• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on 07/28/2018 in all areas

 1. 2 points
  நான்கலைஞரின் விசுவாசி அல்ல இந்த நேரம்களில் இப்படியான ட்ரோல் பண்ணுற வேலைகள் நாகரிகமானவை அல்ல
 2. 2 points
  முதலில் உங்கள் வாழ்நாளில் உங்களால் முடிந்தால் இலங்கை முஸ்லிம்களை தமிழர்கள்மீது போர் குற்றம் புரியப்பட்டது என்று ஒரு வரி சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம், அதுக்கப்புறம் உலக முஸ்லிம்நாடுகளின் ஆதரவை எண்ணி கனவு காணலாம். ஐநா செயலர் முன்னாளோ/இந்நாளோ,ஐநாவின் மனித உரிமை ஆணையாளரோ முஸ்லீமாக இருந்தால் அவர் ஒரு முஸ்லிம் என்ற உணர்வுடனேயா ஐநா நடவடிக்கைகளில் ஈடுபடுவார்? அல்லது ஒரு முஸ்லிமாக அவர்களின் பதவிகளை கையாள ஐநாதான் அனுமதிக்குமா? நீங்கள் சொல்லும் ஐநாவின் உயர்பதவிகளில் இருந்த முஸ்லிம்கள், சிரியாவிலும் ரோஹிங்கியா ,முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட மனித உரிமைமீறல்களை எவ்வாறு ஒரு முஸ்லீமாக அந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள் என்று இருவரி எழுதுங்கள் வாசித்து பயன்பெற ஆவல். உலகின் மனித உரிமைமீறல்களுக்கு முஸ்லீம்நாடுகள் குரல்கொடுக்குமா? உலகமே முஸ்லீம்நாடுகளில் இடம்பெறும் மனித உரிமைமீறல்களுக்காக தினம் தினம் அழுத்தங்கள்,ஆயுதங்கள்,என பிரயோகிப்பதும் அவர்கள் சண்டையால், அகதிகள் நுழைவால் தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் செயல்போன்று உள்ளே வந்தவர்களின் செயலால் சொந்த மக்களையே தினம் தினம் இஸ்லாமியமதவெறிக்கு பலிகொடுத்து திக்குமுக்காடி கிடக்கிறது அமெரிக்க ஐரோப்பிய தேசங்கள். நீங்கள் என்னடா என்றால் இஸ்லாமிய தேசங்களும், இஸ்லாமிய உயர்பதவியில் உள்ளவர்களும் இலங்கையில் எமக்கிழைக்கப்பட்ட போர்குற்றங்களுக்கு குரல் கொடுப்பது நம்மால் தடைப்பட வாய்ப்பிருக்கிறதென்று அந்த பழியைகூட எம்மவர்கள்மேலேயே திருப்பி அவர்களுக்கு மனித சிஹாமணிகள் பட்டம் கொடுக்க வலுவான வாய்ப்பு தேடுகிறீர்கள். உங்களின் நகைச்சுவை உணர்வு பிரமிக்கதக்கது ஐயா. தமக்குள் தாம் ஒருவருக்கொருவர் எதிரியாக இருந்தாலும் ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேசம், சவுதி உட்பட ஈழதமிழர்களின் அழிவில் அனைத்து இஸ்லாமியநாடுகளுக்கும் பங்கிருந்தன,நேரடி பங்களிப்பும் இருந்தன சரி அதைதான் விடலாம் அரசுகளுக்கு அரசு ஆதரவு வழங்கியதென்று, ஆனால் ஈழபோராட்ட ஆரம்பகாலத்திலிருந்து அனைத்து இயக்கங்களுமே நியாபடுத்திய,அனுதாபத்துடன் நோக்கிய, தமது மானசீக ஆதரவை வழங்கிய, இன்னும் ஒருபடிமேலேபோய் சில உறுப்பினர்கள் நேரடியாகவே அங்கு சென்று பயிற்சியும் பெற்று திரும்பிய, எமதுபோராட்டத்தையும் நியாயத்தையும் உலகிலேயே அனைவரையும்விட ஓரளவு அறிந்தவர்களுமாக இருந்த,எம்மைபோலவே ஒரு ஆதிக்க சக்திக்கெதிராக சொந்த மண்ணிலேயே அடக்குமுறைகளை அனுபவித்த/அனுபவித்துகொண்டிருக்கும் பாலஸ்தீனம் எனும் அரசு எமக்கு பண்ணியது................ இலங்கையின் இறுதி இனவொழிப்பு நடந்துமுடிந்ததும், முதலில் இலங்கைக்கு வாழ்த்து சொல்பவர்களின் வரிசையில் நின்றதே!, அவர்களின் அந்த வாழ்த்துக்களுக்கு காரணம் எம்மைபற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை என்பதல்ல, அவர்கள் இஸ்லாமியர்கள் அப்படித்தான் பண்ணுவார்கள். சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் காலை கழுவிக்கொள்ளும் அவர்கள் எந்தக்காலமும் திருந்தபோவதும் இல்லை எமக்காய் குரல்கொடுக்கபோவதும் இல்லை!
 3. 2 points
 4. 2 points
 5. 2 points
  ஒன்றை வைத்து மற்றொன்றைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. சிறு வயதிலேயே வாழ்க்கையின் கோர முகத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் மனம் தளராதவர்கள் போற்றுதலுக்குரியவர்களே. ஒரு விளையாட்டில் போராடுபவர்களுக்கு எவ்வளவு கை தட்டுகிறோம் ? அது நியாயமான கைதட்டல்தான். குறியீடாக வாழ்க்கைப் போராளிகளையும் சமூகப் போராளிகளையும் ஊக்குவிக்கவே விளையாட்டுகள். கை தட்டுவோம். அதிலும் இந்தியச் சூழலில் ஒரு பெண் குழந்தைக்கு நிறையவே.
