• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. ampanai

    ampanai

    கருத்துக்கள உறுப்பினர்கள்


    • Points

      5

    • Content Count

      10,936


  2. putthan

    putthan

    கருத்துக்கள உறுப்பினர்கள்


    • Points

      5

    • Content Count

      11,905


  3. nedukkalapoovan

    nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      30,084


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      53,683



Popular Content

Showing content with the highest reputation on சனி 15 பிப்ரவரி 2020 in all areas

  1. 5 points
    தொலை பேசி ,முகப்புத்தகம்,யுடுயுப்,வட்சப் இது இல்லாமல் நம்மட வாழ்க்கை இல்லை என்ற காலம் இப்ப பொழுது . ஒருகாலத்தில் முற்சந்தி ,படலையடி ,பொட்டுகள் வாசிகசாலை,விளையாட்டு மைதானங்கள் தான் எமது கருத்து பரிமாற்றங்கள் வீட்டு வேலை செய்ய கள்ளம் அடித்து எனது அறையில் அமைதியாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்,மெசெஞர் அலரியது பார்த்து கொண்டிருந்த நயன்ந்தாராவின் படத்திற்கு மேலே குகன் கொலிங் ஆன்சர் என்று வந்தது... இவனுக்கு ஆன்சர் ப‌ண்ண வெளிக்கிட்டால் இன்றைய பொழுது அதோ கதி என்று எண்ணியபடி மவுஸை வேறு இடத்திற்கு மாற்றினேன் ஆனால் எனது காலக‌ஸ்டம் மவுஸ் ஆன்சர் என்ற இடத்தில் போய் கிளிக் ப‌ண்ணிவிட்டது. "ஹலோ மச்சான் எப்படிடா இருக்கிறாய் ,என்ன சிட்னி எரியுதாம் புஷ் வயராம்" "எங்களுக்கு பிரச்ச்னை இல்லை நாங்கள் சிட்டியில் தானே இருக்கிறம்,புஷ்வ‌யர் காடுகளுக்குள் தானே நட‌க்கின்றது அதை விட்டுத்தள்ளு நீ எப்படி இருக்கிறாய்" "இங்க கனடா டிவியில் ஒரே அவுஸ்ரேலியா புஷ்வயரை த்தான் காட்டி கொண்டு நிற்கிறாங்கள்,சில சனம் அகதியா வெளிக்கிடுதுகள் போல இருக்கு" "சில வெள்ளைகள் காடுகளுக்குள் வீடுகளை கட்டி வாழ்ந்து கொண்டிருக்குங்கள் அதுகள் தான் பாதிக்கப்பட்டிருக்குங்கள்" "மச்சான் அங்க இருக்க பிரச்சனை என்றால் எங்கன்ட கனடாவுக்கு வாடாப்பா ,உண்மையிலயே கனடா அந்த மாதிரியான நாடு புஷ்வயர்,சுறாவளி,வெள்ள பெருக்கு என்று ஒரு கோதாரியும் இல்லை" "கனடா உங்கன்ட நாடோ?" "பின்ன " "என்கன்ட அவுஸ்ரேலியாவும் திறம் கண்டியே நான் சிட்னியில சிட்டியில் இருக்கிறன் புஷ்வயர் எட்டியும் பார்க்காது" "சரி மச்சான் பத்திரமா இரு வெளிக்கிடவேணும் என்றால் உடனே கனடாவுக்கு வா,என்ட வீட்டில நிற்கலாம்...Bye." ஊடகங்கள் நல்லாத்தான் பெடியை பயப்ப‌டுத்திபோட்டுது என நினைத்து கொண்டு மீண்டும் முகப் புத்தகத்தில் முகத்தை நுழைத்தேன்...மீண்டும் மெசன்ஞரில் இங்கிலாந்து நண்பனிடமிருந்து அழைப்பு " ஹலோ மச்சான் என்னடாப்பா நீ face book லயும் whatsapp லயும் நிற்கிறாய் அவுஸ்ரேலியா பத்தி எறியுதாம் என்று இங்க நியூஸில சொல்லிக்கொண்டிருக்கிறாங்கள் ..நீ விளையாடிக்கொண்டிருக்கிறாய்" அவ‌னுக்கும் அதே பதிலை சொல்லி நான் சிட்னியில் சிட்டியில் இருக்கிறன் என்று ஒரு கெத்தை காட்டினேன். " நான் சிட்டியில் இருப்பதால பிரச்சனை இல்லை, கொஞ்சம் காடுகள் அழிந்து போய்விட்டது " "ஒம்டாப்பா மில்லியன் கணக்கில் மிருகங்கள் செத்து போயிட்டுதாம் ...மிருகங்கள் தான் பாவம் " "உலகில் மனிதர்கள் கொத்து கொத்தாய சாகிறார்கள் நீ என்னடா என்றால் மிருகங்களுக்கு பாவம் பார்க்கிறாய்" "என்ட நாய் போன‌கிழ‌மை செத்து போய்விட்டது வீட்டில் நாங்கள் ஒருத்தரும் இர‌ண்டு நாளாக சாப்பிடவில்லை அவ்வளவுக்கு நாங்கள் மிருகங்களுடன் பாசமா இருக்கிறோம்" "நல்லவிடயம் மச்சான், அது சரி உங்க இப்ப எத்தனை மணி ?" "ம‌தியம் 12 ஆகிறது" "சாப்பிட்டாச்சே" "இல்லைடாப்பா இன்றைக்கு எங்க‌ன்ட கிரிக்கட் கிளப் பெடியள் பார்க்கில BBQ போடுறாங்கள் இரண்டு பியரை அடிச்சு போட்டு வர இன்றைய பொழுது சரியாகிவிடும்" "animal lover என்று சொல்லுறாய் நீ இப்ப மச்சம் சாப்பிடுறதில்லையே" "சும்மா போடா Barbequeக்கு போறதே அதுக்குத்தானே,சரி மச்சான் நேரம் போகுது நான் பிறகு எடுக்கிறேன்" முகப்புத்தகத்தை மூடி வைத்து போட்டு whastapp யை திறந்தேன் 65 விடுப்பு உனக்காக காத்திருக்கு என்று அது சொன்னது. ஐந்தாறு குறுப்பில் இருந்தால் இப்படித்தான் விடுப்புக்கள் வ‌ரும் என மனம் சொன்னது. ..வேலை குறுப்,பாடசாலையில் படிச்ச பெடியளின்ட குறூப்,சொந்தகாரங்கள் குறூப்,பக்கத்துவீட்டுக்காரிகள் குறூப்,அங்கத்தவராக இருக்கும் சங்கங்களின் குறூப்....இப்படி பல....சில சமயம் ஒரே விடுப்பை எல்லா குறூப்பும் பகிர்ந்து கொண்டிருப்பினம் அதுதான் கொஞ்சம் கஸ்டமா இருக்கும் மற்றும்படி விடுப்பு அறிவது என்றால் ஐயாவுக்கு அலாதி பிரியம்... எல்லா விடுப்புக்களையும் தட்டி பார்த்து கொண்டிருக்கும் பொழுது அடுத்த whatsapp call வந்தது ...என்ன என்று தான் கண்டுபிடிக்கிறாங்களோ தெரியவில்லை நான் வெட்டியா இருக்கிறேன் என்று புறுபுறுத்தபடி பெயரை பார்த்தேன் குகன் from USA இருந்தது answer அழுத்தி புஷ்வயரைப்பற்றித்தான் இவனும் கேட்க போறான் என்று நினைத்து " ஹலோ மச்சான் நான் இருக்கிரது சிட்டியில் இங்க புஷ்வயர் இல்லை" "அடே என்னடா நான் சும்மா சுகம் விசாரிப்போம் என்று எடுத்தா நீ புஷ்வயர் மெஸ்வயர் எங்கிறாய்" "கனடாகாரர்,லண்டன்காரர் எல்லாம் எடுத்து புஷ்வயரைப்பற்றித்தான் கேட்டவங்கள்...அது தான் மச்சான்" "இங்கயும் புஷ்வயர் வாரதுதான் நாங்கள் எங்கன்ட பாடு ,தாயகத்தில சனம் பாடுபடும் பொழுதே கண்டுக்கவில்லாயாம் இதில புஸ்வயரை பற்றித்தான் கண்டுக்க போறம்'" "சரியா சொன்னாய்" " கிறிஸ்மஸ் கொலிடெக்கு வெளியால எங்கேயும் போறீயோ" "ஒம்டாப்பா நாளைக்கு வெளிக்கிடுகிறேன் ,சிட்டியிலிருந்து ஆறு மணித்தியால ஓட்டம் விக்டோரியா போடருக்கு கிட்ட " "சரிடாப்பா நான் வைக்கிறேன் நீ திரும்பி வந்த பிறகு எடு" (Eden is a coastal town in the South Coast region of New South Wales, Australia. The town is 478 kilometres south of the state capital Sydney and is the most southerly town in New South Wales),ஏற்கனவே ஒழுங்கு செய்த கிறிஸ்மஸ் விடுதலைக்கான பயணத்தை அடுத்தநாள் தொடங்கினோம் .Eden என்ற சவுத்கோஸ்ட் நகரத்தில் விடுதலைய கழிப்பதாக‌ முடிவெடுத்து அங்கு தங்குவதற்கு வீடு ஒழுங்கு செய்திருந்தனர் கந்தர் குடுமபம் . சிட்னியிலிருந்து தெற்கு கரையோரமாக உள்ள சில நகரங்களில் காட்டுதீ காரணமாக பாதைகள் மூடியிருந்தபடியால் அவுஸ்ரேலியா தலைநகரம் கன்பரா ஊடாக எமது பயணம் அமைந்திருந்தது. நாலு காரில் எடன் நோக்கி எமது பயணம் உறவினருடன் ஆரம்பமானது .கன்பராவில் உள்ள மக்டோனாலில் மதிய உணவை உண்பதற்காக வாகனத்தை நிறுத்தினோம்.காரை விட்டு வெளியே வந்த பின்புதான் , வழ‌மைக்கு மாறானா வெப்பநிலை நிலவுகின்றது என்பதை உணர முடிந்தது.எல்லோரும் மக்டோனாலினுள் போட்டி போட்டுக்கொண்டு ஒடினோம் சாப்பிடுவதற்கு அல்ல வெப்பம் தாங்க முடியாமல்,உள்ளே சென்று குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து மனைவி கொண்டு வந்த பேகரை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது " என்ன வெட்கை சிட்னியை விட இங்க கொளுத்து வாங்குது" என்ற படி வந்தார் கையில ஒரு சிறிய சான்விட்ச்சும் தண்ணீர் பொத்தலுடனும் உடன்.வழமையாக டபிள் பேகரும் கொக்கும் அடிக்கும் காய் இன்றைக்கு சான்விட்ச்சும் கொக்குடனும் நிற்பதை கண்ட என‌க்கு கன்பராவெப்பநிலையை விட இது பெரிய விட‌யமாக இருந்தது. "ஒம் சரியான வெட்கையா இருக்கு 40 இருக்குமோ" "சும்மா விசர் கதை கதைகிறீர் சிட்னியில் 40 பிறகு கொள்பேர்னில் 42 இங்க 46 காட்டுது என்ட‌ காரில் " என புள்ளிவிபரம் சொன்னார். "என்ட காரிலயும் காட்டியிருக்கும் நான் கவ‌னிக்கவில்லை" "உம்மட காரில் இருக்கோ தெரியவில்லை நான் போன கிழமை புதுசு எடுத்தனான்" "என்ன டோயோட்டாவோ" ஒரு சிரிப்பு சிரிச்சு போட்டு " நான் வந்த நாள் தொடக்கம் பெண்ஸ் தான் ஒடுகிறேன் ,இப்ப அவிட்டதும் லெட்டஸ்ட் சிறிஸ்" " நான் கவ‌னிக்கவில்லை " " கவனிக்கவில்லையோ உம்மை எத்தனை தரம் ஒவர்டேக் பண்ணிகொண்டு வ‌ந்தனான் கவ‌னிக்கவில்லை என்று சொல்லுறீர் " என்ன உதுல நின்று அவரோட அலட்டி கொண்டிருக்கிறீயள் நேரம் போகுது என கந்தரின்ட மனிசி கத்த‌ "இவள் ஒருத்தி ஐந்து நிமிடம் ஒருத்தருடன் கதைக்க விடமாட்டாள்" என புறு புறுத்து கொண்டு எழும்பினவர் "உந்த வெய்யிலுக்குள்ள ந‌டந்து போனால் கறுத்து போய்விடுவேன் "என்று சொல்லிய படி ஓடிப்போய் காருக்குள் ஏறினார் . அவரை தொடர்ந்து நாங்களும் வெளியேறி எமது பய‌ணத்தை தொடர்ந்தோம்.போகும் வழியில் காடுகள் தமது பச்சை தன்மையை இழந்து மழைக்காக ஏங்கி கொண்டிருந்ததை பார்க்க கூடியதாக இருந்தது.. நீச்சல் குளத்துடன் கடற்கரைக்கு அருகாமையில் எமது வாடகை வீடு அமைந்திருந்தது.உள்ளே சென்று பொருட்களை இறக்கி வைத்து வீட்டை சுற்றி பார்த்துவிட்டு,இரவு உணவு வீட்டில தயாரிப்போமா மக்கிக்கு போவோமா என்று நான் கேட்க‌ "நான் மரக்கறி ஸ்டிம் பண்ணி சாப்பிட போறன் ,நீங்கள் போற‌து என்றால் போங்கோ" என்றார் கந்தர் . உண்மையிலயே அவரின்ட நடத்தையில் பாரிய வித்தியாசத்தை இந்த தடவை பார்க்க கூடியதாக இருந்தது.இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தான் தெரியாமல் இருந்தது மலிந்தால் சந்தைக்கு வ‌ரும் தானே என நினைத்து விட்டு அவரிடம் நான் இது பற்றி கேட்கவில்லை... எங்களுடன் வந்த இன்னுமோரு உறவு சொல்லிச்சு "அவர் மரக்கறி அவிச்சு சாப்பிடட்டும் நீர் வாரும் ஐசே போய் எங்கன்ட அலுவலை பார்த்து போட்டு வருவம் என்று" நீச்சல் குளத்துடன் கடற்கரைக்கு அருகாமையில் எமது வாடகை வீடு அமைந்திருந்தது.உள்ளே சென்று பொருட்களை இறக்கி வைத்து வீட்டை சுற்றி பார்த்துவிட்டு,இரவு உணவு வீட்டில தயாரிப்போமா மக்கிக்கு போவோமா என்று நான் கேட்க‌ "நான் மரக்கறி ஸ்டிம் பண்ணி சாப்பிட போறன் ,நீங்கள் போற‌து என்றால் போங்கோ" என்றார் கந்தர் . உண்மையிலயே அவரின்ட நடத்தையில் பாரிய வித்தியாசத்தை இந்த தடவை பார்க்க கூடியதாக இருந்தது.இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தான் தெரியாமல் இருந்தது மலிந்தால் சந்தைக்கு வ‌ரும் தானே என நினைத்து விட்டு அவரிடம் நான் இது பற்றி கேட்கவில்லை... எங்களுடன் வந்த இன்னுமோரு உறவு சொன்னார் "அவர் மரக்கறி அவிச்சு சாப்பிடட்டும் நீர் வாரும் ஐசே போய் எங்கன்ட அலுவலை பார்த்து போட்டு வருவம் என்று" நாங்கள் எங்கன்ட அலுவலை பார்த்து போட்டு ஸ்டேடியா அதே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் ,கந்தரை தேடினேன் "அவர் கார் ஒடி கலைத்துவிட்டார் "என கந்தரின் மனைவி சொன்னார். "எங்க போனீங்கள் இவ்வளவு நேரமா சொல்லவுமில்லை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் " என்றால் என்ட‌ மனிசி. "நான் சொல்லி போட்டுத்தான் போனானான் உமக்கு கேட்கவில்லை போல, மொபைலுக்கு அடிச்சிருக்கலாமே" "மொபைலை கொண்டு போனால் தானே ,அது இங்க இருக்கு" உண்மையிலயே மறந்து போனது போல பொக்கற்றை தட்டி பார்த்த பிறகு சொன்னேன் "விட்டிட்டு போய்ட்ட‌னே?" "அது சரி புது இடங்களில் இருட்டுக்குள்ள எங்க சுற்றிகொண்டிருக்கிறீயள் வ‌ந்து சாப்பிட்டு போட்டு படுங்கோ" "நான் என்ன‌ குழந்தை பிள்ளையே " " கந்தண்ணையை பாருங்கோ வந்தார் சாப்பிட்டு போட்டு படுத்திட்டார் ,தண்ணி வெண்ணி ஒன்றுமில்லை அவரின்ட ம‌னிசி கொடுத்து வைச்சவர்" " அப்ப அவரை கட்டியிருக்கலாமே " "கோலிடெ வந்த இடத்தில சும்மா கொளுவாமல் போய் படுங்கோ" என்ன என்று கண்டுபிடிக்கிறாளாவையளோ தெரியவில்லை என மனதில் நினைத்தவாறு நித்திரா தேவியை தழுவினேன். விடுதலை நாட்களிலும் காலை ஐந்து மணிக்கு எழும்பிவிடுவேன் ,கோப்பியை குடித்து கொண்டு இயற்கையை ரசித்தபடியிருந்தேன். "என்னப்பா உங்களுக்கு நித்திரை வராட்டி நித்திரை கொள்ளுற ஆட்களையாவது படுக்க விடுங்கோ" "இஞ்சாரும் சண்ரைஸ் இன்னும் பத்து நிமிசத்தில் வருமாம் பார்க்கவில்லையா?" "ஏன் சிட்னியில் சண் ரைஸ் பண்ணிறதில்லையே" "இது கொஞ்சம் வடிவா இருக்குமாம்" கடல் கடந்து வந்து கடற்கரையில் அமர்ந்து கதிரவன் வரவை காலை காட்சியுடன் காண்பதற்காக‌ கண் விழித்து காத்திருக்கையில் அவனோ கார்மேகத்தினுள் மறைந்திருந்து கடுப்பேத்துகிறார்... பதில் வரவில்லை கொரட்டை தான் வந்தது. த‌னியாக இருந்து சூரிய உதய‌த்தை ர‌சித்து கொண்டிருந்தேன்...அதை பார்த்தவுடன் ஒரு குட்டி கவிதை எழுதி கந்தரின்ட வட்சப்புக்கு அனுப்பினேன்... அவர் படித்து போட்டு பதில் அனுப்பினார் சனம் புஷ்வயரில் கஸ்டப்படுகிதுகள்...நீர் குடிச்சு கும்மாளம் அடிச்சு கொண்டு கவிதை எழுதிகிறீர் என்று பதில் போட்டார்.. ஐசே நான் வன்னியில் பிரச்சனை நடக்கும் பொழுது கொழும்பில் போய்நின்று போட்டு அவுஸ்ரேலியாவுக்கு வந்து சிறிலாங்கா அந்த மாதிரியிருக்கு என்று சொன்னா ஆள்....என பதில் போட்டேன்.... இன்னும் பதில் வரவில்லை மத்தியாணம் சாப்பிட்ட பிறகு பதில வரும்.....
  2. 3 points
    ஊர் விட்டு ஊரோடி வான் விட்டு நாடோடி நிலவரம் கலவரமாக நீயே என் கதி என ஊர்ப்புதினத்தின் விடுப்புக்காரி கண் எதிரே திரை விரித்தாய். தாய்க்கு நிகர்த்து மொழி பேசி உறவுக்கு நிகர்த்து கதை பேசி கடுகதி வாழ்வில் கனதிகள் குறைக்கும் திரைபேசியானாய் நான் அலைபேசி மறந்தேன். காலவெளியில் கண்ட சங்கதிகள் ஆயிரம் ஆயிரம் அத்தனையும் அடக்கி அமுசடக்கமாய் வளர்ந்து குமரியாய் குலுங்கி நிற்கும் யாழே... நீயே என் மனதை தைத்த மோக முள்... ஊர் தொலைத்தவனின் ஊனத்தை ஊமையாய் புரிந்து கொண்டவள்..! சாதனைக்குள் சோதனை சாதாரணம்..! சார்ந்திருந்தோர் எதிர் நின்றோர் எல்லாம் தாண்டி சதா நிகழும் மாற்றங்கள் மத்தியில் தானுமாய் மாறி தன் அடையாளம் காக்கும் யாழே.. நீயே என் மனதைக் கூட்டித் தைத்த தையல் ஊசி..! காலத்தால் நீ கிழவி ஆனாலும் நான் கிழவன் ஆனாலும் தமிழால் நீ என்றும்.. தலை நிமிர்வாய் தமிழருக்காய் நீ வாழ்ந்திருப்பாய் வரலாறாய் வாழி என் தோழி. ஆக்கம் - நெடுக்ஸ் [15-02-2020]
  3. 3 points
    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொடக்கப்பள்ளி ஒன்றின் மாணவர்கள் மனதில் திருக்குறளை பதியவைக்க, அப்பள்ளியின் ஆசிரியை எடுத்துள்ள வித்தியாசமான முயற்சி நல்ல பலனை அளித்துள்ளது. சாத்தூர் அடுத்துள்ள மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் ஜெயமேரி. உலகப் பொதுமறையாம் திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு செல்ல வித்தியாசமான முறையை கையிலெடுத்தார். தாம் பங்கேற்கும் இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட்டு அவர் சேமிக்கிறார். அங்கு பயிலும் 130 மாணவ மாணவிகளுக்கும் உண்டியல்களை வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் சொன்னால் தன் உண்டியலில் இருந்து ஒரு ரூபாய் வழங்குகிறார்.திருக்குறளோடு அதற்கான பொருளும் சொன்னால் 2 ரூபாயை வழங்குகிறார்.இதனால் குழந்தைகள் ஆர்வத்தோடு திருக்குறளை பயில்வதுடன், சேமிப்புப் பழக்கமும் வாசிப்புப் பழக்கமும் வளர்வதாக கூறுகிறார் ஆசிரியை ஜெயமேரி. மேலும் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி, குழந்தைகளின் தனித்திறன்களை வீடியோவாக பதிவிட்டு ஊக்குவிக்கிறார். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கு இணங்க, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணவும் ஆசிரியை ஜெயமேரி தவறுவதில்லை. ஈ மொய்க்கும் திண்பண்டங்களை வாங்கி உண்ணாதிருக்க, சிறுதானிய திண்பண்டங்களை இலவசமாக வழங்குகிறார். அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரின் மாணவர்களை ஊக்குவிக்கும் செயலை பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வரவேற்கின்றனர். https://www.polimernews.com/dnews/100595/மாணவர்கள்-மனதில்திருக்குறளை-பதியவைக்கஆசிரியையின்-வித்தியாசமானமுயற்சி
