• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. கிருபன்

  கிருபன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   19,140


 2. வல்வை சகாறா

  வல்வை சகாறா

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   4

  • Content Count

   5,650


 3. tulpen

  tulpen

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   2,000


 4. Lara

  Lara

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   1,607Popular Content

Showing content with the highest reputation on 08/31/2019 in all areas

 1. 2 points
  காணொளிகளை நேரடியாக தரவேற்றமுடியாது. YouTube போன்ற தளங்களில் இருந்துதான் இணைப்புக் கொடுக்கமுடியும். இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும். சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம். இவைதான் நான் பாவிக்கும் முறைகள்.
 2. 2 points
  அண்ணன் இலண்டன் திரும்பிப் போகவேண்டும் என்பதற்குத்தான் தம்பியின் இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். வீடு எப்போதும் தம்பிக்குத்தான்! காசு, காணி, வீடு விசயங்களில அண்ணன்-தம்பி உறவெல்லாம் அநேகமாக வேலை செய்யாது.
 3. 1 point
  வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதில் பங்கு பற்றி அவர்கள் அரசியல் ஆய்வாளர்கள் திரு கருணாகரன் திரு யதிந்திரா மற்றும் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள்
 4. 1 point
 5. 1 point
  https://imggmi.com/ கோசான் இந்த தளத்தில் போட்டோவை தரவேற்றிவிட்டு அதை copy paste செயது பாருங்கள்
 6. 1 point
  பாஞ்ச் மீண்டும் உங்களது தப்பான விளக்கம். என் மனத்தை புண்படுத்தியதாக நீங்களே கற்பனை செய்து மன்னிப்பு வேறு . உங்களை நானோ என்னை நீங்களோ இங்கு புண்படுத்த வில்லை. பொதுவான சமுதாய கருத்துக்களை எழுதுவது யாருடைய மனத்தையும் புண்படுத்தாது. எம்மை நாமே சுய விமர்சனம் செய்து திருத்திக்கொள்வது காலத்தின் கட்டாயம். நடைமுறைக்கு ஒவ்வாத பழக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு உலகத்தோடு சரி சமமாக நாம் செல்வதே எமக்கு பெருமை. மதங்களில் கூறப்படவற்றை புறக்கணித்து செல்வதே மனிதர்களுக்கு பெருமை என்பதே இந்த திரி கூறிய செய்தி.
 7. 1 point
  பார்ரா.. யாருன்னு தெரியுதா.. கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. நம்ம எடப்பாடியாரா இது! சென்னை: கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. யார்னு தெரியுதா.. நம்ம முதல்வரேதான்.. லண்டனில் புது கெட்டப்பில் கலக்கி வருகிறார்! பதவி ஏற்றது முதலே தான் ஒரு விவசாயி என்பதை ஆணித்தரமாக சொல்லி வருபவர்தான் எடப்பாடி பழனிசாமி. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் சரி, யாருடைய கல்யாணத்துக்கு போனாலும் சரி.. நானும் விவசாயிதான். இன்று வரை விவசாயம் செய்து வருகிறேன் என்பதை மறக்காமல் பதிவு செய்துவிட்டு வருவார் எடப்பாடி பழனிசாமி. அதனால் ஒரு விவசாயி என்ற பிம்பமே எடப்பாடியார் மீது நமக்கு விழுந்து விட்டது. அது மட்டுமில்லை.. இவர் மிக மிக எளிமையான முதல்வரும்கூட! ஜோரா இருக்கு உண்மையிலேயே, எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்தான். நேற்றுகூட வெளிநாடு செல்வதற்கு முன்பு, தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன். நான் பெரிய தொழிலதிபர் இல்லை. சாதாரண விவசாயி என்று சொல்லிவிட்டுதான் பிளைட் ஏறினார். கோட்-சூட் ஆனால் லண்டனில் கால் வைத்தவுடனேயே உஜாலுக்கு மாறிவிட்டார் முதல்வர். கோட்-சூட் போட்டு ஆளே அடையாளம் தெரியவில்லை. அந்த போட்டோதான் இப்போது வைரலாகி வருகிறது. எப்பவுமே எடப்பாடியாரின் நெற்றியில் விபூதி பளிச்சென காணப்படும். அதுவும் இப்போது மிஸ்ஸிங். தனிநபர் உரிமை பொதுவாக, வெளிநாட்டுக்கு