• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. ரஞ்சித்

  ரஞ்சித்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   5,686


 2. தனிக்காட்டு ராஜா

  தனிக்காட்டு ராஜா

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   7,520


 3. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   5,556


 4. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   17,425Popular Content

Showing content with the highest reputation on 01/10/2019 in all areas

 1. 3 points
  அரசியலுக்குள் ஆட்சி கிழக்கில் பறி போனது பல இடங்கள் கிழக்கில் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டை வெட்டுவான், செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், அட்டைப்பள்ளம், சவளக்கடை, திராய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை வாழைச்சேனை, பூநொச்சிமுனை, ஆரையம்பதி, செங்கலடி ஏறாவூர் வாகரை என நூற்றுக்கணக்கான தமிழ் கிராமங்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அக்கிராமங்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டது .அதேபோல அம்பாறையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி, மீனோடைக்கட்டு, திராய்க்கேணி, பல கிராமங்கள் முழுமையாக பறிக்க பட்டு விட்டது. கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மீனோடைக்கட்டு தமிழ் வித்தியாலயம் என காணப்பட்ட பாடசாலை இன்று முஸ்லீம் பாடசாலையாக காணப்படுகிறது அதுமட்டுமல்லாது கிழக்கில் 1990களின் பின் பல சைவ ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டு அவை பள்ளிவாசல்களாகவும் சந்தைகளாகவும் குடியிருப்புக்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. வாழைச்சேனை காளிஅம்மன் ஆலயத்தின் காணியை சுவீகரித்து அதில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கான சந்தையும் இறைச்சிக்கடையும் அமைத்ததாகவும் அதற்கான நிதியை தானே ஓதுக்கியதாகும் என ஆளுநராக நியமிக்கப்படும் ஹிஸ்புல்லா வெளிப்படையாக சொன்னார் .மீனோடைக்கட்டு பிள்ளையார் கோவில் முற்றாக இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இறைச்சிக்கடையுடன் கூடிய வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டமாவடி பிள்ளையார் கோவில், கரைவாகு காளிகோவில், முற்றாக அழிக்கப்பட்டு இறைச்சிக்கடைகள் கட்டப்பட்டிருக்கிறது. சம்மாந்துறை காளிகோவில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோவில், என கிழக்கு மாகாணத்தில் இருந்த பல சைவக்கோவில்கள் இருந்த இடம்தெரியாமல் இடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இதன் பின்னனியில் எல்லாம் முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் இருந்தனர் . இந்த கொடூரங்களை 1990 க்கு பின்னால் கிழக்கில் பலம் பெற்ற புலிகள் தடுத்து நிறுத்தினர் . சில இடங்களில் வன்முறையும் எங்கள் தமிழ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது .இதை ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் அந்த காலத்தில் வேறு தெரிவுகள் இருக்கவில்லை 2009 க்கு பின்னர் மீண்டும் பழைய நிலை தோற்றுவிக்க பட்டு இருக்கிறது .பல ஏக்கர் மேச்சல் தரைகள் பறி போய் இருக்கிறது . கோவில் சிலைகள் திருடப்பட்டு இருக்கிறது .விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்க பட்டு இருக்கிறது .மாடுகள் உட்பட கால்நடைகள் நாள்தோறும் திருடப்படுகிறது . சட்டத்துக்கு புறம்பாக அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகினறன .. இப்போது கோவில் காணியை திருடி சந்தை கட்டிய குற்றாவளியை ஆளுநராக நியமித்து இருக்கிறார்கள் . வடக்கு மக்கள் வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை ராணுவம் என்கிற 4 அமைப்புகளிடம் நிலங்களை தொடர்ச்சியாக பறி கொடுத்து வருகிறார்கள் ..ஆனால் கிழக்கு மக்கள் இந்த 4 அமைப்புகள் மற்றும் முஸ்லீம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடம் நித்தம் நிலங்களை இழந்து வருகிறார்கள் . தமிழ் மக்கள் தகுதியான தலைமையை தேர்ந்து எடுக்காத வரை இந்த கொடூரங்கள் தொடரும் . இது எங்கள் கிழக்கின் நிலை
 2. 2 points
  நுனிப்புல் மேய்ந்தது நானல்ல. நீங்களே. உண்மையை மறைக்க பார்பன தினமலரின் இணைப்பில உள்ளதை மேற்கோள் காட்டாமல் பகவற்கீதையையும் இந்து மத மணு நீதியையும் வாசியுங்கள். பிரம்மாவின் சிரசில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன், தொடையில. இருந்து பிறந்தவன் வைசிகன், கால்களில் இருந்து பிறந்தவன் சூத்திரன். இதுவே கீதையிலும் மனு தர்மத்திலும் சொல்லப்பட்ட வருணாசிரம கோட்பாடு. நாகரீக உலகத்தில் இருந்து இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதாலும் மக்களின் விழிப்புணர்வு காரணத்தாலும் போலியாக அதை மறுத்து பிறப்பில் இருந்து வருவதல்ல என்று ஆரிய பார்பனரகள் எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும் அதை அவர்கள் ஒரு பிரச்சாரமாக செய்கிறாரகளேயொழிய உண்மையில் அதை கடைப்பிடிப்பதில்லை. மகாபாரத்திலேயே இதற்கு பல உதாரணங்கள் உண்டு. கர்ணன் சத்திரயன் அல்ல தேரோட்டி மகன் என்று பல தடவை ஏளனப்படுத்தப்பட்டான். பிறப்பால் பிராமணன் அல்லாததால் பரசுராமன் கர்னனுக்கு வில்வித்தை கற்று கொடுக்க மறுத்தார். பிறப்பால் பிராமணன் என்று பொய் சொல்லியே கர்னன் பரசுராமரிடம் வில்வித்தை கற்றான்.பொய் சொன்ன காரணத்திற்காக சாபமும் பெற்றான். வேடுவப்பிறப்பு என்பதால் ஏகலைவனுக்கு துரோணர் வில்வித்தை கற்றபிக்க மறுத்து காழ்புணர்சியால் பெரிவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. இராமாயணத்தில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம் ( கல்வி கற்கலாம்) என்ற காரணத்தை வைத்து தவம் செய்த கீழஜாதி சம்புகன் இராமனால் தலை வெட்டி கொல்லப்பட்டான். இவ்வாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாத பல சான்றுகள் மகாபாரதம், இராமாயணம என்ற ஆரிய இதிகாசங்களில் உண்டு. அண்மையில் சங்கர மடத்திற்கு சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு சங்கராசீரியாருக்கு பக்கத்தில் கதிரை போடப்பட்டு அமரவைக்கப்பட்டது அதேபோல. அங்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாக்கிருஷ்ணனுக்கு பிராமணர் அல்லாததால. அமைச்சர் என்றும் பாராது தரையில் இடம் வழங்கப்பட்டது. இந்து மதம் தான் சாதியநோயின் ஊற்று எனபதற்கு இவ்வாறு பல் சான்றுகள் உண்டு. இதில. குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம் இந்தி கிரிக்கெட் அணியில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாசாரியார் வருது வழங்கப்படுகிறது. அதாவது நன்றாக விளையாடும் கீழ்ஜாதி வீரர்களை ஏகலைவனுக்கு கட்டை விரல் எடுத்தது போல் ........ discrimination!!!!!!!!!! செய்தால் இந்த விருது கிடைக்குமோ!!!!!!
 3. 2 points
 4. 2 points
  இங்கு குறிப்பிடும் போராளிகளின் இயக்கம் சாதி மதமற்ற ஒரு சமூகத்தையே உருவாக்கவே முயற்சித்தது. அவ்வியக்கத்தின் அரசயலறிஞரின் நூல்களில் இவை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஈழத்தமிழினம் மதத்தால் அடையாளப்படுத்தப் பட்டொன்றதல்ல. அவ்வாறு எம்மை அடையாளப்படுத்த முனைவது எம்மை பலவீனப்படுத்தும்.
 5. 2 points
  ரதி, இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. கருணா பிரிந்தபொழுது ஒரு முஸ்லீம் அமைச்சரூடாகத்தான் கொழும்பிற்குச் சென்றார். அன்றிலிருந்து இன்றுவரை மகிந்தவின் கையாளாகத்தான் வேலை செய்தும் வருகிறார். அண்மையில் நடந்த மட்டக்களப்பு நகர் இரு பொலீஸ்காரர் கொலை உற்பட. ஆகவே, கருணா என்பவர் பேரினவாதத்தின் ஒரு கருவியே அன்றி கிழக்குத் தமிழருக்கான விடிவெள்ளி கிடையாது. நீங்கள் சொல்வதுபோல, முஸ்லீம்களுடன் அவர் முரண்பட்டு, கிழக்கைப் பாதுகாப்பார் என்பது செல்லாது ஏனென்றால், அவர் சிங்களத்துக்கு இன்னொரு பக்கத்தால் வேலை பார்ப்பார். முஸ்லீகளால் பறிக்கப்படாத தமிழ் நிலம், சிங்களவருக்குத் தாம்பாளத்தில் வைத்துக் கருணாவால் கொடுக்கப்படும். அப்போதும் கூட இழப்பது தமிழர்தான். கருணாவினால் சிங்களப் பேரினவாதத்தைவிட்டு வெளியே வரமுடியாது. சிங்கத்தின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார், விட்டால் அது அவரைக் கொன்று தின்று ஏப்பம் விட்டுவிடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், அவருக்கு மகிந்த எனும் இனக்கொலையாளிக்குச் செம்பு தூக்குவதைவிட வேறு வழியில்லை. தமிழ்க் கூட்டமைப்பிற்கு கருணா நிச்சயம் மாற்றீடாக இருக்கமுடியாது. ஏனென்றால் தமிழ்க் கூட்டமைப்பு செய்வது அரசியல், கருணா செய்வது கூலிக் கொலைகள்.
