• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. போல்

    போல்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      14

    • Content Count

      6,134


  2. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Content Count

      9,671


  3. வல்வை சகாறா

    வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Content Count

      5,676


  4. மோகன்

    மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      8

    • Content Count

      5,902



Popular Content

Showing content with the highest reputation on வெள்ளி 15 மே 2020 in all areas

  1. 8 points
    2017 2018 திருகோணமலையில்.... Kitchen 3D
  2. 6 points
    அநேகமாக புலம்பெயர்ந்து வாழும் பலருக்குள் இருக்கும் அவா. எங்களுடைய சந்ததியைத் தொடராத வேர்மடிக்கு ஏங்கும் வாழ்வு. எங்களில் பலருக்கு அவர்கள் விருப்புகள் பூர்த்தியடையாமலே விடுபடப்போகும் விதியாக அமைந்துவிட்டது தாய்நாட்டுவாழ்வு. விடாப்பிடியாக சிலருக்கு கடின வாழ்வில் அமைதியைத் தேடுவதும் கிடைக்கத்தான் செய்கிறது. நீண்ட காலமாக யாழ் இணையத்தில் இதுபற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நேற்றைய காலத்தில் நாங்கள் தீர்மானித்த எதிர்காலத்திற்கு எதிர்ப்பக்கமாகவே காலம் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. சென்றடைய வேண்டிய இடத்தை அடையாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்குள்ளேயே தேங்கவேண்டிய கட்டாயத்தால் பல புலம்பெயர்ந்தவர்கள் பின்வாங்கி தாயகம் சென்று வாழ்தல் பற்றியே பேசும் சக்தியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையை எதிர் கொண்டும் ஊரில் வீடுகட்ட எத்தனிக்கும் சுமேயை பாராட்டாமல் நகர முடியவில்லை. வீடுகட்டுதல் என்பது அங்கு வாழாதபோது இலகுவானதல்ல. புலம்பெர்ந்த நாடுகளில் ஒவ்வொருவரும் வாழ்வைத் தொலைத்துத்தான் வளத்தை எடுக்கிறார்கள். முதுமை கோடிட்டபின்னர் இழந்த வாழ்வை எண்ணி ஏங்குவது அனைவருக்கும் பொருந்தும். இங்குதான் நமக்கான என்ற தேடல் தொடங்குகிறோம். இருக்கும் சொற்ப வளத்தைக் கொண்டு முதுமையை செதுக்க எத்தனிக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றமே பலருக்கும் மிஞ்சிவிடுகிறது. துணிந்து பெருங்காரியங்களில் இறங்க முடியாமை. மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலமை என நிலை மாறிவிடுகிறது. ஒரு விடயம் செய்ய எண்ணினாலும் சூழல் சாதகமாக அமைவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் சுமேயும் அந்நிலைக்குள் அகப்பட்டுவிடுவார். அதற்குப்பின்னர் சுமேயால் தன் சுய எண்ணங்களை ஈடேற்றுவது கடினம். இப்போது சுமேயால் முடியும். மேலே பல நண்பர்கள் நன்றையும் தீதையும் தத்தம் அநுபவங்களையும் எழுதி உள்ளார்கள். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்வழி செல்லுங்கள். மனம் கொண்டதே மாளிகை. கடினவாழ்வு கண்டு அமைதி கிடைப்பது வரம். நாளை என்னுடைய பேரப்பிள்ளைகள் வேர்மடி தேடும்போது வெறுமையாகிவிடக்கூடாது என்பதற்காக நிலவேறிய கிழக்கு வான் என்வீட்டு மொடடைமாடியில் இருந்து அந்திசாயும் தெற்கு முகம் சூரியன் விடைபெறும் மேற்கு எல்லை
  3. 4 points
    வாலி உங்கள் மூலப்பதிவு யாழ்களத்தில் இப்போதும் உள்ளது. இணைப்பு .யாழ் களத்தின் பதிவுகள் அனைத்தும் 2 வருடத்திற்கு மேல் பதில்கள் எதுவும் வைக்கப்படாது விட்டால் archive செய்யப்பட்டுவிடும். களத்தின் வேகத்தினை அதிகப்படுத்தவே இச்செயற்பாடு இங்கு உள்ளது. அவ்வாறான பதிவுகளுக்கு பதில்கள் வைக்கமுடியாதே தவிர அவை எப்போதும் பார்வைக்கு இருக்கும். அவ்வாறான பதிவுகளில் பதிவுகள் வைக்க விரும்பினால் அதனை மட்டுறுத்துனர் archive பகுதியில் இருந்து மீள பதிலளிக்கும் நிலைக்கு கொண்டுவரவும் முடியும். இதை நீங்கள் எழுதியபின் உங்களிடம் நான் தொடர்பு கொண்டு சில மாற்றங்களுடன் பாவிக்க அனுமதி கேட்டு உங்கள் அனுமதியுடன் தான் 2010 ம் ஆண்டில் இருந்து இந்த வரிகள் இங்கு பாவிக்கப்படுகின்றது.
  4. 2 points
    நெடுக்கு என்னுடைய வீடு எந்த நிறுவனத்தைக் கொண்டும் கட்டமைக்கப்படவில்லை. குத்து மதிப்பாக என்னுடைய எண்ணங்களை படமாக வரைந்து சதுர அடிகளையும் தீர்மானித்து அங்கு அனுப்பி அறிந்த ராஸ்மன் இருவரிடம் வரைந்து எடுத்து கட்டிடக்கலை அறிந்த உறவினர் ஒருவர் ஊடாக தொடர்புகளை சிறு சிறு குழுக்களாக உருவாக்கி அங்கு வாழும் எனது சகோதர் ஊடாக கட்டியது. தளம் தூண்கள் அத்திவார கனதி என்பனவற்றிற்கு தனிப்பட்ட முறையில் இஞ்சினியரிங்கோடு சம்பந்தப்பட்ட ஒருவர் கட்டடக்கலை நிபுணருக்கு ஊதியத்தோடான உதவி செய்தார். தனிப்பட்ட வேலை வாய்ப்பாக பலருக்கு அமைந்தது. 1984 ஆம் ஆண்டு சிங்கள இராணுத்தால் எரிக்கப்பட்ட வீடு பின்னர் திருத்தி அமைக்கப்பட்டது மீளவும் 87 ஆம் ஆண்டு ஒபரேசன் லிபரேசன் காலத்தில் இலங்கை இராணுவத்தால் சேதப்படுத்தப்பட்டது. மீளவும் அவ்வாண்டே பல வெடிப்புகளூடாக சீரமைக்கப்பட்டு வாழ்விடமானது அதற்குப் பின்னர் மீளவும்1992 இல் இலங்கை வான்படையின் பொம்மர் அடியில் சீரிழந்தது. அந்தக்கால வீடு பிறந்து வளர்ந்த வீடு அம்மாவின் இறப்பிற்கு பின்னர் பாட்டன் வழிச்சொத்தாக என் அண்ணன்களால் எனக்கு கையளிக்கப்பட்டது. அலங்கோலமாக ஒருவாயாக இருந்த என் பிறந்தகத்தை மீள மீள புனரமைக்கப்பட்டதால் வீடே நேர்த்தியின்றி சிதறிக்கிடந்தது. எனக்கு வீட்டைத்தந்ததால் என் சகோதரர்களாலும் அதனை மேம்படுத்தமுடியவில்லை. அதனை பெற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. நான் அங்கு வரவேண்டும் வாழவேண்டும் என்பதே இன்று வரைக்கும் அவர்களுடைய எதிர்பார்ப்பாகவும் என் சந்ததியின் உறவுக்கொடியை ஊரோடு வலிமையாக வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் என்னுடையவற்றை மிகவும் வாஞ்சையோடு வைத்திருக்கிறார்கள். என் முப்பாட்டன் தேடியவற்றை காக்கவேண்டிய கடப்பாடு எனக்கும் இருக்கிறது என் சந்ததிக்கும் தொடர்வதற்கான வழியை வைக்கவேண்டும்.
