• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. Justin

  Justin

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   7

  • Content Count

   2,810


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   49,480


 3. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   5,414


 4. Rajesh

  Rajesh

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   1,712Popular Content

Showing content with the highest reputation on 07/18/2019 in all areas

 1. 6 points
  ஏராளன், ஈழப்பிரியன் அண்ணை, நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை! கடைசி முயற்சியாக இந்த விடயத்தில் மட்டும் என் பங்களிப்பு. இதன் பின் எதுவும் எழுத இல்லை: 1. மின்காந்த கதிர்வீச்சினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டு. அது ஏற்கனவே நவீன வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பாதிப்பை விட அதிகமா என்றால் இல்லை என்பது தான் பல முறையான வழியில் செய்யப் பட்ட ஆய்வுகள் சொல்லியிருக்கும் பதில். உதாரணமாக டீசல் புகை ஒரு நிரூபிக்கப் பட்ட புற்று நோய்க்காரணி. அந்த டீசல் புகையை ஏற்கனவே சுவாசித்துக் கொண்டு, 5ஜியும் 4 ஜியும் புற்று நோயை இனித் தான் கூட்டப் போகிறது என்று கதை பரப்புவது பயமுறுத்தும் செயல். மேலும் 5ஜியும் 4ஜியும் ஏனைய ரேடியோ அலைகளும் மனிதனின் தோலைத் தாண்டி உள்ளே சென்று டின்.ஏயைத் தாக்கும் சக்தியற்றவை. அதனால் தான் மூளைப் புற்று நோய்க்கும் செல்லிடப் பாவனைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று காட்டியிருக்கிறார்கள். வெறும் செல்களில் பரிசோதனை செய்து விட்டு தரமற்ற சஞ்சிகைகளில் அதை பிரசுரித்து விட்டு ரேடியோ அலைகள் புற்று நோயை உருவாக்கும் என்று கதை பரப்பும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும், நான் அறியேன். 2. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பது தான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் செய்ய வேண்டியது. அறிவியல் தகவல்களை உரிய ஒப்பீடுகளோடு மக்களிடம் சொல்லாமல் fear mongering செய்தால் என்ன நிகழும் என்பதை அழகாக ஒரு 2016 ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் 15000 நபர்களை தேர்வு செய்து அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சைப் பெறுகிறார்கள் என்று துல்லியமாக அளவிட்டார்கள் (modeled exposure) . பின்னர் அந்த நபர்களைப் பேட்டி கண்டு "எவ்வளவு செல் போன் கதிர் வீச்சுக்கு அவர்கள் ஆளாவதாக நினைக்கிறார்கள்" என்று கணக்கிட்டார்கள் (perceived exposure).பின்னர், இதே நபர்களின் சில ஆரோக்கிய அளவீடுகளை (health outcomes) மேற்கொண்டார்கள். ஆய்வு முடிவில், தாம் அதிகமாக செல் போன் கோபுரக் கதிர்வீச்சைப் பெறுவதாக நம்பும் நபர்களிடையே அதிகமாக ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதையும் துல்லியமாக அளவிடப் பட்ட கதிர்வீச்சிற்கும் ஆரோக்கியக் குறைபாட்டிற்கும் தொடர்பில்லாதிருப்பதையும் கண்டறிந்தார்கள். இந்த மனப் பிராந்தியை சரியான ஆய்வு முடிவுகளை மக்களுக்குச் சொல்லாமல் வெறும் பயப் பிராந்தியை மட்டுமே உருவாக்கும் போலி அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இணைப்பு இதோ: https://academic.oup.com/aje/article/186/2/210/3111638 3. 5ஜி யினால் யாழ் நகரம் smart city ஆக நவீன மயப்படுமென நான் நம்பவில்லை. ஆனால், 5ஜியினால் எவ்வளவோ நன்மைகள் கல்வித் துறைக்கும் மருத்துவ சேவைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு. யாழ் பல்கலை உலக மட்டத்தில் தங்கள் வலைபின்னலை அதிகரிக்க இந்த தொழில் நுட்பம் உதவும். எங்கள் மருத்துவர்கள் யாழில் இருந்தே மேற்கு நாடொன்றில் நடக்கும் நவீன மருத்துவ ஆய்வு முயற்சிகளை, கூட்டங்களை ஏன் சத்திர சிகிச்சைகளைக் கூட பார்த்து நவீன திசை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஒரு ஆதாரமில்லாத பயமூட்டும் தகவல்களால் கிடைக்காமல் போகும் என்பது துரதிர்ஷ்டம்! நன்றி.
