Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

 1. Maharajah

  Maharajah

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   10

  • Posts

   325


 2. போல்

  போல்

  கருத்துக்கள பார்வையாளர்கள்


  • Points

   8

  • Posts

   6,134


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Posts

   60,361


 4. இசைக்கலைஞன்

  இசைக்கலைஞன்

  கருத்துக்கள பார்வையாளர்கள்


  • Points

   4

  • Posts

   22,122


Popular Content

Showing content with the highest reputation on புதன் 30 அக்டோபர் 2019 in all areas

 1. எங்கள் இனத்தை காவு கொடுத்ததட்குரிய பலனை இந்தியா அனுபவிக்கத்தானே வேண்டும். அதை நான் இறப்பதற்கு முன்னர் பார்க்க வேண்டும். இதுதான் என்னுடைய ஒரே ஒரு அவா.
  6 points
 2. மிகவும் துயரத்தை கொடுத்த ஒரு நிகழ்வு. அதனால் எந்த திரியையும் எட்டிப் பார்க்க முடியவில்லை! எனக்குத் தோன்றுவது என்னவென்றால், கைகள் மேலே தெரிந்தபோதே சுருக்கு கயிற்றை இறக்கி கைகளில் ஒன்றை சுருக்கிட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 20 அடியில் இருந்து எண்பது அடிகளுக்கு செல்லாமல் தடுத்திருக்கலாம். இரண்டாவதாக, குழியின் மேல் vacuum seal செய்து 1.0psi suction கொடுத்தால் குழந்தைக்கு சில கணங்கள் கடினமாக இருந்தாலும், சுற்றுச் சுவர்கள் இறுக்கம் தணிந்து மேலே இழுக்க வசதி ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விரிவான செய்முறை வரைந்துதான் விளக்க முடியும். ஆழ்ந்த இரங்கல்கள்!
  3 points
 3. பகுதி 33 “உங்கட அம்மாவோட கதையுங்கோ. பெரிசா செய்யத் தேவை இல்லை. எழுத்தை மாத்திரம் எழுதிவிடலாம்” இப்படி அபி சொல்லிவிட்டாள் என்றாலும்... அவளால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனம் ஒரு நிலைகொள்ளாது தவித்தது. துக்கமும், கோபமும் ஒன்றுசேர்ந்து அவளை வாட்டியது. என் அன்புக்குரிய இனிய மதுரன் இனி எனக்குக் கிடைக்காமல் போவதற்கு நானே வழிவகுத்துவிட்டேன். என்தலையில் நானே மண்ணைவாரிக் கொட்டிவிட்டேனா! என்று மனம் குமுற வீட்டிற்கு வந்தவள், எதுவும் செய்யப் பிடிக்காது முன்னால் இருந்த ரீவியின் பட்டனை அழுத்திச் தமிழ்சனலில் புகுந்தாள், கல்யாணகுமார் அங்கு சோகத்துடன் எங்கிருந்தாலும் வாழ்க பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். சற்று நிமிர்ந்தவள் ஆமாம் நான் உண்மையில் மதுரனை விரும்பிக் காதலித்திருந்தால்... அவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராகும் நிலையில்தான் நான் இருக்கவேண்டும். அவன் விரும்புவதைத்தானே அவனுக்கு நான் அளிக்கவேண்டும். அவன் இன்பமே எனது இன்பமாக இருக்கவேண்டும், அபியின் மனம் சற்று அமைதிகொண்டது. மதுரன் எங்கிருந்தாலும் வாழ்க! அவள் அடிமனதில் எழுந்த எண்ணம் அவளை சாந்தப்படுத்தியது. அபி சுரேசுடன் தொடர்புகொண்டபோது... “என்ன அபி மதுரன் உனக்குக் கிடைத்துவிட்டானா?” என்று தொடர்ந்தான். “நான் உன்னிடம் ஒன்று கேட்பேன் மறுக்காமல் செய்வாயா?” என்று கேட்டாள் அபி. “என்னவென்று சொல்லு கட்டாயம் உனக்காக நான் செய்வேன்” என்றான். சுரேசு. “மதுரமும் நிலாவும் ஒன்றுசேர எந்த இடையூறும் செய்யாமல் இருப்பாயா...?” அபியின் கேள்வி சுரேசுக்கு திகைப்பாக இருந்தது. அபி நடந்தது எல்லாவற்றையும் கூறினாள். “நீ உண்மையில் இதயசுத்தியோடு நிலாவைக் காதலித்திருந்தால்... அவள் உன்னோடு வாழ்வதற்குக் கொடுத்துவைக்காது விட்டாலும் அவள் எங்கிருந்தாலும் நன்றாக வாழவேண்டும் என்றுதானே உன் மனமும் என்னைப்போல் வாழ்த்தும் என்று எண்ணித்தான் உன்னிடம் கேட்டேன்.” “நான் அத்தனை கெட்டவனில்லை அபி, நானும் ஆசா பாசங்களுடன் கூடிய மனிதன்தானே, ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்வது சற்றுச் சிரமம்தான், அவகாசம் கொடு நான் உன்னைத் தொடர்புகொள்கிறேன் என்றான் சுரேசு. சுரேசு அந்த நிறுவனத்தில் தலைமைக் கணக்காளர் பணியை ஏற்ற சிலநாட்களிள் அதிசயிக்கத்தக்க வகையில் அந்த நிறுவனம் வளர்ச்சிகண்டது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அதன் பெயர் பரவியது. நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் அதிக இலாபம் கண்டது. அதன் தலைவர் நந்தபால அவனை முகாமையாளராகப் பதவி உயர்த்தினார். அதுமட்டுமல்ல அங்கு பணிசெய்த அனைவருக்கும் ஊதிய உயர்வுகிடைக்க அவன் காரணமானான். அவர்கள் அவனை அன்புடனும் மரியாதையுடனும் அணுக முயன்றனர். இத்தகய மதிப்புமிக்க உயர்வினால் அவனிடம் இருந்த கோபதாபம், பொறாமை, பழிவாங்கும் உணர்ச்சிகள் அனைத்தும் அற்றுப்போய் மனிதநேயம் அவன் உள்ளத்தில் மலரத்தொடங்கிய நேரத்தில்தான் அபி மதுரன் நிலா விடயமாக அவனைத் தொடர்புகொண்டாள். தன்னைப் பார்க்கவந்த தனது சகோதரர்கள் இருவரிடம் அமானி மதுரனை அறிமுகப்படுத்தினாள். மதுரனின் அறிவுத் திறமைகளை அறிந்ததோடு அவன் அழகையும்கண்டு அவர்களுக்கும் மதுரனைப் பிடித்துவிட்டது. வரும் விடுமுறையில் மதுரனையும் ஈரானுக்கு அழைத்துவரும்படி அமானியை வேண்டினார்கள் என்பதைவிடவும் கட்டளையிட்டார்கள் என்பதையே அவர்கள் தொனி வெளிக்காட்டியது. மதுரன் சென்றபின் தொடர்ந்த அவர்களுடைய உரையாடல்களை, தற்செயலாக அவர்கள் அறையைக் கடக்கநேர்ந்த மதுரனின் நண்பன் டேவிட்டால் கேட்கமுடிந்தது. தங்கள் மொழி இங்கு யாருக்குத் தெரியும் என்ற அலட்சியத்தில், அமானியும் அவன் சதோதரர்களும் வெளியே பிறருக்குக் கேட்டுவிடுமோ என்ற தயக்கமும் இன்றி சற்று உரக்கவே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டு அதிர்ந்துபோனான் டேவிட். டேவிட் பூர்வீக லண்டன்காரன். ஈரான் மொழி உட்படப் பல மொழிகளில் தேர்ச்சிபெற்றவன், அத்துடன் ஈரானிய மொழிகள் என்பன, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பிரிவும் ஆகும். அதனால் அவர்கள் பேசியது அவனுக்குத் தெளிவாகவே புரிந்ததால் திகைத்தான், தன் நண்பனுக்கு