• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. போல்

  போல்

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   10

  • Content Count

   6,134


 2. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   11,107


 3. tulpen

  tulpen

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   2,744


 4. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   54,248Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 08 ஜூன் 2020 in all areas

 1. 7 points
  தனது இனவெறுப்பு பிரச்சாரத்தால் ஜேர்மனியை நாசிஜேர்மனியாக கருக்கொள்ள வைத்த வரலாற்றை மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் என்ற நூல் பதிவு செய்துள்ளது. அந்த புத்தகதில் இருந்து சில பக்கங்களை இங்கு இணைத்துள்ளேன். அன்றைய உலக மக்கள் தொகையில் 3 வீதத்தை பலிகொண்ட அதாவது ஏறத்தாள 85 மில்லியன் மக்களை பலிகொண்ட இரண்டாம் உலக யுத்தத்தின் ஆரம்பப்புள்ளியின் ஒரு சில பக்கங்களை இப்பதிவு கூறுகிறது. முதல் உலகப்போர் முற்றுப்பெற்ற 1918 ம் ஆண்டு தொடங்கி 1921 வரையான காலகட்டத்தை உடன்படிக்கைக் காலகட்டம் என்று அழைக்க முடியும். ஜேர்மனி மட்டுமல்ல தோற்றுப்போன அத்தனை தேசங்களுடனும் தனித்தனியே ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளபட்டன. · செப்ரெம்பர் 10, 1919 ல் Treaty of Trianon – ஹங்கேரியுடன். · ஜூன் 4 27, 1920 ல் Treaty of Neuilly – பல்கேரியாவடன் · ஆகஸ்ட் 10 1927ல் Treaty of Sévres. துருக்கியுடன் கெய்சல் வில்லியம்ஸ் கிளம்பி போய்விட்டதால், ஜேர்மனியில் மன்னராட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகம் வந்து சேர்ந்தது. ஹிட்லர் விரக்தியின் உச்சியில் இருந்தார். ஜேர்மனியில் மட்டும் மொத்தம் இருபது லட்சம் பேர் இந்த போரில் உயிரிழந்திருந்தனர். இருபது லட்சம் பேரை இழந்தும் கிடைத்தது என்ன? தோல்வி, அவமானம் , நெஞ்சைப்பிளக்கும் வேதனை. பிஸ்மார்க்கின் கனவு இதோ சிதைந்து கிடக்கிறது. சிங்கம் போல் கர்ஜிக்காமல், பின்னிரண்டு கால்களுக்கு இடையில் வாலைச் சாதுவாக சுருண்டு கிடக்கிறது ஜேர்மனி. ஹிட்லர் தனது வாழ் நாளில் வேறு எதற்கும் இத்தனை கலங்கி நின்றதில்லை. இனி ஜேர்மனி எழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தெரு முனையில் மக்கள் பேசிக்கொண்ட போது அவமானத்தால் குறுகிப்போனார். சிவந்த கண்களுடனும் மார்பு முழுவதும் வன்மத்துடனும் சுற்றி வந்தார். இவர்களைப் பழிவாங்க வேண்டும். ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரையும். ஹிட்லரின் ரத்தத்தை இரும்பு குழம்பாக மாற்றியது ஜேர்மனி மீது வீசப்பட்ட குற்றச்சாட்டு. எல்லாவற்றிற்கும் காரணம் ஜேர்மனி தான். இந்த போர் மூண்டதற்கு காரணம் ஜேர்மனியின் பேராசை. இப்படியே விட்டால் ஐரோப்பவின் எதிர் காலத்தை பாதிக்கும் என்பதால் நாம் செய்த தியாகம் அது. எங்களில் பல லட்சக்கணக்கானவர்கள் உயிரழந்திருக்கிறார்கள். பற்பல லட்சம் செலவாகி விட்டது. எங்கள் தேசத்தின் பொருளாதாரம் சரிய ஆரம்பித்து விட்டது. காரணம், ஜேர்மனி. ஆகவே, ஜேர்மனி எங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும். கொதித்துப் கத்தினார் ஹிட்லர். நீங்கள் மட்டும் உத்தமர்களா? ஜேர்மனி நடத்தியது மட்டும் தான் ஆதிக்க போர் என்றால் நீங்கள் நடத்தியது தேசபக்திப்போரா? தோற்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக, இப்படியா அடாவடி செய்வது? நீங்கள் கேட்கும் பெரும் பணத்திற்கு ஜேர்மனி என்ன செய்யும்? உங்களுக்கு ஈவிரக்கமே கிடையாதா? நீங்களும் மனிதர்களா? கமயூனிஸ்டுகளையும் யூதர்களையும் ஹிட்லரால் மறக்க முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. ஹிட்லரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடிந்தது. மன்னர்கள் கம்யூனிஸ்டுகளிடம் பரிவாக இருந்தது தவறு. கம்யூனிச சித்தாந்தத்தை தேசம் முழுவதும் பரவ விட்டது தவறு. யூதர்கள் பிசாசுகள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் விட்டது மாபெரும் தவறு. ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றினார் ஹிட்லர். இது நிரந்தரமல்ல என்று உள்மனம் சொன்னது. கனவு ஒன்று உருவாக ஆரம்பித்தது. அதிகாரம் மட்டும் கையில் இருந்தால் தவறுகள் அனைத்தையும் சரி செய்துவிடமுடியும் அல்லவா? தூய ஜேர்மனியை மீட்டெடுக்கு முடியுமல்லவா? பிஸ்மார்க்கின் கனவை மெய்ப்பிக்க முடியும் அல்லவா? கனவு தான். இருக்கட்டுமே. தோல்வி, தோல்வி என்று இடிந்து கிடப்பதை விட இது எவ்வளவோ மேல் . தன் கனவை வெளியில் சொல்ல பயந்தார் ஹிட்லர். இப்போதைக்கு இது என்னிடம் மட்டும் இருக்கட்டும். சமயம் வாய்க்கட்டும். தொடங்கலாம். ஒரு ஆட்டம் ஆடப் பார்த்து விடலாம். இது தகுந்த தருணம் அல்ல. பொறு மனமே பொறு. ஐரோப்பா கலைந்து கிடந்ததுழ இத்தாலியில் பெனிட்டோ முசோலினி 1922 ல் ஆட்சியைக் கைப்பற்றினார். புதிய ரோமானிய சாம்ராஜ்யத்தை இங்கே உருவாக்க போகிறேன. இத்தாலியர்களே என் பின்னால் வாருங்கள் என்று அறைகூவல் விடுத்திருந்தார். இராணுவத்தை விட்டு கழண்டு கொண்டு விடலாம் என்று ஹிட்லர் நினைத்து கொண்டிருந்த போது அவர் வேலையை மாற்றினார். ராணுவ வீர்ர்களுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் வேலை. அதுவரை வீர்ர்கள் அரசியல் அறிந்திருக்கவில்லை. மன்னர் அவர்தான் பரம்பொருள். அவர் மூலமாக வரும் உத்தரவுகளை பிசகில்லாமல் செய்து முடிக்கவேண்டியது மட்டுமே அவர்களுகு இடப்பட்டிருந்த பணி. அதை மட்டுமே சீராக செய்து முடித்தால் போதுமானது. இனி மன்னர் இல்லை. நிலவரம் மாறிக்கொண்டு இருக்கிறது. ஜேர்மனி பழையை புஷ்டியான தேசமாக இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச ராணுவமும் ஒழுங்காக இருக்க வேண்டும். அரசியல் கற்க வேண்டிது அவசியம். துப்பாக்கிப் பயிற்சி போல இதுவும் ஒரு பயிற்சி. ஹிட்லரை அந்த பணிக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. விஷய ஞானம் உள்ளவர், புத்தகங்கள் படிப்பவர், உலக விடயங்கள் பலவற்றைப் பற்றி அவர் வீர தீரமாக உரையாற்றியதை நண்பர்கள் பார்திருக்கிறார்கள். எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு அறிவுஜீவி என்ற அடையாளத்தை பெறுத்தந்திருக்க வேண்டும். இனவெறிப் பிரச்சார ஆரம்பம். ஹிட்லர் பணியை ஏற்றுக்ககொண்டார். அரசியல் தானே? நானும் அதற்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன். ஹிட்லர் பேச ஆரம்பித்தார். தனக்கு தெரிந்த அரசியலை, தனக்கு தெரிந்த இன வெறுப்பை, தனக்கு தெரிந்த லட்சியத்தை, பிஸ்மார்க்கின் கனவை ஆர்வம் பொங்க விவரித்தார். ஜேர்மனி எப்படிப்பட்ட தேசம் தெரியுமா என்று ஆரம்பித்து தேசத்தின் அருமை பெருமைகளை அடுக்கினார். தேசபக்தி என்றால் என்ன தெரியுமா நண்பர்களே என்று கதைப்பிரசங்கம் செய்தார். கம்மியூனிஸ்டுக்களையும் யூதர்களையும் நான் ஏன் வெறுக்கிறேன் தெரியுமா? புள்ளிவிவரங்களோடு விவரித்தார். பேசும் போதே சீறினார், பாய்ந்தார், குதித்தார், எம்பினார், முகத்தை கோணலாக்கி பேயாக கத்தினார். சட்டென்று பணிந்து புன்னகை செய்தார். சிலருக்கு சிரிப்பு வந்தாலும் பெரும்பாலானோரை ஹிட்லர் வசியப்படுத்தியது நிஜம். அவர் பேசுவதையும் ரசிக்க ஆரம்பித்தார்கள். பேச்சின் சாரத்தையும் சிறிது சிறிதாக உள்வாங்கிக்கொண்டார்கள். ஹிட்லருக்கு ஏக்கமான இருந்தது. எப்படியாவது பவேரிய மாநில அரசாங்கத்தை கைப்பற்றவேண்டும். அரசாங்கத்தை வீழ்த்த முடியந்தால் நன்றாக இருக்கும். இந்த அரசாங்கத்திற்கு விசாலமாக கனவு காணும் ஆற்றல் இல்லை. நிர்வாக திறன் இல்லை. உபயோகபடாத அரசாங்கத்தை வைத்துக்கொண்டிருப்பது ஆபத்தானது. அவமானகராமானது. தன்னைப்போலவே சிந்ததிக்கும் வேறு சில புரட்சியாளர்களும்( ஆம் தன்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டார் ஹிட்லர்) பவேரிய மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை ஹிட்லர் அறிந்து கொண்டார். அவர்களுக்கும் ஹிட்லரை தெரிந்திருந்தது. ஹிட்லருடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். புதிய அரசங்கத்தை நிர்மாணிக்கலாம். அதற்கு முன்னால் கட்சி ஒன்றைத் தொடங்கிவிடுவோம். கட்சி இல்லாமல் அரசியல் நடத்த முடியாது. புரட்சி நடத்த முடியாது. நம்மிடையே வலுவான அரசியல் சித்தாந்தம் இருந்த்தாலும், ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆயுதங்கள் தேவே. எனவே ராணுவம் தேவை. அரசியலில் இணைவு சிந்தித்து பார்த்தார் ஹிட்லர். புதுக்கட்சி தேவையில்லை என்று தோன்றியது. இருக்கும் சுண்டைக்காய்க் கட்சிகளுள் ஒன்றை நம் வசமாக்குவ்வோம். ஆராய்ந்து பார்த்து அவர்கள் தேர்ந்தெடுத்தது ஜேர்மன் தொழிலளர் கட்சியை (German Worker`s Party) ஐம்பத்து ஐந்தாவது உறுப்பினராக ஹிட்லர் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். பிறகு, ராணுவத்தை தொடர்பு கொள்ள வேண்டும். நமது சித்தாந்தத்திற்குள் அவர்களை இழுக்கவேண்டும். நம் வசப்படுத்த வேண்டும். கட்சியின் நிறுவனர் ஆல்டல் டிரெக்ஸ்லரின் (Anton Drexler) சித்தாந்தத்தை கேள்விப்பட்ட ஹிட்லர் ஆச்சரியம் அடைந்தார். யூதர்களை அழிக்க வேண்டும். பரந்து விரிந்த தூயஜேர்மனியப் பேரரசை நிர்மானிக்க வேண்டும். உலகின் சிறந்த குடிமகன்களாக ஜேர்மனியர் இருக்க வேண்டும். அதுவும் தூய ஜேர்மனியரே இந்த நாட்டை ஆளவேண்டும். டியெற்றிஹ் எக்காட் (Dietrich Eckart) என்பவரின் சிநேகிதமும் கிடைத்தது. விஷய ஞானம் கொண்டவர், சிந்தனாவாதி என்று அறியப்படவர். ஹிட்லர் அவரிடம் இருந்து கற்க ஆரம்பித்தார். தான் சிந்திக்கும் முறை சரிதானா என்று அவ்வப்போது உரையாடி சரிபார்த்துக் கொண்டார். ஹிட்லர், நீ உரைகள் பல நிகழ்த்தியிருக்கிறாயாம, நம் கட்சியின் சார்பாகவும் பேசு. பொது மக்களை கட்இசக்குள் சேர்க்க உனது உதவி தேவை. தலையைத் தாழ்த்தி ஏற்றுக்கொண்டார் ஹிட்லர். அவர்கள் யூகித்தது சரியாகவே இருந்தது. ஒரு பகுதியினரிடையே ஹிட்லர் அறியப்பட்டிருந்ததால், கூட்டம் வந்தது. ஹிட்லருக்கு தெரியும். உயிரைக் கொடுத்து பேசினார். உணர்ச்சிக் கடலில் தத்தளித்தார். இமைக்கவும் மறந்து கேட்டுக்கொண்டு நின்றார்கள். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்களை ஈர்க்க தன் வாழ்நாள் முழுவதும் ஹிட்லர் திரும்ப திரும்ப பயன்படுத்திய உத்தி அது. வெறும் பேச்சு. தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரங்கள் ஒரு வாய் தண்ணி கூடப் பருகாமால் உரையாட முடிந்தது அவரால். ஹிட்லர் தனக்கான இடத்தை கட்சிக்குள் அழுத்தமாக அமைத்துக் கொண்டார். யாராலும் அசைக்க முடியாத ஒரு அடித்தளத்தையும் சத்தம் போடாமல் உருவாக்கிக் கொண்டார். ஹிட்லரைப் போல இன்னொரு துடிப்பான ஆளுமை கட்சிக்குள் இல்லாதது அவருக்கு வசதியாகிப் போனது. ராணுவத்தில் இருந்து முறைப்படி விலகிக் கொண்டார். இனி எதற்கு அங்கே வகுப்புகளை எடுத்து நேரத்தை விரயமாக்க வேண்டும். ஹிட்லரின் வளர்ச்சி கட்சி வட்டத்திற்குள் புகைச்சலைக் கிளப்பியது. அவரால் தான் கட்சி வளர்ந்திருந்தது. செல்வாக்கு உருவாகியிருந்தது. நிதி சேர்ந்தது. ஆனால் கட்சியின் மூத்த உறுப்பினர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூத்தவர்கள் நாம் எத்தனை ஆண்டுகளாக்க் கொடிபிடித்துப் போராடி இருப்போம். தலைமைக்கு கட்டுப்பட்டு எத்தனை சிரமங்களை அனுபவித்திருப்போம். நேற்று வந்த ஹிட்லரைத் தூக்கி வைத்து கொண்டுடாடுகிறார்களே. ஒரு காரியம் செய்தார்கள். ஹிட்லரை மட்டுப்படுத்த வேண்டுமானால் மேலும் பல புதிய தலைவர்களை உள்ளுக்குள் கொண்டு வரவேண்டும். ஹிட்லருக்கு போட்டி உருவாக்க வேண்டும். நம்மால் அதைச் செய்ய முடியாது. ஆகவே தேவை கட்சி இணைப்பு. ஆகஸ்பர்க் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு சோஷலிசக் கட்சியுடன் பேசினார்கள். தொழிலாளர் கட்சியுடன் இணைய அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அடுத்து Anton Drexler உடன் பேசினார்கள். அவருக்கும் இதில் தனை இருக்கவில்லை. ஹிட்லருக்கு தெரியவந்த போது அவர் அமைதியாக இருந்தார். இணைப்பு எங்கே எப்போது அறிவிக்கப்படபோகிறது என்பதை மாத்திரம் கேட்டுக்கொண்டார். ம்யூனிக் தலைமயகத்தில் நடப்பதாக இருந்தது. சென்றரார் மிஸ்ரர் டிரெ்ஸ்லர் நான் கேள்விப்பட்டது உண்மையா? இன்னொரு பொடிக் கட்சியோடு இணையப்போகிறோமா?ஆம் என்றார் டிரெக்ஸ்லர். நல்லது உங்கள் கட்சி நீடூழி வாழட்டும். என்னது உங்கள் கட்சியா? என்னப்பா சொல்லுறாய்? ஹிட்லர் தெளிவாக அறிவித்தார். இனி எனக்கு இங்கு இடமில்லை டிரெக்ஸ்லர். புதிய கட்சிகளுடன் புதிய தலைவர்களும் கிடைப்பார்கள். அவர்களை வைத்து கட்சியை முனுக்கு கொண்டு வாருங்கள். டிரெக்ஸ்லர் கலங்கி விட்டார். நீ இல்லாத கட்சியா? வேண்டாம். வா நீ எது கேட்டாலும் தருகிறேன். ஹி்ட்லர் திரும்பினார். நின்று நிதானமாக கேட்டார். கட்சியின் சேர்மனாக என்னை நியமித்தால் மட்டுமே நான் கட்சியில் நீடிப்பேன். இதோ இந்த இடத்தில் அறிவிக்க வேண்டும். சொல்லிவிட்டு நின்றார். டிரெக்ஸ்லர் யோசிக்கவேயில்லை. சரி நீயே ஏற்று நடத்து ஹிட்லர். உன் அளவுக்கு தெம்பும் திறனும் எனக்கில்லை. எங்களில் யாருக்கும் இல்லை. நான் இப்போதே விலகிக்கொள்ளுகிறேன். ஹிட்லர் தன் மீசையைத் தடவிக்கொண்டார். முதல் காரியமாக கட்சிப் பெயரை மாற்றினார். ஜேர்மன் தொழிலாளர் கட்சி அல்ல. தேசிய சோசலிஷ ஜேர்மன் தொழிலாளர் கட்சி அதாவது நாசி. National Socialist German Workers Party Die Nationalsozialistische Deutsche Arbeiterpartei ( Nazi) என் கட்சி நான் சூட்டிய பெயர். எனக்கு கட்டுப்பட்டு தலையாட்டும் ஒரு கூட்டம். ஹிட்லர் வாழ்க என்று சொல்ல சொன்னால் அப்படியே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்க ஒரு திருத்தொண்டர்குழு. சர்வாதிகாரம், அடுத்த பாய்ச்சல் எதை நோக்கியது என்பதை ஹிட்லர் மனத்தளவில் முடிவு செய்திருந்தார். பவேரியா மாநிலத்தைக்கைப்பற்ற வேண்டும். அது ஆனபின்னர் ஜேர்மனி. அது போதும். நான் நினைக்கும் வேகத்தில் காரியங்கள் நடந்து முடிந்து விட்டால் என் தேசம் தான் உலகம் முழுவதற்குமான ஆசான், உலகத்தலைவன். சிறிது காலம் தான் என்றாலும் பவேரிய ரெஜிமென்டில் பணிபுரிந்த காலத்தில் அங்கே பல நண்பர்களை ஹிட்லர் பெற்றிருந்தார். நண்பர்கள் என்பதை விட ரசிகர்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஹிட்லர் என்ன பேசப்போகிறார் என்று வாய்திறந்து வேடிக்கை பார்க்கும் கூட்டம் அது. அதே போல், காவல்துறையிலும் நீதித் துறையிலும் கூட சிலரை ஹிட்லர் தெரிந்து வைத்திருந்தார். ஆனால் எல்லோரையும் விட ஹிட்லர் அதிகம் நம்பியது தன்னை மட்டும் தான். இதுதான் சரியான தருணம். பவேரியா முழுவதும் பல்வேறு குழுக்கள் புரட்சி பற்றி விவாதித்துக்கொண்டிருந்தன. அரசாங்கத்தைத் தூக்கியடித்து புதிய ஆட்சியை நிர்மாணிப்போம் என்று மைக் பிடித்து பீர் ஹால்களில் (அங்கே பொதுக்கூட்டங்கள் பொதுவாக பீர் ஹால்களில் தான் நடக்கும். மக்கள் பெருமளவில் அங்கு கூடுவார்கள் என்பதால் அந்த ஏற்பாடு) பேசிக்கொண்டு இருந்தார்கள். பவேரியாவின் பிரதமராக இருந்த எய்கூர் ரீட்டர் வொன் நில்லிங்(Eugur Ritter von Knilling) என்பவர் மீது அத்தனை பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. சாதுவான நபர். தொட்டால் சாய்ந்து விடுவார். யார் முந்துகிறார்களோ அவர்களுக்கே அரசாங்கம். ஒரு கட்டத்தில், போராட்டம் வன்முறை வடிவம் எடுத்தது. கடைகள் சூறையடப்பட்டன. கொலைகளும் விழுந்தன. அவசரநிலைப்பிரகடம் செய்யப்பட்டது. மூவர் கொண்ட ஆட்சிக்குழு உருவாக்கப்பட்டது. தலைமைபொறுப்பு குஸ்தாவ ரிட்டர் கார் (Gustav Ritter von kahr) என்ற மாநில நிர்வாக கமிஷனரிடம் அளிக்கப்பட்டது. அதிகாரத்தை கைப்பற்றும் முதல் முயற்சி தோல்வி என்ன செய்யலாம் லுடண்டொர்ஃப் என்றார் ஹிட்லர். எரிக் லுடன்டொஃவ் (Erich Ludendorff) கட்சியில் ஹிட்லருக்கு அடுத்தவர். முன்னாள் ராணுவ அதிகாரி. ஆலோசகர். கர்ரிடம் பேசிப்பார்கலாம் என்று முடிவு செய்தார்கள். தொடர்பு ஏற்பட லுடன்டாஃவ் உதவினார். இருவரும் பேசினார்கள். ஹிட்லரின் கோரிக்கை தெளிவாக இருந்தது. கர், எனக்கு உதவி செய்யுங்கள். நான் ஜேர்மன் ஆட்சிபீடத்தை விரைவில் கைப்ற்ற போகிறேன். புரட்சி ஒன்றை நடத்தப்போகிறேன். என்னைபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் சொல்வதை செய்து முடிக்க பல லட்சக்கணக்காக இளைஞர்கள் இருக்கிறார்கள். நீங்களும் என்னுடன் இணைந்தால் உபயோகமாக இருக்கும். கர் உடன்பட்டார்.ஹிட்லர் ஜேர்னியை ஆளட்டும். எனக்கு பவேரியா போதும். சொல்லிவிட்டாரே தவிர மேற்கொண்டு எந்த வித ஒத்துளைப்பும் அவரிடம் இருந்து வெளிவரவில்லை. நவம்பர் 8,1923 அன்று கர் முனிச்சில் இருந்த ஒரு பீர் ஹாலில் உரையாடிக்கொண்டு இருந்த போது, ஹட்லர் கதவை உதைத்து திறந்து உள்ளே நுழைந்தார். இடைஞ்சலுக்கு மன்னிக்கவும். லுடன்டொர்ஃபுடன் இணைந்து ஒரு புதிய பவேரிய அரசாங்கத்தை ஏற்படுத்தியாகிவிட்டது. அடுத்து பேர்லின். நீங்களும் உங்கள் வசம் இருக்கும் ராணுவமும் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். இதை சொல்லும் போது ஹிட்லரின் கையில் துப்பாக்கி இருந்தது. நகரம் முழுவதையும் வசப்படுத்தும் பணியை ஹிட்லரின் படை மேற்கொண்டிருந்தது. முக்கிய அரசாங்க அலுவலங்கள் கைப்பற்றப்பட்டன. சில கைதுகள. எதிர்பாராவிதமாக ஒரு கொலை. தொடர்ந்து முன்னேறி ராணுவக அமைச்சகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டம். ஆனால் அதற்குள் பவேரிய இராணுவத்தினர் குவிந்துவிட்டனர். நாசிகளை நோக்கி துப்பாக்கிச்சூடும் ஆரம்பித்து விட்டது. ஹிட்லர் கைது செயப்படுகிறார். ஐந்து ஆண்டு சிறைக்காவல். சறுக்கல் தான. ஆனால் அதுபற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் சிறையில் இருந்தபடியே ‘’மையின் காம்ஃப்’’ (Mein Kampf) புத்தகத்தை எழுத ஆரம்பித்தார் ஹிட்லர். சிறையில் இருந்து வெளிவந்ததும், அதுவரை உறக்கத்தில் இருந்த நாஜிக்கட்சியை தட்டி எழுப்பினார். ஜேர்மனியின் அவல நிலை குறித்து பிரச்சாரம் செய்தார். வெர்ஸைல்ஸ் ஒப்பந்தத்தால் ஜேர்மனி அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களைப் பட்டிலிட்டார். ஆயிரக்கணக்கில் மக்கள் அவரை நாடி வந்தனர். இவர் சொல்வதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். 1928 மே 20ம் திகதி நடைபெற்ற தேர்தலில், நாசிக் கட்சிக்கு எட்டு லட்சம் சொச்சம் வாக்குகளே கிடைத்தன. பெரிதாக மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை என்றாலும் மேலும் இனவெறி பிரச்சாரத்தை இளைஞர்களை கவரக்கூடிய முறையில் செய்வதன் மூலம் வாக்கு வீத்த்தை அதிகரிக்கலாம் என்று ஹிட்லர் நம்பினார். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற துடிப்புள்ள அதேவேளை அதிகம் சிந்திக்காத தான் சொல்வதை வேதவாக்காக நம்பும் இளைஞர் பட்டாளமே தனது சொத்து என்றும் அவர்களுக்கு இன வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்படுத்துவதன் மூலம் தனது கனவை அடையலாம் என்று நம்பினார். அவரது நம்பிகை பொய்க்கவில்லை. அதிகார ஆசையின் அடுத்த முயற்சி 1929 ல்ஐரோப்பா முழுவதையும் அச்சுறுத்திய பொருளாதாரச் சரிவு ஜேர்மனியை விட்டு வைக்கவில்லை. அதிபர் ஹிண்டர்பர்குகு எதிரான அலை வீச ஆரம்பித்தது. ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம்,மற்றொரு பக்கம் விலைவாசிப் பாதிப்பால் வீதிக்கு வந்த மக்கள் எழுச்சி. விளைவு, பாராளுமன்றம் கலைக்கபட்டது. ஏப்ரல் 1932 ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஹிண்டன்பர்குக்குஎதிராக தேர்தலில் நின்றார் ஹிட்லர். மிக்க் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டா் ஹிட்லர். ஜேர்மனியை தன்னைத்தவிர வேறு எவராலும் மீட்டெடுக்க முடியாது என்பதை அழுத்தமாக பதிய வைத்தார். ஹிட்லர், ஜேர்மனி. ஜேர்மனி, ஹிடலர். திரும்ப திரும்ப நாசிகட்சி மேற்கொண்ட பிரச்சாரம் ஹிட்லர் தான் ஜேர்மனி என்ற தோற்றத்தை மக்களிடையே எழுப்ப முயன்றது. நம் பொருளாதாரம் ஏன் இந்த அளவுக்கு வலுவிழந்து கிடக்கிறது? அமெரிக்காவிடம் இருந்து (அதன் முதலாளிகளிடம் இருந்து) ஏழு பில்லியன் டாலர் கடன் பெற்றிருக்கிறது ஜேர்மனி. என்ன அவசியம்? தூய ஜேர்மனியரிடம் இல்லாத வளங்களா? ஜேர்மனியரிடம் இல்லாத நிர்வாத திறமையா? இவ்வாறான தூய ஜேர்மனியன் என்ற உசுப்பேற்றல்கள் இளைஞர் பட்டாளத்தையும் நடுத்தர பாமர மக்களையும் நன்றாகவே கவர்ந்தது. ஹிட்லர் அடிக்கடி சோசலிசம் என்னும் பதத்தைப்பயன் படுத்தினார். பொருளாதாரம் குறித்தும் ஜேர்மனியின் எதிர்காலம் குறித்தும், ஐரோப்பிய வல்லரசுகளைச் சாராமல் இருக்கும் தற்சார்பு பொருளாதாரம் குறித்தும் திரும்ப திரும்ப பேசினார். முதல்முதலாக விமானத்தை பிரச்சாரத்திற்காக பயன் படுத்தினார். ஒரே நாளில் இரு நகரங்களில் அவரால் உரையாட முடிந்ததை அதிசயமாக பேசிக்கொண்டனர் மக்கள். மதியம் வரை எங்களிடம் தானே இருந்தாரே! அங்கேயும் வந்தாரா ஹிட்லர்? மிக்க் கடுமையான பிரசாரத்தின் பயனான அந்த தேர்தலில் ஹிட்லருக்கு முப்பதைந்து சதவீத வாக்குகள் கிடைத்தன. தோல்விதான் என்றாலும் ஹிட்லர் யார் என்பதை அடையாளம் காட்டிய தேர்தல் அது. தேர்தல் முடிந்து கண்மூடி கண் திறப்பதற்குள் மீண்டும் பிரச்சனை. மீண்டும் சலசலப்புக்கள், விவாதங்கள், அதிருப்தி அலை. நடந்து கொண்டிருந்தது கூட்டணி அரசாக இருந்ததால், அனைத்து கட்சியினரையும் திருப்திப்படுத்த வேண்டிய நிலை. Franz von Papen என்பவரை சான்சிலராக கொண்டு வந்த்தார் ஹிண்டரபர்க். அவருக்கு பெரிய ஆதரவு வட்டம் இல்லை. மீண்டும் குழப்பம். என்ன செய்யலாம்? மீண்டும் தேர்தல். அதே 1932 ல் ஆனால் ஜுன் மாதம். இந்த முறை நாஜிகள் 2330 இடங்களை கைப்பற்றியிருந்தனர். நாடாளுமன்றத்தில் பெரிய கட்சி என்ற அங்கீகாரம். துணை சான்சிலர் பதவி அளிக்கிறோம் என்றார் சான்சிலர் பாபென். ஹிட்லர் ஒரு புன்னகையுடன் மறுத்தார். வேண்டாம் எனக்கு சான்சிலர் பதவி போதும். என்ன சான்சிலர் பதவியா என்று அதிர்ந்து பின்வாங்கினார் பாபென். அடுத்ததாக ஹிட்லர் செய்தது, பாபெனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது தான். மிகப்பெரிய கட்சியாக நாசி இருந்ததாலும், மிகப் பிரபலமான தலைவராக ஹிட்லர் இருந்ததாலும் அவருக்குப் பின்னால் அமைச்சர்கள் அணிவகுக்க ஆரம்பித்திருந்தனர். பாபென் தோற்றார். மீண்டும் தேர்தல். மீண்டும் ஹிட்லர். முன்பைக்காட்டிலும் கூடுதல் பலத்துடன். ஹிண்டன்பர்குக்கு அப்போதும் ஹிட்லரை சான்சிலராக்குவதற்கு மனமில்லை. பாபேனை நீக்க வேண்டி இருந்தது. நீக்கிவிட்டார். மாற்று ஏற்பாடாக, ராணுவத் தளபதி குர்ட் வோன் ஷ்லைஸர்(Kurt von Schleicher) என்பவரை அமர்த்தினார். ஷ்லைஸர் ராணுவத்தளபதி. அவரால் நாட்டை சமாளிக்க முடியும் அதே வேளை ஹிட்லரையும். மாதா மாதம் தேர்தல் நடத்திக்கொண்டிருந்தால் ஜேர்மனி விளங்காது. அதிகார பீடத்தை நோக்கி முன்னேற்றம் புதிய சான்சிலர் நியமனம் ஹிட்லருக்கு மட்டுமல்ல பாபெனுக்கும் உறுத்தலாக இருந்தது. பதவியைக் கைப்பற்ற இருவருமே முயன்று கொண்டிருந்தனர். இருவரும் கூடிப்பேசவும் ஆரம்பித்தனர். பாபென் விட்டுக்கொடுக்க முயன்றார். ஹிட்லரை தன் கைக்குள் போட்டுக்கொண்டு துணை சான்சிலராக வந்து விடலாம். திரை மறைவில் ஆட்சியை நடத்தலாம் என்று கனவு கண்டார். ஹிண்டன்பர்குடன் இதுபற்றி விவாதித்து, தன் முடிவை அவர் மீது திணிக்கவும் செய்தார். ஜனவரி 30, 1933 அன்று ஹிட்லர் சான்சிலர் பதவியை ஏற்றுக்கொண்டார். பதவி கிடைத்து விட்டாலும் ஹிட்லர் ஆபத்துக்களை உணர்ந்திருந்தார். சான்சிலர்தான் என்றாலும் இப்போது நின்று கொண்டிருப்பது மிகவும் பலவீனமான ஒரு பலகை மீது. எப்போதும் நொறுங்கி விழலாம். இன்னொரு தேர்தல், மற்றொரு தேர்தல், அதற்கு பின்னர் இன்னொன்று என்று காலத்தைக் கழிக்க முடியாது. திரைக்கு முன்னால் திரைக்குப் பின்னால் சூழ்ச்சிகாரர்க் ஓயாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை கவனிப்பதையே முழுநேரப் பணியாகக் கொள்ள முடியாது. ஒரு அரசியல்வாதியாக மாறுவது அல்ல ஹிடலரின் கனவு. அவருக்கு தேவை அதிகாரம். சர்வாதிகாரம். அதற்கு முன்னால், ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு நாடாளுமன்றத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் உதிரி கட்சிகளைத் தவிடு பொடியாக்க வேண்டும்.குறிப்பாக கம்யூனிஸ்டுகளை. தேவை ஒரே ஒரு தேர்தல். ஹிட்லர் குறி வைத்திருந்தது போருக்கு பிறகு உருவக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டதில் இருந்த ஒரு அற்புதமான சட்டம், Enabling Act. சான்சிலரின் அதிகாரதை வரையறுக்கும், நிறுவும் சட்டம். அவர் விரும்பிதைப் போலவே சர்வாதிகாரத்தை கொண்டுவருவதற்கான சட்டம். ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தன்னனிடம் குவித்துக் கொள்வதற்கான ஒரு வழி. புதிய சட்டங்களை நீக்கவும் சான்சிலருக்கு அதிகார் வழங்கும் சட்டம் இது. மார்ச் 5, 1933 என்று தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது. மீண்டும் ஒரு சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் ஹிட்லர். திரும்பும் திசையெங்கும் நாஜிக் கட்சியின் ஸ்வஸ்திக் சின்னம். ஹிட்லர் அழைக்கிறார். திரண்டு வா ஜேர்மனி. இந்த முறை, பிரச்சாரத்தோடு வேறு ஒரு ஏற்பாட்டையும் செய்திருந்தார் ஹிட்லர். Reachstag பாராளுமன்றத்தை கொளுத்துவது. பழியை கம்யூனிஸ்டுகள் மீது போடுவது. பிப்ரவரி 27, 1933 அன்று கொளுத்தினார்கள். Marinus van der Lubbe என்ற ஒருவர் கட்டடத்துக்குள் சிக்கினார். கைது செய்து விசாரித்த போது அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று தெரியவந்தது. ஹிட்லரின் ஏற்பாடு. உடனே ஆரம்பித்து விட்டது நாசிக்கட்சி. கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக விஷப்பிரச்சாரம் அலை அலையாக கிளம்பியது. தேர்தலில் இந்த அலை, பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்த முறை ஹிடல்ருக்கு 43.9 சதவீதம் கிடைத்திருந்தது. தேவை 51. கலங்கவில்லை ஹிட்லர். சான்சிலர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கூடவே, பலத்த சச்சரவுகளுக்கு இடையே, Enabling Act ஐ கொண்டு வந்தார். சர்வாதிகாரியாதல் ஜேர்மனியை நிர்வாகம் செய்ய தான் மட்டும் போதும் என்னும் தீர்க்கமான முடிவுக்கு ஹிட்லரல் வந்து சேர்ந்திருந்தார். முழுமுற்றான அதிகாரத்தை தன் காலடியில் குவித்துக்கொள்ள ஹிட்லர் கையாண்ட முறைக்கு Gleichschaltung என்று பெயர். இதன் பெயர் இணங்க செய்வது. கொடி பிடித்து போராடும் எந்த அமைப்பும் ஜேர்மனிக்கு தேவையில்லை. அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்காக நம் சான்ஸிலர் ஹிட்லர் நடத்திய போராட்டமே இறுதிப் போராட்டம். அவர் நிகழ்த்தியது தான் இறுதிப் புரட்சி. அரசாங்கத்திற்கு எதிராக ஒலித்த இறுதிக்குரல் அவருடையது தான். இனி, சான்சிலருக்குக் கட்டுப்பட்டு நடந்தால் போதுமானது. இதை மட்டும் தான் நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறோரம். மற்றதை, ஹிட்லர் பார்த்துக்கொள்வார். ஜேர்மன் கம்யூனிச கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. ஹிடல்ரை ஆதரிக்காத சோஷியல் டெமாக்ரடிக் கட்சி துரோகிகளாக காட்டப்படு தடை. தேசத்தின் நலனிக்காகத் தான் மக்களே என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டார் ஹிட்லர். நாசிக்கட்சி ஒன்று போதும் என்றார். தொழிற்சங்கங்கள் கலைக்கபட்டன. மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் ஒர் அமைப்பு ஆரம்பிக்கபட்டது. ஆறு வயது முதலே பயிற்சிகள் ஆரம்பமாகிவிடும். பெண் மாணவர்களுக்குத் தனிப்பிரிவு. Kraft durch Freude என்னும் பொழுது போக்கு அமைப்பில் இருபத்தைந்து மில்லியன் ஜேர்மானியர்கள் இணைந்து கொண்டனர். நாசிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அமைப்புச்செயற்பட்டது. ஒரு ஜேர்மானியன் என்ன விளையாட வேண்டும். எப்படி விளையாடவேண்டும் என்பதை கூட அரசாங்கம் தான் தீர்மானிக்கும். பெண்களுக்கு நாசிக்கட்சி வழங்கிய அறிவுரை மிகவும் எளிமையானது. நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை. அரசாங்கத்திற்கு உபயோகமான காரியங்களை ஆற்றுவதற்கு லாயக்கானவர்கள் ஆண்கள் மட்டுமே, நீங்கள் வீட்டில் கிடந்தால் போதும். ஆண்களுக்கு ஒத்தாசை செய்யுங்கள். குழந்தை பெறுங்கள். செப்ரெம்பர் 1934 ல் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஹிட்லர் இப்படிக் குறிப்பிட்டார். பெண்களே உங்கள் உலகம் எது தெரியுமா? உங்கள் கணவன், உங்கள் குழந்தைகள், மற்றும் உங்கள் வீடு. கட்டுமானமும் ஆரம்பமானது. சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது. பாலங்கள் கட்டப்பட்டன. முக்கிய அணைகள் உருவாக்கபட்டன. ரயில்வே பாதைகள் புதிதாக கட்டமைக்கப்பட்டன. ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்பட்டது. ஒரு காருக்கான வரைபடத்தை உருவாக்குவதில் ஹிட்லர் பிரத்தியேகமாக பங்கேற்றார். பின்னர், இதை டாக்டர் ஃபெர்டினால் ஃபோர்சே (Dr.Ferdinand Porsche) நடைமுறையில் உயிர்ப்பித்துக் கொண்டு வந்தார். ஹிட்லரின் தொழில் நுட்ப திறனுக்கு இது ஒரு சான்று. வொக்ஸ்வேகன் பீட்டில் (Volkswagen Beetle) என்று அந்த கார் அழைக்கப்பட்டது. நம்பமுடியாத விலை ஒன்றையும் அவர் அதற்கு நிர்மாணித்தார். தொள்ளாயிரத்தித் தொண்ணூற்றொம்பது மார்க்குகள். இவ்வளவு குறைந்த விலையில் தனியார் நிறுவனங்களால் காரை உருவாக்க முடியாத பட்சத்தில் அராங்கமே தயாரிப்பை ஏற்றுக்கொளும் என்று அறிவித்தார் ஹிட்லர். கட்டடக்கலைஞர்ள் வரவேற்கபட்டனர். ஆல்பரட் ஸ்பீர் நாசி அரசாங்கத்தின் முதல் கலைஞராக அங்கீகரிக்கபட்டார். எது போன்ற கட்டங்கள் அமைக்கபட்ட வேண்டும் என்பதை ஹிட்லர் முடிவு செய்தார். ஜேர்மன் கலாச்சாரத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. 1936 ம்ஆண்டு ஒலிம்பிக்ஸ் விளையாட்டு பெர்லினில் தொடங்கியது. ஹிட்லர் தொடங்கி வைத்தார். வேலையில்லாதவர்கள் என்று ஜேர்மனியில் கிட்டத்தட்ட ஒருவரும் இல்லை என்றது ஒர் அரசாங்கப் பிரச்சாரம். நிஜமாகவே பிரமித்து தான் போனார்கள் மக்கள். ஆயிரம் குறை சொன்னாலும் இந்த சாதனையை ஒப்புக்கொள்ளதானே வேண்டும்? உண்மை தானே? நமக்கு தெரிந்து வேலையில்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? இந்த மகத்தான சாதனைக்குப் பின்னால் இருந்த உண்மை பின்னரே தெரியவந்தது. அதாவது ஏற்கனவே பணியில் இருந்த அத்தனை பெண்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கபட்டனர். அவர்கள் வேலையைப் பறிமுதல் செய்து, ஆண்களிடம் ஒப்படைத்தார் ஹிட்லர். பெண்கள் வீட்டு வேலை செய்தால் போதுமானது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார் அல்லவா? தொழில் நுட்பரீதியில் ஜேர்மனி பலம் பொருந்திய நாடாக வளரவேண்டும் என்னும் கனவு ஹிட்லரிடம் இருந்தது. ஆனால் அதற்கான நீண்டகாலத்திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. தொழிற்சாலை இல்லையா? எத்தனை செலவாகும்? சரி மூலைக்கு ஒன்று கட்டு. இப்படிப்பட்ட குறுகிய கால திட்டங்களே அவரிடம் இருந்தன. தேவைபடும் பணத்தை உருவாக்கித் தாருங்கள் என்று கட்டளையிட்டிருந்தார். நிதி நிர்வாகம் ஹிட்லரின் நிர்வாகமாகவே இருந்தது. கேட்கும் பணம் அச்சடிக்கபட்டது. விநியோகிக்கப்பட்டது. ஹிட்லர் குறிப்பாக கவனம் செலுத்தியது ராணுவத்தின் மீது தான். பலம். செய்ததை சாதித்து முடிக்க வேண்டுமானால் நம் ராணுவம் உலகத்திற்கு சவால் விடும் படி வளரவேண்டும். அதி நவீன ஆயுதங்கள் என்று அறியப்படும் அனைத்தையும் நாம் தருவித்துக் கொள்ள வேண்டும். அல்லது நாமாகவே உருவாக்கிக் கொள்ளவேண்டும். நினைவிருக்கட்டும். முதல் உலகப்போரின் முடிவில் நோஞ்சான் தேசமாக ஜேர்மனி சுருங்கிப் போனதிற்கு காரணமே, ராணுவப்பலமின்மை தான். ஆயுதத்தயாரிப்புகள் ஒரு புறம் மும்முரமாக நடைபெபறு வந்தது. ஆனால், வெளிப்புறத்துக்கு ஹிட்லர் தன் சாந்தமான முகத்தையே காட்டினார். வெர்ஸைல்ஸ் ஒப்பந்தத்தை கனவிலும் மீறமாட்டேன் என்று உருகினார். மே 17 1933ல், மே 21, 1935ல, மார்ச் 7, 1936ல் நடைபெற கூட்டங்ககினல் ஹிட்லர் அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்திப் பேசினார். ஒப்பந்தங்களை ஜேர்மனி எத்தனை அக்கறையுடன் பேணிப் பராமரிக்கிறது என்பதை விவரித்தார். 1933ல் காபினட் முதல் முறையாக கூட்டப்பட்ட போதே ஹிட்லர் தெளிவாக அறிவித்து விட்டார். செய்யவேண்டிய பணிகள் என்று எடுத்துக்கொண்டால் ஏராளம் உள்ளன. அவற்றுள் முதன்மையானது ராணுவ்வளர்ச்சி. அதிகபட்ச அக்கறையும் கவனிப்பும் ராணுவத்துறை மீது இருந்தாக வேண்டியது அவசியம். இந்தத் தேவை பூர்த்தியானால் தான் பிறவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நிதி அமைச்சகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த டாக்ட் ஹான்ஸ் லூதர் என்பவரிடம் ஹிட்லர் பேசினார். ராணுவத்திற்கான உங்கள் பட்ஜேட் என்ன? கூட்டிக்கழித்துப் பார்த்துவிட்டு அவர் சொன்னது, 100 மில்லியன் மார்க்குகள். ஹிட்லர் தன் அதிருப்தியைத் தெரிவித்த போது, இதற்கு மேல் முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டா் அந்த அமைச்சர். உடனே, அவர் மாற்றப்ட்டார். புதிதாக இணைந்த Hjalmar Schacht அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12 பில்லியன் மார்க்குகளை ராணுவத்திற்காக ஒதுக்கினார். நாசிக்கட்சி அயல்துறை தலைமை அதிகாரி ஆல்ஃபிரட் ரோஸன்பேர்க மே 1933 ல் லண்டன் பறந்து சென்றார். அக்ரோபர் மாதம் 1933ம் ஆண்டு ஹிட்லர் தனது முதல் அடியை எடுத்து வைத்தார் *லீக் ஒவ் நேஷன்ஸ் (League of Nations) உலக ஆயுத ஒழிப்பு மகாநாடு(Disarmament talks) போன்றவற்றிலிருந்து ஜேர்மனி தன்னைத் துண்டித்துக் கொண்டது. ஜேர்மனியின் முன்னேற்றதிற்கு இவை தடையாக இருக்கின்றன என்று ஹிட்லர் குற்றம் சாட்டினார். * ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கத்தற்கு முன்று |''லீக் ஒவ் நேஷனல்'' என்ற அமைப்பே நாடுகளுக்கிடையிலான பிரச்சனைகளுக்கு இணைப்பு அமைப்பாக செயற்பட்டது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல என்று கூறுவார்களே. அது போல் அடுத்த ஹிட்லர் எதிர்பார்த்த அரிய வாய்ப்பு எதிர்பாராமல் சடுதியாக கிடைத்தது ஹிட்ல்ருக்கு. 1934 ஆகஸ்ட் 2 ம் திகதி ஹிண்டன்பர்க் இறந்து போன போது ஹிட்லர் கொண்டாடி இருக்க வேண்டும். ஹிட்லர் அறிவித்தார். நம் அதிபர் இறந்து விட்டார். இனி நானே அதிபர். சான்சிலராகவும் நீடிப்பேன். ராணுவத் தளபதி பொறுப்பையும் அத்தோடு கூட ஏற்கிறேன். ஹிட்லர் தயாராகிக்கொண்டிருப்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை என்பது தான் ஆச்சரியம். Die Diktatoren Benito Mussolini und Adolf Hitler in München, 1940 நாசிசத்தின் செற்பாட்டு நிலையின் ஆரம்பம் செலுத்தப்பட்ட அம்பு போல் ஹிட்லர் தன் பாதையில் பறந்து கொண்டிருந்தார். சிறு தயக்கமும் இல்லை அவரிடம். மைய்ன் காம்ஃப் எழுதிய போது எது போல் சிந்தி்த்தாரோ அப்படியேதான் சிந்தித்துக்கொண்டிருந்தார். எவற்றை எல்லாம் செய்ய விருப்பம் என்று மைய்ன் காம்ஃப் ல் எழுதி இருந்தாரோ அவற்றைத்தான் செய்ய ஆரம்பித்திருந்தார். ஜேர்மனியின் பெருமையை மீட்டெடுக்கவேண்டும். பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும். ஒப்பத்தம் மேல் ஒப்பத்தம் போட்டு ஜேர்மனியை கழுத்தறுத்து ஐரோப்பிய சக்திகளின் கழுத்தை நெரிக்க வேண்டும். ஆரியகுல பெருமையை உலகுக்கு நிருபிக்க வேண்டும். தூய ஜேர்மனியை கட்டி எழுப்பவேண்டும். இது ஒரு கனவு. அடுத்த கனவு யூதர்கள் இல்லாத தூய ஜேர்மனியை கட்டி எழுப்ப வேண்டும். இரண்டையும் ஒன்று சேர தொடங்கியிருந்தார் ஹிட்லர். ஜேர்மனியில் இனவெறிப்பிரச்சாத்தின் மூலம் ஹிட்லர் ஏற்படுத்திய ஆட்சி மாற்றம் மாபெரும் உலக மக்கள் அழிவுக்கும் மானுட சமுதாயத்திற்கு ஒரு பாடத்தையும் கொடுத்த வரலாறாக ஆகியது. அதன் பின்னரே தூய இனம் என்று தேசியவாதத்தை முன்னெடுப்பவர்களை உலகம் எச்சரிக்கையுடன் பயத்துடனும் பார்க்க தொடங்கியது. வரலாற்று பதிவு மூலம் நூல் இரண்டாம் உலகப்போர். எழுதியவர் மருதன் Edition May 2009 வெளியீடு கிழக்கு பதிப்பகம்
 2. 4 points
  இந்தியா எங்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாது என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட உண்மை இந்தியா நிச்சயம் தீமை செய்யயாமல் இராது என்பது. I Say No To India
 3. 3 points
  பிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/). அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி. நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும் உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). வந்த கடித்ததில் இருந்த படம் : பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம். அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும். மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு, அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா
 4. 3 points
 5. 3 points
  முழுப்பூசணிக்காயை ஒரு பானை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். இவர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி இராவிட்டால் இவர் இருக்க வேண்டிய இடம் சிறையல்லவா? எப்படி சிங்கள தேசிய கட்சியில் பிரதி அமைச்சராக முடிந்தது? தலைவரின் உடலை அடையாளம் காட்ட எத்தனையோ போராளிகள் இருக்க, இவர் மட்டும் ஏன் கூட்டி வரப்படவேண்டும்? அதுவும் தான் வெளிநாடு சென்றுவிட்டேன். என்று வேறு புளுகுகிறார். த .தே கூட்டமைப்பு தான் தமிழரின் ஏகபிரதிநிதிகள். என்கிற நிலையை உடைத்து, இவர்களை வைத்து சர்வதேசத்தில் இருந்து வரும் அழுத்தங்களை குறைப்பதற்கு, பகடைக்காய்களாக இருந்து தமிழரின் முன்னேற்றங்களை, போராட்டங்களை இல்லாதொழிப்பதற்கே இவர்கள் இறக்கப்படுகிறார்கள். தலைவர் சமஷ்டிக்கு சம்மதிக்கவில்லை என்கிறார். போராட்டம் மௌனித்து ஆண்டுகள் பல கடந்தும், அந்தப் பேச்சுக்கே இடமில்லை. என்று அடம்பிடிக்கும் சிங்களத்திடம் வேறு என்ன திட்டம் இருந்தது? அல்லது எதை இவர் அவர்களிடம் இருந்து பெறப்போகிறார்? அபிவிருத்தி! நாம கஸ்ரப்பட்டு சேர்க்க, தம் அதிகாரத்தை பயன்படுத்தி சூறையாடவும், விரட்டி அடிக்கவும் தான் உதவும். வெறும் அரசியற் கைதிகளை விடுவிக்க முடியாத சிங்களத்தின் அடிமை. சாதிக்கப் போறார் தவறாமல் குத்திவிடுங்கோ. இவரை வெல்ல வைப்பதற்காகவே முஸ்லீம்களை உசுப்பி விடும் சிங்களம். அதன்பின் அவர்களிடம் இருந்து இலகுவாக பிடுங்கிக்கொள்ளும். இப்போ அதற்கு தலைவலி நிக்க வேணும். அதை நீக்க இப்படியான நிவாரணிகள் தேவை. அதற்கு என்ன நாடகமும் போடும் சிங்களம். ஆனால் தமிழரை அடிமையாக்கவேணும் என்கிற நிலைப்பாட்டில் இருந்து நகராது. 15 ஆண்டுகள் திட்டம் நாளை யார் கையில் அதிகாரம் யாரே அறிவார்?
