• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   17

  • Content Count

   4,837


 2. கிருபன்

  கிருபன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   19,140


 3. Kavi arunasalam

  Kavi arunasalam

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   664


 4. விவசாயி விக்

  விவசாயி விக்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   5,711Popular Content

Showing content with the highest reputation on 11/17/2019 in all areas

 1. 5 points
  உத்தியோக பற்றற்ற முடிவுகள் கீழே தயவுசெய்து அவரவர் முடிவுகளை சரிபாருங்கள் பிழைகள் இல்லாதவிடத்து இதையே உத்தியோக பூர்வ முடிவாக கொள்ளலாம். 100% - யாருமில்லை 90% - குமாரசாமி, அகஸ்தியன், வாதவூரான், வாத்தியார், கிருபன், லாரா, நிழலி, கோஷான் 80%- ரதி, ஈழப்பிரியன் 70% - நிலாமதி 50% - விசுகு, சூமா, துல்பென், மருது, புங்கையூரான், தமிழ் சிறி, பிரபா, நுணாவிலான். 40% - ஏராளன், யூட் 30% - மீரா, சுவி போட்டியில் “யாருமில்லை” வெற்றி பெற்றுள்ளதாக பூர்வாங்க தகவல்கள் சொல்கிறன. போட்டியில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும், துணுக்குகள், செய்திகள், விபரங்களை இணைத்த சகல உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
 2. 4 points
  எனக்கு இங்கே கருத்து எழுதுபவர்களை யோசிக்க அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்ல. முன்னர் யுத்தகாலத்தில் “பெட்டி அடித்தல்” கதைகள் எழுதியமாரி இப்போ, சீனா, அமெரிக்கா, இந்தியா என சும்மா பிளந்து கட்டுவதை விடுங்கள். புவிசார் அரசியல் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பெரும் காரணி என்றாலும் அதில் மட்டுமே எல்லாம் தங்கி இல்லை. எந்த தரப்பு வந்தாலும் அமெரிக்கா, சீனா, இந்தியா தொடர்பான இலங்கையின் கொள்கையில் பெரிய அசைவு வராது. அண்மையில் மைத்திரி ஏற்படுத்திய குழப்ப நிலையில் கூட, இந்த விடயத்தில் இருதரப்பும் விட்டுக்கொடாமல் நடந்ததை கண்டோம். எல்லாரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இலங்கை வெட்டி ஆடும். அதில் ராஜபக்சயள், ரணில், சஜித் எல்லாரும் ஒரு அணிதான். 1. அடுத்து பொதுத்தேர்தல் வரும். அதில் 2/3 பெற்று அரசியலமைப்பை தமக்கு ஏற்ப மாற்றுவதே ராஜபக்சேக்களின் முதல் குறி. 2. தொடர்ந்து அடுத்த தேர்தல்களை எப்படி வெல்லுவது என யோசிப்பர். கோட்டா இன்னும் ஒருதரம் அதன் பின் நாமல். அதுவரை எப்படி சிங்கள வாக்குகளை தக்க வைப்பது? அல்லது இழக்கும் அணிக்காக வாக்குகளை சிறுபான்மை வாக்குகளால் ஈடு செய்வது? இதற்காக ஒன்றில் மேலும் இன்வாதத்தை கையில் எடுக்கலாம் அல்லது சுமூகமாக போகலாம். 3. சுமூகமாக போனால் ரணிலோ, சம்பிக்கவோ இனவாதத்தை கையில் எடுப்பர். எனவே இலகுவில் வெல்லும் வழி, இனவாத்தை தூண்டி விடுவதே. அதற்கு ஒரே வழி இன்னும் இன்னும் முஸ்லிம் தமிழ் மக்களிடம் இருந்து பயங்கரவாதிகளை உருவாக்கி பின்னர் அழிப்பது. மிக விரைவில் இரு சிறுபான்மை இனங்களும் பெரும் நெருக்குதலை காணும். இது இந்த மாவீரர் அனுட்டிப்பில் தடை, கைது எனத் தொடங்கும். அப்பாவி சிறுபான்மை மக்களை துன்புறுத்தி அதன் மூலம் பெரும்பான்மை மத்தியில் அவர்களின் இருப்பு தக்க வைக்கப்படும். 4. ஒரே சமயத்தில் இலங்கையின் நீதி, சுயாதீன குழுக்கள் என்பனவறின் அதிகாரம் படிபடியாக முடக்கப்பட்டு சகலதும் அரசே என்றாக்கப்படும். 5. நாங்கள் தொடர்ந்தும் வைகோ போல, அமெரிக்கா, சீனா, இந்தியா என யாழில் எழுதி கொண்டிருப்போம்.
 3. 3 points
  கோத்தாவுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு ....தமிழ் மக்கள் இவரை பகைக்காமல்,இவரோடு உறவாடி தமக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எதிர்த்து நிற்பதால் இழப்புகளும்,தோல்விகளும் தான் அதிகம்...முஸ்லிம்களை பாருங்கள் தேர்தலில் சஜீத்திற்கு வோட் போட்டு விட்டு ,கோத்தா வென்றதும் அவரை வாழ்த்தி வெடி கொளுத்துகிறார்கள் ...எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பு அரசியல் செய்யாமல்,பணிந்து போய் எமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எந்த நேரமும் நேருக்கு,நேர் மொத வேண்டும் என்றில்லை
 4. 3 points
  அந்தளவுக்கு அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள் அல்ல நம்ம அரசியல் தலிவர்கள்
 5. 3 points
 6. 3 points
  மக்களுக்காக வாழ்பவர்கள் அனைவரும் போராளிகள். வரதராஜப்பெருமாள் சொல்லிக் கொள்வதைப் போல், அவரும் போராளியென்றால் மாற்றுக் கருத்துகளையும் மாற்று வழிமுறைகளையும் கொண்ட போராளிகளையும் மதிக்கத் தெரிய வேண்டும். போராளிகள் அனைவருக்கும் நோக்கம் ஒன்றுதானே ! வெல்வது மட்டும்தான் போராட்டம் என்றில்லை. தோற்றாலும் போராட்டம்தான். மற்றபடி மக்களைப் பலி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் போரை முன்னெடுப்பதில்லை. விளைவுகளைக் களமும் காலமும் தீர்மானிக்கின்றன. பிரபாகரன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராளி. அவரைப் போன்றோர் களத்தில் வீழ்வதில்லை ; துரோகத்திலேயே வீழ்கின்றனர்.
 7. 2 points
  அதி தீவிர புலி எதிர்ப்பாரர்களும், அதி தீவிர புலி ஆதரவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள். அவர்களால் தாயக மக்களுக்கு ஒரு சத பிரயோசனமில்லை .
 8. 2 points
  6. அரசமரத்தடி அரசியல் "அத்தான் புலி ஆதரவு என்று வருவினம் அரசாங்க ஆதரவு என்று வருவினம். ஒருத்தரையோடையும் அரசியல் கதைக்காதைக்கோ!" மச்சினன் பத்து தடவையாவது சொல்லி இருப்பான். அது என் பலவீனம் என்று அவனுக்கு தெரியும். நான் வீட்டிற்குள் முடங்காமல் ஊரை சுற்றுவதில் குறியாய் இருந்தேன். தங்கிய வீட்டில் இருந்து மாமா வீடு நோக்கி செல்லும் போது மாமனார் கல்யாண மண்டபத்தில் சிலரோடு நிற்பதை கண்டு பூராயம் பார்க்க அங்கு சென்றேன். சில இளையோர் இரும்பை ஒட்டி கதவுகள் செய்து கொண்டிருந்தனர். நான் கேட்க முன் மாமனார் "தம்பி இந்த சின்ன பொடியள் மேல் மாடிக்கும் கீழுக்கும் ஓடி விளையாடுதுகள். விழுந்து கிழுந்தால் நாங்கள் தான் பொறுப்பு அது தான் கதவு செய்து படியளுக்கு போடுறம்" நான் இரும்பு வேலையை கவனிக்கிறேன். ஒட்டல் வேலை சீராக இருந்தது இளையோரும் வேளையில் கண்ணாக இருந்தார்கள். "எவ்வளவு முடியும்?" ஒரு தொழிலாளியின் சம்பளத்தை கணிப்பது நோக்கம். "இதென்ன ஒரு ஐயாயிரம் ரூபா முடியுது" மாமனார். " நல்ல மலிவா இருக்கு. வேலையும் நல்லா இருக்கு" நான். கதைக்கும் போது உருளுந்து ஒன்று எம் முன் வந்து நின்றது. "வாத்தியார், எப்படி இருக்கிறீங்கள்?" மாமனார். வாத்தியார் என்னை கூர்ந்து பார்த்தார். "இது எண்ட அக்கவிட மகன்" திரும்பி என்னை பார்த்து "விக்கி இவர் யார் சொல்லு பார்ப்பம்?" கேடடார் மாமா. என்னால் மடடுபிடிக்க முடியவில்லை. "இவர் தான் குமாரியிண்ட புருசன்" மாமா. நான் சிரித்து கொண்டே அவருக்கு ஒரு தலையாட்டல் போட்டேன். "எங்க இருந்து வாறீங்கள் வாத்தியார்?" மாமன். "நான் அண்ணை இப்ப நாமல் ராஜபக்சவிண்ட கூட்டத்தை முடிச்சிட்டு வாறன். நல்ல சனம் 800 பேருக்கு கிட்ட வந்திச்சினம். நாமலுக்கும் நல்ல சந்தோசம்" பெருமையோடு கூறினார் வாத்தியார். எனக்கு வியப்பாக இருந்தது எம் குடும்பத்தில் ஒரு ராஜபக்ச ஆதரவாளர். என் முகத்தில் இருந்த சந்தேகம் கண்டு " தம்பிக்கு எங்கட ஊர் அரசியல் தெரியுமோ?" கேடடார். "கொஞ்சம் தெரியும்" பொய் சொன்னேன். "இவன் ஒரு விவசாயி வேற" மாமா பெருமையோடு சொன்னார். என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார் ஆசிரியர். "தம்பி விவசாய அமைச்சர் எண்ட நண்பன்" நானும் ஆச்சரியத்தோடு "அவர் தான் ஒழுங்கா இங்க வேலை செய்யுறார். பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கை நல்ல விசயம் ' வாத்தியார் கண்ணில் ஒளி. நான் எனது உடன்தபால்(இன்ஸ்டாக்ராம்) பக்கத்தை எடுத்து காட்டினேன். "சூ மரக்கறியள் அந்த மாதிரி இருக்கு. தக்காளி பள பளகுது" புகழ்ந்தார். "இது இயற்கை விவசாய காய் கறிகள்:" பெருமையுடன் நான். "சீ உண்மையாவோ?" நம்பாமல் பக்கத்தை தட்டி தட்டி போனார். அப்போது புத்தி கொஞ்சம் பேதலிக்க இளையவன் ஒருவன் வந்தான். "அக்கா தேத்தண்ணி தரமாடடாவாம்" அவன் தலை குழம்பி, பெரிய சட்டை அணிந்து, பெரிய காற்சட்டையை பாவாடை நாரால் இறுக்கி கட்டி இருந்தான். எனக்கு மனது உளைய தொடங்கியது. நான் யாழில் கண்ட மனம் குன்றிய முதலாமவர் அவர். முன்பு சிவநேசம் என்று ஒரு பெண் இருந்தார் எம் ஊரில். அவர் A L தேர்வில் மூன்று A ஒரு B எடுத்த படியால் மன உளைச்சல் வந்து புத்தி பேதலித்தவர். "சரி