• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 17 டிசம்பர் 2018 in all areas

 1. 4 points
  அது மரபணு மாற்றபட்ட மரக்கறி வகை என்று ஒருவருடங்களுக்கு முன்பு நவம்பர் குளிர்கால நேரம்களில் அவுசில் இருந்து இறக்குமதியாகின்ற பொழுது இங்குள்ள இங்கிலாந்து https://www.gov.uk/guidance/port-health-authorities-monitoring-of-food-imports உணவு அமைப்பு எரிக்க சொல்லி உத்தரவிட்டது காரணம் இறக்குங்க ஒவ்வொரு முருங்கைக்காயிலும் அது மரபணு மாற்றம் செய்யபட்ட உணவு என்று லேபில் ஓட்டனும் இறக்கியவர் நம்ம தமிழ் ஆள் வேண்டாம் சோலி என்று எரிப்பதுக்கு காசை கட்டி விட்டு வந்துவிட்டார் அதன் பின் அவுஸ் முருங்கைக்காய் இந்தபக்கம் தலை வைத்து படுப்பதில்லை . உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு முருங்கைக்கையை உங்கள் போர்ட் கெல்த் ஆட்களுக்கு அனுப்பி விட விலாவாரியாக ஆராய்ந்து மெயில் அனுப்புவார்கள் அநேகமாக இலவச சேவையாக இருக்கும் . Bacillus thuringiensis ஒருவகை கிருமி இயற்கை கொள்ளி பொதுவாக பயிர்களை தாக்கும் பூச்சிகளுக்கு இயற்க்கை அமைத்த வில்லன் மனிச மூளை வேறுவிதமாக சிந்திக்கும் Bacillusலிருந்து குறிப்பிட்ட மரபணுவை விதைகளில் கலந்துவிட அன்று தொடங்கியது தலையிடி அப்படியான உணவுகள் உணவுகால்வாயில் புற்று நோயை கொண்டு வருது என்று ஒரு பகுதி கொடிகட்ட அமெரிக்காவின் மான்செண்டோ போன்ற விதை கொம்பனிகள் இல்லை என்று வாதிட கொள்ளுபாடு தொடர்கிறது இங்கு இங்கிலாந்து சட்டம்கள் நஞ்சை நஞ்சென்று எழுதி வித்தால் விக்கலாம் gmo மரக்கறி வகைகள் பைக்கட்டில் ஒரு மூலையில் சிறிய எழுத்துகளில் இது gmo உணவு என்று பிரிண்ட் பண்ணி வியாபாரம் செய்யலாம் . gmo பயிர்கள் இயற்க்கை சுற்று வட்டத்தை பாதிக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது அதனால் மூன்றாம் உலகநாடுகளை நோக்கி வலுக்கட்டாயமாக தள்ளி விடுகிறார்கள் சொல்லப்படும் காரணம் பாரிய விளைச்சல் . ஆதாரம் வேண்டுவோர் . https://www.bbcgoodfood.com/howto/guide/what-gmo-food http://www.marklynas.org/2013/04/time-to-call-out-the-anti-gmo-conspiracy-theory/ https://thetruthaboutcancer.com/dangers-gmo-foods/
 2. 3 points
  அந்த ஒரு துளி விந்துவால் உருவாகிய மனிதனா இப்படி சிந்திக்கின்றான்? ஓ மை காட்....... ஐ மீன் என்ரை கடவுளே...
 3. 2 points
  நான் போன கிழமை வழக்கம் போல வார இறுதியில் கண்டிப்பாக முருக்கங்காய் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று (நான் பாக்கியராஜ் ரசிகனாக்கும்) தமிழ் கடைகளுக்கு போய் பார்த்தால் அநேகமான கடைகளில் முருக்கங்காய் மெலிந்து போய் சதை கிதை ஒன்றும் இல்லாமல் கிடந்தன. இதை சாப்பிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று யோசித்து கொண்டு கடைசியாக இன்னொரு தமிழ் கடைக்கு போய் பார்த்தேன். அங்கு மெலிந்து போய் கிடந்த முருங்கைகாய்கள் வைத்திருக்கும் கூடைக்கு அருகில் இன்னொரு கூடையில் நல்லா கொழுத்த ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த முருங்கைகாய்களை வைத்து இருந்தனர். இதென்னடாப்பா இப்படி கொழுத்து கிடக்குதே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கடையில் வேலை செய்யும் அக்காவிடம் "இது என்ன முருங்கைகாய்.. இப்படி கொழுத்து இருக்குதே" என்று கேட்டேன். அதற்கு அவா, 'இது அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த முருங்கைகாய்கள்... கொண்டு போய் சாப்பிட்டு பாருங்கள்.. நல்லா இருக்கும்' என்றார். இது என்னடாப்பா புதுசா இருக்கு... அவுசில் இருந்து Lamb வரும், கங்காரு இறைச்சி வரும், சில நேரங்களில் Cheese கூட வரும், ஆனால் முருங்கைக்காய் கூட வருமா என்று ஆச்சரியமாக இருந்தது. "உண்மையாகவா அக்கா.. இது அவுசில் இருந்து வந்ததா.." என மீண்டும் கேட்டேன். "ஓம் தம்பி.... இப்ப தமிழ் கடைகளுக்கு அவுசில் இருந்து முருங்கைகாய்கள் வருகுது..விலை கொஞ்சம் கூட..ஆனால் நல்லம்" என்று மீண்டும் நற்சான்றிதழ் கொடுத்தார். நானும் ஆறு டொலருக்கு ஒரு இறாத்தல் (1 lbs) வாங்கிக் கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டு பார்க்க, சுவை நல்லா இருந்தது. காய் நிறைய சதையும், கொஞ்சம் இறுகியும் (thicK ஆக) இருந்தது. ஒட்டி மீன் கறிக்கு சரியான தோதாக இருந்தது. ஒரு பெரும் வெட்டு வெட்டினேன். எனக்கு இது தொடர்பாக கொஞ்சம் விபரங்கள் வேண்டும். எப்ப இருந்து அவுசில் மற்ற நாடுகளுக்கும் அனுப்பக் கூடியவாறு முருங்கைகாய் பயிரிடத் தொடங்கிச்சினம்? இப்படி கொழுத்து போவதற்கு ஏதும் இரசாயன பசளைகள் போடுகின்றனரா? அல்லது இது ஒரு GMO உணவா (மரபணு மாற்றம் செய்த உணவா)? அவுஸ் உறவுகள் அல்லது இது தொடர்பாக மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள் பதில் தாருங்கள். பதில் தருகின்றவர்களுக்கு பாக்கியராஜின் படங்களின் பாட்டு பரிசாக கிடைக்கும்.
 4. 2 points
  நிழலி, அவுஸ்திரேலியா பல்வேறு காலநிலைகளைக் கொண்ட பரந்த ஒரு தேசம். இலங்கையை போன்ற நாடுகளில் நிலவும் உஷ்ண வலய (tropical) காலநிலை அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில் குறிப்பாக குயின்லண்ட் (Queensland) மாநிலத்தில் நிலவுகிறது. இங்கு தான் அனேகமான உஷ்ண தேச பழ வகைகள் மரக்கறிகள் பயிரிடப்படுகின்றன. முருங்கை மட்டுமல்ல பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம் ஆகியவையும் இங்கிருந்து கிடைக்கும். குயின்லண்ட்ல் நம்மவர்களில் ஒருவர் பக்கத்து வீட்டு வெள்ளை இனத்தவர் வீட்டு மரத்து முருங்கைக் காய்களை பெற்று சமைத்ததாகவும், அந்த வெள்ளையர் அதைப் பற்றி ஆவலுடன் கேட்டறிந்து தமக்கும் சமைத்து தரக் கேட்டதாகவும் அறிந்துள்ளேன். முருங்கை மரம் அவுஸ்திரேலியாவில் பூர்வீக காலம் தொட்டே உள்ளதா என எனக்குத் தெரியவில்லை. இது பற்றி நானும் முன்பு பலரிடம் கேட்டுள்ளேன். ஒருவருக்கும் தெரியவில்லை. இவ்வாறு நமது பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய ஆராய்ந்து பார்க்க வேண்டிய சுவாரசியமான விடயங்கள் அவுஸ்திரேலியாவில் பல உண்டு.
 5. 2 points
 6. 2 points
  ஆடு மாடுகளைவிடவும் கேவலமாகக் கறுப்பு இனத்தவரை அடிமைகளாக அடக்கி ஆண்ட வெள்ளையினத்தவருக்கும் தலைவனாகி அவர்களை ஒரு கறுப்பர் ஆண்ட வரலாற்றுக் காலத்தில் வாழ்பவர்கள் நாங்கள். நம்பிக்கை மட்டுமல்ல, யதார்த்தத்திலும் பெற்ற அனுபவம் ஈழப்பியன் அவர்களே!
 7. 2 points
  எறியப்படும் எலும்புத்துண்டுகளை பொறுக்கிக் கொண்டு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் இந்தியர்களை யாரும் மதிப்பதில்லை.
