• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   4,599


 2. ampanai

  ampanai

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   5,477


 3. nunavilan

  nunavilan

  கருத்துக்கள நிர்வாகம்


  • Points

   3

  • Content Count

   40,787


 4. Elugnajiru

  Elugnajiru

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   2,015Popular Content

Showing content with the highest reputation on 09/15/2019 in all areas

 1. 3 points
  இந்தியா என்பது மிகப்பெரிய அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு அதற்கு நாம் மேற்றிய செயற்பாடுகளைச் செய்யமுடியாதுஅது எப்படி இருக்குமெனில் பத்துப்பிளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டியமாதிரி அதைவிட அவர்கள் எமது வழிக்கு வருவது கிழவி சாமத்தியப்படுவதற்குச்சமன். நாம் யாரும் இந்தியாவுக்குச் சொம்பு தூக்கவேண்டிய அவசியம் இல்லை காரணம் இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே அப்படியும் நாம் சொம்புதூகினால் நாம் காமடிப்பீசாகவே கணிக்கப்படுவோம். கிட்டத்தட்ட இந்தியாவை ஐம்பது வருட காலமாக நம்பியும் ஏமாந்தும் வருகிறோம் ஐம்பதுக்குக் குறைவான புலொட் போராளிகளைவைத்தே மாலைதீவினை இந்தியா தனது கைக்குள் கொண்டுவந்தது அது அந்தகாலம் எனினும் தற்போது இலங்கைத் தீவின் அனைக்து இடங்களிலிம் இந்தியா அனைத்து வடிவிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. ஈஸ்டர் குண்டுவெடிப்பின்போது நாம் அவதானித்தவையில் கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலில் வெடித்த குண்டு சாதாரணமாக முதுகில் எல்லோரும் சுமக்கும் பையில் கொண்டுபோய் வெடிக்கவைத்து அது பாரிய சேதாரத்தை ஏற்படுத்துமாகவிருந்தால் பஞ்சிகாவத்தையில் கையெறி குண்டுக்காகப் பயன்படும் வெடிபொருள் பாவித்திருக்க முடியாது பிளாஸ்டிக் வகை வெடிமருந்தாக இருக்கவேண்டும் அதை சாதாரணமாக நாம் கையாளமுடியாது தவிர வேறு நாடுகளிலிருந்து தருவிக்க முடியாது அப்படித்தருவிக்க முற்பட்டால உடனடியாக அனைத்துலகத்திலுமுள்ள புலனாய்வுத்துறையினருக்க்கும் செய்தி போய்ச்சேரும் அந்த அளவுக்கு வலையமைப்பு இறுக்கமாக இருக்கு அதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினதான வெளியேற்றத்தை பிரிட்டிஸ் ஒரு ஒப்பந்தத்துடன் நடைமுறைப்படுத்த முயல்கிறது இல்லாதுவிட்டால் சர்வதேச மற்றும் பிராந்திய தீவிரவாத அமைப்புகளது செயல்பாடுகள் மற்றும் முனைவுகளைப்பற்றிய தகவல் பரிமாற்றத்துக்கு நிரம்பவே கணிசமான கட்டணத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இங்கிலாந்து கொடுக்கவேண்டிவரும் ஆக புலனாய்வுப்பரிமாற்றம் என்பது உலக அளவில் நாடுகளுக்கு நாடுகள் மாறினாலும் விடையம் ஒன்றாகவே பார்க்கப்படும். ஆக யாரோ ஒரு பிராந்திய வல்லரசு மிகவும் திட்டமிட்ட ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு அதி தமிழருக்குப் பாதிப்பு ஏற்படும்வண்ணம் (காரணம் அவனது குரல்தான் இப்போது சகல வழிகளிலும் அடைக்கபட்டுள்ளது) ஆனால் இலங்கை அரசியலில் தங்களது ஆடு புலி ஆட்டத்தை தமக்குச்சாதகமாக ஆட யாரோ ஒருவரால் திட்டமிட்ட சம்பவம் அச்சம்பவத்துக்கு எப்போது இலங்கையின் குடுமியை எப்போதும் தன்வசம் வைத்திருக்க எண்ணும் இந்தியாவே செய்திருக்க வாய்ப்புள்ளது. அதுவும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பத்தாவது வருட நிறவை எதிர்கொள்ளத் தமிழினம் ஆயத்தானவேளையில் மற்றும் சர்வதேச நாடுகள் அதற்கான நீதி இதுவரை கலதாமதகாஇரது ஏன் எனக் கேத முனைகின்றவெளையில் இப்படியான தாக்குதல் நடாத்தப்பட்டது இந்தியாவின் கைங்கரியம் இல்லாது வேறு யாராலும் இருக்கமுடியாது. அமைதிப்படையின் உற்றுகையப்போல பல்மடங்கு வீரியமான முற்றுகையை தமிழினம்மீது இந்தியா இப்போது மேற்கொண்டுள்ளது. அது எதுபோல் எனில் தமிழ் நாடு அரசை கிரிஜா வைத்திய நாதன் எனும் ஒரு தலைமைச்செயலாளரை வைத்தே இயக்குவதுபோலாகும். ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது இதற்கான விவாதக்களம் அனைத்திடங்களிலும் திறக்கப்படுவது காலத்தின் கட்டாயம் இந்தியக்கனவு காண்பவர்கள் பேடிகள் ஒதுங்கி நில்லுங்கள் விருப்பமென்றால் உங்கள் இந்திய எஜமானனுக்குக் கூறுங்கள்.
 2. 2 points
  இதென்னே பிரமாதம் இதைவிட பெரிய கொம்பு முளைத்த ஆக்கள் எல்லாம் யாழ் களத்தில இருக்கினம் ( முககண்ணாடி பார்த்தோ சொல்லிறியள் எண்டு கேக்க வேணாம்).
 3. 1 point
  இவர் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும். ஏனெனில் அவர் கொம்பு முளைத்தவர்.
 4. 1 point
  பெரியாரை, பகுத்தறிவுவாதத்தை பற்றி முகநூலில் வந்த திரிப்புகளையும் அவதூறுகளையும் மட்டுமே கொண்டு தம் மதிப்பீட்டை வைத்திருப்பவர்களுக்கு. பார்பனர்களின் ஊடகமான விகடனில் இருந்து.
 5. 1 point
  இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்) ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள் மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.
 6. 1 point
  வடக்கு தேசிய பட்டியலில் ஒரேஒரு கறுப்பாடு தான் உள்ளது.
 7. 1 point
  ஆம் இந்த தொழில்நுட்பம் இலகுவாக தயாரிக்கபப்படவும் அதிகம் செலவில்லாமலும், இந்த வருடத்தில் செய்து (2019) , போராட்டத்தில் பாவிக்க கூடியமாதிரி உள்ளது. பத்து வருடத்திற்கு முன்னராக (2009) இந்த தொழில்நுட்பம் இவ்வாறு இல்லை. இன்னும் பத்து வருடத்தில் கூட இந்த தொழில்நுட்பம் மேலும் முன்னேற்றகரமாக அமையலாம் இல்லை இதைவிட மலிவாக உயர் தொழில்நுட்பம் வடிவமைக்கப்படலாம். அதேவேளை, ஈரானின் உதவி அதிகமாக ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்கின்றது. ஈரான் ஒரு அணு ஆயுத வல்லரசாக வர முயலும் நாடு. எனவே, அவர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை ஒப்பீடடளவில் இலகுவாக செய்யலாம். நாளை ஆப்கான் தாலிபான்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களும் ஆரம்பிக்க இருக்கும் காஸ்மீர் போராட்ட அரங்கிலும் இன்று ட்ரோனை காணவில்லை, ஆனால் விரைவில் இங்கும் வரவும் என்பது வல்லரசு நாடுகளின் உளவுத்துறைக்கும் தெரியும்.
