  வாத்தியார்

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   11

  • Content Count

   10,839


 2. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   8

  • Content Count

   85,545


 3. Ahasthiyan

  Ahasthiyan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   1,871


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   29,737Popular Content

Showing content with the highest reputation on சனி 23 ஜூன் 2018 in all areas

 1. 10 points
  அவர் பேசியது தமிழில் ...... அனைவருக்கும் வணக்கம். நீங்கள் இங்கு வந்திருப்பதையிட்டு மகிழ்சசி பிறந்தது ஐந்து பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பம் அந்தக்கால நினைவுகள், கோயில் குளங்கள் தாத்தா பாட்டி எனச் சென்று கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஐந்து வயதில் யுத்தம் ஆரம்பமாகியது. வீட்டை இழந்து நாட்டிலேயே அகதியாகை ஒரு நாள் ஒரு வீடு என அலைந்து நாடு இரவில் பதுங்கு குழிகளில் உறங்கமுடியாமல் தவித்து இருந்த காலங்கள் என் மனத்தைத் தொட்டுச் செல்கின்றன. எனது ஆறு வயதில் எனது சகோதரிக்கு ஏற்பட்ட வருத்தம் யுத்தம் காரணமாக மருத்துவம் இல்லாம இறந்தார், எனது பெற்றோர்கள் தனது மற்றைய பிள்ளைகளையும் யுத்தத்திலோ நோயினாலோ இழக்க விரும்பாமல் ....எனது அம்மா என்னைக் கேட்டார் மகனே நீ ஜெர்மனி செல்கின்றாயா என்று. அதற்கு நான் கேட்டது அங்கு பாடசாலை செல்ல முடியுமா என்பதே அதற்கு அவர் ஆம் என்றதால் நானும் சம்மதித்தேன். எனக்குப் பதிமூன்று வயதில் தங்கள் காணியை வீட்டை வித்து ஜெர்மனிக்கு அனுப்பினார்கள். வடக்கிலிருந்து கொழும்பு செல்ல மூன்று நாட்கள். பின்னர் கொழும்பிலே அம்மா சென்று வா மகனே என்று சொன்னபோது தான் எனக்குப் புரிந்தது அம்மா என்னுடன் வரவில்லை நான் தனியாகத்தான் செல்கின்றேன் என. அழ ஆரம்பித்தேன், அம்மாவின் ஆறுதல் அழுகையைக் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் ஏஜென்சிக்காரன் அழுதால் உன்னை ஜெர்மன் கூட்டிச் செல்ல மாட்டேன் என்று பயமுறுத்திய படியால் அழுகையை அடக்கிக் கொண்டேன். ஆபிரிக்க நாடுகள் எல்லாம் சுற்றி தரகர் என்னை இறுதியில் ஸ்பெயின் வழியாக ஜெர்மனிக்கு அழைத்து வந்தார்.குழந்தைகள் காப்பகம் பின்னர் எனது மாமா ஆதரவுடன் கம்பேர்க்கில் பாடசாலை சென்று மொழி படித்து பாடசாலையில் திறமைசாலியாக வளர்ந்தேன் அப்போது அகதி அந்தஸ்து வழக்கில் நாட்டை விட்டுச் செல்லுமாறு தீர்ப்பு வந்தது. பல மாடிக் கட்டடத்திலிருந்து கிழே குதிக்க முயற்சி செய்யும் நிலையில்...... எனது தாயை நினைத்தேன். அன்று அவர் விமான நிலையத்தில் என்னை வழியனுப்பும் பொது கூறிய அந்த மூன்று விடயங்கள்....... மது புகைத்தல் என்பவனற்றைத் தவிர்...... படித்து மறுத்தவராகி என்னை வந்து பார். மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தற்கொலை முயற்சியைக் கைவிட்டுப் பாடசாலை சென்று எனது நிலையைக் கூறினேன் பாடசாலையில் அனைவரும் எனக்காக உதவினார்கள் ஆசிரியர் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் இன்றும் எனது கடமைப்பாட்டு உள்ளது உயர்தரம் கல்வி பயின்று பல்கலைக் கழகம் சென்றேன்.2006 இல் "தனிமையில் தஞ்சம் தேடல்" என்ற புத்தகத்தை எழுதினேன்.அதற்காக பல் தேடல்களை செய்திருந்தேன். எனது நாட்டு மக்கள் அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டும் ன்பதற்காக எழுதினேன். 2008மருத்துவரானேன். அதற்கான சகல ஆதரவையும் எனது வகுப்பு ஆசிரியர் பெற்றோரின் இடத்தில் இருந்து தந்தார். இன்று வைத்தியராகை உங்கள் முன்னே நிற்கின்றேன். இடைக்காலத்தில் சாப்பாட்டுக்கு கடையில் கோப்பை கழுவினேன். பெர்கர் கடையில் பெர்கர் வித்தேன் . இருதய நோய் வாய்ப்பட்டவர்களைப் பராமரித்தேன் எனது அடுத்த நோக்கமாக இருந்தது இறத்தய நிபுணராக வேண்டும் என்பதே அதையும் சாதித்து இன்று உங்கள் முன் நிற்கின்றே. வாழ்க்கையில் முன்னேற நாங்கள் சிலவேளைகளில் எங்களை உயர்ந்தவர்களாக நினைக்க வேண்டும். தேவையான நேரத்தில் தேவையானவர்களுடன் பேச வேண்டும். ஒருவருடன் ஒருவர் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் தன்னைப்பற்றிப் பேச இடம் கொடுக்கலாகாது. அந்த நேரம் உண்து தோல்விக்கான நேரமாகிவிடும். இப்போது வடக்கு ஜெர்மனில் இருந்து தெற்கு ஜெர்மனிக்குச் சென்றுள்ளேன். நான் எப்போதும் என்னை மற்றவர்கள் பாலியல் ரீதியாகவோ நிற அடிப்படையிலோ இன அடிப்படையிலோ துன்பறுத்த . அனுமதிப்பதில்லை. இந்த நாட்டில் என்னை அந்நியனாக நினைப்பதில்லை. யாரவது என்னை நீ ஒரு அந்நியன் என்று கூறினால் வருந்துவதில்லை. ஏனென்றால் இது இந்த நாடு எனது புதிய வீடு என்றே நான் நினைக்கின்றேன். அப்படி என்னை யாராவது அந்நியனாக நினைத்தால் அதைத் தவறாகவும் நினைப்பதில்லை. எனது நாட்டில் வெள்ளையர் ஒருவர் தன்னை இலங்கைக்குíயான் என்று கூறிக்கொள்வது எப்படி மற்றவர்களுக்கு ஆச்சரியத்தைத் தருகின்றதோ அப்படித்தான் இந்த நாட்டிலும் இருக்கும். ஆனால் அவர்கள் நீ எந்த நாடு என்று கேட்பது உன்னை அந்நியப்படுத்துவதற்கல்ல அவர்களுக்கு அது ஒரு புதினம் அது தான் காரணம். ஒரு வீதத்திற்கு குறைந்தவர்கள் உன்னை அந்நியப்படுத்துவதற்காக அப்படிக் கேட்பார்கள்-இன்னும் இருப்பது முப்பது வருடங்களில் இந்த நிலை மாறிவிடும். இன்று அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் எப்படி அமெரிக்கர்களாக இருக்கின்றானோ அப்படியே ஜெர்மனியிலும் இருக்கும். அடுத்து இந்த நாட்டைத் தேடி வருபவர்களுடன் பேச வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கொடுத்த அவர்களை ஊக்குவிக்கவேண்டும். அதை நான் செய்ய விரும்புகின்றேன். என்னைப்போலவே அடுத்து வரும் காலங்களில் அவர்களும் தங்களை நினைத்து பூரிப்படைவார்கள் நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன். முடிந்தளவில்.... அவசரமாக எழுதியுள்ளேன்.... பிழைகள் இருக்கலாம். மன்னித்துக்கொள்ளவும்.
 2. 6 points
  ஜேர்மன் சனாதிபதி முன்னிலையிலே ஈழத்தமிழரின் பிரச்சனையை எடுத்துரைத்த #மருத்துவர் #தமிழன் திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன் , உயரிகாரிகளையும் கண்கலங்கவைத்தார்! யேர்மனி கம்பர்க் நகரில் பணிபுரியும் இருதய சத்திரசிகிச்சை நிபுணரும் வைத்தியகலாநிதியும், எழுத்தாளருமான திரு உமேஸ் அருணகிரிநாதன். இவர் தனது 12வயதில் இலங்கையைவிட்டு யேர்மனிக்கு வந்துள்ளார்; தமிழர் பிரச்சனை உலகத்தலைவர்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்கு தனது தாயக இடப்பெயர்வும் அதன்வலிகளையும் ஜேர்மானிய அரசுக்கு புத்தக வடிவிலும் , அதை அவர்களையே முன்னிருத்தி எடுத்துச் சொன்ன அந்த அகதியாகி, மருத்துவர் பல ஜெர்மனிய உயரதிகாரிகளையும் கண்கலங்க வைத்தார் , பாஷை விளங்கவில்லை, ஆனால் அவரின் பேச்சை மிகவும் ரசித்தேன். தெளிவான, கூர்மையான பேச்சு. எத்தனை தடவைகள் வேணுமானாலும் கேட்கலாம். 13 நிமிடங்கள் எல்லோரும் அமைதியாக கேக்கிறார்கள் வாழ்த்துக்கள் சகோதரா.