வீட்டை போ நான் வாறன்" அவனுக்கு சொல்லிவிட்டு "தம்பி அரசமரத்தடிக்கு ஆறு மணிக்கு வாங்கோ அரசியல் கதைப்பம். " வாத்தியார் சொல்லிவிட்டு அவனை தொடர்ந்தார். "இந்த பொடியன் ஒரே பிள்ளை. பெற்றோர் நல்ல காசு காரர். அவை வருத்தத்தில் செத்த பிறகு சொந்த கார கூட்டம் ஏமாத்தி சொத்துக்களை பிடுங்கி போட்டு அவனை தெருவிற்கு கலைச்சு போட்டுதுகள்" மாமா கவலையோடு சொன்னார். "பாவம் பொடியன். வாத்தியார் பெற்றோரிண்ட சொந்தம். சாப்பாடு போடுறார். அவன் கோயில்ல உதவி செய்யுறான்" திரும்பவும் சோகத்துடன். "இப்படியும் ஆக்கள் இருக்கினமே? " பொடியனின் கள்ளம் கபடம் இல்லாத முகத்தை நினைத்து கொண்டே கேட்டேன். மாமரும் மௌனமாக தலையாட்டி கொண்டு ஒட்டு வேலையை மேற்பார்வை செய்ய சென்றார். நானும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தை நோக்கி நடை காட்டினேன். அரசமரத்தடி கூட்டத்தில் என்னையும் சேர்த்ததில் மகிழ்ச்சி ஆனால் வயது கூடியதில் ஒரு சின்ன கவலை. சின்ன வயதில் பெரிய ஆக்கள் கதைக்கும் போது வர கூடாது என்று எம்மை விரட்டுவார்கள். ஆறு மணி போல் கோவில் கும்பிட்டு திரு நீறு பட்டை போட்ட பெரியோர் அரசமரத்தடியில் கூட தொடங்கினர். நான் வெக்கையை தணிக்க மாமனாரின் செவ்விளனி ஒன்றை பிடுங்கி வெட்டி குடித்து கொண்டே மரத்தடி வந்திருந்தேன். வாத்தியார் பெரிய சிரிப்புடன் வரவேற்றார். அரசியலுக்குள் ஒரேயடியாக குதித்தார். "தம்பி நான் இங்க எனது SLPP தொடர்பால் ஒரு 300 பொடியளுக்கு வேலை எடுத்து கொடுத்துட்டேன். இப்பவும் 80 வேலைக்கு ஆள் இல்லை. இந்த வதிரி சந்தியில வேலை இல்லாமல் சுத்திய பொடியளிட்ட இண்டைக்கு போனனான். ஆனால் அவர்கள் என்னை கண்டவுடன் எகிறி ஓடுறாங்கள்" குமுறினார். "ஏன்? வேலை சரியில்லையே?" கேட்டேன். "சீ சீ மாதம் நாற்பதாயிரம் சம்பளம் தபால் நிலையம், கல்வி, மருத்துவமனை சார்ந்த வேலைகள். பொடியளுக்கு பஞ்சி. எல்லாம் வெளிநாட்டு காசு செய்யிற வேலை" பட படத்தார். அவரை ஆமோதித்து சுத்திவர இருந்த பெரியவர்கள் தலை அசைத்தார்கள். "அப்ப பொடியள் என்ன செய்யிதுகள்?" கேட்டேன். "வெளிநாட்டு காசில் சொகுசு உருளுந்துகளை வேண்டி போட்டு ஊர் சுத்துவது, தண்ணி அடிப்பது, இப்ப போதை பொருட்களும் வந்து விட்டது." இன்னொரு பெரியவர். "வெளிநாட்டுக்காரர் வருசத்துக்கு ஒருக்கா காசு அனுப்புவினம். கை கடிக்க தொடங்க இப்ப சங்கிலி பறிக்கிறது, பெண்களிடம் கை பை பறிப்பது என்று களவு செய்யுதுகள் பொடியள்" முடித்தார். எனக்கு முகம் சுருங்கி இருந்தது. "போதை பொருள் எப்படி இங்க வருது?" கேட்டேன். "இப்ப கேரளா கஞ்சா, மெத், ஹெரோயின் எல்லாம் கொழும்பில இருந்து தாராளமா வருது. இங்க நெல்லியடி பள்ளி கூடத்து பொடியளுக்கு வெளியில வைச்சு கேரளா கஞ்சா விக்கிறாங்கள்" வாத்தியார். ம்ம் பொருளாதாரம் உயர பிரச்சினைகளும் உயரும். அமெரிக்க ராப் பாடகரின் "மோர் மணி மோர் பிராப்ளம்" பாட்டு ஞாபகம் வந்தது. "காவல் துறை என்ன செய்கிறது?" கேட்டேன். "பிடிக்கிறார்கள் ஆனால் இவங்கள் வெளியில உடனே வந்திருவாங்கள். வெளிநாட்டில் இருந்து வழக்கறிஞருக்கு காசு வருது" இன்னொரு பெரியவர் கூறினார். "தம்பி வடமாகாணத்திற்கு நிறைய காசு இன்னும் இருக்கு ஆனால் எங்கட தமிழ் அரசியல்வாதிகள் பிரேரணை ஏற்றி அந்த நிதியை பெற்று ஏனோ உதவி செய்யினம் இல்லை" வாத்தியார் கூட்டமைப்பை சாடினார். "அவையள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா போவதும் தமது சொந்த வியாபாரங்களை காப்பதில் தான் குறி" வாத்தியார். "அவையளை வெளிநாட்டில் கூத்தமைப்பு என்பார்கள்" நக்கலாக அரசியல் சூட்டை தணிக்க சொன்னேன். அரசமரத்தடி கூட்டம் விழுந்து விழுந்து சிரித்தது. அவர்களுக்கு அந்த பட்ட பெயர் தெரியாதது அதிசயமாக இருந்தது. என்னை பிரகாசமான முகத்துடன் பார்த்தார் வாத்தியார். "கூத்தமைப்பு. நல்லா இருக்கு பெயர். அது தான் இங்க நடக்குது. சனமும் அவையளை மதிக்கிறதில்லை. ரெண்டாயிரம் மூவாயிரம் வாக்குகள் தான் இவையளுக்கு கிடைக்கும் இங்க" "முஸ்லிம்களை பாருங்கோ தம்பி. தமக்கு என்று ஒரு கட்சி இருந்தாலும் இரு சிங்கள கட்சிகளிலும் இருந்து தம் இனத்திற்க்கு உதவுகிறார்கள். " வாத்தியார். "இவை அரசாங்க சலுகைகள், வேலைகள், புனரமைப்பு காசுகளை எடுத்து மக்களுக்கு குடுத்தால் எதிர் கட்சிக்கு பெயர் கிடைச்சுடும் என்று எம்மக்களை முடக்குகிறார்கள். " திரும்பவும் குமுறினார். "கோத்தா தான் திரும்பவும் வருவார். அவர்கள் நிறைய வெளிநாட்டு திட்டங்களை கொண்டு வருவார்கள். அதிலிருந்து எப்படி தமிழ் மக்கள் பயன் பெறலாம் என்று சிந்திக்காமல் அவருடன் மோதுவார்கள்..... இருந்து பாருங்கோ தம்பி" தொடர்ந்தார். "வீடில்லா சனத்திற்கு நிலம் வாங்கி வீடு கட்ட அரசாங்கம் பதினோரு இலச்சம் குடுக்குது. போராளிகளுக்கு கை வேலைத்திட்ட பயிற்சி கொடுக்குது. மாதம் 1800 ரூபா உதவி தொகை போராளிகளுக்கு கொடுக்குது. இப்ப யாழில் தொழில் பேட்டை தொடங்கி சின்ன வியாபாரங்களை பெரிதாக்க உதவுகிறது. எங்கட சுபாஸ் வெதுப்பி கடை தொழில் பேட்டையில் தொழிற்சாலை தொடக்கி 80 பேர்ல இருந்து 200 பேராக வளர்ந்திருக்கு. 24 நேரமும் தொழிற்சாலை இயங்குது" மூச்செடுத்தார் வாத்தியார். இருட்டி ஏழு மணியாகியது மனுசிமார் கை பேசிகளால் அழைப்பு விட்டார்கள். "தம்பி நாளைக்கும் வாங்கோ. உங்கட மென்பொருள் நிறுவனத்திற்கு என்ன நடந்தது எண்டு கேட்கவேணும். மற்றையது விவசாயம் பற்றி கதைக்கோணும். இங்க நிறைய வசதிகள் இருக்கு ஆனால் அதை ஒழுங்காக செய்து கொடுக்க ஆக்கள் இல்லை" வாத்தியார். எல்லோரும் என்னுடன் சேர்ந்து முருகன் கோவில் மண்டபத்தின் முன் படம் எடுத்து வாட்ஸ் அப்பில் உலகம் பூராக செய்தி அனுப்பினார்கள். "விக்கி எங்களுடன் அரசமரத்தடியில் இருந்து பூராயம் கதைக்கிறான். நீங்களும் வாங்கோ!" செய்தி LTE கைபேசி அலைகளாக பறந்து போனது. அங்குள்ளவர்களுக்கு இடையில் ஒரு தலைமுறை இடைவெளியை நிரப்ப வேண்டும் என்ற ஆசை இருப்பது தெரிந்தது. எனக்கும் அந்த ஆதங்கம் வந்தது. ஏன் ஊரை விட்டு போனேன் என்று கவலை வந்தது. முப்பது வருடங்கள் வரமால் போனது இன்னும் உறுத்தியது. அடுத்த நாள் கீரிமலைக்கு சாம்பல் கரைக்க போகும் திட்டத்தை மனதில் போட்ட படி வீடு சென்றேன்.
 9. 2 points
 10. 2 points
  பங்கு சந்தையில் அப்பாவிகளிடம் காசு பறிக்க திட்டம். சவூதி அரம்கோ என்ற தலைப்பிலேயே சுத்து மாத்து தொடங்கி விட்ட்து. இது ஒரு அமெரிக்க சவூதி அரச குடும்ப தனியார் நிறுவனம். அவர்கள் நன்றாக காசு பார்த்து விடடார்கள். இன்னும் 20 வருடத்தில் எண்ணெய்க்கு தேவை பெரிதாக இருக்காது அதனால் தமது குடும்பங்களுக்கு நட்டம் வராமல் இருக்க அதை பொதுமக்களின் தலையில் கட்டுகிறார்கள். பெருநிறுவன ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன. இந்த பங்குகளை மக்கள் தவிர்ப்பது நல்லது. மற்றும் ஈரானுடன் சண்டை தொடக்கி அவர்கள் அரம்கோ சொத்துக்களை அழித்தாலும் தனியார் குடும்பங்களுக்கு நட்டம் இல்லை. யாரோ ஒரு அப்பாவியின் பென்சன் காசு தான் போகும். மற்றும் தனியார் முதலாளிகள் பங்கு சந்தையை கட்டுப்படுத்தி விலை ஏற்ற விழுச்சிகளை வைத்து காசு உழைக்கலாம். மின் வாகன மின் கல நிறுவனங்களில் முதலீடு செய்வது தான் உகந்தது.
 11. 2 points
  ரதி, நீங்கள் எதிர்வு கூறியமாதிரி மட்டக்களப்பு, மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அம்மான், பிள்ளையான், வியாழன் பின்னால் போய் கோத்தாவுக்கு வாக்களிக்கவில்லையே! கோத்தா வரக்கூடாது என்று வாக்களித்த மக்களை சரணாகதி அரசியல் செய்யச் சொல்வதை பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், பச்சோந்தித்தனம் என்று அரசியலாளர்கள் சொல்வார்கள் இதை இன்னொரு திரியில் கவிஞர் பொயற்றுக்கும் சொல்லியுள்ளேன். தமிழ், முஸ்லிம் மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமை மூலம் தெளிவாகவும், துணிச்சலாகவும் சொன்ன செய்திக்கு அவர்களுக்குதான் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கவேண்டும். மக்களின் உணர்வுகளை மதிக்காது அரசியல் செய்பவர்கள் ஒருபோதும் மக்களின் மனங்களை மாற்றமாட்டார்கள். 2010, 2015, 2019 தேர்தல்களில் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மாறாமல் தமது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார்கள். அதே போல் சிங்களவர்களும் தங்களது பேரினவாதத்தின் பற்றுதலை தெளிவாகவே காட்டியுள்ளனர். சலுகைகளுக்காக வாக்குப்போடும் அளவிற்கு மக்கள் இறங்கிவராதபோது, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க என்ன செய்யவேண்டும் என்றே கட்சிகள் சிந்திக்கவேண்டும்.
