• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on வெள்ளி 12 ஜூன் 2020 in all areas

 1. 8 points
  இதன் வேர்களைப் புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்னையை அணுகமுடியாது. 1) சந்திரிக்கா முதலில் தானே நூலகத்தை திறக்க விரும்பியிருந்தார். அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்டு ஐ.தே கட்சியை பழிவேண்டும் அரசியல் அதற்கு ஆனந்தசங்கரி துணைபோனார். (அனந்தசங்கரிக்கு சமாதான தூதுவர் விருதெல்லாம் வெளிநாட்டில் வழங்கப்பட்டது. பிரான்ஸ் அரசு சந்திரிகா பிரான்சில் கல்வி கற்றவர் ) 2) அக்காலப்பகுதி சமாதான உடன்படிக்கை உருவாகி ஒருவருடம் நிறைவு பெறவில்லை. புலிகள் சர்வதேசத்தால் கண்கொத்திப் பாம்பு போல கண்காணிக்கப்பட்டார்கள். 3) புலிகள் சாதி தொடர்பில் தம்மால் இயன்றவற்றை செய்தார்கள். தண்டனைகள் கூட வழங்கி இருக்கிறார்கள். சட்டங்கள் கூட இயற்றி இருக்கிறார்கள். அதில் அவர்கள் பூரணமாக தொழிற்படவில்லை என்பவர்கள், அவர்கள் ஒரு போராளிகள் குழு என்பதை மறந்துவிடுகிறார்கள். இவர்கள் என்ன சாதி ரீதியாக தொடுக்குபவரை சுட வேண்டும் என்று சொல்கிறார்களா ?அப்படி சுடடால் அதற்கு மனிதஉரிமை என்று வருவார்கள். புலிகளைபபொறுத்தவரை அவர்கள் 18 வயதுகளில் ஆயுதம் ஏந்துகிறார்கள். அமைப்புக்குள் சாதி இல்லை. அவர்கள் அந்த அமைப்பின் வளர்ச்சியுடன் உருவாகுகிறார்கள்.தீண்டாமை பற்றிய எதுவுமே அவர்களிடம் இல்லை. மக்களும் அவர்களிடம் காட்டவில்லை. அன்கொன்றும் இன்கொன்றுமாக .. இருந்ததை அவர்கள் தமிழீழத்தில பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள். பின் காலத்தில் தான் சமூகநீதி பற்றிய கல்விகள் நடைமுறைப்படுத்தகிறது. போராளிகள் குழுவாக இருந்து அரசாக மாறும்போது அது இயல்பாகவே உள்வாங்கப்படுகிறது 4) இலங்கை அரசு கூட 57 களில் சாதி ஒடுக்குமுறைக்கு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. நீதிமன்றங்களில் வழக்கு தானே செய்ய முடிந்தது. 5)சாதி ரீதியாக புலிகளை தீண்டாதவர்களாக்கும் ஒரு பொறிமுறை புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அது புலிவிரோத அரசியல். தமிழ் நாட்டின் சில அறிவுஜீவிகள் உடன்போனர்கள். 2009 புலிகள் அழிவின் பின் அவர்கள் தங்களுக்குள் சண்டை பிடித்து பலவேறுகுழுக்களாகி விட்டார்கள். இலக்கிய இருப்புக்காக சிலர் இன்னும் புலி எதிர்ப்பை பேசுகிறார்கள். 6) மேயர் செல்லன் கந்தையா அவர்கள் ஒரு துணைமேயர். ரவிராஜ் mp ஆகியபின் மேயர் ஆக்கப்பட்டார். அவர் கூடடணிக்குள் எவ்வாறான ஒடுக்குதலுக்கு எல்லாம் ஆளாக்கப்பட்டார் என்று பேசுவரில்லை. இன்றுவரை சாதியாக இயங்கும் கூட்டமைபை இன்னும் ஆதரிக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் செய்யும் புலி நீக்க அரசியல். (புலிகளின் காலத்தில் தாழ்த்தப்பட்ட இந்த வார்த்தைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனத்தவர் சிலர் பாராளுமன்றம் போயிருந்தனர். அதையும் பேசுவாரில்லை ) 7)ஆனந்தசங்கரி புலிகளை விரோதிக்கிறார் சந்திரிக்கா ஏற்படுத்திய சாணக்கியம் அது. பேச்சு மேடையில் தானும் இருக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அதன் மூலம் புலிகளை பலவீனமான ஒரு தரப்பாக்க சந்திரிக்கா விரும்புகிறார். (ரணிலும் அதைத்தான் செய்தர். சந்திரிக்காவை விட ரணில் எவ்வளவு புத்திசாலி பாருங்கள்) 8 ) பல்கலைக்கழ மாணவர் தலைவர் அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகிறார். (அவர் தங்களை ஒரு ஹீரோ நிலையில் வைத்துதான் அன்று இருந்தனர். 40 ஆயிரம் சவப்பெட்டிகள் கதைக்கு அப்பாடியோரு கிழி வேண்டியிருந்தார் தலைமையிடம் ) பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் சங்கரியுடன் பேச்சு நடத்துகிறது, சங்கரியார் உடன்படவில்லை. மாவை சம்மந்தன் உற்பட்ட முக்கிய தமிழரசுக் கடசியினர் நூலகத்தை நினைவுச் சின்னமாக வைத்திருக்கவே விரும்பினார். ஏனென்றால் அது அவர்கள் கால அடையாளம். 9 ) ஆனந்த சங்கரி செல்லன் கந்தையாவை பயன்படுத்துகிறார். ஆனந்தசனகிரியின் வலதுகை வடமராட்சி உறுப்பினர் மேயரை தாக்குகிறார். அதற்க்கு வேறு காரணம் சொல்லபப்டுகிறது. 10 ) புலிகள் வெளியில் நின்று ஆலோசனை சொல்கிறார்கள். அவர்களுக்கு நூலகம் பொருட்டாக இல்லை. ஆனால் சமாதானகாலத்தில் நடைபெறும் புனரமைப்புகளின் நிகழும் அரசியலுக்கு தலையீடு கடுமையாக செய்கிறார்கள். தமிழீழம் என்ற கோரிக்கையில் நூலகம் ஒரு துரும்பு. ஆனால் அன்றைய புனரமைப்பை புலிகள் விரும்பவில்லை என்பதும் உண்மைதான். காரணம் சர்வதேச தூதுவர்களை அதனை ஒரு அடையாள சின்னமாக வைத்திருக்க விரும்பினார்கள். (உண்மையும் தானே ) 11) இப்ப புலி எதிர்பாளர்கள் தங்கள் இருப்புக்காக தமக்கு ஏற்றவாறு வளைத்து பேசுகின்றனர். அவர்களின் சந்தர்ப்பாவாத உரைகளை கேளுங்கள். தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு தலித் தான் என்பார்கள். வெளிநாட்டு செய்திகளில் புலிகளை போற்றியே பேசுவதாக சொல்வார்கள். நேர் எதிராக இங்கு பேசுவார்கள். புலிகளின் அதனை கொலை கொள்ளைகளுக்கு ஆதரவாக ஆரம்பகாலத்தில் இருந்துவிட்டு இப்ப அதற்கு வியாக்கியானம் கூறுவார்கள். இதுதான் அசல் வெள்ளாள ஆதிக்க புத்தி.
 2. 3 points
  ராஜன் ஹூல் முக்கிய பங்காற்றிய யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைகளுக்கான அமைப்பின் (மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்) அறிக்கை எல்லாமே நேர்மையற்றதாகவே இருந்தன. அந்த அறிக்கைகள் எப்படி இருந்தனவென்றால் பத்து பக்க அறிக்கையில் ஒன்பதரைப் பக்கங்கள் புலிகளின் மனிதவுரிமை மீறல்கள் என்று பட்டியலிட்டுவிட்டு இலங்கை அரசினதும், இலங்கைப் படையினரதும் அட்டூழியங்களை அரைப்பக்கத்தில் எழுதியிருப்பர். அவற்றில் விமானப்படையின் குண்டு வீச்சில் அகப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகளில் இருந்து பாலியல் வல்லுறவுகள் வரைக்கும் இருந்ததில்லை. யாழ் பல்கழகம் என்று போட்டது கூட நேர்மையற்ற செயல்; ஏனெனில் ராஜன் ஜூலும் சரி, அவரது பரிவாரங்களும் சரி யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கவில்லை. விட்டு விலகி வேறு இடங்களுக்கு பெயர்ந்த பின்னும் அதே பெயரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்தனர். இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. இவரை மனிதவுரிமைவாதி என்று குறிப்பிடுவதே மிகப்பெரும் அவலம்.
 3. 2 points
  வேறையார் இளையராஜாவும் பாண்டியராஜனும்தான்......!
 4. 2 points
  இப்பொழுது ஐயோ குய்யோ என்று அழுது என்ன பயன்??????? யாழிலும் சரி எனது பொது வாழ்விலும் சரி எழுத்தாளர்களை கதை கட்டுரை கவிதை எழுதுபவர்களை வளர்த்து விடுவதில் மிக மிக அவதானமாக இருப்பதுண்டு (பல அனுபவங்களினால்) இந்த ஷோபா சக்தி ஒரு ------ நாய்க்கு கூட நான் மதிப்புக்கொடுப்பதுண்டு......
 5. 2 points
  " அடையாளத்தை " இழக்காமல் கூடி வாழ்தல் என்பது சாத்தியமே இல்லாத ஒன்றா ... எழுத்துப் பிழைகளுக்கு இணைத்தவர் பொறுப்பில்லை! நல்லதொரு பகிர்வு , பகிர்விற்கு நன்றி ...இளம் தலைமுறையினர் தவறாமல் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் , ஆகக் குறைந்தது எங்களுடைய பிள்ளைகளுக்காவது இப்படியான விடயங்களை தெரியப் படுத்த வேண்டும் ...
 6. 2 points
  பரிமாறும் போ து மேலே பொன்னிறமாக பொரித்த வெங்காயம் மல்லித் தழை கொண்டு அலங்கரித்து உடன் அவித்த முடடை, பெரிய வெங்காயச்சாம்பல் ( வெங்கயம் மி தூள் வினிகர் சீனி அரை தேக்கரண்டி உப்பு அளவாக ) ( Plate ) கோப்பையில் வைத்து சேர்த்து உண்டால் சுவையே தனி நான் இவா வின் முறையில் செய் வதுண்டு
 7. 2 points
 8. 1 point
  கிராமத்து வீடு சாய்வு நாற்காலியில் சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள் ராசம்மா டீச்சர் , மாலை மங்குவதற்கு சூரியன் தன கதிர்களை மெல்ல இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம் கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் , உதவியாக இருக்கும் .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர் விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள். பின் மேசை விள க்கினையும் . கண்ணடியை துடைத்து மேசையின் ந டுப்பகுதியில் வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வின் மகள் எடடாம் வகுப்பு படிக்கிறாள் வீட்டுப் பாடம் செய்ய உதவி கேட்டு படித்து இரவு துணையாக இருந்து காலையில் செல்வாள். இவள் வீடு வாயில் படலையில் நின்று கூப்பிடடால் .கேட்க்கும் தூரம் தான் . தியாகு மிகவும் விசுவாசமானவன் அவன் . மனைவியும் சமையல் முடித்து பிள்ளைகள் இருவரும் பாடசாலைக்கு சென்ற பின் ராசம்மா டீச்சர் வீட்டில் வந்து சமையல் பாத்திரம் தொட க்கம் , துணி துவைப்பது வரை செய்து கொடுப்பாள் . ராசம்மா டீச்சர் இளைப்பாறிய பின் . இரண்டு வருடங்களுக்கு முன் கணவன் இறந்து விட படடனத்தில் இருக்கும் மகன் தன்னிடம் வரும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டாலும் ராசம்மா மறுத்து வி ட டாள் . வருடமொருமுறையாவது பிள்ளைகளையு ம் கூட்டி வந்து என்னைப் பார்த்துக் கொண்டு போனால் காணும் என்பாள் . கிராமத்து சூழ் நிலையிலே பிறந்து வளர்ந்து வாழ்க்கை படடவள். மகன் பிறந்த பின் சில வருடங்கள் படிப்பிக்க போகாமல் விட்டு அவன் வளர்த்தும் தன மாமியாரிடம் விட்டு கல்வி ஒரு கொடை அதை சிறார்களுக்கு கற்பிப்பது பெரும் புண்ணியம் எனும் கணவனின் விருப்புக்கேற்ப பாடசாலை அருகாமையில் இருந்ததால் சென்று படிப்பித்து வந்தாள் . எல்லாம் கனவு போலாகியாது அவளுக்கு அவளும் ஓய்வு பெற்று பல வருடங்களாகி விட்ட்து வயதும் ஆகி விட்ட்து . சில தடவை மகனின் வீட்டுக்கு சென்ற போதும அங்கு மனம் நிலை கொள்ள வில்லை . வாகன இரைச்சலும் காலையில் எழுந்து கணவன் மனைவி வேலைக்கு ஓடுவதும் , குழந்தைகளை ஆட்டொவில் பள்ளிக்கு அனுப்புவதும் ஒரு எந்திர த்தனமான வாழ்க்கை . தனியாக இருக்க மகனும் விரு ம்ப வில்லை .. அம்மாவின் விருப்பின் படியே இருக்கட்டும் என விட்டு விடடான் . காலம் தன் வழியே பயணித்துக் கொண்டு இருந்தது .