• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. சண்டமாருதன்

    சண்டமாருதன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Content Count

      2,452


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Content Count

      51,032


  3. Kavi arunasalam

    Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Content Count

      748


  4. nedukkalapoovan

    nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Content Count

      29,555



Popular Content

Showing content with the highest reputation on 11/20/2019 in all areas

  1. 7 points
    மகாவம்ச கதைகளும் சரி துட்டகைமுனு வரலாறும் சரி சிங்கள இனத்தை ஒரு பாதையில் வழிநடத்த உதவுகின்றது. ஒரு விகாரையை கட்டினாலும் சரி அரசமரத்தை நட்டாலும் சரி வரலாற்றை திரித்தாலும் சரி அவைகள் அந்தப் பாதையின் அடயாளங்களாகின்றன. இறுதிப்போர்க் காலத்தில் விலைவாசி ஏற்றம் பொருளாதார நெருக்கடிகளை அனுசரித்து சிங்கள மக்கள் போரை ஒரு அணியில் நின்று ஆதரித்தார்கள். தேவாலயம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பின் கோட்டபாயவை தேர்ந்தெடுத்திருக்கின்றது சிங்கள இனம். கோட்டபாய தனது பதவிப்பிரமாணத்துக்கு தேர்ந்தெடுத்த இடத்தின் ஊடாக தமது இனம் நடந்து செல்லும் வழித்தடத்தில் மீளவும் ஒரு அடயாளத்தை ஏற்படுத்தி வரலாற்றை எதிர்காலத் தலை முறைக்கு நினைவு கூருகின்றார். புராணங்கள் கதைகள் கோயில்கள் எதுவும் இனத்தை ஐக்கியப்படுத்தும் வகையில் தமிழர்களிடம் இல்லை. மாறாக அவைகள் இனத்தை சிதைக்கவும் தன்னினத்துக்குள் இரைதேடும் குணத்தை விதைக்கவும் ஊர்வாதங்கள் பிரதேசவாதங்களை ஊக்குவிக்கவுமே வழிவகுக்கின்றது. போரின் அழிவுகளுக்கு பின்னரும் தாழ்ந்தவன் தேரிழுக்க கூடாது என ஜேசிபி இயந்திரத்தை வைத்து தேரிழுத்த நிலையில் தான் இனத்தின் ஐக்கியப்பாடு இருக்கின்றது. எது விடுதலை யாரிடம் இருந்து யாருக்கு விடுதலை என்பதே தமிழர்களுக்கு இன்னும் தெளிவற்ற நிலை. இதில் கோட்டபாய வந்தால் என்ன சஜித் வந்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். தங்கத் தட்டில்வைத்து தனிநாட்டை கொடுத்தால் கூட அது குரங்கின் கையில் கொடுத்த புமாலை நிலைதான் தமிழர்களுக்கு.
  2. 3 points
    #மாயப்பெருநிலம் கிண்டிலின் உதவியினால் வாசித்து முடித்தாயிற்று வாசித்து முடிக்கும் வரையிலும் உண்மையில் மிக விறு விறு ப்பா இருந்தது அதுவும் அந்த போலியானவர்களின் கையில் போய்ச்சேர்ந்துவிடுமோ, இவர்களை இலகுவாக நம்பி விட்டாரே பேராசிரியர் ஜெயச்சந்திரன் என்ற தவிப்பு இருந்து கொண்டே வந்தது. நம்பர் 002 உண்மையில் இருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு அநேகமானவர்களிடம் இருப்பது போல் பேராசிரியரிடமும் இருந்ததில் வியப்பு இல்லை. எங்களவர்கள் எழுதும் கதைகளில் போராட்டத்தின் இழப்புகள் சார்ந்த ஒருவித சோக இழையோடும் கதைகள் அதிகமாக வந்திருக்கின்றன அல்லது நான் படித்திருக்கிறேன் அவற்றுடன் ஒப்பிடும் போது இப்படியான கதைகள் புதிய களத்தினை திறந்து வைத்திருக்கின்றது எனலாம்.. கதாசிரியர் இடையிடையே சில வரலாற்று கதைகளையும் (கொடு/தொடு)த்திருக்கிறார் ஆபுத்திரன் கதை,நயினாதீவின் பழைய வரலாறு..பல்லவ குலத்தோன்றல் இளந்திரையன் கதை என்பன குறிப்பிடத்தக்கவை.. அவற்றில் ஒன்று ************************"*""******* கண்ணகியின் / கண்ணகை ( சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகையே தான்) தந்தை மாநாய்க்கன் மரக்கலம் வைத்து நெடுந்தூரம் சென்று வணிகம் செய்யும் வணிகர் குழு தலைவன். ஒருமுறை பூம்புகாரில் இருந்து விலையுயர்ந்த பொருட்களுடன் கீழ் நாடுகள் நோக்கி பயணம் மேற்கொண்டார். மரக்கலம் இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள்காலை ஒரு தீவை நெருங்கியது.சிறிது இளைப்பாறிச்செல்லலாம் என கரை ஒதுங்கினர். கரை அருகே கடலுக்குள் இரண்டு பாறைகள் ஒரு பாறையில் நாகம் ஒன்று சீறிக்கொண்டிருந்தது.மற்றைய பாறையில் கருடன் ஒன்று அதை கொத்தி தின்ன தருணம் பார்த்திருந்தது. அந்தப்பாம்பு தினமும் புளியந்தீவுப்பகுதியிலிருந்து நீந்தி வந்து இத்தீவில் உள்ள நாகர்குல பெண்தெய்வத்தை வழிபட்டு வந்தது இன்றும் அப்படி வரும் போது தான் கருடனிடம் மாட்டி கொண்டுவிட்டது . அதைக்கண்ட மாநாய்க்கன் நாகதேவியை வழிபடச்செல்லும் பாம்பை கொல்ல வேண்டாம் என கருடனைக் கேட்கிறான் அப்போது கருடன் உனக்கு நாகதேவி மேல் அவ்வளவு பற்று இருக்குமானால் நீ கொண்டு வந்த பொருட்கள் எல்லவற்றையும் இந்த கோவிலுக்கு கொடுத்து விடு நான் பாம்பை விட்டு விடுகிறேன் என கூறியது.மாநாய்கனும் ஒப்பு கொண்டு அப்படியே செய்கிறான் அப்படி மாநாய்க்கன் கொடுத்த செல்வத்தால் கட்டபட்டது தான் நயினை நாகபூசனி அம்மன் கோவில் மாநாய்க்கனால் கோவில் கட்டப்பட்டதாலும் அக்கோயிலில் நயினார் பட்டர் எனும் பூசாரி பூசை செய்த்தாலும் இத்தீவிற்கு நயினா தீவு என பெயர் வந்தது ************************************* சீமானை வஞ்சகமில்லாமல் வைச்சு செய்திருக்கிறார். ஆடிட்டர் நந்தா எனும் பாத்திரத்தில் உலவ விட்டு முப்பாட்டன் முருகன் மாயோன் ஆகியோர் இடைக்கிடை வந்து போகின்றனர். கிரண்பேடியையும் வாரி இருக்கிறார்.. "திராவிடத்தால்விழுந்தோம்" "இலவசத்தால் விழுந்தோம்" எனும் வாக்கியங்கள் மீது உள்ள வெறுப்பையும் காட்டி செல்கிறார் கதை சுருக்கம் போராட்டத்தின் இறுதி காலங்களில் 40கிலோ தங்கம் தமிழகத்திற்கு கடத்தப்பட்டு அங்கு விற்கப்பட்டு அங்கிருந்து பணம் அப்போதைய பொறுப்பானவருக்கு மாற்றப்படுகிறது அவர் அந்த பணத்தினை பிட் கொயினாக மாற்றி இரகசிய கணக்கில் வைத்திருக்கிறார் அவற்றின் மதிப்பு 21000 கோடி ரூபாக்கள் அந்த இரகசிய கணக்கினை திறப்பதற்கான குறிச்சொல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரியும் அவர்களில் ஒருவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் அவரை நம்ப வைத்து அவரிடமிருந்து அவற்றை திருட ஒரு சிலர் திட்டம் போடுகிறார்கள்.. பேராசிரியர் ஏமாந்தாரா அந்தப்பணம் என்னவானது படியுங்கள் கிண்டிலி்ல் 0.99$
  3. 3 points
    ருவான் வெலிசாய...! ஒட்டுமொத்த இலங்கையின் - இலங்கையரின் கவனத்தையும் நேற்று முன்தினம் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட இடம். ஆம்...! இங்குதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம்மிக்க ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்த இடம். ஜனாதிபதியாகப் பதவியேற்பவர் தனக்குப் பிடித்தமான இடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால், ஓர் ஆழமான வரலாற்றுக் காரணம் உள்ளது. இதை அவருடைய முதல் பேச்சும் ஆழமாக உணர்த்திச் சென்றுள்ளது. அவரின் இந்த வியாக்கியானங்களை நாம் விளங்கிக் கொள்ள - கோட்டாபய சொல்லும் வரலாற்றுச் செய்தியை உணர நாம் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். நம் கண்முன், ஒரு சிறுவன் பஞ்சணையில் படுத்திருக்கிறான். ராஜ களை ததும்பும் அவன் முகம் சோகத்திலும் கோபத்திலும் சிவந்து கிடக்கிறது. கைகளையும் கால்களையும் குறுக்கிக் கிடக்கிறான். அவனின் தாய் அவனைத் தேற்றிக் கொண்டே கேட்கிறாள். “காமினி ஏன் இவ்வாறு கஷ்டப்பட்டுப் படுத்திருக்கிறாய்...! கை, கால்களை நீட்டித் தாராளமாகப் படுத்துக் கொள்”, என்கிறாள் தாய். கோபத்தில் எள்ளும்கொள்ளுமாய் வெடித்த மகன் சொல்கிறான், “மகா கங்கைக்கு