Jump to content

Leaderboard

 1. கற்பகதரு

  கற்பகதரு

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Posts

   2866


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Posts

   61869


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Posts

   36732


 4. Kapithan

  Kapithan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Posts

   3789


Popular Content

Showing content with the highest reputation on 05/11/20 in Posts

 1. 5 க்கு 4.62 புள்ளிகள் பெற்று 100% சிறப்பான பேராசிரியர் என்று மாணவர்களால் புகழப்படும் கள உறுப்பினர் நில்மினிக்கு வாழ்த்துகள். பின்வரும் இணைப்பை பாருங்கள்: https://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=2248908#ratingsList
  7 points
 2. கனகரிடம் கிளாசை கொடுத்து " அண்ணே எடுங்கோவன் என்றேன்", "லட்சுக்கு சொல்லாமல் வந்திட்டேன் இரு போனில் சொல்லிபோட்டு வாரேன்" ,கனகர் அந்த காலத்தில காதலிச்சு கலியாணம் செய்த மனிதன் இன்றும் அதே காதலுடன் தான் இருக்கிறார்.மனைவியின் விசயலட்சுமி என்ற பெயரை சுருக்கி லட்சு என்று அழைக்கிறார் இன்றுவரை என்றால் பாருங்கோவன் ஐபோனை எடுத்தார் போன் ஸ்கிர்னில் லட்சுவின் இளமை போட்டோவை ஒர் சின்ன தட்டு தட்டினார் "ஹலோ " "லட்சுயம்மா நான் சுதா வீட்டை நிற்கிறேன் ,கொஞ்சம் லெட்டாத்தான் வருவன் தேடாதையும்" போனை கையால் பொத்திக்கொண்டு "லட்சுக்கு பொர் அடிக்குதாம் என்ன செய்ய" என்றார் . அவவையும் வரச்சொல்லுங்கோவன் என்றேன். "நான் சொன்னா வரமாட்டா ,சுதாவிட்ட சொல்லு கூப்பிடசொல்லி" "சுதா!! மாமியை வரச்சொல்லி சொல்லும் மாமா தேடுகிறார்" "மாமா தேடவில்லை உங்களுக்கு தண்ணியடிக்க பாட்னர் அதுக்கு எங்கன்ட மாமாவை பயன்படுத்த்றீயள் என்ன" என செல்லமா அதட்டியபடி மாமாவின் கையிலிருந்த போனை வாங்கி "ஹலோ மாமி புட்டு அவிக்கிறேன் வீட்டை வாங்கோ நான் உங்களை கூப்பிட இருந்தனான் அதுக்குள் மாமா கொல் எடுத்திட்டார் ,வெளிகிடுங்கோ நான் வந்து பிக்கப் பண்ணுகிறேன்" மாமி வாரவாம் என்று சொல்லியபடி மாமாவிடம் போனை கொடுத்து விட்டு ... "மாமி வாரா இரண்டு பேரும் பார்த்து பாவியுங்கோ" என்று கூறியபடி காரடிக்கு சென்றாள் சுதா. "உவள் வந்து கிளாஸ் கணக்கு கேட்க‌ முதல் இரண்டு பெக் அடிச்சு போட வேண்டும்" போதலை திறந்து தனது இஸ்டத்திற்கு அருந்த தொடங்கினார். "டேய் நீ உந்த பன்டமிக்கை பற்றி என்ன நினைக்கிறாய்" என்னை டேய் என்று அழைக்க தொடங்கிற்றார் என்றால் மாமா அடுத்து உலக நடப்பு தான் கதைப்பார் அதுதான் அவருடைய வழமை. "உவன் அமெரிக்கன் தான் உந்த வைரஸை பரப்பி போட்டு இப்ப சீனாக்காரனை பிழை சொல்லுறான்" " ஏன் அப்படி சொல்லுறீயள்" வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்டவுடன் "வந்திட்டாளவையள் போல, இந்த கிளாஸுக்குள் கொஞ்சத்தை ஊற்றிபோட்டு போத்தலை ஆங்கால கொண்டுபோய் வை" அவர் சொன்னமாதிரி செய்து போட்டு .. ""அண்ணே அப்ப நீங்கள் சொல்லுறீயள் அமெரிக்கன் தான் செய்திருக்கிறான் எண்டு ,நான் நினைக்கிறேன் உவங்கள் சப்பட்டைகள்தான் செய்திருப்பாங்கள்" "இஞ்ச உந்த பட்ட பெயர் சொல்லி ஆட்களை விழிக்கிறதை நிறுத்து உது எல்லாம முதலாளித்துவ சிந்தனையுள்ள உன்னை போல ஆட்களுக்கு கை வந்த கலை" "சரி அண்ணே மன்னியுங்கோ, ஏன் அமெரிக்கன் தன்ட மக்களை கொல்லப்போறான்" "அது முதலாளித்துவ சிந்தனை தான் ,சீனா வல்லரசாக மாறப்போகுது என்ற பயத்தில தன்னட மக்களை கொல்கின்றான் அத்தோட உந்த கொரானாவுக்கு வக்சின் என்று மருந்தை கண்டுபிடிச்சு நல்ல வியாபாரம் செய்யபோறாங்கள்..." "அண்ணே எதற்கு எடுத்தாலும் சும்மா முதலாளித்துவத்தையும் அமெரிக்காவையும் குற்றம் சாட்டாமல் உங்கன்ட மாவோ சிந்தனையையும் மீள்பரிசீலனை செய்யுங்கோ" "டேய், டேய் நீ ஒரு முதலாளித்துவ அருவருடி உன்னோட எங்கன்ட புனித தாலிவர் மாவோவின் சிந்தனையை பற்றி கதைக்கிறது வேஸ்ட்" "சரி அண்ணே ,உங்களுக்கு தெரியுமோ ஜெ.வி.பி காலத்தில ஒரு கதை அடிபட்டது ஜெ.வி.பி ஆட்சி அமைத்தால் வயோதிபர்களை கொலை செய்துவிடுவார்கள் எண்டும் அதற்கு ரோகணா விஜயவீர விடுதலையான பின்பு ...,எனது பெற்றோர்களை நான் கொல்வேனா என மறுப்பு தெரிவித்ததும்" "இப்ப ஏன் அதை இதுக்குள்ள கொண்டுவாராய்...." "இல்லை இப்ப கொரானாவில் இறந்தவர்களில் 90% வயோதிபர்கள் தானே மாவோ சிந்தனையின் ஒரு வடிவமோ" "டேய் டேய்" மாமாவின் குரல் கொஞ்சம் உயர தொடங்கியது "என்ன சத்தம் அங்க‌ ,சாப்பாடு ரெடி வாங்கோ இரண்டு பேரும்" மாமியின் குரல் கேட்டவுடன் மனுசன் பெட்டி பாம்பாகிவிட்டார். இவரின்ட சத்தம் வீட்டுக்குள்ள தான் போல எண்ணிகொண்டிருக்கும் பொழுது "இஞ்சயப்பா மாமாவையும் கூட்டி க்கொண்டு வாங்கோ சாப்பிட இனி காணும்" உடனே கையிலிருந்த கிளாசை மேசையில் வைத்து விட்டு நானும் மாமாவை பின் தொடர்ந்தேன். மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது.மாமி சாப்பிடுவதற்காக கையை கழுவிக்கொண்டிருந்தார். "ஹலோ மாமி" என்றேன் எனது மனைவி என்னை பார்த்து முழுசினார்,வழ‌மையாக மாமியை அக்கா என அழைப்பேன் ,என்னை விடமூன்று வயது தான் அதிகம் ..மனைவிக்கு தெரியும் நான் உறவு சொல்லி அழைக்க தொடங்கி விட்டேன் என்றால் பாவனையின் எல்லைக்கு வந்திட்டார் என நினைத்து கிளாஸ் போத்தல் எல்லாம் மாயமாக மறைய தொடங்கிவிடும் அதுவும் அவர்களது உறவுகள் இருந்தார்கள் என்றால் எனது பாவனைக்கு பல வித தடைகள் போடப்படும். " "ஹலோ மாமி என்ன முதுகில புத்தர் இருக்கிறார் ,கவனம் சிறிலங்காவுக்கு போட்டுக்கொண்டு போய்விடாதையுங்கோ " "ஒன்லைனில ஒடர் கொடுத்து இந்தியாவிலிருந்து எடுப்பிச்சனான் அவன்கள் இப்படி தைச்சு போட்டாங்கள்" "ஏன்டா சிறிலங்காவுக்கு போட்டுகொண்டு போக ஏலாது புத்தர் அவங்கன்ட கட‌வுள்தானே" என மாமா கேட்டார் "கடவுளை கோவிலில்தான் வைக்கவேணுமாம் சீலையிலயும் ,பிளவுஸிலயும் வைக்கூடாதாம்" "இஞ்சயப்பா மாமி உடுத்திறக்கிற சீலையும் ஒன்லைனில் தான் ஒர்டர் பண்ணி எடுத்தவ வடிவா இருக்கு என்ன?" "நீரும் ஒவ்வோரு மாதமும் எடுக்கிறனீர்தானே" "ஒமப்பா ஆனால் மாமியின்ட கடையில் விதம்விதமா கன‌ செலக்சன் இருக்கு" "நாளைக்கு ஒடர் பண்ணி எடும்" "ஏன் நான் நாளைக்கு மட்டும் வெயிட் பண்ண வேணும் இப்பவே ஒன்லைனில போக வேண்டியான் மாமியும் நிற்கின்றா சூஸ் பண்ண இஸியாக இருக்கும்" மேசையில் சாப்பிட்டபடியே கதைத்துகொண்டிருந்தோம் . "என்ன மாமி இன்றைக்கு ஸ்டைலா எங்கன்ட வீட்டை வெளிகிட்டுக்கொண்டுவந்திருக்கிறீயள்" "இன்றைக்கு பேத்தியின்ட பேர்த்டெ " "நீங்கள் போகவில்லையா ? இங்க நிற்கீறியள்" "பின்னேரம் ஸ்கைப்பில கெக் வெட்டினவையள் அதுக்கு வெளிக்கிட்டனான் அப்படியே இரவு வெஸ்புக்கில் முருகனையும் பார்ப்போம் என்று தான் இருந்தனான் அதுக்குள்ள இவர் இங்க கூப்பிட்டு போட்டார் இங்க இருந்து முருகனை பார்ப்போம்" "வெஸ்புக்கில் முருகனை பார்க்க இவ்வளவு அலங்காரம் தேவையே மாமி" "நீங்கள் ஏன் மாமியை போட்டு அறுக்கிறீயள்" "சீ சீ நான் அறுக்கவில்லை சும்மா கேட்டனான்" "கண்ணா முருகனை வெஸ்புக்கில் பார்க்க வெளிக்கிட தேவையில்லை ஆனால் முருகனுக்கு ஸூமில் பஜனை பாடவேணும் அது தான் வெளிகிட்ட படியே நிற்கின்றேன்" "ஏன் நீ எனக்கு முதலே சொல்லவில்லை இரு நானும் வெஸ்டியை சுற்றி போட்டு வாரன் ,கண்ணா வெஸ்டி ஒன்று எடுத்து தாடா" மாமா உற்சாக வெளிக்கிட ஆயத்தமானார்,மாமி தன்னுடைய காளிமுகத்தை காட்ட தொடங்கிவிட்டார். "நான் சொல்லவில்லையோ? நேற்று காலம்பிற கத்திகத்தி சொன்னான் பஜனை ஸூமில் செய்யப்போகினம் என்று நான் சொல்லுறதை கேட்கிறதில்லை பிறகு சொல்லுறது நான் சொல்லவில்லை என்று இந்த மனுசனுக்கு இதே வேலயா போச்சு" " கண்ணா நீ வெஸ்டியை எடு" " தண்ணியை அடிச்சு போட்டு சாமிக்கு பஜனை பாடப்போறீங்களோ?" "தண்ணி அடிச்சு போட்டு கோவிலுக்கு தான் போககூடாது சூமில் பஜனை பாடலாம் தானே என்ன கண்ணா?" "கண்ணா வேஸ்டியை கொடுக்காதே வயசு போக போக உந்த மனுசன் சொல்வழி கேட்கிதில்லை" "இரண்டும் பேரும் உங்கன்ட செல்ல சண்டக்குள்ள என்னை இழுக்காதையுங்கோ" "நான் பஜனை பாடஇல்லை நீங்களே பாடுங்கோ" என்று கதிரையை விட்டு வெகமாக எழுந்து போய் கொண்டுவந்திருந்த பூக்கள் நிரம்பிய தட்டை எடுத்து மாமாவிடம் கொடுத்து "இந்தாங்கோ முருகனை காட்டும் பொழுது இதை கொம்பூயுட்டருக்கு முன்னால‌ வையுங்கோ நான் வீட்டை போறன்" "லட்சு ,லட்சு கோபபடாதை நீ பஜனை பாடு நான் சும்மா சொன்னான்" ஒரு சில வினாடிகள் மெளனமாக இருந்த மாமி மீண்டும் சுதாகரித்துக் கொண்டு "கோவில்காரர் சூம் லிங் அனுப்பியிருக்கினமா என்று பார்" "இருங்கோ பார்த்து சொல்லுறன் " பார்த்துவிட்டு சொன்னாள் அனுப்பியிருக்கினம் இன்னும் பத்து நிமிசத்தில தொடங்கப்போயினம். "அடுத்த வெள்ளிக்கிழமை நீங்கள் பஜனை படுங்கோ நான் கோவில்காரரிடம் கதைச்சு வைக்கிறன் ஆனால் இவன் கண்ணனின்டவீட்டை வந்து கூத்தடிக்கிறதில்லை" சொல்லியபடியே மாமியும்,சுதாவும் கொம்பியூட்டர் மேசைக்கு போனார்கள். " என்ன மாமா மாமி இப்படிசொல்லுறா" "இந்த முப்பது வருசத்தில உப்படி எத்தனையை கண்டிட்டன்" "அது சரி அண்ணே உந்த ஒன்லைனில சாமி கூம்பிடுறதை பற்றி என்ன நினைக்கிறீயள்" "நான் கடவுளோட சேட்டை விடமாட்டேன்,நீ என்ன நினைக்கிறாய்" "இன்லைனில் கடவுளை வைக்க வேண்டிய சனம் ஒன்லைனில் வைச்சு கூத்தடிக்குதுகள்" "அதேன்ன இன்லைன்" "உள்ளக் கமலத்தில்"
  5 points
 3. சண்டை தொடங்கினால்... நிறைய கற்கள், தேவைப்படும் என்பதால், இருவரும், லொறி நிறைய.. கற்களை கொண்டு வந்து, குவித்து வைத்திருக்கிறார்கள்.
  4 points