 12. 2 points
  வடபகுதிச்சனம் சஜித்துக்கு மனமாய்த்தான் அள்ளிப்போட்டிருக்கினம். ஒரே பச்சை மயமாய் கிடக்கு...
 13. 2 points
  அரசியலில் ஈடுபடும் மதத்தலைவர்களை அரசியலில் இருந்தும், மதக்காரியங்களிலிருந்தும் விலக்கிவைக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமே உண்மையான மத வழிபாடுகளும், நேர்மையான அரசியலும் உருவாக வழியேற்படும்.
 14. 2 points
 15. 2 points
  5. சந்தையும் சாப்பாடும் வருத்தங்களும் "அத்தான் சந்தைல பார்த்து சாமான் வாங்குங்கோ. எங்கட ஆக்கள் நிறைய இரசயானங்கள் பாவிக்கினம். பழுத்த மாம்பழம் கரும்புள்ளி விழாமல் ஒரு கிழமை இருக்கும். இப்ப அங்க ஜி எம் ஓ சாமானும் வந்தாச்சு" மச்சினன் ஒரு விடயம் விடாமல் சொல்லி அனுப்பி இருந்தான். ஊரெல்லாம் வல்லிபுர கோவில் விரதம். மாமிக்கு உதவியாக ஏதாவது சந்தைல வாங்கி வருவம் என்று கிளம்பினேன். உண்மையில் சந்தையை பார்ப்பது தான் குறிக்கோள். விவசாயி போகாமல் யார் போவார்? குழந்தைகள் இரண்டையும் கிளப்பி நடந்தோம். தெருவால் நடந்து செல்வது பெரும் சிரமமாக இருந்தது. தாறுமாறாக சனம் ஓடி கொண்டிருந்தது. பீப் பீப் என்று ஒரே சத்தம். குழந்தைகளை கரைப்பக்கம் விட்டு நான் தெரு பக்கமாக நடந்தோம். நேர வருவோரை முறைத்து பார்த்து கொண்டே வந்தேன். நான் விட்டால் தள்ளி விழுத்தி விடுவேன் என்ற பயத்தில் கொஞ்சம் தள்ளி உருளுந்து கூட்டம் சென்றது. "எங்கட ஆக்களுக்கு இடம் கொடுத்தால் மடமும் பிடிச்சு அதுக்கு தொலைக்காட்சியும் கேட்பினம். " நினைத்து கொண்டே குழந்தைகளுக்கு கடைகள், சிறு வயது சந்தை கதைகள் சொல்லி கொண்டே வந்தடைந்தேன். வாசலில் ஒரு ஆச்சி ஜம்பு காய் விற்று கொண்டிருந்தார். வலது பக்கம் பல சரக்கு அங்காடிகள் உணவு கடைகள் இருந்தன. எமக்கு வேர்க்க தொடக்கி இருந்தது. பொடியள் நெக்டொ கேட்டு தொல்லை தந்தனர். "கொஞ்சம் பொறுங்கோ...சுத்தி பாத்திட்டு வாங்குவம். " கண்ணால் துழாவி கொண்டிக்கும் போது "பீப் பீப்" பின்னால் ஒரு பெருத்த பெண்மணி வண்டியை தரிக்கும் இடத்திற்கு சந்தைக்குள்ளேயே உருளுந்து விட்டு இறங்காமல் "பீப் பீப்". குழந்தைகள் பயந்து தள்ளி போக பார்க்க நான் அவர்களை இழுத்து கொண்டு வழி விடாமல் நடந்து போனேன். "பீப் பீப்" திரும்பி சுட்டெரிப்பது போல் பார்த்தேன். அவர் பயத்தில் இறங்கி தரிப்பிடம் நோக்கி வாகனத்தை உருட்டினார். "ஏன் இவர்கள் வாகனத்தில் சந்தைக்குள் ஓடுகிறார்கள்?" மகள் கேடடாள். "அவர்களுக்கு பஞ்சி. அவர் ஒரு சோம்பேறி " மகன் சொல்லி சிரித்தான். மற்றும் படி பட்டம் சொல்ல கூடாது என்று தடுப்பேன் ஆனால் அந்த பெண்மணியின் மேல் இருந்த கோபத்தில் நானும் சேர்ந்து சிரித்தேன். அவன் பொய் சொல்லவில்லை. ஒருவர் மட்டும் வாழைப்பழம், பப்பாசி, விளாம்பழம் சில மாம்பழங்களை வைத்திருந்தார். மற்றோர் எல்லாம் ஆரஞ்சு, அப்பிள் என்று வெளிநாட்டு பழங்களை விற்றார்கள். உள்ளூர் முந்திரி காணகிடைக்கவில்லை. ஏக்கத்தோடு உள்ளுக்கும் சுற்றி பார்த்து மீன்கடை இறைச்சி கடை பக்கம் போனேன். இறைச்சி கடைகள் சுத்தம் இல்லாமல் ரத்த சகதியாக இருந்தது. 42 நாள் புரொயிலர் கோழிகள் சிறு கூட்டுக்குள் தூங்கி சாவுக்கு காவல் இருந்தன. ஆட்டு மாட்டு இறைச்சி கடையில் குல்லா போட்டு வேலை செய்திருந்தனர். மகளை திசை திருப்பி மீன் கடைகள் பக்கம் திருப்பினேன். "தம்பி வெளிநாடோ?" பெரிய கட்டிட வாசலில் இருந்து வெங்காயம் விற்ற வயதானவர் கேட்டார். "ஓம் கனடா" சொன்னேன். "அங்க இறைச்சி வேண்டாதைங்கோ. அவை காவல் துறைக்கே நாய் இறைச்சி விற்று பிடிபட்டவை. சிங்களவன் அவைண்ட பழைய கடையை கொழுத்தி போட்டான்." இரகசியமாக சொன்னார். எனக்கு தூக்கி போட்டது. எமது சிங்கள ஓட்டுனரும் இதையே புத்தளத்தில் சொன்னார். "இல்லை ஐயா. நாங்கள் கோயில் விரதம். சும்மா பொடியளோட சுத்தி பார்க்க வந்தனான்" சொல்லி கொண்டே குளிர் பானம் வாங்க வேர்த்து கொண்டு நகர்ந்தோம். ஒரு கடையிலும் நெக்டொ இல்லை. போர்டேலோ சோடா மூன்று வாங்கி வெளியில் இருந்த வாங்கிலில் மூவரும் இருந்து பழ கடைகளை பார்த்து ரசித்து குடித்தோம். "தம்பி மாம்பழம் எவ்வளவு?" கேடடார் ஒரு மூதாட்டி வாடிக்கையாளர். "மருந்தடிக்காதது 250 அடிச்சது 150. எப்ப சாப்பிடபோறாயணை?" வினவினார். "நாளைக்கு கோயிலுக்கு பூசைக்கு கொண்டு போக வேணும். 150 பழத்தில நாலு தா தம்பி. விலையை பார்த்து போடு" மாம்பழம் தந்த கடவுளுக்கு மலிந்த மாம்பழம். கடைக்காரர் அந்த பழங்களை எடுத்து திரும்பி நின்று மறைத்து ஏதோ திரவத்தை அடித்து பின் துடைத்து பையில் போட்டு கொடுத்தார். இயற்கை விவசாயி பொருமி பார்த்து கொண்டிருந்தேன் "இந்த சந்தைல ஒண்டும் வாங்க கூடாது" நினைத்தேன். எங்கட ஆக்கள் எப்படியெல்லாம் காசு உழைக்கிறார்கள். சந்தை பல்பொருள் அங்காடியில் காப்புக்களை பார்த்து மகள் ஆசைப்பட அவளுக்கு ஒரு சோடி. மகனுக்கு ஒரு வில்லு அம்பு விளையாட்டு சாமான் வாங்கி கொண்டு வாசல் கடை ஆச்சியிடம் வந்தேன். அவரிடம் றோஸ் நிற ஜம்பு இருந்தது அது பள பளக்காமல் சிராய்ப்புகளுடன் இருந்தது. குந்தி இருந்து காய்களை பொறுக்கினேன். "ஆச்சி நீங்களும் மருந்து அடிச்ச பழங்கள் விக்கிறீங்களோ? சீண்டினேன். "இல்லை தம்பி இது எண்ட மகளிண்ட வீடடை இண்டைக்கு காலமை பிடுங்கினான்" அவர் இன்னொரு பையை எடுத்து கொட்டினார். நான் ஒரு சில காய்களை தவிர எல்லாவற்றையும் வாங்கினேன். "150 தா தம்பி" கேடடார். நான் விலைக்கு வாக்குவாத பட போகிறேன் என்று தயாரானார். "ஆச்சி எவ்வளவு காலமா சந்தைக்கு வாறீங்கள்?" எனக்குள் எதோ அவரை தெரிந்த உணர்வு. எனது குடும்பத்தினர் பலர் முன்பு அங்காடி வைத்திருந்தவர்கள். "அறுபதாம் ஆண்டு தொடக்கம் தம்பி" நான் விலை பேசாமல் இருந்த நிம்மதியில் சொன்னார். "அப்ப வள்ளி பிள்ளை ஆச்சியை தெரியுமே? அரிசி வித்தவா" ஆவலுடன் வினவினேன். "ஓம்.. நீ யார் தம்பி?" கண்ணாடி இல்லா கண்ணால் என்னை கூசி பார்த்து கொண்டு கேட்டார். "நான் அவவிண்ட மூத்த பூட்டன்" ஆச்சியின் கண்கள் ஒளிர்ந்தது. "அப்பு நல்லா இருக்கிறீயே? அக்கா எனக்கு முந்தி நிறைய உதவி இருக்கிறா. வட்டி இல்லாமல் கடன் தந்து தான் நான் எண்ட மூத்த மகளுக்கு கட்டி கொடுத்தனான். மகராசி" எனக்குள் ஒரு உற்சாகம். ஆயிரம் ரூபாவை நீட்டினேன். அவர் சில்லறை தேடும் போது எழுந்து "ஆச்சி போய்டுவாறன்" மிச்சம் எதிர்பார்க்காமல் ஜம்பு காயை கழுவி தின்னும் ஆவலில் வீடு நோக்கி வெளிக்கிட்டோம். மகாத்மா தியேட்டர் ஒழுங்கையால் திரும்பினோம். இன்னொரு வெளிநாட்டு தெரிந்த முகம் என்னை பார்த்து கொண்டு வந்தது. "விக்கியே?" கேடடார். "ஓம் கனகா அக்காவே?" நான் திருப்பி கேட்டேன். "ஓமடா எப்படி கண்டு பிடிச்சாய்?" வியப்போடு கேட்டார். "நீங்கள் கனடாவிற்கு போன வருஷம் கலியாணத்திற்கு வந்தனீங்கள் தானே?" பதிலை கேள்வியாய் தொடுத்தேன். "அட ஓம் மறந்து போச்சு. பிள்ளையள் வளர்ந்திட்டினம்" கன்னத்தில் கிள்ளினார். "பீப் பீப்" பின்னிருந்து "குறுக்கால போவார் " வாய் தவறி சித்தியின் முன் பேசிக்கொண்டே ஓரங்கட்டினோம். சித்தியும் "ம்ம்ம் இங்க விக்கி ஒருத்தரும் நடந்து திரியினம் இல்லை. எல்லாரும் ஓட்டோவும் உருளுந்தும் என்று திரியினம். நாப்பது வயசு தாண்டினவை எல்லோருக்கும் சலரோகமும் கண்ட கண்ட வருத்தங்களும்" "ஓம் நானும் இண்டைக்கு இரண்டு துவிச்சக்கர வண்டியை தான் கண்டனான்" ஆதங்கபட்டேன். "இப்ப துவிச்சக்கர வண்டி ஓடுவது நடப்பது எல்லாம் ஏழைகளின் போக்குவரத்தாகி போச்சு தம்பி" திரும்பவும் ஆதங்க பட்டார். "நான் நோர்வேயில குளிரோ வெயிலோ 40 நிமிடம் நடந்து தான் பாடசாலைக்கு படிப்பிக்க போறனான். நானும் அவரோட நேற்று பூரா கரவெட்டி, கிராவளை, அத்துளு, அரசடி எல்லாம் சுற்றி நடந்து பார்த்தனாங்கள். சனம் எங்களை ஒரு மாதிரி பார்க்கினம்" தொடர்ந்தார். குழந்தைகள் வீடு திரும்பி மாமனாரின் வீட்டு ஆட்டு குட்டிகள் நாயுடன் விளையாட திட்டம் போட்டு நிலையா நிக்கமால் சுழன்றனர். "நான் கோவில் முடக்கில எண்ட மாமியார் வீட்டில நிக்கிறன். ஆறு மாதத்திற்கு ஒருக்கா வருவம். அவாவிற்கு வயசு வந்து வாக்கு மாறி போச்சு" சித்தி நிலைமை உணர்ந்து பேச்சுக்கு முடிவுரை தொடங்கினார். "நாங்கள் அம்மாவோட மாமா வீடடை நிக்கிறம், கட்டாயம் வீடடை வாறன்" சத்தியம் கூறி விடை கொடுத்தோம். கையில் பை இருந்தபடியால் நாய்கள் தொடர்ந்தன. குழந்தைகள்வீடு நோக்கி ஓட தொடங்கியிருந்தனர். நானும் எட்ட கால் வைத்து நடந்தேன். முடக்கில் "பீப் பீப்" , "அட சனியனுகள் நிம்மதியா நடக்க விடுகுதுகள் இல்லை" சுவரோடு ஒட்டி புல் வளர்ந்த பக்கத்தில் விரைந்தோம். ஜம்பு காயை நோக்கி மனதை திருப்பி கொண்டு வாயூற வீடு வந்தடைந்தோம்.