 3. 2 points
  29 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்.... 1. ஈழப்பிரியன் 20 2. கந்தப்பு 20 3. suvy 19 4. nunavilan 19 5. கறுப்பி 19 6. சுவைப்பிரியன் 18 7. nesen 18 8. பகலவன் 18 9. vasanth1 18 10. வாத்தியார் 18 11. Eppothum Thamizhan 17 12. kalyani 17 13. வாதவூரான் 17 14. கிருபன் 16 15. குமாரசாமி 16 16. தமிழினி 14
 4. 2 points
 5. 2 points
  அதுதான் நடக்கும் நைஜீரியாவுக்கு அடியெண்டால் நாயடி பேயடியாய் இருக்கும்..
 6. 2 points
 7. 2 points
  1990ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப்போட்டியிலும் ஆர்ஜென்ரினா தான் விளையாடிய குழுவில் நடந்த முதலாவது போட்டியில் ஆபிரிக்கநாடான கமரூனுடன் தோற்று பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது . அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலர் ஆர்ஜென்ரினாவுக்குதான் ஆதரவு. 1986ல் மேற்கு ஜேர்மனியை வென்று உலககிண்ணத்தினை வென்றது ஆர்ஜென்ரினா. ஜே.ஆர் அரசுக்கு இராணுவ தளபாடங்களை அக்காலத்தில் மேற்கு ஜேர்மனி வழங்கிவந்ததினால் 1986ல் இருந்து பலர் ஜேர்மனியை வெற்ற ஆர்ஜென்ரினாவுக்கு ஆதரவு. மரடோனா பலரது விருப்பமான விளையாட்டுவீரர். தற்போதைய உலகக்கிண்ணத்தில் 8 குழுவாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றில் 4 அணியாக மொத்தம் 32 அணிகள். ஒவ்வொரு குழுக்களில் இருந்து முதல் இரண்டு அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும். அதாவது 8*2 =16 அணிகள் தெரிவாகும். 1990ம் ஆண்டில் 6 குழுக்கள். ஒவ்வொன்றிலும் 4 அணிகள். மொத்தம் 24 அணிகள் . குழுக்களில் இருந்து முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும் (மொத்தம் 6*2 =12), 3ம் இடத்தினைப் பெறும் (புள்ளிகள் ,கோல்கள் அடிப்படையில்) சிறந்த 4 அணிகளும் மொத்தமாக 16 அணிகள் 2ம் சுற்றுக்கு செல்லும். 1990 ஆண்டில் ஆர்ஜென்ரினா, பிறேசில், இத்தாலி, மேற்கு ஜேர்மனி ஆகியவற்றுள் ஒன்றே கிண்ணத்தினைப் பெறும் எனப்பலர் எதிர்ப்பார்த்தார்கள். இதன்படி போட்டிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டன. அதாவது இவ்வணிகள் தங்கள் பங்கேற்கும் குழுவில் முதல் இடம்பெற்று, தொடர்ந்து வெற்றி பெற்றால் , அரை இறுதியில் மேற்கு ஜேர்மனியும், ஆர்ஜென்ரினாவும், மற்றைய அரை இறுதியில் பிரேசிலும் இத்தாலியும் விளையாடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இரண்டு மூன்று தினங்கள் ரசிகர்கள் தொலைக்காட்சியில் உலகக்கிண்ணத்தினைப் பார்த்தார்கள். பிறகு 2ம் ஈழப்போர் ஆரம்பிக்க, சுன்னாகம் மின்சாரநிலையத்திற்கு வானில் இருந்து குண்டு போட்டு யாழ்ப்பாணத்து மின்சாரத்தினை தடைசெய்தது பிரேமதாசா அரசு. மக்கள் வானொலிச் செய்திகளில் மட்டும் போட்டி முடிவுகளை அறிந்து கொண்டார்கள். (அக்காலத்தில் மயிலிட்டி போன்ற பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் காணிகள் சில இப்பொழுதுதான் விடுவிக்கப்பட்டிருக்கிறது). கமரூனுடன் தோற்ற ஆர்ஜென்ரினா, உருமேனியாவுடன் நடந்த போட்டி வெற்றி தோல்வியுடன் முடிய, இரஸ்சியாவினை வென்று மூன்றாம் இடத்தினை ப் பெற்றது. இதனால் 2ம் சுற்றில் பலம் வாய்ந்த பிரேசிலுடன் மோதும் வாய்ப்பினைப் பெற்றது. அப்போட்டியில் ஆர்ஜென்ரினா வெற்றி பெற்றது. யூகோசிலாவாக்கியாவை காலிறுதியில் வென்று, அரையிறுதியில் இத்தாலியையும் வெற்று, இறுதிப்போட்டியில் மேற்கு ஜேர்மனியுடன் மோதியது. கமரூனுடன் நடந்தபோட்டியில் தோற்றதினால் முதல் சுற்றிலே தோற்கடிக்கப்படும் என்று எதிர்ப்பார்த்த ஆர்ஜென்றினா இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் மேற்கு ஜேர்மனி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. நடுவரின் தவறான தீர்ப்பினால் கிடைத்த பனால்டியினால்தான் மேற்கு ஜேர்மனி வெற்றதாக அப்போதைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இம்முறையும் அடுத்த போட்டியில் நையிரியாவை வென்றால், சிலவேளை ஆர்ஜென்ரினா 2ம் இடத்தினைப் பிடிக்கலாம். குழு Cயில் பிரான்ஸ் பெரும்பாலும் முதலாம் இடத்தினைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறது. 2ம்சுற்றில் பிரான்சும், ஆர்ஜென்ரினாவும் மோதும் சந்தர்ப்பம் உருவாகலாம். 1990ம் ஆண்டில் நடந்தது போல நடக்கலாம்.
 8. 2 points
 9. 2 points
 10. 1 point
  சென்ற மாதம் மதுரைக்கருகே எங்கள் கிராமத்திற்கு சென்றபோது, ஊரின் எல்லையில் "டெய்ஸி டூரிங் டாக்கீஸ்" இருந்த இடத்தை கடந்து செல்லும்போது ஏதோ ஒரு இனிமையையும், சந்தோசத்தையும் தொலைத்து விட்ட உணர்வு மேலோங்கியது. அன்று 50 பைசா கொடுத்து 'டூரிங் டாக்கீஸில்' பார்த்த அனுபவமும், சந்தோசமும் இன்று சென்னையிலும், துபாயிலும் ஐமாக்ஸ்(IMAX) திரையரங்குகளில் டால்பி அட்மாஸ்(Dolby Atmos) தொழிற்நுட்பத்திலும் ஏற்படவில்லை. 'டூரிங் டாக்கீஸில்', நமக்கு விருப்பான கதாநாயகர்களின் படத்திற்கு சென்று மண் தரையில் ஆவலுடன் எப்போது படம் திரையில் தோன்றும் என உட்கார்ந்திருக்கையில், படம் போடப்போகிறார்கள்... என்ற முன்னறிப்பாக இந்த பிரபலமான "கம் செம்டம்பர்"(Come September) இசைத்தட்டை திரைக்குப்பின்னால் ஒலிக்கச் செய்வார்கள்.. விசில் சத்தம் காதைப் பிளக்கும்.. "கம் செம்டம்பர்" இசையொலி முடிந்தவுடன் படம் திரையில் தோன்றும்.. 1940,1950 களில் பிறந்து வாழ்பவர்களின் பலரின் இதயத்தில் நீங்கா வரம் பெற்ற இசைக்கருவிகளின் துடிப்பு, இந்த இன்னிசை.. காலம், தொழிற்நுட்பங்கள் மாறலாம், ஆனால் முதலில் அனுபவித்த நினைவுகள் என்றும் நம்மைவிட்டு அழியாது..! நீங்களும் ரசியுங்களேன்..
 11. 1 point
  அரோகரா......! போட்டிகள் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கு. காவலுக்கு வைரவருக்கு வந்திட்டார் போல.....!
 12. 1 point
  முதற்கண் நேர்த்திக்கடன் நிறைவேற்றல்....
 13. 1 point
 14. 1 point
 15. 1 point
  கட்டார்.. கொழும்பு கட்டார் எயார் வெய்ஸ் ஏறிப் பாருங்கள்.. உரப் பையுடன் சனம் வாறதைக் கூடக் காணலாம். அரிசி.. அரிசி மா பாக்.. ஆட்டா மா.. கடலை எண்ணெய் கான்..இப்படி இன்னோரென்ன பொருட்கள்.. இதெல்லாம்...சர்வசாதாரணமாகக் காவப்படும். ஏன் எங்கடை ஆக்கள்.. சறத்தால் முருங்கக்காயை கூட்டா கட்டிட்டு எடுத்திட்டு.. கோட்டு சூட்டுப் போட்டு இங்கிலாந்து பாஸ்போட்டில்.. லண்டன் போறதையும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். இதொன்னும் ஆச்சரியமே இல்லை. ?
 16. 1 point
  எல்லாரும் அவர் நல்லாப் பேசுறார் வல்லவராப் பேசுறார் என்றீங்களே.. அவர் என்னத்தைப் பேசுறார் என்று மட்டும் சொல்லுறீங்களே இல்லையே..???! ? இது எப்படி இருக்கென்னா.. எங்கடை ஆக்கள்.. வெளிநாட்டில இருந்து ஊருக்குப் போய்.. வேலை வேலை என்று சொல்லுவினம்.. ஆனால் என்ன வேலை என்று சொல்லமாட்டினம். அதுமாதிரிக் கிடக்குது.
