Jump to content

Leaderboard

  1. nilmini

    nilmini

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      908


  2. tulpen

    tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      12

    • Posts

      4150


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      28963


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43052


Popular Content

Showing content with the highest reputation on 03/18/20 in Posts

  1. தேங்காய் எண்ணெய் 76 degrees F (24 C) பாகை வெப்பத்துக்கு கீழ் கட்டியாகி விடும். அதற்கு மேல் என்றால்தான் உருகும். நல்லெண்ணெய் - 5 பாகைக்கு கீழ் தான் கட்டியாகும். அதற்கு மேல் என்றால் உருகி விடும். இதற்கு காரணம் அந்தந்த எண்ணையில் உள்ள பலவகை கொழுப்புகள் . இந்த இரண்டு எண்ணையும் உடலுக்கு மிகவும் நல்லது. இப்பதான் மேலை நாடுகள் தேங்காய் எண்ணெயின் நல்ல பயன்களை ஆய்வு மூலம் அறிகிறார்கள். சீனர்கள் கருக்கிய எள்ளு எண்ணெய் ( sesame oil ) பாவிப்பதால் அதனை பற்றியும் இப்போது ஆய்வு அறிக்கைகள் உள்ளது. எமது நல்லெண்ணெய் பற்றி அவ்வளவாக ஒருவருக்கும் தெரியாது. தேங்காய் என்னை பாவிப்பதினால் உள்ள நன்மைகள்: HDL கொலஸ்டரோலை கூட்டும் , குருதியில் உள்ள சீனி அளவை கட்டுப்படுத்த உதவும், ஈரலை பாதுகாக்கும். தோலுக்கு முடிக்கு பூசினால் antibacterial, antifungal ஆக செயற்படும்.நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். முடி வளர்ச்சி , ஆரோக்கியத்தை கூடும். பற்களுக்கும் எலும்புகளுக்கும் நல்லம், மூட்டு வலிகளுக்கு உதவும், பசியை குறைக்கும், காயங்கள் ஆற உதவும். இன்னும் பல நன்மையைகளே அன்றி தீங்கு இல்லை.
    4 points
  2. உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. நான் MD இல்லை PhD . நான் மருத்துவ கல்லூரியில் படிப்பித்துக்கொண்டு research உம் செய்கிறேன். Anatomy படிப்பிப்பதால் உடல்களை dissect பண்ண வேண்டும். அத்துடன் மற்ற மருத்துவர்களுடன் பலதும் விவாதிப்பதால் நிறைய விடயங்களை அறிகிறேன். அவற்றைத்தான் பதிவிடுகிறேன். நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பரவாயில்லை. பதில் தெரிந்தால் பதிவிடுவேன்
    3 points
  3. சுவையான அவரைக்காய் பொரியல் /பிரட்டல்.........! 😋
    2 points
  4. முயற்சித்து பாருங்கள். பழகிவிடும். நிறையசாப்பிடும்போது இரப்பை எல்லாவற்றையும் சேகரிப்பதற்காக இலாஸ்டிக் மாதிரி இழுபட்டு பெரிதாகி விடும். அதனால் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் இரப்பை நிறையும் வரை சாப்பிடலாம் போல இருக்கும். அதுவே கஸ்ரப்பட்டு சாப்பாட்டை அரைவாசியாக குறைத்தால் திரும்ப இரைப்பை சிறுத்து பழைய அளவுக்கு வந்து விடும். அதுக்கு பிறகு கணக்க சாப்பிட முடியாது. Obese ஆணவர்களுக்கு சில சமயம் இரைப்பையின் அளவை குறைப்பதற்கு ஒரு பகுதியை இறுக்கி கட்டி விடுவார்கள் . நான் வெட்டிய உடல்கள் சிலவற்றில் பார்த்திருக்கிறேன்
    2 points
  5. நான் முன்பு போட்ட பதிவின்படி ஆட்டிறைச்சி தான் இருக்கும் இறைச்சிகளிலே சிறந்தது என்று பல ஆய்வுகள், survey கல் மூலம் நிரூபித்து இருக்கிறார்கள். உலகில் 70% வீதமான Red-meat Goat meat என கூறப்படும் ஆட்டிறைச்சியில் இருந்துதான் பெறப்படுகிறது. ஏன் Greasy ஆக இருக்கென்று தெரியவில்லை. குளிர் பிரதேசத்தில் இருக்கும் மிருகங்களுத்தான் கொழுப்பு அதிகமாக இருக்கும். Lamb எனப்படும் செம்மறி ஆடு கூடாது. அதில் நிறைய கூடாத கொழுப்பு LDL , Saturated fat எல்லாமே இருக்கு
