Jump to content

Leaderboard

  1. nilmini

    nilmini

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      16

    • Posts

      908


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      76591


  3. nedukkalapoovan

    nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      32862


  4. Kapithan

    Kapithan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      7507


Popular Content

Showing content with the highest reputation on 05/10/20 in Posts

  1. நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது உறுதி. அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும். Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும். பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும் உதவும். பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது
    4 points
  2. செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது.... இடையில் புகுந்த, "இலையானை" கொன்ற செய்தியாளர்.
    3 points
  3. தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந்து எமது உடல் செல்கள் சில முக்கிய வேலைகளை செய்ய முடியாமல் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் இந்த விளைவுகள் மாறுபடும். பொதுவாக சோர்வு, நித்திரைஇன்மை, மனச்சோர்வு, உடல் பருமனடைதல், தோலில் சொறிவு , முடி உதிர்வு, குரல் மாற்றம் இவைகள் பொதுவானவை. சிலருக்கு ஐயோடின் குறைபாடால் சுரப்பி பெருக்கும் . ஐயோடின் supplement, சத்திர சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம்.தைரொக்சின் எமது உடலை அடிக்கடி திருத்தி நல்ல நிலையில் வைத்திருக்கும். உணவை எரித்து சக்தியும் வெப்பத்தையும் தரும். இதனால் தான் தைரொக்சின் குறைபாட்டால் குளிர் உணர்வு, உடல் பருமனாதல் , சோர்வனவு ஏற்படுகிறது. கொலெஸ்டெரோல் அளவும் கூடும். நன்றாக உடல் பயிற்சி செய்து, புரத சத்து அதிகமான உணவுகளை உண்டு selenium நிறைந்த உணவுகளான sardine, tuna, Brazil nuts , முட்டை, எல்லாவிதமான தானியங்கள் மற்றும் zinc நிறைந்த உணவுகளான நண்டு, கணவாய், றால், கோழி இறைச்சி , அன்னாசி பழம் , கல்லுப்பு , ஹிமாலயன் உப்பு, மீன் சாப்பிட்டு வந்தால் தைரொய்ட் சுரப்பிகள் மேலும் பழுதடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் கட்டாயம் மருத்துவ உதவி பெற்று Leveothyroxine வகையான மருந்தை ஒவ்வொரு நாள் அதிகாலையில் எடுக்க வேண்டும். இது மற்ற மருந்துகளுடன் ஒத்துபோகக்கூடியது. அதனால் சேர்த்து எடுக்கலாம். இது மரபு வழி சம்பந்தப்பட்டது. உங்கள் குடும்ப உறுப்பினருக்கு இருந்தால் உங்களுக்கும் வர சந்தர்ப்பம் அதிகம். எனவே சோர்வு, உடல் பருமனடைதல், மனச்சோர்வு , முடி உதிர்தல் இருந்தால் கட்டாயம் ரத்த பரிசோதனை செய்து பாருங்கள். மருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தவறாமல் எடுக்க வேண்டும். முக்கியமாக அன்னாசி, நண்டு, கணவாய் , றால், கோழி , அவரைக்காய் , nuts , முட்டை , tuna சாப்பாட்டில் சேர்க்கவும். மரக்கறி மட்டும் உண்பவர்கள் நிறைய தானியம், Brazil nut சேர்த்து சாப்பிடவும்
    1 point
  4. எனக்கு அந்த சுடுதண்ணி (Hot water ) மேட்டர் கொஞ்சம் அர்ஜன்ட் கண்டியளோ....😀
    1 point
  5. வணக்கம். இது Circadian rhythm சம்பந்தப்பட்டது. இதைப்பற்றி விரைவில் விரிவாக விளக்கம் தருகிறேன். குறிப்பு: நான் MD இல்லை. PhD .மருத்துவ கல்லூரியில் படிப்பிப்பதனாலும், research செய்வதனாலும் எனக்கு தெரிந்த சில விடயங்களை பதிவிடுகிறேன்.
    1 point
  6. அய்யோ... அது என்ன நம்ம குடும்ப அங்கத்தவரா... ஒண்ணா வாழ பழகுறதுக்கு?
    1 point
  7. அந்த இஞ்சினை விட மின்சார பற்றியில் அதிக பவரை எடுக்கலாம் நிறையும் குறைவு என்று பதிவு பண்ண சென்றால் ஆள் கன்னடா திரும்பி வந்தாயிற்று .
    1 point
  8. இருவருக்கும் அவசரமில்லாத பிரச்சனை .ஆனபடியால் ஆறுதலாக எழுதுங்கள்.நன்றி.