  5. 2 points
    இன்று உச்சாநீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்தில் நாளை முதல் "கொரானா டான்ஸ்"..!
  6. 2 points
    எளிமையான அருமையான சைடிஷ் ......!
  7. 2 points
    சகாரா அக்கா.. மீரா உங்கள் வீடுகள் சூப்பர். யாரால் இவை அமைக்கப்பட்டன.. மொத்த செலவினத்தின் மட்டத் தொகை.. என்ற விபரம் பகிர்ந்து கொண்டால்.. நவீன மனைகளை அமைக்க விரும்பும் யாழ் உறவுகளுக்கும் உதவும்.
  8. 2 points
    சாத்திரியார்..... உங்களுக்கும் வணக்கம். தமிழ் ஈழத்தின்... நம்பிக்கை நட்சத்திரமாக செயற் பட்டவர், தேசியத் தலைவர் பிரபாகரன். அதில் மாற்றுக் கருத்து, எதுவும்... உங்களுக்கு இருக்க முடியாது என நினைக்கின்றேன். ஒரு இனத்தின், நம்பிக்கை... நட்சத்திரத்தை இழப்பது மிகக் கொடுமையானது. இன்றும்... ஹிட்லர், சுபாஷ் சந்திர போஸ்... போன்றவர்கள், உயிரோடு... வாழ்கின்றார்கள் என்று, நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். தெரியுமா? நீங்கள்.... முன்பு, உங்களது வீட்டு "பல்கனியில்" வைத்து, மற்றவர்களை, கடுப்பு ஏத்துவதற்காக... அஞ்சலி, செலுத்திய படங்களும்.... நினைவில் உள்ளதை மறக்க வேண்டாம். அந்த நேரம், நீங்கள் செய்த வேலைக்கு..... நுணாவிலான், உங்களை... நீக்கியத்தில் எந்தத் தவறும் இல்லை. அது... அந்த நேரத்தில், எடுக்கப் பட்ட, சரியான..... முடிவு.
  9. 2 points
    நீங்கள் கூறுவதை யாராலும் தடுக்க முடியாதுதான். இழப்பின் வலி. இழப்பைத் தடுக்க முடியாத கோபம். புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கொடுத்தீர்கள் பாருங்கள் கோட்டாபயவுக்கு ஒரு நற்சான்றுப் பத்திரம்.. ***மக்களின் மரணங்களையும் அழிவுகளையும் ஒப்பாரியையும் முடிவுக்கு கொண்டுவந்தவர் இருக்கிறார். ** ஆகா.. இங்கேதான் நிற்கிறீர்கள் நீங்கள். சாதி, சமயம், பிரதேசவதத்திற்கெதிராக குரல் கொடுத்தீர்கள் பாருங்கள். அப்பப்பப்பா.. அப்போ.......எல்லாமே பில்டப்தானா... நன்றி கற்பகதரு. உங்கள் உண்மையான நிறத்தைக் காட்டியதற்கு.
  10. 2 points
    ஆதிரை ஆ திரை பரணி கேடடை (நட்ஷத்திரம் ) ஆரை என்பது நீர் நிலையில் வாழும் கீரை வகை திரை என்பது தோற்சுருக்கம்
  11. 1 point
    5 க்கு 4.62 புள்ளிகள் பெற்று 100% சிறப்பான பேராசிரியர் என்று மாணவர்களால் புகழப்படும் கள உறுப்பினர் நில்மினிக்கு வாழ்த்துகள். பின்வரும் இணைப்பை பாருங்கள்: https://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=2248908#ratingsList
  12. 1 point
    Before the presidential election he won last November, Gotabaya Rajapaksa laid out for Banyan his vision for Sri Lanka. It was a sunlit upland of peaceful, inclusive “knowledge-based” development. All the political bickering of recent years, “Gota” promised, would be swept aside by his programme of brisk, technocratic proficiency. His years as an army officer would ensure that. A military timbre to the former lieutenant-colonel’s rule was always on the cards. Mr Rajapaksa’s campaign dwelt on the need for a “disciplined society”. Viyathmaga, a social movement with political ambitions that backed him, counted many former officers among its leaders. The president’s personal network is rooted not just in his family (his elder brother, Mahinda, now prime minister, was himself president from 2005 to 2015). Gota commands the loyalty of past and present soldiers, a band of brothers from his time fighting a horrific, long-running civil war against Tamil insurgents, first as an officer and latterly as the powerful secretary of defence under Mahinda. After the war, the army and intelligence played a big role in public life and, most Sri Lankans assumed, in the disappearance of critics of the government, until Mahinda was unexpectedly defeated in the presidential election of 2015. Yet few predicted the extent to which under Gota’s rule military types would move into senior positions in government, development and even health, fighting the covid-19 epidemic. In a tally by the International Truth and Justice Project, a human-rights group, current or former officers include the president’s chief-of-staff and the heads of national intelligence, prisons and prisoner rehabilitation. Generals, past or present, are in charge of customs, the port authority, development, agriculture and poverty eradication. The army commander, General Shavendra Silva, runs the coronavirus task-force. Top brass are also expected to be named to plum ambassadorships. The president’s backers bridle at any suggestion that this is an unhealthy trend. They point out that the top customs job is an irresistible temptation to civilian incumbents. Yet they do not explain how it would be any more resistible to military