• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on வியாழன் 11 ஜூன் 2020 in all areas

 1. 3 points
  1970 / 1980 களில்... யாழ்ப்பாணத்தில்... இருந்த, Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும். *கோட்டை முனியப்பகோயில்* தேங்காய்ச் சொட்டு. *பரணி ஹோட்டல்* அப்பம். *சிற்ரி பேக்கறி* கால், றாத்தல்... பாணும், பருப்பும்.... *சுபாஸ் கபே* ஐஸ்கிரீம். *றிக்கோ கோப்பி பார்* றோல்ஸ், கோப்பி. *மலாயன் கபே* உளுந்து வடை / போளி. *தாமோதர விலாஸ்* நெய் தோசை. *சந்திரா ஐஸ் கிறீம்* ஐஸ் சொக். *கொழும்பு றெஸ் ரோறன்ட்* இறால்கறி, குளம்பு. *பிளவ்ஸ்* Beef றோஸ். (5 சதம்) *மொக்கன் கடை* புட்டு, ஆணம், மட்டிச் சம்பல். *சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, கல்லாப் பெட்டிக்குள், போட்டு விட்டு... அவர் தாற, மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.* *முனீஸ்வரா கபே* புட்டு, இடியப்பம், புளிச்சொதி, தாளித்த சம்பல் (கடுகு தூக்கல்). (வெலிங்டன் சந்தி) *லிங்கம் கூல்பார்* சர்பத் , இதரை வாழைப்பழம், பீடா.......... (வெலிங்டன் சந்தி) *கபே பாரத்* அப்பம், பிளேன் ரீ. (ஆரிய குளம் சந்தி) *ஒரியென்டல் பேக்கரி* சங்கிலிப் பாண். *சொக்கன் கடை* கடலை வடை. (3 - 5 சதம்) பிளேன் ரீ (கைலாச பிள்ளாயார் கோயில்) உங்களுக்கு தெரிந்த, கடைகளின் பெயரை... கூறுங்களேன்.
 2. 2 points
  நன்றி அக்னி, நீங்களும் தனியும் இல்லாவிடில் அக்கா எங்களுக்கு நல்லா அவிச்சு விடுவா....
 3. 2 points
 4. 2 points
  அதானே.... அந்தக் காலத்திலேயே..... வடை, தோசை, இட்டலி... போன்றவைக்கு, தேவையான உளுந்தை அரைக்க, மெசின் நெடுக, ஓடிக் கொண்டே இருக்கும். அந்தக் கடைக்குப் பின்... உளுந்து மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டு, சிறிய... ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி வந்தது.. பத்மா கபே. கந்தர்மட சந்தியில்.... இருந்த, சின்னத்தம்பி கடையின் சுத்தம், சுகாதாரம்... இலங்கையில்.. எங்கும் இருக்காது. அப்பிடி... எல்லாம், பளிச் என்று, மினுங்கும்.
 5. 1 point
  பிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/). அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி. நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும் உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). வந்த கடித்ததில் இருந்த படம் : பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம். அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும். மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு, அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா
 6. 1 point
  உப்பின் மருத்துவத்தை பற்றி கூறுகின்றார்.
 7. 1 point
  ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக, எழும்பூரை ஆங்கிலத்தில் எக்மோர் என குறிப்பிட்டு வந்த நிலையில், இனி எழும்பூர் என்றே அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.இதேபோல், திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்கக் கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும். tuticorin என்பதை தூத்துக்குடி என அழைக்க வேண்டும். கோயம்புத்தூர் - KOYAMPUTHTHOOR, தரும‌புரி - THARUMAPURI, ஆலங்குளம் - AALANGGULAM, திருமுல்லைவாயல் - THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி - POOVIRUNTHAVALLI, மயிலாப்பூர் - MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை - CHINTHADHARIPETTAI, சைதாப்பேட்டை - SAITHAAPPETTAI என்றே அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.maalaimalar.com/news/topnews/2020/06/11020024/1597016/GO-released-for-pronunciation-in-english-just-as-the.vpf
 8. 1 point
  இங்கே அனேகம்பேர் இந்த lockdownஉடன் வீட்டிலிருந்து நன்றாக, ருசியாக சமைத்து சாப்பிடுவது போல தெரிகிறது... இனி மீண்டும் பழையபடி வேலைக்கு திரும்பும்போதுதான் தெரியும் சிலபேருக்கு. Weight loss கட்டாயம் தேவை என்று.. அவர்களுக்காக ஒரு இலகுவான salad.. தேவையான பொருட்கள்: Tuna- 95g small can - பாதி ஒரு அவித்த முட்டை Brown and quinoa rice - 125g( microwave வில் 90 seconds வைக்கவும்) Jalapeño- சிறியளவு இவை எல்லாவற்றையும் சேர்த்து. இப்படி ஒரு சாலட் செய்யலாம்.. வித்தியாசமான ஒரு சுவை..
