• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 03 நவம்பர் 2019 in all areas

 1. 2 points
  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் விருப்ப‌த்துக்கு இன‌ங்க‌ பாட்டு வ‌ரிக‌ளோடு பாட‌ல்க‌ளையும் இணைத்து இருக்கிறேன் / பாட்டு வ‌ரிக‌ளில் ஒரு சில‌ எழுத்து பிழை இருக்க‌லாம் , பிழை விடாம‌ல் ச‌ரியாய் எழுத‌ முயற்சி செய்யிறேன் /
 2. 2 points
  சம்மந்தனும் சுமந்திரனும் ஒழுங்காக இருந்து இருப்பின் சிறையில் இருந்தவர்களை என்றாலும் விடுவித்து இருக்கலாம் அவர்கள் இருவரும் புறோம்போக்கு அரசியலைத்தான் செய்கிறார்கள். இலங்கை பௌத்த நாடு என்று சொல்ல சம்மந்தன் யார்? எப்போதிருந்து இலங்கை பௌத்த நாடு? அவர்கள் யாரை இருந்தால் என்ன? கேள்விக்கு பதில் என்ன? நீங்கள் என்ன எதிர்பாக்கிறீர்கள்? இவர்கள் சுமந்திரனுக்கு சம்மந்தருக்கும் எமது உறவுகள் காணாமல் ஆக்கபட்டுளார்கள் என்று பாதாதையில் எழுதி அதை தூக்கி பிடித்துக்கொண்டு அவர்கள் இருவருக்கும் அதை 2019இல் தெரிய படுத்த வேண்டும் என்றா? இவர்களுக்கு ஆதரவாக இன்று ஒரு கட்சியும் இல்லை .... எடுப்பப்பார் பிள்ளைபோல இவர்களை யார்வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் ..... இவர்களுக்கு ஆதர்வாவு தருவதாக வருபவர்கள் இவர்கள் மூலமாக தங்கள் சொந்த விடயங்களை முன் எடுக்கலாம்........... அதெல்லாம் வாசித்து புரிந்துகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தம் .... யார் வந்தாலும் அவர்களை பிடித்து தொங்கும் நிலையில் இவர்களை விட்ட கூத்தமைப்பு பற்றி உங்கள் விளக்கம் என்ன?
 3. 2 points
  காணமல் போனோருக்கும், மோடிக்கு இலங்கை பெள்த்த நாடு என்று குறிப்பிட்டதுக்கும் என்ன சம்பந்தம் ..... கணக்கு எங்கேயோ இடிக்கிதே.... மண்ட மேல இருக்கிற கொண்டையை மறைக்க முடியவில்லையே காட்சி தான் ஞாபகம் வருது ...!!!!
 4. 2 points
  ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ஆடிய‌ அரும் எனும் புய‌ல் கொடியே நெடி யோனெனும் தாய‌க‌த்தின் விடி வில‌க்கே ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் விடுவ‌தில்லை என அருன் எழுந்தான் விடுவ‌தில்லை என‌ அருன் எழுந்தான் த‌ம்பி நெடியோனும் கூட‌வே தான் இணைந்தான் க‌ரும்புலி இருவ‌ரும் வெடி சும‌ந்தார் ந‌டு வ‌ழியினில் த‌ங்க‌ளின் உயிர் இழ‌ந்தார் ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் அந்த‌ வீதியில் ஏன‌டா இவ‌ர் ச‌ரிந்தார் நெஞ்சினில் ஒரு வில‌க்கை ஏற்றுகிறோம் இவ‌ர் நினைவுட‌ன் பூக்க‌ளை சாற்றுகிறோம் ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன‌
 5. 2 points
  நல்லதொரு முயற்சி மல்லிகை வாசம். எமது வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது அல்லும் பகலும் யோகர் சாமியின் பாட்டுக்கள் கேட்கும். எனக்கு இப்போதும் பல பாடல்கள் மனப்பாடம். சில சமயம் வாய்விட்டு பாடும் போது மன அமைதி கிட்டும். எனது விருப்பப்பாடல்கள், “சூரியன் வருவது யாராலே” மற்றும் “அந்த வாக்கும் பொய்த்துப் போமோ”. எனது தாய்வழி பாட்டானார் யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமியை நல்லூரடியில் சந்திப்பதற்கு முன்பிருந்தே அவரின் நண்பர். பின்னாநாளிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது. ஒரு முறை யாழில் தனது தாய் நிலமை மோசம் என அறிந்து எனது பாட்டனார் அவசரமாக கிளிநொச்சியில் இருந்து வந்த சமயம். காரை செம்மணியில் வைத்து மறித்த யோகர், என்னை மறுபடியும் கொண்டுபோய் கிளிநொச்சியில் விடு எனக் கேட்டாராம். தாயை பார்க்க வேண்டும், ஆனால் யோகரோ முன்கோபி என்ன செய்வது ? என என் பாட்டனார் குழம்ப, “ கொம்மாவை பற்றியே யோசிக்கிறாய்? அவ போய் சேந்துட்டா, என்னை கிளிநொச்சியில விட்டுட்டு ஆறுதலா போய் காரியம் செய்” என்றாராம் யோகர்! இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும், யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் . என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன். தேவை இல்லை என்பது என் அபிப்பிராயம்.
