• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. ampanai

  ampanai

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   6,324


 2. புரட்சிகர தமிழ்தேசியன்

  புரட்சிகர தமிழ்தேசியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   9,994


 3. நிலாமதி

  நிலாமதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   9,116


 4. tulpen

  tulpen

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   2,000Popular Content

Showing content with the highest reputation on 09/04/2019 in all areas

 1. 5 points
  மரம் நடுவோம். வளம் காப்போம். தண்ணீரைச் சேமிப்போம்
 2. 3 points
  உங்களது இந்த வீர உரையை யாழ் கள உறுப்பினர்கள. அனைவரும் விண்அதிர கரகோசம் செய்து வரவேற்கிறார்கள். பொது எதிரிக்கு (பிரா) எதிராக யாழகளமே திரண்டிருப்பது மகிழ்ச்சி.
 3. 3 points
  உலகில் எங்கெங்கு மக்கள் போராட்டங்கள் இடம்பெறுகின்றதோ அவற்றுக்கெல்லாம் இந்த நிழலி ஆதரவு கொடுப்பான். கொரிய பெண்களின் போராட்டத்துக்கும் தன் இரு கண்களையும் அகலத் திறந்து ஆதரவு கொடுக்கின்றான். இந்த மக்கள் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமங்களிலும் கூட வெடிக்கட்டும். பிரா என்ற ஒரு ஆடையே உலகில் இருந்து ஒழியட்டும். வெற்றி நமதே!
 4. 3 points
  காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 03 செவ்வாய்க்கிழமை, பி.ப. 03:43 பாடசாலைகளின் விடுமுறைக் காலம் முடிவுற்று, மீண்டும் மூன்றாம் தவணைக்காலம் ஆரம்பித்துள்ளது. பொதுவாக, மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள், உறவினர்களோடு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டிருப்பார்கள். புதிய இடங்களைப் பார்த்தல், புதிய நபர்களைச் சந்தித்தல், அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் என்பன சிறுவர்களைப் போன்று பெரியவர்களுக்கும் பிரியமானதே. அந்த வகையில், நண்பர்கள், மாணவர்கள் அடங்கிய அணியாக அண்மையில் களுத்துறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கு எங்களை தடல்புடலாக வரவேற்றனர். ஒரு வீட்டில் காலை உணவு; இன்னொரு வீட்டில் மதிய உணவு என விதம் விதமான உணவுகளால் வயிறு நிறைந்தது. எங்களது சுதந்திரமான இலகுவான உரையாடலுக்கு, மொழி பிரதான தடைக் கல்லாக அமைந்திருந்தது. பாசங்களை வெளிப்படுத்த, பாசை இடைஞ்சலாக அமைந்திருந்தது. ஒரு கட்டத்தில், மொழி பெயர்ப்பாளர் திக்குமுக்காடினார். அந்த அளவுக்கு பல பக்க உரையாடல்கள் தொடர்ந்தன. மொழி, மனித உள்ளங்களைப் பிரிப்பதை உணர்ந்த அவ்வேளையில், பிற மொழிகளைக் கற்க வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பும் தானாகவே உணர்ந்துகொண்டன. “தமிழ் மக்கள் அனைவருமே ஆயுதம் வைத்திருக்கின்றார்கள்; அவர்கள் பொல்லாதவர்கள் என நாங்கள் அப்போது நினைத்திருந்தோம்” என, ஒரு சிங்களப் பெண்மணி கூறினார். “களுத்துறை ஆட்கள் மிகவும் துவேசம் பிடித்தவர்கள் என்றே நாங்கள் அப்போது நினைத்திருந்தோம்” என்று, ஒரு தமிழ் மகன் கூறினார். அன்று ஓகஸ்ட் 11ஆம் திகதி. அன்றைய தினமே பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஐபக்‌ஷ என ஊடகங்களில் அறிவிக்கப்படுகின்றார். இது, நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த இடத்தில் இருந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. அதுவரை, எங்களுடன் பொதுவான எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், மெல்ல அரசியலுக்குள் அடி எடுத்து வைத்தார்கள். அவர்களுக்குள் இரண்டு பிரதான ஆளும் கட்சிகளது ஆதரவாளர்களும் காணப்பட்டனர். அவர்கள், தாங்கள் சார்ந்த கட்சி குறித்த கருத்துகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. பண்டா - செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால், நாட்டில் இனப்பிரச்சினை ஏற்பட்டிருக்காது என, ஒரு பகுதியினர் கூறினர். கல்வியின் தரப்படுத்தலே, இப்பிரச்சினைக்குக் காரணம் என, மற்றைய பகுதியினர் வாதிட்டனர். நாங்கள் அமைதியாக அவர்கள் கதைப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்தோம். அவர்களது உரையாடலைப் புரிய மொழி புரியவில்லை என்பது ஒரு காரணம். இலங்கை அரசியலில் இருந்த வெறுப்பு (பகையு)ணர்வு, மறு காரணம்.நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள் என ஒருவர் எங்களைக் கேட்டார். கடந்த காலங்களில், இரு கட்சிகளுமே எங்களுக்கு (தமிழ் மக்கள்) தீமைகளைச் செய்துள்ளன என்று, உங்களது உரையாடல்களே தெளிவாகச் சொல்கின்றன. இந்நிலையில், யாருக்கு வாக்களிக்காது விடுவதென்பதே எங்களின் பிரதான பிரச்சினை என்றோம். சற்று நேரம் கடும் அமைதி நிலவியது. அந்த அமைதியின் அர்த்தம் (சொற்கள்) எங்களின் வார்த்தை நியாயமானதென ஏற்றுக்கொண்டது போலக் காணப்பட்டது. “சரி, பழையனவற்றை விடுவோம். இப்போது எல்லாம் சரி தானே, இப்போது என்ன பிரச்சினை?” எனக் கேட்டார் இன்னொருவர். “ஒன்றா இரண்டா, எதைச் சொல்வது எதை விடுவது? எங்கள் பகுதிகளில் பல இளைஞர்கள் படித்துவிட்டு இருக்கின்றார்கள். வேலைவாய்ப்புகள் இல்லாதநிலை தொடர்கின்றது. இந்நிலையில் இங்குள்ள (தெற்கு) இளைஞர்கள் அங்கு மின்மாணி வாசிப்பாளராகக்கூட நியமிக்கப்படுகின்றார்கள். எங்கள் கடலில் எங்கள் மீனவர்கள் கடற்றொழில் செய்யப் பல தடைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், மாத்தறையிலிருந்தும் நீர்கொழும்பிலிருந்தும் வந்து எங்கள் கடலில் எங்கள் மீனைப் பிடித்து எங்களுக்கே விற்கின்றார்கள். அத்துடன், சட்டவிரோத மீன் பிடியிலும் ஈடுபடுகின்றனர். “கொழும்பிலிருந்து பிக்கு ஒருவர் வந்து, படையினரின் உதவியுடன், செம்மலை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் விஹாரை கட்டி, எமது மக்களின் சுதந்திரமான வழிபாட்டுக்கு தடைகள் செய்கின்றார். பஸ்களில் பௌத்தர்களைக் கூட்டிவந்து வழிபாடுகளை மேற்கொள்கின்றார். இவ்விடயம் நீதிமன்றம்வரை சென்று விட்டது. வலி. வடக்கிலுள்ள எங்கள் விவசாய நிலங்களில், படையினர் பயிர் வளர்த்து மருதனார்மடத்தில் எங்களுக்கு விற்கின்றார்கள். பலாலி விமான நிலையம் மீண்டும் இயங்கப் போகின்றது. அங்கும் பெருமளவில் பெரும்பான்மையினரை நியமித்து, எங்களை ஓரங்கட்டி விடுவார்களோ எனப் பயமாக இருக்கின்றது” என அடுக்கிக்கொண்டே போனோம். இவை ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாது. “ஏமத?” (அப்படியா) என ஆச்சரியத்துடன் கேட்டார்கள். இவை ஏற்றுக்கொள்ள முடியாதவைகள் எனக் கூறினார்கள். அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்குத் தெரியப்படுத்தினீர்களா எனக் கேட்டார்கள். பலரிடமும் பலமுறை கூறியும் விளைவு பூச்சியம் என்றோம். “எங்கள் பிரதேச விடயங்களில் எங்களால் முடிவுகள் எடுக்க முடியாதுவிட்டால், அதில் எங்களுக்கு உரித்துகள் இல்லை என்றுதானே பொருள்” எனக் கூறினோம். “இதில், தமிழர், சிங்களவர் எனப் பார்க்காது, குறித்த பிரதேச மக்களின் விடயமாகப் பார்க்க வேண்டும்” எனக் கூறினோம். இதனையே நாங்கள் 1948ஆம் ஆண்டு தொடக்கம் கோரி வருவதாகக் கேட்டுக்கொண்டோம். அனைத்தையும் பொறுமையாகவும் அமைதியாகவும் கேட்டார்கள். ஆகவே, ஆயுதப் போர் நடைபெற்ற காலங்களிலும் சரி ஆயுதப் போர் அமைதியாக உள்ள காலங்களிலும் சரி, தமிழ் மக்களது பிரச்சினைகள் அதன் மறுதரப்பான சிங்கள மக்களிடம் உண்மையாகவும் நியாயமான முறையிலும் மொழி பெயர்ப்புச் செய்யப்படவில்லை. பிழையாகவும் முறைகேடாகவும், பல முறைகள் பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப கூறி, பெரும்பான்மை மக்களின் ஆழ் மனங்களில், தமிழ் மக்கள் தொடர்பில் பிழையான, தப்பான எண்ணங்கள் விதைக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து சிங்கள மக்கள் வெளியே வரவேண்டும். இதுவொரு வகையில் பிரச்சினையின் முக்கிய தரப்பு அறையின் உள்ளே தாழ்ப்பாள் இட்டு பூட்டியிருப்பதற்குச் சமம் ஆகும். பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. மருத்துவம், கல்வி, போக்குவரத்து