யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   353

  • Content Count

   46,008


 2. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   311

  • Content Count

   27,089


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   268

  • Content Count

   16,047


 4. Nathamuni

  Nathamuni

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   159

  • Content Count

   6,995Popular Content

Showing content with the highest reputation since 03/23/2019 in all areas

 1. 19 points
  பாலைவன தடங்கள் ................................... 2003 உயர்தர பரீட்சை ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்தது. எப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அது. அதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது மாவிலாறு பகுதியில் சமாதான புறா மெதுவாக இறக்க ஆரம்பிக்க வெள்ளைவான் ஊர்வலம் வரத் தொடங்கியது கிழக்கு வீதிகளில். யார் யார் உலா வருகிறார்கள் என்று தெரியாமல் கண்டம் விட்டு கண்டம் பாய்வது போலும் ஊரை விட்டு அயல் முஸ்லீம் ஊர்களில் ஒழித்துக்கொள்வோம் பகல் , இரவு வேளைகளில் அந்த நாட்களில் . (காலத்தில்) இப்படி இருக்க வேண்டாம் எங்கேயாவது போய்விடு என்று அம்மா சொல்ல கடனையும் வாங்கி ,இருந்த நகைகளையும் வித்து மத்திய கிழக்குக்கு போக தயாராகுகிறேன் . மெடிக்கல் , பாஸ்போட் என எல்லாம் கொழும்பில் வைத்து எடுத்து பயணம் 2004 ... . ....ல் ஆரம்பமாகிறது போகும் இரவு நேரத்தில் மட்டக்களப்பை தாண்டியதும் வெடியோசைகள் காதை கிழிக்க ஆரம்பித்தது என்னவோ ஏதோ? என மனது அடித்துக்கொண்டாலும் உயிரை தப்பித்துக்கொள்ள எங்கேயாவது ஓடிடு என்ற குரல் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது மனதுக்குள் எல்லா சோதனைகளை தாண்டி அதிகாலை கொழும்பை அடைந்ததும் மட்டக்களப்பில் சண்டைகள் அரங்கேற்றப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது . விமான நிலையம் போக பஸ்ஸை தவற விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்தாலும் விமான நிலையம் இருக்கும் அந்த பாதையோ மிக வாகன நெருசல் மிக்க தாக இருந்தது விமான நிலய அருகாமையில் இருக்கும் சோதனை சாவடியில் வைத்து என்னை மட்டும் இறக்கி நீ யாருடைய ஆள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. என்னடா எனக்கு வந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் இல்லை படித்து முடித்து விட்டேன் ஊர்பக்கம் பிரச்சினை அதுதான் வெளிநாடு செல்ல போகிறேன் என்றேன் அவனும் ஒரு மணி நேரம் வரை வைத்துவிட்டு நாட்டை விட்டு செல்வது அவர்களுக்கு நல்லதென்று பட்டுதோ என்னவோ சரி போ என தூரம் வைத்திருந்த அப்பா, சித்தப்பாவிடம் அனுப்பினார்கள் . அந்த நேரம் விமான நிலையம் கண்ணாடி பொருந்த்தப்படவில்லை வெறும் பலகைகளாலும் மட்டைகளாலும் வைத்து மறைக்கப்பட்டிருந்தது , அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் கையை அசைத்துவிட்டு புறப்படலாகினேன் . அங்கேயும் போகும் வழியில் ஒரு நன்றாக தமிழ் தெரிந்த புலனாய்வு துறை ஒருவர் வந்து மீண்டும் கூட்டிக்கொண்டு விசாரித்தார் எந்த ஊர்? எந்த ஏரியா என? அவர் எங்கள் பகுதியில் இருந்திருப்பார் என்னவோ தெரியாது! சகல இடங்களையும் விசாரித்து விட்டு விலாசத்தையும் மனதுக்குள் முணுமுணூத்து பார்த்துவிட்டு விட்டு விட்டார் அவர் தமிழ் தெரிந்த சிங்களவர் அல்ல அவர் ஒரு தமிழர் என்பது அவர் பேசிய மொழி பாஷையில் அறிய முடிந்தது எனக்கு . தொடரும்.....
 2. 18 points
  உ சிவமயம் பெர்லின் மேற்கு ஜெர்மனி 15.10.1982 அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது! நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன் நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள் பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை. இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே. என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். இப்படிக்கு அன்பு அத்தான் குமாரசாமி அடுத்த கடிதம் வரும்......
 3. 18 points
  நேற்று இரவில் இருந்து ஏற்பட்ட ஒரு நடுக்கம் இன்னும் மனதில் இருந்து விலகவில்லை. கொழும்பில் இருக்கும் காலப்பகுதியில், முக்கியமாக A/L படிக்கும் காலப்பகுதியில் கொட்டாஞ்சேனை பகுதியில் தான் எல்லா ரியூசன் கிளாசுக்கும் செல்வது. அப்படி போகும் காலப்பகுதியில் ஒவ்வொரு வெள்ளியும் பொன்னம்பல வாணேச்சரர் கோவிலுக்கு போவது வழக்கம். அந்த கோயிலில் உறைந்து இருக்கும் இருளும் வெளிச்சமும் கலந்த ஒரு நிறம் மனசுக்கு மிகவும் அமைதியை கொடுக்கும். அப்படி போய்விட்டு வெளியே வந்து கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்கு முன் இருக்கும் ஒரு கடையில் பிளேன் ரீயும் வடையும் வாங்கி சாப்பிடுவது உண்டு. அத்துடன் பல தடவை அந்தோணியார் கோவிலுக்குள் போய் வணங்கி இருக்கின்றேன். பின் ஒரு தமிழ் கத்தோலிக்க பெண் ஒருவரை காதலித்துக் கொண்டு இருந்த இரண்டு வருடங்களில் அடிக்கடி உள்ளே அவருடன் சென்று அமைதியாக அமர்ந்து இருந்திருக்கின்றேன். எல்லா வழிபாட்டு தலங்களும் நேர்மறையான எண்ணங்களை அதிகமாக கொண்ட இடங்கள். வருகின்ற எந்த ஜீவனும் தம் பிரச்சனைகளுக்கு, கவலைகளுக்கு, முயற்சிகளுக்கு, நோய்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வருவர். எவரும் மற்றவர் நாசமாக போக வேண்டும் என்று வழிபட வருவதில்லை என்பதால் எப்பவும் நேர்மறையான எண்ணங்கள் கொண்ட இடமாகவே வணக்க தலங்கள் இருப்பதால் ஒரு கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ அல்லது புத்த கோவிலுக்கோ உள்ளே சென்று அமைதியாக இருக்கும் போது மனம் மிகவும் நிரம்பி போய் இருக்கும். பூசைகள் மீதும் மெழுகுவர்த்திகள் மீதும் எப்பவும் எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை என்பதால் அவற்றில் இருந்து விலகி இருப்பதுண்டு. பின்னர் கடவுள் இல்லை என்று கண்டபின்பும் கூட வழிபாட்டு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு வந்தால் மறுப்பதும் இல்லை. போன வருடம் மகள் இயலினியை கூட்டிக் கொண்டு கொழும்பு போய் அங்கு தங்கிய 5 நாட்களில் ஒரு நாள் பொன்னம்பல வாணேச்சரர் கோவிலுக்கு கூட்டிச் சென்று காட்டியபின், அடுத்ததாக கொண்டு சென்றது கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்குதான். எம்முடம் வந்த அம்மா, இயலை கூட்டிக் கொண்டு சென்று சொரூபங்களை எல்லாம் தொட்டு கண்ணில் வைத்து வழிபட்டுக் கொண்டு இருந்தார். நான் வழக்கம் போல அமைதியை நிரப்பிக் கொண்டு இருந்தேன். இந்த இரண்டு கோவில்களும் மனசுக்குள் அத்தனை நல்ல நினைவுகளை கொண்டவை நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இந்த கோவிலும் பாதிக்கப்பட்டு அதில் பலர் இறந்தமையை கேட்டதில் இருந்து எனக்கு வந்த மெல்லிய நடுக்கம் இந்த நல்ல நினைவுகளின் மீது இழைக்கப்பட்ட கொடூரத்தின் குரூரத்தின் பேரால் வருகின்றது. ஏனைய இடங்களிலிருந்து வரும் இழப்புகளின் செய்திகள் மனதை வெறுமைக்குள் தள்ளி விடுகின்றது. அனைத்து வழிபாட்டு தலங்களின் மீதான தாக்குதல்களும் மானிடத்தின் பெயரால் கண்டிக்கபட வேண்டியவை. தம் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காக, மன அமைதிக்காக வரும் அப்பாவிகள் மீது கட்டவிழ்த்தப்படும் இந்த மாதிரியான வன்முறைகளால் மக்களை எப்பவும் ஒரு 'நடுக்கத்தில்' வைத்திருக்க செய்யும் உளவியல் போரிற்காக நூற்றுக்கணக்கானோரை கொன்று குவிக்கின்றனர். அவர்கள் எல்லாரையும் கொல்கின்றனர். ஆண் பெண் குழந்தைகள் என்று எந்த வேறுபாடும் இன்றி வழிபட வந்தவர்களை, ஆயுதம் எதுவுமற்ற அப்பாவிகளை குறிவைத்து கொல்கின்றனர். மனிதர்களை கொல்கின்றனர், போர் ஒன்றில் இலக்கு வைக்கப்படக் கூடாது என்று வரையறை செய்த இடங்களை இலக்கு வைத்து கொல்கின்றனர். அவர்களின் தேவை மனித சதையும், இரத்தமும், அது சிந்தும் போது வரும் அந்த நெடியும். துயரமும் யதார்த்தமும் என்னவெனில், இது இத்துடன் முடியப் போவது இல்லை என்பதுதான். தன் தாயை இழந்து, தன் குழந்தையின் முத்தங்களை இழந்து, பிரார்த்தனை செய்வதற்காக சென்ற அப்பாவை இழந்து, தனக்காவும் பிரார்த்தனை செய்ய போன துணையை இழந்து வாடும் உயிர்களுக்காகவும் மற்றும் காயம்பட்ட அத்தனை உறவுகளுக்காகவும் மனம் வருந்துகின்றேன். சபிக்கப்பட்ட உலககில் இருந்து வெறுமனே வருந்துவதை தவிர வேறு எது செய்ய முடிகின்றது?
 4. 16 points
  உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம். எச்சரிக்கை இம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். குறிப்பு சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை. உடலுக்கான சக்தியின் தேவை பிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. 1. முதலாவது காபோஹைதரேட் இதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு. சுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும். அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும். ஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது. 2. இரண்டாவது கொழுப்பு. முளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும். ஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும். வரலாற்றுக் குறிப்பு ரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர். 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார். குளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது. இன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. ஒப்பந்தம் கொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா ? இதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை. என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம். சமன்பாடு கொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம். ஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி 150 கிராம் கோழி = 350 கி.கலோரி ஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி ஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது. இதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம் . அனுகூலங்கள் கொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன. நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம் கலோரிக் கட்டுப்பாடு தேவையில்லை இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும் (triglycerides) இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது மேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம். சில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது சில வகையான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும் ஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும். இன்னும் பல… தீமைகள் உடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் நார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் கொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும். படிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும். இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன். தயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள். தொடரும்.
 5. 16 points
  வணக்கம் போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது. யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் யாழ் இணையம் மூலம் விளம்பர சேவைகளை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை ஏதாவது ஒரு அமைப்பிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்பதுடன் நாம் சட்டச்சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் யாழில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணம் TNRA அமைப்பிற்கே போய் சேரும் வகையில் விளம்பரப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. யாழ் கள உறுப்பினர்களிடம் இருந்து கேட்பது என்னவெனில் உங்கள் பகுதிகளில் இருந்து விளம்பரங்களை யாழில் இணைப்பதற்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இது பற்றிக் தெரியப்படுத்துங்கள். விளம்பரங்களையாழ் இணையத்தின் மூலம் பிரசுரிப்பதன் மூலம் அத் தகவலினை உலகமெங்கும் வசிக்கும் உறவுகள் தெரிந்து கொள்ள வழியேற்படும் என்பதுடன் கிடைக்கும் பணம் நல்நோக்கத்திற்கே பயன்படப்போகின்றது என்பதையும் தெரியப்படுத்துங்கள். இன்னமும் என்ன செய்யலாம் என்ன மாதிரி செய்யலாம் என்பதையும் கள உறுப்பினர்கள் ஆலோசனைகளாக இங்கு வைக்க முடியும். உங்கள் பகுதிகளில் இதற்கு என விளம்பரங்களை பெற்றுத் தர நீங்கள் இணைய விரும்பினால் சேவை அடிப்படையில் இணைந்து கொள்ள முடியும். https://yarl.com/order/ எனும் முகவரியில் விளம்பரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
 6. 16 points
  கணனியில் அதிகம் பயிற்சி எடுத்த களம் என்றால்.. அது யாழ் களம் தான். குறிப்பாக தமிழ் விசைப்பலகையில் ஆரம்பித்து... தமிழ் யுனிக்கோட் எழுத்துரு உருவாக்கத்தில்... ஆரம்ப காலத்தில்... நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியது ஈறாக.. வலைப்பூக்கள் அமைப்பு.. படங்களை மீள் வடிவமைத்தல்.. அசைவியக்க படங்கள் உருவாக்கம்.. தமிழ் மூல.. வின்டோஸ் அப்பிளிகேசன் மென்பொருள் பாவனை என்றும்.. கணணி வன்பொருள் அறிவு பெற்றமை.. கணனிக்குரிய பகுதிகளை வாங்கிப் பொருத்தி சொந்தமாக கணனி.. உருவாக்குதல் என்று.. போய்.. யாழுக்கு அப்ஸ் உருவாக்கும் வரை என்று நிறைய கணணி சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள யாழ் இடமளித்திருக்கிறது கடந்த பல ஆண்டுகளாக. இந்தப் பின்னணிகள் மற்றும் கல்வியிடங்களில் பெற்ற கணனி அறிவு.. மற்றும்.. வேலையிடங்களில் பெற்ற கணணி மென்பொருள் அறிவு எல்லாத்தையும் கலந்தடித்து சமர்ப்பித்ததன் அடிப்படையில்.. பிரிட்டிஷ் கம்பியூட்டர் சாசைட்டி.. The British Computer Society.. BCS இல்.. நிரந்தர அங்கீகாரங்களில் ஒன்றான.. AMBCS நிலை அண்மையில் கிடைக்கப் பெற்றது. கணணி சார் பட்டப்படிப்பு எதனையும் கொண்டிராத நிலையில்.. இந்த தகுதி நிலையை அடைவதற்கு இடையறாது.. கணணி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம்.... இந்த அங்கீகாரத்துக்கான அடிப்படையாகும். அதுக்கு யாழும் உதவி புரிந்துள்ளது. The benefits of Associate (AMBCS) membership Associate membership delivers a range of services designed around the professional needs of today’s competent IT practitioners. Professional recognition Tools to gain recognition within the industry include post nominal letters AMBCS, and a defined path to Chartered status via Professional membership. Career development To plan and track progression, members use our Personal Development Plan (PDP), the CPD portal and gain full access to Browse SFIAplus, the online tool that allows them to explore the industry framework for IT skills, training and development. Networking Top people, great ideas and the latest thinking locally, nationally and online - our global networking opportunities are unrivalled and include branches, specialist groups and the Member Network. Knowledge and best practice From the latest industry news to our massive online library, the Institute’s information services keep members up to date with best practice, and at the cutting edge of IT. Exclusive discounts and offers Adding even more value to membership, our discounts and free services enable members to enjoy savings both at work and at home. Upgrading to Professional (MBCS) membership At any time during their free year’s membership, candidates who are eligible can upgrade to Professional (MBCS) membership. (MBCS subscription payment is required). யாழில் எழுத ஆரம்பித்த ஆர்வத்தின் மிகுதியால் கிடைக்கும் இரண்டாவது அங்கீகாரம் இதுவாகும். முன்னர் விஞ்ஞானச் செய்திகளை.. ஆக்கங்களை படித்து.. மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தமைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அது Royal Society of Biology வாயிலாகக் கிடைத்தது. இவை போக.. தமிழகத்தில்.. ஆனந்த விகடனில்.. யாழில் எழுதி வந்த விஞ்ஞான ஆக்கங்களை... எளிமையான மொழிபெயர்ப்புக்களை.. கொண்டு வந்த எங்கள் வலைப்பூவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இவை போக.. யாழிலிலும் பகிர்ந்து கொள்ள என்று பிடிக்கப்பட்ட இரண்டு.. உயிரியல் சார்ந்த படங்கள்.. The Biologist என்ற இரு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியாகும் ஏட்டிலும் இரு வேறு படங்கள்.. இரு வேறு தடவைகள்.. பிரசுரமாகியுள்ளன. யாழ் ஒரு பொழுதுபோக்கு களம் என்பதற்கும் அப்பால்.. பலரும் பல்வேறு நிலை விருத்திக்குப் பயன்படுத்திய.. படுத்தக் கூடிய.. நுண்மைகள் பொருந்திய இடமும் கூட. இவற்றையும் யாழின் 21 ஆண்டு கால சாதனைகளில் சேர்ந்துக் கொண்டமைக்கு யாழுக்கும் யாழை உருவாக்கி.. நிர்வகித்து நடத்துவோருக்கும்.. செந்நன்றிக்கடனாக்கிக் கொள்கிறோம்.
 7. 15 points
  அழியாத கோலங்கள். புலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று. காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகளும், சிறியகாயங்களும் அவ்வப்போது வந்துபோயினும் புலம்பெயர்ந்த செயற்கை வாழ்க்கை இது எதையுமே நினைக்க விடவில்லை. வந்துவிட்டோம், வாகனமும், வீடும், வேலையும் சமூக அந்தஸ்த்தும் தேடித் தேடியே நாட்கள் தொலைந்துதான் மிச்சம். இடையிடையே கவலைகள் மனக்கசப்புகள் வேதனைகள், ஆற்றாமைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், விரக்திகள் என்று வாழ்க்கை தெருக்களிலெல்லாம் சிந்திக்கொண்டே போயிருக்கிறது. மறக்க விரும்பிய கணங்கள், நினைக்கத் தோன்றா தருணங்கள், மிண்டும் வாழ்ந்துபார்க்க விரும்பும் பொழுதுகள் என்று எத்தனையோ கணங்கள் வந்து போய்விட்டன. எவை வந்துபோயினும் கூடவே இழையோடியிருக்கும் ஒரு வெறுமை. எதுவென்று சொல்லத் தோன்றாத ஒரு ஏக்கம். நிறைவடையாத மனது. முடிவில்லாத தேடல்கள். இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது. எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. ஆனால், மனிதர்களில் இதுவரையில் தோழமையுடன் வந்தவர்கள் வெகு சிலரே. வந்தவர்களும் பாதியிலேயே விட்டகல வெறும் தனிமைதான் கூட வருகிறது. உறவுகள் இறுதிவரையென்றாலும், தனிமனித விருப்பு வெறுப்புகள் அவற்றையும் தேடல்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகின்றன. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.
 8. 14 points
  வணக்கம் யாழ்கள உலககிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி மே மாதம் தொடங்கவிருப்பதால் யாருமே போட்டியை முன்னின்று நாடாத்த முன்வராததால் அரைகுறை அனுபவத்தோடு நானே 2019 போட்டியை நடாத்தலாமென்று யோசித்துள்ளேன்.இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கலாம். இதுவரை இந்தப் போட்டியை நடத்த வேண்டுமென்று யாராவது நினைத்திருந்தால் தாராளமாக நடாத்தலாம்.எனக்கும் இதுக்கும் வெகு தூரமென்றாலும் யாராவது நடாத்தியே தீர வேண்டுமென்பதாலேயே முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி முன்வந்துள்ளேன். இனி உங்கள் ஆதரவு கண்டு தொடர்கிறேன்.
 9. 14 points