 16. 2 points
  4. சந்தி சந்தடி "அத்தான் ஊர்ல நாலு மோதிரம் மூண்டு சங்கிலி போட்டு படங்காட்ட வேண்டாம். ஓட்டோவில வந்து சாப்பாடுக்கு காசில்லை என்று அழுவினம். வெளிநாட்டுக்காரரை அவையள் வங்கி இயந்திரம் போல தான் பார்ப்பினம் " மச்சினன் அறிவுரை. அடுத்த நாள் காலை எழும்பி காகம் கரைவதை கேட்டு மகிழ்ச்சியுடன் அசைவு போடுகிறேன். எங்கள் வீட்டில் ஒரு குடும்பம் குடியிருப்பதால் எனது இன்னொரு கனடா மாமனார் வீட்டில் தங்கினோம். குளிரூட்டி, துவைப்பி, வெளிநாட்டு கழிவறை என்று வீடு நவீனமாக இருந்தது. குளிரூட்டி அறை காற்றோட்ட ஓட்டைகளை அடைத்திருந்தாலும் தம்பிரான் கோவிலில் பாட்டு பிலத்து கேட்டது. மேளமும், நாதசுவரம் விடிய ஆறு மணிக்கே முழங்கியது. எழுந்து குளித்து காற்சட்டையை கொழுவி செருப்பை கொழுவிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன். விடிய வெயில் சூடு கொளுத்தியது. எனக்கு வேர்த்து ஒழுகியது. ஆனாலும் ஒரு மகிழ்ச்சி. அதற்குள் துணைவி வீட்டிலிருந்து குரலிடடார். "மாமி சம்பல் இடிச்சு வைச்சிருக்கிறா. றோஸ்ட் பாண் வாங்கி வாங்கோ" சந்திக்கு போக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. பிள்ளைகள் நேர மாற்றத்தால் நித்திரையால் எழும்ப வில்லை. அப்படியே தம்பிரான் கோவில் பக்கம் நடை கட்டினேன். அப்போது என்னை கூசி பார்த்து கொண்டு சித்தி ஒருவர் வந்தார். எனக்கு அவரை தெரிந்தது ஆனால் அவர் என்னை யாரெண்டு கண்டு பிடிக்க முயன்றார். என்னை தொடர்ந்து கோவில் பக்கம் வந்தார். முந்தி இருந்த பாலர் பாடசாலை முருகன் கோவில் கல்யாண மண்டபம் ஆகியிருந்தது. பக்கத்தில் ஒரு வீடு பாலர் பாடசாலை ஆகி இருந்தது. முருகன் கோவில் விளமபர சுவரில் ஆசிரியர் தேவை விண்ணப்பிக்கவும் என்று எழுதி இருந்தது. இந்த பாலர் பாடசாலையில் தான் தாஸ் குரூப் தங்கிய ஞாபகம் வருகிறது. தம்பிரான் கோவிலில் ஒரு பத்து பேர் கும்பிட்டு இருந்தார்கள். ஐயர் மந்திரம் சொல்லி ஓமம் வளர்த்து கொண்டிருந்தார். முன்பு நாங்கள் விளையாடிய பூவரசம் மரங்கள் அப்படியே இருந்ததில் மகிழ்ச்சி. கோவில், பாம்பு புற்று என்று படங்களை கைபேசியில் தட்டினேன். சித்தி மடடுபிடிக்க முடியாமல் "தம்பி யார் நீங்கள்?" நான் யாரின் பிள்ளை மற்றும் பேரன் என்று கூறினேன். கண்களில் பிரகாசம். "டேய் நான் யாரென்று தெரியுதா? நீ முடக்காட்டில எங்கட வீடடை வந்து கொய்யா களவெடுக்கிறனீ" பிலத்து எனது பெருமை சொல்லி சிரித்தார். அப்போது கோவிலுக்கு வந்த இன்னும் சில சொந்தங்கள் பூராயத்தை கேட்டு என்னை சுற்றி வலயம் போடடார்கள். "தெரியும் சித்தி" வழிந்து கொண்டு சொன்னேன். ஒவ்வொருவரும் தன்னை தெரிகிறதா என்று கேடடார்கள். நான் கனடா முகங்களுடன் ஒப்பிட்டு சிலரை சரியா சொன்னேன். நான் கோவில் பூசையை பார்ப்பதை பார்த்து "இது உங்கட கனடாவில் இருந்து பாமதி வந்து ஒவ்வொரு வருசமும் பத்து நாள் திருவிழா நடத்துறா" சொன்னார்கள். "நல்ல விசயம்" "அக்கா வந்திருக்கிறாவோ?" கேடடார்கள். "ஓம் மாமி வீட்டை நிக்கிறா" அப்படியே என்னையும் தம்பிரானையும் கைவிட்டு சொந்தங்கள் மாமி வீட்டை படையெடுத்தார்கள். நான் புளிய மரத்தை நோக்கி சென்று ஏமாந்தேன். புளிய மர காணியில் கத்தரி தோட்டம் இருந்தது. தோட்டத்தை பார்த்ததில் உற்சாகம் வந்து சில படங்களை தட்டி விட்டு சொந்தக்காரர் வீடுகளை நோடடம் விடடவாறு நடந்தேன். ஓவ்வொரு முடக்கிலும் தெருநாய்கள் ஆனால் முன்பு போல் இல்லாமல் கொழுத்திருந்தன. தாமும் தம் பாடாக திரிந்தன. விசர் நாய்களை காணாததில் திருப்தி. முன்பு கடி வாங்கி பதினாறு ஊசி குத்திய ஞாபகம் வந்து உடம்பு ஒருக்கால் சிலிர்த்தது. எதற்கும் நாய்களிடம் ஒரு கண் வைத்திருந்தேன். திரும்பி முருகன் கோவில் வந்து ஒழுங்கையால் மகாத்மா தியேட்டர் தெருவிற்கு வந்து நெல்லியடி சந்தி நோக்கி நடந்தேன். எனக்கு இன்னும் வேர்வை கூடி மேற்சட்டை தோய்ந்திருந்தது. வேர்வையை வழித்து சுண்டி எறிந்துவிட்டு உற்சாகத்துடன் சந்தி வந்தேன். எங்கும் பீப் பீப் என்று ஓலி ஓட்டோவும், வாகனங்களும், உருளுந்துகளும் சீறி ஓடின. துவிச்சக்கர வண்டிகள் ஒரு சிலதையே காணக்கூடியதாக இருந்தது. நான் தெருவை கடந்து சுபாஸ் வெதுப்பக்கத்திற்கு போக காவல் நின்றேன். ஒருத்தரும் சடடை செய்யாமல் தம் போக்கில் போனார்கள். பக்கத்தில் இருந்த கைபேசி கடையில் இரு இளைய இராணுவத்தினர் எதையோ வாங்கினார்கள். அவர்களிடம் துப்பாக்கி இருக்கவில்லை. நான் பொறுமை இழந்து கையை காட்டிக்கொண்டு குறுக்கால ஓடி மற்ற பக்கம் சென்றேன். வாடிக்கையாளருக்கு இரு பக்கமும் நடை பாதை இருந்தது. ஒவ்வொரு கடையா பார்த்து கொண்டு சுபாஸ் கடை நோக்கி நடந்தேன். எனக்கு முன்னால் ஒரு துரு பிடித்த துவிச்சக்கர வண்டி வந்து திடீர் என்று நின்றது. ஒரு இளையவர் சிரித்து கொண்டே "நீங்கள் வெளிநாட்டில இருந்து வந்திருக்கிறதா உங்கட முன் வீடு காரர் சொன்னவை. உங்களை பார்க்க தான் வந்தனான். சந்திக்கு போனதா சொல்லிச்சினம். நான் ஒரு போராளி காலை இழந்து விட்டேன்" காலை உற்று நோக்கினேன் அவர் சாரத்தை சற்றே தூக்கி காட்டினார். கால் பிளாஸ்டிக்கால் செய்தது. எண்ணெய் போட்டு துடைத்திருக்க வேண்டும். பளபளத்தது. "எனக்கு சொக்ஸ் தேவை. எனக்கு உங்களை கேட்க வெட்கமாக இருக்கு ஆனால் நான் செய்யும் வேலை குடும்பத்திற்கு மட்டுமே போதும். வாங்கி தருவீர்களா?" நான் சாந்தி அக்காவுடன் சேர்ந்து உதவிய போராளி கண்முன் வந்து போனார். நான் தயங்குகிறேன் என்று நினைத்து "சில வருடத்திற்கு முதல் ஐந்து வெளிநாட்டுக்காரர் எனக்கு ஒரு இலட்ச்சம் தந்தவை. அதை வைச்சு ஒரு பெட்டிக்கடை வல்வெட்டி துறையில் வைச்சிருக்கிறன்" என் மாமாவின் முன் வீட்டில் தங்கியிருப்பவர்கள் வல்வெட்டி துறையை சேர்ந்தவர்கள். எனக்கு மச்சினனின் அறிவுரை இந்த விடயத்தில் சரி பட்டுவராது என்று தெரிந்தது. இவர் ஒருவர் தான் காலையில் பார்த்ததில் துவிச்சக்கரவண்டி ஓட்டிய மிக சிலரில் ஒருவர். எமக்காக கால் இழந்தவன் பிச்சை எடுப்பதை பார்க்க கண் கட்டியது. அவரும் வெட்கத்தில் தலையை மீண்டும் மீண்டும் கோதி கொண்டிருந்தார். "எவ்வளவு தேவை?" முகம் இறுக கேட்டேன். "ஒரு இரண்டாயிரம் ரூபா போதும் அண்ணா" சொன்னார் . "இஞ்சால வாங்கோ தம்பி" ஓரங்கட்டினேன். கொத்துரொட்டி ஒரு கட்டு தொள்ளாயிரம் ரூபா ஆனால் இவன் இரண்டாயிரம் கேட்கிறான். நான் ஒரு காற்சட்டை பையில் சில்லறை தாளுகளையும் மற்றைய பையில் ஐந்தாயிரம் தாள்களையும் வைத்திருந்தேன். "உனக்கு வருசத்துக்கு எவ்வளவு சொக்ஸுக்கு முடியும்?" கேட்டேன். " பத்தாயிரம் கிட்ட முடியும் அண்ணா அதை போட்டு தான் செயற்கை கால் போடலாம். இப்ப உள்ளது கிழிந்து சிராய்த்து போய் கிடக்கு" இன்னும் சாரத்தை தூக்கி இரத்த கறையை காட்டினார். எனக்குள் குப்பென்று ஒரு சூடு தொடக்கி இன்னும் வேர்த்தது. புலி சாப்பாட்டு பொதி கேட்டு துன்புறுத்தினம் என்று பொய் சொல்லி அகதி உரிமை பெற்றவர்கள் சொகுசு கார்களும் மில்லியன் டொலர் வீடுகளிலும் வாழ்ந்து ஆங்கிலத்தில் பீட்டர் விடுவது மனதில் வந்து கோபம் இன்னும் கூடியது. "இந்தா தம்பி இதில முப்பதாயிரம் இருக்கு. பத்தாயிரம் சொக்ஸ் வாங்க. இருபதாயிரம் ஒரு புது துவிச்சக்கர வண்டி வாங்க. இந்த கறல் பிடித்த வண்டியை தூக்கி ஏறி. நான் அடுத்த வருசமும் வருவன் அப்ப முன் வீட்டு அக்காவிற்கு