வரப்போகும் ஆபத்தை எண்ணிக் கலங்கினான். டேவிட்டுக்குத் தெரிந்த மொழிகளில், தமிழ்மொழியின்பால் அவன்கொண்ட பற்றுமட்டும் ஆழமானது. மதுரனின் திறமையை அறிந்ததோடு அவனும் ஒரு தமிழன் என்று அறிந்ததும், டேவிட் தானாகவே வலியவந்து மதுரனை தனது நண்பனாக்கிக் கொண்டவன். அப்படிப்பட்டவன் தன் நண்பனுக்கு ஒரு கேடுவருவதை தாங்கிக் கொள்வானா? சகோதரர்களோடு நடைபெற்ற அமானியின் உரையாடல் அனைத்தையும் அவன் மதுரனிடம் கூறிவிட்டான். அமானி கூறினாள்... “நான் இங்கு படிக்கவந்தபின் இங்குள்ள தமிழர்களோடும் பழகி அவர்கள்பற்றி நிறைய அறிந்துள்ளேன். அவர்கள் எங்களைப்போல் அல்ல… எங்கள் சமூகத்திலிருந்து யாராவது மதம் மாறினால் நாங்கள் கொதித்தெழுந்து மாறியவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுமோம். ஆனால் அவர்கள் அப்படியல்ல. யாராவது மதம்மாறினாலும் அவர்கள் சமூகம் அதனைப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆகவேதான் நான் சொல்கிறேன் மதுரனை மதம்மாற்றி நான் அவரை மணப்பதில் சிரமமிருக்காது. அவர் அப்படி மறுக்க முனைந்தாலும் எங்கள் நாட்டில் அது நடவாது. ஒரு தமிழனை வன்முறையால் மாற்றித் திருமணம் செய்து வைத்துவிட்டாலும், மனைவியென்று வந்தவளைத் தனது ஆயுட்காலம்வரை விட்டுப் பிரியாது வாழும் பண்பு தமிழரிடம் உள்ளது. மதுரனும் ஒரு தமிழன் அப்படித்தான் இருப்பார் நம்பலாம்.“ “சரி அமானி, நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மதுரனை அங்கு அழைத்துவருவது உன்பொறுப்பு மற்றவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.” சகோதரர்கள் கூறினார்கள். டேவிட்மூலம் அமானியும் அவளின் சகோதரர்களின் உரையாடல்களை அறிந்த மதுரன் கதிகலங்கிப்போனான். வகுப்பறையில் அமானிக்கு அருகே இருந்த இருக்கை இடம்மாறியது. அவளின் நிழல்கூட தன்மீது படியாமல் பார்த்துக்கொண்டான். டேவிட்டுக்கு மதுரன் நன்றி சொல்லியபோது அவன் கேட்டான், “ஏன் மதுரன் நீங்கள் தமிழர்கள்…. பல மதங்களைப் பின்பற்றி வாழ்கிறீர்கள், உங்கள் தாய்மதம் என்ன.?” என்றான். பிற இனங்களையும் ஆராயும் அவன் ஆர்வத்தை வியந்த மதுரன் பதில் கூறினான், “தமிழர்களுக்கு மதமில்லை இயற்கைதான் அவர்கள் கடவுள். ஆனாலும் சைவம் என்ற சமயமே அங்கு தோன்றி மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியது. அதன்பின் தமிழர்களை ஆண்ட, அடிமைகொண்ட அரசுகளின் மதங்களுக்கு சிலர் நிரப்பந்தத்தினாலும், அரசுகளின் செல்வாக்கைப் பெறுவதற்காகவும் மாறினார்கள். அப்படி மாறியவர்கள்தான், பின்நாளில் தாய்மதத்தை மறந்தது தவறென்ற குற்ற உணர்வுகொண்டு அதனைத் தவிர்ப்பதற்கு தவறான காரணங்களைத் தேடுகின்றனர். தாய்மதத்தில் உள்ள, இக்காலத்திற்கு ஒவ்வாத புனைக்கதைகளை, புராணங்களைக் கிளறி எடுத்துத் தாங்கள் முன்னோரும் மதம்மாறியது சரியே என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தி ஏனையோரையும் ஏமாற்ற முயல்கின்றனர்“ என்றான் மதுரன். “ஆமாம் மதுரா உங்கள் சைவ சமயத்தைப்பறறியும், ஆரியம் அதற்குள் புகுந்து தனது மொழியாலும் மதத்தாலும் உங்களைக் குழப்பியுள்ளதையும் நான் அறிவேன். எங்கள் மதமும் உங்கள்மேல் சவாரிசெய்வதையும் அறிந்துள்ளேன்.” என்று கூறிய டேவிட்டைத் தொடர்ந்தான் மதுரன், “மதங்கள் கடவுளால் படைக்கப்பட்டதல்ல, நல்வாழ்கையை மனித இனம் மேற்கொள்வதற்காக மனிதர்களே அவற்றைப் படைத்தார்கள். அதனை மனிதர்களுக்கு உணர்த்த எடுத்த உதாரணங்களைத்தான் புரிந்துகொள்ளாது தவறென்கிறார்கள். உண்மையில் கடவுள் என்றால் முதலில் உன் உள்ளத்தைக்கட என்பதாகத்தான் பொருள்கொள்ள வேண்டும். அதனைவிடுத்துக் கடவுள் என்றால்... கடவுளே இல்லையென்று நாத்திகம்பேசி, “கடவுளைக் காட்ட முடியுமா?” என்று சண்டைக்கும் வருகிறார்கள், “ஆன்றோர்கள் சொன்னதை எல்லாம் நம்பவேண்டாம் நம்பினால் அது மூடநம்பிக்கை என்கிறார்கள். இவர்களுள் அறிஞர்களும் அடங்கியிருப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” “உண்மைதான் நண்பா! நான் இதுபற்றி ஒரு கட்டுரை எழுதி இங்குள்ள ஒரு பிரபலமான பத்திரிகைக்குக் கொடுப்பதாக உள்ளேன்” என்றான் டேவிட். அபி மதுரனுடன் பேசியதை பேச்சுடன் நிறுத்தவில்லை மதுரனுடனும் நிலாவுடனும் நீண்டநேரம் உரையாடி, அவர்களைப் பதிவுத் திருமணத்துக்குச் சம்மதிக்கவைத்தும் அல்லாமல் மதுரனின் அண்ணன்மார் குகனுடனும், பெரியண்ணனுடனும் தொடர்புகொண்டு அவர்களையும் சம்மதிக்க வைத்துவிட்டாள். குகன் தான் அங்குவந்து சாட்சிக் கைழுத்துப் போடுவதாகவும், ஊரில் அம்மா அப்பா மற்றும் சொந்தபந்தங்கள் முன்னிலையில் மதுரன் நிலா கல்யாணத்தை நடாத்தவிருப்பதாக தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தி சம்மதம் பெற்றுவிடுவதாகவும் உறுதியளித்தார். அவன் விரும்பினால் நான் தடையில்லை என்று பெரியண்ணன் பட்டும் படாமலும் ஒதுங்கிவிட்டார். இதுவரையில் அனைத்து ஏற்பாடுகளும் அபியின் எண்ணப்படி நிறேவேறி வந்தாலும் எதிர்பாராதவிதமாக நிலாவின் சம்மதத்தில் மாற்றம் ஏற்பட்டு அனைவரையும் கலங்கடித்தது. நிலாவின் அம்மா தான் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், பதிவுத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனாலும் பிரச்சனை வேறுவடிவில் தோன்றியது. அம்மா அருகே இல்லாமல் நான் எதுவும் செய்யப்போவதில்லை என்று நிலா உறுதியாகச் சொல்லிவிட்டாள். இது அனைவரையும் அதிருப்தி அடைய வைத்தாலும், அவளுடைய தாயன்பு மனதை உருக்கி இரக்கம்கொள்ளவே வைத்தது அபி செய்வதறியாது திகைத்தாலும் சுரேசின் ஞாபகம்வரவே அவனுக்குப் போன் செய்தாள். நடந்தது, நடப்பவை அனைத்தையும் அபி சொல்லக்கேட்ட சுரேசின் மனம் கவலையுறத்தான் செய்தது. அவன் இப்போது பிறர் கவலையையும் தன் கவலையாகக் கொள்ளும் பெரிய மனதைக் கொண்டவன் அல்லவா. பதவி வரும்போது பணிவு வரவேண்டும். ஆனால் பணிவோடு பாசமும் அன்பும் சுரேசிடம் குடிகொண்டது அதிசயம்தான். அன்று தனது நிறுவனத்துக்கு வருகைதந்த