• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. nilmini

  nilmini

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   467


 2. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   9,671


 3. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   6,134


 4. Nathamuni

  Nathamuni

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   8,296Popular Content

Showing content with the highest reputation on வியாழன் 14 மே 2020 in all areas

 1. 2 points
  அநேகமாக புலம்பெயர்ந்து வாழும் பலருக்குள் இருக்கும் அவா. எங்களுடைய சந்ததியைத் தொடராத வேர்மடிக்கு ஏங்கும் வாழ்வு. எங்களில் பலருக்கு அவர்கள் விருப்புகள் பூர்த்தியடையாமலே விடுபடப்போகும் விதியாக அமைந்துவிட்டது தாய்நாட்டுவாழ்வு. விடாப்பிடியாக சிலருக்கு கடின வாழ்வில் அமைதியைத் தேடுவதும் கிடைக்கத்தான் செய்கிறது. நீண்ட காலமாக யாழ் இணையத்தில் இதுபற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நேற்றைய காலத்தில் நாங்கள் தீர்மானித்த எதிர்காலத்திற்கு எதிர்ப்பக்கமாகவே காலம் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. சென்றடைய வேண்டிய இடத்தை அடையாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்குள்ளேயே தேங்கவேண்டிய கட்டாயத்தால் பல புலம்பெயர்ந்தவர்கள் பின்வாங்கி தாயகம் சென்று வாழ்தல் பற்றியே பேசும் சக்தியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையை எதிர் கொண்டும் ஊரில் வீடுகட்ட எத்தனிக்கும் சுமேயை பாராட்டாமல் நகர முடியவில்லை. வீடுகட்டுதல் என்பது அங்கு வாழாதபோது இலகுவானதல்ல. புலம்பெர்ந்த நாடுகளில் ஒவ்வொருவரும் வாழ்வைத் தொலைத்துத்தான் வளத்தை எடுக்கிறார்கள். முதுமை கோடிட்டபின்னர் இழந்த வாழ்வை எண்ணி ஏங்குவது அனைவருக்கும் பொருந்தும். இங்குதான் நமக்கான என்ற தேடல் தொடங்குகிறோம். இருக்கும் சொற்ப வளத்தைக் கொண்டு முதுமையை செதுக்க எத்தனிக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றமே பலருக்கும் மிஞ்சிவிடுகிறது. துணிந்து பெருங்காரியங்களில் இறங்க முடியாமை. மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலமை என நிலை மாறிவிடுகிறது. ஒரு விடயம் செய்ய எண்ணினாலும் சூழல் சாதகமாக அமைவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் சுமேயும் அந்நிலைக்குள் அகப்பட்டுவிடுவார். அதற்குப்பின்னர் சுமேயால் தன் சுய எண்ணங்களை ஈடேற்றுவது கடினம். இப்போது சுமேயால் முடியும். மேலே பல நண்பர்கள் நன்றையும் தீதையும் தத்தம் அநுபவங்களையும் எழுதி உள்ளார்கள். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்வழி செல்லுங்கள். மனம் கொண்டதே மாளிகை. கடினவாழ்வு கண்டு அமைதி கிடைப்பது வரம். நாளை என்னுடைய பேரப்பிள்ளைகள் வேர்மடி தேடும்போது வெறுமையாகிவிடக்கூடாது என்பதற்காக நிலவேறிய கிழக்கு வான் என்வீட்டு மொடடைமாடியில் இருந்து அந்திசாயும் தெற்கு முகம் சூரியன் விடைபெறும் மேற்கு எல்லை
 2. 2 points
  ஆதிரை ஆ திரை பரணி கேடடை (நட்ஷத்திரம் ) ஆரை என்பது நீர் நிலையில் வாழும் கீரை வகை திரை என்பது தோற்சுருக்கம்
 3. 2 points
 4. 2 points
 5. 2 points
  என்ன செய்வது அண்ணா ? அநேகமான வீட்டில் இருக்கும் மரங்களையுமே பராமரிக்க ஆட்களுக்கு பஞ்சி. எமது வீட்டில் பாக்கு , மா, கொய்யா, தென்னை எல்லாவற்றயும் வெட்டி போட்டார்கள். திரும்ப செய்யலாம் தானே? Dwarf சாதி மரங்கள் நடலாம். நான் ஒரு Agriculture officer உடன் கதைத்து வைத்திருக்கிறேன். வீடு கட்டு engineer அவரே Design , plan , building பொறுப்புக்களை எடுத்துள்ளார். இப்ப curfew வுக்கு பிறகு என்னும் வேலை தொடங்கவில்லை. முதல் கட்ட வேலைகள் 1 மாதத்துக்குள் செய்யலாம் என்கிறார். அதை பார்த்துவிட்டு உங்களுக்கு recommend விளக்கமாக எழுதுகிறேன் விளக்குகிறேன்.
 6. 2 points
  இரண்டு மட்டத்தில் நிலக்கீழ் தண்ணி இருக்கும். இரண்டையும் பிரிக்கும் பாறைகளில் ஏதாவது வெடிப்பு வந்து அதனூடாக இரண்டாவது மட்டத்தில் உள்ளநீர் கிணற்றுக்கு வந்திருக்கும். http://www.env.gov.bc.ca/wsd/plan_protect_sustain/groundwater/flowing_artesian_wells.pdf
 7. 2 points
 8. 2 points
 9. 2 points
  அந்தர் "பல்டி" அடித்த, சுமந்திரன். இதுவரை... அவருக்கு, முட்டுக் கொடுத்தவர்களை... மேடைக்கு... "பின்புறம் வரும்படி" ... அன்புடன் அழைக்கின்றோம்.
 10. 2 points
  பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம் என்று எல்லோருக்கும் தெரியும். தடிமன், சைனஸ்,தொண்டை நோ, சமிபாடு, உடல் நிறை குறைய (தேன் சேர்த்து விடிய வெள்ளன குடிக்கலாம், அல்லது சூடான கிறீன் டீ ( நச்சுப்பொருட்கள் உருவாவதை குறைக்கும் - Freeradicals ), செமிக்க உதவும். சுடுநீர் ( தேசிக்காய் புளி சேர்க்கலாம்) வியர்க்க வைக்கும். அதனுடன் சேர்ந்து நச்சு வாயுக்கள், கழிவுகள் வெளியேறும். சுடுதண்ணி குடிக்கும்போது உடனே தசை சுருங்கும் ஆனால் ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகள் தளர்வடைந்து , தசை , மூட்டு வலிகள் சுகமாகும். எமது ரத்தக்குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் சுருங்கி விரிவதாலேயே இரத்த ஓட்டம் ஒழுங்காக நடக்கிறது. சுடுநீர் இதனை சீராக்கி ரத்த அழுத்தத்தை சரிப்படுத்தும். படுக்கபோகும்போது சுடுநீர் குடித்தால் நிம்மதியான நித்திரை வரும், இரவில் வரும் food cravings வராது. பொதுவாகவே இளஞ்சூட்டு நீர் தான் உடலுக்கு மிகவும் உவந்தது . எனது அனுபவத்தில் ஓரளவு சுடுதண்ணீர் ஒவ்வொரு நாளும் குடித்தால் நல்லா செமிக்கும் , ஓரளவு மெலியலாம். மருந்துகள் எடுப்பவர்கள் கொதிநீரை ஒவ்வொருநாளும் குடிப்பது கூடாதென ஆய்வுகள் கூறுகின்றன. சுடுதண்ணி குடிப்பவர்கள் இளமையான தோற்றத்துடனும் , நல்ல குணம் படைத்தவர்காளாகும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன (இது எனது தந்தைக்கு பொருந்தும்) இஞ்சி மஞ்சள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் (Zingiberaceae family). Blood pressure diabetes மருந்துகள் எடுக்கும்போது வயிற்றில் கொஞ்சம் அமிலத்தன்மையை தன்மையை கூட்டும் . ஆனால் நாங்கள் சிறு வயதில் இருந்தே இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிடுபவர்கள். எமது உடல் இதற்கு பழகி இருக்கும். அத்துடன் உணவில் சேர்த்து சமைப்பதால் இந்த மருந்துகளுடன் interfere பண்ணாது. வெள்ளைகள் Turmeric , ginger capsules குடிப்பது வழக்கம். அவர்களுக்குத்தான் இவ்வாறான பிரச்சனைகள் வரும். மஞ்சள் இஞ்சியினால் மிகக்கூடிய பலன்கள் உண்டு. அதனால் விலை கூடினாலும் பரவாயில்லை என்று Organic மஞ்சள் இஞ்சி நித்தமும் சமையலில் பாவிப்பது நன்று.