 8. 2 points
  போர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா! தோற்றுப்போன சீனா? Report us Suresh Tharma 7 hours ago இலங்கையில் தற்போதைய நிலை குறித்த இந்தப் பதிவிற்குள் உறைந்திருக்கின்ற பல உண்மைகள் காலம் கடந்துமே வெளிவர முடியாதவை. அந்தளவிற்கு இப்போது நடைபெற்ற அரசியல் களேபரங்கள் சர்வதேச அரசியலுடன் பிற நாடுகளின் நலன்களிற்கான ஒரு முயற்சியாகப் பின்னிப் பிணைந்துள்ளது. சீனாவும் அமெரிக்காவும் தேர்வு செய்துள்ள பல இடங்களில் இலங்கை தற்போது மையமாக மாறியுள்ளதே இதற்கான காரணமாகும். சர்வதேசம் பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஒரு விடயத்தை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை சீனாவிடம் முற்றுமுழுதாகச் சிக்குண்டுள்ளது. அது மகிந்த ராஜபக்சாவாக இருந்தாலென்ன, ரணில் விக்கிரமசிங்காவாக இருந்தால் என்ன, சீனாவின் நிலைப்பாட்டிற்கு மாறாகச் செயற்பட முடியாது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கின்றது தற்போதைய நிகழ்வுகள். இதற்கான காரணம் என்னவென்றால் இலங்கை சீனாவிடம் பெற்றுள்ள பெருந்தொகைக் கடன்களாகும். சீனாவின் கடன்மூலம் நாடுகளைக் கைப்பற்றுதல் என்கிற திட்டத்தின் முதற்பலிக்கடா இலங்கை. அது பெற்ற கடன் 8,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள். அதனால் தான் மகிந்தாவால் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கான பணத்தைச் செலுத்த முடியாமல் துறைமுகத்தின் 99 வருடத்திற்கான உரிமைத்தை சீனாவிடம் ரணில் கொடுந்திருந்தார். இதைவிடவும் அடுத்த ஆண்டு தை மாதமும் ,ஏப்ரல் மாதமும் இலங்கை ஒரு பெரும் பணத்தொகையை தான் பட்ட கடன்களிற்காகச் செலுத்த வேண்டியுள்ளது. சர்வதேச இறையான்மைப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டவையே அவை. அடுத்த நான்கு மாதங்களிற்குள் செலுத்த வேண்டிய தொகை என்பது சுமார் 1,700 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இலங்கை மதிப்பில் இது 27,710 கோடி ரூபாக்கள். இந்தத் தொகையைச் செலுத்துவதற்கு இலங்கை நம்பியிருந்த பணம் சீனா ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகைக்காக இந்த மாதம் கொடுக்கவிருந்த 650 மில்லியன் டொலர்களாகும். இந்த நேரத்தில் தான் அமெரிக்கா இலங்கைக்கு சுமார் 166 மீற்றர் நீளமுள்ள கடலோரப் பாதுகாப்பிற்கான ஹமில்டன் வகையைச் சேர்ந்த ஒரு பெரிய ஆயுதக்கப்பலை வழங்கியிருந்தது. இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை வந்தடையும். இந்த விவகாரம் சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் இலங்கையின் சொந்தக் கடல் எல்லைகளான 14 கடல்மைல்களை விட இலங்கையின் பொருளாதார [Exclusive Economic Zone] எல்லையான சுமார் 800 கடல்மைல் வரையான ரோந்திற்கே இது வழங்கப்பட்டிருந்தது. அதாவது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா சட்டவிரோத தேவைகளிற்கு பயன்படுத்தி வருவதை கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையாக அமெரிக்கா இதனைச் செய்கின்றது என்பதை சீனா நன்கே அறிந்திருந்தது. ஏனென்றால் அம்பாந்தோட்ட மாத்தள விமான நிலையத்திற்கு தற்போது உலகிலேயே மிகவும் பெரிய சரக்கு விமானமாக அன்ரரோவ் 124 இரவு வேளைகளில் வந்து செல்கின்றது. அது எரிபொருள் நிரப்ப வருவதாகவே இலங்கைசார் செய்தியூடங்கள் நம்ப வைக்கப்பட்டாலும், அவற்றின் மூலம் எடுத்து வரப்படும் சீன ஆயுதங்கள் ஆபிரிக்காவிற்கு கடல்மூலம் சட்டவிரோதக் கும்பல்களிற்கு கடத்தப்பட்டு ஆபிரிக்கா கொதிநிலையில் வைக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா சந்தேகமாகக் கொண்டுள்ளது. இத்தோடு ஈரானிடமிருந்து கொண்டுவரப்படும் சட்டவிரோத எண்ணெய்கள் கூட நாடுகளின் கொடிகளற்ற கப்பல்களின் மூலம் அம்பந்தோட்டைத் துறைமுகக் கொல்கலன்களிற்கு விநியோக்கிக்படுவதும், அங்கிருந்து உத்தியோகபூர்வமாக எடுத்துச் செல்லப்படுவதும் இடம்பெற்றுவருகின்றது. ஏனென்றால் அம்பாந்தோட்டையில் தான் அதிபெரிய எண்ணெய் கொள்;கலன் வசதி இலங்கையிலிருக்கின்றது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் ஒருமுறை இலங்கையின் வரைபடத்தை கண்முன்னே நிறுத்தினால் ஆபிரிக்கா இலங்கைக்குக் கீழேயிருப்பதும் அம்பாந்தோட்டையே இலகுவான பயணப்பாதை என்பதையும் விட தென்னாசியாவிலுள்ள அதிபெரிய அமெரிக்கத்தளமான டியகோ காசியாவிற்கு அச்சுறுத்தலாக அம்பந்தோட்டையில் சீனாவின் அதீத செயற்பாடு அமைந்து விட்டது. ஏனென்றால் டியாகோ காசியா இருப்பது இலங்கையில் இருந்து நேர் தெற்காக 800 மைல் தொலைவில். இங்கிருந்து தான் அமெரிக்கா ஆப்கான் மற்றும் மத்திய தரைக்கடற்பகுதியிலுள்ள தனது படைகளிற்கான பொருள் விநியோகத்தை கடல்வழிப்பாதையால் மேற்கொண்டு வருகின்றது எனவே அந்தக் கடல்வழிப் பாதையில் வேறு கப்பல்களின் பிரசன்னத்தை அமெரிக்கா அறுதியாகவே விரும்பவில்லை. எனவே அமெரிக்காவின் வியூகம் என்பது கடன்பட்டு தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை மாற்றத்தைக் கொண்டு வராது என்பதை சீனா நம்பியிருந்தாலும் அமெரிக்க முயற்சி வியாபிக்கும் என்பதனால் மகிந்தாவை பிரதமாராக்கும் முடிவை மகிந்த சார்ந்த தரப்பிற்கு சீனா மறைமுக ஆசையாக வழங்கியது. இதற்கான சந்திப்பிற்காக பிரத்தியேகமாக வாடகைக்கு அமர்ந்தப்பட்ட ஏயர் ஏசியன் என்ற விமானத்தில் மகிந்தவின் படை சிங்கப்பூர் பறந்து சென்றார்கள். சீனா உளவாளிகளைச் சந்தித்தார்கள். திட்டத்துடன் மீண்டு வந்தார்கள். மைத்திரிக்கும் கூட இது திட்டங்கள் விளக்கப்படுத்தப்பட்டிருக்கலாம். அதாவது சீனா டிசம்பரில் தர வேண்டிய 650 மில்லியன் டொலர்களை தராமல் இழுத்தடிப்புச் செய்தால் இலங்கைப் பணம் பாதாளத்தில் வீழ்ந்து நாடு ஸ்திரமற்ற தன்மையை அடையும் என்பது கூட விளங்கப்படுத்தப்பட்டிருக்கலாம். மகிந்தாவைப் பிரதமாராக்குதை சீனா விரும்புகின்றது என்பதை விட இலங்கை ஸ்திரமற்றுப் போவதைத் தடுப்பதற்காக ரணிலை அகற்றி மகிந்தாவை நியமிக்கும் முடிவை எடுக்க மைத்திரி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். அவ்வளவு ஆபத்திற்கு இலங்கையைச் சீனா இட்டுச் சென்று மிரட்டிவருகின்றது. அதனை நீங்கள் மேற்கத்தைய செய்தியூடங்களால் அறிய வேண்டுமாக இருந்தால் அடுத்த மாதம் வரைப் பொறுத்திருக்க வேண்டும். ஆம் கனடாவின் முன்னணி செய்தி நிறுவனமொன்று “சீனாவிடம் சிக்குண்டுள்ள சிறீலங்கா” என்கிற விவரனத்தை தயாரித்து வருகின்றது. அது நெற்பிளிக்ஸ் எனப்படும் இணைய ஊடகத்தினூடாக அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும். இவ்வாறு சிங்கப்பூரில் தீட்டப்பட்ட திட்டம் வெற்றிபெறாமல் இலங்கையில் இன்றைய தேதியில் சீனாவின் பிடி தளர்வதற்கான காரணமாக இருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது ஆதரவை ரணிலிற்கு வழங்கியதே. ரணிலிற்கே ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பது ராஜதந்திரரீதியில் சிலவேளைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கூடச் சொல்லப்பட்டிருக்கலாம். இரண்டு மாதப் போராட்டத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் நிரூபிக்கப்பட்டதான தோற்றம் தற்போது ஏற்படுத்தப்பட்டாலும், இனிச் சீனாவை ரணில் அரசாலோ அல்லது தமிழர்களால் கூட வேறு ஒரு தரப்பாக பார்க்க முடியாதபடி அதன் கடன் வரப்புக்கள் அமைந்து விட்டன. எனவே கனடாவிலுள்ள பெரிய ஊடகம் விவரணம் தயாரிப்பதற்கு முன்பதாக சிலவேளைகளில் சீனா கூட ஒரு மாற்றத்தை அதாவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களிற்கு தீர்வைக் கொடுங்கள் என்ற நிர்ப்பந்தத்தை கொடுத்து தனது பிடியை இலங்கை மீது அதிகரிக்கலாம். இதற்கான காரணம் யாதெனில் இலங்கையின் ஆட்சிமாற்றங்களில் நாங்கள் திழைத்துக் கொண்டிருக்க அமெரிக்கா தனது அனுஆயுதந் தாங்கிய Nimitz-class aircraft carrier USS John C Stennis (CVN 74) என்கிற அனுஆயுத நாசகாரிக் கப்பல் தனது கப்பலிலுள்ள 90க்கு மேற்பட்ட யுத்த விமானங்களை தற்காலிகப் பராமரிப்பிற்கு உள்ளாக்குவதற்கான விமானத் தங்குமிடமொன்றை திருக்கோணமலையில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இன்றைய தேதி தன்னை இணைத்துள்ளது. எனவே சீனா என்கிற மீளமுடியாக கடணாளி மற்றும் அமெரிக்கா என்கிற இலங்கைக்கு தெற்கே டியாகோ காசியா என்கிற தீவை பாரிய முகாமைக் கொண்டுள்ள அமெரிக்கா தங்களின் நலனிற்காக செயற்படுத்தப் போகும் திட்டங்களில் ஒன்றுமட்டுமே தமிழர்களிற்கான வெற்றியாக அமையும். அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயான தீர்வு என்பதையே சீனாவும் அமெரிக்காவும் ஆதரிக்கப் போகின்றன என்கிற ஒரு நெருடலான உண்மையாகும். எனவே தமிழர்களின் பேசுபலம் சிதறாமல், தமிழர்கள் ஒன்றாகச் செயற்படுவதே எம்முன் இப்போதுள்ள பணி. இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Suresh Tharma அவர்களால் வழங்கப்பட்டு 16 Dec 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Suresh Tharma என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும். https://www.tamilwin.com/articles/01/201696?ref=home-imp-parsely
 9. 1 point
  கனடாவில் இருந்து வந்தவர் அங்குள்ள லோக்கல் தேர்தலில் நின்று வென்றும் உள்ளார் நாதமுனி . கொழும்பு கத்தரிக்காயின் பிறப்பிடம் அதுதான் Dominican Republic.