 6. 2 points
  பாராளுமன்றப் பதவியையும், அரசின் மறைமுக ஆதரவினையும் கொண்டே கூட்டமைப்பு தலைமையினால் விக்கினேஸ்வரன் ஓரம்கட்டப்பட்டார் என்பது எனது வாதம். தனது மாகாணசபையில் உறுப்பினர்களின் தயவு இல்லாதபொழுது, அவரால் எவ்வாறு செயற்பட முடிந்திருக்கும்? அவரின் தலைமையை ஏற்பதில்லை என்று உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் ஆதவுடன் கூச்சலிடும்பொழுது அவர் தலைமை தாங்குவது எப்படி? மகிந்தவின் முன்னால் அவர் பதவிப்பிரமானம் செய்துகொண்டார் என்பதால் அவரை மகிந்தவின் ஆள் என்று நீங்கள் நினைப்பது சரியா என்று தெரியவில்லை. அவரது பதவியேற்பு நிகழ்வுகூட மிகவும் இறுக்கமான சூழ்நிலையில்தான் நடந்ததாக எனக்கு நினைவு. இப்படிப் பார்த்தால் விக்கி மட்டுமல்லாமல், இன்று பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றில் மகிந்தவினதோ, மைத்திரியினதோ அல்லது ரணிலினதோ ஆட்களாகத்தான் இருக்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை மகிந்தவுக்கும், மைத்திரியிக்கும் ரணிலுக்குமிடையே அதிக வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. சிங்கக்கொடியசைத்து மகிழ்ந்த சம்பந்தர் ஐயாவை விடவா விக்கியர் தவறானவர்? கஜேந்திரக்குமாரை விக்கியர் ஆதரிப்பது ஏன் தவறென்கிறீர்கள்? கஜேந்திரக்குமார் கூட்டமைப்பிற்கு எதிராக அரசியல் செய்தார் என்பதை விட அவரில் என்ன தவறு கண்டீர்கள்? அவர் எப்படி மகிந்தவிற்கு வேலை பார்க்கிறார் என்று சொல்கிறீர்கள்? இன்று விக்கியருக்கு நடந்ததுதானே அன்று கஜேந்திரக்குமார், அனந்தி, பத்மினி, கஜேந்திரன் ஆகியோருக்கு நடந்தது? விக்கியர் மகிந்தவுக்கு ஆதரவாக விட்ட அறிக்கையினை இங்கே இணைக்க முடியுமா? அதை மீண்டும் ஒருமுறை படிக்க விரும்புகிறேன். மகிந்த அதிகாரத்திலிருக்கும்பொழுது, ராணுவத்தளபதியாகவிருந்த சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதென்று கூட்டமைப்பு எடுத்த முடிவும், மகிந்த சனாதிபதியாக இருந்தபோது, உதவி சனாதிபதியாகவும், உதவி பாதுகாப்பமைச்சராகவும் இருந்த மைத்திரியை ஆதரிப்பதென்று கூட்டமைப்பு எடுத்த முடிவும் எமக்குச் சரியாகப் படுமாக இருந்தால், மகிந்தவின் முன்னால், அரசின் தலைவர் என்கிற ரீதிய்ல் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டதையும் சரியென்றுதானே கொள்ளவேண்டும்? மகிந்த அதிகாரத்திலிருக்கும்போதும், எதிர்க்கட்சியிலிருக்கும்போதும் விக்கியர் தருணத்திற்கேற்றவாறு பேசுவதாக நான் நினைக்கவில்லை. நடந்த போர்க்குற்றங்கள் பற்றித் தொடர்ந்தும் அவர் பேசிவருகிறார். இது மைந்த ஆட்சியிலிருந்தாலென்ன, இல்லாவிட்டலென்ன மகிந்தவைப் பாதிக்கத்தான் செய்யும். இறுதியாக, "சுமந்திரனைக் கூடச் சமாளிக்க முடியாத விக்கியர்" என்ற உங்களின் கருத்திலிருந்தே யார் பிரச்சினைக்குக் காரணம் என்பது தெளிவாகிறது நண்பரே !
 7. 1 point
  புத்தகம் ………………….. உங்கட மகனை நான் அனுப்புகிறேன். அவற்ர புத்தகத்தையும், 50000 ரூபா காசை அட்வான்சாகவும் தாங்கோ. ஓம் தம்பி சொன்ன மாதிரி செய்யிறன். எம்மவரின் புலம்பெயர்வு காலத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று. ஏஜென்ஸிமாருக்கும் எமக்குமான உரையாடல்களில் இச் சொற்கள் சர்வசாதாரணமாகவே வரும் அது என்ன புத்தகம். பாடப்புத்தகம், பாஸ்போட் ( கடவுச் சீட்டு -Passport ), மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகம். ஆகியவை எம்மால் புத்தகமென கூறப்படும் புத்தகங்களாகும். எம்மவருக்கும் புத்தகம் எனப்படும் பாஸ்போட்டுக்கும் இரத்தமும் சதையுமான உறவு ஒன்று உள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக நாம் வெகு சுதந்திரமாக இந்தியாவுக்குப் போய் வந்த ஒரு காலம் இருந்தது. 1974 ஆம் ஆண்டு எனது அப்பாவை பலாலி விமான நிலையம் வரை சென்று இந்தியா பயணமாக வழியனுப்பி வந்தது ஞாபகத்திற்கு வருகிறது. அப்போது பாஸ்போட் இல்லாமல் அவசர காலப் பத்திரம் என்ற ஒரு முறை பயன்படுத்தும் ஆவணம் மூலமாக பயணத்தை மேற்கொண்டோரும் உள்ளனர். நாளாந்தம் காலை 10 மணிக்கு பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்திற்கு விமானமொன்று புறப்படும். அதில் யாழ்ப்பாணத்தில் வெட்டப்பட்ட கிடாய் ஆட்டின் இறைச்சியை விமான நிலைய ஊழியர்கள் மூலமாகத் தமது உறவுகளுக்கு கிரமமாகக் கொடுத்து விட்டோரும் உள்ளனர். கொடிகாமத்திற்கு அங்கால கறுப்பா சிவப்பா எனத் தெரியாமல் தமது ஊருக்குள் முடங்கி வாழ்ந்த காலமொன்றும் இருந்தது. 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் வந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்கள் தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற கைநிறைய உழைக்கும் நிலை வந்தது. அப்போது பாஸ்போட் எடுப்பதற்கான ஆள்களின் தொகை சடுதியாகப் பல மடங்கு அதிகரித்தது. அதனால் அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு என மட்டும் குறித்துப் பாஸ்போட்டை வழங்கும் முறையைக் கொண்டு வந்தது. மத்திய கிழக்கு எனப்பட்ட மேற்காசிய அரபு நாடுகளில் உழைத்த பணம் நாட்டின் நாலா பகுதிகளிலும் புதுப் பணக்காரக் குடும்பங்களை உருவாக்கியது. காலச் சக்கரம் உருண்டது. போர் மேகங்கள் கருக்கொள்ள தப்பிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு எம்மவர் போகத் தொடங்கும் நிலைமை 1980 களின் ஆரம்பத்தில் வந்தது. அப்போது பாஸ்போட்டின் தேவை எழுந்தது. கச்சேரி எனப்பட்ட மாவட்டச் செயலகங்கள் ஊடாக மட்டும் பாஸ்போட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை இருந்தது. அப்படி விண்ணப்பித்தால் 3 மாத கால அளவில் பாஸ்போட் வந்தது. நேரடியாகக் கொழும்பு சென்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினுள் உள்ளால் அலுவல் பார்த்து ஓரிரு நாள்களில் பாஸ்போட் எடுக்கும் வழக்கமும் இருந்தது. புளத்சிங்கள தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக வந்த ரொனிடி மெல் வரவு செலவுத் திட்டத்தின் நிதிப் பற்றாக்குறைக்கு நிதி பெறும் வழிகளில் ஒன்றாக ஒரே நாளில் பாஸ்போட் பெறும் முறை ஒன்றை 1980 களின் ஆரம்பத்தில் கொண்டு வந்தார். பாஸ்போட் அலுவலகத்தில் அவரைப் பிடித்து இவரைப் பிடித்து இலஞ்சம் கொடுத்து பாஸ்போட்டை ஓரிரு நாள்களில் பெறுகின்றனர். அதை ஏன் அரசாங்கத்திற்கு வருமானமாக மாற்றக் கூடாதென நினைத்து இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார். இத் திட்டம் பெரும் முன்னோடித் திட்டமாகப் பார்க்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்காக வழங்கப்பட்ட பாஸ்போட்டை சகல நாடுகளுக்கும் செல்வதற்கான நடைமுறையாக பொன்ட் சைன் எனப்பட்ட பிணை நிற்கும் நடைமுறை ஒன்றை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி இருந்தது. இதன் படி குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலாக மாதச் சம்பளம் பெறும் ஒருவர் தமது நியமனக் கடிதம், சம்பள விபரப் பட்டியல் ஆகியவற்றைக் கொண்டு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு செல்லல் வேண்டும். அங்கு வைத்து உரிய படிவத்தை நிரப்பி சகல நாடுகளுக்கும் செல்வதற்கான பாஸ்போட் தேவைப்படுபவருக்கான பிணை எனப்பட்ட பொன்ட் சைன் ( Bond Sign) வைத்தல் வேண்டும். அந்தப் பாஸ்போட்டில் பொன்ட் வைத்தவருக்கு