• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Content Count

      9,671


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      30,142


  3. nedukkalapoovan

    nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      30,087


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      18,306



Popular Content

Showing content with the highest reputation on புதன் 13 மே 2020 in all areas

  1. 3 points
  2. 2 points
    ஒரே கேள்விதான். திருப்பதி இதுவரையில் யார் கண்ணுக்கும் தெரிவதில்லையே.. அது ஏன்?! இந்த ஜோ வடநாட்டுகாரிதானே.. 3000 கோடிகளுக்கு பட்டேல் சிலையை குஜராத்தில் திறந்து வைத்தார்களே.. அதைத்தானே முதலில் குறிப்பிட்டிருக்க வேண்டும்?! மேலும் தஞ்சைப் பெரிய கோயில் யுனெஸ்கோவினால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு வரலாற்று சின்னம். அது இவக்கு கண்ணை உறுத்துது. ஊசி போன இடம் தெரியுமாம்.. ஆனால் உலக்கை போன இடம் தெரியாதாம்..
  3. 2 points
    மனிதர்கள் அடங்கிய பாலூட்டிகளுக்கு அடுத்த நிலையில் உள்ளவை.. பறவைகள். அவற்றிற்கு நிறப்பார்வை உண்டு. மேலும் சில பறவைகளுக்கு இராக்காலப் பார்வை உண்டு.. அதாவது அவை செந்நிறக் கீழ்க்கதிர்களை (IR) காணும் திறன் கொண்டவை. இன்னும் சில பறவைகளால்.. ஊதாகடந்த கதிர்களையும் (UV) காண முடியும். அதாவது எம்மை விட அவற்றிற்கு நிறப்பார்வை உள்ளடங்க பார்வைப் புலன் அதிகம்.
  4. 2 points
  5. 1 point
  6. 1 point
    கனகரிடம் கிளாசை கொடுத்து " அண்ணே எடுங்கோவன் என்றேன்", "லட்சுக்கு சொல்லாமல் வந்திட்டேன் இரு போனில் சொல்லிபோட்டு வாரேன்" ,கனகர் அந்த காலத்தில காதலிச்சு கலியாணம் செய்த மனிதன் இன்றும் அதே காதலுடன் தான் இருக்கிறார்.மனைவியின் விசயலட்சுமி என்ற பெயரை சுருக்கி லட்சு என்று அழைக்கிறார் இன்றுவரை என்றால் பாருங்கோவன் ஐபோனை எடுத்தார் போன் ஸ்கிர்னில் லட்சுவின் இளமை போட்டோவை ஒர் சின்ன தட்டு தட்டினார் "ஹலோ " "லட்சுயம்மா நான் சுதா வீட்டை நிற்கிறேன் ,கொஞ்சம் லெட்டாத்தான் வருவன் தேடாதையும்" போனை கையால் பொத்திக்கொண்டு "லட்சுக்கு பொர் அடிக்குதாம் என்ன செய்ய" என்றார் . அவவையும் வரச்சொல்லுங்கோவன் என்றேன். "நான் சொன்னா வரமாட்டா ,சுதாவிட்ட சொல்லு கூப்பிடசொல்லி" "சுதா!! மாமியை வரச்சொல்லி சொல்லும் மாமா தேடுகிறார்" "மாமா தேடவில்லை உங்களுக்கு தண்ணியடிக்க பாட்னர் அதுக்கு எங்கன்ட மாமாவை பயன்படுத்த்றீயள் என்ன" என செல்லமா அதட்டியபடி மாமாவின் கையிலிருந்த போனை வாங்கி "ஹலோ மாமி புட்டு அவிக்கிறேன் வீட்டை வாங்கோ நான் உங்களை கூப்பிட இருந்தனான் அதுக்குள் மாமா கொல் எடுத்திட்டார் ,வெளிகிடுங்கோ நான் வந்து பிக்கப் பண்ணுகிறேன்" மாமி வாரவாம் என்று சொல்லியபடி மாமாவிடம் போனை கொடுத்து விட்டு ... "மாமி வாரா இரண்டு பேரும் பார்த்து பாவியுங்கோ" என்று கூறியபடி காரடிக்கு சென்றாள் சுதா. "உவள் வந்து கிளாஸ் கணக்கு கேட்க‌ முதல் இரண்டு பெக் அடிச்சு போட வேண்டும்" போதலை திறந்து தனது இஸ்டத்திற்கு அருந்த தொடங்கினார். "டேய் நீ உந்த பன்டமிக்கை பற்றி என்ன நினைக்கிறாய்" என்னை டேய் என்று அழைக்க தொடங்கிற்றார் என்றால் மாமா அடுத்து உலக நடப்பு தான் கதைப்பார் அதுதான் அவருடைய வழமை. "உவன் அமெரிக்கன் தான் உந்த வைரஸை பரப்பி போட்டு இப்ப சீனாக்காரனை பிழை சொல்லுறான்" " ஏன் அப்படி