• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on செவ்வாய் 12 மே 2020 in all areas

 1. 5 points
  இஞ்சை பாருங்கோ கூத்தை..... வெள்ளை வடை சுடுது.
 2. 5 points
  அதிபர் ஆனந்தராஜா, ரஜனி திரணகம போன்றவர்களை எப்போதும் தூக்கிப் பிடிப்பதற்கான உண்மையான காரணம் என்ன ? சிங்கள அரசால் கொல்லப்பட்ட கல்வியியலாளர்களை, இந்திய அரசால் கொல்லப்பட்ட கல்வியாளர்களை இலகுவாக மறந்துபோவதற்கான (மறைத்து) என்ன காரணம் ?
 3. 3 points
  Thampi (little brother), our dog Singaa, my 30 pet doves and myself in Eelam at the end of 2008 moving from Vaddakkachchi to Visuvamadu. ___I was 15 years old at that time and thought it’d only be two or three weeks then we’ll be back to our place and continue with our normal lives. But I was wrong. ___Who would have thought we had to keep moving to four other places? Every time we moved we had to leave some of our stuff behind. We were camping, living on the beachside, eating rice and lentils without any flavour for months (but some people didn't have that privilege). ___No hope and constantly fearing the worst. ___Sharing a series of memories of Mullivaikkal by @nishan_sanjee @ Mullaitivu
 4. 2 points
  அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுவழி கடல்பாதையை தவிர்க்க, நாட்டின் குறுக்கே கடல்மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையின் ஏரியின் இருபுறமும் மிகுந்த உயிர்பலி, சிரமங்களுக்கிடையே கால்வாய்கள் வெட்டி மூன்று தொட்டி போன்ற நிலைகளில் தண்ணீர் நிரப்பி, கப்பல்களை உயர்த்தி ஓடவிட்டு மறுபுறம் கடத்தும் தொழிற்நுட்பம் வியக்கத்தக்கது.. காணொளியை பார்த்தால் எளிதாக புரியும்..!
 5. 2 points
  பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம் என்று எல்லோருக்கும் தெரியும். தடிமன், சைனஸ்,தொண்டை நோ, சமிபாடு, உடல் நிறை குறைய (தேன் சேர்த்து விடிய வெள்ளன குடிக்கலாம், அல்லது சூடான கிறீன் டீ ( நச்சுப்பொருட்கள் உருவாவதை குறைக்கும் - Freeradicals ), செமிக்க உதவும். சுடுநீர் ( தேசிக்காய் புளி சேர்க்கலாம்) வியர்க்க வைக்கும். அதனுடன் சேர்ந்து நச்சு வாயுக்கள், கழிவுகள் வெளியேறும். சுடுதண்ணி குடிக்கும்போது உடனே தசை சுருங்கும் ஆனால் ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகள் தளர்வடைந்து , தசை , மூட்டு வலிகள் சுகமாகும். எமது ரத்தக்குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் சுருங்கி விரிவதாலேயே இரத்த ஓட்டம் ஒழுங்காக நடக்கிறது. சுடுநீர் இதனை சீராக்கி ரத்த அழுத்தத்தை சரிப்படுத்தும். படுக்கபோகும்போது சுடுநீர் குடித்தால் நிம்மதியான நித்திரை வரும், இரவில் வரும் food cravings வராது. பொதுவாகவே இளஞ்சூட்டு நீர் தான் உடலுக்கு மிகவும் உவந்தது . எனது அனுபவத்தில் ஓரளவு சுடுதண்ணீர் ஒவ்வொரு நாளும் குடித்தால் நல்லா செமிக்கும் , ஓரளவு மெலியலாம். மருந்துகள் எடுப்பவர்கள் கொதிநீரை ஒவ்வொருநாளும் குடிப்பது கூடாதென ஆய்வுகள் கூறுகின்றன. சுடுதண்ணி குடிப்பவர்கள் இளமையான தோற்றத்துடனும் , நல்ல குணம் படைத்தவர்காளாகும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன (இது எனது தந்தைக்கு பொருந்தும்) இஞ்சி மஞ்சள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் (Zingiberaceae family). Blood pressure diabetes மருந்துகள் எடுக்கும்போது வயிற்றில் கொஞ்சம் அமிலத்தன்மையை தன்மையை கூட்டும் . ஆனால் நாங்கள் சிறு வயதில் இருந்தே இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிடுபவர்கள். எமது உடல் இதற்கு பழகி இருக்கும். அத்துடன் உணவில் சேர்த்து சமைப்பதால் இந்த மருந்துகளுடன் interfere பண்ணாது. வெள்ளைகள் Turmeric , ginger capsules குடிப்பது வழக்கம். அவர்களுக்குத்தான் இவ்வாறான பிரச்சனைகள் வரும். மஞ்சள் இஞ்சியினால் மிகக்கூடிய பலன்கள் உண்டு. அதனால் விலை கூடினாலும் பரவாயில்லை என்று Organic மஞ்சள் இஞ்சி நித்தமும் சமையலில் பாவிப்பது நன்று.
