• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. கிருபன்

  கிருபன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   19,107


 2. சண்டமாருதன்

  சண்டமாருதன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   2,445


 3. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   5,474


 4. நிழலி

  நிழலி

  கருத்துக்கள பொறுப்பாளர்கள்


  • Points

   5

  • Content Count

   12,450Popular Content

Showing content with the highest reputation on 12/03/2019 in all areas

 1. 3 points
  எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன். போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது.. இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..! இப்படியே விட்டால், பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..? இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?
 2. 3 points
  சீமானது பேச்சுத்தான் பிரச்சினை என்றால் அவர் பேசுவதில் 99 வீதம் சரி தேவையானது ஒரு வீதம் தான் எமக்கு சிக்கலானது அப்படியாயின் கண்ணை மூடிக்கொண்டு 99 வீதத்தை எதிர்ப்பவர் யார்?? உங்களுக்கு எதுவுமே சரியில்லை அல்லது சரிவராது மற்றவருக்கு ஒன்று பரவாயில்லை பார்க்கலாம் என்றால் ஒன்றையுமே தொடாத உங்களுக்கு அதில் என்ன சங்கடம் வந்துவிடப்போகிறது???
 3. 2 points
  உங்கள் எதிர்பார்ப்பு சரியானது தமிழக தளம் பிழையானது. தமிழ்த்தேசியம் என்னும் கருத்து சீமானுக்கு சொந்தம் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் சில நூறு வருடம் முன்பே தமிழ் தேசிய கருத்தாக்கம் இருந்து இருக்கிறது. அதை திராவிட விற்பன்னர்கள் மழுங்கடித்து உணர்வாளர்களை பார்ப்பான்தான் உன் எதிரி என்று காட்டி திசை திருப்பினார்கள். பார்ப்பான் எதிரி என்பதால் அது உணர்வாளர்கள் தளத்தில் இலகுவாக பற்றியது என்பதுதான் உண்மை. உலகின் ஒட்டுமொத்த மீடியாவும் பண முதலாளிகள் அரசியல் கட்சிகள் சார்ந்தவை சீமானின் 1 மணிநேர பேச்சில் 1 நிமிடத்தை மக்களிடம் சேர்த்து வெறுப்பை உண்டுபண்ணுவது என்பதை தமிழக மீடியாக்கள் சிறப்பாக செய்துவருகிறார்கள். இதை செய்கிறார்கள் என்பது தெரிந்துகொண்டும் அசதியாக இருக்கும் சீமானின் போக்கில் உங்களைப்போல எனக்கும் உடன்பாடு இல்லை. இங்கு யாழ்களத்தில் ஈழத்தவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இவர்கள் எதோ புலிபற்றி தெரிந்தவர்கள் என்று பொருள் கிடையாது எல்லோரும் தம் தம் பாதுகாப்பு கருதி ஓடியவர்கள்தான் நடுநிலை வாதி என்று இல்லாத ஒரு நிலையில் தொங்கிக்கொண்டு வாந்தி எடுப்பதை தவிர இவர்கள் யாரும் புடுங்கியது என்று ஒரு ஆணியும் கிடையாது. இதை பலமுறை நான் நேரிலேயே பார்த்தவன். 1987 கடைசிகளில் நான் புலி ஆதரவாளனே கிடையாது ... நான் டெலோ இயக்கத்தை சார்ந்து இருந்தததால் என்னைக்கூட புலிகள் கொண்டு சென்று வைத்திருந்தார்கள் ..... அதிர்ஷ்டவசமாக டெலோ அப்போது தாஸ் க்ரூப் பொபி குரூப் ஏன்னு பிரிந்து இருந்தது தலைமை (சிறிசபாரட்ணம்) பொபியோடு இருந்தார் இருவரும் கூடியே தாஸை சுட்டு கொன்றார்கள். இதில் தாஸ் குரூப்பை சார்ந்தவர்களிடம் ஆயுதங்களை வாங்கிவிட்டு மேலதிக விசாரணைகளையும் செய்துவிட்டு 3-10 நாட்களுக்குள் விட்டு விடார்கள் அவர்கள் அவர்கள் பற்றிய பொறுப்புகள் ஆயுத கையாளுதல் என்பதால் சிலர் முன்னும் பின்னுமாக விடுதலை ஆனார்கள். நான் சிறுவனாக இருந்தேன் 4ஆவது நாளே என்னை விட்டு விடார்கள். 1987 கடைசியில் இந்திய இராணுவ சண்டை தொடங்கியவுடன் பிரபாகரனின் மனைவியும் மகள் துவாராகவும் வந்தது எமது ஊருக்குத்தான் அங்கிருந்து எங்கோ கொண்டுசெல்ல அவர்கள் திட்டம் இருந்து இருக்கும் அது சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பின்தள்ள பட்டுக்கொண்டே இருந்தது. அப்போ இங்கு யாழ்களத்தில் குப்பை கொட்டுபவர்கள் போல இருந்த எந்த புலி ஆதர்வாள்களும் அடைக்கலம் கொடுக்க தயாரில்லை. அவர்கள் இவர் இன்னார்தான் என்பதை யாருக்கும் சொல்லவும் இல்லை (ஒருவேளை தெரிந்து இருந்தால் கொடுத்து இருப்பார்களோ தெரியாது) அனேகணவர்கள் அது இறந்துபோன புலேந்திரன் அம்மானின் மனைவி என்று ஊகித்து கொண்டார்கள் . இவர்களை அப்போது ஒரு பாதுக்காப்பான இடத்தில் கொண்டு சென்று விட்டது நானும் எனது நண்பனும். பின்னாளில் ஒரு புலி ஆதரவு காரன் அதில் பங்குபற்றிய புலிக்கு சொல்லியிருக்கிறார் .... என்னை நம்ப வேண்டாம் என்றும் நான் டெலோவை சேர்ந்தவன் என்றும். அதை அவர் என்னிடம் சிரித்துக்கொண்டே சொன்னார் காரணம் 1987இல் அவர்கள் ஓடிக்கொண்டு இருந்தபோது இருந்த நிலைமை அவர்களுக்கு தெரியும் என்பதால். இது யாழ்ப்பாண தமிழனின் இரத்தத்தில் ஊறியது .... தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்று சொல்வதைப்போல. தானும் செய்யான் .... செய்கிறவனையும் விட மாட்டான். இப்போ சீமானை பற்றி இகழும் யாருக்கும் முத்துக்குமார் எப்படி அநாதை பிணமானான்? என்பது மறந்து போயிருக்கும் தமிழக அரசியல் தளத்தில் நான் புலி ஆதரவாளன் என்று நின்றது எவ்ளவு பெரியது என்று பழையதை மறந்து இருந்தால் 2008க்கு முந்திய தமிழகம் உங்களுக்கே ஞாபகம் இருக்காது. பிரபாகரன் எமது தலைவன் என்று இன்று தமிழகத்தில் எவன் சொன்னாலும் அதுக்கு சீமான்தான் காரணம். அப்படி ஏற்றுக்கொள்ளும் மனநிலை யாருக்கும் இருந்து இருந்தாலும் அரசியல் லாபம் சொந்த வாழ்வு என்று எண்ணி பயநிலையில்தான் இருந்தார்கள். அதை தகர்த்து ஒரு அக்கினி குஞ்சை முதலில் வைத்தது சீமான்தான் அதனால் அவர் சிறைக்கு கூட போனார் ........ அடங்கவில்லை தொடர்ந்தார். நேர்த்தியாக நீங்கள் விரும்புவதுபோல பேசிக்கொண்டு இருந்தால் ....... சீமானை எனக்கே தெரியாமல் போயிருக்கும். மீடியாக்கள் அப்படியே மழுங்கடித்து இருப்பார்கள். இப்போது கரி பூசுவத்துக்காவது 1 நிமிடம் என்றாலும் சீமானை காட்டுகிறார்கள். சர்ச்சை பேச்சு வேண்டாம் என்று உங்களைப்போல நானும் விரும்புகிறேன் .......... சர்ச்சை இல்லாதுபோனால் சீமானும் இல்லாமல் போய்விடுவார் என்ற இன்னொரு கசப்பான உண்மையும் இருக்கிறது. உங்கள் விருப்பம்போல எல்லோரையும் ஒன்று சேர்ப்பது என்பது முடியாத காரணம் சீமானின் நிலைப்பாடே அவர்களுடன் கூடாது இருப்பதுதான். சீமானின் அரசியல் வேறுவிதமானது அதில் தோல்வி கிடையாது .......தேர்தல் ஆடசி என்பது எல்லாம் இரண்டாம் பட்ஷம். அவர்களிடம் இருந்து பறிக்க வேண்டும் என்பதுதான் முன்னிலை ....... ஆளுதல் என்பது இரண்டாம் நிலை அதனால்தான் தூர பார்வை இல்லையோ என்று கூட எண்ணுகிறேன்.
 4. 2 points
  சம்பந்தன் கொம்பனியும் ஊழலின் இமயம் கருணாநிதி வம்சங்களும் போட்ட பொன்வாத்து முட்டைகள் எத்தனை?