அப்பால் (வடக்கே) தமிழர்கள். கீழே (தெற்கே) சமுத்திரம். கை, கால்களை நீட்டி தாராளமாக நான் படுப்பது எங்ஙனம்...?” இவ்வாறு கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது? தேற்றுவதுதான் எப்படி? ஏனெனில் அவனுள் இந்தக் குரோதமும் விரோதமும் வளரக் காரணமானவள் அவளல்லவா...? தன் மசக்கை ஆசைகளில் ஒன்றாக “தமிழ் (எல்லாளனின்) தளபதி ஒருவனின் தலையை வெட்டிய - குருதி படிந்த வாளைக் கழுவி, அந்த இரத்த நீரை குடிக்கக் கேட்டவள் அல்லவா அவள்...? அவளுக்குப் பிறந்தவளின் - அவள் அதைக் குடிக்கும்போது கருவில் இருந்த பிள்ளைக்கு தமிழனை விரோதிக்கவும் - பகைக்கவும் சொல்லித்தான் கொடுக்க வேண்டுமா... என்ன? நீங்கள் நினைப்பது சரிதான்... அந்தச் சிறுவன் வேறு யாருமல்லன். மகாவம்சம் கூறும் இலங்கை வரலாற்றின கதாநாயகன் - சிங்கள - பௌத்தர்கள் இன்றும் - என்றும் போற்றிப் புகழும் வீரநாயகன் துட்ட கைமுனு அல்லது துட்ட காமினி என அறியப்பட்ட “காமினி அபய”தான். நீதிநெறி வழுவாத மன்னவன் - எதிரிகளும் எதிர்நிற்க அஞ்சும் வீரனான எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றி கொன்றானே அதே வீர(?)நாயகன் துட்ட கைமுனுதான். பல இட்டுக்கட்டிய கதைகளைச் சொல்லும் - தமிழர்களுக்கும் - சிங்களவர்களுக்கும் இனவாதத் தீயை முதலில் பற்ற வைத்த மகாவம்சம் நூலின் நாயகன்தான். அந்தத் துட்ட கைமுனு, சூழ்ச்சியால் எல்லாளனை போரில் வென்ற பின்னர், தனது வெற்றியைப் பறைசாற்றவும் பௌத்த மதத்தின் மீது தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தவும் அமைத்ததுதான் ருவான் வெலிசாய. இந்த விகாரையை துட்டகைமுனு கட்டியபோது, நவரத்தினங்களையும் தங்கக் கட்டிகளையும், வெள்ளிக்கட்டிகளையும் கொட்டிக் கட்டினான் என்கிறது மகாவம்சம். ஆனால், சூழ்ச்சியாலும் சதியாலும் வென்ற போரில் சூறையாடப்பட்ட தமிழர்களின் சொத்துக்களையும், அவர்களைக் கசக்கிப் பிழிந்து பெற்ற வரிகளை வசூலித்தும், போர் கைதிகளாக பிடிபட்ட தமிழர்களை அடிமைகளாக்கி அவர்களை துன்புறுத்தி - வருத்தி அவர்கள் சிந்திய இரத்தத்திலும் - வியர்வையிலும் கட்டப்பட்டதுதான் இந்த விகாரை. தமிழர்களை வெற்றி கொண்டதன் அடையாளச் சின்னமாக - அன்றைய போரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழர்களின் நினைவுச் சின்னமாக - பல்வேறு துன்பங்களையும் - சித்ரவதைகளையும் - அடக்குமுறைகளையும் தமிழர்கள் எதிர்கொண்டதற்கான சாட்சியமாகவும் நிமிர்ந்து நின்றதுதான் இந்த ருவான் வெலிசாய. இவ்வாறு தமிழின அழிப்பின் - தமிழர்கள் மீதான அடக்குமுறையின் அடையாளமாக நிற்கும் ருவான் வெலிசாயவில்தான் கோட்டாபயவின் அரசியல் பயணம் தொடங்கியது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனவழிப்பு உலகமே வர்ணிக்கும் “முள்ளிவாய்க்கால் இனவழிப்பை” வழிநடத்தியவர்களில் ஒருவர்தான் இந்த கோட்டாபய ராஜபக்ச. 2005 இல் தமிழ் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்தபோது - சிங்கள -பௌத்த தீவிர சக்திகளின் தெரிவாக இருந்தவர் இவருடைய மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச. இவர், பதவியேற்றதும் இலங்கை வந்த முன்னாள் இராணுவத்தினனான கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றார். தமிழர்களுக்கு எதிரான போரை - தனது சகோதரனின் நிறைவேற்று அதிகார ஆசியுடன் முன்னின்று நடத்தினார். இராணுவத் தளபதிகள் குற்றங்கள் இழைக்கவும் - அவர்கள் கட்டுக்கடங்காத போர் மீறல்களை மேற்கொள்ளவும் - சர்வதேச போர் விதிகளை காலில் போட்டு மிதித்து தமிழர்களுக்கு எதிராக அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டார். தமிழரின் தாயகத்தை - தமிழருக்கே உரித்தான அரசை மீளக் கேட்ட - அமைக்க முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கச் செய்யப்பட்டது. சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அங்கு பல இன்னல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டார்கள் தமிழ் மக்கள். இவ்வாறு தமிழர்களை வெற்றிகொண்ட ராஜபக்ச சகோதரர்களில் ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ச 2010 தேர்தலில் போட்டியிட்டபோது, இலங்கையை முதன்முதலில் ஒருங்கிணைத்த - தமிழர்களை அழித்து - அடக்கிய - துட்டகைமுனு மன்னனுக்கு நிகராகக் கொண்டாடப்பட்டார் - போற்றப்பட்டார். 2015 ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு தடை ஏற்பட்டது. எனவே 2019 தேர்தலில் அவர்களுக்குப் பெருவெற்றி ஒன்று தேவைப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையைப் பறிகொடுத்த அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அப்போதைய தலைவர் பண்டாரநாயக்க என்ன நோக்கில் தொடங்கினாரோ அதே இலட்சியப் பாதையில் - அதே சிந்தனையை முன்வைத்தே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தொடங்கப்பட்டது. சிங்கள - பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் ஆட்சிப்பீடம் ஏற அவர்களின் ஆசி மட்டுமே போதும் என்பதை மீண்டும் பறை சாற்றியது கோட்டாபயவின் வெற்றி. துட்டகைமுனுவின் ஊரான திஸ்ஸமகரகமவை (அம்பாந்தோட்டை) சேர்ந்த கோட்டாபயவும், தனது அண்ணன் வழியிலேயே, சிங்கள - பௌத்தர்கள் போற்றும் நவீன துட்டகைமுனுவான கோட்டாபய ராஜபக்ச, துட்டகைமுனு மன்னன் தமிழர்களை வெற்றி கொண்டு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய செல்வங்களைக் கொண்டு கட்டிய விகாரையான ருவான் வெலிசாயவில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து. அங்கேயே பதவிப் பிரமாணத்தையும் செய்து சிங்கள - பௌத்தன் என்ற பெருமிதத்துடன் நவீன துட்டகைமுனுவாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் வகைதொகையின்றி தமிழர்கள் அழிக்கப்பட்ட - தமிழர்களை அழித்தும் - வருத்தியும் பெறப்பட்ட செல்வங்களைக் கொண்டு கட்டப்பட்ட ருவான் வெலிசாயவில், “கோட்டாபய எனும் நான் இந்த நாட்டின் சகல மக்களையும் இன, மத, சாதி பேதமின்றி அனைவருக்கும் சேவையாற்றுவேன் என உறுதி ஏற்றிருக்கிறார். இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து விட்டேனே என துட்டகைமுனு கலங்கியபோது, “நமது மார்க்கத்தை நம்பாதவர்கள் தீய வாழ்வை மேற்கொண்டவர்கள் - மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக்கூடாதவர்கள்”, என உபதேசமளித்தனர் பிக்குகள். இதனால் துட்டகைமுனு மனம் மாறினான் என்கிறது மகாவம்சம். நவீன துட்டகைமுனுவான கோட்டபய ராஜபக்சவும் இதைப் பின்பற்றி துட்டகைமுனுவாகவே வாழ்வாரா? அல்லது கோட்டாபய என்ற “சிங்கள - பௌத்த ஆதிக்கராக சிறுபான்மை மக்களின் மனதில் இருக்கும் விம்பத்தை அழித்து முன்மாதிரியான தலைவராக மாறுவாரா? என்பதை இனிவரும் காலங்கள்தான் பதில் சொல்லும். -செங்கையான்
  4. 3 points
    இந்த காலத்தில் பாப் இசை சக்ரவர்த்தி எனப்படும் எ யி மனோகரன் அவர்கள் ஒரு பாடலை வெளியிட்டு இருந்தார் அப்போது எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்தது அதை தேடுகிறேன் கிடைக்கவில்லை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதன் ஒரு பல்லவியில் இப்படி வரும் ..... பிரபா உமா பாலா பத்மா நாற்படையினரே ஸ்ரீசபாபும் சேர பஞ்ச பாண்டவர் ஆச்சே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு வெற்றி நிச்சயம் இனி தங்கத்தமிழ் ஈழம் வரும் இது வேத சத்தியம். ஒன்றுபடுவதுக்கு பதிலாக இரண்டு பட்டு எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்.
  5. 3 points
    077-4004994 இதற்கு அழைத்து பாருங்கள் ???