 2. 2 points
  மன்னிக்கணும் மேடம். எனது நண்பர் தவறுதலாக பிழையான விலாசம் தந்துவிட்டார். சரியான விலாசம். ஈழப்பிரியன் வெள்ளைமாளிகை வாசிங்டன் டிசி-டிஸ்ரிக் ஒவ் கொலம்பியா. அமெரிக்கா. நன்றி. சாமான் பிழையான விலாசத்துக்கு போகப் போவுது. எனது விலாசத்தைப் பார்த்தா பணமே எடுக்க மாட்டாங்களே!
 3. 2 points
  ஹலோ மேடம்! ஆவணி மாதம் 10ம்திகதிக்கிடையிலை 2 பச்சைப்பெட்டி போத்தல் அனுப்பிவிடுங்க மேடம். விலாசம்:- ஈழப்பிரியன் நாச்சியப்பன் ஒழுங்கை 73a நியூயோர்க் அமெரிக்கா.
 4. 2 points
  தீடிரென இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, லாயர் ஆபீஸோன்னு நினச்சேன்...
 5. 2 points
  விதி எண் 19.8ஐ மீறி விட்டீர்கள்.. நியூஸிக்கு எதிராக நேற்று சதி நடந்ததா? அதிர வைக்கும் பின்னணி! By Shyamsundar I Published: Monday, July 15, 2019, 11:58 [IST] WORLD CUP 2019 FINALS : Overthrow | விதி எண் 19.8ஐ மீறி விட்டார்கள்! நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடுவர்கள் செய்த தவறு ஒன்று இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடிந்துள்ளது. முக்கியமான விதி ஒன்றை நடுவர்கள் களத்தில் மீறி இருக்கிறார்கள். இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் எளிதான இலக்கை நோக்கி இறங்கி 49 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 227 ரன்கள் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் இருவரும் களத்தில் இருந்தனர். நானா கிடையவே கிடையாது.. களத்திலேயே அதிர்ச்சி அடைந்த கேன் வில்லியம்சன்.. ஷாக் வீடியோ.. ஏன் தெரியுமா? எப்படி சென்றது கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இங்கிலாந்து ஆடிக்கொண்டு இருந்தது. அந்த ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்தில் ரன் எதுவும் செல்லவில்லை. அடுத்த பாலே ஸ்டோக்ஸ் சிக்ஸ் அடித்தார். ஆறு ரன்கள் இந்த போட்டியை மாற்றிய பந்து என்றால் அதற்கு அடுத்த பந்துதான். சரியாக அந்த ஓவரின் 4 வது பந்தில் 2 ரன்கள் எடுக்க, நியூசி வீரர் குப்தில் பந்தை சரியாக தடுத்து தூக்கி கீப்பரிடம் வீசினார். ஆனால் அது பேட்டில் பட்டு ஓவர் த்ரோவாக மாறி பவுண்டரி சென்றது. இதனால் அந்த பந்தில் 6 ரன்கள் தேவையின்றி சென்றது. எப்படி ஆறு இந்த நிலையில் எப்படி இதற்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்து ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லவில்லை. ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டுதான் பவுண்டரி சென்று இருக்கிறது. இதற்கு எப்படி பவுண்டரி கொடுத்தார்கள். என்ன கணக்கு இது என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். விதி என்ன ஆனால் விதிப்படி பேட்டில் பட்டு பவுண்டரி சென்றாலும் அது ஓவர் த்ரோ என்றுதான் கொள்ளப்படும். அதில் எந்த விதமான தவறும் கிடையாது. ஆனால் அந்த பந்தில் எப்படி 6 ரன்களை கொடுத்தார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. 