 10. 1 point
  Dominican Republic என்ற நாட்டில், கனடா, சுவிஸ் எங்கண்ட ஆக்கள், காணியல் வாங்கி, மரக்கறி தோட்டங்கள் செய்து, உங்க ஐரோப்பாவுக்கும், கனடாவுக்கும் அனுப்புகினம்... அங்க வைப்பு, செப்பு எல்லாம் வைச்சு இருக்கினம் என்று முன்னம் ஒரு திரியில யாரோ பதிஞ்சவயல். வசதி என்ன எண்டால், இந்தியா, இலங்கையில் இருந்து சரக்கு செலவு, $3/kg எண்டால் DR இல் இருந்து $1 தானாம். அதே போல ஐரோப்பாவுக்கு பக்கத்தில் கானா நாட்டில், மரக்கறி தோட்டங்கள் வைத்திருக்கும் இரு VVT ஆட்களுக்கு, அந்நாட்டு விருது கிடைத்ததாக யாரோ பதிந்தார்கள்.
 11. 1 point
  எனது கணவரை விடுதலை செய்யுங்கள் அவர்மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை அப்பாவை கேட்டு எனது பிள்ளைகள் அழுகின்றனர் என வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் தனது கணவரான அஜந்தன் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் மேற்கண்டவறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரு பொலீசார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட எனது கணவர் அஜந்தன் அவர்களை தொடர்ந்தும் எந்தவித ஆதாரமும் இன்றி அடைத்துவைத்து விசாரணை செய்து வருகின்றனர். எனது கணவர் கைது செய்யப்படும் போது நான் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை ஒன்றிற்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தேன் எனது கணவர் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியாது. மறுநாளே எனது கணவர் கைது செய்யப்பட்ட விபரம் எனக்கு தெரியவந்தது. எனது கணவர் நிரபராதி அவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி அவர் இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார். சம்பவ தினம் இரவு அவர் மட்டக்களப்பில் உள்ள தேசத்தின் வேர்கள் அமைப்பின் காரியாலயத்தில் பொதுமக்களுக்கான நிவாரணப் பொதிககளை தயார்செய்துவிட்டு அன்று இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் திரைப்படம் பார்த்துக் கொண்டு பிள்ளைகளுடன் வீட்டிலே இருந்துள்ளார். அவருக்கும் பொலீசாரின் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் பொலீசாரும் புலனாய்வு பிரிவினரும் எனது வீட்டை பல தடவை சோதனையிட்டுள்ளனர் பலதடவை எனது அம்மா பிள்ளைகள் என அனைவரையும் துருவி துருவி விசாரணை செய்துள்ளனர். எங்களிடம் இருந்த நான்கு கைத்தொலைபேசிகளையும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் இன்னும் விசாரணைகள் நிறைவு பெறவில்லை. நாங்கள் மிகுந்த வேதனையிலும் வறுமையிலும் வாழ்ந்துவருகின்றோம் அப்பாவை கேட்டு பிள்ளைகள் அழுகின்றது எங்களுக்கு 05 பிள்ளைகள் உண்டு மூன்றுமாத கைக்குழந்தையும் உண்டு நான் அந்தக் கைக்குழந்தையுடன் பல தடவை எனது கணவரை தேடி பொலீஸ் நிலையம் சென்றுள்ளேன் ஆனால் அவர்கள் நீங்கள் வரவேண்டாம் நாங்கள் விசாரணை முடிந்தவுடன் அவரை அனுப்புவோம் என்று கூறுகின்றனர் ஆனால் இன்றுவரை விடுதலை செய்யவில்லை நான் போய் கேட்கும்போதெல்லாம் விசாரணை செய்துவிட்டு அவரை விடுதலை செய்கின்றோம் என்று மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். இனியும் பொறுக்கமுடியாது எனது கணவரை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார். நாளை உண்ணாவிரதம்! கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் தொடர்பாக எந்த அரசியல் தலைர்களும் தனக்கு உதவி செய்யவில்லை என்பதால் தனது கணவரை விடுதலை செய்யக் கோரி நாளை காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அஜந்தனின் மனை தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/110918?ref=rightsidebar
 12. 1 point
  ஆபிரிக்காக்காரன் தான் முருங்கைக்காய் சாப்பிட்டால் பேய் புடிக்கும் எண்டதை சரியாய் கணிச்சு சொல்லியிருக்கிறான்
 13. 1 point
  வடமாநிலத்தில்...டார்வின்...கதரின் போன்ற இடங்களில்..காடுகளில் முருங்கை மரங்கள் வளர்கின்றன! எனவே இயற்கையாக வளருகின்றன என்றே நினைக்கிறேன்! உள்ளூர் வாசிகள் ...இவற்றைச் சாப்பிடுவதில்லைப் போல உள்ளது! ஆனால்..ஐரோப்பியர் முருங்கைக் காய்களைக் குதிரைகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்! மேற்கு ஆபிரிக்காவில்....முருங்கைக் காய் மரங்கள் உண்டு! எனினும் ....அங்குள்ளவர்கள்...அதனைப் பேய் பிசாசுகளுடன் தொடர்பு படுத்தியிருப்பதால்...அவர்கள்....முருங்கைக் காய் சாப்பிடுவதில்லை! நாங்கள்...இருந்த காலத்தில்...உயிரியல் படிப்பிப்பவர்களிடம் கெஞ்சி....பிரக்டிகல் செய்யத் தேவை...என்று மாணவர்களிடம் கூறி....முருங்கைக்காயைப் பெற்றுக்கொள்வதுண்டு! அதேபோலத் தான்....பலாப்பழங்களும்...மல்லிகை வாசம் கூறியது போல...குயின்ஸ்லாந்து பகுதிகளில்....மரங்களில்..பழுத்து...வெடித்த படியே கிடக்கும்! ஒருவரும்...கண்டு கொள்வதில்லை! சுமே, சிட்னியில்...முருங்கை மரங்கள் வளரும் எனினும்....குயின்ஸ்லாந்து..அல்லது வட மாநிலங்களில் வளர்வது போல...அடர்த்தியாகவும்...உயரமாகவும் வளர்வதில்லை! வீட்டில் நிற்கும் முருங்கையில்...ஒரு மூன்று நான்கு மாதங்களுக்குக் காய்கள் பிடுங்கக் கூடியதாக இருக்கும்! ஆனால்...நிறைய இலைகள் கிடைக்கும்! வறுக்கலாம்! தென் மாநிலம், மேற்கு அவுஸ்திரேலியா போன்ற இடங்களிலும்...முருங்கை, பலா, புளி போன்ற மரங்கள் அதிகமாக வளரும்! கள உறவு...உடையார் காரை இடையில் நிறுத்திவிட்டு...புளியங்காய் பொறுக்கும் வழக்கம் உள்ளவர் என்று ஒரு முறை அவர் எழுதிய நினைவு உண்டு!