  கடந்த ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது. ஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து பதிவுசெய்தாகிவிட்டது. இணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாகத் திரிவது ஆபத்து என்று போட்டிருந்தார்கள். மேலும் தேடியதில் விமான நிலையத்தில் இருந்து எதென்ஸ் செல்வதற்கு டாக்சியில் செல்வதற்கு அதிகமான பணம் வசூலிப்பார்கள். விமான நிலையத்துக்கு முன்னாலேயே தொடருந்துத் தரிப்பிடம் உள்ளது. அதில் செல்வது மலிவு என்று போட்டிருந்தார்கள். லண்டனில் இருந்து எதென்ஸ் செல்ல நான்கு மணி நேரம். இங்கு காலை எட்டுமணியளவில் புறப்பட்டு பகல் 12.30 க்கு அங்கு போய் நானும் கணவரும் இறங்கிவிட்டோம். வெளியே வந்து பார்த்தால் விமான நிலையம் சும்மா ஒரு கட்டடம் போல் நின்றுகொண்டிருந்தது. தொடருந்து நிலையம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு அங்கேயே ஒரு எதென்சின் வரைபடத்தையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்து காத்திருக்கிறோம். கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும் வரைபடத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது நின்மதியாக இருந்தாலும் சரியான தொடருந்தைப் பிடித்துச் சரியானஇடத்துக்குப் போய்ச் சேர வேண்டுமே என்று மனதில் ஒரு படபடப்பு ஒட்டிக்கொண்டே இருந்தது. தொடருந்து வர இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. காவிருக்கைகள் இருக்கும் இடங்கள் எல்லாம் ஆட்கள் இருக்கின்றனர். வேறுவழியில்லாமல் ரெயின் வரும் வரை நிக்கத்தான் வேணும் என்கிறேன். நாலுமணித்தியாலம் இருந்து தானே வந்தனாங்கள் அரை மணித்தியாலம் நில்லன் என்று கூறிவிட்டு மனிசன் பிராக்குப் பார்க்க வேறுவழி யில்லாது நானும் தண்டவாளத்தின் பலகைகளையாவது எண்ணிக்கொண்டிருப்போம் என்றால் அந்தத் தொடருந்துத் தடத்துக்கு பலகைகளைக் காணவில்லை. என்னப்பா இது இங்க பாருங்கோ பலகையளைக் காணேல்லை என்று நான் சொல்ல, எனக்கு உதைப்பற்றித் தெரியாது. என்னைக் கேட்காதை. வேறை ஏதும் டெக்னோலஜி பாவிச்சிருப்பான்கள் என்கிறார் மனிசன். தொடருந்து வருவதாக அறிவிக்க, இது சரியான தொடருந்துதானா என்ற சந்தேகம் எழ, பக்கத்தில நிக்கிறவனிட்டைக் கேளுங்கப்பா என்கிறேன் மனிசனிடம். மனிசன் கேட்க அவனுக்கோ ஆங்கிலம் விளங்கவில்லை. கொஞ்சம் தள்ளி இன்னொரு பெண்ணும் நிற்கிறார். அவளிடம் கேளுங்கோ என்கிறேன். இந்த நாட்டில தெரியாத ஆட்களிடம் பெண்கள் கதைப்பார்களோ தெரியாது. எதற்கும் நீ போய்க் கேள் என்கிறார் மனிசன். நான் போய் கேட்டதும் அவளுக்கும் விளங்கவில்லை. தூரத்தே தொடருந்து வருவது தெரிகிறது. நான் வரைபடத்தில் இறங்கவேண்டிய இடத்தைக் காட்டி தொடருந்தையும் கை காட்டுகிறேன். அவளுக்கு விளங்கியதோ இல்லையோ. ஓம் என்று தலையை இங்குமங்கும் ஆட்டுகிறாள். சரி தொடருந்தை விட ஏலாது. முதல்ல ஏறுவம். பிறகு உள்ள ஆரிட்டையாலும் கேட்பம் என்கிறேன். இதுவாய்த் தான் இருக்கும். சும்மா பயந்து என்னை டென்ஷன் ஆக்காதே என்றபின் நான் எதுவும் கதைக்கவில்லை. தொடருந்து வந்து நின்றதும் பார்த்தால் நிறையச் சனம். இருக்கவும் இடம் கிடைக்காது போல என்று விசனத்துடன் நிக்க, நிறையப்பேர் எதென்சில் இறங்க மனிசன் விரைவாக ஏறி எனக்கும் தனக்குமாக இடம் பிடிச்சிட்டார். சரியாக ஒரு மணி நேர பயணத்தில் எதென்ஸ் போய் இறங்கியாச்சு. வரை படத்தைப் பார்த்துப் போனால் இடம் பிடிபடவில்லை. வீதிகளை பார்க்க பாழடைந்துபோய் பலகாலம் பயன்படுத்தாத மூடிய கடைகளும் புழுதியான வீதிகளும்.... என்னடா இது உதவாத இடத்தில் தங்குமிடத்தை எடுத்துவிட்டோமோ என்று புழுக்கத்துடன் போனால் வீதியின் மறுபுறம் நல்ல சுத்தமாக இருக்க, மனதில் ஒரு நின்மதி ஏற்பட்டது. வரவேற்பிடத்தில் போய் எம் பதிவைச் செய்துவிட்டு லிப்ரில் ஏழாம் மாடியை அடைந்து எமது அறையைத் திறந்து குளியலறையையும் திறந்துபார்த்தபின் தான் நின்மதியானது மனது. காலநிலையும் 20 பாகை செல்சியஸ் என்பது வருமுதலே அறிந்ததுதான் எனினும் இதமான காலநிலை மனத்துக்குஒரு மகிழ்வைத் தர பால்கனியில் போய் நின்று பார்க்க மேலே உயரத்தில் ACROPOLIS OF ATHENS என்னும் இடிபாடுகளுடைய கோவில் தெரிகிறது. அதை நாளை பார்க்கப் போகிறோம் என்றதுமே மனதில் ஒருவித பரவசம் வந்து சேர்க்கிறது. விமானத்தில் தந்த உணவுக்குப் பின்னர் எதுவும் உண்ணாததால் பசிக்கிறது. நேரம் மாலை நான்குமணி. கீழே சென்று உணவுவிடுதியைப் பற்றிக் கேட்க, ஆறு மணிக்குத்தான் திறப்பார்கள். ஒருவருக்குப் 10 யூரோஸ் என்கிறாள் வரவேற்புப் பெண். இனி வெளியே சென்று உணவகம் தேடி உண்பதிலும் இங்கேயே உண்பது என முடிவெடுத்து, அங்கு பார்க்கும் இடங்கள்பற்றி விசாரிக்க இன்னொரு தெளிவான வரைபடத்தைத் தருகிறாள் அவள். ஐந்து நிமிடம் நடந்து போனால் பஸ் தரிப்பிடம் வரும் அங்கே மஞ்சள் உடையுடன் ஒருவர் நிற்பார். அவர் உதவுவார் என்கிறாள். மேலே அறைக்குச் சென்று ஒருமணிநேரம் படுத்திருந்துவிட்டு எட்டாம் மாடியில் உள்ள உணவகத்துக்குச் சென்றால் நாம் மட்டும் தான் அங்கே. விதவிதமான சலாட்டுகள், ஒலிவ் பழங்கள், பழங்கள் என்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அன்றைய இரவு முதன்மை உணவு மாட்டிறைச்சியும் உருளைக்கிழங்கும் அல்லது கோழியும் உருளைக்கிழங்கும் அத்தோடு Spaghetti உம் என்று கூற நாம் மாட்டைத் தெரிவுசெய்துவிட்டு சலாட், ஒலிவ் போன்றவற்றை எடுத்துவந்து உண்ணவாரம்பிக்கிறோம். Goldan City Hotel தொடரும்
 10. 12 points
  பிள்ளையார் துணை பிறேமன் மேற்கு ஜேர்மனி 19,10.1982 அன்புள்ள தேன் பரிமளம் அறிவது! நான் நல்லசுகம்.உங்கடை சுகங்கள் எப்பிடி? என்னையும் இன்னும் கொஞ்ச ஆக்களையும் நாங்கள் ரயிலிலை பரீஸ் போய்க்கொண்டிருக்கேக்கை பொலிசு பிடிச்சுப்போட்டார்கள்.நீங்கள் பொலிசு எண்டவுடனை கனக்க யோசிக்க வேண்டாம். அகதியாய் வந்தால் இஞ்சை இப்பிடித்தானாம்.எங்களை விசாரிச்சுப்போட்டு ஒரு பெரிய காம்பிலை விட்டிருக்கினம். இஞ்சத்தையான் பொலிசு நல்லவங்கள்.அடிக்கேல்லை.நல்ல அன்பாய் கதைக்கினம். காம்பிலை கனசனம் இருக்கினம்.எல்லாம் வேறை வேறை நாட்டுக்காரர். எங்கடை சனமும் கனபேர் இருக்கினம்.அதாலை ஒரு பயமும் இல்லை. கடியன் கந்தையாவின்ரை மூத்த பெட்டையும் இஞ்சைதான் நிக்குது. நான் திரும்பியும் பாக்கேல்லை.நான் இருக்கிற றூமிலை 8பேர் இருக்கிறம்.புங்குடுதீவு,அரியாலை,கொழும்புத்துறை,மானிப்பாய்,முல்லைத்தீவு,கொழும்பு,பூநகரி எண்டு எல்லாரும் வேறைவேறை இடத்து ஆக்கள்.பழகிறதுக்கு நல்லவை போலை கிடக்கு. இஞ்சை வரவர குளிர் கூடுது.குளிருக்கு பியர் நல்லதெண்டு அரியாலைப்பொடியன் ஈழக்குமார் சொன்னவர்.ஒரு சில ஆக்கள் பியர் ரின் வாங்கி குடிப்பினம்.நான் குடிக்கிறதில்லை.இஞ்சையெல்லாம் பியர் குடிக்கிறது கெட்டபழக்கம் இல்லையாம்.இஞ்சை காம்பிலை மூண்டு நேரமும் பெட்டிச்சாப்பாடு தருவினம்.மாதம் 75ருபாயும் கைச்செலவுக்கு தருவினமாம். நான் உங்களுக்கு கடிதம் போடுறது ஒருத்தருக்கும் சொல்லவேண்டாம்.பீயோன் ஏகாம்பரம் ஐயாவிட்டை எல்லாம் விபரமாய் சொல்லியிருக்கிறன்.அவர் இரகசியமாய்த்தான் கடிதங்களை கொண்டுவந்து தருவார்.நீங்கள் கடிதம் எனக்கு போடேக்கை அவரிட்டையே குடுத்து விடுங்கோ.அவர் முத்திரை ஒட்டி எனக்கு போடுவார்.என்ரை செல்லம் நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.வேலை கிடைச்சவுடனை நான் எல்லாத்தையும் பாக்கிறன்.கொஞ்ச நாள் போக ஒவ்வொருத்தருக்கும் வீடடிச்சு விடுவினமாம்.அதுக்குப்பிறகு வேலை தேடி எடுக்கலாமாம்.இல்லாட்டி சுவீஸ் போகலாம் எண்டு கதைக்கினம். என்ரை வில்லன் அதுதான் உங்கடை பொடிகாட் கொண்ணர் என்ன செய்யிறார்? நான் இல்லாதது அவருக்கு ஒருசோலி முடிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். நான் என்ரை மாம்பழம் உங்கடை நினைப்பிலை தான் இருக்கிறன்.அதை ஒருத்தராலையும் ஒண்டும் செய்யேலாது. சரி செல்லலம் கனக்க எழுதிப்போட்டன் போலை கிடக்கு. இப்ப இஞ்சை நேரம் இரவு ஒன்பதரை.மற்றவை காட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கினம்.நான் படுக்கப்போறன்.என்ரை தற்போதைய விலாசம் பின்பக்கம் எழுதிவிடுறன்.பதில் கடிதத்தை ஏகாம்பரம் ஐயாவிட்டை குடுத்து விடுங்கோ.உங்கடை பதில் கடிதம் காண வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன் அன்பே. என்ரை ராசாத்திக்கு ஆயிரம் முத்தங்கள். இப்படிக்கு அத்தான் குமாரசாமி
 11. 11 points
  "பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது. "இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ" "காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது" "போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்" "என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல" "இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்" "இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்" "போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் " "எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள், கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள், இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே " "நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று" " இந்தியாவில சொப்பிங் செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் " "இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே" "டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல" "அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் " "சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்" தொடர்ந்து மனைவியுடன் விவாத்தித்து வெல்ல முடியாது என நினைத்தவன் "நீர் நினைச்சதை தான் செய்து முடிப்பீர் ,என்னத்தையும் செய்து முடியும்" கலாவை வெகு சீக்கிரத்தில்ச‌ந்திக்க வேணும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு அத‌ற்கு காலதாமத‌ங்கள் ஏற்படுகின்றது என்ற ஆத்திர‌த்தில் கையிலிருந்த தேத்தண்ணீர் கோப்பையை மேசையில் டமார் என சத்தம் வரும்படி வைத்தான். "இப்ப ஏன் கோவப்படுறீயள் " "நான் கோவப்பட‌வில்லை ,ஊருக்கு போவதற்கு தாமதமாகுது " "உன்னான எனக்கு விளங்கவில்லை வழமையாக ஊருக்கு போவது என்றால் பஞ்சிபடுவியள் இந்த‌ தடவை ஏன் அந்தரபடுறீயள்" "அதோ ,போனதடவை போய் ஒரு சின்ன வீடு செட் பண்ணி போட்டு வந்தனான் அதை பார்க்கத்தான்" "உந்த மூஞ்சிக்கு அது ஒன்றுதான்இல்லாத குறை " "இஞ்சாரும் என்ட மூஞ்சிக்கு வராட்டியும் அவுஸ்ரேலியன் பாஸ்போர்ட்டுக்கு சனம் லைனில வரும்" "ஓஓஒ ,உங்களுக்கு கலியாண வயசு சனம் லைனில வரப்போகுது" "சும்மா விசர் கதை கதையாமல் போற அலுவலை போய் கவனியும்" ம்ம்ம்ம் உதுல நின்று உங்களோட கதைச்சுகொண்டிருந்தால் ஊருக்கு போக முதல் டிவோர்ஸில் தான் முடியும் என புறு புறுத்தபடியே மேசையில் இருந்த தேத்தண்ணீர் கோப்பையை எடுத்துக் கொண்டு குசினிக்குள் சென்றவள் ,தனது கோபத்தை கொப்பைகள் மீது காட்டினால். குறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்ற கோட்பாட்டில் அவள் டிக்கட்களை எடுத்திருந்தாள். "எயர்போர்ட்டுக்கு டக்சியை புக் பண்ணி போவமோ" "என்ன புதுக்கதை வழமையா என்ட தம்பி அல்லது தங்கச்சி தானே கூட்டிக்கொண்டு போறவையள்" "அவயளுக்கு ஏன் கரைச்சலை கொடுப்பான் " "20 கிலோவும் கான்ட் லகேட்ஜ் ம‌ட்டும் தான் கொண்டு போகலாம்"என்றாள் உடனே சீனாக்காரனின்ட கடைக்கு ஒடிப்போய் ஒரு ஸ்கேலையை வாங்கி கொண்டு வந்தான் சுரேஸ்.ஒவ்வோருமுறையும் ஒரு ஸ்கேல் வாங்குவான் பயணம் முடிய அது உடைந்து விடும் ,ஐந்து டொலருக்கு ஏற்ற வேலையையத்தான் அதுவும் செய்ய முடியும்.எல்லோருடைய ல‌க்கேஜும் ச‌ரியா 20 கிலோ இருக்குமாறு செய்துவிட்டு கைப்பொதிகளையும் 7 கிலோ இருக்கும்மாறு ஒழுங்கு படுத்திவிட்டு சமான்கள் எல்லாம் வைச்சாச்சோ லொக்கை போடட்டோ என்றான். "ஏன் அந்தரப்படுறீயள் அப்பா" அவனது பிள்ளைகளும் மனிசியும் கோரசா குரல் கொடுத்திச்சினம் "அப்பாவுக்கு எல்லாத்திற்கும் டென்சனும் அந்தரமும்" "இப்பவே எல்லா லக்கேஜும் 20 கிலொ வ‌ந்திட்டு இனி எங்க வைக்கிறது "அப்பா உங்கன்ட உடுப்புகளை குறைச்சு போட்டு உதுகளை வையுங்கோவன், நீங்கள் அங்க போய் வாங்கலாம் தானே" "ம்ம்ம் கடைசில நான் தான் அதற்கும் தியாகம் பண்ணவேணும்" " சூவிட் அப்பாவல்லோ" இழுபறிபட்டு அவர்களது பயணம் தொடங்கினது.இரண்டு கிழமை(உந்த இர‌ண்டு கிழமையும் உவன் சுரேஸ் என்ன செய்திருப்பான் என்று பிறகு எழுதுகிறேன்) கழித்து சென்னையிலிருந்து கொழும்பு பயணம். "இஞ்சாரும் இந்தியாவில சீலைகள் எல்லோருக்கும் அளவா வாங்கினீறோ அல்லது எக்ஸ்ராவா ஒன்று இரண்டு வாங்கினீரோ" "ஒம் ஐந்தாறு எக்ஸ்ராவா வாங்கினனான் , ஏன்? என்னப்பா இந்த முறை உங்கன்ட போக்கு ஒரு மாதிரி கிடக்கு" "சும்மா கேட்டனான் ,ஊரில் சொந்த பந்தங்களுக்கு கொடுக்க" "உங்களுக்குத்தானே ஒருத்தருமில்லையே ,இருக்கிற சொந்தங்களுக்கும் நான் தான் பார்த்து கொடுக்கிறன் இப்ப என்ன புதுசா" "சும்மா கேட்டனான் அடிஆத்த" விமானப்பணிப்பெண் உங்களுக்கு என்ன குளிர்ப்பாணம் வேணும் என கேட்க தனக்கு பிடித்த குளிர்பானத்தை கேட்டு வாங்கி அருந்த தொடங்கிவிட்டான். கலாவுக்கு ஒரு சீலையை கொடுக்க வேணும் என்று நினைத்து அவன் சீலைகளின் எண்ணிக்கையை அறிந்தவன்,அதை எப்படி மனைவியிடம் கேட்பது என்ற தர்ம சங்கடத்திலிருந்தான் ... . பல தடவைகள் போய் வந்தமையால் விமானநிலையம் கொஞ்சம் பழக்கப்பட்டு விட்டது சுரேஸுக்கு. குடிவரவு திணைக்கள வேலைகளை முடித்து கொண்டு பொதிகளையும் எடுத்து சுங்க பரிசோதணையாளர்களை பார்த்து ஒரு புண்சிரிப்பை விட்டான் அவர்களும் தங்களது கடமையை சரியாக செய்வது போல அவனை அழைத்து எங்கேயிருந்து வாறீங்கள் என‌ கேட்டார்கள்,சென்னை என்று சொல்லாம் சிட்னி என்றான் ,நேராக வெளியே செல்லும்படி கையை காட்டினார்கள். வெளியே அவனது சகோதரி தனது மக‌னுடன் அவனுக்காக காத்திருந்தாள். "மாமா என்ன நல்லா மெலிந்து போனீங்கள்" நீ நல்லா வெயிட் போட்டிட்டாய் , உனக்கு அம்மாவின்ட சாப்பாடு ,எனக்கு மனிசியின்ட சாப்பாடு அதுதான்" "மாமி ,மாமா சொன்னது கேட்டதே" "ஒமடா உவர் உப்படி கணக்கா சொல்லுவார்,அங்க இவ்வளவு காலமும் காத்து தானே குடிச்சுக்கொண்டிருந்தவர்" "டேய் நாளைக்கு யாழ்ப்பாணம் போகவேணுமடா டிரெயின் புக் பண்ண ஏலுமோ" "இல்லை மாமா உடனே புக் பண்ணுறது கஸ்டம், வான் பிடிச்சு போங்கோ" "முதல் முல்லைதீவுக்கு போக வேனுமல்லோ அப்பா ....முதலே சொன்னான் அல்லேஉங்களுக்கு இப்ப எல்லாம் மறந்து போகுது டிமன்சீயா கிமன்சீயா வரப்போகுதோ தெரியவில்லை" "மறந்து போனன் அப்ப முல்லைத்தீவுக்கு டிரேயின் புக் பண்ணடா" என்றவன் கண்னை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து விட்டான்.எல்லோருக்கும் புரிந்து விட்டது கிழவர் கொதியில் இருக்கிறார் என்று ஆகவே அமைதி காத்தனர் வாகனத்தில். சகோதரியின் வீட்டில் சமான்களை இறக்கி வைத்து விட்டு குளித்து உணவு உட்கொள்ள அமர்ந்தனர்.. "மாமா நாளைக்கு முல்லைதீவுக்கு வான் புக் பண்ணவே" "ஓம் புக் பண்ணு எவ்வளவு காசு என்று கேள்' "அப்பா வவுனியாவுக்கு போவம் அங்கயிருந்து முல்லைதீவுக்கு போக எங்கன்ட மச்சானை வானை கொண்டு வரச்சொல்லுவோம்" " அட கட‌வுளே இப்ப வவுனியாவிலும் நாலு நாள் நிற்கப்போறீரோ" "இல்லை சொந்தங்களின்ட வீட்டை டீ குடிச்சு கொண்டிருக்க முல்லை மச்சான் வானை கொண்டு வந்து எங்களை கூட்டிகொண்டு போவார்,தெரிஞ்ச ஆட்களோட அங்க போறது பயமில்லைத்தானே" " ம்ம்ம்ம் ..." அடுத்த நாள் காலை வானில் வவுனியா புறப்பட்டனர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே முல்லை மச்சான் தனது வாகனத்துடன் வந்தார்.அவரும் விருந்தில் கலந்து கொண்டார் .பிள்ளைகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் சுரேசின் மனைவி. மாமாவின் மகள்,சித்தாப்பாவின் மகன் என்று சொல்ல பிள்ளைகளுக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை எல்லோருக்கும் ஹாய் ஹாய் என்று சொல்லி விட்டு தமிழில் உறையாட தொடங்கிவிட்டனர்.நல்லா தமிழ் கதைப்பினம் போல கிடக்கு எப்படி?என்றனர் உறவினர். வீட்டில நாங்கள் தமிழில் கதைக்கிறனாங்கள் ,மற்றது நாங்கள் த‌மிழை ஒரு பாடமாக எடுத்னாங்கள் என்று அவையளின்ட தமிழ் புலமைக்கு விளக்கம் கொடுத்தனர். முல்லை மச்சான் வெளிக்கிடுவோமா என்று கேட்க எல்லோரும் நாங்கள் ரெடி என்றனர் . மீண்டும் பைகளை ஏற்றி கொண்டு முல்லை நோக்கி பயணமானார்கள் சுரேசுக்கு கலாவை சந்திக்க வேணும் என்ற ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது.போகும் பாதையில் உள்ள தமிழ் பாடசாலைகளை பார்த்த‌வுடன் இங்கு அவள் ஆசிரியராக கடமை புரிவாளோ என்று எண்ணதொடங்கி விடுவான்.அவள் பின்னால் அழைந்து திரிந்தவை எல்லாம் ஞாபக‌ம் வரத்தொடங்கிவிட்டது. "உங்களுக்கு முல்லை தீவில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் யாரையும் தெரியுமோ" "இல்லை என்ட தங்கச்சி டீச்சர் அவளிட்ட கேட்டு பாருங்கோவன்" "இன்னும் ஒரு மணித்தியாலத்தில் போய்விடுவம் என்ன" "ஒம் ஓம் ,மச்சாளை பார்க்க வேணும் என்று சொன்னவள் தங்க‌ச்சி வீட்டை வந்து நிற்பாள் கேட்டு பார்ப்போம்" அந்த ஒரு மணித்தியாலம் ஒரு வருடம் போல தோன்றியது அவ‌னுக்கு வீடு போய் சேர்ந்தவுடனே சுகம் விசாரிக்க எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள்.பொதிகளை இறக்கி வைத்து விட்டு கிணற்றடியில் குளித்து விட்டு இருக்கும் பொழுது சுடச்சுட் தேனீருடன் டிச்சர் வந்தார். "டீச்சர் உங்கன்ட ஸ்கூலில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் படிப்பிக்கினமே" "ஓம் அண்ணே ஐந்தாறு டீச்சர்மார் இருக்கினம்" அவ‌னுக்கு ஒரு நிமிடம் கலாவை கண்ட சந்தோசம் வந்து போனது தொடரும் (நாங்களும் டிராமா பார்க்கிறமல்ல)இன்னும் ஒரு பகுதியுடன் கிறுக்கல் முடிவடையும்... இந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன் .
 12. 11 points
  நண்பரே இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாக இருந்தாலும் கூட அரைவாசி ஆண்கள் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் யாழில் பெண்கள் ஒத்து வருவார்களா கத்தியால் குத்த வருவார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம். இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாதுதானே..... சட்ட சிக்கல் வேற இருக்கு.....! ஆனாலும் முயற்சித்து கொண்டுதான் இருக்கின்றோம். சமீபத்தில் இம் முயற்சியில் நான் ஊர் போயிருந்தபோது, என்னை கண்டதும் அப் பெண் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்.....! (திவ்யதேசம்) எனது நண்பர் இதற்காக தனது மனைவியையும் அழைத்து கொண்டு ஊருக்கு சென்றபோது அவரது காதலி அவரை தெரியாது என்றே கூறிவிட்டார்.....!(கலா). இன்னொரு நண்பர் கடிதத் தொடர்பில் இருக்கிறார்.கதை முடியும்போதுதான் தெரியும் அவருக்கு என்ன மாதிரியான முடிவு என்று.....! ( அன்புள்ள பரிமளம். இன்னும் முடிவு த எட்டப்படவில்லை). இதற்கான ஆவணங்கள் யாழ் அக்காவை 21ல் காணக் கிடைக்கிறது. தேடித் பார்க்கவும்.....!
 13. 11 points
  பிடரிப்பகுதியிலே -எனக்குப் பெரியதாய் ஒரு தசைப்பிடிப்பு. ஆட்டிச் சொல்ல முடியுதில்லை- தலையை ஆம் என்றும், இல்லை என்றும். பின்னாலே பார்ப்பதற்கு நான் பிரள வேண்டும் பாதி வட்டம். முயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும் முன்னேற்றம் மட்டும் பூச்சியமே. வாட்டி இழு எருக்கிலையை வலி மறையும் என்றார் பாட்டி. வாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி மயிரெல்லாம் எரிந்து போச்சு. வா வீ கியூ மணம் வருதே நானும் வரட்டா ஒரு பிடிபிடிக்க என மயிரெரியும் வாசனையை என் மச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான். டைகிளோ பீனைல் போடு என ரை கட்டிய நண்பன் சொன்னான். போட்டுத்தான் பார்த்தேன் நானும் ம்கும் போகவில்லை தசைப்பிடிப்பு. பிசியோ தெரபி சிகிச்சை செய்யும் பிரிந்து போன பழைய காதலி சொன்னாள். செய்துதான் பார்த்தேன்- செலவாய்ப் போச்சு பெருமளவு. தலையணையை மாற்றுங்கள் அத்தான் தயவாய் எந்தன் மனைவி சொன்னாள். மாற்றினேன் தலையணையை-அதிசயம், மாயமாச்சு தசைப்பிடிப்பு. கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து காரணம் என்ன என்று கேட்டேன். தலையணைக்கும் மெத்தைக்கும் சரியான பொருத்தமில்லை, மற்றையவர் பொருந்தாட்டியும் நமக்கும் வலிகள் வரும். மனைவி சொன்னாள் இந்த உண்மை. மெத்தையை மாற்றுதற்கு மெத்தச் செலவு , அதனாலேதான்- தலையணையில் கையை வைத்தேன் தயங்காமல் இதையும் சொன்னாள். மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை மனைவி சொல் மருந்துமாகும். ஆதலினால் மனைவி சொல்லைக் கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.
 14. 11 points