சிறுமி குமுதாவும் உயர்கல்வி கற்று பல்கலைக்கு சென்றுவிடடாள் . ராசம்மா பல வாறு யோசிக்க தொடங்கினாள் . மீண்டும் தனக்கு உதவியாக சிறு குழந்தையுடன் கைவிடட தனித்து நின்ற தேவகியை வேலைக்கு அமர்த்தி பொருட்கள் களஞ்சிய படுத்தும் அறையை சகல வசதிகளுடன் ஒதுக்கி கொடுத்து வீட்டொடு வைத்துக் கொண்டாள் . மீண்டும் மகன் தன்னிடம் வரும் படி அவற்புறுத்தவே , காலையில் குயிலின் கூவ லோடு எழும் இன்ப மும் சுற்றிவர மாமரங்களும் தோடை பலா என பயன் தரும் மரங்களும் காலப்போக்கில் கவனிப்பாரற்று அழிந்து விடும் . காலையில் தரிசிக்கும் முருகன் கோவில் , செவ்வாய் வெள்ளி விரதநாட்களில் காக்கைக்கு உணவளித்து உண்ணும் மன நிறைவு இவற்றை அவள் இழந்து மகனுடன் செல்ல தயாரில்லை . என மறுத்து விடடாள். தற்போது அவளுக்கு சற்று எதிர்காலத்தின் முதுமையை நோக்கிய ஒரு பய உணர்வு ....அன்று வழக்கம் போல் எழுந்து காலை க் கடன் முடித்து உணவுண்டு முடித்தவள் , தேவகியை கடைத்தெருவுக்கு மீன் வகை வாங்கி வர அனுப்பினாள். பின் மணிச் சத்தம் கேட்டு வாயிற் கதவை நோக்கியவள் .தபாற்காரன் வந்திருந்தான். அவளது கணவனின் அக்காவின் கடைசி மகளுக்கு ..பெண் குழந்தை பிறந்த சேதி யோடு .கூடிய கடித மொன்றுடன் . மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் . மதிய உணவு முடித்து ...சற்று ஓய்வெடுக்க எண்ணிய அவள் மேசை மீது கடிதமெழுதும் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மகனுக்கு ஒரு மடல் வரைந்தாள் . அன்புள்ள மாதவன் , ஜீவிதா மற்றும் பேரப்பிள்ளைகள் அறிவது ... முருகன் துணையால் நான் நலமே உள்ளேன் நீங்களும் அவ்வாறே இருக்க எல்லாம் வல்ல முருகன் துணை புரிவார் . . தேவகி வீட்டு வேளைகளில் ஒத்தா சையாக இருப்பதால் நிம்மதியாய் இருக்கிறேன் பெரிய மாமியின் மகள் கெளசல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மாமி கடி தம் போட்டிருந்தார் . என் பேரப்பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்களா ? அங்கு வெயில் எப்படி இங்கு மரங்கள் சூழ இருப்பதால் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது . இம்முறை பள்ளி விடுமுறைக்கு என்னைப்பார்க்க வருவீர்களா ? வெள்ளைச்சியும்,கொம்பாளும் ஒரே நேரத்தில் கன்று போட்டிருக் கு . இரண்டு நாகு கன் றுகளும் வீட்டு முற்றத்தில்துள்ளித் திரிந்து ...விளையாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் வீட்டில் தாராளமாக பால் கிடைக்கிறது . என் பேரப்பிள்ளைகளைத் தான் நினைப்பேன் . வீட்டுத்தேவைக்கு எடுத்து போக மீதியை வறிய பள்ளிப்பிள்ளைகள் மூவர் வந்து மாலை வேளைகளில் எடுத்து செல்வார்கள். அயலில் எல்லோரிடமும் பால் மாடுகள் இருக்கின்றன . அதனால் ஒருவருக்கும் கொடுக்க முடியவில்லை . வறிய பிள்ளைகள் பசியாறட்டும் போகும் வழிக்கு புண்ணியமாகும் என எண்ணிக் கொள்வேன். அடுத்து மகனே உனக்கு நான் உங்களுடன் வந்து தங்கவில்லை என குறையாக இருக்கலாம் யோசித்து பார் பரபரப்பான இந்த காலத்தில் குழந்தைகளின் படிப்பு உன் வேலை வீடு செலவு என்று உனக்கே நேரம் இல்லாத போது என்னை கவனிக்க கஷ்டமாய் இருக்கும் . நான் நடமாடித்திரியும் வரை என சுய தேவைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இருக்கும் வரை நீ பிறந்து வாழ்ந்த இந்த வீட்டிலிருக்கவே விரும்புகிறேன் . நான் உயிருடன் இருக்கும் வரை இதை விற்கவோ ..வேறு தேவைக்கோ எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். என் சுயம் இழந்து ... மறதி கண்டு ...என்னை இன்னொருவர் துணையோடு தான் வாழ வேண்டிய நிலைமை வந்தால் ...எனது இளைப்பாற்றுச் சம்பள பணம் சேமிப்பில் இருக்கிறது . அது உனதும் எனதுமான இணைந்த வைப்புக் கணக்கில் இருக்கிறது அதை எடுத்து உன் தேவைகளை செய் . என்னை ஒரு கண்ணியமாக நடத்தும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு ...இதை என் கடைசி ஆசையாக நிறை வேற்றுவாய் என்பதில் நம்பிக்கை உண்டு . ஒன்று சொல்ல மறந்து விடடேன் . கார் கார தியாகுவின் பெண்ணுக்கு நகரத்தில் ஒரு வேலை கிடைக்க உதவி செய்வாயா? நன்றாக படித்து இரண்டு டிகிரி ..வாங்கி உள்ளாள் .அதுகள் உன்னை குழந்தையாக வீட்டுக்கு கொண்டு வந்த காலத்தில் இருந்து கைக்குள்ள இருந்து சேவை செய்ததுகள் அந்த பெண் தலை நிமிர்ந்தால் அதுகளின் சீவியம் மேம் படும் ...மீண்டும் குடும்பத்தையும் உன்னையும் பாது காக்க .முருக கடவுளை வேண்டி நிற்கிறேன் .இப்படிக்கு .. பாசமுள்ள அம்மா ...கண்கள் பனித்தன வாரங்கள் மாதங்களாகி பள்ளிக்கு கூட விடுமுறையும் வந்தது . ஒரு ஞாயிறு காலை வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட்து ...மகன் மருமகள் பேர ப் பிள்ளைகளோடு வந்திருந்தான் .ராசம்மாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .. பேத்தி நன்றாக வளர்ந்து ரடடை ஜ டை போட்டு இருந்தாள். பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது . பேரன் தேவகி பையனோடு கிளி பார்க்க மாமரத் தடிக்கு சென்று விடடான் . .அவர்கள் குளித்து முடிந்ததும் காலை ஆகாரத்தை நிறைவு செய்தார்கள் . ராசம்மா மதிய உணவுக்கு என்ன செய்வது என்று ..எண்ணிக் கொண்டு இருக்கையில் .". மாமி எங்களுக்கு கடையில் வாங்கும் கோழி சலித்து விட்ட்து . ஊர் கோழி சமைப்போமா என மருமகள் ஜீவிதா ..கேட்டுக் கொண்டே குசினிக்குள் நுழைத்தாள். அவளும் கூட மாட உதவி செய்து சமையலை ஒப்பேற்றறினார்கள். பல கதைகளும் கதைத்த பின் ..... மத்திய உணவு சுடச் சுட கோழிக் கறியும் தோடடத்து பிஞ்சு வெள்ளைக்கத்தரிக் கறியும் மற்றும் பல உணவுகளுடன் நிறைந்தது . நாட்கள் ஓடி வாரங்களானது ராசம்மா மிகவும் யோசனையுடன் காணப்படடாள் . ..மறு நாள் பயணம் . இரவு உணவு முடித்துக் கொண்டு ...படுக்கைக்கு சென்றார்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரை அதிகாலை மூன்று மணி யளவில் அம்மாவின் அறையில் ...விளக்கு எரிந்து கொண்டிருந்ததை பார்த்த மகன் .. உள் சென்று பார்த்த போது ஒரு வகை விக்கல் ..எடுத்துக் கொண்டிருந்தார் ராசம்மா ...அருகில் சென்று கையை பற்றியவர் ....கை துவண்டு போவதைக் கண்டு ...அதிர்ச்சி அடைந்தார் . தேவகி ஓடிச்சென்று ....கார் கார தியாகுவை அழைத்து வந்து ..வைத்திய சாலை சென்ற போது அவர் ஏற்கனவே மாரடைப்பில் இறந்து விடடார் . தன் கடைசிக் கால ஆசைகளை விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்ட திருப்தியில் ராசம்மா ஆழ்ந்த நித்திரையில் .... .முதியவர்களை அவர்கள் விருப்ப படி ...ஓய்வாக அமைதியான சூழலில் வாழ விடுங்கள் . பணத்தைக் கட்டி முதியோர் இல்லங்களில் தள்ளி விட்டு கடமை முடித்தேன் என வாழாதீ ர்கள் .மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் ஆடு மாடு தோட்ட்ம் வயல் வெளி என ...வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாலு சுவர் கொண்ட கூட்டுக்குள் வாழ்வது வீட்டுச் சிறை போல தனித்து விடப்பட்டது போல உணர்வார்கள். தனிமையம் ஏக்கமும் அவ்ர்களைக் கொல்லாமல் கொள்ளும் . யார் வருவார்கள் தன்னைப் பார்க்க என்று மனம் எங்கும். முடிந்த வரை முதியோர் இல்லம் தவிர்த்து எஞ்சிய காலத்தை வாழ வையுங்கள். தாய் /தந்தை மனசு தங்கம் நான் அறிந்த சொந்தம் நன்றி சொல்ல போதாதையா ஏழேழு ஜென்மம்
 9. 1 point
  1970 / 1980 களில்... யாழ்ப்பாணத்தில்... இருந்த, Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும். *கோட்டை முனியப்பகோயில்* தேங்காய்ச் சொட்டு. *பரணி ஹோட்டல்* அப்பம். *சிற்ரி பேக்கறி* கால், றாத்தல்... பாணும், பருப்பும்.... *சுபாஸ் கபே* ஐஸ்கிரீம். *றிக்கோ கோப்பி பார்* றோல்ஸ், கோப்பி. *மலாயன் கபே* உளுந்து வடை / போளி. *தாமோதர விலாஸ்* நெய் தோசை. *சந்திரா ஐஸ் கிறீம்* ஐஸ் சொக். *கொழும்பு றெஸ் ரோறன்ட்* இறால்கறி, குளம்பு. *பிளவ்ஸ்* Beef றோஸ். (5 சதம்) *மொக்கன் கடை* புட்டு, ஆணம், மட்டிச் சம்பல். *சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, கல்லாப் பெட்டிக்குள், போட்டு விட்டு... அவர் தாற, மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.* *முனீஸ்வரா கபே* புட்டு, இடியப்பம், புளிச்சொதி, தாளித்த சம்பல் (கடுகு தூக்கல்). (வெலிங்டன் சந்தி) *லிங்கம் கூல்பார்* சர்பத் , இதரை வாழைப்பழம், பீடா.......... (வெலிங்டன் சந்தி) *கபே பாரத்* அப்பம், பிளேன் ரீ. (ஆரிய குளம் சந்தி) *ஒரியென்டல் பேக்கரி* சங்கிலிப் பாண். *சொக்கன் கடை* கடலை வடை. (3 - 5 சதம்) பிளேன் ரீ (கைலாச பிள்ளாயார் கோயில்) உங்களுக்கு தெரிந்த, கடைகளின் பெயரை... கூறுங்களேன்.
 10. 1 point
  கல்யாண வீட்டில் நான்தான் மாப்பிள்ளை. செத்த வீட்டில் நான்தான் பிணம். இந்தக் கூட்டம் எப்போதும் இப்படித்தான்.
 11. 1 point
  தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ?
 12. 1 point
  மலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன் மலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் "ஆண்ட பரம்பரை” என மார்தட்டுபவர்கள். தமிழ் பரம்பரையை போலவே இவர்களது பரம்பரையும் ஆண்ட பரம்பரையே. இவர்கள் முற்றுழுதாக இந்து, தமிம் கலாசாரத்தினை கொண்டிருந்தாலும் வீட்டில் பேசும் மொழி மூலம் தனித்துவம் பேணுகின்றனர். இவர்களது வரலாற்றினையும் மலையக வரலாற்றுடன் ஆய்வு செய்ய வேண்டும். இக் கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே. திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி மலையான்ம, மலயாய்ம எனவும் அழைக்கப்பட்டது. மலையாளம் என்பது ஒரு நாட்டையும் பின்னர் மொழியையும் குறித்தது. மலையாள நாட்டை அல்லது மலையாளிகளை "மலபார்” என அரேபியரே முதலில் அழைத்தனர். இதனையே சிலர் கேரள மொழி என அழைத்தனர். கேரளா என்பது தென்னை நாடு என பொருள்படும். கன்னியா குமரி முதல் கோகர்ணம் வரை மலையாள தேசம் என அழைக்கப்பட்ட போதும் பிற்காலத்தில் கன்னியா குமரி தமிழ் நாட்டுடன் இணைந்தது. இதில் பூமி நாடு, கற்கா நாடு, குட்ட நாடு, குட நாடு ஆகியவையும் அடங்கியுள்ளன. பரசுராமன் மலையாள பூமியை கடலினின்று மீட்டு வந்தார் என புராணக் கதைகள் கூறுகின்றன. மலையாள தேசம் கேரள தேசம் என்றே அழைக்கப்படுகிறது. மலையாள தேசமும், கோயம்புத்தூரும், சேலம் மாவட்டமும் சேரருடைய ஆட்சியில் இருந்துள்ளது. எனவே இது சேர நாடு எனவும் அழைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில மக்களான மலையாளிகள் தமிழ் நாட்டில் சேலம், வட ஆற்காடு, அம்பேத்கார், தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி பெரியார் மாவட்டங்களிலும், சேர்வராயன் மலை, கொல்லி மலை, சவ்வாத்து மலை, ஏலகிரி மலை, பச்சை மலை பகுதிகளிலும் வாழ்ந்தனர். மலையாளிகளிடமும் வெள்ளாளர், கொங்க வெள்ளாளர், மலைக்கவுண்டன், கவுண்டன் என பல சாதிகள் இருந்தன. மலையாளிகள் பொதுவாக ஆவியுலக கோட்பாடு, மந்திரம், மந்திர ஜாலம் ஆகியவற்றி நம்பிக்கையுடையவர்கள். விஷ்ணுவ அதிகம் வழிபடுவர். கரியராமர், தர்மராசா, அய்யனார், காளி, கருப்பன், பிடாரி, மாரி போன்ற