• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. மல்லிகை வாசம்

  மல்லிகை வாசம்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   1,347


 2. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   28,303


 3. சாமானியன்

  சாமானியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   276


 4. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   17,020Popular Content

Showing content with the highest reputation on 03/09/2019 in all areas

 1. 5 points
  இன்று இங்கே சனி காலை நேரம். வழமையாக இரவு படுக்கப் போக எப்படியும் 11, 11.30 ஆகி விடும். புலம் பெயர்ந்தும் மாறாத பழக்கங்களில் இதுவும் ஒன்று. அதிசயமாக நேற்று இரவு 10 மணிக்கே படுக்கைக்கு போயாயிற்று । காலையில் துணைவியார் அதிசயமாக நல்லதொரு "mood " உடன் என்னப்பா இரவெல்லாம் ஒரே கனவு என்று கொண்டு வந்தார்। தேடிக் கதைக்க வரும் அருமையான சந்தர்பங்களை விட மனமில்லாமல் கையில் இருந்த வேலை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னப்பா என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லையப்பா சிங்களவர் , சோனகர் , தமிழர் எல்லோரும் ஒரே சண்டை , நீர்வேலியில் வைத்து நாங்கள் எல்லோ இடையில் மாட்டுப்பட்டுப் போனோம்। ஓடித் தப்பிக்கலாம் எண்டால் கை கால் ஒண்டும் வேலை செய்யுதில்லை அப்பிடியே இறுக்கிப் போச்சுது , சரியாக் களைச்சுப் போனன் அப்பா என்றார் இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் , வீட்டில் சர்வதேச விடயங்களை கையாள்வது நான் மட்டுமே. மன்னார் புதை குழி பற்றி கதை எடுத்தால் கூட “உதெல்லாம் தெரிந்த விடயம் தானேயப்பா , உவங்கள் உதுக்குள்ள என்ன விளையாட்டு காட்டினங்களோ ஆருக்கு தெரியும் " என்பதோடு முடித்து விட்டு " அந்த அந்த பிளம்பரோட கதைச்சநீங்களே , எப்ப வாறானாம்” என உள்நாட்டலுவல்களுக்கு மாறி விடுவார் । அப்பிடிகொத்தவர் இப்ப இலஙகைப் பிரச்சனை பற்றி கனவும் கண்டு அதைப் பற்றி கதைக்கவும் வருகிறார் எண்டால், ஏதோ ஒண்டு சரியில்லை எண்டு மட்டும் விளங்குற மாதிரி ।। துணைவியார் மேலும் தொடர்ந்தார் ।। " அப்பா கனவு அத்தோட முடியேல்லையப்பா " . " என்ன Chapter 2 உம் இருக்கோ " இது நான் । "” ஓம் ஓம் , உங்களுக்கு எவ்வளவு தடிப்பப்பா , நான் சொல்லச் சொல்ல , இவ்வளவு பிரச்சனைக்குள்ளும் நீங்கள் இவள் சுமதியைஎல்லோ காருக்குளேயே ஏத்திக் கொண்டு வாரியள், ஒண்டாத் தப்புவம் எண்டு. நாங்களே தப்ப வழியைக் காணேல்லை , இதுக்குள்ள இது வேற. இவள் சுமதி உங்களோட இளிச்சு இளிச்சு கதைக்கிறது எனக்கு கொஞ்சமும் பிடிப்பில்லை, அவள் ஆக்களைப் பாவிச்சு தன்ர காரியத்தைக் கொண்டு போகிற type “” ( இதுவெல்லாம் கனவிலே நடந்த விடயங்கள் தான் ). இப்ப எனக்கு கொஞ்சம் விளங்குகிற மாதிரி இருந்தது , துணைவியார் தொடர்ந்து கேட்டார் ( இது கனவிலல்ல ) “ எப்பவெண்டாலும் , என்ன காரணத்திற்கெண்டாலும் சுமதியை காரில ஏத்துவீங்களோ எண்டு " இப்ப தான் சனி காலை தொடஙகி இருக்கு. இன்று முழுவதும் போய் , நாளை ஞாயிறும் போய் திங்கள் வேலைக்கு வெளிக்கிட எவ்வளவு காலம் கிடக்கு । அதுக்குள்ளே இன்று சனி இரவு இலங்கையில் இன்னொரு கலவரம் வராதெண்டதுக்கும் ( கனவிலே தான் ) எது வித உத்தரவாதமும் இல்லையென்று நினைக்க அடி வயித்ததில என்னவோ செய்யிது
 2. 3 points
  கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, ! போதை தரும் வாதை சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......! ..............(1) அந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும், தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால் இடப்பற்றாகுறை காரணமாக ஒரே அமளிதுமளிதான். அதன் முதலாம் மாடியில் சில வழக்குகள் நடைபெற இருக்கின்றது.எல்லோரும் வந்து தங்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்து நீதிபதியின் வருகைக்கு காத்திருக்கின்றனர்.நீதிபதி ஈஸ்வரதாசன் நிதானமாக நடந்துவர எல்லோரும் எழுந்து நிக்கின்றனர்.அவரும் தனது இருக்கையில் அமர்கின்றார். தனது பையில் பொடிமட்டையை எடுத்து இரு விரல்களால் கிள்ளி எடுத்து காரம் சிரசில் அடிக்க இரு மூக்குத்துவாரத்திலும் நிரப்பிவிட்டு குமாஸ்தாவைப் பார்க்கிறார்.நீதிபதியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட குமாஸ்தாவும் தயாராக இருந்த வழக்கு கட்டுகளை எடுத்து கூப்பிடுகின்றார்.பெரும்பாலும் அபராதம் கட்டுபவர்கள், வாய்தா வாங்குபவர்கள் மற்றும் சில வழக்குகள் என்று ஆரவாரமாய் போகிறது. . வழக்கு எண் 108. வாய்க்கால் வழக்கு. என குமாஸ்தா அழைக்கவும் சிவஞானமும் செல்லையாவும் வந்து வாதி பிரதிவாதி கூண்டுகளில் ஏறி நிக்கின்றார்கள். நீதிபதி: யாரப்பா வக்கீல், வந்து வழக்கை சொல்லவும். வக்கீல் 1: ஐயா, எதிரி கூண்டில் நிக்கும் செல்லையா என்பவர் எனது கட்சிக்காரரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்.இரண்டு வீட்டின் எல்லைகளுக்கு இடையில் பொதுவான ஒரு வாய்க்கால் இருக்கு. அதை இவர் ஆக்கிரமித்து தனது வீட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளார் எஜமான்.அதற்கு நியாயம் வேண்டித்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கு. நீதிபதி: அந்த வாய்க்கால் யாருக்கு சொந்தமானது என்று ஆவணம் சொல்லுது . வக்கீல் 2: (குறுக்கிட்டு)அது பொதுவானது எஜமான். நீதிபதி: பொதுவானது என்றால் .......! வக்கீல் 1:அரசுக்கு உரித்தானது. நீதிபதி: அரசுக்கு சொந்தமான சொத்தை ஆட்டையை போடலாமா செல்லையா. அது தப்பில்லையா. அப்படியே சிவஞானத்தை பார்த்து உம்மை நான் மெச்சுகின்றேன்.ஒரு குடிமகனானவன் அநீதியை கண்ட விடத்து அதைத் தைரியமாக வெளிக்கொண்டுவர வேண்டும்.என்று சொல்ல .... எங்கோ பராக்கு பார்த்து கொண்டிருந்த வக்கீல் 1 அவசரமாய் குறுக்கிட்டு அதற்கில்லை எஜமான், செல்லையா முழு வாய்க்காலையும் தானே அபகரிப்பது அநியாயம்.