• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on வெள்ளி 10 ஆகஸ்ட் 2018 in all areas

 1. 2 points
  உள்ள போனவ நிறைய இனிப்புக்களையும் டொபியையும் இன்னும் சில பிஸ்கட்களையும் தந்தார் இனி அந்த மணியை ஆட்டக்கூடாது சரியா. ம்ம் உனக்கு சொக்கா வேணுமென்றால் இங்க வா அப்பச்சியும் நானும் தான் இருக்கிறம். இங்க எங்கட பிள்ளை ஒன்றை தேடி வந்திருக்கிறம் இங்க சரியா ம்ம் வாங்கின அத்தனை இனிப்பு பொருட்களையும் சந்தோஷத்தில வீட்டுக்கு எடுத்து வந்தால். அம்மாவோ உனக்கு ஏது இவ்வளவு பொருட்கள் என கேட்டு காதை திருக அந்த எதிர்வீட்டு ஆச்சியோ ஓடி வந்து நடந்ததை சொல்ல மீண்டும் அம்மா காதை திருகினா. அந்த இனிப்பை வாங்கியற்கு அல்ல அந்த மணியை இனி தட்டுவையா என்று கேட்டு இல்ல இல்ல என்று நானும் கத்த. விடுங்க பிள்ள சின்ன பொடியந்தானே என்ன தெரிய போகிறது என்று அந்த ஆச்சி சொல்ல அம்மா காதிலிருந்து கையை எடுத்தா அன்று ஆரம்பமாகிறாது அம்மாக்களின் நட்பு. நானும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன் அந்த நேரம் எல்லாம் அந்த வீட்டுக்கார ஆச்சியின் கணவரோ இருக்கமாட்டார். இந்த ஆச்சியோ யாரையோ நினைத்து அழுதுகொண்டிருக்கும் நான் வீட்டுக்குள் போகும் போது சேலையால் கண்களை துடைத்து விட்டு ஓடி வா ராசா என்ன சாப்பிட்டயா நானும் சாப்பிட்டாலும் இல்லையென்பேன் ஏதாவது கள்ள தீன் கிடைக்குமே என்ற எண்ணத்தில் உடனே கொதிக்க கொதிக்க பிளேன் டீயும் கடிக்க எதாவது தந்துவிட்டு என்னை தடவிகொண்டிருக்கும் அந்த கைகள் . ஏன் டா நாங்க செத்தா கொள்ளி போடுவையா ? ஓ அடுப்பிலதானே ஓம் போடுவன் சிரித்த கிளவி அடுப்புக்கு இல்லையடா எனக்கும் அவருக்கும். ஏன்ஆச்சி உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? கண்களில் நீர் கரை தேடி ஓடுவதை போல நிலத்தில் விழ ஆரம்பக்கிறது அழாதீங்க அழாதீங்க என்றேன் நான். அவவோ என்ற பிள்ளையை பிடிச்சிட்டு போயிட்டாங்கடா பொலிஸ்காரங்க அவனைத் தேடித்தான் இந்த ஊருக்கு வந்தன் ரெண்டு பெண் வேற நாட்டுக்கு போயிட்டாங்க எந்த நாட்டில் இருக்கிறாங்கள் எங்கு இருக்கிறாங்கள் என்று தெரியல. நானும் என்ற கடைசி மகனை தேடி தேடி ஊர் ஊராக திரியுறோம் இன்னும் அவன் கிடைக்கல என்று அழுது முடித்தார் . அந்த படலை மணி அவனுக்குத்தான் கட்டியது வெளியே போகும் அப்பச்சி அவனை கூட்டிக்கொண்டு வரமாட்டாரா? என்ற ஏக்கத்தில் அந்த மணியோசை காதில் கேட்க காத்திருப்பேன் என்றார் அன்றிலிருந்து அந்த மணியை நான் தட்டுவதும் கிடையாது யாரையும் தட்ட விட்டதும் கிடையாது . கவலைப்படாதீங்க ஆச்சி நான் இருக்கன், எங்க அம்மா இருக்காவு, அப்பா இருக்கிறார், என்ற அக்கா இருக்காவு இனி நீங்கள் எங்கவும் போக வேண்டாம் இந்த இந்த ஊரில் இருங்க எங்களோட இருங்கள் நான் இருக்கிறன் சரியா அவர் கண்ணை துடைத்த என் கைகளை கொஞ்சி விடுகிறார் அப்பச்சியும் வருகிறார். என்ன அப்பச்சி அண்ணனை தேடுன நீங்களோ? ஓமடா உன்னைப்பத்தித்தான் மனிசி சொல்லிச்சி இண்டைக்குத்தான் பார்க்க முடிஞ்சிது. என்ற அவர் சொக்கை திருகிவிட்டு உள்ளே