 6. 1 point
  "என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்" " ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி" "வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்" "போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்" " அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்" "ஊ ஊ ஊ " "என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்" "அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு நின்றனாங்கள் ஊஊஊஊ" "சும்மா ஊளையிடாமல் விசயத்திற்கு வா" "எங்களை கண்ட மையிலரின்ட கடைசி கல்லை வீச கடுவன் என்னை இழுத்து கொண்டு பொட்டுக்காலை ஓடிட்டான்" "பிறகு" "பெட்டைநாய் என்று சொல்லி எங்களை வீடுகளுக்குள்ள எடுக்கமாட்டாங்கள் தானே, கோயில் வளவும் முற்சந்தியும் தானே எங்கன்ட இருப்பிடம்" "இப்பவும் அதே நிலைதான் எங்களுக்கு" "விசயம் முடிய வழமையா கடுவன் வீட்டை போய்விடுவான் அவனின்ட கெட்ட காலம் அன்றைக்கு அறுவான்களின்ட காம்ப் பக்கம் போய்விட்டான்" "அதுக்கென்ன போனால், நான் ஒவ்வொரு நாளும் அங்க போய் தானே சாப்பிடுறன்" "அந்த காலத்தில‌ சிங்கம், புலி விளையாட்டு இந்த மண்ணில் நடந்தது" "வாவ் அப்படி அடர்ந்த காடாவா இருந்தது" "போடி விசரி ...உந்த மனிதாபம் பேசும் மனிதர்கள் எங்களை நாய்பிறவிகள் என்று திட்டிக்கொண்டு தாங்கள் தங்களுக்குள்ள சுடுப்பட்டவன்கள்" "புரியல்ல" "அது சொன்னால் புரியாது அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும், அந்த சுடுபாட்டில மையிலரின்ட கடுவன் பரலோகம் போய்ட்டான் ஊஊஊஊஊஊ அதன் பின்பு சிங்கங்களின்ட கூடாரப்பக்கம் நான் தலைவைத்தும் படுப்பதில்லை" " ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ" "போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது" . .."..வாவ்," "பிறகு ஏன் ம‌யிலரின்ட கடுவனுக்கு ஒரு பீலிங்கொட பிலிம் காட்டுகின்றாய்" "அவனின்ட சா ஒரு வீண் சாவு என்ற பீலிங்க் தான் அது போக நேற்று மயிலரின்ட கடக்குட்டியை கண்டனான் " .."..வாவ்," "அடியே நீ எப்படி இங்கிலிஸ் படிச்சனீஎல்லாத்துக்கும் வாவ் ,வாவ் என்று கொண்டுநிற்கிறாய் எங்க‌ன்ட பரம்பரை சத்தமான வள்,வள் என்பது மறந்து போச்சு உனக்கு", "உந்த கனடா,அவுஸ்ரேலியா,இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து வாரவையளின்ட வாரிசுகளிட்டத்தான்" "என்ன உனக்கு மட்டும் அவையள் தனியா வகுப்பு எடுத்தவையளோ" "சும்மா பகிடிவிடாத அக்கா...அவையள் கிணற்றை கண்டால் வாவ் என்கினம்,ஆடு,மாடுகளை கண்டால் வாவ் எங்கினம்" "அது சரி மயிலரின்ட கடக்குட்டியை எங்க க‌ண்டனீ? அவன்கன்ட பழைய வீட்டிலயோ" " "சிங்கம் புலி விளையாட்டில மண்ணையும் வீட்டையும் விட்டிட்டு ஒடி போனவங்கள் தானே...இப்ப சொந்தகாரங்களுக்கு வாடைக்கு கொடுத்து போட்டு ஒரு அறையை தங்களுக்கு என வைச்சிருக்கிறாங்கள்" "அப்ப அங்க தான் வந்து நிற்கினம் என்று சொல்லுறாயோ அக்கா" "ஓம் ஓம் வைரவர் பொங்கலுக்கு பிள்ளை குட்டியோட வந்திருக்கினம் ,எங்களை கண்டால் அடிக் நாயே என்று கல்லால் அடிப்பாங்கள் அதே நேரம் பொங்கலும் வைப்பாங்கள் பர‌தேசிகள்" "எங்கன்ட தலைவிதி அப்படி அக்கா" "வாவ் உன்னை அடையாளம் கண்டிருப்பானே" "சீ சீ என்கன்ட பரம்பரையில் நான் தான் இவ்வளவு காலம் இருக்கிறேன் அது அவன்களுக்கு தெரியாது நான் செத்திருப்பன் என்று நினைத்து கொண்டிருக்கினம்" "அது சரி உங்களுக்கு எத்தனை வயசு" "வயசை சொன்னால் நாவூறு பட்டுப்போடும்" "மையிலரின்ட கடைசி கலியாணம் க‌ட்டினது விடுப்புராணியின் மகளைத்தான்,இரண்டு குட்டிகளும் இருக்கு" "அப்படியே அக்கா! விடுப்புராணியின்ட வீட்டுக்கு பக்கத்து சந்தையில் நடந்த செல் வீச்சிலதான் எங்கன்ட மாமா,தாத்தா ,அப்பா எல்லாம் செத்து போனவையள் என்று அம்மா சொன்னவ" " ஒம் ஒம்,அது ஒரு சோகமான நாள்,.. அந்த காலத்தில விடுப்பு ராணியின்ட சந்தை பக்கம் இருக்கிற கடுவங்களை மையிலர்வீட்டு பக்கம் இருக்கிற கடுவன்கள் தங்கட ஏரியாவுக்குள் வரவிடாமாட்டாங்கள் " "ஏன் அக்கா", "எல்லாம் எங்களை மாதிரி பெட்டைகளை இழுத்து கொண்டு திரிகின்ற போட்டி தான்" "இவன்களும் அங்க போக ஏலாது அவன்களும் இங்க வர ஏலாது ஒரே நாய் பாடு என்று சொல்லுறீயள்" "நாங்கள் மட்டுமல்ல அப்ப விடுப்புராணியின்ட ஆட்கள் மையிலரின்ட ஆட்களை கலியாணம் கட்டமாட்டினம்" "பிறகு எப்படி உவையள் மட்டும் கட்டியிருக்கினம்" "எல்லாம் வெளிநாட்டுக்கு போன பின்பு அவையளுக்குள்ள கனக்க மாற்றம் வந்திருக்கு" "அப்படியே" "நேற்று அவங்களின்ட வீட்டு வாசற்படியில் படுத்திருந்தனான்,மையிலரின்ட பேத்தி ஒடி வந்து என்னை கட்டி பிடிச்சு ஏய் பியூட்டி வட் இஸ் யு அ நேம் என்று கொண்டு நிற்குது" "ஓ வாவ்" "இப்ப எங்களை உள்நாட்டுகாரர் கட்டி பிடிப்பதிலும் பார்க்க வெளிநாட்டுகாரர் அதிகம் கட்டிபிடிக்கினம்..... வாவ் வாவ் வாவ்"
 7. 1 point
  பேஸ்புக்கில் அவ்வப்போது சில அரிய புகைபடங்களை பார்த்து வியந்திருக்கிறேன்,அதனை இணைக்க எண்ணுகிறேன். இந்த படங்களுக்கான அனைத்து உரிமமும் முக புத்தகத்தில் தம் கடின உழைப்பை இட்டு சேகரித்தவர்களுக்கு மட்டுமே, அதை நான் பகிர்கிறேன். இது வைகோ-வின் திருமணம் .. பழம் பெரும் நடிகர் ரங்கராவ் திருமணம்... சத்யசாய் பாபா.. இந்திரா காந்தி.. ஸ்ரீதேவி தந்தையுடன்... மஹாத்மா காந்தியின் மனைவி பிள்ளைகள்.. ஜெயகாந்தன் ..கண்ணதாசன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..
 8. 1 point
  ? பச்சைப்புள்ளிகளை வெகுவிரைவிலேயே பெற்றுக்கொண்ட சோமசுந்தரம் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.??