நடுவில் எல்லையிட்டு பாதியை தனக்கு தரவேண்டுமென்று எனது கட்சிகாரர் கேட்கிறார். வக்கீல் 2 குறுக்கிட்டு அதெப்படி தரமுடியும்.எனது கட்சிகாரர் இருநூறு லொறி செம்மண் போட்டு நிரப்பியுள்ளார் வாழை நடுவதற்காக. நீதிபதி குறுக்கிட்டு காலை வெட்டுவன், வாழை நடப்போறாராம் வாழை,இரு வக்கில்களையும் பார்த்து கேஸ் என்றவுடன் எல்லாத்தையும் எடுக்கிறதா,இந்தகேஸ் நிக்காதென்று உங்களுக்கே தெரியும் அவர்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டாமா. கட்சிக்காரர்களைப் பார்த்து எச்சரிக்கை செய்து ஒரு அரச அதிகாரியின் முன்னால் அந்த வாய்க்காலை பழையபடி செப்பனிட வேண்டும்.மேலும் இந்த வழக்கிற்கான செலவுகளை இருவரும் பங்கிட்டு நீதிமன்றத்துக்கு செலுத்தவேண்டும். (அவர்கள் புறப்பட்டுப் போக, குமாஸ்தாவை பார்க்கிறார்) வழக்கு எண் 762. கஞ்சா விற்ற வழக்கு. நீதிபதி : யாரப்பா போலீஸ்... வந்து வழக்கை சொல்லவும். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன்னால் வந்து ஒரு பையை மேசையின்மேல் விரித்து வைக்கிறார்.அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருக்கின்றன.அதை நீதிபதி ஈஸ்வரதாசன் பார்க்கிறார். பின்னால் இரண்டு காவலர்கள் ஒரு இளம் பெண்ணை அழைத்து வருகின்றனர். அவள் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிக்கிறாள். ரவீந்திரன் இன்னொரு கூண்டில் ஏறி நின்று வணக்கம் ஐயா,இந்தப் பெண் வீதியில் நின்று கஞ்சா விற்று கொண்டிருக்கும் போது கைது செய்தேன். அந்தப் பையும் அதிலுள்ள கஞ்சா பொட்டலங்களும் இவளுடையதுதான். நீதிபதி: உன் பெயர் என்னம்மா... பெண் : காஞ்சனா ஐயா. நீதிபதி: நீ என்னம்மா சொல்கிறாய்.உனக்காக வாதாட வக்கீல் வந்திருக்கிறாரா....! காஞ்சனா: இல்லை ஐயா. நான் விக்கவில்லை. நீதிபதி: அப்படியென்றால் இந்த பையும் கஞ்சாவும் உன்னுடையதில்லை என்கிறாயா....! காஞ்சனா: ஆமாம். நான் அப்போதுதான் அதை கீழே கிடந்து எடுத்தேன். அப்போது அங்குவந்த காவலர் ஐயா என்னை பிடித்து கொண்டுவந்து விட்டார். நீதிபதி: நீங்கள் இவரை பிடிக்கும்போது பக்கத்தில் சாட்சிகள் யாராவது....! ரவீந்திரன்:இல்லை ஐயா. நீதிபதி: உங்களைக் கண்டதும் ஓடவோ அல்லது பொருளை மறைக்கவோ முயற்சித்தாரா...! ரவீந்திரன்: யோசித்து.... இல்லை ஐயா. நீதிபதி: அதிகமாய் பணம் ஏதாவது வைத்திருந்தாரா....! ரவீந்திரன்: இல்லை ஐயா. நீதிபதி: நீங்கள் இந்த வேலைக்கு புதிதாய் சேர்ந்திருக்கிறீர்களா....! ரவீந்திரன்: ஆமாம் ஐயா. நீதிபதி: போலிஸைப் பார்த்து நீங்களாவது சொல்லி இருக்கக் கூடாதா, ஒரு வழக்கை எப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று. பின் குமாஸ்தாவை பார்த்து கேட்கிறார் இந்தப் பெண்மீது பழைய வழக்குகள் ஏதாவது இருக்கா....! குமாஸ்தா: இல்லை ஐயா....! நீதிபதி:காஞ்சனாவிடம் இந்தா பாரம்மா, கீழே ஏதாவது பொருள் இருந்தால் போலீசுக்கு அறிவிக்க வேண்டும். அதை அவர்கள் வந்து எடுத்து பிரித்து கொள்வார்கள். நீயே எடுத்துக் கொண்டு போகக் கூடாது.ஏதாவது குண்டு கிண்டு கிடந்து தொலைக்கப் போகுது. சரியான ஆதாரங்கள் இல்லாததால் நீ போகலாம். இன்ஸ்பெக்ட்டரும் காவலரும் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே போகிறார்கள். நீதிபதியும் உள்ளே போக எழுந்தவர் மேசையில் கிடந்த பையைப் பார்த்துவிட்டு இந்த கருமாந்திரத்தையும் எடுத்து கொண்டு போங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறார். காஞ்சனாவும் ஓடிப்போய் அந்த பையை எடுத்துக்கொண்டு வேறு வாசல் வழியாக வெளியேறுகிறாள். ........வளரும்......!
 3. 2 points
  விசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம் கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது. இவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், குளியலை முடித்துவிட்டு அவனிடம் படுக்கையறைக்கு வந்த அவன் மனைவி கல்யாணி "என்னப்பா விடிய எழும்பினதும் கையுமா யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்? நேரம் 6:10 ஆச்சு. வேலைக்குப் பிந்தப் போகுது. ஓடிப்போய் குளியுங்கோ" என்றாள். உடனே அவளுக்குத் தான் கண்ட கனவை விபரித்தவனை "ஊர்ல உங்களுக்குப் புதையலாம். முப்பாட்டன், பேர்த்தி காலக் கதை போல எல்லா இருக்கு" என்று பரிகாசித்தாள் கல்யாணி. "சும்மா பகிடி விடாதையும். அதிகாலைக் கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்கள். மற்றவங்களுக்குப் பலித்திருக்கோ, இல்லையோ எனக்கு நிறையப் பலித்திருக்கு; இங்க அவுஸ்திரேலியாவில சிட்னிக்கு வருவேன் எண்டும், எனக்கு அடுத்த நாள் வேலை கிடைக்கும் என்றும் இப்படி நிறையக் கனவுகள் பலித்திருக்கு" என்று சொன்னவனை, "என்னைத் தவிர மற்றதெல்லாம் உங்களுக்குக் கனவில வரும்" என்று இடைமறித்துச் சிரித்தாள் கல்யாணி. "இல்லை கல்யாணி, இந்தக் கனவும் அதிகாலையில் கண்ட கனவு; நிச்சயமாக இதில ஏதோ செய்தி இருக்கு. புதையல் எண்டது பழங்கால விஷயம் தான். ஆனாலும் இந்தக் கனவை நான் நம்புறன். முந்தி பிரச்சினை காலத்தில எங்கட பாட்டி பின் காணிக்க புதைச்சு வச்ச நகையா இருக்குமோ?, அல்லது ஏதும் ஏன்ர அப்பா முந்தி யாருக்கோ கொடுத்த கடன் பணம் திரும்ப அவர் இல்லாத காலத்தில இப்ப எனக்கு கிடைக்கப் போகுதோ?, வேறு ஏதும் சொத்தோ?. இப்படி பல மாதிரி பல அர்த்தம் எடுக்கலாம் தானே?" என்றவனை "ஊர்ல ஒண்டும் வேண்டாம் எண்டு தானே உதறித்தள்ளிவிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு வந்தனீங்கள். 1999இல இங்க வந்ததுக்கு திரும்ப ஊருக்குப் போகவே இல்ல. இப்போ ஊரோட பெரிசா ஒரு தொடர்பும் இல்லை, உங்கட சித்தியைத் தவிர. சரி, அதைப் பற்றி பின்னேரம் பேசலாம். இப்போ போய்க் குளித்து வேலைக்கு வெளிக்கிடுங்கோ" என்று அவசரப்படுத்தினாள் கல்யாணி. குளிக்கும் போதும் மீண்டும், மீண்டும் அந்தக் கனவு பற்றியே சிந்தித்த அவன் மனம் அவனைச் சிட்னியை விட்டுத் தாயகத்தில் யாழ்ப்பாணத்துக்கு - கிட்டத்தட்ட 20 வருடங்கள் பின்னோக்கிய நினைவுகளுக்குக் கொண்டு சென்றது. (புதையலுக்கான தேடல் தொடரும்...)