  6. 2 points
  7. 2 points
    கோத்தா கோட்டையையும் விட்டிட்டு.. 1992 இல் பயந்து ஓடின ஒருத்தர். அவரை வீரனாக.. துட்டகைமுனுவாக காட்ட நினைப்பதெல்லாம் வெறும் அபந்தம். அதன் பின் கோத்தா.. போர்க்களத்துக்கு போனதும் வெகு குறைவு. கட்டளைகளை இட்டு படுகொலைகளை ஆட்கட்டத்தலைகளை.. கப்பம் பெறுதல்களை.. காணாமல் போகடித்தல்களை செய்தது தான் அதிகம். சரத் பொன்சேகா அளவுக்கு கூட யுத்தத்தை நேரடியாக.. எதிர்கொண்டவரும் அல்ல. டென்சில் கொப்பேகடுவ காலத்தில் இருந்து புலிகளை எதிர்கொண்டவர்.. புலிகள் சின்னப் பொடியளாக இருக்கேக்க உந்த வீரத்தை காட்டி.. அப்பவே ஒடுக்கி இருக்கலாமே. இப்ப உங்களால் பெரிய துட்டகைமுனுவாக.. காட்டப்படும் கோத்தா. முள்ளிவாய்க்கால்.. என்பது சிங்களத்தைப் பொறுத்த வரை.. காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை தான். நீங்கள் முன்னர் மைத்திரியை சகலகலா வல்லவராகக் காட்டினீர்கள். எனி கோத்தா. ஆனால் தமிழ் மக்கள்.. இவங்கள் யாரையும் நம்புவதாக இல்லை. அனுராதபுரம் எதிரியின் கோட்டைக்குள் புகுந்த இவர்கள் வீரர்கள். யாழ் கோட்டையை விட்டிட்டு ஓடின... கோத்தா.. அனுராதபுரத்தில்.. போய் பதுங்கினது.. வீரம் கிடையாது.
  8. 2 points
    ஏலவே அதளபாதளத்தில் கிடக்கும் சொறீலங்காவின் பொருளாதாரம் மீள வழியைக் காணம். இதில கோத்தா வரவு வேற. பிரதான கடன் வழங்கும் நாடுகள்... கோத்தாவின் வரவை எச்சரிக்கையுடனேயே பார்க்கின்றன. எனி கோத்தாவுக்கு வாக்குப் போட்டோர்.. பாணும் சாப்பிட முடியாது. மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் யுகத்துக்குப் போய் இலைக்கஞ்சி தான் குடிக்க வேண்டும். இனவாதத்திற்கு சிங்கள மக்கள் வாக்களித்துக் கொண்டே வந்தால்.. அவர்கள்.. மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தொடர்ந்து வாழ நேரிடும். மிக விரைவில்.. சிங்களவர்களின் கையில் 10 ஆயிரம் ரூபா நோட்டுப் புழங்கினாலும்.. ஆச்சரியமில்லை. சிம்பாபேக்கு ஒரு முகாபே போல்.. சொறீலங்காவுக்கு ஒரு ராஜபக்ச குடும்பம். நவீன உலக ஒழுங்கில் நவீனமாக.. லிபரலாகச் சிந்திக்க மறுப்பின்.. சிங்களம்.. அதன் இனவெறிக்கு அதுவே பலியாகும் நாள் தொலைதூரத்தில் இல்லை. ---------------------------------------------------- https://www.bbc.co.uk/news/world-africa-50454812
  9. 2 points
  10. 2 points
    ஐயோ இங்க அரசியல் ஆய்வாளர்களின் அதகளம் தாங்க முடியேல்ல சாமியோவ்! பரபரப்பு ரிஷி தோற்றார் போங்கள் சஜித் வெண்டிருந்தாலும் ஜெய்தான் முதல் வரவு. சஜித்தின் முதல் பயணமும் இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். மோடி அண்மையில் வென்ற பின்னும் முதலில் வந்தது இலங்கைக்குதான். இங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்துகொண்டிருக்கிறோம்.
  11. 2 points
  12. 2 points
    கடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே?!
  13. 1 point
    அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம் Nov 19, 2019 | 1:53by புதினப்பணிமனை in கட்டுரைகள் சிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம். சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், பிபிசி தமிழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மையினர் சஜித்திற்கு வாக்களித்திருந்த போதிலும் ஒட்டுமொத்தமாக சிறிலங்கா வாக்காளர்கள் கோத்தாபயவிற்கு வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு புதிய யுகத்தை இவர் துவங்கி வைப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்த் தலைவர்கள் ஏற்கனவே ராஜபக்ச தரப்புடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், புதிய அதிபர் அதிகாரப் பகிர்வை ஒப்புக்கொள்வாரா என்பதுதான் முக்கியமான கேள்வி. அதிகாரப்பகிர்வு போதுமானதாக இல்லை என்பது தமிழர்களுடைய குற்றச்சாட்டு. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதிகாரப் பகிர்வு கிடைப்பது கடினம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், புதிய வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆகவே தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும். புலிகள் இருந்த காலம் போல் இப்போது இல்லை. அவர்கள் இருந்தபோது பெரும் வன்முறை இருந்தது. இப்போது தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி தங்கள் வாய்ப்புகளைப் பெற முயல வேண்டும். தேர்தலில் வெற்றி – தோல்வி என்பது சாதாரணமான விடயம்தான். தேர்தலில் தாங்கள் ஆதரித்த தரப்பு வெற்றிபெறவில்லை என்ற ஏமாற்றம் தமிழ் மக்களுக்கு இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அவர்கள், அதிபருடன் பேசி கோரிக்கைகளை வைக்க வேண்டும். சிறிலங்கா முழுவதுமாக சீனா பக்கம் நிற்கிறது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்றம். அது உண்மையல்ல. தவிர, கோத்தாபய இந்தியாவோடு நெருக்கமாகவே தான் இருந்திருக்கிறார். ஆகவே, அவர் அதிபராக வருவதால் சிறிலங்கா – இந்திய உறவில் ஏதும் மாறாது. ஒரு வழக்கமான உறவே நீடிக்கும். உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு, இந்தியா தொடர்ந்து சிறிலங்கா அரசுடன் நெருக்கமாகத்தான் இருந்து வருகிறது. நரசிம்மராவ் துவங்கி, யார் பிரதமராக இருந்தாலும் இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆகவே கோத்தாபய அதிபராகியிருப்பதால் எதுவும் மாறிவிடாது.” என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2019/11/19/news/41295
  14. 1 point
    போர்க்குற்றவாளி கோட்டாபயவின் அலுவலக உதவியாளராக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நியமனம் பெற்றுள்ளார்!
  15. 1 point
    பாட‌ல் கிடைத்தால் க‌ண்டிப்பாய் உங்க‌ளுக்கு வைப்ப‌ர் ஊடாக‌ அனுப்பி வைக்கிறேன் அண்ணா ,
  16. 1 point
  17. 1 point
    நீங்களும்தான் ஓவரு காலையும் மலம் கழிக்கிறீர்கள் உங்கள் மலமும்தான் நாறுகிறது... ஆகவே அதுதான் உண்மை என்று மீதமுள்ள நாள்பூராக அதை பற்றி பேசி எதை காண போகிறீர்கள்? ஈழத்தமிழருடைய விடுதலை போராட்டம் என்பது உலகிலேயே மகத்தானது பூகோள ரீதியாக தீவக அமைந்து கடலால் சூழ்ந்தததால் எந்த ஒரு ஆதரவும் இன்றி சொந்த வைராக்கியத்தில் மட்டுமே அத்திவாரம் ஏற்றி கட்டபட்ட ஒரே ஒரு விடுதலை போராடடம் என்பதால் மட்டுமே பலரது கண்ணை அது உறுத்திக்கொண்டு இருந்தது.