சீர் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல்கள் நடக்கின்றன. போர் இல்லாது, பிரச்சினைகள் இல்லாது தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்கள் என்ற எண்ணத்திலேயே கணிசமான சிங்கள மக்கள் இன்னமும் இருக்கின்றார்கள். இவ்வாறே சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள ஊடகங்கள் மெய் திரித்து பொய் உரைத்து வருகின்றன. இவ்வாறாக தமிழ் மக்கள் அனுதினம் அனுபவிக்கும் பிரச்சினைகளைக் கணிசமான சிங்கள மக்கள் அறியாது இருக்கையில், அடிப்படைப் புரிதல்கூட இல்லாது அவர்கள் இருக்கின்றார்களே என எவ்வாறு எங்களால் (தமிழ் மக்கள்) கூற முடியும்? ஆகவே, இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். சிங்கள மக்களை நாடி, அவர்களது வீட்டுவாசல் தேடிச்செல்ல வேண்டும். நாங்கள் ஹம்பாந்தோட்டைக்கும் அநுராதபுரத்துக்கும் செல்வோம். எங்கள் அரசியல்வாதிகள் எங்கள் வீட்டுக் கோடியில் நின்று கத்துவதைக் காட்டிலும், அவர்களது வீட்டு முற்றத்துக்குச் சென்று எங்கள் பிரச்சினையைச் சொன்னால் என்ன? மொழி வல்லமை படைத்த எங்கள் அரசியல் ஜம்பவான்கள் இதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். அதைச் சொல்வதில் தடங்கல்கள், சிக்கல்கள் வந்தால்கூட அதுகூட செய்திதானே? தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினையை வெளிப்படுத்தக்கூட சுமூகமான சூழ்நிலை இலங்கையில் இன்னமும் இல்லை என்பதை உலகம் உணரட்டுமே. நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தமிழ் அரசியல்வாதிகள் ஹம்பாந்தோட்டையிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கோ அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கோ, கரவெட்டியிலும் களுவாஞ்சிக்குடியிலும் வைத்துக் கூறிப் பயன் எதுவுமில்லை. ஏனெனில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களது அனைத்துப் பிரச்சினைகளும் நன்கு தெரியும். சில வேளைகளில் தமிழ் அரசியல்வாதிகள் அறிந்ததைக் காட்டிலும் அதிகமாகத் தெரியும். அவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கு வந்து வடிக்கும் கண்ணீர் அனுதாபக் கண்ணீர் அல்ல. வெறும் முதலைக் கண்ணீர். இப்படியே கதைத்துக் கொண்டு இருக்கையில் நாவற்குழி புகையிரத நிலையம் வந்தது. எங்கட தமிழ் அரசியல்வாதிகள் என்னத்தைத் தான் உருப்படியாகச் செய்கின்றாங்கள். இவங்களைப் பற்றிக் கதைத்தால் எனக்கு இரத்தம் கொதிக்கும் என்றார் ஒரு முதியவர் சற்றுக் கோபத்துடன். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இவர்களை-நினைச்சா-இரத்தம்-கொதிக்குது/91-237827
 5. 2 points
  “நான் பிக்குணியாகி 50 வருடங்களாகிவிட்டது. இதற்கு முன் ஜயஸ்ரீ மகாபோதியின் மேற்தளத்திற்கு இரண்டு தடவைகள் சென்று வணங்கியிருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் எங்களை போக விடுவதில்லை.” இப்படி கூறியிருப்பவர் சாதாரண பெண் அல்ல. இலங்கை பிக்குணி அதிகார பீடத்தின் பொதுச்செயலாளரான “கொத்மலே ஸ்ரீ சுமேத” என்கிற பிக்குணி. ஸ்ரீ மகாபோதியின் மேற்தளம் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக நெடுங்காலம் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஓகஸ்ட் 13 அன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச அந்த மேற்தளத்திற்குச் சென்று போதி மரத்தை வணங்கிச் சென்ற செய்திகள் வெளிவந்ததும் மீண்டும் இது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாயவும் அவரின் சகோதரர் மகிந்த மற்றும் பிரமுகர்கள் சகிதம் தமது பிரச்சாரப் பணிகளின் அங்கமாக ஸ்ரீ மகாபோதியை வணங்கச் சென்றிருந்தனர். அப்போது அங்கே அவர்களுடன் ஷிரந்தி ராஜபக்சவும் ஸ்ரீ மகா போதியின் மேற்தளத்திற்கு சென்று வணங்கி வந்திருந்தார். சிங்கள ஊடகங்களிலும், சமூகத்திலும் இந்த செய்து இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. அனைத்துப் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஷிரந்தி எப்படி அங்கே சென்றார் என்கிற கேள்வி பலமாக எழுந்துள்ளது. ஆனால் பௌத்த தலைமைப் பீடங்கள் அத்தனையும் மகிந்த தரப்பை ஆதரவளித்து வருவதால் இந்த சம்பவத்தை அவர்கள் இந்த சர்ச்சையில் இருந்து ஒதுங்கி கண்டும் காணாது இருப்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கு முன்னர் சந்திரிகா பண்டாரநாயக்க, சஜித் பிரேமதாசவின் மனைவி, சரத் பொன்சேகாவின் மனைவி, ஜெனெரல் தயா ரத்நாயக்கவின் மனைவி, அமைச்சர் சந்திராணி பண்டார போன்றோர் ஸ்ரீ மகா போதியை தொட்டு வணங்கிவிட்டு வந்திருக்கின்றனர். அது மட்டுமன்றி இதற்கு முன்னர் ஜே.ஆரின் ஆட்சி காலத்தில் பிரித்தானிய மகாராணி எலிசபத் இலங்கை வந்திருந்த போதும் கூட அவரை ஜே.ஆர். ஸ்ரீ மகா போதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மாதவிடாய் காரணமாக பெண்கள் தூய்மையற்றவர்கள் என்றும், எனவே ஸ்ரீ மகா போதி என்கிற புனிதப் பிரதேசத்திற்குள் பெண்கள் நுழைவதால் அதன் தூய்மை கெட்டுவிடும் என்கிற ஐதீகம் பௌத்தர்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. இது வெறும் நம்பிக்கையோடு நின்று விட்டால் கூட ஒரளவு சகிக்கலாம். ஆனால் அதையும் தாண்டி பெண்களை அங்கு அனுமதிக்காதபடி தடையும், கண்காணிப்பும் இருப்பது தான் இதன் உச்சபட்ச பாரபட்சம். மூட நம்பிக்கைகளும், தவறான ஐதீகங்களும், பாரபட்சமான மரபுகளும், சடங்குகளும் தற்போதைய காலத்தின் நவீன மனிதம் மிக்க சமத்துவ, ஜனநாயக சிந்தனை வளர்ச்சிகளால் குறைந்து கொண்டும், இல்லாதொழிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் இங்கே முன்னர் இல்லாத அசமத்துவமும், பாரபட்சமும் புதிதாக திணிக்கப்பட்டு வருவது “இலங்கையின் பௌத்த நடைமுறை”யும், பௌத்த நடத்தையும் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்றே கேட்க வேண்டியிருக்கிறது. நமது பிரச்சினை ஷிரந்தி போதிமரத்தை வணங்கியதல்ல மாறாக அதே உரிமை ஏன் ஏனைய அனைத்துப் பெண்களுக்கும் மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் சந்திரிகா அங்கு சென்று வணங்கியிருக்கிறார். சமீபத்தில் மைத்திரிபாலவின் மனைவி ஜெயந்தி புஷ்ப குமாரி சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது அவர் கடும் சுமவீனமுற்றிருந்த போது அவருக்கு ஆசி வேண்டி 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி இதுபோலவே ஷிரந்தி இந்த ஸ்ரீ மகா போதி மரத்தை வணங்கிச் சென்றார். அப்போதும் கூட இதே போன்று ஊடகங்களில் அது சர்ச்சைக்குள்ளானபோதும் மகிந்த ராஜ்ஜியத்தின் செல்வாக்கு அந்த சம்பவத்தை ஊதிப்பெருப்பிக்க விடவில்லை. அதுபோல தனது பாரியாருக்கு உள்ள உரிமை இந்த நாட்டு பெண் பிரஜைகள் அனைவர்க்கும் இருக்கிறது என்று கூட அறிவிக்க முன்வராத நாட்டுத் தலைவர்கள் அவர்கள். இத்தனைக்கும் ஷிரந்தி ராஜபக்ச பௌத்த மதத்தைச் சேர்ந்தவருமல்ல. அவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அனைவரும் அறிவர். ஆக அதிகாரமும், செல்வாக்கும் தான் அவர்களின் தீட்டையும், துடக்கையும் தூய்மைப்படுத்துகின்றனவா? அதிகாரமும் செல்வாக்கும் இல்லாத ஒரே காரணத்தால் தான் பாமரப் பெண்கள் தூய்மை இழந்து கிடக்கிறார்களா? உரிமை மறுக்கப்படுவதற்கான அளவுகோள் அது தானா? இது பற்றி பிரபல ஜனநாயக செயற்பாட்டாளரான தம்பர அமில தேரர் கடந்த ஓகஸ்ட் 19 அன்று நடத்திய ஊடக மாநாட்டில் தனது எதிர்ப்பை இப்படி பதிவு செய்தார். ஸ்ரீ மகா போதி புனித வெள்ளரசு மரத்தைத் தான் சிறீ மகாபோதி என்கிறோம். புத்தர் ஞானம் பெற்ற அந்த வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இது. கலிங்கப் போரின் இறுதியில் யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட மாபெரும் மனிதப் பேரழிவினால் அசோக மன்னன் (கி.மு : 304-232) பௌத்த பிக்குவின் உபதேசத்தைப் பெற்று பௌத்த மதத்தைத் தழுவிக்கொண்டான். அசோகனின் மகன் மகிந்தன், சங்கமித்தை ஆகியோரும் பௌத்த மதத்தை தழுவி பௌத்தத் துறவிகளானார்கள். பௌத்த மதத்தை பரப்புவதற்காக இருவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. அசோகனின் இதே காலப்பகுதியில் இலங்கையை ஆண்ட தேவநம்பியதிஸ்ஸன் அசோகனின் சமகாலத்து நண்பன். தேவநம்பியதிஸ்ஸனின் (கி.