• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   53,775


 2. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   6,134


 3. பெருமாள்

  பெருமாள்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   8,447


 4. ராசவன்னியன்

  ராசவன்னியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   6,262Popular Content

Showing content with the highest reputation on சனி 09 மே 2020 in all areas

 1. 3 points
  இந்துக்கள் செய்யும் நற்பணிகள் அனைத்துமே நலிவுற்ற மக்களை நிர்பந்தித்து மதம் மாற்றும் நோக்கங்களுடன் கூடியதில்லை என்பதால் மனப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டும்!
 2. 2 points
  நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். 'வடிவு, நீங்கள் நல்ல வடிவு' 'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ' 'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு' 'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்' 'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ' 'அக்கா, ஐ லவ் யூ" இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்திருந்தால் அப்படியே பாசியில் வழுக்கி விழுவது போல வழுக்கி விழுந்து பிடரியை உடைத்திருப்பேன். நல்ல வேளையாக அதை எப்போதோ கடந்திருந்தேன். சிலர் நல்ல அழகான கவிதைகள் கூட எழுதியிருந்தார்கள். இன்னும் சிலர் நான் முதலே வாசித்த வேறு யாருடையதோ கவிதைகளை தங்களது கவிதைகள் போல எழுதியிருந்தார்கள். எல்லாம் என் வடிவையும் அதனால் அவர்களுக்கு என் மேல் எழுந்த காதலையும் வைத்துத்தான். அதுதான் எனக்குக் குழப்பமாக இருந்தது. வீட்டில் சண்டை வருகிற பொழுதெல்லாம் வடிவில்லாத என்னை தனது தலையில் கட்டி விட்டதற்காகவும் எனக்கு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்ததற்காகவும் எனது கணவர், ஊரிலிருக்கும் எனது அம்மாவைத் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார். 'உன்ரை மூஞ்சைக்கும் முகரக்கட்டைக்கும் இந்தப் பெயரொன்றுதான் குறை" என்றும் சொல்லிக் கத்துவார். உண்மையில் எனக்கு வடிவாம்பிகை என்று பெயர் வைத்தது அம்மா இல்லை. அம்மாச்சிதான் நான் பிறந்த உடனேயே எனது வடிவைப் பார்த்து விட்டு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்தாவாம். நான் இதைக் கனதரம் எனது கணவருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் மறந்து போனது மாதிரித் திரும்பத் திரும்ப அம்மாவைத் திட்டிக் கொட்டிக் கொண்டிருப்பார். நான் நினைப்பூட்டினால் 'காகத்துக்கும் தன்ரை குஞ்சைப் பார்த்தால் வடிவாத்தான் தெரியும்' என்று சொல்லி, கெக்கட்டம் விட்டுச் சிரிப்பார். அது மட்டுமே? வேறு பெண்களிடம் அவர் அசடு வழிகிற பொழுதெல்லாம் நான் கேட்டால் 'நீ வடிவா இருந்தால் நான் ஏன் வேறையாரையும் பார்க்கப் போறன்?' என்பார். நான் ஓடிப்போய் நான் வடிவோ அல்லது இவர் சொல்லுறது மாதிரி உண்மையிலேயே வடிவில்லையோ என்று கண்ணாடியில் பார்த்தேன். அந்த நேரம் பார்த்துத்தான் அந்த அழைப்பு வந்தது. யாரோ Facebook மெசஞ்சரின் ஊடாகத்தான் அழைக்கிறார்கள் என்பதைச் சத்தத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். சாதாரணமாக