சொல்லுறீயள்" வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்டவுடன் "வந்திட்டாளவையள் போல, இந்த கிளாஸுக்குள் கொஞ்சத்தை ஊற்றிபோட்டு போத்தலை ஆங்கால கொண்டுபோய் வை" அவர் சொன்னமாதிரி செய்து போட்டு .. ""அண்ணே அப்ப நீங்கள் சொல்லுறீயள் அமெரிக்கன் தான் செய்திருக்கிறான் எண்டு ,நான் நினைக்கிறேன் உவங்கள் சப்பட்டைகள்தான் செய்திருப்பாங்கள்" "இஞ்ச உந்த பட்ட பெயர் சொல்லி ஆட்களை விழிக்கிறதை நிறுத்து உது எல்லாம முதலாளித்துவ சிந்தனையுள்ள உன்னை போல ஆட்களுக்கு கை வந்த கலை" "சரி அண்ணே மன்னியுங்கோ, ஏன் அமெரிக்கன் தன்ட மக்களை கொல்லப்போறான்" "அது முதலாளித்துவ சிந்தனை தான் ,சீனா வல்லரசாக மாறப்போகுது என்ற பயத்தில தன்னட மக்களை கொல்கின்றான் அத்தோட உந்த கொரானாவுக்கு வக்சின் என்று மருந்தை கண்டுபிடிச்சு நல்ல வியாபாரம் செய்யபோறாங்கள்..." "அண்ணே எதற்கு எடுத்தாலும் சும்மா முதலாளித்துவத்தையும் அமெரிக்காவையும் குற்றம் சாட்டாமல் உங்கன்ட மாவோ சிந்தனையையும் மீள்பரிசீலனை செய்யுங்கோ" "டேய், டேய் நீ ஒரு முதலாளித்துவ அருவருடி உன்னோட எங்கன்ட புனித தாலிவர் மாவோவின் சிந்தனையை பற்றி கதைக்கிறது வேஸ்ட்" "சரி அண்ணே ,உங்களுக்கு தெரியுமோ ஜெ.வி.பி காலத்தில ஒரு கதை அடிபட்டது ஜெ.வி.பி ஆட்சி அமைத்தால் வயோதிபர்களை கொலை செய்துவிடுவார்கள் எண்டும் அதற்கு ரோகணா விஜயவீர விடுதலையான பின்பு ...,எனது பெற்றோர்களை நான் கொல்வேனா என மறுப்பு தெரிவித்ததும்" "இப்ப ஏன் அதை இதுக்குள்ள கொண்டுவாராய்...." "இல்லை இப்ப கொரானாவில் இறந்தவர்களில் 90% வயோதிபர்கள் தானே மாவோ சிந்தனையின் ஒரு வடிவமோ" "டேய் டேய்" மாமாவின் குரல் கொஞ்சம் உயர தொடங்கியது "என்ன சத்தம் அங்க‌ ,சாப்பாடு ரெடி வாங்கோ இரண்டு பேரும்" மாமியின் குரல் கேட்டவுடன் மனுசன் பெட்டி பாம்பாகிவிட்டார். இவரின்ட சத்தம் வீட்டுக்குள்ள தான் போல எண்ணிகொண்டிருக்கும் பொழுது "இஞ்சயப்பா மாமாவையும் கூட்டி க்கொண்டு வாங்கோ சாப்பிட இனி காணும்" உடனே கையிலிருந்த கிளாசை மேசையில் வைத்து விட்டு நானும் மாமாவை பின் தொடர்ந்தேன். மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது.மாமி சாப்பிடுவதற்காக கையை கழுவிக்கொண்டிருந்தார். "ஹலோ மாமி" என்றேன் எனது மனைவி என்னை பார்த்து முழுசினார்,வழ‌மையாக மாமியை அக்கா என அழைப்பேன் ,என்னை விடமூன்று வயது தான் அதிகம் ..மனைவிக்கு தெரியும் நான் உறவு சொல்லி அழைக்க தொடங்கி விட்டேன் என்றால் பாவனையின் எல்லைக்கு வந்திட்டார் என நினைத்து கிளாஸ் போத்தல் எல்லாம் மாயமாக மறைய தொடங்கிவிடும் அதுவும் அவர்களது உறவுகள் இருந்தார்கள் என்றால் எனது பாவனைக்கு பல வித தடைகள் போடப்படும். " "ஹலோ மாமி என்ன முதுகில புத்தர் இருக்கிறார் ,கவனம் சிறிலங்காவுக்கு போட்டுக்கொண்டு போய்விடாதையுங்கோ " "ஒன்லைனில ஒடர் கொடுத்து இந்தியாவிலிருந்து எடுப்பிச்சனான் அவன்கள் இப்படி தைச்சு போட்டாங்கள்" "ஏன்டா சிறிலங்காவுக்கு போட்டுகொண்டு போக ஏலாது புத்தர் அவங்கன்ட கட‌வுள்தானே" என மாமா கேட்டார் "கடவுளை கோவிலில்தான் வைக்கவேணுமாம் சீலையிலயும் ,பிளவுஸிலயும் வைக்கூடாதாம்" "இஞ்சயப்பா மாமி உடுத்திறக்கிற சீலையும் ஒன்லைனில் தான் ஒர்டர் பண்ணி எடுத்தவ வடிவா இருக்கு என்ன?" "நீரும் ஒவ்வோரு மாதமும் எடுக்கிறனீர்தானே" "ஒமப்பா ஆனால் மாமியின்ட கடையில் விதம்விதமா கன‌ செலக்சன் இருக்கு" "நாளைக்கு ஒடர் பண்ணி எடும்" "ஏன் நான் நாளைக்கு மட்டும் வெயிட் பண்ண வேணும் இப்பவே ஒன்லைனில