தலைவர் நந்தபால, சுரேசின் வாடியமுகம் கண்டு என்னவென்று ஆதரவாக வினவினார். அவர் அன்புக்குக் கட்டுப்பட்ட சுரேசு அபி சொன்ன அத்தனையும் விலாவாரியாக ஒப்பித்தான். தனது ஆத்மார்த்தமான நண்பர்கள் மதுரன் நிலாவுக்குச் செய்யவேண்டிய கடமையாக அவர்களது பெற்றோர்களை லண்டனுக்கு அனுப்ப எடுத்த முயற்சி தோல்விகண்டதாக கவலையோடு தெரிவித்தான். சற்று நிதானித்த நந்தபால, „அவர்களுக்குரிய ஆவணங்களுடன் அவர்கள் படங்களையும் எனக்குத் தரமுடியுமா?” என்று கேட்டார். கேட்ட அனைத்தும் சுரேசிடம் இருந்ததால் உடனே எடுத்துக் கொடுத்தான். மதுரன் நிலா பதிவுத்திருமணம், மதுரனின் பெற்றோர், நிலாவின் அம்மா முன்னிலையில், அபி, சுரேசுவின் சாட்சிக் கைழுத்துடன் மற்றும் உறவுகள் நண்பர்கள் சூழ லண்டன் பதிவுக் கந்தோரில் இனிதே நடந்தேறியது. நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது சுரேசும் அபியும் அருகருகே இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். “எப்படி மதுரன்! அபியின் பெற்றோர்கள் இத்தனை விரைவில் எந்தத் தடங்கலுமின்றி லண்டன்வர முடிந்தது..?” அபி ஆச்சரியமாகக் கேட்டாள். அவளை அன்புடன் நோக்கிய சுரேசு... “எங்கள் நிறுவனத்தின் தலைவர் உள்துறை மந்திரியின் நெருங்கிய உறவினர் என்பது தனக்கு பின்புதான் தெரிந்தது என்றான்.” அங்கு கூடியிருந்த அனைவரும் சுரேசைப் பாராட்டி வாழ்த்தினார்கள். “நீங்கள் எல்லோரும் இன்று வாழ்த்தவேண்டியது புதுமணத் தம்பதிகளை, என்னையல்ல” என்ற சுரேசின் புத்திசாலித்தனமான பேச்சைக்கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். “ஆமாம் அம்மா! ஊர் எப்படி இருக்கிறது? எல்லோரும் நலமா?” என்று தாயை விசாரித்தான் மதுரன். “நலம்தான், ஆனால் ஆச்சிப்பிள்ளை ஆச்சிதான் பாவம்” என்றார் மதுரனின் தாய். மதுரன் நிலா உட்பட அபியும் பதற்றமாக “அவருக்கு என்ன நடந்தது?” என்றார்கள். மதுரனின் தாயும் தந்தையும் நடந்ததைக் கூறினார்கள்..... ஆத்தைப்பிள்ளை “ஆச்சி ஐயோ! குறுக்காலை போவான்கள்! நாசமாய்ப் போவான்கள்!” என்றும், பல காதுகொடுத்துக் கேட்கமுடியாத திட்டுக்களையும், ஒப்பாரிப் பாடல்களையும் அவள் வீடுதாண்டி அப்பாலுள்ள வீடுகளுக்கும் கேட்கும்படி புலம்பிய குரல் கேட்டு, என்னவோ ஏதோ என்று ஓடிவந்தவர்கள் திகைத்து நின்றார்கள்…! நாகேந்திரன் தலையில் தீவட்டிப் பந்தம்போல் பெரிய துணிச் சுற்றலுடன், கைகள், கால்களில் இரத்தக் காயங்களுடனும்….! ஆத்தைப்பிள்ளை ஆச்சி விசிறிகொண்டு விசிற, அவள் மடியில் படுத்திருந்தான். “என்ரை பிள்ளையை யாரோ இடிவிழுந்து சாவான்கள் இருட்டில் வைத்து பொல்லால் அடித்துப்போட்டாங்கள் ஏன்? எதுக்கென்று பிள்ளைக்கும் தெரியாதாம்.!” ஆச்சி புலம்பியதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. “அவன் எல்லோருக்கும் உதவிசெய்யும் நல்லவனாயிற்றே அவனை யார் அடித்திருப்பார்கள்?” என்று மதுரன் கேட்டான். நாகேந்திரன் பற்றிய பேச்சுவந்ததும், நிலாவின் அம்மாவின் முகம் கடுப்பானதையும் அதனைமறைக்க அவர் பாத்றூமுக்கு எழுந்து சென்றதையும் யாரும் கவனிக்கவில்லை. என்ன நடந்திருக்கும்.....? யாழ்கள உறவுகள், மற்றும் வாசகர்களால் இதுபற்றி யூகிக்கமுடியுமா....?? நானும் முயற்சிசெய்கிறேன். சுபம்.
  3 points
 4. Message from TripAdvisor: Due to a recent event that has attracted media attention and has caused an influx of review submissions that do not describe a first-hand experience, we have temporarily suspended publishing new reviews for this listing. If you’ve had a firsthand experience at this property, please check back soon - we’re looking forward to receiving your review! அவன் முந்தியிட்டான் .
  2 points
 5. இதில ஒரு தீவும் அடங்கியுள்ளது. இந்தியாவுக்கு பெப்பே!
  2 points
 6. முஸ்லிம்கள் உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் தமது மதத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருப்பவர்கள். இனம் மொழி நாடு என்பதைதெல்லாம் அர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. (இது எனது கருத்து மட்டுமே. )
  2 points
 7. பொயட் அண்ணே..... கடை முதலாளி, முஸ்லீமாம். இதுக்கு... இனி எப்படி, முட்டுக் கொடுக்கப் போகின்றீர்கள், என்று பார்க்க ஆசையாக உள்ளது.
  2 points
 8. மணிகண்டன் என்ற இந்த தனிநபரின் முயற்சி பெரும் பாராட்டுக்கு உரியது. அவர் தனது ஆள்துளைக் கிணற்றில் வீழ்ந்த தனது குழந்தையைக் காப்பாற்றியதோடு நின்றுவிடாமல் பலவருட முயற்சியில் பயனுள்ள ஒரு கருவியை வடிவமைத்து, அதனை மேலும் மேலும் செம்மையாக்கி வருகிறார். தமிழக அரசும், வல்லரசுக் கனவில் நித்தம் மிதக்கும் இந்திய ஹிந்திவெறி அரசும் ஆள்துளைக் கிணறு தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வக்கிலாதவை. ஊழலில் ஊறிப்போயுள்ள இவர்களால் கையூட்டுகளை வாங்கவும் மனிதகுல அழிவுக்கு துணைபோகவும் மட்டுமே முடிகின்றது என்பது இந்திய வரலாறு. மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு தென்னிந்திய தொழிலதிபர்களை அழித்தொழிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. எயர்செல், ஸ்பைஸ்ஜெட், கிங்க்பிஷர் போன்ற பல தென்னிந்திய வர்த்தகங்கள் மூடப்படுவதற்கு அல்லது வட ஹிந்தியர்கள் கைகளுக்கு மாறுவதற்கு தேவையான அனைத்தையும் மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு செய்து முடித்திருந்தது. ராஜாவை கைது செய்த மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு தற்போது வடஹிந்தியர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த சிதம்பரத்தின் மீதும் கைவைத்துள்ளது. மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு இதுவரை எத்தனை வட ஹிந்தியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது? மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு இதுவரை எத்தனை வட ஹிந்திய பெரும் வர்த்தகர்களை கைது செய்துள்ளது?