    1 point
  6. எல்லா செயற்கை மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் இருக்கு. மருந்துக்கு மருந்து அதன் விளைவுகள் மாறுபடும் . மற்றும் எடுக்கும் dose ஐ பொறுத்ததும் தான். Rosuvastatin பக்க விளைவுகள் அவ்வளவு இல்லை. மூட்டு, தசை நோக்கள் தான் பொதுவானது. இந்த மருந்து ஈரலில் கொலெஸ்ட்ரோல் உருவாக்க தேவையான ஒரு நொதியத்தை தடுத்து கொலெஸ்ட்ரோல் கூடாமல் செயற்படுவதால் ஈரலை கொஞ்சம் பாதிக்கும். அனால் ஈரல் எமது உடற் பாகங்களுக்குள் மிகவும் வலிமையானது. பாதித்த பகுதிகள் தம்மை திருத்தி விடும். ஆனால் அதையும் மீறி நாம் ஈரலை பாவித்தால் ஈரல் பழுதாகி விடும். முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்னவென்றால் இந்த மருந்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுக்கலாமா என்று டொக்டரிடம் கேக்கவேணும். Alcohol , Nicotin பொதுவாக எல்லா மருந்துகளோடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ( சிலர் Alcohol உடன் மருந்தை எடுப்பார்கள். இது மிக ஆபத்தானது. ஈரலை பாதிக்கும் ) ஒவ்வொரு நாளும் prescrption இந்த படி மருந்தை எடுக்கவேண்டும் ( அளவு, சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா , capsule மருந்தை முழுதாக விழுங்க வேணும். ஒரு நாளைக்கு எடுக்க மறந்தால் அடுத்த நாளைக்கு double டோஸ் எடுக்க கூடாது. சில மருந்துகள் Fridge இல் வைக்க வேணும். சிலதுகள் இருட்டான இடத்தில நிறைய வெப்பம் இல்லாமல் இருக்கும் இடத்தில வைக்கவேணும். இவை எல்லாம் பார்ப்பதுக்கு சின்ன விடயங்களாக இருந்தாலும் மிகவும் முக்கியமான விடயங்கள். குறிப்பு: 16 மணி நேரம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் ஒரு கிழமைக்கு இரு நாட்கள் செய்தால் ஈரலுக்கு நல்லது, எல்லா berry வகை பழங்களை smothie அடித்து குடித்தல் , உணவில் organic மஞ்சள் சேர்த்தல் , Apple , Broccoli , இஞ்சி , கொத்தமல்லி இலை , புதினா (mint ) இலை எல்லாம் ஈரலை மற்றும் உடல் பாகங்கள் அனைத்தைம் detox பண்ணும். எனது அவதானிப்புப்படி மருந்துக்களை நான் மேலே சொன்னமாதிரி எடுத்துக்கொண்டு எமது உணவுப் பழக்கங்கள், சிறிது உடற் பயிற்சி, யோகாசனம், தியானம் செய்தால் முக்கால்வாசி நோய்களும் குறையும். கேரளாவில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளும் நல்லது ( நிறைய fake ones இருக்கு, தெரிந்தவர்கள் மூலமாக தான் போக வேணும்). யோகாசனம், தியானம் நிச்சயம் பலனளிக்கும் . விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து உள்ளார்கள்.
    1 point
  7. குளிருக்கு.... தேங்காய் எண்ணை உறைந்தால் தான், கலப்படமில்லாத எண்ணை என்று சொல்ல கேள்விப் பட்டுள்ளேன். மற்றும் தேங்காய் எண்ணையில் உள்ள கொழுப்பு... உடலுக்கு தீங்கு விளைவிக்காத கொழுப்பு என எங்கோ வாசித்தேன். அது சரியா... என்று தெரியவில்லை, ஈழப் பிரியன்.
    1 point