நான் மெசஞ்சர் அழைப்பென்றால் பேசாமல் விட்டு விடுவேன். ஆனாலும் ஓடி வந்து யாரென்று பார்த்தேன். நம்பவே முடியவில்லை. டொக்டர் சுதர்சனின் அழைப்பு அது. டொக்டர் சுதர்சனை உங்களுக்கும் எப்பிடியும் தெரிஞ்சிருக்கும். சரியான நல்ல மனுசன். முள்ளிவாய்க்கால் பிரச்சனை நடக்கிற போது சுவிசிலிருந்து அங்கேயே போய் நின்று பாதிக்கப்பட்ட சனங்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தவர். யாருக்குத்தான் அப்படியொரு துணிச்சலும், சேவை மனப்பான்மையும் வரும். அதுவும் அந்தப் போர் நேரம், உயிரைப் பணயம் வைத்து அங்கேயே நின்று... எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏன் எனக்குப் போன் பண்ணுகிறார்? இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் என்னோடு Facebook இல் நட்பானவர். அவரின் நட்புக்கான அழைப்பு வந்த உடனேயே கொஞ்சமும் யோசிக்காமால் நான் accept பண்ணி விட்டேன். இப்படியான ஒரு ஆளோடு நட்பாயிருப்பது எவ்வளவு பெரிய விசயம். பெருமையும் கூட. அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு விருது கூடக் கொடுத்திருக்கிறார்கள். நான் தயக்கமில்லாமல் தொலைபேசியை எடுத்து „வணக்கம்“ என்றேன். அங்கிருந்தும் „வணக்கம்“ வந்தது „நீங்கள் டொக்டர் சுதர்சன் தானே?“ „ஓமோம், அவரேதான்“ „உங்கடை சேவையளைப் பற்றியெல்லாம் அறிஞ்சிருக்கிறன். உண்மையிலேயே நீங்கள் பெரிய ஆள். உங்கடை நல்ல மனசை எப்பிடிப் பாராட்டிறதென்றே எனக்குத் தெரியேல்லை“ அவர் பதிலுக்குச் சிரித்தார். „எனக்கு உங்களோடை கதைக்கக் கிடைச்சது பெரிய சந்தோசமா இருக்கு. அது சரி, ஏன் என்னைத் தேடி போன் பண்ணினனீங்கள்?“ „நான் அங்கை உங்களிட்டை வரோணும். உங்களிட்டைத் தங்கோணும்“ „ஏன் இங்கையும் ஆருக்கும் ஏதும் உதவி செய்யப் போறிங்களோ?“ „ம்.. ம்.. அங்கை வந்திருந்துதான் ஆருக்காவது உதவி வேணுமோ எண்டு பார்க்கோணும்“ எனக்கு உடனடியாக ஒன்றுமே விளங்கவில்லை. யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்காக வரும் ஒருவர் தங்குவதற்கு இடம் தேடுவது உண்டு. இது இங்கு வந்து தங்குவதற்காக யாருக்காவது உதவி செய்யத் தேடுவது... குழம்பினேன். எனது குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். இப்போது தெளிவாகச் சொன்னார் „உங்களோடு தங்க வேண்டும்“ எனக்கு எதுவோ புரிந்தது. „ஓ... அது சாத்தியப்படாது. என்ரை வீட்டிலை தங்கிறதுக்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை“ „ஏன்.. ஏன்?“ அதிர்ச்சியோடு கேட்டார். „எனக்குக் குடும்பம் இருக்குது. கணவர் இருக்கிறார்“ „அதிலையென்ன? அவர் நாள் முழுக்க வீட்டிலையோ இருக்கப் போறார். வேலைக்கும் போவார்தானே“ „இல்லை, அது ஒரு போதும் சாத்தியப்படாது“ „ஏன் அப்பிடிச் சொல்லுறிங்கள். நினைச்சால் எதையும் சாத்தியப்படுத்தலாம்“ நான் ஆகாயத்துக்கு மேலால் உயரமாகத் தூக்கி வைத்திருந்த டொக்டர் சுதர்சனை வெடுக்கெனக் கீழே போட்டு விட்டேன். இந்தப் பூனையுமா? மனசு ஒருவித ஏமாற்றத்தில் வெட்கித்துக் கூசியது. „உங்களுக்கு எத்தினை வயசு?“ கேட்டேன் நான் அப்படிக் கேட்டதும், வளைகிறேன் என நினைத்தாரோ? மிகுந்த உற்சாகமாக தனது வயதைச் சொன்னார். „என்ரை மகனுக்கு உங்களை விட இரண்டு வயசு கூட. அது தெரியுமோ உங்களுக்கு?