• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Content Count

      11,101


  2. போல்

    போல்

    கருத்துக்கள உறுப்பினர்கள்


    • Points

      7

    • Content Count

      6,134


  3. tulpen

    tulpen

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      2,744


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      30,400



Popular Content

Showing content with the highest reputation on சனி 23 மே 2020 in all areas

  1. 5 points
    நீண்ட காலத்தின் பின்னர் குடும்பத்துடன் ஒரு நாள் இனிய மலை நடைபயணம் செய்ய கூடிய சந்ததப்பம் நேற்று கிடைத்தது. சுவிற்சர்லாந்தில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை. நான் வசிக்கும் இடத்தில் இருந்து கிட்ட தட்ட 100 கி. மீ தூரத்தில் உள்ள Grindelwald என்னும் இடத்தை தெரிவு செய்தோம். கடல் மட்டத்தில் இருந்து 1030 மீற்றர் உயரமான பிரதேசம். நடந்து போகும் பாதை மிகவும் அழகான இயற்கை காட்சிகளை கொண்டதாக இருந்தது. மிக ரம்மியமான காற்றுடன் கூடிய காலநிலை பயணத்தை இன்பமூட்டியது. அல்ப்ஸ் மலை தொடரின் Wetterhorn, Eiger,Faulhorn, Mittelhorn, Mättenberg மலைகளின் சிகரங்களின் அழகான காட்சிகள் மனதிற்கு இதம் தருவதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அங்கு செலவிட்டோம். அங்கு எடுத்த படங்களை யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். சுவிற்சர்லாந்திற்கு வர சந்தர்ப்பம் கிடைத்தால் யாழ்கள உறவுக்கள் மலை நடைப்பயணத்திற்கு இந்த பிரதேசத்தை தெரிவு செய்யயலாம். மிக அழகான இயற்கை காட்சிக்கள் மனத்திற்கு மிகவும் சந்தோசத்தை கொடுக்கும். Bernerhighland ல் இருக்கும் Interlanken நகரத்தை அண்டியுள்ள இப்பிரதேசம் இயற்கை அழகு கொண்டது.
  2. 3 points
    கொத்து ரொட்டி தேவையான பொருட்கள் மா - 500 g ஜீஸ்ட் - 2 மே. கரண்டி உப்பு - 1 மே. கரண்டி தண்ணீர் - அளவானது இறைச்சிக் கறி / சோயாக்கறி பெரிய வெங்காயம் - 6 பச்சை மிளகாய் - 8 முட்டை - 6 / 8 எண்ணெய் - அளவானது செய்முறை வீடியோ இணைப்பில் பாத்திட்டுப் போகாமல் Like செய்து Subscribe செய்யுங்கோ உறவுகளே
  3. 3 points
    உண்மையிலையே நீங்கள் ஒரு சிற்பி. நீங்கள் அரிக்கனாலை எல்லாத்தையும் அரிச்சுப்போட்டு......அரிக்கனிலை மிஞ்சியிருக்கிற வண்டு ,புளு ,கல்லு, உமி, சப்பி, கஞ்சல், கடைசல் அதுகளை பாத்து கதைக்கிறியள். எம்மில் இருக்கும் கள்ளர் காடையர்களை விடுத்து தமிழர் வரலாறுகளில் உள்ளவர்களை பாருங்கள். நாட்டுக்கும் உலகிற்கும் தியாகம் செய்த தமிழர்களை பாருங்கள். மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்லதே கண்ணுக்கும் மனதிற்கும் தெரியும்.
  4. 2 points
    கனகரிடம் கிளாசை கொடுத்து " அண்ணே எடுங்கோவன் என்றேன்", "லட்சுக்கு சொல்லாமல் வந்திட்டேன் இரு போனில் சொல்லிபோட்டு வாரேன்" ,கனகர் அந்த காலத்தில காதலிச்சு கலியாணம் செய்த மனிதன் இன்றும் அதே காதலுடன் தான் இருக்கிறார்.மனைவியின் விசயலட்சுமி என்ற பெயரை சுருக்கி லட்சு என்று அழைக்கிறார் இன்றுவரை என்றால் பாருங்கோவன் ஐபோனை எடுத்தார் போன் ஸ்கிர்னில் லட்சுவின் இளமை போட்டோவை ஒர் சின்ன தட்டு தட்டினார் "ஹலோ " "லட்சுயம்மா நான் சுதா வீட்டை நிற்கிறேன் ,கொஞ்சம் லெட்டாத்தான் வருவன் தேடாதையும்" போனை கையால் பொத்திக்கொண்டு "லட்சுக்கு பொர் அடிக்குதாம் என்ன செய்ய" என்றார் . அவவையும் வரச்சொல்லுங்கோவன் என்றேன். "நான் சொன்னா வரமாட்டா ,சுதாவிட்ட சொல்லு கூப்பிடசொல்லி" "சுதா!! மாமியை வரச்சொல்லி சொல்லும் மாமா தேடுகிறார்" "மாமா தேடவில்லை உங்களுக்கு தண்ணியடிக்க பாட்னர் அதுக்கு எங்கன்ட மாமாவை பயன்படுத்த்றீயள் என்ன" என செல்லமா அதட்டியபடி மாமாவின் கையிலிருந்த போனை வாங்கி "ஹலோ மாமி புட்டு அவிக்கிறேன் வீட்டை வாங்கோ நான் உங்களை கூப்பிட இருந்தனான் அதுக்குள் மாமா கொல் எடுத்திட்டார் ,வெளிகிடுங்கோ நான் வந்து பிக்கப் பண்ணுகிறேன்" மாமி வாரவாம் என்று சொல்லியபடி மாமாவிடம் போனை கொடுத்து விட்டு ... "மாமி வாரா இரண்டு பேரும் பார்த்து பாவியுங்கோ" என்று கூறியபடி காரடிக்கு சென்றாள் சுதா. "உவள் வந்து கிளாஸ் கணக்கு கேட்க‌ முதல் இரண்டு பெக் அடிச்சு போட வேண்டும்" போதலை திறந்து தனது இஸ்டத்திற்கு அருந்த தொடங்கினார். "டேய் நீ உந்த பன்டமிக்கை பற்றி என்ன நினைக்கிறாய்" என்னை டேய் என்று அழைக்க தொடங்கிற்றார் என்றால் மாமா அடுத்து உலக நடப்பு தான் கதைப்பார் அதுதான் அவருடைய வழமை. "உவன் அமெரிக்கன் தான் உந்த வைரஸை பரப்பி போட்டு இப்ப சீனாக்காரனை பிழை சொல்லுறான்" " ஏன் அப்படி சொல்லுறீயள்" வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்டவுடன் "வந்திட்டாளவையள் போல, இந்த கிளாஸுக்குள் கொஞ்சத்தை ஊற்றிபோட்டு போத்தலை ஆங்கால கொண்டுபோய் வை" அவர் சொன்னமாதிரி செய்து போட்டு .. ""அண்ணே அப்ப நீங்கள் சொல்லுறீயள் அமெரிக்கன் தான் செய்திருக்கிறான் எண்டு ,நான் நினைக்கிறேன் உவங்கள் சப்பட்டைகள்தான் செய்திருப்பாங்கள்" "இஞ்ச உந்த பட்ட பெயர் சொல்லி ஆட்களை விழிக்கிறதை நிறுத்து உது எல்லாம முதலாளித்துவ சிந்தனையுள்ள உன்னை போல ஆட்களுக்கு கை வந்த கலை" "சரி அண்ணே மன்னியுங்கோ, ஏன் அமெரிக்கன் தன்ட மக்களை கொல்லப்போறான்" "அது முதலாளித்துவ சிந்தனை தான் ,சீனா வல்லரசாக மாறப்போகுது என்ற பயத்தில தன்னட மக்களை கொல்கின்றான் அத்தோட உந்த கொரானாவுக்கு வக்சின் என்று மருந்தை கண்டுபிடிச்சு நல்ல வியாபாரம் செய்யபோறாங்கள்..." "அண்ணே எதற்கு எடுத்தாலும் சும்மா முதலாளித்துவத்தையும் அமெரிக்காவையும் குற்றம் சாட்டாமல் உங்கன்ட மாவோ சிந்தனையையும் மீள்பரிசீலனை செய்யுங்கோ" "டேய், டேய் நீ ஒரு முதலாளித்துவ அருவருடி உன்னோட எங்கன்ட புனித தாலிவர் மாவோவின் சிந்தனையை பற்றி கதைக்கிறது வேஸ்ட்" "சரி அண்ணே ,உங்களுக்கு தெரியுமோ ஜெ.வி.பி காலத்தில ஒரு கதை அடிபட்டது ஜெ.வி.பி ஆட்சி அமைத்தால் வயோதிபர்களை கொலை செய்துவிடுவார்கள் எண்டும் அதற்கு ரோகணா விஜயவீர விடுதலையான பின்பு ...,எனது பெற்றோர்களை நான் கொல்வேனா என மறுப்பு தெரிவித்ததும்" "இப்ப ஏன் அதை இதுக்குள்ள கொண்டுவாராய்...." "இல்லை இப்ப கொரானாவில் இறந்தவர்களில் 90% வயோதிபர்கள் தானே மாவோ சிந்தனையின் ஒரு வடிவமோ" "டேய் டேய்" மாமாவின் குரல் கொஞ்சம் உயர தொடங்கியது "என்ன சத்தம் அங்க‌ ,சாப்பாடு ரெடி வாங்கோ இரண்டு பேரும்" மாமியின் குரல் கேட்டவுடன் மனுசன் பெட்டி பாம்பாகிவிட்டார். இவரின்ட சத்தம் வீட்டுக்குள்ள தான் போல எண்ணிகொண்டிருக்கும் பொழுது "இஞ்சயப்பா மாமாவையும் கூட்டி க்கொண்டு வாங்கோ சாப்பிட இனி காணும்" உடனே கையிலிருந்த கிளாசை மேசையில் வைத்து விட்டு நானும் மாமாவை பின் தொடர்ந்தேன். மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது.மாமி சாப்பிடுவதற்காக கையை கழுவிக்கொண்டிருந்தார். "ஹலோ மாமி" என்றேன் எனது மனைவி என்னை பார்த்து முழுசினார்,வழ‌மையாக மாமியை அக்கா என அழைப்பேன் ,என்னை விடமூன்று வயது தான் அதிகம் ..மனைவிக்கு தெரியும் நான் உறவு சொல்லி அழைக்க தொடங்கி விட்டேன் என்றால் பாவனையின் எல்லைக்கு வந்திட்டார் என நினைத்து கிளாஸ் போத்தல் எல்லாம் மாயமாக மறைய தொடங்கிவிடும் அதுவும் அவர்களது உறவுகள் இருந்தார்கள் என்றால் எனது பாவனைக்கு பல வித தடைகள் போடப்படும். " "ஹலோ மாமி என்ன முதுகில புத்தர் இருக்கிறார் ,கவனம் சிறிலங்காவுக்கு போட்டுக்கொண்டு போய்விடாதையுங்கோ " "ஒன்லைனில ஒடர் கொடுத்து இந்தியாவிலிருந்து எடுப்பிச்சனான் அவன்கள் இப்படி தைச்சு போட்டாங்கள்" "ஏன்டா சிறிலங்காவுக்கு போட்டுகொண்டு போக ஏலாது புத்தர் அவங்கன்ட கட‌வுள்தானே" என மாமா கேட்டார் "கடவுளை கோவிலில்தான் வைக்கவேணுமாம் சீலையிலயும் ,பிளவுஸிலயும் வைக்கூடாதாம்" "இஞ்சயப்பா மாமி உடுத்திறக்கிற சீலையும் ஒன்லைனில் தான் ஒர்டர் பண்ணி எடுத்தவ வடிவா இருக்கு என்ன?" "நீரும் ஒவ்வோரு மாதமும் எடுக்கிறனீர்தானே" "ஒமப்பா ஆனால் மாமியின்ட கடையில் விதம்விதமா கன‌ செலக்சன் இருக்கு" "நாளைக்கு ஒடர் பண்ணி எடும்" "ஏன் நான் நாளைக்கு மட்டும் வெயிட் பண்ண வேணும் இப்பவே ஒன்லைனில போக வேண்டியான் மாமியும் நிற்கின்றா சூஸ் பண்ண இஸியாக இருக்கும்" மேசையில் சாப்பிட்டபடியே கதைத்துகொண்டிருந்தோம் . "என்ன மாமி இன்றைக்கு ஸ்டைலா எங்கன்ட வீட்டை வெளிகிட்டுக்கொண்டுவந்திருக்கிறீயள்" "இன்றைக்கு பேத்தியின்ட பேர்த்டெ " "நீங்கள் போகவில்லையா ? இங்க நிற்கீறியள்" "பின்னேரம் ஸ்கைப்பில கெக் வெட்டினவையள் அதுக்கு வெளிக்கிட்டனான் அப்படியே இரவு வெஸ்புக்கில் முருகனையும் பார்ப்போம் என்று தான் இருந்தனான் அதுக்குள்ள இவர் இங்க கூப்பிட்டு போட்டார் இங்க இருந்து முருகனை பார்ப்போம்" "வெஸ்புக்கில் முருகனை பார்க்க இவ்வளவு அலங்காரம் தேவையே மாமி" "நீங்கள் ஏன் மாமியை போட்டு அறுக்கிறீயள்" "சீ சீ நான் அறுக்கவில்லை சும்மா கேட்டனான்" "கண்ணா முருகனை வெஸ்புக்கில் பார்க்க வெளிக்கிட தேவையில்லை ஆனால் முருகனுக்கு ஸூமில் பஜனை பாடவேணும் அது தான் வெளிகிட்ட படியே நிற்கின்றேன்" "ஏன் நீ எனக்கு முதலே சொல்லவில்லை இரு நானும் வெஸ்டியை சுற்றி போட்டு வாரன் ,கண்ணா வெஸ்டி ஒன்று எடுத்து தாடா" மாமா உற்சாக வெளிக்கிட ஆயத்தமானார்,மாமி தன்னுடைய காளிமுகத்தை காட்ட தொடங்கிவிட்டார். "நான் சொல்லவில்லையோ? நேற்று காலம்பிற கத்திகத்தி சொன்னான் பஜனை ஸூமில் செய்யப்போகினம் என்று நான் சொல்லுறதை கேட்கிறதில்லை பிறகு சொல்லுறது நான் சொல்லவில்லை என்று இந்த மனுசனுக்கு இதே வேலயா போச்சு" " கண்ணா நீ வெஸ்டியை எடு" " தண்ணியை அடிச்சு போட்டு சாமிக்கு பஜனை பாடப்போறீங்களோ?" "தண்ணி அடிச்சு போட்டு கோவிலுக்கு தான் போககூடாது சூமில் பஜனை பாடலாம் தானே என்ன கண்ணா?" "கண்ணா வேஸ்டியை கொடுக்காதே வயசு போக போக உந்த மனுசன் சொல்வழி கேட்கிதில்லை" "இரண்டும் பேரும் உங்கன்ட செல்ல சண்டக்குள்ள என்னை இழுக்காதையுங்கோ" "நான் பஜனை பாடஇல்லை நீங்களே பாடுங்கோ" என்று கதிரையை விட்டு வெகமாக எழுந்து போய் கொண்டுவந்திருந்த பூக்கள் நிரம்பிய தட்டை எடுத்து மாமாவிடம் கொடுத்து "இந்தாங்கோ முருகனை காட்டும் பொழுது இதை கொம்பூயுட்டருக்கு முன்னால‌ வையுங்கோ நான் வீட்டை போறன்" "லட்சு ,லட்சு கோபபடாதை நீ பஜனை பாடு நான் சும்மா சொன்னான்" ஒரு சில வினாடிகள் மெளனமாக இருந்த மாமி மீண்டும் சுதாகரித்துக் கொண்டு "கோவில்காரர் சூம் லிங் அனுப்பியிருக்கினமா என்று பார்" "இருங்கோ பார்த்து சொல்லுறன் " பார்த்துவிட்டு சொன்னாள் அனுப்பியிருக்கினம் இன்னும் பத்து நிமிசத்தில தொடங்கப்போயினம். "அடுத்த வெள்ளிக்கிழமை நீங்கள் பஜனை படுங்கோ நான் கோவில்காரரிடம் கதைச்சு வைக்கிறன் ஆனால் இவன் கண்ணனின்டவீட்டை வந்து கூத்தடிக்கிறதில்லை" சொல்லியபடியே மாமியும்,சுதாவும் கொம்பியூட்டர் மேசைக்கு போனார்கள். " என்ன மாமா மாமி இப்படிசொல்லுறா" "இந்த முப்பது வருசத்தில உப்படி எத்தனையை கண்டிட்டன்" "அது சரி அண்ணே உந்த ஒன்லைனில சாமி கூம்பிடுறதை பற்றி என்ன நினைக்கிறீயள்" "நான் கடவுளோட சேட்டை விடமாட்டேன்,நீ என்ன நினைக்கிறாய்" "இன்லைனில் கடவுளை வைக்க வேண்டிய சனம் ஒன்லைனில் வைச்சு கூத்தடிக்குதுகள்" "அதேன்ன இன்லைன்" "உள்ளக் கமலத்தில்"