  8. முதல்முறையாக ஆட்டிறைச்சியில் கொழுப்பு குறைவு என்று எழுதும் ஒருவராகவே உங்களைப் பார்க்கிறேன். ஆட்டு இறைச்சியை வெட்டும் போதோ சாப்பிட்டு முடிந்த பின் கை கழுவும் போதோ சவர்க்காரம் போடாவிட்டால் கையிலுள்ள கொழுப்பு போகாது. மற்றைய இறைச்சிகள் அப்படியல்ல. வீட்டில் சமைப்பது அனேகமாக கோழி.எப்பவாவது உடனே அடித்த ஆட்டிறைச்சி.5-6 மாதத்துக்கொரு முறை பண்டி றிப் .மாடு வீட்டில் சமைப்பது கிடையாது.கடைத்தெருவுக்கு போனாலும் பெண்குலங்கள் சாப்பிட மாட்டார்கள். ஆட்டிறைச்சி சமைத்தால் ஒரு பிரச்சனை வீட்டில் எல்லோருமே இரண்டாம் தரம் சோறு போட்டு சாப்பிடுவோம். உங்கள் தகவல்களுக்கு நன்றி. 70 வயது 50க்கு மேல தான் சார்.
    1 point
  9. நாம் உண்ணும் உணவினால் மட்டுமே உடல் பருக்கும். ஏனெனில் உடல் உணவினால் தான் ஆனது. மரபு வழியினாலும் வேறு குறைபாடுகளினால் மட்டுமே சாப்பிடாமல் அசாதாரணமாக உடல் எடை கூடும். ஆனால் விரைவில் அது ஒரு நோயாக வடிவெடுக்கும். மற்றது வயது போக உடல் என்னும் இந்த இயந்திரம் நல்லா வேலை செய்யாமல் சாப்பிட்ட சாப்பாட்டை எல்லாம் சேகரிக்க தொடங்கி விடும். 50 வயதுக்கு பின் ( குறிப்பாக பெண்களுக்கு) ஹோர்மோன் குறைபாடால் நல்லாவே கொழுப்பு சேரும். எனவே 30 வயதில் சாப்பிட்ட உணவில் இருந்து 50% தான் சாப்பிட வேண்டும். மற்றது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யவே வேண்டும். எமது மரபு அணுக்களும் கொஞ்சம் விளையாடும். சில பேருக்கு கொஞ்சம் கவனித்தால் போதும் மற்றவருக்கு நிறைய கவனம் தேவை. குறிப்பு: பாண் நல்லம் என்று சொல்லவில்லை. சொல்லப்போனால் பாணில சீனி உப்பு, எண்ணெய் , ஈஸ்ட், என்று எல்லாமே இருக்குது. சோறென்றால் தனிய சோறுதான். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை சோறு சாப்பிடா விட்டால் நிறை குறையும்.
    1 point
  10. சரி. இது உங்களுக்கன பதில். ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும் அவரது நடவடிக்கைகளையும் பொறுத்து ஒரு நாளைக்கு இத்தனை கலோரி சக்தி தேவைப்படும் என்ற நிர்ணயம் உண்டு. நிர்னயிக்கப்பட்ட கலோரியின் அளவை மட்டும் சாப்பாட்டின் மூலம் உடலுக்குக் கொடுத்தால் உடல் நிறை மாறாது. அதற்கு மேலான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமான கலோரிகளை உடல் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்துக் கொள்ளும். அதாவது உடல் நிறை அதிகரிக்கும். தேவையான அளவுக்குக் குறைவான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமாகத் தேவைப்படும் சக்தியைப் பெறுவதற்காக உடல் தான் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பிலிருந்து பெற்றுக் கொள்ளும். உடல் நிறை குறையும். ஜிம்முக்குப் போகத் தேவையில்லை. இது மிகச் சாதாரணமான சமன்பாடு. குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் பருமன் கூடுவது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதற்கான காரணங்கள் பல உண்டு. உடற்பயிற்சி செய்தால் நாளாந்தம் தேவையான கலோரிகளின் அளவு அதிகரிக்கும். வழமையாகச் சாப்பிடுவதைக் குறைக்காமலே மெலியலாம். அதிகமாகச் சாப்பிடாமலே உடம்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். அவர்களின் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்பதை அறியாமலே ஏராளமான கலோரிகளை உட்கொள்கிறார்கள். கொழுப்பு மட்டும் உடல் பருமனைக் கூட்டுகிறது என்பது தவறான கருத்து. கொழுப்பு உடலுக்கு இன்றியமையாத ஒன்று. கொழுப்பு இல்லாமல் உடல் இயங்க முடியாது. இதனால்தால் உடலுக்குத் தேவையான 70 வீதமான கொலஸ்ரோலினை உடலே உருவாக்கிக் கொள்கிறது.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.