 4. 2 points
  பட்டது + படிச்சது + பிடித்தது - 144 இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடுவதற்கும் இன்றைய கரோக்கே இசையில் பாடுவதற்குமான வித்தியாசமும் நாம் தொலைத்தவையும் இந்தப்பாடலையும் பாடுபவரின் யாலங்களையும் பாருங்கள். இசையை அறிந்தவர்களுக்கு அல்லது பாடக்கூடியவர்களுக்கு தெரியும் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடுவதற்கும் இன்றைய கரோக்கே இசையில் பாடுவதற்குமான வித்தியாசமும் நாம் தொலைத்தவையும். இந்தப்பாடல் வந்த காலப்பகுதியில் இந்தப்பாடலை மிகவும் ரசித்தும் இசை மற்றும் சுருதி குன்றாமல் பாடக்கூடியவர்களில் நானும் ஒருவன்.
 5. 2 points
  கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மாதா சிலை, ஜேசு சிலை வைப்பதை பார்த்தும் சேற்ச்சை கண்டால் இப்போதும் மரியாதை கொடுக்கும் நாம் (சைவர்கள்). ஏன் இந்த மத வெறீவர்களுக்கு என்பதுதான் புரியவில்லை. இது மன்னாரில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள் எனது சொந்தக் காரர் ஏனெண்டா சாத்தானாம். வாய் திறந்தாலே எப்போதும் சாத்தான்(பேய்) பற்றிதான் கதை. ஏன் இந்த மத வெறி.???????? எனது நண்பர்களும், அவர்களும் கத்தோலிக்கர்தான் ஆனால் அவர்கள் மதம் பற்றி பேசமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தமிழர்கள். யாரின் மனதையும் புண் படுத்த வேண்டும் என எழுதவில்லை, எனது ஆதங்கம். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மாதா சிலை, ஜேசு சிலை வைப்பதை பார்த்தும் சேச்சை கண்டால் இப்போதும் மரியாதை கொடுக்கும் நாம் (சைவர்கள்). ஏன் இந்த மத வெறீவர்களுக்கு என்பதுதான் புரியவில்லை. இது மன்னாரில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள் எனது சொந்தக் காரர் ஏனெண்டா சாத்தானாம். வாய் திறந்தாலே எப்போதும் சாத்தான்(பேய்) பற்றிதான் கதை. ஏன் இந்த மத வெறி.???????? எனது நண்பர்களும், அவர்களும் கத்தோலிக்கர்தான் ஆனால் அவர்கள் மதம் பற்றி பேசமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தமிழர்கள். யாரின் மனதையும் புண் படுத்த வேண்டும் என எழுதவில்லை, எனது ஆதங்கம்.
 6. 2 points
  அண்ணை..... அவர், அடுப்படிக்கு வந்தால்..... இடுப்பை, பிடித்து.... கிள்ளுவார் என்று... பரிமளம் ஆன்ரி, கோவிக்க மாட்டாவோ... எனக்கென்னவோ... செருப்படி.... விழும் என்ற பயமாய் இருக்கு.
 7. 2 points
  புதையலைத் தேடி... (பாகம் 5 ) முகநூலுக்கு முற்பட்ட காலத்தில் தாய்மண்னை விட்டு வெளியேறிய வசந்தன், முழு உலகமும் அதன் பாவனை வியாபித்திருக்கும் தற்காலத்தில் முதன் முறையாக மீண்டும் யாழ் மண்ணில் ஓர் குளிர்கால மாலைப்பொழுதில் காலடி வைக்கிறான். சித்தி ரஞ்சனியின் மூத்த மகன் சிவா அவனை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்திருந்தான். யாழ் டவுனிலிருந்து ஓர் வாடகைக்காரில் ரஞ்சனிச்சித்தியின் வீட்டுக்கு வசந்தனின் பயண மூட்டைகள் சகிதம் இருவரும் பயணிக்கின்றனர். சிட்னியின் கோடைகால வெயிலில் கடந்த சில வாரங்களைக் கழித்தவனுக்கு காரின் ஜன்னல்களினூடு பாய்ந்த இளந்தென்றல் காற்று இதமாக இருந்தது. ராஜா தியேட்டரைத் தாண்டிச் செல்லும்போது 'பேட்டை' படம் பார்ப்பதற்கு இளைஞர்கள் பலர் முண்டியடித்துச் செல்வத்தைப் பார்த்தான். அங்கே தான்அவன் கடைசியாக ரஜினியின் 'படையப்பா' படம் பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது. கடந்த 20 வருடங்களில் ரஜினி படங்களின் கதையில் அடிப்படையில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லையே என உள்ளூர நகைத்த அவன் தன் வாழ்க்கையும், தனது தாய்மண்ணும் பாரிய மாற்றத்தைச் சந்தித்திருக்கின்றன என்பதை உணர்ந்தான். துவிச்சக்கர வண்டிகளும், உந்துருளிகளும் ஆதிக்கம் செலுத்திய காங்கேசன்துறை வீதியில் தற்போது பல்வேறு வகை மோட்டார்வாகனங்கள் கடுகதியில் பாய்ந்து செல்வது அவனுக்குப் புதிதாக இருந்தது. சல்வார், ஹமீஸ் அணிந்த நமது நங்கையர் பலரைக் காணும்போது தான் ஏதோ இந்தியத் தமிழ்த்திரைப்படத்தையோ அல்லது, இந்திய கலாசார நிகழ்வில் கலந்துகொள்ளும் உணர்வைக் கொடுத்தது! இவ்வாறு யாழ் நகரின் காட்சிகளில் வசந்தன் லயித்திருக்க, வாடகைவண்டி அவனது கிராமத்துக்குள் நுழைந்தது. விவசாயக் கிராமமான அதன் இயற்கை அழகு குன்றாமல் இருந்தாலும் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆலயங்கள், புதிதாக முளைத்த பல்பொருள் அங்காடிகள், அழகுசாதனக் கடைகள் எனப் புதுப்பொலிவுடன் வசந்தனின் பார்வையில் காட்சியளித்தது. இங்கே தான் அவனது பிறந்த வீடும், தற்போது அவனது சித்தியின் குடும்பத்தினர் வாழும் வீடும் சில நிமிடங்கள் நடை தூரத்தில் இருக்கின்றன. ரஞ்சனிச் சித்தி வீட்டு பிரதான வாயிலின் முன்னால் அவர்களது வண்டி சென்றடைந்த கணமே வண்டிச் சத்தம் கேட்டு வாசலுக்கு விரைந்து வந்தாள் சித்தி. அவளைக் கண்டதும் பயணக்களைப்பையும் மீறி உற்சாகமாகக் குழந்தை போல வண்டியிலிருந்து இறங்கி ஓடி வந்து அவளை கட்டியணைத்துக்கொண்டான் வசந்தன். ஊருக்குள் நுழைந்த போது அவன் மனதில் தோன்றிய ஒட்டுமொத்த வெறுப்புணர்வையெல்லாம் ஈடு செய்வது போல் அந்த அன்பான அணைப்பு இருந்தது; அவன் அங்கு வர ஒரே காரணமாக இருந்தவள் அவனது அம்மாவின் சொந்தத் தங்கையான அவள் அல்லவா! ****************** அன்றிரவு இராப்போசனத்தை சித்தியுடனும், அவளது மகன்மார் சிவா, நரேன் ஆகியோருடனும் எடுத்த பின் பரஸ்பரம் இரு குடும்பத்தாரின் சுகங்களை விசாரித்துக்கொண்டனர். ஊர்ப்புதினங்களும், அவுஸ்திரேலியப் புதினங்களும் பரிமாற்றப்பட்டன. சிவாவும், நரேனும் மறுநாள் தூர இடத்திற்கு வேலைக்குச் செல்லவேண்டி இருந்ததால் சிறிது நேரத்திலேயே படுக்கைக்குச் சென்றுவிட்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சித்தியைக் கண்ட