  5. 2 points
    நாங்கள் வருடா வருடம் செல்வது நண்பர்களுடன் மட்டுமே மனைவி இதுவரை செல்லவில்லை அதுபோக அவாக்கு ஆரம்ப மாணவர்களின் கற்கைகளுக்கு ஆசிரியர் அண்ணா அதனால் வரவும் மாட்டா எங்கள் குழந்தையும் சின்ன ஆள் அதனால் வரவே மாட்டார் படம் எடுத்தது நான் போகிறவர்கள் என் நண்பர்கள்
  6. 2 points
    அது தொடரும் அண்ணை நிலமையை பொறுத்தே அரசு இன்று அனுமதி அளித்துள்ளது சில வேளை கொரானோ அதிகரிக்குமானால் தடைப்படலாம் அப்படி தடைப்படாவிட்டால் தனிக்காட்டுராஜாவும் காட்டுவழி பயணம் தொடருவார் பல லட்சத்தை தாண்டிச்செல்லும் பக்தர்கள். விவசாயி அவர்களே வருடா வருடம் சில நேரம் இந்தவருடம் குறைவாகலாம் இந்த கொரானோ வைரசின் தாக்கத்தினால் செல்ல முடிந்தால் படங்களை இணைக்கிறேன். கொழும்பிலிருந்து சிங்கள நண்பர்களும் வருவார்கள் உகந்தை வழியாக காட்டினூடாக செல்வதற்கு . சில நேரம் வெள்ளைக்காரர்கள் கூட வருவார்கள் காவியுடன் ஆரம்பகாலத்தில் அமெரிக்கர் ஒருவரே முன்னின்று வருவார் .
  7. 2 points
    அது தானே ஐயா 2019 இல் சொல்லும் போது சுமந்திரன் ஐயாவின் ஆயுத போராட்டத்தை ஆதரித்தவரோ....
  8. 2 points
    சுமோ வீட்டிலிருந்து சமையல் வாசனை அடிக்கிறது... ஏதாவது கொண்டு வருவா.... இன்டைக்கு
  9. 2 points
    பலமாதங்களா தமிழ் மக்களை சோதனை சாவடிகளில அகோர வெயிலில இறக்கி சோதனை செய்யேக்க வாய்திறக்காத மனோ கணேசன் இப்ப வேதனைப்படுறது எவ்வளவு நடிப்பு? மனோ கணேசன் சுய ஆதாயத்துக்காக பலருக்கு அடிமை சேவகம் செய்றது புதுசில்லையே!
  10. 2 points
  11. 2 points
    அதற்கு அவசியம் இல்லை என நினைக்கின்றேன். தமிழ் தலைமைகளின் வங்குரோத்து அரசியலையும், பதவி மோகத்தையும், ராச(அ)தந்திர அறிவையும் எம்மை விட சிங்களம் / முக்கியமாக கோத்தா அணியினர் மிக நன்கு புரிந்து வைத்து இருக்கின்றனர். எனவே இருக்கும் தமிழ் கட்சிகளை இன்னும் பல சிறு கட்சிகளாக உடைத்து பலவீனமாக்கும். அதே நேரத்தில் வடக்கில் சைவ மக்களுக்கும் கிறீஸ்தவ மக்களுக்கும் இடையில் மேலும் விரோதத்தையும், குரோதத்தையும் வளர்த்து தமிழ் தேசியத்தின் பால் மக்களை ஒன்றுபட விடாது பார்த்துக் கொள்ளும். கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கி சிறுபான்மையினரின் ஒன்றுபடலை இல்லாதொழிக்கும். போரின் மூலம் ஏற்பட்ட இழப்பு உயிர் / உடல் / உடமை சேதம் என்றால் இதனால் ஏற்படப் போகும் சேதம் தமிழ் இனத்தின் அடையாளங்களை சிதைத்து நீர்கொழும்பு, சிலாபம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களை போல சிங்களத்தை அண்டி வாழும் சமூகமாக ஆக்குவதாக அமையும்.
  12. 2 points
    காசி அல்வா ( எ ) வெண்பூசணி அல்வா ..
  13. 1 point
    Love nature7 months ago பணக்காரன் பணத்த வச்சிட்டு மேலும் மேலும் பேராசையோடு சம்பாதிக்கிறான். ஏழை சேவை மனப்பான்மையோடு சேவை செய்கிறான் jacob wilson7 months ago நம் கண்முன்னே வாழும் தெய்வங்கள் , இவர்களை போன்றவர்கள் இனிமேல் கிடைப்பார்களா என்று யோசிப்பதை விட இவர்களைப்போல நம்மால் முடியுமா என்று யோசிக்க தோன்றுகிறது
  14. 1 point
    வித்யா பாலன் இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு போய் ஆளில்லாத தீவின் அந்தரத்தில் கைவிட்ட கதை, வேறு எவருக்கும் நடந்திருந்து, இத்தனை எளிதாக அதை தாங்கிக் கொண்டு இயல்பாக கடந்து வந்திருக்க முடியுமா என்றால், அதற்கான பதிலை வார்த்தைகளில் சொல்வது கூட சிரமம் தான். ‘மனசெல்லாம்’ படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டு, நடிகர் ஸ்ரீகாந்த்தோடு வெறிப்புறப்படப்பிற்கு சென்று நடிக்க துவங்கியாகி விட்டது. அவரின் மனதில் தன்னுடைய கனவுகளின் முதல் கதவு திறந்து விட்ட பரவசம். உற்சாகமாகவே ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையிலேயே தயாரிப்பாளரிடம் யாரோ இந்த பெண் செக்சியாகவே இல்லை என்று கொளுத்திப் போட, அவரிடம் சொல்லாமலே, அவரை நீக்கி விட்டு, திரிஷாவை நாயகியாக போட்டு, வேறொரு லொகேசனில் படம் பிடிக்க சென்றுவிட்டார்கள். வித்யா தன் தாயோடு அங்கிருக்கிற ஒரு சுமாரான ஹோட்டலில் தங்கியிருக்கிறார். எந்த தகவலும் அறியாமல், படப்பிடிப்பிற்கு கார் அனுப்புவார்கள் என்று மேக்கப் போட்டுக்கொண்டு வெகுநேரம் உட்கார்ந்திருக்கிறார். பிறகு தான் தெரிகிறது. அவரிடம் எதுவுமே தெரிவிக்காமல், அவரை அங்கேயே கைகழுவிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் யூனிட் கிளம்பிச் சென்று விட்ட சேதி. இப்போது வித்யா கையில் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. எப்படி சென்னைக்கு திரும்பி செல்வது. யார் வந்து ஹோட்டல் பணத்தை செட்டில் செய்வது. கையறு நிலை. வித்யா தளர்ந்துவிடவில்லை. அவருக்குள் இருந்த ஃபீனிக்ஸ் பறவை, தன் கழுத்தில் போட்டிருந்த தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு போய் அங்குள்ள அடகுக்கடையில் விற்று காசாக்கி, அந்த ஹோட்டலுக்கு தர வேண்டிய பணத்தை தந்து விட்டு, சென்னை திரும்பியிருக்கிறது. அப்போதும் வித்யாவின் மனதில் எந்த வன்மமும் ஏற்படவில்லை. யதார்த்தத்தை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, எளிதில் அந்த கசப்பை மருந்தாக விழுங்கி செறித்து விட்டார். அது தான் வித்யா. இது இருபது வருடத்திற்கு முன்னால் நடந்த கதை மட்டுமல்ல.. விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கியமான இந்திய நடிகைகளில் ஒருவராக அவரை முன்னெடுத்த வரலாற்றின் முதல் அத்தியாயம். எந்த மனிதர்கள் அவரை செக்சியாக இல்லை என்று நிராகரித்தார்களோ, அவர்களின் கண் முன்பாகவே அவர் செக்சியாக டர்ட்டி பிக்சர் படத்தில் நசுருதீன் ஷாவுடன் நடித்து ஓவர் நைட்டில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். அந்த படத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது ஒரு நகைமுரண். அவர் தமிழ் திரையுலகம் தந்த அவமானத்தை எங்கும் டமாரம் அடிக்கவில்லை. அந்த கங்கை மனதிற்குள் சுடராக ஏற்றி வைத்துக்கொண்டு, வைராக்கியத்தோடு முயன்றார். சரியான தருணத்திற்காக அவர் காத்துக் கொண்டும், தன்னை தயார்படுத்திக் கொண்டுமிருந்தார். அந்த தருணம் அவர் எதிர்பாராத வகையில் இந்தி திரையுலகிலிருந்து வந்தது. அவர் நடித்த பரினித்தா என்கிற ஒரு திரைப்படம், இந்தி திரையுலகையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி..வெற்றி தான்.. வெற்றியை தூரத்திலிருந்து மூன்றாவது மனுசி போல தரிசிக்கிற வித்யாவின் மனநிலை அவரை மகோனத உயரத்திற்கு அழைத்துச் சென்றது. ரகோ சலாம் ஈ இஸ்க், ஏகலைவா, உருமி, பாம்பே டாக்கீஸ், மகாபாரத், சாடி கீ சைட்எஃபெக்ட்ஸ், பேகம் ஜான், நேர்கொண்ட பார்வை, சைனிகுடு, மிஷன் மங்கள், லகே ரகோ முன்னாபாய், பா, இஷ்கியா, நோ ஒன் கில்ட் ஜெசிகா, தேங்க் யூ, டீன், துமாரி சுலு என்று இவரின் கிராஃப் ஒன்றின் உச்சத்தை இன்னொன்று தாண்டிச் சென்றுகொண்டே இருந்தது. மணி ரத்தினத்தின் குரு படத்தில் ஃபிசிகலி சேலஞ்ட் பெண்ணாக வந்து அசத்தியிருப்பார். ஹே பேபி திரைப்படத்தில் சிங்கிள் மதராக வந்து அசத்துவார். பூல் புலய்யா படத்தில் டிசோஸியேட்டிவ் ஐடன்டிட்டி டிஸார்டர் குணாம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். டீன் திரைப்படத்தில் ஒரு பதின்பருவ பெண்ணிற்கு நிகழ்கிற செக்சுவல் அப்யூஸை எதிர்த்து, அந்த பதின்பருவ பெண்ணை எந்தவித வடுவும் மனதில் ஏற்படாமல் நுட்பமாக அந்த சிடுக்கிலிருந்து விடுவிக்க, அமிதாப்பச்சனின் உதவியோடு போராடுவார். அற்புதமான கதாபாத்திரம் அது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை முத்துகள். கஹானி, கஹானி 2, என்று தொடர்ந்து அவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. கஹானியில் காணாமல் போன கணவனை, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வித்யா தேடிக் கொண்டிருப்பார். உண்மையில் அவர் தேடும் கணவன் ஒரு தீவிரவாதியா என்கிற சந்தேகம் காவல் துறைக்கு இருக்கும். அதை தாண்டி அதில் ஒரு காவல் அதிகாரி அவருக்கு உதவுவான். அவனுக்கு அவள் மீது மெலிதான ஒரு காதல் இருக்கும். இந்த நிலையில், அவள் அவளின் கணவனை தேடிக் கண்டுபிடித்ததும், ஒரு காளி மாதா திருவிழா கூட்டத்தில் அவனை சந்திப்பாள். சந்தித்ததும் சுடுவாள். காரணம் அவன் அவள் கணவனே அல்ல. அவன் தான் தன் கணவனை கொலை செய்தவன் என்பது அந்த உச்சக்கட்ட காட்சியில் தெரிய வரும். அதேசமயம் அவள் கர்ப்பிணியே அல்ல என்பதும் தெரிய வரும். இந்த உச்சக்கட்ட காட்சி ஏஞ்சலினா ஜுலி நடித்த ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து கையாளப்பட்டிருந்தாலும், அதை வித்யா தன்னுடைய நடிப்பின் பரிமாணத்தால் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று, உணர்வுகளை மனதிற்கு நெருக்கமாக ஆக்கியிருப்பார். துமாரி சுலு படத்தில் வித்யா நடித்த கதாபாத்திரத்தை தான் தமிழில் ஜோதிகா நடித்து தன் ரீஎன்ட்ரியை தக்க வைத்துக்கொண்டார். அந்த படம் தான் காற்றின் மொழி. துமாரி சுலுவில் செக்சியாக இரவில் எஃப்.எம்-ல் காமம் சார்ந்த செக்ஸ் பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்கிறவர்களுக்கு இதமாய், வருடலாய், ஆதூரமாய், ரஸமாய் பதில் சொல்கிற செக்ஸி குரலழகி ஆர்.ஜே-வாக வாழ்ந்திருப்பார். வித்யாவிற்கு அப்பா பாலன் என்றால் உயிர். அவரும் ஒரு புன்னகை மன்னன். எப்போதும் அவரிடமிருக்கிற சாசுவத புன்னகையையே வித்யாவிற்கும் உயில் எழுதி தந்திருந்திருக்கிறார். அடிக்கடி அதற்காகவே ரகசியமாக சென்னை வந்து தன் அப்பாவின் கையால் சமைத்த சுவையான உணவுகளை ருசித்துச் செல்வது அவருக்கு மிகவும் பிடித்த விசயம். அவரின் அப்பாவிற்கு கேன்சர். ஆனாலும், அவரின் புன்னகை அவரை இப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிற அருமருந்தாக இருக்கிறது. அவர் புன்னகையோடு தன் தந்தையை ஒருமையில் அழைக்கிற அழகை கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவே இயற்கை அவரின் ஆயுளை நீட்டித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதில் உண்மை அல்லாமல் இல்லை. இந்த சூழ்நிலையிலும் அந்த எளிய மனிதர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, வித்யாவின் பேரன்பு தோய்ந்த புன்னகைக்கும் முக்கிய உண்டு. ஆறு ஃபில்ம் ஃபேர் விருது மற்றும் தேசிய விருது பெற்றாகி விட்டது. பத்மஸ்ரீ விருது பெற்றாகி விட்டது. பிரபலமான தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து கரம் பிடித்தாகி விட்டது. என்றாலும், திரைப்படத்துறையிலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் இப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மிகையில்லாத நடிப்பின் நளினம், அந்த மருளும் விழிகளின் ஜாலங்கள் அவரது தனித்தன்மை. வித்யா பாலன் ஐந்து மொழிகளிலும் நடித்து வெற்றியை தன் வசப்படுத்திக் காட்டியிருந்தாலும், அவர் துவக்கத்தில் பட்ட அவமானங்களை வன்மங்களாக மனதில் ஒரு நாளும் ஏற்றிக் கொண்டதில்லை. அந்த ஸென் மனநிலை தான் அவரின் இந்த பரிபூரண வெற்றியின் பின்புலம் என்று எதனாலோ உள்ளுணர்வு சொல்லச் சொல்கிறது. அப்படியானால், அந்த சொற்கள் அப்பட்டமான உண்மையாக தானே இருக்க முடியும். வித்யா பாலன் இப்போது கணிதமேதை சகுந்தலாதேவியாக சகுந்தலாதேவி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னை காயப்படுத்தியவர்களுக்கும் சேர்த்தே மருந்திடும் மகோனத புன்னகைக்கு சொந்தக்காரான வித்யா, அதனாலேயே, தனதான எல்லா பக்கங்களிலும் நேர்த்தியான வெற்றிகளை சாசுவதமாய் தொட்டுக்கொண்டே இருக்கிறார். முகநூல்