என மாவட்டக் குறியீட்டு ஆங்கில எழுத்துடன் ஓர் இலக்கம் ஒதுக்கப்படும். அது பாஸ்போட்டில் குறிக்கப்படும். ஒருவருக்கு மாவட்டக் குறியீட்டுடன் ஒரு இலக்கம் ஒதுக்கப்பட்டால் வேறு ஒருவருக்கு அது வழங்கப்பட மாட்டாது. உதாரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பொன்ட் சைன் வைத்தால் அவருக்கு JF 00121 என இலக்கம் ஒதுக்கப்படும். அது போல அரசுக்கு வருமான வரி கட்டுபவர்களும் பொன்ட் சைன் செய்ய முடியும். அவருக்கும் இதே போன்ற நிபந்தனைகளும் உண்டு. அரச உத்தியோகத்தரின் சம்பள அளவுக்கும், வருமான வரி கட்டுபவர்களின் வருமான அளவுக்கும் ஏற்ப பொன்ட் சைன் வைக்கக் கூடிய தகுதி எண்ணிக்கை கூடும். பெரும்பாலும் ஒருவர் இரண்டு மூன்று பேருக்கு மேல் சைன் வைக்க விரும்புவதில்லை. ஏனெனில் வெளிநாட்டுக்குச் செல்பவர் திரும்பி வராவிட்டால் பொன்ட் சைன் வைத்தவர் தான் அதறகுரிய பிணைப் பணத்தைக் கட்ட வேண்டும். இதனால் பொன்ட் சைன் வைப்பவர்கள் தமக்கென ஒரு தொகைப் பணத்தை வாங்கிக் கொண்டு பிணை வைத்தார்கள். நிதி அமைச்சரான ரொனி டிமெல் பின்னாளில் வரவு செலவுத் திட்டப் பிரேரணை மூலமாக சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டைப் பெறுவதற்கான பொன்ட் சைன் முறையை நீக்கி விட்டார். அதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கான பாஸ்போட்டுக்கு ஒரு கட்டணமும், சகல நாடுகளுக்குமான பாஸ்போட்டுக்கு ஒரு கட்டணமும் அறவிடும் நடைமுறையைக் கொண்டு வந்தார். இது இலங்கையர் யாவருக்கும் சிறந்த ஓர் முறையாக இருந்தது. முன்பு பம்பலப்பிட்டியில் பாஸ்போட் பெறும் அலுவலகம் இருந்த போது காலை 6 மணிக்கே சனக் கூட்டம் அலைமோதும். சமாதான நீதிவான்கள் மக்களுக்கு இலவசமாகச் சேவை செய்ய வேண்டுமெனக் கூறுவார்கள். ஆனால் அங்கும் தற்போது பாஸ்போட் அலுவலகம் உள்ள புஞ்சிபொரளையிலும் பகிரங்கமாக விலைபேசி சமாதான நீதிவான்களின் கையொப்பம் விற்கப்படுவதனைக் காணலாம். போர்க் காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் புலம் பெயர்வுப் பயணத்திற்குச் சென்ற போது பாஸ்போட்டின் கீழ் 100, 500, 1000 என காலத்திற்கு ஏற்ப தாள் காசு வைத்து உரிய சோதனைகளின் போது கொடுத்தால் தான் நகர முடிந்தது. வல்லரசுப் பனிப் போர்க் காலம் இருந்த போது கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி முரண்பாடுகள் தீவிரமாக இருந்தது. மேற்கு ஜேர்மனி கிழக்கு ஜேர்மனிய மக்களை வசியப்படுத்தி பேர்லின் எல்லைச் சுவரேறிக் குதிக்க வைத்தது. அதற்குப் பழிவாங்க கிழக்கு ஜேர்மனி இலங்கை போன்ற போர் மேகம் சூழ்ந்த நாடுகளிலிருந்து ஆள்களை தனது நாடு ஊடாக மேற்கு ஜேர்மனி போக வழிவிட்டது. எம்மவர் பல ஆயிரம் பேர் மேற்கு ஐரோப்பா போக கிழக்கு ஜேர்மனி தாராள உபயம் தந்தது. ஒருவரது பாஸ்போட்டை இன்னொருவர் உடமையாக வைத்திருப்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஏஜென்ஸிமார் பலரது பாஸ்போட்டை தமது உடமையாக வைத்திருப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. பாஸ்போட்டில் தலைமாற்றி இன்னொருவரை அனுப்புவதனை ஹெல்மட் என அழைத்தார்கள். புலம் பெயர்ந்த பல இலட்சம் பேர் இன்று பிரித்தானியா, ஜேர்மனி, சுவிற்சலாந்து, சுவீடன்,கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என தாம் வாழ்ந்த நாடுகளின் பிரசையாகி அந்த நாடுகளின் பாஸ்போட்டுடன் சிறிலங்கா விசா பெற்று வருவது சாதாரண ஒன்றாகி விட்டது. கொழும்பு, கண்டி,அநுராதபுரம் ஆகிய இடங்களில் மட்டுமிருந்த பாஸ்போட் வழங்கும் அலுவலகங்கள் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்பாக மாகாணத்திற்கு ஒரு அலுவலகம் என அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டு விட்டது. வட மாகாணத்திற்குரிய அலுவலகம் வவுனியாவில் உள்ளது. நேற்றைய தினம் 01.01.2019 ஆம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பாஸ்போட் வழங்கும் முறை நீக்கப்பட்டு சகல நாடுகளுக்கான ( All Countries ) பாஸ்போட் மட்டுமே வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. அதனால் பாஸ்போட் ( Passport ) நினைவலைகள் பல வந்து இங்கு எழுத்துருவாக்கம் பெற்றுள்ளது. வேதநாயகம் தபேந்திரன் நன்றி- எதிரொலி 02.01.2019 புதன்கிழமை
 8. 1 point
  தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் சி.வி. விக்னேஸ்வரனே என்று தெரிவித்துள்ளார்கள் IBC தமிழ் இணையத்தள வாசகர்கள். IBC தமிழ் இணையத்தளத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டுவந்த கருத்துக்கணிப்பிலேயே மக்கள் தமது விருப்பை இவ்வாறு வெளியிட்டுள்ளார்கள். தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு: 48.09% வீதமானவர்கள் (27,720 வாக்குகள்) சி.வீ. விக்னேஸ்வரன் என்றும், 18.68% வீதமானவர்கள் (10,768 வாக்குகள்) இரா. சம்பந்தர் என்றும், 13.82% வீதமானவர்கள் (7,968 வாக்குகள்) கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் என்றும், 3.9% வீதமானவர்கள் (2,248 வாக்குகள்) டக்ளஸ் தேவானந்தா என்றும், 15.5% வீதமானவர்கள் இவர்களைத் தவிர வெறொருவர் என்றும் வாக்குப் பதிவு செய்திருக்கின்றார்கள். IBC தமிழ் மற்றும் லங்காசிறி இணையத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் இலங்கை, இந்தியா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 57,640 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/112001
 9. 1 point
  சுமந்திரனை எதிர்த்தல் எனும் போதை Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 10 வியாழக்கிழமை, மு.ப. 10:53 இலங்கை அரசியலை ஓரளவுக்குக் கவனித்து வருபவர்கள் அனைவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் வெறுக்கப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கிடைக்காத மீடிறனில், சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த எதிர்ப்புகள், தேவையான நேரங்களில் கேலிகளாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாயிரத்துப் பதினைந்தாம் (2015) ஆண்டு, இலங்கை அரசியலில் பாரிய மாற்றமொன்று ஏற்படுவதற்கு முன்பும், சுமந்திரன் இந்த எதிர்ப்பும் கேலியும் இருந்தது. ஆரம்ப காலத்தில், “தேசியப் பட்டியல் எம்.