 6. 2 points
  பாருங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தமிழரின் மாநகர மேயர் இவர்கள் கலந்து கொண்ட கூட்டம்?? ஒரு ஊர்ச்சங்க கூட்டம் என விளம்பரப்படுத்தப்பட்டு செயற்பாட்டாளர்களைத்தவிர்த்து முகநூலில் அவர்களுக்கு சார்பாக எழுதுபவர்களை இனம் கண்டு தனி அழைப்பு விடுக்கப்பட்டு நடாத்தப்பட்டிருப்பதே இவர்களின் உள் நோக்கத்தையும் மக்களை சந்திப்பதிலுள்ள நேர்மையீனத்தையும் காட்டுகிறது
 7. 2 points
  பலர் கோத்தபாய பூச்சாண்டி காட்டி திட்டமிட்ட தமிழின அழிப்பை சத்தமின்றி செய்துவரும் ரணில்-சஜித் கும்பலுக்கு மக்களை வாக்களிக்க வைக்கமுடியும் முயற்சிக்கிறார்கள். இவர்கள் யார் என்றால் (1) றணில், சுமந்திரன் கூட்டில் தமிழர் உரிமையை அடகுவைச்சு சுயலாபம் பெற்றுபவர்கள் (2) அப்பப்ப ஊருக்கு விசிட் அடிச்சு சோ காட்டிவாற ஆக்கள் (3) கொழும்புல செட்டில் ஆகி வட-கிழக்கு தமிழர் எப்பாடுபட்டாலும் கவலை இல்லை என்டு நினைக்கும் ஆக்கள் (4) தங்கட உறவுகளை கொழும்புல செட்டில் ஆகி வட-கிழக்கு தமிழர் எப்பாடுபட்டாலும் கவலை இல்லை என்டு நினைக்கும் மேட்டுக்குடி மக்கள் (5) ஆனந்தசங்கரி, டக்ளஸ் போல முற்போக்குவாதிகள் என்டு நெச்சுக்கொண்டு இருக்கும் பிற்போக்குவாதிகள் (6) சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆட்களின் விசிறிகள் இதைப்போன்ற ஆக்கள் தான் கோத்தபாய வந்தால் அவ்வளவு தான் என்டு பூச்சாண்டி காட்டி திரியினம். இந்த உண்மைகள் மக்கள் மேல அக்கறை உடையவர்களுக்கு மட்டும் தானே புரியும்! சுயநலன்களுக்காக ஒரு கொலைகாரனை விட மற்ற கொலைகாரன் திறம் என்டுற ஆட்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் செவிடன் காதுல ஊதின சங்கு போலத் தான்.
 8. 1 point
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் இருவரது பாரிஸ் கூட்டம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. தேர்தலில் நிற்கின்ற பெரிய பேயை விட சிறிய பேயை தேர்வு செய்ய வேண்டிய கட்டம் என மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வேண்டி அவர் கூறிய கருத்தே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் தமது 13 அம்சக் கோரிக்கையுடன் ஒப்பமிட்ட ஐந்து கட்சிகளின் கூட்டு முடிவு வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் 31ம் திகதி அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னராகவே இவ்வாறு சுமந்திரன் எம்.பி கருத்து தெரிவித்திருப்பதே சர்ச்சைகளை கிளப்பியுள்ளன மக்கள் சந்திப்புக்கான பொதுஅழைப்போ, ஊடகங்களுக்கான அறிவித்தலோ ஏதுமின்றி, பாரிசின் புறநகர் பகுதியான செவ்ரோன் எனும் இடத்தில் இரகசியமான முறையில் சனிக்கிழமை கூட்டம் இடம்பெற்றுள்ளது. யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் ஊர் மக்களுடனான சந்திப்பு என்ற பெயரில், அப்பகுதி மக்கள் மட்டும் சந்திப்புக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரான்சை சேர்ந்த வெளிச்சம் எனும் அமைப்பு சந்திப்புக்கான ஏற்பாட்டை கடந்த வாரம் இரகசியமான முறையில் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யாழ். மேயர் ஆர்னோல்ட்டுடன் புலம்பெயர் அமைப்புக்களுக்கான சந்திப்பு என்ற பெயரில் சனிக்கிழமை கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. கூட்டம் நடைபெறுகின்ற இடம், நேரம் ஆகியன தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என அமைப்புக்களுக்கு தெரிவித்திருந்த ஏற்பாட்டாளர்கள், பின்னராக தேர்வு செய்த அமைப்பினருடன் சந்திப்பினை செய்து முடித்துள்ளனர். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியலிங்கமோ, தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ பங்கெடுக்கருக்கவில்லை. கனேடிய தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி டன்ரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா ஒருங்கிணைப்பாளர் வின் மகாலிங்கம் உட்பட, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். மேயர் ஆர்னோல்ட் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். தமிழ்த்தேசிய கருத்தியலில் எம்.ஏ.சுமந்திரனிடம் கருத்து மோதல்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே பல அமைப்புக்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, யாழ். மேயருடன் ஊர் மக்கள் சந்திப்பு இரகசியமாக இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொது மக்களுக்கான பொது அழைப்போ, ஊடகங்களுக்கான அறிவித்தலோ ஏதுமின்றி நடந்த இச்சந்திப்பில், 1 மணி நேரத்துக்கு பின்னராக வருகை தந்திருந்த எம்.ஏ.