மு : 250-210) வேண்டுகோளின் பிரகாரம் அசோகன் இலங்கையில் பௌத்தத்தை நிறுவுவதற்காக மகிந்தனையும் சங்கமித்தையையும் அனுப்பினான். இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டு வந்து சேர்த்தவர் அந்த மகிந்தனே. முதலில் மகிந்தனே இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனுக்கு, புத்தர் அமர்ந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்றைத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தான். இதனை நிறைவேற்று முகமாக அசோகனே அவ்வெள்ளரசு மரம் இருக்கும் இடம் சென்று கிளையொன்றை வெட்டுவித்து சங்கமித்தவிடம் கொடுத்து அனுப்பியதாகவும் இலங்கையின் பௌத்த வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இலங்கையில் பௌத்த பிக்குணிகளின் மரபும் இங்கிருந்து தான் தொடங்குகிறது. இலங்கையின் பிக்குணி சாசனம் ஆரம்பிக்கப்பட்டதும் சங்கமித்தாவின் வருகையுடன் தான். இதன் போது தான் தேவநம்பியதிஸ்ஸனின் சகோதரன் மகாநாகனின் மனைவி அனுலா தேவியும் அவருடன் 500 பெரும் பிக்குணிகளாக ஆனார்கள். இலங்கையின் முதலாவது பிக்குணி அனுலா தேவி. புனித வெள்ளரசு மரம் கி.மு 249 இல் தேவநம்பியதிஸ்ஸனால் நடப்பட்டதாக இலங்கையின் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவென்று கூறப்படுவது வழக்கம். புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம் இந்தியாவில் யுத்தத்தால் அழிக்கப்பட்ட நிலையில் பிற்காலத்தில் மீண்டும் இலங்கையில் இருந்து ஒரு கிளை கொண்டு செல்லப்பட்டு நடப்பட்டது. அந்த கிளையே இன்றும் புத்தகயாவில் வணங்கப்படுகிறது என்பது இன்னொரு கிளைக்கதை. இனி விடயத்துக்கு வருவோம். இலங்கைக்கு வெள்ளரசு மரக் கிளையை பத்திரமாக மடியில் வைத்து பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்ததே ஒரு பெண்தான் என்பதைக் கவனிக்கவேண்டும். பிக்குணியான “கொத்மலே ஸ்ரீ சுமேத” சமீபத்தில் பி.பி.சி யிடம் (2019 ஓகஸ்ட் 17) அளித்த பேட்டியில் கூறும்போது அப்படி எந்தவித தடையையும் பெண்களுக்கு நாங்கள் விதிக்கவில்லை என்று ஸ்ரீ மகாபோதியைச் சேர்ந்த பிக்கு ஒருவரும் பி.பி.சி.யிடம் கூறியிருக்கிறார். ஆனால் இந்த விதிகள் உத்தியோகபூர்வமாக நேரடியாக பிரயோகிக்கப்படவில்லை. மேலும் தீட்டையும் துடக்கையும் ஏற்றுக்கொள்ளும் சாதாரண பெண்கள் தாமாகவே அந்தத் தணிக்கை நியாயமானது என நம்பிக்கொண்டு தம்மை தாமே அங்கு செல்வதை தணித்துக்கொள்கின்றனர். புனிதத்தைக் கெடுப்பது தெய்வகுற்றமாக புனையப்பட்டுள்ள கட்டுக்கதைகளை சாதாரண பெண்கள் நம்பிக்கொண்டு இதனை எதிர்க்காமல் தவிர்த்து விடுகின்றனர். என்று வருடாந்தம் கொழும்பிலிருந்து ஸ்ரீ மகாபோதி தரிசனத்திற்காக செல்லும் ஒரு பெண் யாத்திரிகை பி.பி.சிஇடம் தெரிவித்திருக்கிறார். தலதா பத்திருப்பு – பெண்களுக்குத் தடை தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியும் பெண்களின் தீட்டு பட்டுவிடக்கூடாது எனக் கூறி பெண்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவே இன்றும் இருக்கிறது. இலங்கையில் பௌத்தர்களின் மிக முக்கிய புனிதஸ் தளமாகக் கருதப்படுவது தலதா மாளிகை. அங்கே புத்தரின் புனிதப்பல் (Sacred Relic of the tooth of Buddha, Buddh-dantya) வைக்கப்பட்டு வணங்கப்பட்டுவருகிறது. கலிங்க அரசன் யுத்தத்தில் தோல்வியுறும் தருவாயில் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தை கணக்கில் கொண்டு தான் அதுவரை பாதுகாத்து வந்த புத்தரின் தாதுப்பல்லை இளவரசன் தத்த மற்றும் இளவரசி ஹேமமாலாவிடம் கொடுத்து அனுப்பினார். பௌத்த யாத்திரிகை போல வேடமிட்டு இரகசியமாக உடலில் மறைத்து வைத்துக்கொண்டு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்தார் ஹேமமாலா. “தாதுவம்சம்” என்கிற காவியத்தில் இவர்கள் இந்த தாதுப்பல்லை இலங்கைக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்காக பட்ட பாடுகளை விபரிக்கின்றன. பிரேமதாச ஜனாதிபதியாக ஆன போது அவர் தனது பதவியேற்பை தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியில் இருந்து செய்தார். அவருடன் அவரின் குடும்பத்தினரும் இருந்தனர். அவரின் மனைவி ஹேமா பிரேமதாச பத்திருப்பு பகுதிக்கு சென்றது பெரும் சர்ச்சையாக ஆனது. இன்றளவிலும் அது உரையாடப்படுகிறது. இலங்கைக்கு மாதக்கணக்காக புத்தரின் தாதுப்பல்லை உடலில் மறைத்துக்கொண்டு வந்த ஹேமமாலாவிடம் காணாத தீட்டை எப்படி இன்று சகல பெண்கள் மீதும் பிரயோகித்து வருகிறார்கள். தீட்டும் துடக்கும் இதே தீட்டிக் காரணம் காட்டி சபரிமலைக் கோவிலுக்கு பெண்கள் செல்வதை தடை செய்திருந்ததையும் அதற்கெதிரான வழக்கின் தீர்ப்பு சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டிருந்ததையும் அறிவீர்கள். அந்த தீர்ப்பின் படி அந்தத் தடை சட்ட ரீதியில் தடுக்கப்பட்டது. ஆனால் பெருவாரி ஆண்களை எதிர்த்து அங்கே செல்வதை பெண்களே தவிர்த்து வருகின்றனர். உலகில் உள்ள எந்த மத விதிகளும் பெண்களால் உருவாக்கப்பட்டதில்லை. ஆண்களே உருவாக்கினார்கள். ஆணாதிக்க சமூகத்தை மறுத்து தொழிற்பட முடியாத பெண் சமூகம் அதனை பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த விதிகளை அவர்களே பேண வேண்டும் என்கிற நம்பிக்கைக்கு அவர்களே ஆளாக்கப்பட்டார்கள். அதன் விளைவு; பெண்களே பெண்களுக்கு எதிரான ஆசாரங்களை பாதுகாத்து நியாயப்படுத்தி, அமுல்படுத்தும் நிலைக்கு ஆனார்கள். அதாவது ஆணாதிக்க நிகழ்ச்சிநிரலை தாமே ஏற்று நடத்தினார்கள். அதன் பின்னர் ஆணாதிக்க விதிகளையும், நிர்ப்பந்தங்களையும் அமுல்படுத்த நேரடியாக ஆண்கள் தேவைப்பட்டதில்லை. பெண்களே அதனைப் பார்த்துக் கொண்டார்கள். பாலுறவுக்கு பாலுறுப்பு வேண்டும், பரம்பரை தழைக்க பாலுறுப்பு வேண்டும். ஆனால் அதன் இயற்கை இயல்பு மட்டும் எப்படி தீட்டானது. அதைக் காரணம் காட்டி எப்படி உரிமைகளைத் தடுக்க முடிகிறது? சடங்குகளுக்கும், வைதீக மரபுகளுக்கும் அப்பால் மனசாட்சியின் பால் ஆண்கள் சிந்திக்க முடியாதா? தன்னை ஈன்ற தாயை, வாழ்க்கையின் சக பயணியை, தான் பெற்ற மகளை தீட்டு - துடக்கின் பேரால் பலவற்றிலும் ஒதுக்கி வைக்கும் நிலையை நெஞ்சில் ஈரமுள்ள ஆண்கள் ஆதரிக்க முடியுமா? சகிக்க முடியுமா? எதிர்க்க வேண்டா? கொதித்தெழ வேண்டாமா? வைதீக நம்பிக்கைகள், சடங்குகள், மரபுகள் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் நவீன சமூகத்தில் உலகம்; உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்துக்கும், சமத்துவத்துக்கும் முன்னுரிமை கொடுத்து அடுத்தக் கட்டத்திற்கு வளர்ந்து கொண்டு செல்கிறது அரசியல் பலம், அதிகார பலம், பண பலம் போன்ற பின்னணியையுடைய VIP க்களுக்கு மட்டும் சலுகையையும், விதிவிலக்கையும் தரும் இந்தப் போக்கை நிச்சயம் நாம் எதிர்க்க வேண்டும். மற்ற பெண்களுக்கு இல்லாத அனுமதி ஷிரந்தி ராஜபசவுக்கும் இருக்கக் கூடாது என்பதல்ல நமது வாதம். ஷிரந்திக்கு இருக்கக் கூடிய அதே உரிமையும், சலுகையும் அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே நமது முழக்கம். நன்றி - தினக்குரல் https://www.namathumalayagam.com/2019/09/forbiddenbuddhism.html?fbclid=IwAR2iRi3osVxij43ywC3ID-1zhS4YWD-a_i5IZQlaqyVfAwW0R8YFY7CBoiA
 6. 2 points
  இந்த மேத்தா போன்ற ஆய்வாளர்கள் கூட இனப்படுகொலையாளிகளே. ஒரு நாட்டின் முழுமையாயான வரலாற்றை இன உணர்வுகளை புரியாமல் வெறுமையாக ஒரு இராணுவ தீர்வு என்ற கோணத்தில் அணுகி, சிங்கள இனவழிப்பிற்கு உதவிய பின்னர் மீண்டும் இருப்பை நிலைநாட்ட எழுதுகிறார்கள். இந்திய அரசு செய்த தமிழர் படுகொலைகளை ஒப்புக்கொள்ளாமல் எழுத்துபவர்கள் வெறும் எழுத்துக்களுக்காகவே !
 7. 2 points
  101 % உண்மை.. ! அது 3000 ம் ஆண்டு வாக்கில் நடக்கலாம் .. அது சரி..உலகையே ஆளும் நிலைக்கு வரும் போது இலங்கை எம்மாத்திரம் என் மிலிபன் விசுகோத்து ..?