 8. 1 point
  இதுதான் என்பது ஒரு பாடமாக அமையுமா என தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு போராட்டமும் ஒன்றில் இருந்து வேறுபாடும். என்னால் முடிந்த சில குறிப்புக்கள். எமது போராட்டம் இனவிடுதலை சார்ந்தது. ஏமனில் நடப்பது கூத்தி என்ற சியா இஸ்லாமிய மதப்பிரிவினர் சுனி மதப்பிரிவினர் இடையே நடக்கும் யுத்தம் என தெரிகின்றது. இரு ஆட்சியாளர்கள் பதவிக்கு போட்டி, மதத்தால் வேறுபட்டவர்கள். எம்மைப்போல இரண்டு நாடுகளாக இருந்து ஒருநாடக மாறியது இங்கே கூத்தி இனமக்கள் எமது மக்களை விட அதிக அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி கொண்டவர்கள். ஏமன் சண்டை கிட்டத்தட்ட ஆறுவருட சண்டை. ஈரானும் சவூதியும் ஏமனில் மோதிக்கொள்ளும் களம். எனவே, எமக்கும் ஏமனுக்கும் பல வித்தியாசங்கள். ஆனால், அப்பாவி மக்கள் இறப்பு, குழந்தை சிறப்புக்கள், போன்ற மனித அவலங்கள் எமது மக்களை போலவே உள்ளது. இவர்களும் எம்மை போலவே வறுமையானவர்கள், எந்த இயற்கை வளமும் இல்லை. எம்மை போல ஒரு கேந்திர முக்கியமான புவிசார் பாதையில் அமைந்துள்ளன. இதுவே வல்லரசுகளின் பார்வையில் உள்ளது.
 9. 1 point
  அரும்பாகி...மொட்டாகி...பூவாகி ..
 10. 1 point
  நான் பொறாமை கொள்கிறேன். எஸ்.பி.பி
 11. 1 point
  அனுதினமும் வற்றாமல் அன்னதானம் செய்யும் அன்னை நாகபூசணி.......!
 12. 1 point
 13. 1 point
  படம் : அன்னை (1962) வரிகள்: கண்ணதாசன் இசை : R சுதர்சனம் பாடியவர்: பானுமதி பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா (பூவாகி) பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக்கனி இல்லை பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில் தொட்டில் கட்டி தாலாட்டும் பேறு மட்டும் இல்லை பேறு மட்டும் இல்லை (பூவாகி) ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பிக் கேட்கவில்லை உறவையெல்லாம் வாழவைத்தேன் கடனைக் கேட்கவில்லை எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தார் இந்தச் செல்வம் திருப்பித் தரும் செல்வமில்லை கண்ணே (பூவாகி) வேண்டும் என்று கேட்பவர்க்கு இல்லை இல்லை என்பார் வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார் ஆண்டவனார் திருவுளத்தை யாரறிந்தார் கண்ணே யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே யார் அறிவார் கண்ணே (பூவாகி)
 14. 1 point
 15. 1 point