திமுக, அதிமுக, விசிக, மதிமுக என எந்த கட்சி தலைவர்கள் போனாலும்சரி, தங்கியிருக்கும் நாட்கள் வரை, அந்த நாட்டுக்கு ஏற்றவாறு தங்கது உடைகளை மாற்றி கொள்வது இயல்பு. அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது. இது தனிநபர் உரிமையும்கூட. வித்தியாசம் அந்த வகையில் எடப்பாடியாரும் மாறி உள்ளார். (ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் ஜப்பானுக்கு சென்றபோது, வேட்டி-சட்டையுடனே அந்த நாட்டில் நடமாடினார்) வழக்கமாக, எடப்பாடியாரை ஒயிட் & ஒயிட் வெள்ளை வேட்டி, விபூதி என பார்த்து பார்த்து பழகிய நமக்கு இப்போது கோட்-சூட்டில் பார்க்க வித்தியாசமாக உள்ளது. ஜம்முன்னு இருக்கு தமிழ்நாட்டில் கோட்-சூட் போட்ட முதல்வர்களை பார்ப்பதே அரிதானது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது. கண்ணுபடப் போகுதய்யா.. என்றுதான் பாடத் தோன்றுகிறது படத்தைப் பார்த்தால்.! https://tamil.oneindia.com/news/chennai/cm-edapadi-palanisamys-new-getup-change/articlecontent-pf397419-361490.html
 8. 1 point
 9. 1 point
  தமிழ் ஊர்களின் பெயர் மாற்றப்படாமல் இருக்க இவ்வாறு, குறிப்பாக சிங்கள குடியேற்றங்கள் உள்ள தமிழர் தாயாக நிலங்களில், வளைவுகளை அமைக்கலாம். அமைக்கவும் வளைவுகளில் தமிழ் மொழி கொலை நடக்காமல் இருக்க வேண்டும். அறுபது இலட்சம் என்ற தொகை சற்று பெரிதாகவும் தெரிகின்றது அதேவேளை இந்த பணம் வேறு ஒரு சிறப்பான வழியில் செலவு செய்யப்பட்டும் இருக்கலாம்.
 10. 1 point
  ஏதோ புலம்பெயர் நாடுகளில் இருப்பவன் எல்லாம் உத்தம புத்திரன் போல் ..........
 11. 1 point
  பிறந்த குஞ்சுகள் எல்லாம் ஆண் குஞ்சுகள் போல கிடக்கு.............
 12. 1 point
  பட்டது + படிச்சது + பிடித்தது - 190 காணாமல் போகுதல் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (வெள்ளிக்கிழமை) என்பதால் இங்கு நடக்கும் ஒன்று கூடலுக்கு போகணும். கறுத்த சேட்டை எடுத்து வை என்றேன் மனைவியிடம். என்னப்பா 2 நாளா கால் நடக்க முடியல என்கிறீர்கள் ஒன்று கூடலில் நிற்கமுடியுமா என்றாள் மனைவி. முள்ளிவாய்க்காலில் என் இனம் பெற்ற வலியை நினைப்போம் என்றேன் நான். விடிய எழும்பும் போது கால் வலி இன்னும் அதிகமாகி விட்டது. மனைவிக்கு அதை காட்டிக்கொள்ளாமல் கடைக்கு வந்து ஒரு 3 மணிக்கு அங்கு சென்றேன். ஒரு 10 பேர் நின்றார்கள். மனம் உடைந்து போனது. சரி வருவார்கள் என 5 மணிவரை நின்றேன் ஒரு 20 பேர் தான். அத்தனையும் 30 வருடங்களாக நான் பார்த்த முகங்கள். கேள்வி 1: இந்த 20 பேருக்கும் தான் நாட்டில் காணாமல் போன உறவுகள் இருந்தார்களா? கேள்வி 2: 2009 இறுதிப்போரிலே ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போனதாக தமிழர்கள் சொல்வது பொய்யா? (அப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் காணாமல் போயிருந்தால் அவர்களது உறவுகள் தானும் வராதது ஏன்????) தரவு 1: இதே சதுக்கத்தில் 2009 இறுதிப்போரின் போது கூடிய தமிழ் மக்களின் தொகை 45ஆயிரம் என பிரெஞ்சு காவல்த்துறையின் அறிக்கை கூறுகிறது. தரவு2 : இறுதியாக வந்த அஜித்தின் திரைப்படத்தை பிரான்சில் தியேட்டரில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரம். அப்போ நாம் முற்றாக காணாமல் போய் விட்டோமா?? J’aime Commenter Partager
 13. 1 point
  கூட்டுக்குடும்பம் எண்டால் கக்கூசும் இப்பிடித்தான் இருக்கவேணும்.
 14. 1 point
  என்ன இருந்தாலும் இவ்வாறான ஆடைகள் தடைசெய்யப்படவேண்டும். அதிகமாக பக்திகொண்டவர்கள் தொட்டு கும்பிட்டுவிட்டால் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகமாகிவிடும்.
 15. 1 point