 11. 1 point
  தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந்து எமது உடல் செல்கள் சில முக்கிய வேலைகளை செய்ய முடியாமல் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் இந்த விளைவுகள் மாறுபடும். பொதுவாக சோர்வு, நித்திரைஇன்மை, மனச்சோர்வு, உடல் பருமனடைதல், தோலில் சொறிவு , முடி உதிர்வு, குரல் மாற்றம் இவைகள் பொதுவானவை. சிலருக்கு ஐயோடின் குறைபாடால் சுரப்பி பெருக்கும் . ஐயோடின் supplement, சத்திர சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம்.தைரொக்சின் எமது உடலை அடிக்கடி திருத்தி நல்ல நிலையில் வைத்திருக்கும். உணவை எரித்து சக்தியும் வெப்பத்தையும் தரும். இதனால் தான் தைரொக்சின் குறைபாட்டால் குளிர் உணர்வு, உடல் பருமனாதல் , சோர்வனவு ஏற்படுகிறது. கொலெஸ்டெரோல் அளவும் கூடும். நன்றாக உடல் பயிற்சி செய்து, புரத சத்து அதிகமான உணவுகளை உண்டு selenium நிறைந்த உணவுகளான sardine, tuna, Brazil nuts , முட்டை, எல்லாவிதமான தானியங்கள் மற்றும் zinc நிறைந்த உணவுகளான நண்டு, கணவாய், றால், கோழி இறைச்சி , அன்னாசி பழம் , கல்லுப்பு , ஹிமாலயன் உப்பு, மீன் சாப்பிட்டு வந்தால் தைரொய்ட் சுரப்பிகள் மேலும் பழுதடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் கட்டாயம் மருத்துவ உதவி பெற்று Leveothyroxine வகையான மருந்தை ஒவ்வொரு நாள் அதிகாலையில் எடுக்க வேண்டும். இது மற்ற மருந்துகளுடன் ஒத்துபோகக்கூடியது. அதனால் சேர்த்து எடுக்கலாம். இது மரபு வழி சம்பந்தப்பட்டது. உங்கள் குடும்ப உறுப்பினருக்கு இருந்தால் உங்களுக்கும் வர சந்தர்ப்பம் அதிகம். எனவே சோர்வு, உடல் பருமனடைதல், மனச்சோர்வு , முடி உதிர்தல் இருந்தால் கட்டாயம் ரத்த பரிசோதனை செய்து பாருங்கள். மருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தவறாமல் எடுக்க வேண்டும். முக்கியமாக அன்னாசி, நண்டு, கணவாய் , றால், கோழி , அவரைக்காய் , nuts , முட்டை , tuna சாப்பாட்டில் சேர்க்கவும். மரக்கறி மட்டும் உண்பவர்கள் நிறைய தானியம், Brazil nut சேர்த்து சாப்பிடவும்
 12. 1 point
  தடம் அழியா நினைவுடன் … மே-13 அ . அபிராமி ‘டமார்’ என்ற ஒரு பேரோலி, அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது. பொலுபொலு என்ற சத்தத்துடன் எறிகணைத் சிதறல்கள் ஆங்காங்கே தகரத்தில் பட்டுத் தெறித்தன. எறிகணைத் துண்டொன்று மண்மூட்டைக்கு மேல பட்டிருக்க வேணும் , சொர சொர என்று கழுத்துக்கு நேரே மண்ணைக் கொட்டியது. வாய் மூக்கு எல்லாம் ஒரே மண் சடாரென்று எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். இப்போதும் வானத்தில் எரிந்து கொண்டிருந்தன வெளிச்சக் குண்டுகள். தலைக்கு மேலே நின்று இரைந்தபடி, படம்பிடித்துக் கொண்டிருந்தது ஆளில்லா விமானம். கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அருகருகே வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்த ரவைகள், மோட்டார் ரக எறிகணைகள். எதுவும் சற்றுக்கூட ஓய்ந்ததாக இல்லை. மணிக்கட்டைப் பார்த்தேன்.நேரம் அதிகாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ”அட நாலு மணிக்குத்தானே காவல் கடமைய மாத்தி விட்டனான். அதுக்குள்ள ஐந்து மணியாச்சா..” இனி எப்படிப் படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை. தலைக்கு வைத்துப் படுத்திருந்த உடமைப் பையிலிருந்து சீப்பை எடுத்துத் தலையை வாரிக் கட்டிக் கொண்டேன். கீழே விரித்துப் படுத்திருந்த உரப்பையை மடித்து வைத்துவிட்டு முகம் கழுவ வெளியில் வந்தேன். தலையை உரசிக்கொண்டு போவதுபோல் சீறிக் கொண்டு போனது எறிகணை ஒன்று. ”அக்கா… உள்ளவாங்கோ.. கனோனால பொழியப்போறான்…ஓடி வாங்கோ..” பக்கத்தில் காவல் கடமையில் நின்றவள் இரண்டு மூன்று அடி தள்ளி நின்ற என்னை அழைக்க பத்து வீடு கேட்க கத்தினாள்.அவள் சொல்லி வாய் மூடவில்லை. மூச்சு விடாமல் பொழியத் தொடங்கியது பல்குழல் எறிகணை. ”ம்.. விடியக் காத்தாலேயே தொடங்கீற்றான்… இண்டைக்கு எத்தின பேற்ற உயிரப்பறிக்கப் போறானோ தெரியேல்ல…” அவள் வாய் முணுமுணுத்தது. அதற்குள் மற்றவள் தேனீரோடு வந்தாள். ”கிடந்த சீனியப் போட்டுத்தான் தேத்தண்ணி ஊத்திருக்கு. இண்டையோட அதுகும் சரி .” கிட்டத்தட்ட மூன்று நாலு நாளா இதையேதான் அவளும் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் விடிந்ததும் எப்படியோ தேத்தண்ணி ஊத்தித் தந்திடுவாள். நாங்கள் இப்போது இருக்கும் இடம் உண்டியல் சந்தியடிக்கு சற்று முன்னதாக இருந்தது. அந்த இடத்துக்கு வந்து இரண்டு நாடக்ள் தான் ஆகியிருந்தது. என்னோடு இன்னும் இரு போராளிகள். இசை செஞ்சோலையில் வளாந்தவள். கவி இரு மாவீரர்களின் சகோதரி.இருவருமே எந்தச் சூழ்நிலையிலும் களமுனைக்கு அனுப்பக்கூடாது என்ற தலைமைச் செயலகத்தின் உறுதி மொழியோடு நிற்பவர்கள். எமக்கு முன்னதாக அந்த இடத்தில் இருந்துவிட்டு சென்றவர்கள் அமைத்திருந்த பாதுகாப்பகழி இப்போது எங்களின் பாதுகாப்பிடமாக இருந்தது. கிழக்கு வானம் மெல்ல வெளிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே மூட்டை முடிச்சுகளோடு மக்கள் நகரத் தொடங்கியிருந்தார்கள். பணியின் நிமிர்த்தம் முன்னரங்கிற்கு சென்று வர வேண்டிய தேவை எனக்கிருந்தது. புறப்படத் தயாரானேன். முன்னரங்கு என்பது பல கிலோ மீற்றர்கள் தள்ளி இருக்கும் இடமல்ல. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 800 மீற்றருக்கு உடப் ட்ட தூரம்தான். பொடிநடையாப்போனா 4-5 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் வண்டுக்கு மறைப்பெடுத்து, எதிரியின் தாக்குதல்களுக்கு காப்பெடுத்துச் செல்ல ஒரு மணி நேரத்துக்கு மேலாக எடுத்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த தரப்பால் கொட்டகைகள் சுனாமி அழிவுக்குப்பின் கட்டப்பட்ட வீடுகள் என மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்த அந்தப் பகுதி இப்போது கொடும் சூறைக்காற்றில் சிக்குண்டு அழிந்த இடமாய்க் காட்சி தந்தது. சாம்பல் மேட்டின் மேல் நிற்பது போன்ற உணர்வு. காப்பகழிகளுக்குள்ளே புதைந்தும் புதைபடாமலும் கிடந்த உடலங்களின் நெடி நெஞ்சை நெருடியது. காகங்கள் அங்கும் இங்குமாய் பறந்து பறந்து மனித உடலங்களை தமக்கு இரையாக்கிக் கொண்டு இருந்தன. அதற்குள் நின்றுதான் போராளிகள் எதிரியை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருந்தார்கள். களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த போராளிகளின் மனவுறுதியை ஒப்பிட்டுச் சொல்ல எதுவுமே இல்லை. ஆர்.பீ.ஜீ எறிகணை ஒன்று ஸ்ஸ்ஸ்.. என்ற இரைச்சலுடன் காதை உரசிச் சென்றது.விழுந்து படுத்தேன்.உடலில் ஏதாவது எறிகணைத் துண்டு பட்டிருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் அப்படி எதுவும் பட்டதாக தெரியவில்லை. ”அக்கா பார்த்து வாங்கோ…, நிமிர்ந்து நடந்தால் தலைதான் பறக்கும்…வென்ரெடுத்து வாங்கோ…” முன்னரங்கில் நின்ற போராளி உரத்த குரலில் சொன்னான். ஒரு மாதிரி வென்ரெடுத்தபடியே முன்னரங்கை அடைந்தேன். குயிலினி என்னைக் கண்டு விட்டு ஓடிவந்தாள். சுடரொளியின் கையில் பெரிய கட்டுபோடப்பட்டிருந்தது. அவள்தான் எங்களது அணியை வழிப்படுத்திக் கொண்டு இருப்பவள். ”என்ன சுடர் காயப்பட்டத அறிவிக்கவே இல்லையே.. பின்னுக்கு வந்து மருந்தாவது கட்டியிருக்கலாம் தானே….” அக்கறையோடு நான் சொன்னேன்.அவள் சிரித்தாள். ”என்னக்கா..இதெல்லாம் பெரிய காயமே..இதவிடப் பெரிய காயக்காரர் எல்லாம் லைனில நிக்கிறாங்கள். இஞ்ச பாருங்க குறிபார்த்துச் சுட கண்ணிருக்கு..துப்பாக்கி விசை வில்லை அழுத்த வலக்கை விரலிருக்கு ..அதவிட என்னால முடியும் எனகிற மனத்துணிவு இருக்கு.. இதவிட வேற என்னக்கா வேணும்….” அவளுக்குள் இருந்த ஓர்மம் என்னை நெகிழ வைத்தது. எவ்வளவு தற்துணிவு. எந்தப் படைவலுவாலும் தகர்க்க முடியாத ஆன்ம பலம் என்ற ஆயுதத்தைத் தாங்கி களங்களை நிறைத்து நிற்கும் இந்தக் காவல் தெய்வங்களை இந்த மண் ஒருபோதும் மறந்து போகக்கூடாது. எனக்குள் வேண்டிக் கொண்டேன். எனது பணியை முடித்துக் கொண்டு இருப்பிடத்துக்கு திரும்பியபோது நேரம் நண்பகலைக் கடந்து விட்டது. எங்கும் களீர் பளீர் என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறும் இரும்புத் துண்டுகள். எங்கே வீழ்கிறது எங்கே வெடிக்கிறது என்பதைக் புரிந்து கொள்ள முடியாவிடட் லலும் ஒவ்வொரு இடமாய்க் கேடகு; ம் எங்கள் உறவுகளின் அவலக்குரல்கள் அவை எங்கே வீழ்ந்திருக்கிறது என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டிருந்தது. எங்களது இருப்பிடத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் அக்கா தலையை ஒரு துணியால் போர்த்தி மூடிக் கொண்டு குனிந்தபடியே ஓடி வந்தார்.அவருக்கும் எனக்கும் நீண்டநாள் பழக்கம். ”வெளியில நிக்காதையுங்கோ..உள்ள வாங்க அக்கா..” அவரையும் எங்கள் காப்பகழிக்குள் அழைத்தேன். இருந்து ஆறுதலாகப் பேசுமளவுக்கு சூழலில்லை. ”சின்னாக்களையும் வைச்சுக் கொண்டு இனி இதில இருக்கிறது கொஞ்சம் கூட பாதுகாப்பில்ல. நாங்க வெளிக்கிடப்போறம். அதுதான் சொல்லீற்றுப் போகலாம் எண்டு வந்தனான்.” அந்த அக்காவின் முகத்தில் பதற்றம் கவலை என பலவித உணர்வுகள் ஓடிக் கொண்டிருந்தது. எப்போதும் துருதுருவென்று இருக்கும் அவர் விழிகளில் சொல்ல முடியாத சோகங்கள் நிறையவே தேங்கிக் கிடக்கும். ஆனால் இன்று அது வழமைக்கு மாறாக நிறையவே தெரிந்தது. இந்த நெருக்கடியான சூழலுக்குள் ஐந்து சின்னச் சின்ன குழந்தைகள், கூடவே வயதான அம்மா அப்பா என ஒரு பெரும் குடும்பத்தை தனி ஒருவராகத் தாங்கிக் கொண்டு இருப்பவர் அவர். சுற்றுமுற்றும் விழிகளை ஓடவிட்டுவிட்டு இரகசியக் குரலில் என்னோடு பேசினார். ”இஞ்சே..ராத்திரி பிள்ளைகள் எல்லாம் நித்திரைக்குப் போன பிறகு தங்கச்சியும் அவரும் வந்தவ” அக்காவின் குரல் உடைந்து விழியோரம் கசிந்தது. ”ஏனக்கா.. ஏன் அழுகிறீங்கள். அழாதையுங்கோ அக்கா ” அவரை ஆறுதல் படுதத் முயன்றேன்…… தொடரும் https://www.thaarakam.com/news/129061
 13. 1 point
  Thampi (little brother), our dog Singaa, my 30 pet doves and myself in Eelam at the end of 2008 moving from Vaddakkachchi to Visuvamadu. ___I was 15 years old at that time and thought it’d only be two or three weeks then we’ll be back to our place and continue with our normal lives. But I was wrong. ___Who would have thought we had to keep moving to four other places? Every time we moved we had to leave some of our stuff behind. We were camping, living on the beachside, eating rice and lentils without any flavour for months (but some people didn't have that privilege). ___No hope and constantly fearing the worst. ___Sharing a series of memories of Mullivaikkal by @nishan_sanjee @ Mullaitivu
 14. 1 point
  நீங்களே தமிழினி இது
 15. 1 point
  மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18ஆவது நிமிடத்தில், ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படும்… க.வி.விக்னேஸ்வரன் May 14, 2020 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு போரின் போது உயிர்நீத்த பிராத்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கோரோனாவின் பாதிப்புக்கு இருக்கின்ற நேரத்திலே வருகின்றபடியால் பலவிதமான தடங்கல்களை நாங்கள் எதிர்நோக்க இருக்கின்றோம். முள்ளிவாய்க்காலுக்கு சென்று எங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றி மௌனமாக இறந்தவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு சூழல் தற்போது இருக்கின்றதோ என்று எங்களுக்கு கூற முடியாது இருக்கின்றது. அவ்வாறு செய்யக் கூடியவர்கள் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மௌனமாக அஞ்சலி செலுத்தி வரக்கூடும் என்றால் மிகவும் நன்று. தற்போதைய நிலையைப் பார்க்கும்போது பொலிஸார் உடைய, படையினர் உடைய எதிர்ப்புகள் இவற்றில் இருப்பதை நான் காண்கின்றேன். அதில் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால் அவ்வாறானவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொண்டு போக எத்தனிக்கின்றார்கள். அப்படியானால் 14 நாள்கள் அவர்களைக் கொண்டுபோய் வைத்து இருக்கக்கூடும். ஆகவே முடியுமா என மக்கள் அங்கு சென்று தங்களுடைய மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம் நாங்கள் நடவடிக்கையில் இறங்கலாம். ஆனால் எங்களுடைய கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் இரண்டு விடயங்களை அன்றைய தினம் செய்ய இருக்கின்றோம். இறந்த மக்களினுடைய நினைவாக பயன்தரும் மரங்களை நடுவதற்கு இருக்கின்றோம். அது சம்பந்தமாக அந்தந்த மாவட்டங்களில் ஒருத்தரை அடையாளப்படுத்தி அவர்களுக்கு ஊடாக நாங்கள் மரங்களை வாங்கியும், பெற்றும் மக்களுக்கு தேவையானவர்களிடம் மரங்களை கொடுத்து தங்களுடைய வீட்டிலும் பயன்தரும் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதை 16ஆம் 17ஆம் 18ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அது ஒரு முக்கியமான பெட்டகம் என்று நான் நினைக்கின்றேன். ஏன் என்றால் வெறுமனே எங்களுடைய மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றுவதோடு நின்றுவிடாமல் வரும் காலத்திலே எங்களுடைய இறந்த உறவுகள் எதை நோக்கி எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டார்களோ அதாவது எங்களுடைய வடகிழக்கு தாயகப் பிரதேசம் நன்றாக முன்னேறவேண்டும், செழிக்க வேண்டும் அத்தோடு எல்லா விதத்திலும் நல்லதொரு நிலையை அடைய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அது நடைபெற வேண்டுமானால் இப்போது இருந்தே இந்த பயன்தரு மரநடுகை நிகழ்வில் நாங்கள் ஈடுபடுவது நல்லது என்று நினைக்கின்றேன். ஆகவே அன்று நாங்கள் அதை ஒரு விடயமாக காலையிலே செய்கின்றோம். அதைவிட உலகம் முழுவதும் எங்களுடைய தமிழ் உறவுகள் அன்றைய தினம் 18.18.18 க்கு அதாவது 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிலே இறந்தவர்களை நினைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும். இது இலங்கையில் மாத்திரமன்றி எத்தனையோ நாடுகளிலே அன்றைய தினம் நடைபெறுகின்றது. உதாரணமாக எங்களுடைய நாட்டிலே அந்த நேரத்தில் செய்யும்போது ஆஸ்திரேலியாவில் 5 அல்லது 6 மணித்தியாலம் வித்தியாசமாக இருக்கும், இங்கிலாந்தில் வித்தியாசமாக இருக்கும். ஆகவே அந்தந்த நாடுகளிலேயே18.18.18 க்கு நாங்கள் விளக்குகளை ஏற்ற இருக்கின்றோம். விளக்குகளை ஏற்றி இறந்தவர்களை நினைத்து அவர்களுடைய எதிர்பார்ப்பின் படி வரும் காலம் நல்லதொரு காலமாக வடகிழக்கு மாகாண மக்களுக்கு அமைய வேண்டும் என்று சிந்திப்போமாக. இப்போது இருக்கும் நிலையிலேயே சில பல தடங்கல்கள் இருக்கின்றபடியால் நான் கூறிய அந்த விடயங்களை நாங்கள் முக்கியமாக செய்யலாம். காலையிலேயே மரம் நடுதல், அதாவது எங்களுடைய கட்சியின் ஊடாகதான் மரம் நடவேண்டும் என்று இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு முடியுமான ஒரு பயன்தரும் மரத்தை தங்களுடைய தோட்டங்களிலோ, அண்மையில் இருக்கும் இடங்களிலோ அல்லது பொது இடங்களிலோ அவற்றை நட்டு குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதனைப் பேணிப் பராமரித்து வரவேண்டும். அதனை ஒருபுறமாக செய்யும்போது அன்றைய தினம் மாலை ஆறு மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொரு வீட்டியிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரி கொள்கின்றேன்- என்றார் http://globaltamilnews.net/2020/142765/
 16. 1 point
  அத்தாவுல்லா, ஹிஸ்புல்லா, றிசாட் ஆகிய தமக்குள் போட்டி போட்ட தீவிர வாத காடைகளை முஸ்லீம் மக்கள் ரசித்தார்கள்.... யாருமே அவர்களை எச்சரிக்கவில்லை. எச்சரிக்கையுடன் நடந்த ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் கூட பரிகசிக்கப்படார்கள். இறுதியில் உலகளாவிய பயங்கரவாதிகள், அவர்களிடையே புகுந்து, அவர்களது வாழ்வினை அவலமாக்கும் வரை ஓய மறுத்தார்கள். நீட்டப்படட தமிழர்கள் கரத்தினை, மமதையுடன் நிராகரித்தனர். நியூஸிலாந்து நாட்டில் நடந்த படுகொலைகளுக்கு பழிவாங்க, தேசத்தின் சகோதர இனங்களை கொலை செய்யும் நிலை வரை போகும் வரை, கண்ணை மூடிக் கொண்டிருந்து விட்டு, ஓய்வில் இருந்த கோத்தாவை இழுத்து வந்து ஜனாதிபதியும் ஆக்கி, இன்று குய்யோ, முறையோ என்று கூறினால் என்ன பலன். இன்றாவது உணர்ந்து கொண்டால் நல்லது. நல்லூர் கோவில் எங்களது.... நாம் தான் பூர்வீக குடிகள் என்றார் ஒருவர். சிங்களவர், தமிழர் வருமுன்னர் நாமே இந்த நாட்டில் இருந்தோம் என்றார் இன்னொருவர். அமீர் + காக்கா = அமெரிக்கா என்று கதை சொன்னார் ஒருவர். இப்படி.... அந்த கதை.... குரங்கின் கதை.... நிலைமை ஆகி விட்டது. ஏய் ... குரங்கே மரத்தில் இருந்து... இங்கே இறங்கி வா.... சொல்வதை கேள்.... நீ... தேவன் அல்ல.... மனிதனும் அல்ல... குரங்கு என்பதை மறவாதே.... நல்லது... சொல்ல வேண்டியதை சொல்லியாகி விட்டது.... திரும்பி மரத்தில் ஏறி ஒழுங்காக இரு.....
 17. 1 point
  பெருமளவு பணத்தை கொள்ளையடிக்க இது போன்ற வீதி அபிவிருத்தி திட்டங்களே உதவும்.
 18. 1 point
  முஸ்லீம்களின் வெறுக்கத்தக்க செயல்கள் மூலம் தங்களை இன்னிலைக்கு இட்டுச்சென்ற பெருமை முஸ்லீம்களுக்கே உரியது.