  விமான நிலையத்தில் என்னுடன் சேர்ந்து ஒரு 30 பேர் செல்ல ஆயத்தமானார்கள் அவர்கள் எல்லோரும் என் வயதை ஒத்தவர்கள் அந்த நாட்டு காசு மாற்றி எல்லோரிடமும் வெறும் 50 திர்ஹம் மட்டும் இருந்தது. என்னைப்போலவே வயல்காணிகளையும் , வீடுகளையும் விற்று வந்தவர்ளும் மற்றும் பிள்ளை பிடித்தலில் இருந்து தப்பித்து வந்தவர்களும் படுவான்கரையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் எல்லோரும். விமான நிலைய உள்ளக சம்பவங்களை கண்டதும் நாங்கள் எங்களை மறந்து போனோம். விமானம் ஏர்லங்கா அழைப்பு கொடுக்கிறது அடிமாடுகளாய் செல்ல போகும் அடிமைகளே அனைவரும் வருக வருக என. வாருங்கள் வாருங்கள் உங்களை இன்னொரு நாட்டுக்கு விற்க ஆவலாக உள்ளோம் எனவும். எல்லோரும் உள்ளே சென்றோம் முதல் விமான பயணம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும். எல்லாச்சாமிகளும் ஒரு நிமிடம் மனதுக்குள் வந்து விளையாடிப்போனார்கள் . விமானம் பறக்க ஆரம்பமானது உச்சியை தொடும் வரை கொஞ்சம் நெஞ்சில் தண்ணீ இல்லை எல்லோருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதை கவனித்து அதன் பிறகு எல்லாம் தெரிந்தவர்கள் போல செய்து பல தடவை விமானத்தில் சென்று வந்தது போல காட்டிக்கொண்டோம் எல்லோரும் . விமானத்தில் சாப்பாடும் கொஞ்ச தண்ணீரும் சோடா பானங்கள் கொடுக்கப்பட்டது குடித்துவிட்டு அந்த விமான பெண்களை அழைக்கும் ஒரு சுவிட்ச் இருந்தது அதை அவர்களை அழைப்பதென்று தெரியாமல் இவனுகள் எல்லோரும் அவளை காண்பதற்க்காகவா? இல்லை தெரியாமல் அழுத்துகிறார்களா!!!! என்று தெரியாமலே அழைத்துக்கொண்டிருந்தானுகள் சிலர் அவளிடம் பியர் வாங்கி குடிப்பதற்க்காகவும் அழுத்திக்கொண்டே இருந்தானுகள். அவளோ சிரித்து வந்து ஏசிப்போனாள் மணித்தியாலங்கள் செல்ல செல்ல ஊரும் உறவினர்களும் ஞாபகத்திற்குள் வந்து விட்டார்கள் விமானம் தரை இறங்க உள்ளதால் சீட் பெல்ட்டை அணிய சொல்லி விமானி அறிவித்தல் கொடுக்க பட்டியை இறுக்கி யன்னல் வழியே எட்டிப்பார்க்க எல்லாம் மணல் தரைகளாகவும் மணல் குன்றுகளாகவும் கண்ணாடி கட்டிடங்களின் ஒளி பிளம்புகள் பளபளவவென மின்னல் வெளிச்சம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. விமானம் தரை இறங்கியதும் வெள்ளைக்காரன் போய் கெப்டனை (பைலட்டை) கட்டி அணைத்து நன்றி சொல்லி இறங்கி சென்றான் நானும் தங்கியூ கெப்டன் என்று சொல்லி விமானநிலையத்தினுள் உள் நுழைகிறேன் வெல்கம் துபாய் என்ற அழைப்பும் அரபு மொழியும் ஆங்கிலமும் கலந்து வரவேற்றது . ஆங்கிலம் புரிந்தது ஆனால் அரபியோ சுத்தமாக ஒன்றுமே புரியல. கண்ணிலிருந்து, கைரேகை வரைக்கும் பதிவு செய்து எல்லாம் சரி செய்த பின்னரே வெளியே விட்டார்கள் வெளியே வந்து பார்த்தால் சரியான வெயில் நம்ம ஊரில் பாண் செய்யும் போறணைக்குள் (பேக்கரி) இருக்கும் தணலில் தூக்கி போட்டமாதிரி இருந்தது. எங்களுக்கு என்னடா இப்படி வெயிலா இருக்கு என்று ஆளாளுக்குள் பேசிக்கொண்டாலும் எங்களை அழைத்து செல்ல நாங்கள் வந்த ஒப்பந்த கம்பனிகாரர்கள் வரவில்லை இரண்டு மணிநேரமாக காத்திருக்க போட்டு வந்த சேட் எல்லாம் வியர்வையால் (உருகி) நனைந்து நனைந்து ஈரமாகிகொண்டே இருந்தது. தொடரும்..........
 15. 11 points
  கொல்வது கொலை விடிகாலை இருள் விலகும் தருணம். அந்தத் தென்னந்தோப்புக்குள் நிலை எடுத்தபடி அவள் அவதானமாக நகர்ந்தாள். கைகள் பிஸ்டலில் பதிந்திருக்க விழிகள் தூரத்தில் நாய்கள் குரைக்கும் திசை நோக்கி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததன. ஒரு இராணுவப் படைநகர்வு பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்த கூப்பாடுகள் அந்த விடிகாலை இருளைக்கிழித்தன. அரவம் காட்டக்கூடாது என்ற மேலிடத்துக்கட்டளை அவளை அசைவித்துக் கொண்டிருந்தது. பெக்கி சேர்ட், இலகுவாக ஓடுவதற்கும் தடை தாண்டுவதற்கும் ஏற்றாற்போல் பான்ட், இடுப்பிலே கட்டப்பட்டிருந்த பெல்டின் இடது பக்கம் பிஸ்டல் வலதுபக்கம் இரண்டு கிரனைட்டுகள் கழுத்தில் குப்பி. மிடுக்கான தோற்றம், பெண்மையை வெளிப்படுத்தாத பிரிதொரு கம்பீரம். விழிகளில் மருட்சி இல்லை, அவதானம் ,எச்சரிக்கை உணர்வு, நடுக்கமில்லாத மூச்சுக்காற்று, கத்தரிக்கப்பட்ட கூந்தல் தனி மிடுக்கைக் கொடுத்து மீள மீள அந்தப் பெண் போராளியை நோக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. எதிர்ப்புறத்தை நோக்கி கொண்டிருந்தவளுக்கு பின்பக்கமாக அசைவு தெரிய அந்த இருளில் அசையாமல் நிலத்தோடு ஒட்டிக்கொண்டாள். நாய்களின் குரைப்பொலி பின்பக்கம் கேட்காததால் நிச்சயமாக அது இராணும் இல்லை என்பதை உள்ளுணர்வு உணர்த்தியது. யாரோ நம்மாட்களாக இருக்கும் என்று எண்ணியபடி மெல்லத் திரும்பியவளின் முகத்தைத் தாக்கியது ஒரு கனமான பொருள். சட்டென ஒலியின்றி சுருண்டது அவள் தேகம். முனகலுடன் அவள் விழித்தபோது அவள் எதிரே அவன் இரண்டு கொங்கிரீட் கற்களை அடுக்கி அமர்ந்திருந்தான். அவனைக்கிரகித்து எழுவதற்கு முயன்றவளின் உடல் அசைக்க முடியாமல் வலித்தது. கைகால்கள் பின்புறமாகக் கட்டப்பட்டு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் கழட்டி எடுக்கப்பட்டிருந்தது. ஏன் ? இவன் எதற்கு? ஏகப்பட்ட குழப்பங்களுடன் நிமிர்ந்தவளைப் பார்த்து புன்னகைத்தான் அவன். அவனை அவளுக்குத் தெரிந்திருந்தது. அவன் போக்கு சரியில்லை என்பதும் அவன் ஒழுக்கம் பற்றியும் அமைப்பிற்குள் அரசல் புரசலாக சில கதைகள் அண்மைகாலத்தில் அலைவதையும் அறிந்திருந்தாள். மற்றப்படி அவனை அவள் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் அவளைத்தாக்கி இந்த இராணுவ நகர்வுப்பாதையில் கட்டிப்போட்டிருப்பது திகைப்பையும் அச்சத்தையும் உருவாக்கத்தவறவில்லை. அப்படியானால் இவன் ஒழுக்கந்தவறியதற்கு அப்பால் காட்டிக்கொடுக்கும் துரோகியா? அவன் அவளையே வைத்தகண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான். எத்தனை காலமாக அவளைக் குறிவைத்திருந்தான். இப்போது மான் மாட்டியிருக்கிறது. இராணுவ நகர்வு அண்மித்துக் கொண்டிருந்தது. அவன் அச்சமின்றி அமர்ந்திருந்தான். அவனுடன் இன்னும் சிலர் அவனுக்கு பாதுகாப்பாக… அவர்களை இராணுவம் நகரும் திசைநோக்கி நகரச் சொல்லி இந்தப்பக்கம் இராணுவம் வராமல் இருக்க அவர்களைத் திசைமாற்றி குறிப்பறிவிக்கச் சொன்னான் எப்படியாவது அவளைத் தன்வலையில் வீழ்த்த இராணுவ நகர்வைப் பயன்படுத்திவிடவேண்டும் என்பது அவன் எண்ணம். அதுவரை இராணுவத்திடம் அகப்படாமல் அவளை வைத்திருக்கத் திட்டமிட்டு, அவள் வாயில் துணியை அடைத்தான். தென்னோலைகள் கொண்டு அவளை மூடி நகர்ந்தான். அவன் நினைப்பிற்கு மாறாக அவன் மீது சந்தேகப்பார்வையை படர விட்டபடி அந்த இராணுவப் பெண் கொமாண்டர் சுற்றிலும் நோட்டம் விட்டாள். வெறுப்புடனும் விருப்பமில்லா சிரிப்புடனும் அவனுக்கு கைகுலுக்கிக் கொண்டு அந்தப் பெண் கொமாண்டர் அவன் வந்த திசை நோக்கி நகர்ந்து முன்னேறினாள். அவள் விழிகள் கொடூரத்தன்மையை வெளிப்படுத்த இதழ்கடையில் குரூரமாக புன்னகைத்தாள். சட்டென்று அந்தத் தென்னந்தோப்புக்குள் சில இராணுவர்களுடன் நுழைந்து நோட்டம் விட்டாள் சற்று மேடாகத் தெரிந்த ஓலை அவளின் சந்தேகப்பார்வைக்குள் விழ தனக்கு அருகாமையில் இருந்த இராணுவனுக்கு கண்களால் ஆணையிட்டாள். சரசரவென ஓலைகள் அகற்றப்பட முக்கில் இரத்தம் ஒழுக, முகம் வீங்கிய நிலையில், கைகளும் கால்களும் பின்புறமாக அசையமுடியாதபடி கட்டப்பட்டிருந்த வாயில் துணி அடைக்கபட்டிருந்த போராளிப்பெண் குப்புறவாக கிடந்தாள். அருகே வந்த கொமாண்டர் அவள் வாயில் இருந்த துணியை அகற்றி அவளை வானம் பார்க்க நிமிர்த்திப் போட்டு விசாரிக்க ஆரம்பித்தாள். கொமாண்டரின் விசாரணைகள் எதற்கும் பதில் அளிக்காமல் இறுக்கமாக மௌனத்திற்குள் இருந்தாள் போராளி. கொமாண்டர் அவனைச்சுட்டிக்காட்டி அவன்போல் நீயும் எங்களுடன் சேர்ந்து விடு, உனக்கு வசதியான வாழ்க்கை அமைத்துத்தருகிறோம். இங்கு வாழ விரும்பாவிட்டால் இந்தியாவில் நீ அழகான வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் என்றாள். அப்பட்டமான துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அந்தப்பெண் போராளி ஆணித்தரமான மறுப்பை தலையை அசைத்து வெளிப்படுத்தினாள். இராணுவப் பெண்கொமாண்டருக்கு சினம் கூடியது. ஆத்திரத்துடன் கம்பி நறுக்கும் நீண்ட கொறடை எடுத்து போராளி அருகே வந்து அவள் கழுத்தில் வைத்து மிரட்டினாள். அவள் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தன்னினத்திற்கே துரோகியாக மாறிய அவனை பார்த்தாள். “ஏய் என்ன அவனை முறைக்கிறாய்? எங்களோடு சேர் இல்லையென்றால் இந்தக்கட்டரால் உன் கழுத்தை அறுத்துவிடுவேன்” என்றாள். முடியாது என்று உரக்கக்கூறினாள் போராளி. அடுத்த கணம் கழுத்தில் இருந்த கட்டரை சற்று சாய்வாக்கி கழுத்தின் நரம்பை அறுத்தாள் கொமாண்டர். குபுகுபுவென்று இரத்தம் பாய்ந்தோட அந்தப்பெண் போராளி கைகால்கள் கூட அசைக்கமுடியாமல் கிடந்தாள். அவள் கண்கள் எதிரியை நோக்கவில்லை துரோகியை காறி உமிழ்ந்தது. கொமாண்டர் விலகி நடந்தாள். அவளுடன் சில இராணுவர் அகல, சிலர் கைகால்கள் கட்டப்பட்டு குற்றுயிராக கிடந்த அவளை நெருங்கினர். கை கால்களின் கட்டுகளை விடுவித்து ஆடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கி குற்றுயிராய் கிடக்கும் அவள்மேல் சிறுநீர் கழித்து எங்களோடு சேராத உனக்கு இதுதான் தண்டனை என்று சொல்லி அவள் உடலெங்கும் சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். சற்றுத்தூரத்திலிருந்து அவன் பார்த்துக்கொண்டிருந்தான். ஆசைப்பட்டது தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தைத்தவிர அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவள் அன்றே இறந்தும்போனாள். புழுதி படிந்த சாய்வு நாற்காலி, அதிகாரம் இழந்த ஆணவம், எல்லோராலும் ஒதுக்கப்பட்ட தனிமை, களையிழந்த முகம், ஒளி குன்றிய கண்கள், நடுத்தர வயதின் முடிவு நரையும் ,வழுக்கையும் போட்டியிடும் தலை, மனஉளைச்சல்களின் கதக்களியில் மூப்பெய்திய அவன். கேட்க ஒரு நாதியற்ற மானுட அவலத்தில்,……. நேற்றாடிய துரோகத்தால் இன்னும் அவன் உயிரோடு கிடந்தான். அவன் தனித்திருந்தான் சூழ இருந்த பலங்கள் காரியம் முடிந்ததும் காணாமல்போயின. , மெல்ல மெல்ல மன உளைச்சல் அவனிடத்தில் குடியேறி அவன் துரோகத்தை படிப்பினையாக்கி கொண்டிருந்தது. ஆண் என்ற ஆணவமும், வாழ்வேன் என்ற வன்மமும் புழுதி படிந்து அந்த சாய்வு நாற்காலியைப்போல்…. கூட இருந்தவர்களைத் துரோகத்தால் வீழ்த்திய வரலாறு பெருஞ்சாபமாய் தலையில் விடிந்தது. கைகால்கள் மரத்துக் கொண்டன. வாயில் நா ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. உடல் நிலத்தில் வீழ்ந்தது. நீண்ட நேரமாகியும் எவரும் வரவில்லை. ஒரு நாய் மட்டும் அருகே வந்து மணந்து தனது பின்னங்காலைத்தூக்கி சிறுநீர் கழித்துவிட்டு நகர்ந்து மறைந்தது. மூளை கிரகித்துக் கொண்டது. அசைய முடியாதபடி கைகால்கள் கட்டப்பட்டு கழுத்து நரம்பு அறுக்கப்பட்ட பெண்போராளி புன்னகையுடன் அவனை விழித்துப் பார்த்தாள்.
 16. 10 points
  துர்க்கை அம்மன் துணை கரணவாய் சென்ரல் கரணவாய் 2.11.1982 அன்புள்ள ஆசை அத்தானுக்கு. நான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மனை வேண்டுகின்றேன். உங்கள் பொன்னான மூன்று கடிதங்களும் என் கைக்கு கிடைத்தது. உங்கள் முத்து முத்தான முத்தங்களை அள்ளி பகிர்ந்தேன். உவ்விடம் கடுமையான குளிர் என எழுதியிருந்தீர்கள். நல்ல உடுப்புகள் வாங்கி போடுங்கோ. சாப்பாடுகள் எல்லாம் என்ன மாதிரி? கூடாத சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம். புட்டு இடியப்பம் எல்லாம் தருவார்களோ? உங்களுக்கு முட்டுக்காய் தேங்காய் துருவல் போட்ட புட்டு நல்ல விருப்பம் என்று உங்கடை அம்மா சொன்னவ . செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம்.நான் இப்ப அம்மனுக்கும் முருகனுக்கும் விரதம் பிடிக்கிறன். சொண்டு வெடிச்சுப்போச்சுதெண்டு எழுதியிருந்தீர்கள்.டாக்குத்தரிடம் போய் மருந்து எடுங்கோ. உங்கை பாசைப்பிரச்சனை இல்லையோ? கடியன் கந்தையாவின்ரை மகள் கதை கேட்டாலும் கதைக்க வேண்டாம்.வேறு இடம் மாற முடியுமென்றால் இடம் மாறவும்.அவள் உங்கடை அறைக்கு பக்கத்திலையா இருக்கிறாள்? அய்யாவும் அம்மாவும் சுகமாய் இருக்கினம்.நீங்கள் சுகம் கேட்டதாய் சொன்னேன். சந்தோசப்பட்டினம். அய்யா உங்கடை அய்யாவோடை எங்கடை கலியாணத்தை பற்றி கதைக்கப்போறன் எண்டு சொன்னார். தங்கச்சி வசந்தி உங்களைப்பற்றியே நெடுக விசாரிச்சுக்கொண்டிருப்பாள்.நீங்கள் சுகம் விசாரிச்சதாய் சொன்னேன். அவளுக்கும் நல்ல சந்தோசம். அத்தான் என்னைத்தான் எண்ட பாட்டை நான் பாட அவளும் சேர்ந்து பாடுவாள். சின்னப்பிள்ளை தானே. நீங்கள் இருக்கிற அறையிலை எட்டுப்பேர் என எழுதியிருந்தீர்கள். எல்லாரும் உங்கடை வயதுக்காரார்களோ? எல்லாரும் குடிக்கிறவையோ? நீங்கள் கவனமாய் இருங்கோ.நீங்கள் கெட்ட பழக்கம் பழக என்ரை அம்மன் விடமாட்டா. இருந்தாலும் நீங்கள் கவனமாய் இருக்கவும்.பியோன் ஏகாம்பரம் நல்ல மனிசன்.அய்யாட்டை வாற சாட்டிலை உங்கடை கடிதத்தை என்னட்டை ஒருத்தருக்கும் தெரியாமல் தெரியாமல் தருவார். எனது அண்ணா சுகமாக இருக்கிறார்.அண்ணா எங்கள் காதல் விவகாரம் தெரிந்து உங்களை சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும் என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள். இப்பவும் நோகுதா அத்தான்? நான் எத்தனை முறை தடவினாலும் அந்த வலி ஆறாது என்பது எனக்குத்தெரியும் அத்தான். இதை எழுதும் போது என்மனம் அழுகின்றது அத்தான்.உங்களை கட்டிப்பிடித்து அழவேண்டும் போலிருக்கின்றது அத்தான். ஆயிரம் முத்தங்கள் என் அத்தானுக்கு. நீங்கள் எனக்கு கைச்செலவுக்கு தந்த பத்தாயிரம் ரூபாய் அப்பிடியே வைச்சிருப்பன்.அதை செலவழிக்க மாட்டன்.உங்களுக்கு சொந்தமான 85 ஏக்கர் முரசுமோட்டை வயலை உங்கடை தங்கச்சிக்கு எழுதினதை ஊரிலை பெரிசாய் கதைக்கினம். அண்ணா என்றால் இப்படித்தான் இருக்கோணுமாம். பளையில் இருக்கும் தென்னம் தோப்புகளை என்ன செய்யப்போகின்றீர்கள். அதையும் தங்கச்சிக்கு எழுதி விடுறது நல்லது என நான் நினைக்கின்றேன். அத்தான் உடம்பை கவனியுங்கோ.நேரத்துக்கு சாப்பிடவும். உங்களை காணாதது எனக்கு ஏதோ விடியாதது மாதிரி இருக்கின்றது.இத் துடன் முடிக்கின்றேன். உங்கள் பதில் கடிதம் கண்டதும் முத்த மழை பொழிவேன். அன்பு ஆசை அத்தானுக்கு அளவில்லா முத்தங்கள். இப்படிக்கு உங்கள் அன்பு வருங்கால துணைவி பரிமளம்
 17. 9 points
  2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன. அவையாவன: இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2, தோல்வி (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1 வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும். அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம். 1) மே 30. இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான் 3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா 4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா 5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ் 6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் 7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா 8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர் இந்தியா 9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர் நியூஸிலாந்து 10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர் மேற்கு இந்தியத்தீவுகள் 11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர் சிறிலங்கா 12) ஜூன் 8. இங்கிலாந்து எதிர் பங்காளாதேஷ் 13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 14) ஜூன் 9. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா 15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர் மேற்கு இந்தியத்தீவுகள் 16) ஜூன் 11. பங்காளாதேஷ் எதிர் சிறிலங்கா 17) ஜூன் 12. அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான். 18) ஜூன் 13.இந்தியா எதிர் நியூஸிலாந்து 19) ஜூன் 14. இங்கிலாந்து எதிர் மேற்கு இந்தியத்தீவுகள் 20) ஜூன் 15. சிறிலங்கா எதிர் அவுஸ்திரேலியா 21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர் ஆப்கானிஸ்தான். 22) ஜூன் 16. இந்தியா எதிர் பாகிஸ்தான். 23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பங்காளாதேஷ். 24) ஜூன் 18. இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான். 25) ஜூன் 19. நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா. 26) ஜூன் 20. அவுஸ்திரேலியா எதிர் பங்காளாதேஷ். 27) ஜூன் 21. இங்கிலாந்து எதிர் சிறிலங்கா. 28) ஜூன் 22. இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான். 29) ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் நியூஸிலாந்து. 30) ஜூன் 23. பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா. 31) ஜூன் 24. பங்காளாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான். 32) ஜூன் 25. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா. 33) ஜூன் 26. நியூஸிலாந்து எதிர் பாகிஸ்தான். 34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் இந்தியா. 35) ஜூன் 28. சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா. 36) ஜூன் 29. பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான். 37) ஜூன் 29. நியூஸிலாந்து எதிர் அவுஸ்திரேலியா. 38) ஜூன் 30. இங்கிலாந்து எதிர் இந்தியா. 39) ஜூலை 1. சிறிலங்கா எதிர் மேற்கு இந்தியத்தீவுகள். 40 ) ஜூலை 2. பங்காளாதேஷ் எதிர் இந்தியா. 41) ஜூலை 3.இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து 42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கு இந்தியத்தீவுகள். 43) ஜூலை 5. பாகிஸ்தான் எதிர் பங்காளாதேஷ். 44) ஜூலை 6. சிறிலங்கா எதிர் இந்தியா. 45) ஜூலை 6. அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா. 46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) 47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும் (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (3 புள்ளிகள்) #2 - ? (2 புள்ளிகள்) #3 - ? (1 புள்ளி) #4 - ? (0) 48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! இறுதிச் சுற்றுப் போட்டிகள் 49) முதலாவதாகவும் நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். 50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். 51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்? சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும். 52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள். 53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள். 54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள். 55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள். 56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள். 57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள். போட்டி விதிகள் 1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி 2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம். 3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். 4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 18. 9 points
