Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 20 மே 2019 in all areas

 1. 5 points
 2. 4 points
  இனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில், ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ? ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ? மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல. மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன ? பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது?
 3. 3 points
  LBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று: மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக்கி எடுத்தார். அதனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிலையை நாங்கள் கடந்துவந்துவிட்டோம். என்னைப்பொறுத்தவரையில், LBGTi என்பது எமது சமூகத்தில் ஒரு அங்கம். தவிர்க்க முடியாத அங்கம். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, காமம் மட்டுமல்ல அவர்களது நோக்கம், பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, தோழமை, காதல் என்று எல்லாமே உண்டு. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எமக்கு தெரியாது. அதனால் அவர்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்பதே நாகரிகமான, பண்பட்ட மனிதர்களின் செயல்.
 4. 2 points
  எதிர்காலத்தில் இலங்கையில் முஸ்லிம்களை அரசியல் பலமுள்ள ஒரு சமுதாயமாக கட்டியெழுப்பி அவர்களின் பெரும்பான்மையை இரண்டாவது அல்லது முடிந்தால் முதலாவது இடத்திற்கே கொண்டுபோய் நாட்டின் அதிகார பலத்தை கத்தியின்றி இரத்தமின்றி கைப்பற்றுவதே முஸ்லிம் தலைவர்களின் நோக்கம். இதற்கு தேவையானது முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் போதிய குடிசன பரம்பல். இதற்கான ஆதரவும் நிதியுதவியும் அவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தாராளமாக கிடைக்கிறது. முஸ்லிம் குடும்பங்களின் சிங்களவர்களிலும் பார்க்க அதிக குழந்தைகள் பிறப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இது தவிர முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது இனத்தவரை நாடுமுழுவதிலும் குடியேற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக பல தமிழர் நிலங்கள் பறிபோயிருக்கின்றன அத்துடன் சில இடங்களில் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. சிங்கள அரசு நாட்டின் பெரும்பான்மையின மக்களை இலங்கையின் பல பாகங்களிலும் தமிழர் வெளியேறிய நிலங்களிலும் புதிய குடியேற்றத்திட்டங்களிலும் கொண்டுசென்று குடியேற்றியதுடன் நின்றுவிட முஸ்லிம் இனத்தவர்களோ ஒரு நீண்ட நாள் தொலைநோக்குத் திட்டத்துடன் மேற்சொன்ன இருவிடயங்களையும் சேர்த்து ஒரே வேளையில் செய்துகொண்டிருக்கிறார்கள். முடிவில் தமிழினம்தான் அழிவின் வழிம்பிற்கு தள்ளப்படும் அபாயத்தை சந்திக்கும். இலங்கையில் தமிழரின் சனத்தொகை உள்நாட்டுப் போரின்பின் கணிசமான அளவிற்கு குறைந்துவிட்டது. ஒரு தொகை தமிழர் போரில் கொல்லப்பட்டதுடன் நாட்டைவிட்டு வெளியேறியது இன்னொரு தொகை. இதே கண்ணோட்டத்துடன் தமிழரின் அரசியல் பலத்தை தக்கவைக்கும் மாற்றுத்திட்டம் எதுவும் எமது தமிழ் அரசியல் தலைவர்களால் இதுவரை முன்வைக்கப்படவுமில்லை அப்படி செய்வதற்கு அவர்கள் அலட்டிக்கொள்ளவுமில்லை.
 5. 2 points
 6. 1 point
  நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இன்று இடம்பெற்றது. https://www.ibctamil.com/srilanka/80/120372
 7. 1 point
  இறுதியில் தமிழ் பேசும் மக்கள் உடன் எதையுமே பகிர விரும்பாத சிங்களம், சீனா, அமெரிக்கா ஆகிய வல்லரசுகளின் போட்டியில் சிக்கி விட்டது. இந்தியா அணிலை மரமேற விட்ட நாய் போல அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். இதுக்குத்தான் பிரபாகரன் மீண்டும், மீண்டும் அழுத்தி சொன்னார், நாம் உங்களுக்கு நேச சக்தி என்று. இனி இந்த வல்லரசுகள் போட்டியில் நாடு சின்னாபின்னமாக போகின்றது.
 8. 1 point
  ரோட்டில் தோசைக்கடை வைத்திருப்பது சாதனையா??????? நாதமுனி சொன்னமாதிரி கடின உழைப்பாளி.....அதுக்கு பெரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லலாம். கந்தசாமி திருக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொழில் எந்தவகையானாலும் உழைப்பு முக்கியம்.
 9. 1 point
  வணக்கம் வாத்தியார்........! பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்பிரியமாயிருந்த னம்மா,மெத்தனம் உடையை என்றறியாது நானுன்புருஷனை மறந்தனம்மா,பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்பராமுகம் பார்த்திருந்தால்,பாலன் யானெப்படி விசனமில்லாமலேபாங்குட னிருப்பதம்மா,இத்தனை மோசங்களாகாது ஆகாதுஇது தர்மமல்ல வம்மாஎந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோயிதுநீதி யல்லவம்மா,அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோஅதை யெனக்கருள் புரிகுவாய்அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாட்சி உமையே. --- காமாட்ஷி விருத்தம்----
 10. 1 point
  கடந்த பத்து வருட காலத்தில் எமது சமூகத்தின் ஒற்றுமை வீரியம் குறைந்தே காணப்படுகின்றது. ஒரு நம்பிக்கை தரக்கூடிய தலமை இல்லாத நிலையே காணப்படுகின்றது. இன்றைய சர்வதேச உலகின் அரசியலை உலக பொருளாதார நலன்களை அறிந்து அதன் ஊடாக சிங்கள இந்திய சீன மற்றும் அமெரிக்க நலன்களை அறிந்து எமது மக்களின் வாழ்வியலை மேம்படுத்தக்கூடிய தலைமை தேவைப்படுகின்றது. எமது அரசியல் தலைமைகள் அவர்களின் நிலைப்பாடுகள் அவை மீதான எமது சமூக அழுத்தங்கள் ஆராயரப்படல்வேண்டும். எமது மக்களின் தேவைகளை செய்து முடிக்கமுடியாதவர்கள் தமது பதவிகளை விட்டுக்கொடுக்கவேண்டும். சமூக பொருளாதார மேம்படுத்தலை தொடர்ந்தும் மக்கள் முன்னெடுக்க உள்ளூர் புலம்பெயர் அமைப்புக்கள் மேலும் திட்டமிட்ட முறையில் ஒரு கட்டமைப்பான முறையில் வடிவமைக்கவேண்டும். ஆவணப்படுத்தல்: இன்றுவரை ஒரு நிலையான ஒரு இடமோ இல்லை தொகுக்கப்பட்ட ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. சர்வதேச ரீதியாக போர்க்குற்றம் என்ற நிலையில் இருந்து திட்டமிட்ட இனவழிப்பு என்பதை மேலும் வலுவாக முன்னெடுக்க வேண்டும். இதன் ஊடாக ஐ.நா. வரை எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும் . தமிழினம் ஒரு சுய அலசல் செய்யவேண்டும்.