“ „அப்ப Facebookஇலை நீங்கள் போட்டிருக்கிற படத்திலை சரியான இளமையா இருக்கிறீங்கள்? வடிவாயும் இருக்கிறீங்கள்“ „அந்தப் போட்டோவைப் பார்த்திட்டோ இப்ப போன் பண்ணினனீங்கள்?“ „அதுவும் தான்… உங்கடை மற்றப் படங்களையும் பார்த்தனான்“ இழுத்தார். „போட்டோவை மட்டும் பார்த்திட்டு நான் வடிவு, இளமையெண்டெல்லாம் எப்பிடி நினைச்சனிங்கள்? நான் நேற்றுப் போட்டது பத்து வருசத்துக்கு முந்தி எடுத்த போட்டோ. மற்றது அதிலை பார்த்தால், நல்லா லைற் விழுந்து என்னை நல்ல வெள்ளை மாதிரிக் காட்டுது. ஆனால் நான் அந்தளவு வெள்ளையில்லை“ இப்போது அவரது கதைகளின் சுரம் குறைந்து கொண்டு போனது. ஆனாலும் நம்ப முடியாதவராய் சில கேள்விகள் கேட்டார். „நான் உங்கடை அம்மான்ரை வயசை ஒத்திருப்பன். சில வேளையிலை அதையும் விட அதிகமாகவும் இருப்பன்“ என்றேன். அவர் தடுமாறுவது வார்த்தைகளில் தெரிந்தது. „நீங்கள் இன்னும் கலியாணம் கட்டேல்லையோ?“ கேட்டேன். „கட்டீட்டன்“ „குழந்தையள்..?“ „இரண்டு பேர். இரண்டும் பொம்பிளைப் பிள்ளையள்“ „அப்ப ஏன் எனக்கு போன் பண்ணினனிங்கள்?“ „நீங்கள் வடிவு...“ இழுத்தார் „உங்கடை பெஞ்சாதி Facebookஇலை இருக்கிறாவோ?“ „ஓம்“ ஐடி சொன்னார். பார்த்தேன் . Facebook இல், புகைப்படத்தில் அந்த மனைவி மிக அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தார். மனைவியை அணைத்த படி டொக்டர் இருந்தார். கூடவே தேவதைகள் போல் இரு பெண் குழந்தைகள். 'ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…“ „ஹி.. ஹி.. ஹி..“ அதன் பிறகு 'நான் வடிவோ இல்லையோ?' என்ற கேள்வியோ, ஆயிரத்தெட்டுத்தரம் கண்ணாடியைப் பார்க்கும் எண்ணமோ எனக்குள் வரவில்லை. `இப்படியானவர்களின் மனசைப் பார்ப்பதற்குக் கண்ணாடி ஒன்றிருந்தால் நல்லாயிருக்கும்´ என்ற எண்ணம்தான் வந்து கொண்டேயிருக்கிறது. குழலி 30.04.2020
 3. 2 points
  கு.சா, ஈழப்பிரியன் மற்றும் சுவி ஆகியோருக்கு மிக்க நன்றி..! நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், என் இல்லாள் தரும் குறிப்புகளும், அறிவுறுத்தல்களும் நிச்சயம் பயனளிக்கும். விழுப்புண்கள் பட்டாலும் ஓரளவாவது சமையல் கற்று தேறாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ளேன். இட்லி, தேங்காய் மற்றும் தக்காளி சட்னியுடன் இன்னைக்கு ஒரு பிடி..!
 4. 2 points
  இதுக்கெல்லாமா வெட்கப்படுவார்கள் ....யாரிட்ட சொல்கிறீர்கள்....தம்பி தங்கைகளிடம்தானே .....எப்போதும் அடுப்பில் இருந்து சூடான சாமான்களை இறக்கும்போது "பனால்டி அடிக்கும் போது நிக்கும் கோல் கீப்பரின் பொசிசனில்" நிக்கவும்.அப்போதுதான் உடலுக்கு சேதாரம் இருக்காது....!
 5. 2 points
  உண்மையில் இந்த விடயத்தை போலீஸ் கையாண்டு இருக்கணும் ராணுவம் ஒரு எல்லையுடன் அடங்கி இருக்கணும் ஆனால் குழப்பகரமான சேதிகள் வேண்டுமென்றே குற்றவாளிகளால் பரப்பப்படுகின்றது சுமத்திரன் உள்ளே காட்சிக்கு வந்தாலே விளங்கனும் என்ன நடக்கும் என்று .
 6. 2 points
  வெளியே எழுதாவிட்டாலும் புத்தன், சுவி அண்ணா போன்ற சிறந்த எழுத்தாளர்களும் யாழில் உள்ளனர். சிறந்த எழுத்தாளுமை உள்ள இன்னுமொருவன் யாழுக்கு வெளியே எழுதுவதில்லை என்று எங்கோ சொன்னதாக ஞாபகம்.