 5. 2 points
  சப்போர்ட் "அத்தான் ஊருக்கு போகும் போது பார்த்து போங்கோ! டிரைவரை அவசர படுத்தாதைங்கோ. ஆளோட முன்னுக்கு இருந்து கதை குடுங்கோ. ஒருத்தரோடையும் அரசியல் கதைச்சு போடாதைங்கோ!" மச்சினன் சொல்லி அனுப்பி இருந்தான். வாகனம் நீர்கொழும்பு தெருவால் யாழ் நோக்கி பயணிக்கிறது. நீர் கொழும்பு வீடுகள் மாளிகைகள் போல் இருந்தது. அடுத்தடுத்து அழகு அலங்கார அங்காடிகள். எங்களது வெளிநாட்டு முவா (MUA) கூட்டம் கூட வீட்டு அடித்தளங்களில் வைத்து தான் வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு கண்ணாடி பளிங்கு அங்காடிகள் பல. "நீர்கொழும்பின் பொருளாதாரம் என்ன? வாகன விற்பனை நிலையங்களும், அலங்கார அங்காடிகளும், மாளிகைகளும் அள்ளி கொட்டி கிடக்கு" இலகுவான ஆங்கிலத்தில் எங்களது வாகன ஓட்டி துசாரவிடம் கேட்டேன். அவருக்கு தமிழ் தெரியாது. "இந்த பக்கத்தை சின்ன இத்தாலி என்று அழைப்பார்கள். கத்தோலிக்கர்கள் நிறைந்த இடம். இந்த மாளிகைகளில் பலதில் ஆக்கள் இல்லை. அவர்கள் இத்தாலியில் இருந்து தங்க கட்டிய விடுமுறை வீடுகள்" அவரின் பேச்சில் ஒரு நக்கலும் சின்ன எரிச்சலும் தெரிந்தது. "இந்த தேவாலயத்தில் தான் குண்டு வெடித்தது" சொல்லி கொண்டே தாண்டி போனார். தேவாலயத்திற்கு முன் காவல் நின்ற துருப்பு முறைத்து பார்த்தார். வாகனம் புத்தளம் கொழும்பு தெருவால் அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. தெருவை கார்பெட் வீதி என்று அழைத்தார்கள். கனடா தெருவிலும் பார்க்க சீரமைப்பாக இருந்தது. முந்திய லொறிகள் சிலதே இருந்தது. பெரிய லொறிகள், கனரக கட்டுமான இயந்திரங்கள் என்று எல்லா வெளிநாட்டு நவீன இயந்திரங்களையும் கண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. "முந்தி வாகனம் போனால் பின்னுக்கு ஒரு புகை படலத்தை விட்டு செல்லும். இப்ப ஓட்டோவில் கூட புகையை காணோம் ?" கேட்டேன். "இப்ப நாங்கள் எமிசன் சோதனை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும்" துசார சொன்னார். "தெருக்களும் அருமையாக உள்ளது" சொன்னேன் நான். "எல்லாம் ராஜபக்ச கட்டி தந்தது" ஆங்கிலத்தில் துசார சொன்னார். ":எல்லாம் சீனா கடன்" ஆதங்கத்துடன் தாயார் தமிழில் பின்னிருந்து முணுமுணுத்தார். வந்து ஒரு மணி நேரத்தில் அரசியல் பேச்சுக்கு அடித்தளம் இடடார் வாகன ஓட்டி. மச்சினன் சொன்ன எல்லா அறிவுரையையும் கேட்ட நான் அரசியலுக்கு மட்டும் விலக்களித்தேன். "நீங்கள் யார் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" வினவினேன். "கோத்தபாய தான் நாட்டுக்கு வேண்டும். எமக்கு பாதுகாப்பு தேவை. " துசார சொன்னார். ஈஸ்ட்டர் குண்டுவெடிப்பு பல சிங்கள மக்களில் ஒரு பீதியை உருவாக்கி இருப்பதை உணர கூடியதாக இருந்தது. இரு மணிகள் ஓடி இருக்கும். தெருவில் ஒவ்வொரு சில கிலோ மீட்டருக்கு இரு காவல் துறையினர் வேகப்பிடி கருவியுடன் நின்றார்கள். "ஒவ்வொரு வாகன அளவிற்க்கு ஏற்ப வேகம் இருக்கும்" தெருவோர அடையாளத்தை காட்டினார் துசார. "நாங்கள் ஓட்டிகள் வாகன விளக்கை அடித்து காட்டி எங்கு காவல் துறையினர் நிற்கிறார்கள் என்று அறிந்து வேகத்தை குறைப்போம்." விளக்கினார். "கனடாவிலும் அப்படிதான். அனால் இப்ப கைபேசி மென்பொருள் எல்லாம் வந்திடுச்சு" விளக்கினேன் நான். மாதம்பை முருகன் கோவிலை தாண்டி சென்றோம். பின் நிறுத்தி திரும்பி சென்று வழிபட்டு இளநீர் வாங்கி குடித்தோம். அங்கிருந்த பிச்சை எடுப்போருக்கு குழந்தைகளிடம் காசு கொடுத்து குடுக்க வைத்தேன். மாதம்பை முருகன் கோவிலின் அழகை ஆல மரத்தின் கீழ் இருந்து ரசித்தேன். தாய் குலங்கள் யாழ் செல்லும் அவசரத்தில் வாகனத்திற்குள் இருந்து கூவி அழைத்தார்கள். "நாங்கள் மூண்டு கிழமை சுற்றுலா வந்திருக்கிறம். என்ன அவசரம்?" சினந்தேன் நான். மாமியும் மருமகளும் வென்றார்கள். சிங்களத்திலும் தமிழிலும் உண்டியல் என்று எழுதி இருந்தது. அதில் ஒரு ஐயாயிரம் ரூபாவை எனது மூத்தவனிடம் கொடுத்து "உன் காது பிரச்சினை, பேச்சு நல்லா வர வேண்டி உண்டியலில் போடு". காவலாளிகள் எனது மகனை பார்த்து புன்முறுவினர். "இந்த பக்கம் தமிழர் இருக்கிறார்களா?" கேட்டேன். தயங்கி சிந்தித்து "ஒரு சிலர் இருக்கிறார்கள்" சொன்னார் துசார. "அடுத்து எங்கே?" கேடடார். கூகிள் வரைபடத்தை பார்த்து "அனுராதபுரம் சென்று அங்கிருந்து A 9 தெருவால் செல்வோம். தெருக்கள் நல்லது தானே?" கேட்டேன். ஓம் என்று தலை ஆட்டினார் துசார. வாகனம் பல தெரு வேக தடுப்புகளையும், முழுசி பார்க்கும் துருப்புகளையும், காவல் துறையினரையும் தாண்டி சென்றது. புத்தளம் வந்தடைந்தோம். பல முஸ்லிம் கடைகள், மசூதிகள், மாளிகளை தாண்டி சென்றோம். நான் கேட்க முன் "இது சின்ன அரேபியா. எல்லோரும் அங்கு கக்கூஸ் கழுவுகிறார்கள் ஆனால் இங்கே அரபி சேக் போல் பென்சில் உலவுகிறார்கள்" துசாரவின் பேச்சில் ஒரு கடுப்பு தெரிந்தது. சிங்கள முஸ்லீம் பிரிவினை குண்டு வெடிப்பின் பின் சில மாதங்களில் வங்காள விரிகுடா போல பிரிந்திருந்தது. ஒரு கொத்து ரொட்டி கடையை கண்டேன். பழைய முஸ்லீம் கடை கொத்து ரொட்டி வாசம் வீச, "இங்க எப்படி சாப்பாடு?" கேட்டேன். "ஐயோ இங்க சாப்பிட வேண்டாம். இவர்கள் கெமிக்கல் கலந்து முஸ்லீம் இல்லாதோரை மலடாக்குகிறார்கள்." துசார பட படத்தார். "எனக்கு மூண்டு பொடியள் ஏற்கனவே. இலவச கப்பாத்து சேவையை ஏன் விடுவான்?" நக்கலடித்தேன். சிரித்தார் வாகன ஓட்டி. "இருள போகுது வீடடை போகோணும்" பின்னிருந்து பொம்பிளையள் தின்ன தடை போடடார்கள். வாகனம் திரும்பி அனுராதபுரம் நோக்கி சென்றது. பல அங்காடிகள் வாசலில் தாடியுடனும் குல்லாவுடனும் முஸ்லிம் சகோதரங்கள் ஆவலுடன் தாண்டி செல்லும் வாகனங்களை பார்க்கிறார்கள். எல்லாம் தாண்டி சென்றது. புர்கா அணிந்த பெண்கள் அந்த சுடு வெய்யில் தாக்க வேர்த்து நடந்து சென்றார்கள். "தொண்ணூறுகளில் பெண்கள் சீலையை வைத்து தலையை மறைத்தார்கள். ஆனால் இப்ப புர்கா அணியினம்." அம்மா சொன்னார். "அப்ப இருந்தது சூஃபி இஸ்லாம். சவூதி காசை கொட்டி பலரை வகாபிகளாக மாற்றிவிட்டது. அதன் பயனை இப்போது அனுபவிக்கிறார்கள் அப்பாவிகள்" எனது ஆதங்கத்தை கொட்டினேன். வாகனம் அனுராதபுரத்தை நோக்கி சென்றது. இருட்ட தொடங்கி இருந்தது. கார்பெட் வீதி என்றாலும் தெரு விளக்குகள் இருக்கவில்லை. அடுத்தடுத்து வெள்ளை விகாரைகள். பல மக்கள் தெருவில் டோர்ச் லைட் அடித்து நடந்து சென்றார்கள். "இந்த பகுதியில் நிறைய ஏழை விவசாயிகள் வாழ்கிறார்கள்" சின்ன வெட்கத்துடன் சொன்னார் துசார. "கோத்தபாய வந்தால் தான் இவர்களுக்கு சுபீட்ச்சம்" புகழ்ந்தார். "ம்ம்ம் வந்து இன்னும் சீனாவிட்ட கடன் வாங்கி கடடுவினம்" முணுமுணுத்தார் துணைவி தமிழில். திடீர் என்று ஒரு டோர்ச் லைட் ஒன்று வாகனத்தை ஓரங்கட்டுமாறு சைகை செய்தது. "மன்னிக்கவும் மாத்தையா நான் கதையில் கவனத்தை இழந்து வேகத்தை கூட்டி விட்டேன். வாகனத்திற்குள் இருங்கள். கதைத்து விட்டு வருகிறேன்." தனது பணப்பையில் இருந்து காசை தேடுகிறார். "என்னிடம் ஐந்தாயிரம் ரூபா தாழும் சில்லரையும் தான் இருக்கு. உங்களிடம் ஆயிரம் ரூபா இருக்கா? " "ஏன் ஆயிரம் ரூபா?"வினவினேன். "சப்போர்ட் குடுக்க வேணும்" அப்பாவியாக வழிந்தார் வாகன ஓட்டி. காசை கொடுத்தேன். அதை தனது வாகன ஓட்டுனர் அட்டையை சுத்தி கொண்டு காவல் துறையிடம் சென்றார். ஒரு நிமிடத்தில் சிரித்து கொண்டு வந்தார். "எல்லாம் ஓகே" வாகனம் வெளிக்கிட்டது. "இங்க வாகனம் வேகமா ஓடினால் 3500 ரூபா தண்டம். அதில காவல் துறைக்கு இருபது விகிதம். பின் வாகன ஓட்டி தபால் சாலை சென்று தண்டம் கட்டி துண்டு வாங்கி பின் நீதி மனை சென்று சான்று காட்டி தான் வாகன அடடையை திரும்பி பெறலாம். தலையிடி மாத்தையா" விளக்கினார். "அது தான் காவல் துறை ஆயிரம் ரூபா சப்போர்ட் வாங்கி ஒரு முன்னூறு ரூபா நோகாமல் இலாபம் பார்க்கிறது" சொல்லிவிட்டு விளங்குகிறதா என்று என்னை நோக்கினார். "விளங்குது விளங்குது. அது தான் ஒவ்வொரு முடக்கிலும் நின்று சேவை செய்யினம் " தலையாட்டி கொண்டே சிரித்தேன். வாகனம் வெளிக்கிட்ட்து. ஊரை பார்க்கும் ஆவல் இன்னும் கூடுகிறது.