 11. 1 point
  தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவுகள்… May 18, 2019 தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறப்புற உணர்வுபூர்வமாக இடம்பெற்றது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 அன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் அனுஷ்டித்து வருகின்றனர். அந்த வகையிலே யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்ற போதும் தமிழர்களுக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் நீதி கிடைக்கும் வரை தங்களுடைய உரிமைக்கான போராட்டங்கள் தொடரும் எனவும் அந்த வகையில் அதன் ஒரு அங்கமாக இந்த நினைவு நிகழ்வுகள் இடம்பெறுகின்pறன. அந்த வகையில் இன்றைய தினம் தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பித்து தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது உறவுகளை பறிகொடுத்த தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது தொடர்ந்து மக்களால் உயிரிழந்தவர்களுக்காக நினைந்துருகி சுடர்கள் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதோடு நிகழ்வுகள் நிறைவு பெற்று இருக்கின்றது இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். #தமிழினப் படுகொலை #முள்ளிவாய்க்கால் #யுத்தம் #mullivaikal http://globaltamilnews.net/2019/122120/
 12. 1 point
  மகிந்த, கோத்தா போன்றோர் ஏற்கனவே சீன ஆதரவு நிலைப்பாடுடையவர்கள், இதில் கோத்தாவுக்கு அமெரிக்க ஆதரவும் இருக்கு, இந்திய ஆதரவும் இருக்கு. ஆனால் இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பம் செய்த அட்டூழியங்களால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இவரைப்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அதேநேரம் இனவாத சிங்களவர் மத்தியில் இவருக்கு இன்னும் ஆதரவு இருக்கு. இலங்கை தேர்தலை பொறுத்தவரை சிறுபான்மை இனத்தவரின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இவரை தவிர்த்து வேறொருவரை ஜனாதிபதியாக்குவது இலகு. ஆனால் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மைத்திரி, ரணில் அரசு மேலும் கடும் விமர்சனத்தை உருவாக்கியதால் அவர்களும் இப்ப சிங்களவர் மத்தியில் ஆதரவை இழந்து செல்கிறார்கள். இந்திய அரசின் வால் சுப்ரமணிய சுவாமியும் இது தான் சாட்டென்று கோத்தபாய ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கூறியிருந்தார். மைத்திரி இப்ப அமெரிக்காவுடன் இசைந்து போகிறார். ஒருவேளை இவர் தேர்தலில் போட்டியிட்டால் மைத்திரி-ரணில் கூட்டு உருவான மாதிரி நாளை மைத்திரி-கோத்தபாய கூட்டு உருவாகாது என்று சொல்லவும் முடியாது. சர்வதேசம் யாரை ஜனாதிபதியாக்க விரும்புகிறதோ அது பற்றி தமிழ், முஸ்லிம் தலைமைகளுடனும் கலந்துரையாடுவர். அத்தலைமைகளும் அவர்கள் காட்டும் ஒருவரை மக்களுக்கு காட்டி வாக்களிக்க கேட்பார்கள். தமிழர்களை கோத்தபாயவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியாது. எனவே என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். யார் ஜனாதிபதியாக வந்தாலும் அமெரிக்காவின் John Bolton, Mike Pompeo போன்றவர்கள் ஆபத்தானவர்கள். என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ தெரியாது.
 13. 1 point
  பிரச்சனை என்றவுடன் சமூக வலைத்தளம்களை இழுத்து மூடுவது போல் அதிகாரத்தில் இருப்பவர்களும் மதவாதிகளும் இனத்துவேச கருத்துக்களை கூறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை உடனுக்குடன் எடுத்தால் நாட்டில் பாதி பிரச்சனை முடிவுக்கு வரும் அதைவிட்டு ராணுவத்துக்கு மரியாதை அளிப்பு விழாஎன்று என்று இன்னமும் தமிழ் இனத்தை அடிமைபடுத்தியதை கொண்டாடும் நாட்டில் அமைதி என்பது கானல் நீர் தான்.
 14. 1 point
  இவ்வளவு பெரிய ஜனநாயகம் (அதுவே சிரிப்புக்கு இடமானது ) நாட்டில் ஓட்டு இயந்திரத்தை நம்புவதும் ஊழல் கடலில் மிதக்கும் நாட்டில் தேர்தல் முடிந்தபின் அறைக்குள் பூட்டி வைத்து அதுவும் கிட்டத்ததட்ட ஒருமாத இடைவெளிக்கு பின் ஓட்டுக்கள் என்னபடுவதும் கேலிக்கூத்து . ஆனாலும் பாஜக வரனும் அப்பத்தான் தென்னிந்தியர்கள் இந்தியா எனும் சொல் மூலம் வடக்கர்கள் தங்களை அடிமை படுத்தி உள்ளதை உணர்வார்கள் .
 15. 1 point
 16. 1 point
  போட்டியில் பங்கு கொண்ட மருதங்கேணிக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
 17. 1 point
  வீறுகொண்டு எழமுடியாவிட்டாலும் அறிவும் இரக்கமும் கொண்டு ஏதாவது செய்யலாம் தானே
 18. 1 point
  சிறு பிள்ளைகள் மற்றும் வயதானவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இதை செய்து குடுக்கலாம்.....!
 19. 1 point
  இப்போதைக்கு சின்னத்தையும் கட்சி அங்கீகாரத்தை தக்க வைத்தால் போதும்.. 50 ஆண்டுகால இரண்டு திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியை மெதுவாகத்தான் கரைக்க இயலும்..
 20. 1 point
 21. 1 point
  இன்று விவசாயி அழுதால், நாளை உலகம் அழும்.
 22. 1 point
  நீங்கள் கூறியது போல தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் திறைசேரி சேமிப்பை அதிகரிக்க செய்வதற்காக வரி அதிகரிப்பு, negative gearing சலுகையை இல்லாமல் செய்வது, franking credits cash back திட்டத்தை இல்லாமல் செய்வது போன்ற கொள்கைகள்தான் அக்கட்சியின் தோல்விக்கு காரணங்கள் என்று. அத்துடன் பெருமளவு சுற்றுலாத்துறை மற்றும் கனிமவளத்துறையில் தங்கியிருக்கும் Queenslanders, Adani Coal Mine ஒப்பந்தம் தொடர்பான தொழிற்கட்சியின் மதில் மேல் பூனை போக்கால், அவர்களின் வாக்குகளை லிபரலை நோக்கி திரும்பியதும் பெரியளவிலான வாக்கு சரிவிற்கு காரணம் எனவும், Pauline Hanson’s One Nation மற்றும் Clive Palmer’s United Australia கட்சி போன்ற சிறிய கட்சிகளின் பங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், (இதில் Clive Palmer தொழிற்கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதே United Australia கட்சியின் முக்கிய நோக்கம் என வெளிப்படையாக கூறி வந்துள்ளார்), மேலும் Bill Shorten அதிவிருப்பத்திற்குரிய தலைவராகவோ, ஆளுமைமிக்கவராகவோ கருதப்படாமையும் தொழிற்கட்சியின் படுதோல்விக்கு காரணங்கள் என ஊடகங்கள் கூறுகின்றன.