men. As for handling the coronavirus, given that the bureaucracy is hidebound and civilian capacities are weak, deploying the armed forces and their logistical abilities makes sense—besides, the armed forces are widely admired. Yet it is weird for them to police a dubious liquor ban imposed by the teetotal president. And their enforcement of quarantine areas with hazmat suits and assault rifles is surely overkill. Moreover, the commanders’ claims of covid-competence have been undermined by outbreaks on military bases. Of 900-odd reported cases in Sri Lanka, over 500 are members of the armed forces or their close contacts. Nor is there much reason to believe that military men will do a better job of running ports, reducing poverty or increasing crop yields. For now, the main question is accountability. The positions filled by officers have little civilian oversight. It does not help that Mr Rajapaksa has dissolved the old parliament, while elections for a new one have been thwarted by the epidemic. The president and his aides govern by decree. It reinforces what Kanishka Jayasuriya of Australia’s Murdoch University calls the “normalisation” of military influence in the civilian sphere, as informal networks become formal under Mr Rajapaksa. The normalisation extends to business, where—as has long been the case in, for example, Myanmar—military types prosper alongside a new, assertive bourgeoisie grown rich on the back of property and infrastructure deals, much of it lubricated by Chinese loans. Former officers advise on projects’ security, while the army gets involved in slum clearance to make way for development. Academics and journalists say they are afraid to investigate the business links. Thus does Sri Lanka lurch further from liberal democracy. Gota has in the past railed at Banyan about the unfairness of external critics. He has no time for the un’s call for an investigation into crimes that may have been committed in the closing days of the civil war. He defends General Silva, who was banned from America earlier this year over suspected involvement in extra-judicial killings. As he and his band of brothers have long seen it, having saved Sri Lanka from fracturing, they are entitled to an outsize role in its future. With military efficiency, they are taking it. https://www.economist.com/asia/2020/05/14/sri-lankas-new-president-is-putting-soldiers-in-charge-of-everything
  13. 1 point
  14. 1 point
    பெரும் காணிகளில் தனித்த வீடுகள், விசாலமான வீடுகள் , சாளரங்கள் இடைவெளிகள் என்பனவற்றிற்கு நகரசபைகள் குளிரூட்டிகள் அற்ற நிலையில் வீடுகட்டுவதற்கான அநுமதியை வழங்குகின்றன. குறுகிய காணி, நெருக்கமான எல்லைச்சுவர்கள் ,விசாலமில்லாத அறைகள், காற்றோட்டத்தை இலகு ஆக்க முடியாத சாளர வடிவங்கள் என்பனவற்றுக்கு நகரசபைகள் அநுமதியை மறுக்கின்றன. அவ்விடத்தில் வீடு கட்டுவதாக இருந்தால் குளிரூட்டிகள் படங்களில் காட்டப்பட்டால் மாத்திரமே வீடு கட்டுவதற்கான அநுமதி கிடைக்கிறது. ஒரு வீடு கட்டுவதற்கு முறையே வீதியின் நடுவிலிருந்து 36 அடிகள் பின் தள்ளியே வீட்டின் முகப்பு அமைய வேண்டும். மற்றைய சுற்று எல்லைச் சுவர்களில் இருந்து குறைந்தபட்சம் 6அடிகள் உள் ஒதுங்கியே வீடு இருக்கவேண்டும் என்பது கட்டாய விதி.
  15. 1 point
  16. 1 point
  17. 1 point
    சிங்களம் ஒருபோதும் தமிழரை தனது தேவைக்கு வலிந்து இழுக்கவில்லை. எம்மில் சிலர் பதவி, அதிகாரம், பொருளாதார நலன்களுக்காக அவர்களுடன் ஒட்டிக்கொண்டு நிற்கிறோம். காலம் காலமாக இதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோமே.
  18. 1 point
    எல்லாருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மேலும் அவரவர் நீதியான தர்மமான முயற்சிக்கு ஏற்ப அடிப்படைக்கு அப்பால் அவரவர் தமக்கென அமைத்துக் கொள்ளும் வசதிகளுக்கும் வழிவிட வேண்டும். பொறாமை கொள்ளக் கூடாது. தமிழ் தேசியம் மாடி வீடு கட்டக்கூடாது என்றும் சொல்லவில்லை.. அதேவேளை குடிசைக்குள் பசி இருப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பதையும்.. ஏற்றுக் கொள்ளவில்லை.
  19. 1 point
    அந்தம்மாவின் கையில இவரை உயிரோட ஒப்படைக்கும் வரை நாங்கள் படுகிற பாடு இருக்கே ....ஸ்......சப்பா முடியல்ல.தக்காளி சட்டிக்குள் புகை எழும்பி அடிப்பிடிக்குது போல் இருக்கு வன்னியர்......!
  20. 1 point
    சகாரா & மீரா உங்கள் வீடுகள் வடிவாக அமைந்துள்ளீர்கள், மனமார்ந்த வாழ்த்துகள்.
  21. 1 point
    கையறு நிலையில் நின்ற எம் மக்களுக்கு ஆழ்ந்த நினைவாஞ்சாலிகள்.......!
  22. 1 point
    35வருடங்கள் சென்றாலும் மறக்கமுடியாத இந்தநாள்.. 15.05.1985 அன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்நோக்கி வந்த குமுதினிப் படகின் அன்றைய அரசின் கோரத்தாண்டவத்தினால் நீரினிலே நினைவிழந்த 36 உடன் பிறப்புகளுக்காக நினைவு சுமந்த எனது குரல் வடிவக் கவிதை தந்துள்ளேன். இந்தக்கவிதையை கேட்க click here <--
  23. 1 point