 9. 1 point
  மக்களது தேவைகளையும் இடர்களையும் மாற்றுவதற்கான அரசியற் சிந்தனை இருந்தால் இப்படிப் பொய்களை உற்பத்தி செய்யும் தேவை எழாது. கடந்த காலத்திற் பேட்டியிற் கூறியதுபோல் துணிந்து இந்தத் தேர்காலத்திற் முன்வைக்கலாமே. இந்த பொய் தேவைப்படதே.
 10. 1 point
  சுமந்திரன் ரொம்ப குழம்பிபோயுள்ளார். இரண்டு தோணியில் ஒரே நேரத்தில் பயணிக்க விரும்புவதால், நிறைய பொய்களை கூறுகிறார்.
 11. 1 point
  இப்படி மக்களை உசுப்புவதற்காக, விநாயக மூர்த்தி முரளிதரனே செய்திருக்கலாம். புத்தர் சிலைகளை உடைத்து, சிங்கள பவுத்த மக்களை உசுப்பி வாக்கு சேர்ப்பவர்களின் அடிமை. அதை விட பெரிசாய் என்ன யோசிக்கப் போகிறார்? குருவைப்போல்தானே சீடனும் யோசிப்பார்.
 12. 1 point
  எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல் பதில் மிக மிகச்சுலபம் கோடரிக்காம்புகளின் இறுதி நிலையும் வாழ்வும் இது தான்
 13. 1 point
  பல காரணங்கள்: அனேகமான குடியேறிகள், தமிழர் உட்பட, தாங்களும் குடும்பத்தினரும் வந்து சேர்ந்தவுடன் கதவு அடித்துப் பூட்டப் படவேண்டும் என்று நினைக்கும் தன்மை அதில் ஒன்று. ஏனைய காரணங்களை எழுதினால் திரிக்கு "மதம்" பிடித்து விடக்கூடும், எனவே வேணாம்!
 14. 1 point
  இங்கை எம்ம‌வ‌ர்க‌ளுக்குள் போட்டி என்ன‌ என்றால் , அவை சீத‌ன‌ம் 7ல‌ச்ச‌ம் குரோன் குடுத்தா அவையை விட‌ தாங்க‌ள் கூட‌ குடுக்க‌னும் , ஆட‌ம்ப‌ர‌மான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் அக்கா டென்மார்க் வாழ் த‌மிழ‌ர்க‌ளின் கூத்துக‌ளை , என்ர‌ சொந்த‌மும் லேசு ப‌ட்ட‌வை இல்ல‌ , கொண்டாட்ட‌த்துகு காசை கொட்டி ஆட‌ம்ப‌ர‌மாய் செய்வின‌ம் , ஆனால் ஊரில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ள் அவைக்கு தெரிவ‌து இல்ல‌ , அஜித்தின்ட‌ விஜேயின்ட‌ ப‌ட‌ம் எப்ப‌ வ‌ரும் திரைய‌ர‌ங்கில் போய் பார்க்க‌லாம் இது தான் அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை / என்னையும் கொண்டாட்ட‌த்துக்கு கூப்பிடுவின‌ம் ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லிவிட்டு சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவ‌தில்லை , பெரும்பால‌ன‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ம‌னித‌ நேய‌த்த‌ மிக‌வும் நேசிக்கிற‌வை , அவையும் வெளியில் தெரியாம‌ க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ உற‌வுக‌ளுக்கு உத‌வின‌ம் , எம்மால் ஆன‌ உத‌வியை உற‌வுக‌ளுக்கு செய்வோம் அக்கா
 15. 1 point