 9. 1 point
  நீங்கள் சொல்வது உண்மையாகலாம் அது கலைஜர் உயிருடன் இருக்கும் மட்டுமே சாத்தியம் இந்த நேரத்தில் ஆள் போய் சேர்ந்தால் .இருக்கிற பல்லாயிரம் கோடி உழல் பணத்தை சொத்து பிரிக்கையில குடும்பத்துக்குள் குத்துவெட்டு பலமாய் நடக்கும் அப்படி நடக்காவிட்டாலும் மத்தியில் இருக்கும் பிஜேபி விடாது ஒவ்வொரு திமுகா காரன் வீட்டிலும் வருமான வரிக்காரன் பாய்ந்து கணக்கு காட்ட முடியாதா பனத்தை கொள்ளையடித்து விடுவார்கள் சட்ட ரீதியாக dmk குழப்ப மயமாய் நிற்க்கும் இப்போதைய அதிமுகாவை விட மோசமான குழப்பத்தில் காரணம் dmkயின் சொத்துசேர்ப்பு வேறுவகை .. ராகுல் வரலாம் தொங்கு பாராளுமன்றம் மூலமே சாத்தியம் அதிகம் .அதை விட அவர் பேசாமல் சும்மா இருக்கலாம் காரணம் மோடி என்ன ஆட்டம் ஆடினாலும் அவர் சுதேசி ராகுலின் வெளிநாட்டு தோற்றம் சிறு பிழை கூட பெரிய நெருப்பாய் மாறும் .
 10. 1 point
  மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு.சோமசுந்தரம்..!
 11. 1 point
  தன்னுடைய பிள்ளைகளை செட்டிலாக்கிவிட்டு வயது போன நேரம் ஊரை அடிச்சி உலையில் போட்டு பிழைப்பு நடத்த வந்திருக்குது ஓநாய் ஒன்று . முதலில் இவரால் காணாமல் ஆக்கபட்ட தமிழ் மாணவர்களுக்கு இவரின் மீதும் போர்குற்றம் பதியனும் .
 12. 1 point
  இதில பகிடி என்ன என்றால் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்துகின்றார்கள் என சொல்லும் சிலர் ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்காக இந்த களத்திலயே குரல் கொடுத்தவர்கள்.... லங்கஸ்தான் உருவாகப்போகின்றது என்றால் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது....
 13. 1 point
  உங்கள் பணி தொடரட்டும், வளவன்! எல்லாப் படங்களுமே அபூர்வமானவை
 14. 1 point
  குறைந்த பதிவுகளையிட்டு கூடிய புள்ளிகளை எடுத்த யாழ்கள உறுப்பினர் என்றால் அது சுப.சோமசுந்தரம் ஒருவர் தான். வாழ்த்துக்கள்.
 15. 1 point
  100 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற சுப. சோமசுந்தரம் அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 16. 1 point
  முன்னெப்போதும் பார்க்காத படங்கள்.உண்மையில் அபூர்வ படங்கள்.
 17. 1 point
  இவருக்கும் ஒரு ஆசை.. மகிந்தவே எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தும், புலிகளின் பகிஸ்ரிப்பு மூலமே பதவிக்கு வந்தார். ரணில் இன்னும் முயல்கிறார். 2009 வரை யாரென தெரியாது. வெள்ளைவான், போர்க்குற்றம் விசாரணை... ஏகப்பட்ட சமாச்சாரம். தீடீரென ஜனாதிபதி ஆகப் போறன், எண்டால், நடக்கிற விசயமே?
 18. 1 point
 19. 1 point
  அனுதாபம் தோன்றினாலும், பல அருமையான வாய்ப்புகள் இருந்தும், தமிழரின் நலனைக்காட்டிலும் தம் சொந்த நலன், குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி தமிழரின் அழிவிற்கு வித்திட்டவர். தமிழின் பெயரை சொல்லி, தன் வாழ்வை மட்டுமே முன்னேற்றிக்கொண்டவர் என்ற இவரின் கடந்த கால நினவில் வரும் அனுதாபமும் நீர்த்துபோகிறது. நலம் பெறட்டும்!
 20. 1 point
  கண்கவர் அழகிய சுற்றுலாப் பூமி நிலாவெளி
 21. 1 point
  நாய்....கெட்டிக்கார நாய்...தான்! இருந்தாலும்....அது பிறந்த மண்ணின் குணமும்...அது தான்!
 22. 1 point
  இந்த கோவிலுக்கு போவது விட அமைதியான ஏரிக்கரையில் உள்ள ரெஸ்ரராண்டில் அமர்ந்து பியர் அருந்துவதால் மன மகிழ்வும் மன அமைதியும் அதிகமாக கிடைக்கும்.
 23. 1 point
  கண்கொள்ளா காட்சிகளை கண்முன் நிறுத்திய புத்தனுக்கு ஒரு வாவ்
 24. 1 point
  வாவ்.... வாழ்க்கையில, மதில் ஏறிப் பாயுற நாயை... இது வரை காணவில்லை.? அது எத்தனை தரம் முயற்சி செய்து, தான் நினைத்த காரியத்தை செய்து விட்டது. உண்மையில்... சரியான கெட்டிக்கார நாய். ? காணொளி இணைப்பிற்கு.. நன்றி ஈழப் பிரியன். ?
 25. 1 point
  இவர்கள் தீ மிதிப்பதால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை. யருக்கும் பிரயோசனம இல்லாத ஒரு வேலையை செய்வதால் கடவுள் அருள் புரிவார் என்று நம்பும் கூட்டம் முட்டாள்கள் கூட்டமே. உலகிலே நாங்கள் தான் அதி முட்டாள்கள் என்பதை தமிழ் பக்தர்கள் ஐரோப்பிய நமரங்களில் கோவில் திருவிழாக்களில் நிரூபித்து வருகிறார்கள். வருடம் முழுவதும் குளிரிலும், பனியலும்உழைக்கும் பணத்தை கொண்டு கோடை கால விடுமுறையை சந்தோசமாக அனுபவிக்காமல் கோவில் வியாபாரிகளின் வங்கிக்கணக்கை நிரப்பும் முட்டாள்கள் கூட்டம்.
 26. 1 point
  எங்களது சிலை வழிபாடு...சிலைக்கு பூசைகள் செய்யும் போது அதற்கு என்று பல வரை முறைகள் இருக்கு...எல்லோரும் கடவுளது குழந்தைகள் தான் அதற்காக எல்லோரும் கோயிலில் பூசை செய்ய வெளிக்கிடடால் நிலைமை இப்ப இருக்கிறதை விட மோசமாகும்...பிராமணர்கள் தங்களை பெரியவர்கள் என்று சொன்னதில்லை.உங்களை போன்றவர்கள் தான் அவர்களை பெரியவர்களாக்கி உள்ளீர்கள்...உண்மையில் அவர்கள் தான் பாவப்படட ஜென்மங்கள்...நினைத்ததையெல்லாம் சாப்பிட முடியாது...நாங்கள் இண்டைக்கு விரும்பின மச்சத்தை சாப்பிடுவோம் நாளைக்கு முழுகிப் பூட்டு கோயிலுக்கு போவோம். புலம் பெயர் மக்களை ஒன்றினைக்கும் இடமாய் இருப்பது கோயில் மட்டும் தான்...பக்தியாய் கோயிலுக்குப் போனால் அது ஆன்மிகமான இடமாய் இருக்கும்..அதை விடுத்து விடுப்புப் பார்க்கப் போனால் ஆனமீகம் இல்லாத மாதிரித் தான் இருக்கும்
 27. 1 point
  நாயின் கதையைக் கேட்டே மனம் உடைந்த பிள்ளை ஒட்டுமொத்த தமிழரின் கதையை முழுவதும் அறிந்தால் எப்படி துடிக்கும்?