சென்றார் உள்ளே சென்ற அவர் மனிசியிடம் காதில் புறு புறுப்பது எனக்கும் கேட்க மனிசியோ தேம்பி தேம்பி அழுவது எனக்கு சஞ்சலத்தை உண்டாக்க நாளை வருகிறேன் என நான் படலைக்கு கீழாக புகுந்து வெளியே வந்து விட்டேன் . இப்படி நாள் தோறும் இருவரும் அடிக்கடி வீட்டை பூட்டிக்கொண்டுமனுக்கள் கொடுப்பது போட்டோவை காண்பித்தும் கேட்பதும் அவர்கள் நாளாந்த நடவடிக்கை ஆகிவிட்டது காலம் பதில் சொல்ல மறுத்தது !!!! இப்படி நாட்களும் வருடங்களும் கிழித்த கலண்டர்களும் வருடங்களை கணக்கிட்டது. இப்போ 2018 எனக்கு வயது 18 இருவரும் உள்ளே தினம் தினம் செத்து இருக்கிறார்கள் அவனை தேடி. கொடுக்காத கடிதங்கள் அல்ல பார்க்காத இடங்கள் இல்லை ஆனால் கொண்டு போனவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று. மனிசியும் என்னை அடிக்கடி கூப்பிட்டு என்னை மறந்திராதடா இல்லை ஆச்சி நான் மறக்க மாட்டன் என சொன்ன எனக்கு அடுத்த நாள் ஆச்சி படுக்கையிலே இறந்து போன செய்தி கேட்டு யாருக்குமே இந்த நிலை வரக்கூடாது இறைவா என இல்லாத கடவுளை வேண்டியவன் போல அந்த ஆச்சி சொன்னது போலவே அவருக்கு கொள்ளி வைக்க என்னைத்தான் கூப்பிட்டார்கள். அந்த அப்பச்சிக்கும் எங்கள்குடும்பத்துக்கும் இந்த செய்தியை தாங்க சக்தியில்லாமல் அங்கே கிடந்தோம் அழுதழுது. ஒருவரை கொன்று விட்டால் நிம்மதியாக வாழ்ந்திடலாம் நினைப்போடு ஆனால் ஒருவரை கைதாக்கி கொண்டு போனவருக்கு என்ன நடந்திருக்கும்! ஏது நடந்திருக்கும் ! என்று வாழ்வது யாருக்கும் வரக்கூடாது என்ற நினைவுகள் அந்த சிமிழி விளக்கின் ஒளியில் அணைந்த நினைவுகள் அவை. நாட்கள் கழிந்தன அப்பச்சியின் பெண் பிள்ளைகள் மட்டும் கன இடங்கள் தேடி கண்டு பிடித்து பேர பிள்ளைகளுடன் வரவே அப்பச்சியும் அளவிலா சந்தோஷத்தில் மகிழ்கிறார். ஒரு துன்பம் ஒரு இன்பம் இது வாழ்வியலின் பக்கம். அப்பச்சியும் தேடி கொடுத்த அனைவரிடமும் அந்த வீட்டு முகவரியை மட்டும் என்னிடம் தந்து விட்டும் கடிதங்களோ யாரும் தேடிக்கீடி வந்தாலோ என்னை தொடர்பு கொள்ளு மகன். என்று சொல்லி கொள்ளி வைத்த கதையை மகள்களிடன் சொல்லி விட்டு அந்த நினைவுகளிலிருந்து நாடு விட்டு கடந்து சென்றுவிட்டார். நானோ அந்த படலை மணி சத்தம் கேட்காதோ ஆச்சியின் ஆத்தாமாவும் சாந்தி பெறாத என்ற நினைப்பில் தினம் தினம் படலையை நோக்கியவாறு பயணிக்கிறேன் . யாவும் கற்பனை என்று சொல்ல முடியல படங்கள் இணையத்தில் எடுத்தவை
 2. 1 point
  என் .....மரணத்தின் போது......யாரும் அழவேண்டாம்......நீங்கள் இழப்பதற்கு......இன்னும் நிறைய இருக்கிறது.....!என்.....உடலை மரணத்தின் பின்.....நீராட வேண்டாம்......உயிருள்ள போது நன்றாக......நீராடுகிறேன்..................!என்.....உயிரற்ற உடலுக்கு........வாய்க்கரிசி போடவேண்டாம்.......உயிருள்ளபோது நன்றாக.......சாப்பிடுகிறேன்...............!என் ......மரணத்தின் போது......ஈமைக்கிரிகைகள் எதுவும்.......செய்யவேண்டாம்.......கடவுள் பற்றற்றவன் அல்ல.....கிரிகைகளில் பற்றற்றவன்.....!என்.....உடலை எரிக்காதீர்கள்......புதைத்துவிடுங்கள்......புழுக்கலும் பூச்சிகளும்.....உணவாக உண்டுமறைந்துவிடுகிறேன்.......!^^^^^^கவிப்புயல் இனியவன்யாழ்ப்பாணம்- இலங்கை