  18. 1 point
    வணக்கம் தமிழரசு.நீண்ட நாட்களின் பின் யாழுக்கு வருகை தந்துள்ளீர்கள்.மிகவும் மகிழச்சி. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  19. 1 point
    நன்றி, உங்களுக்கு தாமரை கோபுரம் பற்றிய சீனாவுடனான பிரச்சனைகள் மற்றும் சொறி சிங்களத்தின் கைகளில் இல்லை தெரியவில்லை என்பதற்கு. அனால், இது சிறிய விடயம், மற்ற விடயங்களோடு ஒப்பிடும் போது. இதுவும், ராஜபக்சே பேரதில் ஒன்று. இது தெரிந்து இருக்க வேண்டியதில்லை. நீங்கள் அறிவது மற்றும் புரிவது எல்லாமே black-and-white ஆக, செய்திகள் மற்றும் அறிக்கைகளில் உள்ளவற்றை. கோத்தா இற்கு, pentagon , zionist தொடர்புகள் இருந்தும், கோத்தா தனது மற்றும் ராஜபக்சே நலன்களின் அடிப்படையில் இயங்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. அதற்கு, சீனாவே வசத்திப்படுத்தக்கூடிய உள்ளக மற்றும் வெளியாக அரச, நிதி, மற்றும் நிர்வாக அதிகாரங்கள், செல்வாக்குகள் மற்றும் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இதை அமெரிக்கா செய்ய முடியாது. அதனால், கோத்தா விரும்பினாலும், அமெரிக்காக விரும்பினாலும், சீனாவே கோத்தாவின் தெரிவு. கோத்தாவின் மீது அமெரிக்கவிற்கு உள்ள பிடி மனித உரிமைகள், போர் குற்றங்கள். இதை அமெரிக்கா ஏற்கனவே நினைவு படுத்தி விட்டது. கோத்த அதிபர் பதவி எடுத்ததில் ஓர் முக்கியமான நோக்கம் அதை வாழ்நாளில் தவிர்பதற்காக. சீன இதை பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை. MCC கொடையை மகிந்த கேட்டது, சீனாவின் கடன் சுமையில் இருந்து இடைவெளி பெறும் நோக்கில். அதுவும், மனிதஉரிமை, போர்க்குற்றம் பிரச்சனைகளும், MCC ஐ மகிந்தவிற்கு தடுத்து விட்டது. இப்போதைய MCC கொடையில், ராபக்சே குடும்பத்தித்ற்கே பிரச்சனையான விடயம் உள்ளது. காணிச் சந்தையை உருவாக்குதல். ராபக்சே குடும்பத்தின் நலனில் இதயத்திலும், மூளையிலும் கைவைக்கும் விடயம். இது ராஜபக்சேகளின் கைகளை கட்டி, சீனவின் கைகளை கட்டுவது. சீனாவும் விரும்பாது. காணிச் சந்தை, SOFA இற்கு அவசியம். SOFA வில், உள்நாட்டு அரசியல் பிரச்னைகள், சீன தடுக்கின்றமை. ஈஸ்டர் தாக்குதல் அமெரிக்கா தான் செய்தது என்று உண்மையில் இருந்தாலும், அதை பற்றி சிங்களத்தின் எல்லா அதிகார மையங்களுக்கும் 6 மாததிற்கு முதலே தெரிந்து இருந்தது. எல்லோரும் தத்தம் நன்மை கருதி, கண்டும் காணாமல் இருந்து விட்டதே உண்மை. உங்களின் புரிதல் எனக்கு தெரியாது, எல்லா western அரசியல், பொருளியல் மற்றும் பாதுகாப்பு வட்டரங்களில், கோத்தாவின் வெற்றி சீனாவின் வெற்றியாகவே நோக்கப்படுகிறது. அரசியல், ரஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பவையம், அவற்றின் ஒன்றோடு ஒன்றிணைந்த நலன்கள் எவ்வாறு அடையப்படுகிறது என்பதின் அறிவையும் யார் வளர்க்க வேண்டும் என்பதை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன். ஆயினும், நான் அதில் வரும் மாற்றங்கள் பற்றி அறிவை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், நீங்கள் இணைத்த க்ஸி ஜின்பிங் இன் ஆங்கில அறிக்கையில் black-and-white ஆகவே உள்ள சீனாவின் திருப்தி இல்லாமையை புரிந்து கொள்ள முடியாதது, இந்தியா பற்றி ஒன்றுமே சொல்லாமல், உங்களுடைய புரிதலுக்கு பின்பு port city உதாரண நான் சொன்னது, Port City உங்களின் உதாரணம் உங்களுடைய புரிதல் படி இருந்தும், க்ஸி ஜின்பிங் சீனாவின் தற்போதைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இந்தியா பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை. மொத்தத்தில், க்ஸி ஜின்பிங் இன் அறிக்கை உங்களுக்கு புரியவில்லை. விடுங்கள். இந்திய அரசின் port city பற்றிய செல்வாக்கும், ஈடுபடும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. அதற்காக, இந்திய அரச செய்தது மற்றும் சாதித்தது இல்லை என்று ஆகி விடாது.
  20. 1 point
    Jeremiah 49:37-39 Judgment on Elam 34This is the word of the LORD that came to Jeremiah the prophet concerning Elam at the beginning of the reign of Zedekiah king of Judah. 35This is what the LORD of Hosts says: “Behold, I will shatter Elam’s bow, the mainstay of their might. 36I will bring the four winds against Elam from the four corners of the heavens, and I will scatter them to all these winds. There will not be a nation to which Elam’s exiles will not go. 37So I will shatter Elam before their foes, before those who seek their lives. I will bring disaster upon them, even My fierce anger, declares the LORD. I will send out the sword after them until I finish them off. 38I will set My throne in Elam, and destroy its king and officials, declares the LORD. 39Yet in the last days, I will restore Elam from captivity,i ” (means restore the fortunes of Elam) declares the LORD. இது எமது விடுதலையா? The Mediterranean Peoples (Dravidians) (Extracts from The Original Indian” An Enquiry by Dr. A. Desai. How the Mediterranean people came to be called Dravidians makes interesting story. The original Dravidians or Elamites arrived from western Asia and then gradually many of them not all mixed with the Aboriginal population there. The higher strata amongst them were hardly mixed compared to the lower strata . It is amazing how ignorant people are , Dravidians are a lank haired Canaanite people, they did not originate in Ethiopia , they are the original Mediterranean and Sumerian culture , the Dravidians mixed with the Semitic Akkadians and Amorites and they also mixed with Indo-Aryan types(Lydians who are the Neo-Hittites. they are Canaanites an they are not Mongoloids or Australoid . They were in the Mediterranean in ancient times. The Pre-Hellenistic Lycians of Asia Minor, who where probably the Mediterranean stock called themselves Trimmili. Another tribe of this branch in the island of Crete was known by the name Dr(a)mil or Dr(a)miz. In ancient Sanskrit writings we find the terms Dramili and Dravidi, and then Dravida . which referred to the southern portion of India. South India was known to the ancient Greek and Roman geographers as Damirica or Limurike. Many of the low caste or Dalit Tamil have more of the Australoid mixture and this is seen in their features , however the most of the middle and upper castes have typical Mediterranean Caucasoid face structures and features and their skin colour may vary from dark to light brown .tanned. Some have Indo Aryan mixture.
  21. 1 point
    Jeremiah 49:37-39 Judgment on Elam 34This is the word of the LORD that came to Jeremiah the prophet concerning Elam at the beginning of the reign of Zedekiah king of Judah. 35This is what the LORD of Hosts says: “Behold, I will shatter Elam’s bow, the mainstay of their might. 36I will bring the four winds against Elam from the four corners of the heavens, and I will scatter them to all these winds. There will not be a nation to which Elam’s exiles will not go. 37So I will shatter Elam before their foes, before those who seek their lives. I will bring disaster upon them, even My fierce anger, declares the LORD. I will send out the sword after them until I finish them off. 38I will set My throne in Elam, and destroy its king and officials, declares the LORD. 39Yet in the last days, I will restore Elam from captivity,i ” (means restore the fortunes of Elam) declares the LORD. இது எமது விடுதலையா? The Mediterranean Peoples (Dravidians) (Extracts from The Original Indian” An Enquiry by Dr. A. Desai. How the Mediterranean people came to be called Dravidians makes interesting story. The original Dravidians or Elamites arrived from western Asia and then gradually many of them not all mixed with the Aboriginal population there. The higher strata amongst them were hardly mixed compared to the lower strata . It is amazing how ignorant people are , Dravidians are a lank haired Canaanite people, they did not originate in Ethiopia , they are the original Mediterranean and Sumerian culture , the Dravidians mixed with the Semitic Akkadians and Amorites and they also mixed with Indo-Aryan types(Lydians who are the Neo-Hittites. they are Canaanites an they are not Mongoloids or Australoid . They were in the Mediterranean in ancient times. The Pre-Hellenistic Lycians of Asia Minor, who where probably the Mediterranean stock called themselves Trimmili. Another tribe of this branch in the island of Crete was known by the name Dr(a)mil or Dr(a)miz. In ancient Sanskrit writings we find the terms Dramili and Dravidi, and then Dravida . which referred to the southern portion of India. South India was known to the ancient Greek and Roman geographers as Damirica or Limurike. Many of the low caste or Dalit Tamil have more of the Australoid mixture and this is seen in their features , however the most of the middle and upper castes have typical Mediterranean Caucasoid face structures and features and their skin colour may vary from dark to light brown .tanned. Some have Indo Aryan mixture.
