• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. nilmini

  nilmini

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   16

  • Content Count

   467


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   53,775


 3. nedukkalapoovan

  nedukkalapoovan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   30,087


 4. Kapithan

  Kapithan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   1,626Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 10 மே 2020 in all areas

 1. 4 points
  மதத்துக்கும் சட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணராதவர்களின் சட்டம் பொய்த்தே போகும். அறிவியல் எரிக்கச் சொன்னால் எரியுங்கள்.. அங்கு சட்டமும் மதமும் செல்வாக்குச் செய்யக் கூடாது. காரணம்.. அறிவியல் ஆய்ந்து சொல்லும்.. சட்டம் தர்க்கிச்சு வெல்லும்..மதம் கற்பனையில் செல்லும்.
 2. 4 points
  போராட்டம் என்பது தொடஎச்சியான செயற்பாடு. இலக்கை அடையும்வரை போராட்ட முறைகள் மாறலாம், மாற்றமடையும். அதனைத் தனியே பிரித்து தந்தை செல்வா காலத்துப் போராட்டம், பிரபாகரன் காலத்துப் போராட்டம் என்று பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்துப் பார்த்தால் சாத்வீகப் போராட்டத்திலும் எந்த ஒன்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை பிரபாகரன் காலத்திலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும். போராட்டமும் முடிந்துபோயிற்று என்றும் பொருள்படும் ஆகவே 1) ஆயுதப் போராட்டத்தால் எதனைப் பெற்றுக் கொண்டோம் என்பது பொருளற்ற கேள்வி. 2) போராடியவர்கள் வடக்கு - கிழக்கில் குடியிருந்த தமிழர். போராட்டத்தால் சாதித்தோமா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறமுடியுமே தவிர சுமந்திரனல்ல. நீங்கள் கேட்கலாம் சுமந்திரன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்தானே. ஏன் அவர் கதைக்க முடியாதா என்று ? உண்மை. அவர் தெரிவு செய்யப்பட்ட (எந்த முறையிலென்றாலும்) பிரதிநிதிதான். ஆனால் இன்றுவரை அவர் வடக்கு-கிழக்கு மக்களின் மனநிலை அறிந்து அதனைப் பிரதிபலித்திருந்தாரென்றால் நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அவ்வாறு பிரதிபலித்ததாக எனக்கு நினைவிலில்லை. எனவே எங்கள் போராட்டத்தை தீர்ப்பிடுவதற்கான தகுதி அவருக்கிலை என்பது என் கருத்து. அவர் இலங்கைப் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்தவர் என்கின்ற வகையில் அவர் பிரிவினையை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆகக் குறைந்த அளவிலாவது, மனச்சாட்சி உள்ள மனிதராக, அவர் சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம். அந்தப் பக்குவம் அவருக்கில்லையெனில் அவரால் எங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை.
 3. 4 points
  பருத்தித்துறை வடை தேவையான பொருட்கள் 250 g உழுந்து அவித்த கோதுமை மா 250 g பச்சைக் கோதுமை மா 250 g உப்பு - 1 மே . கரண்டி பெருஞ்சீரகம் - 2 மே . கரண்டி செத்தல்மிளகாய் - 15-20 கறிவேப்பிலை - 3 கெணுக்கு எண்ணெய் - தேவையான அளவு செய்முறைக்கு வீடியோ இணைப்பைப் பாருங்கள். பார்த்துவிட்டு like செய்யுங்கோ sabcribe செய்யுங்கோ
 4. 4 points
  நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது உறுதி. அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும். Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும். பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும் உதவும். பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது
 5. 3 points
  செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது.... இடையில் புகுந்த, "இலையானை" கொன்ற செய்தியாளர்.
 6. 2 points
 7. 2 points
  1970 களில் இருந்தே பழகும் ஒரு நல்ல நண்பன். மிகவும் எளிமையான , எல்லோரையும் பண்பாக நடத்தும் குடும்பம். ராயல் கல்லூரியில் தமிழ் போட்டிகளில் எல்லாம் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். வீட்டில் Christmas tree கூட வைப்பதில்லை. எமது தேவைகளை பற்றி நிறைய கேட்டுருக்கிறேன். ஆரம்பத்தில் உசாராக கதைத்தாலும் பிறகு பிறகு ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பது போல் தான் சொன்னான்.இலங்கை அரசியலில் இருப்பவர்கள் ஒருவருக்குமே தாங்கள் என்னே செய்யவேண்டும் என்று தெரியாது. பௌத்த பேரினவாதத்தை கைவிட்டு சிங்கப்பூர் மாதிரியான ஒரு அரசியலை முன்னெடுத்தால் தான் எமது நாடு உருப்படும். நாமும் அங்கு மனுசர் மாதிரி வாழலாம். இது என் கருத்து. ஆனால் கட்டாயம் உங்கள் கருத்தை copy பண்ணி அனுப்பிகிறேன் பதில் கேட்டு ரதி.