போக வேண்டியான் மாமியும் நிற்கின்றா சூஸ் பண்ண இஸியாக இருக்கும்" மேசையில் சாப்பிட்டபடியே கதைத்துகொண்டிருந்தோம் . "என்ன மாமி இன்றைக்கு ஸ்டைலா எங்கன்ட வீட்டை வெளிகிட்டுக்கொண்டுவந்திருக்கிறீயள்" "இன்றைக்கு பேத்தியின்ட பேர்த்டெ " "நீங்கள் போகவில்லையா ? இங்க நிற்கீறியள்" "பின்னேரம் ஸ்கைப்பில கெக் வெட்டினவையள் அதுக்கு வெளிக்கிட்டனான் அப்படியே இரவு வெஸ்புக்கில் முருகனையும் பார்ப்போம் என்று தான் இருந்தனான் அதுக்குள்ள இவர் இங்க கூப்பிட்டு போட்டார் இங்க இருந்து முருகனை பார்ப்போம்" "வெஸ்புக்கில் முருகனை பார்க்க இவ்வளவு அலங்காரம் தேவையே மாமி" "நீங்கள் ஏன் மாமியை போட்டு அறுக்கிறீயள்" "சீ சீ நான் அறுக்கவில்லை சும்மா கேட்டனான்" "கண்ணா முருகனை வெஸ்புக்கில் பார்க்க வெளிக்கிட தேவையில்லை ஆனால் முருகனுக்கு ஸூமில் பஜனை பாடவேணும் அது தான் வெளிகிட்ட படியே நிற்கின்றேன்" "ஏன் நீ எனக்கு முதலே சொல்லவில்லை இரு நானும் வெஸ்டியை சுற்றி போட்டு வாரன் ,கண்ணா வெஸ்டி ஒன்று எடுத்து தாடா" மாமா உற்சாக வெளிக்கிட ஆயத்தமானார்,மாமி தன்னுடைய காளிமுகத்தை காட்ட தொடங்கிவிட்டார். "நான் சொல்லவில்லையோ? நேற்று காலம்பிற கத்திகத்தி சொன்னான் பஜனை ஸூமில் செய்யப்போகினம் என்று நான் சொல்லுறதை கேட்கிறதில்லை பிறகு சொல்லுறது நான் சொல்லவில்லை என்று இந்த மனுசனுக்கு இதே வேலயா போச்சு" " கண்ணா நீ வெஸ்டியை எடு" " தண்ணியை அடிச்சு போட்டு சாமிக்கு பஜனை பாடப்போறீங்களோ?" "தண்ணி அடிச்சு போட்டு கோவிலுக்கு தான் போககூடாது சூமில் பஜனை பாடலாம் தானே என்ன கண்ணா?" "கண்ணா வேஸ்டியை கொடுக்காதே வயசு போக போக உந்த மனுசன் சொல்வழி கேட்கிதில்லை" "இரண்டும் பேரும் உங்கன்ட செல்ல சண்டக்குள்ள என்னை இழுக்காதையுங்கோ" "நான் பஜனை பாடஇல்லை நீங்களே பாடுங்கோ" என்று கதிரையை விட்டு வெகமாக எழுந்து போய் கொண்டுவந்திருந்த பூக்கள் நிரம்பிய தட்டை எடுத்து மாமாவிடம் கொடுத்து "இந்தாங்கோ முருகனை காட்டும் பொழுது இதை கொம்பூயுட்டருக்கு முன்னால‌ வையுங்கோ நான் வீட்டை போறன்" "லட்சு ,லட்சு கோபபடாதை நீ பஜனை பாடு நான் சும்மா சொன்னான்" ஒரு சில வினாடிகள் மெளனமாக இருந்த மாமி மீண்டும் சுதாகரித்துக் கொண்டு "கோவில்காரர் சூம் லிங் அனுப்பியிருக்கினமா என்று பார்" "இருங்கோ பார்த்து சொல்லுறன் " பார்த்துவிட்டு சொன்னாள் அனுப்பியிருக்கினம் இன்னும் பத்து நிமிசத்தில தொடங்கப்போயினம். "அடுத்த வெள்ளிக்கிழமை நீங்கள் பஜனை படுங்கோ நான் கோவில்காரரிடம் கதைச்சு வைக்கிறன் ஆனால் இவன் கண்ணனின்டவீட்டை வந்து கூத்தடிக்கிறதில்லை" சொல்லியபடியே மாமியும்,சுதாவும் கொம்பியூட்டர் மேசைக்கு போனார்கள். " என்ன மாமா மாமி இப்படிசொல்லுறா" "இந்த முப்பது வருசத்தில உப்படி எத்தனையை கண்டிட்டன்" "அது சரி அண்ணே உந்த ஒன்லைனில சாமி கூம்பிடுறதை பற்றி என்ன நினைக்கிறீயள்" "நான் கடவுளோட சேட்டை விடமாட்டேன்,நீ என்ன நினைக்கிறாய்" "இன்லைனில் கடவுளை வைக்க வேண்டிய சனம் ஒன்லைனில் வைச்சு கூத்தடிக்குதுகள்" "அதேன்ன இன்லைன்" "உள்ளக் கமலத்தில்"
  7. 1 point