 23. 1 point
  திருமணத்தில் இருந்து... தப்பிக்க, இப்படியும் ஒரு வழி இருக்கா....
 24. 1 point
  அந்த இளைஞர் செய்திதான் படிக்கிறார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவரின் முகத்தில் உள்ள சிரிப்பை பார்க்க... கடலை... போடுகிறார் போலுள்ளது.
 25. 1 point
  இதனை... இலங்கையில், நான் காணவில்லை.
 26. 1 point
  1) மே 30. இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா இங்கிலாந்து 2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான் பாகிஸ்தான் 3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா சிறிலங்கா 4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா 5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ் தென்னாபிரிக்கா 6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் பாகிஸ்தான் 7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா சிறிலங்கா 8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர் இந்தியா இந்தியா 9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர் நியூஸிலாந்து நியூஸிலாந்து 10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர் மேற்கு இந்தியத்தீவுகள் அவுஸ்திரேலியா 11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர் சிறிலங்கா சிறிலங்கா 12) ஜூன் 8. இங்கிலாந்து எதிர் பங்காளாதேஷ் இங்கிலாந்து 13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து நியூஸிலாந்து 14) ஜூன் 9. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா இந்தியா 15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர் மேற்கு இந்தியத்தீவுகள் தென்னாபிரிக்கா 16) ஜூன் 11. பங்காளாதேஷ் எதிர் சிறிலங்கா சிறிலங்கா 17) ஜூன் 12. அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான். பாகிஸ்தான் 18) ஜூன் 13.இந்தியா எதிர் நியூஸிலாந்து நியூஸிலாந்து 19) ஜூன் 14. இங்கிலாந்து எதிர் மேற்கு இந்தியத்தீவுகள் இங்கிலாந்து 20) ஜூன் 15. சிறிலங்கா எதிர் அவுஸ்திரேலியா சிறிலங்கா 21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர் ஆப்கானிஸ்தான். தென்னாபிரிக்கா 22) ஜூன் 16. இந்தியா எதிர் பாகிஸ்தான். பாகிஸ்தான் 23) ஜூன் 17. மேற்கு இந்தியத் தீவுகள் எதிர் பங்காளாதேஷ். மேற்கு இந்தியத் தீவுகள் 24) ஜூன் 18. இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான். இங்கிலாந்து 25) ஜூன் 19. நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா. தென்னாபிரிக்கா 26) ஜூன் 20. அவுஸ்திரேலியா எதிர் பங்காளாதேஷ். அவுஸ்திரேலியா 27) ஜூன் 21. இங்கிலாந்து எதிர் சிறிலங்கா. சிறிலங்கா 28) ஜூன் 22. இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான். இந்தியா 29) ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் நியூஸிலாந்து. நியூஸிலாந்து 30) ஜூன் 23. பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா. பாகிஸ்தான் 31) ஜூன் 24. பங்காளாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான். பங்காளாதேஷ் 32) ஜூன் 25. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா. அவுஸ்திரேலியா 33) ஜூன் 26. நியூஸிலாந்து எதிர் பாகிஸ்தான். நியூஸிலாந்து 34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் இந்தியா. இந்தியா 35) ஜூன் 28. சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா. சிறிலங்கா 36) ஜூன் 29. பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான் 37) ஜூன் 29. நியூஸிலாந்து எதிர் அவுஸ்திரேலியா. அவுஸ்திரேலியா 38) ஜூன் 30. இங்கிலாந்து எதிர் இந்தியா. இங்கிலாந்து 39) ஜூலை 1. சிறிலங்கா எதிர் மேற்கு இந்தியத்தீவுகள். சிறிலங்கா 40 ) ஜூலை 2. பங்காளாதேஷ் எதிர் இந்தியா. இந்தியா 41) ஜூலை 3.இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து இங்கிலாந்து 42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கு இந்தியத் தீவுகள். மேற்கு இந்தியத் தீவுகள் 43) ஜூலை 5. பாகிஸ்தான் எதிர் பங்காளாதேஷ். பாகிஸ்தான் 44) ஜூலை 6. சிறிலங்கா எதிர் இந்தியா. சிறிலங்கா 45) ஜூலை 6. அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா. தென்னாபிரிக்கா 46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், சிறிலங்கா 47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும் (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) 1 - இங்கிலாந்து 2 - இந்தியா 3 - சிறிலங்கா 4 - பாகிஸ்தான் 48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! சிறிலங்கா 49) முதலாவதாகவும் நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். இங்கிலாந்து 50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். இந்தியா 51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்? சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும். இந்தியா 52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள். இங்கிலாந்து 53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள். சிறிலங்கா 54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள். பாகிஸ்தான் 55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள். இந்தியா 56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள். இந்தியா 57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள். இங்கிலாந்து.
 27. 1 point
  இந்த மூன்று முக்கிய நாடுகளுக்கும் கோத்தா கதாநாயகன் எண்டால்.... வில்லன் யார்? மாலை தீவா?
 28. 1 point
  முள்ளிவாய்கால் மண்னில் இறுதி யுத்தத்தின் போது உண்ட உப்பில்லாகஞ்சியானது அவ் மக்களை நினைவுபடுத்தும் முகமாக மன்னாரில் வழங்கப்பட்டது.
 29. 1 point
  இந்திய தேர்தல் ஆணையத்தையே நம்பமுடியாமல் இருக்கின்றது. இதற்குள் கருத்து கணிப்பை வைத்து கேள்விக்குறி ஏன்? அவர்களுக்கு வெற்றியோ தோல்வியோ? ஆனால் அவர்களின் தமிழ்நாடு சார்ந்த கொள்கை வரவேற்கத்தக்கது.