சொல்றன்" ஒருவித பதட்டத்தோடு சொன்னேன். "ஐயோ அண்ணா இரண்டாயிரம் போதும்" அவன் கண்களில் ஆசை இருந்தாலும் அவனது மானம் அதை தடுத்தது. அண்ணர் போராளிகளை நல்லா வளர்த்திருக்கிறார் என்று தெரிந்தது. "இல்லை தம்பி வைச்சிரு." காசை கையில் திணித்தேன். அவர் தலை கோதுவதை விட்டு எனது கையை இறுக்கி பிடித்திருந்தார். எனக்கு அவருடன் நிற்க ஏனோ பிடித்திருக்கவில்லை. மன உளைச்சல் கூடியது. " தம்பி நல்லா இரு. முயற்சியை கை விடாதே" சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சுபாஸ் கடை நோக்கி நடந்தேன். அவன் அங்கு நின்று என்னை பார்ப்பது கழுத்தின் மயிர்கள் உணர்ந்தது. சுபாஸ் வெதுப்பக்கத்தில் ஒரு பெரிய கூட்டமே நின்றது. அங்கு வரியில் நின்று வாங்கும் பழக்கம் இன்னும் இல்லை என்றதை கண்டேன். அடித்துபிடித்து பாண் வாங்கி வெளியில் வந்தேன். இந்த முறை சந்திக்கு போய் சுற்றி போக திட்டம். செல்லமுத்தூஸ் கடையில் வந்து என் பழைய நண்பரை தேடினேன். அங்கு காசும் மாத்தலாம். முதலாளி வர நேரம் எடுக்கும் என்று வேலை செய்த இளையோர் கூறிவிட்டு கடையை திறக்கும் பரபரப்பில் இருந்தார்கள். பல கடைகள் எல்லா வகையான பொருட்களும் அங்கிருந்தன. திருமகள் புத்தகசாலை, மற்றும் சேனாந்தை சந்தை பழைய நினைவுகளை கிளறியது. அங்கு அங்காடி வைத்திருந்த என் குடும்பத்தினர் இந்திய இராணுவத்துடன் இயங்கிய கைக்கூலிகளால் இலஞ்சம் கேட்டு சுடப்பட்ட இடத்தை பார்க்கிறேன். முழங்காலில் கையெடுத்து கும்பிடும் போது வாய்க்குள்ள சுட்டார்கள் என்று நினைவு வந்தது. தொண்டையில் ஏதோ கட்டியது. கார்பெட் தெரு என்றாலும் அதில் இரத்த கறை தெரிந்தது. பேருந்து நிலையம் பெரிதாக கட்டியிருந்தது. ஆனால் அதற்கு முன்னாள் சுடப்பட்டு தப்பிய லண்டன் மாமா ஞாபகம் வந்தார். ஆனால் மரணித்த மற்றைய 21 பல்கலை மாணவர்கள் ஞாபகம் வரவில்லை. நிலைய சுவரில் இரத்த கறைகள் தெரிந்தன, என் மனதில். சமிக்ஞை விளக்கில் சிங்கள காவல் துறையினர் நின்று வாகனங்களை ஒழுங்கு படுத்தினர். அவர்கள் சைகைக்கு காவல் நிற்கும்போது பக்கத்தில் நிண்ட ஐயாவை கேட்டேன் "சந்தை இப்பவும் இங்க தானோ?" "இல்லை தம்பி அது பெட்ரொல் ஸ்டேஷன் பக்கம். இப்ப இங்க சின்ன அங்காடிகள் இருக்கு. இதை பெரிய பேருந்து நிலையமாக கட்டிட போயினம்" சொன்னார் ஐயா. நானும் அவரும் ஒரு சிலரும் தான் நடைவாசிகள் மற்றோர் எல்லாரும் வாகனங்களில் எங்கேயோ அவசரமாக சென்றார்கள். நான் இடது பக்கம் திரும்பி கடைகளை பார்த்து கொண்டு முருகன் கோவில் தெருவை நோக்கி நடந்தேன். நகை கடைக்குள் யாரோ விடிய வெள்ளனை நகை பாரத்திருந்தார்கள். அப்படியே தண்ணி கடை தாண்டி திரும்பினேன். சிகை அலங்கார கடைக்கு வெளியால் பல இளையோர் உருளுந்துகளில் நின்று சல்லாபித்தார்கள். அதற்கு முன் உள்ள புகைப்பட கடையில் மும்முரமாக ஒரு இளையவர் கணனியில் வேலை செய்திருந்தார். அவர்கள் என்னை பார்க்க நான் புன்முறுவலிட்டு தலையை மேலும் கீழும் ஒரு தடவை ஆட்டினேன். அவர்களும் திரும்ப மரியாதைக்கு தலையாட்டி தந்தார்கள். முடக்கில் ஒரு ஐந்து நாய்க்கூட்டம் படுத்திருந்தது. அவர்களை கண்டும் காணாமல் தாண்டி சென்றேன். அதில் இரண்டு பாண் வாசத்தை கண்டு என்னை தொடர்ந்தன. நான் செக்கிழுக்கும் ஆலை ஒழுங்கையால் விழுந்து வேகமா நடந்தேன். நாய்களும் வேகமெடுத்தன. அங்கு மாடுகள் இப்பவும் செக்கிழுக்கும் சத்தம் கேட்டது. நல்லெண்ணெய் வாசம் தூக்கியது. மாமனார் கோவிலுக்கு பூ பறித்துக்கொண்டிருந்தார். கல்லெடுப்பது போல் குனிந்தார் எனது தொடராளிகள் தெறித்து ஓடினார்கள். "எப்படி சந்தி?" பெருமையாக கேடடார். "கண்டுபிடிக்க முடியவில்லை அவ்வளவு வளர்ச்சி. ஒரு பக்கம் தான் பார்த்தனான் பின்னேரம் இன்னொரு சுற்று போக இருக்கு" உற்சாகமாக சொன்னேன். "ம்ம் பார்த்து நட இடிச்சுப்போட்டு போயிடுங்கள் இந்த சனம்." சொல்லி வாய் மூட முதல் உருளுந்தில் யுவதி ஒருவர் பீப் பீப் என்று முடக்கில் சத்தமெழுப்பி வேகத்தை குறைக்காமல் விரைந்து சென்றார். மற்ற பக்கத்தில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தெருவில் இருந்து நகர்ந்து மணலுக்குள் வண்டியை விட்டு தப்பினார். "இந்த பொடியளை திருத்த முடியாது" சபித்து கொண்டே போனார். உரலில் இடித்த சம்பலுடன் முப்பது வருடத்தின் பின் பாண் சாப்பிடும் ஆவலில் மாமி வீடு நோக்கி மாமனாருடன் விரைகிறேன்.
 17. 1 point
 18. 1 point
  கிருபன் ,உங்கட கதையைப் பார்த்தால் இப்ப நடந்த ஆட்சி காலத்தில் ஏதோ தமிழர்களை முதற் தர பிரஜைகளாய் நடத்தின மாதிரி அல்லவா இருக்கு . சரணாகதி அடைந்த கோழையாகவே நான் இருந்திட்டு போறேன்...அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை....நீங்கள் இங்கே இருந்து கொண்டு அவர்கள் கோத்தாவை புறக்கணித்து விட்டார்கள் என்று கெக்கரிப்பது மு.புத்தகத்தில் அரசியல் செய்ய மட்டுமே உதவும் உண்மையில் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் அங்குள்ள தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியாது . கோத்தா அழிக்கப்பட வேண்டியவர் அது, இது என்று இப்ப எதிர்ப்பு காட்ட வெளிக்கிட்டால் ஊரில் தமிழினம் இருந்த அடையாளம் தெரியாமல் அழிந்து விடும்...அவரை மு.வாய்க்காலில் பார்த்தும் நேருக்கு நேர் மோதுவேன் என்பது சண்டித்தனம் எம் இருப்பை தக்க வைக்க அவரோடு சேர்ந்து பயணிப்பதில் தப்பேதும் இல்லை.
 19. 1 point
  எனக்கும் உதே கதிதான். போன் போட்டு கேட்ட போது கூட, “மூக்கை பிடித்தபடி கோட்டவுக்கே போடுறோம்” எண்டு சொல்லிய பயபக்கி எல்லாம் கூட போய் சஜித்துக்கு போட்டிருக்கு . ஆனாலும் மக்களின் கொள்கை பற்று கண்ணில் நீரை வர வைத்தது. #வீரம் விளைந்த மண்.
 20. 1 point
  அது பால் இல்லாத அப்பம். கட்டைச் சம்பலுடன் விழுங்குவது சற்றுக் கடினம்.
 21. 1 point
  தமிழன் அதுவும் இலங்கைத் தமிழன் இன்று யாரையும் நம்புவனாக இல்லை. ஏனெனில் அந்தளவுக்கு அவன் ஆரியனாலும், பிராமணனாலும், இந்தியனாலும், சிங்களவனாலும் மட்டுமல்ல, தனது சொந்தத் தமிழ் அரசியல் தலைவர்களாலும்.... நிறையவே அடிவாங்கிக் களைத்துவிட்டான்.
 22. 1 point
  விக்கி ஐயா மகிந்த முன்னிலையில்.. பதவியேற்ற போதும்.. அந்தந்த தகுதி நிலைக்குரியவர்களுக்கு சட்டத்துக்கு அமைய மதிப்பளித்தே வந்திருக்கிறார். இப்போதும் அதே. அதற்காக கோத்தாவின் கடந்த காலச் செயற்பாடுகளை எல்லாம் நியாயப்படுத்துபவராக இல்லை என்றே தெரிகிறது.
 23. 1 point
  ஏற்கனவே சொன்னதை தான் சொல்கிறேன். அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் அக்கறை செலுத்துவதில்லை.
 24. 1 point
  உப்ப என்ன சொல்றீங்கள் மிஸ்டர் ஜூட்?... எத்தனை பேர் கோத்தாவுக்கு ஆதரவாய் வாக்களித்து இருக்கினம் ...எதற்கெடுத்தாலும் என்ட அண்ணையை இழுப்பது உங்கள் இயலாமை ...என்ட அண்ணெய் முதலிலேயே சொல்லி விட்டார்...பிள்ளையான் திரும்ப வெளியில் வரோணும், அவர் திரும்பவும் முதலமைச்சர் ஆகோணும் என்று...ஜ.பி.சியில் அவரது பேட்டி வந்தது தேர்தலுக்கு முன்னர்...ஒப்கோஸ் உங்களுக்கு இதையெல்லாம் பார்க்க நேரம் கிடைக்காது...ஆனால் அவர் யாரை வெச்சிருக்கார் ,யாரோடு படுத்தார் போன்ற காணொளிகளை இணைப்பதற்கு,பார்ப்பதற்கும் இங்கு ஒரு கூட்டம் இருக்கு .
 25. 1 point
  சூரியனை சூழ்ந்திருக்கும் மேகம் விலகி சுபீட்ஷம் கிடைக்குமா ......!