 14. 1 point
  சிங்களம் ஒருபோதும் தனது ராணுவத்தைக் காட்டிக் கொடுக்காது. ஏனென்றால், ராணுவ இயந்திரத்தைப் பாவித்து இனக்கொலையை அரங்கேற்றியதே சிங்களப் பேரினவாதம் தான் என்றாகிறபோது, தனது ராணுவத்தைக் காட்டிக்கொடுப்பதென்பது, தன்னைக் காட்டிக்கொடுப்பது போலாகிவிடும். சேர்பியாவிலும், தென் சூடானிலும் நடந்தது போன்று, வெளித்தலையீட்டுடனான அரசியல் மற்றும் ராணுவத் தலைமகள் மீதான வழக்கொன்றே இப்போர்க்குற்றவாளிகளை நீதிமன்றம் முன் கொண்டுவரச் செய்ய முடியும். இதற்கு உள்நாட்டில் தமது காணாமல்ப் போன சொந்தங்களை இன்றுவரை தேடும் உறவுகளும், போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் உறவுகளும் ஒன்றிணைந்து வழக்கொன்றை சர்வதேச நீதிமன்று ஒன்றினூடாக சமர்ப்பித்து சர்வதேச பிடியாணையொன்றை ஏதேனும் ஒரு குற்றவாளிக்கெதிராகப் பிறப்பிக்கப் பண்ணினால், இது சாத்தியம். இறுதிக் கட்டப் போரில் பெருமளவிலான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை சிங்களப் பேரினவாதம் இன்று ராணுவ மனிதவுரிமைகள் அமைப்பின் தலைவராக நியமித்துள்ளது. இது ஒரு மிகவும் வெட்கக் கேடான சம்பவம் மற்றுமன்றி, அவனின் இரத்தம் தோய்ந்த கரங்களை மறைக்கச் சாதுரியமாகப் பாவிக்கப்பட்டிருக்கும் ஒரு கைங்கரியமும் ஆகும். இவன் போன்றே முன்னாள் தளபதி ஜகத் டயஸும் பிறேசில் நாட்டு தூதுவராக இருந்தபொழுது தன்மீது அந்நாட்டில் போடப்பட்ட போர்க்குற்ற வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மத்திய கிழக்கினூடாக தலைமறைவாகி இலங்கையில் வந்திறங்கினான். இவ்வாறான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவேண்டும். இவர்களைப் போன்றே, ராணுவத் துணைக்குழுவான கருணா குழுவின் பல உறுப்பினர்கள் இறுதிக்கட்டப் போரில் பல போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். புலிகளின் கிழக்குத் தளபதியான கேணல் ரமேஷ் மற்றும் சில முக்கிய தளபதிகளை மற்றைய கைதிகளிடமிருந்து பிரித்தெடுத்துச் சென்று கொன்றவர்கள் இவர்கள் தான் என்று கண்ணால் பார்த்த சாட்சியங்கள் உள்ளன. மே 15 இலிருந்து 18 வரையான நாட்களில் கருணா குழு உறுப்பினர்கள் ராணுவ முன்னரங்க சரணடையும் நிலையங்களில் மக்களை சல்லடை போட்டுத் தேடி, புலிகளைப் பிரித்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டதையும், பலரை அவர்களே இழுத்துச் சென்றதையும் கண்ட சாட்சிகள் இருக்கிறார்கள். தேசியத்தின்பால் அக்கறையுள்ளவர்களும், தேசியத்தின் வளங்களை இன்றுவரை காத்துவருபவர்களும் தமது நேரத்தையும், வளங்களையும் இவற்றிற்காகச் செலவு செய்வது காலத்தின் தேவை.
 15. 1 point
  உந்த வாத்தி அறிவில்லாத இனவாதி என்பது மட்டும் தெரிகிறது.
 16. 1 point
  யீ.எல். பீரிசு என்றால் முன்பு ஒரு மதிப்பு ஏற்படும். இப்போ மிதிக்கவும் கால் கூசுகிறது.
 17. 1 point
  பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைப் போலவே, அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் ஒரு கலை வடிவம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு உயிர்ப்புடன் இருந்தது என்றால் நம்பமுடிகிறதா? தஞ்சையை ஆண்ட மராத்தியர்களால் தமிழகத்திற்கு கிடைத்த கலைவடிவமான லாவணிதான் அந்த பழங்கால விவாத நிகழ்ச்சி. எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரில் இரண்டு பிரிவாக கலைஞர்கள் அமர்ந்துகொண்டு, பாடல் மற்றும் வசனத்தை இசையோடு பேசி ஒரு தலைப்பை விவாதிக்கும் நிகழ்ச்சி லாவணி ஆகும். கலைஞர்கள் தாங்கள் தேர்வுசெய்த குழுவிற்கு வலுசேர்க்க புராண, இதிகாச கதைகள், தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுத்தாளப்படும் கதைகள், வரலாற்று உண்மைகள் போன்றவற்றை பாடியும், கதையாக சொல்லியும், நயத்துடன் விவாதிக்கவேண்டும். சொல்லும் கருத்து வலிமையானதாகவும், நேரம் எடுத்துக்கொள்ளாமல், உடனடியாகவும் பதில் தந்து எதிர்க்கட்சியை வீழ்த்தும் கட்சி வெற்றிபெறும். மராத்திய மன்னர்கள் காலத்தில் தொடங்கிய லாவணி கலை, ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர வேட்கை ஊட்டவும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அவ்வப்போது மக்களுக்கு நாட்டு நடப்புகளை சொல்வதற்கும் பயன்பட்டது என அனுபவம் மிக்க லாவணி கலைஞர்கள் கூறுகிறார்கள். அழிவின் விளிம்பில் லாவணி தற்போது தமிழகத்தில் அதிபட்சமாக 20 லாவணி குழுக்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக தஞ்சையைச் சேர்ந்த மூத்த லாவணி கலைஞரான 67 வயதாகும் ஜோதிவேல் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். தளர்ந்த உடலோடு, இரண்டு பைகளுடன் நம்மை சந்திக்க வந்த ஜோதிவேலிடம் களைப்பு தெரிந்தது. ஆனால் லாவணி பற்றி கேட்டதும் உற்சாகம் அடைந்தவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஏற்று நடித்த லாவணி கச்சேரி புகைப்படங்களை ஆர்வத்தோடு காட்டினார். ''லாவணி கலையை சொல்லித்தர எங்களைப் போன்ற வயதானவர்கள் மட்டுமே இருக்கிறோம். இளைய தலைமுறையில் பலருக்கும் இதுபோன்ற ஒரு கலைவடிவம் தமிழகத்தில் இருந்தது என்பதே தெரியாமல் போய்விடுமோ என்று அச்சப்படுகிறோம். தஞ்சாவூரில் பிரபலமாக இருந்த லவாணி, தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் கட்டாயமாக இடம்பெற்றிருந்தது.'' ''காலம் மாறியதும், லாவணியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. நீங்கள் லாவணி நிகழ்ச்சியை பாரக்கவேண்டும் என்றால், மதுரை மீனாட்சி கோயில் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் காமன் பண்டிகை என்ற பெயரில் நடக்கும் லாவணியைப் பார்க்கலாம்,''என தொய்வுடன் பேசினார் ஜோதிவேல். காட்டுப்புறம், நாட்டுப்புறம், பூபாளம் மற்றும் காலங்கடா என நான்கு விதமான லாவணிகள் இருந்தன. கிராம திருவிழாக்களின்போது, இரவு முழுவதும் நடக்கும் என நினைவுகூறுகிறார் இந்த மூத்தக்கலைஞர். எரிந்த கட்சி, எரியாத கட்சி எது? லாவணியில் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரால் இரண்டு குழுக்கள் அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது சுவாரசியமான தகவலை தெரிவித்தார் ஜோதிவேல். ''மராத்திய லாவணிக்கு முன்னதாக, தமிழகத்தில் காமன் கூத்து என்ற புராணக் கதை, லாவணி பாணியை போலவே வழங்கப்பட்டு வந்தது. காமனை சிவன் எரித்தார் என்ற புராண கதையில் எரிந்த கட்சி என்பது காமனை குறிக்கிறது, எரியாத கட்சி என்பது சிவனைக் குறிக்கிறது.'' ''லாவணி போலவே அந்தக் கூத்து இருந்ததால், லாவணியை வழங்குவதிலும் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற முறை பின்பற்றப்பட்டது. விவாதம் செய்பவர்கள், தங்களது அணியின் கருத்தை நிலைநாட்ட விவரங்களை பேசுவார்கள், பாடுவார்கள். '' ''அரசியல் விவகாரங்களை சுவாரசியமாக எதுகை, மோனையோடு பாடுவது என்ற நடைமுறைகூட இருந்ததது. மொழிப்போர் தொடர்பான விவாதங்கள் லாவணி வடிவில் நடைபெற்றன,'' என லாவணி நிகழ்ச்சியை விளக்கினார் ஜோதிவேல். மராத்தியர்கள் விட்டுச் சென்ற கலை பாரம்பரியம் தனது ஆசானாகக் கருதும் எம்.கே.