  2 points
 9. 2 points
 10. மொழி-பா.உதயன் காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட மொழி பேசும் மனதோடு இசை பாடும் அழகான கிளி எல்லாம் அமுதமாய் தமிழ் பேசும் அருகோடு குயில் வந்து அதனோடு சுரம் பாடும் மழை கூடி தினம் வந்து மலரோடு கதை பேசும் இரவோடு இது பேசும் மொழி எல்லாம் தனி ராகம் சிற்பியின் உளியோடு சிலை கூட மொழி பேசும் அவனோடு தனியாக அது பேசும் மொழி வேறு அழகான பாவங்கள் அசைந்து ஆடும் ராகங்கள் மனதோடு அது பேசும் மனிதர்க்கு மட்டும் தான் மொழி என்று எவன் சொன்னான் இயற்கையின் மொழி எல்லாம் இறைவனின் படைப்பாகும் இது பேசும் மொழி எல்லாம் இதயத்தின் கனவாகும் .
  1 point
 11. பட்டது + படிச்சது + பிடித்தது - 198 பெற்றவர்கள் என்போர்??? ஒரு பிள்ளைக்கு தாய் தகப்பனாவதென்பது பெரும் பாக்கியம் மட்டுமல்ல பெரும் பொறுப்பு. அந்த பாக்கியத்தை உணர்பவர்கள் அதன் பொறுப்பை பெரும்பாலும் உணராததால் தான் அநேகமான பிள்ளைகள் தவறுகின்றன. ஒரு பெற்றோரிடம் அன்பும் கண்டிப்பும் இருக்கணும். எதை அனுமதிப்பது எதை அனுமதிக்கக்கூடாது அனுமதிக்கமுடியாது என்ற தெளிவு இருக்ணும். அந்தவகையில் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை அனுமதித்தும் தேவையற்றவற்றை ஒதுக்கியும் வைக்க முதலில் பெற்றோர் தெரிந்திருக்கணும். இது பிள்ளைகளின் பழக்கவழக்கங்களிலிருந்து அவர்களது நண்பர்கள் மற்றும் அவர்கள் பாவிக்கும் வீட்டில் மட்டுமல்ல வெளியிலிருக்கும் பொருட்கள் வரை பொருந்தும். எனது வீட்டில் ஆபத்தான மருந்துகளோ விசமான திரவங்களோ தேவைக்காக வாங்கிய அன்றே மிகுதி தூர எறியப்படும். அல்லது எனக்கு நித்திரை வராது. வீட்டில் கண்ணாடியோ கோப்பையோ உடைந்துவிட்டால் அவை முழுமையாக துப்பரவாக்கி நான் நடந்து பார்க்கும்வரை பிள்ளைகள் அவர்களது ரூமுக்குள் வைத்து பூட்டப்படுவர். அப்படியாயின் எப்படி 300 அடி பள்ளத்தை வளவுக்குள் வைத்தபடி பிள்ளைகளை வெளியில் விடமுடிந்தது???? நான் அங்கிருந்தால் பெற்றவர்களுக்குத்தான் காதாவடியில் போட்டிருப்பேன். அப்புறம் மாநிலம் காப்பாற்றும் மத்தி வரும் என்ற எதிர்பார்ப்பு வேறு?? எப்ப இவர்கள் வந்தார்கள் காப்பாற்றினார்கள் நம்புவதற்கு?? வெள்ளப்பெருக்கில்?? கடலில் தத்தளித்தபோது?? சுனாமியின் போது??? பக்கத்து நாட்டில் 4 சறம் கட்டிய பெடியளைக்கொண்ட இயக்கம் சுனாமி இழப்பை 3 நாளில் சர்வதேச விதிகளுக்கமைய சுகாதாரத்தை பேணி பாதிக்கப்பட்ட மக்களை பேணி நிற்க இவர்கள்??? ஆனால் கேட்காமல் காசு கொடுப்பார்கள் அது ரசியாவாக இருப்பினும் பிள்ளையை பாதுகாக்கத்தெரியாத பெற்றோராக இருந்தாலும்?? என்ன ஒன்று பிள்ளையை தூக்கி எங்காவது போட்டுவிட்டு படம் எடுத்து முகநூலில் போட்டால் கோடீசுவரர் ஆகலாம் என்பது முறிக்கிவிடப்பட்டிருக்கு......
  1 point
 12. ஆனால், தமிழர்களின் பூர்வீக காணியை மட்டும் கொடுக்கமாட்டொம்
  1 point
 13. ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும் ஆர். அபிலாஷ் சீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமீபமாக கூறியது இதுதான்: “முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்றுகுவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம்என்ற வரலாறு வரும்”. ராஜீவின் அயலுறவு முடிவுகள் முன்னுக்குப் பின் முரணானவை, நிதானமான தெளிவானநோக்கற்றவை, அதன் பலனாகத் தான் ஈழத்தில் கடுங்குற்றங்களை நமது அமைதிப்படைநிகழ்த்தியது; அயல் நாட்டுனான உங்களது ராஜதந்திர நகர்வுகளை பொதுமக்களைபகடையாக்கி செய்யக் கூடாது. ஆனால் இதை எல்லா வளர்ந்த நாடுகளும் தொடர்ந்து செய்துவருகின்றன. அமைதிப்படை (பயங்கரவாதிகளையே கொல்கிறோம் எனும் தோரணையில், அதுவரை நட்புப் படையினராக இருந்தவர்களை தாக்குகிறோம் எனும் முரணுடன்) ஈழத்தில்பொதுமக்களை தாக்கியது, பெண்களை பலாத்காரம் பண்ணியது. எத்தனை எத்தனையோபடுகொலைகள். ஒரு உறுதி செய்யப்படாத கணக்கு மொத்தம் 20,000 தமிழர்கள்கொல்லப்பட்டதாய் சொல்கிறது. இந்திய ராணுவ குற்றங்களில் ஒன்றே ஒன்றை இங்கு உதாரணமாக தருகிறேன்: 1987இல் அக்டோபர் மாதம் 21, 22 நாட்களில் யாழ்ப்பாண மருத்துவமனையில் இந்தியஅமைதிப்படை நடத்திய மரணவேட்டை. புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தஇந்திய ராணுவம் எதிர்பாராமல் யாழ்ப்பாண மருத்துவமனைக்குள் நுழைந்து சுமார் மருத்துவர்கள், செவிலியர், நோயாளிகள் உள்ளிட்டு 70 பேரை சுட்டு வீழ்த்தியது. கொலைகளைக் கண்டு அஞ்சிஅழுத குழந்தைகளையும், சத்தமெழுப்புகிறார்கள் எனும் காரணத்துக்காக, சுட்டுக் கொன்றது. தண்ணீர் கேட்டவர்களையும் சுட்டனர். ரேடியாலஜி பிளாக்குக்குள் பதுங்கி இருந்தபொதுமக்களையும் படை யோசிக்காமல் சுட்டி வீழ்த்தியது. அடுத்து உயிருடன் இருக்கும்நோயாளிகள் முன்னிலையிலேயே பிணங்களை எரித்தது. மருத்துவர் சிவபாத சுந்தரம், மூன்றுசெவிலியருடன், கைகளை உயர்த்திய நிலையில் சரணடைய வந்தார். அவரையும் உடனடியாய்அமைதிப்படை சுட்டு வீழ்த்தியது. மேலும் இதே வருடம் கொக்குவில் கிராமத்தில் 40 பொதுமக்களை சுட்டுக் கொன்றது. 