 26. 1 point
 27. 1 point
  ஏற்கனவே தென்பகுதில வீதியில் திரிகிற முஸ்லீம்களை கொஞ்சநாளைக்கு வீட்டுக்குள்ள இருக்க சொல்லி பள்ளிவாசல்கள் அறிவிக்கின்றனவாம்.
 28. 1 point
  நல்ல செய்தி! இதே நிலை ஏனைய போர்க்குற்றவாளிகளுக்கும் அவங்கட குடும்பத்துக்கும் ஏற்பட வேண்டும். இது புலம்பெயர் தமிழரின் முயற்சியில தங்கியிருக்கு.
 29. 1 point
  If and when the win is declared and confirmed, the three embassies will go to work overtime : China, India and USA. They, each will carefully craft a congratulatory message to the newly elected president and make their strategic moves to strengthen their positions. This would open new doors for Tamils too. Will we be ready to take advantage ?
 30. 1 point
  சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் எந்தத் தொகுதியிலாவது சஜித் வென்றதாகத் தெரியவில்லை. 40% க்கு கீழ்தான் வாக்குகள் சிங்களத் தொகுதிகளில் சஜித்துக்கு விழுந்திருக்கின்றன. யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை மாவட்ட முடிவுகள் முழுமையாக கிடைத்துள்ளதால் சஜித்தின் மொத்த வாக்குகள் 44.46%, கோத்தாவின் வாக்குகள் 49.59% ஆக தற்சமயம் காட்டுகின்றது. இது விரைவில் மாறி கோத்தா அமோகமாக வெல்வார்!
 31. 1 point
  DAKAR, Senegal — Gambia, the smallest country in continental Africa, took an unprecedented step this week in the realm of international justice: It filed a lawsuit at the United Nations’ top court accusing Myanmar of genocide against Rohingya Muslims. The case at the International Court of Justice, which typically addresses disputes between states, raised eyebrows because Myanmar sits roughly 7,000 miles from Gambia, which lacks any tangible connection to the protracted crisis in Southeast Asia. But the story of why such a tiny player chose to tackle a distant conflict is personal. Abubacarr M. Tambadou, Gambia’s attorney general and justice minister, read a U.N. report last year that detailed how an army crackdown in Buddhist-majority Myanmar had killed thousands of Rohingya in 2017 and driven more than 700,000 into neighboring Bangladesh. Investigators described the violence as “crimes against humanity,” and the United States called it an ethnic-cleansing campaign. Myanmar has denied all the allegations, saying it was targeting terrorists. Tambadou, who worked for years as a lawyer at the U.N. tribunal focused on the 1994 genocide in Rwanda, visited a Rohingya refugee camp in Bangladesh in May 2018. Conversations with the refugees, and their pain, reminded him of Rwanda’s history of government-led atrocities, which wiped out about 800,000 lives over 100 days in the East African country. An estimated 250,000 women endured sexual assault. “As I listened to the horrific stories — of killings, of rape, of torture, of burning people alive in their homes — it brought back memories of the Rwandan genocide,” Tambadou said in a phone interview. “The world failed to help in 1994, and the world is failing to protect vulnerable people 25 years later.” https://www.washingtonpost.com/world/africa/why-a-tiny-african-country-is-taking-the-rohingyas-case-to-the-world-court/2019/11/12/f491d5a4-04cd-11ea-9118-25d6bd37dfb1_story.html?fbclid=IwAR3G66y_QXSbxo4GrpFCG3pvazmB2RExr_tyhw5MnCMclVKoSg1t-FpBqCk
 32. 1 point
 33. 1 point
  அம்பனை மேட்டர் ஓவர். உங்கள் ஆசை பலித்து விட்டது.
 34. 1 point
 35. 1 point
  போர்க்குற்றவாளி கோட்டாபயவை தோற்கடிக்க இதுபோன்ற ஆவணங்களை அமெரிக்காவோ, மங்கள போன்றவர்களோ உருவாகியிருக்கலாம்.
 36. 1 point
  இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சகல விதத்திலுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பொதுமக்களுக்காக செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் இவற்றில் 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 பேர் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இன்று நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறுகின்ற நிலையில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள சகல மக்களும் தமக்கான வாக்குகளை பதிவதற்கான சகல ஏற்பாடுகளும் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் நேரம் அந்த வகையில் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதுவரை காலமாக தேர்தல் நாட்களில் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4மணி வரையும் வாக்களிக்க முடியும் என நேர ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை மேலதிகமாக ஒரு மணிநேரம் அதிகமாக நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய வாக்காளர்கள் பிற்பகல் 5 மணி வரையில் வாக்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். வாக்களிப்பு -வாக்கெண்ணும் நிலையங்கள் அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 1550 வாக்கெண்ணும் நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் 48 ஆயிரம் பேர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு கடமைகளில் 2 இலட்சம் அரச அதிகாரிகளும் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் (15,994,096) ஆகும். இவர்களின் எண்ணிக்கை 22 தேர்தல் மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில்- 1,670,403 வாக்காளர்களும், கம்பஹா மாவட்டத்தில் - 1,751,892 வாக்காளர்களும் , களுத்துறை மாவட்டத்தில்- 955,079 வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில் - 1,111,860 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில்- 401,496 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் - 569,028 வாக்காளர்களும், காலி மாவட்டத்தில் - 858,749 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் - 652,417 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் - 485,786 வாக்காளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் - 564,714 வாக்காளர்களும், வன்னி மாவட்டத்தில் - 282,119 வாக்காளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் - 398,301 வாக்காளர்களும், திகாமடுல்லை மாவட்டத்தில் - 503,790 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் - 281,114 வாக்காளர்களும், குருநாகல் மாவட்டத்தில் - 1,331,705 வாக்காளர்களும், புத்தளம் மாவட்டத்தில் - 599,042 வாக்காளர்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் - 682, 450 வாக்காளர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் - 326,443 வாக்காளர்களும், பதுளை மாவட்டத்தில் - 657,766 வாக்காளர்களும், மொனராகலை மாவட்டத்தில் - 366,524 வாக்காளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் - 864,978 வாக்காளர்களும், கேகாலை மாவட்டத்தில் - 676,440 வாக்காளர்களும் இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்கள் அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 புதிய வாக்காளர்கள் தகுதியாகியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 15,044,490 பேர் வாக்களிக்க தகுதியானர்கள். எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 15,994,096 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் புதிதாக இம்முறை 9 49,606 பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறை 35 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் 41 பேர் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் இறுதியாக 35 பேர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் புதிய ஜனநாயக முன்னணி-சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- கோத்தாபய ராஜபக்ஷ , தேசிய மக்கள் சக்தி- அநுரகுமார திஸாநாயக்க, ஜாதிக சங்வர்தன பெரமுன - பள்ளெவத்த கமலராளலாகெ றொஹான் பள்ளெவத்த, தேசிய மக்கள் இயக்கம் -ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, ஐக்கிய சோசலிச கட்சி - சிறிதுங்க ஜயசூரிய , நவ சிங்கள உறுமய - சரத் மனமேந்திர, எங்கள் மக்கள் சக்தி கட்சி - வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, இலங்கை தொழிலாளர் கட்சி- ஏ.எஸ்.பி.லியனகே , முன்னிலை சோசலிச கட்சி- துமிந்த நாகமுவ , இலங்கை சோசலிச கட்சி - கலாநிதி அஜந்த விஜேசிங்க பெரேரா , ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி- ஆரியவங்ச திஸாநாயக்க , சோசலிச சமவுடைமைக் கட்சி - நம்புநாம நாணயக்கார அக்மீமன பள்ளியங்குருகே வஜிரபானி விஜயஸ்ரீவர்தன, நவ சமசமாஜக் கட்சி- பெத்தே கமகே நந்திமித்ர , ஜனநாயக தேசிய முன்னணி - அருண டி சொய்சா, சிங்கள தீப ஜாதிக பெரமுன- ஜயந்த லியனகே , ஜனசத பெரமுன- பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ருஹுனு ஜனதா பெரமுன கட்சி - அஜந்த டி சொய்சா, ஐக்கிய சோசலிச கட்சி- வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா , மக்கள் அனைவரும் அரசர் - பிரியந்த முனிஹத் எதிரிசிங்க , தேசிய ஐக்கிய முன்னணி - நாமல் ராஜபக் ஷ, எமது தேசிய முன்னணி - சுப்ரமணியம் குணரத்தினம், சுயேட்சை வேட்பாளர் .- வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்ணான்டோ , சுயேட்சை வேட்பாளர் - ஸ்ரீபால அமரசிங்க, சுயேட்சை வேட்பாளர்- சமரவீர வீரவன்னி, சுயேட்சை வேட்பாளர் - பொல்கம்பலராளலாகே சமிந்த அனுருத்த , சுயேட்சை வேட்பாளர்- கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா , சுயேட்சை வேட்பாளர் -சந்திரசேகர ஹேரத் ஹிட்டிஹாமி கோராளலாகே சமன் ஸ்ரீ ஹேரத், சுயேட்சை சேட்பாளர்.- அஷோக வடிகமங்காவ சுயேட்சை வேட்பாளர் -அப்பரெக்கே புஞ்ஞானந்த தேரர், சுயேட்சை வேட்பாளர் - விஜேநாயக்க கங்கானம்கே பியசிறி விஜேநாயக்க , சுயேட்சை வேட்பாளர் - சாந்த குமார ஆனந்த வெல்கம சுயேட்சை வேட்பாளர் - பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, சுயேட்சை வேட்பாளர்- இல்லியாஸ் ஐத்துரோஸ் மொஹமட் , சுயேட்சை வேட்பாளர் - வெலேரா கீர்த்தி ரத்தின முதியன்சேலாகே சரத் விஜித குமார, சுயேட்சை வேட்பாளர் - எம்.கே.சிவாஜிலிங்கம், சுயேட்சை வேட்பாளர் - மஹ்மூத் லெவ்வை ஆலீம் மொஹமட் ஹிஸ்புல்லாஹ் , சுயேட்சை வேட்பாளர்- குணபால திஸ்ஸகுட்டி ஆராச்சி , சுயேட்சை வேட்பாளர்- கனே ஆரதச்சிகே மஹீபால ஹேரத் என வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். வாக்குச்சீட்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் எண்ணிக்கை இம்முறை அதிகரித்த காரணத்தினால் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களின் வாக்குச்சீட்டை விடயம் இம்முறை வாக்குசீட்டின் நீளமும் அதிகரித்துள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் நீளமானது 26 அங்குலமாகும். ஆகவே மக்கள் வேட்பாளர்களின் பெயர்களை முழுமையாக தேடி வாக்களிக்க சிறிது நேட வினாடிகள் தேவைப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு அதேபோல் கடந்த தேர்தலை விடவும் இம்முறை தேர்தலில் அதிக நிதி தேர்தல்கள் ஆணைகுழுவினால் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சகலதற்காகவும் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஆறு பில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இம்முறை தேர்தலில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்துக்கும் இரண்டு ஆயுதம் தரித்த பொலிசார் என்ற அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபடவுள்ளனர். அதன் அடிப்படையில் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்கு மாத்திரம் 25 ஆயிரத்து 712 பொலிசார் கடமையில் ஈடுபடுவார்கள். அதேபோல் வாக்களிப்பு நிலையங்களை மையப்படுத்திய விசேட பாதுகாப்பு உக்தியாக ரோந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அவ்வாறு அனைத்து வாக்களிப்பு நிலையங்களையும் கண்காணிக்கும் வண்ணம் 3043 ரோந்துக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கு 2193 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் சில பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் கலகத்தடுப்பு பிரிவினரும் பொலிசாரும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். வீதி சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளின் கண்காணிப்பு தேர்தல்கள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் சர்வதேச நாடுகளில் நான்கு கண்காணிப்புக் குழுக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேபோல் இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு குறித்த சிவில் அமைப்புகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். https://www.virakesari.lk/article/69004
 37. 1 point
  சிங்கள-பௌத்தர்கள் கடுமையான, தாங்கமுடியாத அளவுக்கு வேதனைகளை அனுபவிக்கும்வரை அவர்களது மகா பொய்வம்ச, சிங்கள-பௌத்த இனமதவெறி மனநிலை மாறும் சூழல் ஏற்படப்போவதில்லை. அதற்கான சூழலை ஏற்படுத்துவதில் தான் சிறுபான்மை இனத்தின் மீட்சி தங்கியுள்ளது.