 6. 1 point
  ‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன் ‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள். போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதினாறு பதினேழு வயதுதொட்டு ஐம்பது கடந்தவர்கள் கூட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகவேண்டிய ஒரு கட்டாய நிலை தோன்றியது. இதன் காரணமாக பலர் மனவுளைச்சல்களுக்கும் ஆளானார்கள். ஆனாலும் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்ற நிலையில் பலவிதமான இன்னல்களையும் ஆரம்பநாட்களில் சகித்துக்கொண்டு தமக்காகவும் தம் குடும்பத்துக்காகவும் உழைத்தார்கள். பல தமிழர்கள் காணிகளை, வீடுகளை, நகைகளை ஈடுவைத்து அல்லது விற்று தம் பிள்ளைகளை, கணவன்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியும் வைத்தனர். தம் உறவினர் வெளிநாடு சென்றுவிட்டால் பணமழை அங்கு கொட்டும். தம் துன்பங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்றே ஆரம்பத்தில் பலரும் நம்பினர். நாம் பிறந்து வளர்ந்த வீட்டையும் கூடித் திரிந்த நண்பர்களையும், உறவினர்களோடு கூடி வாழ்ந்த பூர்வீக நிலங்களையும் கிராமங்களை, கல்விகற்ற பள்ளிகளை, வேலைத்தலங்களை மட்டுமல்ல தம் தகுதிகளையும் விட்டுவிட்டு கற்பனைகளோடு கவலைகளையும் சுமந்து வெளிநாடு வந்த சிலர் மகிழ்வோடு இருந்தாலும் பலரும் பிரிவுத் துயரில் பலநாட்கள் தூக்கம் தொலைத்து விழித்திருந்ததைப் புலத்தில் உள்ளவர்கள் அறியமாட்டார்கள். உண்மையான அக்கறையோடு உயிர்காக்கப் பெற்றோரால் அனுப்பப்பட்டவர்களும் தாமாக வந்தவர்களுமாக 2009 வரை இலட்சக்கணக்கில் தமிழர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் 2009 இன் பின்னர் வருபவர்களும் ஒருசிலர் போரின் வடுக்கள் தாங்கி வாழமுடியாதவர்களாக இருந்தாலும்கூட மற்றவர்கள் வெளிநாடு வருவதன் நோக்கம் என்ன???பணமும் வசதியான வாழ்வும் மட்டுமே காரணிகள். புலத்தில் வாழும் இளம் பெண்களைப் பொறுத்தவரை வெளிநாடு என்பது சொர்க்கம் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை அவர்கள் எல்லோர் மனதிலும் வேரூன்றியிருக்கிறது. வெளிநாட்டு மாப்பிளைகளையே பெற்றோரும் விரும்புவதற்குக் காரணம் பிள்ளைகள் அங்கு சென்றால் தம் பொருளாதார வளம் சீரடையும் என்ற எண்ணமும் வெளிநாட்டில் பிள்ளை வசதியாக வாழ்வாள் என்ற எண்ணப்போக்கும்தான். பல பெற்றோர் கூட மணமகனுக்கு எந்தவிதக் கல்வித் தகுதியோ அல்லது எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் கூட அதைப்பற்றி எவ்வித கவலையும் இன்றி மணமகனின் குணநலன்களைக் கூட விசாரிக்காது அல்லது கண்டுகொள்ளாது மணமுடித்துக் கொடுக்கின்றனர். இதற்கான காரணம் பணமும் வசதியான வாழ்வும் என்ற எண்ணமேயன்றி வேறென்ன இருக்கமுடியும்? சில பெண்கள் அங்கு ஒரு காதலன் இருக்க அவரின் சம்மதத்துடனும் திட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டு வந்து இங்கு விசா பெற்றுக்கொண்டபின் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள். இதைவிடக் கேவலமான செயல் வேறொன்றுமில்லை. பெற்ரோரைக் கடவுளாக மிகைப்படுத்திக் கூறும் எம் சமுதாயத்தில் பெற்றவர்கள் பலர் பிள்ளைகளின் வாழ்வைப் பற்றிய எந்தக் கரிசனையுமற்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளிடம் பணம் கறப்பதையே நோக்கமாகக் கொண்டு, தாம் மகிழ்வாக வாழவும், போலி கெளரவத்துக்காக தம் பிள்ளைகளை ஓட்டாண்டியாக்கி வெளிநாடுகளில் நடைப்பிணங்களாக வாழவைத்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது. பெற்றோர் ஒருபுறமிருக்கட்டும். பல சகோதரர்கள் வெளிநாட்டுச் சகோதர சகோதரிகளின் உழைப்பைச் சுரண்டி தாம் அங்கு ஆடம்பரவாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பது கண்கூடு. உறவினர் பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி அவர்கள் பணத்தில் பெற்றோல் போட்டுத் திரியும் இளம் பெண்கள் ஆண்கள் எத்தனைபேர்? தம் பிள்ளைகளின் கல்வி, திருமணச் செலவு, குடும்பத் செலவு, தம் வைத்தியச் செலவு மட்டுமன்றித் தாம் விடுமுறை சென்று மகிழ்வதற்கு வெளிநாட்டவர் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவுசெய்வதைப் பலரும் அறிந்திருந்தாலும் தொடர்ந்தும் தம் உறவுகள் நல்லாய் இருக்கட்டும் என்ற பரந்த நோக்கில் தம் செலவுகளைச் சுருக்கி, தம் பிள்ளைகள் கேட்கும் பல பொருட்களை வாங்கிக் கொடுக்காது, ஒரு நாளில் மேலதிக வேலை செய்து, கடுங் குளிரில் விறைத்தபடி வேலைக்குச் செல்வதை புலம்பெயரிகள் பணத்தை ஏப்பமிடும் எவரும் அறியமாட்டார்கள். புலம் பெயர்ந்தவர்கள் பெயரில் ஏதாவது சொத்துக்கள் இருந்தால் அவ்வளவுதான். அவர்களுக்கு எதற்கு இங்கிருக்கும் சொத்து? எனத் தாமாகவே முடிவு செய்துகொண்டு அவர்களுக்கே தெரியாமல் அச் சொத்துக்களில் தம் ஆதிக்கத்தைச் செலுத்துவதும், கள்ள உறுதி முடித்துத் தமதாக்கிக்கொள்வதும், அவர்களை நிர்ப்பந்தித்து அச் சொத்துக்களை தம் பெயருக்கு மாற்றி எழுதிக்கொள்வதும் பல இடங்களில் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்து புலத்தில் வாழும் எம் உறவுகள் பலருக்கு மானஉணர்ச்சியே அற்றுப் போய்விட்டமை தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. போர் கொடுமையானதுதான். எம்மினத்தின் ஆன்ம பலத்தை அடியோடு அழித்து, பலரை நிற்கதியாக்கிப் பல சந்ததிகளையே அடையாளம் தெரியாமலும் ஆக்கிவிட்டது. அதை எம் எதிரிகள் தான் செய்தார்கள். ஆனால் உங்கள் உறவுகளை, உங்கள் இனத்தவரை இப்படிச் சுரண்டி, ஏமாற்றி, எதிரிகளாக எண்ணி அவர்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களைத் தூற்றுபவர்களை ஐந்தறிவு கொண்டவைகளில்க் கூட அடக்கமுடியாது. இனி நாம் எம்மூரில் வாழமுடியாது.சரி விடு முறைக்காவது அங்கு சென்று உறவுகளைக் கண்டு மகிழலாம், எம் பிள்ளைகளுக்கும் எம் நாட்டை, ஊரைக் காட்டிப் பற்றுக்கொள்ள வைக்கலாம் என்னும் அற்ப ஆசையுடன் புலத்துக்குச் செல்லும் பலர் இனிமேல் அங்கு போவதில்லை என்னும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தனை காலமும்எம்பணத்தை அவர்களுக்கு அனுப்பியது போதாதென்று வெளிநாட்டிலிருந்து போகும்போதும் இலட்சக் கணக்கில் கொண்டுபோக வேண்டி உள்ளது. ஆயிரங்கள் எல்லாம் ஒரு பெறுமதி அற்ற பணம் அவர்களுக்கு. ஒரு சிலஅறிவற்ற புலம்பெயர் தமிழர்கள் அவர்களையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்துவிட்டு வருவோம் என்று தம் பணத்திலோ அன்றி வட்டிக்கு வாங்கிக்கொண்டோ சென்று ஊதாரித்தனமாகச் செலவு செய்வதைக் காணும் மற்றவர்கள், சாதாரணமாகச் செல்லும் ஒருவரிடம் காணும் எளிமையைக் கூடப் போற்றுவதில்லை. நாம் எப்போதும் இங்கு வாகனத்திலேயே திரிகிறோம். காற்றாட எம் ஊரில் பேருந்துக்களில் திரிவோம் என்றாலோ, பணத்தை விரயமாக்காது கவனமாகச் செலவழித்தாலோ எமக்கு கிடைக்கும் பெயர் நம்பி, கசவாரம் என்பதுதான். சில வெளிநாட்டில் இருந்து செல்லும் குடும்பங்கள் பணத்தை ஆடம்பரமாகச் செலவுசெய்து, அங்குள்ளவர்களிடம் தாம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று பணத்தை வீண் செலவு செய்கிறார்கள். அது அவர்களின் அறியாமை என்பது ஒன்று. மற்றும் புலம் பெயர் தேசத்திலும் சொந்த உழைப்பில் வாழாது அரச உதவிப் பணங்களில் வாழும் கேடுகெட்ட சிலர் செய்யும் அர்த்தராத்திரியில் குடைபிடிக்கும் வேலையால் ஒட்டுமொத்த புலம் பெயர் சமூகத்தின் பெயரும் கெட்டுப்போகின்றது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் புலத்தில் உள்ளவர்களுக்கு நாங்கள் வெறும் பணம் காய்க்கும் மரங்கள் மட்டும்தான். புலத்தில் உள்ளவரின் அந்த மனநிலை பற்றித் தெரிந்தும் கூடப் பல உறவுகள் இன்னும் இன்னும் தம் உறவுகளுக்குப் பணம் அனுப்பி உதவியபடிதான் உள்ளனர். அப்படி இருந்தும் எமக்கெல்லாம் அவர்களிடம் இருந்து கிடைக்கும் மகத்தான பட்டம் நாட்டை விட்டிட்டு ஓடிப் போனவர்கள். இதை நாட்டுக்காகப் போராடிய போராளிகளோ அவர்கள் குடும்பத்தவரோ சொன்னால் கூட நாம் ஏற்றுக்கொள்வோம். சரி நாங்கள் ஓடிப்போனவர்களாகவே இருக்கட்டும். நீங்கள் நாட்டுக்காக என்ன செய்தீர்கள்? போராடப் போனீர்களா? அல்லது நாட்டுக்காக மனமுவந்து ஒரு துரும்பைத்தான் எடுத்துக் போட்டீ ர்களா அல்லது