 4. சிங்களவர்கள் மீதோ சிங்கள மொழிமீதோ எமக்கு விரோதம் இல்லை எமது மண்ணில் அழிக்கப்படும் தமிழ் மொழியும் தமிழ் உயிர்களும்தான் எமக்கு அடிப்படை பிரச்சனை. எமது மாவீர்கள் சிந்திய குருதியின் மணத்தை அதில் வாழும் மனிதர்கள் மறந்தாலும் அந்த மண் ஒரு போதும் மறக்கபோவதில்லை. அது வெறும் மண்ணாக மட்டும் இல்லை எமது பாதி உயிராகவும் இருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்களோ? அமெரிக்கர்களோ? எக்காலத்திலும் மாறப்போவதில்லை ஒரு சாரர் கொஞ்சம் மனம் மாறி கொள்வார்கள் அதுவும் தமது வாழ்வை நிவர்த்தி செய்யும் ஒரு சுயநல போக்குதான். அவர்கள் சிங்கள ஆதிக்கத்தையோ வெள்ளையின வெறியையோ பெரிதாக எதிர்க்க போவதில்லை காரணம் அவர்களுக்கு அதில் லாபம் என்று ஏதும் இருக்க போவதும் இல்லை. இப்போதைய அமெரிக்க வெள்ளையின துவேஷிகள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? டிராம் அதிபராக வரும் முன்பும் அவர்கள் இங்குதான் இருந்தார்கள் இப்போது வெளிப்படையாக வெளியில் வருகிறார்கள் அவளவுதான். உணர்வுகளை கொலைசெய்துவிட்டு வாழ்வது என்றால் ஏன் அங்கு போகவேண்டும் அதை இங்கேயே செய்துகொண்டு வாலாமே? சிங்கள ஆதிக்க வெறியாலும் துரோகங்களாலும் எமது மண்ணும் மொழியும் நாளும் நாளும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இங்கிருந்தும் ஒன்றும் வெட்டி புடுங்க போவதில்லை அங்கு போய் நாலு சிங்களவருக்கு எடுத்து சொல்லி அவர்களாவது புரிந்துகொண்டால் பெரும் வெற்றி என்று நீங்கள் எண்ணுவதும் சரியானதுதான். வலிகள் என்பது எவ்வளவு அடிபட்டோம் என்பதை பொறுத்தது குட்டிமணியின் கண் உயிருடன் பிடுங்கப்பட்ட போது எல்லா தமிழ் கண்ணுக்கும் ஒரே மாதிரி வலித்திருந்தால் ...... எமது நாடு இன்று வேறு விதமாக இருந்திருக்கும் என்பதுதான் இவ்வளவு உயிர்களை பறிகொடுத்து நாம் புரிந்துகொண்டது.
  3 points
 5. அங்க போய் வெளிநாட்டில் இருந்து வந்தது என்ற பந்தா காட்டி வாழ முடியாது. சனம் ஓரிரு வாரங்களுக்கு அந்த பந்தாவை அங்கீகரித்தாலும்.. அது நிரந்தரமில்லை. மேலும்.. அங்கு போய் ஏதாவது ஒரு சமூக வேலைத்திட்டத்தோடு இருந்தால்.. காலம் போவது தெரியாது. எனது உறவினர் ஒருவர் இங்கிலாந்தில் மருத்துவ ஆலோசகர் நிலையில் இருந்தார். அவர் ஊரில் போய் தொண்டர் அடிப்படையில் ஒரு வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில் அவருக்கு பெரும் வரவேற்பிருந்தது. கடைசியில்.. அவரா.. ஒரு மோட்டார் சைக்கிலில்.. லோ லோ என்று அங்குள்ள புழுதி விழுந்த ஒழுங்கைகளுக்கூடாகத் திரிந்து கொண்டிருந்தார். ஆனால்.. அதை அவர் மகிழ்வாக எடுத்துக் கொண்டார். என்ன ஊரில்.. இருந்தால்.. நீங்கள் எதையோ தொலைத்த உணர்வு இருக்காது. கோவில் குளம் இருக்குது.. நினைச்ச நேரம் போகலாம். உங்களுக்கு எழுத்துப் பணி செய்ய நல்ல சூழல் உள்ளது. ஒவ்வொரு ஊராகப் போய் வரலாம். ஊர் மக்களைக் கொண்டு போருக்குப் பிந்திய எமது சமூகம் பற்றிய ஒரு சமூக ஆய்வைக் கூடச் செய்யலாம். இப்படி ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை செய்ய வெளிக்கிட்டால்.. நிச்சயம்.. காலம் போவதே தெரியாமல்..போகும். வீட்டில்.. வீட்டுத் தோட்டம்.. மூளிகைத் தோட்டம் வைக்கலாம். நாய் வளர்க்கலாம்.. பறவைகள் ஒன்று கூடும் இடங்களை நிறுவலாம்.. இவை எல்லாம் நல்ல பொழுதுபோக்கும்.. எம்மால்.. இயலுவாகச் செய்யக் கூடியதும் ஆகும். ஆக.. அடுத்தவர் விடயங்களில் தலையிடாமல்.. நாம் நம் பாட்டுக்கு நம் பொழுதை அழகு படுத்திக் கொண்டிருந்தால்.. ஊரில் இருப்பது போல்.. பொன்னான வேளைகள் எதுவும் இருக்காது.
  3 points
 6. எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன். 5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது. முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்பிடப் போகிறார்கள் என்று கேட்டால் இது நாளை இரவுக்கு தான் பாணாக வரும் என்றார்கள். இன்று ஞாயிறு காலை உணவை முடித்து தொடங்கியவர் குழைத்து வைத்ததை எடுத்து நேரம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் குழைத்து கடைசியில் நீண்டநேரம் வைத்து அவனில்போட தயாரானார்.நாங்கள் பாண் செய்வது போலவே போடப் போகிறார் என்று பார்த்தால் போடமுதல் கூரிய கத்தியால் ஆங்காங்கே கீறி விட்டு ஒரு சட்டியில் வைத்து இன்னொரு சட்டியால் மூடி 450 F இல் 20 நிமிடம் மூடி வைத்து 20 நிமிடம் திறந்துவிட்டு இறக்கினார். முன்னர் இப்படியான பாண் சாப்பிடாதபடியால் நானும் மிகவும் ஆவலாக இருந்தேன்.ஏற்கனவே செய்து வைத்த பருப்பு ,சம்பல் ,வாழைப்பழத்துடன் சாப்பிட்டோம். கொஞ்சம் புளிப்பாக இருந்தது.சாதாரண பாண்போலவும் இருந்தது.அதன் சுவையே தனி சுகமாக இருந்தது.எல்லாம் நல்லபடியாக வந்ததால் அவருக்கும் மிகவும் சந்தோசம்.இந்த வகையான பாண் இதுவே முதல் தடவையாக செய்ததாக சொன்னார்.இரவு எல்லோரும் சந்தோசமாக சாப்பிட்டோம். அவர் செய்ததென்று யாரும் செய்ய முற்படாதீர்கள்.ரொம்பவும் சிரமம் பிடித்த வேலை.இதுவரை இந்த புளிப்பான பாண் (Sourdough)சாப்பிடாதவர்கள் தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். இது கருகிப்போய் விட்டது என்று எண்ணாதீர்கள்.இது முதலில் செய்தது. இது இரண்டாவதாக செய்தது. செய்முறை தேவையானவர்களுக்காக.
  2 points
 7. குழலி கைதேர்ந்த எழுத்தாளர்போல் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இப்போதுதான் இப்பதிவைப் பார்த்தேன். முகநூலில் நாம் யாக்கிரதையாக இல்லாவிட்டால் கிழவியா குமரியா என்று கூடப் பார்க்காது பல ஆண்கள் நாக்கைத் தொங்கப் போட்டபடி உள்பெட்டியில் அலைவார்கள் வெட்கம் கெட்டு.உல் பெட்டியில் மட்டுமல்ல பெங்களின் பதிவுகள் என்றாலே வீணீர் வடிய உடனேயே லைக் செய்து கொமண்ட் எழுதினால்த்தான் அவர்களுக்கு நின்மதி. நல்ல காலம் நான் வெள்ளையாக இல்லாததால் எனக்கு உப்பிடியான தொந்தரவு குறைவு.
  2 points
 8. நல்ல முடிவு நில்மினி, அரசியல் கதைக்க வெளிக்கிட்டால், மனநிம்மதி இருக்காது. எவ்வளவு கதைத்தாலும் தமிழரில் ஒற்றுமை வரும் வரை விடிவில்லை.
  2 points
 9. சிக்ஸ்பாக் வேணும்....முடி வேணும்.
  2 points
 10. போராட்டம் என்பது தொடஎச்சியான செயற்பாடு. இலக்கை அடையும்வரை போராட்ட முறைகள் மாறலாம், மாற்றமடையும். அதனைத் தனியே பிரித்து தந்தை செல்வா காலத்துப் போராட்டம், பிரபாகரன் காலத்துப் போராட்டம் என்று பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்துப் பார்த்தால் சாத்வீகப் போராட்டத்திலும் எந்த ஒன்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை பிரபாகரன் காலத்திலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும். போராட்டமும் முடிந்துபோயிற்று என்றும் பொருள்படும் ஆகவே 1) ஆயுதப் போராட்டத்தால் எதனைப் பெற்றுக் கொண்டோம் என்பது பொருளற்ற கேள்வி. 2) போராடியவர்கள் வடக்கு - கிழக்கில் குடியிருந்த தமிழர். போராட்டத்தால் சாதித்தோமா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறமுடியுமே தவிர சுமந்திரனல்ல. நீங்கள் கேட்கலாம் சுமந்திரன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்தானே. ஏன் அவர் கதைக்க முடியாதா என்று ? உண்மை. அவர் தெரிவு செய்யப்பட்ட (எந்த முறையிலென்றாலும்) பிரதிநிதிதான். ஆனால் இன்றுவரை அவர் வடக்கு-கிழக்கு மக்களின் மனநிலை அறிந்து அதனைப் பிரதிபலித்திருந்தாரென்றால் நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அவ்வாறு பிரதிபலித்ததாக எனக்கு நினைவிலில்லை. எனவே எங்கள் போராட்டத்தை தீர்ப்பிடுவதற்கான தகுதி அவருக்கிலை என்பது என் கருத்து. அவர் இலங்கைப் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்தவர் என்கின்ற வகையில் அவர் பிரிவினையை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆகக் குறைந்த அளவிலாவது, மனச்சாட்சி உள்ள மனிதராக, அவர் சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம். அந்தப் பக்குவம் அவருக்கில்லையெனில் அவரால் எங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை.
  2 points
 11. ஆண்டவர் சவடால்
  1 point
 12. நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். 'வடிவு, நீங்கள் நல்ல வடிவு' 'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ' 'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு' 'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்' 'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ' 'அக்கா, ஐ லவ் யூ" இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்திருந்தால் அப்படியே பாசியில் வழுக்கி விழுவது போல வழுக்கி விழுந்து பிடரியை உடைத்திருப்பேன். நல்ல வேளையாக அதை எப்போதோ கடந்திருந்தேன். சிலர் நல்ல அழகான கவிதைகள் கூட எழுதியிருந்தார்கள். இன்னும் சிலர் நான் முதலே வாசித்த வேறு யாருடையதோ கவிதைகளை தங்களது கவிதைகள் போல எழுதியிருந்தார்கள். எல்லாம் என் வடிவையும் அதனால் அவர்களுக்கு என் மேல் எழுந்த காதலையும் வைத்துத்தான். அதுதான் எனக்குக் குழப்பமாக இருந்தது. வீட்டில் சண்டை வருகிற பொழுதெல்லாம் வடிவில்லாத என்னை தனது தலையில் கட்டி விட்டதற்காகவும் எனக்கு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்ததற்காகவும் எனது கணவர், ஊரிலிருக்கும் எனது அம்மாவைத் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார். 'உன்ரை மூஞ்சைக்கும் முகரக்கட்டைக்கும் இந்தப் பெயரொன்றுதான் குறை" என்றும் சொல்லிக் கத்துவார். உண்மையில் எனக்கு வடிவாம்பிகை என்று பெயர் வைத்தது அம்மா இல்லை. அம்மாச்சிதான் நான் பிறந்த உடனேயே எனது வடிவைப் பார்த்து விட்டு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்தாவாம். நான் இதைக் கனதரம் எனது கணவருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் மறந்து போனது மாதிரித் திரும்பத் திரும்ப அம்மாவைத் திட்டிக் கொட்டிக் கொண்டிருப்பார். நான் நினைப்பூட்டினால் 'காகத்துக்கும் தன்ரை குஞ்சைப் பார்த்தால் வடிவாத்தான் தெரியும்' என்று சொல்லி, கெக்கட்டம் விட்டுச் சிரிப்பார். அது மட்டுமே? வேறு பெண்களிடம் அவர் அசடு வழிகிற பொழுதெல்லாம் நான் கேட்டால் 'நீ வடிவா இருந்தால் நான் ஏன் வேறையாரையும் பார்க்கப் போறன்?' என்பார். நான் ஓடிப்போய் நான் வடிவோ அல்லது இவர் சொல்லுறது மாதிரி உண்மையிலேயே வடிவில்லையோ என்று கண்ணாடியில் பார்த்தேன். அந்த நேரம் பார்த்துத்தான் அந்த அழைப்பு வந்தது. யாரோ Facebook மெசஞ்சரின் ஊடாகத்தான் அழைக்கிறார்கள் என்பதைச் சத்தத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். சாதாரணமாக நான் மெசஞ்சர் அழைப்பென்றால் பேசாமல் விட்டு விடுவேன். ஆனாலும் ஓடி வந்து யாரென்று பார்த்தேன். நம்பவே முடியவில்லை. டொக்டர் சுதர்சனின் அழைப்பு அது. டொக்டர் சுதர்சனை உங்களுக்கும் எப்பிடியும் தெரிஞ்சிருக்கும். சரியான நல்ல மனுசன். முள்ளிவாய்க்கால் பிரச்சனை நடக்கிற போது சுவிசிலிருந்து அங்கேயே போய் நின்று பாதிக்கப்பட்ட சனங்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தவர். யாருக்குத்தான் அப்படியொரு துணிச்சலும், சேவை மனப்பான்மையும் வரும். அதுவும் அந்தப் போர் நேரம், உயிரைப் பணயம் வைத்து அங்கேயே நின்று... எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏன் எனக்குப் போன் பண்ணுகிறார்? இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் என்னோடு Facebook இல் நட்பானவர். அவரின் நட்புக்கான அழைப்பு வந்த உடனேயே கொஞ்சமும் யோசிக்காமால் நான் accept பண்ணி விட்டேன். இப்படியான ஒரு ஆளோடு நட்பாயிருப்பது எவ்வளவு பெரிய விசயம். பெருமையும் கூட. அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு விருது கூடக் கொடுத்திருக்கிறார்கள். நான் தயக்கமில்லாமல் தொலைபேசியை எடுத்து „வணக்கம்“ என்றேன். அங்கிருந்தும் „வணக்கம்“ வந்தது „நீங்கள் டொக்டர் சுதர்சன் தானே?