 6. 2 points
  நில்மினியை காணவில்லை என்று தேடிய ரதி, ஈழப்பிரியன் ,உடையார் மற்றும் யாழ் கள நண்பர்களுக்கு நன்றி. அம்மாவுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று தங்கை, தம்பி குடும்பத்தினருடன் அம்மாவை பார்க்க Tennessee சென்று இருந்தேன். யாழ் களத்தை எட்டிப்பார்த்ததுடன் சரி ஒன்றும் எழுத முடியவில்லை. மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து தேர் கொஞ்சம் தடுமாறி விட்டது... அம்மாவின் சுகயீனம் காரணமாக. இப்ப மீண்டும் தெருவுக்கு வந்துவிட்டது. பதிவுகள் , பதில்கள் விரைவில் தொடரும் . என்னைப்பற்றிய உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கு அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா
 7. 2 points
  அந்தப் பிள்ளை இங்கு வந்த உடனே வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தான் இனிமேல் தினமும் இங்கு வந்து ஒப்பமிடுவேன் என்று சொன்னது.நானும் தமிழ்சிறியும் அவரைப் பாராட்டினம்.அதன்பின் அவ வைத்தியர் என்றவுடனே எல்லாரும் வரிசையாய் வந்து வடம் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் தேரைத் தெருவில விட்டாச்சுது. இப்ப தேர் அங்குமில்லை இங்குமில்லை எங்கு நிக்குதோ தெரியவில்லை....!
 8. 2 points
  கருணா போன்ற மாசற்ற மாணிக்கத்தை பற்றி லண்டனில் இருக்கும் அக்காவிடம் மட்டும் கேட்டால் போதாது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எங்களிடமும் கேட்கவேண்டும், கருணா, 2008 மாகாண சபை,உள்ளூராட்சி தேர்தலிகளில் வெற்றி பெற்று புரிந்த சேவையை பார்த்து புல்லரித்து போன மட்டக்களப்பார்கள் அடுத்த தேர்தலில் தர்ம அடி கொடுத்து துரத்தினர். அங்கேயும் இங்கேயும் தொங்கி திரிந்த கும்மானுக்கு ஒன்றும் தேறவில்லை, தன்னுடைய பருப்பு மட்டக்களப்பில் எடுபடவில்லை (மட்டுவில் தமிழர் பெரும்பாண்மை), என்றதும் முஸ்லிம்களால் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகும் (தமிழர் சிறுபான்மையாக இருக்கும்) எல்லைப்புற நகரங்களை குறிவைத்தார், சிக்கியது கல்முனை ஏற்கனவே கூத்தமைப்பின் கூத்தாடிகளின் மேல் கொலை வெறுப்பில் இருந்த தமிழர்களை கையில் போட்டுக்கொண்டு நானும் ரௌடிதான் என்று பிலிம் காட்டுகிறார். கும்மானின் பப்ளிசிட்டி ஸ்டன்டிற்கு கல்முனை மூன்றாம் குறிச்சியில் தமிழரால் முஸ்லிமிற்கு விற்கப்பட்ட காணி அடியெடுத்து கொடுத்தது, மேலதிக தகவல்கள் :- இந்த 35 அடி (?) கட்டவுட்டுகள் வைக்கப்பட்டிருப்பது இதே மூன்றாம் குறிச்சி தெருவுக்கு போகும் வழியில்(RKM பாடசாலை சந்தி,அதற்க்கு திரும்பும் சந்தி), இந்த மூன்றாம் குறிச்சியில் விடுதலை புலிகளின் வால்கள் அந்தக்காலத்திலிருந்தே அதிகம், வால்களுக்கு இன்னொரு வாலை தான் அதிகம் பிடிக்கும், இப்படி முஸ்லிம்களுக்குக்கெதிராக போராட ருத்ர அவதாரம் எடுத்திருக்கும் கும்மான் தப்பி ஓட்டிவந்ததே அலிசாஹிர் மௌலானா என்ற முஸ்லீம் ஒருவரின் வாலை பிடித்துக்கொண்டுதான். இதை சொல்லி அலிஸாகிர் புலம்பியதெல்லாம் தனிக்கதை
 9. 2 points
  எத்தனை மணிக்கு... விளக்கு பிடிக்கணும். நம்ம தான்... "கோ கொறோனா, கோ...." சொன்னமே... அப்பையும் எப்படி...?
 10. 2 points
  அவர்களின் பசிக்கு சீனாவினால் மட்டுமே தீனி போடக்கூடியதாக இருக்கின்றது....அதனால் டயபட்டிக் வந்து கால் எடுக்க வேண்டிவருமோ அல்லது கொலஸ்ரோல் அதிகமாகி மாரடைப்பு வருகின்றதோ என பொறுத்திருந்து பார்ப்போம் ...
 11. 2 points
  கிருப்பண்ணர், உங்களுடன் ஆக்கபூர்வமான விவாதத்தில் இருக்கிறேன் என்று நினைத்தால், இந்தப்பக்கம் வந்து, வேறு வகையில் சீமானை இழுத்து, தொடங்கி விட்டீர்கள். சீமான் phobia வில் இருந்து உங்களை வெளியே எடுப்பது மிக கடினமாக இருக்கும் போலை கிடக்குதே. முதலில், இன்றய நிலையில் இந்த சிங்கள முஸ்லீம் இணைவினை எப்படி குறிப்பிடுவீர்கள்? முஸ்லிம்களை ஒடுக்கவே கோத்தா, சிங்களவர்களால் கொண்டுவரப்பட்டார். முஸ்லிம்கள், தமது பாதுகாப்பு குறித்து கரிசனை கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர் என்பதனை ஏற்றுக்கொள்வீர்களா? உலகளாவிய பிரச்சனைகள் காரணமாக, எம்மைப்போல, அவர்கள் கிளம்பி அகதியாக, இலகுவாக வரமுடியாது, என்பதனையும், உலகமே சந்தேக கண்ணுடன் தான் அவர்களை பார்க்கும் என்பதனையும் ஏற்றுக்கொள்வீர்களா? ஆகவே, இலங்கையில் முஸ்லீம் மக்கள், தமிழ்பேசும் மக்களாக, ஒன்றிணைந்தால் தான் பாதுகாப்பானது என்ற நிலைக்கு வரவேண்டியது தவிர்க்க முடியாதது. இந்த ஒன்றிணைவு நிலைக்கு, வரமுடியாமல், சிங்களத்தால் தூண்டப்பட்டு வீரவசனம் பேசிய றிசாட், ஹிஸ்புல்லா, அதாவுல்லா எல்லோரும் பல் புடுங்கி விடப்பட்டுள்ள பாம்புகள். மேலும், சிங்களவர்கள் நாடு பிரித்து தருவார்களா என்பது ஒரு அப்பாவித்தனமான, அபத்தமான கேள்வி. அவர்கள் என்ன தருவது என்று அல்லவா சிந்திக்கவேண்டும். அவன் யாரு தருவதற்கு, நாம் யாரு பெறுவதற்கு? எமது சுஜநிர்ணய உரிமை குறித்து மட்டுமே நாம் பேசவேணும். அவ்வளவு தான். வடக்கு, கிழக்கில் குடியொப்பம் ஒன்று நடத்தும் இலக்குடன் நாம் நடக்க வேண்டும். அதற்குரிய அழுத்தம், இங்கே வாழும் நம்மால் கொடுக்கப்படவேண்டும். அதுக்கும், சீமானை பிடித்துக் கொண்டு தொங்குவதக்கும் என்ன தொடர்பு. நான் சொன்னது போலவே, இந்த தமிழ் மெகா அலம்பறை இணையங்களில் இருந்து வெளியே வாருங்கள். அவை உங்களை, தமிழக, இந்திய அரசியலுக்குள் வைத்து சிந்திக்க வைக்கின்றன. தமிழகத்தில் எந்த ஒரு எழுத்தாளரின் சிந்தனையும் தெளிவானது அல்ல. காரணம் புலமையும், ஏழ்மையும் இணைந்தே இருப்பது. இதன் காரணமாக எழுத்துக்கள் வாங்கப்படுகின்றன. சுஜ சிந்தனைகள் முடக்கப்படுகின்றன. சுபவீ என்னும் ஆரம்பகால தமிழ் தேசிய சிந்தனையாளர், அப்படியே குப்புக்கரணம் அடித்து, மறுபக்கம் போய், திமுக பக்கம் நின்று பேச காரணம்.... எனது புரிதல் சரியானால்.... குடும்ப வறுமை. பிரசாந்த் கிஷோர் வந்தபின்னர் பல எழுத்தாளர்கள், சமூக ஊடகவியலாளர், திமுக சார்பானவர்களாக எழுதும் வகையில் விலைக்கு வாங்கப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது. ஒரு காலத்தில் சோ தனது அரசியல் நிலைப்பாடு வேறு, துக்ளக் பத்திரிகை நிலைப்பாடு வேறு என்று இருந்தார். இன்று அவரது பத்திரிகை குருமூர்த்தி தலைமையில் அப்படியே பிஜேபி மடியில். விகடன் திமுக கையில்.... இப்படிதான் பல....
 12. 1 point
  உப்பின் மருத்துவத்தை பற்றி கூறுகின்றார்.
 13. 1 point
  இந்த சிங்கள கிராமிய சமையல் சேனல் லைப் பாருங்கள். மொழியே தேவை இல்லை. மிக அருமையாக தந்துள்ளார்கள். பின்னணி இசை, படப்பிடிப்பு என எம்மை தூக்கிக் கொண்டு போய் அப்படியே ஊரில் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். தோட்டத்தில் வெங்காயத்தாளை புடுங்க்குவதாகட்டும், தம்பியர் விறகு வெட்டுவதும், அம்மம்மா வெங்காயத்தாளை சுத்தப்படுத்துவதும்.... தம்பியும், அக்காவும் சமைப்பதும் அருமை. பாராட்டாமல் இருக்க முடியாது.
 14. 1 point
  பேட்டியை ஆறுதலாகப் பார்த்தால் தெரியும். வடக்கு-கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலம் ஒரு தீர்வை ராஜபக்ஸக்களோடு பேசி எட்டலாம் என்று சொல்கின்றார் அம்மான். சமஸ்டி என்ற சொல்லைப் பாவித்தாலும், சமஸ்டி என்றாலே பிரிவினை என்ற கருத்து சிங்களவரிடையே இருப்பதால் அப்படியான சொல்லாடல்களுடன் பேசமுடியாது என்று தெரிந்துவைத்திருக்கின்றார். சிங்களவர்களை விட முஸ்லிம்களால்தான் கிழக்கில் தமிழர்களுக்கு ஆபத்து என்று சொல்லுவதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புகின்றார். எல்லாம் ஒரு எம்பியாக வந்து தனது சொத்துக்களைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிதான். வேறு ஒரு தீர்வையும் எடுத்துத் தரமாட்டார் அம்மான்.
 15. 1 point
  நீங்கள் இறக்கி விடும் சரக்குக்கே பாரம் தாழாமல் யாழ் கள சேர்வேர் தள்ளாடும்போது இதுக்குள்ளே நாங்கள் வேற எதுக்கு வீண் பாரமாக .....? (இனியாவது ஏதாவது தலைப்புக்கோ அல்லது முதல் எழுதிய கருத்துக்கோ சம்மந்தப்பட்டு எழுதுங்கள் ஞாபகத்தில் வந்தால்)
 16. 1 point
  தமிழ் தேசியம் என்பது எதிர்ப்பு தத்துவம் அல்ல. மாறாக, அது ஒரு உயிர்ப்பு தத்துவம்.
 17. 1 point
  கீழடியில் மனித எலும்புகள்.! மரபணு சோதனை நடத்தப்படுமா.? சிவகங்கை : கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள் மரபணு சோதனை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மக்களிடையே எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி ஆராய்ச்சி தொடர்ந்த கொந்தகை கிராமத்தில் கதிரேசனுக்கு சொந்தமான நிலத்தில் ஆறாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகை கிராமத்தில் கதிரைசனக்கு சொந்தமான மற்றொரு நிலத்தில் இன்று காலை விவசாயத்திற்காக விவசாய பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு தென்னங்கன்று காக தோண்டப்பட்ட குழியில் மனித எலும்புக்கூடு உள்ள தாழி பானை தென்பட்டதை கண்ட கதிரேசன் ஆய்வுப்பணி செய்துகொண்டிருந்த தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தொல்லியல் துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கதிரேசனின் விவசாயம் நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர் . அதில் பெரிய தாழி பானை ஒன்றும் சிறிய பானை ஒன்றும் இரண்டையும் மூடுவதற்கான இரண்டு தட்டுகள், சுடுமண்ணால் ஆன தட்டுகள், பெரிய பானைக்குள் மனித எலும்புக்கூடு உட்கார வைத்தது போல் இருந்தது. ஆராய்ச்சியாளர்கள் பானைக்குள் இருந்த மனிதத் தலை ,கை கால்களுக்கான எலும்புகள் அனைத்தையும் ஆராய்ச்சிக்காக பாதுகாப்பாக எடுத்து வைத்தனர், இது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்பதை ஆராய்ச்சிக்கு பின் தான் தெரியவரும் என்று கூறினார்கள். ஏற்கனவே 5 ம் கட்ட ஆய்வு பணியின் போது எலும்புகள் கிடைத்தன. அது மாடுகளின் எழும்புகளாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்க ப்பட்டது. 6 ம் கட்ட ஆய்வின் போது சிறிய அளவில் எலும்பு கிடைத்தது. அது மிக நீண்ட முதுகெலும்பு வரிசைகளை கொண்டதாக இருந்தது. அதுவும் விலங்கின் எலும்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிடைத்த எலும்புகள் வைத்து மரபணு சோதனைகள் நடத்தப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. https://www.updatenews360.com/tamilnadu/sivagangai-archaeological-found-060620/
 18. 1 point
  மருதங்கேணி இவ்வாறான வரலாற்று நூல்களை தமிழில் படிக்கும் போது இது சரியான பதிவோ என்ற சந்தேகம் வருவது இயற்கை. உங்களுக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வந்தது. அதற்காகவே பல்வேறு ஜேர்மன் தளங்களுக்கு சென்று தரவுகள் சரியானதா என்று சரிபார்த்தேன். நூலில் குறிப்பிடப்படிருக்கும் சில வரலாற்று இடங்களுக்கு நான் நேரில் சென்றும் இருக்கிறேன். உதாரணமாக Maginot line, Auschwitz Concentration camp ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்ற போது நூலின் ஆசிரியர் சகட்டு மேனிக்கு எழுதாமல் மிக சிரமமெடுத்து பொறுப்புடன் துல்லியமான தகவல்களை கொடுத்திரார் என்பதை என்னால் நேரடியாக உணர முடிந்தது. நூலின் தரவுகளை நீங்களும் வரலாற்று தளங்களுக்கு சென்று உறுதிபடுத்தி கொள்ளலாம். மற்றது இவ்வாறான பெரிய புத்தகத்தை வாங்கியபிறகு தான் வாசிக்க முடியும். கடையிலேயே வாசித்து எனக்கு பிடித்த நூலை வாங்குவது சாத்தியமற்றது. நூலின் இந்த பதிப்பு வெளிவந்தது 2009 ம் ஆண்டு.
 19. 1 point
  30min.... ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும் மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால் பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச் சற்றும் தயக்கமின்றிச் சாற்று........
 20. 1 point
  எனக்கு சீனாவைப் பற்றி எந்த அக்கரையுமில்லை இந்தியா உடையும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம். ஆனால் , என் வாழ் நாளில் அதைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை மட்டும் அல்ல பலருடைய ஆசையும் அதுதான். எங்களை அழித்தவர்கள் அழிய வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நியாயமானது. அது சரி, இந்தியா உடையாது என்பது உங்கள் எதிர்வு கூறலா அல்லது விருப்பமா
 21. 1 point
  அடுத்த அடிமை தொடங்கீற்றார். யார் முழு அடிமை என்கிற போட்டி இவர்களுக்குள்.
 22. 1 point
  ரதி, நீங்கள் இவ்வளவுக்கு கருணாவை விரும்புவதற்கு நிச்சயமாக பல வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே? கருணா பிரிந்தது, மாறியது பற்றிய பல ஆக்கங்களையும் படித்ததில் இருந்து நான் அறிந்திவை: 1. இளம் வயதில் இருந்தே பிரபாகரனால் பாசத்துடன் பயிற்றப்பட்டு வளர்க்கப்பட்டவர். 2. சிறந்த போர்க்கள தளபதி என்று பிரபாகரனால் அறியப்பட்டவர். 3. பிற்காலத்தில் தமிழீழம் நிலைக்காது என்று விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள முதலே தான் அறிந்து கொண்டவர். 4. இவரது கிழக்குமாகாண நிருவாக முறைகளை பொட்டர் ஊழல்கள் நிறைந்ததாக கருதி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதால் பிளவு உருவானது. 5. பிரபாகரன் பொட்டரில் பெரிதும் தங்கி இருந்தார். 6. போராளியான கருணாவின் சகோதரரையும் பொட்டரின் ஆட்கள் கொன்று விட்டார்கள். 7. பொட்டரின் பிளவால் மாத்தையாவின் நிலை தனக்கும் உருவாகும் என உணர்ந்து கருணா விடுதலைப்புலிகளுக்குள் இறுதி யுத்தத்தில் இறங்கி வெற்றியும் பெற்றார். அடிப்படையில், இந்த விளைவுகள் உருவாகும் என்பதை அறியும் ஆற்றல் பொட்டருக்கு இருக்கவில்லை, அல்லது அறிந்திருந்தாலும் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. இதுவே நான் வாசித்ததில் அறிந்தது. கருணா மட்டும் இந்த அழிவுக்கோ துரோகத்துக்கோ பொறுப்பாக தெரியவில்லை.
 23. 1 point
 24. 1 point
  நில்மினி இப்ப நேரமில்லாமல் இருக்கின்றா போலிருக்கு, நேரமிருக்கும் போது உங்கள் பதிவுகளை இடுங்கள்
 25. 1 point
  இனத்தை காட்டிக்கொடுத்த ஒரு கோமாளியை பற்றி எழுதும்போது எப்படி சிரிப்பு வராமல் இருக்கும்.......... ********* ---------அடக்கவே முடியாத சிரிப்பும் வந்தது என்ன செய்ய கால கொடுமை என்று விட்டு கடந்து போகிறேன்
 26. 1 point
  ஹிந்தி திணிப்பு பற்றி இன்னுமொரு அருமையான கருத்து! தமிழின விரோத கூலிக்கு மாரடிக்கும் சுப்ரமணியசாமி போன்றவர்களின் சமஸ்கிருதம் பற்றிய பொய்கள் தகர்க்கப்படுகின்றது.
 27. 1 point
  ஹிந்தி திணிப்பு பற்றி அருமையான கருத்து! இதன் பிற்பகுதியில் பிஜேபி ஹிந்தி வெறியர்களின் (சொறிலங்கா கொலைகாரர்களின் நண்பி சுஷ்மா சுவராஜ்) மனோநிலை வெளிப்படுகிறது.
 28. 1 point
  ஜேர்மனியிலை தவளை,முயல் வீதிக்கு வராமல்பாதுகாத்து வேலி,மதில் எல்லாம் கட்டுகிறார்கள்.அவ்வளவிற்கு பிற உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இதுகள் என்னடாவெண்டால் மனச்சாட்சியே இல்லாமல் கொல்லுதுகள். சீமான் பிற உயிரினங்களின் முக்கியத்துவத்தை பிரச்சாரமாகவே செய்கின்றார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
 29. 1 point
  சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை. தமிழருக்கு காலகாலமாக இந்தியா (ஹிந்தியர், மலையாளிகள், .....) எதிரி. இது மாறுகிறதுக்கு சந்தர்ப்பம் இல்லை. எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.
 30. 1 point
  உண்மை தான். எம்மைப் போலவே தான் வைரஸூகளுக்கும் பல சூழல் உயிரியல்.. பெளதீகக் காரணிகளை எதிர்த்துப் போரிட வேண்டிய நிலை. அதுவும் இல்லாமல்.. அவற்றின் வாழ்கை வட்டம் குறுகியது என்பதால்.. அவற்றின் ஜீன்களில் உண்டாகும் மாற்றங்கள் சில அவற்றைப் பலவீனப்படுத்தலாம். அந்தப் பலவீனம் அடுத்தடுத்த அவற்றின் சந்ததிகளுக்குப் பரவின் இந்த கொரோனா வைரசுக்கள் இயற்கையாகவே பலவீனப்படும் வாய்ப்புக்கள் உண்டு. மேலும்.. எமது உடலும் தன்னை புதிய தொற்றுக்களுக்கு எதிராக பலவழிகளில் போராடும். அதில் அது வெற்றி கண்டு.. வைரஸும் தொற்றும் இயல்பில் பலவீனப்பட்டால்.. இந்த வைரஸ் இயற்கையாக அதன் வீரியத்தை இழந்ததாகி விடும். Coronavirus 'could be getting weaker' as scientists spot new mutation https://www.mirror.co.uk/science/coronavirus-could-getting-weaker-scientists-21981820 Healthy eating as important as social distancing in fight against COVID-19, Government is warned by food specialists from City, University of London, the University of Sussex and Cardiff University. https://www.city.ac.uk/news/2020/march/healthy-eating-important-covid-19-fight-experts-warn-government ஆனால்.. இப்படி நிகழ்வதற்கு உள்ள சாத்தியம் என்பது உடனடியானதாக இருக்க வாய்ப்புக் குறைவு. அதனால்.. தான் இந்த வைரஸுக்கு எதிரான மருந்துத் தேடலும்.. வக்சீன் தேடலும். காரணம்.. இந்த வைரஸீன் தற்போதைய தொற்று வீதம் அதிகம். இறப்பு வீதமும் ஒப்பீட்டளவில் தற்போதைய சூழலில் சில நாடுகளில் அதிகம். எல்லாவற்றிற்கும் மேலாக.. இந்த வைரஸின் பொருண்மிய.. சமூகத்தாக்கம் மிக மிக அதிகம். அதனால் தான் பல நாடுகள்.. போட்டி போட்டுக்கொண்டு மருந்துகளை.. வக்சீனைத் தேடுகின்றன. ஏலவே இந்த நிலையை சார்ஸ் வைரசில் அவதானித்திருக்கிறார்கள். எனவே உங்களின் அந்த எளிமையான கருத்து நிராகரிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. புரளியும் கிடையாது. நிகழ்வுக்குச் சாத்தியமானதே.
