• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on புதன் 29 ஏப்ரல் 2020 in all areas

 1. 7 points
  எதோ நம்மால் முடிந்தது என்று இருபது மிக வறிய குடும்பங்களை தத்தெடுத்துள்ளேன், ஒவ்வொரு மாதமும் 2500/= பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதியை அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பெற்றுச்செல்லுமாறு வசதி செய்துள்ளேன் முதல் மாதம் வெற்றிகரமாக கடந்துள்ளது ,புலம் பெயர் நல்ல உள்ளங்களும் இப்படி அவர்களால் முடிந்ததை செய்து அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டலாமே
 2. 2 points
  நேற்று காலையில் பாலைவனத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும்போது மனதில் ஒரே தவிப்பு..! 'நாளை ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்போகுதே.. ஒரு பயலும் கடையை திறக்க மாட்டானுக..சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?' இங்கே ரமலான் நோன்பு மாதத்தின்போது தினமும் உணவகங்கள் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சில கடைகள் திறந்தாலும் திறக்கும், ஆனால் மறுபடியும் எட்டு மணிக்கு கொரானா ஊரடங்கால் மூடிவிட வேண்டும்..! காலை பத்து மணியிலிருந்து தமிழகத்திலிருக்கும் என் மனைவியிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பல அறிவுறுத்தல்கள், சமையல் குறிப்புகள், கெஞ்சல்கள்..! "சரி.. சரி..சரியம்மா.. வேலை முடிந்தவுடன் போய் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுறேன்.. வேலையில் இருக்கிறேன், நீ போனை வையம்மா.." என அலுப்புடன் துண்டித்தேன்.. ஒப்பந்தகாரர்களின் நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் அன்பர்கள், "என்ன சார், வீட்டம்மாவிடம் நல்ல 'டோஸ்'ஸா.. சமையல் ரொம்ப ஈஸிதான் சார்.. சிரமமாக இருந்தால் எங்க வீட்டுக்கு வாங்க.." என அன்புடன் அழைத்தனர். "இல்லையப்பா.. நானே முயற்சிக்கிறேன்.. அழைப்பிற்கு நன்றி.." என கூறிவிட்டு வேலையில் மூழ்கிவிட்டேன்.. மாலை வீட்டுக்கு வந்ததும் 'சரி, சமையலறையில் என்னதான் பொருட்கள் இருக்கின்றன..?' என உருட்டி தேடினேன்.. பாத்திரங்கள், அலமாரி தட்டுகளில் பழைய மளிகை பொருட்கள்.. எல்லாம் தூசி படிந்து காய்ந்திருந்தன..லுங்கியை மடித்துக்கட்டி தேவையான பாத்திரங்களை சோப் தண்ணிரில் ஊறவைத்து கழுவினேன்.. வீட்டம்மா 'வாட்ஸ்அப்'பில் அனுப்பிய குறிப்புகளின்படி தேவையான மளிகை பொருட்களை வாங்கிவந்தேன்..வாங்கி வந்த மளிகை பொருட்களை அடுக்கிவிட்டு ஓய்ந்து, யாழ்ப் பக்கம் வந்தேன்.. யாழ்க்களத்தில் 'சுமே மேரியம்மா'வின் படங்கள் பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைத்தேன்..! இரவில் வீட்டில் பேசும்பொழுது 'காலையில் இட்லிக்கு எப்படி தயார் செய்வது..?' என பெரிய விளக்க உரையை மனைவியிடம் முழித்தவாறே கேட்டு புரிந்த மாதிரி தலையாட்டினேன்..மனதிற்குள் தோன்றியது, 'இந்த இமய மலையில்கூட ஏறி சிகரம் தொட்டுவிடலாம், புரிபடாத இந்த சமையலை எப்படி கற்றுத் தேறுவது..?' மலைப்புடன் யூடுயூபில் "இதயத்தில் நீ.." படம் பார்க்க ஆரம்பித்தேன்.. அப்படியே தூங்கியும் விட்டேன்..! காலையில் மனவியிடமிருந்து அழைப்பு.. "என்ன, இன்னமுமா தூங்கிறீங்க.. எழுந்து சமையல் வேலையை நான் சொன்ன மாதிரி செஞ்சி எனக்கு போட்டோ அனுப்புங்கள்..!" என அன்புக் கட்டளை. தட்டிக்கழிக்க முடியுமா..? "அட இரும்மா..நீ சொன்னமாதிரி நான் சமையல் செய்யுறேன், நீ பேரனை கவனி.." எனக் கூறிவிட்டு மடமட குளித்துவிட்டு சமையல் வேலைகளை தொடங்கினேன்.. பல நாட்கள் கேஸ் ஸ்டவ் பயன்படுத்தாததால் அது மக்கர் செய்தது.. சரிசெய்துவிட்டு 'ஒழுங்காக வேலை செய்கிறதா..?' என உறுதிபடுத்தினேன்.. ஃப்ரிட்ஜிலிருந்து இட்லி மாவு பாக்கெட்டை உடைத்து, இட்லி அடுக்கில் ஊற்றி குக்கரில் வைத்து அடுப்பை இயக்கினேன்.. அது பாட்டுக்கு வேக ஆரம்பித்தது.. அடுத்து 'தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி எப்படி தயார் செய்வது..?' இது எனக்கு மிகப் பெரிய சவால்..! இவ்விசயத்தில் மனைவி சொல்லே மந்திரம்..! அவர்கள் சொன்ன அறிவுறைகளின்படி ஒருவழியாக கண்ணீருடன்(?) சட்டினியை தயாரித்து, இட்லியை வேகவைத்து சமையலை முடித்தேன்..! சூடாக இருந்த இட்லி குக்கரின் மூடியை திறந்து, இட்லியை இறக்க முயன்றபோது கையில் சூடுபட்டு சிவந்துவிட்டது.. ஒருவழியாக துணிகளை சுற்றி பிடித்துக்கொண்டு மூடியை திறந்தபோது, பலநாள் பசியாய் இருந்து சாப்பாட்டைக் கண்டது மாதிரி ஒரே மகிழ்ச்சி.. உங்கள் மொழியில் "சொல்லி வேலையில்லை..!" 'ஆகா நாமளும் இட்லி அவித்துவிட்டோம்.. சாப்பாட்டுக்கு அலையாமல் இந்த ரமலான், கொரானா கடை அடைப்புகளை சமாளித்து வெல்ல முடியும்' என்ற நம்பிக்கை வந்தது..! 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள்' என்பது எவ்வளவு யதார்த்தம் என்பதை இந்த சிறிய விடயத்தில் உணர முடிந்தது..! என் மனைவிக்கு நன்றி..!! "இது குழந்தை பாடும் தாலாட்டு.." என என் சமையல் கலை(??????)யை பொறுமையாக வாசித்த உங்களுக்கும் நன்றி..!!! .