  என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற எதுவோ...ஓர்...மோகம் என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம் ஆழ் நிலையில் அரங்கேற காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமேதான் என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற எதுவோ...ஓர்...மோகம் என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
 16. 1 point
  எல்லாம் மாற்றத்திற்கு உட்படும். அதை நோக்கியே நாம் நகர்கின்றோம். ஒரு சமூகமாக ஒரு மதமாக ஒரு இனமாக ஒரு ஊராக இருக்கும் வரைதான் இவைகள் தொடரும். ஒருவரை ஒருவர் தெரியும் வரைதான் அவரது சாதியும் உயிர்வாழமுடியும். ஏனெனில் அதற்கு பிற அங்க அடயாளம் எதுவும் கிடையாது. வேறு இனங்கள் மதங்களோடு கலந்து பிற மொழிகளை தாய்மொழியாக்கி பிறதேசங்கள் ஊர்களை வாழ்விடமாக்கி நகரும்போது சில தலமுறைகள் கடந்து யார் என்ன சாதி என்பது தெரியாது. இன்று சிங்களவர்களில் கணிசமானவர்கள் ஒருகாலத்தில் தமிழர்களே. அதேபோல் புலம்பெயர் தேசங்களில் கூட தனித்தனி தீவுகளாகி கலைந்து சிதைந்து போகும் போது இந்த சாதீயம் சில தலமுறைகளில் காணாமல் போகும். அதனால் தான் இனத்தின் முடிவும் சாதீயத்தின் முடிவும் ஒரே புள்ளியில் இருப்பதாக அவ்வப்போது பதிவு செய்வதுண்டு. சாதீயம் என்பது தன்னித்துக்குள் வேட்டையாடுவது.. அதிலிருந்து தப்பிபது இயல்பாக நடக்கும். சாதீயம் தன்னை விடுவிக்க இவ்வாறான ஒரு திசையில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இவ் இயக்கம் அடிப்படையில் தேசீயத்துக்கும் இன கட்டமைப்புக்கும் இன ஐக்கியத்துக்கும் எதிரானது. இதன் விழைவு அபாயகரமானது என்பதை வரலாறு எமக்கு கற்பித்துள்ளது இருந்தும் இவ்வாறுதான் எமது பயணம் தொடரும். சாதீயம் அழியவேண்டுமானால் இனம் முற்றாக சிதையவேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்வினை உருவாகும். அவைகள் ஏற்படுத்தும் விதிகள் இவை. அடிக்கடி சலித்துக்கொள்வோம் தமிழனுக்கு ஒற்றுமை இல்லை என்று. அதை என்னுமொரு கோணத்தில் பார்த்தால் ஒற்றுமை இல்லாமல் இருபதே நகர்வதே சரியானது. ஏனெனில் தமிழனாக இனமாக ஒற்றுமையாக இருக்கும்வரை சாதீய இறுக்கமும் இருக்கும். வினைகளும் எதிர்வினைகளும் இயற்கையானது. அதை வெல்லவேண்டுமானால் அறிவும் மானுடநேயமும் அவசியம். அது சத்தியம் இல்லை.
 17. 1 point
  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது மறவேன் மறவேன் அற்புதக் காட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்
 18. 1 point
  மன சஞ்சலத்துடன் தான் இதை எழுத வேண்டி இருக்கு , சாதியைப் பற்றி முற்போக்குத்தனமாக கதைக்க வெளிக்கிட்டு விட்டு , முகம் தெரியாத அந்த பெண் அவருடைய ஆண் நண்பருடன் கதைக்கும் நிலை தாண்டி அப்பாலும் சென்றிருப்பார்கள் என்று படு பிற்போக்குத் தனமாக உங்கள் வக்கிரபுத்தியை வெளிப்படுத்தி அல்லவா எழுதுகிறீர்கள் அண்மைக் காலங்களில் யாழ் வெளியில் முற்போக்குத்த தனமாக சிந்திக்கிறோம் , எழுதுகிறோம் என்று பலரும் , பொது வெளியில் பாவிக்க இயலாத வார்த்தைப் பிரயோகங்களை ( சைக்கோ , முட்டாள் etc ) யும், மற்றயவரின் தனிப்பட்ட பிரத்தியேக வளையத்துக்குள் சென்று இவர் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கருத்திடுவதும் , தனி ஒருவரின் பிரத்தியேக நம்பிக்கைகளை விமர்சிப்பதும் அதிகரித்துக் காணப்படுகிறது மற்றயவரின் பிரத்தியேகங்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்…... எமக்கென்று ஒரு தராதரத்தை பேணிக் கொள்வோம் ...…….
 19. 1 point
  ஏன் குரல் கொடுக்க வேண்டும்? எம் மீது மிகப் பெரும் இனவழிப்பு இடம் பெற்ற போது எந்த எதிர்ப்புக் குரலும் கொடுக்காது காஷ்மீரிகள், காஷ்மீரத்து முஸ்லிம் தலைவர்கள் தம் எஜமானர்களின் மீதான (பாகிஸ்தானியர்கள் மீதான) விசுவாசத்தை காட்டிக் கொண்ட மாதிரி நாம் மெளனமாக இருப்பதில் தவறில்லை. இது பாலஸ்தீனர்களுக்கும் பொருந்தும். விடுதலை என்பது வெறுமனே அறம் சார்ந்தது மட்டுமல்ல, அரசியல் சார்ந்ததும் ஆகும்.