 8. 1 point
  3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான் ! அதிசய கண்டுபிடிப்பு.! குரங்கிலிருந்து மில்லியன்கணக்கான ஆண்டுகளாக பரிமாண வளர்ச்சி பெற்று மனிதன் தற்போதுள்ள தோற்றத்தை அடைந்தான் என்பதைப்பற்றியது அல்ல இது. 3.5 மில்லியன் ஆண்டுகள் எனினும் சமீபத்தில் எத்தியோப்பியாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மண்டையோடு ஒன்று, நம் முன்னோர்கள் உண்மையில் எப்படி தோற்றமளித்தனர் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி-ஐ சேர்ந்த மானுடவியல் தொல்லியலாளரும், இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய ஆய்வாளருமான யோகன்ஸ் ஹெய்லே சிலாஸீ கூறுகையில், இது ஒரு வாழ்நாள் கண்டுபிடிப்பு மற்றும் இதைவிட உற்சாகமானது வேறெதுவும் இல்லை. தொல்பொருள் பதிவுகளில் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு பழமையானவை இதுவரை கண்டறிந்திராத நிலையில், முற்கால மனித மூதாதையரின் முழுமையான மண்டைஓட்டைப் பற்றி நாம் இப்போது பேசிவருகிறோம் என்கிறார். பெரிய தாடை, நீண்ட வடிவம் எம்ஆர்டி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொல்பொருள், லூசி இனங்களின் ஆஸ்ட்ராலோபிதிகஸ் அபரென்சிஸ்-ன் நேரடி மூதாதையர் என நம்பப்படும் ஆஸ்ட்ராலோபிதிகஸ் அனாமென்சிஸ் மூதாதையர் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தான் நமது மூதாதையர்கள் இரண்டு கால்களை பயன்படுத்தி தரையில் நடக்க கற்றுக்கொண்டனர். அதுமட்டுமின்றி இந்த சமயத்தில் தான் அவர்களது முகத்தில் மனிதகுரங்கு போன்ற அம்சங்களும், பெரிய தாடை, நீண்ட வடிவம் மற்றும் சிறிய மூளையையும் கொண்டிருந்தனர். சாகிட்டல் கிரீஸ்ட் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி,எம்ஆர்டி-ல் நீண்ட முகத்துடன் கூடிய வலுவான உடல் மற்றும் சாகிட்டல் கிரீஸ்ட்(sagittal crest) எனப்படும் தாடை தசைகளுக்கு வலுசேரக்கும் தலையில் உள்ள எலும்பும் குறைவில்லாமல் வளர்ந்திருந்தது. தனிமைபடுத்தப்பட்ட தாடை பாகங்கள் மனித இன பரிணாம வளர்ச்சிக்கு லூசி முக்கிய பங்காக இருந்தாலும், அதை போதுமான தகவல்களை கொண்டிராததால் இதுவரை அவற்றின் மூதாதையர்களைப் பற்றி கவனம் செலுத்தவில்லை. அவர்களால் கண்டுபிடிக்கமுடிந்தது எல்லாமே தனிமைபடுத்தப்பட்ட தாடை பாகங்கள் மற்றும் பற்கள் மட்டுமே. எனினும் எம்ஆர்டி பற்றிய சமீபத்திய கண்டுபிடிப்பு அனைத்தையும் மாற்றிவிட்டது. நமது பரிணாம வளர்ச்சி எம்ஆர்டி தொல்பொருளின் வயது அது லூசி இனத்துடன் சுமார் 100,000 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தது என்ற உண்மையை வெளி கொண்டு வந்துள்ளதுடன், அதன் மூதாதையர் ஒன்றாக வாழவில்லை என்ற முந்தைய கணிப்பையும் பொய்யாக்கியுள்ளது. நாம் இங்கு பார்ப்பது நமது பரிணாம வளர்ச்சி, ஒரு இனத்திலிருந்து மற்றொன்றிற்கு முழுவதுமாக நேரடியான மாற்றித்தின் மூலம் வந்ததல்ல என்பதையே குறிக்கிறது என்கிறார் ஹெய்லே. https://tamil.gizbot.com/scitech/is-this-how-ancestors-looked-nearly-3-5-million-years-ago/articlecontent-pf164184-023017.html
 9. 1 point
  பிரித்தானியாவும் பிரெக்சிட்டும் Britain and brexit பா.உதயன் பிரித்தானியாவில் இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு மிக முக்கியமான செய்தியாக இன்று பிரெக்ஸிட் (brexit) இருப்பதை காண முடிகின்றது .சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது . இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார் . இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய முன்னை நாள் பிரதமர் தெரசா மே கடந்த மூன்று வருடங்களாக ஐ .யூனியனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு ஒப்பந்தம் செய்து மூன்று தடைவைகள் பிரித்தானிய பாராளுமன்றத்தினால் விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட பின்பு பிரித்தானிய பழைமைவாத நரிகளோடு நாடகம் ஆடிய தெரசா மே இறுதியில் ஆட்டம் இழந்து பதவி விலகினார் . இதை தொடர்ந்து இன்னும் ஒரு பழைமை வாத நரியாகிய போரிஸ் ஜோன்சன் பிருத்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானிய பிரிய வேண்டும் (பிரெக்ஸிட்)என்று ஆரம்பத்தில் இருந்து போராடி வந்தவர் தான் இந்த புதிய பிரதமர். பல சட்ட சிக்கல்களையும்,வேல்ஸ் ,வடஅயர்லாந்து ,ஸ்காட்லாந்து போன்ற ஒன்று சேர்ந்த பிரித்தானியாவின் இறைமைக்கும் அதே போல் பக்கத்து நாடு அயர்லாந்து உடனான பொருளாதார ஒப்பந்தம்,எல்லை கட்டுப்பாடு போன்ற பல பொருளாதார அரசியல் சட்ட சிக்கலோடு ஐரோப்பிய யூனியனோடு இன்றும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமல் ஒரு இழுபறி நிலையே காணப்படுகிறது . பல ஆண்டு வரை ஐ .யூ உடன் சேர்ந்து இருந்த பிரித்தானிய முழுமையான ஓர் விவாகரத்தை வேண்டி நிற்கிறது .தெரேசா அம்மையார் தனது மந்திரி சபையுடன் ஒரு முழுமையான யுத்தம் நடாத்தி ஆட்டம் இழந்து சென்றிருக்கிறார்.இதே போன்று புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரெக்ஸிட் ஓடு போராடும் ஒரு நிலைமை ஏற்பட்டு இருகிறது . பிரித்தானிய அரசியல் வரலாற்றில்இது ஒரு பெரிய சவாலாகவே காணப்படுகிறது . ஐரோப்பிய யூனியனிடம் இருந்து பிரித்தானிய பிரிய வேண்டும் என்ற ஒரு பழமை வாத தேசியவாத சித்தனையோடு ஒரு சாராரும் மற்றொரு சாரார் பிரியக் கூடாது என்ற வாதத்தோடும் இரு பகுதியார்க்கும் இடையே ஒரு இடியப்ப சிக்கல் பிரச்சினையாக பிரித்தானியாவுக்கு பெரும் ஒரு தலை இடியாக பிரெக்ஸிட் மாறியிருகிறது . ஐ .யூ உடன் இருந்து பிரித்தானிய பிரிந்து போகும் இடத்து பிரித்தானியப் பொருளாதாரம் ஒரு பின்னடைவை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .ஐ .யூ ஊடாக பிரித்தானியாவுக்கு வரும் எந்த வித நுகர்வுப் பொருட்களும் வரி விலக்குடனே தான் வந்து சேருகின்றன .ஐ .யூ .இருந்து பிரித்தானிய எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் விலகுமிடத்து பிரித்தானியாவுக்கள் வந்து சேரும் அனைத்து பொருளுக்கும் பிரித்தானிய வரி செலுத்தியாகவேண்டும் . இதனால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தள்ளப்படுவர் .எல்லா வித நுகர்வுப் பொருட்களின் விலை முன்பை விட அதிகரித்தே காணப்படும் .இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவர் .இது மட்டும் இன்றி பல தொழிற்சாலைகள் தாங்கள் இறக்குமதி செய்யும் உற்பத்தி சாதனங்களுக்கு முன்பை விட கூடுதலான பணம் செலுத்த வேண்டும் . இது மாத்திரம் இன்றி தோழிலாளர் பற்றா குறையும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் . இவை அனைத்தையும் விட முக்கியமான பிரச்சினையாக இருப்பது(backstop )என பேசப்படும் அயர்லாந்துக்கும் பிரித்தானியாவோடு சேர்ந்து இருக்கும் வட அயர்லாந்துக்கும் இடையிலான(boder) எல்லை பிரச்சினையாகும் இது காலவரைக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் நடமாட்டம் நுகர்வு பொருட்கள் என்பன கட்டுபாடு இல்லாமால் நடை பெற்று வந்தன .பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து போகுமிடத்து பிருத்தானியாவுடன் சேர்ந்து இருக்கும் வட அயர்லாந்துக்கும் அருகில் இருக்கும் அயர்லாந்து இடையிலான மக்கள் நடமாட்டம் பொருளாத ஒப்பந்தம் நுகர்வு பொருட்களின் கட்டுப்பாடு இல்லாத சேவை முதலிய முக்கிய சேவைகளை எப்படி தீர்ப்பது என்ற சிக்கலே இன்றும் ஐரோப்பிய யூனியனோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாத தீர்க்கப்படாத பிரச்சினையாக தொடர்கிறது . இது இப்படி காணப்படும் இடத்து பிருத்தானியா ஏதோ ஒரு வழியில் ஐ .யு உடன் ஒரு ஒப்பந்தத்துக்கு போக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது . ஐ .யூ உடன் அங்கத்துவம் பெறும் எந்த ஐரோப்பிய நாடுகளும் அதன் சட்ட வரைபுக்கு உட்பட்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது . அப்பொழுது தான் அவரகள் single market எனப்படும் ஒற்றை சந்தையிலோ அல்லது customs union ஒரு வரி விலக்கு சந்தையிலோ தம்மை இணைத்து கொள்ள முடியும் . இவை மாத்திரம்இன்றி ஐ .யூ .நின் நான்கு முக்கிய ஒப்பந்தங்களாக The free movement of goods ,services,capital,and persons within the e.u.are the famous four freedom the treaty of Rome அதாவது ஐ.