சந்தோஷம் வசந்தனின் பயணக்களைப்பை நீக்கவே அவனும் சித்தியுடன் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தான். பேச்சின் இடையே சித்தி கேட்டாள் "தம்பி, நீர் ஊருக்கு வந்தது உங்கட அம்மா (ரஞ்சனியின் அக்கா), அப்பா, அக்காவுக்குத் தெரியுமா"? "இல்லைச் சித்தி, உங்களுக்குத் தெரியும் தானே? அவை இப்பவும் என்னை ஒதுக்கித் தான் வச்சிருக்கினம். நாங்கள் அவையோட இப்பவும் பேசுறதில்லை" என்று சொன்ன வசந்தன் "நான் உங்கட வீட்டை தங்குறது அவங்களுக்குத் தெரியாது. இதனால உங்களுக்கு ஒண்டும் பிரச்சினை இல்லையே சித்தி?" என்று பரிதாபமாய்க் கேட்டான். "இல்லை தம்பி, எனக்கும் வயது போகுது... இனி எனக்கென்ன பிரச்சினை வரப் போகுது? அக்காவும் எப்பவாவது இருந்திட்டு ஒருக்காத் தான் கோல் எடுத்துக் கதைப்பா. அங்கையும் அவையும் ஒரே பிசியாத் தானே இருப்பினம்" என்று சொன்னவள் "நீர் அவையோட கதைக்க முயற்சித்தனீரோ?" என்று கேட்டாள். "இல்லைச் சித்தி, அவை தானே நானும், கல்யாணியும் அப்ப யாழ்ப்பாணத்தில இருக்கும் போதே எங்களை ஒதுக்கி வச்சிட்டினம். பிறகெண்டாலும் என்னையோ, கல்யாணியையோ தொடர்புகொள்ள முயற்சிக்கேல்ல. அதால, நாங்களும் பேசாமல் விட்டுட்டம்" என்று உள்ளுர எழுந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சொன்னான் வசந்தன். "சரி தம்பி, நடந்தது நடந்து போச்சு. மூளையைப் போட்டுக் குழப்பதையுங்கோ. உங்களுக்கு நானும், என் மகன்களும் இருக்கிறம். கன நாளைக்குப் பிறகு வந்தனீங்கள், சந்தோஷமா ஊரைப் பார்த்திட்டுப் போங்க" என்ற சித்தி "நாளைக்குக் காலையில பக்கத்தில இருக்கிற கோயில்களுக்குப் போய்ட்டு வருவம். பிறகு எனக்கு தோட்டப்பக்கம் கொஞ்சம் வேலை இருக்கு" என்று சொன்னாள். "தோட்டவேலையா? யாருடைய தோட்டம்" என்று உடனே இடைமறித்துக் கேட்டான் வசந்தன். "இப்ப போன மாதம் தான் தோட்டக்காணி ஒரு துண்டை வாங்கினனாங்கள். கனடாக்காரர் ஒராள் தான் வந்து வித்திட்டுப் போனவர். எனக்கும் பொழுது போகவேணுமெல்லோ. சும்மா இருக்காமல் மரவள்ளித் தோட்டம் போடலாம் எண்டு யோசிக்கிறன்" என்றாள் சித்தி. உடனே வசந்தன் "அப்படியா சித்தி, நானும் நாளைக்கு தோட்டப்பக்கம் வரலாமா? நிறைய நாளைக்குப் பிறகு தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தமாதிரியும் இருக்கும், உங்களுக்கு உதவியாவும் இருக்கும்" என்றான் உற்சாகமாக, தனது புதையல் பற்றிய கனவை மனதில் எண்ணிக்கொண்டு. "உங்கட விருப்பம் தம்பி, நான் ஏன் தடுக்கப் போறன்?" என்று சிரித்தபடியே ஆமோதித்த சித்தி "சரி தம்பி, உங்களுக்கும் நித்திரை ஒழுங்கில்லாமல் இருந்திருக்கும். போய்ப்படுத்து நல்லா ரெஸ்ட் எடுங்கோ" என்று சொல்ல "சரி சித்தி, குட் நைட்" என்று சொல்லிவிட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்றான் வசந்தன். (தேடல் இன்னும் தொடரும்...)
 8. 2 points
  புதையலைத் தேடி... (பாகம் 3): இவ்வாறு புதையல் பற்றிய கனவு மூலம் பழைய நினைவுகளில் புதையுண்ட வசந்தனை "என்னப்பா, இன்னுமா குளிச்சு முடிக்கேல?! உங்கையும் ஏதும் கனவில இருக்கிறீங்களோ? இல்லை... உதுக்குள்ள ஏதும் புதையல் தேடுறீங்களோ?!" என்று கிண்டலாகவும், அவசரத்துடனும் கேள்விக்கணைகளைத் தொடுத்த கல்யாணி "7 மணியாகப் போகுதப்பா; கெதியா வாங்கோ" என்றாள். ************************** மனைவிக்கும், பள்ளிக்கு வெளிக்கிட்டுக்கொண்டிருந்த தனது ஒரே பிள்ளைச்செல்வம் அனந்தனுக்கும் முத்தமிட்டுவிட்டுத் தனது டொயோட்டா கமேரியில் ஏறி வேலைக்கு விரைந்தான் வசந்தன். வண்டியின் திருப்புச் சக்கரத்தில் அவனது கை கவனமாகத் திருப்பியும், சுழற்றியும் இயங்கிக்கொண்டிருந்தாலும், அவனது மனம் மீண்டும், மீண்டும் கனவை எண்ணிச் சுழன்று அவனது ஊர், ஒரு வருடக் கொழும்பு வாழ்க்கை, கடந்த 19 வருட கால இயந்திரமயமான சிட்னி வாழ்க்கை என்று பல நினைவுகளை அவன் மனக்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது. விருப்பமின்றி, சந்தர்ப்ப சூழ்நிலையால் தமது இருபதாவது வயதில் கொழும்பு வந்த வசந்தனுக்கும்,கல்யாணிக்கும் ஆதரவாக அவர்களது யாழ்ப்பாண நண்பர்கள் மூலம் கிடைத்த சில மூத்த நண்பர்கள் இருந்தாலும், நாட்டின் அரசியல் கெடுபிடிகளின் தாக்கத்தை மேலும் உணர்ந்த அவர்கள் வெளிநாடு செல்வதே மேல் என்று தீர்மானித்தார்கள். எனினும், வசந்தனுக்கு மட்டுமே அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான உயர்கல்வி விசா புலமைப் பரிசிலுடன் ஒரு வருடத்தில் கிடைத்தது. கல்யாணி தனித்து விடப்போகிறாளே என்று யோசித்தபோது தான் கொழும்பில் விதவைத் தாயாகத் தனது இரு சிறு மகன்களுடன் வசித்துவந்த வசந்தனின் சித்தி ரஞ்சனி அவளைத் தனது வீட்டில் தங்குவதற்கு இடமளித்தாள். கற்பதற்கு சிட்னி வந்த வசந்தன் தனது மூன்று வருட வணிகக்கல்வியை பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் மிகச் சிறப்பாக முடித்து உதவிக் கணக்காளராக முதலாவது வேலையை ஆரம்பித்து, அவுஸ்திரேலியா நாட்டின் நிரந்தரக் குடியுரிமையையும் பெற்றுக்கொண்டான். அந்த 3, 4 வருட காலப்பகுதியில் படிப்பு, பகுதி நேர இரவு வேலை என அவன் பட்ட கஷ்டங்களும், அவன் மிகவும் நேசித்த தாய் மண்ணையும், புது மனைவி கல்யாணியையும், உதவி செய்த சித்தியையும் பிரிந்து ஓர் அந்நிய தேசத்தில் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும், ஒட்டாத அந்த வாழ்வும் தாய் மண், உறவுகள் பற்றிய அவனது பார்வையை வெகுவாக மாற்றியது. காதலித்த குற்றத்திற்காக ஒதுக்கிய உறவுகளும், ஊரவரும் மனித உணர்வுகளை மதிக்கத்தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டமாகவும், அவுஸ்திரேலியப் பழங்குடியினரிலும் (இவர்களைப் பற்றி பின்னாளில் அவன் வாசித்த போது அவர்களின் மேன்மையைப் புரிந்துகொண்டது வேறு கதை!) கீழான