 38. 1 point
  தமிழ் முஸ்லிம் வாக்காளர்கள் சஜித்துக்கு வாக்களித்தாலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் தான் வெல்லுவேன் எனும் உறுதிப்பாட்டிலேயே கோத்தபாய இத்தேர்தலுக்கு முன்னரே தயாரானார். ஏன் இது பற்றி யாரும் எழுதவில்லை.
 39. 1 point
  அதிகம் சிந்திக்க விரும்பாத பொது மக்களுக்கும் பாமர மக்களுக்கும் சின்னம் பற்றிய தெளிவு / தெளிவுபடுத்தல் அவசியமாகிறது!
 40. 1 point
 41. 1 point
  சளைக்காமல் முடிவுகளை தொடர்ந்து ஒட்டி வரும் லாராவுக்கு நன்றி!
 42. 1 point
  மிகச் சரியான கருத்து. இனவாதம் எப்போதும் மிகப் படித்த ஆளும் வர்க்கத்தினரிடையே தான் எப்போதும் மிகவும் நுட்பமாகவும் மிகக் கோரமானதாயும் இருக்கும். இவர்கள் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டிடும் என்கின்ற அவசியமில்லை.
 43. 1 point
  ஆயுத போர் மவுனிக்கும் மட்டும் தண்ணியில்லா பாலைவனத்தில் ஒளிச்சு கிடந்தவனெல்லாம் கதைக்க வெளிக்கிட்டு விட்டாங்கள் .
 44. 1 point
  என்னைப்பொறுத்தவரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி உரிமை தமிழ் வடக்குக் கிழக்கு இணைப்பு போர்க்குற்றம் எனச் சொல்லி அரசியல் செய்வதைவிட அரசாங்கத்துடன் சேர்ந்து ஏதாவது பதவியப்பெற்று காசு சம்பாதிக்கலாம். அல்லது இருக்கிற காசு போதும் என நினைத்து சேர் பொன் அருனாசலம் அவர்களது மைத்துணர் வீடு (இது முன்பு இப்போ கஜேந்திரகுமார் விலைக்கு வாங்கிவிட்டினம்ந நினைக்கிறன்) குயீன் வீதி வீட்டில் காலுக்கு மேல் காலைப்போட்டுக்கொண்டு ஜாலியாய் வாழ்நாளைப்போக்கலாம். குதிரைக்கஜன் அரசாங்கத்தில ஆரையாவது பிடித்து மத்திய வங்கியில் வேலை வாங்கி, இனிவரும் காலத்தைக் கொழும்பில கழிக்கலாம். புலம்பெயர் தமிழர்களே முக்கினது போதும் அவையவை சோலிகளைப்பாருங்கோ. தாயகத் தமிழர்களுக்கு எங்களைவிட நிறையவே அரசியல் தெரியும். விருப்பமெண்டால் கார்த்திகை மாதத்தில் வரும் மாவீரர்தினம் திலீபன் நினைவுதினம் அன்னைபூபதி தினம் இவைகளை எதுவித எதிர்பார்ப்பும் இல்லாது கொண்டாடிவிட்டு உங்கட கடமை முடிந்தது என அடுத்த அலுவலைப்பார்க்கவும். அப்படியிருந்தாலும் புலம்பெயர் தேசங்களில் நாம் சும்மா எல்லாம் விட முடியாது எனக்கூறி சிலர் கிச்சுக் கிச்சு மூட்டுவினம் நல்லா பகிடி விடுகினம் எனச்சொல்லிவிட்டு விலத்திப்போயிடுங்கோ.
 45. 1 point
  அப்டேட் செய்யப்படாத தமிழ் வாக்குகள்? நிலாந்தன்… November 16, 2019 இக்கட்டுரை வாசிக்கப்படுகையில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிடும். அம் முடிவுகள் தொடர்பில் இக்கட்டுரை விவாதிக்காது. ஆனால் அம்முடிவுகளின் மீது தமிழ் வாக்காளர்கள் புத்தி பூர்வமாகத் தாக்கம் செலுத்தியிருக்க முடியும், செலுத்தியிருக்க வேண்டும் என்ற நோக்குக் கோணத்திலிருந்து இக்கட்டுரை எழுதப்படுகிறது. 2005 இல் புலிகள் இயக்கம் ஜனாதிபதித் தேர்தல் மீது அவ்வாறான ஒரு தலையீட்டைச் செய்தது. அதன் விளைவுகளே இன்று வரையிலும் இலங்கைத் தீவின் ஜனாதிபதித் தேர்தல்களில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தலைப் புறக்கணித்தது. அதன்மூலம் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ச அந்த இயக்கத்தை 2009 ஆம் ஆண்டு மே மாதம் தோற்கடித்தார். அந்த வெற்றியின் மூலம் அவர் இலங்கைத் தீவின் நவீனவரலாற்றில் வேறு எந்தக் குடும்பமும் பெற்றுக் கொடுக்காத ஒரு வெற்றியை சிங்கள மக்களுக்கு பெற்றுக் கொடுத்தார். அந்தவெற்றியை முதலீடாக கொண்டு அவர் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்க தொடங்கினார். ராஜபக்ச பெற்றுக்கொடுத்த வெற்றியின் பிரகாசம் குறையும் வரையிலும் யுத்த வெற்றி வாதமும் தென்னிலங்கையில் கோலோச்சும். இவ்வாறு ஆயுதப் போராட்டத்தை நசுக்கிய ராஜபக்சவுக்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகள் திரும்பின. ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதை விடவும் யார் வரக்கூடாது என்று சிந்தித்து தமிழ் மக்கள் வாக்களிக்க தொடங்கினார்கள். இதன்படி 2009-ல் இருந்து தொடங்கி தமிழ் மக்கள் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின்போதும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களித்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் வாக்களிப்பு மனோநிலை எனப்படுவது இப்படித்தான் இருந்து வருகிறது. இதனால் நன்மை அடையும் தரப்புக்கள் நான்கு முதலாவது ஐக்கிய தேசிய கட்சி. ராஜபக்ஷக்களுக்கு எதிரான வாக்குகளை தனக்கு ஆதரவான வாக்குகளாக அக்கட்சி அறுவடை செய்து வருகிறது .இம்முறையும் அறுவடை செய்யப் போகிறது. இரண்டாவது கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலின் போது ராஜபக்சவுக்கு எதிராக விழும் வாக்குகளைத் தான் ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவாக விழுந்த வாக்குகளாக வியாக்கியானம் செய்து வருகிறது. இம்முறையும் அப்படித்தான் தேர்தலுக்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னரே ஐக்கிய தேசிய கட்சியைஆதரிக்கும் தனது நிலைப்பாட்டை கூட்டமைப்பு அறிவித்தது. அதை அறிவிக்கும் வரை பல்கலைக்கழக மாணவர்களையும் ஏனைய கட்சிகளையும் ஏமாற்றி ஒரு பொய்யான கூட்டை உருவாக்கி காலத்தை கடத்திய பின் முடிவில் நிலைப்பாட்டை கிட்டத்தட்ட இரண்டு கிழமைகளுக்கு முன் அறிவித்தது. மூன்றாவது தரப்பு மேற்கு நாடுகள். நான்காவது தரப்பு இந்தியா. இவ்விரண்டு தரப்புக்களும் இலங்கைதீவில் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதில் அதிகரித்த ஆர்வத்தைக் காட்டுகின்றன. இலங்கைத்தீவின் ஜனாதிபதித் தேர்தல் எனப்படுவது உள்நாட்டில் ராஜபக்சக்களை எதித்து சஜித் மோதும் ஒரு களம் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று ஆர்வம் காட்டும் சீனாவும் அமெரிக்க இந்திய கூட்டும் மோதும் ஒரு களமுமாகும்.இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் இச்சிறிய தீவு இதற்கு முன்னெப்பொழுதும் இந்தளவுக்கு சீன மயப் பட்டதில்லை. இவ்வாறு இலங்கைத் தீவு சீன மயப்படுவதை விரும்பாத அதை தடுக்க விரும்புகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றன. எனவே ராஜபக்ஷக்களுக்கு எதிரான தமிழ் மக்களின் கூட்டு மனோநிலை எனப்படுவது இது விடயத்தில் பேரரசுகளுக்கும் சாதகமானது. இப்படிப் பார்த்தால் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு ஒருபுறம் யுத்தத்தை வென்ற ராஜபக்ச குடும்பத்துக்கு முதலீடாக மாறியிருக்கிறது.அதேசமயம் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களின் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறா ஆதரவு வாக்குகளாக மாறியிருக்கின்றன.அதாவது 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் இயக்கம் தலையீடு செய்ததன் விளைவுகள் இலங்கைத்தீவின் அரசியலில் தொடர்ந்தும் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த அடிப்படையில் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் பெருமளவுக்கு மாறா நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.இக்கூட்டு மனோநிலையை தமிழ் கட்சிகளின் தலைவர்களும் உட்பட வெளித்தரப்புகளும் தமக்கு வசதியாக பயன்படுத்துகிறார்கள். மாறாக அதை தமிழ் நோக்கு நிலையிலிருந்து கையாண்டு எப்படி தமிழ்ப் பேரத்தை உயர்வாகத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று சிந்திப்பதற்கு தமிழ் கட்சித்தலைவர்கள் யாராலும் முடியவில்லை. சாதாரண தமிழ் மக்கள் தமது கை பேசிகளையும் கணினிகளையும் ஏனைய இலத்திரணியல் பொருட்களையும் காலத்துக்குக் காலம் அப்டேட் பண்ணி வருகிறார்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தலின் போது தமது வாக்களிப்பு முறைமையை இந்தமுறையும் தமிழ் மக்கள் அப்டேட் பண்ணப் போவதாக தெரியவில்லை. அதைஅப்டேட் பண்ண வேண்டுமென்று தமிழ் கட்சித் தலைவர்களும் சிந்திப்பதாக தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கூட்டு மனோநிலையை அப்டேட் பண்ணுவது என்றால் என்ன? அக்கூட்டு மனோநிலையை கூட்டுப் பேரமாக மாற்றவேண்டும். 2009இல் தமிழ்ப் பேரம் ஒப்பீட்டளவில் தாழ்வாக இருந்ததுதான். ஆனால் 2015இல் நிலைமை மாறிவிட்டது. இந்தோ பசுபிக் மூலோபாய அரசியலுக்குள் தமிழ் வாக்குகள் கேந்திர முக்கியத்துவம் மிக்கவை என்பது அந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது.அதன் பின் கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக கொழும்பில் யார் ஆள வேண்டும் என்பதை பெரிதும் தீர்மானித்தது தமிழ் மக்களே. எனவே அந்தப் புதுப்பிக்கப்பட்ட அதாவது அப்டேட் செய்யப்பட்ட யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் வாக்குகள் அப்டேட் செய்யப்பட வேண்டும். யாருக்கு வாக்களிப்பது என்றாலும் அதை ஒரு வெற்று காசோலையாக நிபந்தனையின்றி வழங்கக் கூடாது. அவ்வாறு நிபந்தனை வைத்து ஆதரவை வழங்குவதென்றால் அதற்குப்பேரம் பேசும்அரசியலைக் கெட்டித்தனமாக முன்னெடுக்கத் தெரிய வேண்டும்.ஆனால் தமிழ்க்கட்சி தலைவர்களிடம் அப்படிப்பட்ட கெட்டித்தனமோ சாதுரியமோ தீர்க்கதரிசனமோ இல்லை. அதனால்தான் இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பேரம் செய்யவில்லை. பேரம் செய்யவேண்டும் என்று கேட்ட சுயாதீன குழுவுக்கு கூட்டமைப்பும் ஏனைய பெரிய கட்சிகளும் பெருமளவுக்கு ஒத்துழைக்கவில்லை. தவிர சுயாதீனக் குழுவின் நகர்வுகளை ஒரு நெருக்கடியாக கருதிய கூட்டமைப்பு அதிலிருந்து தப்புவதற்கான ஒரு மார்க்கமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முன்னெடுப்பை தந்திரமாக பற்றிக்கொண்டது. இதுவிடயத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் முன்யோசனையுடன் நடந்திருக்கலாம்.