 7. 2 points
  நிச்சயமாக, தனிப்பட்ட வாழ்விலும் சரி ஒரு தேசத்தின் வளர்ச்சியிலும் சரி நாம் மற்றவரால் தான் அழிந்தோம் என்று குற்றம் சாட்டிக் கொண்டு காலத்தை கழிப்போமானால் அதுவே எமது அழிவுக்கான முழுமுதற் காரணமாகிவிடும். அதைவிடுத்து இந்த வீழ்ச்சிக்கான எனது அல்லது எமது பலவீனம் என்ன என்பதை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்வதன் மூலம் எம்மை மற்றவர்கள் வீழ்த்துவதற்கு காரணமான இருந்த ஒரு காரணியை இல்லாது செய்ய முடியும்
 8. 2 points
  முதலில் கொரோனாவுக்கு மருந்தை கண்டு பிடியுங்கோ
 9. 2 points
 10. 1 point
  நானும் யாழ் இணையமும் - கோமகன் நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப் பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள் சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். பலருக்குப் பலரை இன்னார் என்றே தெரியாது. ஆனால் அண்ணன் தம்பி போல் கட்டிப்பிரண்டு இருக்கின்றோம். ஐ டி க்களைப்பற்றி அறியும் ஆர்வம் எமக்கு இருந்தது. ஆனால் இன்றுவரை அவர்கள் யார் என்றே தெரியாது. ஆனால் இன்று முகநூல் ஒரு சிலரை அடையாளப்படுத்தி இருக்கின்றது அதில் முக்கியமானவர் எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. அதே வெளியில் நான் சுருக்கு சுறுக்கராக வலம்வந்து பனங்கொட்டைத்தமிழில் எழுதுவதற்கு எனக்கு ஆதர்சமாக இருந்தவர் குமாரசாமி மற்றும் சுப்பையா. இன்று இங்கு உலாத்தும் உழவாரத்தை சில வேளைகளில் நான் குமாரசாமியோ என்று கூட எண்ணுவதுண்டு. இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது. இன்று இலக்கியப்பரப்பில் நட்சத்திர எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் எழுத்தாளப்பெருமக்களின் ஆதி மூலம் யாழ் இணையம் தான். அதுதான் புலம்பெயர் ஈழத்து தமிழ் எழுத்துப்பரப்பிற்குப் பெரும்கொடையாளியாக இருந்தது. அதில் முக்கியமானவர்களை இங்கு வரிசைப்படுத்துகின்றேன். தமிழ்நதி வல்வைசஹாரா சந்திரவதனா கறுப்பி சுமதி சாந்தி நிவேதா உதயராஜன் ( மொசப்பத்தேமியா சுமேரியர் ) மயோ மனோ சாத்திரி சயந்தன் கானா பிரபா கோமகன் சஞ்சயன் ஜே கே படலை நெற்கொழுதாசன் இணுவையூர் மயூரன் இவர்கள் அனைவரும் தாங்கள் புனைந்த நூல்களின் அடிப்படையில் பொதுவெளியில் அறியப்பட்டவர்கள். சில பேர்கள் தவறவிடப்பட்டிருக்கலாம். அறியத்தந்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். நன்றி .
 11. 1 point
  நேற்று காலையில் பாலைவனத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும்போது மனதில் ஒரே தவிப்பு..! 'நாளை ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்போகுதே.. ஒரு பயலும் கடையை திறக்க மாட்டானுக..சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?' இங்கே ரமலான் நோன்பு மாதத்தின்போது தினமும் உணவகங்கள் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சில கடைகள் திறந்தாலும் திறக்கும், ஆனால் மறுபடியும் எட்டு மணிக்கு கொரானா ஊரடங்கால் மூடிவிட வேண்டும்..! காலை பத்து மணியிலிருந்து தமிழகத்திலிருக்கும் என் மனைவியிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பல அறிவுறுத்தல்கள், சமையல் குறிப்புகள், கெஞ்சல்கள்..! "சரி.. சரி..