 17. 1 point
  சிறுத்தையைக் கொல்ல இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1. மக்கள் குடியிருப்புக்கு வந்து தொந்தரவு செய்த சிறுத்தையைக் கொன்று அதனைக் கொல்லும் காட்சியை சமூகவலைத் தளங்களில் பரவி பரபரப்பையும் மற்றையோரின் கவனத்தையும் பெறும் நோக்கம். 2. புலிகளின் மீதான ஆழ்மனதில் உறைந்திருக்கும் பயமும் காழ்ப்பும் ஆயுதம் இல்லாமல் வந்த சிறுத்தை மேல் காட்டப்பட்டிருக்கலாம்
 18. 1 point
  எங்கள் வளங்கள் ; எமது எதிர்காலம் ச. சிவந்தன் , இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் சர்­வ­தேச ரீதியில் அதி­க­ரித்து செல்லும் மக்கள் தொகை­யா­னது உணவு முத­லான அடிப்­படைத் தேவை­க­ளுக்­கான கேள்­வியைத் (demand) தொடர்ச்­சி­யாக அதி­க­ரிக்க வைப்­ப­துடன் இயற்கை வளங்­களின் மீதான அழுத்­தத்­தி­னையும் அதி­க­ரிக்­கின்­றது. இலங்கைத் தீவா­னது வள­மான கடற்­ப­கு­தியைக் கொண்­ட­மைந்­துள்­ள­துடன் நீருக்கும் நிலத்­திற்­கு­மான விகி­தா­சாரம் அதி­க­மான நாடாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இத்­தீ­வா­னது உள்­நாட்டு யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அழி­வு­களால் தடம் மாறிப் பய­ணித்து தற்­போது கொடிய யுத்­தத்தின் முடிவில் சிறிது சிறி­தாக தன்­னு­டைய பாதை­யினை அபி­வி­ருத்­தி­யினை நோக்­கி­ய­தாக திசை மாற்றி பய­ணிக்கத் தொடங்­கி­யுள்­ளது. அபி­வி­ருத்தி எனும் கருத்­து­ரு­வாக்­கத்தின் போது சுதந்­தி­ர­மான வளப்­ப­யன்­பாடு (open access nature) மற்றும் திறந்த பொரு­ளா­தார நிலை (open economy) என்­பன முக்­கி­ய­மாகக் கரு­தப்­பட்­டாலும் பல சந்­தர்ப்­பங்­களில் வளப்­பா­து­காப்­பினை (resource conservation) நோக்கின் அச்­சு­றுத்­தல்­க­ளாக விளங்­கு­வ­துடன் வளம் மற்றும் நிலை­யான வளப்­ப­யன்­பாடு தொடர்­பான சரி­யான விஞ்­ஞான ரீதி­யான தக­வல்கள் போதி­ய­ளவில் இல்­லாமை மற்றும் இவற்றை திறம்­பட முகா­மைத்­துவம் செய்யும் வினைத்­தி­ற­னான நிர்­வாகக் கட்­ட­மைப்­பின்மை அல்­லது செயற்­ப­டாமை என்­பன இவற்­றிற்­கான கார­ணி­க­ளாக விளங்­கு­கின்­றது. இந்த நிலை­யா­னது வளங்­களின் மித­மிஞ்­சிய பயன்­பாடு (overexploitation) மற்றும் அரு­கி­வரும் இனங்­களின் அழிவு ஆகி­ய­வற்றை ஊக்­கு­விப்­ப­துடன் இறு­தியில் இவ்­வ­ளங்கள் மீள முடி­யாத (non-renewable) இக்­கட்­டான நிலைக்கு கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. உற்­பத்தி நிறைந்த இவ்­வ­ளங்கள் மாசு­ப­டுத்­தப்­பட்ட வளங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்ற இந்த நிலை­யா­னது இவ் இயற்கை வளங்­களை அண்­டி­யுள்ள பகு­தி­களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏனைய ஜீவ­ரா­சி­களை நேர­டி­யாகப் பாதிப்­ப­துடன் ஏனைய பிர­தே­சங்­களில் வசிக்கும் உயி­ரி­னங்­க­ளையும் காலப்­போக்கில் மறை­மு­க­மாக சமூக, பொரு­ளா­தார, சுகா­தார மற்றும் சூழ­லியல் ரீதியில் பாதிக்­கின்­றது. சர்­வ­தேச ரீதியில் அதி­க­ரித்து செல்லும் மக்கள் தொகை­யா­னது உணவு முத­லான அடிப்­படைத் தேவை­க­ளுக்­கான கேள்­வியைத் (demand) தொடர்ச்­சி­யாக அதி­க­ரிக்க வைப்­ப­துடன் இயற்கை வளங்­களின் மீதான அழுத்­தத்­தி­னையும் அதி­க­ரிக்­கின்­றது. இலங்­கையின் வட பகு­தி­யா­னது தனது மூன்று பக்­கங்­க­ளிலும் வள­மான கடற் பகு­தி­யையும், நிலப்­ப­கு­தியில் கணி­ச­மான அள­வி­லான நன்னீர் வளத்­தி­னையும் கொண்டு தனித்­து­வ­மான கலா­சார பண்­பாட்டுக் குறி­யீட்­டுடன் விளங்­கு­கின்­றது. வட இலங்­கையைப் பொறுத்­த­வரை விவ­சா­யமும், மீன்­பி­டித்­து­றை­யுமே பொரு­ளா­தார நிலை­யினைத் தீர்­மா­னிக்கும் இரு பெரும் உற்­பத்தித் துறை­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன. விவ­சா­யத்­தினைப் பொறுத்­த­ளவில் நிலத்­தடி நீரி­னையும், மழை நீரி­னையும் நம்பி முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன், மீன்­பி­டித்­து­றை­யினைப் பொறுத்­த­ளவில் பெரும்­பா­லான கட­லு­ணவு உற்­பத்தி கரை­யோர மீன்­பி­டி­யி­னையே (coastal fisheries) நம்­பி­யுள்­ளது. இக்­க­ரை­யோர மீன்­பி­டி­யா­னது சிறு கடற்­றொழில் முயற்­சி­களை (small scale fishing) பெரு­ம­ள­விலும், ஆழ்­கடல் கடற்­றொழில் முயற்­சி­களின் ஆரம்ப நிலை­யிலும் காணப்­ப­டு­கின்­றது. இலங்கைத் தீவின் வட பகு­தி­யினை நோக்­கு­மி­டத்து கடந்த மூன்று தசாப்த உள்­நாட்டு யுத்­தத்­தி­னாலும், 2004ஆம் ஆண்டு இடம்­பெற்ற சுனாமி அனர்த்­தத்­தி­னாலும் பெரும் உயி­ரி­ழப்­புகள், உட­மை­யி­ழப்­பு­க­ளி­னூ­டாக பாரிய பொரு­ளா­தார பின்­ன­டை­வினை சந்­தித்­துள்­ள­துடன் தற்­போது அர­சாங்க, சர்­வ­தேச, புலம்­பெயர் மக்கள் மற்றும் தனி­யாரின் முத­லீ­டு­க­ளுடன் நிமிரத் தலைப்­ப­டு­கின்­றது. இன்­றைய சூழ் நிலையில், இங்கு காணப்­படும் வளங்­களின் அடிப்­ப­டை­யிலும் மற்றும் உள்­நாடு மற்றும் வெளி­நாட்டில் காணப்­படும் கேள்­வி­களின் அடிப்­ப­டை­யிலும் கட­லு­ணவு உற்­பத்தி, பத­னி­டுதல் மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் துறை­யா­னது ஒரு பிர­தான துறை­யாக அடை­யா­ளங்­கா­ணப்­பட்­டுள்­ள­துடன் அதனை நோக்­கிய முத­லீட்­டா­ளர்­களின் வர­வேற்பும், வரு­கையும் அதி­க­ரித்து செல்­கின்­றது. ஆனாலும் கட­லக மீன்­பி­டி­யினால் (wild fishing) பெறப்­படும் கட­லு­ண­வு­களின் தர­மா­னது சரி­யான அறு­வ­டைக்குப் பிந்­திய பாது­காப்பு முறை­களைக் கைக்­கொள்­ளா­மை­யி­னாலும், வளத்­திற்குப் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மீன்­பிடி முறை­களைக் கையாள்­வ­தாலும் பல சந்­தர்ப்­பங்­களில் ஏற்­று­மதி தரத்­திற்கு ஏற்­ற­தல்­லா­த­தாக காணப்­ப­டு­கின்­றது. அத்­தர இழப்பு கார­ணத்­தி­னாலும், உற்­பத்­திக்கு மேல­தி­க­மாக சந்­தையில் கேள்வி காணப்­ப­டு­வ­த­னாலும் கட­லக மீன்­பி­டிக்கு மேல­தி­க­மாக நீரில் வளர்ப்பு (aquaculture) முறை­களும், தொழி­நுட்­பமும் மாற்­றீ­டாக அடை­யா­ளங்­கா­ணப்­ப­டு­கின்­றன. வட இலங்­கையின் அபி­வி­ருத்­தியைப் பொறுத்­த­ளவில் இங்கு காணப்­படும் வளங்­களின் அடிப்­ப­டை­யிலும், இவ்­வுற்­பத்­தித்­து­றைக்கு காணப்­படும் உள்­நாட்டு, வெளி­நாட்டு உயர் சந்­தைப்­பெ­று­ம­தியின் அடிப்­ப­டை­யிலும், இப்­ப­கு­தியில் வாழும் மக்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கும் இந்த நீரில் வளர்ப்புத் தொழி­ல்நுட்­பத்தின் அறி­மு­கமும், வளர்ச்­சியும் சாத­க­மா­கவும், தேவைப்­பா­டுள்­ள­தா­கவும் விளங்­கு­கின்­றது. நீரில் வளர்ப்­பினைப் பொறுத்­த­ளவில் நீர் வாழ் உயி­ரி­னங்கள் அவை