சுமந்திரன் எம்பி, தனது கருத்துரையினை வழங்கியுள்ளார். கோத்தபாய ராஜபக்சவினை தமிழ் மக்கள் ஒரு பெருங்கொலையாளியாகவே பார்க்கின்றனர் என குறிப்பிட்ட அவர், இருக்கின்ற பேய்களில் நல்ல பேயை தேர்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஒரு சிலரது கேள்விகளுக்கு பதில் அளித்த எம்.ஏ.சுமந்திரன், கேள்விகள் கூர்மைப்பட்ட நிலையில், ஏற்பாட்டாளர்களால் 1 மணி நேரத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து கூட்டத்தினை யாழ்.மேயர் நடத்தியுள்ளார். மேயர் என்ற வகையில் யாழில் முதற் குடிமகனாகிய நீங்கள், யாழ் மக்கள் அனைவரையும், யாழ். ஊர் சங்கங்களையும் அழைத்து பேசாமல், இவ்வாறு உங்களின் ஊர் மக்களோடு மட்டும் சந்திப்பினை நடத்துவது பொருத்தமா என ஒருவர் கேட்டதற்கு, நிலைமை அவ்வாறு இல்லை. காலப்போக்கில் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை தேர்தல் ஒன்றினைச் சந்தித்திருக்கும் இவ்வேளையில் மக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லப்படுவோர், பொதுமக்களையும், ஊடகங்களையும் வெளிப்படையாக சந்திக்காமல் இரகசியமான முறையில் பின் கதவுகளால் கூட்டங்களை நடத்துவது என்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதோடு, மக்களுக்காக அல்லாமல் யாருக்காக இவர்கள் வேலை செய்கின்றார்கள் என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது. https://www.tamilwin.com/politics/01/229982?ref=archive-feed
 9. 1 point
  நாமெல்லாம் அறிந்த யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளது நற்சிந்தனைகளை இத்திரியில் பகிர்வதற்கு உத்தேசித்துள்ளேன். இவை ஒவ்வொன்றும் சுருக்கமானவையாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் அமைந்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை அல்லது இவை முழுவதையும் கள உறவுகள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். எனினும், ஒரு மீள்நினைவூட்டலுக்காகவும், இவற்றை அறியாத இன்றைய இளைய சமுதாயத்தை மனதில் வைத்தும். இந்தத் தத்துவ முத்துக்களை ஒவ்வொன்றாகப் பகிரவுள்ளேன். அவ்வப்போது இவை தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளைன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன. உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளோருக்கு இவை ஊக்கமாத்திரைகளாக அமையும் என நம்புகிறேன். (1872ஆம் ஆண்டு தொடக்கம் 1964ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாழ்ந்த இவர் செல்லப்பாச் சுவாமிகளின் சீடராவார். சுவாமிகள் பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம்.அறியாதோர் பின்வரும் இணைப்பில் அவரது சுருக்கமான வரலாற்றை அறியலாம்: https://ourjaffna.com/cultural-heroes/யோகர்-சுவாமிகள் )
 10. 1 point
  புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்ட மேடையில் சிங்கள மொழிக்கு முதன்மை கொடுக்கப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். சஜித் பிரேமாதாசவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிலும் அதிகமானவர்கள் தமிழ் பேசுபவர்களே. இந்த நிலையில் சஜித் பிரேமதாச பிரச்சார கூட்ட மேடையானது இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் பொறிக்கப்பட்ட வேட்பாளர் குறித்த வசனங்கள் முழுமையாக சிங்கள மொழியில் காணப்பட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாட்டு மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசார உரையாற்றியிருந்தார். தமிழ் மக்களிடம் வாக்கு கேட்க வரும் போதே தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்காத நிலையில் எதிர் காலத்தில் இவர்களது செயற்பாடுகள் எப்படி அமையும் எனவும் தமிழ் மக்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். https://www.tamilwin.com/politics/01/229968?ref=home-feed
 11. 1 point
  மதி.சுதா மீள்பதிவு- எல்லா இயக்குனர்களிடமும் தாம் ஆசைப்பட்டும் செய்ய முடியாத கதை ஒன்று இருக்கும். அப்படியான ஒரு குறுங்கதை தான் இது. இங்கு இதை படமாக எடுக்க முடியாவிட்டாலும் இந்தியாவில் யாராவது குறும்படமாக எடுத்தாலும் சந்தோசமே.... ஆர்வமுள்ள யாருக்காவது பகிர்ந்து விடுங்கள்.... எந்தளவு வன்மமுள்ள போராளிக்குள்ளும் ஒரு மென் உணர்வு இருக்கும் அதே காதலாக இருந்து விட்டால்.... படியுங்கள்... சில நினைவுகளை மீட்டிப் பார்த்த போது வந்த குறுங்கதை... மன மறைவில் ..... ”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே” கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான். ”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு” சற்றே தயங்கியவனாக.. ”திருமகள் வீரச்சாவாமடா” அரைவாசியை விழுங்கிக் கொண்டே சொன்னான். நான் அழுவேன் ஆர்ப்பாட்டம் செய்வேன் என்று