  22. 1 point
    அரசியலில் கை குலுக்கல், உடல் அசைவுகளின் வெளிப்பாடுகள் கூட அரசியல் ஆய்வாளர்களால் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரை உள்ளது. What have the politicians been telling us with their body language? https://www.bbc.co.uk/bbcthree/article/c46b9432-4703-4bc7-9c25-580eb254445a How Politicians Manipulate You Without Saying a Word https://medium.com/@pricelindy/how-politicians-manipulate-you-without-saying-a-word-227007439fd9
  23. 1 point
    திரும்பவும் எங்கள் முதுகை நாங்களே தட்டி, தட்டி சொறிந்து, சொறிந்து இன்பம் காண்போம். ( இதைத்தானே காலம் காலமாக செய்துவருகிறோம் )
  24. 1 point
  25. 1 point
    இலங்­கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேர­டி­யாக பல்­வே­று­பட்ட பொரு­ளா­தார, அர­சியல் மாற்­றங்கள் மற்றும் சமய சமூக பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­தது. யுத்­தத்தின் அதி­யுச்ச பாதிப்பை தன்­ன­கத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகு­தி­களில் யுத்­தத்தின் பின்னர் பாரிய அளவு இல்­லா­விட்­டாலும் ஒரு அள­விற்கு யுத்­தத்தின் வடுக்­களை குறைப்­ப­தற்­கான அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் இடம் பெற்­றாலும் வடக்கு கிழக்கு பகு­தியில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் உள ரீதி­யான பாதிப்பு இது­வரை சரி செய்­யப்­பட முடி­யா­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. மனி­தர்­க­ளா­கிய நாம் ஏதேனும் பிரச்­சி­னை­க­ளுக்கு அல்­லது கசப்­பான சம்­ப­வங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் போது நாம் அனை­வரும் உள­வியல் ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு ஏதோ ஒரு வகையில் ஆளா­கின்றோம். இருப்­பினும் அதன் தாக்­கங்கள் அல்­லது வெளிப்­பா­டுகள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் வேறு­பட்டு காணப்­படும். சிலர் அதனை மன­த­ளவில் சகித்­துக்­கொள்­வார்கள் மற்றும் சிலர் நெருங்­கி­ய­வர்­களின் உத­வியை நாடிச் செல்­வார்கள் இன்னும் சிலர் முறை­யான ஆலோ­ச­னைகள் மூலம் குறித்த வடு­வி­லி­ருந்து மீள முயற்சி செய்­வார்கள். நேர­டி­யாக யுத்­தமும் பின்னர் உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லையும் வட மாகாண பெண்கள் மத்­தியில் பாரிய அள­வி­லான உள­நல பாதிப்­புக்கு வித்­திட்­டது என்­பது உண்­மை­யாகும். யுத்­தத்­திற்கு பின்னர் வடக்கு கிழக்கு பகு­தியில் நிறைய பெண்கள் வித­வை­க­ளா­கவும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளா­கவும் குடும்ப பொறுப்­புக்­களை சுமக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. பெரும்­பா­லான பெண்கள் நேர­டி­யாக காணாமல் ஆக்­கப்­பட்ட தங்கள் பிள்­ளை­களை, கண­வனை, சகோ­த­ரனை தேடி தேடி பல்­வேறு கட்ட போராட்­டங்­களை முன்­னெ­டுத்து உள ரீதியில் பாதிக்­கப்­பட்டு தங்கள் வாழ்க்­கையை பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் கொண்டு செல்­கின்­றனர். இது ஒரு புறம் இருக்க யுத்த பாதிப்பில் இருந்து தங்கள் குடும்­பங்­களை மீள் உரு­வாக்கம் செய்ய வேண்டும் என அனேக பெண் தலை­மைத்­துவ குடும்ப பெண்கள் நுண்­நிதி நிறு­வ­னங்­க­ளிடம் நேர­டி­யாக கட­னா­ளி­யாகி உள்­ளனர். இவற்­றுக்கு நேர­டி­யாக நுண்­நிதி கடன்­வ­ழங்கும் நிறு­வ­னங்­களை குறை­கூற முடி­யாது. பல குடும்­பங்கள் குறித்த நுண்­நிதி கடன்­களை பெற்று தமது வாழ்­வா­தா­ரத்தை முறை­யாக கையாண்டு முன்­னேறி வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கதே. ஆனால் இங்கு காணப்­படும் பிர­தான பிரச்­சினை யாதெனின் குறித்த பெண்­க­ளுக்­கான வாழ்­வா­தார மேம்­பாட்டு திட்­டங்கள் தொடர்ந்தும் நடை­பெற்று வந்­தாலும் தேவை­ய­டிப்­ப­டையில் பட்­டி­ய­லிடும் போது அவ்­வ­கை­யான மேம்­பாட்டு திட்­டங்­கள் தேவை­யினை விடவும் மிக குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. அதேபோல் அதி­க­மான குடும்­பங்­களின் வரு­மா­னத்தை விட அவர்­க­ளது செல­வுகள் அதி­க­மாக காணப்­ப­டு­வது, வீண்­வி­ரயம் மற்றும் வரவு செல­வு­களை முறை­யாக கையாள முடி­யாமை போன்ற கார­ணங்­க­ளி­னாலும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள் நுண்­நிதி கடன்­களை மேல­திக சுமை­க­ளாக சுமக்­க­வேண்­டிய நிலை உரு­வா­கின்­றது. இவ்­வாறு அதி­க­ள­வான குடும்ப சுமை கார­ண­மாக ஏற்­ப­டு­கின்ற உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு முறை­யாக சிகிச்­சைகள் பெறா­விடின் குறித்த உள­நல பிரச்­சி­னைகள் அவர்­களை தற்­கொலை போன்ற தவ­றான முடி­வு­களை மேற்­கொள்ள வழி­வ­குக்­கின்­றது. இவ்­வா­றான நிலையில் அவர்­களை நம்­பி­யுள்ள குடும்­பத்தின் நிலைமை கேள்விக் குறி­யா­கின்­றது. இவ்­வா­றான உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை வடக்கு கிழக்கு பெண்கள் அனு­ப­வித்து வரு­கின்ற நிலையில் அர­சாங்கம் முறை­யான ஒரு அர­சியல் சமூக பொரு­ளா­தர சாசன செயற்­றிட்­டத்­தினை மேற்­கொள்­கின்ற போது இவர்­க­ளுக்­கான விசேட அவ­தா­னிப்­புக்­களை உள்­ள­டக்­கு­வது பொருத்­த­மாக காணப்­படும் என்­பது உண்­மை­யாகும் குறிப்­பாக பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு என விசேட தொழில் பயிற்­சிகள், சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள் என அனைத்தும் உரிய முறையில் உரு­வாக்­கப்­பட வேண்டும். மேலும் வாழ்­வா­தார உத­விகள், அர­ச­க­ட­னு­த­விகள் என்­பன வழங்­கப்­படும் போது பெண்­த­லை­மைத்­துவ குடும்­பங்கள் நேர­டி­யாக பயன்­பெ­று­வ­துடன் நுண்­நிதி நிறு­வ­னங்­களின் கடன்­ சு­மைக்குள் சிக்­காது பாது­காக்­கப்­ப­டு­வார்கள். அதே நேரத்தில் இளம் வித­வைகள் விட­யங்­களில் அவர்­க­ளுக்­கான அரச வேலை­வாய்ப்­புக்­களை அல்­லது மீள் வாழ்தல் நிலையை உரு­வாக்க வழி ஏற்­ப­டுத்தல் மற்றும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளுக்­கான கல்வி, பாது­காப்பு மற்றும் ஏனைய அத்­தி­ய­ாவ­சிய தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள வழி­வ­குத்தல் என்­பன அவர்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு வழி­வ­குக்கும் அதே­வேளை அவர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்கும் உறு­து­ணையாய் அமையும். அதே நேரத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­டவர் விட­யம், யுத்த விசா­ர­ணை, அங்­க­வீனம் உற்ற பெண்கள் விடயம் தொடர்­பாக அர­சாங்கம் உண்­மை­யான பதிலை வழங்­கு­வதே வடக்கு கிழக்கு பெண்­களின் உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை குறைப்­ப­தற்­கான சிறந்த வழி­யாகும். ஓர் பிரச்­சினை அல்­லது மன­வடு சார் அனு­ப­வத்­தினை எதிர்­கொண்ட ஒரு­வரின் உள­நலம் பாதிக்­கப்­ப­டு­வது இயல்­பான விட­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள், சிறு­வர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்­காக உளநல ஆலோசகர்கள் மற்றும் உளவள உத்தியோகத்தர்கள் போதுமான அளவு பணியில் அமர்த்துதல் அவர்களுக்கான வாழக்கை மேம்பாட்டுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறப்பாக அமையும் என நம்புகின்றேன். இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் ; (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ; (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. – ஜோசப் நயன் – https://www.virakesari.lk/article/68995
  26. 1 point
    ஆம் சரியானதே நீங்கள் இணைத்தது
  27. 1 point
    கோத்தா ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து முடித்து வைக்கிறார்.. ஒன்றும் முடியவில்லை. முள்ளிவாய்க்கால்.. கோத்தாவின் தனிப்பட்ட முடிப்பல்ல. அது சர்வதேச.. பிராந்திய.. வல்லாதிக்க சக்திகளின் தேவைக்கான முடித்து வைப்பு. அதில் கோத்தார் குளிர் காய்கிறார் அவ்வளவே. எனி.. புலி சாட்டு இல்லை.. தமிழர்கள் மீது வெளிப்படையாகக் கை வைக்க. தமிழர்கள் 2005 இல் எப்படி வாக்களித்தார்களோ அதையே 2019 இலும் செய்திருக்கிறார்கள். 2005 புலிகள்.. தடுத்தார்கள்.. சுட்டார்கள்.. கையை வெட்டினார்கள்.. விரலை வெட்டினார்கள் என்று கதையளந்தோர்.. இப்போ.. அமுசடக்கமாகி இருக்கிறார்கள். சிலர் தமிழ் மக்கள் மீது தங்களின் இயலாமைகளை திணிக்க விரும்புகிறார்கள்.. ஆனால் மக்கள் புத்திசாலிகள்.
  28. 1 point
    யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டதற்காக.. சந்திக்கா அம்மையார்.. அனுரத்த ரத்வத்தைக்கு தங்க முலாம் பூசிய வாள் ஒன்றை பரிசளித்து.. அவரை ஒரு நவீன துட்டகைமுனு லெவலுக்கு காட்டினார். அதன் பின் மகிந்த.. தன்னைத் தானே.. முள்ளிவாய்க்கால் பெரும் இனவழிப்போடு.. நவீன துட்டகைமுனுவாக காட்டிக் கொண்டார். நவீன மகாவம்சத்தையும் வெளியிட்டார். இப்பொ.. கோத்தா.. ருவன்வெலி சயவில் போய் நின்று கொண்டு.. தன்னை அனுராதபுர ராட்சியதின் தொடர்ச்சி துட்டகைமுனுவின் வாரிசாகக் காட்ட முனைகிறார். பொலநறுவையாக இருக்கட்டும்.. அனுராதபுரமாக இருக்கட்டும்.. கண்டியாக இருக்கட்டும்.. யாழ்ப்பாணமாக இருக்கட்டும்.. வன்னியாக இருக்கட்டும்.. எல்லாத்தையும் தலைநகராக்கியதே தமிழ் மன்னர்கள் தான். சிங்களவர்கள் கிடையாது. அதுவும் சைவ மன்னர்கள். அதனால் தான் இங்கெல்லாம்... சைவக் கோவில்களை நிறுவி இருந்தனர். இப்போ அவற்றில் பல சேதமடைந்து விட்டன. சிகிரியா ஓவியங்கள் கூட காசியப்பன் காலத்தினது. அங்குள்ள குகை ஓவியப் பெண்கள்.. அழகிய பொட்டணிந்திருப்பதைவ். கூந்தலில் பூ மாலை அணிந்திருப்பதைக் காணலாம். மேலும் காதணி.. மற்றும் அந்தப் பெண்கள் அணிந்திருக்கும்.. அணி கலன்கள் தமிழர் நாகரிகத்துக்குரியவை. மிஸ்டர்.. கோத்தாவும்.. அவரது கும்பலும்.. இந்த ஓவியங்களையும் மாற்றி வரையலாம். அதற்காக வரலாற்றை இப்படியே தமக்கேற்ற வாறு தொடர்ந்து புனைய முடியாது. இலங்கைத் தீவுக்குள் உள்ள மாதன முத்தாக்களை இனவாதத்தின் பெயரால்.. மயக்கி வைக்கலாம்.. ஆனால்.. நவீன உலகோடு தொடர்புடைய இளைய சமுதாயத்தை அதிக காலம் எனி ஏமாற்ற முடியாது.