    தமிழினப் படுகொலையின் மக்கள் அவலத்தை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி 2009, தமிழினப்படுகொலையின் போது மக்கள் உணவுக்காக பட்டதுன்பத்தை நினைவேந்தும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி திட்டம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் தொடக்கநாளான இன்று தமிழர் தாயகத்தில் தொடங்கிவைக்கப்பட்டதோடு, மரக்கன்றுகளும் வழங்கபட்டன. யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின் அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளும் வகையில் தமிழினப்படுகொலையின் குறியீடாக ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ அமைகின்றது. இந்நிலையில் தமிழர் தாயகத்தில் எதிர்கால எதிர்கால சந்ததியினருக்கும் இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் இளையோர் இயக்கத்தினால் தொடங்கி வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் கிழக்கு முள்ளிவாய்க்கால் மேற்கு வலைஞர் மடம்,அம்பலவன் பொக்கணை,மாத்தளன் ,புதுக்குடியிருப்பு முதலிய பல பிரதேசங்கள் உள்ளடங்களாக ஆயிரம் பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதோடு மரக்கறி நாற்றுக்களும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமல்லாது கிளிநொச்சி வவுனியா முதலிய மாவட்டங்களிலும் இன்றையதினம் ஆயிரம் பொதுமக்களுக்கான கஞ்சி உணவுப் பொதிகளை வழங்கும் செயற்திட்டம் சமநேரத்தில் முன் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஓரிரு நாட்களில் மன்னார்,யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை முதலிய மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மே18 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையினை தமிழீழத் தேசிய துக்க நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே12 முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது. http://thinakkural.lk/article/41513
  8. 1 point
    புதினம் பார்க்க...மக்கள் கூடினர். கூடவே சொறீலங்கா பொலிஸ் மற்றும் இராணுவம் போர்க்கால அடிப்படையில் ஆயுதங்களுடன் குவிப்பு. நன்றி: முகநூல்.
  9. 1 point
    ஆகா.... இதெல்லாம் சேர்ப்பில்லை. எங்கண்ட பிள்ளையாரின் விளையாட்டு.... இதை சொல்லாவிடில்... புத்தரிண்ட விளையாட்டு என்று முடித்து விடுவார்கள்.
  10. 1 point
    சுட்டவை சொன்னவை தாங்கள் தான் சுட்டோம் என்று...சில,பல கொலைகள் புலிகள் உணர்ச்சி வசப்பட்டு செய்ததுண்டு...இவருக்கும் 2,3 தடவை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தான் கொலை செய்யப்பட்டார் ...பிழை விட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ..புலிகள் பிழையே விடாத மாதிரி நீங்கள் எல்லோரும் சொல்வதால் தான் , நியாயமான கருத்தை நாம் சொல்லும் போதும் பொய்யர்களாகி நிற்கிறோம்
  11. 1 point
    ஏலவே வலைப்பூ பதிவில் உள்ளதை.. யாழ் இந்து முகநூல் பக்கத்திற்கு அனுப்பி அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரசுரமாகியுள்ளது. உங்களது நண்பரதும்.. உங்களதும் பணிக்கு பாராட்டுக்கள். இன்னும் தொடர வேண்டும்.
  12. 1 point
    நல்ல வீடு. தோட்டமும் செய்யலாம். கட்டாயம் திருத்தி வீட்டை அழகாக்குங்கள்.
  13. 1 point
  14. 1 point
    நேரம் எடுத்து விரிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி நில்மினி.
  15. 1 point
    எமது கலாச்சார வாழ்வில் ஒரு புதிய இணைப்பாக இந்த "முள்ளிவாய்க்கால் கஞ்சி" அமையட்டும் !
  16. 1 point
    நன்றி Dash, தவறுக்கு வருந்துகிறேன். இத்தனை வருடங்களும் விக்கியர்தான் தண்டனைத் தீர்ப்பினை வழங்கினார் என நம்பி வந்தேன். நீங்கள் கூறியபின்னர் விக்கிபீடியாவை கிளறினேன். தவறு புரிந்தது. நன்றி. உள்நோக்கம் எதுவும் இல்லை.