 6. 2 points
 7. 2 points
 8. 2 points
 9. 2 points
  நெடுக்ஸ், 1) நானும் நீங்களும் வாழ்ந்த அதே சமூகக் கட்டமைப்பிற்குள் இருந்துதான் புலிகளும் தோற்றம் பெற்றனர். 2) உலக போராட்ட வரலாறுகளில் தவறு விடப்படாத, தூய்மையான போராட்டங்கள் என்று ஒன்றையும் காட்ட முடியாது. நோக்கம் தூய்மையானது என்கின்ற போது, போராளிகள் விடும் தவறுகளை மக்கள் மன்னிக்கிறார்கள். புலிகளின் தூய்மையான இலக்கு, அதி உச்ச தியாகங்கள் போன்ற காரணங்களுக்காகத்தான் மக்கள் அவர்களைப் போற்றுகிறார்கள்.
 10. 2 points
  இங்கே பலருக்கு கெளரவமான முறையில் கதைக்க பேசத் தெரியாது. ஏன் எத்தனையோ திரிகளில் வெட்டு கொத்து திரி பூட்டு என்று பிரச்சனைகள் வருகிறது. அரசியல் என்பது சாக்கடை.அதற்குள் பாவம் அந்தம்மாவும் குளிக்கவா வேண்டும். ரதியைப் போல வாடா பார்ப்போம் என்று இறங்க அவவுக்கு தெரியாது.
 11. 2 points
  கூத்தமைப்பு கூத்தாடிகள் எப்பதான் கட்சியோட கருத்தை சொல்லியிருக்கினம் , யார் எப்போ என்ன சொன்னாலும் அது அவிங்களோட தனிப்பட்ட கருத்துத்தான் ,2015 இல் தீர்வு என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகள் பயங்கரவாதிகள் என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகளுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றாலும் தனிப்பட்ட கருத்து, இந்த மொள்ளமாரித்தனத்திற்கு பதிலாக தெருவோரம் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு பிச்சை எடுக்கலாம்
 12. 1 point
  எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன். 5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது. முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்பிடப் போகிறார்கள் என்று கேட்டால் இது நாளை இரவுக்கு தான் பாணாக வரும் என்றார்கள். இன்று ஞாயிறு காலை உணவை முடித்து தொடங்கியவர் குழைத்து வைத்ததை எடுத்து நேரம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் குழைத்து கடைசியில் நீண்டநேரம் வைத்து அவனில்போட தயாரானார்.நாங்கள் பாண் செய்வது போலவே போடப் போகிறார் என்று பார்த்தால் போடமுதல் கூரிய கத்தியால் ஆங்காங்கே கீறி விட்டு ஒரு சட்டியில் வைத்து இன்னொரு சட்டியால் மூடி 450 F இல் 20 நிமிடம் மூடி வைத்து 20 நிமிடம் திறந்துவிட்டு இறக்கினார். முன்னர் இப்படியான பாண் சாப்பிடாதபடியால் நானும் மிகவும் ஆவலாக இருந்தேன்.ஏற்கனவே செய்து வைத்த பருப்பு ,சம்பல் ,வாழைப்பழத்துடன் சாப்பிட்டோம். கொஞ்சம் புளிப்பாக இருந்தது.சாதாரண பாண்போலவும் இருந்தது.அதன் சுவையே தனி சுகமாக இருந்தது.எல்லாம் நல்லபடியாக வந்ததால் அவருக்கும் மிகவும் சந்தோசம்.இந்த வகையான பாண் இதுவே முதல் தடவையாக செய்ததாக சொன்னார்.இரவு எல்லோரும் சந்தோசமாக சாப்பிட்டோம். அவர் செய்ததென்று யாரும் செய்ய முற்படாதீர்கள்.ரொம்பவும் சிரமம் பிடித்த வேலை.இதுவரை இந்த புளிப்பான பாண் (Sourdough)சாப்பிடாதவர்கள் தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். இது கருகிப்போய் விட்டது என்று எண்ணாதீர்கள்.இது முதலில் செய்தது. இது இரண்டாவதாக செய்தது. செய்முறை தேவையானவர்களுக்காக.
 13. 1 point
  விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதம் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த கடிதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 08.05.2020 அன்று ஒரு சிங்கள ஊடகத்திற்கு இதே போன்று கருத்து கூறியிருக்கின்றார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். நானும் அவருடைய கருத்தை எதிர்க்கின்றேன். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும். அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளர் பதவி அவரிடத்திலிருந்து வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும். இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை கூட்டும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/245767?ref=home-imp-parsely
 14. 1 point
  தேயிலையில் இருக்கும் Tannin என்னும் மூலப்பொருள் எமது சாப்பாட்டில் இருக்கும் புரதம் மற்றும் மாப்பொருட்கள் , அவற்றை சமிபாடடைய செய்யம் நொதியங்கள் இவற்றுடன் தாக்கமடைந்து உணவு செமிப்பதை குறைக்கும். இதனால் செமிக்க மிகவும் நேரம் எடுப்பதுடன் மிகவும் அசௌகரியமாகவும் இருக்கும். என்றபடியால் எந்த தேநீரும் சாப்பிட 2 மணித்தியாலத்துக்கு முன் அல்லது பின் தான் குடிக்க வேணும் ரதி
 15. 1 point
  நான் இந்த பானை சாப்பிட்டதேயில்லை ...ஒருக்கால் வேண்டி சாப்பிட்டு பார்க்கோணும் தூயா என்று ஒரு பெண் அவுசில் இருந்து முந்தி வந்தவ . அவவே நீங்கள் ?