ஏற்கனவே ஒரு சுயாதீன குழு -அதுவும் திருச்சபையின்ஆயர், ஒரு குரு முதல்வர். அங்லிக்கன் மதகுரு,யாழ் சின்மயா மிசனின்முதல்வர், திருமலை தென்கைலை ஆதீன முதல்வர்;,நான்கு கருத்துருவாக்கிகள,; ஒரு மருத்துவர், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்று எல்லா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உருவாக்கிய ஒரு சுயாதீன குழு -ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது சந்திப்புக்களை மேற்கொண்டிருந்த ஒரு பின்னணியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏன் இடையில் உள்நுழைந்தார்கள்? இது தொடர்பான வேலைகளை தாங்கள் சுயாதீனக் குழு செயற்பட முன்னரே தொடங்கி விட்டதாகவும் அதன் ஒரு பகுதியாக விக்னேஸ்வரனுடன் ஒரு சந்திப்பு நடந்ததாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். எனினும் மாணவர்களின் முன்னெடுப்புகள் விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்புக்கே சாதகமாக முடிந்தன. இதன் மூலம் செயற்கையான ஒர் ஐக்கியத்தை பரபரப்பாக கட்டியெழுப்பி 13 அம்சங்கள் அடங்கிய ஓர் ஆவணத்தையும் உருவாக்கி அதை பெரிய சாதனையாக காட்டிக் கொண்டிருக்க கூட்டமைப்போ வெகு சாதாரணமாக அக்கூட்டினை சிதைத்து விட்டது. அப்பதின்மூன்று அம்சங்கள் அடங்கிய பொது ஆவணம் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பெரிய கவனிப்பை பெற்றது.முக்கிய மேற்கத்தையஊடகங்கள் அதிகரித்த முக்கியத்துவத்தை வழங்கின. ஆனால் தேர்தலுக்கு முன்னரே அது புஸ்வானம் ஆகிவிட்டது. இதற்கு பல்கலைக்கழக மாணவர்களும் பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களை பேய்க்காட்டியது போல சுயாதீன குழுவை நடத்தியிருக்க முடியாது. ஏனெனில் அக்குழுவில் மதத் தலைவர்களும் தொடர்ச்சியாக எழுதி வரும் கருத்துருவாக்கிகளும்காணப்பட்டார்கள். எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேசக் கிடைத்த ஒரு வாய்ப்பு சிதைக்கப்பட்டு விட்டது. சுயாதீன குழுவும் பிந்தி விட்டது.அக்குழுவில் காணப்பட்ட பலரும் தமிழ் மக்கள் பேரவையை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருபவர்கள். கடைசியாக நடந்த எழுக தமிழ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே அது தொடர்பிலும் பேரவையின்இதுவரை கால செயற்பாடுகள் தொடர்பிலும் முழு அளவு ஆராய்ந்து பேரவையை புனரமைக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வந்த ஒரு பின்னணியில் பேரவைசுயாதீனக் குழுவை தொடக்கிவைத்தது. எழுக தமிழ் முடிந்த கையோடு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் பேரவையை புனரமைப்பதை விடவும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி தமிழ் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு பொதுக்கருத்தை கட்டியெழுப்புவது உடனடியாகச் செய்யப்பட வேண்டிய ஒரு காரியமாக தோன்றியது. எனவே சுயாதீன குழு தொடக்கி வைக்கப்பட்டது. ஆனால் அது மிகவும் பிந்தி விட்டது. ராஜபக்ச குடும்பம் தேர்தலில் போட்டியிடுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னரே உழைக்கத் தொடங்கிவிட்டது. ஒரு ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்று திட்டமிட்டு சஜித் பிரேமதாச பல ஆண்டுகளுக்கு முன்னரே உழைக்கத் தொடங்கிவிட்டார.; மற்றொரு வேட்பாளரான அனுரகுமாரவும் அவரது கட்சியான ஜே.வி.பி.யும் அதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே உழைக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் ஒரு பொது தமிழ் வேட்பாளரை தேடவேண்டிய தமிழ் சமூகமும் தனக்குள் ஒற்றுமை படாமல் சோம்பிக்கிடந்தது. சிலகருத்துருவாக்கிகள் கட்டுரைகளை எழுதினார்கள். அதற்கும் அப்பால் எதுவும் நடக்கவில்லை.தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்டகால நோக்கில் பண்படுத்தி எடுப்பதற்கு தமிழ் மக்கள் மத்தியில் எந்தவோர் ஏற்பாடும் இல்லை. கட்சிகளும் இல்லை. மக்கள் இயக்கங்களும் இல்லை. இருக்கின்ற ஒரு பேரவைதான் எழுக தமிழ் முடித்த கையோடு சுயாதீனக் குழுவை தொடங்கி வைத்தது.அது பிந்தி விட்டது. ஒரு கிழமைக்குள் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை எப்படி கண்டுபிடிப்பது? யானையின் தும்பிக்கையில் மாலையைக் கொடுத்தனுப்பி ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இது என்ன அரசர் காலமா? அல்லது யாககுண்டத்தை பிளந்துகொண்டு ஒரு பொது வேட்பாளர் தோன்றுவார் என்று நம்புவதற்கு இது என்ன அம்புலிமாமாக் கதையா? எனவே ஒரு பொது வேட்பாளரை உடனடிக்குக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் சுயாதீனக் குழு அடுத்தகட்டமாக எல்லா கட்சிகளையும் ஒரு மேசைக்குஅழைத்து ஒரு பொதுப் பேர ஆவணத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்டது. ஆனால் அதற்கிடையில் பல்கலைக்கழக மாணவர்கள்உள்நுழைந்தார்கள். அதன் விளைவாக ஐந்து கட்சிகளின் கூட்டும் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஒரு ஆவணமும் உருவாக்கப்பட்டன. ஆனால் தேர்தலுக்கு முன்னரே அது டம்மிக் கூட்டு ஆகிவிட்டது. இப்பொழுது கூட்டமைப்பின் நிகழ்ச்சிநிரல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. அதை ஊக்குவிக்கும் தரப்புக்கள் பணத்தை அள்ளியிறைத்திருக்கும். நேற்றுமறுபடியும் ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஆணையை வெற்றுக் காசோலையாக வழங்கி விட்டார்களா? http://globaltamilnews.net/2019/133256/
 46. 1 point
  தமிழ் சிறி தலைப்பை மீறி எழுதுகிறேனோ தெரியவில்லை. ஆனால் யாழ் சர்வதேச விமான சேவைக்கும் தமிழரின் வர்த்தகத்திற்கும் தொடர்பிருப்பதால் தமிழ் வர்தகர்களை பற்றிய எனது அனுபவங்களில் மிகச் சிலதை மட்டும் சுருக்கமாக கூறுகிறேன். பொதுவாக fresh product விற்பனை செய்யும் கடைகள் எல்லாம் கிழமை நாட்களில் காலை 8.00 மணிக்கே திறந்து சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். கடைக்குள் சென்றால் பொருட் கள் வாடிக்கையாளரை கவரும் விதத்தில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தமிழ் கடையில் மரக்கறி வாங்க காலையில் சென்றால் கடை முதலாளி 8.30 மணிக்கு பிறகே நித்திரை மயக்கத்தில் (ராத்திரி அடித்தது சரியாக முறியாத நிலையில்) தலையைக்கூட சரியாக வாரிவிடாமல் வந்து கடையைத் திறப்பார். அண்ணை எத்தனை மனிக்கு கடை திறக்கினீங்கள் என்று கேட்டால் அனேகமா எட்டரை ஒன்பதுக்கு வந்துடுவன் என்பாரே தவிர கடை திறக்கும் sharp time சொல்ல மாட்டார். கடைக்குள் இருக்கும் பொருட்கள அவரே தடக்கி விழும் அளவுக்கு அலங்கோலமாக வைக்கப்பட்டிருக்கும். ஒருமுறை கடையில் காலாவதியான திகதியுடன் கடை Regal ல் வைக்கப்பட்ட பொருளை எடுத்து கடை முதலாளியிடம் காட்டியபோது அதை பெரிய விடயமாக எடுக்காமல் இந்த சாமான் கொண்டுவாறவங்கள் இப்படித்தான் என்று delivery ஆடகளை திட்டி விட்டு அப்பொருளை திரும்பவும்அதே Regal ல் வைத்துவிட்டு சாதாரணமாக தனது வேலையைப் பார்ததார். வேறொரு முறை பொருட்களை எடுத்துக்கொண்டு kassa க்கு போனால் கடையில் வேலை செய்பவர் இறைச்சி வெட்டிய கையோடு kasse ல் பில் அடித்தார். வெட்டிய இறைச்சி சிதலங்கள் அவரின் விரல்களில. ஒட்டி இருக்க அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் customer Service செய்தார். தந்த மிச்ச காசில் ஒட்டி இருந்த இறைச்சியை தான. என்ன செய்ய. அதை வைத்து சமையலும் செய்ய முடியாது. இது வெறும் Trailer மட்டும் தான் இதைப்போல் பல வர்ததக உலகின் ஆச்சரியங்களை இங்கு தமிழ்க்கடைகளுக்கு சென்றால் காண முடியும் .
 47. 1 point
 48. 1 point
  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அன்றே சொன்னார், பாலை விற்பதைப் போல தண்ணீரை ஒருநாள் விற்பார்கள் என்று.அது இன்றைக்கு நடக்கிறது. நான் ஒன்று சொல்கிறேன். காற்றை ஒரு நாள் விற்பார்கள். சுங்கச்சாவடி அமைத்து காற்றுக்கு வரி வசூலிக்கும் நிலை வரும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உலகம் சந்தையாகிவிட்டது. சீமான்.
 49. 1 point
  இது ஒரு வெத்து வேட்டு. உப்பிடி கொஞ்சத்தை வைச்சு சர்வதேசத்தை ஏமாத்தலாம் எண்டு சிங்களம் அப்பப்ப வெளியில கொண்டுவந்து ஏதாவது சொல்ல வைத்தவுடன், அவர்களுக்கு ஏற்றமாதிரி எதையாவது உளறிக்கொட்ட வேண்டியதுதான். ஆட்சி மாற மற்றவர் கூப்பிட்டவுடன் அவர்களுக்கும் வாலாட்ட வேண்டியது. கொள்கை இல்லாமல் போராட வெளிக்கிட்டு தன்மானத்தோடு வாழவும் முடியாமல் எடுபிடி வேலை. அதற்குள் அறிக்கை, பேட்டி ஒரு கேடு. அத்தோடு காணாமல்ப் போய்விடுவினம்.
 50. 0 points
  கோத்தா அண்ட் கோ ஒரு "ஸ்டேட்ஸ்மன்" மாதிரி நடப்பார்களாயின் சம்பந்தராலும் ஹக்கீமாலும் தமது மக்களுக்கு ஒரு அரசியல் உரிமையை வெல்ல முடியும். அவர்களை ஒரு "ஸ்டேட்ஸ்மன்" மாதிரி நடக்க வைக்க யாராலும் முடியாது. அவர்களாக விரும்பினால், அவர்களால் மட்டுமே அது சாத்தியம். அவர்களுக்கு மட்டுமே பௌத்த சிங்கள இனவாதிகளை மீறி ஒரு தீர்வை வைக்கும் பலமும் உள்ளது. ஆனால், என்ன செய்வார்கள், தீர்வை தருவார்களா? இல்லை இனவழிப்பை தொடருவார்களா? என்பதற்கு காலம் தான் பதில்.