1989ஆம்வருடம் வெல்வெட்டித்துறையில் குழந்தைகள் உள்ளிட்டு 64 பேரைக் கொன்றது. இதற்கு, ராணுவம் பின்னர் அளித்த விளக்கம் “எங்களுக்கு பொதுமக்களுக்கும் புலிகளுக்கும்வித்தியாசம் தெரியவில்லை; புலிகள் பொதுமக்களுக்கு இடையில் பதுங்கி இருந்துதாக்குகிறார்கள்” என்பது. மருத்துவமனையில் பதுங்கி இருக்கும் குழந்தைகள், மருத்துவர், செவிலிகள் எல்லாம் உங்களுக்கு புலிகளா? இது குறித்த சர்வதேச விசாரணையை இன்னமும் யாரும் நடத்தவில்லை. இந்திய அரசும் இந்தபடையினரை விசாரிக்கவோ தண்டிக்கவோ இல்லை. (சிலரை தண்டித்திருக்கிறோம் என இந்தியராணுவம் பெயரளவுக்கு சொன்னாலும் குற்றம் சாட்டப்பட்ட பலரையும் இந்திய ராணுவம் பின்னர்சர்வதேச அமைதி படைகளுக்கு அனுப்பி இருக்கிறது.) இந்த பின்னணியில் சீமான் பேசியதில் நிச்சயம் நியாயமுள்ளது - அதாவது எளிய மக்களின்உயிரிழப்புக்கு, பெண்கள் மீதான தாக்குதலுக்கு நீதி வழங்கப்படவில்லை, ராஜீவின் குடும்பமும்இதற்கு மன்னிப்பு கோரவில்லை எனும் பொருளில். ஆனால் இந்த பிரச்சனை இத்தோடு முடிந்துபோகிற ஒன்றில்லை. காஷ்மீரியரை இதே போல் கொன்றும் கண்ணில் பெல்லெட் குண்டுகளால் சுட்டும் பெண்களைபலாத்காரம் பண்ணியும் அழித்ததற்கும், இந்திரா படுகொலையை ஒட்டி பஞ்சாபியரைகொத்துக்கொத்தாய் கொன்றொழித்ததற்கும், பல பழங்குடிகளையும் போராடும் மக்களை சுட்டுக்கொன்றதற்கும், மதக்கலவரங்கள் எனும் பெயரில் பல்வேறு சிறுபான்மையினரை குண்டர்களால்தாக்கியும் வீட்டுக்குள்ளும் கடைக்குள்ளும் வாகனங்களுக்குள்ளும் வைத்து கொளுத்திகொன்றதற்கும் இதுவரை எந்த அரசும் அதிகாரிகளும் மன்னிப்புக் கோரியதில்லை. இதுதொடர்ந்து இறையாண்மை பொருந்திய நமது அரசுகள் நிகழ்த்தும் கொடுங்குற்றங்களின்கரும்பக்கம். ராஜீவின் அரசு இதையே மற்றொரு நாட்டில் நிகழ்த்தியது. இதற்கு பல அதிகாரிகளும் துணைபோயினர் என்பது மட்டுமே வித்தியாசம். இங்கு நாம் அமைதிப்படையின் குற்றங்களைப் பற்றிப்பேசும் போது இந்தியாவுக்குள் இவர்கள் நிகழ்த்தும் கொடுங்கொலைகளையும் பட்டியலிடவேண்டும். அந்த பின்னணிக்குள் வைத்தே இதையும் பேச வேண்டும். காங்கிரஸை மட்டும் பழிக்கக்கூடாது. இந்த நோக்கில் தான் சீமானின் பேச்சில் ‘கடுகளவாவது’ நியாயமுண்டு என நினைக்கிறேன். அதாவது இத்தகைய உணர்ச்சிகர அறிக்கைகளால் தான் ஓரளவாவது இவர்களை சற்று நெளியவைக்க முடியும். ஆனால் எந்த ஜனநாயக அரசமைப்புக்குள்ளும் நீதி கோருபவர்கள் பழிக்குப் பழி வாங்குவதைநியாயப்படுத்த முடியாது. அப்படி செய்தால் இந்த அரச பயங்கரவாதங்களை, வெளியுறவுத்துறையின் மீறல்களை, இனப்படுகொலைகளை கேள்வி கேட்கும் தகுதியை நாம் இழந்துவிடுவோம். சீமானின் பேச்சின் பிரச்சனை அது சட்டென தமிழ்க் குரலை ஒரு காட்டுமிராண்டிக்குரலாக திரித்துக் காட்டுகிறது என்பது. அதே நேரம் சீமான் முன்வைத்ததை சற்று நாகரிகமான நிதானமான மொழியில் நாம் தேசிய, சர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து பேச வேண்டும். ராணுவம், காவல்துறை, வெளியுறவுத்துறைஆகியவற்றுக்கு வழங்கப்படும் மட்டற்ற அதிகாரத்தை கண்டித்து, அந்த அதிகாரத்தை மட்டுப்படுத்தகோரிக்கை வைக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் நமது காவல்துறையும் ராணுவமும் நம்மண்ணிலும் வெளிமண்ணிலும் நடத்திய அத்தனை படுகொலைகளுக்கும், பாலியல்குற்றங்களுக்கும் அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். இதை ஒவ்வொரு கட்சியும் தம் ஆட்சியில்நடந்த குற்றங்களுக்காக செய்ய வேண்டும்; எவ்வளவு பெரிய போராட்டங்களில் மக்கள்ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக துப்பாக்கியை நீட்ட மாட்டோம் என உறுதிமொழியை இந்தராணுவமும், காவலர்களும் இவர்களுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரிகளும் தலைவர்களும்எடுக்க வேண்டும். சாலையை சுத்தமாக வைப்போம் என்பது போன்ற உறுதிமொழிகளை விடஇதுவே முக்கியம். http://thiruttusavi.blogspot.com/2019/10/blog-post_1.html?m=1
  1 point
 14. சுற்றுசூழல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க், நார்டிக் கவுன்சில் அறிவித்துள்ள ‘சுற்றுசூழல் விருதினை’ நிராகரித்துள்ளார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி, வெள்ளிக்கிழமைகளில் தனது வகுப்புகளை புறக்கணித்து விட்டு கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இதன்மூலம் உலக முழுவதும் பிரபலமடைந்த சிறுமிக்கு, ‘சுற்றுசூழல் விருது’ வழங்க 87 நாடுகளை கொண்ட நார்வே கவுன்சில் முன்வந்தது. ஆனால் கவுன்சிலின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள தன்பர்க், விருது மற்றும் பரிசு தொகை சுமார் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்துள்ளார். மேலும் சுற்றுசூழல் இயக்கத்துக்காக விருதுகளை வழங்காமல், தற்போதுள்ள அறிவியலை பயன்படுத்தி, அதிகாரத்தில் இருப்போர் சுற்றுசூழலை பாதுகாத்திட கவனம் செலுத்தும்படி தன்பர்க் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.polimernews.com/dnews/86724/நார்டிக்-கவுன்சில்அறிவித்த-‘சுற்றுசூழல்விருது,-ரூ37-லட்சத்தைநிராகரித்த-சிறுமி Teen climate activist Greta Thunberg, who has inspired protests around the world urging leaders to better tackle global warming, has declined an environmental prize, saying "the climate movement does not need any more prizes." Two fellow climate activists spoke on Thunberg's behalf at an awards ceremony Tuesday in Stockholm for the regional interparliamentary Nordic Council's prizes. The two read a statement thanking the group for the honour. Thunberg, 16, is currently in California. But Sofia and Isabella Axelsson quoted Thunberg as saying "what we need is for our rulers and politicians to listen to the research." The Nordic Council hands out annual prizes for literature, youth literature, film, music and the environment, each worth 350,000 Danish kroner ($68,000 Cdn). It was not the first prizethe climate activist has been nominated for or won. Three Norwegian lawmakers nominated for the Nobel Peace Prize this year because they believe "the massive movement Greta has set in motion is a very important peace contribution." Last year, about three months into her school climate strike campaign, Thunberg declined another award — the Children's Climate Prize, which is awarded by a Swedish electricity company — because many of the finalists had to fly to Stockholm for the ceremony. Thunberg notes that flights contribute to global warming, so she sailed across the Atlantic Ocean for two weeks on a zero-emissions sailboat to reach New York. There the Swede scolded a UN climate conference in September , repeatedly asking, "How dare you?" "We are in the beginning of a mass extinction and yet all you can talk about is money. You are failing us," she said. https://www.cbc.ca/news/technology/greta-thunberg-nordic-prize-1.5340672