மனிதராகவும் அவன் பார்வையில் தென்படத்தொடங்கினர். இந்தப்பார்வை அவனது ஊரவர் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த யாழ்பாணத்தவர் மீதான வெறுப்பாகவும், இன்னும் மொத்த தமிழ்ச் சமுதாயம் மீதான வெறுப்பாகவும் படிப்படியாக விரிந்து சென்றது. எனவே சிட்னியிலும் அவனது நண்பர்கள் என வெள்ளை, சீன இனத்தவர்களையே பல்கலைக்கழகத்திலும், வேலையிடத்திலும் சேர்த்துக்கொண்டான். நம்மவர்களுடன் பேசிப் பழகுவதை முடிந்தவரை தவிர்த்த அவனுக்கு ஒரு சில யாழ்பாணத்து நண்பர்களே இருந்தனர். தனது காதல் மனைவி கல்யாணியை குடும்ப விசாவில் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த சில வருடங்களில் அழைத்தது, மகன் பிறந்தது, அவன் பள்ளி செல்ல ஆரம்பித்தது என வேகமாகக் காலம் உருண்டோடிய பின்னரும் வசந்தனுக்கு நம்மவர்கள் மீதான வெறுப்புத் தணியவில்லை. பல்லின மக்கள் வாழும் சிட்னியில் நம்மினமும் ஓர் சிறந்த இனம் என்பதையும், நம் பழமையையும் மறந்து தான், தன் குடும்பம், வேலை, சில பல்லின நண்பர்கள் என தனது வட்டத்தைச் சுருக்கிக்கொண்டான். எனினும், அவனது வாழ்வின் அடித்தளம் யாழ்ப்பாணத்திலேயே இடப்பட்டதாலும், ஒப்பீட்டளவில் மனைவி கல்யாணி நாட்டுக்குப் புதியவள் என்பதாலும் அவுஸ்திரேலிய வழி வாழ்க்கைமுறைக்கு முழுமையாக அவனால் மாறவும் முடியவில்லை. எனவே இரண்டும்கெட்டானான வாழ்க்கையொன்றையே அவன் இதுநாள் வரை சிட்னியில் வாழ்ந்து வருகிறான். இவ்வாறு நெடுதூரம் தாவியோடும் கங்காரு போல் வசந்தனின் மனம் கடந்த கால நினைவுகளைத் தொட்டுக்கொண்டு அலைபாய அவனது மோட்டார் வண்டியும் அவனது வேலைத்தளத்தை அடைந்தது. (தேடல் இன்னும் தொடரும்...)
 9. 2 points
  புதையலைத் தேடி... (பாகம் 2): யாழ்ப்பாணத்திலே பசுமையான தோட்டவெளிகளும், வீதிகளின் இரு மருங்கே நிழல்தரு மரங்களும், ஆலயங்கள் பலவும் நிறைந்த சொர்க்கபுரி போன்ற ஓர் ஊரிலே கண்டிப்பான ஓர் அதிபருக்கும், ஆசிரியைக்கும் ஏகபுதல்வனான வசந்தனுக்கு அவனை விட இரு வயது கூடிய சகோதரி மட்டுமே இருக்கிறாள். அவனை ஒரு புகழ்பெற்ற வைத்தியராக்குவதே பெற்றோரின் நெடுநாள் கனவு. எனினும் வசந்தனின் இலட்சியம் தான் ஒரு கணக்காளனாக வருவதே. எனவே, பெற்றோரின் வற்புறுத்தலையும் மீறி உயர்தர வகுப்பில் வணிகவியல் துறையைத் தேர்ந்தெடுத்த அவன் 1999ஆம் ஆண்டு பல்கலைக்கழக நுழைவுக்கும் தகுதி பெற்றான். எனினும், இதனால் பெற்றோருக்கு அவன் மீது ஏற்பட்ட மனக்கசப்பு இன்னொரு விடயத்தால் மேலும் அதிகரித்து முற்றியது; அதே 1999ஆம் ஆண்டு தானும், தன்னுடன் உயர்தர வகுப்பில் படித்த கல்யாணியும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கும் விடயத்தைத் தன் பெற்றோருக்குத் தெரிவித்த வசந்தன் அவர்களது மனப்பூர்வமான சம்மதத்தைக் கேட்டபோது வீடே அல்லோலகல்லோலப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் யாழ்பாணத்துப் பெற்றோரின் வழமையான 'காதலிப்பது கேவலமான, கௌரவமற்ற ஒன்று' என்ற மனநிலையில் அவனது காதலைக் கடுமையாக எதிர்த்த அவர்கள், கல்யாணி வீட்டாருக்கு இவர்கள் காதலிக்கும் விடயத்தைக் கூற அவர்களும் இவர்கள் காதலுக்குச் சம்மதிக்கவில்லை. எனவே வசந்தனும், கல்யாணியும் அவரசமாகப் பதிவுத்திருமணம் செய்துகொண்டமை இருவீட்டாரின் வெறுப்பை மட்டுமல்ல, ஊரார் பலரின் புறக்கணிப்புக்கும் ஆளாயினர்; பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராகக் காதலித்து இவர்கள் எடுத்த இந்த முடிவு தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் ஓர் தவறான முன்னுதாரணமாக இருந்துவிடுமே என்ற கிராமத்தாரின் மனநிலை தான் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம். பல்கலைக்கழகக் கல்வியுடன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கும் தயாராக வேண்டிய நிலையில் இருந்த இந்த இளஞ்சிட்டுக்கள், தங்கள் வாழ்க்கையைப் பெற்றோர், மற்றும் உறவினர், ஊரவருடன் கூடிக் கொண்டாடி நடத்த முடியாத வேதனையில் தாம் இதுவரை சுதந்திரப் பறவைகளாகச் சிறகடித்துத் திரிந்த யாழ் மண்ணை விட்டுப் பிரிந்துசெல்ல முழுமனதின்றி கொழும்பு சென்றன, தாம் புது வாழ்க்கை அமைக்கப் புதிய களம் தேடி. தாம் நேசித்த செம்மண்ணின் வாசனையை நுகரவும், கோவில் மணியோசையும், கூடவே கூவிய சேவலும் அலாரமடித்துத் தூக்கம்கலைக்கவும் இனிச் சில தசாப்தங்கள் ஆகுமென அறியாமல், மோட்டார் வண்டிகள் உமிழும் புகையின் 'சுகந்தத்தை' நுகரவும், பொழுது சாய்ந்ததும் குருவி நுழையப் பெரு மரத்தின் சிறு பொந்து போன்ற 'அப்பார்ட்மென்ட்' வாழ்க்கையை அனுபவிக்கவும் கொழும்பு நகரில் காலடி வைத்தனர். (தேடல் இன்னும் தொடரும்... தேடலுக்கு உத்வேகமூட்டிய உறவுகளுக்கு நன்றி! )
 10. 1 point
  கவிதையோ கவிதை கதையோ கவிதையோ எதுவோ ஒன்று இணையம் 21 க்கு இயற்றிடலாம் என்று தண்டோரா போட்டு விட்டனர் இன்று பண்புடன் ஏற்று அதை செப்புதல் நன்று மண்ணில் விதையிடில் மரம் முளைக்கலாம் மரத்தின் கிளையில் கவிதை பறிக்கலாமோ மயங்கிய மதியை மனசுக்குள் தேற்றி அறிவெனும் ஒளியை அகலினில் ஏற்றி ஒரு கை பார்க்க புடைத்தது நெற்றி கொப்பியடித்தால் கிடைத்திடும் வெற்றி காலம் கடந்த பட்டுக்கோட்டை பாடல்களை பக்குவமாய் தறித்து இட்டு கட்டிடலாமோ காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைகளை கன்னா பின்னா என்று உரு மாற்றிடலாமோ அவதாரபுருஷன் வாலியின் வாலிப வரிகளை வாலைப் பிடித்து வளைத்து போடலாமோ வைரமுத்துவின் சத்தான செய்யுள்களை கொத்தாக உருவி கெத்தாய் விடலாமோ நா.முத்துக்குமாரின் நயமான கவிதைகளை நசுக்கிடாமல் சுட்டு அரங்கேற்றிடலாமோ எண்ணியெண்ணி ஏங்கித் தவிக்கிறேன் என் தூக்கம் கேட்டு எதுவும் எழுதிலேன் ஆங்கிலக் கவிதைகளை அலேக்காய் துக்கலாம்தான் அதிலொரு பிரச்சினை எனக்கு அம்மொழியும் அரைகுறை.....! யாழ் இணையம் அகவை 21. ஆக்கம் சுவி.......!