“ „ஓமோம், அவரேதான்“ „உங்கடை சேவையளைப் பற்றியெல்லாம் அறிஞ்சிருக்கிறன். உண்மையிலேயே நீங்கள் பெரிய ஆள். உங்கடை நல்ல மனசை எப்பிடிப் பாராட்டிறதென்றே எனக்குத் தெரியேல்லை“ அவர் பதிலுக்குச் சிரித்தார். „எனக்கு உங்களோடை கதைக்கக் கிடைச்சது பெரிய சந்தோசமா இருக்கு. அது சரி, ஏன் என்னைத் தேடி போன் பண்ணினனீங்கள்?“ „நான் அங்கை உங்களிட்டை வரோணும். உங்களிட்டைத் தங்கோணும்“ „ஏன் இங்கையும் ஆருக்கும் ஏதும் உதவி செய்யப் போறிங்களோ?“ „ம்.. ம்.. அங்கை வந்திருந்துதான் ஆருக்காவது உதவி வேணுமோ எண்டு பார்க்கோணும்“ எனக்கு உடனடியாக ஒன்றுமே விளங்கவில்லை. யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்காக வரும் ஒருவர் தங்குவதற்கு இடம் தேடுவது உண்டு. இது இங்கு வந்து தங்குவதற்காக யாருக்காவது உதவி செய்யத் தேடுவது... குழம்பினேன். எனது குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். இப்போது தெளிவாகச் சொன்னார் „உங்களோடு தங்க வேண்டும்“ எனக்கு எதுவோ புரிந்தது. „ஓ... அது சாத்தியப்படாது. என்ரை வீட்டிலை தங்கிறதுக்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை“ „ஏன்.. ஏன்?“ அதிர்ச்சியோடு கேட்டார். „எனக்குக் குடும்பம் இருக்குது. கணவர் இருக்கிறார்“ „அதிலையென்ன? அவர் நாள் முழுக்க வீட்டிலையோ இருக்கப் போறார். வேலைக்கும் போவார்தானே“ „இல்லை, அது ஒரு போதும் சாத்தியப்படாது“ „ஏன் அப்பிடிச் சொல்லுறிங்கள். நினைச்சால் எதையும் சாத்தியப்படுத்தலாம்“ நான் ஆகாயத்துக்கு மேலால் உயரமாகத் தூக்கி வைத்திருந்த டொக்டர் சுதர்சனை வெடுக்கெனக் கீழே போட்டு விட்டேன். இந்தப் பூனையுமா? மனசு ஒருவித ஏமாற்றத்தில் வெட்கித்துக் கூசியது. „உங்களுக்கு எத்தினை வயசு?“ கேட்டேன் நான் அப்படிக் கேட்டதும், வளைகிறேன் என நினைத்தாரோ? மிகுந்த உற்சாகமாக தனது வயதைச் சொன்னார். „என்ரை மகனுக்கு உங்களை விட இரண்டு வயசு கூட. அது தெரியுமோ உங்களுக்கு?“ „அப்ப Facebookஇலை நீங்கள் போட்டிருக்கிற படத்திலை சரியான இளமையா இருக்கிறீங்கள்? வடிவாயும் இருக்கிறீங்கள்“ „அந்தப் போட்டோவைப் பார்த்திட்டோ இப்ப போன் பண்ணினனீங்கள்?“ „அதுவும் தான்… உங்கடை மற்றப் படங்களையும் பார்த்தனான்“ இழுத்தார். „போட்டோவை மட்டும் பார்த்திட்டு நான் வடிவு, இளமையெண்டெல்லாம் எப்பிடி நினைச்சனிங்கள்? நான் நேற்றுப் போட்டது பத்து வருசத்துக்கு முந்தி எடுத்த போட்டோ. மற்றது அதிலை பார்த்தால், நல்லா லைற் விழுந்து என்னை நல்ல வெள்ளை மாதிரிக் காட்டுது. ஆனால் நான் அந்தளவு வெள்ளையில்லை“ இப்போது அவரது கதைகளின் சுரம் குறைந்து கொண்டு போனது. ஆனாலும் நம்ப முடியாதவராய் சில கேள்விகள் கேட்டார். „நான் உங்கடை அம்மான்ரை வயசை ஒத்திருப்பன். சில வேளையிலை அதையும் விட அதிகமாகவும் இருப்பன்“ என்றேன். அவர் தடுமாறுவது வார்த்தைகளில் தெரிந்தது. „நீங்கள் இன்னும் கலியாணம் கட்டேல்லையோ?“ கேட்டேன். „கட்டீட்டன்“ „குழந்தையள்..?“ „இரண்டு பேர். இரண்டும் பொம்பிளைப் பிள்ளையள்“ „அப்ப ஏன் எனக்கு போன் பண்ணினனிங்கள்?“ „நீங்கள் வடிவு...“ இழுத்தார் „உங்கடை பெஞ்சாதி Facebookஇலை இருக்கிறாவோ?“ „ஓம்“ ஐடி சொன்னார். பார்த்தேன் . Facebook இல், புகைப்படத்தில் அந்த மனைவி மிக அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தார். மனைவியை அணைத்த படி டொக்டர் இருந்தார். கூடவே தேவதைகள் போல் இரு பெண் குழந்தைகள். 'ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…“ „ஹி.. ஹி.. ஹி..“ அதன் பிறகு 'நான் வடிவோ இல்லையோ?' என்ற கேள்வியோ, ஆயிரத்தெட்டுத்தரம் கண்ணாடியைப் பார்க்கும் எண்ணமோ எனக்குள் வரவில்லை. `இப்படியானவர்களின் மனசைப் பார்ப்பதற்குக் கண்ணாடி ஒன்றிருந்தால் நல்லாயிருக்கும்´ என்ற எண்ணம்தான் வந்து கொண்டேயிருக்கிறது. குழலி 30.04.2020
  1 point
 13. சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயத்தை தொரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியிருந்த நேர்காணலைக் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறானவர்களின் இத்தகைய பேச்சுக்களினால் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் சிங்கள அரசாங்கங்கள் தற்போது செல்லும் பாதை சரியென்று சிங்கள மக்கள் நினைக்கவும் வாய்ப்புண்டு. என் பழைய மாணவரான சுமந்திரன் பற்றி எந்தக் கருத்தும் கூறாது இருக்கவே நான் முயன்றேன். ஆனால் நண்பர்கள் பலரின் உந்துதலால் நான் என் கருத்துக்களை வெளியிடுகின்றேன். விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார். அப்படியென்றால் தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது. தனது கருத்துக்களை வெளிப்படையாக வடமாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ மக்களுக்குக் கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம். அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம். யாழ் தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேஷம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது. எனது பழைய மாணவரா இவ்வாறு பேசுகின்றார் என்று வெட்கமாக இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லா மக்களும் அறிந்தது. தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களுக்கும் இது பற்றி தெரியும். ஆனால் சுமந்திரன் போன்றவர்கள்தான் உண்மையை அறியாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றார்கள் போல் தெரிகின்றது. இதனால் எதைச் சாதிக்கப் பார்க்கின்றார்? ஜனநாயக ரீதியாக தமிழர்களின் உரிமையை வெல்ல வேண்டும் என்ற அபிலாசையில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமே இதனால் தடம்மாற்றிக் காட்டப்படுகின்றது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் உண்மை நிலைமையை மறைத்து தவறான புரிதல்களை ஏற்படுத்த சுமந்திரன் முயல்கின்றாரோ என்று எண்ண வேண்டியுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு முந்தையது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிறார். சுமந்திரனுக்கு வரலாறு தெரியவில்லையா அல்லது தெரியாததுபோல் நடிக்கின்றாரா? அப்படி நடிப்பதால் நல்லவர் என்ற பெயரை சிங்களவர்கள் மத்தியில் ஒருபோதும் அவர் பெற முடியாது. அவருக்குத் தமிழ் மக்களின் உணர்வுதான் புரியவில்லை என்றால் வரலாறுமா தெரியவில்லை. 1949இல் உருவாக்கப்பட்டது தமிழரசுக் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது 2001இல். 2001ல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில்தான் அவர் பேச்சாளராக இருக்கிறார் என்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சிங்களவர்கள் மத்தியில் சுமந்திரனைவிட அதிக காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அத்துடன் சிங்கள மக்களை உறவாகவும் கொண்டவன் நான். அவர்களுடன் உறவாக இருப்பது வேறு. எமது உரிமைகளை அவர்களிடம் எடுத்துக் கூறுவது வேறு. சிங்களவர்கள் மத்தியில் அதிக காலம் வாழ்ந்துவிட்டுத்தான் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு வந்திருக்கின்றேன். சுமந்திரன் கூறியவை ஏதோ தனிப்பட்ட செல்வாக்கை சிங்களவர் மத்தியில் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியது போல் தெரிகின்றது. தமிழ் மக்களின் வருங்கால நலம் பற்றி சிந்திக்காது தான் அவர் அங்கு பேசியுள்ளார். மற்ற இனங்களை மதிப்பது வேறு. அவர்களின் அடிமையாக வாழ விரும்புவது வேறு. மற்ற இனங்களை திருப்திப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் அடிவருடியாகக் காட்டிக் கொள்வதை சுமந்திரன் பெருமையாக நினைக்கிறார் போல் தெரிகின்றது. இது சிங்கள மக்களுக்கு எம் தொடர்பில் தவறான தோற்றப்பாட்டையே உருவாக்கும். தமிழர்கள் அடிமையாக இருப்பதை அதிர்ஷடமாக நினைக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும். சுமந்திரன் அவ்வாறு அடிமையாக இருப்பதை பெருமையாகக் கருதலாம். ஆனால் தமிழர்கள் சார்பில் பேசும் போது அவ்வாறு பேச அவருக்கு உரித்தில்லை. அது மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தோல்வியை தழுவிய நிலையில், விரக்தி கொண்ட தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியது வரலாறு. அதனை நாம் எம் விருப்பு வெறுப்புக்களுக்காக மாற்றிச் சொல்ல முடியாது. கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு, இப்போது வந்து வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. வேண்டுமானால் இந்த மக்களை புரிந்து அவர்களுக்காக அவர்கள் கோரிக்கையின் பேரில் குரல் கொடுப்பது உத்தமமானது. இல்லை என்றால் விலகி இருந்து திரு.சுமந்திரன் அவர்கள் தாம் விரும்பும் சிங்கள மக்கள் மத்தியில் போட்டியிட்டு அரசியல் பதவிகளை வகிப்பது நல்லது. சிங்களவர்களுக்கு எமது விடுதலைப் போராட்டம் தொடர்பில் புரிதலை ஏற்படுத்த வேண்டும். தம்பி பிரபாகரன் ஏன் ஆயுதம் ஏந்தினார் என்பதை நன்கு விளங்கிக்கொண்டுள்ள சிங்கள மக்கள் பலர் உள்ளனர். தமிழர் தம் போராட்டங்களை, நியாயங்களைப் பற்றிப் பேசுகின்ற சிங்களத் தலைவர்கள் தெற்கில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத நடிப்பாளர்கள் எம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். அதே கேள்வி சிங்களத்தில் என்னிடம் கேட்டிருந்தால் பிரபாகரனின் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளால் முற்றும் முழுதுமாக உருவாக்கப்பட்டது என்று கூறியிருப்பேன். https://www.virakesari.lk/article/81830
  1 point