  உலகிலேயே அதிகம் தானம் செய்பவர்கள் அமெரிக்கர் தான். 2005 சுனாமியின்போது அமெரிக்கர்களின் டொனேஷன்தான் உலகில் உள்ள எந்த ஒரு அமைப்பிலும் பார்க்க அதிகமாக இருந்தது ( அந்த பணம் எல்லாம் அரசியல்வாதிகளின் கைக்குள் போனது வேறு கதை) 55% வீதமான அமெரிக்கர்கள் தானம் செய்கிறார்கள். இது 10 வாரங்களுக்கு முன் 63% வீதமாக இருந்தது. Global charitable percentage 20% தான். அதிலும் எம்மக்களை பற்றி சொல்லவே தேவையில்லை. மிகக்குறைந்தவர்களே தானம் செய்கிறார்கள் . Diaspora தமிழர்கள் எல்லாம் சேர்ந்து போராளிகள் குடும்பங்களுக்கு ஒரு அமைப்பு அமைத்து உதவி செய்தால் எவ்வளவு புண்ணியம். எல்லேரும் பிஸி. மற்றவர்களை பற்றி நினைக்க நேரம் இல்லை
 16. 1 point
  இணைப்பிற்கு நன்றிகள்.. Avocadoவினை boycott செய்கிறார்கள், விலை மிக அதிகமாக இருந்தும் கூட அவற்றின் பாவனை குறையவில்லை.. சிலியின் Waters/Bore Water Right, இங்கே Mining Right on Aboriginal sites.. எல்லாமே பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றை தடுக்கமுடியாது ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.. அதன் மூலம் சிலவற்றை தடுக்கலாம். மிகவும் இலகுவான ஒரு உணவு.. பலவிதமாக செய்யலாம்.. சில சமயங்களில் அதிக செலவும் இல்லை
 17. 1 point
  சீமான் வெற்றி பெறுகிறதோ இல்லையோ தமிழும் தமிழ்மீதான பற்றும் வளர்ந்திருக்கிறது வளர்கிறது
 18. 1 point
 19. 1 point
  மகளின் ஓவியம் அருமை, உடையார். அவருக்கு பாராட்டுக்கள். ஈன்ற பொழுதின் தன் மகனைச் சான்றோன் என கேட்ட தாய் " என்ற குறளுக்கு அமைய பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் பிள்ளையை பெற்றுள்ளீர்கள்.
 20. 1 point
  நன்றி பையா, என்னால் முடிந்ததை செய்கிறேன், கடமைப்பட்டவன் பலருக்கு. பிள்ளைகளையும் பழக்கி எடுக்கனும், மற்றவர்களுக்கு உதவினால் அது ஒரு தனி மகிழ்ச்சி, அவர்களுக்கும் விருப்பம், இதுதான் முதல் தொடக்கம்
 21. 1 point
  இந்தியாவில் மீண்டும் நோய் அதிகரித்துவரும் நிலையில் திரும்ப ஒருமாதம் உள்ளிருப்புக்காலமாக அறிவிக்கப்போகிறார்கள் என்றும் செய்தி உண்டு.
 22. 1 point
  கை, கால்களை அடக்கி, மடக்கி வைத்து உளைவு எடுத்திட்டுது. நீட்டி, வளைத்து, முறிவு எடுக்கவேண்டாமோ? எத்தனை நாளைக்கு நடிக்க முடியும்?
 23. 1 point
  புரட்சி 35 என்றால் அவ்வளவு இளக்காரமா......! நானே எஸ்.எஸ்.சி வரை வந்தது 35 to 40 க்குள் எடுத்துத்தான். கூடுதலாக எடுக்க முடியாது என்றில்லை , அது அவசியமில்லை, இதுவே போதும் என்று இருந்திட்டன்......!