  4. 2 points
    பாலியல்த் தொழிலாளியும் ஒரு ஆசா பாசங்கள் உள்ள ஒரு பெண்தான் என்று உணரும்போது அவளுக்காக செய்வது அபத்தமாகத் தெரியாது என்பது எனது தாழ்மையான கருத்து.
  5. 1 point
    ‘டளிடா…’-சிறுகதை-சாத்திரி நடு இணைய சஞ்சிகைக்காக .... வரிசை மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வருச கடைசி வேற. நத்தாருக்கு பரிசு அனுப்புகிறவர்கள் பொதிகளோடு காத்து நின்றார்கள். நான் பணம் அனுபுவதுக்காக வெஸ்ரன் யூனியன் படிவத்தை நிரப்பி கையில் வைத்திருந்தபடி நின்றிருந்தேன். இந்த நாட்டில் எனக்கு போகப் பிடிக்காத இரண்டு இடங்கள்: முதலாவது வைத்திய சாலை,இரண்டாவது தபாலகம். இரண்டிடத்திலும் வரிசையில் காத்திருப்பதென்பது எனக்கு கொலைக்களத்தில் காத்திருப்பது போல. அவளுக்கு வழமைபோலக் கொடுத்த வாக்குறுதிக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை. மெதுவாகநகர்ந்த வரிசையில் சுமார் அரை மணித்தியாலம் கழித்து எரிச்சலோடு அதைக் காட்டிக் கொள்ளலாமல் காலை வணக்கம் சொல்லியபடி படிவத்தையும் பணத்தையும் என் அடையாளஅட்டையையும் நீட்டினேன். நீண்ட முக்கில் கண்ணாடி போட்டிருந்த பெண் அதை வாங்கி சரிபார்த்தபடி, “நீங்கள் மொறோக்கரா ? என்றாள். “இல்லை…ஏன் ?” “மொறோக்கோவுக்குப் பணம் அனுப்புகிறீர்கள், அதான் கேட்டேன்.” “மொறோக்கர் தான் மொறோக்கோவுக்கு பணம் அனுப்பலாம் என்கிற புதுசட்டம் ஏதும் வந்திருக்கிறதா… ? நான் பல தடவை அனுப்பியிருகிறேனே?” என்று கொஞ்சம் எரிச்சலாகவே கேட்டேன். “அப்படி எல்லாமில்லை. சும்மாதான் உங்களை பார்த்தால் மொறோக்கர் போல தெரியவில்லை. அதான் கேட்டேன்.” என்றபடி, பணத்தை வாங்கி கணணியில் விபரங்களை பதிவு செய்து ஒரு படிவத்தை கையில் தரும்போது, “என்னுடைய மூதாதையர்கள் மொறோக்கர்கர்கள். அதுதான் கேட்டேன். வேறொன்றும் தவறாக நினைக்க வேண்டாம்.” என்றபடி நீட்டினாள். “ஓ……… சரி மன்னிக்கவும். எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது. அந்த பதட்டம், நன்றி.” என்றபடி அதை வாங்கி அங்கேயே மேசையில் வைத்து கைத்தொலைபேசியில் படமெடுத்து மொறோக்கோ இலக்கத்துக்கு அனுப்பிவிட்டு, வேகமாகப் போய் வாசலில் கிடந்த பத்திரிகை கடிதங்களை பொறுக்கியபடி கடையை திறந்து, கோப்பி மெசினை இயக்கிவிட்டு பத்திரிகையை தலைப்புக்களை மட்டும் மேலோட்டமாக பார்த்தேன். ஓய்வுதிய வயதெல்லை அதிகரிப்புக்கு எதிராகத் தொடரும் போராட்டம். ஈரான் அமெரிக்க முறுகல் வலுக்கிறது. எரித்துக்கொல்லப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்பு. புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாமென புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை. அவுஸ்திரேலியா தீ விபத்து, பல இலச்சம் விலங்குகள் உயிரிழப்பு என்று தொடர்ந்தது. “ச்சே…… வருசக்கடைசியானா ஒரே இழவுச் செய்தி. இந்த வருசம் விமான விபத்து, சுனாமி இரண்டும் தான் நடக்கேல்ல”. என்றபடி பத்திரிகையை ஏறிந்து விட்டு கோப்பியை உறுஞ்சியபடி அவளின் இலக்கத்துக்கு போனடிதேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. மீண்டும் சில தடவை முயற்சி பண்ணிப் பார்த்து விட்டுப் “பணம் அனுப்பி விட்டேன்.அதன் விபரமும் போட்டோ எடுத்து அனுப்பி விட்டேன்”. என்று செய்தி வைத்து விட்டுக் கதிரை மேசைகளைத் துடைத்து ஒழுங்கு பண்ணத் தொடங்கியிருந்தேன். ‘இருவர் உள்ளே நுழைந்தார்கள். மேசை கதிரை அடுக்க முதலே காலங் காத்தாலையே குடிக்க வந்திட்டாங்கள்’. என்று நினைக்கும்போதே முன்னால் வந்து நின்ற இருவரும், சட்டென்று அடையாள அட்டையை தூக்கி காட்டி, “டளிடாவை உனக்கு எப்படி தெரியும் ?” என்றார்கள். இரகசிய பொலிசாரின் திடீர் கேள்வியில் கொஞ்சம் தடுமாறிப் போனாலும் சமாளித்துக்கொண்டு, “தெரியும். கடைக்கு அடிகடி வருவாள். அவ்வளவுதான்.” என்றதும், “இப்போ சிறிது நேரத்துக்கு முன்னர் நீ அவளுக்கு பல தடவை போனடித்திருக்கிறாய். பணம் அனுப்பியதாக செய்தி வைத்திருக்கிறாய். என்ன பணம்? யாருக்கு அனுப்பினாய்?” இந்தக் கேள்வியில் எனக்கு லேசாய் தலைசுற்ற ஆரம்பித்திருந்தது. “அது அவளின் அம்மாவுக்கு. அவளே அனுப்பச்சொல்லி கொடுத்திருந்தாள். அவ்வப்போது உதவியாக கேட்பாள். நானும் அனுப்புவேன்.” என்று சொன்னபடி, ஓடிப்போய் பணம்அனுப்பிய படிவத்தை எடுத்துக் காட்டினேன். அதை பார்த்தவர்கள். “சரி நீ கடைசியாக எப்போ அவளை பார்த்தாய்?” “நேற்று இரவு எட்டு மணியளவில் கடைக்கு வந்து ஊருக்கு அனுப்பச்சொல்லி பணம் கொடுத்து விட்டு போனாள். பின்னர் நான் வேலை முடிந்து போகும்போது பதினோரு மணியளவில் அவள் வழமையாக நிக்குமிடத்தில் பார்த்து தலையாட்டி விட்டு போய் விட்டேன்.” என்றதும், என் பெயர் விபரங்களை பதிவு செய்தவர்கள். புறப்படும்போது, “ “அவளுக்கு என்ன நடந்தது ? என்றதும், “உனக்கு செய்தி பார்க்கும் பழக்கம் உண்டா ?” “ஓம்……… ஒவ்வொரு நாளும் பார்ப்பேன்.” “அப்போ செய்தியை பார்த்து அறிந்து கொள்.” என்று விட்டு போய் விட்டார்கள். நான் அவளுக்கு போனடித்தது இவர்களுக்கு எப்படித் தெரியும்? ஒரே குழப்பமாக இருந்தது. ஒரு வேளை அவளைக் கைதுசெய்து வைதிருக்கிரர்களா? ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டார்களா? குழப்பமாக இருந்தது. பாஸ்கலுக்கு போனடித்துக் கேட்கலாமென நினைத்து அவனது இலக்கத்தை அழுத்தினேன். அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. “மிகஅவசரம். என்னோடு தொடர்பு கொள்.” என செய்தி வைத்து விட்டு வேலையை தொடங்கினாலும் மனம் ஒரு நிலையிலில்லை. 00000000000000000 அவளை பல வருடங்களாக தெரியும். நான் வழமையாக வேலைக்கு போய் வரும் கடற்கரை வீதில் சிகரெட் புகையை ஊதிக்கொண்டே சுயிங்கத்தை மென்றபடி வியாபர புன்னகையை வீசி நிக்கும் பாலியல் தொழிலாளிகள் எனக்கு பழகிப்போனதொன்று. இரவு பகல், விடுமுறை பண்டிகை என்று எல்லா காலத்திலும் இவர்களை காணலாம். அப்படிதான் நான் வேலை செய்யும் மதுச்சாலைக்கு அருகில் அவளை சந்தித்தேன். அவளும் வழமை போல வாயில் சுயிங்கம், வியாபாரப் புன்னகையோடு என்னை பார்ப்பாள். இப்பிடி எவ்வளோ பார்த்திருப்போம் என்று நினைத்தபடியே நானும் கடந்து போய்க் கொண்டிருப்பேன். ஒரு குளிர்கால இரவு, அடை மழை, கடையிலும் யாருமில்லை. வெளியே இருந்த கதிரை மேசைகளை உள்ளே எடுத்து வைக்கப் போயிருந்தபோது, மழைக்காக சுவரோரத்தில் ஒரு பல்லியைப்போல ஒட்டிக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததும், ‘வா……….’ என சைகை செய்தேன். நனைத்த கோழிக் குஞ்சைப்போல ஓடி வந்தாள். உள்ளே வந்தவளுக்கு ஒரு கோப்பியை போட்டு நீட்டியதும், பர்சை திறக்க போனவளிடம், “வேண்டாம் இருந்து ஆறுதலாக குடி”. என்று விட்டுக் கிளாஸ்களை துடைக்கத் தொடங்கியிருந்தேன். ‘நன்றி’. சொல்லி விட்டு கோப்பியை உறுஞ்சியபடி, “நீங்கள் இந்தியாரா…………?” “இல்லை.” “அப்போ………. மொரிசியரா?” “இல்லை.” “அப்போ எந்த நாடு…….. ?” “நிச்சயமாக பிரெஞ்சுகாரர் இல்லை. ஆனால், இப்போ பிரெஞ்சு குடியுரிமை”. “நாட்டை சொல்ல விருப்பமில்லையா ?” “அப்பிடியில்லை. சொல்லி பெருமைப்படவும் அதில் ஒன்றுமில்லை. நான் ஸ்ரீ லங்கன். உன்னைப்பார்தால் மொரோக்கன் போலவிருக்கிறது. என்ன பெயர்?” “எப்படிக் கண்டு பிடித்தாய் ?” “பெண்களைப் பார்த்தாலே ஓரளவுக்கு நாடு கண்டு பிடித்து விடுவேன். உன் பழுப்பு நிறம். கரும் சுருண்ட முடி. முட்டைக்கண்கள். குறைந்த உயரம். சிறிய அளவான …” “போதும் நிறுத்து. என் பெயர் டளிடா”. திடீரென அவளிடம் திரும்பி, டளிடவா………..? எனக்கு மிகவும் பிடித்த பாடகியின் பெயர். நீ டளிடாவை அறிந்திருகிறாயா?” லேசாக சிரித்தவள், “இல்லை ஒரு பாடகி என்று மட்டும் அம்மா சொல்லியிருக்கிறார். நானும் ஒரு பாடகியாக வர நினைத்து அந்த பெயரை வைத்திருக்கலாம்.” “அறுபதுகளில் தன் குரலால் உலகை கட்டிப்போட்ட ஒரு பாடகி. எண்பதுகளில் பாரிஸ் நகரில் தனிமையில் காலத்தை கழித்துக் கொண்டிருந்தவள், ஒருநாள் ஒரு கோப்பை விஸ்கியில் விசத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டு விட்டிருந்தாள். காரணம் இன்றுவரை தெரியவில்லை. அவள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.” ‘ம்.’என்றவள், பின்னர் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் கிளாஸ்களை துடைத்து அடுக்கி முடிந்ததுமே மழையும் லேசாகி விட்டிருந்தது. அவளும் கோப்பியை குடித்து முடித்திருந்தாள். நான் சாவியை கையிலெடுத்தும், கடையை பூட்டப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினாள். எங்களின் முதல் சந்திப்பு அதுதான். அதுக்குப்பின்னர் நான் அவளை கடந்து போகும்போது அவள் வீசும் வியாபார புன்னகை, நட்பு புன்னகையாக மாறியிருந்தது. 0000000000000000000000 கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள். எனக்கு வேலை அதிகம் . தொடங்கும் நேரம் முடியும் நேரத்துக்கு வரையறை இல்லை. அவளுக்கும் அதே போலதான். அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடியாத . எப்போதாவது பார்த்துக்கொள்ளும் போது லேசான தலையாட்டல். கொடுங் குளிர் காலத்தில் கொட்டும் மழை இரவொன்றில்தான் மீண்டும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. இப்போ அவள் கைகளில் கோப்பியல்ல, விஸ்கி. என் கைகளில் வழக்கம் போல துடைக்கப்படும் கிளாஸ். “உன் பெயரை சொல்லவில்லையே………?” “நீ கேட்கவேயில்லையே ………?” “சரி சொல்லு.” “சாத்திரி.” “காலியாணமாச்சா……….?” “ம். ஒரு மகளும். பெயர் மீரா.” திடுக்கிட்டவளைப்போல விஸ்கி கிளாசை உறிஞ்சிவிட்டு, “என்ன பெயர் சொன்னாய் ?” “மீரா.” “என் மகளுக்கு பெயர் மேரா. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?” “தெரியுமே……. உலகம் முழுதும் உள்ள மொழிகளில் அனைத்திலும் உள்ள ஒரேயொரு பெயர். ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்று அர்த்தம். விரக்தியாய் சிரித்தவள், கிளாசை நீட்டினாள். அதை பாதி நிரப்பி ஐஸ் கட்டிகளை போட்டு நீட்டியபடியே, “உனக்கும் கலியாணமாச்சா……?” “ம்………. ஆச்சு. ஆனால் ஆகேல்ல.” ‘இவளென்ன வடிவேலு மாதிரியே…’ என்று நினைத்தாலும் நான் எதுவும் கேட்கவில்லை. கிளாசை முடித்துவிட்டு, ஐம்பது யூரோவை எடுத்து மேசையில் எறிந்து விட்டு போனவளிடம், “ஏய்……… மிச்ச காசு.” என்று மிகுதியை நீட்ட, தலைக்கு மேலால் கையை ஆட்டி வேண்டாமென சைகை செய்துவிட்டுத் தள்ளாடியபடி போய்க்கொண்டிருந்தாள். சரி அடுத்த தடவை வரும்போது கொடுக்கலாமென அதை தனியாக எடுத்து வைத்திருந்தேன். அடுத்தடுத்த சந்திப்புக்களில் அதுவும் கொஞ்சம் போதை ஏறும்போதுதான் தன்னைப்பற்றி சொல்லத் தொடங்கியிருந்தாள். அப்பா இல்லை. அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவள். “திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. நன்றாக இருந்த குழந்தைக்குத் திடீரென எதோ காய்ச்சல் வந்தது. வைத்திய சாலையில் கொண்டு போய் காட்டினேன். அதுவரை நன்றாக இருந்த குழந்தை சோர்ந்து போய் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருக்க தொடங்கியது. எதோ வைரஸ் காச்சல் என்றார்கள். எனக்கு அதன் விபரம் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் பார்வையே போய் விட்டது . அது மட்டுமில்லை மெலிந்து படுத்த படுக்கையாகி விட்டது. என் குடும்பம் பாவம் செய்ததால் சைத்தான் குழந்தையாக பிறந்து விட்டது என்று கணவன் சில மந்திரவாதிகளிடம் கொண்டு போய்க் காட்டினான். அவர்களும் ஏதேதோ செய்தார்கள் சரிவரவில்லை. அவன் ‘தலாக்’ சொல்லிவிட்டு போய் விட்டான். குழந்தையைமீண்டும் வைத்தியரிடம் கொண்டு போனேன். அவள் வியாதிக்கு எதோ பெயர் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சத்திர சிகிச்சை செய்தால் மீண்டும் பார்வை வந்து விடும். அதுவும் பல கட்டமாகத்தான் செய்யவேண்டும் என்றபோது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஆனால் சிகிச்சைக்கு அவர்கள் சொன்ன தொகையை கேட்ட போது தான் வந்த வேகத்திலேயே நம்பிக்கை திரும்பவும் போய் விட்டது. அம்மா தான் தன் கதைகளை சொல்லி எனக்குள் மீண்டும் நம்பிக்கையை வரவளைத்தாள். குழந்தையை அம்மாவிடம் கொடுத்து விட்டு வேலை தேடி நகரத்துக்கு போன போதுதான் ஒரு முகவர். ‘பிரான்ஸ் போனால் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னதும் அதை நம்பி இங்கு வந்து விட்டேன்.” இவை நீங்கள் சுவாரசியமில்லாமல் படித்து முடித்ததை போலவே அவள் வேகமாக சொல்லி முடித்தது. அடுத்து அவள் மெதுவாக அடுத்தடுத்த சந்திப்புக்களில் சொன்னது: “என் முகவரே கடவுச் சீட்டு எடுத்து ஒரு வாரம் பிரான்சுக்கான சுற்றுலா விசாவில் அழைத்து வந்து ஒரு விடுதியில் தங்க வைத்து விட்டு கடவுச் சீட்டை பிடுங்கி வைத்துக் கொண்டான். ஒரு கிழமை முடிந்ததும் என்னிடம் வந்தவன், “இப்போ உனக்கு விசா முடிந்து விட்டது. இனி ஊருக்கு போக வேண்டுமானால் முதலில் ஜெயிலுக்கு போக வேண்டும். அதை விட நான் சொன்னபடி கேட்டால் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது. உனக்கும் வேகமாக அதிக பணம் தேவை. எனக்கும் தான். ஏனென்றால் உனக்காக நானும் நிறைய செல்வழித்திருக்கிறேன். உன்கருப்பு முடி , பழுப்புத் தோல் நிறத்துக்கு இங்கு நல்ல கிராக்கி. இரண்டு பேருமே ஒரு உடன்படிக்கைக்கு வருவோம். நீயும் முரண்டு பிடிக்க கூடாது.” என்றான். “எனக்கும் அப்போ வேறு வழியிருக்கவில்லை. அவனே வாடிக்கையாளர்களை கூட்டி வருவான். நான் அறையை விட்டு எங்கேயும் போகமுடியாது. சாப்பாடு தண்ணி கூட வாடிக்கையாளரைப்போலவே அறைக்கு வந்து சேரும். எனக்கும் குடும்பத்துக்குமான தொடர்பு குறைவுதான். எப்போதாவது அவனின் தொலைபேசியில் தொடர்பெடுத்து சில நிமிடங்கள் மட்டுமே பேச தருவான். ஆனாலும் அவனும் நல்லவன். வீட்டுக்கு மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அதனால் எனக்கும் அவனிடம் நம்பிக்கை வந்து விட்டிருந்தது. அதுக்காகவே நானும் அவன் சொன்னபடியெல்லாம் நடக்கத் தொடங்கியிருந்தேன். இப்படியே மூன்று வருடங்கள் ஓடிப்போயிருக்கும். அறைக்கு தேடி வருபவர்கள் குறையத் தொடங்கினார்கள். உலகின் தொழில் நுட்பம் எப்படி வேகமாக மாறி வருகிறதோ அதுபோலவே எங்கள் தொழிலின் நுட்பத்தையும் மாற்றவேண்டியிருந்தது. நான் வீதிக்கு வந்து விட்டேன். இப்போ எனக்கும் கொஞ்சம் நின்மதி. வெளி உலகம். நிறைய மனிதர்களோடு பேசிப் பழகலாம். அதை விட முக்கியம், எல்லா பணத்தையும் அவனிடம் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு இருநூறு யுரோ அவனுக்கு கொடுத்தால் போதும். நான் எவ்வளவு சம்பாதித்தாலும் அது எனக்கே. ஆனால் அறை வாடகை, சாப்பாடு என்செலவு . “இப்போதான் நீ வெளியே வந்து விட்டாயே ? பிறகெதுக்கு அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும்?” “தெரியாத மாதிரியே கேக்கிறியே………..? இந்த மாதிரி தொழில் நம்பிக்கை மட்டுமே மூலதனம். ஒருவரை ஒருவர் ஏமாத்திறதா சந்தேகம் வந்தாலே அவ்வளவுதான். யாரோ ஒருத்தர் உயிரோடு இல்லை. எனக்கோ ஊரில் உள்ள குடும்பத்துக்கோ ஏதும் நடந்து விடக்கூடாது என்கிற பயம் தான்.” என்று விட்டு, விஸ்கி கிளாசில் கடைசி துளியை அண்ணாந்து நாக்கால் துடைத்து விட்டு, “கணக்கில் எழுதிக் கொள்.” என்றவள் சிகரெட்டை பற்றவைத்து ஊதியபடியே வழமையான இடத்தில் போய் நின்று கொண்டாள். இப்போது அவள் என் வாடிக்கையாளர். கற்பனையைக் கண்டபடி ஓட விடவேண்டாம். அதாவது கடைக்கு மட்டும். அப்படியான நாளில் தான் ‘ஒருஉதவி’ என்று கேட்டிருந்தாள். “என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. கொஞ்சம் பணம் அம்மாவின் பெயருக்கு அனுப்பி விட முடியுமா?” என்றாள். அன்றிலிருந்து இன்றுவரை அது தொடர்கிறது. அது மட்டுமில்லை ஒருநாள் கொஞ்சம் பதட்டமாகவே வந்தவள், இன்னொரு உதவி என்றாள். “என்ன சொல்லு.” “கொஞ்சம் அதிகமாகவே பணம் அனுப்பவேண்டும். மகளுக்கு கண் சிகிச்சை செய்யப்போகிறார்கள். பணம் அறையில் இருக்கிறது. நீ வந்தால் எடுத்து கொடுத்து விடுவேன்.” “நீயே கொண்டு வந்து கொடேன்.” “இல்லை அது அதிகபணம். எவ்வளவோ சிரமப்பட்டுச் சேகரித்தது. யாராவது பறித்து விட்டால்…….? அது என் மகளின் எதிர்காலம். அதுதான் பயமாக இருக்கிறது.” “நீ இவ்வளவு பயந்தாங்கொள்ளி என்று நினைக்கவில்லை. சரி வேலை முடிந்து போகும் போது வருகிறேன்.” வேலை முடிந்து போகும்போது அவள் வழமையாக நிக்குமிடத்தில் பார்த்தேன். நின்றிருந்தாள். அவளை காரில் ஏற்றிக்கொண்டு அவள் காட்டிய பாதையில் போய்க்கொண்டிருந்தேன்.