  17. 1 point
    கூட்டமைப்பெ தாயகத் தமிழர்களுக்குத் தகுதியானவர்கள் எனக்கூறியது அவர்களை எந்தவித விமர்சனங்களும் இல்லாது ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதற்கில்லை இப்போதைய தாயகத் தமிழர்களது எண்ணங்கள் எல்லாம் மாறிவிட்டது அரசியலுக்கும் அவர்களுக்கும் மிகவும் தூரமாகிவிட்டத் தமக்கான அரசியலை யார் முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதற்கான நிதர்சனம் இல்லாதுபோய்விட்டது. ஆகவே அப்படியான ஒரு சமூகக்கூட்டத்துக்கு சம்பந்தன் சுமந்திரன் மாவையர் தலைமையிலான ஒரு அரசியல் கட்சி எனத் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரு குழுநிலைவாத குத்தகைக்காரரே தேவைப்படுகிறார் காரணம் அவர்கள் செய்யும் அரசியல் எனும் தகிடுதித்தம் தமது நடைமுறவாழ்வில் எந்தவித இடையூறையும் ஏற்படுத்தாது அவ்வரசியலில் தாம் எந்தவகையிலும் பங்குகொள்ளாது வெறும் வாக்குகளை போட்டு ஒரு ஏஜண்டை தமக்காக நியமிப்பதுபோன்ற ஒரு செயல்பாடாகும். இல்லாதுவிடின் தற்போதைய குரோணா காலத்தில் தாயக மக்கள் நேரடியாகவே தாம் கடந்தகாலங்களில் தெரிவுசெய்த தமது பிரதிநிதிகளை நோக்கியே தமது தேவைக்காகக் கோரிக்கை வைத்திருப்பார்கள். எமக்கு இந்த நெருக்கடியான காலத்தில் எமக்கான சிறீலங்கா அரசினது சட்டரீதியிலான உதவிகளை சரியான விதத்தில் எமக்காக ஏன் ஒருங்கமைக்கவில்லை என அவர்களது வீடுகளுக்கு முன்பு வந்து கேள்வி கேட்டிருப்பார்கள். தற்போது புலம்பெயர் தேச உறவுகள் தாயகத்து மக்களுக்கான தொடர்புகள் உறவுகள் மற்றும் உதவிகள் அனைத்தையும் வெட்டிவிடுவதே உங்களுக்கும் எங்களுக்கு இனிமேல் எதுவுமே இல்லை உங்களது செல்லும்வழி என்ன என்பதை நீங்களே தேர்மானித்துக்கொள்ளட்டும்.
  18. 1 point
  19. 1 point
  20. 1 point
    பொய் சுடாது... உண்மையாயின். பொது வெளியே பகிராதீர்கள். நான் ஒரு உண்மையை சொன்னால், சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், யாழ் ஆ... நான் கேள்விப்படவேயில்லை... என்னது யாழ்ப்பாணம் பத்தினதோ எண்டு கதை விட.... நாதமுனியெண்டு.... என்றே தொடங்க மாட்டினம்.... உங்களுக்கு அந்த நிலை இல்லை. ஆகவே உண்மையை சொல்கிறேன் என்று பொது வெளியே குடும்ப கதையினை சொல்லாதீர்கள்.... சரிதானே அக்கா...
  21. 1 point
    நல்லதொரு சேவை. இதனை வடக்குக்கிழக்கு பாடசாலை அதிபர்களுக்கு மற்றும் வடக்குக் கிழக்கு.. கல்வித் திட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பழைய மாணவ சங்கங்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
  22. 1 point
    இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள். அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,? சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.
  23. 1 point
  24. 1 point
    அரபிக்காரன்ட ஐடியாவை அடிச்சுக்க ஆளே கிடையாது.....வாயாலேயே வடை சுட்டு வருமானம் பார்க்குறான்.....!
  25. 1 point
  26. 1 point
  27. 1 point
    அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுவழி கடல்பாதையை தவிர்க்க, நாட்டின் குறுக்கே கடல்மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையின் ஏரியின் இருபுறமும் மிகுந்த உயிர்பலி, சிரமங்களுக்கிடையே கால்வாய்கள் வெட்டி மூன்று தொட்டி போன்ற நிலைகளில் தண்ணீர் நிரப்பி, கப்பல்களை உயர்த்தி ஓடவிட்டு மறுபுறம் கடத்தும் தொழிற்நுட்பம் வியக்கத்தக்கது.. காணொளியை பார்த்தால் எளிதாக புரியும்..!
  28. 1 point
    மிகவும் நன்றி ரதி. நிச்சயம் தமிழ் மக்களுக்கு எனது சேவை காத்திருக்கிறது விரைவில் இப்படியெல்லாம் எனது கல்விச்சேவையை யாழ் களஉறுப்பினர்கள் எல்லோரும் பாராட்டுவீர்கள் என்று நினைத்தே இருக்கவில்லை. கடமையை செய், செய்வன திருந்த செய், உனக்கு மட்டும் வாழாமல் மற்றவர்களும் உதவியா வாழ் என்று எனது தகப்பனாரின் வழியில் செல்கிறேன். மேலும் எமது மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை. கட்டாயம் செய்வேன். உங்கள் அன்புக்கு நன்றி. திருக்குறள் எல்லாம் போட்டு அசத்தி விட்டீர்கள் . எனக்கு திருக்குறள் மிகவும் பிடிக்கும்.