இயற்­கையில் வாழும் சூழ்­நி­லைக்­கேற்ப நன்­னீ­ரிலோ, உவர்­நீ­ரிலோ வளர்க்­கப்­பட முடியும் என்­ப­துடன் சரி­யான தொழி­நுட்­பத்­தி­னூடு சூழ­லுக்கு இயைந்த முறையில் மேற்­கொள்­வதன் மூலம்­நீ­டித்த மற்றும் கூடிய வரு­வா­யினைப் பெற்­றுக்­கொள்ளும் சந்­தர்ப்­பத்­தினை வழங்கும் தொழிற்­று­றை­யாகக் காணப்­ப­டு­கின்­றது. ஆனாலும் இந்­நீரில் வளர்ப்பு முறைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் போதும், விஸ்­த­ரிக்­கப்­படும் போதும் பல விட­யங்கள் கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது வளங்­களின் நீடித்த பயன்­பாட்­டிற்கும், பிணக்­குகள் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களைக் குறைத்துக் கொள்­வ­தற்கும் ஏது­வாக அமை­கின்­றன. சரி­யான வளர்ப்­பினம் (species) / பிர­தே­சங்­களை இனங்­கா­ணுதல்: இங்கு காணப்­படும் இயற்கை வளங்­களின் அடிப்­ப­டையில் சரி­யான வளர்ப்­பி­னங்­களை தெரிவு செய்து வளர்க்­கப்­பட முடியும்; அல்­லது உற்­பத்­தித்­திறன் மற்றும் சந்­தைப்­பெ­று­மதி கூடிய வளர்ப்­பி­னங்­களைத் தெரிவு செய்து வளர்க்­கவும் முடியும். ஆனாலும் இரண்­டா­வது முறை­யா­னது மிகவும் சிக்­க­லா­ன­தாகக் காணப்­ப­டு­வ­துடன் குறிப்­பிட்ட பிர­தே­சத்தில் காணப்­ப­டாத புது வளர்ப்­பி­னங்­களைத் தெரிவு செய்து வளர்க்க முற்­படும் போது சரி­யான முறையில் விஞ்­ஞான ரீதி­யாக உறுதி செய்து வளர்க்­கப்­ப­டா­த­விடத்து அப்­பி­ர­தே­சத்தின் இயற்கை சம­நி­லையைக் குழப்பும் செயற்­பா­டாக அமை­வ­துடன் புது­வித நோயாக்­கி­க­ளையோ/ நோய்க்­கா­வி­க­ளையோ அறி­மு­கப்­ப­டுத்தும் தவ­றான செயற்­பா­டாக மாறி­விடும் அபா­யமும் உள்­ளது. ஆகவே நீரில் வளர்ப்­பிற்கு உகந்த இடங்கள் சரி­யான முறையில் இனங்­கா­ணப்­பட்டு வடக்கில் இந்­நீரில் வளர்ப்­பிற்­கான ஒரு விளக்­க­மான திட்டம் (master plan) தயா­ரிக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மாகும். நீரில் வளர்ப்­பிற்­கான அடிப்­படைக் கட்­ட­மைப்­பினை ஏற்­ப­டுத்தும் போது இயற்கை வளங்­களில் ஏற்­படும் மாற்றங்கள் மற்றும் பாதிப்­பு­களைக் குறைத்தல்: நீரில் வளர்ப்­பா­னது உள்­நாட்டில் நன்­னீ­ரிலோ, கரை­யோ­ரப்­பி­ர­தே­சங்­க­ளிலோ, ஆழ்­கடற் பிர­தே­சங்­க­ளிலோ மேற்­கொள்­ளப்­பட முடியும். தரை­யினில் அல்­லது கரை­யோ­ரப்­பி­ர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­படும் போது கண்டற் தாவ­ரங்கள், நன்னீர் வங்­கிகள் – நிலத்­தடி நீர்/ குளங்கள் (freshwater banks – ground water/ reservoirs), கடல் அடித்­த­ளத்தில் காணப்­படும் உயிர்ச்­சூழல், களப்­பு­களை அண்­டிய பிர­தேச சூழல் போன்ற உணர்­திறன் மிக்க பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மா­வ­துடன் அவற்றில் ஏற்­படும் மாற்­றங்கள் மற்றும் பாதிப்­புகள் மொத்த வளத்­தி­னை­யுமே பாதிப்­பினை நோக்கி இழுத்துச் செல்­வ­துடன் அவற்­றினை நம்­பி­யி­ருக்கும் மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தி­னையும் பாதிப்­ப­டையச் செய்யும். வினைத்­தி­ற­னான தொழி­ல் நுட்­பங்­களைப் பயன்­ப­டுத்­தப்­ப­டுதல்: நீரில் வளர்ப்­பினைப் பொறுத்­த­ளவில் மேற்­கொள்­ளப்­படும் முறைக்­கேற்ப பல­வி­த­மான தொழி­நுட்­பங்­களும், முறை­களும் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம்; அவை பௌதீக, இர­சா­யன மற்றும் உயி­ரியல் தொழி­நுட்­பங்­க­ளாக அமையும். ஆனாலும் அவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­படும் முறைகள் வளத்­திற்கோ அல்­லது பயன்­பாட்­டா­ள­ருக்கோ பௌதீக ரீதி­யா­கவோ அல்­லது உடற்­சு­கா­தார ரீதி­யா­கவோ பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தாத முறை­க­ளாக இருத்தல் அவ­சி­ய­மா­னது என்­ப­துடன் தற்­போது ஐரோப்­பிய ஒன்­றியம் உள்­ள­டங்­க­லான பெரும்­பா­லான மேற்­கத்­தேய நாடுகள் இர­சா­யனப் பயன்­பாட்­டி­லி­ருந்து விலகும் போக்­கினைக் கடைப்­பி­டிப்­பது கருத்­திற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தாகும். அத்­துடன் இத்­தொ­ழில்­நுட்­பத்­துடன் பரீட்­ச­ய­மான, தொழி­ல்நுட்ப அறி­வுள்ள ஆளணி இருத்தல் முக்­கி­யமா­னது என்­ப­துடன், ஒரு நிலை­யான தொழி­நுட்ப ஆள­ணியைப் பேணுதல் முக்­கி­ய­மா­ன­தாகும். பிணக்­குகள் உரு­வாக்­கமும் சமா­ளித்­தலும்: இலங்­கையில் கரை­யோரம் உள்­ள­டங்­க­லான கடற்­பி­ர­தே­ச­மா­னது எல்­லை­க­ளற்ற வளங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு அத­ன­டிப்­ப­டையில் முறை­யான அனு­ம­தி­க­ளூ­டாக இவ்­வ­ளங்­களை யாரும் பயன்­ப­டுத்­த­மு­டியும் என்ற நிலை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பிட்ட வளங்­களின் பயன்­பாட்­டினை ஆராயும் போது ஒரு குறிப்­பிட்ட பிர­தேசம்/ வள­மா­னது பல தொழிற்­று­றைக்கும் பொருத்­த­மா­ன­தாக அடை­யா­ளங்­கா­ணப்­ப­டு­மி­டத்து போட்டித் தன்­மை­யினை உரு­வாக்­கு­கின்­றது. ஆனாலும் இந்த நிலை­மையின் போது குறிப்­பிட்ட அவ்­வ­ளத்தின் பாரம்­ப­ரிய பயன்­பாட்­டா­ளர்­க­ளி­னதும், அவ்­வ­ளத்­தினை நம்பி வாழ்­வா­தா­ரத்­தினை முன்­னெ­டுக்கும் சமூ­கத்­தி­னதும் தேவைகள், விருப்­பங்கள் மற்றும் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்தல் இன்­றி­ய­மை­யா­த­தாகும். கடற்­றொழிற்றுறையில் இதனை நெறிப்­ப­டுத்தும் முக­மாக பல அர­சாங்கக் கட்­ட­மைப்­புகள் காணப்­பட்­டாலும், இற்­றைக்கு பல தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் உரு­வாக்­கப்­பட்ட கூட்­டு­றவு சங்கக் கட்­ட­மைப்பு போன்ற வட­ப­கு­தியில் பலம் பொருந்­திய நிலையில் காணப்­ப­டு­கின்ற மக்கள் சார் அமைப்­பு­களின் வகி­பாகம் முக்­கி­ய­மா­ன­தாகும். இவ்­வா­றான மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட அமைப்­புக்­க­ளா­னது அவர்கள் சார்ந்த மக்­களின் விருப்பு வெறுப்­புகள், தேவைகள் ஆகி­ய­வற்றை சரி­யான முறையில் இனங்­கண்டு முன்­வைப்­ப­துடன், இவ்­வ­மைப்­புக்கள் தாம் சார்ந்த மக்­க­ளுக்கு நியா­ய­மான வரு­மா­னத்­தினை (equitable economic returns) உறு­தி­செய்­வ­துடன் வெளிப்­பங்­கு­தா­ரர்­க­ளுடன் (stakeholders) பேரம் பேசும் அமைப்­பா­கவும் தொழிற்­பட முடியும். அத்­துடன் இவ்­வா­றான அமைப்­பு­க­ளுடன் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதன் மூலம் பிணக்­குகள் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களை வெகு­வாகக் குறைத்­துக்­கொள்ள முடி­வ­துடன் திட்­டங்­களை