 11. 1 point
  பரவாயில்லை, ரதி. நானும் நேரடியாகக் கூறியிருக்கலாம்.
 12. 1 point
  மாந்தை நாற்சந்தியில் அமைந்திருக்கும் மடு மாதா தேவாலயத்தின் வாசலை கடந்துதான் பக்தர்கள் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு செல்லவேண்டும். அதேசமயம் கிறிஸ்தவர்கள் மடுமாதா கோவிலுக்கு செல்ல இந்துக் கோவிலின் அலங்கார வழைவுகளை தாண்டி செல்லவேண்டிய அவசியம் கிடையாது. கேதீஸ்வரத்துக்கு செல்லும் அதே வழியில் ஒரு புத்தவிகாரையும் (Mathota Raja Maha Viharaya) அமைந்திருக்கிறது அல்லது புதிதாக அமைக்கப்பட்டிருப்பதையும் கூகிள் வரைபடம் காட்டுகிறது. புத்த விகாரைக்குச் செல்ல இந்த வழியில் உள்ள வழைவுகளைத்தாண்டித்தான் செல்லவேண்டும். இப்போது உறவுகளுக்கு புரியும் இந்த விடையத்தில் உண்மையான பின்னணி யாரென்பது. தமிழர்கள் சமய பேதங்களால் தமக்குள் அடிபட்டு சாக அதில் எப்போதுமே இலாபம் பெறுவது பொளத்த சிங்களவர். மொத்தத்தில் தமிழன் ஒரு பேமாளி.
 13. 1 point
  அது ஒரு காலம் அண்ணை சாராரண தரப்பரீட்சையில் சங்கீதத்துக்கு D (அதி உயர் சித்தி) எடுத்தவன் நான் அப்புறம் பருவ வயதும் அது சார்ந்த குரல் மாற்றமும் கொழும்புக்கான இடம் மாற்றமும் அதனால் ஏற்பட்ட தொடர் பயிற்சி இன்மையும் குரலை மாற்றி விட்டது ஆனால் இசையும் அதன் சுருதியும் இன்றும் என்னோடுண்டு நானாடா விட்டாலும்........ நன்றியண்ணா
 14. 1 point
 15. 1 point
  தமது மதமும் கடவுள்களும் பிழையென்றுதானே, பிற மதத்திற்கு மாறினார்கள். ஆக, ஒவ்வொருவருக்கும் பிற மதத்தினர் - சாத்தான்கள்.
 16. 1 point
  சண்டை நேரம் தலையாட்டிகளாக இருந்த பலரை அரசே பிரான்சுக்கு அனுப்பியது.இதே போல ஆவா குழு என்று பிடித்தவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. கூட்டிக் கழித்து பார்த்தா விடை சரியாகவும் இருக்கலாம்.
 17. 1 point
  பிரான்சில கன பேர் சண்டை பிடிக்கிறார்கள் போதாக்குறைக்கு முகநூலிலிலும் அடிப்பேன் உதைப்பேன் என்று இது இலங்கையில் நடந்திருந்தால் ஆவா குழு அல்லது ராணுவத்தின் வேலையென்று ஆள் ஆளுக்கு வகுப்பு எடுப்பார்கள்
 18. 1 point
 19. 1 point
 20. 1 point
  இது நடந்த அக்கிரமத்தை மறைக்கும் முயற்சி. கேதீஸ்வரத்துக்கான வளைவு அவர்களது தேவாலயத்திற்கு எப்படி இடைஞ்சலாக மாறும்? இரண்டும் வேறு வேறு தெருக்களில் இருக்க, இவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகத் தெரிவது எப்படி? கத்தோலிக்க மதவெறிக் காட்டுமிராண்டிகள். தமிழின ஒற்றுமையைக் குழப்ப முயல்கிறார்கள்.
 21. 1 point
  விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய தொழிற்கட்சி டொனி பிளேயர் ஆட்சி கொண்டு வந்த தடை என்பது மிகவும் மோசமான அமெரிக்க வால்பிடித்தனத்தின் வெளிப்பாடு. அந்தத் தடையை இன்னும் அனுமதிப்பது என்பது எம்மவர்கள் சொந்த மக்களுக்கு இனத்துக்கு தொடர்ந்து செய்யும் துரோகம். அண்மையில் அம்மையார் மே கொண்டு வந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம்.. தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயற்பாடுகளில் ஈடுபாடுள்ளவர்களின்.. பிரித்தானிய பிரஜா உரிமையை அரசு கேட்டுக்கேள்வி இன்றி.. ரத்துச் செய்யலாம். இந்த வகையில்.. இப்போ பலரின் பிரஜா உரிமை ரத்தாகியுள்ளது. குறிப்பாக சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்களது. அதிலும் குறிப்பாக இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் நிலை மோசம். இதில் வேடிக்கை என்னவென்றால்.. எம்மவர்கள் அசைலம் அடிக்கும் போது எழுதிய பொய் கதைகளில் அவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்களே அவர்களுக்கு ஆப்பாக மாறும் வாய்ப்புள்ளது. அந்த வகையில்.. புலம்பெயர் தமிழர்கள் தம் இருப்பை பாதுகாக்க வேண்டின்.. விடுதலைப்புலிகள் மீதான சர்வதேச தடைக்கு எதிராக காத்திரமான வழியிலும் சட்ட ரீதியான வழியிலும் போராடி வெல்ல வேண்டும். அதாவது அந்தத் தடையை நீக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வன்முறையிலும் ஈடுபடாது மெளனிக்கப்பட்டு ஜனநாயக வழிக்கு முன்னாள் போராளிகள் திரும்பி உள்ள நிலையில்.. அவர்கள் மீதான சர்வதேசத் தடை என்பது ஒரு அடக்குமுறை.. அநாவசியம் என்பதை ஒருமித்த மக்களின் குரலாகவும்.. சட்டத்தின் மூலமும் சர்வதேச நாடுகளுக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு எம்மவர்களுக்கு உண்டு. ஆனால் எம்மவர்கள் அதைச் செய்ய பெரும் முனைப்புக் காட்டவில்லை. ஒரு சில இளையோர் அமைப்புக்கள் தவிர. அதன் விளைவே இது.