 16. 1 point
 17. 1 point
  வணக்கம்! பார்வையிட்டது மட்டுமல்லாமல் கருத்தை பகிர்ந்தளித்தமைக்கும் நன்றி. இங்கு அந்த நபரை அஃறிணையாகவும் பார்க்கப்படவில்லை. உயர்திணையாகவும் பார்க்கப்படவில்லை. மாறாக இலங்கை எனும் நாட்டில் தமிழர் பிரதேசங்களில் உள்ள ஊர் மனைகளில் உள்ள பேச்சு வழக்கு தமிழாகவே பார்க்கப்படுகின்றது.
 18. 1 point
  நான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள். இப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் "மகாராணி" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.
 19. 1 point
  https://tamilsresist.com/home தயவு செய்து இந்த இணையத்தளத்தில் உங்கள் பெயரையும் பதிவு செய்து இன அழிப்பின் குறியீடாக விளக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து எம் எதிர்ப்பை உலகிற்கு காட்ட உதவுங்கள் நன்றி https://tamilsresist.com/home
 20. 1 point
 21. 1 point
  பொது வெளியில் உண்மையான பெயருடன் அரசியல் கதைத்தால் எப்படியிருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அக்கா இன்னுமெரு புனை பெயரில் வந்து நன்றாக அரசியல் கதைக்கலாம், அவாவுக்கு நிம்மதி
 22. 1 point
 23. 1 point
  நைட்டிங்கேல்: காலத்தைத் தாண்டிய ஒளி பள்ளிப் பாடப்புத்தகங்களின் வாயிலாக ‘கை விளக்கேந்திய காரிகை’ என்ற பெயரில் நமக்கு அறிமுகமானவரும், தாதியர்களுக்கு லட்சிய உருவமாக இருப்பவருமான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த நாள் இன்று. ஒரு பெருந்தொற்று காலத்தில், கைகள் கழுவுவது உள்ளிட்ட அடிப்படையான பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசும் இந்நாட்களில், ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவுகூர்வது இன்னமும் பொருத்தமானது. பொதுச் சுகாதாரத்தையும் சுத்தத்தையும் மேம்படுத்துவதன் மூலம், தொற்றுநோய்ப் பரவலைக் குறைக்க முடியும் என்பதைத் தனது செயல்பாடுகளின் வழியாக நிரூபித்துக் காட்டிய முதன்மையான நவீன தாதி அவர்தான். சுகாதாரமாக இருப்பதற்கும் நோய் குணமாவதற்கும் இடையிலான தொடர்புகள் அறியப்படவோ... சொன்னால் நம்பவோபடாத 1800-கள் அது. தாதிப் பணிக்கு வருவதற்கு முன்னர் கணிதத்தில் ஈடுபாடு மிக்க அவர், தொற்றுநோய்கள் பரவுவது, குணமாவது தொடர்பில் புள்ளியியலையும் விளக்கப்படங்களையும் பயன்படுத்திய முன்னோடி. ரஷ்யாவுக்கு எதிராக துருக்கியுடன் பிரிட்டனும் பிரான்ஸும் சேர்ந்து போரிட்ட கொடூரமான கிரீமியன் போர்தான் கணிதம் போதித்துவந்த நைட்டிங்கேலை மருத்துவ சேவை நோக்கி ஈர்த்தது. 1854-ல் துருக்கியில் உள்ள ராணுவ மருத்துவமனைகளில் ஆங்கிலேயப் படை வீரர்கள் சந்தித்த மோசமான சூழ்நிலையைப் பற்றி போர்ச் செயலரான சிட்னி ஹெர்பர்ட் ஒரு பத்திரிகை செய்தியைப் படித்து வேதனை அடைந்தார். அவர் தனது தோழி நைட்டிங்கேலை அழைத்தார். நைட்டிங்கேலின் தலைமையில் துருக்கிக்குச் சென்ற 38 மருத்துவத் தாதிகள், ராணுவ மருத்துவமனைகளில் இருந்த நிலையைப் பார்த்துத் திகிலடைந்துபோனார்கள். காயமடைந்த வீரர்கள் ஒருவரின் மூச்சு இன்னொருவருக்குப் படும்படி படுத்திருந்த அறைகள், அழுக்கும் கழிவுநீரும் ஓடும் தரை, எலிகள் ஓடும் தாழ்வாரம் என ராணுவ மருத்துவமனை நரகம்போல இருந்தது. நோயை விரட்டிய கணிதம் நைட்டிங்கேலின் கணிதத் திறன், ராணுவ மருத்துவமனையில் நோயோடு போராடிக்கொண்டிருந்த வீரர்களைக் காப்பாற்றுவதற்காகச் செயல்படத் தொடங்கியது. மரணங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் அவர் பட்டியலிட்டார். போர்க்களத்தில் அடைந்த காயங்களால் விளைந்த மரணங்களைவிடவும் மருத்துவமனைக்கு வந்த பின்னர் ஏற்பட்ட நோய்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அவரால் கணக்குகள் வழி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அரசுக்கும் நிரூபிக்க முடிந்தது. நைட்டிங்கேல் உருவாக்கிய போலார் விளக்கப்படத்தில், நீல வண்ணமிட்ட பகுதிகள் முன்கூட்டியே தடுக்கக்கூடிய வியாதிகளைக் காட்டக்கூடியதாகவும், சிவப்பு வண்ணம் போரில் பட்ட காயங்களால் ஏற்பட்ட மரணங்களையும், கருப்பு வண்ணம் பிற காரணங்களால் ஏற்பட்ட மரணங்களையும் காட்டுவதாகவும் இருந்தன. ராணுவ நிர்வாகத்திடம் போலார் வரைபடத்தைக் காட்டிப் பேசி, மருத்துவமனைகளின் சுகாதார நிலையை மேம்படுத்தியதுதான் நைட்டிங்கேலின் முதல் வெற்றிகரமான