சரியம்மா.. வேலை முடிந்தவுடன் போய் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுறேன்.. வேலையில் இருக்கிறேன், நீ போனை வையம்மா.." என அலுப்புடன் துண்டித்தேன்.. ஒப்பந்தகாரர்களின் நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் அன்பர்கள், "என்ன சார், வீட்டம்மாவிடம் நல்ல 'டோஸ்'ஸா.. சமையல் ரொம்ப ஈஸிதான் சார்.. சிரமமாக இருந்தால் எங்க வீட்டுக்கு வாங்க.." என அன்புடன் அழைத்தனர். "இல்லையப்பா.. நானே முயற்சிக்கிறேன்.. அழைப்பிற்கு நன்றி.." என கூறிவிட்டு வேலையில் மூழ்கிவிட்டேன்.. மாலை வீட்டுக்கு வந்ததும் 'சரி, சமையலறையில் என்னதான் பொருட்கள் இருக்கின்றன..?' என உருட்டி தேடினேன்.. பாத்திரங்கள், அலமாரி தட்டுகளில் பழைய மளிகை பொருட்கள்.. எல்லாம் தூசி படிந்து காய்ந்திருந்தன..லுங்கியை மடித்துக்கட்டி தேவையான பாத்திரங்களை சோப் தண்ணிரில் ஊறவைத்து கழுவினேன்.. வீட்டம்மா 'வாட்ஸ்அப்'பில் அனுப்பிய குறிப்புகளின்படி தேவையான மளிகை பொருட்களை வாங்கிவந்தேன்..வாங்கி வந்த மளிகை பொருட்களை அடுக்கிவிட்டு ஓய்ந்து, யாழ்ப் பக்கம் வந்தேன்.. யாழ்க்களத்தில் 'சுமே மேரியம்மா'வின் படங்கள் பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைத்தேன்..! இரவில் வீட்டில் பேசும்பொழுது 'காலையில் இட்லிக்கு எப்படி தயார் செய்வது..?' என பெரிய விளக்க உரையை மனைவியிடம் முழித்தவாறே கேட்டு புரிந்த மாதிரி தலையாட்டினேன்..மனதிற்குள் தோன்றியது, 'இந்த இமய மலையில்கூட ஏறி சிகரம் தொட்டுவிடலாம், புரிபடாத இந்த சமையலை எப்படி கற்றுத் தேறுவது..?' மலைப்புடன் யூடுயூபில் "இதயத்தில் நீ.." படம் பார்க்க ஆரம்பித்தேன்.. அப்படியே தூங்கியும் விட்டேன்..! காலையில் மனவியிடமிருந்து அழைப்பு.. "என்ன, இன்னமுமா தூங்கிறீங்க.. எழுந்து சமையல் வேலையை நான் சொன்ன மாதிரி செஞ்சி எனக்கு போட்டோ அனுப்புங்கள்..!" என அன்புக் கட்டளை. தட்டிக்கழிக்க முடியுமா..? "அட இரும்மா..நீ சொன்னமாதிரி நான் சமையல் செய்யுறேன், நீ பேரனை கவனி.." எனக் கூறிவிட்டு மடமட குளித்துவிட்டு சமையல் வேலைகளை தொடங்கினேன்.. பல நாட்கள் கேஸ் ஸ்டவ் பயன்படுத்தாததால் அது மக்கர் செய்தது.. சரிசெய்துவிட்டு 'ஒழுங்காக வேலை செய்கிறதா..?' என உறுதிபடுத்தினேன்.. ஃப்ரிட்ஜிலிருந்து இட்லி மாவு பாக்கெட்டை உடைத்து, இட்லி அடுக்கில் ஊற்றி குக்கரில் வைத்து அடுப்பை இயக்கினேன்.. அது பாட்டுக்கு வேக ஆரம்பித்தது.. அடுத்து 'தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி எப்படி தயார் செய்வது..?' இது எனக்கு மிகப் பெரிய சவால்..! இவ்விசயத்தில் மனைவி சொல்லே மந்திரம்..! அவர்கள் சொன்ன அறிவுறைகளின்படி ஒருவழியாக கண்ணீருடன்(?) சட்டினியை தயாரித்து, இட்லியை வேகவைத்து சமையலை முடித்தேன்..! சூடாக இருந்த இட்லி குக்கரின் மூடியை திறந்து, இட்லியை இறக்க முயன்றபோது கையில் சூடுபட்டு சிவந்துவிட்டது.. ஒருவழியாக துணிகளை சுற்றி பிடித்துக்கொண்டு மூடியை திறந்தபோது, பலநாள் பசியாய் இருந்து சாப்பாட்டைக் கண்டது மாதிரி ஒரே மகிழ்ச்சி.. உங்கள் மொழியில் "சொல்லி வேலையில்லை..!" 'ஆகா நாமளும் இட்லி அவித்துவிட்டோம்.. சாப்பாட்டுக்கு அலையாமல் இந்த ரமலான், கொரானா கடை அடைப்புகளை சமாளித்து வெல்ல முடியும்' என்ற நம்பிக்கை வந்தது..! 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள்' என்பது எவ்வளவு யதார்த்தம் என்பதை இந்த சிறிய விடயத்தில் உணர முடிந்தது..! என் மனைவிக்கு நன்றி..!! "இது குழந்தை பாடும் தாலாட்டு.." என என் சமையல் கலை(??????)யை பொறுமையாக வாசித்த உங்களுக்கும் நன்றி..!!! .