  1 point
 15. சிங்கள இராணுவ அதிகாரியின் செயல் மதிக்கத் தக்கதாக உள்ளது. கவிஞரே, நீங்கள் ஓரிரு உங்கள் நண்பர்களை வைத்து முழு முஸ்லிம் மதத்தவரையும் பொதுமை படுத்துவதாகவல்லோ படுகிறது.
  1 point
 16. அதுகளுக்கு எங்கிருக்கு படிப்பறிவு இல்லை பட்டறிவாவது இருக்கணும் இல்லை திறமையா உழல் செய்யவாவது தெரிந்து இருக்கணும் அதுவும் கிடையாது அடிமைகளா இருப்பது அதுகளுக்கு சுகம் .
  1 point
 17. சிலேடைச் சிதறல்கள் வேறெந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று- இரண்டு பொருள் தரும்படியான வார்த்தைகள் மற்ற மொழிகளைவிட தமிழில்தான் அதிகம் உள்ளன. ஒரு வார்த்தை இருபொருள் தரும்படி அழகாகப் பேசுவதை ‘சிலேடை’ என்று அழைப்பார்கள். இந்த சிலேடைத் தமிழில் வல்லவர் திரு.கி.வா.ஜ. அவர்கள். இங்கே நான் படித்து ரசித்த சில சிலேடைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு மடாதிபதி தமிழ்ப் புலவர்களை எல்லாம் அழைத்து விருந்து ஒன்று வைத்தாராம். எல்லா ஊர்களில் இருந்தும் புலவர்கள் வந்து விருந்தில் அமர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கடைமடை என்ற ஊர் இன்றைக்கும் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த புலவர் ஒருவர் விருந்திற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார். மடாதிபதி அவரை வரவேற்கும் விதமாக, “வாரும் கடைமடையரே!’ என இருபொருள்பட அழைத்தாராம். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவரே என்பது ஒரு பொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மற்றொரு பொருள். வந்த புலவர் லேசுப்பட்டவரல்ல... அவரும் பதிலுக்கு, “வந்தேன் மடத்தலைவரே...” என்றாராம். இதற்கு மடத்திற்குத் தலைவரே என்பது ஒரு பொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள். ================================================== பெரும் புலமை பெற்ற ஒருவர் பாட்டுப் பாடுவதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவர் தன் ஊரில் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த கிராமத்து ஆசாமி ஒருவன் அவரை நெருங்கி, “ஐயா, நான் உங்களைப் பாடையில பார்க்கணும்” என்றானாம். ’பாடும்போது பார்க்க வேண்டும்’ என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறான். அவரும் அசராமல், ”அப்ப சாகையில வந்து பார்” என்றாராம். ’சாகை’ (ஜாகை) என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். வீட்டில் வந்து பார் என்பதை இப்படி அழகாக சிலேடையில் கூறிச் சென்றுள்ளார் புலவர். ================================================== வயதான புலவர் ஒருவர் கம்பு ஒன்றினை ஊன்றிக் கொண்டு தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட கஞ்சப்பிரபு ஒருவர் கேலியாக, ”வாரும் கம்பரே...” என்றாராம். கம்பரைப் போன்ற புலவர் என்றும் கம்பை ஊன்றியவரே என்றும் பொருள் கொள்ளும்படி அவர் பேச, இவரும் உடனே தயங்காது கம்பைச் சற்று ஓங்கி, ”அடியேன் வணக்கம்” என்றாராம். ================================================== ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த ‘வெண்பா பாடுவதில் புலி’ என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக, “வேம்புக்கு இங்கு இடமில்லை” என்றாராம். ’வேம்பு’ என்றால் கசப்பு. இந்த இனிய சபையில் கசப்புக்கு இடமில்லை என்றும், வேம்பத்தூரைச் சேர்ந்த உமக்கு இடமில்லை என்றும் இருபொருள் கொள்ளலாம். புலவர் விடுகிற ரகமா என்ன..? சட்டென்று சற்றும் தயங்காது வெகுவேகமாக வந்து மன்னரின் சிம்மாசனத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, “வேம்பு அரசோடுதான் இருக்கும்” என்றாராம். அதாவது வேம்பு என்று தன்னை மன்னன் சொன்னதும், அரசனும், வேம்பாகிய தானும் சேர்ந்தே இருப்போம் என்றும், வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து இருந்தால் அது கோவிலாகும் என்றும் இருபொருள்படக் கூறினாராம். சபையே வியந்து சிரிக்க, மன்னரும் சிரித்து மகிழ்ந்தாராம். ================================================== பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்த கூட்டத்தில் பேசுவதற்கு அவசரமாகக் கிளம்பினார். அவரோடு சில நண்பர்களும் காரில் ஏறிக் கொண்டனர். அண்ணா, டிரைவரிடம், “தம்பி, விரைவாக வண்டியை ஓட்டுவாயா?” என்று கேட்டார். டிரைவரும் உடனே, “கவலைப்படாதீங்கய்யா... ஒரு நொடியில கொண்டு போய் விட்டுடறேன் பாருங்க...” என்றிருக்கிறார். அவர் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றதில் சாலையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கவனிக்காமல் போக, கார் பள்ளத்தில் இறங்கி உருண்டது. அனைவரும் காரைவிட்டு வெளியே வர, நல்லவேளையாக யாருக்கும் அதிகமாகக் காயம் இல்லை. அனைவரும் கோபமாக டிரைவரை திட்டத் தொடங்க, அண்ணா அவர்களை கையமர்த்தி விட்டு இப்படிக் கூறினாராம்: ”நாம கிளம்பறப்பவே அவர்தான் சொன்னார்ல... ஒரு ‘நொடி’யில விடறேன்னு. சொன்னபடி விட்டுட்டார். விடுங்க...” நொடி என்பதற்கு வினாடி, பள்ளம் என்று இரு பொருள் உண்டு. இப்படி அண்ணா சொன்னதும் அனைவரும் கவலை மறந்து சிரித்து விட்டார்களாம். ================================================== கவியரசு வைரமுத்து ஒருமுறை தன் சொந்த