அதிக தூரமில்லை. வண்டி பழைய நகரத்துள் நுழைந்திருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு நடக்கத் தொடங்கியிருந்தோம். சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முந்திய நகரம். எனக்கு பழக்கமான நகரம்தான். குறுகிய சாலைகள். எலாப்பக்கமும் படிகட்டுகளும், பழைய கட்டிடங்களும் மட்டுமே. கோடை காலத்தில் உல்லாச பயணிகளால் நிரம்பி வழியும் தேவதைகளின் நகரம். குளிர் காலத்தில் குப்பையைக் கிளற வரும் பெருச்சாளிகளை விட வீதியில் யாரையும் காண முடியாது. அப்போ அது பேய்களின் நகரம். ஒரு பழைய மரக்கதவைத் தள்ளி திறந்தவள், லைட்டைப் போட்டுவிட்டு முதலாம் மாடிக்கு ஏறிப் போய் நின்று விட்டு, “இங்கேயே நில்.” என்றவள் இரண்டாம் மாடிக்குப் போய் அங்கிருந்த ஒரு பூச்சாடியில் கையை வைத்து திறப்பை எடுத்துக் கொண்டு வந்து அறையை திறந்தாள். “திறப்பை எதுக்கு பூச் சாடியில் வைத்திருகிறாய்……?” “ஒரு தடவை என் கைப் பையை இரண்டு சிறுசுகள் பறித்து விட்டார்கள். கஞ்சாவோ கட்டையோ புகைப்பவர்களா இருக்கலாம். பாவம் அவர்களுக்கு பணத் தேவை. அதிலிருந்த பணம், வீட்டு திறப்பு எல்லாமே பறி போய் விட, நான் வீடுக்கு உள்ளேயே போக முடியாமல் இரவு முழுவதும் இந்த படியிலேயே படுத்திருந்து விட்டு அடுத்த நாள் மேல் வீட்டுக் காரரின் உதவியோடு கதவை உடைத்து பூட்டை மாற்றி விட்டேன். அதுக்குப் பிறகு திறப்பை எங்காவது ஒளித்து வைத்து விட்டு போவேன்.” என்றபடி கதவைத் திறந்து, “உள்ளே வா.” என்றழைத்தாள். மிகச் சிறிய அறை. எல்லா வாசனைத்திரவியங்களும் கலந்த ஒரு வாசனை. ஒரேயொரு சோபா மட்டுமே. அதை விரித்து கட்டிலாகவும் பயன்படுத்தலாம். சிறிய அலமாரி. சுவரில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிக்கு முன்னால் அவளது அலங்காரப் பொருட்கள். கொண்டோம் பாக்கெட்டுகள். அதுக்கடுத்து குளியலறையும் கழிப்பறையும் சேர்ந்த டூ இன் வண் அறை. “இரு.” என்றபடி, அவசரமாக சோபாவின் கீழே கிடந்த ஜட்டி ஒன்றை காலால் ஒரு முலையில் தள்ளிவிட்டு, “ சிறிது நேரத்துக்கு முன்னர் வந்து விட்டுப் போனவன் ஒருவனுடையது. எதோ அவசரத்தில் இதை போட மறந்துவிட்டு போய் விட்டான். சில நேரம் அதை தேடி திரும்பவும் வரலாம்”. என்று சிரித்தவள், அறையை பார்த்தாயா? ஏதாவது குடிக்கிறயா? என்று கேட்க மாட்டேன். இங்கு எதுவுமில்லை.” இன்னொரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சப்பாத்து பெட்டிகளில் ஒன்றை எடுத்து அதிலிருந்த சப்பாத்து ஒன்றினுள் கையை விட்டு இழுத்தாள். சுருட்டி வைக்கப்பட்டிருந்த யூரோ நோட்டுக்களை என்னிடம் நீட்டியவள், “ஏழாயிரம் வரையுள்ளது. முடிந்தளவு விரைவாக அனுப்பிவிடு.” என்றாள். ‘ஏழாயிரமா………..?’ என மனதில் உள்ளே திடுக்கிட்டாலும் காட்டிக் கொள்ளாமல். “பணத்தை எதுக்கு சப்பாத்துக்குள் ஒழித்து வைத்திருக்கிறாய் ?” “எனக்கென்ன வங்கி கணக்கா இருக்கு போட்டு வைக்க. அதைவிட வரும் வாடிக்கையாளர்கள் யாராவது நான் குளியலறைக்குள் போனதும் களவெடுத்துக்கொண்டு ஓடி விடுவார்கள். ஒரு தடவை நடந்திருக்கிறது. அதுக்குப் பின்னர் தான் இப்படி ஒழித்து வைக்கிறேன். ஆனாலும் எப்போதும் ஒரு பயத்தோடு அடிக்கடி சரி பார்த்துக்கொள்வேன். பணத்தை நாளைக்கே அனுப்பி விடுவாயா……..?” “அதிகமான பணம் ஒரேயடியாக முடியாது. இரண்டு மூன்று தடவை பிரித்து தான் அனுப்பலாம். உன் அம்மாவின் பெயர் விலாசம், தொலைபேசி இலக்கம் எல்லாம் என்தொலைபேசிக்கு அனுப்பிவிடு.” என்றபடி அவளை மீண்டும் ஏற்றிய இடத்தில் கொண்டுபோய் விட்டு பணத்தை கடையில் கொண்டுபோய் வைத்து விட்டு போய் விட்டிருந்தேன். இப்போநான், அவளின் வங்கியாக மாறி விட்டிருந்தேன். அவ்வப்போது கொண்டு வந்து கொடுக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். கொடுக்கும்போதெல்லாம் ஒரு துண்டில் திகதி தொகை எழுதி அவளுக்கு காட்டி விட்டு தனியாக ஒரு பெட்டியில் போட்டு வைத்து விடுவேன். பணம் அனுப்பி இரண்டு வாரம் கழித்து மகிழ்ச்சியாக வந்தவள், பாருக்கு முன்னால் கதிரையை இழுத்துப் போட்டு விட்டு ‘ஒரு விஸ்கி’ என்றாள். “என்ன மகிழ்ச்சியாக இருகிறாய் போல…” “ஓம்……. மகளுக்கு ஒரு கண்ணில் சிகிச்சை முடிந்து ஓரளவு பார்வை வந்து விட்டதாம். போனில் சொன்னாள். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டுமாம். முடிந்தளவு விரைவில் அடுத்த கண்ணையும் சிகிச்சை செய்யச்சொல்லி வைத்தியர் சொல்லியிருக்கிறாராம். விஸ்கியை ஊற்றி கொஞ்சம் கோலா கலந்து நீட்டியபடி, “பிறகென்ன மகிழ்ச்சியான செய்தி. அடுத்த கண்ணையும் செய்ய வேண்டியது தானே…….? “எனக்கும் ஆசை தான். அதுக்கு இன்னுமொரு பத்தாயிரம் யூரோக்கள் வேணுமே…….? “பத்தாயிரமா…….? உன்னிடம் இப்போ வெறும் ஆறுநூறு தானே இருக்கு?” “ம்…….அதை சேர்க்க இன்னும் மூன்று நாலு வருசம் தேவைப்படும். சரி பார்க்கலாம்.” என்று தொடங்கிய உரையாடலோடு குடித்துக்கொண்டேயிருந்தாள். இடையில் கடைக்கு வந்தவனொருவன், “அவளிடம் என்ன போகலாமா ?” என்றதும். “நான் இன்று லீவு என்னை குடிக்கவிடு. போடா. என்று திட்டி அனுப்பிவிட, அவனோ என்னை கோபமாக பார்த்துவிட்டு வெளியேறி விட்டான். கடை சாத்தும் நேரம் நெருங்கி விட்டிருந்தது. இப்போ குளிர் காலமென்பதால் அதிக வாடிக்கையாளர்களில்லை. வந்திருந்த மதுப்பிரியர்களும் தள்ளாடியபடி விடை பெற்றார்கள். “சரி கடை சாத்த வேண்டும்”. என்றதும், நீ வேலை நேரத்தில் குடிக்க மாட்டாய் எனக்குத் தெரியும். ஒரு நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து நிறைய குடிக்க வேண்டும். சரியா………?” என்றபடி நடக்கத் தொடங்கியிருந்தாள். கடையை சாத்தி விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருந்த நேரம் கீல்ஸ் சப்பாத்துக்களைக் கழற்றி கையில் பிடித்தபடி தள்ளாடிய படியே போய்க்கொண்டிருந்தவளிடம், “ஏய்………… வந்து ஏறு. வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்.” என்றதும், அதுக்காகவே காத்திருந்தவளைப்போல ஓடி வந்து ஏறிக்கொண்டவள். வீடு வந்ததும், வீட்டுக்கு வாயேன். போன தடவை வந்த போது எதுவும் கொடுக்கவில்லை. இப்போ ஒரு ஒரு போத்தல் விஸ்கி உள்ளது. ஒரு கிளாஸ் குடித்து விட்டு போ.” “வேண்டாம்……… நீ நிறைய குடித்திருக்கிறாய். போ. இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்.” “என்ன……… பயப்பிடுறியா ? நான் ஒண்டும் செய்ய மாட்டேன். வா.” ஒரு பெண் ஒருவனைப்பார்த்து பயப்பிடுறியா என்கிற ஒரு வார்த்தையே அவனை உசுப்பி விடும். “எனக்கா………..பயமா……..?” என்றபடி அவள் பின்னல் போயிருந்தேன். புதிதாக இருந்த விஸ்கியை எடுத்து என்னிடம் நீட்டி, “நீயே திற.” என்றபடி இரண்டு பிளாஸ்டிக் கப்புகளை எடுத்து நிலத்தில் வைத்து விட்டு, அவள் நிலத்திலேயே குந்திவிட சமஅளவில் விஸ்கியை ஊற்றிய போது தான், ‘ஐயையோ கலக்க எதுவுமே வாங்கவில்லை .மறந்து விட்டேன்’. என்றவளிடம், “பரவாயில்லை.” என்றபடி ‘சியஸ்’ சொல்லி ஒரே மடக்கில் விழுங்கி விட்டேன். லேசாய் எரிந்தபடி இதயத்தை ஊடறுத்து இறங்கியது. “இன்னும் கொஞ்சம்……” என்றாள். அடுத்த தடவை எரியவில்லை. “சரி போகிறேன்.” என்று எழுந்தபோது, தட்டுத்தடுமாறி எழுந்தவள் என்னை இழுத்து இறுக்கி அணைத்துக் கொள்ளத் தள்ளி விடவும் முடியாமல், அணைக்கவும் முடியாமல் அசையாமல் நின்றிருக்க. ஒரு கை என்சட்டைக்குள் நுழைந்து முதுகில் வருடிக் கொடுக்க, உள்ளே போன விஸ்கியும் அவளின் அரவணைப்பும் சூடேறத் தொடங்கியிருந்தது. “உனக்கு கட்டிப் பிடிக்கத் தெரியாதா……….. ? “என்று காதருகில் லேசாக கேட்டாள். “இல்லை விடு…….. நான் போக வேணும்.” அவளின் மறுகை என் பிடரியில் தழுவி தலையை பலவந்தமாக இழுத்து குனிய வைத்து உதட்டில் முத்தமொன்று கொடுத்தபோது, எனக்கு என் மேலேயே சந்தேகம் வரத் தொடங்கியிருந்தது. ‘இதுக்குமேல் போனால் எல்லாமே கட்டுப்பாட்டை இழந்து விடும். ஓடு’ என்று உள் மனது துரத்தியது. “மனைவி காத்திருப்பாள் போகவேணும்.” என்றபடி கொஞ்சம் பலவந்தமாகவே அவளை விடுவித்துக்கொண்ட போது சோபாவில் அமர்ந்து. “என்ன பயந்துட்டியா………?” என்றபடி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள். வேகமாக வெளியே வந்து காரில் ஏறி உள்ளே லைட்டை போட்டு கண்ணாடியில் முகத்தை பார்த்தேன். அவளின் லிப்ஸ்டிக் உதட்டில் ஓட்டியிருந்ததது. தண்ணீர் போத்தலை எடுத்து முகத்தைக் கழுவித் துடைத்து விட்டுக் காரில் ஏறினாலும் மீண்டும் வெளியே வந்து சட்டையை கழற்றி நன்றாக உதறிப்போட்டுக் கொண்டேன். ஏனென்றால் சாப்பாட்டில் நீள முடி இருந்தால் காற்றில் வந்து விழுந்திருக்கும் உறவு நீடிக்குமாம் என்று மனைவி சாவகாசமாக சொல்லி விடுவாள். என் சட்டையில் ஒருநீள முடி இருந்தால் காற்றில் வந்து விழுந்தது என்று தப்பிக்க முடியாது. நீலப்பட நாயகனைப்போலவே என்னை பார்ப்பாள். அதனால் கால்சட்டையையும் கழற்றி உதறி போட்டுக்கொண்டு வீடு போனாலும், டளிடாவின் பெர்பியூம் வாசனை என்னில் ஒட்டியிருப்பது போலவேயிருந்தது. நல்லவேளை மனைவி நித்திரை. மெதுவாக குளியலறையில் நுழைந்து ஆடைகளை அவிழ்த்து அழுக்கு கூடையில் போட்டு விட்டு ஒரு குளியல். படுத்து விட்டேன். மறுநாள் கடைக்கு வரும்போதே புதுமணப் பெண்ணைப்போல வெட்கப்பட்டுக் கொண்டே வந்தவள், “என்ன நேற்று நன்றாக உறங்கினாயா ?” என்று கிண்டலாகவே கேட்டாள். “என்ன நக்கலா……….? உனக்கு சரியான போதை போல. “உண்மையை சொல்லவா… ? எனக்கு அவ்வளவு போதையில்லை. ஆனால் முதன்முதலாக என் மனதுக்குப்பிடித்த ஒருவனை கட்டித் தழுவிக்கொண்டேன். கொஞ்சம் திடுக்கிட்டவனாகவே, “என்னது ………?” “பயப்பிடாதே. அவ்வளவும் தான். இனி அப்படியொரு தர்ம சங்கடத்தை உனக்கு நான் கொடுக்க மாட்டேன்.” என்று விட்டு போய் விட்டாள். கோடையும் குளிருமாக மூன்று வருடங்கள் ஓடிப்போயிருக்கும். அவ்வப்போது வழமை போல பணம் அனுப்பவும் சேமிப்பில் வைக்கவும் வந்து போய்க்கொண்டிருந்தவள், இந்தவருடக் குளிர் காலத்து இரவொன்றில் கொஞ்சம் சோர்வாக வந்தவளிடம், “என்ன கோப்பி போடவா ?” என்றதும், “இல்லை எனக்கு விஸ்கி.” என்றாள். “உன்னை வீட்டில் மட்டும் கொண்டு போய் விட மாட்டேன்.” என்றபடி விஸ்கி கிளாசை நீட்டியதும், “சிரிக்கும் மனநிலையில் நானில்லை.” என்றபடி அதை உறிஞ்சியவளிடம், “ஏன் ஏதும் பிரச்சனையா…………? “ம். ஓரளவு சரி வந்த பார்வையும் மகளுக்கு மீண்டும் மங்கலாகிப் போய்க்கொண்டிருக்கிறதாம். உடனடியாக அடுத்த சிகிச்சை செய்தாக வேண்டும். இப்போதைக்கு எதோ ஊசி போட வேண்டுமாம். அதுக்காக கொஞ்சம் பணம் தருகிறேன். நாளை அனுப்பி விட முடியுமா?” எனப் பணத்தை நீட்டினாள். அதை வாங்கியபடி, “சிகிச்சையை செய்ய வேண்டியதுதானே… ? சேர்த்திருக்கும் பணத்தை அனுப்பி விடலாமே…….? “எவ்வளவு சேர்ந்திருக்கிறது……..?” நான் குறித்து வைத்த துண்டை எடுத்துப்பார்த்து விட்டு. “இப்போதைக்கு ஆறாயிரத்து இருநூறு.” “இன்னும் குறைந்தது இரண்டாயிரம் தேவை. அதுக்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ?” “என்னிடமும் இப்போ அவ்வளவு தொகை இல்லை. யாரிடமாது கேட்டுப் பார்கிறேன். கிடைத்தால் நல்லது.” “சரி விடு. எல்லாம் அவன் நினைத்தபடி நடக்கட்டும்.” என்று மேலே காட்டியவள், வெறும் கிளாசை நீட்டினாள். மீண்டும் நிரப்பிவிட்டு, “நீ இங்கு வந்து எவ்வளவு காலமாகிறது ?” “ஏழு வருசமிருக்கும்.” “அதுக்கான ஆதரரம் ஏதாவது இருக்கா ?” “பாஸ்போட் மட்டும்தான். அதுவும் என்னிடமில்லை.” “நன்றாக யோசித்துப்பார். வேறை ஏதாவது…….?” “வேறை ஏதாவதென்றால் ஆரம்பத்தில் வீதியில் நிக்கும்போது சில தடவை வீசா இல்லததுக்காக என்னை கைது செய்திருகிறார்கள்.” “மேசையில் தட்டிய நான், “அது போதும். எப்போதாவது இரவு தடுத்து வைதிருந்தார்களா? நீதிபதி ஒருவர் முன்னால் கொண்டுபோய் உன்னை நிறுத்தியிருந்தர்களா?” “அது முதல் தடவை. அப்படி நடந்தது.” “அப்போ உன்னை விடுதலை செய்யும்போது ஏதாவது பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதில் ஒரு பிரதி உன்னிடம் கொடுத்தார்களா ?” “எதுக்கு இதெல்லாம் கேட்கிறாய்………?” “கேட்டதுக்குப் பதில் சொல்லு.” “ம்…….. கொடுத்தார்கள். அதை எங்கேயோ தொலைத்து விட்டேன். “அது போதும். நாளைக்கே உன் அம்மாவுக்கு போனடித்து உன் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை உடனடியாக அனுப்பி வைக்கச் சொல்லு.” “எதுக்கு…….? “பிரான்சில் ஐந்து வருடங்களுக்கு மேலாக இருந்த ஆதாரத்தோடு நிரூபித்து வதிவிட உரிமை வாங்கி விடலாம். அது மட்டுமில்லை, உன் மகளை இங்கு வரவழைத்து சிகிச்சை கூட செய்து விடலாம். “உண்மையாகவா……..? அவள் கண்கள் விரிந்தது. “உண்மை. விண்ணப்ப படிவங்கள் ஒன் லைனிலேயே எடுக்கலாம். நான் அதை செய்கிறேன். அதே நேரம் உன்னை இத்தனை வருடங்களாக தெரியுமென மூன்று பிரெஞ்சுக்காரர்களின் கடிதம் வேண்டும். ஒன்று நான் எழுதலாம். உனக்கு தெரிந்த இருவரின் கடிதம் எடுக்க வேண்டியது உன் பொறுப்பு.” கொஞ்சம் யோசித்தவள், “வழமையாக கொண்டோம் வாங்குகிற பாமசிக் காரரிடம் வாங்கலாம். இன்னுமொருவர்…….