Jump to content

Leaderboard

  1. nilmini

    nilmini

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      908


  2. போல்

    போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      6

    • Posts

      6134


  3. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      23357


  4. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      13647


Popular Content

Showing content with the highest reputation on 05/14/20 in Posts

  1. பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம் என்று எல்லோருக்கும் தெரியும். தடிமன், சைனஸ்,தொண்டை நோ, சமிபாடு, உடல் நிறை குறைய (தேன் சேர்த்து விடிய வெள்ளன குடிக்கலாம், அல்லது சூடான கிறீன் டீ ( நச்சுப்பொருட்கள் உருவாவதை குறைக்கும் - Freeradicals ), செமிக்க உதவும். சுடுநீர் ( தேசிக்காய் புளி சேர்க்கலாம்) வியர்க்க வைக்கும். அதனுடன் சேர்ந்து நச்சு வாயுக்கள், கழிவுகள் வெளியேறும். சுடுதண்ணி குடிக்கும்போது உடனே தசை சுருங்கும் ஆனால் ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகள் தளர்வடைந்து , தசை , மூட்டு வலிகள் சுகமாகும். எமது ரத்தக்குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் சுருங்கி விரிவதாலேயே இரத்த ஓட்டம் ஒழுங்காக நடக்கிறது. சுடுநீர் இதனை சீராக்கி ரத்த அழுத்தத்தை சரிப்படுத்தும். படுக்கபோகும்போது சுடுநீர் குடித்தால் நிம்மதியான நித்திரை வரும், இரவில் வரும் food cravings வராது. பொதுவாகவே இளஞ்சூட்டு நீர் தான் உடலுக்கு மிகவும் உவந்தது . எனது அனுபவத்தில் ஓரளவு சுடுதண்ணீர் ஒவ்வொரு நாளும் குடித்தால் நல்லா செமிக்கும் , ஓரளவு மெலியலாம். மருந்துகள் எடுப்பவர்கள் கொதிநீரை ஒவ்வொருநாளும் குடிப்பது கூடாதென ஆய்வுகள் கூறுகின்றன. சுடுதண்ணி குடிப்பவர்கள் இளமையான தோற்றத்துடனும் , நல்ல குணம் படைத்தவர்காளாகும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன (இது எனது தந்தைக்கு பொருந்தும்) இஞ்சி மஞ்சள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் (Zingiberaceae family). Blood pressure diabetes மருந்துகள் எடுக்கும்போது வயிற்றில் கொஞ்சம் அமிலத்தன்மையை தன்மையை கூட்டும் . ஆனால் நாங்கள் சிறு வயதில் இருந்தே இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிடுபவர்கள். எமது உடல் இதற்கு பழகி இருக்கும். அத்துடன் உணவில் சேர்த்து சமைப்பதால் இந்த மருந்துகளுடன் interfere பண்ணாது. வெள்ளைகள் Turmeric , ginger capsules குடிப்பது வழக்கம். அவர்களுக்குத்தான் இவ்வாறான பிரச்சனைகள் வரும். மஞ்சள் இஞ்சியினால் மிகக்கூடிய பலன்கள் உண்டு. அதனால் விலை கூடினாலும் பரவாயில்லை என்று Organic மஞ்சள் இஞ்சி நித்தமும் சமையலில் பாவிப்பது நன்று.
    2 points