தெய்வங்களையும் வழிபடுவர். மலையாளிகளே 'வர்மனை' அதிகம் வழிபடுவார்கள். அவர்கள் பச்சைக் குத்திக் கொள்ளும் பழக்கமுடையவர்கள். “தெனுகு”, “திரிலிங்கமு”, “ஆந்திரமு” என சொல்லப்படும் தெலுங்கு மொழி இந்தியாவில் முக்கிய மொழிகளில் ஒன்றாகும். இதுவும் திராவிட மொழிகள் ஒன்றாகும். தெலுங்கு பிரதேசத்தினை தெலுங்கு நாடு என்றும், ஆந்திரா நாடு என்றும் அழைக்கின்றனர். விஜயநகர பேரரசு, நாயக்கர் காலம் என்பதெல்லாம் இவர்களது காலமேயாகும். ஆந்திராவின் தலைநகர் விஜய நகராகும். தெலுங்கு நாட்டைப் பொறுத்த வரை 1509 - 1530 ஆட்சி புரிந்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் முக்கியமானவர். அவர் காலத்தில் தென்னகத்தில் ஆட்சி புரிந்த வல்லரசனாகத் திகழ்ந்தார் என வரலாறுகள் கூறுகின்றன. விஸ்வாமித்திரர் காலத்தில் அம் மக்கள் ஆரிய சமூகத்தில் இருந்து நீக்கப்பட்டு வந்திரராகி விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவர்கள் கோதாவரி பிரதேசத்தில் வாழ்ந்த தெலுங்கரோடு கூடி ஆந்திரா ராஜ்யத்தினை ஏற்படுத்தினர் என்பது வரலாறு. தெலுங்கு என்பதற்கு த்ரிலிங்கு கேசம் என்பது பொருள். ஸ்ரீ சைலம், தாஹாராமம் (பீமேசுரம்), காளேசுரம் என மூன்று தெலுங்கு தேசத்தினை கொண்டது. தெலுங்கர் மூலமே கோலாட்டம் பாடலு, படவ பாடலு, ஏதம் பாடலு, லாலி பாடலு (தாலாட்டு), பெள்ளி பாடலு (கலியாணப் பாடல்), ரோகடி பாடலு (தானியம் இடிக்கும் போது அல்லது குத்தும் போது பாடும் பாடல்) என்ற பதம் பாவிக்கப்பட்டது. இவர்களது மூதாதையரான தியாகையர் சிறந்த பக்திக் கவிஞர். இவர் இயற்றிய பக்திப் பாடல்கள் சங்கீதத்திற்கு ஆரம்பமாயிற்று. சங்கீதத்தின் தந்தையான இவர் 1767 - 1847 காலப்பகுதியில் வாழ்ந்தவர். கர்நாடக சங்கீதத்தின் ஆரம்பகர்த்தாவாக கொள்ளப்படுகிறார். இவர்களிடையே ஒன்பது பிரிவுகள் உள்ளன. "உகடி" - வருடப் பிறப்பு "டுசார” பெருநாள் மற்றும் மொகாரம் இவர்களால் கொண்டாடப்படுகிறது. இன்றும் இலங்கையில் கிட்டத்தட்ட 1,50,000 தெலுங்கர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இப் பெருநாளினை கொண்டாடுகிறார்கள். இவர்களில் பலருக்கு நாயுடு, ரெட்டி, ராவ் என்ற பெயர்கள் உண்டு. இவர்களது ஒன்பது பிரிவில் இவையும் அடங்கும். இலங்கையில் இவர்களை இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தற்போது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இலங்கையில் இவர்களின் வரலாற்றினை நோக்குவோமாயின் இலங்கை தெலுங்கு மக்கள் இந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆந்திரா அல்லது தெலுங்கு தேச வழித்தோன்றல்களேயாகும். ஆந்திராவில் கோயா, செஞ்சு, சாவரா இனக்குழுவினர் களின் வழித்தோன்றல்களே தமிழ் நாட்டு தெலுங்கர்கள். மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஆந்திரர்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்த ஆந்திர ஆட்சிக்காரருள் ஒருவர் பல்லவ வம்ச மன்னர் வீரகுரச்சவர்மாவிற்கு தன் மகளை மணமுடித்ததன் பின்னர் வீரகுரச்சவர்மா தனது மாமனாரிடம் அரசின் தென்பகுதியை வாரிசுரிமையாக பெற்றுள்ளான். இது காஞ்சி வரை காணப்பட்டுள்ளது. ராஜ ராஜ சோழர் காலத்தில் ஆந்திர நாட்டின் தென் மாவட்டங்கள் பட்டாபி, ரேநாடு, நெல்லூர் ஆகியவற்றை சோழர்கள் ஆண்டனர். சோழர்களுக்கு காகிதிய வம்சம் உதவியது. காகதிய வம்சம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் கடைசி காகிதிய அரசன் வராங்கல்லின் பிரதாப ருத்ர தேவாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1323ல் துணைத் தலைவராக இருந்த ஹரிஹரா புக்கா விஜயநகர அரசை உருவாக்கினான். இதன்பின் விஜய நகர பேரரசு ராஷசா தெங்காடி போரில் வீழ்ந்தது. பின்னர் படிப்படியாக தெலுங்கு நாடு குதுப்ஷாஹிகளின் கட்டுப்பாட்டிலும் பின்னர் ஹைதராபாத் நிஜாமின் கீழும் வந்தது. குண்டூர், கிருஷ்ணா , கோதாவரி விசாக மாவட்டங்கள் நிஜாமால் ஆங்கிலேயரிடம் பரிசளிக்கப்பட்டன. காக்கிநாடா, ஏனம் பிரான்சுகாரர்கள் வைத்திருந்தனர். தேலுங்கர்கள் இந்து மதக் கூறுகளை உளவாங்கியிருந்தாலும் தங்கள் சொந்த இயற்கை ஆண், பெண் தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். சோழ மன்னர்கள் வங்கக் கடலுக்கு அப்பாலும் புலிக் கொடியுடன் ஆண்டனர். - 12ம் நூற்றாண்டு தமிழர் வரலாற்றில் ஒரு பொற்காலம். அக்காலத்தில் சோ சாளுக்கியருடன் போர் புரிந்துள்ளனர். சோழ மன்னன் இராஜராஜன் ே நாட்டைத் தாக்கினான். வேங்கியிலிருந்து பொண்னையும் பொருளையும் கொ வந்து இராசராசேசுவரர் கோயிலைக் கட்டினான். இக்காலத்தில் வேங்கையாக சோழ அரசுடன் திருமண உறவு கொள்ள காரணமாயிற்று. கீழைச் சாளுக்கியர் ஒருவனான விமலாதித்தியன் (கி.பி.1015 - 1022) இராஜராஜன் மன்னன் மகன் குந்தவையை திருமணம் புரிந்தான். இதைத் தொடர்ந்து சோழ, சாளுக்கிய மன்னர்களது திருமணங்கள் நடைபெற்றன. சாளுக்கிய அரச பரம்பரையில் வந்த இராஜராஜ நரேந்திரன் (1022 - 1061) சோழ அரசனான முதலாம் இராஜேந்திரனுடைய மகளாகிய அம்மங்கை தேவியை மணந்தான். இராஜராஜ நரேந்திரனுடைய மகன் தாய் வழியில் கங்கை கொண்ட சோழனது பேரன். இவரையே இரண்டாம் இராசேந்திரன் என்று அழைப்பர். இவர் தழிமைப் பயின்று தமிழராகவே நடந்தார். இளவரசனான இவனே பின்னர் அரசனானான். இவனே குலோத்துங்க சோழன் என அழைக்கப்பட்டான். இதன் மூலம் சோழ நாடும் வேங்கி நாடும் இணைந்தது. வேங்கி நாடு சோழ நாட்டின் ஒரு பகுதியானது. இதன் மூலம் தெலுங்கு நாட்டுப் பகுதிகள் தமிழ் நாட்டின் ஆட்சிக்குட்பட்டன. குலோத்துங்க சோழன் தந்தை வழியால் சாளுக்கியனாகவும் தாய் வழியில் சோழனுமாக விளங்கினான். குலோத்துங்கனுக்கு திறை செலுத்தி வந்தவன் கலிங்கநாட்டரசன். இவ் அரசன் அனந்தவர்மன் (சோழகங்கன்) திறை செலுத்த மறுத்ததால் குலோத்துங்கன் படை கரணாகர தொண்டமான் தலைமையில் கவிங்கத்தின் மீது போர் தொடுத்தது. குலோத்துங்கன் கலிங்கத்தினை வென்றான். இதுவே கலிங்கத்துப்பரணி எனப்படும். சயங்கொண்டார் இவ்வெற்றியை பாடினார். குலோத்துங்க சோழன் தன்னுடைய மக்களாகிய இராஜஇராஜ மும்முடி சோழன், வீர சோழன், சோழங்கன், விக்கிரம சோழன் ஆகியோரை ஒருவர் பின் ஒருவராக வேங்கியை ஆளச் செய்தான். அதன் பின் தெலுங்கு நாட்டு சோழருள் ஒருவனான சோடன் வேங்கிநாட்டு தலைவரானான். இதன் பின் விக்கரம சோழனும் அதன் பின அவன் மகன் 2ம் குலோத்துங்க சோழனும் பட்டத்துக்கு வந்தனர். இதன்பின் 3ம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் தெலுங்கர் திறை செலுத்த மறுத்தனர். இதன் பின் 3வது இராஜஇராஜ சோழன் ஆட்சிக்கு வந்தான். இதன் பின் சோழ அரசு வீழ்ச்சியடைந்தது. சடையவர்மன் சுந்தர பாண்டியன் காரணமாக பாண்டியர் எழுச்சியுற்றனர். சுந்தர பாண்டியன் காஞ்சியின் மீது படையெடுத்து கோபாலன் எனும் தெலுங்கு சோழனை வென்றான். இவருக்குப் பின் வந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான். இவன் தனது மகன் சுந்தரபாண்டியனுக்கு அரசை வழங்காமல் வைப்பாட்டியின் மகனான வீரபாண்டியனுக்கு முடி சூட்டினான. 5 காலத்தில் ஏற்பட்ட போர் காரணமாக சுந்தரபாண்டியன் முகம்மது பின் துகள் துணையை வேண்டினான். மாலிக்கபூர் சுந்தரபாண்டியனைப் பற்றி வீரபாண்டியனைப் பற்றியோ கவலையில்லாமல் மதுரை மீது படையெடுத்து கோயில்களை சூறையாடினான். மாலிக்கபூருக்குப் பின்னர் பல முஸ்லீம்கள் தமது நாடு மீது படையெடுத்தனர். தமிழ் நாட்டில் இஸ்லாம் ஆரம்பம் உருவாகியது. - பின்னரே விஜயநகர கிருஷ்ண தேவராயர் படையெடுத்து ஆட்சியை. பாண்டியருக்கு வழங்கி வரும்படி நாகம நாயகனை படையுடன் அனுப்பினார். இந்த கிருஷ்ண தேவராயரே தெலுங்கு மன்னராவார். இவர் அனுப்பிய நாகம நாயகர் கல் நாயகர் பெயர் தொடங்குகிறது. நாகம நாயகர் போரில் வென்று பாண்டியனிடம் நாட்டை கொடுக்காது தானே ஆட்சி செய்தான். இதற்கு எதிராக மகன் விசுவநாதநாயகரை அனுப்பி தந்தையுடன் போரிட செய்தார். மகன் வென்றான். விசுவநாதநாயகரை கிருஷ்ண தேவராயர் மதுரைக்கு தலைவராக்கினார். 1559 ஆண்டிலிருந்து பாண்டி நாடு நாயகருடைய ஆட்சிக்குட்பட்டது. பாண்டி நாடு விஜய நகர பேரரசுக்கு கீழ் வர முன்னரே தெலுங்கு மக்கள் பலரும் தமிழ் நாட்டில் குடியிருந்தனர். இவர்களே பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர். விசுவநாதருக்குப் பின் அவரது புதல்வர் குமார கிருஷ்ணப்ப நாயகர் பட்டத்துக்கு வந்தார். இவர் இலங்கையின் மீது படையெடுத்தார். கண்டியை வென்று தம் மைத்துனர் விஜயகோபால நாயகரை தம் பிரதிநிதியாக அமர்த்தினார். விஜய நகர அரசனாகிய 2ம் ஹரிகரனும் (1379 - 1406) 2ம் தேவராயனும் (1438) இலங்கையைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். கடலாதெனிய, லங்காதிலக விஹாரைகள் விஜய நகர சிற்ப முறையில் கட்டப்பட்டுள்ளன. 14ம் நூற்றாண்டில் கம்பளை இராசதானிக் காலத்தில் இந்தியக் கட்டிடக் கலை நிபுணர்களையும், சிற்பக் கலை நிபுணர்களை - கணேஷ்வர ஆச்சாரியார் இஸ்தாபதிராயர் ஆகியோர்களை வரவழைத்து இவ்விஹாரைகளை கட்டியுள்ளனர். இவ்விஹாரையஜனை கட்டியபோது அதில் மலையாளிகளும் பணிபுரிந்துள்ளனர். பிரதான கூரையினை வடிவமைத்து செய்தவர் ஒரு மலையாளி ஆகும். இலங்கையுடன் விஜயநகர மன்னர்கள் பலர் தொடர்புபட்டுள்ளனர். முதலாம் ஹரிஹரன் (1336), முதலாம் புக்கன்(1356), 2ம் ஹரிஹரன்(1377), இரண்டாம் புக்கன்(1404), முதலாம் தேவராயன்(1406), வீர விசயன்(1422), 2ம் தேவராயன்(1425), வீரபாஷர்(1465), ப்ரொட் தேவராயன்(1485), வீர நரசிம்மன்(1486), இம்மடி நரசிம்மன்(1492), கிருஷ்ண தேவராயன்(1509) இதில் 2ம் ஹரிகரனே இலங்கையில் காணிக்கை பெற்றதாகவும் லக்கண்ணா தலைமையில் இலங்கை மீது படையெடுத்ததோடு இவரது கடற்படை இலங்கையை கைப்பற்றியுள்ளது. விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு தெலுங்கு மொழி அரசின் ஆதரவை இழந்து விட்டது. மதுரை நாயக்க மன்னர்களும், தஞ்சை அரசுகளும் தெலுங்கு மொழிக்கு ஆதரவு வழங்கினர். 15ம், 16ம், 17ம், நூற்றாண்டுகளில் தெலுங்கர் தெலுங்கு நாட்டில் இருந்து குடி பெயர்ந்து தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் நிரந்தரமாகத் தங்கினர். தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம் வாழ்ந்தனர். தஞ்சையையும், மதுரையையும் ஆண்ட நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் தெலங்கர் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்தனர். தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயகர் (1600 - 1631) இரண்டாவது கிருஷ்ண தேவராயர் என்றே அழைக்கப்பட்டார். மலைநாட்டினைப் பொறுத்தவரை நாயகர் ஆட்சி முக்கியத்துவம் பெறுகிறது. நாயகர் வம்சம் எவ்வாறு ஆட்சிக்கு வந்தது என்பதை நோக்கில் சேன சம்பத் விக்ரமபாக (1473 - 1511), ஜயவீர(1511 -1551), கரலியத்த பண்டார (1551 - 1581), 1ம் இராஜசிங்கன்(1581 - 1590) 1ம் விமலதர்மசூரியன்(1590 - 1604), செனரத் (1605 - 1635), 2ம் இராஜசிங்க ன் (1635 - 1687), 2ம் விமலதர்மசூரியன் (1687 - 1706), மகன் நரேந்திரசிங்கன் (1706 - 1739) ஆட்சியாளனானார்கள். 