யூநாடுகளுடையே பொருட்கள்,சேவைகள்,மூலதனம் ,மக்கள் ,இலகுவாக போய் வர வேண்டும் .ஆனால் பிரித்தானிய முதல் மூன்று சேவைகளுக்கு மாத்திரமே தாங்கள் உடன் படுவதாகவும் நான்காவதான ஐரோப்பிய மக்களின் சுதந்திரமாக பிரித்தானியாவுக்குள் வந்து குடி உரிமை தொழில் வாய்ப்புகள் என்பன முழுமையாக தடை செய்யப்படும் என்றும் கூறி வருகின்றது . இது சுய நலன்களோடு கூடிய ஒரு cherry picking போன்றது என்று ஐ .யூ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது .ஐரோப்பிய யூனியனின் ஒற்றை சந்தைக்கான (single market )ஒப்பந்தங்களில் இருந்து மீறுவதாகவே இது அமையும் என்று ஐரோப்பிய யூனியன் தொடர்ந்து மறுத்து வருகின்றது பிரித்தானியாவின் புதிய உள்நாடு அலுவலக அமைச்சராக பதவி ஏற்று இருக்கும் பிரீதி பட்டேல் பிருத்தானியாவில் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கும் இனிமேல் புதிதாக பிரித்தானியாவுக்குள் வேலை தேடியோ அல்லது அங்கு வந்து நிரந்தர குடி உரிமை பெறுவதற்வதற்காக வரும் ஐரோப்பிய யூனியன் மக்களுக்கும் புதிய குடிவரவு சட்டங்களை அமுல் படுத்தவுள்ளார் . பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல் 31ம் திகதி ஐப்பசி மாதம் முழுமையாக விலக்குமிடத்து அந்த நாளில் இருந்தே ஐரோப்பிய யூனியனில் இருந்து வரும் மக்களின் சுதந்திரமான நடமாட்டம்(freedom of movement )நிறுத்தப்படும் என்று மிகவும் கண்டிப்பான ஒரு சட்டத்தை அமுலாக்குவதாக கூறி இருக்கிறார் .இவரின் இந்த கருத்துக்கு எதிர் கட்சியான தொழிலாளர் கட்சி உட்பட பல சட்டவாக்க அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டும் அன்றி இது உடனடியாக நடை முறைக்கு சாத்தியப்படாததென்றே கூறி வருகின்றனர் . எதிர் காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரும் நடுத்தர வர்க்க ஏழை தொழிலாளிகளினதும் ,அகதிகளாக தஞ்சம் கேட்டு வருவோரும் மிகவும் கடுமையான சட்ட கொள்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் நிலைமை ஏற்படலாம் . எது எப்படி இருப்பினும் பிரித்தானியாவின் அரசியல் பொருளாதார சுய நல அடிப்படையில் எப்படியான புதிய ஒழுங்குகள் சட்டங்கள் வர இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் . பிருத்தானியாவை 1509 தொடங்கி 1547 வரை ஆண்ட 8 ம் ஹென்றி மன்னன் ஒரு சர்வாதிகார ஆட்சியை( authoritarian rule) நடத்தினான் 6 தடவை திருமணம் செய்த இவன் தனது இரு மனைவிமாருக்கு கழுத்தைஅறுத்து (behead) கொலை செய்தான் .அன்று அரசனாய் இருந்த ஹென்றி மன்னன் போலவே இன்றைய பெரிய இராச்சியத்தின் பிரதமராய் இருக்கும் போரிஸ் ஜோன்சன் செயல் படுவது போல் தெரிகின்றது . பாராளுமன்றுக்கு எதிரான ஒரு அரசியல் சட்ட மரபுகளை மீறி பாராளுமன்றத்தை கூட்ட விடாமல் பல வாரங்களுக்கு ஒத்தி வைக்கும் அனுமதியை பிரித்தானிய மகா ராணியிடம் இருந்து அனுமதி பெற்று இருக்கிறார் .இது எதிர் காலத்தில் பெரும் சிக்கலை இவருக்கு ஏற்படுதும் என்பது தெரிகிறது .இவர் ஐரோப்பிய யூனியனோடு ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்து கொள்வாரா,அல்லது எந்த ஒப்பந்தமும் இன்றி வெளியேறுவாரா , ஆட்டம் இழப்பாரா ,அல்லது புதிய தேர்தல் ஒன்றை பிரித்தானிய மக்கள் எதிர் கொள்வார்களா என்று எதிர் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .இது சார்ந்த விவாதம் எல்லாம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன .பாராளுமன்றமே ஒரு யுத்த களமாக மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகிறார்கள் . எது எப்படி இருப்பினும் பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழ தமிழ் மக்கள் பிரெக்ஸிட்(Brexit) பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வது முக்கியமாகும் .எதிர் காலத்தில் பிரித்தானியாவில் ஏற்பட போகும் அரசியல் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் எப்படியான ஒர் தாக்கத்தை அங்கு வாழும் மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதை சரியான தெளிவான கண்ணோடத்தில் இருந்து பார்த்து இனி வரப்போகும் பாராளுமன்ற தேர்தல்களில் சரியான கட்சிக்கு வாக்கு அளிப்பதன் மூலம் உங்கள் அரசியல் கலாச்சார பொருளாதர உரிமைகளுக்கு உத்தரவாதம் ஆக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை .
 10. 1 point
  நீங்களும் இப்ப இதெல்லாம் போட வெளிகிட்டியளே அண்ணை? . இந்த இயக்கம் வெற்றி பெற்று, அடுத்து மேலாடை இல்லாமல் போகும் போராட்டத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு இவர்கள் போராட்டம் வெற்றி பெற என் முழு ஆதரவு எப்போதும் உண்டு. ஆனால் இது ஒண்டும் புதிசில்லையே? 1970 களிலேயே, வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய யாழ் பல்கலைகழக புத்தி சீவிகள் இதை முன்னெடுத்துள்ளாதாக கேள்வி.
 11. 1 point
  எட்டிப்பார்த்துட்டு போவோம் ஆடை சுதந்திரம் என்று சொல்லிட்டு போயிடுவம்
 12. 1 point
  தமிழின் சிறப்பு, தமிழ் கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைத்து ஆத்திகனாக இருந்தாலும் பணம் கோடி கோடியாகக் கொட்டும். ஆதாரம் சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம். தமிழில் புலமை பெற்றுக் கடவுளே இல்லையென்று நாத்திகம் பேசினாலும் பணம் கோடி கோடியாகக் கொட்டும். ஆதாரம் கருணாநிதி குடும்பம். இப்படியான சிறப்புகளைக் கொண்ட ஒரே ஒரு நாடு, உலகில்... அதுவும் இந்தியாவிலுள்ள தமிழ்நாடே.!!
 13. 1 point
  பேராசிரியரை அமெரிக்க-சீன, அமெரிக்க -தென்கொரிய மற்றும் பிரெக்சிட் பிரச்சனைகளில் தலையிடுமாறு கோரிக்கை விடப்பட்டால் நன்மை. கொஞ்சம் பிரியாணி பார்சல்களுடன் உலக பிரச்சனைக்ளுக்கு தீர்வை பெற்றுத்தந்து விடுவார்
 14. 1 point
  'பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்'. இந்தியனுக்கு மானம் இருந்தால்தால் அல்லவா அது வெளிவரமுடியும்.! துவக்குப்பிடியால் பிரதமரே அடிவாங்கியபோது வெளிவராத மானமா இப்போ வரப்போகிறது.??
 15. 1 point
 16. 1 point
 17. 1 point
 18. 1 point
  அண்மையில் தமிழ்நாடு கால்நடை வேளாண்மைத் துறை, கால்நடை வளப்புக்காக விசேடமாக பால்தேவைக்கான மாடுகள் வளர்ப்புக்கான புதிய நடைமுறைச்சட்டத்தை உருவாக்கியுளது. இனிவரும் காலங்களில் நாட்டு மற்றும் கலப்பின மாடுகளை யாரும் பால்தேவைக்காக வளர்க்கமுடியாது வெளிநாடுகளில் எடுபிடி தடவிக்கொடுக்கும் மாடுகள் போன்ற மிருகத்தையே வளர்க்கலாம் அதைவிட இனவிருத்தி செய்வதற்க்குப் பொலிகாளைகளைப் பாவிக்க முடியாது அரசாங்கத்தால் அல்லது தனியாரால் பராமரிக்கப்படும் இனவிருத்தி மையங்களில் செயற்கைச் சினையூட்டலையே செய்தல்வேண்டும். அதாவது நாம் ஜல்லிக்கட்டுகுத்தான் போராடிணோம் இப்போ எமது பாரம்பரிய நாட்டு மாடுகள் இனமே அழியக்கூடிய ஒரு சட்டத்தை எந்தவித சத்தமும் இல்லாமல் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கு. இதனால் பால் உற்பத்தி அதிகரிக்கும் எனக்கூறலாம் ஏற்கனவே தமிழ்நாடு தேவைக்கேற்ற அளவு பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்கு அதில் நாட்டு மாடுகளது பங்கும் அதிகம் ஆனால் இப்போ இச்சட்டத்தின்மூலம் எடுத்ததற்கெல்லாம் நாம் செலவுசெய்யவேண்டிய நிலை ஏற்படும் இவ்வளவு பெரிய பால்த்தேவைக்கான சந்தையை வைத்திருக்கும் ஒரு மாநிலத்தில் இப்படியான சட்டத்தைக்கொண்டுவந்தால் பால்பண்ணைகளுக்கான தீவனம் மருந்து அதைவிட அவற்றுக்கான ஏன்னென்ன தேவைகள் இருக்கின்றதோ அவை அனைத்தையும் சந்தைப்படுத்தும் ஒரு மிகப்பெரிய வலை அமைப்பை உருவாக்கலாம் என்பதே இவர்களது நோக்கம் மேலே இணைக்கப்பட்டிருக்கும் படம்கூட இப்படியான் ஒரு கட்டமைப்பை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான விளம்பரப்படமே. இச்செய்திய வெளியிட்ட ஆனந்த விகடனை தீயூட்டப்பட்ட யாழ் பொதுநூலகக் காலத்திலிருந்தே எனக்குப் பரீட்சயம் ஆனால் அப்போதிருந்த அற நெறி இப்போது அவர்களிடம் இல்லை இப்போது அவர்கள் சினிமா மற்றும் சின்னத்திரையிலும் காலடி எடுத்துவைத்துவிட்டனர் அவர்களது சின்னத்திரைத் தயாரிப்பில் ஒன்று அடுத்தவள் புருசனை எப்படி அபகரிப்பது என நிறைய ஐடியாக்களைக் கொடுப்பதான நாடகமாகும்.
 19. 1 point
  cooler bag , எந்த ஊடகம் மூலம் தேவநபிய தீசன் வேண்டுகோள் விடுத்திருப்பார் ,WhatsApp ,Facebook,fax,telephone?