ஓகே. அவரிடமும் வாங்கலாம்.” “யாரந்த முடி திருத்தும் கடை வைத்திருக்கும் கிழவன் தானே……..?” “உனக்கெப்படித் தெரியும்.” கொடுப்பினுள் சிரித்தாள். “அடிக்கடி உன்னோடு கதைத்துக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். நல்ல மனிதர் தான். பிள்ளைகள் இல்லை. மனைவி பல வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். நான் கூட முன்னர் அவரிடம் தான் முடி வெட்டிக் கொள்வேன். இப்போ அவருக்கு வயசாகி விட்டதால் கை நடுங்குகிறது. அதனால் அவரிடம் போவதில்லை.” “நல்ல மனிதர் தான். பேச்சுத் துணைக்காக என்னிடம் அடிக்கடி வருவார். பின்னர் வாரத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் கடையை சாத்தி விட்டு சமையல் செய்து வைத்து என்னை அழைப்பர். பகல் முழுவதும் அவரோடேயே கழிப்பேன். பணம் வேண்டாமென மறுத்தாலும் பலவந்தமாக திணித்து அனுப்பி விடுவார்.” “அதெல்லாம் இருக்கட்டும். கடிதத்தை வாங்கி விடு. அது சரி, பின்னர் போலிஸ் உன்னை கைது செய்வதில்லையா?” “இல்லை. எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. அவர்களுக்கு வேண்டியதை அவ்வப்போது கொடுத்து விட வேண்டும்.” “கொஞ்சம் அதிர்ச்சியாகவே, என்னது இலஞ்சமா……….? இந்த நாட்டு போலீசா…….? “நீ நினைப்பது போல பணமாக இல்லை. அவர்கள் இரகசியமாக தனித்தனியாக அழைப்பார்கள். நாங்களும் அவர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். அவர்களும் எங்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். ஒரு எழுதப்படாத ஒப்பந்தம்.” “உண்மையாகவா………?” “உன் நண்பன் பாஸ்கல் கூட அவ்வபோது அழைப்பான். அவனிடம் கேட்டு விடாதே. அவன் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவுதான். பாவம் தெருவில் என்னோடு நிக்க வேண்டும்.” என்று சிரித்தபடி கிளாசை நீட்டினாள். மீண்டும் நிரப்பினேன். “எனக்காக அந்த டளிடா பாடலை ஒருக்கா போடுகிறாயா ?” என்றதும் யூ டியுப்பில் அதை எடுத்து ஓட விட்டேன். Je ne rêve plus, je ne fume plus Je n’ai même plus d’histoire நான் இனி கனவு காணவில்லை, இனி புகைப்பதில்லை என்னிடம் இப்போது ஒரு கதை கூட இல்லை நீங்கள் இல்லாமல் நான் அழுக்காக இருக்கிறேன் நீங்கள் இல்லாமல் நான் அசிங்கமாக இருக்கிறேன் நான் ஒரு ஓய்வறையில் அனாதை போல இருக்கிறேன் நான் இனி என் வாழ்க்கையில் வாழ விரும்பவில்லை நீங்கள் வெளியேறும்போது என் வாழ்க்கை முடிகிறது எனக்கு இனி வாழ்க்கை இல்லை, என் படுக்கை கூட இல்லை இது ஒரு நிலைய தளமாக மாறுகிறது நீங்கள் கிளம்பும்போது எனக்கு உடல் நலமில்லை முற்றிலும் நோய்வாய்ப்பட்டது இரவில் என் அம்மா வெளியே சென்றது போல அவள் என் விரக்தியுடன் என்னைத் தனியாக விட்டுவிட்டாள் எனக்கு உடல் நலமில்லை நீங்கள் எப்போது என்று உங்களுக்குத் தெரியாது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது அது விரைவில் இரண்டு ஆண்டுகள் ஆகிறது நீங்கள் கவலைப்படவில்லை என்று ஒரு பாறை போல பாவம் போல நான் உங்களிடம் தொங்குகிறேன் நான் சோர்வாக இருக்கிறேன் அவர்கள் இருக்கும்போது மகிழ்ச்சியாக நடிப்பது நான் ஒவ்வொரு இரவும் குடிப்பேன் ஆனால் அனைத்து விஸ்கிகளும் என்னைப் பொறுத்தவரை எங்களுக்கும் அதே சுவை இருக்கிறது எல்லா படகுகளும் உங்கள் கொடியை சுமக்கின்றன நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை எனக்கு உடல் நலமில்லை முற்றிலும் நோய்வாய்ப்பட்டது நான் உங்கள் இரத்தத்தை உங்கள் உடலில் ஊற்றுகிறேன் நீங்கள் தூங்கும் போது நான் ஒரு இறந்த பறவை போல இருக்கிறேன் எனக்கு உடல்நலமில்லை முற்றிலும் நோய்வாய்ப்பட்டது எனது எல்லா பாடல்களையும் நீங்கள் இழந்துவிட்டீர்கள் என் வார்த்தைகளையெல்லாம் நீ வெறுமையாக்கினாய் இன்னும் உங்கள் தோலுக்கு முன் எனக்கு திறமை இருந்தது இந்த காதல் என்னைக் கொல்கிறது அது தொடர்ந்தால் தனியாக இறந்துவிடுவேன் ஒரு முட்டாள்தனமான குழந்தையைப் போல என் வானொலியின் அருகில் பாடும் என் சொந்தக் குரலைக் கேட்பது எனக்கு உடல்நலமில்லை முற்றிலும் நோய்வாய்ப்பட்டது இரவில் என் அம்மா வெளியே சென்றது போல அவள் என் விரக்தியுடன் என்னைத் தனியாக விட்டுவிட்டாள் எனக்கு உடல் நலமில்லை அது சரி, எனக்கு உடல் நலமில்லை எனது எல்லா பாடல்களையும் நீங்கள் இழந்துவிட்டீர்கள் என் வார்த்தைகளையெல்லாம் நீ வெறுமையாக்கினாய் என் இதயம் முற்றிலும் சரியில்லை சுற்றிலும் தடுப்புகள் உள்ளன என் உடல் நலமில்லை ஏன் என்று கேட்கிறீர்களா? அவளும் சேர்ந்தே பாடியவள், அடுத்த கிளாசையும் முடித்து விட்டு, “பணத்தை மறக்காமல் அனுப்பி விடு.” என்று விட்டு போய் விட்டாள். வேலை முடிந்து போகும்போது தொலைத்துவிட்ட எதையோ தேடுபவளைப்போல சிகரெட்புகையை ஊதியபடி லேசாக தள்ளாடிய படியே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அன்றிரவு குளிர் வேறு அதிகமாக இருந்தது. கடலில் அலை வேறு அதிகமாக இருந்தது. மழை பெய்யுமென வானிலை அறிக்கை வேறு போனில் காட்டிக் கொண்டிருந்தது. காரை நிறுத்தி வீட்டில் கொண்டு போய் விடவா என கேட்க நினைத்தாலும், அன்றைய அனுபவத்துக்கு பிறகு நான் அப்படியொரு முயற்சியை எடுத்ததில்லை. எனவே கையசைத்து விட்டு போய் விட்டேன். அதுதான் நான் கடைசியாகப் பார்த்தது. Ooooooooooooooooooooooooo அன்று பாஸ்கலின் வரவுக்காகவே காத்திருந்தேன். இந்தக் கிராமத்தின் காவல்துறை அதிகாரி அவன், நீண்டகால நண்பன். இரவு அவன் வரும்போதே, “செய்தி தெரியுமா?” என கேட்டபடி வந்தான். “என்ன ஸ்ட்ரைக் தானே……..? “இல்லை……… டளிடா விடயம்.” “அதுக்குதான் உனக்கு போனடிதேன். காலை இரண்டு சிவில் போலிஸ் வந்து விசாரித்து விட்டு போனார்கள் என்ன நடந்தது?” “ஓ………. தெரியாதா? அவள் இறந்து போய் விட்டாள். யாரோ நேற்றிரவு அவளை கொண்டுபோய் காட்டுப்பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு எரித்துக் கொன்று விட்டார்கள்.” இழவுச் செய்திகள் எனக்கு புதிதில்லை தான். ஆனாலும் அது டளிடா என்றதும் லேசாகத் தலை கிறுகிறுத்தது. “நிச்சயமாக தெரியுமா ? அது அவள் தனா?” “ம். அவள்தான். நானும் சம்பவ இடத்துக்கு போயிருந்தேன். அவளின் கைப்பை பற்றைக்குள் கிடந்தது. அதில் அவள் தொலைபேசி இருந்தது. அதிலுள்ள விபரங்களை வைத்துத்தான் அடையாளம் கண்டோம். ஏனென்றால் டயரை போட்டு கொளுத்தியிருக்கிறார்கள். உடல் அடையாளம் காண முடியாதவாறு எண்பது வீதம் எரிந்து விட்டது.” “என்ன கொடுமை. யாரென்று தெரியுமா………?” “காட்டு பகுதிக்கு செல்லும் வீதியில் உள்ள சி சி டி வி காமராவையும் அவள் உடல் கிடந்த இடத்தில் இருந்த கார் டயர் அடையாளத்தையும் வைத்து ஒருவனை கிரைம் பிரிவு கைது செய்திருக்கிறார்கள். அவன் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்றின் உறுப்பினர். விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு அவ்வளவு தான் தெரியும்.” “ஏன் செய்தான்……….?” “நிச்சயமா ஒருத்தன் தனியாக செய்திருக்க முடியாது. விசாரணை முடிவில்தான் தெரியும். வெளிநாட்டவர்களைக் குறிப்பாக பாலியல்தொழில் செய்யும் பெண்களை, அதுவும் இஸ்லாமியப் பெண்களை குறிவைத்து இயங்குகிறார்கள். அது அவர்களுக்கு இலகுவான இலக்கு. கைது செய்யப் பட்டாலும் இலகுவாக கொஞ்ச நாள் தண்டனையோடு வெளியே வந்து விடுவார்கள்.” “என்ன……. நீயே இப்பிடி சொல்கிறாய்?” “ம்……இறந்து போனவர் சட்டத்துக்கு புறம்பாக இங்கு தங்கியிருந்தவர். சட்டத்துக்கு புறம்பான வேலையை செய்தவர். அவர் சார்பாக வாதாட கூட யாரும் வர மாட்டார்கள். இவ்வளவும் போதுமே குற்றவாளிக்கு.” “ஆனால் சட்டம் என்று ஒண்டு இருக்கு தானே……?” லேசாக சிரித்தபடி, “ஒரு பியர்.” என்றான். அவனுக்காக கிளாசில் நிரப்பிய பியரின் நுரையைப் போலவே அவளின் நினைவுகள் அத்தனையும் என்னுள் ஒருதரம் பொங்கி அடங்கியது. மூளையின் ஓரத்தில்சின்னதாக ஒட்டியிருந்த அவள் மகளின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாவது போலவிருந்தது. அவனுக்கான பியரை வைத்துவிட்டு கழிப்பறையில் போய் முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்திய குளிர் நீரால் அடித்து கழுவி துடைத்து விட்ட பின்தான் அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்க முடிந்தது. ஒரு முடிவெடுத்தேன். அவளின் மத முறைப்படி இறந்துபோனால் உடல் சூடு ஆறுவதுக்கு முன்னரே மசூதிக்கு கொண்டுபோய் வாழ்நாளில் ஏதும் பாங்கள் செய்திருந்தால் அதுக்காக மன்னிப்பு கேட்டு பிரார்த்தித்து புதைத்து விடுவார்கள். அப்போதான் ஆன்மா சொர்க்கம் போகும் என்பது அவர்களது நம்பிக்கை. உடல் கிடைக்கா விட்டால் என்ன செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. எங்கள் முறைப்படி உடலை எரித்து சாம்பலை கடலிலோ ஆற்றிலோ நீரில் கரைத்து சடங்கு செய்வார்கள். பியரை உறுஞ்சிக் கொண்டிருந்த பாஸ்கலிடம் போய், “அவள் எரிக்கப்பட இடத்திலிருந்து கொஞ்சம் சாம்பல் மட்டும் எடுத்துக் கொடுக்கிறாயா……?” திடுகிட்டவன், “என்ன என் வேலைக்கு முடிவு கட்ட போகிறாயா…………?” “இல்லை. ஒன்றும் பிரச்னை வராது. கொஞ்சாமா ஒரு பிடி மட்டும்………..” “விசாரணை முடியும்வரை அதெல்லாம் முடியாது. இப்போ அந்த இடம் கிரைம் பிரிவின் கட்டுப் பாட்டிலிருக்கு.” “இருக்கட்டுமே……….நீ கூட அவளை பாவித்திருக்கிறாய். அந்த நன்றிக்காவது செய்.” “ஓ…….. சொல்லி விட்டாளா? சரி நாளை கொண்டு வந்து தருகிறேன்.” ஆனாலும் எனக்கு அவனில் நம்பிக்கையில்லை கடுதாசியை கொளுத்தி அந்த சாம்பலை கொண்டுவந்து கொடுத்து போலிஸ் புத்தியை காட்டி விடுவான். எனவே, “சரி வேண்டாம். சனமேயில்லை. பியரை குடித்து முடி. கடையை பூட்டி விட்டு இரண்டு பேரும் போகலாமென முடிவெடுத்து இரண்டு பேருமே போனோம். அவன் காட்டிய இடத்தில காரை நிறுத்திவிட்டு போனில் உள்ள டோச் வெளிச்சத்தில் நடந்துபோய் ‘போலீஸ்’ என என எழுதப்பட்டிருந்த சிவப்பு வெள்ளை நாடா கட்டியிருந்த இடத்தில் கொஞ்சம் சாம்பலை அள்ளி தயாராய் கொண்டுபோயிருந்த பொலிதீன் பையில் போட்டுக்கொண்டு கிளம்பி விட்டிருந்தோம். அடுத்தநாள் காலை தபால்நிலையத்தில் பணத்தை அனுப்பிய பின் மொரோக்கோ இலக்கத்துக்கு விபரத்தையும் அனுப்பி விட்டு கடையை திறந்து விஸ்கி போத்தலின் மூடியை திறந்து வாயில் கவிழ்த்து அது தொண்டை வழியே களக் களக் என்று இறங்கும் சத்தம் நீண்ட நாளின் பின்காதில் கேட்டது. பாதி முடிந்து விட மீதியை எடுத்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு முடி திருத்தும் கடைக்கு போயிருந்தேன். கடை பூட்டியிருந்தது. அண்ணாந்து பார்த்தால் கிழவன் கடற்கரையை பார்த்தபடி வீட்டு பல்கனியில் நின்றிருந்தார். பெரிய டைடானிக் ஜாக் எண்டு நினைப்பு. “ஓய்ய்…….என்ன கடை பூட்டா ?” என்றதும், “ஓம். இன்று புதன் கிழமை. கடை லீவு என்றார். அவள் இனி வர மாட்டாள். வந்து கடையை திற.” என்றதும் வேகமாக வந்து கடையை திறந்து என்னை உள்ளே தள்ளி, “என்ன சொன்னாய் ? நான் காத்திருப்பது உனக்கு எப்பிடித் தெரியும்?” என்றவரிடம், “முதல்ல மயிர வெட்டு. பிறகு சொல்லுறேன்.” சாதாரணமாவே கை நடுங்கும் அவருக்கு இன்னமும் வேகமா நடுங்கத் தொடங்கியிருந்தது. “எப்பிடி வெட்ட வேணும்………. சொல்லு.” “மொட்டை.” “என்னது…….? மொட்டையா? நீ குடித்திருக்கிறாய். உளறாதே ………” “சொன்னதை செய்.” என்றதும், மெசினை எடுத்து வழித்தார். கண்ணாடியில் மொட்டைத்தலையைச் சரி பார்த்த போது நிலத்தில் கொட்டியிருந்த மயிரையெல்லாம் கூட்டிக் கொண்டிருந்தார். எல்லா இனத்தினதும் மதத்தினதும் சாதியினதும் மயிரெல்லாம் குப்பையாய் ஒரு மூலையில் குவிந்து கிடந்தது. “சரி இப்பவாவது சொல்லேன். எப்பிடித் தெரியும்? ஏன் வர மாட்டாள்?” “அவளுக்காக என்ன சமைத்து வைத்திருக்கிறாய் ?” லேசான வெட்கத்துடன், “அவளுக்கு பிடித்தமான மட்டன் தஜின் செய்து வைத்திருக்கிறேன்.” “சரி போய் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வா.” கொஞ்சம் தயங்கிய படியே மேலே வீடுக்கு போய் ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் மட்டன் தாஜின் கறியும் அதுக்கு மேல் ஒரு பாண் துண்டையும் வைத்து கொண்டு வந்து நீட்டியவர், இனியாவது சொல்லலாம் தானே என்பது போல பார்த்தார். “செய்தி படித்தாயா ? பெண் எரித்துக்கொலை.” “ம்……… படித்தேனே.” “அது அவள்தான். இனி வர மாட்டாள்.” “ஓ………. ஏசுவே……. யார் செய்தது?” “யாரோ உன்னைப்போலவே ஏசுவை நம்பும் ஒருத்தன்.” அவரின் கண்களில் வழிந்த கண்ணீரை எனக்கு தெரியாமல் திரும்பி துடைத்துக் கொண்டார். “என்ன அழுகிறாயா ? இவ்வளவு அன்பு வைத்திருந்தால் நீ அவளை திருமணம் செய்திருக்க வேண்டும். சரி இந்த கிண்ணம் உனக்கு தேவையா? ‘இல்லை.’ என்று தலையசைத்தபடி கதிரையில் அமர்ந்தவர், அங்கிருந்து வெளியேறிய என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். வெளியேவீதியை தண்டி வந்து கடலைப் பார்த்தேன். மெல்லிய அலைகள் மட்டுமே. மீனைத் தேடி வளைய வரும் நீர் காகங்களைத் தவிர யாருமில்லை. நிலத்தில் மண்டியிட்டு போத்தலை திறந்து மேலும் சில மிடறுகளை விழுங்கி விட்டு, “ஓ………. அல்லாஹ் உனை எப்படி தொழுவதென்று எனக்குத் தெரியாது. டளிடா தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்திருக்கலாம். அவள் பாவங்களை மனித்து சொர்க்கத்தினுள் அனுமதிக்குமாறு ரிழ்வான் மலக்கிடம் கட்டளையிடும். அவள் ரூஹ் சாந்தியடையட்டும்.” என்றபடி சாம்பலை எடுத்து கடலில் தூவி, மிச்சமிருந்த விஸ்கியையும் கடலில் தெளித்துவிட்டு. ‘டளிடா நீ என்னை எவ்வளவு நேசித்தாயோ அவ்வளவு நானும் உன்னை உன்னை நேசித்தேன்’ என்றபடி மட்டன் தஜினை கிண்ணத்தோடு கடலில் விட்டேன். அது தள்ளாடிய படியே அசைந்து கொண்டிருந்தது. கடல் நீரை கொஞ்சமெடுத்து தலையில் தெளித்து விட்டு. நான் மொட்டையடித்த காரணத்தை மனைவி கேட்பாள் என்ன சொல்லலாமென யோசித்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.
  6. 1 point
    SL Army chief barred from entering USA Colombo (News 1st): The US Department of State has barred Army Commander and acting Chief of Defence Staff, Lt. General Shavendra Silva from entering the United States of America. This has been done, as the US State Department claims that it has credible information that Lt Gen Shavendra Silva, through command responsibility, was involved in gross violations of human rights, namely extrajudicial killings, by the 58th Division of the Sri Lanka Army during the final phase of Sri Lanka’s Civil War in 2009. In addition to the Army Commander, his immediate family has also been barred from entering the United States of America. The US State Department issuing a statement says the allegations of gross human rights violations against Shavendra Silva, documented by the United Nations and other organizations, are serious and credible. Its adds, The United States will continue to use all available tools and authorities, as appropriate, to address human rights violations and abuses around the world no matter when they occurred or who perpetrated them.
  7. 1 point
    பகலவன் பார்வையிலே பதுங்கி நிற்கும் நிழலே சிறு தட்பம் தந்தாய் பாதத்திலே அந்த நிமிடம் இளைப்பாறிய தேகத்திலே புத்துணர்வு தந்தாய் புன்னகை வெட்கத்திலே இந்த இரவு நேரத்திலே இதயத்தின் ஓரத்திலே உன் மீது தோன்றிய மோகத்தினாலே உன்னை எண்ணி வர்ணித்தேன் சில வரிகளாளே........