புலம்பெயர்ந்த உங்கள் உறவுகள் சொந்தங்கள் அனுப்பிய பணத்தில் ஒரு பத்து ரூபாயைத் தன்னும் போராட்டத்துக்காக வழங்கினீர்களா? அல்லது போரினால் துன்பப்பட்ட மக்களில் ஒருவருக்காவது மனிதநேயத்தோடு ஓர் உதவியாவது செய்தீர்களா ? என்றால் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. ஒரு சிலர் விதிவிலக்கணவர்களும் இருந்தார்கள். நான் அவர்கள் பற்றிப் பேசவில்லை. உங்களிடம் பணம் இருந்திருந்தால் எமக்கு முன்னோ பின்னோ நீங்களும் தான் ஓடி வந்திருப்பீர்கள். உறவுகளுக்காகப் பணம் அனுப்பினோம் சரி. முகமே தெரியாத எத்தனையோ உறவுகளுக்கு இடப்பெயர்வின்போது, சுனாமியின் போது, மழை வெள்ளம் ஏற்பட்டபோது, மண்சரிவு ஏற்பட்ட போது, நாட்டைக் காப்பதற்காய், போர் ஓய்ந்தபின்னும் எமினத்தவர் என்ற காரணங்களுக்காய் அள்ளி அள்ளிக் கொடுத்தோமே…. இன்றுவரை கொடுப்பது இன்னும் நிற்கவே இல்லை. எம்மைப் பார்த்து இன்னும் சொல்ல முடிந்தவை எல்லாம் சொல்வீர்கள். ஏனெனில் நாம் நாடற்று அகதிகளாய் அலையும் புலம்பெயர் தமிழர்கள். வசதி வாய்ப்பிருந்தும் வெளிநாட்டு ஆசை அறவே இன்றி தான் பிறந்த மண்ணை விட்டுப் போகமாட்டேன் என்னும் மனது துணிவோடு இருந்தவர்களுக்கு என் தலை தாழ்த்தி வணக்கமும் நன்றியும் கூறிக்கொள்வதில் நான் பெருமைதான் கொள்கிறேன். தாய் நாட்டுக்கு விடுமுறையில் செல்லும் உறவினரை உள்ளன்போடு எதிர்பார்த்துக் காத்திருப்போர் மிகச் சொற்பமே. அக்காலத்துக்கு ஏற்ற நாகரிக உடை அணிந்து வாழ்வை வசதியாக்கிக்கொண்டு நல்ல வீடு, வாகனங்கள் என சுகவாழ்வு வாழ்பவர் பலர் இங்கு இருக்கிறார்கள் தான். ஆனாலும் பலர் தம் சொந்தங்களுக்காக இன்னும் கடன் கட்டிக்கொண்டு, விடுமுறைக்கு எங்கும் செல்லாது பணம் மட்டுமே குறிக்கோளாய், எத்தனையோ நோய்களை உடலில் சுமந்துகொண்டு, விரும்பிய உணவுகளைச் சுவைக்க முடியாதவர்களாக, தம் அற்ப ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாதவர்களாகவும் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் எம்பணத்தில் உண்டுகொண்டே எம்மைப்பற்றிக் கட்டுரைகள், கவிதைகள், நக்கல் நளினங்கள் என இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் பகிரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் எம்மைக் குறை கூற புலத்தில் உள்ள எவருக்கும் அருகதையே இல்லை. ஏனெனில் நீங்கள் உண்பது, உடுப்பது, வாழ்வது, வீணடிப்பது எம் உழைப்பும் தான். புலம்பெயரிகள் செலவழிக்கலாம், படாடோபமாகக்கூட வாழலாம். அதைக் கேட்க உறவுகள் , எம்மினம் என்பதைத் தவிர உங்களுக்கு எந்த உரிமையோ அன்றி கடமையோகூட இல்லை. ஏனெனில் நாம் எம் பணத்தில் வாழ்கிறோம். எம் பணத்தைச் செலவு செய்கிறோம், எம்பணத்தில் உண்கிறோம். ஒருவராவது வெளிநாட்டவர்களுக்கு ஒருநேர உணவை எதிர்பார்ப்பின்றித் தந்தீர்களா? ஒருதரமேனும் எதிர்பார்ப்பின்றி நலமாக இருக்கிறீர்களா? என விசாரித்திருக்கிறீர்களா? உங்கள் உழைப்பில் ஒருநாள் ஊதியத்தை எமக்குத் தந்துள்ளீர்களா? தந்திருப்பவர்கள் கூட ஒரு எல்லை வரை தான் கேட்க முடியும். அவர்கள் கேட்காதவற்றையெல்லாம் எதுவுமே செய்யாது, சொந்த உழைப்பின்றி எம் பணத்தில் உண்டு வாழும் நீங்கள் கேட்பதே தவறு. ஆனாலும் அதன்பின்னும் கூட நாங்கள் பலர் உங்களை மன்னிக்கிறோம். ஏனெனில் நீங்கள் எம் உறவுகள் என்பதும் எம்மால் வாழமுடியாத எம் தேசதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்னும் காரணம்தான். அதை புரிந்து இனியாகிலும் எங்களைத் தூற்றுவதைவிட்டு உங்கள் சொந்தக் காலில் நின்று உங்கள் எண்ணங்களையும் வாழ்வையும் வளம்படுத்தப் பாடுபடுங்கள். உங்கள் உயர்வுகண்டு நாங்கள் உங்களை போற்றுவோமேயன்றி எப்போதும் தூற்றவே மாட்டோம் புலத்தவரே. நிவேதா உதயராஜன் -ஐக்கிய ராச்சியம் https://naduweb.com/?p=10883
 7. 1 point
  (30 வருடங்களிற்கு பின் ஊர் பயணம். எனது மாமனாரின் சாம்பல் கரைக்க கீரிமலைக்கு சென்றோம். எனது அனுபவங்களை சிறு கதைகளாக பகிர்கிறேன்.) "அத்தான், எயர் போர்டில முழுசி முழுசி உங்களை பார்ப்பினம் பயந்தால் உடனே விசாரிக்க கூப்பிட்டு காசு பறிக்க பார்ப்பினம்" மச்சானின் அறிவுரை மனதில் ஓடுகிறது. குடும்பத்துடன் எயர் லங்கா விமானத்தில் இறங்கி வரி திணைக்களம் நோக்கி நடக்கின்றோம். இராணுவ சீருடையில் சின்ன பொடியள் நின்று எங்களை முழுசி பார்க்கிறார்கள். நாங்கள் அவர்களை அசடடை செய்யாமல் நடக்கின்றோம். ஓடுபாதைக்கு அப்பால் வான்படை துருப்புகள் பழைய ரஷ்ய விலங்கூர்திகளை கழுவி கொண்டிருத்தந்தார்கள். "பேரிச்சம் பழம் கூட தேறாது," எம்முடன் பயணித்த ஒரு கனடா அண்ணர் சிரித்து கொண்டே சொன்னார். நானும் சுற்றவர பார்த்துவிட்டு சிரித்தேன். "குண்டுவெடிப்பிற்கு பிறகு எல்லா இடமும் ஆர்மி தான்" அக்கா அண்ணருக்கு சொல்லி கொண்டு வந்தார். எம்மை உற்று நோக்கினார் அதிகாரி. எனது குழந்தைகளுக்கு முதல் பயணம் அவர்கள் எப்போது அங்கிருந்து வெளிக்கிடலாம் என்று ஆங்கிலத்தில் அங்கலாய்த்து கொண்டிருந்தார்கள். அதிகாரியும் கனடா பாஸ்போர்டை பார்த்து கடுப்பில் கணணியை தட்டி முடித்து ஆவணங்கள் தந்தார். அவருக்கு தெரியும் இந்த கூடடத்திடம் ஒன்றும் தேறாது. வரியில்லா அங்காடிகள் ஊடாக வெளிக்கிட்டு வந்தோம். அங்காடிகளில் குளிரூட்டி, துவைப்பி, தொலைக்காட்சி தகடுகள், கணனி என்று கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள். எம்மை கண்டவுடன் தமிழில் கூவினார்கள். "வெளியில் வாங்குவதிலும் பார்க்க 40 விகிதம் கழிவு" நன்றி சொல்லி கொண்டே அங்காடிகளை தாண்டி உடைமைகளை எடுக்க செல்கின்றோம். எம்மை ஒரு சிங்கள சுமை தூக்கி பட்டாளம் தொடர்கிறது. நாமும் பெரிய குடும்பம் என்ற படியால் அதில் ஒருவரை நான் தேர்ந்தெடுத்தேன். எனது தாயார் "ஏன் அவங்கள்? நாங்கள் தூக்கலாம் தானே? எனக்கோ திரும்பி அந்த அப்பாவிக்கு இல்லை என்று சொல்ல மனமில்லை. அவர் ஓடி போய் பைகள் சுழலியில் நின்று என் துணைவி காட்டும் பைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். சுங்கவரி அதிகாரி மேல்மாடி கண்ணாடி அறையில் இருந்து கண்காணித்துக்கொண்டிருந்தார். சுமை தூக்கி இல்லாமல் பைகள் எடுத்து வெளியேறும் வெள்ளை, சிங்கள பயணிகளை நிறுத்தி விசாரித்து அனுப்பி கொண்டிருந்தார்கள். எமது 13 பைகளை இரண்டு தள்ளியில் ஏற்றி சுமை தூக்கி இன்னொரு உதவியை பிடித்து தள்ளி கொண்டு எம் முன்னால் சென்றார். சுங்கவரி அதிகாரிக்கு எதையோ சிங்களத்தில் சொன்னார். அவரும் எம்மை போகுமாறு சைகை செய்தார். சுமைதூக்கி புன்சிரிப்புடன் என்னை பார்த்தார். நான் புன்சிரிப்புடன் தாயாரை பார்த்தேன். "ம்ம்ம் இவர் இல்லாட்டில் மினக்கெடுத்தி இருப்பங்கள்" தாயார். வெளியில் வந்து எமது வண்டிக்கு காவல் நின்றோம். 32 செல்சியஸ் எனக்கு வேர்த்து ஒழுகியது. சுமைதூக்கி இரகசியமாக "எமக்கு சம்பளம் இல்லை. டிப்சுக்கு வேலை செய்கிறோம்" வழிந்தார். நான் அதை நம்பவில்லை என்றாலும் கனடா கலாச்சாரத்தின் படி சிறு உதவி செய்ய எனது பணப்பையை துழாவுகிறேன். சுமை தூக்கி "டொலர் இருக்கா?" கொச்சை தமிழில் கேடடார். "இல்லை எல்லாவற்றையும் ரூபாவாக மாற்றிவிடடோம்" நான். வாடகை வண்டி வந்தது. வேற்று ஒழுகி சுமை தூக்கிகள் பத்திரமாக பைகளை ஏற்றி வைத்தார்கள்" ஆளுக்கு ஆயிரம் ரூபா எடுத்தேன். " ஏன்டா அவ்வளவு? நூறு ரூபா காணும்." தாயார். அதை கேட்டு ஏக்கத்துடன் முகம் சுருங்கி இருந்தனர் எமது சுமை தூக்கிகள். நான் தாயாரை கேட்காமல் ஆளுக்கு ஆயிரம் கொடுத்தேன். அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எமக்கு கதவு திறந்துவிட்டு நாம் ஏறிய பின் அதை சாத்தி எமது சிங்கள வாகன ஓட்டிக்கு "பார்த்து ஓடு" என்று சிங்களத்தில் அறிவுறுத்தினார். என்னை பார்த்து சொன்னார்கள். "ஸ்துதி மாத்தையா!" . எனக்குள் ஒரு குளிர்ச்சி. "ம்ம்ம் ஸ்துதி மல்லி" வாகனம் வெளிக்கிட்டது. எனது மாமனார் வைத்தியசாலையில் இருக்கும் போது பகிர்ந்த பழைய நினைவுகளில் ஒன்று வந்தது. "தம்பி 50, 60 களில் சிங்களவர் எங்களை மாத்தையா என்று தான் அழைத்தார்கள். ஏனென்றால் அவர்களில் பலர் தமிழ் வியாபாரிகளிடம் கூலிக்கு வேலை செய்தவர்கள். இப்ப காலம் மாறி போச்சு!" ம்ம்ம்ம் காலம் திரும்பவும் மாறுது சிந்தித்துக்கொண்டே நீர்கொழும்பை ரசிக்க தொடங்கினேன்.