 14. பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள் நிலைமை போர்த்துக்கேயர், கோழிக்கோடு வந்து இறங்கியபோது 1498ல் சாமோரியர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். போர்த்துக்கேயர் வரவேற்க்கப்படவில்லை. திரும்பிப் போன போர்த்துக்கேயர், பலத்துடன் வந்து கொச்சி பகுதியினை பிடித்துக் கொண்டனர். எதிரியின் பிரதேசம் ஆயினும், ஒரே இனம் என்பதால், மேலே கோழிக்கோடு பகுதியினை ஆண்டு வந்த சமூரியர்கள், போர்த்துகேயர்களை எதிர்ப்பதில் அப்பகுதி அரசனுக்கு உதவினர். விளைவாக அங்கிருந்து வெளியேறிய போர்த்துக்கேயர், 1505ம் ஆண்டளவில் இலங்கை பக்கம் போய், 1520ம் ஆண்டளவில் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு பக்கத்தில் இருந்த தீவுக் கூட்டங்களை பிடித்துக் கொண்டனர். முக்கியமாக நெடுந்தீவு. அதேவேளை தெலுங்கு நாயக்கர்கள், தமிழகத்தின் மீதான போர் அழுத்தத்தினை அதே காலப்பகுதியில் ஆரம்பித்து, 1529 ல், தமிழர்களை தோற்கடிப்பதில் முடிந்து, தமிழகத்தினை பிடித்துக் கொண்டனர். உண்மையில் அதற்கு முன்னர் டெல்கி, மாலிக் கபூர், மதுரை பகுதியை பிடித்திருந்தான். விஜய நகர பேரரசின் போரானது, அத்தமிழகத்தின் இதர பகுதிகளுடன், மதுரையினையும் கபூரிடம் இருந்தும் மீட்டும் ஆளத்தொடங்கியது. நாயக்கர் ஆட்சி வரும்வரை, யாழ்ப்பாண அரசுகள் அழுத்தங்களுக்கு ஆளான போது, தமிழகத்தின் சேர, சோழ, பாண்டியர்கள் அவவ்போது படையுடன் வந்து, சிங்களவன் கொட்டத்தினை அடக்கினார்கள். தமிழக்கத்துடன் இருந்த தொடர்புகளை, தீவுக்கூட்டங்களில் இருந்த போர்த்துக்கேயர் தடுக்து, யாழ்பாண ராஜ்யத்தினை மிரட்டியபோது, போர்த்துகேயர்களுடன் இசைந்து போன நாயக்கர்கள், கண்டுகொள்ள வில்லை. அதனால் போர்த்துக்கேயருக்கு கப்பம் கொடுத்து யாழ் அரசு நீடித்தது. நாயக்கர்கள் , சிங்கள அரச குடும்பங்களுடன் மண உறவுகள் கொண்டபின்னர், போர்த்துக்கேயர், யாழ் ராசதானி மீது போர் தொடுத்து, சங்கிலி மன்னனை வீழ்த்தி, யாழ்பாணத்தினை பிடித்துக் கொண்டதை கண்டுகொள்ளவில்லை, உதவவில்லை. ஏனெனில் தமிழக தமிழனை வீழ்த்தி ஆண்டு கொண்டிருந்த , மிகப்பலம் பொருந்திய விஜய நகர பேரரசின் தெலுங்கு நாயகர்கள், போர்த்துக்கேயரால் வீழ்த்தப்பட்ட ஈழ தமிழரை கண்டுகொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. ஆகவே, ஏறத்தாழ சமகாலப்பகுதியில், கடலின் இருபகுதியிலும் இருந்த தமிழர்கள் வீழ்த்தப்பட்டனர். நாமாவது போராடினோம். அங்கே திராவிடம் என்ற போர்வையினை எதிரி போர்த்துக்கொண்டு ஆள்கிறான். நமக்கு, எதிரி 'நாம் சிங்களவன்' என்று சொன்னதால், அடடா, 'நாம் தமிழரா' என முழித்துக் கொண்டோம். அங்கே, எதிரி, முழித்துக் கொண்டு, 'நாம் திராவிடர்கள்' என்று அல்வாவை கொடுத்து, அங்கே உள்ள தமிழனை முழிக்க விடாமல் செய்து தொடர்ந்து ஆள்கிறான். இதுதான் கடந்த 500 வருசமாக, பாக்கு நீரிணையின் இருபுறமும் வாழும் பூர்வீகத் தமிழரின் அவல நிலை.
  1 point
 15. சகா பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் வேண்டுகோளின்பேரில் மீண்டும் அம்பாறைமாவட்டத்தில் கத்தரிக்காய் இரட்டை நிவாரணச் செயற்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று பொத்துவில் பிரதேசத்துக்குச்சென்று ஊறணி விவசாயக்கிராமத்தில் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் கொள்வனவு செய்யப்பட்டது. கிலோகிராம் 30 ரூபாய் வீதம் 1,500 கிலோகிராம் கத்தரிக்காய்களும் கிலோகிராம் 100 ரூபாய் வீதம் 200 கிலோகிராம் மிளகாய்களும் கொள்வனவு செய்யப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் திருக்கோவில் உதவிப் பிரதேசசெயலாளர் க.சதீஸ்கரன் ஆகியோர் நேரடியாக வந்து இச்செயற்பாட்டில் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். இவர்கள் கூடவே நின்று கத்தரிக்காய் ஆய்வதிலும் ஈடுபட்டனர். பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றிய இணைப்பாளர் சோ.வினோஜ்குமார் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் சமூகசெயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா வி.மோகன் சோ.தினேஸ்குமார் உள்ளிட்டோர் இவ்விரட்டை நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர். இவ்விரட்டை நிவாரணச் செயற்பாடு கடந்த மாதத்தில் 4 தடவைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. அது பொது மக்கள் மத்தியிலும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. பாடுபட்டு கஷ்ட்டப்பட்டு பயிர்செய்த உள்ளூர் விவசாயிகளுக்கு அவர்களது உற்பத்திப் பொருள்களை கொள்வனவு செய்வதன் மூலம் நிவாரணம் வழங்கும் அதேவேளை ஊரடங்கு காரணமாக முடங்கிக்கிடக்கும் ஏழைமக்களுக்கு இலவச நிவாரணமாக கத்தரிக்காய்கள், வெண்டிக்காய், மிளகாய் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/அம்பாறை/பிரித்தானிய-சைவத்திருக்கோவில்கள்-ஒன்றியத்தின்-ஏற்பாட்டில்-கத்தரிக்காய்-நிவாரணம்/74-250094
  1 point
 16. இல்லை முன்னனியில் நிற்பது தென்மாநிலத்தவர்கள் கூடவே பஞ்சாபியர்களும் ஹிந்தி வாலாக்கள் பின்னுக்கு நின்று சதிராடுவினம் 1989களில் நேரடியாக பார்த்தோம் . சண்டை ஒன்று வந்தால் டெல்லிக்கு நேரே அணுகுண்டு போடணும் என்றுதான் வேண்டுதல் .
  1 point
 17. நீங்கள் இணைத்துள்ள அனைத்து ஊடகங்களும், ஏதோ ஓர் விதத்தில் தமது கருதுகோள்களை sensational ஆக முன்வைப்பவை. முதலாவது Global Times சீன ஊடகம், அது எப்போதுமே சீன சார்பானது. sun, nypost, மேற்கு extereme, ultra right wing ஊடகம், அதிலும் sun ஐ நீங்கள் ஏறெடுத்துப் பார்க்காமல் நம்புகிறீர்கள், ஏனையோரிடம் விட்டு விட்டுவிடுகிறேன். Indian Express - இவற்றில் இருந்து காப்பியடித்து உள்ளத. இவை எல்லாமே, ஜேர்மன் ஊடகம், ஜேர்மன் புலனாய்வில் இருந்து கிடைத்த தகவலை ஜேர்மன் ஊடகம் பிரசுரிக்க, அதை மேற்கொள் காட்டி WHO China-Centric என்ற வாதத்திற்கு தமது வலுவையும், ஒப்புதலையும் அளித்துள்ளார்கள், அப்படி உண்மையில் phone call நடந்திருந்தாலும். நீங்கள் நான் சொன்னதை புரிந்து கொள்ளவில்லை. நான் எழுதும் போதே கூறி இருந்த்த்தேன், Xi WHO ஐ அப்படி கேட்டு இருந்தாலும் என்று. எனது கருத்து WHO தனது decision ஐ, சீன கூறியதை மட்டும் வைத்து எடுக்க முடியாது. அது தனது தகவல்களில், ஆய்வில் இருந்தும், சீன கூறியதை வைத்தும் ஓர் சுதந்திரமான முடிவாக இருக்க வேண்டும் என்பது. அப்படி WHO பின்னடித்தது என்றால், மேற்கு நாடுகள் ஜனவரி 22 இல் இருந்து என்ன செய்தன? அறிந்தும் தாக்கத்தின் வீரியத்தை தடுப்பதில் மேற்கு நாடுகள் தோற்றுவிட்டன என்பதே உண்மை. இதை ஏற்றுக்கொண்டால் அநேகமான மேற்கு அரசாங்கள் கவிழும் Fareed Sakaria சொல்வது போல, மக்களின் அந்த கோபத்தினை திசை திருப்பும் வேலையே, இப்பொது மேற்கு நாடுகள் சீனாவை பழி சுமத்துவது. இத்தாலி கூட முழுமையான லோக்கடவுன் ஐ, 9 March ஏ கொண்டு வந்தது. Fareed Sakaria சொல்வது போல, WHO இன் கைக்கு வர முதல் சீன காவிட 19 ஐ உள்ளாட்சி அல்லது தேசிய அளவில் அமத்துவதற்கு முற்பட்டு இருக்கலாம். அனால் நீங்கள் இன்னும் local ஆகவே அணுகிறீர்கள். அதாவது, எந்தவோர் அரசும், அரசாங்கமும் தன்னால் முடிந்தவரை நோயை அழிப்பதற்கு தானாகவே முயலும். இயலாது எனும் போதே வெளியாரை அனுமதிக்கும். covid 19 மேற்கில் வந்து இருந்தாலும், இதே போன்றொதொரு அணுகுமுறையே அநேகமாக இருந்து இருக்கும்.
  1 point
 18. அந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.
  1 point
 19. நான் டெய்லி லைவ்விலை பாத்து அரோகரா சொல்லிட்டுத்தான் வேலைக்கு போறனான்.
  1 point
 20. வுகானிலிருந்து ஒரு சிலரை முன்னணியில் நிறுத்துமாறு சீன அரசிடம் தாழ்மையுடன் இரந்து நிற்கிறேன்.
  1 point
 21. இன்று இது செய்து பார்த்தேன், சுவையாக இருந்தது. மிகவும் இலகுவானது. மிதமான சூட்டில் நிறைய நேரம் பொரிக்கவேண்டி இருந்தது. இல்லாவிட்டால் உள்ளுக்குள் அவ்வளவு வேகாது.
  1 point
 22. ஒரு மாதிரி.... சிறிசுகளையும் குசினிக்குள், இறக்கி விட்டாச்சு போலை கிடக்கு.
  1 point
 23. தமிழர்களின் ஆயுதப்போராட்டமே பிழையானது என்று பேட்டிகொடுக்கும் ஒருவரை யாழ் களத்தில் வந்து கேள்விகளுக்கு பதிலளிக்க செய்யவேண்டும் என்று நினைப்பது அவ்வளவு முன்னேற்றகரமான முடிவல்ல என்பது எனது கருத்து. சரி அப்படி வந்தாலும் பலகேள்விகளுக்கு பதிலே இருக்காது. நில்மினி அக்கா அரசியல் சம்பந்தமான திரிகளில் அவதானத்துடன் பதிலளிப்பது நல்லது. சுமந்திரனுடன் உள்ள தனிப்பட்ட சிநேகித்ததை அரசியலுடன் சேர்த்து குழப்பியடிக்காதீர்கள். உங்களுக்கு இந்த களத்தில் ஒரு தனிமதிப்பும் மரியாதையும் உள்ளது!!
  1 point
 24. பெருமாளிடம் ஆதாரம் இல்லாதால் அவர் எழுதியது அவராக கற்பனை செய்தது போல தெரிகிறது. பெருமாள் எழுதியதை தன்மீதான அவதூறாக கருதி சுமேந்திரன் யாழ் களத்திடமும் பெருமாளிடமும் நட்டஈடு கோரி வழக்கு தொடரும் சாத்தியம் உண்டு. மேலும் ஏற்கனவே நீதிமன்றில் ஆய்வு செய்யப்படும் ஒருவிடயத்தை பற்றிய முன் அறியப்படாத தகவலை பொதுவெளியில் பிரசுரிப்பது நீதிமன்ற விவகாரங்களில் தலையிடும் (perjury) சட்டவிரோத செயலாகும். மட்டுறுத்துனர்களே, பெருமாளின் மேற்படி கருத்தை விவகாரம் முற்ற முதல் அகற்றி விடுங்கள்.
  1 point