 20. 1 point
  -க. அகரன் போராட்டத்தின் உத்வேகமும் இதன் நிலைபேறு தன்மையும், அந்தச் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வல்லவனவாக அமைந்திருந்தல் அவசியமாகின்றது. அந்த வகையிலேயே, இலங்கைத்தீவில் காலாதி காலமாக, தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களைப் பல வழிகளில் மேற்கொண்ட போதிலும், அவற்றின் பலாபலன்கள் எந்தளவுக்கு அமைந்துள்ளனவென்பது கேள்வியாகவே உள்ளது. தனிநாட்டுக் கோரிக்கையில் ஆரம்பித்த போராட்டமானது, இன்று காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, மாகாண சபைக்கான அதிகாரம் என்ற சிறிய வட்டத்துக்குள் நின்று சுழன்றடிக்கின்றது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. மத்தியில் ஆட்சி செய்த அத்தனைப் பெரும்பான்மை ஆட்சியாளர்களும், தமிழ் மக்களை முதுகில் தட்டியும் முகத்தில் குத்தியும், தமது இராஜாங்கத்தை நிலைநிறுத்தியுள்ள போதிலும், தமிழ்த் தலைமைகள் அது தொடர்பில் கண்டுகொள்ளாத நிலையும் அரசாங்கங்களுக்கு இசைந்தாடும் தன்மையுமே அதிகளவில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையிலேயே, தமிழ் மக்களின் நீண்டதும் விடைகாண முடியாததுமான காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் காணப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பல கட்டமைப்புகளை, இலங்கை அரசாங்கம் செய்திருந்தது. எனினும், அதனூடாக எவ்விதப் பலனுமற்ற நிலையிலேயே, சாலிய பீரிஸ் தலைமையில் காணாமல் போனோருக்கான ஆணைக்குழு அமைக்கப்பட்டு, அலுவலகங்களும் செயற்பட்டு வருகின்றன. ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை பிரகாரம், 1983ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இலங்கையில் 20,000 பேர் காணாமல் போயுள்ளனரெனக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், ஐ.நாவுக்கு, மன்னார் ஆயர் அலுவலகத்தால் 2017ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட அறிக்கைப் பிரகாரம், யுத்த காலத்தின்போது, 1 இலட்சத்து நாற்பதாயிரம் பேர் காணாமல் போயுள்ளனரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அதுவரை எவரிடமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான விவரங்கள் இல்லாத நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் வடக்கு, கிழக்கில் வியாபித்திருந்தன. தமது உறவுகளை தொலைத்தவர்கள், வவுனியாவில் 920 நாள்களையும் கடந்து, வீதியோரத்தில் சுழற்சி முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரணமாக இவர்கள் இந்தப் போராட்டத்தைக் கடந்துசெல்லவில்லை. வானிலைத் தாக்கங்கள், கேலிப்பேச்சுகள், தவறான கருத்தியல் பறிமாற்றங்கள் என்பவற்றுடனேயே, இவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்றால் அது மறுப்பதற்கில்லை. அண்மையில் இவர்களால் நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பொன்றில், வீதியோரப் போராட்டத்தால் தாம் அனுபவித்துவரும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தனர். “குறிப்பாக, சிறீ டெலோ கட்சியால் ஊடகம் ஒன்று நடத்தபடுகின்றது. அதில் எங்களது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகப் பல அவதூறுச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் நாங்கள் பொறுமை காத்திருந்தோம். நாங்கள் ஜனநாயக ரீதியில் போராடுகின்றோம். ஜனநாயக ரீதியாக யாரும் எல்லாவற்றையும் கூறமுடியும் என்றாலும், உண்மையைக் கூறவேண்டும். குறித்த ஊடகம், அவதூறுச் செய்தியை மாத்திரமே பரப்பி வந்துள்ளது. 26 வருடங்களாகத் தமிழ் - சிங்களம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்த பின்னர், தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற போராட்டத்துக்குத் தலைமை தாங்கியது தமிழீழ விடுதலைப்புலிகள்” என்ற தொனிப்பொருளில், சர்வதேச ஊடகங்களில் கட்டுரையொன்று வெளியாகியிருந்தது. “மேலும், எங்களது போராட்டத்துக்கு முக்கிய கருப்பொருளாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகில், எமது மாவட்டத் தலைவி கா.ஜெயவனிதாவின் மகள் ஜெரோமி இருக்கின்ற புகைப்படத்தைப் பிரசுரித்து, கா. ஜெரோமி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார் என்ற அவதூறான செய்தியை அந்தக் காலகட்டத்தில் குறித்த ஊடகம் பரப்பியிருந்தது. இதன் மூலம், சிறீ டெலோ கட்சி, எமது தமிழர்களுடைய போராட்டத்தில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளதென்பது தெரிய வருகின்றது” என்று, பகிரங்கமாகவே தமிழர் தரப்பில் அரசியல் செய்யும் கட்சியொன்றைச் சுட்டிக்காட்டி, குற்றஞ்சாட்டியிருந்தனர். இது ஒருபுறமிருக்க, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பிலும் போராட்டங்கள் முனைப்புப்பெற்றிருக்கின்றன. எனினும், விடை தெரியாத இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு, வெறும் ஏமாற்றம் மாத்திரம் கிடைத்து விடவில்லை. ஏமாற்றத்துடன்கூடிய மரணங்களும் நிழந்தே வருகின்றன. வடக்கு, கிழக்கிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 53 பேர், இதுவரை மரணித்துள்ளனரென, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான கடந்த 30ஆம் திகதியன்று, ஓமந்தையில் பாரிய அளவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது வெளியிடப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளைத் தேடிப் போராட்டம் நடத்தி மரணித்தவர்களது பெயர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியே, இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆக, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் என்பது, வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டுமா என்ற கேள்வி, அண்மைய நாள்களாக எழுந்துள்ளதையும் வடக்கு, கிழக்கில் அவதானிக்க முடிகின்றது. மக்கள் போராட்டம் என்பது, அந்த இனக்குழுமத்தின் ஒட்டுமொத்த ஆதரவுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாகும். எனினும், தற்போது அந்தத் தளம், தமிழ் மக்கள் மத்தியில் குறைவடைந்துச் செல்வதற்குக் காரணமென்ன என்ற கோணத்தில் ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளது. தமிழ் அரசியல் பரப்பிலும் சரி, தமிழர்களின் வாழ்வியல் முறைகளிலும் சரி, கடந்த காலத்தில் காணப்பட்ட தமிழ்த் தேசியம்; சுயநிர்ணயம் போன்ற விடயங்கள், தற்போது கொதி நிலையில் இருந்து தளர்ந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே, இது சற்று மங்கிச்செல்வதாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், இதற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியல் தலைமைகளை வைத்தே, கம்பெரலிய திட்டத்தினூடான அபிவிருத்திகளை மேற்கொள்ள வைத்தமையும் தொடர்ச்சியாகத் தமிழ்த் தலைமைகள், மக்களின் அபிலாஷைகளுக்கு மாறாகவும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டும், தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியும் வருகின்றனர் என்ற வெறுப்புணர்வும், மக்கள் தாம் தனித்து விடப்பட்டதான உணர்வின் நிமிர்த்தம் தள்ளப்பட்டுள்ளனர். வெறுமனே மக்கள் மத்தியில் மாத்திரம் உணர்வும் கோரிக்கைகளும் நிறைந்திருக்க, அதனை ஈடேற்றிக்கொடுக்க வேண்டிய அரசியல் தலைமைகள், தமது நலன்சார் விடயங்களில் மாத்திரம் கரிசனை கொண்டு வருவதானது, உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சமூகத்துக்கு சற்றே தயக்கமான நிலையை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தற்போதைய ஆட்சியாளர்கள், ஆட்சிப்பீடம் ஏறவேண்டுமெனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில தமிழ்த் தலைமைகள் எந்தளவுக்கு ஆவல் கொண்டிருந்தனரோ, அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயத்தில் ஒரு பேரம் பேசும் தளத்தை உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதும் வேதனைக்குரிய விடயமேயாகும். இந்நிலையிலேயே, 8ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்யப்போகும் அடுத்தத் தேர்தலிலும், தமிழ் தலைமைகள் வெறுமனே வேட்பாளர்களது வாய்மூல வாக்குறுதிகளோடு ஆதரவை வழங்கப்போகின்றனரா, இல்லையேல் தம்மைப் பேரம்பேசும் தளத்தில் உயர்த்தி நின்று ஆதரவளிக்கப்போகின்றனரா என்பதே, தற்போதைய அரசியல் தளத்தில் வாதப்பொருளாக உள்ளது. எவ்வாறிருப்பினும், காலச்சூழலில் தனது இனத்தின் நம்பிக்கையை வெல்லாத அரசியல் தலைமை, தமது அரசியல் தளத்தில் இருந்து அகன்று செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், தமது சமூகத்தின் முக்கிய தேவைகளை உணர்ந்து, அவற்றை நிவர்த்திக்க வேண்டிய பாதையை அவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இற்றைக்கு 920 நாள்களைக் கடந்தும், தமது உறவுகளைக் காணவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வீதியோரங்களில் உள்ள இவ்வுறவுகள், இன்று அனைத்து அரசியல் தரப்பினரையும் வெறுத்தொதுக்கும் நிலைக்குச் சென்றது மாத்திரமன்றி, தமது நியாயமான கோரிக்கைகளைத் தாமே இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் உணர்த்தும் செயன்முறையையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஓ.எம்.பி அலுவலகத்தின் பிரதானியான சாலிய பீரிஸ், தமது பரிந்துரைகளை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்பதான கருத்தை, அண்மையில் பதிவிட்டிருந்தார். இவ்விடயத்தினூடாக, குறித்த அலுவலகமும் அதன் ஆணையாளர்களும், எந்தளவுக்கு பலம் பொருந்தியவர்களாகவும் குறித்த அலுவலகம் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் வெளிப்படை. இதனை அடிப்படையாக வைத்தே வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊடாக சந்திப்பின்போது, சர்வதேசத்துக்கான கண்துடைப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே தவிர, மக்களின் தேவைக்காக இது திறக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. “இதற்குமப்பால், நாங்கள் நீதிக்காகவே போராடுகின்றோம். பணத்துக்காகவோ சுகபோகத்துக்காகவோ போராடவில்லை. எமக்கும் வீடு இருக்கின்றது. பிள்ளைகள் இருக்கின்றனர். எனினும், நாம் வீதியோரங்களில் போராடுவது எமது உறவுகளுக்காகவே. எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்” எனவும் அவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டமானது முடிவின்றி தொடரும் நீண்ட பாதையாக காணப்படுகிறது. எனவே, இவ்விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டுச் செயற்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்வதனூடாகவே, அடுத்து வரும் தேர்தல்களில் வெறுமனே ஆதரவு என்பதற்கப்பால் பேரம் பேசலுடனான ஆதரவையும் வழங்கும் நிலைமை ஏற்படும். ஓ.எம்.பி தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி விசனம் அரசாங்கமானது, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்கில், காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தை ஆதரித்ததன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பலிக்கடாவாகி இருக்கின்றார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்... “காணாமற்போன உறவுகள், தங்களுக்கு நீதி வேண்டி, ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்தவகையில், இறுதிக்கட்டப் போரிலே, ஓமந்தை பகுதியில் வைத்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்களைச் சரணடையச் சொன்ன இராணுவம், அவர்களை பஸ்களில் ஏற்றிச் சென்றது.குறித்த சம்பவம் இடம்பெற்று இன்று 10 வருடங்களைக் கடந்தும், அவர்களுக்கு என்ன நிகழ்ந்ததென்பதை அறியமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. “அத்துடன், பெற்றோர்களோடு சேர்ந்து அவர்களது பிள்ளைகளும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு வயதிலிருந்து ஐந்து வயதான குழந்தைகள் வரை, பல நூற்றுக்கணக்கான சிறுவர்களும் பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 10 வருடம் கடந்தும், அந்தக் குழந்தைகளுக்குகூட என்ன நடந்ததென்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. “உண்மையில், தற்போது இருக்கக்கூடிய இந்த அரசாங்கம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஓர் உருப்படியான தீர்வை இதுவரை எட்டவில்லை. குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் என்ற பெயரில், வெறும் கண்துடைப்புக்காக ஓர் அலுவலகத்தை அமைத்திருக்கிறார்கள்.இவ்வலுவலகத்தின் ஊடாக, எந்தவித நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கான நட்டஈட்டைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது. “வெறுமனே ஒரு சான்றிதழை மட்டும் பெறுவதற்காகவே, இந்தக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் உருவாக்கபட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தையும் ஏனையோர்களையும் ஏமாற்றி, காலம் கடத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கவே இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குரிய அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு வரும்போது, என்னைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களோடு, இந்த அலுவலகம் தொடர்பான சாதக, பாதக நிலைமைகள் என்ன என்பதைப் பகிர்ந்துகொள்ளாமல், அவசர அவசரமாக அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகி இருக்கின்றார்கள். “இன்று வடக்கிலும் கிழக்கிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தங்களுக்கு குறித்த அலுவலகத்தின்மீது நம்பிக்கை இல்லை. அந்த அலுவலகம் தேவையில்லை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்த அரசாங்கம் எம்மவர்களையும் பலிகடா ஆக்கியிருக்கின்றது. “ஆகவே, இந்த காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றவர்களுக்கு சர்வதேசச் சமூகம் விரைந்து ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்திலே, எல்லோர் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றேன்” என, அவர் மேலும் தெரிவித்திருந்தார். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கண்ணீரின்-காத்திருப்பு/91-237830
 21. 1 point
  இல்லையே பாஞ்ச் அப்பாச்சி என்று அப்பாவின் தாய்வழியில் உள்ளவரைத் தான் அழைப்பார்கள். அப்பா + ஆச்சி =அப்பாச்சி.