அப்துல் காதர் அல்லது டேப் காதர் என்ற கலைஞர் தனது இறுதி ஆண்டுகளுளில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்ததை நினைவுகூர்ந்த ஜோதிவேல், ''லாவணி ஆவணப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது என்பது எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அவ்வப்போது அரசாங்கத்தில் கலை நிகழ்ச்சிகளில் லாவணிக்கு முக்கியத்துவம் தந்தால், இந்த கலை உயிர்ப்புடன் இருக்கும்,'' என கூறியபோது அவரது கண்கள் குளமாகின. ஜோதிவேலின் உணர்ச்சிபூர்வமான சந்திப்பை அடுத்து, லாவணி கலையைப் பற்றி சுமார் பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்துள்ள ஆந்திராவில் உள்ள குப்பம் பல்கலைகழகத்தில் தமிழ்துறையில் பணியாற்றும் விவேகானந்த கோபாலனிடம் பேசினோம். அவர் 'லாவணி வரலாறும் வளர்ச்சியும்' என்ற புத்தகத்தின் ஆசிரியரும்கூட. ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை "அறைகளுக்குள் சிறைப்படுவதல்ல கலை" Exit player "அறைகளுக்குள் சிறைப்படுவதல்ல கலை" லாவணியின் வரலாறு 1670களில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் வெங்கோஜியின் காலத்தில் இருந்து தொடங்குகிறது என்றார் ஆராய்ச்சியாளர் கோபாலன். ''மராத்தியப் படைகளை வழிநடத்திய தளபதி வெங்கோஜி, தஞ்சையை ஆளும் நிலை ஏற்பட்டபோது, அவரோடு தஞ்சைக்கு வந்த போர்வீரர்கள் தங்களது ஊருக்கு திரும்பாமல், இங்கயே தங்கிவிட்டனர். அரண்மனையில் மன்னருக்காக நடைபெறும் கலை நிகழ்ச்சியில் லாவணி இடம்பெற்றது''. ''அதைத் தொடர்ந்து மராத்திய குடும்பங்களுக்காக, பொதுவெளியில் மராத்திய மொழியில் லாவணி நடத்தப்பட்டது. காலப்போக்கில் அது தமிழ் மொழியிலும் நடத்தப்பட்டது,'' என்றார் ஆராய்ச்சியாளர். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஓலைசுவடிகளில், தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களில் சரபோஜி மன்னனின் மகன் இரண்டாம் சிவாஜி லாவணி பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர் என்பதற்கான சான்று உள்ளது. குறிப்பாக இரண்டாம் சிவாஜி தனது அவையில் லாவணி வேங்கட ராவ் என்ற அவைப் பாடகருக்கு வாய்ப்புகளை கொடுத்தார் என்பதும் புலனாகிறது. மேலும், லாவணி போட்டிகளில் அவர் தலைமையேற்று நடத்தியுள்ளார் என்றும் தெரியவருகிறது. லாவணிக்கு அங்கீகரம் தேவை மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்கு பின்னரும் லாவணி கலை தமிழகத்தில் நிலைபெற்று, கோயில் திருவிழாக்களில் நடத்தப்பட்டது. வானொலி மற்றும் தூர்தர்சன் தொலைக்காட்சியில் லாவணி நிகழ்ச்சி இடம்பெற்றதை நினைவுகூறும் கோபாலன், ''1970 முதல் 1980கள் வரை லாவணி பொதுவெளியிலும், ஊடகங்களிலும் பிரபலமாக இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மாறிவிட்ட நிலையில், லாவணிக்கு கிடைத்த இடம் மறையத்தொடங்கியது. தற்போது வெகு சில ஊர்களில் மட்டுமே, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை காணலாம்,'' என்றார் கோபாலன். தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் லாவணி தொடர்பான புத்தகமும், சுவடிகளும் உள்ளன என கோபாலன் கூறியதை அடுத்து, அங்குள்ள மராத்திய மொழி நிபுணர் ராமச்சந்திரனிடம் பேசினோம். இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில், தென்னிந்தியா மற்றும் வடஇந்தியாவில் அவர் பயணம் செய்த திருத்தலங்களின் வரலாறுகளை லாவணி பாடல்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என விளக்கினார். மேலும் 'லாவணி' என்றால் 'நடுதல்' என்ற பொருள் தரும் மராத்திய சொல் என்றும், ஆரம்பத்தில் நாற்று நடும்போது பாடப்பட்ட பாடல்களாக லாவணி இருந்தது என்றும், பின்னர் தனி ஒருவகை இசைப்பாடலாக மாறிவிட்டது என்ற குறிப்பையும் தந்தார். சரபோஜி காலத்தில் தஞ்சாவூரின் தெருக்களில் ஒலித்த நூற்றுக்கும் மேற்பட்ட லாவணி பாடல்கள் புத்தக வடிவில் சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடல்கள் தங்களை பாடும் குரலுக்காக காத்துக்கிடக்கின்றன. https://www.bbc.com/tamil/india-46552725
 18. 1 point
  அப்ப பெரிய விடயமும் இருக்கு ஆனா சம்பந்தன் குழுவுக்கு அதில அக்கறை இல்லை என்டு குத்திக்காட்டுகிறார். இது யார் யாருக்கு விளங்குமோ தெரியல்ல.
 19. 1 point
 20. 1 point
  மிகத் தெளிவாக சொறிலங்கா அரசின் போக்கை கூறியுள்ளார். மைத்திரி நேற்று விட்ட அறிக்கை இதுக்கு நல்ல சான்று. அப்பாவி பொதுமக்களை கொன்ற ராணுவக் கொலைகாரர்களை விட்டால் தானாம் எந்த ஆதரமுமின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவாராம். எனவே படுகொலைகளுக்கு உடந்தையான மைத்திரியும் சிறைகளில் வேண்டியவர்.
 21. 1 point
  வடை, சுட்ட பாட்டியை.... கொன்ற கூகிள்.
 22. 1 point
  கருணாநிதியின் மக்களாகிய... ஸ்ராலின், கனிமொழியை சொல்லியிருக்கின்றார் ராகுல்.
 23. 1 point
 24. 1 point
  மறுப்பதற்கில்லை. ஆனால் ஏதோ ஒருவகையில் சட்டம் ஒரு பாதுகாப்பைக் கொடுக்கின்றது. நேரடியாக மக்களிடம் இருந்து பணம் பறிப்பது வைதியர்களால் சாத்தியமற்று இருக்கின்றது. மேலும் பல்வேறுவிதமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மருத்துவ செலவுக்கு உதவியாகவும் இருக்கின்றது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை சட்டம் சிங்களப் பேரினவாதத்தின் கைகளில் உள்ளது. அது வாள்வெட்டுக் குழுக்களுக்கும் வைத்தியர்களுக்கும் சாதகமாகவே இருக்குமேயன்றி வறுமைப்பட்ட மக்களுக்காக ஒருபோதும் இருக்காது இதனால் மக்கள் மிக பாதிப்புக்க உள்ளாவார்கள். சாதாரணமாக 3 பிள்ளைகளுககு மேல் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 5000 ருபாய் உதவித்தொகை என்ற திட்டமே எவ்வாறு அணுகப்படுகின்றது என்பதைப் பாருங்கள் ஏராளமான காரணங்கள் இருக்கின்றது என நம்புகின்றேன். நிறைய சூரிய ஒளி கிடைக்கின்றது. எல்லா நிலத்திலும் விளையும் உணவுகளில் ஒரே மாதிரியான சத்து இருப்பதில்லை. அதிக ரசாயனங்கள் பாவிப்பதும். மரபணு மாற்றப்படுதலும் என ஏராளமான காரணங்கள் இருக்கின்றது. இயற்கையாக சத்துள்ள மண்ணில் தான் சத்துள்ள காய்கறிகள் விளையும். அந்தவகையில் தாய்மண் வளமானது. ஆனால் பணத்தின் மீதான பாய்ச்சலும் பொருளாதார நெருக்கடியும் தாய்மண்ணிலும் அதிகப்படியான ரசாயன உரப்பாவனையால் மண்வளம் பாதிக்கப்படுகின்றது. ஊரில் சிறு பிராயத்தில் நாட்டுமாட்டுப் பாலை பாவித்தேன் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை ஆனால் இங்கு பால் ஒத்துக்கொள்வதில்லை. வீடுகளுக்குள் அடைபட்ட வாழ்வும் மன அழுத்தமும் என ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். புலம் பெயர் வாழ்வு சிஙகளப் பேரினவாத அடக்குமுறையில் இருந்து ஒரு பாதுகாப்பை தந்துள்ளது ஆனால் ஆரோக்கியம் மன நிம்மதி மகிழ்சி என்பன கேள்விக்குறியாகவே உள்ளது. ஒன்றை இழந்துதான் ஒன்றை அடைய முடியும் என்ற விதியில் பலதை இழந்துதான் இந்த புலம்பெயர் வாழ்வின் அமைப்பும் உள்ளது என நம்புகின்றேன்.
 25. 1 point
 26. 1 point
  மண்ணில விழுந்து.. பிரண்டு.. உடம்பு பூரா சேறு பூசின பின்னும்... மீசையில் மண்படாத ஜீவன். இதுங்க எல்லாம் மக்களுக்கு தலைமை தாங்குவது.. சொறிலங்காவின் சாபக் கேடுகளில் ஒன்று.