  29. 1 point
    கொரோனாவை விரட்டும் வகையில், சமூக விலகலை மையப்படுத்தி செயல்படும் ஸ்வீடன் ஓட்டலுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. சீனாவில் உருவானகொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை விரட்டும் வகையில், சமூக விலகலை மையப்படுத்தி செயல்பட்டு வரும் ஸ்வீடன் ஓட்டலுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூக விலகலை கருத்தில் கொண்டு ஸ்வீடன் நாட்டின் வேர்ம்லாந்தில் டேபிள் ஃபார் ஒன் என்ற பெயரில் ஓட்டல் திறக்கப்பட்டு உள்ளது. இந்த ஓட்டலில் ஒரு மேசை, நாற்காலி மட்டுமே போடப்பட்டிருக்கும். அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து உணவு சாப்பிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓட்டலில் சப்ளையர் கிடையாது. கயிறு ஒன்றில் பிக்னிக் கூடை கட்டப்பட்டு அதில் உணவு வைத்து மேசைக்கு அனுப்பப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதில் சிறிய முன்னுதாரணமாக விளங்குவது இந்த ‘டேபிள் பார் ஒன் ஓட்டல் என்றால் மிகையில்லை. இந்த ஓட்டலை நடத்துபவர்கள் ஸ்வீடனை சேர்ந்த ரஸ்முஸ் பெர்சன், லின்டா கார்ல்சன் தம்பதி. இதுதொடர்பாக பெர்சன் கூறியதாவது: இந்த ஓட்டலை உருவாக்கும் எண்ணம் வருவதற்குக் முக்கிய காரணம் என் மனைவியின் பெற்றோரே. தினமும் அவர்களுக்கு ஜன்னல் வழியாக உணவை வழங்கியதன் விளைவாகவே இந்த ஓட்டல் உருவானது. தனிமையில் அமர்ந்து உணவுக்காகக் காத்திருந்து உணவு சாப்பிடுவதை இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் ரசிக்கின்றனர் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் https://www.maalaimalar.com/news/topnews/2020/05/13054352/1511163/Swedish-pop-up-restaurant-fights-coronavirus-one-guest.vpf
  30. 1 point
    எழுஞாயிறு நீங்கள் சொல்வது சரி தமிழ்த்தேசிய கூட்ட்டமைப்பு தகுதியானது என மக்கள் எண்ணுவதற்கு காரணம் அது விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட்து என்று சாதாரண மக்களுக்கும் அறிந்திருப்பதால் , அதனால் அக்கட்சியில் யாரை நிப்பாடினாலும் அவர்கள் வெல்வார்கள். இதுதான் நிதர்சனம் .
  31. 1 point
    வேண்டாமே கபிதன், நீங்கள் யாழுடன் நீண்ட காலமிருக்கனும், உங்கள் கருத்துகளை என்னைபோல் பலர் இழக்கவிரும்பவில்லை.
  32. 1 point
    emotional (உணர்வு பூர்வமாக) ஆக சிந்திக்காமல் rational (அறிவு பூர்வமாக) ஆக சிந்தியுங்கள். அங்கு நீங்கள் இருந்த காலம் வேறு. இப்போது காலம் வேறு. இருக்கும் பணத்தினை அங்கு கொட்டாமல்.... எங்கவாது நிம்மதியாக இருக்க பாருங்கள். நம்மில் பலருக்கு அங்கு போய் வாழவேண்டும் என்று ஆசை. ஆசை வேறு, நிதர்சனம் வேறு. வயது போகும் போது, இங்கே வாழ்வது பல வசதிகள். அரசே செய்து தருகிறது. அங்கே, பிள்ளைகள் உடன் இல்லாவிடில், வாழ்வது அர்த்தமில்லாதது. போய் வரலாம். நிரந்தரமாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. ஒரு சிறு வருத்தம் வந்தால் போதும். பெரு வருத்தமாக காட்டி.... கோவணத்துடன் தான் வெளியே விடுவார்கள். (இதனை எழுத்தாளர் சுஜாதாவே சொல்லி இருக்கிறார்) எனது பூர்வீக வீட்டில், உறவினர்கள் வாழ்கிறார்கள். சாதாரணமாக, கழிவறை கூட பயன்படுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பிழை இல்லை. எமது பழக்க வழக்க மாறுதல்களினால், அதனை, நாம் பாவித்த அதே கழிவறையினை, பாவிக்க முடியாத மன நிலை. இது ஒரு உதாரணம். சமையலில் இருந்து சகலமும் அப்படியே.... சாப்பாட்டுக்கு கூப்பிட்டார்கள் ஒரு உறவினர்கள். சமையல் அறைக்கு கை கழுவ போனால், காலில் கறுப்பாக ஓட்டும் அளவுக்கு அசுத்தம்.... சமயலறையில் இருந்து வெளியே பின் வளவுக்கு போக கதவு. அதை திறந்து அடிக்கடி போய், வருவதால், மண் வருகிறது என்று சொல்கிறார்கள். இதனை சொல்லி மாத்து விக்க முடியும் என்று தோன்றவில்லை. இங்கே டிவி நிகழ்வில், வீடு, வாசல் எப்படி வைத்துக்கொள்வது, பூந்தோட்டம் எப்படி பராமரிப்பது என்று சொல்லித் தருவார்கள். அங்கே, தமிழகத்து குப்பைகள் டிவியில். எப்படி முன்னேறுவது? அங்கே வாழ தொடங்கும் வெளிநாடு நபர்கள் என்றால், போலீசார் கூட, கிரிமினல்களை அனுப்பி, கொள்ளை அடித்து பங்கு போடுகிறார்களாம்.