 3. 2 points
  தங்கள் இருவரின் பதிவுகளை படித்தவுடன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டேன். ஒரு சாதாரண மின்கடத்தியில் மின்சாரம் செல்ல பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு பொறிமுறைகளை ஆராய்ந்து வடிவமைப்பது வழக்கம். பெரும்பாலும் வடிவமைத்த குறிப்பிட்ட எல்லை அளவுகளை மின்சாரம் மீறாது. அப்படியும் மீறினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். மின்சாதனங்களும் பழுதாகாது. இப்படி சடப் பொருள்களை வடிவமைக்கவே இவ்வளவு ஆராயும் ஒரு பொறியாளர், சமைக்கும் முன் 'என்னென்ன பாதகங்கள், தெளிவில்லாத விடயங்கள் உள்ளன..?' என ஆராய்ந்து பல்வேறு இடங்களில் தகவல்கள் பெற மாட்டாரா..? அப்படியே தகவல்கள் பெற்றாலும் வீடு மந்திரியிடம் இறுதியாக ஆலோசனை கேட்க மாட்டாரா..? என் இல்லாளிடம் இந்த சோறு குழைவு விடயமாக சொல்லி படத்தை காட்டியபோது, அவர் கூறியது "தண்ணீர் சரியான அளவில் சேர்த்தாலும், நீங்கள் வாங்கிய அரிசி புதியதாக இருக்கும், அந்த குறிப்பிட்ட நிறுவன பொருளை திரும்பக் கொடுத்துவிட்டு இன்னொரு நிறுவனத்தின் பொருளை வழக்கமாக வாங்கும் கடையில் வாங்கி சமைத்துவிட்டு சொல்லுங்க..!" என்றார். (இப்பொழுது அந்த தமிழ்க் கடை ஊரடங்கு தளர்வு காரணமாக திறந்துள்ளது.) நானும் புதிய அரிசிப் பொதியை திரும்பக் கொடுத்துவிட்டு வழக்கமாக வாங்கும் தமிழ்க் கடையில் பழைய பொன்னி அரிசி பொதியை வாங்கி சமைத்ததில், எல்லாம் சுகமே..! இரு 'தாத்தா'க்களின் ரகளைகளுக்கும் நன்றி ..!
 4. 2 points
  எனக்கும் அப்படித்தான் தோணுது . ஆனாலும் அவர்களின் கடவுள் மாபாலி(ஓணம் பண்டிகை கடவுள் ) படத்தை என் காலில் போட்டு மிதித்து படம் எடுத்து போட்டால் அவர்கள் தாங்குவார்களா ?
 5. 2 points
 6. 1 point
  காதுல ஏன் ரத்தம் .. ? ம்ம்.. அதே ரத்தம்.! இந்த படத்திற்கு ஏண்டா வந்தம்.? என்டு நொந்த போன தருணங்கள் .. இடை வேளை நேரத்தில் ஆளை விட்டா போதும் என்ர சாமி .! என்டு ஓடி வந்த நேரம்கள் .. இந்த றப்பா படத்திற்கு ஓன் லைனில் அவசரப்பட்டு பணம் கட்டி போட்டமே .. வட போச்சே..! என்டு நொந்து நூடூல்ஸ் ஆன தருணம்கள். சுருக்கமாக தாங்கள் பார்த்த அந்த தரமான பழைய / புதிய திரை காவியத்தின் (மொக்கை.!) விமர்சனத்தை / அனுபவத்தை .. கள உறவுகள் எழுத்துங்களேன் .. அல்லது வேறு யாராவது கழுவி ஊற்றி இருந்தால் இணையுங்களேன் . அதே ரத்தத்தை நாமும் பார்ப்பம்..ரசிப்பம்.. நன்றி.! அக்கரை சீமையிலே (1993) அப்போது (1990's) விஜயகாந்திற்கு மாற்று என்று அறியபட்ட செவ்வாழை சரவணன் நடித்த இந்த படம் அப்போதைக்கு அதிக நாட்கள் ஓடின என்றால் நம்ப முடிகிறதா..?
 7. 1 point
  Sri Lanka gears up for daunting debt repayment Meera Srinivasan As Sri Lanka battles COVID-19 with its public health expertise and military might, it is gearing up for another imminent crisis — servicing its mounting external debt, of which $2.9 billion is due this year. Of the many economic side effects of the global pandemic, is the drastic fall in Sri Lanka's foreign exchange reserves — driven mainly by exports, remittances and tourism that have all suffered heavily post COVID-19 The Central Bank of Sri Lanka recently sought a $400 million currency swap with the Reserve Bank of India (RBI), to boost its foreign reserves. “Yes, we have made a request to the RBI for a swap facility for $400 million,” Central Bank Governor W.D. Lakshman told The Hindu on Monday. Sri Lanka has resorted to the currency swap facility with the RBI from time to time to maintain its reserves, but the middle-income country has a daunting road ahead this year, as it must pay a sizeable portion of its foreign debt amounting to 42.6% of the country’s GDP in 2019. Well before COVID-19 emerged a threat, Sri Lanka mulled appealing for loan moratoriums from India and China, two of its willing lenders. Sri Lanka owes about $960 million to India, while its debt to China was $5 billion in 2018. Following the recent public health emergency — nearly 600 COVID-19 positive cases reported so far — President Gotabaya Rajapaksa urged the Director General of the World Health Organization (WHO) to persuade the International Monetary Fund, the World Bank and the Asian Development Bank, and leading bilateral lenders to provide a debt moratorium or debt re-profiling facility for “vulnerable developing countries” like Sri Lanka. Debt management Contrary to the popular “Chinese debt trap” analysis often made in regard to Sri Lanka’s economy, the country’s debt concerns are not confined to borrowings from China alone. “Sri Lanka certainly has a debt problem, but it is not necessarily a Chinese debt problem,” according to Ganesh Wignaraja, executive director of the Lakshman Kadirgamar Institute of International Relations and Strategic Studies. Along with three other researchers, Mr. Wignaraja recently co-authored a paper on Chinese investments, as part of a study commissioned by the London-based Chatham House policy institute. Citing 2018 data on Sri Lanka’s loans from different lenders, the paper shows that the country’s debt owed to financial markets (holders of international sovereign bonds issued in Sri Lanka) is more significant than that owed to multilateral lenders [such as the World Bank, IMF], and bilateral lenders [including China, Japan and India]. Economists like Mr. Wignaraja argue that Sri Lanka’s economic situation is better off compared to that of Greece or Argentina at the height of their crises, in terms of meeting its domestic and international obligations — using its reserves, domestic borrowings or by printing money. However, everyone agrees that the debt raised through sovereign bonds in the international money markets is stifling, with little wiggle room or scope for negotiation. With a $1 billion-international sovereign bond maturing in October, the alarm bells are already ringing in Sri Lanka. Acknowledging the pressure, former Prime Minister Ranil Wickremesinghe, in a recent interview to The Hindu, proposed that SAARC as a region negotiate this with the London Club, referring to the informal group of private creditors in the international money market. Asked about Sri Lanka’s strategy, the Central Bank told The Hindu that the country had maintained “an unblemished record” of debt servicing and had entered into a long-term financing arrangement through which it received funds totalling $500 million in March, and expected an additional $300 million soon. Further, the apex bank said liquidity facilitation arrangements with the RBI — in the form of swap facilities — and other major central banks are at “an advanced stage of completion”. Arrangements with the IMF and other multilateral donors are also under review, a spokesman said. However, in addition to managing different lenders, it is time for Sri Lanka to consider some fundamental changes to its policy, economists emphasise, pointing to the need for greater attention to the rural economy, mainly agriculture, and a shift from an “urban bias” in policy, as Mr. Wignaraja put it. Ahilan Kadirgamar, senior lecturer, University of Jaffna, said Sri Lanka’s limited foreign reserves are necessary not only for debt servicing but also for essential imports amid falling foreign earnings. In the current situation, he predicts that the government will be squeezed by its demanding foreign lenders, while facing growing discontent from citizens who are denied imported goods that Sri Lanka has failed to substitute in the past. “Even as the government makes every effort to avoid defaulting on its foreign debt, can it muster the political will to redistribute wealth to ensure the working people can afford a broad basket of goods amidst rising costs for many goods in short supply?” he asked.