 25. Thappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை பெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் ஆதாரமான உரிமைகளைப் பற்றி பேசும் படைப்புகளின் தொனி இப்போது மேலும் கூர்மையடைந்திருப்பதை கவனிக்க முடிகிறது. பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசும் படைப்புகள் முன்பெல்லாம் எப்படியிருக்கும்? அப்பாவியான ஒரு மனைவி இருப்பார். அதற்கு எதிர்முனையில் குடிப்பழக்கம், குடும்ப வன்முறை உள்ளிட்டு பல தீய இயல்புகளைக் கொண்ட ஒரு கணவன் இருப்பார். கணவன் செய்யும் பல கொடுமைகளை சகித்துக் கொண்ட பெண், நெருக்கடியின் உச்சத்தில் ஒரு கட்டத்தில் பொங்கியெழுவார். அதாவது கணவனின் பாத்திரம் கொடுமைத்தனம் உள்ளதாகவும் மனைவியின் பாத்திரம் கொடுமையில் மாட்டிக் கொண்டு அல்லல்படும் அப்பாவி அபலையானதாகவும் துல்லியமாக பிரிக்கப்பட்ட கறுப்பு – வெள்ளையில் இருக்கும். எனவே பார்வையாளர்களின் அனுதாபம் பெண்ணின் பக்கம் எளிதில் சாய்ந்து விடும். ஆனால் உண்மையில் அவ்வாறு அவதிப்படும் பெண்களை அன்றாட வாழ்விலும் நாம் காண முடியும். ஆனால் 2016-ல் வெளிவந்த ‘Pink’ என்கிற இந்தித் திரைப்படத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கவனிக்க முடிந்தது. இதில் வரும் பெண்கள் அடுப்பங்கரை அடிமைகளாக இல்லாமல் சற்று சுதந்திரமான மனோபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். நவீன ஆடைகள் அணிந்து குடிவிடுதிக்குச் செல்கிறார்கள். அங்கு நட்பின் மூலம் ஏற்படும் அறிமுகத்தால் ஆண்களுடன் இணைந்து குடிக்கிறார்கள். ஆனால் தனிமையான சூழலில் ஆண்கள் அத்துமீறத் துவங்கும் போது தற்காப்பிற்காக தாக்கி விட்டு தப்பிக்கிறார்கள். இதில் பெண்கள் அப்பாவித்தனமுள்ளவர்களாக, அபலைகளாக, பார்வையாளர்களின் அனுதாபத்தைக் கோரும் வகையில் சித்தரிக்கப்படவில்லை என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். இந்தத் திரைப்படம் எழுப்பிய கேள்விகளும் மிக முக்கியமானவை. ஆணைப் போலவே பெண்ணும் தாம் விரும்பிய படியான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளும் சகல உரிமைகளும் உள்ளது என்று நினைக்கும் சமூகமாக பெண் சமூகம் மாறி வருகிறது. அப்படியாக Pink திரைப்படத்தில் வரும் பெண்கள் குடிவிடுதிக்குச் சென்று ஆண்களுடன் இயல்பான நட்புடன் தனிமையில் பேசத் துவங்குகிறார்கள். ஆனால் அந்த சமிக்ஞையை பாலியல் அழைப்பிற்கான, அல்லது சம்மதத்திற்கான சமிக்ஞையாக ஆண்கள் எப்படி தானாகவே எடுத்துக் கொள்ள முடியும்? அவள் அந்தச் சூழலில் பாலுறவிற்கான உறவை மறுத்தால் அப்போது ‘NO’ என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் ஆணின் அடிப்படையான நாகரிகம். அல்லாமல் அத்துமீறினால் அது சட்டவிரோதமான, பண்பாடற்ற செயலாகத்தான் கருதப்பட வேண்டும். ஆனால் பொதுப்புத்தி இதை எப்படி எதிர்கொள்ளும்? ‘இவங்க.. கவர்ச்சியாக ஆடை அணிந்து கொண்டு குடிவிடுதிக்குச் செல்வார்களாம்… ஆண்களுடன் சிரித்து பேசுவார்களாம்.. ஆனா மேல கைய வெச்சா.. நான் கண்ணகி’ன்னு கத்தி ஊரைக் கூட்டுவாங்களாம்’.. என்னப்பா.. நியாயம் இது?” என்றே பேசும். உண்மையில் இந்தத் திரைப்படம் தமிழில், நேர்கொண்ட பார்வையாக வெளி வந்த போது அரங்கத்தில், பொதுப்புத்தி சார்ந்த இவ்வாறான கேலிக்குரல்கள்தான் கேட்டன. ஆணாதிக்க மனோபாவத்திலேயே ஊறிப் போய் தான் செய்வது ஆதாரமான அத்துமீறல் என்பதைக் கூட உணர முடியாமல் ‘ஒரு பொண்ணு நைட்ல வெளில வந்தா.. நாலு ஆம்பங்களைங்க துரத்தத்தான் செய்வான்” என்று தன் குற்றத்தை நியாயப்படுத்தியே பேசுகிறது. இந்த ஆதாரமான ஆணாதிக்க மனோபாவத்தைத்தான் ‘Pink’ திரைப்படம் கேள்வி கேட்டது. “ஒரு பெண் குடிவிடுதிக்கு வந்தால் அவள் மேல் கைவைக்க அது லைசென்ஸ் ஆகி விடுமா.. இதுவே கோயிலுக்குச் செல்லும் பெண் மீது ஏன் தோன்றுவதில்லை’ என்பது உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்தது. ** இந்த வரிசையில் ‘Thappad’ திரைப்படமும் இதே மாதிரியான கேள்வியைத்தான் இன்னொரு கோணத்தில் கேட்கிறது. “ஒரு ஆம்பளை.. ஏதோவொரு கோவத்துல.. பொண்டாட்டியை அறைஞ்சுட்டான்.. அதுக்காக.. இப்படியாப்பா.. அந்தப் பொண்ணு.. ஓவராப் பண்ணுது” என்றுதான் பல ஆண்கள் இந்தத் திரைப்படத்தைப் புரிந்து கொள்கிறார்கள். இதை விடவும் மொண்ணையான, தட்டையான புரிதல் இருக்கவே முடியாது. அவர்களுக்குள் ஊறிப் போயிருக்கும் பழமைவாதமும் ஆணாதிக்க மனோபாவமுமே இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகிறது. இந்தக் காட்சியை அப்படியே திருப்பிப் போட்டு பார்ப்போம். ‘இதே மாதிரி ஒரு பார்ட்டியில் ஒரு மனைவி கோபத்தில் தன் கணவனை பளார் என்று அறைந்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம்.. அப்போதும் இதே மாதிரியான எதிர்வினையைத்தான் ஆண் சமூகம் தருமா?” இந்தக் கேள்வியை நேர்மையாக சிந்தித்துப் பார்த்தாலே இந்தப்படம் என்ன சொல்ல வருகிறது என்பது புரிந்து விடும். ** மேலும் பல விளக்கங்களுக்குப் போவதற்கு முன் படத்தைப் பற்றி சிறிது பார்த்து விடுவோம். வெவ்வேறு வர்க்க சூழலில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான மெல்லிய அறிமுகத்துடன் படம் ஆரம்பிக்கிறது. ஒரு வேலைக்காரி பாத்திரம், தன் கோபக்கார கணவனிடம் தினம் தினம் அடிவாங்குகிறது. இளம் வழக்கறிஞராக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு மண வாழ்க்கையில் நிறைவில்லை. அவளுடைய அங்கீகாரத்தை மறுக்கும் கணவன், அவனுடைய வெற்றியையே எப்போதும் பிரதானமாகப் பேசுகிறான். அவள் உழைத்து அடையும் வெற்றியைக் கூட, வழக்கறிஞராக இருந்த தன் தந்தை அடைந்த வெற்றியின் நிழலாகத்தான் பார்க்கிறான். எனவே மணவுறவில் இருக்கும் கசப்பினால் தன் திருமணத்திற்கு முந்தைய காதலனுடன் இருக்கும் தருணங்களை இனிமையானதாக அவள் உணர்கிறாள். ஒரு முதிய தம்பதி. திருமண காலம் முழுவதும் தன் மனைவி மீது அன்பும் மரியாதையும் இருப்பவர்தான் அந்தக் கணவர்.. ஆனால் ‘பாடகி’யாவதுதான் விருப்பம் என்கிற மனைவியின் இளம் வயதுக் கனவை அறியாதவராக இருக்கிறார். இதை அந்திம வயதில்தான் அவரால் அறிய முடிகிறது. அந்த அளவிற்கு தன் கனவுகளை ஆழப்புதைத்து விட்டு குடும்பத்திற்காக பல சமரசங்களை பெண்கள் மேற்கொள்கிறார்கள். இன்னொரு இளம் ஜோடி. திருமணம் என்கிற நிறுவனத்தின் மீதான சந்தேகஙகளுடன் தன் உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பெண் ஒரு விதவை. மிக மிக அன்பாக இருந்த தன் கணவனின் மறைவை ஜீரணிக்க முடியாமல் அடுத்த திருமணம் குறித்த தயக்கத்தினுள் இருப்பவள். இவளுடைய இளம் மகள், தன் சக வயதுப் பையனுடன் சுதந்திரமாக பழகுகிறாள். இவர்கள் நவீன தலைமுறையின் பிரதிநிதிகள். இன்னொரு பணக்காரப் பெண்மணி. நீரிழவு நோயாளியான இவள், கணவன் தன் வெற்றியின் மிதப்பிலேயே இருப்பதால் அவனை விட்டுப் பிரிந்து தன் மகனுடன் வசிக்கிறாள். இப்படி பல கதாபாத்திரங்களையும் அவர்களுக்கிடையே உறவுச்சிக்கல்களையும் படம் மெலிதாக அறிமுகப்படுத்துகிறது. ஆனால் அனைத்து உறவுகளிலும் இழப்புகளைச் சந்திக்கிறவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். ** இந்தத் திரைப்படத்தின் நாயகி, அம்ரிதாவிற்கு வருவோம். இவள் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண். பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வு உள்ள அம்மா மற்றும் அப்பா இருக்கும் குடும்பத்தில் வளர்வதால் ஆணாதிக்கம் என்பதின் வாசனையை பெரிதும் அறியாதவள். ஒரு பணக்கார குடும்பத்தினுள் இவள் வாழ்க்கைப்படுகிறாள். இவளுடைய கணவனான விக்ரம். அவர்களின் குடும்ப நிறுவனம் ஒன்று இருந்தாலும் தன் கனவுகளைத் தேடி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கடுமையாகவும் விசுவாசமாகவும் பணிபுரிகிறான். காலை ஆறு மணிக்கு அலார்ம் அடிப்பதில் அம்ரிதாவின் அன்றாட நாள் துவங்குகிறது. வாசலைத் திறந்து நாளிதழையும் பால் புட்டிகளையும் எடுத்து வந்து தனக்கான தேநீரை தயார் செய்து பருகுகிறாள். பால்கனிக்குச் சென்று அதை அருந்திய படியே சூரிய உதயத்தை புகைப்படம் எடுக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரிக்கு ஒரு புன்னகை. ஒரு நாளில் இதுதான் அவளுக்கான நேரம். இது மட்டுமேதான். பிறகு ஆரம்பிக்கிறது அவளது இயந்திர வாழ்க்கை. மாமியாருக்கு தேநீர் தயார் செய்து விட்டு அவருக்கு நீரிழவு பரிசோதனையைச் செய்கிறாள். பிறகு இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனுக்கு பெட் காஃபியை தயார் செய்து விட்டு அவனை எழுப்புகிறாள். பிறகு அவனுக்கான உணவு. அவன் அலுவலகத்திற்கு கிளம்பும் போது அவனுக்கான பொருட்களை கையில் வைத்துக் கொண்டு வாசல் வரை தந்து நிற்கிறாள். பிறகு இரவு. அணைத்துக் கொண்டிருக்கும் கணவனின் பிடியில் இருக்கிறாள். மீண்டும் காலை ஆறு மணி அலாரம். இந்தக் காட்சிகள் படத்தில் திரும்பத் திரும்ப காட்டப்படுகின்றன. அவளின் தினசரி வாழ்க்கை இதுவாகவே இருக்கிறது. அதாவது கணவனின் இயக்கத்தின் ஒவ்வொரு துளியிலும் அவள் கலந்திருக்கிறாள். ** ஆனால் கணவனுக்கு இது பற்றிய பிரக்ஞையே இருப்பதில்லை. தன்னுடைய வெற்றிக் கனவைத் துரத்திக் கொண்டு ஓடுவதிலேயே அவன் கவனம் பெரும்பாலும் இருக்கிறது. அது சார்ந்த பரபரப்பிலேயே இருக்கிறான். அவனுக்கு பதவி உயர்வுடன் லண்டன் அலுவலத்திற்கு தலைமை பொறுப்பாளனாக செல்லும் ஒரு வாய்ப்பு வருகிறது. அலுவலகத்தில் இவனுடைய பெயர்தான் பிரதானமாக அடிபடுகிறது. இவன் அதற்காக பல வருடங்கள் மிகவும் விசுவாசமாக உழைத்திருக்கிறான். எனவே அந்தக் கனவு மெய்ப்படும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறான். அதற்கு இணையாக நாயகியும் காத்திருக்கிறாள். அந்த நாளும் வருகிறது. இவன் லண்டன் செல்வது உறுதியாகிறது. அதற்காக வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடாகிறது. கணவன், மனைவியின் உறவினர்கள், நண்பர்கள், கணவன் பணிபுரியும் நிறுவனத்தின் உயரதிகாரி ஆகிய பலரும் அங்கு கூடியிருக்கிறார்கள். குதூகலகமும் உற்சாகமும் கொப்பளிக்கிறது. ஆனால் விக்ரமிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி தலைமையிடமிருந்து வருகிறது. அவனுடைய கனவு இடத்தில் ஒரு வெள்ளைக்காரன் இருப்பான். இவன் அவனுடைய உதவியாளனாக செல்லலாம். Corporate politics. இதைக் கேட்டதும் விக்ரமின் அத்தனை உற்சாகமும் வடிந்து கோபம் தலைக்கேறுகிறது. இதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த அதிகாரி, விருந்துக் கூடத்திலேயே இருப்பதால் ஆத்திரம் கண்ணை மறைக்க அவரிடம் சென்று உரக்க விவாதம் செய்கிறான் விக்ரம். தன் உதவியாளன் தடுத்தும் அவன் அடங்குவதில்லை. விருந்தினர்கள் சற்று திகைத்துப் பார்க்கிறார்கள். சூழல் ரசாபாசமாகி விடக்கூடாதே என்கிற பதட்டத்தில் நாயகி அவனைத் தடுக்க முனைகிறாள். ஆனால் ஆத்திரத்தின் உச்சியில் இருக்கும் அவனுக்கு எதுவும் உறைப்பதில்லை. மீண்டும் மீண்டும் தன்னைத் தடுக்க முனையும் மனைவியின் கன்னத்தில் பளார்’ என்று ஓர் அறை விடுகிறான். அம்ரிதா திகைத்துப் போய் நின்றிருக்க எல்லோரும் மெளனமாக விலகி விடுகிறார்கள். ஒரு பெண்ணின் பெற்றோருக்கு மிக குறிப்பாக தந்தைக்கு இது மிகவும் மனவருத்தத்தை தரும் சம்பவம். அவர்களும் வருத்தத்துடன் கிளம்பி விடுகிறார்கள். ** இந்த ஒரு ‘பளார்’ நாயகியின் வாழ்க்கையைத் தலைகீழாக்கி விடுகிறது. இந்தப் படத்தைப் பார்த்த பலர், இந்த அறைதான் நாயகியின் மிகையான எதிர்வினைக்கு காரணமாகி விடுகிறது என்பது போல் புரிந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படியல்ல. அதுவரை அவள் கொண்டிருந்த பல்வேறு மனஅழுத்தங்களுக்கான ஒரு சாவியாகவே