    1 point
  9. வணக்கம் வாத்தியார்.....! சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே வாழ்வில் மேலோரென்டும் கீழோரென்டும் பேதமில்லாமல் உலகில் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே எல்லோரும் முடிவில் சேர்ந்திடும காடு தொல்லை இன்றியே வாழ்ந்திடும் வீடு உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண்டி எங்கே அரசனும் இங்கே அறிஞன் எங்கே அசடனும் இங்கே ஆவி போனபின் கூடுவார்கள் இங்கே ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா .......! ---சமரசம் உலாவும் இடமே---
    1 point
  10. வாழவைக்கும் வாழையும் வாழையில் வந்தமர்ந்த காக்கையாரும்.....! 🌴
    1 point
  11. அவ பாவம் என்று சொன்னது நாயையும் பாம்பையும்தான்.....! 🤔
    1 point
  12. 😄 உண்மையில் ஆட்டுக்கறி மற்ற இறைச்சியில் பார்க்க நல்லது. ஆனால் பிரச்னை என்னவென்றால் கறி நல்ல இருக்கெண்டு நிறய சோறும் சேர்த்து சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது . மரக்கறி சாப்பிடும் மீனும் என்றால் கனக்க சோறு சாப்பிட முடியாது.
    1 point
  13. கொலெஸ்ட்ரோலும் ஆட்டிறைச்சியும் மற்ற இறைச்சிகளிலும் பார்க்க ஆட்டிறைச்சி இல் கொலெஸ்ட்ரோல் மற்றும் saturated fats குறைந்தே காணப்படுறது. 85 கிராம் மட்டன் இல் 2.6 கிராம் கொழுப்பு தான் இருக்கிறது.மாடு 7.9, செம்மறி ஆடு(லாம்ப்) 8.1, பண்டி 8.2, கோழி 6.3 . கலோரி முறைப்படி பார்த்தாலும் ஆடு 122, மாடு 179, செம்மறி ஆடு(லாம்ப்) 175, பண்டி 174 கோழி 162 காலோரிகள். it has all the amino acids needed by the body along with a high level of iron that can be helpful to anemic persons. இது எனது பல்கலைக்கழக கழக கண்டுபிடிப்பு. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்றின் படி: saturated fat இனால் இதய நோய்கள் அதிகரிக்கும். ஆனால் unsaturated fat இனால் நல்ல கொலஸ்டரோல் அதிகரிக்கும்.இதனால் இதய நோய்களை குறைக்கலாம் என்று கண்டு பிடித்துள்ளது (இது Ampani காண குறிப்பு) ஆனால் எனது சொந்த அனுபவத்தில் எதையும் அளவாக உண்பது தான் நல்ல ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் . மாடு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்( இது எனது வேண்டுகோள்). நான் ஆடு , பண்டி இறைச்சிகள் சாப்பிட்டேன். ஆனால் 5 வருடங்களாக இறைச்சி எதுவுமே சாப்பிடுவதில்லை. மீன் வகைகள் தான். பாலும் தயிர் செய்வதுக்கு மட்டுமே வாங்குவேன் (கடை தயிரில் அல்புமின் தான் அதிகம்) Greek yogurt நல்லது என்று நினைக்கிறன் . பிரெஷ், frozen மரக்கறிகள் வாங்கி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைப்பேன். கருவாடு, நெத்தலி கொஞ்சமாக வெங்காயம் சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஒரு உற்சாகமும் நல்ல பொழுது போக்கும் ஆகும். smoothie maker இல் frozen பழவகைகள் ( என்ன பழம் மிஞ்சுதோ அவற்றையும் freeze பண்ணி தேவையான நேரத்தில் எடுத்து smoothie செய்யலாம். நான் frozen berries , fresh அன்னாசிப்பழம் , நெல்லிக்காய் தூள், Agave sweetener போட்டு smoothie அடித்து பிரிட்ஜில் வைத்து குடிப்பேன். தேத்தண்ணி, கோப்பி எல்லாம் குறைத்து மூலிகை கோப்பி செய்து coconut sugar அல்லது cane சுகர் போட்டு குடிப்பேன் ( மல்லி, சீரகம், மிளகு, சுக்கு, கறுசீரகம், ஓமம் கொஞ்சம் கோப்பி நல்ல வறுத்து அரைத்து எடுக்க வேண்டும்). கிழமைக்கு ஒருநாள் Tripala என்னும் இந்திய மூலிகை பவுடர் சுடு தண்ணியில் கரைத்து குடிப்பேன். ப்ரிட்ஜில் ஒரு pitcher இல் வாடி கட்டிய தண்ணீர், Lemon துண்டுகள், இஞ்சி, புதினா (mint ) இல்லை ஊறவைத்து வெயில் காலத்தில் குடிப்பேன். நன்னாரி பவுடர் அம்மா உணவகத்தில் இருந்து வேண்டி வந்து அதையும் இடைக்கிடை குடிப்பேன். 