 31. 1 point
  எல்லாம் இழந்த பின்பும்... மனிதனுக்கு கொடுப்பதை மறக்க வில்லை மரம்..!
 32. 1 point
  தமிழ் நாடு பலம் மிக்கதாக இருந்திருக்கும். இந்தியா இருப்பதால் தான் சீனாவுக்கு பாகிஸ்தான் தேவை. உடைந்துவிட்டால் தேவை இல்லை. முசுலீம்கள் தான் தங்களுக்கு அடுத்த ஆபத்தானவர்கள் என்பது சீனாவுக்கு தெரியும். அதனால் சீனா தமிழர்களை ஒட்டியே போக நினைப்பார்கள். எனவே நீங்க கூறியவை அனைத்தும் சாத்தியமற்றது.
 33. 1 point
  வ.உ.சி பதிப்பகம் - விலை ரூ 140 தெரியாம அச்சடிக்குறாங்க...
 34. 1 point
  உடையார் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...... பிள்ளைகள் நல்லதையே சிந்திக்கவும் செயல்படவும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம்.இதற்கு ஆன்மீகமும் துணையாக இருக்கின்றது.
 35. 1 point
  கனவு மெய்ப்பட வேண்டும். சுயநலம் நிறைந்தவர்கள் உள்ள உலகில் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை இளவயதிலேயே கொண்டுள்ள உங்கள் மகளின் கனவு ஈடேறவேண்டும். ஓவியம் மிக அழகாக உள்ளது.
 36. 1 point
  நீங்கள் ஆசீர்வதிக்கப்படடவர், வாழ்த்துக்கள் உடையார்......ஓவியம் மிகவும் அழகாக இருக்கின்றது.....!
 37. 1 point
 38. 1 point
  எங்கே நில்மினியைக் காணவில்லை
 39. 1 point
  தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு
 40. 1 point
  நன்றி ஈழப்பிரியன்ந நான் முன்னேற பல கடவுள்கள் உதவினார்கள் ஒருவர் அல் பலர். என்னால் இயன்றதை என் சக்திக்கு உட்பட்டு செய்கிறேன், அதையே பிள்ளைகளுக்கு பழக்குகின்றேன், பார்ப்போம். நன்றி சிறி, ஆமாம் எனக்கும் தான் நேற்று வியப்பாக இருந்திச்சு, வழக்கமாக நான் கொடுக்கும் பணங்களைதான் அவா யாருக்கும் கொடுப்பா ஊருக்கு போகும்போது. இப்ப ரியூஷனில் உழைப்பதால் அவரின் வங்கிகணக்கில் கொஞ்ச காசிருக்கு. அதை நல்ல வழியில் செலவழிக்க பழுக்கனும்.. சின்னவயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவும் குணமிருக்கு.
 41. 1 point
  அத்தியாயம் 100 ‘‘ஏன் இப்படி திகைத்து அதிர்ச்சியில் சிலையாக மாறியிருக்கிறாய் கரிகாலா..?’’ வாய்விட்டுச் சிரித்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். ‘‘இப்படியொரு நிலையைத்தானே சாளுக்கியர்கள் மத்தியில் சிவகாமியை முன்வைத்து சிருஷ்டித்திருக்கிறாய்..? ராஜ தந்திரத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான் என்றாலும் நீ செய்யும் காரியம் கத்தியின் மீது நடப்பதற்கு சமம்... சற்றே பிசகினாலும் நீ விசுவாசம் காட்டும் பல்லவர்களையும் அது பதம் பார்த்துவிடும்...’’‘‘மன்னா...’’ ‘‘நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன் வேடத்தில் வந்திருக்கும் போலியா என்று உன்னைப் பார்த்து நான் கேட்டது உன்னால் உருவாக்கப்பட்ட சூழலை உனக்கே புரிய வைக்கத்தான்...’’‘‘மன்னா...’’ ‘‘உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் கரிகாலா... உன்னளவு திறமை வாய்ந்தவனை இதுவரை நான் கண்டதில்லை. நல்லவேளையாக நீ பல்லவ இளவரசனாக இல்லை... இல்லையென்றால் என் மகன் மிகப்பெரிய எதிரியை தன் ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்டிருப்பான்...’’ கரிகாலன் சற்றே முன்நகர்ந்து பாண்டிய மன்னரின் கால்களைத் தொட்டு வணங்கினான். நெகிழ்ச்சியுடன் அவனது தோள்களைத் தொட்டுத் தூக்கினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘நீ சிருஷ்டித்திருப்பது பத்மவியூகம். அபிமன்யு போல் அல்லாமல் இந்த பத்மவியூகத்திலிருந்து நீ சேதாரமின்றி வெளியேறுவாய் என்று நான் நம்புகிறேன்...’’‘‘தங்கள் நம்பிக்கையை கண்டிப்பாகக் காப்பாற்றுவேன் மன்னா...’’ ‘‘நல்லது... உன்னால் பாண்டியர்களின் பாதாளச் சிறைக்கு அனுப்பப்பட்ட சிவகாமி யார் என்றெல்லாம் கேட்கப் போவதில்லை... அவள் உன் காதலியா அல்லது பல்லவர்களின் இளவரசியா அல்லது உண்மையான சிவகாமியின் தோற்றத்தில் அனுப்பப்பட்ட சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியா என்பதை எல்லாம் எங்கள் ஒற்றர் படை ஏற்கனவே என்னிடம் தெரிவித்துவிட்டது...’’ ‘‘பாண்டியர்களின் ஒற்றர் படையை ஒருபோதும் நான் குறைத்து மதிப்பிடவில்லை மன்னா...’’‘‘அதற்கு மாறாக உனது திறமையின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறாய்...’’ கரிகாலனின் கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே சொன்னார் பாண்டிய மன்னர்.இம்முறை அவரது பார்வையை எதிர்கொள்ளாமல் தலைகுனிந்தான் கரிகாலன்.‘‘தலையைக் குனிவது புலிக்கு அழகல்ல... என்னதான் உன்னை நீயே வளர்ப்புப் பிராணி என்று கூறிக்கொண்டாலும் மீனைப் பொறுத்தவரை என்றுமே நீ புலிதான்... சாளுக்கியர்களுக்கு எதிராக நீ நடத்தி வரும் நாடகம் பாண்டிய நாட்டைப் பாதிக்காத வரையில் ஒரு பார்வையாளனாக நான் வேடிக்கை பார்ப்பேன்... இதை மட்டும் இந்தக் கணத்தில் என்னால் சொல்ல முடியும்... உறுதி அளிக்க முடியும்...’’‘‘நன்றி மன்னா... இந்த நாடகத்தில் மீனுக்கு எந்த கதாபாத்திரமும் இல்லை... இதை என்னால் இந்தக் கணத்தில் அழுத்தம்திருத்தமாகச் சொல்ல முடியும்...’’‘‘அதங்கோட்டாசான் கூடவா..?’’ அரிகேசரி மாறவர்மர் இப்படிச் சொன்னதும் கரிகாலன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.‘‘பல்லவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மட்டுமல்ல... சாளுக்கியர்களின் ஒவ்வொரு நகர்வையும் மட்டுமல்ல... உனது ஒவ்வொரு காலடிச்சுவட்டையும் கூட எனது ஒற்றர்கள் கண்காணித்து வருகிறார்கள்... காஞ்சி சிறையில் நீயும் சிவகாமியும் எதைத் தேடினீர்கள்... இப்பொழுது மதுரை சிறைக்கு உன்னால் எதற்காக சிவகாமி அனுப்பப்பட்டிருக்கிறாள்...’’ ‘‘என்னால் சிவகாமி அனுப்பப்படவில்லை மன்னா... அவள் பல்லவ இளவரசியாக வேடமிட்டிருக்கும் சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவி...’’ ‘‘என்னிடமே இந்த விளையாட்டைத் தொடர்கிறாயா..?’’‘‘அதில்லை மன்னா... நான் சொல்ல வருவது...’’ ‘‘...உண்மை எனக்குத் தெரியும்... ஆட்டம் போதும். முடித்துக் கொள்...’’‘‘மன்னா...’’ ‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மர், உங்களுக்கு அளித்த ஆயுதக் குவியலும் அக்குவியல் இருந்த மலைக் குகையும் உனக்கு நினைவில் இருக்கிறதா..?’’கரிகாலன் தலையசைத்தான்.‘‘அந்தக் குகையின் மற்றொரு மூலையில் இருக்கும் பாதாளச் சிறையில்தான் ‘உண்மையான’ சிவகாமியை சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அடைத்து வைத்திருக்கிறார்... என் கணிப்பு சரியெனில், இந்நேரம் அவர் அங்கு சென்று, தான் அடைத்து வைத்திருக்கும் சிவகாமி மயக்கத்தில் இருக்கிறாளா என பரிசோதித்திருப்பார்...’’கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றான். ‘‘பிடி இறுகி வருகிறது கரிகாலா... உடனடியாக நீ சிருஷ்டித்த பத்மவியூகத்தில் இருந்து வெளியே வா...’’‘‘இந்தச் சிறியவன் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி மன்னா... தாங்கள் கூறியபடியே வெளியே வந்து விடுகிறேன்...’’‘‘என்னைத் திருப்திப்படுத்தச் சொல்கிறாயோ அல்லது உண்மையிலேயே வெளியே வரப் போகிறாயோ... அது உன் விருப்பம்... ஆனால் ஒன்று - பொழுது விடிவதற்குள் அதங்கோட்டாசானையும் அவரால் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களையும் மதுரையில் இருந்து வெளியேற்றிவிடு... இந்த இரவு மட்டுமே உனக்கு அவகாசம்...’’ ‘‘மன்னா...’’ ‘‘எனக்கு பாண்டியர்களின் நலம் முக்கியம் கரிகாலா... பல்லவ - சாளுக்கிய பிரச்னையில் என் மக்களின் தலை உருள்வதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது...’’ ‘‘அப்படி நடக்காது மன்னா...’’‘‘நடக்காமல் இருப்பதே பல்லவர்களுக்கும் உனக்கும் நல்லது!’’ அழுத்திச் சொன்ன பாண்டிய மன்னர், விடை கொடுப்பதற்கு அறிகுறியாக அறைக் கதவைப் பார்த்தார். புரிந்துகொண்டதுபோல் கரிகாலன் தலைவணங்கினான். ‘‘நன்றி மன்னா... நான் வருகிறேன்...’’அறைக் கதவை அவன் நெருங்கியபோது அரிகேசரி மாறவர்மர் அழைத்தார். ‘‘கரிகாலா...’’நின்று திரும்பி அவரைப் பார்த்தான். ‘‘மன்னா...’’‘‘சில கணங்களுக்கு முன் ரிஷபம் எருது குறித்து உரையாடினோம் அல்லவா..?’’‘‘ஆம் மன்னா...’’‘‘அப்பொழுது மருந்துக்குக் கூட நான் வராகத்தைக் குறிப்பிடவில்லை...’’‘‘காரணம் புரிந்தது மன்னா... ரிஷபமும் எருதும் ஒன்றுதான் என்பதை குறிப்பால் உணர்த்தினீர்கள்... அதாவது பல்லவர்களும் சாளுக்கியர்களும் வேறு வேறல்ல... சாதவாகனப் பேரரசில் சிற்றரசர்களாக இருந்தவர்கள்... ஒரே உறையில் இருந்த இரு கத்திகள் என்பதாலேயே தொடக்கம் முதல் உரசிக் கொண்டிருக்கிறார்கள்... இன்றைய வராகம் நிஜத்தில் எருதுதான்... என்பதை இந்த சிறியவனுக்குப் புரியவைக்க முயற்சித்தீர்கள்...’’அரிகேசரி மாறவர்மரின் கண்களில் கனிவு வழிந்தது. ‘‘உன் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று எல்லாம்வல்ல மதுரை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்...’’மீண்டும் அவரை வணங்கிவிட்டு கரிகாலன் அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். அவனது வருகைக்காகவே அங்கு பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன் நின்று கொண்டிருந்தான்! ‘‘உறங்கச் செல்லவில்லையா..?’’ கரிகாலன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.‘‘உன்னுடன் இந்த இரவு முழுக்க பேசிகொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது... உனக்கொன்றும் பிரச்னையில்லையே..?’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.‘‘பிரச்னையா..? மகிழ்ச்சியாக இருக்கிறது... வா...’’ புன்னகையுடன் சொல்லிவிட்டு இரணதீரனுடன் நடந்தான். ‘இன்றிரவு முழுக்க உன் தந்தையின் கட்டளைப்படி என்னைக் கண்காணிக்கப் போகிறாய்... அப்படித்தானே..?’ மனதுக்குள் கரிகாலன் சொல்லிக் கொண்டான். அதேநேரம் வேறொரு வினாவும் அவன் உள்ளத்தில் பூத்தது. ‘ஆமாம்... தாயத்தை தரையில் உருட்டாமல் தன் கைகளிலேயே பாண்டிய மன்னர் உருட்டிக் கொண்டிருந்தார்... இதற்கு என்ன அர்த்தம்..?’ ‘‘ம்...’’ கனைத்துவிட்டு தன் கையில் இருந்த பட்டுச் சுருளை சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனிடம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர். மவுனமாக அதை வாங்கிப் படித்தான் விநயாதித்தன்.‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை. இதனைத் தொடர்ந்து கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள். வடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரை கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’ ‘‘நம்மிடம் சிவகாமி ரகசியமாகக் கொடுத்து அனுப்பிய செய்தி இதுதான்...’’ தன் அறையில் இருந்த சாளரத்துக்கு வெளியே வானத்தைப் பார்த்தபடி ராமபுண்ய வல்லபர் சொன்னார். ‘‘இது நாமும் அறிந்த செய்திதான்... என் ஊகம் சரியெனில், மதுரை மன்னரும் இதை அறிவார்... இப்படி எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை ரகசிய செய்தியாக நம்மிடம் ஏன் சிவகாமி கொடுக்க வேண்டும்..?’’ விநயாதித்தன் அமைதியாக அவரைப் பார்த்தான். ‘‘இந்தச் செய்தியை புறா வழியே சிவகாமிக்குத் தெரியப்படுத்தியவர் யாராக இருக்கும் விநயாதித்தா..?’’ ‘‘தெரியவில்லை குருநாதா...’’‘‘அதுவும் சரியாக பல்லவ இளவரசருக்கு நாம் இரவு விருந்து அளிக்கும்போது புறா வழியே சிவகாமிக்கு செய்தி வரவேண்டுமா..? ஒற்றர் படையில் கடைநிலை வீரனாக இருப்பவன் கூட அதுபோன்ற சூழலில், தான் அனுப்பும் செய்தி சேர வேண்டும் எனக் கணக்கிட மாட்டானே..?’’விநயாதித்தன் திரும்பி, மூடியிருந்த அறைக்கதவை உற்றுப் பார்த்தான். ‘‘எதற்காக அறைக்கதவை ஆராய்கிறாய் விநயாதித்தா..?’’ திரும்பி சாளுக்கிய இளவரசனை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘பதிலுக்காக குருதேவா...’’ நிதானமாகச் சொன்னான் விநயாதித்தன்.‘‘என்ன பதில்..?’’‘‘நீங்கள் அனுப்பிய வீரர்களிடம் இருந்து வரப்போகும் பதில்!’’பெருமையுடன் தன் சீடனை அவர் பார்த்தபோது, அறைக்கதவைத் திறந்துகொண்டு நான்கு வீரர்கள் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் தூக்கி வந்தது கடிகை பாலகனை என்பது தீபத்தின் ஒளி இல்லாமலேயே ராமபுண்ய வல்லபருக்கும் விநயாதித்தனுக்கும் புரிந்தது. வந்த வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் முன்னால் வந்து சாளுக்கிய போர் அமைச்சரையும் சாளுக்கிய இளவரசனையும் வணங்கினான். ‘‘மதுரையிலேயேதான் இவர் பதுங்கி இருந்தார்...’’ கடிகை பாலகனை சுட்டிக் காட்டினான். ‘‘எந்த இடத்தில்..?’’ கேட்ட ராமபுண்ய வல்லபரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘பாதாளச் சிறைக்குச் செல்லும் வழியில்!’’ ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘இவரிடம் இருந்து சிலவற்றைக் கைப்பற்றி இருக்கிறோம்...’’சொன்ன வீரர்களின் தலைவனைப் பார்த்தான் விநயாதித்தன். ‘‘புறாக்களையா..?’’ ‘‘இல்லை இளவரசே...’’‘‘பிறகு..?’’ ‘‘செய்திகளை...’’ என்றபடி 15 பட்டுச் சுருள்களை எடுத்து வீரர்களின் தலைவன் காண்பித்தான். ‘‘அனைத்திலும் ஒரே செய்திதான் ஒரே மாதிரியாக எழுதப்பட்டுள்ளது...’’‘‘என்ன செய்தி அது..?’’ நாசி அதிர சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டார்.‘‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை. இதனைத் தொடர்ந்து கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள். வடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரைக் கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’’ படுத்த நிலையில் கரிகாலனைக் கொத்தாகத் தன் தலைக்கு மேல் தூக்கினாள் சிவகாமி.சரியாக அவளது அதரங்களுக்கு நேராக வந்ததும் அதில் தன் உதடுகளைப் பதித்தான் கரிகாலன்.நான்கு உதடுகளும் பின்னிப் பிணைந்தன! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16879&id1=6&issue=20200529
 42. 1 point
 43. 1 point
  சனிக் கிழமை முதல்..... ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவித்தல் ஜுன் 6 ஆம் திகதி சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இதேவேளை முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இரவு பத்து மணிக்கு அமுலாகும் ஊரடங்குச்சட்டமானது, நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144548?ref=home-imp-parsely
 44. 1 point
 45. 1 point
  கொரோனா எதிரொலி: யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக, யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே து.ஈசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் எமது சபையின் எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகளும் வர்த்தக நிலையங்களும் பூட்டிடப்படடன. இதன் காரணமாக எமக்கு இரண்டு மாதங்களுக்கு 18 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வருமானம் இல்லாத நிலையிலும் வரவு- செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு மேலதிகமாக கொரோனா தொற்றின் போது கிருமி தொற்று நீக்கல் மற்றும் சுகாதார சேவைகளை முன்னெடுக்க 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் எமக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்டிருந்த இருமாத முடக்கநிலையில் மொத்தமாக 20 மில்லியன் ரூபாய் நிதி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எமது வரவு செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் எதிர்பாக்கப்படாத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக உரிமம் மாற்றத்தினால் கிடைக்கும் 130 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கிடைக்கும் வருமானம் 20 மில்லியன் வரையான வருமானம் இழக்கப்படலாம். ஏனெனில் இம்முறை நல்லூர் ஆலய உற்சவம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது.இவ்வாறு வேறு வருமானங்களான வரிகள், சந்தை குத்தகை இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட சந்தைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், வர்த்தகர்களுக்கு சில வரி விலக்குகளை சில நாட்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். மேலும் தற்போது கழிவகற்றல் செயற்பாட்டிற்கு தனியாரின் உழவு இயந்திரங்களை பாவிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். கழிவகற்றல் செயற்பாட்டிற்கு மாநகர சபையின் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எனினும் நாம் திண்ம கழிவகற்றலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மலையின் காரணமாக டெங்கின் தாக்கம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர எல்லைக்குள் சில நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. எனவே நாம் அது தொடர்பிலும் சுகாதார திணைக்களம், பிரதேச செயலகத்துடன் இணைந்து அதற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். சில பகுதிகளுக்கு இப்போதே புகையூட்டிடல்கள் இடம்பெறுகின்றன” என தெரிவித்துள்ளார். http://athavannews.com/கொரோனா-எதிரொலி-யாழ்-மாநக/
 46. 1 point
  கொரோனா வைரஸ் என்றால் என்ன? யாழ்.மக்களின் பதில் சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுதையும் புரட்டிப்போட்டுள்ளது. இந்த வைரஸ் எங்கிருந்தது வந்தது? கொரோனா வைரஸ் என்றால் என்ன? என்ற கேள்விக்கு யாழ். மக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவற்றை கீழே காணொளியில் காணலாம்... https://www.ibctamil.com/srilanka/80/143999
 47. 1 point
  யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபர் தொடர்ந்து தெரிவிக்கையில்.. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 21ஆம் திகதியில் இருந்து காற்று அதிகரித்து காணப்பட்டது. புயல் அபாயத்தை தொடர்ந்து வீசிய காற்று மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் ஒரு வீடு முழுமையாகவும், மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கிறது. அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் 3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கைதடி கலை வாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து ஒரு பெண்மணி காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். சிறு முயற்சியாளர்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளதுள்ளது. 6 பேர் தொழில் பாதிப்பு அடைந்துள்ளார்கள் அதிலும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து அவரது படகு சேதமடைந்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளது எனினும் வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி யுள்ளோம். தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். இன்றும் நாளையும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை நாடு புதிய விதிப்படி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரைக்கும் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படஇருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை தொடக்கம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது கொழும்பு கம்பகா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனைய விடயங்களை செயற்படுத்துவதற்காக தீர்மானித்துள்ளோம். தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது உள்ளூர் போக்குவரத்து சற்று அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம் பெற்று வருகின்றது அதிலும் குறிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படுவதோடு அவை தொடர்ச்சியாக பின்பற்றப்படுகின்றதா என அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது. அதோடு தனியார் போக்குவரத்துச் சேவையில் நின்டுகொண்டு பயணிகள் பயணம் செய்வது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே இது தொடர்பில் நாங்கள் தனியார் போக்குவரத்து சபையினருடன் பேச உள்ளோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் பஸ் சேவையை அதிகரிப்பதற்காக வேலைத்திட்டத்தினை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். அத்தோடு தீவு பகுதிக்கான போக்குவரத்துக்கும் வழமைபோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. காற்றின் தாக்கத்தின் காரணமாக சிறு தடங்கல் ஏற்பட்டுள்ள போதிலும் தீவு பகுதிக்கான போக்குவரத்து சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகிறது. ஆலயங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் நாங்கள் அறிவித்துள்ளோம் அதிலும் மத வழிபாட்டுத்தலங்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன். எங்களுடைய உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக "சௌபாக்கியா "கொள்கை அதாவது விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் முயற்சி உங்களுடைய யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக வீட்டு தோட்டங்கள். விதை நாற்றுகள் மரக்கன்றுகள் போன்றவை சுமார் 26,000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன அதே போல உரவிநியோகமும் விவசாய உள்ளீடுகள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாய உள்ளீடுகள் போதுமானஅளவு கையிருப்பில் வைத்திருப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் நாங்கள் உரிய இடத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம் அதேபோல் விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பன இந்த விடயத்தை மிகவும் சிறப்பாக செயற்படுத்தி வருகின்றார்கள். சௌபாக்கியா வேலைத்திட்டமானது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. உரத் தட்டுப்பாடு நிலவி வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது எனினும் அது ஒரு தற்காலிகமான தட்டுப்பாடேயன்றி அது ஒரு பிரச்சினையான விடயமல்ல அது விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143908
 48. 1 point
  திருகோணமலை - மூதூர் பகுதியில் யுவதியொருவரை கடத்திச் சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரொருவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார். நடுத்தீவு, மூதூர் - 7, பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி வெளிநாடு சென்றுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே வெருகல் பகுதியில் உள்ள 23 வயதுடைய தமிழ் யுவதியொருவரை கடத்தி சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்திச் செல்வதாக அப்பிரதேச பள்ளிவாசலினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்த குறித்த நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilwin.com/community/01/246630?ref=home-feed
 49. 1 point
  வடக்கில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேரூந்துகள் சேவை யாழில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் நாளையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறித்த பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளதாகவும் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக குறித்த பயண சேவைகள்யாவும் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறவுள்ளதாகவும் சங்க தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அதாவது கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து குறித்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் எனவும் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி நடத்துனர் களாக சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எனினும் பொதுமக்களின் நலன் கருதியே நாளைய தினத்தில் இருந்து குறித்த சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் சி.சிவபரன் மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/வடக்கில்-நாளை-முதல்-மட்ட/
 50. 1 point