பி” என்று, அவரைக் கேலி செய்த காலமிருந்தது. ஆனால், இப்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதைத் தான் பார்க்க முடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, ஏராளமான விமர்சனங்களை முன்வைக்க முடியும். அதன் ஆரம்பம் முதல் இப்போது வரை, அக்கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட விமர்சனங்களில் குறிப்பிடத்தக்க விமர்சனங்களை, அதன் பேச்சாளரும் அதன் இரண்டாம் நிலைத் தலைவர் போன்று செயற்படுகின்ற சுமந்திரன் மீதும் முன்வைக்க முடியும். இப்பத்தியாளர் உள்ளிட்ட தமிழ்ப் பத்தியாளர்கள் பலரால், அப்படிப்பட்ட காத்திரமான விமர்சனங்கள், இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன; இனிமேலும் முன்வைக்கப்படும்; முன்வைக்கப்பட வேண்டும். ஆனால், சமூக வலைத்தளங்களிலும் ஒரு சில ஊடகங்களிலும் காணப்படும் சுமந்திரன் மீதான எதிர்ப்பு, பல நேரங்களில் எரிச்சலையும் சில நேரங்களில் நெற்றியையும் உள்ளங்கையையும் இணைக்கும் சேவையையும் செய்கின்றன. பேஸ்புக்கில் இருக்கின்ற கணிசமான தமிழ் இயங்குநிலைப் பயனர்கள், கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அல்லது தங்களைத் தாங்களே காண்பித்துக் கொள்கிறார்கள் என்ற அடிப்படையில், இதுவொன்றும் வியப்பான ஒரு விடயமும் கிடையாது. தேர்தலுக்கு அண்மையான காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான எதிர்ப்பு, பாரிய அளவில் வெளிப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கும். எனவே, இந்த எதிர்ப்பும் கேலியும், ஓரளவுக்குப் புரிந்துகொள்ளப்படக் கூடியன. என்றாலும், எரிச்சல் உணர்வைத் தடுத்துவிட முடியாது. இப்படி, சுமந்திரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் திட்டித் தீர்ப்பவர்களுக்கு, பளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம், வெறும் வாயில் மெல்லுவோருக்கு, அவல் கிடைத்த போன்று தான் அமைந்திருந்தது. சுமந்திரனின் பெயரைக் குறிப்பிடாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் எனத் தெரிவித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) வெளியான பத்திரிகையொன்றில் வெளியான “செய்தி” தான், இச்சர்ச்சைகளுக்குக் காரணமாக அமைந்தது. கஞ்சா வைத்திருந்தோரைக் கைதுசெய்வதற்குப் பொலிஸார் முயன்றபோது, பொலிஸாரை அவர்கள் தாக்கினர் எனவும், அதைத் தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவித்த அந்தச் “செய்தி”, அவர்களை விடுவிக்குமாறு, பொலிஸ் உயரதிகாரி மீது, குறித்த முக்கியஸ்தர், “குரைத்தார்” என்றும் குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர், அந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டிருந்தது. அதேபோல், வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்களை இல்லாது செய்யும் பொலிஸாரின் நடவடிக்கைகளில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீடு காணப்படுகிறது எனவும், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விசனமடைந்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே காணப்படும் எதிர்ப்பு மனநிலைக்குத் தூபமிட்ட இச்செய்தியைத் தொடர்ந்து, சமூக ஊடக வலையமைப்புகளில் கேலிகளும் விமர்சனங்களும் எழுந்திருந்தன. அதேபோல், செய்தி இணையத்தளங்களில் பல கதைகள் கட்டப்பட்டிருந்தன. இத்தனைக்கும், சுமந்திரனின் பெயர், அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பெயர் எப்படியோ கசிந்திருந்தது. நகைச்சுவைகள் கொடிகட்டிப் பறந்தன. இந்த எதிர்ப்புகளும் கேலிகளும், ஒருவரை மாத்திரம் இலக்குவைத்திருந்தன: சுமந்திரன். ஆனால், இந்தக் கேலிகளுக்கு நடுவில், நான்கு தமிழ் இளைஞர்கள், கஞ்சா கடத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டார்கள் என்பது மறக்கப்பட்டது. அந்த நான்கு பேரும், குற்றவாளிகள் போன்றே, இக்கருத்துகள் அமைந்தன. ஆனால், வெளியிடப்பட்ட அந்தச் “செய்தி”யில், ஏராளமான ஓட்டைகள் காணப்பட்டிருந்தன. அந்தச் “செய்தி”யின், தொனி, ஒரு வகையான இனவாத நெடியைக் கொண்டிருந்ததாகக் காணக்கூடியதாக இருந்தது. அதிலும் குறிப்பாக, “இப்படித் தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறார்களாம்” என்று, பொலிஸ் அதிகாரி ஒருவர் சொன்னதாகக் கூறப்பட்ட கருத்து, அண்மைக்கால அரசமைப்பு நெருக்கடியின் போது, கூட்டமைப்பின் செயற்பாடுகளால் எரிச்சலடைந்த ஒருவரின் கருத்தென்பது தெளிவு. அதேபோல், சம்பந்தமேயில்லாமல், கிளிநொச்சியைப் பற்றி விவரிப்பதற்கு, “தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டையாக அமைந்த பகுதி” என்று கூறப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்துக்குமிடையில் எச்சம்பந்தமும் இல்லையென்பதைப் பற்றிக் கவனஞ்செலுத்தியிருக்கவில்லை. அதேபோல், குறித்த தகவல் தொடர்பாக, சுமந்திரன் உள்ளிட்ட எவருடனும் நேரடியாகத் தொடர்புகொண்டு, அச்சம்பவம் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை. இவற்றுக்கு மேலதிகமாக, வடக்கில் மேற்கொள்ளப்படும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழ் அரசியல்வாதிகள் இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு, மிகப் பாரதூரமானது. பொதுவான அக்குற்றச்சாட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே இலக்குவைத்தது என்பதில் எச்சந்தேகமுமில்லை. ஆனால், அதற்கான ஆதாரமாக எதையும் சமர்ப்பித்திருக்கவில்லை. பொதுவாகக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கும் கஞ்சா கடத்தல்களுக்குமிடையில் தொடர்புகள் இல்லையென்பது தெளிவு. எனவே, மேற்படி விமர்சனம், அடிப்படை ஆதாரங்களற்ற ஒரு விமர்சனம். இப்படி, குறித்த “செய்தி” தொடர்பில் இத்தனை கேள்விகள் காணப்படும் நிலையில், அவற்றைப் பற்றிய எந்தவொரு கவனமோ, சட்டையோ இன்றி, சுமந்திரன் மீதான அவதூறுக்காக அந்தச் “செய்தி”யைப் பயன்படுத்துகின்ற மனநிலை, ஆபத்தானது. ஏனெனில், சுமந்திரனோடு சேர்ந்து, தமிழ் இளைஞர்கள் நால்வரும், அவதூறைச் சுமந்துகொண்டிருந்தார்கள். ஆனால், தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்புகள் என்று சொல்கின்ற குறித்த தரப்புகள், அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கவில்லை. சுமந்திரன் மீதான கண்மூடித்தனமான இந்த எதிர்ப்பு, ஒரு கட்டத்தில், யதார்த்தங்களையும் நன்மைகளையும் பற்றிக் கவலைப்படாமல் செல்வதற்கு இடமுண்டு. ஒரு கட்டத்தில், தமிழீழம் பெற்றுத் தருவதாகச் சுமந்திரன் சொன்னால், “இல்லையில்லை. தமிழீழம் கூடாது. ஒற்றையாட்சி தான் வேண்டும்” என்று கேட்கவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சுமந்திரனை நியாயப்படுத்துவது போல் இப்பத்தி தென்பட்டாலும் கூட, அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள் அவசியமற்றவை என்பது, இப்பத்தியின் கரு கிடையாது. சுமந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள் அவசியமானவை. ஆனால், உண்மைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட விமர்சனங்களாக அவை இருக்க வேண்டும். நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ, அரசியல் தீர்வு தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கதைக்கக்கூடிய ஒரே ஆளாக, சுமந்திரன் தான் இருக்கிறார். அரசியலிலிருந்து சுமந்திரன் ஓய்வுபெற்று, தற்போது 85 வயதாகியுள்ள சம்பந்தன் ஐயா காலமாகிவிட்டால், இப்பணிகளை யார் செய்வர்? அடுத்த தலைமை யார்? மாற்றுத் தலைமைகளாகத் தங்களை அடையாளப்படுத்தியுள்ள சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் என்று எவருமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் சுமந்திரனதும் முயற்சிகள் தவறென்றால், அவற்றுக்கு மாற்றான, யதார்த்தமான திட்டமாக எதை வைத்திருக்கிறார்கள் என இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லை. கூட்டமைப்பை எதிர்ப்பது மாத்திரம் தான், அவர்களது ஒரே அரசியல் நோக்காகக் காணப்படுகிறது போன்று தென்படுகிறது. இந்நிலையில், சுமந்திரன் மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பு, எதைச் சாதிக்கப் போகிறது? http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனை-எதிர்த்தல்-எனும்-போதை/91-227776