 8. 1 point
  தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது.. 1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. எனினும் 2018 யூன் மாதம் சமஸ்டி நீதிமன்றம் விடுதலைப்புலிகளிற்கும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் இடையிலான தலைமைத்துவ தொடர்புகளிற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஏப்பிரல் மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தீர்ப்பிற்கு எதிராக முறையீடு செய்திருந்ததுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவியல் அமைப்பிற்கு ஆதரவளித்துள்ளனர் என தெரிவித்திருந்தது. இது குறித்து இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ள சமஸ்டி நீதிமன்றம் தனது முன்னைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்துள்ளது. சுவிசின் குற்றவியல் கோவையின் 260 வது பிரிவு திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது, அதன் பின்னர் அல்ஹைதா போன்ற அமைப்புகளிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. நிதி திரட்டப்படும் வேளை விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அக்காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்காக நிதி திரட்டியவர்கள் தாங்கள் பின்னர் சட்டத்தை மீறுவார்கள் என கருதியிருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இனசமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/70347
 9. 1 point
  நான் யாழ்களத்தை பாத்துக்கொண்டிருக்கேக்கை நிர்வாகம் என்னை கண்காணிக்கேலுமோ?ஏனெண்டால் நான் கூடுதலாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறனான்....அதுதான் கேட்டனான். கலோ மோகன் உங்கடை கொம்பியூட்டரிலை நான் தெரியிறனே?
 10. 1 point
  அன்று வடிகட்ட ஆரம்பித்தவர்கள் இன்றும் வடிகட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நான் முதலில் அவர்கள் ஏதோ அறிந்துதான் சொல்கிறார்கள் என நினைத்தேன்.2009க்கு பின்னரும் தொடரவே அவர்கள் அறிந்து சொல்லவில்லை அது அவர்கள் தொழில் என்பதை புரிந்து கொண்டேன்.
 11. 1 point
  சிலவேளைகளில் அப்படி நடப்பதில்லை குசா. எமது அறிவுக்கும் எதிர்பார்ப்பிற்கும் அகப்படாத வழியில்க் கூட அவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள். அவர்களை நியாயப்படுத்தும்பொழுது, சரியான ஆதாரங்களோடு நியாயப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். இக்கேள்விகூட இன்னொரு தளத்தில் புலிகள் இதைச் செய்யவில்லை என்பதை நிறுவத்தான்.
 12. 1 point
  உங்கள் மீது மேலே நீங்கள் சொன்ன எந்தக்குற்றச்சாட்டையம் நான் வைக்கவில்லை வைப்பதுமில்லை யாரையும் துரோகி என்று நான் அழைத்ததுமில்லை இதெல்லாம் பழைய அதிலும் பலமுறை விவாதித்தவிடயம் உங்களுக்கு ஒரே பதில்தான் அவர்கள் எதைச்செய்வார்கள் எதைச்செய்யமாட்டார்கள் என்று எமக்குத்தெரியணும் தெரியும் ஏனெனில் நாங்கள் தான் புலிகள்
 13. 1 point
  இதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள் அதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான் அப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள் இதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் எத்தனையோ பேர்கள் ஈபி யாலும் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை. இவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார் அவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள். புலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்? எனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே தெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன். ஈப்பி அப்போது புலிகள் இல்லாத வெறுமையை பயன்படுத்தி யாழ் பல்கலைக்கழக சப்போர்ட்டை தமது பக்கம் திருப்ப பல முயற்சிகளை செய்ததர்கள் அதுக்கு இவர் நேரடியாகவே இந்திய இராணுவத்தையும் அவர்களுடன் கூடி இருந்தவர்களையும் விமர்சித்து அவர்களுடன் இவரே விரோதத்தை ஏற்படுத்தி இருந்தார். அது ஒரு அசாதாரண துணிச்சல் .. அந்த சூழ்நிலைக்கு பொருத்தம் இல்லாத ஒன்றை ... எந்த தைரியத்தில் செய்தார் என்பது தெரியவில்லை. இவரின் மரணம்தான் செல்விக்கு சாதகமானது செல்வியை வைத்தே ஈப்பி அப்போது யாழ் கம்பசுக்குள் பல சித்து விளையாட்டுகளை செய்துவந்தார்கள். புலிகள் செய்தார்கள் என்பது எமது மக்களின் ஒரு லாஜிக்கும் இல்லாத பேய் பிசாசு கதைதான் புலிகளே செய்து இருந்தாலும் .... அந்த காலத்தில் புலிகளுக்கு இருந்த காரணம் என்ன? இவைகள் நான் செவி வழி அறிந்தது ..... ஆனால் 89 90களில் இவரின் வீடு புலிகளுக்கு எதிரான கருத்ததுடன் இருந்தது .... வெறுப்புடன் இருந்த்தது அவர்கள் புலிகள்தான் செய்தார்கள் என்பதை நம்பி இருந்தார்கள் என்பதை நேரடியாக என்னால் உணர முடிந்தது. ஆரம்ப காலத்தில் போராடத்துக்கு ஆதரவாக இருந்தாதவர்கள் பின்னாளில் எதுவுமே செய்ததில்லை விடுதலைப்போரின் விரோதிகள்போல ஆகி இருந்தது துரதிர்ஷ்டம். இந்திய இராணுவம் வெளியேறினாலும் ஈப்பியின் தமிழ் இராணுவம் நிலைகொள்ளும் எனும் எண்ணம் இந்திய இராணுவம் ஈப்பி இருவருக்கும் இருந்தது அந்த காலப்பகுதியில் என்பதுதான் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய விடயம்.
 14. 1 point
  அண்மையில் இவ்விடயம் பற்றி நண்பர் ஒருவருடன் உரையாடியிருந்தேன். முறிந்த பனைகள் நூலில் புலிகளைப் பற்றிய விமர்சனங்கள் இருந்த காரணத்தால்தான் கொல்லப்பட்டார். ஈபிஆர்எல்எவ் மீதான குற்றச்சாட்டை அற்புதன் தவிர வேறு எவரும் வைக்கவில்லை. The new Indian government of V.P.Singh announced the withdrawal of the IPKF on September 20, 1989. The very next day, we were given the most grim indicator of what was to follow: The LTTE assassinated Dr.Rajani Thiranagama, a founder activist of the UTHR(J), the head of the Anatomy Department and one of the four who co-authored 'The Broken Palmyra'. http://www.uthr.org/history.htm
 15. 1 point
  எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து.. புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. கதை இதுதான். ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க, அந்த வெளிச்சம்.. அது இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார் https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo
 16. 1 point
  மற்றைய நாடுகளோடு ஒப்பிடும்போது சுவிஸ் எப்போதுமே நம்மவர்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.