 19. 1 point
  Egg Dosa - முட்டைத் தோசை
 20. 1 point
  உங்கள் வீட்டில் ஆயுதக் குழு இரத்தம் சித்த வைத்தது என்றால்.. எங்கள் வீட்டையே இல்லாமல் செய்தது சிங்களமும் அதன் ஆயுதப்படையும். ஆயுதக் குழுக்கள் உருவாக முன்னமே எங்கள் குடும்ப உறவுகள் 1950 களில்.. கொழும்பு வீதியில்.. சிங்கள காடை ஆயுதக் குழுக்களால்.. தார் போட்டு எரிப்பட்டு விட்டனர். வீடுகள்.. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்கமுவ பகுதியில் இருந்த அவர்கள் முழுக் கடைத்தொகுதியும் கொள்ளையிடப்பட்டு தீயிடப்பட்டது. அதேபோல்.. கொழும்பில் எம் உறவுகள் பிரேமதாசவின் கைக்கூலி ஆயுதக் கும்பலால்.. சுட்டுக் கொல்லப்பட்டனர். புறக்கோட்டையின் 40 சதவீத மொத்த வியாபாரத்தை தம் கையில் வைத்திருந்த அந்த உறவுகளின்.. உறவுகள் அனாதைகள் ஆயினர்.. அதிக காலமல்ல.. 1989 இல். உங்கள் அனுபவத்தில்.. நீங்கள் ஆயுதக் குழுக்களை திட்டினால்.. எங்கள் போன்று.. வடக்கிலும் கிழக்கிலும்.. மேற்கிலும் தெற்கிலும்.. மலையகத்திலும் சிங்கள ஆயுதப் படைகளால்.. கூலிகளால்.. முஸ்லிம் காடைகளால்.. ராசிக் கும்பல் கூலிகளால்.. ஊர்காவற்படை கூலிகளால்.. எம் இனத்துரோகிகளால்.. அழிக்கப்பட்ட இரத்தம் சித்தப்பட்ட எம் மக்களில் எத்தனை பேர் அவர்களை திட்ட முடியும். அது உங்கள் ஒருவரின் திட்டு அல்லது சிலரின் திட்டு அதற்கு என்றுமே ஈடாக முடியாது. இன்றும்.. 1991 இல் 1996 இல் சிங்களப் படைகள் குண்டு வைத்த வீடுகள்... டாங்கி போட்டு உழுத வீடுகள் எத்தனை எத்தனை. வீடுகள் என்ன புலிகளாக சண்டை போட்டனவா..??! தமிழர்களின் இருப்பை அழிக்கனும் என்றே.. திட்டமிட்டு அழிக்கப்பட்ட வீடுகள் பல. இவை புரியாத உங்கள் போன்றோரின் இழிகுரல்.. மனிதமே இல்லாத ஒரு கேவலம். பிள்ளையை கேட்டார்கள் என்கிறீர்கள்.. எத்தனை பெற்றோர்.. 1980 களின் ஆரம்பத்தில் யாழ் நகர சுற்றிவளைப்புக்களில்.. தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்து.. பூஸா முகாமுக்கு ஓடித்திருந்த... ஆறுகளில் சடலங்களாக அவற்றை கண்டபோது பொங்கித் தவித்தார்கள். எத்தனை பள்ளிக்கூட மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவற்றை தடுக்க வீட்டுக்கு ஒருவர் வா என்பதில்.. என்ன அபந்தம். சிங்களப் படைக்கு ஓட ஓட ஆள் திரட்டிய போது அந்தப் பிள்ளைகளை நோக்கி ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கவில்லை உங்கள் முதலைக் கண்கள். ஆக.. கேலவம்.. ஒரு இனத்தினை கூட்டுச் சேர்ந்து அழித்துவிட்டு அந்த இனத்தின் மீது பழிப்பையும் செய்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒரு மிலேச்சத்தனமான மனிதன் இந்த உலகில் இருக்கவே முடியாது. நீங்கள் எல்லாம் ஜேசுவை வணங்குகிறீர்களாம்..?! பாவம் அவர்.
 21. 1 point
 22. 1 point
  ஆயுதக்குழு எனது குடும்பத்தவரின் இரத்தத்தை சிந்தி உயிரையும் இழக்க வைத்தார்கள் - மே 18. அவர்களால் எங்களுக்கு கிடைத்தது அழிவும் மரணமும். இந்த உண்மையை சொன்னால், அதற்கு உங்கள் மொழியில் பெயர் “கொச்சைப்படுத்துதல்”. சுமந்திரனுக்கு செருப்புமாலை போடுவதற்கு உங்கள் மொழியில் பெயர் ஜனநாயகம். எனது குடும்பத்தவரை முள்ளிவாய்க்காலில் பலிகொடுத்தவருக்கு நான் மே-18ல் ஒரு நூறு இணையத்தளங்களை உருவாக்கி செருப்புமாலை போட்டால் ஜனநாயகம் என்பீர்களா? அல்லது கொச்சைப்படுத்துதல் என்பீர்களா? இதற்கு எனக்கு மாதம் 50 டொலர்கள் தான் செலவாகும். ஆரம்பசெலவு 1,200 டொலர்கள். இரெண்டு நாள் உழைப்பு. போடவா செருப்புமாலை? இது ஐனநாயகமா, அல்லது கொச்சைப்படுத்துதலா? முடிவு உங்கள் பதிலில் தான் இருக்கிறது.
 23. 1 point
 24. 1 point
  மது அன்பர் --- மது அருந்துபவர்களை நேசிப்பவர். மது கருணையர் ---- மது வெறியில் மண்டை உடைந்து கிடப்பவருக்கு முதலுதவி செய்ப்பவர். மது பயணியர் ---- வீதியில் விழுந்து கிடப்பவரை வீடுவரை கொண்டு சேர்ப்பவர்......!
 25. 1 point
 26. 1 point
  இருக்கிற தலையிடியிலை... இது, பெரிய தலையிடி. நீங்க யார் என்று, போற போக்கில.... சொல்லீட்டு, போங்கோ...ப்ளீஸ்.