 10. 1 point
  படுத்து பிரண்டுக்கிறேன் ஏசி ரூம் ஈடாகாது சாணத்தால் மெழுகிய தரையும் வைக்கோலினால் மேயப்பட்ட குடில்களும்
 11. 1 point
  எல்லா மததினரும் மண்ணுக்க தான் செல்வது இதில் எந்த கடவுளோ வந்து மேலோகத்து அழைத்து செல்வதில்லை ஆனால் மதம் கொண்ட மனிதர்கள் தான் இன்று வரைக்கும் அண்மையில் மட்டக்களப்பில் படிப்பிக்க சென்ற வாத்தி பிள்ளைக்கு குரான் கொடுத்து படிக்க சொல்லி மதத்தை மாற்றிவிட்டான் ஆர்ப்பாட்டமும் நடந்தது ஆனால் சவுதியில் முஸ்லீம் மதம் பிடிக்கவில்லையென்று நாட்டை விட்டு சென்ற சவுதி பெண்ணும் அடைக்கலம் கொடுத்த அவுஸ்ரேலியாவும் பஸ்சில் வேலைக்கு சென்று வந்து கொண்டிருக்கும் போது ஒரு சில பெண்கள் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் பஸ்ஸில் ஏறும் பெண்களுக்கு அவர்கள் எழுந்து சீற் கொடுத்தார்கள் இதெல்லாம் நடக்குமா பஸ்ஸில் இருந்தால் யாரும் சீற் கொடுப்பதில்லை ஆனால் அந்த சீற்றில் இருந்த பெண்ணுக்கு சன்லைட் சோப்பு போட்டு மண்டைக்கழுவிக்கொண்டிருந்தார்கள் அடுத்தபடியாக எனக்கு நானோ வில்லங்கம் பிடித்த ஆள் என்று அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்னிடம் அவர்கள் உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை நாங்கள் தீர்த்து வைப்போம் என்றார்கள் கொஞ்ச லிஸ்டில் உள்ள பல பிரச்சினைகளை சொன்னார்கள் ............ நானோ இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா ஓம் என்றார்கள் அப்படியானால் யுத்தம் நடக்கும் நாடுகளுக்கு செல்லுங்கள் அங்கேதான் பல பிரச்சினைகள் எழுந்து யுத்தம் நடக்கிறது அங்கே சென்று ஏன் நீங்கள் அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடாது அங்கே கன பேருக்கு தீர்க்கமுடியாத பிரச்சினை இருக்கிறது போய் தீர்த்து வையுங்களன் என்று சொன்னேன் உங்களுக்கு வேண்டுமானால் டிக்கற் வசதி செய்து தருகிறேன் என்றேன் பல்லை இழித்து பதில் இல்லை இதை வந்து எனது உன்மையான ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை கிறிஸ்டியனாக வழும் என் நண்பவ் அன்றோவிடம் சொன்னேன் அதற்கு அவனோ சுனாமிக்கு பிறகு மதம் மாறிய கூட்டங்கள் காசுக்கும் வீட்டுக்கும் என்றான் நானும் அது அவர்கள் சுய விருப்பம் ஆனால் அதை மற்றவர்களிடம் திணிக்க கூடாது என்றேன் அவனோ ஆலமரம் ஒன்றுதான் அதன் வேர் மண்ணுக்குள் இருக்க விழுதுகளை வேர் என்று சொல்கிற கூட்டமும் இருக்கு என்றான் சொல்லிவிட்டு அந்தக்காலத்தில் இலங்கையை ஆண்ட வெள்ளைக்காரன் ஆரம்பித்த பள்ளிக்கூடத்தில் கல்விகற்க அவனின் மதத்துக்கு மாறி கல்வியை பெற்ற சமுதாயம் நம்ம சமுதாயம் என்றான் இல்லாவிட்டால் கல்வியறிவு நமக்கு கிடைத்திருக்காது என்றான் அதில் நானும் வம்ச வழி வந்தவன் என்றான்
 12. 1 point
  என்னத்தை சொல்ல எங்களுக்கு பழகிவிட்டது இதை மொத்தமாக கேட்பவர்களுக்கு கொஞ்சம் கஸ்ரமாக இருக்கும் எங்கள் ஊர் பிரதான வீதியில் இருக்கும் காணிகளும் விற்பனையாகி விட்டது யாருக்கும் தெரியாமல் கோடி கணக்கில் விற்றவர்கள் பெரிய இடம் அவங்களுக்கு ஒன்றும் கதைக்கமாட்டார்கள் ஆனால் ஒரு ஏழை விற்றால் அவன் குடும்பத்தையும் ஒட்டு மொத்தமாக நாறடித்து விடுவார்கள்
 13. 1 point
  பிள்ளைக்கு நிலாவைக் காட்டி சோறுட்டுவதுபோல் தமிழருக்கு இந்த தமிழ் நிபுணரைக் காட்டி சிங்களம் தனக்குச் சார்பான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளும்.
 14. 1 point
 15. 1 point
  2018ம் ஆண்டும் பெரிதாக என்னால ஒண்டும் செய்ய முடியவில்லை. வேலை, வீடு, படிப்பு எண்டு போனது. 2018ம் ஆண்டு உறுப்படையாக செய்த காரியம் எண்டால் MSc in Construction Project Management முடிச்சது மட்டும்தான். கொழும்பில் வேலை செய்வதாலும் மற்றும் படித்ததாலும் யாழ்ப்பாணம் தவிர வேறு ஒரு இடமும் அடிக்கடி போக முடியவில்லை. எவ்வளவு வேலை மற்றும் படிப்பு பளு இருந்தாலும், ரிலாக்ஸ்கு மதம் 1 முறை 2 நாள் (சனி மற்றும் ஞாயிறு) அம்மா அப்பா மற்றும் சகோதர்களிடம் யாழ்ப்பாணம் போடுவான். பயண களைப்பு இருந்தாலும் அவர்களுடன் செலவிடும் அந்த 2 நாளும் மிகவும் சந்தோசமாக போகும். 2018ல் பெரிதாக புத்தகங்கள் வாசிக்க நேரம் கிடைக்கவில்லை (நேரம் கிடைத்தாலும் வசித்து முடிக்கிற திறதில்லை). முற்றுமுழுதாக எனது படிப்பு சம்பந்தமான புத்தகங்களுடன் போய்விட்டது. 2018ல 2 படம் மட்டும்தான் பாத்தான். 96 மற்றது கோலி சோடா 2. கொழும்பில் இருந்தாலும் அரசியில் நாட்டம் இல்லை. அதனால் அரசியலைப்பற்றி கதைப்பது கவலைப்படுவது இல்லை (நான் கதைச்சு கவலைப்பட்டு ஏதாவது நடக்கவாபோகுது என்ன). வேலை படிப்பு அம்மா அப்பா சகோதரம் எண்டு லைப் சந்தோசமாக போகுது. இன்னும் திருமணம் முடிக்காதபடியால் வேற கமிட்மெண்ட்ஸ் இல்லை (குறிப்பாக காதாக கீதல் எண்டு ஒண்டும் இதுவரை இல்லை). பாப்பம் 2019 எப்படி போகப்போகுது எண்டு.
 16. 1 point
  சோலா பூரி .. (பெரிய அளவு பூரி)
 17. 1 point
  நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அபராஜிதன்......! குறிப்பாக சொல்வதெனில் 2018 ல் பல வருடங்களின் பின் தாயகம் போய் வந்தேன். நிறைய கோயில்களுக்கு சென்று வந்ததும் ,அங்கு யாழ் உறவுகள் ஜீவன் , தனியை சந்தித்ததும் அவர்களுடன் படித்த பாடசாலையை சுற்றி நடந்ததும், நீலாம்பரியில் கோப்பி குடித்ததும் மறக்க முடியாத அனுபவம். மற்றும்படி அதே வேலை அதே வீடு அதே நண்பர்கள் அதே பிள்ளைகள் அதே மனைவி அதே யாழ் என்று போகின்றது ......!
 18. 1 point
  அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். உங்கள் மதத்தை உங்கள் வீட்டுடனும் தேவாலயத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள். அதை என் மற்றவன் வீட்டிற்கு சென்று போதித்து மதம் மாற்ற முனைகிறீர்கள் என்பதுதானே பிரச்சனையே! சாதிப்பிரச்சனை, நிற துவேசம் என்பன எல்லா நாட்டிலும் ஏன் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கூட..இருக்கிறது. அப்படி இல்லை என்று வாதிடும் உங்களுடன் கருத்தாடுவதில் பயனில்லை. ஒருவன் தனது மனைவியையோ அல்லது கூடப்பிறந்தவர்களையோ கூட்டிக்கொடுப்பதால் சலுகைகளும் துன்பங்களுக்கு தீர்வும் கிடைக்கும் என்றால் அதைக்கூட செய்யலாம் என்பீர்களா? அதெப்படி மதம் மாறுவதால் இவை கிடைக்கும் என்றால் மதம் மாறலாம் என்பதை இவ்வளவு இலகுவாக நியாயப்படுத்துகிறீர்கள். எமது இனத்தின் அடையாளம் மதமும் மொழியுமே. அதை தொலைத்துவிட்டு எமது துன்பங்கள் தீர மத மொழி மாற்றங்களே தீர்வென்றால் சிங்களவராகவும் புத்தனாகவும் மாறி நமது நாட்டிலேயே வாழலாமே. போராட்டங்களே தேவை இல்லையே. நீங்கள் அப்படியான வாழ்க்கையே மேலென நினைத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அடையாளத்துடன் வாழ்ந்துவிட்டு போங்கள். தயவு செய்து இலங்கை தமிழனென்று அடையாளப்படுத்தி எமக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய போராளிகளையும் மக்களையும் கொச்சை படுத்தாதீர்கள். உங்களை ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அவர்களது நாட்டில் அனுமதித்தது உங்களிடம் வேலை வாங்கி அவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவே அன்றி உங்களில் உள்ள அக்கறையால் அல்ல.