  15. 1 point
    நாடாளுமன்றை மீள கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லையென திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனை பயன்படுத்த தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன்.அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக்கூடாது. நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும் கலைப்பேன்.இந்த நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அரசியலமைப்பின்படி என்னசெய்யமுடியுமோ அதனை நான் செய்வேன். நாட்டின் தற்போதைய நிலைமையில் யாரும் தேவையற்ற அரசியலை செய்யக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143745?ref=ibctamil-recommendation
  16. 1 point
    பதவியில் இருந்த போது கேட்டு இருந்தால் சொல்லியிருப்பார். எவரும் கேட்டவில்லையே? அவரும் அவரது நாட்டு பிரச்சினைகளை பார்த்து கொண்டிருந்திருப்பார். பதவியில் இருக்கும் கயானா ஜனாதிபதியிடமும் ஏதோ சொல்லும்படி கேட்டிருப்பதாக எங்கோ படித்தேன். சொல்லுவார் கேளுங்கள்.
  17. 1 point
    தலைவருக்கு திரி திறந்தால் அவரையும் கும்முவோம்
  18. 1 point
    ஓ மை கோட் நான் இவ்வளவு நாளும் இவ மலையாளி என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறன்...என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் ...தமிழ்த் திரையுலகத்திற்கு தமிழர்களை பயன்படுத்த தெரியாது என்பது மிகவும் துரதிஸ்ட்டமானது.
  19. 1 point
    என்ன பழக்கம் இது நீங்கள் மட்டும் அவவின் வீட்டை போய் தனிய சாப்பிடலாமா?
  20. 1 point
    நான் புனைவுகளை அதிகம் வாசிப்பேன். டி.பி.எஸ். புனைவுக் கதைகளை போராட்டம் நடந்தபோது வாசித்து கிளுகிளுப்பு அடைந்ததும் உண்மைதான். ஆனால் பல ஆண்டுகளாக இவரின் கட்டுரைகளைத் தேடி வாசிப்பதில்லை
  21. 1 point
  22. 1 point
    10 வருடத்துக்கு பிறகு வர பழக அனுபவிக்க வேண்டிய தொழில் நுட்பம் இப்பவே வந்து துலைத்து விட்டது . இனி virtual reality goggles மூலம் மீட்டிங்குகள் படிப்புக்கள் . வீடுகள் வாங்குவது ,சூப்பர் மார்க்கெட்டில் ஷொப்பிங் செய்வது போன்ற பல வேலைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் போதாக்குறைக்கு அவுஸ் காரர் இப்ப இருக்கும் இணைய வேகம் போல் ஒரு லட்ஷம் மடங்கு வேகம் கொண்ட இணைய பொறிமுறையை கண்டு பிடித்து உள்ளனர் .https://www.independent.co.uk/life-style/gadgets-and-tech/news/internet-speed-world-record-fastest-download-a9527236.html?utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR3t9GRRSjVzlfB3PAh24YbmrPqV-wAI4ev_XxHa-t7AL-4G7FBnlxPNMqs#Echobox=1590138481 இது வந்த பின் ரொபோ மூலம் ஊரில் இருந்தபடி லண்டனில் உள்ள வீட்டில் சுமோ அண்டி தோட்டம் போட்டு பராமரித்து அதை யாழில் எழுதி குமராசாமியாரிடம் எழுத்து எறி வாங்குவா .
  23. 1 point
    சுமே வீட்டு அடுப்பு 14-May க்கு பின் எரியவில்லை, அவரையும் காணவில்லை. லண்டன்காரர் ஒருக்கா அவ வீட்டை எட்டு பார்த்து விட்டுவாருங்கள்
  24. 1 point
    உண்மைதான் நேற்று.... கனடா, அவுஸ், இலங்கை, அமெரிக்க, 8 நணபர்கள்.... ஸசூமில் இணைந்து..... இராமாயணம் படித்தோம்.... ரேஸ்ட்.... மிக்சர்... பச்சத்தண்ணீயோட.... வித்தியாசமான அனுபவம்.
  25. 1 point
    பணம், பணம் எதையும் செய்யும்..... ஒருத்தனின் வறுமையும், கடனும், கையறு நிலையும் கழுதையிடம் கூட அடிமையாய் நிக்க வைக்கும்.....!
  26. 1 point
    இராணுவ முன்னரங்க நிலைக்கு சமீபமாக போய் வீழ்ந்த வேவுப் புலியாக இருக்கக் கூடும். வீழ்ந்து அநாதையாக தூங்கிவிட்ட அந்த வீரப் புலித் தமிழச்சிக்கு.. வீர வணக்கம். அண்மையில் பிரித்தானியா கட்டியமைத்த பெரும் விமானந்தாக்கிக் கப்பலை கொண்டு வருவதற்காக பிரித்தானிய தென்கோடியில் உள்ள துறைமுக கடலடியை துப்பரவு செய்த போது.. சிதைந்த ஜேர்மனிய விமானப் பகுதிகளோடு பல மனித உடல்கூறுகளையும் கண்டெடுத்தனர். போர் எங்கு நிகழினும் விளைவு ஒன்று தான். என்ன வெற்றி பெற்றவன் மனிதனின் மரணத்தை கொண்டாடுறான்.. தோற்றவன் தொண்டைக்குழிக்குள் அழுகையை நிறுத்திக் கொண்டு மெளனித்துக் கடந்து போய்க் கொண்டிருக்கிறான். போர்கள் தவிர்க்கப்படுவது.. பேச்சுக்களால் வெல்லப்படுவதின் தார்ப்பரியத்தை உரைக்கும். ஆனால்.. பேசவே மாட்டேன் என்ற அகங்காரிகளிடம்.. பேசி எதைப் பெறுவது எனும் நிலையில்...???!
  27. 1 point
    எமது அரசியல்வாதிகள் இனப்பிரசினைக்கான தீர்வு பற்றிய செயற்பாடுகளில் பகுதி நேரமாகவோ அல்லது தமக்கு வேண்டிய நேரங்களிலோதான் ஈடுபட்டுவருகிறார்கள். அரசியல் தலையீடு இல்லாமல் தமிழர் விவகாரங்களை கவனித்து 24 மணி நேரமும் வேலைசெய்யும் நிரந்தரமான செயற்குழு ஒன்று எம்மிடம் இல்லை. தமிழர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை சர்வதேச அரங்கில் மட்டுமல்ல உள் நாட்டிலும்கூட தீர்க்கதரிசனத்துடனும், இராஜதந்திரத்துடனும், இனப்பற்றுடனும் அணுகி சேவை செய்யும் ஆற்றலும் அறிவும் எந்த தமிழ் அரசியல்வாதிக்கும் இல்லை. மாறாக தேர்தலில் வென்றால் மட்டும் அவர்களிடம் அரசியல் பலம் இருக்கும் என்பது தெரிந்து பதவிகாலம் முடிந்ததும் இதே காரணத்தை கூறி தங்களை மீண்டும் தெரிவுசெய்தால் தீர்வு பெற்றுதருவதாக கூறி மீண்டும் மீண்டும் பதவிக்கு வருவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். அவர்கள் செய்யும் கொஞ்ச நஞ்ச வேலையிலும் தொடர்ச்சி இல்லாமல் போகும். அரசியல்வாதிகளை உள்ளடக்காத தமிழர் விவகாரத்திற்கான நிரந்தர அரசியல் செயற்ப்பாட்டுகுழு ஒன்று இஸ்தாபிக்கப்படவேண்டும். சர்வதேச நீதித்துறை, அரசியல் அமைப்பு, இராஜதந்திர கோட்பாடுகள் ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்கள் இதில் இணைந்து தீர்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயலாற்றவேண்டும்.
  28. 1 point
    அத்தியாயம் 98 சாளுக்கிய மன்னரை சுமந்து வந்த அந்தப் புரவி, வனத்துக்குள் நுழையவும் கூகை ஒருமுறை அலறவும் சரியாக இருந்தது.மெல்ல தன் வலது கையால் குதிரையின் வயிற்றைத் தட்டிக் கொடுத்தார். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அப்புரவி தன் வேகத்தைக் குறைத்து பழக்கப்பட்ட ஒற்றையடிப் பாதைக்குள் நுழைந்தது. செடிகளையும் மரங்களையும் ஊடுருவியபடி தன் பயணத்தைத் தொடர்ந்தது.கால் நாழிகை பயணத்துக்குப் பின் மீண்டும் கோட்டான்கள் இருமுறைக் கூவின. அரை நாழிகை கடந்ததும் ஒரு சிறிய வெட்டவெளியை அப்புரவி அடைந்தபோது மூன்று முறை கூகை அலறியது. புரவியை விட்டு இறங்கிய விக்கிரமாதித்தர், அதன் நெற்றியை முத்தமிட்டு தட்டிக் கொடுத்தார். தலையை அசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அக்குதிரை, புற்களை மேயத் தொடங்கியது.நிதானமாக வெட்டவெளியைக் கடந்து தென்பட்ட பாறைகளை நோக்கி சாளுக்கிய மன்னர் நடந்தார்.ஐந்து முறை கோட்டான்கள் அலறி முடித்ததும் பாறை இடுக்கில் இருந்து தீ பந்தத்துடன் சாளுக்கிய வீரன் ஒருவன் வெளிப்பட்டு மன்னரை வணங்கினான்.‘‘சந்தேகப்படும்படி யாரேனும் இந்தப் பக்கம் நடமாடினார்களா..?’’‘‘இல்லை மன்னா...’’‘‘பொருள்..?’’ ‘‘பலத்த பாதுகாப்புடன் நீங்கள் வைத்த இடத்திலேயே இருக்கிறது...’’புருவத்தை உயர்த்தி அந்த வீரனை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்.‘‘உறுதியாகத் தெரியும் மன்னா... வனம் முழுக்க நம் வீரர்கள் கண்ணும் கருத்துமாக காவல் காக்கிறார்கள்... அவர்களை மீறி சிற்றெறும்புகள் கூட நுழைய முடியாது... உங்கள் வருகையைக் கூட அவர்கள்தான் கோட்டான்களின் அலறல் வழியே எனக்குத் தெரியப்படுத்தினார்கள்...’’தன் வலக்கரத்தை நீட்டினார் சாளுக்கிய மன்னர்.தன்னிடமிருந்த தீ பந்தத்தை அவரிடம் கொடுத்துவிட்டு விலகி நின்றான் அந்த காவல் வீரன். பந்தத்தைப் பிடித்தபடி பாறை இடுக்கில் நுழைந்த விக்கிரமாதித்தர், பத்தடிக்கு பின் இடதுபக்கம் திரும்பினார்.பாறை ஒன்று அகற்றப்பட்டிருந்தது. பந்தத்தின் ஒளியில் இறங்குவதற்கு ஏதுவாக படிக்கெட்டுகள் குடையப்பட்டிருந்தன. ‘‘இறங்கி நேராகச் செல்லுங்கள்... எங்கும் திரும்ப வேண்டாம்... முடியும் இடத்திலேயே சிவகாமி அடைக்கப்பட்டிருக்கிறாள்!’’ அமைதியாகச் சொன்னான் பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன். ‘‘எங்களுடன் நீங்கள் வரவில்லையா..?’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனின் குரலில் ஆச்சர்யம் வழிந்தது.‘‘அவசியமில்லை...’’‘‘ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்.‘‘பெரியதாக ஒன்றுமில்லை சாளுக்கிய போர் அமைச்சரே! நீங்கள் இருவரும் தனிமையில் சிவகாமியுடன் உறவாடுவீர்கள்... இடையில் நான் எதற்கு..?’’ ‘‘இல்லை... பாண்டிய மன்னர்...’’ இழுத்தான் விநயாதித்தன். ‘‘தந்தைதான் என்னை உடன் இருக்க வேண்டாம் என்றார்...’’ பதிலை எதிர்பார்க்காமல் இரணதீரன் சென்றான். ‘‘குருதேவா...’’‘‘நேரமில்லை... வா...’’ பாதாள சிறையின் படிக்கெட்டுகளில் ராமபுண்ய வல்லபர் இறங்கத் தொடங்கினார். தரையைத் தொட்டதும் சொன்னார். ‘‘எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது விநயாதித்தா... நம்முடன் விளையாடுகிறான் கரிகாலன்..!’’ ‘‘கரிகாலா... தாயம் விளையாடலாமா..?’’தன் அத்தையான பாண்டிய அரசியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கரிகாலன் துள்ளி எழுந்தான். ‘‘இந்த நேரத்திலா மன்னா...’’ ‘‘ஆட்டத்துக்கு நேரம் காலம் இருக்கிறதா என்ன..?’’ கேட்ட பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை உற்றுப் பார்த்தான். மன்னரின் நயனங்கள் நகைத்தன.பதிலுக்கு தன் கண்களால் சிரித்தான் கரிகாலன். ‘‘இரவில் தாயம் ஆடக் கூடாது என்பார்களே..?’’ ‘‘அது மக்களுக்கு... மன்னர்களுக்கல்ல!’’ ‘‘நான் மன்னன் இல்லையே மன்னா... பல்லவர்களின் உபசேனாதிபதிதானே..?’’ ‘‘ஆனால், சோழர்களின் பிற்கால மன்னனாயிற்றே!’’ ‘‘தேசமற்ற தேசத்தின் மன்னன்!’’ ‘‘இல்லை... தேசத்தை விரிவுப்படுத்தப் போகும் மன்னன்! உன் குருதியின் ஆட்டம் என்னவென்று பார்க்க ஆசைப்படுகிறேன்...’’ என்ற அரிகேசரி மாறவர்மர், தன் மனைவியை நோக்கினார். ‘‘உன் பிறந்த வீட்டுப் பெருமையை நாளை பேசிக் கொள்... இன்றிரவு உன் சகோதரனின் மகன் என்னுடன் விளையாடட்டும்!’’