  ம்ம் நிட்சயமாக் கருத்துக்கு நன்றி சகோ மிக்க நன்றி ரதி அந்த நிறுவன முதலாளி கூப்பிட்டிருந்தார் பயந்து போய் நின்றேன் போட்டுக்கொடுத்தவர் ஈரான் நாட்டை சேர்ந்தவன் ஏன் கார் கழுவுகிறாய் உனக்கு என்ன வேலை!!! என்ன செய்கிறாய் நீ ?......... என...... .நான் பதில் பேசாமல் நின்று விட்டு மன்னிக்கவும் சேர் வீட்டில் சரியான கஸ்ரம் எல்லோரும் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள் சுனாமி அடிச்சதால. எனக்கு கம்பனி தரும் சம்பளம் போதாது அதற்குத்தான் கார் கழுவினேன் தொழும் நேரம் என்பதால் எனக்கும் வேலை இல்லை அதானலதான் என்றேன். முழுவிபரங்களை கேட்ட அவர் பரிதாபப்பட்டார் சரி அப்படியென்றால் நமது நிறுவன கார்களையும் சேர்த்து கழுவி விடு அதற்கு செக் தருகிறோம் நாங்கள் என்றார். எனது சம்பளம் 800 +1000( கார் ) =64000 இந்த கார் கழுவுவது கம்பனிக்கு தெரியாது தெரிந்தால் பிரச்சினை உடனே வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள் அதுபோக அடிக்கடி வந்து செக் பண்ணிவிட்டு செல்வார்கள் எங்களை. பொலிசுக்கும் தெரியக்கூடாது தெரிந்தால் பிடிச்சி போய் விடுவார்கள் இப்படி இருக்க எங்க மேனேஜரோ பொலிசுக்கும் மேலாக இருந்தவர் அவர். இப்படி நல்ல மனிதரா என நினைத்தாலும் அவரிடம் போட்டுக்கொடுப்பது மற்ற நாட்டுக்காரன்கள் ஈரானி, மிசிறி (எஜிப்ற்) சூடானி , எத்தியோப்பியா, இவனுகள் போய் அவரிடம் கோள் சொல்வது வழமைதானாம் என்று சொன்னார்கள் மற்றவர்கள். எங்களுக்கு அங்கு வேலை காலை 7.30 ற்கு ஆரம்பமாகி பகல் 2.30 ற்கு முடிந்து விடும் அதிகாலை நேரத்துடன் வேலைக்கு வருவதால் அந்த நிறுவன கார்களை நேரத்துடனே கழுவி விட்டு பகலில் எங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் அரபி பெண்களின் கார்களையும் கழுவிக்கொள்வேன். அதற்கும் காசு தருவார்கள் மாதா மாதம் எனது வேலையையையும் திறமையையும் பார்த்த அவர்களுக்கு பிடித்து போக நானும் அங்கே ஓர் நம்பிக்கை மிகுந்த ஓர் சேவையாளன் ஆனேன். (காலையில் டீ, அரபி கோப்பி வகைகள் எல்லாம் போட்டுக்கொடுத்து விட்டு , புத்தகம் கட்டுவது , அங்கு வரும் அரபிகளுக்கு சகல வேலைகளையும் (போட்டோ கொப்பி, வைன்டிங்) செய்து கொடுத்து ஹிந்தி ,ஓரளவு அரபி விளங்கி கொள்ளும் பேச வராது ஆங்கிலம் ஓரளவுக்கு பேச கற்றுக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். மேனேஜருக்கும் அரபி பெண்களுக்கும் பிடித்தவனானேன் என்னை விடமாட்டார்கள் போல் ஆகிவிட்டது காரணம் களவு இல்லை வேலை தரமாக இருக்கும் ஒர் வேலை சொன்னால் அது எத்தனை மணியானாலும் செய்து முடிப்பது அதனால் ஆண்களை விட அரபி பெண்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஹிந்திப்படம் பார்ப்பார்களாம் அரபி பெண்கள் அதில் ராஜா என்ற பெயரில் சாருக்கான் வருவராம் சாருக்கான் மிகவும் பிடிக்குமாம். இன்று வரை பிடித்த நாடு துபாய்தான் சுரண்டல்கள் இல்லாமல் இருந்தால் ஊழியர்களும் வாழ்வார்கள் அவர்கள் சிந்தும் வியர்வைக்கும் சரியான கூலி கிடைக்கும். மற்ற நாட்டுக்கார்கள் வேலைசெய்யவும் விடமாட்டார்கள் வேலை செய்யவும் மாட்டார்கள் மெனேஜரை. இதனால் மேனேஜரோ வெள்ளிக்கிழமையும் வந்து காலையில் வேலை செய்து விட்டு போவார் வெள்ளிக்கிழமை எனக்கு வேலைவரும் காரணம் செக்கியுருட்டி லீவு எடுத்துக்கொள்வான் அங்கே பரீட்சியம் ஆன ஆள் என்ற படியால் வெள்ளிக்கிழமையும் நான் வேலை செய்வது இதனால் எனக்கு விடுமுறை இல்லை ஓவர் டைம் வழங்கப்படும். இப்படி இருக்க கணணியில் ஊர் செய்திகளை ஆவல் கொண்ட எனக்கு இணையத்தளங்களை பார்க்க பழகி அதை பிரின்ட் எடுத்து எங்கள் தங்குமிடங்களில் போட்டோ கொப்பிகள் அடித்து அதை பத்திரிகை போல எல்லா றூம்களுக்கும் அனுப்பிவிடுவேன் ஏனென்றால் ஊர் செய்திகளை படிக்க ஆவலாக இருப்போர் அதிகம் (சண்டைகள் ஆரம்பம்) அத்தனை பேரும் விலகி வந்தவர்களும் ஓடிவந்தவர்களும். இயக்கத்தை விட்டு அந்த இணையத்தளங்களை பார்க்கும் போது முதல் தடவையாக தட்டும் போது பரீட்சியமானதுதான் யாழ் இணையம். 2.30 ற்கு பிறகு எங்கள் நிறுவனத்தை கிளின் பண்ண ஆட்கள் வருவார்கள் அவர்களுக்கு எல்லா கதவுகளையும் (றூம்களையும்) திறந்து கொடுத்து விட்டு செய்திகள் பார்ப்பேன் படிப்பேன். கணணி பற்றி பெரிதாக தெரியாது 6 மாதம் பயின்ற கொஞ்ச அனுபவத்தை வைத்து புரட்டலானேன் யாழ் இணையத்தில் விவாதங்கள் ,கதைகள் , கவிதைகள் பிடித்துப்போக ஏன் நானும் இணையக்கூடாது என இணைந்துகொண்டேன் முனிவர் ஜீ என அந்த பெயருக்கும் ஓர் காரணம் எனது ரூமில் இருப்பவர் ஒருவர் கல்யாணம் கட்டவில்லை வயது வந்தும் அவருக்கு நாங்கள் வைத்த பெயரை அப்படியே நான் புனைப்பெயராக மாற்றிக்கொண்டேன். யாழை திறக்கும் போது முள் உள்ள பலாப்பழம் போல தான் இருந்தது உள்ளே நுழைந்ததும் அதன் சுவை அறிந்தேன் நான். (2008)ம் ஆண்டு ஓர் நாள் ராஜவன்னியன் என்று அறிமுகமான சேகர் அண்ணையிடமும் தொலைபேசியில் கதைக்க முடிந்தது ஆனால் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை துபாயில் மன்னிக்கணும் அண்ண வேலைப்பழு அப்படி மேனேஜர் (லீவு நாளில் வெள்ளிக்கிழமை) வேலைக்கு வரும் போது எனக்கும் சேர்த்தும் சாப்பாடு வாங்கி வருவார் போகும் போது காசும் தந்து விட்டு செல்வார். வெள்ளிக்கிழமை. எல்லோருக்கும் லீவு என்பதால் வாகனம் வராது என்னைச் ஏற்றி செல்ல டிரைவருக்கும் விடுமுறை. என்னுடைய காசை கொடுத்தே பஸ்ஸில் செல்வேன் ஆனால் மாலை ஆறு மணிக்கு பஸ்தரிப்பிடத்துக்கு சென்றால் அன்றைய நாள் விடுமுறையென்பதால் பஸ்லில்கூட்டம் அதிகமாக இருக்கும் அதனால் சாரதி ஏற்றிகொள்ளமாட்டான் காரணம் பஸ்ஸில் நின்று கொண்டு செல்ல முடியாது 10 ற்கு மேற்பட்டோர் சட்டம் அப்படி 10 மணிக்கு ஓரளவு கூட்டம் குறைய பஸ்ஸில் ஏறி தங்குமிடம் செல்ல 11.30 மணி ஆகும். நான் வேலைசெய்யும் அரச நிறுவனத்தில் ஓர் எகிப்து நாட்டுக்காரன் எங்கள் நிறுவனத்துக்கு சாப்பாடு கொண்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணியை கூட்டிக்கொண்டு வந்தான். விடுமுறை நாளில் வந்த அவனோ அவளை றூமுக்குள் வைத்து விட்டு என்னிடம் யாருக்கும் சொல்லாத என்று சொல்லிவிட்டு என்ன செய்தான் என்பது அந்த நாலு சுவருக்கே வெளிச்சம். தொடரும்.....................
 19. 9 points
  இரண்டரை மணிநேரத்தின் பின்பே நாங்கள் வந்த விசா பொறித்த வான் ஒன்று வந்தது வந்த அந்த வானில் இருந்து ஒருவர் இறங்கி வந்தார். ஸ் ரீ லங்காவில் இருந்து வந்த நீங்களா? என கேட்டு அத்தனை பேரிடமும் முதலில் பாஸ்போட்டை பறித்துக்கொண்டார். பறித்துக்கொண்ட பின்பே அதனை ஒவ்வொன்றாக சரிபார்த்துவிட்டு வாகனத்தினுள்ளே ஏற்றினார். வாகனம் குளிரூட்டப்பட்டிருந்தது நிம்மதியான பெருமூச்சு விட்டு எல்லோரையும் மீண்டும் எண்ணி சரிபார்த்து வாகனம் புறப்பட்டது. நகர்களை பார்த்தால் எல்லாம் கண்ணாடிகளால் ஆனதாகவே இருந்தது வானுயர்ந்த கட்டிடங்கள் அழகிய கானல் நீர் கரை புரண்டு ஓடும் தார் சாலைகள் இரு மருங்கிலும் அழகான பூ மரங்களென மிக அழகாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. அந்த பாலைவனத்தில் மிளிரும் துபாய் நாடு. சுமார் ஓர் மணி நேரம் சென்ற பிறகு எங்கோ ஓர் தூரத்தில் நகர்கள் மொதுவாக மறைந்து செல்ல செல்ல மணல் மேடை ,மணல் குவியல்கள் சூழ்ந்த சிறிய பாலைவனச் செடி நிறைந்த ஒட்டிய பகுதியில் இருந்த கம்ப் (Camp) ஒன்றிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே இறக்கிவிட்டு ஒரு தமிழர் (இந்தியர்) இவர்களுக்கு றூமை கொடு என்று சொல்லிவிட்டு என்ன வேலை? எத்தனை மணிக்கு வரவேண்டும்? எந்த தகவலும் சொல்லாமல் வான் பறந்தது. அவர்தான் அந்த விடுதிக்கு காப்பாளரும் கூட வந்த களைப்பில் ஒருவன் கால் கை மேலை கழுவித்து வருகிறேன் என குளிக்கும் அறைக்கு போனவன் ஓடிவருகிறான் ஐயோ அம்மா , அப்பா காப்பாற்றுங்க காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என நாங்களும் பயந்து என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என விசாரிக்க அவனால் சொல்ல முடியவில்லை உடம்பில் நீர் மட்டும் ஊற்றப்பட்டு இருந்த்து. சிறிது நேரம் கழிந்த பின்னர் அழுகையை நிறுத்திவிட்டு முதுகை பார்க்க சொன்னான் அவனது முதுகு தோல் மெதுவாக உரிய ஆரம்பித்தது என்னடா நடந்தது? என விசாரிக்க தண்ணீரை திறந்து முதுகை காட்டினேன் சுடுதண்ணி வந்து ஊற்றுப்பட்டதென கூறினான் அவன். உடனே அந்த கம்ப்(Camp) காவலரிடம் சென்று கேட்க இப்ப ஜீலை மாதம் தண்ணி கொதிநீராகத்தான் வரும் நீங்கள் கேன்களில் பிடித்து குளிக்க வேண்டும் என்று சொன்னார் நாங்களும் அவனுக்கு சிக்னலை (பற்பசை) எடுத்து பூசிவிட்டு கொஞ்சம் இருடா என ஆளை இருத்தி விட்டு. ஒரு ரூமுக்கு எட்டு எட்டு பேராக பிரிக்கப்பட்டு அறை வழங்கப்பட்டது. நான்கு கட்டில்கள் ஒரு கட்டிலில் இருவர் இருக்கலாம் கீழும் மேலும். ஏசியை போட்டு அறையை குளிராக்கி அவனையும் அழைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டோம். கையில் இருந்த காசை கொண்டு கம்ப் எதிரே இருந்த மலையாளியின் கடைக்கு சென்று ஒரு ரெலிபோண் காட்டை வாங்கி ஊருக்கு அழைத்து நான் இங்கு வந்து விட்டேன் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான் அழுது கொண்டேன் . கையில் இருந்த காசில் 20 திர்ஹம் காட் அந்த காட் முடிந்து விட்டது நான் அடுத்தமாதம் தான் இனி எடுப்பன் என கடைசி வார்த்தை சொல்லிவிட்டு மீதி இருந்த 30 திர்ஹம்(ரூபா) க்குள் எப்படி காலத்தை கடத்துவதென தெரியாமல் முழுசிக்கொண்டு இருந்தேன் . நேரம் மாலை 6 மணியாக காகங்கள் கூடு வந்து சேர்வது போல எல்லா வேலையாட்களும் கவலையுடனும் வேலைக் களைப்பில் வருவதும் அவதானிக்க முடிந்தது முதலில் நேபாள் காரர்கள் வந்து எட்டிப்பார்த்து விட்டு செல்ல , பிறகு வங்களாதேஷ், ஆந்திரா, கர்னாடகா, சிங்களவர்களும் களும் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர் கடைசியில் நம்ம பொடியங்கள் தமிழ் பொடியங்கள் வந்திருக்கிறார்கள் என பல நூறு பேர் பொடியங்கள் ,நடுத்தர வயதானவர்கள் வந்தார்கள் எல்லோரும் என்னுடன் வந்தவர்களுக்கு பரீட்சியமானவர்கள் ஊரீல் இருந்து கொண்டு வந்த தீன் பண்டங்களையெல்லாம் மேய்ந்து விட்டு. ஊர்நிலமைகளை கேட்டார்கள் நிலமையை சொல்ல ஓர் தலைவனின் வழிநடத்தலில் வந்தவர்களது அறைக்கு வேறொரு நாள் சென்ற போதே பார்க்க முடிந்தது அத்தனை பேரின் அறைகளிலும் தலைவர் நிமிர்ந்து நின்றது இப்பவும் கண்ணுக்குள் இருக்கிறது . சாப்பிட்ட அவர்கள் இங்க கவனமாக இருக்க வேண்டும் களவு எடுக்க கூடாது தனியாக செல்லக்கூடாது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவர்களுக்கு தெரிந்த பொடியங்களுக்கு அவர்களும் 50 ரூபா கொடுத்துவிட்டு போனார்கள் செலவுக்கு எனக்கோ அங்கே யாரையும் தெரியாது எங்க ஊர் பொடியங்கள் அங்கு யாரும் இருக்க வில்லை போகும் போது இந்த கம்பனி கூடாது சம்பளம் குறைவு நாங்களெல்லாம் ஊருக்கு போக முடியாது என்ற காரணத்திற்க்காகதான் இங்கே வேலை செய்கிறோம் என்று சொல்லி விட்டு. அந்த இந்த வேலையை செய்ய சொன்னால் செய்ய கூடாது உங்களுக்குரிய அடையாள அட்டை வரும் வரைக்கும் உங்களை மேய்ச்சு போடுவாங்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சொன்னானுகள். கம்பனியில் ஒருவன் இருக்கிறான் அவந்தான் எல்லாமே அவனுக்கு ஒட்டுமொத்த பேரும் நடுங்குவானுகள் நம்ம பயத்தை காட்டினால் அவன் நமக்குமேல் ஏறிவிடுவான் எனவும் அவன் பெயர் இடிஅமின் என்று சொல்லி போனார்கள் சுமார் 2000 பேர் இருந்தார்கள் அந்த கேம்பில்(Camp) அடுத்த நாள் காலை .............. தொடரும்
 20. 9 points
  தென் ஆப்பிரிக்காவின், சிங்கத்தாய் (Lion Mamma) நேரம் நள்ளிரவை தாண்டி விட்டது. அந்த தாய் வேலை முடித்து வந்த அசதி.... அவரது ஒரே மகள், தனது நண்பிகள் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கே தங்கி மறுநாள் தான் வருவதாக சொல்லி இருந்தார். போன் அலறுகிறது.... திடுக்கிட்டு எழுகிறார். அழைப்பது...மகள் இல்லையே. கிராமத்தில் 500மீட்டர் தூரத்தில் இருக்கும் மகளின் நண்பி பேசுகிறார்.... பதட்டத்துடன். உன் மகளை... சில குடி கார இளைஞர்கள் ... பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள்..... அவள் போடும் கூச்சல் எனக்கு கேட்கிறது. அவரிடம் கேட்டாலும் உதவிக்கு போக மாட்டார்கள்... காரணம்.. பயம்.... கேட்பதில் பயனில்லை. பயம்... அதிர்ச்சி.... கோபம்.... நண்பிகள் எங்கே... அவள் மட்டும் என்றால் எப்படி? இரண்டு அறை வீடு. ஒன்று சமையல் அறை.... அங்கே செல்கிறார். கையில் கிடைத்தது.... காய்கறி வெட்டும் கத்தி.... போலீசாரை அழைக்கிறார். அவர்கள் அந்த கிராமத்துக்கு வந்து சேர முன்னர், மகள் இறந்து விடக் கூடும். அவர்களும் ஓடி விடக்கூடும். வெளியே ஓடுகிறார்.... கும் இருட்டு... போனில் உள்ள டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் ஓடோடி செல்கிறார். கிராமத்தின் ஒரு மூலையில்... நான்கு வீடுகள். அதில் ஒரு (நண்பியின்) வீட்டில் தான் இவரது மகள் தூங்கிக் கொண்டிருந்தார். மணி 1.30. அவளை எழுப்ப விரும்பாத நண்பிகள், வெளியே இயற்கை அழைப்பினால் சென்றிந்தார்கள். அவர்கள், கதவை பூட்டாமல் போனதை, அவதானித்த மூன்று, குடிகார இளைஞனர்கள் உள்ளே புகுந்து கொண்டு, அந்த பெண்ண தாக்க ஆரம்பித்திருந்தார்கள். நல்ல வேளையாக ஒரு பெண்ணிடம் இருந்த போன் மூலம் அந்த தாய்க்கு தகவல் போனது. இதோ அந்த (சிங்க) தாய் ஓடி வருகிறார். அருகில் செல்லும் போது.... மகளின் அவலக் குரல் கேட்கிறது. பயம், கோபமாக மாறுகிறது. குரலை தொடர்ந்து செல்கிறார். உள்ளே, கையில் இருந்த வெளிச்சத்தில், மூவர்.... ஒருவர்... அலறிக் கொண்டிருக்கும் மகளை.... வன்புணர்வு செய்து கொண்டிருந்தார். அடுத்த இருவர்களது காலாடை, முழுங்காலளவுக்கு இறங்கி இருக்கிறது.... தமது முறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என புரிந்தது. இருட்டில், வருவது யார் என்று தெரியவில்லை.... வெளியே போன பெண்களோ..... மப்பில்.... தீர்க்கமாக பாய்ந்து வந்தனர், இருவரும்..... சில கணங்கள் தான்... அவர்கள் கையில் இருந்த வெளிச்சத்தினை பாச்சிய போனினை தட்டி விடலாம், அவரையும் தாக்கலாம்... கையில் இருந்த கத்தி..... எழுந்தது.... ஒருவர் ஐயோ என்று அலறி வீழ்ந்தார்... அடுத்தவர் குத்து வாங்கிய வாறே யன்னலோடு பாய்ந்து, வெளியே விழுந்து காயத்துடன் ஓடினார்.... மகளை தாக்கியவரோ.... என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளவில்லை எனினும்.... எழுவதற்கு முன்னரே.... முதுகில் கத்தி பாய்ந்தது. ஒருவர் கொலை.... இருவர் படுகாயம். ***** போலீசார் வந்தனர்.... அந்த தாய் கைதானார்... மகள் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார். அன்று பகல் முழுவதும் போலீஸ் நிலையத்தில்..... தவித்துக் கொண்டிருந்தார் மகளை நினைத்து. ஆனால் வெளியே... தென் அப்பிரிக்காவே ஆர்த்தெழுந்திருந்தது. உலகின் மிக மோசமான பாலியல் வன்புணர்வுகள் நடக்கும் ஒரு நாடு தென்னாபிரிக்கா. அங்குள்ள சட்டப்படி.... அந்த தாயின் பெயரை நீதிமன்றம் சொல்லும் வரை வெளியே சொல்ல முடியாது. ஆனால் குட்டியை கவ்வி செல்லும் பெண் சிங்கம் ஒன்றின் படத்தினை போட்டு, சிங்கத்தாய் என்ற அடைமொழியில் அவரது கதையை வெளியே சொன்னன தென் ஆப்பிரிக்க பத்திரிகைகள். அந்தப் பெயரே நிலைத்து விட்டது. போலீசாருக்கும், அரசுக்கும் எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. விளைவாக, சிங்கத்தாய் பிணையில் விடுவிக்கப் பட்டு, மகளை கவனிக்க வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். 18 மாதங்களின் பின்னர் வழக்கு நீதிமன்றம் வந்தது. தென் அப்பிரிக்காவில் பணம் இருந்தால் தான் சிறந்த வழக்குரைஞர்...நீதி. ஆனாலும், மக்கள் பெரும் நிதியை சிங்கத்தாய்க்கு அளித்தனர். மிகவும் திறமையான வழக்கறிஞர்கள் இலவச சேவை வழங்க தாமே வந்து நின்றார்கள். அவர் செய்தது, தனது, தனது மகளை காப்பத்துக்குமான கைமோசக் கொலை என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது. இந்த தாக்குதலினால் பேசும் சக்தியை இழந்து விட்ட, அவரது மகள், நீதிமன்ற தீர்ப்பினைக் கேட்டு புன்முறுவல் செய்தார். காயங்களுடன் தப்பி ஓடிய இருவரும், 30 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டு உள்ளனர். https://www.bbc.co.uk/news/stories-47726967
 21. 9 points
  அன்புள்ள என்ரை செல்லம் அறிவது! நான் நல்ல சுகம். உங்கடை சுகத்துக்கும் கடவுள் அருள் புரிவாராக. நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டனான்.கிடைச்சிருக்குமெண்டு நம்புறன். இப்ப நான் பேர்லினை விட்டு மேற்கு ஜேர்மனியிலை நிக்கிறன். சுவீஸ் இல்லாட்டி கொலண்டுக்கு போனால் நல்லது எண்டு இஞ்சை எங்கடை ஆக்கள் கனபேர் கதைக்கினம்.எனக்கும் என்ன முடிவெடுக்கிறதெண்டு தெரியேல்லை. பாப்பம். உங்கை வீட்டிலை எல்லாரும் சுகமாய் இருக்கினமோ? எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ? பக்கத்து தோட்டக்காரன் சந்திரனோடை கவனம். அவன் என்ன கேட்டாலும் ஒரு பதிலும் சொல்லக்கூடாது. அவன் ஒரு மாதிரியானவன் தெரியும் தானே.கொய்யா கொம்மாவை சுகம் கேட்டதாய் சொல்லவும். தங்கச்சி அதுதான் உங்கடை அன்புத்தங்கச்சியையும் நான் விசாரிச்சதாய் சொல்லவும். வேறை என்னதை எழுத....பிறகு விரிவாய் எழுதுறன். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை அனுப்புறன். இப்படிக்கு அத்தான்
 22. 8 points
  பொயட், உங்கள் ஜப்னா முஸ்லீம் பதிவுகளை நானும் வாசித்தேன். தமிழர்களிலும், முஸ்லீம்களிலும் பலர் உங்களை போல் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை. நீங்கள் எதிர்பார்க்கும் அளவில் பெரும்பாலான மக்கள் இரு பக்கத்திலும் இல்லை. ஒரே நில, நீர், ஆதார, அரசியல் வளங்களுக்காக ஆளை ஆள் தின்னும் அடிபிடி, வரலாற்று வன்மம், சமயக் குரோதம் இதுதான் கிழக்கின் இன்றைய யதார்த்தம். நீங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றம் இருபுறமும் ஏற்படாது என்பதே என் கணிப்பு. இது மிகவிரைவில் ஒரு பெரும் கலவரத்தில் முடியும் என்ற பயமும் எனக்குண்டு. சுருங்கச் சொல்லின், உங்கள் கருத்துக்கள் காலத்துக்கு ஒவ்வாதன. மன்னிக்கவும் ஆனால் இதுவே யதார்த்தம்.
 23. 8 points
  ( உடற்பருமனாதல் பிரச்சினையின் மருத்துவ/உடற்றொழிலியல் தகவல்களை இலகுவான தமிழில் தரும் ஒரு குறுகிய முயற்சி - மூன்று பகுதிகளாக இடம்பெறும். இது இணையவனின் உடல் எடை குறைப்புத் தொடருக்கு போட்டியாக எழுதப் படுவதல்ல! இங்கே உடற்பருமன் அதிகரிப்பதன் மருத்துவ அறிவியல் அடிப்படையும், உடற்பருமனாதலை உருவாக்கும் காரணிகளும் மட்டும் சிறு குறிப்புகளாகப் பகிரப் படும்) உலகளாவிய ரீதியிலும், வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளிலும் உடற்பருமன் அதிகரித்தல் (obesity) என்பது மூன்றிலொரு பங்கினரைப் பாதிக்கும் ஒரு ஆரோக்கியக் குறைபாடாக இருக்கிறது. ஒருவரின் உடலின் உயரத்திற்கேற்ப அவரது உடல் நிறை இருக்க வேண்டும். இதனாலேயே உடல் கொழுப்பதை வெறும் உடல் நிறையாக அளக்காமல், உடல் நிறையை உயரத்தின் வர்க்கத்தினால் வகுத்து வரும் உடற்திணிவுச் சுட்டி (body mass index- BMI) எனும் அளவீட்டை உடற்பருமனைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்துக் கொண்டு, வளர்ந்தோரில் BMI 25 முதல் 30 வரை இருந்தால், அவர்கள் உடல் எடை கூடியோர் (over weight) என்றும் 30 இலும் அதிகமாக இருந்தால் உடற்பருமனானோர் (obese) எனவும் மருத்துவ விஞ்ஞானம் வகைப் படுத்தி வைத்திருக்கிறது. உடலின் எடை இங்கே பங்களிப்புச் செலுத்துவதால் தசைகளைப் பெருப்பிக்கும் பயிற்சிகளால் பொடி பில்டர்களாகத் திகழுவோருக்கு இந்த அளவீடு சரியான ஆரோக்கியக் குறிகாட்டியாக இருக்காது. வளரும் குழந்தைகளிலும் இந்த உடற்திணிவுச் சுட்டி சரியான ஆரோக்கியக் குறிகாட்டியல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.இன்னொரு பக்கம், உடற்திணிவுச் சுட்டி 25 இலும் குறைவாக இருக்கும் ஒருவர், ஏனைய கொழுப்புடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப் படும் வாய்ப்புகள் குறைவெனினும், முற்றாக அந்த நோய்களற்று இருப்பார் என்றும் உறுதியாகக் கூற இயலாது. இதன் காரணம், உடம்பு வாசி எனப்படும் genotype காரணமாக, உடலின் தோற்கீழ் கொழுப்புக் குறைவாக இருந்தாலும், இதயத்தின் இரத்தநாளங்களில் கொழுப்புப் படிவது சிலரில் தாராளமாக நடக்கிறது. இதுவே உடற்பருமன் அதிகமாக இல்லாத ஒல்லிப் பித்தான்களும் சில சமயங்களில் மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு போன்ற இதய குருதிக் கலன் நோய்களால் பாதிக்கப் படுவதற்குக் காரணம். எனவே, சாராம்சமாக, உடற்திணிவு சுட்டி என்பது ஆரோக்கியமான உடல் எடையைப் பேண பெரும்பாலானோரில் உதவும் ஒரு குறிகாட்டி! ஆனால் முழுமையான ஆரோக்கியத்தைப் பேண இந்தக் குறிகாட்டியை மற்றைய பரிசோதனை முடிவுகளோடு இணைத்துப் பயன்படுத்துவது முக்கியம். உதாரணமாக, வருடாந்தம் உடற்பரிசோதனைகள் செய்யும் போது பெறப்படும் இரத்தக் கொழுப்பின் அளவு, கொலஸ்ரோலின் அளவு, குழூக்கோஸ் அளவு என்பனவும் ஒருவரின் அனுசேபத் தொழிற்பாட்டின் ஆரோக்கியத்தை (metabolic health) முழுமையாக அளவிடுவதற்குப் பயன்படுத்தப் பட வேண்டும். - தொடரும்
 24. 8 points
  மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ் பொலன்னறுவைக்கும், மட்டக்கிளப்புக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது புனாணை கிராமம். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பகுதியில் இரண்டு தளங்களுடன் அமைந்து வருகிறது ஷரியா பல்கலைக்கழகம். இது கிழக்கு, சர்சைக்குரிய அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் கனவு முயற்சி. உயர்கல்வி அமைச்சு அனுமதி இன்றி நாம் எவ்வாறு ஷரியா சட்டம் கற்க்கை நெறிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியும் என்கிறார் ஹிஸ்புல்லா. ஆனாலும், அவ்வாறான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறது உயர்கல்வி அமைச்சு. ஆயினும் அந்த அமைச்சுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்ப படிவத்தில் ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் உள்ளடக்கிய 5 வகை கற்க்கை நெறிகளை கொண்டுள்ளதாக தெரிகிறது. சவுதி அரேபியாவில் இருந்து வந்த பெரும் நிதியுடன், அரசு சார்பில்லாத தனியார் நிறுவனம் ஒன்று ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது குறித்த கரிசனைகள் கல்வியாளர்கள் மத்தியில் உண்டாகி உள்ளது. இத்தகைய தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பேராசிரியர் சாண ஜெயசுமண, சட்ட பீடத்தின் கீழ் சட்டம் படிப்பதாக அனுமதியை வாங்கி, அதன் கீழ், ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது தான் திட்டம் என்கிறார். இது குறித்து முழு விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்கிறார். Batticaloa Campus (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஹிஸ்புல்லா. அவர் கிழக்கு கவர்னர் ஆனதும், தனது மகனை தலைவர் ஆக்கி உள்ளார். ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் படிப்பிக்கப் படும் என்பது பச்சை பொய் என மறுக்கிறார் ஹிஸ்புல்லா. உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இன்றி எவ்வாறு அதை செய்ய முடியும் என்கிறார் அவர். உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இந்த தனியார் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கின்றது. முன்னாள் உயர் கலவி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, தனது காலத்தில் அவ்வாறான அனுமதி இன்னும் வழங்கப் படவில்லை என்கிறார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் மாயாதுன்னா, IT சிஸ்டம் குறித்த மதிப்பீடுகளுக்கே விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார். ஆயினும், குறித்த பல்கலைக்கழகம் ஏப்ரல் 30ம் திகதி, Information Technology, Management, Agriculture and Education ஆகிய துறைகளில் கற்க்கை நெறிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் முகாமையாளர் முகம்மது தாஹிர், இன்னும் ஒருவருட காலத்தில் சகல கட்டுமான வேலைகளையும் முடிந்து விடும் என்கிறார். தாஹிர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல்கலைக்கழகத்துக்கு வந்து பரிசீலனை செய்து சென்றதாக சொல்கிறார். ஆயினும் இதனை மறுக்கிறார் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி செயலாளர் விஜேசிங்க. நாம் நாட்டின் அரச பல்கலைக்கழகங்களையே ஒழுங்கு படுத்துகிறோம். இது தனியார் நிறுவனம். ஆகவே இது உயர்கல்வி அமைச்சின் கீழே வரும் என்கிறார் அவர். நிறுவனத்தின் முன்பகுதி, மொகலாய, மேற்கு ஆசிய (சவூதி) கட்டிட கலைகளை பிரதிபலிப்பதாக பிரமாண்டமாக உள்ளது. வகுப்பறைகள் மிக நவீன வசதிகள் கொண்டதாக உள்ளன. இந்த காணி உள்ள நிலம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. இங்கே நீச்சல் தடாகமும், கால்பந்து மைதானமும், பல நவீன விளையாட்டு வசதிகளும் கொண்டதாக இருக்கும் என நிறுவனத்தின் youtube பதிவு சொல்கிறது. இதற்க்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி ஹிஸ்புல்லாவிடம் முன்வைக்கப் பட்டது. சவீதியில் உள்ள ‘Ali Al-Juffali Trust’ இடம் இருந்து 24 மில்லியன் டாலர் கடன் பெறப்பட்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கின் ஊடாக வந்தது என்கிறார் அவர். மலேசியாவில் உள்ள Universiti Teknologi Petronas (UTP) என்கிற தனியார் பல்கலைக்கழகத்தின் மாதிரியை கொண்டே இந்த பல்கலைக்கழகத்தினை அமைகின்றார் அவர். இதற்காக 2016 -17 காலப்பகுதியில் அங்கே சென்று இருக்கிறார் ஹிஸ்புல்லா. சோலார் ஓடுகளுடன் கூடிய கூரைகளுடன் கட்ட பட்டுக்கொண்டிருந்த இந்த பல்கலைக்கழகத்தின் லைப்ரரி வேலைகள், கடந்த வார குண்டு வெடிப்புகளுக்கு பின் நிறுத்தப் பட்டுள்ளன. யாழுக்காக எனது மொழிபெயர்ப்பு. sundaytimes.lk
 25. 8 points
  சன்னதியான் துணை சிமோனா ஸ்ராச 24 முன்ஸ்ரர் 15.06.1983 அன்புள்ள வசந்தி அறிவது! நான் நல்ல சுகம்.நீங்களும் சுகமாயிருக்க எம்பெருமான் முருகனை வேண்டுறன். உங்கள் கடிதம் கிடைத்தது.வாசித்து மட்டில்லா மகிழ்ச்சியடைந்தேன். நான் அனுப்பின போட்டோவிலை இருக்கிறவ என்னோடை வேலை செய்யிறவ.நல்ல சீவன். என்ன உதவி கேட்டாலும் இல்லையெண்டாமல் உதவி செய்யும்.மற்றப்படத்திலை இருக்கிற பொடியன் சிலோன் பொடியன் தான்.ஊர்காவத்துறை பொடியன். கொண்ணர் ஐயாவோடை பிரச்சனைப்பட்டதெல்லாம் கேள்விப்பட்டன்.பரிமளத்தின்ரை பேச்சுக்கால் சறுக்கினதுக்கு நான் தான் காரணமெண்டு முறுகினவராம்.பரிமளம் ஓமெண்டால் கலியாணத்தை செய்து வைக்க வேண்டியது தானே.ஏன் என்ரை ஐயாவோடை கொண்ணர் புடுங்குப்பட வேணும்? நீங்கள் வெளிநாடு வாறதெண்டால் வீட்டிலை கதைச்சு ஒரு முடிவை எடுங்கோ.நான் எல்லா உதவியும் செய்வன்.ஆனால் என்ரை பெயர் மருந்துக்கும் உங்கினேக்கை அடிபடக்கூடாது. பிறகு கன பிரச்சனை வரும்.உங்களுக்கு கனடாவிலை ஒரு சினேகிதி இருக்கிறமாதிரி கதையை பரவ விடுங்கோ.ஆரும் சந்தேகப்பட மாட்டினம்.இப்ப வாறதெண்டால் பேர்லினுக்கு நேரை வந்து இறங்கலாம்.போடர் இறுக்குவாங்கள் போலை கிடக்கு. சட்டுபுட்டெண்டு முடிவெடுங்கோ.திருப்பியும் சொல்லுறன் என்ரை பெயர் வெளியிலை வரக்கூடாது.பிறகு பெரிய வில்லங்கங்கள் வரும். வைரவர்மடை நடந்ததெண்டு எழுதியிருந்தியள். உவன் சந்திரன் நாலு முழத்தை கட்டிக்கொண்டு அங்கையும் இஞ்சையும் ஓடி பெரிய சேக்கஸ் காட்டியிருப்பானே.அவனுக்கு நான் இல்லாதது.... தான் பெரிய கிங் எண்ட நினைப்பு. தான் கொஞ்சம் வெள்ளைதோல் எண்டபடியாலை மன்மத குஞ்சு எண்ட நினைப்பு.என்னைப்பற்றி தெரியேல்லை அவருக்கு.. சரி வசந்தி கனக்க எழுதீட்டன் போலை கிடக்கு.வெளிநாட்டுக்கு வாற விசயமாய் ஒரு முடிவெடுங்கோ. நான் இருக்கிறன் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். பதில் கடிதம் போடுங்கோ. இப்படிக்கு அன்புடன் குரு
 26. 8 points
  சன்னதியான் துணை சிமோனா ஸ்ராச 24 முன்ஸ்ரர் 15.06.1983 என்ரை செல்லம் பரிமளம் அறிவது. நான் நல்ல சுகம். அதுபோல் நீங்களும் சுகமாயிருக்கு சன்னதியானை வேண்டுறன். எப்படியப்பா இருக்கிறீர்? நான் இவ்வளவு கடிதம் போட்டும் ஏன் ஒரு பதில் கடிதம் கூட போடேல்லை. அப்படி நான் என்ன பாவம் செய்தனான். ஒரு படம் அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர். இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு? உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே? நீங்களும் கொப்பரை மாதிரி கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை. நான் இஞ்சை வெளிக்கிடுறதுக்கு முதல் நாள் பின்னேரப்பார் நானும் நீங்களும் துரவுப்புட்டிக்கு பின்னால நிண்டு கதைச்சதையெல்லாம் மறந்து போனியள் போலை கிடக்கு.உங்களோடை அந்த பின்நேர தருணத்தை நான் ஒவ்வொருநாளும் நினைத்து வாடுறன் தெரியுமே உண்மையிலையே நீர் ஈவு இரக்கம் இல்லாத கல்நெஞ்சுக்காரியப்பா. கந்தசாமி கோயில் திருவிழா இப்ப நடக்குமெண்டு நினைக்கிறன். போனவருசத்துக்கு அதுக்கு முதல் வருச வேட்டைத்திருவிழா ஞாபகமிருக்கோ..அதுதான் அந்த கச்சான் சுருள்..... பின் பனங்காணியுக்கை கொண்டுவந்து தந்த கொழுக்கட்டை இப்பவும் என்ரை வாயிலை இனிச்சுக்கொண்டேயிருக்கு. கடியன் என்ன செய்யிறான்? அவன் இல்லாட்டில் எங்கடை சந்திப்புகள் பெரிய சோலியளிலை முடிஞ்சிருக்கும். இருந்தாலும் ஒருக்கால் கொண்ணரோடை கடியன் போகேக்கை கடியன் என்னைப்பாத்து வாலாட்டினது கொண்ணருக்கு இனி இல்லையெண்ட அவமானம். அதுக்குப்பிறகுதானே கொண்ணர் என்னை நோட் பண்ண வெளிக்கிட்டவர். சரி செல்லம்.கோவங்களை மறந்து இனியாவது கடிதம் போடுமப்பா.... .இஸ் லீப டிஸ். நான் இப்ப நல்லாய் ஜேர்மன் பாசை கதைப்பன். wie geht es dir mein schatz இத்துடன் முடிக்கிறன் அன்பு அத்தான்
 27. 8 points
  "கலா என்ற பெயரில் யாராவது படிப்பிக்கின‌மே" அவள் யோசித்துவிட்டு அந்த பெயரில் ஒருத்தரும் இல்லை அண்ணே என்றாள். "அவ‌ருக்கு எத்தனை வய‌சு இருக்கும் அண்ணே " "அவருக்கு அவ்வளவு வயசு இருக்காது என்னோட படிச்சவா" "உங்களுக்கு வயசு ஆகவில்லை என்று சொல்ல வாறீயள் அது சரி உங்களுக்கு எத்தனை வயசு" "கி கி எனக்கு ஐம்பத்தெழு அவவுக்கும் அந்த வயசு தான் இருக்கும்" "அப்ப அவ ரிட்டையர் ப‌ண்ணிபோட்டு நேர்ஸிங்கோமில் தான் இருப்பார் வெளிநாட்டுக்காரர் போல மினிக்கிக்கொண்டு திரியமாட்டினம்" சிரித்தபடியே கூறினாள்.எல்லோரும் அவளது கிண்டலையும் கேலியையும் ர‌சித்தனர் . அங்கு படிப்பிக்கும் யாழ்ப்பாணத்தார் எல்லாம் ஐம்பது வயசுக்குள் தான் இருப்பினம் அவர்களிடம் கேட்டு பார்க்கலாம் ,கலாவின் முழுப்பெயர் என்ன என்று தெரியுமோ என‌ கேட்டாள் "கலாதேவி ..அப்பாவின் பெயர் விஸ்வலிங்கம்,அம்மாவின் பெயர் பூபதி இருவரும் டீச்சர்மாரக இருந்தவை பிறகு விஸ்வலிங்கம் அதிபராக இருந்தவர் ....புருசனின்ட பெயர் தெரியவில்லை" "நாளைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு யாழ்ப்பாணத்தாரிட்ட கேட்டு பார்ப்போம்" மாலை பாடசாலையால் திரும்பிவந்தவள் சொன்னாள் அங்கு கலாவை தெரிந்தவர்கள் ஒருத்தரும் இல்லை என்று. வற்றாப்பளை அம்மன் கோவில் ,ஊற்றங்கரை பிள்ளையார் கோவில் என்று எங்கு போனாலும் அவன் கலாவை தேடாமல் இல்லை.. நாலு நாட்கள் முல்லை மண்னை தரிசனம் செய்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி கலாவின் நினைவுகளுடன் பயணமானான்.சகல வாகனங்களும் பூனகரி பாலத்தினூடாகவே செல்கின்றன‌, .ஆனையிறவு பாதையை தவிர்க்கின்றனர் பல காரணங்களை சொல்லுகின்றனர். பூனகரியோ,கிளாலியோ ஆனையிறவோ எதுவும் மனதில் நிற்கவில்லை கலாவின் நினைவை தவிர.... பருவங்களின் கோளாறுகளை நினைத்தபடி மனைவியை திரும்பி பார்த்தான் அவளும் இயற்கையை ரசித்தபடியிருந்தாள் . "என்னப்பா எதாவது பழைய ஞாபகங்களை இரைமீட்கின்றீரோ" "உங்களை மாதிரி கற்பனையில நான் இருக்க முடியோ எங்களுக்கு எவ்வளவு வேலை கிடக்கு ஊருக்கு போய் அடுத்து என்ன செய்ய வேணும் என்று யோசிக்கிறேன்" "உதுக்கு போய் தலையை உடைக்கிறீர் நான் ஏற்கனவே பிளான் போட்டிட்டேன்" "டவுனுக்கு 12 மணிக்கு போய்விடுவோம் அவையளின்ட வீட்டை சமான்களை வைத்து சாப்பிட்டுவிட்டு எங்கன்ட ஊர் கோவிலுக்கு போவம்,அப்படியே இரண்டு மூன்று என்ட் பெடியள் இருக்கிறாங்கள் பார்த்து போட்டு வருவம்" "கோவிலுக்கு போனால் வீட்டை திரும்பி வரவேணும் யாரின்ட வீட்டையும்போககூடாது' "வெளிக்கிட்ட இடங்களில் உதுகள் ஒன்றையும் பார்க்க ஏலாது' தொடர்ந்து பேச்சைகொடுக்காமல் இருந்து விட்டாள் வீடு போய்ச் சேரும்வரை. சுரேஸ் நினைத்தபடி 12 ம‌ணிக்கு முதலே உறவினர் வீட்டை வந்து சேர்ந்தனர் .ஒரு மணிக்கு கோவில் பூட்டி போடுவார்கள் பிறகு ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள் என உறவினர் சொன்னதும் சுரேஸ் தனது திட்டம் பிழைத்து விட்டதே என கவலைப் பட்டான். அடுத்த நாள் கோவிலுக்கு போனார்கள் அங்கும் கலா வருவாளா என ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தான். கோவில் தரிசனம் முடித்து விட்டு கலா வாழ்ந்த பழைய வீட்டுக்கு நேராக சென்றான் .அவனை யாழ்நக‌ரின் காவல் தெய்வங்கள் ஆரவாரம் பண்ணி வரவேற்றன. "அவளை போய் பார்க்கிற சுதியில உந்த நாய்களின்ட கடிவாங்கி போடாதையுங்கோ" "நாயின்ட கடியை விட உம்மட கத்தல் தான் பயமா இருக்கு" என்று சொல்லிய படி ,திறந்திருந்த படலையை மூடிய பின்பு வீட்டுக்காரார் என குரல் கொடுத்தான் . ஒம் வாரன் யாரது என்று கேட்டபடியே வீட்டுக்கார அம்மா வந்தார். "அதிபர் விஸ்வலிங்கத்தின்ட வீடு இது தானே" " இல்லை தம்பி அவையளிட்ட இந்த வீட்டை நாங்கள் வாங்கி போட்டோம்" " அவையள் இப்ப எங்க இருக்கினம் என்று தெரியுமோ அம்மா" " ஐந்தாறு வீடு தள்ளித்தான் இருக்கினம்" " சரியா விலாசத்தை சொல்லுங்கோ வீட்டு நம்பர் என்ன என்று சொல்ல முடியுமோ" "இங்க அங்க‌த்தைய மாதிரி நம்பர்கள் இல்லை , ஐந்தாவது வீடு ,கலா பவனம் என்று போர்ட் போட்டிருக்கு..." ஊர்சனம் எப்படித்தான் வெளிநாட்டுக்காரரை கண்டு பிடிக்குதுகளோ தெரியவில்லை என நினைத்த படி மனைவியிடம் ஒடிப்போய் சொன்னான் "இஞ்சாரும் இவள் கலா ஐந்தாவது வீடு தள்ளித்தான் இருக்கிறாளாம்,ஒருக்கா டக்கெண்டு பார்த்திட்டு போவம் வாரும்" அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் ,தம்பி வானை எடும், ஐந்தாவது வீட்டடியில் நிற்பாட்டும்" "நீர் வானுக்குள் இருக்கப்போறீரோ ,அல்லது உள்ள வாறீரோ" "நானும் வாரன் ,என்ன வெறும் கையோடய போரது" "ஒரு சீலையை கொண்டு வந்திருக்கலாம்" " என்னது சீலையையோ....நான் பார்த்து பார்த்து வாங்கி வைக்க நீங்கள் உங்கன்ட பழசுக்கு .....வாயில வருது" அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான் வாய் தடுமாறி மனதில் இருந்த எண்ணத்தை உளறினதை.. . "கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்" கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது.... கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் . "ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் " "எந்த சுரேஸ்'" என யோசிக்க தொடங்கினாள் "நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ்." "கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்" கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது.... கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் . "ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் " "எந்த சுரேஸ்'" அவள் யோசிக்க தொடங்கினதை தெரிந்து கொண்ட சுரேஸ் "நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ், உங்கன்ட மகள் கலாவோட படிச்சனான்" "நான் பூபதி டீச்சர் இல்லை நான் தான் கலா உள்ளே வாங்கோ இருங்கோ" "இவா என்ட வைவ்" இருவரும் ஹலோ சொல்லி கொண்டனர் "என்ட அம்மா போன வருடம் தவறிப்போயிட்டா" "சோறி டு கெயர்" உங்களை கண்ட ஞாபகமா இருக்கு ஆனால் முகம் நினைப்பில வருதில்லை உங்களுடன் படிச்ச வேறு போய்ஸின்ட பெயர் சொல்லுங்கோ... "குகன் ,விமல்,ராஜ்,...சுதாவை தெரியும் தானே" "ஓமோம் அவள் லண்டனிலிருப்பதா கேள்விப்பட்டேன்" "போனவ‌ருடம் சுதா அவுஸ்ரேலியா வந்தவர் நானும் குகனும் மீட் பண்ணினனாங்கள் "விமல் லோட அதிகம் நீங்கள் தானே சைக்கிளில் வாரனீங்கள் விமல் இப்ப என்ன செய்கின்றார்" " ஓமோம் நான் தான்' "இப்ப ஞாபகம் வருகின்றது" "விமல் எங்க இருக்கின்றார்" "நாங்கள் 72 கிளப் என்று வட்சப் வைச்சிருக்கிறோம் அதில் நீங்கள் ஜொன்ட் பண்ணுங்கோவன்" "விமலும் அந்த வட்சப் குறூப்பில் இருக்கின்றாரோ" " ஒமோம் கனடாவில் இருக்கின்றான்" "அதென்ன 72 கிளப்" "72 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பு படிக்கதொடங்கினோம் அது தான்" "விமலுடன் கதைத்தால் நான் விசாரித்ததாக சொல்லுங்கோ" "வட்சப்பில் ஜொன்ட் பண்ணினால் எல்லோருடனும் நீங்களும் கதைக்கலாம் "ஹஸ்பனிட்டதான் நல்ல போன் இருக்கு அவர் வந்த பிறகு கேட்டு சொல்லுறேன்... தேனீரும் சிற்றூண்டியும் அருந்திவிட்டு விடைபெற்றனர். அடக்கி வைத்திருந்த சிரிப்பை படலை தாண்டியவுடன் சிரித்தாள் "ஏன் இப்படி சிரிக்கின்றீர்" "சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்" கலாவின் பக்கத்துவீட்டு ரேடியோவிலிருந்து " .
 28. 8 points
  “வந்துட்டான்யா வந்துட்டான் எழுதியே கொல்லப் போறான் “ என்ற மைன்ட் வொய்ஸ் நல்லாவே கேட்குது. சீ சீ அப்படி செய்வேனா என்ன? இது ஒரு உண்மைக்கதை.சின்னக்கதை. ஆனாலும் பிரபல்யமான கதை. இது சுவியின் ஊரவர் என்றபடியால் அவரும் தெரிந்ததை விபரமாக எழுதலாம். இதை அறவே மறந்தே போனேன்.இருந்தாலும் சைக்கிள்கடை என்று சிறி கேள்வி எழுப்பத் தான் ஞாபகத்துக்கு வந்தது. யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது. ஒரு தடவை புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே சைக்கிள் முன்வளையம் வழைந்துவிட்டது.பாடசாலை முடிவதற்கிடையில் திருத்தி கொடுக்க வேண்டும்.யாரிடமும் திருத்த பணம் இல்லை.மதியநேரம் யாரிமாவது கடன் வாங்கலாம் என பொறுத்திருந்தோம்.சைக்கிளை தூக்கிவந்து மைதான வைரவகோவிலுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு இடைவேளை விட்டதும் ஆளாளுக்கு அலைந்து திரிந்தோம்.ஐஸ்பழத்துக்கும் கடலைக்கும் காசு சேர்ந்ததே தவிர போதுமான காசு சேரவில்லை. நீராவியடி கோவிலுக்கு பக்கத்திலுள்ளவர் எனது வகுப்பு.அவர் மதியம் வீடு போய் சாப்பிட்டு வர அவரிடம் யாரிடமாவது சொல்லி இந்த சைக்கிளைத் திருத்தி தா நாளை காசு தருகிறோம் என்று அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டோம். சரி இந்து மகளீர் சந்தியில் எனது அண்ணன் சைக்கிள்கடை வைத்திருக்கிறார் பெயர் அப்பு நான் சொன்னதாக சொல்லுங்கோ என்றார்.அந்த நேரம் இந்த ராங்ஸ் நன்றி யார் தான் சொல்லுவது.தூக்கிக் கொண்டு அங்கே போய இஞ்சை அப்பு அண்ணை என்றதும் அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில வருவார் என்று நின்றவர் சொன்னார். கொஞ்சநேரத்தில் அவரும் வந்து இறங்கினார்.உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கினம் என்று நின்றவர் சொன்னார்.அப்பு அண்ணையும் வளைந்த ரிம்மையும் எங்களையும் பார்த்திட்டு 2-3 ரூபா வரப் போகுது என்ற சந்தோசத்தில உள்ளுக்கு கொண்டு வாங்கோ என்றார்.இப்போ ஆளையாள் பார்த்து முழுசாட்டம்.காசு இப்ப இல்லை என்று சொல்லித் தொலைக்க வேண்டுமே. அப்புஅண்ணை எங்களை விட 6-7 வயது மூத்தவராக இருப்பார்.நான் தான் மெல்ல மெல்ல மசிந்து மசிந்து அண்ணை இப்ப காசில்லை உங்கடை தம்பி முத்துகுமாரு தான் இஞ்சை அனுப்பினவர்.கோபப்படப் போகிறார் என்று எதிர்பார்த்தா பெலத்து சிரித்துக் கொண்டு அதுதானே அங்கையிருக்கிற கடையெல்லாம் விட்டுட்டு இஞ்சை கொண்டாந்திருக்கிறாங்களே என்று பார்த்தேன். சரி சரி கொண்டு வாங்கோ என்று திருத்தித் தந்தார்.(கூலி சரியாக நினைவில்லை ஓரிரு ரூபா தான்) அடுத்த நாளே அவருக்கு காசைக் கொடுத்துவிட்டோம்.அங்கேயே சைக்கிள் வாடகைக்கு விடுவதாக சொன்னார்.பிற்பாடு தேவையான நேரங்களில் அவரிடமே வாடகைக்கு சைக்கிள் எடுப்போம்.இதுவே நாளடைவில் அங்கேயே ஒரு எக்கவுணட்டும் திறந்தாச்சு. நாள் போகப் போக அண்ணையாக இருந்த அப்பு ஒருமையில் கதைக்கப் பழகிக் கொண்டேன்.எனது 90 வீதம் நண்பர்கள் என்னைவிட 2 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர்.எத்தனை வயது கூடு என்றாலும் எல்லோருடனும் ஒருமையிலேயே கதைக்கப் பழகிக் கொண்டேன்.இதை எனது தகப்பனார் பல முறை எச்சரித்திருந்தார். ஒருநாள் பாடசாலை போன போது சிஐடி வந்து நாலு பேரை பிடித்துக் கொண்டு போட்டாங்கள்.அதில ஒராள் லேடிஸ் கொலிச் சந்தியில் சைக்கிள்கடை வைத்திருக்கிறார்.சைக்கிள்கடைக்குள் கைக்குண்டுகள் இருந்தாம் என்று சொன்னார்கள்.பின்னர் தான் தெரிந்தது யாழ்ப்பாணமே இந்த கைதால் அதிர்ந்து போனது. மெதுவாக முத்துக்குமாரிடம் அப்புவாடா என்று கேட்க கண் கலங்கிவிட்டார்.அண்ணை அண்ணை என்று அழைத்த அப்பு அண்ணை இப்போ வெறும் அப்பு என்றே அழைப்பேன்.இப்போது தான் அவரது முழுப்பெயர் அமரசிங்கம் என்று தெரியவந்தது. இவர் வேறு யாருமல்ல மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை இவர்களுடன் பிடிபட்ட அமரசிங்கம் என்ற அப்பு தான். இந்த நால்வரும் 6-7 வருடம் சிறையிருந்தார்கள்.பின்பு எப்படி விடுதலையானார்கள் என்று தெரியவில்லை.70 களின் பின்பகுதியில் கூட்டணி மேடைகளில் பார்த்தா வெள்ளை வேட்டி வெள்ளைச் சேட்டுடன் இவர்களை இருத்தி வைத்திருப்பார்கள்.இவருக்கு மேடைப் பேச்சு அறவே வராது.வண்ணை ஆனந்தன் தான் இலுப்பைப்பழம் பழுத்துவிட்டது.முன் வரிசையில் இருப்பவர்களிடம் இலுப்பைப்பழம் பழுத்தால் என்ன வரும் வெவ்வால் வரும்.வெவ்வால் வரும் போது சும்மா வராது காலில் துவக்கு கொண்டு தான் வரும் என்றால் விசிலடிச் சத்தம் நிற்கவே ஓரிரு நிமிடமாகும். மேடையில் இருக்கிற அமரசிங்கம் என்ற அப்பு என்னோடு வாடா போடா என்று நெருங்கி பழக என்னோடு சேர்ந்தவர் சேராதவர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.அடுத்தடுத்த கூட்டம் எங்கே என்று கேட்டு என்னைக் கூட்டிக் கொண்டு போவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நால்வரும் மேடைக்கு வந்ததும் இரண்டு மூன்று பேர் ஊசியுடன் நிற்பார்கள்.பின்னால் இரத்ததிலகம் இடுவதற்கு வரிசையில் நிற்பார்கள்.எனக்கு ஒரே சிரிப்பு.என்ன மாதிரி இருந்த அப்பு இப்ப பாரடா.அட சிறை சென்றவனுக்குத் தான் அந்த மரியாதை என்றால் அவருடன் நெருங்கி பழகியதால் எனக்கு வேறை.கூட்டம் என்றால் என்னைக் கூட்டிக் கொண்டு போகவென்றே அலைவார்கள். அந்த நால்வரில் நல்ல புத்திசாலித்தனமாக நடந்து மாவை சேனாதிராஜா நல்ல இடத்துக்கு வந்திட்டார்.மற்றவர் என்னவானார்களோ தெரியாது. முற்றும். ஈழப்பிரியன்.
 29. 8 points
  பிச்சைக்காரன் தனது புண்ணைக்காட்டிப் பிச்சையெடுப்பது போலவே.....சிங்களம்...தமிழனைக்காட்டிக் காட்டிப் பிச்சை எடுத்துத் தன்னை வளர்த்தது தானே....சுனாமி...காலம் தொடக்கம் நடக்குது!
 30. 7 points