 3. 1 point
  இன்று உலக சிங்க தினம்; அழிவின் விளிம்பில் ‘காட்டு ராஜா’- 2 லட்சமாக இருந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைந்தது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்க தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. திறந்த புல்வெளி காடுகளின் அழிவாலும், கடுமையான வேட்டை யாலும் சிங்கங்கள் அழிவைச் சந்திக்கின்றன. சிங்கங்களைப் பாது காக்கவும், அது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அடையவும் கென்யா வன உயிரின ஆர்வலர்களின் முயற்சியால் இந்த நாள் முதலில் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழு வதும் சிங்கங்களின் நலன் பேணும் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500-க்கும் குறைவாகவே உள்ளன. மன்னர்கள் காலத்தில் இருந்து சிம்மம் என்னும் சொல் தலைவன், அரசன் என்பதை குறிக்கும் சொல்லாகவே கருதப்படுகிறது. உதாரணமாக சிம்மாசனம், சிம்ம சொப்பனம் என்று பல சொற்களை குறிப்பிடலாம். ஆற்றலின் அடை யாளமாகவே சிங்கம் அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த வழக்கம் நமது நாட்டில் மட்டும் அல்ல, ஆப்பிரிக்க பழங்குடிகள் தொடங்கி ஐரோப்பா வரை இருந்துவருகிறது. பூனை இனங்களில் புலிகளுக்கு முன்னர் மிகக் கடுமையான அழிவை சந்தித்தவை சிங்கங்களே. கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இவற்றின் அழிவு தொடங்கிவிட்டது. அரசர்கள் வேட்டையாடியபோதும், போர்களின்போதும் நாடுவிட்டு நாடு பயணம் செல்லும் வேளைகளிலும், வீர விளையாட்டு என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. இதுகுறித்து மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது: ஆப்பிரிக்க சிங்கங்கள் இனத்தில் 7 உள்ளினங்களும், ஆசிய இனத்தில் ஒரே ஒரு இனம் மட்டுமே மீதம் உள்ளன. ஆப்பிரிக்க இனங்களின் உள்ளினங்களில் ஒன்று பார்பெரி சிங்கம், இவை ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்பட்டன. இவை தற்போது காடுகளில் முழுமையாக வேட்டையாடப்பட்டு விலங்கு காட்சியகங்களில் மட்டுமே சொற்ப எண்ணிக்கையில் எஞ்சியுள்ளன. இரண்டாவது, செனகல் சிங்கங்கள் எனும் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங் கள். இவையும் அழிவின் விளிம்பில் உள்ளன. மூன்றாவது காங்கோ சிங்கம் அல்லது உகாண்டா சிங்கம் என்ற இனம். இவை காங்கோவில் உள்ள தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்காவது, கட்டாங்கா சிங்கங்கள் அல்லது தென் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்கள். ஐந்தாவது மசாய் சிங்கங்கள் அல்லது கிழக்கு ஆப்பிரிக்க சிங் கங்கள். இவை மிக அழகான வையாக கருதப்படுகின்றன. அதன் நீண்ட கால்களும், சீரான பிடரி முடிகளும், அழுத்தமான முக அமைப்பும் தனி அடையாளமாக திகழ்கின்றன. ஆறாவது, கலகாரி சிங்கங்கள் அல்லது தென்கிழக்கு ஆப்பிரிக்க சிங்கங்கள். இவை