இல­கு­வா­கவும், வெற்­றி­க­ர­மா­கவும் செயற்­ப­டுத்த முடியும். ஆகவே இவ்­வா­றான மக்கள் சார் கட்­ட­மைப்­புகள் பலம்­பொ­ருந்­தி­ய­தா­கவும், தற்­கால சூழ­லுக்கு ஏற்­ற­தா­கவும் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டுதல் இன்­றி­ய­மை­யா­த­தாகும். இலங்­கையின் வடக்குப் பிர­தே­சத்தின் அபி­வி­ருத்தி தொடர்­பான கவனம் அதி­க­ரித்­தி­ருப்­ப­த­னாலும், அந்த அபி­வி­ருத்தி எனும் கருப்­பொ­ருளில் கடற்­றொழிற் துறையும் உள்­வாங்­கப்­ப­டு­வ­த­னாலும், இத்­து­றையில் முத­லிட உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் முன்­வ­ரு­கின்­றனர். ஆனாலும் நிலை­யான அபி­வி­ருத்தி (Sustainable development) என்­பது மனி­த­குல நன்­மை­க­ளையும் (human wellbeing), சூழ­லியல் நன்­மை­க­ளையும் (ecological wellbeing) வினைத்­தி­ற­னான முகா­மைத்­து­வத்­தி­னூ­டாக (good governance) சம­நி­லைப்­ப­டுத்தும் போதே ஏற்­ப­டு­கின்­றது. இந்த மாதி­ரி­யான சம­நிலையே நியா­ய­மான பொரு­ளா­தாரப் பங்­கீடு (equitable economic returns) மற்றும் சமூக வெளிப்­பா­டு­களை (social outcomes) உறு­திப்­ப­டுத்தும். யுத்­தத்­திற்குப் பின்னரான வடக்கின் அபிவிருத்தி தற்போதும் ஆரம்ப நிலையில் முன்னகர்வதனால், இந்த ஆரம்ப நிலையிலேயே அபிவிருத்தித் திட்டங்கள் சரியான முறையில் விஞ்ஞான ரீதியாக ஒழுங்கமைக்கப்படுவது முக்கிய­மாகும். அந்த அடிப்படையில் இங்கு காணப்படும் வளங்களின் பங்கீடும், பயன்பாடும் சரியான திட்டமிடல்களினூடு மேற்கொள்ளப்படுவது முக்கியமாகும். அந்த நிலையில் மேற்குறிப்பிட்ட நீரில் வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முனையும் போது அது சார்ந்த சரியான மற்றும் உறுதியான தகவல்கள் இருத்தல் முக்கியமாகும். இந்த நிலையில் நீடித்த பயன்பாட்டுப் பிரதேசங்களின் (Sustainable Use Areas – SUAs) உருவாக்கமானது இவ்வியற்கை வளங்களை வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவதுடன் அந்த இயற்கை வளங்களை சரியான முறையில் பாதுகாத்து அவற்றினை நம்பி வாழ்ந்துவரும் கிராமிய சமூகத்தின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவும் அமையும். அத்துடன் மேலதிகமாக உருவாகும் கழிவுகள் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுதல் இன்றியமையாததாக இருப்பதுடன் முறையற்ற கழிவு முகாமைத்துவம் இயற்கை வளத்தினை மேலும் மாசுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் ஒருகட்டத்தில் அவ் வளங்களை பாவனைக்குதவாத நிலைக்கு மாற்றிவிடக்கூடிய அபாய நிலை­யினையும் கருத்திற்கொண்டு செயற்படுதல் நீடித்த பாவனைக் கொள்கைக்கு நன்மை பயக்கும். “பாதுகாப்பினை விட முற்பாதுகாப்பே பாதுகாப்பானது” http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-22#page-6
 19. 1 point
  ஜேர்மனியில் தற்போது நிலவும் அகதிகள் பிரச்சனைகளுக்கு மத்தியில் இரு பெரும் அரசியல்வாதிகள் எழுந்து நின்று உமேஷ்வரனுக்கு வரவேற்பளித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. அகஸ்தியன்! செய்திக்கு நன்றி
 20. 1 point
  அதைவிட இந்த அவல நிலைக்கு மிகவும் பிரதானமான காரணி எமது இனம் .... நிச்சயமாக எமது இனம்.. வன்னியில் நடந்த அவலத்தின் பொது வடக்கு கிழக்கில் அமைதியாக இருந்த எமது இனம் .... தான் மட்டும் தப்பினால் போதும் என்று அமைதி காத்த எமது இனம் ...
 21. 1 point
  மெதுவாக ஆனால் உறுதியாக நானும் கு.சா. ஐயாவும் எமது இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம்!? தூரம் அதிகம் இல்லை. அதோ தெரியுதுபார் எல்லை! ?
 22. 1 point
  26 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்.... 1. ஈழப்பிரியன் 17 2. கறுப்பி 17 3. கந்தப்பு 17 4. suvy 16 5. nunavilan 16 7. சுவைப்பிரியன் 15 8. nesen 15 6. பகலவன் 15 10. vasanth1 15 9. வாத்தியார் 15 11. Eppothum Thamizhan 14 12. kalyani 14 13. வாதவூரான் 14 14. கிருபன் 13 15. குமாரசாமி 13 16. தமிழினி 12
 23. 1 point
  நைஜீரியா வெற்றி suvy, nunavilan, தமிழினி, ஈழப்பிரியன், vasanth1, கறுப்பி, கந்தப்பு .... இவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.
 24. 1 point
  மொத்தத்தில் எல்லா படங்களிலும் ஒவ்வொரு புதுமை எல்லாமே ரசிக்க கூடியதாக இருக்கிறது. இணைப்பகளுக்கு ரொம்ப நன்றி சிறி.
 25. 1 point
  இன்று தோற்றதால் கால் இறுதியாட்டத்திற்குக் கூட போகமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். இதனால் எனது கணிப்புக்கள் எல்லாம் பிழைத்து கு.சா. ஐயா கடைசியாக வரப்போகின்றார்! ராசி பலன் அப்படி வேலை செய்யுது??
 26. 1 point
  கருணா இயக்கத்தின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இல்லாமல் தன்னைப் பற்றிமட்டும் சுயநலமாகச் சிந்தித்து செயற்பட்டது காரணமாகத் தெரியவில்லையா? பால்ராஜ் போல சொல்லப்பட்ட எதையும் இயக்கத்திற்காக கேள்விகேட்காமாலேயே செய்த பலர் இருந்திருக்கின்றார்கள்.
 27. 1 point
  அவனுக்கு என்ன கஸ்ரம் இருக்கிறதோ யாருக்குத் தெரியும்
 28. 1 point
  நானறிந்தவரை முஸ்லிம்களுடன் நல்லிணக்கமாக போகவேண்டும், முஸ்லிம்களுக்கு நாம் துரோகமிழைத்துவிட்டோம் என்று கதறி தன் பெயரை பிரபல்யபடுத்தும் தமிழர்களே அதிகம்... ஆனால்.. தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டே தமிழரை கொன்றோம், அவர்களை காட்டி கொடுத்தோம்,ஒரேமொழி ஒரே பிரதேசம், ஒரே சமூகவட்டம் என்று வாழ்ந்தாலும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தமிழரை பலவீனபடுத்த சிங்களவருடன் சேர்ந்து நின்றோம் அது தவறு என்று எந்த முஸ்லீமும் ... கட்டுரையோ...கவிதையோ...கருத்தோ சொன்னதேயில்லை... அடிவாங்கினது நாமாக இருந்தாலும், அடித்தவனை அணைத்துபோக சொல்லும் எருமைமாட்டு இனம் உலகில் நாமாக மட்டுமே இருக்க முடியும்..
 29. 1 point
  சதாம் ஹுசைன், கேர்ணல் கடாபி, பின்லாடன், ஜசீர் அரபாத், போன்றோரின் ஆட்சியும்,அமைப்புக்களும் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, வீழ்த்தப்பட்டார்களோ அது போன்று எமது அமைப்பும் தலமையும் வீழ்த்தப்பட்டது.....அம்பிட்டுந்தான்... உலக சக்தி ஒன்று ஒரு அமைப்பை வீழ்த்த வேணும் என்று நினைத்து விட்டால் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது....25, 30 வருடஙகள் சென்றாலும் வீழ்த்தியே தீர்வார்கள்.... இதில் ஒற்றுமை,பிரதேசவாதம் ,சாதி ...எல்லாம் ஒரு பொருட்டே இல்லை....
 30. 1 point
 31. 1 point
  இயற்கையை அழித்து செயற்கையை ரசிக்கும் இயந்திரம் மனிதன்...