 8. 2 points
  MGR இருந்து இருந்தால் முள்ளிவாய்க்கால் மட்டும் யுத்தம் போகுமட்டும் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார் .அவரின் தமிழ் உணர்வுக்கு பல உதாரணம் சொல்லலாம் .கருணாநிதி தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை இழக்க கூடாது எனும் பயத்தினால் மட்டுமே எங்களுக்கு உதவுவது போல் நடித்தவர் பெரும் ஆரவாரத்துடன் அவர் தத்தெடுத்த ஈழத்து அகதி சிறுவன் இப்ப எங்கிருக்கிறார் என்று தெரியுமா ? எப்படி ஒரு மனிதன் வாழக்கூடாது என்பதுக்கு தெலுங்கு கருணாநிதி சாட்சி . 2009 ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரசிலிருந்து பேச வந்து போகும் பிரணாப் முகர்ஜி போன்றவர்களை கூட ஈழப்போர் நிறுத்தம் குறித்துதான் பேச வந்ததாக கூட்டு சேர்ந்து நாடகமாடியது ஈழப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்கும் வகையில் சுவரொட்டி அச்சிட தடை . அப்படியே அச்சிட்டு ஓட்ட சென்றாலும் சென்றவர்களை தூக்கி சிறையிலிடுதல். 2009 ஜனவரியில் செங்கல்பட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்ததோடு முத்துகுமார் மரணத்தினால் மாணவர்கள் மத்தியில் எழுர்ந்த பேரெழுச்சியை தடுக்க கல்வி கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறையளித்தது . லிபியா, எகிப்த்து என பிற நாடுகளின் பதிக்கப்படும் , கொல்லப்படும் செய்திகளை ஒளிபரப்பவும் ,தன் ஏடுகளில் படமாகவும் போடும் தன் ஊடகம் தமிழின படுகொலைகளைப்பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் ஊடக இருட்டடிப்பு செய்தும் இன்றும் ஈழப்படுகொலைப்பற்றியே விபரம் தெரியாத மக்களாக தமிழர்கள் இருக்க காரணமாயிருப்பது தமிழினத்தை காங்கிரஸ் அழிக்கிறது அதனுடன் கூட்டு சேர்த்ததால் நீண்ட கால பழி வரும், நாங்கள் உங்களுடன் இருக்குறோம் கவலைபடாதிர்கள் என ராமதாஸ் , திருமா, வீரமணி உள்பட பலர் காதுகிழிய சொல்லியும் அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் இவர்களுக்கெல்லாம் விபரம் பத்தாதாது போல் நினைத்து, நீங்கள் பெரிதாக நினைக்கும் ஈழ விஷயத்தை என் சாணக்கிய புத்தியால் ஒன்றும் இல்லாமல் செய்கிறேன் பார் என திட்டமிட்டு, திரும்ப திரும்ப சீமான் போன்றவர்களை சிறை தள்ளியதோடு இனத்திற்காக வெகுண்டெழுந்து உண்ணா விரதமிருந்து தமிழ் இனத்திற்கே தனியொரு தலைவனாய் உருவெடுத்த திருமாவையும் இரண்டு சிட் கொடுத்து ..இன்று தன்னைபற்றியே குறை பேசாத நபராக மாற்றியது . இனி என்ன செய்ய போகிறோம் என்ற குறுவட்டை பார்த்த எந்த ஒரு நபரும் ஏன்? காங்கிரஸ்காரரே கூட தன் கட்சிக்கு ஒட்டு போட மாட்டார் .அப்படிப்பட்ட ஈழ படுகொலையை எடுத்து சொல்லும் குறுவட்டை எங்கும் பரப்பவிடாமல் பலரை சிறை அனுப்பியதோடு ,கலைஞர் ஒரு தமிழின கொலைஞர் என்ற குறுவட்டை தயாரித்த நபரையும் சிறைதள்ளியது. ஈழபிரச்சனையில் ஊர் ஊராக சென்று கருணாநிதி , காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இயக்குனர் பாரதிராஜா அலுவலகத்தை முரட்டுத்தனமாக தாக்கி தன்னை எதிர்ப்பவர் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு இந்த கதிதான் என பயமுறுத்தியும். வைக்கோ உள்ளிட்ட பல தலைவர்கள் கூடி கண்டன பொதுகூட்டம் நடத்தியும் குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து தண்டிக்காதது. அத்தோடு திரைத்துறையினர் தனக்கு சாதகமாக நடப்பவர்களை உக்குவித்தும் எதிராக நடப்பவர்களுக்கு எல்லாவிதமான நெருக்கடிகளையும் தொடர்ந்துகொடுத்துவருவது அல்லது கூடி கண்டன எதிர்த்தவர்களையே தன்வசப்டுத்தி தனக்காக பேச வைப்பது இனத்திற்கு ஆதரவான போராட்டங்களை ஓடிக்கி கொண்டே .. காங்கிரசோடு கூட்டணி வேண்டம், கூட்டணி வேண்டம் என தலைபாடக அடித்து கூறிய வீரமணி போன்றவர்கள் வாயிலாகவே.. நாம் கருணாநிதியை வெற்றி பெற வைத்தால் தான் இந்தளவுக்காவது போராட முடியும் . ஜெயலலிதா வந்துவிட்டால் வாயை துறந்து இனத்திற்கு ஆதரவாக பேசமுடியாது எனும் ஒரு கூற்றை.. மீண்டும் மீண்டும் தனக்காக பிறரை பேச வைத்து நாடகமாடியது . ஏதோ மீண்டும் ஒரு முறை அதே 2008 . அதேபுலிகள் கையில் ஈழம் .. அதே சோனியா அதேஇந்தியபடை உதவி .. அந்த நேரம் பார்த்து இங்கு ஜெயலலிதா ஆட்சி இருக்க போவது போலவும், இவர் போலவே அவரும் துரோகம் செய்வார் போலவும், அந்த நேரம் போராடுவர்களை இவரைவிட அதிகமாக முடக்குவார் போலவும் கூறும் இவரின் கூற்றையும் சிலர் நம்பினார்களே நம்ப வைத்தார். இப்படி பேசினால் எப்படி முடியும் என சாணக்கியனுக்கு தெரியும். கடலில் என்னை தூக்கி போட்டால் நன் கட்டுமரமாக உதவுவேன் வசனம் பேசிய கருணாநிதி மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்பட்டும் கொல்லப்படும் நிகழ்வுக்கு .. நம் மீனவர்கள் பேராசைகாரர்கள் அதனால் தான் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று பேட்டி கொடுத்தது . நாம் தமிழர் இயக்கத்தினரை சம்மந்தமில்லாமல் ஈ.வி.கே.ஸ்.