மசாய் சிங்கங்களைப் போன்றே மிகப் பெரியவை. ஏழாவது, எத்தியோப்பிய சிங்கங்கள். இவை வெகு சமீப காலத்தில்தான் மரபணு சோதனையின் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க வகை சிங்கங்களில் இருந்து தனி இனமாக அறிவிக்கப்பட்டன. இதன் சிறப்பு அடர்ந்த பிடரி முடியில் இருக்கும் கருப்பு வண்ணமே. இந்த 7 வகை சிங்கங்களைத் தவிர, துருக்கியில் இருந்து தென்மேற்கு ஆசியா முழுவதும் பரவி இருந்த ஆசிய சிங்கங்கள் இன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே உள்ளன. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டன. திடீரென பரவும் தொற்றுநோய்கள், ஒரே குடும்பங்களுக்குள் நேரும் இனச்சேர்க்கையினால் பலவீனம் அடைதல், இடநெருக்கடிகளால் காடுகளை விட்டு வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித - விலங்கு மோதல்கள் போன்ற பிரச்சினைகளை ஆசிய சிங்கங்கள் எதிர்கொள்கின்றன. அரசர் காலத் தில் சிங்கங்கள் பெரிய அழிவை சந்தித்திருந்தாலும், அதையே சொல்லிக்கொண்டு இருக்காமல் தற்போதுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன உயிர்களை காப் பதன் மூலம் இயற்கையின் சம நிலையை நிலை நிறுத்தினால் நமக்குத் தேவையான நீர், காற்று, ஆரோக்கியம் போன்ற செல்வங் களையும் பெறலாம் என்றார். https://tamil.thehindu.com
 4. 1 point
  கட்சியை 3 பொண்டாட்டி பிள்ளைகளுக்கும் எழுதி வைச்சிட்டுப் போயிருக்கு மனுசன். இதில தொண்டர்கள் ஓசி புரியாணிக்கு அலைய வேண்டியான். நல்ல சன நாய் அகம் மப்பா. ?
 5. 1 point
  யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே அண்ணா, ஈ. வி. கே. சம்பந், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராசன் ஆகியோர்தான் திமுகவின் ஆரம்ப கால ஐந்து முக்கியத் தலைவர்கள்.(கவனிக்க, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இல்லை) அண்ணாவுக்கு அடுத்த தலைவராக இருந்தவர். ஈ. வி. கே. சம்பந், அவரின் துரதிருஸ்ரம் அண்ணாவை விட்டு பிரிந்ததுதான். அவர் மட்டும் அண்ணாவை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அவரே தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்திருப்பார்.அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் ஈ. வி. கே. சம்பந். அவருடன் இணைந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் கண்ணதாசனும் சிவாஜி கணேசனும் .1962 சட்டமன்றத் தேர்தலில் போடியிட்ட ஈ. வி. கே. சம்பந்தின் கட்சி படுதோல்வியடைந்தது. அந்த நேரத்தில் வெளிவந்த படம்தான் சிவாஜி கணேசன் நடித்த பலே பாண்டியா. அந்தப் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்தான் “யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே..”
 6. 1 point
  அழகிரி மகன்.... துரை தயாநிதி கொஞ்சம் பொறுத்தால், அன்பழகனின் பதவி கொடுக்கப்படும். ? அவசரப் பட்டால்... திருநெல்வேலி அல்வா தான் கிடைக்கும். ?
 7. 1 point
  தோழர். . நான் இந்த விடயத்தில் அழகிரி பக்கம் .. அவரின்ட மகன் என்ன ரொமாட்டோ சட்னியா ரெல் மீ ?.. அவருக்கு பதவி ?