இந்தச் சம்பவம் அமைகிறது. இந்த அவமதிப்பு நிகழ்ந்தாலும் ஒரு இந்தியப் பெண்ணுக்குரிய சகிப்புத்தன்மையுடன் அந்த வீட்டிலேயே தொடர்ந்து இருக்கிறாள் அம்ரிதா. ‘பூ.. ஒன்று புயலானது’ மாதிரி உடனே வெகுண்டு எழவில்லை. ஆனால் கணவனிடம் முன்பு போல் பேசுவதில்லை. அன்பு காட்டுவதில்லை. இயந்திரம் போல் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாள். ஏதேவொரு நிம்மதியின்மை அவளைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. இந்தச் சம்பவத்திற்காக பிறகு விக்ரம் வருத்தம் தெரிவிக்கிறான். ‘ஏதோ கோபத்துல செஞ்சிட்டேன். இதை விட்டுடேன்’ என்று மறுபடி மறுபடி வேண்டுகிறான். ஆனால் அவனுடன் பழைய மாதிரி பழக முடியாமல் ஏதோவொன்று அம்ரிதாவைத் தடுக்கிறது. தங்களின் இடையில் இருந்த ஏதோவொன்று உடைந்து நொறுங்கி விட்டதாக அம்ரிதா உணர்கிறாள். “என்ன பண்றது.. பொம்பளைங்களோட பொழப்பு இப்படித்தான்’ என்று ஒரு சராசரியான பெண் போல அந்தச் சம்பவத்தை மறந்து விட்டதைப் போல அவளால் நடிக்க முடியவில்லை. அப்படியொரு பொய்யான வாழ்க்கை தேவையில்லை என்று நேர்மையாக நினைக்கிறாள். எனவே தற்காலிக விடுதலையாக தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால் இதை கணவன் தனக்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு கோபமடைகிறான். மீண்டும் இறங்கி வருகிறான். ஆனால் அவர்களுக்கு இடையேயான உறவுச் சிக்கல் இன்னமும் மோசம் அடைகிறது. விவாகரத்து கோரி விண்ணப்பிக்கிறாள் அம்ரிதா. அதற்காக கணவனின் மீது எவ்விதமான பொய்ப் புகாரையும் அளிக்க அவள் விரும்பவில்லை. ‘இப்படில்லாம் சாதாரணமா போட்டா கேஸ் நிக்காது’ என்று அவளுடைய வழக்கறிஞர் எச்சரித்தும் அவள் தன் நேர்மையைக் கைவிடுவதில்லை. ஆனால் இந்த விவாகரத்தை தன் ஆண்மைக்கு சவாலாக எடுத்துக் கொள்ளும் கணவன். தன் வழக்கறிஞரின் ஆலோசனையின் படி அம்ரிதாவிற்கு எதிரான பல பொய் புகார்களை, குற்றங்களை இணைக்கத் துணிகிறான். பிறகு என்னவானது என்பதை மிக நெகிழ்வுபூர்வமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறது இந்தத் திரைப்படம். ** ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்’ என்கிற பழமொழி இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இது பெண்ணின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் பழமொழியாக தென்பட்டாலும், காலம் பூராவும் உழைத்தாலும் ஆணின் பின்னால்தான் பெண் எப்போதும் நிற்க வேண்டியிருக்கிறது என்கிற மறைபொருளான செய்தியையும் கொண்டிருக்கிறது. அத்தகையை பழமைவாத மரபைத்தான் இந்தப் படம் கேள்வி கேட்கிறது. இதில் நாயகனாக வரும் விக்ரம், ஒரு சராசரி ஆணைப் பிரதிபலிக்கிறான். அடிப்படையில் அவன் நல்லவன்தான். ஆனால் தன்னிச்சையான ஆணாதிக்கம் நிரம்பி வழியும் ஆண்களின் பிரதிநிதியாக இருக்கிறான். இது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். கணவனை இழந்து வாழும் பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி, விக்ரம் வைத்திருப்பதையும் விடவும் பெரிய காரை வாங்குகிறாள். விக்ரம் தன் மனைவி அம்ரிதாவிடம் கேட்கிறான். ‘என்ன வேலை செய்யறா.. அவ?” ஒரு பெண் எப்படி அதிகம் சம்பாதித்து விட முடியும் என்கிற மலினமான அர்த்தம் கொண்ட கேள்வி அதனுள் பொதிந்திருக்கிறது. பெண்கள் உயர்பதவியை அடையும் போது ஆண்கள் பேசும் வம்புகள் பெரும்பாலும் அவளுடைய கற்பு சார்ந்ததாகவே இருக்கும். ஏன்.. பெண்கள் கூட இம்மாதிரி வம்பு பேசுவதில் விதிவிலக்கில்லை. ஆனால் கணவன் கேட்கும் வில்லங்கமான கேள்விக்கு அம்ரிதா சரியான பதிலைச் சொல்கிறாள். ‘அவ hard work செய்யறா’ அடுத்த வசனத்தில் அம்ரிதா கேட்கிறாள். ‘நானும் கார் ஓட்ட கத்துக்கிடட்டுமா?” அதற்கு விக்ரம் பதில் சொல்கிறான். ‘நீ மொதல்ல பரோட்டாவை தீயாம சுடப் பழகிக்கோ” தங்களின் ஆணாதிக்க கிண்டல்களின் மூலமும் மலினமான நிராகரிப்புகளின் மூலமும் ஆண்கள் பெண்களை பின்னுக்குத் தள்ளியபடியே இருக்கிறார்கள். பெண்களுக்கென்று ஒரு சுயம் இருக்கிறது, அவர்களுக்கும் பல கனவுகளும் லட்சியங்களும் இருக்கும், அவர்களும் வெற்றிப்பாதையில் பயணப்பட விரும்புவார்கள் என்பது குறித்த பிரக்ஞையே ஆண் உலகத்திற்கு இருப்பதில்லை. தன் வெற்றிக்கு பெண் துணையாக நின்றால் போதும் என்றே ஆண்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ** “என் சொந்தக் கம்பெனி மாதிரி நெனச்சு உழைச்சேன்… ஆனா இப்படி துரோகம் பண்ணிட்டாங்களே’ என்று புலம்பும் விக்ரம், தன் கணவனின் வெற்றியயையே தன்னுடைய வெற்றியாக நினைத்த மனைவிக்கு ஓர் அறையின் மூலம் அதே துரோகத்தை பரிசாக அளிக்கிறான். அவனுடைய குடும்ப நிறுவனம் ஒன்று இருந்தாலும், அவன் அங்கு இணைய விரும்பவதில்லை. மாறாக தனித்தன்மையுடன் தன்னுடைய உழைப்பில் நிகழ்ந்த வெற்றியையே சுவைக்க விரும்புகிறான். ஆனால் இதே மாதிரியான கனவு பெண்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்பதுதான் இந்தத் திரைப்படம் வைக்க விரும்பும் முக்கியமான செய்தி. அம்ரிதாவின் தம்பியே அக்காளின் பிரச்சினையை புரிந்து கொள்வதில்லை. ‘அவர் ஏதோ டென்ஷன்ல அடிச்சிட்டாரு. இத்தனைக்கும் இதுதான் முதன்முறை.. அதுக்கு இவ ரொம்ப சீன் போடறா” என்கிற மாதிரி புகார் சொல்கிறான். அவனுடைய தோழி அதற்கு சரியான பதிலைச் சொல்கிறாள். ‘என்னது முதன்முறையா.. அதனால பரவாயில்லைன்னு ஆயிடுமா.. ஒரு பெண் முதன் முறை சோரம் போனா .. நீங்க ஒத்துப்பீங்களா?” என்று கேட்கிறாள். இது தட்டையான புரிதலை கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்குமான கேள்வி. ஆண்கள் மட்டுமல்ல.. அம்ரிதாவின் தாய் உட்பட்ட இதர பெண்களும் கூட அம்ரிதா வாங்கிய அறையை ஒரு சாதாரண விஷயமாகத்தான் பார்க்கிறார்கள். பெண்கள் செய்யும் பல்வேறு சமரசங்களின் மூலமாகத்தான் ஒரு குடும்பம் பழுதின்றி இயங்குகிறது என்பது அவர்களின் நெடுங்கால அனுபவம். அது உண்மைதான். ஆனால் இன்னமும் எத்தனை காலத்திற்கு அத்தகைய சமரசங்களை பெண்கள் மட்டுமே சகித்துக் கொள்ள வேண்டும்? ஒருவகையில் இந்த ஆணாதிக்க மனோபாவத்திற்கு பெண்களும் காரணமாக இருக்கிறார்கள் என்கிற செய்தியையும் படம் பதிவு செய்கிறது. அம்ரிதா, தன் மாமியாரிடம் பேசும் அந்த உருக்கமான உரையாடல் படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று. “நான் அடிவாங்கின போது யாராவது ஒருத்தராவது எனக்கு ஆறுதலா வந்து நிப்பீங்கன்னு நெனச்சேன். ஆனா உங்க குடும்ப மரியாதைன்னு முக்கியம்-னு நெனச்சீங்க” என்று அம்ரிதா சொல்லும் போதுதான் மாமியாருக்கும் அது புரிகிறது. ‘நீ விவாகரத்து கோரினது தப்பில்ல. நீ போ. சுதந்திரமா வாழு’ என்கிறாள். ஏனெனில் அவளுக்கும் அப்படியொரு கசப்பான வாழ்க்கை இருக்கிறது. எனவே அவளால் அம்ரிதாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் ** ஒரு குடும்ப வண்டி எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்க பெண்களின் பங்குதான் பிரதானமானது. அதற்காக பெண் சமூகம் பல்வேறு சமரசங்களை, அவமதிப்புகளை, தியாகங்களை எதிர்கொள்கிறது. ஆனால் தன் வெற்றியின் மிதப்பினால்தான் அனைத்தும் நடக்கின்றன என்கிற போலியான பெருமையை ஆண் அடைகிறான். அந்தப் பெருமிதத்துடன் பல்வேறு வன்முறைகளை பெண்ணின் மீது நிகழ்த்துகிறான். அம்ரிதாவிற்கு விழும் அறை இத்தனை விஷயங்களை அவளுக்குள் கிளறச் செய்கிறது. ஆண் அடித்து விட்டான் என்பதற்காக அவள் அங்கிருந்து விலகவில்லை. அந்தக் குடும்பத்தில் தன் இருப்பின் மதிப்பு என்ன என்கிற கேள்வியே அவளைத் துரத்துகிறது. ஆண்கள் அடையும் வெற்றி கூட பெண்களுக்கு ஒருவகையில் தண்டனை என்பதற்கான உதாரணக்காட்சி இந்தப் படத்தில் இருக்கிறது. விக்ரமின் லண்டன் வெற்றிக்காக அம்ரிதாவும் ஆவலுடன் காத்திருக்கிறாள். அந்தச் செய்தி அவளுக்கு வந்து சேர்கிறது. ஆனால் கூடவே வரும் ஒரு செய்தியினால் அவள் சற்று சங்கடம் அடைகிறாள். அன்று இரவு சுமார் நாற்பது பேர் கலந்து கொள்ளும் விருந்திற்கான ஏற்பாடுகளை அவள் செய்தாக வேண்டும். எனவே சற்று சங்கடத்துடன் அதைச் சொல்லி விட்டு அப்புறம்தான் லண்டன் தகவலை மாமியாரிடம் சொல்கிறாள். ஆண் வெற்றி பெறுவதற்கான கொண்டாட்டத்திற்கு கூட பெண்தான் உழைக்க வேண்டியிருக்கிறது என்கிற தகவலை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது இந்தக் காட்சி. ** ஆக தன் கணவன் ஒரே ஒரு முறை கோபத்தில் தெரியாமல் அடித்தற்காகத்தான் அம்ரிதா பிடிவாதமாக விவாகரத்தைக் கோருகிறாள் என்று இந்தப் படத்தைப் புரிந்து கொள்வதைப் போல் ஒரு தட்டையான புரிதல் இருக்கவே முடியாது. அம்ரிதாவின் முடிவிற்குப் பின்னால் ஏராளமான இழைகள் இருக்கின்றன என்பதற்கான பல சாட்சியங்கள் இந்தத் திரைப்படத்தில் இறைந்திருக்கின்றன. எந்த வெற்றிக்காக விக்ரன் அத்தனை அல்லாடினானோ, அம்ரிதா இல்லாமல் அந்த வெற்றியை அவனால் சுவைக்க முடிவதில்லை. அத்தனையையும் கைவிட்டு விட்டு மன்னிப்புடன் அம்ரிதாவின் முடிவை ஏற்றுக் கொள்கிறான். அவளுடைய இருப்புதான் அவனுடைய வெற்றியை முழுமையாக்குகிறது என்பதை அவன் இறுதியில்தான் புரிந்து கொள்கிறான். நுண்ணுணர்வுள்ள பார்வையாளர்கள் வந்தடைய வேண்டிய இடமும் இதுவே. ** இதைப் போலவே திருமணம் என்கிற நிறுவனத்திலிருந்து பெண்கள் விலகுவதுதான் இந்தப் படம் சொல்லும் செய்தி என்பதைப் போல தட்டையாக வேறு சிலர் புரிந்து வைத்திருக்கலாம். பெண்கள் குடும்பத்திற்காக பல சமரசங்களை, தியாகங்களை, அவமதிப்புகளை எதிர்கொண்ட காலம் மலையேறி விட்டது. நவீன காலப் பெண்களிடம் இன்னமும் ஆணாதிக்க மனோபாவம் செல்லுபடியாகாது. அறிவுத் தேடலும் பொருளாதார சுதந்திரமும் கொண்ட பெண்கள், ஆண்களுக்கு தாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்கிற உணர்வை அடையத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இனி மேல் திருமணம் செய்யப் போகும் ஆண்கள், எந்தவொரு காரணத்திற்காகவும் தங்களின் கோபத்தின் வடிகாலாக பெண்களை உபயோகிக்க முடியாது. அப்படியொரு அழுத்தமான செய்தியை இந்தத் திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. இறுதிக்காட்சியில் விக்ரமின் மேலதிகாரி சொல்கிறார் “உன் கோபத்தைக் காண்பிக்க என்னையோ, தலைமை அதிகாரியையோ உன்னால் அடித்திருக்க முடியுமா? எளிய வாய்ப்பாக இருந்த மனைவியை அடித்து விட்டாய். நீ செய்தது தவறு” என்கிறார். ஆண்கள் தங்களிடமுள்ள கோப தாபங்களின் வடிகாலாக பெண்களை கிள்ளுகீரை போல பயன்படுத்திக் கொள்ள முடியாது, இனிமேலும் அதை இயல்பு என்று பெண்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதே படம் சொல்லும் முக்கியமான செய்தி. என்னதான் நாகரிக உலகத்தை நோக்கி நடைபோடுகிறவர்களாக நம்மை சொல்லிக் கொண்டாலும், ஆணாதிக்க சூழல் காரணமாக வர்க்க பேதமின்றி ஏறத்தாழ அனைத்துக் குடும்பங்களிலும் குடும்ப வன்முறை இன்னமும் கூட குறையாமல் இருக்கிறது. இந்தச் சூழலில், பெண்களின் தரப்பிடமிருந்து ஒரு பலத்த எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது, இந்தத் திரைப்படம் suresh kannan http://pitchaipathiram.blogspot.com/2020/05/thappad-2020.html
  1 point
 26. 1970 களில் இருந்தே பழகும் ஒரு நல்ல நண்பன். மிகவும் எளிமையான , எல்லோரையும் பண்பாக நடத்தும் குடும்பம். ராயல் கல்லூரியில் தமிழ் போட்டிகளில் எல்லாம் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். வீட்டில் Christmas tree கூட வைப்பதில்லை. எமது தேவைகளை பற்றி நிறைய கேட்டுருக்கிறேன். ஆரம்பத்தில் உசாராக கதைத்தாலும் பிறகு பிறகு ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பது போல் தான் சொன்னான்.இலங்கை அரசியலில் இருப்பவர்கள் ஒருவருக்குமே தாங்கள் என்னே செய்யவேண்டும் என்று தெரியாது. பௌத்த பேரினவாதத்தை கைவிட்டு சிங்கப்பூர் மாதிரியான ஒரு அரசியலை முன்னெடுத்தால் தான் எமது நாடு உருப்படும். நாமும் அங்கு மனுசர் மாதிரி வாழலாம். இது என் கருத்து. ஆனால் கட்டாயம் உங்கள் கருத்தை copy பண்ணி அனுப்பிகிறேன் பதில் கேட்டு ரதி.
  1 point
 27. இணைப்பிற்கு நன்றி ...நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்து விட்டேன்
  1 point
 28. சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். நீங்கள் திரு சுமந்திரன் அவர்களின் அரசியல் ரீதியாக என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளீர்கள் என்பது தெரியாமல் உங்களிடம் எப்படி கேள்வியை கேட்பது. கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடும் என்பார்கள். கேள்விக்கு பதில் வழங்குவது சுமந்திரனா அல்லது நீங்களா?
  1 point
 29. முசிலிம்களின் உண்மையான முகம் இது. அவர்கள் பலவீனமான நிலையில் உள்ள தமிழர்களைத்தான் தங்கள் எதிரியாகக் கொள்கிறார்கள். பலமான நிலையில் உள்ள சிங்களத்துடன் கூட இருப்பதையே விரும்புகிறார்கள். நாம்தான் அவர்களை எங்கள் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம்.
  1 point
 30. Anna Jarvis: The woman who regretted creating Mother's Day By Vibeke Venema BBC Stories Getty Images The woman responsible for the creation of Mother's Day, marked in the many countries on the second Sunday in May, would have approved of the modest celebrations likely to take place this year. The commercialisation of the day horrified her - to the extent that she even campaigned to have it rescinded. When Elizabeth Burr received a phone call a few days ago from someone asking about her family history, she initially thought she had been scammed. "I thought, 'OK, my identity has been stolen, I'll never see my money again,'" she says. In fact the call came from a family history researcher looking for living relatives of Anna Jarvis, the woman who founded Mother's Day in the US over a century ago. Anna Jarvis was one of 13 children, only four of whom lived to adulthood. Her older brother was the only one to have children of his own, but many died young from tuberculosis and his last direct descendant died in the 1980s. So Elisabeth Zetland of MyHeritage decided to look for first cousins, and that was what led her to Elizabeth Burr. When Elizabeth had been reassured that her savings were safe, she gave MyHeritage the surprising news that her father and aunts hadn't celebrated Mother's Day when they were growing up - out of respect for Anna, and her feeling that her idea had been hijacked by commercial interests and debased. Anna Jarvis's campaign for a special day to celebrate mothers was one she inherited from her own mother, Ann Reeves Jarvis. Mrs Jarvis had spent her life mobilising mothers to care for their children, says historian Katharine Antolini, and she wanted mothers' work to be recognised. "I hope and pray that someone, sometime, will found a memorial mothers' day commemorating her for the matchless service she renders to humanity in every field of life. She is entitled to it," Mrs Jarvis said. She was very active in the Methodist Episcopal Church, where, from 1858, she ran Mothers' Day Work Clubs to combat high infant and child mortality rates, mostly due to diseases that ravaged their community in Grafton, West Virginia. Getty Images Ann Reeves Jarvis In the work clubs mothers learned about hygiene and sanitation, such as the vital importance of boiling drinking water. The organisers provided medicine and supplies to sick families and, when necessary, quarantined entire households to prevent epidemics. Mrs Jarvis herself lost nine children, including five during the American Civil War (1861-1865) who most likely succumbed to disease, says Antolini, a professor at West Virginia Wesleyan College. When Mrs Jarvis died in 1905, surrounded by her four surviving children, a grief-stricken Anna promised to fulfil her mother's dream, though her approach to the memorial day was quite different, Antolini says. Whereas Mrs Jarvis wanted to celebrate the work done by mothers to improve the lives of others, Anna's perspective was that of a devoted daughter. Her motto for Mother's Day was "For the Best Mother who Ever Lived—Your Mother." This was why the apostrophe had to be singular, not plural. "Anna envisioned the holiday as a home-coming, a day to honour your mother, the one woman who dedicated her life to you," says Antolini. Mother's Day or Mothering Sunday? In the UK the fourth Sunday in Lent has long been celebrated as Mothering Sunday - originally a day when people who had left home returned to their "mother church" and were reunited with their parents A movement to revive Mothering Sunday traditions was launched in 1920 by a Nottinghamshire woman, Constance Penswick Smith, out of concern that the secular US Mother's Day would displace the Christian Mothering Sunday Anna Jarvis's chosen day, the second Sunday in May has been adopted by many countries, but a wide variety of other dates are also used around the world This message was something everyone could get behind, and also appealed to churches - Anna's decision to have the holiday on a Sunday was a smart move, says Antolini. Three years after Mrs Jarvis's death, the first Mother's Day was celebrated in the Andrews Methodist Church in Grafton - Anna Jarvis chose the second Sunday in May because it would always be close to 9 May, the day her mother had died. Anna handed out hundreds of white carnations, her mother's favourite flower, to the mothers who attended. The popularity of the celebration grew and grew - the Philadelphia Enquirer reports that soon you could not "beg, borrow or steal a carnation". In 1910 Mother's Day became a West Virginia state holiday and in 1914 it was designated a national holiday by President Woodrow Wilson. A huge factor in the day's success was its commercial appeal. "Even though Anna never wanted the day to become commercialised, it did very early. So the floral industry, greeting card industry and candy industry deserve some of the credit for the day's promotion," says Antolini. Getty Images Norman Rockwell (1894-1978) American painter and illustrator, at work on an official 1951 Mother's Day poster But this was absolutely not what Anna wanted. When the price of carnations rocketed, she released a press release condemning florists: "WHAT WILL YOU DO to rout charlatans, bandits, pirates, racketeers, kidnappers and other termites that would undermine with their greed one of the finest, noblest and truest movements and celebrations?" By 1920, she was urging people not to buy flowers at all. She was upset with any organisation that used her day for anything but her original, sentimental, design, says Antolini. This included charities that used the holiday for fund-raising, even if they meant to help poor mothers. "It was a day meant to celebrate mothers, not pity them because they were poor," explains Antolini. "Plus some charities were not using the money for poor mothers like they claimed." Mother's Day was even dragged into the debate over women's votes. Anti-suffragists said that a woman's true place was in the home and that she was too busy as a wife and mother to be involved in politics. For their part, suffrage groups would argue, "If she is good enough to be the mother of your children, she is good enough to vote." And they stressed the need for women to have a say in the future well-being of their children. Getty Images Anna Jarvis (1864-1948) The only one not to take