 27. 1 point
  உங்கள் இந்தக் கருத்துக்களுடன் ஒப்பிடும்போது, சுமந்திரனது கருத்துக்கள் மிக உயர்ந்தவையாக எனக்குத் தோன்றுகிறது. ***** இரண்டுவகையான மனிதர் இந்த அழகான பூமிப்பந்தில் உயிர் வாழ்கின்றனர். 1) இரந்துண்டு வாழ்பவர்கள் 2) மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் - வகையினர் இதில், போராடியோர், போராடப் புறப்பட்டோர், போர் ஆடலுக்கு பொருளீர்ந்தோர், அவர்களுக்கு தோள் கொடுத்தோர் இரண்டாம் வகையினர். வடக்கு - கிழக்கில் வாழ்ந்தோரில் மிக மிகப் பெரும்பான்மையோர் இரண்டாம் வகைக்குள் அடங்குவர். மேற்கூறியவற்றிற்குள் நீங்கள் எந்த வகை என்று நிச்சயம் நான் கேட்கப்போவதில்லை ***** (குறிப்பு; இது மேற் குறிப்பிட்ட உங்கள் கருத்திற்கான எதிர்வினை மட்டுமே)
 28. 1 point
  கரோனா தன்னார்வலர்களுக்கு நளபாகம்: 42 நாட்கள் தொடர் சமையல் சேவை புரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் “வெங்காயத்தைப் பெருசா நறுக்கு... இஞ்சி, பூண்டு கூட கிராம்பு, பட்டை எல்லாம் சேர்த்து மைய அரைச்சிடு…”- நெற்றியில் திருநீற்றுப் பட்டை. கூடவே சந்தனம் குங்குமம். படபடக்கும் குரலில் சமையல்காரராகத் தன் உதவியாளர்களை ஏவியபடி இருந்த ‘செல்லா’ என்கிற செல்லக்குமார், ஊட்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநர். காந்தல் பகுதியில் கரோனா தன்னார்வலர்களுக்கு 42 நாட்களாகச் சமையல் சேவை செய்து அசத்தியிருக்கிறார் இவர். 30 ஆயிரம் பேர் வசிக்கும் காந்தலில், கடந்த மாதம் 9 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதி சிவப்பு மண்டலத்துக்குள் கொண்டுவரப்பட்டது. மக்கள் தெருவை விட்டு வெளியில் வர முடியாத சூழல். அவர்களுக்குத் தேவைப்படும் காய்கனி, மளிகை உணவு, மருந்து, பால் பொருட்களை வாங்கிக் கொடுக்க 45 தன்னார்வலர்கள் புறப்பட்டார்கள். அவர்களுக்குக் காலை, மதியம், மாலை உணவு சமைக்கும் பணிகளைச் செய்தவர் செல்லக்குமார். அவரிடம் பேசினேன் காந்தல்ல எப்போ இந்த சமையல் வேலைய ஆரம்பிச்சீங்க? ஏப்ரல் 2-ம் தேதி ஆரம்பிச்சோம். 42 நாள் இப்படியே ஓடியிருக்கு. காலையில கிச்சடி, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம். இதுக்கு எப்படியும் நாலஞ்சு கிலோ அரிசி போடுவேன். மதிய சாப்பாட்டுக்கு 8 கிலோ அரிசி. குழம்பு, ரசம். கூட்டுப் பொரியல். மதிய சாப்பாட்டுக்கு 50, 55 பேர் ஆயிடுவாங்க. காலையிலயிருந்து பொழுது வரைக்கும் வேற யாரையும் சமைக்க விடமாட்டோம். எல்லா வேலையும் இந்த 45 பேர்தான். அதனால யாருக்கும் கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உருவாகலை. ஏற்கெனவே சமையல் வேலை செஞ்சிருக்கீங்களா? சின்ன வயசுலயிருந்து சமையல்ல ரொம்ப ஆர்வம். வீட்ல விருந்தினர்கள் வந்துட்டா, ஸ்பெஷல் அயிட்டம் எல்லாம் நான்தான் சமைப்பேன். சொந்தக்காரங்க வீட்ல விசேஷம்னாலும் சமையல்கட்டுலதான் என் வாசம். மாரியாத்தா கோயில் விசேஷத்துல சமைச்சிருக்கேன். 200 பேர் வரைக்கும் சமைச்சுப் போட்டிருக்கேன். யாருகிட்டவும் பைசா வாங்கிக்க மாட்டேன். இங்கே சமையல்காரரா மாறுனது எப்படி? இதே காந்தல்லதான் என் வீடும் இருக்கு. ஜனங்க கஷ்டப்படறதைப் பார்த்தவுடனே தன்னார்வலர்களோட நானும் சேர்ந்துட்டேன். எல்லாரும் ஆளுக்கு ஒரு வேலை பார்த்தாங்க. நம்ம என்ன செய்யறதுன்னு பார்த்தேன். இப்படி உழைக்கிற தன்னார்வலர்களுக்குச் சமைச்சுப்போடறதே நம் பாக்கியம்னு இறங்கிட்டேன். ரெண்டு மூணு நண்பர்களைச் சேர்த்துட்டேன். ஒருத்தர் இங்கிருந்து சமையல் கான்ட்ராக்ட் எடுத்து வெளியே உணவு சப்ளை செஞ்சவர். இன்னொருத்தர் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடறவர். விஷயத்தைச் சொல்லி அவங்ககிட்ட பாத்திரங்கள் கேட்டோம். உடனே ஸ்பான்சர் கொடுத்துட்டாங்க. கேஸ் அடிஷனல் சிலிண்டர் என் நண்பர் கொடுத்தார். அதை மாத்தி எடுத்துட்டோம். என் நண்பர் வீடு ஒண்ணு காலியாக் கிடந்தது. சமையல் செய்யக் கேட்டதும் கொடுத்துட்டார். சாப்பாட்டுக்கான செலவுகளை எப்படி சமாளிக்கிறீங்க? ஒரு நாள் மட்டும்தான் சொந்த செலவுல பொருள் வாங்கிச் சமைச்சோம். அதைப் பார்த்துட்டு ஊருக்குள்ளேயே சில பேர் ஒவ்வொரு நாள் செலவை (தினம் சுமார் ரூ.3500) ஒவ்வொருத்தர் ஏத்துக்கிட்டாங்க. ஒரு ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியாளர் ஒருத்தர் 8 கிலோ சிக்கன் வாங்கிக் கொடுத்தார். அதைப் பார்த்து அடுத்தடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆளாளுக்கு சிக்கன் வாங்கித் தர ஆரம்பிச்சுட்டாங்க. இந்தச் செய்தி தெரிஞ்சு திருப்பூர்ல இருக்கும் என் உறவினர் ஒருவர் என் அக்கவுன்ட்ல ரூ.3,000 போட்டுவிட்டார். 42 நாள் தொடர்ச்சியா 50 பேருக்கு மூணு வேளையும் சமைச்சிருக்கீங்க… சோர்வு தட்டலையா? எதுக்கு சோர்வு வருது? நமக்குப் பிடிச்ச வேலை. மக்கள் கஷ்டப்படறபோது செய்றோம். இது மாதிரி நிறைவு, வேற ஏதாவதுல கிடைக்குமா? இப்ப இந்தப் பகுதிக்கு குவாரன்டைன் பீரியடு முடியுது. அவங்கவங்க அவங்கவங்க வேலைய கவனிக்கப் போயிருவோம். அதை நினைக்கும்போதே ஏதோ இழந்த மாதிரி ஃபீலிங் வருது.பஸ் டிரைவர் பணியையும், சமையல் சேவையையும் எப்படிப் பார்க்கறீங்க? அது சம்பளம் வாங்கிட்டுச் செய்றோம். இதைச் சம்பளம் வாங்காம செய்றோம். ஆனா, ரெண்டுமே மக்களுக்கான பணி. உயிர்ப் பாதுகாப்புக்கான பணி. இன்னும் சொல்லப்போனா இந்தப் பணியைக் கூட நான் சம்பளம் வாங்காம செஞ்சேன்னு சொல்ல முடியாது. ஏன்னா, இந்த மாசம் பஸ் ஓட்டாமலே ஆபீஸ்ல எனக்கு சம்பளம் போட்டுட்டாங்க! https://www.hindutamil.in/news/tamilnadu/554315-bus-driver-cooked-for-corona-volunteers-1.html
 29. 1 point
 30. 1 point
  வங்காலையான், நீங்கள் சில அனுமானங்களை பொது வெளியில் கூறும்போது மிகப் பொறுப்போடு கூறவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கூறியதற்கு வலுச் சேர்க்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தற்போது புலிகள் இல்லாத சூழலில் அதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது ? சும்மா புழுதி வாரித் தூற்றுவதாகத்தான் இறுதியி முடியும். போராட்ட வரலாற்றில் எல்லோரும் பிழை விட்டுள்ளனர். ஆனால் இறுதியில் எங்களுக்கான அடையாளம் புலிகள் என்றாயிற்று. ஏனெனில் அவர்களது நோக்கத்திலும் சரி அர்ப்பணிப்பிலும் சரி ஒருவரும் சந்தேகம் கொள்ளவில்லை. நாங்கள் எமக்குள்ளே எவ்வாறுதான் பிணக்குற்றாலும் உலகமே தமிழர் என்றவுடன் புலிகளாகத்தான் பார்க்கிறார்கள். பயங்கரவாதி என்று கூறினாலும் போராளிகள் என்று கூறினாலும் நாம் எல்லோருமே புலிகள்தான், பிறர் கண்களுக்கு. இதுதான் உண்மை. எனவே தேவையற்ற விவாதங்களை நீங்கள் தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
 31. 1 point
  புலிகள் சுட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் வைச்சுக் கொண்டு.. இதுதான் நியாயம் என்கிறீர்கள். இப்படித்தான் எல்லாக் கொலைகளையும் புலிகள் மேல் போட்டுவிட்டு.. உலகம் பூராவும் அவர்களைப் பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டீர்களே. ஏன் எத்தனை பொய் கதைகளை எம்மவர்கள் உலகம் பூராவும் நீதிமன்றங்களில் சமர்ப்பித்து தங்கள் அகதி விண்ணப்பம் வெல்ல உழைத்தார்கள்..இதனால் பாதிக்கப்பட்டது புலிகள் தான். ஆதாரத்தை காட்டுங்கள்..?! சிங்களவன் ஒரு இனப்படுகொலையை செய்து போட்டே இல்லை எங்கிறான். புளொட் காரன் வவுனியாவில் நின்று காட்டிக்கொடுத்தும் சுட்டும் கொன்று விட்டு இன்று சனநாயகவாதி ஆகிட்டான். முழுக் கூலிக்கொலைகளையும் செய்த டக்கிளஸ் கும்பல்.. சனநாயகம் பேசுது. இன அழிப்புக்கு ஒத்தூதிய கருணா என்ற கொலைஞன்.. சனநாயகவாதி. இதில் யாரை எல்லாம் நீங்கள் எந்தக் கொலைக்கு பொறுப்பாக்கினீர்கள். அதேன் புலிகள் என்றவுடன் மட்டும்.. காதால் கேட்டது.. சிங்களன் சொன்னது.. ஒட்டுக்குழு பேப்பரில் வந்தது.. ஹிந்தியன் கட்டிவிட்டது.. அமெரிக்க அவிழ்த்துவிட்டது எல்லாம் உங்களுக்கு ஆதாரமாகிறது. புலிகள் சொன்னார்களா..??! அல்லது ஏற்றுக் கொண்டார்களா...??? ஆதாரம் இருக்கா இதற்கு.