2ம் விமலதர்மசூரியன் தஞ்சாவூர் மன்னனின் மகளை திருமணம் செய்தான். 1706ல் கண்டிய மன்னனுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர், கோவில்பட்டு, இராஜபாளையம், திருநெல்வேலி பகுதிகளில் குடியேறியுள்ளனர். இங்கு தொழில் காரணமாகவும், பஞ்சத்தினாலும் - மாவட்டத்தில் குடியேறினர். இங்கு நாயகர்கள் இவர்களை ஆதரிக்க இடையறு செய்துள்ளனர். தெலுங்கு மன்னர்கள் நாயகர்கள் தம் ஆட்சி எல்லை விரிவுப்படுத்தியபோது தெலுங்கு பிராமணர்களையும், தெலுங்கு சக்கிலியர்களையும் உடன் அழைத்து வந்துள்ளனர். இவர்கள் மதுரையில் திருமலை நாயகர் அரண்மனையைச் சுற்றி பத்துதூண், விளக்கத்தூண், அனுப்பானடி பகுதிகளில் அரண்மனையைச் சுற்றி பத்துதூண், விளக்கத்தாண். - கங்குவதற்கும், நெசவு தொழில் செய்வதற்கும் ஆடை துவைத்தலக் குடியமர்த்தினர். பிராமணர்களுக்கு வைகை ஆற்றின் தென் பகுதியை வல வேதபாராயணம் செய்வதற்கான சூழலை ஏற்படுத்தினர். தெலுங்கு சக்கிலியர்கள் வளரின் ஒதுக்குப்புறமாக இடமளித்து காலணி உற்பத்தி, நகர சுத்திகரிப்ப. ஆகியவற்றில் ஈடுபடுத்தினர். இவர்களிடையே சாதி முரண்பாடு என் குடும்பங்களோடு விரும்பிய பகுதியில் தொழில் செய்ய சென்றனர். இவர்கள் நாயகர் ஆட்சிக் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் இலங்கைக்கு குடிபெயர்ந்துள்ளனர். மலையாளிகளின் இலங்கை விஜயம் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளது. எல்லாளன் - மன்னன் துட்டகாமினியால் தோற்கடிக்கப்பட்ட ஏழாவது நாளில் இவரின் மருமகன் பல்லுவ அல்லது வல்லுகன் தலைமையில் 6000 வீரர் கொண்ட படை மாந்தோட்டத்தில் வந்திறங்கியுள்ளனர். இப்படை துட்டகாமினியின் படைத்தளபதி புஸ்ஸதேவ என்பவரால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படையில் மலையாளிகளும் தெலுங்கரும் இருந்துள்ளனர். கரிகால சோழன் (110 - 112) 12000 இலங்கையரை சிறைப்பிடித்து காவிரிக்கு அணை கட்டினான். கஜபாகு மன்னர் இவர்களை மீட்டதோடு இருமடங்கு தமிழரை மீட்டு வந்தார் எனக் கூறப்படுகிறது. இவர்களோடு வந்தவர்களுள் மலையாளிகளும் தெலுங்கர்களும் இருந்துள்ளனர். இந்த மீட்பு சேரன் செங்குட்டுவனுடன் நட்பு ரீதியாக திகழ்ந்ததாக சில வரலாற்று நூல்கள் கூறுகின்றன. சேர நாடு தமிழ், தெலுங்கு மக்களைக் கொண்டதாகவே காணப்பட்டது. கஜபாகு கொண்டுவந்தவர்களை 'பெரும்பாகம்' என்ற இடத்தில் குடியமர்த்தினார். இவர்களுல் பெரும்பாலானவர்களை குடியேற்றியதால் பெரும்பாகம் எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதையே மகா - தளய என்றும் இப்போது மாத்தளை என்றும் பெயர் வரக் காரணமாயிற்று. இவர்கள் அநேகமானோர் தெலுங்கு வம்சாவழிகளே எனக் கருத வேண்டியுள்ளது. பூஜாவலி என்ற நூலிலே 13ம் நூற்றாண்டில் கலிங்க மாகனிடம் 44000 வீரர்களும், ஜெயபாகுவிடம் 40000 வீரர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. சூழவம்சப்படி ஜெயபாகுவுக்கு துணையாக 44000 கேரள படை வீரர்கள் இருந்ததாக்க கூறப்படுகிறது. இதனை சில நூல்கள் கேரள தமிழர்கள் எனக் கூறுகிறது. இவர்கள் மலையாளிகளாகவும் இருக்கலாம் அல்லது மலையாளிகளும் உள்ளடக்கப்பட்டி ருக்கலாம். இக்காலத்திலேயே அதிக மலையாளிகள் இலங்கையில் வாழ்ந்துள்ளன. 1590களில் அரசியல் காரணங்களினால் தோற்கடிக்கப்பட்ட மலபாரகள் (மலையாளிகள்) இலங்கைக்கு வந்து குடியேறியுள்ளனர். போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையில் குடியேறிய பரவர்கள் தரும் உறவுகளை மலையாளிகளுடன் ஏற்படுத்தியுள்ளனர். இதன்பின் டச்சுக்காரர் பெண்கேட்டு மதுரைக்குச்சென்ற தூதுக்குழுவில் சிதம்பரநாத், அடையப்பான் என்ற வாண்டு தமிழர்கள் இருந்துள்ளனர். அவர்கள் தம்முடன் எடுத்துச்சென்ற விண்ணப்பம் சிங்களம் தமிழ் தெலுங்கு மொழிகளில் இருந்துள்ளது. இக்காலத்தில் தமிழ் நாட்டினர் போர் வீரர்களாக வந்தனர். இவர்களை 'வடகத்தையர்' என அமைத்தனர். இவர்களுள் தெலுங்கரும், மலையாளிகளும் காணப்பட்டனர். தஞ்சாவூர் அரசியின் மகனே நரேந்திரசிங். நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனே ஸ்ரீ விஜயராஜசிங்கன் (1739 - 1747) அவனது மனைவியின் சகோதரனே கீர்திதி ஸ்ரீ இராஜசிங்கன் (1747 - 1781) அவனது சகோதரன் இராஜாதி இராஜ சிங்கன் (1781 - 1798) அவரது மனைவியின் சகோதரனே விக்ரமராஜசிங்கன் (1798 - 1815) நரேந்திர இராஜசிங்கனுக்குப் பின் வந்த நாயகர்கள் இவர்கள் 76 ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இவர்கள் காலத்தில் தெலுங்கரும், மலையாளிகளும் பலர் குடும்பம் குடும்பமாக இங்கு வந்துள்ளனர். நாயக்கமன்னர்களினால் தலதா மாளிகை கட்டப்பட்டபோது தலதாமாளிகை கூரையினை வடிவமைத்து செய்தவர் ஒரு மலையாளி ஆவார். தலதாமாளிகைகட்டும் பொழுது பல மலையாளிகளும் தெலுங்கர்கள் பணிபுரிந்ததாக தலதாமாளிகை வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. மலையாளிகள் வாழ்ந்த வீதி மலபார் வீதி என கண்டியிலும், கம்பளையிலும் உள்ளது. மலபார் வீதி என்பது முன்னர் நாயக்கர்கள் வாழ்ந்த வீதி. அப்போது, அது குமரப்பா வீதி என அழைக்கப்பட்டது. இராஜசிங்கனின் இரண்டாவது மனைவியாக மலையாளி ஒருவரை திருமணஞ் செய்த பின்னர், அவரது குடும்பத்தினர் இங்கு குடியமர்ததப்பட்டனர். இவர்கள் மன்னருக்கு விசுவாசமானவர்களாக இருந்தனர். எனவே இவர்கள் இவ்வீதியில் குடியமர்த்தப்பட்டதால் குமரப்பா வீதி, மலபார் வீதி ஆயிற்று. இக்காலத்திலேயே மன்னர்களை தெய்யோ எனவும் நாணக்கர்களை நாயக்க தெய்யோ எனவும் மக்கள் அழைக்கத் தொடங்கினர். 1710களில் மாப்பிள்ளை நாயகர், நரெனப்ப நாயகர், நடுகாட்டு சாமி நாயகர், கபடதுரை நாயகர், நாம் நாயகர் எனப் பலரும் குடும்பங்களுடன் இங்கு வந்து செல்வாக்குடன் வாழ்ந்துள்ளனர். நரெனப்ப நாயகரின் மகளே விஜயராஜசிங்கனின் மனைவியாகும். விக்கிரமராஜசிங்கனின் ஆட்சிக்குப் பின் ஆங்கிலேயருக்குப் பயந்து நாயக்க வமிசத்தினர் குருநாகல், மெல்சிரிபுர, கலிகமுவ, ஜோசப்வாஸ்புரம், வில்பாவ (வீரபாகுபுரம்) ஆகிய பகுதிகளுக்கும் ஹங்குரங்கெத்த, ஹாரகம, ஊருகொல்ல, குண்டசாலை பகுதிக்கும் சென்றுள்ளனர். கம்பளை ஆட்சிக் காலத்தில் அளகக்கோனார் குடும்பத்தினரின் ஆட்சி வலுப்பெற்று விளங்கியுள்ளது. இவர் சேர நாட்டு தலைநகரான வஞ்சியில் இருந்த பிரதான குடும்பத்தவர்கள். இவர்கள் றைகமவில் வாழ்ந்ததோடு அமைச்சர்களாகவும் விளங்கினர். கண்டி மன்னரின் கடைசிகாலத்தில் முன்னூறு மலபார்கள் காவலில் அமர்த்தப்படாது சுதந்திரமாக திரிகின்றனர் என்ற செய்தி தேசாதிபதி பிரவுண்றிக்குக்கு கடைத்துள்ளது. இதுவும் கண்டி படைவலிமை குறைந்துள்ளது என்பதை அவருக்கு எடுத்துக்காட்டியுள்ளது. நாயகர் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு பேசும் பல்வேறு சாதியினர் ஆந்திராவிலிருந்து இடம் பெயர்ந்து முதலில் இராமநாதபுரம், அரும்புக்கோட்டை, விருதுநகர், காலத்தில் டச்சுக்காரர்கள், யாழ்ப்பாணத்தமிழர்களை மலபார் அழைத்துள்ளனர். மலையகத்தில் வழ்ந்த இந்திய வம்சாவளி கேரள மலையான் வேறு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 1796ல் பிரித்தானியர் இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றிய போது இங்கு வரி சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் மலையாளிகளாகவும், தெலுங்கர்களாக இருந்துள்ளனர். 1818ல் இலங்கையில் ஆங்கிலேயருக்கு எதிரான சிங்களவரின் கிளர்ச்சி. அடக்குவதற்கு ஐந்தாயிரம் தென்னிந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் மலையாளிகளும் தெலுங்கர்களும் அடங்கியிருந்தனர். இதன் பின் கோப்பி மற்றும் தேயிலை பயிர்ச்செய்கையின் ஆரம்பகாலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கூலி தோட்டத் தொழிலாளர்களும் மலையாளிகளும் தெலுங்கரும் இருந்துள்ளனர். நாயுடு பெயருடைய பலர் இக்காலத்தில் வருகை தந்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. இறுதியாக செட்டியார்களைப் போல வியாபார நோக்குடன் ”கொச்சி” வியாபாரிகள் என அழைக்கப்படும் மலையாளிகள் வருகை தந்துள்ளனர். இதன் பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஆட்சி செல்வாக்கு செலுத்திய காலத்தில் தெலுங்கர் பல நாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆங்கிலேயர் காலத்து தொழிலாளர்கள் வருகை பற்றி பல்வேறு நூல்கள் உண்டு. இதில் சாதி அடிப்படையில் விகிதாசாரங்கள் தொகைகள் கூறப்பட்டுள்ளன. நாயுடு, ராவ், நாயர் சாதியினர் பற்றியும் குறிப்புகள் உள்ளன. கேரள நாட்டின் அல்லது மலையாளிகளின் முக்கிய நகரமாக கொச்சின் விளங்குகிறது. கேரள இலங்கையைப் போல தென்னை மரங்கள் உண்டு. தென்னை சாராயத்திற்கும், கல்லுக:கம் பிரசித்தி பெற்ற இடம். இலங்கையிலும் கேரளக்காரர்களே அதாவது மலையாளிகளே அதிகம் பார்கள் அல்லது தவரணைகள் நடத்தினர். சாராயம், கல்லு இவர்களது முக்கிய வியாபாரமாகும். இவர்களது தவரணைகள் ”கொச்சி தவரணை” அல்லது ”கொச்சி பார்” என்றே அழைக்கப்பட்டது. இலங்கையிலுள்ள கேரள வம்சாவழி மலையாளிகள் ஓனம் பண்டிகை, விசு ஆகிய பெருநாள்களை கொண்டாடுகின்றனர். இது தைப் பொங்கல் போல சூரியனுக்கு புது அறுவடையினை வழங்கும் விழாவாகும். எனவே இவ்விரு பிரிவினரைப் பற்றியும் தனித்தனியாக ஆராய வேண்டியதும் இவர்களது பதிவுகளை முன்கொணர வேண்டியதும் அவசியமாகும். உசாத்துணை நூல்கள் அரங்கநாதன்.பு.சு, 1974, விஜய நகரப்பேரரசு கிரட்டிண தேவராயர், சென்னை , தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். சர்மா, சி.ஆர், 1987, தெலுங்கு இலககியம் ஒரு கண்ணோட்டம் சென்னை , தமிழ்நாடு பாரி நிலையம். நீலகண்ட சாஸ்திரி, கே.ஏஈ 1966, தென் இந்திய வரலாறு. இலங்கை அரசாங்க பாஷைப்பகுதி. மாணிக்கம், தா.சா, 1974, தமிழும் தெலுங்கும், சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். வாழ்வியல் களஞ்சியம் தொகுதி - பத்து, 1988. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழம் தஞ்சாவூர் எழுத்துப் பிழைகளுக்கு இணைத்தவர் பொறுப்பில்லை!
 13. 1 point
  அட ஒரு சந்தோசத்தில சொன்னாலும் விடமாட்டீங்களோ எனது த(து)ம்பி Texas ல் குப்பை கொட்டுகிறார்.