தலையீடு. மருத்துவமனைக்கு வந்த பிறகு போர் வீரர்களுக்கு வரும் நோய்களை, அவர் சுகாதாரத்தை மேம்படுத்திக் குறைத்ததன் வழியாக இறப்பு விகிதம் ஆண்டுக்கு 40%-லிருந்து வெறும் 2.2%-ஆகக் குறைந்தது. போலார் விளக்கப்படம் இன்றும் புள்ளியியல் கணக்கீட்டில் நைட்டிங்கேலின் பெயராலேயே அறியப்படுகிறது. புள்ளியியல் தரவுகள் கிரீமியன் போருக்குப் பின்னர், மருத்துவரீதியான திட்டங்களை இடுவதற்குப் புள்ளியியல்ரீதியான தரவுகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தார் நைட்டிங்கேல். லண்டனில் உள்ள ‘இன்டர்நேஷனல் ஸ்டேடிஸ்டிக் காங்கிரஸ்’ மூலமாக அனைத்து மருத்துவமனைகளின் புள்ளிவிவரங்களையும் ஒரேமாதிரியாகச் சேகரிக்கும் திட்டத்தை முன்வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஒரு நோயாளியின் விவரங்களை மருத்துவமனை அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் தேச அடிப்படையிலும் ஒப்பிடும் சூழல் ஏற்பட்டது. 1857-ல் நைட்டிங்கேலை ப்ரூசெல்லோசிஸ் நோய் தாக்கியது. பாக்டீரிய நோய்த்தொற்று கொண்ட இறைச்சி, பால் பொருட்களை உண்பதன் வாயிலாக ஏற்படும் நோய் அது. காய்ச்சல், சோர்வு, உடல் வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இந்த நோய்த்தொற்று நைட்டிங்கேலுக்கு கிரீமியன் போரில் காயமடைந்த வீரர்களுக்குச் சேவையாற்றிய காலகட்டத்தில் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. படுத்த படுக்கையாக இருந்தும் வீட்டிலிருந்தபடி பணிகளைத் தொடர்ந்தார். இங்கிலாந்து அரசின் சுகாதாரச் சீர்திருத்தத்தை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான நூல்கள், அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்களைத் தனது வாழ்நாள் முழுவதும் எழுதி வெளியிட்டார். இங்கிலாந்தில் தாதியருக்கான புகழ்பெற்ற கல்லூரிகள் அவரது முயற்சியின் வாயிலாகவே தொடங்கப்பட்டன. சுகாதாரம் தொடர்பான உணர்வு பொதுமக்களிடம் பரவலாவதை நைட்டிங்கேல் தனது வாழ்நாளிலேயே பார்த்தார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பெட்பேன் எனப்படும் கழிகலங்கள் வழங்கத் தொடங்கியிருந்தனர். காற்றோட்டமான இடமும், சுத்தமான போர்வைகளும், உணவுக் கிண்ணங்களும் நோயாளிகளுக்கு அவசியம் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. நைட்டிங்கேலின் கவனம் இந்தியாவில் உள்ள படை வீரர்களின் ஆரோக்கியம் சார்ந்தும் திரும்பியது. இங்கிலாந்தின் ஆதிக்கம் இருந்த எல்லா நாடுகளிலும் உள்ள ராணுவக் குடியிருப்புகளில் சுகாதாரம், சுத்தமான நீர் வழங்கப்படுவதற்கு அவர் காரணமாக இருந்தார். பெருந்தொற்று அறிவியல் நைட்டிங்கேலின் புள்ளியியல்ரீதியான பகுப்பாய்வு, பெருந்தொற்று அறிவியலில் மிக முக்கியமான கணக்கீடாக விளங்குகிறது. இப்போது கரோனா பரவலைக் கணக்கிடக்கூட அவர் உருவாக்கிய கணக்கு மாதிரிகள் உதவுகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, வீழ்ச்சி அடைவது, எதிர்கால நிலைமை பற்றிக் கணிப்பது என எல்லாவற்றுக்கும் இந்தக் கணக்கீடு உதவுகிறது. சுகாதாரப் பணியாளர்கள், அரசியலர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை பெருந்தொற்றுகள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குக் கணிதத்தைத்தான் முதன்மையான கருவியாகப் பெருந்தொற்றியலாளர்கள் பார்க்கின்றனர். கைவிளக்கேந்திய காரிகையின் 200-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் அவர் தனது கணிதத்தின் மூலம் பரப்பிய ஒளிக்காக அவருக்கு நன்றி சொல்வோம். https://www.hindutamil.in/news/opinion/columns/554028-florence-nightingale-2.html
 24. 1 point
 25. 1 point
  பகிடி என்னவென்றால் இவர்கள் சாப்பாடு போட்டு வளர்த்த பற்றீரியா மீதமாக இருந்தது.இன்று விடிய இதுக்கு என்ன அலுவலைக் கொடுக்கலாம் என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தேன். முதல்நாள் இது செய்யும் போதே நீங்கள் தோசைக்கு மா குழைத்து வைப்பது போலவே இதுகும் என்று சொல்லி சொல்லி செய்தார்கள். அந்த ஞாபகம் வரவே வெள்ளை அரிசிமா ஏற்கனவே இருந்தது.சரி அப்பம் செய்து பார்ப்போம் என்று இரண்டு கப் மாவுடன் இருந்த பற்றீரியா மாவையும் போட்டு குழைத்து வைத்தேன். இப்போது பிற்பகல் எடுத்து தேங்காய் பாலும் விட்டு அடித்து பாலப்பம் செய்து பார்த்தேன். எல்லோரும் புழுகி புழுகி சாப்பிட்டார்கள்.