  29. 1 point
    தமிழினத்துக்கு ஒரு தலமை என்பதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வது என்பதும் கற்பனை நிலையில் கூட தற்போது சாத்தியமற்றது. முரண்பாடுகள் நிறைந்து சாதி மத பிரதேசவாதமாக பல்வேறு தளங்களில் ஐக்கியமின்றி சிதைந்துபோன நிலையில் உள்ள இனம் அதே நேரம் பேரினவாதத்திடம் இருந்து விடுபடவும் வேண்டும். இரண்டுக்குமான ஒரு தலைமை எப்படி சாத்தியம் என்பதே கற்பனைக்கு எட்டாத விசயம். புலிகள் காலத்தில் தமிழினம் விடுதலை அடைந்தால் சரி இல்லையேல் தமிழர்களுக்கென்று ஒரு அரசியலே இருக்காது என்ற நிலை இருந்ததின் காரணம் இதுதான். புலிகளின் முடிவுக்குப் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தளமே கிடையாது. இன்றைய சுமந்திரன் சம்மந்தர் விக்கி சிவாஜிலிங்கம் யாரானுலும் சரி அவர்கள் தளமற்று அந்தரத்தில் நின்று எதையே செய்கின்றார்கள் தவிர அது இனத்துக்கான அரசியல் எல்லைக்குள் வரமாட்டாது. அவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதும் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அர்த்தமற்ற ஒன்றுதான்.
  30. 1 point
  31. 1 point
  32. 1 point
    புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 20 , கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு ஒருசில மணி நேரத்துக்கு முன்னராகத் தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில், ‘வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது, வெற்றியை நோக்கிய பயணத்தை விட முக்கியமானதாகும்’ என்று எழுதியிருந்தார். பெரும் தோல்விகளிலிருந்து, ஐந்து வருடத்துக்கு உள்ளாகவே மீண்டெழுந்து, வெற்றியை அடைந்துவிட்ட ராஜபக்‌ஷக்களின், தொடர் வெற்றிகளுக்கான கட்டியமாகவே, மேற்கண்ட நிலைத்தகவலைக் கொள்ள முடியும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்‌ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படும் போது, அவர்கள் குறித்த நம்பிக்கைகள் பெரிதாக யாரிடமும் இருக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதவர்களே, ராஜபக்‌ஷக்களின் பின்னால் நின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க, சுதந்திரக் கட்சியை உடைத்து, தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு கருவியாக மாத்திரமே, ராஜபக்‌ஷக்களை நோக்கினார். அதன்போக்கிலேயே அவர்களைக் கையாளவும் செய்தார். சிறுபான்மைக் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் கூட, ராஜபக்‌ஷக்களைக் குறித்து, குறைந்த மதிப்பீட்டையே கொண்டிருந்தார்கள். இந்தப் பத்தியாளர் உட்பட, பெரும்பான்மையான பத்தியாளர்களும் ஆய்வாளர்களும் கூட, ராஜபக்‌ஷக்களை ஒரு கட்டம் வரையில், ஆடி ஓய்ந்துவிட்ட கிழட்டுச் சிங்கங்களின் கூடாரமாகவே பார்த்தார்கள். குறிப்பாக, ராஜபக்‌ஷக்களால், 2016ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட பேரணிகளையும் மாநாடுகளையும் எள்ளலுக்கான விடயமாகவே அணுகினார்கள். மதுபோதையில், கூட்டங்களில் வித்தை காட்டியவர்களைக் கேலி செய்வதில் காலத்தைக் கடத்தி, ராஜபக்‌ஷக்கள் தென்இலங்கை மக்களிடம் மீண்டும் கட்டியெழுப்பிய அபிமானத்தைக் குறைத்து மதித்துவிட்டார்கள். அந்த அபிமானம், இனவாதம் என்கிற ஒற்றை விடயத்தை மாத்திரம் முன்னிறுத்தியது அல்ல; மாறாக, நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனங்கள், குழறுபடிகளாலும் ஏற்பட்டது என்பது உணரப்படவில்லை. அதுதான், தனிச் சிங்கள வாக்குகளில், 62 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை, ராஜபக்‌ஷக்கள் பெறக் காரணமானது. கோட்டா பெற்ற 69 இலட்சம் வாக்குகளில், சுமார் 66 இலட்சம் வாக்குகள், தனிச் சிங்கள வாக்குகள். அவருக்கு எதிராக, சஜித் பிரேமதாஸவால் 36 இலட்சம் தனிச் சிங்கள வாக்குகளையே பெற முடிந்திருக்கின்றது. இது, சிங்கள வாக்குகளில் 35 சதவீதமானது மட்டுமே ஆகும். எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும், தனிச் சிங்கள வாக்குகளில் 42 சதவீதத்துக்கும் அதிகமாகப் பெற முடியாது போனால், சிறுபான்மை வாக்குகள், அந்த வேட்பாளருக்கு 90 சதவீதம் கிடைத்தாலும் வெற்றிபெற முடியாது. ஏனெனில், நாட்டின் ஒட்டுமொத்த வாக்குகளில் 72 சதவீதத்துக்கும் அதிகமானவை, தனிச் சிங்கள வாக்குகளாகும். சஜித், 45 இலட்சம் தனிச் சிங்கள வாக்குகளைப் பெற்றிருந்தால், அவரின் வெற்றி குறித்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகளை ஐக்கிய தேசியக் கட்சியும் நல்லாட்சி அரசாங்கமும் தென்இலங்கையில் ஏற்படுத்தவில்லை. அதற்கு, ராஜபக்‌ஷக்கள் குறித்த குறைமதிப்பீடு முக்கிய காரணமாகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை, ஜனாதிபதித் தேர்தல் போன்ற ஒன்றோடு, நூறுக்கு நூறு சதவீதம் ஒப்பிட முடியாதுதான். ஆனால், அதன் பகுதியளவு உண்மைகளையாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, கொழும்பு என்கிற ஒற்றை அரசியல் புள்ளியிலிருந்து ரணிலும் ஐ.தே.கவும் சிந்தித்ததன் விளைவு, எதிர்வரும் பத்து வருட ஆட்சிக் கனவை இல்லாமல் செய்திருக்கின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களித்த சதவீதமும் விதமும் இன்னொரு தேர்தலில் பிரதிபலிக்குமா என்பது கேள்வி. ஏனெனில், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகம். ராஜபக்‌ஷக்களிலேயே கோட்டா குறித்த பயம் அதிகமிருப்பதே அதற்குக் காரணமாகும். ராஜபக்‌ஷக்களுக்காக வாக்குக் கேட்டு வந்தவர்களையும் தேர்தலைப் பகிஷ்கரிக்க கோரியும் பொது வேட்பாளர்களை நிறுத்தியும் மறைமுகமாக ராஜபக்‌ஷக்களுக்கு உதவ முற்பட்ட முகவர்களையும் தமிழ், முஸ்லிம் மக்கள் புறங்கையால் ஒதுக்கித் தள்ளினார்கள். அதனால்தான், ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆற்றிய முதலாவது உரையிலேயே கோட்டா, சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களிக்காமை குறித்துப் பொரும வேண்டி வந்தது. இன்றைக்குத் தனிச் சிங்கள மக்களின் வாக்குகளால் தேர்தெடுக்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதியாகவே கோட்டா அடையாளப்படுத்தப்படுகிறார். அதனை, எப்படியாவது கடந்தாக வேண்டும் என்கிற அடிப்படையிலேயே, பொதுத் தேர்தலிலாவது, சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்றவர்களைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டிய விடயத்தைக் குறித்து அவர் சிந்திக்கிறார். அதனால்தான், இனியாவது, தன்னோடு சிறுபான்மை மக்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று கோரவும் வேண்டி வந்திருக்கின்றது. ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றி, தோல்விகளை வரையறுப்பதற்கான காரணிகள் மாறுபடலாம். ஆனால், சாதாரண மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாது, அதற்கு மாறாக நடக்கின்ற எந்தத் தரப்பாக இருந்தாலும் அவர்களைத் தோற்கடிப்பதற்கு, மக்கள் தயாராவார்கள் என்பது அடிப்படையானது. அதைத்தான் இந்தத் தேர்தல் முடிவும் பதிவு செய்திருக்கின்றது. வடக்கு மக்களின் அரசியல், வாழ்வாதார தேவைகள் பலவுண்டு. ஆனால், அதில் முதலாவது இடத்தில், வாழ்தலுக்கான அச்சுறுத்தல் என்கிற விடயம் வரும் போது, அதற்கு எதிராக அவர்கள் திரண்டார்கள். அதையே, தென் இலங்கையிலும் மறுவளமாக ராஜபக்‌ஷக்கள் முன்னிறுத்தி வெற்றி கொண்டார்கள். தமிழ்த் தேசிய அரசியல் இயங்கு நிலை என்பது, ஏக (ஒற்றைத்) தலைமை என்கிற வழக்கத்தைக் கொண்டிருப்பது. இரட்டைத் தலைமை, மாற்றுத் தலைமை என்கிற விடயங்களுக்கான சந்தர்ப்பங்களைப் பரிசீலிப்பதற்கே தயாராக இருப்பதில்லை. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், மாற்றுத்தலைமையாக வருபவர்களும் ஏக தலைமையாக உருவாகவே விரும்புகிறார்கள். அதுபோலவே, புலிகள் காலத்தில் அன்டன் பாலசிங்கம் வகித்த பாகத்தை, எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கின்ற புலமையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் பலருக்கு இருக்கின்ற கனவு. ஒரு கட்டத்தில், பாலசிங்கத்தையே புலிகள் வெட்டிவிட்டார்கள் என்பதைக் கண்டுவிட்ட பின்னரும், பாலசிங்கமாக, ‘மதியூகி’ பட்டம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது, அவர்களின் அவா. அதனால், தமிழ் மக்களிடம் உருவாக வேண்டிய ஜனநாயக உரையாடல்களுக்கான வெளி என்பது, குறுகிய சிறு சிறு வட்டங்களுக்குள் முடிந்து போய்விடுகின்றது. ஒரு கட்டத்தில், ஒவ்வொரு சிறு வட்டமும் மற்றைய வட்டத்துக்கு எதிராக, நாம் பெரியவர்கள் என்று நிரூபிப்பதற்காகக் காலத்தைக் கடத்துவதிலேயே நேரத்தைச் செலவிட்டுத் தொலைக்கின்றன. அதனால், சாதாரண தமிழ் மக்களின் தேவைகள், விருப்பங்கள் குறித்து அறிவதிலிருந்து தவறி நிற்கின்றன. அப்படியானதொரு நிகழ்ச்சி நிரலில் இயங்கியே, தமிழ் மக்கள் பேரவையும் பேரவையின் சுயாதீனக் குழுவும் சுயாதீனக் குழுவுக்குள் இருக்கும் தமிழ் சிவில் சமூக இயக்கத்தின் முக்கியஸ்தர்களும் அந்த முக்கியஸ்தர்களை ஆலோசகர்களாகக் கொண்டிருக்கின்ற (கொண்டிருந்த) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இன்றைக்கு மக்களிடம் இருந்து தூக்கியெறியப்பட்டு இருக்கின்றன. அரசியல் என்பது, ஒவ்வொரு நிகழ்விலும் பிரதிபலிப்பது மாத்திரமல்ல; எதிர்கால நிகழ்வுகளைக் கணித்து, அதனை நோக்கித் திட்டமிட்டு இயங்குவது. ஆனால், தமிழ் அரசியல் சூழலில், அதற்கான வாய்ப்புகளை அடைப்பதிலேயே, கட்சிகளும் சிவில் அமைப்புகளும் கவனம் செலுத்துகின்றன. அது, யார் பெரியவர் என்கிற ஒற்றை விடயத்தாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு, ஒருசில வாரங்களுக்கு முன்னர், பொது வேட்பாளர் விடயத்தைத் தூக்கிச் சுமப்பதும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராகப் பகிஷ்கரிப்புக் கோசத்தை எழுப்புவதும் ஆரோக்கியமான அரசியலா? இவ்வாறான அரசியலை வைத்துக் கொண்டு, ஏகநிலை பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் திருத்திவிட முடியுமா? பலவீனமான எதிரிகளை வைத்துக் கொண்டு, விளையாடுவதையே யாருமே விரும்புவார்கள்; அதனைத்தான் கூட்டமைப்பும் விரும்பும். அதற்கான சித்து விளையாட்டைத்தான், பொது இணக்கப்பாடு உள்ளிட்ட விடயங்களில் கலந்து கொண்டு, கூட்டமைப்பு ஆடிக்கொண்டிருக்கின்றது. ஏனெனில், மக்களின் இந்தத் தேர்தல் குறித்த முடிவு, எது என்பது வெளிப்படையானது. அதன்போக்கில் முடிவெடுத்துவிட்ட கூட்டமைப்பு, என்ன சித்து விளையாட்டுகளை விளையாடினாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். அவ்வாறான சூழலில், அரசியலை வைத்துக் கொண்டு, சர்வதேசத்தை வளைத்து, எமது அடைவுகளை அடைந்து கொள்ள முடியும் என்பது, படுமுட்டாள்தனமானது. நாம் விரும்பாவிட்டாலும், கோட்டா என்கிற ஒருவரை ஜனாதிபதியாக எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கின்றது. அவரின், கடந்த கால வரலாறுகளைக் கருத்தில் கொண்டும், எதிர்கால அரசியலுக்கான வழிவரை படங்களை, உண்மையான அர்த்தத்தோடு புரிந்து, வரைந்து கொண்டும் தமிழ்த் தேசிய அரசியல் களம் இயங்க ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால், மீண்டும் மீண்டும் ஒப்பாரி அரசியலையே செய்ய வேண்டியிருக்கும். அது, ஒரு வகையில் அயோக்கியத்தனமானது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கடடவன-வறறயம-ஒபபர-அரசயலம/91-241229
  33. 1 point
    ஒரு அருமையான காலம் கனிந்து எம் கண்னமுன்னே வந்து எங்களுக்கு பல தன்னம்பிக்கைகளை தந்து எல்லாம் ஒரு கனவுபோல மறைந்துபோனது.
  34. 1 point
    சிங்களவர்கள் தோன்றிய நாடு இலங்கை. தென்னிந்திய தமிழ் மன்னர்கள் தமது பெரும் எண்ணிக்கையையும் பணபலத்தையும் கொண்ட படை எடுப்புகள் மூலம் இந்த சிங்கள மக்களை எப்படி வாட்டி இருக்கிறார்கள் என்பதை அந்த தாயின் வேண்டுகோளில் இருந்தும் இந்த சிறுவனின் கவலையில் இருந்தும் அறிய முடிகிறது. மனிதர்கள் எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள். இனவெறுப்பும், கொலைவெறியும் கடும் பாதிப்புகளாலும் இயலாத்தன்மையாலுமே ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் இலங்கையில் யாழ்ப்பாணமே குற்றங்கள் மிகக்குறைந்த, அமைதியான, அறிவாளிகள் வாழும் செல்வந்த நகராக இருந்தது. கடும் பாதிப்புகளாலும் இயலாத்தன்மையாலும் இதே யாழ்ப்பாணத்தவர் உலகில் பல நாடுகளின் எத்தனையோ சட்டங்களை மீறி தாமும் தமது உறவுகளும் வாழ வழி தேட வேண்டியவர்கள் ஆனார்கள். மேலும் பல யாழ்ப்பாணத்தவர்கள், அதில் இளம் பெண்களும் சிறுவர்களும் கூட, தாம் கனவிலும் நினைத்திராத பயங்கரவாத கொலைகளை செய்ய வேண்டியவர்களானார்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் அந்த சிறுவன் காமினி, படைகளை கொன்று உயிர்களை அழிக்காமல், தான் தனியே எல்லாள மகராசனுடன் மோதி, வெற்றி பெற்றபின் அந்த அரசனுக்கு சமாதியும் கட்டி, இன்று வரை அதை கடக்கும் எவரும் வாகனத்தில் இருந்து இறங்கி பாதணிகளை களற்றி, மரியாதை செலுத்தி செல்ல வைத்திருக்கிறான். அவனது பெயரான துட்டு (பல் முன்தள்ளிய) காமினி என்பதை இனவெறித்தமிழர் “துட்ட காமினி” என்றாக்கி, அவனை கூடாதவனாக காட்டி, பல தலைமுறைகளாக இனவெறுப்பை தமிழருக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்கள். சிங்களவரும், ஈழத்தமிழரும் இந்த தீவில் வாழ வேண்டியது அவர்களின் தலைவிதி. இந்த இரு இனங்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மற்றவரை மதித்து வாழ முயலாவிட்டால் அழிவதை தவிர வேறு எதிர்காலம் இல்லை. “அவர்கள் தான் எங்களை புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் ஒன்றும் அப்படி புரிந்து கொள்ள தேவையில்லை“ என்று தமிழர்கள் நினைக்கும் வரை அழிவு தொடரும். யாராலுமே உதவமுடியாது.
  35. 1 point
    அய்யா மகாராசா...கோமகராசா...உங்கள் ஒப்புவமையை இனத்தின் அழிவுடன் திரும்பிப் பார்க்கலாமே..
  36. 1 point
    பிறரை திட்டி தீர்த்தது போதும். முதலில் நாங்கள் தோல்வியுற்ற காரணத்தை (ஒற்றுமை இன்மை, சுயநலம், துரோகத்தனம் ) இல்லாதொழிக்க வழிபாருங்கள். எப்போதும் பிறரின் வெற்றியை இழிவுபடுத்துவதும், அதனுடாக எம்மை நாமே திருப்திப் படுத்திக்கொள்வதுமே இதுவரை கண்டது. இந்த போலி ஆய்வாளர்களை வெள்ளை வான்காரனுக்கு தெரியாதோ ?