  கப்பல் சிறிதாக இருந்தாலும் கடற்பயணம் மனதில் பேருவகையை ஏற்படுத்தியது. மத்தியதரைக் கடலில் கலக்கும் சிறிய கடற்பகுதிக்கு மிருடன் கடல் என்று பெயர். ஆனால் அவர்கள் கப்பல் மத்தியதரைக் கடலில் செல்வதாகவே எமக்குக் கூறினர். இந்தச் சிறிய கடலே இத்தனை பெரிதாக இருக்கிறது. பெருங்கடல்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும் என்ற ஆசையும் கூடவேபயமும் எழுந்தது. முதலில் எம்மை கைட்றா என்னும் அழகிய தீவில் இறக்கிவிட்டனர். நாமாகவே சென்று இடங்களைப் பார்த்துவிட்டு இரண்டு மணி நேரத்தில் திரும்ப கப்பலுக்கு வந்துவிட வேண்டும்.பக்கத்தில் எல்லோரும் போகிறார்கள் என்று நாமும் போனால் ஒரு பழைய தேவாலயம். சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று பார்த்துவிட்டு பலரும் போய்க்கொண்டிருந்த ஒரு வீதியைத் தெரிவு செய்தோம். ஆரம்பத்தில் அவை சிறிய வீதிகளாக முழுவதும் வெண்கற்களால் நிலம், வீதி வீடுகள் எல்லாமே வெள்ளையாகத் தெரிந்தன. கழுதை போன்ற ஒன்றைக்கொண்டுவந்து குதிரையில் போகப் போகிறீர்களா என்று ஒருவன் கேட்கிறான். உயரம் குறைவாக இருக்க ஏறிப் பார்ப்போமா என எண்ணி மனிசனிடம் கேட்க பாவம் கழுதை என்று மனிசன் காலை வாருகிறார். சிலர் அதில் ஏறிச் செல்வதை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்குகிறேன். தொடர் வீடுகள். வீதியிலே வாசல்கள் இருக்கின்றன.கொஞ்சம் ஏற்றமாக இருக்கிறது. கடும் வெய்யில் என்றாலும் கடற்காற்றில் நன்றாக இருக்கிறது.தொடர்ந்து நடக்க நடக்க மழைக் குன்றுகள் தான் தெரிகின்றன.தொட்டம் தொட்டமாக வீடுகள். பாதை உயர உயரச் செல்கின்றது. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் நடக்க ஒரு உணவு விடுதி வருகிறது . நேரம் பத்தரை என்பதனாலும் கப்பலில் கொண்டுவந்த காலை உணவைக் கப்பலில் உண்டதாலும் பசி இல்லை. ஆனாலும் நடந்து களைத்ததனால் கோப்பி அருந்திவிட்டுச் செல்வோம் என்று அங்கே அமர்ந்து கோப்பியும் அவர்களின் கேக்கும் உண்டுவிட்டு எழுந்து மீண்டும் நடக்கிறோம். வெட்டை வெளிகளையும், மரம் செடி, கொடிகளையும் பார்த்துக்கொண்டிருக்க நேரம் போய்விட்டது. மீண்டும் திரும்ப வருகிறோம். இன்னும் ஒரு பத்து நிமிட நடையில் கப்பலை அடைந்துவிடலாம். இருந்தாற்போல் பெரிய குழல் ஊதுவதுபோல் எமது கப்பலில் இருந்து சத்தம் வருகிறது. கப்பல் புறப்பட ஆயத்தமாகி அதன் பாதையை பூ ட்டிடத்தொடங்கிவிட்டனர். நெஞ்சு பாதை பதைக்க stop என்று கத்தியபடி ஓடி வருகிறோம் நாம் இருவரும். எடுத்த கப்பலை நிறுத்தி மீண்டும் எமக்குப் பாதையைத் திறந்து விடுகின்றனர். மனதில் பெரிய நின்மதியும் கூடவே வெட்கமும் எழுகின்றது. மன்னியுங்கள் என்று அதில் நின்றவரிடம் கூறிவிட்டு உள்ளே சென்று அமர்கின்றோம். பன்னிரண்டரை முதல் ஒரு ஒன்றரை மணி வரை கப்பலிலேயே மதிய உணவு என்று எமது வழிகாட்டி கூறியிருந்தார். பபே என்பதனால் எதற்கும் முதலே உண்பது நல்லது என்று எண்ணி மேலே செல்லாது காத்திருக்கிறோம். நேரம் நெருங்க கதவைத் திறந்துகொண்டு சென்றால் சனம் நெருக்கி அடித்தபடி நிற்கின்றனர். ஒருவாறு இடம்பிடித்து அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தோம். இந்திய உணவுகளும் மீன் வகைகளும் மரக்கறிகளும் செய்துவைத்திருந்தனர். சுவையாகவே இருக்க இரசித்து உண்டுகொண்டிருக்க என்ன குடிக்கிறீர்கள் என்று ஒருவர் வந்து கேட்டார். கணவர் கோலா சொல்ல நான் எனக்கு கலந்த பணம் வேண்டும் என்று ஒரேன்ஜ் வித் ginger என்று ஓடர் செய்தேன். சிறிது நேரத்தில் வந்த பணியாள் தோடம் பழம் இல்லை என்று கூறி எலுமிச்சையில் இஞ்சி போட்டு வேறு ஒரு சிரப் விட்டுத் தருகிறேன் நன்றாக இருக்கும் என்றான். சரி கொண்டுவா என்றுவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தால் அழகாக அலங்கரித்துக் கொண்டு வருகிறான். வாயில் வைத்துக் குடிக்க ஒரு கசப்புத் தெரிகிறது. குளிர்பானங்களுக்குத் தனியாக நாம் பணம் செலுத்தவேண்டும் என்று கூறி பில்லையும் தர வாங்கிப் பார்த்தால் கோலா 5 யூரோஸ் எனது பணம் 7யூரோஸ் என்று இருக்கு. அனியாயக் காசு என்று மனிசன் புறுபுறுக்க அந்தாளின் திட்டுக்குப் பயந்து எதுவும்சொல்லாமல் மிச்சம் வைப்போமோ என்று நினைத்த யூஸைக் குடித்து முடிக்கிறேன்.
 31. 7 points
  ஓமண்ணை கவனிக்கவில்லை .மன்னிச்சுப்போடுன்கோ ...அப்போ இதையும் படித்துவிட்டு தானோ ஹிஜாபுடன் அல்லது நிகாப்புடன் வரப்போகினம் என்று புளங்காகிதம் அடைகிறோம். அவர்கள் விரும்பியது ஹிஜாபுடன் பாடசாலை போவது அல்ல ஹிஜாபை வைத்து பாடசாலை மாறுவது. அதற்க்கு வலு ஆப்பு ஒன்றை மனோ கணேசன் போட்டுவிட்டார், அவர்கள் எதோடு வேண்டுமானாலும் வரட்டும் ,வச்ச குண்டுக்கு அவர்களுக்கு ஏழரை ஆரம்பிச்சிட்டு சிங்களவன் செமையாக பக்குவமாக பல்லுப்படாமல் செய்யுறான் ,வேடிக்கை பார்ர்கிறதை விட்டுவிட்டு அவர்கள் ஹிஜாபோடு வரப்போகிறார்கள் நிக்காப்போடு வரப்போகிறார்கள் என்று நாம் ஏன் குத்தி முறிவான் , அவர்கள் எதோடு வேண்டுமானாலும் வரட்டும் ஏன் ஆடையே அணியாமல் வேண்டுமென்றாலும் வரட்டும் , அது அவர்களது பிரச்சினை ,இது தான் எனது அபிப்பிராயம் ....நமக்கெதுக்கு வெற்றி ...இதுல வெற்றியடைந்து ...இப்போ தமிழன் கழுவுற மீனில் நழுவுற மீன். முடிஞ்சா சிங்களவனுடன் சொருகிவிட்டுவிட்டு வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்
 32. 7 points
  பிள்ளையாரும் துர்க்கை அம்மனும் துணை. கரணவாய் மத்தி கரணவாய் 30.06.1983 அன்புள்ள ஆசை அத்தான் அறிவது! நான் இங்கு நல்ல சுகம். அது போல் நீங்களும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். உங்கள் பல கடிதங்கள் கிடைத்தது. பதில் எழுத என் உள்மனம் இடங்கொடுக்கவில்லை. அத்தான்! நீங்கள் ஏன் அவர்களுடன் நின்று தோளின் மேல் கைபோட்டுக்கொண்டு போட்டோ எடுத்தனீங்கள்? அந்த உரிமை எப்படி உங்களுக்கு வந்தது? உங்கள் மீது என் மூச்சு மட்டுமே படவேண்டும். நீங்கள் எனக்கு மட்டுமே சொந்தம்.அப்படியிருக்கும் போது நீங்கள் அந்த வெள்ளைக்காரியின் படத்தை எனக்கு அனுப்பி எதிர்காலம் என்று ஒரு சொல்லு எழுதியிருந்தீர்கள். அது என் இதயத்தை முள்ளாக குத்தி விட்டது. அதிலிருந்து நான் இன்னும் மீளவேயில்லை. உங்களுக்கு விசா பிரச்சனையாயின் திரும்பி இங்கே வாருங்கள் நான் வேலைக்கு போய் உங்களை கடவுள் போல் வைத்திருப்பேன். அத்தான் நீங்கள் குடிப்பது போல் ஒரு போட்டோவும் அனுப்பியிருந்தீர்கள். அது என்ன சாராயமா? கெட்ட பழக்கமெல்லாம் பழக வேண்டாம் அத்தான். சொண்டு கூட கறுத்துப்போய் இருக்கு. சிகரெட்டும் பத்துறியளோ? தனிய இருந்து எல்லா ஊத்தைப்பழக்கங்களையும் பழகிறியள் போலை இருக்கு. காலைச்சாப்பாடாய் என்ன சாப்பாடு சாப்பிடுறியள் அத்தான். காலைச்சாப்பாடு முக்கியம் அத்தான். ஏனெண்டால் நீங்கள் 11,12 மணிக்குத்தான் நித்திரயாலை எழும்புவன் என எழுதியிருந்தீங்கள்.8 மணிக்கு எழும்பி தேத்தண்ணி குடிச்சு சாப்பிட்டுட்டு பிறகு நித்திரை கொள்ளலாம் தானே அத்தான். உடம்பை கவனியுங்கோ. வெள்ளைக்காரியளோடை உங்களுக்கு தொடர்சல் வேண்டாம்.கடியன் கந்தையாவின்ரை மகளை கண்டனீங்களோ? அவள் இஞ்சையே சரியில்லாதவள். நீங்கள் கவனமாய் இருக்க வேணும் அத்தான். பிள்ளையார் கோயில் குருபூசைக்கு நானும் வசந்தியும் போனனாங்கள். உங்கடை அம்மாவும் வந்திருந்தவ. ஐயர் திருநீறு தரேக்கை உங்கடை அம்மா வாங்கி என்ரை நெற்றியிலை பூசி விட்டவ.இதை டிப்போவின்ரை மனுசி சரசுவதி ஒரு மாதிரி பார்த்தார். இதை கண்ட உங்கடை அம்மா என்ரை பிள்ளை நல்லாய் இருக்கோணும் நல்லாய் இருக்கோணும் எண்டு என்ரை சொக்கிலையும் கழுத்திலையும் திருநீறு பூசிவிட்டவா. அத்தான் நீங்கள் கோட் சூட் போட்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ. என்ரை குஞ்சு அத்தானுக்கு ஒரு குறையும் வரக்கூடாதெண்டு எங்கடை மருதடி வைரவரை ஒவ்வொரு நாளும் கும்புடுவன். இனி நான் தொடர்ந்து கடிதம் போடுவேன். கவனம் வெள்ளைக்காரியள். விசா பிரச்சனை எண்டால் இஞ்சை வாங்கோ.நான் உங்களை என்ரை மடியிலை பிள்ளை போலை வைச்சு பாப்பன். நீங்கள் இனிமேல் எங்கடை வீட்டுக்கே கடிதம் போடுங்கோ அத்தான். ஏகாம்பரம் ஐயாவிட்டை அனுப்ப வேண்டாம்.அவர் பின்னேர வெறியிலை எங்கடை ஐயாவிட்டையும் உங்கடை ஐயாவிட்டையும் எல்லாத்தையும் சொல்லுறார் போலை இருக்கு. வேறு என்ன அத்தான் பதில் கடிதம் போடுங்கோ. போட்டு மறக்க வேண்டாம். அத்தான் எனக்கு உங்களை நினைக்கும் போதெல்லாம் பல்லு கூசும். உங்களுக்கு???? இத்துடன் முடிக்கின்றேன் அத்தான் அன்பு பரிமளம்
 33. 7 points
 34. 7 points
  பேருந்து இரண்டு மூன்று இடங்களில் நின்றும் நாம் இறங்கவில்லை.முதலில் அக்றோபொலிஸ் என்னும் மலையில் எதெனா என்னும் பெண் தெய்வத்துக்காக கடத்தப்பட்ட கோவிலைத்தான் முதலில் பார்க்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். எம்மைக் கொண்டுபோய் அந்த மலையின் அடிவாரத்தில் ஓரிடத்தில் இறக்கினார்கள். அனைத்து வாகனங்களும் அதற்கும் அங்கால் போகாது. நாம் சென்ற நேரம் விடுமுறையைக் கழிக்க எக்கச்சக்கமான சனங்கள் வந்தும் போய்க்கொண்டும் இருந்தார்கள். மேலே சென்று கோயிலைப் பார்ப்பதற்கு ஒருவருக்கு 10 யூரோக்கள். கடும் ஏற்றமாக இல்லாமல் ஒரு பாதையும், ஒற்றையடிப் பாதை போன்று ஒரு பாதாயும் இருக்க நாம் ஆடிப்பாடி சீரான பாதையால் நடந்து சென்றோம். ஒரு ஐந்து பாகை குறைவாக இருந்தாலே குளிர்வதுபோல் இருந்திருக்கும. அன்றைய வெப்பநிலை 19 O செல்ஸியஸ் என்பதனால் எந்தவித சலிப்பும் இன்றி மகிழ்வாக இருந்தது. இடையேயும் சிறு கட்டட இடிபாட்டுடன் கூடிய பிரமாண்டமான மதில்கள் பார்ப்பதற்கு ஆச்சரியத்தைத் தந்தன. பெருமரங்கள் என்று சொல்வதற்கு எதுவுமே காணப்படவில்லை. இடையிடையே புதிதாக நடப்பட்ட சில மரங்களும் ஒலிவ் மரங்களும் காணப்பட்டன. உச்சியில் ஏறினால் பிரமாண்டமான கோயில் ஒன்று இடிபாடுகளோடு காணப்பட்டாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதனால் வாய் பிளந்து பலரும் அதை பார்ப்பதுபோல் நாமும் சுற்றிவந்து பார்த்துப் பரவசமடைந்தோம். பல பாரந்தூக்கிகளை வைத்து இடிபாடுகளை புனரமைத்துக்கொண்டிருந்தார்கள் பலர். ஒரே வெள்ளை நிறக் கற்களில் பலவற்றை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி செதுக்கிய உயரமான தூண்கள் பல சிதறித் துண்டு துண்டாகி பரவலாய் விழுந்து கிடந்தன. புதைந்து போய்க் கிடந்தவற்றையும் எடுத்துக் பொருத்திக் கொண்டிருந்தார்கள். பார்க்கவே எனக்கு களைப்பாக இருந்தது. ஏனெனில் அத்தனையையும் பொருத்தி முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். எமது கட்டடக்கலைக்கும் சிற்பங்களும் எவையும் ஈடாகமுடியாதுதான் எனினும் அவர்களின் கட்டடக்கலையையும் சாதாரணமான ஒன்றல்ல என்று புரிந்தது. அவற்றின் பிரமாண்டம் மலைக்கவைத்தது. இதனை பெருங்கற்களை இந்த மலையில் எடுத்து வந்து இத்தனை பெரிய கோவிலைக் கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்.? எத்தனை பேரை வேலை வாங்கியிருப்பார்கள். இடையில் நின்று பார்த்தபோது கீழே இந்த அரங்கு தெரிந்தது. கீழே அக்றோபொலிஸ் பற்றி எழுதியிருப்பவர் திரு வாசுதேவன். நான் கிரேக்கத்தின் படங்களைப் போட்ட போது அவர் என் முகநூலில் எழுதியதை இதில் இணைக்கிறேன். ஐரோப்பாவில் முதன் முதலாக நிறுவப்பட்ட பிரமாண்டமான நகரம் எதென்ஸ் ஆகத்தான் இருக்க முடியும். எதென்ஸில் தான் முதலில் ஜனநாயகம் பிறந்தது. பெரிக்கிளீஸ் தான் எதென்ஸ் நகரின் காரணகர்த்தா. எதென்ஸ் நகரும் அதன் மக்களும் பெரிக்கிளீஸின் நிர்வாகத்தில் செழிப்பை அனுபவித்தார்கள். பெரிக்கிளீஸால் எல்லோருக்கும் பல உரிமைகள் வழங்கப்பட்டன. சிற்றரசுகளாகப் பரிமாணம் கொண்டிருந்த கிரேக்கத்தில் பெரிகிளீஸின் இராணு நிர்வாகமே பாதுகாப்பு வழங்கியது. இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக மற்றைய சிற்றரசுகளிமிருந்து பெறப்பட்ட வரியை முதலாக்கி பெரிக்கிளீஸ் பாரிய கடற்படையையும் உருவாக்கினான். பாரிய கட்டுமானங்களைச் செய்தான். ஏதென்ஸ் நகரத்தைச் சுற்றி பாரிய பாதுகாப்பு மதிலைக்க கட்டினான். அக்றோபொலிஸ் மலைப்பீடத்தில் எதெனா தேவதைக்கு உலமே வியக்கும் வண்ணம் ஆலயம் கட்டினான். பின்னால், இரண்டாயிரம் வருடங்கள் கடந்தும், டாவின்சியும்அக்கட்டடக்கலையை விதந்துரைத்தான். * வருடத்திற்கொருமுறை மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவனாக இருபத்தொன்பது தடவை தெரிவு செய்யப்பட்டான். அத்தனை செல்வாக்குள்ள தலைவனாக விளங்கினான் பெரிக்கிளீஸ். புத்திஜிவிகளுக்கு பாரிய உதவிகளை வழங்கினான். அவர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டான். எதென்ஸ் நகரை விஸ்தரிந்து புதிய நகரங்களை உருவாக்கினான். * ஆனால், எதெனிய அரசியல்வாதிகள் அவனில் பாரிய பொறாமை கொண்டிருந்தார்கள். பெரிக்கிளீஸின் நெருங்கிய நண்பர்கள் சிலரைச் சதியால் கொன்றார்கள். ஸ்பாட்டா சிற்றரசு தொடர்ச்சியாக எதென்ஸ் படைகளுக்கு அஞ்சிய வண்ணமிருந்தது. இருப்பினும் ஸ்பாட்டா அரசு தரைப்படையில் மிகுந்த பலத்தைக் கொண்டிருந்தது. கடல்படையில் மிகவும் பலவீனமாக இருந்தது. ஸ்பாட்டா எதென்ஸ் க்கு எதிராகப் போர் தொடுத்தபோது பெரிக்கிளீஸீன் படைகள் அவற்றைத் தோற்கடித்தன. ஒரே வருடத்தில் பத்துத் தடவைகள் போர்தொடுத்தன. எதென்ஸ் நகரைத் தோற்கடிக்க முடியவில்லை * இருப்பினும் -430 ல் பெருநோயொன்று எதென்ஸ் நகரைத்தாக்கியது. எதென்ஸ் நகர அரசியல்வாதிகள் பெரிக்கிளீஸின் நடத்தை காரணமாகவே அவ்வாறு நோய் உருவாகியது என்று குற்றம் சுமத்தினார்கள். எது எப்படியிருப்பினும் பெரிகிளீஸ் அந்நோயாலேயா மாண்டான். எதென்ஸ் நகரம் எதிரிகளின் கைகளில் வீழ்ந்து இழிவடைந்தது. * எவ்வாறோவெல்லாம் மாறியது. தேவதை அத்தெனாவின் ஆலயம் பின்னொருகால் கிறிஸ்தவ தேவாலயமாகியது. பின்னர் ஒஸ்மானியர்கள் அதை கைப்பற்றியபோது அது பள்ளிவாசலாக இருந்தது. வெனிசியர்கள் அதைத் தாக்கியழித்தார்கள். சரிந்தது. * இன்னமும் அக்ரோபொலிஸ் குன்றின் முகட்டில் நிமிர்ந்து நிற்கும் எதெனா தேவதையின் ஆலயத்தின் உயர்ந்த தூண்கள் பெரிக்கிளீஸின் வெற்றியின் சின்னம். * பெரிக்கிளீசுகள் கிரேக்கத்தில் மாத்திரம் முளைப்பதில்லை. அவர்கள் கிரேக்கத்தில் மாத்திரம் வீழ்வதில்லை. பெரிக்கிளீசுகளை நான் நேசிக்கிறேன். எதென்ஸ் நகரம் என்னை அழைக்கிறது - 22
 35. 7 points
  வந்தவனின் பெல்ட் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடந்திருக்கக் கூடிய அனர்த்தம் தப்பி விட்டது என ஓர் செய்தி (23/04/2019) . பெல்ட் என்பது பழைய ஞாபகம் ஒன்றை கிளறி விட்டது. முகத்திலே இலகுவாகப் பேய்க்காட்டுப்படக் கூடிய ஆள் என்று எழுதி வைத்திருக்கோ என்னமோ தெரியவில்லை , எங்க சாமான் வாங்கப் போனாலும் எதாவது ஒண்டு நடக்கும். அது பழைய காலத்தில பெற்ராவில (புறக்கோட்டை) நூற்றுச் சொச்ச ரூபாவிற்கு இடுப்புப் பட்டி வாங்கிய நாட்கள் என்றாலென்ன, இப்ப 5.20 வெள்ளி பெறுமதியான யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் என்றாலென்ன, 1,399 வெள்ளி பெறுமதியான Lap Top எண்டாலென்ன எதையாவது அமத்தி அடிச்சு தலையில கட்டப் பார்க்கினம் . ஒண்டுக்கு இரண்டு ரீடிங் கிளாஸ் எடுத்துக் கொண்டு போய் ( சின்ன எழுத்து வாசிக்க ஒண்டு , பெரிய எழுத்து வாசிக்க ஒண்டு) எண்ணெய் விட்டுக் கொண்டு போன கண்ணால துருவித் துருவிப் பார்த்தாலும் சில வேளை ஏதாவது தப்பி விடும் , வீட்டுக்கு வந்து பார்க்கும் போது. Episode 1: பெற்றாவில் வாங்கிய பெல்ட் : உழைக்கத் தொடங்காத காலம். அப்பா ஒவ்வொரு மாதமும் அனுப்பும் மணி ஓடரை வைத்து ஹால் சாப்பாட்டுக்காசு, சில்லரைச் செலவுகள் எல்லாம் பார்த்து , இடை இடையே நண்பர்களுடன் Leons இற்கு போய் அருமையாக ரெண்டு பியர் அடிச்சு ( இரண்டுக்கே நல்லா ஏறி விடும் அப்பவெல்லாம்) , பிறகு கொழும்புக்கும் போவதற்கு காசினைத் தேற்றி எடுப்பதென்பது குதிரை கொம்பு தான். எப்படியோ சில பல குதிரைக்கொம்புகள் இடைக்கிடை வந்து சேரும். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் கொழும்பு போன நேரம் , வந்த அலுவல் முடித்து விட்டு திரும்புவதற்கு பஸ்ஸைப் பிடிக்க Pettah (புறக்கோட்டை ) நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். வழியில ஒருத்தன் வித விதமான இடுப்புப் பட்டிகளை பரப்பி வைத்து விலை எதோ நூற்றுச்சொச்சம் என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தான். சற்றுக் குனிந்து இடுப்பைப் பார்த்தேன். ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய ஓட்டைகளும் குறுக்கே ஒரு பெரிய மடிப்பு வெடிப்புமாக எனது பெல்ட் பென்ஷன் தரச் சொல்லி அழுது கொண்டிருந்தது. பர்ஸினுள் மேலதிகமாக ஒரு 125 ரூபாய் மட்டில் இருந்தது ஞாபகம் வர , சற்றே வேகம் குறைத்து அவனிடம் சென்றேன். “மில கீயத (என்ன விலை)?” என்று எனக்குப் பிடித்திருந்த ஒரு பெல்டைக் காட்டிக் கேட்டேன். எனது சிங்களம் பற்றி எனக்கு எப்பவுமே பெருமை உண்டு 4,5 வயதில் கத்தோலிக்க சிஸ்டரிடம் படிக்கப் போன காலத்திலேயே , அவர் ஒரு சிங்கள மாஸ்டரை ஒழுங்கு படுத்தி சிங்களம் பயின்று வந்திருந்தது இப்ப ஒரு 45 வருடம் போன பின்பும் நல்லா நினைவில் நிக்கிற ஒண்டெண்டால் , அப்ப இருபது வயதில தெள்ளுத் தெறித்தது மாதிரித் தானே இருந்திருக்கும். “ ஏக்க சீய தஹாயாய் மஹத்தயா” என்றான் அவன். மஹத்தயா என்று அவன் விழித்தது மனதுக்கு அப்படி ஒரு திருப்தி. இப்ப நினைச்சுப் பார்த்தால் அன்றாடம் சந்திக்கும் சாதாரண மனிதர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அவன் தரவளிகளெல்லாம் Customer Psychology இல் PhD தர அறிவு கொண்டிருந்து வியாபாரம் செய்திருந்தார்கள் என வியப்பாகக் இருக்கிறது , Fittest Survives. இன்றைய திகதியில் எனது துணைவியாரும் என்னுடன் அங்கு நின்றிருந்தால், ஐம்பது ரூபாய்க்குத் தருகின்றாயா எனக் கேட்டிருப்பார். எப்போதுமே வராத அந்தத் துணிச்சல் எங்கேயோ பதுங்கி நிற்க , விலை கொஞ்சம் அதிகம் தான் என மனது சொல்ல , ஒரு மாதிரி துணிச்சலை வரவழைத்து கொண்டு கேட்டேன், “ ஏக்க சீயட்ட தெண்ட புளுவாங்த ( நூறு ரூபாய்க்கு தர முடியுமா)” என்று. ஒரு மாதிரி என்னை மேலும் கீழும் அளந்து பார்த்தவன் , “சரி” என்று சொன்னான். எனக்குள்ளே ஒரே புழுகம்- ‘ யாரடா சொன்னது உனக்குத் துணிச்சலும் பேரம் பேசும் திறமையும் இல்லை எண்டு’ எனக்கு நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு தான் விவகாரமே ஆரம்பமாகியது. நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். சந்தோசமாக வாங்கி வைத்து கொண்டான். பின்பு Belt ஐ எடுத்து எனது இடுப்பில் சுற்றி அளவு பார்த்தவன் கேட்டான் “ ஹோலுத் தஹலா தெனவாத மாத்தையா ருப்பியல் பஹய் விதராய் ( ஓட்டை போட்டுத் தரவா ஐந்து ரூபாய் மட்டுமே)” என்றான். நானும் சரி என்றேன். இடுப்பில் வைத்து மீண்டும் அளவு எடுத்து ஓட்டை போட்டான். பிறகு கேட்டான் பக்கத்தில கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு மேலும் ஓட்டைகள் போடவா என்று. நானும் ஒரு பெரிய மனிதத் தோரணையில் ஓமென்று தலையாட்டினேன். படக் படக் என்று நாலைந்து ஓட்டைகள் போட்டான். பெல்டைத் திரும்பத் தந்தான். போட்டுப் பார்க்கச் சொன்னான். பழைய பெல்டை அதிலேயே கழற்றி எறிந்து விட்டு புதியதை மாட்டிக் கொண்டேன். குனிந்து பார்க்க நல்ல எடுப்பாகத் தான் இருந்தது. பர்ஸ் இலிருந்து ஐந்து ரூபாயத் தாளை எடுத்து நீட்டினேன். போகத் திரும்பினேன். “ பொட்டக் இண்ட மஹத்தயா?” என குரல் விட்டான். திரும்பிப் பார்த்தேன். “தவ ரூபியால் விஸ்ஸக் தென்ட மஹத்தயா( இன்னமும் இருபது ரூபாய் தாருங்கள்)?” என்கிறான். எனக்குப் பெரிய அதிர்ச்சி. 105 ரூபாய் போக மிச்சமாக இருக்கக் கூடிய 20 ரூபாயில் புறக்கோட்டை நானா கடை கொத்துரொட்டியை ஒரு கை பார்த்து விட்டு பஸ் ஏறலாம் (அப்ப ஒரு கொத்து ரொட்டி 10 ரூபா அப்படி இருந்திருக்கும்) என இருந்த எனக்கு , இவன் காசு முழுவதையும் அமத்தப் பார்த்தால் எப்படி இருக்கும். “ என்ன 5 ரூபாய் எண்டு தானே சொன்னனீ ? “ என்றேன் நான். “ ஓம் மஹத்தயா ஒரு ஓட்டை போட 5 ரூபாய் , 5 ஓட்டைக்கும் 25 ரூபாய் ஆகின்றது. காசைத் தாருங்கள்” என்று தொனியை சற்றே உயர்த்தி சொன்னான். யாரோ எங்கோ எள்ளி நகைத்தார்கள். எனது கொத்து ரொட்டி கனவை இறுக்கமாக மூட்டை கட்டி வைத்து விட்டு, பர்ஸை வழித்துத் துடைத்து அவனிடம் கொடுத்து விட்டு , ஏன் எனக்குத் தான் இதெல்லாம் நடக்குது என்று வாழ்க்கையே வெறுத்துப் போய் திரும்புவதற்கு மீண்டும் பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினேன். Episode 2 : வரும்….
 36. 7 points