 14. 1 point
  நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன் நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம் சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து . நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,''ஐ ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல் ,புலம்பெயர் வாழ்வுக்கும் தாயக வாழ்வுக்கும் இடையே பல வேறு தளங்களில் தத்தளிக்கும் வாழ்வின் ஒரு வெட்டுமுகம் என்பதில் ஐயமில்லை . எழுத்தாளர் ஒருவர் தனது படைப்பை மக்கள் முன் வைக்கும் நோக்கம் என்ன ?இப்போது வாழும் மனித குலம் இன்னும் சிறிதளவு சிறந்ததாக இன்னும் கொஞ்சம் மனிதப் பண்பு மிக்கதாக மேலும் சற்றுக் கூரப்படைந்ததாக மாற அந்தப் படைப்பு உதவுமாக இருந்தால் அது படைப்பாளியின் வெற்றிப்படி என்று கருதலாம் .கதையின் உள்ளடக்கம் தருகின்ற செய்தி வாசகர் ஒருவரிடமாவது இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் உருவம் கலைநயம் மிக்கதாக அமைந்து ரசிகரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் .உதாரணமாக இந்நூலில் 'ஆசை மனதளவு 'என்ற கதையின் நாயகி விழுமியமும் அறமும் மாறுபட விரும்பாதவளாய் உயர்ந்து நின்று உள்ளடக்க நோக்கத்தை நிறைவு செய்கிறாள் . Rocco Fumento என்ற ஆய்வாளர் சிறுகதை நாலுவகை என்பார் . 1.நிகழ்ச்சியால் சிறப்பெய்தும் கதை 2.சூழலால் சிறப்பெய்தும் கதை 3.கதை மாந்தரின் பண்பால் சிறப்பெய்தும் கதை 4.உரிப்பொருளால் சிறப்பெய்தும் கதை 'பணத்துக்காக எதுவும் செய்யலாம் 'என்ற கலாசாரம் தமிழர் மத்தியில் மிக வேகமாகப் பரவுகிறது .இனியாளின் அக்கா அதற்கான ஒரு வகை மாதிரி .அதனால் அது கதைமாந்தரின் பண்பால் சிறப்புப்பெறுகிறது .என்ஜினியர் கதை கலாசார அதிர்ச்சியை அழகாகச் சொல்லுகிற அதே நேரம் தாயகத்தில் வளர்ந்த ஆண் ,வெளிநாட்டில் வளர்ந்த பெண் ஆகியோரின் பாத்திரப் படைப்பை மிக இயல்பாகத்தந்து அத்தகைய திருமணத்தில் வரக்கூடிய நெருக்கீட்டை கதை மாந்தர் சித்திரிப்பால் சிறப்புறச் சொல்கிறது பெண்மனது கதை முதுமையில் வரும் இயலாமை ,வன்முறை ஆகியவற்றைக் காட்டினாலும் தேவகி என்ற பாத்திரத்தினால் சிறப்புறுகிறது .தேவகியை வகைமாதிரிப் பாத்திரம் எனப்பார்க்கலாம் . வேப்பங்காய்கள் அழகான தலைப்பு .நீளமான கதை.சிறுகதைக்கட்டமைப்பு ப் பேணப்படுகிறதா உடைந்துவிடுகிறதா என்ற ஐயம் ஏற்பட்டாலும் சிந்தியா பாத்திரத்தால் உயர்வடைகிறது . விடுதலை தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று .நந்தா என்கிற அருமையாக வார்க்கப்பட்ட பாத்திரம் அதற்கான காரணம் .சம்பவங்கள் இதனை இயற்பண்பு கொண்ட கதை ஆக்கி விடுகின்றன . நிகழ்வுகளால் சிறப்பெய்தும் கதைகளில் உறவுகள் ஒன்று.ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வு முறையின் மாற்றம் பற்றி அது பேசுகிறது .மகனுடைய நடத்தை நிறையவே சிந்திக்க வைக்கிறது .அவன் உணர்வு பூர்வமாகச் சந்தோஷிக்கிறானா ?தனது எதிர்ப்பைக் கோபமாக வெளிப்படுத்தாவிட்டாலும் உறுதியாகவேனும் புலப்படுத்தா த காரணம் என்ன ?பயமா ?அசௌகரியமான சூழலை எதிர்கொள்ளும் தயக்கமா ?எதிர் காலத்தில் தனக்கான முன்மாதிரி என்று நினைக்கிறானோ ?விவாதிக்கத் தூண்டும் பாத்திரம் . எப்போதும் இரவு நல்ல தலைப்பு .நிகழ்வுகளால் உயரும் மற்றோர் கதை .பெண்கள் மீதான வன்முறை கலை நயத்துடன் வெளிப்படுகிறது .ஆயினும் வாசகர் திருப்திப்பட முடியவில்லை . தொகுதியின் தரமான கதைகள் வரிசையில் வரக்கூடிய மற்றொன்று வரம் வேண்டினேன் .நிகழ்வுகளால் மேலேவருவது .மருத்துவருக்கு இந்த மாற்றம் சாதாரணமாக இருக்கலாம் .ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்ட பெற்றோரின் உணர்வு ?எமது மரபணு குழந்தைக்கு வராவிட்டால் உயிரியல் தொடர்ச்சி என்ற திருப்திக்கு என்ன ஆவது ?இதுதான் நியதி என்றால் குழந்தை ஒன்றைத் தத்து எடுத்திருக்கலாமே ?இவ்வளவு செலவும் துன்பமும் ஏன் ?விடை இல்லாத வினாக்கள் . உணர்வுகள் கொன்றுவிடு என்ற தலைப்புக் கதை உரிப்பொருளால் சிறப்புப் பெறுவது .நேரில் பார்க்காத ,பழகாத ,முகப் புத்தக உறவுகளின் கொடுமை பற்றி அழகாகப் பேசுவது இக்கதை .அண்மையில் தாயகத்தில் இருந்து ஒரு பெண் ,நிஜத்தில் இத்தகு உறவைத்தேடி இந்தியா சென்று தற்கொலையில் தன் வாழ்வை நிறைவு செய்திருப்பது பத்திரிகைச் செய்தி .முடிவாகிப்போனது என்ற கதையும் தற்கொலையில் முடிகிறது .நல்ல அன்பு என்றால் உயிர் ஒன்றாகப் போகுமா ?அல்லது முறையற்ற உறவு அகால மரணத்தில் தான் முடியுமா ?எழுத்தாளரின் தொனி காதலரின் முடிவுக்குச் சாதகம் போலத் தெரிகிறது . அநீதியை எதிர்ப்பது கனவில் தான் முடியும் என்கிறதா ரயில் பயணம் ?வாழ்வு வதையாகி என்ற கதை Euthanasia கருப்பொருளைக் கொண்டது .உலக சரித்திரத்தில் இது புது விடயம் .தமிழ்ச் சிறுகதை ஒன்றில் இக்கருப்பொருளைக் கலைத்துவமாகக் கையாண்டமை எழுத்தாளரின் பலம் .ஆனாலும் இனிமேல் மாற்றவே முடியாத கடும் வேதனையைத் தருகிற நோய்களுக்குத்தான் Euthanasia சாத்தியப்படும் .பாரிசவாதம் மெல்ல மெல்லக் குணமடைவதும் உண்டு .கடும் வேதனை தராத அந்த நோயுடன் பத்து வருடத்துக்கு மேல் வாழ் பவர்களும் உண்டு .கதையின் யதார்த்தப் பண்பு கேள்வியாகிறது . மனம் எனும் மாயம் என்ற கதையில் பலவீனமான மனம் ஒன்று அழகாகக் காட்டப்பட்டாலும் முடிவு நம்பும்படி இல்லை . ஆசிரியரின் சில இடங்களில் இவர் எழுத்தாளர் தான் என்பதை உறுதி செய்கிறது .உதாரணமாக ,'வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது '(கிடந்தன ?)ஆயினும் மொழி இன்னும் சிறக்கலாம் . படைப்பு வட்டம் என்பது தயாராதல் ,அடைகாத்தல் ,உந்தல் ,சரிபார்த்தல் ,என நாலு நிலைகளைக் கொண்டது .சரிபார்த்தல் என்ற நிலையில் எழுத்துப் பிழைகள் ,இலக்கண வழு ஆகியனவும் கவனிக்கப் படவேண்டும் .நின்மதியா ?நிம்மதியா ?ஏஜென்சியா ?ஏயென்சியா? கதையோடு கதையாகச் சொல்லிச் செல்லும் சில விடயங்கள் மனதில் நிற்கின்றன .காசுக்காகப் புருஷனைவிவகாரத்துச் செய்துவிட்டு ஒன்றாக வாழும் மேல்நாட்டுக் கலாசாரம் ஒரு வகைமாதிரி . மனதுக்கு நிறைவு தரும் தொகுப்பு . கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன் இலங்கை
 15. 1 point
 16. 1 point
  ஐம்பது ரூபாவுக்கு.... கொக்கு சுட்டு இருந்தால், துவக்கு திருத்த வேண்டி வந்திருக்காது.
 17. 1 point
  நன்றி உடையார். கடைசியில் பேட்டி கண்டவர் சிரிப்பார் பாருங்கோ ஒரு சிரிப்பு. அந்தச் சிரிப்பின் அர்த்தம் ஆயிரம்..பேட்டி கண்டவர் மிகவும் முக்கியமான வேலை ஒன்றைச் செய்திருக்கிறார். அவருக்கு நாம் நன்றி கூற கடமைப் பட்டவர்கள்.
 18. 1 point
  சரியான ஆயன் இல்லாமல் தவிக்கும் ஆடுகளை விழுங்க விசர் பிடிச்ச ஓநாய் ஒன்று வெளிக்கிடுகுது.
 19. 1 point
  நிழலி, நீங்கள் கூறிய விடயம் தொடர் பாக ஒரு காணொலி பார்த்தேன். 1982 ம் ஆண்டு பாண்டி பஜார் துப்பாக்கி சண்டை அதன் அதன் பின்னரான சம்பவங்களை திகதி வாரியாக விளக்கும் காணொலி என்பதால் இதனை இணைக்கிறேன்.
 20. 1 point
  அந்த மூன்று நிமிடச் சாட்சியம் June 11, 2020 ஷோபாசக்தி நண்பர்கள் சயந்தனும், சோமிதரனும் இன்று வெளியிட்டிருக்கும், ஒரு மூன்று நிமிட நேரக் காணொளிகுறித்துப் பேசிவிட நினைக்கிறேன். இற்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன்னதாக, யாழ் பொதுநூலக நிலையத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது நாம் அறிந்ததே. அது ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது, எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுவதுண்டு. தடுத்து நிறுத்திய புலிகள் அதற்கான காரணத்தை எப்போதுமே சொன்னதில்லை. அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் தலைமையில், வீ. ஆனந்தசங்கரி அந்த நூலகத்தைத் திறந்துவைப்பதாக இருந்தது. திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டதும், சம்மந்தப்பட்ட செல்லன் கந்தையனும் ஆனந்தசங்கரியும் அறிக்கைகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டார்கள். அவற்றில் சொல்லப்பட்ட காரணம் ‘செல்லன் கந்தையன் தலிச் சாதியொன்றைச் சேர்ந்தவர் என்பதாலேயே திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது’. இருவரதும் இந்தச் சாட்சியங்களை, அப்போது புலிகளோ, யாழ் மாநகரசபையின் மற்றைய உறுப்பினர்களோ மறுக்கவில்லை. புலிகள் திறப்புவிழாவைத் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து ஒட்டுமொத்த மாநகரசபை உறுப்பினர்களும் உடனடியாகவே பதவி விலகினார்கள். இதற்கு வெளியிலும் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. பல்வேறு சிறிய அமைப்புகள் நூலகத் திறப்புவிழாவை எதிர்த்தன. ஆனால் எதிர்த்தற்கு அவை சொல்லிய காரணங்கள் நம்பத் தகுந்தவையாக இருக்கவில்லை. ‘நூலகத் திருத்த வேலைகள் முற்றுப்பெற முன்பு திறப்புவிழாவை நடத்தக்கூடாது’ என்பதே அவர்கள் முன்வைத்த சப்பைக் காரணம். தேசிய நாளிதளான ‘தினக்குரல்’ செல்லன் கந்தையனை உள்ளாடை தெரிய, சாதிய இழிவு தொனிக்கக்கூடிய ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. செல்லன் கந்தையன் இந்தச் சந்தர்ப்பத்தில் தனது தரப்பைத் தெளிவாகவே பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தினார். டெய்லிமிரர் – தினமுரசு போன்ற பத்திரிகைகளில் தனது கண்டனத்தை வெளிப்படையாகப் பதிவு செய்திருந்தார். புலிகளுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்யப் பல ஊடகங்கள் மறுத்திருக்கும் என்பதும் நாம் அறிந்ததே. பத்திரிகைச் சுதந்திரம் பாதாளத்தில் கிடந்த காலமது. புலிகள் கடுமையாகப் பத்திரிகைகளைக் கண்காணித்தார்கள். ஆனால் தினக்குரலில் வெளியான சாதிவெறிக் கேலிச் சித்திரத்தை அவர்கள் கவனித்து ஏதும் நடவடிக்கை எடுத்ததாகத் தகவல்களில்லை. 01.03.2003ல் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு செல்லன் கந்தையன் வழங்கிய செவ்வியில் “இந்த நூலகம் திறக்கப்படுவதால் புலிகளுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. அவர்கள் நூலகம் திறப்பதைத் தடுத்ததிற்குப் பின்னால் வேறோரு காரணமுள்ளது என்றே நான் கருதுகிறேன். நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்துள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் பொதுநூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம் புலிகள் முற்று முழுதாகச் சாதிய அடிப்படையிலேயே இப் பிரச்சினைகளை அணுகினார்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்றார். ‘தினமுரசு’ பத்திரிகைக்கு 23.02.2003-ல் வழஙகிய நேர்காணலில் “ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த என்னுடைய பெயர் நூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் இடம்பெற்று விடக்கூடாது என்பதற்காகவே திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது” என்றார் செல்லன் கந்தையைன். பின்னொரு நாளில் இந்தியத் தூதுவரகத்தால் யாழ் நூலகத்துக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்ட வைபவத்தில் செல்லன் கந்தையன் கலந்துகொண்டார். அப்போது அவர் உணர்சிபொங்கக் கண்ணீர் மல்கி இவ்வாறு பேசினார் என்பதை Sunday Times பதிவு செய்து வைத்திருக்கிறது: “சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக போராடுபவர்கள் என சொல்லிக்கொள்ளும் விடுதலைப்புலிகள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் நூலகத்தை திறந்து வைக்கும் வரலாற்றுப் பெருமையை தடுத்து நிறுத்தியுள்ளனர்” (The controversy over the opening of the Jaffna library which was postponed has drawn in the issue of caste. The former Mayor of Jaffna, Sellan Kandaiyan is on record saying that though the LTTE was supposed to be carrying its struggle for the oppressed low caste, now they have deprived him of opening the library and going down in history as a member of the low caste who had the privilege of opening the building. In a moving speech at the ceremony of the Indian High Commission handing over a donation of books to the Jaffna Library last Monday at the Indian Cultural Centre, Mr. Kandaiyan broke down in tears and recounted the story of the attempts he made to get the library opened.) இந்தப் பின்னணியினதும் சாட்சியங்களினதும் அடிப்படையில்தான் தலித் அரசியலாளர்களும் இடதுசாரிகளும் எழுத்தாளர்களும் நிகழ்ந்த சாதிவெறியைக் கண்டித்தும், செல்லன் கந்தையனுக்கு நியாயம் கோரியும் எழுதினார்கள். அப்போது நாங்கள் சிலபேர் இயங்கிய ‘NON’ என்ற குழு வெளியிட்ட ‘ஒரு வரலாற்றுக் குற்றம்’ என்ற சிறுநூலே முதலில் இதை விரிவாக ஆவணப்படுத்தியது என நினைக்கிறேன். இந்தச் சிறுநூலை சாதி எதிர்ப்புப் போராளியான தாயார் காசிநாதர் மணிமேகலைஅவர்களின் நினைவாக மறுபிரசுரமாக்கி, சுவிஸ் யோகா மாஸ்டர் நூற்றுக்கணக்கான பிரதிகள் விநியோகித்தார். பல்வேறு எழுத்தாளர்களும் நிகழ்ந்த சாதிவெறியைக் கண்டித்து எழுதினார்கள். ‘இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்’ என்ற ஆவண நூலில் வெகுஜனன் – இராவணாவால் இந்தச் சாதிவெறிச் செயல் கண்டிக்கப்பட்டு ஆவணமாக்கப்பட்டது. சோமிதரனும் சயந்தனும் நீண்ட காலமாகவே, செல்லன் கந்தையன் சொன்னதை மறுத்துவந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தங்களுடைய மறுப்புக்கு ஆதாரங்கள் எதையுமே நேற்றுவரை வைத்திருக்கவில்லை. இன்று அவர்கள் ஓர் ஆதாரத்தை உருவாக்கிவிட்டார்கள். அவர்கள் செல்லன் கந்தையைனை நேர்கண்டு ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வாறான ஒரு வரலாற்று நிகழ்வை வெறும் மூன்றே நிமிடக் காணொளியின் மூலம் தெளிவுபடுத்த நினைக்கும் அவர்களது முயற்சி வியக்கத்தக்கது. அதனிலும் வியக்கத்தக்கது செல்லன் கந்தையனிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகள். செல்லன் கந்தையன் நூலகத் திறப்புவிழா குறித்து, அவர் இதுவரை கூறிவந்த எல்லாச் செய்திகளையும் மறுப்பதுபோன்ற தொனியில் இக்காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நூலகத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டதற்குக் காரணம் சாதியம் அல்ல. இது உண்மையாகவே இருந்தால், இது மகிழ்ச்சிக்குரிய செய்தியே. நூலகத்திலிருந்து செல்லன் கந்தையனின் பெயர் பதிக்கப்பட்ட கற்பலகை சென்ற ஆண்டு பெயர்த்தெடுக்கப்பட்டதை நாம் மறந்துவிடலாம். தினக்குரல் வரைந்த கேலிச் சித்திரத்தில் உள்ளவர் செல்லன் கந்தையனே இல்லை என்றுகூட நாம் ஆறுதல் அடையலாம். ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை உள்நோக்கமுடையது என நாம் முடிவு செய்துவிடலாம். ஆனால் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் தினமுரசுவுக்கும் டெய்லிமிரருக்கும் தனது வாயால் சொன்ன செய்தியை நாம் எப்படி மறக்க முடியும்? இந்தியத் தூதரக வைபவத்தில் அவர் கண்ணீர் மல்க நின்று “எனக்குக் கிடைத்திருக்கவேண்டிய வரலாற்றுப் பெருமை என் சாதி காரணமாகவே எனக்கு மறுக்கப்பட்டது” எனச் சொன்னதை நாம் எப்படி மறக்க முடியும்? இந்தக் கேள்விகளையல்லவா செல்லன் கந்தையனை நேர்கண்டவர் கேட்டிருக்க வேண்டும். செல்லன் கந்தையன் வழங்கிய பத்திரிகை நேர்காணல்கள் திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டனவா? இந்தியத் தூதரக வைபவத்தில், “ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவர் ஒருவர் நூலகத்தை திறந்து வைக்கும் வரலாற்றுப் பெருமையைப் புலிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்” எனப் பேசுமாறு அவர் வற்புறுத்தப்பட்டாரா? என்றெல்லாவா கேட்டிருக்கவேண்டும். இந்தக் கேள்விகள் ஏன் தவிர்க்கப்பட்டன. இதுதானே இந்நேர்காணலின் மையக் கேள்வியாக இருக்க முடியும்! இப்போதுகூட ஒன்றும் கெட்டுவிடவில்லை, இந்தக் கேள்வியையும் அவர்கள் செல்லன் கந்தையனிடம் கேட்டுப் பதிலைப் பெற்று வெளியிட்டுவிட்டால் நமக்குப் பூரணமான தெளிவு கிடைத்துவிடும். யாழ் நூலகத்தின் மீதும் புலிகளின் மீதும் விழுந்த வரலாற்றுக் கறை முழுவதுமாகவே துடைக்கப்பட்டுவிடும். அது எனக்கும் மகிழ்ச்சியே. அதேவேளையில் யாழ் நகரத்தின் முதலாவது தலித் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான செல்லன் கந்தையன் ஒரு வடிகட்டின பொய்யரே என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். செல்லன் கந்தையன் பொய்யரே என நிறுவும் முயற்சியில் முதல் கட்டமாக மூன்று நிமிட வெற்றி சயந்தனாலும் சோமிதரனாலும் சாதிக்கப்பட்டுவிட்டது. பார்க்கலாம், வரலாறு நமக்கு என்ன பதிலை வைத்திருக்கிறது என்று… நிகழ்ந்த உண்மைகளைத் தெட்டத் தெளிவாக அறிந்தவர்களும், அந்த உண்மைகளை ஆவணப்படுத்தக் கூடியவர்களும் நம்மிடையே ஏராளமாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது கனத்த மவுனமே பலவேளைகளில் ஒடுக்குபவர்களுக்குச் சாதகமாகவும் வாய்ப்பாகவும் மூடுதிரையாகவும் அமைந்துவிடுகிறது. ‘ஓர் இன ஒடுக்குமுறையின் போது மவுனம் சாதிப்பவர்களும் யுத்தக் குற்றவாளிகளே’ என்பார்கள். அது சாதி ஒடுக்குமுறைக்கும் நிச்சயமாகவே பொருந்தும். http://www.shobasakthi.com/shobasakthi/2020/06/11/அந்த-மூன்று-நிமிடச்-சாட்/
 21. 1 point
 22. 1 point
  ஆள் உசார்.. முன்கூட்டியே நீதிமன்றம் சென்றுவிட்டார். கம்பிகுள்ள களி தின்றுப்பார். இல்லையென்றா பைத்தியமாகி ஏர்வாடி தர்க்காவில் இருந்திருப்பார்..