ஊரான வடுகபட்டிக்கு வந்திருந்தார். அவர் என் இனிய நண்பர் ஆதலால் நான் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம். அவருக்கு கவிதையைப் போலவே நகைச்சுவை உணர்வும் அதிகமுண்டு. நானும் அவரும் நண்பர்களும் காரில் வரும்போது மதுரையில் ஓரிடத்தில் பொங்கல் வைத்து விழாக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். “மதுரை இன்றைக்கும் கிராமம்தான்” என்று கவிஞர் ஆச்சரியத்தோடு சொல்ல, “அந்த போஸ்டரைப் பாருங்கள். இன்றிரவு கரகாட்டமும், பட்டிமன்றமும் நடைபெறும் என்று போட்டிருக்கிறார்கள்” என்று நான் சுட்டிக் காட்டினேன். “இப்போதெல்லாம் இரண்டும் ஏறத்தாழ ஒன்றுதான்” என்று ஒரு நண்பர் சொன்னார். உடனே வைரமுத்து, “இரண்டுக்குமே தலையில் ஏதாவது இருந்தால்தான் நல்லது” என்றார் சிரிப்போடு. கார் ஓட்டிய டிரைவர் உட்பட அனைவரும் சிரித்து விட்டோம். அவர் சிலேடையாகக் கூறிய செய்தியை நினைத்து வியந்தோம். -முனைவர் கு.ஞானசம்பந்தன் எழுதிய ’பரபரப்பு, சிரிசிரிப்பு’ என்ற நூலிலிருந்து. https://eluthu.com/kavithai/269016.html
  1 point
 18. நமது கனவு "லங்காஸ்தான்" கத்தியின்றி ரத்தமின்றி ஜனநாயக வழியிலேயே இன்னும் 20,30 வருடங்களில் சாத்தியப்படும்..?
  1 point
 19. தமிழ் தலைமைகளின் வழி நடத்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வியே எழும் சாத்தியம் இல்லை. சஜித் மட்டுமே அந்த வேட்பாளர். இந்த தலைமைகளின் வழிகாட்டல் சஜித்துக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தலை புறக்கணிப்பதா என்பது பற்றியதாகவே அமைய வேண்டும். சஜித் உண்மையிலேயே இந்த மக்கள் தேர்தலை புறக்கணித்து விடுவார்களோ என்று அஞ்சும் அளவுக்கு தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு அமைய வேண்டும். மல்யுத்த வீரர்களை பார்த்து இருப்பீர்கள். சண்டைக்கு முதல் தமது உடலை தட்டி தாம் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்று காட்டுவார்கள். அப்படி தமிழ் தலைமைகளும் காட்ட வேண்டும். இப்படி தான் லீ குவான் யு, மலேசிய பிரதமர் துங்கு ரஹ்மானுடன் சிங்கபூர் மக்களின் உரிமைகளுக்காக பேரம் பேசி, சிங்கபூர் சுதந்திர நாடானது. தேர்தலை பகிஸ்கரிப்பது பற்றி மட்டுமே அனைவரும் ஒற்றுமையாக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யும் அதே வேளை, தமது கோரிக்கைகளை சிங்கள வாக்குகளை இழக்க வைக்கும் கோரிக்கைகள் என்ற நிலையில் இருந்து முன்னேற்றி சாத்தியமான கோரிக்கைகளாக மாற்றி, பேச்சுவார்த்தைக்கு பின்னணியில் முயற்ச்சிக்க வேண்டும். சுருக்கமாக: வெளிப்படையாகவும் உண்மையாகவும் தேர்தலை பகிஸ்கரிக்க ஆயத்தப் படுத்த வேண்டும். பின்னணியில் சாத்தியமான கோரிக்கைகளை ஆயத்தப்படுத்தி பகிஸ்கரிப்பை கைவிடும் சூழ்நிலை உருவாக கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இந்த முயற்ச்சியில் கோத்தபாய வெல்லும் சாத்தியம் உள்ளதே என்று அஞ்சுவீர்கள். அந்த அச்சம் பொன்சேகாவுக்கும், மங்களவுக்கும், சஜித்துக்கும், ரணிலுக்கும் வர வேண்டும். உங்களுக்கு அஞ்சும் நிலை வந்தால் தான் அவர்களுக்கும் அஞ்சும் நிலை வரும். அப்போது தான் இறங்கி வருவார்கள். எல்லாவற்றிலும் இழப்புகளுக்கும் ஆபத்துகளுக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன - இதை risk என்பார்கள். அதிக நன்மை வேண்டும் என்றால் அதிக ஆபத்து உள்ள முறை தான் தேவையானது. இதை the higher the risk, higher the reward என்பார்கள்.
  1 point
 20. இக் குழந்தை வீழ்ந்த செய்தி காதில் வீழ்ந்து அருகில் ஒரு குழியை / துளையை இடுகிறார்கள் என்று கேள்விப்பட்ட கணத்திலிருந்து எனது மனதிலும் ஓடிய எண்ணம் இதுதான். துளையிடும் கருவி அல்லது வாரும் இயந்திரங்களின் அதிர்வுகள் குழந்தையை மேலும் ஆழத்துக்கு தள்ளும் என்ற எண்ணம் தொடர்ந்தும் 2, 3 தினங்களாக மனதை குடைந்து கொண்டே இருந்தது.
  1 point
 21. நிகழ்தகவை பெருமளவில் பயன்படுத்தும் தத்துவ கோட்பாடுகளில் Game Theory யும் ஒன்று. தமிழில் : https://ta.m.wikipedia.org/wiki/ஆட்டக்_கோட்பாடு ஆங்கிலத்தில்: https://en.m.wikipedia.org/wiki/Game_theory
  1 point
 22. எங்க போன ராசா கண்டு கன நாளாச்சு திரியும் காய்ஞ்சு போவுது ஆக்கள் வரத்தும் குறைஞ்சு போவுது எங்க போன ராசா கண்டு கன நாளாச்சு அப்பப்ப வந்து போனால் திரியும் செழிப்பாகும் போட்டியும் சிறப்பாகும் எங்க போன ராசா கண்டு கன நாளாச்சு.....
  1 point
 23. ஹிந்தியன் ஏற்கனவே தங்களின் காட்டுமிராண்டிப் பண்பாடுகளை சிங்களவனுக்கு புகட்டி வருகிறான்!
  1 point
 24. ஒரு நிறுவனத்தின் ஊழியருக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலையே புகைப்படத்தில் காண்கிறீர்கள். அதற்கு அந்நிறுவனம் கொடுத்திருக்கும் விளக்கமானது. படத்தில் உள்ளது 1. கூகிளில் போய் "Peppermint cafe Sri lanka' என்று டைப் செய்யவும். 2. இந்தக் கடையை கண்டுபிடித்து ' Review ' என்னும் பகுதிக்கு போகவும். 3. அங்கே ஐந்து நட்சத்திரங்களை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் முதலாவதை மட்டும் அழுத்தவும். 4 . பிறகு வாழ்த்து எழுதுவதற்கு விடப்பட்டிருக்கும் கட்டத்தில் காரணத்தை எழுதிவிடுங்கள்.
  1 point
 25. இந்த மேட்டுக்குடி விடுதியினை பற்றி கூகிள் ரிவியூ பக்கம் போய் எம் சனம் தாறுமாறாக விமர்சித்ததில் நேற்றிரவு 4.8 ஆக இருந்த தரம் இப்ப 1.9 இற்கு இறங்கி விட்டது. நானும் ஒரு Review போட்டுள்ளேன் கீழே உள்ளது இன்னொருவரின் முகனூலில் சுட்ட வழிமுறைகள் (steps) 1. கூகிளில் போய் "Peppermint cafe Sri lanka' என்று டைப் செய்யவும். 2. இந்தக் கடையை கண்டுபிடித்து ' Review ' என்னும் பகுதிக்கு போகவும். 3. அங்கே ஐந்து நட்சத்திரங்களை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் முதலாவதை மட்டும் அழுத்தவும். 4 . பிறகு வாழ்த்து எழுதுவதற்கு விடப்பட்டிருக்கும் கட்டத்தில் காரணத்தை எழுதிவிடுங்கள். https://www.google.ca/search?sxsrf=ACYBGNSSF7mNtm0oL3VMLhE0C5gXimHadg%3A1572372386398&source=hp&ei=on-4XbvsFcm9ggfzx5nQBw&q=peppermint+cafe&oq=peppermint+ca&gs_l=psy-ab.3.0.0i3j0l9.59.3801..4571...0.0..0.191.1327.0j9......0....1..gws-wiz.......0i131.IDC0m6gP7K4