 30. 1 point
  ஒரு மணி நேரம் சென்றபின் கப்பல் மீண்டும் போறோஸ் என்னும் ஒரு தீவை அடைகிறது. ஆனால் எந்தவித கவர்ச்சியும் அற்று இருக்கிறது தீவு. எக்கச்சக்கமான சிறிய உல்லாசப் படகுகள் மரக்கறிகள் அடுக்கியதுபோல் கரைகளில் கட்டப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டு படகுகள் மட்டும் கடலில் செல்கின்றன. ஒரு அரை மணி நேரம் நீங்கள் சுற்றிப் பார்க்கலாம் என்கிறார் எமது வழிகாட்டுபவர். தலை தெறிக்க ஓடிவந்த அனுபவம் அரைமணியில் சுற்றிப்பார்க்கும் ஆசையை நிராகரிக்க நானும் கணவரும் கடக்கரையின் ஓரமாக படகுகளைக் கணக்கெடுத்தபடி நடக்கின்றோம். மதியம் இரண்டரை ஆகிவிட்டதால் பயங்கர மதிய வெய்யில் சுடுகிறது. பத்து நிமிடத்தின் பின்னர் திரும்பி நடக்கிறோம். போகும் வழியில் நிரைக்கு ஆட்கள் இல்லாத உணவகங்கள் மட்டும் தான். எமது கப்பலில் வந்த பலரும் அங்கேயே சுத்திக்கொண்டிருக்கின்றனர். முதல் பார்த்த தீவைப் போலவே கிட்டத்தட்ட இத்தீவும் இருந்ததால் தீவைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆசை பலருக்கும் எழவில்லையாக்கும் என எண்ணியபடியே வருகிறேன். அடுத்ததாக எஜீனா என்னும் இன்னொரு தீவுக்குப் போகப் போகின்றோம். தீவைச் சுற்றிப்பார்க்க விருப்பமானவர்கள் வாருங்கள். பஸ்ஸில் அழைத்துப் போவோம். தனியாகவும் நீங்கள் செல்லலாம். ஒருவருக்கு 20 யூரோஸ். ஒரு மணிநேரம் நேரம் சுற்றிப் பார்க்க.பின்னர் கடலுணவு பஃபே என்கிறார். வழிகாட்டுபவர். பஃபே என்றவுடன் ஒரு இருப்பது பேர்வரை நாங்களும் வருகிறோம் என்று கூறுகின்றனர். மீண்டும் எமது கப்பல் புறப்படுகிறது. இம்முறை நான் கப்பலின் உள்ளேயோ மேலேயோ போய் இருக்காமல் முதலாவது தளத்தில் நின்றபடியே கடலைப் பார்த்துக்கொண்டு எப்போது கரை வரும் என்று பார்த்துக்கொண்டு நிற்கிறேன். மீண்டும் எனக்கு பஸ்ஸில் முன்பக்கம் இடம் பிடித்துத் தீவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் எழுகிறது. கணவர் தான் போய் இருக்கப் போகிறேன் என்கிறார். தீவை அடைய இன்னும் அரை மணி நேரம் இருக்குது தானே என்ற எண்ணத்தில் வாருங்கள் கோப்பி குடிப்போம் என்று கணவரை இழுத்துக்கொண்டு செல்கிறேன். அங்கு இரண்டு மூன்றுபேர் கோப்பிக்கு பணத்தைச் செலுத்திவிட்டு காத்துக்கொண்டிருக்கின்றனர். நானும் பணத்தைச் செலுத்திவிட்டு நிற்கிறேன்.கணவர் கதிரையில் அமர்ந்துவிட்டார். பத்து நிமிடமாகிவிட்டது இன்னும் எனக்கு கோப்பி வரவில்லை. ஒருவன் ஆடிப்பாடிக் கோப்பி போட்டுக்கொண்டும் இளம் பெண்களைக் கண்டால் பல்லைக் காட்டிக் கதைத்துக்கொண்டும் வேலையில் கவனமின்றி இருக்கிறான். எனக்குப் பின் வந்த பெண் ஒருவருக்கு எனக்குத் தராது கோப்பியைக் குடுக்க நான் கோபத்துடன் எனக்கு என்னும் தராமல் அவளுக்கு கொடுக்கிறாய் என்கிறேன். அவன் சிரித்துக்கொண்டு கூல் கூல் என்று சொல்லியபடி அவர்கள் மொழியில் அவளுடன் கதைத்துக் கொண்டு நிற்க, என் பணத்தைத் திரும்பக் கொடு எனக்குக் கோப்பி வேண்டாம் என்கிறேன். அவன் வேண்டுமென்றே தன் மொழியில் கதைக்கிறான். என் நல்ல காலம் அந்தநேரம் பார்த்து எமது வழிகாட்டி படிகளில் இறங்கி வருகிறார். நான் அவரிடம் சென்று முறையிடுகிறேன். அவர் சென்று அவனிடம் எதோ கூற என் பக்கம் திரும்பி சொறி என்றுவிட்டு கோப்பி தயாரிக்கிறான். நான் எனக்கு கோப்பி வேண்டாம் பணத்தை தா என்கிறேன் மீண்டும். நீ போய் இரு நான் கொண்டுவாறன் என்றபடி வழிகாட்டி என்னைச் சமாதானப்படுத்த, நான் கணவருக்குப் பக்கத்தில் சென்று அமர்கிறேன். உனக்குப் போற இடம் எல்லாம் பிரச்சனை தான் என்று மனிசன் நக்கலாச் சிரிக்குது. வழிகாட்டுபவர் எமக்கு கோப்பிகளைக் கொண்டுவந்து வைத்தபடி கெதியாக் குடியுங்கள் இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கு என்று கூற கோப்பியைக் குடிதத்துவிட்டு மீண்டும் வாசலுக்கு அண்மையில் கணவரையும் இழுத்துக்கொண்டு போய் நிற்கிறேன். வழிகாட்டியும் கீழேயே நின்றது மனதுக்கு நின்மதியாக இருக்கு. கப்பல் நின்றவுடன் வழிகாட்டிக்குப் பின்னாலேயே நானும் கணவரும் சென்று பஸ் எங்கே நிற்கிறது என்று கேட்க அவர் அதோ தூரத்தில் நிற்கும் வெள்ளை பஸ் தான் என்கிறார். நல்ல காலம் வேறு நிற பஸ்கள் பல நின்றதால் வெள்ளையை அடையாளம் கண்டு நானும் கணவரும் விரைந்து சென்று வாசலில் நிற்கிறோம். வழிகாட்டி மிச்சப்பேரைக் கூட்டிக்கொண்டு வந்தபின் கதவு திறக்க நானும் கணவரும் முன் இருக்கையைப் பிடித்து அமர்கிறோம். மலைக் குன்றுகள் நிறைந்த ஒரு சிறிய தீவு. கடல் நீர் பளிங்கு போல் தெளிவாக இருக்கிறது. பார்த்தவுடன் தண்ணீரில் இறங்கவேண்டும் போல் ஆசை