 26. 1 point
  1) நுணலையும் தன் வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் மிகச் சிறந்த உதாரணம். 2) உண்மையில் Dr. நில்மினி தனது கருத்துக்களைத் துணிவுடன் இங்கே குறிப்பிட்டு கலந்துரையாட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பெரிய ஆழுமை ஒன்றை சமயல் குறிப்புடன் நிற்பதென்பது இந்த யாழ் இணையத்திற்கு வெட்கக் கேடானது. அதே தருணம் Dr. நில்மினியும் கொஞ்சம் காரசாரமான விவாதங்களைக் கண்டு ஒதுங்குவது அவரது புலமைத் தேர்ச்சிக்கு அழகு சேர்க்காது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
 27. 1 point
  ஓமோம்... சுமே அக்காவோட பெரியம்மாவோ தெரியவில்லை. புளியை போட்டு பொரிச்சா.... அப்படி தான் நினைக்க தோன்றுது.
 28. 1 point
  சடாரென்று பிள்ளை எண்டு தொடங்கீட்டாரே... அதுதான் ராஜதந்திரம்... அண்ணை நாய் கட்டி நிக்குதோ?என்று கேக்கிற மாதிரி தான். எதுக்கும் ஆயத்தமாக இருக்கோணுமல்ல.
 29. 1 point
  தாராவிக்குள் கரோனாவின் தாண்டவம் ஜோதி ஷெலார்/அஜீத் மகலே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதியன்று தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், இந்தியாவின் பெரும்பாலான சாலைகள் காலியாகவே காணப்படுகின்றன. ஆனால், மும்பையின் தாராவியிலோ நிலைமை முற்றிலும் தலைகீழ். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியும், உலகிலேயே மக்கள் அடர்த்தி மிக அதிக அளவில் உள்ள இடமுமான தாராவி, இப்போது கட்டுப்பாட்டு மண்டலமாக விளங்குகிறது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3.6 லட்சம் மக்கள் வசிக்கும் இடம் இது. ஒடுங்கலான சந்துகள், தீப்பெட்டி போல ஒட்டி அடுக்கிய அறைகளில் வாழும் மக்கள் இருக்கும் இந்தப் பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் மேலும் நெருக்கடி சூழ்ந்த இடமாக மாறியுள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்க அத்தியாவசியத் தேவையான சமூக இடைவெளி என்பது இங்கே சாத்தியமேயில்லாத நிலை. ஏப்ரல் 1-ம் தேதி, கோவிட் -10 வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்று அறியப்பட்ட முதல் நபர் 56 வயதான ஆடைத் தொழிலக உரிமையாளர். அவருக்கு லேசான இருமலும் காய்ச்சலும் இருந்தது. உள்ளூர் மருத்துவர் ஒருவரைப் பார்த்து மருந்தெடுத்துக் கொண்டபின்னரும் அறிகுறிகள் தீவிரமானதால், சியான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சோதனை எடுக்கப்பட்டதில் அவருக்கு கோவிட்- 19 நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடிமைப் பணி அதிகாரிகள் அவர் தொடர்பு கொண்ட நபர்களை ஆராயத் தொடங்கும் வேலைகளை ஆரம்பித்தபோதே கரோனா அவரைப் பலிகொண்டது. இதைத் தொடர்ந்து அவர் இருந்த தொகுப்பு வீட்டுக் குடியிருப்பு மொத்தமும் சீல் வைக்கப்பட்டது. தாராவியின் வைபவ் அடுக்ககத்தில் குடியிருக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்தான் கரோனா பாதித்த அடுத்த நபர். கரோனா தொற்றுக்குள்ளான சுகாதாரப் பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தவர், தன்னிடம் கரோனா அறிகுறிகள் தென்படுவதை உணர்ந்ததும் அவரே தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள எஸ்.எல். ரஹேஜா மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரது தொடர்புகள் அனைவரும் அறியப்பட்டு சோதனைகளும் செய்யப்பட்டனர். மருத்துவரின் மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதியானது. அதேவேளையில், டாக்டர் பலிகா நகர் வீட்டு சொசைட்டியில் உள்ள 30 வயதுப் பெண்ணுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தாராவியில் முதன்முதலாக கரோனா தொற்றிய ஆடைத் தொழிலக உரிமையாளர் வீட்டுப் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இவர். இவையெல்லாம் உதிரியான தொற்றுகள். ஏப்ரல் 