  2. தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந்து எமது உடல் செல்கள் சில முக்கிய வேலைகளை செய்ய முடியாமல் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் இந்த விளைவுகள் மாறுபடும். பொதுவாக சோர்வு, நித்திரைஇன்மை, மனச்சோர்வு, உடல் பருமனடைதல், தோலில் சொறிவு , முடி உதிர்வு, குரல் மாற்றம் இவைகள் பொதுவானவை. சிலருக்கு ஐயோடின் குறைபாடால் சுரப்பி பெருக்கும் . ஐயோடின் supplement, சத்திர சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம்.தைரொக்சின் எமது உடலை அடிக்கடி திருத்தி நல்ல நிலையில் வைத்திருக்கும். உணவை எரித்து சக்தியும் வெப்பத்தையும் தரும். இதனால் தான் தைரொக்சின் குறைபாட்டால் குளிர் உணர்வு, உடல் பருமனாதல் , சோர்வனவு ஏற்படுகிறது. கொலெஸ்டெரோல் அளவும் கூடும். நன்றாக உடல் பயிற்சி செய்து, புரத சத்து அதிகமான உணவுகளை உண்டு selenium நிறைந்த உணவுகளான sardine, tuna, Brazil nuts , முட்டை, எல்லாவிதமான தானியங்கள் மற்றும் zinc நிறைந்த உணவுகளான நண்டு, கணவாய், றால், கோழி இறைச்சி , அன்னாசி பழம் , கல்லுப்பு , ஹிமாலயன் உப்பு, மீன் சாப்பிட்டு வந்தால் தைரொய்ட் சுரப்பிகள் மேலும் பழுதடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் கட்டாயம் மருத்துவ உதவி பெற்று Leveothyroxine வகையான மருந்தை ஒவ்வொரு நாள் அதிகாலையில் எடுக்க வேண்டும். இது மற்ற மருந்துகளுடன் ஒத்துபோகக்கூடியது. அதனால் சேர்த்து எடுக்கலாம். இது மரபு வழி சம்பந்தப்பட்டது. உங்கள் குடும்ப உறுப்பினருக்கு இருந்தால் உங்களுக்கும் வர சந்தர்ப்பம் அதிகம். எனவே சோர்வு, உடல் பருமனடைதல், மனச்சோர்வு , முடி உதிர்தல் இருந்தால் கட்டாயம் ரத்த பரிசோதனை செய்து பாருங்கள். மருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தவறாமல் எடுக்க வேண்டும். முக்கியமாக அன்னாசி, நண்டு, கணவாய் , றால், கோழி , அவரைக்காய் , nuts , முட்டை , tuna சாப்பாட்டில் சேர்க்கவும். மரக்கறி மட்டும் உண்பவர்கள் நிறைய தானியம், Brazil nut சேர்த்து சாப்பிடவும்
    1 point
  3. நீங்களே தமிழினி இது 😄
    1 point
  4. சிக்கன் ஹண்டி ஹோட்டல் சுவையில் வீட்டில் செஞ்சு பாருங்க https://www.youtube.com/watch?v=zBDPrq6dqKQ
    1 point
  5. "ரயிலோடுது, யாழ் ரயிலோடுது.." எப்படி "மயிலோடுது.. வான் மயிலோடுது.." என மருவியது என மலைக்கிறீர்களா..? எல்லாம் 'உல்டா' தான்..! பால்ய வயதில் கிராமத்து தெருக்களில் கோலி, கிட்டிப்புல் விளையாட்டுகளை விளையாடும்பொழுது ஆகாயத்தில் சத்தத்துடன் பறக்கும் விமானத்தை பார்த்து அதிசயிப்பது வழக்கம். பெரியாளானதும் 'ஒரு நாளாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும்' என்பது கனவாகவே இருந்தது. காலசுற்றலில் அக்கனவு பலமுறை நிறைவேறிவிட்டது.. ஏர்பஸ் 380 யில் சிலறை பறந்தாச்சு, கெலிகாப்டரில் சிலமுறை.. ஆனால் கன்கார்டில் பறக்க முடியவில்லை.. இந்த விமான ஈர்ப்பு சிறுவயதிலேயே ஆழமாக பதிந்துவிட்டதால், விமான தொழிற் நுட்பங்களை ஆர்வத்துடன் யுடுயூபிலும், இணைய குறிப்புகளிலும் சிரத்தையாக பார்த்து ரசிப்பதுண்டு.. அப்படி பார்த்து ரசித்த சில காணொளிகளை பகிர்கிறேன்..! முதலில் நம்ம 'ஈழ்ஸ்' வசிக்கும் ஊரில்..!! 😉 ஒரே சமயத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் (Parallel landing) அதிசயம்..! 👇
    1 point
  6. தனியா வாங்கினா காசு .. ராணி காமிக்ஸ் வாங்கினா முதல் பக்கம் உள்ளே இலவச இணைப்பு வச்சிருப்பினம்..அது ஒரு கனா காலம் தோழர்..👌
    1 point
  7. ஒரு பிட்ஸா செய்திருந்தார்கள் வீட்டில்......சிலசமயம் இப்படி எதிர்பாராமல் விருந்துகள் கிடைப்பதுண்டு....! 😁
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.