  சும்மா புலம்பாதீர்கள் யூட் கிறீஸ்த்தவர்கள் மற்றும் யூதர்களை இஸ்லாம் நேரடியாகவே புத்தகத்தின் மக்கள் என்று குறிப்பிடுகிறது https://www.quranindex.net/kelime.php?id=8552 இதன்படி கிறீஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் இறை மறுப்பாளர்கள் அல்லது இணை வைப்பாளர்கள் எனும் பிரிவிட்க்குள் வருவார்கள். இஸ்லாம் இவர்களை காபீர்கள் என்று அழைக்கிறது ,அவர்களை கொல்லவும் சொல்கிறது https://en.wikiquote.org/wiki/Qur'an_on_non-Muslims சும்மா எழுந்தமானமாக அடிச்சு விடாமல் முஸ்லிம்களின் குரானிலும் என்ன சொல்லயிருக்கிறது என்று தெரிந்து கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்கலாம் . அதுசரி காத்தான் குடியில் முஸ்லிம்களை கொலை செய்தது தமிழ் மற்றும் சிங்கள கிறீஸ்தவர்களா ...? எதற்கு கிறீஸ்தவர்கள் மீது கைவைத்தார்கள் ....? சிங்கள பௌத்தன் மீது கைவைத்திருந்தால் தெரிந்திருக்கும் முதலில் கண்ணில் படும் முஸ்லிம்களை எல்லாம் வெட்டி எறிந்து போட்டு தான் பேச்சுவார்த்தைக்கே வந்திருப்பான் .கிறிஸ்தவன் இழிச்ச வாயன் எதுவும் பண்ணலாம் ,அதற்கு நீங்கள் வந்து வாக்காளத்தும் வாங்கலாம்
 37. 7 points
  ஜஸ்டின், ஏன் நோயுற்றதாக கருதுகிறீர்கள்? இந்த வகை உணவு முறைகளில் கலோரி கட்டுப்பாடுகள் தேவையில்லை. இதில் எனது அனுபவத்தை பகிர்கிறேன். இந்த உணவு பழக்கத்துக்கு மாறிய பின் நான் கார்போஹைட்ரட் இற்கு பதிலா அதிகளவு saturated கொழுப்பு, அதாவது கெட்ட கொழுப்பு என்று காலங்காலமாக சொல்லப்பட்ட கொழுப்பை மாற்றீடாக சேர்த்து கொண்டேன். தானிய வகைகள் கிட்டத்தட்ட சேர்ப்பதே இல்லை. மரக்கறி. மீன், bacon , கொழுப்பு கூடிய இறைச்சி வகைகள், organ meat , முட்டை (மஞ்சள் கரு தவிர்ப்பதே இல்லை) போன்றவை பிரதானமாக இருக்கும். நெய், பட்டர், ஒலிவ் ஆயில் , heavy கிரீம் பால் போன்றவையும் தேவையை பொறுத்து இருக்கும். கலோரி அளவில் பார்த்தால் இலகுவாக 2500-3000 கலோரிகள் தாண்டிவிடும். முறைப்படி நிறை கூட வேண்டும் ஆனால் நிறை குறைந்தது. ஆரம்பத்தில் அதிக கொழுப்பின் தயக்கத்தில் proteinஐ அதிகமாக சேர்த்ததுண்டு, பிறகு அது தவறு என்று தெரிந்து மாற்றிவிட்டேன். தற்பொழுது உடல் கலோரி எரிக்கும் முறை நாம் சாதாரணமாக கணிக்கும் முறையில் இல்லை என்று சிலர்/சில ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. முதல் இரண்டு கிழமைகள் கொடூரமானவை, அதன் பிறகு பழகிவிடும், வயிறு எப்பவுமே நிறைந்தது போல ஒரு உணர்வு இருக்கும். நோயுற்ற உணர்வு இருப்பதில்லை. இதை இங்கே பகிருவதில் எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு குறைந்த வயதில் sugar பிரச்னை வந்துவிட்டது (அப்பா, அம்மா இருவரது familyயிலும் உள்ளது). கொலஸ்டரோலும் ஓரளவுக்கு எகிறியிருந்தது. ஆரம்பத்தில் இந்த diet இல் தயக்கம் இருந்தது, மூன்று மாதங்களுக்கு பிறகு எனது முதலாவது blood reportஇல் markerகள் நம்ப முடியாத அளவுக்கு controlஇற்கு வந்தது. இதற்கு பிறகு sugar மாத்திரையை நிறுத்த முடிந்தது, அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்த diet இல் குழப்பம் வரும் வரைக்கும் எதுவித மாத்திரைகளும் தேவைப்படவில்லை. வெறும் உணவு பழக்கத்துடன் , சிறிதளவு உடற்பயிற்சியுடன் சாதாரணமாக இருக்க முடிந்தது. நான் எதிர்பார்க்காத சில இன்ப அதிர்ச்சியும் உண்டு. முன்பு சிறிது மந்தமாக இருக்கும் நிலை போய், மிகவும் தெளிவாக இருக்கும். இந்த dietஐ சில சூழ்நிலைகளால் என்னால் கட்டுப்பாட்டுடன் தொடர முடிந்ததில்லை. ஆனாலும் இப்போதும் carb நிறைய சாப்பிடுவதில்லை. மீண்டும் தொடரவேண்டும் என்ற உத்வேகத்தை இணையவனின் இந்த பதிவு தருகிறது. நீங்கள் இது ஒரு backup mechanism, பக்க விளைவுகள் இருக்கும் என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள். இது ஆராய்ச்சியில் முழுமையாக நிரூபிக்கப்படாதவை என்று நினைக்கிறன் (பழைய புரிந்துணர்வு, myth என்கிறார்கள்). தற்போதைய சில ஆராய்ச்சிகளில், ஒரு உதாரணத்துக்கு Alzheimer’s disease சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் , ketonகள் மூளையின் "preferred" energy source ஆக அறியப்பட்டுள்ளது. நான் அறிந்த வரையில் மாச்சத்து ஒரு essential nutritionஆக அறியப்படவில்லை. இந்த வகை diet இல் வரும் ketonகள் சிறுநீரில் அமிலத்தன்மையை அந்த அளவுக்கு அதிகரிக்க போதாது என்று சொல்கிறார்கள். அது ketoacidosis (இந்த diet இற்கு சம்பந்தம் இல்லாதது) என்ற நிலையிலேயே வரலாம் என்கிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்தை/நிலைப்பாட்டை அறிய ஆவல். உங்களை challenge பண்ணும் நோக்கத்தில் எழுதவில்லை. நான் ஒரு மருத்துவன் கிடையாது, இது எனது வாசித்த, பின்பற்றிய அனுபவம் மாத்திரமே. பின்பற்ற விரும்புபவர்கள் மருத்துவர்களில் ஆலோசனைகளை பெறுவது சிறந்தது. இணையவனின் இந்த பதிவு, மீண்டும் இதை பின்பற்றவேண்டும் என்ற ஒரு ஊக்கத்தை தருகிறது. அவரது அனுபவத்தையம் அறிய அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன். தமிழர்களில் இந்த வகை diet பயன்படுத்துபவர்கள் அரிது , கனடாவில் இருந்து வந்த ஒரே ஒருவரை மாத்திரமே இதுவரை சந்தித்து, உரையாடி உள்ளேன்.
 38. 7 points
  அதே ஆட்கள் மட்டும் தான் வெள்ளையும் சொள்ளையும் பக்கா குப்பைகள் நன்றி அண்ணை எனக்கே வாழ்கையே வெறுத்த காலம் அது ஏழையாக இருந்திடக்கூடாது என ஆனால் வாழ்க்கை யாரைத்தான் விட்டது அதன் வட்டத்தில் சுழலத்தானே வேண்டும் ஓம் ஓம் இது கனபேருக்கு புரிய வேண்டும் நன்றி அக்கா கருத்துக்கு உள்ளே என்ன நடந்தது எனக்கும் தெரியாது ஆனால் கொஞ்ச ரிசு பேப்பரை அள்ளி ரொய்லெட்டில் போட்டு விட்டு சென்றான் அவன் சென்ற ரூமை திறக்க முடியாது ஏனென்றால் நம்பர் லாக் பண்ணிருப்பார்கள். அந்த நம்பர் தெரிந்திருக்க வேண்டும் அடுத்த நாள் காலை மேனேஜர் வந்து என்னைக்கூப்பிட்டு நேற்று என்ன நடந்தது என்று கேட்க (அவர் எங்கோ இருந்து பார்த்திருப்பார் போல இவன் அவளை உள்ளே கூட்டி வந்ததை) நான் விபரங்களை சொன்னேன் ஏன் நீ எனக்கு முதலில் சொல்ல வில்லை என்று கேட்க?? அவர் என்ன செய்தார் என்று நான் என் கண்ணால் பார்க்கவில்லை அப்படி இருக்க எப்படி பொய் சொல்ல முடியும் அவர் ஒர் பெண்ணைக்கூட்டி வந்தது தெரியும் அதை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லலாம் என்று நினைந்திருந்தேன் எனவும் சொன்னேன். நிறுவனத்தில் அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் பயங்கர மேட்டர்க்காரன் என்பது அவர்களுக்கும் ஏன் எனக்கும் தெரியும். அவனுக்கு ஆப்பு அடிக்கப்பட்டது வேலையில் இருந்து மாற்றப்பட்டான் . மீண்டும் நம்பிக்கைக்கு ஆளான நான் மேனேஜரின் ரூம் நம்பரும் எனக்கு மட்டுமே கொடுப்பட்டது வேற யாரும் உள் செல்ல முடியாது ஏனென்றால் அவர் துபாயில் மிகவும் முக்கிய புள்ளிகளில் ஒருவர். ஒரு மனிதாபிமானம் உள்ள நேர்மையான மனிதரும் கூட மதம் பார்க்காதவர். மற்றவர்கள் எங்கள் மதத்துக்கு வா உன்னை இங்கே எல்லோருக்கும் பிடிச்சிருக்கு இங்கே வசிக்க விசாவும் தருவார்கள் நல்ல சம்பளம் , இருக்க றூம் எல்லாம் தருவார்கள் என்று சொல்ல நானோ உங்களுக்கு என் வேலை மட்டும் தானே வேண்டும் அதை நான் இங்கு இருக்கும் வரைக்கும் செய்கிறேன் ஆனால் மதம் மாற என்னால் முடியாது என்றேன். என்னுடன் இருந்தவர்களில் வங்காளிக்கு விசா கிடைத்தது மற்றவன் மட்டக்களப்பு அவனோ தான் ஒரு கிறிஸ்டீன் என பொய் சொல்லி விசா எடுத்தான் நான் மட்டும் விரும்பல காசுக்காக மதத்தையெல்லாம் விட்டுச் செல்ல முடியாது என கூறிவிட்டேன். ஆனால் அங்கிருந்த ஒரு லெக்சர் ஒருவர் என்னை அழைத்து அந்த மெனேஜரிடம் கூட்டிச்சென்று இவனுக்கும் விசா கொடுத்து இங்கே வைத்துக்கொள்ளுங்கள் என சொல்ல மெனேஜரும் ஓ நல்ல விடயம் என கூறி ஒரு எஜிப்ற் நாட்டுக்காரரிடம் இவருடைய விளக்கத்தை சரிபார்த்து கம்பனியிடம் கதைத்து முடிவு எடுங்கள் என்றார் . இப்படி பல வருடங்கள் ஓடியது அவனும் அவர் முன் தலையாட்டிவிட்டு மந்தமாகவே இருந்தான் ஏனென்றால் அவனுக்கு மதம் முக்கியமாக இருந்தது நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை எத்தனை வருடத்துக்கு இங்கே இருப்பது?? நான் நாட்டுக்கு செல்ல வேண்டும் நினைத்தாலும் நல்ல சம்பளம் அரச வேலை ஆர்வமும் இருந்தது இப்படி வருடங்களும் சென்றது 2009 தங்கைகு கல்யாணம் என அழைப்பு வர நான் நாட்டுக்கு போக தயாரானேன் என் வேலைக்கு பதிலாக இன்னுமொரு வங்களாதேஷ் காரன் வந்தான் அவன் கொஞ்ச நாள் வேலை பழக்கியதும் நான் ஊர் செல்ல ஆயத்தமானேன் அந்த அலுவலகத்திலிருந்த அனைவரும் காசு சேர்த்து தந்தார்கள் அரபி பெண்களோ போய் வந்துடவேண்டும் வராமல் விட்டால் கொன்று விடுவோம் என்றும் சொன்னார்கள். ஊர் வந்து தங்கையின் திருமணத்தை) செய்து) கல்யாணமும் சிறப்பாக முடித்து விட்டேன் ஒருவரது (வளவு வாங்கி வீடு கட்டி அதன் மேலதிக வேலைகளயெல்லாம் நான் துபாயி இருக்கும் போது செய்துவிட்டன்) ஊர் சென்ற போது பொலிஸில் சேர இன்றவியுவிக்கு சென்றேன் அங்கே எனது ரிசேல்ட்ஸ், விளையாட்டுச் செட்டிபிகேட் எல்லாவற்றையும் பார்த்து விட்டு கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னார்கள் உயரத்தை பார்த்துவிட்டு 5.5 அடி பார்போம் நீங்கள் 5.3 அடி இருக்கிறீர்கள் அடுத்த வருடம் முயற்ச்சி செய்யுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் , ரயில்வே ஊழியராக இன்றவியுக்கு சென்றேன் வவுனியாவில் அல்லது கிளிநொச்சியில் வேலை வரும் போவீர்களா போவேன். எனக்கூறிவிட்டு வந்தேன்ஆனால் வேலை கிடைக்கல அடுத்தது நில அளவை உதவியாளர் சகலதும்கேட்டார்கள் பார்த்தார்கள் ஆனால் வேலையென்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இப்படி இருக்க அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் ஆட்கள் சென்றது அதிகம் அந்த வருடம் சரி இலங்கையில் வேலை கிடைக்காது நமக்கு இனியென்ன படகேறுவோம் என நினைத்து இருந்தேன் . ஆனால் நீ படகேறினால் அங்கு செல்கிறாயோ இல்லையோ இங்கே இருவர் இறந்து கிடப்பார்கள் என அம்மா அப்பா சொல்ல அதையும் கைவிட்டேன். விடுமுறை கழியும் தறுவாயில் இருக்க மீண்டும் விமானமேறினேன் அதே இடத்துக்கு செல்ல அங்கே நான் வேலை பழக்கிய வங்காளிக்கு விசா கொடுத்து அழகு பார்த்தான் அந்த எஜிப்ற்காரன் எனக்கு அங்கு இருக்க பிடிக்கல ஊருக்கு போய் வந்ததனாலும் சொந்தங்களும் பழகிவிட்டு வந்ததாலும் மேனேஜரிடம் போய் ஏன் எனக்கு விசா கொடுக்கல இத்தனை வருடமாக வேலை செய்கிறேன் என சொல்ல எனக்கு ஒன்றும் தெரியாது ராஜா நான் அவரிடம் தானே சொல்லி இருந்தேன் என அவர் கூற அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் உள்ளே வர மேனேஜர் கேட்கிறார் என்ன நடந்ததென அவரோ நான் இருவருக்கு அப்பிளே பண்ணினேன் அவருக்கு கிடைத்தது இவருக்கு கிடைக்கல என்று சாதரணமாக சொன்னார். மேனேஜரோ உனக்கு வேலை நான் தருகிறேன் என அவர் காரில் ஏற்றி சென்றார் (இதுவரை யாரையும் அவர் காரில் ஏற்றியதில்லை அவர் காரின் பின்பே பல கார்கள் செல்லும் முக்கியமானவர்) பயத்தில் பின்சீட்டில் இருக்க எனக்கு நீ முதலாளியா முன்னுக்கு என் அருகில் வா என கூட்டிக்கொண்டு அந்த வாகனம் பறந்து சென்றது. அங்கே ஓர் கடையில் நிறுத்தினார் நல்ல சம்பளம் நீ இங்கே வேலை செய் என்றார் அங்கே கடையில் நின்றவர்கள் எல்லாம் பெண்கள் எனக்கு பிடிக்கல யோசித்து சொல்கிறேன் சேர் என மீண்டும் காரில் ஏறி வந்துவிட்டேன் வந்த நான் அம்மாவுக்கு உடல் நலமில்லை நான் நாட்டுக்கு போகபோகிறேன் என கூறி கேன்சல் செய்துவிட்டுவர ஆயத்தமானேன் கணக்கு எல்லாம் பார்கப்பட்டு பிடித்து வைத்த காசயெல்லாம் கொடுத்தது கம்பனி நானும் ஊர் புறப்பட தயார் ஆனேன் 2010 ம் ஆண்டு அப்பாவும் ஊரில் 5 ஏக்கர் வயல் எடுத்தவர் நானும் போணைப்போட்டு நானும் வருகிறேன். இன்னும் 5 ஏக்கர் வயல் மேலதீகமாக எடுங்கள் என்று சொல்லியும் ஊருக்கு வந்து விட்டேன். வயல் எடுத்து செய்ய அறக்கொட்டியும் , வெள்ளைக்கதிரும் நோயும் அடித்து மொத்தமாக நஷ்டம் வெள்ளாமை வெறும் மரமாக நின்றது கொண்டு வந்த காசும் மொத்தமாக செல்ல 5 லட்சத்துக்கு மேல் நட்டமும் அப்பாவுக்கு காட் அட்டக் வர என்ன செய்வதென்று தெரியாமல் உதவி யாழ் இணையத்திடமும் கேட்டிருந்தேன் நேசக்கரம் ஊடாக சிறிய உதவி மிக பெரியதாக இருந்தது. எப்பவும் சொல்லிக்கொள்வேன் இரண்டு வருடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கூலி வேலைகளெல்லாம் செய்தேன் . வேலைக்கு இண்டவியுக்கு கூட்டி சென்றார் ஒருவர் பல கேள்விகள் கேட்கப்பட்டது எனது பதில் சரியாக இருக்கும் ஆனால் வேலை கிடைக்காது என்ற நிலையில்தான் நான் இருந்தேன் அதிஸ்ரம் கிடைத்ததா என்று தெரியவில்லை வேலை கிடைத்தது , ஒருவருடத்தில் பதவி உயர்வும் கிடைத்தது மீண்டும் முகாமைத்து உதவியாளருக்கு (M.A) பரீட்சை எழுத காத்துக்கொண்டிருக்கிறேன். மறக்க முடியா சம்பவங்கள் மனதிலிருந்து இறக்கி வைத்து இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது வாசித்த கருத்துகூறிய அனைவருக்கும் நன்றிகள்.
 39. 7 points
  நிரந்தரம் என்று எதுகும் இல்லை உறவுகளோ நண்பர்களோ உன்னை வெறுப்பதாய் இருந்தால் விட்டு விலகிவிடு அவர்கள் வேண்டாம் என்று போன பின் நீ அன்பு வைப்பதில் அர்த்தமில்லை இந்த உலகில் நிரந்தரமானது என்று எதுகும் இல்லை அன்பு பாசம் எல்லாமே ஒரு மேடை நாடகமே சுயநலத்துடன் சுளரும் பம்பரம் போலே வேசம் கலைந்தபின் விட்டு விலகிவிடுவார்கள் ஒன்றை மட்டும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்னோடு எப்பவுமே பொய்மைகள் உறங்குவதில்லை என் மனச்சாட்சியுடன் நான் இப்போ மௌனமான மொழியை கற்றுக்கொண்டு விட்டேன் அதனோடு வாழவும் பழகிவிட்டேன் என் அருகில் அழகிய வாழ்வு இருக்கும்பொழுது நான் தனியனே போதும் என் படை அசையாமல் நகரும் பா .உதயகுமார் /Oslo
 40. 7 points
  வன்னியில் வறுமையால் கல்வியில் கீழ் மட்டத்திற்கு போயிட்டுது என்று சொன்னால் நம்பலாம் யாழ்ப்பாணத்தில் வறுமையா?...அளவுக்கு மிஞ்சிய பணம்,ஜூட் சொன்ன மாதிரி வெளிநாட்டு பணம்,இணையங்களின் வளர்ச்சி,தொலைபேசி,மு.புத்தகம் அதில குந்திட்டு இருக்கிறது,கண்ட,கண்ட குப்பைகளை பார்த்து கெட்டுப் போறது,,,சிறு வயதிலேயே ஆண் /பெண் நண்பர்களை தேடிக் கொள்வது,மதுபானம்,போதைவஸ்து எல்லாவற்றையும் விட ஒருத்தருக்கும் பயமில்லாமை...கஷ்டப்பட்டு படிக்காமல் இலகுவாய் எப்படி பணம் சம்பாதிப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்
 41. 6 points
  கந்தவனம்! ஆள் ஊரிலை பெரிய காய். ஆள் கரிக்கறுப்பு எண்டாலும் கட்டுமஸ்தான உடம்பைக்கண்டு மயங்காத கன்னியர் இல்லை எண்டே சொல்லலாம். சிங்கன் பாலர் வகுப்புக்கு வாத்தியார் எண்டாலும் தான் பெரிய பேராசிரியர் மாதிரித்தான் ஊருக்குள் திரிவார்.சனசமூக நிலைய கூட்டம் அல்லது பல நோக்கு கூட்டுறவு சங்க தேர்தல் வந்தால் ஆளை பிடிக்கேலாது.தன்ரை கையில தான் இந்த பிரயளமே உருளுவது போல் அவரும் ஊர் முழுக்க உருண்டு பிரண்டு திரிவார்.....அதிலும் அவர் குளக்கரையில் நின்று தேகாப்பியாசம் செய்யும் அழகே தனியழகு....அதற்கென்றே ஒரு சில கன்னியர் கூட்டம் அவர் வரும் நேரம் பார்த்து நீராட வருவர். அவரும் ஒரு நாள்...... மிச்சம் மீதி வேலிக்காலை வரும்......
 42. 6 points
  தபால்கந்தோர் கரணவாய் 24.06.1983 தம்பி குரு அறிவது! யான் நலம் வேண்டுவதும் அதுவே. நான் முன்னர் ஒரு கடிதம் போட்டிருந்தேன் கிடைத்திருக்குமென்று நம்புகின்றேன். நீங்கள் கன நாட்களாக கடிதம் எதுவும் போடவில்லை. ஏன் ஏதும் பிரச்சனையா? வசந்தியிடமும் விசாரித்தேன். அவர் பதிலேதும் சொல்லாமல் சிரித்து விட்டு சென்றார். பரிமளத்தையும் குளத்தடியில் கண்டேன். எப்பிடி சுகமாய் இருக்கிறியளோ பிள்ளை எண்டு சுகம் விசாரிச்சன். ஓமண்ணை இப்ப அது மட்டும்தான் குறைச்சல் எண்டு வெடிச்சு விழுந்தா.....நான் அதுக்குப்பிறகு வாயே திறக்கேல்லை. சிவத்தின்ரை மூத்த பெட்டை சதாசிவத்தின்ரை பெடியனோடை ஒரு தொடர்பு இருந்ததெண்டு உங்களுக்கு தெரியும் தானே. இப்ப பெட்டை க்கு 7மாதமாம். சதாசிவத்தின்ரை பெடியன் அது தனக்கில்லையெண்டு ஊர்முழுக்க சொல்லிக்கொண்டு திரியிறானாம். பாவம் பெட்டை கலியாணம் கட்டாமல் அவசரப்பட்டுட்டு இப்ப அழுதுகொண்டு திரியுது. பெட்டிசத்துக்கு மேலை பெட்டிசம் போட்டு தவறணையை வயல்கரைக்கு அங்காலை கொண்டு போட்டாங்கள்.சரியான தூரம். எண்டாலும் வாடிக்கையாளர் எக்கச்சக்கம் எண்டபடியாலை இப்பவும் களைகட்டுது.பெட்டிசம் போட்டது முழுக்க விநாயகத்தான் எண்டது எல்லாருக்கும் தெரியும்.தம்பி நீங்கள் இஞ்சை இருந்திருந்தால் விநாயகத்தானுக்கு கட்டாயம் இருட்டடி விழுந்திருக்கும் எண்டு எனக்கு நல்லவடிவாய் தெரியும். வட்டி வீரகத்திக்கு எட்டாவதும் பொம்புளைப்பிள்ளை தான் பிறந்திருக்கு. போனமாதம் தான் வீரகத்தியின்ரை மூத்த பிள்ளைக்கும் பொம்பிளைப்பிள்ளை பிறந்தது.கைலாயபிள்ளையின்ரை பெடியன் கள்ளக்கரண்டு எடுக்கேக்கை கரண்ட் அடிச்சு செத்துப்போனான்.அவனுக்கும் இப்ப 21 வயதாகுது. பரமானந்தம் வாத்தியார் அங்கை பள்ளிகூடத்திலை ஆரோடையோ சேட்டை விட்டவராம். அவங்கள் அரோ அடி அடியெண்டு அடிச்சுப்போட்டாங்களாம். முகத்திலையும் கையிலையும் சரியான காயத்தோடை திரியுறார். மனுசி விசாலாச்சி அவர் சைக்கிளாலை விழுந்துதான் காயமெண்டு சொல்லிக்கொண்டு திரியிறாவாம்.ஆனால் ஊர்ச்சனம் முழுக்களுக்கும் உள்ள விசயம் தெரியும். ஆறுமுகத்தார்ரை கடைசிக்கு லண்டன் மாப்பிளையை பேசி வைச்சிருக்கினம். சீதனம் எக்கச்சக்கம் எண்டு கேள்விப்பட்டன். லண்டன் மாப்பிளை எடுக்கிறது கஸ்டம் தானே. போனவருசம் தான் மாப்பிளை லண்டனுக்கு போனவராம். நல்ல இடத்திலை வேலை செய்யிறார் எண்டு கேள்விப்பட்டன். வேறு விடயங்கள் இல்லை. உங்களிடமிருந்து எனக்கு ஒரு உதவி வேண்டும்.கேட்பது சரியோ பிழையோ தெரியவில்லை.நீங்கள் குறை நினைக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன். எனக்கு கொஞ்ச பண உதவி வேண்டும்.பனங்காட்டுக்கு பக்கத்திலை இன்னொரு வீடு கட்டினனான் உங்களுக்கு தெரியும் தானே. வீடு ஒரளவுக்கு கடவுளே எண்டு கட்டி முடியுது. கையோடை கையாய் கிணறும் கட்டி விட்டால் நல்லது .அதுக்கு கொஞ்சம் பண உதவி செய்தால் நன்றிக்கடனோடை இருப்பேன்.கட்டாயமில்லை. முடிந்தால் உதவி செய்யுங்கோ குரு.இல்லையென்றாலும் சாந்தோசம். இத்துடன் முடிக்கின்றேன்.பதி கடிதம் போட மறக்க வேண்டாம். இப்படிக்கு ஏகாம்பரம்
 43. 6 points
  எழுஞாயிறு, மனோகணேசனின் பேச்சை தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகின்றேன். சசிவர்ணத்தின் கருத்துடன் உடன் படுகின்றேன். மனோகணேசன், அமைச்சராக இருந்து கொண்டு அப்படித்தான் பேசமுடியும். இதனை தமிழில்... "வஞ்சக புகழ்ச்சி" என்று சொல்வார்கள். அதாவது அரசை புகழ்ந்து விட்டு... தமிழர்களுக்கு நடந்த தவறுகளையும், இப்போது... செய்து கொண்டிருக்கும், தவறுகளையும் சொல்லிக் காட்டியுள்ளார்.
 44. 6 points
  island பத்திரிகை ஆசிரிய தலையங்கம் எழுதியுள்ளது. மிக தெளிவாக சொல்கிறது. இவர்களை மூளைச்சலவை செய்தவர்கள் சமூகத்தில் இருந்து நீக்கப் படவேண்டும். அப்படி செய்யும் போது, உலகம் மீண்டும் யுத்த குற்றம் என்று நமது படைகளுக்கு தொந்தரவு தரக்கூடாது. என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிகிறதா? ஆனாலும், நியூசீலாந்து நாட்டின் தாக்குதலுக்காக, சம்பந்தமே இல்லாமல் ஒரு மூன்றாம் உலக நாட்டில் அப்பாவி கிறித்தவ, சக மனிதர்களை கொல்ல திட்டம் தீட்டிய இவர்கள் மனித குலத்தின் எதிரிகள். அவர்களை, ரசிய புட்டின் சொன்னது போல, அல்லாவிடம் தான் அனுப்பி வைக்க வேண்டும். அடுத்தவரது மத உரிமைகைள கொடுமையாக நிராகரித்த இவர்கள், இந்த ஈன செயலை செய்து விட்டு, பௌத்தர்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையில் நாளை பள்ளிக்கு எவ்வாறு சென்று நிம்மதியாக தொழுகை நடத்தப போகின்றனர். நீண்ட கால நோக்கில், முஸ்லீம் சமூகம் பெரும் நெருக்கடிகளை சந்திக்கப் போகின்றது என்பதே நிதர்சனம். காத்தான்குடியினுள் ராணுவம் முகாம் அமைவதும், அவர்களது இவ்வளவு கால கடும் உழைப்பும், உயர்வும் வீணாக்கப் போவதும் நிதர்சனமாக தெரிகிறது. இதனை எதிர்க்க முடியாத அளவில் அரசியல் பலமும் சிதைக்கப்படும். இவர்களது பொருளாதாரத்தினை சிங்களம் உலக நாடுகள் வேறு பக்கம் பார்க்கும் நிலையில் அழிக்கும் அல்லது பிடுங்கும். தமிழர்களுக்காகவாவது வெளிநாடுகள் தஞ்சம் தந்தன. பிழைத்துக் கொள்ள முடிந்தது. ஏழை முஸ்லிம்கள், இன்றைய நிலையில் எங்கே போக முடியும். எல்லா நாடுகளும் சந்தேகத்துடன் தானே பார்க்கின்றன. இவர்களது அடாவடி அரசியலால், தமிழர்கள் கூட இவர்கள் பக்கம் நிற்க முடியாமல் போயுள்ளது. வட இந்தியாவில், இதே போன்ற நிலையில், இந்துத்துவா எழுச்சி அடைந்ததும், முஸ்லிகள் உரிமைகள் மிக மோசமாக பறிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக பெரும் வன்முறைகள் நடப்பதும் எதிர்த்தால், பாகிஸ்தான் போ என்று சொல்வதும் நிகழ்கிறது. இதே நிலை இலங்கையில் வரக் கூடாது என்பதே முஸ்லிகள் கவலையாக இருக்கும் என்று நினைக்கிறன்.