 8. 1 point
  இன்றைய ஸ்பெசல் வாழைப்பழ பணியாரம். எமது வீட்டில் இடைஇடை செய்தாலும் எல்லா நேரங்களிலும் சரியாக வராது.அளவு என்று ஒன்றும் இதுவரை இல்லை. சரி காணொளிகளைப் பார்த்து செய்வோம் என்று எண்ணி முதலில் யாழ்களத்தில் உறுப்பினராக உள்ள தாமரை என்பவரது கொணொளியை பார்த்தால் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. இன்னொரு காணொயைப் பார்த்தால் சுலபமாகவும் இருந்த பொருட்களுடனே செய்யலாம். அந்த காணொளியையும் மேலே இணைத்துள்ளேன். அதில் எல்லாமே அவ சொன்ன மாதிரி செய்தேன்.ஆனாலும் தண்ணீருக்கு பதிலாக பால் விட்டேன்.தின்றது தான் தின்றது கொஞ்சம் ருசியாக சாப்பிடுவமே என்று தான். அடுத்து நான் கை பாவிக்கவில்லை.கறிக்கு பாவிக்கிற வளையாத கரண்டி இருந்தது.அதைப் பாவித்து குழைத்து சட்டிக்குள் போடும் போது தண்ணீருக்குள் தோய்த்து தோய்த்து எடுத்த மேசைக்கரண்டியைப் பாவித்தேன். நன்றாக இருந்தது ரெசிப்பியைத் தாங்கோ என்று வேறு வாங்கி வைத்துள்ளார்கள் முக்கிய குறிப்பு வாழைப்பழம்,மாவு,எண்ணெய்,சீனி ஒன்றுக்குமே உதவாத சாமான். நன்றி.
 9. 1 point
  அந்த லேடிக்கு குரல் சரியில்லை. அதை மறைக்க.... அபிநயம் போட்டு டான்ஸ் ஆடுது... சகிக்கலை
 10. 1 point
  ஐயா, உங்களை ஆதரித்தே எழுதினேன். நல்ல தரவுகளை இணைத்துள்ளீர்கள்.
 11. 1 point
 12. 1 point
  எப்படி படம் எடுத்தாலும் கதை இல்லாவிட்டாலும் நாலு டான்ஸ் நாலு சண்டை காட்சி இருந்தால் தமிழ்நாட்டில் படம் ஓடும் அவ்வளவுக்கு மக்களை முட்டாள்களாய் உருவாக்கிய பெருமை திராவிடம் என்று பூச்சாண்டி காட்டிய இரு பெரும் கட்ச்சிகளையே சேரும் .இனி கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின் பருப்பு வெகும்கிற கதை இல்லாமல் போகும் . காரணம் இந்த கொரனோ நேரம் வீடுகளில் இருந்து படம் தரவிறக்கி பார்த்தவர்கள் தியேட்டர் சென்று பார்க்க இனி நல்ல படம் என்றால் மட்டுமே எட்டிபார்ப்பார்கள் . ஆனாலும் தொடர்ந்து கொரனோ அடங்க மறுத்தால் டிரைவ் இன் தியேட்டர்கள் பழையபடி சக்கை போடு போடும் காரில் இருந்தபடியே படம்பார்த்து அப்படியே மக்டொனால் ம் டிரைவ் துரு வில் வாங்கி உண்டு மனிதர்கள் தங்கள் குடும்பங்களுடன் தனி தீவாகி விடுவினம் .
 13. 1 point
  ஏப்ரல் மாதம்-29 ஆம் திகதி பூமியை விண்கல் தாக்கினால் பாரிய அழிவு ஏற்படும்.! மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும், இந்த விண்கல் பூமியை தாக்கினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் எனவும் நாசா அறிவித்துள்ளது. விண்கல் என்பது விண்வெளியில் இருந்து வளி மண்டலத்தை கடந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதி வேகத்தில் வந்தடையும். எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்றுகள் பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன. சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது. அதன்படி, நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட எரி கல் ஒன்று பூமியை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது. இந்த எரிகல் வரும் ஏப்ரல் 29ம் தேதி, புதன்கிழமை அதிகாலை 4:56 மணிக்கு பூமிக்கு மிக அருகில் இந்த எரிகல் பறந்து செல்லும் என கணிக்கப்படுகிறது.குறிப்பாக இந்த எரிகல் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. ஆனால் அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றும் பூமியை எரிகல் நெருங்கும்போது அளவு குறைந்து சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது நாசா. இந்த எரிகல்லுக்கு 52768 (1998 OR2) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எரிகல் முதலில் 1998ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எரிகல் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த எரிகல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது என்பதால் இதை அபாயகரமான எரி கல்லாக நாசா குறிப்பிட்டுள்ளது. http://puthusudar.lk/2020/04/18/ஏப்ரல்-மாதம்-29-ஆம்-திகதி-பூ/
 14. 1 point
  நிச்சயமாக.... இதனை மட்டுவில் இருக்கும் எனது நண்பனுடன் சேர்ந்து ஒரு குழுவாக செய்கிறோம்.. அதாவது பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் இரு நல்ல உள்ளங்கள் அவர்களது முழு இலாபத்தையும் தவிர்த்து கொள்முதல் விலைக்கே பொருட்களை தந்துதவுவதால் 1000 ரூபாய் பொதியை தயார் படுத்த எங்களுக்கு 900 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஆகவே உதாரணத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பொதிகளை தயார் செய்தால் எங்களுக்கு மிஞ்சும் பணத்தை வைத்து மொத்தமாக 11 பொதிகளை தயார் செய்ய முடியும். 2500 பொதி என்னும்போது மொத்தமாக ஒரு பொதியில் 250 ரூபாய் மிஞ்சும் 10 பொதி என்னும்போது மிஞ்சும் 2500 ஐ வைத்து மொத்தமாக 11 பொதிகளை செய்யலாம். எனது நண்பன் மட்டுநகரை சேர்ந்தவன் , அவனும் அவனது குழுவும் பணம் சேகரித்து ஒவ்வொரு தடவையும் குறைந்தது 250- ஆயிரம் ரூபாய் பொதிகளாவது செய்வார்கள் எனது வதிவிடம் கல்முனை என்பதாலும் ,மற்றும் பொதியின் கனதி அதிகம் அத்துடன் நான் 20 பொதிகளை மட்டுமே கேட்டிருந்ததாலும் இந்த 20 பொதிகளை தனியாக செய்து வீட்டில் கொடுத்துவிடுவார். மிஞ்சும் 5000 ரூபாயில் 5 -ஆயிரம் ரூபாய் பொதிகளை செய்து அவர் விநியோகிக்கும் ஆயிரம் ரூபாய் பொதிகளுடன் சேர்த்து மட்டுவில் விநியோகம் செய்வார். மிகுதி விடயங்கள்,மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு தனி மடலில் தெரிவிக்கிறேன்
 15. 1 point