 27. 1 point
  யாழ் நூலகத்தை எரித்த, யாழ் ஹாட்லி கல்லூரி நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சி என்ற சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் தற்கால தலைவரான ரணில் மீண்டும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் பிரதமராக ஆகியுள்ளார். இதனால் திட்டமிட்ட இனவழிப்பை எதிர்கொள்ளும் தமிழர்களுக்கு உரிய நீதி நியாயம் கிடைக்காது.
 28. 1 point
  சிங்கள-பௌத்த அரசின் நீதித்துறை இதுவரை தமிழினத்துக்கு உரிய நீதிகள் எதையும் வழங்கிய சரித்திரம் இல்லை.
 29. 1 point
  தான் செய்த கொலைகளையும், கொள்ளையடித்த சொத்துக்களையும் கண்டுகொள்ள கூடாது என்ற பேராசையில் அனுப்பப்பட்ட வாழ்த்தாக இருக்கவேண்டும்.
 30. 1 point
  இந்தத் தீர்வை யார் முன்வந்து நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் கடவுளுக்கு இணையாக உலக மக்களாலும் போற்றப்படுவார்கள் என்பது திண்ணம்.
 31. 1 point
  இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் என்கிற முறையில் இம்மாணவர்களின் பெறுபேறுகள் பற்றி பெருமகிழ்ச்சி அடைவதோடு, இதுதொடர்பான எனது கருத்தினையும் இங்கே பதிவிடலாம் என்று நினைக்கிறேன். தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுப்பதென்பது வெறும் இரண்டு வருடங்களில் தமிழினைக் கற்று அல்லது கற்பித்து நடக்கக்கூடிய ஒரு விடயமல்ல என்பது பலருக்கும் தெரிந்த விடயம். மாணவர்கள் ஆரம்பப் பள்ளியிலிருந்து சிறிது சிறிதாக தாம் பெற்றுக்கொண்ட தமிழறிவினூடாகத்தான் உயர்தரத்தில் சிறப்பாகச் செயற்பட முடியுமேயன்றி, வானிலிருந்து குதித்து வந்து வெறும் ஒன்று அல்லது இரு வருடங்களில் தமிழினை அடிப்படையிலிருந்து கற்று சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுவிடமுடியாது. இம்மாணவர்களில் பெரும்பாலானவர்களை அவர்களின் சிறுபராயத்திலிருந்து நான் அறிவேன். நான் பாடசாலையில் உதவுவதற்காக இணைந்தபோது இவர்கள் 3 ஆம் அல்லது 4 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களுடன் சேர்த்து இன்னும் குறைந்தது 40 அல்லது 50 மாணவர்கள் இவர்களின் தரத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமாக இம்மாணவர்கள் தரமேற்றப்படும்பொழுது, ஆசிரியர்களினதும், பெற்றோரினதும் முயற்சியாலும், இடைவிடாத ஊக்குவிப்பினாலும், தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுக்கவிரும்பிய மாணவர்கள் தொடர்ந்தும் முன்னேற, மற்றையவர்கள் தமிழினை வாழ்க்கைக்கு உபயோகிக்க முடிந்தால் போதும், பரீட்சைக்காக வேண்டாம் என்பதுடன் தமது கற்றலினை நிறுத்திக்கொள்வார்கள். ஆக, பலவருடங்களாக வெவ்வேறு ஆசிரியர்களின் ஊக்குவிப்பினாலும், தன்னலமற்றை கற்பித்தலினாலும் தமிழறிவூட்டப்பட்ட இம்மாணவர்கள் உயர்தரத்தினை அடையும்பொழுது தமிழ்பற்றிய ஒரு பூரண அறிவைப் பெற்றிருந்ததுடன், உயர்தரத்தில் மாணவர்களுக்கு தமிழ்ப் பரீட்சையினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான சிறப்புக் கற்பித்தல் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சிறப்புப் பயிற்சிபெற்ற தமிழ் மொழியில் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்ற ஆசிரியர்களினால் மெருகூட்டப்பட்டு வந்தனர். உயர்தரத்தில் கற்பித்த ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும், வேலை அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது பொன்னான நேரத்தை மாணவச் செல்வங்களுக்குத் தமிழறிவூட்டப் பயன்படுத்தவேண்டும் என்கிற அவாவும், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை எடுத்து பல மீட்டல்ப் பயிற்சிகளைச் செய்ததன் மூலமும் மட்டுமே இப்பெறுபேறு சாத்தியமாயிற்று என்றால் மிகையாகாது. நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதுபோல, நான்கு பிரிவுகளான, எழுத்துப் பரீட்சை, கேட்டலும் பதிலளித்தலும், வாசித்தலும் பதிலளித்தலும் மற்றும் வாய்மொழித்தொடர்பாற்றல் ஆகியவற்றினைக் கற்பிக்க 4 அல்லது 5 ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கிறார்கள். ஆக, இவற்றுள் ஒரு பாடத்தில் மாணவர்கள் திறம்படச் செய்யாவிட்டாலும்கூட, அவர்களின் மொத்தப் பெறுபேறு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை. எழுதுதலுக்கு 20 புள்ளிகள், வாசித்தலுக்கும் எழுதுதலுக்கும் 25 புள்ளிகள், கேட்டலுக்கும் எழுதுதலுக்கும் 30 புள்ளிகள் மற்றும் வாய்மொழித்தொடர்பாடலுக்கு 25 புள்ளிகள் என்று 100 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஆகவே இந்த நான்கு பாடங்களிலும் சிறப்பாகச் செய்யும்போது மட்டுமே ஒரு மாணவர் அதியுயர் சித்தியைப் பெற முடியும். ஆகவே, இந்த 4 பாடங்களையும் கற்பித்தவர்களில் எவரும் ஒருவர் தன்னால் மாத்திரமே மாணவர்களுக்கு இந்தப் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன என்று உரிமை கோருவதோ அல்லது பெருமைகொள்வதோ நகைப்பிற்கிடமானது மட்டுமன்றி, இம்மாணவர்களின் 12 வருடகால தமிழ்க் கற்றலில் தம்மாலான அனைத்து வகைகளிலும் தன்னலமற்ற சேவையாற்றிய ஏனைய பல ஆசிரியர்களின் சேவையையும் தியாகங்களையும் தட்டிப்பறிப்பதுடன் அவர்களைக் கேவலப்படுத்துவதுமாக ஆகிவிடுகிறது. ஆகவே, ஊடகங்களில் வெளிவரும் இது தொடர்பான செய்திகள் இம்மாணவர்களின் வளர்ச்சியில் பங்குபற்றிய அனைத்து ஆசிரியர்களினதும் தமிழ்ப்பணியை முன்னுக்குக் கொண்டுவருவதோடு, தனிமனித வழிப்பாட்டுக்கான முயற்சிகளை அறவே களைந்துவிடவேண்டும் என்பதும் எனது அவா. இறுதியாக, இம்மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் மிகவும் பெருமைக்குரியவை. இவர்களின் இந்த சிறப்பில் பங்குகொண்ட சிறுவயது ஆசிரியர்கள் முதல், இறுதியாகக் கற்பித்த அனைத்து உயர்தர ஆசிரியர்கள் வரை போற்றுதற்குரியவர்கள். இவர்களை சிறுபராயம் முதல் தமிழில் வளர்த்தெடுத்து இன்று இவ்வாறான உயர்நிலைக்கு உயர்த்த உதவிய அனைத்து வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் எனது நன்றிகளும் பாராட்டுதல்களும். குறிப்பு : இம்மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக வென்ற்வேத்வில்த் தமிழ்ப் பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவு கீழே,
 32. 1 point
  இதோட போதும் .. கிளம்பிடலாம்னு சொன்னனே கேட்டீயா ..? நம்மள பத்தி ரீவியில் வரும் ..பேப்பர்ல போடுவாங்க.. எல்லாரும் பேசுவாங்கனு .. சொன்னையே அது இதானா ?