 22. 1 point
  நன்றி அக்கா கதையின் இடையிடையே இவை பற்றியும் குறிப்பிடுதல் அவசியம் எனப்பட்டது அண்ணா. மேலும் விபரமாக எழுத அவா எனினும் சுருக்கத்துக்காக நீண்ட வர்ணனைகளை முடிந்த அளவு தவிர்த்துக்கொள்கிறேன். வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா.
 23. 1 point
  28 வருடமாக சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யுமாறு தமிழர் ஒன்றுகூட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. இதுவரை பொறுத்தது போதும். இனியும் பொறுப்பதற்கில்லை என்பதை இந்திய அரசுக்கு உணர்த்த இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தமிழ் மக்களால் இதுவும் முடியும். தமிழ் மக்களால் மட்டுமே இப்படி முடியும் என்று காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. வந்தாரையே வாழ வைக்கும் தமிழக மக்கள் தம்மை நம்பியவர்களை கைவிட்டு விடுவார்களா என்ன? தம்மை நம்பியவர்களை தமிழினம் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதை காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தேர்தல் வருகிறது. மக்கள் விருப்பம் என்ன என்பதை மட்டுமல்ல மக்கள் பலம் என்பதையும் காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. நேற்று அற்புதம்மாளின் கைத்தொலைபேசியை யாரோ திருடிவிட்டார்கள். தன் கைத் தொலைபேசியை திருடு போய்விட்டதே என்றாலும் தன்னைவிட யாரோ வறுமை நிலையில் இருக்கிறாரே என்றுதான் அவர் பரிதாபப்பட்டிருக்கிறார். அந்த தொலைபேசியில் தன் மகன் படத்தை போட்டு வைத்திருந்ததாகவும் விரக்தி வரும்போதெல்லாம் மகன் படத்தை பார்த்து உற்சாகம் பெற்று வந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். போதும். அந்த அற்புதமான தாய் இதவரை அடைந்த துயரம் போதும். இனி நேரிலேயே தன் மகன் முகத்தை இறக்கும்வரை பார்த்து ஆறுதல் பெறட்டும். தமிழர்களே! ஒன்று சேருங்கள் ஒருமித்து குரல் கொடுங்கள் ஏழு தமிழர் விடுதலை பெறட்டும். இன்னும் 24 மணி நேரம் மட்டுமே!
 24. 1 point
  அதில்லை விசயம். ஆங்கிலத்தில் மிக தெளிவாக போடப்பட்டுள்ளது. இலங்கைத்தூதரகம் சில வேலைகளை செய்கிறது. அதற்க்காக பணம் செலவு செய்கிறது. His arrest comes just days after it emerged that the Sri Lankan embassy in London was actively spying on Tamil protesters. ஜெனீவாவுக்கு செல்பவர்களை பயமுறுத்துவதும், விலக வைப்பதும் அதில் ஒன்று. பல அமைப்புகளிடையே, அவர்களின் உளவாளிகள் புகுந்து உள்ளனர். யார், யார் எங்கே, எப்போது என்ன செய்ய கிளம்புகிறார்கள் என்ற பூரண தகவல் அங்கே கிடைக்கின்றன. போலீசாருக்கு, பயங்கரவாதிகள் என்று சொன்னால் அவர்கள் விசாரித்து விளங்கும் வரை பயணம் தடைபடும் அல்லது பயணமே செய்ய மாட்டார்கள். இது போன்ற கொடிகளை எடுத்து செல்வதானால், இலங்கை தூதரகத்தினை உச்ச வேண்டுமானால், முன்னரே போலீசாருக்கு கடிதம் எழுதி அனுமதியினை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம், பிரச்சனைகள் எழும் போதே தடுக்க முடியும். இலங்கை தூதரகத்தினை அதன் வழியிலேயே வெட்டி ஆடாமல், முடடாள் தனமாக நடந்தால் இது தான் நிலை.
 25. 1 point
  ஆளுக்கொரு வேசம், நேரத்திற்கொரு பேச்சு, என்றிருப்பவர்கள்தான் வாழ்க்கையை மிக எளிதாக எதிர்கொள்கிறார்கள்....
 26. 1 point
  எந்த சிங்களக்கட்சி வந்தாலும் இலங்கை தமிழருக்கு விமோசனம் இல்லை. இது 60வருட அரசியல் அனுபவம். ஒரு இஞ்சியளவு கூட இய்ய விடமாட்டார்கள்.
 27. 1 point
  புங்கை இதை கனவென்று சொன்னாலும் எல்லாமே நிஜத்தில் நடப்பது போலத் தான்.இதில் கலர் என்ற சொல்லுக்கே இடமில்லை.
 28. 1 point
  துளசிதான் தினமும் சந்திரிக்கா அம்மையாருக்கு விஸ்கி ஊத்திக் கொடுத்து பிரட்டி விடுகின்றவர். அவருக்குத்தான் அம்மையாரை காலையில் எழுப்பும் கஷ்டம் புரியும்! அம்மையார் எப்படிப் பாடுபட்டாவது மகிந்த கோஷ்டி ஆட்சியைப் பிடிப்பதை தடுக்க முயற்சிக்கின்றார். அதற்காகத்தான் சிறுபான்மை இனங்களிடம் புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்று வார்த்தைஜாலங்களை அள்ளித் தெளிக்கின்றார்.
 29. 1 point
  தற்பொழுது தான் கண்ணில் பட்டது ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அற்புதமாக கதை சொல்கிறீர்கள் இடைக்கிடை நாட்டு நடப்புக்களையும் அதன் தற்போதைய போக்குகளையும் பூடகமாக சுட்டிக்காட்டுவது அருமை (கோயில் கோபுரங்கள் மட்டுமே புணரமைக்கப்பட்டு உயர்ந்து நிற்பது) வாழ்த்துக்கள் தொடருங்கள் தொடர்கின்றோம்
 30. 1 point
  ஈழப் பிரியன், "பென்ஷன்" எடுதாப் பிறகு தான், பலருக்கும் புத்தி வரும். சந்திரிக்காவும், அதற்கு விதி விலக்கு அல்லவே.... இப்படியான செய்திகளை வாசித்து, விட்டு, கொடுப்புக்குள் சிரித்து விட்டு, போக வேண்டும். அதனை... நாம், சீரியஸாக எடுத்தால், எமக்கு "பிளட் பிரஷர்" உச்சத்துக்கு ஏறி விடும்.
 31. 1 point
  இன்றுதான் வாசித்தேன் நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள் மல்லிகை வாசம் உங்கள் அனுபவத் தொடரை.
 32. 1 point
  தினமும் Scotch Whisky இல் புரளுபவர், சந்திரிகா அம்மா. காலையில், வேளைக்கு எழும்புவது கஷ்டம்தான்.
 33. 1 point
 34. 1 point
  கவனம் அப்பு, எங்கட அலட்டல் எல்லாத்தையும் கவனித்து கொண்டிருந்து விட்டுதான் சாமானியன் சன்னதமாட வந்திருக்கிறார்......!