 23. 1 point
  கோப்பி கொட்டைகளை தொங்கவிட்டு உணவு தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால், இடைநிறுத்தப்பட்ட விற்பனை பற்றி எழுதி இருக்கிறீர்கள். சொல்லுக்கு சொல்லு மொழிபெயர்த்து அர்த்தத்தை தொலைத்துவிடலாமா? இந்திய மத்திய அரசின் ஆவணம் ஒன்றில், The government has a big roll to play. என்பதை தமிழில், “அரசாங்கம் விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை கொண்டுள்ளது.” என்று மொழிபெயர்த்து இருந்தார்கள்.
 24. 1 point
 25. 1 point
  அதுதான் எல்லா இடமும் நம் மக்களிடையே நடக்குது தம்பி. எனது சொந்தம் நட்பு வட்டாரம் முழுக்க அதே தான். மிகச்சிலரே கொஞ்சமாவது செய்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தேவை என்ன என்று தெரிகிறது மனம் தான் இல்லை. எல்லாம் சுயநலம் தான். நீர் சொன்னமாதிரி யாழ் கள உறுப்பினர் பலரும் தமக்கு முடிந்த அளவு எமது மக்களுக்கு உதவுகிறார்கள். அதை விட நாம் ஒன்றுமே செய்ய முடியாது தம்பி . இப்போது செய்வதிலும் பார்க்க , சிறப்பாக ஏதாவது எமது மக்களுக்கு அதிலும் முக்கியமாக போராளிகளின் குடும்பங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்றுதான் முயற்சி செய்கிறேன். உமது மனித நேயம் கண்டு மிகவும் மகிழ்ச்சி.
 26. 1 point
  சுவி... நீங்கள் குறிப்பிட்ட கடை தெரியும். மத்தியான நேரம்... சனம் அதிகமாக இருக்கும். ஜும்மா தெருவில் உள்ள... முஸ்லீம் தையல் காரரிடம் தான்.... நான் "பெல் பொட்டம்" கால் சட்டை, தைக்கக் கொடுப்பேன். தையல் கூலி... 25 ரூபாய்.
 27. 1 point
 28. 1 point
 29. 1 point
  அமரர் துரைரத்தினம்- இவரின் வாழ்க்கையை நீங்கள் அறிந்ததுண்டா? சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப்போராட்டத்திற்கு கொடுத்து விட்டு இறுதிக்காலத்தில் ஆச்சிரமத்தில் இருந்து காலமானவர்தான் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம். தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கல்வி கற்கிறார்கள் என பரவலான குற்றச்சாட்டு காணப்படுகிறது. இந்த காலத்தில் சொத்து சேர்க்காத அரசியல்வாதிகள் இல்லை எனலாம். ஆனால் 23ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த துரைரத்தினம் அவர்களிடம் இருந்தது அவரின் மனைவியின் வீடு ஒன்றுதான். அதையும் இராணுவ ஆக்கிரமிப்பால் இழந்து போனார். நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்களின் பிள்ளைகள் இந்தியாவிற்கோ லண்டனுக்கோ செல்லவில்லை. அவர்கள் சென்றது தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு தான். தொண்டமானாற்றை பிறப்பிடமாக கொண்ட கதிர்ப்பிள்ளை துரைரத்தினம் 1930ஆண்டு ஓகஸ்ட் 10ஆம் திகதி பிறந்தார். கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியான அவர் ஆசிரிய தொழிலை ஆரம்பித்தார். சட்டகல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து சட்டத்தரணியும் ஆனார். சிறுவயது முதல் தமிழரசுக்கட்சியின் அகிம்சை போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் தனது 30ஆவது வயதில் 1960ஆம் ஆண்டு தேர்தலில் பருத்தித்துறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் 1983ஆம் ஆண்டு 6ஆவது திருத்த சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். சிரித்த முகம், மிக எளிமையான மனிதர். தேர்தல் பிரசார கூட்டங்களில் குட்டிகதைகளை சொல்லி சிரிக்க வைப்பார். அக்கதைகளில் ஆழமான கருத்துக்கள் பொதிந்திருக்கும். சொந்தமாக ஒரு வாகனம் வைத்திருந்தது கிடையாது. அக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன பெர்மிற் வழங்குவது கிடையாது. கொழும்புக்கு புகையிரதத்திலேயே செல்வார். மெய்பாதுகாப்பாளர்கள் கிடையாது. 1977ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் பருத்தித்துறை தொகுதி மக்கள் பணம் சேர்த்து இவருக்கு ஜீப் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தனர். அந்த ஜீப் வண்டியின் சாரதியாக அவரின் மகனே இருந்தார். தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் சொன்ன கதை ஒன்று. கொழும்பு சிராவஸ்தி ( நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாசஸ்தலம் ) முன்னால் உள்ள பஸ்தரிப்பிடத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த போது அங்கு நீண்டகாலமாக கடைவைத்திருந்த ஒரு முதியவர் கேட்டாராம். ஐயா நீங்கள் எவ்வளவோ காலமாக நாடாளுமன்றத்திற்கு பஸ்ஸிலேயே போகிறீர்களே என..... பஸ்ஸில் போவதால் தான் ஒவ்வொரு முறையும் எனது தொகுதி மக்கள் என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என தான் பதிலளித்ததாக கூறினார். 1983ஆம் ஆண்டுக்கு பின்னர் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றனர். ஆனால் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் தனது உடுவில் இல்லத்திலும், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் தனது நல்லூர் இல்லத்திலும், பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரத்தினம் தனது தொண்டமானாறு இல்லத்திலும் தங்கிருந்தனர். இந்த மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு இந்திய றோ அமைப்பு ரெலோ இயக்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அக்காலப்பகுதியில் இந்திய றோவின் வழிநடத்தலில் ரெலோ இயக்கம் பல படுகொலைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தி கொண்டிருந்தது. இந்திய றோ அமைப்பின் உத்தரவை அடுத்து ரெலோவின் தலைவர் சிறிசபாரத்தினம் தனது பொறுப்பாளர்களான பொபி, தாஸ் ஆகியோருக்கு தமிழ் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு தகவல் அனுப்பினார். உடுவிலிருந்த தர்மலிங்கத்தையும் நல்லூரில் இருந்த ஆலாலசுந்தரத்தையும் சுட்டுக்கொல்லுமாறு பொபிக்கு தகவல் அனுப்பினார். தொண்டமானாறில் இருந்த கே.துரைரத்தினத்தை சுட்டுக்கொல்லுமாறு வடமராட்சி பொறுப்பாளர் தாஸிற்கு உத்தரவிட்டார். ஆனால் துரைரத்தினத்தை சுட்டுக்கொல்வதற்கு தாஸ் இணங்கவில்லை. வடமராட்சியில் மக்கள் செல்வாக்குள்ள ஒரு அப்பாவி மனிதரை எந்த குற்றச்சாட்டுக்களும் இன்றி எப்படி கொல்வது என அதற்கு அவர் இணங்கவில்லை. தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். ஆனால் பொபி உடனடியாக ஆலாலசுந்தரத்தையும் தர்மலிங்கத்தையும் வீட்டிலிருந்து கடத்தி சென்று சித்திரவதை செய்து சுட்டுக்கொன்று விட்டு அவர்களின் வீடுகளுக்கு அருகில் சடலத்தை வீசியிருந்தனர். துரைரத்தினம் அவர்கள் அந்த படுகொலையிலிருந்து தப்பியிருந்தார். 1983ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் இளைஞர்கள் பலர் ஆயுதப்போராட்டத்தில் இணைந்து கொண்டனர். துரைரத்தினம் அவர்களின் மகனும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். கமலை மட்டக்களப்பு படுவான்கரை மக்கள் பெரிதும் அறிந்திருந்தனர். குமரப்பாவுடன் நீண்டகாலம் மட்டக்களப்பு படுவான்கரையில் இருந்த அவர் மட்டக்களப்பில் பல தாக்குதல்களில் ஈடுபட்டவர். தந்தையை போலவே சிரித்த முகத்துடன் மக்களுடன் அன்பாக பழகுவதில் கமல் வல்லவர். நெல்லியடி மத்திய மகாவித்தியாலய இராணுவ முகாம் மீதான தற்கொலை தாக்குதலில் ஒரு அணிக்கு தலைமை தாங்கி சென்ற மேஜர் கமல் அந்த தாக்குதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் மகனை மட்டுமல்ல மகளையும் விடுதலைப்போராட்டத்திற்கு வழங்கியிருந்தார். துரைரத்தினம் அவர்கள் வடமராட்சி கிழக்கு மக்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தார். அந்த கிராமங்களுக்கு செல்லும் அவர் அந்த மக்களுடன் தரையில் இருந்து உணவு உண்டு, சுகம் விசாரித்து வருவதை தனது கடமையாக கொண்டவர். எனக்கு வாக்குரிமை 1977ல் தான் கிடைத்தது. நான் வாக்களித்த முதலாவது அரசியல்வாதி துரைரத்தினம் அவர்கள் தான். ஒரு முறை தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் போது பருத்தித்துறை நகரப்பகுதி வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. பருத்தித்துறை நகரசபை தலைவராக இருந்த நடராசா முன்னணியில் இருந்தார். ஆனால் துரைரத்தினம் சிரித்துக்கொண்டிருந்தார். அவரின் ஆதரவாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர் தோல்யடையப்போகிறார், இந்த வேளையிலும் இவர் சிரித்து கொண்டிருக்கிறாரே என்று. வடமராட்சி கிழக்கு வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட்ட போது 99வீதமான வாக்குகள் துரைரத்தினம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குகளால் அவர் வெற்றியடைந்திருந்தார். அப்போது துரைரத்தினம் அவர்கள் சொன்ன வார்த்தை. எனக்கு தெரியும் வடமராட்சி கிழக்கு மக்கள் என்னை கைவிட மாட்டார்கள். தேர்தல் முடிந்த பின் மருதங்கேணியிலிருந்து ஆழியவள வரை பூப்பந்தல் ஒன்றில் அவரை மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றதை சிறுவனாக நின்று பார்த்தது இன்றும் மனதில் நிழலாடுகிறது. வடமராட்சி லிபிரேசன் ஒப்பிரெசன் இராணுவ நடவடிக்கையின் போது தொண்டமானாற்றில் உள்ள வீடு இராணுவ ஆக்கிரப்புக்குள்ளாகியது. அங்கிருந்து இடம்பெயர்ந்த அவர் அகதி முகாமில் மக்களோடு மக்களாக இருந்தார். கைவெனியனும் சாறனுடன் அகதி முகாமில் மக்களோடு மக்களாக வாழ்ந்தார். தனது நாடாளுமன்ற ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை வயோதிபர்களை பராமரிக்கும் ஆச்சிரமத்திற்கு வழங்கி வந்தார். இறுதிக்காலத்தில் அந்த ஆச்சிரமத்திலேயே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்கள் தனது 65ஆவது வயதில் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி காலமானார். 65வயது என்பது மரணத்தை நெருங்கும் முதுமை வயது அல்ல. ஆனால் துரைரத்தினம் அவர்களின் இறுதிக்காலம் என்பது வேதனையும் மன அழுத்தமும் நிறைந்த காலமாக இருந்தது. பிள்ளைகளை இழந்த சோகம், சொந்த வீடு வாசல்களை இழந்த மன அழுத்தம். தான் நேசித்த மக்கள் சந்தித்து வந்த இடப்பெயர்வு உயிரிழப்பு துன்பங்கள். சிரித்த முகத்துடன் வலம் வந்த அந்த மனிதன் இறுதியில் துன்பங்களையும் வேதனைகளையும் சுமந்தவாறு 65வயதிலேயே இந்த உலகை விட்டு சென்று விட்டார். அமரர் துரைரத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இப்போது இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் கற்க வேண்டும். இப்போது உள்ள அரசியல்வாதிகளை பார்க்கும் போது அமரர் துரைரத்தினம் போன்றவர்கள் மீண்டும் பிறந்து வரமாட்டார்களா என்று எண்ணத்தோன்றும். இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு அவரைப்பற்றி தெரியாவிட்டாலும் எங்களை ஒத்த தலைமுறையினர், அதற்கு முன்னைய தலைமுறையினர் மனங்களில் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ( அவர் பற்றி அறிந்தவர்கள் உங்கள் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ) இரா.துரைரத்தினம்.