 45. 6 points
  பிரதான உணவு பெரிதாகச் சூடாக இல்லாமல் இருக்க திருப்பி சூடாக்கி எடுத்துவரச் சொல்வோமா என்று எண்ணினாலும் சரியான பசி காரணமாக நான் உண்ணத்தொடங்க, கணவர் பொறுப்பானவரைக் கூப்பிட்டு உணவு சூடில்லை என்கிறார். அவன் மன்னிக்கவும் என்றுவிட்டு கணவனின் தட்டை எடுத்துப் போக நான் பரவாயில்லை என்று விட்டு உண்கிறேன். 10 யூரோசுக்கு உணவு பரவாயில்லை. ஆட்களே இல்லை. அப்பிடியிருந்தும் இப்பிடி ஆறிய உணவைக் கொண்டு வருகிறான் எனப் புறுபுறுத்தபடி மனிசன் இருக்க சூடாக்கிய உணவை கொண்டுவந்து வைக்கிறான் அவன். இனிமேல் இங்க சாப்பிடுறேல்லை என்று மனிசன் சொல்ல காலை உணவுக்கும் இங்குதான் என்கிறேன் நான். பார்ப்பம். நாளைக்கு விடியச் சாப்பிட்டுவிட்டு சரியில்லை என்றால் கான்சல் பண்ணுறதுதானே என்கிறார் மனிசன். காலை உணவு பற்றி விசாரிக்க 7 மணிக்கு உணவகம் திறப்பார்கள் என்றான் அவன். மணி ஏழேகால் ஆகிவிட்டுது. இருட்டும் பட்டிட்டுது. இனி வெளியில போகவேண்டாம்.நாளைக்கு வெள்ளண எழும்பிச் சாப்பிட்டிட்டு உடனே இடங்களைப் பார்க்கக் கிளம்பவேனும் என்கிறார். என்னப்பா விடுமுறையிலாவது கொஞ்ச நேரம் படுக்க விடுங்கோவன் என்கிறேன். நித்திரை கொள்ளவே காசைச் சிலவழிச்சு வந்தனி? நிக்கிறது பத்தே பத்து நாள். அதுக்குள்ளே பாக்கக் கூடியதை பாத்திட்டு வீட்டை போய் நித்திரையைக் கொள்ளு என்று கூறிவிட்டுப் போக எரிச்சலோடு நான் பின்னால் போகிறேன். கன நாட்களுக்குப் பிறகு பிள்ளை குட்டியள் இல்லாமல் தனியா வந்திருக்கிறம் என்ன என்று எதோ வீட்டில தனிமையே கிடைக்காத கணக்கா மனிசன் சொல்ல தனியா வந்து மாட்டுப்பட்டாச்சே மனிசனிட்டை என்று துணுக்குறுகிறது மனம். இரவு உடைக்கு மாறி அடுத்தநாள் எங்கெங்கெல்லாம் போகவேண்டும் என்று மனிசன் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு நித்திரை கண்ணைச் சுற்றுகிறது. என்னண்டடியப்பா படுத்த உடன உனக்குமட்டும் நித்திரை வருது? நீ கூப்பிட்டாலும் வரமாட்டாய். நான் வாறன் என்றபடி மனிசன் என்னருகில் வந்தால் கட்டில்களுக்கிடையில ஒரு பத்து அங்குலத்துக்கு இடைவெளி. நான் ஒரே கட்டில் தானே புக் பண்ணின்னான். இதென்ன இந்தளவு இடைவெளி என்று மனிசன் டென்ஷனாக நான் சிரிக்கிறேன். மனுசனுக்கு கோவம் வந்து உடனே ரிசெப்சனுக்கு போன் செய்யிறார். நான் உடனே போனைக் கட் செய்துபோட்டு இப்ப இருட்டுக்குள்ள அவங்கள் ஒண்டும் செய்ய மாட்டாங்கள். பேசாமல் படுங்கோ என்றுவிட்டு AC ஐ போட்டுவிட்டு குயிலெட்டால் போர்த்துக்கொண்டு படுக்கிறேன். நல்ல தூக்கத்தில் யாரோ உலுப்ப ... கண் திறந்து பார்த்து விட்டு எத்தினை மணி என்கிறேன். 6.30 எழும்பு. போய் குளி என்று மனிசன் விரட்ட, ஏழுமணிக்கு எழும்பினால் காணும் தானே என்று தலையைப் போர்வையால் மூட மனிசன் கால் பக்கம் நின்று போர்வையை வில்லன் போல் இழுக்கிறார். பின்னேரம் வந்து வடிவாய் படு என்கிறார் வில்லன். சரி இனி எப்பிடியும் என்னை படுக்கவே விடாது என்று தெரிய எழுந்து சென்று குளித்துவிட்டு வர மனிசன் வெளிக்கிட்டுத் தயாராய் நிக்கிறார். நாங்கள் இருந்ததுக்கு மேல் மாடியில் தான் உணவகம் என்பதனால் கொஞ்ச நேரம் பொறுத்துப் போவம் என்கிறேன். எனக்கு உடன கோப்பி குடிக்க வேணும். எழும்பி எவ்வளவு நேரம் ஆச்சு என்றபடி மனிசன் எழுந்திருக்க நானும் கதவைப் பூட்டிவிட்டுப் போகிறேன் பின்னால். அங்கு சென்றால் மூன்றுபேர் எமக்குமுன்னரே வந்து காத்திருக்க நாம் போன பின்னரே கதவைத் திறக்கின்றனர். உணவு வகைகள் தாராளமாக விதவிதமாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. பார்க்கவே பசி எடுக்கிறது. தட்டுக்களில் வேண்டிய உணவுகளை எடுத்து வைத்துக்கொண்டு கோப்பியையும் ஊற்றிக்கொண்டு மேசையில்சென்று அமர்கிறோம். அதிகமாக எமக்குத்தெரிந்த பாண் வகை, சீஸ் வகை, சலாமி வகைகள், அவித்த முட்டை, ஆம்லெட், ஒலிவ்ஸ் என்று விதம் விதமாக இருந்தாலும் வித்தியாசமான உணவு வகைகளைக் காணாமல் இவைதானா என மனம் எண்ணுகின்றது. நிறைய பழ வற்றல்கள், கேக் வகைகள் சில மட்டும் புதியனவாக இருக்கின்றன. உணவு உண்டபடியே கண்ணாடிக்கு கதவுகள் யன்னல்களூடே வெளியே பார்க்க வெள்ளைக் கற்களை அடுக்கியது போல் கட்டடங்கள் மட்டுமே தெரிகின்றன. ஒன்றிரண்டு சிறிய மரங்களைத் தவிர பெரிய மரங்களையே காணவில்லை. உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்து கைப்பை தொப்பி கண்ணாடி என்பவற்றை எடுத்துக்கொண்டு கீழே வருகிறோம். அழகிய இளம்பெண் கீழே ரிசெப்ஷனில் நிக்கிறாள். இடங்களைச் சுற்றிக்காட்டும் பஸ் தரிப்பிடத்துக்கு எப்படிப் போகவேண்டும் என்று கேட்கிறேன். இரண்டு பக்கத்தாலும் போகலாம் என்று அவள் சிரித்தபடி கூறுகிறாள். உடனே என் கணவர் எமக்கு நீ வேறு அறை தா என்கிறார். ஏன் என்ன பிரச்சனையென்று அவள் கேட்க நாங்கள் இருவரும் கணவன் மனைவி.ஒரே கட்டில் இருக்கும் அறைதான் நான் புக் செய்தது. எமது அறையில் இரண்டு கட்டில்கள் இருக்கின்றன என்கிறார். அறைகள் எதுவுமே காலியாக இல்லை. என்கிறாள் அவள். அப்பிடி என்றால் நாங்கள் வேறு ஹோட்டல் பார்க்கிறோம் என்கிறார். எனக்கோ கூச்சமாக இருக்கிறது. ஏனப்பா இப்பிடிக் கதைக்கிறியள். விசரே உங்களுக்கு. உந்தக் கட்டிலுக்காக இனி சூட்கேஸை இழுத்துக்கொண்டு அலையப் போறியளோஎன்று திட்டுகிறேன். நீ பேசாமல் இரு. அவள் ஏதும் செய்வாள் என்று மனிசன் சொல்லி வாய் மூட முதல் " நீங்கள் வெளியே போய்விட்டு வரும்போது உங்கள் கட்டிலை சரியாக்கி வைக்கிறோம்" என்கிறாள் அப்பெண். பாத்தியா நாங்கள் பேசாமல் இருந்தால் அவையும் நல்லா ஏமாற்றுவினம். நான் கனிமூன் மூட்டோட வந்திருக்கிறன். சும்மா விடுவனே என்று அசட்டுச் சிரிப்புச் சிரிக்க எரிச்சல் பற்றிக்கொண்டு வருகிறது. பொல்லுப் பிடிக்கிற வயதிலும் உந்த ஆம்பிளையளுக்குக் கனிமூன் கேட்கும். வாயை மூடிக்கொண்டு வாங்கோ போவம் என்று நான் முன்னால் நடக்கிறேன். மீண்டும் முதல்நாள் வந்த வீதி புழுதி படிந்து சிறுநீர் கழித்த நாற்றத்தோடு பார்க்க அருவருப்பாக இருக்க அடுத்த வீதியைத் தெரிவு செய்து அவ்வீதியால் செல்கிறோம்.ஒரு பத்துநிமிடம் நடக்க ஒரு நாற்சந்தியுடன் கூடிய சனநடமாட்டத்துடன் வாகனங்கள் செல்லும் வீதி தெரிகிறது. அங்கே சென்று தேடினால் ஒரு பஸ் தரிப்பிடத்தில் மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் அந்தந்த நிற பஸ்களுடன் விளம்பரம் தெரிய அதைநோக்கிப் போக அதற்கு கீழே மஞ்சள் நிற உடையுடன் ஒருபெண் நாங்கள் வைத்திருப்பது போல் வரைபடங்கள் வைத்தபடி நிற்கிறாள். அவளிடம் போகவே அவள் எமக்கு இந்த பஸ் நாங்கள் பார்க்கவேண்டிய இடங்களுக்கு எல்லாம் போகும். இரண்டு நாட்கள் முழுவதும் நீங்கள் இதில் பயணம் செய்யலாம். விரும்பிய இடத்தில் இறங்கிவிரும்பிய இடத்தில் ஏறலாம். காலை எட்டரை தொடங்கி மாலை ஐந்தரை வரை பஸ் ஓடும். ஒருவருக்கு இருப்பது யூரோக்கள் என்கிறாள். நாற்பது யூரோக்களைக் கொடுத்துவிட்டு பஸ்ஸுக்காகக் காத்திருக்க அரை மணி நேரத்தில் பஸ் வருகிறது. மேலே திறந்தபடியான சுற்றுலா பஸ். நானும் கணவரும் முன்னதாக ஏற முற்பட ஒரு பன்னிரண்டு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுவன் எம்மை இடித்துக்கொண்டு முதலில் ஏறுகிறான். அவனுக்குப் பின்னால் நாம் வேகமாக ஏறி முன் இருக்கை ஒன்றுக்குப் போக அவன் காலை நீட்டி எம்மைப் போக விடாமல் மறித்தபடி ஏதோ மொழியில் சொல்கிறான். அவன் இடம் பிடிக்கத்தான் ஓடி வந்திருக்கிறான் என்றபடி இரண்டாவது வரிசையில் என் கணவர் இருக்கப் போக அங்கும் இருக்க வேண்டாம் எனக் கைகளால் காட்டுகிறான். அவனின் முகத்துக்கு நேரே கையை நீட்டிப் போடா என்றுவிட்டு மனிசன் சீற்றில் இருக்க நானும் இருக்கிறேன். லண்டனில எண்டால் நான் முன் சீற்றிலயே இருந்திருப்பன். இதுதெரியாத ஊர் எண்டபடியா அடக்க ஒடுக்கமா வாயே திறக்காமல் இருந்தன். நாம் இருந்த கையோடு ஒரு எட்டுப் பேர் கொண்ட கும்பல் மேலே வந்து பொடியன் பிடித்த இடங்களிலும் எமக்கு எதிர்ப்பக்கத்தில் உள்ள இருக்கைகளில் இருக்க பெடியன் எம்மைக் காட்டி எதோ சொல்ல அவர்களும் ஏதோ சொல்லிவிட்டு அமர்கின்றனர். ஐந்து நிமிடங்களில் பஸ் வெளிக்கிடுகின்றது. வீதியின் இரு மருங்கிலும் தோடை மரங்கள் அழகுக்காக நடப்பட்டுக் காய்த்துக் குலுங்குவது பார்க்க அழகாக இருக்கிறது.
 46. 6 points
  Brexit நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே Dances with wolves. பிரித்தானியாவிலஇன்று அனைவராலும்பேசப்படும் ஒரு மிக முக்கியமான செய்தியாக பிரெக்ஸிட் இருப்பதை காண முடிகின்றது .சுமார் இரண்டு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது . இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார் . 50 ஆண்டு வரை ஐ .யூ உடன் சேர்ந்து இருந்த பிரித்தானிய முழுமையான ஓர் விவாகரத்தை வேண்டி நிற்கிறது .தெரேசா அம்மையார் தனது மந்திரி சபையுடன் ஒரு முழுமையான யுத்தம் நடாத்தி கொண்டு இருக்கிறார் .ஐ .யூ .ஓடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும் இல்லை நாம் முழுமையாக வெளியேற வேண்டும் என்று இன்னும் சில மந்திரிமாரும் தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்களால் இன்னும் ஒரு தீர்வு எட்டாமல் இழுபறி நிலையே காணப்படுகின்றது . ஐ .யூ உடன் இருந்து பிரித்தானிய பிரிந்து போகும் இடத்து பிரித்தானியப் பொருளாதாரம் ஒரு பின்னடைவை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .ஐ .யூ ஊடாக பிரித்தானியாவுக்கு வரும் எந்த வித பொருள்களுழும் வரி விலக்குடனே தான் வந்து சேருகின்றன .ஐ .யூ .இருந்து பிரித்தானிய எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் விலகுமிடத்து பிரித்தானியாவுக்கள் வந்து சேரும் அனைத்து பொருளுக்கும் பிரித்தானிய வரி செலுத்தியாகவேண்டும் . இதனால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பொருளாதாரரீதியாக மிகவும் பின் தள்ளப்படுவர் .எல்லா வித நுகர்வுப் பொருட்களின் விலை முன்பை விட அதிகரித்தே காணப்படும் .இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவர் .இது மட்டும் இன்றி பல தொழிற்சாலைகள் தாங்கள் இறக்குமதி செய்யும் உற்பத்தி சாதனங்களுக்கு முன்பை விட கூடுதலான பணம் செலுத்த வேண்டும் . இது மாத்திரம் இன்றி தொழிளாரர் பற்றா குறையும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் . இது இப்படி காணப்படும் இடத்து பிருத்தானியா ஏதோ ஒரு வழியில் ஐ .யு உடன் ஒரு ஒப்பந்தத்துக்கு போக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது . ஐ .யூ உ டன் அங்கத்துவம் பெறும் எந்த ஐரோப்பிய நாடுகளும் அதன் சட்ட வரைபுக்கு உட்பட்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது .பின் வரும் முக்கிய காரணிகளை முழுமையாக அவரகள் உடன் பட வேண்டும் அப்பொழுது தான் அவரகள் single market எனப்படும் ஒற்ரை சந்தையிலோ அல்லது customs union ஒரு வரி விலக்கு சந்தையிலோ தம்மை இணைத்து கொள்ள முடியும் . ஐ .யூ .நின் நான்கு முக்கிய ஒப்பந்தங்களாக The free movement of goods ,services,capital,and persons within the e.u.are the famous four freedoms set out in the treaty of Rome.அதாவது ஐ.யூ நாடுகளுடையேபொருட்கள், சேவைகள், மூலதனம் ,மக்கள் ,இலகுவாக போய் வர வேண்டும் .ஆனால் பிரித்தானிய முதல் மூன்று சேவைகளுக்கு மாத்திரமே தாங்கள் உடன் படுவதாகவும் நான்காவதான ஐரோப்பிய மக்களின் சுதந்திரமாக பிரித்தானியாவுக்குள் வந்து குடி உரிமை தொழில் வாய்ப்புகள் என்பன முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு நுழைவதற்கான இறுதி திகதி அதாவது cutt-off date for EU nationals 31.12.2020 எனறும் அறிவித்து இருக்கிறது . ஐ .யூ .பிரித்தானியாவின் தீர்மானத்தில் குடி வரவுகளின் இறுதி திகதியை அங்கீகரித்தாலும் இவர்களது ஒப்பந்தத்தை தொடர்ந்து நிராகரித்து கொண்டே வருகின்றது .தனக்கு தேவையான பிரித்தானிய நலன் கருதிய பொருளாதார காரணிகளை எடுத்துக் கொண்டு தன் நாட்டுக்குள் நுழையும் ஐரோப்பிய யூனியன் மக்களை தடை செய்வதானது ஒரு cherry picking போன்றது என்று ஐ .யூ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது . பிரித்தானிய பிரதமர் அடிக்கடி கூறி வருகின்றார் No deal is better than a bad deal என்றெ .ஐ .யூ உடனான நல்ல ஒப்பந்தம் இல்லாது விடத்து எந்த வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளி ஏறுவது சிறந்தது என்றே கூறி வருகிறார் .எது எப்படி இருப்பினும் பிரித்தானிய கட்டாயமாக ஒரு ஒப்பந்தத்தை செய்தே ஆக வேண்டிய நிலை தான் காணப்படுகிறது .இதுவே பிரித்தானியாவின் நீண்ட காலா பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் .அப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமா அல்லது மீண்டும் ஒரு மக்கள் தீர்ப்புக்கு வழி சமைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் . பா .உதயகுமார் /Oslo
 47. 6 points
  சிறீலங்கன் விமான நிறுவனம் வாங்குவார் இல்லாமல் தவிக்கிறது. முறையான நிர்வாகம் இல்லாமல் தடுமாறுகிறது. மக்களின் வரிப்பணத்தில், நம்ம ஊர் வழக்கில் சொல்வதானால் 'ரிம்மில்' ஓடுகின்றது. விமான நிறுவனங்கள் இன்றைய நிலையில், அரசுகள் கையில் லாபகரமாக இயங்க முடியாது. அதுவும் இலங்கை போன்ற ஊழல் மிக்க நாடுகளில். அரசு வாங்குவார் இல்லாமல் தவிக்கிறது. எமிரேட்டை வெளியே அனுப்புவதில், மகிந்தா முன்னர் செய்த அடாவடியால், வெளியார் யாருமே வாங்க மறுக்கிறார்கள். லைக்காமுதலீட்டினை எதிர்த்தால், கடன் சுமையில் தள்ளாடும் நாட்டின் வரிப்பணத்தில் இப்படியே போனால், வேறு வழியில்லாமல் ஸ்ரீலங்கன் இழுத்து மூடப்பட்டு, இந்த தொழில் சங்கங்கள் வேலையிழப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிவரலாம். ஆகவே அவர்கள் போராடுவார்கள் என்பது சும்மா பீலா. அதேவேளை வாங்கும் எந்த வெளி நிறுவனமும், அநியாயத்துக்கு குந்தி இருந்து சம்பளம் எடுக்கும் பலரை வெளியே அனுப்பியே தீரும். அந்த கோஸ்டிகள் தான் போராட்டத்தில் முன்னிலை வகிப்பார்கள். இவர்கள் அரசியல்வாதிகளானால் வேலை கொடுக்கப் பட்டவர்கள். லைக்கா வாங்குவதானால், தமிழர் அல்ல, பிரித்தானியா நிறுவனமே முதலிட்டு வாங்குகிறது என்று பொருள். அதன் பொருள், பிரித்தானிய அரசு, இலங்கை அரசிடம், பிரித்தானிய நிறுவனத்தின் முதலீடு தொடர்பில் சில உத்தரவாதங்களை பெறும். காரணம், லைக்கா முழு முதலீடும் செய்ய கூடிய பெரிய நிறுவனம் அல்ல. ஆனால் முன்னிலை வகித்து, புலம் பெயர் மக்களிடம் பங்குகள் வாங்க முடியும். இந்த பிரித்தானிய அல்லது புலம் பெயர் மக்களின் பங்குகள் வாங்கும் காரணத்தினால், இலங்கை அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டி வரலாம். ஆகவே தமிழர் என்ற வகையில் இந்த முதலீட்டினை செய்து, இந்த நிறுவனத்தினை கையகப் படுத்தி, தமிழர் பணபலத்தினை காட்டிட வேண்டும். ஆயுபோவனுடன், வணக்கமும் சொல்ல வைக்க வேண்டும். அது கேட்டுப் பெறுவதிலும் பார்க்க, உத்தரவு போட்டு பெற வேண்டும். இலங்கை உல்லாச பயணத்துறை பெரும் அபிவிருத்தி அடைந்து உள்ளதால் உண்மையில் ஸ்ரீலங்கன் நிறுவனம் சரியான நிர்வாகத்தில் லாபத்தில் இயங்க முடியும். இஸ்ரேலியர்கள், பணத்துடன் பாலஸ்த்தீனதில் விளையாடிய அதே விளையாடு செய்ய நேரம் வந்து விட்டது. நாம் இதற்கு முழு ஆதரவு தர வேண்டும்.
 48. 6 points
  பிள்ளையார் துணை முன்ஸ்ரர் மேற்கு ஜேர்மனி 16.04.1983 அன்புள்ள வசந்தி அறிவது! நான் நல்ல சுகம். உங்கடை சுகங்கள் எப்படி? உங்கடை கடிதம் வந்தவுடனை எனக்கு இனி இல்லையெண்ட சந்தோசமாய் இருந்தது. நீங்கள் கடிதம் எழுதுவியள் எண்டு நான் எதிர்பாக்கவேயில்லை. வேலையெல்லாம் எப்படி போகுது.போக்குவரத்திலை கவனமாயிருங்கோ.சண்முகத்தின்ரை மூத்தவனும் மூண்டாவதும் கனடாவுக்கு வெளிக்கிட்டு இடையிலை பிடிபட்டு போச்சினம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ? எனக்கு இஞ்சை விசா பிரச்சனை இறுகிக்கொண்டு போகுது.சுவீசுக்கு போகலாமெண்டால் அங்கையும் இப்ப திருப்பி அனுப்ப வெளிக்கிட்டுட்டாங்களாம். பரீஸ் போடர் இப்ப கஸ்டமெண்டு இஞ்சை கதைக்கினம்.நான் வேலை செய்யிற இத்தாலி முதலாளி சொன்னான் உனக்கு ஏதும் பிரச்சனை எண்டால் சொல்லு நான் உன்னை இத்தாலியிலை கொண்டுபோய் விடுறன் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை எண்டான். எனக்கு இப்ப என்னத்துக்கடா ஊரைவிட்டு வெளிக்கிட்டன் எண்டிருக்குது. உங்கடை தலைவி அதுதான் அன்பு அக்கா பரிமளம் என்ன செய்யிறா?கடிதத்துக்கு மேலை கடிதம் போட்டும் ஒரு பதிலுமில்லை.நான் ஒண்டும் அவவிட்டை வித்தியாசமாய் கேக்கேல்லை. விசா பிரச்சனை இருக்கிறதாலை இப்பிடியும் ஒரு ஐடியா இஞ்சை இருக்குது எண்டு படத்தையும் அனுப்பினன். அதுக்குப்பிறகு பதில் எதுமில்லை.நான் விளக்கமாய் எல்லாம் எழுதி விளங்கப்படுத்தி விட்டன். இதுக்கு மேலை என்னாலை ஒண்டும் செய்யேலாது. ஒரேயொரு வழி நான் ஊருக்கு திரும்பி வாறதுதான். நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. நீங்கள் வேலை செய்யிற இடத்திலை நீங்கள் கதைக்கக்கூடியமாதிரி ரெலிபோன் வசதி இருந்தால் நம்பரை தரவும். இத்துடன் முடிக்கின்றேன். அன்புடன் குரு
 49. 6 points
  இந்த நிலை வந்துவிட்டால் மீதி தன்னால் நிகழும். பெரும்பான்மையானோர் நீங்கள் சித்தரிக்கும் நிலையினை அடையாதே இறந்து போய்விடுகின்றனர். நமது சமூக்தில் மட்டுமல்ல உலகில் பெரும்பான்மையானோர், ஏதோ ஒரு பெறுமதியினை எடுத்துக் கொண்டு (அது பணம், அழகு, கல்வி இப்படி என்னவாகவேனும் இருக்கலாம்) அந்தப் பெறுமதியில் தம்மை விடக் குசறைவானவர்களாகத் தாம் கருதும் ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு அந்த வட்டத்திற்குள் தாம் றாஜாக்களாக மந்தை வளர்த்துக் கொண்டிப்பார்கள். தமது வட்டம் தமக்குப் பொன்னாடை போர்த்திக்கொண்டிருக்கும் வரை, தமது அகங்காரம் திருப்த்தியடைவதாக உணர்ந்துகொள்வார்கள். நீங்கள் குறிப்பிடும் வெறுமையினை உணர்வதற்கு முதற்படி தமக்குத் தாம் உண்மையாக இருப்பது அவசியம். தமது நிறைகுறைகள் சார்ந்தும் உணர்வுகள் இச்சைகள் தேடல்கள் சார்ந்தும் தமக்குள் தெளிவு அவசியம். பலர் இதனை அனுமதிப்பதில்லை. இதை இப்படிப் பார்க்கலாம். உடலில் ஏதோ ஒரு நோவு ஏற்படுகிறது என்றால் உடனடியாக நோவுநீக்கி மாத்திரை இரண்டினை முழுங்கி விடல் ஒரு வழி. ஏன் நோவு ஏற்படுகிறது என்ற அடிப்படையினை ஆராய்ந்து அந்த அடிப்படைப் பிரச்சினைக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா என்று தேடுவது பிறிதொரு வழி. முதலாளித்துவ சமூகம் எப்போதும் முன்னையதையே தேர்ந்தெடுக்கும். ஏனெனில் நீங்கள் நோவு நீக்கி மாத்திரையினை முழுங்கிவிட்டுஆசைப்படுதல்களத் தொடர்ந்தால் தான் சந்தைக்கு ஆதாயம். சுருக்கமாக, நீங்கள் சித்தரிக்கும் நிலையினை நீங்கள் உணர்ந்த மாத்திரத்தில், அந்த உணர்வுக்குச் செவிகொடுத்தலை முதல் பெறுமதி ஆக்கிக்கொள்ளுங்கள், மீதி தன்னால் நிகழும். இவை தொடர்பில் மற்றயைவருடன் உரையாடுவதோ, மற்றயையவரை மாற்ற முயல்வதோ வினைத்திறன் அற்ற தேர்வுகள். நீங்கள் உங்களுடன் இயன்றவரை அமைதிக்குள் வாழக் கற்றுக்கொள்ளுவது, இன்னுமொரு விதத்தில் சொன்னால் சும்மாயிருக்கக் கற்றுக்கொள்ளுவது பெரும் பயன் தரும். மொத்தத்தில் நீங்கள் குறிப்பிடும் வெறுமையினை நீங்கள் பெற்றதைக் கொண்டாடுங்கள். மிக அவசியமான ஆரம்பம்.
 50. 6 points
  உண்மை தான். அந்த காலத்தில் Assembly,GWBasic, Pascal, FORTRAN, Prolog, COBOL, RPG 400 (AS 400 Languages) இல் எழுதுவதற்கும், இப்போது C#, Java இல் எழுதுவதற்கும் இடையில் எங்கையோ எதையோ இழந்த உணர்வுகள். இருந்தாலும் Python மீண்டும் C/C++ இல் எழுதும் உணர்வுகளை தருகிறது. 2020 காலங்களில் Machine Learning/AI and Data Scientist/Data Mining தான் உலகத்தை ஆளும். வாழ்த்துக்கள் நெடுக்ஸ். உங்கள் வளர்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். யாழின் தொழினுட்ப களத்தில் எம்மவர்களின் பங்களிப்பை அதிகபடுத்தவேண்டும். எங்கள் அடுத்த தலைமுறை தொழினுட்பத்தால் உலகை ஆளவேண்டும். RPA(Robotic Process Automation) சம்பந்தமாக UiPath/BluePrism பற்றி ஏதாவது எழுதுவம் என்று இருக்கிறேன். நிச்சயமாக எங்கள் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்று நம்புகிறேன்.
யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு