• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   13

  • Content Count

   54,243


 2. ஈழப்பிரியன்

  ஈழப்பிரியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   9,052


 3. ரதி

  ரதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   13,299


 4. Rajesh

  Rajesh

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   5

  • Content Count

   3,105Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 25 மே 2020 in all areas

 1. 3 points
  ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி! ரமலானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு உதவ, ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று முன்வந்துள்ளது. பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை. இதனால், அங்குள்ள மார்தா லூதேரன் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 4ஆம் திகதி ஜேர்மனி மத சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. ஆனால் வழிபாட்டாளர்கள் 1.5 மீ (5 அடி) தூரத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் விளைவாக, நகரின் நியூகால்ன் மாவட்டத்தில் உள்ள தார் அஸ்லாம் மசூதி அதன் சபையின் ஒரு பகுதியை மட்டுமே தொழுகைக்காக வைத்திருக்க முடியும். குறிப்பாக 50 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும். இந்தநிலையில், க்ரூஸ்பெர்க்கில் உள்ள மார்த்தா லூத்தரன் தேவாலயம் நெருக்கடியால் சிக்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரபு மற்றும் ஜேர்மன் மொழிகளில் தங்களது தொழுகையினை மேற்கொள்ள இடமளித்துள்ளது. புதிய சமூக தொலைதூர விதிகளின் கீழ் முஸ்லிம்கள், தற்போது கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மதத்தின் இன்னொரு மதத்தினருக்கு இவ்வாறு உதவுவது, ‘ஒற்றுமையின் அற்புதமான அடையாளம்’ என்று உலகநாடுகளால் பாராட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜேர்மனியில்-கிறிஸ்தவ-தேவ/
 2. 3 points
  சண்டைய கூட பொறுத்துக்கலாம்ட.. ஆனா இந்த பிளாஷ் நியூஸ்க்கு கண்டன்ட் எழுதறவனோட அலப்ஸ் பொறுக்க முடியலடா.. அத்துமீறும் சீனா.! அதிரடி காட்டும் கிந்தியா..! அடங்கி போகும் சீனா .. ! பரிக்கோட்டில் பதற்றம் ஏன்.? சீனா பீதி..! இவயளை தூக்கி முன்னரங்கில் விட்டா காணும் யாருக்கு வாந்தி வருது.. பேதி ஆகுது .. என்டு.
 3. 3 points
 4. 3 points
  இன்றைய காலை ஸ்பெசல்.
 5. 2 points
  ஜெனிலியா கலியாணம் முடித்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்... கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை.
 6. 2 points
  இவர்களால் விடுவிக்கப்பட்ட நாடுகள் ஒன்று சண்டை போட்டபடி இருக்கணும் இல்லை இவர்களின் சப்பாத்தை நக்கி கொண்டு இருக்கணும் உதாரணம் இந்தியா மோடி .
 7. 2 points
 8. 2 points
  பையா ஒரு காலத்தில் சீமானுக்கு முன் இவ்வளவு தூரம் தனது நாட்டையே சீரழித்து அடுத்த சந்ததி வாழ விடாமல் இயற்கை வளங்களை எல்லாம் தோண்டி பணம் பண்ணுகிறார்கள் என்று தெரிந்திருக்கவில்லை. மாறிமாறி வந்த அரசுகள் இரண்டும் அதையே செய்து கொண்டிருந்ததால் ஆளைஆள் காட்டிக் கொடுக்காமல் இந்தப் பிரச்சனைகள் வெளிவராமல் பார்த்துக் கொண்டார்கள். இப்போது சீமான் வந்தபடியால்த் தான் ஊர் உலகம் ஏன் தமிழக மக்களுக்கே வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.
 9. 2 points
  படிப்பிக்கிறார்கள்! ஆனால், பெற்றோர்கள் வழிநடத்தலில் அதை மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் படித்தால் எதிரியை கையாளுவது இலகுவாக இருக்கும்.
 10. 2 points
  இப்படி உசுப்பேத்தியும் இந்திய இரணுவத்தை சண்டை பிடிக்க வைக்க முடியலையே, இனி மானமிருக்கா ரோஷமிருக்கா என்று உசுப்பேத்தனும், வல்லரசு என்றதை சீனாவுடன் மோதி நிருபிக்கட்டும். பாக்கியை கூட ஒன்னும் செய்யமுடியலை, அதுகுள்ள சீனவுடன் சீண்டல், நேபள வேற சீண்டிப்பார்க்குது, இலங்கை தமிழக மீனவர்களுடன் விளையாடுகின்றது....இந்தியா பேச்சளவில் மட்டும்தான்
 11. 2 points
  சுப்பரா வந்திருக்கு மாலு பணிஸ் . ஈழப்பிரியன் அண்ணாவுக்கு A++ by செஃப் நில்மினி
 12. 2 points
  இப்படி இருந்து பூட்டப்பிள்ளைக்கு தாலாட்டுப்பாடுவது ஒரு பெரிய வரம்......!
 13. 2 points
 14. 1 point
  நீங்கள், சுமத்திரன் கிறிஸ்தவர் என்பதனால் தான் பதவி கொடுக்க மறுக்கிறார்கள் என்று எழுதினீர்கள் ...நான் அதுவல்ல பிரச்சனை ...அவருடைய மனைவி தான் பிரச்சனை என்று எழுதினேன் ...சுமத்திரனை மக்கள் ஆதரிக்க வேண்டுமானால் அவர் தான் திருந்த/மாற வேண்டுமேயொழிய எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை ...தவிர , நீங்களும் சும்மா இங்கே வந்து அவர் கிறிஸ்தவர் என்பதால் ஒதுக்கி விட்டார்கள் என புலம்ப வேண்டாம்
 15. 1 point
  என்ட அண்ணர் சொன்ன மாதிரி நீங்கள் இந்த ஜென்மத்திற்கு ஊரில் போய் இருக்க போவதில்லை உதென்ன அடுத்த பிளானே எனக்கும் ஒன்று கட்டித் தாங்கோ
 16. 1 point
 17. 1 point
  26 வயசுப் பெட்டையை கல்யாணம் கட்டி கொடுக்காமல் வீட்டில வைத்திருந்தால் இப்படித்தான் ...வர ,வர யாழ்ப்பாணம் இந்தியாவை விட கேவலமாய் போய்க்கிட்டு இருக்கு
 18. 1 point
  தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே எல்லாம் மற்றய இனத்தவரால் தான் பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?
 19. 1 point
  சந்தேகப் படுவது ஒரு ரகம்......சந்தேகப் படு மவனே என நடிப்பது ஒரு ரகம்.....எது எப்படியாயினும் காரியத்தில் கண்ணாய் இருக்கின்றார்கள் ......அப்படியும் இல்லையெனில் கதைகளில் சுவாரஸ்யம் இருக்காது.....!
 20. 1 point
  கொரோனா வைரஸ் என்றால் என்ன? யாழ்.மக்களின் பதில் சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுதையும் புரட்டிப்போட்டுள்ளது. இந்த வைரஸ் எங்கிருந்தது வந்தது? கொரோனா வைரஸ் என்றால் என்ன? என்ற கேள்விக்கு யாழ். மக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவற்றை கீழே காணொளியில் காணலாம்... https://www.ibctamil.com/srilanka/80/143999
 21. 1 point
  பிறகு எப்பிடியாம் அடையாளம் காண்பது?
 22. 1 point
  அகளி வண்டு அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (அபிராமி அந்தாதி)
 23. 1 point
  இந்த வைரசு அதன் உலக பொருளாதார தாக்கம் காரணமாக, இலங்கை மிகவும் நெருக்கடியான பொருளாதார நிலைக்குள் செல்வதை தவிர்க்க முடியாது. மகிந்த அண்ட் கோ, அவர்களின் இராணுவ மயமாக்கல் மற்றும் இனவழிப்பு கொள்கைகளும் இந்த வறுமை நிலைக்கு காரணம். தமிழ் பேசும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். இன்றும் பாதிக்கப்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அதிகளவில் சிங்கள மக்கள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் தமிழ் பேசும் மக்கள் போன்று அமைதியாக இருக்கமாட்டார்கள். மலேசியா சிங்கப்பூரை பொருளாதார சுமை என 'கழட்டி விட்டது' போன்று சிங்களமும் தமிழ் பேசும் மண்ணை விட்டு ஓடவேண்டும். Sri Lankan President Gotabaya Rajapaksa has requested India to provide a special USD 1.1 billion currency swap facility to boost the country’s draining foreign exchange reserves in view of the economic slowdown due to the coronavirus pandemic. https://www.tribuneindia.com/news/world/sri-lanka-seeks-usd-1-1-billion-currency-swap-facility-from-india-amidst-depleting-forex-reserves-89328
 24. 1 point
  அதுக்கு முழு துணையும் சம்பந்தன்-சுமந்திரன் முண்டு கொடுப்புக்களும் நீங்களும் உங்க தமிழரசுக் கட்சியும் தானே ! ஏன் அத தெரியாத மாதிரி பேசுறீங்க?
 25. 1 point
  சிங்கள மக்கள் தான் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும் என்று சுமந்திரன் விரும்புகிறார். விக்நேஸ்வரனை சிங்கள மக்கள் பயங்கரவாதி என்று ஒதுக்கி அவர் சொல்வது எதுவாக இருந்தாலும் அதனை காது கொடுத்து கேட்பதில்லை. அப்படி தான் சொல்வதையும் சிங்கள மக்கள் காது கொடுத்து கேட்க மறுத்தால், தமிழர் சார்பில் சிங்கள மக்களுடன் பேச யாரும் இல்லாத நிலை வருமே என்று சுமந்திரன் கவலைப்படுவது தெரிகிறது. இந்த கவலைக்கு காரணம் சுமந்திரன் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டிருப்பதே. அப்படி அக்கறை இல்லாவிட்டால் சுமந்திரன் இலகுவாக யு.என்.பி. யில் சேர்ந்து கொழும்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் போக முடியும். இப்படி தமிழர்கள் நினைக்கிறார்கள் என்று சிங்களவர்கள் அனைவருக்கும் தாராளமாக தெரியும். சுமந்திரனும் அதையே திரும்பவும் சொல்லி என்ன பயன்? தாம் நல்லவர்கள் என்றும் தமிழர்கள் இந்திய அரசின் நலன்களுக்காக ஆயுதம் ஏந்திய துரோகிகள் என்றும் சிங்களவர்கள் நினைக்கிறார்கள். அதை பொய் என்று சுமந்திரன் சொன்னாற் போல சிங்களவர்கள் நம்பப் போவதில்லை. அது வீண்விரயமான செயற்பாடாக இருந்திருக்கும். விக்னேஸ்வரன் அதைத்தான் செய்கிறார். சிங்களவர்கள் அதை காது கொடுத்து கேட்பதில்லை. அமிர்தலிங்கம் முதல் அன்ரன் பாலசிங்கம், இன்று கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நெவி பிள்ளை ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை தமிழரின் பிரச்சினைகளை தாராளமாக விளக்கியுள்ளார்கள். ஆனால் எந்த நாடும் தமிழர் பிரச்சினைக்கு தனிநாடு தீர்வு என்று ஏற்றுக்கொள்ளவில்லை. சுமந்திரனால் அந்த நிலைப்பாட்டை மாற்ற முடியாது. ஆகவே சர்வதேச நாடுகள் பொருத்தமான தீர்வு என்று நினைப்பதை சாத்தியமாக்க சுமந்திரன் முயற்சிக்கிறார். தமிழரின் நலன்களை பாதுகாக்க இதை தவிர வேறு வழி இல்லை.
 26. 1 point
  இஞ்சை பாருங்கோ உதெல்லாம் அந்த பாலகனிலை உள்ள பார்வைக் கோளாறு இல்லை கண்டியளோ... எல்லாம் இயற்கையின்ரை/ஹோர்மன்ரை குரங்கு வேலை ..... எங்கடை பட்டினத்தார் பாட்டிலையே பாடி வைச்சிருக்கிறார் பாருங்கோ.. சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம் பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம் கறந்த இடத்தை நாடுதே கண்..
 27. 1 point
  சீனாவுக்கு பிரதமரும் இந்தியாவுக்கு ஜனாதிபதியும் போய் நின்று கொண்டு டிராகனுக்கு வாலையும் சிங்கத்துக்கு தலையையும் காட்டிக்கொண்டு சமயத்துக்கு தக்கவாறு பணம் கறந்து கொண்டிருப்பார்கள்.......!
 28. 1 point
 29. 1 point
  எனக்கு ஏற்க்கனவே தெரியும் உங்கடை பிளான்
 30. 1 point
 31. 1 point
 32. 1 point
  இவரது இறப்புடன் தமிழர், தமிழ்நாட்டின் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. சரி பிழைகளுக்கு அப்பால் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது என்பதால் இவரது மரணம் (தவிர்க்க முடியாதது என்றாலும்) எனக்கு கவலையை உண்டாக்குகிறது. இவரது ஆன்மா அமைதியில் உறங்கட்டும்.
 33. 1 point
  யாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா? இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா? இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா?
 34. 1 point
  எதற்கும் வெளிநாடு ஒன்றுக்கு, தாங்கள் விசா எடுத்து வைத்திருப்பது நல்லது. ஜனாதிபதி என்கிற பிசாசு வெகு விரைவில் தன் கோர முகத்தை காட்டப்போகுது.
 35. 1 point
 36. 1 point
  உண்மைதான் தமிழ் சிறி, மசூதிக்காரருக்கும், பிள்ளையார் கோவில்காரருக்கும் இடையே எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் பிள்ளையார் கோவில்காரர் தங்களிடையே அசம்பாவிதம்கொண்டு கோட் வாசலில் நிற்கிறார்கள்.
 37. 1 point
  அடுத்த வருடம் வைகாசி 19 சதுர்தசி திதி - கார்த்திகை நாள் நல்லா இருக்கு.. டிஸ்கி : நல்ல நாள் குறித்தான கருத்து..
 38. 1 point
  உடையார், இது கொம்பு பணிஸ் போல இருக்கு, நீங்கள் உருளைக்கிழங்கு பணிஸ் என்று போட்டுள்ளீர்கள்? நானும் செய்து பார்ப்பதாக உள்ளேன். அண்ணை, சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான் நிற்கிறீங்களா?
 39. 1 point
  இது ப‌டித்த‌ இளைஞ‌ன் , அறிவு ச‌ம்ம‌ந்த‌மா சிந்திச்சு , எங்கையோ இருந்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு பிற‌ந்த‌ நாளுக்கு வாழ்த்து சொல்ல‌ வ‌ந்து இருக்கிறார் / நான் யாழில் எழுதுவ‌த‌ இந்த‌ தோழ‌ன் காணொளி மூல‌ம் சொல்லி இருக்கிறார் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா க‌ருணாநிதி கைதாகும் போது துடிச்ச‌ குடும்ப‌த்தில் இருந்து வ‌ந்த‌ அண்ண‌ன் ம‌னி செந்தில் க‌ருணாநிதியின் ந‌ம்ப‌க‌ த‌ன்மையை 2009ம்ப‌துக்கு பிற‌க்கு தான் உண‌ர‌ தொட‌ங்கி இருக்கிறார் / மாண‌வ‌ர் போராட்ட‌த்தின் போது ம‌னி செந்தில் அண்ண‌னின் குடும்ப‌ம் ப‌ட்ட‌ அவ‌மான‌ங்க‌ளையும் ம‌ன‌ம் விட்டு சொல்லுகிறார் / நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்காக‌ எவ‌ள‌வு பாடு ப‌ட்ட‌வ‌ர் / அண்ண‌னின் பிடிச்ச‌து என‌க்கு நா அட‌க்க‌ம் , பெரிதும் அல‌ட்ட‌ மாட்டார்
 40. 1 point
 41. 1 point
  எனக்கு இந்த ஜதி சாதியெல்லாம் ஒன்றே. இதை நான் கணக்கில் எடுகாது விட்டாதால் தான் இன்று வரை நிம்மதியாக சந்தோஷமாக இருக்கின்றேன், என் அறியா பருவத்திலிருந்து நான் இந்த ஜாதி சாதி ஏதிர்ந்து வந்துள்ளேன், 3ம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் படிக்கும் மாணவர்களை அவர்கள் கேலி செய்வதுண்டு, அவர்கள் 5ம் வகுப்பு, நான் அந்த மாணவர்களுடன் இணைந்து அவர்களை ஏதிர்த்துள்ளேன், அவர்களை ஓட ஓட அடித்து விரட்டியும் உள்ளோம். இன்றும் என்னுடன் படித்த அவர்களை ஊருக்கு போகும் போது சந்திப்பேன். சாதி மதம் என்று கதைத்தவர்களை இன்று காணவில்லை.
 42. 1 point
  உண்மையாக மதங்களைக் கடைப்பிடிப்போர் மற்றைய மதங்களை நிந்தனை செய்வதில்லை. மதங்கள் மனிதர்களால் அதிகாரங்களைக் கைப்பற்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அது அமெரிக்கா முதல் ஆரியகுளம் வரை ஒன்றே. இந்த உலகு முதலில் கடந்து செல்ல வேண்டியது மதவாதிகளையே. அன்றுதான் உலகில் அமைதியும் சமத்துவமும் தானாகத் தோன்றும். தன்தன் மதத்தை புனிதமெனக் கொண்டாடுவது போல் அடுத்தவர் மதத்தைக் கொண்டாட வேண்டாம். நிந்தனை செய்யாதிருந்தாலே உலகில் பாதிப் போர்கள் நின்றுவிடும். ஆனால் அதனைத் தடுப்பதிலும் தூண்டிவிடுவதிலும் ஆயுத தளபாட விற்பனையாளர்கள் திறம்படச் செயலாற்றி வெற்றிபெற்றே வருகின்றார்கள். கொரோனா ஒரு புதிய உலகைத் தேடும் சூழலைத் தந்தபோதும் உலகால் மாறமுடியவில்லை என்பதை உலகப் பெருநாடுகளின் நிகழ்கால உரையாடல்களும் நகர்வுகளும் சுட்டுகின்றன. ஆயிரம்போர்களும் கோடிக்கனக்கான மக்களின் அழிவுகள் சூழந்தாலும் சுரண்டாலிதிக்க சக்திகள் என்றும் மாறப்போவதில்லை. இதில் மதவாதிகள் இருந்துகொண்டேயிருப்பார்கள் என்பதும் நிதர்சனமானதே.
 43. 1 point
 44. 1 point
  குவைச்சன் குண்டுமணி அக்கா கேட்கிறா.... சீனா- இந்தியா சண்டை ஒண்டு வந்திட்டுது எண்டால் இந்துசமுத்திரத்தின்ரை முத்து சிறிலங்கா ஆருக்கு தேத்தண்ணி ஆத்திக்குடுக்கும்?
 45. 1 point
  சுமந்திரன் போன்ற சட்டத்தரணிகளின் சுபாவங்கள் நகைச்சுவையா விளக்கப்பட்டுள்ளது
 46. 1 point
 47. 1 point
  வடக்கில் மே18 இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோஷ்டியை சொறிலங்கா போலீஸ் காடையர்கள் அச்சுறுத்தியபோது வாய்திறக்காத மனோ கணேசன் இப்ப வேதனைப்படுறது எவ்வளவு நடிப்பு? மனோ கணேசன் சுய ஆதாயத்துக்காக பலருக்கு அடிமை சேவகம் செய்றது புதுசில்லையே!
 48. 1 point
 49. 1 point
  அப்படி இல்லை திருடர்கள் புதிய முறையை கையாளுகிறார்கள் கவனம் என்பதுதான் அந்த தகவல் வீட்டில் நடக்க இருந்தது தப்பிவிட்டோம் அவ்வளவுதான் அப்படி வீட்டில் காசும் இல்லை நகைகளும் இல்லை . இருப்பதையும் கொள்ளையிட நினைக்கிறார்கள் திருடர்கள் பணக்காரர்கள் எங்கேயோ இருக்க எங்களுடையதை திருடி இன்னும் ஏழ்மைக்குள்ள தள்ள நினைத்துவிட்டான் .
 50. 1 point
  பெருமாள்.... தேசியத் தலைவரின் படங்களை, யாரும் சேகரித்து வைத்ததாக... நான் அறியவில்லை. ஆரம்பத்தில் இருந்து, படங்களை இணைத்து வந்த, பலரை... முகநூலில், தடை செய்துள்ளமை மிகவும் வேதனையானது. முகநூலில்.. உலகிலேயே... மிக அதிகமானவர்கள் பயன்படுத்தும்... மொழிகளில் ஒன்றான, தமிழில்... எமது தேசியத் தலைவரின் படங்களை நீக்க வேண்டாம் என்று, முகநூல் நிர்வாகத்துக்கு... அறிவிக்க, ஏதாவது வழிகள் உள்ளதா? அதனை தனிப்பட்டவர் செய்வதிலும் பார்க்க, ஏதாவது எமது அமைப்புகள்... மூலம் வேண்டுகோள் விடுப்பது, பலனைத் தரும் என நினைக்கின்றேன்.