 30. 1 point
 31. 1 point
  உண்மை சகோதரி உங்கள் சலட்டுகள் சுப்பர் தொடருங்கள் நாங்களும் எங்களுடைய கைவண்ணத்தையும் காட்டலாமென்று பார்த்தால் படங்களை இங்கு போடேலாமல்கிடக்கு
 32. 1 point
  மக்களது தேவைகளையும் இடர்களையும் மாற்றுவதற்கான அரசியற் சிந்தனை இருந்தால் இப்படிப் பொய்களை உற்பத்தி செய்யும் தேவை எழாது. கடந்த காலத்திற் பேட்டியிற் கூறியதுபோல் துணிந்து இந்தத் தேர்காலத்திற் முன்வைக்கலாமே. இந்த பொய் தேவைப்படதே.
 33. 1 point
  சுமந்திரன் ரொம்ப குழம்பிபோயுள்ளார். இரண்டு தோணியில் ஒரே நேரத்தில் பயணிக்க விரும்புவதால், நிறைய பொய்களை கூறுகிறார்.
 34. 1 point
  மிகவும் உண்மையான கருத்து. தான் கொண்ட கொள்கைக்கு என்றும் விசுவாசமாக இருக்கும் ஒரு போராளியான நீங்கள் வாழ்ந்து வருவதையே சொல்லி இருக்கிறீர்கள். இவர்களும் தாம் தேர்ந்து கொண்ட மனிதத்துக்கான போராட்டத்துக்கு விசுவாசமான போராளிகளாகவே இன்றும், என்றும் இருக்கிறார்கள். இராஜினியின் கொலையோ, ஏனைய அச்சுறுத்தல்களோ இவர்களை பின்னடைய வைக்கவில்லை. ஒரே கொள்கையான, மனிதத்துக்கு முதலிடம் என்ற கொள்கைக்கே இவர்கள் விசுவாசமாக இருக்கிறார்கள். இனரீதியான தேசியத்துக்கு முதலிடம் கொடுத்து, மனிதம் அதற்கான விலையாகும் போது இவர்களுக்கும் இனரீதியான தேசியத்துக்கு முதலிடம் கொடுப்பவர்களுக்கும் இடையே முரண்பாடு உருவாகிறது. இனரீதியான தேசியத்துக்கு முதலிடம் கொடுப்பவர்கள் தமது நோக்கத்துக்காக மனிதர்கள் மடிவதை தேவையானதாக கருதுகிறார்கள். மனிதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களோ, ஒவ்வொரு மனித உயிரும் தனது முழுமையான வாழ்வை அனுபவித்து இயற்கை எய்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
 35. 1 point
  சொன்னேன் சொன்னேன். குறிப்பிட மறந்துவிட்டேன். வயது போன காலத்தில் இப்படி யாரும் சுகம் விசாரித்ததாக சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
 36. 1 point
  ரத்த மகுடம்-101 நகரம் என்பது மண் அல்ல. நகரம் என்பது மனிதர்களும் அல்ல. நகரம் என்பது நினைவுகள். நகரம் அல்லாத பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணும் மனிதர்களும் முக்கியமாகத் தெரிவார்கள். நகரவாசிகளுக்கு நினைவுகள் மட்டுமே நெடுந்துணை. ஏனெனில் நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் மிகுதி. நிலைத்திருப்போர் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள். அதனால்தான் காலங்கள் உருண்டோடினாலும் நகரமே அழிந்தாலும் நகர நினைவுகள் மட்டும் தலைமுறைதோறும் தொடர்கிறது. நினைவுகளின் தொகுப்புதானே தொன்மங்களின் அடித்தளம்? இல்லாத நகரத்துக்கே இது பொருந்தும் என்னும்போது மூத்த குடியின் மூத்த நகரான மதுரைக்கு இது உச்சமாக அல்லவா பொருந்தும்? அதுவும் காலங்களைக் கடந்தும் தன் கம்பீரத்தையும் ஜொலிப்பையும் இருப்பையும் நடமாட்டத்தையும் இழக்காமல் இருக்கும் நகரமல்லவா மதுரை..? அதனால்தானே மதுரை குறித்த நினைவுகளின் தொகுப்பு பரிபாடல்களுக்கு முன்பே தோன்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக் காஞ்சியில் நிலைபெற்று அரிகேசரி மாறவர்மரின் ஆட்சிக் காலத்திலும் தன் தடங்களைப் பதித்து வருகிறது...இதனால்தானே ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் இமயத்தை விட உயர்ந்ததாக மதுரை நினைவுகள் வீற்றிருக்கின்றன?!இதை மெய்ப்பிப்பது போலவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதைக் கடத்தவும் தங்கள் பங்களிப்பைச் செய்வது போல்அன்றைய இரவுக் காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட பாண்டிய வீரர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இமயம் கொலுவீற்றிருந்தது! அது அவர்களது நடை உடை பாவனைகளிலும் பிரதிபலித்தது! உறங்கா நகரத்தை உறங்க வைக்க அவர்கள் முயற்சிக்கவேயில்லை. மாறாக, உறங்காதவர்களுக்கும் உறங்குபவர்களுக்கும் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தார்கள்!குறிப்பாக, மதுரைக்கே அழகு சேர்க்கும் வைகை நதிக்கரையில்!இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாம் ஜாமம் தொடங்கப் போவதற்கான அறிகுறிகளை நட்சத்திரங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல் நதிக்கரையில் இருந்த சுங்கச் சாவடி பகலைப் போலவே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.ஆங்காங்கே தூண்களில் பொருத்தப்பட்ட வளையங்களில் செருகப்பட்ட தீப்பந்தங்களின் ஒளி, இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. கணக்கர்கள் ஓய்வில்லாமல் சுவடிகளில் சரக்குப் போக்குவரத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே எடை போடும் கருவி இருக்க... எடைக்குத் தகுந்தபடி நாணயங்களின் எண்ணிக்கையை அளவிட்டு வசூலிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார் வருவாய் அலுவலர்.உள்நாட்டுச் சந்தைகளுக்கான பொருட்கள் கொற்கை துறைமுகத்தில் இருந்து சிறு படகுகள், தோணிகள் வழியே வைகைநதியில் பயணித்து மதுரைக்கு வந்தன. அப்படி வந்த படகுகளும் தோணிகளும் சுங்கச் சாவடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைய வரிசைகட்டி நின்றன.மற்ற தேசங்களுக்கு ஏற்றுமதியாக வேண்டிய பொருட்கள் மாட்டு வண்டியில் சுங்கச் சாவடிக்குக் கொண்டுவரப்பட்டு சாவடியின் மறுபுறத்தில் இறக்கப்பட்டன.இறங்கிய பொருட்கள் அடங்கிய மூட்டையைப் பிரித்துப் பார்த்து சோதனையிட்ட அரசாங்க ஊழியர்கள் பின்பு அவற்றை எடை போட்டனர். எந்த தேசத்துக்கு அப்பொருட்கள் செல்லப் போகிறதோ அதற்கேற்ப சுங்கத் தொகையை கணக்கர் கணக்கிட்டு அறிவித்துக் கொண்டிருந்தார். அதற்கேற்ப உரிய நாணயங்களைப் பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலர், தன் உதவியாளர்களால் எழுதப்பட்டு தயார் நிலையில் இருந்த அத்தாட்சி ஓலையை ஒருமுறைக்கு இருமுறை படித்து சரிபார்த்துவிட்டு அரசாங்க முத்திரையைப் பொறித்துக் கொண்டிருந்தார்.எடைபோடப்பட்டு அத்தாட்சி ஓலை வழங்கப்பட்ட சரக்கு மூட்டைகளை அந்தந்த வணிகர்களின் பணியாளர்கள் பாண்டிய வீரர்களின் மேற்பார்வையில் படகுகளிலும் தோணிகளிலும் வரிசையாக அடுக்கினர். ஒவ்வொரு மூட்டையிலும் அரக்கினால் முத்திரை பதிக்கும் பணியை இருவர் சளைக்காமல் செய்தனர்.மொத்தத்தில் படகுகளும் தோணிகளும் வைகைக் கரையை விட்டு நகர்வதும் கரைக்கு வருவதுமாக இருந்தன. பகலிலாவது உச்சிப் பொழுதில் சில நாழிகைகள் ஓய்வு கிடைக்கும். இரவில் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட நகர முடியாதபடிக்கு பணிச்சுமை அழுத்தும். அதுவும் துறைமுகங்களில் நங்கூரமிட்ட பிற தேசத்து பெரும் மரக்கலங்கள் கருக்கல் சமயத்தில் தம் பயணத்தைத் தொடர தயாராகும் என்பதால் அதற்குள் சரக்குகளைச் சேர்க்கவேண்டுமே என வணிகர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டு தங்கள் பணியாளர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தனர்.இப்படி அனைவருமே தத்தம் பணிகளில் மும்முரமாக இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் எழுந்த நானாவித ஓசைகளை அனுபவித்துக் கொண்டிருந்த வைகை, ‘பார்த்தாயா எனது முக்கியத்துவத்தை’ என இரு கரைகளிடமும் மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தது!‘நாங்கள் மட்டும் சளைத்தவர்களா... எங்களை மிதித்துவிட்டுத்தானே பொருட்களை உன் மீது ஏற்றுகிறார்கள்...’ என இரு கரைகளும் தங்கள் மீது மோதிய வினாக்களுக்கு விடையளித்துக் கொண்டிருந்தன.இவற்றையெல்லாம் கேட்டபடி தனக்குள் சிரித்துக் கொண்டான் அந்த சீனன். யார் கண்ணிலும் படாதவாறு சுங்கச் சாவடிக்கு ஒரு காத தொலைவில் இருந்த புதருக்குள் அமர்ந்திருந்த அவன், வைகையில் தன் கால்களை நனைத்தபடி வானத்தை ஏறிட்டான். தனக்குள் நேரத்தைக் கணக்கிட்டான்.பிறகு சுங்கச் சாவடி பக்கம் தன் பார்வையைச் செலுத்தினான். இமைக்காமல் அங்குள்ள நடமாட்டத்தையே ஆராய ஆரம்பித்தான்.‘‘யார் அந்த 15 பேர்..?’’ கர்ஜித்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..?’’ குரலை உயர்த்தாமல், அதே நேரம் அழுத்தத்தைக் குறைக்காமல் வினவினான் விநயாதித்தன்.அலட்சியமாக அவர்கள் இருவரையும் நோக்கினான் கடிகை பாலகன்.‘‘நாங்கள் இருவரும் கேட்டது காதில் விழவில்லையா..?’’ அவன் சிகையைப் பிடித்து உலுக்கினார் ராமபுண்ய வல்லபர்.‘‘விழுந்தது...’’ கண்களால் சிரித்தான் கடிகை பாலகன்.விநயாதித்தன் அவனை உற்றுப் பார்த்தான். ‘‘பிறகு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறாய்..?’’‘‘கேள்வி தவறாக இருப்பதால்..!’’‘‘என்ன தவறைக் கண்டுவிட்டாய்..?’’‘‘15 என்றார் சாளுக்கிய போர் அமைச்சர்...’’‘‘ம்...’’‘‘ஆனால், 16 அல்லவா இளவரசே..? சிவகாமி வழியாக உங்களிடம் வந்து சேர்ந்ததையும் கணக்கில் சேர்க்க வேண்டுமல்லவா..?’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘சிவகாமிக்கு..?’’‘‘அனுப்பியது நான்தான் ராமபுண்ய வல்லபரே...’’ அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி சொன்னான் கடிகை பாலகன்.‘‘அவளுக்கு ஏன் அனுப்பினாய்..?’’ விநயாதித்தன் படபடத்தான்.‘‘சாளுக்கிய மன்னர்தான் அனுப்பச் சொன்னார்...’’‘‘என் தந்தையேதான் அதே செய்தியை அதேபோல் 15 பட்டுத் துணிகளில் தனித்தனியாக எழுதச் சொன்னாரா..?’’‘‘ஆம் இளவரசே! அவரது கட்டளைப்படிதான் நடக்கிறேன்!’’‘‘எதற்காக ஒரே செய்தியை 16 துணிகளில் எழுதச் சொன்னார்..?’’‘‘பாண்டியர்களையும் கரிகாலனையும் ஏமாற்றி திசைதிருப்ப...’’‘‘இதை நாங்கள் நம்புவோம் என நினைக்கிறாயா..?’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் தீயைக் கக்கின.‘‘நம்பாவிட்டால் இதைக் காண்பிக்கச் சொன்னார்...’’ என்றபடி வராக உருவம் பொறித்த மோதிரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான்.அதைப் பெற்றுக்கொண்டு, எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகில் சென்றவர், எண்ணெய்க்கசடை எடுத்து மோதிரத்தின் மீது தடவினார். பின்னர் தன் அங்கவஸ்திரத்தால் அதை பளபளவென்று தேய்த்தார். அவர் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்தன. ‘‘மன்னரின் அந்தரங்க முத்திரைதான்... குழப்பமாக இருக்கிறது...’’ முணுமுணுத்தபடி விநயாதித்தனிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்தார்.தன் சிகையைச் சரிசெய்தபடி இமையோரம் புன்னகைத்தான் கடிகை பாலகன்.அதைக் கவனித்த விநயாதித்தனின் புருவங்கள் முடிச்சிட்டன. ராமபுண்ய வல்லபரிடம் இருந்து பெற்ற மோதிரத்தை தீப்பந்தத்தின் அருகில் உயர்த்திப் பிடித்து ஆராய்ந்தான்.பின்னர் நிதானமாக நடந்து கடிகை பாலகனின் அருகில் வந்தான்.இமைக்கும் பொழுதில் ஓங்கி அவனை அறைந்தான்.வலி தாங்காமல் சுருண்டு விழுந்தான் கடிகை பாலகன்.‘‘இவனை நிற்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளியுங்கள்...’’தங்கள் இளவரசரின் கட்டளையை அங்கிருந்த வீரர்கள் கணத்தில் நிறைவேற்றினார்கள்.உதட்டோரம் குருதி வழிய மயக்கம் முழுமையாகத் தெளியாத நிலையில் விநயாதித்தனை ஏறிட்டான் கடிகை பாலகன்.‘‘உண்மையைச் சொல்...’’ அடிக்குரலில் சீறிய விநயாதித்தன், கடிகை பாலகன் சுதாரிப்பதற்குள் அவன் நாசியில் ஒரு குத்துவிட்டான்.உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அரிகேசரி மாறவர்மர், மெல்ல படுக்கையை விட்டு எழுந்தார். அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாண்டிமாதேவியைக் கண்டதும் தனக்குள் புன்னகைத்தார். ‘கொடுத்து வைத்தவள்... கட்டியவனை நம்பி நிம்மதியாக உறங்குகிறாள்...’ஓசை எழுப்பாமல் கட்டிலை விட்டு இறங்கியவர் சாளரத்தின் அருகில் வந்தார். வானத்தை ஏறிட்டார். மதுரை மாநகரத்தை ஆராய்ந்தார். ‘மக்களில் பலர் உறங்குகிறார்கள்... சிலர் இரவிலும் தங்கள் தொழிலை கவனிக்கிறார்கள். எல்லோர் மனதிலும், நம் நலத்தை கவனிக்க மன்னன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்கிறது... அந்த நம்பிக்கைக்கு நான் பாத்திரமானவன்தானா..? நம்பிக்கையைக் காப்பாற்றும் சக்தி எனக்கு இருக்கிறதா..?’ பெருமூச்சுடன் மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்தார்.‘அன்னையே... உன் மகனின் நிலையைப் பார்த்தாயா..? இக்கணம் வரை பாண்டியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... ஆனால், அடுத்த கணத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே..? பல்லவ சாளுக்கிய பிரச்னையில் இதுவரை பாண்டியர்கள் சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள். ஆனால், விதி தொடர்புபடுத்திவிடும் போல் இருக்கிறதே..?விருந்தினராக வந்திருக்கும் சாளுக்கிய இளவரசனும் நிம்மதியாக உறங்குகிறான்... தன் அத்தை வீட்டுக்கு வந்திருக்கும் பல்லவ உபசேனாதிபதியான சோழ இளவரசனும் எவ்வித கவலையும் இன்றி நித்திரையில் இருக்கிறான். ஆனால், அவ்விருவர் பிரச்னையிலும் சம்பந்தப்படாத பாண்டிய மன்னனான நான் மட்டும் உறக்கம் வராமல் தவிக்கிறேன்... இதென்ன சோதனை..? இன்றிரவு ஏதோ நடக்கப் போகிறது என உள்ளுணர்வு சொல்கிறது... அப்படி நடப்பது பாண்டி யர்களின் எதிர்காலத்துக்கு நன்மையைச் செய்யுமா, அல்லது...’நினைத்துப் பார்க்க முடியாமல் அரிகேசரி மாறவர்மர் ஆலய கோபுரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். ‘அன்னையே... இந்த தேசத்தைக் காப்பாற்று...’சில கணங்கள் வரை இமைகளை மூடி தியானத்தில் ஆழ்ந்தவர் ஏதோ முடிவுடன் கண்களைத் திறந்தார். திரும்பி அடிமேல் அடியெடுத்து வைத்து அறைக்கதவின் அருகில் வந்தார். ஓசை எழுப்பாமல் தாழ்ப்பாளை அகற்றி வெளியே வந்தார்.சட்டென காவலுக்கு நின்றிருந்த வீரன் வணங்கினான்.கண்களால் அவனை எச்சரித்துவிட்டு விடுவிடுவென பாதாளச் சிறையை நோக்கி நடந்தார்.‘‘சும்மா இருங்கள்...’’ சிணுங்கியபடி, தன் கொங்கைகளை நோக்கி நகர்ந்த கரிகாலனின் கைகளைப் பிடித்து தடுத்தாள் சிவகாமி.‘‘சும்மா இருந்தால் சுதந்திரம் எப்படி கிடைக்கும்..?’’ கேட்டபடி அவளது நாபிக்கமலத்தில் முத்தமிட்டான்.பாதாளச் சிறையின் கல்தரையும் பட்டு மெத்தையாக சிவகாமிக்கு இனித்தது! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16905&id1=6&issue=20200605
 37. 1 point
  சீமான் வெற்றி பெறுகிறதோ இல்லையோ தமிழும் தமிழ்மீதான பற்றும் வளர்ந்திருக்கிறது வளர்கிறது
 38. 1 point
 39. 1 point
  சிறி, எங்கள் காலத்தில் சந்திரா ஐஸ் கிரீம் காலம் முடிந்து விட்டது. சிறு வயதில் வீடு வீடாக வரும் சந்திரா ஐஸ் கிரீம் வானும் வழக்கொழிந்து விட்டது. லிங்கன் கூல் பார் உடன், கஸ்தூரியார் வீதியில் இருந்த கல்யாணி கிரீம் ஹவுஸ் என்பது மிக பிரபல்யமாகி விட்டது. நீங்கள் குறிப்பிட்ட கைலாச பிள்ளையார் கோவிலடியில் இருக்கும் சொக்கன் கடையை மறக்கமுடியாது. இவர்களது விலை எப்பவுமே விலை குறைவு. வெளியில் வடை 3 ரூபா வித்தால் இவர்கள் 1 ரூபாவுக்கு விற்பார்கள். வடை, மோதகம், கொழுக்கட்டை என்று சைவம்தான். பெரும் தீனிக்காரன் எவனையாவது சாப்பிட கூட்டிக்கொண்டு போறதென்றால் இங்குதான் கொண்டு போறது, எவ்வளவு சாப்பிட்டாலும் 20 ரூபாவுக்கு மேலே வராது.
 40. 1 point
  எப்படி சுகம் சிறி. அம்மாவிடம் நீர் சுகம் விசாரித்ததாக சொன்னேன். கேட்டது சந்தோசம் என்று சொன்னா . உமக்கும் குடும்பத்துக்கும் தனது அன்பை தெரிவிப்பதாகவும் சொன்னா. உமது அம்மா அப்பாவை பற்றி அடிக்கடி கதைப்பா . மிகவும் நல்ல மனிதர்கள்.
 41. 1 point
  நீர்வேலியான் இது இருந்த இடம் ஞாபகம் இருக்கிறதா? ஆஸ்பத்திரி முன்பாக இருந்ததாக சிறி சொல்கிறார். ஆனால் சுபாசுக்கு போட்டியாக பஸ்நிலையம் முன்பாகவே இருந்ததாக நினைவு.
 42. 1 point
  மிகவும் பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும் ஈழப்பிரியன் அண்ணா தேங்காய் எண்ணெயில் (கொலெஸ்ட்ரோலை கூட்டும் Saturated Oil அதிகமாக இருந்தாலும் , கணிசமான அளவு medium-chain triglycerides saturated oil இருக்கு. இது பட்டர் மற்றும் கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு நன்மை தரக்கூடிய கொழுப்பு. அத்துடன் தேங்காய் எண்ணெயில் உள்ள medium-chain triglycerides saturated oil, HDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) அளவை கூட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன - ஆதாரம் Mayoclini . ஒலிவ், கனோலா , ஒமேகா 3 போன்ற கொழுப்பு வகைகளின் நன்மை பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் பற்றி இப்போதுதான் ஆராய்ச்சி செய்கிறார்கள். கொலெஸ்ட்ரோல் நாம் சாப்பிடும் உணவில் இருந்து வருவதில்லை. எமது ஈரல் தான் அதை உற்பத்தி செய்கிறது. Saturated மற்றும் trans fat உள்ள உணவுகள் சாப்பிடும்போது ஈரல் அதனை பாவித்து கொலெஸ்டெராலை உற்பத்தி செய்யும். முட்டையில் மிகக்குறைந்த saturated fat தான் உள்ளது. அதனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது (இதயத்துக்கும் சேர்த்து). lutein and zeaxanthin போன்ற நோயெதிர்ப்பு காரணிகளும் முட்டையில் உள்ளது. Omega 3 supplement எடுக்காமல் Omega 3 கூடிய உணவுகளை சாப்பிடவும் (supplements பொதுவாக அவ்வளவு வேலை செய்வதில்லை) கொழுப்புக்கள் fatty acids இனால் ஆனவை . தேங்காய் எண்ணெயில் உள்ள Luaric fattyacid மற்ற கொழுப்புகளை மாதிரி அதிகம் சேகரிக்கப்படாமல் உடலில் எரிந்து விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் உடல் நிறை குறைவதற்கு தேங்காய் எண்ணெய் உதவும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பாக்டீரியா போன்ற நுண் உயிர்களை எதிர்க்கவும் உடல் உள்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. தினமும் தேங்காய் எண்ணெய் பாவித்து உடற்பயிற்சியும் செய்வதால் உயர் குருதி அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. Pacific islanders, 60விகிதத்துக்கும் அதிகமான கொழுப்பை தேங்காய் எண்ணெயில் இருந்து பெற்றாலும் அவர்களின் கொலெஸ்டெரோல் அளவோ அல்லது இதய நோய்களோ மிகவும் குறைவானவர்களுக்கே வருகிறது. முடிவு என்னவென்றால், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை பரம்பரையாக பாவித்து வரும் உலகின் பலவேறு பாகங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு இதய நோய் , பக்க வாதம், High LDL போன்ற பிரச்சனைகள் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. பிரச்னை என்னவென்றால் சோயா, சூரியகாந்தி, ஒலிவ் போன்ற எண்ணெய்களை பற்றிய ஆய்வுகள் கூடிப்போய் தேங்காய் எண்ணெயை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டார்கள். ஆனால் தேங்காய் எண்ணெயின் பெரும்பான்மையான நன்மைகள் அதை பாவிப்பதால் வெளிப்படையாக பலனளிப்பதால் இப்போ மேலை நாடுகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் மிகவும் அதிகமாக விரும்பப்படுகிறது ( நோயெதிர்ப்பு, உடல், குடல் புண், நிறை குறைதல், ஆரோக்கியமான தலை முடி, தோல் ) தேங்காய் எண்ணெயின் மிகப்பெரிய குழப்பம் அதில் இருக்கும் அதிகப்படியான saturated oil. அதே நேரம் அந்த saturated oil மற்ற எண்ணெய்களிலும் ஒரு வித்தியாசமான fattyacid ஆல் ஆனதால் அது நல்ல கொலெஸ்டெராலை (HDL ) கூட்டுதல், கூடாத (LDL ) கொலஸ்டரோலை குறைத்தல் , மற்றைய saturated fat களிலும் பார்க்க அதிகமாகவும் விரைவாகவும் உடலில் எரிந்து சக்தி தருதல், உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் அதிகம் சேகரிக்க படாமை போன்ற தன்மைகளை கொண்டுள்ளது. இந்த ஆதாரங்களை human research மூலம் அதிகம் நிரூபிக்கப்படாததால் தான் வைத்தியர்களிடையில் இவ்வளவு குழப்பம். நான் வைத்தியர் இல்லாவிட்டாலும் மருத்துவ மாணவர்களை படிப்பிப்பவர் என்ற முறையிலும் ஒவ்வொரு நாளும் என்னுடன் வேலை செய்யும் மருத்துவருடன் கதைப்பதாலும் அறிந்து கொண்டது என்னவெண்டால் எல்லாவற்றுக்கும் மருத்தவரிடம் போய் ஆலோசனை கேட்டால் அவர்களுக்கு நோய்க்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியுமே ஒழிய இப்படியான விடயங்கள் அவர்களுக்கு நிச்சயமாக கூறமுடியாமல் தான் இருக்கும். எனக்குத்தெரிந்த nutritionist களுக்கே இந்தமாதிரியான விடயங்களுக்கு சரியான பதில் தெரியாது. எனது அனுபவத்திலும், அவதானிப்பிலும் நான் அறிந்தது தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் இரண்டுமே உடலுக்கு நல்லது. ஆனால் வயது போக போக அதன் பாவனை அளவை குறைக்கவேண்டும். அவைகளை தினமும் பாவிக்கும்போது உடற்பயிற்சி செய்யவேண்டும். எமது உடலுக்கு நிறைய என்னை கொழுப்பு தேவை. ஏனென்றால் எமது உடல் காலங்களின் சுவர்கள் கொழுப்பால் ஆனவை. என்றபடியால் மற்ற உணவுகளை குறைத்து போல வயது போக போக எண்ணெய் வகையை குறைத்து ஆனால் தினமும் பாவிப்பதே நல்லது. (பின்குறிப்பு: 3 மாதத்துக்கு தேங்காய், தேங்காய் எண்ணெய் மட்டும் சமையலுக்கு பாவித்து விட்டு medical checkup ஒன்று செய்து பார்த்தால் உண்மை விளங்கி விடும்) நானும் குடும்பத்தவரும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் மட்டும்தான் எப்பவுமே பாவிக்கிறோம். மற்ற எண்ணெய்கள் பாவிப்பது மிகவும் குறைவு. ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இதுவரைக்கும் பெரிதாக இல்லை
 43. 1 point
  சில வியாபாரங்களில் விளம்பரம் செய்வதை விட விளம்பரத்துக்கு செய்யும் சிலவுக்கு விலையை குறைத்து கொடுப்பது ஒருவகையான விளம்பர உத்தி .அதே போல் மொக்கன் கடை மூணாவும் அநியாயத்துக்கு கணக்கு வழக்கு தெரியாத அப்பாவி போல் நடித்து தனது கடை வியபாரத்தை பெருக்கியும் இருக்கலாம் .அவரின் கடையில் முஸ்லிம்கள் வாடிக்கையாளராக இருந்து இருந்தால் ஓரளவுக்கு நம்பலாம் . மாட்டை உண்ணுவது இழுக்கு பாவம் எனும் ஊரில் தங்கள் உணவுக்கடைகள் மூலம் மாற்றியமைத்த பெருமக்கள் அவர்கள் .
 44. 1 point
  டேய் தம்பி..! எல்லாம் ஒன்டுதான்....
 45. 1 point
 46. 1 point
  இங்கே தேவை இல்லாமல் உங்கள் 'மொக்கைத்தனமான' கருத்துக்களை பதியாதீர்கள். சக கள உறவாயினும், அது சீமான் மீதல்ல, யாராக இருந்தாலும், இங்குள்ள சக களமாடுபவர்களை முட்டாள்களாக நினைத்து கதைகள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது பதிவுகளை அவரே நிரூபிக்கமுடியாமல் தடுமாறும்போது, நீங்கள் வேறு சப்பை கட்டு, கட்டி.... உங்களை கோமாளியாக காட்டிக்கொள்வது நன்றாகவா இருக்கிறது?
 47. 1 point
 48. 1 point
 49. 1 point
 50. 1 point
  நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே ......!