அவன் நினைத்திருக்கக் கூடும். நானும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் கத்தி அழ வேண்டும் போல் இருந்தாலும் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கொஞ்ச எச்சிலையும் விழுங்கிக் கொண்டேன். மனதுக்குள் திருப்ப திருப்ப சொல்லிக் கொண்டேன் ”காட்டிக் கொள்ளாதே நீ ஒரு வைத்தியர் உன்னை நம்பி பல காயக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்” கேசவன் என்னை முழுதாகப் புரிந்தவன். அருகே வந்து கைகளைப் பற்றிக் கொண்டு ”உன்ர வோட் ஐ நானே பார்க்கிறன் போயிட்டு வா பின்னேரம் தான் விதைக்க போகினமாம்” ”எங்க நடந்தது” ”கல்லாறு” ஒரு தடவை வியந்து போய் திருப்பியும் கேட்டான். ஏனென்றால் 2 நாட்களுக்கு முன்னர் தான் அங்கு முன்னரங்குக்கு ஒரு மருத்துவ முகாமிற்குச் சென்றிருந்தான். அங்கு ஏதோ தாக்குதல் ஆரம்பிக்கப் போகிறது என்பதை முதலே ஊகித்திருந்தான் ஏனென்றால் நான்கைந்து சினேப்பர் பிள்ளையள் முகம் முழுக்க கரிபூசி உருமறைப்புடன் நிற்க அவர்கள் செக்சன் லீடர் ஏதோ அறிவுறுத்திக் கொண்டு நிண்டார். வந்த களைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை அவரது போத்தலை வாங்கித் தான் குடித்தேன். ”என்னத்தில காயம்” ”வயித்து காயம் சினேப் பண்ணியிருக்கிறாங்கள்” ஏதோ அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் இழுத்தது ஏனென்டால் அவள் முகத்தைக் கண்டு 2 வருடம் இருக்கும். படிக்கிற காலத்திலேயே முளை விட்ட காதல் அது. இருவருக்கும் மனசுக்குள் சின்ன பயம் இருந்தாலும் எப்படியோ வீட்டுக்கு கதை போய் விட்டது. ஆனால் நாம் பயந்தளவுக்கு இருக்கவில்லை ”படிச்சு முடியட்டும் செய்து வைக்கிறம் ஆனால் அதுவரைக்கும் எங்கட பேர் கெடக் கூடாது” அழுத்தமான நிபந்தனையால் காணும் போது சிரிப்பது மட்டுமே எம் உச்ச பட்ச காதல் தொடர்பாகிப் போனது. அப்பப்போ கடிதங்கள் மட்டும் புத்தகங்களால் காவப்படுவதுடன் சரி. அதன் பின்னர் வீட்டுக்கொருவர் போராட போக வேண்டும் என்றதன் பிறகு இருவர் வீட்டிலும் நாமே முன் வந்து போய்க் கொண்டோம். ”பெட்டி சீல் பண்ணியிருக்கா” வெளிவராத குரலை இழுத்து குரல் நாணில் பூட்டிக் கேட்டேன். ”இல்ல துணைக்கு ஆரையும் கூட்டிக் கொண்டு போ” கூறிக் கொண்டே என் வோட்டை பொறுப்பெடுப்பதற்கான ஆயத்தமாக ரிக்கேட்டுக்களை எடுத்து அடுத்த ஊசி போட வேண்டியவருக்குரிய ஒழுங்கில் அடுக்க ஆரம்பித்தான். வழமையாக அடம்பிடிக்கும் மோட்டார் சைக்கிள் இன்றைக்கு என் நிலமை புரிந்தோ தெரியவில்லை ஒரே தடவையில் பற்றிக் கொண்டது. இன்னொரு மனித வலுவை வீணாக்க விரும்பாமையால் தனியாகவே புறப்பட ஆயத்தமானேன். ஆனால் மனதுக்குள் ஏதோ உறுத்தியது. உயிரோடில்லாத அந்த முகத்தை நான் பார்க்கத் தான் வேண்டுமா? அவளில் அடிக்கடி நான் ரசித்து இன்று வரை என் நினைவில் எஞ்சி நிற்பது அந்த குழி விழுந்த கன்னமும் பல் தெரியாத சிரிப்பும் தான் ஏன் அந்த முக விம்பத்தை நானே அழிப்பான். மோட்டார் சைக்கிளை நிறுத்திக் கொண்டேன். வோட்டுக்குள் நுழைந்தேன் கேசா ஊசி போட வேண்டியவருக்கு போட்டு முடித்திருந்தான். இன்று தியெட்டரில் எனக்கு 8 கேஸ் சேர்ஜரி செய்ய வேண்டியிருந்தது. புதிதாக வருவதைத் தவிர்த்து. ”நீ போ நான் தியெட்டருக்கு போறன்” என்றான் கேசா, ”வேண்டாம் நான் போகேல்லை நீ போய் படு இரவு மாற ஆள் வேணும்” அவன் பதில் எதுவும் பேசவில்லை என் முடிவுகள் எப்போதும் மாற்றத்திற்குரியவையல்ல என்பது அவனுக்கு தெரியும். ”சேரா….. திருமகளின்ர செக்சன் லீடர் காலமை காயப்பட்டு இப்ப தான் வந்திருக்கிறா” ”கதைச்சியா” ”இல்ல மயக்கம் தெளியேல்லை” காதல் முடிந்து விட்டது கடமையாவது ஒழுங்காகச் செய்வோம் என்று மனது தானாகவே சொல்லிக் கொண்டிருந்தது. ”ம்.... நான் தியெட்டர் போறன் நீ ஓய்வெடுத்திட்டு வா” கூறிக் கொண்டே ஸ்டெத்தை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். கையை ஸ்க்ரப் பண்ணி விட்டு வரவும், அல்லி அக்கா மயக்க மருந்து கொடுத்து ஆயத்தமாக வைத்திருந்தார். கையுறையை அணிந்து கொண்டு வரவும் உதவியாளர்கள் அனைத்தும் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். Wound toilet செய்ய வேண்டிய காயம். இது தான் கடைசியாக செய்ய வேண்டிய wound toilet என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் காயத்தை சரியாக பராமரித்தால் அடுத்த வாரம் தையல் போடலாம். ஏனோ தெரியவில்லை கத்தியை கையில் எடுத்ததும் என்னைச் சுழ இருப்பதே எனக்கு மறந்து விடும் அதற்குள் திருமகளும் இன்று மாட்டுப்பட்டு விட்டாள். வேகமாகவே செய்து முடித்தேன். இரண்டாம் தரம் ketamine கொடுக்க வேண்டிய தேவை அல்லி அக்காவுக்கு ஏற்படவில்லை. சாதுவாக தலையிடிப்பது போல இருந்தது. ”அக்கா அடுத்தாளை ஏற்றுங்கோ ரீ ஏதாவது குடிச்சிட்டு வாறன்” அவர் தலையசைத்ததைக் கூடப் பார்க்காமல் கவுணைக் கழட்டிக் கொழுவி