 17. 1 point
  சுமே ஆண்களைக்காட்டிலும் பெண்களால் எவ்விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கமுடியும். உங்கள் கட்டுரை சொல்லும் செய்தி அதுதான். அநேகமாக புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு பொருளாதார உதவி செய்பவர்கள் இப்படியாக இக்கட்டில் கணிசமாகவே மாட்டுப்பட்டுள்ளனர். தாயகத்தின் மீதான பற்றுதலால் அங்குள்ள உறவுகளுக்கு நேர்ந்த துன்பங்களால் இப்படியான கசப்பான உணர்வுகளை நேர் கொண்டபோதும் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். ஒரு புதிய சமூகம் அங்கு உருவாகி இருக்கிறது என்பது உண்மை. சில சமயங்களில் தம் குண இயல்புகளுக்கு அப்பால் பொருளாதார மோகம் பிறள்வுகளை உருவாக்கி அவர்களை சுரணையற்றவர்களாகக்கூட ஆக்கிவிடுகிறது. அன்பொழுக அழைப்பார்கள் உணவு தருவார்கள் என்பதெல்லாம் போராட்டகாலத்திற்கு முந்தையது அந்த எதிர்பார்ப்பை இப்போது நாங்கள் தேடுவது தவறு. ஏனென்றால் அச்சத்துடனான அவர்கள் அன்றாட வாழ்வை பெரும் பிணியோடு கடந்தவர்கள். ஒரு வேளை உணவுக்காகக்கூட ஒவ்வொரு குடும்பமும் தத்தளித்திருக்கின்றன. அதன் நிமித்தம் மற்றவரை உபசரிக்கும் பண்புகள் இழந்திருக்கின்றன. நீண்ட காலமாக எதிலியாக இடங்கள் மாறி தத்தம் சொந்தத்தேவைகளைப் பாதுகாக்க சுயநலமியாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள். இன்னும் அந்நிலையின் ஆதிக்கத்திலிருந்து விடுபடாத தன்மைகள் அவர்களை உபசரிக்கும் பண்பிலிருந்து விலத்தி வைத்திருக்கிறது. இவற்றை தவறென்று கருதிவிட முடியாது. புலம்பெயர்ந்தவர்கள் கஸ்டப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று சொல்லிவிடமுடியாது நாங்கள் கஸ்ரப்படுவதை தாங்கள் அறிந்திருப்பதாக காட்டிக்கொண்டால் உங்களிடம் பெறக்கூடிய ஏதேனும் உதவிகளை கேட்க முடியாதே அதுதானே அடிப்படை நீங்கள் சரியாக கஸ்ரப்படுகிறீர்கள் என்று சொல்லிவிட்டு எனக்கு ஏதேனும் உதவி செய்யலாம்தானே என்று கேட்க முடியுமா? இல்லைத்தானே... அடுத்து போராட்ட காலத்தில் ஓடியோடி அன்றாட தொழில்களை செய்யாமல் நிலையற்ற தன்மையால் சோம்பேறிகள் ஆகியிருக்கிறார்கள். தொழில் ரீதியாக நமக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் சாதிய வன்மங்களால் இப்போது அங்குள்ள இளையவர்கள் அவர்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். கூலித் தொழில் செய்பவர்கள் அநேகமாக முதியோர்களாகவே இருக்கிறார்கள். இளைவர்கள் மத்தியில் உழைப்பு என்றால் வெளிநாடு என்பதுதான் வேதமாக இருக்கிறது. எப்படியாவது வெளிநாடு போய்விட்டால் இந்த பொருளாதாரம் மற்றும் சமூக வன்மங்களிலிருந்து விடுபட்டுவிடுவோம் என்ற நப்பாசைதான். நாங்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் எங்கள் சமூக அடிப்படைக்குணத்திலிருந்து விடுபட்டுவிட்டோம் என்று சொன்னால் அது வேசமாகும். புலம்பெயர்ந்த நாங்கள் கொஞ்சம் பொருளாதார மேம்பாட்டுடன் எம் சமூகத்திற்கே உரிய அடிப்படை குணங்களை மறைத்து மேக்கப்போட்டு மறைத்திருக்கிறோமேயன்றி மாறவில்லை. வசதி வாய்ப்புகள் இருக்கும் நாங்களே மாற்றமில்லாதவர்களாக பயணிக்கும்போது வாய்ப்புகளும் இல்லாமல் வசதியும் இல்லாமல் அத்தோடு ஒடுக்கப்பட்ட வாழ்வியலுக்குள் நின்று மன அழுத்தங்களுக்குள் ஆட்பட்டிருக்கும் சமூகமாகவே அவர்களை நாங்கள் நோக்கவேண்டும். கூர்மையான நோக்கல்கள் உங்கள் கட்டுரையில் நிறைந்திருக்கின்றன. அதே நேரம் உள் ஊடுருவும் பார்வையைத் தவிர்த்து விட்டீர்கள். உங்கள் நேரடியான அநுபவங்களும் ஆதங்கமும் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அநுபவங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் அவை அவரவர்கள் உணரும் விதம் வேறல்லவா. உங்களுடைய பதிவில் உள்ளவைகள் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன. நாம் ஏற்றுக்கொள்ளும் விதம் மாறுபடுகிறது சுமே. ஆரோக்கியமான பதிவுதான் பலரை பேசவைக்கிறது.
 18. 1 point
  Mr. & Mrs. டாமோடிரன் இக்குப் பின் ஈழத்தமிழர் மத்தியில் கேலிச்சித்திர கலை வளர்ச்சி பெறவில்லை என்பது என்னுடைய கணிப்பு. கேலிசித்திரம் வரைபவனுக்கு சிறந்த அரசியல் நுண்ணறிவும், நகைச்சுவை உணர்வும் வேண்டும். வெறுமனே பக்கசார்பான சிந்தனை முறையும், நகைச்சுவை உணர்வும் இல்லாத வரைதல்கள் கேலிச்சித்திரம் என்கின்ற வகைக்குள் அடங்கா என்கிறேன். அந்த வெற்றிடத்தை இலங்கை தமிழ் நாளேடுகளில் நாம் நாளாந்தம் காணலாம். இத் துறையில் சிங்களமும், தமிழ்நாடும் நான்கு வளர்ச்சி அடைந்துள்ளன.
 19. 1 point
 20. 1 point
  வாழ்த்துக்கள்.. அப்துல்கலாம் தொடங்கி.. (அதற்க்கு முன்பும் பலர் இருந்திருக்கலாம்) உந்த வான் வெளி ஆராய்ச்சி , இஸ்ரோ.. இதை கடாசிவிட்டு வெளியுறவு ,தேசிய ஆலோசகர்.. போன்ற மலையாளிகளின் இடத்திற்கு முன் நகர்ந்தால் தமிழினத்திற்கு நன்மை உண்டாகும்..
 21. 1 point
  Wஎல்லோருக்கும் என்னதான் பிரச்சனை ? சீமான் தன்னை தலைவரோடு சேர்த்து பேசுவதா ??? சீமான் பேசினால் பேசிவிட்டு போகட்டுமே. அதனால் உங்களுக்கென்ன பிரச்சனை ? சீமான் அதிகமாக கதைப்பதுதான் பிரச்சனை என்றால் அது அவர் அரசியல் செய்யும் தமிழகம் பார்த்துக்கொள்ளும். உங்களுக்கென்ன வந்தது ???? சீமான் பிரபாகரனை தவறான விடயங்களுக்கு பாவித்ததால் அது எவ்வளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் ? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா ? நாங்கள் மட்டும்தான் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் தத்தெடுத்துக் கொண்டோமா ? எல்லோருக்கும் என்னதான் பிரச்சனை ? Karl marx, Lenin, Fidel Castro, Che Guvera எல்லோரையும் எங்கள் விருப்பப்படி கதைப்போம் ஆனால் பிரபாகரனை எண்களைத் தவிர வேறு ஒருவரும் கதைப்பது கூடாதா ? என்ன மனநிலை இது ? அதுக்குள்ள கேலிச்சித்திரம் வேற. பிரபாகரனை தமிழக மக்கள் கதைக்காமல் வேறு யாருக்கு கதைக்க உரிமை இருக்கு ? (சீமானின் பேச்சில் தவறுகளிருந்தால் அதனை ஒரு தாய் தகப்பன், ஆசிரியர் நிலையில் இருந்து திருத்துவீங்களா, அதை விடுத்து........ )
 22. 1 point
  காலத்தால் அழியாத குறள் போல் சுனாமியிலும் பிறழாத வள்ளுவனை தன் வளைக் கரத்தில் தாங்கிடும் தங்கமகள்.....!
 23. 1 point
  அப்படியானால் எனது பெயரை முதலாவதாக பதிந்து வைத்துக்கொள்ளுங்கள் தமிழன் ஒன்று படாமல் சிங்களத்தை சிறுபான்மையாக்காமல் எமக்கு விடிவில்லை அதற்காக நான் ஒரு முகவர்
 24. 1 point
  சண்டமாருதன் உங்கள் பதிவை வாசித்தேன். பொதுவாக எனது கருத்துப் படங்களுக்கு வரும் விமர்சனங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை. எனது கருத்தில் மாற்றம் இல்லை. உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையும் எனக்கு இல்லை. பாராட்டுக்களைவிட. எதிர்ப்பில்தான் எனக்கு நாட்டம் அதிகம். அதுதான் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தரும். நன்றி சண்டமாருதன்.
 25. 1 point
 26. 1 point
  திரு ஈழப்பிரியன் , நீங்கள் மேலே ”இலங்கை” என்பதை ”சீன ராசதந்திரிகளின் வழிநடத்தலில் இலங்கை” என்றே நான் கூற முனைகிறேன்.