4-ம் தேதி, தாராவின் குடிசைப் பகுதிக்குள் இருக்கும் முகுந்த் நகருக்குள் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு அறைகளே கொண்ட வீட்டில் 11 குடும்ப உறுப்பினர்களுடன் இருநூறு சதுர அடி கொண்ட பரப்பளவில் வாழ்ந்து வந்த 48 வயது நபர் அவர். நெஞ்சு வலியும், மூச்சுத் திணறலும் இருந்து சியான் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டு கஸ்தூரி பாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பத்தினர் முழுவதும் தாராவியிலேயே ஒரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏப்ரல் 13-ம் தேதி தந்தை இறந்துபோனது அவரது மகனுக்குத் தெரிவிக்கப்பட்டது. குடும்ப நண்பர் ஒருவர் உடன் இருக்க குடும்பத்தினர் யாருமே இல்லாமல் அரசு சுகாதாரத் துறையே அவரது இறுதிச் சடங்கை நிறைவேற்றியது. 14 நாட்கள் தனிமை வாசத்துக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், இடைவெளி விட்டு வீட்டில் இருக்க வேண்டுமென்று கூறப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சின்ன இடத்தில் எப்படி இடைவெளியைப் பராமரிக்க வேண்டுமென்று கேட்கிறார் இறந்தவரின் மகன். சின்னச் சின்ன சந்துகள் கொண்ட இடம் அது. கழிப்பறைக்குச் செல்வதாக இருந்தாலும் ஒருவர் தோளில் ஒருவர் உரசாமல் செல்லவே முடியாத இடம் இது. பொதுக் கழிப்பறைகள்தான் பிரச்சினை மும்பையின் புகழ்பெற்ற குடிசைப் பகுதியான தாராவி, மீனவர்கள் பூர்விகமாக இருந்த சதுப்புநிலப் பகுதியாகும். சின்னச் சின்ன தொழிற்சாலைகள், தொழிலகங்கள் வளர்ந்து ஒரு காலகட்டத்தில் அடர்த்தியான குடிசைப் பகுதியாக மாறி லட்சக்கணக்கான மக்கள் இருக்கும் இடமாக இப்போது உள்ளது. 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இரண்டரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில் 6. 53 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஜி- நார்த் வார்டின் துணை ஆணையரான கிரண் திகாவ்கர், கணக்கில் வராமல் மேலும் இரண்டரை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கே இருக்கலாம் என்கிறார். “இங்கேயிருக்கும் பெரிய பிரச்சினை பொதுக் கழிப்பறைகள்தான். பெரும்பாலான வீடுகள் பத்துக்கு பத்து அடியில் உள்ளவை. எட்டு முதல் பத்து பேர் அத்தனை சிறிய அறைகளில் வாழ்வதை சகஜமாகப் பார்க்க முடியும். இத்தனை நெருக்கமாக மக்கள் வாழும் பகுதியில் வைரஸை எப்படிக் கட்டுப்படுத்த முடியும். அத்துடன் இவ்வளவு நெருக்கடி உள்ள இடத்தில் மக்களைத் தடுத்து வைப்பதும் சவாலானது. நாங்கள் தினசரி 19 ஆயிரம் மதிய உணவு பார்சல்களையும் 19 ஆயிரம் இரவு உணவு பார்சல்களையும் விநியோகிக்கிறோம். ஆனால், உணவு விநியோகிக்கும்போது கூட்டம் கூடிவிடுகிறது” என்று வருத்தத்துடன் பேசுகிறார். தாராவி குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவரது நெருக்கமான தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து தனிமைப்படுத்தி வைப்பதாக திகாவ்கர் சொல்கிறார். தாராவியில் மட்டும் 3 ஆயிரம் தனிமைப் படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவர், அவற்றை பள்ளி, திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள், பூங்கா, விருந்தினர் இல்லங்களில் உருவாக்கியிருக்கிறார். தாராவியில் 275 நகராட்சி கழிப்பறைக் கட்டிடங்கள், 125 மாநில வீட்டுவசதி மற்றும் பிராந்திய மேம்பாட்டுத் துறைக் கழிப்பறைக் கட்டிடங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டிடத்திலும் 10 கழிப்பறைகள் உள்ளன. தாராவியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு பொதுக் கழிப்பறைகளே அன்றாடக் கடன்களைக் கழிக்க உதவியாக உள்ளன. ஒவ்வொரு கழிப்பறையிலும் சானிடைசர் திரவங்கள் கிடைக்கும் வசதியைச் செய்து, ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை கழிப்பறைகளைக் கழுவும் நடவடிக்கைகளும் இங்கே எடுக்கப்பட்டு வருகின்றன. துண்டிக்கப்பட்ட