4 ரன்கள் பவுண்டரி 2 ரன்கள் ஓடிய கணக்கு என்று மொத்தம் 6 ரன்களை கொடுத்துள்ளனர். அட ஆனால் ஐசிசி என 19.8 படி ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லும் சமயங்களில் கடைசி ரன் எடுப்பதை கணக்கில் கொள்ள கூடாது. அதாவது ஸ்டோஸ் ஓடிய இரண்டாவது ரன்னை கணக்கில் கொள்ள கூடாது. இதனால் முதல் ரன் மற்றும் பவுண்டரி இரண்டு மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். அதாவது 6 ரன்களுக்கு பதில் 5 ரன்கள் மட்டுமே அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். Read more at: https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-what-icc-rules-say-about-nz-vs-eng-match-over-throw-016024.html
 6. 1 point
  மட்டக்களப்பிலை உள்ள போடிமார் செய்யாத ஜில்மா வேலைகளா? போடிமாரின் பண்ணை வீடுகளில் வைப்பாட்டிகளுக்காக நடக்காத கொலைகளா? சரவணபவன் அண்ணாச்சிக்கு இது முதல் கொலையாக இருக்காது எண்டது என்ரை அனுமானம்.
 7. 1 point
  வெற்றிபெற்ற சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள். சங்க தலைவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள். கொள்கையே வெல்லும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய ஈழப்பிரியனுக்கும் உதவிய கிருபனுக்கும் மற்றும் இந்த திரியை கலகலப்பாக கொன்டு சென்ற பையனுக்கும் கோஷன் சேயுக்கும் நன்றிகள்.
 8. 1 point
  நேர்த்திக் கடன் வைத்து பலி கொடுப்பது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கங்களில் ஒன்று. பணம் படைத்தவர்கள் விசேட பூசை முதல் கொண்டு கோவில்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுப்பது வரைக்கும் செலவு செய்து திருவாளர் கடவுளின் மனசை குளிர்வித்து தம் காரியங்களை சாதிக்க நினைக்கும் போது அப்படியான வசதி இல்லாதவர்கள் கோழியையோ அல்லது ஆடையோ சிறுசில் இருந்து வளர்த்து பலி கொடுத்து பூசை செய்கின்றனர். இவ்வாறு பலி கொடுப்பது தவறெனில் வசதி அற்றவர்களுக்கு திருவாளர் கடவுளரை திருப்தி செய்விக்கும் வழி என்ன? உயிர் கொலை தவறெனில் மச்சம் சாப்பிடுவதும் தவறு. மரக்கறிகள் வளர்க்கும் போது பூச்சிக் கொல்லிகளை பாவிப்பதும் தவறு. நுளம்பார் எம்மை குத்தும் போது அடித்துக் கொல்வதும் தவறு. கரப்பத்தானை தட்டிக் கொடுத்து வளர்க்காமல் விடுவதும் தவறு. என்னைக் கேட்டால் இல்லவே இல்லாத கடவுளுக்கு இப்படியான எந்த வழிபாட்டு முறைகளும் சுத்த வேஸ்ட் என்பேன்.
 9. 1 point
  தங்களைப்போன்ற துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஒதுங்குவது மூடத்தனங்களை பரப்பும் யூரியூப் வியாபாரிகளுக்கு வரப்பிசாதமாக அமையும். அறிவியல் ரீதியான் ஆய்வுகளை விட பழமைவாத மூடத்தனத்தை நம்பும் மனவியாதி ஊரில் உள்ள படித்த சமூகம் என்று கூறுபவர்களிடமும் காலங்காலமாக இருப்பதை அவதானிக்க முடியும். அறிவியிலால் கண்டு பிடிக்கப்பட்ட தற்போதைய தகவல் தொழிழ்நுட்ப வளர்ச்சி கூட எம்மவரால் மூடக்கொள்கைகளை பரப்பவே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது.
 10. 1 point
  "போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...!" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு? ஆரோக்கியப் பாதிப்பென்றால் 4ஜியிலும் உண்டே? பழைய காலம் போல ரின்பால் பேணியில் கம்பி கட்டிய தொலைபேசிக்கு மாறினால் ஆரோக்கியப் பாதிப்பின்றி நீண்ட காலம் வாழலாம்!
 11. 1 point
  இதென்ன புதுசா இருக்கு? சம்பந்தன்டை நிரந்தர அரசியல் சாதனையே தமிழ்மக்களுக்கு இடையறாது துரோகம் செய்வது தானே! அந்த மனுஷன் இப்ப ஒன்டும் புதுசா துரோகம் செய்ய தொடங்கத் தேவையில்லை.