 12. 1 point
  ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன்
 13. 1 point
 14. 1 point
  நானும் தான், இவர் விடுதலை புலிகளால் உருவாக்கப்படட தமிழ் தேசிய கூட்ட்டமைப்புக்குள் பின்கதவால் நுழைந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை
 15. 1 point
  இவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் ஆயுதம் தூக்கவில்லை. மக்களின் மண்ணின் தேவையது.. குறிப்பாக இவர்களின் கட்சி ஸ்தாபகர்.. செல்வநாயகம் ஐயா தமிழர்களை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு தமிழீழமே தீர்வு என்று செப்பிய பின் தான்.. பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். அதிலும் இவரின் தலைவரின் கூட்டாளி யோகேஸ்வரன்.. 1000 ஆயுதமேந்திய.. தமிழ் இளைஞர்களை தாருங்கள்.. ஒரு மாதத்தில்.. தமிழீழம் மீட்டுத்தருகிறேன் என்று கூவி விட்ட பின் தான் பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். எதுஎப்படியோ.. இவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்.. ஆயுதப் போராட்டம் நடந்தது தான் வரலாறு. இவர் இப்ப என்ன.. 1972 இல் இருக்கிறாரோ..??!
 16. 1 point
  கோத்தா பதவியேறின சகுனம் சூப்பர் இன்னும் சில வருடங்களில் ஊர் போறவை ரூபா நோட்டுக்களை வைத்து உருட்ட ஒரு ரோலி ஒண்டு வாங்கிக்கொண்டு போவது நல்லது .
 17. 1 point
  இவர் பலகாலமாக தன்னை ஒரு மாக்ஸீயவாதி.. தலித்தியவாதி.. பகுத்தறிவுவாதி.. பெண்ணிலைவாதி.. புலிவாந்தி வாதி.. இப்படிப் பல பிரமானங்களை காட்டித்தான்.. தன் எழுத்துக்களை இணையத்தில் ஏற்றியவர். ஒன்றிலும் இவருக்குத் தெளிவில்லை.. என்பதை இப்ப அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால்.. அது விளம்பரமும்.. வியாபாரமும்.. ஓரளவுக்கு மேம்பட்ட பின் தான்.
 18. 1 point
  காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம்
 19. 1 point
  நினைப்பு முழுக்க... யுத்தம், ஆயுதம் என்று தான்... சிந்திக்கிறார்கள்.
 20. 1 point
  அங்கால இஞ்சால பார்த்துட்டு அள்ளிப் போட வேண்டியது தானே? சரி நுhடுல்ஸ் தானே 5 நிமிடத்தில் ரெடி. இதற்கு கிடக்கிற மரக்கறிகளை கொஞ்சம் வாட்டி வதக்கி மிக்ஸ் பண்ணினா கதையே வேற சார்.
 21. 1 point
  இலங்கையில் அரச அதிகாரிகள் ஒரு மாத சம்பளத்தினை எடுக்காமல் உதவ வேண்டுமாம்
 22. 1 point
  பெண்களுடன் சேட்டை செய்த காவாலிகள் கைது செய்யப்பட்டு கடுமையா தண்டிக்கப்பட வேணும். இந்த காவாலிகளுக்கு துணைநிக்கிற / அடைக்கலம் கொடுக்கிற பேர்வழிகளுக்கும் கண்டிக்கப்பட வேணும். ஆனா சட்ட எல்லைமீறி செயற்படுறதை ஆதரிக்கிறது நல்லதல்ல. அதுவும் சொறிலங்கா ராணுவம் இரவில் ஒரு வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது, பொருட்களை சேதமாக்குவது சொறிலங்கா அரசின் அராஜகமாகவே கருதப்பட வேணும். இதை எந்த காரணத்துக்காகவும் நியாயப்படுத்த ஏலாது.
 23. 1 point
  தொடப்பக்கட்டையாலை அடிவாங்கிறதை விட விசரன் லூசன் எண்டு கிழி வாங்கிறது பெட்டர்..
 24. 1 point
  வணக்கம் ராசவன்னியர்! சமையல் சாப்பாடு எல்லாம் எப்பிடி போகுது? கூப்பன்மா ரொட்டியும் சம்பலும் செய்து அனுப்பி விடட்டே? இண்டைக்கு அனுப்பினால் திங்கட்கிழமை மத்தியானம் துபாய்க்கு வந்துடும். ரொட்டியெண்டால் பத்து நாளைக்கு வைச்சு சாப்பிடலாம்.இட்டலி பொங்கல் எல்லாம் சரிவராது கெதியிலை பழுதாய்ப்போகும் எல்லோ....!