தாராவி சியான் புறநகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளலிருந்து தாராவி குடிசைய்ப பகுதியை அதன் கிழக்கு முனையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பிரிக்கிறது. புறநகர் பகுதியையும் குடிசைப் பகுதியையும் இணைப்பது ஒரு பாலம்தான். அந்தப் பாலம் கரோனா தொற்றையொட்டி இப்போது மூடப்பட்டுள்ளது. டோபி காட் பாலம் என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் தான் தாராவி மக்களின் அடிப்படைத் தேவைகளான மருத்துவ வசதிகளைப் பெறுவற்கான ஒரே இணைப்பு. வெறுமே ஐந்து நிமிட நடையில் பாலத்தைக் கடந்தால் சென்றுவிடக் கூடிய பகுதி, பாலம் துண்டிக்கப்பட்டிருப்பதால் ஒரு ஆம்புலன்ஸ் அல்லது வாகனம் வருவதற்காக மக்கள் காத்திருக்கு வேண்டிய நிலையில் உள்ளது. தாராவி குடிசைப் பகுதியில் கரோனா தொற்றுகள் மேலதிகமாக ஏற்பட்ட நிலையில், பாலத்துக்கு அருகில் இருந்த மருத்துவர்களும் தங்கள் கிளினிக்குகளை அச்சத்தால் மூடிவிட்டனர். “தாராவியிலிருந்து வரும் நோயாளிகளை மருத்துவமனைகள் திரும்ப அனுப்புகின்றன. சியான் புறநகர் பகுதி வீடுகளில் வேலைக்குச் செல்லும் தாராவியைச் சேர்ந்த பணிப்பெண்களை வரவேண்டாம் என்று வீட்டுக்காரர்கள் சொல்லிவிட்டனர்” என்கிறார் தாராவியில் வசிக்கும் குடியிருப்பு வாசி. சென்ற வெள்ளிக்கிழமை வரை தாராவி பகுதியில் மட்டும் வீடுவீடாக நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் இதுவரை 90 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவும் பரிசோதிக்கப்படுகிறது. ஏழாயிரம் முதியவர்கள் பரிசோதிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்கள் 250 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சென்ற வெள்ளிக்கிழமை வரை மும்பையில் கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட 12 ஆயிரத்து 142 பேரில் 808 பேர் தாராவியைச் சேர்ந்தவர்கள். மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போன 462 பேரில் தாராவியைச் சேர்ந்தவர்கள் 26 பேர். சுருக்கப்பட்ட வடிவம் தமிழில் : ஷங்கர் 'தி இந்து' ஆங்கிலம் https://www.hindutamil.in/news/opinion/columns/553876-corona-spread-in-dharavi-4.html
 30. 1 point
  ஆமாம் சரியான வாய்ப்பு, அப்படியே சீனர்களையும் கொண்டுவந்து வேலைக்கு அமர்த்திவிடுங்கள், சீன தேசம்
 31. 1 point
  இருக்காது. இது ஒரு கபட நாடகமாக இருக்கும். இது தமிழரசுக்கட்சியின் கருத்து இல்லை என்று மந்த அரசியவாதி மாவை சொல்லவில்லையே.
 32. 1 point
  ஒரு பிட்ஸா செய்திருந்தார்கள் வீட்டில்......சிலசமயம் இப்படி எதிர்பாராமல் விருந்துகள் கிடைப்பதுண்டு....!
 33. 1 point
  நான் டெய்லி லைவ்விலை பாத்து அரோகரா சொல்லிட்டுத்தான் வேலைக்கு போறனான்.
 34. 1 point
  வழமையான விடுப்புக்களோடை ஒரு தண்ணியடிக்கதைக்கு நன்றி புத்தன்.அது சரி தண்ணிக்கு என்ன ரேஸ்ற் எடுக்கிறனீங்கள்?
 35. 1 point
  ஒரு கல்லில் பல மாங்காய்கள்.இன்னும் பல விடையங்களை தொட்டு கிறுக்கவும்.
 36. 1 point
  சுவியர், எதிர்காலம் இல்லை. பழைய காலத்திலேயே, எனக்கு தெரிந்து 12 வருசமா நடக்குதே. எந்த கோவிலில, எந்த சாமிக்கு எண்டு செலக்ட் பண்ணி, என்ன பூசை வேணும் எண்டு, காசையும், பெயர் நட்ஷத்திரம் கொடுத்தால், பூசை செய்து, பிரசாதம் போஸ்டில் வருகிறது. இன்னும் கொஞ்சம் கூட காசு கொடுத்ததால், அய்யர் பூசை பண்ணுவதை வீடியோ பிடித்து அனுப்புகிறார்கள்.
 37. 1 point
  எதிர்காலத்தில் பூசைகள் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இந்தக் கதை ஒரு முன்னோட்டம்தான்....பூத்தட்டை கொம்யூட்டருக்கு முன்னாள் வைக்கலாம், ஐயர் பிரசாதத்தை எப்படித் தருவார்.....!
 38. 1 point
 39. 1 point
  உந்த பாண் இஞ்சை ஜேர்மன் கடைகளிலையும் கிடக்கு......நான் சில நேரம் வாங்கி சாப்பிடறனான். எனக்கு பெரிசாய் பிடிக்காது.