 32. 1 point
  எப்படியான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதற்கு மற்றைய இனங்களையும் அரசாங்கத்தையும் காரணமாக காட்டிவிட்டு எங்களை ஒரு புனிதர்களாக படம்பிடித்து காட்டி குற்றவாளிக்கூண்டில் இருந்து தப்பித்துவிடுவது எமது திறமை. சாதி பாகுபாடுகள், வேறுபாடுகள் களையப்படாதவரை தமிழர்கள் ஒருபோதும் ஒருமித்து வாழப்போவது இல்லை. எமக்குள்ளேயே சமூக அஸ்தஸ்து, கெளரவம், பதவிகள், செல்வம், செல்வாக்கு, பிரதேசவாதம் என்று பல விடயங்களில் ஒருவருக்குள் ஒருவர் கடும்போட்டி, புடுங்குப்பாடு உள்ளது. பல விடயங்கள் வெளிப்படையாக பேசப்படுவது இல்லை. ஆனால், பல்வேறு பிரச்சனைகளின் மூலாதாரமாய் அவைதான் விளங்கும். எமது தவறுகளை கண்டுகொள்ளாமல் இப்படியே தொடர்ந்து சொறி லங்கா போலிஸ், ஒட்டுக்குழு, இத்தியாதி என்று கத்திக்கொண்டு இருப்போம். நிச்சயம் விடிவு பிறக்கும்.
 33. 1 point
  செனகல் வெற்றி. ஒரே ஒருவருக்கு புள்ளி கிடைக்கிறது. வாதவூரான்
 34. 1 point
  ஒரு செய்தியை இணைப்பதற்கே ஆதாரம், மூலம் யாழில் கேட்கப்படுகிறது, பல லட்சம்பேர் கிட்ட நின்று பார்க்காத ஒரு வரலாற்றையே எழுதும் பீஷ்மர்,அவர் எழுதும் தொடருக்கு,அறிந்த மிக இரகசியமான தகவல்களுக்கு ஆதாரங்கள் சிலதையாவது சொல்லி தொடங்காதது ஏனோ? யுத்த காலங்களில் புலத்தில் ஆய்வாளர்கள் கொடிகட்டி பறந்தார்கள், ஒவ்வொரு நாட்டிலும் பல ஆய்வாளர்கள், பல பெயர்களில் ,, ஒருவர் பல பெயர்களில் எல்லாம் என்று மணிக்கணக்கில் ஆய்வு செய்தார்கள்,பந்தி பந்தியாய் எழுதி குவித்தார்கள், இறுதியுத்தம் முடிவதற்கு முதல்நாள்கூட, புலிகள் இன்னும் பதுங்குவது எதற்கு, பல அணிகள் இன்னும் களமிறக்கப்படாது இருப்பதன் மர்மம் என்ன என்று கேள்வியெல்லாம் கேட்டு மனசாட்சியே இல்லாமல் வெற்றி முரசு கொட்டினார்கள், எல்லாம் முடிந்தபின்னர் இப்போ அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியாது. மழைவிட்டும் தூறல் நிக்காததுபோல, இன்னும் ஒருசிலர் நரம்புகளை சூடேற்றி புகழ்தேடும் அவர்கள் தொழிலை விடுவதாகவே இல்லை. எல்லாம் முடிந்து மயானத்தில் வந்து நிற்கிறோம் என்று தெரிந்தும் அங்கும் வந்து வார்த்தை அலங்காரம் பண்ணுபவர்களுக்கு இரண்டே இரண்டு நோக்கங்கள்தான் இருக்கும் ஒன்று: காசு பார்க்கும் ஊடக வியாபாரம், அல்லது தனிப்பட்ட பிரபல்யம், ஒரு அழிவில்கூட ஆதாயம் பார்க்கும் இனம் எம்மைவிட்டால் இந்த பூமியில் வேற யார் இருக்கிறார்கள்?
 35. 1 point
  சிரித்ராலாயா 03: பிரிந்த நண்பர்கள்... ஒளிர்ந்த நட்பு! ‘காசேதான் கடவுளடா’ படத்தில் லட்சுமி, முத்துராமன், ‘தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த் ஸ்ரீ தரும் கோபுவும் ஐந்தாம் வகுப்பில் தொடங்கி ஒன்றாகப் படித்தவர்கள். கோபுவின் வீடு செங்கல்பட்டு சின்னமணிக்காரத் தெருவில் இருந்தது. ஸ்ரீதரின் வீடு மறுகோடியில் நத்தம் என்ற பகுதியிலும் இருந்தது. பள்ளிவிட்டால் நண்பன் கோபுவைத் தேடி வந்துவிடுவார் ஸ்ரீதர். ஒன்பதாவது படிக்கும்போது ஸ்ரீதருக்குக் கலையார்வம் துளிர்த்தது. மனோகரா என்னும் நாடகத்தை எழுதி, பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேற்றினார். அதில் ஸ்ரீதர் கதாநாயகனாகத் தோன்ற, அதே நாடகத்தில் காமெடியன் ரோலில் சக்கை போடு போட்டார் கோபு. அதுமட்டுமல்ல; நாடகத்தின் நகைச்சுவைப் பகுதியை கோபுதான் எழுதினார். ஸ்ரீதர்-கோபு கூட்டணி முதல்முதலாக உருவானது பள்ளியாண்டு விழாவில்தான். இவர்கள் இருவருடன் ரங்கநாதன் என்ற மாணவனும் படித்தார். இவர்தான் ‘கடுகு’ அகஸ்தியன் என்ற பிற்கால எழுத்தாளராக உருவெடுத்தார். இவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவிட்டால் அவர்கள் இருக்கும் இடம் கணஜோராகக் களை கட்டிவிடும். அடிக்கடி சாகசங்களிலும் இறங்கிவிடுவார்கள். காப்பாற்றிய கதாநாயகன் அப்போது பாலாற்றுக் கரையில் மாந்தோப்புகள் நிறைய உண்டு. அந்தத் தோப்பு மாங்காய்களைத் திருடி அவற்றைத் துவைக்கிற கல்லில் உடைத்து உப்புக்கல் வைத்துத் தின்றால்தான் ருசி. தோட்டக்காரர் இல்லாத சமயத்தை உளவறிந்து மாங்காய் அடிக்கச் செல்ல வேண்டும். அப்படி மதிய சாப்பாட்டுக்கு அவர் சென்றிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஸ்ரீதரும் கோபுவும் தோப்புக்குள் நுழைந்து மாங்காய் அடித்துக்கொண்டிருந்தார்கள். மாயக்காரன் மாதிரி அங்கே திடீரென்று வந்து நின்றார் தோட்டக்காரர். ஸ்ரீதர் உட்பட எல்லோரும் அலறி அடித்து ஓட்டம்பிடித்துவிட, சுதாரிப்பதற்குள் கோபுவைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டார் தோட்டக்காரர். பள்ளிக்கூடப் பிள்ளை என்று கூடப் பார்க்காமல் கோபுவின் முதுகை மத்தளம் ஆக்கினார் தோட்டக்காரர். இரக்கமில்லாத தோட்டக்காரர் ஆத்திரம் அடங்காமல் மாங்காய் திருடிய கள்வர்களின் தலைவனைப் பிடித்துவிட்டதுபோன்ற கர்வத்துடன் கோபுவை மரத்தில் கட்டிப் போட்டார். ஆனால், கோபுவுக்கு நண்பன் மீது நம்பிக்கை இருந்ததால் மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த மாங்காய்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீதர் தனக்குத் தெரிந்த ஒரு பெரிய மனிதரை அழைத்து வந்து கோபுவை மீட்டுக்கொண்டுபோனார். “என்னை மரத்தில் கட்டிப் போட்ட விவகாரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது” என்று சத்தியம் செய்யச் சொன்னார் கோபு. ஸ்ரீதரும் சத்தியம் செய்துகொடுத்தார். ஆனால், மறுநாள் பள்ளிக்கூட மணியை அடித்துக்கொண்டே பியூன் கோபுவைப் பார்த்து “இன்னா கோபு, மாந்தோப்புல செம மாத்து மாத்திட்டாங்களாமே?” என்றான். அவன் கேட்ட விதம் பள்ளிக்கூடம் முழுவதும் மணியடித்துச் சொல்லி விட்டேன் என்பது போல இருந்தது கோபுவுக்கு. “என்னடா ஸ்ரீ! நீ செய்த சத்தியம் அவ்வளவுதானா?” கோபு கோபத்துடன் கேட்டார். “டேய் நீ மாட்டிக்கிட்டதும் உன்னைக் காப்பாத்தனுமேன்னுதான் நான் தப்பிச்சுப்போனேன். நானும் உன்னோட மாட்டியிருந்தா நம்மள யார் காப்பாத்தியிருப்பா சொல்லு?” என்று ஸ்ரீதர் பதில் சொன்னதும் கோபுவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. கேள்வித்தாள் வள்ளல் பள்ளித்தேர்வு நேரம் நெருங்கிவிட்டால் காமெடியன் கோபு ஹீரோவாக மாறிவிடுவார். கோபுவுடைய தந்தை துரைசாமிதான் இருவருக்கும் வகுப்பு வாத்தியார். அவர் வீட்டு பீரோவில்தான் கேள்வித்தாள்கள் அடங்கிய பைலை வைத்திருப்பார். ஸ்ரீதர் கோபுவை