 24. 1 point
 25. 1 point
  விண்வெளிக்கும் ஆழ்கடலுக்கும் சென்ற முதல் பெண் விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர் கேத்ரின் சல்லிவன். தற்போது கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரெஞ்சில் உள்ள சேலஞ்சர் முனைக்குச் சென்று திரும்பிய முதல் பெண் என்கிற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்! 1978-ம் ஆண்டு நாசாவில் பெண்கள் இடம்பெற்ற முதல் விண்வெளித் திட்டத்தில் சேர்ந்தார் கேத்ரின். 25 ஆண்டுகாலம் நாசாவில் பணியாற்றிய போது, 3 முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். 1984-ம் ஆண்டு சேலஞ்சர் விண்கலத்தைவிட்டு வெளியே வந்து 3.5 மணி நேரம் விண்வெளி நடை மேற்கொண்டார். தனது 3 பயணங்களின் மூலம் மொத்தம் 532 மணி நேரத்தை விண்வெளியில் கழித்திருக்கிறார். 1993-ம் ஆண்டு நாசாவிலிருந்து ஓய்வுபெற்ற கேத்ரின், தனக்கு மிகவும் விருப்பமான கடலியல் துறையில் நுழைந்தார். என்ஓஏஏ (National Oceanic and Admospheric Administration) நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானியாகச் செயல்பட ஆரம்பித்தார். பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா ட்ரெஞ்ச் மிக ஆழமான பள்ளத்தாக்கு. இதில் உள்ள மிக மிக ஆழமான பகுதி சேலஞ்சர். பூமியிலேயே மிக ஆழமான பகுதி இதுதான். 11 கி.மீ. ஆழத்தில் இருக்கும் இந்தப் பகுதியில் தண்ணீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் (கேத்ரினின் கூற்றுப்படி 291 ஜம்போ ஜெட் அல்லது 7,900 டபுள் டெக்கர் பேருந்துகளின் எடைக்கு இணையான அழுத்தம்). ‘லிமிட்டிங் ஃபேக்டர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் இதுபோன்ற கடலின் ஆழப்பகுதிகளுக்குச் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்டது. விக்டர் வெஸ்கோவோ என்ற ஆராய்ச்சியாளர் 5 கடல்களின் ஆழப்பகுதிகளுக்குச் சென்று, வரைபடம் தயாரிப்பதற்காக இந்த நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. வெஸ்கோவோவுடன் இணைந்துதான் சேலஞ்சர் பகுதிக்குச் சென்றார் கேத்ரின். இருவரும் 4 மணி நேரப் பயணத்திட்டத்தில் ஒன்றரை மணி நேரம் சேலஞ்சர் பகுதியில் இருந்து, அழுத்தத்தைச் சமாளித்து, படங்கள் எடுத்து வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறார்கள். இந்தப் பயணத்தின் மூலம் கேத்ரின் உலகின் ஆழமான பகுதிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், விண்வெளிக்கும் கடல் ஆழத்துக்கும் சென்ற ஒரே பெண் என்ற சிறப்பும் இவருக்கே. வெஸ்கோவோவுக்கு இது மூன்றாவது பயணம். சேலஞ்சரிலிருந்து மேல் பகுதிக்கு வந்தவுடன் கேத்ரினும் வெஸ்கோவோவும் சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்களுடன் உரையாடினர். தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். “ஒரு விண்வெளி வீரராகவும் கடலியலாளராகவும் என் வாழ்நாளில் மிகச் சிறந்த நாள்” என்று இந்தச் சாதனையைக் குறிப்பிட்டிருக்கிறார் கேத்ரின் சல்லிவன். https://www.hindutamil.in/news/blogs/558889-kathryn-sullivan-1.html
 26. 1 point
 27. 1 point