 19. 1 point
 20. 1 point
  இயற்கையின், இனிய படைப்புகள்.
 21. 1 point
 22. 1 point
  நீதித்துறையும் அரசும் பயனற்றதாக இருக்கும் போது முஸ்லீம் மதவெறியர்களும் முஸ்லீம் கள்ளக்காணிக் காடையர்களும் இது போன்ற பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்!
 23. 1 point
  இலங்கையில் இது 100க்கு 100 உண்மை. சாதிய கட்டுப்பாடுகள் மிக ஆழமாக, இந்துக்கள் மத்தியில் உள்ளதற்கு இணையாக கிருஸ்தவர்கள் மத்தியிலும் உள்ளது.
 24. 1 point
  உண்மையான கருத்து! விக்னேஸ்வரன் மீது காழ்புணர்ச்சியாலும், பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அவரது தலைமையில் மாகாணசபைகள் செய்த பல்வேறு நலத்திட்டங்கள், முன்னேற்றங்கள், அபிவிருத்திகள், போன்றவற்றை அறியாமையாலும் பலர் இங்கே தவறான கருத்துக்களை விதைக்கின்றனர். ரணில், மைத்திரியுடன் இணைந்து கொண்டு விக்னேஸ்வரனை செயற்படவிடாமல் பல முட்டுக் கட்டைகளை சுமந்திரன், மாவை, சரவணபவன் போன்றவர்களும், ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து கொண்டு சத்தியலிங்கம் தவராசா போன்றவர்களும், சிவஞானம் போன்ற தமிழரசுக் கட்சியினரும், சில மதவெறிக்கும்பல்களும் செயற்பட்டத்தை தெரியாதது போல சிலர் இங்கு நடிக்கின்றனர். இவர்கள் எப்படிப்பட்ட நோக்கங்களையும், யாருடன் செயற்படுபவர்கள் என்பதுவும் பலரும் அறிந்துள்ளதே. ஜனநாயகம், ஊடகம், சமத்துவம் என்று அவற்றின் கருத்துக்களை அறியாமல் துள்ளிக் குதிப்பவர்கள் மிக மிக சிறுபிள்ளைத் தனமாக பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஒரு ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் முட்டையில் மயிர் புடுங்குவது போன்று குறைகளை கண்டு பிடிக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் சுயரூபங்கள் தெளிவாக வெளிப்படுகின்றது.
 25. 1 point
  அதுபற்றி எனக்குத் தெரியவில்லை, ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் தெரியும். எத்தனையோ பேருக்கு எத்தனையோ முறை நாம் சந்தர்ப்பம் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். விக்கியருக்கும் ஒருமுறை கொடுத்துப் பார்க்கலாம், என்ன குறைந்துவிடப்போகிறது.
 26. 1 point
  நான் இறுதியாகக் கூறியது இதைத்தான். "சுமந்திரனையே சமாளிக்க முடியாத விக்கியர், எப்படிச் சிங்களவரைச் சமாளிக்கப் போகிறார்" எனும் உங்களின் கேள்வியைத்தான். இந்தக் கேள்வியில் நீங்கள் யாரைத் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள்? விக்கியருக்குத் தலையிடியைக் கொடுக்கும் சுமந்திரனையா அல்லது அவரைச் சமாளிக்கத் திணறும் விக்கியையா? நீங்கள் சுமந்திரனைத்தான் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? இப்போது புரிகிறதா உங்களுக்கு ?
 27. 1 point
  விக்கியர் தவறானவர் என்று எங்கும் சொல்லவில்லை. என் முதல் பதிலிலேயே நேர்மையானவராகவும், மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் தைரியமான்வர் என்று குறிப்பிட்டும் உள்ளேன். அதே நேரத்தில் அவர் தலைமைத்துவ பண்பு அறவே அற்ற ஒருவர். அத்துடன் நிர்வாகத் திறனும் கொஞ்சம் கூட இல்லாதவர் என்பது தான் என் அவர் பற்றிய அவதானம். அத்துடன் அவர் மகிந்தவின் அனுதாபியாக காட்டக் கூடிய விதமாகவே 2015 தேர்தல் வரைக்கும் தன்னை வெளிப்படுத்தி இருந்தார் (இதற்கு வாசுவின் சம்பந்தியாக அவர் இருப்பது காரணம் ஆக இருக்காது என நம்புகின்றேன்) மகிந்தவை ஆதரியுங்கள் என்று அவர் நேரிடையாக அறிக்கையில் கேட்கவில்லை. ஆனால் 2015 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எதிராக ,தேர்தலுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அறிக்கை விட்டு இருந்தார். கூகிளில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. யாழ் இணையத்திலும் அது உள்ளது. நேரம் கிடைக்கும் போது கண்ணில் பட்டால் இணைக்கின்றேன் கஜேந்திரகுமாரை ஆதரிப்பது தவறு என்று என் பதிலில் நான் குறிப்பிடவும் இல்லை. கஜேந்திர குமாரின் பெயரினைக் கூட நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நீங்கள் இதை எழுதியதற்காக குறிப்பிட விரும்பும் விடயம்: விக்கியர் கஜேந்திரகுமாரை ஆதரிப்பதாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி ஆதரித்து இருக்கலாம். அவர் இன்று விலகியது போன்று அன்றே விலகி ஆதரித்து இருக்கலாம். த.தே.கூ வில் இருந்து கொண்டே இன்னொரு கட்சிக்கு ஆதரித்தது சரியான நேர்மையான விடயமா ரகு? சரி, அப்படி விலகின பிறகு கூட அவர் கஜேந்திரகுமாருடன் இணையாமல் தனித்து கட்சி அமைத்தது ஏனென்றும் புரியவில்லை. விக்கியர், போர்க் குற்றம்,வடக்கு கிழக்கு இணைப்பு போன்றவற்றை மகிந்த இருக்கும் வரைக்கும் பேசவில்லை. அவர் தமிழக தலைவர்களை விமர்சித்து கொண்டு இருந்த காலம் அது. ரணில் ஆட்சியமைத்த பின் தான் அவர் இவை பற்றி பேச தொடங்கியிருந்தார். நீங்கள் சொன்னவாறு மகிந்த / ரணில் / மைத்திரி மற்றும் இனி வரக்கூடிய சஜித் / கரு / நவீன் திசனாயக்கா போன்றோரில் எவர் வந்தால் என்ன. சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழ் மக்களை அடக்கி தன் மேலாதிக்கத்தை நிறுவத்தான் போகின்றது என்பதை நானும் அறிவேன். அத்துடன் அதைப் பற்றி என் பதில்களில் குறிப்பிட்டும் வருகின்றேன். ஆனால் இந்த திரி, விக்கியரின் தலைமைத்துவம் பற்றிய திரி. அதை ஒட்டித்தான் என் கருத்துகள். என்ன சொல்ல வருகின்றீர்கள் என புரியவில்லை நண்பரே. ----------------------------------------- இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வியுடன் நிறுத்திக் கொள்கின்றேன். விக்கியரை தமிழர்களுக்கு தலைமை தாங்குவதற்கான தலைமைத்துவப் பண்பும், நிர்வாகத் திறனும், தன் கட்சி உறுப்பினர்களையும், தன்னுடன் இயங்க கூடிய ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களையும் அரவணைத்து செல்லக் கூடிய, பெளத்த பேரினவாதத்தினை எதிர்த்து ஆக்கபூர்வமாக செயற்படக் கூடிய ஒரு 'தலைவர்' ஆக ஏற்கின்றீர்களா?
 28. 1 point
  ஒருவர் தானாக விரும்பி ஒரு மதத்தைத் தெரிவு செய்வதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது. இதில் வேறு கருத்தில்லை. ஆனால், இன்று வீதியில் நின்று போதிப்பதாலோ அல்லது பிரசங்கம் செய்வதாலோதான் மதமாற்றம் நிகழ்கிறது என்கிறீர்களா? இல்லையே? வீடுவீடாகச் சென்று சலுகைகள் அழுத்தங்கள் என்று கொடுக்கப்படுகின்றனவே? உங்களின் மதம் தவறானது, மோட்சத்திற்குப் போகமாட்டீர்கள், எங்களின் மதத்திற்கு வாருங்கள் என்று பயங்காட்டல் நடக்கின்றதே? நான் இருக்கும் மதத்தில் எனக்கு உரிமைகள் இல்லையென்றால், நான் மதம் மாறுவதுதான் தீர்வா? இந்துக்களாக இருந்த பலர் முன்னர் கிறீஸ்த்தவர்களாக மதம் மாறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சாதிக்கொடுமை ஒரு காரணம் என்று கொள்ளலாமா? ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை. ஒருவன் தனது இனத்திற்காக, மொழிக்காக, மதத்திற்காக, கலாசாரத்திற்காக போராடுவதென்பது அவை காக்கப்படவேண்டும் என்று விரும்புவதோ பிழையென்றால், நாம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். இல்லாதொழிக்கப்படும் உரிமைகளை மீண்டும் கேட்கக் கூடாது, எமது அடையாளங்களை இழந்து சிங்கள் மொழியுடனும், பெளத்த மதத்துடனும் கலந்து ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாம் அவற்றைச் செய்யவில்லை, மாறாக அவற்றைக் காக்க வேண்டுமென்று போராடுகிறோம். இனம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் மதம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இன்று சுதந்திரமாக, பிறர் அழுத்தமின்றி மதம் மாறுவோர் என்று எவருமில்லை. திருமணத்திற்காக, பணத்திற்காக, தமது இருப்பிற்காத்தான் இது நடக்கிறது. மதம் மாறாவிட்டால் பெண்வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ தம்மை திருமணம் முடிக்க விடமாட்டார்கள் என்கிற அழுத்தம், மதம் மாறாவிட்டால் எமக்கு வசதிகள் வாய்ப்புகள் கிடைக்காதென்கிற அழுத்தம், பணமில்லாவிட்டால் வாழ முடியாதென்கிற அழுத்தம் என்பனவே மதத்தை மாறப்பண்ணுகின்றன. வெளித்தூண்டல் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை, மதம் உற்பட. மனிதன் வாழப்போவது கொஞ்சக்காலம்தான், அதற்குள்ளும் பலர் அவனை மதம் மாற்றப் பார்க்கிறார்கள்.