  33. 1 point
    தனிபட்ட கருத்து ..குறித்து தமிழில் கூகுள் ஆண்டவரிடம் வேண்டிய போது .. முதலிடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் , இரண்டாமிடத்தில் அதிமுகவின் ஜெயகுமாரும் , மூன்றாம் இடத்தில் குஷ்பூவும் நான்காம் இடத்தில் திமுக - கொங்குரஸ் கூட்டணி அலப்பறைகளும் உள்ளது.. டிஸ்கி: செய்தி தொடர்பாளரா வாற கருத்துக்கும் தனிப்பட்ட கருத்துக்கும் என்னண்ணே வித்தியாசம்..? ..
  34. 1 point
    தேயிலையில் இருக்கும் Tannin என்னும் மூலப்பொருள் எமது சாப்பாட்டில் இருக்கும் புரதம் மற்றும் மாப்பொருட்கள் , அவற்றை சமிபாடடைய செய்யம் நொதியங்கள் இவற்றுடன் தாக்கமடைந்து உணவு செமிப்பதை குறைக்கும். இதனால் செமிக்க மிகவும் நேரம் எடுப்பதுடன் மிகவும் அசௌகரியமாகவும் இருக்கும். என்றபடியால் எந்த தேநீரும் சாப்பிட 2 மணித்தியாலத்துக்கு முன் அல்லது பின் தான் குடிக்க வேணும் ரதி
  35. 1 point
    நில்மினிக்கு வாதாடும் திறமையும் நேரமும் இருந்தால் தாராளமாக வரலாம் என்பது என் கருத்து. மனதுக்கு சங்கடம் தரும் விவாதத்தில் பங்கேற்கும் மனப்பக்குவம் இல்லை என தெரிந்த படியால் தான் நானும் அரசியல் திரியிலிருந்து ஒதுங்கி இருங்கள் என ஆலோசனை சொன்னேன். வேறு எந்த அடக்குமுறை எண்ணங்களும் இல்லை. ஈழப்பிரியனும் நானும் சொன்னதை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு கருத்திற்கு மாறுபட்ட சிந்தனைகளை சிந்திப்பதை தவிர்த்தால் ஒன்றும் குறையப் போவதில்லையே...!
  36. 1 point
    நெடுக்ஸ், 1) நானும் நீங்களும் வாழ்ந்த அதே சமூகக் கட்டமைப்பிற்குள் இருந்துதான் புலிகளும் தோற்றம் பெற்றனர். 2) உலக போராட்ட வரலாறுகளில் தவறு விடப்படாத, தூய்மையான போராட்டங்கள் என்று ஒன்றையும் காட்ட முடியாது. நோக்கம் தூய்மையானது என்கின்ற போது, போராளிகள் விடும் தவறுகளை மக்கள் மன்னிக்கிறார்கள். புலிகளின் தூய்மையான இலக்கு, அதி உச்ச தியாகங்கள் போன்ற காரணங்களுக்காகத்தான் மக்கள் அவர்களைப் போற்றுகிறார்கள்.
  37. 1 point
    யாழில் படையினரால் தேடப்பட்டு வந்ததாக கூறப்படும் முன்னாள் போராளி சரண் யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் தினம்தினம் இராணுவத்தினர் தேடிச் சென்று பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் இன்று தனது சட்டத்தரணியூடாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் கடந்த 08/05/2020 நள்ளிரவு வேளை குறித்த முன்னாள் போராளியின் வீட்டிற்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், சிலர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது. இதனைத் தொடர்ந்து பல சுற்றிவளைப்புக்கள் நடாத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் தைப் பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை படையினர் தொடர்ச்சியாக தேடிவந்த நிலையில், குறித்த போராளி நீதிமன்றில் இரு வாரங்களுக்கு முன்னர் தனது சட்டத்தரணியூடாக முன்னிலையாகியிருந்த நிலையில் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அவ்வாறு ஒரு சந்தேகமான இளைஞனே இல்லை. அவ்வாறு ஒருவரை தேடவில்லை என கூறியிருந்தனர். இந்த நிலையிலேயே கடந்த 08/05/2020 நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்த நிலையில் அன்றையதினம் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவரது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டதுடன் 500 லீட்டர் மண்ணெண்ணெயும் நிலத்தில் ஊற்றப்பட்டிருந்தது. அவரது சகோதரர்கள், உறவுகள் அண்மைக்காலமாக கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்ததுடன் பலர் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையிலேயே இன்றையதினம்முன்னாள் போராளி பருத்தித்துறை நீதிமன்றில் சரணடைய சென்ற நிலையில் நீதிமன்ற கடமைநேரம் முடிந்ததை அடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/142975?ref=ibctamil-recommendation
  38. 1 point
    ஒரு பிட்ஸா செய்திருந்தார்கள் வீட்டில்......சிலசமயம் இப்படி எதிர்பாராமல் விருந்துகள் கிடைப்பதுண்டு....!