  சூடு, சொரணை அற்ற... ஜென்மங்கள் தான்... திராவிட தமிழக அரசியல் வாதிகள். அவர்களுக்கு... கொடி, பிடிக்கும் கூட்டங்களை, நினைக்க கவலையாக உள்ளது. ஆனால், இந்த நிலைமை... நீண்ட நாள், நீடிக்காது. உலகம்... முழுக்க, சேர்த்து வைத்த, காசை.... இவர்கள்.... தானமாக, கொடுக்கும்... நேரம் வரலாம். இல்லை என்றால்.... திகார் ஜெயில் போக... மறியல், உடுப்பு... அணிய வேண்டி வரும்.
 16. 1 point
  போர் சூழ‌ல் கார‌ண‌மாய் ஊரில் பாட‌சாலையில் பெரிசா ப‌டிக்க‌ முடிய‌ வில்லை த‌மிழ் சிறி அண்ணா , இங்கை வ‌ந்து இவ‌ங்க‌ளின் பாசை ப‌டிக்க‌வே வ‌ச‌தி இருந்த‌து , த‌மிழ் சொல்லி த‌ர‌ ஒருத‌ரும் இல்லை , இங்கை இருக்கிர‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் த‌மிழ் பெரிசா எழுத‌ தெரியாது , ம‌ச்சி நாங்க‌ள் சொல்லுற‌த‌ த‌மிழில் எழுதி வைப்ப‌ரில் அனுப்ப‌டா என்று என் ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லும் போது என் நினைவுக்கு வார‌து ( யாழ் ) யாழில் வ‌ந்து தான் த‌மிழ் எழுத‌ ப‌ழ‌கினான் இது தான் உண்மையும் கூட‌ , த‌மிழ் டெனிஸ் ஆங்கில‌ம் , இந்த‌ மூன்று மொழியும் இப்ப‌ என்னால் எழுத‌ முடியும் , உங்க‌ள் நாட்டு பாசை க‌தைக்க‌ தெரியும் எழுத‌ வாசிக்க‌ தெரியாது , குமார‌சாமி தாத்தா போன் ப‌ண்ணினா கொஞ்ச‌ நேர‌ம் ஜேர்ம‌ன் மொழியில் தாத்தாவோடு க‌தைக்க‌னும் என்று காத்து கொண்டு இருக்கிறேன் , ஒழுங்காய் க‌தைக்கிறேனா என்று ரெஸ் ப‌ண்ண / எப்ப‌வும் என் தாய் மொழி த‌மிழுக்கு தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பேன் , என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌ம் என்னோடு டெனிஸ்சில் க‌தைச்சா நான் த‌மிழில் ப‌தில் சொல்லுவேன் /
 17. 1 point
  உன்னிடம் மயங்குகிறேன்......!
 18. 1 point
  பிக்பொஸ் ஐ இங்கு தடைசெய்து விட்டு அங்கு நடைபெறும் விடயத்தை விவாதிப்பது தவறு என்று நினைக்கின்றேன்......
 19. 1 point
  அருமையான சிந்தனைத் துளிகள் பேரா.கிருஷ்ணன் அள்ளித் தெளித்தவை. தமிழன் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும், தான் கடந்து செல்லும் மனிதர்களிடமிருந்தும் அனைத்தும் கற்றான் என்பது தெளிவு. குரு, குருகுலம் போன்ற சொற்களே வட புலத்தாரிடமிருந்து வந்தவை. வாத்தியார் என்பது வடசொல்லான 'உபாத்யாயரின்' திரிபு. ஆசிரியர் எனும் சொல்லே ஆஷ்ரய (आ‌श्रय) (பொருள்-அடைக்கலம்) என்பதன் திரிபு. வடவரின் குருகுல வழக்கத்தில் குருவிடம் அடைக்கலம் ஆகிப் படிப்பதால் தோன்றிய சொல் 'ஆசிரியர் '. ஆசு - அகக்குற்றம் (மாசு - புறக்குற்றம்) ; இரிதல் - விலக்குதல் ; இவ்வாறு 'ஆசிரியர்' என விளக்கம் தருதல் தற்செயல் நிகழ்வு (Editorial க்கு 'ஏடு இட்டோர் இயல்' எனும் தற்செயல் நிகழ்வைப் போல). 'பள்ளி' என்ற சொல்லே தமிழ்ச் சொல்லானாலும், சமணப் பள்ளி (படுக்கை) யிலிருந்து வந்தது. முதலில் சமணர்கள்தான் தமிழகத்தில் தம் பள்ளியிலிருந்து எழுந்தமர்ந்து மக்களை சுற்றி அமர வைத்து முறைசார் கல்வி (organised education) தந்தவர்கள். எனவே 'ஆசிரியர் ' என்பதற்கு பழந்தமிழ்ச் சொல்லே இல்லை என்று நினைக்கிறேன். இல்லாத வழக்கத்திற்கு சொல் மட்டும் எங்கிருந்து வரும் ? பேரா.கிருஷ்ணனை வாசித்ததும் தோன்றிய நினைவுகளை (நான் எப்போதோ வாசித்ததிலிருந்து) சிதறி விட்டேன். நீண்ட‌ எழுத்திற்கு மன்னிக்கவும். முடிந்தால் கோர்வையாக்கிக் கொள்ளவும்.