 29. 1 point
  தமிழர்களுக்கு சரியான தலைமையை வழங்கக் கூடியவர்கள் இப்போது எவருமே இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது, பெரும்பான்மையான தமிழர்களின் விருப்பைப் பெற்றவர்கள். 100% தமிழர்களின் விருப்பைப் பெற்றவர்கள் எப்போதுமே இருந்ததில்லை, ஏனென்றால் எமக்கான எதிரிகள் எமக்குள்ளேயேதான் இருந்தார்கள், இருக்கிறார்கள். அண்மைக் காலங்களில் பெரும்பாலான தமிழர்களை ஒருங்கிணைத்தவர் என்றால், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். ஆனால், அவருக்குக் கூட எதிர்ப்பென்பது, தமிழர்களுக்குள்ளேயே கணிசமான அளவு இருந்தது, இன்றும் இருக்கிறது. தமிழ்க் கூட்டமைப்பு மீதான பெரும்பாலான தமிழ் மக்களின் விருப்போ அல்லது தெரிவோ, அவர்கள் உள்ள அபிமானத்தினாலன்றி, வேறு சரியான தெரிவுகள் இல்லாமையும், தமிழரின் வாக்குகள் சிதறிவிடுதல் சிங்களப் பேரினவாதிகள் தமிழர் தாயகத்தில் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதனாலுமே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. காலம் காலமாக தமிழரசுக் கட்சி அல்லது ஆனந்த சங்கரிக்கு முன்னதான தமிழர் கூட்டணிக்கான கண்மூடித்தனமான ஆதரவு ஆகியவற்றாலும் வாக்குகள் கிடைக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. திரு. விக்கினேஸ்வரன் வட மாகாண முதல்வராக இருஃந்த சமயத்தில் முறைகேடுகளைத் தடுக்கவில்லை, அல்லது சரியான திட்டங்களை வகுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தது. தலைமைத்துவம் வழங்கக்கூடிய தகுதி அவரிடம் இல்லை என்பது அவர்மேல் வைக்கப்பட்டும் இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், மாகாணசபையின் அங்கத்தவர்களாக இருந்துகொண்டே அவரின் செயற்பாட்டிற்கு தொடர்ந்தும் குந்தகம் விளைவித்துக்கொண்டிருந்தவர்கள் யார்? அவர் பதவியிலிருந்த பொழுதுகூட அவரை விமர்சித்துக்கொண்டு, அவரின் மேல் அரசினூடாக அழுத்தங்களை பிரயோகித்தவர்கள் யார்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து அவரை ஓரங்கட்ட தொடர்ச்சியாக வேலைபார்த்தவர்கள் யார்? இன்று அவரை கையாலாகாதவர் என்று கூறுவது யார்? இவர்கள் எல்லோருமே ஒரே ஆட்கள்தான். தமக்கு எதிராக அரசியல் செய்கிறார், வரம்புமீறிச் செல்கிறார் என்று வெளிப்படையாகவே விமர்சித்து அவரின் செயற்பாட்டை முடக்கியவர்கள் தான் இன்று அவரை கையாலாகாதவர் ஆக்கியவர்கள். அவர் சுதந்திரமாக, தன்னிச்சையாக வேலை செய்ய விடுங்கள், உங்களின் கூலிகளைக் கொண்டு அவரை முடக்குவதை நிறுத்துங்கள், ஒரே கட்சியிலிருந்துகொண்டு விமர்சிப்பதை நிறுத்துங்கள், பிறகு அவர் கையாலாகாதவரா அல்லது தலைமை தாங்க முடியாதவரா என்பதைப் பார்க்கலாம். அவரது மாகாணசபையை உங்களின் உறுப்பினர்களைக் கொண்டு பலவீனமாக்கிவிட்டு, தலைமை தாங்க முடியாதவர், சொல்வீரர் என்று எப்படிக் கூறுகிறீர்கள். இன்றுவரை, நாம் விரும்பியோ அல்லது வேறு தெரிவின்றியோ கூட்டமைப்பைத்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். சர்வதேச அழுத்தங்களினால் அன்றி, சுமந்திரனாலோ அல்லது சம்மந்தராலோ இன்று சிறியளவில் நடைபெறும் காணி விடுவிப்புக்களும், கைதி விடுவிப்புக்களும் நடைபெறவில்லை. இதை அவர்களால் உரிமை கோரவும் முடியாது. ஒரு சில வருடங்கள் மட்டுமே வட மாகாண சபையை ஆட்சிசெய்த விக்கினேஸ்வரனின் தலைமைத்திறனை, அவரது செயற்திறனை கேள்விகேட்கும் நீங்கள், ஏன் இத்தனை வருடகாலம் தமிழர்களின் தலைமை என்று சொல்லிக்கொள்ளும் சம்மந்தரோ அல்லது சுமந்திரனோ என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை? எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம், சிங்களம் ஒருபோதுமே தமிழர்க்கு நீதியான தீர்வொன்றைத் தரப்போவதில்லையென்பது. புலிகள் இருந்த காலத்தில்க் கூட ஒரு நீதியான தீர்வை தரமறுத்த சிங்களம், இன்று உள்நாட்டில் எந்த அழுத்தமும் இல்லாத நிலையில், வெறும் சம்மந்தனுக்ககவும், சுமந்திரனுக்காகவும் ட்நீதியான தீர்வொன்றைத்தரும் என்று நம்புகிறீர்களா? யுத்தத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றுக்கொண்ட பின் அவர்கள் எதற்காகத் தமிழர்க்கு எதையுமே கொடுக்க வேண்டும்? ஆக, இன்று கிடைப்பதாகக் கூறப்படும் விடயங்களாகட்டும் (அதுகூட பிரிந்த வட கிழக்கு, ஒற்றையாட்சி, பெளத்தத்திற்கு முதலிடம், அதிகாரமற்ற காணிகள் என்று குற்றுயிராக்கப்பட்டு) அல்லது இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகளாகட்டும் எல்லாமுமே சர்வதேச அழுத்தங்களால் நடைபெறுகின்றன.காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக கூட்டமைப்பு இவற்றிற்கு உரிமை கோருவது தவறு. தாயகத்தில் விக்கினேஸ்வரனுக்கான தமிழர்களின் ஆதரவென்பது ஒருமுறை, மிகத்தெளிவாகக் காட்டப்பட்டு விட்டது. வட மாகாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர்தான். அதுமட்டுமல்லாமல், பேரவை ஆரம்பிக்கும் நாட்களில் அவரது வீட்டிற்கு முன்பாகத் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலத்திலுருந்ஹ்டு போனவர்கள் கிடையாது. முடிந்தால், உதயன் போன்ற பத்திரிக்கை ஒன்றின் மூலமோ அல்லது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூலமோ தமிழருக்குத் தலைமை தாங்கக் கூடியவர் யார் ந்பது தொடர்பாகக் கருத்துக் கணிப்பொன்றை நடத்திப் பார்க்கலாம். அப்போது தெரியும் மக்கள் ஆதரவு யாருக்கென்று.