இவன்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு விசியதாக சிறை தள்ளியும் .. அதே இயக்கத்தை சேர்ந்த ஈழ படுகொலையின் போது செத்து கொண்டிருந்த மக்களுக்கு இரத்தபொட்டலம் கடத்தியதாக அதே இயக்கத்தை சேர்ந்த (கடத்தினால் என்ன ?) முத்துகுமார் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையிலடைத்து .அதே இயக்கத்திலிருந்த என்னை ஜெயராம் வழக்கில் சிக்க வைத்து 16 நாள் சிறையிலடைத்து .. ஆம் 25 / 01 / 2010 தேதியே நடிகர் ஜெயராம் தமிழச்சியை கேவலமாக பேசியது குமுதம் நாளிதழில் வெழிவந்தது அதனை தொடர்ந்து இதற்க்கு மனிப்பு கேட்பிர்களா என்று அவரிடம் கேட்க அவர் அது தவறில்லை என்று கூறியிருக்கிறார் இந்நிலையில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கசென்றது 5 / 2 /2010 . ஆக இப்படி கேவலமாக தமிழச்சியை பேசிய ஒரு நடிகரை 10 நாளாகியும் கண்டிக்காதது விட்டு விட்டது யார் தவறு? பின் எங்களை கைது செய்ததோடு சட்டம் அதன் கடமையை செய்யும் என்றதோடு எங்களுக்கு கண்டனம் வேறு தன் சிங்கள இனத்திற்கு விசுவாசமாக தமிழினத்தை கொன்று மீதியுள்ளோரையும் முள் வேலி முகாமில் அடைத்த ராஜபட்செவிடமே தமிழ் இன தலைமகனின் மகளான கனிமொழியை அனுப்பி, கைகுலுக்கி பரிசு பெற்று வந்த பாக்கிய முகாமில் அடைத்த ராஜபட்செவிடமே தியை பெற்ற தந்தை.. அதே மகளை வைத்தே பின் அதே ராஜபக்சேவுக்கு எதிராக மீனவ நண்பன் போராட்டம் செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்ற பெயரில் காரணமின்றி வருடக்கணக்கில் அடைத்து வைத்துள்ளவர்களின் கோரிக்கையான ஒன்று விடுவி அல்லது தண்டனை கொடு என்ற தொடர் போராட்டங்களை ஒடுக்க தமிழரல்லாத ஒரு பிகாரி அதிகாரியை போட்டு உயிர்போக அடித்த பின் வாரி திருச்சியலடைந்த்து அகதிமுகாம்களில் உள்ளவர்களையும் புலி ஆதரவு கருணாநிதி ஆதரவு என பிரித்து நடந்தும் சூழ்ச்சி பொய்வழக்குகள் போடுவது. முத்துகுமார் இறந்த போது தான் உடலை எடுத்து செல்ல விடவில்லை .. கட்சி சார்பற்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஏற்பாடு செய்த முத்துகுமார் முதலாம் அன்டு நினைவு துண் வைக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து நீதிமன்றம் அலையவிட்டது புலிகள் ஒட்டு மொத்தமாக ஒளிந்துவிட்டோம் என ராஜபக்சேவே கூறிய பின்னும் தடையை நீக்க, கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி கேட்டால்அதற்க்கு அனுமதி மறுத்து நிதிமன்றம் அலையவிட்டது. இது போன்ற இனம் சார்ந்த பல நிகழ்வுகள் நீதிமன்றத்திற்கு சென்றே அனுமதிபெற்று நடத்தினாலும் அடுத்த அடுத்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை அரச வாடிக்கையாக்கியது மீனவர்களில் ஒருவன் தாக்கப்பட்டால் சிங்கள மாணவர்கள் பாதுகாப்புடன் இங்கு நடமாட முடியாது என கூறிய சீமானை கைது செய்து 5 மாதம் சிறையில் அடைத்த கருணாநிதி ,மீனவனை கொன்ற சிங்களனை கைது செய்து தண்டிக்க வேண்டுமென இதுவரை ஒரு வார்த்தை கூறாதது இனத்திற்காக போரடுபவர்களிடம் பணம் கிடையாது அந்தநிலையிலும் பிச்சை எடுத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து ஒட்டப்படும் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் காவல்துறையை விட்டு தெரு தெருவாக சுற்றி கிழிக்க வைப்பது அல்லது மொத்தமாக கைப்பற்றி காவல்நிலையத்தில் போடுவது இன்னும் ஒருபடி மேலே போய் தடை செய்த இயக்கத்தை பற்றி பேசினாலோ எழுதினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என 26 / 11 / 2009 தேதி ஒரு பக்க விளம்பரம் போல அவ்வபோது அரசு செலவிலேயே அச்சுறுத்துவது 7 , 8 , பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது. தமிழ் மொழி பேசிய ஒரே காரணத்திற்காக, முள்வேளிக்குள்ளே ஆடு மாடுகளாய் அடைத்து வைத்திருந்தவர்களை திறந்துவிட்டாவது நடத்தினால் பரவாயில்லை என்ற எந்த கூச்ச சுபாவம் இல்லாமல் இனத்துரோக அலை பரவுவதை தடுக்க ஓடிசியா மைதானத்தில் செம்மொழி மாநாடு அதனை தொடர்ந்து 1000 ம் ஆண்டு விழா இராஜ இராஜ சோழனுக்கு. இதில் ஒவ்வொன்றிலும் எதாவது சித்து விளையாட்டு போல கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்ததே ஆகா , அப்படி, இப்படி என மக்களே வாய்விட்டு பேச வைக்கும் உள்நோக்கம் இதில் யார் யாரையெல்லாம் எந்த எந்த நிகழ்ச்சிவாயிலாக பங்கெடுக்க வைக்கலாமென யோசித்து, செம்மொழியா……. தமிழ்மொழியா ..என ஆஸ்கர் பரிசு பெற்றவரையே கூட துரோகம் மறைக்க இசையமைக்க வைத்த செயல். அரசு நிகழ்ச்சி வாயிலாகவே வந்தஅனைவரும் தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற மாயையை வெழிக்காட்டவும் வராதவர்களை தனியே பிறித்தது… பிறித்துமேயத்தான் . செம்மொழிக்கு எதிராக எட்டப்பனை கட்டபொம்மனாக்க செம்மொழி மாநாடா ? என சுவரொட்டி ஒட்டியவர்கள் பேசியவர்களுக்கு கவனிப்பு 25 ஒக்கனேக்கல் கர்நாடகாவை சேர்ந்தது என எடியுரப்பாவை எல்லை தாண்டி உள்ளே வந்து போராட அனுமதித்து .