 28. 1 point
  நான் அறிந்தவர்கள் தான் இந்த நையப்புடை பக்கத்தை நடத்துகிறார்கள். வயதானவர்கள் ஸ்டாலின் பக்கம் நிற்பதை பார்க்க முடியும். தேர்தல் என்று வரும்போது வாக்குகளாக எப்படி மாற்றுவது என்பது தனி. அது போகப்போகத்தான் தெரியும்.
 29. 1 point
 30. 1 point
 31. 1 point
  படித்ததில் பிடித்தது. .. *?பல தோல்விகள் முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள். அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”. தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார். Toyoto நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார். இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார். எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள். முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய piston மாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார். அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும். எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமென்டு தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர்நண்பன். இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமென்டு கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா. ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது. அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது. ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா. ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது. மொத்தத்தொழிற்சாலையையும் dதிருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா. இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்......... ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து....... “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.” இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது. அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது. அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள். அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள். அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது. முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார். அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம். ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே" . Fb
 32. 1 point
  வலிமை (கலைமகளில் வெளியான முத்திரைச் சிறுகதை) நேரம் கிடைக்கும் போது படியுங்கள். வீடு முழுக்க அம்மாவின் வாசனை நிறைந்திருந்தது. காற்று, தண்ணீர், தோட்டத்து மண், அடுப்பில் எரியும் நெருப்பு, முற்றத்து ஆகாசம் எல்லாவற்றிலும் அவளது மணமும், ஓசையும், வெம்மையும், குளுமையும் நிறைந்திருந்தது. அம்மாதான் அமிர்தாவின் வாழ்க்கை. அவள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் வேறு எப்படியோ இருந்திருக்கும். அம்மாவின் திடமும், மன உறுதியும், எண்ணங்களும், துணிச்சலும் காலத்தைக் கடந்தவை. வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்தித்தவள். தனக்கென்று சீரிய சிந்தனைகள் கொண்டவள். தன் நியாயமான தீர்மானங்களிலிருந்து அவள் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. அம்மா தன் வாசத்தை வீட்டில் நிரப்பி விட்டு ஊருக்குச் சென்றிருக்கிறாள். இருபத்தி நான்கு வருஷம் தான் திரும்பிக் கூடப் பார்க்க விரும்பாத ஊருக்குச் சென்றிருக்கிறாள். அதுவும் யாரைப் பிரிந்து இருபத்த்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்தாளோ அவரைக் காணச் சென்றிருக்கிறாள். அம்மா விசித்திரமானவள். அவள் சிந்தனைகள் புதிரானவை. பதினேழு வயதில் அவளுக்குத் திருமணம். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் கருவிலேயே கலைந்தன. ஆண் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த குடும்பத்திற்கு இது அதிர்ச்சியாக இருந்தது. மூன்றாவது முறை அவள் கருவுற்ற போது அவளைக் கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டது அவள் புகுந்த வீடு. பாதாமும், குங்குமப் பூவும் கலந்த பாலும், பழங்களும் தினமும் கொடுத்து அன்பைப் பொழிந்தார்கள். பிரசவ தேதிக்கு இரண்டு நாள் முன்பு வலி எடுத்து அழகான பெண் குழந்தை பிறந்தது. பெண் பிறந்ததில் சற்று ஏமாற்றம்தான் என்றாலும், சரி அடுத்தது பிள்ளை பிறந்து விடும் என்ற நம்பிக்கையில் எல்லோரும் சகஜமாகவே இருந்தார்கள். குழந்தையைக் கொஞ்சினார்கள். அமிர்தவல்லி என்று பெயர் சூட்டி, சீராட்டி...எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அமிர்தா பிறந்த பத்தாவது மாதம் அம்மாவுக்கு சற்றே உடல் நலம் குன்ற, பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு கர்ப்பப்பையில் வளர்ந்திருந்த கட்டி ஒன்று புற்று நோய்க்கட்டியாக இருப்பதாகக் கூறி கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதும் புகுந்த வீடு வேறு முகத்தைக் காட்டத் தொடங்கியது. இனி ஆண் வாரிசுக்கு வழியில்லை என்ற நிலையில் அப்பாவுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பது என்று முடிவாயிற்று. அப்பாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அம்மா ஒரு முடிவெடுத்தாள். தன் துணிமணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள். கழுத்தில் திருமாங்கல்யத்தோடு தொங்கிய மஞ்சள் சரடைக் கழற்றி புருஷனிடம் கொடுத்து விட்டு அமிர்தாவைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள். அவர்கள் அதிர்ந்தார்கள். அவளை எங்க தூக்கிட்டு போற என்ற கேள்வி அப்பா வாயிலிருந்து எழும்ப, அப்பாவின் அம்மா அவரைக் கண்களால் அடக்கினாள். பெண் குழந்தைடா! உனக்கெதுக்கு பாரம்? போகட்டும் விடு என்றாள். அம்மா புன்னகைத்தபடி படியிறங்கினாள். நேராகப் பிறந்த வீடு வந்தாள். விஷயத்தைச் சொன்னாள். அவர்கள் அழுதார்கள். “நா உங்களுக்கு பாரமா இருக்க மாட்டேன். ஆனா உங்க உதவி எனக்கு தேவைப்படுது. நா படிச்ச படிப்புக்கு என்ன வேலை கிடைக்குதோ அதைத் தேடிக்கற வரை உங்க கூட இருக்க அனுமதி கொடுங்க. ஊர்ல நாலு பேர் என்னை வாழாவெட்டின்னு சொல்லுவாங்க. அதைப்பத்தி நீங்களும் கவலைப் படாதீங்க. நானும் சட்டை பண்ண மாட்டேன். அப்டி சொல்ற யாரும் எனக்கு உதவியா ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடப்போறதில்லை. பிரிவுன்றது நா என் சுய நினைவோட எவ்வித தயக்கமும் இல்லாம எடுத்த தீர்மானம். பெண் என்பவள் ஆண் விருப்பப்படும் குழந்தையைப் பெற்றுக் கொடுக்கற வெறும் இயந்திரம் இல்ல. கருப்பை நீக்கப்பட்ட பெண், மாற்று குறைந்தவளா என்ன? என் மதிப்பு எனக்குத் தெரியும். நா வாழ்ந்து காட்டறேன். என் காலில் நான் சுயமா நிற்கும் வரை உங்க கையை எனக்கு ஆதரவா கொடுங்க. என் குழந்தையை உங்ககிட்ட விட்டுட்டுதான் நா வேலைக்கு போகணும்.” அம்மாவைப் பெற்றவள் அவளை அணைத்துக் கொண்டாள். அமிர்தா, தாத்தா பாட்டியின் பொறுப்பில் இருக்க, அம்மா ஒரு தனியார் நிறுவனம் மூலம் தொலைபேசி சுத்தம் செய்யும் வேலை ஒன்று தேடிக் கொண்டாள். ஒரு தொலைபேசி சுத்தம் செய்து வாசனை திரவியம் அதில் பூசினால் ஐந்து ரூபாய் கிடைக்கும். அப்போதெல்லாம் அரசாங்க தொலைபேசிகள்தான். ஒரு நாளைக்கு காலையிலிருந்து மாலை வரை முப்பதிலிருந்து நாற்பது தொலைபேசிக் கருவிகள் வரை சுத்தம் செய்வாள். சில நாள் இருபதுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கும். ஆனாலும் ஒரு அரசு ஊழியரின் மாதாந்திர ஊதியத்திற்கு நிகராக அவளும் சம்பாதித்தாள். சுயமாய் நிற்பதற்கான முதலடி இதுதான். வருமானத்தில் சிக்கனச் செலவு போக அம்மா அப்பாவுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்து மிச்சத்தை சேமித்தாள். இந்தப் பணி அவளுக்கு வாழ்க்கையின் அடுத்த படியில் கால் வைக்க உதவி செய்தது. பெரிய பெரிய நிறுவனங்களுக்கு தொலைபேசி சுத்தம் செய்யச் சென்றதால், பல நல்லோர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களில் ஒருவர் உனக்கு தட்டச்சும் சுருக்கெழுத்தும் தெரியுமா என்று கேட்க, தட்டச்சு ஹையர் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் சார். சுருக்கெழுத்து தெரியும். ஆனால் தேர்வு எழுதுவதற்குள் திருமணமாகி விட்டது என்றாள். “பரவாயில்லை. உனக்கு ஆறுமாதம் அவகாசம் தருகிறேன். சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்று வா. எனது நிறுவனத்தில் நல்ல ஊதியத்தோடு உனக்கு வேலை நிச்சயம் என்று நம்பிக்கை கொடுத்தார். அவள் அடுத்த இரண்டாம் நாளிலிருந்து அருகிலிருந்த ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்தாள். ஏற்கனவே சுருக்கெழுத்து தெரியும் என்பதால் பயிற்சி சுலபமாகவே இருந்தது. கற்றுக் கொடுப்பவரே வியக்கும் வண்ணம் நேரடியாக இன்டெர் எழுதி தேர்ச்சி பெற்றாள். சான்றிதழ் கிடைத்ததும் அதை எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தாள். அவர் தான் வாக்களித்தபடி அவளுக்கு வேலை கொடுத்தார். இப்படித்தான் அவளது வளர்ச்சி ஏறுமுகமாக இருந்தது. அவள் சுயம்புவாய் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டாள். கடின உழைப்பையும், நேர்மையையும் தவிர வேறொன்றும் தெரியாது அவளுக்கு. அலுவலக நேரம் போக அவளது நேரம் அமிர்தாவோடு மட்டும்தான். பெண்ணிடம் நிறைய பேசுவாள். அப்பா பற்றிய பேச்சு வந்த போது, தான் ஏன் வீட்டை விட்டு வெளியில் அவளை அழைத்துக் கொண்டு வந்தேன் என்பதை எதையும் மறைக்காமல் அவளிடம் கூறினாள். கருப்பை என்றால் என்னம்மா? என்று கேட்ட மகளுக்கு அது பற்றியும் விளக்கினாள். என் கருப்பையில்தான் நீ வளர்ந்தாய். என் தொப்புள்கொடி மூலம் உனக்கான உணவு கிடைத்தது. நீ பிறந்ததும் தொப்புள்கொடி அறுக்கப் பட்டு நீ என்னிலிருந்து விடுவிக்கப் பட்டாய், உனக்கும் கருப்பை உள்ளது. பெண்ணின் பெருமையே உயிரை உருவாக்குதல்தான் என்றாலும் நாம் வெறும் கருப்பை மாத்திரம் அல்ல என்றாள். பெண் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு இன்னும் நிறைய கேள்விகள் கேட்டாள். “இன்னொரு திருமணம் செய்து கொண்ட அப்பாவை எப்படி சும்மா விட்டாய்? குறைந்தபட்சம் ஜீவனாம்சமாவது வாங்கிக் கொண்டிருக்கலாமே” “ஆண் குழந்தை வேண்டும் என்று நினைக்கும் ஒரு சராசரி ஆண் குணம் கொண்டவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதைக் கூட இழிவாக நினைத்தேன். ஒரு வகையில் நான் அவரை இதன் மூலம் உதாசீனம் செய்தேன் எனவும் கொள்ளலாம்.” “அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததா?” “தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.” “ஒருவேளை என்னை உன்னிடம் கொடுக்க அவர்கள் மறுத்திருந்தால்? “நிச்சயம் சம்மதித்திருக்க மாட்டேன். சட்டரீதியாகப் போராடி உன்னைப் பெற்றிருப்பேன்.” “அவ்ளோ அன்பாம்மா என் மேல? “அன்பு