  கொழும்பான்.... எனது... முதல் பதிவில், மூன்றாவதாக... "சிற்றி பேக்கறி" என, எழுதியுள்ளதை... கவனிக்க வில்லையா. அதற்கு... சிங்களவர் தான், உரிமையாளர். இருந்த இடம்... யாழ். ஆஸ்பத்திரி வீதி. யாழ்ப்பாணத்தின் பிரதான பேரூந்து நிலையத்திற்கு, முன்பாக இருந்த, பூபாலசிங்கம் புத்தகக் கடைக்கு எதிர் பக்கமாகவும், "ஹற்றன் நஷனல்" வங்கி இருக்கும் பக்கத்தில் இருந்தது தான்... "சிற்றி பேக்கரி" அதிலிருந்து.... 200 மீற்றர் தூரத்தில் "சுபாஷ் கபே" இருந்தது. 70´ களில் நல்ல பாண் வாங்க வேண்டும் என்றால், கந்தர் மடத்திலிருந்து சைக்கிளில், சிற்றி பேக்கரிக்கு போக... 15 நிமிடம் எடுக்கும். அப்படியே... சிங்களவனின், பாணை வாங்கிக் கொண்டு, பூபால சிங்கம் கடையில்... அப்பாவுக்கு, சில ஆங்கில மாத சஞ்சிகளையும் வாங்கிக் கொண்டு வருவேன். பிற் குறிப்பு: உங்களது கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். சந்தேகம் இருந்தால்... தாராளமாக கேளுங்கள். கொழும்பான்.
 28. 1 point
  அடுத்து லைனில் நிற்பவர் நீங்கள் தான்.
 29. 1 point
  நிறைய பேக்கரிகள் இருந்தன.சிறிய சிறிய தேநீர்க்கடைகள் இருந்தன.பெரிய கடைகள் என்று எதுவும் காணவில்லை.
 30. 1 point
  தேங்காய் எண்ணை விளக்கத்திற்கு நன்றி நில்மினி.
 31. 1 point
  பெரியதொரு விளக்கம் தந்திருக்கிறீர்கள். மிகவும் நன்றி.இரண்டு மூன்று தடவை வாசித்தால்த் தான் கொஞ்சமென்றாலும் விளங்கும்.
 32. 1 point
  மிகவும் பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும் ஈழப்பிரியன் அண்ணா தேங்காய் எண்ணெயில் (கொலெஸ்ட்ரோலை கூட்டும் Saturated Oil அதிகமாக இருந்தாலும் , கணிசமான அளவு medium-chain triglycerides saturated oil இருக்கு. இது பட்டர் மற்றும் கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு நன்மை தரக்கூடிய கொழுப்பு. அத்துடன் தேங்காய் எண்ணெயில் உள்ள medium-chain triglycerides saturated oil, HDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) அளவை கூட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன - ஆதாரம் Mayoclini . ஒலிவ், கனோலா , ஒமேகா 3 போன்ற கொழுப்பு வகைகளின் நன்மை பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் பற்றி இப்போதுதான் ஆராய்ச்சி செய்கிறார்கள். கொலெஸ்ட்ரோல் நாம் சாப்பிடும் உணவில் இருந்து வருவதில்லை. எமது ஈரல் தான் அதை உற்பத்தி செய்கிறது. Saturated மற்றும் trans fat உள்ள உணவுகள் சாப்பிடும்போது ஈரல் அதனை பாவித்து கொலெஸ்டெராலை உற்பத்தி செய்யும். முட்டையில் மிகக்குறைந்த saturated fat தான் உள்ளது. அதனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது (இதயத்துக்கும் சேர்த்து). lutein and zeaxanthin போன்ற நோயெதிர்ப்பு காரணிகளும் முட்டையில் உள்ளது. Omega 3 supplement எடுக்காமல் Omega 3 கூடிய உணவுகளை சாப்பிடவும் (supplements பொதுவாக அவ்வளவு வேலை செய்வதில்லை) கொழுப்புக்கள் fatty acids இனால் ஆனவை . தேங்காய் எண்ணெயில் உள்ள Luaric fattyacid மற்ற கொழுப்புகளை மாதிரி அதிகம் சேகரிக்கப்படாமல் உடலில் எரிந்து விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் உடல் நிறை குறைவதற்கு தேங்காய் எண்ணெய் உதவும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பாக்டீரியா போன்ற நுண் உயிர்களை எதிர்க்கவும் உடல் உள்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. தினமும் தேங்காய் எண்ணெய் பாவித்து உடற்பயிற்சியும் செய்வதால் உயர் குருதி அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. Pacific islanders, 60விகிதத்துக்கும் அதிகமான கொழுப்பை தேங்காய் எண்ணெயில் இருந்து பெற்றாலும் அவர்களின் கொலெஸ்டெரோல் அளவோ அல்லது இதய நோய்களோ மிகவும் குறைவானவர்களுக்கே வருகிறது. முடிவு என்னவென்றால், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை பரம்பரையாக பாவித்து வரும் உலகின் பலவேறு பாகங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு இதய நோய் , பக்க வாதம், High LDL போன்ற பிரச்சனைகள் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. பிரச்னை என்னவென்றால் சோயா, சூரியகாந்தி, ஒலிவ் போன்ற எண்ணெய்களை பற்றிய ஆய்வுகள் கூடிப்போய் தேங்காய் எண்ணெயை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டார்கள். ஆனால் தேங்காய் எண்ணெயின் பெரும்பான்மையான நன்மைகள் அதை பாவிப்பதால் வெளிப்படையாக பலனளிப்பதால் இப்போ மேலை நாடுகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் மிகவும் அதிகமாக விரும்பப்படுகிறது ( நோயெதிர்ப்பு, உடல், குடல் புண், நிறை குறைதல், ஆரோக்கியமான தலை முடி, தோல் ) தேங்காய் எண்ணெயின் மிகப்பெரிய குழப்பம் அதில் இருக்கும் அதிகப்படியான saturated oil. அதே நேரம் அந்த saturated oil மற்ற எண்ணெய்களிலும் ஒரு வித்தியாசமான fattyacid ஆல் ஆனதால் அது நல்ல கொலெஸ்டெராலை (HDL ) கூட்டுதல், கூடாத (LDL ) கொலஸ்டரோலை குறைத்தல் , மற்றைய saturated fat களிலும் பார்க்க அதிகமாகவும் விரைவாகவும் உடலில் எரிந்து சக்தி தருதல், உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் அதிகம் சேகரிக்க படாமை போன்ற தன்மைகளை கொண்டுள்ளது. இந்த ஆதாரங்களை human research மூலம் அதிகம் நிரூபிக்கப்படாததால் தான் வைத்தியர்களிடையில் இவ்வளவு குழப்பம். நான் வைத்தியர் இல்லாவிட்டாலும் மருத்துவ மாணவர்களை படிப்பிப்பவர் என்ற முறையிலும் ஒவ்வொரு நாளும் என்னுடன் வேலை செய்யும் மருத்துவருடன் கதைப்பதாலும் அறிந்து கொண்டது என்னவெண்டால் எல்லாவற்றுக்கும் மருத்தவரிடம் போய் ஆலோசனை கேட்டால் அவர்களுக்கு நோய்க்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியுமே ஒழிய இப்படியான விடயங்கள் அவர்களுக்கு நிச்சயமாக கூறமுடியாமல் தான் இருக்கும். எனக்குத்தெரிந்த nutritionist களுக்கே இந்தமாதிரியான விடயங்களுக்கு சரியான பதில் தெரியாது. எனது அனுபவத்திலும், அவதானிப்பிலும் நான் அறிந்தது தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் இரண்டுமே உடலுக்கு நல்லது. ஆனால் வயது போக போக அதன் பாவனை அளவை குறைக்கவேண்டும். அவைகளை தினமும் பாவிக்கும்போது உடற்பயிற்சி செய்யவேண்டும். எமது உடலுக்கு நிறைய என்னை கொழுப்பு தேவை. ஏனென்றால் எமது உடல் காலங்களின் சுவர்கள் கொழுப்பால் ஆனவை. என்றபடியால் மற்ற உணவுகளை குறைத்து போல வயது போக போக எண்ணெய் வகையை குறைத்து ஆனால் தினமும் பாவிப்பதே நல்லது. (பின்குறிப்பு: 3 மாதத்துக்கு தேங்காய், தேங்காய் எண்ணெய் மட்டும் சமையலுக்கு பாவித்து விட்டு medical checkup ஒன்று செய்து பார்த்தால் உண்மை விளங்கி விடும்) நானும் குடும்பத்தவரும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் மட்டும்தான் எப்பவுமே பாவிக்கிறோம். மற்ற எண்ணெய்கள் பாவிப்பது மிகவும் குறைவு. ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இதுவரைக்கும் பெரிதாக இல்லை
 33. 1 point
  நிறுத்தி வாசிப்பது கஷ்டமா? உங்களுக்காக திரும்பவும் வேகத்தைக்குறைத்து பதிவது ஒரு பிரச்சனையே இல்லை. உங்களைப்போல் இன்னும் பலர் இருப்பார்கள். வயசெல்லாம் ஒரு விடயமேயில்லை.