advantage of Mother's Day, it seems, was Anna herself. She refused money offered to her by the florist industry. "She never profited from the day and she could easily have done so. I admire her for that," says Antolini. Anna and her sister Lillian, who was visually impaired, survived on the inheritance from their father and their brother Claude, who ran a taxi business in Philadelphia before dying of a heart attack. But Anna went on to spend every penny fighting the commercialisation of Mother's Day. Elizabeth Burr Elizabeth Burr, the cousin called out of the blue by MyHeritage, and her daughter, Madison Even before it became a national holiday she had claimed copyright on the phrase "Second Sunday in May, Mother's Day", and threatened to sue anyone who marketed it without permission. "Sometimes groups or industries would purposely use the possessive plural spelling 'Mothers' Day' in order to get around Anna's copyright claims," says Antolini. A Newsweek article written in 1944 claimed she had 33 pending lawsuits. By then she was 80 and almost blind, deaf and destitute, and being cared for in a sanatorium in Philadelphia. There have long been claims that the floral and card industries secretly paid for Anna Jarvis's care, but Antolini has never been able to verify this. "I would like to think that they did, but it just may be a good story and not true," she says. One of Anna's final acts, while still living with her sister, was to go door-to-door in Philadelphia asking for signatures to back an appeal for Mother's Day to be rescinded. Once she had been admitted to the sanatorium, Lillian soon died of carbon monoxide poisoning while trying to heat the run-down house. "Police claimed that icicles hung from the ceiling because it was so cold," says Antolini. Anna herself died of heart failure in November 1948. Jane Unkefer, 86, another of Anna's first cousins (and Elizabeth Burr's aunt), thinks Anna Jarvis became obsessed with her anti-commercialisation crusade. "I don't think they were very wealthy, but she totally ran through whatever money she had," she says. "It's embarrassing. I wouldn't want people to think the family wasn't caring for her, but she ended up in the equivalent of a pauper's grave." They may not have been able to help her at the end of her life, but the family did honour Anna's memory in another way - by not celebrating Mother's Day for several generations. "We really didn't like Mother's Day," says Jane Unkefer. "And the reason we didn't is that my mother, as a child, had heard a lot of negative things said about Mother's Day. We acknowledged it as a nice sentiment, but we didn't go in for the fancy dinner or the bouquets of flowers." Elizabeth Burr Jane Unkefer (right), Emily d'Aulaire and Richard Talbott with their mother, Frances As a young mother Jane used to stop in front of a plaque honouring Mother's Day in Philadelphia and think about Anna. "It's a sort of a poignant story because there's so much love in it," says Jane. "And I think what has come out of it is a nice thing. People do remember their mom, just the way she would have wanted them to." Jane confesses she has changed her mind about the celebration now. "Many generations later, I've forgotten all the negative things my mother ever said about it, and I get very angry if I don't hear from my children. I want them to honour me and my day," she says. Jane's younger sister, Emily d'Aulaire, has also found her attitude to Mother's Day altering over time. "I didn't even really know about it until my own child was in school and came home with a Mother's Day gift," she says. "Our mother used to say something like, 'Every day is Mother's Day.'" For a long time Emily was sad that Anna's original intention for the day was thwarted, but these days she sends a card to her daughter-in-law, the mother of her grandchildren. This year many families won't be able to treat their mothers to flowers or a day out and instead will celebrate Mother's Day via a video link, because of the lockdown. But Antolini thinks Anna and her mother would have been pleased with such pared-down celebrations. She imagines that Mrs Jarvis, a veteran of many epidemics, would resurrect the Mother's Day Clubs to help others. And Anna would be delighted with the lack of shopping opportunities, which she felt clouded the purity of her original vision. You may also be interested in: Saint Louis Art Museum / Ebony It's 50 years since photographer Moneta Sleet became the first African American to win a Pulitzer prize for journalism. Has his work received the recognition it deserves? The great black photographer you have never heard of
  1 point
 31. சுமந்திரன் தன்னுடைய வாயைக் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். அவரது மேட்டிமைத்தனத்தை போராளிகளிடத்தும் போராளிகளைக் கொடுத்த மக்களிடமும் காட்டக் கூடாது. இரத்தம் சிந்தியது வடக்கு+கிழக்கு மக்கள்தான். சிந்தப்பட்ட இரத்தத்தை அவமதிக்க அனுமதிக்க முடியாது அவர் என்ன வெட்டி வீழ்த்தினார் என்று ஒருவரும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதை ஒருவரும் ஏற்கப்போவதில்லை. (கொஞ்சம் நாகரீகமாக எழுத விரும்புகிறேன். அம்புட்டுதே )
  1 point
 32. இவரின் செய்முறை இலகுவாக இருக்கு, நன்றி நில்மினி பகிர்வுக்கு. நேற்று கொஞ்சம் கருக விட்டு எடுத்தேன், நன்றாக வந்திச்சு.
  1 point
 33. பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள். அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?
  1 point
 34. கொரோனாவால் எல்லா நாடுகளும் தான் கடன்படுது...இலங்கை கடன் வேண்டும் செய்திகளை மட்டும் தான் நாங்கள் வாசிக்கிறோம்
  1 point
 35. காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம்
  1 point
 36. காவாலி வேலை செய்யும் குரங்குகளை ஆமி அடித்தால் கதையை மற்றப்பக்கம் திருப்பிவிடுவார்கள்.
  1 point
 37. சுமோ அக்கா, உங்கள் எழுத்துகளை வச்சுசொல்லுறன் நீங்கள் மற்றவர்கள் இதை செய்யவேண்டுமென்று நினைக்கிறீங்கள், நீங்கள் ஒரு இஞ்சிகூட நகரமாட்டீங்கள்! உங்களுக்கு உது சரிப்பட்டு வராது
  1 point
 38. உங்களுக்கு ஏற்கனவே அம்மொழியின் அறிமுகம் உள்ளதால் கற்பது இலகுவாகும். எனக்கு மனம் முழுவதும் அவர்கள் மேலும் அந்த மொழிமேலும் துவேசம் இருக்கவே செய்கிறது. அவர் ஒரு பேராதனை பல்கலை, கலை பட்டதாரி. வேலை இல்லாத படியால், வான் ஓட்டுனரானார். ஒரு நண்பனின் சிபாரிசில், கொழும்பு விமானநிலையத்தில் என்னை பிக் அப் பண்ணி யாழ் பயணமானோம். வீடு இடிந்து நொறுக்கப்பட்டிருந்தது. இந்திய, இலங்கை, ராணுவத்தின் கைங்கரியம்... கண்களில் நீர் வந்தது..... என்னை பார்த்த அவர் மௌனமானார்.... நீண்ட நேரத்தின் பின்னர் பேசினார். பல போராட்ட கால கதைகளை சொல்ல, சொல்ல திகைத்துப் போனார் அவர். இலங்கையின் தென் பகுதியில் ஜேவிபி காலத்தின் வன்கொடுமைகளுக்கு அதே இனத்தின் ராணுவமே பொறுப்பு. ஆனால் இலங்கையின் வடக்கே, கிழக்கே வாழும் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு வேறு இன ராணுவமும், வெளிநாடு ராணுவமும் பொறுப்பு. இரு வேறு நாட்டு ராணுவத்தினால் தமிழர்கள் பெரும் அவலமடைந்தது, சிங்களவர்களுக்கு மறைக்கப்படுள்ளது என்றேன். இன்றும் தொடர்பில் உள்ளார். அப்போது நினைத்தேன். எமது வலிகளை, சிங்கள மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே தெரியப்படுத்தாவிடில் எமக்கான விடுதலை துரிதமாகாது. பிரித்தானியாவின் பேரரசு வரலாறில், அடிமைத்தனம் ஒழிய, பிரித்தானிய மக்களுக்கு அடிமைளது அவலம் தெரியப்படுத்தபட்டமையே காரணமாகியது. நான் ஒரு மனிதனும், சகோதரனும், நான் ஒரு பெண்ணும், தாயும் போன்ற மனதை கரைய வைக்கும் தெரு ஓவியங்கள், பதாகைகள், இறுதியில் பிரித்தானிய அரசை அசைத்து, அடிமை வியாபார தடை சட்டத்தினை கொண்டு வர வைத்தது. தென் ஆப்பிரிக்காவின் வைர சுரங்ககளை, டச்சு குடியேறிகள் பல ஆண்டுகள் வைத்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து அதனை பிரித்தானியா கையகப்படுத்த நடந்த போர், போயர் யுத்தம், ஒரு கொடூர யுத்தம் 3 ஆண்டுகள் நடந்தது. இதற்க்கு பேரரசின் பல பகுதிகளில் இருந்து படையினர் கொண்டு செல்லப்பட்டனர். இதுக்கு எதிராக வீரமுடன் போராடிய, டச்சு காரர்களின் மீது, பெரும் அனுதாபம் பிரிட்டனில் உண்டாக்கியது. அதன் விளைவு, தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரம். ஆகவே, சிங்கள மொழியினை முடிந்தளவு படித்து, சமூக வலைத்தளங்களில், எமது வலிகள் சொல்லப்படவேண்டும். இறுதி யுத்த காலத்தில், ஒரு சிங்களவர்கள் தளத்தில், சிங்களவர் போல இணைந்து கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் கருத்துடையாடல்.... விடக்கூடாது... போட்டுத்தாக்கு என்று பலர் கூறிக்கொண்டிருந்தார். இறந்த பெண்ணின் வயித்தில் இருந்து குழந்தை ஒன்று வெளியே வந்திருந்த படத்தினை போட்டேன். அப்படியே ஆடிப் போய்விட்டனர். இதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை.
  1 point
 39. இவ்வளவு தைரியமாக யாரும் படம் எடுக்கவில்லை உண்மையான கருத்து பெண்களை மதிக்க தெரிந்த சமூகம் உருவாக ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய படம்
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.