கேரளா அமராவதி குறுக்கே அணைகட்டுவதை கண்டித்து போராடிய வைக்கோவை கேரளா எல்லையே நுழைய விடாமல் தடுத்தது கேரளா காவல்துறையை மகிழ்வித்தது . மத்திய அரசே அனுமதித்தும் இங்கு வந்து சேர்ந்த அன்னை பார்வதி அம்மாவை தமிழ்நாட்டில் இருந்து சிகிச்சை பெற அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு வைக்கோ போன்றவர்கள் பெரும்கூட்டமாக விமான நிலையம் சென்றதுதான் காரணம் என கூறியது. அதுவல்ல காரணம் . தன்னை பற்றி எதாவது பார்வதியம்மாள் தவறாக கூறிவிடுவரோ இல்லை உடல் நிலை தேறிய பிறகு கூறிவிடுவரோ .. இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட்டால் துரோகத்தோடு துரோகமாக ஒன்று கூடும் என்ற உள் எண்ணம் . 27 .https://thamukablog.wordpress.com/2017/04/17/தெலுங்கர்-கருணாநிதியின்/ தமிழ் இனத்தையே கொன்று முள்வேலிக்குள் அடைத்து வைத்தவனும், பல கோவில்களைக்கூட இடித்த இராசபக்சே அவனது அமைச்சர்கள் எந்த வித பயமும் இன்றி தமிழக கோவில் குளங்களுக்கு வருவது எதற்கு ? தமிழினத்தை கொன்றதை தமிழ்நாட்டு தமிழர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள் என உலகத்தாரை நம்ப வைத்து.. இனப்படுகொலை விசாரணை யிலிருந்து தப்பிக்க, அடிக்கடி தமிழகம் வந்து செல்வதை மட்டுமாவது தடுக்கலாம். அதைவிட்டு இன்னும் தமிழ் உணவாளர்கள் சுடுசுரனையுடன் தான் இருக்கிறார்ககளா? என்று அவ்வபோது பரிசோதித்து கொள்வதற்காவது அவர்களின் வருகை பயன் படட்டுமே வெறும் 2008 முதல் ,2009,முதல் 2010 என வெறும் இரண்டே ஆண்டுகளில் வெளியில் தெரியும்படி நடந்தது இந்த 27 துரோக செயல்கள் . தன்னை தமிழன் என்று சொல்லி நம்மை ஏமாற்றிய தெலுங்கர் கருணாநிதி 2008 ஆம் ஆண்டுககு முன் செய்த துரோகத்தின் எண்ணிக்கை என்ன ? தெரியாமல் இருக்கும் துரோகங்களின் எண்ணிக்கை என்ன ? 1 /2 நாள் உண்ணாவிரதம் ..அதனை தொடர்ந்து போர் நின்று விட்டது என அறிவித்து, பின் தானே முடித்து கொண்ட நிலையில் போர் இன்னும் நிற்கவில்லையே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு .. மழை நின்றும் துவானம் விடவில்லை என பேசியது . 29 / 01 / 2009 ல் முத்துகுமார் தீக்குளித்து இறந்து போனதும் அந்த உடலை கொளத்தூரிலிருந்து புரசைவாக்க பிரதான சாலை வழியாக கூட எடுத்து செல்ல அனுமதிக்காதது முத்துகுமாரின் கடைசி ஆசைப்படி என் உடலை கருவியாக வைத்து போராடுங்கள் என்ற கூற்றுப்படி தமிழகமெங்கும் எடுத்து செல்ல வேண்டும். அப்படி போராடுங்கள் செய்தால் நம் துரோகம் அதிகமாக வெளிப்பட்டுவிடும் என பயந்து அதற்க்கு அனுமதி மறுத்தது . முத்துகுமார் செய்தி காட்டு தீயாய் தமிழ் உணர்வாளர்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையிலேயே .. தன் மகன் அழகிரியின் பிறந்த நாளை பிரியாணி பொட்டலங்களுடன் தடபுடலாய் கொண்டாட அனுமதித்தது . முத்துக்குமாரை தொடர்ந்து அதே 2009 பிப்ரவரி மாதத்தில் இனத்திற்க்காக தீக்குளித்து இறந்த சிலரை ,குடும்ப சண்டையில் இறந்துவிட்டதாக பொய் செய்திகளை பரப்பி அவர்களின் தியாகத்தை கேவலப்படுத்தியது . நன்றி அதியமான் . இதுக்கு மேலயும் கருணாநிதி நல்லவர் வல்லவர் என்று கம்பு சுத்த வருபவர்கள் வந்து கருத்துக்களை வையுங்கள் பார்க்கலாம் !.........................
 9. 2 points
  ஒரு மாபெரும் உயிர் கொல்லி வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க மத வழிபாட்டு தலங்களை பூட்டிவைக்ப்பட்டதை ஏற்றுக்கொண்ட அறிவு மதங்கள் பரப்பிய அறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வாதாடுவதில் எங்கு போய்விட்டது. சடலங்களை எரித்தால் அல்லாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று முட்டாள்தனமாக நம்பும் இஸ்லாமியர்கள் கொரோணாவில் இருந்து அந்த அல்லாவால் மக்களை காப்பாற்ற முடியவில்லை என்று அறிவு ரீதியாக சிந்திக்கலாமே.
 10. 2 points
  முசிலிம்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். முசிலிம்கள் தவிர்த்து யார் அவர்களுக்கு உதவினாலும் அவர்கள் கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்படுவார்கள். என்பதைக் கட்டுரை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. பாவம் சுமந்திரன்.
 11. 2 points
  இப்ப bank , பென்ஷன், டெலிபோன் bill , electricity bill எல்லாம் ஒன்லைனில் கட்டலாம். மற்ற office களும். பரவாயில்லை. கொஞ்சம் slow தான். Election duty , poya , வருடப்பிறப்புக்கு 2 கிழமை என்று வேலைகள் நடக்காது. மற்றது கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்றாலும் செய்து கொள்ளுவது கரைச்சல். மற்றும்படி அவ்வளவு கஸ்டமில்லை . 2002 இலிருந்து ஒவ்வொரு வருடமும் போயிருக்கிறேன். நிறைய வேலைகள் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் செய்து குடுத்திருக்கிறேன்.
 12. 2 points
  சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது.