 20. 1 point
  ஆசிரியர் இன்னார் என்று திருக்குறள் கூறாததின் மறைதிறவு! - கம்பனுக்கே குரு ஆன ஏற்றப்பாட்டு உழவர்கள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ல் பல்கலைக்கழக ஆசிரியர் தின விழாவில் அறிவியற்புல முதன்மையர் என்ற முறையிலும், மூத்த பேராசிரியர் என்ற முறையிலும் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். புதிய செய்தியினை இவ்வாண்டு ஆசிரியர் தின வாழ்த்தாகத் தெரிவிக்க மனம் விரும்பியது. ஆசிரியர் இன்னார் என்று வரையறுக்காத குறளாசான்! வேண்டுவதை வேண்டியபடி எளிதில் தரும் அட்சய பாத்திரம் என்ற வகையில் திருக்குறளைப் புரட்டினேன். கல்வி குறித்தும், கற்றுக்கொள்வது குறித்தும் சிறப்பாகப் பேசும் திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர் அல்லது குரு என்பவனின் கடமை, தகுதி போன்றவற்றைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஆவலுடன் தேடிச்சென்றவனுக்குக் கிடைத்த விடையோ 'இன்னார்தான் என்று ஒன்றுமில்லை' என்பதுதான்! அறிவானும் அறிவிப்பானும்! கல்வி என்னும் கற்றல் என்பது தனி மனிதனின் முயற்சியால் அடையப்படும் ஒன்று என்பதே திருக்குறள் தரும் செய்தி. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. தானே முயன்று கற்றுக்கொள்ளும் நிலை கை கூடாவிட்டால், கற்றுக்கொண்டவர்களிடம் கேட்டுக்கொண்டாவது அறிவு பெற வேண்டும் என்று சொல்கிறது குறள். கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414) அவ்வாறு பெற்றுக்கொண்ட அறிவு, ஒருவர் தளர்ச்சி அடையும் காலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல உதவும். திருக்குறள் ஏன் தனி மனிதர் எவரையும் ஆசிரியனாக, குருவாகப் பேசவில்லை? ஆசிரியர் என்பவர் இன்னார், அவருக்கான இலக்கணம் இது என்று ஆசிரியரை வரையறை செய்யாமல், யார் யாரெல்லாம் அறிவுடையவர்களோ அவர்களிடமெல்லாம் அறிவைப் பெற்றுக்கொள்க என்று பொத்தாம் பொதுவாகப் பேசுகிறது. கல்வியைக் குறித்தும், கல்வியால் விளையும் அறிவைக் குறித்தும் விரிவாகப் பேசும் குறளாசான், கற்பித்து அறிவை வளர்க்கும் ஆசிரியரைக் குறித்துச் சிறப்பாக ஒன்றும் பேசவில்லையே! சற்றே அயர்ச்சியுடன் நூல்களைப் புரட்டிக் கொண்டே மனம் அசைபோட, அந்திக்கருக்கல் வேளையில், பளீரென வயல்வெளியில் உலா வந்தார் கல்வியில் பெரிய கவிச்சக்கரவர்த்தி, கம்பநாடன் என்னும் பேராசான்! கம்பநாடனும் கண்முன் விரிந்த எசப்பாட்டும்! எங்கிருந்தோ வந்த ஏற்றப்பாட்டின் சந்தத்தில் ஈர்க்கப்பட்டு, தம்மை அறியாமலேயே குரல் வந்த திசையில் நடக்கலானார் கம்பர். கமலை ஏற்றம் இறைத்து தண்ணீர் பாய்ச்சிய உழவர்களின் பாட்டே