  8. 1 point
  9. 1 point
    MCC யில் ஒப்பமிட்டதும் சவேந்திர சில்வா காச்சல் சரியாகிவிடும்!
  10. 1 point
    Last year on October 22 the US publicly criticized the promotion of Shavendra Silva as Army Commander. Assistant Secretary Destro of the Department of State stated, “We’ve made it clear to the Sri Lankan President and other Sri Lankan officials that his promotion to army commander will significantly curtail bilateral cooperation with the Sri Lankan army under US law.” Current President Rajapaksa, an alleged war criminal himself, has wasted no time in strategically securitizing and militarizing Sri Lanka through high-level appointments of individuals previously accused of corruption or alleged to have committed war crimes.
  11. 1 point
  12. 1 point
    இவர் போர்க்குற்றம் செய்தவர் என்பது ஐநாவில் ஆவணப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடக்கப் போகிறது. இவர் மீது மட்டுமல்ல.. கோத்தா மீதும் மகிந்த மீது.. மற்றும் தற்போதைய பாதுகாப்புச் செயலர் என்று டக்கிளஸ்.. கருணா.. சித்தார்த்தன் என்று பலர் மீதும்.. கடும் மனித உரிமை மீறல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. ரணில் அரசு காலத்தில் இதைப் பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாத அமெரிக்கா.. இப்ப திடீர் என்று சீனச் சார்ப்பு உந்தக் கொடியவன் மீது மட்டும்.. பார்வையை திருப்பி இருப்பது.. மகிந்த - கோத்தாவிற்கான அமெரிக்கா நோக்கிய ஒரு கடிவாளம் மட்டுமே. ஏலவே கோத்தாவின் வரவோடு இது எதிர்பார்க்கப்பட்டது தான். மீண்டும் போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும்.. மேற்குலக நலனுக்காக பேசப்படும் என்று. எதுஎப்படியோ.. எம்மினத்தை அழித்தவர்கள் பலர். அதில் சிலராவது இப்படி சிறுக என்றாலும் மற்றவர்களின் தேவைக்காக என்றாலும் தண்டிக்கப்படுவது.. எம் இனத்தின் மீது போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள்.. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்பதையாவது உறுதி செய்து நிற்கும். இந்த இடத்தில் இருந்து நாம்.. தான் எமக்கான நீதியை உலகை நோக்கி உரத்துக் கோர வேண்டும். தொடர்ச்சியாக. செய்வோமா..??! இல்ல இச்செய்திகளை வாசிச்சு சுய புளகாங்கிதம் அடைவதோடு அடங்கி விடுவோமா...??!
  13. 1 point
  14. 1 point
    ஊக்கி | தொழில்நுட்பத் துறைக்கு வடக்கின் மாற்று வழி! 4 வளரும் வடக்கு -3 ஜெகன் அருளையா ஜெகன் அருளையா டிசம்பர் 2019 இல் புதிய அரசு பதவியேற்றதும் 64,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படுமென அமைச்சரொருவர் அறிவித்திருந்தார். இருந்தும் இலங்கை அவ்வப்போது பல்லாயிரக்கணக்கான புதிய பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. அத்தனை பேரும் அரச சேவைக்குள்ளேதான் நுழைய விரும்புகின்றனர். அரச சேவைகள் ஏற்கெனவே இப்படியானவர்களினால் வீங்கிப்போயிருக்கிறது. அதிகாரிகள் அதிகரிப்பதனால் அதிகாரத்துவமும் (bureaucracy) அதிகரிக்கிறது. அதிக அதிகாரத்துவம் முன்ன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. இவ்வேளையில் இலங்கைக்கு மேலும் பட்டதாரிகள் தேவைதானா? சமீபத்தில், குடிமக்கள் கனக்கெடுப்பு, புள்ளிவிவரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2006 -2016 காலப்பகுதியில், இலங்கையின் பொதுப்பணித்துறை 30% வளர்ச்சி கண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதே காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை 7.5 வீதமே வளர்ந்துள்ளது. அதிகரித்த இந்த நான்கு மடங்கு களுக்கு ஈடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள் அதிகரித்திருக்கிறதா? உயர்தரக் கல்வி மானவர்கள் பலகலைக்கழகங்களுக்குள் நுழைவதற்காக ‘A’ களைத் தேடி ஓடுகிறார்கள். உண்மையில் தொழில் முகவர்கள் எதிர்பார்ப்பது ஒரு தொழிலாளி கொண்டுள்ள மூன்று ‘A’ களான Attitude, Aptitude, Application ஆகியவற்றையே அல்லாது பாடங்களில் எப்படியான சித்திகளைப் பெற்றுள்ளார் என்பதையல்ல. ஒருவர் பெற்றுக்கொண்ட பட்டப்படிப்பு அவர் இப்படியான ‘A’ க்களைக் கொண்டிருக்கிறாரா என்பதைக் காட்டித் தராது. பட்டப் படிப்பு எதுவுமில்லத ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பொறுத்து அவரிடம் இந்த ‘A’ க்கள் இருப்பதை இலகுவில் அறிந்துகொண்டு விடலாம். எப்படித் தன்னைக் காட்டிக்கொள்வது என்பதை Yarl IT Hub அறிந்துள்ளது Yarl IT Hub இலங்கையின் வடமாகாணத்தில் வேர் கொண்டு, கொழும்பிலும் வெளிநாடுகளிலும் கிளைகளைப் பரப்பியுள்ள தகவற் தொழில்நுட்ப நிறுவனம். அவர்களது செயற்கூற்று : “யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்கு ஆக்குவது” (To Make Jaffna The Next Silicon Valley). இந்த அமைப்பின் நிறுவன அங்கத்தவர்களில் பலர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கியும், நிர்வகித்தும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுக்கு வேலைகளை வழங்கியவர்களுமாவர். ஒரு நல்ல பணியாளி எப்படியிருக்கவேண்டுமெனக் கோட்பாடு வகுப்பவர்களல்ல இவர்கள். ஒரு நல்ல பணியாளியில் நிறுவனமே தங்கியுள்ளது என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள். Yarl IT Hub முதலில் செய்த காரியம், அரச பல்கலைக்கழகங்களுக்கோ, தனியார் கல்லூரிகளுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ போகமுடியாதவர்களது அடிப்படைப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தது. பின்னர் அவர்களை மையப்படுத்திய ஒரு பயிற்சித் திட்டத்தை உருவாக்கி அதைச் செயலாக்குவதற்காக ‘ஊக்கி‘ (catalyst) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தது. ‘ஊக்கி ‘ கலிபோர்ணியாவிலிருக்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வி, முகாமைத்துவ அறக்கட்டளை (Information Technology Education and Entrepreneurship Foundation (ITEE Foundation)) , GiZ (ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் ஆதரவில் இயங்குமமைப்பு) மற்றும் லெபாரா அறக்கட்டளை (ஈழத்தமிழரின் நிறுவனம்) ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஏப்ரல் 2017 இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இன் நிறுவனம், மார்ச் 2019 முதல் கிளிநொச்சியிலும் இயங்கி வருகிறது. கிளிநொச்சி ‘ஊக்கி’ நிறுவனத்தின் நிர்வாகி கிளிநொச்சி ‘ஊக்கி’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சயந்தினி செல்வராசாவுடன் நான் பேசினேன். கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்த சயந்தினி, பிரித்தானிய பல்கலைக்கழகத்துடன் இணைந்த கொழும்பிலுள்ள கல்லூரியொன்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். கொழும்பிலுள்ள ஓறியோன் நகரிலிருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் மென்பொருள் பொறியாலராகப் பணியிலிணைந்த அவர் ‘யாழ் ஐ.ரீ. ஹப்’ இலும் இணைந்தார். பின்னர் கிளீநொச்சி ‘ஊக்கி’ நிறுவப்பட்டபோது அதன் தலைமை நிர்வாகியாகும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. ‘ஊக்கி’ ஒரு தகவல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம். அதில் சேர்வதற்குத் தகமையாய், க.பொ.த உயர்தரத்தை வெற்றிகரமாக முடித்திருந்தால் போதுமானது. சித்திகளைப் பற்றிப் பொருட்படுத்த மாட்டார்கள்; அரச பல்கலைக் கழகங்களில் அனுமதி மறுக்கப்பட்டவர்கள், தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு வசதியற்றவர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள், சமூக மற்றும் இதர செயற்பாடுகளில் ஈடுபாடுள்ளவர்கள் எனப் பலருக்கும் அது சந்தர்ப்பத்தை வழங்கும் என சயந்தினி கூறுகிறார். “‘ஊக்கி’யில் இணைவதற்கு நிறைய விண்ணப்பங்கள் இருந்தும், இடப் போதாமையால் அனைவரையும் சேர்த்துக்கொள்ள முடியாமலிருக்கிறது. 20 இடங்களுக்கு 45 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. இஅவை அத்தனையும் கிளிநொச்சி வளாகத்துக்கு மட்டுமே. வெற்றிகரமான விண்ணப்பதாரிகளுக்கு கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது” என்கிறார் சயந்தினி. ‘ஊக்கி’ யில் நிரந்தர விரிவுரையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதே வேளை ‘யாழ் ஐ.ரீ. ஹப்’ இலிருந்து சிறப்பு வருகை விரிவுரையாளர்கள் வந்து, தகவல் தொழில் நுட்பம், சந்தைப்படுத்தல், தொழில் முகாமைத்துவம் போன்ற விடயங்களில் விரிவுரைகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் செய்கிறார்கள். அத்தோடு, ‘ஊக்கி’ ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகை விரிவுரையாளர்கள் மூலம் ஆங்கிலக் கல்வியையும் போதிக்கிறது. ஆங்கிலம் தகவல் தொழில்நுட்பத்தின் இணைப்பு மொழி. அது சிங்கள – தமிழ் மொழி பேசும் பணியாளர் மற்றும் இலங்கையின் வேகமாக வளர்ந்துவரும் சர்வதேச வாடிக்கையாளர் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணும் மொழியாகவும் உள்ளது. அத்தோடு, ஒரு வணிக நிறுவனத்தை ஆரம்பிக்கவும் நிர்வகிக்கவும் தேவையான ஆரம்ப நெறிமுறைப் பயிற்சிகளையும் ‘ஊக்கி’ தன் மாணவர்களுக்கு வழங்குகிறது. வேலை வாய்ப்புகள் ‘ஊக்கி’ யில் பயிலும் மாணவர்களைச் சிறந்த நிறுவனங்களில் பயிற்சிப் பணியாராக அமர்த்தும் உதவிகளையும் இன் நிறுவனம் செய்து கொடுக்கிறது. Kale Systems, 99X Technologies, Idea Factory மற்றும் Cookoo Eats ஆகிய நிறுவனங்கள் ‘ஊக்கி’ மானவர்களைப் பயிற்சிப் பணியாளராகச் (interns) சேர்த்துக்கொள்கின்றன. (இவற்றில் ஒரு நிறுவனத்தின் நிறுவனர் ‘ஊக்கி’ யில் கல்வி கற்றுத் தேறியவர்). சாதனைகள் இதில் விசேடமென்னவென்றால், ‘யாழ் ஜீக் சலெஞ்’ (Yarl Geek Challenge) என நடத்தப்படும் திறமைப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கிடையிலான போட்டியில் ‘ஊக்கி’ மாணவர்களும் கலந்துகொள்வதுமல்லாது வெற்றியும் ஈட்டி வருகிறார்கள் என்பது. இந்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலக தொழில் முயற்சி மாணவர் விருது விழாவில் (Global Entrepreneur Students Award ) இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் யதுஷா குலேந்திரன் ஒரு ‘ஊக்கி’ மாணவி மட்டுமல்ல இலங்கைப் பல்கலைக்கழகப் போட்டியாளரை வெற்றிகொண்ட ஒருவருமாவார். அவரது ‘ஓலை’ (Olai) என்ற தொழில் முயற்சி நிறுவனத்தை இவ் விருது விழாவில் காட்சிப்படுத்தவுள்ளார். ஒரு ‘ஊக்கி’யின் பட்டதாரி சிறீராம் ஜெகதீசன் பாடசாலையில் சறுக்கியதை ஒப்புக் கொள்கிறார். பருத்தித் துறையிலுள்ள பிரபல பாடசாலையான ஹாட்லிக் கல்லூரிக்குச் செல்லக்கூடிய வசதிகளிருந்தும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் தன் நேரத்தைச் செலவிடுவதுண்டு. அவர் புத்தகங்களைக் கண்டது பள்ளிக்கூடத்தில் ஆசிரியை ஒருவரின் மேற்பார்வையின்போது தான். அவர் மேற்கொண்டு முயற்சி எடுத்தால் மருத்துவராக ஆக முடியுமென அவரது இன்னுமொரு ஆசிரியர் சொன்னதாகச் சொல்கிறார் சிறீராம். நான் அவரை, இக்கட்டுரைக்காக செவ்வி கண்டபோது, அவரது ஆங்கிலப் புலமையையும், பேச்சுத் திறனையும், தன்நம்பிக்கையையும் கண்டு அசந்து போனேன். அவரது ஆசிரியர் சொன்னது சரிதான், நான் ஒரு மருத்துவராக வந்திருக்கக் கூடியவருடன் தான் உரையாடுகிறேன் எனப் புரிந்து கொண்டேன். விதி வேறு விதமாக இருந்திருந்தால் நான் அவரது நோயாளியாகவும் இருந்து, அவர் எனது இரத்த அழுத்தம், கொலெஸ்டெரோல், சீனி விடயங்களைப் பற்றி செவ்வி கண்டிருக்கவும் கூடும் (குளிசைகளுக்கு நன்றி, எல்லம் நன்றாகவே உள்ளது) சித்தியெய்தப் போவதில்லை என உணர்ந்ததும் சிறீராம் 2014 இல் தனது க.பொ.த. உயர்தரப் பரீட்சையை எழுதவில்லை. தனது முயற்சிகளுக்கு மேலும் கால அவகாசம் வாங்கிக்கொள்ளும் அதே வேளை அவர் கிரிக்கெட்டுடனும், ரீ.வீ. யுடனும் காலத்தைப் போக்கினார். 2015, 2016 ஆண்டுகளில் அவர் எடுத்த உயர்தரப் பரீட்சைகள் அவரைக் கைவிட்டு விட்டன. இத் தோல்விகள் அவரது முயற்சியைத் தூண்டிவிட்டன. பல்கலைக் கழகம் பற்றி நினைக்கவே முடியாத நிலையில், இலங்கையின் தனியார் கல்லூரியொன்றில் இணைந்து பட்டப்படிப்பை முடிக்கத் திட்டமிட்டார். பாடசாலையில் படிக்கும்போதே சிறீராம் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஃபோன் மற்றும் கணனிகளைப் பழுதுபார்த்துக் கொடுப்பார். கருவிகளின் மீது அவர் கொண்டிருந்த காதல் அவரை ஒரு தகவற்தொழிநுட்பக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெறத் தூண்டியது. இருப்பினும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் அவரது குடும்ப நண்பர் ஒருவர் ‘ஊக்கி’யில் இணையும்படி பரிந்துரைத்தார். ஊக்கி கொடுத்த ஊக்கம் பட்டப்படிப்பு என்றால் குறந்தது 4 அல்லது 5 வருடங்கள் ஆகும். ஆனால் ‘ஊக்கி’ ஆறு மாதங்களிலேயே ஒருவரைப் பயிற்சிப் பணியில் (internship) இணைத்து விடுகிறது. சிறீராம் ‘ஊக்கி’ யில் சேர்வதற்கு விண்ணப்பித்து 2018 ஆரம்பத்தில் அதில் இணைந்து தன் பயிற்சியைத் தொடங்கினார். “‘ஊக்கி’ ஒரு கல்லூரி மாதியல்ல. அது ஒரு குடும்பம் மாதிரி” என்கிறார் சிறீராம். பல நாட்கள் ‘ஊக்கி’யில் மகிழ்ச்சியாகக் கழிந்தன. அரைவாசி நாட்களில் அங்கு ‘கோடிங்’ (coding) எனப்படும் மென்பொருள் வகையைத்தான் கற்பித்தார்கள். இன்றய தகவற் தொழில்நுட்பம் இவ்வகை மென்பொருளை மையப்படுத்தித்தான் இயங்குகிறது. மீதி அரைவாசி நாட்களில் துறைப் பிரவேசத்துக்குத் தேவையான வாழ்க்கைத் திறன்கள் (life skills) பற்றிய போதனைகள் நடக்கும். காட்சிப் படுத்தல் (presentation), செவ்வியை எதிர்கொள்ளல் (interview), உடையணிதல் (how to dress), தொழிலாரம்பம் (how to start a business), ஆரோக்கியத்தைப் பேணுதல் (how to keep fit), ஆங்கிலம் (English) ஆகியன இப் போதனகளில் சில. நான் சிறீராமை இக் கட்டுரைக்காகச் செவ்வி கண்டபோது இத்தனை திறன்களையும் அவரிடம் அவதானிக்க முடிந்தது. ஊக்கி யில் வகுப்பு ஆகஸ்ட் 2018 இல் சிறீராம் தனது பயிற்சிப் பணியை அரிமா வில் ஆரம்பித்தார். அனிமா, யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட ஒரு மென்பொருள் நிறுவனம். இதைப்பற்றி நான் வேறொரு தடவை லங்கா பிசினெஸ் ஒன்லைனில்’ எழுதியிருக்கிறேன். ஜனவரி 2019 இல் ‘அரிமா’ சிறீராமுக்கு முழுநேரப் பணியொன்றை வழங்கியது. அசோசியேட் சொஃப்ட்வெயர் எஞ்சினியர் பதயிலிருந்த அவர் சொஃப்ட்வெயர் எஞ்சினியராகப் பதவியுயர்த்தப்பட்டார். தற்போது அவர் ‘அரிமா’ வின் சகோதர நிறுவனமான ‘ ஆரோக்யா லைஃப்’ (Arogya.Life) என்னும் நிறுவனத்தில் முக்கிய பொறியியலாளர்களில் ஒருவராக இருக்கிறார். ‘ஆரோக்யா’ இன்னுமொரு வெற்றியின் அடையாளம். மருத்துவமனைகளின் செயற்பாட்டு முகாமைத்துவத்தை (critical hospital management system) நிர்வகிக்கும் மென்பொருட் தொகுதியை அது வடிவமைக்கிறது. இலங்கையில், கொழும்பு, தலவாட்டுகொடவிலுள்ள ஹேமாஸ் மருத்துவமனை, இரத்தினபுரியிலுள்ள சிங்ஹ மருத்துவமனை, யாழ்ப்பாணத்திலுள்ள மூளாய் மருத்துவமனை ஆகியன இந் நிறுவனத்தின் பென்பொருளையே பாவிக்கின்றன. ‘அரிமா’ வுக்கு யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அலுவலகங்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தையே அது தொடர்பு மொழியாகப் பாவிக்கிறது. சிறீராமின் சகபாடிகள் ஹாட்லிக் கல்லூரியில் 2014 இல் உயர்தரப் பரீட்சையை எழுதி, 2015 இல் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று 2019 இறுதியில் தமது பட்டங்களைப் பெற்றார்கள். சிறீராம் 2016 வரையில் தனது உயர்தரக் கல்வியைக் குழப்பி வந்தார். 