எழ, இக்கடலில் குளிக்க முடியாதா என்று கேட்கிறேன். நேரம் போதாது என்கிறார் வழிகாட்டி. ஏற்ற இறக்கமான பாதையில் பஸ் செல்கின்றது. ஆங்காங்கே சிறிய வீடுகள் கண்ணுக்குத் தெரிகின்றன. மற்றப்படி ஒன்று இரண்டு பேரைத்தான் வீதியில் காண முடிகின்றது. நேரே எம்மை ஒரு தேவாலயத்துக்கு கூட்டிச் செல்கின்றார். உயர்ந்த ஒரு கோபுரத்தோடு நிற்கிறது தேவாலயம். வேறு வழியின்றி அதை பார்த்துவிட்டு வெளியே வர மூன்று நான்குபேர் பிஸ்ராசியோ ( pistachio nuts)ஐ வைத்து விற்றுக்கொண்டிருக்கின்றனர். அதில் வயதுபோன கணவன் மனைவி வைத்திருந்த இடத்தில் சென்று அவர்கள் உண்டு பார்க்கவென்று வைத்திருந்த பிஸ்ராசியோக்கள் சிலதை உண்டு பார்க்கிறோம். மிகவும் ருசியாகவும் மலிவாகவும் இருக்க ஒரு கிலோவை வாங்கிக்கொண்டு வருகிறோம். அங்கு நிறைய விளைவதாக வழிகாட்டி கூறி மரத்தையும் எமக்கு காட்டுகிறார். மஞ்சள் நிறப் பூக்களுடனும் சிறிய இலைகளுடனும் பிஸ்ராசியோ மரங்கள் நிற்கின்றன. அதன் பின்னர் மீண்டு பஸ்ஸில் ஏறி இயற்கை அழகை இரசித்தபடி கப்பல் நிற்கும் இடத்துக்கு வருகிறோம். கடலுணவு பஃபே உண்ணலாம் வாருங்கள் என எல்லோரையும் வழிகாட்டி அழைக்க விதவிதமான கற்பனையோடு நானும் செல்கிறேன். நல்ல வாசனைகள் மூக்கைத் துளைக்கின்றன. எம்மை உணவகத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறார் என்று நாம் நினைக்க உணவகத்துக்கு பக்கத்தில் மூன்று நான்கு வாங்குகள் போட்டிருக்க அதில் எம்மை அமரச் சொல்லிவிட்டு உள்ளே செய்கிறார் வழிகாட்டி. ஒரு சிறிய மேசை அங்கே இருக்கிறது. ஒரு பெண் சில யூஸ் பெட்டிகளையும் பிளாஸ்டிக் கப்புகளையும் கொண்டுவந்து வைக்கிறாள். எல்லோரும் பசியுடன் இருந்ததால் உடனே யூஸ்களைக் குடிக்கவாரம்பிக்க நாமும் சேர்ந்துகொள்கிறோம். சிறிது நேரத்தில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குப் பொரியலையும் இருவிதமான சோஸ்களையும் அத்தோடு சிறிய பேப்பர் தட்டுக்களையும் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போகிறாள். மற்றவர்கள் எழுந்து அவற்றை எடுத்து உண்ண நான் போகாமல் கடலுணவுகள் வரட்டும் என்று காத்திருக்கிறேன். நானும் கொஞ்சம் எடுக்கப்போறன் என்றபடி எழுந்து சென்ற மனிசன் பாத்திரத்தை உருட்டிப்பிரட்டி மிச்சமிருந்த மூன்று துண்டுகளைப் பொறுக்கிக் கொண்டு வருகிறார். இந்த ஒன்றையாவது தின் என்று ஒரு துண்டை எனக்குத் தந்துவிட்டு இரண்டைத் தான் உண்ண இந்த ஒண்டாய் உண்டு நான் ஏன் வாயைப் பழுதாக்குவான் நீங்களே சாப்பிடுங்கோ என்று குடுத்திட்டு வழிகாட்டியைத் தேடுகிறன். அவனை அந்தப் பக்கமே காணேல்லை. மீண்டும் அந்தப் பெண் வர முதலே போய் எடுப்பம் அப்பா.பிறகு கிடைக்காது என்றபடி நான் எழுந்து சென்று பார்த்தால் ஒரு குடும்பம் சாப்பிடக் கூடிய சிறிய இறால் பொரியல், கணவாய்ப் பொரியல் மீன் பொரியல் மூன்றையும் கொண்டுவந்து வைத்திருக்கிறாள். எரிச்சலை அடக்கிக்கொண்டு நான்கைந்து பொரியல்களை எடுத்துக்கொண்டுவந்து வாயில் வைத்தால் உறைப்புப் புளிப்பற்று எண்ணெய் இழுத்து .... ஒன்றைச் சாப்பிடவே வெடுக்கு மணத்துடன் ...... இறாலை எடுத்தால் அது சோர்ந்துபோய் விழுது. எனக்கு வேண்டாம் என்று மனிசனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் போய் யூஸை வாரத்துக்கு குடித்து வயிறை நிரப்பிக்கொண்டு எதுவும் கூறாது வந்திருக்க, நால்லா ஏமாத்திப்போட்டாங்கள். பழசை சூடாக்கித் தந்திருக்கிறாங்கள் கள்ளப்பயல்கள் என்று கோவப்படாத மனிசன் கோவத்துடன் ஏசுறார். ஆனாலும் பசியில் தட்டில் ஒரு துரும்பு கூட இருக்கவிடாமல் எல்லாரும் கோப்பைகளைக் காலி செய்யினம். ஒரு பத்து நிமிடத்தில் அந்த வழிகாட்டி உள்ளேயிருந்து வந்து "விரைவாக வாருங்கள் எல்லாரும் கப்பலுக்குப் போகவேண்டும் உடனே" என்கிறான். எல்லாரும் அவன் மேல் இருந்த கோபத்தை மறந்து கப்பலுக்கு விரைகின்றனர். கப்பல் புறப்பட்டு மீண்டும் அரை மணி நேரத்தில் கரையை அடைய நான் இறங்கி கோட் டலுக்குப் போவதற்கான பஸ்சில் ஓடிப்போய் முதலாவதாக ஏறுகிறேன். இரவு ஏழு மணிக்கு பஸ் தங்குமிடத்தை அடைய உள்ளே செல்லாது பக்கத்தில் இருந்த ஒரு உணவகத்துக்குச் சென்று இரு உணவுகளை வாங்கி உண்டுவிட்டு வர மனம் அதன் ருசியில் நின்மதியாகிறது. பிஸ்ராசியோ மரம்
 31. 1 point
 32. 1 point
  "தக்கன பிழைக்கும்" இதற்கு உதாரணம் இவர்கள்
 33. 1 point
  மற்ற தமிழ் தலைவர்கள் கையாலகாவதர்கள் என்பற்க்காக விக்கியர் மாற்று தலைவர் என்று இல்லை.அபிவிருத்துக்கு எதிராவனர் எல்லாம் இப்ப எமக்கு தேவை இல்லை..அதுதான் காரனம்..