அது! “மூங்கில் இலைமேலே...” என்ற உழவனொருவனின் எசப்பாட்டுக்கு “தூங்கும் பனி நீரே...” என்ற எதிர்ப்பாட்டை மற்றொரு உழவன் பாட, “தூங்கும் பனி நீரை...” என்ற மூன்றாமவன் எசப்பாட்டு நெட்டிசையில் கொள்ளை போனது கம்பனின் மனம்! கண்ணிமைக்கும் நேரத்தில், எசப்பாட்டுப் பாடிய உழவர்கள் மூவரையும் அங்கிருந்து கொத்திக்கொண்டு போனது "அப்பா! நம்ம வீட்டுப்பசு கன்னு போட்டாச்சு, கூப்புடுறாங்க!’ என்ற சிறுமியின் குரல்! கம்பனுக்கே கைவராத எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு! இருள் கவிந்து சூழ்வதை உணராது, பாடலில் மனதை பறிகொடுத்த கம்பர் அங்கேயே நிற்கிறார். “தூங்கும் பனி நீரை...” என்பதன் அடுத்த வரிக்கு கவிச் சக்கரவர்த்தி கவி புனைய எத்தனிக்கிறார்; தம் கவித்திறம் விடைபெற்றுக் கொண்டதோ என்று கவலைகொள்ளுமாறு, கம்பநாடனின் நாவில் உதிக்க மறுக்கிறாள் தமிழன்னை! எதிர்ப்பாட்டை முடித்துவைத்த ஏற்றம்பாடும் உழவர்கள்! தம்மை மறந்து ஆற்றின் பாலக்கட்டையில் அப்படியே உட்காருகிறார். இரவும், நிலவும் மலர்ந்து உயர்வதை அறியாமலேயே கம்பர் அந்த இடத்தை விட்டு அகலாமல் உறைந்து கண் அயர்ந்து விடுகிறார். பொழுது புலர்கின்றது..! புள்ளினங்கள் சிலம்பும் ஓசையில் உறக்கம் கலைய, உழவர்களின் கமலை இயங்கத் துவங்குகிறது! ஏற்றப்பாட்டும் தொடர்கிறது!! தூங்கும் பனி நீரை” என்று மூன்றாமவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் பாட, வாங்கும் கதிரோனே!” என்று முதலாமவன் முடித்துவைக்கிறான். மீண்டும், “மூங்கில் இலைமேலே...” என்று இரண்டாமவன் தொடங்க, “தூங்கும் பனி நீரே...” என்று மற்றொருவன் பாட, “தூங்கும் பனி நீரை... ... வாங்கும் கதிரோனே” என்று எசப்பாட்டும் கமலையும் இசை பெருக்கின. கம்பனுக்கே பேராசான்களான எசப்பாட்டு உழவர்கள்! தம்மால் இயற்ற முடியாத அற்புதக் கவிதையைக் கேட்ட கம்ப நாடனின் உள்ளம் பேருவகை அடைந்தது. பாட்டை இடைநிறுத்த மனமில்லாமல், தமக்குக் கவி கற்றுக்கொடுத்த உழவர்களாகிய பேராசான்களிடம் மனதால் நன்றி கூறி, பரந்த மனமும், தன்னடக்கமும் கொண்ட உள்ளம் வரப்பெற்றவராய் தம் வீட்டை நோக்கி நடக்கிறார் கம்பன் என்னும் பெருங்கவிக்கோ. 'ஆசிரியன் வாழ்நாள் முழுவதும் மாணவனே' என்று உணர்த்திய கம்பன்! வள்ளுவனின் ஆளுமை கண்டு வியந்து போனேன்! அணுவைத் துளைத்து ஏழ்கடலைத் துளைத்துக் குறுகத் தரித்த குறள், எந்த தனி ஒரு ஆசிரியரின் தகுதிப்பாட்டையும், குணநலன்களையும் வெளிப்பட உரைக்காதது கற்றலும், கற்பித்தலும் ஒரு வாழ்நாள் அனுபவம் என்பதால் அல்லவா! ஆசிரியன் வாழ்நாள் முழுவதும் மாணவனே என்று உணர்த்தினார் கம்பன்; மனித வாசிப்பு, சமூக வாசிப்பு, ஏனைய உயிரினங்களும், இயற்கையும் தரும் பட்டறிவு உள்ளிட்ட பல ஆசிரியர்களையும் உள்ளடக்கிய வாழ்வியல் பாடம் திருக்குறள் முழுவதும் சொல்லப்படுவதால், 'ஆசிரியர்' தனியாகக் குறிப்பிடப்படவில்லை என்பது