விட்டு வெளியே வந்தேன் மேசையில் சுடுதண்ணீர்ப் போத்தலில் தேநீர் ஆயத்தமாகவே இருந்தது. ஒரு தடவை தான் வாயில் வைத்திருப்பேன் கேசவன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு வந்து ஜீன்ஸ் பொக்கட்டில் கையை விட்டபடி… ”சேரா… அவா எழும்பீட்டா திருமகள் உனக்கனுப்பச் சொல்லி குடுத்ததா ஒரு கடிதம் தந்தவா” அவன் நீட்ட முதலே இழுத்துப் பறித்துக் கொண்டேன். என்றும் என் அன்பிற்குரியவனுக்கு… நலம் சுகம் எல்லாம் விசாரித்தெழுதி உன் கடமை நேரத்தையும் என் கடமை நேரத்தையும் வீணாக்க முடியாது. அதோட எனக்கடுத்ததா கடிதம் எழுத இன்னும் 3 பேர் பேனைக்கு காவல் நிக்கினம்.. நாம் ஒன்றாய் வாழும் காலம் மிகவிரைவில் கை கூடும் முக்கியமா ஒண்டு சொல்லோணுமடா, இப்ப நீ அக்காவிட்டை தண்ணி வாங்கிக் குடிக்கும் போது உருமறைப்போட வரிசையில் நிண்டது நான் தான். ஓடி வந்து கையை பிடித்து பேசோணும் போல இருந்தது. 2 வருசத்துக்கு பிறகு பார்க்கிறன் உன்ர அழகும் மிடுக்கும் கண்டு மிரண்டு போனன். எல்லாரும் டொக்ரர் டொக்ரர் எண்டும் போது பெருமையா இருந்தது. நான் காயப்பட்டு வந்தால் நோகாமல் மருந்து கட்டுவியா. கூப்பிடவில்லை எண்டு கோபிக்காதை அணியில் நிற்கும் போது பேசவே கூடாது என்பது நான் சொல்லித் தான் உனக்கு தெரியோணும் எண்டில்லை. காகிதத்தின் அரைவாசி கண்ணீரால் நிரம்பியிருந்தது. கேசவன் எதுவுமே பேச முடியாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். ”நீ போ போய் படு நீ வந்தால் தான் நான் போய் படுக்கலாம்” தன்னை விரட்டுகிறான் எனப் புரிந்திருக்க வேண்டும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றான். அல்லி அக்கா அடுத்த காயத்தை ஆயத்தப்படுத்தியிருப்பார். கடிதத்தை மடித்து ஜீன்ஸ் பையில் வைத்துக் கொண்டேன். கட்டிலில் கிடந்தவனின் காய வேதனைக் கதறல் சற்று அதிகமாகவே இருந்தது. மயக்க மருந்து வேலை செய்ய ஆரம்பிக்க ஆரம்பிக்க அவன் கத்தல் முனகலாக மாறிக் கொண்டிருந்தது. திருமகளின் வலியை மற்றைய ஜீன்ஸ் பையில் மடித்து வைத்துவிட்டு கையுறையை போட்டு கத்தியை கையில் எடுத்துக் கொண்டேன். -ம.தி.சுதா
 12. 1 point
  அம்புலிமாமாக் கதை இராமாயணம் ஆக்கப்பட்டது. இராமாயணம் நடந்தாக கூறப்பட்ட காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம். புத்தர் பிறந்து இன்றைக்கு 2600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2600 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்ததாக கூறப்பட்ட இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:- (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு) 1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பௌத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்ப வர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. (அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்) 2. ராமன், ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும், பௌத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்) 3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார். (சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்) 4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பௌத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது. (கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்) 5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது. (அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்) 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2600 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2600 ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றியிருக்கவேண்டும். கி.பி. 400 குப்தர்களின் காலத்தில்தான் இவை எழுத்துருபெற்றது. ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும். அத்துடன் சமஸ்கிருத மொழி தோற்றத்திற்கும் வரலாறு உண்டு. இன்று விஞ்ஞானம் வளர்ந்த நிலையில் ஹோமோசேப்பியன்ஸ்சே 2 லட்ச வருடங்கள்தான் ஆகிறது என்று விஞ்ஞான ரீதியாக மரபணு மூலம் நிரூபித்திருக்கிறார்கள். ஒரு துகள் மரபணு மூலம் வரலாற்றையும் கூறமுடியும் இன்னொரு உயிரையும் உருவாக்க முடியும். இவ்வாறிருக்க நேற்று தோன்றிய சமஸ்கிருத மொழியில் கூறப்பட்ட கடவுள்களை நம்புவது எவ்வாறான செயல்? வால்மீகிதான் இராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியது. ஆனால் திரேதா யுகத்தில் 21 லட்ச வருடங்களுக்கு முன்பு வால்மீகி ஆசிரமத்தில் சீதை வாழ்ந்ததாகவும் கூறுகிறது. 