  படம் : மீனவ நண்பன் இசை : M.S.விஸ்வநாதன் பாடியவர் : K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் வரிகள் : முத்துலிங்கம் தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ அந்த தேவ லோக மன்னவனும் நீயோ வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ புள்ளி மான் தேடும் கலை மானும் நானல்லவோ அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு அமுதாகவே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா? இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனை காண்கிறேன் உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கின்றேன் இந்த மனராஜியம் என்றும் உனக்காகவே சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன் நினைக்க இனிக்க கொடுத்து மகிழ்ந்த முத்தாரமே தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ அன்புக்கு நான் அடிமை! தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை! நல்ல கொள்கைக்கு நான் அடிமை! தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை! அன்புக்கு நான் அடிமை... இன்பங்கள் இங்கே பொங்கி வழியும் முகங்கள் நான் பார்க்கிறேன்! இதயம் எல்லாம் பாலைவனம்போல் இருக்கும் நிலை பார்க்கிறேன்! அன்பு பணிவு அடக்கம் எங்கே? தேடிப்பார்த்தேன் தென்படவில்லை! அன்புக்கு நான் அடிமை... குடிக்கும் நீரை விலைகள் பேசி கொடுக்கும் கூட்டம் அங்கே! இருக்கும் காசை தண்ணீர் போலே இறைக்கும் கூட்டம் இங்கே! ஆடை பாதி ஆளும் பாதி அறிவும் பாதி ஆனது இங்கே! அன்புக்கு நான் அடிமை... உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் உறவு கொண்டீர்களே! கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை மறந்து போனீர்களே! நாகரீகம் என்பது எல்லாம் போதையான பாதையல்ல! அன்புக்கு நான் அடிமை... தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை! தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்! ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்! உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்! தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை... கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்! கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்! புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்! பொதுவுடைமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்! கண்கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே! களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே! நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் எங்கே? நிமிர்ந்தெழுந்தால் தடைகள் எல்லாம் உடைந்திடும் இங்கே! வீரமுண்டு வெற்றியுண்டு விளையாடும் களம் இங்கே உண்டு! வா வா என் தோழா! பூனைகள் இனம் போலே பதுங்குதல் இழிவாகும்! புலியினம் நீ எனில் பொருதிட வாராய்! வீரமுண்டு வெற்றியுண்டு விளையாடும் களம் இங்கே உண்டு! வா வா என் தோழா! தென்பாங்குத் தென்றல் பண்பாடும் நாட்டில் தீராத புயல் வந்ததேனோ? நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே நெஞ்சங்கள் துடித்தேங்கலாமோ? வா வா என் தோழா! வீரமுண்டு வெற்றியுண்டு விளையாடும் களம் இங்கே உண்டு! வா வா என் தோழா! தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை! தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்!
 16. 1 point
  சீனாவின் பொருளாதாரமும் வேகமாக சரிந்து வரும் நிலையில், சீனா கைவிரித்து சிங்களம் இந்தியாவிடம் கையேந்துகின்றதா? இல்லை, இந்த இக்கட்டான நிலையில் எல்லாரிடமும் கை ஏந்துகின்றதா? பணம் கொடுத்த சீனா சும்மா விட்டுவிடாது. இந்தியா பணம் கொடுக்காவிட்டால் சிங்களம் மேலும் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடும் என்ற கவலை டெல்லிக்கு. பசில் தலைமையில் கொமிசன் மகிந்த குடும்பத்திற்கு .... இவர்கள் வீடுகளில் செல்வம் கொட்டோ கொட்டுகின்றது.
 17. 1 point
  இதில் உங்களுடன் நானும் இணைந்து கொள்ளலாமா? இன்னும் 10 குடும்பங்களை இணைத்து 30 குடும்பங்களுக்கு கொடுக்க முடியுமா?
 18. 1 point
  " என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வார்த்தைகளுக்கு குறையாமல் கட்டுரை எழுங்துங்கள்” பாவித்த வார்த்தைகளை மீண்டும் ...... மீண்டும் ...... மீண்டும் பவிக்கலாமா??
 19. 1 point
  அவ்வளவு தான் சரக்கு .....எல்லோரையும் பார்த்து கேள்வி மட்டும் தான் கேட்போம். வகையாக ஒரு பிடி பிடித்தால் நைசா வேறுயாரையாவது இழுத்துவிட்டு நழுவிவிடுவோம் ,இந்த லட்சணத்தில் தான் நாங்க அடுத்தவருக்கு இனப்பற்றை பற்றியும் வகுப்பெடுக்கிறோம் பாருங்கள்... அங்கே தான் நாங்க நிக்கிறோம் பி .கு: ..அது யாரு சூத்திரம் ....?, வெரி சாரி மனு நீதி எங்களுக்கு not applicable, வேறு ஏதாவது try பண்ணுங்கோ
 20. 1 point
  சக்கர நாற்காலியில் இருத்திய இன அழிப்புப் போர்: சாதித்து காட்டிய மாணவிகள் Last updated Apr 28, 2020 நடந்தது முடிந்த 2019 கல்வி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் கல்விக்கு ஊனம் ஒருபோதும் தடையில்லை என்பதனை மாணவிகள் நிரூபித்துக்காட்டியுள்ளனர். இதில் உயிரிழை அமைப்பின் பயனாளிகள் பிள்ளைகள் 8 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் விஷேசமாக எமது உயிரிழை அமைப்பின் பயனாளிகள் இருவர் தங்களது சக்கர நாற்காலிகளுடன் சென்று தங்களது கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதனை நிருபித்துள்ளனர். 1.தன்னீருற்று மேற்கு முள்ளியவளையை சேர்ந்த கெங்காதரன் பவதாரனி இவர் கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இருந்து தனது வாழ்க்கையை சக்கரநாற்காலியுடனே வாழ்ந்து வருபவர். 2.நாவலர் வீதி முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த மதியழகன் விதுர்சிகா இவர் கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்தில் தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இருந்து இன்று வரை சக்கரநாற்காலியுடனே வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது கல்வியை இடையில் விட்டுவிடாது தொடர்ந்து படித்து க.பொ.த. சாதாரண தரத்தில் மிகவும் சிறப்பாக சித்தியடைந்துள்ளனர். K.பவதாரணி- 8A,B, M.விதுர்ஷிகா- 6A,B,2C ஆகியோர் சிறந்த சித்திகளை பெற்றுள்ளானர்.இவர்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். விசேடமாக Lebara Foundation (LBR Foundation) தொடர்ந்தும் உயிரிழை அமைப்பின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கான கல்வி வளர்ச்சியில் முழுக்கவனம் எடுத்து இன்றுவரைக்கும் கல்வி செயற்திட்டத்திற்காக அர்ப்பணிப்போடு செயல்ப்பட்டு வருகின்றனர். இதேவேளை குறித்த மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். https://www.thaarakam.com/news/126135
 21. 1 point
  தனி யாழ்ப்பாணத்தில் என்னை வந்து சந்தித்தபோது இந்துக்கல்லூரி அருகே போனனாங்கள் .நான் அந்த வாசல் குந்தில் இருந்தான். தனியை இருக்க சொல்ல அவர் இருக்கேல்ல, இது தெரிந்திருந்தால் நான் அவரை லேடிஸ் கொலிஜ் பக்கமாய் அழைத்துப் போயிருப்பேன்....முதன் முதல் சந்தித்த படியால் அவரும் வெக்கத்தில் சொல்லவில்லை......!