 13. 2 points
  இதன் சாராம்சம் ஏழைகளுக்கு மதத்தை மாற்றாமலும் உதவி செய்யலாம் என்பது
 14. 1 point
  தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந்து எமது உடல் செல்கள் சில முக்கிய வேலைகளை செய்ய முடியாமல் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் இந்த விளைவுகள் மாறுபடும். பொதுவாக சோர்வு, நித்திரைஇன்மை, மனச்சோர்வு, உடல் பருமனடைதல், தோலில் சொறிவு , முடி உதிர்வு, குரல் மாற்றம் இவைகள் பொதுவானவை. சிலருக்கு ஐயோடின் குறைபாடால் சுரப்பி பெருக்கும் . ஐயோடின் supplement, சத்திர சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம்.தைரொக்சின் எமது உடலை அடிக்கடி திருத்தி நல்ல நிலையில் வைத்திருக்கும். உணவை எரித்து சக்தியும் வெப்பத்தையும் தரும். இதனால் தான் தைரொக்சின் குறைபாட்டால் குளிர் உணர்வு, உடல் பருமனாதல் , சோர்வனவு ஏற்படுகிறது. கொலெஸ்டெரோல் அளவும் கூடும். நன்றாக உடல் பயிற்சி செய்து, புரத சத்து அதிகமான உணவுகளை உண்டு selenium நிறைந்த உணவுகளான sardine, tuna, Brazil nuts , முட்டை, எல்லாவிதமான தானியங்கள் மற்றும் zinc நிறைந்த உணவுகளான நண்டு, கணவாய், றால், கோழி இறைச்சி , அன்னாசி பழம் , கல்லுப்பு , ஹிமாலயன் உப்பு, மீன் சாப்பிட்டு வந்தால் தைரொய்ட் சுரப்பிகள் மேலும் பழுதடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் கட்டாயம் மருத்துவ உதவி பெற்று Leveothyroxine வகையான மருந்தை ஒவ்வொரு நாள் அதிகாலையில் எடுக்க வேண்டும். இது மற்ற மருந்துகளுடன் ஒத்துபோகக்கூடியது. அதனால் சேர்த்து எடுக்கலாம். இது மரபு வழி சம்பந்தப்பட்டது. உங்கள் குடும்ப உறுப்பினருக்கு இருந்தால் உங்களுக்கும் வர சந்தர்ப்பம் அதிகம். எனவே சோர்வு, உடல் பருமனடைதல், மனச்சோர்வு , முடி உதிர்தல் இருந்தால் கட்டாயம் ரத்த பரிசோதனை செய்து பாருங்கள். மருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தவறாமல் எடுக்க வேண்டும். முக்கியமாக அன்னாசி, நண்டு, கணவாய் , றால், கோழி , அவரைக்காய் , nuts , முட்டை , tuna சாப்பாட்டில் சேர்க்கவும். மரக்கறி மட்டும் உண்பவர்கள் நிறைய தானியம், Brazil nut சேர்த்து சாப்பிடவும்
 15. 1 point
  சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை.? சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை என்ற கேள்விக்கு,சீன பிரதமர் லீகியாங்கின் பதில்! “நாங்கள் ஒரு நாளில் சிறுபகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக்கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக்கொள்வதில்லை. இந்தியர்களின் ஆர்வத்தைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது”என்பதாகும். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும், மற்றும் கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அப்பட்டமான விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம். ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தும் மறைமுக எதிர்வினைகள் பற்றி நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஐ.பி.எல். தொடர் நடைபெறும் இந்த இருமாத காலங்களில் ஈயடிக்கும் வணிகத்துறைகள் ஏராளம். வணிக வளாகங்கள், கண்காட்சிகள், தீம் பார்க்குகள், நூலகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற எல்லா துறைகளுமே நலிந்து விடுகின்றன. கோடைக்கால விடுமுறையை மாணவர்களை பயனுள்ள வகையில் கழிக்க விடாமல் செய்யும் இந்த ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆக்கபூர்வமான நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. பின்னிரவு வரை நடைபெறும் ஆட்டத்தால் மக்களின் மறுநாளைய பணிகள் சீர் குலைகின்றன. ஒரு சில தனியார் அமைப்புகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்காக, ஒட்டுமொத்த நாட்டு மக்களையே ஆண்டுதோறும் இரு மாத காலம் ஐ.பி.எல். லுக்கு அடிமையாக்கி சுரண்டுவது அதர்மம் மட்டுமல்ல, சினிமா மற்றும் டாஸ்மாக் போதையில் அகப்படாதிருந்த வெகு சில இளைஞர்கள் கூட இந்த ஐ.பி.எல். போதைக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல. இளைஞர்கள் மட்டுமல்ல, (சில கூலித் தொழிலார்கள் தவிர) ஆண், பெண் என அனைவருமே அடக்கம். ஏன் இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடர்க் கூட உறுப்பினர்கள் இன்றி காணப்படும் அவலம். அனேக விளையாட்டுகள் உடலினது வலிமையை, தாங்கு திறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, மன நலத்தை, சமூக நலத்தை, ஒற்றுமையை, தலைமைத்துவத் தன்மையை வளர்கிறது என்பது உண்மையே. #சரி யாருக்கு.? விளையாடுபவர்க்கு… இங்கே 20 பேர் விளையாடுவதை 20 கோடி பேர் இருந்த இடத்தை விட்டு நகராமல், பல மணி நேரத்தை, பல நாட்களை வீணாக்குவதால், பொருளாதாரம், நல்லவற்றை கற்றல், உடல் நலம், மற்றும் வெற்றி தோல்வியால் ஏற்படும் பிரச்சனைகள் என தொடர்வதால், இது நமக்கு நன்மையா? தீமையா? http://puthusudar.lk/2020/05/07/சீனாவில்-ஏன்-கிரிக்கெட்/ டிஸ்கி : என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட....
 16. 1 point
  என்னது கும்மான் ஜெயந்தன் படையணியை கலைத்தாரா?? தலைவரின் ஊடக சந்திப்பிற்கு பின்னர் வன்னியிலிருந்து மட்டுவிற்கு கும்மான் தனது படையணிகளையும் கூட்டி கொண்டு புறப்பட்ட வேளை தலைவரால் ஜெயந்தன் படையணியை வன்னியில் விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஜெயந்தன் படையணியின் தளபதி ஜெயாத்தன் 2009இல் இந்தியாவிற்கு குடும்பமாக வந்து தற்போது புலம்பெயர் நாடு ஒன்றில் உள்ளர்(?).
 17. 1 point
  நீங்கள் நித்திரையில் இருப்பது போல் நடிக்குகிறீர்கள் .எழுப்ப முடியாது . ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக கருணாநிதியின் தமிழருக்கு எதிரான துரோகங்கள் ஓடி ஒளிந்து விடாது மற்றவர்களை விட கருணாநிதி தமிழ் மீது பற்று போல் நடித்த அரசியல் வியாபாரி அதை அறியாது தெலுங்கு வடுகனை தமிழின காவலர் என்று நினைத்து ஏமாந்தது தமிழ் சனம் . ஆனால் அம்மு ஈழத்தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் போர்க்குற்றம் இழைத்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் எடுக்க முடிந்தது இதை எப்படி அவர்களால் செய்ய முடிந்தது ? உங்கள் கருணாநிதி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தவர் மேலும் ஒரு படி மேலே போய் போர்க்குற்றமிழைத்த இலங்கைப் படையினருக்குத் தமிழ்நாட்டு மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மனிசி பிடிவாதம் பிடித்து மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, குன்னூரிலும் தாம்பரத்திலும் பயிற்சி பெற்ற இலங்கைப் படையினரைத் கலைக்க அவரால் முடிந்தபோது தமிழின காவலாளி என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் வடுகன் எங்கே போனவர் ? அதற்குப் பின்னர், இலங்கைப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதையே முற்றாக இல்லாதொழித்தவர் ஜெயலலிதா அம்மா . நாளைக்கு கனிமொழியோ சுடானிலோ முதலமைச்சராய் வந்தால் தமிழ்நாட்டில் மறுபடியும் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி தொடருமா தொடராதா ? இதே கனிமொழி ராஜபக்சேவுக்கு சென்னைக்கு கூப்பிட்டு பெரும் விழா எடுத்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை . அன்று கருணாநிதி ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்தில் போர் வேறு விதமாக போயிருக்கும் . முதலில் புலிகளை பலமிழக்க செய்து ஒரு வலிந்த தீர்வை கொடுப்பதுக்கு இடைவிடாத போர் என்றார்கள் மக்கள் வன்னியில் 1வருடத்துக்கு மேல் அங்குமிங்கும் அகதியாய் ஓடிக்கொண்டு இருக்குதுகள் அப்போது சொல்லப்பட்டது அதன் பின் முகமாலை புலிகளின் முன்னரங்கு தகர்ப்படும் பொழுது முடிவு தெரிய தொடங்கியது பாரிய அழிவுகள் என்று அப்போது அதிகாரப் பகிர்வை புலிகளிடம் தரப்போவதில்லை புலிகளை அழித்துவிட்டுத்தான் அதிகாரத்தை தமிழ் மக்களிடம் கொடுப்போம் என்று ராஜபக்சேவினர் சொல்லியதாக திமுக முக்கியஸ்த்தர் சொல்லிவிட்டு அதன் பின் வடகிழக்கில் இருந்தும் உலகத்தமிழர்களிடமிருந்தும் சென்ற ஒரு போனுக்கும் பதில் இல்லை .டெல்லிக்கு போரை நிறுத்தச்சொல்லி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார் உங்கள் ஆள் .