21லட்ச வருடங்களிற்குமுன் திரேதா யுகத்தில் வாழ்ந்தார் வால்மீகி எனில், துவாபர யுகமும் தாண்டி கலியுகத்தில் சமீபத்தில் தோன்றிய சமஸ்கிருதத்தில் எவ்வாறு இராமாயணத்தை எழுதியிருக்கமுடியும்? இவ்வாறானவற்றை நம்பும் மூடர்களை என்னவென்று சொல்வது? உண்மையில் நடந்தது என்னவெனில்... கி.மு 6ம் நூற்றாண்டுகளிற்கு பிறகு வாய்வழியாக செய்யுள் வடிவில் உருவாகியது இந்த கற்பனை அம்புலி மாமாக் கதை. கதை கூறும்போது 21 லட்ச வருடங்களிற்கு முன் இக்கதை நடந்ததாகவும், (முன்னொரு காலத்தில் என்று கதை கூறுவதுபோல) ஏற்கனவே இருந்த இடங்களைவைத்து கதைகளை புனைந்தார்கள். (இன்றைய சினிமா எடுப்பதுபோல. ஏற்கனவே இருந்த நிலப்பரப்பை இராமர் கட்டிய பாலம் எனவும் அதற்கு ஒரு தேவை இருந்ததாகவும் கதைகளை உருவாக்கினார்கள்.) இராமரை விஷணுவின் அவதாரமாக படு பொய்யை இந்து இதிகாசங்கள் மக்கள் மத்தியில் பரப்பியது. இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது கதை நடந்ததாக கூறப்படுவது 21 லட்ச வருடங்களிற்குமுன் திரேதா யுகத்தில் என்கிறார்கள். அதன்பிறகு துவாபர யுகம் இப்போது கலியுகம் என்கிறார்கள். அவ்வாறு பார்த்தாலும் திரேதா யுகம் அழிந்து துவாபரயுகம் ஆரம்பித்து அது அழிந்து கலியுகம் ஆரம்பித்தபின்பும் திரேதாயுக நிலப்பரப்புகளும், இராமர் மூன்று கோடுபோட்ட அணிலும், ஏன் 21 லட்ச வருடங்களாக வால்மீகியும் இருப்பது வேடிக்கை. விஞ்ஞானம்.. பரிணாம வளர்ச்சி, கண்ட ஓட்ட அசைவுகள், ஒவ்வொரு உயிர்கள், கண்டெடுக்கபட்ட பொருட்கள் எவ்வளவு பழமையானது என்று பலவற்றை நிரூபித்தபின்னும், புவியை தாண்டி பல கோள்கள், ஞாயிற்றுதொகுதிகள், இருப்பதை உறுதிசெய்த பின்பும், புவியில் சமீபத்தில் தோன்றிய ஒரு மொழியில் யாரோ மனிதன் கூறிய கதையில் அல்லது புத்தகத்தில் உள்ளவற்றை கடவுள் என்று நம்பினால் இவர்களை என்னவென்று கூறுவது? பல நிரூபிக்கப்பட்டபின்பும் இவை தெரியாது அல்லது இவை தவறு என்பதுபோல கண்களை மூடிக்கொண்டு மதங்கள் கூறும் பாலை அருந்தி அமைதியாவது ஐந்தறிவு பூனைகளின் செயலுக்கு ஒப்பானது. நன்றி வேணு கோபால் சங்கர் https://ramayanam.mooligaimannan.com/2015/02/blog-post.html
 13. 1 point
 14. 1 point
  பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1nUaRZpm2K8 கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு ஒரு பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் அருகினில் விரியும் ம‌ல‌ரினில் ப‌டியும் ப‌னியேன‌ உறையும் இதைய‌ம் மாவீரர்க‌ள் துயிலும் விடுத‌லை வ‌ய‌ல்க‌ள் விரைவினில் அறியும் உதைய‌ம் பூவெல்லாம் உங்க‌ளுக்கான‌து இந்த‌ புல்வெளி உங்க‌ளுக்கான‌து மேக‌மே உங்க‌ளுக்கான‌து ம‌ழை முத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து தேச‌மே உங்க‌ளுக்கான‌து எங்க‌ள் பூஜைக‌ள் உங்க‌ளுக்கான‌து வாயிரின் துதிரும் வார்த்தைக‌ள் முழுதும் மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து மா வீர‌ர்க‌ளே உங்களுக்கான‌து கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு ஒரு பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு கார்த்திகை உங்க‌ளுக்கான‌து விடி காலைக‌ள் உங்க‌ளுக்கான‌து போர்க் கள‌ம் உங்க‌ளுக்கான‌து கோடி புன்னிய‌ம் உங்க‌ளுக்கான‌து பூத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து எந்த‌ சாவிலும் உங்க‌ளுக்கான‌து பார்த்திடும் க‌ட‌லும் ஆலைய‌ ம‌னியும் மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு ஒரு பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு க‌ண்ணில் தெரியும் மான‌ம் முழுதும் கைக‌லில் வ‌ந்து சேரும் மாவீர‌ர்க‌ள் உற‌ங்கும் கல்ல‌றை மீது விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும் விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும்
 15. 1 point
  இவர்கள் இழந்து தவிப்பது குடும்ப துணை சொந்த பிள்ளை அவர்கள்தான் உலகம் என்று இருந்த உறவுகள் ... அவர்களின் உணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியாது நீங்கள் சொலவதுபோல் இவர்கள் என்று எடுப்பர் பிள்ளையாகி இருப்பது என்பது வெளிச்சமானது இந்த நிலையில் இவர்களை கூட விட்வர்களிடம் .... ஒரு தமிழன் எதிர்பார்க்க என்ன இருக்கு?
 16. 1 point
  குடிச்சுட்டு பார்க்கிற வைத்தியத்தை வாசித்தாலே குடிக்க இருந்த மனமும் மாறிவிடும். பச்சை தண்ணியை குடித்துவிட்ட்டு நிம்மதியா இருக்கலாம்
 17. 1 point
 18. 1 point
  மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாது சம்பந்தனும் சுமத்திரன் ஓடி ஒழிக்கின்றனர் செம்புகள் மட்டும் காவடி எடுக்கின்றனர் .
 19. 1 point
  மிகவும் தவறான கருத்து! திட்டமிட்ட சதியில் இறங்கிய சம்மந்தன், சுமந்திரனின் கேடித்தனங்களுக்கும், தமிழின அழிப்புக்கு ரணிலுக்கு முண்டு கொடுத்துவந்த கும்பலுக்கும் விழுந்த செருப்படி!