  1 point
 26. மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அணியும் பேட்கள் குறித்து உரையாடுவதற்கு நான் வெட்கப்பட மாட்டேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பேட்கள் குறித்து சஜித் பிரேமதாச ஆற்றிய தொடர்பில் அவரை எதிரணியினர் மோசமாக விமர்சித்த நிலையில் பதிலடியாக இந்தக் கருத்தை சஜித் முன்வைத்துள்ளார். மேலும், யுனிசேப் தகவல்படி இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட பருவ வயதுடைய பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பாடசாலை கல்வியை தவற விடுகின்றனர். எமது அரசு சுகாதர பொருட்களுக்கான வரியை 100% இருந்து 63% குறைத்தனர். ஆனால் ஆயிரக் கணக்கான பெண்கள் இன்னமும் களங்கத்தை அனுபவித்து, ஒவ்வொரு மாதமும் தங்களை ஆபத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த உரையாடலுக்காக நான் வெட்கப்பட மாட்டேன். பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பில் நாங்கள் தீவிரமாக இருந்தால் அதற்குரிய சிறந்த அடிப்படை இடமாக இது இருக்கும். நிலையான செலவு குறைந்த வழிகளை கண்டறியும் வரை சுகாதார பொருட்களை இலவசமாக வழங்க வாக்குறுதியளித்து நிக்கிறேன். நான் பெண்கள் உரிமைகளில் உறுதியாக இருக்கிறேன். நான் பேட்மன் லேபிலை பெருமையுடன் அணிவேன். எனது பார்வையில் வானுடன் மனிதனாக (மேன்வித்தவனாக) இருப்பது நிச்சயம் விரும்பத்தக்கது. – என்றார்.
  1 point
 27. நீங்கள் கூறுவது நிகழ்தகவு(Probability) எனநினைக்கிறேன் தவறெனில் மன்னிக்கவும் ,நிகழ்தகவின் தரவுகளின் அடிப்படையில் ROR (Risk of Ruin simulator) இணைது ஒன்று நிகழ்வதற்கான சாத்தியகூறுகளை ஆராய்வார்கள்.
  1 point
 28. நையப்புடைப்பவர்கள் எல்லாம் வெளிநாடுகளிலிருந்து விசைப்பலகைகளில் நையப்புடைக்காமல் இலங்கை வந்து நேரடியாக நையப்புடைப்பார்களாயின் எங்களுக்கு ஓகே ...அதைவிடுத்து வெளிநாடுகளில் ஒளித்துக்கொண்டிருந்து நையப்புடைப்பார்களாயின் அவர்கள் எப்போதாவது தாயகம் எட்டிப்பார்க்கும் போது இங்குள்ள மக்களால் நையப்புடைக்கப்படுவார்கள்
  1 point
 29. அடப்பாவிகளா! என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க. நான் கூட கொஞ்ச நேரத்துல வேற என்னமோ செய்தினு நினைச்சுட்டேன்...
  1 point
 30. 1 point
 31. உங்கள் குடும்ப தொழிலை மதமாற்றிகளுக்கு கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான் அவருடைய மூதாதையர் மதமாற்றம் செய்யதமைக்கான காரணங்கள் அது
  1 point
 32. அண்ணே அது அல்லேலூயா & சோனக கூட்டம். கத்தோலிக்கர்களுக்கோ பெளத்தர்களுக்கோ இது பெரிய விடயமில்லை
  1 point
 33. ஐந்து கட்சிகளை பொது இணக்கப்பாட்டில் இணைத்த வடகிழக்கு பல்கலை மாணவர்கள்! அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன? இலங்கைத் தீவின் தேசிய கேள்வியாக கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்திருப்பதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் மரபுவழி தாயகம் என்பதையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து , தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும்“ என்று ஐந்து தமிழ்க் கட்சிகளின் பொது உடன்பாட்டின் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஏதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட் பொது உடன்பாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டிருந்தனர். ஐந்து தமிழ்க்கட்சிகளும் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம் வருமாறு: இலங்கைத் தீவின் தேசிய கேள்வியாக கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்திருப்பதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் மரபுவழி தாயகம் என்பதையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து , தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் எமது நிலைப்பாட்டுக்கு அமைவாக, நடந்து முடிந்த யுத்தத்தின் தாக்கத்தாலும் நீடித்து கொண்டிருக்கும் விளைவுகளாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வை சாத்தியமான வழிகளில் காண முடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் இதற்கு கீழ் காணப்படும் கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளிடமும் அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைக்கின்றோம். புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச பொறிமுறைகளான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரசபடைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். வடக்கிற்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகாரசபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல் வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில திட்டமிட்டு; மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டு தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். வடக்கு – கிழக்கிற்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தை சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். வடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கில் தெரிவு செயயப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும். மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்றுள்ளது. ***** https://www.tamilwin.com/politics/01/228565?ref=home-feed
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.