விசேஷமாகக் கவனிப்பார். கோபுவும் பீரோவைத் திறந்து தன் அப்பாவுக்குத் தெரியாமல் கேள்வித்தாள்களில் ஒன்றை உருவிடுவார். கேள்வித்தாள் இருந்து விட்டால் போதுமா, புத்தகத்தில் பதில்கள் எங்கே இருக்கின்றன என்று தேட வேண்டுமே! ஸ்ரீதரும் கோபுவும் ரங்கநாதனைத் தேடி ஓடுவார்கள். கையில் கேள்வித்தாள் கிடைத்ததும் ஸ்ரீதரும் கோபுவும் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை தாண்டவே மாட்டார்கள். இருவரும் பார்டர் மார்க் மேதாவிகள். ஆனால், ரங்கநாதன் மட்டும் சென்டம் வாங்கிவிடுவார். கோபுவையும் ஸ்ரீதரையும் குறித்து துரைசாமி வாத்தியாருக்கு எந்தச் சந்தேகமும் எழவில்லை. ஆனால், ரங்கநாதன் செண்டம் வாங்குவதைப் பார்த்து வியந்துபோன அவர், அந்தத் தகிடுதத்தத்தின் சூத்திரதாரிகள் கோபுவும் ஸ்ரீதரும் என்று தெரிந்து சுதாரித்துக்கொண்டார் வாத்தியார். தேர்வு நேரங்களில் கோபுவை வீட்டுச் சிறையில் தள்ளிவிடுவார். ஆனால், கோபு அசர மாட்டார். புழக்கடையிலிருந்து சின்ன சின்ன கற்களைப் பொறுக்கி வைத்து, கேள்வித்தாள்களைக் கல்லில் சுற்றி மடித்து வீதியில் எறிவார். ஸ்ரீதர் அதை லாகவமாகப் பிடித்து, ரங்கநாதனிடம் கொண்டுபோய்ச் சேர்த்து அவர் இரக்கப்பட்டுத் தரும் பார்டர் மார்க் பதில்களை மட்டும் தெரிந்துகொண்டு பதில்களை எழுதி, நண்பனுக்காக மீண்டும் கோபுவின் வீட்டு மாடியை நோக்கி கல்லில் எறிய, கோபு அதைத் தாவிப் பிடிப்பார். இந்தப் பரிமாற்றத்தில் தொடங்கிய இவர்களது லட்சியக் கூட்டணி, பின்னாளில் கதை-வசன தாள்களின் பரிமாற்றத்தில் முடியும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்களா என்று தெரியவில்லை. ஓய்வுத் தருணம் ஒன்றில் கோபுவும் ஸ்ரீதரும் பிரிந்த நண்பர்கள் பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் ஸ்ரீதருடைய அப்பா அவரைக் கூட்டுறவு அலுவலகத்தில் வேலையில் அமர்த்திவிட்டார். ஸ்ரீதருடன் திரிந்து கொண்டிருந்த கோபுவை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவரைக் காரைக்குடிக்கு நாடு கடத்துவதுபோல அழைத்துச் சென்று அழகப்பா கல்லூரியில் இன்டெர்மீடியேட் படிப்பில் சேர்த்தனர். இதற்கு கோபு ஒப்புக்கொள்ள மாட்டார் என்று தெரிந்துகொண்ட கோபுவின் பெற்றோர், அழகப்பா கல்லூரில் புகழ்பெற்ற கிரிக்கெட் டீம் இருப்பதை எடுத்துக்கூறி ஆசை காட்டி அவரைக் கல்லூரியில் அடைத்துவிட்டு வந்தார்கள். அதை உண்மை என்று நம்பிய கோபு, கல்லூரியின் கிரிக்கெட் அணியில் சேர்ந்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வெல்வதற்குக் காரணமாக இருந்தார். ஆனால், நண்பன் ஸ்ரீதர் நம் அருகில் இல்லையே என்ற கவலை அவரை அரித்துக்கொண்டேதான் இருந்தது. அங்கிருந்து கோபுவுக்கு கடிதங்கள் எழுதி தனது நட்பைப் பத்திரமாக வைத்துக்கொண்டார். காரைக்குடியில் கோபு படித்துக்கொண்டிருந்தபோது அழகப்பா கல்லூரியின் பொறியியல் துறை கட்டிடத்தைத் திறப்பதற்காக வந்திருந்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. சிவப்பு சிங்கமாக நின்றிருந்த காஷ்மீர் ஆப்பிள் நேருவைத் தொட்டுக் கைகுலுக்கி, நண்பன் ஸ்ரீதரிடம் பீற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை. ஆனால், நேருவை நெருங்க முடியவில்லை. மானசீகமாக நேருவின் கையைக் குலுக்கிவிட்டு, அவர் கல்லூரிக்கு வந்து சென்ற நிகழ்வை நண்பனுக்கு கோவையாக எழுதி அனுப்பினார். அவ்வளவு சீக்கிரம் பாராட்டிவிடாதவர் ஸ்ரீதர், ‘நானே நேருவைக் கண்டதுபோல் நல்ல வர்ணனையில் எழுதியிருக்கிறாய் சினேகிதா’ என்று ஸ்ரீதரிடமிருந்து பாராட்டு வரிகளுடன் பதில் வந்தது. காரைக்குடியில் கோபு தங்கியிருந்த இடத்தின் பெயர் கல்லுக்கட்டி. அங்கிருந்த குளக்கரை எதிரில் இருந்த ஏ.வி.எம் சன்ஸ் கட்டிடத்தின் மாடியில்தான் நண்பர்களோடு தனது அறையைப் பகிர்ந்திருந்தார் கோபு. ‘வேதாள உலகம்’, ‘வாழ்க்கை’ போன்ற ஏ.வி.எம்மின் படங்களை அங்கிருந்த சரஸ்வதி தியேட்டரில் பார்த்த கோபு, எப்படியாவது ஏ வி எம் செட்டியாரைச் சந்தித்து அவரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால், பிற்காலத்தில் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்தை ஏ.வி.எம். செட்டியார் வாங்கி, திரைப்படமாகத் தயாரித்து, அதைத் தன்னையே இயக்கச் சொல்வார் என்று கோபு சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. விதி இப்படித்தான் சிறு சிறு சம்பவங்களின் மூலமாக எதிர்காலத்துக்குக் கட்டியம் கூறும் என்பதை கோபு அப்போது உணர்ந்திருக்கவில்லை. சிரிப்பு தொடரும் http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22621110.ece
 36. 1 point
  சிரித்ராலயா 02: கலைவாணர் எனும் குரு பாராட்டு விழா ஒன்றில் ஸ்ரீதருடன் கோபு நகைச்சுவையின் இயல்பான அம்சங்களில் முக்கியமான ஒன்று பகடி. அது பிறரைப் புண்படுத்திவிடாத நேர்மையுடன் இருக்க வேண்டும். அதே நேரம் அந்த நேரத்துக்கு மட்டும் குலுங்கிச் சிரித்துவிட்டு கடந்துபோவதாக அந்தப் பகடி இருக்கக் கூடாது. தன்னம்பிக்கையை ஊட்டுவதாகப் பகடி இருக்க வேண்டும் என்பார் கோபு. அப்படிப்பட்ட அசலான நகைச்சுவையை தன் அம்மாவின் வெள்ளந்தியான பேச்சுகளிலிருந்து உள்வாங்கிக்கொண்டவர். நடுவுல வந்தவன் நடுவுல போயிட்டான் சூழ்நிலைக்கு ஏற்ப அம்மா செல்லம்மாவிடம் வெளிப்பட்ட அசலான நகைச்சுவை உணர்வைப் போலவே துணிவும் இணைந்தே வெளிப்பட்டது. இக்கட்டான சூழ்நிலைகளில் கூடச் சம்பந்தப்பட்டவர் ஒருகணம் திடுக்கிட்டு, அதே நேரம் அவர் அந்த இக்கட்டிலிருந்து விடுபட்டு வெளிவந்துவிடும்விதமாக நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டுவந்துவிடுவார். இப்படித்தான் அவருக்கு நெருக்கமான ஒரு பெண்மணியின் கணவர், வீட்டு முற்றத்தில் வழுக்கி விழுந்தபோது, அவரது தலை துணி துவைக்கும் கல் மோதி, அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். ‘உன் வாழ்க்கை இப்படிப் பாழாப்போச்சே. உன்விதி இப்படியா அமையணும், ஆத்துக்காரனுக்கு நல்ல சாவு…’ என்று ஊரார் ஒவ்வொருவராக வந்து, துக்கம் கேட்கிறேன் என்ற பெயரில் அவரது மனதையே சுக்கல் சுக்கலாக உடைத்துப்போட்டிருந்தார்கள். கோபுவின் அம்மா செல்லம்மா துக்கம் கேட்கப் போயிருந்தார். அன்று கை வளையல்களை உடைத்து, தலையிலிருக்கும் பூவை எடுத்து, நெற்றிக்குங்குமத்தை அழித்துவிடும் சடங்கு. கணவனைப் பறிகொடுத்திருந்த பெண்மணி செல்லம்மாவைக் கண்டதுமே