 33. 1 point
  கே.என்.சிவராமன் -31 ஓவியம்: ஸ்யாம் துடிக்கும் இதயத்துடன் குரலின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கரிகாலன் கதவைத் திறந்தான். வலது காலை எடுத்து வைத்து அறைக்குள் நுழைந்தான்.தன்னைத் தொடர்ந்து சிவகாமியும் அறைக்குள் வந்ததையோ அல்லது அந்த அறையின் உட்புற அழகையோ கவனித்து ரசிக்கும் நிலையில் அவன் இல்லை.பார்வை ஒரே இடத்தில்தான் நிலைகுத்தி நின்றது. அந்த இடமும் அவனை இப்படியும் அப்படியும் அசையவிடாமல் கட்டிப்போட்டது. இத்தனைக்கும் அது வெறும் நாற்காலிதான். ஆனால், சாதாரண இருக்கை அல்ல. சிம்மாசனம்!வியப்பும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் சந்தேகமும் ஒருசேர கரிகாலன் மனதில் எழுந்தன. பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் பெரு வணிகர் மாளிகையில் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்ட இருக்கைகளும் அதில் வைர வைடூரிய கற்கள் பொருத்தப்பட்டும் இருக்கலாம்; இருக்கவும் செய்தது. அவனே பலமுறை அதைப் பார்த்திருக்கிறான். அதில் அமர்ந்தபடிதான் பெருவணிகர் அவனுடன் பேசவும் செய்திருக்கிறார். ஆனால், சிம்மாசனம்..? வாய்ப்பே இல்லை. பல்லவ நாட்டின் செல்வ வளத்தை தீர்மானிப்பவராகவும் அதிகரிப்பவராகவுமே இருந்தாலும் மன்னருக்கு, தான் சமம் அல்ல என்பதை எப்போதுமே பெரு வணிகர் நினைவில் வைத்திருப்பார். அதனாலேயே அரண்மனையை அலங்கரிக்கும் பொருட்களையோ மன்னர் பயன்படுத்தும் சாதனங்களையோ தன் மாளிகையில் அவர் வைத்துக் கொள்ளவும் இல்லை; பயன்படுத்தவுமில்லை. அப்படியே விலையுயர்ந்த பொருட்கள் தனக்குக் கிடைத்தாலும் அதை மன்னருக்கே காணிக்கையாகச் செலுத்துவார். அப்படிப்பட்ட பெரு வணிகரின் மாளிகையில், அதுவும் அவரது அந்தரங்க அறையில் மன்னர் அமரும் சிம்மாசனத்துக்கு சமமான இருக்கை எப்படி வந்தது..? ஒருவேளை இங்கு சாளுக்கிய மன்னர் வருகை தரலாம் என்பதற்காக சிம்மாசனத்தின் மாதிரியில் ஓர் இருக்கையை தயார் செய்திருக்கலாம். அதற்காக அதில் மன்னராக இல்லாதவர் எப்படி அமரலாம்..? ‘‘என்ன பார்க்கிறாய் கரிகாலா..?’’ பிசிறில்லாமல் வாளின் கூர்மையுடன் ஒலித்த குரல் கரிகாலனின் சிந்தனையை அறுத்து எறிந்தது. நிமிர்ந்து குரலுக்கு உரியவரை ஏறிட்டவனின் கண்களில் மரியாதையும் பக்தியும் குடிபுகுந்தது. எழுந்த கேள்விகள், கேட்க நினைத்த வினாக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் கரைந்தன.தன்னையும் மீறி ஓடோடிச் சென்று சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். ‘‘எழுந்திரு குழந்தாய்...’’ பாசத்துடன் குரல் ஒலித்தது.கட்டுப்பட்டு எழுந்தவன் முட்டி போட்டு பாதங்களைத் தொட்டு வணங்கினான். குரலுக்கு உரியவர் அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். மீண்டும் பாதங்களைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டு பவ்யமாக எழுந்தவன்,குரலுக்கு உரியவரின் முன்னால் கைகட்டி நின்றான். இதுவரை கரிகாலனுக்குப் பின்னால் நின்றிருந்த சிவகாமி, இப்போது அவனைக் கடந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின் அருகில் நின்றாள். தன் கைகளால் அமர்ந்திருந்தவரின் தோளைப் பற்றினாள்! பற்றிய கரங்களை குரலுக்கு உரியவர் வெகு பிரியத்துடன் பிடித்தார்.இதனைக் கண்ட கரிகாலனின் கண்கள் அகல விரிந்தன.‘‘என்ன பார்க்கிறாய் கரிகாலா..?’’ புன்னகையைக் கசியவிட்ட குரலுக்கு உரியவரை அந்தக் கணத்தில் மீண்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை மரியாதையுடன் பார்த்தான்.அந்த சிம்மாசனம் அவருக்காகவே தயாரிக்கப்பட்டது போல் நீக்கமற அதில் அமர்ந்திருந்தார். இடது காலை மடித்தும் வலது காலை உயர்த்தி குத்துக்காலிட்டும் சிம்மாசனத்தில் வைத்திருந்தார். கம்பீரம் என்றால் அப்படியொரு கம்பீரம். எழுந்து நின்றால் நிச்சயமாக சராசரியான பெண்களைவிட அதிக உயரம் இருப்பார். அந்த உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு. அடர் சிவப்பும் இல்லாமல் மென் சிவப்பும் இல்லாமல் மத்திம சிவப்புப் புடவையை அணிந்திருந்தார். தலைக் கேசம் முடிச்சிடப்பட்டிருந்தது. நெற்றிச்சுட்டியும் கழுத்தில் தொங்கிய நகைகளும் தங்கள் பிறவிப் பயனை அடைந்தன. அவர் அசையும்போதெல்லாம் அசைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. புருவ மத்தியில் வட்டமாகத் தீட்டப்பட்டிருந்த திலகமும் நாசியில் ஜொலித்த வைர மூக்குத்தியும் அவரது அந்தஸ்தை எதிராளிக்கு பறைசாற்றின. இத்தனையும் மீறி அந்த முகத்தில் ஜொலித்த உறுதியும் கண்களில் வழிந்த அன்பும் கரிகாலனை நெகிழ வைத்தன. ‘‘தங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை தாயே...’’ கண்கள் பனிக்க பதில் சொன்னான்.‘‘நானும்தான்!’’ கலகலவென்று சிரித்தபடி சொன்ன சிவகாமி, குனிந்து அந்த அம்மையாரின் முகத்தைத் தடவினாள். ‘‘உங்கள் பிள்ளையுடன் பேசிக்கொண்டிருங்கள்... அவர் களைத்திருக்கிறார்! பருகுவதற்கு பழரசம் கொண்டு வருகிறேன்...’’ கரிகாலனைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு உட்புறமாக விரைந்தாள். அவள் செல்வதையே கண்கள் இடுங்க கரிகாலன் பார்த்தான். காஞ்சிக்கு புதியதாக வந்திருப்பவள் என பல்லவர்களின் புரவிப் படைத்தளபதியான வல்லபனால் தன்னிடம் அறிமுகம் செய்யப்பட்டு முழுதாக ஒரு திங்கள்கூட ஆகவில்லை. இடைப்பட்ட நாட்களில் இருவரும் தனித்திருந்த வேளைகளிலும் அவரவர்களின் பின்புலம் குறித்து உரையாடியதில்லை. அப்படியிருக்க தன் பெரிய தாயாரை அவளுக்கு எப்படித் தெரியும்..? சிவகாமியின் செயல் அவனுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது என்றால் அடுத்து ஒலித்த பெரிய தாயாரின் குரல் அவனை அதிர்ச்சியின் விளிம்புக்கே அழைத்துச் சென்றது.‘‘சரியான பெண்ணைத்தான் பிடித்திருக்கிறாய்! நம் குடும்பத்துக்கு ஏற்ற மணமகள்! உன் தந்தையும் தாயும் தேடியிருந்தால்கூட இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை உனக்குக் கிடைத்திருக்காது!’’ துள்ளியபடி ஓடிய சிவகாமியைப் பார்த்தபடியே சொல்லிவிட்டு அவனை நோக்கித் திரும்பினார். பிரமை பிடித்தபடி கரிகாலன் நின்றான். பெரிய தாயார் என்ன சொல்கிறார்..? ‘‘தாயே...’’ குழப்பத்துடன் அவரது கண்களை நோக்கினான்.‘‘சிவகாமி எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டாள்!’’‘‘எல்லாவற்றையும் என்றால்..?’’ கரிகாலனுக்கு சொற்கள் வர மறுத்தன.‘‘மல்லைக் கடற்கரையில் நீங்கள் சந்தித்தது முதல் காபாலிகனின் ஓலையைக் கண்டு காஞ்சி மாநகரத்துக்குள் நீங்கள் நுழைந்தது வரை!’’‘‘எப்போது தாயே..?’’‘‘சில நாழிகைகளுக்கு முன்..?’’கரிகாலன் பேச்சிழந்து நின்றான். அதைக் கண்டும் காணாததுபோல் புன்னகை பூக்க அவனது பெரிய தாயார் தன் உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘சத்திரத்தில் அவளைத் தங்கச் சொல்லியிருந்தாயாமே! ஏதோ ஒரு கடிகை மாணவன்... பார்க்க பாலகன் போன்று இருந்தானாம்... அவன் வந்து உனக்கு ஆபத்து என்றதும் பதறிவிட்டாளாம். இந்தப் பக்கமாக நீ வருவாய் என்று அவன் சொன்னதும் ஓடோடி வந்தாளாம்...’’‘‘நீங்கள் அவளைச் சந்தித்தது..?’’ ‘‘இந்த மாளிகை வாயிலில். கோயிலுக்குச் சென்றுவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தேன். நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தவளை அழைத்து என்னவென்று விசாரித்தேன். உன்னைப் போலவே என் முகத்தைக் கண்டதும் எல்லாவற்றையும் கொட்டிவிட்டாள்! அவள் சொன்ன அங்க அடையாளங்கள் உன் தோற்றத்துக்கு பொருந்தி வந்தன. உன்னைத்தான் குறிப்பிடுகிறாள் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை! ’ ’இமைக்காமல் தன் பெரிய தாயாரையே கரிகாலன் பார்த்தான். பெற்றவர் இல்லை. ஆனால், பெற்றவருக்கும் மேலாக பாலூட்டி சீராட்டி வளர்த்தவர். அதனாலேயே இவரையும் சரி, பெரிய தந்தையையும் சரி, ஒருபோதும் அவன் அந்நியராகக் கருதியதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் ‘தாயே... தந்தையே...’ என்றுதான் அழைத்து வருகிறான். எந்தக் காரியம் செய்தாலும் பெரிய தாயாரின் ஒப்புதலைப் பெற்றபிறகே தன் தந்தை செய்வார். அதையே தனயனும் கடைப்பிடிக்கிறான். தங்களுக்கு குழந்தை இல்லையே என அவர்களும் வருத்தப்பட்டதில்லை. கரிகாலனும் அப்படியொரு நினைப்பு அவர்களுக்கு வர அனுமதித்ததில்லை.எப்போதும் அன்பையும் தன் நலத்தையும் மட்டுமே பெரிய தாயார் பெரியதாக நினைப்பார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதை அணு அணுவாக அனுபவித்தும் வருகிறான்.ஆனால், முதல்முறையாக அந்த அறையில் அவனுக்கு பலவிதமானஐயங்கள் எழுந்தன. கோர்வையாக பெரிய தாயார் நடந்தவற்றைச் சொன்னாலும் பல இடங்களில் அவை முரண்பட்டன. உறையூரில் இருக்க வேண்டியவர் காஞ்சிக்கு எப்போது வந்தார்... ஏன் வந்திருக்கிறார்... பெரிய தந்தையும், தந்தையும் என்ன செய்கிறார்கள்... வந்தவர் எப்படி பெரும் வணிகரின் மாளிகையில் தங்குகிறார்... கதவைத் திறந்து தன்னை வரவேற்ற சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கும் தன் பெரிய தாயாருக்கும் என்ன தொடர்பு... குறிப்பாக சிம்மாசனத்தில் அமரும் அதிகாரம்... பல்லவர்களின் தோழர்களாக, அவர்களது நலம் விரும்பிகளாக தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்து வருகையில் திடீரென சாளுக்கியர்களுடன் நெருக்கம் ஏன்..? எப்போதையும் விட இப்போதல்லவா பல்லவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்... இழந்த நாட்டை அவர்கள் மீட்க உதவ வேண்டியது நம் கடமையல்லவா..? கேள்விகள் விழுதாகி மரமாகி தோப்பாகப் படர்ந்தன. கரிகாலனின் உடல் நடுங்கியது. சிவகாமியின் மீதான சந்தேகம் தன் பெரிய தாயாரின் மீதும் திரும்புவதை எந்தநோக்கில் எடுத்துக்கொள்வது..? இது தேசத் துரோகமா அல்லது தேச நலனா..?‘‘என்ன கரிகாலா அமைதியாகி விட்டாய்..?’’கேட்ட பெரிய தாயாருக்கு பதில் சொல்வதற்காக கரிகாலன் வாயைத் திறந்தான். அதற்குள் வேறொரு இடத்திலிருந்து சொற்கள் வந்து விழுந்தன.‘‘சிவகாமி எப்போது வருவாள் என ஆவலுடன் உங்கள் மகன் எதிர்பார்க்கிறான்... அப்படித்தானே..?’’ கேட்டபடியே உள்ளறையிலிருந்து முகமெல்லாம் மலர்ச்சியுடன் கம்பீரமாக நடந்து வந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், கரிகாலனின் தோளைத் தட்டி கண்சிமிட்டிவிட்டு சிம்மாசனத்துக்கு அருகில், ஒரு படி கீழே போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.‘‘சின்னஞ்சிறுசுகள் அல்லவா... அப்படித்தான் இருக்கும்...’’ சாளுக்கிய அமைச்சரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு கரிகாலனை ஏறிட்டார் பெரிய தாயார்.கரிகாலன் சிலையென நின்றான்.மடி கனத்தது. அதிலிருந்த சுவடிக் கட்டுகளும்தான்! (தொடரும்) http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14629&id1=6&issue=20181214
 34. 1 point
  ஆதி மனிதன் காதலுக்கு முன் உதித்த காதல் இதுதான் , ஆதாம் ஏவாள் ஜோடிக்கு முன் அமைந்த ஜோடியும் இதுதான்.......!
 35. 1 point
  கடந்த ஐம்பதாண்டுகாலத்துக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலை மக்கள் கடவுள் இல்லை என்ற கருவில் இருந்து வளர்ந்த திராவிடக் கட்சிகளிடமே கொடுத்துள்ளார்கள். ஆனால் வாக்களிக்கும் மக்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கிடையாது. கடவுள் என்ற கருப்பொருளை வைத்து உண்டா இல்லையா என்ற கேள்வி பதில்கள் உலகில் ஏனைய மக்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவானதில்லை. ஒரு கோணத்தில் அணுகினால் தமிழ்மொழியே தமிழர்களின் கடவுள் என்றும் சிந்திக்க முடியும் அவ்வளவு ஆழமாக மொழி கடவுள் சார்ந்து பிணைந்துள்ளது. இந்திய மத்திய ஆட்சியாளர்கள் இன்றய காலத்தில் தமிழை திட்டமிட்டு அழிபதென்றில்லை அன்றய காலத்திலும் தமிழை நீச பசை என்று எவ்வளவு தூரம் தாள்த முடியுமோ அவ்வளவு தூரம் நசுக்கவே செய்தனர். நீண்டகாலமாக மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. அவ்வாறே இங்கும் பல கருத்துக்கள் பதிந்துள்ளேன் ஆனால் அண்மைக்காலமாக இக்கருத்தில் இருந்து மாறுகின்றேன். எனைய மொழிகள் போல் தமிழ் சத்தமாக மட்டுமின்றி அது ஒரு பொருள் தாங்கிய மொழி என்று மேலே உள்ள காணொளியில் சொல்வது சார்ந்து சிநதிக்கின்றபோது தொடர்பாடல் கருவி என்ற வட்டத்திற்குள் நிற்க முடியாதுள்ளது.. மொழி கடவுள் சமயம் சாதி இனம் மதம் என்ற பல்வேறு தளங்களில் தத்தளிக்கின்ற போதும் மொழி சார்ந்தே தமிழர்களின் அரசியல் அடிப்படையில் வாழ்கின்றது அந்தவகையில் இந்த மொழி பெரியாரை பயன்படுத்தியது எனலாம். கருணாநிதி எம் ஜி ஆர் போன்றவர்கள் பெரியாரையும் மொழியையும் பயன்படுத்தினார்கள் எனலாம். இதனடிப்படையில் எதிர்காலத்தில் நேரடியாக மொழியை அடிப்படையாக வைத்து வளரும் நாம்தமிழர் சார்நது மக்கள் ஆதரவு மாற வாய்பிருக்கின்றது.
 36. 1 point
  சம்பந்தன் ஊர் திருகோணமலை இல்லையோ? மக்களை படுகொலை செய்யும் ஜனநாயகத்துக்கு பாடுபடும் அந்த மனுஷனை நம்பி வேலையில்லன்னு புரிகிறது.
 37. 1 point
  சக நண்பனை காப்பாற்ற சென்று இறந்து போன பிருந்தன் என்ற ஓர் தமிழ் சிறுவனின் பெயர் பலகை கொண்ட பார்க்கின் இடம் என்று நினைக்கிறேன் ரதி சில வருடங்களுக்கு முன்பு படித்த செய்தியின் ஞாபகம் வந்தது
 38. 1 point
  தூரத்து கானல்போல தெரிகிறது ஒரு முகம் நெருங்க நெருங்க கானலும் காணாமல்ப் போக வெறுமைகள் தொடர்கிறது சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக மனம் வெதும்பித் தணிகிறது சொன்னவையும் கேட்டவையும் ஆழ்கடல் தூரத்தில் எதிரொலிக்க நியாயங்கள் கேட்டுக் கொல்வதோடு மட்டுமே இப்போது நாட்கள் கடக்கிறது பதிலில்லாக் கேள்விகள் கேட்பதால் வெறுமையே பதிலாக - ஒரு மனதில் கோபம் கொப்பளிக்கிறது விதி பிய்த்தெறிந்து புதிதாக எழுது கதையொன்று உலகத் தவறெலாம் சுரண்டியெடு - அதைத் தலைமேல் கொட்டிக்கொண்டு ஆர்ப்பரி கூடவே இரு தளிர் கொண்டு போ - உன் துயர் சேர்த்துகரைத்து ஊற்று அது அவற்றின் விதியென்று பறை ! விடியா விடியலாய் உதிக்கும் ஒரு உலகு - உனக்கு !
 39. 1 point
 40. 1 point
  கைதி எண் அகற்றப்பட்டு சுதந்திரமாக உலவ விட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்
 41. 1 point
  எல்லாம் ஏற்கனவே பலரும் பேசியும் எழுதியும் பாடியும் சென்ற தலைப்புகள்தான் டம்பி... நாமளும் சும்மா ஏதாவது கிறுக்குவம் என்று சக்கடத்தார் ஏறி சவாரி செய்த குதிரையில் தமிழை நம்பி ஆரம்பித்துள்ளேன். வந்து வாசித்துபின்னூட்டம் போட்டு தொடர்ந்து செல்ல ஊக்கமூட்டியதற்கு நன்றி தனிக்காட்டு ராஜா மற்றும் விருப்புப் புள்ளிகள் வழங்கி வரவேற்றிருக்கும் ரோமியோ , ரதி , கிருமி ஆகியோருக்கும் நன்றிகள்.
 42. 1 point
  இதற்கு ஜீவாவின் பதில் என்ன. தன்னை மாதிரி சிங்களவர்களின் காலில் விளச்சொல்வாரோ