 22. 1 point
  யாரோ புலியை வென்ற எங்களுக்கு இந்த கொரானோ எல்லாம் சாதாரணம் என்றானுகள் இப்ப ஒரு மாத்திற்கு மூட சொல்கிறார்கள் நிவாரணம் கொடுங்கடா அரச ஊழியருக்கும் முடியல பொருட்கள் வேற கடைகளில் இல்ல குறைவாக இருக்கு ஒருமாதம் என்றால் ஏழைகள் வாழ்வு அதே கெதிதான்
 23. 1 point
  ரிஷாட்டை வளர்த்து விட்டதே இந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தான்; அப்படியிருக்கும் போது எப்படி கோத்தா அவரை அடக்குவாத் என்று எதிர்பார்க்கிறியல்? அதே நேரம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் ரிஷாட் ரணிலுடன் சங்கமமாகிய பின்னர் இரண்டு தரப்பும் ஒற்றுமயில்லை எனவும் கேள்விப்படேன். அதேபோல் பொது தேர்தலில் மொட்டு 2/3 பெரும்பான்மை பெற்றால் மீண்டும் எல்லாம் நட்பாகும்;
 24. 1 point
 25. 1 point
 26. 1 point
 27. 1 point
 28. 1 point
  இப்படி கேக் ஆக செய்தல் இன்னும் சுவையாக இருக்கும் ( எண்ணையில் பொறிக்க தேவை இல்லை )
 29. 1 point
  வாய்ப்பனும் வாழைப்பழ பணியாரமும் சிறிது சிறிது வேறுபாடும் . ஈழப்பிரியன் இந்த முறையில் செய்து பாருங்கள் ,பின்பு எப்படி வருகிறது என சொல்லுங்கள் .
 30. 1 point
  நன்றி பகிர்வுக்கு. வாய்ப்பனும் இதுவும் ஓன்றுதானே. பாடசலை கன்ரீனில் இதுதான் மழிவு, நண்பர்களுடன் சுடச்சுட வாங்கி பிளேன்ரியுடன் சாப்பிட அந்த மாதிரி சுவை. புத்தன் & சாத்திரி பாடசலை வாய்ப்பனின் சுவை எப்படியிருந்தது?
 31. 1 point
  சிங்களவன் புகுந்து விளையாடுகின்றான் தமிழர்களை பிரித்து மேய்வதில்
 32. 1 point
  அவரே தான் ,எல்லோரும் போய் (போதாக்குறைக்கு பிக்கியும் ) சீனைப்போடுகிறார்கள் ,நாமளும் வந்து ஒரு சீனைப் போட்டுப்பார்ப்போம் என்று வந்தார், சனம் விளக்குமாத்தையும் கதிரையையும் தூக்கி எறிஞ்ச ஏறியில் பின்னங்கால் பிடரியிலடிபட இவரும் ,இவரோடு வந்த குற்றத்திற்காக மனோ கணேசனும் ஓட வேண்டிவந்தது, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியை தமிழ்மக்களே அன்று விட்டு கலைத்தனர் , பார்க்கவே கண் கொள்ளா காட்சியது ....சபாஷ் தனி ...Mr.கற்பகம் தலீவரிடம் கேட்டு சொல்வாரா ,எவ்வளவு செலவாகும் என்று ,புலத்திலிருக்கும் தமிழர்கள் மட்டுமே போதும், மொத்த வழக்கு செலவையும் கவனிக்க நாங்க ரெடி...உங்க தலீவர் ரெடியா....? நாவிதன்வெளியை சேர்ந்த சிறுமியின் மூளை சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை முழு தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து மிக குறுகியகாலத்தில் சேகரித்து வெற்றிகரமாக நடத்திக்காட்டியதை Mr.கற்பகம் அறியவில்லை போலும்
 33. 1 point
 34. 1 point
  காட்சி உண்மையில் நீக்கப்பட்டு இருக்கணும் ஆனால் அவர்கள் சுழித்தோடுவார்கள் அதுக்கு தகப்பன் காரனை இழுத்தாள் காணும் ஆனால் இது வேண்டுமென பல சேதிகள் அடியில் போக இதை ஊதி பெருபிக்கிறார்கள் ஆனாலும் தமிழ்நாடு இவ்வளவு குமுறினதே இப்போ இருக்கும் தமிழ்நாட்டு டெல்லி அடிமைகளை சிந்திக்க வைத்து இருக்கும் . நேற்றும் யாரோ திண்ணையில் இருந்து இந்த செய்தி பற்றி தேடிக்கொண்டு இருந்தினம் திண்ணையில் வைத்து விளங்கப்படுத்தும் அளவுக்கு இது பெரிது அல்ல .
 35. 1 point
  இது ஐ.பி.சி..தமிழ்வின் விளையாட்டு..அங்கு ஒரு செய்தி 10..தடவையாவது தலைப்பு மாற்றி போடப்பட்டிருக்கும்...வியாபார விபச்சாரம்..