    வீர‌ப்ப‌ன் கொலையில் ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ்சுக்கும் தொட‌ர்வு இருக்கு , இத‌ அன்மையில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் நேர‌ம் அண்ண‌ன் வேல் முருக‌ன் வெளிப்ப‌டையாய் சொல்லி காட்டினார் / ந‌க்கீர‌ன் கோபாலு வீர‌ப்ப‌னை ச‌ந்திச்சி கிட்ட‌ த‌ட்ட‌ 10வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் வீர‌ப்ப‌ன் கொல்ல‌ப் ப‌ட்டார் , வீர‌ப்ப‌ன் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ யாரையும் கிட்ட‌ அனுக‌ விட‌ மாட்டார் , ந‌க்கீர‌ன் கோபாலு ஊட‌க‌ ச‌ந்திப்புக்காக‌ தான் போய் இருந்தார் , அப்ப‌டி பார்த்தா ந‌க்கிர‌ன் போன‌ கையோட‌ வீர‌ப்ப‌ன் இருக்கும் இட‌த்தை பார்த்து இந்திய‌ இர‌ணுவ‌ சிற‌ப்பு ப‌டை வீர‌ப்ப‌னை அப்ப‌வே கொன்று இருப்பாங்க‌ள் , ந‌க்கீர‌ன் கோபாலு ச‌ந்திச்ச‌ பிற‌க்கும் க‌ய‌வ‌ர்க‌ளை வீர‌ப்ப‌ன் போட்டு த‌ள்ளின‌வ‌ர் ஏனோ தெரிய‌ல‌ வீர‌ப்ப‌ன் மேல் என‌க்கு பேர் அன்பும் பாச‌மும் இருக்கு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
  24. 1 point
  25. 1 point
    எல்லாமுண்டு நம்மிடத்தில்! - கொரோனாவும் பழந்தமிழர்கள் விட்டுச் சென்ற பாடமும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்ற பெருமை நம் தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு. இவ்வார்த்தைகளைச் சற்று ஆழமாகச் சிந்தித்தால்தான், நம் மூப்பின் தன்மையை முழுதாக உணர இயலும். இயற்கையின் சீற்றத்தால் மலைகள் உடைந்து, பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கற்களாகி விட்டன. அந்தக் கற்கள், காற்று, மழை காரணமாக ஒன்றோடு ஒன்று உராய்ந்து மண் ஆக உருவெடுக்க வேண்டும். அப்படிக் கற்கள் மண்ணாக உருவெடுக்கும் முன்னரே தோன்றிவிட்டதாம் தமிழர்களின் வாழ்க்கை என்று சொல்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகுக்கு வழி காட்டியாகத் தமிழ்ச் சமுதாயம் இயங்கி வருவதை உலகே அறியும். கீழடி ஆய்வுகளும் இதை உணர்த்தும். கொரோனா என்ற கொடிய அரக்கனின் பிடியில் ஆரஞ்சுப் பழமாக அகில உலகமே பிழியப்பட்டு வரும் இவ்வேளையிலும், நமது பண்பாடும், நாகரிகமும், பழக்க வழக்கங்களும் உலகுக்கு வழிகாட்டியாக நிற்பதில் நமக்குப் பெருமைதான். தனித்திரு. விழித்திரு. பசித்திரு என்பது நமது தாரக மந்திரமே. அதைத்தான் உலகப்பந்து முழுமையும் இன்று ஒன்றாகக் கடைப்பிடிக்கின்றன. கடைப்பிடிப்பவை வாழ்கின்றன. உதாசீனப்படுத்துபவை பெரும் உயிரிழப்பைச் சந்திக்கின்றன. ழந்தமிழர்கள், உள் முற்றம் வைத்த ஒய்யார வீடுகளில் வாழ்ந்தார்கள். வெளியில் சென்று வந்ததும், உள் முற்ற அண்டாவிலிருக்கும் நீரைச் சொம்பால் எடுத்துக் கால், கைகளைக் கழுவி விட்டே உள்ளே சென்றார்கள். கந்தலானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி என்ற கொள்கைகளைப் பின்பற்றினார்கள். அவைதான் மனித வாழ்வுக்கு எப்பொழுதும் வேண்டியவை என்பதை இந்தக் கொரோனா இப்போது உலகிற்கே மெய்ப்பித்திருக்கிறது. உணவே மருந்து என வாழ்ந்த காரணத்தால்தான், இப்பொழுது சிலர் மருந்தையே உணவாகக் கொள்ளும் நிலையிலிருந்து மாறுபட்டு வாழ்ந்தார்கள். கடுகும், மிளகும், கார இஞ்சியும், முருங்கையும், கறிவேப்பிலையும் இன்ன பிறவும் இனிதான வாழ்வின் அடையாளங்கள் என்பதை அப்போதே அறிந்திருந்தார்கள். அதனால்தான் கொரோனாவால் கூட, ஒட்டுமொத்தமாக நம் மக்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. வாழ்க்கையில், இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். அடுக்கடுக்காய்த் துன்பம் வந்தாலும் அதையும் எதிர்த்து நிற்க வேண்டுமென்று போதித்தார்கள். மனிதர்களுக்குத் துன்பம் எப்படியெல்லாம் சேர்ந்து வந்து, சீரழிக்கும் வாழ்வை என்பதைத் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள். ஆவீன மழை பொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக மாவீரம் போகுதென்று விதை கொண்டோட வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள சாவோலை கொண்டொருவன் எதிரே செல்ல தள்ளவொண்ணா விருந்து வர சர்ப்பம் தீண்ட கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க குருக்களோ தக்கணைகள் கொடு என்றாரே. (ஆ-பசு;அகத்தடியாள்- வீட்டுத் தலைவி;மாவீரம்-மழை ) மழை பெய்யும் நேரம் பார்த்து வீட்டுப்பசு கன்று ஈன, வீட்டையொட்டி உள்ள மாட்டுக் கொட்டிலில் வீட்டுச் சுவர், மழையில் கரைந்து இடிந்து விழ, தெய்வாதீனமாகக் கன்றும் மாடும் தப்பிக்க, கன்றை அருகிருந்து கவனிக்க வேண்டிய வீட்டுத் தலைவி உடல் நலம் குன்றிப் படுத்திருக்க, எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டிய வீட்டு வேலைக்காரப் பெண்ணோ, திடீரென்று எதிர்பாராத விதமாக உயிரிழந்து விடுகிறாள். மழை பெய்யும் இந்த நேரத்தில் உரிய முறையில் விதைத்தால்தான், பலனை எதிர்பார்க்கலாம் என்ற நிலையில் வீட்டுத் தலைவர் விதையை எடுத்துக்கொண்டு வயலை நோக்கி ஓட, வழியில் அவரைக் கண்ட, கடன் கொடுத்தவரோ, `என் கடனைப் பைசல் செய்துவிட்டு விதையைத் தெளி அல்லது விதையை என்னிடம் கொடு’ என்று கூறி வழியை மறித்துக்கொள்கிறார். அந்த நேரம் பார்த்து, பக்கத்து ஊரிலுள்ள நெருங்கிய உறவினர் இறந்து விட்டதாகச் செய்தி வருகிறது. இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், பல நாள்களாக வருந்தியழைத்த விருந்தினர் இவர் வீட்டுக்கு வர, மாட்டைக் கவனிக்கலாம் என்று மாட்டுக்கொட்டிலுக்கு ஓடினால், உள்ளேயிருந்து வெளிக் கிளம்பிய பாம்பை, மாடு சீறித் துரத்த, கோபத்தில் அது இவரைக் கடிக்கிறது. இந்த இக்கட்டில், அரசவை ஆட்களோ நிலவரி கேட்டு வந்து நிற்க, உள்ளூர் கோயிலின் குருக்களோ, மண்டகப்படிக்கான செலவுக்கான பணம் கேட்டு வந்து