‘‘என்னிடம் எதற்கு அனுமதி..? மாமனாயிற்று... மருமகனாயிற்று...’’ என்ற பாண்டிய அரசி, தன் கணவரின் பார்வையைப் புரிந்து கொண்டு, ‘‘எனக்கும் உறக்கம் வருகிறது...’’ என்றபடி நகர்ந்தாள்.அத்தை செல்வதையே இமைக்காமல் பார்த்த கரிகாலன், பாண்டிய மன்னரை நோக்கித் திரும்பினான். ‘‘கேளுங்கள் மன்னா...’’ ‘‘எதைக் கேட்க வேண்டும்..?’’‘‘அதை தாங்கள்தான் சொல்ல வேண்டும்! தனிமையில் என்னுடன் உரையாடத்தானே அத்தையை அகற்றினீர்கள்..?’’ வாஞ்சையுடன் அவன் தோளில் கைபோட்டார் அரிகேசரி மாறவர்மர். ‘‘எதிர்பார்த்ததை விட புத்திசாலியாக இருக்கிறாய்... உண்மையிலேயே தாயம் ஆடத்தான் அழைத்தேன்...’’கண்கொட்டாமல் அவரைப் பார்த்தான் கரிகாலன்.தன்னை மீறி புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘விளையாடிக் கொண்டே பேசலாம், வா!’’ தாங்கியில் தீ பந்தத்தை செருகிய விக்கிரமாதித்தர், சில கணங்கள் அங்கேயே நின்றார். தன் பார்வையை சுழற்றினார். குறிப்பிட்ட இடைவெளியில் பந்தங்கள் எரிந்துக் கொண்டிருந்தன. கூர்மையான முனைகள் மழுங்கடிக்கப்பட்டு பாறைகள் குடையப்பட்டிருந்தன. தன் முன் நீண்ட பாதையைப் பார்த்தார். இரு பக்கங்களிலும் அறைகள் போல் ஆங்காங்கே பாறைகள் உள்வாங்கியிருந்தன. இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த கதவுகள் அவற்றை மூடியிருந்தன. ஆனால், அவைகள் காலியாக இருந்தன. பலத்த சிந்தனையுடன் நேராக நடந்தார். பாதையின் முடிவில் இருந்த அறையை நெருங்கினார். அறைக்குள் எரிந்து கொண்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒரு பெண் தரையில் குப்புறப்படுத்திருப்பது தெரிந்தது.கம்பிகளைப் பிடித்தபடி உற்றுக் கவனித்தார்.‘‘ஒவ்வொரு வேளையும் இந்த குளிகையில் ஒன்றை உணவில் கலந்து கொடுங்கள். அப்பொழுதுதான் பாதி மயக்கத்திலேயே இவர் இருப்பார். உறக்கமும் எந்நேரமும் இவரை ஆக்கிரமிக்கும்...’’ அன்று தலைமை மருத்துவர் சொன்ன வாசகங்கள் அப்படியே சாளுக்கிய மன்னரின் செவியில் இன்றும் எதிரொலித்தன. சிறைக் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். படுத்திருந்தப் பெண்ணை சுற்றி வந்தார். குனிந்து அவள் முகத்தை ஆராய்ந்தார். மெல்ல ஒலி எழுப்பாமல் வெளியே வந்து சிறைக்கதவைத் தாழிட்டார்.ஆலமரத்தின் வேர்களைப் போல் விக்கிரமாதித்தரின் முகமெங்கும் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.‘‘சிந்திப்பதற்கு அவகாசமில்லை ராமபுண்ய வல்லபரே...’’ அழுத்தமாகச் சொன்னாள் சிவகாமி. ‘‘ஆனாலும்...’’ சாளுக்கிய போர் அமைச்சர் மென்று விழுங்கினார். ‘‘வேறு வழியில்லை. இதை நாம் செய்தே ஆக வேண்டும்... இல்லையெனில் சாளுக்கிய மன்னர் நம்மை மன்னிக்க மாட்டார்!’’ சிவகாமி சொல்வது சரியென்றே விநயாதித்தனுக்கும் தோன்றியது. பார்வையை தன் குருநாதர் மீது திருப்பினான். ராமபுண்ய வல்லபரின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘இன்னும் ஏன் யோசிக்கிறீர்கள்..?’’ ‘‘பாண்டிய மன்னரைப் பற்றி நினைக்க வேண்டாமா சிவகாமி..?’’ எரிச்சலுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர். ‘‘ஏன்... அவருக்கென்ன..?’’ ‘‘என்ன இப்படி கேட்டுவிட்டாய்..?’’ விநயாதித்தனின் நாசி துடித்தது. ‘‘குருநாதர் சொல்வது சரிதானே..? பாண்டிய மன்னரின் விருந்தினராக நாம் மதுரைக்கு வந்திருக்கிறோம்...’’‘‘நாம் என என்னையும் சேர்க்க வேண்டாம்... நான் கைதியாக பாதாளச் சிறையில் அடைப்பட்டிருக்கிறேன்...’’ சிவகாமி இடைமறித்தாள். ‘‘இதற்கு முழுக்க முழுக்க நீதானே காரணம்..?’’சொன்ன சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி உற்றுப் பார்த்தாள். ‘‘நானா..?’’‘‘பின்னே... நாங்களா..? கரிகாலன் அடுக்கடுக்கடுக்காக உன் மீது குற்றம் சுமத்தியபோது எந்தப் பதிலும் பேசாமல் நின்றவள் நீதானே..?’’ ‘‘அப்படி நின்றதால்தானே ‘இதை’ சாதிக்க முடிந்தது..?’’ என்றபடி தன் சிகையில் முடிச்சிட்டிருந்த சுருளான பட்டுத் துணியை எடுத்து ராமபுண்ய வல்லபரின் கரங்களில் திணித்தாள்.என்னவென்று அதை பார்க்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்பட்டார்.‘‘இங்கே பிரிக்காதீர்கள்! உங்கள் மாளிகைக்குச் சென்று சாளரங்களை அழுத்தமாக மூடிவிட்டு பிரித்துப் பாருங்கள்...’’‘‘இது...’’ விநயாதித்தன் இழுத்தான்.‘‘புறா வழியே வந்த உண்மையான செய்தி!’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘அப்படியானால் கரிகாலன் உன் மீது குற்றம் சுமத்தக் காரணமாக இருந்த புறா வழியே வந்தச் செய்தி..?’’ ஆச்சர்யத்துடன் ராமபுண்ய வல்லபர் கேட்டார். ‘‘அவனை ஏமாற்ற நான் நடத்திய நாடகம்!’’ ‘‘அதற்காக நீ சிறைப்பட வேண்டுமா..?’’ ‘‘அப்பொழுதுதானே இந்தச் சிறையில் இருக்கும் மர்மத்தை கண்டறிய முடியும்!’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எதற்கு ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கிறீர்கள்..?’’ சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ‘‘இந்நேரம் காஞ்சி கடிகையில் இருந்து சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் காணாமல் போய்விட்டதாக செய்தி வந்திருக்குமே!’’ ‘‘சிவகாமி...’’ ‘‘எதற்காக சத்தம் போடுகிறீர்கள் ராமபுண்ய வல்லபரே..? உங்கள் முன்தானே நிற்கிறேன்! என்ன... நமக்கு நடுவில் கம்பிகள் இருக்கின்றன!’’ ‘‘விளையாடாதே!’’ ராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன. ‘‘இந்தச் சிறையில் என்ன மர்மம் இருக்கிறது..?’’ ‘‘காஞ்சி சிறையில் இல்லாத மர்மம்!’’‘‘சிவகாமி...’’‘‘எதற்கு என் பெயரை திரும்பத் திரும்ப மனனம் செய்கிறீர்கள்..?’’ சிவகாமி சிரித்தாள். ‘‘மர்மத்தை முழுமையாக அறிந்த பின் நானே உங்களுக்கு சொல்கிறேன். என்னை பரிபூரணமாக நம்புங்கள். தேவையில்லாமல் நான் பல்லவர்களின் பக்கம் சாய்ந்துவிட்டதாக நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம்! சென்று வாருங்கள். இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும். அப்பொழுது நான் சொன்னதை செய்யுங்கள்!’’‘‘நீ சொன்னதை அப்படியே சொற்கள் மாறாமல் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் இந்நேரம் சிவகாமி சொல்லியிருப்பாள் அல்லவா..?’’ தாயத்தை உருட்டியபடியே அரிகேசரி மாறவர்மர் கேட்டார். சட்டென்று கரிகாலன் நிமிர்ந்தான்.‘‘மதுரையின் மேல் புறாக்கள் பறக்க இன்னும் எத்தனை நாழிகைகள் இருக்கின்றன?!’’ http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16834&id1=6&issue=20200515 அத்தியாயம் 99 ‘‘கேட்டது புரியவில்லையா அல்லது தொடுத்த வினா அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதா..?’’ புருவங்களை உயர்த்தியபடியே கேட்டார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். ‘‘இரண்டுமே அல்ல மன்னா...’’ நிதானத் துடன் பதிலளித்தான் கரிகாலன். ‘‘பிறகு ஏன் எதுவும் சொல்லாமல் என்னைப் பார்க்கிறாய்..?’’ ‘‘குழப்பத்தை வெளிப்படுத்த அடியேனுக்கு வேறு உபாயம் தெரியவில்லை...’’ ‘‘உனக்கா..?’’ வாய்விட்டு நகைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘குழம்புவது உன் அகராதியிலேயே கிடையாதே!’’ ‘‘அகராதிக்கு சொற்களே சூழலில் இருந்துதானே மன்னா கிடைக்கின்றன..?’’ ‘‘அப்படியொரு சூழல் இக்கணத்தில் பிறந்திருக்கிறதா..?’’ ‘‘ஆம் மன்னா...’’ ‘‘அதாவது நாம் தாயம் ஆடும் சூழலைக் குறிப்பிடுகிறாய்...’’ ‘‘தாயத்தை உருட்டியபடியே நீங்கள் கேட்ட கேள்விகளால் உருவாகி இருக்கும் சூழலைக் குறிப்பிடுகிறேன்...’’ ‘‘அப்படியொரு புதிய சூழலை என் வினாக்கள் உருவாக்கி இருக்கிறதா என்ன..?’’ ‘‘உருவாகி இருப்பதால்தானே மன்னா அடியேன் பேச்சிழந்து நிற்கிறேன்...’’ ‘‘ஆனால், தொடுத்த வினாக்கள் பழமையானவை அல்லவா..?’’ ‘‘பழமையில் இருந்துதானே மன்னா புதியவை பிறக்கின்றன...’’ ‘‘என்னை பழமையானவன் என்றும் உன்னை புதியவன் என்றும் குறிப்பிடுகிறாயா..?’’ ‘‘மீனே பழமையானது என்ற உயிரியலின் தோற்றச் செயல்பாட்டை ஒருபோதும் நிராகரிக்க முடியாது என்ற உண்மையை நினைவு படுத்துகிறேன் மன்னா...’’ பாண்டிய மன்னரின் நயனங்களில் திருப்தி மலர்ந்தது. ‘‘இதை புலி குறிப்பிடுவதால் ஏற்கத்தான் வேண்டும்!’’ நிறுத்திவிட்டு கரிகாலனின் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘ஆனால், இப்பொழுது நான் குழம்பி நிற்கிறேன்...’’ ‘‘எதனால் மன்னா...’’ ‘‘நீ குறிப்பிட்ட வாக்கியத்தில் இருந்து பிறந்திருக்கும் சூழலால்!’’ ‘‘சற்றே விளக்க முடியுமா மன்னா..?’’ ‘‘புலியின் இயல்பு ரிஷபத்தை அடித்துக் கொல்வது! இப்படித்தானே நீ குறிப்பிட்ட உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடுகிறது..?’’ ‘‘ஆம் மன்னா...’’ ‘‘ஆனால், இங்கோ ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது! இதை நான் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்..?’’ ‘‘அதே உயிரியலின் தோற்றச் செயல்பாட்டில் இருந்துதான் மன்னா...’’ ‘‘அப்படியா..?’’ ‘‘அப்படித்தான் என்று மட்டுமே இந்த சிறியவனால் விடையளிக்க முடிகிறது மன்னா...’’ ‘‘அது எப்படி என இந்தப் பெரியவனுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்ல முடியுமா...’’ ‘‘தாங்கள் அறியாததா மன்னா... இருந்தாலும் இந்த எளியவனை பரிசோதிக்க கேட்கிறீர்கள்... புரிந்து கொண்டதை சொல்கிறேன்... தவறு இருந்தால் திருத்துங்கள்...’’ சொன்ன கரிகாலனை உற்றுப் பார்த்தார் அரிகேசரி மாறவர்மர். கரிகாலனின் கருவிழிகளில் எந்த பாசாங்கும் இல்லை என்பதைக் கண்டதும் தாயம் இல்லாத தன் கரத்தை உயர்த்தி மேலே சொல்லும்படி சைகை செய்தார். அதை ஏற்று கரிகாலன் தொடர்ந்தான். ‘‘வனமிருந்தால்தான் அது புலி... காட்டில் வாழ்ந்தால்தான் அது வேட்டைப் புலி! வனமற்ற நிலத்தில் வாழ சபிக்கப்பட்ட புலி, புலியல்ல... இன்னொரு வளர்ப்புப் பிராணி...’’ ‘‘அவ்வளவுதானா..?’’ ‘‘அவ்வளவேதான் மன்னா! சபிக்கப்பட்ட புலிக்கு அடைக்கலம் கொடுத்து வனமற்ற நிலத்திலும் வளமோடு அதை வளர்ப்பது ரிஷபம்தான்! எனவேதான் அந்த ரிஷபத்தை தன் தாய் ஸ்தானத்தில் வைத்து புலி வணங்குகிறது; ரிஷபத்தைக் காக்க முன்னால் வந்து நிற்கிறது, ஒரு வளர்ப்புப் பிராணியைப் போல்..!’’ ‘‘என்றாலும் தன் மீதுள்ள கோடுகளை புலி மறைப்பதில்லையே!’’ ‘‘அது புலியின் இயல்பு மன்னா...’’ ‘‘வேட்டையாடுவதும் புலியின் குணம்தானே..?’’ ‘‘அப்படித்தான் உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடு கிறது மன்னா...’’ ‘‘எனில் தன்னை வளர்க்கும் ரிஷபத்தை எப்பொழுது வேண்டுமானாலும் புலி வேட்டையாடும்... அப்படித்தானே..?’’ ‘‘ஒருபோதும் தன் தாயை வேட்டையாடாது...’’ ‘‘அதே தாயே மாற்றாந் தாயாக இருந்தால்..?’’ ‘‘அன்னை என்றுமே அன்னைதான் மன்னா... தன் குழந்தைக்கு மட்டுமல்ல... தாயற்ற குழந்தைக்கும் பால் கொடுப்பதால்தான் அவள் அன்னை!’’ ‘‘ஆனாலும் பெற்ற அன்னைக்கும் வளர்ப்பு அன்னைக்கும் வித்தியாசம் இருக்கிறதே..?’’ ‘‘இதை நாட்டின் மக்களை தன் மக்களாகக் கருதும் மன்னரான நீங்கள் சொல்லலாமா..?’’ ‘‘பிரமாதம்...’’ வாய்விட்டு மெச்சினார் பாண்டிய மன்னர். ‘‘வளர்ப்புப் பிராணியாக மாறினாலும் புலி, புலிதான் என்பதை நிரூபிக்கிறாய்...’’ ‘‘தங்கள் ஆசிகள் மன்னா...’’ ‘‘இந்த இடத்தில் இன்னொன்று கேட்கத் தோன்றுகிறது...’’ ‘‘பதிலளிக்க சித்தமாக இருக்கிறேன் மன்னா...’’ ‘‘ரிஷபமோ அடைக்கலம்தான் கொடுத்திருக்கிறது... எருதோ, புலிக்காக கானகம் ஒன்றையே சிருஷ்டிக்கத் தயாராக இருக்கிறது... எனில் வளர்ப்புப் பிராணியாக இருக்கும் புலி என்ன செய்ய வேண்டும்..?’’ ‘‘எருதின் கோரிக்கையை ஏற்காமல் ரிஷபத்தின் பக்கமே நின்று அதைக் காக்க வேண்டும்!’’ ‘‘ஏனோ? புலிக்கு வனம் வேண்டாமா..?’’ ‘‘சுதந்திரத்தை விட சுவாசம் முக்கியம் மன்னா... கிடைக்கும் கானகமே தனக்கு உயிர் கொடுத்த ரிஷபத்தின் இடமாக இருக்கையில் அதை மறுப்பதே புலிக்கு அழகு!’’ ‘‘வேட்டையாடும் எந்தப் புலியும் விசுவாசம் பார்ப்பதில்லை...’’ ‘‘வளர்ப்புப் பிராணி விசுவாசத்தைத் தவிர வேறு எதையும் கணக்கில் கொள்வதில்லை!’’ ‘‘எந்த ஓர் உயிரினமும் தன் தர்மத்தை மறப்பது அதர்மம்...’’ ‘‘தர்மமும் அதர்மமும் தர்க்கத்துக்குள் அடங்குபவை மன்னா... மனித வாழ்க்கையோ தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை... சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதே உயிரினத்தின் நியதி...’’ ‘‘அதைத்தான் நானும் சொல்கிறேன்! ஒருபோதும் புலி, வளர்ப்புப் பிராணி அல்ல!’’ ‘‘ரிஷபம் இருக்கும்வரையில் புலி வளர்ப்புப் பிராணிதான்...’’ ‘‘ரிஷபத்தை எருது அழித்து விட்டால்..?’’ ‘‘பாதுகாப்பாக புலி இருக்கும் வரையில் எருதால் ரிஷபத்தை நெருங்கக் கூட முடியாது!’’ ‘‘ஒருவேளை ரிஷபமும் எருதும் கூட்டு சேர்ந்தால்..?’’ ‘‘அப்படி ஒருபோதும் நடக்காது மன்னா...’’ ‘‘நடந்து விட்டால்..?’’ ‘‘கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அப்படி நடைபெற சாத்தியமே இல்லை மன்னா...’’ ‘‘ஒருவேளை எதிர்காலத்தில் அப்படி நடந்தால்..?’’ ‘‘அப்பொழுது புலியின் வாரிசுகள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள்!’’ ‘‘அதுவரை மீன் என்ன செய்ய வேண்டும்..?’’ ‘‘கழுவும் நீரில் நழுவியபடியே இருக்க வேண்டும்...’’ ‘‘இது புலியின் கட்டளையா..?’’ ‘‘வளர்ப்புப் பிராணியின் வேண்டுகோள்!’’ ‘‘இப்படி இறைஞ்சும்படி புலியை அனுப்பி வைத்தது ரிஷபமா..?’’ ‘‘இல்லை! எருதின் திட்டத்தை அறிந்த வளர்ப்புப் பிராணியான புலி, தானாகவே முன்வந்து இந்த கோரிக்கையை மீனின் முன் சமர்ப்பிக்கிறது...’’ ‘‘அது என்ன எருதின் திட்டம்..?’’ ‘‘ரிஷபத்தை அழித்துவிட்டு மீனை ஒழிப்பது!’’ ‘‘அது அவ்வளவு எளிதான செயல் என்று நினைக்கிறாயா..?’’ ‘‘இல்லை என எருதே நினைக்கிறது! அதனால்தானே ரிஷபத்தை அழிக்க மீனின் தயவை நாடி அந்த எருதே இங்கு வந்திருக்கிறது!’’ ‘‘ரிஷபமும் மீனின் உதவியை நாடித்தானே...’’‘‘வரவில்லை மன்னா! குறுக்கிட்டுப் பேசுவதற்கு மன்னிக்கவும். மீனின் உதவி தனக்குத் தேவை என ரிஷபம் நினைத்திருந்தால், தனது வளர்ப்புப் பிராணியை இங்கே அனுப்பியிருக்காது. மாறாக ரிஷபமே இங்கு வந்திருக்கும்!’’ ‘‘எவர் உதவியும் இன்றி தன்னால் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் கருதுகிறதா..?’’ ‘‘சின்ன திருத்தம் மன்னா... தான், வளர்க்கும் புலியின் உதவியுடன் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் நினைக்கிறது!’’ ‘‘ஆக, வேண்டுகோள் வைக்க மட்டுமே புலி இங்கு வந்திருக்கிறது... அப்படித்தானே!’’ ‘‘ஆம் மன்னா...’’ ‘‘இதை மீன் நம்பும் என நினைக்கிறாயா..?’’ ‘‘நம்ப வேண்டும் என்றே புலி மனதார பிரார்த்தனை செய்கிறது! ஏனெனில் ரிஷபத்துக்கும் மீனுக்கும் நட்பும் இல்லை... பகையும் இல்லை. தற்சமயம் அவரவர் இடங்களில் அவரவர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ரிஷபத்தின் இடத்தைக் கைப்பற்ற எருது முயல்கிறது. இந்த நேரத்தில் ரிஷபத்துக்கும் எருதுக்கும் இடையில் மீன் நுழையாமல் வேடிக்கை பார்த்தால் நன்றாக இருக்குமே என புலி நினைக்கிறது. ரிஷபமோ எருதோ... இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அதை வைத்து தன் அடுத்த கட்ட நகர்வை மீன் திட்டமிட்டால் அதற்கு சேதாரம் ஏற்படாதே என்று யோசிக்கிறது...’’ ‘‘வளர்ப்புப் பிராணியாக இருந்தாலும் தந்திரமாகத்தான் புலி இருக்கிறது!’’ ‘‘தம் கோடுகளை அவை மறைப்பதில்லை என சில கணங்களுக்கு முன் தாங்கள்தானே மன்னா குறிப்பிட்டீர்கள்!’’ ‘‘நிறைய குறிப்பிட்டேன். இது மட்டும்தான் உன் நினைவில் தங்கியிருக்கிறதா..?’’ ‘‘சொல்லப்படும் செய்திகளில் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்வதுதானே உயிரினத்தின் இயல்பு!’’ ‘‘அந்த இயல்புப்படிதான் புலி நடந்து கொள்கிறதா..?’’ ‘‘வளர்ப்புப் பிராணி அப்படித்தான் நடந்து கொள்கிறது மன்னா!’’ ‘‘இதன் அடிப்படையில்தான் கோரிக்கை வைக்கப்பட்டதா..?’’ ‘‘ஆம் மன்னா!’’ ‘‘இதை சொல்லத்தான் புலி... உன் மொழியில் வளர்ப்புப் பிராணி... இங்கு வந்திருக்கிறதா..?’’ ‘‘அதற்காகவும்தான் மன்னா..!’’ ‘‘எனில் இன்னொரு காரணமும் இருக்கிறது...’’ ‘‘அது மீனுக்கே தெரியும் மன்னா...’’ ‘‘கேள்வி, மீனுக்குத் தெரியுமா தெரியாதா என்பதல்ல... இன்னொரு காரணத்தைச் சொல்ல தன் வளர்ப்புப் பிராணிக்கு ரிஷபம் உத்தரவிட்டுள்ளதா இல்லையா என்பதுதான்!’’ ‘‘இதற்கு உத்தரவிட வேண்டுமென்று அவசியமில்லை மன்னா...கடலின் நீள அகலங்களும், ஆழங்களும் எருதை விட, ரிஷபத்தை விட, புலியை விட மீனுக்கு நன்றாகத் தெரியும் என்பது...’’ ‘‘...ரிஷபத்துக்கும் வளர்ப்புப் பிராணியான புலிக்கும் நன்றாகவே தெரியும்! அப்படித்தானே..?’’ ‘‘அப்படியேதான் மன்னா...’’ ‘‘இப்படி சொல்லச் சொன்னது...’’ ‘‘...ரிஷபமல்ல மன்னா...’’ ‘‘வளர்ப்புப் பிராணியே சுயமாகச் சொல்கிறதா..?’’ ‘‘ஆம் மன்னா! இப்படி சுயத்துடன் புலியை வாழ ரிஷபம் அனுமதித்திருப்பதால்தான்... ரிஷபம், புலியின் அன்னையாக மாறியிருக்கிறது... ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது..!’’‘‘மீனிடம் தைரியமாக நின்று இதை சொல்கிறது! ஆனால், தொடக்கத்தில் கேட்ட இரு கேள்விகளுக்கு மட்டும்் விடை அளிக்காமல் பேச்சை மாற்றுகிறது...’’ தாயத்தை உருட்டினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘மன்னா...’’ ‘‘சரி... மூன்றாவது கேள்விக்காவது பதிலைச் சொல்...என் முன் இங்கு அமர்ந்திருப்பது ரிஷபத்தின் உண்மையான வளர்ப்புப் பிராணியா அல்லது எருதின் வளர்ப்புப் பிராணியா..?’’‘‘மன்னா...’’‘‘சொல்! நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன் வேடத்தில் வந்திருக்கும் போலியா?!’’ http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16855&id1=6&issue=20200522
  29. 1 point
    உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயத்தொழில் பிரிவு தலைவராக இலங்கை தமிழ் பெண் நியமனம் Bharati May 22, 2020 உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயத்தொழில் பிரிவு தலைவராக இலங்கை தமிழ் பெண் நியமனம்2020-05-22T20:39:33+00:00உள்ளூர் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயத்தொழில் பிரிவு தலைவராக கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ராஜி பாற்றாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கவும், பயிற்சி பெற்ற பின் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப் படுத்தவும், விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்களின் முன்னேற்றம், வாழ்வாதாரம் பெருகும். இதற்காக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு பல்வேறு தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்து பயிற்சி வழங்கவும், பயிற்சி பெற்றபின் சிறிய நிதி ஆதாரம் பெற்றுத் தரவும், விரிவான திட்ட அறிக்கையை செய்து கொண்டு வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கையில் தயாரிக்கும் பொருட்களை வாங்கி ஆதரவு தெரிவித்தால் போதும், நம் தமிழ் உறவுகள் தலை நிமிர்ந்து வாழ பேருதவியாக இருக்கும். இக்கட்டமைப்பின் தலைவராக திருமதி ராஜி பாற்றாசனும், உதவியாக 7 துணை தலைவர்களும், 14 செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் தெரிவித்திருக்கின்றார். http://thinakkural.lk/article/42933
  30. 1 point
    ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சனம் செய்தலும் துரோகி அடையாளமும் Bharati May 23, 2020 ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சனம் செய்தலும் துரோகி அடையாளமும்2020-05-22T22:26:23+00:00Breaking news, அரசியல் களம் சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான மூன்று சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. கடந்த வாரத்தில் போரின் முடிவினை நினைவுகூரும் செயன்முறைகள் இலங்கையில் வாழும் சமூகங்களினாலும், இலங்கைக்கு வெளியில் வாழும் புலம்பெயர் இலங்கையினராலும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாகத் தமிழர்கள் மத்தியிலே சமூக வலைத்தளங்களிலே இந்த நினைவுக்கூரற் செயன்முறைகள் போர் பற்றிய பல சிக்கலான‌‌ நினைவுகளை வெளிக்கொண்டு வந்தன. போரின் போதும், அதன் முடிவின் போதும் அரசினால் மட்டுமன்றி விடுதலைப் புலிகள் உள்ளடங்கலான ஆயுதப் போராட்டக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் குறித்தும் சிலர் தமது கருத்துக்களையும், நினைவுகளையும் முன்வைத்தனர். இது ஜனநாயக ரீதியிலே ஓர் ஆரோக்கியமான செயன்முறையே. ஆனாலும், விடுதலைப் புலிகளின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டோரும், அவர்களைச் சார்ந்தோரும் தமது நினைவுகளையும், கருத்துக்களையும், நினைவுகூரற் காலப் பகுதியிலே பொதுத் தளங்களிலே வெளியிட்ட போது, அவர்களின் குரல்களை ஏற்க மறுக்கும் வகையிலும், சுயவிமர்சனக் கருத்துக்களுக்கு இடமளிக்காத வகையிலும் சிலர் செயற்பட்டனர். ஆயுதப் போராட்டத்தினை விமர்சனபூர்வமாக அணுகும் ஜூட் ரட்ணத்தின் டீமன்ஸ் இன் பரடைஸ் என்ற திரைப்படத்தினை 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே திரையிடுவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள், அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தொடர்பிலே வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக அவரினைத் துரோகியாக்கும் முயற்சிகள், நினைவுகூரற் செயற்பாடுகளிலே புலிகளை விமர்சிப்போர் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றன, ஆயுதப் போராட்டம் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட முடியாத ஒரு புனிதம் என்ற கருத்தியல் இன்றும் கூட எமது சமூகத்தின் சில தரப்பினரிடையே வேரூன்றி இருப்பதனை வெளிக்காட்டுகின்றன. ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற போது அது தொடர்பான கருத்துக்களைப் பொதுவெளியிலே முன்வைப்போர் கடத்தப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், அல்லது அவர்கள் வடக்குக் கிழக்கிலே வாழ்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இன்று ஆயுதப் போராட்டம் ஓய்ந்த நிலையிலே, அதனை நிராகரிப்போர் மீதும், அது பற்றி விமர்சனக் கருத்துக்களை முன்வைப்போரின் மீதும் வெறுப்பு விதைக்கப்படுகிறது. சிங்கள பௌத்தப் பெரும்பான்மைவாதத்தினாலும், இராணுவமயமாக்கத்தினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அந்தப் பாதிப்புக்களுக்காக நீதி கோரும் நாம், எமது சமூகங்களினுள்ளே கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்முறையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்துப் பேசுவோர் மீதும், அந்த ஞாபகங்களினைப் பொது வெளியிலே பகிருவோர் மீதும், எதிர்ப்பினை வெளியிடுவதும், அவர்களைக் கைகழுவி விடுவது போல செயற்படுவதும் மிகவும் கவலைக்குரிய விடயம். தமிழ் சமூகமும் அதனுடன் இணைந்து வாழும் சமூகங்களும் இவ்வாறு மக்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். விமர்சனங்களுக்கான வெளிகளை வழங்க முடியாத நிலைமையும், விமர்சகர்கள் துரோகியாக்கபடுவதும் தொடருமானால், எமது சமூகம் வெறுப்பூட்டும் ஒரு கருத்தியலுக்குள் சிக்கிவிடக் கூடிய அபாயம் ஏற்படும். சுயவிமர்சனத்துக்கு இடமளிக்கும், முற்போக்கான பன்மைத்துவத்தினை மதிக்கும் சமூகங்களினால் மாத்திரமே புதிய அரசியற் பார்வைகளினையும், புதிய அரசியல் செயல்முறைகளையும் உருவாக்கிட முடியும் என்பதனை நாம் வலியுறுத்த வேண்டும். தமிழ்த் தேசியவாத அரசியலிலே துரோகி அடையாளம் ஆயுதப் போராட்டத்துக்கு முன்னைய காலங்களிலேயே தமது தேசியவாத நிலைப்பாடுகளுடன் உடன்படாத தமிழ் அரசியல்வாதிகளையும், இலங்கையின் தேசிய ரீதியிலான அரசியற் கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்போரினையும் துரோகிகள் என்று சொல்லும் அரசியல் தமிழ்த் தேசியர்களால் முன்னெடுக்கப்பட்டது. துரோகிகளைக் கட்டமைக்கும் வெறுப்பூட்டும் அரசியலினை உருவாக்குவதிலே தம்மை அகிம்சைவாதிகள் என்று சொல்லிக் கொண்ட தமிழரசுக் கட்சியனருக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. இவர்கள் ஆரம்பித்து வைத்த துரோகிக் கருத்தியலினையே புலிகள் உள்ளடங்கலாகப் பின்னர் வந்த ஆயுதப் போராட்ட இயக்கங்களும் பின்பற்றத் தொடங்கினர். போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, ஆயுதப் போராட்டத்தின் வறுமைகளையும், புறமொதுக்குதல்களையும் கேள்விக்குட்படுத்திய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜனி திராணகம அதே பல்கலைக்கழகத்தின் மாணவர்களான கவிஞர் செல்வி, ஜோர்ஜ் மனோகரன் போன்றோர் உள்ளடங்கலாகப் பலர் கொலை செய்யப்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், தங்கத்துரை, சரோஜினி யோகேஸ்வரன் போன்றோரும், ஆயுதப் போராட்டத்துக்கு மாற்றான வழிகளிலே விடுதலைக்குத் தீர்வுகளைத் தேடுவதற்கு முயற்சித்த வேளையிலே கொல்லப்பட்டனர். இடதுசாரி நிலைப்பாட்டில் அரசியல் முயற்சிகளினை மேற்கொண்டோர் கடுமையான அச்சுறுதல்களுக்கு உள்ளாகினர். அவர்களது கட்சிகள் கூட வடக்குக் கிழக்கிலே இயங்க முடியாது இருந்தது. ஆயுதப் போராட்டத்துக்கு வெளியில் இருந்து யாராவது அரசியல் செய்யும் போதும் கூட தம்மைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அவர்கள் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தி இருந்தனர். 1980களின் நடுப்பகுதியிலே வேறு போராட்ட இயக்கங்களைத் துரோகிகளாக முத்திரை குத்திக் கொன்று குவித்ததன் பின்னரே புலிகள் தமிழ் ஆயுதப் போராட்டப் பரப்பிலே தனிப்பெரும் சக்தியாக உருவாகினார்கள். இந்தக் கொலைகளைக் கண்டும் காணாதது போலவும், அவை குறித்து மௌனிகளாகவும், சில வேளைகளிலே அவற்றினை நியாயப்படுத்துபவர்களாகவும் நாம் இருந்திருக்கிறோம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தின் அவலமான விளைவுகளுக்கு நாமும் பொறுப்பு என்பதனையும் ஏற்க வேண்டும். தமிழர்களைத் தனிமைப்படுத்துவதில் ஆயுதப் போராட்டத்தின் பங்கு தமிழ் மக்கள் மிகவும் நீண்ட காலமாக அவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தமக்கு சமஷ்டி அடிப்படையிலான பிராந்திய சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பது உள்ளடங்கலான சில நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து சாத்வீகப் போராட்டங்களை நடாத்தினர். இந்தக் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்க மறுத்த இலங்கையினை ஆட்சி செய்த அரசாங்கங்கள், அரசினையும், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளினையும் சிங்கள பௌத்த மயமாக்கும் பணிகளிலே ஈடுபட்டனர். இவ்வாறான புறக்கணிப்புக்களை எதிர்கொண்ட நிலையிலேயே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் உருவானது. இந்தப் போராட்டம் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலையினை முன்னிறுத்தினாலும், இது ஒரு கட்டத்திலே தமிழ் மக்கள் மத்தியில் உள்ளக‌ ஜனநாயகம் பாதிக்கப்படுவதற்கும் காரணமாகியது. ஆயுதப் போராட்டத்தின் கொடிய விளைவுகளில் ஒன்றாகவே வட பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாகப் புலிகளினால் வெளியேற்றப்பட்டனர். தென்னிலங்கையிலே பேரூந்துகளிலே பயணித்த, சமய வழிபாட்டுத் தலங்களிலே ஒன்று கூடிய சிங்கள மக்களின் மீதும், வடக்குக் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்களின் மீதும் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. எம்மீது இனவாதம் மிக்க அரசினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்குப் பதிலடியாகவே நாம் இந்த வன்முறையினை மேற்கொண்டோம் என, இந்த வன்முறையின் பாதிப்புக்களைப் பற்றிச் சிந்திக்காது, எமது வன்முறையினை நாம் நியாயப்படுத்தி வந்தோம். இதனால் தமிழர்கள் நாட்டில் வாழ்ந்த ஏனைய சமூகங்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டோம். இனங்களுக்கு இடையிலான உறவுகளிலே அவதானிக்கப்பட்ட பிளவுகள் மேலும் கூர்மை அடைந்தன. ஏற்கனவே பலவழிகளிலே புறமொதுக்கல்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய அரசியல் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்ட காலத்தில் மேலும் மோசமான புறமொதுக்குதல்களை உருவாக்கியது. இது தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான நியாயப்பாடுகளை உண்ணாட்டிலும், வெளிநாடுகளிலும் முன்கொண்டு செல்லுவதற்குப் பதிலாக அவற்றினை வலுவிழக்கச் செய்தது. ஒருவிதமான சுய அழிவினையும் இந்தப் போராட்டம் மக்கள் மீது ஏற்படுத்தியது. அரசின் கொடிய வன்முறைகளுக்கு மேலதிகமாக ஆயுதப் போராட்டத்தின் வன்முறைகளையும் சுமக்க வேண்டியவர்களாக வடக்குக் கிழக்கு வாழ் மக்கள் மாறினோம். சமூக விடுதலை முயற்சிகளிலே ஆயுதப் போராட்டத்தின் தாக்கம் ஆயுதப் போராட்ட காலத்திலே மக்களின் சமூக விடுதலைக்கான போராட்டங்களும் சில வகைகளிலே பின்னடைவினை எதிர்கொண்டன. புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் சாதி ரீதியில் மக்களை ஒடுக்கும் சில நடைமுறைகளுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தமை, ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் வாழ்விலே சில சாதகமான மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கங்கள் செயற்படுவதற்குப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டம் இடமளிக்கவில்லை. மக்கள் மத்தியில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கூட்டுக் கருத்துருவாக்கம் இடம்பெறுவதற்கான வெளிகள் குறுக்கப்பட்டன. பெண்களின் விடுதலையினை ஆயுதப் போராட்டத்திற்கும், தமிழ்த் தேசியத்துக்குமான அவர்களின் பங்களிப்பு என்பதன் ஊடாகவே புலிகளின் அரசியல் பெரும்பாலான வேளைகளிலே விளங்கப்படுத்த முற்பட்டது. மாற்று அரசியற் கருத்துக்களைக் கொண்ட பெண்கள் கொலை செய்யப்பட்டனர். பெண்களுக்கான பாலியல் சுதந்திரம், ஆடைச் சுதந்திரம் போன்ற விடயங்களும் ஆயுதப் போராட்ட காலங்களிலே கட்டுப்படுத்தப்பட்டன. பல்வேறு நாடுகளிலே தேசியவாதச் சூழல்களிலே அவதானிக்கப்பட்டது போல, பெண்ணின் தலையில் தேசத்தின் கலாசாரத்தினைச் சுமக்கும் பொறுப்பினை தமிழ்த் தேசியவாதமும் ஊக்குவித்தது. பெண் விடுதலையினை அரசியல், சமூக, கலாசாரத் தளங்களின் ஊடாக, பன்முகப்படுத்தப்பட்ட முறையில் முன்னெடுக்க விரும்பிய பெண் செயற்பாட்டாளர்களை மேலைத்தேயப் பெண்ணியவாதிகள் என முத்திரை குத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்றன. ஆயுதப் போராட்டம் பற்றிய பல விதமான பார்வைகள் ஆயுதப் போராட்டத்தினை அகிம்சை நிலையில் இருந்து அறமற்ற போராட்டம் என முற்றாக நிராகரிப்போர், அதனைத் தாம் விரும்பாத நிலையில் இயக்கங்கள் தம்மீது திணித்ததாகச் சொல்வோர், ஆயுதப் போராட்டம் சுய அழிவினை ஏற்படுத்தும் நிலையினை எட்டுவதற்கு முன்னரான அதனது காலப் பகுதியினை ஆதரிப்போர், 1987 இல் ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முந்தைய ஆயுதப் போராட்டத்தினை ஆதரிப்போர், ஆயுதப் போராட்டத்தின் நல்ல பக்கங்கள் எவை கெடுதியான பக்கங்கள் எவை என வேறுபடுத்தி அதன் அடிப்படையில் ஆயுதப் போராட்டம் பற்றி விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆதரிப்பவர்கள் எனத் தமிழ் சமூகத்திலே ஆயுதப் போராட்டத்தினை ஆதரிக்கும், நிராகரிக்கும் பல வகையான தரப்பினர் இருக்கிறார்கள். இவ்வாறான பன்மைத்தன்மையான கருத்துக்களைக் கொண்டிருக்கும் சமூகம் ஒன்றிலே ஆயுதப் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாதோரைத் துரோகிகள் எனவும், தமிழர்களுக்கு விரோதமானவர்கள் எனவும், அரச ஆதரவாளர்கள் எனவும், ஒத்தோடிகள் எனவும், அவர்கள் தமிழர்களே இல்லை என்றும், அல்லது அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலினை முன்னிறுத்தும் கட்சிகளிலே பங்குபற்ற முடியாது என்று சொல்லும் போக்குகள் மிகவும் அபாயகரமான மனநிலை ஒன்று எம்மத்தியிலே இருப்பதனையே காட்டுகிறன. பல குறைபாடுகளைக் கொண்ட ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சன ரீதியாக அணுகுவது, நாம் எமது நிகழகால மற்றும் எதிர்கால சமூகப் பொருளாதார அரசியல் விடுதலையினை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும். ஆயுதப் போராட்டத்தினைச் சுயவிமர்சனம் செய்வது என்பது போராட்டத்தில் ஈடுபட்டோரினை காட்டுமிராண்டிகள் என்றோ வக்கிர மனநிலை கொண்டவர்கள் என்றோ முத்திரை குத்தி, எம்மை அவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் புனிதர்களாகக் காட்டும் ஒரு முயற்சி அல்ல. போராட்டத்தினை மேற்கொண்டவர்களும் எமது சமூகத்தில் இருந்து வந்தவர்களே. அவர்கள் எமது சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சில கருத்தியல்களையே பிரதிபலிக்கிறார்கள். எனவே சுயபரிசோதனை என்பது போராட்டத்தின் போதாமைகளுக்கும், வன்முறைகளுக்கும், புறமொதுக்கல்களுக்கும் நாம் சமூகங்களாகப் பொறுப்பேற்கும் ஒரு முயற்சியே. இவ்வாறான ஒரு முயற்சியின் மூலமே நாம் புதியதோர் திசையில் சமூகங்களின் கூட்டாக எமது விடுதலையினை நோக்கிப் பயணிக்க‌ முடியும். http://thinakkural.lk/article/42950
  31. 1 point