 25. 1 point
 26. 1 point
  What is Bitcoin halving? After every 210,000 blocks, Bitcoin goes through a process called “halving.” This mechanism was integrated into the protocol by Satoshi Nakamoto himself. After a protocol goes through “halving,” it cuts the supply of new Bitcoins in half, halving the miner's block production rewards, as well. Will Bitcoin go up after halving? Bitcoin tends to drop before and after a block-reward halving in the short term. ... Because the halving drops the amount of BTC that is mined as Bitcoin approaches its fixed supply of 21 million, miners will earn less BTC after the halving for performing the same work. Can a Bitcoin crash? The price of Bitcoin (BTC) has seen a destructive week, as the price crashed 52% on one single day this week. One of the most massive crashes witnessed since the existence of Bitcoin
 27. 1 point
 28. 1 point
  மகிந்தா :ஐசே சம்பந்தன் உமக்கு தெரியும்தானே சிறிலங்கா இப்ப இறையாமையுடைய நாடு இல்லை..இதை வெளிநாட்டுக்காரன்கள் பகுதி பகுதியா குத்தகைக்கு எடுத்து போட்டாங்கள் இதை நான் எங்கன்ட சன‌த்திட்ட சொல்ல முடியாது... சம்பந்தன்: அனே.. அப்பேட்மிழ்கட்டி பவ்னே மாத்தாயா மகிந்தா : அப்பே மினிசு என்று சொல்லாதையுங்கோ .லங்காவே மினிசு பவ் ...இப்ப இருக்கிற ஒரே வழி முடியுமான வரை எங்கன்ட வங்கி கண‌க்கை கூடுறதுதான் சுமத்திரன்: மகிந்தா மாத்தையா சொல்லுரதுதான் சரி சம்பந்தன் அண்ணே.. இப்படி சிரிலங்காவை ஒர் இக்கட்டான் நிலைக்கு கொண்டு வந்தமைக்கு யார் காரணம் மூவரும் ஒரே குரலில் பிரபாகரன்,கொட்டி ,கொட்டி பிரபாகரன் தமிழ் சிங்கள மக்கள் ....அவையள் சொல்லுறதிலயும் உண்மையிருக்குமோ
 29. 1 point
  தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை! தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால், கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள், 7-ம் திகதி அன்று திறக்கப்பட்டன. இந்த நிலையில், குறித்த தினத்தில் 172 கோடி ரூபாய்க்கும், நேற்று மட்டும் 122 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக, மதுரையில், 78 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 76 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது. சென்னை மண்டலத்தில் 19 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 57 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 48 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனை இடம்பெற்றுள்ளது. http://athavannews.com/தமிழகத்தில்-கடந்த-2-நாட்க/ ############ ############## ############ ############ தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உயர்நீதிமன்றத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று தமிழகத்தில் மதுபான விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் மதுபான விற்பனையின் போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என இன்று அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை முதல் அமுலுக்கு வரும் என கூறப்படுகின்றது. இதனிடையே ஒன்லைன் மூலம் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://athavannews.com/தமிழகத்தில்-டாஸ்மாக்-கடை/
 30. 1 point
  தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு நீர்வேலியான் 100 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.
 31. 1 point
 32. 1 point
  மிகச் சரியாக விளங்கிக் கொண்டுளீர்கள்! நன்றி வாதவூரன்! ***
 33. 1 point
  பாட்டும், இசையும், முகபாவமும் மிக அருமையா இருக்கு..! (ஆனால் ஒரேயொரு உறுத்தல், பாட்டு பாடுபவரின் தலைமுடி, ஏன் இப்படி கரையான் புத்துக்குள்ளே தலையை விட்டமாதிரி பிராய்ஞ்சி இருக்கு..? )
 34. 1 point
  இதன் சாராம்சம் ஏழைகளுக்கு மதத்தை மாற்றாமலும் உதவி செய்யலாம் என்பது
 35. 1 point
 36. 1 point
  ஈழத் தமிழர் அரசியலுக்காக பிசாசுடன் பேசுவதற்கும் நாங்கள் தயார்! முன்பு ஜே ஆர் ஜெயவர்த்தன இப்படியொரு வசனத்தை பேசியதாக என் வீட்டில் சொல்லுவார்கள்.