 20. 1 point
  நன்கு திட்டமிட்ட முறையில் கோத்தா தரப்பு இதை அரங்கேற்றி வருகிறது, கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு என்றவுடன் கூட்டமைப்புக்கு மேல் தமிழ் மக்களுக்கு வெறுப்பை அதிகரிக்க செய்து அவர்களுடைய தெரிவான சஜித்துக்கு விழ போகும் வாக்குகளை கிடைக்காமல் செய்து கோத்தாவை வெல்ல வைக்கும் தந்திரமே இது....!!!! கூட்டமைப்பின் மீது வெறுப்பு உண்டு; ஆனால் அதை காட்டும் தருணம் இதுவல்ல, அதை பாராளுமன்ற தேர்தல் வரும் போது அவர்களை தோல்வி அடைய செய்யலாம்.
 21. 1 point
  அதான் இன்றைக்கு வவுனியாவில் செருப்ப எடுத்துட்டு போனா ஓர் அம்மா தமிழரசுக்கட்சிக் காரர்களுக்கு எறிய காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய்
 22. 1 point
  ஆம். மிகுதி நாடகம். தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்தல் என்றும் சொல்லலாம்.
 23. 1 point
 24. 1 point
  பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் இப்பாடல்களைக் கேட்கிறேன். அதிகாலையில் கேட்பதற்கு அருமையாக இருக்கும். மீள்நினைவூட்டியமைக்கு நன்றி, கோஷன்.
 25. 1 point
  பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு https://vocaroo.com/i/s1k8oSG3Rjuv ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ஆடிய‌ அரும் எனும் புய‌ல் கொடியே நெடி யோனெனும் தாய‌க‌த்தின் விடி வில‌க்கே ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் விடுவ‌தில்லை என அருன் எழுந்தான் விடுவ‌தில்லை என‌ அருன் எழுந்தான் த‌ம்பி நெடியோனும் கூட‌வே தான் இணைந்தான் க‌ரும்புலி இருவ‌ரும் வெடி சும‌ந்தார் ந‌டு வ‌ழியினில் த‌ங்க‌ளின் உயிர் இழ‌ந்தார் ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் அந்த‌ வீதியில் ஏன‌டா இவ‌ர் ச‌ரிந்தார் நெஞ்சினில் ஒரு வில‌க்கை ஏற்றுகிறோம் இவ‌ர் நினைவுட‌ன் பூக்க‌ளை சாற்றுகிறோம் ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன‌
 26. 1 point
  அருமையான பாடல்கள்.இணைப்பிற்கு நன்றி கோசான்.
 27. 1 point
  யாழ்.வீராங்கனை தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாமரி வர்ணகுலசூரிய தலைமையிலான இலங்கை பெண்கள் பளுதூக்குதல் அணியிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனை ஆஷிகா இடம்பிடித்துள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி நேபாளத்தின் காட்மண்டுவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-வீராங்கணை-தெற்காசிய/
 28. 1 point
  இப்ப‌ பாட்டு வ‌ரியோடு பாட‌லையும் இணைத்து இருக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , பாட‌ல்க‌ளை கேட்டு மாவீர‌ர்க‌ளை நினைவு கூறுவோம்
 29. 1 point
  இலத்திரனியல் சாதனங்களில் தமிழை போட முடியாதாம்! அப்பிடி மனோகணேசன் சொன்னாலும் சொல்வார்.
 30. 1 point
 31. 1 point
  இந்த சம்பவம் யோகர் சுவாமிகளின் குரு செல்லப்பா சுவாமியால் நிகழ்த்தப்பட்டது. சமையல் செய்ய சீடரை பணித்துவிட்டு அது நிறைவுறும் நேரம் கவிழ்த்து கொட்டியது செல்லப்பா சுவாமிகள்.
 32. 1 point
  பையா இணைப்புக்கு மிகவும் நன்றி. இந்த இணைப்புடன் ஒலிநாடா அல்லது காணொளி இணைப்பையும் இணைத்தால் மிகவும் நன்று. கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.கார்த்திகை முழுவதும் ஒவ்வொரு நாளும் இணையுங்கள்.
 33. 1 point
 34. 1 point
  எல்லாவற்றுக்கும் பின்னணியில் நடிகை ரோஜா இருக்கிறார் என ஒரு சஞ்சிகையில் வாசித்த ஞாபகம்.
 35. 1 point
  பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு https://vocaroo.com/i/s0Ev7rdg4Hao ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் ஆற‌லையே வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் ஆற‌லையே ஆடும் அலை ஏறி வ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு வ‌ருகின்ற‌ திசை எங்கும் வ‌ழி பார்த்து விழிபூத்து வாச‌லில் கோல‌ம் இட்டோம் அவ‌ர் தேருமேனி நெருப்பாகி எரிகின்ற‌தென‌க் கேட்டு உயிர்வாட‌ ஓல‌ம் இட்டோம் தீயாகி எரிந்திட்ட‌ நெஞ்ச‌ங்க‌ளே வ‌ந்து தாய் ம‌ண்ணின் க‌ரை மீது கொஞ்சுங்க‌ளேன் ஆடும் அலை ஏறி வ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு த‌ண்ணீரில் குளிக்கின்ற‌ தேச‌த்தை பாச‌த்தில் காண‌வா ஓடி வ‌ந்தீர் கிட்டு அண்ண‌னே உன் வீர‌ர் க‌தையாவென் பாட்டிலே வீச‌வா போய் முடிந்தீர் க‌ட‌ல் மீது குட‌ம் இட்ட‌ த‌ங்க‌ங்க‌ளே இனி க‌ண் காண‌ முடியாத‌ சொந்த‌ங்க‌ளே ஆடும் அலை ஏறி வ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு த‌ர்ம‌த்தின் தாய் வீடு என‌ந‌ம்பி நினைத்திட்ட‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு தீ மூட்டினாய் ஹிந்தி அம‌ர்வ‌த்தின் உருவ‌த்தில் வ‌ந்து எங்க‌ள் வீர‌ர்க‌ள் உயிர் தின்று அழிவூட்டினான் உல‌க‌த்தின் திசை எங்கும் புய‌ல் ஆன‌து எங்க‌ள் உரிமைக்கு இது தானே உர‌ம் ஆன‌து ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் ஆற‌லையே வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் மாற‌லையே ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு
 36. 1 point
  ஒருபோதும் சந்திக்கவே மாட்டாங்கள்! இரண்டு காரணங்கள்! ஒன்டு, 6 கட்சிகள் பேசத் தொடங்கின ஆரம்ப காலத்திலேயே சம்பந்தன், சுமந்திரன் சதி செய்து ஓடிச் சென்று ரணிலுக்கு கொடுத்த ரகசிய வாக்குறுதிகள் அம்பலமாகியுள்ள நிலைல யாரும் சந்திக்கப் போவதில்லை! இரண்டு, வெல்வதற்கு தமிழர்ற்றை வாக்குகள் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு தேவைப்பட்டிருந்தாலும் அவர்கள் எப்படியோ எடுபிடி அரசியல்வாதிகளின் உதவியோடு ஏமாந்த தமிழர்களின் கணிசமான வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பது.