பெருங்குரலெடுத்து அழ, செல்லம்மா அவரை அதட்டினார். “எதுக்குடி அழறே! நடுவுல வந்தவன், நடுவிலேயே போயிட்டான், அதுவும் நடு முத்தத்துல வழுக்கி விழுந்து! அழறதை நிறுத்திட்டு, வேலைக்குப் போய் குடும்பத்தை நிமிர வைக்க பாரு. பிறந்ததுலேர்ந்து வச்சுக்கற குங்குமப் பொட்டை நடுவுல வந்தவனுக்காக எதுக்கு அழிக்கணும்?” என்று கேட்டதும் அங்கே வந்திருந்த கூட்டம் மொத்தமும் அசந்துபோனது, அரண்டும்போனது. ஆச்சார அனுஷ்டானங்கள் மிக்க அந்தக் காலத்தில் இப்படிப் பேசுவதற்கு எவ்வளவு துணிவு வேண்டும்? எழுதி வாங்கினாயா? இப்படி சிறுவயது முதலே அம்மாவின் அதிரடி நகைச்சுவைகளால் ஈர்க்கப்பட்ட கோபு, இக்கட்டான மற்றொரு சூழலில் அவர் உதிர்ந்த இன்னொரு ‘பிளாக் ஹியூம’ரையும் விவரித்துவிட்டுக் குழந்தையைப் போல் சிரிக்கிறார். கோபுவின் மாமியார் இறந்தபோது, உறவினர்கள் எல்லாரும் குழுமியிருந்தனர். திடீரென்று செல்லம்மா, கோபுவின் மனைவியிடம் வந்து, “கமலா! உங்கம்மா கிட்ட எழுதி வாங்கினியா?” என்று கேட்டார். அங்கிருந்த எல்லோருக்கும் பகீரென்று ஆகிவிட்டது. ‘கடவுளே.. சம்பந்தியம்மாள் சொத்துப் பிரச்சினையை இப்படிப் பட்டவர்த்தனமாக எழுப்புகிறாரே’ என்று பந்துக்கள் அனைவரும் பதைபதைத்துப் போனார்கள். அடுத்து செல்லமா என்ன கேட்பாரோ என்று எல்லோரும் குழம்பிப்போய் அவரது முகத்தைப் பார்க்க, “உங்கம்மா ஆவக்காய் ஊறுகாய் பிரமாதமா போடுவாள். அவகிட்ட ரெசிபி எழுதி வாங்கிக்கிட்டியா?” என்று செல்லம்மா கேட்க, சாவு வீடு நகைச்சுவை மன்றமாகி குபீர் சிரிப்பொலியால் நிறைந்தது. இரண்டாம் குரு அம்மாவின் நகைச்சுவை உணர்வு ஏற்படுத்திய தாக்கம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ‘கலைவாணர்’ என்.எஸ் கிருஷ்ணன் ஏற்படுத்திய தாக்கம், அவரைத் தனது இரண்டாம் நகைச்சுவை குரு என்று கோபு கூறும் அளவுக்கு அவரை வடிவமைத்திருக்கிறது. சி.வி.ராமன் தயாரிப்பில் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான படம் ‘கிருஷ்ண பிடாரன்’(1942). இந்தப் படத்தில் சங்கீத வித்துவானாக வரும் என்.எஸ்.கேவின் நகைச்சுவைக் காட்சிகள் பற்றிப் படம் பார்த்தவர்கள் வந்து சிலாகிக்க, பத்து வயதில் அந்தப் படத்தைப் பார்க்கப் போனார் கோபு. படத்தில் என். எஸ்.கே. ஒரு கர்நாடக சங்கீத வித்துவான். அவருடைய சகாக்கள் புளிமூட்டை ராமசாமி, ஆழ்வார் குப்புசாமி, சி.எஸ் பாண்டியன் ஆகியோர். (கவுண்டமணி, செந்தில் மாதிரி இவர்கள் அன்று பிரபலமான நகைச்சுவை அணி) கதைப்படி என்.எஸ் கிருஷ்ணனுக்கு ஆறு மணிக்கு சங்கீதக் கச்சேரி. மிருதங்க வித்துவானுக்கு ஏதோ பிரச்சினை. தன்னால் வர முடியவில்லை என்று மிருதங்கத்தை மட்டும் அனுப்பிவைத்துவிட்டு, ‘இன்றைக்கு மட்டும் யாரையாவது வைத்து சமாளித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிடுவார். மிருதங்கம் இல்லாமல் கச்சேரி களை காட்டாதே! நொந்துபோகும் வித்வான் என்.எஸ்.கே., “மிருதங்கம் வாசிக்க யாரையாவது போய் அழைச்சிட்டு வாங்கோ” என்பார். ஆவர் அப்படிக் கூறிக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒரு பறை அறிப்பாளர், அரசனின் ஆணையைப் பறையடித்து கூறிக்கொண்டே வருவார். அவரைப் பிடித்துக்கொண்டு வந்து என்.எஸ்.கே. முன்பாக நிறுத்துவார்கள். என்.எஸ்.கே. அவரிடம் “தண்டோராக்காரரே! எனக்கு நீங்க மிருதங்கம் வாசிக்கணும்” என்பார். அவரோ விழித்தபடி “மிருதங்கம்னா என்னங்க அய்யா?”என்று கேட்பார். “அது ஒன்னுமில்லேப்பா… இப்ப நீ பறையைக் குச்சியால் அடிச்சே இல்லே. குச்சிய உபயோகப்படுத்தாம உன்னோட விரல்களைக் கொண்டு இந்த மிருதங்கத்தை ரெண்டு பக்கமும் அடிக்கணும். வாத்தியம்தான் வேற” என்பார். அவரும் ஒப்புக்கொள்ள, அடுத்த காட்சியில் கச்சேரி தொடங்கும். கொஞ்சம் பக்கத்தில் வா ‘ராம நீ சமானமெவரு…’ என்று என்.எஸ்.கே. பாடுகிறார். பறையை அடிக்கும் அந்த தண்டோராக்காரர் ‘திருதிரு’வென விழித்தபடி ‘டண்டணக்கா டண்டணக்கா’ என்று மிருதங்கத்தை அடிக்கத் தொடங்க, என்.எஸ். கே திகைக்கிறார். அவரைப் பார்த்து, “தண்டோராக்காரரே! கொஞ்சம் கிட்டே வாங்க!” என்கிறார். தண்டோராக்காரர், மிருதங்கத்தைத் தூக்கிக்கொண்டு என்.எஸ்.கே. அருகில் வந்து உட்காருகிறார். என்.எஸ் கே. மீண்டும் திகைத்து, “நான் சொன்னது இந்த கிட்டே இல்லே! சங்கீதத்துக்குப் பக்கமா கொஞ்சம் கிட்ட வர சொன்னேன்!” என்று சொல்லிவிட்டு, மீண்டும், “ராம...நீ சமானமெவரு...” என்று பாடத் தொடங்குகிறார். தண்டோராக்காரர் மறுபடியும், ‘டண்டணக்கான டண்டணக்கா’ என்று தாளத்தைத் தன் வழக்கமான அடியில் தொடர… என்.எஸ்.கே. வேறு வழியின்றி, “நீ என்னோட ஒத்து வர மாட்டே! நான்தான் உன்னோட ஒத்துப் போகணும்” என்று சொல்லிவிட்டு, ‘ராமா நீ சமானமெவரு’ என்ற கர்நாடக கீர்த்தனையை, ‘ராமநீச.... மானமேவரூ...’என்று ‘டண்டணக்கா டண்டணக்கா’ ஸ்டைலில் வேகமாகவும் தாவித் தாவியும் பாட, இந்தக் காட்சியில் திரையரங்கம் குலுங்கியது. கோபுவினுள் இந்த நகைச்சுவைக் காட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியெல்லாம் மக்களைச் சிரிக்கவைக்க முடியுமா என்று கலைவாணர் சிறுவன் கோபுவைச் சிந்திக்க வைத்துவிட்டார். இந்த ஒரு காட்சிக்காகவே ‘கிருஷ்ண பிடாரன்’ படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பிய கோபு, அதற்காக வீட்டில் காசு திருடி படம் பார்த்திருக்கிறார். பத்து வயதில் பார்த்த ‘கிருஷ்ண பிடாரன்’ படத்தின் காட்சியை 86 வயதில் நினைவூட்டிக்கொண்டு, என்.எஸ்.கே.வின் குரலில் அப்படியே நடித்துக் காட்டுகிறார். கோபு ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பதையும் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். பின்னாட்களில் ஸ்ரீதரின் படங்களுக்கு நகைச்சுவைக் காட்சிகளை எழுதியபோது கோபுவிடம் தன் தாயாரின் நகைச்சுவையில் இருந்த பகடி, துணிவு ஆகியவற்றுடன் கலைவாணரின் நாகரிகக் கோமாளித் தன்மையும் இணைந்துகொண்டது. இதனால் கோபுவிடமிருந்து வெளிப்பட்டது அத்தனையுமே தரமான நகைச்சுவையாக அமைந்துபோனது. இதைப் பிரபல வார இதழ், ‘என்.எஸ். கிருஷ்ணனுக்குப் பிறகு, நாகரிகமான சிறந்த நகைச்சுவையை அளித்தவர் சித்ராலயா கோபு’ என்று பாராட்டி எழுதியது. ஆனால், தன் நண்பன் ஸ்ரீதரிடம் பாராட்டு வாங்குவதுதான் கோபுவுக்குக் குதிரைக் கொம்பாக இருந்தது. சிரிப்பு தொடரும் http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22521499.ece