மட்டும் இல்ல. அக்கறையும் கவலையும் இருந்தது. அங்கேயே நான் உன்னை விட்டு விட்டு வந்திருந்தால் உன்னை இன்னொரு கருப்பை சுமக்கும் யந்திரமாக மட்டுமே வளர்த்திருப்பார்கள். ஓரளவுக்கு படிக்க வைத்து உரிய வயது வந்ததும் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய கடனாக மட்டுமே உன்னை அவர்கள் நினைத்திருப்பார்கள். நீ பெண்குழந்தை என்பதால்தானே, நான் உன்னோடு வெளியேறியதைக் கூடத் தடுக்கவில்லை? எனவே அதற்காக சந்தோஷப்படு. பெண் என்பவள் பெரும் சக்தி. அவள் பல்வேறு பொறுப்புக்களை வகிக்க வேண்டியவள். வாழ்வில் பல்வேறு பாத்திரங்களை ஏற்க வேண்டியவள். சகிப்புத் தன்மை வேண்டும்தான். ஆனால் அதற்காக சுயத்தை இழந்துவிடக் கூடாது" இப்படிக் கற்றுக் கொடுத்த அம்மாவின் உழைப்பில்தான் அவள் பொறியியல் படிப்பும், அதைத் தொடர்ந்து எம்பிஏவும் முடித்து ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அம்மா இப்போது, தான் வேலை பார்த்த கம்பெனியின் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறாள். இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவாள். இந்நிலையில்தான் ஒருநாள் அம்மாவிடம் அமிர்தா கேட்டாள். “திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு அவசியம்தானாம்மா?” “என்னைப் பொறுத்தவரை நல்ல கணவன் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையா இன்னும் மகிழ்ச்சி! பெண் என்பவள் யாரையேனும் சார்த்துதான் வாழ வேண்டும் என்று சொல்லி சொல்லி பெண் இனத்தை இந்தச் சமூகம் பலவீனம் கொண்டவள் என்று முத்திரை குத்தி வைத்திருக்கிறது. உண்மையில் நம்மால் சுயமாக இயங்க முடியும். நம் வலிமை தெரிந்ததால்தான் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் நம்மைக் கட்டுப் படுத்துகிறார்கள். ஒன்று அன்பால் அடக்கி வைப்பார்கள். அல்லது அதிகாரத்தால், அல்லது பயமுறுத்தி கட்டுப்படுத்துவார்கள். “அப்படியானால் பெண்ணுக்கு இந்த உலகில் பாதுகாப்பு குறைவு என்பதெல்லாம்?” “பாதுகாப்பு குறைவுதான். அதனால்தான் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறேன்.” “எப்படி?” “யாரையும் எளிதில் நம்பாதே. எப்போதும் எவர் மீதும் ஒரு மெல்லிய சந்தேகத்திரை இருப்பது நல்லது. கல்வி ஒரு பலம். சுய சம்பாத்தியம் மற்றொரு பலம். சுதந்திரம் என்ற பெயரில் ஆடைக் குறைப்பும், ஆண் நண்பர்களோடு ஊர் சுற்றுவதும் நிச்சயம் பாதுகாப்பல்ல. நாகரீகச் சிந்தனைகள் நம் மனதில்தான் பெருக வேண்டுமே தவிர நடத்தையில் அல்ல. எப்போது ஆடையால் மூட ஆரம்பித்தோமோ அப்போதே பாதுகாப்புக்கு உத்தரவாதம் குறைந்து விட்டது. எப்போது வீட்டைப் பூட்ட ஆரம்பித்தோமோ அப்போதே திருடர்கள் தோன்றி விட்டார்கள். எனவே உறக்கத்திலும் விழிப்போடு இருக்க வேண்டியவள்தான் பெண். நம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கற்கத்தான் வேண்டும். எதிராளியின் கண்களை வைத்து அவனை எடை போடக் கற்க வேண்டும். கவலைப் பட வேண்டாம், உலகத்தில் நல்லவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டறியவும் கற்க வேண்டும்” . அமிர்தா அம்மாவை வியப்போடு பார்த்தாள் அவளுடைய சிந்தனைகளும், மன உறுதியும் தனக்கும் இருக்க வேண்டும் என்று விரும்பினாள். இப்டிப்பட்ட ஒரு மனைவியை இழந்து விட்ட அப்பாவை நினைத்து அவளுக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது. "ஒருவேளை அப்பா மனம் மாறி அல்லது மனம் திருந்தி உன்னை அழைத்தால் போவாயா அம்மா?" ‘விடுபட்ட வெள்ளரிக் காயில், காம்பின் தடம் கூட இருப்பதில்லை” அம்மா சிரித்தாள். “அப்படியானால் ஒரு பெண்ணுக்கு ஆண் தேவை இல்லை என்று நினைக்கிறாயா?” “நீயே சொல்லி விட்டாய் ஆண் என்று. வாழ்க்கைக்கு ஆண் துணை தேவைதான். ஆனால் அரைகுறைகள் தேவையில்லை. விந்துக்களை வெளிப்படுத்துபவன் மட்டுமே ஆண் அல்ல. ஆண்மை என்பது வேறு. உனக்கொரு பூரணமான ஆண்மகன் கிடைக்கட்டும். உன் வாழ்க்கை இனிதாகட்டும் . “அமிர்தா அம்மாவை அணைத்துக் கொண்டாள். “நான் ஆசீர்வதிக்கப் பட்டவள்மா. இப்படி மனம் விட்டுப் பேசும் ஒரு அம்மா எல்லாருக்கும் கிடைத்து விட மாட்டாள்" . “உன்னைத் தன்னில் பாதியாக நினைக்கும் ஒரு ஆண் உனக்குத் துணையாய்க் கிடைக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. “அந்த ஆண் உன்னையும் தன் தாயாக ஏற்க முன் வர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை”. அம்மா சிரித்தாள். “என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும். அதுசரி உன் துணையை நான் தேட வேண்டுமா? நீயே தேடிக் கொண்டு வருவாயா?" “ஒரு லவ் புரோபோசல் வந்திருக்கு. இன்னும் கன்ஸிடர் பண்ணலை.” “யாரு?” என்னோட எம்பிஏ படிச்சவன். நா இன்னும் பதில் சொல்லலை. உன் அளவுக்கு ஒருவரை ஜட்ஜ் பண்ற அனுபவம் எனக்கில்லை. ஒரு ஃபிரண்டா நினைச்சு அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். நீ ஸ்கான் பண்ணிச் சொல்லு அவன் எப்டின்னு. நீ ஓகேன்னு சொன்னா அவன் புரோபோசலைக் கன்சிடர் பண்றேன். இல்லன்னா ஃபிரண்டாவே நினைச்சுக்கறேன். “எப்பவும் நானே வழிகாட்டிக் கொண்டிருக்க முடியுமா? நல்ல முடிவுகளை நீயே எடுப்பதுதான் எப்பவும் உனக்கு நல்லது. “அப்டியா சொல்ற?” “அவனைப் பத்தி உன் அபிப்ராயம் என்னன்னு முதல்ல யோசி. அதுக்கப்பறம் நானும் அவனைப் பார்க்கறேன். நம்ம எண்ணங்கள் ஒத்துப் போகுதான்னு பார்ப்போம்.” அம்மா சிரித்தாள். அப்போது அழைப்பு மணி ஒலித்தது.. அமிர்தா கீழே இறங்கிச் சென்று யாரென்று பார்த்தாள். “அம்மா இருக்காங்களா? என்று கேட்டது நடுத்தர வயது கடந்த ஒரு பெண்மணி. “நீங்க?” "அவங்களோட பால்ய தோழி. வைஷ்ணவின்னு சொன்னா தெரியும்". அமிர்தா உள்ளே போய் அம்மாவிடம் அந்தப் பெயரைச் சொன்னதும் அம்மா வியப்போடு மாடியிலிருந்து இறங்கி வந்தாள். அந்தப் பெண்மணியை அணைத்துக் கொண்டாள். “எப்டி இருக்க வைஷு?” “நா நல்லார்க்கேன். நீ எப்டி இருக்க? எப்டி இவ்ளோ அழகா இளமையா இருக்க இன்னும்?" அம்மா சிரித்தாள். "உள்ள வா முதல்ல? என்னை எப்டி கண்டுபிடிச்சு வந்த?" “அந்தக் கதையைக் கடைசில சொல்றேன். உன்னை நான் மறுபடியும் சந்திப்பேன்னு நினைக்கவேயில்லை தெரியுமோ? ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சோம், ஒண்ணா வளர்ந்தோம். அடுத்தடுத்து கல்யாணமாச்சு. கொஞ்ச வருஷம் கழிச்சு மதுரைக்கு மீனாட்சியை தரிசிக்கப் போனப்போ உன் வீட்டுக்குப் போயிருந்தேன். நீ வீட்டை விட்டு ஓடிப்போயட்டதா சொன்னாங்க. என்னால நம்ப முடியல. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? அங்க இன்னொரு பெண்ணோட திருமணக் கோலத்துல உன் புருஷன்! எனக்கு ஒன்றும் புரியல. யாருகிட்ட என்ன கேட்பதுன்னு புரியாத நிலையில் என் கணவருக்கு டெல்லிக்கு மாறுதலாச்சு. நாலு வருஷம் முந்திதான் நாங்க சென்னைக்கு வந்தோம். போன மாதம் மறுபடியும் மதுரைக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற்றச் சென்றிருந்தோம். உன்னைப் பத்தி ஏதாவது தகவல் கிடைக்காதான்னு ஒரு ஆதங்கத்தோட மறுபடியும் உங்க வீட்டுக்குப் போனேன். வீடு இருளடைஞ்சு கிடந்துது. நா உன் தோழின்னு சொன்னேன். நா ஏற்கனவே வந்துட்டுப் போன தோழின்னு அவங்களுக்கு நினைவில்ல. இம்முறை நா உன் தோழின்னு சொன்னதும் அவங்க அழுதாங்க. நாங்க உன் சிநேகிதிக்கு பெரிய அநியாயம் செய்துட்டோம். அதோட பலனை இப்போ அனுபவிக்கறோம்னாங்க. எனக்கு ஒன்றும் புரியலை. அப்பறம் அவங்களே விவரமா சொன்னாங்க. “என் பையன் சிறுநீரகம் செயல்படாம இருக்கான். பிழைப்பானா மாட்டானான்னு தெரியாம நாங்க துடியா துடிச்சுக்கிட்டு இருக்கோம். சாகறதுக்குள்ள பத்மாகிட்ட மன்னிப்பு கேக்கணும்னு நினைக்கறான். அவ எங்க இருக்கான்னு தெரியல. ஒரு ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு, அவ கருப்பையை எடுத்துட்ட ஒரே காரணத்துக்காக அவளை அனுப்பினதுக்குத் தண்டனையா, அடுத்து கட்டிக்கிட்ட பெண்ணுக்கு கருப்பை இருந்தும் குழந்தை பாக்கியம் இல்ல. அப்பவும் திருந்தாம, மூணாவதா ஒரு பெண்ணை அவனுக்குக் கட்டி வைக்கணும்னு கூட நினைச்சோம். ஆனா ரெண்டாவதா வந்தவ பத்மா மாதிரி ஒதுங்கிப் போக முடியாதுன்னுட்டா. என் பையனும் சம்மதிக்கல. நா இப்டியே இருந்துடறேன் விட்ருங்கன்னான். கொஞ்சமாவா பாவம் பண்ணினோம். பத்மா இருந்திருந்தா ஒரு பெண் குழந்தையாவது வீட்ல இருந்திருக்கும். இப்போ வெறும் சூன்யம்தான் நிறைஞ்சிருக்குன்னாங்க. வருத்தப் படாதீங்கம்மான்னு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். " அம்மாவின் முகம் இறுகிப் போயிருந்தது. அமிர்தாவை நிமிர்ந்து பார்த்தாள். “நா ஊருக்குப் போகணும். அவரைப் பார்க்கணும் என்றாள். அமிர்தா திகைத்தாள். “அம்மா அவரை எதுக்கு? இத்தனை காலம் வேண்டாம்னுதானே இருந்தோம். இப்போ எதுக்கு? நீ போறதுல எனக்கு இஷ்டம் இல்லம்மா.” “சௌகர்யப் படலைன்னு விலகி வந்தேன். புருஷனா நினைச்சு போகலை. கஷ்டப் படும் ஒரு மனிதனுக்கு ஆறுதல் சொல்லப் போவதில் ஒண்ணும் தப்பில்லையே. தவிர நாம யாரையும் பழிவாங்கவோ, அவங்க கஷ்டத்தை நினைத்து சந்தோஷப் படவோ பிறக்கலை. எந்த நிலையிலும் நம்ம சுயத்தை எப்டி இழக்கக் கூடாதோ அதே மாதிரி மனித நேயத்தையும் இழக்கக் கூடாது. உடனே எனக்கு ஒரு பிளைட் டிக்கெட் போடு. சரியா?" அம்மா சொல்ல. அமிர்தா எதுவும் பேசாது உடனே தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். “வைஷு ரொம்ப நன்றிடி. நீ உன் விலாசமும் மொபைல் நம்பரும் கொடுத்துட்டு போ. நான் ஊர்லேர்ந்து வந்ததும் வரேன். நாம்ப நிறைய பேசணும்”. “உனக்கு ஆட்சேபணை இல்லன்னா நானும் உன் கூட வரவா பத்மா? வைஷு கேட்டதும் “அமிர்தா ரெண்டு டிக்கெட்டா போடு” என்றாள். “ரொம்பக் காலம் கழிச்சுப் பாக்கறேனா? உன்கூட இருக்கணும்னு ஒரு ஆசை.” “எனக்கும்தான்” மறுநாள் அம்மா கிளம்பி, தோழியை அழைத்துக் கொண்டு செல்ல வீடு வெறிச்சென்று ஆகி விட்டது போலிருந்தது. அமிர்தா சுற்றி சுற்றி வந்தாள். வீடு முழுக்க அம்மாவின் வாசம். ஐந்து நாட்களாகியும் அம்மாவிடமிருந்து போன் எதுவும் வரவில்லை. இவள் பண்ணினாலும் தொடர்பு கிடைக்காமல் அவளது போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது. அமிர்தா வைஷ்ணவி ஆண்ட்டியின் நம்பருக்கு டயல் செய்து பார்த்தாள். பல முறை முயற்சித்த பிறகு ஒரு வழியாக வைஷு ஆண்ட்டி போனை எடுத்தாள். “ஆண்ட்டி நா அமிர்தா...அம்மா ஏன் போனை எடுக்காம அணைச்சு வெச்சிருக்காங்க?” “கவலைப் படாதே அமிர்தா. அம்மா நல்லார்க்காங்க. ஒரு அரைமணியில் நானே உன்னைத் தொடர்பு கொள்கிறேன் சரியா?" “அங்க என்ன நடக்குது ஆண்ட்டி? அம்மாவை அவங்க மதிச்சு பேசினாங்களா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே? எனக்கு கவலையா இருக்கு” “எல்லா விஷயமும் நா சொல்றேன் அமிர்தா. நீ கவலைப்படாம இரு” கவலைப்படாமல் இரு என்று சொன்னாலும் கவலையோடுதான் போனை வைத்தாள் அவள். அரைமணி நேரம் யுகமாக நகர்ந்தது. செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அரைமணி நேரம் முடியும் போது அது ஒளிர்ந்தது. டக்கென எடுத்தாள். “சொல்லுங்க ஆண்ட்டி” “நா சொல்வதை நீ அமைதியா கேக்கணும் அமிர்தா. சட்டுனு உணர்ச்சி வசப்பட வேண்டாம் சரியா?” “நீங்க பீடிகை போடறதைப் பார்த்தாலே எனக்கு பயம்மார்க்கே. என்ன விஷயம் ஆண்ட்டி?’ ‘ஒரு முறை இவங்களை எல்லாம் பார்த்து ஆறுதல் சொல்லி ஏதேனும் பண உதவியோ அல்லது மற்ற உதவியோ தேவையான்னு கேக்கத்தான் பத்மா இங்க வந்தா. ஆனா இங்க வந்த கொஞ்ச நேரத்துல, அவளோட ஒரு சிறுநீரகத்தையே அவருக்குக் கொடுத்து உதவ முடியும்னு தெரிஞ்சப்பறம் அவ கொஞ்சமும் தயங்கலை. உடனே தன்னை பரிசோதிக்கச் சொன்னா. எல்லாம் சரியாக இருக்குன்னு தெரிஞ்சப்பறம், நேற்று காலையில் அறுவை சிகிச்சை நடந்துது. இப்போ ரெண்டு பேரும் நல்லார்க்காங்க. நான்தான் அம்மாவைப் பக்கத்துல இருந்து கவனிச்சுக்கறேன். நீ எந்தக் கவலையும் பட வேண்டாம் சரியா?” அமிர்தா திகைப்பில் வாயடைத்துப் போனாள். ஒரு பக்கம் கண்கள் கலங்க, மறுபக்கம் வாய் குழற, தடுமாறினாள். “நா உடனே கிளம்பி வரேன் ஆண்ட்டி..எனக்கு அம்மாவைப் பார்க்கணும் எந்த ஆஸ்பத்திரி சொல்லுங்க? என்றாள் சற்று சுதாரித்துக் கொண்டு. பிறகு போனை வைத்தவள் வேறு ஒரு நம்பருக்குத் தொடர்பு கொண்டாள். “ஹரீஷ் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். நா ரொம்ப படபடப்பா இருக்கேன். எனக்குத் துணையா என் கூட நீ மதுரைக்கு வரணும். முடியுமா?” “என்னாச்சு அமிர்தா? எனி பிராப்ளம்?” “போற வழில சொல்றேன். நா உடனே பிளைட் டிக்கெட் கிடைக்குதான்னு பாக்கறேன். நீ கிளம்பி வா” அவர்கள் சென்ற போது அம்மா நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள். வைஷ்ணவி ஆண்ட்டி மருத்துவரைப் பார்க்கப் போயிருப்பதாக அங்கிருந்த செவிலி கூறினாள். “இங்க என் ஸ்கூல் மேட் ஒருத்தன் டாக்டரா இருக்கான். நா போய் அவனைத் தேடறேன்” என்றபடி ஹரீஷ் சென்ற சற்று நேரத்தில் வந்தாள் வைஷ்ணவி ஆண்ட்டி. “எல்லாம் நார்மலா இருக்கு அமிர்தா. உங்கம்மாவை நினைச்சு நீ பெருமைப் படணும். இன்னும் நாலஞ்சு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லி இருக்கார் டாக்டர். என் உயிர்த் தோழியை கண்ணுக்கு கண்ணா நா பார்த்துக்கறேன். நீ கவலைப்படாம ஊருக்குப் போ சரியா?" “இல்ல ஆண்ட்டி நானும் இங்க இருக்கேன். லீவு சொல்லிட்டுதான் வந்திருக்கேன்.” “அவர்கள் பேசும் போதே பத்மாவிடம் அசைவு தெரிந்தது. அமிர்தாவைப் பார்த்ததும் வியப்போடு சிரித்தாள். “நீ எப்போ வந்த?” “இப்பதான் வந்தேன். என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் நீ? உனக்கு ஏதாவது ஆகியிருந்தா?" “ஒண்ணும் ஆகாது. நல்லதுதானே செய்யறோம். நீ எப்டி வந்த?” “பிளைட்ல. என் பிரண்டோட வந்தேன்.” “யார் அந்த ஃபிரண்டா?” “ஆமாம்” “ரொம்ப சந்தோஷம். எங்கே அவன்?” இங்க ஒரு சிநேகிதரைப் பார்க்கப் போனான்” “எப்டிம்மா உனக்கு மனசு வந்துது? சட்டுன்னு இப்டி ஒரு முடிவெடுத்திருக்க? இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்கற அன்பா இல்ல கருணையா?" “அம்மா புன்னகைத்தாள். எப்டி வேணா வெச்சுக்கோ. அப்போ அவர் விரும்பினதைக் கொடுக்க என்னிடம் கருப்பை இல்லை. ஆனா இப்போ அவருக்கு வேண்டியதைக் கொடுக்க என்கிட்ட ஒன்றிற்கு இரண்டா கிட்னி இருக்கு. கொடுத்தேன்.” அமிர்தா விழியகல அம்மாவைப் பார்த்தாள். கருணையும் சேர்ந்ததுதான் பெண்ணின் வலிமையோ? அன்பு, உறுதி, சுயம்,..! நிச்சயம் பெண் என்பவள் மாபெரும் சக்திதான். அவள் குனிந்து அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்ட நேரம் ஹரீஷ் உள்ளே நுழைந்தான். “இவன்தாம்மா நா சொன்ன அந்த பிரண்டு.” அம்மா அவனை இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்தாள் புன்னகையுடன். பிறகு பெண்ணை அருகே அழைத்தாள். அவள் காதில், எனக்கு ஒகே என்றாள் "உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்.” அமிர்தா சிரித்தாள். “அம்மாவும் பெண்ணும் அப்டி என்ன குசுகுசுன்னு பேசிக்கறீங்க?” வைஷ்ணவி கேட்டாள். “அந்தப் பையனை இவளுக்குப் பிடிச்சிருக்காம். அவனுக்கும் இவளை...! என்றவள் பெண்ணின் பக்கம் திரும்பி, “அவங்க விலாசம் வாங்கிக்கோ அமிர்தா உடம்பு கொஞ்சம் சரியானதும் நானே போய்ப் பார்த்து பேசறேன்” என்றாள் “அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. இப்பவே பேசலாம்” வைஷ்ணவி சொல்ல, அம்மா விழி சுருங்கப் பார்த்தாள். “அவன் என் பையன்தான். அவன் மொபைல்ல இருந்த உங்க ரெண்டு பேரோட போட்டோவைப் பார்த்துதான் உன்னை நான் கண்டு பிடிச்சேன். உங்களைப் பத்தி அவன் கிட்ட விசாரிச்சேன். உன் ஃபேஸ்புக் பக்கத்துலேர்ந்து அதை டவுன்லோடு பண்ணி வெச்சுக்கிட்டு இருக்கான். உன் பெண்ணை அவன் நேசிக்கறான்னும் தெரிஞ்சுது. என் சந்தோஷத்துக்குக் கேக்கணுமா?. உடனடியா உங்க வீட்டுக்கு வந்தேன். அதுக்குள்ள இங்க வரா மாதிரி ஆகிப் போச்சு.. இவங்கப்பா கிட்டயும் விஷயத்தைச் சொல்லிட்டுதான் உன்கூட வந்தேன்” அமிர்தா மட்டுமல்ல அம்மாவும் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயிருந்தாள். “அம்மா நீ எப்பவும் என் கூட இருப்ப இல்ல? அமிர்தா திடீரென ஏதோ ஒரு கவலையோடு கேட்க, “என்ன சந்தேகம் உனக்கு?. ஒரு உசிரைக் காப்பாத்த நினைச்சேனே தவிர ஒருநாளும் ஒட்டிக்கப் போறதில்ல. அந்த சந்தேகமே உனக்கு வேண்டாம். நா எப்போவும் உன் அம்மாவா மட்டும்தான் இருப்பேன் சரியா?” அம்மா புன்னகைத்தாள். ************************ முகநூல்