  37. 1 point
  38. 1 point
    பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0SCFjRJlgXI ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் புன்ன‌டிக‌ள் தான் க‌ழுவி பாவிசெய்த்து பூதூவி அவ‌ர்க‌ளை வ‌ண‌ங்கிடுவோம் தான் பெற்ற‌ பிள்ளையை தாய‌க‌ம் த‌விக்கையில் தானையில் சேர்த்துடுவோம் க‌ண் க‌ல‌ங்கா உண‌ர்வோடு த‌லைவ‌னின் கால‌த்தில் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம் ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் செத்துப்போக‌ போகுதே எங்க‌ள் த‌மிழ் ஈழ‌ம் என்று உருகிப் போய் நின்ற‌வ‌ர்க‌ள் எங்க‌ள் சொத்து உயிர் போர் புலி ப‌டையினை பெருக்கிய‌ பெருமைக்கு உரிய‌வ‌ர்க‌ள் ப‌த்து மாத‌ம் நுந்து பெற்ற‌ புத‌வ‌ர்க‌ள் இழ‌ந்தும் த‌மிழ் மான‌ம் காத்த‌வ‌ர்க‌ள் ப‌த்து மாத‌ம் நுந்து பெற்ற‌ புத‌வ‌ர்க‌ள் இழ‌ந்தும் த‌மிழ் மான‌ம் காத்த‌வ‌ர்க‌ள் வீர‌ர் அத்த‌ம் த‌ந்த‌ எந்தைய‌ர் வ‌ர‌லாற்று சிற்பிக‌ளை பொன் மேட்டில் செருக்கிடுங்க‌ள் ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் விடிய‌லை தேடியே போன‌வும் செல்வ‌ங்க‌ள் ம‌டிய‌வே இல்லைய‌ம்மா ஈழ‌ம‌டிதாயின் க‌ண் மூடி துயில் கொள்ளும் தெய்வ‌ங்க‌ள் உன் பிள்ளை தானேயம்மா கோடி கைக‌ள் கும்பிட்டு ப‌ல்லாண்டு வாழ்த்திடினும் இந்த‌ க‌ட‌ன் முடியாத‌ம்மா கோடி கைக‌ள் கும்பிட்டு ப‌ல்லாண்டு வாழ்த்திடினும் இந்த‌ க‌ட‌ன் முடியாத‌ம்மா தொப்புள் கொடியோடு வ‌ழி வ‌ந்த‌ த‌மிழ் தாயின் இந்திர‌ம் நாம் என்றும் ம‌ற‌ப்போமா ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் க‌ருவினில் சும‌ந்திங்ன்ர‌ உங்க‌ள் வீர‌ர் தாய்க‌ளையும் போற்றி நாம் துவுக்கின்றோம் இன்றும் செருவினின் பொய்யோடு குனிந்து ப‌கை மாய்ப்ப‌தையும் க‌ண் கூடாய் காணுகின்றோம் 27தேதி கார்த்திகை உமைந்த‌ மாவீர‌ர் நாள் அல்ல‌வா 27தேதி கார்த்திகை உமைந்த‌ மாவீர‌ர் நாள் அல்ல‌வா த‌லைவ‌ன் க‌வுர‌வித்து உங்க‌ளை நினைவுகூர்ந்து துன்ப‌த்திலும் ப‌கிர்ந்து கொள்ளும் தின‌ம் அல்ல‌வா ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் புன்ன‌டிக‌ள் தான் க‌ழுவி பாவிசெய்த்து பூதூவி அவ‌ர்க‌ளை வ‌ண‌ங்கிடுவோம் தான் பெற்ற‌ பிள்ளையை தாய‌க‌ம் த‌விக்கையில் தானையில் சேர்த்துடுவோம் க‌ண் க‌ல‌ங்கா உண‌ர்வோடு த‌லைவ‌னின் கால‌த்தில் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம் ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம்
  39. 1 point
  40. 1 point
    ஏராளன் கணினி பாவிப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தெரிவு காண்பிக்கும்.
  41. 1 point
    நேற்றும் அதிசயம் அற்புதம் நடந்தது..... இன்றும் அதிசயம் அற்புதம் நடக்குது....... நாளையும் அதிசயம் அற்புதம் நடக்கும்......
  42. 1 point
  43. 1 point
  44. 1 point
    எங்களுக்கும் எண்டொரு தேசம்” இருந்தது.
  45. 1 point
  46. 1 point
    பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0EsS9CPLdca வீரத்தின் விளைநிலம்மே விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே வீரத்தின் விளைநிலம்மே விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே வீரத்தின் விளைநிலம்மே விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே விடுத‌லையை காண்ப‌த‌ற்காய் வீறு கொண்டு எழுந்த‌வ‌ரை முத்த‌ம்மிட்டு க‌ள‌ம் அனுப்பி முத‌ல் தாயாய் ஆகி விட்டாய் காண‌க‌த்தில் நிலைத்து இருந்து க‌ள‌ம் க‌ண்ட‌ உன் செய்கையை தொலைவில் இருந்து வாழ்த்துகையில் த‌லை சிற‌ந்த‌ தாயானாய் முற்றுகைக்குள் நீயும் வாழ்ந்து வ‌லிக‌ளை உந்த‌ன் உட‌ல் சும‌ந்தாய் வெற்று உட‌லாய் சாயும் போதும் ம‌ல‌ர்க‌ளை போல‌ புன்ன‌கைத்தாய் ச‌ஞ்ச‌ல‌ங்க‌ள் கொண்ட‌ வாழ்வில் ச‌ற்றும் நீயோ ச‌ளைத்த‌தில்லை சாத்திர‌ங்க‌ள் ஓதும் பெண்மை போல‌ நீயும் வாழ்ந்த‌தில்லை தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே உற்ற‌வ‌ர்க‌ள் தொலைவில்லிருந்து உன‌து உள்ள‌ம் நினைத்து இருக்கும் பெற்ற‌வ‌ரை காண்ப‌த‌ற்காய் உன் விழிக‌ள் த‌வித்து இருக்கும் பெரும்த‌லைவ‌ன் உன் ம‌க‌னை நாக்குல‌ரி அழைத்து இருக்கும் நீ வ‌ள‌த்த‌ வீர‌ருக்காய் உன் விழிக‌ள் சொரிந்து இருக்கும் வார்த்தை போத‌வில்லை இங்கு உந்த‌ன் வாழ்வை எழுதிட‌வே வாய்க் அரிசி இட‌வும் கைக‌ள் நீளும் தூர‌ம் நீயிஇல்லையே போதும‌டி தாயே போய்வா பொழுதும் துய‌ர‌ம் உன‌க்கு எத‌ற்கு ஆளும் ஒரு கால‌ம் தோன்றும் அங்கே உன‌க்கும் சிற‌ப்பு இருக்கு போதும‌டி தாயே போய்வா பொழுதும் துய‌ர‌ம் உன‌க்கு எத‌ற்கு ஆளும் ஒரு கால‌ம் தோன்றும் அங்கே உன‌க்கும் சிற‌ப்பு இருக்கு வீரத்தின் விளைநிலம்மே விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே வீரத்தின் விளைநிலம்மே விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ன‌ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே
  47. 1 point
    இனி bbc தமிழ் என்பதை விட bbc ரோ தமிழ் என்று போடுவது நல்லது இனி அவர்களின் இணைப்பை இங்கு இணைக்கும் போது அதே பெயருடன் இணைக்கலாமா என்று யோசிக்கிறன் .
  48. 1 point
    பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0fOxBpb27Mc கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா த‌மிழீழ‌ம் எங்க‌ள‌து தேச‌ம் கொடும் க‌ய‌வ‌ர்க‌ளால் வ‌ந்த‌து அங்கு நாச‌ம் த‌மிழீழ‌ம் எங்க‌ள‌து தேச‌ம் கொடும் க‌ய‌வ‌ர்க‌ளால் வ‌ந்த‌து அங்கு நாச‌ம் த‌மிழ் தாயின் ம‌ற‌வ‌ர் கொண்ட‌ நேச‌ம் என்றும் த‌மிழீழ‌மே அவ‌ர்க‌ள் போடும் கோச‌ம் த‌மிழ் தாயின் ம‌ற‌வ‌ர் கொண்ட‌ நேச‌ம் என்றும் த‌மிழீழ‌மே அவ‌ர்க‌ள் போடும் கோச‌ம் உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா அடிமைக‌ளாய் வாழ்ந்தோம‌டா அன்று நாங்க‌ள் அக‌திக‌ளாய் ஆனோம்மடா இன்று அடிமைக‌ளாய் வாழ்ந்தோம‌டா அன்று நாங்க‌ள் அக‌திக‌ளாய் ஆனோம்மடா இன்று அடிமை வாழ்வு போதும் இனி என்று இங்கு துடித் எழுந்தார் வீர‌ர்ர‌டா இன்று அடிமை வாழ்வு போதும் இனி என்று இங்கு துடித் எழுந்தார் வீர‌ர்ர‌டா இன்று உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா அஞ்சி அஞ்சி வாழ்ந்த‌ கால‌ம் உண்டு இன்று அஞ்சிடாம‌ள் ஆயுத‌ங்க‌ள் கொண்டு அஞ்சி அஞ்சி வாழ்ந்த‌ கால‌ம் உண்டு இன்று அஞ்சிடாம‌ள் ஆயுத‌ங்க‌ள் கொண்டு பொங்கி எழும் க‌ட‌ல் த‌லையும் வென்று புலிக‌ள் அழித்துடுவார் உயிர் ஆயுத‌ம் கொண்டு பொங்கி எழும் க‌ட‌ல் த‌லையும் வென்று புலிக‌ள் அழித்துடுவார் உயிர் ஆயுத‌ம் கொண்டு உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் இனி துனை இருப்பார் த‌ய‌ங்காதே கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா உற‌வுக‌ள் உன‌க்கு இல்லை என்று க‌ல‌ங்காதே அந்த‌ ம‌ற‌வ‌ர்க‌ள் என்றும் துனை இருப்பார் த‌ய‌ங்காதே கண்ணே கண்மணியே கேள‌டா ந‌ம் க‌ண்ம‌ணிக‌ள் வீர‌ம் சொல்வேன் கேள‌டா
  49. 1 point
    காட்சியில் இல்லாதவரை அல்லவா குறிப்பிட்டுள்ளேன்....! நன்றி. மலருவதற்கான சாத்தியங்கள் தான் அதிகமாக இருக்கின்றது. மத்தியவங்கியின் மோசடி, பாரிய அளவிலான அபிவிருத்தியின்மை, காலம் தாழ்த்திய வேட்பாளர் நியமனம் என்பன பறவைக்கு பாதகமாக உள்ளது
  50. 1 point
    பாடல்: அவளும் நானும் படம்: அச்சம் என்பது மடமையடா இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்:விஜய் ஜேசுதாஸ் வரிகள்: பாவேந்தர் பாரதிதாசன்