 8. 1 point
  ஓ மரணித்த வீரரே உன் சீருடைகளை எனக்குத்தா உன் பாதணிகளை எனக்குத்தா உன் ஆயுதங்களை எனக்குத்தா மழை பொழியும் ஓர் நாளில் மலர் சூடும் கல்லறைகள் உமைப் பிரிந்த உறவெல்லாம் உமைத்தேடி வந்திருக்கும் உமைத்தேடி அழுதழுது உம்முன்னே உயிர் துடிக்கும் உமக்கென்று ஏதேதோ கொண்டு வந்து சேர்த்திருக்கும் மணம் நிறைத்த மலராலே மாலைகளும் அவை சூடும் மனம் நிறைந்த வேதனையால் விழி நீரை அவை சிந்தும் அண்ணன் உரை தொடர்கையிலே அமைதியாக செவிமடுக்கும் மணியோசை ஓய்ந்த பின்னே மௌனமாக அஞ்சலிக்கும் வேளை வந்து சேர்ந்தவுடன் விளக்கொன்றை அவை ஏற்றும் மழைத்துளிகள் வீழ்கையிலும் சுடர் ஒளிரும் கல்லறை முன் சுடர் ஒளியின் நடுவினிலே முகம் தெரியும் இரவினிலே முகம் காணும் விழிகள் எல்லாம் குளமாகும் நீராலே நீர் வழிந்த முகங்கள் எல்லாம் உமை நினைந்தே சிவந்திருக்கும் நீர் வாழ்ந்த நாட்கள் எல்லாம் வந்து வந்து போயிருக்கும் நீர் நிறைத்த நினைவுகளோ நெஞ்சில் வலி மூட்டியிருக்கும் நீர் சுமந்த கனவதுவோ நிமிர்ந்து நட என்றிருக்கும் உங்கள் பணி தொடர்ந்திடவே உறுதியெடு என்றிருக்கும் விடை பெறும் வேளையிலே விம்மி வெடிக்கும் நெஞ்சமெல்லாம் உம்மைச் சுமந்தபடியே உறுதியெடுக்கும் உம் பணி தொடர..
 9. 1 point
 10. 1 point
 11. 1 point
 12. 1 point
 13. 1 point
 14. 1 point
  ”ஒரே அடி...ஒரே கடி...ஆள் காலி!” - இந்த விலங்குகள் கிட்ட வச்சுக்காதீங்க மக்கா பெரிய விலங்குகள், மனிதர்கள் உள்பட அனைத்தையும் ஒரே கடியில் கொன்று விடும். இந்தியா, தென் ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் வாழும். விலங்குகளின் கோபத்திற்கு சிறியது, பெரியது என்ற உருவ வித்தியாசம் கிடையாது. யாரை வேண்டுமானாலும் எப்போதும் தாக்கக் கூடியது. பெரிய விலங்கு மட்டும்தான் சிறியவற்றை தாக்கும் என நினைப்பது தவறு. உருவத்தில் சிறியதாக இருக்கும் விலங்குகள்கூட மிகவும் ஆக்ரோஷமாக தாக்கக்கூடிய பண்புகளைக் கொண்டிருக்கும். ஆனால், விலங்குகள் எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் தங்களுடைய கோபத்தைக் காட்டிக் கொள்ளும். அப்படி உலகில் அதிகமாகத் தனது கோபத்தை வெளிப்படுத்தும் சில விலங்குகளைப் பற்றி பார்க்கலாம். 1. தேன்வளைக் கரடி (honey badger) தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆசியக் காடுகளில் அதிகம் வாழும். தேன்வளைக் கரடிகளுக்கு பயம் என்ற ஒன்று கிடையாது. பார்ப்பதற்குக் கீரியின் உருவம் போலவே உடலமைப்பைக் கொண்டது. ஆனால் தன்னை விட உருவத்தில் பத்து மடங்கு பெரிய விலங்குகளைக் கூட எதிர்த்துத் தாக்கக் கூடிய தன்மை கொண்டது. இவற்றின் அதிக கோபம் மற்றும் ஆக்ரோஷத்தின் காரணமாக மிருகக்காட்சி சாலையில் வைத்துப் பராமரிப்பது எளிதான காரியம் அல்ல. பொதுவாகச் சிங்கம், புலி போன்ற விலங்குகளுடன் சமமாக சண்டையிடும் திறமையை பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய கோபக்கார விலங்காக இருந்தாலும், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தால் அரிதான விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 2. காட்டுப் பன்றி (wild boar) மேற்கு ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பன்றி இனத்தைச் சேர்ந்திருந்தாலும், மற்ற பன்றிகள் போல இல்லாமல் இதன் கீழ்த்தாடையில் இரண்டு நீளமான பற்களைக் கொண்டிருக்கிறது. கோபம் ஏற்படும் நேரங்களில் மனிதர்களைக்கூட ஆக்ரோஷமாக தாக்கக் கூடியது. முழுவதுமாக வளர்ந்த காட்டுப்பன்றி கிட்டத்தட்ட 130 கிலோ எடையுடன் காணப்படும். ஒவ்வொரு கடியும் அதிகமான உறுதியைக் கொண்டது. இந்தப் பன்றிகள் அனைத்து விலங்குகளையும் உண்ணக்கூடிய குணத்தைக் கொண்டது. 3. உப்புநீர் முதலைகள் (Salt Water Crocodile) உலகில் மிகவும் பெரியதாக வளரும் விலங்கு என்ற சாதனையைக் கொண்டுள்ள உப்புநீர் முதலைகள் மிக ஆபத்தானதும்கூட. ஆண் முதலைகள் 24 அடி வரை வளரும் தன்மை கொண்டது. 180 கிலோ எடையைக் கொண்டிருக்கும். இவை கொண்டுள்ள உறுதியான பற்கள் கோபம் ஏற்படும் நேரங்களில் மற்றவற்றைத் தாக்க உதவியாக இருக்கும். பெரிய விலங்குகள், மனிதர்கள் உள்பட அனைத்தையும் ஒரே கடியில் கொன்று விடும். இந்தியா, தென் ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் இவை அதிகமாக வாழும். 4. சூரிய கரடிகள் (Sun Bear) தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக இக்கரடிகள் காணப்படுகின்றன. அதிகமாகத் தூங்கும் பழக்கத்தைக் கொண்ட இந்த விலங்குகள் சிறிய விஷயத்துக்கெல்லாம் கோவப்படக் கூடியது. மனிதன் எந்த ஒரு தொல்லையும் கொடுக்காதபோதும் கூட மனிதனைத் தீவிரமாக தாக்கும் குணம் கொண்டது. உலகில் வாழும் மிகச் சிறிய கரடி இனமும் இதுதான். இது மிகக் கூரிய பற்களைக் கொண்டிருக்கும். கால்களில் மிகப்பெரிய நகங்களைக் கொண்டிருக்கும். ஒரே தாக்குதலில் சாதாரண கரடி ஏற்படுத்தும் காயங்களை விட அதிக அளவிலான தாக்கங்களை ஏற்படுத்திவிடும். 5. ஆப்பிரிக்க காட்டெருமைகள் (african buffalo) ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இவ்விலங்குகள் மிகவும் கோபம் கொண்ட விலங்குகள். சாதாரணமாக ஒரு டன் எடை வரை வளரக் கூடியது. ஒரே தாக்குதலில் மனிதனின் உயிரை நிச்சயமாகத் தாக்கிவிடும் திறன் கொண்டது. இதனால் வருடத்திற்கு 200 நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைகின்றனர். இதனைச் சரணாலயத்துக்குள் சென்று பார்த்து அதனுடன் விளையாடுபவர்களும் உண்டு. https://www.vikatan.com/
 15. 1 point
  அந்த காணொலியை யூரியுப் தளத்தில் இருந்து தூக்கும் அளவுக்கு போய்விட்டது IBC தமிழ். இப்போ யார் வேணும் என்றாலும் என்ன வேணும் என்றாலும் சொல்லலாம் என்ற அளவுக்கு வந்துவிட்டது கட்டுக்கோப்பாக, தியாகத்துடன், இரகசியத்தின் உச்சகட்டத்தில் வளர்ந்த போராட்டம். அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு இரட்டைப்புலனாய்வை பற்றி கதையளந்தும், அதை பகிரங்கமாக இணையத்தில் பிரசுரம் செய்தும், பயத்தில் தூக்கும் அளவுக்கு பொய்களும் புலனாய்வு ஊகங்களும் நிறைந்தது தான் அந்த காணொலி. அதில் விஜயகலாவை பற்றிய புலனாய்வு அறிக்கை புல்லரிக்கவைத்தது.