 40. 1 point
  sourdough செய்முறைகளை பற்றி முன்பு பார்த்துள்ளேன், மிகவும் மினக்கட்ட வேலை. இருந்தாலும் உங்கள் மருமகனுக்கு நிறைய பொறுமை உள்ளது
 41. 1 point
  ஈழபிரியன் நல்லா மினக்கிட்டிருக்கின்றார் உங்கள் மருமகன். இங்கு கடைகிளில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன், நல்ல சுவை
 42. 1 point
  கொழும்பில் இருந்து மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (சனிக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். கல்கிசை பொலிஸ் வலயத்தில் 10 பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு மேல் மாகாணத்தில் தற்காலிக தங்குமிடங்கள், வாடகை அறைகளில் தங்கியிருந்தவர்களே, 4 ஆவது கட்டமாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் இரத்மலானை புகையிரத மைதானத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு அங்கிருந்து உரிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். ஏற்கனவே கடந்த 5 ஆம் திகதி நுகேகொடை பொலிஸ் வலயத்தில் 600 பேர், கடந்த 7 ஆம் திகதியும் 1200 பேர் மற்றும் களனி பொலிஸ் பிரிவில் இருந்த 370 பேர் கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் மாகாண ஆளுநர், மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலகவின் திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழி நடாத்தலில், இந்நடவடிக்கைகள்ன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://athavannews.com/கொழும்பில்-இருந்து-மேலும/
 43. 1 point
  போர்க்குற்றவாளியும் படுகொலைகாரனுமாகிய பயங்கரவாதி சவேந்திர சில்வா பொதுமக்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்பது சாத்தன்கள் வேதமோதுவதற்கு ஒப்பானது.
 44. 1 point
  மக்களை ஏமாற்றும் காலக்கெடுக்காலாக வருடப்பிறப்புகளும், தீபாவளிகளும், பொங்கல்களும் போய் இப்போது உரிய நேரம் பற்றி சாத்தான் சம்மந்தரின் புதிய உளறல் தொடங்கியுள்ளது.
 45. 1 point
  ஆயுதம் ஏந்தினால் அவர்கள் புளட், டெலோ போன்று தனது கைக்கூலித் தொழிலுக்கு உடந்தையாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்கிறார். அற்பனுக்கு பின்னால் சில அற்பர்கள் சேர்ந்தால் நடு நிசியிலும் குடைபிடிப்பான் என்பது புதுமொழி.
 46. 1 point
  போராட்டம் என்பது தொடஎச்சியான செயற்பாடு. இலக்கை அடையும்வரை போராட்ட முறைகள் மாறலாம், மாற்றமடையும். அதனைத் தனியே பிரித்து தந்தை செல்வா காலத்துப் போராட்டம், பிரபாகரன் காலத்துப் போராட்டம் என்று பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்துப் பார்த்தால் சாத்வீகப் போராட்டத்திலும் எந்த ஒன்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை பிரபாகரன் காலத்திலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும். போராட்டமும் முடிந்துபோயிற்று என்றும் பொருள்படும் ஆகவே 1) ஆயுதப் போராட்டத்தால் எதனைப் பெற்றுக் கொண்டோம் என்பது பொருளற்ற கேள்வி. 2) போராடியவர்கள் வடக்கு - கிழக்கில் குடியிருந்த தமிழர். போராட்டத்தால் சாதித்தோமா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறமுடியுமே தவிர சுமந்திரனல்ல. நீங்கள் கேட்கலாம் சுமந்திரன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்தானே. ஏன் அவர் கதைக்க முடியாதா என்று ? உண்மை. அவர் தெரிவு செய்யப்பட்ட (எந்த முறையிலென்றாலும்) பிரதிநிதிதான். ஆனால் இன்றுவரை அவர் வடக்கு-கிழக்கு மக்களின் மனநிலை அறிந்து அதனைப் பிரதிபலித்திருந்தாரென்றால் நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அவ்வாறு பிரதிபலித்ததாக எனக்கு நினைவிலில்லை. எனவே எங்கள் போராட்டத்தை தீர்ப்பிடுவதற்கான தகுதி அவருக்கிலை என்பது என் கருத்து. அவர் இலங்கைப் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்தவர் என்கின்ற வகையில் அவர் பிரிவினையை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆகக் குறைந்த அளவிலாவது, மனச்சாட்சி உள்ள மனிதராக, அவர் சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம். அந்தப் பக்குவம் அவருக்கில்லையெனில் அவரால் எங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை.
 47. 1 point
  ஊரில் பார்ப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். ஏன் பார்ப்பார்கள் என்று எனக்கு தெரியாது. இது பற்றி கதைப்பதே நமக்கு அலர்ஜி
 48. 1 point
  தமிழ் சிறி, கதிரைக்குப் பின்னாலை.... மண்வெட்டிகள் குழிபறிக்க வருவதும் தெரிகிறது.
 49. 1 point
 50. 1 point
  ஆழ்ந்த அனுதாபங்கள் . நிறைய கற்றவர் என்னும் பெருமை இல்லாதவர் . ஒரு சிறந்த வாசிக சாலையை தன்னிடத்தே கொண்டவர் . அள்ளக்குறையாத அறிவு கொண்ட இனிய மனிதர் அதிர்ந்துபேசாதவர். எளிமையானவர். காவலூரில் இவரை தெரியாதவர் இல்லை. அற்புதமான மனிதர்