2018 இல் ‘ஊக்கி’யில் இணைந்து ஜனவரி 2020 இல் அவர் ‘அரிமா’வின்’ நிரந்தரப் பணியில் முதலாவது பதவியுயர்வையும் பெற்றுவிட்டார். பணி நிறுவனம் சிறிகரன் அரியகுமார், சிறீராமைப் போலல்லாது, ஹாட்லிக் கல்லூரிக்குச் சென்றார். தற்போது கொழும்பில் வாழ்கிறார். தொழில்நுட்பம், பொறியியல் போன்ற துறைகளில் இலங்கையின் முன்னணிப் பல்கலைக்கழகமான மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் 2008 இல் தன் பட்டக் கல்வியைத் தொடங்கினார். ஒரு தொழில்நுட்ப வணிகத்தின் முதல்தர உதாரணம் அவர். பட்டம் பெற்றபின், இரு வேறு பிரித்தானிய மென்பொருள் நிறுவனங்களுக்குப் பணியாற்றியபின் தற்போது இலங்கையில் இருக்கும் அவரது குடும்ப கட்டுமான நிறுவனமொன்றில் பணி புரிகிறார். நிறுவனங்களுக்கான வளத் திட்டமிடல் (Enterprise Resource Planning (ERP)) என்றொரு மென்பொருளைச் சிறிகரன் வடிவமைத்தார். பின்னர் 2015 இல் அவர் ‘ரெக்கோறின்’ (Techorin) என்றொரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் தனது மென்பொருள்களை வடிவமைத்து, சந்தைப்படுத்தி வருகிறார். வட அமெரிக்க நிறுவனமொன்று அவர் உருவாக்கிய ‘வெயர்ஹவுஸ் மனேஜ்மெண்ட் சிஸ்டம்’ (Warehouse Management System) ஒன்றைப் பாவித்து வருகிறது. ‘ரெக்கோறின்’ தற்போது இணைய, கைத்தொலைபேசி அப்பிளிகேசன்களை உருவாக்குவதில் முனைப்புக்காட்டி வருகிறது. சிறிகரனும் ‘யாழ் ஐ,ரீ. ஹப்’ இல் ஒரு அங்கத்தவர். ‘யாழ் ஜீக் சலஞ்’ போட்டிக்காகப் பல குழுக்களை அவர் தயார்படுத்தித் தந்திருக்கிறார். 2012 இல் அவர் தயார் படுத்திய குழுக்களில் ஒன்றுதான் ‘அரிமா’. ‘ஊக்கி’ பற்றி நான் சிறிகரனின் அபிப்பிராயத்தைக் கேட்டேன். ‘ஊக்கி’யின் மூன்று பயிற்சி மாணவர்கள் அவரிடம் பணிபுரிந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திமோஷன். திமோஷனை அவர் தனது பயிற்சிப் பொறியியலாளராக பெப்ரவரி 2019 இல் சேர்த்திருந்தார். புதியவர்களை அவர்களது சுய விருப்புகளுக்கேற்ப சவால்கள்களை ஏற்றுப் பணியாற்ற அனுமதிப்பது வழக்கம். முன்னணிப் பல்கலைக்கழகங்களிலிருந்து வந்தவர்கள் உட்படப் பலர் 3-4 நாட்கள் எடுத்து இப்பணிகளைச் செய்து முடிப்பார்கள். திமோஷன் அதை ஒரே நாளில் முடித்து விட்டார். அவரது திறமையைக் கண்ட சிறிகரன், நிறுவனத்துக்குப் புதிய வரவான திமோஷனுக்குப் பதவி உயர்வு கொடுத்து ‘புரொடக்ட் டெவொலப்மென்ட் ‘ (product development) திணைக்களத்துக்கு மாற்றிவிடடார். முன்னரே மாதங்களில் அதையும் வெற்றிகரமாக்கிய திமோஷனுக்கு அடுத்த உயர்வு ‘மொபைல் அப்ஸ்’ திணைக்களத்துக்கு. அக்டோபர் மாதம், அவரோடு சமகாலத்தில் இணைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலாக, திமோஷன் ‘சீனியர் சொப்ட்வெயர் எஞ்சினியராகப்’ பதவியுயர்த்தப்பட்டார். எதிர் காலம் பல்கலைக்கழகத்துக்கான ஓட்டத்தில் பல திறமைகள் அடிபட்டுப் போகின்றன என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, தனியார் பல்கலைக்கழகங்களுக்குப் போவதற்கு வசதியில்லாத மாணவர்கள் சந்தர்ப்பங்களை இழக்கிறார்கள். அரச புள்ளி விபரங்களின்படி 2018 இல் மட்டும் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான 167,907 மாணவர்களில் 31,451 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 130,000 க்கும் மேலானவர்கள் தகமை பெற்றிருந்தும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது! ‘ஊக்கி’ யும் ‘யாழ் ஐ.ரீ .ஹப்’ நிறுவனமும் மிகப் பெரும் சவால்களுடனான திட்டங்களை வகுத்திருக்கின்றன. 2017 இல், அந் நிறுவனங்கள் வகுத்த 5 ஆண்டுத் திட்டத்தின்படி 10,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் வழிக் கல்வியும், 1,000 மாணவர்களுக்கு தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பும், 100 புதிய தொழில் முயற்சிகளும் வட மாகாணத்தின் வழியாக நிறைவேற்றப்பட வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களும் முற்று முழுதாகத் தனியார் நிதியில், உலகம் முழுவதிலுமிருந்து தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் நேரம், திறமை, ஆதரவு ஆகியவற்றுடன் நிர்வகிக்கப்படுபவை. ‘ஊக்கி’ தங்கள் தொழில்நுட்பக் கல்வியைப் பெற்றுப் பலன் பெறும்படி மாணவர்களுக்குத் தொடர்ந்தும் அழைப்பு விட்டுக்கொண்டிருக்கிறது. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவதோ ‘ஊக்கியில்’ இணைந்து பலன் பெற விரும்பினால், அவர்களது இணையத் தளம் http://uki.life/ வரவேற்கின்றது. Uki மற்றும் Yarl IT Hub பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் பாலதாசன் சயந்தன் அவர்களுடன் sayanthan@yarlithub.org என்ற ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். (-ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து அவர் இரண்டு வயதாகவிருக்கும்போதே குடும்பத்துடன் இலண்டனுக்குச் சென்றவர். 1986 இல், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் படம் பெற்ற அவர், அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் தகவல் தொழில்நுட்பத் துறையில் இலங்கையிலும், இந்தியாவிலும் பணி புரிந்துவிட்டு 2015 இல் யாழ்ப்பாணத்திற்கே குடி பெயர்ந்தவர். அங்கு அவர் சமூக, பொருளாதார திட்டங்களில் பணியாற்றி வருகிறார். இக் கட்டுரை லங்கா பிசினஸ் ஒன்லைன் பத்திரிகைக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பிரசுரமானது. அதன் மொழிபெயர்ப்பு அவரின் அனுமதியுடன் ‘மறுமொழி.கொம்’ இல் மில் பிரசுரமாகிறது. மொழி பெயர்ப்பு: சிவதாசன்) https://marumoli.com/ஊக்கி-தொழில்நுட்பத்-துற/?fbclid=IwAR1Vlfw7yRDLDd9_hiZyU0KaOoawPi8umMvk8H4BSvP-G7ddGZocxpwzg5Q
  15. 1 point
    எனது கருத்தும் இதுவே அந்த பெண்ணிற்காக, அந்த பெண்ணோடு இருந்த நட்பை மதித்து தன்னால் இயன்ற இறுதிகாரியத்தை செய்தமை மதிக்கதக்க ஒன்று. நன்றி சாத்திரி அண்ணா
  16. 1 point
    கலக்கல் புத்தா
  17. 1 point
    வாவ்.... புரட்சி, இந்த விளம்பரம் வந்ததை... நமது யாழ். களத்து, இசைக்கலைஞன் அறிந்து இருப்பாரோ... தெரியவில்லை. இதனைப் பார்த்தால்... அவர், சந்தோசப் படுவார் என்பதால், நம்ம ஆளுக்கு... ஒரு தனி மடலில், ஒரு கடிதம்... அனுப்பி விடுகின்றேன்.
  18. 1 point
    பகிடி வதை செய்வதற்கு... நாம் எதிர்ப்பல்ல. அதுவே... காமக் கண்ணோத்துடன், ஒரு சகோதர தமிழ்ப் பெண்ணை... தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்கு போகும் போது... ஆத்திரம் தான் வருகின்றது. இதனால்... இரண்டு பகுதிகளில் உள்ள பெற்றோரும், எவ்வளவு... மிகவும் மன வேதனைப் பட்டு இருப்பார்கள், என்பதனை நினைத்துப் பார்க்கவே... கஸ்ரமாக உள்ளது. அடுத்த சந்ததிக்கு... முன் உதராணமாக இருக்க வேண்டிய, மாணவர்களே... வரம்பு மீறி, எதனையும்.. செய்யாதீர்கள். ப்ளீஸ்.
  19. 1 point
    சாணக்கியனை கண்டது சந்தோசம் …"சிங்கத்தின் குகையில் இருந்து மீண்டு புகலிடத்தில் அடைக்கலம்" அடைந்தாச்சு போல
  20. 1 point
    அதெண்டால்... உண்மை, சாணக்கியன். இப்பவே... ஒரு கோஸ்ட்டி திரைக்கதை எழுத ஆரம்பித்து இருப்பார்கள்.
  21. 1 point
  22. 1 point
    இனப்படுகொலை குற்றச்சாட்டு விசாரணை போய்.. போர்க்குற்ற விசாரணை போய்.. இப்ப காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விசாரிப்பு. நல்ல சாணக்கியம்... சம்பந்தர். உங்களின் சாணக்கியம்.. உங்கள் சிங்கள எஜமானர்களை உச்சாரக் கொப்பில் வைக்கும். பொக்கட்டை நிரப்பிக் கொள்ளவும். இப்படி ஒரு கோரிக்கையை தமிழ் மக்கள் சம்பந்தனிடம் எப்ப வைச்சவை. தமிழ் மக்கள்.. 1978 இல் வைச்சது.. தனித் தமிழீழம். அதுக்கு தான் வாக்குப் போட்டவை. 1995 இல்.. 2002 இல் வாக்குப் போட்டவை.. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி.. அதன் பின்னர்.. சுயநிர்ண உரிமையுடன் கூடிய.. ஒரு தேசம்.. இரு அரசுகள்.. அதன் பின்னர்.. கூட்டாட்சி... ஹிந்திய மாநிலங்கள் அளவிலாவது அதிகாரப் பகிர்வு. அதன் பின்னர் 13+ அதன் பின்னர்13 இப்ப.... இப்ப.. இவர் வைக்கிறார்.. ஒன்றுபட்ட இலங்கைக்குள்.. ஒற்றையாட்சிக்குள் தீர்வு. அதுதானே நடைமுறையில் இருக்கிறதே. பிறகென்ன தீர்வு... இப்படிக் கேட்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிக நேரம் எடுக்காது.
  23. 1 point
  24. 1 point
    புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக .. பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட்டியில் நிரப்பப் பட்டிருந்த தண்ணீரை ஒரு வாளியில் அள்ளிக்கொண்டு போய் கழிப்பறையில் வைத்து விட்டு “அப்பா தண்ணி ரெடி” என்று கத்தினான் குமார. இது அவனது அன்றாட நிகழ்ச்சி நிரலில் முக்கியமானது. இதை எப்போ தொடங்கினான் என்று தெரியாது. அவனுக்கு விபரம் தெரிய வந்த நாளில் ஒரு நாள் காலை வழமையாக பியசீலி தொட்டியிலிருந்து தண்ணீரை அள்ளியதுமே “அம்மா நான் கொண்டு போய் வைக்கிறேன்.” என்று அந்த வாளியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டுபோய் கழிப்பறையில் வைக்கத் தொடங்கியிருந்தான். இப்போ மூன்று வருடங்களாக அந்த வேலையை ஒரு கடமையாக ஒருவித மன நிறையோடு அவன் செய்து வருகிறான். சத்தம் கேட்டதுமே குணதாச படுக்கையிலிருந்து எழுந்து பக்கத்திலேயே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஊன்று கோல்களை எடுத்து இரண்டு பக்கமும் கைகளுக்கிடையில் வைத்துகொண்டு எழும்பி கொஞ்சம் தடுமாறினாலும் சுதாகரித்துக்கொண்டு ‘டக்….. டக்….’ என்கிற சத்தத்தோடு ஒற்றை காலை நிலத்தில் தடவியபடியே கழிப்பறைக்கு போவதை பல் தேய்த்தபடியே அவர் எங்கும் விழுந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடு குமார கவனித்துக்கொண்டிருந்தான். “குமார……. பன்சாலைக்கு போகவேணும் கெதியா வா ” என்கிற பியசீலியில் சத்தம் கேட்டு அவசரமாக தொட்டி தண்ணீரில் குளித்து முடித்தவன், அவள் எடுத்து வைத்திருந்த வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு அவனது ஆடையை போலவே வெள்ளை வெளேரென முற்றத்தில் மலர்ந்திருந்த நித்தியகல்யாணி பூக்களை பிடுங்கி ஒருதட்டில் நிரப்பியவன் சிலவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு, வரவேற்பறையின் மூலையில் பொருத்தப்பட்டிருந்த பலகையின் மேல் சிறிய கண்ணாடி கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் சிலைக்கு முன்னால் காய்ந்து போயிருந்த பூக்களை எடுத்து எறிந்து விட்டுப் பியசீலி கொடுத்த தேநீரை குடித்து முடிந்ததும் அவள் தலை வாரி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். காலைக்கடனை முடித்து முகம் கழுவிவிட்டு தட்டில் குமார வைத்த பூக்களை எடுத்து கண்ணாடிக் கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் முன்னால் வைத்து வணங்கிவிட்டுக் கதிரையில் வந்தமர்ந்த குணதாச முன்னால் பூக் கூடையை தூக்கியபடியே ஓடிப்போய் நின்றான். “உன் கோபத்தை குறைத்து நல்ல புத்தியை கொடுக்கும்படி புத்த பிரானை நன்றாக வேண்டிக்கொள்.” என்று பியசீலி வாரிவிட்ட தலையை லேசாய் கலைத்துவிட்டு ஒரு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குணதாச கடை திறக்கவேண்டியதில்லை எனவே தொலைக்காட்சியை போட்டுவிட்டு கதிரையில் சாய்ந்துவிட பியசீலி சமையலில் இறங்கிவிட்டாள். சிறிது நேரத்திலேயே வீதியில் எதோ சத்தம் கேட்டது “நோனா….. நோனா….. ஓடியாங்க உங்களோட மகன் என்னோட மகனை போட்டு அடிக்கிறான். தயவு செய்து ஓடியாங்க”. என்கிற சத்தத்தோடு அதே தெருவிலிருக்கும் ரமணி ஓடி வந்துகொண்டிருந்தாள். சத்தம் கேட்டு சமையலறையிலிருந்த பியசீலி வெளியே போய் ரமணியோடு சேர்ந்து ஓடினாள். குமார கொண்டுபோன மலர்தட்டு கீழே விழுந்து பூக்கள் எங்கும் சிதறிப்போய் கிடக்க அவன் ரமணியின் மகனை குப்புறப்போட்டு முதுகில் ஏறியிருந்து மாறி மாறி குதிக்கொண்டிருந்தான். பெரும்பாடு பட்டு அவனை பிரித்தெடுத்த பியசீலி “எதுக்கடா அவனை அடிக்கிறாய்? உனக்கு கோபம் குறைந்து நல்ல புத்தி கொடுக்க தானே பன்சாலைக்கு போ என்று அனுப்பினேன். எதுக்கடா?” என்றபடி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாலும் அது அவனுக்கு வலிக்கவில்லை . “அம்மா அவன் அப்பாவை கிண்டல் பண்ணினான்.அப்பா போல தாண்டி தாண்டி நடந்து காட்டினான். அதுக்காக அடிச்சது பிழையா?” என்று சத்தமாகவே கேட்டான் . “இல்ல நோனா அவன் நேற்று பந்து விளையாடும்போது உண்மையிலேயே மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதுதான் தாண்டியபடி நடக்கிறான்”. என்று பயந்தபடியே ரமணி சொல்லி முடிக்க. “சரி உன்னைப்பார் ஒரே அழுக்கு, இனி பன்சாலை போகவேண்டாம்.” என்றபடி கீழே விழுந்திருந்த தட்டை தூக்கியவள் குமாரவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வரும்போதே தடியை ஊன்றியபடி குணதாச பாதி வழிக்கு வந்து விட்டிருந்தான். “என்ன நடந்தது?” என்கிற அவனது கேள்விக்கு, “எல்லாம் உங்களாலைதான் .” என்றுவிட்டுப் பியசீலி வேகமாக கடந்து சென்றுவிட, தடியை ஊன்றி வேகமாக நடந்ததால் தோள் பட்டைகள் வலியெடுக்க அப்படியே கொஞ்ச நேரம் குனிந்து நின்று ஆறுதல் படுத்திக்கொண்டு மீண்டும் வீட்டிற்குதிரும்பியிருந்தான். வீட்டுக்குள் நுழையும்போதே பியசீலிக்கும் குமாரவுக்கும் நடந்த கோபமான உரையாடல் அவன் காதில் விழுந்தது. “அம்மா நீ சொல்வது போல அவர்கள் ஒன்றும் நல்லவர்களில்லை. அவன் வேணுமெண்டே அப்பாவை கிண்டலடித்தான்..” “இல்லை மகனே அவர்கள் நல்லவர்கள். “எங்களுக்கு நிறைய உதவியிருக்கிறார்கள் ..” “இல்லை கெட்டவர்கள்…. அவர்களால் தான் அப்பாவுக்கு இந்த நிலைமை. அவரை பார் எவ்வளவு சிரமப்படுகிறார்?” “அது வேற. இது வேறடா. புரிஞ்சுகொள் ……” “இல்லை அவர்கள் எல்லாமே அப்பிடிதான். அவர்களை அடிக்க வேணும். முடிந்தால் கொலை கூட …..” “டேய்…… நீ கூட ………?” என்று பியசீலி ஆத்திரத்தில் கத்தும் போது உள்ளே வந்து விட்டிருந்த குணதாச “வேண்டாம் நிப்பாட்டு……..” என்று அதை விட சத்தமாக கத்தினான். வேகமாக வீட்டினுள் புகுந்து தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு பின்புறமாக சென்ற குமார சுவரோடு பந்தை அடிக்கத் தொடங்கியிருந்தான். அவனுக்கு கோபம் வரும்போதெல்லாம் தன் கோபத்தை குறைக்க அவன் செய்யும் வேலையது. சுவரில் பந்தை அடித்து அடித்து அது டமாலென வெடித்த பின்புதான் அவன் கோபம் ஆறும். பந்து சுவரில் மோதும் சத்தம் கேட்கத் தொடங்கிருந்தது. குணதாச கைத்தடிகளை கீழே போட்டு விட்டு நிலத்தில் அமர்து கொண்டு “என்ன பியசீலி நீ கூட….?” என்று சொல்லும்போதே அவன் கண்கள் கலங்க தொடங்கியிருந்தது. “இல்லை இப்போ அவன் வளர்த்துவிட்டான். எல்லாம் தெரிந்துகொள்ளும் வயதும் வந்து விட்டது. இனிமேலும் எல்லாத்தையும் மறைக்க முடியாது. அவனாக தெரிந்து கொண்டால் எங்கள் மீது வெறுப்பு வரும். எனவே சொல்லிதானே ஆகவேணும் ..?” “சரி சொல்லலாம். கொஞ்ச நாளில பள்ளிக்கூட விடுமுறை வந்துவிடும். நாங்கள் எல்லோரும் ஒரு சுற்றுலா போகலாம். அப்போ நானே பக்குவாமா அவனுக்கு சொல்லுறேன். அதுவரை பொறுமையா இரு”. டமாலென்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. சரி இன்னொரு பந்து வாங்கவேண்டும் என்றபடி பியசீலி வீட்டின் பின்புறமாக போனாள். ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ இதே கிராமத்தில் இதே காணியில் இருந்த சிறிய குடிசையில் தன் தாய் சகோதரியோடு தான் குணதாச வாழ்ந்தான். தந்தை யாரென்றோ அதைப்பற்றி அறியும் ஆவலோ அவனுக்கு இருந்ததில்லை. நீ வயிற்றில் இருக்கும்போதே, “அப்பா யாரோடோ ஊரை விட்டு ஓடிப்போய் விட்டார்.” என அம்மா சொன்னதை தவிர வேறெந்த தகவலும் அவனுக்கு தெரியாது. தேயிலை பதனிடும் சிறிய தொழிற்சாலை ஒன்றில்தான் அவன் அம்மா வேலை செய்தார். குணதாசவுக்கும் படிப்பில் பெரிய ஆர்வமில்லாததால் எட்டாவது வகுப்போடு நிறுத்திவிட்டு அம்மாவோடு அதே தொழிற்சாலைக்கு வேலைக்கு போக தொடக்கி விட்டிருந்தான். அவன் அக்கா பத்தாவது படித்து விட்டு வீட்டிலிருந்தபோது பன் சாலையில் வணங்க வந்த ஒரு போலிஸ் காரர் அவளைப் பிடித்துப்போய் பெண் கேட்டு வந்து திருமணமும் நடந்து அவர்களோடு அம்மாவும் கண்டி நகருக்கு போய்விட. வாழ்கையில் எந்த இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நாட்களை கடதிக்கொண்டிருந்த குணதாசவுக்கு தேயிலை தொழில்சாலையில் வேகமாக சுற்றிக்கொண்டிருந்த இயந்திரத்தின் பட்டி அறுந்து தோள்பட்டையில் அடிதபோதுதான் வாழ்கையின் முதல் வலி தெரிந்தது . அவசரமாக அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போனதும் வலியை குறைப்பதுக்காக மென்மையான வலியோடு ஊசி மருந்தை செலுத்திய தாதி பியசீலியை முதன் முதலாக சந்தித்தான். பின்னர் அவளை சந்திப்பதுக்காகவே வலிக்கான வழியை தேடி கண்டுபிடித்து வைத்திய சாலையின் வாடிக்கையாளன் ஆனான். தினமொரு வலியோடு தன்னை சந்திக்கவே வழி தேடி வருவதாக பியசீலி உணர்ந்துகொண்ட தருணத்தில் அவளுக்கும் அவனை பிடித்துப்போய் விடவே, “அடிக்கடி அடிபட்டு வராதே அன்பே. அன்போடு நானே உனை தேடி வருகிறேன். அப்பாவை வந்து பார்.” என்று அவள் சொல்லி விட்டாள். அவன் அவளின் அப்பாவை தேடிப்போனான். அவரோ, “வேலையென்ன? சம்பளமென்ன? இப்போவெல்லாம் வசதியான பெண்களை வழைத்து போட்டுக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறதே உங்களுக்கு வேலையாய் போச்சு. போய் முடிந்தால் ஒரு வசதியான வீட்டை கட்டி முடி. அப்போதான் என் மகளை கட்டிக்கொடுக்க முடியுமென்று கறாராக சொல்லி விட்டார்”. கூரை பிய்ந்து தொங்கிய குடிசையில் குந்தியிருந்து யோசித்தான். தேயிலை கொம்பெனியில் வேலை செய்து கூரை கூட வேயமுடியாது. வீடு எப்பிடி காட்டுறதாம்..? அப்போ தான் வாகனத்தில் வந்தவர்கள் வீசி விட்டு போன விளம்பரத்தை எடுத்தான். ‘எம் தேசத்தை நாமே மீட்க வேண்டும். இருக்கும் இந்த தீவு மட்டுமே எமக்கான இருப்பிடம். நான்கு பக்கமும் கடலால் மட்டுமல்ல எதிரிகளாலும் சூழப்பட்டிருக்கிறோம். இது அவசர தேவை. அதிக சம்பளம்.’ படித்து முடித்ததுமே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி கைகளை மடக்கி மேலே உயர்த்தி தசைகள் புடைக்கிறதா என பார்த்து விட்டு அடுத்த நாளே அந்த விளம்பரதிலுள்ள விலாசத்துக்கு போவதென முடிவெடுத்திருந்தான். அன்றிரவே அவன் கனவில் அந்த இடத்தில் ஒரு மாடி வீடு பிளஸ் மொட்டை மாடியில் பிய சீலியை அணைத்தபடி அவன்………. 000000000000000000000 இராணுவத்தில் சேர்ந்து விட்டிருந்தவன் பயிற்சிகள் முடிந்ததுமே கட்டாய சேவையாக வடக்குக்கு அனுப்பப் பட்டிருந்தான். புதிதாக சேர்ந்தவர்களின் கடமையே இரவுநேர காவல் நிலைகளில்தான் தொடங்கும். சண்டை தொடக்கி விட்டால் முன்னுக்கு செல்பவர்களும் அவர்கள் தான். மூன்று வருடங்கள் லீவு எடுக்கமால் அவ்வப்போது பியசீலிக்கு மட்டும் கடிதமெழுதி அனுப்பி விட்டு கல்வீட்டை கட்டி காதலியை மனைவியாக்கும் கனவோடு கடமையிலிருந்தானே தவிர நாட்டை பற்றிய கவலையேதுமிருக்கவில்லை. சண்டை தொடங்கி விட்டாலே எரிச்சலாவிருக்கும். முடிந்தவரை எங்காவது பதுங்கி விடுவான். “சண்டையில் என்ன கிழித்தாய்?” என்று அவன் அதிகாரி கேட்கும் கேள்விக்காக வானத்தை நோக்கி சுட்டு விட்டு துப்பாக்கி ரவை தீர்ந்த கணக்கை காட்டுவான். சமாதான பேச்சுவார்த்தை தொடங்கலாமென பேச்சு அடிபட்டுகொண்டிருந்த நேரம் தொடர்ச்சியாக விடுமுறையே எடுக்காத அவனுக்கு விடுமுறை கிடைத்தது. நேரடியாக பியசீலியின் வீட்டுக்கு சென்றவன் அவள் தந்தையிடம் “இதோ பொறுப்பான வேலையிலிருக்கிறேன். நல்ல சம்பளம். நாளையே ஒரு இஞ்சினியரை அழைத்துவந்து வீட்டுக்கு பிளான் கீறி அத்திவாரம் போடப்போகிறேன். தனி வீடு அல்ல மாடி வீடு”. என்று வாசலில் நின்றபடி சத்தமாகவே சொன்னான். இராணுவ உடையில் துப்பாக்கியோடு வேறு வந்திருக்கிறான். இதுக்கு மேலையும் முடியாது என்று சொன்னால் சுட்டாலும் சுட்டு விடுவான் என்கிற பயத்தில் உடனே அவர் ‘சரி’ சொல்லிவிட, எளிமையாக அவர்களின் திருமணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. வீடு கட்டும் வேலைகளும் ஆரம்பித்து விட்டதால் அவன் பியசீலி வீட்டிலேயே தங்கியிருந்தான். ஒரு மாத லீவு ஓடித் தீர்ந்துவிட அவளை வங்கிக்கு அழைத்துப்போய் அவள் பெயரை தன் கணக்கில் இணைத்தவன், “பணத்தை எடுத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொள். அடுத்த விடுமுறைக்கு வரும்போது புது வீட்டுக்கு குடி போய் விடலாமென்றவன்.”, புதிய காதல் மனைவியை கண்ணீரோடு விடை பெற்றான். அப்போ சமாதான காலமென்பதால் அவனுக்கு அடிக்கடி விடுமுறை கிடைத்தது. கீழ் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்படிருந்த வீட்டுக்குள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் வருடங்கள் செல்ல செல்ல அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்கிற கவலை மனதுக்குள் புகுந்து கொள்ளத் தொடங்கியிருந்தது . அங்கங்கே சிறு மோதல்களும் நடந்து பேச்சு வார்த்தை குழம்பி மீண்டுமொரு யுத்தம் தொடங்குவதுக்கான அறிகுறிகள் தோன்றியிருந்ததால் விடுமுறையில் போயிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அறிவித்தல்களும் வெளியாகியிருந்தது. சண்டை தொடங்கி விட்டால் இனி அடிக்கடி விடுமுறை கிடைக்காது எனவே வைத்தியரை போய் பார்த்து விடலாமென்று உள்ளுரிலிருந்த வைத்தியசாலையில் போய் பரிசோதனை செய்து பார்த்தார்கள். குறைபாடு குணதாசவிடமே என்றதும் அவனுக்கு மடியிலேயே ஒரு குண்டு விழுந்து வெடித்தது போலவிருந்தது. “இல்லை இவன் சரியில்லை. கொழும்பு போய் பெரிய வைத்திய சாலையில் பார்க்கலாமென்று” பியசீலி அவனை தேற்றினாள். மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையோடு கொழும்பு போனார்கள். அந்த வைத்தியசாலை பரிசோதனை முடிவுகளும் குணதாசவை நோக்கியே கையை நீட்டியது. அவன் வாழ்நாளில் நினைவு தெரிந்து முதன் முதலாக அழுதான். முழுதாய் உடைந்து போனவனை பியசீலி அணைத்து அழைத்து வந்தாலும் வீட்டில் மாட்டியிருந்த இராணுவ உடையில் கம்பீரமாக நின்றிருக்கும் அவனது படம் அவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பது போலவேயிருந்தது. கண்ணை மூடும் போதெல்லாம் பியசீலியின் தந்தை, “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா ? உனக்கெதுக்கு ராணுவ உடுப்பு? கையில துப்பாக்கி தூ ………” என்று துப்புவது போலவேயிருந்தது. ஒரு நாள் முழுதும் துவண்டுபோய் வீட்டிலேயே படுத்திருந்தவனுக்கு பியசீலியின் நிலையை யோசித்தான். பாவம் என்னை நம்பி வந்தவள், அவளை சமாதானப் படுத்த வேண்டும்என்பதுக்காக, “சரி விடு. எல்லாம் புத்தபகவான் பார்த்துக்கொள்ளுவார். மருத்துவத்தால் மாற்ற முடியாததையும் அவர் மாற்றுவார்.” என்று தேற்றியவன், மறு நாளே சில வேலைகளை திட்டமிட்டு செய்யத் தொடங்கியிருந்தான். வீடு மேல் தளம் கட்டுவதை இப்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவெடுத்தவன் தன் பெயரில் ஆயுள் காப்புறுதி செய்துவிட்டு அன்றே வேலைக்கு திரும்பி விட்டிருந்தான். சில நாட்களிலேயே யுத்தமும் தொடக்கி விட்டிருக்க அவனை மன்னார் தளத்துக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். இராணுவம் மன்னாரிலிருந்தே களமுனையை திறந்து விட்டிருந்தது. இந்தச் சண்டையில் எப்படியும் செத்துப்போய் விடவேண்டும் அப்போதான் அவளுக்கு காப்புறுதி பணம் கிடைக்கும். வேறு யாரையாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பது மட்டுமே அவனது நோக்கம். இதுவரை காலமும் பதுங்கியிருந்து வானத்தை நோக்கி சுட்டவன் இப்போ முன்னுக்கு வந்து மூர்க்கமாகக் களமாடத்தொடங்கியிருந்தான். அவனது திறமையை பார்த்த அதிகாரியே அசந்துபோய் ஊடுருவி தாக்கும் சிறிய குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்திருந்தார். இராணுவம் மடுவைத் தாண்டி பல குறுக்கு பாதைகளாலும் கிளிநொச்சியை அண்மித்துக்கொண்டிருந்தது. அவனும் யுத்த களத்தில் திறமையால் குவித்த வெற்றிகளை பாராட்டி குறுகிய காலத்திலேயே ஒரு படையணியை வழிநடத்தும் அதிகாரியாகி விட்டிருந்தான். பியசீலிக்கு அவ்வப்போது குறுஞ் செய்தி அனுப்புவதோடு அவனுக்கு கிடைத்த பாராட்டுக்களும் பதவிகளாலும் ‘நான் வீரமான ஒரு ஆண்மகன். எனக்கு எந்தக்குறையுமில்லை.’ என நம்பத் தொடங்கியிருந்தான். கிளிநொச்சியின் பாரிய மண் அணையை உடைத்து உள்ளே புகுந்த அணியில் அவனது அணியும் முக்கியமானது. பொது மக்களை சரணடையும்படி அறிவித்தல் கொடுத்ததுமே எங்காவது ஒரு வழி கிடைக்காதா என காயங்களோடும் பசியோடும் ஏங்கயிருந்த மக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கியிருந்தார்கள். இராணுவத்தினர் ஆண்களை, பெண்களை, வயதானவர்களை, காயமடைந்தவர்களை எனத் தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். நடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டிருந்தவரிசையில் ஒரு சலசலப்பு. அவன் என்னவென்று விசாரித்தான். யாரோ ஒரு இளம்குடும்பம் பெண் நிறைமாத கர்ப்பிணியாம். கணவன் அவளை தனியாக விடமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் கவனிதுக்கொண்டிருந்தவன் நேராகப்போய் அடம்பிடிதுக்கொண்டிருந்தவனை எட்டி உடைத்து விட்டு இழுத்துக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான். “ஐயா பெறு மாசம் ஐயா. இண்டைக்கோ நாளைக்கோ பிறந்திடும். அவள் வேற நோஞ்சான இருக்கிறாள். நான் பக்கத்திலை பாத்துக்கொள்ளுறேன். விடுங்கோ ஐயா.” எண்டு புலம்பியபடியே இருந்தவனை இராணுவத்தினர் தள்ளிக்கொண்டு போனார்கள். அவள் மொத்தமாக அழுது கண்ணீர் தீர்ந்திருக்க வேண்டும். வயிற்றைப்பிடித்தபடி பற்களால் உதட்டை கடித்து கண்களை மூடி நின்றிருந்தவளை இராணுவ பெண்ணொருத்தி அழைத்துக்கொண்டு போனாள். இரவானதும் சரணடைவு நிறுத்திவைக்கப்பட்டு மறுநாள் வரும்படி அறிவித்தார்கள். இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கிகளின் சத்தம் அன்று கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அவர்களது தலைநகரம் வீழ்ந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் முற்றாக முடித்துவிடுவோம் என்று வெற்றிக்களிப்பில் நிறைந்திருந்த தன் அணியினர்ருக்கு வாழ்த்து சொன்னவன். தற்காலிக தங்குமிடமாகப் பாதி இடிந்தவீடு ஓன்றில் ஓய்வெடுக்க சென்றிருந்தான். ஜெனறேற்றரில் ஒரேயொரு பல்ப்புமட்டும் மெல்லிய வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாகக் கண்ணயர்த்து போகும் நேரம் மீண்டும் சலசலப்பு. வேகமாக வந்த ஒருவன் சலூட் அடித்துவிட்டு, “சேர் .. சரணடைந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கப்போகிறது. வலியில் கத்துகிறாள் என்ன செய்யலாம்? ” என்றான். பல நாட்களுக்கு பின்னர் கழற்றி மாட்டியிருந்த சட்டையை போட்டுக்கொண்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு போனவன் வலியில் துடிதுக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவன் அடித்து விரட்டியவனின் மனைவியேதான். “ராணுவ மருத்துவருக்கு தகவல் கொடுங்கள். அவளை என் தங்குமிடத்துக்குத் தூக்கிவாருங்கள்.” என்று கட்டளையிட்டு விட்டு மீண்டும் இருப்பிடம் திரும்பி விட்டான். அவளைக் கொண்டுவந்து நிலத்தில் கிடத்தி விட்டிருந்தார்கள். வைத்தியர் வந்து சேரும்போது வலியில் முனகிக்கொண்டிருந்தவள் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள். வைத்தியர் வந்ததுமே அவள் நாடித்துடிப்பை தொட்டுப்பார்த்து விட்டு வேகமாக இயங்கத் தொடங்கினார். குளுக்கோஸ் பையை எடுத்து ஒரு தடியில் கட்டி ஊசியை குழாயில் இணைத்து அவள் கையில் நரம்பை தேடிப்பிடித்து ஏற்றி விட்டு. சிறு பிளேட்டை எடுத்து அவளின் அடி வயிற்ரைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்தவர், அதே பிளேட்டால் தொப்பிள் கொடியை வெட்டி விட்டு தண்ணீர் வேணுமென்றதும் குணதாசவே வாளியில் தண்ணீரை கொண்டு வந்து வைத்தான். அதில் குழந்தைதையை அமிழ்த்தி கழுவத்தொடங்கியதுமே அழத் தொடங்கியிருந்தது. “குழந்தைக்கு பால் கொடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்று வைத்தியர் சொன்னதுமே, காவலுக்கு நின்ற ஒருவனை அழைத்து, “கைதானவர்களில் பால் கொடுக்கக் கூடிய தாய் யாராவதிருந்தால் உடனே வேகமாக அழைத்து வா..” என்று கட்டளையிட்டான். சில நாட்களுக்கு முன்னர் பிறந்த கைக்குழந்தையோடு ஒரு தாயை அவன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் சைகை செய்ததுமே ஒருவன் அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொள்ள அழுதுகொண்டிருந்த குழந்தையை அவள் கையில் கொடுத்ததும் அங்கிருந்து ஓரமாக அவள் சென்றுவிட குழந்தையின் அழுகை சத்தம் நின்று போய் விட்டிருந்தது. தன் கடமைகளை முடித்த வைத்தியர் அவனிடம் வந்து, “தையல் போட்டிருக்கிறேன். நிறைய இரத்தம் வெளியேறியிருக்கிறது. ஏற்கனவே அந்தப்பெண் பலவீனமாக இருக்கிறாள். உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் உயிருக்கு ஆபத்து. வசதியுள்ள பெரிய வைத்திய சாலைக்கு எடுத்துப்போங்கள்.” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் சல்யூட் அடித்து விட்டு விடை பெற்றுக்கொண்டான். வைத்தியர் போனதும் சுற்று முற்றும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் காவலுக்கு நின்றவர்களும் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்ணும் சிறிது தூரத்திலேயே நிற்பது தெரிந்தது. அறைக்கு திரும்பி அசைவற்றுக்கிடந்த அவளையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவன் மீண்டும் வெளியே பார்த்தான். அருகாக யாருமில்லை. கதவை மெதுவாக சாத்தி விட்டு இடுப்பிலிருந்த சிறிய கத்தியை எடுத்து அவளின் அடி வயிற்றின் கீழே செருகி மேல் பக்கமாக இழுத்தான். அப்போதுதான் போடப்பட்டிருந்த தையல்கள் கத்திக்கு வழி விட்டு இலகுவாக ஒவ்வொன்றாக அறுத்துக்கொண்டு சில அங்குலங்கள் அதையும் தாண்டி வந்து நின்றது. கத்தியை இழுத்தெடுத்து குளுக்கோஸ் குழாயை அறுத்தவன், அதிலிருந்து வழிந்த குளுக்கோசில் கழுவி மீண்டும் இடுப்பில் செருகி விட்டு குனிந்து பார்த்தான். அவள் அவனை வெறித்துப் பார்த்தபடியே உடல் ஒரு தடவை அசைந்தது. எதோ சொல்ல முயற்சித்தது போலவிருந்தது. கழுதுப்பக்கத்தில் விரல்களை வைத்துப் பார்த்தான். நாடித் துடிப்பு அடங்கிப்போயிருந்தது . வெளியே வந்து லேசாக விசிலடித்ததும் ஓடி வந்த பாது காவலனிடம், ‘அவள் இறந்து விட்டாள். கொண்டு போய் புதைத்துவிடு.’ என்று சைகையிலேயே சொன்னதும், இயந்திரம் போல இயங்கிய பாதுகாவலன் இறந்தவளின் உடலை அவள் கிடத்தியிருந்த துணியிலேயே சுருட்டி தோளில் சுமந்தபடி இருளில் மறையத் தொடங்கியிருந்தான். அவளுடலில் வழிவதற்கு இரத்தம் இருந்திருக்கவில்லை. வெளியே பாலுட்டி முடித்திருந்தவளிடம் அவளின் குழந்தையையும் எடுத்துக்கொண்டுபோய் உள்ளே படுக்கசொன்னதும் அவள் குழந்தைகளோடு உள்ளே நுழைந்து இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி நித்திரையாகிப்போனாள். அரையிருளில் அறுந்துபோன குளுக்கோஸ் குழாயிலிருந்து இன்னமும் துளிகள் விழுந்துகொண்டிருந்தது. 0000000000000000000000000 நீண்ட நாளின் பின் குணதாச தொலைபேசியில் பிய சீலியை அழைத்ததும் அதிகாலை நேரம் பயத்தில் பரபரத்து, “உங்களுக்கு ஒன்றுமில்லையே…….? என்றவளிடம் , “இல்லை காலை விடிந்ததும் ஒரு வண்டியை பிடித்துக்கொண்டு கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு வவுனியா வந்துவிடு. இராணுவ அலுவலகத்துக்கு போக வேண்டாம். ரயில் நிலைய பக்கமாக வந்துவிடு. அங்கேயே காத்திரு. நான் வந்துவிடுகிறேன்.” என்று விட்டு தொலை பேசியை துண்டித்து விட்டான் . நடந்த முழு உண்மையையையும் பியசீலியிடம் சொல்ல முடியாது. எனவே அவளுக்கு சொல்வதுக்ககவே ஒரு கதையை தயார் செய்ய வேண்டியிருந்தது .யோசித்தான். கதை இதுதான் : ‘பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி பொது மக்களை மீட்டுக்கொண்டிருந்தோம். அப்போ ஒரு கர்ப்பிணி பெண்ணும் கணவனோடு ஓடி வந்துகொண்டிருந்தாள். அப்போ பயங்கரவாதிகளின் சூடு பட்டு கணவன் இறந்து போய் விடக் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை மட்டும் என்னால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அன்றிரவே குழந்தை பிறந்துவிட பலவீனமாக இருந்த அந்தப்பெண் இறந்து விட்டாள். எவ்வளவோ முயன்றும் என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. புத்த பிரானே எமக்காக இந்த குழந்தையை என் கையில் கொடுத்ததாக நினைத்தேன். இனி இவன் எங்கள் குழந்தை……” இதை பலமுறை அவன் சொல்லிப் பார்த்துக்கொண்டான். அதிகாலையே எழுந்தவன் நித்திரையிலிருந்த பெண்ணிடம், “உன் குழந்தையை கொண்டுபோய் முகாமில் உன் உறவினர் அல்லது தெரிந்தவரிடம் கொடுத்துவிட்டு வா.” என்றவன் பழைய துணியால் சுற்றியபடி நித்திரையிலிருந்த குழந்தையை தன்னுடைய இராணுவ சீருடை ஒன்றில் சுற்றி கையில் எடுத்து பார்த்தபடியே நிற்றிருக்கும்போதே அவள் வந்து விட்டிருந்தாள். குழந்தையை அவள் கையில் கொடுத்து ஜீப்பில் ஏற சொன்னவன், வண்டியை இயக்கியதும் அது ஏ 9 பாதையால் ஓடத் தொடங்கியிருந்தது. வழி நெடுகலும் அங்காங்கு இருந்த இராணுவ தடை கம்பங்கள் எல்லாமே அவனின் அடையாளத்தை உறுதி செய்து வழி விட்டுக்கொண்டிருந்தது. வவுனியா இரயில் நிலையத்துக்கு அருகில் வந்தவன் தொலைபேசியில் பியசீலியை தொடர்பு கொண்டதுமே, அருகிலிருந்த ஒரு வாகனத்திலிருந்து இறங்கி சுற்று முற்றும் பார்த்து விட்டு, வண்டியிலிருந்தவளிடம் குழந்தையை வாங்கும்போதே அது வீரிட்டு அழத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் பலவந்தமாகவே குழந்தையை பிரித்தெடுக்கும் போது அவள் உதடுகளை கடித்து கண்களை மூடிய படியே பேசாமலிருந்தாள். பியசீலியின் கைகளில் குழந்தையை கொடுத்தவன், பியசீலிக்காக சொல்வதுக்கு தாயார் செய்து வைத்திருந்த கதையை வேகமாக சொல்லி முடித்துவிட்டு , “நீ ஊருக்கு போக வேண்டாம். அமாவிடம் விபரம் சொல்லியுள்ளேன். நேராக அவர்கள் வீட்டுக்கு போ. போகிற வழியில் குழந்தைக்கு வேண்டிய பால்மா, பால் போச்சி வாங்கி கொள்.” என்றவனிடம் குழந்தைக்கு என்ன பெயர் என்ற பியசீலியின் கேள்விக்கு, “குமார………..” என்று விட்டு ஜீப்பில் போய் ஏறிக்கொண்டான். மீண்டும் கிளிநொச்சி சென்றுகொண்டிருந்த வாகனத்தை யாருமற்ற காட்டுப் பகுதியில் நிறுத்தி அவளை கீழே இறங்கசொன்னவன் துப்பாக்கியை அவள் தலையில் வைத்தான். எந்த அசைவுமற்று நின்றவளிடம் “உனக்கு சாக பயமில்லையா?” என்றதும் அவளது உதடுகள் லேசாய் விரிந்தது. அதை சிரிப்பென்று அவன் எடுத்துக்கொண்டான். “என்ன பெயர்?” என்று அவளிடமிருந்து வந்த உணர்வுகளற்ற குரலுக்கு. “என்பெயரா….?” என்று கோபமாய் கேட்டான். “இல்ல… உன் பெண்சாதி பெயர் ..” கம்பீரமாய் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தவன் கொஞ்சம் தடுமாறி, “எதுக்கு….? என்றான். “அந்தக் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கொள்ள சொல்.” என்றதும் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் செருகிவிட்டு, “சரி வந்து ஜீப்பில் ஏறு.” என்றான்.அவள் ஏறி அமர்ந்ததும் ஜீப் நகரத்தொடங்கியது. இருவரிடமும் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகளை வீணாக்க இருவருமே விரும்பவில்லை. ஜீப் மீண்டும் கிளிநொச்சி முகாமுக்குள் நுழைந்ததும் அவளை இறங்கி போகசொன்னவன், “உன் விசாரணைகளை விரைவாக முடித்து விடுதலை செய்ய சொல்கிறேன். நீ போகலாம்.” என்றதும் தன் பிள்ளை இருக்கும் இடத்துக்கு வேகமாக போய் கொண்டிருந்தவளிடம், “கொஞ்சம் நில்லு.” என்றவன், அருகில் போய், “அவள் பெயர் பியசீலி…… குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள்வாள். இதை பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது. போ என்றான்.” எபோதாவது செத்து தொலைந்து விட வேண்டும் என்பதுக்காகவே முன்னரங்கில் மூர்க்கமாக படை நடத்தி வெற்றிகளை குவிதுக்கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் நகரத் தொடங்கியிருந்தான். ஒரு துப்பாக்கி ரவை கூட உரசிப் பார்க்கமேலேயே வாழ்க்கை வெறுத்துப்போயிருந்த காலங்கள் கடந்து போய் விட்டிருந்தது. இனி வாழ்ந்து விட வேண்டுமென முடிவெடுத்திருந்த அன்றிரவே அவனுக்கு பக்கத்தில் விழுந்து வெடித்த குண்டுச் சத்தத்தில் எழுந்த வலியோடு மயங்கிப் போயிருந்தான். ராணுவ வைத்திய சாலையில் கண்விழித்த போது, ஒற்றை காலடியில் குழந்தையோடு பியசீலி நின்றிருந்தாள். வலப்பக்கமாக பெரும் வலி. வலக்கால் பக்கமாக தொடைக்குக் கீழே வெள்ளை போர்வை மட்டுமே தெரிந்தது. ஆனாலும் விரல்கள் இருக்குமென்கிற நம்பிக்கையோடு அசைத்துப் பார்த்தான். முறிந்த பல்லியின் வால் போல அவனது தொடை மட்டும் கொஞ்சம் அசைந்தது. என்ன நடந்ததென ஞாபகங்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்து பார்க்க முயன்றதில் குண்டு வெடித்தது வரை மட்டுமே ஞாபகத்தில் வந்தது. அறுந்து போயிருந்த நினைவு மீண்டும் ஓட்ட வைத்ததில் ஒற்றைக் கால் இல்லாதவனாகப் படுக்கையில். அதுக்கு மேல் அவனால் நினைவுகளை மீட்க முடியவில்லை. பியசீலி குழந்தையை அவனருகில் கிடத்தியதும், அது இரண்டு கால்களையும் அடித்து எதோ சத்தம் போட்டபோது அவன் ஒற்றைக் கால்வலியை மறந்து போனான். காயம் ஆறும்வரை சில மாதங்கள் வைத்திய சாலையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. ஒருநாள் வெளியே வீதியெங்கும் பட்டாசு சத்தம். காவலரணில் நின்றிருந்த இராணுவத்தினரும் வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். வைத்திய சாலை ஊழியர்களும் மகிழ்ச்சியோடு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடி முடித்த மறுநாள் வைத்திய சாலைக்கு வந்திருந்த ராணுவ அதிகாரி காயமடைந்திருந்த அனைத்து வீரர்களின் வாயிலும் ‘பயங்கர வாதத்தை வென்று அரக்கனை கொன்று விட்டோம்.’ என்ற படியே பால்ச்சோற்றை ஊட்டி விட்டுச் சென்று விட்டார். காயம் ஆறிப்போனதும் வீடு திரும்பியிருந்தவனுக்கு காயமடைந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் ஊக்கதொகையும் வேறு தொழில் தொடங்குவதுக்காக கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் வீட்டுக்கு முன்னாலேயே சிறிய தொலைபேசி திருத்தும் கடை ஒன்றை போட்டுக் கொண்டவனுக்கு ஒய்வுதியமும் கிடைதுக்கொண்டிருந்ததால் வாழ்க்கை சுமுகமாகப் போய்கொண்டிருந்தது. நாட்கள் செல்ல நடந்த சம்பவங்களும் நினைவிலிருந்து விலகிப்போய் இன்றுவரை நிம்மதியாகவே இருந்தான். இன்றைய சம்பவம் மீண்டும் அவனை பழைய நினைவுகளுக்கு இழுத்துக்கொண்டு செல்லவே, அடுத்த லீவுக்குக் குடும்பமாக கிளிநொச்சிக்குச் சுற்றுலாபோய் பியசீலிக்கு அவன் சொல்லி வைத்திருந்த அதே கதையை அங்குவைத்து நம்பும் படியாக குமாரவுக்கு சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தான். 0000000000000000000000000000 வாகனம் கிளிநொச்சி நகரை அண்டியிருந்தது. குணதாசவுக்கும் பியசீலிக்கும் நடுவில் கையில் பந்தை வைத்து உருட்டியபடியே குமார வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குணதாசவோ இறுகிய முகத்தோடு பல வருடங்களுக்கு பின்னர் ஒரு இடத்தைக்காட்டி “இதோ……. இங்குதான் நீ கிடைத்தாய்.” என மீண்டும் சொல்லப்போகும் அந்த கதையையே மனதுக்குள் திரும்ப சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தான். கிளிநொச்சி சந்தியில் சனக்கூட்டமாகவும் சத்தமாகவும் இருக்க, சந்தியில் இருந்த உணவகத்தில் ஏதாவது சாப்பிடலாமென நினைத்து வண்டியை நிறுத்துமாறு சொல்லிவிட்டுத் தன் கைதடியைகளை எடுத்துக்கொண்டு இறங்கிய போது, வீதியின் மறுபக்கம் சனக்கூட்டமாக இருந்தது. “அங்கே என்ன நடக்கிறது?” என்று ஒருவரை கேட்டதும் , “ஒ……… அதுவா? காணமல் போனவர்களுக்கான போராட்டம். இதுவே இவங்களுக்கு வேலையா போச்சு.” எண்டு சொன்னபடி போய் விட்டார். குமார வண்டியிலிருந்து இறங்கும்போது கையிலிருந்த பந்து நழுவி வீதியில் குறுக்கே உருண்டோட தொடங்கியதும் அதை பிடிப்பதுக்காக அவன் வீதியில் பாய மறுபக்கமிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஓன்று பிரேக் அடித்து நிக்க, ஓடிப்போன குமார திரும்பவும் மறுபக்கம் வந்து விழுந்திருந்தான். என்ன நடந்தது என எல்லோருமே யோசிக்க முதல் அது நடந்து விட்டிருந்தது. அனைவருமே உறைந்து போய் நின்றிருக்கும் போது குணதாச வீதியில் கிடந்தவனை பார்த்தார். குறுக்கே ஓடிய குமாரவை காப்பாற்ற அவனை தள்ளி விட்டு பேருந்தில் ஒருவர் அடி பட்டு கிடந்திருந்தார். யாரோ போனடித்து விட்டிருக்க அம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு போனதும் அங்கு வந்த போலிசார் பேருந்து ஓட்டுனரை கைதுசெய்து விசாரிக்க தொடங்கியிருந்தார்கள். குறுக்கே போன குணதாச தன் இராணுவ அடையாள அட்டையை காட்டி “என் மகனில் தான் பிழை. அவரை விட்டு விடுங்கள்.” என்றதும் போலிசாரும் “விசாரணைக்கு அழைக்கும்போது வரவேணும்.” என்று அவனை விட்டு விட்டார்கள். குமரவை காப்பாற்ற குறுக்கே விழுந்தவன் கையில் வைத்திருந்த எதையோ எறிந்து விட்டதை கவனித்திருந்த குணதாச அதை போய் எடுதுப்பார்த்தான். ஒரு பதாதையில் படம் ஒட்டியிருந்ததது. கீழே சிலவசனங்கள் . அந்த படம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவின் மங்கிய வெளிச்சத்தில் அவனிடம் எதையோ சொல்ல முயற்சி செய்து அப்படியே அடங்கிப்போனவளின் முகம். இன்னும் அவனின் நினைவிலிருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் “என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டான். “என் மனைவியும் பிள்ளையும் எங்கே……”? என்று எழுதியிருக்கு என்று சொல்லிவிட்டு அவன் போய் விட்டான். அக்கம் பக்கம் பார்த்து விட்டு அந்த படத்தை தனியாக பிரித்தெடுத்து சட்டைபைக்குள் மறைத்து வைத்துக்கொண்டான் . உணவகத்தில் சாப்பிட அமர்திருந்தாலும் அவனால் சாப்பிட முடியவில்லை. பியசீலியும் குமாரவும் கூட சரியாக சாப்பிடவில்லை. அரை குறையாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்திருந்தவர்கள் வண்டியில் ஏறியதும் “திரும்பவும் ஊருக்கே போ………” என்று ஓட்டுனரிடம் சொல்லிவிட எதுவும் புரியாமல் அவனும் வந்த வழியே வண்டியை செலுத்த தொடங்கியிருந்தான். குணதாச மடியிலேயே தலை வைத்து படுத்திருந்த குமார, “அப்பா……. எல்லாம் என்னால தானே…? அவருக்கு ஒண்டும் ஆகியிருக்காதே..?” என்றான். இல்லை ஒண்டும் ஆகியிருக்காது. அவர்களும் நல்லவர்கள் தான்”. என்று சட்டையை தடவிப் பார்த்துக் கொண்டான் குணதாச. ஊரை அடைந்திருந்தபோது இரவாகி விட்டிருந்தது. நீண்ட நேர மௌனத்தை உடைத்தவன், “இன்றைக்கு கொஞ்சம் குடிக்கவேண்டும்.” என்று பியசீலியிடம் மெதுவாக அனுமதி கேட்டான். அவளும் எதுவும் சொல்லவில்லை. வாகனம் சாராய கடையை அண்மித்தபோது றைவரின் தோளில்த் தட்டிப் பணத்தைக் கொடுத்தான். வண்டியை நிறுத்தியவன் ஓடிப்போய் வாங்கி வந்து அவனிடம் கொடுத்து விட்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். இரவு பியசீலி அறைக்குள் போய் படுத்துவிட, அவன் குடிப்பதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த குமாரவை “வா…” என்று அழைத்தவன், அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு, அப்பா இப்போ உனக்கொரு கதை சொல்லப் போகிறேன்.” என்று சொல்லத் தொடங்கியிருந்தான் 000000000000000000000 மறுநாள் காலை வழமையை விட தாமதமதமாக எழும்பிய குமார குணதாசவை பார்த்தபோது அவன் மூலையில் சிறிய கண்ணாடி கூண்டிலிருந்த புத்தர்சிலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த நந்தியாவட்டை பூக்கள் நிரம்பியிருந்தது. அருகில் ஒரு பெண்ணின் படம். ” குமார முகம் கழுவி விட்டு வா. தேநீர் தயார் செய்கிறேன்.” என்கிற பியசீலி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவன் பந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பின்புறமாக சென்றிருந்தான். பந்து சுவரில்மோதும் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. குணதாச பியசீலியை திரும்பிப் பார்த்தான். அவள் முகட்டை வெறித்துப்பார்த்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குணதாச நினைவு தெரிந்து வாழ்கையில் இரண்டாவது தடவையாக அழ ஆரம்பித்திருந்தான். டமால் என்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது .
  25. 1 point
    படம்: எதிர்பாராதது (1954) வரிகள்: K.P காமாட்சி சுந்தரம். இசை: C.N பாண்டுரங்கன் பாடியவர் : A.M ராஜா சிற்பி செதுக்காத பொற்சிலையே! எந்தன் சித்தத்தை நீ அறியாயோ! சிற்பி செதுக்காத... அற்ப செயலுக்கு இப்படியும் மன அவஸ்தை பட விடுவாயோ ! சிற்பி செதுக்காத.... கர்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை காண்பதும் உன் செயலாலே கற்கண்டு பாகும் கனிரசம் தேனும் கசந்திடும் உன் மொழியாலே....! சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறியாயோ!..
  26. 1 point
  27. 1 point
  28. 1 point