 34. 1 point
  எண்ட பாத்திமா டாத்தா, புத்தர்ட பஞ்சலைக்கு பூ கொண்டு போற அழகை பாருங்கவா. அல்லாவை தவிர வேற யாரையும் வணங்க கூடாதே. வேறு பண்டிகைகள் கொண்டாடக் கூடாதே. விவசாயிகள் திருநாள் ஆயினும், பொங்கலே கொண்டதா ஆக்கள், வெசாக் 'கொண்டு ஆடுகினம்'...அதுவும் நோன்பு காலத்தில்.... நாலு அடி விழுந்தால் மார்க்கம் எல்லாம், கடாசசப்படுமோ?
 35. 1 point
  சிங்களப் பகுதிகள் எங்கும் வெசாக் சோபை இழந்து சிங்கள பெளத்த மக்கள்.. வீடுகளுக்குள் முடக்கிக் கிடக்கிறார்கள்.. பயத்தில். ஆனால்.. தமிழன்.. அவன் எங்க போனாலும்.. எவர் காவலுக்கு வருகினமோ இல்லையோ.. சொன்ன நேரத்துக்கு தேர் இழுப்பான். அது ஒன்று மட்டும் தான் தமிழர்கள் சொன்ன நேரத்துக்குச் செய்யும் ஒரே காரியம்.
 36. 1 point
  யாருமே சாகாவரம் பெற்று வருவதில்லை. புலிகள் தம்மால் முடிந்த அதி உச்ச போராட்டத்தை நடாத்தினர். தொடர்ஓட்டம் போல அடுத்து வருபவர்கள் எடுத்துக் கொண்டோடுவர். நம் காலத்தில் இல்லாவிடினும், நமது விடுதலை வேறு வகையில் வந்து சேரும். ஹிஸ்புல்லா, ரிசாட்டை தவிர்த்து பாருங்கள். தமக்கும் ஆதங்கம் உண்டு என தம்மை வன்செயலுக்கு பலமுறை உள்ளாக்கிய சிங்களவர்களுக்கு புரிய வைத்துள்ளனர். மதவாதம் ஒரு காரணி, தேவையான பொருளாதாரத்தை வழஙகி இருக்கும். சிங்களத்தின் பொருளாதாரம் பெரும் அடி வாங்கி உள்ளது. மீன்று எழ நாளாகலாம். உரிமைகளை பகிர்ந்து கொள்ளாவிடில், சிங்களமும் நாட்டை இழககும். அமெரிக்கன் இலகுவாக உள்ளே வந்துவிட்டான். இதை தடுக்கவே இந்தியா தமிழர் இயககங்களை வளர்த்தது (1983). நிலையாமை. இதுதான் யதார்த்தம்.
 37. 1 point
  ரத்த மகுடம்-53 சிவகாமி இருந்ததே விசாரணை மண்டபத்தின் உப்பரிகையில் இருந்த தூணின் மறைவில் என்பதாலும், மாடியில் மக்கள் அனுமதிக்கப்படாததாலும், காற்று மட்டுமே அங்கு நீக்கமற நிறைந்திருந்ததாலும் சிவகாமி சரிந்ததையோ அவள் உடலில் அம்புகள் பாய்ந்ததையோ ஒருவரும் கவனிக்கவில்லை.மழையென பொழிந்த அம்புகளால் அலறும் சக்தியை அவளும் இழந்திருந்தாள்.நியாயமாகப் பார்த்தால் சிவகாமியின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்திருக்க வேண்டும். இடைவிடாமல் அம்புகளை எய்த சாளுக்கிய வீரர்களின் நோக்கமும் அதுதான். அதனாலேயே அம்புகளைப் பாய்ச்சியதும் தங்கள் கடமை முடிந்தது என விலகவும் செய்தார்கள்.ஆனால், மனிதன் கணக்கிடும் நியாய, அநியாயங்கள் வேறு... இயற்கையின் கணிப்பு வேறு என்பதை ஒருபோதும் எந்த உயிரும் உணர்வதில்லையே! அப்படி உணரும் சக்தி இருந்திருந்தால் மனித குல வரலாறே வேறு விதமாக அல்லவா மாறியிருக்கும்! எதிர்பாராத கணத்தில் உயிரை விட்டவர்களும் உண்டு. எதிர்பார்த்த கணத்தில் பிரிய இருந்த உயிர், பிரியாமல் கெட்டிப்பட்டதும் உண்டு. சரித்திரம் என்பதே இந்த இரண்டு சாத்தியங்களாலும் நிரம்பியதுதான். உயிர் மட்டுமல்ல... வெற்றி தோல்விகள் கூட கணத்தில் தீர்மானிக்கப்படுபவைதான். மனித எத்தனங்கள் எல்லாமே இப்படி கணத்துக்கு முன் மண்டியிட்டு தாழ்பணிந்திருக்கின்றன. இந்தக் கணத்தை கடவுள் என டையாளப்படுத்துபவர்களும் உண்டு; இயற்கையின் விதி என அறிவிப்பவர்களும் உண்டு; இவை இரண்டுமல்ல என மறுத்து மூன்றாவதாக வேறு எதையாவது குறிப்பிடுபவர்களும் உண்டு.எது எப்படியிருந்தாலும் கணங்கள் மட்டும் எல்லா கணங்களிலும் யாருக்காவது கனத்தபடியே இருக்கின்றன; சரித்திரத்தை காலம்தோறும் எழுதியபடி இருக்கின்றன.அப்படியொரு கணம்தான் அந்தக் கணத்தில் சிவகாமிக்கு வாய்த்தது!அலறும் சக்தியற்று சரிந்தவளின் செவியில் மக்கள் கூக்குரலும் அங்கும் இங்கும் ஓடுவதும் துல்லியமாகவும் துல்லியமற்றும் விழுந்தது. ஒலிப்பது கனவிலா நிஜத்திலா என்பதை உணரும் சக்தி அப்போது அவளுக்கு இல்லை. ‘கரிகாலனுக்கு நீ உதவியதாக ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன... இதுகுறித்து என்ன சொல்ல நினைக்கிறாய்..?’ என நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தபடி அனந்தவர்மன் கேட்ட வினாவுக்கு அந்த கடிகை பாலகன் என்ன பதில் சொன்னான்..? ஒருவேளை அவன் சொன்ன விடையைத் தொடர்ந்துதான் இந்தக் கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறதா..? பொய்மையும் வாய்மை இடத்து என்பதை மறுத்து உண்மையையே அந்தப் பாலகன் கூறிவிட்டானா..? அவனுக்கு மரண தண்டனை அறிவித்து விட்டார்களா..? அப்படி மட்டும் நிகழ்ந்துவிட்டால் கரிகாலன் தன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாரே...மயக்கம் முற்றிலுமாகத் தன்னைத் தழுவும் முன் சிவகாமியின் உள்ளத்தில் படர்ந்த சிந்தனைகள் இவைதான்.அதன்பிறகு எண்ணங்கள் அவளை விட்டு அகன்றன. தன் நினைவை அவள் இழந்தாள்.ஒருவேளை அம்புகள் சிவகாமியின் உடலைத் தைக்காவிட்டாலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு தன் நினைவை அவள் இழந்திருப்பாள். ஏனெனில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட காட்சிகள் அடுத்தடுத்து விசாரணை மண்டபத்தில் அரங்கேறின. ‘‘சொல் பாலகனே... ஏன் மவுனமாக இருக்கிறாய்? கரிகாலனுக்கு நீ ஏன் உதவி புரிந்தாய்? இதற்குமுன் உன் வாழ்க்கையில் நீ கரிகாலனைச் சந்தித்ததும் இல்லை... உறவாடியதும் இல்லை. அப்படியிருக்க யார் சொல்லி பல்லவர்களின் உபசேனாதிபதியான அவனுக்கு உதவி செய்தாய்?’’