 36. 1 point
  இது ஒரு தவறான பாதை அல்லது எண்ணம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நெருப்பை தொட்டவன் ஒருவன் நெருப்பு சுடும் என்று இன்னொருவருக்கு அறிவுரை சொல்லவே கூடாது என்பது போல உங்கள் கருத்து இருக்கிறது. எல்லோரும் நெருப்பை தொட்டு பார்த்து அறிய தேவை இல்லை. இன்னொருவரின் வாழ்க்கையின் எழுச்சி வீழ்ச்சியை முன் உதாரணமாக எடுப்பவனே புத்திசாலி அவர்கள்தான் இந்த உலகில் பல சாதனைகளை படைக்கிறார்கள். மற்றது இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருப்பது . "வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில்" "வீடொன்றிலேயே அண்மைக்காலமாக தகாத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில்" "கலாச்சார சீரழிவு" எந்த வார்த்தை மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியது இது ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதிக்க கூடிய ஒரு விடயம் பற்றியே நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே இது எழுந்தமாத்திரமாக நாம் எழுதிவிட்டு செல்ல கூடியது அல்ல. 1000 வருடம் முன்பு விபச்சாரம் இருந்ததால் ........ அதன் பின்பு ஆயிரம் வருடம் முன்னேறி வளர்ந்த மனித குலத்தில் இன்றும் இருக்க வேண்டும் என்பது அபத்தம். அப்போது கணவர் இறந்தால் பெண்கள் உடன்கட்டை எற வேண்டும் என்றும் இருந்தததால் நாம் இன்று அதை தொடரவில்லையே? மேலைநாடுகளில் இருப்பதால் அங்கும் இருக்கலாம் என்பதும் ஒரு சரியான வாதம் இல்லை ஏனெனில் மேலைநாடுகளில் எமது கலாச்சாரம் பண்புகள் எமது நிலத்துக்கே உரித்தான உறவு முறைகள் இல்லை. அங்கு இருப்பது இங்கு இல்லாதபோது இங்கு இருப்பதை ஒரு சீர்கேடை அங்கே இருக்கலாம் என்பது ஒரு நல்ல வாதமாக படவில்லை. இங்கு இருப்பவர்கள் பலர் விபச்சாரிகளிடம் போய்வருகிறார்கள்தானே? ஆதலால் அங்கு இருப்பவர்களும் போகலாம் என்பதும் ஒரு நியாயமான வாதமில்லை விபச்சாரம் எவ்வாறான தாக்கத்தை ஒரு சமூகத்தில் கொண்டு வருகிறது என்பதுதான் இங்கே பார்க்க வேண்டிய விடயமே தவிர எத்தனை பேர் ஈடுபடுகிறார்கள் என்பதல்ல சாலைகளில் அதிகமானவர்கள் வேக தடைக்கு மேலாக வாகனம் ஓட்டுவதால் வேக தடைகளை நீக்கிவிடலாம் என்பது போன்ற எதிர்விளைவை பற்றி சிந்திக்காத ஒரு எண்ணமாகவே எனக்கு படுகிறது. இங்கு வாதத்துக்கு உட்படுத்த வேண்டியது விபச்சாரம் நல்லதா? கேடா? .......... சமுகத்துக்கு நன்மையா? தீமையா? ஏன் விபச்சாரிகள் உருவாக்குகிறார்கள்? அல்லது விபச்சாரிகள் உருவாக்கப்படுகிறார்களா? வறுமைதான் காரணம் என்றால் எல்லா வறிய பெண்களும் இப்படித்தான் வறுமையை எதிர்கொள்கிறார்களா? வறுமை இல்லாத இடங்களில் விபச்சாரம் அழிந்து போய் இருக்கிறதா? விபச்சாரிகளின் வறுமையை ஒழிக்க வேறு வழிகள் உருவாக்க படலாமா? இவைதான் நாம் விடை தேட வேண்டிய வினாக்கள் என்னுடைய தனி ஒழுக்கம் ஒரு சமூக பார்வைக்கு தேவையற்றது ஒரு சமூக பார்வை என்பது சமூகத்தின் எதிர்காலம் பற்றி பார்க்க வேண்டியது.
 37. 1 point
 38. 1 point
  2049 இல் உலகை ஆளப் போகும் சீனா.
 39. 1 point
  தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று ஏன் கூவிக்கொண்டு திரிய வேண்டும் ஆக பொட்டி எல்லாத்துக்கும் பணம் காசு கொடுத்தால் தான் வாதாடுவார் என்று சிம்பிளா சொல்லுங்களன் யெப்பா கல்முனை பக்கம் வந்து ஓடினவர் இவர்தானே இவர்ர செருப்பு இப்பவும் கிடக்காம் உன்மையாப்பா?? பணம் என்றால் தானே வழக்கே எடுப்பீர்கள் அவர் தமிழ் மக்களை விடுவிக்க எவ்வளவு கேட்கிறாரோ அவ்வளவையும் கட்ட தயாராக இருக்கிறோம் தமிழ் மக்களிடம் அறவீடு செய்தாவது கொடுக்க இருக்கிறோம் தமிழ் மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி
 40. 1 point
  (சை)நா மிருக்கப் பயமேன். கட்டுரையாளர் மீரா சிறீனிவாசனும் தி ஹிந்துவும் விரும்புவதெல்லாம் இங்கே நடக்காதுங்கோ
 41. 1 point
 42. 1 point
  ரேபிட் கிட் விடயத்தில் 9 கோடி அடித்தனாங்கள்...1000கோடி என்றால் எவ்வளவு வருமானம் வரும் தெரியுமா..அம்மா வாழ்க.... சின்னம்மா செய்த புண்ணியத்தில்...எவ்வளவு அதிஸ்டம்....வாழ்க கொரானா..