 37. 1 point
 38. 1 point
  முதல் கட்ட நடவடிக்கையாய் மூலஸ்தானத்திலையிருந்து ஐயர்மாரை கலைக்க முக்காவாசி பிரச்சனை சரிவரும். இன்னுமொரு முக்கிய பிரச்சனை இருக்கு அதை பிறகு ஒரு சந்தர்ப்பத்திலை பாப்பம்.
 39. 1 point
  தேர்தல் காலம் என்பதால் மனோ கணேசனின் சந்தர்ப்பவாத ஆதங்கம் வெளிப்பட்டாலும் இதனால் 1 வாக்கு கூட கிடைக்கப்போவதில்லை. இந்த மனோகணேசன் தனக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு கிடைக்க வேண்டிய 1000 ரூபா நாளாந்த சம்பளம் பற்றிக்கூட இதுவரை இவ்வளவு கவலைப்படவில்லை. பங்குனியில் இருந்து சம்பள உயர்வு என்று கூறிக்கூறி மனோ கணேசன் மலையக மக்களை ஏமாற்றியது தான் மிச்சம்.
 40. 1 point
  பாராட்டுக்கள். இந்துக்கள் ஏன் மதம் மாறுகின்றார்கள் என ஆராய்ந்து அதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை முயற்சி செய்யவும் வேண்டும்
 41. 1 point
  தமிழன படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுக்க முண்டியடிக்கும் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலுக்கு தக்க பதிலடி. அருந்தவபாலன் சுயநலத்தை கைவிட்டால் சிறப்பாக மக்களுக்கு தொண்டாற்றலாம்.
 42. 1 point
  இருவரும் வாக்குவாதப்பட்டு முடியுங்கோ ...நான் கடைசியில் வந்து யார் சரியென்று சொல்கிறேன்
 43. 1 point
  நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி
 44. 1 point
 45. 1 point
  பிரபாகரனை வளர்ததது எம்.ஜி.ஆர் அல்ல. அப்போதைய காலகட்டத்தில் தன்னால் முடிந்த சில உதவிகளை செய்தார். அதுவும் இந்திய அரசின் அனுமதியுடன் தான். 1989 - 1990 காலப்பகுதியில் கருணாநிதியும் அவ்வாறான உதவிகளை செய்தார் என்பதை உண்மையான புலிகளால் மறுக்க முடியாது. 1991 க்கு பின்னரான காலப்பகுதி என்றால் இந்திய அரசின் உத்தரவை மீறி எம்ஜியாரால் சிறு துரும்பை கூட அசைத்திருக்க முடியாது என்ற ஜதார்த்தத்தை புரிய சாதாரண அரசியல் அறிவே போதும். இப்படி கனவுலகில் வாழ்வதை விட தோல்விக்கு எமது தரப்பில் உள்ள தவறுகளை ஆராய்வது பலன் தரும். நாம் எபோதும் 100 வீதம் சரி. எமது தோல்விக்கு அடுத்தவன்தான் காரணம் என்று பழி போட்டு அந்த கருத்தை வளர்ப்பதும் எமது எதிர்கால அழிவுக்கான வித்து தான். அதைத்தான் புலம் பெயர் போலிப் புலிகள் செய்து வருகிறார்கள்.
 46. 1 point
  வாட்சப்ல வாழ்க்கை நடத்துறான் பய புள்ள..! மோகனசுந்தரம் காமெடிகளில் பெண்களை பற்றிய சீண்டல்கள் யதார்த்தமாக இருப்பதில்லை..அதை தவிர்த்து இக்காணொளி வெளிநாட்டு வாழ்க்கை பற்றியது பரவாயில்லை ரசிக்கலாம்..!
 47. 1 point
  இந்து மாமன்றத்தின் பணி நலிவுற்ற மக்களை நிர்பந்தித்து மதம் மாற்றும் நோக்கங்களுடன் கூடியதில்லை என்பதால் மனப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டும்!
 48. 1 point
  வாய்ப்புகள் இருந்திருந்தால்.... நாங்களும், ரொனால்டோ தான்.
 49. 1 point
  இணையவன்... ருல்பன்... உதவிய முறை, எது... என்று, விபரமாக... சொன்னால் தானே, நாங்களும், அதே... முறையில் பங்களிக்க முடியும். மாதா மாதம், எனது வங்கியிலிருந்து... நேரடியாகவே, அந்த வங்கிக்கு... குறிப்பிட்ட ஒரு தொகையை.. அனுப்ப வசதி இருந்தால், மிக நல்லது. அல்லது, இதனை விட... வேறு, இலகுவான வழி இருந்தால்... கூறுங்களேன்.
 50. 1 point