நிற்கிறார். பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். என்பதற்கிணங்க பத்துக்கும் மேற்பட்ட இன்னல்கள் ஒன்றாகக் கைகோத்து வந்து தாக்கினாலும், மன உறுதியுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறும் வல்லமை வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லி வைத்தார்கள். அதன் பிரதிபலிப்பே மேற்கண்ட பாடல். இந்தக் கொடிய கொரோனாவையும் நம்மால் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். என்பதற்கான நம்பிக்கையைப் பாடல் மூலமாக அன்றைக்கே சொல்லி வைத்துவிட்டார்கள், உலக நிலைமையறிந்த நம் முன்னோர். முண்டாசுக் கவிஞனின் முத்தான பாடலையும் நாம் இங்கு நினைவுகூர்ந்தாக வேண்டும். அச்சமில்லை... அச்சமில்லை… அச்சமென்ப தில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்ப தில்லையே. இந்தப் பாடலை நாம் ஆழ்ந்து பார்த்தால்தான் இதன் முழுப் பொருளும் விளங்கும். இப்பொழுதெல்லாம் விண்ணிலிருந்து சற்று பெரிய கற்கள் விழுந்தாலே, நமது விஞ்ஞானிகள் நம்மைப் பயமுறுத்தி எச்சரிக்கின்றனர். சில மரங்கள் காற்றில் விழுந்தாலே நாம் பதறிப் பரிதவித்துப் போய் விடுகிறோம். ஆனால், பாரதியாரின் துணிச்சலைப் பாருங்கள். நமது தலைக்கு மேலே உள்ள வானம் முழுதாக இடிந்து பூமியை நோக்கிப் பூதாகாரமாக வந்தாலுங்கூட பயமில்லை என்கிறார். பாரதியின் வழித் தோன்றல்களாகிய நாம் கேவலம், கண்ணுக்குத் தெரியாத இந்தக் கொரோனாவிடமா பயந்து தோற்போம்.. நீங்கள் கேட்கலாம். பயந்துதானே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறோமென்று. புலி பதுங்குவது பாய்வதற்கே என்பதையே இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அஞ்சுவது அஞ்சுவதல்லவோ அறிவுடையார் செயல். இதைக் கூறிய வள்ளுவர்தான், காலமறிந்து செயல்பட வேண்டுமென்றும் கூறுகிறார். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. நேரங்காலம் சரியில்லாதபோது, சரியான மீனுக்காக ஒற்றைக் காலைத் தூக்கித் தவம் இருக்கும் கொக்கைப் போல, நாமும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். காலம் கை கூடி வரும்போது, அந்தக் கொக்கானது எப்படித் தப்பாமல் மீனைக் கொத்திக் கவ்வுகிறதோ, அதைப்போல நாமும் குறி தவறாமல் செயல்பட வேண்டும். இப்பொழுது நாம் ஒடுங்கியிருக்க வேண்டிய காலம். ஒடுங்கியே இருப்போம். காலங் கனிந்ததும், ஒன்றாய்ச் சேர்ந்து உழைத்து உயரலாம். இன்னும் நம் வாழ்க்கை செம்மையுற எத்தனையோ சொல்லப்பட்டிருந்தாலும், ஒன்றைக் கூறி நிறைவு செய்வோம். சங்கு வெண்டாமரைக்குத் தந்தை தாய் இரவி தண்ணீர் ஆங்கதைக் கொய்துவிட்டால் அழுகச் செய்தே கொல்லுமந்த நீர் துங்கமன் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான் தங்களின் நிலைமை கெட்டோர் இப்படித் தயங்குவரே. தண்ணீர்த் தடாகத்தில் வளர்ந்திருக்கும் தாமரைக்குத் தந்தை, மேலிருக்கும் சூரியன்; தாயோ, உடனிருக்கும் தண்ணீர்தான். நீரிலிருக்கும் தாமரையைத் தண்டுடன் பிடுங்கி, தாயான தண்ணீருடனே வைத்திருந்தாலும், அத்தாய் அதைக் காப்பாற்றாமல் அழுக விட்டு விடும். சரி. தாய்தான் காப்பாற்றவில்லை. வானத்திலிருந்து கொண்டு உலகையே காத்திடும் தந்தை பார்த்துக்கொள்ளட்டு மென்று அத் தாமரைத் தண்டைத் தூக்கிக் கரையில் போட்டு, சூரியனிடம் காட்டினால், தந்தை சூரியன் அதை வாடி வதங்க வைத்து விடுகிறான். இது போல்தான் மனித வாழ்வும். தங்களின் நிலைமையிலிருந்து கீழிறங்கியவர்களை எந்தச் சக்தியாலும் காப்பாற்ற முடியாது. உன் வாழ்க்கை உன் கையில். என்ற நாலடியாரின் கருத்தும், Nobody can give you Wiser advice than yourself என்ற ஆங்கிலப் பழமொழியும் ஈண்டு நினைவுகூரத் தக்கவை. வாழ்க்கை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெளிந்த நீரோடை. பலருக்கு அது பயங்கர அலைகளும், பெருங்காற்றும், உயிர்க்கொல்லும் திமிங்கிலங்களும் நிறைந்த கொந்தளிக்கும் கடல். அவையனைத்தையும் கடந்து கரை ஏறுபவனே உண்மையான மனிதன். நாமும் உண்மையான மனிதர்களாக இருப்போம். உறுதியுடன் எதிர்ப்போம் இந்த உருக்காட்டாத கொரோனாவை. -ரெ.ஆத்மநாதன்(விஜய்) https://www.vikatan.com/oddities/miscellaneous/tamil-tradition-and-corona-outbreak
  26. 1 point
    ஓம் அண்ணா. நாங்கள் பல வருடங்களாக பாவிக்கிறோம் . அத்துடன் காலிங் கார்ட்(calling card) போல மிகுதியை தொலைக்க தேவை இல்லை. மிகுதி அப்படியே இருக்கும். நிமிடத்துக்கு ஒன்று இரண்டு சதம் அதிகமாக எடுக்குமோ தெரியவில்லை. காலிங் கார்ட் இல் அநேகம் பேலன்ஸ்(balance) காணாமல் போவதிலும் இது பரவாயில்லை.
  27. 1 point
    வாவ் சகாரா வீடு அந்த மாதிரி இருக்கு.மனமார்ந்த வாழ்த்துக்கள். 5FD171E6-394C-4338-BDDD-2B8392076699 மீரா அடுக்கு மாடி இரண்டு வீடு ஒன்றான மாதிரி இருக்கு. சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
  28. 1 point
    இன்று காலை செய்தேன், நல்ல சுவை
  29. 1 point
    நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை Bharati May 15, 2020 நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை2020-05-14T23:06:57+00:00உள்ளூர் கிழக்குத் தீமோரின் முன்னாள் பிரதமரும், அதிபருமாகிய José Manuel Ramos-Horta அவர்கள், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கான குரலாக தமிழனப்படுகொலையின் 11வது ஆண்டு தேசிய துக்க நாளில், முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை வழங்க இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. José Manuel Ramos-Horta அவர்கள் கிழக்கு தீமோரின் விடுதலைப்போராளியாகவும், சமாதானத்துக்கான நோபால் பரிசு பெற்றவரும், இராஜதந்திரியுமாக இருப்பதோடு, கிழக்குத் தீமோர் சுதந்திர தேசத்தின் பிரதமராகவும் (2006-07) , அதிபராகவும் (2007-12) பொறுப்புக்களை வகித்தவர். உலகின் முக்கிய ஆளுமைகள் பங்கெடுத்துக் கொள்ளும் முள்ளிவாய்க்கால் பேருரை (Mullivaaikkaal Memorial Lecture) நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் மே18 நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்த்தி வருகின்றது. இம்முறை கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி நிகழ்வினை முன்னெடுக்க முடியாத சூழலில், இணையவழியூடாக முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மே18ம் நாள், திங்கட்கிழமை (அமெரிக்க நேரம் 11 am, ஐரோப்பா 5 pm , தமிழகம், தாயகம் 9h30 ) இணையவழி www.tgte.org / Facebook : @tgteofficial மூலமும், உலகத்தமிழர் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் அவர்களுடைய பேருரையினைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கபட்ட மக்களுக்கான நீதியின் குரலாக தொடர்ந்து உழைத்துவருவதோடு, உலக மட்டங்களில் அமைதிக்கும், இராஜதந்திர அணுகுமுறைக்குமான தூதராரக உலகத்தினால் மதிக்கப்படுபவரராக José Manuel Ramos-Horta விளங்குகின்றார். கொரோனாவுக்கு பின்னராக உலகச்சூழலில் தமிழர்கள் தமக்கான நீதியையும், அரசியல் இறைமையினையையும் பெற்றுக் கொள்வதற்கு, தனது நீண்ட அனுபவத்தின் ஊடான அணுகுமுறைகள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://thinakkural.lk/article/41773
  30. 1 point
    சின்னிலிருந்து எந்த விலங்கினத்தையும் பழக்கி எடுக்காலம், மக்கள்தான் ஏமாறுகின்றார்கள்
  31. 1 point
    கவிதைக்கு மிக்க நன்றி. இந்த கொடூரமான கொலை இன்னமும் கண் முன் நிற்கிறது.
  32. 1 point
    இத்திரியை முதலில் இருந்து வசித்த(குறிப்பாக உங்களுடைய மூன்றாவது பதிவில்) எல்லோருக்கும் தெரியுது நீங்கள் எப்படி,எதனால், எதற்க்காக வந்தீர்கள் என்று தொடருட்டும் உங்கள் பணி.
  33. 1 point
    எவ்வளவு காலத்துக்குத்தான் இவற்றை பேசிக்கொண்டு இருக்கப்போறியல். நானும் பலவருடங்களாக பார்த்தவரைக்கும் ஒருவர் வந்து அந்த திரிக்கே சம்பந்தமில்லாத விடய(ச}த்தை தூவிவிட்டு சென்றுவிடுவார் நீங்களும் இதுதான் தருணமென்று தொடங்கிவிடுவீர்கள். இடையில் வந்து கொஞ்சம் எண்ணெயும் ஊதிவிட்டு போவார் நீங்களும் உங்களுக்குள் தொடர்ந்து தர்க்கப்பட்டு கொண்டிருப்பீர்கள் நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள் கடந்த பத்து வருடத்தில் எத்தனை முறை இவ்விடையத்தை பற்றி பேசியிருப்பீர்கள். இதனால் எதாவது நன்மை நடந்ததா? இந்த பத்துவருடத்தில் இப்படிபடடவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கும் உங்களையெல்லாம் ………..
  34. 1 point
  35. 1 point
    முள்ளிவாய்க்கால் நினைவு மரநடுகை: மரக்கன்றுகள் வழங்குநர்களின் விபரத்தை வெளியிட்டார் சி.வி. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள் வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நினைவு நாளன்று பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இதனால், மக்களின் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை அன்றைய தினம் காலையில் நாட்டுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தவகையில், மரக் கன்றுகளை யாரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கந்தையா இராஜதுரை (0718584882), வவுனியா மாவட்டத்தில் விநாயகமூர்த்தி குககேசன் (0775024784), மன்னார் மாவட்டத்தில் ஆறுமுகம் செல்வேந்திரன் (0774349363), முல்லைத்தீவு மாவட்டத்தில் நடனசாபாபதி வன்னியராஜா (0775027674), கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி பரிமளராஜ் (பாமகன்) (0776550030), திருகோணமலை மாவட்டத்தில் சிவசுப்பிரமணியம் நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்) (0753113541), மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்.உதயராஜ் (0779080697, 0713109938) ஆகியோரின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகையில், “எமது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இந்த மரம் நாட்டும் பணியில் அன்றைய தினம் ஈடுபடுவார்கள். கொரோனா வைரஸ் சம்பந்தமாக தரப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மனதிற் கொண்டு அவற்றிற்கு அமைவாக பயன்தரு மரம் நாட்டல் செயற்பாட்டை முன்நடத்துங்கள்! அதுமட்டுமன்றி எமது மக்கள் யாவரும் வரும் மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்தில் (18-18-18) நீங்கள் இருக்கும் இடங்களில் 2009 மே மாதம் இதே தினத்தன்று முள்ளிவாய்க்காலில் மரணித்தோர் நினைவாக விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் செய்ய வேண்டுகின்றோம். அரசாங்கப் படைகள் அன்று செய்த கொடூரமான மனிதாபிமானமற்ற செயலை இன்றும் நாம் கண்டிக்கின்றோம் என்பதுடன் இந்த மனோநிலையுடன் அன்று எமது மக்கள் யாவரும் மாலையில் விளக்கேற்ற வேண்டும் என்று பணிவன்புடன் நாம் கேட்டுக் கொள்கின்றோம்” என அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-8/
  36. 1 point