 43. 1 point
 44. 1 point
  வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டப்பட்டிருக்கும் என அறிவிப்பு வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளார். எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் தொற்று நீக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், மற்றும் சந்தைகள் என்பன நாளைய தினம் பூட்டபட்டிருப்பதுடன் பொதுப்போக்குவரத்தும் இடம்பெறாது என் அரச அதிபர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/வவுனியாவில்-வர்த்தக-நிலை/ ஊரடங்கை தளர்த்தி மீண்டும் மக்களை வீதிக்கு இறக்கினால் நிலைமை மோசமாகும் : மருத்துவ நிபுணர் எச்சரிக்கை ஊரடங்கை தளர்த்தி நாட்டினை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் நினைப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், வைரஸ் பரவலானது அதன் மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் அடுத்தது சமூக பரவலாக மாறலாம். மீண்டும் மக்களை வீதிக்கு இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதே உண்மையாகும். எனினும் நாட்டில் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டது என கூற முடியாது. இவ்வாறான தொற்றுநோய் நீண்டகாலம் செயற்பாட்டில் இருக்கும். எனவே உடனடியாக நாட்டினை வழமைக்கு கொண்டுவருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சமூகத்தில் பரவல் ஆரம்பித்தால் அதன் பின்னர் நோய் எவ்வாறு பரவுகின்றது, யார் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறிய முடியாது. இது சமூகத்தில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும். இன்று ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காம சீனா போன்ற நாடுகளுக்கு நேர்ந்ததும் அதுவே. இந்த சமூக பரவல் இலங்கையில் ஏற்பட்டால் நிலைமைகளை கட்டுப்படுத்த கடினமாக அமையும். ஏனைய நோய்களை போல் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது குறித்து எம்மால் கணிப்பிட முடியாதுள்ளது. எவ்வளவு காலம் செயற்பாட்டில் இருக்கும், மீண்டும் இரண்டாம் மூன்றாம் சுற்றில் தாக்கம் செலுத்துமா, தன்மைகள் எவ்வாறானது என்ற எதுவுமே தெரியாத நிலையில் தான் உலகம் பூராகவும் இவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நாம் ஆரம்பம் தொடக்கம் கடினமான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தினால் பரவல் வேகத்தை இப்போது வரையில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கம் செலுத்தும் என்பது குறித்து எதிர்வுகூற முடியாது. ஆனால் நோய் பரவலுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் கூறினார். https://www.ibctamil.com/srilanka/80/142050?ref=home-imp-flag ஊரடங்கு தளர்த்தப்படும் தினம் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட தகவல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. அந்த வகையில் ஸ்ரீலங்காவில் ஊரடங்கு முழுமையாக எப்போது நீக்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “தொடர்ந்து 28 நாட்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லாவிட்டால் மட்டுமே தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை எந்த பிரச்சனையும் இல்லாமல் நீக்க முடியும்” என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்றைய தினம் தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் எதிர்வரும் 1ஆம் திகதி அமுல்படுத்தப்பட உள்ளது. மேலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மே மாதம் 4ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/142049?ref=imp-news
 45. 1 point
  இலங்கைக்கும் மலையாளிகளுக்குமான தொடர்பு பாண்டிய சேர பல்லவர்களால் வந்தது அது பல ஆயிரம் ஆண்டு முந்தியது மலையாளம் தெலுங்கு கன்னடத்துக்கு முந்தைய கால பகுதியில் கிட்டதட்ட ஒரே கால பகுதியில் ஆந்திராவின் மேற்பகுதியில் சம்ஸ்கிருதமும் நடு+ கீழ் பகுதியில் கிரந்தமும் தமிழை உள்வாங்கியே உருவானது இரண்டு மொழிகளினதும் எழுத்துக்களை உற்றுப்பார்த்தால் தமிழ்வடிவமும் உச்சரிப்பும் இருக்கும் பின்னாளில் கிரந்தம் பல்லவர்களின் வீழிச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது அதுபோல சம்ஸ்கிருதமும் விஜய பேரரசுக்கும் மொகலாய + மராட்டிய படையெடுப்புகளுக்கும் இடையில் மாட்டி அழிந்துபோனது. விஜயநகர பேர் அரசின் காலத்தில்தான் கிரந்தம் சமஸ்கிருதம் கலந்து தெலுங்கு மொழியும் தமிழ் கிரந்தம் கலந்து கன்னடம் எஞ்சிய பல்லவ சிற்றரரசுகளின் மக்களுக்குள் உருவானது. பல்லவரின் படையெடுப்போடுதான் வங்கத்தில் இருந்து வந்த பாளி மொழி பேசிவந்த (சிங்களவர்கள்) எழுதத்துருவை தெலுங்கு + கன்னடம் கலந்து கண்டதோடு பாளி மொழியை இழந்து பாலி +தெலுங்கு + தமிழ் கலந்து சிங்களம் பேச தொடங்கினார்கள். சேரர்கள் தமிழர்கள்தானே செங்குட்டுவன் காலத்தில் கிரந்தமே இருக்கவில்லை மலையாளம் 800 ஆம் ஆண்டளவில் சோழ பேரரசின் எழுச்சி காலத்தில் சோழர்களிடம் வீழ்ச்சி கண்ட பல்லவ சேர மன்னரும் மக்களும் தமிழ்நாட்டின் தென் மேற்கு ப்பகுதிக்கு சோழர்கள் வலிமையடையாத பகுதிக்கு நகர்ந்து வாழ்ந்து வந்த போது கிரந்தமும் தமிழும் கலந்து பேச தொடங்கியபோதுதான் பின்னாளில் அது மருவி மலையாளம் எனும் ஒரு புது மொழி உருவானது மலையாள எழுத்து உரு முதலில் வட்எழுத்து என்று தமிழை வட்டமாக எழுத்துவதில்தான் உருவானது மலையாளத்தின் மிக மிக பழமைவந்த இலக்கியமே தமிழின் வளையாபதியை வட்டெழுத்தில் கி.பி 830 எழுதியதுதான். தற்போதைய இலக்கண மலையாளம் 13ஆம் நூற்றாண்டில்தான் உருவானது. இலங்கைக்கும் மலையாளிகளுக்குமான தொடர்பு ....... பாண்டிய அரசுகளும் சேர அரசுகளும் சோழர்களிடம் வீழ்ச்சி அடைய தொடங்கிய போது இலங்கையில் எஞ்சியிருந்த பல்லவ அரசுகள் தமிழ்+ சிங்களம் பாண்டிய சேர அரசுக்களுக்கு துணையாக சோழர்களை எதிர்த்து போராட வந்து வந்து போவதுண்டு அந்த கால பகுதியில் சோழர்களிடம் வீழ்ச்சி கண்ட சில சேர சிற்றசர்கள் மக்கள் கூட்டம் இலங்கையில் இருந்து வந்த தமிழ் சிங்கள படைகளுடன் உயிர்தப்பி இலங்கைக்கு வருவதுண்டு. இந்த இலங்கையில் இருந்து அப்ப அப்ப பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் துணையாக வரும் இலங்கை அரசுகளை இலங்கைக்கு சென்றே அடிக்க வேண்டும் எனும் எண்ணம் முதன் முதலில் ஆதித்ய சோழனுக்கே உருவான போதும் வடக்கே இருந்து வந்த படையெடுப்புகளை எதிர்த்து போராடும் பொறுப்பை அவனது தந்தை சுந்தர சோழர் அவனிடம் ஒப்படைத்து இருந்தார் ஆதலால் ஆதித்ய சோழனால் இலங்கைக்கு அப்போது ஒரு பாரிய படையெடுப்பை செய்ய முடியாது போனாலும் ஒரு படையை அனுப்பி இருந்தான் அது அப்போது பலமாக இருந்த சிங்கள மன்னன் மகிந்தனின் மகனான சேனாதியிடம் தோல்விகண்டு திரும்பியது என்ற செய்தி சுந்தர சோழருக்கு வந்த போதுதான் ........ சுந்தர சோழர் முதன் முதலில் அந்த தோல்வியை தாங்க முடியாது இலங்கைக்கு படையெடுக்கவேண்டும் என்று எண்ணம் கொண்டார் (இதை நான் தொடருவத்துக்கு காரணம் ...... கைவிரல் நீடிய இடமெல்லாம் புலிக்கொடி ஏற்றிக்கொண்டு வந்த சோழ பேர் அரசு அழிய இதுதான் பிள்ளையார் சுழி போட்டது என்பதால்) இலங்கைக்கு படையெட்டுப்பது எனும் திட்டத்தை சுந்தர சோழர் அரச சபையில் வைத்தபோது ஆதித்திய சோழன் வடமுனையில் ஓர் பாரிய படையெடுப்பை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தான் ஆதலால் யார் இலங்கைக்கு படையெடுப்பது? என்று கேள்வி வந்தபோது சுந்தர சோழரின் இளைய மகளான குந்தவைதான் அப்போது வெறும் பதின்ம வயதிலேயே இருந்த தனது தம்பியான அருண்மொழி சோழனை அனுப்ப தந்தைக்கு ஆலோசனையாக மட்டும் அல்ல கொஞ்சம் கட்டளையாகவும் கூறி இருந்தாள் ....... அதன்படியே அருண்மொழி சோழன் இலங்கைக்கு படையெடுத்து வந்தான் இது வரைக்கும் எமக்கு (இலங்கைக்கு) வைகைநதி பக்கம் வீரபாண்டியனுக்கும் இவர்களுடன் திருமண தொடர்பில் கொங்கு நாட்டு சேரர்களுக்கும்தான் தொடர்பு இருந்தது. பாண்டிய அரசனான பரந்தாக வீர நாராயணன் சேர நாட்டு இளவரசியான வானவ மகாதேவி யை திருமணம் முடித்து இருந்தான். வைகைநதி அருகே ஆதித்ய சோழன் வீர பாண்டியனை சாகடித்து பாண்டி நாட்டை கைப்பற்றிய பின்பு பின்னாளில் பரந்தாமன் என்று இன்னொரு சோழ மன்னன்தான் சேர அரசான வானவ மாதேவியின் வாரிசுகளை வெற்றிகொண்டான். சுந்தர சோழரின் செல்ல மகளான குந்தவையின் சொல் கேட்டுதான் இப்போ சுந்தர சோழர் நடந்துகொள்கிறார் ஒரு பொம்பிளையா எங்களுக்கு கட்டளை போடுவது என்று பின்னாளில் சுந்தர சோழர் வயது வந்து இருந்த போது சோழ பேர் அரசுக்கு பக்க துணையாக இருந்து பல போர்களை வெல்ல துணை போய்க்கொண்டு இருந்தசிற்றரசர் பழுவேட்டையர் மற்ற சில சிற்றரசர்களுடன் கூடி சோழ அரசை கைப்பற்ற உள் கலக்கம் செய்தார்கள் ஒருபக்கம் விஜய பேரசின் படையெடுப்பு உள்ளுக்குள் இவர்கள் கலகம் என்று அப்போது சோழ அரசு கொஞ்சம் தள்ளாட தொடங்கினாலும் .......... கி பி 900- 1000 ஆண்டளவில் நம்ம ராஜா ராஜ ராஜ ராஜேந்திர சோழன் கொங்கு நாடு ஈழம் தொடங்கி கலிங்கம் முதல் கடாரம் வரை புலிக்கொடி ஏற்றினான். இதுக்கு பின்பு பண்டாரவன்னியன் வரை இலங்கையை ஆண்டது எல்லாம் சோழ அரசர்களும் விஜய நகர நாயக்கர்களும்தான். எமக்கும் மலையாளிகளுக்கு மான தொடர்பு என்பது ஆயிரம் வருடம் முன்னையது ஆனால் எம்மில் பல ஆயிர கணக்கானவர்கள் மலையாளிகளாக சேர நாட்டிடை சேர்ந்தவர்களாக இருக்கலாம் நாம் பின்னாளில் தமிழர்க்ளாக ஆகி இருக்கலாம். நாம் மலையாளிகள் என்பதனால் எமக்கு சோழர் காலத்திலும் படகு போக்குவரத்துகள் பண்ட மாற்றங்கள் தொடர்ந்து இருக்கலாம். மதங்கள் மன்னர்கள் கால பகுதியை வைத்து நாம் எமது தமிழ்மொழியின் இலக்கியங்களோடு நடை போட தொடங்கினால் மட்டுமே உண்மைகளை கண்டறிய முடியும்
 46. 1 point
  ஊரடங்கு வேளையில் மண்வெட்டியுடன் சுற்ற வேண்டாம்; இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவுறுத்தல் விவசாயம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை, ஆயினும் பலர் விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வதாக அனுமதியை பெற்று மண்வெட்டியுடன் நடமாடுவதுதை குறைத்து கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் தலைமையில் சவளக்கடை மற்றும் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக பிரதேச செயலாளர்கள், பிரதே சபை உறுப்பினர்கள் உட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வு சனிக்கிழமை (25) மாலை மத்தியமுகாம் தொழிற்பயிற்சி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட 24ம் படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாக மக்களுக்கு பள்ளிவாசல்கள் ஊடாக தெளிவான முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் செல்வது ஒன்று கூடுவது ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் இராணுவ தளபதியினால் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்போது இஸ்லாமியர்களின் புனித ரமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமிய மத தலைவர்கள் மாத்திரம் பள்ளிவாசல்களுக்கு சென்று ஒலி பெருக்கிகள் மூலம் மத பிரசங்கங்களை ஜும்மா பள்ளிகளில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இருந்த போதிலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதித்து செயற்பட வலியுறுத்தினார். அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுய தனிமைப்படுத்தலில் இருந்த காரணத்தினால் ஏனைய பிரதேசத்திற்கு பரவாமல் இருந்தது அது போன்று நாம் மிகவும் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும் . பலர் விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வதாக அனுமதியை பெற்று மண்வெட்டியுடன் அலுவலகத்திற்கு செல்வது போன்று ஆடைகளுடன் வீதியில் நடமாடுவதுதை குறைத்து கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகேவினால் அறிவுரை வழங்கப்பட்டது. https://www.ibctamil.com/srilanka/80/141933
 47. 1 point
  உண்மைதான் நீர்வேலியான். கொரானா, ரமலான் நோன்பு போன்றவைகளால் உணவு தட்டுப்பாடும் அதிகரிக்கிறது. பெரிய உணவங்களில் தினமும் அதிக விலைகொடுத்து சாப்பிடவும் முடியாது, கொரானா தொற்றிலிருந்து இவர்களின் 'உணவு தயாரிப்பு எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கும்' என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் இயலாது. ஒரே வழி, சமையலை கற்றுக்கொண்டு தொற்று அபாயத்தை முடிந்தளவு தவிர்ப்பதுதான். சமையலில் பழக்கம் இல்லாவிட்டாலும், கேட்டுத் தெரிந்து விரைவாக செய்துமுடிக்கக் கூடிய வத்தக் குழம்பு, தக்காளி குழம்பு போன்றவைகளை கற்றுக்கொள்ள நினைக்கிறேன். வீட்டம்மாவிடம் டியூசன் எடுத்து செய்யணும்..!
 48. 1 point
  இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஆகியவற்றில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் நேற்றிரவு 8 மணி முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. http://athavannews.com/இன்றும்-நாளையும்-நாடளாவி/
 49. 1 point
  முறையான விசாரணை நடந்தால் ஒன்றல்ல மூன்று சனாதிபதிகளும் சிறைகளில் அடைபட / தூக்கில் தொங்க வேண்டியவர்கள்.
 50. 1 point