புரிந்தது! அன்னை, தந்தை, குரு, தெய்வம் என்று இறைவனுக்கு முந்தைய படிநிலையில் உள்ள ஆசிரியர் என்பவரின் தகுதிப்பாடு திருக்குறள் நெடுகிலும் பரக்கப் பேசப்படும் பொருள் அல்லவா? தனிமனிதனுக்குள் ஆசிரியனைத் தேடிய மதியிலியானேன்! தனிமனிதனுக்குள் ஆசிரியனைத் தேடிய மதியிலியான எனக்கு, ஏற்றப்பாட்டு உழவர்கள் போல் எண்ணற்ற ஊனுடல்களில் ஒளிந்திருக்கும் ஆசிரியர்களின் தரிசனம் கிட்டியது! தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே! என்று திருமூலர் அருளிய திருமந்திரத்துக்குப் புதிய பொருள் விளங்கித் தோன்றிற்று! அறிவானும் அறிவிப்பானுமாகிய வாலறிவனே பேராசான்! மனிதர்களுக்கு பொறி-புலன்கள் கொண்ட உடல் மூலம் அறிவை அறிவிக்கும் இறைவன், மனிதர்களுடன் தானும் அறிகின்றான்; அறியப்படும் அறிவாகவும் இருப்பதும் இறைவனே! அவனே வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, அறிகின்ற மெய்ப்பொருள் உண்மையுமாய் நிற்பவன் என்று காரைக்கால் அம்மையின் பாடல் நன்கு விளங்கிற்று! அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்! - 11ம் திருமுறை:அற்புதத் திருவந்தாதி-4:காரைக்காலம்மையார். ஆசிரியன் இவன்தான் என்று நுட்பப் பொருளாக வள்ளுவன் என்னும் பேராசான் வழங்கிய கற்றதனால் ஆய பயன் என்கொல்! வாலறிவன் நற்றாள் தொழார் எனின்? குறள்வழி, அறிவானும், அறிவிப்பானும் தானேயாகிய வாலறிவனின் பேரருள் விளங்கிற்று! குருவின் திருவடிகளே சரணம்! வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார் உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்! கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
 21. 1 point
 22. 1 point
  காணொளிகளை நேரடியாக தரவேற்றமுடியாது. YouTube போன்ற தளங்களில் இருந்துதான் இணைப்புக் கொடுக்கமுடியும். இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும். சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம். இவைதான் நான் பாவிக்கும் முறைகள்.
 23. 1 point
  வில்லாய் வளையும் தமிழ்நாட்டின் 100 வயது 'யோகா பாட்டி'
 24. 1 point
  குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவீழு மாறே (திருமந்.1680) குரு என்னும் சொல், கு+ரு என பகுபடும். ரு - இருள் கு - நீக்குதல் அதன்படி, “குரு” என்பவர் அறியாமை என்னும் பேரிருளை நீக்குபவர் என பொருள்படும். அதாவது, ” எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தன்னிலிருந்து பிறருக்குக் கடத்துகிற ஆசிரியர் ‘குரு’ ஆகிறார்” என்பது தவறாகும். ஒரு மாணவனின் அஞ்ஞான இருளை போக்குபவரே குரு. இங்கு எழுதிய இரு விடயங்களுக்குள்ளும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. திருமந்திரம் பொருட்செறிவு மிகுந்த பொக்கிஷம். அதன் ரசத்தை பருகுவதற்கு நுண்ணறிவு மிகமுக்கியம். வெறுமனே தமிழ் விரித்தெழுதல் பயன் தரா. நுணுகி ஆராய்ந்து பாருங்கள் நண்பர்களே.