    45 வருடங்களுக்கு முன்பு அமேரிக்கா எகாதிபத்தியம்,நவகாலாணித்துவம்,காலணித்துவம் இவற்றை முறியடிக்க வேண்டுமாயின் ,புரட்சிகர சிந்தனை கொண்ட மாவோயிசம்,மார்க்ஸிசம் போன்றவை தான் சிறந்த வழி என ....உருத்திராட்சை கொட்டையுடன் சிவசிந்தனை கருத்தியலுடன் திரிந்த சமுகத்திடம் புகுத்தப்பட்டது ...... இன்று இந்த அமெரிக்கா எகாதிபத்தியத்துக்கும்,பிரித்தானிய காலணித்துவத்திற்கும்,சீனா ,ரஸ்யா நிலஆக்கிரமிப்புக்கும் வித்தியாசம் தெரியவில்லை .... எல்லோரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் இதை புரிய எனக்கு 40 வருடங்கள் ஆகிவிட்டது...
  32. 1 point
    நடுவில் சனாதிபதி இருப்பது இல்லை பிரச்சனை, ஒற்றையாட்சி முறை. அங்கேயே முழு அதிகாரமும் இருப்பது தான் நாட்டில் பிரச்சனை. மாகாணங்களுக்கு அரசியல் அதிகார பரவலை தந்தால், சனாதிபதியால் முழு அதிகாரங்களையும் வைத்திருக்கமுடியாத நிலை இருக்கும். அதுவே, மேலை நாடுகளில் பொதுவாக உண்டு.
  33. 1 point
    இவர்கள் என்றுமே பிடிபட்டவர்களைக் காட்டிப் பொதுமக்களை இந்தக் களவாணிகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி செய்யமாட்டார்கள். குற்றவாளிகளைப் பிடித்த தங்களின் பதவிகளை வெளிக்காட்டும் சின்னங்கள் கொண்ட சீருடைப் படங்களையே போட்டுக் காட்டுவார்கள். இதன் பின்னணி என்னவாக இருக்கும்.....?? குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வரும்வரை ஒருவரைக் குற்றவாளியாக வெளிக்காட்டக் கூடாது எனச் சட்டமிருப்பதாக இங்கு வந்து தாளம்போடக்கூடாது. சிறீலங்காவில் நீதி, நியாயம், சட்டம், ஒழுங்கு என்பதெல்லாம் ஒரு கண்துடைக்கும் பம்மாத்துக் காரணிகளே.
  34. 1 point
    ஆட்களை நேரில் கண்டால் வெருண்டடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். இனி ஒன்லைனில்தான் வாழ்க்கையின் பெரும்பகுதி போகும்! கடவுளரும் நைவேத்தியங்களை ஒன்லைனில் உண்பதில் பிரச்சினை இல்லையே!
  35. 1 point
    இந்த நாட்டின் பிரதம மந்திரி தமிழர் வழி வந்தவரே, பெயர் :Hon. Moses Veerasammy Nagamootoo. இந்த நாட்டில் நிறைய தமிழர்கள் வாழ்கிறார்கள் (இவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் பெயர்கள் மட்டும் அழகான தமிழ் பெயர்கள்) இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் குடியேற்றப்படடவர்கள். இங்கே கனடாவில் உள்ள எம்மவர்கள் இந்த நாட்டில் காணி வாங்கி பெருமளவில் விவசாயம் செய்கிறார்கள், கனடாவுக்கு எமது மரக்கறி {கத்தரிக்காய், முறுக்கங்கய் ), மீன் என்பன பெருமளவில் இந்த நாட்டில் இருந்தே வருகின்றது.
  36. 1 point
    குமாரசாமி, இவை நான் வீட்டில் காய வைத்து பவுடரக்கி செய்தவை. குளிசை செய்யும் இயந்திரமும் குளிசைகளும் ebay இல் வாங்கினேன். கடைசி மகனிடம் கொடுத்தேன் செய்ய சொல்லி, அவர்தான் கிழமைக்கு 200nos செய்வார். நீங்கள் காய்ந்த வல்லாரை முருங்கை இலைகளை தமிழ்கடைகளில் வாங்கி பவுடராக செய்யலாம், இவை கடைகளில் வாங்க முடியாது. அங்கு இல்லாவிட்டால், தேவை என்றால் தனிமடலில் விலாசம் அனுப்புங்கள், என்னிடம் முருங்கை இலை குளிசைகள் அதிகமிருக்கு அனுப்பிவிடுகின்றேன் குளிசை: https://www.ebay.com.au/sch/i.html?_nkw=Empty Vegetable Capsules இயந்திரம்: https://www.ebay.com.au/itm/100-Holes-Capsule-Filler-Pill-filler-Filling-Machine-for-size-0/164184578360?hash=item263a29d938:g:e-oAAOSwS51er4Dv https://www.youtube.com/watch?v=uvSkshSX520
  37. 1 point
    திருகோணமலை - மூதூர் பகுதியில் யுவதியொருவரை கடத்திச் சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரொருவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார். நடுத்தீவு, மூதூர் - 7, பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி வெளிநாடு சென்றுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே வெருகல் பகுதியில் உள்ள 23 வயதுடைய தமிழ் யுவதியொருவரை கடத்தி சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்திச் செல்வதாக அப்பிரதேச பள்ளிவாசலினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்த குறித்த நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilwin.com/community/01/246630?ref=home-feed
  38. 1 point
    ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தற்போது வெளியான தகவல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் தற்போது கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த மாவட்டங்களில் தளரத்தப்பட்டுள்ளது. எனினும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை நாடு தழுவிய ரீதியில் தினமும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143716?ref=rightsidebar
  39. 1 point
    எமது விடுதலைப் போராட்டம் ஓய்ந்து போகப்போவதில்லை! தடம் அழியா நினைவுடன் … மே 16 – பகுதி 2 அ. அபிராமி On May 20, 2020 வட்டுவாகல் வீதிக்கு ஏறினேன்.ரவைகள் சீறிச்சீறி வந்து கொண்டிருந்தன. வீதியின் மருங்கில் உழவு இயந்திரப் பெட்டிகளில் சாவடைந்தவர்களின் உடலங்கள்.அந்தப் பெட்டிகளின் கீழே விழுப்புண் தாங்கியவர்களுமாய்ப் பலர் கிடந்தனர். நெஞ்சே பற்றி எரிந்தது. ”தண்ணி…தண்ணி..” ஈனக்குரலில் யாரோ தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்தேன். உழவு இயந்திரப் பெட்டிக்குக் கீழே இருந்துதான் அந்தக் குரல் வந்தது. ஒருதம்பி கைகளை நீட்ட முயற்சி செய்து கொண்டிருந்தான்.. அது கொஞ்ச உயரத்துக்கு மேலே உயரவில்லை. திரும்பவும் கீழே விழுந்தது. அவன்தான் தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டேன்.அவனுக்குப் பக்கத்தில் இறந்த உடலங்கள் கிடந்தன. விழுப்புண் தாங்கியவர்களும் இருந்தார்கள். ஓவென்று கதறி அழவேண்டும் போலிருந்தது.பக்கத்தில் யாரிடமாவது தண்ணீர் இருக்குமா என்று விசாரித்துப் பார்த்தேன் ஒருவரிடமும் இல்லை. கிட்டத்தில் கிணறு கூட இல்லை தண்ணீர் எடுத்துவரக்கூடிய இடமும் இல்லை. எல்லாரையும் போலவே பார்த்துவிட்டு உதவமுடியாதவளாய், அவனைத் திரும்பிக்கூட பார்க்கச் சக்தியற்று வந்துகொண்டிருந்தேன். உள்ளம் நெருப்பாய் கொதித்தது.எப்படி வந்தேன் என்று தெரியாமலே நந்திக்கடற்கரையடியில் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன்;. எறிகணைகள் ஓய்ந்தபாடில்லை.நானும் அவளும் இருந்த பக்கமாக ஒரு 60 எம்.எம் மோட்டார் எறிகணை ஒன்று வந்து குத்தியது. அந்த இடத்திலேயே எல்லாம் முடிந்து விட்டது என்றுதான் நினைத்தோம். ஆனால் வந்து குத்திய எறிகணை வெடிக்காமல் கிடந்தது. எனது உடமைப் பையையில்; இருந்த அறிக்கைகள் எல்லாவற்றையும் எரிக்கத் தொடங்கினேன். உடமைப்பையில் ஒவ்வொரு இடமாகக் குறைத்துக்குறைத்து இப்போது எஞ்சியது இதுவரை நாளும் பத்திரமாய் கட்டிக்காத்து வந்த சில புகைப்படங்கள்,எனது நீண்ட நாள் உழைப்பின் அறுவடையாய் இருந்த கரும்புலிகளது வரலாற்றைத்தாங்கிய நூல். அந்த நூலை வடிவமைத்துத் தந்த போராளி எனது கையில் தந்த தரவுகளைச் சேமிக்கும் கருவி (மெமறிஸ்ரிக்),எப்போதும் என்னோடு இருக்கும் கொப்பி,பேனை, இதைத்தவிர எனது தனிப்பட்;ட தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள,; அதை மிஞ்சி வேறு எதுவும் அந்தப்பையில் இல்லை. சொல்லப்போனால் தோழி தந்த அரைப்பாவாடை சட்டையைத் தவிர வேறு மாற்றுடை கூட என்னிடம் இல்லை. என்னிடம் என்று சொல்வதை விட அனைவரது நிலையும் அதுவாகத்தான் இருந்தது. அந்தப் புகைப்படங்களை எடுத்துப்பார்த்தேன். ‘அண்ணையோட நின்று படமெடுக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு. அந்தக்கனவு பலருக்குக் கிடைக்கும் சிலருக்கு கிடைக்காமலே போய்விடும்.’ ஆனால் எனக்கு பலதடவை வாய்ப்புக் கிடைத்திருந்தது.இப்போது அதைக்கூட வைத்திருக்க முடியாத சூழலில் நான் இருந்தேன.; அந்தப்படங்களை எரிக்க மனம் இடங்கொடுக்கவில்லை. அண்ணாவின் படத்தைக் கிழிக்கவும் என்னால் முடியவில்லை. நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு எனது படத்தை மட்டும் கிழித்து எரிகின்ற நெருப்பில் போட்டுவிட்டு அண்ணாவின் படத்தை நாங்கள் இருக்கிற பங்கருக்குள்ளே வைத்தேன். அடுத்து நான் எழுதிய புத்தகம். அட்டைப் படத்திலிருந்து ஒவ்வொரு தாளாகக் கிழித்துக்கிழித்து எரிகின்ற தீயில் போடுகின்றபோது இதுநாள்வரை ஒவ்வொரு செங்கல்லாய்ச் சேர்த்துச்சேர்த்து நான்கட்டிய கோபுரத்தை ஒரே நாளில் என் கையாலே தகர்த்தெறிவது போலிருந்தது. கையில் இருந்த தரவுகளைச் சேமிக்கும் கருவியை பக்கத்தில் கிடந்த கல்லால் குற்றி தூர வீசினேன். எந்தநேரம் என்ன நடக்கும் என்பதை சொல்லமுடியவில்லை. பாதுகாப்பகழிக்குள் இருந்தபடியே நான் அணிந்திருந்த எனது உடையை மாற்;றினேன். என்ஆளுமை, என்நிமிர்வு, என்அடையாளம் எல்லாமே என்னைவிட்டுப் போவதைப்போலிருந்தது. ஆனாலும் விடுதலைப் போராட்டத்தின் பாதித்தூரத்திலிருந்து பயணித்த நான் இந்தக் கணம் வரை எனது கடமையை சரிவரச் செய்திருக்கிறேன் என்ற திருப்தி மட்டும் முழுமையாக இருந்தது. பொழுதும் சாயத் தொடங்கியது. எம் இனத்தை அழிப்பதற்காக உலக நாடுகள் எல்லாம் அள்ளிக் கொடுத்த ஆயுதங்களால் பெருமெடுப்பலான தாக்குதல்களை, நாலா பக்கமிருந்தும் எதிரி தொடுத்தவண்ணமிருந்தான். இப்போதும் எதிரியை நோக்கி சரமாரியான எதிர்த் தாக்குதல்கள் நடந்து கொண்டே இருந்தது. எத்தனை துணிச்சல், எத்தனைவீரம் தாம் சண்டை செய்வது அரச படைகளோடு மட்டுமல்ல, ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும் பெரும் வல்லரசுப் படைத்திட்டமிடல்களோடும், படைவளத்தோடும் என்பதைத் தெரிந்திருந்தும,; வருடங்களைக் கடந்தும் நீண்ட போரில் நிமிடங்கள் கூட ஓயாது களமாடும் ஒவ்வொரு படையணிகளையும் சேர்ந்த எங்கள் சகோதர சகோதரிகள் இந்தத் தேசத்தின் எல்லைச்சாமிகளாய்த் தெரிந்தார்கள்.அவர்களை என்றும் இந்த மண் நன்றியுடன் தலைவணங்கவேண்டும் என எனக்குள் எண்ணிக்கொண்டேன். ஒவ்வொரு கணங்களும் நீண்ட யுகங்களாகமாறிக் கொண்டிருந்தன. வானத்தில் பராவெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. நாங்கள் இருந்த இடமும் பாதுகாப்பற்றதாய் உணர, சொஞ்சம் நகர்ந்து இன்னுமொரு காப்பரணுக்குச் சென்றோம். இரவிரவாய் நந்திக் கடல் அதிர்ந்து கொண்டிருந்தது. வெளியில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. எல்லோர் முகங்களும் பாறைகள் போல் இறுகிக் கிடந்தன. அழகே உருவான அவளது முகம் கூட சோபை இழந்து கிடப்பதாக எனக்குத் தோன்றியது. ஊடகப்பிரிவுக்கு நான் சென்றதிலிருந்து அவளது வளர்ச்சியை திறனை கூடவே இருந்து பார்த்திருக்கின்றேன். ஊடகத்துறை சார்ந்து அவளுக்கு தெரியாதது என்று எதுவுமே இல்லை. தனது குரல் ஆளுமையால்,தனது நடிப்புத் திறனால்,தனது படைப்புகளால், தனது தொகுப்பாற்றலால், தனது படப்பிடிப்பு வல்லமையால் எனப் பல்துறை ஆளுமையை தனக்குள்ளே தாங்கி நிற்கும்;; அவள், கணவனிடம் இருந்து இன்னும் எந்தத் தகவலும் வராத குழப்பத்தில் இருந்தாள்.குழப்பத்தோடே நேரங்கள் உருண்டோடின. அவளது கணவனிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன்தான் நந்திக்கடலூடாக ஊடறுத்து இறங்கும் கடலணிகளுக்குப் பொறுப்பாக இருந்தான். ”என்னைப் பார்க்க வேண்டாம். நீ அக்காக்களோடு வெளிக்கிட்டு போ..”ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அவனோடு நின்றால் அவனையும் பாதுகாக்கலாம் என்பது அவள் எண்ணமாக இருந்தது. அவனைத் தனியே விட்டுவிட்டு வெளியேறுவதற்கு அவள் மனது ஒருதுளியும் இடங்கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்தப் போர்ச்சூழலிற்குள்தான் அவள் போதிய மருத்துவ வசதி இன்றி தனது பிஞ்சுக் குழந்தையை இழந்திருந்தாள். இப்போது அவனுக்கும் ஏதும் நடந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்குள் இருந்தது.அதனால்; அவன் நிற்கும் இடத்துக்கே தானும் வரப்போவதாக சொன்னாள். அவனும் அவளை அழைத்து வர ஆட்கள் வருவார்கள் என்றும் எங்களை வெளியேறிக் கொண்டு இருக்கும் மக்களோடு சேர்ந்து வெளியேறும்படியும் சொன்னான். நாங்களும் அவளை எங்களோடு வரும்படி அழைத்தோம். ”நான் தனிய வந்து என்ன செய்யிறது எப்படியும் அவரையும் அழைத்துக் கொண்டு வரப்பார்க்கிறன்.இல்லையென்றால் ஏதோ நடக்கிறது வாழ்வதாக இருந்தாலேன்ன சாவதாக இருந்தாலேன்ன அது இரண்டு பேருக்குமே ஒன்றாகவே இருக்கட்டும்.. ”’ அவள் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்தாள்.எங்களையும் வெளியே செல்வதற்கு தொடர்புகளை எற்படுத்தித் தந்துவிட்டு வெளியேறினாள்.நாங்களும் அவளும் செல்லும் பாதைஒன்றாக இருந்தது.அவள் நந்திக் கடல் பக்கமாகச் செல்ல நாங்கள் வட்டுவாகல் பக்கமாக நடக்கத் தொடங்கினோம். எல்லோர் மனங்களுக்குள்ளும் இனம்புரியாத அச்சமும் பதற்றமும் இருந்தது. எப்படிப்போகப்போகிறோம்? யாரோடு போகப்போகிறோம்? போனபின் என்ன நடக்கப்போகிறது? எல்லோருக்குள்ளும் விடைதெரியாத பல கேள்விகள் இருந்தன. ஆனாலும் அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் வெளிக்கிடும் போதும், இறுதிவரை நின்று போராடுவது என்ற ஓர்மத்தோடு நின்ற போராளிகள் ~கவனமாக போங்கள் இது முடிவல்ல..பெரும் பொறுப்புகளை சுமந்து செல்கிறீர்கள் உங்களை நம்பித்தான் இங்கு நாங்கள் நிற்கிறோம்…’ என்று எங்களை வழியனுப்பி வைத்த போராளிகளை நினைத்தபடியே நடந்து கொண்டிருந்தேன். எதிரியின் மனிதப்பேரவலத்தை சுமந்த மக்கள் தம் உயிர்க்கூடுகளைச் சுமந்தபடி நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நாங்களும் நடக்கத் தொடங்கினோம். 17 ஆம் நாள் காலை மெல்ல மெல்ல புலரத் தொடங்கியது. ஒருவரை ஒருவர் முகம்பார்க்கக் கூடிய அளவுக்கு வெளிச்சம் பரவியிருந்தது. அப்போதுதான் என் நெருங்கிய தோழியைக் கண்டுவிட்டேன்.சோர்ந்து போயிருந்த மனதுக்குப் பெரும் தெம்பு கிடைத்ததுபோலிருந்தது. அவளினுடைய அம்மா ஏற்கனவே மூன்று போராளிகளைக் கூட்டிச் செல்ல வேண்டும். அனாலும் கொஞ்சம் கூட அச்சமின்றி எல்லாப்போராளிகளையும் தான் அழைத்துச் செல்வதாகச் சொன்னார். ”பயப்படததையுங்கோ பிள்ளைகள் எல்லாரையும் நான் கூட்டீற்றுப் போறன்..எனக்குப் பின்னால வாங்கோ…” அந்த ஒற்றைச் சொல் தந்த நம்பிக்கையில் அம்மாவுக்குப் பின்னாலே சென்று கொண்டிருந்தோம்.வட்டுவாகல் பிரதானசாலையில் இருந்து கொஞ்சம் இறங்கி ஒரு தொடர் அணியாக நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.அவ்வளவு நெரிசலுக்குள்ளும் எங்களணி தனது தொடரைக் கைவிடவில்லை. கால்களில் எல்லாம் மக்கள் பாவித்து விட்டுச் சென்ற பொருட்கள் மிதிபட்டன. தரப்பால் கொட்டில்களை இழுத்துக்கட்டிய கட்டைகள் இடித்தன,மக்கள் சேர்த்துச்சேர்த்து வைத்திருந்த பொக்கிசங்கள் எல்லாம் கால்களில் மிதிபட்டன. அந்த நேரத்தில் கூட எதிரியின் தாக்குதல்கள் தொடர்ந்தபடியே இருந்தன. தாக்குதலுக்கு காப்பாக மக்கள் இருந்து விட்டுச் சென்ற காப்பகழிகளிகளில் இறங்கியிருந்தோம். அப்போதுதான் காதணி எதுவும் அணியவில்லை என்பதை தோழி நினைவுபடுத்தினாள். என்னிடம் காதணி எதுவும் இல்லை. பக்கத்தில் இருந்த இன்னுமொரு தோழி ஒரு ‘இமிற்றெசன்’ தோடொன்றைத் தந்தாள். அந்த அமளிக்குள் எனக்கு காதுகுத்து நடந்தது. காதிலிருந்து இரத்தம் வந்தது. உணர்வுகள் மரத்துப்போயிருந்ததால் அந்தவலிகூடத் தெரியவில்லை. மீண்டும் எழுந்து நடக்கத் தொடங்கினோம்.வீதி நிறைந்த மக்கள் வெள்ளம்.ஆங்காங்கே ஆதரவற்றுக் கிடந்த உடலங்கள். ‘காட்டுக்க ஆமிகாரன் நிக்கிறான்’ குசுகுசுப்புகள் எங்கள் காதிலும் எட்டியது. அப்போதுதான் கழுத்தில் கிடந்த குப்பிதகடு நினைவுக்கு வந்தது. கழுத்தில் கிடந்ததைக் கழற்றி கையில் வைத்திருந்தேன். இப்போது வட்டுவாகல் பக்கமாக காடுகளோடு காடுகளாய் நின்ற இராணுவத்தினரை நாங்களும் கண்டு விட்டோம். வீதிகளில் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் எவரும் ஒருத்தரை ஒருத்தர் அறிந்தவர்களாகக் காட்டிக் கொள்ளாது சென்று கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளைத் தேடித்தேடி காண்பவர்களிடம் எல்லாம் விசாரித்துக் கொண்டு திரிந்தார்கள்.எப்படியாவது தங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கம்,தவிப்பு அவர்களின் முகங்களில் தெரிந்தது. வீதியில், உழவு இயந்திரப் பெட்டிகளில் விழுப்புண் தாங்கியவர்களை ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.பாதை திறந்துவிட்டான் என்பதைப் புரிந்து கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வட்டுவாகல் ஆலமரத்தடிக்கு வந்து விட்டோம். இப்போது இராணுவத்தினரை நேருக்கு நேர் மிக அருகில் பார்க்கிறோம். இராணுவத்தினர் போராளிகளாக இருந்தவர்களை சரணடையும்படி அறிவித்தல் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் முகங்கள் எல்லாம் கோரமும் குரோதமும் நிறைந்திருப்பதாக தெரிந்தது. நாங்கள் வெளியேறிக் கொண்டிருப்பவர்களையே பார்த்துக் கொண்டு மணிக்கணக்கிலே நின்றோம்.இனி நாங்களும் உள்ளே சென்றுதானே ஆகவேண்டும்…கையில் வைத்திருந்த குப்பிதகடுகளை பனைமரப் பொந்தில் போட்டேன். அது என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. அது என்னைக் கோழை என்று எண்ணியிருக்கக் கூடும்.. ஆனால் எனது உயிர் இருந்தால் இன்னும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது எனக்குள் அதிகம் இருந்தது. அதே நம்பிக்கை எல்லோருக்குள்ளும் இருந்தது. எதிர்கால சந்ததிகளைப் பக்குவமாகத் தீட்டுகின்ற பெரும் கடமையும் பொறுப்பும் இருந்தது. நாம் தோற்றுப் போனவர்கள் அல்ல..,தோற்கடிக்கப்பட்டவர்களும் அல்ல.., எத்தனை நாடுகள் எம்மைக் கூட்டுச்சேர்ந்து அழிப்பது தெரிந்தும் அந்த வல்லாதிக்க சக்திகளை எல்லாம் எதிர்த்து நின்று களமாடும் வீரத்தைக் கொண்டவர்கள். சாம்பல்மேடுகளில் இருந்துதானே பல சரித்திரங்கள் பிறப்பெடுக்கின்றன. இதோடு எமது விடுதலைப் போராட்டம் ஓய்ந்து போகப்போவதில்லை. போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதங்கள் ஏந்தினோமோ அந்தமக்களின் விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும்வரை தொடர்ந்து உழைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பையும் கடமையும் தாங்கியவர்களாய் எங்கள் மண்ணிலேயே திறந்தவெளிச் சிறைக் கைதிகளாய் ஒவ்வொரு அடியாய் நகர்ந்து வட்டுவாகல் பாலம் கடக்க கால்களை எடுத்து வைத்தோம். மீண்டும் சந்திப்போம்.. https://www.thaarakam.com/news/132027
  40. 1 point
    சரியான பதில்! வாழ்த்துக்கள்
  41. 1 point
    எல்லாம் போதைக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் அடியான இளய கூட்டம் பெரிய பைக் வேண்டும் கையில காசு வேண்டும் ஆனால் உழைக்க போமாட்டார்கள் இப்படியான கீழ்த்தரமான வேலைகள் செய்து அடுத்தவன் உழைப்பை சுரண்டி வாழ்வது இது எல்லா இடங்களிலும் பையா எப்படியும் நம்ம வீடு ஏரியா பக்கம் எல்லாம் தெரிந்தவன் சொல்லிக்கொடுத்துதான் மற்றவன்வருவான் நீங்க சொன்னது போலவும் நடந்திருக்கு ஊரில் பல சம்பவங்கள்
  42. 1 point
  43. 1 point
  44. 1 point
    டாஸ்மாக்கை திறந்ததால் எல்லா இடங்களிலும் கொலை கொள்ளை சீமான்.
  45. 1 point
    கீழே உள்ள இணைப்பில் விபரமாக இருக்கு https://www.youtube.com/watch?v=gPP3a6JsdTE
  46. 1 point
    அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண் தர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். கிழக்கிலங்கையில் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி பெற்றவர். உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் யாழ் , பல்கலை கழகத்தில் அவர் பட்டம் பெற்றபோது அவரின் அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்திற்கு சென்றிருந்த போது தர்சிகாவின் திறமையை சவுத் கரோலினாவிலுள்ள கிளெம்சோன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அவதானித்துள்ளார். கல்வியில் திறமைசாலியாக விளங்கிய தர்சிகா ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.அவர் அமெரிக்காவில் உயர் கல்வியை தொடருவதற்கான ஏற்பாடுகளை இலங்கையை சேர்ந்த பேராசிரியர் நடராஜா ரவிச்சந்திரன் மேற்கொண்டிருந்தார். கிளென் திணைக்களத்தில் விஞ்ஞான முதுமாணி பட்டத்தை பெற்றிருக்கும் தர்சிகா விக்னேஸ்வரன் புவித்தொழில்நுட்ப பொறியியல் கல்வியை பூர்த்தி செய்துள்ளார். பேராசிரியராக வரும் நம்பிக்கையுடன் அவர் கலாநிதி பட்ட கல்வியை தொடரவுள்ளார். http://thinakkural.lk/article/42024
  47. 1 point
    நாளை மறுதினம் கடுமையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்! பொலிஸார் எச்சரிக்கை நாடு முழுவதும் நாளை மறுதினம் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நாளை மறுதினம் ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்று சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அந்த வகையில், ஊரடங்கு உத்தரவை மீறும் எவரையும் கைது செய்ய நாளை மறுதினம் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். கொழும்பு மற்றும் கம்பாஹாவில் ஊரடங்கு உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதால், அடுத்த வாரத்திலும் இந்த பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். பொலிஸார் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் சில இடங்களில் திடீர் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த அதிகாரிகளுக்கு ஆதரவளிக்க மறுக்கும் எவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/special/01/246151?ref=home-imp-parsely
  48. 1 point
    பேபி உருளைக்கிழங்கு அவிச்சு போட்டால் தான் சலட்டுக்கு நல்லாய் இருக்கும் ...அத்தோடு சிவப்பு வெங்காயம் போட்டால் சுப்பர்
  49. 1 point
    ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டு – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இதன்போது 245 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து கடந்த 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 53,547 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இந்த காலகட்டத்தில் 14,333 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொழும்பு-மற்றும்-கம்பஹா/
  50. 1 point
    Egg Dosa - முட்டைத் தோசை