பிரேதக் கண்கள் ஜொலிக்க அனந்தவர்மர் இப்படிக் கேட்டதும் கடிகையைச் சேர்ந்த அந்தப் பாலகன் நிமிர்ந்தான். சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டு அங்கிருந்த மக்களைப் பார்த்தான்; அலசினான். பாலகன் சொல்லவிருக்கும் பதிலுக்காக அனந்தவர்மர் காத்திருந்தாரோ இல்லையோ... பார்வையாளர்களாக வந்திருந்த மக்கள் அனைவரும் தங்கள் செவிகளைக் கூர்தீட்டிக் காத்திருந்தார்கள். பால் வடியும் அந்த முகமும் அதில் ஜொலித்த தேஜஸும் அந்தப் பாலகன் மீது அவர்களுக்கு மரியாதையையும் அன்பையும் ஏற்படுத்தி இருந்தன. இதற்குமுன் அந்தப் பாலகனை எங்குமே யாருமே சந்தித்ததில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. இனி சந்திக்கவே முடியாதோ என்ற அச்சமே அவர்கள் மனதில் விருட்சமாக வளர்ந்து நின்றது! ஏனெனில் அனந்தவர்மர் நடத்திய விசாரணையின் போக்கு எந்தத் திசையில் செல்கிறது என்பது அங்கிருந்த அனைவருக்குமே புரிந்திருந்தது. துடிக்கும் இதயத்துடன் பாலகனையே இமைக்காமல் பார்த்தார்கள். மக்களின் எண்ண ஓட்டத்தை ஸ்படிகம் போல் பாலகன் படித்தான். படிக்க மட்டுமே செய்தான். மற்றபடி அதில் தன் கவனத்தைக் குவிக்கவில்லை. யாருடைய ஆறுதலும் அன்பும் அவனுக்கு அவசியமாகவும் படவில்லை. நெஞ்சை நிமிர்த்தி அலட்சியத்துடன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல அனந்தவர்மரை நோக்கி அவன் வாயைத் திறந்தான்.ஆனால், ஒரேயொரு எழுத்து சொல் கூட அவன் உதட்டிலிருந்து பிறக்கவில்லை! பிறக்க அக்கணமும் அனுமதிக்கவில்லை! ஏனெனில் அக்கணத்தையும் அதற்கடுத்து வந்த கணங்களையும் அசுவங்கள் ஆக்கிரமித்தன!ஆம். புரவிகள்! எங்கிருந்து எப்படி வந்தன என்பதை ஒருவராலும் ஆராய முடியவில்லை. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட அசுவங்கள் விசாரணை மண்டபத்துக்குள் புகுந்தன. அவை அனைத்துமே அப்பொழுதுதான் அரபு நாட்டிலிருந்து மல்லைத் துறைமுகத்தில் வந்து இறங்கியவை. கடற்கரை மணலில் ஓடவிட்டு சரிபார்க்கப்பட்டு காஞ்சி மாநகரத்தை வந்தடைபவை. மற்றபடி இன்னமும் பழக்கப்படாதவை.எனவே மக்கள் கூட்டத்துக்குள் அவை தறிகெட்டுப் பாய்ந்தன. அவற்றை அடக்கும் வல்லமை படைத்த அசுவ சாஸ்திரிகள் அங்கு இல்லாததால் மனம்போன போக்கில் அவை பாய்ந்தன.அவற்றின் குளம்புகளில் மிதிபடாத வண்ணம் தப்பிக்க மக்கள் மட்டுமல்ல... நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்த அனந்தவர்மரும் அவருக்குக் காவலாக நின்ற சாளுக்கிய வீரர்களும் முயன்றார்கள்.எல்லோரும் எல்லா இடங்களிலும் ஓடி தப்பிக்க முயன்றார்கள். முண்டியடித்தார்கள். ஒருவர் மீது மற்றவர் மோதி விழுந்தார்கள். விழுந்தவர்கள் வெளியில் பாய்ந்தார்கள்.இந்த அமளிகள் எல்லாம் அடங்க ஒரு நாழிகையானது.தகவல் அறிவிக்கப்பட்டு வந்து சேர்ந்த சாளுக்கிய அசுவ சாஸ்திரிகள் ஒருவழியாக புரவிகளை அடக்கினார்கள். அனைத்தையும் கொட்டடிக்கு அழைத்துச் சென்றார்கள்.எல்லாம் முடிந்தபிறகுதான் அந்த உண்மை தெரிந்தது.விசாரணைக் கூண்டில் இருந்த அந்த கடிகை பாலகனைக் காணவில்லை!இது மட்டுமே அங்கிருந்த அனந்தவர்மரும் மற்றவர்களும் அறிந்தது. அவர்கள் அறியாதது, உப்பரிகையில் அம்பு பாய்ந்த நிலையில் மயக்கம் அடைந்திருந்த சிவகாமியும் அங்கு இல்லை என்பது!அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் மேலும் பிரேதத்தை பிரதிபலித்தன. கண்கள் இடுங்கின. அவரால் நடந்ததை எல்லாம் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.கடிகை பாலகன் தப்பித்துவிட்டான் என்பதை விட பாய்ந்த புரவிகள் மோதியோ அல்லது அதன் குளம்படிகளில் சிக்கியோ மக்களில் ஒருவரோ அல்லது சாளுக்கிய வீரர்களில் ஒருவரோ காயமும் படவில்லை... உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இல்லை... என்ற உண்மை அவர் முகத்தை அறைந்தது!ஒழுங்குபடுத்தப்படாத புரவிகளை அந்தளவுக்கு ஒழுங்குடன் விசாரணை மண்டபத்துக்குள் ஓட விட்டவன் யார்..? அவன் யாராக இருந்தாலும் கைதேர்ந்த அசுவ சாஸ்திரியாக இருக்க வேண்டும்...அனந்தவர்மரின் புருவங்கள் முடிச்சிட்டன. யார் அவன் என்ற கேள்வி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது.‘‘சந்தேகமென்ன... கரிகாலன்தான்!’’ வெறுப்புடன் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.‘‘எப்படி அவ்வளவு உறுதியுடன் சொல்கிறீர்கள்..?’’ அனந்தவர்மரின் பார்வை வேறு எங்கோ இருந்தது.‘‘அவனைத் தவிர வேறு யாராலும் இந்தக் காரியத்தை செய்திருக்க முடியாது! இந்தப் பகுதியில் மட்டுமல்ல... இந்த பரத கண்டத்திலேயே இரண்டே இரண்டு பேர்தான் கைதேர்ந்த அசுவ சாஸ்திரிகள். அதில் கரிகாலனும் ஒருவன்!’’ ‘‘இன்னொருவர் சிவகாமிதானே?’’ சட்டென்று திரும்பிக் கேட்டார் அனந்தவர்மர். அவர் பார்வை சாளுக்கிய போர் அமைச்சரை அம்பென துளைத்தது.எலும்புக்குள் நடுக்கம் ஊடுருவினாலும் ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் பார்வையைத் திருப்பவில்லை. அனந்தவர்மரின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தார். ‘‘ஆம்!’’‘‘அவள் எங்கே..?’’‘‘இறந்திருக்க வேண்டும்...’’‘‘அதாவது உறுதியாகத் தெரியாது. அப்படித்தானே?’’‘‘அப்படியில்லை....’’‘‘பின் வேறு எப்படி..?’’‘‘விசாரணை மண்டபத்துக்கு சிவகாமியும் வந்திருந்தாள். நம் வீரர்கள் அவள் மீது அம்புகளைப் பாய்ச்சினார்கள்...’’‘‘எனில் இறந்துவிட்டாள் என உறுதியாகச் சொல்லவேண்டியதுதானே..?’’ராமபுண்ய வல்லபர் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றார். ‘‘அவள் சடலம் கிடைத்ததா..?’’ அனந்தவர்மர் கேட்டார்.‘‘இல்லை!’’‘‘அதாவது நம் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு பாலகனையும் அவளையும் ஒருசேர கரிகாலன் அழைத்துச் சென்றிருக்கிறான்... அப்படித்தானே..?’’