 34. 1 point
  இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..?
 35. 1 point
  நான் சலாட் வெகு பிரியமாக சாப்பிடுவேன். இணைப்புக்கு நன்றி.
 36. 1 point
  சகலதுறை ஆட்டக்காரர்,ஒரு சொத்தை வீரருக்காய் விளையாட வந்தால் விளையாட்டின் போக்கையே மாற்றி விட்டு விடுவார்கள் ...கேணைத்தனமான முடிவு
 37. 1 point
  மேலேயும் உற கீளேயும் உற எண்டா பிறகென்னத்துக்கு அந்தக் கறுமத்த (நான் உறயத்தான் கறுமம் எண்டு சொல்லுறன்) சுவியர் மாதிரி உறவ சொல்லயில்ல.
 38. 1 point
  நல்ல சலட் தான் ஆனால் இதையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கவேண்டும் https://www.boell.de/en/2018/03/09/secos-documantary-about-consequences-failed-water-policy-chile
 39. 1 point
 40. 1 point
  சாணியால் மெழுகின ஒத்தை திண்ணை வீட்டுக்குள்ள, தாத்தாவும், பாட்டியும் 9 வதையும் பேக்காட்டி, 10 வதும் பெத்துதான் இருக்கினம். உங்க, பிள்ளையள் தங்கண்ட ரூமுக்குள்ள போய் படுக்க, தனி ரூமுக்குள்ள.... இருக்கிறவயள் சும்மாவே இருப்பினம்...
 41. 1 point
  உடையார்! நாங்கள் வீட்டிலையும் கட்டித்தொங்க விட்டுருக்கிறம். சும்மாவே எங்கடை முன்னோர்கள் எல்லாம் செய்தவையள். எல்லாம் விசயத்தோடைதான். ஏதோ இப்ப உள்ள கொஞ்சப்பேர்தான் மூடநம்பிக்கை அது இது எண்டீனம்.
 42. 1 point
 43. 1 point
 44. 1 point
  எனக்கு மட்டும், அந்த மாஸ்க்.. பலாப்பழ தோலில் செய்த மாதிரி இருக்கு...!
 45. 1 point
  டேய் தம்பி..! எல்லாம் ஒன்டுதான்....
 46. 1 point
  வாழ்த்துக்கள் தோழர்..
 47. 1 point
  குழந்தைகளை பெற்ற பொழுது பெற்ற மகிழ்வைக் காட்டிலும் மற்றவர்களால் சிறந்தவர்கள் . என் பாராடடப படும் போது பெற்றோருக்கு கிடைக்கும் பெரு மகிழ்ச்சி அளவிட முடியாதது . மகளின் எதிர்காலக் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்
 48. 1 point
 49. 1 point
  இன்று சூடாக என்ன இருக்கின்றது என்று பலர் பார்ப்பதனால் வரலாறுகள் மறந்துபோகின்றன. அவற்றை கொஞ்சமாவது நினைவூட்டத்தான் நான் படிப்பவற்றைப் பகிர்கின்றேன். நேரம் இருக்கும்போது படியுங்கள்
 50. 1 point
  அப்புறம் ஆடத் தொடங்கினால் என்னவாம் செய்யிறது?