 30. 1 point
 31. 1 point
  ஜஸ்டின், ஒருவர் ஒரு மதத்தில் இருந்து, இன்னொரு மதம் பற்றி நன்றாக அறிந்துகொண்டு, தனது மததைக் காட்டிலும் புதிய மதம் சிறந்தது என்கின்ற தெளிவுடன், எந்த அழுத்தமும் இல்லாமல் புதிய மதத்திற்கு மாறுவது அவரது சுதந்திரம். இதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது. ஆனால், இன்று மத்திய கிழக்கிலும், ஆசிய நாடுகளிலும் நடைபெறும் மதமாற்றம் என்பது இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அழுத்தத்தினால் மட்டுமே நடக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாம் அல்லாத சிறுபான்மை மதங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன. யஸீடீக்கள் மற்றும் அசிரியர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அல்லது கட்டாய இஸ்லாமிய மதத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவ்வாறான விடயங்கள் பாக்கிஸ்த்தானிலும் நடக்கின்றன. சிறுபான்மை கிறீஸ்த்தவர்களும், இந்துக்களும் இலக்குவைக்கப்படுக் கொல்லப்படுவதுடன், கட்டாய மதமாற்றமும் நடக்கிறது. இந்தியாவில், வறுமைப்பட்ட இந்துக்கள் முஸ்லீம்களின் சலுகைகளாலும், அவ்வாறே வறுமைப்பட்ட முஸ்லீம்கள், இந்துக்களின் அழுத்தத்தினாலும் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதில், எவருமே இன்னொரு மதத்தை தாமாகவே தேர்ந்தெடுத்து, தெளிவாக உணர்ந்துகொண்டு சேராமல், ஏதோ ஒரு வகையில் அழுத்தங்களுக்கு உற்பட்டே மாற்றப்பட்டிருக்கின்றனர் அல்லது மாறியிருக்கின்றனர். இதை எப்படி அவர்களது சுதந்திரம் என்றோ, மற்றையவர்களுக்கு இதில் என்ன வேலை என்றோ சொல்ல முடியும்? அண்மையில், மட்டக்களப்பில் 15 வயது தமிழ்ச் சிறுமியை ஆசை வார்த்தைகள் காட்டி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற இரு இஸ்லாம் ஆசிரியர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள். 15 - 16 வயதுச் சிறுமிக்கு ஒரு மதம் பற்றிய தெளிவு எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இம்மாற்றத்தை அவள் சுதந்திரமாக, எதுவித அழுத்தமும் இன்றி செய்திருப்பாள் என்று உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா? அழுத்தங்களும், சலுகைகளும், பண உதவிகளும் ஒருவரின் மதமாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறும்பொழுது, அவரது சுதந்திரம் என்பது அடிப்பட்டுப் போய்விடுகிறது. தனது மதமும், கலாசாரமும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவது தவறாகாது. ஆனால், சிவசேனை இந்தியாவில் நடப்பது போன்று முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்துக்களை மீண்டும் வலுக்கட்டாயமாக இந்துமதத்திற்கு மாற்ற நினைத்தால், அதுவும் கட்டாய மதமாற்றமே. மனிதன் தான் தனக்குத் தேவையான மதத்தைத் தெரிவு செய்ய வேண்டும், மதம் அதனைத் தீர்மானிக்க முடியாது.
 32. 1 point
  கல்லிலே கலை வண்ணம் கண்டான்......!
 33. 1 point
  இன்னொருவரை வலிந்து மதம் மாற்ற நினைப்பது கொடிய மனநோய்! இவர்களுக்கு உரிய முறையில் "வைத்தியம்" பார்க்க வேண்டும்.
 34. 1 point
  நான் நினைக்கிறேன் பெரும் பாலும் இது காதல் விவகாரமாய்த் தான் இருக்கும்...அங்கு இருப்பவர்கள் தான் வந்து எழுதோணும்
 35. 1 point
  துருவங்களில் உள்ள பனிக்கட்டி உருகினால் இவர்களின் கணிப்பு தவராகலாம்.
 36. 1 point
  இதில் தவறில்லை! மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர். இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை. சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம். தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!
 37. 1 point
  ஓ! தெரியாமல் போச்சு! உங்கள் அரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! விரைவில் வெளிநாட்டு மாப்பிள்ளையா கோடி கோடியா சீதனம் கேட்டு இங்கு நாறடித்த பெண்கள் குடும்பத்தினரை ஒருவழி செய்திடுங்கோ!
 38. 1 point
  இந்த முஸ்லீம் மதவெறியர்கள் நாடுகடத்தப்பட்ட வேண்டியவர்கள். இலங்கையில் வசிக்க இவர்களுக்கு தகுதியில்லை.
 39. 1 point
  இலங்கையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஓடியோ; சிக்கலில் சிக்கிக்கொண்ட மஹிந்த குடும்பம்?! https://youtu.be/A-52DZI8-So மேல் மாகாணசபை உறுப்பினர் சண் குகவரதனின், ஆதரவாளர் சஜீவானந்தன் ,அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய குரல் பதிவினை ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் இணையம் இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இராஜபக்ச அணியுடன் இரகசிய தொடர்புகளை பேணியதால் கட்சியுடன் முரண்பட்டிருந்த சண். குகவரதனின் வலதுகரம் சஜீவானந்தன், அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய குரல் பதிவினை ராஜபக்ச அணியுடன் இரகசிய தொடர்புகளை பேணிவந்ததால், ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையுடன் முரண்பட்டிருந்த மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனின், ஆதரவாளர் சஜீவானந்தன் , இலஞ்சம் பெற்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ச அரசில் சேரும்படி, அமைச்சர் மனோ கணேசனுடன், அரசியல் நெருக்கடி வேளையான அக்டோபர் 31ம் திகதி, ரூபா 65 கோடிக்கு பேரம் பேசிய இந்த ஐந்தேமுக்கால் நிமிட குரல் பதிவினை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையம் வெளியிட்டுள்ளது. குறித்த குரல் பதிவில் பேரம் பேசுகின்ற சஜீவானந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின், இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையத்தில் இருந்து பல மாதங்களுக்கு முன் கட்சி விரோத செயற்பாடுகளால் வெளியேற்றப்பட்டவர் ஆகும். குறித்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர், இன்னமும் சிலகாலம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளனர். அமைச்சர் மனோ கணேசனை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளனர். ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனின் மிக நெருங்கிய ஆதரவாளர், சஜீவானந்தன் ஆவார். கடந்த திங்கட்கிழமை, அமைச்சர் மனோ கணேசனுக்கு எதிராக, சண். குகவரதன் கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில், சண். குகவரதனுடன் மேடையில், குரல் பதிவில் பேரம் பேசுகின்ற சஜீவானந்தன் ஒன்றாக அமர்ந்திருந்தார். எனவும் சண். குகவரதன் தலைமையில் இவர்கள் புதிய அரசியல் பயணம் போவதாக ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளனர். சண் குகவரதனின் வலதுகரமான சஜீவானந்தன், குரல் பதிவில், “நீண்டகாலமாக ப்ரோசசில் இருக்கும் மதில்மேல் பூனை” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் போட்டுக்கொடுத்துள்ளார்.அமைச்சர் மனோ கணேசன், நெருக்கடி வேளையில் தன்னுடன் பேசிய ஏனையவர்களை பற்றி சொல்கிறார். இந்த குரல் பதிவில், பேசப்பட்ட பல விடயங்கள் இன்னமும் இருப்பதாகவும், இது குற்றப்புலனாய்வு பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சின்னத்தம்பி பாஸ்கரா தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/111899?ref=recommended2
 40. 1 point
 41. 1 point
 42. 1 point
 43. 1 point
  வாழ்த்துக்கள் பிள்ளைகளூக்கு. எல்லோரும் கேட்டது போல் பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாவுக்கு ஓய்வு தராத முகாமையாளர் உலகம் தெரியாதவர் போல அல்லது பொறாமையோ தெரியவில்லை.
 44. 0 points
  ம்ம் அம்பாறையில் ஓர் கிராமம் அழிந்து போய்விட்டது பல வருட காலம் யாரும் உள்ளே செல்வதில்லை ஆலங்குளம் என்ற கிராமம் புராதான சிவன் ஆலயம் . முகநூலில் எனது தம்பி ஒருத்தன் அங்கே சென்று அதை படம் பிடித்து அதன் வரலாற்றை முகநூலில் சித்தரித்த போது கிழக்கு பலகலைக்கழத்திலிருந்து ஆராய்ச்சி செய்து அறிக்கை விட்டு கட்டுரையும் வெளியிட்டுள்ளார்கள் இன்னும் சில காலத்தின் பின் அந்த கிராமமும் இராது
 45. 0 points
  நான் எப்போ குறிப்பிட்டு இருக்கிறன் கூத்தமைப்புக்கு வாக்களித்தேன் என முகநூலில் இந்த கட்சிகளுக்கு எல்லோரும் ஆப்படிக்கவே பேக் ஐடி வச்சிருக்கிறன் அதில் நீங்களும் நண்பர் அப்பு
 46. 0 points
  விஸ்வாசம் பார்க்க பணம் தராத அப்பா.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்.. காட்பாடியில் ஷாக்! விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் அஜித்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர்.இந்நிலையில் வேலூர் மாவட்ட கட்டப்பாடி அருகே கிழஞ்சூரில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க பாண்டியன் என்பவரின் மகன் ஆசைப்பட்டிருக்கிறார். இவர் தீவிர அஜித்குமார் ரசிகர். இவரது பெயரே அஜித்குமார்தான். முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் பல ரசிகர்களில் இவரும் ஒருவர்.அதனால் விஸ்வாசம் படம் பார்க்க தன் அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற அஜித்குமார், தூங்கிக்கொண்டு இருந்த தந்தை மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டார்.தீவிர சிகிச்சை: உடம்பெங்கும் தீ பற்றி எரிய பாண்டியன் அலறி துடித்துள்ளார். பிறகு சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் தீக்காயங்களுடன் பாண்டியனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பார்க்க பணம் தராத அப்பாவை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/vellore/son-try-kills-his-father-due-viswasam-film-338551.html