 22. 1 point
  அப்பாச்சி கெலிகாப்டர்களுக்கு ஏன் குங்குமப் பொட்டு வைத்தார்கள்....? சந்தணப் பொட்டல்லவா வைத்திருக்கவேண்டும்.! அம்மாஞ்சி கெலிகாப்டர்களை வாங்கி வரவேற்றிருந்தால்.. குங்குமப் பொட்டு வைப்பது பொருத்தமாக இருந்திருக்கும்.!
 23. 1 point
 24. 1 point
  http://www.tgte-homeland.org/international-disappearance-day-2019-08-30/ 100 பேர் திரண்டா என்ன 4 பேர் நின்றால் என்ன விடயம் ஒன்று தான். காணாமல் போன உறவுகளுக்காக குரல் கொடுத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள்.
 25. 1 point
 26. 1 point
  என்ன இருந்தாலும் இவ்வாறான ஆடைகள் தடைசெய்யப்படவேண்டும். அதிகமாக பக்திகொண்டவர்கள் தொட்டு கும்பிட்டுவிட்டால் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகமாகிவிடும்.
 27. 1 point
  5. பித்தளைப் பிள்ளையார் தண்டகாரண்யத்து வனவாசி என்னை அந்தக் குகைக்குள் அழைத்துச் சென்ற நேரம் அங்கே மூன்று சன்னியாசிகள் இருந்தார்கள். ஒருவர் ஒரு ஓரமாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். இன்னொருவர் தியானத்தில் இருக்க, மூன்றாம் நபர் ஒரு காடா விளக்கின் வெளிச்சத்தில் ஓலைச்சுவடி ஒன்றைப் படிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். சுவரோரம் ஒரு கணப்புச் சட்டி இருந்தது. இரண்டு மூன்று துணிப்பைகளில் பிதுங்கப் பிதுங்க ஏதோ அடைத்துவைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருப்பது வெளியே தெரியாதபடிக்கு மேற்புறம் சணல் கோணிச் சுருணைகள் சொருகப்பட்டிருந்தன. ஒரு சில கலயங்கள், பாக்குமட்டைத் தட்டுகள் இருந்தன. அருவியில் பிடித்த மீன்கள் கொஞ்சம் இன்னொரு ஓரத்தில் உலரவைக்கப்பட்டிருந்தன. அவை பாதி காய்ந்த மீன்களாக இருந்தாலும் அதன் வாடை அங்கே இல்லை. மாறாக, எங்கிருந்தோ அடர்த்தியாகத் திரண்டுவந்த எருமைச் சாண வாசம்தான் குகை முழுதும் பரவி நிறைந்திருந்தது. உள்ளே சென்றதும் வனவாசி அவர்முன் விழுந்து வணங்கி எழுந்து கைகளைக் கட்டிக்கொண்டான். எனக்குச் சற்றும் பரிச்சயமில்லாத சத்திஸ்கரி மொழியில் என்னைக் காட்டி ஏதோ சொல்லத் தொடங்கினான். அவர் என்னை ஒரே ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். உட்காரச் சொல்லிக் கைகாட்டிவிட்டு, பார்வையை அந்த வனவாசியின் பக்கம் திருப்பி ஏதோ பேச ஆரம்பித்தார். அவர் பேசிய எந்த ஒரு சொற்றொடரும் சிறியதாக இல்லை. குறைந்தது பதினைந்து சொற்களில்லாமல் ஒரு வரியைக்கூட அவர் நிறைவு செய்வதில்லை என்று தோன்றியது. பதில் சொல்லிக்கொண்டிருந்த வனவாசியும் நீளநீளமாகவே பேசினான். சுமார் ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் அவர்கள் உரையாற்றிய பின்பு, வனவாசி என்னிடம் திரும்பி ‘தெரியவில்லை’ என்ற பொருளில் இரு கைகளையும் விரித்தான். எளிய பதில். மிகச் சிறியதும்கூட. ஆனால் அதைக் கண்டடைவதற்கு எத்தனை நூறு சொற்களை விரயம் செய்யவேண்டியதாகிவிட்டது இவர்கள் இருவருக்கும்! நான் அந்த சாதுவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு குகையைவிட்டு வெளியே வந்தேன். அவர்கள் சித்தர்களா என்று என் சீடன் ஒருவன் அந்த வனவாசியிடம் கேட்டான். நான் புன்னகை செய்தேன். அவன் கேட்டது அந்த வனவாசிக்குப் புரிந்ததா என்றும் தெரியவில்லை. கேள்வி கேட்ட மரியாதைக்கு அவனும் விரிவாக ஏதோ விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான். அது நிச்சயம் என் சீடனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. என்ன காரணத்தாலோ எனக்கு அற்புதங்களின் மீது ஆர்வமில்லாது போய்விட்டது. என் பயணங்களில் நூற்றுக்கணக்கான சித்தர்களை நான் சந்தித்திருக்கிறேன். சில அற்புதங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டும் இருக்கிறேன். எனக்குத் தெரியாத ஓர் இயல் என்பதைத் தாண்டி அதில் வியக்க ஒன்றுமில்லை என்றே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது. ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. அது நாங்கள் நான்கு பேரும் வீட்டில் இருந்த காலம். கோயிலுக்கு யாரோ சித்தர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அப்பா விடிகாலையிலேயே குளித்து முழுகி, சந்தியாவந்தனமெல்லாம் செய்துவிட்டுக் கிளம்பிப் போயிருந்தார். வாய்ப்பிருந்தால் அவரை வீட்டுக்கு அழைத்துவருவதாக அம்மாவிடம் சொல்லியிருந்தார். கோயில் கமிட்டியில் இருந்தவருக்கு அதெல்லாம் ஒரு சிரமமா? எப்படியும் அழைத்து வந்துவிடுவார் என்று எங்கள் எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அதனால் அம்மாவும் சீக்கிரம் குளித்து மடிசாரெல்லாம் உடுத்திக்கொண்டு, வீட்டைப் பெருக்கித் துடைத்து வாசலில் பெரிய கோலம் போட்டு வைத்துவிட்டு அப்பா வருகிறாரா என்று திண்ணையில் அமர்ந்து காத்திருந்தாள். முன்னதாக எங்கள் நான்கு பேரையும் எழுப்பி, தூக்கக் கலக்கத்தோடு குளிக்கவைத்து, ஆளுக்கொரு வேட்டியை இடுப்பில் சுற்றிவிட்டு, அப்பா வரும்வரை படித்துக்கொண்டிருக்கச் சொல்லியிருந்தாள். தையூர் சந்தைக்குப் போய்விட்டுக் காய்கறிப் பைகளுடன் சைக்கிளில் வந்துகொண்டிருந்த கேசவன் மாமா, அந்நேரத்தில் அம்மாவை வாசல் திண்ணையில் பார்த்ததில் சற்றே வியப்படைந்தார். என்ன என்று சைக்கிளை நிறுத்திவிட்டுக் கேட்டார். ‘யாரோ சித்தர் வந்திருக்காராம் கோவிலுக்கு. காலங்கார்த்தால கதவ இடிச்சி ஆராம்து சொல்லிட்டுப் போனான். முடிஞ்சா ஆத்துக்குக் கூட்டிண்டு வரேன்னு சொல்லிட்டு இவரும் போயிருக்கார்.’ ‘ஓஹோ’ என்றார் கேசவன் மாமா. சித்தர் வருவதற்குள் தன்னால் வீட்டுக்குப் போய் குளித்து முடித்து மடியாக வந்து நிற்கமுடியுமா என்ற சந்தேகம்போல. குளிக்காவிட்டால் சித்தர் ஒன்றும் கோபித்துக்கொள்ளமாட்டார் என்று தீர்மானித்து, சைக்கிளை எங்கள் வீட்டுத் திண்ணை ஓரம் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். ‘என்னடா பசங்களா, படிக்கறிங்களா?’ என்று கேட்டார். நான்கு பேரில் வினய்தான் மாமா செல்லம். அவரைப் பார்த்ததும் சட்டென்று புத்தகத்தைப் போட்டுவிட்டு எழுந்துவந்து, ‘கிரிக்கெட் ஆடலாம் வரிங்களா?’ என்றான். ‘உங்கப்பா பார்த்தா தோலை உரிச்சிடுவார். படிங்கோ, படிங்கோ. அவர் வரவரைக்கும் படிச்சிண்டிருங்கோ. நன்னா சத்தம் போட்டுப் படிங்கோ’ என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் புகுந்தார். அம்மா அப்போதுகூட எழுந்து உள்ளே வரவில்லை. மாடவீதியின் வலப்புற வரிசையில் ஏழாவது வீடு எங்களுடையது. முன்புறம் ஓட்டுச் சரிவும் அதன்பின்னால் தளமும் போட்ட புராதனமான வீடு. திண்ணையைத் தாண்டியதுமே சிறிதாக ஒரு நடையோடியை அடுத்து முற்றம் வந்துவிடும். முற்றத்தின் இரு புறங்களிலும் இரண்டு அறைகள். பின்கட்டில் சமையல் அறையை ஒட்டினாற்போலப் பாத்திரம் துலக்க அப்பா ஒரு தொட்டி கட்டிவிட்டிருந்தார். கிணற்றில் நீர் இறைத்து தொட்டியில் கொட்டிக்கொண்டு உட்கார்ந்தால், அம்மா நாளெல்லாம் தேய்த்துக்கொண்டே இருப்பாள். எத்தனை தேய்த்தாலும் எந்நாளும் எங்கள் வீட்டுப் பாத்திரங்கள் துலங்கிப் பொலிந்து நான் பார்த்ததில்லை. எல்லாம் எந்தக் காலத்திலோ அம்மா தனது கல்யாணச் சீராகக் கொண்டுவந்த பாத்திரங்கள். பித்தளையும் எவர்சில்வருமாக ரகத்துக்கு இரண்டு ஜோடி இருக்கும். அப்பாவுக்கு காப்பி மட்டும் பித்தளை தம்ளரில் கொடுத்தால் போதும். வாழ்வில் வேறு எதையுமே அவர் எதிர்பார்த்ததில்லை. ஆனால், அம்மா அத்தனை வருடங்களாக தினம் தவறாமல் தேய்த்தும் அந்த தம்ளர் பளபளத்ததில்லை. ‘சிலதெல்லாம் அப்படித்தான். மாத்த முடியாது; தூக்கிப்போடவும் முடியாது’ என்று சொல்லுவாள். ஐந்தரைக்குக் கோயிலுக்குப்போன அப்பா, ஏழே முக்காலுக்கு வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு ஓடி வந்தார். ‘அவர் வரார். வரேன்னு சொல்லிட்டார்.’ உடனே அம்மா இங்குமங்கும் சிதறிக்கிடந்த பொருள்களை எடுத்து ஒழுங்கு செய்து வைத்தாள். மாமா தனக்காகப் போட்டுக்கொண்ட காப்பி டிக்காஷனில் மிச்சம் இருந்ததை வேறொரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து அதன் நடுவே வைத்துச் சூடுபடுத்தினாள். பீரோவைத் திறந்து எதையோ தேடி, எந்தக் கல்யாணத்திலோ யாரோ வைத்துக் கொடுத்து, பிரிக்காதிருந்த புதிய வேட்டியொன்றை எடுத்துவந்து தாம்பாளத்தில் வைத்தாள். மாமா நாலு வெற்றிலை, இரண்டு கொட்டைப் பாக்குகளை அதன் மீது வைத்து அழகுக்கு இரண்டு வாழைப் பழங்களையும் வைத்தார். ஒரு சித்தரை நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. அவர் என்னென்ன செய்வார் என்பது குறித்த தெளிவு எங்கள் யாருக்கும் இல்லை. ‘என்ன வேணா பண்ணுவார்’ என்று கேசவன் மாமா சொன்னது சரியாகப் புரியவில்லை. காவியும் ஜடாமுடியும் நீண்ட தாடியும் கமண்டலமுமாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பான அகத்தியர் திரைப்படத்தின் கதாநாயகர்தான் என் நினைவில் வந்தார். அவர் பெயர் சீர்காழி கோவிந்தராஜன் என்பதைப் பிற்பாடு அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அம்மாவின் சினிமா ஆர்வம் அளப்பரியது. எப்போதும் ஏதாவது படம் பார்த்துக்கொண்டோ அல்லது ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டோ மட்டுமே அவளால் இருக்கமுடியும். அதுவும் உரத்த சத்தத்தில் கேட்டால்தான் அவளுக்குத் திருப்தியாகும். ‘ஏம்மா இப்படி?‘ என்று மூத்த அண்ணா பல சமயம் சலித்துக்கொண்டிருக்கிறான். ஒரே ஒரு சமயம் அம்மா அதற்கு பதில் சொல்லியிருக்கிறாள். ‘இதுவும் இல்லேன்னா செத்துப்போயிடுவேனே.’ நாங்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்கொள்ளத் தயாரான சித்தர் அன்று எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால் அசப்பில் அவர் எங்கள் மனத்தில் இருந்த பிம்பத்தை ஒத்திருக்கவில்லை. சாதாரணமான எட்டு முழ வேட்டி கட்டியிருந்தார். உள்ளே இருக்கும் பனியன் தெரியும்படி இரண்டு பட்டன்களை அவிழ்த்து விட்டுக்கொண்டு அரைக்கை சட்டை அணிந்திருந்தார். நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டும் அதன் நடுவே கறுப்பாக ஒரு பொட்டும் இருந்தது. சற்றுமுன் வரை வெற்றிலை போட்டுக் குதப்பிக்கொண்டிருந்தவர், வீட்டுக்குள் நுழையும் முன் வெளியே துப்பியிருக்க வேண்டும். சட்டையில் ஒன்றிரண்டு சொட்டுகள் சிந்தியிருந்ததை எப்படியோ கவனிக்க மறந்திருக்கிறார். ‘வாங்கோ வாங்கோ’ என்று அப்பா இடுப்பு வரை குனிந்து வரவேற்று அவரை அமரவைத்தார். அப்பாவும் அம்மாவுமாக அவரை விழுந்து சேவித்துவிட்டு நகர்ந்துகொள்ள, கேசவன் மாமா அதன்பின் சேவித்தார். ‘இப்படி வாங்கோடா’ என்று அப்பா எங்களை அழைத்தார். நாங்கள் வரிசையில் வந்து நின்று அவரை வணங்கினோம். அவர் கையை உயர்த்தி ஆசீர்வாதம்கூடச் செய்யவில்லை. வெறுமனே எங்களைப் பார்த்துச் சிரித்தார். அம்மா, தயாராக வைத்திருந்த வெற்றிலைத் தாம்பாளத்தை எடுத்துவந்து அவர் முன் வைத்தாள். அவர் அதிலிருந்து ஒரு வாழைப் பழத்தை மட்டும் எடுத்து தோலை உரிக்க ஆரம்பித்தார். மீண்டும் எங்கள் நான்கு பேரையும் ஒரு பார்வை பார்த்தார். என்ன நினைத்தாரோ, உரித்த பழத்தின் பாதியைத் தன் வாயில் போட்டு மென்று விழுங்கினார். மீதமிருந்த பாதி பழத்தை இடது உள்ளங்கையில் வைத்து வலக்கையால் மூடினார். சில விநாடிகள்தாம். மூடிய கைகளை அப்படியே பிசைய ஆரம்பித்தார். சிக்குண்ட வாழைப்பழம் பிதுங்கி நாலாபுறமும் வெளியே வரத் தொடங்கியது. அப்பாவும் அம்மாவும் பக்திப் பரவசம் மேலிட கைகூப்பியபடியே அவரைப் பார்த்துக்கொண்டிருக்க, சற்றும் எதிர்பாராதவிதமாக அது நிகழ்ந்தது. அவரது உள்ளங்கைகளுக்குள் இருந்து பிதுங்கி வழிந்துகொண்டிருந்த வாழைப்பழத்தோடு சிறிதாக ஒரு பித்தளை பிள்ளையார் சிலை வெளிப்பட்டுக் கீழே விழுந்தது. அவ்வளவுதான். அப்பா தடாலென்று மீண்டும் அவர் காலில் விழுந்தார். ‘எடுத்துக்கோங்கோ’ என்று சித்தர் சொன்னார். அப்பா அந்தச் சிலையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு பெருமிதமுடன் அம்மாவிடம் நீட்டினார். அம்மா உடனே அதை வாங்கிக்கொண்டு உள்ளே ஓடினாள். அதற்குமேல் என் மூத்த அண்ணா பொறுக்கவில்லை. ‘எங்காத்துல பிள்ளையார், முருகர், சிவன் பார்வதியெல்லாம் கிடையாது. நாங்க ஐயங்கார். பெருமாள் சிலை ஒண்ணு வரவெச்சித் தாங்களேன்!’ என்று கேட்டான். சித்தர் வெகுநேரம் பேசவேயில்லை. அண்ணாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குள் அப்பா பதற்றமாகி அவனைக் கீழ்க்குரலில் அதட்டி, அவன் பேசியதற்கு அவரிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். அவர் ஒன்றும் சொல்லவில்லை. கிளம்பும்போது மட்டும் எங்கள் நான்கு பேரின் பெயர்களையும் அப்பாவிடம் கேட்டார். ‘மூத்தவன் விஜய் குமார். அடுத்தவன் வினய் குமார். இவன் வினோத் குமார். கடைசிப் பையன் விமல் குமார்’ என்று அவர் அறிமுகப்படுத்தியதும், இடைவெளியே இல்லாமல் கேசவன் மாமா சொன்னார்: ‘பேரெல்லாம் சம்மந்தமே இல்லாம இருக்கேன்னு நினைக்காதீங்கோ. அதெல்லாம் எங்கக்கா நவீனமா ஆசைப்பட்டு வெச்சது. அத்திம்பேர் எவ்ளோ சொல்லியும் கேக்கமாட்டேன்னுட்டா.’ அவர் புன்னகை செய்தார். வரேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். அம்மா அவரிடம் எதையோ கேட்க நினைத்து, சொற்களில்லாமல் தவித்துத் தவித்துத் தணிந்துகொண்டிருந்ததை அன்று கண்டேன். அவர் வாசல் படி இறங்கும்போதுகூட, அப்பாவின் தோளை இடித்து எதையோ கேட்கச் சொல்லி சைகை செய்துகொண்டிருந்தாள். அவருக்கும் ஏதோ தயக்கம் இருந்ததாகப் பட்டது. இருந்தாலும் அம்மாவை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு அவரை வழியனுப்பும்விதமாகக் கூடவே போக ஆரம்பித்தார். எப்படியும் கடற்கரைச் சாலை வரை அவர் சித்தரோடுகூட போயிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்குள் அம்மா கேட்க விரும்பிய அந்த ஏதோ ஒன்றை அவர் அவசியம் சித்தரிடம் கேட்டிருப்பார். அம்மா என்ன கேட்க நினைத்தாள் என்பதோ, சித்தர் அதற்கு என்ன பதில் சொல்லி அனுப்பினார் என்பதோ கடைசிவரை எனக்குத் தெரியாமலே போய்விட்டது. அண்ணா சொல்லிக்கொண்டிருந்தது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. ‘ஒரு பித்தளைப் பிள்ளையாருக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேண்டாம். கடைசிவரைக்கும் அவரால ஒரு பித்தளை வெங்கடாசலபதியைக் கொண்டுவர முடியல பாத்தியா?’ (தொடரும்) http://www.dinamani.com