 32. 1 point
  இங்க லண்டனிலும் எல்லாக் கோயில்களும் ஒன்லைன் பூசை நடக்குது ...திருவிழாக்கள் முடியும் மட்டும் கோயில்கள் திறக்கேலாமல் பண்ணினால் நிம்மதி
 33. 1 point
  சுட்டவை சொன்னவை தாங்கள் தான் சுட்டோம் என்று...சில,பல கொலைகள் புலிகள் உணர்ச்சி வசப்பட்டு செய்ததுண்டு...இவருக்கும் 2,3 தடவை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தான் கொலை செய்யப்பட்டார் ...பிழை விட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ..புலிகள் பிழையே விடாத மாதிரி நீங்கள் எல்லோரும் சொல்வதால் தான் , நியாயமான கருத்தை நாம் சொல்லும் போதும் பொய்யர்களாகி நிற்கிறோம்
 34. 1 point
  "ரயிலோடுது, யாழ் ரயிலோடுது.." எப்படி "மயிலோடுது.. வான் மயிலோடுது.." என மருவியது என மலைக்கிறீர்களா..? எல்லாம் 'உல்டா' தான்..! பால்ய வயதில் கிராமத்து தெருக்களில் கோலி, கிட்டிப்புல் விளையாட்டுகளை விளையாடும்பொழுது ஆகாயத்தில் சத்தத்துடன் பறக்கும் விமானத்தை பார்த்து அதிசயிப்பது வழக்கம். பெரியாளானதும் 'ஒரு நாளாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும்' என்பது கனவாகவே இருந்தது. காலசுற்றலில் அக்கனவு பலமுறை நிறைவேறிவிட்டது.. ஏர்பஸ் 380 யில் சிலறை பறந்தாச்சு, கெலிகாப்டரில் சிலமுறை.. ஆனால் கன்கார்டில் பறக்க முடியவில்லை.. இந்த விமான ஈர்ப்பு சிறுவயதிலேயே ஆழமாக பதிந்துவிட்டதால், விமான தொழிற் நுட்பங்களை ஆர்வத்துடன் யுடுயூபிலும், இணைய குறிப்புகளிலும் சிரத்தையாக பார்த்து ரசிப்பதுண்டு.. அப்படி பார்த்து ரசித்த சில காணொளிகளை பகிர்கிறேன்..! முதலில் நம்ம 'ஈழ்ஸ்' வசிக்கும் ஊரில்..!! ஒரே சமயத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் (Parallel landing) அதிசயம்..!
 35. 1 point
  ஏலவே வலைப்பூ பதிவில் உள்ளதை.. யாழ் இந்து முகநூல் பக்கத்திற்கு அனுப்பி அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரசுரமாகியுள்ளது. உங்களது நண்பரதும்.. உங்களதும் பணிக்கு பாராட்டுக்கள். இன்னும் தொடர வேண்டும்.
 36. 1 point
  பிற்காலத்தில் போய் வாழ்றதுக்கு நல்ல இடம். அங்கேயே போய் இருந்தால் 6 - 12 மாதத்துக்குள்ள சோலையா மாத்திடலாம்.
 37. 1 point
  நல்ல வீடு. தோட்டமும் செய்யலாம். கட்டாயம் திருத்தி வீட்டை அழகாக்குங்கள்.
 38. 1 point
  கபிதன் நீங்கள் விக்கியர் மீது வைத்த குற்றச்சாட்டு 2013 ல் அவர் அரசியலுக்கு வந்தபோது அவரை சிங்கள அரசின் எடுபிடியாக நினைத்து அவர் மீது சிலரால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. இதில் வேடிக்கை என்னவெற்றால் அன்று இப்படி குற்றச்சாட்டை வைத்தவர்கள் இன்று அவரை விழுந்து விழுந்து ஆதரிக்கும் தரப்பினர் தான். இது தான் அரசியல். அரசியலில் இது எல்லாம் சகஜம்ப்பா.
 39. 1 point
  பொய் சுடாது... உண்மையாயின். பொது வெளியே பகிராதீர்கள். நான் ஒரு உண்மையை சொன்னால், சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், யாழ் ஆ... நான் கேள்விப்படவேயில்லை... என்னது யாழ்ப்பாணம் பத்தினதோ எண்டு கதை விட.... நாதமுனியெண்டு.... என்றே தொடங்க மாட்டினம்.... உங்களுக்கு அந்த நிலை இல்லை. ஆகவே உண்மையை சொல்கிறேன் என்று பொது வெளியே குடும்ப கதையினை சொல்லாதீர்கள்.... சரிதானே அக்கா...