 35. 1 point
  இளந்திரையனின் பதவியை வைத்து என்ன,என்ன சுகங்களை அனுபவித்தார்களோ அதே போல கஸ்டங்களையும்,பாவங்களையும் அவர்கள் சுமக்கத் தான் வேண்டும்
 36. 1 point
 37. 1 point
  புதையலைத் தேடி... (பாகம் 4): மாலையில் வீடு திரும்பிய வசந்தன் இராப்போசனம் முடிந்ததும் மனைவியுடன் தனது கனவைப் பற்றிய பேச்சை மீண்டும் ஆரம்பித்தான். "கல்யாணி, இண்டைக்கு முழுக்க மனம் ஒரு நிலையில் இல்லை. வேலையிலும் முழுக்கவனம் செலுத்த முடியேல. பழைய ஞாபகங்கள் எல்லாம் மண்டையைப் போட்டுக் குடையுது" என்று பெரு மூச்சுடன் சொன்ன வசந்தனிடம் "என்னப்பா, இன்னும் அந்தப் புதையலைத் தோண்டி முடியேல்லையோ? சும்மா பேசாம விடுங்க. டீவில நாடகம் தொடங்கப் போகுது" என்று கல்யாணி அவசரமாகச் சொல்ல, இடைமறித்து வசந்தன் "நீர் இஞ்ச வந்த நாள் தொடக்கம் ஒரே நாடகமாத் தான் எங்கட பொழுது போகுது. வாழ்க்கை ஒரே நாடகமேடை எண்டு சொன்னாலும் சொன்னாங்கள். அதை பிழையாய்ப் புரிஞ்சுகொண்டீர் போல. எங்கட வாழ்க்கையே ஒரே நாடகமாய்த் தானே போய்க்கொண்டிருக்கு" என்று சலிப்புடன் சொன்னான். "ஏன் நீங்களும் தானே நாடகம் பார்க்கிறீங்கள்? உள்ள சொந்த பந்தம் எல்லாம் வேண்டாம். நாடகம் பார்த்தாலே சொந்தங்களோட உறவாடினமாதிரி இருக்கு எண்டு ஒரு காரணம் வேற சொல்லிக்கொண்டு" என்று முறைப்பான சிரிப்புடன் சொன்ன கல்யாணிக்கு "சரி அதை விடுமப்பா. இந்தக் கனவிலே ஏதோ ஒரு விஷயம் இருக்கு. இன்னும் என் மனசில நல்லாப் பதிஞ்சிருக்கு" என்று ஆழ்ந்த யோசனையுடன் சொன்ன வசந்தனிடம் "சரியப்பா, இப்ப என்ன புதையல் தானே? ஊருக்குப் போய்க் கிண்டிப் பாருங்கோவன். பெரிய தொகை கிடைச்சா எங்கட மோர்ட்கேஜ்ம் வெள்ளணக் கட்டி முடிக்கலாம்" என்ற கல்யாணி "அது சரி, ஊருக்குப் போற பிளைட் டிக்கெட் காசாவது புதையல்ல கிடைக்கும் தானே?... ஹிஹிஹி" என்று சிரித்தபடி குரலைத் தாழ்த்திச் சொன்னாள். "பகிடியை விடும் கல்யாணி, ஊருக்குப் போகத் தான் வேணும். எண்டாலும் 20 வருசத்துக்குப் பிறகு போறன். அங்க போய் எப்படிச் சமாளிக்கப் போறனோ தெரியல்ல. நீரும், வரேலாது. அனந்தனோட படிப்பைப்பார்க்க வேணும்" என்றவனிடம் "உங்கட ரஞ்சனிச் சித்தி இப்ப யாழ்ப்பாணத்தில தானே இருக்கிறா. அவ கொழும்பில இருக்கேக்க எங்களுக்கு உதவி செய்தவ தானே. மகன்மாரும் வளர்ந்து பெரியவங்களாகி விட்டாங்கள் தானே." என்று நினைவூட்டினாள் கல்யாணி. "ம்... எல்லாம் உமக்கு நினைவில இருக்கு என்ன?!" என்று அதிசயமாகப் புன்னகைத்தபடி கேட்ட வசந்தனை "ஓமோம், அவங்க செய்த உதவியை மறக்கக் கூடாது தானே?" என்று கல்யாணி சொல்ல "நீர் சொல்லுறதைப் பார்த்தால் செய்த உதவிக்காக மறக்கக்கூடாது என்ற அர்த்தத்தோட சொல்லுறதாத் தெரியல்ல. இனிக் கிடைக்கப் போற உதவிக்காகத் தான் மறக்கக் கூடாது என்று சொல்லுற போல இருக்கு" என்று கிண்டலடித்தான் வசந்தன். "என்னில எப்படியாவது பிழை கண்டுபிடிப்பதே உங்க வேலையாய்ப் போச்சு. சரி இனியும் நேரத்தை மினக்கெடுத்தாமல் கெதியா ஊருக்கு பிளைட் டிக்கெட்டைப் போடுங்கோ" என்று அவசரப்படுத்திய கல்யாணி "போகேக்க உங்கட வீட்டையும் ஒருக்கா எட்டிப்பார்த்திட்டு வரலாமே" என்று சிரிப்புடன் சொல்ல "இல்லையப்பா, அது சரி இல்லை. இவ்வளவு காலமாகியும் எண்ட அம்மா, அப்பாவோ, அக்காவோ எங்களை நாயென்றும் மதிக்கிறதில்லை. அவை இப்ப லண்டன்ல செட்டில் ஆகியும் கூட மாறேல. சும்மா பூட்டிக்கிடக்கிற வீட்டுக்குப் போய் ஏன் வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான். ஊரவங்களுக்கு என்மேல கடுப்பு என்னும் இருக்குமோ என்னவோ" என்று உதட்டை விரித்தபடி சொன்னான் வசந்தன். "இல்லை, ஒருவேளை புதையல் உங்கட வீட்டு வளவில் தான் என்று இருந்தால்?" என்று விழிகளை உயர்த்தியபடி புன்னகைத்து கல்யாணி சொல்ல, "அப்படி இருந்தால் அது கனவில கூட வராது" என்று தடித்த தொனியில் வேகமாகப் பதிலளித்தான். "சரி எதோ பார்த்துச் செய்யுங்கோ. நானும் அனந்தனும் படுக்கைக்குப் போறம். குட் நைட் பா" என்று சொல்லிவிட்டு அடுத்த அறையிலே பள்ளிப்பாடங்களைச் செய்துகொண்டிருந்த அனந்தனிடம் சென்றாள் கல்யாணி. அந்நிய நாடொன்றுக்கு உல்லாசப்பயணம் செல்லும் வெள்ளைக்காரன் மனநிலையில் வசந்தன் விமான நுழைவுச்சீட்டைப் பதிவுசெய்வதற்காக மடிக்கணணியைத் திறந்தான் வசந்தன். (தேடல் தாய் மண்ணில் தொடரும்...)
 38. 0 points
  அந்த டொக்டர் ஏன் இறந்தவர் காட் அட்டாக்கா?...அவரது இறப்பு மிகவும் கவலையானா ஒரு விசயம்...ஊர் மக்களுக்கு நல்ல சேவை செய்தவர் என்று கேள்விப் பட்டேன்...ஒரு கோயிலில் அவரைக் கூப்பிட்டு கெளரப் படுத்தினார்கள்...கொஞ்ச நாளில் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்
 39. 0 points
  ஒரு செக்கன் முடிவு. செத்தவனுக்கு பிள்ளை பிறந்து 7 நாள் வெட்டியவனுக்கு 3 சிறுபிள்ளைகள் வெட்ட உதவியவர்கள் மிகமிக நல்லபிள்ளைகளாக எல்லோராலும் அறியப்பட்டவர்கள் இளம் குடும்பத்தர்கள் ஒன்றுமே புரியல