 18. 1 point
 19. 1 point
  தனி , அவர் ஆக்கி சென்றாரோ அல்லது அழித்து சென்றாரோ அவருக்கு பின்னால் ஜெயந்தன் படையணி என்று ஒன்று இல்லை
 20. 1 point
 21. 1 point
  நூறுவீதம் உண்மை. சம்சும் கோஷ்டியும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நடப்பார்கள்.
 22. 1 point
 23. 1 point
  எனக்கு அந்த சுடுதண்ணி (Hot water ) மேட்டர் கொஞ்சம் அர்ஜன்ட் கண்டியளோ....
 24. 1 point
  முசிலிம்களின் உண்மையான முகம் இது. அவர்கள் பலவீனமான நிலையில் உள்ள தமிழர்களைத்தான் தங்கள் எதிரியாகக் கொள்கிறார்கள். பலமான நிலையில் உள்ள சிங்களத்துடன் கூட இருப்பதையே விரும்புகிறார்கள். நாம்தான் அவர்களை எங்கள் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம்.
 25. 1 point
  https://www.realestate.com.au/buy?rsf=sem:rea:brand:wa மேலே உள்ள இணைப்பில் வீட்டு விலைகளை தேடிப்பார்க்கலாம் வீடுகள் பல விலைகளில் இருக்கு, எங்கு வாழப்போகின்றீர்கள் என்பதை பொறுத்துதான் விலை, எனக்கு இந்த இடங்களில் தான் ஏக்கர் கணக்கில் வாங்கி பிற்காலத்தை போக்க ஆசை : Western Australia - Bunbury, Busselton, Dunsbrough, Denmark, Margaret Rvier, ....; தோட்டங்கள் பண்ணை வைப்பதற்கு நல்ல இடம், அமைதியாக வாழலாம்; அத்துடன் நல்ல மக்கள்; நீங்கள் முதலில் முடிவெடுங்கள் இங்கு வந்து பார்த்தபின் எங்கு வாழப்போகின்றீர்களென்று, அதன்பின் பல தரவுகள் தரலாம்
 26. 1 point
  இப்படியே எப்ப எங்க என்ன பேசுறீங்க என்று வெளில எதுவும் சொல்லாமலே.. பேசிக்கிட்டே இருங்க. நடப்பில் எதுவும் நடப்பதாக இல்லை. இதில் இருந்து தெரியனும் என்ன பேசுறீங்கன்னு.
 27. 1 point
  தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வது சரணாகதி அரசியல் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வது சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகளிடம் தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து, அவர்களின் தமிழின அழிப்புக்கு துணை போய்க்கொண்டு அவர்களிடம் இரகசியமாக பெட்டி பெட்டியாக பணத்தைப் பெற்று தம்மை வளர்க்கும் அரசியல் என்கிறார் சிவமோகன்.
 28. 1 point
 29. 1 point
 30. 1 point
  அந்த இஞ்சினை விட மின்சார பற்றியில் அதிக பவரை எடுக்கலாம் நிறையும் குறைவு என்று பதிவு பண்ண சென்றால் ஆள் கன்னடா திரும்பி வந்தாயிற்று .
 31. 1 point
  இதெல்லாம் ஒரு நாளைக்கு உஸ்ஸு கொட்டி கதைப்பார்கள் நாளைக்கு வேறு ஒரு செய்தியில் தொங்கிக்கொண்டு இருப்பார்கள் அதுதான் இந்தியா .
 32. 1 point
  இருவருக்கும் அவசரமில்லாத பிரச்சனை .ஆனபடியால் ஆறுதலாக எழுதுங்கள்.நன்றி.
 33. 1 point
  நெடுக்கர் இப்பத்தான் சரியான இடத்துக்கு வந்திருக்கிறார். கருணா, டக்ளஸ் போன்றோரை நாம் எப்படி துரோகிகள் என்று கூறுகின்றோமோ, அதைவிட கேவலமானவர்கள் இந்த மக்களிடமிருந்து காசு சேர்த்து ஆட்டையைப்போட்டவர்கள். அவர்கள் எப்படியாவது எமது சமூகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்களே. மற்றயது நீங்கள் கூறியதுபோல் உடல், உள நலிவுற்றிருக்கும் ஊரிலுள்ளோருக்கு அவர்கள் சுருட்டிய பணத்தில் ஒரு சிறு தொகையை கொடுத்தாலே பல போராளிக்குடும்பங்கள் நிமிர்ந்திருக்கும். மற்றும்படி இந்த கருணாநிதி அவரது அரசியல் வாரிசுகள் எல்லாருமே கடைந்தெடுத்த சுயநலமிக்க அயோக்கியர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!!
 34. 1 point
 35. 1 point
  காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம்
 36. 1 point
  தமிழ் மக்களை ஏமாத்தி பிழைப்பு நடத்தும் பலவித கோஷ்டிகளின் ஒரே ஸ்டைல் இப்ப இது தான். தாங்க எல்லா அக்கிரமங்களையும், சமூகவிரோத செயல்களையும், செய்து போட்டு, நல்லவன் வேஷம் போட்டு குதிக்கிறது. யாழ்ல மட்டுமில்ல வடகிழக்கு எல்லாப் பக்கமும் கஷ்டப்படுகிற மக்களை ஏமாத்துற கூத்தமைப்பு உட்பட பல சமூகவிரோத கோஷ்டிகள் நல்லவன் வேஷம் போட்டு திரியுது.