  39. 1 point
    அங்கிள், இந்த sourdough breadஉடன் spinach dip செய்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் நன்றாக இருக்கும்.
  40. 1 point
    இந்தப் பாண் நாம் உண்பதுதான் இந்தப் பாண் கறியுடன் உண்பதிலும் சலாமி சீஸ் இவற்றுடனுண்ண சுவையாக இருக்கும்.
  41. 1 point
    சமையலை ரசித்து நல்லதொரு உணவு செய்ய வேண்டுமென்றால் ஒரு வாரம் என்ன ஒரு மாதம்கூட காத்திருக்கலாம்.....இது சில நாட்களுக்கு வைத்திருந்தும் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்......!
  42. 1 point
    வாழ்த்துக்கள் நில்மினி. மேன் மேலும் உயர்ந்து மக்களுக்கு சேவை புரிய கடவுளின் ஆசீர்வாதம் என்றென்றும் இருக்க வேண்டுகின்றேன்.
  43. 1 point
    வாழ்த்துகள் நில்மினி, உங்கள் சேவை தொடரட்டும் பல மணவர்களுக்கு. திரும்பி பார்க்கும் போது எத்தனையாயிரம் மாணவர்கள் உங்களால் வெற்றி பெற்றிருப்பார்கள் வாழ்கையில், அதே ஒரு தனிவித மகிழ்ச்சி & பெருமிதம். வாழ்க்கையில் இதனை விட என்ன சந்தோஷம் வேண்டும். மனதார பாராட்டுகின்றேன் உங்கள் சேவையை மாணவருக்கும் எங்கள் மக்களிற்கும்
  44. 1 point
    ஜோர்ஜ் வாஷிங்கடன் போராடியது பிரித்தானியாவுடன். நாங்கள் போராடுவதோ ஒரு பயங்கரவாத அரசுடன். எமது சாத்வீக மாறும் ஆயுத போராட்டங்களை அநீதியான முறையில் சிங்கள இனவாத அரசுகள் வென்றிருக்கலாம், ஆனால் அவர்கள் வெல்லவில்லை. என்றும் ஒரு அடிமையான தேசமாக உலகில் இருப்பார்கள்.
  45. 1 point
    கொரோனா பரிதாபங்கள்
  46. 1 point
    யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்கது – மணிவண்ணன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) கருத்து வெளியிடும் போதே மணிவண்ணன் இவ்வாறு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்து இராணுவத்தினர் அச்சுறுத்தியதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் வீட்டில் இருந்தவர்கள் கூறியிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியது இராணுவத்தினர் என்றும், அவர்கள் இராணுவ இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் கையடக்க தொலைபேசியை கைவிட்டு சென்றுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். http://athavannews.com/யாழில்-வீடு-புகுந்து-தாக-2/
  47. 1 point
  48. 1 point
    முடக்கப்பட்ட ஸ்ரீலங்காவை வழமைக்கு திருப்புவது குறித்து விசேட வர்த்தமானி நாட்டில் நிலவி வரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக முடக்கப்பட்ட பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மேல் மாகாணத்தின் பங்களிப்பின்றி எமது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது அதனால் மேல் மாகாணம் திறக்கப்பட வேண்டும். அங்கு தற்போதைய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டாலும் மேல் மாகாணத்தில் முக்கிய பணிகளை ஆரம்பிக்க வேண்டும். உரிய சட்ட கட்டமைப்புக்குள் தனியார் நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்டு அங்கு பணியாற்ற வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து நிறுவன தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராகவும், சட்டங்களுக்கு அமைய செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக விசேட பேச்சு வார்த்தைகளை எதிர்வரும் தினங்களில் நடத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/142734?ref=imp-news நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபாலகங்களும் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு! எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபாலகங்களும் திறக்கப்படவுள்ளன. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தபாலகங்களில் பணியாற்றும் ஊழயர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரம் பணிகளை முன்னெடுப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கடமைகளுக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். http://athavannews.com/நாடளாவிய-ரீதியிலுள்ள-அன-2/
  49. 1 point
    விலங்கினமொன்று இடை இழந்தால் கேள்வியாகும். முன்னிழந்தால் இதற்கும் பெண்களுக்கு பலன் பார்ப்பவருண்டு.
  50. 1 point
    நான் ஏதாவது ஏத்திக்கொண்டு விழுந்து கிடந்தாலும் அதுக்கும் பெருமாள் இழப்பீடு வழங்க வேண்டும்......!