    2ம் நாள் அஞ்சலி; வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்றது. 1995 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் திகதி விமானப் படையினரின் விமான குண்டு வீச்சில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்ட நவாலிசென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இன்று காலையில் இருந்து 60க்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அஞ்சலிக்காக அங்கே வந்திருந்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்தின் மற்றும் சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோருடன் பொலிஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் குறிப்பிட்ட நேரத்திற்குள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களும் அஞ்சலியை செலுத்தினர். https://www.ibctamil.com/srilanka/80/143201
  37. 1 point
    முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நடைமுறைகள்! முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாள் நடைமுறைகள் தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, சிங்கள-பௌத்த அரசினால் முள்ளிவாய்க்காலில் திட்டமிட்டு தமிழினம், வயது வேறுபாடின்றி, பால் பாகுபாடின்றி துடி துடிக்கக் கொல்லப்பட்ட 11ஆம் ஆண்டு நிறைவு எதிர்வரும் 18.05.2020 அன்று முள்ளிவாய்க்கால் நின்னைவேந்தல் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் முற்பகல் 10:30 மணிக்கு நினைவுகூரப்படும் . இது ஓர் தேசிய நினைவெழுச்சி நாள், உட்பூசல்களைத் தவிர்த்து தமிழ்த்தேசியத்தால் ஒன்றுகூடும் நாள். கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட எம்உறவுகளுக்காய் நீதி வேண்டிய பயணத்தில் தமிழராய் ஒன்றிணையும் நாள். அன்றய தினம் பிற்பகல் 7மணிக்கு அனைத்து வணக்கத்தலங்களிலும் விசேட மணி ஒலி எழுப்பி இப்பேரவலத்தை நினைவேந்துமாறும் அச்சந்தர்ப்பத்தில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூருமாறும் முள்ளிவாய்க்கால் பேரவல நிலமையை நினைவுபடுத்தும் வகையில் அன்றய தினம் கஞ்சி தயாரித்து பகிர்ந்து கொள்ளுமாறும் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/143232
  38. 1 point
    போர்க்குற்றவாளி கோட்டாபய கடத்தல், கப்பம், தரகுப்பணம் மூலம் கொள்ளையிட்ட ஆயிரமாயிரம் கோடி பணத்தில் சிறு தூசுக்கு கூட இணையற்ற அளவு.
  39. 1 point
    சுமந்திரனுக்கு இந்தியாவிலும் அடி!! உருவப் பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்ட வீடியோ காட்சி சுமந்திரனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, பெட்ரோல் ஊற்றி எரித்தார் இயக்குநர் மு.களஞ்சியம். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 8-ம் தேதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் truth with chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணலில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன்.விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நான் ஏற்றதில்லை என்று விமர்சித்தார், அதோடு தான் சிங்களவர்களோடு கொழும்பில் வாழ்வது எனது பாக்கியம் என்றும் சொன்னார். தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை விமர்சித்துப் பேசச் சுமந்திரனுக்கு உரிமை இல்லை. வடக்கு கிழக்கு உட்படத் தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் அகிம்சை வழி போராட்டத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆயுதம் ஏந்தி போராடியது. ஆயுத போராட்டம் தமிழ் மக்களுக்குள் திணிக்கப்பட்டது அல்ல. அந்த போராட்டம். தமிழ் மக்களுடன் இணைந்து பௌத்த, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட ஆயுத போராட்டம். இது குறித்துப் பேச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அருகதையில்லை. பௌத்த, சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல் அடக்கு முறையைக் கட்டவிழ்த்த போது அவருடைய ஐந்து வயதிலிருந்து, அதாவது ஐம்பது வருடங்கள் கொழும்பு சென்று வாழ்ந்து வந்த சுமந்திரனுக்கு, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களை அறியாத சுமந்திரனுக்கு ஆயுத போராட்டம் பற்றி என்ன தெரியும்? சுமந்திரனின் கருத்தானது தமிழ் மக்களின் விடுதலைக்காப் போராடிய போராளிகள், போராடி தமது உயிர்களைக் காவியமாக்கிய மாவீரர்களையும், தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவேகருதுகின்றோம். இவ்வாறாக விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட சுமந்திரனை வன்மையாகக் கணிக்கும் விதமாகவும் இனி எதிர்காலத்தில் இது போன்ற பேச்சுக்களைப் பேசக்கூடாது என எச்சரித்தும், ''தனி ஈழம் ஒன்றே தீர்வு'' என்கிற வீட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மே-14 தேதி, எமது தமிழர் நலப் பேரியக்கத்தின் சார்பில் சுமந்திரனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, பெட்ரோல் ஊற்றி எரித்தோம். https://www.ibctamil.com/india/80/143242?ref=imp-news
  40. 1 point
    கடலிலும் அலை வழமையை விட அதிகம் உள்ளே வந்ததாக கூறுகிறார்கள். புவிப் பெருந்தட்டுகளின் நகர்வால் ஏற்பட்ட அமுக்கத்தினால் இருக்கும் சாத்தியமுண்டு.
  41. 1 point