 12. 1 point
  பிறகெதுக்கு இந்த முஸ்லீம் இனவாதிகளோட இன்டைக்கு சந்திப்பு? கூட்டமைப்பு இவ்வளவு மோசமானளவு ஆளுமையற்றது என்டு இப்ப தான் விளங்குது.
 13. 1 point
  சித்தார்த்தன், நீங்கள் எந்த வர்க்கம்? தமிழர்களை அழிப்பவர்களின் குறுந் தலைவரா? அல்லது ஜால்ரா கோஷ்டிகளின் குறுந் தலைவரா? உங்கடை வர்க்கம் பற்றி கொஞ்சம் விபரமா சொன்னா என்ன?
 14. 1 point
 15. 1 point
  இந்த யாழ் பல்கலைக்கழகக் குழு செம்மையாக விஞ்ஞான ஆய்வுகளை முன்னெடுத்து செயற்பட்டால், சர்வதேச தரத்தில் ஆவணங்களை தயாரித்தால் சிங்களவன்டை புலுடாக்களை லேசா முறியடிக்கலாம்.
 16. 1 point
  19.8 OVERTHROW OR WILFUL ACT OF FIELDER ஒவர் தொரோ, வில் புல் ஆக்ட் ஒப் தெ பீல்டர் என்றால் என்ன? ஓவர் துரோ என்பது பீல்டர் எறிந்த பந்து, எதிலும் படாமல், மற்றைய பீல்டர்களால் நிறுத்த படாமல், பவுண்டரி நோக்கி போவது அல்லது, பவுண்டரியை தாணடுவது. வில் புல் ஆக்ட் ஒவ் த பீல்டர் என்றால் - பீல்டர் வேணும் எண்டே ( சதி செய்யும் நோக்குடன்) பந்தை பவுண்டரி நோக்கி எறிவது. இப்போ ஸ்டோக்சிற்கு நடந்ததை பாருங்கள்? அது ஓவதுரோவா? இல்லை (மட்டையில் பட்டது ஆகவே deflection not over throw). அது பீல்டர் வேண்டும் என்றே செய்த willful act ஆ? நிச்சயமாக இல்லை ( fielder was throwing to get Stokes run out). அப்போ எந்த அடிப்படையில் விதி 19.8 இங்கே applicable? விடை இங்கே 19.8 applicable இல்லை. அப்போ எந்த விதி இதற்கு applicable ? கீழ்வரும் விதி, 19.7.3 When a boundary is scored, the batting side, except in the circumstances of 19.8, shall be awarded whichever is the greater of19.7.3.1 the allowance for the boundary19.7.3.2 the runs completed by the batsmen together with the run in progress if they had already crossed at the instant the boundary is scored. இப்போ புரிகிறதா ஏன் சைமன் டெளவளுக்கு அறழை பேந்து விட்டது என்று சொன்னேன் என்று. அவர் 5 முறை சிறந்த நடுவராக வந்தார் என்பதால் அவர் எப்போதும் சரியாக இருப்பார் என்று ஒரு விதியும் இல்லை.
 17. 1 point
  கலோ....கலோ.... இஞ்சை ஒருத்தர் நித்திரையாலை இப்பதான் எழும்பி வந்து நிக்கிறார்...ஓவர்.. .
 18. 1 point
  மனமே முருகனின் மயில் வாகனம்....!
 19. 1 point
 20. 1 point
  இந்த ஆண்டின், சிறந்த நண்பன்.
 21. 1 point
 22. 1 point
 23. 1 point
  சீனாக்காரர், குறிப்பாக இந்திய அரச பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி கவனமாக இருக்கும்படி கூறுகிறார்கள்.
 24. 1 point
  அரச பயங்கரவாதம் + சிங்கள-பௌத்த பயங்கரவாதம் என்பவற்றுடன் இஸ்லாமிக் பயங்கரவாதமும் முற்றாக அழிக்கப்படும் போது இலங்கையில் அமைதி ஏற்பட வழிபிறக்கும்.
 25. 1 point
  உண்மையாயின் முதலில் தூக்கிலேற்றப்பட வேண்டியவர் மைத்திரிபால சிறிசேன தான்.
 26. 1 point
  முதலில் 1948 முதல் ஆட்சிகளில் அமர்ந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் அனைவருக்கும் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும்! அப்போது மட்டும் தான் போதைப்பொருள் வியாபாரம் முற்றாக ஒழிக்கப்பட முடியும்.
 27. 1 point
  இது எத்தனையாவது வாக்குறுதி! மக்களுக்கு பல வாக்குறுதிகளை யார் கொடுத்தது? இப்போது யார் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்? மாவை சேனாதிராஜா இப்படியே எவ்வளவு காலத்துக்கு தமிழ் மக்களை ஏமாற்றி ஈனப் பிழைப்பு நடத்தப் போகிறார்? மாவை சேனாதிராஜா தலைமையிலுள்ள தமிழரசுக் கட்சியின் திருடர் பட்டாளத்துக்கு தேர்தல் நடுக்கம் ஆரம்பித்துள்ளது?