 40. 1 point
  நான் பொய் எழுதாதபடியால் பயப்படேல்லை உங்களுக்கு அங்கே போய் இருக்க ஐடியா இருக்கோ அண்ணா
 41. 1 point
 42. 1 point
  அப்படி இருந்தாலும் , அவரின் மணடயில் போடும் திடடத்தை தோற்கடித்தவர்களும் புலிகள்தான்। புலிகளுக்குளேயே இரண்டு பிரிவுகள்। இது எப்படி இருக்குது? பொட்டு அம்மன் விசாரணைக்கு கூப்பிட்டும் ஒரு அரச அதிபர் போகவில்லை। அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் எண்டு தடுத்தவர்களும் புலிகள்தான்। அளவுக்கதிகமாக வெள்ளையடித்தால் அது வெள்ளையடிக்கப்படட கல்லறையாக மாறி விடும்। அதாவது அதட்குள் நாற்றமும் , எலும்புக்கூடுகளுமாகத்தான் இருக்கும்।
 43. 1 point
  இதே கேள்வியோட இனிமேல் படலைய வந்து ஆட்டாதைங்கோ. மொத்தக் கேள்விக்கும் ஒத்த விடை. பஞ்சாயத்து முடிஞ்சு.கிளம்பு
 44. 1 point
  emotional (உணர்வு பூர்வமாக) ஆக சிந்திக்காமல் rational (அறிவு பூர்வமாக) ஆக சிந்தியுங்கள். அங்கு நீங்கள் இருந்த காலம் வேறு. இப்போது காலம் வேறு. இருக்கும் பணத்தினை அங்கு கொட்டாமல்.... எங்கவாது நிம்மதியாக இருக்க பாருங்கள். நம்மில் பலருக்கு அங்கு போய் வாழவேண்டும் என்று ஆசை. ஆசை வேறு, நிதர்சனம் வேறு. வயது போகும் போது, இங்கே வாழ்வது பல வசதிகள். அரசே செய்து தருகிறது. அங்கே, பிள்ளைகள் உடன் இல்லாவிடில், வாழ்வது அர்த்தமில்லாதது. போய் வரலாம். நிரந்தரமாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. ஒரு சிறு வருத்தம் வந்தால் போதும். பெரு வருத்தமாக காட்டி.... கோவணத்துடன் தான் வெளியே விடுவார்கள். (இதனை எழுத்தாளர் சுஜாதாவே சொல்லி இருக்கிறார்) எனது பூர்வீக வீட்டில், உறவினர்கள் வாழ்கிறார்கள். சாதாரணமாக, கழிவறை கூட பயன்படுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பிழை இல்லை. எமது பழக்க வழக்க மாறுதல்களினால், அதனை, நாம் பாவித்த அதே கழிவறையினை, பாவிக்க முடியாத மன நிலை. இது ஒரு உதாரணம். சமையலில் இருந்து சகலமும் அப்படியே.... சாப்பாட்டுக்கு கூப்பிட்டார்கள் ஒரு உறவினர்கள். சமையல் அறைக்கு கை கழுவ போனால், காலில் கறுப்பாக ஓட்டும் அளவுக்கு அசுத்தம்.... சமயலறையில் இருந்து வெளியே பின் வளவுக்கு போக கதவு. அதை திறந்து அடிக்கடி போய், வருவதால், மண் வருகிறது என்று சொல்கிறார்கள். இதனை சொல்லி மாத்து விக்க முடியும் என்று தோன்றவில்லை. இங்கே டிவி நிகழ்வில், வீடு, வாசல் எப்படி வைத்துக்கொள்வது, பூந்தோட்டம் எப்படி பராமரிப்பது என்று சொல்லித் தருவார்கள். அங்கே, தமிழகத்து குப்பைகள் டிவியில். எப்படி முன்னேறுவது? அங்கே வாழ தொடங்கும் வெளிநாடு நபர்கள் என்றால், போலீசார் கூட, கிரிமினல்களை அனுப்பி, கொள்ளை அடித்து பங்கு போடுகிறார்களாம்.
 45. 1 point
 46. 1 point
  உண்மை தான். யாழ் நகர சந்தைப் பகுதிக்குச் செல்கிறேன். நயினாதீவுக்கு சென்றுவிட்டு திரும்பும் சிங்களக் குடும்பங்கள். அங்கு தான் கருவாடு முதலாய் நிறைய பனம்பொருட்களை வாங்குகிறார்கள். அவர்கள் சாதாரணமாகத் தான் நின்றார்கள். ஆனால் இரண்டு சிங்கள இராணுவத்தினர் சீருடையில் வந்தனர். ஒருவர் கையில் ஆயுதம். மற்றவர் உயர் அதிகாரி போலும். அவர் அந்தச் சிங்களவர்களோடு கதைத்து விட்டு நாங்கள் நின்று விலை பேசிக் கொண்டிருந்த கடைக்குள் நுழைகிறார். எந்த அனுமதியும் இன்றி அந்தக் கடைக்காரரிடம் அதிகாரத் தொனியில்.. விலைகளை விசாரிக்கிறார். கடைக்காரரும் பதறி அடிச்சுக் கொண்டு எங்களை கவனிப்பதை தற்காலிகமாக விடுத்து.. அந்த இராணுவ அதிகாரியையும் அவருடன் வந்த குலாமையும் கவனிக்கிறார். வெளிநாடுகளில் இப்படியான ஒரு நிகழ்வு நிகழின்.. நாமோ.. வெள்ளைகளோ சும்மா இருக்கமாட்டோம். கியூவில் நின்று வாங்கோ என்று தான் சொல்லுவோம். ஆனால்.. அங்கு அப்படியல்ல. ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது ஹிந்திய இராணுவம் பொருட்கள் வாங்க வந்தாலும் இப்படி பொதுமக்களை இடித்துத்தள்ளிவிட்டு தாங்கள் முன்னுக்குப் போய் வாங்கியதை நான் கவனிக்கவில்லை. ஆனால் சிங்கள இராணுவத்திடம் யாழ் நகரில் பொருட்கள் வாங்கும்.. போது திமிர் அதிகம். ஆனால்.. இதனை கொழும்பில்.. தெற்கில் அவதானிக்க முடியவில்லை. அங்கு மக்களோடு மக்களாக கியூவில் நின்று தான் வாங்கிறார்கள். உண்மையில் அந்தச் சம்பவம் அடிமனதில் ஒரு ஆத்திரத்தை உண்டு பண்ணினாலும்.. அனாதரவான எம்மால்.. அதைத் தட்டிக்கேட்க முடியாத சூழல். பொறுமையாக நின்று அந்தக் கும்பல் பேரம் பேசிப் போன பின்.. நாங்கள் எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். அப்போது அந்த தமிழ் கடைக்காரர் சொன்னார்.. இது இப்ப இங்க சாதாரணம். சீருடையில்.. ஆயுத்தோடு வந்து அடிமாட்டு விலைக்கு கேட்பாங்கள். பயந்து கொடுப்பம் என்று. எங்களுக்கு கட்டுபடியாகாட்டி எப்படிக் கொடுக்கிறது. ஏதோ சொல்லிச் சமாளித்துவிடுகிறோம் என்றார். இப்படியான சூழலில்.. நிச்சயம் வெளிநாட்டில் இருந்து போகும் உணர்வாளர்களுக்கு கோபம் அடக்கமுடியாத அளவுக்கு எழும்.. கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.. ஊரில் இருக்க வேண்டின். ஏனெனில்.. எமது கோபத்தை அவர்கள் உணரும் வழிக்குக் காட்ட அங்கு நியாயமான வழியில்லை.. இப்போ.
 47. 1 point
 48. 1 point
  தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில், அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் அன்று மாலை பிரதமர் மகிந்தவுடன் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் மீண்டும் தனிமையில் சந்தித்துப் பேசியிருந்தனர். இதன்போது பேசப்பட்டது என்ன? கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு என்ன? வடக்கு கிழக்கில் கொரோனா தொற்றின் நிலவரம் என்ன? இராணுவத்தின் பிரசன்னம் எந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் இருக்கின்றன. இதுபோன்ற பல தகவல்களை ஐபிசி இணையத்தளத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், https://www.ibctamil.com/srilanka/80/142737
 49. 1 point
  ஸ்ரீலங்காவில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான செய்தி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முடிவு அடுத்த வாரமளவில் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை பெற்று பாடசாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஆனால் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்க இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கிருமி ஒழிப்பு நடவடிக்கையின் பின்னர் 4 நாட்கள் வரை பாடசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முதலாம் கட்டமாக உயர்தர மாணவர்களையும், இரண்டாம் கட்டமாக சாதாரண தர மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும், அதன் பின்னரே ஆரம்ப பிரிவு மாணவர்கள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/142850
 50. 1 point
  அரசியல் தீர்வில்லையென்றால் அரசியலைவிட்டு வெளியேறுவேன் என்று மக்களை ஏமாற்றித் திரிந்த சுமந்திரன் தற்போது தனக்கும் தான் புதிதாக கண்டுபிடித்த பெண்மணிகளுக்கும் அமைச்சு பதவி கிடைக்குமா எனத் தேடித் திரிவதாக தெரிகிறது.