50 வயதுக்கு பிறகு இறைச்சி வகைகளை தவிர்த்து, கடல் உணவு, மரக்கறி, தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் தேங்காய் பால் சேர்த்து வீட்டில் சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாரத்தில் 3 நாள் வது இரண்டு சாப்பாட்டுக்கு நடுவில் 16 மணித்தியாலம் விட்டு தண்ணீர் மட்டும் குடித்தால் எமது ஈரல் எல்லா கழிவுகளையும் அகற்றி நிறைய நோயில் இருந்து காப்பாற்றும். Organic மஞ்சள் வாங்கி நிறைய சேர்க்கவும். Olive oil இல் பொரிக்க கூடாது. அதை வேறு விதமாக தான் சாப்பிட்டில் சேர்க்கவேண்டும். இங்கு கொலஸ்டரோலை பற்றி பொதுவான கருத்துக்களையும் உண்மை எதுவென்பதயும் பதிவிட்டுளேன் பொதுவான கருத்து : நடுத்தர வயதில் இருந்துதான் கொலஸ்டரோல் பிரச்னை வரும். உண்மை: 9 - 11 வயதளவில் ஒருமுறை 17- 21 வயதளவில் ஒரு முறை . 20 வயதின் பின் 5 வருடத்துக்கு ஒருமுறையாவது ரத்த பரிசோதனை செய்தல் நலம். நீங்கள் கேட்டாலே இன்றி பொதுவாக வைத்தியர்கள் கொலெஸ்ட்ரோல் அளவை செக் பண்ண மாட்டார்கள். ஆதலால் நீங்கள் தான் கேட்டு பரிசோதனை செய்ய வேண்டும் பொதுவான கருத்து :உடல் பருத்தவர்களுக்கு மட்டும்தான் கொலஸ்டரோல் பிரச்னை வரும். உண்மை: உடல் பருத்தவர்களுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கூட. ஆனால் மெல்லிய தேகம் உடையவர்களுக்கும் வரும். பொதுவான கருத்து: ஆண்களுக்குத்தான் கொலஸ்டரோல் பிரச்னை வரும். உண்மை; Atherosclerosis - ரத்த குழாயை அடைக்கும் கொலஸ்டரோல் படிவுகள் பெண்களில் பார்க்கவும் ஆண்களுக்கு நடுத்தர வயதிலேயே வருவது அதிகம். CVD எனப்படும் இதய சம்பந்தமான நோயாலேயே அதிகமான பெண்கள் இறக்க நேரிடுகிறது .50 வயதின் முன்பு ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் பெண்களுக்கு அதிகமாக இருப்பதால் நல்ல கொலஸ்டரோல் (HDL) அதிகரிக்கும். அனால் 50 வயதுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் குறைவதால் கெட்ட கொலஸ்டரோல் (LDL ) அதிகரிக்கும். பொதுவான கருத்து: எமது சாப்பாட்டு முறையும், உடற்பயிற்சியும் மட்டும் தான் கொலெஸ்டெரோல் அளவை தீர்மானிக்கும் உண்மை: இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், மரபு வழியில் சில பேருக்கு இயற்கையிலேயே கொலெஸ்ட்ரோல் அதிகமாக இருக்கும். அதனால் ஓரளவு உடற்பயிற்சியும் இதயத்துக்கும் ரத்த குழாய்களுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளை உண்டு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கலாம் பொதுவான கருத்து: சில உணவுவகை லேபிள் இல் No Cholesterol, Heart healthy என்று போட்டிருந்தால் பயப்படாமல் சாப்பிடலாம் உண்மை: Low fat என்று போட்டிருந்தாலும் மிகும் ஆபத்தான saturated fat, trans fats மற்றும் total கலோரி அளவுகள் கூட இருக்கும் .வியாபார தந்திரத்துக்காக முழு பக்கெட்டில் உள்ள அளவுகளை போடாமல், per serving என்று போட்டிருப்பார்கள் . பொதுவான கருத்து: பட்டரிலும் பார்க்க மாஜரின் இல் குறைந்த கொலெஸ்ட்ரோல் உண்டு உண்மை: இரண்டிலயும் கூடாத கொழுப்பு உண்டு, soft மாஜரின் கொஞ்சம் நல்லது. எதுவாகினும் 0 ZERO trans-fat உள்ள உணவை வேண்டவும். அதிகநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நிறைய transfat , சீனி, உப்பு, preservative எல்லாமே போடுவார்கள். நான் பொதுவாக எதையும் சூப்பர்மார்கெட் shelf இல் இருந்து வேண்டுவதில்லை ( மா, சீனி, pasta , அரிசி இது போன்ற உணவுகளை தவிர்த்து) . பாணும் பேக்கரி இல் செய்ததுதான் வேண்டுவது. டின் உணவுகள் அடிக்கடி வேண்ட கூடாது. Frozen vegetables, fruits நல்லது.
    1 point
  14. நான் உட்பட எமது குடும்பத்தில் நிறைய பேருக்கு இந்த பிரச்னை இருக்கு. வயதை பொறுத்து 30 mg இல் இருந்து 300 mg வரை போகும். வயது கூடிய ஆட்களுக்கு குறைந்த டோஸ் போதும். கொஞ்சம் சிக்கலான கணிப்பு. ஆனால் 75 gram தைரொக்சின் எமது வயதினருக்கு மிக மிக குறைவான லெவல். ஹிமாலயன் அல்லது கோஷர் உப்பு பாவிக்கவும். Meditation , யோகா பயிட்சிகளும் சுரப்பிகளை சீராக்கும்
    1 point
  15. திருவட்டாறு - கன்னியாகுமரி
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.