 28. 1 point
  அமீரகத்தில் பணிபுரிய 60 வயது உச்ச வரம்பு இருந்தாலும், பெரும்பாலும் துபாயில் 65 வயது வரை வேலை செய்யலாம். சில தனியார் நிறுவனங்களில் 70 வயதுவரை வேலை செய்பவர்களும் உண்டு. எல்லாம் அந்த நிறுவனத்தின் தொழில்முறை தேவையை பொறுத்தது. ஒரு வித்தியாசம் மட்டுமுண்டு. 60 வயது வரை மூன்று வருடத்திற்கு ஒருமுறை வேலைக்கான ஒப்பந்தமும், விசாவும் புதுப்பிக்கப்படும். 60 வயதை தாண்டிவிட்டால் வேலை கொடுப்பவர், எமக்கு இவரின் தனிதிறமைகள் வேலைக்கு அவசியம் என சிபாரிசு செய்யவேண்டும், வேலை விசாவிற்கான வைப்புத்தொகை அதிகரிக்கும், வருடம் ஒருமுறை மருத்துவ சோதனைக்கு சென்று தகுதி சான்றிதழ்(Medical Fitness Certificate) பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் வேலைக்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். அரசாங்க வேலையெனில் மூன்று வருடத்திற்கு விசாவும், தனியார் நிறுவன வேலையென்றால் இரு வருட விசாவும் கிட்டும். நான் பணிபுரிவது அரசாங்க வேலை என்பதால் 60 வயதிற்கு மேற்பட்டும் சில வருடமாக அது பாட்டுக்கு ஓடுது..!
 29. 1 point
 30. 1 point
  கேள்வி உங்கள் தனிப்பட்ட அரசியல் இலக்கிய வாழ்க்கை பற்றியது. இதுக்குள் நீங்கள் மொட்டையாக புலிகள் முஸ்லிம்களை யாழில் இருந்து வெளியேற்றினார்கள் என்றால் முஸ்லிம்கள் என்ன பணம்காய் பறித்துக்கொண்டா இருந்தார்கள்? ஒன்றில் நீங்கள் முழுமையாக நடந்ததை கூறியிருக்க வேண்டும் அல்லது உங்கள் கேள்விக்கு உகந்த தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறியிருக்கலாம். போராளிகள் துரோகம் செய்வதில்லை கருணா அம்மான் செய்வார் ... நீங்கள் தேவையில்லாது இந்த இடத்தில் புலிகள் மீது சேறடித்து எமக்கு துரோகம் செய்ததாகவே எனக்கு படுகிறது. யாழில் இருந்து வெளிறப்பட்ட முஸ்லீம் வீட்டில் கம்பகாவில் நான் கூட்டுப்படை குண்டு தாக்குதல் ரஞ்சன் வியரட்ன குண்டுத்தாக்குதல் நடந்த போது சென்று ஒழித்து கொள்வது .... அவர்களுக்கு நடந்தது தெரியும் அதைப்பற்றி ஒருபோதும் தலை நிமிர்ந்து என்னுடன் பேசியதில்லை. தங்கள் பொருட்களை வாழ்வாதாரம் வேண்டி கொண்டுசெல்ல எம்மை விட்டிருக்கலாம் என்று மட்டுமே எனக்கு சொல்வார்கள் ... வெளியேற்றியது தவறு என்று ஒருபோதும் சொன்னதில்லை காரணம் அவர்களுக்கு நன்று தெரியும். நீங்கள்தான் வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்கிறீர்கள் விமர்சனம் நல்லது ..... ஒருபக்க நியாயத்தை இருட்டடித்து செய்வதுதான் புரியவில்லை
 31. 1 point
  போராட்டத்தை ஒடுக்க பறந்த விமானங்கள் !! மீனவனின் உடலைத்தேடி பறக்கவில்லையே !!
 32. 1 point
  சுமத்திரனோ,சம்மந்தரோ ஊழல் செய்தால் என்ன ,செய்யாட்டில் என்ன இப்படி சும்மா பதவியில் பொம்மை மாதிரி இருக்கிறதை விட கோயிலில் சிலையாக இருக்கலாம்...தங்கட பதவியை வைத்து தமிழருக்கு செய்த ஏதாவது ஒரு நல்ல விடயம் ?
 33. 1 point
 34. 0 points
  பாஞ்சின் பதிவு துணுக்குற வைக்கவில்லை வல்வை சகாறா அவர்களே! நான் உவகையை நாடியிருந்தால் நிச்சயம் உவகை ஒரு பெண்ணை அவருக்குத் தேடியிருக்கும். வன்னியரும் பாஞ்சு வந்திருப்பார்... சுப்பிரமணியராகி தேவிகளோடு காட்சி தந்திருப்பார். என் பதிவு...! வன்னியரை, நம்நாட்டுச் சுப்பிரமணிய சுவாமியாகாமலும் காப்பாற்றியுள்ளது.!!
 35. 0 points
  நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்.. போரில் முன்னரங்கில் விடப்பட வேண்டிய நங்கூறுகள்..