 27. 1 point
 28. 1 point
  வழக்கப் போல் ஒற்றைப் பார்வையுடன் எழுதப்ப கட்டுரை. நான் கடந்த நான்கு வரிசங்களாக ஊருக்கு போய் வருகின்றேன். இது வரைக்கும் எந்த உறவுகளும் இவ்வளவு தா என தொந்தரவு செய்ததில்லை, நானும் கொடுக்கின்ற ஆளும் இல்லை. ஊரில் நிற்கும் போது வெளிநாட்டு வாழ்வு முகத்தில் தந்த சில மாறுதல்கள் மட்டுமே வெளிநாடு ஒன்றில் வந்த ஒருவனாக காட்டும். மற்றப்படி பாட்டா செருப்பும் வெளியே விட்ட சேர்ட்டுமாகவே திரிவதுண்டு. என் முகனூலில் இருக்கும யாழ் கள உறவுகள் பலருக்கு இது தெரிந்து இருக்கும். ஊரில் வெளிநாட்டு பண உதவி எதுவும் இல்லாமல் சொந்த கடை நடத்தியும் விவசாயம் செய்தும் வாழும் பலரை என்னால் காட்ட முடியும். அரசு எந்தவொரு தொழிலையும் பொருளாதார மேம்பாடுகளையும் செய்யாமல், அது பற்றி தமிழ் எம் பிக்கள் எந்த பிரக்ஞை யும் அற்று இருக்கும் சூழ்நிலையிலும் தம் சொந்த கால்கள தங்கியிருக்கும் இளையவர்கள் பலர் உள்ளனர். அங்கு உள்ள படித்த அல்லது ஏதாவது ஒன்றில் திறமையுள்ள ஒருவர் வெளிநாடு வர விரும்பின் அதற்கான வழிமுறைகள் பற்றி அறிய என்னிடம் கேட்டால் எனக்கு தெரிந்த வழிமுறைகள் அனைத்தையும் கூறுவது உண்டு. ஏனெனில் அங்கு தமிழர்கள் சுயமரியாதையுடன் நிம்மதியாக வாழும் காலம் இனி வரப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றேன். வெளிநாட்டு வாழ்வு என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு போராளிகளின் தியாகத்தால் விளைந்த வாய்ப்பு. அங்கு இருப்பது அந்த வாய்ப்பை தந்தவர்களை சுமந்து நின்ற மண். அந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கு எம் மேல் இருக்கும் கோபம் பலவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருக்கு. அதை புரிந்து கொள்ளாமல் நாம் பணம் தந்தவர்கள்/ இப்பவும் தருகின்றவர்கள் தானே என நாட்டாமை குணத்தை காட்ட நினைத்தால் அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி தான் இன்னும் அதிகரிக்கும். நன்றி
 29. 1 point
  எங்கட கருத்துக்கள "மூனா" விடம் கொஞ்சம் கவனமாத்தான் கதைக்கவேணும்........ மனுசன் கார்டூன் படம்போட்டு காவடி ஆட வைத்துவிடுவார்...... யப்பா நான் இந்தப்பக்கம் இனி தலை வச்சும் படுக்கமாட்டன்.
 30. 1 point
  இப்படி நேரடியாய் வெருட்டி கடன் வாங்குவதற்கும் ஒரு தில் இருக்க வேண்டும்
 31. 1 point
 32. 1 point
  சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம். கட்சி வேறுபாடுகள் இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான். இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது. திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே. ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள். ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது. நன்றி
 33. 1 point
  அண்ண‌ன் சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை பேசி இருக்கிறார் , அது இவ‌ர்க‌ளில் காதில் கேக்காது , 200ரூபாய்க்கு அண்ண‌ன் சீமானுக்கு எதிரா மிம்ஸ் புர‌ளிய‌ கில‌ப்ப‌ த‌மிழ் நாட்டில் ப‌ல‌ர் இருக்கின‌ம்
 34. 1 point
  அந்தாள்தான் ஒரு கோப்பை பாலுக்கு பத்து மாடும் ஒரு தீவும் வாங்கி அல்லாடுது என்றால் நீங்கள் வேற ......!
 35. 1 point
  "dosa man" திருக்குமார் நியூயோர்க்.....!
 36. 1 point
  சுயநிர்ணய உரிமை விடயத்தில் இந்திய அவ்வாறான நிலையை எடுக்கமாட்டாது என்பது தான் இந்தியாவின் சர்வதேச நிலைப்பாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்தியாவும் பல சிறுபான்மையினரை கொண்ட ஆசிய நாடுகளும் சுயநிர்ணய உரிமை என்பதை ஐரோப்பாவில் 20ம் நூற்றாண்டில் பிரபலமான ஒரு கோட்பாடாகவே பாக்கின்றனர். இந்த பின்னணியில் தான் 1979ம் ஆண்டில் இந்தியா ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை பிரகடனத்தில் கைச்சாத்திடபோது சுயநிர்ணய உரிமையை இறையாண்மையை மீறி போகமுடியாது என திட்டவட்டமாக பதிவுசெய்துள்ளார் (மூலம் கீழே தரப்படுள்ளது). சுயநிர்ணய உரிமை என்பது வெளிச்சக்தி ஒன்றில் ஆளுமைக்கு உட்பட் ட (காலனித்துவம் ) மக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்வும் சுதந்திர நாடுகளுகோ அல்லது அதனுள் வாழும் தேசிய இனங்களுகோ பொருந்தாது எனவும் இந்தியா 1979இல் பதிவு செய்துள்ளது . தனது தேசிய நலன் கருதி அவாறானதொரு நிலைப்பாடை எடுத்த இந்திய தனது நலன் கருதி இலங்கையிலும் அதனையே தொடர்ந்து செய்யும். 2018ல் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான் காஸ்மீர் சுயநிர்ணய உரிமை பற்றி பிரஸ்தாபித்தபோது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இந்தியாவின் இறையாண்மையை மீறமுடியாது என இந்திய பிரதிநிதி பதிலளித்திருந்தார். இந்தியாவை சுற்றயுள்ள நாடுகள் இந்தியாவை பிரித்து தமது இலக்குகளை அடைய துடிக்கின்றனர். அது இந்தியாவை இந்த சுயநிர்ணய உரிமை விடயத்தில் மேலும் இறுக்கமடைய வைக்கும். என்னை பொறுத்தவரையில், நாம் பொருளாதார சுயநிர்ணய உரிமையை அடைவதன் ஊடக எமது அரசியல் நிலைமையை எமக்கு அதிகம் பாதகம் வராத வகையில் நீண்டகால அடிப்படையில் பார்த்துக்கொள்ளலாம். அந்த வகையில் இந்தியாவுடன் இறுக்கமான பொருளாதார உறவுகளை வளர்க்க கொள்கை வளர்க்கவேண்டும். அதட்கான பொறிமுறைகளை உருவாக்கவேண்டும். வர்த்தக மற்றும் கலாசார தொடர்புகளை வளர்க்கவேண்டும்., குறிப்பாக தமிழக பொருளாதார உறவுகளை நாம் மேம்படுத்தவேண்டும். குஜராத்தியர் போல பொருளாதார வலிமை பெறவேண்டும். எமக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக கசப்பான வரலாறு இருந்தாலும் அதட்கு முன்னர் ஒரு சுமுகமான உறவு இருந்ததையும் மறக்கமுடியாது. நாம் விரும்பியோ விரும்பாமலோ ஆசியாவில் ஒரு தீவில் அடைபட்டுக்கொண்டுள்ள இனம். எவ்வளவு தூரம் ஐரோப்பிய சுயநிர்ணய உரிமை விடயங்களில் முற்போக்காக இருந்தாலும் அது எங்களுக்கும் பொருந்தும் என்பது பேச்சளவில் தான் இருக்குமே தவிர நிஜம் என்பது வேறு. அதிர்ஷ்டவசமாக எமக்கு ஒருநாள் விடுதலை வரக்கூடும் . ஆனால் அந்த தருணம் வரை நாம் தப்பி பிழைப்பதோடல்லாமல் நாம் வளர்ச்சியடைய என்ன வழிமுறைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து இன்றே இயங்கவேண்டும். International Covenant on Civil and Political Rights - 1966 Ratified பய on 10/4/1979 with Reservations on Art 1, 9 and 13 and declarations on Articles 12, 19(3), 21, 22 Reservations: Article 1: The Government of the Republic of India declares that the words `the right of self-determination' appearing in [this article] apply only to the peoples under foreign domination and that these words do not apply to sovereign independent States or to a section of a people or nation--which is the essence of national integrity. Article 9: The Government of the Republic of India takes the position that the provisions of the article shall be so applied as to be in consonance with the provisions of clauses (3) to (7) of article 22 of the Constitution of India. Further under the Indian Legal System, there is no enforceable right to compensation for persons claiming to be victims of unlawful arrest or detention against the State. Article 13: The Government of the Republic of India reserves its right to apply its law relating to foreigners. Declarations: Articles 12, 19(3), 21, 22: The Government of the Republic of India declares that the provisions of the said [article] shall be so applied as to be in conformity with the provisions of article 19 of the Constitution of India. மூலம்: https://www.pmindiaun.gov.in/pages.php?id=867
 37. 1 point
 38. 1 point
  அவ்வாறான எந்த ஒரு தலமையும் உருவாக ஈழத்திலும் தமிழகத்திலும் வாய்ப்பே இல்லை. புலிகளின் முடிவுக்குப் பின்னர் புலிக்கொடியையும் தலைவர் உருவப்படத்தையும் வெளிப்படையாக முன்நிறுத்தி செல்லும் சீமானின் போக்கு ஏனைய ஈழ ஆதரவாளர்களிடம் இருநது வேறுபடுகின்றது. இதற்கக சீமானை தூக்கி உள்ளுக்கு போட்டிருக்கலாம் , ராஜீவை தமிழ்மண்ணில் கொன்றோம் என்றதற்காகவேனும் உள்ளுக்கு போட்டிருக்கலாம். இருந்தும் அவை நடக்கவில்லை. புலிகளின் அடயாளத்தை முன்றாக அழிப்பதால் எந்த நன்மையும் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு கிடையாது. இனிவரும் காலங்களில் இலங்கை இந்திய உறவுகளின் போக்குக்கு ஏற்ப இநத நிலமை மாறலாம் இதன் அடிப்படையில் சீமான்மேலும் வளரலாம் அல்லது காணாமல் போகலாம். புலிகளின் முடிவு, அதன் பின்னரான இலங்கை இந்திய உறவு, இவற்றின் மீதான உளவுத்துறையின் கவனிப்பு என்ற பலதரப்பட்ட நிலையில் ஒரு வாய்ப்பு சீமானுக்கு ஏற்படுகின்றது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஈழப்போராட்ட முடிவோடு ஏற்பட்ட வாய்ப்பை திராவிட கருத்தியலை கடந்த தமிழ்த்தேசீய கருத்தியலை முன் நகர்த்தவும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மீதான விழிப்புணர்வு. அணு உலை மீதேன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என பலதை இந்த வாய்ப்போடு இணைத்துக்கொண்டார். ஈழத்தமிழர்கள் மீதான மத்திய அரசின் துரோகங்கள் வெளிப்படையக பேசப்பட்டது. தமிழக அரசியலில் புதியதொரு சிந்தனை தோற்றுவிக்கப்பட்டது. சீமான் ஆட்சியை பிடிப்பார் அல்லது டெப்பாசிட் வாங்கமாட்டார் என்பது பெரியவிசயமில்லை. எதிர்காலத்தில் என்ன ஆவார் என்பது கூட நிச்சயமில்லை. ஆனால் ஒரு வாய்ப்பை தமிழர்கள் சார்பான பால பிரச்னைகளை பேசவும் பல கேள்விகளை எழுப்பவும் பல கோணத்திலும் சிந்திக்கவும் என பயன்படுத்திக்கொண்டார். இந்த வாய்பை எப்படி புரிந்துகொள்வதென்றால் புலிகள் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கும் போது சீமான் புலிக்கொடியை தூக்கியிருந்தால் அதை ஒருபோதும் இந்திய உளவுத்துறை அனுமதித்திருக்காது. எம்மவர்களிடம் தமது இனம் குறித்து மேன்மையான இனம் என்ற ஒரு கற்பனை இருக்கின்றது,, அந்த கற்பனை மேன்மைக்கு ஏற்ப ஒரு தலமையையும் கற்பனை செய்கின்றபடியால் முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் சாதி மதம் பிரதேசவாத ஏற்றதாழ்வுகளை கடந்து இனம் என்ற ஒரு கட்டமைப்பை நோக்கி நகர எத்தனிக்கின்றோமே தவிர நாம் ஒரு முழுமையான இனக்கட்டமைபில் இல்லை.பானையில் இல்லாத ஒன்றை அகப்பையில் தேடுவது போல தலமையை தேடுகின்றோம். சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.