 37. 1 point
 38. 1 point
  போல் வியாபார உலகில் எல்லோருமே தத்தமது பொருளாதார வியாபார தேவைக்கு தான. முன்னுரிமை கொடுப்பாரகள் ஆனால் அதனை எமக்கு அனுகூலமாக பாவிப்பது நம்மவர் கையில் தான் உள்ளது. புலம் பெயர் சமூகம் என்ற வலுவான முதலீட்டு சக்தியை சரிவர பாவித்தால் சம வேளை தமிழரின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் சாத்தியம் உள்ளதை மறுக்கமுடியாது.
 39. 1 point
  எத்தனை எத்தனை தியாகங்கள். எல்லாம் இப்போது மறக்கடிக்கப்பட்டுக்கொண்டே போகின்றன.
 40. 1 point
 41. 1 point
 42. 1 point
 43. 1 point
  மல்லிகை வாசம் நல்லதொரு பக்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள். தொடருங்கள். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.
 44. 1 point
  அரசியலில் கிழக்கிற்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்றுவரை கூட்டமைப்பின் தலைவர் கிழக்கை சேர்ந்தவர். கிழக்கு மக்கள் இனியும் ஒட்டுண்ணிகளாக வடக்கில் ஒட்டியிருக்காமல் சுயமாக இருக்கவேண்டும்.
 45. 1 point
  ஐந்து கட்சிகள் உடன்பாடு செய்து கொண்டதிலிருந்து நித்திரையில்லாமல் சிரமமப்படும் ஒருவர் சுமந்திரன். எப்படி தன்னுடைய எசமானும் திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை கனகச்சிதமாக அரங்கேற்றிவரும் ஐக்கிய தேசியக் கட்சி எனும் பயங்கரவாதக் கும்பலுக்கு தமிழரை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கலாம் என்று நாய்படாதபாடா அலைந்து திரிகிறார் சுமந்திரன்.
 46. 1 point
  யாரைக் கடத்தி, யாரிடம் கப்பம் பெற்று, யாருடைய காணிகளை/சொத்துக்களை அபகரித்து, யாரைக் கொலை செய்து, ..... ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்?
 47. 1 point
  தமிழ் மண்ணில் பேரினவாதக் கட்சிகளுக்கு சேவகம் செய்யும் மனோ கணேஷனின் போலித்தனமும், சிங்கள-பௌத்த கொலைகாரக் கட்சிகளில் ஒன்றான ஐ.தே. கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தமிழ் மொழிப் புறக்கணிப்பும் / அவமதிப்பும் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இவை இப்படியிருக்க, மிகமிக மோசமான பிற்போக்கு / மோட்டு / அடிமை மனோநிலையில் உள்ள சிலரால் மட்டுமே திட்டமிட்ட தமிழினவழிப்பை கடந்த 70 வருடங்களாக செய்துவரும் பேரினவாதிகளில் ஒருவற்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் அல்லது பகிஷ்கரிக்க வேண்டும் என்று புலம்ப முடியும். அதிலும் கையாலாகாத சம்மந்தன், சுமந்திரன், மாவை வகையறாக்களும் இவர்களின் விசிறிகளும் சிங்கள-பௌத்த கொலைகாரக் கட்சிகளில் ஒன்றான ஐ.தே. கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நப்பாசையில் காலத்தைக் கடத்துகின்றனர். இவை போன்ற பின்னணியில் தான் தமிழ் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பது மிக அவசியமானதாக கருதப்படுகிறது.
 48. 1 point
  எமது பெரு மதிப்பிற்குரிய நடிகரும் கவிஞருமான மாண்புமிகு பொயட் ஐயா அவர்கள் தான் பல இராணுவத்தினர் மத்தியில் பலமாக சத்தம் போட்டு தனது எதிர்ப்பை காட்டியதாக இங்கே கூறியுள்ளார்.இது உண்மையில் வரவேற்கத்தக்க செயல்.பாராட்டப்பட வேண்டியதுமாகும். இருந்தாலும் எமது மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் இந்த பாரபட்சம் காட்டும் செயலை கண்டிக்காமல் இருப்பது மிகவும் வேதனை தரும் செயல் என இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
 49. 1 point
  Message from TripAdvisor: Due to a recent event that has attracted media attention and has caused an influx of review submissions that do not describe a first-hand experience, we have temporarily suspended publishing new reviews for this listing. If you’ve had a firsthand experience at this property, please check back soon - we’re looking forward to receiving your review! அவன் முந்தியிட்டான் .