    உங்கள் வீட்டில் ஆயுதக் குழு இரத்தம் சித்த வைத்தது என்றால்.. எங்கள் வீட்டையே இல்லாமல் செய்தது சிங்களமும் அதன் ஆயுதப்படையும். ஆயுதக் குழுக்கள் உருவாக முன்னமே எங்கள் குடும்ப உறவுகள் 1950 களில்.. கொழும்பு வீதியில்.. சிங்கள காடை ஆயுதக் குழுக்களால்.. தார் போட்டு எரிப்பட்டு விட்டனர். வீடுகள்.. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்கமுவ பகுதியில் இருந்த அவர்கள் முழுக் கடைத்தொகுதியும் கொள்ளையிடப்பட்டு தீயிடப்பட்டது. அதேபோல்.. கொழும்பில் எம் உறவுகள் பிரேமதாசவின் கைக்கூலி ஆயுதக் கும்பலால்.. சுட்டுக் கொல்லப்பட்டனர். புறக்கோட்டையின் 40 சதவீத மொத்த வியாபாரத்தை தம் கையில் வைத்திருந்த அந்த உறவுகளின்.. உறவுகள் அனாதைகள் ஆயினர்.. அதிக காலமல்ல.. 1989 இல். உங்கள் அனுபவத்தில்.. நீங்கள் ஆயுதக் குழுக்களை திட்டினால்.. எங்கள் போன்று.. வடக்கிலும் கிழக்கிலும்.. மேற்கிலும் தெற்கிலும்.. மலையகத்திலும் சிங்கள ஆயுதப் படைகளால்.. கூலிகளால்.. முஸ்லிம் காடைகளால்.. ராசிக் கும்பல் கூலிகளால்.. ஊர்காவற்படை கூலிகளால்.. எம் இனத்துரோகிகளால்.. அழிக்கப்பட்ட இரத்தம் சித்தப்பட்ட எம் மக்களில் எத்தனை பேர் அவர்களை திட்ட முடியும். அது உங்கள் ஒருவரின் திட்டு அல்லது சிலரின் திட்டு அதற்கு என்றுமே ஈடாக முடியாது. இன்றும்.. 1991 இல் 1996 இல் சிங்களப் படைகள் குண்டு வைத்த வீடுகள்... டாங்கி போட்டு உழுத வீடுகள் எத்தனை எத்தனை. வீடுகள் என்ன புலிகளாக சண்டை போட்டனவா..??! தமிழர்களின் இருப்பை அழிக்கனும் என்றே.. திட்டமிட்டு அழிக்கப்பட்ட வீடுகள் பல. இவை புரியாத உங்கள் போன்றோரின் இழிகுரல்.. மனிதமே இல்லாத ஒரு கேவலம். பிள்ளையை கேட்டார்கள் என்கிறீர்கள்.. எத்தனை பெற்றோர்.. 1980 களின் ஆரம்பத்தில் யாழ் நகர சுற்றிவளைப்புக்களில்.. தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்து.. பூஸா முகாமுக்கு ஓடித்திருந்த... ஆறுகளில் சடலங்களாக அவற்றை கண்டபோது பொங்கித் தவித்தார்கள். எத்தனை பள்ளிக்கூட மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவற்றை தடுக்க வீட்டுக்கு ஒருவர் வா என்பதில்.. என்ன அபந்தம். சிங்களப் படைக்கு ஓட ஓட ஆள் திரட்டிய போது அந்தப் பிள்ளைகளை நோக்கி ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கவில்லை உங்கள் முதலைக் கண்கள். ஆக.. கேலவம்.. ஒரு இனத்தினை கூட்டுச் சேர்ந்து அழித்துவிட்டு அந்த இனத்தின் மீது பழிப்பையும் செய்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒரு மிலேச்சத்தனமான மனிதன் இந்த உலகில் இருக்கவே முடியாது. நீங்கள் எல்லாம் ஜேசுவை வணங்குகிறீர்களாம்..?! பாவம் அவர்.
  42. 1 point
  43. 1 point
    மது அன்பர் --- மது அருந்துபவர்களை நேசிப்பவர். மது கருணையர் ---- மது வெறியில் மண்டை உடைந்து கிடப்பவருக்கு முதலுதவி செய்ப்பவர். மது பயணியர் ---- வீதியில் விழுந்து கிடப்பவரை வீடுவரை கொண்டு சேர்ப்பவர்......!
  44. 1 point
    கவலையான விடயம், பெற்றோர்கள் தான் கவனமாக பார்க்க வேண்டும்
  45. 1 point
    சிங்களவர்கள் மீதோ சிங்கள மொழிமீதோ எமக்கு விரோதம் இல்லை எமது மண்ணில் அழிக்கப்படும் தமிழ் மொழியும் தமிழ் உயிர்களும்தான் எமக்கு அடிப்படை பிரச்சனை. எமது மாவீர்கள் சிந்திய குருதியின் மணத்தை அதில் வாழும் மனிதர்கள் மறந்தாலும் அந்த மண் ஒரு போதும் மறக்கபோவதில்லை. அது வெறும் மண்ணாக மட்டும் இல்லை எமது பாதி உயிராகவும் இருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்களோ? அமெரிக்கர்களோ? எக்காலத்திலும் மாறப்போவதில்லை ஒரு சாரர் கொஞ்சம் மனம் மாறி கொள்வார்கள் அதுவும் தமது வாழ்வை நிவர்த்தி செய்யும் ஒரு சுயநல போக்குதான். அவர்கள் சிங்கள ஆதிக்கத்தையோ வெள்ளையின வெறியையோ பெரிதாக எதிர்க்க போவதில்லை காரணம் அவர்களுக்கு அதில் லாபம் என்று ஏதும் இருக்க போவதும் இல்லை. இப்போதைய அமெரிக்க வெள்ளையின துவேஷிகள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? டிராம் அதிபராக வரும் முன்பும் அவர்கள் இங்குதான் இருந்தார்கள் இப்போது வெளிப்படையாக வெளியில் வருகிறார்கள் அவளவுதான். உணர்வுகளை கொலைசெய்துவிட்டு வாழ்வது என்றால் ஏன் அங்கு போகவேண்டும் அதை இங்கேயே செய்துகொண்டு வாலாமே? சிங்கள ஆதிக்க வெறியாலும் துரோகங்களாலும் எமது மண்ணும் மொழியும் நாளும் நாளும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இங்கிருந்தும் ஒன்றும் வெட்டி புடுங்க போவதில்லை அங்கு போய் நாலு சிங்களவருக்கு எடுத்து சொல்லி அவர்களாவது புரிந்துகொண்டால் பெரும் வெற்றி என்று நீங்கள் எண்ணுவதும் சரியானதுதான். வலிகள் என்பது எவ்வளவு அடிபட்டோம் என்பதை பொறுத்தது குட்டிமணியின் கண் உயிருடன் பிடுங்கப்பட்ட போது எல்லா தமிழ் கண்ணுக்கும் ஒரே மாதிரி வலித்திருந்தால் ...... எமது நாடு இன்று வேறு விதமாக இருந்திருக்கும் என்பதுதான் இவ்வளவு உயிர்களை பறிகொடுத்து நாம் புரிந்துகொண்டது.
  46. 1 point
    நியாயமான சந்தேகம். ஏனெனில், நெருக்கடி நிலைகளின் போதெல்லாம் கொள்ளையடித்து சொத்து சேர்த்து வளர்ந்தவர்கள் தான் இந்த இராஜபக்ச பயங்கரவாதிக் குடும்பத்தினர்.
  47. 1 point
    தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வது சரணாகதி அரசியல் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வது சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகளிடம் தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து, அவர்களின் தமிழின அழிப்புக்கு துணை போய்க்கொண்டு அவர்களிடம் இரகசியமாக பெட்டி பெட்டியாக பணத்தைப் பெற்று தம்மை வளர்க்கும் அரசியல் என்கிறார் சிவமோகன்.
  48. 1 point
    மக்களை ஏமாற்றும் காலக்கெடுக்காலாக வருடப்பிறப்புகளும், தீபாவளிகளும், பொங்கல்களும் போய் இப்போது உரிய நேரம் பற்றி சாத்தான் சம்மந்தரின் புதிய உளறல் தொடங்கியுள்ளது.
  49. 1 point
    இவர்களும் யாழில் எழுதினார்கள் என்று இன்றைக்கு தான் தெரியும் ...கறுப்பி சுமதி என்பவர் அர்ஜுன் அண்ணாவின் தங்கச்சியா? அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள்
  50. 1 point
    அரசியல் தீர்வில்லையென்றால் அரசியலைவிட்டு வெளியேறுவேன் என்று மக்களை ஏமாற்றித் திரிந்த சுமந்திரன் தற்போது தனக்கும் தான் புதிதாக கண்டுபிடித்த பெண்மணிகளுக்கும் அமைச்சு பதவி கிடைக்குமா எனத் தேடித் திரிவதாக தெரிகிறது.