 37. 1 point
  கொரோனா எல்லோருக்கும் பழையவற்றை மீள் நினைவுக்குக் கொண்டுவரவும் கனகாலம் தொடர்புகள் அற்று இருப்பவர்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தவும் நேரத்தைக் கொடுத்துள்ளது. சின்னச் சின்ன விடயங்களுக்கு கோபப்படுவதையும், இறப்பில்லாத வாழ்வு நித்தியம் என்ற இறுமாப்பையும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி இல்லாமல் ஆக்கியுள்ளது!
 38. 1 point
  நான் எழுதுவம் என்டு வந்தால் நீங்கள் முந்தீட்டிங்கள்.
 39. 1 point
  பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியல் எப்போது வெளியிடப்பட்டது என்பதிலும் பார்க்க ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு கையளிக்கப்பட்ட திகதிக்கு முன்பா அல்லது பின்னரான ஒரு திகதியிலா கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டது என்பதுதான் இங்கு முக்கியமானதாக இருக்கமுடியும். அது பின்னரான திகதியாக இருந்தால் கோட்டா தனது வேட்புமனுவில் பொய்த்தரவு வழங்கியமைக்காகவும் அந்த நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் தகமையை கோத்தா கொண்டிருக்கவில்லை என்ற அடிப்படையிலும் ஜனாதிபதியை பதவியில் இருந்து தூக்கமுடியும். தமிழ்(?) சிங்கள தரப்பு அரசியல்வாதிகள் சட்டத்தின் துணையுடன் இந்த விடயத்தை மேலும் ஆராய்வார்களா அல்லது கோட்டாவை தகுந்த இடத்தில் வைப்பதற்கு இதை துருப்புசீட்டாக பயன்படுத்துவார்களா?
 40. 1 point
  In இலங்கை May 2, 2020 12:10 pm GMT 0 Comments 1076 by : Litharsan அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன. இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். நாளாந்த கூலித் தொழில் புரியும் பலர் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் பணியில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தெனியாயவில்-அகில-இலங்கை/
 41. 1 point
  Diplomatic immunity கூட இறைமைக்கு உட்பட்டது. நீங்கள் சொல்வது Sovereign immunity, அல்லது இப்போதைய நவீன அரசுகளுக்கு அது State Immunity எனவும் அழைக்கப்படுகிறது. இது அரசுகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால் எல்லா அரசுக்களாலும் மற்ற அரசுகளுக்கோ அல்லது sovereign (அரசுக் குடும்பங்களுக்கோ) வழக்கப்படுவதில்லை. இது சமீபத்தில் நடைமுறையில் பார்த்தோம், US Missouri state சீன மீது நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த போது சீன அரசு மற்றும் அரசாங்கம் என்ற பதத்தை தவிர்த்து, C hinese C ommunist P arty மீது வழக்கு தொடுத்தது. ஏனெனில், US Federal State மற்றைய அரசுகளுக்கு sovereign immunity வழங்குவதால், அதன் மூலம் வழக்கு தானாகவே தள்ளுபடியாகாமல், நீதி மன்றம் வழக்கை கையில் எடுப்பதற்கு.
 42. 1 point
  ஊழியர்களிடம் பிச்சையெடுக்கும் நிலைக்கு தாழ்ந்துள்ள சிங்கள-பௌத்த இராஜபக்ச கொள்ளைக் கும்பலுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்றால் அதைவிட்டு ஒதுங்குவதே பொருத்தமானது.
 43. 1 point
 44. 1 point
  தமிழர் ஒருசதமும் கொடுக்கக் கூடாது. ஏன்னென்றால் இந்த நிதியால் தமிழர்களுக்கு பயன் கிடைக்கவே கிடைக்காது.
 45. 1 point
 46. 1 point
 47. 1 point
  வாழவைக்கும் வாழையும் வாழையில் வந்தமர்ந்த காக்கையாரும்.....!
 48. 1 point
  கொலெஸ்ட்ரோலும் ஆட்டிறைச்சியும் மற்ற இறைச்சிகளிலும் பார்க்க ஆட்டிறைச்சி இல் கொலெஸ்ட்ரோல் மற்றும் saturated fats குறைந்தே காணப்படுறது. 85 கிராம் மட்டன் இல் 2.6 கிராம் கொழுப்பு தான் இருக்கிறது.மாடு 7.9, செம்மறி ஆடு(லாம்ப்) 8.1, பண்டி 8.2, கோழி 6.3 . கலோரி முறைப்படி பார்த்தாலும் ஆடு 122, மாடு 179, செம்மறி ஆடு(லாம்ப்) 175, பண்டி 174 கோழி 162 காலோரிகள். it has all the amino acids needed by the body along with a high level of iron that can be helpful to anemic persons. இது எனது பல்கலைக்கழக கழக கண்டுபிடிப்பு. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்றின் படி: saturated fat இனால் இதய நோய்கள் அதிகரிக்கும். ஆனால் unsaturated fat இனால் நல்ல கொலஸ்டரோல் அதிகரிக்கும்.இதனால் இதய நோய்களை குறைக்கலாம் என்று கண்டு பிடித்துள்ளது (இது Ampani காண குறிப்பு) ஆனால் எனது சொந்த அனுபவத்தில் எதையும் அளவாக உண்பது தான் நல்ல ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் . மாடு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்( இது எனது வேண்டுகோள்). நான் ஆடு , பண்டி இறைச்சிகள் சாப்பிட்டேன். ஆனால் 5 வருடங்களாக இறைச்சி எதுவுமே சாப்பிடுவதில்லை. மீன் வகைகள் தான். பாலும் தயிர் செய்வதுக்கு மட்டுமே வாங்குவேன் (கடை தயிரில் அல்புமின் தான் அதிகம்) Greek yogurt நல்லது என்று நினைக்கிறன் . பிரெஷ், frozen மரக்கறிகள் வாங்கி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைப்பேன். கருவாடு, நெத்தலி கொஞ்சமாக வெங்காயம் சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஒரு உற்சாகமும் நல்ல பொழுது போக்கும் ஆகும். smoothie maker இல் frozen பழவகைகள் ( என்ன பழம் மிஞ்சுதோ அவற்றையும் freeze பண்ணி தேவையான நேரத்தில் எடுத்து smoothie செய்யலாம். நான் frozen berries , fresh அன்னாசிப்பழம் , நெல்லிக்காய் தூள், Agave sweetener போட்டு smoothie அடித்து பிரிட்ஜில் வைத்து குடிப்பேன். தேத்தண்ணி, கோப்பி எல்லாம் குறைத்து மூலிகை கோப்பி செய்து coconut sugar அல்லது cane சுகர் போட்டு குடிப்பேன் ( மல்லி, சீரகம், மிளகு, சுக்கு, கறுசீரகம், ஓமம் கொஞ்சம் கோப்பி நல்ல வறுத்து அரைத்து எடுக்க வேண்டும்). கிழமைக்கு ஒருநாள் Tripala என்னும் இந்திய மூலிகை பவுடர் சுடு தண்ணியில் கரைத்து குடிப்பேன். ப்ரிட்ஜில் ஒரு pitcher இல் வாடி கட்டிய தண்ணீர், Lemon துண்டுகள், இஞ்சி, புதினா (mint ) இல்லை ஊறவைத்து வெயில் காலத்தில் குடிப்பேன். நன்னாரி பவுடர் அம்மா உணவகத்தில் இருந்து வேண்டி வந்து அதையும் இடைக்கிடை குடிப்பேன். 50 வயதுக்கு பிறகு இறைச்சி வகைகளை தவிர்த்து, கடல் உணவு, மரக்கறி, தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் தேங்காய் பால் சேர்த்து வீட்டில் சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாரத்தில் 3 நாள் வது இரண்டு சாப்பாட்டுக்கு நடுவில் 16 மணித்தியாலம் விட்டு தண்ணீர் மட்டும் குடித்தால் எமது ஈரல் எல்லா கழிவுகளையும் அகற்றி நிறைய நோயில் இருந்து காப்பாற்றும். Organic மஞ்சள் வாங்கி நிறைய சேர்க்கவும். Olive oil இல் பொரிக்க கூடாது. அதை வேறு விதமாக தான் சாப்பிட்டில் சேர்க்கவேண்டும். இங்கு கொலஸ்டரோலை பற்றி பொதுவான கருத்துக்களையும் உண்மை எதுவென்பதயும் பதிவிட்டுளேன் பொதுவான கருத்து : நடுத்தர வயதில் இருந்துதான் கொலஸ்டரோல் பிரச்னை வரும். உண்மை: 9 - 11 வயதளவில் ஒருமுறை 17- 21 வயதளவில் ஒரு முறை . 20 வயதின் பின் 5 வருடத்துக்கு ஒருமுறையாவது ரத்த பரிசோதனை செய்தல் நலம். நீங்கள் கேட்டாலே இன்றி பொதுவாக வைத்தியர்கள் கொலெஸ்ட்ரோல் அளவை செக் பண்ண மாட்டார்கள். ஆதலால் நீங்கள் தான் கேட்டு பரிசோதனை செய்ய வேண்டும் பொதுவான கருத்து :உடல் பருத்தவர்களுக்கு மட்டும்தான் கொலஸ்டரோல் பிரச்னை வரும். உண்மை: உடல் பருத்தவர்களுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கூட. ஆனால் மெல்லிய தேகம் உடையவர்களுக்கும் வரும். பொதுவான கருத்து: ஆண்களுக்குத்தான் கொலஸ்டரோல் பிரச்னை வரும். உண்மை; Atherosclerosis - ரத்த குழாயை அடைக்கும் கொலஸ்டரோல் படிவுகள் பெண்களில் பார்க்கவும் ஆண்களுக்கு நடுத்தர வயதிலேயே வருவது அதிகம். CVD எனப்படும் இதய சம்பந்தமான நோயாலேயே அதிகமான பெண்கள் இறக்க நேரிடுகிறது .50 வயதின் முன்பு ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் பெண்களுக்கு அதிகமாக இருப்பதால் நல்ல கொலஸ்டரோல் (HDL) அதிகரிக்கும். அனால் 50 வயதுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் குறைவதால் கெட்ட கொலஸ்டரோல் (LDL ) அதிகரிக்கும். பொதுவான கருத்து: எமது சாப்பாட்டு முறையும், உடற்பயிற்சியும் மட்டும் தான் கொலெஸ்டெரோல் அளவை தீர்மானிக்கும் உண்மை: இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், மரபு வழியில் சில பேருக்கு இயற்கையிலேயே கொலெஸ்ட்ரோல் அதிகமாக இருக்கும். அதனால் ஓரளவு உடற்பயிற்சியும் இதயத்துக்கும் ரத்த குழாய்களுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளை உண்டு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கலாம் பொதுவான கருத்து: சில உணவுவகை லேபிள் இல் No Cholesterol, Heart healthy என்று போட்டிருந்தால் பயப்படாமல் சாப்பிடலாம் உண்மை: Low fat என்று போட்டிருந்தாலும் மிகும் ஆபத்தான saturated fat, trans fats மற்றும் total கலோரி அளவுகள் கூட இருக்கும் .வியாபார தந்திரத்துக்காக முழு பக்கெட்டில் உள்ள அளவுகளை போடாமல், per serving என்று போட்டிருப்பார்கள் . பொதுவான கருத்து: பட்டரிலும் பார்க்க மாஜரின் இல் குறைந்த கொலெஸ்ட்ரோல் உண்டு உண்மை: இரண்டிலயும் கூடாத கொழுப்பு உண்டு, soft மாஜரின் கொஞ்சம் நல்லது. எதுவாகினும் 0 ZERO trans-fat உள்ள உணவை வேண்டவும். அதிகநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நிறைய transfat , சீனி, உப்பு, preservative எல்லாமே போடுவார்கள். நான் பொதுவாக எதையும் சூப்பர்மார்கெட் shelf இல் இருந்து வேண்டுவதில்லை ( மா, சீனி, pasta , அரிசி இது போன்ற உணவுகளை தவிர்த்து) . பாணும் பேக்கரி இல் செய்ததுதான் வேண்டுவது. டின் உணவுகள் அடிக்கடி வேண்ட கூடாது. Frozen vegetables, fruits நல்லது.
 49. 1 point
  உண்மையில் ஆட்டுக்கறி மற்ற இறைச்சியில் பார்க்க நல்லது. ஆனால் பிரச்னை என்னவென்றால் கறி நல்ல இருக்கெண்டு நிறய சோறும் சேர்த்து சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது . மரக்கறி சாப்பிடும் மீனும் என்றால் கனக்க சோறு சாப்பிட முடியாது.
 50. 1 point
  திருவட்டாறு - கன்னியாகுமரி