 39. 1 point
  எத்தனை முறை பார்த்தாலும்... சலிப்பு வராத காணொளி.
 40. 1 point
  இந்த துறைமுகத்தை சீனா இலகுவில் கைவிடாது. அவர்களது பட்டு பாதை திடடத்தின் ஒரு முக்கியமான இடம்தான் இந்த துறைமுகம். இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளும் உடன்படிக்கையானது இலகுவில் மற்றம் செய்ய முடியாது இரு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல். இருந்தாலும் இலங்கையை சீனாவினால் பகைக்க முடியாது. எனவே நிச்சயமாக ஒரு மாற்றம் செய்யப்படும். இருந்தாலும் சீனாவின் பலம் அதில் மேலோங்கியே இருக்கும்.
 41. 1 point
  இதுவரை ஒன்டுக்குமே உதவாத சம்பந்தன், சுமந்திரன், மாவை, துரைசிங்கம், ஆனந்தசோணகிரி, எல்லாம் ஒதுக்கினால் நல்லதொரு வெளி பிறக்கும்.
 42. 1 point
  ஐங்கரநேசன் போன்ற பாத்தீனியம் செடிகளை உள்வாங்கினால் கதை கந்தலாகப் போய்விடும் பாத்தீனியம் செடிகளை புடுங்கி எறிவது தான் நல்லது.
 43. 1 point
  அருந்தவபாலன் நல்லாத்தான் ஜோக் அடிக்கிறார்! அதெப்படி அதே புல்லுருவிகளிடமும், ஆட்சியாளர்களிடமும், விலை போனவர்களிடமும், மக்களை ஏமாற்றியவர்களிடமும் தங்களைத் தாங்களே விரட்டியடிக்க கூறமுடியும்? பல்கலை மாணவர் ஏற்படுத்திகொண்டுவந்த ஒற்றுமையை அறிக்கைகள் விட்டு குழப்பியடித்த தங்கள் பங்கை அருந்தவபாலன் கூறட்டும்!
 44. 1 point
  ஒவ்வொரு ஜனாதிபதிபதியும் என்ன மனநிலையில் இருந்து பேசுகிறார்கள் என்பதுதான் உண்மையான பிரச்சனையே. எல்லா இலங்கையருக்குமான ஜனாதிபதியா அல்லது பவுத்த சிங்களவருக்கான ஜனாதிபதியா என்பதிலிருந்தே எல்லாம் ஆரம்பமாகிறது. அவர் யாருக்கு ஜனாதிபதி என்பதை அவரது பேச்சிலிருந்து புரிந்துகொள்ளலாம். அப்படியான மனநிலையில் இருந்து அவர் இனப் பிரச்சனைக்கு தீர்வை காணமுடியும். தருவதை பெற்றுக்கொள்ளுங்கள் என்பதற்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை கொண்டுவருவதற்க்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது. எனது பார்வையில், இவருக்கு மற்றெல்லா ஜனாதிபதிக்கும் இல்லாத அருமையான சந்தர்ப்பம் (Golden opportunity ) கிடைத்துள்ளது. வரலாறில் இடம் பிடிப்பாரா இல்லையா என்பது அடுத்த ஆண்டே விடை தெரியும். அப்படி அவர் எல்லோருக்குமான ஜனாதிபதியாக முனைந்தால் SWRD Bandaranayake வுக்கு நடந்ததுதான் இவருக்கும். நன்மை நடந்தால் மகிழ்ச்சியே
 45. 1 point
 46. 1 point
  தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது. எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
 47. 1 point
  இங்கேயிருந்து போய் அங்கு ஓவராய் படம் காட்டினால்,அவர்களும் அதிகம் எதிர்பார்ப்பார்கள்...பொதுவாக அங்கிருப்பவர்கள் நினைப்பது இங்கு காசு கொட்டிக் கிடக்குதுக்கு என்று ...பொறுமையாய் விளங்கப்படுத்தினால் விளங்கிக் கொள்வார்கள் விலைவாசி ஏறிக் கொண்டு போவதால் அங்கும் இருவரும் உழைத்தாலும் காணுதில்லை என்பார்கள்... இங்கேயும் அப்படித் தானே ! கிரெடிட் காட் இருப்பதால் இங்கு சமாளிக்கிறார்கள் அங்கு இருப்பவர்களுக்கும்,இங்கு இருந்து போவோருக்கும் இடை வெளி இருக்கு தான் ...நான் பார்த்த அங்கிருக்கும் சிலர் சாப்பாட்டுக்கு காசு செலவழிப்பதில்லை ...அவர்களுக்கு காசு சேர்ப்பதில் தான் ஆர்வம்..இங்கேயும் அப்படி இருக்கினம். இங்கேயிருந்து போவோருக்கு வடிவாய் உடுத்த விருப்பம். இங்கேயிருந்து போவோர் ஹொலிடேக்கு தான் வந்து இருக்கிறார்கள் ஈன்று அங்கிருப்பவர்கள் நினைப்பதில்லை...அங்கிருப்பவர்கள் ஹொலிடேயே போயிருக்க மாட்டினம்,இங்கத்தையே வாழ்க்கை முறை தெரியாது...விளங்கப் படுத்தி சொன்னால் விளங்குவார்கள்.
 48. 1 point
  வெளிநாட்டு வாழ்க்கைக்காக சில பெண்கள் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள். என்கிறார் கட்டுரையாளர் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது யாருக்கும் கட்டாயம் இல்லை. அவரவர்கள் தங்களுக்கு ஏற்ப வாழட்டும். இதை ஒரு ஆண் செய்தால் அதை அப்படியே விட்டு விடுகிறோம். நிறைய பார்த்திருக்கிறேன். நான் அறிந்த வகையில் பலர் தாங்கள் வாழும் நாடுகளிலேயே நிலைத்து அந்த நாட்டவர்களாக ஆகிப் போனார்கள். அவர்களது அடுத்த தலைமுறைக்கு அவர்கள் வாழும் நாடுதான் சொந்தநாடு. கோடை விடுமுறைக்கு தாயகம் போன இடத்தில் கட்டுரையாளரிடம் இருந்து நன்றாக பணத்தை கறந்து விட்டார்களோ என்ற கேள்வி என்னிடம் இருக்கிறது.
 49. 1 point
  பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை மீறி மட்டக்களப்பு வாகரையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு காட்சிகள் மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை மீறி மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பிரதான ஈகைச் சுடரினை கரும்புலி மேஜர் ரங்கன் அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார். இதில் ஆயிரக்கணக்கான மாவீரர் குடும்பங்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். எழுச்சி பாடல்கள் ஒளிபரப்பு செய்வதற்கும், மாவீரர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்துவதற்கும் பொலீசார் தடைவிதித்ததிருந்தனர். மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்னால் நடப்பட்ட கொடிகளை அகற்றுமாறும் ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததிருந்தனர். மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த வாகரை பிரதேசத்திற்குள் நுழையும் பகுதிகளில் வழமைக்கு மாறாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வீதியில் செல்லும் வாகனங்கள் சோதனையும் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஏராளமான பொதுமக்கள் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/132000
 50. 1 point
  சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை, அடிமைச் சுபாவம் ஆரோக்கியமானது இல்லை. முக்கிய தருணங்களில், தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்ற பொழுதிலெல்லாம் சிங்கள-பௌத்த கொலைகார்கள் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தி உலக அனுதாபத்தை பெற்று காலத்தை கடத்துவது அவ்வப்போது நடந்து வந்திருக்கிறது. ஐ.நா. சபைக்கு சிங்கள-பௌத்த கொலைகார அரசு பொறுப்பான பதிலைக் கூறவேண்டிய நேரேத்தில் தான் மைத்திரி-மகிந்த-ரணில் ஆட்சி கவிழ்ப்புக் கூத்துக்கள் நடந்தன. இந்த நாடகத்துக்குள் விழுந்தடித்து குள்ளநரி ரணிலுக்கு முண்டு கொடுத்த சம்மந்தன்-சுமந்திரன் கூட்டில் இயங்கும் கூத்தமைப்பு மூடர்கள் சிங்கள-பௌத்த கொலைகார அரசின் மீது அதிகரித்துவந்த சர்வதேச நெருக்கடியை குறைப்பதற்கு பெரும் உதவி செய்தனர். கூத்தின் முடிவில் சிங்கள-பௌத்த கொலைகாரர்களான ரணிலும் - கோட்டாபயவும் அலரிமாளிகையில் சந்தித்து சிரித்து மகிழ்ந்திருந்தனர். மைத்திரி-ரணிலின் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு அமைந்த காலத்தில் ஐ.நா. சபையில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஓடியோடி குத்திமுறிந்த சொதப்பல் சுமந்திரன் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு பயங்கரவாதிகளின் மீதான அழுத்தத்தை குறைக்கவே உதவினார். சம்மந்தனும் போர்க்குற்றவாளிக் கும்பல்களில் ஒன்றான இந்திய அரச கொலைகாரர்கள் எதிர்நோக்கிய ஆபத்தை அகற்ற திக்கித்திக்கி உழைத்தாரே தவிர பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்களைப் பற்றி சிறிதும் அக்கறை எடுக்கவில்லை. எனவே அதே அடிமைச் சேவக மனநிலையுடன் சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை ஆரோக்கியமானது இல்லை.