முதல் முறையாக ராமபுண்ய வல்லபர் தலைகுனிந்தார்.‘‘இதனால் என்னென்ன ஆபத்துகள் வரும் என கொஞ்சமாவது யோசித்தீர்களா ராமபுண்ய வல்லபரே! சிவகாமி மீது அம்புகள் பாய்ந்திருக்கின்றன. அவளைக் காப்பாற்ற கரிகாலன் சிகிச்சை அளிக்கப் போகிறான். அப்படி சிகிச்சை அளிக்கப்பட்டால் நம் திட்டம் வெளிப்பட்டு விடாதா..? சிவகாமி யார் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள மாட்டானா..? சாளுக்கிய மன்னனான என் தம்பி விக்கிரமாதித்தனுக்குக் கூடத் தெரியாமல் நாம் அரங்கேற்ற நினைத்த காதை அம்பலத்துக்கு வந்தால் நம் நிலை என்னவாகும் என கொஞ்சமாவது யோசித்தீர்களா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் உதட்டைக் கடித்தார்.‘‘போங்கள்... உடனடியாக வீரர்களையும் ஒற்றர்களையும் அனுப்பி சிவகாமிக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேடச் சொல்லுங்கள். அநேகமாக குறுவாள் பாய்ந்த சோழ மன்னருக்கு எந்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறாரோ அவரிடம்தான் சிவகாமியையும் கரிகாலன் அழைத்துச் சென்றிருப்பான்...’’புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், அனந்தவர்மருக்கு தலைவணங்கிவிட்டு வெளியே சென்றார்.பற்களைக் கடித்தபடி அந்த அறையின் சாளரத்துக்கு அனந்தவர்மர் வந்தார். காஞ்சி மாநகரம் பரந்து விரிந்திருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவரின் பார்வை சட்டென கூர்மை அடைந்து ஓர் இடத்தில் நிலைத்தது.அந்த இடத்தில் புறாக்கள் தானியங்களைக் கொத்திக் கொண்டிருந்தன! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15351&id1=6&issue=20190517
 38. 1 point
 39. 1 point
 40. 1 point
  அதான் குருநாகல்,குளியாபிட்டி பௌத்த மக்கள் உங்கள் ஆலோசனைகளை கருத்துக்களை அப்படியே கேட்டுவிட்டார்களே!
 41. 1 point
  அநேக இடங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாம்!
 42. 1 point
  “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்” களியாட்டங்களைத் தவிர்ப்போம்! By கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளால் மே12ம் நாள் ஞாயிற்றுக்கிழமையில் இந்நினைவேந்தல் வார நிகழ்வுகள் தொடங்குகின்றது. இந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு, தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும், சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும், இந்நாட்களில் நினைவேந்தி வணக்கமும், அஞ்சலியும் செய்வோம்!! நாளை ஆரம்பமாகின்ற முள்ளிவாய்கால் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் வாரத்தில், அனைவரும் ஒற்றுமையாக, எந்த பேதங்களிமின்றி இணைந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைவேந்தல் வாரத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன, துன்பகரமான இந்நாட்களை, ஆடம்பரங்களையும்/ களியாட்ட நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளின், சொந்தங்களின் வலிகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்வது தன்மானமுள்ள அனைத்து உறவுகளின் கடமையாகும். மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, இறுதித் தருணத்தில் எந்தவித அஞ்சலிகளும், சடங்குகளும் இன்றி உயிரிழந்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கொள்ளவேண்டும். இதற்காக எல்லோரையும் அன்புடனும், உரிமையுடனும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக / ஆத்மசாந்திக்காக கோயில்கள், தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள், தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக் கூடியவை. அவை, சார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன. அதனை தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும். ஒப்பீட்டளவில் இத்தருணத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாக பெரும் ஆறுதலை, புலம்பெயர் சமூகம் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். இங்கு ஆறுதல் என்பது வலிகளைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ள மக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகிர்ந்து கொள்வதாகும், அத்துடன் அநியாயமாக இழக்கப்பட்ட இந்த உறவுகளுக்காக, நீதிவேண்டி தொடர்ந்து எம்மால் முடிந்தளவு போராட வேண்டும். நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய், உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதிபூண்டு கொள்வோம்!! http://www.errimalai.com/?p=40126
 43. 1 point
  மட்டக்களப்பு - வவுணத்தீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உரிய முறையில் விசாரணை செய்திருந்தால் நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தவிர்த்திருக்க முடியும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா - கந்தப்பளை கொங்கோடியா நடுப்பிரிவு, கீழ்பிரிவு பகுதிக்கான பிரதான பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வவுணத்தீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் போராளியான அஜந்தன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அண்மையில் இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய சஹ்ரானின் சாரதி வெளியிட்ட தகவலின் படி குறித்த கொலையை ஐ.எஸ் பயங்கரவாதிகளே நடத்தியுள்ளமை தெரியவந்தது.இதையடுத்து முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/119807